ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -3-குழல் கோவலர் மடப் பாவையும் –வெள்ளைச் சுரி சங்கு -7-3-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

————–

அவதாரிகை –
கீழில் பாட்டில்-பிரிவின்  பிரதம அவதி யாகையாலே- (முதல் நிலையும் முதிர்ந்த நிலையும் இரண்டு பாட்டுக்கள் ) தன்னுடைய தசையை (வெட்கத்தை) ஸ்த்ரீத்வத்தாலே ஒழித்தாள்
அங்கன் அன்றிக்கே
தோழிக்கு சொல்லித் தரிக்க வேண்டும்படிக்கு ஈடான தசா விபாகத்தாலே அவன் பின்னே போன நெஞ்சானது வருமோ -அங்கனே போமோ -என்று தோழியைக் கேட்கிறாள்   –

முதல் இரண்டும் பகவத் சேஷத்வம் -பாகவத சேஷத்வம் இதில் -அப்புள்ளின் பின்னே அன்றோ நெஞ்சு போயிற்று–சம்பந்த ஸத்ருச பதார்த்தங்கள் -பாதகம் ஆகும் விஸ்லேஷத்தில்-ராமம் மே அநு கதா த்ருஷ்ட்டி -சக்ரவர்த்தி-இருவருக்கும் நிழல் -பெருமானுக்கு நிழல் போல் -நமக்கும் நிழல் – மானஸ அனுபவம் கிட்டியது -பாஹ்ய அனுபவம் கிட்டுமா திருமலை நம்பி அருளிச் செய்ததாக பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்வதாக -நம்பிள்ளை ஈடு -இதுக்கு சங்கதி-பிராகிருத சம்பந்தம் போனது -சாஷாத்காரம் பெற்றது -சாத்மிக்குமா- நிலைக்குமா–நம்மால் அனுபவிக்க முடியுமா –என்றுமாம் -இப்படி மூன்று சங்கதிகள் இப்பாட்டுக்கு

குழற் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற் போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே
—3-பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழிந்து உரைத்தல் –தசரதன் -கண் பின்னே போனது போல் ஆழ்வார் நெஞ்சு போனதே-

குழற் கோவலர் மடப் பாவையும்
குழலை–அழகிய மயிர் முடியை யுடைய கோவலருக்கு உடைய மடப்பத்தை யுடைய –ஆத்ம குண சம்பன்னையான எம்பெருமானுக்கு அதி ஸ்லாக்த்யையான நப்பின்னைப் பிராட்டியும்-குழலை உடையவளுமாய் -அவர்களுக்கு பவ்யையுமாய் இருந்துள்ள நப்பின்னை பிராட்டி –-நப்பின்னைப் பிராட்டியும்- குழலூதும் கோவலர் என்றுமாம்–குழலை உடைய கோவலர் -என்றபடி- பிராமணர்க்கு சந்த்யா வந்தாதிகள் போலே இவர்களுக்கு இது ஜாதி பிரயுக்தம் –அக் குழல் ஓசையாலே அறிவில்லாத பசுக்களையும் வசீகரிக்க வல்லவரான கோப குலத்திலே பிறக்கையாலே தன் மொழி அழகாலே வசீகரிக்க வல்லவளுமாய் மடப்பம் முதலான நாரீ குணங்களை உடையவளுமான நப்பின்னைப் பிராட்டியும்

மண் மகளும்
ஷமா தத்துவமான பூமிப் பிராட்டியும்–கந்தவதியான பிருத்விக்கு அபிமாநிநி யாகையாலே
மணத்தை வடிவாக யுடையளான ஸ்ரீ பூமிப் பிராட்டியும்

திருவும்
எம்பெருமானுக்கு சம்பத்தான பெரிய பிராட்டியார்-தவ ஸ்ரியா –ஸ்தோத்ர ரத்னம் –38–என்று
ஸர்வ ப்ரகார ஸம்பத் ரூபையாய் இருக்கிற பெரிய பிராட்டியாரும்-

1-ஆஸ்ரிதர் குற்றத்தை பொறுக்கும் பிராட்டி –
2-குற்றம் காண்பான் என் பொறுப்பான் என்-என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி
3-நப்பின்னை பிராட்டி ஷமை தான் ஒரு வடிவாய் இருக்கும் –

1-பெரிய பிராட்டியார் இவனுக்கு சம்பத்தாய் இருக்கும் –
2-ஸ்ரீ பூமிப் பிராட்டி -அது விளையும் தரை
3-நப்பின்னை பிராட்டி அதனை அனுபவிக்கும் போக்தா –

நப்பின்னைப் பிராட்டி முதலாகச் சொல்லுகையாலே
1-நீர்மை முன்னாக
2-அழகாலே ஈடுபட்டு
3-மேன்மை ஈறாக
நெஞ்சு அவகாஹித்த படி சொல்லிற்று
-நப்பின்னைப் பிராட்டியை முதலில் சொல்வதானால் மேன்மையை விட நீர்மைக்கு உள்ள மேம்பாட்டு சொல்லிற்று

நிழற் போல்வனர் கண்டு
அவனுக்கும் ஒதுங்கும் படி சாயை- ஆஸ்வாச கரம்-ஒருவருக்கு ஒருவர் நிழல்-ஸ்ரீ தேவிக்கு அடங்கி –சாயாம் இவ (பட்டர்)-பவ்யமானவர் -பரதந்த்ரர்=இரண்டு அர்த்தங்களும் உண்டே-நிழற் போல்வனர்-என்கையாலே-ஸ்ரீ பூமி நீளை கள் மூவருக்கும் தத் சேஷத்வம் ஸ்வ பாவிகம் என்னும் இடம் சொல்லிற்று

1-இவர்கள் மூவரும் அவனுக்கு நிழல் போலே இருப்பவர்கள் –
2-ஒருவருக்கு ஒருவர் நிழல் போலே இருப்பவர்கள் -என்றுமாம்
3-ஆஸ்ரயித்தாருக்கு நிழல் போலே இருப்பவர்கள் -என்றுமாம் –

நிற்கும் கொல் மீளும் கொல்
அவ்விடத்தே விடாதே நிற்குமோ அல்லது மீண்டும் வருமோ-1-இப் படிகளைக் கண்டு
இதுவே பற்றாசாக தரித்து நிற்குமோ-2-இம் மேன்மையைக் கண்டு கடலிலே துரும்பு போலே எழ வீசுமோ –அடங்க எழில் ஸம்பத்து ஈசன் என்ற எண்ணத்தால் உள்ளே அடங்குமோ -திருவுக்கும் திருவாகிய செல்வன் -பரத்வம் கண்டு மீளுமோ–இப்பிராட்டிமார் அவனை விட்டு நீங்காது இருப்பது போலே தமக்கும் கிட்டுமோ -என்கிறார்–ராமம் மே அநுகதா த்ருஷ்டிர் அத்யாபி ந நிவர்த்ததே -ந த்வயாமி பஸ்யதேகண்டு நிற்கும் கொல் மீளும் கொல்-என்கையாலே-இப்படி மஹிஷீ பூஷண பரிஜ நாதி விசிஷ்டமான விஷயத்தை அவகாஹித்த நெஞ்சு வ்யவஸ்திதமாய் நிரந்தர அனுபவம் பண்ணுமோ- விஸ்லேஷிக்குமோ -என்று சொல்லிற்று ஆயிற்று –

தண்ணம் துழாய் அழற்போல் அடும் சக்கரத் தண்ணல்
குளிர்ந்து பரிமளத்தை உடைத்தான திருத் துழாய் அழற் போலே முடியா நின்றுள்ள
திரு ஆழியை உடைய சர்வேஸ்வரன் –உபமானம் சொல்லும் போது அவ் வருகு இட்டுச் சொல்லும் படி பகவத் விஷயத்தை  அவஹாகித்த படி அனுகூல பிரதிகூல விபாகம் இல்லை திரு ஆழிக்கு-
அனுகூலர்க்கேயாய் இருக்கும் திருத் துழாய்–திருத்துழாய் எரியுமே விஸ்லேஷத்திலே – வெப்பம் போல் ஆழியும் சுடும் இவளுக்கு-திருத்துழாய் அனுகூலருக்கு விஸ்லேஷத்தில் சுடுவது போல் சுடும் திருவாழி-அண்ணல் திரு ஆழி பிடிக்கும்  போது  பேராத படி பிடிக்கும் இச் செயலாலே என்னை எழுதிக் கொண்டவன் –தண்ணம் துழாய் அழற் போல் அடும் சக்கரத் தண்ணல் –என்கையாலே–1-போக்யத்வமும்–2-அநிஷ்ட நிவர்த்தகத்வமும்–3-ஸ்வாமித்வமும் ஆகிற ஸ்வ பாவ த்ரயமும்
பிராமண சார ப்ரதிபாத்யம்
என்று தோற்றிற்று

விண்ணோர் தொழக் கடவும்
கையையும் திருவாழியையும் கண்டு அயர்வறும் அமரர்கள் தொழும் படிக்கு நடத்தும்–நித்ய ஸூரிகள் தொழும் படி பெரிய திருவடியை நடத்துக்கிற –அவர்கள் தொழுது உளராவார்கள்- அவர்களைத் தொழுவித்துக் கொண்டு  உளனாம் அவன் –கடவும் என்கையாலே-காருணிகோ உததாதி (ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-1 )என்கிறபடி பிராமண ப்ரவ்ருத்தி ஈஸ்வர அதீனம் என்னும் இடம் சொல்லிற்று–விண்ணோர் தொழ -என்கையாலே விஷ்ணு பக்தி பரரான தேவர்களை ஸர்வேஸ்வர ப்ரவர்த்தித ப்ரமாணமானது ஸ்வரூபத்தில் நிறுத்தும் என்னும் இடம் சொல்லிற்று–விண்ணோர் தொழக் கடவும்-என்பதனால் வேத பிராமண பலத்தாலே தேவர்கள் யாவரும் சேஷ பூதர் -இவன் ஒருவனே பரம சேஷீ 

தழற் போல் சினத்த அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—
நெருப்புப் போலே கோபம் -வெஞ்சினத்த -காய்ச்சின-அவனை இங்கே நின்றும் கொண்டு போன
மெய்ப்பரிவை யுடைய திருவடி -ஜகத் ரக்ஷணம் -ஹேதுவாக அன்றோ கூட்டிச் செல்கிறான் –வேத ஸ்வரூபி -வேதத்தை திரு உள்ளம் அனுசந்திக்கிறது –வேத பிரமாணம் புற மத நிரசன சமர்த்தியம்-
க்ரூரரான அக்ரூர பின்னே போனவர் போல்-ஸ்வ தந்திரமான நெஞ்சு-கீழே ஸஹாயம் இல்லாத நெஞ்சு பார்த்தோம் –தென் திருப்பேரை யில் சேர்வன் -நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -அங்கும் புள்ளின் போனதே

தழற் போல் சினத்த-
அஸ்தானே பய சங்கிதனாய்க் கொண்டு அருளுகிறார் –கத கத என்னா நிற்கும் –
(மங்களா ஸாஸன பரர் –அருளாழி புள் -அங்கு பரிவர் உண்டே என்று விஸ்லேஷத்திலும் மகிழ்கிறாள் இவள் கத கத என்னும் அவனையும் குளிரப் பண்ணிப் புறப்படுமே இவன் )-பரிகர பூதனான ஆழ்வானிலும் பரிகரவானான ஈஸ்வரனிலும் விரோதி விஷயத்தில் சீற்றம் கால அக்நி போலே இருக்கும் படியான மஹா ப்ரபாவனாய் இருந்துள்ள பெரிய திருவடியின் பின்னே எனக்கு முந்துற்றுப் போன

தழற் போல் சினத்த அப்புள்-என்று
தன்னுடன் கூடி இருக்கிற நாயகனை போகாசக்தனான ராஜ புத்ரனை வ்ருத்த மந்திரி நியமித்து எடுத்துக் கொண்டு போமா போலே தன்னைச் சிவந்து பார்த்துக் கொண்டு போனமை தோற்றுகிறது –அப் புள்ளின் பின் போன-என்று நெஞ்சு பின் தொடரச் செய்தேயும் அவன் சினம் பொறுக்க மாட்டாமல்
முகம் திரிந்து சொல்லுகிறாள் –சிற்றின்பத்துக்கு அடிமையாய் இருக்கும் ராஜ குமாரனை காலம் கண்ட கிழ மந்திரி கூட்டிச் செல்லுமாப் போல் தன்னிடம் இருந்து பிரித்துக் கூட்டிச் சென்ற அப்புள்

அப் புள்ளின் பின் போன –
தன் இழவு பாராதே அத் தலைக்கு பரிவர் உண்டு என்று கொண்டாடுகிறாள் – அவனிலும் அவனுக்கு பரிந்த புள்ளின் பின்னே தன் நெஞ்சு போனபடி –அப்புள் -என்கையாலே-ப்ரமாணத்தினுடைய உத்கர்ஷம் சொல்லிற்று-தழல் போல் சினத்த அப்புள் -என்று விரோதி நிரஸனம் சொல்லுகையாலே
ப்ரமாணத்தினுடைய பாஹ்ய குத்ருஷ்டி நிரசன ஸாமர்த்யம் சொல்லிற்று

தனி நெஞ்சமே –
ஸ்வ தந்த்ரமான நெஞ்சு-வேண்டா -என்றால் மீள மாட்டாத நெஞ்சு –ஆழ்வார் வேதங்களில் அவகாஹித்து திருமாலை அனுபவிக்கத்  தொடங்கி இந்நிலை விடாமல் இருக்க வேண்டுமே என்கிறார் -ஆழ்வார் திரு உள்ளம் வேதங்களினுள்ளே பிரவேசித்து அனுபவிக்கத் தொடங்கி
இவ்வனுபவம் நித்யமாய் இருக்குமோ இருக்காதோ என்ற சங்கையைச் சொன்னபடி-

ஸ்வாபதேசம்
எம்பெருமானுடைய ஐஸ்வர்யத்தைத் தரித்து நின்று அனுபவிக்கப் போகுமோ-பாஹ்ய சம்ஸ்லேஷம் கிடைக்குமோ கிடைக்காதோ என்றுமாம்–பிராட்டிமாரையும் நித்ய ஸூரிகளையும் சொல்லுகையாலே
சர்வ ஸ்மாத் பரனாய்-ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கிற இருப்பிலே தமக்கு பாவ பந்தம் பிறந்தது
என்னும் இடம் சொல்லுகிறது  –
இதில் இப்புள் வேதமயனாகையாலே மந்த்ரார்த்த ஞானமுடையவன் வேத மார்க்கத்தையே அநுசரிக்கக் கடவன் என்றதாயிற்று –

தாத்பர்யம்–இப் பாசுரத்தில் சர்வேஸ்வரனை முன்பு ஆழ்வார் மாநசமாக அனுபவித்ததால் திரு உள்ளம் ஸர்வேஸ்வரன் இடம் ப்ராவண்யம் ஆனதை தானே சொல்கிறாள் தோழியிடம்
ஓ தோழி நாயகனைப் பிரிந்த இந்த தசையில் அவன் சாத்திக் களைந்த குளிர்ந்த அழகிய திருத்துழாயும் அவன் திருக்கையிலே ஆபரணமாக ஸ்ரீ ஸுதர்சன ஆழ்வாரும் -அனுகூலருக்கு ஆயுதம் இல்லை-என் மேல் தீ வீசி -என்னை மிகவும் உபத்திரியா நின்றன-இவ் வஸ்தையிலும் கூட சர்வேஸ்வரன் திருத்துழாய் அணிந்து -திருக்கையும் திருவாழியுமான சேர்த்தி உடன் சேவை சாதிக்காமல் நித்ய ஸூரிகள் தன்னை ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு -விண்ணோர் தொழக் கடவ -(இது தான் அவனுக்கு வேறே முக்கிய வேலை போல் ) தன்னிடத்தில் பரிவால் இலை அசைந்தாலும் விரோதிகளோ என்று -அஸ்தானே பயசங்கை -பண்ணி – பயந்து சீறி அருளும் திருவடியை வாஹனமாகக் கொண்டு நடத்தி அருளும் போது என் நெஞ்சு என்னையும் விட்டு விட்டு அந்த திருவடி பின்னே தனியாக போனதே — (கருடவாஹனான அவன் பின்னே போனது என்னாமல் அப்புள்ளின் பின் போனதே என்பதால் ததீய சேஷத்வம் அறிந்து சென்றமை தோற்றுமே ) அங்கு போன பின்பு நிறைந்த மயிர் முடி யுடைய நப்பின்னைப் பிராட்டியும் -ஸ்ரீ பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியாரும்
இவர்கள் ஸர்வேஸ்வரனை அனுவர்த்தித்து ஆஸ்ரிதர் குற்றங்களை பொறுப்பிக்க- தலையெடுக்கும் ஸுலப்யம் கண்டு அங்கே நிற்குமா –-அல்லது ஸ்ரீ பூமி நீலா தேவிமார் ஸேவ்யனான அவன் மேன்மையைக் கண்டு அங்கு தரித்து நிற்க மாட்டாமல் திரும்ப வருமோ சொல் -தோழி என்று கீழே விளித்து இங்கு சொல் என்று நிகமிக்கிறாள் –

என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்- -7-3-1-‘இவர்க்கு மயர்வு அற மதிநலம் அருளி-நெஞ்சமே நீள் நகர்’ திருவாய்மொழி-3. 8:2. -என்னும்படி யன்றோ திருத்திற்று?’
ஒரு திரிபாத் விபூதியிலும் இடம் உடைத்தாயிருக்கை. -விசுவஸ்ய ஆய தனம் மஹத் –
திருவடி திருத் தோளில் ஏறி அங்கு உள்ளார்க்கு உஜ்ஜீவனமாகச் சாரிகை வந்து காட்டுமாறு போலே,-இவர் நெஞ்சினுள்ளே தடை இல்லாமல் அழகு செண்டு -விளையாட்டு வையாளி -ஏறுகிறபடி.-நெஞ்சினூடே-‘அகவாயில் உள்ளது கண்களுக்குத் தெரியாதோ?’ என்று இருக்கிறார்கள் ஆயிற்று இவர்கள்.-காணீர் –-காண்கின்றிலீர். இப்பொழுது நடக்கிறதும் காணாமலே ஒழிகிறது தடுக்கின்ற நிர்பந்தத்தாலே அன்றோ? உங்களுக்குக் குர கோஷம் கேட்கிறது இல்லையோ? பிரசித்தமான பொருளை உபதேசிக்க வேண்டுவதே.-காணீர்- உங்களுக்குக் கண்களும் செவிகளும் இன்றிக்கே இருந்தோ தடுக்கிறது? என்னைப் போலே உட் கண்ணாலே காணீர்கோள்!

ஒரு வாசத் தடத்தில் அன்னங்கள் சக்கர வாகங்களை போன்ற ஆழ்வார்களும்,
காடு பட அலர்ந்த தாமரை போலே இருக்கிற திவ்விய அவயவங்களும்,
அத் தடாகத்தில் நீரும் இலையும் போலே இருக்கிற திருமேனியுமாய்,
அதனைக் கினிய -கபளீகரிக்க.-ஒரு மேரு தாங்கினாற்போலே இருக்கிற பெரிய திருவடியோடே கூட இவர் திருவுள்ளத்தே உலாவுகிறபடி. இப்படியே அன்றோ அநுகூலரோடு பரிமாறும்படி

என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –7-3-4–அங்கே புக்காரையும் தம்படி யாக்கிக் கொண்டார்.
‘பிரியேன்’ என்று சொன்னவர் அன்றோ இத் தலையைப் பிரிந்து நினையாது இருக்கிறார்?நெஞ்சினார்’-அலைந்த பரிவட்டமும் தாமுமாய் அணுக்கடித்துத் திரியா நின்றாராயிற்று. -இதுவும் அவனுக்கும் நெஞ்சுக்கும் –-பூஜ்ய வாசி நெஞ்சை சொன்னபடி –இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் – நிறம் தொடக்கமாக இழந்தவை அடைய மீட்பதாகச் சொல்லிப் போன நெஞ்சினரும் அங்கே கால் தாழ்ந்தார். சல்ய சாரத்யம் -போலே -வினைத்தலையிலே படை அறுக்குமாறு போலே,-வரிசையும் கொடுத்துத் தம்மோடு ஒப்புமையையும் கொடுத்தார்.-நிறம் மீட்கப் போனாரும் நிறம் கொடு போனாரோடு ஒத்தார்.-இத்தலையில் வெறுமை கண்டு போனதுவும் -புஷ்கலம் -நிறைவினைக் கண்டு போனவனோடு ஒத்தது.-போவார் போவார் எல்லாரும் இத்தலைக்குக் காரியமாகக் காணும் போம் போது சொல்லிப் போவது! அவன் தானே ‘இத்தலையில் ஊற்று-அபிநிவேசம் அதிசயிக்க — இருக்க வேணும்’ என்று போனான் ஆனான்’-இது இத்தலையில் வெறுமை கண்டு, நோக்குகைக்காகப் போயிற்று.-புக்கார் மீளாத தேசமான பின்பு. அங்கே ஒழிந்தார் –

—-

7-3-வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி-ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழியில், ‘இட்ட கால் இட்ட கை’ என்கிறபடியே, இவள் மோகித்துக் கிடக்க,
இவளுக்கு முன்னே தோழிமாரும் தரைப்பட, திருத் தாயார் ஒருத்தியும் இவள் நிலையை நினைந்து
அருகே இருந்து கூப்பிட்டுப் போருமதும் தவிர இப் பெண்பிள்ளை தானே எழுந்திருந்து கால் நடை தந்து போமளவாய் விழுந்தது.

அதற்கு அடி:
‘பற்றிலார் பற்ற நின்றானே’ என்று பெரிய பெருமாளுடைய பற்றிலார் பற்ற நிற்கும் தன்மை தொடக்கமான,
இவளுக்குப் பற்றாசான குணங்களையும் அழகு முதலான விக்கிரஹ குணங்களையும்
இவள் தான் வாய் வெருவியும் திருத்தாயார் சொல்லவும் கேட்டு அதனாலே தரித்தாள்.
போன உயிரை மீட்கவற்றாயன்றோ குணங்களின் தன்மை இருப்பது?

இவ்விடத்திலே,
‘இத: பரம் மிருத ஸஞ்ஜீவநீம் ராம வ்ருத்தாந்த கதம் ஆஹ’-என்ற
ஸஹஸ்ரநாம பாஷ்ய வாக்கியத்தை நினைப்பது.

‘அவித்த ஜம்புலத்தவ ராதியாயுள
புவித்தலை யுயிரெலாம் இராமன் பொன் முடி
கவிக்கும் என்றுரைக்கவே களித்த தாலது
செவிப்புலம் நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம்!’-என்பது, கம்பராமாயணம், அயோத்தியாகாண்டம், ஆற்றுப்படலம், 23.

மேல் திருவாய்மொழியில் பிறந்த மோகமுந்தெளிந்து பிரிவின் வியசனமும் நினைக்க வல்லளாய்,
பின்பு, ‘அவனைக் கிட்டியல்லது நில்லேன்’ என்னும்படியான ஆற்றாமையும் பிறந்து, அது பெறாமையாலே துக்கமுடையவளாக,
இவள் விடாய்கு ஈடாகும்படி அணித்தாகத் தென்திருப்பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக்காதனுடைய புன்சிரிப்பு
கடைக்கண் நோக்கம் முதலியவைகளாலே கவரப்பட்ட மனத்தை யுடையவளாய்,
அவன் இருந்து இடத்து ஏறப்போக வேணும்,’ என்று ஒருப்பட,

பழையபடியே தோழிமாரும் தாய்மாரும் அவளைச் சூழப்போந்து,
உனக்கு இத்துணை அளவு கடந்த ஈடுபாடு ஆகாது: நமக்கு இது பழியாய் விளையும்,’ என்ன,

நீங்கள் சொல்லுகிறவற்றால் பிரயோஜனம் உண்டாக மாட்டாது. நான் அவன் பக்கலிலே சென்ற மனத்தை யுடையவள் ஆனேன்;
ஆன பின்பு நானே போனேன் ஆகாமே நீங்கள் என்னோடு உடன்பட்டு அங்கே கொடு போய்ச் சேர்க்கப் பாருங்கோள்,’
என்று தனக்குப் பிறந்த துணிவை அவர்களுக்கு அறிவித்துச் சொல்லுகிறாளாய் இருக்கிறது.

அங்ஙன் அன்றிக்கே,
பிள்ளான் சாஷாத் அனுபவம் பெற்றாள் என்று கொண்டு நிர்வாகம் –
‘முகில் வண்ணன் அடியே இவள் அணுகி அடைந்தனள்,’ என்றது ஆகையாலே,
‘நான் அங்கும் இராகவனுடைய வீட்டில் பன்னிரண்டு வருடங்கள் முடிய மனிதர்களுக்குரிய போகத்தை அனுபவித்தேன்,’ என்கிறபடியே,
ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேஸநே
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33.17.

பெரிய பெருமாளோடே நெடுங்காலம் பூர்ண ரசமான கலவி உண்டாக,
பிரிந்து கூடா விடில் இரண்டு தலைக்கும் அழிவு வருமளவு ஆயிற்றது.

இனி, எல்லா அளவிலும் ஒரு நீராகக் கலக்கிறது தர்மிகள் இரண்டும் கூடி அன்றோ?
ஆகையாலே, பிரியா விடில் தர்மியே அழியும் அளவாகப் புக, இவ்வளவில். நாயகனான இவன் இரண்டு தலையும்
ஜீவிக்கப் பார்ப்பான் ஒருவன் ஆகையாலே பிரிவைப் பற்றிப் பேசினான்;

பேச, இவளும் பிரிவில் வாசனை இல்லாதாள் ஒருத்தி ஆகையாலே,
‘கலவியிலே ஒரு வகையோ’ என்று கொண்ட, இவளும் அதற்கு இசைந்தாள்;
இசைய அவனும் வேட்டை நிமித்தமாகப் புறப்பட, இவளும் திரு அணுக்கன் திருவாசல் அளவும் ஒருப்படுத்தி மீண்டாள்:

எல்லா அளவிலும் பிரிவு தன் காரியம் செய்தன்றி நில்லாதே அன்றோ?
பின் இவள் நோவு படப்புக. இதனைக் கண்ட தோழிமாரும் தாய்மாரும், ‘உனக்கு ஒடுகிறது என்?’ என்று கேட்க,
ஸ்ரீஜனகராஜன் திருமகள் காட்டிலே கூடப் போய் அவர் இருந்த இடம் நின்ற இடம் உலாவின இடந்தோறும்
கூட இருந்து அனுபவித்தாற்போலே, நானும் அவன் இருந்த இடத்தே போய்ப் புக்கு அல்லது நில்லேன்,’ என்றாள்;

அதனைக் கேட்ட அவர்கள், ‘உன் தலைமைக்கு இது போராது: நீ சொல்லுகிறது வார்த்தை அன்று,’ என்ன,
அவர்கள், ‘அதற்கு நாங்கள் வழிப்படோம்’ என்ன, ‘ஆகில், நானேயாகிலும் போகை தவிரேன்,’ என்கிறாள் என்று பிள்ளான் பணிப்பர்.

சம்ஸ்லேஷம் -இருந்தால் வேறு சேர்ந்து அனுபவித்த திருவாய்மொழி இருக்க வேண்டுமே –
அதனால் இந்த நிர்வாகம் கொஞ்சம் அஸ்வாரஸ்யம் –

ஸமா த்வாதச தத்ர அஹம்-
இப்போது ஒருவேளை தரிசனமுங்கூட அரிதாம்படி இருக்கிற நான், முன்பு பல காலம் அவரோடே அனுபவிக்கப் பெற்றேன் காண்!
ராகவஸ்ய நிவேசநே-
எங்கள் மாமனாருடைய மாளிகையிலே அவர் தண்ணீர்த் துரும்பு அறுத்துத் தர, நெடுங்காலம் அனுபவித்தேன்
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ- ‘எல்லாக் காமங்களையும்’ என்கிறபடியே,
‘சோஸ்னுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா’ என்றது, தைத்.- எல்லாம் அனுபவிக்கப் பெற்றேன்.
அப்படியும் அன்றே இங்கு:
‘அரசனே! கல்யாண குணங்கள் பல’ என்கிறபடியே, குணங்கள் இரட்டித்த இடம் அன்றோ இது?
‘பஸவோ ந்ருப கல்யாண குணா:’ என்பது, ஸ்ரீராமா, அயோத். 2:26.

‘ஆக, இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
‘நமக்கு ஐம்புல இன்பங்களினின்றும் இந்திரியங்களை மீட்க ஒண்ணாதவாறு போலே அன்றோ
இவரைப் பகவத் விஷயத்தினின்றும் மீட்க ஒண்ணாதபடி?’ என்பதனைக் கூறியவாறு.
அது கருமம் அடியாக வருகிறது: இது பகவானுடைய திருவருள் அடியாக வருகிறது.

‘திருத் தாயார் பேச்சாக வருமவை, ஆழ்வாருக்குப் பிறந்த நிலை விசேடம்:
தலை மகளாய்ப் பேசுகிறதும், இவர்க்குப் பிறந்தது ஓர் அவஸ்தா விசேடம்:
அங்ஙனம் இருக்க, விலக்குவதும் போவதாகக் கூறுவதும் ஒருவர்க்கே கூடுமோ?’ எனின்,

அவற்றுள், விலகுகின்ற திருத் தாயார் முகத்தாற் சொல்லுகிறது,
ஸ்வரூபமான பிராவண்யம் உபாயத்திற் சேர்ந்தால் செய்வது என்?’என்னுமதற்குச் சொல்லுகிறது;

பெண்பிள்ளை கருத்தாற் சொல்லுகிறது. ‘உபாயம் அவனே யாகில் பிராவண்யம் ஸ்வரூபமாமத்தனை அன்றோ?’ என்று சொல்லுகிறது.

ஆக, இவ்விரண்டு அர்த்தத்தையும் -உபாய அத்யாவ சாயத்தையும் பிராப்ய த்வரையும் இரண்டு முகத்தாலே
ஆழ்வார் தாம் அநுசந்தித்தபடியைச் சொல்லுகிறது.
மோகமும் தெளிந்து தானே கூப்பிட வல்லளான இதுவே, இத் திருவாய்மொழிக்கு ஏற்றம்.-

ஸ்ரீ பேரி-தென் திரு பேரியில்-மஹா லஷ்மி இடத்தை எடுத்துக் கொண்டு பூமா தேவி -தபஸ் -அரவாகி சுமத்தியால் —எயிற்றில் ஏந்தி –
வாயில் விழுங்கி —விராட ஸ்தோத்ரம் -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் –
துர்வாசர் -சாபம் -செய்யாளாக-மாறி -ஸ்ரீ பேரம் -திருமேனி கிடைத்தது -தாமிர பரணி தென் கரை
மஸ்த்ய மகர தீர்த்தம் -மகர குண்டலங்கள் -கிடைக்க –
மகர பூஷணரோ-சாபம் தீர்ந்து கரும் பச்சை நிறம் பெற்றாள் -தென் திருப்பேரை
ஸுந்தர்யம் மா நகரில் கோஷிக்கும் -சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுத்து -நெஞ்சினாரும் அங்கே ஒழிந்து-
மகர நெடும் குழைக் காதர் –கோஷிக்கும் தொனிகள்- நெஞ்சில் -புள்ளைக் கடாவும் -வேத ஒலியும்-விளையாட்டு ஒலி-

தென் திருப்பேரையில் என்ற திவ்ய தேச திரு நாமம் – தென் திருப்பேரை மருவி உள்ளது
நிகரில் முகில் வண்ணன் பெருமாள் திரு நாமம் –

மூன்றாம் திருவாய் மொழியில் -கீழ் -பெரிய பெருமாளுடைய உதார குண அனுசந்தானத்தாலே ஆஸ்வஸ்தரான இவர்க்கு –
பாஹ்ய அனுபவ அபி நிவேசம் அநு வர்த்திகையாலே அத்யந்தம் ஆர்த்தராய் -அந்த ஆர்த்தி சமிக்கைக்கு
அவன் ஆசன்னமாகத் திருப் பேரையிலே எழுந்து அருளி இருக்கிறபடியை அனுசந்தித்து –
ஆந்திர அனுபாவ்யமான அவனுடைய திவ்ய ஆயுயாதி வை லக்ஷண்யத்தையும்
அதிசயிதமான பரத்வ ஸுலப்யங்களையும்
ஆகர்ஷகமான திவ்ய அவயவாதி சோபையையும்
அனுபாவ்யமான ஆச்சர்ய குணாதி யோகத்தையும்
அநிஷ்ட வர்க்க நிரசனத்தையும்
உதார குண அதிசயத்தையும்
பிரபல பிரதிபந்தக பங்கத்தையும்
ப்ரக்ருஷ்ட பக்தி வர்த்தகத்தையும்
பிரளய ஆபத் ஸகத்வத்தையும்
ஆஸ்ரித விரோதி நிவர்ஹணத்தையும்
சிந்தித்து -ஏவம் பூதனானவன் எழுந்து அருளி இருக்கிற தேசத்திலே செல்லுகையில் யுண்டான த்வரா விசேஷத்தைக் கண்ட
பார்ஸ்வஸ்த்தரான ஸூஹ் ருத்துக்களுக்கும் பரிவாக்கும் பிராப்தி ஜெனித வியவசாயத்தை அறிவித்த பிரகாரத்தை
நாயகனான மகர நெடும் குழைக் காத்தான் எழுந்து அருளி இருக்கிற தென் திருப் பேரையிலே செல்லுகையில் த்வரையை யுடைய
நாயகியானவள் -இது அநு ரூபம் அன்று -என்று விலக்கத் தேடுகிற தோழிமார் தாய்மார் முதலானவரைக் குறித்து
நான் அத்தேசத்தில் செல்லல் தவிரேன் -நீங்கள் கொடு போய் விடுங்கோள் -இல்லையாகில் நானே போவேன் -என்று
தன் துணிவை வெளியிட்ட பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

————

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி –‘தவள ஒண் சங்கு சக்கரம்’ -திருவாய். 6. 5:1.-என்றும்,
‘கூரார் ஆழி வெண் சங்கு’ திருவாய். 6. 9:1.-என்றும்,‘சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்’ -7. 2:1.-என்றும் கையும் திருவாழியுமான அழகு-கைவிடாதே இவரைத் தொடருகிறபடி.
முகில் வண்ணன் அன்றோ? அந்த நிறத்துக்குப் பரபாகமான வெளுப்பையும் சுரியையுமுடைத்தான ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும், அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாதபடியான அழகையுடைத்தான திருவாழியையும் ஏந்தி,

தாமரைக் கண்ணன்-‘தாமரைக் கண் என்றே தளரும்’ என்றது. பின் நாட்டுகிறபடி.
திருமேனிக்குத் திவ்விய ஆயுதங்கள் பிரகாசகமாய் இருக்குமாறு போலே,
ஆத்ம குணங்களுக்குத் திருக் கண்கள் பிரகாசகமாய் இருக்கிறபடி. என்றது,
‘அக வாயில் தண்ணளி எல்லாம் கண் வழியே அன்றோ தோற்றுவது?’-இவ் விடத்தே நிலாத்துக் குறிப் பகவர் வார்த்தையை அருளிச் செய்வர் சீயர். –-ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு இரண்டு தோள்களா நான்கு தோள்களா —-கைக்கு ஆழ்வார்கள் ஆபரணமாய் இருக்குமாறு போலே ஆயிற்று, முகத்துக்கு திருக் கண்கள் ஆபரணமாய் இருக்கும்படியும்.-ஆழ்வார்கள் தாம் அவனைக் கை செய்திருக்கையாலே ஆபரண கோடியிலே இருப்பார்கள்.
கை செய்தல் –- அலங்கரித்தல்.-சகாயம் செய்தல் -யுத்தம் செய்தல்

என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்- ‘இவர்க்கு மயர்வு அற மதிநலம் அருளி-நெஞ்சமே நீள் நகர்’ திருவாய்மொழி-3. 8:2. -என்னும்படி யன்றோ திருத்திற்று?’
ஒரு திரிபாத் விபூதியிலும் இடம் உடைத்தாயிருக்கை. -விசுவஸ்ய ஆய தனம் மஹத் –
திருவடி திருத் தோளில் ஏறி அங்கு உள்ளார்க்கு உஜ்ஜீவனமாகச் சாரிகை வந்து காட்டுமாறு போலே,-இவர் நெஞ்சினுள்ளே தடை இல்லாமல் அழகு செண்டு -விளையாட்டு வையாளி -ஏறுகிறபடி.-நெஞ்சினூடே-‘அகவாயில் உள்ளது கண்களுக்குத் தெரியாதோ?’ என்று இருக்கிறார்கள் ஆயிற்று இவர்கள்.-காணீர் –-காண்கின்றிலீர். இப்பொழுது நடக்கிறதும் காணாமலே ஒழிகிறது தடுக்கின்ற நிர்பந்தத்தாலே அன்றோ? உங்களுக்குக் குர கோஷம் கேட்கிறது இல்லையோ? பிரசித்தமான பொருளை உபதேசிக்க வேண்டுவதே.-காணீர்- உங்களுக்குக் கண்களும் செவிகளும் இன்றிக்கே இருந்தோ தடுக்கிறது? என்னைப் போலே உட் கண்ணாலே காணீர்கோள்!

ஒரு வாசத் தடத்தில் அன்னங்கள் சக்கர வாகங்களை போன்ற ஆழ்வார்களும்,
காடு பட அலர்ந்த தாமரை போலே இருக்கிற திவ்விய அவயவங்களும்,
அத் தடாகத்தில் நீரும் இலையும் போலே இருக்கிற திருமேனியுமாய்,
அதனைக் கினிய -கபளீகரிக்க.-ஒரு மேரு தாங்கினாற்போலே இருக்கிற பெரிய திருவடியோடே கூட இவர் திருவுள்ளத்தே உலாவுகிறபடி. இப்படியே அன்றோ அநுகூலரோடு பரிமாறும்படி?

நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கண்டு-‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, பாஷ்யகாரர் தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது, ஸ்வரூப வியாப்தியாய் இருக்கும்;-ஆகிலும், எம்பார் ஒரு நாள் ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்தற்பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே விக்கிரஹத்தோட வியாபித்திருக்கும்’ என்று அருளிச் செய்யக் கேட்டேன்’ என்று பணித்தான்;’

உங்கள் கண்களுக்கு விஷயம் ஆகாதவாறு போலே என் வாக்கிற்கும் விஷயம் ஆகிறது இல்லை.-இவர்க்கு நெஞ்சு நிறைந்தது வாய் கொள்ளுகிறது இல்லை காணும்!-என் சொல்லிச் சொல்லுகேன் – நான் வலிமை குன்றியவளாக இருப்பதனாலே சொல்ல மாட்டேன். விஷயம் இவ்வளவு என்று சொல்ல முடியாமையாலே சொல்லி முடிக்கப் போகாது;
எண்ணிப் பார்த்தற்கு உங்களுக்குப் பரிகரம் இல்லாமையாலே சொல்லத் தான் வேண்டா.

அவன் வீற்றிருந்த –-‘இட்ட கால் இட்ட கையளாய் இருக்கிற இருப்புக்கு எதிர்த் தட்டாயிருக்கிற இருப்பு அன்றோ அது?’ என்றது,-இத் தலையைத் துடிக்க விட்டுத் தன் ஐஸ்வரியம் தோற்ற மேலான சுகத்தோடு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே,-இத் தலையைத் தோற்பித்த தன் வெற்றி எல்லாம் அவ் விருப்பிலே தோற்றும்படி இருக்கிறபடி என்னுதல்.-அவன் மெய் மறந்து அப்படி இருந்தால் நாமும் மெய் மறந்திருக்கவோ?-மெய் -வை லக்ஷண்யம் –-நிறைவாளனாய் அவன் செருக்காலே இருந்தால், குறைவாளராய் நோவுபடுகிற நாமும் இருக்கவோ? அவன் முறை தப்ப நின்றால் நாமும் முறை தப்புமித்தனை அன்றோ?

பருவம் நிரம்புவதற்கு முன்னே பகவானுடைய அனுபவமே யாத்திரையாகச் செல்லுவார் இருக்கிற ஊரில் போய்ப் புகுமித்தனை என்கிறாள்.-அவ்வூரில் பருவம் நிரம்பாத பிள்ளைகளும் அகப்பட மகர நெடுங்குழைக் காதனுடைய வடிவழகிலே தோற்று, வாய் வெருவா நிற்பர்கள்.

திருப்பேரெயில் சேர்வன் நானே-வென்றார் இருந்த இடத்தே தோற்றார் சென்று விழுமத்தனை அன்றோ?-தாமரைக் கண்ணன் என் நெஞ்சுனூடே அன்றோ?
ஆகையாலே ‘உனக்கு வெற்றி’ என்று சென்று விழுமத்தனையேயாம்.-

————————–

நானக் கருங்குழல் தோழிமீர் காள்!
அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்
என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே
.–7-3-2-

அகாரத்தின் பொருளான அவனும் ஜீவித்து மகாரத்தின் பொருளான இவனும் ஜீவித்துப் பல காலம் போகச் செய்தேயும், உஜ்ஜீவிக்கப் பெறாதே நடுவே கிடந்து போயிற்றே.
இனி, சேர்க்கின்றவர்களுடைய காரியம் அன்றோ உஜ்ஜீவிப்பிக்கை? அப்படியே இவளை இசைவித்து உஜ்ஜீவிப்பக்க வேணுமே.-‘சேஷிக்கு அதிசயம் வேணும்’ என்றிருப்பர், தங்கள் தங்களுடைய துக்கத்தைப் பாரார்களே அன்றோ?-பெருமாளிலும் துக்கம் விஞ்சி இருக்கச் செய்தே பெருமாளுடைய இரட்சணத்துக்காக இளைய பெருமாள் தம்மைப் பேணிக் கொண்டு தரித்து இருக்குமாறு போலே. இளைய பெருமாள் தாம் பரம் போகி அன்றோ?

தோழிமீர்காள்! அன்னையர்காள்! அயற்சேரியீர்காள்!- தான் அறிந்து தோழிமார்க்குச் சொல்லாதே இருப்பது ஒரு நிலையும், தோழிமாரும் தானும் அறிந்து தாய் அறியாதே இருப்பது ஒரு நிலையும், தானும் தோழியும் தாயும் அறிந்து பிறர் அறியாதே இருப்பது ஒரு நிலையுமாயிற்று இருப்பது; அந்நிலை குலைந்து எல்லாரையும் ஒக்க விளிக்கும்படி ஆயிற்று உலகப் பிரசித்தமானபடி. பிறர்க்குச் சொல்ல வேண்டுவது இல்லை அன்றோ?
ஆயிருக்க, பிரதி கூலர்க்குங்கூட அருள் பண்ண வேண்டும்படி காணும் இவளுடைய துன்ப நிலை.

நான் இத்தனி நெஞ்சம் காக்க மாட்டேன்--‘உங்களுக்கும் இங்ஙனே ஏதேனும் இருப்பது ஒரு காரணம் உண்டோ முறை தப்புகைக்கு நான்?-நீங்களும் ஏதேனும் நெஞ்சு இழந்தீர்களோ? உங்கள் அளவு அன்று’ என்றபடி.-இத் தனி நெஞ்சம்– உங்களில் நான் வேறுபட்டவள் ஆனாற்போலே யாயிற்று, என்னிலும் என் நெஞ்சு வேறுபட்டபடி. என்றது,-‘சொல்லிற்றுக் கேளாத ஸ்வதந்திரமான நெஞ்சம்’ என்றபடி.-என் வசம் அன்று இது--என் செய்வோம், தாய் வேறு கன்று ஆக்கும் விஷயமானால்?

வீற்றிருந்த-பரமபதத்தில் இருப்பு அடங்கலும் தோற்றும்படி இருக்கை.
அவ்விடம் போன்றது அன்றே இவ்விடம்? ஒருவர் கூறை எழுவர் உடுக்கிற இடம் அன்றோ?
அவ்விடத்தைப் போன்று இவ்விடத்தையும் திருத்திக் கொண்டிருக்கிற இடம் அன்றோ?வானப் பிரான் –இதனால் கண்ணழிவற்ற மேன்மையைச் சொல்லுகிறது.-தென்திருப்பேரெயில் வீற்றிருந்த வானப்பிரான் –-ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பை நமக்காக இங்கே இருக்கிற உபகாரன்.-மணி வண்ணன்–மேன்மை இல்லையாகிலும் விட ஒண்ணாத வடிவில் பசை இருக்கிறபடி.-கண்ணன் – அங்குள்ளார்க்குப் படி விடும் உடம்பை இங்குள்ளார்க்கு வரையாதே கொடுத்துக் கொண்டு இருக்கிறவன்.

ஆக,-‘மேன்மை அளவிடவோ?-வடிவழகு அளவிடவோ? நீர்மை அளவிடவோ?’ என்பதனைத் தெரிவித்தபடி.

செங்கனி வாயின் திறத்ததுவே –-கிண்ணகத்தில் ஒரு சுழியிலே அகப்படுவாரைப் போலே, வாய்க் கரையிலே அகப்பட்டது; -வாயின் மேலே அதரத்திலே-என்றவாறு –ஆசைப்பட்ட விஷயத்தைக் கரை கண்டது ஆகில் அன்றோ மீளுவது?-சிவந்து கனிந்து திருப் பவளத்தின் இடையாட்டத்தது;-இது மீள நினைக்கில் அன்றோ உங்கள் வார்த்தை கேட்கைக்கு அவகாசம் உள்ளது?-

————-

செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே.
–7-3-3-

செங்கனி வாயின் திறத்ததாயும் –-‘பிரிந்து கடக்க இருக்கில் என்? உன் கண் வட்டத்திலே கிடக்கில் என்? இது உன் சரக்கு அன்றோ?’ என்று சொல்லத் தொடங்கி, தழுதழுத்து வருகிற திருவதரத்திலே அகப்பட்டபடி.-அதிலும், அதரத்தில் பழுப்புக்குள் இழிய மாட்டுகிறது இல்லை.-வாயின் திறத்ததாயும் –-அதுதான் ஒரு மஹா பாரதத்துக்குப் போரும் ஆகாதே? (நென்னலே வாய் நேரந்தான் போல் )-செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும் –-பிரிவினைப் பற்றிப் பேசிப் பேர நின்ற போது, ஆதி ராஜ்ய ஸூசகமாய்‘உபய விபூதி நாதன்’ என்று தோற்றும்படி இருக்கிற திருமுடியைக் கண்டு தரைப் பட்டுக் காலைப் பிடித்தது.

சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –பிரிந்தால் விரோதியைப் போக்குகைக்குக் கருவியாய்,
வைத்த கண் மாற ஒண்ணாத அழகை யுடைய ஆழ்வார்களைக் கண்டு உகந்தது.-தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் –தவாஸ்மி–‘உனக்கு ஆகிறேன்’ என்று சொல்லப் புக்கு மாட்டாது ஒழிந்தால், குறையும் தலைக் கட்டின திருக் கண்களுக்கு ஆயிற்று
‘பிரிகிற போது நோக்கின நோக்கிலே பிறர்க்கு ஆகாதபடி உஜ்ஜீவிக்கச் செய்தான்’

என் நெஞ்சம்- அவனுடைய உபகாரமும் அழகு முதலானவைகளும் வயிர உருக்கு ஆகை.
நெஞ்சினுடைய வன்மை அறிதி அன்றோ?-நெஞ்சம் அவனும் ஒரு கோவையிலே அடைப்பு உண்டபடி. (அவன் ஆஸ்ரித விஷயத்தில் இருக்குமா போல் நெஞ்சும் பகவத் விஷயத்தில் ஸ்நக்தனாய் இருக்குமே )-நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் –ஸ்ரீராகவனுக்குத் தகுந்தவள் ஸ்ரீஜனகராஜன் திருமகள்’ என்னுமாறு போலே.-ராகவோர்ஹதி வைதேஹீம்’ என்பது, ஸ்ரீராமா. சுந். 16:5.–நங்கள் பிரானுக்கு-பர வ்யூஹ விபவங்கள் போலே அன்றிக்கே உகந்து அருளின தேசம் -அவற்றுக்கு பிற்பாடார் ஆகையால் நமக்கு உபகரிக்கைக்காக என்கை –-என் நெஞ்சம் தோழீ –-நெஞ்சினைத் திருத்திக் கலப்பிக்கப்பட்ட வருத்தம் அறிதி அன்றோ’-இப்போது நீயுங்கூட எதிர்த் தலையாம்படி யன்றோ வாய்த்தது?-நாணும் நிறையும் இழந்ததுவே –-இது இழவாதது உண்டோ!-அரைக்கணம் அவன் பேர நின்று படுத்தின பாடு எல்லாம் என் தான்!-நான், தன்னை இழந்தேன்:-தாய்மார் தோழிமார்கள், என்னை இழந்தார்கள்:-நெஞ்சு, நாணும் நிறையும் இழத்தது.-

———–

இழந்த எம்மாமைத் திறத்துப் போன
என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!
ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்
அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.
–7-3-4-

என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –-அங்கே புக்காரையும் தம்படி யாக்கிக் கொண்டார்.
‘பிரியேன்’ என்று சொன்னவர் அன்றோ இத் தலையைப் பிரிந்து நினையாது இருக்கிறார்?நெஞ்சினார்’-அலைந்த பரிவட்டமும் தாமுமாய் அணுக்கடித்துத் திரியா நின்றாராயிற்று. -இதுவும் அவனுக்கும் நெஞ்சுக்கும் –-பூஜ்ய வாசி நெஞ்சை சொன்னபடி –இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் – நிறம் தொடக்கமாக இழந்தவை அடைய மீட்பதாகச் சொல்லிப் போன நெஞ்சினரும் அங்கே கால் தாழ்ந்தார்.
சல்ய சாரத்யம் -போலே -வினைத்தலையிலே படை அறுக்குமாறு போலே,-வரிசையும் கொடுத்துத் தம்மோடு ஒப்புமையையும் கொடுத்தார்.-நிறம் மீட்கப் போனாரும் நிறம் கொடு போனாரோடு ஒத்தார்.-இத்தலையில் வெறுமை கண்டு போனதுவும் -புஷ்கலம் -நிறைவினைக் கண்டு போனவனோடு ஒத்தது.-போவார் போவார் எல்லாரும் இத்தலைக்குக் காரியமாகக் காணும் போம் போது சொல்லிப் போவது!
அவன் தானே ‘இத்தலையில் ஊற்று-அபிநிவேசம் அதிசயிக்க — இருக்க வேணும்’ என்று போனான் ஆனான்’-இது இத்தலையில் வெறுமை கண்டு, நோக்குகைக்காகப் போயிற்று.-புக்கார் மீளாத தேசமான பின்பு. அங்கே ஒழிந்தார் –

ஆரைக் கொண்டு என் உசாகோ – சரீரத்தையே ஆத்துமாவாக அபிமானித்து இருக்கிற சம்சாரிகளைக் கொண்டு போது போக்கவோ?
ஈஸ்வரோஹம் என்று இருக்கிற பிரமன் சிவன் முதலாயினோர்களைக் கொண்டு போதுபோக்கவோ?
பகவானுடைய அனுபவித்திலே நோக்காக இருக்கிற நித்திய ஸூரிகளைக் கொண்டு போது போக்கவோ?
இத்தலையை உரிசூறை கொண்டு போனவனைக் கொண்டு போது போக்கவோ?

மாயத்து ஆழ்ந்தேன் – அவனுடைய புன்முறுவல் கடைக் கண் நோக்கம் முதலியவைகளிலே மீள ஒண்ணாதபடி அகப்பட்டேன்.-அன்னையர்காள் என்னை என் முனிந்தே – சம்பந்தம் உண்டு என்னாச் சீறுமத்தனையோ?-சீற்றத்துக்கு எதிர்த் தலையும் வேண்டாவோ? தர்மி உண்டாய் முனிய வேணுமே!- -பிராப்தியும் மூப்பையும் கொண்டு முனிய அமையுமோ -பிரயோஜனம் வேண்டாவோ -அழகிலே ஈடுபட்டாரை ஹிதம் சொல்லி மீட்கவோ–மாயத்து ஆழ்ந்தேன் என்னை என் முனிந்தே – ஸ்வாதீனமுள்ளவரை அன்றோ முனிந்தால் பிரயோஜனமுள்ளது!-

————-

முனிந்து சகடம் உதைத்து மாயப்
பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என்செ ய்தீர் அன்னைமீர்காள்!
முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே
காலம் பெற என்னைக் காட்டுமினே
.–7-3-5-

அழியுமற்றையும் அழித்தான்: அழியாததனையும் -ஸ்த்ரீத்வம் -அழித்தான்.
வன்மையாலே அழித்தான் அவற்றை; மேன்மையாலே அழித்தான் இவளை.-விரோதி வர்க்கத்தை அழியச் செய்த ஆண் பிள்ளைத் தனத்தை காட்டி ஒரு காலும் அழியாத ஸ்த்ரீத்வத்தை அழித்தான்-அவற்றின் கையிலே தான் அகப்படாமல் தப்பித் தன்னைத் தந்த உபகாரத்துக்கு எழுதிக் கொடுக்கிறாள் காணும் ‘பிரானுக்கு’ என்று, சேஷியான தன்னை உண்டாக்கி, என்னைச் சேஷத்துவத்தினுடைய எல்லையிலே நிறுத்தினான்.

முன்னி அவன் வந்து வீற்றிருந்த –உபகாரத்தில் முற்பாடன் அவன் காணுங்கோள்.
முன்னி – முற்பாடனாய் நின்று;-‘பூர்வஜ-முன்னே உண்டாவனவனே’ என்னும்படியே, என்னைப் பெறுகைக்குக் காலத்தை எதிர் நோக்கினவனாய்க் கொண்டு தன் வேறுபாடு தோற்ற இருக்கிற.-கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே – கொண்டு புக்குக் காட்டுவார் தாழ்வே; அங்குள்ளன எல்லாம் பக்குவ பலமாக இருக்கும். கனிந்த மரம் கண்டால், ‘அசுர ஆவேசம் உண்டு’ என்று அஞ்ச வேண்டாத சோலை.-காலம் பெற என்னைக் காட்டுமினே –
இக் குடிக்கும் எனக்கும் பரிஹாரம் ஒன்றே அன்றோ?-பின்னையும் என்னை அங்கே கொண்டு போய் விடுதலைத் தவிரீர்கோள்;-நான் உளேனான போதே அதனைச் செய்யப் பாருங்கோள்.-பின்பு கதே ஜலே சேது பந்தம் -தண்ணீர் சென்ற பிறகு அணை கட்டப் பாராமல், நான் ஜீவிக்கும் எல்லையிலே காட்டுங்கோள்-

————–

காலம் பெற என்னைக் காட்டுமின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான்
நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த
நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல் திருப் பேரெயிற்கே
.–7-3-6-

ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த –தூரத்தே சென்று காண வேண்டாதபடி பரமபதத்தில் ஐஸ்வரியம் எல்லாம் இங்கே தோற்றும்படி இருந்த.-திருப்பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமின்கள் –-என் விடாய் தீரச் சிரமத்தைப் போக்கும்படியான தேசத்திலே கொடுபோய்ப் போகடப் பாருங்கோள்.
அன்றிக்கே,-‘அங்குள்ள செந்நெல்லுக்குத் தண்ணீர் தாரகமாய் இருக்குமாறு போலே,
இவளுக்கும் அவ்வூரில் காட்சியே தாரகமாய் இருக்கிறபடி’ என்னுதல்.-

—————-

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப்
பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங் குடையம் தோழீ!
என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே
.–7-3-7-

பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன் – அவன் இருந்த திருப்பேரெயிலே புக்குத் தேடி என் நெஞ்சமானது ஓரிடத்திலும் மீண்டு வரக் காண்கின்றிலேன்.-மீள ஒண்ணாத இலங்கையிலே புக்க திருவடியும் மீண்ட வந்தான்;
அணித்தான இவ்வூரிலே புக்க என் நெஞ்சமானது மீண்டு வரக் காண்கின்றிலேன்!
நெஞ்சுங்கூட வாராத பின்பு அவன் வாராமை சொல்லா வேண்டா அன்றோ?
நெஞ்சினது வரவு பார்த்துக் கண் மறைந்து காணும் இவள் நிற்கிறது.
அன்றிக்கே,-‘கண்டு ஜீவியாமல் நான் இங்ஙனே முடிந்து போமித்தனையன்றோ?’ என்னுதல்.

என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை – நெஞ்சினை மீட்கைக்கு நீ வேணுமோ? நெஞ்சினை அவனுக்கு ஆக்கின நீ வேணுமே எனக்கு ஆக்கும் போதும்;
உன் நிலை இது; உனக்குக் கால்கள் நடை தாரா:-அல்லாதார்க்குக் ‘கூட்ட வேணும்’ என்னும் விரைவு இல்லை: யார் நெஞ்சினை அழைப்பார்?-ஆரை இனிக் கொண்டு என் சாதிக்கின்றது–யாரைக் கொண்டு தான் சாதிப்பது? இனிச் சாதிக்க வேண்டுவது தான் ஏது?
நெஞ்சும் அவனும் வந்தால் இனி நான் தான் உண்டாக வேணுமே?இங்கு வெறுந்தரையாய் அன்றோ கிடக்கிறது?-நெஞ்சு மீளாதே வ்ருத்த கீர்த்தனத்துக்கும் ஆள் இன்றிக்கே ஒழிந்தது ஆகில் , செய்யப் பாரத்தது என்?’ என்னில், என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே-மீளாதே நெஞ்சு போன வழியே போகப் பார்த்தேன்.-

————

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக்
கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும்
நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த
தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே
.–7-3-8-

மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிது –-‘காதல், கடலின் மிகப் பெரிதால்’ என்ற இடம் ஓராதே சொன்னோம்;-‘ஆனால், எங்ஙனே சொல்லும்படி?’ என்னில், பெரியவற்றில் பெரியது என்னுமித்தனை யல்லது,-ஒரு பாசுரமிட்டுச் சொல்லலாவது இல்லை.-மண்ணாலே நெருங்கின பூமியும், அதனைச் சூழ்ந்த கடல் ஏழு, அவற்றுக்கெல்லாம் இடம் தருகின்ற ஆகாசமும் என்னுமிவை இத்தனைக்கும் அவ்வருகுப் பட்டிருக்கை.-‘இப்படிக் காதல் கரை புரண்டால் செய்யப் பார்த்தது என்?’ என்ன,-தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சென்று சேர்வன் –-இந்தக் காதல் மறு நனையும் படியான விஷயம் இருந்த இடத்தே போய்ப் புகுமத்தனை.-அனுபவத்திற்குத் தகுதியான தேசத்திலே போய்ப் புகக் கடவோம்.-சேர்வன் சென்றே –-இனிப் பகட்டால் தீராது, புக்கு அல்லது விடேன்.-ஆள் விடுதல்,-அவன் வரவு பார்த்திருத்தல் செய்யேன்.-சென்று சேர்வன் –இனி எதிரே அவன் வரிலும் மீளேன்.-அவனைச் சேர்தல் அன்று உத்தேசியம்,
அங்கே சென்று கிட்டுகை.-

—————

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்!
அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத்
தென் திருப் பேரெயில் மாநகரே
.–7-3-9-

எனக்காக இருப்பாரும், என்னைத் தங்களுக்காக நினைத்திருப்பாரும் ஒன்றும் சொல்ல வேண்டா.-தோழிமாரோடு தாய்மாரோடு வாசி இல்லை காணும் இவளைத் தேற்றப் போகாமைக்கு.-அறிவில்லாத மாக்களோ ஞானிகளை உபதேசத்தால் மீட்கப் பார்ப்பார்?இவள்,தன்னை மறந்து, அவனையே பார்த்துப் பேசுகிறாள்;
அவர்கள் அவனை மறந்து, தங்கள் தங்களையே பார்த்து மீட்கத் தேடுகிறார்கள்.
உபாயத்தில் கண் வைக்காமல் பிராப்ய ஏக பரராகவே இருக்க வேண்டுமே
பற்றிற்று எல்லாம் பற்றி அவனை பற்றுதல் பக்தி யோகம் உபாயாந்தரம்
விடுவது எல்லாம் விட்டு தம்மையும் விடுகை பிரபத்தி -நாம் பற்றும் பற்றும் பற்று அல்லவே –

நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;-அது வேணுமாகில் அங்கே போய்ச் சொல்லுங்கோள்.-மனமும் அடக்கமும் அவன் பக்கலின், நிறைவு – அடக்கம். நெஞ்சு – அது இட்டுவைக்கும் கலம்.-நெஞ்சும் நிறைவும் எனக்கு ஆம்படியோ அவன் படி -திருமேனி அழகு -இருக்கிறது?-கார் வண்ணன் –-தாய்மார் தோழிமாரானவர்கள் வார்த்தை கேளாத படியாக வடிவைப் படைத்தவன். ‘வெறும் வடிவழகேயோ உள்ளது?’ என்னில்,-கார்க் கடல் ஞாலம் உண்ட –-‘தளர்ந்தார் தாவளம்,-ஆதாரம் – ஆபத்து வந்தால் காப்பாற்றி விடும் அத்தனையோ?’ என்னில்,-கண்ண பிரான் –-தன்னைப் பிறர்க்கு ஆக்கி வைக்கும் உபகாரகன்.-வந்து வீற்றிருந்த--தன் செல்வம் எல்லாம் -அழகு ஆபத் சகத்வம் ஸுலப்யம் உபகாரத்வம் -தோற்றும்படி இருந்த.-திருப்பேரெயிலாகிற மாநகரிலே சென்று சேர்வேன்.
உங்கள் தடைக்கு மீளுதல்,-அவ்வழியில் நிற்றல் செய்யேன்.-என்னைத் தேற்ற வேண்டா.’

————

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!
சிகர மணி நெடு மாட நீடு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்று வரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்
நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே
–7-3-10-

நிகர் இல் முகில் வண்ணன்- ஒப்பில்லாத காளமேகம் போலே இருக்கிற வடிவழகு.
இதனால், ‘விரோதியை வளர்த்தாலும் விட ஒண்ணாத வடிவழகு’ என்கை.-நேமியான் 
அடியார்களுடைய விரோதிகளைப் போக்கும் போது பகலை இரவு ஆக்கும் பரிகரத்தை யுடையவன்.-திருவாழியைக் கொண்டு வீடுமன் முதலாயினோர்களையும் தொடரா நிற்பன் அன்றோ?-நிகர் இல் முகில் வண்ணன் நேமியான் – துரியோதனன் முதலாயினோர்கட்கு மின்னும் இடியுமாய்,-பாண்டவர்கள் துன்பம் தீர மழை பெய்து நின்றபடி.-என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே – அதற்கு ஈடான பரிகரத்தை நான் இழந்து எத்தனை காலம் உண்டு? வடிவழகையும் ஆயுதச் சேர்த்தியையும் காட்டி என் நெஞ்சினைக் கவர்ந்து போய் எத்தனை காலத்தான்?-மாசறு சோதி அக்காலமே போயிற்றே -ஆனபின்பு நாண் எனக்கு இல்லை -பழி சொல்லுவார் தேட்டம் எனக்கு –எனை ஊழியானே –பல கல்பங்கள் உண்டு. துரியோதனன் முதலாயினோரை வெல்ல எண்ணினார் போலே, என் நெஞ்சினைக் கவர்வதற்கு எத்தனை காலம் எண்ணினானோ!

ஊழிதோறு ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார்
அவர் அடிமைத் திறத்து ஆழியாரே
.–7-3-11-

கையும் திருவாழியுமான அழகிலே இவர் அகப்பட்ட படியைத் தெரிவித்தபடி.
அல்லாத அழகுகள் ஒருபடியும் இது ஒரு படியுமாய் இருக்கை;
இது கை மேலே அனுபவித்துக் காணலாமே.-அவர் அடிமைத் திறத்து ஆழியாரே –
அடிமைக் கூட்டத்தில் திருவாழியின் தன்மையை யுடையவர் என்னுதல்;-திறம் -வர்க்கம் சமூகம் என்றபடி –அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட்புகுவர் என்னுதல்.திறம்-யத்னம் –ஊற்றம்-என்றபடி-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading