ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -45-பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம்-ஊனில் வாழ் உயிரே -2-3-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

பக்திப்பெரும் கடல் ஆழ்வார்-தாம் பெற்ற பேற்றினை கீழே அனுபவித்தார்
தம்முடைய தமர்களுக்கு பிறப்பு இனி வராதே-பொசிந்து பொசிந்து அருகில் உள்ள ஏழு ஏழு பிறவிகளிலும் நம்மளவும் பேறு வந்ததே ஆழ்வார் சுற்றத்தார்களில் ஒருவராக ஒதுங்க வேண்டியதே நம் கர்த்தவ்யம்–மாத பிதா உரு பெரு செல்வமும் -மாறன் செந்தமிழ் ஆரணமே-ராமானுஜ முனி வேழம் சம்பந்தியாவதே வேண்டும்-இவன் பெருமையைச் சொல்லு பார்ப்போம் -இவன் பெருமையைச் சொல்ல வழி இல்லையே-வாழி மடநெஞ்சமே-அஹம் ஸ்மராமி -மத்பக்தம் நயாமி -ஸ்ரீ வராஹப் பெருமாள்-மொத்தமாக -ஆழ்வார் மேல் கடாக்ஷிக்க – மலர் புண்டரீகம்-மலர்ந்த- மலர்ந்து கொண்டே மலரப்போகிற -புண்டரீகம் மன்னனுடைய விபீஷணக்குக்காக மலர்கண் போல்–அகாலம் -பிரளய காலம் -அ இ உ -மூன்றும் இல்லாத இந்தக் காலத்தில் -ஸம்ஸார பிரளயம் அதிலும் மேல் அன்றோ-இப்படி பேறு பெற்றார் நம் போல் யாரும் இல்லையே-மருங்கே -ஆழ்வார் சம்பந்திகள் இடமும் வராதே-உளரே -உளர் அல்ல -வருமே -வராதே -எதிர்மறை ஏவகாரம் சொல்லு -என்பதுக்கும் சொல்ல முடியாதே-பேசாமல் இருக்கவே வாழி மடநெஞ்சமே

ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே-
-சந்தோஷமாக அருளிச் செய்கிறார்
தேனும் பாலும் போல் கலந்தோம் –-அறியாத காலத்து அன்பு செய்து -பஸ்யதோ ஹரத்வம்
அறியாமை குறளாய் -அவன் அறியாமலே வஞ்சிக்கப்பட்டது போல் -எனது ஸம்ஸாரம் போக்கி
இராமடம் ஊட்டுவரைப் போல் உபகாரகன் நேரக் காண நிற்கில் ஆள் இட்டு விலக்குவோமே
அதே போல் இந்தப் பாசுரத்திலும் –எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்-நான் என்ற தத்வம் இல்லாதது போல்-ஐக்யா பத்தி அல்லவே –கூடிற்றாகில் நல் உறைப்பு – எல்லாம் தன்னுள்ளே -அப்ருதக் ஸித்த விசேஷணம்

தலைவி தலைவன் இடம் நீரிடை உதவி–பூத்தரு புணர்ச்சி ––புனல் தரு புணர்ச்சி –-களிறு தரு புணர்ச்சி
மூன்றும் உண்டே –-தன்னைக் காத்தவனுக்குத் தன்னைக் கொடுப்பாள் காதலில் இங்கு ஆழ்வார் –தன்னைக் காத்துக் கொண்டால் அதுக்குத் தன்னையே கொடுப்பார் குவலயா பீடம் தன்னை ரக்ஷித்து கொண்டதுக்கு ஆழ்வார் தம்மையே கொடுப்பார்–மஹா வராஹ -நீரில் விளையாடி -நீரிடை ரக்ஷணம் -நானும் அவர்களில் ஒருவன் தானே –-பூமி -கோட்டிடை நாமும் பூமியில் ஓர் ஏக தேசம் தானே – முன்பு செய்த உபகாரகம் -நெஞ்சுக்குக் காட்டிக் கொடுக்கிறார் –-ஸம்ஸார பிரளயத்தில் இருந்தும் ரக்ஷிப்பானே-ஊனில் வாழ் உயிர் போல் மகிழ்ந்து அருளிச் செய்கிறார்

கீழே அவன் அருளால் தான் பெற்ற பேற்றை அருளிச் செய்து-இதில் தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் சம்சாரம் கிட்ட வற்றோ – விசேஷ கடாக்ஷ விஷயீ க்ருதரானார்கள் என்று களிக்கிறார்

இப்படித் தமக்கு ஈஸ்வரன் தன் மஹாத்ம்யத்தைப் பிரகாசிப்பித்த படியை அனுசந்தித்து
ஸந்துஷ்டாரான அளவிலே –இவர் திரு உள்ளமானது ஸம்ஸார ஆர்ணவ மத்யஸ்தரான நமக்கு
பாரித்தால் போலே அவன் உபகரித்தான் என்று ஹ்ருஷ்டராகா நின்றீர்-சம்சாரத்தில் நின்றும் உத்தீர்ணரானவர்கள் பெறக் கடவ பேறானது நமக்கு நிலை நிற்கக் கூடுமோ என்று திரு உள்ளத்துக்கு கருத்தாக அவன் பூர்ண கடாக்ஷம் பெற்ற நமக்கு குறையில்லை காண் என்று அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-இப்படி ஸ்வ யத்ன சாத்யமல்லாத வஸ்துவை ஒரு ஹேது இன்றிக்கே இருக்கப் பெற்றுக் கொடு நின்றேன்-இப்படி இருக்கிற எனக்கு ஒப்பாவார் புறம்பு யுண்டோ
ஸம்ஸார துரிதம் தான் என்னைப் பின்னாட்ட வற்றோ -என்கிறார் –

பெரும் கேழலார்  தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே
-45-தலைவி தலைவன் நீரில் உதவியதை நினைந்து உரைத்தல் –

ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை
யானது அனுபவித்தற்காம் துணையா -வானில்
அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன்
அடியார் உடன் நெஞ்சே ஆடு—-13-தம்முடைய ஆர்த்தி தீர வந்து கலந்த எம்பெருமான் உடைய
சம்ச்லேஷ ரசத்தை பேச ஒருப்பட்டு எப்பேர்பட்ட இனிமையும் விளையும் படி தம்முடனே அவன் வந்து
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-இத்யாதிப் படியே ஏக தத்வம் என்னலாம் படி கலந்தபடியையும்
அந்த கல்வியால் வந்த ரசம் தம் ஒருவரால் உண்டு அறுக்க ஒண்ணாத படி அளவிறந்து இருக்கிற படியையும் அனுசந்தித்து தனித் தேட்டமான இதர விஷயங்கள் போல் அன்றிக்கே துணைத் தேட்டமாய் அதுக்கு இவ் விபூதியில் ஆள் இல்லாமையாலே இவ் வனுபவத்தில் நிலை நின்ற நித்ய சூரிகள் திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவது எப்போதோ என்று பிரார்திக்கிற ஊனில் வாழ் அர்த்தத்தை ஊனம் அறவே வந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –அபி நிவேசத்திலே ஊன்றின ஆழ்வார் அடியாரான இங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்களோடே நெஞ்சே கூடி யாடு
அன்றிக்கே – அக் குழாத்தில் முழுகி அனுபவிக்கப் பார் -என்றுமாம் அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ -என்றார் இறே

ஆழி யம் -மண்டலாகாரம் -ஸம்ஸார சூழல் -பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகம்
வாழி யம் சூழ் பிறப்பு –ஸ்வரூப ப்ரயுக்தமான வாழ்வைப் பெற்றோம் -வாதிகேசரி ஜீயர் நிர்வாகம்
ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ்
–-வரதராஜ ஸ்தவம் –102—சங்கிலி தொடர் அருளிச் செய்கிறார்-

வரத-ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்-விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் –-ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்-ச து –அந்த எம்பெருமானாரோ-யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்-ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –ச ச –அந்த ஆளவந்தார் தாமும்-நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்-பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே–ச ச -அந்த நாதமுனிகளும்-பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்-குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு
இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ
ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும்
தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்-ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ –
பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ
இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத் தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ-நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம் என்னும் இடத்தை மூதலிக்கிறார்

பெரும் கேழலார் –ரஷ்யத்தின் அளவு அன்றிக்கே –ரஷகனுடைய பாரிப்பு இருக்கிற படி –மாசுடம்பில் நீர் வாரா –ஏறும் அழுக்கு எல்லாம் ஏறும் படியாக இருக்கை–(பரம் சுடர் உடம்பாய் -அழுக்கு பதிந்த சுடர் உடம்பாய் -வ்ருத்த விபூதி ஆகாரகன் )பன்றியாம் தேசு ஆத்மாநாம் மானுஷம் மன்யே -என்று கேழலான தேஜஸ்ஸூக்கு ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கும் தேஜஸ் போராது  இருக்கை –துயின்ற பரமன் -துயிலும் போதே பரமன்-இங்கும் பன்றியால் ஆனதால் வந்த தேஜஸ்ஸூ-அது இருக்கும் தேஜஸ் இது பிறந்து பெற்ற தேஜஸ் ஸ்ரேயான் உ தேஜஸ்-உகாரம் ஒவ்வொன்றிலும் வைத்து வியாக்யானம்-என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதியை– ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ -(3-3)-தன்னை அறியாதார்க்கு முகம் கொடுத்தவனுக்கு தன்னை அறியும் அவர்களுக்கு தான் முகம் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ –பெரும் கேழலார்-
சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவாகாரம் குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எங்கோமான் கண்டீர் இலங்கிய நான்மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழிசையும் கேள்விகளும் எண்திக்கு எங்கும்
சிலம்பிய நற்பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே!”
.–

தம் பெரும் கண் மலர் –-பெரும் கேழலார்  என்ற உடம்பு-அடைய-கண்ணாய் இருக்கை –-கடல் போலே பெருத்து அது நிறைய தாமரை பூத்தாற் போலே இருக்கை மகா வராஹஸ் ஸ்ப்புட பத்ம லோசன –இப் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து பிராட்டிக்கு கார்யம் செய்தானாய்- ஸ்ரீ பூமிப் பிராட்டியை குளிர நோக்கிக் கொண்டு இருக்கிற இருப்பு –நம் மேல் –அவள் பிரஜையான நம் மேல் –ஒருங்கே –ஸ்ரீ பூமி பிராட்டி பக்கலிலும் பாலி பாயாதபடி–பிறழ வைத்தார் –மிக வைத்தார் –-தம்மால் தரிக்க போகிறது இல்லை–இவ்வ காலம்சருகாய் கிடக்கும் மரங்களும் ஒரோ காலத்தே தளிரும் முறியுமாய் நிற்குமது போலே –ஒருவர் நம் மேல் வரும் கேழ்பவர் உளரே –ஆரேனும் ஒருவர் நம்மை போலே வரும் நன்மை உடையார் உண்டோ –சர்வேஸ்வரனுக்கு சேஷத்வ ரசம் இல்லாமையாலே  இல்லை –-முக்தரும் நித்தியரும் அவ்வருகில் உள்ளார் ஆகையாலே  அவர்களுக்கு இல்லை – பக்தர் விஷய பிரவணர் ஆகையால் அவர்களுக்கு இல்லை – நஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷனாம் -என்கிற
வை லஷண்யத்தை உடையார் ஆகையாலே பிராட்டிமார்க்கு இல்லை – இவரைப் போலே தாழ நின்று -இப் பேறு பெற்றார் இல்லை -என்றபடி –

தொல்லை இத்யாதி – பழையதாய் –ஸ்ம்ருத்தமாய்–பொல்லாதாய்-போக்கற வளைப்பதான ஜன்மம்-
என்னோடு சம்பந்தம் உடையார் பக்கல் கிட்டப் பெறுமோ –மாதா பிதா யுவதயஸ் தனயா ஸர்வம் நியமேன –மதன்வயாநாம்-சொல்லு வாழி மட நெஞ்சமே – கண்டதில் எல்லாம்  நாக்கு நீட்டி திரிந்த நீ சொல்லாய்-மட நெஞ்சமே –எனக்கு பவ்யமாக நீ வாழ்வாயாக –

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே
–ஸ்ரீ திரு-விருத்தம்-55- என்னுமா போலே –

நீரிடை உதவியை நினைத்து-எண்பது கோடி நினைத்து எண்ணுவன் – நாயகி அருளிச் செய்யும் பாசுரம் பூமிப பிராட்டிக்கு செய்து அருளின-உபகாரம் தமக்கு -தானே -அன்றியும்-பின்னை கொல்-நிலா மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-அன்றோ பராங்குச நாயகி-ஒருங்கே -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே – இவ்வகாலம்-தம்மை மதியாமல் அழிய மாறி-என்றோ பண்ணி அருளினாலும் அன்பின் மிகுதியால் இப்பொழுது நடப்பது போலே – சம்சார பிரளய வெள்ளம் தாண்ட பூர்ண காடாக்ஷம் வைத்து அருளினான் –நெஞ்சே கலக்கம் தெளிந்து வாழ்வாயாக -என்கிறார் –

பெரும் கேழலார்-பிரளய ஆர்ணவத்திலே புக்கு அழுந்தின பூமியை எடுக்கைக்கு-அந்த பிரளய ஜலம் கீழ் வலிற்றன வாம் படி-மஹா வராஹமானவர்-ஜலார்த்த ருஷேர் மஹா வராஹஸ்ய – (தண்ணீரால் நனைந்த அடிவயிறு கொண்டவர் )–ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-4-24- என்னக் கடவது இறே-தம் பெரும் கண் மலர் புண்டரீகம்மஹா வராஹ ஸ்புட பத்ம லோசன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-20- என்கிறபடியே
பிரளயத்திலே மூழ்கி ஸ்ரீ பூமிப்பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே விகஸிதமான கண் அழகு இருந்தபடி-நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார்-அவளை அன்று பிரளயத்தில் நின்றும் எடுக்கைக்குப் பாரித்தால் போலே நம்மையும் இஸ் ஸம்ஸார ஆர்ணவத்தில் நின்றும் எடுப்பதாக நம் பக்கலிலே ஒருபடிப்பட மிளிரும்படி வைத்தார்-இவ்வ காலம்-இக்காலத்தில்–ஒருவர் நம் போல் வரும் கேழ்பவருளரே -இக் கடாக்ஷ விஷய பூதரான நம்மைப் போலே அவனோடே கேழ் முதலைப் பெற்று இருப்பார் ஒருவர் உளரோ-பிரளய ஆர்ணவமும் ஸம்ஸார ஆர்ணவமுமான ஆபத்தின் வாசி போரும் இறே ஸ்ரீ பூமிப்பிராட்டி பக்கலிலும் நம் பக்கலிலும் யுண்டான உறவின் வாசிதொல்லை யாழியம்
(தொல்லை வாழியம் ) இக் கேழ் முதல் யுண்டான உறவு அளவே அன்றியே பழையதாய்
ஸ்வரூப ப்ரயுக்தமான வாழ்வு யுடையோம் ஆவோம்–வாழ்வு என்று அனுபவத்தை நினைக்கிறது
(மிக்க இறை நிலையும் வாழ் வினையும் -ப்ராப்யம் )சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே-நம்மைச் சூழ்ந்த பிறப்பும் நம் பரிசரங்களிலே வரவற்றோ-சொல்லு-பகவத் கடாக்ஷம் யுண்டால்
அனுபவம் பெற்றாருக்கு ஜென்ம சம்பந்தம் யுண்டு என்று கேட்டு அறிவது யுண்டா சொல்லிக் காண் –வாழி உன் கலக்கம் அற்றுத் தெளிந்து வாழ்வாயாக–ஜாயமான புருஷ -மது ஸூதன கடாக்ஷம்
கண்ணாவான் -அமலங்களாக விழிக்கும் கருவிலே திருவுடையார் அன்றோ
மட நெஞ்சமே
ஒடுக்கமுடைய நெஞ்சமே-உன் அறிவில் சங்கோசம் இறே நீ இப்படி சங்கித்தந்து என்று திரு உள்ளத்தைத் தெளிவித்தார் ஆயிற்று–இப்பாட்டு கிளவியாம் இடத்து நாயகனான ஈஸ்வரனுடைய நீருடை (நீரிடை )யுதவியை நினைத்து உரைத்தது ஆகவுமாம்-அவ்விடத்து சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்ற இடம் பிரிந்தார் படும் துயர் நமக்கு யுண்டாகாது என்று கருத்து

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-பெரும் கேழலார் –ரஷ்யத்தினுடைய ரக்ஷணத்துக்குத் தன்னை அழிய மாறுமவர்-மஹா வராஹா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-26- ரஷ்யமான பூமியின் அளவல்ல வாயிற்று ரக்ஷகனான தன்னைப் பாரித்த படி–தம் பெரும் கண் மலர் புண்டரீகம்ஸ்புட பத்ம லோசனநம் மேல்-குளப்படியிலே கடலைத் தேக்குமா போலே நம் சிறுமை பாராதே ஸ்ரீ பூமிப்பிராட்டி பரிகரம் என்ற இது ஒன்றையுமே பார்த்த இத்தனை –ஒருங்கே-நம் மேல் வைத்த கடாக்ஷத்தை மாற்றிப் பிராட்டி தன் பக்கலிலே வைக்க வென்றால் அதுவும் அரிதாம் படியாயிற்று-த்வயி கிஞ்சித் ஸமா பந்நே கிம் கார்யம் சீதயா மம -யுத்த -41-4-இங்குக் கிஞ்சித் ஸமா பத்தியும் பொறுக்கப் போகாது-அங்கே தர்மியை விட்டுப் பிடிக்கிலுமாம் நீர் மஹா ராஜரான தரம் குலைய உம்மை ஒரு வார்த்தையைப் பையல் சொன்னான் ஆகில் நீர் தேடிப்போகிற சரக்கு நமக்கு என் செய்ய –பிறழ-மிகுதியைச் சொல்லவுமாம் கடாக்ஷம் நம்முடம்பிலே மிளிரும்படியாக என்னவுமாம்-வைத்தார் –இதுக்கு நம் பக்கல் ஓர் அடி இல்லை
அவன் இப்படிக்கு கடாக்ஷிக்கக் கண்டது அத்தனை-ஆகிலும் ஒரு–இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி வியாக்யானம்–மஹா கிருபா பரித கடாக்ஷ பிரசுரமான அந்தத் திருக்கண்களை நம் மேல் ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம்-இக்காலத்தில் நமக்கு உபாயம் நிறைவேறின காலத்திலேயே தானே என்றபடி
யா –ஸ்மர்த்தா –தம் -அஹம் -ஸ்மராமி–நயாமி பரமாம் கதிம் –என்றுள்ள திருவருளாலே
நம்மில் உள்ள புண்ய பாபங்கள் எல்லாம் ஒருமிக்க அங்க அங்காகாச் சாயாவும் –
அவைகளுக்கு நம்மில் ஒட்டு அறவும்-ஸ்வத் யாகும் பபரீத கடாக்ஷங்களை ஒருமிக்க பிரசரிப்பித்து
அதுகளே நம்மைக் கழலப் பிறழும்படி அக்கண்களால் கடாஷித்தவர்வ்-ஒருவர் நம் போல் வரும் கேழ்பவருளரே-யாரேனும் ஒருவர் நம்மைப் போலே உபாயம் பெற்று இருப்பாரும் வரும் நன்மை யுடையாரும் யுண்டோ–தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே-அநாதியாய் வருந்தனை வாழ்ச்சியும் யோனிகள் தோறும் பிறப்பும் நம்மைப் பற்றி இருப்பார்க்கு வருமோ-சொல்லு வாழி மட நெஞ்சமே–உன் அதிசங்கை நீங்கி அவனோடே வாழக் கடவாய் எனக்குப் பவ்யமான நெஞ்சமே –

தாத்பர்யம்--சர்வேஸ்வரன் தன்னுடைய வைபவத்தை பிரகாசிக்க ஆழ்வார் கண்டு மகிழ
மனஸ்ஸூ -ஸம்ஸாரத்தில் இருந்தும் -உத்தரிப்பத்த அன்று தானே மகிழ வேண்டும்
என்று ப்ரஸ்னம் பண்ண அவன் நம்மை பூர்ணமாக கடாஷித்த பின்பு இனி ஒரு குறை உண்டோ
அன்று பிரளயத்தில் உத்தரித்த மஹா வராஹ நாயனார் பூமா தேவியை உத்தரித்து மகிழ்ந்து
மலர்ந்த திருக்கண்கள் கொண்டு கடாஷித்த மாதிரியே –இன்று நம்மை பூர்ணமாகக் கடாஷித்த பின்பு -வேறே எங்கும் பக்க நோக்கு அறியாமல் -ஒருங்கே கடாஷித்த பின்பு-இனி நமக்கும் நம்மைச் சேர்ந்தவருக்கும் துஸ்சரமாய் அதி குரூரமான ஜென்ம சூழல் இல்லை-ஸ்வத சித்தமான பரமபதமும் அணித்தானதே-நம்மைப் போல் பாக்கியவான்கள் இனி யாரும் இல்லை-நெஞ்சே இதில் சம்சயம் உண்டாகில் சொல்லிக் காண் என்று மகிழ்ந்து அருளிச் செய்கிறார் –

2-3-ஊனில் வாழ் உயிர் -பிரவேசம் –

வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான துன்பமெல்லாம் தீரும்படி வந்து-
ஸம்ஸ்லேஷித்த சம்ச்லேஷத்தை – கலந்த கலவியினை அருளிச் செய்கிறார்.
இத்திருவாய்மொழியில்.
‘ஆயின், இது, ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியினைச் சார்ந்தன்றோ இருத்தல் வேண்டும்?’ எனின்,
ஆம்; முதல் திருவாய்மொழியின் ஈற்றுப் பாசுரத்தில் இறைவனுடைய முதன்மையினை அருளிச் செய்தாராயின்,
அது சம்பந்தமாகத் தோன்றிய -ஈஸ்வரத்வம் -அம் முதன்மையினை இரண்டாந்திருவாய்மொழியில் அருளிச் செய்தார்;
பின்னர், துன்பம் எல்லாம் தீரும்படி வந்து கலந்த கலவியினை அருளிச்செய்கிறார் இத் திருவாய்மொழியில்.

ஆக, இரண்டாந்திருவாய்மொழி, நடுவில் தாம் பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்;
அது அளவு இறந்ததாய் இருந்தது; தமது முயற்சி காரணமாக வந்ததாயின் அளவுபட்டு இருக்கும்;
எல்லாம் வல்ல இறைவன் காரணமாக வந்த தாகலின் அவ்வின்பம் கனத்திருந்தது.
மற்றும், தாம் அநுபவித்த அநுவபத்துக்குள்ளே எல்லா ரசங்களும் உண்டாய் ஒப்பும் உயர்வும் அற்றதாய் இருந்தது;
‘இத்தகைய பேற்றுக்கு உசாத் துணையாவார் யார்?’ என்று பார்த்த இடத்தில் சம்சாரத்திலே ஆள் இல்லாமையாலே,
அவன் தன்னோடு ஒக்கப் பிராப்யருமாய் அவனை நித்தியாநுபவம் பண்ணா நிற்பாருமாய்,
பகவானுடைய அநுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற நித்திய ஸூரிகள் திரளிலே சென்று புக்கு –
போதயந்த பரஸ்பரம் -ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு அநுபவிக்கப் பெறுவது எப்பொழுதோ?’ என்னும்
அநவாப்தியோடே இத்திருவாய் மொழியினைத் தலைக் கட்டுகிறார்.

வாயும் திரையுக்களில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் அசேதனங்களையும் சேர்ந்தார்
சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நைசர்க்கிகமான நித்ய ஸூ ரிகளை உசாத் துணையாகத் தேடுகிறார் –

‘ஆயின், ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியிற்கூறியது போன்று,
பிரீதிக்கும் பறவை முதலியவற்றைத் தேடாது, ஈண்டு நித்திய ஸூரிகளைத் தேடுவதற்குக் காரணம் என்னை?’ எனின்,
‘வாயும் திரை உக’ளில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திரியக்குகளையும் அசேதநங்களையும் சேர்த்தார்;
ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் அசேதனங்களையும் -காற்றையும் கழியையும் கட்டி அழுதார்
இங்கு, கலவியால் வந்த பிரீதிக்கு-அறிவு நைசர்க்கிகமான- இயற்கை அறிவையுடைய நித்திய ஸூரிகளைத் தேடுகிறார்.
இறைவன் ஆழ்வாரோடு கலந்த கலவி,
பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கலவியைப் போன்று இருந்தது.–ஜாதி குணங்கள் திரவியத்துப் பிரகாரமாய்ப் பிரிக்க ஒண்ணாதபடியாய்
இருக்குமா போலே, பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி.-‘அப் பெரியவன் இப்படித் தாழ விடுவதே!’ என்று அச் செயலிலே தன் நெஞ்சு துவக்குப்பட்டு ‘அது அது’ என்று கிடக்கு மாயிற்று. -அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவிதான்.

இப்படி உத்துங்க லலிதனான இவனுடைய ஸர்வவித சாரஸ்ய அதிசய ப்ரயுக்தமான திவ்ய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–அவனுடைய சர்வ ரசாத்மத்வத்தையும் -2-சர்வ ரஸ்ய யுக்தனான அவன் விஷயத்தில் தம்முடைய உபகார ஸ்ம்ருதியையும் —
3–ஸ்வ விஷயத்தில் தம்மை அவன் அபி நிவேசிப்பித்த படியையும் -4-அவ்வுபாஜகாரத்துக்கு பிரதியுபகாரம் இல்லாத படியையும் —
5–தன்னுடைய அப்ராக்ருத போக்யத்தையும் -பிரகாசிப்பித்துச் சேர்த்துக் கொண்ட படியையும் 6-இந்த சம்ச்லேஷம் ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே அநாதி ஸித்தமான படியையும் –
7–போக்யதா அதிசயத்தாலே வ்யதிரேகத்தில் தரிக்க அருமையையும் -8-அவ்வனுபவம் தமக்குக் கைப் புகுந்தமையையும் –
9–சர்வ பிரகார அனுபவத்தால் பிறந்த ஆனந்த விசேஷத்தையும் –
இப்படி அனுபவித்து ஆனந்திகளான ஸூரி களோடு தாம் கூடி அனுபவிக்கையில் யுண்டான ஆசையையும் –
அருளிச் செய்து கீழ்ச் சொன்ன சர்வ பிரகார சாரஸ்யம் ஸூரி போக்யம் என்னும் இடத்தையும் உபபாதித்து அருளுகிறார் –

ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே
 –2-3-1-

பரம பதத்தைப் பெற்று அங்கே தான் பகவத் அனுபவம் பண்ணுகிற இடைத்தேயோ நீ உதவிற்று-மாம்ஸாதி புஞ்சமான சரீரத்திலே நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ நீ உபகரித்தது –ஈஸ்வரனும் என்றும் உளன் – தத் சம்பந்தமும் அநாதி – அவன் எதிர் சூழல் புக்கு அவசர ப்ரதீஷனாய் நிற்க -நீ ஆபிமுக்யம் பண்ணாமையால் அன்றோ இழந்தது-நீ ஆபி முக்கியம் பண்ணி இறே இப்பேறு பெற்றது – ‘கைங்கரிய சாம்ராஜ்யத்திற்கு இட்டுப் பிறந்த வைத்து நெடுநாள் அதனை இழந்து கிடக்க,
இந் நெஞ்சு அன்றோ இப்போது அதனைத் தந்தது?’ என்று தம் திருவுள்ளத்தைக் கொண்டாடுகிறார்.

‘ஊனில் வாழ் உயிரே’ என்பதற்குச்  சரீரத்தைப் பற்றி அனுபவிக்கிற அனுபவத்தை யன்றி,
அதற்கு அப்பால் வேறு ஒன்றனையும் அறியாதே வாழ்ந்து போன உயிரே!’ -உயிர்’ என்றது, மனத்தினை-

வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் தானும் யானும் –-தான் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் -அவதரித்து, மதுவாகிற அசுரனைப் போக்கியது போன்று,
என்னுடன்-சம்ச்லேஷ விரோதியை – கலப்பதற்குத் தடைகளாய் இருந்தனவற்றைப் போக்கி
என்னைத் தோற்பித்துத் தன் பக்கலிலே கைங்கரியத்திலே மூளும்படி செய்த தானும் 
கைங்கரியத்திற்கு விஷயமாக உள்ள-விஷய பூதனான – யானும்,–கிருஷி செய்த தானும்,
கிருஷிக்கு விஷயமாக உள்ள நானும்’

‘தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தோம்’ என்கிறார்.-இதற்கு,ஏக –
ஒரு ஜாதிப் பொருள்கள் தம்மில் ஒன்றனோடு ஒன்று கலந்தது போன்று கலந்தோம்’ என்று 
ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பொருள் அருளிச் செய்வர்.
அதாவது,-தானும் யானும் எல்லாம் தன்னுள் தேனும் பாலும் நெய்யும்
கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தொழிந்தோம்’–தேனும் தேனும் கலந்தாற் போலவும், பாலும் பாலும் கலந்தாற் போலவும், கன்னலும் கன்னலும் கலந்தாற் போலவும்-அமுதும் அமுதும் கலந்தாற்போலவும் என்பதாம்.

இதற்கு இவற்றைச் சுவை யுடைப் பொருள்களுக்கு எல்லாம் உபலக்ஷணமாக்கித்
‘தானும் நானுமாக கலவிக்குள்ளே எல்லா ரசங்களும் பிறக்கும்படி கலந்தோம் என்கிறார்’ என்று  எம்பெருமானார் பொருள் அருளிச் செய்வர்.  ‘சர்வ ரஸ: சர்வ கந்த:’ என்கிற இறைவனோடே கலக்கும் கலவி ஆதலானும், ஞான ஆனந்தங்களையுடைய இறைவனும் ஆத்துமாவும் கலக்கிற கலவி -சேர்த்தி -ஆதலானும் சர்வ ரஸங்களும் பிறக்கத் தட்டு இல்லை.  

அநேக த்ருஷ்டாந்த தாத்பர்யம் -ஸர்வவித சாரஸ்யமும் தோற்றுகைக்காக-
தேன் என்று -சர்வ ரஸ சமவாயம் –பால் என்று ஸ்வாபாவிக ரசம் -நெய் என்று ப்ரும்ஹண ரசம் -கன்னல் என்று கரும்பாய் -அதனுடைய பாகஜ ரசத்தை நினைக்கிறது –
அமுது என்று நித்ய ரசம் –

———

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே
 –2-3-2-

இவர் திருவுள்ளத்தைக் கொண்டாடப் புகுந்தவாறே, நெஞ்சு,-பெற்ற தாய் இருக்க மணை வென்னீராட்டுவரைப் போலே ‘நீர் அடி அறியாதே, வழிப் போவாரைக் கொண்டாடுகிறது என்? என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனைக் கொண்டாடீர்’ என்ன, கேட்ட ஆழ்வார்,
‘ஒக்கும் ஆராயின், அதற்கும் அடி இறைவன் அன்றோ?-நடுவே நெஞ்சைக் கொண்டாடினோமித்தனை ஆகாதே?’ என்று தம் திருவுள்ளத்தை விட்டு,
சர்வேஸ்வரனைக் கொண்டாடுகிறார்.

எம்பார் திருவாய்மொழிக்குப் பொருள் அருளிச் செய்து வருங்கால், இப்பாசுரம் ப்ரஸ்துதமான அளவிலே அளவில்,
எம்பார் கோஷ்டியிலே ‘இவ்வாத்துமாவுக்குப் பிரதம் குரு யார்?’ என்ற ஒரு வினா எழுந்தது;
இருந்த முதலிகளிற்சிலர், ‘ஆசாரியன்’ என்றனர்; சிலர்,
‘ஆசாரியன் திருவடிகளிலே அடைவதற்கு வா என்று அழைத்துக் கொண்டு போய்ச் சேர விட்ட ஸ்ரீவைஷ்ணவர்,’ என்றனர்;
எம்பார், ‘அங்ஙன் அன்று காண்; அவன் இவனை அழைத்தாலும் இவன் ‘அல்லேன்’ என்னாதபடி 
‘இசைவித்து’ என்கிறபடி,
அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன் காண் பிரதம குரு’ என்று அருளிச் செய்தார்

திருமகள் கேள்வனுக்கும் தன்னால் கழிக்க ஒண்ணாதபடி இருப்பது ஒரு தாரித்திரியம் உண்டு என்று அருளிச் செய்வார் எம்பார்,

எப்பொருட்கும் ஒத்தாய் -இந்திரா அனுஜன் -இந்திரனுக்குத் தம்பியாகவும்,
இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தும்,
திர்யக்குகளை -விலங்குகளைப் போன்று மஹா வராஹமாகியும்,
ஸ்தாவரங்களோடு ஓக்க -நிலையியற் பொருள் போன்று குட்டை மாமரமாயும் நின்ற நிலைகள் போல்வன.-குப்ஜாம்ரம் ‘குட்டை மாமரமாக நின்றது எற்றிற்கு?’ எனின்,
செவ்வே நிற்பின் பெண்ணுக்கும் பேதைக்கும் ஏற ஒண்ணாது என்று எல்லோர்க்கும் ஒக்க எளியன் ஆகைக்கு.-மேன்மையோடே வரின், ‘கிட்ட ஒண்ணாது’ என்ற அகலுவர்கள்;
தாழவிட்டு வரின், காற்கடைக் கொள்ளுவர்கள்;-ஆகையாலே, சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறான்.

நீ செய்தன’ என்னுமித்தனை.-செய்த நீ அறியில் அறியுமித்தனை; என்னால் சொல்லித் தலைக்கட்டப் போமோ?-அனுபவித்துக் குமிழி நீர் உண்டு போமித்தனை ஒழிய என்பார், ‘அடியேன் அறியேன்,’ 

அத்தா என்கிறதுக்கு- ஞான பிரதாத்ருத்வமும் -உபகாரத்வமும் -ஸ்வாமித்வமும்- அர்த்த த்ரயங்கள் –

————

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே
 –2-3-3-

அறிவு நடையாடாத பருவத்தில் சம்பந்த ஞானத்தினைப் பிறப்பித்தாய்;
பிறப்பித்த ஞானத்தினை அழிக்கக்கூடிய தேஹ சம்பந்த்தத்தோடே பின்னையும் வைத்தாய்,’ என்னும் இன்னாப்பாலே
சொல்லுகிறார் என்று ஆளவந்தார் அருளிச் செ்யாதாராகத் திருமலையாண்டான் அருளிச் செய்வர்.

இதனை, எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீதியோடே நடவா நிற்க,
நடுவே பிரீதியின்மை தோற்றச் சொல்லுமது சேராது;
ஆன பின்னர், இங்ஙனே யாமித்தனை.
அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் என்கிறார்,’ என்று
இதனையும் ஓர் உபகாரமாக்கி அருளிச் செய்தார்.
‘அத்தா நீ செய்தன’ என்று, ‘நாம் செய்த உபகாரங்களைச் சொல்லுகின்றீர்;
அவற்றிலே நீர் மதித்திருப்பது ஓர் உபகாரத்தைச் சொல்லிக் காணீர்,’ என்ன, அதனைச் சொல்லுகிறார்

பெறாவிடில் முடியும்படியான நிலையினை உண்டாக்கினாய்’ என்பார், ‘அன்பு செய்வித்து’என்கிறார்.-அசித்தில் சேர்ந்தவனாய் இருக்கிற என்னை-நம்முடைய பொருள் அன்றோ?-அடியேனை-‘இத்தண்ணீர்ப் பந்தலை வைத்தாயே’-உபகார ஸ்ம்ருதி-எனது ஆவியுள் கலந்து – நான் இருக்குமிடத்தளவும் வந்து என்னோடே கலந்து,-
அத்யந்தம் அந்நிய பரனான ‘மிகவும் பராக்காய் இருக்கிற ஆத்துமாவிலே புகுந்து
உன் குணத்தாலும் செயலாலும் வசீகரித்தாய்,’ 

———

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே 
–2-3-4-

அவன் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி, அனுசயிக்கிறார் –

உதவியாவது,-உபகரித்தல்.
நல்லுதவியாவது, -பச்சை கொள்ளாதே உபகரித்தல். 
பெருநல்லுதவியாவது, தன் பேறாக உபகரித்தல்.

மயா சமர்ப்பித- ‘தேவரீருடைய திருவடித் தாமரைகளில் எனது உயிரை இப்போது நான் சமர்ப்பித்தேன்,’ என்றும்,
அதவா கின்னு ஸமர்ப்பயாமி தே -‘என்னுடையதும் யானும் ஆகிய எல்லாப் பொருள்களும் தேவரீர் உடைமை அன்றோ?
இதனை நன்கு அறிந்த யான் தேவரீருக்கு என்னுடைய பொருள் என்று எதனைக் கொடுப்பேன்?-ஸ்ரீ ஆளவந்தார்

சத்தை அவன் இச்சாதீனம் ஆகையால் தந்த நீ கொண்டாக்கினையே –பிரளய ஆர்ணவத்திலே நசியாதபடி ஜகத்தை ரஷித்தால் போலே நான் பிரிந்து நோவு படாதபடி என்னோடே கலந்து அடிமை கொண்ட ஸ்வாமி-பண்டே உனக்கு சேஷமாய் இருக்கிற இவ்வாத்மாவை நீ கொண்டு அருளினாய் –

———

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே
 –2-3-5-

ஞான லாபமே அமையுமோ?பிராப்தி – பேறு வேண்டாவோ?’ என்ன,தனியேன் வாழ் முதலே!! -எனக்குப் பிரதம ஸூஹ்ருதமும் நீயேயாய்,-என்னைச் சமுசாரிகளில் -வ்யாவ்ருத்தன்- வேறுபட்டவன் ஆக்கின அன்றே பெற்றேனே அன்றோ?’ என்கிறார்

கனிவார் வீட்டு இன்பமே – நீ என்றால் உள் கனிந்து பக்குவமாய் இருக்குமவர்களுக்கு மோக்ஷ சுகம் ஆனவனே!
அன்றி, ‘நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைவிக்குமவனே!’ என்றுமாம். –வீட்டு இன்பப்பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் – -அர்ச்சாவதார பரத்வேந –நாயனார்-யசோதைப் பிராட்டிக்குக் காட்டி அருளியது த்ருஷ்டாந்தம்-

என் கடல் படா அமுதே –முயற்சி இன்றிக் கிடைத்த அமுதம் போன்றவனே-(இத்தால் ப்ராப்யத்வம் சொல்லிற்று )

எனக்கு என்றிருப்பார் நடுவே இருக்கையிறே இவர்க்குத் தனிமை.
தம்மை அத்தலைக்கு ஆக்கி வைக்கையிறே இவர்க்கு வாழ்வு,’ 
என்பது இருபத்து நாலாயிரப்படி

நுன பாதம் சேர்ந்ததேனே –-இமையோர் தலைவா ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்னும்படி,-அறிவைத் தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேனே அன்றோ?’

————

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே
 –2-3-6-

இனி நுன பாதம் சேர்ந்தேனே’ என்றார். கீழ் திருப்பாசுரத்தில்;
‘இனி என்று தான் விசேஷிக்க வேண்டுமோ?
‘பொய்ந் நின்ற ஞானத்திலே’ நீ விசேஷ கடாக்ஷம் பண்ணின போதே கிட்டிற்றிலேனோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்,
அன்றிக்கே
ஸ்வரூபத்தை அநுசந்தித்தவாறே, நிலை நின்ற ஸ்வரூபம்
ஸ்வாபாவிக – இயல்பாகவே அமைந்துள்ளதான- சேஷத்துவமேயாய்,
நடுவுள்ளது வந்தேறியாய்த் தோன்றுகையாலே அருளிச் செய்கிறார் எனலுமாம்

அநாதி காலம் பிறவிகளால் உழன்று திரிந்த ஆத்துமா சர்வேஸ்வரனைக் கிட்டுகையாவது
கெடு மரக்கலம் கரை சேர்ந்தது போன்று இருத்தலின், ‘சேர்ந்தார்’ என்கிறார்;இறைவன் தானே அழிக்கப் பார்க்கும் அன்றும்-அழிக்க ஒண்ணாதபடியான திண்ணிய மதியைக் கொடுக்குமவன்-அம்பரீடன் தவம் செய்து கொண்டிருக்க, சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தைத் தரித்துக் கொண்டு சென்று,  ‘உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்’ என்ன ந அஹம் ஆராதயாமி த்வாம் தவ பத்தோயம் அஞ்சலி ,‘நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன் காண்;-என்னைச் சமாதி பங்கம் பண்ணாதே போக வல்லையே! உன்னைக் கும்பிடுகிறேன்’ என்றான்.

தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை 
ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதவ் – ‘ஸ்ரீராமரே! உம்மால் நீக்கப்பட்ட பிராட்டி உயிர் வாழாள்; நானும் உயிர் வாழேன்:-ஒருவாறு பிழைத்தோமானால், தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன் போன்று, ஒரு கணநேரமே பிழைத்திருப்போம்’ என்கிறபடியே,
தன்னைப் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போகமாட்டாதே,
அவர்கள் உயிர், தன்னைப் பிரிந்து-த்ரவீபூதமாய் – நீர்ப்பண்டமாக மங்கிப் போகக் கொடாதே,-அது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை.-தீர்ந்தார் 
உபாயத்தில் துணிவுடையார்; அவர்கள் ஆகிறார் –-பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்குமவர்கள்;-அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் –தீர்ந்தார் என்று ப்ராப்ய த்வரா நிஷ்டர் என்றும் —
ப்ராப்ய ப்ராபக நிஷ்டர் என்றுமாம்

அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே –
சேஷ பூதனான நான் பண்டே அடைந்தேன் அன்றோ
‘அநாதி காலம் இழந்த இழவை மறக்கும்படி வந்து கலக்கையாலே, இன்றோ பெற்றது?
இவ்வாத்துமா உள்ள அன்றே பெற்றேன் அல்லேனோ?’ என்கிறார்.-முதன் முன்னமே என்றதுக்கு மூன்று அர்த்தங்கள்
1-இனி என்று பொய் நின்ற ஞானத்திலே விசேஷ கடாக்ஷம் பண்ணின போதே பெற்றேன் என்று விசேஷிக்க வேணுமோ –அநாதி காலம் பிடித்துப் பெற்றேனே அன்றோ
2-இனி -என்று அறியாத அறிவித்த போதே பெற்றேன் என்று விசேஷிக்க வேணுமோ –
பொய் நின்ற ஞானத்திலே நீ விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளினை போதே பெற்றேனே
3-வாயும் திரை யுகளில் ஆர்த்தி தீரக் கலந்த போதே பெற்றேன் என்று விசேஷிக்க வேணுமோ –-அநாதி காலம் தொடங்கி விஸ்லேஷம் இன்றிக்கே ஸம்ஸ்லேஷமாய் அன்றோ தமக்குச் செல்கிறது –

———–

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே
–2-3-7-

அடைந்தேன் முதல் முன்னமே-தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் நினைத்தார்;
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே -இவ்விஷயத்தினுடைய இனிமையையும்-போக்யத்தையும் – அநு சந்தித்தார்;
‘இது இருந்தபடி கண்டோமுக்குத் தொங்காது போலே இருந்தது’ என்று – அதிசங்கை கொண்டு, தேவர் என்னைக் கைவிடில் நான் உளேன் ஆகேன்;-என்னைக் கைவிடாது ஒழிய வேண்டும்,’ என்கிறார்

இவர்கள் தொழுது உளராமாப் போலே -அவர்களைத் தொழுவித்துக் கொண்டு உஜ்ஜவலனாகா நிற்குமவன்-அனுபூதாம்சம் அளவுபட்டு அனுபாவ்ய அம்சமே பெருத்து இருக்குமே ஆதலின், ‘பரனே’ என்கிறார்.-கன்னலே-அமுதே-கார் முகிலே கண்ணா –இவ்வளவும் இவருடைய சங்கா ஹேது-உன்னை ஒழிந்த அன்று-அசித்ப்ராயமான -அறிவு அற்ற பொருளாகக் கிடக்கும் என்னை,-இவ்வயிருக்குத் தாரகனாய் இருக்கிற நீ பார்த்தருள வேண்டும்;-திருவுள்ளம் பற்றல் வேண்டும்-வ்யதிரேகத்தில் அழியும்படியான என்னை -வ்யதிரேகத்தில் அழிக்கும் படியான போக்யதையை யுடைய நீ -இரண்டு தலையையும் அறிந்து திரு உள்ளம் பற்ற வேணும் –

————

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே
 –2-3-8-

என்னை நீ குறிக் கொள்ளே’ என்றவாறே,-அவன் குளிரக் கடாக்ஷித்தான்;-அதனால் சகல வ்யசனங்களும் – எல்லாத் துன்பங்களும் போய்-அவனை அனுபவிக்கிறார்-

அவன் பின்னே நெறிப் பட்ட நெஞ்சை யுடையனாய்.-பின் நெறி – -பின்னே சொன்ன வழி-பிறவித் துயர் கடிந்து’ என்று தடையின் நீக்கத்தை–சரம ஸ்லோகத்தில் ‘எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிக்கின்றேன்’-அர்த்த த்வயம் – பல பரமாயும் உபாய பரமாயும்-இவர், வெண்ணெய் களவு காணப்போன இடத்தில் அடி ஒற்றிக் கொண்டு சென்று, அவன் புக்க வீட்டிலே தாமும் புக்கு,  அவன் வெளி வாராமல் படலைத் திருகி வைத்து, உபாய நெறியினைக் கேட்டு அறிந்து, பின் பிறவித்துயர் கடிந்தார் என்ற தொனிப் பொருளும் தோன்றும்-பேறாவது–கிறியாவது பகவத் பிரசாதம் –சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் அனுபவத்தை இஜ் ஜென்மத்தில் அல்ப காலத்திலேயே அயத்நேந நான் பெற்றேன் -என்று தாம் பெற்ற ஸம்ருத்தியைச் சொல்லி அனுபவிக்கிறார் –

———

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே
 –2-3-9-

சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ராஹ்மணா விபச்சிதா ‘-இவ் வுயிரானது முற்றறிவினனான இறைவனுடைய நற் குணங்களை அவ் விறைவனோடு அனுபவிக்கின்றது’ என்கிறபடியே,-தம்முடைய-சகல துரிதங்களும் – எல்லாத் துக்கங்களும் போகும்படி-‘இறைவனை அனுபவிக்கப் பெற்றேன்’ என்று ஹ்ருஷ்டராகிறார்

செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே –-அடி காண ஒண்ணாதபடி தூறு மண்டிக் கிடக்கிற தீய வினைகளெல்லாம் போகும்படி வந்து கிட்டி,-நான்கு மூலைகளிலும் புக்கு உட் புகுந்து, -அநந்யார்ஹனான -வேறு ஒருவர்க்கும் உரியன் அல்லாத- யான்-முழுமிடறு செய்து அனுபவதித்து, யமன் முதலியோர் தலைகளிலும் அடியிட்டுக் களிக்கப் பெற்றேன்.
படிதல் – கிட்டுதல்-
குடைதல். எங்கும் புகுதல்-
ஆடுதல் – உட்புகுதல்–
வாய் மடுத்துப் பருகுதல் – பெருவிடாயோடே அனுபவித்தல்.களித்தேனே-இதர விஷய ஸ்பர்சம் -சிற்றின்பம் துக்கமே ஆயது போன்று, பகவத் குணானுபவம் களிப்பே ஆதலின், 
‘களித்தேனே’ எனத் தேற்றேகாரம் 

———-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே
 -2-3-10-

களித்தேனே’ என்றவர்,-மீண்டும்,-‘இவ் வுலக மக்களோடு பொருந்தி யிருத்தல் நீங்கி,
இவ் வனுபவத்திற்குத் தேசிகரான நித்திய ஸூரிகள் திரளில் போய்ப் புகுவது எப்போதோ?’ என்கிறார்-

துளிக்கின்ற வான் இந்நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற மாயப் பிரான் –வர்ஷிக்கையே ஸ்வபாவமாக யுடைய மழையினைப் பெய்கின்ற ஆகாயம், (துளிக்கின்ற -வர்த்தமான பதார்த்தம் )-அதனால் விளையக் கூடிய இந்தப் பூமி இவற்றைக் கடற்கரை வெளியில் நோக்கியது போன்று,  திவ்ய ஆயுதங்களைத் தரித்து நோக்குகிற ஆச்சரியத்தை யுடையவன்.

கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று,
இவரும் ‘அத்திரளில் போய்ப் புகப் பெறுவது என்றோ!’ என்கிறார்.
ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச் செய்கின்றது. –அடியார்கள் குழாங்களையே    -இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –

பாண்டி நாட்டினின்றும் ஸ்ரீ வைஷ்ணவர் சிலர் வந்து நம்பிள்ளையைக் கண்டு வணங்கித்
‘தேவரீர், எங்களுக்குத் தஞ்சமாக இருப்பது ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேண்டும்,’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘கடற்கரை வெளியை நினைத்திருமின்’ என்று அருளினார்.
அவர்களும் ‘மணற் குன்றையும் காவற் காட்டையும் நினைத்திருக்கவோ?’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் புன் முறுவல் செய்து அருளிச் செய்தபடி:

‘சக்ரவர்த்தி திருமகன் கடற்கரையில் படை வீடு செய்திருக்கும் போது
ஸ்ரீ வானர வீரர்கள் இராகவார்த்தே பராக்ராந்தராய்த் தங்களை உபேக்ஷித்துப் பெருமாளையே நோக்கிக் கொண்டு கிடக்க,
இவர்கள் கண்ணுறங்குந்தனையும் தான் உறங்கி,
இவர்கள் கண்ணுறங்கினவாறே அம்பறாத் தூணியை முதுகிலே கட்டித்
திருக் கையிலே பிடித்த சார்ங்கமும் திருச் சரமுமாய் இராமுற்றும் நோக்கின
சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகளே தஞ்சமென்று இருமின்,’ என்று அருளினார்.

ஆகையால், ஸ்வ ரக்ஷண சிந்தையற்று நியதனாகவே சர்வ ரக்ஷகன் கைக் கொண்டு ரஷிக்கும் என்றபடி’.-இந்த திருவாய் மொழிக்கு –நிதான பாசுரம் இது-ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பிறந்து ஆவிர்பூத ஸ்வரூப ஸ்வ பாவரானவர்க்கு ப்ராப்யம் அடியாராக ஸூரிகள்-என்று கருத்து –

————

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே 
–2-3-11-

பருகிக் களித்தேனே -என்னா உடன் கூடுவது என்று கொலோ -என்று நான் பட்டது படாதே முதலிலே திரளோடே அனுபவிக்கப் பாருங்கோள்-அநு கூலராய் இருப்பார் அஹங்காராதிகளாலே பிரிய வர்த்தியாதே ஏக கண்டராய் அனுபவிக்கப் பாருங்கோள்-
அர்த்த காமாதிகளைப் பற்றி ஸ்வரூபத்தை இழவாதே கொள்ளுங்கோள் –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading