ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
இன்று தாறும்-இது காறும் -இன்று வரை நெஞ்சைத் தூது விட்ட ஆழ்வார் அவனைப்போலவே
சீதாபிராட்டி இரண்டாம் பிரிவு போல் ஆனதே -முதல் பிரிவில் பெருமாள் துன்பம் பட்டார்
இரண்டாம் பிரிவில் அப்படி ஒன்றும் இல்லாமல் தரித்து இருந்தாரே -இதுவும் அவரைப் போலவே ஆனதே–அவர் ஆளை நமக்குள் வைக்கும் ஒற்றர் போல் அன்றோ இந்த நெஞ்சம்
அது தெரியாமல் நமது மட நெஞ்சம் என்று பிரமம் கொண்டுள்ளோம்
அப்படி நம்பி இருந்தால் -தூது விட்டால் -நெஞ்சு -திரும்பாதே -விடாதீர் என்று உபதேசிக்கிறார் –
போவதற்கு முன்பு இள நெஞ்சமாக இருந்து இப்பொழுது திடமான நெஞ்சு ஆனதே –
ஆழ்வாரைக் கை விடுவதில் உறுதியான நெஞ்சு-அருள் பெறுவார் அடியார் -10-6–நெஞ்சே மருள் ஒழி என்பார் அதிலே-திருவாறன் விளைக்காக்கவோ பரமபதத்துக்கோ –-உடையவன் கூப்பிட திவ்ய தேச ப்ராவண்யத்தில் மயங்கி போகாமல் இருக்காதே -அங்கு –
வாழி மட நெஞ்சே -என்று நெஞ்சை ஸ்துத்திவாறே–என்னை இப்படி ஸ்துத்திக்கிறது என் -நான் என் செய்தேன் -என்ன –இந்நாள் வரை பந்த ஹேதுவாய் போன நீ – அவனுடைய கடாஷத்துக்கு இலக்காகி சஹகரித்திலையோ- உன்னாலே அன்றோ நான் இது (பெரும் கேழலார் புண்டரீக கடாக்ஷம்) பெற்றது -என்று – கொண்டாடினார் கீழ் –கொண்டாடின அநந்தரம் ஸ்வப்பனம் போலே முன்புற்றை அனுபவம் மாநசனமாய்- பாஹ்ய சம்ஸ்லேஷ-அபேஷை பிறந்து – அது கை வராமையாலே கலங்கி – இவர் படுகிற வியசநத்தை கண்டு – திரு உள்ளம் -நான் இங்குற்றை செய்ய வேண்டுவது என் -என்ன –அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் போய் என் தசையை அறிவி -என்று திரு உள்ளத்தை தூது விட்டார் –அது மீண்டு வரக் காணாமையாலே நோவு படுகிறார் –பெரும் கேழலார்-என்று ஸ்ரீ வராகமான அவதாரத்தை ஆசைப்பட்டு –ஸ்ரீ நரஸிம்ஹமான இடத்தே தூது விடுவான் என் என்னில் – இரண்டு அவதாரமும் ஆஸ்ரிதர் அர்த்தம் என்கையாலே விடுகிறார் –
மட நெஞ்சம் -என்று கீழே சர்வேஸ்வரன் மேல் விழுவதுக்கு–அல்லேன் -என்னாதே ஆபிமுக்யத்தை பண்ணி அதுக்கு (சர்வேஸ்வரன் மேல் விழுவதுக்கு )உடன் பட்டது என்று நெஞ்சைக் கொண்டாடினார் –இப்போது அந்நெஞ்சை இன்னாதாகிறார் –இப்போது இன்னாதாகிறது என் – அப்போது கொண்டாடுகிறது என் -என்னில் –ஆசை கரை புரளும்படி –அதுக்கு தானே கிருஷியைப் பண்ணி –
அவ்வாசைக்கு இரை இட்டு –இனி பிராப்தி அல்லது நடவாத சமயத்திலே –அதுக்கு தானே-சஹகரியாதே –தன்னைக் கொண்டு அகல நின்றது என் என்று -இன்னாதாகிறார் –அவன் வரவு தாழ்ந்த இந்த சமயத்தில் அவன் நமது ஆர்த்தியை வளர்க்கப் பிரிய ‘இதுவும் அவனுடன் நின்று விட்டதே–இது சஹகரிக்கை ஆவது என் என்னில் – பந்த ஹேதுவானோ பாதி மோஷ ஹேது இதுவும் இறே- ரஷ தர்மேண பலேந சைவ (கிஷ்கிந்தா)-என்கிறபடியே ப்ராப்தி அளவும் செல்ல-தான் முகம் காட்டி -நீ பட்டது என்-என்ன வேணும் இறே-–அஹம் சர்வம் கரிஷ்யாமி ஸஹ வைதேஹ்யா
என்று சொல்லி-பிரிந்த போது பண்ண வில்லையே –அவனே உபாயம் என்கிறது –-ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி -நிஷ்கரிஷித்து சொல்லுகிற வார்த்தை -இறே –அவனே உபாயமாக செய்தேயும் -இத்தலையாலேயும் வருவன-குவாலாயுண்டு இறே –அவை தான் தனித்தே பேற்றுக்கு உடலாக மாட்டாமையாலே – ஒன்றாகச் சொல்லுகிறது அத்தனை இறே –அவன் ஸாஷாத் உபாயம்-இது நெஞ்சு பரம்பரையா உபாயம் ஆகுமே-இத் தலையால் வரும் அவை தான் -எவை என்னில் –பேற்றுக்கு சேதனன் தான் உளனாக வேணுமே –தான் உளன் என்னா–உபாயத்தில் அந்வயியான் இறே –புருஷார்த்தத்தை அறிந்து –ருசித்து –சஹகரிக்கைக்கு நெஞ்சு வேணுமே –உபாயாந்தரங்களை எதிர்பார்க்க மாட்டான்
இருந்தாலும் அதிகாரி வேண்டுமே-உபாயாந்தரங்களை விடுவதும் நாம் தானே-ஆனுகூல்ய சங்கல்பமும் நாம் தானே பண்ண வேணுமே-பிரதி கூல்ய வர்ஜனமும் நாம் தானே பண்ண வேணுமே
திட அத்யவசாயத்துக்கும் நாம் வேண்டுமே –ஈத்ருசங்கள் சில உண்டு இறே – இத்தலையால் வருவன -இவை தான் உண்டாக நிற்கச் செய்தேயும் –கரண சரீரத்தில் (உபாயத்தில் )நிவேசியாதே –சந்நிதி மாத்ரத்தாலே உபகாரங்களாய் நிற்கக் கடவது –அவனே உபாயமுமாய் – அவன் சித்த ஸ்வரூபமானுமாய்-இருக்கச் செய்தே – சம்சாரமும் அனுவர்த்திக்கிற ஹேது – ஈத்ருசங்களில் இல்லாமை இறே –ஆக –இப்படி ப்ராப்தி அளவும் நின்று -முகம் காட்டி தரிப்பிக்க வேண்டி இருக்க –
அது செய்யாமையாலே -நெஞ்சை இன்னாதாகிறது –
நீர் இருக்க –மட மங்கைமீர் -கிளிகள் தாம் இருக்க -மதுகரம் எலாம் நிறைந்து இருக்க –
மட அன்னம் முன்னம் நிரையாய் இருக்க -உரையாமல் யான் ஆர் இருக்கினும்
என்நெஞ்சம் அல்லது ஒரு வஞ்சம் அற்ற துணை இல்லை என்று ஆதரத்தினொடு
தூது விட்ட பிழை ஆரிடத்து உரை செய்து ஆற்றுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேடரிய திரு அரங்கரை வணங்கியே திருத் துழாய் தரில் விரும்பியே
கொடு திரும்பியே வருதல் இன்றியே வார் இருக்கும் முலை மலர் மடந்தை உறை மார்பிலே
பெரிய தோளிலே மயங்கி இன்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –- ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –24–
இப்படி இவர் வார்த்தை கேட்டுத் திருந்தின நெஞ்சு பகவத் விஷயத்திலே அவஹாகிக்க
இம் மாநஸ அனுபவத்துக்கு அநு ரூபமான பாஹ்ய அனுபவத்தில் அபி நிவேசம் பிறந்து
அது கிடையாமையாலே யுண்டான தளர்த்தியாலே சொன்ன பாசுரத்தை நாயகனான ஈஸ்வரனுடைய விஷயத்திலே நெஞ்சைத் தூதுவிட்ட நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை–கீழ் –ஸர்வேஸ்வரன் மேல் விழுவதற்கும்-அல்லேன் என்னாதே ஆபி முக்யத்தைப் பண்ணித் தமக்கு உடன்பட்டது என்று நெஞ்சைக் கொண்டாடினார்-இப்போது-நெஞ்சை இன்னாதாகிறார்–அது என் என்னில்–ஆசை கரை புரளும்படு அதுக்குத் தான் கிருஷி பண்ணி
அவ் வாசைக்கு இரை இட்டு இனி பிராப்தியால் அல்லது நடவாத ஸமயத்தில் அதுக்கு ஸஹ கரியாதே
தன்னைக் கொண்டு அகல நின்றது என்று இன்னாதாகிறார் –இது ஸஹ கரிக்கையாவது என் என்னில்
பந்த ஹேதுவானவோ பாதி மோக்ஷ ஹேதுவாவும் இறே-ர ரஷே தர்மேண பாவேந சைவ -கிஷ்கிந்த-1-128-என்கிறபடியே-பிராப்தி அளவும் செல்ல முகம் காட்டி ஓக்க நின்று நீ பட்டது எல்லாம் நான் பாட்டன் -என்ன வேணும் இறே–அவனை உபாயம் என்கிறது-ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி நிஷ்கர்ஷித்துச் சொல்லும் வார்த்தை இறே–அவனே உபாயமாக நிற்கச் செய்தே இத்தலையில் வருவதும் யுண்டு இறே அவை தான் தனித்து நின்று பேற்றுக்கு உடலாக மாட்டாமையாலே
ஒன்றாகச் சொல்ல மாட்டாது ஒழிகிறது அத்தனை-இத்தலையால் வருமவை தான் எவை என் என்னில்
பேற்றுக்குச் சேதனன் தான் உளனாக வேணுமே-தான் உளன் என்னா உபாயத்தில் அந்வயியான் இறே
புருஷார்த்தத்தை அறிந்து ஸ்வீ கரிக்கைக்கு நெஞ்சு வேணும் இறே-ஈத்ருசங்கள் சில யுண்டு இறே -இத்தலையிலே வருவன இவை தான் உண்டாகா நிற்கச் செய்தேயும் தான் உபாய சரீரத்திலே நிவேசியாதே ஸந்நிதி மாத்ரத்தாலே உபகாரகங்களாய் நிற்க்க கடவது-அவன் உபாயமாய்
ஸித்த ஸ்வரூபனுமாய் இருக்கச் செய்தே இவனுக்கு சம்சாரம் அநு வர்த்திக்கிறதுக்கு ஹேது ஈத்ருசங்கள் இல்லாமை இறே-இப்படி பிராப்தி அளவும் நின்று முகம் காட்டித் தரிப்பிக்க வேண்டி இருக்க
அது செய்யாமையாலே நெஞ்சை இன்னாதாகிறார் –இன்று தாறும் திரிகின்றதே
மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப் போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்று தாறும் திரிகின்றதே -46-நெஞ்சைத் தூது விட்ட தலைவி இரங்குதல்
அருளால் அடியில் எடுத்த மால் அன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து -இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் –96–இப்படி பரோபதேசம் தலைக் கட்டின பின்பு தம்மை அவன் திரு நாட்டிலே கொடு போகிக்கு த்வரிக்கும் படியையும்-கொடு போகும் இடத்தில் தாம் நியமித்தபடி கொடு போக வேணும் என்று தமக்கு அவன் பரதந்த்ரனாய் நிற்கிறபடியையும்-தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் தம்முடைய திரு உள்ளத்துக்குச் சொல்லி-இனியராய் பேசுகிற அருள் பெறுவாரில் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்–கரை ஏற்றுமவனுக்கு நாலாறும் உபதேசித்தார் –-
மட நெஞ்சம் -என்றும் –தமது -என்றும் –-நாட்டிலே இங்கனே இருப்பதொரு பிரமமுண்டு –தந்தாம் நெஞ்சு தந்தாமுக்கு பவ்யமாய் இருக்கும் என்றும் –இச் சேதனன் புருஷார்த்தத்தை சாதித்து கொள்ளுகைக்கு உறுப்பாக சர்வேஸ்வரன் இவனோடே கையடைப்பாக்கி வைக்கையாலே – இத்தை-தம்மது -என்றும் இருப்பர்கள்-இறே –இச் சரீரத்தை கொடுத்தவோபாதி -சரீர ஏக தேசமான நெஞ்சையும் புருஷார்த்தத்தை அறிந்து –ருசி பண்ணுகைக்காக-கொடுத்து வைத்தான் -ஆன பின்பு – இவனுக்கு -என்னது -என்கைக்கு தட்டில்லை இறே –பவ்யராய் இருப்பார்க்கு –எதிர்தலை நோவு படா நின்றால்-
ஒக்க நின்று -முகம் காட்டி -நீ பட்டது என் -நான் பட்டது என் –என்ன வேணும் -இறே –சேஷபூதன் சேஷிக்கு அதிசயத்தை பண்ண வேணும் –அவை இரண்டும் இல்லையே இற்றே இதற்கு –
ஒரு கருமம்-இத்யாதி –ஒரு பிரயோஜனத்தை குறித்து -நெஞ்சை ஏவுகையிலே துணிந்தவர்கள் –
அக் கார்யம் தன்னையே விட்டுப் பிடிக்க அமையும் -இது செய்வது என்கிறதன்று-அக் கார்யம் தன்னை விட்டுப் பிடிக்க அமையும் என்கிறது –என்றான்-எதற்காக-விட தேடுகிறது என் -என்ன –அப் பொன் பெயரோன் -இத்யாதி –பவ்யமுமாய் –சேஷமுமாய் இருக்கிற இது செய்து திரிகிற கார்யம் இது அன்றோ –அப்பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ் விட –கார்யம் கொள்ள ஒண்ணாத தோரிடத்திலே தான் விட்டேனோ –நமக்கு கார்யம் செய்து உபகரித்து நிற்கிறவன் பக்கலில் அன்றோ விட்டது –ஆஸ்ரிதரில் ஒருவருக்கு செய்தது -தமக்கு செய்ததாக இருக்கிறார் –அப் பொன் பெயரோன் – தன் வயிற்றிலே பிறந்த பிரஜை வாயாலே திருநாமத்தைச் சொல்ல – அவனை சத்ருக்கள் செய்யுமத்தைச் செய்து நலியக் கோலின க்ரௌர்யத்தை நினைத்து –-அப் பொன் பெயரோன் -என்கிறார் –
பள்ளியில் ஓதி வந்த –பள்ளி ஓதும் பருவத்திலே ஏதேனும் சொல்லிலும் கோதுகலாமாய் இறே இருப்பது –தன் சிறுவன்-ஆரேனும் பிள்ளைகள் சொல்லிலும் இனிதாய் இருக்கும் பருவத்திலே –
தன் வயிற்றில் பிறந்தவனும் -இறே–வாயில் ஓர் ஆயிர நாமம் ஒள்ளியவாகிப் போத –சத்ருவைச் சொல்லிலும் – காலிலே விழ வேண்டும்படி வார்த்தையை ஆயிற்றுச் சொல்லிற்று –அப்பருவத்தில்-
அவன் சொன்ன வார்த்தையாலே –ஒன்றையே குவாலாக சொல்லுகிறார் –ஒன்றுமோர் பொறுப்பு இலனாகி –அசஹ்ய அபசாரம் ஆயிற்று –நிருபாதிக பந்தம் உண்டாய் இருக்க -அவற்றையும் காற்கடை கொண்டு – சத்ருக்கள் செய்யும் அத்தைச் செய்தான் –பிள்ளையைச் சீறி –திருநாமம் சொன்னதுவே ஹேதுவாக-இவனை -புத்திரன் அன்று -என்று-கை விட்டான் – இவர் அவனோடு தமக்கு ஒரு சம்பந்தம் சொல்லுகிறார் –தட நெஞ்சம்--தேவதைகளுடைய வரத்தை ஊட்டியாக விட்டு – திரு உகிருக்கு இரை போரும்படி வளர்த்த பெரிய மார்பை –கீண்ட –நரசிம்ஹனுடைய சீற்றத்தை கண்டவாறே அவன் சரீரம் உருகிற்று –அநாயாசேன கிழித்து பொகட்டான்–பரியனாகி வந்த -வரம் கொடுத்து பருமனாக்கி வைத்த தேவதைகள்-பொன் பெயரோன் -கோப அக்னி பட்டு உருகிற்றே —பிரானார் –தகப்பன் பகையாக வந்து உதவின இவன்-தான் அகல நிற்கையாலே வந்த ஆற்றாமைக்கும் ஆள் விட்டால் பொறுத்திரான் (பொறுக்க மாட்டான் ) இறே-அவன் தெளிவிக்கு உதவின அவன் கலக்கத்துக்கு உதவாமை இல்லை இறே –அவனதும் பக்தியே ஆகிலும் –மத்தஸ் சர்வ மகம் சர்வம் -என்கிற தெளிவோடே கூடி இருக்கும் இறே –இவரதோ கலங்கி மூவாறு மாசம் மோஹித்தவர் அன்றோ-இவரும் கடல் ஞாலம் செய்தேன யானே என்னும் என்றும் பின்பு ஒவ்வொரு சமயம் தெளிவுடன் அநு காரம் செய்வார்
தமதடிக் கீழ் விட –அவன் திருவடிகளில் விட–போய் திட நெஞ்சமாய் –போகிற போது -இத் தலையில் ஆற்றாமை கண்டு கண்ணும் கண்ண நீருமாய் -இத் தலை பட மாட்டாதோ என்னும் படி இறே போனபடி –
அங்கே புக்கவாறே -அவன் ஸ்வாபத்தைப் பஜித்தது- பிராட்டி உடைய இரண்டாம் பிரிவு போலே —அசோக வனம் முதல் பிரிவில் -தூங்காமல் -கடித்தது ஊறுவது தெரியாமல் இருந்தவர் இரண்டாம் பிரிவில் தரித்து தெம்பாக இருந்தாரே-அவன் தான் போகிற போதும் இவன் அகல நின்றால் தாழான் என்று இறே போக விட்டது –அவன் ஸ்வபாவத்தை பஜித்தது என்று கொடுமை சொல்லுகிற இதுக்கு
கீழ் உபகாரகர் என்றதோடு சேர்த்தி என் என்னில் –அவ் உபகாரத்தை பற்றிச் சொல்லிற்று அது –
இவ் ஆற்றாமையிலே முகம் காட்டாமையைப் பற்றிச் சொல்லிற்று இது –எம்மை நீத்து –என்னை அற சந்யசித்து–இன்று இத்யாதி –நாம் அல்லது தஞ்சம் இல்லாதாரைப் பொகட்டு போந்தோம் என்னும் –
அனுதாபத்தோடு ஓரிடத்திலே விழுந்து கிடந்தது என்று கேட்கப் பெற்றோம்-
கீழ் பாட்டில் ஸ்ரீ வராஹ அவதாரத்தில் ஈடுபட்டு இதில் ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தில் ஈடுபட்டு மீட்க முடியாத படி ஆழ்ந்தபடியை அருளிச் செய்கிறார் –விட நெஞ்சை உற்றார்-விஷம் போலே கொடிதான மனத்தை உற்றார் –அதற்கு உரியவர் விடவோ அமையும்–விட அமையுமோ -தூது விடத் தகுமோ -தகாது என்றும் உரைக்கலாம்-ஓர் கருமம் கருதி–நெஞ்சை உற்றார்-விட அமையுமோ–ஒரு காரியத்தைக் குறித்து மனத்தைத் தூது விடத் துணிந்தவர்கள்-அப்படி விடுவதில் காட்டிலும் அந்த காரியத்தை கை விடவே அமையும் -என்றவாறு-மறந்து அங்கேயே இருந்ததே -போய்-திட நெஞ்சமாய் -போகும் பொழுது
எனது பிரிவாற்றாமையை நோக்கி நெகிழ்ச்சி கொண்டு இருக்க-அங்கே போன பின்பு அவனைப் போலவே வன்மை கொண்டு விட்டதே –திரிகின்றதே-நம்மை அல்லது தஞ்சம் இல்லாதவரை தனியே விட்டு வந்தோமே அனுதாபித்து ஓர் இடத்தில் விழுந்து கிடாமல்-உல்லாசம் தோற்ற தான் நினைத்தபடி திரிந்து கொண்டு இருக்கின்றதே –
மட நெஞ்சம் என்றும்-மடப்பத்தால் தமக்கு விதேயமாகப் போந்த நெஞ்சு என்றும்–தமது என்றும்–
விதேயத்வ மாத்ரம் அன்றிக்கே-கரணத்வ ப்ரயுக்தமான சேஷத்வ ஸம்பந்தம் யுண்டு என்றும்-ஓர் கருமம் கருதி-இது புறம்புள்ளாரைக் கொண்டு கொள்ளும் கார்யம் இன்றியே அந்தரங்க பூதரைக் கொண்டு கொள்ளுவதொரு கார்யம் என்று நினைத்து-விட நெஞ்சை உற்றார்–நெஞ்சைப் போக விடுவதாக அறுதி இட்டவர்கள்–விடவோ அமையும்–அந்த அறுதிப் பாட்டைத் தவிர அமையும்–ஓ -என்று-இழவைக் காட்டுகிறது–நெஞ்சிலும் அண்ணியாரும் யுண்டோ (அருகிலே உள்ளார் உண்டோ ) தவிருகிறது என் என்னில்–அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் -தமது அடிக் கீழ் விட துர்மானத்தாலும்
பகவத் பாகவத ப்ரத்வேஷத்தாலும் ப்ரஸித்தனாய்-பொன்னுக்குப் பர்யாயமான ஹிரண்யன் என்னும் பேரை யுடையவனுடைய அஹங்காரம் குடி கொண்ட இடமுடைய ஹிருதயத்தை அநாயாஸேந பிளந்த மஹா உபாகாரகனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே போக விட–இத்தால் ஆஸ்ரயித்தவர்களுக்கு பிரபல விரோதிகள் யுண்டாகிலும் அநாயாஸேந கழித்துக் கொடுக்குமவன் ஆகையாலே நெஞ்சைப் போக விடுகைக்கு பற்றாசாகாச் சொன்ன படி—போய்த் திட நெஞ்சமாய்—
விட்டதே பற்றாசாக விஷய வை லக்ஷண்யத்தாலே சடக்கெனப் போய் த்ருட அத்யவசாய யுக்தமாய்–இவ்விடத்தில் நெஞ்சு என்றது வியவசாயத்தை—எம்மை நீத்து–கார்யம் கொள்ளப் போக விட்ட
எங்களை நினையாமல் விட்டு–இன்று தாறும் திரிகின்றதே –இன்று அளவும் முக்தரைப் போலே
அனுபவமே யாத்ரையாய் அநு ஸஞ்சரணம் பண்ணித் திரியா நின்றது –இத்தால் தம்முடைய திரு உள்ளம் மீட்க அரிதாம் படி பகவத் விஷயத்திலே அவஹாகித்தமையை அருளிச் செய்தார் ஆயிற்று
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-மட நெஞ்சம் என்றும் தமது என்றும்-நாட்டிலே இங்கனேயும் பிரமம் யுண்டு-தம் தாம் நெஞ்சு தம் தனக்கு பவ்யம் என்று சேதனன் தான் புருஷார்த்தத்தை சாதித்துக் கொள்ளுகைக்கு உறுப்பாக ஸர்வேஸ்வரன் இவற்றை இவனோடு கையடைப்பாக்கி வைக்கையாலே இவற்றைத் தம் தாம் என்று இருப்பார்கள் இறே-இச்சரீரத்தைக் கொடுத்தவோ பாதி-சரீர ஏக தேசமான னென்கையும் புருஷார்த்தை யறிந்து ருசி பண்ணுகைக்காகக் கொடுத்தான்-அங்கே புக்கவாறே அவன் ஸ்வ பாவத்தைப் பஜித்தது பிராட்டியுடைய இரண்டாம் பிரிவு போலே அவன் தான் போகிற போது இவன் தாழ்க்க மாட்டான் என்று இறே போயிற்று-அவன் ஸ்வ பாவத்தைப் பஜித்தது என்று கொடுமை சொல்லுகிற இதுக்கு கீழ் உபகாரம் சொன்னதோடு சேர்த்தி என் என்னில் அங்கு உபகாரத்தைப் பற்றிச் சொல்லிற்று இங்கு இவ்வாற்றாமையாலே முகம் காட்டாமையான அத்தைப் பற்றிச் சொல்லிற்று—எம்மை நீத்து-என்னை ஸந்யசித்தது–இன்று தாறும் தாறும் திரிகின்றதே-நம்மை யல்லது தஞ்சம் இல்லாதாரைப் பொகட்டுப் போந்தோம் என்னும் அனுதாபத்தோடே ஓர் இடத்தே இழந்து கிடந்தது என்று கேட்கப் பெற்றதாகிலுமாம் இறே தான் நினைத்த படி இன்று அளவும் ஸஞ்சரியா நின்றது –
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-வியாக்யானம்–மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் -தங்கள் நெஞ்சு தங்களுக்கு விதேயம் என்றும்-நெஞ்சு தான் தங்களது என்றும் அத்யவசித்து இதுவும் மிகவும் அந்தரங்கர் செய்யுமது என்று எண்ணி நெஞ்சை அதுக்காக விட நினைத்தார்-அந்த நினைவை விடத்தக்கதே–அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப்-நான் அந்தப் பொன் பெயர் உள்ளவனுடைய பகவத் பாகவத த்வித அத்வேஷங்களால் அகன்ற மார்வை விதாரணம் செய்த மஹா உபகாரகருடைய திருவடிகளில் என் நெஞ்சைப் போக விட–போய்திட நெஞ்சமாய்-சடக்கெனப் போய் என்னை விடுமத்திலும் அவரையே தொடர்வதிலும் அத்யவசாய தார்ட்யம் யுடையதாய்–எம்மை நீத்து-என்னை நிராகரித்து–இன்று தாறும் தாறும் திரிகின்றதே–தோளில் இட்ட திருத்துழாய் தாரும் தானுமாய் அவரோடே இன்றும் அநு சஞ்சரண ஸீலமாய் இரா நின்றதே-ஆகையால் ஆர்க்கும் தன் நன் நெஞ்சு என்று தூது விடலாகாது என்று –
தாத்பர்யம்
கீழ் உபதேசம் கேட்டு சர்வேஸ்வரனை அனுபவிக்க மானஸ அனுபவம் விஞ்சி-இப்படி இவர் வார்த்தை கேட்டுத் திருந்தின நெஞ்சு பகவத் விஷயத்திலே அவஹாகிக்க-இம் மாநஸ அனுபவத்துக்கு அநு ரூபமான பாஹ்ய அனுபவத்தில் அபி நிவேசம் பிறந்து அது கிடையாமையாலே யுண்டான தளர்த்தியாலே சொன்ன பாசுரத்தை நாயகனான ஈஸ்வரனுடைய விஷயத்திலே நெஞ்சைத் தூதுவிட்ட நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் – நமக்கு உபகரணமாக கொடுவிக்கப்பட்ட கற்ப்பிக்கப்பட்ட இம் மனஸ்ஸூ நமக்கு அடங்கி உதவும் என்று கருதி பார்ஸ்வத்தாருக்கு உபதேசிக்கிறார்
பலிஷ்ட சத்ருக்கள் அனைவரும் இவர் பெயர் மாத்ரம் கேட்டு-அதனாலே மாயும் ஸ்ரீ நரசிம்மன் –
பரம உபகாரகன் இடம் எனது நெஞ்சைத் தூது அனுப்பினேன்-உண்ணப் புக்கு வாயை மறப்பாரைப் போல அனுப்பிய என்னையும் என் காரியமும் மறந்து சுகமே இருக்க நீங்களும் மனஸ்ஸை அதே போல் அனுப்பி இழவாதே கொள்ளுங்கோள்-நீ எத்தனித்த கார்யம் மறக்கவே அமையும் நினைக்கவும் மனம் வேண்டுமே–
அருள் பெறுவார் -பிரவேசம் –
பொய் நின்ற ஞானம் தொடங்கி -இவ்வளவும் வர –சர்வேஸ்வரனை ஆழ்வார் பின் தொடர்ந்த படி சொல்லிற்று –
இது தொடங்கி ஆழ்வாரைச் சர்வேஸ்வரன் பின் தொடருகிற படியைச் சொல்கிறது –
கண்ணன் கழலிணை யில் -இப்படி பக்தியின் தன்மையை உபதேசித்து-
கை ஒழிந்த பின் தன் பக்கலிலே இவர்க்கு விடாய் பெருகிற படியைக் கண்டு-
இவர்க்கு முன்பே விடாய்த்து திரு வாட்டாற்றிலே தங்கு வேட்டையாக -பரஸ்தானம் போலே -வந்து நிற்கிறவன் ஆகையாலே-
ஸ்வ ஸ்தானம் பரமபதம் அன்றோ -இவரைக் கொண்டு போகையிலே அவன் விரைவு மிக்கவன் ஆனான் –
இவர் விடாயின் அளவு அன்றே அவனுடைய விடாயின் அளவு –
சிரஞ்சீ வதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம்அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர -66-30-
ஒரு கணமும் நான் உயிர் தரித்து இருக்க மாட்டேன் -என்னும் ஏற்றம்-உண்டே அன்றோ அவன் விடாய்க்கு
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னின் முன்னம்-பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் -9-6-10-
ஆழ்வாரும் நாமுமாய் அனுபவிக்க வேண்டும் -என்று பாரித்து-அது செய்யும் இடத்தில்-
அனுபவத்துக்கு ஒரு பிரிவு வாராதபடி தன்னந்தனியே இருப்பது ஒரு தேச விசேடத்திலே கொடு போய் வைத்து-
அனுபவிக்க வேண்டும் -என்று பாரித்து-அங்கனம் செய்யும் இடத்தில்-
இவருக்கு பர தந்த்ரனாய் இவர் ஏவுகிறபடி செய்தோமாக வேண்டும் என்று-
இவர் அனுமதி ஒழியச் செய்த மாட்டாதவனாய் நின்றான்-
சர்வேஸ்வரனை தாம் ஏவ மாட்டாரே தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே-
இப்படி தம் பக்கலிலே மிக்க காதலைச் செய்கிறவனுடைய மேன்மையையும்-
அப்படி மேன்மையை உடையவன் தம் பக்கல் பாரதந்த்ர்யனாய் தாழ நிற்கிற படியையும் நினைந்து-
இதற்கு உசாத் துணையாக இவ் உலக மக்களை பார்த்த இடத்து-நாட்டார் உடன் இயல் ஒழிந்து –
அவர்கள் ஐம்புல இன்பங்களுக்கு வசப் பட்டவர்களாய் அவற்றோடு பணி போந்து இருந்தார்கள்-
சோஸ்ச்னுதே ஸர்வான் காமான் -என்று அவன் உடன் கூடவே இருந்தே அனுபவிக்கும் முக்த நித்யர் போலே –
அவனைப் பார்த்த இடத்தில் மிக்க காதலை உடையவனாய் முன்னடி தோற்றாதே இருக்கிறவன்-
ஆகையாலே அவன் இதற்கு ஆளாக மாட்டு இற்றிலன்-
இனி அவன் திரு அருளுக்கு இலக்கான தாமும் தம்மோடு-உடன் கேடான நெஞ்சமேயாய் இருந்தது –
அந் நெஞ்சினைக் குறித்து-
அவனுடைய மேன்மை இருந்த படியும்-அப்படி மேன்மை உடையவன் நம் பக்கல் தாழ நின்ற நிலையும்
நாம் பெற்ற பேற்றின் கனம் இருந்தபடியும் எல்லாம் கண்டாயே-
நம் கார்யம் விழுந்தபடி கண்டாயே -என்று இதனை தம் திரு உள்ளத்தோடு கூட்டி இனியர் ஆகிறார் –
இதற்கு முன்பெல்லாம்-
சர்வேஸ்வரன் ஆகிறான் எல்லாரையும் ஏவுகின்றவனாய்-ஸ்வ தந்த்ரனாய் இருப்பான் ஒருவன்-என்று இருந்தார்
இப்போது அங்கன் அன்று –
அடியார்கட்கு பரதந்த்ரப்பட்டு இருப்பதுவே அவனுடைய தன்மை என்கிறார்-
முன்பு எல்லாம் தம்மாலே பாரதந்த்ர்யத்தை இழந்தார்-
இப்போது அவனாலே பார தந்த்ர்யத்தை இழக்கிறார்-
அதுதான் -இருந்தும் வியந்து -என்ற திருவாய் மொழியில் சொல்லிற்று இல்லையே -என்னில்
அதைக் காட்டிலும் இதற்கு வாசி உண்டு –மூன்று தத்துக்கு பிழைத்த பிள்ளை என்ற பிரிவால் அன்றோ அங்கு –
இப்பொழுது -அடியார் தம் அடியனேன் -என்று காரணத்தோடு சொல்லுகிறார்-
சரம தசையில் தாம் நிற்பத்தால் வந்த விளைவு இது என்கிறார் –
நெடுமாற்கு அடிமை -பாடியதன் பயன் பெற்றார் –பாரதந்தர்யம் இழக்க முடியாதே –
நாம் ததீய சேஷத்வத்தில் நிற்கவே -அவனும் ஆஸ்ரித பாரதந்தர்யத்தில் நிலை நிற்கிறான் திவ்ய தேச பிராவண்யம் விட்டு -அவன் உடன் செல்ல -இத்தையே மருள் என்கிறார் -நெஞ்சுக்கு –இந்த பிராவண்யம் போக்க தானே திரு வாட்டாற்று எம்பெருமான் இடம் –
அவன் தானே இவரை அங்கே கூட்டிச் செல்ல த்வரிக்கின்றான்-
மருள் ஒளி மட நெஞ்சே -இத்தையே அருளிச் செய்கிறார் –
மோக்ஷ தாநத்தில் பிராண பாரதந்தர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும் -சூர்ணிகை -184-
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-
அருள் பெறுவார் அடியார் –-ராஜாக்கள் மகிஷிகளுக்கு விபூதிகளையும் தங்களையும் அவர்கள் அதீனமாக்கி வைப்பாரைப் போலே -ஈஸ்வரன் தன்னை முற்றூட்டாக கொடுத்து அனுபவிக்குமவர்கள் –
தன் அடியனேற்கு -நீக்கமில்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எங்கோக்கள் -என்று இறே தம் ஸ்வரூபத்தை நினைத்து இருப்பது –அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -பெரிய திருமொழி -2-6-10-என்கிறபடியே-இதனை ஆயிற்று இவர் தமக்கு ஸ்வரூபமாக நினைத்து இருப்பது –
ஆழியான்–திரு வாழி யாழ்வானை விஷயீ கரித்தாலே போலே விஷயீ கரிக்க நினையா நின்றான் –விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல் விடல் இல் -2-9-11–என்கிறபடியே-
கையில் திரு ஆழியை விடல் அன்றோ உம்மை விடுவது -என்னா நின்றான்–ஆஸ்ரிதரை நிரூபகமாக யுடையவன் -என்றுமாம் –
அருள் பெறுவார் அடியார் – தன் அடியனேற்கு-இருவருக்கும் நிரூபகம் இருக்கிறபடி –
இவர் -அருள் பெறுவார் அடியார் தம் அடியார்-அவன் -ஆழியான்- இருவருக்கும் நிரூபகர் அடியார்களே காணும் –
அருள் தருவான் அமைகின்றான் -ஆஸ்ரிதர் எல்லார் பக்கலிலும் பண்ணும் அருளை -என் பக்கலிலே பண்ணுமவனாகச் சமைந்து நின்றான் –அஸ்மா பிஸ் துல்யோ பவது -என்னுமவர்கள் இறே இவர்கள் -ஸ்வதந்த்ரனாகில் தருகிறான் — இனிக் குறை என் என்னில் –
அது நமது விதி வகையே–அது நாம் சொல்லச் செய்வானாக நினைத்து இரா நின்றான் -அது நம்முடைய பாக்யாதி குணம் இறே -என்றாய்த்து பூர்வர்கள் நிர்வாஹம் -இது பிரகரணத்தோடு சேராது -நாம் விதித்த படியே செய்வானாக நினைத்து இரா நின்றான் -என்று அருளிச் செய்தார் எம்பெருமானார் -தன் பக்கல் குறைவற்று இருந்தாலும் இத் தலையில் இச்சை பார்த்து இருக்கும் இறே –சொல் வகையே என்னாதே- விதி வகையே -என்றது -தானே தருமது வித்யதிக்ரமம் -என்று இருக்கை யாலே –விதியை மீறுவதில் பாபத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்-நமது விதி வகையே –
த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிதா-த்வயா நிஸ்ருஷ்டாத்மா பிரேன யத் யதா
ப்ரீயேன சேனாபதீனா ந்யயேதி தத்-ததா அனுஜாநத்தம் உதார வீஷணை-ஸ்தோத்ர ரத்னம் -42
சேனாபதி முதலியாராலே எந்தக் காரியம் எந்தப்படி-விண்ணப்பம் செய்யப் பட்டதோ
அந்த கார்யத்தை அந்தப் படியே நிறைந்த அருளாலே அனுமதி செய்கின்றவனான உன்னை -என்கிறபடியே
இது பட்டர் தாமே அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
இருள் தரும் மா ஞாலத்துள் –-நான் அவன் வழியே போகப் பார்த்தேன் -இங்கு உகந்து அருளின நிலங்களும் பாகவத ஸஹவாசமும் உண்டாய் இருக்க அவன் வழியே போக வேண்டுகிறது என் -என்ன -அஞ்ஞான அவஹமான ஸம்ஸாரமாகையாலே-ஞானாதிகனான ப்ரஹ்லாதனையும் எதிரிடப் பண்ணிற்று இறே –
இனி–அவன் கருத்தை அறிந்த பின்பு –
பிறவி யான் வேண்டேன்–வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை —
மருள் ஒழி நீ –நீயும் என் வழியே போரப் பார் –திரு வாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் –என்று உகந்து அருளின நிலங்களில் நசையாலே பிரமித்து ஓன்று உண்டு –அத்தைத் தவிர் –இங்கே உகந்து அருளின இதுக்கு பிரயோஜனம் அங்கே கொடு போகை யன்றோ –
வாட்டாற்றான் அடி வணங்கே–நம்முடைய நலத்தையே விரும்புகிறவன் வழியே போய் அவனை அனுபவிக்கப் பாராய்-நம்மை பரம பதத்துக்கு கொண்டு போக இங்கே வந்து இருப்பவன்-
அடி வணங்கு -என்பது அவனுடைய கருத்துக்கு இணங்கு -நமஸ்காரம் பொருள் இல்லை –
உகந்து அருளின நிலங்களிலே வந்து நிற்கிறது நம்மை அவ்வருகே கொடு போகைக்காக இருக்கும் –நீயும் அவன் நினைவில் போகப் பாராய் – அடி வணங்குகை யாவது -ஈர் அரசு தவிர்க்கை அன்றோ –
இங்கு நமது விதி வகையே
மேல் வாட்டாற்றான் பணி வகையே– வரும்
இரண்டுமே ஒன்றாக இருக்குமே-அவன் பணித்தது இவர் விதி விருப்பம் படியே என்று கொண்டானே –ஏக மதம்-
———-
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை செய்து அடிமை கொள்ள வேண்டும் -என்று நாம் விரும்ப-அதுவும் கிடக்கச் செய்தே அடிமை கொண்டான் கண்டாயே-இங்கேயே இந்த தேகத்துடன் -அடிமை கொண்டான் கண்டாயே-
பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து –நாம் அடிமை செய்ய-அடைவதற்குத் தடைகளாய்-பலகாலமாக ஈட்டப்பட்ட அவித்யை முதலியவைகள்-எல்லாம் போகப் பெற்ற படியைக் கண்டாயே –பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் படி யன்றோ கவி பாடுவித்துக் கொண்ட படி — கேசவன் எம்பெருமானை -பாட்டாயே பல பாடி-பிரசஸ்த கேசனாய் இருக்கிற அழகைக் காட்டித் தோற்பித்து கவி பாடுவித்துக் கொண்டான் -என்றுமாம் –கேசியை கொன்றால் போல் நம் விரோதிகளை நீக்கி-நம்முடைய அடிமைத் திறத்தினை நிலை நிறுத்தி-நமக்கு ஸ்வாமியாய் உள்ளவனை -என்றபடி –இவை வினை அறுக்க குடித்த வேப்பங்குடிநீர் இது காணும் –
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே –ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களை விட்ட அளவேயோ-ஒரு காரணமே இல்லாமல் பந்துவாக இருக்கும் சர்வேஸ்வரனை பற்றவும் பெற்றோம் –விட்டவர்கள் தம்மை வேறு ஒரு தன்மையாலே பற்றுகிறார் காணும் –ஆகாராந்தரம் -நார சப்தத்துக்குள் உண்டே-நாரணனை நண்ணினமே-படுக்கைக்கு கீழே மிகப் பெரிய நிதி கிடக்க-புறங்கால் வீங்கி சாவாரைப் போலே அன்றோ–நாராயணனாக -அந்தர்யாமியாக -இருக்கச் செய்தேயும் நண்ணாமல் இருந்த படி
————-
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-
நெஞ்சே – நம்மை அங்கீ கரிக்க வல்லனே-என்று நாம் இருக்க –அவ்வளவு அன்றிக்கே பலிக்கிற படி-என் -என்கிறார்-
இஷுவாகு வம்ச ராகு குல நாயகன் கிடைப்பானோ என்று நாம் இருக்க ராக்ஷஸ குல தம்பி கிடைப்பானோ என்று அன்றோ பெருமாள் இருந்தார் –
நாமங்கள் பல சொல்லி–மேன்மைக்கும் நீர்மைக்கும் போக்யத்தைக்கும் ப்ரகாசகமான பல திரு நாமங்களையும் சொல்லி –
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான்-ரஷ்யம் குறைவற்ற தேசம் ஆகையால் ரக்ஷகனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் இங்கு -கைங்கர்யத்துக்கு விச்சேதம் இல்லாமையால் சேஷ பூதனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் அங்கு –
மோஷ தானத்தில் பிரணத பாரதந்த்ர்யம்-வளம் மிக்க நதியிலே கரை புரளும் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-சூர்ணிகை -85
ஆவது அழிவது ஆகிற இந்த உலகம் இவருக்கு தரம் அன்று என்று காணும் அவன் நினைவு-
இவர்க்கே கொடுக்கை யாவது -இவர் வேண்டிக் கொண்டவாறே -வழு விலா அடிமையைக் கொடுக்கையே அன்றோ –
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் –இக் காரியங்கள்- நாம் அவன் பாடே செல்லவும்- நாம் அர்த்திக்கவும்-
நாம் அதிலே தவரிக்கவும்- அவன் நினைவு பார்க்கவும் -எண்ணி இருந்த பிரகாரம் அன்றியே
தானே வருகையும் -அபேக்ஷிக்கையும் -த்வரிக்கையும் – நினைவு தான் பார்க்கையுமாக ஆய்விட்டான் –
விதி வகையே -விண்ணுலகம் தருவானாய் -விரைகின்றான் –
இவருக்கு ருசி பிறப்பதற்கு முன்பு தான் எதிர் சூழல் புக்கு விரைந்து திரிந்தான்-
ருசி பிறந்த பின்பு இவர் விரையத் தொடங்கினார்-
அது கண்டு அவனும் இவர் அளவு அல்லாதபடி விரைகின்றான்-அது கண்டு இவர் ஆச்சர்யப் படுகிறார்-உடையவன் அன்றோ உடைமையை பெறுகைக்கு விரைவான் –
————-
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-
என்னைக் கொண்டு திருவாய் மொழியைச் சொல்லுவிக்கையாகிற இந்த ஸம்ருத்தியில் காட்டிலும் சீரியதோ திரு நாடு என்கிறார்-என் நெஞ்சத்து உள் இருந்து-
பல காலம் இவ் உலகத்திலே தன்னை ஒழிந்த ஐம் புலன்-இன்பங்களை உகந்து போந்தது என்றாயிற்று-இவர் என் நெஞ்சு -என்று இறாய்க்கிறது
இதில் குணமும் குற்றமும் கிடந்தபடி கிடக்க இவர் -என்னது -என்றதுவே காரணமாக-அவன் மேல் விழா நின்றான்-
இவர் –என் நெஞ்சு -என்று புறம்பே கால் வாங்கா நின்றார்-
அவன் அதுவே காரணமாக உள்ளே போக அடி இடா நின்றான் –
விடாயர் மேலில் நீரை நீக்கி உள்ளே ஆழ முழுகிக் கிடக்குமாறு போலே-நெஞ்சின் உள்ளே புகுந்தார் என்பார்–உள் என்கிறார் – –என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு-புறம்பு ஒரு விபூதி உண்டு என்று நினையாதே ஸ்த்தாவர ப்ரதிஷ்டையாக இரா நின்றான் -பரம பதத்தில் பரிமாற்றத்தை சம்சாரத்திலே உண்டாக்கினான்-அங்கே இல்லாத செல்வத்தையும் இங்கே உண்டாக்கினான் –திருவாய் மொழி உண்டாக்கி – என் முன் சொல்லும் -7-9-2-என்றவற்றையும் ஒன்றாக நினைக்கின்றிலர்-அதனால் மொழிவித்து என்னாமல் மொழிந்து என்கிறார் –படை தொட்டான் –படை எடுத்தான்-படை விட்டான் -என்னப் பெற்றது இல்லை-தான் மேற்கொண்ட குறிக்கோளை குலைத்தான் இத்தனையே –கார்யம் கொள்ளப் பெற்றது இல்லை-–நமக்கு அருள் தான் செய்வானே–நமக்கு அவ் வருளைப் பண்ணியே விடும் –விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் என்ற பேற்றை பண்ணியே விடும் -இது நிச்சிதம் –இசைவுக்கு நீ யுண்டு –இசைவைக் கொண்டு கார்யம் செய்கைக்கு அவனோடு சம்பந்தம் யுண்டு -நம் பேற்றுக்கு குறை யுண்டோ –நெஞ்சு அநு கூலித்தது-அல்லேன் என்கைக்கு நீ உண்டு –ஆவோம் என்கைக்கு அவன் உண்டு –அவனை பிரேரிக்கைக்கு கிருபை உண்டு -காருண்ய ரூபை ஸ்ரீ மகா லஷ்மி உண்டே –நமக்கு அருள் பண்ணியே விடும் –விண்ணுலகம் பேற்றைக் கொடுத்தே தீருவான் –இசைவிக்க அவன் உண்டு –இசைந்த பின்பு கார்யம் முடிக்க சம்பந்தம் உண்டே -நம் பெருமான் –பேறு கிட்டியே தீரும்
————–
வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5-
வான் ஏற வழி தந்த –பரம பதத்தில் பொய் புகுகைக்கு -அர்ச்சிராதி மார்க்கத்தைத் தந்த –
பரமபதத்தை பெறுவதில் காட்டிலும் அவ்வருகே ஒரு பெரும் பேறு என்னும்படி அன்றோ -அர்ச்சிராதி -அடைதல் –போம் வழியைத் தரும் -3-9-3-என்று ஈடு படும்படி அன்றோ அதனுடைய சிறப்பு இருப்பது –
வான் ஏற வழி தந்த-திருநாடு பெற வேணும் என்று அபேக்ஷை யுடையார் எல்லார்க்கும் வான் ஏறுகைக்கு ஈடான உபாயத்தைக் கொடுத்து அருளினான் –ஆறாயிரப்படி–
பணி வகையே –அவன் திரு உள்ளம் ஆனபடியே -என்றது-
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்றதனைச் சொல்லுகிறார் –
பண்டே பரமன் பனித்த பணி வகையே -10-4-9-என்றாரே அன்றோ –
அன்றிக்கே-மரணமானால் -9-10-5- என்றதனை சொல்லிற்று ஆகவுமாம் –
பிள்ளை அழகிய பெருமாள் அரையர் -கிரந்தியைப் பார்த்து -கட்டியை பார்த்து-
திருவரங்க நாதன் திருமாலை திருப் பரிவட்டம் முதலானவை வரவிட்டு அருள-
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே -என்று-கிரந்தியைப் பார்த்து சிரித்து சொன்ன வார்த்தையை நினைப்பது –
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே –திருவடி திருத் தோள்களிலும் -என் தலையிலுமான-இது தவிர்ந்து-என் தலையிலே யாயிற்று-
அவன் இழவுக்கு வெறுக்க வேண்டா அன்றோ –அவன் தானே கொடு வந்து கொடுக்கப் பெற்றவர் ஆகையாலே அன்றோ ஒரு பழு ஏறப் பெற்றது –திருவடி புருஷாகாரமாக பெற்றார் இறே-
————-
தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-
தாளிணைகள் தலை மேலே –நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து -2-9-1- என்றும்-
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2- என்றும்-
நான் வேண்டிக் கொண்ட படியே அழகிய திருவடிகளாலே தலை அலங்காரமாகப் பண்ணினான் –
என் நெஞ்சிலே நிற்பது-அப்படியே கண்களுக்கு இலக்காம்படி முன்னே நிற்பது-
திருவடிகளை தலை மேலே வைப்பது-ஆகிய இவை எல்லாம் ஒரு காலே செய்யா நின்றான் –சௌபரி ஐம்பது வடிவு கொண்டால் போலேயும்-
முக்தன் இறைவனை அனுபவிக்க பல வடிவுகளைக் கொள்ளுமாறு போலேயும்-
இறைவன் தான் இவரை அனுபவிக்க பல வடிவுகள் கொள்ளா நின்றான் –
எம்பெருமான்-உடமை உடையவனைப் பெற்றால் இருக்கும் அளவு அன்று இ றே உடைமையைப் பெற்றால் உடையவனுக்கு இருப்பது –
மதம் மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் –அனுபவத்துக்கு தடைகளாக உள்ளவை அடங்கலும்-குவலயா பீடம் பட்டது படும் இத்தனை –
அவன் இவன் விரோதியைப் போக்க இவன் அனுபவத்தில் சேர்த்தல் தகும் –
குரை கழல்கள் குறுகினமே –ஆபரணத்தின் ஒலி செவிப்படா நின்றது –
தடம் தாமரை கட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -6-9-9- என்று
வேண்டிக் கொண்டது பெற்றோம் –விடாய் தீரும் படி கிட்டப் பெற்றோம் –
————–
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-
கோவிந்தன் குடி கொண்டான் –அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும்-
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -பெரியாழ்வார் திருமொழி -5-2-10-
என்கிறபடியே திருவாய்ப் பாடியிலே ஐந்து லஷம் குடிகளோடும் கூடக் காணும் இவர் நெஞ்சிலே புகுந்தது –எம்பெருமான் ச பரிகரமாக வந்து என்னுள்ளே புகுந்து அருளினான் -அத்தாலே என் உடம்பு நிரந்தரமாக த் திருத் துழாய் நாறா நின்றது -என்கிறார் –
மெய்ந் நின்று கமழுமே –கோயில் சாந்து நாறுகிறபடி-என் உடம்பு முழுவதும் எப்பொழுதும் நாறா நின்றது –
அன்றி மற்றோர் உபாயம் என் -8-9-10-என்று தோழி சொல்லியும்-
வெறி கொள் துழாய் மலர் நாறும் -4-4-3- என்று தாயார் சொல்லியும்-போந்த இது-தன் வாயாலே சொல்லும்படி ஆயிற்று –
என் வார்த்தை அறிய வேண்டுமாகில்-
என் உடம்பை மோந்து பார்க்க மாட்டீர்களா -என்பாள் -மெய்ந்நின்று கமழுமே -என்கிறாள்-
செய்த நன்றி தேடிக் காணாதே-கெடுத்தாய் தந்தாய் என்ற-அத்வேஷ ஆபிமுக்யங்களும்
சத் கர்மத்தால் அல்ல -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்தி -சூர்ணிகை 2-22-இங்கு நினைத்தல் தகும்-
———————-
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-
இறைமைத் தன்மைக்கு அறிகுறியான தார் -அது
நினைத்தது செய்ய முடிக்க வல்ல கருவி அது –
வடிவு அழகு அது –
இப்படி துறை தோறும் தலைமை பெறும்படி இருக்கிறவன்-என் நெஞ்சிலே புகுந்து-பெறாப் பேறு பெற்றானாய் இரா நின்றான் –மிக உயர்ந்த மேன்மையினை உடையனான எம்பெருமான்-திரு வாட்டாற்றிலே வந்து சுலபனாய்-
என் மனத்திலே வந்து புகுந்து-பேர் ஒளியன் ஆகைக்கு -நான் என்ன நன்மை செய்தேன்
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–என்ன நன்மை செய்தேனாக –பெரிய வுடையாரைப் போலே என்னை அழிய மாறினேனோ –திருவடியைப் போலே தனி யிடத்தில் உதவினேனோ –தன்னுடைய ஆஞ்ஞா ரூபமான விஹிதங்களை அனுஷ்டித்தேனோ –என் நெஞ்சில் புகுந்த பின்பு விளங்கினான் என்னும் படி விரும்பிற்று —
———–
திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-
எல்லாப் பொருள்களாலும் நிறைவு பெற்று இருக்கின்ற தான்-இகழாதே -என் மனத்தினை-
எக்காலத்திலும் விடுகின்றிலன்-ஒருவனுடைய காதல் இருந்தபடி என் –என்று பிரீதர் -ஆகிறார்-ஸ்ரீ யபதியான ஏற்றத்தோ பாதி போருமாய்த்து திரு வாட்டாற்றை கலவிருக்கையாக யுடையவனாகையும் –
புகழ்கின்ற புள்ளூர்தி –புகழ் நின்ற புள்ளூர்தி –
புகழ் எல்லாம் தன் பக்கலிலே கிடக்கும்படி இருக்கிற பெரிய திருவடியை-வாகனமாக உடையவன்
புகழ் அடங்கலும் கிடப்பதுவும் அவன் பக்கலிலே-அதனை உடையவன் -என்கிற இதுவே இவனுக்கு ஏற்றம் –
தனக்கு திவ்ய மஹிஷி சர்வ லோக மகேஸ்வரியான பெரிய பிராட்டியார் –
சேர்விடம் திரு வாட்டாறு –
தன் திருவடிகளில் கைங்கர்ய ஏக ரதித்வமே புகழாக யுடையனாய் இருந்த பெரிய திருவடி -தனக்கு நித்ய வாகனமும்-ஆஸ்ரித விரோதி நிரசன உபகரணமும் –
இங்கனே இருந்து வைத்து என்னுடைய நிகர்ஷத்தைப் பார்த்து என்னை இகழாதே ஒரு க்ஷணம் என்னைப் பிரிவில் தரிக்க மாட்டாத
ஸ்வபாவத்தை யுடையனாய்க் கொண்டு என் நெஞ்சினுள்ளே புகுந்து இருந்து அருளினான் –ஒருவனுடைய குணவத்தை இருக்கும் படியே இது என்கிறார் –
————
பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட் பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே-10-6-10-
பிரியாது ஆட் செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
நம்மைப் பிரியாதே நமக்கு அடிமை செய் -என்று அருளிச் செய்து-பிறப்பினையும் போக்கி
நித்யமாக செய்யப் படுகின்ற தொண்டினையும்-எனக்குக் கொடுத்தான் –
1-பிரியாது ஆட் செய்து என்று-எனக்கே ஆட் செய் -என்ன வேண்டும் என்று -நாம்-
எம்மா வீடு -என்ற திருவாய் மொழியிலே வேண்டிக் கொண்டபடியே – செய்தான் –
2-பிறப்பறுத்து-இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று-
பொய் நின்ற ஞானமும் -என்ற பாசுரத்திலே விரும்பியபடியே-பிறப்பினை அறுத்தான்
3-ஆள் அறக் கொண்டான்-தனக்கே யாக என்று எம்மா வீடு -திருவாய்மொழியில் வேண்டிக் கொண்ட படியே ஆள் அறக் கொண்டான் –
கால அவதி இல்லாமல் என்றும்-தனக்கே யாக அற என்றுமாம் –பெரியோர்களை அடைந்தால்-பின்னை அவர்கள் கொள்ளுகிறவன் சிறுமை பார்த்தல்
கொடுக்கிறவன் பெருமை பார்த்தல் செய்யாதே கொடுப்பார்கள்-என்று இங்கனே நாட்டில் ஓன்று உண்டு-அதனை என் பக்கலிலே காட்டினான் –உபய விபூதியிலும் தம்மைப் போலே திருவாய் மொழி பாடப் பெற்றார் இல்லை என்று இருக்கிறார் –தாம் அனுபவிப்பதற்காகவே இறைவன் அவதாரங்கள் என்று இருக்கிறார் இவர்-
————-
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-
காட்டித் தன் கனை கழல்கள் –தன் கனை கழல்களைக் காட்டி-நிர்ஹேதுகமாக தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டி –கழல் -திரு மேனிக்கு உப லஷணம்-
ஆரார் வானவர்கள்-இதனைச் சொல்ல கேளா நின்றால்-இன்னம் சொல் இன்னம் சொல் -என்னும் இத்தனை போக்கி-கேட்டவற்றைக் கொண்டு மனம் நினைவு பேரார்கள் ஆயிற்று-நித்ய ஸூரி போக்யதையை அருளிச் செய்கிறார் –
பகவான் உடைய குணங்களை அனுபவித்து-அதற்கு போக்கு விடுகைக்கு பாசுரம் இன்றிக்கே-விம்மல் பொருமலாய் படுமவர்கள்-இப்பாசுரம் கேட்டால் விடார்கள் அன்றோ –
அதற்கு காரணம் என்-
அவனுடைய சீல குணங்களை அனுபவித்தோ என்னில்-இப் பாசுரத்துக்கு தோற்று -என்கிறார் –செவிக்கு இனிய-
கேட்ட போதே இன்பம் பயப்பது -செவி வழியே புக்கு நெஞ்சுக்கு இனிதாகை அன்றிக்கே-செவியில் பட்ட போதே பிடித்து இனிதாய் இருக்கையாலே-
அதற்க்குக் காரணம் என் என்னில் –செஞ்சொல்லே – நினைவும் சொல்லும் செயலும்-ஒருபடிப் பட்டு இருக்கையாலே-சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே -8-5-11-என்னா-செந்தமிழ் பத்தும் -என்றார் அன்றோ இவர் தாமே –
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply