பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம் ஸர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங் மயம்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம் நமாம் யஹம் திராவிட வேத சாஹரம் –ஸ்ரீ நாதமுனிகள் அருளிச் செய்த தனியன் –
பக்தாம்ருதம்
பத்தராகக் கூடும் –3-6-11-
தொண்டர்க்கு அமுது –9-4-9-என்றபடி
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-எல்லாம் கிடைக்கிலும் கிடையாதாயிற்று பகவத் பக்தி –அதுவே நிரூபகமாகை நிச்சிதம்-பயிலுமினே.--அர்ச்சாவதார பர்யந்தமான ஸுலப்யத்தை சொல்லுகிற இது திரு வாய்மொழியை அப்யசியுங்கோள்-இத்திருவாய்மொழியைக் கற்க அதுவும் கிடைக்கும்
1- பரத்துவ ஞானத்துக்கு அடியான புண்ணியமாதல், -2-சாஸ்திர ஞானமாதல்,
3- நற்குருவின் உபதேசமாதல், 4-பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் இவையனைத்தும் இல்லாதார்க்கும் அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே பகவானிடத்தில் பத்தி உண்டாகக் கூடும் என்பார், ‘பத்தராகக் கூடும் பயிலுமின்’ என்கிறார்.
ஒரு பொருளிலும் விருப்பம் இல்லாதவனான சர்வேசுவரன் அடியார்களிடத்து வைத்த வாத்சல்யத்தாலே இவன் உகந்தது ஒன்றைத் திருமேனியாக விரும்பி, ‘இவன் உண்பித்ததை உண்டு, அகங்கள்தோறும் புக்கு விடமாட்டாமல் இருந்தால், ‘இவன் நம்மை விடமாட்டாதே இருந்த பின்பு நாமும் இவனிடத்தில் அன்பு வைத்தல் ஆகாதோ?’ என்னக் கூடும் அன்றோ?’ என்றபடி.
‘‘பயிலுமின்’ என்றால், பயில்வர்களோ?’ எனின், ‘நிதி இங்கே உண்டு’ என்ன, அவ்விடத்தைத் தோண்டுவார்களே அன்றோ? அப்படியே, ‘பத்தி உண்டாம்’ என்ன, கற்பார்கள் என்று அருளிச்செய்கிறார்.-கல்லுவார்கள் -தோண்டுவார்கள் கற்பார்கள் அப்யசிப்பார்கள்
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9–என்னளவு இன்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்-நானும் உண்டு-என் வேலையாள்களும் ஜீவித்து-என் உறவினர்களுக்கும் விருந்திட வல்லேன் ஆனேன் –என்பாரைப் போலே – சொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்-அடியார்கட்கு அடிமை யாதலை-எல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் – பெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே-இது தான் தோன்றியான கைப்பற்று (ஸ்வ யத்னம் )அடியாக வந்தது ஓன்று அன்று –சர்வேஸ்வரனாலே-அடியவனாக-அங்கீகரிக்கப் பட்டவன் ஆனேன் –
விஸ்வ ஜன அநு மோதனம்
பார் பரவின் கவி –7-9-5-
அடியார்க்கு இன்ப மாரி –4-5-10—என்கிறதைச் சொன்ன படி
சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5-விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி அற எல்லாரும் வாய் புலற்றும் படியான இனிய கவி என்னுதல் -பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்கிறபடியே யாதல் –என்னைக் கருவியாகக் கொண்டு பாரில் உள்ளார் அனைவரும் தன்னைப் பரவும்படி இனிய கவிகளைப் பாடினான். என்றது-‘விசேஷஜ்ஞர், விசேஷஜ்ஞர் அல்லாதார் என்னும் வேற்றுமை இன்றியே எல்லாரும் கொண்டாடும்படி செய்தான்,’ என்றபடி.-மண் மிசை–ராமானுஜன் பிறந்த பின்பே–அப்பொழுதே மாதவனுக்கு ஆளானார்கள்-பரமரே –-அவனோடு ஒத்தவர் இல்லை’ என்கிற வாக்கியம் கொண்டு இவனுடைய உயர்வு அறிய வேண்டா; என்னை இடுவித்துக் கவி பாடுவித்துக் கொண்ட இதுவே போரும் அவனுடைய உயர்வு அறிகைக்கு.
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-ப்ராப்த விஷயத்தில் அடிமை செய்யப் பெற்ற இதுவேயோ-இது ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆனந்தாவஹமும் ஆயிற்று–இன்ப மாரி–இன்பத்தை உண்டாக்கும் மேகம்-இது எனக்கு இருக்கிறபடி கண்டால் உகக்கிறவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கை–இன்பத்தையுண்டாக்கும் மேகம் ஆதலின், ‘இன்பமாரி’ என்கிறது.
‘இது எனக்கு இருக்கிறபடி கண்டால், இது உகக்குமவர்களுக்கு எங்ஙனே இருக்கிறதோ!’ என்கை.
‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,’ என்றாரே அன்றோ?–
ஸர்வார்த்ததம்
எல்லாப் பொருளும் விரித்தானை –4-5-5-என்னும்படி ஸகல அர்த்த ப்ரதமமாய் இருக்கை –
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-அர்ஜுனனுக்கு சார்வார்த்தங்களையும் வீசாதீ கரித்தால் போலே யுக்த அயுக்தம் அறியாதே-சிஷ்யாஸ் தேஹம் சாதிமாம் த்வம் ப்ரபன்னம் -என்று அர்ஜுனனுக்கு ஆத்ம யாதாம்யா ஞான பூர்வகமாக கர்மத்தை உபதேசித்து-தத் சாத்தியமான ஞானத்தை உபதேசித்து உபய அனு க்ருஹீதையான பக்தியை உபதேசித்து அவன் அதன் அருமையைக் கண்டு-அஞ்சின அளவிலே என்னையே தஞ்சமாகப் பற்று என்று அருளிச் செய்தான் இறே-விரித்தானை-சுருதி சுத்தமான அர்த்தத்தை ஸ்ரீ கீதா முகத்தாலே உபதேசித்தான்-எம்மான் தன்னை-அர்ஜுனனுக்கு -உபதேஸித்தால் போலே தன் குண சேஷ்டிதங்களை எனக்கு சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பித்த மஹா உபகாரகனை
மிக்க இறை நிலை –என்று தொடங்கி
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –என்கிறபடி
அறிய வேண்டிய அர்த்தம் எல்லாவற்றையும் அறிவிப்பிக்கும் என்கிறபடி –
ஸ்ரீ சடகோப வாங் மயம்
குருகூர் சடகோபன் சொல் –1-1-11-என்றபடி
கரவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-சர்வ ஸ்மாத் பிறனுடைய துயரறு சுடரடி விஷயமாக திரு நகரியைப் பிறப்பிடமாக யுடையராய் சடரான பாஹ்ய குத்ருஷ்டிகளை வெல்லும் ஸ்வ பாவரான ஆழ்வார் அருளிச் செய்ததாய்–திருவடிகளிலே பரிசர்யா ரூபமாக அருளிச் செய்தது
வால்மீகிர் பகவான் ருஷி என்னுமாபோலே -தம்முடைய ஆப்தியைத் தாமே அருளிச் செய்கிறார்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம்
ஸஹஸ்ர சாகை -சாம விதமாய்-தத் சாரம் -சாந்தோக்ய உபநிஷத்தாய் –அதின் சாரம் உத்கீதம் -என்றதாய் அத்தை யாயிற்று இப்படிப் பாடி அருளிற்று என்றபடி –
வேத அரும் பெருமான் நூல்களை –9-3-3-
வண் தமிழ் நூலாக்கின –4-5-10-படி
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் இறே –
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-துர்ஜ்ஜேயார்த்தத்தை அறிந்தனவாய் இருக்கிற வேதங்கள் ஆகிற சாஸ்திரங்கள் -என்னுதல் -அறிந்தனவாய் இருக்கிற வேதங்களில் துர்ஜ்ஜேயார்த்தங்களை நிஷ்கர்ஷித்து தரும் ப்ரஹ்ம ஸூ த்ர இதிஹாச புராணாதிகள் என்னுதல் –அறிதற்கு அரிய பொருள்களை அறிந்தனவாய் இருக்கிற-வேதங்கள் ஆகிற சாஸ்திரங்கள் –
அன்றிக்கே அறிந்தனவாய் இருக்கிற வேதங்களில் அறிதற்கு அரிய பொருள்களை அறுதி இட்டு தரும்
ப்ரஹ்ம சூத்ரம் இதிகாசம் புராணங்கள் -முதலானவைகள் -என்னுதல் –
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-திருவாய்மொழி பாடுகைக்கு பாக்யம் பண்ணினேன் -தன்னைச் சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பலன்களையும் கொடுக்கக் கூடியதான உதார குணத்ததாய் இருத்தலின், ‘வண் தமிழ்’ என்கிறது.–வண் தமிழ்-ஆவது பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே ஸ்பஷ்டமாய் இருக்கை-அன்றிக்கே.
இது முன்னே நடந்ததாயிருந்தாலும் இப்பொழுது நேரிற்கண்டது போல இருக்கின்றது,’ என்பது போன்று,-லவ குசர்கள் பாட பாட நடந்த ராம சரித்ரம் மக்களுக்கு விளங்கினது போலே –
பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே விளக்கமாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது என்னுதல். ‘கண்டவாற்றால்’ என்று நேரில் பார்ப்பதாய் இருக்கிறதே அன்றோ?
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –அநந்தாவை வேதா – என்கிறபடி ஒரு சங்கையை இட்டு –சொல்லப் போகாத படி ஒரு அபரிமிதங்களாய் -சர்வோப ஜீவியங்கள் ஆகாதே
அதி க்ருத்தாதி காரங்களாய்-அந்யோப மரத்தக வாக்யங்களாலே -ஸ்வார்த்தத்தை தெளியும் போது -எத்தனையேனும் அதிசய ஞானர் ஆனவர்களுக்கும் அருமைபடுத்தக் கடவதான சம்ஸ்க்ருத வேதங்களை –ஆயிரம் இன் தமிழால் –வரணாதி நியதி இன்றிக்கே -ருசி பிறந்தவர்கள் எல்லாரும் அதிகரிக்கும் படியாய் –ஆயிரம் என்ற ஒரு சங்கையுடன் கூடி இருப்பதாய் -உயர்வற உயர்நலம் -என்று தொடங்கி -உயர்ந்தே -என்னும் அளவும் – ஆதி மத்திய அவசானங்களிலே – ஸ்ரீ பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் – சேதன அசேதன ரூப ச்வபாவங்களையும் – சேதனருடைய சம்சார பந்த ஹேதுக்களையும் – தந் நிவர்தன உபாயமான தத் விஷய ப்ரீதி ரூபாபன்ன ஞானத்தையும் –
ஜகத் காரண வஸ்து நாராயணனே என்று -தேவதாவஸ்து விசேஷ நிர்த்தாரணத்தையும் –
அவனுடைய சமஸ்த கல்யாண குணாத் மகத்வத்தையும்-அநந்த கருட விஷ்வக்சேநாதி திவ்ய சூரி பரிசர்யமான நளினனாய்க் கொண்டு நின்ற படியையும் – தாம் அனுபவித்த படியே எல்லாரையும் அனுபவிப்பைக்காக -தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே – லவ்கிகரைக் குறித்து உபதேசித்த படியையும் – தம்முடைய அபிநிவேசம் எல்லாம் தீரும்படி அவனை ப்ராபித்த படியையும் -விசதமாக பிரதிபாதிப்பதாய் –ஸ்வா ர்த்தத்தை எல்லாம் ஸூஸ்பஷ்டமாகவும் ஸூக்ரஹமாகவும் தெறிவிக்குமதாய் – அத ஏவ அத்யந்த சுலபமாய் -பக்தாம்ர்தம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் –என்னும்படி அநு போக்தாக்களுக்கு அத்யந்தம் போக்யமாய் -நடை விளங்கு தமிழான -த்ரமிட பாஷையாலே – ஸ்ரீ திருவாய் மொழி என்கிற பிரபந்த ரூபேண –
நமாம் யஹம் திராவிட வேத சாஹரம்
அளவியன்ற அந்தாதி ஆயிரத்தை –1-4-11-
பத்தர் பரவும் –1-5-11-படி சொல்லிற்று –
அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11-அபரிச்சேத்யனானவனையும் தனக்குள்ளே ஆக்கவற்றாய் அந்தாதியான ஆயிரம் இப் பத்தின் வளவுரையால் பெறலாகும்-வளவுரை -நற்சொல்லு-பாலைக் குடிக்க நோய் போமா போலே-இத் திருவாய் மொழியின் இனிய சொல்லாலே பெறலாம்-வானோங்கு பெரு வளமே-வான் என்று -பரம பதமாய் -பரமபதத்தில் விஸ்த்ருமாய்-நிரதிசயமான சம்பத்தைப் பெறுவார்கள்-பிதா கிருஷி பண்ணி வைத்தால் புத்ரனுக்கு பலத்தில் அந்வயமாம் போலே-இப் பத்தையும் கற்றவர்களுக்கு இவர் தூது விட்டு பட்ட க்லேசம் பட வேண்டா
இவர் பேற்றைக் கொடுக்கும் இப் பத்து–அதாவது, ஸ்வயம் பிரயோஜனமாக -‘தானே பிரயோஜனமாயிருக்கிற இத்தால், சம்சாரத்தில்-சங்குசிதமான- குறைவான நிலை போய், பரமபதத்தில் சென்று, தன் ஸ்வ ரூபத்தைப் பெற்று – விஸ்த்ருதன் -விரிவையடைந்தவன் ஆகையாகிற எல்லை இல்லாத செல்வத்தைப் பெறலாம், என்றபடி.-
மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11-பாலோடு ஒத்து உள்ள தமிழ் அறிவார்-இசை அறிவார்-சர்வேஸ்வரனும் ஆழ்வாருமான பரிமாற்றத்திலே கால் தாழ்ந்து இருக்குமவர்கள்-பாலேய் தமிழர் -என்கிறது முதல் ஆழ்வார்களை–இசைகாரர் -என்கிறது ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை
பத்தர் -என்கிறது பெரியாழ்வார் போல்வாரை-ஸ்ரீ பராங்குச நம்பி -ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பிள்ளை யுறங்கா வல்லி தாசர் போல்வர் என்னுமாம் -ஆழ்வான் ஓர் உருவிலே–பரவும் ஆயிரத்தின்-அக்ரமாக கூப்பிடுகை
——
கடலையும் சடகோபன் சொல்லையும் சமமாகச் சொல்லுகிறது –
பக்தாம்ருதம்
விண்ணவர் அமுது உண –பெரிய -6-1-2-என்னும்படி
விண்ணின் மீது அமரர் கட்காய -பெரியாழ்வார் –3-4-10-
தேவ போக்யமான அம்ருதத்தை உடைத்தாய் இருக்கும் அது
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-2-தேவ ஜாதி அம்ருதத்தை புஜித்து உஜ்ஜீவிக்க அந்த அம்ருதம் தான் கோதாம் படியாக வந்து தோற்றின பெரிய பிராட்டியாரை லபித்தது
அவ்வழி யாலே ஆஸ்ரித வர்க்கத்துக்கு உபகரித்தவனே – ஜனனி பக்கல் பண்ணும் உபகாரம்
பிரஜைகளுக்காய் இருக்கும் இறே
இது பாலோடு அமுது அன்ன ஆயிரம் –8-6-11-என்னும்படி
அவனித் தேவரான -8-4-10– பூ ஸூரர்க்குப் போக்யமான அம்ருதமாய்
ஆரா வமுதத்தை -2-5-5- உடைத்தாய் இருக்கும் –
சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-பாலோடு அமுது அன்ன ஆயிரம் என்னுதல் -இப்பத்து என்னுதல் -வாஸ்ய வாசகங்கள் யுடைய சேர்த்தி இருக்கிற படி –பால் என்கிறது -சோலை திருக் கடித்தானத்து உறை-திருமால் என்கிற வாஸ்யத்தை –அமுது என்கிறது சடகோபன் சொல் என்கிற வாசகத்தை -இது ஆளவந்தார் நிர்வாஹம் –
அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனித் தேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-பூ ஸூரரான வைஷ்ணவர்களுக்கு பிராப்ய பூமி-பூ தேவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடையத் தக்க பூமி –
எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-க்ஷண காலமும் -கலா காஷ்டாதிகளாலும் பேதிக்க ஒண்ணாத அத்யல்ப காலம் அனுபவிப்பது-ஒரு நாள் அனுபவிப்பது -ஒரு மாசம் அனுபவிப்பது -ஒரு சம்வத்சரம் அனுபவிப்பது-கல்பம் தோறும் கல்பம் தோறும் அனுபவிப்பது -இப்படி கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் பூர்வ க்ஷணத்தில் அனுபவம் போலே அன்றியே உத்தர க்ஷணத்தில் அனுபவம் இருப்பது –-ஊழி ஊழி -மேல் போக்கு இல்லாமையால் மடிக்கிறார்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே – தாரா வாஹிக ஞானத்தில் கால உபஷடம்பாதிகளால் வருவதொரு பேதம் உண்டு இ றே ஞானத்துக்கு-அது போல் அன்றிக்கே அனுபவித்த ஒன்றை அனுபவித்தால் போலே நித்ய அபூர்வமாய் இருக்கை-அதாவது ஒரு பொருளைப் பற்றித் தொடர்ச்சியாக உண்டாகின்ற பல வகை அனுபவங்களில் காலம் தேசம் முதலியவைகளின்
கூட்டரவுகளால் வருவது ஒரு பேதம் உண்டு ஞானத்திற்கு; இங்கு விஷயந்தானே பேதியா நின்றது வேறுபடுகின்றது-ஆயிற்று – என்பதாம்.
ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–நிரதிசய போக்யனாய் -எப்போதும் உண்ணா நின்றாலும் மேன்மேலென திருஷ்ணையை விருப்பத்தை விளைக்கும் அமிருதம் போன்று-
நிரதிசய எல்லை இல்லாத -போக்யனாய் இனியனாய்- வைத்து–அசன்னேவ -என்கிற ஆத்மாவோடு வந்து கலந்தான் – தன்னையும் அறிந்திலேன் -என்னையும் அறிந்திலேன் -அசித்தில் காட்டில் தம்மைக் குறைய நினைத்த படி -அசித்துக்கு இழவு இல்லை –
சேதனனாய் இருந்து வைத்து ஞான பலம் இல்லாமையால் அசித்துக்கு அவ்வருகாக நினைத்து இருக்கிறார்
விஸ்வ ஜன அநு மோதனம்
ஸர்வ ஜன அபிமத ப்ரதமம் ஆகையாலும்
தர்ச நீயமாகையாலும்
ஸமுத்ரம் சர்வ ஜன சந்தோஷ வேஷத்தை யுடைத்தாய் இருக்கும் –
இதுவும் முதல் பத்தர் வானவர் என் அம்மான் பார் பரவ –ஆச்சார்ய ஹ்ருதயம் –187-என்னும்படி
சேஸ்வர விபூதி போக்யமாய் இருக்கும் –
இவற்றில் பிராவண்யம் இவள் பரமே என்ன உண்டாய் ஷோடசகலா பூரணமான சந்திர மண்டலம் போலே பதினாறு நஷத்ரம் நிரம்பினவாறே தேவ போக்யமானவதில் அம்ருதம் போல் அன்றிக்கே என்னாத் தமிழர் இசைகாரர் முதற் பத்தர் வானவர் என் அம்மான் பார் பர வென்னும் படி
சேஸ்வர விபூதி போக்யமான பாலோடு அமுதன்ன மென் மொழி முகம் செய்தது–சூரணை -187-
அதாவது
இவ் அர்ச்சாவதார ஸ்தலங்களிலே ப்ராவண்யம் –இவள் பரமே என்ன உண்டாய்-
முலையோ முழு முற்றும் போந்தில –பெருமான் மலையோ திரு வேம்கடம் என்று
கற்கின்ற வாசகம் இவள் பரமே –திருவிருத்தம் -60–என்னும் படி பருவம் நிறம்புவதர்க்கு முன்னே உண்டாய் —பதினாறு கலைகளாலும் பரி பூர்ணமான சந்திர மண்டலம் போலே பதினாறு நஷத்ரம் பூர்ணமான வாறே-தேவ போக்யமானவதில் அம்ருதம் போல் அன்றிக்கே
அதாவது
கிருஷ்ண பஷே அமரைஸ் சஸ்வத் பீயதே வை ஸூதாமய–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-11-22-என்கிறபடியே
தேவர்களுக்கு போக்கியம் ஆகையாலே -போக்த்ரு நியமம் உடைத்தான அந்த சந்திர மண்டல அம்ருதம் போல் அன்றிக்கே —பொருந்தா வானுறை நாள்களை நாள் தொறும் புணர்வோன் அருந்த வானவர்க்கு
ஆரமுது அன்புடன் அளிப்போன்-வில்லி பாரதம் ஆதி பர்வம்
என்னாவில் இன் கவி –திருவாய் -3-9-1-என்றும் -( இத்தால் ஆழ்வாருக்கும் இதன் இனிமை சொல்லி )
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் –திருவாய் -1-5-11–என்றும் –
தூ முதல் பத்தர்க்கு–திருவாய் –7-9-3- -என்றும் -(இவற்றால் கற்பவர்களுக்கு இனிமை )
கேட்டாரார் வானவர்கள்–திருவாய் -10-6-11- -என்றும் –
தென்னா வென்னும் என்னம்மான் -என்றும் -திருவாய் -10-7-5–
பார் பரவின் கவி–திருவாய் -7-9-5- -என்றும்
சொல்லுகிறபடி ஸ்வ பர விபாகம்-ஸூரி சம்சார விபாகம்–ஈச ஈசி தவ்ய விபாகம் அற-
ஈஸ்வரனோடே இரண்டு விபூதியும் புஜிக்கைக்கு யோக்யமாய் –( பெருமான் மகுடம் சாய்க்கும் வண்ணம் கவி சொல்ல வல்ல ஞானக்கவி -)பாலோடு அமுதன்ன ஆயிரம்–திருவாய் -8-6-11– -என்றும் –
அமுத மென்மொழி–திருவாய் –5-6-2- -என்கிறபடியே
வாச்ய வாசக சம்ச்லேஷ ரசத்தால் -பாலும் அமுதும் கலந்தால் போலேயாய் –
போக்யத அதிசயத்தாலும் – புஜித்தார்க்கு நித்யத்வத்தை கொடுக்கையாலும் – அம்ருத சமமாய் –
அதில் வ்யாவ்ருத்தமான மார்த்வத்தை உடைத்தான சப்தம் இவர் முகோத்கதமாய்த்து என்கை ..
ஸ்ரீ சடகோப வாங் மயம்
அதில் அம்பஸ்ஸூ அகஸ்த்ய வாங் மயமாய் இருக்கும்
இதில் சந்தஸ்ஸூ ஸ்ரீ சடகோப வாங் மயமாய் இருக்கும்-திரு வாய் மொழி இறே
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம்
அது ஸர்வ ஸாகா ஸாரமான சந்தந ஸாகா சமாகத்தை சமீபத்தில் உடைத்தாய் இருக்கும் –
இது ஸர்வ வேதா ஸாரமான உபநிஷத்துக்கள் திரட்சியாய் இருக்கும் –
நமாம் யஹம் திராவிட வேத சாஹரம்
அந்த சாஹரம்-அஞ்சலிக்கு பிராங் முக க்ருத்வா -என்னும் படி அசரண்யனுக்கு சரண்யமாய் இருக்கும்
வண் தமிழ் நூல்களான இது -4-5-10-சடகோபன் பாட்டு என்றவாறே நாடு அடைய கை எடுக்கும்படியாய் இருக்கும் – நமாம் யஹம் -என்று நாடு எல்லாம் அனுசந்திக்கக் கடவர்கள் இறே
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-–திருவாய்மொழி பாடுகைக்கு பாக்யம் பண்ணினேன் ––தன்னைச் சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பலன்களையும் கொடுக்கக் கூடியதான உதார குணத்ததாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது. வண்தமிழ்-ஆவது பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே –லவ குசர்கள் பாட பாட நடந்த ராம சரித்ரம் மக்களுக்கு விளங்கினது போலே ––ஸ்பஷ்டமாய் இருக்கை–கண்டவாற்றால்’ என்று நேரில் பார்ப்பதாய் இருக்கிறதே அன்றோ?-அடியார்க்கு இன்பமாரியே – சர்வேசுவரனைக் கவி பாடப் பெற்ற இதுவேயோ? இது, வைஷ்ணவர்களுக்கு ஆனந்தத்தை உண்டாக்கக் கூடியதாகவும் ஆயிற்று.-இன்பத்தை யுண்டாக்கும் மேகம் ஆதலின், ‘இன்பமாரி’ என்கிறது.–இது எனக்கு இருக்கிறபடி கண்டால், இது உகக்குமவர்களுக்கு எங்ஙனே இருக்கிறதோ!’ என்கை.-‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,’ என்றாரே அன்றோ?
——–
வந்தே ராமாயண ஆர்ணவம் -என்னுமா போலே
ஸ்லோக ஜால ஜலாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம்
காண்ட க்ராஹா மஹா மீநம் வந்தே ராமாயண ஆர்ணவம்
அங்கே சதுர் விம்ச ஸஹஸ்ரம்
இங்கே சீர்த் தொடை ஆயிரம் -4-1-11-
தீர்த்தங்களாய் இருக்கும் -7-10-11-
அங்கு ஐநூறு சர்க்கம்
இங்கு பத்து நூறு -6-7-11-என்னும்படி இருக்கும்
அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-கல்யாண குணங்களை தொடுத்துச் சொன்ன இது திருவாய் மொழி-
வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத் துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-கிழி கிழி யாய் கொடுப்பாரை போலே
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-தன் இனிமையால் புறம்புள்ளவற்றை அறுக்கும் என்னுதல் -பாவனம் என்னுதல் -ஆயிரம் பாசுரங்களும் ஆயிரம் தீர்த்தங்கள் ஆயின.
அங்கு ஷட் காண்டமாய் இருக்கும்
இங்கே ஷட் பதார்த்த ப்ரதிபாதகமாய் பத்துப் பத்தாய் இருக்கும்
அது ராமாயண ஆர்ணவம்
இது திராவிட வேத சாகரம்
அது ரகு வம்ச சரிதமாய் இருக்கும்
இது முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரமாய் இருக்கும் –7-2-11-
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11—காளமேகம் போன்று மிக்க பேரெழிலை யுடையரான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச்செய்த சொற்களை யுடைய மாலை ஆயிரத்து இப்பத்தையும் கருத்தோடு கற்க வல்லவர்கள்–பெரிய பெருமாள் திருவடிகளிலே யாயிற்று ஆயிரமும் சொல்லிற்று -திரு மோகூர்க்கு ஈத்த பத்து -திரு வேங்கடத்துக்கு இவை பத்து -என்றும் பிரித்துக் கொடுத்த அத்தனை -திருப் பலகையில் அமுது படியில் திருப் பதிகளில் நாயன்மார்க்கு அளந்து கொடுக்குமா போலே -என்று பிள்ளை அருளிச் செய்வர் –
அது வால்மீகிர் பகவான் ருஷி என்னும்படி வால்மீகி ப்ரோக்தம்
இது குருகூர்ச் சடகோபன் சொல்லாய் –9-6-11-இருக்கும் –
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
அது மஹா பாதக நாஸினமாய் இருக்கும்
இதுவும் அருவினை நீறு செய்யுமதாய் இருக்கும் —3-5-11-
தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண் வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-பகவத் குணங்களை கேட்டால் -வேறுபடாதே திண்ணியராய் இருக்கைக்கு அடியான மஹாபாவங்களைச் சாம்பல் ஆக்கும்.–அவிகிருதரராய் இருக்கைக்கு அடியாகிற மஹா பாபத்தை போக்கும்
அது ஸம்ஸாரம் ஸ விஹாய கச்சதி புமான் விஷ்ணோ பதம் ஸாஸ்வதம் -என்று பலமாய் இருக்கும்
இதுவும் -வானின் மீதி ஏற்றி அருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே –8-4-11- என்று
திருவடியே அடைவிக்கும் -4-9-11-
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-அராஜகம் ஆனால் ராஜ புத்ரன் தலையிலே முடியை வைத்து பின்னை விலங்கு வெட்டி விடுமா போலே இப்பத்து தானே முந்துற பரமபதத்தை கொடுத்து பின்னை சம்சாரம் ஆகிற மஹா நாடகத்தை அறுத்துக் கொடுக்கும் –
திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11-திருவடிகளிலே வைத்து சொன்ன ஆயிரம் என்னுதல் –இவ் விசேஷணங்களை ஆயிரத்திலும் இட்டு நிர்வஹிப்பர்கள் பூர்வாச்சார்யர்கள் -பட்டர் அவ்வோ திருவாய்மொழியிலே இட்டு நிர்வஹிப்பர்–இத்திருவாய் மொழி தானே திருவடிகளிலே சேர்விக்கும் –திருவடிகளை பிராபித்து-சாயுஜ்யம் பிரதி பன்னாயா-என்றும் -யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -என்றும் சொல்லுகிறபடியே இளைய பெருமாளை போலே பிரியாதே நின்று எல்லா அடிமைகளையும் செய்யப் பாருங்கோள் –அவன் திருவடிகளிலே கிட்டக் கொள்ள, நீங்கள் உங்களுக்குமாய் இராமல்,-அடிசிற் பானை போலே அவன் திருவடிகளிலே
நித்ய கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்.-சமானமான பதவியை அடைந்தவர்களாய், விரோதி கழிந்தவர்களாய்-எப்பொழுதும் என்னுடைய கைங்கரிய பரர் ஆகின்றார்கள்,’ என்றும்,
பகவான் எந்த எந்த வழியாலே செல்லுகிறானோ,-அந்த அந்த வழியிலே உயிரும் செல்கிறது,’ என்றும் சொல்கிறபடியே,-இளைய பெருமாளைப் போலே பிரியாதே நின்று அவன் நினைவிற்குத்
தகுதியாக அடிமை செய்யப் பாருங்கோள்.
இப்படி அடிமை செய்வார்க்கு, இவர் விட்டவையும் விட்டுப் பற்றியதும் பற்ற வேண்டுமோ?’ என்னில்
இவர் அருளிச் செய்த இத் திருவாய் மொழியைச் சொல்லவே,-தன்னடையே ஐம்புல இன்பங்களில் விரக்தியையும் பிறப்பித்து அவன் திருவடிகளில் சேர விடும் இத் திருவாய் மொழி தானே,’ என்க.
————-———————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply