ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு – தனியன்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

ஸ்ரீ நாத முனிகள் அருளிய தனியன்கள்-

அவிதித விஷயாந்தரச் சடாரே ருபநிஷதன் முபகான மாத்ர போக
அபி ச குண வசரத் ததேக சேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மமாவி ரஸ்து —

அவிதித விஷயாந்தர-நம்மாழ்வாரைத் தவிர வேறொரு விஷயத்தை அறியாதவரும்
சடாரே ருபநிஷததாம் -நம்மாழ்வாருடைய திவ்ய ஸூ க்திகள் ஆகிய திவ்ய பிரபந்தங்களை
முபகான மாத்ர போக -இசை பாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும்
அபி ச குண வசரத் -குண வசிரதபிர -குணம் அடியாகவும்
த தேக சேஷீ -அந்த நம்மாழ்வார் ஒருவரையே தமக்கு சேஷியாகக் கொண்டவருமான
மதுரகவிர் ஹ்ருதயே மமாவி ரஸ்து -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் என் நெஞ்சில் ஆவிர்பவிக்கக் கடவர் –

தனியன் அவதாரிகை –

அவிதித விஷயாந்தர -இத்யாதி
இதில் வேறு ஒன்றும் நான் -அறியேன் என்று -ஆழ்வாரை ஒழிந்த விஷயங்கள் அவிவிதங்களாய் இருப்பாராய் – சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையரான -ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய
அநுபவ பரிவாஹ ரூபமான -திருவாய்மொழியின் -காநமே -போகமாய் இருப்பாராய் –
அவ்வளவிலும் நில்லாதே -அதுக்கும் மேலே அவர் வாத்சல்யாதி குணத்தாலும் -தோற்று -அவரையே தம்மை அடிமை கொள்ளும் சேஷி -என்று அறுதி இட்டு இருக்கும் ஸ்ரீ மதுரகவிகள் -தன் நிஷ்டை -நிலை உண்டாகும்படி என் ஹ்ருதயத்தில் ஸூ ப்ரதிஷ்டராய் ஆகக் கடவர் –என்கிறது

தனியன் வியாக்யானம் –

அவிவித விஷயாந்தர –
ஆழ்வாரை ஒழிந்த விஷயங்களிலே வ்யத்புத்தி பண்ணி யறியார் -என்கிறது –
சிந்தை மற்று ஒன்றின் திறத்தல்லா –என்றும்
பாவோ நான்யத்ர கச்சதி –மற்று ஒன்றினைக் காணாவே -என்னக் கடவது இறே –

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத் தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-திருவாறன் விளை ஒழிய வேறு ஒன்றில் ப்ராப்ய புத்தி இல்லை என்னும் இடம் சர்வேஸ்வரன் அறியும் -நெஞ்சானது பரம பதம் என்று பேச்சு தன்னையும்-ப்ரசங்கமும் -நினையாதது சர்வேஸ்வரன் அறியும். தன்மை – சுபாவம்.
பரம பதம் என்ற பெயர் சொல்லுதலுங்கூடத் தமக்கு விருப்பமின்மையின், ‘மற்று ஒன்று’ என்கிறார்.

இங்கு விஷயாந்தரங்கள் ஆகிறது –
1-பாட்டுக் கேட்கும் இடமான பர விஷயமும்
2-கூப்பீடு கேட்கும் இடமான வ்யூஹ விஷயமும்
3-குதித்த இடமான விபவ விஷயமும் –
4-வளைத்த விதமான அந்தர்யாமி விஷயமும் –
5-ஊட்டும் இடமான அர்ச்சாவதாரவிஷயமும் —
எல்லாம் வகுத்த விஷயமான ஆழ்வாரே ஆகையாலே மற்று ஒரு விஷயங்களையும் அறியாதே இருப்பர் –

(அதாவது –
ஏதத்  சாம காயன் நாஸ்தே -என்கிறபடியே –-1-நிரந்தர அனுபவத்துக்கு போக்குவீடாகப் பண்ணும் சாம கானம் கேட்க்கும் ஸ்தலமான பரம பதமும் –
2-அசூர ராஷச பீடிதரான ப்ரஹ்மாதி தேவர்கள் ஆர்த்த நாதம் கேட்க செவி கொடுத்துக் கொண்டு கண் வளரும் வ்யூஹ ஸ்தலமும் –
3-அவர்கள் ஆர்த்த த்வனி கேட்டு -துடித்துக் கொண்டு எழுந்து இருந்து -நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே –திருபாற் கடலிலே திரு அரவணையின் நின்று இவ்வருகே வரக் குதிப்பாரைப் போலே -வந்து அவதரித்த -அவதார ஸ்தலமும் –
4-நினைத்து தலைக் கட்டும் அளவும் -மலையாளர் வளைக்குமா போலே -இட்டவடி பேர விடாதே -வளைத்துக் கொண்டு இருக்கிற -அர்ச்சாவதார ஸ்தலங்களும் –
5-ஏஷாம் இந்தீவரஸ்யாமோ ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டத -என்றும் –ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே -என்றும் – சொல்லுகிறபடியே -ஹிருதய கமலத்திலே இருந்து -தான் உகந்தாருக்கு தன் அழகை புஜிப்பிக்கும்-அந்தர்யாமித்வ ஸ்தலம் ஆகிற –இந்த ப்ராப்ய ஸ்தலங்கள் எல்லாம் -தனக்கு வகுத்த ஸ்தலமாய் -பிராப்யமுமாய் -இருக்கும் ஆசார்ய விஷயமே என்று அத்யவசித்து இருக்க கடவன் -என்கை-

வளைத்த இடமாவது -பிறர் அறியாதபடி திரை வளைத்துக் கொண்டு இருக்கிற அந்தர்யாமி  ஸ்தலம் –
ஊட்டும் இடம் ஆவது -சஷூர் விஷயமாய் இருந்து -தன் வடிவு அழகையும் குணங்களையும் – ஆஸ்ரிதரை புஜிப்பிக்கும் அர்ச்சாவதார ஸ்தலம் -என்று சொல்லவுமாம்–
ஏனைவ குருணா யஸ்ய வியாச வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட்ட துக்த்தாப்த்தி  த்வாரகாஸ் சர்வ ஏவச -என்றும் –
வில்லார் மணி கொழிக்கும் -என்று துடங்கி -அருளாலே வைத்தவர் -என்றும் சொல்லக் கடவது இறே–

அன்றிக்கே –
பாட்டு கேட்கும் இடம் -இத்யாதிக்கு -ரஷகமாக அவற்றை ஆசைப் படக் கடவன் அல்லன் என்கிற அளவன்றிக்கே -அவை எல்லாம் தனக்கு இவ் விஷயமே என்று இருக்கக் கடவன் என்கிறது என்று கீழோடு சேர யோஜிக்கவுமாம் —

ஆச்சார்யரே பிராப்தம் -அனுபவத்துக்கு போக்கு வீட்டு வைகுண்ட செல்வனார் மேல் -ஏதத் ஸாம கானம் 
ஆர்த்தி உடன் -கூப்பீட்டு கேட்க்கும் இடம்துடித்து எழுந்து அரை குலைய குதித்த அவதார ஸ்தலங்கள்
கண்ணையும் மனத்தையும் வளைக்கும் அர்ச்சைதேனும் பாலும் -நிரதிசய போக்யமான அந்தர்யாமி ஓவாத ஊணாக ஊட்டும்-நின்ற ஒன்றை உணர்ந்துபரமபதம் இத்யாதிகள் ஸ்தலம் -இங்கு -இடம் தான் -அனைத்தும் ஆச்சார்யர் திருவடி –

பகவத் அபிமத ஸ்தலம் -விமல சரம திருமேனியை -குற்றம் அற்ற கடைசியான விக்ரஹம் -திருவடி உப லக்ஷணம் –அன்றிக்கே–பிரகாரம் நிலைகளைப் பற்றி அவனுக்கும் தனக்கும் வகுத்த இடம்-ஆச்சார்யரே உபாயம் உபேயம் முக்த கண்டம் –பகவானுக்கும் ஆச்சார்யர் -அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் -அவனுக்கும் உத்தேச்யம்
மனக்கடலில் வாழ வல்ல என் மாய -வ்யூஹம்
வில்லாளன் என் நெஞ்சத்து உள்ளான் -விபவம்
ஒருவன் அடியேன் உள்ளான் அந்தர்யாமி
திருவேங்கடமே எனது உடலே -அவனுக்கும் நமக்கும் இதுவே வகுத்த இடம் -அடியார் திருமேனியையையே விரும்பி உள்ளான் -)

மாதா பிதா இத்யாதி
அன்னையாய் -அத்தனாய் -சர்வம் யதேவ –
சமஸ்த சாம்சாரிக விஷய சுகங்களும் சடகோபாச்சார்யர் என்று அறுதி இட்டு –
தத் அந்யங்களை அறியாதவர் –என்றுமாம்
ஆழ்வார் –எல்லாம் -கண்ணன் என்று இருக்குமா போலே
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ -வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்த
வம்மான் கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சகம் –
என்றும் –
மொய்த்தே திரை மோது தண் பாற்கடல் உளான் பைத்தேய் சுடர் பாம்பணை நம் பரனை
வைத்தேன் மதியால் -என்கையாலே -அவனும் கிடந்தது என் நெஞ்சு -அகலான்
-என்றும் –
உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் -புணர்ந்தான் என்றும் –
எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப வுள்ளே இருக்கின்ற பிரான் -என்றும்
கண்கள் சிவந்திலே -அப்படியே –ஒருவன் அடியேன் உளான் -என்றும் –
திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் -புகுந்தான்
என்றும் –
விண் மீது இருப்பாய் -என்கிற -ஐந்தும் எனதாவியுள் மீதாடி –என்றும் –
தேவர் கோலத்தோடுமானான் என்கிற தெய்வ உருவில் இவர்க்கு எல்லாம் உண்டாகையாலே
அவற்றை அறியத் தேவை இல்லை இறே-

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியர் ஆகையாலே ஆயிற்று –
கரிய கோலத் திரு உருக் காண்பன் -என்றதும் –

அதவா –
அவிவித விஷயாந்தரஸ் ஸடாரே -என்கையாலே –
சடாரியைக் காட்டிலும் அறியாமல் இருப்பதான -அந்ய விஷயங்களை உடையவர்-என்கிறது –
அதாவது –ஆழ்வார் கழிக்குமது -இளம் தெய்வத்தை யாயிற்று –
இவர் கழிக்குமது –கழி பெரும் தெய்வமாய் -கரும் தெய்வமான -கண்ணனான பெரும் தேவனை யாயிற்று –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் நண்ணி -என்றார் இறே-
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழாள் -என்றும் –
ஒரு மா தெய்வம் மற்று உடையமோயாமே -என்றும் –
தேவு மற்று அறியேன் -என்று ஆயிற்று இவர்கள் பேச்சு இருப்பது –
இப்படி ஆழ்வாரில் வ்யாவருத்தராய் இருக்கிற இவர்-

சடாரே ருபநிஷதர முபகாநமாத்ரே போகர் -ஆகையாவது –
நாட்டியல் ஒழிந்து சடரை ஒட்டின சடகோபன் மொழி பட்டோடும் கவி அமுதமான
யாழின் இசை வேதத்தின் பண்ணார் பாடலின் அநுபவ ரச ஜ்ஞராய் –
பாவின் இன்னிசை பாடித் -திரிவேன் என்றும் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே –
என்று இருக்கை -என்றபடி-
இத்தால் –
அவரோபாதி அவர் சம்பந்தம் உடையதும் உத்தேச்யம் -என்று ஆயிற்று இவர் விரும்புவது –

அவிவித விஷயாந்தரஸ் ஸடாரே -என்று ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் -சொல்லிற்று
அபிச குணவ ஸாத்தா தேக தேஷீ -என்று குணாக்ருத தாஸ்யமு+ம் உண்டு என்கிறது
அபிச -கீழ் சொன்ன அளவு அன்றிக்கே பின்னையும் –
குணவ ஸாத் -என்று த்ருதீயார்த்தே பஞ்சமியாய்க் கிடக்கிறது –
ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே -என்றும் –
பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்றும்
அனுசந்தித்த வாத்சல்யாதி குண பூர்த்தியாலும் குணைர்த் தாஸ்யம் உபாகதராய்
தத் ஏக சேஷியாய் இருப்பார் ஆயிற்று –

ஏவம் பூதரான –மதுரகவி -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்னும்படியான
வாக் மாதுர்யத்தை உடையவர்
மம ஹ்ருதயே –
மதுரகவி நிஷ்டையை அபேஷிக்கிற என் மனச்சிலே -நின்று இருந்து
பட்டோலை கொண்ட நிலையோடே
ஆவிரஸ்து
ஆவிர்ப்பிக்கக் கடவர் –
சந்நிதானம் பண்ணக் கடவர்
இத்தால் -அனுகூலரான ஆசார்ய பரதந்த்ரர் ஆதரணீயர் என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆய்த்து –

————————————————————————–

வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை
யாள்வார் யவரே யரண் –

வேறு ஒன்றும் நான் அறியேன் –
ஆழ்வாரை ஒழிய தேவு மற்று அறியாத மதுரகவிகள் நமக்கு ஸ்வாமியும் ரஷகரும் அவரே என்கிறது –
வேறு ஒன்றும் நான் அறியேன் -வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள் வாழ்வாம் -என்னும் அளவும் மதுரகவி சொல்லை அனுகரித்து சொன்னபடி
மேல் ஏவம்வித ரானவர் நமக்கு சேஷியும் சரண்யரும் -என்கிறது –
தேவு மற்று அறியேன் –என்றத்தை –வேறு ஒன்றும் நான் அறியேன் -என்றது –
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சினுள் -நிறுத்தினான் –
என்றத்தை –வேதம் தமிழ் செய்த -என்றது –
காரி  மாறப் பிரான் -சடகோபன் என் நம்பி -என்றத்தை –மாறன் சடகோபன் -என்கிறது
பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே –
என்றத்தை –வண் குருகூர் ஏறு எங்கள் வாழ்வாம் -என்றது

எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்றத்தை –ஏறு எங்கள் வாழ்வாம் என்று -ஏத்தும் என்றது
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி -என்றத்தை-வண் குருகூர் ஏறு எங்கள் வாழ்வாம் என்று ஏத்தும்-எம்மை யாள்வார் -என்றது –
அவரை ஆளுகிறவர் ஆழ்வார் -நம்மை ஆளுகிறவர் இவர்
யவரே யரண் –
ரஷை
சரண் -என்ற பாடமான போதும் ரஷை என்றே அர்த்தம் –
மதுரகவிக்கு எல்லாம் ஆழ்வாரே ஆனால் போலே-நமக்கு எல்லாம் மதுரகவி -என்கிறது

—————————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading