திரு வழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும் மருவினிய வண் பொருநல் என்றும்
அரு மறைகள் அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து —ஸ்ரீ ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன்-
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை-அவர் சம்பந்தம் உடைய நாட்டோடும் ஊரோடும் ஆற்றோடும் வாசி அற எல்லாவற்றையும் சேர்த்து ப்ரஸன்னமான மனஸே -அனுசந்தித்துப் போரு -என்கிறது –
வைகுந்தச் செல்வனார் –நான்முகன் –75-சேவடி யோபாதி
வைகுண்ட வானாடும் -பெரிய திரு –68-
இறந்தால் தங்குமூரான –பெரிய –10-2-10-
கண்ணன் விண்ணூரும் –திரு விருத்தம் -47-
அமுத விரசை ஆறும் -ஆர்த்தி –20–உத்தேச்யமாம் போலே இங்கும் இவை உத்தேச்யம் ஆகிற படி –
நாக் கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக் கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-பரம பதத்தில் ஐஸ்வர்யத்தை யுடையனாகையாலே ஷூத்ரரான இவர்கள் ஏத்த அவிக்ருத்தனாய் இருக்கிறவனுடைய திருவடிகளில் பாட்டைக் கொண்டு மனுஷ்யரைப் பாடேன் -திரு உள்ளத்தில் ஒரு உகப்பு இன்றிக்கே -மதியாதே கலங்காப் பெரு நகரில் அயர்வறும் அமரர்கள் அதிபதி(பரத்வத்திலே நோக்கு இவருக்கு -விகாரம் இல்லாத தேசமாயும் நித்ய முக்தரும்
எளியவன் என்றால் அவஜாநந்தி மாம் மூடர் ) பிரேம பரவசராய் புகழ –(விகாரம் இல்லா திவ்ய தேசம் -அயர்வில்லா நித்யர் முக்தர்களின் அதிபதி )அத்தை உகந்து கேட்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் ஐஸ்வர்யம் யுடையவருடைய -(செல்வனார் ) சிவந்த திருவடிகளை பாடக் கடவ நாக் கொண்டு
ஷூத்ர மனுஷர்களைப் பாடேன் –
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–68-திரு மலையும் திருப்பாற் கடலும் பரமபதமும் என்கிற தேசங்கள்
உள வாகவுமாம்-அளவாகவுமாம்-இப்படி சில விசாலமாக பிரதேசங்கள் இருக்கவுமாம் -என்றும் அர்த்தம்- அவற்றிலே தனக்கு ருசி யுண்டாகவுமாம் தோற்றும் இருக்கிறிலன் – என்னோடே கலந்த பின்பு ஸுபரி ஐம்பது பெண்களோடே (மாந்தாதாவுடைய பெண்கள் )கலந்து போருகிற இடத்தில் தன் மக்களைத் தனித்தனியே -பிதா உனக்கு குறை இல்லையே என்று கேட்க என்னுடன் பிறந்தாரை ஒருத்தரையும் அறியாதே எப்போதும் என்னோடே இருக்கும் இதுவே வெறுப்பு வேறே ஒரு குறையில்லை என்று சொன்னால் போலே இவரும் தம்முடைய எல்லா ஸ்தானங்களையும் மறந்து
என்னை அல்லது அறிகிறிலர் என்கிறார்
அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால்
தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-10-இம்மையிலே இடர் இன்று வாழப் பெறுவீர்-இறந்த பின்பு மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே
திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –47–என்றும் ஒக்க ஓர் இருப்பேயாய் காட்சி கொடுக்கிற(கண்ணன் காதா சித்கதம் -விண்ணூர் என்றும் ஒக்க ஓர் இருப்பேயாய் காட்சி கொடுக்கிற) கண்ணன் விண்ணூர் –ராகவஸ்ய நிவேசனே -ஸூந்தர காண்டம் – 33-7 – ஸ்ரீ ராமனுடைய அரண்மனையில் -என்னுமா போலே –(மானுஷன் லோகான் -ராகவஸ்ய வீட்டில் போல் இங்கும் கண்ணன் விண்ணூர் -சர்வ ஸூலபன் எம்பெருமான் பரம பதத்தில் விருப்பம்-உண்டானதால் பார தந்தர்யம் இழக்க வேண்டி வருமே
இத்தால் ஆழ்வார் திருவடிகளைச் சிந்தித்த படி சொல்கிறது –
கவள யானைக் கொம்பு ஓசித்த கண்ணன் என்றும் -என்று தொடங்கி — பார்த்தன் பள்ளி பாடுவாளே –பெரிய –4-8-1-என்னுமா போலே-
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே -4-8-1-பிராட்டி தன்மையில் -திருத் தாய் பாசுரத்தாலே -அருளிச் செய்தது –-ஆழ்வார் யுடைய அளவற்ற அபி நிவேசம் இத் திரு மொழியாக பரிணமித்தது-எம்பெருமான் யுடைய குண சேஷ்டிதங்களையே வாய் வெருவிக் கொண்டு இந்த திருப்பதியின் திரு நாமத்தையே பாடா நிற்கிறாள் -என்கிறாள்
—
திரு வழுதி நாடு என்றும்
வாய்த்த வழுதி வள நாடன் -5-6-11- என்று நிரூபகமாக இறே அது தான் இருப்பது –
அவர் ஸம்பந்தத்தால் அவரோ பாதி அதுவும் அனுசந்தேயமாய் இருக்கும் ஆகையால் திருவடிகள் நாட்டோடே நடக்கிறது –
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-வாய்க்கை யாவது கிட்டுகை -அதாவது பாவனா ப்ரகர்ஷத்தாலே சாஷாத் கரிக்கை-அநுகாரத்தாலே கிட்டின படியை நினைக்கிறது.-பாவநா ப்ரகரஷத்தாலே தத் பாவத்தை கிட்டி இருப்பாராய் வழுதி வள நாட்டுக்கு நிர்வாஹகராய் ஸூஸ்த்திரையான திரு நகருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அந்தரங்க விருத்தியாக அனுஷ்ட்டித்து-
—
தென் குருகூர் என்றும்
குருகூர் நகரான் -திரு விரு -100–என்று அவர் இருக்கும் ஊர் ஆகையாலே அதுவும் அப்படியேயாய் இருக்கை –
நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-குருகூர்க்கு ‘நல்லார்நவில்’ என்ற விக்ஷேணமிடட்தனால், அப்படிப்பட்ட திவ்ய தேசத்தில் பிறந்ததனால் தான் தமக்கு இப்படிப்பட்ட பக்திப் பெரு காதல் உண்டாயிற்று என்பதாகத் தொனிக்கும். இப்படி லோக விலக்ஷணராண ஆழ்வார்
திருவலதரிக்கப் பெற்ற திருநகரியை நல்லவரர் நவிலச் சொல்ல வேணுமோ?-திருவாய் மொழியில் * பயிலுஞ்சுடரொளி! நெடுமற்கடிமை முதலிய திருப்பதிககளில் ஆழ்வாருடைய பாகவத பக்தி நிஷ்டை
மிக விளங்குதலால் ‘திருமால் திருப்பேர் வல்லாறடிக் கண்ணி சூடிய’ என்று தமக்கு இட்டுக்கொண்ட விக்ஷேணம் மிகப் பொருத்தம்.
—
மருவினிய வண் பொருநல் என்றும்-மருவ இனிதான வண் பொருநல் -என்றபடி –
பொருநல் சங்கணித் துறைவன் –10-3-11- இறே-இதுவும் இவர் இறங்கும் துறை
அவர் திருவடிகளும் இறங்கும் துறை நல் ஞானத் துறை -திரு விரு –93-
வண் சடகோபனைப் போலே இதுவும் வண்மை யுடைத்தாய் இருக்கும் –
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே–10-3-11-இவர் இருந்த இடத்தே சத்துக்கள் சேருமா போலே –சங்குகளாலே அணியப் பட்ட -திருப் பொருநலை யுடையராய் –சம்ருதமான திரு நகரியை யுடையராய் –பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்திலும்
காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –ஞானம் ஆகில்-பகவத் விஷயத்தை பற்றி அன்றி இராது இறே –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல் திருவந்தாதி )என்னக் கடவது இறே –தத் ஜ்ஞானம் அஞ்ஞானம் அதோன்யதுக்தம் (பராசர மகரிஷி )- என்றும் –வித்யான் யாசில் பகை புணம் – புறம்பே ஒன்றை அறிந்ததோடு துன்னம் பெய்ய அறிந்ததோடு வாசி இல்லை இறே –துறை படிந்தாடி –ஜ்ஞானம் ஆகிற இத் தீர்த்தத்திலே புக்கு அவஹாகித்து நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி (ஆச்சார்யர் கீழ் படிந்து -பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு)
—
ஸவித்ரீ முக்தாநாம்
இப்படி விலக்ஷணமான
நாடும்
நகரும்
துறையும்
என்று அனுசந்தித்து
—
அரு மறைகள் அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து —
அதாவது
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச்
சிந்தையுள்ளே சிந்தித்துப் போரு -என்கை-
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –அநந்தாவை வேதா – என்கிறபடி ஒரு சங்கையை இட்டு –சொல்லப் போகாத படி ஒரு அபரிமிதங்களாய் -சர்வோப ஜீவியங்கள் ஆகாதே
அதி க்ருத்தாதி காரங்களாய்-அந்யோப மரத்தக வாக்யங்களாலே -ஸ்வார்த்தத்தை தெளியும் போது -எத்தனையேனும் அதிசய ஞானர் ஆனவர்களுக்கும் அருமைபடுத்தக் கடவதான சம்ஸ்க்ருத வேதங்களை –ஆயிரம் இன் தமிழால் –வரணாதி நியதி இன்றிக்கே -ருசி பிறந்தவர்கள் எல்லாரும் அதிகரிக்கும் படியாய் –ஆயிரம் என்ற ஒரு சங்கையுடன் கூடி இருப்பதாய் -உயர்வற உயர்நலம் -என்று தொடங்கி -உயர்ந்தே -என்னும் அளவும் – ஆதி மத்திய அவசானங்களிலே – ஸ்ரீ பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் – சேதன அசேதன ரூப ச்வபாவங்களையும் – சேதனருடைய சம்சார பந்த ஹேதுக்களையும் – தந் நிவர்தன உபாயமான தத் விஷய ப்ரீதி ரூபாபன்ன ஞானத்தையும் –
ஜகத் காரண வஸ்து நாராயணனே என்று -தேவதாவஸ்து விசேஷ நிர்த்தாரணத்தையும் –
அவனுடைய சமஸ்த கல்யாண குணாத் மகத்வத்தையும்-அநந்த கருட விஷ்வக்சேநாதி திவ்ய சூரி பரிசர்யமான நளினனாய்க் கொண்டு நின்ற படியையும் – தாம் அனுபவித்த படியே எல்லாரையும் அனுபவிப்பைக்காக -தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே – லவ்கிகரைக் குறித்து உபதேசித்த படியையும் – தம்முடைய அபிநிவேசம் எல்லாம் தீரும்படி அவனை ப்ராபித்த படியையும் -விசதமாக பிரதிபாதிப்பதாய் –ஸ்வா ர்த்தத்தை எல்லாம் ஸூஸ்பஷ்டமாகவும் ஸூக்ரஹமாகவும் தெறிவிக்குமதாய் – அத ஏவ அத்யந்த சுலபமாய் -பக்தாம்ர்தம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் –என்னும்படி அநு போக்தாக்களுக்கு அத்யந்தம் போக்யமாய் -நடை விளங்கு தமிழான -த்ரமிட பாஷையாலே – ஸ்ரீ திருவாய் மொழி என்கிற பிரபந்த ரூபேண –
—
குரு பாதாம் புஜத் த்யாயேத் -என்கிறபடியே
திருவடிகளையே சிந்தித்துப் போரு –
மற்று ஒன்றிலே மருளாதே தெளிந்து அவ்வடியை அனுசந்திக்கப் பார் –
அன்றிக்கே
வேதத்திலே -வைகுண்ட புவன லோகம் -என்று நாட்டையும்
யோ வைதாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதே நாவ்ருதாம் புரீம் -என்று
அம்ருத வாஹினியான விரஜை ஆற்றிலே ஆவ்ருதமான வைகுண்ட நகரத்தையும்
விஷ்ணோ பத பரமே மத்வ உத்ஸ-என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
அவன் திருவடிகளையும் உபநிஷத்துக்கள் ஓதினால் போலே
அந்த அருமறையின் தாத்பர்யமான அர்ச்சாவதாரமான ஆதிப்பிரானதான திரு வழுதித் திரு நாட்டையும்
திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் –4-10-1-என்னும்படி அவன் வர்த்திக்கிற ஊரையும்
ஊருக்கு வடக்கான வண் பொருநல் ஆற்றையும்
அங்கே நிற்கும் ஆதிப்பிரானுடைய நீள் கழலையும் –1-9-11-இறே -திருவாய் மொழியில் சொல்லிற்று
இது மற்றை உகந்து அருளின நிலங்களில்
ஆற்றுத் துறைக்கும்
ஊருக்கும்
நாட்டுக்கும் உப லக்ஷணம் —
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1–ஸ்ருஷ்டரான சேதனர்க்கு ஆச்ரயண ருசி பிறந்த அன்று நாம் தூரஸ்தராக ஒண்ணாது என்று திரு நகரியிலே நின்று அருளின ஸுலப்யத்தை சொல்லுகிறது – குன்றம் போல் -மலைகளை கொடு வந்து சேர வைத்தால் போலே-மணி மாடம் -மணி மயமான மாடம் நீடு -மாடங்களினுடைய ஒக்கம் இருக்கிற படி –ஆசிரயணீயன் தன்னோபாதி ஆகர்ஷகமான தேசம் என்கை–இப்படிப் படைத்தவன் தான் தூரத்தில் உள்ளவனாய் நிற்கை யன்றிக்கே, மலைகளைக் கொடு வந்து சேர வைத்தாற்போலே இருப்பனவாய், மணி மயமான மாடங்களினுடைய உயர்ச்சியை யுடைத்தான திருநகரியிலே நின்ற. பெருமாள் மீண்டும் என்னைக் கூப்பிடுவரோ என்னும் ஆசையால் பல நாள் குகனோடு கூட அங்கே நின்றிருந்தேன்,’ என்னுமாறு போலே, நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு ‘நான் வணங்கமாட்டேன்,’ என்னாமல், வணங்குவர்களோ?
அன்றிக்கே,
நாம் வளைந்து கூட்டிக் கொள்ளப் புக்கால், விலக்கா தொழிவர்களோ!’ என்று கொண்டு காலத்தை எதிர் நோக்கினவனாய் நிற்கின்றபடி.
அங்குச் சேஷியைப் பெறுகைக்குச் சேஷ பூதனானவன் நின்ற நிலை; இங்கு அடியவர்களைப் பெறுகைக்கு இறைவன் நின்ற நிலை. சேஷ பூதனை லபிக்க சேஷி நிற்கும் நிலை –
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-ஒரு கால் விண்ணப்பம் செய்ய -என்றும் ஓக்க திருவடிகள் தலையிலே சேரும்-நீள் கழல் -ஆசா லேஸம் உடையார் இருந்த இடம் எல்லையாக வளரும் திருவடிகள்-பொரு வென்று ஒப்பாய் -சேரும் என்றபடி-உச்சியுள்ளே நிற்கும் என்று இவர் பெற்றதுவே பேறாகக் கடவது –
—
குட்ட நாடு -என்று இறே நாட்டையும் அருளிச் செய்து போருவது
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர்-என்றும்
தண் புனல் சூழ் திருவரங்கத்து உள்ளாய் -என்றும் –
ஊரையும் ஆற்றையும் அருளிச் செய்தது –
கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1—அழகிய நிறைந்த தண்ணீரை உடைத்தான-வயல் சூழ்ந்த –-குட்ட நாடு -என்று அந்நாட்டுக்கு பெயர் –-பெறுதற்கு அரிய-ஆச்சர்யத்தை உடையவன் –-நீர் வாய்ப்பை யுடைய வயலாலே அலங்க்ருதமான குட்ட நாட்டுத் திருப் புலியூரில் வர்த்திக்கிற பெறுதற்கு அரிய ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவனுடைய -திரு அயோத்யையில் உள்ளார்க்கு சக்கரவர்த்தி திரு மகனை போலே யாயிற்று இவனும்
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10—ஊரும் ஆறும் இன்ன இடத்திலே என்னுமிடம் நெஞ்சிலே பட்டுக் கிடக்கிறது காணும் இவளுக்கு.-வட பால் – வட திசை. கடலுக்குத் தென் பால் இருக்கிற பிராட்டியைப் போலே யாயிற்று இவள் இருக்கிற இருப்பு.-என்னைப் போல் கலங்கி இருக்கும் இங்குத்தை பதார்த்தங்கள் ஒழிய தெளிந்த பதார்த்தங்களை காண் கிறி கோள் இறே -வைடூர்ய விமலோதகா-என்கிறபடியே தெளிந்து இறே அங்குத்தை பதார்த்தங்கள் இருப்பது -உபதத்தோ தகா நத்ய-என்று இறே இங்குத்தவை இருப்பது-வட பார்ஸ்வத்திலே -கடலுக்கு தென்பால் இருக்கிற பிராட்டியை போல் யாயிற்று இவள் இருக்கிற இருப்பு
மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6—உன்னைக் கிட்டி என் பரிதாபம் தீருகைக்கு ஈடாகக் குளிர்ந்த நீர் சூழ்ந்த கோயிலிலே ஸந்நிஹிதனானவனே என்னும்-குளிர்த்திக்கு இவ் வடிவு அழகு தேடித் போக வேண்டாத படி தேசமே சிரமஹரமாய் இருக்கிற படி -சந்நிஹிதனாய் வைத்து எனக்கு உதவாது ஒழிவதே
—
இப்படி யாயிற்று
திவ்ய தேச
திவ்ய நகர
திவ்ய நதிகளின் வைபவத்தையும் -திருவாய் மொழி முகேன தர்சிப்பித்தது –
ஆக மூர்த்தியில் பண்ணின தமிழன படி –ஆச்சார்ய ஹ்ருதயம் –
அதவா வேத வேத்ய ந்யாயத்தாலே பரத்வபரமுது வேதம் வ்யூஹ வ்யாப்த் யவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மநு படுகதைகளாய் ஆக மூர்த்தியில் பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்ராவிடமாகச் செய்தாரென்னும்.–70-
ஆக மூர்த்தியை பண்ணின தமிழனாவாறே-அதாவது-அப்படி அவதார முகேன நின்று ரஷித்து அருளுமவன் ,அவதாரத்தில் பிற்பட்டாரும் இழவாத படி –-ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் –திருச்சந்த -17-(யாக மூர்த்தி -ஆக மூர்த்தியாக -யஜ தேவ பூஜாயாம் -அர்ச்சிக்கத்தக்க மூர்த்தி
அன்றிக்கே இப்படியாக வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு தோன்றிய திவ்ய மங்கள விக்ரஹம் -என்றுமாம் ) என்று விசேஷஜ்ஞர் ஈடுபடும் படி ஆஸ்ரித ஹிருதய அனுகுணமாக – (நெஞ்சில் நினைப்பவன் எவன் -என்பதை நாமும் அறியும் படி மா முனிகள் )தமர் உகந்தது எவ் உருவம் –முதல் திருவந்தாதி -44–இத்யாதிப் படியே த்ரவ்ய நாம ரூப ஆசன சயனாதிகளிலும்-தேச கால அதிகாராதிகளிலும் ஸ்நான போஜனாதிகளிலும் ஒரு நியமமற பண்ணிக் கொண்டு அத்யந்த ஸூலபனாய் இருக்கும் அர்ச்சாவாதார அவஸ்தையில் -தத் வைபவ பிரதிபாதன அர்த்தமாக
சடகோபன் பண்ணிய தமிழ்-2-7–13–என்னும் படி பிரமேயம் தன்னைப் போலே தானும்-பிரமணமான தானும் சர்வ ஸூலபமாய் சர்வ அதிகாரமாய் ஆகைக்கு உறுப்பாக த்ராவிட ரூபமாக கொண்டு செய்வதாக சொல்லுவதும் ஒரு பிரகாரம் உண்டு என்கை.–எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை –இராமானுச நூற்றந்தாதி -18-என்னக் கடவதிறே..
இவை எல்லாத்திலும் -( வேதம் -பாஞ்சராத்ரம் மனு சாஸ்திரம் ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் திருவாயமொழி ) எல்லாம் சொல்லுமே ஆகிலும் ஒன்றுக்கு ஒன்றிலே நோக்காய் இருக்கையாலே இறே
இவர் இப்படி அருளிச் செய்தது ..-இது தான்-முது வேதம் தான் பரத்வபரம்-( பண்ணிய தமிழ் ஆக மூர்த்தி பரம் ) -என்கையாலே ஸ்பஷ்டம் இறே .. வக்த்ரு விசேஷத்தாலே -தெளிந்ததாய் அர்த்த பிரகாசகத்வம் நிறைந்து இருக்குமே இங்கு –
ஆக இதுக்குக் கீழ் வேதத்தினுடையவும், தது,பப்ரும்ஹணத்தினுடையவும் ஸ்தாநத்திலே யாக்கி அவற்றினுடைய ஸப்த லக்ஷணங்களும் அர்த்த லக்ஷணங்களும் அருளிச் செய்தார். இனி மேல் ப்ரமேய பூதனான ஸர்வ ஸ்மாத் பரனுடைய அவதார டரம்பரையில் எல்லையான அர்ச்சாவதாரம்
”ஆகமூர்த்தியாய வண்ணம்”” (திருச்ச, 17) என்கிறபடியே ஸர்வேஸ்வரன் ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக “’தமருகந்ததெவ்வுருவம்”'(மூ.திரூவ. 45) என்கிறபடியே த்ரவ்ய-நாம-ரூப-ஆஸந-ஸயந-தேஸ – கால-அதிகாயு-போஜநாதீ ஸகல வ்யாபாரங்களையும் ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக்கிக் கொண்டு ஸர்வ ஸுலபமான அர்ச்சாவதாரமான விடத்தில் ப்ரமாணமும் அப்படியே ப்ரமேயம் போலே ஸர்வ ஸுலபமாய் ஸர்வாகதிகாரமாம்படி த்ரவிட ஸம்ஹிதையாக ப்ராப்த மாகையாலே **பண்ணிய தமிழ் மாலை”” (திருவா. 2 – 7 – 13) என்கிறபடியே வேதத்தைத் திருவாய்மொழியாகச் செய்தருளினார் என்னவுமாம் என்கிறார். அந்த வேதம் முதலானவை எல்லாத்திலும் எல்லாம் சொல்லிற்றே யாகிலும் ஒன்றுக் கொன்றிலே நோக்காகக் கடவது –
—
திரு நாமப் பாட்டுக்கள் தோறும் தமக்கு நிரூபகமாகவும்
ஊரையும்-நாட்டையும் –ஆற்றையும் -பாடுகையாலே -அது தான்
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருளாக அருளிச் செய்கையாலே அத்தைப் பற்ற —
திரு வழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும் மருவினிய வண் பொருநல் என்றும்
அரு மறைகள் அந்தாதி செய்தான்–என்று இங்கனே சொல்லுகிறது ஆகவுமாம் –
திரு வழுதி நாடு என்றும் -சிந்தியா என்னுதல் –
திரு வழுதி நாடு என்றும்-அரு மறைகள் அந்தாதி செய்தான் -என்னுதல்
ததீய வைபவம் இறே வேத தாத்பர்யம் அறுவது –
இப்படி வேதத்தைத் த்ராவிடமாகச் செய்த திராவிட உபநிஷத் ஆச்சார்யருடைய
அங்கரி யுகங்களை –
தெளிவுற்ற சிந்தையர் -7-5-11-
தெளிந்த என் சிந்தை –9-2-4-என்னுமா போலே
உபாய உபேயம் என்று தெளிந்து
மனஸே ஸந்ததம் ஸ்மரித்துப் போரு -என்று ஆழ்வார் திருவடிகளே அனுசந்தேயமாகச் சொல்லிற்று —
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-பாமரு மூவுல கத்துள்ளே-தெளிவுற்ற சிந்தையர்-பதார்த்தங்கள் சேர்ந்து இருந்துள்ள சகல லோகங்களுக்கு உள்ளே கலக்கம் ஸ்வபாவமாய் இருந்துள்ள சம்சாரத்துக்கு உள்ளே சுத்தமான அந்தகரணத்தை உடையராவார் –அகர்ம வஸ்யனான தான் வரிலும் சோக மோகங்களை விளைக்கும் சம்சாரம் -சம்சாரி செல்லிலும் தெளிவைப் பிறப்பிக்கும் பரமபதம் –இப்படி வ்யவஸ்திதமாய் இருக்க இதுக்கு உள்ளே முக்தருடைய பாவ சுத்தியை உடையராவார் –பாபம் நிறைந்திருக்கிற தேசத்திலே’ என்றபடி. அவ் வருகே ஒரு தேச விசேடத்தே போனால் பெறக் கடவே தெளிவை அதற்கு எதிர்த்தட்டான இங்கே இருந்தே யுடையராவர்;
‘சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே தெளிவுற்ற சிந்தையர்: குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான பரமாத்துமாவையும் தன் வழி ஆக்க வல்ல இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த பாவராய் இருப்பர். பாபம் என்பது, ‘பா’ எனக் கடைக் குறைந்து நிற்கிறது.
புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-அயோக்கியன் என்று அகலாத படி கண்கள் சிவந்திலே என் ஹிருதயம் தெளிந்தவாறே -அத்தைக் கை விடாதே நிரந்தர வாஸம் பண்ணி –அன்றிக்கே-தெளிந்த சிந்தை -என்னும் இவ்விடத்தில்-பட்டர் -தொட்டியம் -திருநாராயண புரத்திலே வெறுப்பிலே -பிள்ளை திரு நறையூர் அரையரும் திரு நாட்டுக்கு-
எழுந்து அருளியதாலும்-எம்பெருமான் திரு மேனிக்கும் அழிவு வந்ததாலும்- தேவர் ஸ்வாதந்தர்யம் எல்லாம் காட்டினாலும் பின்னையும் பண்ணின நம்பிக்கையில்- குலைத்தல் இன்றிக்கே இருக்கும்படி-எலும்பு உரமுடைய எம்பெருமானார் போல்வார் பக்கல் செய்யுமத்தனை–எலி எலும்பனான அடியேன் பக்கலிலும் செய்வதோ -என்றது- மகா விஸ்வாச பூர்வகம் -மிக பெரிய நம்பிக்கை முன்னாக -என்கிறபடியே-ஏதேனும் ஓன்று வந்தாலும்-இங்குத்தைக்கு வருவதாய் வந்தது ஓன்று அன்று-
இதற்கு அடி நம்முடைய பாவம் -என்று-பண்ணின நம்பிக்கை குலையாதார் விஷயத்தில் செய்யும் அத்தனை – இது தானே காரணமாக நெஞ்சு நெகிழும்படி இள நெஞ்சர் பக்கலிலும் அதைச் செய்யக் கடவதோ -என்றாராம் -என்றபடி–பேற்றுக்கு அடி கிருபை -இழவுக்கு அடி கர்மம் -என்கிற மகா விச்வாஸம் இருக்கும் படி -தெளிந்த என் சிந்தை –என்றபடி-
——-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply