ரத சப்தமி இந்து சமயத்தவர்களால் தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுவதாகும். இது குறிப்பாக ஸூரிய தேவன் ஏழு குதிரைகள் (ஏழு வண்ணங்களைக் குறிக்கின்றன) பூட்டிய தனது ரதத்தை வடக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்த நாள் ஸூரியக் கடவுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஸூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமி யன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும். இது பருவங்களின் அடிப்படையில், வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. இந்திய விவசாயிகளூக்கு இந்த நாள் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாக உள்ளது. இந்து சமய குடும்பங்களிலும், ஸூரியக் கடவுள் உள்ள கோவில்களிலும் ரத சப்தமி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அறிந்தோ அறியாமலோ பாவ காரியங்கள் செய்துவிடுகிறோம். அதன் பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப்படும் ஒரு விரதமே ரத சப்தமி விரதம் என்பதாகும்.
தை முதல் நாள் தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகிறோம். தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் திதி ரத சப்தமியாகக் கொண்டாடுகிறோம்.
இந்த நாளை சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடுகிறோம்
காஷ்யப ரிஷியின் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது, வெளியிலிருந்து ஒரு அந்தணன் பசிக்கு உணவு கேட்க, அதிதி தான கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த அந்தணனுக்கு கொடுத்தாள். இதை தன் மேல் செய்த உதாசீனம் என்று கோபித்த அந்தணன் ‘உன் வயிற்றில் வளரும் குழந்தை இறந்து பிறப்பான்’ என்று சாபமிட்டான். அதிதி முதலில் வருந்தினாலும், அவர்கள் நல்லுள்ளதின்படி ஒளி மாயமான சூரியன் அவர்களுக்கு மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் வரும் ஏழாவது நாள் சப்தமி விரதம் அன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது
ஸூரியனின் தேரில் உள்ள ஏழு குதிரைகள் ஏழு வண்ணங்களைக் கொண்ட வானவில்லைக் குறிப்பதாகும். மற்றும் ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும் கருத்து நிலவுகிறது. அதாவது ஸூரியனுக்கு உகந்த தினமான ஞாயிற்றுக் கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான ஏழு நாட்களைக் குறிக்கிறது. மேலும், ரதத்தில் உள்ள 12 சக்கரங்கள் பன்னிரெண்டு ராசிகளைக் குறிக்கின்றன. சூரியனின் சொந்த வீடாக சிம்ம ராசி உள்ளது. சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் பயணித்து திரும்பி வருவதற்கு ஒரு வருடம் ஆகிறது. ரத சப்தமி திருவிழா ஸூரிய கடவுளிடமிருந்து ஆற்றலையும் ஒளியையும் பெறும் விழாவாக உள்ளது
ஏக தினம் ப்ரஹ்மோத்சவம்
ஏழு வாஹனங்கள் திருமலை கோவிந்த ராஜர் திருச்சானூர் மூன்று இடங்களிலும் உண்டு -தீர்த்த வாரி மட்டுமே திருச்சானூரில் இல்லை –
ஸூர்ய சந்திர இரண்டு வாஹனங்கள் திருக்காஞ்சி திருக்குடந்தை போன்ற இடங்களிலே உண்டு
காலை 6:30 மணிக்கு வரதராஜ பெருமாள் வாகன மண்டபத்திற்கு எழுந்தருளி, மலர் அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். மாலை 6:00 மணியளவில் சந்திர பிரபை வாகனத்தில் பெருமாள் மீண்டும் நான்கு மாட வீதிகளில் உலா வருகிறார்.
ஸூர்ய பிரபையில் ஸூர்ய நாராயணன் திருக்கோலம் முதலில்-சின்ன சேஷ வாஹனம் -அடுத்து -பெருமாள் மட்டுமே புறப்பாடு -ரத சப்தமி அன்று திருமலையில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஏழு வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் பவனி வருவார். அதனால் அன்றைய தினம் “சிறிய ப்ரஹ்மோத்சவம் ” என்று அழைக்கப்படுகிறது.
ரத சப்தமியன்று விடியற்காலை 5.30 மணியளவில், ஸூரிய பிரபை வாகனத்திலும், அதைத் தொடர்ந்து சின்ன ஆதி சேஷன் வாகனம் காலை 9 மணி யளவிலும், கருட வாகனம் 11 மணி யளவிலும், அனுமன் வாகனம் பிற்பகல் 1 மணி யளவிலும், சக்கர ஸ்நானம் பிற்பகல் 2 மணியளவிலும், கற்பகம் (மரம்) வாகனம் மாலை 4 மணி யளவிலும், சர்வ பூபால வாகனம் மாலை 6 மணி யளவிலும் திரு மாட வீதிகளில் ஊர்வலம் நடை பெறுகின்றன. அன்று இரவு 8 மணி யளவில் சந்திர பிரப வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வருவதுடன் பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. திருப்பதி வேங்கடேஸ்வர ஸ்வாமி ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மணி நேரத்திற்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
அன்றைய தினம் காலையில் ஸூரியனை பார்த்து ‘ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று மூன்று முறை கூறி ஸூரிய பகவானை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
மகா பாரத்தின் ஒரு வலிமை வாய்ந்த நாயகன் பீஷ்மர். வீதி வசத்தால் கௌரவர்கள் அணியில் போர் புரிய நேர்ந்தது. பீஷ்மருக்கு அவர் விரும்பிய நேரத்தில், விரும்பியபடி மரணம் நேரும் என வரமிருந்தது. ஆனால் அவர் விரும்பியது போல் மரணம் ஏற்படவில்லையே. அப்போது அங்கே வந்த வேத வியாசரிடம் ஏன் இப்படி என்று கேட்க, அவர் கூறியது: ‘துரியோதனன் அவையில், பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்தபோது, அந்த அவையிலிருந்த யாருமே அவளுக்கு உதவ முன்வரவில்லை. இது அநீதி என்று குரல் கொடுக்கவில்லை. நீங்களும் அங்கு இருந்தீர். அநீதிகளை செய்வது மட்டுமல்ல, செய்பவர்களைத் தடுக்காமல் இருப்பதும், செயலற்றவன்போல் காட்சி தருவதும்கூட பாவம்தான். அதற்கான தண்டனையையும் உடல் அளவில் மட்டும் அல்லாது, உள்ளமும் படாத பட்டு. அவர் அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதியாகும்’
வேதனைப்பட்ட பீஷ்மர் வியாசரிடம், ”இதற்கு என்ன பிராயச்சித்தம்?” என்று கேட்டார். எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து, இதன் பெயர் அர்க்கபத்ரம். அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழுச் சக்தியும் இதில் உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்” என்று வியாசர் சொல்ல , மெதுவாக பீஷ்மர் ரத சப்தமி அடுத்த நாளன்று சிறிது சிறிதாக தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார்.
எனவேதான் ரத சப்தமி அன்று எருக்க இலை ஸ்நானமும், ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். பீஷ்மருக்கான தர்ப்பணமும், நம் முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.
ரத ஸப்தமி ஸ்னான அர்க்ய மந்த்ரம்.
ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக தீபிகே
ஸப்த ஜன்மார்ஜிதாம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம்
யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் சோகம் ச மாகரி ஹந்து ஸப்தமீ
நெளமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்தலோகைக மாதரம்
ஸப்த அர்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய
மடி வஸ்த்ரம் உடுத்தி நெற்றிக்கு இட்டுகொண்டு ஸங்கல்பம் செய்துகொண்டு ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று சொல்லி கீழ் கண்டமந்திரம் சொல்லி நீரால் ஸூர்யனுக்கு அர்கியம் விட வேண்டும்.
ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசக
திவாகர க்ருஹாணார்க்கியம் ஸப்தம்யாம் ஜ்யோஷிதாம் பதே
திவாகராய நம: இதமர்க்கியம் இதமர்க்கியம், இதமர்க்கியம்.
ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம்ஹர ஸப்தமி
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி
தேவி, த்வாம் ஸப்த லோகைக மாதரம்
ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய!
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply