ஸ்ரீ திருவாய் மொழி தனியன்-5-வான் திகழும் சோலை-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால்
வளர்த்த இதத்தாய் இராமானுசன்
-ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

இனி இதில் திருவாய் மொழியினுடைய உத்பாதகரையும் வர்த்தமானரையும் -சொல்லுகிறது

வான் திகழும் சோலை -ஆவது-ஆகாசத்திலே திகழ்கிற பிரகாசிக்கிற சோலை என்றபடி –
வ்ருஷ ஷண்ட மிதோ பாதி –
வான் ஏந்து சோலை
சோலை அணி –திருவரங்கம் இறே –

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே–14–சோலை அணி திருவரங்கம் –சோலையை ஆபரணமாக உடைத்தான கோயில் -என்னுதல் –சம்சாரத்துக்கு ஆபரணமான கோயில் -என்னுதல்

மதிள் அரங்கர்
திண் கொடி மதிள் சூழ்

மதிள் திருவரங்கம் –7-2-3-
அதுவும்-வானை யுந்து மதிளாய் இருக்கை – -9-10-4-

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்; வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3–ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் பெறாதார்க்கும் உன்னைக் கொடுத்து அருள கடவதானமை தெரியும் படி கொடி கட்டிக் கொண்டு அன்றோ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது–திண்ணிய மதிள் என்னுதல் -திண்ணிய கொடி என்னுதல் -அவிழ்த்துக் காட்டாத கொடி என்கை -வருவோர் எல்லாரும் வாருங்கோள் -என்று உறுதியாக கொடி கட்டிக் கொண்டு அன்றோ கிடக்கிறது

வான் திகழும் சோலை
உயர்ந்த சோலையையும் மதிளையும் யுடைய கோயிலிலே நிரூபகமான பெரிய பெருமாளுடைய –
ஸ்லாக்யமான கல்யாண குண விஷயமாய் விஸ்திருதமாயிற்று ஆயிரம் திருவாய் மொழியும்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம்
–7-2-11-என்னக் கடவது இறே

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-காளமேகம் போன்று மிக்க பேரெழிலை யுடையரான பெரிய பெருமாள் விஷயமாக -பெரிய பெருமாள் திருவடிகளிலே யாயிற்று ஆயிரமும் சொல்லிற்று -திரு மோகூர்க்கு ஈத்த பத்து -திரு வேங்கடத்துக்கு இவை பத்து -என்றும் பிரித்துக் கொடுத்த அத்தனை -திருப் பலகையில் அமுது படியில் திருப் பதிகளில் நாயன்மார்க்கு அளந்து கொடுக்குமா போலே -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

அது தான்
சீர்த் தொடை ஆயிரம்
–1-2-11- என்று சீர் கலந்த சொல்லாய் இறே இருப்பது –
நலமுடையவன் –1-1-1-
ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10-என்று உபக்ரமித்து
வாழ் புகழ் நாரணன் –10-9-1-என்று இறே தலைக்கட்டி அருளினார் –

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே
 –1-2-11-சீர் என்று கவிக்கு உறுப்பான அலங்காரங்களைச் சொல்லுதல்-பகவத் குணங்களைச் சொல்லுதல்-எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை’ பா இனம் – என்று கவிக்கு உறுப்பாக இருப்பன சில உள; அவற்றைச் சொல்லுதல்;-அன்றிக்கே , உபாசகன் அனுக்ரஹத்தாலே – உபாஸ்யனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்த ஆயிரம் என்னுதல்.

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-உயர் – -உயரா நிற்கை-கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் அவ்வருகாய்க் கொண்டு வாக் மனஸ் அங்கங்களால் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை-அனுபூத அம்சம் அல்பமாய் அனுபாவ்ய அம்சமே விஞ்சி இருக்கை-நலம்-குண விபூத்யாதிகளை அனுபவிக்கையால் வந்த ஆனந்த குணம் – ஏக வசனம் ஜாத்யபிப்ராயமாய் -குண ஜாதி பரமாகவுமாம்- ஆனந்த அவஹமான குண விபூத்யாதி பரமாகவுமாம்-நலம் என்கையாலே -கட்டடங்க நன்மையேயாய் இருக்கைஉடையவன் ஆதந்துகம் அன்றிக்கே ஸ்வரூப அனுபந்தியாய் இருக்கை-இதுக்கு ஆளவந்தார் -ஸ்வா பாவிக அநவதிக அதிசய கல்யாண குண கண -என்று அருளிச் செய்வர்-குத்ருஷ்டிகளை மிடற்றை பிடித்தால் போலே நலமுடையவன் என்று ஆழ்வார் அருளிச் செய்த படி கண்டாயே -என்று பிள்ளை பிள்ளை ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்தான் –

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
 –1-2-10-அசங்க் யேயமாய் அபரிச்சின்னமான கல்யாண குணங்கள் என்ன -இவற்றை யுடையன் ஆகையால் –நாராயண சப்த வாச்யனான ஸ்வாமியினுடைய-ஈறு இல’ என்பதனை ‘ஈறு இலவான ஒண் பொருள்’ என்றும்,-‘ஈறு இலவான வண் புகழ்’ என்றும் அன்வயித்துக் கிடக்கும்-ஈறு இலவான ஒண் பொருளையும், ஈறு இலவான வண் புகழையும் உடையன் ஆகையாயிற்று-‘நாராயணன்’ யாகையாகிறது –பாவத்க மங்கல குணா ஹாய் நிதர்சனம் ந -( ‘தேவரீருடைய குணங்கள் அன்றோ எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றன?’ )என்கிறபடியே,
தன்னுடைய கல்யாண – நற்குணங்களைப் போன்று, இவ் வுயிர்களும் நித்தியமுமாய்ப் பிரகாரமுமாய் இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி. குணங்களை நிதர்சனமாகச் சொல்லிற்று –
ஆக, நித்தியரான த்ரிவித -மூவகைப்பட்ட சேதனரையும், நித்தியமான கல்யாண குணங்களையும் உடையவன் நாராயணன் என்பதாயிற்று. 

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-ஆஸ்ரிதரை வாழும் படி பண்ண வற்றான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன்

பெரிய பெருமாள் தான் நலம் திகழ் நாரணன் –பெருமாள் –10-11- இறே –
நாராயண பரம் ப்ரஹ்ம
நாராயணா பரா வேதா
–என்னக் கடவது இறே —
அத்தாலே –மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்-என்கிறது –

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே–10-11–-அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –-ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –

நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர: நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண: பரநாராயண பரோ த்யாதா த்யானம் நாராயண பர:–நாராயண ஸூக்தத்தில் (யஜுர் வேதம்)-நாராயண பரம் ப்ரஹ்ம: நாராயணனே முழுமுதற் கடவுள் (பரம்பொருள்).-எல்லாவற்றிற்கும் மேலான உயர்ந்த உண்மை அல்லது தத்துவம் நாராயணனே.-நாராயண பரோ ஜ்யோதி: நாராயணனே எல்லாவற்றிற்கும் மேலான ஒளி.-ஆத்மா நாராயண: பர: அனைத்து உயிர்களுக்கும் உள்ளே இருக்கும் ஆன்மாவும் நாராயணனே-நாராயணனே தியானம் செய்பவர்களுள் சிறந்தவர். நாராயணனே சிறந்த தியானம்.-யச்ச கிஞ்சிஞ்-ஜகத் சர்வம் த்ருஷ்யதே ஷ்ரூயதே அபி வா | அந்தர் பஹிஷ்-ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணா: ஸ்தித: ||-யாக்க கிஞ்சித் (அதெல்லாம்) ஜகத் சர்வம் (உலகம் முழுவதும்) த்ருஷ்யதே (அது
பார்த்தது) அபி வா (அல்லது உள்ளது) ஷ்ரூயதே (கேட்டது), நாராயணா: (ஸ்ரீமன் நாராயணா)
ஸ்திதா: (நின்று) வ்யாப்ய (வெளிப்படுத்துதல்) தத் சர்வம் (அனைத்தும்) அந்த:
(உள்ளே) பஹிஷ்-சா (மற்றும் வெளியே).-இந்த ஸ்லோகம் மீண்டும் ஸ்ரீமன் நாராயணனின் ‘விஸ்வத்வத்தை’ வலியுறுத்துகிறதுஅனந்தம் அவ்யாயம் கவீம் சமுத்ரே-அந்தம் விஷ்வஷம்புவம் |
பத்மகோஷ-ப்ரதீகாஷம் ஹৃதயம் சாப்யதோமுகம் |
|-அனந்தம் (முடிவற்றவர்) அவ்யயம் (மற்றும் அழிவற்றவர்) கவிம் (மற்றும் ஒரு கவிஞர், எல்லாம் அறிந்தவர்) சமுத்ரே (கடலில் இருப்பவர்) அந்தம் (மற்றும் உள்ளே இருப்பவர்) விஷ்வ – ஷம் – புவம் (யார் உலகமனைத்துக்கும் நல்வாழ்வை (ஷம்) அளிக்கிறாரோ – நான்) அந்த நாராயணனை தியானியுங்கள்). ஹ்ருதயம் கா அபி (இதயம் இது) அதோ-முகம் (முகம் குனிந்து) பத்மகோஷ-பிரதீகாஷம் (தாமரை மொட்டு போல் தன்னை வெளிப்படுத்துகிறது).

இனித்தான்
திருவாய் மொழி பத்துப் பத்தாலும் ப்ரதிபாதிக்கிற
1-பரபரன் –1-1-8- என்கிற பரத்வமும்

2-சோராத எப்பொருட்க்கும் ஆதி -2-1-11-என்கிற காரணத்வமும்

3-முழுதுமாய் முழுதியன்றாய் –3-1-8-என்கிற வியாபகத்வமும்

4-மறுகல் ஈசன் –4-1-10- என்கிற நியந்த்ருத்வமும்

5-ஆவா என்று அருள் செய்து -5-1-6- என்கிற காருணிகத்வமும்

6-ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் –6-1-10-என்றும்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரண் –6-3-7-என்றும் – சொல்லுகிற சரண்யத்வமும்

7-எண்ணிலாப் பெரு மாயன் –7-1-1- என்கிற சக்தி மதத்வமும்

8-தேவிமார் ஆராவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் –8-1-1- என்கிற ஸத்ய காமத்வமும்

9-எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் –9-1-1-என்கிற ஆபத் ஸகத்வமும்

10-சுரி குழல் கமலக் கட் கனிவாய்க் காள மேகம் –10-1-1-என்ற ஆர்த்தி ஹரத்வமும்

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே 
–1-1-8-அவன் காட்டின வழியாலே ஏகதேச சிருஷ்டியையும் ஏக தேச சம்ஹாரத்தையும் பண்ணுகையாலே அஸ்மத் தாதிகளைக் காட்டில் பரராய் இருக்கிற ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு நிலம் அல்லாத சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகையாலே அவர்களுக்கும் பரன் 

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-இப்படி இவரோடு கலந்து இவரை உளர் ஆக்குகையாலே ஓன்று ஒழியாதபடி சகல பதார்த்தங்களும் ஈஸ்வரனுமாய்
சோதிக்கே--முக மலர்த்தியும் தன்னைத்தான் படி இருந்தான்-இவர் ஒருவரையும் சோர விட்டான் ஆகில் சர்வ சேஷி யாக மாட்டானே-நிரவதிக தேஜோ ரூபமான விகிரஹத்தை உடையானான் என்றுமாம் –
சர்வ ரக்ஷகத்வம் நிலை நின்றது-வடிவு அழகும் புதுக் கணித்தது

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8–அனுக்தமான குண விபூதி யாதிகளை உடையையாய் எல்லா வற்றையும் நிர்வஹிக்கிறவனே –ஜகச் சரீரனாய் நிற்கும் நிலை
வரம்பின்றி முழுதியன்றாய் -என்றதன் அனுவாதமாய் எல்லாவற்றையும் நிர்வஹித்தாய்
என்றபடி –

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-ஹேய ப்ரத்ய நீகனாகவும் ஞான ஏக ஆகாரகனாகவும் அனுசந்தித்து அவனோடு சஜாதீயனாகவும் ஆத்மாவை அனுசந்தித்து
மறுகல் இல்-மறுகுகிற சமயத்தில் -சரீர விஸ்லேஷ சமயத்தில் என்னவுமாம் -இப்படி துஸ் சாதகம் ஆகையால் -ஈஸ்வர சாபேஷம் யாகையாலும் -பகவத் அனுபவத்தை குறித்து தண்ணிது யாகையாலும்
தண்ணிது ஆனது தானே ஸ்த்திரம் ஆகையால் மிகவும் அபுருஷார்த்தம் ஆகையால் -அபிராப்த புருஷார்த்தம் ஆகையால் அண்ணல் கழல்கள் குறுகுமினோ -என்று கீழ்ச் சொன்ன கைங்கர்யமே புருஷார்த்தம் –மறுகல் இல் ஈசனைப் பற்றி -அந்திம ஸ்மிருதி பண்ணி சரீரத்தை-விடாவிடில் பின்னும் வீடு இல்லை – இந்திரிய நியமனம் முதலானவைகள் உண்டாய், பின்பு பகவானை வழிபட்டுக்
கர்மங்களை எல்லாம் அழித்து, ஆத்துமாவைக் காண வேண்டும் என்று இருக்கின்ற அன்றும், சர்வேசுவரன் பக்கல் அந்திம ஸ்மிருதி பண்ணி இச்சரீரத்தை விடுவதற்குப் பாரானாகில்,
அந்த மோக்ஷந்தான் இல்லை.-எதோ உபாசனம் ததோ பலம் -விருப்பம் இல்லாதவனுக்கு கொடுக்கக் கூடாதே –-அண்டாதிபதே -சொல்லி ஐஸ்வர்யம் பெற்று போவான் –-அசுத்த சரீரம் -கர்மா தீனம் இல்லாமல் -சுத்தன் என்றே உபாசித்து -கைவல்யம் பெற்று போவான் –-அவன் அழகை அனுசந்தித்து -பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம் பெற்று போவோம் – உபாசனம் ஆபிராணாத்- இதற்கு சாஸ்திரம் அந்திம ஸ்ம்ருதி -விதிக்கிறதே –-மறுகல் இல் ஈசனை – குற்றங்கட்கு எதிர்த்தட்டான சர்வேசுவரனை,
அன்றிக்கே,-‘மறுகலில் –-சப்தமி -ஏழாம் வேற்றுமை – மறுகுகிற சமயத்தில்; உயிர் நீங்குங் காலத்தில் வருகின்ற கலக்கத்தில்’ என்னுதல்.-ஈசனைப் பற்றி விடாவிடில் – பற்றாமல் இருந்தாயாகில் என்றபடி –
அந்திம ஸ்மிருதி இல்லையாகில் ஆதி பரதனைப்போலே மான் ஆதல், மரை ஆதல் ஆமித்தனை.
அஃதே வீடு – ‘திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று நான் சொல்லுகிற அதுவே புருஷார்த்தம். பன்னீராயிரப்படி மட்டும் -அவனைப் பற்றி பிரயோஜ நாந்தரம் பெற்று விடா விடில் -அஃதே வீடு –

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய உறுப்புகளோடும் அவ் வுறுப்புக்களில் சேர்ந்த திவ்விய ஆயுதங்களோடுங் கூட வந்து, ஐயோ ஐயோ என்று தன்னுடைய நிரவதிக கிருபையை பண்ணி –கேசவன் தமர் தொடங்கி-கிருபையை விதி சப்தத்தால் சொல்லிப் போந்தவர் -இப்பாட்டில் அருள் என்று வெளியிடுகிறார் –ஸ்வரூப அநு ரூபமாக சேஷியாய் வந்து கலந்தான் –

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் –ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் –-உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே
.–6-3-7-வரையாதே எல்லார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படியான ஸ்ரேஷ்டமான திருவடிகள்-சிறியோர் பெரியோர் என்று அன்றிக்கே எல்லார்க்கும் தஞ்சமான புகல் வேறு இல்லை –அல்லாதவை ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் கழுத்துக் கட்டியாய் இறே இருப்பது –

உண்ணி  லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-
எண்ணிலாப் பெரு மாயனே!-எண்ணிறந்த காரியங்களை விளைக்க வற்றாய் துஸ்தரமான பிரக்ருதியை யுடையவனே -நீ வேண்டாதாரை நலிகைக்கு ப்ரக்ருதியை உபகரணமாக யுடையவன் என்கை -மமமாயா துரத்யயா -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்று பிள்ளான் பணிக்கும் -என்னுடைய நோய்க்கும் உன்னுடைய குணங்களுக்கும் என்ன சேர்த்தி யுண்டு

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே8-1-1-தேவிமார் ஆவார் திருமகள் பூமி -அவர்கள்புருவம் நெளிந்த இடத்தே உனக்கு கார்யம் செய்ய வேண்டும் படி வல்லபைகளாய் இருக்கிறார் பிராட்டியாரும் ஆண்டாளும் -நகச்சின் நபாராத்யதி -என்று பொறைக்கு உவாத்தாய் இருக்கும் ஒருத்தி -பொறுப்பது எத்தை குற்றம் தான் உண்டோ -என்று அப் பொறை தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கும் ஒருத்தி -ஒருத்தி சம்பத்தாய் இருக்கும் -ஒருத்தி சம்பத்துக்கு விளை பூமியாய் இருக்கும் -அவர்கள் இருவரும் அருகே இருக்க நான் இழக்க வேண்டுகிறது என் என்ன
ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-அவனும் அவளுமான சேர்த்தியிலே எடுத்துக் கை நீட்டுவார் நித்ய ஸூரிகள்-ஏவ -கைங்கர்யம் உத்தேச்யமானவோ பாதி ஏவிக் கொள்ளுகையும் உத்தேச்யம் என்கை –க்ரியதாம் இதி மாம் வத –-மற்று -என்று துல்ய விகல்பத்தை யாயிற்று -திரு முலைத் தடத்தில் அணைந்தால் பிராட்டிமார்க்கு உள்ள இனிமை -அச் சேர்த்தியில் கைங்கர்யம் பண்ணப் பெறுகையாலே இவர்களுக்கு உண்டாம் -ரமமாணா வநேத்ர்ய -ஸ்வரூப அனுரூபமாய் இறே-ஸூ கங்கள் இருப்பது –அருளே -ப்ராப்ய ப்ராபகம் இரண்டும் ஒன்றே என்று இருப்பார்க்கு கார்யம் செய்யலாகாது என்கை –

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
10-1-1-சுரி குழல்–இவன் பின்னே வழியே போமிடத்து திருக் குழலை ஒரு கால் பேண நெடு நாள் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும் படி யாய்த்து இருப்பது –கேசவ கிலேச நாசன –-கமலக் கண் கனி வாய்-பந்தம் எல்லாம் தோற்றும் படியான நோக்கும் ஸ்மிதமும் இருக்கிற படி –சம்சாரத்திலே பொய்யருடைய நோக்கிலும் ஸ்மிதத்திலும் பட்ட நோவு எல்லாம் ஆறும் படி இறே இருப்பது –கச்சதாம் தூர  மத்வானம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம் -பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் –-காளமேகத்தை – -வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இறே இருப்பது -சர்வ கந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் –

ஆகிற அதில் பத்து அர்த்தமும் பெரிய பெருமாளைப் பிரதிபாதிக்கிற-கங்குலும் பகலிலும் –7-2- காணலாய் இருக்கும் –

1- வடிவுடை வானோர் தலைவனே -7-2-10-என்று பரத்வமும்

2-முன் செய்து இவ்வுலகம் -7-2-2- என்றும்
விண்ணோர் முதல் -7-2-6- என்றும்
காரணத்வமும்

3-கட்கிலி–7-2-3- என்றும்
என்னுடை ஆவி -7-2-9-என்றும் வியாபகத்வமும்

4- பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் –7-2-7–என்றும்
கால சக்கரத்தாய்–7-2-5- –என்றும்
மூ உலகாளி –7-2-10- என்றும்
நியந்த்ருத்வமும்

5- இவள் திறத்து அருளாய் –7-2-6–என்று காருணிகத்வமும்

6-பற்றிலார் பற்ற நின்றானே -7-2-7- என்று சரண்யத்வமும்

7- அலை கடல் கடைந்த ஆரமுதே –7-2-5- என்று சக்தி மத்வமும்

8-என் திருமகள் சேர் மார்பனே –என்றும்
நில மகள் கேள்வனே –என்றும்
ஆய் மகள் அன்பனே –7-2-9- என்றும்
சக்தியால் நித்யமாகக் கற்பித்த பத்நீ பரிஜா நாதிகளை யுடைய ஸத்ய காமத்வமும்

9- இவ்வுலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் -7-2-2- என்று ஆபத் ஸஹத்வமும்

10- முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் –7-2-11- என்று ஆர்த்தி ஹரத்வமும் அருளிச் செய்தார் இறே

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10–த்ரை லோக்ய நிர்வாஹனான இந்திரனுக்கு அந்தராத்மாதயா வாக நின்று அவனுடைய அதிகாரத்தை நடத்துவபனே என்னும் -ஐஸ்வர்ய ஸூ சகமான தாரையையும் -சாதகத்வ ஸூ சகமான ஜடையையும் உடைய ருத்ரன் அதிகாரத்தை அவனுக்கு அந்தராத்மாவாக நின்று நிர்வஹித்தவனே என்னும் -கடி கமழ்-பரிமளம் மிக்கு இருக்கை –சதுர்முகனான தேவதைக்கு ஆத்மாவானவனே என்னும் -உன்னோடே ஒத்த வடிவை யுடைய நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனே

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-ஜல ஸ்தல விபாகமற உபகரிக்கும் மேக ஸ்வ பாவனானவனே -நீ முகம் காட்டாது இருக்குமது அந்த யுபகாரத்துக்குத் தகுவதோ என்னும்–அந்த யுபகாரகத்வம் பலமாம்படி இந்த லோகத்தை பிரதமத்திலே ஸ்ருஷ்டித்து – பிரளயத்தில் உண்டு -உமிழ்ந்து -அந்நிய அபிமானம் போம்படி அளந்து கொண்டவனே–நிர் ஹேதுகமாக முன்பு ஜகத் ஸ்ருஷ்ட்டி யாதிகளைப் பண்ணினவன் அல்லையோ –ஸ்ருஷ்ட்டி யாதிகளில் யவ் கபத்யத்தை கர்ம அனுகுணம் என்ன ஒண்ணுமோ -அபு நா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தை பெறுகைக்கு அடியாய் இருபத்தொரு கனவியதொன்று சேதனன் தலையிலே கிடக்க வற்றோ –காரணம் ஒன்றும் இல்லாமலே முன்பு உலகத்தைப் படைத்தல் முதலானவைகளைச் செய்து ‘தகவிதோ’ என்கைக்கு ‘உபகரணம் இல்லாத அன்று இதனை உண்டாக்கி நோக்கினாய் நீ அன்றோ?’ என்றது, ‘கரண களேபரங்கள் இல்லாமல் கிடந்த இதனை வெறும் உன் கிருபையாலே உண்டாக்கினாய் இத்தனை அன்றோ?-உண்டாக்கிவிட்ட அளவையோ? பிரளய ஆபத்து வயிற்றிலே வைத்துப் பாதுகாத்து, உள்ளே கிடந்து நோவு படாதபடி புறப்பட விட்டு, எல்லை நடந்து மீட்டுக் கொண்டு, எல்லாவிதமான பாதுகாத்தலையும் செய்தாய் அல்லையோ!’ என்றபடி.

மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வைத்து ஆர்த்த ரக்ஷண அர்த்தமாக அன்றோ திவ்யாயுதங்களை தரித்தது -காணவே எதிரிகள் மண் உண்ணும்படியான திவ்யாயுதங்களை தரித்து இருக்கிற நீ என் விரோதிகளை போக்கி முகம் காட்டாது ஒழிவதே-திவ்ய ஆயுதங்கள் பகைவர்களை அழிப்பதற்கு உடலாக இருக்குமாறு போலே காதலிகளை அழிக்கைக்கும் உடலாக இருக்குமன்றோ உகப்பாரையும் உகவாதாரையும் ஒக்கத் தோற்பிக்குமவை? முன்னே கை கண்டு வைக்கிறவை அன்றோ?
காணவே பகைவர்கள் மண்ணுண்ணும்படியான திவ்ய ஆயுதங்களைத் தரித்திருக்கிற நீ
என் விரோதிகளைப் போக்கி முகங்காட்டாது ஒழிவதே!விண்ணோர் முதல் என்னும்- திவ்விய ஆயுதங்களினுடைய சேர்த்தியால் வந்த அழகினைக் காட்டி நடத்த, அதுவே ஜீவனம் ஆயிற்று அந்நாடு கிடப்பது. இல்லையாகில், அங்கே வினை உண்டாகத் தரித்திருக்கிறான் அன்றோ?

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்; வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-பாஹ்ய சஷூஸூக்கு அவிஷயமான நீ நான் உன்னைக் காணும் படி கிருபை பண்ணி அருள வேணும்-நசஷூஷா பஸ்யதி -என்கிறது தாம் தாமே காண இழிவாருக்கு –தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் –என்று அவன் தானே காட்டும் அன்று அவ்வருமை இல்லை -சிலருக்கு சதா தர்சனம் பண்ணைக் கொடுத்திலையோ – ‘கட்கிலீ! -கண்ணுக்கு இலீ என்றபடி -இப்படி அரிதான பொருளை நாம் சிலர்க்கு அருளிற்று உண்டோ என்ன-காகுத்தா! –ரூப ஓவ்த்தார்ய குணை பும்ஸாம் என்றும் ரூப சம்ஹ நனம் லஷ்மீம் என்றும் நாகரீகருக்கும் வான வாசிகளுக்கும் காட்டிக் கொடு திரிந்திலையோ-ஒரு கால் செய்தது கொண்டோ என்ன –-கண்ணனே!’ என்னும்;ஆயாந்தம் புண்டரீகாக்ஷம் வீக்ஷ மாணா குருஸ் த்த்ரிய-என்றும் தாஸாம் ஆவிர்பூத் என்றும் இடைச்சிகளுக்கும் அகப்பட காட்டிக் கொடு திரிந்திலையோ

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்; ‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9–இவளுடைய பிராணன் பஞ்ச வ்ருத்தியாய் அன்று இருப்பது -ஒரு மிதுனமாயிற்று இவளுக்கு பிராணன் –திருமகள் சேர்மார்பனாய்க் கொண்டு எனக்கு தாரகன் ஆனவனே என்னும் -இத்திருவாய்மொழி இயலைக் கேட்டருளாநிற்க, இப்பாட்டளவில் வந்தவாறே ‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச் செய்ய, அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச் செய்வர். ‘அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு, ‘இவர்க்குப் பகவானை அடைவது அணித்தாகிறதோ?’ என்று அஞ்சியிருந்தேன்,’ என்று சீயர் அருளிச் செய்வார்.-இவர்க்குப் பிரமாணம் ஒரு காற்று விசேடம் அன்று: ஒரு மிதுநமாயிற்று. ‘திருமகள் சேர் மார்பனாய்க் கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-இடம் அறிந்து ஸூக துக்கங்களை படைத்தவனே -பாலாவாக -ஸ்த்தாநே ஸ்த்தாநே யாக -பிரிந்தார் எல்லாரும் அனுபவிக்கும் இத்தை இவள் ஒருத்தியும் அனுபவிக்கப் பார்த்தால் இவளால் பொறுக்கப் போமோ -அங்கனம் இன்றிக்கே ஆஸ்ரிதர் வாழ்வும் அநாஸ்ரிதர் கெடும்படியாகவும் அன்றோ பண்ணி வைத்தது -தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்கு தீமைகள் செய்யுமவன் அன்றோ –பண்டு கட்டின மரியாதையும் இல்லையோ இவளுக்கு — பற்றிலார் பற்ற நின்றானே!–அபராதம் யாய் ஸூக்ருத லேசமும் இல்லாத ஜெயந்தன் போல்வார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி யன்றோ உம்முடைய நீர்மை –ச பித்ராச பரித்யக்த=–‘ஒரு கைம்முதல் இல்லாதார்க்காக அன்றோ இங்கு வந்து சாய்ந்தருளிற்று?
இந்தக் கிடை நித்திய ஸூரிகளுக்காகவோ? உம்முடைய பக்கல் பற்று அறுத்துக் கொண்ட
ஜயந்தன் போல்வார்க்கும் பற்றாய் இருக்குமவர் அன்றோ நீர்!’ ‘அந்தப் பெருமாளையே சரணமாக அடைந்தான்’ என்றே அன்றோ கூறுகிறது- ஸ்ரீராமாயணம்? ‘தமேவ ஸரணம் கத;’ என்பது, ஸ்ரீராமா, சுந். 38:34-கால சக் கரத்தாய்! -காலத்தை நடத்தும் திரு வாழி யை யுடையவனே -விஷயீ கரிக்க காலமாக வேணுமே என்னில் காலதத்வமும் நீ இட்ட வழக்கு அன்றோ என்றுமாம்–விஷயீ கரிக்க காலமாக வேணுமே என்ன –கால தத்வம் நீ இட்ட வழக்கு அன்றோ -ஆஸ்ரிதர்க்காக பகலை இரவாக்கினவன் அன்றோ -அங்கனம் அன்றிக்கே பிரதிபந்தகமும் உண்டு காணும் என்ன -ப்ரதி பஷத்துக்கு ம்ருத்யுவான திரு வாழி கையிலே இருக்க பிரதிபந்தகம் உண்டோ –தடைகளுக்குக் கூற்றுவனான திருவாழி அன்றோ நீ தரித்திருக்கிறது?’ என்னுதல்.-காலம் -கூற்று-(கால -காலம் என்றும் மிருத்யு என்றும் )

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10-த்ரை லோக்ய நிர்வாஹனான இந்திரனுக்கு அந்தராத்மாதயா வாக நின்று அவனுடைய அதிகாரத்தை நடத்துவபனே என்னும்-இதனை-‘மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச் சடையனே! நான்முகக் கடவுளே’ என்று சொல்லப்படுகிற, வடிவுடை வானோர்க்குத் தலைவனே!’ என்னும் என்று, திருமலை யாண்டான் வையதி கரண்யமாக்கிப் பொருள் நிர்வஹிப்பர்.- வானோர் வார்த்தை என்று-நிர்வஹிப்பர்‘–என்னும்’ என்பதற்கு ‘என்னுமவனாய்’ என்பது பொருள். (வானவர்கள் -தேவர்கள் மூவரையும் கொண்டாடும் படி -இங்கு லீலா விபூதி மட்டுமே )–இதனை எம்பெருமானார் கேட்டருளி,
ஸாமாநாதி கரண்யாத்தாலே அருளிச் செய்தருளினார்:-மூன்று உலகத்திற்கும் உரியனான இந்திரனுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்:
‘வாசனையை யுடைத்தான கொன்றையைச் சடையிலே யுடைய சிவபிரானுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்; ‘அவர்களோடு இவ்வருகுள்ளரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகனாயிருக்கிற நான்முகனாகிய தெய்வத்துக்கு அந்தர்யாமியானவனே!’ என்னும் என்று. வடிவுடை வானோர் தலைவனே என்னும்- பகவானுடைய அனுபவத்தால் வந்த உவகை வடிவிலே தோற்றும்படி இருக்கிற நித்திய ஸூரிகளுக்கு நாதனானவனே’ என்னும்.–வடிவுடை வானோர் தலைவனே!’ என்றதனோடு, ‘மூவுலகாளியே!’ என்றதனோடு, ‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்றதனோடு, ‘நான்முகன் கடவுளே!’ என்றதனோடு வாசியற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு:- புண்டரீகாக்ஷனே நால் தோள் அமுதே -போலே வேதாந்த வாசனை மாறாமல்
மயர்வற மதிநலம் பெறுகையாலே; விசேஷணாம்சத்தில் நிற்கின்ற வரல்லரே; சர்வ நிர்வாஹகன் என்று உணர்ந்திருக்குமவராயிற்று இவர்.
–மூ உலகு ஆளியே -பாட்டுத் தோறும் சம்போதானம் -வர வேண்டுமே – இந்திரன் என்று வானோர் சொல்வதாகக் கொண்டால் ரீதி பங்கம் வருமே – என்னும் -தாயார் அனுபாஷணம் பண்ண வேண்டுமே – திருமாலை ஆண்டான் நிர்வாகத்தில் லீலா விபூதி நாதத்வம் மட்டுமே வரும் -அதனால் எம்பருமானார் நிர்வாகம் ஸ்ரேஷ்டம்

மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-பாடோடிக் கிடக்கிற இவள் திறத்து-அருள் கொள்வார் தேட்டமான நீ அருள் பெற்றால் ஜீவிக்கும் இவளை இப்படி தறைக்கிடை கிடக்க இட்டு வைப்பதே-பாவியேன் செயல் இடத்தது-இவள் பக்கலிலும் குறை இல்லை -உம்முடைய பக்கலிலும் குறை இல்லை -இருவருமான சேர்த்திபெற இருக்கிற என் பாபம் இறே இதுக்கு ஹேது –மத்பாப மேவாத்ர நிமித்த மாஸீத்

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் ‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே! அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய் தானே!–7-2-5-அலை கடல் கடைந்த ஆர் அமுதே!-பிரயோஜனாந்தர பரருமாய் -ஈஸ்வர அபிமானிகளும் ஆனார்க்கு நிரதிசய போக்யமான வடிவைக் கொண்டு ஷூபிதமான கடலைக் கடந்தவனே-இவளுக்கு கடல் கடைய வேணுமோ -கடல் கடைந்த வடிவைக் காட்ட அமையாதோ-ஒரு பிரணயிநியை லபிக்கைக்கு பண்டு கடல் கடைந்தவன் அல்லையோ–உன்னைக் கொண்டு ஒரு பிரயோஜனம் கொள்வார்க்கோ உதவலாவது?-உன்னையே ‘பிரயோஜனம்’ என்றிருப்பார்க்கு உதவலாகாதோ?-ஆர் அமுதே ‑-இவருடைய அமுதத்தைக் கொண்டாயிற்று அவர்கள் கடல் கடைந்து.

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்; ‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்;

தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-என் என்கிற இடம்  திரு மகளில் அந்வயிக்கிறது -மார்பனே என்கிற இடத்தில் அந்வயிக்கிறது அன்று -எனக்கு ஸ்வாமி நியான பிராட்டியை திரு மார்பிலே யுடையவனே என்னா நின்றாள் -இவ்வதி பிராவண்யம் பிராட்டி அடியாக வந்தது என்கை–என்னுடைய ஆவியே!’ என்னும்;-இவளுடைய பிராணன் பஞ்ச வ்ருத்தியாய் அன்று இருப்பது -ஒரு மிதுனமாயிற்று இவளுக்கு பிராணன் –திருமகள் சேர்மார்பனாய்க் கொண்டு எனக்கு தாரகன் ஆனவனே என்னும் – ‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட-நிலமகள் கேள்வனே!’ என்னும்;-அழகுக்கு நின் திரு எயிறு என்னும் அத்தனை -நீ இடந்து கொண்ட –அந்த புரகார்யத்துக்கு ஆளிட ஒண்ணாதே -ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே என்னும் –
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட-ஆய்மகள் அன்பனே!’ என்னும்;-உன்னோடே சம்ச்லேஷிக்க வல்லனே என்று துளும்புகிற அன்று -ம்ருத்யு சத்ருசமான ருஷபங்கள் ஏழையும் தழுவி -உருவென்று -உருமு-இடி போலே பயங்கரமான ஏறு -அந்தரம் ஏழும் அதிரும் இடி குரல் -என்ன கடவது இறே -அவளை லபிக்கைக்கு நிமித்தம் ஆகையால் அவள் முலையிலே அணைந்தால் போலே இருக்கை -நப்பின்னை பிராட்டிக்கு ஸ்நிக்தனானவனே என்னும் –நீ கொண்ட -நீ கைக் கொண்ட – இத்தால் என் ஸ்வாமிநி களுக்கு உதவின நீ -அவர்கள் அடியேனான எனக்கு உதவாது ஒழிவதே என்னுதல் -பிரணயி யான என்னை நீ அங்கீ கரியாது ஒழிவான் என் என்னுதல்

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2–நிர் ஹேதுகமாக முன்பு ஜகத் ஸ்ருஷ்ட்டி யாதிகளைப் பண்ணினவன் அல்லையோ –ஸ்ருஷ்ட்டி யாதிகளில் யவ் கபத்யத்தை கர்ம அனுகுணம் என்ன ஒண்ணுமோ -அபு நா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தை பெறுகைக்கு அடியாய் இருபத்தொரு கனவியதொன்று சேதனன் தலையிலே கிடக்க வற்றோ –காரணம் ஒன்றும் இல்லாமலே முன்பு உலகத்தைப் படைத்தல் முதலானவைகளைச் செய்து ‘தகவிதோ’ என்கைக்கு ‘உபகரணம் இல்லாத அன்று இதனை உண்டாக்கி நோக்கினாய் நீ அன்றோ?’ என்றது,
‘கரண களேபரங்கள் இல்லாமல் கிடந்த இதனை வெறும் உன் கிருபையாலே உண்டாக்கினாய் இத்தனை அன்றோ?-உண்டாக்கிவிட்ட அளவையோ? பிரளய ஆபத்து வயிற்றிலே வைத்துப் பாதுகாத்து, உள்ளே கிடந்து நோவு படாதபடி புறப்பட விட்டு, எல்லை நடந்து மீட்டுக் கொண்டு, எல்லாவிதமான பாதுகாத்தலையும் செய்தாய் அல்லையோ!’ என்றபடி.-

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11–பெரிய பெருமாள் திருவடிகளைக் கிட்டி அங்குத்தை பிரசாதத்தை பெற்று தரித்தவன் -பூர்வ அவஸ்தையில் சத்தையும் மேல் உள்ளவையும் அவன் அருளாலே யாய் இருக்கையாலே உய்ந்தவன் என்கிறது

ஆக -எல்லாவற்றாலும் –
மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்னத் தட்டு இல்லை இறே

ஆழ்வார்களில் நம்மாழ்வார் அதிகரானால் போலே
எம்பெருமான்களில் நம் பெருமாள் அதிகாரய் இறே இருப்பது
அத்தைப் பற்றவும் சொல்லிற்று –

இப்படிப் பெரிய பெருமாள் விஷயமாகவே ப்ரதிபாதித்த திருவாய் மொழியை
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்
நெடும் காலம் நோற்றுப் பெற்ற முந்தின மாதா ஆழ்வார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் —4-5-10–என்றார் இறே

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10—அடியார்க்கு திருவாய்மொழி பாடுகைக்கு பாக்யம் பண்ணினேன் –-வண்தமிழ்-ஆவது பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே ஸ்பஷ்டமாய் இருக்கை-சிர நிர்வ்ருத்தம் அப் யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம்–திருவாய்மொழி பாடுகைக்குப் பாக்கியம் செய்தேன். தன்னைச் சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பலன்களையும் கொடுக்கக் கூடியதான உதார குணத்ததாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது.-அன்றிக்கே.-இது முன்னே நடந்ததாயிருந்தாலும் இப்பொழுது நேரிற்கண்டது போல இருக்கின்றது,’ என்பது போன்று, லவ குசர்கள் பாட பாட நடந்த ராம சரித்ரம் மக்களுக்கு விளங்கினது போலே – பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே விளக்கமாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது என்னுதல். ‘கண்டவாற்றால்’ என்று நேரில் பார்ப்பதாய் இருக்கிறதே அன்றோ?

வருந்திப் பெற்ற பிள்ளையை வளர்த்து எடுக்கும் மாதாவைப் போலே திருவாய் மொழியை வளர்த்த இதத்தாய் –
வர்த்திப்பித்த மாதா -எம்பெருமானார் ஆயிற்று
ஞானக் கலையான -1-9-8- திரு வாய் மொழிக்கு ஜென்ம பூமி ஆழ்வார் -தத் வர்த்தகர் எம்பெருமானார் –
இப்படி யாயிற்று ஞான சந்தானம் வளர்த்தியோடே நடந்து செல்வது –

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து –பெரிய –8-9-7-என்னுமா போலே

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8—ஜிஹ்வாக்ரத்திலே விகசியா நின்றுள்ள வித்யாஸ் தலங்களுக்கு எல்லாம்–ஞான சாதனமான -ஞானத்திற்குக் கருவியான-வித்யா – கலை – விசேஷங்களுக்கு எல்லாம்.-

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை

முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே—8-9-7–பித்ராதிகள் ராகாந்தராய்
பிரஜைகளை உத்பாதித்து யௌவன விரோதி என்று பொகட்டுப் போக நிற்பர்கள் ஆயிற்று –
பின்னையும் இவனுக்கு ஒரு உறவு முறை ஒழிய செல்லாது இறே – பண்ணிப் போந்த வாசனையாலே
அவ்வளவில் அவர்கள் வழியாலே நின்று முகம் கொடுக்குமாயிற்று –தன் கை பார்த்து இருக்க வேண்டும் படியான பருவத்தை உடைய எனக்கு எல்லா உறவு முறையும் தானேயாய் நின்று நோக்கி –தாய்  தகப்பன் பொகட்ட அன்றும் நான்  ஜீவிக்க வேணும் என்று இருக்கும் இறே-இச் சேதனன் தான் –
அப்படி தனக்கு பரிவனான தானாயும் நோக்கினான் ஆயிற்று –

மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் ஆவது –
ஈன்ற தாய் பெற்றுப் பொகட்டுப் போனால் வளர்க்கும் தாய் தன் மிடுக்காலே காத்து நோக்குமா போலே ஆயிற்று –
இவரும் அத்தைக் காத்து வளர்த்த படியும் –
தேவகி பெற்ற யுருவு கரிய ஒளி மணி வண்ணனை –பெரிய –1-2-17–
வளர்க்கும் தாயான யசோதை தன் மிடுக்காலே எடுத்து –
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –பெரியாழ்வார் –2-9-6-என்றும்
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தே நின்று –2-9-8-
போதர் கண்டாய் –2-9-6-
தாய் சொல் கொள்வது தன்மம் கண்டாய் –2-9-8-என்று
குற்றம் சொல்லுமவர்களையும் தன் சொல்லாலே வாய்ப் புடை புடைத்து தன் வசமாக்கி
தீய புஞ்சிக் கஞ்சன் –2-2-5-என்று கருத்தைக் குலைத்து
காப்பாரும் இல்லை -2-3-1—என்று இரந்து
அசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறு பிள்ளை –1-3-12-என்னும்படி
நிறம் பெற வளர்த்து ப்ரமேய சாரத்தை வர்த்திப்பால் போலே
பிரமாண ஸாரத்தை வர்த்திப்பித்த பிரகாரமும் –

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி  வண்ணன்

புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-லஷ்மி துல்ய ஸ்வாபையான தேவகி பிராட்டி இப்படிக்கு ஈடாக நோற்றுப் பெற்ற –-திருவின் வடிவு ஒக்கும் என்கையாலே –-கீழ் சீதக் கடலுள் அமுதன்ன தேவகி –என்றது -இங்கே ஸ்பஷ்டமாய் இறே இருப்பது –

போதர் கண்டாய் இங்கே  போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –அசலகத்தானவர்கள்  உன் விஷயமாக வாசாமகோசரமான தோஷங்களை தங்களிலே சொல்லி –-அவ்வளவும் அன்றிக்கே –-என் பக்கலிலே வந்து என் செவியால் கேட்கவும் வாக்கால் சொல்லவும் ஒண்ணாதவற்றை சொல்ல நான் கேட்டு இருக்க மாட்டேன்-

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக்  கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- இடைச்சிகளுக்கு அடிச்சிகளாய் போருகிறவர்களும் இடையருக்கு அடியாராய் போருகிறவர்களும் உனக்கு சொல்லுகிற தூஷணங்களுக்கு ஓர் அவதி இல்லை காண் – அவர்கள் நின்ற இடத்தில் நில்லாதே போராய் –

போதர் கண்டாய் இங்கே  போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- -போதரு -என்கிற இது போதர் என்று கிடக்கிறது-அங்கே நின்று தீம்பு செய்யாதே இங்கே போரு கிடாய் –-போதர் என்ற இது போதரு என்றபடி–இவள் கடுக வருகைக்காக மீளவும் ஒருகால் சொல்லுகிறாள் – இப்படி இவள் அழைக்கச் செய்தே -அவன் வர மாட்டேன் என்ன –-வாரேன் என்னாதே வா கிடாய் என்கிறாள்-

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக்  கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- –பெற்ற தாய் வசனம் கொள்ளுகை பிள்ளைகளுக்கு தர்மம் காண்-நீ தான் பிறந்த போதே -மாதா வசன பரிபாலனம் பண்ணினவன் அன்றோ – சதுர்புஜ ரூபோப சமஹரனத்தை-திரு உள்ளம் பற்றி அருளி  செய்கிறார் –

தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப் படுக்கில் வாழ கில்லேன் வாசு தேவா
தாயர் வாய் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர் பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே -2-2-5 –துர் புத்தியான கம்சன் –
பிள்ளைக் கொல்லி இறே–மக்கள் அறுவரைக் கல்லிடை மோதின பாபிஷ்டன் இறே –

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும்  இல்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – 2-3 1- அதுக்கு மேலே விரகு அறிந்து -ரஷிக்க வல்லாரும் இங்கு இல்லை –ரஷகரான அவர் வந்திலர் – நானோ அபலை -வேறோர் பரிவர் காண வில்லை -யார்தான் ரஷிப்பார்-

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12–கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல் – அஞ்சன அலங்க்ர்தமாய் விஸ்தாரமாய் இருந்துள்ள கண்ணை உடையவள் -என்னுதல் – இப்படி இருந்துள்ள கண் அழகை உடைய யசோதை பிராட்டி -வைத்த கண் வாங்காமல்  நோக்கி வளர்க்கிற வளர்ப்பார் பலர் உண்டாய் இருக்கச் செய்தேயும் – அவர்கள் கையில் காட்டிக் கொடாதே -தானே இறே வளர்ப்பார்கள் –பூ சாரம் உள்ள ஷேத்ரத்தில் -அப்போது அலர்ந்த குவளை பூவின் நிறம் போல் இருக்கிற நிறத்தை உடையவனான சிறு பிள்ளை யினுடைய- அவள் சீராட்டி வளர்த்த முசு முசுப்பு-( ஸ்ரத்தை ) எல்லாம் திரு நிறத்திலே தோன்றும்படி இருக்கும் ஆயிற்று 

அது எங்கனே என்னில் —
இங்கும் ஆழ்வார் அவதரித்து
அவா அற்று வீடு பெற்று எழுந்து அருளின –10-10-11- பின்பு
பாஹ்ய குத்ருஷ்டிகளால்
பாஷா கானமான திருவாய் மொழி அபி பூதமாய் வருகிற படியைக் கண்டு
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகளாலே அத்தை நிரோதித்து-அத்தை இதுக்குக் காவலான வேலியாகக் கற்பித்துத்
திருவாய் மொழியைத் தன் கை வசம் ஆக்கி
திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கொண்டு இதன் அர்த்தத்தை வெளியிடுவித்து வர்த்திப்பித்துக் கொண்டு போந்தார் இறே –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்னும்படியான அடியார் ஆகையால் –
ஆண்டவன் இட்ட பயிரை வர்த்திப்பிக்க வேணும் இறே அடியானுக்கு —

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11—அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த –கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்-ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த-

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்பதை மணவாள மா முனிகள்-பராங்குச பாத பக்தம் –என்று வட மொழியில் மொழி பெயர்த்தார்-சரம பர்வ ப்ரபந்தம் என்பது தோன்ற எம்பெருமானை அடி பணிவதாக கூறாது-எம்பெருமான் பாவில் மன்னும் மாறன் அடி பணிந்ததாக அமுதனார் அருளிய-நயம் வியந்து இன்புறத் தக்கது
மந்த்ரத்தின் தாத்பர்யம் தோன்ற-மாறன் அடி பணிந்து –என்றார் அமுதனார் -என்க –பூ மன்னு மாது -அம்ருத மயமான பாசுரம்அண்ணல் செய்து -விண்ணவர் அமுது உண -சக்கை -அமுதில் வரும் –பெண்ணமுதம் தான் கொண்டான்-மாது பொருந்திய மார்பன் -அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன்-மார்பன் புகழ் மலிந்த பா -திருவாய் மொழி –பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்-பா மன்னு மாறன் -இன்ப மாரி-அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே –மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜன் -ராமானுஜன் எனக்கு ஆரமுதே – பிராட்டி -பகவான் -பா -ஆழ்வார் -எம்பெருமானார் -பஞ்சாம்ருதம் கொடுத்த அமுதக்கவி -ஆறு சுவைகளும் அமுதம்

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading