ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
————–
(ததீயத்வ)விபூதி ஆகாரத்தாலே -இங்குள்ள பதார்த்தங்கள் ஸ்மாகரமாய் நலிகிற படி –
ஜ்ஞான சங்கோசம் அற்று –-ந ச புன ஆவர்த்ததே -என்கிற தேசத்திலே போனால் ஸ்மாகரமாவை-
இங்கே ஸ்மாகரகமாம் படி எங்கனே என்னில்–ஸ்வ எத்ன சாத்தியமான ஜ்ஞானம் அன்றிக்கே
மயர்வற மதிநலம் அருளப் பெறுகையாலே-பரபக்தி பர ஜ்ஞான பரம பக்திகள் ஏக ஷணத்திலே இவர்க்கு உண்டாகையாலே-இங்கே இருக்கச் செய்தே-ஸ்மாரகமாய் நலியும்படி இவருக்குப் பிறந்த ஜ்ஞான வைசத்யம் இருந்த படி –(இங்கு கர்மம் திரோதானம் நமக்கு -சரீர ஆத்ம பாவம் தெளிவாக அங்கு வருமே – ததீயத்வ ஆகாரம் பார்க்கும் ஞானம் இங்கேயே ஆழ்வாருக்கு-அப்ருதக் சித்த விசேஷணம் -இங்கேயே ஞான விளக்கம் -நிர்ஹேதுக விஷயீ காரத்தால் – அதனால் தான் துன்பப்படுகிறார்)
காற்றுக்கு குளிரக் கடவதாக ஈஸ்வரன் நியமித்ததும் அந்நியதாய் ஆகிறதே-ரக்ஷணத்துக்கு பிராட்டி மாற்றிய இடம் திருவடிக்கு அக்னி சுடக் கூடாதே –ஸீதா பவ -என்றாள் -அன்றோ-இங்கு மூவரும் இருக்க -அவன் இவளை சிஷிப்பதா –தடாவியதே –கூடுமோ மாறி விட்டதா வருத்தம் கலந்த வெறுப்பு சங்கை கவலை தோற்ற ஸ்வரம் -கேள்வி அல்ல-இது என் பெண் பிள்ளை நிமித்தமாக தாயார் இன்னாதாகிறாள் அவனால் ஆதாரத்துடன் அணைப்பவன் -இவளைப் படுத்துவதா மட்டும் அல்ல
அவன் ஸத்ய ஸங்கல்பம் பொய்யாகலாமோ
கூரத்தாழ்வானை விட்டுப் பிரிய திரு உள்ளம் இல்லாத எம்பெருமானார் ஈஸ்வரன் ஆணையைப் பேணி பாது காத்தால் போல் அன்றோ இதுவும்
பிரிவும் -12 ஆண்டுகள் மேல் கோட்டைக்குச் சென்றதும் -திரு நாட்டுக்கு எழுந்து அருளியதும் உண்டே
ஈஸ்வரன் ஆணையை உடையவர் நிமித்தமாக இல்லை யாக்கினான் என்று இருக்கக் கூடாதே
அதுக்காக திருத் தாயார் ஏங்குகிறாள்-இது தோழி வார்த்தையாகவுமாம்
இப்படி ப்ராப்ய த்வரையை யுடைய இவருக்கு ஸ்மாரகமான லௌகிக பதார்த்த ஸந்நிதியும்
சைத்தில்ய ஜனகமானபடி பார்ஸ்வஸ்தரான ஸூஹ்ருத்துகளுக்கு ப்ரஸித்தமான பிரகாரத்தை
வாடைக்கு ஈடுபட்டு மாமை இழந்த தலை மகளைக் கண்டு தோழி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
நாயகனும் தானும் கலந்து இருந்த சமயத்தில் அனுகூலமான வாடையானது அவனைப் பிரிந்து தனியிருக்கும் சமயத்திலே வெற்றிலை இடுவாரே கொல்லுமா போலே நலிய அத்தாலே நலிவு பட்டுத் தன் தசையைத் தான் அறியாதே-தன் தசையைத் தான் அறிவிக்க க்ஷமையும் இன்றிக்கே
நோவு பட்டுக் கிடக்க- அத்தைக் கண்டதோழி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ மதுரகவி போல்வார் ஆழ்வார் நிலையை அருளிச் செய்கிறார்கள் –
பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒரு நான்று தடாவியதே —வாடைக்கு வருந்தி மாமை இழந்த
தலை மகளைக் கண்டு தோழி இரங்குதல் –திருத்தாயார் பாசுரம் என்றுமாம்
குளிர்த்தியை இயல்பாக உடைத்த மந்த மாருதம் இக்காலத்தில் இவ்வூர் ஒன்றிலும்-ஆழ்வாருக்கு மட்டும் அல்ல குளிரும் ஸ்வ பாவம் தவிர்ந்து நெருப்பை வீசா நின்றது-அழகிய திருத் துழாயின் குளிர்த்தியிலே -அதன் பொருட்டு இவள் ஸ்வபாவம் இழந்து -ஆறி இருக்காமல் -அழகிய கண்களை உடைய இவள் -தன்மையும் மாறும்படி வர்ஷுக வலாஹம் போல் -முகில் வண்ணன் -வடிவை உடைய செங்கோல் இவ்வாறு செய்வதே-ஒரு நாள் இவ்வாறு விளைந்ததே-சார்ங்கம் சங்கல்பம் விடாதவன்
சோரா நின்ற தடம் கண்ணி–
பனிப்பியல்வாக உடைய தண் வாடை –
குளிர்த்தியை ஸ்வ பாவகமாக உடைத்தான மந்த மாருதமும்–இரண்டு விசேஷணங்கள்–
தொழில் பண்பும் குணப் பண்பும் –குளிரப் பண்ணுகையே நடப்பாக உடைத்தாகையாலே
குளிர்த்தியே குணமாக யுடைய வாடை–
இக் காலம் இவ் ஊர்ப் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் –-இக் காலத்திலே-இத் தேசத்திலே-இதுக்கு ஸ்வபாவ பேதம் பண்ணுகின்றவன் ஆகையாலே- அவனுக்காக நின்றபடி-பதார்த்தங்கள்
ஸ்வ பாவ பேதமும்-ஸ்வரூப பேதமும் பண்ணிக் கொண்டே யாகிலும் இவளை அழிக்க நினைத்த படி-(தத்துவமும் தகவும் இல்லை -கிருபையும் ரக்ஷகத்வமும் இல்லையே அவனுக்கு )அவன் தனக்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் வேறு பட்டால் அவனைப் பின் செல்லுகிறவற்றைச் சொல்ல வேணுமோ–
இக்காலம் இவ் ஊர்-–
முன்பு இப்படி இல்லை -விஸ்லேஷத்திலே –ஆழ்வார் நிலை கண்டு ஊரெல்லாம் இப்பாடு படுவதால் இவ்வூர் –இக் காலத்திலும் இவ் வூரிலும்–காலாந்தரத்திலும் இல்லை–தேசாந்தரத்திலும் இல்லை
முற் காலம் தானும் காணாமையாலே இக்காலம் என்கிறாள்–இவளுக்கு என்னாதே-இவ்வூருக்கு என்றது-இவள் ஆற்றாமையைக் கண்ட ஊரார் தங்களுக்கும் வாடை தபிக்கையாலே
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து
பனிப்பிக்கிற இயல்பை ஏக தேசமும் சேஷியாத படி விட்டு—எரி வீசும்-வாயோர் அக்னி (தைத்ரியம் -1-2-5 ) என்று தன் கார்யமான அக்னியின் குணத்தைப் பஜியா நின்றது-வீசும்-ஒளிக்க வேண்டாத படி போன இடம் எல்லாம் தூவா நின்றது
பத்ம கேசர சம்ஸ்ருஷ்டோ வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத
நிச்வாச இவ ஸீதாயா வாதி வாயுர் மநோ ஹர –கிஷ்கிந்தா -1-71-
பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ -தாமரைப் பூவின் தாதுக்களோடு கலந்ததாய்
வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத -மரங்களின் நடுவே இருந்து வெளி வருவதாய்
நிச்வாச இவ -மூச்சுக் காற்று போலே
ஸீதாயா-ஸீதா தேவி யினுடைய
வாதி -வீசுகிறது
வாயுர் -காற்று
மநோ ஹர -மனசை அபஹரிப்பதாய்-
பத்ம சௌகந்திக வஹம் சிவம் சோக விநாசநம்
தன்யா லஷ்மண சேவந்தே பாம்போ பவன மாருதம் -கிஷ்கிந்தா -1-115-
பத்ம சௌகந்திக வஹம் -தாமரை ஆம்பல் ஆகிய புஷ்பங்களின் மணத்தை தரித்து நிற்பதும்
சிவம் -பரிசுத்தம் ஆனதும்
சோக விநாசநம் -துன்பத்தை துடிப்பதையும்
தன்யா -பாக்யவான்களே
லஷ்மண-லஷ்மணா
சேவந்தே -அனுபவிக்கிறார்கள்
பாம்போ பவன மாருதம் -பம்பா சரஸ்சின் கரையில் உள்ள தோட்டத்தில் இருந்து வீசுகிற காற்றை-
(இந்த ஸ்லோக வியாக்யானம் நம்பிள்ளை ஈட்டில் விரிவாக அருளிச் செய்துள்ளார்)
அம் தண் அம் துழாய்-பனிப் புயல் சோரும் தடங்கண்ணி
சர்வேஸ்வரன் உடைய குளிர்ந்து அழகிதான திருத் துழாயை ஆசைப் பட்டு கண்ண நீர் சோரா நின்றாள் –தண் குளிர்ந்து உள்ள திருத் துழாய்-பனிப் புயல் -கண்ணீர் குளிர்ந்து இருக்காதே விஸ்லேஷத்தில்
இங்கு ஆனந்த அஸ்ரூ பொருந்தாதே-பனி -தர்ச நீயம் -என்ற அர்த்தம் இங்கு-இத்தை நம்பிள்ளை ஈட்டில் காட்டி அருளுகிறார் )
அம் தண் அம் துழாய்-அழகிய குளிர்ந்த திருத்துழாய் இடத்து (அதன் பொருட்டு ) இந்த நெருப்பை ஆற்றலாவது-அவன் வளையத்து வைத்த குளிர்ந்த திருத்துழாயின் நிழலில் என்கை –
(இந்த இடம் ஒன்றே வாடைக் காட்டால் தபிக்க ஒண்ணாத ஸ்தலம் ஆயிற்று )
பனிப் புயல் சோரும் தடங்கண்ணி
துளிக்கிற புயல் போலே நீர் சொரிகிற பெரிய கண்ணை உடையவள் ஒதுங்க நிழல் இல்லாமையாலே
உருகி விழும்படியான கண் கலக்கத்தை உடையவள்(ஸ்வரூப ஞானத்தை விரக அக்னி உருக்கிற்றே )
இக் குற்றம் செய்தாருக்கு பட வேண்டுவது இவ்வளவேயோ-இப் பரப்பு மாற ஏகார்ணவம் பெற்றாலும் போராது –இது வாயிற்று இவள் செய்த குற்றம் –
பிரகலாதன் எங்கும் உளன் கண்ணன் சொன்னது போல் திருத்துழாயை ஆசைப்பட்டதே இவள் குற்றம்
ஆகாசத்தில் இருந்து வாயோர் அக்னி தண்ணீர் பிருத்வி-பூநிலாய ஐந்தும் -தாய் குணம் பிள்ளைக்கும் வருமே-அக்னியிடம் வாயு குணம் இருக்கலாம்-இங்கு குழந்தை போல் தாயுக்கு -அக்னி குணம் வாயுவுக்கு )
மாமைத் திறத்துக்கு எலாம் –
இந் நிறத்தை அழிக்கைக்கு கிடீர் -இப்பாடு பட்டது
மாமைத் திறத்துக் கொலாம்
இவள் நிறம் இடையாட்டத்துக்கு ஆக வேணும் இறே-நெஞ்சு பெரிய திருவடி கொண்டு போனானாகில்
நிறத்தைத் தான் அழிப்பதாக வாடையை வேறுபடுத்தி வரக் காட்டினான் ஆகக் கூடும்
பனிப் புயல் வண்ணன் செங்கோல் ஒரு நான்று தடாவியதே –
தாபத் த்ரயங்களும் போம்படி இருந்த படி –பனிப் புயல் வண்ணன் – நிர்ஹேதுக ஸ்வ பாவன்-குளிர்ந்த மேக வண்ணன் -என்றும்-மேக ஸ்வ பாவம் என்றுமாம் -கிருபா ஸ்வ பாவம் -குளிர்ந்த வர்ஷுக வலாஹகம் போலே இருக்கிற வடிவை யுடையவன்-ஸ்ரமஹரமுமாய் உபகாரகமுமான மேக ஸ்வபாவன் என்னவுமாம்
செங்கோல்-
நாம் பட்ட படி படுகிறோம்-அத் தலையில் ஆஞ்ஞைக்கு ஒரு ஹானி வாராது ஒழிய வேணும்–ஒரு நான்று-இன்று தொடங்கி–தடாவியது –விலங்கிற்று-இவளை அழிக்க அன்றோ இவ் வொரு பொழுது நிலை குலைந்தது—செங்கோல்-வடிவு போலே ஸ்வபாவ பேதம் பிறவாத ஆஜ்ஜை–ஒரு நான்று தடாவியதே-ஒரு கால விசேஷத்திலே செவ்வை குலைந்து வளைந்தது–பூதம் பூதாந்தர குணத்தை பஜிக்கை யாகிற இது ஈஸ்வர ஆஜ்ஜைக்கு செவ்வைக் கேடு என்று நினைக்கிறாள்-செவ்வையே ஸ்வ பாவமான இது இவள் நிறத்துக்காக ஒரு கால விசேஷத்திலே குலைந்தது என்கை –
இத்தால்
பனிப்பியல்வாக உடைய தண் வாடை –என்கையாலே
தன் ஸ்வரூபத்துக்கு ஈடாக லோகத்துக்கு கார்யகரமாயிற்று என்றதாயிற்று-
இக் காலம் இவ் ஊர்ப் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் –என்கையாலே
பிராப்தி த்வரை பிறந்த இன்று ஸ்மாரகமாய்க் கொண்டு-அலாப நிபந்தன பரிதாபத்தை
இவரோடு இவரைப் பற்றினாரோடு வாசி அற விளைக்கையாலே ஸ்வ பாவ பேதம் பிறந்ததாக நினைக்கை-
எரி வீசும் -என்கையாலே
லௌகிக பதார்த்த ஸந்நிதி ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்த்ர வ்யவஸ்தித்தி போலே இருக்கை
(நெருப்புக் கூண்டு தேவலை போல் இருக்குமே-பகவத் சிந்தை இல்லாதவர் கூட்டம் மிகவும் த்யாஜ்யம் )
அம் தண் அம் துழாய் பனிப்புயல் சோரும் தடங்கண்ணி -என்கையாலே
போக்ய விஷய வை லக்ஷண்யம் சைத்தில்ய ஜனகமாம் படி சொல்லிற்று-
பனிப் புயல் சோரும் தடங்கண்ணி -என்கையாலே
மதி எல்லாம் உள் கலங்கி (திருவாய் 1-4-3 )-என்கிறபடி நேர் அறிவு கலங்கின படி-
மாமைத் திறத்துக் கொலாம்-என்கையாலே
ஸ்வ அசாதாரண ஆகாரத்தையும் சிதிலமாக்கக் கூடுமாய் இருந்ததே இறே என்றபடி-
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே-என்கையாலே
ஆர்த்தி அதிசயத்தாலே அப்ரகம்ப்யாமான சங்கல்பத்துக்கும் ஆர்ஜவ சைத்தில்யத்தைப் சங்கிப்பிக்கும் என்கை –
பதார்த்தா ந்தரத்துக்கு ஸ்வபாவ பேத சங்கையைப் பிறப்பித்தவோ பாதி அசாதாரண ரூபத்துக்கு சைத்தில்ய சங்கையைப் பிறப்பிக்கும் இறே ஆர்த்தியினுடைய அதிசயம் –
இது தாயார் வார்த்தை –-காமம் சாரா வெறியதினிளமை காட்சி மகிழ தனலம் பாராட்டு -துறை –
(விருப்பப்பட்டது நடக்காத போது -பித்து பிடித்து-அவனது இனிமை இளமை போல்வன நலம் பாராட்டும் துறை )-அதாவது-சம்ஸ்லேஷ்சம் ஆகிற காமம் ஆனது-சாரா -கிட்டாமையால் உண்டான-வெறி உண்டு -பிச்சு-அதனுடைய இளமையாவது–காட்சி திருஷ்டி பந்தத்தை சொல்லுகையும்-மகிழ்தல் அநந்தரம் உண்டான ஹர்ஷ வசனமான மந்த ஸ்மிதத்தை நினைக்கையும்-நலம் பாராட்டு -சௌந்தர்யாதிகளை கொண்டாடுகை-கிளவித் துறை –
மந்த மாருதம் பராங்குச நாயகிக்கு தாபத்தை உண்டாக்கக் கடவது -என்றே சங்கல்பித்தான் போலும் –
என்று தோழி இரங்குகிறாள்- பெரிய திருவடியைக் கொண்டு நெஞ்சம் கவர்ந்த அனந்தரம் வாடையை அனுப்பி மேனி நிறத்தை கவர –மாமைத் திறத்துக் கொலாம் பனிப்புயல் வண்ணன்-வடிவும் ஸ்வபாவமும் மேகம் போல் இருக்க இப்படி விருத்த சங்கல்பம் பண்ணுவதே–வாடையை மட்டும் மாற்ற சங்கல்பம் கொள்ளாமல் தன் ஸ்வ பாவத்தையும் மாற்றிக் கொண்டானே-
நெடும் கடல் நிற்பதும் ஞாயிறு காய்வதும் நித்தலும் கால்
ஒடுங்கி நடப்பதும் தண் கார் பொழிவதும் ஊழி தன்னில்
கடும் கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
அடும் கனல் ஆழி அரங்கேசர் தம் திரு ஆணையினே-திருவரங்கத்து மாலை –15-
(நம்பிள்ளை ஈட்டில் இவ்விடம் மூன்று விஷயங்கள் தன்மை மாறி
1-தத்வம் ஸ்வரூபம் ஸ்வ பாவம்
2-பெண்ணின் அழகு
3-ஸத்ய சங்கல்பம்
முதல் இரண்டும் த்ருஷ்டாந்தம்
நான்காவது
4-பிராட்டி சங்கல்பம் -பெருமாளாளாலும் கைவிடப் பட்டவனை ரஷிப்பேன் என்ற-தண்ணீரும் சுடுவது போல் -அவள் சங்கல்பம் மாறினதே –பெருமாள் திரு உள்ளம் மாறாமல் இருக்க வேண்டி இருந்தாளோ –
விபீஷணனுக்கு-செய்தது போல் ராவணனையும் கை யாலாகாத தன்மைக்கு நிறுத்தி யதும் இவள் கார்யம் சரணாகதிக்கு கையில் ஒன்றும் இல்லாமல் இருக்க –செய்தாலும் மேலே கார்யகரம் ஆகாதது ராமன் திரு உள்ளம் மாறக் கூடாதே-இவன் சரணம் சொல்ல வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் இவள் செய்தாள்-அதே போல் இங்கும் நாயகிக்கு ஞான விபாக கார்யம் –-ஆர்த்தி அதிகார பூர்த்திக்கு பெருமாள் செய்யும் கார்யம் ஆகையால் அத்தை மீறக் கூடாதே )
தந்யைஸ் ஸ்ருதம் ததிஹ தாவக ராஸ காலே
கீதேந யேநஹி சிலாஸ் சவிலாம் பபூவஸ்
பஞ்சாபி கிஞ்ச பரிவ்ருத்த குணாநி பூதாநி
உர்வீ க்ருசாநு மருத் அம்பர சம்பராணி–ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம்46-இந்த பாசுரத்தைத் திரு உள்ளம் கொண்டே அமைக்கப்பட்ட ஸ்லோகம்–பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள் ஆழ்வார்கள் மட்டும் அல்லவே -ஆச்சார்யர்களும் கூடவே தானே-
இஹ -இந்த லோகத்தில்
தாவக ராஸ காலே –நீ குரவைக் கூத்து ஆடின போது
கீதேந யேந–யாதொரு வேணு கானத்தாலே
சிலாஸ்–கற்கள்
சவிலாம் பபூவஸ்-நீர்ப் பண்டமாயினவோ
கிஞ்ச-இன்னமும்
உர்வீ க்ருசாநு மருத் அம்பர சம்பராணி– பூமி அக்னி வாயு ஆகாசம் ஜலம்–என்கிற
பஞ்சாபி பூதாநி -பஞ்ச பூதங்களும்
பரிவ்ருத்த குணாநி -மாறுபட்ட குணங்களை யுடையவனாக
பபூவ –ஆயினவோ
தத் கீதம் தந்யைஸ் ஸ்ருதம் –அப்படிப்பட்ட கானமானது பாக்யாதிகர்களாலே செவி சாத்தப்பட்டது-
ராஸ க்ரீடை -திருக் குரவை-அங்கநாம் அங்கநாம் அந்தரே மதவோ மாதவம் மாதவம் ச அந்தரேணர் அங்கநா-அந்த சமயம் திருக் குழல் ஓசையால் கடின பதார்த்தங்களும் நீர்ப் பண்டமாய் உருகிப் போயினவே-பஞ்ச பூதங்களும் ஸ்வ ஸ்வ குணங்கள் தன்மைகள் மாறாடப் பெற்றனவே-பாக்ய சாலிகளாலே அந்த திவ்ய கானம் செவி சாத்தப் பட்டதே-கருவிலே திருவிலாத அடியேன் போல்வாருக்கு அந்த பிராப்தி கிட்டாதே)
ஸ்வ பாதேசம்
சம்சாரத்தில் பாஹ்ய விஷயங்களே எல்லாருக்கும் அனுகூலமாய் செல்லா நிற்க-தமக்கு எம்பெருமானோட்டை அல்லது செல்லாமல் பாஹ்ய விஷயம் நலியும்படி சொல்கிறது –விரஹிணியில் சேஷ்யந்தந்திரங்கள் எல்லாம் அவனைப் போலவே பின்ன ஸ்வ பாவராவர்-
தாத்பர்யம்
இப் பாசுரத்தில் ஆழ்வார்-இவ் விபூதியில் உள்ள மாருதம் முதலான பதார்த்தங்கள் –
சர்வேஸ்வரனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவையே இவை என்றும் – அவனுக்கே சேஷ பூதம் என்றும் அனுசந்தித்து அவ்வழியாக-ததீயத்வ ஆகாரம் என்று அறிந்து –சர்வேஸ்வரன் ஸ்ம்ருதி விஷயமாக பிராப்தி த்வரையால் அலாபத்தால் விஷண்ணராய் இருக்க-அப்பொழுது பக்கத்தில் உள்ள பாகவதர்கள் சொல்லும் பாசுரத்தை ஒரு விரஹிணி மந்த மாருதத்தால் பாதிக்கப் பட்டுக் கிடக்க அவள் நிலையை தோழி உரைக்கும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்-அருகே உள்ளார் இப் பெண் நாயகனான சர்வேஸ்வரன் சூடிய திருத்துழாயில் ஆசைப்பட்டு –பெற வேண்டும் -என்று எண்ணி -கிடைக்காமையால் பெரு மழை போல் தன்னுடைய விசாலமான நேத்ரங்களிலே தாரை தாரையாக கண்ணீர் பெருக்க-ரக்ஷகனான சர்வேஸ்வரன் தனது ஸ்வரூபம் மாறாடிக் கொண்டு -கருணை ரக்ஷகத்வம் இல்லாமல் ஆகவே தொண்டனான வாயுவும் இவளது சவுந்தர்யம் அழிக்கக் கோலி – தனது குளிர்ந்த -சீத ஸ்வபாவம் மாறாடிக் கொண்டு உஷ்ண ஸ்வபாவம் அடைந்து -நெருப்பாய்
இப்பொழுது இவ்வூரில் இவள் மேல் அழல் வீசத் தொடங்கிற்று-வாயுவுக்கு வெப்பமும் குளிரும் இருக்கக் கூடாது என்ற சர்வேஸ்வரன் ஆஜ்ஜை கூட இப்போது இவருக்காக பங்கமாயிற்றே -என்று இன்னாப்பு –
அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!-7-8-2-
உருவ வெளிப்பாடும் அவனைப் பார்க்க வேண்டும் -இப்பொழுது விபூதியைப் பார்க்கிறார் -துளசி கண்ணால் பார்க்கலாமே –-இதற்கு அந்தராத்மா என்று அன்றோ பார்க்கிறார் -அதனால் பாதிப்பு இல்லை -இதில் -ப்ரீதி அப்ரீதிகள் மாறி மாறி தானே இவருக்கு வரும் –சந்த்ர ஸூர்யாதி பதார்த்தங்களை அடைய தனக்கு விபூதியாக யுடையனாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்-
கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4-
கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே – அப்போது அலர்ந்த தாமரைப்பூப்போலே இருக்கின்ற திருக்கண்களையுடையவனாய்ப் பவ்யனாய் இருக்கிறவனே!
அவனுடைய திருக்கண்கள் போலே ஆயிற்று, இவர்க்கு விபூதியும் கவர்ச்சியாய் இருக்கிறபடி.
அன்றிக்கே, ‘திருக்கண்களைப் போன்று துன்பத்தைச் செய்வதாகா நின்றது ஆயிற்று விபூதி அனுபவமும் இவர்க்கு,’ என்னுதல்.
‘துன்பத்தைச் செய்வதாவது என்?’ என்னில், ‘இன்னது’ என்று நிச்சயிக்கமாட்டாதே ஐயுற்றுப் பட்டது ஒரு துக்கம் உண்டே அன்றோ?
அதுவும் துன்பத்தைச் செய்வதாக இருக்குமே? அதனைச் சொல்லுகிறது. முடிச்சோதி யாய் -சங்கை போலே -பாதிப்பு -சம்சயித்து பட்ட கிலேசம் –
—
7-8-மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்-ப்ரவேஸம்-
மேல் திருவாய்மொழி, உருவு வெளிப்பாடாய்ச் சென்றது.
கைக்கு எட்டாமையாலே உருவு வெளிப்பாடு என்று அறிவர் அன்றோ?
இனி. சர்வேஸ்வரன் தான் நினைத்த காரியம் செய்து தலைக் கட்டிக் கொள்ளுமளவும் நம்மை இங்கே
வைத்திருப்பான் என்னும் இடமும் அறிவரன்றோ?
ஆகிலும், அவனை ஒழியத் தரிக்க மாட்டாதவர் ஆகையாலே, இதனை நினைத்து ஆறி இருக்கவும் மாட்டாரே!
‘விரோதியைப் போக்கித் தரவேணும்’ என்று இவர் விரும்பினாலும்,
அவனும் இவரைக் கொண்டு தான் நினைத்த பிரபந்தங்களைத் தலைக்கட்டிக் கொள்ளாமளவும் இவர் விரும்பியதைச் செய்யானே!
இவர் விரும்பியதைச் செய்யாதிருக்கச் செய்தேயும், இவரை இங்கே வைத்து வாழ்விக்கும் உபாயங்களும் அறிந்திருக்குமே!
ஆகையாலே, சில பொருள்களை –மத்ஸ்யங்களை -உயிர் போகாதபடி ஒன்றிலே கோத்திட்டு வைக்குமாறு போலே,
முடியவும் ஒட்டாதே வாழவும் ஒட்டாதே நடுவே இருத்தி நலிகிறபடி நினைத்து,
‘எனக்கு இதில் பொருந்தாமை உண்டாய் இருக்கச் செய்தேயும் இச் சம்சாரத்திலே வைத்து என்னை நடத்திக் கொடு
போருகிற இவ் வாச்சரியத்தை எனக்கு அருளிச் செய்ய வேண்டும்,’ என்ன ஒன்றைக் கேட்க,(பாசங்கள் நீக்கி நிதான பாசுரம் )
வேறே சிலவற்றைச் சொல்லுவாரைப் போலே, ‘இது ஒன்று கண்டோ நீர் ஆச்சரியப்படுகிறது?
இவ்வளவு அல்லாத நம்முடைய விசித்திர உலக உருவமாய் இருக்குந் தன்மையைப் பாரீர்!’ என்று
தன்னுடைய ஆச்சரியமான உலக உருவமாய் இருக்குந் தன்மையைக் காட்டிக் கொடுத்தான்.
அங்ஙனம் காட்டிக் கொடுத்த அது தானும் இவர் நினைத்தது அன்றே யாகிலும், அவன் காட்டிக் கொடுத்தது ஆகையாலே.
அதுவும் இவருடைய பிரீதிக்குக் காரணமாக இருக்கும் அன்றோ?
ஆக, இவர் ஒன்றைக் கேட்க, –
அதைத் தவிர -அவன் பல ஆச்சரியங்களைக் காட்டிப் பரிகரித்தான்.
அக்குரூரன், யமுனையிலே புக்கு முழுகினவாறே பிள்ளைகளை நீருக்குள்ளே கண்டு அஞ்சிக் கரையிலே பார்த்தான்:
அங்கேயும் கண்டான்;
நீரிற் புகுங்கண்டு தேரினைப் பார்க்கும் நிறுத்தியபொன்
தேரில் தொழும்பின்னை நீரினில் காணும் சிறந்தபச்சைக்
காரில் திறம்மெய் யரங்கனும் சேடனும் கஞ்சவஞ்சன்
ஊரிற் செலஉடன் போம்அக்கு ரூரன்தன் உண்மகிழ்ந்தே.’-என்ற திருவரங்கத்துமாலைச் செய்யுள் நினைத்தல் தகும்.
‘ஓ கிருஷ்ணனே! இந்த உலகமானது, மஹாத்துமாவான எவனுடைய மிகப் பெரிய ஆச்சரிய சொரூபமாயிருக்கிறதோ,
அப்படிப்பட்ட மிகப் பெரிய ஆச்சரியச் செயலை யுடைய உன்னோடு சேர்ந்தேன்,’ என்று கொண்டு
ஜகத் ஏதத் மஹாஸ்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மந:
தேந ஆஸ்சர்யவரேண அஹம் பவதா க்ருஷ்ண ஸங்கத:’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 19 : 7.
கண்டு,அவன் ஆச்சரியப்பட்டாற்போலே, இவரும்
அவனுடைய விசித்திரமான உலக உருவமாய் இருக்குந் தன்மையை அருளிச் செய்து ஆச்சரியமடைந்தவராகிறார்.
விஸ்மயம் வியப்பு விஸ்ம்ருதி மறப்பு
புகழும்நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியும், ‘நல்குரவும் செல்வும்’ என்ற திருவாய்மொழியும், இத்திருவாய்மொழியும்
பொதுவாக நோக்க ஒன்றாக இருந்தனவே யாகிலும் ஒவ்வொன்றற்கும் வேறுபாடு சிறிது உண்டு என்க.
‘புகழும் நல்ஒருவன்’ என்ற திருவாய்மொழி ஐயத்திலே – நோக்கு.–ஜெகதாகாரத்வம் –
‘நல்குரவும், செல்வும்’ என்ற திருவாய்மொழி மாறுபட்ட ஐஸ்வர்யத்திலே நோக்கு- -விருத்த ஆகாரம் அங்கு
இத்திருவாய்மொழி ஆச்சரியமாக உலக உருவமாய் இருக்குந்தன்மையிலே நோக்கு.-விசித்திர ஆகாரம் இங்கு-
எட்டாம் திருவாய்மொழியில் –
கீழ் உருவு வெளிப்பாடான பிரகாசம் நடக்கச் செய்தே அனுபவம் பெறாதபடி நிரோதித்து ஆர்த்தியை அதிசயிப்பித்த
வைசித்ரியம் கண்டவர் இந்த விசித்திர சக்தி யோகத்துக்கு ஹேது வானவனுடைய
ஆச்சர்யமாயுள்ள அர்த்தித்தவ ரூபத்தையும்
அபிமத சித்தியால் வந்த ஆதிக்யத்தையும்
அம்மேன்மை கிடக்கச் செய்தே உண்டான ஆஸ்ரித பவ்யதையையும்
உத்துங்க பவ்யதைகள் இரண்டுக்கும் ஸூ சகமான புண்டரீகாக்ஷத்வத்தையும்
அநந்ய ப்ரயோஜனர்க்கு அதிசயித போக்யனாம் படியையும்
சித்த பிராமகமான சேஷ்டிதாதிகளையும்
கர்மாத்யனுரூபமான துக்க ஜனகத்வத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அபோதகனார்ஹத்தையையும்
துரவபோதகத்வ ஹேதுவான ஸும்ஷ்ம்ய அதிசயத்தையும்
ஸூ த்ருட பிராமண ஸித்தமான ஸூஷ்மசித் அசித் பிரகாரத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான நீ ஒன்றுக்கு ஓன்று ஒவ்வாத விசித்திர ஆகாரமான ஜகத்தை விபூதியாகக் கொண்டு நிற்கிற
ஆச்சர்ய சக்தி யோகம் இருந்தபடி என் என்று புத்தி ஸந்நிஹிதனான ஈஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்து
தம்முடைய விரோதி நிவ்ருத்தியில் பணி இல்லாமை நினைத்து ஸந்துஷ்டாராகிறார் –
—
மாயாமல் தன்னை வைத்த வை சித்திரியாலே
தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு ஆயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த மாறனை நாம்
ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று –68-தன் ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து விஸ்மிதர் ஆகிற மாயா வாமானனில் அர்த்தத்தை-மாயாமல் தன்னை வைத்த இத்யாதியால் அருளிச் செய்கிறார் –இப்படி விசித்திர ஜகதாகாரனானவன் சம்பத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வாரை –நாம் கிட்டி அவர் திரு நாமங்களைச் சொல்லி வாழும் காலம் ஆக வற்றோ-அன்றும் ஒரு நாளாக ஆகவற்றோ -என்றபடி –
————
மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-
மாயா!’ என்கிற இது, இத்திருவாய்மொழிக்காகச் சுருக்கமாய் இருக்கிறது.-மாயனை மன்னு-அங்கும் 30 பாட்டிலும் மாயன் அர்த்தம் கோத்து அர்த்தங்கள் உண்டே –மாயன் என்கிற பதத்திற் சொல்லுகிற ஆச்சரியத்தினை அறிகிற இடமாய் இருக்கிறது. என்றது,
அன்றே பிறந்து அன்றே வளர்ந்து –பெரியதிருவந்தாதி.–மஹாபலி பக்கலிலே சென்று. அவன் முன்னே நின்று, தான் சொன்னவை எல்லாம் செய்ய வேண்டும்படி வார்த்தை அருளிச் செய்து, சிற்றடியைக் காட்டிப் பெரிய அடியாலே அளந்து கொண்டு, இப்படிச் செய்த செயல்கள் அனைத்தையும் முன்னோட்டுக்கொண்ட வாமனனே!’ என்கிறார் என்றபடி.-
நீயாய் – உலக உருவமாய் இருக்கும் அளவு அன்றே தனக்கே உரியதான விக்கிரகத்தோடு கூடி இருக்கும் இருப்பு?-இவர்க்குப் பரம பதத்திலே நித்திய ஸூரிகளுக்கு இனியனாய் இருக்கும் இருப்போடு, உலக உருவமாக நிற்கும் நிலையோடு வாசி அறப் போக்கியமாம்படி அன்றோ இவர்க்குப் பிறந்த ஞானத்தின் தெளிவு இருக்கிறபடி?-நீ நின்றவாறு– இப்படி இவை எல்லாமாய்க் கொண்டு நீ நின்ற பிரகாரம்.
முதல் திருவாய்மொழியிலே இவனுடைய இறைமைத் தன்மையை அனுபவித்திருக்கச் செய்தேயும், இதற்கு முன்பு கண்டறியாதாரைப் போலே புதியராய் அனுபவிக்கிறாராயிற்று.
குணானுபவத்தில் கணந்தோறும் புதுமை பிறந்து அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமாய் –திருவாய் 2. 5 : 4.- அனுபவிக்குமாறு போலேயாயிற்று, விபூதி அனுபவத்திலும் புதியராய் அனுபவிக்க வல்ல படி.-இவை என்ன நியாயங்கள் நீ அருளாய்-
இதனை அருளிச் செய்ய வேணும்.-அருச்சுனனுடைய சந்தேகத்தைத் தீர்த்தாற்போலே, என்னுடைய ஐயத்தையும் தீர்த்தருள வேணும்.-
———–
அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!-7-8-2-
உருவ வெளிப்பாடும் அவனைப் பார்க்க வேண்டும் -இப்பொழுது விபூதியைப் பார்க்கிறார் -துளசி கண்ணால் பார்க்கலாமே –-இதற்கு அந்தராத்மா என்று அன்றோ பார்க்கிறார் -அதனால் பாதிப்பு இல்லை -இதில் -ப்ரீதி அப்ரீதிகள் மாறி மாறி தானே இவருக்கு வரும் –சந்த்ர ஸூர்யாதி பதார்த்தங்களை அடைய தனக்கு விபூதியாக யுடையனாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்-
————
சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3-
சித்திரம் தேர் வலவா – விசித்திரமாம்படியாகத் தேரை நடத்த வல்லவனே!
விசித்திரமாவது, துரோணன் கையும் அணியும் வகுத்து வாசலைப் பற்றி நிற்க,
அவனை வளைந்து அவனுக்கு அவ் வருகே தேரைக் கொடு போய் நிறுத்தி, அவன் போர் செய்தற்கு இடம் அறுத்தல்.-அன்றிக்கே,-‘வீடுமன் கையில் அம்பு தூரப்போய் விழும்; அருச்சுனன் கையில் அம்பு இவ் வருகே விழும்; ஆகையாலே, அவன் அம்பு விடப் புக்கவாறே தேரைப் பின்னே கழலக் கொடு போயும், இவன் அம்பு விடப் புக்கவாறே தேரைக் கிட்ட நிறுத்தியும், இப்படித் தேரை நடத்தும்படியை நோக்கி’ என்னவுமாம்.
ஒத்த வியவாய் ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் – ஓர் ஆகாரத்தாலே ஒத்தும், வேறு ஆகாரத்தாலே வேறுபட்டும் இருப்பனவுமாய், விலட்சணமுமான பல வகைப்பட்ட பொருள்கள் பலவற்றை யுடையையாய். என்றது, ‘தேவர் மனிதர் முதலிய சாதியாலே ஒத்தும், வடிவு வேறுபட்டாலே வேறுபட்டும் இருக்கிற பல பொருள்களுமாய்’ என்றபடி.-அன்றிக்கே, எல்லா ஆத்துமாக்களும் ஞானத்தாலே ஒத்திருக்கச் செய்தேயும் நான் நீ முதலிய வேறுபாட்டாலே வேறுபட்டவர்களாய் இருப்பர்கள் அன்றோ? அவற்றைத் தெரிவித்தபடி ஆகலுமாம்.-இவை என்ன விடமங்களே – இவை என்ன சேராச் சேர்த்தியான செயல்கள் தாம்?-
———–
கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4-
கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே – அப்போது அலர்ந்த தாமரைப்பூப்போலே இருக்கின்ற திருக்கண்களையுடையவனாய்ப் பவ்யனாய் இருக்கிறவனே!
அவனுடைய திருக்கண்கள் போலே ஆயிற்று, இவர்க்கு விபூதியும் கவர்ச்சியாய் இருக்கிறபடி.
அன்றிக்கே, ‘திருக்கண்களைப் போன்று துன்பத்தைச் செய்வதாகா நின்றது ஆயிற்று விபூதி அனுபவமும் இவர்க்கு,’ என்னுதல்.
‘துன்பத்தைச் செய்வதாவது என்?’ என்னில், ‘இன்னது’ என்று நிச்சயிக்கமாட்டாதே ஐயுற்றுப் பட்டது ஒரு துக்கம் உண்டே அன்றோ?
அதுவும் துன்பத்தைச் செய்வதாக இருக்குமே? அதனைச் சொல்லுகிறது. முடிச்சோதி யாய் -சங்கை போலே -பாதிப்பு -சம்சயித்து பட்ட கிலேசம் –
அன்றிக்கே, ‘மேல் திருவாய்மொழியிலே, ‘சூழவும் தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றும்’ என்றதனை நினைக்கிறார,்’ என்று பிள்ளான் பணிக்கும்.
அதனைச் சீயர் கேட்டருளி, ‘மேலே ஓடுகிற ரீதியின்படியே இதுவும் ஆகப்பெற்றதாகிர் அழகிது! அங்ஙன் அன்றிக்கே, இது வேறு ரசமாய் அறிவுண்டான பின்பு இவ்விடத்தோடு பொருந்தமாட்டாது’ என்று அருளிச் செய்தாராம்.
உள்ளப் பல் யோகு செய்தி – திரு வுள்ளத்திலே இரட்சண சிந்தை பல செய்யா நிற்றி. ஆத்துமாக்கள் பல்வேறு வகைப்பட்டிருத்லைப்போலும் போருமாயிற்று,-அவன் செய்யும் இரட்சண சிந்தையில் பரப்பு.-இவன் தலையிலே இசைவு இன்றிக்கே இருக்கச் செய்தே,
‘இவன் நம்மைக் கிட்டினானாம் விரகு ஏதோ?’ என்று அதற்கு உறுப்பாக உபாய சிந்தை செய்து திருக் கண் வளர்ந்தருளுகிறபடி’-இவை என்ன உபாயங்களே – சேதநர் பலரானால் அவ்வவருடைய இரட்சணங்களும் பலவாயே அன்றோ இருப்பன? அதற்குத் தகுதியாக உபாயங்களையும் அறியுமே முற்றறிவினன் ஆகையாலே. இவை என்ன விரகுகளே!
————
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-
இத்திருவாய்மொழிக்கு நிதானமான பாட்டாயிற்று இது.-அதாவது, ‘மயர்வற மதிநலம் அருளி, பின்னையும் எனக்குப் பொருந்தாததான சம்சாரத்திலே என்னை வைத்து
வாழ்வித்துக் கொடு போகிற இவ்வாச்சரியம் இருந்தபடியை எனக்கு அருளிச்செய்ய வேணும்,’ என்கிறார்.-
உனக்கே அறக் கொண்டிட்டு--துயர் அறு சுடர் அடி தொழும்படியாகச் செய்து.
‘பாசங்கள் நீக்கிற்றும் தனக்கே அறக்கொண்டதும் எதனைக் காட்டி?’ என்னில்,-வாசம் மலர்த் தண்துழாய் முடி மாயவனே – வைத்த வளையத்தில் அழகைக் காட்டியாயிற்று,புறம்பு உண்டான பற்று அறுத்ததும், தனக்கே யாம்படியாகச் செய்ததும்.-அருளாய் – இவ்வளவு புகுர நின்ற என்னை இங்கே இட்டு வைத்து நலியவோ?
பின்னும் நீ மாயங்கள் செய்து வைத்தி- உன் பக்கலிலே அறிவைப் பிறப்பித்து, பின்னையும் இதிலே பொருந்தாதபடியான என்னைச் சம்சாரத்திலே வையா நின்றாய்.-இவை என்ன மயக்குகளே–இவை என்ன தெரியாத செயல்கள் தாம்!-புறம்பு உண்டான பற்றை அறுத்து உன் பக்கலிலே அன்பைப் பிறப்பிக்கையாலே நீ அங்கீகரித்தாயோ என்று இரா நின்றேன்;
பின்னையும் இச் சம்சாரத்திலே வைக்கையாலே கைவிட நினைத்தாயோ என்று இரா நின்றேன்; இது என்ன மயக்கம்!
—————
மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே.–7-8-6-
விஸ்ம்ருதி – விஸ்மரணம் –தொடக்கமான விருத்த பதார்த்தங்களை விபூதியாக யுடையனாய் இருக்கிற படியை அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –-இவை என்ன துயரங்களே – உனக்கு இவற்றில் அருமை இன்றியே விளையாட்டாய் இரா நின்றது; எங்களுக்கு அவை தாம் துக்கத்தைக் கொடுக்கக் கூடியவையாய் இரா நின்றன.-
———–
துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே.–7-8-7-
துயரங்கள் செய்யும் கண்ணா-துக்கங்களைச் செயக் கூடிய கிருஷ்ணனே! ‘எதனாலே நலிவது?’ என்னில்,-‘முடிச்சோதி’ என்ற திருவாய் மொழியிற் கூறியபடியே திருமுடியில் அழகைக் காட்டியாயிற்று.-அடியவனான நான்’ என்கிற அபிமானம் அடிக் கழஞ்சு பெற்றிருக்கும்.- இன்பம் செய்யும் மானம் அன்றோ இது -சோஹம்-கூடாதே -தாஸோஹம் -கூடுமே-இவை என்ன சுண்டாயங்கள்- உனக்கு விளையாட்டாக இரா நின்றது, எங்களுக்குத் துக்கத்திற்குக் காரணமாக இராநின்றது.-
———-
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8-.
எல்லா உலகங்களையும் படைத்து உள்ளும் புறம்பு பரந்து இப்படி நிர்வகித்து வைத்து அறிய
முடியாதவனாய் இருக்கிற இது என்ன ஆச்சரியம்!’ என்கிறார்.-என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா –-என்ன விளையாட்டுகளை யுடையையாய் நிற்கிறாய், என்னை அடிமை கொள்ளுகிற கிருஷ்ணனே! இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற அரியை –-எங்கனே நின்றிட்டாய் -பெரியவாச்சான் பிள்ளை
இன்ன படிப்பட்ட தன்மையை யுடையை என்று, எல்லாப் பொருள்களுக்கும் காரணனாய் இருக்கிற உன்னை, எத்தனையேனும் மிகுதியுற்ற ஞானத்தை யுடையவர்களாலும் அறிய ஒண்ணாதபடி நிற்புத்தி:-இவை என்ன இயற்கைகளே–உனக்கு இவை தாம் விளையாட்டாக இரா நின்றன; எங்களுக்கு இவை தாம் ஆச்சரியமாக இரா நின்றன-
————-
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-
ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஐம்புலன்களும் அவனுக்கு விபூதியாக இருக்கிற இருப்பை அருளிச் செய்கிறார்.-உன்னுடைய பெருமையையும் ஸூஷ்மத்தையையும் அனுசந்திக்கப் புக்கால் உன்னுடைய வை லக்ஷண்யத்துக்கு முடிவு இல்லை-
———
இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம்
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே –7-8-10-
வேதங்களாலேயே அறியப்படுமவனாய்க் –காரணாமாய் –அதி சூக்ஷ்மமாயிருந்துள்ள சேதனங்களையும் அசேதனங்களையும் விபூதியாக வுடையவனாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்.
இதனின் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம் –
இதனைக் காட்டிலும் வேறு சூக்ஷ்மமாய் இருப்பது இல்லை என்னும்படி.
அதாவது,-இவற்றுக்குத் தனக்கு என்று ஒரு நாமமும் உருவமும் இன்றிக்கே பிரமத்தினுடைய நாமத்தையும் உருவத்தையும் இட்டுப் பேச வேண்டும்படி,
காரண நிலையிலே இருக்கிற சேதனங்களும் அசேதனங்களும் நீ இட்ட வழக்கு.-ஆக, உலகமே உருவமாய் இருக்கும் இருப்பைச் சொல்லிற்று.-
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப- பரமபதத்தை யுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.-அல்லியை யுடைத்தான திருத்துழாய் மாலையாலே அலங்கரிக்கப்பட்ட திருமார்பினையுடையவனே!-அச்சுதனே –-அவ்விருப்புக்கு ஒரு நாளும் அழிவில்லாதபடி பரமபதத்திலே எழுந்தருளி யிருக்கிற இருப்பை எனக்குப் பிரகாசிப்பிக்கிறவனே!
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணம் –-இதற்கு இரண்டு படியாக அருளிச்செய்வர்: ‘இவன், தனக்கு உள்ள அளவு எல்லாம் கொண்டு பேசினால், உன் பக்கல் சொல்லிற்றாமத்தனை போக்கியல்லது, உனக்கு ஓர் அளவு இல்லையே அன்றோ?’ என்னுதல்; அப்போதைக்கு, அதுவே உனக்கு ஆம் வண்ணம்? – -‘அது அன்று என்கிறது’ என்னுதல்.
அன்றிக்கே, உன் பக்கல் அன்புள்ளவர்களாய் இருப்பார் எத்தனையேனும் அளவு இன்றிக்கே, இருந்தார்களாகிலும், அவர்கள் ஒன்றைச் சொன்னால், ‘ஸ்ரீவைகுண்டத்திலே நித்திய சூரிகள் நடுவே அவர்களுக்குங்கூடப் பேச்சுக்கு நிலம் அன்றிக்கே
இருக்கிற நம்மைச் சம்சாரத்திலே மிகத் தாழ்ந்தவனாய் இருக்கிற இவன் அறிந்தானாகச் சொல்லுவதே?’ என்று சீறுகை அன்றிக்கே, இவன் சொன்னதுவே தனக்கு அளவாக நினைத்திருக்கும் என்னுதல்.
———
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11-
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை -இன்னபடிப்பட்டது ஒரு தன்மையையுடையவன் என்று கொண்டு யாவராலும் அறிய அரியனாய் இருக்கிற சர்வேஸ்வரனை ஆயிற்றுக் கவி பாடிற்று.-வேதங்களும் மீண்டவனை ஆயிற்றுப் பேசிற்று.
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த-‘அவன் மயர்வற மதிநலம் அருள ஆயிற்று இவர் பேசிற்று. தன் முயற்சியால் அறியப் பார்க்கில் அன்றோ அரிது?’ என்றது,
அவன் கொடுத்த அறிவு கொண்டு அறிவார்க்குக் குறை இல்லை அன்றோ?
வண்ணம் –பா.-அன்றிக்கே, வண்ணம் என்று ஓசையாய், ‘நல்ல ஓசையை யுடைய செந்தமிழ்’ என்னுதல்.
ஆம் வண்ணத்தால் உரைப்பார் –-பின்னை, இதனைச் சொல்லுமவர்களுக்கும் மயர்வு அற மதி நலம் அருளப் பெற்று அவனுக்குத் தகுதியான சொல்லாலே சொல்ல வேணுமோ?’ என்னில், அத் தேவை எல்லாம் ஆழ்வார் தம்மோடே; இவர்களுக்குத் தாங்கள் வல்ல அளவும் சொல்ல அமையும்.-அமைந்தார் தமக்கு என்றைக்கும் –-அவர்களுக்கு இவ் வாத்துமா உள்ளதனையும், ஈஸ்வரன் முழங்கைத் தண்ணீர் வேண்டா; ஆழ்வார் அங்கீகாரத்துக்கு விஷயமானதுவே போரும். என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே அமைந்தார்களாய் இருப்பர்கள்.-
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply