த்,விதீய பாதம் -தாத்பர்ய மூல பாதம் – –ஸாஸ்த்ர தாத்பர்ய ப்ரதாநாதி, கரணம்-ஒரே ஸூத்ரம் – 16
இனி மேல் சாஸ்திர பிரதி பாத்யார்த்த விசேஷங்களை சங்க்ரஹேண பிரதி பாதித்து கொண்டு
ஏவம் பூத சாஸ்திர அப்யாசம் அநேக யோக்யதா சாபேஷதையா துஷ்கரம் என்று தானே திரு உள்ளம் பற்றி-ஈத்ருசா நேக யோக்யதா நிர் அபேஷத்வேன ஸூகரமாய் சாஸ்திர தாத்பர்யமுமான திருமந்த்ரத்தை ஈஸ்வரன் வெளி இட்டு அருளிய படியை அருளி செய்கிறார் மேல்-
இனி மேல் ஸாஸ்த்ர ப்ரதிபாத்யமான அர்த்த விஸேஷங்களை ஸங்க,ரஹேண ப்ரதிபாதியா நின்று கொண்டு ஏவம் வித,மான ஸாஸ்த்ரத்தினுடைய ௮ப்யாஸத்துக்கு ஐம்பூ, த்வீபாதி, தேஸ தேஹாதி,ஸாபேக்ஷதயா ஜ்ஞாதும் அஸக்யமாயிருக்குமென்று இப்படி ஸாபேக்ஷமன்றிக்கே, நித்ய நிரபேக்ஷமாய், அத ஏவ ஸூகரமுமாய், ஸாஸ்த்ர தாத்பர்யமுமான திருமந்தரத்தை ஸ்ரீபதரிகாஸ்ரமத்திலே வெளியிட்டருளினான் என்கிறார்
(கலைகளை நீர்மையினால் அருள் செய்தான் -என்று அருளிச் செய்தார்-அந்த கலைகளில் சொல்லப்படும் பொருள்கள் இன்னவை இன்னவை என்று இதில் விவரித்து-அதுக்கு மேலே அக்கலைகளை கற்பதற்கு வேண்டிய தகுதிகளை விவரித்து-அதுக்கு மேலே அத்தகுதிகள் இருந்து கற்க முயன்றாலும் -அல்ப வாழ் நாள்-பல் பிணி -சிற்று அறிவினர் ஆகையால் அக்கலைகளைக் கற்று அறிந்து தெளிதல் அரிது என்று காட்டி அருளி-ஆகையினாலே பக்தி யுடையார் எல்லாரும் அதிகாரிகளாம் படி எளிதான திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினமையையும் அந்த திருமந்திரத்தின் பெருமையையும் அது தேனும் பாலும் அமுதமுமாய் திருமால் திரு நாமம் ஆகையால் அத்தை வேதத்தின் நின்றும் எடுத்த வகையையும் அருளிச் செய்கிறார் இதில் –)
சதுர் விதமான தேக வர்ண ஆஸ்ரம அதிகாரி–பல மோஷ சாதன கதி யுக தர்ம வியூக ரூப
கிரியாதிகளை அறிவிக்கிற பாட்டுப் பரப்புக்கு பெரிய தீவினில் ஒன்பதாம் கூறும் மானிட பிறவியும் ஆக்கை நிலையும் ஈரிண்டில் ஒன்றும் இளைமையும் இசைவும் உண்டாய் புகுவரேலும் என்கிறதுக்குள்ளே விக்னமற நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில் முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-சூரணை-16-(சதுர் விதம் என்கிறது மேல் சொல்லுகிற எல்லா வற்றிலும் அனுவர்த்திக்கிறது)
அதாவது
1-தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர –ஆகாரேன நாலு வகை பட்ட தேகம்-
2-ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய சூத்திர ரூபேண நாலு வகை பட்ட வர்ணம்
3-பிராமச்சரயா கார்கஸ்த்ய வானப்ரஸ்த சந்த்யா சாத்மக தயா நாலு வகைப் பட்ட ஆஸ்ரமம்
4-ஆர்த்தோ ஜிஜ்ஞாசு அர்த்தா அர்தாதீ ஜ்ஞானி-ஸ்ரீ கீதை -7–16– -என்கிற நாலு வகை பட்ட அதிகாரம்
5-தர்ம அர்த்த காம மோஷங்கள் என்கிற நாலு வகை பட்ட பலம்
6-சாலோக்ய சாமீப்ய சாருப்ய சாயுஜ்யங்கள் என்கிற நாலு வகை பட்ட மோஷம்
7-கர்ம ஞான பக்தி பிர பத்தி கள் என்கிற நாலு வகை பட்ட ஸாதனம்
8-பஞ்சாக்னி வித்யோக்த பிரகாரேண வரும் கர்ப்ப கதி யாம்ய கதி தூமாதி கதி அர்ச்சிராதி கதி என்கிற நாலு வகைப் பட்ட கதி
9-கிருத த்ரேதா த்வாபர கலிகள் என்கிற நாலு வகை பட்ட யுகம்
10-த்யாயன் க்ருதே யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன் யதாப்நோதி தாதாப்நோதி
கலவ் சங்கீர்த்திய கேஸவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–12–16–என்று சொன்ன த்யான யஜன அர்ச்சன சங்கீர்த்தனங்கள் ஆகிய நாலு வகை பட்ட யுக தர்மம்
11-வாசுதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் ஆகிய நாலு வகை பட்ட வியூகம்
12-கிருதாதி யுகங்களில் – பாலின் நீர்மை செம் பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலாம் நீல நீர்மை –திருச்சந்த -44- படியே சொல்லுகிற ஸீத பீத ஸ்யாம நீல தயா –நாலு வகைப் பட்ட ரூபம்
13-ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்கார மோஷ பிரதத்வங்கள் என்கிற நாலு வகை பட்ட கிரியை
ஆதி சப்தத்தாலே மற்றும்-சதுர் வித மான பிரமேய விஷயங்களை சொல்லுகிறது
14-வாசுதேவாத் உத்பன்னரான கேசவ நாராயண மாதவர்கள்
-சங்கர்ஷணாத் உத்பன்னரான கோவிந்த விஷ்ணு மது சூதனர்கள்
பிரத்யும்நாத் உத்பன்னரான த்ரி விக்கிரம வாமன ஸ்ரீதரர்கள்
அனுருத்நாத் உத்பன்னரான ஹ்ருஷீகேச பத்ம நாப தாமோதரர்கள்-என்ற நாலு வகை பட்ட வியூகாந்தரம்
15-ஆமோத பிரமோத சம்மோத வைகுண்ட ரூபேண நாலு வகைப் பட்ட வியூகஸ்தானம் முதலானவை பலவும் உண்டு இறே- ஆக இப்படி பல சதுர் விதமான அர்த்த விசேஷங்களை பிரகாசிப்பிக்கிற- பாட்டும் முறையும் -என்கிற பாட்டில் சொல்லுகிற சாஸ்திர விஸ்தரத்துக்கு-
(சதுர்விதமான தேஹம்) தே,வ-திர்யங் மநுஷ்ய-ஸ்தாவர ரூபமான ஸரீர விஸேஷங்கள். (வர்ணம்) ப்,ராஹ்மண-க்ஷத்ரிய வைஸ்ய-ஷூத்ர ரூபமான வர்ண சதுஷ்டயம். (ஆஸ்ரமம்) ப்,ரஹ்ம சர்ய- கார்ஹஸ்த்ய -வாநப்ரஸ்த,-ஸந்த்யாஸங்களாகிறவை. (அதிகாரம்) “ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு அர்த்தார்த்தி, ஜ்ஞாநீ” (கீதை 7 – 16) என்று சொல்லுகிறவை-இதில் ஆர்த்தனாவான் – நஷ்ட ஐஸ்வர்ய காமன். ஜிஜ்ஞாஸுவாவான் – கேவலன். அர்த்தார்த்தீ,யாவான் -அபூர்வ ஐஸ்வர்ய காமன். ஜ்ஞாநி என்கிறது பகவதநுபவ ஏக பரனை. ஆர்த்தனுக்கும் அர்த்தார்த்திக்கும் நடுவே கேவலனைச் சொல்லிற்று – அவனும் ப்ரயோஜநாந்தர பரன் என்னுமிடம் தோற்றுகைக்காக. (பலம்)“‘தர்ம- அர்த்த,- காம மோக்ஷாக்,யா:” ( ) என்று சொல்லுகிறவை. (மோக்ஷமாவது) – ஸாலோக்ய-ஸாமீப்ய ஸாரூப்ய-ஸாயுஜ்யங்கள், (ஸாதநம்) – கர்ம-ஜ்ஞாத-ப,க்தி-ப்ரபத்திகள். (கதியாவது )த்,யு:பர்ஜந்ய ப்ருதிவீ புருஷ யோஷித்துக்களான பஞ்சாக்நி வித்யையில் சொல்லுகிற படியே வருகிற கர்ப்ப,கதியும், யாம்ய கதியும், தூம்ய கதியும், அர்ச்சிராதி,கதியும். (யுக,மாவது) – க்ருத-த்ரேதா-த்,வாபர-கலியுக,ங்கள். (த,ர்மமாவது) – “த்யாயத் க்ருதே யஜந் யஜ்ஞை: த்ரேதாயாம் த்,வாபரேர்ச்சயத் | யதாப்நோதி ததாப்நோதி கலெள ஸங்கீர்த்ய கேஸவம்”’ (வி. பு. 6 – 2 – 17) என்று சொல்லுகிற த்யாந -யாக,-அர்ச்சந -சங்கீர்த்தநங்கள்-வ்யூஹமாவது – வாஸு தே,வ-ஸங்கர்ஷண-ப்ரத்யும்ந- அநிருத்தர்கள். ரூபமாவது “ரக்தம் ஸிதே தரே பீதம் சதுர்த்தா யத் க்ருதே யுகே, ! ரக்தாத்யம் ஸித நிஷ்டஞ்ச த்ரேதோயாம் ஹி மஹாமதே பீதம் க்ருஷ்ணம் ஸிதம் ரக்தம் ஸம்ப்ராப்தே த்வாபரே யுகே, ! கலெள க்ருஷ்ண ஸிதம் ரக்தம் பீதஞ்சாநுக்ரமேண து””( ) (யதாமதி ஸோத நீயம்] என்கிற படியே க்ருதாதி,களில் ஸித-ரக்த- பீத-க்ருஷ்ணாதி,களான ஸங்கர்ஷணாதிகளுடைய வர்ண சதுஷ்டயங்கள். “பாலினீர்மை”! (திரு.ச . வி. 44) இத்யாதி, க்ரிசை யாவது -ஸ்ருஷ்டி -ஸ்திதி-ஸம்ஹார-மோக்ஷ ப்ரதத்வாதி,கள். ஆதி சப்தத்தாலே மற்றும் அர்ச்சநீயரான தேவதா விஸேஷங்களைச் சொல்லுகிறது
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைந்ததென்ன நீர்மையே –44—பாலின் நீர்மை – க்ர்த யுகத்தில் உள்ளார் சத்வ ப்ரசுரராய் வெளுப்பு உகக்குமவர்கள் ஆகையாலே அவர்களுக்கு பால் போன்ற நிறைத்தைக் கொள்ளும் ஸ்வபாவம் –அதாகிறது நிறம் – வளை வுருவாய்த் திகழ்ந்தான் -என்றும் –சங்க வண்ண மன்ன மேனி -என்றும் – சொல்லுகிற ஸ்தானத்தில் பாலின் நீர்மை -என்றது –இவ் வெளுப்புக்கு ஆஸ்ரயம் சர்வ ரச -என்கிற விஷயம் என்று தோற்றுகைக்காக –செம்பொன் நீர்மை – த்ரேதா யுகத்திலே வந்தால் –ருக்மாபம் -என்றும் – கட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது -என்றும் சொல்லுகிறபடியே சிவந்த நிறத்தை கொள்ளும் –சேயன் என்றும் த்ரேதைக் கண் -என்கிற ஸ்தானத்திலே – செம்பொன் நீர்மை -என்றது அந் நிறத்துக்கு ஆஸ்ரயமான விக்ரஹம் மஹார்க்கம்
என்று தோற்றுகைக்காக –பாசியின் பசும்புறம் போலும் நீர்மை –த்வாபர யுகத்திலே வந்தால் பாசியினுடைய புறத்தில் பசுமை போல ஸ்ரமஹரமான திரு நிறத்தை உடையவனாய் – பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா நீல நீர்மை –-பொற்பு–அழகு-விண்டல்-அலர்தல்-கலி யுகத்தில் வந்தால் எல்லா வடிவும் கொண்டாலும் அபிமுகீ கரிப்பர் இல்லாமையாலே ஸ்வாபாவிகமான நீல நிறமாய் இருக்கும் –நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் -என்னக் கடவது இறே –கலௌ ஜகத் பதிம் -அழகிய தடாகத்திலே வண்டுகள் நெருங்கப் படிந்து மது பாநத்தை பண்ணி -அத்தால் வந்த ஹர்ஷத்தாலே சிறகு விரித்து வுலவா நின்றுள்ள நீலப் பூவின் நிறம் போலே இருக்கிற நிறத்தை உடையவனாய் -இத்தால் ஸ்ரமஹரமாய் செவ்வியை உடைத்தான நீலப் பூ என்கை –யென்றிவை நிறைந்த கால நான்குமாய் – ஆஸ்ரித அர்த்தமாகக் கொள்ளும் அந் நிறங்கள் குறைவற்று இருந்துள்ள சதுர் யுகமாய் – இந் நிறங்கள் நாலு யுகங்களிலும் குறைவற்று இருக்கை
பெரிய தீவினில் இத்யாதி — நாவலம்பெரிய தீவு -என்கிற போக மோஷ சாதன அனுஷ்டான பூமி ஆகையாலே த்வீபாந்தரங்களில் உத்க்ருஷ்டமான ஜம்பூத்வீபத்தில் –-நவ கண்டத்திலும் வைத்து கொண்டு-வர்ஷாந்தரங்களை போலே ப்வ்மமான ஸ்வர்க்கம் என்னலாம் படி போக பூமி இராதே ஸ்வர்க்க மோஷ ரூபமான பலங்களுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுகைக்கு ஈடான ஸ்தலமாய்-யந்தி தேவா கில கீத கானி தன்யாஸ்து எ பாரத பூமி பாகே ஸ்வர்க்கா பவர்க்கா ச்பதமார்க்க பூதே பவந்தி பூய புருஷாஸ் சுரத்வாத்-என்று தேவர்களும் ஸ்லாகிக்கும் படி யான நவம கண்டமான பாரத வர்ஷமும்
இப்படி சதுர் வித,மான தேஹாத் யர்த்த,விஸேஷங்களுக்கு ப்ரகாஸகமான பாட்டுப் பரப்புக்கு “பாட்டும் முறையும்?” (நா. திருவ. 76) என்கிற பாட்டில் சொல்லுகிற ஸாஸ்த்ர விஸ்தரத்துக்கு. (பெரியதீவினில் இத்யாதி,) ““நாவலம் பெரிய தீவு”’ (பெரியா. தி. 3 – 6: – 1) என்கிற ஜம்பூ த்வீபத்தில் நவ கண்டையான ப்ருதிவியில் பரத கண்ட,மும்
பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-—லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று- அவனையே தாம் கவி பாடுகைக்கு அடியான அவனுடைய வேண்டற்பாடு சொல்லுகிறார் –
நாவலம் பெரிய தீவினில் வாழு நங்கைமீர்கள் இதோர் அற்புதம் கேளீர்
தூவலம் புரி உடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகுலிப்ப வுடல் உள் அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே -3 6-1 –நாவலை உடைத்தான பெரிய தீவினிலே – த்வீயாந்தரங்களைப் பற்ற பெருமையை உடைய ஜம்பூ த்வீபத்திலே -என்றபடி இந்த த்வீபத்தினுடைய வைபவம் வேறொரு த்வீபத்துக்கு இல்லை இறே-அதாவது –
த்வீபாந்தரங்கள் எல்லாம் -போக பூமியாய் இருக்கும் இத்தனை இறே உள்ளது-ஆர்ஜன பூமி உள்ளது இதிலே இறே–இது தன்னிலும் நவம கண்டமான பாரத வர்ஷம் இறே -ஆர்ஜன பூமியாய் இருப்பது
வர்ஷாந்தரங்களும் போக பூமிகள் இத்தனை -இறே அப்படி இருந்தது ஆகிலும் பாரத வர்ஷ ப்ராதான்யத்தை பற்ற -த்வீபாந்தரங்களில் காட்டில் இந்த த்வீபத்துக்கு ஏற்றம் சொல்லக் குறை இல்லை –த்வீபாந்தரங்களில் -போகங்களுக்கும் -உபரிதன -பாதாள -லோகங்களில் போகங்களுக்கும் மோஷத்துக்கும் சாதன அனுஷ்டானம் பண்ணலாவது இங்கே ஆகையாலும் – ஸ்ரீ திவ்ய தேசங்களும் முமுஷுக்களும் ப்ராசர்யேன உளது இங்கே ஆகையாலும் – இந்த பாரத வர்ஷததோடே கூடி இருக்கையாலே ஜம்பூ த்வீபத்தை -பெரிய தீவு -என்று அருளிச் செய்கிறார் —
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21- என்றும்
அத்ர ஜன்ம சகஸ்ராணாம் சகஸ்ரைரபி சத்தம,கதாசித் லபதே ஜந்து மனுஷ்யம் புண்ய சஞ்சயாத்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–3–24-என்றும் சொல்லுகிற படியே-மானிட பிறவி அந்தோ-திருக் குறும் தாண்டகம் -8- என்று துர்லபமாக சொன்ன மனுஷ்ய ஜன்மமும்-–துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21 -என்கிற படியே-மின்னின் நிலையில மன் உயிர் ஆக்கைகள் –திருவாய் -1-2-2-என்று அஸ்திரமாக சொன்ன சரீரத்தின் உடைய ஸ்தர்யமும்-சாஸ்திர ஞான யோக்ய வர்ணங்களில் பிரதம கண்யமாய்-குலங்களாய ஈர் இரண்டில் ஓன்று என்கிற ப்ராஹ்மண ஜன்மமும்- தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரேயசே சதா -என்கிற படியே புத்தி கொழுந்து விட்டு அப்யசிக்கைக்கு உறுப்பான கிளர் ஒளி இளமை -என்கிற பால்யமும்
துர்லபோ மாநுஷோ தேஹு:”” (ப,ாக,வ. 11 – 2 – 21) என்றும், “மானிடப் பிறவி அந்தோ?” (திருக் குரும் -. 6) என்றும் சொல்லுகிற மநுஷ்ய தேஹமும், ‘“தே,ஹிநாம் க்ஷண பங்கு, ர:”” என்றும், “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்”’ (திருவாய். 1 – 2. 2) என்றும் சொல்லுகிற தாத்ருஸ தேஹங்களினுடைய ஸ்தைர்யமும். ஸாஸ்த்ர ஜ்ஞாநத்துக்கு யோக்யமான வர்ணங்களில் ப்ரதம க,ண்யமாய், ““குலங்களாய ஈரிரண்டிலொன்றிலும்”’ (திருச்ச. 90) என்கிற ப்ராஹ்மண ஜந்மமும், “கிளரொளி இளமை”” (திருவாய். 2 – 10 – 1) என்று இதினுடைய பால்யமும்–தஸ்மாத் பால்யே விவேகாத்மா’ (வி.பு. 1 – 17 – 75) என்றும் சொல்லக் கடவது இறே
வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே–8–துர்லபோ மானுஷோ தேக –அரிது அரிது-இப்படி இருந்தும் உண்டியே உடையே உகந்து அந்த கரும்பு சாற்றை இழக்கிறார்களே–அன்றிக்கே-தீண்டா வழும்பும் செந்நீரும் சீய நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றமும் மிகு உடலாய
மனுஷ்ய சரீரத்தை பெற்று வைத்தும் மார்பு தெறித்து இருக்கின்றார்களே-குரம்பை -குடிசை தேகம் ஆத்மா வசிக்கும் குடிசை-ஆத்ம வஸ்து உஜ்ஜீவிக்கும் வழியை சிந்தியாமல் வீணாக போகிறார்களே–
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –1-2-2–மின்னுக்கு உள்ள நிலையும் இல்லை
சம்பதஸ் ஸ்வப்ன சங்காசா யௌவனம் குஸூமோபமம் தடிச்சஞ்சலமாயுச்ச கஸ்ய ச்யாஜ்ஜா நதோ த்ருதி –அது தோற்றி நசிக்கும்-இது கர்ப்பத்தில் நசிக்கும்-தோற்றின போதே மாயக் கடவதாய் இருப்பதொரு வ்யவஸ்தை உண்டு அதுக்கு-இது சில நாள் இருக்கிலும் இருக்கும் -அஸ்திரம் என்று ஹிதத்தில் ப்ரவர்த்திக்க ஒட்டாது -ஸ்திரம் என்று விச்வசிக்கப் பண்ணி நசிக்கும் –
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1—கிளாரா நின்றுள்ள ஒளியை உடைத்த யவ்வனம் கழிவதற்கு முன்பே கரண படவம் உள்ள போதே –பால்யம் போய் யவ்வனம் தலை வைக்கிற அளவிலே யவ்வனம் விஷயத்திலே மூட்டி நசிப்பதற்கு முன்பே என்றுமாம் –தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ச்ரேயஸே சதா என்னக் கடவது இறே-கோ ஜா நீதே கதா கஸ்ய ம்ருத்யு காலோ பவிஷ்யதி யுவைவதர்ம புத்திஸ் ஸ் யா தே கோ அநித்தியம் ஹி ஜீவிதம்-திருமலையை ஆஸ்ரயிப்போம் -என்ற பிறந்த ஸ்ரத்தை மாளுவதற்கு முன்னே என்றுமாம் –
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்-பெரிய திருவந்தாதி -26- -என்கிறபடியே-எல்லாத்துக்கும் இசைவு வேண்டுகையாலே இதில் மூழுகைக்கு உறுப்பான இச்சையும் உண்டாய்-–வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவர் ஏலும் என்று-சதாயூர் வை புருஷ என்று வேத சாஸ்த்ரோக்தமான ஆயுஸு நூறும்-மனுஷ்யர்கள் தாங்கள் புகுந்தாகள் ஆகிலும் என்று சொல்லுகிற இந்த ஆயுசுக்குள்ளே-அனந்த ஸாரம் பஹுவேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பஹவஸ்ச விக்நா–உத்தர கீதை -7-10–என்றும்
ஸ்ரேயாம்சி பஹிவிக்னானி பவந்தி மஹதாமபி-என்றும் சொல்லுகிறபடியே-சாஸ்திர அப்யாசம் பண்ண வரும் விக்னங்களும் அற்று–நின்றவா நில்லா நெஞ்சு-பெரிய திருமொழி -1-1-4- – என்றும்-சஞ்சலம் ஹி கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-ஸ்ரீ கீதை -6-34-என்றும் சொல்லுகிற படி-ஒரு விஷயத்தில் அரை ஷணமும் நில்லாதே இவனை அடர்த்து தன் வழியே இழுக்கும்-மனசை கொண்டு –கலை அறக் கற்ற மாந்தர் -திருமாலை 7–என்கிறபடி சுருதி ஸ்ம்ருதாதி சாஸ்த்ரங்களை தாத்பர்யம் கை படும் படு அதிகரிக்கை-ஆமாறு அறிவுடையார் ஆர் அவர் அரிது அன்றே-பெரிய திருவந்தாதி -37- -என்று-தாத் பர்யத்தில் உற்று நிற்கை யுக்தமாம் படி அறிவுடையார் ஆகை அரிதன்றோ என்கிற படியே அரிது என்று திரு உள்ளம் பற்றி இறே-
அதிலும், ““யானுமென்னெஞ்சும் இசைந்தொழிந்தோம்”’ (பெரியதிருவ, 36) என்கிறபடியே இச்சையுமுண்டாய், “*வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்”’ (திரு மாலை 3) என்றும், ““ஸதாயுர்வை புருஷ:”” (யஜு. கா. 1 – 8 – 2) என்றும் சொல்லுகிற படியே மநுஷ்யர் வேதோக்தமான ஆயுஸ்ஸை உடையவரே யாகிலும் அவ்வாயுஸ்ஸுக்குள்ளே “அநந்த ஸாரம் ப,ஹு வேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பஹவமஸ்ச விக்,நாநி :’” ( ) என்றும், ““ஸ்ரேயாம்ஸி ப,ஹுவிக்,நாநி ப,வந்தி மஹதாம்பி”” ( ) என்றும் சொல்லுகிறபடியே ஸாஸ்த்ர ஜ்ஞாந விரோதி,யான ப்ரபல ப்ரதிபந்தகங்களும் அற்று, “நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் ” (திருமொழி 1 – 1 & 4) என்றும், “சஞ்சலம் ஹி மநஸ் : க்ருஷ்ண ப்ரமாதி, பலவத்,த்ரூடம் ! தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸதுஷ்கரம்”’ (கீதை 6 – 34) என்றும் சொல்லப்படுகிற மநஸ்ஸைக் கொண்டு ‘கலையறக் கற்ற மாந்தர்”” (திருமாலை 7) என்கிறபடியே ஸாஸ்த்ரங்களைக் கரை கண்டு ”ஆமாறறிவுடையார் ஆவதரிதன்றே”’ (பெரியதிருவ. 37) என்கிறபடியே தாத்பர்ய ஜ்ஞனாகை அரிது என்றிறே-
யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26—இத் தலையில் குறைவற்றது-பொருந்தாத தலையும் பொருந்திற்று-பொருந்துமவன் பொருந்தச் சொல்ல வேண்டா இறே–இசைந்து ஒழிந்தோம் -என்கிற இத்தாலே – தம் தலையிலே குறை யற்றது-அருள் என்னும் தண்டால் -என்கையாலே பெறுவதும் அவன் பிரஸாதத்தாலே என்னும் இடம் சொல்லிற்று இனி அவர்க்கு அநுபவத்திலே இறே அந்வயம் ஆகையாலே அநுபவிக்கிறார்
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்ற விப்பதினை யாண்டு (நின்றதில் பதினை யாண்டு -என்றும் பாடம் )
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே–3–வேத சாஸ்த்ரா விரோதிநா -என்கிறபடியே
வேதமாகிற நூல் -வேதாக்ய சாஸ்திரம் -என்னக் கடவது இறே-நூல் -சாஸ்திரம்-அதவா வேதங்களும் நூல்களும் -என்னவுமாம் –வேதங்களும் வேதார்த்த ஞானம் உடைய புருஷர்கள் உடைய வசனங்களும் –பிராயம் நூறு– சதாயுர்வை புருஷ -என்று இறே சொல்வது-இது இறே பரமாவதி இது தான் ஓலைப் புறத்திலே கேட்டுப் போம் இத்தனை – புகுகைக்கு சம்பாவனை இல்லை-அந்த நூல் தான் அளவுகோல் வாசியால் வந்த ஏற்றத்தாலே-சிலர் பக்கலிலே நெடு வாசிப் பட்டு இருக்கும் –-அத்தை வ்யாவ்ருத்திக்கிறது ––மனிசர் -என்று-ந ஜாயதே ம்ரிய தேவா கதாசிந்நாயம் பூத்வாபவிதாவா ந பூய-என்கிறபடியே-கல்பாதியிலே தோற்றி கல்பாந்தத்திலே முடிவாய் இருக்கும் இறே-சிலருக்கு அங்கன் இன்றிக்கே இருக்கை –தாம் –கர்ப்பம் தொடங்கி மரணத்துக்கு யோக்யமாய் இருக்க-தமக்கு ஒரு ஜீவனமும் பரிக்ரஹமும் காண் என்று ஷேபிக்கிறார் –புகுவரேலும் –முதலிலே புகுவார் இல்லை –கர்ப்பத்திலே முடிதல்-ஜனியா நிற்க முடிதல்-பிறந்து முடிதல்-நாலு நாள் இருந்து முடிதல்-பால்யத்திலே முடிதல்-செருக்கித் திரியும் யௌவனத்திலெ முடிதல் ஜரையிலே முடிதல் -மரணத்தை நிர்ணயிக்க அரிதாம் படி இறே இருப்பது –கர்ப்பே விலீயதி பூயோ ஜாயமானோ ஸ்தமேதிச ஜாத மாத்ரேச ம்ரியதேபால பாவேத யொளவநே மத்யமம் வாவய ப்ராப்த்தே வார்த்தே கேவா த்ருவாம்ர்தி – என்னக் கடவது இறே-பிராணிகள் தங்கள் ஆயுஸ் போகிறபடி ஒன்றையும் அறியாதே-உதய அஸ்தமயங்களைக் குறித்து உகவா நிற்பார்கள் –நந்தந்த யுதித ஆதித்யே நந்தந்த யஸ்தமிதோ வௌ ஆத்மனோ நாவ புத்யந்தே மனுஷ்யா ஜீவித ஷயம் -என்றும் ஜாயஸ்வ ம்ரியஸ்வ -என்றும்-மின்னின் நிலையில -என்றும்
வாள்களாகி நாள்கள் செல்ல -என்றும் சொல்லக் கடவது இறே
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —4–ஊர்வசீ ஸ லோக்யத்துக்கு லோகம் அடங்க சாதன அநுஷ்டானம் பண்ணா நிற்க நேர் கொடு நேர் அவள் தான் நடந்து உபஸ்தானம் பண்ணி முன்னே நிற்க-அர்ஜுனன் நமஸ்கரித்து நின்றான் நின்றான் இறே விரக்தியாலே – இப்படிப் பட்டவன் தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரி வஸூ துஷ்கரம் -என்று பிரதிகூல வாயுவை பிடித்துக் கூடு கட்டிலும் என் நெஞ்சைப் பிடிக்க போகாது காண்–என்றான் இறே-
(சஞ்சலம் ஹி மனஸ் கிருஷ்ண என்றானே) ஒரு விஷயங்களிலே அரை ஷணம் கால் தாளாத (தங்கி நிற்காத) நெஞ்சை உடையேனான நான் இந் நெஞ்சை பரிகரமாகக் கொண்டு உன்னை பெறுகைக்கு ஈடான உபாய அனுஷ்டானம் பண்ண என்பது ஓன்று உண்டோ – உன்னை இழக்கைக்கு உறுப்பாம் இத்தனை
புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்–7–கலையறக் கற்ற மாந்தர் –
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிகாசங்களில் நிலை நின்றவர்களாய்-வேத தாத்பர்யம் கைப் பட்டவர்கள் –
அவர்கள் ஆகிறார் -கூரத் ஆழ்வார் போல்வார்கள் இறே
ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யது வுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மது கரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-வழியான அறிவுடையார் யாவது அரிது அன்றே -யுக்தமான அறிவுடையாராகை கிடையாது –ஆமாறு -ஆறு -வழி
வேத சார உபநிஷத் இத்யாதி —
அசாரம் அல்ப சாரஞ்ச சாரம் சார தரம் த்யஜேத் ,பஜேத் சார தமம் ,
சாஸ்த்ரே ரத்னாகரே இவாம்ருதம் -ஸ்ரீ வைகுண்ட தீக்ஷிதீயம் —என்று சார தமமான சாஸ்த்ரத்தை
பஜிப்பான் என்கையாலே வஹ்ய மாணத்தின் சார தமத்தை தர்சிப்பிக்கிறார் மேல்-(ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -வீற்று இருந்து ஏழு உலகம் அடுத்து இனி யாம் உறாமை -சொல்லாமல் விட்டது ஆழ்வார் உளராகைக்காக -ஸ்ரீ ஈடு -நாளை வதுவை போலே சாத்மிக்க சாத்மிக்க அருள வேண்டுமே –-வேத சாரம் உபநிஷத் இத்யாதி இதில்-அசாரம் பாஹ்யம் -அல்ப சாரம் வேதம் -சாரம் உபநிஷத் –சார தரம் நாராயண அநுவாகம்–சார தமம் -ஸ்ரீ விஷ்ணு காயத்ரி -திருமந்திரத்தின் சாரதமம் தர்சிப்பிக்கிறார் )வேத சார உபநிஷத் என்றது-பூர்வ பாகத்தில் சாரமான வேதாந்தம் என்ற படி-அயதார்த்த பிரதி பாகம் ஆகையாலே அசாரமான பாஹ்ய சாஸ்திரங்கள் போல் அன்றிக்கே யதா பூத வாதியாய் இருந்ததே ஆகிலும் சேன விதி முதலாக ஜியோதிஷ்டோஹமாதிகள் ஈறாக ஐகிக பாரலௌகிக புருஷார்த்த சாதனங்களை பிரதி பாதிக்கிற பூர்வ பாகம்-சூத்திர புருஷார்த்த தத் சாதனம் பிரதி பாதம் ஆகையாலும் சாஸ்திர ஆஸ்திக்யம்–பிரகிருதி ஆத்மா விவேகம் ..இவற்றை பிறப்பிக்கும் மாத்ரம் ஆகையாலும் அல்ப சாரமாய் இருக்கும்-அங்கன் இன்றிக்கே அனந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஸ்வரூபாதி களையும் — தத் பிராப்தி சாதனத்தையும் –பிரதி பாதிக்கையாலே உபநிஷத் பாகம் சாரமாய் இருக்கும்--அது தன்னிலும் அவ் உபநிஷத்துகளில் சொல்லுகிற-பர ப்ரஹ்ம பர தத்வ பரம் ஜோதி பரமாத்மாதி சாமான்ய வாசி சப்தங்களாலும் விசேஷ வாசியான சம்பு சிவாதி சப்தங்களாலும் பிரதி பாடுகிறவன் நாராயணனே என்று பகவத் பரத்வத்தை ஸூஸ் ஸ்பஷ்டமாக பிரதி பாதிக்கிற அநந்ய பரமான நாராயண அனுவாகம் சார தரமாய் இருக்கும்--அது தன்னிலும் காட்டிலும் சர்வ ஸ்மாத் பரதத்வத்துக்கு பிரதான லிங்கமான அவனுடைய சர்வாந்தர ஆத்மவத்தை பிரகாசிப்பதாய் அவ் வியாபகமான சகல பகவன் மந்த்ரங்களிலும் ஸ்ரேஷ்டராயிருக்கிற வியாபக மந்திர த்ரயத்தையும் பிரதி பாதிக்கிற விஷ்ணு காயத்ரி சார தமமாய் இருக்கும்- -இப்படி உள்ள காயத்ரியிலே வியப்யாத்யஹாராதி சாபேஷமான வியாபகாந்தரங்களில் வ்யாவிருத்தம் ஆகையாலே – (எவற்றை வியாபிக்கிறார் -எத்தாலே வியாபிக்கிறார் என்று ஸ்பஷ்டமாக இல்லாத விஷ்ணு போல் இல்லாமல் – வாசுதேவாயா என்பதை போலே அத்யாஹாரம் பண்ண வேண்டாதே) நாராயணாய வித்மஹே-என்று ஆதரம் தோற்ற பிரதமத்திலே ஓதப் படுகிற – ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே – மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -என்கிற படியே வேதாந்த தாத்பர்யமாய் – ரூசோ யஷும்ஷி சாமானி ததைவா தர்வணா நிச , சர்வம் அஷ்டாஷர ஆந்தச்தம்-என்கிற படியே சகல வேத ஸங்க்ரஹமுமான -திரு மந்த்ரத்தை-
வேதஸாரோபநிக்ஷத் – (”அஸாரமல்பஸாரஞ்ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத் | பஜேத் ஸாரதமம் ஸாஸ்த்ரம் ரத்நாகர இவாம்ருதம்” ( )) அயதர்த்த,ப்ரதிபாத,கங்களான பாஹ்ய ஸாஸ்த்ரங்கள் அஸாரமாய், புத்ர பஸ் வந்நாத்,ய ஐஸ்வர்யஸாத,நத்தையும், ஸ்வர்க்க,ஸாத,ந ஜ்யோதிஷ்டோமாதி, களையும் விதிக்கிற முகத்தாலே ஸாஸ்தராஸ்திக்யம் ப்ரக்ருத் யாத்ம விவேகம் இவற்றைப் பிறப்பிக்கையாலே வேதத்தில் பூர்வபாகம் அல்ப ஸாரமாயிருக்கும். இங்ஙனன்றிக்கே அநந்த ஸ்திர பல ப்ரஹ்மோபபாதநமான உபதிஷத பாகம் ஸாரமாயிருக்கும்-அந்த உபநிஷத்துக்களிலும் சொல்லுகிற “பரம் ப்,ரஹ்ம பரம் ஜ்யோதி: ‘” இத்யாதி, ஸாமாந்ய வாசக ஸப்,த,ங்களாலும், விஸேஷ வாசியான சம்பு,சிவாதி ஸப்,த,ங்களாலும்,ப்ரதிபாதி,க்கப்படுகிறன் நாராயணனே என்று சொல்லுகிற நாராயணாநுவாகம் ஸார தரமாய், அதில் வ்யாபக த்ரயத்தையும் ப்ராதாந்யேந ப்ரதிபாதிக்கிற விஷ்ணு காயத்ரியில் ப்ரதமோபாத்தமான நாராயண ஸப்,த,ம் ஸார தமமாகையாலே ““ஓத்தின் பொருள் முடிவுமித்தனையே – மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு! (இர, திருவ. 39) என்கிறபடியே வேதாந்த தாத்பர்யமாய், “ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவா தர்வணாநி ச ” (வரு. ஹா.) என்று இத்யாதி,களில் சொல்லுகிறபடியே ஸகல வேத ஸங்க்ரஹமுமாய், ஸகலார்த்த,ப்ரகாஸகமுமாய் ஸர்வேஸ்வரன் தனக்குத் திருநாமமான திருமந்தரத்தை
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-அமைய -பொறுக்க பொறுக்க-தன் குண சேஷ்டிதங்களை அனுபவிப்பித்தவன் –தன் படிகளை ஒரு காலே காட்டில் குளப் படியில் கடலை மறுத்தால் போலே இவருடைய ஆஸ்ரயம் சிதிலமாம்-இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்ற போதே வீற்று இருந்து ஏழு உலகை அனுபவிப்பித்தால் இவரை கிடையாது என்று இறே இவ்வளவும் கொண்டு போந்தது –
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39-வேதத்தின் யுடைய அர்த்தம் எல்லாத்தாலும் கூட தாத்பர்யமாக நினைத்துத் தலைக் கட்டின அம்சம் – நான் சொல்லப் புகுகிற இவ்வளவே – வேதைஸ்ஸ சர்வை அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15–உத்தமன் பேர்–திரு மந்த்ரம் –-அவன் பக்கலிலே சர்வார்த்தமும் யுண்டானாப் போலே அதன் பக்கலிலே சர்வ சப்தமும் யுண்டு-சர்வம் அஷ்டாஷராந்தச்தம் -ஹாரீத ஸ்ம்ருதி -3-45- ஒமிதீதம் சர்வம் -அகாரோவை சர்வா வாக் –அந்த அப்பரப்பு எல்லாவற்றாலும் கூட சங்ஷேபித்ததாய் யற்ற பொருள் ஸ்ரீ யபதியுடைய திரு நாமத்தைச் சொல்லுகையே –மாதவன் –
நிரூபக தர்மம் -அவன் பிரசாதம் அடியாகப் பிறந்த ஜ்ஞானம் யுடையார் சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் – பகவத் பிரசாதத்தாலே அவனைக் கண்ட என்னை விஸ்வசியுங்கள்-இத்தைச் சுருக்கு என்கையாலே நன்றதனை மாட்டீரேல் -என்ற இடத்திலும் பரப்பு எல்லாவற்றையும் நினைத்துச் சொல்லுகிறது –
தெய்வ வண்டு இத்யாதி
வேத சாரமாய்-தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திரு நாமம்- என்னும் படி இருக்கிற இத்தை வேதத்தில் நின்றும் அவன் கிரஹிக்கிற போது கிரஹித்த பிரகாரத்தை த்ரி பிரகாரமாக வர்ணித்து அருளிச் செய்கிறார்–அதாவது-தூவி அம் புள் உடை தெய்வ வண்டு—திருவாய் -9-9-4- ஆகையாலே -ஷட் பதமானது சாகா சஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமா போலே ,(விபீஷணன் இடம் நம்பிக்கை ஆகிற தேன்-விதுரர் இடம் -பரதன் இடம் பாரதந்த்யம் –இத்யாதிகளை கிரஹித்து திருமந்த்ரார்த்தம் தானே திருவாய்மொழி ) சார பூத சமஸ்தார்த்த போதக தயா சர்வ ரசமான தேன் போலே இருக்கிற
இத்தை வேத சாகைகளிலே தேனை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்- –அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் -பெரிய திருமொழி-5-7-3–என்கிற படி ஹம்ச ரூபியானவன் ஆகையாலே அன்னமானது நீரிலே கலந்து கிடக்கிற பாலை விவேகித்து எடுக்குமா போலே-நானும் சொன்னேன் நமரும் உரைமின்-பெரிய திருமொழி -6-10-6- -என்னும் படி இருக்கையாலே (ரிஷிகளும் சொன்னார்கள்-மற்றைய ஆழ்வார்களும் சொன்னார்கள் -நானும் உம்மைத் தொகை ) சர்வாதிகாரமான பால் போலே இருக்கிற இத்தை-ஓதம் போல் கிளர் வேத நீரனே-திருவாய் -1-8-10- பாலை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்- –அமுதம் கொண்ட பிரான்–பெரிய திருமொழி -6-10-3–என்கிற படியே அசுர பய பீதராய் அமரத்வ சாபேஷரான தேவர்கள் உடைய ரஷணார்த்தமாக விலஷண போக்யமாய் , விநாச ஹரமும் ஆகையாலே ,அமிர்தம் போல் இருக்கிற இத்தை-நால் வேத கடலிலே அமிர்தத்தை –பெரியாழ்வார் திருமொழி -நாலாம் பத்து கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும் சொல்லுகிறது –
ஷட்பத,மானது ஸாகா ஸஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமாப் போலே தூவியம்புள்ளுடைத் தெய்வ வண்டானவன் ஸாகைகளில் ஸாரரூபமான திருமத்த்ரத்தை எடுத்தும், –அன்னமாய் அன்றங்கருமறை பயந்தான்” (திருமொழி 5 – 7 – 3) என்கிறபடியே அன்னமானது நீரிலே பாலை எடுக்குமாப் போலே கிளர்வேதநீரிலே ஸாரமான திருமந்த்ரத்தை எடுத்தும்–அநந்தரம், ““பேணான் வாங்கி அமுதங் கொண்ட ” (திருமொழி 6 – 10 – 3) என்கிறபடியே ஸ்வேந ரூபேண, அஸூர பய பீதரான தேவர்களுடைய ரக்ஷணார்த்தமாக க்ஷீராப்தியை மதித்து அம்ருதத்தை எடுத்தாப் போலே ஸம்ஸார பய பீ,தரான சேதநருடைய ரக்ஷ்ணார்த்த,ம் ”நால்வேதக்கடலமுது?’ (பெரியா. தி. 4 – 3 – 11) என்கிறபடியே நாலு வகைப்பட்ட வேதத்திலும் ஸார பூ,தமான திருமந்த்ரத்தை எடுத்தும்–
கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6-எனக்கு சர்வ வித போக்யமுமான-ஸ்ரீ யபதி உடைய திரு நாமத்தை – மிதுனமான வேஷமே காணும் இவர்க்கு ரசிப்பது –-ரமா மாணா வநே த்ரய -என்னுமா போலே –இதர விஷயங்களின் உடைய பேரைச் சொல்லிப் போந்த நானும் அன்றோ சொன்னேன் – இனி இது கண்டால் எல்லார்க்கும் சொல்லத் தட்டில்லை இறே-என்னோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் இத்தையே சொல்லிப் போருங்கோள் –நமக்கு வகுத்ததையே சொல்லிப் போருங்கோள்-
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4—பெரிய திருவடியை யுடைய-தெய்வ மாகிற வண்டாலே ஆத்தசாரமான என்னுடைய பெண்மையாகிற பூ -ஏவம் விதமாய் ஏவம்விதமாய் நலிவு படா நின்றது –படுக்கை பாதகம் ஆனவாறே புறம்பே புறப்பட்டாள் -ஸ்வரூப அனுபந்தியான ஸ்த்ரீத்வம் சிதிலமாகத் தொடங்கிற்று —தூவி -சிறகு –அழகிய சிறகை யுடையனாய் தர்ச நீய வேஷமான பெரிய திருவடியுடைய முதுகிலே வந்தாயத்து ஸ்த்ரீத்வத்தை அழித்தது -கருட வாஹனன் இறே பரதேவதை யாவான் –இது என்கிறது -ஸ்த்ரீத்வம் அழிந்த படி பேச்சுக்கு நிலம் அல்ல என்கிறது
மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும்
துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள் நிறம் கெட ஒரு நாள்
அன்னமாய் அன்று அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-3—தன்னைப் பேணாதே
கேட்கிறவனுக்கு ஆச்சார்ய அநுவர்த்தனம் பண்ண வேண்டுகிறதோ -என்று கூச வேண்டாத வடிவைக் கொண்டு-தன்னைப் பெறிலும் பெற ஒண்ணாத வேதங்களை வெளியிட்டவன் –அரங்க மா நகர் அமர்ந்தானே –அன்று பிரமாணத்தை வெளி இட்டுத் தந்தவன் இன்று பிரமேய பூதனான தன்னை
வெளி இட்டுக் கொண்டு வந்து கண் வளர்ந்து அருளினான் –
நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரனே —1-8-10-இவனுடைய இப்படிகளைச் சொல்லப் புக்கால் கடல் கிளர்ந்தால் போலே கிளரா நின்றுள்ள வேதத்தாலே ப்ரதிபாதிக்கப்பட்ட நீர்மையை உடையவன் -நீர்மை யாகிறது ஆர்ஜவ குணம் –
பூணாது அனலும் தறு கண் வேழம் மறுக வளை மறுப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே-6-10-3-கடலைக் கடைந்து
அம்ருதத்தை வாங்கி அதைப் புஜிப்பாருக்கு வரக் கடவ ப்ரீதி தனக்கு உண்டாகும் படி இருந்தான்
அதுக்கடி என் என்னில் சர்வேஸ்வரன் ஆகையாலே –திரு மார்வன்- பஸ்யதாம் சர்வ தேவா நாம் -என்கிறபடியே பிராட்டியை திரு மார்விலே உடையவனாய் இருக்கிறவன் – (பெண்ணுக்கு பெண் கோஷ்ட்டியில் வெட்கப்பட வேண்டாமே அமுதினில் வரும் பெண் அமுது கொண்டானே )
ஆக-இப்படி வேத சாராமான இத்தை ஸ்வயமேவ எடுத்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் -வதரி யாஸ்ரமத்து உள்ளானே–பெரிய திருமொழி -1-4-4 -என்கிற படியே நித்ய ஸூரிகளுக்கு போக்யமாய்-பரம ஆகாச சப்த வாச்யமான பரம பதத்தை கொடுப்பதான
நிர்ஹேதுக கிருபையால்-நர நாராயணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்-பெரிய திருமொழி -10-6-1- என்கிற படியே ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண அவதரித்து
தானே சிஷ்யனுமாய் ஆச்சர்யனுமாய் நின்று ஸ்வரூப சாஸ்திரம் சங்குசிதம் ஆகாமல் –சிங்காமை -சுருங்கி விடாமல் –உபதேச அனுஷ்டாங்களாலே வித்ருதமாம் படி பண்ணிற்று-அறக் கற்கை அரிது என்று இறே -என்றதோடு அன்வயிக்கிறது–
ஆக, ஸர்வ ரஸமுமாய் ஸர்வாதிகஸத்யத்தையும் தருமதான “தேனும் பாலும் அமுதுமாய திருமால் திருநாமம் -(திருமொழி -6-10-6) என்கிற திருமந்திரத்தை —அமரர் பெரும் விசும்பருளும் பேரருளாளன் ”’ திருமொழி 1 – 4.4) என்கிற பெரும் விசும்பான பரமபதத்தைக் கொடுப்பதான நிர்ஹேதுக க்ருபையாலே ““‘நரநரரணனாய் உலகத் தற நூல் சிங்காமை விரித்தவன்’‘ (திருமொழி 10 – 6 – 1) என்கிறபடியே ஸ்ரீபதரி காஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண வந்து அவதரித்து ஸ்வரூப ஸாஸ்த்ரம் மடங்காதபடி விஸ்தரித்தருளினது அறக்கற்கை அரிதென்றிறே – இத்தைக் கொண்டு அந்வயிப்பது-
துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு
பிணி யொழித்தமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான்
அணி மலர்க் குழலாரரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே —1-4-4-நம் விரோதியையும் போக்கி பரம பதத்தையும் நமக்குத் தரும்-ஒரு கால் ஆஸ்ரயித்த மாத்ரத்திலே
நம் விரோதியைப் போக்கி நித்ய சூரிகள் இருப்பை நமக்கு பண்ணித் தரும் பரம க்ருபாளானவன் சர்வேஸ்வரன்-(எளிமையும் பரத்வமும்)
எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6-1-நர நாராயண ரூபியாய்க் கொண்டு லோகத்திலே அற நூல் உண்டு – ஹிதானுசாசனம் பண்ணப் போந்த வேதம் – அது சிங்காதபடியாக-அது சங்குசிதம் ஆகாமே விஸ்த்ருதமாம் படி பண்ணிணவனே – உபதேசத்தாலும் அனுஷ்டானத்தாலுமாக விஸ்த்ருதமாம் படி பண்ணினான் –ஹித அனுசானாம் வேத சாரம் திரு மந்த்ரம் நாராயணனாய் விரித்தால் போதாதோ என்ன
நரனாயும் -என்றது –உபதேசம் அனுஷ்டானம் இரண்டுக்காகவும் – சிஷ்யர் இருப்பு நாட்டார் அறியாமையால் -அனுஷ்டித்துக் காட்டி அருளினான் என்றவாறு
–——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply