Archive for January, 2026

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -2-செழு நீர்த் தடத்துக் கயல்-கோவை வாயாள் -4-3-

January 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

—–

அவதாரிகை –
இமையோர் தலைவா
-என்று அவனுடைய பரம பும்ஸ்வத்தை முதலிலே அனுசந்தித்து
அப்படி அவனைக் கிட்டப் பெறாமையாலே ஆண் -பெண்ணாம் படி யாயிற்று –பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணாம் -என்றும் உண்டாகையாலே இதுவும் கூடும்-ஒரு பிராட்டி தசையாம்படி எங்கனே என்னில்-சம்ஸ்லேஷத்தில் இனிமையும்-விஸ்லேஷத்தில் தரியாமையும்-ஸ்வத சித்தமான சம்பந்தமும் — அனந்யார்ஹ சேஷத்வம்ததேக நிர்வாஹ்யத்வம் -உண்டாகையாலே –அத் திரு அவனைப் பற்றும்
இத் திரு இருவரைப் பற்றும்
–தோழி தசையும் திருத் தாயார் படியும் உண்டாகிற படி எங்கனே என்னில்
கிண்ணகம் பெருகா நின்றால்-ஆறுகளும் கால்வாய்களும் குளங்களும் நிறைந்து சமுத்ரத்திலும் குறைவற்றுப் புகுமோபாதி விஷயம் அபரிச்சின்னம் ஆகையாலே-

இவருக்கு இங்கு உண்டான விரோதிகளையும் காட்டி அவற்றில் உண்டான  ருசிகளையும் தவிர்த்து
தன்னுடைய நித்ய விபூதி யோகத்தையும் காட்டிக் கொடுக்க அநந்தரம் அங்கு உள்ளாரின் ஜ்ஞானத்தையும் – அங்குத்தை பரிமாற்றத்தையும் – தேச விசேஷத்தையும் கண்டு அவ்விடத்தை பிராபித்து அல்லது நிற்க மாட்டாத த்வரையும் பிறந்தது –ஆகில் – இவர் அபேஷிதம் செய்து கொடாது ஒழிவான் என் என்னில்–சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தராக்கி நம்மை அல்லாது அறியாத படியும் பண்ணி அலாப தசையில் கூப்பிடும்படி பண்ணி இவருக்கு ஸ்வரூபமான அடிமையையும் வாசிகமாக கொள்ளா நின்றோம் ஆகில் அவ்வருகில் பிராப்தியும் செய்வோம் நாம் ஆன பின்பு செய்து கொடுக்கிறோம் என்று ஆறி இருந்தான் –இவருக்கு கீழ்ச் செய்தது ஜ்ஞான லாபம் ஆகையாலே
அநந்தரம் பிராப்தி பண்ணித் தர வேண்டும் என்று த்வரிக்கிறார்–ஈஸ்வரனுக்கு இங்கனே இருப்பதொரு புடை உண்டு பிரஜைகள் பசித்திருக்க விருந்தினரைப் பேணுமா போலே
அசாதாராண பரிகரத்துக்கு தாழ்த்தும் அல்லாதார் கார்யம் தலைக் கட்டும் -எங்கனே என்னில்-கைகேயி கார்யம் தலைக் கட்டின அநந்தரம் ஸ்ரீ பரத ஆழ்வான் கார்யம் செய்கையாலும் மகா ராஜர் கார்யம் செய்து பின்னை பிராட்டி கார்யம் செய்கையாலும் – இவர்களுக்கு முற்பட செய்கிறது என் என்னில்
கார்யத்து அளவே இறே அவர்களுக்கு உள்ளது அசாதாராணருக்கு அபேஷிதம்  செய்தானோ என்னில்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு முடியைத் தவிர்த்து கொடுக்கையாலே இவர்கள் அபேஷிதமும் செய்யும் –
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நித்ய கைங்கர்யமும் அருளினானே –

விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் – ஸூலபனாய் – ஸூரி போக்யனான ஈஸ்வரன் – திருவடிகளில் இவருக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தாலே வந்த கண் கலகத்தைக் கண்டு விஸ்மிதரான ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை-ஈஸ்வரனான நாயகனைப் பிரிந்து ஆற்றாளான தலைவியினுடைய
வேறுபாட்டைக் கண்டு வியந்த தோழி வார்த்தைகளால் அருளிச் செய்கிறார்–இப் பாட்டு கீழ் பாட்டில்
பிறந்தாய் என்றும்-இமையோர் தலைவா என்றும் சொன்ன பதங்களின் அர்த்தங்களை பிரகாசிக்கிறது

நாயகியும் தோழியுமாக உத்தியான வனத்திலே பூ கொய்ய என்று புறப்பட்டு ஒரு வ்யாஜ்யத்தாலே நாயகனும் அங்கே வரவும் ஒரு வ்யாஜ்யத்தாலே பிரிய தைவ யோகத்தாலே கூடி கூடின வழியே பிரியவும் பிரிவு தானும் கலவியில் ஒரு வகையோ -என்று இருந்தாள் –பிரிவின் மெய்ப்பாட்டாலே புளகித காத்ரையாய்க் கொண்டு நோவு படுகிற படியைக் கண்டு இவளுக்கு சம்ஸ்லேஷம் வ்ருத்தமாக கழிந்தது என்று அறிந்து இனி நாம் உடன்பட்டு இவள் சத்தையை உண்டாக்கிக் கொள்வோம் என்று இது ஓர் வடிவு இருந்த படி என் இவ் விருப்பு நித்யமாக வேணும் – என்று மங்களா சாசனம் பண்ணுகிறாள்  –தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-வாழியரோ
அன்பையே மாலையே ஸமர்ப்பிக்கிறாள்
-ப்ரேமமே மாலை பா மாலையையே பூ மாலையாக -சூட்டினாள்-கோவை வாயாள் -4-3-இதன் விவரணம்

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர்  முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே
—-2-தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் –உடன் பாடு துறை —

செழு  நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப -சேயரிக் கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ –(உவமை அணி -அலங்கார சாஸ்திரம் இதில் )
ஸூத்த ஜலமாய் இருக்கிற தடாகத்திலே- ஒரு கயல் இடம் வலம் கொண்டால் போலே இருக்கை –
உபமானமே பிடித்து திருத்திக் கொண்டு சொல்ல வேண்டி இருக்கிறது – உபமேயத்தின் உடைய வைலஷண்யம்–ஒப்ப -என்றது சர்வதா சாம்யம் அன்று – ஒருவகைக்கு ஒப்பாம் இத்தனை

சேயரிக் கண் அழுநீர் துளும்ப
அஸி தேஷணை-
கண் கிடீர்-சேய் -அழகாய் –அரி -வண்டாய்
அன்றிக்கே-ஹரிக்கிற மநோ ஹாரி என்றுமாம்
அன்றிக்கே-சிவந்த அரியை உடைத்தான
அன்றிக்கே-சிவந்து மநோ ஹரிக்கும் கண்கள்-ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமி நிர்வாகம் –-கறும் கண்ணி தவிர்ந்து விஸ்லேஷத்தால் கரும் கண்ணி மாறி சிவந்து இருக்கை-அஸ்ரு பிரவஹிக்கிறது–என் கார்யம் தலைக் கட்டிற்று-இவள் கார்யம் தலைக் கட்டும் அத்தனை-பகவத் வ்யதிரேகத்தில் கண்ணும் கண்ணீருமாய் இருக்கும் இது இறே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்–இத்தைக் காணும் அது இறே இவர்களுக்கு உத்தேச்யம்-இவ்விருப்பை இவனும் காணப் பெற்றதில்லை – அசலிட்டுக் கேட்கும்-தோழி சொல்ல – இத்தனை இறே  –கிமர்த்தம் -இத்யாதி-ஆர் குடி வேர் பறிய இக்கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிறது-ஆரைச் சேதனராகக் கொண்டு -என்றுமாம் –-அவன் கண்டு உகக்கும் –
அலமருகின்றன -தடுமாறா நின்றனஅழு நீர் துளும்ப அமலருகின்றன -என்கையாலே-அபிநிவேசம் மிகுந்தமை தோற்றுகிறது

வாழியரோ –
இவ் வவசதாம் நீண்டு ஜீவித்திடுக–இந்த ஐஸ்வர்யம் நித்தியமாக வேண்டும்-பகவத் விஷயத்தில் இப்படி இருப்பது பரம போக்யமே என்பதால் வாழியரோ என்கிறார்கள்-விரக வருத்தம் நீங்கி வாழ வேணும் என்றுமாம்–இது தான் தனக்கு தர்ச நீயமாகையாலே நாயகனும் கண்டு வாழ வேணும் என்று
தோழி மங்களா ஸாஸனம் பண்ணுகிறாள்

அன்றியே இந்தப் ப்ரேமம் உள்ளதனையும் நடக்க வேணும் என்று அநுசாஸித்தாள் ஆகவுமாம் –இதில் ஏவம்வித ஸ்வாபவ பாகவதர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுவதே பெரியோர்க்குக் கர்த்தவ்யம் என்றதாயிற்று –

முழுநீர்   முகில் வண்ணன் கண்ணன்-
இக் கடலைத் தரையாக பருகின மேகம் இருந்தபடி-( கீழே தடாகம் இங்கு கடல் )
(கடல் நீர் மேலோட்டமாக அர்த்தம் இங்கு -பராங்குச நாயகி -மணிமாமை குறைவிலமே -)
தூமஜ்யோதீஷ் சலில மாருதாம் சந்நிபாத   -என்று அன்னலும் துன்னலுமாய் -கண்டதும் கடியதும்-ஆன தூமாதிகள்  போலே -இருக்கை அன்றிக்கே ஆதார ஆதேயம் இரண்டும் தானேயாய் இருக்கை
(மேகம் நீர் -தண்ணீரால் ஆன தண்ணீர் )கடலைப் பருகிற்று என்றால் புஷ்கலா வர்த்தகம் (மேகக்கட்டம் )என்று இருக்க வேண்டாவோ-கடலைக் கலக்கிற்று என்றால் மந்தரம் என்று அறியுமா போலே
இந் நிறத்தை இங்கனே ஆக்கியவன் (கறும் கண்ணியை -இழந்து சேயரிக் கண் ஆக்கினான் )
இந்நிறம் உடையவன் இறே
–இவ் வடிவு அழகைக் கொண்டு சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் வர இருக்குமா போலே எல்லாரும் வர இருக்கும் இத்தனையோ என்னில் இவ்வடிவு உடையானும் தானேயாய் வருவானும் தானேயாய் இருக்கிறபடி – மேகம் ஜலம் இரண்டாய்  இன்றிக்கே ஜலமாகவே இருக்கை –

இத்தால்
தடத்து மிளிர்ந்த கயலை நீர் துளும்பின கண்ணுக்கு ஒப்புமை சொல்லுகையாலே
அந் நீரோடு கண்ணுக்கு உண்டான சேர்த்தி தோற்றுதலால் ஞானத்தினுடைய ஊற்றுமை சொல்லிற்று-சேயரிக் கண் என்று ராகோத்தரமாகச் சொல்லுகையாலே அந்த ஞானம் பக்தி ரூபா பன்ன ஞானமே தோற்றுகிறது

முழுநீர்  முகில் வண்ணன்
அவனை விஸ்லேஷித்த இவள் வடிவைக் கண்டால்-ஆதார ஆதேய இரண்டுமே நீராயாயேயான மேகம் போலே இருக்கும்-இவளைப் பிரிந்த அவன் வடிவு என்று நிச்சயிக்கிறாள்-இவளைக் கண்டு அனுமானிக்கிறாள்–இது தான் முழு நீர் மேகம்-மேகத்தில் உள்ள நீர் மேகமே நீர்-அவன் இடத்தில் கறுமை -கறுமையே அவன்-கண்ணன் என்னும் கறும் தெய்வம்

முழு நீர் முகில் வண்ணன் என்று-ப்ரேம விஷயம் பூர்ணமாய் –-தர்ச நீயமாய்-உத்துங்கமாய் இருக்கும் என்றதாயிற்று-கண்ணன் என்று-இவ் விஷயம் இவருக்குக் கை புகுந்தமை தோற்றுகிறது

கண்ணன்
பவ்யதா உச்யதே-எடுக்கவும் கட்டவும் அடிக்கவும் ஆஸ்ரித பரதந்த்ரனானவன்–அம் முகில் போலே ஆகாச வர்த்தியாய் எட்டாதே இருக்கை இன்றிக்கே பூமியிலே கால் தாழ்ந்து ஸூலபனானவனுடைய-கிருபா மயனானவனுடைய

விண்ணாட்டவர் மூதுவராம்
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா
-என்றும்-யத்ர ருஷய பிரதம ஜாயே புராணா -என்றும்
பழையராய் இருக்கிறவர்கள்(நித்யர்களை சொன்னபடி )-இவர்கள் சத்தாகாரமாக  தொழா நின்றார்கள்

தொழுநீர் –
நம இத்யேவ வாதின
-என்கிறபடியே-தொழுகையே ஸ்வ பாவமாக இருக்கும் – தொழுவித்துக் கொள்வதே அவனுக்கு ஸ்வ பாவகமாக இருக்கும்–தொழுநீர் –நீர்மை -என்பதே நீர் -பண்பு ஈறு போயிற்று-நித்ய ஸூரிகளால் தொழப் படுவதை ஸ்வ பாவமாக யுடையவன்-

இணை யடிக்கே –
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான அடிகள்-ஓர் அவயவம் நன்றாய் இருக்குமவன்  நமக்கு அவ்வருகு இல்லை என்று இருக்கும் -ஒருவனுக்கு பவ்யமாய் இருக்குமவன் நமக்கு அவ்வருகு நீர்மை உடையார் இல்லை என்று இருக்கும்-ஒருவனுக்கு நிர்வாஹகனாய் இருக்குமவன் நமக்கு அவ்வருகு நிர்வாஹகர் இல்லை என்று இருக்கும் -இம் மூன்றும் கண் அழிவு அற உண்டான பசும் கூட்டு இறே பரதத்வம் ஆகிறது-
சந்தன கற்பூர குங்கும கூட்டு போலே-இதுக்கு இறே இவள் ஈடுபட்டது-நீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவாரம் தொழும் -பத த்ரயத்துக்கும் வியாக்யானம் – (சவுந்தர்யம் ஸுலப்யம் பரத்வம் மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் )

அடிக்கே அன்பு சூட்டிய-
குண ஜிதரால் விழுவது காலில் இறே–சூட்டிய -என்பான் என் என்னில்-வாசகம் செய் மாலையே – என்னுமா போலே (சாத்தின- பாடிய- போல் இல்லாமல் சூட்டிய என்பதால் பா மாலை -அன்பு மாலை )-ஆழ்வார் அன்பு திருவடிகளுக்கு அலங்காரம் –சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன் 
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி 
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-

சூழ் குழற்கே –
1-சூழ்ச்சியை உடைய குழல்
2-கண்டாரைச் சூழ்த்துக் கொள்ளும் குழல்
3-சுருண்ட குழல் -என்றுமாம்–சூழ் குழற்கு வாழியரோ -என்று அந்வயம்-

அன்பு சூட்டிய சூழ் குழற்கே
ஸ்நேஹம் அவன் தானே ஆதரவு-வாசகம் செய் மாலை-ப்ரேமம் மாலை-அவனை சூழ வற்ற மயிர் முடியை யுடைய இவளுக்கு-பலாத்க்ருத்ய ஆண்டாள் மாலையால் காட்டியது போல்-சூழ்ந்து இருந்த குழல் என்றுமாம்

விண்ணாட்டவர் தொழு நீர் இணை அடிக்கே -என்கையாலே-விலக்ஷண போக்யம் என்னும் இடம் தோற்றிற்று-இணை அடிக்கே அன்பு சூட்டிய -என்கையாலே-அந்த மேகம் இவர் பக்கலிலே கால் விழுந்தமை சொல்லிற்று-அன்பு சூட்டிய என்கையாலே-இத் தலையிலே அன்பு அவன் திருவடிகளுக்கு அலங்காரம் என்று தோற்றிற்று-இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கு -என்கையாலே
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன கழலே (திருவாய் -4-3-6 )என்கிறபடியே அவன் திருவடிகள் இவர் திருமுடிக்கு அலங்காரம் என்னும் இடம் தோற்றுகிறது-வாழியரோ –என்கையாலே
இப் பிரேமம் ஈஸ்வரனுக்கும் ஆசாஸ்யமாய் இருக்கும் என்னும் இடம் தோற்றிற்று – (அவாப்த ஸமஸ்த காமன் ஆசைப்படுவதும் நமது பக்தி ஒன்றையே தானே )-இது தோழி வார்த்தை யாகையாலே
இயற்கையிலே புணர்ந்த தலைமகன் பிரிவிலாதல் அன்றியே தோழியில் கூட்டத்துப் புணர்ந்த தலைமகன் பிரிவிலாதல் பிரிவாற்றாத தலைவி வேறுபாடு கண்ட தோழி உட் கொண்டு (அனுமானித்து )வியந்து உரைத்தது –

தாத்பர்யம்-சர்வேஸ்வரனுடைய நித்ய விபூதி ஐஸ்வர்யத்தை அனுபவித்து-ஆழ்வார் அப்போதே அங்கு அடைந்து அனுபவிக்க கிட்டாமையாலே அத்யந்தம் ஆர்த்தராய்-தனது ஸ்வ பாவம் மறந்து தன்னைப் பிராட்டியாகப் பாவித்துக் கொண்டு இருக்க அங்குள்ள பாகவதர்கள் -இவரை சில பாசுரங்களாலே ஆஸ்வசிப்பிக்க அப்படி வந்தவர்களே தோழிகள் அவர்கள் சொல்லும் பாசுரம் -நாயகன் உடன் ஸம்ஸ்லேஷித்து பிரிந்து விரஹ வேதனையில் இருக்கும் தம்மை ஆஸ்வசிப்பிக்க ஆர்த்தி உடன் தவிக்க -ஆச்சார்யர் நம்மை -சேர்ப்பிப்பார்களே சீதாப் பிராட்டி திருவடி ஸ்ரீ ராமாயணம் சொல்ல சுற்றி சுற்றிப் பார்த்தால் போல் இவள் கண்கள் நீர் கொண்ட மேகம் போல் அதி ஸூந்தரமான சர்வேஸ்வரனுடைய வடிவு அழகை ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய ஸூரிகள் எல்லாரும் ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே இவள் தானும் அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடைக்கப் பெறாமல் வியசனமுற்று தன்னுடைய மத்ஸ்யம் போன்ற கண்களில் நின்றும் கண்ணீரை தாரை தாரையாகப் பெருகிக் கொண்டு தன்னுடைய நாயகன் எந்தத் திக்கில் நின்றும் வருவானோ என்று நாலு பக்கங்களிலும் கண்களைச் சுழற்றி விழித்துப் பார்த்துக் கொண்டு இருக்க பூர்ண தடாகத்தில் துள்ளுகிற இரண்டு மத்ஸ்யம் போன்ற இவளது கண்கள் அழகை அனுபவிக்க இப்பொழுது
இவளது கணவனுக்கு பிராப்தி இல்லையே இனி சீக்கிரத்தில் இவள் நாயகனுடன் சேர்ந்து இவ் வவஸ்த்தையைத் தவிர்ந்து ஸூகிக்கக் கடவள்

இப் பாட்டுக்கு ஸ்வாபதேசம் –பிரதம தர்சனத்திலே பிரகிருதி பிராக்ருதங்களிலே உபேஷை பிறக்கும்படி தமக்கு பகவத் விஷயத்தில் பிறந்த ப்ராவண்யத்தைக்-கண்டார் உகந்து பேசும் படியை
தாம் அனுசந்தித்து இனியர் ஆகிறார் –


4-3-கோவை வாயாள் பொருட்டு ப்ரவேஸம்-

எல்லாத் தேசத்திலும் எல்லாக் காலத்திலும் உண்டான அவன் படிகள் எல்லாம் இப்போதே பெற்று அனுபவிக்க வேண்டும் என்று விடாய்ப்பார் ஒருவரைப் பெறுகையாலே, இவர் உயிர் வாழ்வினையே இறைவனாகிய தனக்கு எல்லாமாம்படி இருக்கிற தன் காதல் குணத்தைக் காட்டிக் கொடுக்கக் கண்டு, இவரும் எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார்.-சர்வேசுவரனுடைய ‘பாலனாய் ஏழுலகு’ இத்திருவாய்மொழி.

மந்திர லோபம் கிரியா லோபம் போக்க-நித்ய திருவாராதானம் பொழுது சொல்ல வேண்டிய திருவாய்மொழி -இதுவாகும்--‘சர்வேஸ்வரனுடைய ‘பாலனாய் ஏழுலகு’ இத்திருவாய்மொழி’ என்றது, ‘மேல் திருவாய்மொழியாகிய ‘பாலனாய் ஏழுலகில்’-ஆழ்வாருடைய காதற் குணம் சொன்னாற்போலே, இத்திருவாய்மொழியில்-ஆழ்வார் பக்கல் சர்வேஸ்வரனுக்கு உண்டான காதற் குணம் சொல்லுகிறது’ என்றபடி.-வாஸூ தேவ சர்வம் என்று இருப்பார்க்கு அவரே சர்வம் என்று இருப்பானே –ஆழ்வார் பாலனாய் -போன்ற பல நிலைகளில் சாத்திக் கொண்ட வகுள மாலை அனுபவிக்க இவன் ஆசைப் படுகிறான்-‘நெடுமாற்கடிமை, ஆழ்வாருடைய நெடுமாற்கடிமையும் எம்பெருமானுடைய நெடுமாற்கடிமையும் என இரு வகைப்படும்;-அவற்றுள் எம்பெருமானுடைய ‘நெடுமாற்கடிமை’ இத்திருவாய்மொழி,’ என்றார் முன்னும். இரண்டாம் பத்து ஏழாந்திருவாய்மொழி முன்னுரை.

இதுதனக்கு மூன்று படியாக நிர்வஹிப்பர்கள் நம் முதலிகள்;
ஒன்றை கேட்டால் -வேறு ஒன்றைக் காட்டி சமாதானம் பண்ணுவது
அத்தையே கொடுப்பதாகச் சொல்லுவது –
அத்தையே கொடுப்பது -என்ற மூன்று நிலைகளும் மூவரும் அருளுவார்கள் –

எம்பார், “அம்புலி அம்மானைப் பிடித்துத் தரவேண்டும்’ என்று அழுத குழந்தைக்குத் தேங்காயைக் –
உடைத்த தேங்காயைக்-கொடுத்து அழுகையை ஆற்றுவாரைப்போலே, வேறு ஒரு குணத்தைப் -காதற்குணத்தை.-
பிரகாசப்படுத்தி அனுபவிப்பிக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.

திருமலை நம்பி, ஒருவன் ஒன்றை விரும்பினால், அவனும் அது செய்வானாய்த் தலை துலுக்கினால், பின்பு பின்னில்
இழவு தோன்றாதே அன்றோ இருப்பது? ஆகையாலே, அவனும் ‘அப்படிச் செய்கிறோம்’ என்ன, மேல் உண்டான இழவு மறந்து,
எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.
ஸ்ரீ கௌசல்யையார், பெருமாள் வனத்திற்கு எழுந்தருளுகிற போது, ‘ஒரே புதல்வனை யுடைய நான் உம்மைப் பிரிந்திருக்க மாட்டேன்!
கூட வருவேன் இத்தனை!’ என்ன, ‘ஆச்சி, நீர் சொல்லுகிற இது தர்மத்திற்கு விரோதம் கண்டீர்,’ என்று முகத்தைப் பார்த்து
ஒரு வார்த்தை அருளிச்செய்ய, இழவை மறந்து மங்களாசாசனம் பண்ணி மீண்டாரே அன்றோ?’
இது, பேச்சின் இனிமை விசுவாசத்திற்குக் காரணம் என்பதற்குத் திருஷ்டாந்தம்.
‘ஒரே புதல்வனையுடைய நான்’ என்று தொடங்குமிவ்விடத்தில்,
‘ஆகி னைய! அரசன்றன் ஆணையால் ஏகல் என்பது யானு முரைக்கிலென்;
சாகலா உயிர் தாங்க வல்லேனையும் போகில் நின்னொடுங் கொண்டனை போகென்றாள்.’ என்ற செய்யுளையும்,
‘ஆச்சி! நீர் சொல்லுகிற இது’ என்றுதொடங்குமிடத்தில்
‘என்னை நீங்கி இடர்க்கடல் வைகுறும் மன்னர் மன்னனை வற்புறுத் தாதுடன்
துன்னு கானம் தொடரத் துணிவதோ?அன்னை யே!அறம் பார்க்கிலை யாமென்றான்.’-என்றும்
‘வரிவில் எம்பி மண்ணர சாயவற்கு உரிமை மாநிலம் உற்றபின் கொற்றவன்
திருவின் நீங்கித் தவம்செயு நாளுடன் அருமை நோன்புகள் ஆற்றுதி யாமன்றே!’- என்ற செய்யுள்களையும் ஒப்பு நோக்கல் தகும்.
ஸ்ரீ கிருஷ்ணன், ‘மாஸூச – சோகத்தைக் கொள்ளாதே’ என்று ஒரு வார்த்தை அருளிச் செய்ய, அருச்சுனன்,
‘சந்தேகங்கள் எல்லாம் நீங்கினவனாய் நிலைத்து நிற்கிறேன்; உனது வார்த்தையின் படி செய்கிறேன்,’ என்று தரித்தானே அன்றோ?

பட்டர், ‘முக்காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெறவேண்டும் என்று விடாய்த்த இவர்க்கு அப்படியே அனுபவிக்கலாம்படி,
கால சக்கரத்தன் ஆகையாலே, கால வேறுபாட்டிற்குரிய காரணங்களைக் கழித்து, நிகழ்காலத்திற் போலே அனுபவத்திற்குத்
தகுதியாகும்படி காலத்தை ஒரு போகி ஆக்கிக்கொடுக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச் செய்வர்.

கால சக்கரத்தன்’ என்றது, ‘சக்கரம் போன்று சுழன்று வருகின்ற காலத்துக்கு நிர்வாஹகன்’ என்றபடி.
‘ஒரு போகி ஆக்கி’ என்றது, ‘நடுவில் தடையில்லாத வெளியாக்கி’ என்றபடி. அல்லது, ‘ஒரே காலத்தில் பலமாக்கி’
என்னலுமாம். பட்டர் நிர்வாகத்துக்கு நிதானம், ‘கால சக்கரத்தானுக்கே’-என்ற நாலாவது திருப்பாசுரம்.

‘மேல் திருவாய்மொழியில் விரும்பியபடியே இத் திருவாய்மொழியில் அனுபவிக்கிறார்’ என்று அருளிச்செய்யக் காரணம் வருமாறு :
‘தோளி சேர் பின்னை’ என்றதற்கு, ‘கோவை வாயாள்’ என்ற பாசுரம்.
‘கொம்பு போல்’என்ற பாசுரத்திற்கு, ‘மதிள் இலங்கைக் கோவை வீய’ என்ற பாசுரப்பகுதி.
‘பாலனாய்’ என்ற பாசுரத்திற்கு, ‘கால சக்கரத்தோடு’ என்ற பாசுரம்.
‘பாவியல் வேத நன்’ என்ற பாசுரத்திற்கு, ‘குரை கழல்கள் நீட்டி’ என்ற பாசுரம்.
மற்றைப் பாசுரங்களையும் இங்ஙனமே கண்டுகொள்க.

மூன்றாம் திருவாய் மொழியிலே
இவருடைய ஆர்த்தி தீர்க்கும்படி ஸம்ஸ்லேஷித்த சர்வேஸ்வரன் இவருடைய அபி நிவேச ஹேதுவான அநு ராக விசேஷத்தைக் கண்டு
அவனும் இவர் பக்கலிலே அத்யந்த அபி நிவிஷ்டனாம் படி அநு ரக்தனாம் படியை அநு சந்தித்த இவர்
அவனுடைய பிராப்தி பிரதிபந்தக ஸமஸ்த விரோதி நிவர்த்தகத்வத்தையும்
ரக்ஷகத்வ ப்ரயுக்த சம்பந்தத்தையும்
சர்வாத்ம பாவாதியால் வந்த நாராயணத்வத்தையும்
அநு கூல சத்ரு நிராசன சாமர்த்யத்தையும்
ஸுசீல்யாதி குண யோகத்தையும்
ரக்ஷண உபகரண வத்தையையும்
அநந்யார்ஹம் ஆக்கி அடிமை கொள்ளும் ஸ்வ பாவத்தையும்
சர்வ வ்யாபகத்வத்தையும்
பாரமார்த்திக பரத்வ உஜ்ஜ்வல்யத்தையும்
அபரிச்சேத்ய மஹாத்ம்யத்தையும்
அநுபவித்து -ஏவம்விதனான சர்வேஸ்வரன் தம்முடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஸ்ரக் வஸ்திர ஆபரணங்கராகாதிகளோ பாதி
தனக்கு அதிசயித போக்யமாம் படி விரும்பின பிரணயித்தவத்தை அருளிச் செய்து ஸந்துஷ்டாராகிறார்

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள்இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.
–4-3-1-

‘நப்பின்னைப் பிராட்டி, ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் தொடக்கமானார் உனக்குத் தேவிமார்களாய் இருக்க. நீ அவர்கள் பக்கலிலே இருக்கும் இருப்பை என் பக்கலிலே இருக்கும்படி என் இருப்பே உனக்கு எல்லாமாய்விட்டது,’ என்கிறார் ஆதல்;
அன்றிக்கே, ‘அடியார்களுடைய பகைவர்களை அழிக்கிற இடங்களில் அந்த அந்தச் சமயங்களில் வந்து முகங்காட்டி அடிமை செய்யப் பெற்றிலேன் நான்; இங்ஙனே இருக்கவும், என் மனத்தினையே இனிய பொருளாகக் கொள்வதே!’ என்கிறார் ஆதல்.

இவளை அணையலாமாகில் இவற்றை முரித்தல் ஆகாதோ?’ என்று தன்னைப் பேணாதே
அவற்றின் மேல் விழுந்தான் -ஸ்ரீ கிருஷ்ணன் வந்து தோன்றினவாறே பிரீதியின் மிகுதியாலே புன்முறுவல் பூத்தாள்; அப்போது அதரத்தில் பழுப்பு இருந்தபடியைத் தெரிவிப்பார், ‘கோவை வாயாள்’ என்கிறார்

சர்வ இரட்சகனான பெருமாளை விட்டு, மதிளை இரட்சகம் என்று இருந்தானாயிற்று.
இது அன்றோ தான் தனக்குச் செய்து கொள்ளும் காவல்?

ஸ்ரீமதுரையில் உள்ள பெண்களைப் போல நின்று, ‘தரையில் உள்ள இராமனுக்கும் தேரில் உள்ள இராக்கதனுக்கும் போர் ஏற்றது அன்று,’ என்று சொல்லப் பெற்றிலேன்.எருது ஏழ் அடர்த்தல் தொடக்கமான காலங்களிலே பிறந்த சிரமம் மாற, குளிர்ந்த உபசாரம் பண்ணிற்றிலேன்

பூவை வீயாம் நின் மேனிக்கு –பூவால் அல்லது செல்லாத நின் திருமேனிக்கு.-அன்றிக்கே, ‘பூவைப்பூவோடு ஒத்த திருமேனி’-வீ என்பது பூவுக்குப் பேர்-‘வெண்ணெய் நாற்றத்திலே பழகினார் இளம் பருவமுடையார் இருவர் சாந்தின் வாசி அறிந்தபடி என்?’ என்று,
அதனால் வந்த உவகை தோன்றப் புன்முறுவல் செய்தாள்; ‘நல்ல சாந்து இடுக்கைக்காக இது ஒரு முகம் இருந்தபடி என்தான்!’ என்கிறான். ஆக, ‘நற்சரக்குப் பரிமாறுவார். அது கொண்டு பயன் கொள்ளுவார் உடம்பின் வாசி அறிய வேண்டுங்காண்;
நம் அண்ணர் உடம்புக்கும் நம் உடம்புக்கும் ஈடான சந்தனம் தா,’ என்று, இப்படித் தரம் இட்டுப் பூசப்படுகின்ற திருமேனி என்பதனைத் தெரிவிக்கும் பொருட்டு, ‘மேனி’ என வேண்டாது கூறுகிறார்.ஸூ கந்த மேதத் –-அப்படி சாந்தில் உள்மானம் புறமானம் அறியுமவனுக்கு பூசும் சாந்து என் நெஞ்சமாய் விடுவதே –

—————-

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே
.–4-3-2-

இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டா; இவர் உண்மையாகில் அவனுக்கேயாய் இருக்கும்; ஆதலின், ‘எனதுடைய’ என்கிறார்.-இவர் நெஞ்சினைக் காட்டிலும் வாக்குப் பரிமளம் விஞ்சி இருக்கும் போலே காணும்.-சாந்து மணம் கொடுப்பது பூவை அணிந்த பின்பே அன்றோ?ஆஸ்ரித கர ஸ்பர்சம் விரும்புவன் அன்றோ -இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டாமே-ஆழ்வார் எனக்கு சொன்னாலும் அவனுக்கே -நாம் அவனுக்கே சொன்னாலும் நமக்கே –நான் -அஹம் -மாறாடி அன்றோ இருக்கும்-நானே அவர் தனம் ஆனபின்பு என்னுடையது எல்லாமே உன்னுடையதே-

வான் பட்டாடையும் அஃதே – பூ கட்டியே இ றே சாந்து மணம் கொடுக்கும் -நெஞ்சின் பெருமை வாசகத்தாலே தானே தெரியும் – அந்தச் சொற்கள் தாமே புருஷோத்தமனாம் தன்மைக்கு அறிகுறியான பரிவட்டமும்.-இவருடைய பா, நல்ல நூல் ஆதலின், வான் பட்டாடை ஆயிற்றுக் காணும்;-‘நல்ல நூலாக வேண்டும்’ என்று அடியிலே நோற்று நூற்றவர் அன்றோ?-“கண்ட வாற்றால் தனதே உலகென நின்றான் றன்னை வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.” (திருவாய். 4. 5 : 10.)-நூற்றல்; பிரபந்தத்தைச் செய்தல்.-தேசமான அணிகலனும் – தனக்கு ஒளியை உண்டாக்குகிற ஆபரணமும்.
என் கைகூப்புச் செய்கையே – சேரபாண்டியன் தம்பிரானைப் போன்று, அவனுக்கு ஒளியை உண்டாக்கா நின்றது இவருடைய அஞ்சலி.–ஏக மூர்த்திக்கே.– அத்விதீயமான திரு மேனியை உடையவனுக்கு-‘‘சர்வகந்த :’ என்கிற திருமேனியை உடையவனுக்குப் பூசும் சாந்து என் நெஞ்சம் ஆவதே! இது சேருமே!’ என்கிறார்.-

————-

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே
.–4-3-3-

இத் தலையை உனக்கு ஆக்கி அத்தாலே கிருதக் கிருத்தியன் ஆனாயே!’ என்கிறார். ஏகமூர்த்தி‘படைப்புக்கு முன்னே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது,’இரு மூர்த்தி-காரண கார்ய அவஸ்தைகள் இரண்டையும் சொன்னபடி-மூன்று மூர்த்தி -சாத்விகமாயும் இராஜசமாயும் தாமசமாயும் மூன்று விதமான அகங்காரங்களைச் சரீரமாகக் கொண்டிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது-பல மூர்த்தியாகி ஐந்து பூதமாய் –பதினோரிந்திரியங்களையும், குணங்களோடு கூடிய ஐம்பெரும்பூதங்களையும் சொல்லி -அவற்றைத் திருமேனியாகவுடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.-இரண்டு சுடராய் -படைத்த சூரிய சந்திரர்களைச் சொல்லுகிறது.-இவற்றைக் கூறியது, காரியமான பொருள்கள் எல்லாவற்றிற்கும் உபலக்ஷணம்.-அருவாகி –-இவற்றை உண்டாக்கி இவைகள் பொருள் ஆகைக்காகவும் பெயர் பெறுகைக்காகவும் தான் அவ்வவ் வுயிருக்குள் அந்தராத்துமாவாய் அநுப் பிரவேசித்து நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.

நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே –பயிரைச் செய்து செய்த்தலையிலே குடி கிடக்குமாறு போன்று, படைக்கப்பட்ட பொருள்களைப் பாதுகாத்தற்காகக் கண் வளர்ந்தருளுகின்றவனே!’-திருவருள் புரிதலையே இயல்பாக வுடையன் ஆகைக்கு அடியான சம்பந்தத்தை யுடையவன்’ என்பார், ‘நாராயணனே’ –ஆவி அல்லல் மாய்த்தது –
உன் திருவுள்ளத்தில் உண்டான துன்பம் ஒருபடி அழியப்பெற்றதே! என்றது,
‘இத்தலையை ஒருபடி கரைமரஞ் சேர்த்து நீ கிருதக்கிருத்யன் ஆனாயே!’ என்றபடி.
அன்றிக்கே, ‘என் உள்ளமானது துக்கம் இல்லாததாயிற்று,’ என்னுலுமாம்.

ஏகமூர்த்தி என்பது, பரத்துவத்தைச் சொல்லுகிறது’ என்றும், ‘இருமூர்த்தி’ என்பது, வியூகத்தைச் சொல்லுகிறது; அதாவது, ‘வாசுதேவ சங்கர்ஷணர்களைச் சொல்லுகிறது’ என்றும்,‘மூன்று மூர்த்தி என்பது, ‘வியூகத்தில் மூன்றாம் மூர்த்தியான பிரத்யும்நரைச் சொல்லுகிறது’ என்றும்,‘பல மூர்த்தி’ என்பது, அவதாரங்களைச் சொல்லுகிறது என்றும்,
‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!’ என்பது, இன்னார் படைப்புக்குக் கடவர், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்கிற படியாலே சொல்லுகிறது’ என்றும் நிர்வஹிப்பார்கள் உளர்.
உளர்’ என்பதனாலே, இவ்வாறு பொருள் கூறுதல் தமக்குத் திருவுள்ளம் அன்று என்பது போதரும்.

—————-

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–
4-3-4-

ஆழ்வார் உடைய சத்தையே-அவனுக்கு அலங்காரம் –மாய்த்தல் எண்ணி –‘இன்னாரை மாய்த்தல் எண்ணி என்னாமையாலே உலகத்தையே அழிப்பதற்காக அன்றோ
அவள் கோலி வந்தது?’ என்பதனைத் தெரிவிக்கிறார்.-கேசி வரும் பொழுது நாரதர் பயந்தாரே இப்படியே –‘சரீரியை நலிந்தால் சரீரம் தன்னடையே அழிந்துவிடும். அன்றோ?
உயிரிலே நலிந்தால் உறுப்புகள் தோறும் தனித்து நலிய வேண்டாவே அன்றோ?
உலகங்கட்கெல்லாம் ஓர் உயிரே அன்றோ அவன்?வாய் முலை தந்த – அவன் திருப்பவளத்திலே நஞ்சினைக் கொடுத்தாற் போலே இருக்கையாலே ‘தந்த’ என்கிறார். பேயாய் வருகை அன்றிக்கே, தாயாயும் வந்தாள்-உயிர் மாய்த்த – அவள் கோலி வந்ததனை அவள் தன்னோடே போக்கினபடி.-மாய ஆயனே – ஆச்சரியமான ஆற்றலையுடைய ஆயனே!
இவனும் பிள்ளையாயே முலையுண்டான்; அவளும் தாயாய் முலை கொடுத்தாள்;
பொருளின் தன்மையாலே முடிந்தாள் இத்தனை.

வாமனனே –அந்த அவதாரத்தில் பூதனை முலை கொடுத்தால் அதனை மாற்றுவதற்கு உரிய மருந்தாக முலை கொடுக்கைக்கு-ஒரு தாயாகிலும் உண்டே அன்றோ அங்கு?
அதுவும் இன்றிக்கே,-எதிரிகள் இருந்த இடத்தே தான் சென்று கிட்டுமது?-‘சீராற் பிறந்து சிறப்பால் வளராது, பேர்வாமன் ஆகாக்கால் பேராளா!’ என்று வயிறு பிடித்தார்கள்?

மாதவா –‘தீ நாள் திருவுடையார்க்கு இல்’ என்கிறபடியே, இந்த அபாயங்களில் அவன் தப்பியது அவள் நெஞ்சோடே யிருந்து நோக்குகையாலே அன்றோ? -சஹ்ருதயமாக -உளமாக-என்றுமாம் –குளிர்ந்த மாலையால் அல்லது செல்லாதபடியாய் ஆதி ராஜ்ய சூசகமான உன்னுடைய திருமுடிக்கு விரும்பிச் சார்த்தும் மாலை,-என் உயிர் –-என் சத்தையாய் விட்டது.

————-

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்றுஎன்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே
.–4-3-6-

மேல் எல்லாம் அவனுடைய காதலைச் சொல்லிக் கொண்டு போந்தார்; இப்போது அவனுடைய காதலின் மிகுதி தம்மையும் காதலன் ஆக்கிற்று என்கைக்காகத் தம்முடைய காதலைச் சொல்லுகிறார்.-நீ என்னைக் கிட்டாது ஒழிந்தாயே யாகிலும் உன் சத்தையே எனக்கு தாரகாதிகள்-கால சக்கரத்தொடு வெண்சங்கம் கை ஏந்தினாய் –-இவர் கூப்பிட்ட பாசுரந்தான் இதுவாயிற்று. -மூன்று விழி சொற்கள்-என்று என்று–1- கையும் ஆழ்வார்களுமான அழகையும் –2-காலத்திற்குத் தகுதியாக ஆபத்தில் துணையாயினமையையும்,-3–இவை இல்லாவிடிலும் விட ஒண்ணாத சம்பந்தத்தையும் சொல்லி. தனித்தனியே ஆழங்காற்பட்டமையைத் தெரிவிக்கிறது.-பரமபதத்திலே இருந்தாலும் நிலை குலைந்து வரவேண்டும்படி பெருமிடறு செய்து கூப்பிடுகின்றமை போதரும்.-“வாராயாகிலும் கோலமாம்’ என்பான் என்?’ என்னில், ‘வாராது ஒழியக்கூடாது; கூடாதது கூடிலும் என் நினைவு இது,’ என்கிறார்.-என்னை அடியிலே -(திருவடிகளிலே’ என்பதும், ‘ஆதிகாலத்திலே’ என்பதும் பொருளாம்-)இப்படி ஆக்கினாயே!’ என்பது கருத்து. அடிவிடில் ‘நின்னலால் இலேன்காண்’ என்பாரே!சென்னிக்கு போக்யமுமாம் –-தாரகாதிகளுக்கும் உப லக்ஷணம்

———-

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே
.–4-3-7-

‘மேலே கூறிய அன்பும் அதற்குத் தகுதியான செயல்களும் இன்றிக்கே இருக்கிலும்
என் உயிரே உனக்கு ஜீவனத்திற்கு ஏது ஆவதே!’ என்கிறார்.மண் கொண்ட கோல வாமனா –
மண் கொண்ட பின்பும் வாமன வேஷம் இவர் திருவுள்ளத்திலே ஊற்றிருந்தபடி.ஊன்றி இருந்த படி –இந்திரனுக்கு இராச்சியம் கொடுக்கை அன்றிக்கே, தம்மை அனுபவிப்பிக்கைக்காக அவ்வடிவு கொண்டான் என்று இருக்கிறார்.இதனால்,பிராப்தியைச் சொல்லிற்று.-திருவடிதான் அஞ்சலிக்கு விஷயமுமாய் அஞ்சலியினாலே சாதிக்கப்படுகின்ற பொருளுமாய் அன்றோ இருப்பது? இந்திரனுக்கு இராச்சியம் கூறுபட்டாற்போலே இவர்க்கும் அத்திருவடிகளில் அழகு கூறுபட்டதாதலின், ‘குரை கழல்கள்’ என்கிறார்.-‘அவனுக்குச் சாதனமானது இவர்க்குச் சாத்தியம் ஆயிற்று,’ என்றபடி.
சேஷத்வ ராஜ்ஜியம் இவருக்கு -புருஷார்த்தமே திருவடியே தானே

மாயனே –‘ஓர் அஞ்சலி மாத்திரத்தாலே உன்னை அடையலாம்படி இருப்பதே! இது என்ன ஆச்சரியந்தான்!’ என்கிறார்.-‘உரை கொள் சோதித் திரு உருவம்-அது அது’ என்று வாய் புலற்றும்படி இருக்கிற சோதி மயமான திருமேனி’-பேச்சுக்கு அப்பாற்பட்ட திருமேனி’ -மாற்றும் உரையும் அற்ற திருமேனி-என்னது ஆவி மேலது – இப்படி வேறுபட்ட சிறப்பினையுடைய உன் திருமேனி என் உயிரின் மேலது. நித்தியசூரிகளுக்குப் போக்கியமான திருமேனிக்குத் தாரகம் முதலானவைகள் என் ஆத்துமா ஆவதே!

————

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?
–4-3-8-

‘ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாதபடி பிறந்த கலவி, பேச்சுக்கு நிலம் அன்று,’ என்கிறார்.

என்னது ஆவி மேலையாய் –1-‘என் ஆத்துமாவைப் பெற்று அதனால் வந்த பிரீதி பிரஹர்ஷத்தை யுடையாய்’ என்னுதல்.-அன்றிக்கே.2- ‘என்னைப் பெற வேண்டும் என்னும் ஆசையை உடையாய்’ என்னுதல். மேலையாய் – எச்சம்.-அன்றிக்கே, 3-‘என்னது ஆவி மேலையாய்!’ என்பதனை விளிப்பெயர் என்னுதல். -சம்போதனம் –‘இவரைப் பெற்ற பிரீதியாலே பரந்து நிறைந்து நிற்றலும் புதுக்கணித்தது -ஒருவனைப் பிடிக்க நினைத்து அவன் பக்கல் உண்டான ஆசையாலே ஊரை வளைவாரைப் போலே, தம்மை அகப் படுத்துகைக்காகப் பரந்து நிறைந்து இருப்பவன் ஆனான்

என்னது ஆவியும் உன்னது; உன்னது ஆவியும் என்னது – என்னுடைய ஆவி உன்னது; உன்னுடைய ஆவி என்னது. என் சொரூபம் நீ இட்ட வழக்கு; உன் சொரூபம் நான் இட்ட வழக்கு.-இவ்விடத்தை ஆளவந்தார் அருளிச் செய்கையில் இருந்த முதலிகளிற் சிலர், ‘இவ்வாத்துமாவின் சொரூபம் அவன் இட்ட வழக்கு என்பது கூடும்; அவன் சொரூபம் இவன் இட்ட வழக்காவது என்?’ என்று கேட்க,
‘இவன் தன்னை அவனுக்கு ஆக்குவான் என்ற அன்று கர்மம் தடைசெய்யவும் கூடும்;
சர்வேசுவரன் தன்னை இவன் இட்ட வழக்கு ஆக்கும் அன்று தடைசெய்பவர் இலர்; ஆன பின்பு, அதுவே நிலை நிற்பது
மேலும், ‘இவன் சொரூபம் அவன் இட்ட வழக்கு ஆகக் கூடுமோ?’ என்று இதிலே காணும்
சந்தேகிக்க வேண்டுவது,’ என்று அருளிச் செய்தார்.
நிரந்குச ஸ்வ தந்த்ரம் அடியாக கொண்ட ஆஸ்ரித பாரதந்திர கல்யாண குணம்
அரசன் தன் குழந்தை காலால் தனது கன்னம் அடித்துக் கொள்வது போலே
காளி தாசன் கதை -பொன் கழஞ்சு பண்ணிப் போடச் சொன்னானே-இப்படிப்பட்ட உன்னுடைய காதல் குணத்தை என்னால் பாசுரம் இட்டுச் சொல்லலாய் இருந்ததோ?’ என்கிறார்-

———–

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4
-3-9-

உன் கரை இல்லாத காதல் என்னுடைய பேச்சுக்கு நிலம் அன்று,’ என்கிறார்.உன் காதல் குணத்தை அனுபவித்துக் குமிழிநீர் உண்டு போமித்தனை போக்கிப் பேசித் தலைக்கட்ட மாட்டுகின்றிலேன்.-‘நித்தியஸூரிகள் பித்து ஏறி ஏத்தக் கண்டேன்; அத்தாலே காதல் மையல் ஏறினேன்;-என்னுடைய கலவியிலும் வடிவிற் பிறந்த ஒளியிலும் குற்றம் இன்றிக்கே இருக்கின்றவனே!-நித்திய ஸூரிகள் பரமபத்தியை உடையவர்களாய்க் கடல் கிளர்ந்தாற்போலே இரைத்துக்கொண்டு ஏத்தக் காண்கையாலே
யானும் ஏத்தினேன் அல்லது, யான் ஆற்றலுடையனாய் ஏத்தினேனோ?’ என்கிறார்.

————

யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே
 –4-3-10-

உனது பெருமையின் எல்லை உனக்கும் உன் மணாளனுக்கும் தெரியாதே என்பர்
ஒரு மிடறாக ஏத்தினாலும் -எத்தின இடம் அளவு பட்டு ஏத்தா இடம் விஞ்சி இருக்குமே -இவன் விஷயத்தில்-சர்வரச ரச்யத்தை போக்யதை யாலும் ஏத்தினேன் பிரணயித்வம் உபகரித்த உபகாரத்தாலும் ஏத்தினேன்-ஏத்தாவிடில் பிழையேன் உஜ்ஜீவிக்க ஏத்தினேன் – கலியர் மேல் விழும் போது விவேகித்தோ இழிவது-சக்தி இல்லாவிடிலும் உஜ்ஜீவனம் பெற ஏத்தினேன்-தேச கால விப்ரக்ருஷ்டமான அவனுடைய படிகளை காண வேணும் என்று ஆசைப்பட்ட நான் உஜ்ஜீவைக்காக ஏத்தினேன் -பரிச்சேதிக்கைக்காக அன்று –

————-

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–
4-3-11-

இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து.இவர் சர்வேசுவரனுடைய காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது, பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று;

‘பொய்யில்’ என்பதனைத் திருவாய்மொழி எல்லாவற்றுக்கும் அடைமொழியாகக் கொள்க.
‘பொய்யில்லாத ஆயிரம்’ என்ற போதே அவ்வோபாதி இப்பத்துப் பாசுரங்கட்கும் வருமே அன்றோ?-அவாப்த சமஸ்த காமனான சர்வேசுவரன் ஒரு நித்திய சமுசாரியோடே இப்படி விரும்பி வந்து கலந்து இவருடைய உயிர் முதலானவற்றையே தனக்கு உரிய இன்பப் பொருள்களாக இருந்தான் என்கிற காதல் குணத்தில் பொய் இன்றிக்கே இருக்கிற பத்து

பூமியிலே எம்பெருமானாரைப் போலே-பர சமுர்த்தியே ஏக பிரயோஜனம் – ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே பல காலம் இருந்து.-இங்கே இருக்கச் செய்தே பரமபதம் தங்கள் சிறு முறிப்படி செல்லும்படி ஆள்வர்கள்.

‘வையம் மன்னி வீற்றிருந்து’ என்கிற இடத்தில் ‘நம்மைப் போலே வாய் புகு சோறாகப் பறி கொடாதே,–ஆழ்வார் போலே -32 வருஷம் மட்டும் –-பாவியேன் பல்லிலே பட்டு தெறிப்பதே – பல காலம் பூமியிலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே ‘நாட்டாரோடு இயல்வொழிந்து’ என்கிறபடியே, தங்கள் வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவர்கள்,’ என்று சீயர் உருத்தோறும் அருளிச்செய்வர். இளமையிலே பட்டரைப் பறி கொடுத்தவர் அன்றோ அவர்?
தமக்கு கிட்டாத ஆச்சார்யர் இழக்க வேண்டாம் – –-முட்டாக்கு போட்டு தீட்டு காத்து கைம்பெண் போலே நஞ்சீயர் இருந்தாரே –

—————

கோவான வீசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத் துவாதிதனை -மேவிக்
கழித்தடையக் காட்டிக் கலந்த குணம் மாறன்
வழுத்துதலால் வாழ்ந்துது இந்த மண் –33–இந்த ஜகத்தில் உள்ளார் எல்லாரும் எல்லாம் சத்தை பெற்று
வாழ்ந்தார்கள் –-வையம் மன்னி வீற்று இருந்து –என்று இறே பல சுருதி –
அன்றிக்கே-விஸ்வம் பரா புண்யவதீ-என்று ஆழ்வார் கால் தரித்து இருக்கையாலே
பூமி பாக்யவதியாகி வாழ்ந்தது ஆகவுமாம்-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -1-பொய் நின்ற ஞானமும் –ஒழிவில் காலம் -3-3-

January 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது


அவதாரிகை –

இவ் வாழ்வார் பக்கலிலே பிரபந்தங்கள் அவதீர்ணங்கள் ஆகிற இடத்து
ஈஸ்வரன் ஸ்வ ஸங்கல்பத்தாலே —வாஸூ தேவாதி சதுர் வ்யூஹத்தைப் பண்ணினால் போலேயும்
வேதங்கள் ருகாதி பேதத்தாலே சதுர்த்தாக வ்யக்தமானால் போலேயும்
இவையும் திரு விருத்தம் திரு வாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி-என்று நாலு வகையாகப்
பிரதிபாதிக்கப் பட்டன –திரு விருத்தம் -திரு-ஸ்ரீ –மேன்மையான விருத்தம் -மேன்மையுடைய விருத்தம் –விருத்தம் –அன்பு மிக்க செய்திகள் – திருமகளின் செய்திகள்

சர்வேஸ்வரன் தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களையும் நித்ய  விபூதி யோகத்தையும்
லீலா விபூதி யோகத்தையும் காட்டிக் கொடுக்க
கண்டு
அநந்தரம்
அங்குள்ளார் ஞானத்த்தையும் வ்ருத்தத்தையும் அங்கு இருக்கும் இருப்பையும் கண்டு
அதுக்கு எதிர் தட்டான சம்சாரத்திலே அவ்வனுபவத்துக்கு  விரோதியான பிரகிருதி சம்பந்தத்தோடு தாம் இருக்கும் இருப்பையும் அனுசந்தித்து இவ்வனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று அபேஷிக்கிறார் –

எம்பெருமானை சாஷாத்கரித்த ஆழ்வார்-த்வத் பகவத் விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து அருள வேணும் என்று- தம்முடைய அபி லஷிதத்தை விஞ்ஞாபிக்கிறார் –பொய் நின்ற ஞானம் தொடங்கி–வல்லார் அழுந்தார் பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே -என்று –பிரகிருதி சம்பந்த நிவ்ருத்தியே பலமாக அருளிச் செய்து தலைக் காட்டுகிறார் –எனவே இப்பிரபந்தம் முமுஷுத்வத்தையும் முக்திவத்தையும் உண்டாக்குவதற்கு ஏற்ற திவ்ய பிரபந்தம்

அயர்வறும் அமரர்கள் அதிபதியான திருமாலால் மயர்வற மதி நலம் பெறும்படி அருளப் பட்ட நம்மாழ்வார் தம்முடைய அனுபவ பரிவாஹங்களான பிரபந்தங்கள் நாலில் முதல் பிரபந்தமாய்
இவர் தம் வ்ருத்தாந்தங்களை முன்னிடுகையாலே-திரு விருத்தம் என்ற பேர் பெற்ற பிரபந்தத்தில்
முதல் பாட்டில்-பூர்வ
உபகார ஸ்ம்ருதியை முன்னிட்டுக் கொண்டு உத்தர உபகார அபேக்ஷையிலே உபக்ரமிக்கிறார் –(உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –-இனி ஒன்னும் மாயம் செய்யேல் )

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே
–1–

பொய் நின்ற ஞானமும் –
அநாத்மநி ஆத்ம புத்தி -அஹங்காரம்–அந்யதா ஞானம்–பிரகிருதி ப்ராக்ருதங்களைப் பற்றிய ஞானம்
தேகத்துடன் -அனுபந்தி -சம்பந்தி -புத்ராதிகள் பற்றிய ஞானம்-ஸ்வர்க்காதிகள் -ஆத்ம அனுபவம் என்று தப்பாக புரிதலும்-அஸ் வேஸ்ய புத்தியையும் –பொய்யான விஷயங்களைப் பற்றி நிற்கையாலே
நஸ்வரம் விஷயமாகக் கொண்ட அறிவு -எப்பொழுதும் மாறும் அசேதனத்தைப் பற்றிய ஞானம்
த்யாஜ்யம் என்று அறிய வேண்டும்–அநித்யமானதை நித்யம் என்றும்-அபோக்ய மானதை போக்யம் என்றும் -அஸ்திரமானதை ஸ்திரம் என்றும் -அல்பமானதை நிறைவாக என்றும்–நாஸ்தி -என்றால் அஸ்தி யாக இருந்து நாஸ்தி ஆவது-தத்வ தர்சிகள் நிர்ணயம் அசத்துக்கு பாவம் வராது -சத்துக்கு அபாவம் வராது இப்படி யதார்த்த -ஒருபடிப்பட உள்ளதால் –உத்பத்தி விநாசாதி யோகத்தாலே அஸத்ய ஸப்த வாஸ்யமான அசேதன விஷயத்தில் ஆத்ம ஞானமும்

ஸ்வரூப அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -தேஹாத்ம அபிமானம்-ஸ்வ பாவ அந்யதா ஞானம் -அந்யதா ஞானம் -பரதந்த்ரனான தன்னை ஸ்வ தந்த்ரனாக நினைக்கை-உத்தேசியத்தை ஒழிந்த அர்த்த ஞானங்கள் அனைத்தும் அஞ்ஞானம்-

காண்கின்ற ப்ரக்ருதி பொய் என்னலாமோ என்னில்
சூன்யவாதியைப் போலேயாய் என்கிறது அன்று-மாயாவாதி போலே துச்சம் என்கிறது அன்று
ஆத்மாவைப் போலே ஒருபடிப் பட்டு இராமையாலே-ஆத்மா ஏக  ரூபமாய் இருக்கும் இறே
அநாத்மன்யாத்மா புத்தியையும் -சொல்லுகிறது – ஜடமாய் இருக்கும் தனக்கு ஞானமும் பாரீர்-பரிணாமம் இல்லாத ஆத்மா பரமாத்மா பற்றிய ஞானமே ஸத்யம் -அதுவே அஸ்தி -ஷட் பாவ விகாரம்-அஸ்தி பிறக்கிறது மாறுதல் வளர்ந்து தேய்ந்து முடிதல்–சம்சார பிரக்ருதியைப் பொய் என்கிறது –

நின்ற
இது தான் என்றும் ஒக்க நிலை நின்ற படி -அழுந்தின படி –

ஞானமும்
ஜடமாய் இருப்பதுக்கு தனக்கு – ஞானம் என்பது பாரீர் -இதுக்கு ஞானம் என்ற பெயரா
தேஹாத்ம அபிமானம் அஞ்ஞானம் தானே

பொல்லா ஒழுக்கும்
ஞான கார்யமான விருத்தம் அனுஷ்டானம் உண்டாகில்–ஞானம் இல்லையாகில் நல்ல அனுஷ்டானமும் இருக்காதே–அஹம் சர்வம் கரிஷ்யாமி–குருஷ்வமாம் அநு சரம் என்று இருக்கும் ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தம் இன்றியே கண்டது அடைய அஹம் என்று இருக்கை-பொய் நின்ற ஞான அனுகுணமான பர த்ரவ்ய அபஹாராதி சாரித்ரமும்  -(துராசாரங்கள் என்றபடி )

அழுக்கு உடம்பும் –
இதுக்கு எல்லாம் அடியான ஹேயமான சரீரமும்–மகா பாரதம் எல்லாம் கூளமும் பலாப்பிசினும் போலே
பிரகிருதி புருஷ விவேகம் பண்ண மாட்டிற்று இல்லை-இவர் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே மூன்று பதத்தாலே பிரகிருதி புருஷ விவேகம் பண்ணி அருளினார்

இந் நின்ற நீர்மை –
இப்படி நிலை நின்ற ஸ்வபாவம் -உதிரக்  கூறை காட்டுகிறார் -என்று அம்மாள்–ஏஹீ பஸ்ய சரீராணி -ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் பெருமாளுக்கு ராஷசர் தின்ற உடம்பை காட்டினால் போலே-
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டுகிறார் -ஆளவந்தார்-ஆழ்வார்  பிறர் படியை காட்டுகிறார்-அம்மாள் நிர்வாஹம்-தம் படியைக் காட்டுகிறார்  -ஆளவந்தார் நிர்வாஹம்இது ஒரு வெட்டு -பொய் நின்ற ஞானம்-இது ஒரு வெட்டு – பொல்லா  ஒழுக்கம் இது ஒரு வெட்டு -அழுக்கு உடம்பு–ஆச்சார்யன் உபதேசத்துக்கும் கேளாதே பிரமாணங்களாலும் பேதிக்க ஒண்ணாதே இதுவே ஸ்வரூபம் என்னலாம் படி இருக்கை–தேவரீர் திருவடிகளுக்கு இட்டுப் பிறந்த இஜ் ஜன்மம் தப்பாமே பட்டேன் இது என்று கருத்து –இவற்றிலே நிலை நின்று போந்த வாஸனா ருசிகள் ஆகிற ஸ்வ பாவ விசேஷத்தை
(நின்ற நீர்மை விட்டுப் பிரியாத ஸ்வ பாவங்கள் )-அநாதி காலம் பரம புருஷார்த்தத்தை இழந்து சம்சாரத்தில் அகப்பட்டுக் கிடந்த இதில் அநு தாபம் தோற்றும் படி(நீர்மை )

இனி –
ஈஸ்வரனும் ஒரு முழம் கை தண்ணீரும் என்று இருந்த காலம் அன்றியே உன்னால் அல்லது செல்லாது என்று இருந்த பின்பு குறைவாளனாய் தேவரீர் திருவடிகளிலே வந்த பின்பு–நிர்ஹேதுக கடாக்ஷ மூலமான ஞான லாபத்தை உடையரான பின்பு-உன் அங்கீ கார பலத்தை உடையரான நாங்கள் அணுகாத படி

யாம் உறாமை –
பரா அநர்த்தம் நெஞ்சிலே படுகையாலே-நாட்டுக்காக தாம் மன்றாடுகிறார்–நாங்கள் ஸ்பர்சியாத படி –
சம்சாரிகள் உடைய வ்யசனம் தம்மது ஆகையாலே -யாம் -என்கிறார்-ஆத்மனி பஹூ வசனம் வா – உறாமை
சாஸ்திர பலம் பிரயோகத்ரி -என்கிற படியே பலம் பெறுவார் அன்றோ அதுக்கு கிருஷி பண்ணுவார்-
நம்மைக் கிட்டுகைக்கு வழிகள் கண்டு வைத்தோம் ஆகில் அவற்றின் படியே வந்து கிட்டுகிறீர்-என்ன-சர்வஞ்ஞனுமாய் சர்வ சக்தியாய் இருக்கிற நான் இவற்றைச் செய்து வருகிறேன்-உன்னுடைய அவதாரத்துக்கு பிரயோஜனம் சொல் என்கிறார் – நீயோ நானோ உபாய அனுஷ்டாம் பண்ணுவது சொல்லு–அவதார பிரயோஜனம் சாது பரித்ராணாம் துஷ்ட நிக்ரஹம் தர்ம ஸம் ஸ்தாபனம் மூன்றுக்கும் அல்லவே ஸித்த உபாயம் ஆகவதர்க்கே அன்றோ நீர் அவதரித்தீர்

உயிர் அளிப்பான் –உயிர்-பிராட்டிமார் திருவடி திரு வநந்த ஆழ்வான்  -என்று வ்யாவர்த்தித்ததோ
யோக்யதை அயோக்யதை பாராதே- சகல ஆத்மாக்களையும் சம்ரஷணம் பண்ணும் அதே பிரயோஜனமாகை –சால பல நாள் உகந்து உயிர்கள் காப்பான் அன்றோ கோலத் திரு மகளுடன் பிறந்தாய்–உலகத்தோர் -யோக்யதை யோக்யதை பாராமல் ஸம் ரக்ஷணமே பிரயோஜனமாக-உனக்கு அநந்யார்ஹ சேஷமாய் வைத்து –அசத் கல்பமாய்க் கிடந்த ஆத்ம ஸ்வரூபத்தை – தாச பூதோஹம் -என்கிறபடியை நித்தியமாக அனுபவிக்கப பண்ணுவான்

அளிப்பான்-எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா –சிலர் அபேஷித்தது உண்டோ      – உன் கிருபை இறே தான் சொல்லும் போதும் பஹூநிம்(கீதை ) என்றான் இறே-யோனியுமாய்-ஆய்
அவதாரத்தில் மெய்ப்பாடு காட்டுகிறது

பிறந்தாய்
ஆத்மாநாம் மானுஷ்யம் மன்யம்–அஹம் வோ பாந்தவ–தூணிலே தோன்றினால் போலே ஆதல்
ஆனைக்கு உதவினால் போலே ஆதல் -அன்றிக்கே ஸதஸ துவாதச மாச-நாட்டில் பிறந்து படாதன பட்டு
பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாசம் இருந்து – பன்னிரு திங்கள் மணி வயிறு வாய்த்தவனே
–அகர்ம வச்யனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து உன் கேவல கிருபையாலே
கர்ம வச்யர் பிறக்கும் பிறவிகளிலே ஆத்மானம் மானுஷம் மன்யே -என்றபடி அதுக்கு அவ்வருகு அறியாதானாய்க் கொண்டு எல்லா யோநிகளிலும் வந்து பிறந்து அருளினவனே-

இமையோர் தலைவா –
இப்படி பிறந்தவன் குறைவாளனாய் இன்றிக்கே-அமரர்கள் அதிபதி-சூட்டு நன் மாலைப்படி ஒரு நாடாக தனக்கு என்று இருப்பவன் கிடீர் அசங்குசித  ஜ்ஞானரையும் துடிப்பித்துக் கொண்டு நிர்வாஹகனாய் இருக்கிறபடி –சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே – கர்ம வசத்தால் நாங்கள் இழந்து கிடக்க நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணும்படி சர்வ சமனான சர்வ ஸ்வாமி யானவனே –
(கர்மத்தால் இழந்த எங்களுக்கு கிருபையால் அவற்றைப் போக்கி அருள வேண்டும் )

மெய்-
இது எத்தனை குளிக்கு நிற்கும் – கிட்டினவாறே மடி எற்ப்பர்கள்  என்ன –மெய் -என்கிறார்
விஞ்ஞாபனம் இதம் சத்யம் பொய் நின்ற ஞானம் தொடங்கி மங்க வொட்டு உன் மா மாயை (10-7-10)-என்னும் அளவும் செல்ல–என்னுடைய விஞ்ஞாபனம் இதம் சத்யம் -என்கிறார்-

நின்று கேட்டருளாய் –
கேட்கை தான் உத்தேச்யமாய் இருக்கிறது – அறிவித்தால் இத்தலைக்கு செய்ய வேண்டுவது இல்லாமை ருசியை அறிவிக்கையை வேண்டுவது-ஆசை உடையார்க்கு எல்லாம் –எம்பெருமான் பேரா நிற்கப் புக இத்தை நின்று கேட்டு அருள வேணும் என்னுடைய சர்வ துக்கமும் போம் -என்று கருத்து –மெய் நின்று சரீரத்தில் இருந்து கேட்டு அருளாய் நான் செய்யும் விண்ணப்பம் மெய் என்றுமாம் -உன் திருவடிகளிலே நிருபாதிக சேஷத்வத்தையே ஸ்வரூபமாக யுடைய நான் செய்கிற மெய்யான விண்ணப்பத்தை ஜகத் வியாபாரத்தில் பரபரப்பு அற்று நின்று கேட்டு அருள வேணும்சரீரத்தில் நின்று என்றுமாம் -கேட்டு அருளாய்-என்று கேட்கை தானே அருள் என்று கருத்து –உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹத்துடன் சேவை சாதித்து அருள வேணும் என்றுமாம் – திரௌபதிக்கு வராமல் புடவை சுரந்தது போலே ஆகாதே-அவா அறச் சூழ்ந்தாய் -என்னும்படி நான் அவா அற்று வீடு பெறும் அளவும் அந்நிய பரனாகாதே அபி முகனாய்க் கொண்டு கேட்டு அருளாய் (உகந்து திருச்செவி சாய்த்து அருள வேணும் மலக்கு நா வுடைய ஆழ்வார் அருளிச் செய்ய தென்னா தென்னா என்னப் பண்ணுமே மயங்கி இல்லாமல் கேட்டு அருள வேணும் )அப்போது நீ அவதரித்தது எல்லாம் ச பிரயோஜனமாம் படி
உன் அவதார விக்ரஹத்தோடே-ஒரு நாள் காண வாராய் -என்று இருக்கிற எனக்கு பிரகாசித்து நின்று-அடியேன் உள்ளான் உடல் உள்ளான் (8-8-2 )என்னும்படி என் அழுக்கு உடம்புக்குள்ளே ஜூகுப்ஸை பண்ணாதே அண்ணியனாய் நின்று 

அடியேன் செய்யும் விண்ணப்பமே –
வாக்ய பேதம் பிறக்கிறதோ -என்று –நீர் ஆர் -என்றான்-அடியேன் -என்கிறார் இவருடைய நான் -இருக்கிறபடி  – (அடிச்சியோம் அடியேன் என்றே எப்பொழுதும் இவர் )நான் என்றாகில் இறே –
சொன்ன வார்த்தை -என்பது அடியேன் -என்கையாலே – செய்யும் விண்ணப்பம் -என்கிறார்-அடியேன் உடைய விஞ்ஞாபனம்-இவருடைய உக்தியிலே இவருடைய மெய்ப்பாடு அறியலாம் என்று எம்பெருமான் கேட்டருள அடியேன் -என்று தம்முடைய ஸ்வரூபத்தை விண்ணப்பம் செய்கிறார்-செய்யும் –இவ் வபேஷைக்கு மேல் இல்லை –

யாம் உறாமை-என்று பன்மையாய் இருக்க-அடியேன்-என்று ஒருமையாலே ஈஸ்வரனுக்கு விஞ்ஞாபிப்பார் தாம் ஒருவருமாய் பல லாபம் சம்பந்தி சம்பந்தி பரம்பரைக்கும் ஒக்கும் என்று கருத்து –

பொய் நின்ற ஞானம் இந்நின்ற நீர்மை -என்கையாலே -விரோதி சொல்லிற்று
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கையாலே -உபாயம் சொல்லிற்று
இமையோர் தலைவா -என்கையாலே பிராப்யம் சொல்லிற்று
அடியேன் -என்கையாலே பிராப்தாவைச் சொல்லிற்று
செய்யும் விண்ணப்பம் -என்கையாலே பிராப்தி பலம் கைங்கர்யம் என்று சொல்லிற்று –
–இப் பாட்டில்
விரோதி நிவ்ருத்தியையும் அவதார ஸுலப்யத்தாலே -உபாய பாவத்தையும் நித்ய ஸூரி ஸேவ்யமான -ப்ராப்யத்தையும் அடியேன் -என்று ஸ்வரூபத்தையும் மெய்ந்நின்று கேட்டு அருளாய் -என்று பல அபேக்ஷையும் பண்ணுகையாலே அர்த்த பஞ்சகம் ஸூசிதமாயிற்று –அர்த்த பஞ்சகம்-தத்வ த்ரயம் ரஹஸ்ய த்ரயம் அனைத்தும் இதிலே உண்டே

ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை பொய் என்பதால் ஆத்மா மெய் என்றும்
ஞானம் என்பதால் ஞாத்ரு ஜேயத்வமும்
ஒழுக்கு என்பதால் கர்த்ருத்வமும்
உடம்பு என்பதால் சரீரத்வமும் தோன்றுமே

இப் பாட்டில்
1-சுத்த அசுத்த ரூபங்களான அசித்துக்களுடைய பேதமும்
2-சித் அசித் பேதமும்
3-பத்த முமுஷு முக்த நித்ய விபாகத்தை உடையரான ஜீவர்களுடைய அன்யோன்ய பேதமும்
4-ஜீவ ஈஸ்வர பேதமும்
5-ஈஸ்வர ஐக்யமும்(தலைவா ஒருவனே )
6-ஞான ஞாத்ரு பேதமும்
7-சத் அசத் ஞான பேதமும்
8-சத் அசத் அனுஷ்டான பேதமும்
9-சித்த ஸாத்ய உபாய பேதமும்
10-பர அவர புருஷார்த்த பேதமும்

கிடக்கிறபடி-யதாஸ்தானம் சப்தமாகவும் அர்த்தமாகவும் அனுசந்திப்பது-ஆகையாலே மேல் அருளிச் செய்யுமது எல்லாம் இதன் விஸ்தாரம் ஆகிறது –


3-3-ஒழிவு இல் காலம் எல்லாம்-பிரவேசம் –

நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்று அவனைக் கிட்டித் தம்முடைய சொரூபம் பெற்றவாறே, சொரூபத்திற்குத் தகுதியான அடிமை பெறவேணும் என்று பாரிக்கிறார் இத்திருவாய்மொழியில்.
பிரகிருதி சம்பந்தத்தால் வந்த கரண சங்கோசத்தை அநுசந்தித்து நினைத்த வகைகளெல்லாம் பரிமாறப் பெறாமையாலே நொந்து,‘அவன் முதலிலே இதனைத் தவிர்த்துத் தன்னை யனுபவித்தற்கு உறுப்பாகப் பல உபாயங்களைப் பார்த்து வைத்தான்;அவற்றிற்குத் தப்பினேன்; அவதாரங்களுக்குத் தப்பினேன்; உயிருக்குள் உயிராயிருக்கும் தன்மைக்குத் தப்பினேன்; இப்படி அவன் பார்த்து வைத்த வழிகள் அடைய தப்பின யான், இனிக் கிட்டி அனுபவித்தல் என்று ஒரு பொருள் உண்டோ? இழந்தேனேயன்றோ!’ என்று ஆசையற்றவராய் முடியப் புக,
‘வாரீர் ஆழ்வீர்! நாம் உமக்காக அன்றோ திருமலையில் வந்து நிற்கிறது? உம்மை இவ்வுடம்போடே அனுபவிக்கைக்காக இங்கே வந்து நின்றோமே! நீர் அங்குச் சென்று காணக்கூடிய காட்சியை நாம் இங்கே வந்து காட்டினோமே! இனித் தான் , உம்முடைய இவ்வுடம்பு நம்முடைய அனுபவத்துக்கு விரோதியு மன்று காணும்; நீர் தாம் கரண சங்கோச அனுசந்தானத்தாலே நோவு படுகிறீராகில், முதலிலே இது இல்லாதாரும் நம்மை யனுபவிக்கும்போது படும் பாடு இது காணும்;-அவர்களும் வந்து அனுபவிக்கிற இடங்காணும் இத்திருமலை; ஆன பின்னர், நீரும் இவ் வுடம்போடே நினைத்த அடிமைகளெல்லாம் செய்யும்,’ என்று தான் திருமலையிலே வந்து நிற்கிற நிலையைக் காட்டிச் சமாதானம் பண்ண, ஸமாஹிதராய் -சமாதானத்தை யடைந்தவராய், அடிமை செய்யப் பாரிக்கிறார்.

‘யாங்ஙனம்?’ எனில், தர்மி ஒன்றே ஆகையாலே, விஷயம் எங்கும் ஒக்கப் பூர்ணமான பின்பு,
ஒரு தேச விசேஷத்திலே சென்றால் செய்யக் கூடிய அடிமை களெல்லாம் இந் நிலத்திலே செய்யலாம்படிக்குத் தகுதியாகக் குறையற்றிருந்ததாகில், நமக்கும் இவ்வுடம்பு விரோதியாதலின்றி அடிமை செய்கைக்குப் பாங்காயிருந்ததேயாகில், இனித்தான் அங்குப் போனாலும் –சோஸ்னுதே சர்வான் காமான் -அவன் கல்யாண குணங்களனைத்தையும் முற்றறிவினனான அவனோடு அனுபவிக்கிறான்,’ என்கிறபடியே, குண அனுபவமன்றோ பண்ணுகிறது?
அந்தச் சௌலப்யம் முதலிய நற்குணங்கள் தாம்-ஸ்பஷ்டமாக விளங்கிக் காணப்படுவதும் இங்கே யாகில்,-இனி அங்குள்ளாரும் வந்து அடிமை செய்வதும் இங்கேயாகில், நாமும் அங்கே சென்று புக்கு அடிமை செய்வோம்,’ என்று கொண்டு, பசியுமிருந்து கையிலே சோறும் உண்டாயிருக்குமவன், நீரும் நிழலும் கண்டால் உண்ணப் பாரிக்குமாறு போன்று,-இவரும் அடிமை செய்யப் பாரிக்கிறார்.
‘பாரிக்கிறது என்? அடிமை செய்யவொண்ணாதோ?’ எனின்,
இவ் விஷயத்தில் அடிமை செய்ய ஒருப்படுவார்க்கெல்லாம் உள்ளது ஒன்றாயிற்று முன்பே பாரித்துக் கொண்டு இழியுமது;-அஹம் சர்வம் கரிஷ்யாமி –‘நான் எல்லாக் காலத்திலும் எல்லா அடிமைகளும் செய்வேன்,’ என்பதன்றோ இளைய பெருமாள் படி?-போஜன பரனாய் இருக்குமவன் -உணவையே முக்கியமாகக் கொண்ட ஒருவன், ஊண் அத்தியாயம் படிக்குமாறு போன்று இருப்பது ஒன்றாயிற்று இவருடைய கைங்கரிய மநோ ரதம்.

இவர் சேஷத்வ விரோதியான தேஹ சம்பந்தாதிகளை நிவர்த்திப்பிக்க வேணும் என்று அபேக்ஷிக்க -நிவ்ருத்த விரோதிகரைக் கொள்ளும் –சேஷ வ்ருத்தியைக் கொள்ளுகைக்கு அன்றோ நாம் சந்நிஹிதராயிற்று என்று பெரிய திருமலையில் நிற்கிற நிலையை பிரகாசிப்பித்த ஈஸ்வரனுக்கு
சர்வ பிரகார சேஷ விருத்தியும் பண்ணுகையே சேஷ பூதனுக்கு ஸ்வரூபம் என்று அறுதியிட்டு அதிலே உத்யோகத்தைப் பண்ணுவதாக –
1–கைங்கர்ய பிரதிசம்பந்தியினுடைய சர்வாதிக சேஷித்வத்தையும்
2–சேஷியினுடைய குண விக்ரஹாதி வைலக்ஷண்யத்தையும்
3–சர்வ பிரகார விலஷணனுடைய ஸூரி சேவ்யத்வத்தையும்
4-இப்படி சர்வாதிகனுடைய சீலாதிசயத்தையும்
5–ஸீலவானுடைய போக்யதையையும்
6–போகார்த்தமான ஆஸ்ரயண சவ்கர்யத்தையும்
7–அவன் நிற்கிற திருமலை தானே பரம சாம்யப்ரதம் என்னும் இடத்தையும்
8–அது தன்னை அனுபவிக்கவே பிரதிபந்தகம் ஸ்வயமேவ நிவ்ருத்தமாம் என்னுமத்தையும்
9–அந்த தேச ஸம்பந்தத்தாலே தேசிகனான ஈஸ்வரனும் அநிஷ்ட நிவர்த்தகனானான் என்னுமத்தையும்
10–அவன் தேசமான திருமலை தானே பரம ப்ராப்யம் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து –
ஏவம் வித தேச வர்த்தியான ஈஸ்வரன் பக்கல் கைங்கர்யமே ஸ்வரூப அனுரூப புருஷார்த்தம் என்று உத்யுக்தராகிறார் –

முதற் பாட்டில், திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எல்லாத் தேசத்திலும் எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் எத்தகைய அடிமைகளும் செய்ய வேணும் என்று விரும்பினார்;
இரண்டாம் பாட்டில், ‘அது ஒரு தேச விசேடத்திலே போனால் பெறுமதன்றோ?’ என்ன,
‘அங்குள்ளாரும் இங்கே வந்து அடிமை செய்கிற தேசமன்றோ? நமக்கு இங்கே பெறத் தட்டில்லை,’ என்றார்;
மூன்றாம் பாட்டில், ‘நிறைவாளர்க்குத் தன்னைக் கொடுத்தவன் குறைவாளர்க்குத் தன்னைச் தரச் சொல்ல வேண்டுமோ?’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘அவர்களுக்குத் தன்னைக் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ, எனக்குங்கூடத் தன்னைத் தந்தவனுக்கு?’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘எனக்குத் தன்னைத் தந்தான் என்றது ஓரேற்றமோ, என்னிலும் தண்ணியாரைத் தேடிக் கிடையாமல் நிற்கிறவனுக்கு?’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘இவ் வடிமையிலே இழிய, விரோதிகளும் தன்னடையே போம்’ என்றார்-
ஏழாம் பாட்டில், ‘இக் கைங்கரியத்தைத் திருமலை யாழ்வார் தாமே நமக்குத் தருவர்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘அத் திருமலையாழ்வார் தாமே நம் விரோதிகளைப் போக்கித் தம்மையும் தருவர்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘திருமலை யாழ்வார் எல்லாம் வேண்டுமோ நமக்குப் பேற்றினைத் தருகைக்கு? அவருடைய சம்பந்தமுடையார் அமையும்,’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘சேஷிக்கு உத்தேஸ்யமாகையாலே அடியர் ஆனார் எல்லாரும் திருமலை யாழ்வாரை அடைமின்,’ என்றார்;
முடிவில், பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

——-

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே
.–3-3-1-

கழிந்த காலத்தில் இழவு நெஞ்சிற்படாதபடி மறப்பிக்கையே யன்றோ உள்ளது?-உடனாய் –
காலமெல்லாம் வேண்டினதைப் போன்று, தேச-அனுபந்தமும் – சம்பந்தமும் அபேக்ஷிதமாயிருக்கிறது காணும் இவர்க்கு.-இளைய பெருமாள் படை வீட்டிலும் அடிமை செய்து வன வாசத்திலும் அடிமை செய்தால் போலே.-மன்னி – சர்வேஸ்வரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக் கொண்டிருந்தாலும், படிக்கம் குத்து விளக்குப் போலே அவ்வளவிலும் நின்று அந்தரங்கமான வ்ருத்திகளை – அடிமைகளைச் செய்ய வேண்டும்.-ஆழ்வார் திருவரங்கப்பெருமாளரையர் இத்திருவாய்மொழி பாடப் புக்கால், ‘ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம்’ என்று இங்ஙனே நெடும்போது எல்லாம் பாடி, மேல் போக மாட்டாமல், அவ்வளவிலே தலைக் கட்டிப் போவாராம்.வழுவிலா அடிமை செய்ய வேண்டும் –அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று.-எல்லா அடிமைகளும் நானே செய்ய வேண்டும்-ஓரடிமை குறையிலும் உண்டது உருக் காட்டாது இவருக்கு–அநுஷ்டான பர்யந்தமாக வேணும்,’ என்பார், ‘செய்ய’ என்கிறார்.-கைங்கரிய மநோ ரதமே பிடித்து இவர்க்கு உத்தேஸ்யமாயிருக்கிறது ஆதலின், ‘செய்ய வேண்டும்’ என்கிறார்.நாம் –தம் திருவுள்ளத்தையும் கூட்டி ‘நாம்’ என்கிறாராதல்;-அன்றி, கேசவன் தமர்க்குப் பின்பு இவர் தாம் தனியரல்லாமையாலே திருவுள்ளம் போலே யிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக்கொண்டு, ‘நாம்’ என்கிறாராதல்.-அவன் தனக்குக் கலவிருக்கையான கலங்காப் பெரு நகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பைதிருவேங்கடத்து எழில் கொள் சோதி –‘அடிமை கொள்ளுகைக்குப் பாங்கான நிலம் இது,’ என்று அவன் வந்து வசிக்கிற தேசம்.-எழில் கொள் சோதி-அசன்னிஹிதனே -தூரத்திலுள்ளவனே-யாகிலும், மேல் விழ வேண்டும்படி வடிவழகு இருத்தலின், ‘எழில் கொள் சோதி’ என்கிறார்.

வானார் சோதியையும்-நீலாழிச் சோதியையும்-வ்யாவர்த்தித்து -வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு ‘வேங்கடத்து எழில் கொள் சோதி’ என்கிறார்.
வானார் சோதி, பகல் விளக்குப்பட்டிருக்கும்:-நீலாழிச் சோதி கடல்கொண்டு கிடக்கும்;
வேங்கடத்து எழில்கொள் சோதி, குன்றத்து இட்ட விளக்காயிருக்கும்;
வேங்கடமேய விளக்கே’யன்றோ? அந்நிலத்தின் தன்மையாலே அழகு நிறம் பெற்றபடி.

தெழி குரல் அருவி – கம்பீரமான ஒலியையுடைத்தான அருவிகளையுடைய. திருஅருவியின் ஒலியும் கூடக் கொள்ளத் தக்கதாயிருக்கிறது இவர்க்கு, அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே. இந்த ஒலி, இவர்க்குக் ‘கைங்கரிய ருசியுடையார் அடிமை செய்ய வாருங்கோள்’ என்றாற்போலே இருக்கிறது.

எந்தை –விரூபனே -அழகில்லாதவனே-யாயினும் விடவொண்ணாதபடியிருக்கும் –
பிராப்தி -சம்பந்தத்தைத் தெரிவிக்கிறார்.-இனி, ‘சௌலப்யத்தாலும் அழகாலும் தம்மைத் தோற்பித்த படியைத் தெரிவிக்கிறார்’ எனலுமாம்.-தந்தை தந்தைக்கு –-பரம சேஷி –
எல்லார்க்கும் முதல்வன் 

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்னுமிதனால், சதுர்த்தியில் -நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகிறது;
‘நாம்’ என்னுமிதனால், -பிரணவ ப்ரதிபாத்யமான -பிரணவத்தாற்சொல்லப்படுகின்ற இவ்வாத்துமாவினுடைய சொரூபத்தைச் சொல்லுகிறது;

தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு’ என்றதனால், நாராயண பதத்தின் பொருளை அருளிச்செய்கிறார்;
சௌலப்யமும் வடிவழகும் ஸ்வாமித்துவமும் எல்லாம் – நாராயண பதத்திற்குப் பொருள்.
பிராப்த விஷயத்தில் செய்யும் கைங்கரியமே பிராப்யமாகும்.

(‘பிராப்த விஷயத்தில் கைங்கரியமிறே ரசிப்பது’ (முமுக்ஷூப்படி, 173.)பிராப்தவிஷயம் – வகுத்த விஷயம். பிராப்யம் – பலம்.
ஆக, ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருமந்திரத்தில் ‘ஓம் நாராயணாய’ என்ற பதங்களின் பொருள் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டன;
இங்குச் சொல்லப்படாத ‘நம’ பதத்தின் பொருளை ‘வேங்கடங்கள்’ என்ற பாசுரத்தில் அருளிச்செய்வர்.)

—————

எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே
.–3-3-2-

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை –-‘அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே’ என்கிறபடியே, ஸ்வ -ஆத்ம- ஸ்வரூபத்தை நிரூபிக்கப் புக்கால், அத் தலையே பிடித்து இவ் வளவும் வர நிரூபிக்குமாறு போலே யாயிற்று,பர ஸ்வரூபத்தை நிரூபிக்கப் புக்காலும் இத் தலையே பிடித்து அவ்வளவும் செல்ல நிரூபிக்கும்படி.-தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம்

கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங் கொடுத்துக் கொண்டு நிற்கிற சௌசீல்ய குணத்தை அநுசந்தித்து-நைந்தவர்களாய்ப் பின்னர் க்ரமத்தில் -முறைப்படி -பரிமாற அருச்சிக்க -மாட்டாது அடைவு கெட்டுச் சிந்தா நிற்பர்கள்.-இங்குள்ளார் அங்கே சென்று மேன்மையைக் கண்டு-அநந்யார்ஹர் – அவனுக்கே அடிமைப் படுமாறு போன்று,அங்குள்ளார் இங்கே வந்து அந் நீர்மை கண்டு ஈடுபடும்படி.

இங்கு, ‘ஆளியும் கோளரியும் பொன் மணியும் முத்தமும் பூமரமும்’ ஆனவற்றுக்குத் தன்னைக் கொடுத்துக் கொண்டு நிற்கையாலே புகழ்க்கு முடிவு இல்லை யாதலின், ‘அந்தமில் புகழ்’ என்கிறது.-ஆக,ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அசவ் ‘ஈஸ்வரன் சமஸ்தமான கல்யாண குணங்களையும் இயல்பாகவே வுடையவன்,’ என்றபடி.-இதனால், ஸ்ரீவைகுண்டத்தில் புகழ்க்கு முடிவு உண்டு போலும்!’ என்றவாறு.

கார் எழில் – ஸ்யாமளமான வடிவு அழகு -நிர்க் குணன் -குணமில்லாதவன் ஆனாலும் விட வொண்ணாத படியாயிற்று வடிவழகு-அண்ணல் –வடிவழகு இல்லை யானாலும், விட வொண்ணாதபடி யாயிற்றுச் சம்பந்தம் -பிராப்தி -இருப்பது.

———-

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண் இல் தொல்புகழ் வானவர் ஈசனே
. –3-3-3-

வானவர் ஈசனே–குணங்களை அனுபவிப்பித்து நித்ய ஸூரிகளை யுடைய ஸத்தையை நோக்கிக் கொண்டு செல்லுகிறவன். என்றது,-‘கண்ணழிவற்ற ருசி யுடையாரைத் தன்னை யனுபவிப்பிக்கும்’ என்கை.-நிரபேஷ மானவர்களுக்குத் தன்னைக் கொடுத்துக் கொண்டிருக்கிறவன், சாபேஷரான நமக்குத் தரச் சொல்ல வேண்டுமோ?’மாயன் –ஸுந்தர்ய- அழகு சீலம் முதலியவைகளால் -ஆச்சர்ய பூதன் -ஆச்சரியங்களை,யுடையவன்.‘அவற்றில் ஓர் அம்மான் பொடி சொல்லிக் காணீர்,’ என்ன, சொல்லுகிறார் மேல்:

அணி கொள் செந்தாமரைக் கண்ணன் – ‘இக் கண்ணழகு உடையவனுக்கு வேறொரு ஒப்பனை வேண்டா,’ என்னும்படி யிருப்பதாய்,-தனக்குத்தானே ஆபரணமாய், -விகாசம் மலர்த்தி செவ்வி குளிர்த்தி நாற்றங்களாலே தாமரையை ஒரு வகைக்கு ஒப்பாம்படி சொல்லலாயிருக்கிற கண்ணழகையுடையவன்.-இது, முதலுறவு செய்யுங் கண்களைச் சொல்லுகிறது.-செங்கனி வாய் – அந் நோக்குத் தப்பினார்க்கும் தப்ப வொண்ணாதபடி யிருக்கிற -ஸ்மிதம் -புன்முறுவலைச் சொல்லுகிறது. –-ஸ்மிதமே- முறுவலாலேயாயிற்று இவரை எழுதிக்கொண்டது.-கரு மாணிக்கம் – அந்த ஸ்மிதத்திலே -முறுவலிலே அகப்பட்டாரை மீளாதபடி ஆழங்காற்படுத்தும் வடிவழகைச் சொல்லுகிறது.

‘அணிகொள் செந்தாமரைக் கண்ணன்’ என்றதனோடு,-‘செங்கனிவாய்’ என்றதனோடு,
‘கருமாணிக்கம்’ என்றதனோடு,-‘தெண்ணிறை நீர்ச்சுனை’ என்றதனோடு-வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு, அதுவும் அந்நிலத்தில் உள்ளதொன்றாகையாலே.

——————-

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே
.–3-3-4-

ஸ்ரீவைகுண்ட நாதனுக்கு ஏற்றம் சொல்லுகிறேனாக மயங்கினேன்;
கானமும் வானரமும் வேடுமானார் ஓலக்கம் கொடுக்க நிற்கிறவனுக்கு நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க நிற்கிறது ஓர் ஏற்றமோ?-முடி சூடி அரசு செலுத்தும் நிலை, திருவேங்கடத்தில்; தட்டியில் இருக்கும்-நிலை, பரமபதத்தில். தட்டி – சிறைக்கூடம்.திருவேங்கடத்தானுக்கு ஏற்றஞ்சொல்லலாவது யாங்ஙனம்?’ எனின்,
‘‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்னவேண்டும்;

அமர்யாத ந்ருபசு-என்னுமா போலே-‘இது ஆளவந்தார் அருளிச்செய்ததேயாகிலும், நான் என் வாயால் இப்பாசுரம் சொல்லமாட்டேன்,’ என்பராம் அனந்தாழ்வான்.
(அழகர், கிடாம்பியாச்சானை அருள்பாடிட்டு, ‘நீ ஒன்று சொல்’ என்ன, ‘அபராத ஸஹஸ்ர பாஜனம்’ என்று தொடங்கி ‘அகதிம்’ என்ன, நம் இராமாநுஜனையுடையையாயிருந்து வைத்து, அகதி என்னப் பெறாய்’ என்று அருளிச்செய்தாராம்)
ஆக, ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்றதனால்,- அநாத்ம- ஆத்மாவிற்குத் தகுதியில்லாத குணங்களே என் பக்கல் உள்ளன; ஆத்ம குணங்கள் ஒன்றுமில்லை என்பதனைத் தெரிவித்தபடி.
‘என் தண்மையும் நிறைவு இல்லாமையுமன்றோ நான் இவ்வார்த்தை-ஈசன் வானவர்க்கு என்பன் – சொல்லிற்று என்கிறார்’ என்பராம் பிள்ளை திருநறையூர் அரையர்.

வானவர்க்கு ஈசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி –நித்யஸூரிகளுக்கு ஈசனாயிருந்தான்; என் பக்கலிலே பற்றை-சங்கத்தை – வைத்தான்.
அவர்களுக்கு-சத்தை – இருப்பு உண்டாகைக்காக அவர்களோடே கலந்தான்:
தன்-சத்தை – இருப்பைப் பெறுகைக்காக என்னோடே வந்து கலந்தான்;
பிராதம்யத்துக்கும் பழிக்கும் செங்கல் சீரைக்கும் ஜீவனம் வைப்பாரைப் போன்று அவர்கள் பக்கல்; நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு’ என்கிறார்.

இனி,என்கண் பாசம் வைத்த’ என்பதற்கு, தன் பக்கலிலே சங்கம் உண்டாம்படி -பண்ணினான் -‘
என்னிடத்தில்-ஸ்வ விஷய பாசத்தை – தன் சம்பந்தமான அன்பை உண்டாக்கினான்’ என்று பொருள் கூறுவாருமுளர்.
இனி,அஹ்ருதயமாக இருக்கச் செய்தே – மனத்தொடு படாமலிருக்கவும் மனசுக்காகக் கலந்தானாயிருத்தலன்றி, ச ஹ்ருதயமாக -மனம் முன்னாகக் கலந்தானென்னுமிடத்தை வடிவிற்பிறந்த புகர் காட்டாநின்றதாதலின், ‘சுடர்ச்சோதி’ என்றும்,
கலந்த பின்னர்-உஜ்வலனாய் முன்பில்லாத புகரெல்லாம் வடிவிலே உண்டாயிராநின்றதாதலின், ‘பரஞ்சுடர்’ என்றும் அருளிச்செய்கிறார் -‘பிராட்டியோடே கலந்தாற் போலே பேரொளிப் பிழம்பாய் இராநின்றான்’ என்றபடி.-

————-

சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?
–3-3-5-

எனக்குத் தன்னைத் தந்தான்’ என்கிற இதுதான் ஓர் ஏற்றமோ, என்னிலும் தாழ நின்றாரைத் தேடிப் பெறாதே -தேடித் கொண்டே நித்ய வாசம் செய்கிறவனுக்கு–?’ என்கிறார் இப் பாசுரத்தில்.-எல்லா உலகும் தொழும்-ஆதி மூர்த்தி-மிகத் தாழ்ந்தவரான தாம் தொழுத போதே எல்லா உலகங்களும் தொழுதமை விழுக்காட்டாலே பெறுதும்;-எல்லா உலகுந் தொழும்’ என்று அடைகின்ற பொருள்களைக் கூறி, ‘ஆதிமூர்த்தி’ என்று அடையக் கூடிய பொருளை அருளிச் செய்தார்.-காரண வஸ்துவே உபாஸ்யம்- ஸ்ருதி-நம்பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் மடத்திலே எழுந்தருளியிருக்கச்செய்தே, ‘ஈஸ்வர பரத்துவத்தை அநுசந்திக்கையாவது,-ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கை’என்றருளிச்செய்தாராம்,
ஆச்சான் பிள்ளை, நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரை ‘பகவத் குணங்களையெல்லாம் சேர அனுபவிக்கலாந்துறை யாது?’ என்று கேட்டருள,‘ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கவே எல்லாக் குணங்களையும் அநுசந்தித்ததாம்’ என்றருளிச்செய்தாராம்.

வேதியர் முழு வேதத்து அமுதத்தை-அந்தணர் மாடு -தனம் –ஸ்வரூபத்தில் இனிமை-ரச மயமாய் இருக்கிறது-குணத்தில் இனிமை.-வேதைஸ்ஸ சர்வைர் அஹம் ஏவ வித்ய -என்கிறபடியே வேதைக சமதி கம்யனாய்-பரம போக்யனானவனை –-தீது இல் சீர்த் திருவேங்கடத்தானை –
குற்றமற்ற குணங்களையுடையவனை. சீருக்குத் தீதாவது, அடைகின்ற அடியார்களுடைய குணாகுண நிரூபணம் பண்ணுகை. என்றது,–அங்கீகரிக்குமிடத்தில், ‘இன்னார் ஆவர், இன்னார் ஆகார்’ என்று ஆராயும் குற்றமின்றியிருத்தல்’ என்றபடி.

1-ஈசன் வானவர்க்கு –
2-என் கண் பாசம் –
3-எல்லா உலகுந்தொழும்-
4-தீதில் சீர்–அவசர ப்ரதீஷனாய் நிற்கிறான் -ஒன்றை விட ஒன்றுக்கு ஏற்றமே –

ஷத்ரியன் -திருவேங்கடமுடையான் ரஷ்ய வர்க்கம் கிடைக்குமா என்று பார்த்து நிற்கிறான்
ஸ்ரீ வைகுண்ட நாதனும் – தேடி இங்கே வந்ததால்- ஷத்ரியன் -நாமும் கைங்கர்யங்கள் தேடி தேடி ஷத்ரியன் ஆவோம் –

—————–

வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே
.–3-3-6—

மேல், திருமந்திரத்தின் பொருளை அருளிச்செய்தார்; அங்கு அருளிச்செய்யாததான ‘நம:’ பதத்தின் பொருளை இப்பாசுரத்தில் தாங்கள் தங்களுக்கு நன்று என்று இருந்த அடிமைகளை செய்ய அமையும் –.கைங்கர்யத்திலே ஈடுபடவே -கர்மங்கள் எல்லாம் தன்னடையே நசிக்கும் –கைங்கர்யம் செய்து கொண்டே குணானுபவமும் பண்ண வேண்டும் -என்றபடி –வேங் கடங்கள்-கடம் என்று கடனாய் ருண த்ரயத்தை சொல்லுகிறது-மெய் மேல்வினை முற்றவும்,- தேஹ உபாதிகமான கர்மங்களும் அடங்க நசிக்கும் –என்று ஆளவந்தார் –உத்தர பூர்வாகங்கள் நசிக்கும் இது மெய் -என்று எம்பெருமானார்-வேங்கடத்து உறைவார்க்கு – சதுர்த்தியில் பிரார்த்தனையைச் சொல்கிறது-நம –-தனக்காய் இருக்கும் இருப்பை கழிக்கிறது

‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிற-அதிகாரியைக் குறித்துச் சொல்லுகையாலே. அதிகாரி வைலக்ஷண்யமும் –வ்ருத்தியின் -செய்கையின் வைலக்ஷண்யமும் தோன்றும்படி –-‘தாங்கள் தங்கட்கு’ என இங்ஙனே ஊன்றிச் சொல்லுமாம் அனந்தாழ்வான்.

அது சுமந்தார்கட்கு – பெறுகிற பேற்றின் கனத்தையும் இவனுடைய முயற்சியின் சிறுமையையும் பார்த்து, ‘இப்பேற்றுக்கு இவன் இம்மலையைச் சுமவானோ?’ என்பாரைப் போன்று-‘அது சுமந்தார்கட்கு’ என்கிறார்.- இது, பெறுகிற பேற்றின் கனத்தையும் பகவானுடைய திருவருளையும் அறிந்திருக்கிற இவர் தம் கருத்தாலே சொல்லுகிறாராதல்;
இவன் பக்கலுள்ளதைக் கனக்க நினைத்திருக்கும் இறைவன் கருத்தாலே சொல்லுகிறாராதல்.-நிர்ஹேதுக கிருபாவான் அன்றோ -நம சொல்லவும் வேண்டுமோ-

———-

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே
.–3-3-7-

‘ஒரு கருமுகை மாலையேயாகிலும் இதைக் கண்டருளக்கடவனே! சாத்தி யருளக்கடவனே! நம்மை விசேட கடாக்ஷம் பண்ணியருளக்கடவனே!’-என்றிருக்கிற இவர்கள் அன்பின் மிகுதியாலே கனத்துத் தோன்றுகிறதாதலின், ‘சுமந்து’ என்கிறார். பக்த்யா பிரயச்சதி –
சாது ராமானுஜாச்சார்யர் ஜீயர் ஸ்வாமிகள் -நமக்காக ஆழ்வார் அருளிச் செய்தார் -என்பாராம்-இன்றும் ஜீயர் ஏகாங்கி -பொட்டு சுமந்து போகிறார்கள் -அகோராத்ரி கைங்கர்யம் செய்து கொண்டே இருக்கிறார்கள்-
இனி, அன்புடையவன் இட்டதாகையாலே சர்வேசுவரன் தனக்குக் கனத்துத் தோன்றுமாதலின், ‘சுமந்து’ என்கிறார் என்னுதல்.-ஸ்ரீ புருஷோத்தமமுடையானுக்கு அரசகுமாரன் செண்பகப் பூக்கொண்டு அணிந்தபடியை நினைப்பது.‘துயரறு சுடரடி தொழுது எழு’ என்கிற தமது வாசனை அவர்களுக்கும் உண்டு என்று இருக்கிறாராதலின் ‘நமன்று எழும்’ என்கிறார்.

தம்மையேயொக்க அருள் செய்வர்,-ஸ்வேன ரூபேண -ஸ்வரூப ஆவிர்பாவம் –-சொரூபத்திற்குத் தக்கதான மோக்ஷத்தைத் தரும்–திருமலைதானே தன்னோடு ஒத்த பேற்றைப் பண்ணித் தரும்,’ என்னுதல்; என்றது,-‘திருமலையாழ்வார்தாம் திருவேங்கடமுடையானைத் தம் திருமுடியிலே எழுந்தருளுவித்துக்கொண்டன்றோ இருப்பது?-அப்படியே ‘நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து’ என்று இவர் வேண்டிக்கொண்ட பேற்றைத் திருமலையாழ்வார் தாமே தந்தருளுவர்,’ என்றபடியாம்-கு மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.-

————-

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே
.–3-3-8-

கீழே இஷ்ட பிராப்தி சொல்லி இங்கே அநிஷ்ட நிவ்ருத்தி சொல்லிற்று-ஏந்திக் காத்தவன்’ என்றும், ‘தொழ ஓயும்’ என்றும் முடிக்க. ‘ஒன்றுமே’ என்பதில் ஏகாரம் பிரிநிலை.-சேஷிக்கு உத்தேச்யம் -சேஷ பூதனுக்கும் உத்தேச்யம் என்றவாறு –ஏந்தி -அநாயாசேன -இன்றும் ஏந்திக் கொண்டு சேவை சாதித்து -கோவர்த்தன கிரிதாரானாக-இதனால், துக்கத்தைப் போக்கும் சாதனம் மலையே என்பதனைத் தெரிவித்தவாறு.-ஒன்றுமே தொழ – ‘ஒன்றையுமே வணங்க. உள்ளே எழுந்தருளி யிருக்கிறவன் தானும் வேண்டா,
திருமலையாழ்வார் தாமே அமையும்,’ என்பார், ‘ஒன்றுமே’ என்கிறார். -ஸ்ரீ சைலமே ரஷகம் என்றவாறு –
நம் வினை ஓயும் – ‘பெற வேண்டும் பேற்றினைப் பெற்றிலோம்’ என்கிற துக்கத்தைப் போக்கும்’ என்னுதல்;
‘வேங்கடங்கள்’ என்னும் பாசுரத்திற்கூறிய, அடிமை செய்வதற்குத் தடையாக உள்ளனவற்றைப் போக்கும் என்னுதல்.

———

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.
–3-3-9-

விரோதியான பாவங்களைப் போக்கி வீடு பேற்றினைத் தருவதற்குத் திருமலை யாழ்வாரெல்லாம் வேண்டுமோ?-திருமலை யாழ்வாரில் ஒரு பகுதி அமையாதோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்.-‘ஒரு பகுதி’ என்றது, திருவேங்கடமுடையானை;- ‘வட மா மலையுச்சியை’ -7-10-3-என்பர் திருமங்கை மன்னன்.-சரம பர்வதத்திலே இன்னும் நிற்கிறார் -கோல் விழுக்காட்டாலே இவனாக அமைந்தது -என்கிறார் –முதலடியில், ‘ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு’ என்றவர், மீண்டும், ‘பிணி வீயுமாறு செய்வான்’ என்பதற்குக் கருத்து என்?’ என்னில்,-‘இவனுடைய இங்குத்தை துக்கத்தைப் போக்குகைக்காக’ என்கை;

அவன் கால் காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும்’-திருமேனியில் கால் பகுதியைக் காண -நாலு பகுதியும் போகும் -மூப்பு -இறப்பு -பிறப்பு -பிணி இவை எல்லாம் போகுமே-வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு –-இவை இரண்டும் உடலுக்கும் உபலக்ஷணமாய், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்றபடி.
வாயுள் வைக்கையாவது, ‘ஓவாது உரைக்கு முரை’-முதல் திருவந்தாதி -95- என்கிறபடியே உரைத்தல்.
மனத்துள் வைக்கையாவது, மறவாதிருத்தல். இப்படி -கரணங்களுக்கு-உறுப்புகட்கு -அடைத்த காரியங்களைக் கொள்ளவே,-சொரூபத்திற்கு விரோதியாய் வந்தேறியானவை தாமாகவே போம்.

————

வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–
3-3-10-

தேவி சுமித்திரை.-ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் -கைங்கர்யமே என்பதை காட்டி அருளுகிறாள் ஸ்ரீ சுமித்ரா தேவி –-‘அப்படியே, இவ்வாத்துமாவையும் இங்கு வைத்தது திருமலைக்குப் போகைக்காக ஆயிற்று,’பைத்த பாம்பு அணையான் திருவேங்கடம் – தன்னுடைய பரிசத்தாலே விரித்த படங்களையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய சர்வேசுவரன் அப் படுக்கையைக் காட்டிலும் விரும்பி வசிக்கின்ற தேசம். இனி, ‘பைத்த பாம்பு அணையாம் திருவேங்கடம்’ என்னுதல்;-திருமலையாழ்வார் தம்மைத் திருவனந்தாழ்வானாகவும் சொல்லப்படும்.

———-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே
.–3-3-11-

திருவேங்கடமுடையானை யன்றோ பாடிற்று இத்திருவாய்மொழியில்? மண்தாவிய ஈசனைப் பாடிற்று என்றல் யாங்ஙனம்?’ எனின்,
’கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா!’-பெரிய திரு மொழி -1-10-4- என்றும்,
’மண் அளந்த இணைத் தாமரைகள்’ என்றும், ‘உலகம் அளந்த பொன்னடியேயடைந்து உய்ந்து’ -5-8-9-என்றும் ஆழ்வார்கள் அருளிச்செய்வர்கள்;எல்லாரையும் கிரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும்,
கிரமத்திலே–அடி வைத்த கணக்கிலே -அடியார்களைப் படிப்படியாக -என்றுமாம் –
வரையாமல் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற படியாலும் திருவேங்கடமுடையானை ஸ்ரீவாமனனாகச் சொல்லப்படும்.-இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழு விலா வாட் செய்ய மாலுக்கு -எழு சிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே புகழ்
———-23-

இத்தால் –
ஒழிவில் காலம் எல்லாம் -என்கிற முதல் பாட்டின் அர்த்தத்தை
அருளிச் செய்த படி
மேல்
சிந்து பூ மகிழும் -என்று காயிக கைங்கர்யத்தையும்
தெண்ணிறைச் சுனை நீர் திருவேங்கடம் –எண்ணில்-என்று மானசமான அடிமையையும்
ஈசன் வானவர்க்கு என்பன் –என்று -வாசிகமான அடிமையையும் என்று சொல்லி
வேங்கடத்து உறைவார்க்கு நம -ஸ்வ போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தி சொல்லி
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் -என்று
அத்தக் கைங்கர்யத்தை திருமலை ஆழ்வாரே தந்து அருளுவார் -என்றும்
திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே -என்று
அந்த கைங்கர்ய விரோதி நிவ்ருதியையும் திருமலை ஆழ்வாரே பண்ணி அருளுவர் என்றும்
இப்படி முதல் பாட்டின் அர்த்தத்தை விவரித்து அருளின இவைகளும் இவர்க்கு விவஷிதம் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–ஸ்லோகங்களும் விளக்கமும்–

January 26, 2026

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
————

ஸ்ரீ லக்ஷ்மி நாதாக்ய சிந்தௌ சடாரிபு ஜலதஹா ப்ராப்ய காருண்ய நீரம்!
நாதா த்ரவப் க்ஷிஞ்சன் ததானு ரகுவரம் போஜ ஷக்சுர் ஜலாப்யம்!!
கத்வதாம் யாமுநாக்யம் சரிதாமத் யதீந்த்ராக்ய பாத்மாகாரேந்திரம்!
ஸம்பூர்ய ப்ராணி சாஸ்யே ப்ரவஹத பஹூதா தேசிகேந்த்ர பிரமேகைஹி.”!!

ஸ்ரீ லட்சுமி நாதன் ஒரு பெரிய கடல்.  நம்மாழ்வார் ஒரு மேகம்.
இந்த கருமேகம் ஆழ்வார் கடலில் இருந்து தண்ணீரை (ஞானம்/அறிவு) எடுத்து மலைகளில் மழையாக (பாசுரங்கள்) பொழிந்தார்.
மலை என்பது ஸ்வாமி நாதமுனிகல் என்று குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நீர்வீழ்ச்சிகளாக நீர் விழுகிறது,
இந்த நீர் வீழ்ச்சி ஸ்வாமி உய்யக்கொண்டார் மற்றும் ஸ்வாமி மணக்கால் நம்பி என்று குறிப்பிடப்படுகிறது,
இந்த நீர் அருவி ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெரிய ஆற்றை அடைந்தது.
அப்போது ஏரியில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஏரி ஸ்வாமி ராமானுஜரால் குறிப்பிடப்படுகிறது.
ஏரியில் இருந்து 74 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

74 ஸ்லோகங்கள் ஸ்வாமி ராமானுஜர் உருவாக்கிய 74 சிம்ஹாசனங்களுக்குச் சமம்.

வீராணம் ஏரியில் 74 கடைமடைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஏரியின் 74 கடைகளும் ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மஸ்னாதிபதிகளை
சித்தரிப்பதாக நமது பூர்வாச்சாரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்

ஸ்வாமி மணவாள மாமுனிகள் இப் பூலோகத்தில் 74 ஆண்டுகள் வாழ்ந்தார்,
ஸ்வாமி பிறந்தது 1370 ஆம் ஆண்டு ஐப்பசி மூலம்,
அவதார சமாப்தி 1443 ஆம் ஆண்டு மாசி கிருஷ்ண பக்ஷ துவாதசியில்.

ஆழ்வார்கள் ஆச்சார்யாக்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் பற்றிய அனைத்து விவரங்களையும் நமக்குத் தரும் ஸ்ரீ மாமுனிகளின் ஒரு படைப்பான ஸ்ரீ உபதேச ரத்தினமாலாவும் 74 ஸ்லோகங்கள் கொண்டது(இங்கு கவனிக்க வேண்டியது, ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஸ்வாமி ராமானுஜருக்கு மரியாதை அளித்து 73 பாடல்களை மட்டுமே இயற்றியுள்ளார் என்பதும்,ஆனால் அவரது சிஷ்யரும் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான ஸ்ரீ எறும்பியப்பா 74 வது பாடலை இயற்றினார்

ஸ்வாமி ராமானுஜ @ 74 வயதில் திருக்குறுங்குடி நம்பிக்கு ஆச்சாரியார் ஆனார்-
ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பி ” ஸ்ரீ வைஷ்ணவ நம்பி” என்று அறியப்பட்டார்

———–

ஸ்ரீ யதிராஜ ஸப்ததி -மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்ரீபாஷ்யம் விரசய்ய ஸம்ய மிவரோ ஜித்வா ஸ்வயம் வாதிந :
பாஹ்யாம்ஸ்சாபி குத்ருஷ்டிகாந் புவிபுந : பாஷ்ய ப்ரதிஷ்டாஸயா |
ஸ்ரீமத் வேங்கடநாத தேஸிக சிரோ ரத்நாத்மநா வீர்பபௌ
இத்யேவம் ச வதந்தி ஹந்த !க்ருதிந :த்ரைகாலிக ஜ்ஞாநி ந : || –5-

ஸ்ரீ உடையவர், ஸ்ரீபாஷ்யத்தை அருளி அவைதிக மதங்களையும் ,பிற மதங்களையும் வாதிட்டு வென்றார்.-இவ்வுலகில், ஸ்ரீபாஷ்யம் நிலை பெற வேண்டும் என்கிற க்ருபையால்,அந்த ஸ்ரீ எம்பெருமானாரே மறுபடியும், ஸ்ரீ வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்று, முக்காலத்தையும் உணர்ந்த ஞாநிகள் கூறுகிறார்கள்.
ஸ்வாமி தேசிகன், எம்பெருமானாரின், அவதாரம் என்பதை, ஸ்வாமியின் திருக்குமாரரான ஸ்ரீ நயினாராசார்யர் – ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களத்தில் புகழ்கிறார் —

வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் |
யதீந்த்ராம் ஸோதவேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் || –6

ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானுடைய அவதாரமோ?
அவரது திருமணி ஆழ்வாரின் ( கண்டை–கண்டாமணி )அவதாரமோ?
அல்லது, எம்பெருமானார், இப்படி அவதரித்தாரா ? என்று, ஸ்வாமி தேசிகனைத் தரிசிப்போர்
பலபடியாக யூகித்துப் புகழும் ஸ்வாமி தேசிகனுக்கு மங்களம் —–என்கிறார்

ஸ்ரீ பாஷ்யகார : பந்தாந மாத்மநா தர்ஸிதம் புந : |
உத்தர்த்து மாகமதோ நூந மித்யுக்தாயாஸ்து மங்களம் || –7-

உலகுக்கு முன்பு வெளிப்படுத்திய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை, மீண்டும் உலகில் தழைக்கச் செய்ய அவதரித்த யதிராஜரோ இவர் என்று, வித்வான்களெல்லாம் வியந்து பாராட்டும் வேதாந்தாசார்யருக்கு மங்களம் என்கிறார்

லக்ஷ்மீ பதேர் யதி பதேஸ்ச தயைக தாம்நோ :
யோஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் |
ப்ராச்யம் ப்ரகாஸியது வ :பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர ஸார : || கத்ய பாஷ்யத்தில், ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்

வாத்ஸல்ய குண பரனான லக்ஷ்மிபதிக்கும், யதிபதிக்கும்( யதிராஜர் ) உலகத்தாருக்கு நன்மையை அளிக்கும் பொருட்டு, எந்த ஸம்வாதம் முன்பு நடந்ததோ, த்வய மந்த்ரமான அந்த ஸம்வாதம் ,
முன்னோர்கள் உபதேசித்த அந்தப் பரம ரஹஸ்யத்தை நமக்கு வெளிப்படுத்துவதாக என்கிறார்.
( பங்குனி உத்ர நந்நாளில் யதிராஜர், திருவரங்கத்தில், திவ்ய தம்பதிகளிடம் சரணாகதி செய்ததையும்,
அப்போது நடந்த ஸம்வாதத்தையும் குறிப்பிடுகிறார் )

பத்யு ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாத கோடிரயோ
ஸம்பந்தேன ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ் ததாந்யாந்குருந் |
ஸுத்தம் ஸம்ஸ்ரித பாதராயண தநோர் நாராயணஸ்யோக்திபி :
ஸ்ரீமாந் வேங்கடநாயக : ஸ்திதிபதம் நிர்மாதி நீதே :ஸுபம் || ந்யாய பரிசுத்தியில் , ஸ்வாமி தேசிகன் யதிராஜரை நமஸ்கரிக்கிறார்

ஸ்ரீ யதிராஜரை நமஸ்கரித்து, அவருடைய திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் ,
பெருமைகளையும் பாக்யங்களையும் பெற்ற ஆசார்யர்களை நமஸ்கரித்து ,
பாதராயணராகிய ஸ்ரீ வேத வியாஸரை சரீரமாகக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீஸுக்திகளைக் கொண்டு, ஸ்ரீவேங்கடநாதன் ( ஸ்வாமி தேசிகன் ), ந்யாய பரிஸுத்தியை எழுதுகிறார் என்கிறார்.

காதா தாதாகதாநாம் களதி கமநிகா காபிலீ க்வாபி லீநா
க்ஷீணா காணாத வாணீ த்ருஹின ஹரதிர: ஸௌரபம் நாரபந்தே |
க்ஷாமா கௌமாரிலோக்திர் ஜகதி குருமதம் கௌரவாத் தூரவாந்தம்
காஸங்கா ஸங்கராதோர் பஜதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம் || -9. தத்வமுக்தா கலாபத்தில் , ஸ்வாமி தேசிகன் சொல்கிறார் –

யதிராஜர், வேதங்களாகிற பத்ர வேதியை அடைந்த போது,புத்த மதம் நழுவுகிறது ;
கபில மதம் ஓடி ஒளிகிறது ;கணாமதம் அழிகிறது;
ப்ரஹ்மாவால் தோற்றுவிக்கப்பட்ட யோக மதமும், பசுபதி மதமும் மணம் அற்றதாகிறது;
குமாரில மதம் நசிக்கிறது;குருமதம் , பெருமைக்கு வெகு தொலைவில் எறியப்படுகிறது.
இப்படியிருக்க, சங்கரர் முதலானவர்களின் மதங்களின் நிலையைப் பற்றிச் சந்தேகம் தேவையா ?

உக்த்யா தனஞ்ஜய விபீஷண லக்ஷ்யயாதே
ப்ரத்யாய்ய லக்ஷ்மண முநேர் பவதா விதீர்ணம் |
ச்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவந் மயி ரங்கநாத ||ந்யாஸ திலகத்தில், யதிராஜருடைய ஸம்பந்தத்தால் ,செருக்கு வந்ததாகச் சொல்கிறார்.

பெருமை மிகு திருவரங்கச் செல்வனே ! அர்ஜுனனுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் ,
விபீஷணணுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் சொல்லி, நம்பச் செய்து,
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உன்னால் அளிக்கப்பட்ட வரத்தைக் கேட்டு அறிந்து,
அவரது ஸம்பந்தத்தால் செருக்கு நிறைந்த எனக்கு, எப்போதும் வரம் தந்து அருள்வாயாக !
( வரம் யாதெனில் )
ஸ்ரீ பாஷ்யகாரரின் திருவடிகளிலோ அவரது சிஷ்ய பரம்பரை ஆசார்யர்களிடமோ ,
ப்ரபத்தியாகிய பரண்யாஸத்தைச் செய்தவர்கள் எல்லாருக்கும், பரமபதம் அளிப்பதே
( இன்னும் பல )

ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத : |
பூயாஸ் த்ரைவித்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் || -சங்கல்ப ஸுர்யோதயத்தில் சொல்கிறார்–யதி சிஷ்யனுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்

நடாதூர் அம்மாள், ஸ்வாமி தேசிகனைப் பால்ய வயதில் அனுக்ரஹித்த ச்லோகம் .
ஸ்வாமி தேசிகன் , சிறு குழந்தையாகத் தன்னுடைய மாதுலர் ( மாமா) அப்புள்ளார் ( ஆத்ரேய ராமாநுஜர் )கூடவே, நடாதூரம்மாளின் காலக்ஷேபத்துக்கு, கச்சி வாய்த்தான் மண்டபத்துக்குப் போன போது,
நடாதூரம்மாள், குழந்தையான ஸ்வாமி தேசிகனின் திருமுக காந்தியை–முக விலக்ஷணத்தைக் கடாக்ஷித்து ,அநுக்ரஹித்து,ஆசீர்வாதமாக அருளிய ச்லோகம் .
இதைத் தான் இயற்றிய சங்கல்ப ஸுர்யோதய நாடகத்தில்,ஸ்வாமி தேசிகன் , யதி (ராஜன் ) தனக்கு ( சிஷ்யன் )ஆசீர்வாதமாகச் சொன்னதாக, ஒரு காக்ஷியை ஏற்படுத்துகிறார்.
இது, ஸ்வாமி தேசிகனுக்கு, யதிராஜரிடம் உள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.

சதாச்சார்ய உபதேச முகமாய் ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களை அதிகரித்து -பல முறை ஸ்ரீ பாஷ்ய பிரவசனம் நடத்திச் சாத்திய ஸ்ரீ வேதாந்தாச்சார்யார் ஸ்ரீ பாஷ்யகாரரான எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள பக்திக்கு போக்கு வீடாக ஸ்வாமியை ஸ்துதிக்க இழிந்து குரு பரம்பரா பூர்வகமாக ஸ்ரீ பகவத் ராமானுஜர் உடையவும் –
அவர் ஸ்ரீ ஸூக்திகள் உடையவும் ப்ரபாவங்களை பரக்கப் பேசி அனுபவிக்க உபக்ரமிக்கிறார் – முதல் ஒன்பது ஸ்லோகங்களால்-அடைவே எம்பெருமான் -பிராட்டி -சேனை முதலியார் -ஆழ்வார் -நாத முனிகள் -முதல் பெரிய நம்பி வரையில் உள்ள ஆச்சார்யர்களை அடி பணிகிறார்


1-கம் அபி ஆத்யம் குரும் வந்தே கமலா க்ருஹமேதி நம்
ப்ரவக்தா சந்தசாம் வக்தா பஞ்ச ராத்ரஸ்ய ஸ்வயம் –

வேதங்களை பிரமனுக்கு கற்பித்தவன்
பாஞ்சராத்ர ஆகமத்தை இயற்றியவன்
பெரிய பிராட்டியாருடன் இல்லறத்தில் உள்ளவன்
முதலாச்சார்யன்
இப்படிப்பட்ட பெரிய பெருமாளை அடியேன் வணங்குகிறேன்

முதன் முதலில் வேதங்களை வெளிப்படுத்தி பிரகாசிப்பித்தவனும் –
ஸ்ரீ பாஞ்ச ராத்ம ஆகமத்தை அருளிச் செய்தவனும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்கிறபடியே -பிரதம ஆச்சார்யனும்
ஸ்ரீயபதியுமான சர்வேஸ்வரனை அடி பணிகிறேன் என்று பகவத் வந்தனம் பண்ணுகிறார் –

கம் அபி ஆத்யம் குரும்-பிரதமம் -ஆதி -குரு-ஓதாதே ஓதுவிக்கும் ஒருவன் தானே
-கம் அபி யாரோ ஒருவன் -பிரசித்த விசேஷணம் -அத்யந்த ஸ்துதி வாக்கியம்
வந்தே-வந்தனம் க்ரியா பதம்– ஞான அநு கூல வியாபாரம் -ஸூ அதிக உத்கர்ஷம் –
கமலா க்ருஹமேதி நம் -சர்வ ரக்ஷகன் -க்ருஹஸ்தன் இவன் -பெரிய பிராட்டியார் -சப்த லோகீ-ஸமஸ்த லோகங்களுக்கும் க்ருஹம் வளப்படுத்துபவன் -க்ருஹமேதி -ஸ்ரீ யபதி-பிராபப்யமும் ப்ராபகமும்
ஆச்சார்ய க்ருத்யம் சொல்கிறது மேல்
ப்ரவக்தா சந்தசாம் வக்தா பஞ்ச ராத்ரச்ய ஸ்வயம் –
சந்தஸ் -வேதம் –
வக்தா -சொல்கிறவன்
ப்ரவக்தா -பிரகர்ஷம் -பிரவசனம் -கால ஷேபம் -வசனம் ஸ்வ தந்திரமாக பேசுவது
தனது சங்கல்பத்துக்கு பரதந்த்ரனாக உள்ளான் –
வேதம் நித்யம் -அப்வருஷேயம் -என்பதும் அவன் சங்கல்பம் தானே –
வேதம் ஈஸ்வரன் பரஸ்பர நிரூபகம் -அவனால் செய்யப் பட்டது என்று சொல்லக் கூடாதே -சுருதி பிரமாணம் –ஸ்வ அபிப்ராயத்தால் பாஞ்சராத்ர ஆகமம் அருளி -என்றவாறு –இவனே வக்தா -வேதத்துக்கு ப்ரவக்தா -என்றவாறு —

ஆத்யம்-பூர்வம் வேதம் சொல்வதையே இங்கு தேசிகன்
கள்ள வேடத்தை -இத்யாதி நாஸ்திக சாஸ்திரங்களும் இவனே பிரவர்த்தா –
கம் அபி -இதம் இத்தம் என்று சொல்ல முடியாத ப்ரஹ்மம் -வாசா அகோசரத்வம்
ஸ்ரீ வராஹ நாயனார் பூமிப் பிராட்டிக்கு உபதேசம் -அஹம் ஸ்மராமி
ஸ்ரீ கீதாச்சார்யனாகவும் உபதேசம் –
அக்னி தேவதை உபதேசம் -கொஞ்சம் விட்டு ஆச்சார்யர் மூலம் முறைப்படி உபாசித்து பெற்ற வித்யையே நிலைத்து நிற்கும் –
குரு சப்தம் அந்தகார நிரோதத்வம் –
லஷ்மீ நாத ஸமாரம்பாம் போல் இங்கும்

வந்தே -மங்களார்த்தம் -நமஸ்கார ரூபம் இது
கமலா க்ருஹமேதி நம் -கிருஹ லஷ்மீ இல்லாத வீடு சோபை இழக்கும் அன்றோ –பத்நியா ஸஹ –
வேறு ஒரு கார்யமார்த்தமாக எழுந்து அருளும் பொழுது பிரார்த்திக்காமல் அந்தப்புர வாசத்திலே –
மிதுனத்தில் -பிரார்த்திக்க வேண்டுமே
பிரமேயமான அவனைப் போல் பிரமாணமும் நித்யம்
கல்பம் தோறும் நான்முகனுக்கும் மகரிஷிகளும் இவனே வேத உபதேசம்
தேன ப்ரோக்தம் -பிரவசனம் செய்து அருளுகிறார் –

பாஞ்ச ராத்ரம் இருளைப் போக்கி -கன இருள் அகன்றது
ஐவருக்கு
ஞான பாத யோக பாத கிரியா பாத –இத்யாதி ஐந்தும்
ப்ரஹ்ம ராத்ரம் இந்த்ர ராத்ரம் இத்யாதி ஐந்தும்
கால பஞ்சக கர்தவ்யம் வைதிக கால கர்தவ்யங்கள்
ரிஷிகள் மூலம் வெளியிடாமல் தானாகவே வெளியிட்டு அருளி -ஸ்வயம் -அருளிச் செய்து
ஆத்ய குருவாக வந்தனம் இதில்

வேதங்களைப் ப்ரகாசப்படுத்தி, தன் சரணாரவிந்தங்களை அடைவதற்கான உபாயமான ,
ஆராதனம் செய்யும் க்ரமத்தைத் தானே பாஞ்சராத்ர ஆகமம் மூலமாக உபதேசித்தவன்;
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரோடு எப்போதும் பிரியாத திருமார்பினன்;
திவ்ய தம்பதிகள் சேஷியாய்,த்யாநத்துக்கு சாக்ஷியாய்,சாக்ஷாத்காரத்துக்கு இலக்காக இருக்கும் லக்ஷ்மிபதி ;
இவனே ஆதிகுரு ; முதல் ஆசார்யன்; பகவத் கீதை மூலமாக, கர்ம,ஞான, பக்தி,ப்ரபத்திகளை உபதேசித்த ஆதிகுருவை வணங்குகிறேன் .

ஸ்வாமி தேசிகன், தன் மாதுலர் ஆத்ரேய இராமாநுஜர் என்கிற அப்புள்ளாரிடம் , வேதங்கள்,வேதாந்தங்கள், சகல சாஸ்த்ரங்கள் எல்லாவற்றையும் கற்றுத் தெளிந்தவர் .இவற்றுக்கு அடிப்படை, யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள், ஸ்ரீபாஷ்யம், முதலியன.இவை யாவும், பகவான் முதலாக, ஸ்ரீபாஷ்யகாரர் வரை ,எண்ணெய் ஒழுக்கு போல,உபதேச பரம்பரையில் வந்தவை என்பதை மனத்தில் தெளிந்து,முதல் ஆசார்யனான பகவானைத் துதிக்க நா எழாமல், அவனது கல்யாண குணங்களில் ப்ரமித்து , திளைத்து,பிரமனுக்கு வேதத்தை உபதேசித்த வெள்ளைப் பரிமுகனாக பகவான் நின்று,தனக்கு உபதேசித்ததை எண்ணி,நெகிழ்ந்து, முதல் ஸ்லோகத்தில், ஆதி குருவான—ப்ரதம ஆசார்யனான, பகவானை வணங்குகிறார்.

2-சஹ தர்ம சரிம் சௌரே சம் மந்த்ரித ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞாத நிக்ரஹாம்

இந்த உலகிற்கு எந்த வகையில் நன்மை செய்யலாம் என்று பெரிய பெருமாளுடன் எப்போதும் ஆலோசனை செய்பவள்
அருள் என்பதே வடிவம் கொண்டதோ என்னும்படி உள்ளவள்
அன்பின் மிகுதியால் தண்டனை என்பதையே அறியாதவள்
பெரிய பெருமாளுக்கு ஏற்றவளாக இருப்பவள்
இப்படிப்பட்ட பெரிய பிராட்டியாரை அடியேன் வணங்குகிறேன்-

எப்போதும் எம்பெருமானுடன் சகல லோகங்களுடைய ஷேமத்தையே நோக்கிக் கொண்டு இருப்பவளும் –
நம்மிடம் நிக்ரஹம் என்பதையே அறியாதவளும்
அருளே வடிவு எடுத்தவளாய் -ஜகத் ரக்ஷணத்தில் பகவானுக்கு சக தர்ம சாரிணியுமான பிராட்டியை அடி பணிகிறார் –

சஹ தர்ம சரிம் சௌரே-விஷ்ணு பத்னீ இவளுக்கு ஏற்றம் -ஸ்ரீ அவனுக்கு ஏற்றம் -சர்வ சேஷிக்கு –சௌரே-ஸ்ரேய பூதன்-பரத்வம் ஸுலப்யம் இரண்டும் சித்தம் –
ஸூரசேனன் -வாஸூ தேவர் உடைய தந்தை -குலத்தையும் காட்டும்
சம்மந்த்ரித ஜகத்திதாம் –மந்த்ரித-ஆலோசனம் -ஜகத் ஹிதம் –சம் யக்-ஏக அபிப்ராயம் ஒரே நினைவு இருவருக்கும் –
அனுக்ரஹ மயீம்
வந்தே -வணங்குவோம்
நித்யம் அஜ்ஞாத நிக்ரஹாம் -நிக்ரஹ பிரகாரம் அறியாதவள் -அறிந்தும் அறியாதவள் -அவ்விஞ்ஞாதா அவன்
ஆஸ்ரித அபராதங்களை அறியாதவன் -சகஸ்ராம்பூ -அறிந்தவன் -சரணாகத வாத்சல்யன்-போக்யமாக கொள்பவன்
-காணாக் கண் இட்டு இருப்பவன் -இவள் நித்யம் -எல்லார் விஷயத்திலும் எப்பொழுதும் -அவன் கதாசித் இவளுக்கு நித்யம் என்றவாறு –

உபதேச பரம்பரையில் -புருஷகார பூதை -பிராட்டி விஷயம் லோக ரக்ஷணத்துக்கு
அவனுடன் -மந்த்ர ஆலோசனை செய்பவள்
பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
மா மகள் மன்னிய -கமலா க்ருஹ
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே
ஸ்ரீய பதித்வம் -மிதுனம் உத்தேச்யம்

வேதங்கள் -கரண களேபரங்கள் கொடுத்து அருளினாலும் -வேதங்களுக்கு அபார்த்தம் சொல்லி –
தர்ம கதி மீறி அதோ கதியாக விழ
ஹே காந்த ஆழ்வாரைக் கொண்டு வேதார்த்த யதார்த்த ஸ்தாபனம் செய்து அருளுவதற்காக
பிராட்டி விஷ்வக்சேனருக்கும்
விஷ்வக்சேனர் மூலம் ஆழ்வாருக்கும் உபதேசித்து –
பகவத் ஸஹ ஏகி பூய ஜகத் ஹித மந்த்ர ஆலோசனை -பெருமாளும் பிராட்டியும் ஆச்சார்ய பீடத்தை அலங்கரித்து
ஜகத்தை உஜ்ஜீவிப்பித்து அருளுகிறார்கள்
வாத்சல்யம் விஞ்சி பர துக்க அஸஹிஷ்ணுத்வம் அனுக்ரஹம் மட்டுமே -அஞ்ஞாதம் அறியாமல் பிராட்டி-

திவ்ய தம்பதியரை, “கமலா க்ருஹ மேதிநம்” என்று நமஸ்கரித்தவர், இந்த ஸ்லோகத்தில், பிராட்டியை ஸேவிக்கிறார்.
ஆசார்ய பரம்பரையில், பகவானுக்கு அடுத்தது, பிராட்டி. இந்தக் க்ரமத்தில் , பிராட்டியை நமஸ்கரிக்கிறார்.
பிராட்டி, கருணையே வடிவானவள். ஜீவாத்மாக்களுக்கு, நன்மைகளைச் செய்வதிலேயே நாட்டம் கொண்டவள்.
சரணம் என்று வந்தவர்களுக்கு,அபயம் அளித்து, ரக்ஷிக்கும் பகவானுக்கு, ஸஹதர்ம சாரிணியாக,கணமும் பிரியாமல் ,கூடவே இருப்பவள்.

பகவான், பிராட்டியிடம் சொல்கிறாராம்.
உண்டியே, உடையே என்று உலக சுகங்களில் மயங்கி ,
துன்பத்தில் உழலும் ஜீவாத்மாக்களைத் திரும்பவும் நம்முடைய வைகுண்டத்துக்கு ஏற்ற,நீ தூண்டினாய்.
அதனால்,ப்ரஹ்மாவைப் படைத்து,வேதங்களை உபதேசித்து, ப்ரஹ்மா மூலமாக சரீரம்,
பஞ்சேந்த்ரியங்களை , ஜீவன்களுக்குக் கொடுத்து, அவர்கள் வேதங்களை அத்யயனம் செய்து, தர்ம மார்க்கத்தில் இழிந்து
பக்தி, ப்ரபத்தி இவைகளை அநுஷ்டித்து,பாப, புண்யங்களை ஒழித்து, இங்கு வருவார்கள் என்று ஏற்படுத்தினேன்.
ஆனால், வேதங்களுக்குத் தவறான அர்த்தங்களைச் சொல்பவர்கள் வார்த்தைகளில் மயங்கி இருக்கிறார்கள்.
அவர்களைத் திருத்த திருக்குருகூரில் அவதரித்துள்ள சடகோபனுக்கு, நாமே நேரில் சென்று , தத்வங்களை உபதேசித்து ,
அவர் மூலமாக, ஜீவாத்மாக்களைத் திருத்தலாமா —- என்று கேட்டாராம்.

அதற்கு, பிராட்டி,
நாமே நேரில் சென்று, நாங்கள் தான் ஜகத் காரணம்,நாங்களே சேஷிகள் என்று சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டார்கள்;
யானையின் மூலமாக, இன்னொரு யானையை வசப்படுத்துவது போல
நமது ஸேநாதிபதியான விஷ்வக்ஸேனரை அனுப்பி,
சடகோபனுக்கு உபதேசிக்கச் செய்து, சடகோபன் மூலமாகவே ஜீவாத்மாக்களைத் திருத்தலாம் என்று யோசனை கூறினாளாம்.

உடனே பகவான், பிராட்டியிடம்,
“நீயே விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து, அவரைக் குருகூர் சடகோபனிடம் அனுப்பி,
தத்வார்த்தங்களைச் சொல்லுமாறு அறிவுரை கூறுவாயாக “ என்றாராம்.

இப்படி, ஸேநாதிபதியான விஷ்வக்ஸேநருக்கு தத்வங்களை உபதேசித்து,
பெரிய உபகாரம் செய்த பெரிய பிராட்டியை நமஸ்கரிக்கிறேன்

—————————————————

3 -வந்தே வைகுண்ட சேநாநயம் தேவம் ஸூத்ரவதி சகம்
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே விஸ்வம் ஏதத் வ்யவஸ்திதம்

வந்தே வைகுண்ட சேநாநயம் -சேனாபதி ஆழ்வாரை சேவிக்கின்றேன்
தேவம் ஸூ த்ரவதி சகம் -ஸூ த்ரவதி சமேத
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே -செங்கோலின் அக்ர
விஸ்வம் ஏதத் வ்யவஸ்திதம்-ஸமஸ்த பிரபஞ்சம் வியவஸ்திதம் ஆகுமே
ஸாத்யா சந்தி தேவர் -பூஜ்யர் -நித்ய ஸூ ரிகள் -சேஷாசயனர் -மந்த்ர ஆலோசனை -பிராட்டி இவருக்கு உபதேசம் –

யாருடைய கையில் உள்ள பிரம்பின் நுனி அசைவதைக் கண்டு இந்த உலகம் இயங்குகிறதோ
யாரிடம் இந்த உலகம் கட்டுப்பட்டு உள்ளதோ
யார் ஒருவர் ஸூத்ரவதி என்பவளுக்குக் கணவனோ
பெரிய பெருமாளின் சேனைக்குத் தலைவராக உள்ளவர் யாரோ
அப்படிப்பட்ட விஷ்வக் சேனரை அடியேன் வணங்குகிறேன் –

குரு பரம்பரையில் மூன்றாவது ஸ்தானம் –
இவர் பிரம்பின் கீழே தானே அவனும்
ஸூ த்ர வதி பிரே ரிக்க -ஸ்ரீ நம்மாழ்வாருக்கு உபதேசம்
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பெருமாள் இடம் செல்லும் பொழுது நான்கு படை தலைவர் மனைவிகள்
அவர்களைப் பிரேரித்தது போலே -என்பர் வியாக்யாதாக்கள் –
வைகுண்ட சேனாபதி என்று சேனாபதி வழக்கமாக சொல்லும் சுப்ரமண்யனை வியாவர்த்திக்கிறது –

ஸூத்ரவதி தேவியின் நாயகனான எந்த விஷ்வக் சேனரின் பிரம்பின் -செங்கோலின் ஆஞ்ஜையில் இந்த உலகம்
நிலை நிற்குமோ அந்த சேனை முதல்வரை அடி பணிகிறேன்

விஷ்வக்ஸேநர் என்கிற சேனைமுதலியார், நித்யஸுரிகளுக்கும் முக்தர்களுக்கும் , பரமபதத்தில் தலைமையேற்று ஒழுங்குபடுத்துபவர்.
நித்யஸுரிகள் ப்ரக்ருதி சம்பந்தமே இல்லாமல்,பரமபதத்தில் எப்போதும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு ,பரம ஆனந்தத்துடன் இருப்பவர்கள்.
முக்தர்களோ பக்தி அல்லது ப்ரபத்தியை அனுஷ்டித்து ப்ரக்ருதியின் தொடர்பை அறுத்து,பரமபதத்தை அடைந்து,
திவ்ய தம்பதிகளுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்து ஆனந்திப்பவர்கள் .
இந்தப் ப்ரக்ருதி , பகவானுக்கு லீலா விபூதி. இங்கு கோடிக்கணக்கான அண்டங்கள் உள்ளன;
ஒவ்வொரு அண்டத்திலும், 14 உலகங்கள் உண்டு. யாவும், திவ்ய தம்பதியரின் ஆணைக்கு உட்பட்டு, செயலாற்றுகின்றன.
திவ்ய தம்பதியருக்கு அடுத்தபடியாக, கண்காணிப்பவர், விஷ்வக்ஸேநர் .
எனவே, இவை அனைத்தும், இவரது ஆளுகைக்கு உட்பட்டது எனலாம்.
இவர், ஸுத்ரவதியின் நாயகர். ஸுத்ரவதி, கணவரான சேனை முதலியாரை விரைவாகச் சென்று,
குருகூர் சடகோபனுக்கு ,உபதேசிக்குமாறு தூண்டுகிறாளாம்.
அதனாலேயே, ஸுத்ரவதி ஸமேத ஸ்ரீ விஷ்வக்ஸேநர் என்று ஸ்வாமி தேசிகன் ஸேவிப்பதாகச் சொல்வார்கள்.

ஸ்ரீ சடகோபனின் உபதேசத்தால் ஜீவாத்மாக்கள் நற் கதி பெற்று ஸ்ரீ வைகுண்டம் சென்று விட்டால் ,ஹவிர்பாகம் கிடைக்காமல்
போய் விடுமே என்று தேவர்கள் இடையூறு செய்ய நினைத்தாலும்
ஸேனை முதலியாரிடம் உள்ள பயத்தால், அப்படிச் செய்ய நடுங்குவார்களாம்.
அப்படிப்பட்ட ஸுத்ரவதீ ஸமேத ஸ்ரீவிஷ்வக்ஸேனரை நமஸ்கரிக்கிறேன்

————

4-யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம்
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே

யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம் -சரஸ்வதி சம்பந்தம் பெற்ற திருவாய் மொழி
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் -வேதங்கள் இளைப்பாற
சடாரிம் தமுபாஸ்மஹே -வந்தே -ஒருமையில் கீழ் -இங்கு குழாங்களாக உபாசிக்கிறோம் நம்மையும் சேர்த்து

யஸ்ய சாரஸ்வதம் -வாக் தேவதா –
ஸ்ரோதோ -பிரவாஹம்
வகுளா மோத வாசிதம் -வகுளம் ஆமோத வாசித்தம்-மகிழம் பூ பரிமளம் நாள் கமழ் -மகிழ் மாலை மார்பினன் –
அஸ்மாத் குல தானம் போக்யம் – வண் குருகூர் நகரான
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் –அலம் போதுமானவை –விஸ்ரமம் ஒய்வு -தத்வ ஹித புருஷார்த்தம் -ஆழ்வார் நன்றாக வெளியிட சுருதிகள் ஒய்வு எடுத்தனவாம் –
சடாரிம் தமுபாஸ்மஹே -ப்ரீதி பூர்வகமாக த்யானம் செய்து அனுதியானம் உபாசனம் –

அவருடைய திருமேனி மட்டும் அல்லாது அவரது வாக்கின் மூலம் வெளிவரும் சொற்களிலும் மகிழம் பூ மணம் சூழ்ந்துள்ளது
அத்தகைய அவரது வாக்கானது வெள்ளம் போன்று ஓடி வர அதில் வேதங்கள் தங்கள் களைப்பை ஆற்றிக் கொள்கின்றன
இப்படிப்பட்ட நம்மாழ்வாரை நாம் உபாஸிப்போம்-

எந்த நம்மாழ்வாரின் மகிழ மலர் மணம் கமழ்கின்ற திவ்ய வாக்கின் பிரவாஹம்
வேதங்களுக்கு இளைப்பாற இடமாகுமோ
அந்த சடகோபனை அடி பணிகிறேன் என்று பிரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரைப் போற்றுகிறார் –

மகிழ் மலர் மணம் வீசும் திரு வாய் மொழி -திருத் துழாய் மணம் -பரஸ்பர சேர்த்தி
அல்பர் கண்டு பயந்த வேதங்கள் -வேத நெறியை அலங்கோலம் பண்ணுகிறார்கள் -அந்த பயம் நீங்கி இளைப்பாறப் பெற்றன –
உபாஸ் மஹே -இடைவிடாத ஸ்ம்ருதி -நாம் அனைவரும் கால ஷேபம் திருவாய் மொழியிலிலே செய்யக் கடவோம்

ஸ்வாமி தேசிகன் , இந்த ஸ்லோகத்தின் மூலம் ஸ்ரீ சடகோபரை நமஸ்கரிக்கிறார் .
நம்மாழ்வார் என்கிற சடகோபன், திருவவதாரம் கலியுகம் தொடங்கி 46 வது நாள் என்பர்.
இவர் பகவானுடையவும் ஸேனை முதலியாருடையவும் அம்சம் என்றும் சொல்வர்.

அவதரித்து, 12 நாட்கள் வரை பால் கூட அருந்தாது, கண்கள் திறக்காது இருந்ததால் பெற்றோரான காரியாரும் , உடையநங்கையும்
ஆழ்வார்திருநகரியில் நித்ய வாஸம் செய்யும் பொலிந்து நின்ற பிரான் சந்நிதியில் இருத்தி,”மாறன் ” என்று பெயர் சூட்டினர். குழந்தை, சந்நிதியிலிருந்து தவழ்ந்து சென்று அருகில் இருந்த புளியமரத்தின் அடியில் யோகாசனத்தில் அமர்ந்தது.
இப்படியே,16 ஆண்டுகள் கழிந்தன. அப்போது,விஷ்வக்ஸேநர் , பெரிய பிராட்டியின் கட்டளைப்படி
அங்கு எழுந்தருளி மாறனுக்கு “பஞ்ச ஸம்ஸ்காரங்களை”ச்செய்து, மந்த்ரங்கள்,ரஹஸ்யார்த்தங்கள் என்பன எல்லாவற்றையும் உபதேசித்தார்.

மாறன், சிறுவயதிலேயே ,”சடவாயு”வை ஜயித்ததால் ,”சடகோபன் “ என்றும்,
ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், மகிழம்பூ மாலையை அனுக்ரஹிக்க ,அதை அணிந்துகொண்டதால்,“வகுளாபரணர் ” என்றும்
தன்னுடைய பாசுரங்கள் போன்றவற்றின் மூலமாக ,பிற மதங்களைக் கண்டனம் செய்ததால் “பராங்குசர் “ என்றும் ,
திருக்குருகூரில் அவதரித்ததால் “குருகைப்பிரான் “ என்றும் ,இவருக்குத் திருநாமங்கள் உண்டு.

இவருக்கு முன்பாகவே ,த்வாபர யுகத்தின் முடிவில் ,அவதரித்த மதுரகவிகள் , வடதேச யாத்திரையில் அயோத்தியில் இருந்தார்.
ஒருநாள் இரவில், தெற்கே உள்ள எம்பெருமானை வணங்க,தெற்கு நோக்கிக் கைகூப்பியபோது, தெற்கே ஒரு பேரொளியைக் கண்டார்.
அதிசயித்து, அந்தப் பேரொளியைத் தேடித் தெற்கே வந்தவர் , குருகூர்க் கோயிலில் அந்தப் பேரொளி உட்புக,
இவரும் பின்தொடர்ந்து வந்து, அங்கு புளியமரத்தடியில், யோகத்தில் இருந்த சடகோபரை ஸேவித்தார்.

அவரோ,கண் திறந்து பார்த்தாரில்லை. மதுரகவிகள், கைதட்டி ஓசை எழுப்ப, சடகோபர் ,கண்விழித்து, மதுரகவிகளைப் பார்த்தார்.
மதுரகவி, சடகோபரைக் கேட்டார்:–
“செத்தத்தின் வயிற்றில், சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ? “
அதாவது, ப்ரக்ருதிக்கு உயிரில்லை; உயிரில்லாத ப்ரக்ருதியான சரீரத்தில், அணுவான ஜீவாத்மா புகுந்தால்,
எதை அனுபவித்துக் கொண்டு, எங்கு இன்பம் உண்டு என்று எண்ணி இருக்கும் ?

ஸ்ரீ சடகோபன் பதிலிறுத்தார் :–
” அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” அதாவது, சரீரத்தில் உள்ள ஐம்புலன்களால் கிடைக்கிற
இன்ப துன்பங்களை நுகர்ந்து, இன்புற்றேன் என அங்கேயே கிடக்கும்.

ஸ்ரீ மதுரகவிகள் சந்தோஷித்து, ஸ்ரீ சடகோபரையே ஆசார்யராக இருக்குமாறு பிரார்த்தித்தார்
சடகோபரும் அப்படியே அருளி, மதுரகவிகளுக்குத் தத்வங்களை உபதேசித்து, தான் இயற்றுகிற பாசுரங்களைப் பட்டோலை செய்யுமாறு நியமித்து,
திருவிருத்தம் (100),திருவாசிரியம் (7) பெரிய திருவந்தாதி (87),.திருவாய்மொழி (1102) ஆக , 1296 பாசுரங்களைச் சொல்ல,
மதுரகவிகள், இவற்றைப் பட்டோலைப் படுத்தினார்.

பகவான் அளித்த மகிழம்பூ மாலையை அணிந்ததால், திருமேனி மாத்ரமல்ல, ஆழ்வாரின் ஸ்ரீஸுக்திகளிலும் மகிழம்பூ மணம் —
அதாவது, ப்ரஹ்ம கந்தம் —அதாவது பகவானின் லீலைகள்,தத்வங்கள் ஆகிய மணம் வீசுகிறதாம்.

பிற மதஸ்தர்களின் குதர்க்க அர்த்தங்களால் வேத மாதா களைத்துப் போய் ,ஆழ்வாரின் திருவாய்மொழியில் ச்ரம பரிகாரம் செய்து கொள்கிறாளாம் .
ஆழ்வார், சடவாயுவை ஜயித்தது போல,அல்ப அறிவாளிகளின் வீண் வாதங்களையும் ஜயிக்கிறாராம் .
இப்படி, பகவானை இடைவிடாது த்யானித்து, அவனது சேர்க்கையை , ஆழ்வார் பெறுகிறார்.
இதனால்,ஆழ்வாரின் மகிழம்பூ மணம் பகவானுக்கும், பகவானின் திருத் துழாய் மணம் ஆழ்வாருக்கும் பரவி உள்ளது . இப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வாரை நமஸ்கரிக்கிறேன் .

பகவானை இடைவிடாது த்யானித்து அனுபவிக்கும் ஆழ்வாரை,ஸ்வாமி தேசிகன் விடாமல் த்யானம் செய்வதால் ,
ஸ்வாமி தேசிகனிடமும் ,அவருடைய ஸ்ரீஸுக்திகளிலும் ,மகிழம்பூ வாசனையும் , துளசி வாசனையும் சேர்ந்து வீசுகிறது.
இது ரஸா னுபவம்.

———————

5–நாதேந முனிநா தேந பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதாம் –

சர்வ வேதங்களின் உட்ப்பொருளான பகவத் தத்வம் எந்த பெரிய முதலியாருக்கு கையிலங்கு நெல்லிக் கனியாக இருக்குமோ –
அந்த ஸ்ரீ மன் நாத முனிகளே எனக்கு ஸ்வாமியாக இருந்து என்னை ஆட் கொள்ள வேண்டும்
என்று ஸ்ரீ மன் நாத முனியை அடி பணிகிறார் –

வேதங்களில் பொதிந்துள்ள உண்மைகள் அனைத்தும் அவரிட்மன் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக நிற்கும் நிலை பெற்றது
அப்படிப்பட்ட நாதமுனிகள் மூலம் நான் உயர்ந்த நல்லவரை அடைவேன் ஆவேன்

நாதமுனியை எனது நாதராக (எஜமானர்) நான் வைத்திருக்கிறேன்,
யாருடைய கைகளில் வேதங்களின் அடிப்படையான கருவானது புரிதலின் தெளிவைப் பெற்றதோ –
இதை ஹஸ்தாஅமலகா என்று அழைக்கலாம்,
இந்த நாதத்தைக் கொண்டு ஒருவர் கூறுவது போல், நான் ” அநாத ” (ஸ்வாமி இல்லாமல் )  இருக்க முடியாது.

நாதேந முனிநா தேந -நாத -முனி இரண்டு பதமாக கொண்டு சிஷ்யர் ஸுசீல்யம் -நாத சப்தம் -அத -அப்புறம் சொல்லாமல் -உடனே உபதேசித்து அருளி
முனி மனா சீலன் -திவ்ய சரணார விந்தங்கள் அனைவரது தியானம்
பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம்–நிகமம் வேதாந்தங்கள் –நிகமே பாவம் நைகமிகம் -வேதாந்த சித்தம் -தத்வ த்ரயம்
-போக்தா போக்யம் பிரேரிதா-உபய நியாந்தா -ஈஸ்வரன் –
ஹஸ்தாமலகதாம் கதாம் -ஹஸ்தம் -நெல்லிக்கனி -சம்சயம் விபர்யயம் இல்லாமல் பிரத்யக்ஷமாக காட்டி அருளி –
-ஆத்ம பிரமாணம் மங்களாசாசன ஸ்லோகம் -ஆளவந்தார் -பரமதங்களை கண்டனம் பண்ணி –
ததீயம் மதம் ஸூ ஸ்தாபனம் -சாஸ்வத மதம் -யோக மஹிமை தத்வ த்ரயம் பிரத்யக்ஷம் ஜீயாத்

வீரநாராயணபுரத்தில் ( தற்போதைய காட்டுமன்னார்குடி ) ஆனி அநுஷத்தில் அவதாரம்.பால்யத்திலேயே யோகத்தில் இழிந்தவர்.
திருக்குடந்தை ஸ்ரீ ஆராவமுதன் ஸந்நிதியில்
ஆராவமுதே, அடியேனுடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் !கண்டேன் எம்மானே !
என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தை,பக்தர் சிலர் பாடக்கேட்டு,

அவர்களை , எல்லாப் பாசுரங்களையும் சொல்லுமாறு,
நாதமுனிகள் வேண்ட,

அவர்கள் இதற்குமேல் தெரியாதென்று சொல்ல,

திருவாய்மொழி முழுவதையும் தெரிந்துகொள்வதற்காக ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளினார்.
அங்கும், ஒருவருக்கும் திருவாய்மொழி முழுவதும் தெரியவில்லை.
அச்சமயத்தில் ஒரு பக்தர், ஆலோசனைப்படி, மதுரகவிகளின் “கண்ணிநுண் சிறுத்தாம்பு “–11 பாசுரங்களை உபதேசமாகப் பெற்று,
(முழுவதும் ஸ்ரீ நம்மாழ்வாரைப் போற்றும் பாசுரங்கள் ), அவற்றைப் பன்னீராயிரம் தடவை ஆவ்ருத்தி செய்து (ஜபித்து ),
நித்யஸுரியான ஸ்ரீ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து,
அவரை ஆசார்யராக வரித்து,
அவரிடம்,மறைந்துபோன திருவாய்மொழி ,மற்ற ப்ரபந்தங்கள்
ரஹஸ்யஅர்த்தங்கள்,
ப்ரஹ்ம ஸுத்ரங்கள் எல்லாவற்றையும் உபதேசமாக அடைந்தார்.

ஸ்ரீ நம்மாழ்வார், “பொலிக!பொலிக!பொலிக!” என்கிற திருவாய்மொழியைச் சொல்லிக் கொடுக்கும் போது,
கலியும் கெடும் கண்டுகொண்மின்” என்கிற வாசகத்தால், பின்னாளில் அவதரிக்க இருக்கும் ஸ்ரீ பாஷ்யகாரரான ராமானுஜரின்
அர்ச்சா திருமேனியை”யும் அவருக்கு எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் என்றும் சொல்வர்.

திவ்ய ப்ரபந்தங்களை , மருமான்களாகிய கீழையகத்தாழ்வான் (க்ருஷ்ணன் ), மேலையகத்தாழ்வான்(வரதன் ) இருவருக்கும்,
தாளம் அமைத்துக் கற்பித்தார் .

ஸ்ரீ நம்மாழ்வார் அருள்செய்ய, பகவானுடைய ஸ்வரூபம் , கல்யாண குணங்கள் , நித்ய விபூதி, லீலா விபூதி,
அனைத்தையும் அறிந்து, யோகீச்வரனாக விளங்கினார்.

தன்னுடைய மருமான்கள் மூலமாக, பகவத் விஷயத்தை அனுபவித்து ரஸித்து,பகவானை சரணம் அடைய மிகவும் உதவிய ஸ்ரீமந்நாதமுநிகளை , அவருக்குத் தாஸனாக இருந்து நமஸ்கரிக்கிறேன்.

—————————

6-நமஸ்யாம் அரவிந்தாஷம் நாத பாவே வ்யவஸ்த்திதம்
சுத்த சத்த்வ மயம் சௌரே அவதாரம் இவ அபரம்

எப்போதும் பெரிய முதலியாரைச் சிந்தையில் நிலையாகக் கொண்டு இருப்பவரும் –
சுத்த சத்வ மயனான எம்பெருமானின் அபர அவதாரமோ
என்று அதிசயிக்கும் படியான பிரபாவம் யுடையருமான ஸ்ரீ புண்டரீகாக்ஷரை –
திருவெள்ளறையில் சித்திரை மாத கார்த்திகை திருநக்ஷத்ரத்தில் அவதாரம்.
ஸ்ரீ உய்யக் கொண்டாரை -நமஸ்கரிக்கிறேன் -என்கிறார் –

நாதமுனிகளின் சிந்தனைகளில் எப்போதும் தனது மனதை நிலை நிறுத்தியவர்
தூய்மையாக உள்ள ஸத்வ குணம் மட்டுமே கொண்டவர்
கிருஷ்ணனின் மற்ற ஒரு அவதாரம் போன்று உள்ளவர்
இப்படிப்பட்ட உய்யக்கொண்டாரை அடியேன் வணங்குகிறேன்

நமஸ்யாம் அரவிந்தாஷம்-புண்டரீகாக்ஷர் -நமாமி –
நாத பாவே வ்யவஸ்த்திதம்-நாதஸ்ய பாவ -மநோ வ்ருத்தி விசேஷம் -ஸ்திரமாக உள்ளவர் –
குருகை காவல் அப்பன் – பிணம் இருக்க மணம் சூடுவாரோ – நம்மை உய்யக் கொண்டார் –
சுத்த சத்த்வ மயம் -ஸ்வ பாவமாக -பிராஸூர்யார்த்தம் மயம் -ஆனந்த மயம் போலே -ரஜஸ் தமஸ் இடம் இல்லாதபடி
-அப்ராக்ருதம் -குண சத்வம் -பரமபதத்தில் த்ரவ்யம் -சுத்த சத்வம்
சௌரே அவதாரம் இவ அபரம்-அவன் கல்யாண குணங்கள் திரு மேனி போலே -சுத்த சத்வம் -ஜென்ம கர்ம மே திவ்யம்

————

7-அனுஜ்ஜித ஷமா யோகம் அபுண்ய ஜன பாதகம்
அச்ப்ருஷ்ட மத ராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே

பொறுமைக்கு கொள்கலமாய் எப்போதும் விளங்குபவரும் -சாது ஜன பிரியரும் –
ராக த்வேஷங்களை வென்றவரும் -உயர்ந்த வைராக்ய சீலருமான
ஸ்ரீ ராம மிஸ்ரரை -ஸ்ரீ மணக்கால் நம்பியை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் –

நான்காவது ராமரை –ஸ்ரீ மணக்கால் நம்பியை -நாம் உபாசிப்போம் –

அனுஜ்ஜித ஷமா யோகம் -ஷமா குணம் ஆஸ்ரயமாக-விடாமல் -அனுஜ்ஜிதம் -பச்சை இட்டு ஆளவந்தார்
-சம்பிரதாயத்துக்கு ஆக்கி அருளின –உஜ்ஜித ஷாமா யோகம் பரசுராமர் -பரசுராமனின் வியாவருத்தம்
அபுண்ய ஜன பாதகம் –பெருமாளின் இவருக்கு வியாவிருத்தி-புண்ய ஜன -ராக்ஷசர் -பாதகம் செய்தார் பெருமாள் – –
இல்லாத தோஷத்தை சப்தத்தால் ஏறிட்டு அருளுகிறார் -நைகி நிந்தா நியாயம் இந்த ஸ்லோகம்
அச்ப்ருஷ்ட மத ராகம் தம் -பலராமனின் வியாவருத்தம்
மதம் ராகம் சுரா பானம் பருகி -யாதவர் -பாபம் இல்லையே -யது குலம் -சந்த்ர வம்சர்-க்ஷத்ரியர் -யாதவர் என்றால் இடையர் இல்லை –
ராகவா யாதவீயம் ஸ்தோத்ரம் ராமருக்கும் கிருஷ்ணருக்கும் வேங்கடாத்ரி அருளிச் செய்து உள்ளார்
யாதவர் -இடையர் இரண்டும் கிருஷ்ணன் இரண்டு குலம் –
ராமம் துர்யம் உபாஸ்மஹே -நான்காவது ராமர் –ராம மிஸ்ரர் –

பொறுமை மன அடக்கம் ஆகியவற்றை எப்போதும் கை விடாதவர்
அடியார்களுக்கு எந்தவிதமான தீங்கையும் எண்ணாதவர்
எவ்வித செருக்கும் ஆசையும் அற்றவர்
இப்படிப்பட்ட நன்மையால் நான்காவது இராமர் என்று போற்றப்படும் மணக்கால் நம்பியை நாம் உபாஸிப்போம்
பரசு ராமர் சக்ரவர்த்தி திருமகன் பலராமர் மற்ற மூவர்-

பரசுராமர்- சகிப்புத் தன்மை இல்லாதவர்–பலராமர்–மது அருந்தும் பழக்கமுடையவர்.)

லால்குடிக்கு அருகே உள்ள மணக்கால் க்ராமத்தில் மாசிமாத மகத்தில் அவதாரம்.
உய்யக் கொண்டாரின் திருவடி பணிந்து,12 வருஷகாலம் அவருக்கு சிச்ருக்ஷை புரிந்து,எல்லாவற்றையும் உபதேசமாகப் பெற்றவர்.
உய்யக் கொண்டாருக்கு அநேககாலம் மடைப்பள்ளி கைங்கர்யம் செய்தவர்.

புராணங்களில் சொல்லப்படுகிற மூன்று ராமர்களினின்றும் வேறுபட்டு சிறந்தவராக ஸ்ரீராமமிச்ரர் இருந்தார்.
ஸ்வாமி தேசிகனுக்கு உய்யக்கொண்டார் பகவான் கண்ணன் என்றால், மணக்கால்நம்பி 4வது ராமர்.

———————

8-விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —

ஸ்ரீ கிருஷ்ணன் அன்பு பூண்ட யமுனா நதி போல அடியார்களை காத்தும் தீயவர்களை விரட்டியும்
காளிய வ்ருத்தாந்தம் -இருக்கும் ஆளவந்தார் இடம் நான் ஆழ்ந்து உள்ளேன் –

தமது சிஷ்ய சமூகமன் ஆகிற சத்துக்களின் ஆத்ம ரக்ஷணத்தில் நிலை நின்றவரும் –
அரங்கனின் -கண்ணனின் -யுடைய பரம ஆதரத்துக்கு பாத்திரம் ஆனவரும்
-விஷய பிராவண்யம் துளியும் இல்லாதவருமான -ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ யாமுனாச்சார்யர் -என்கிற
குளிர்ந்த தடாகத்தில் அமிழ்ந்து களிக்கிறேன் -என்கிறார்

-விகாஹே யாமுனம் தீர்த்தம் -யமுனா சம்பந்தி -யமுனாச்சார்யர் ஆகிய பாவனம் மிக்க ஆச்சார்யர் –அவஹாகிப்போம்
-குடைந்து ஆடி பருகி களிப்போமே-தீர்த்தத்திலும் பகவத் குணங்களிலும் –
சதீர்த்தயர் -சமான சிஷ்யர்கள் ஒரே ஆச்சார்யர் இடம் –
தீர்த்தனுக்கு அற்ற பின்னே –தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தராகி -தீர்த்தங்கள் ஆயிரம் –தேவர் வைகலும் தம் தேவியர்க்கு உரைப்பர்
-கேனோ பாயானே ஸ்ரீ ராம ராம ராமேதி போலே –
சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம் -பிருந்தாவனம் -அழகிய -ஸ்திதம் -யமுனா தீர்த்தம் -மற்ற இடங்கள் அசாது-தோஷம் அற்ற தேசம் என்றவாறு –
சாது பிருந்தா அவனே ஸ்திதம்-அவ ரக்ஷனே-தாது -ரக்ஷணத்திலே-
-சாது கோஷ்ட்டியுள் கொள்ளப் படுபவர்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய -ரக்ஷணத்திலே ஸ்திதம் -ஆளவந்தார் என்றபடி –
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே--சர்ப்பம் -ஜிஹ்மம் -வக்ரகதியில் போவது குடிலை கதி -ஆர்ஜவம் நேர்மை –
அஹங்காரம் மமகாரங்கள் -போக்கி -அபஹத பாப்மாதிகள் -அளிப்பது போலே –
யமுனா தீர்த்தம் தூயமையாக ஆகி -காளியன் நிரசித்து -அந்த ஸ்பர்சம் இருந்ததே -அத்தை போக்கி என்றுமாம் –
யத்ர கிருஷ்ணா க்ருதாதர — கிருஷ்ணரால் ஆதரிக்கப் பட்ட யஹூய யமுனை -கிருஷ்ண மிஸ்ரரால் –
ஆளவந்தார் கிருஷ்ண க்ருதங்களில் ஆழ்ந்தார் –

உலகத்தில் மிகவும் உயர்ந்த இடமான பிருந்தாவனத்தில் உள்ள யமுனை நதியிடம் மிகவும் அன்புடன் கிருஷ்ணன் இருந்தான்
அந்த நீரில் இருந்து காளியனை அவ்விடத்து விட்டு விலக்கினான்
இந்த யமுனை நதி போன்றே அடியார்களைக் காப்பாற்றவும் தீய புத்தியை விலக்கவும் உறுதியுடையவர் ஆளவந்தார் ஆவார்
அப்படிப்பட்ட அவரிடம் நான் ஆழ்ந்து உள்ளேன்
இந்த ஸ்லோகத்தில் யாமுனம் யமுனை ஆற்றையும் ஆளவந்தாரையும் குறிக்கும் –

யமுனையின் புனித நீரில் ( ஆளவந்தார் ) நீராடுவோம்,
அவர் சராசரி மோகம் மற்றும் பற்றுதல் ஆகியவற்றுடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்தவர்,
சாதுக்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றவர்,
மற்றும் கிருஷ்ணரால் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள் மிகச் சரியாக இருந்தன .
(இரண்டாவது பொருள்: பிருந்தாவனத்திற்கு அருகில் உள்ள விஷப் பாம்பு அகற்றப்பட்ட யமுனை நதியின்
புனித நீரில் ஸ்நானம் செய்வோம், அதில் கிருஷ்ணர் ஆர்வம் காட்டினார்.)

ஸ்ரீமந்நாதமுநிகள் —இவரது குமாரர் ஈச்வர பட்டர் –இவரது திருக் குமாரர் யாமுனாசார்யர் (யமுனைத் துறைவர் ),
ஆடி மாதம் உத்தராஷாடா நக்ஷத்ரத்தில் அவதாரம். மணக்கால் நம்பியிடம் சாஸ்த்ர அர்த்தங்களைப் பயின்றவர் .
சோழநாட்டு அரச ஆஸ்தான வித்வான் ஆக்கியாழ்வானை ,இவர் ,அவரிடம் மூன்று விஷயங்களைக் கூறி மறுக்கச் சொல்லி,
அவர் மறுக்க இயலாது திகைத்தபோது, யாமுனரே அவற்றுக்கான மறுப்பையும் சொல்ல,
பட்டத்துராணி மகிழ்ந்து, ” என்னை ஆளவந்தீரோ ” என்று சொல்ல அன்றுமுதல் “ஆளவந்தார் ” என்கிற திருநாமமும் சேர்ந்தது.

யமுனையின் தீர்த்தத்தில் கோடைகாலத்தில் கஷ்டப்படுபவன் முழுகித் திளைத்து மகிழ்வது போல ,
யாமுனரின் குணப் ப்ரவாஹத்தில் மூழ்கித் திளைப்பதாயும் ,ஸாதுவான யமுனை நதி, ப்ருந்தாவனத்தில் காடுகளின் ஊடே வரும்போது,
காளியனால் துன்பப்பட்டதால்,அந்த சர்ப்பக் கூட்டத்தையே விரட்டி, கண்ணன் யமுனை நதியிலும், மணல் திட்டுக்களிலும் கோபியரோடு
விளையாடி, இப்படி கண்ணனால் பஹுமாநிக்கப்பட்டதென்றும் யாமுனரும் சாதுக்களான பெரியநம்பி முதலிய சிஷ்யர்களுக்கு
உபதேசங்கள் செய்து காத்தவர் என்றும் , யமுனைக்குக் கருணை செய்ததைப் போல, ஆளவந்தாரிடமும் ,கண்ணன் பரிவு காட்டினான் என்றும் –
யத்ர க்ருஷ்ண க்ருதாதர : ” என்று சொல்லி,ஆளவந்தாரின் குணங்களாகிய வெள்ளச்சுழிப்பில் ஆழ்ந்து
அவரை வணங்குகிறேன் ——–என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

——————

9-தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ண மாஸ்ரயே
யேன விஸ்வ ஸ்ருஜோ விஷ்ணோ அபூர்யத மநோ ரத

ஜகத் காரணனான புருஷனின் மநோ ரதம்-எந்த பரம தயாளுவாள் பூர்த்தி செய்யப் பட்டதோ —
ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷிக்கப் பண்ணி
தர்சன ப்ரவர்த்தராம் படி பஞ்ச ஸம்ஸ்கார முகமாக வாழ்வித்த ஸ்ரீ பூர்ணாச்சார்யார் என்ற
ஸ்ரீ பெரிய நம்பிகளை -ஆஸ்ரயிக்கிறேன் என்கிறார் –

தயா நிக் நம் -அடிமைப் பட்டு வசப்பட்டு -கருணாவஸ்யன்-மெய்யே பெற்று ஒழிந்தேன்
– விதி வாய்க்கின்றது அவனுக்கு -தயா பிரபாவம் -அவனாலும் மீற முடியாதே –
சர்வ நியாந்தா காருண்யத்துக்கு நியாமகன் ஆவதே -பொய்யே கைம்மை சொல்லி மெய்யே பெற்று ஒழிந்தேன்
நமக்கு விதி பிராரப்ய கர்மா -அவனுக்கு காருண்ய நிக்னம்
தானே சென்று உடையவருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து அருளின தயா பிரபாவம்
யதீந்த்ரச்ய தேசிகம் -ஸ்ரீ பாஷ்யகாரருக்கு சாஷாத் ஆச்சார்யர் -பஞ்சாச்சார்யார் –
பூர்ண மாஸ்ரயே-பூர்ணர் -மஹா பூர்ணர் பெரிய நம்பி -ஆஸ்ரயிக்கிறேன்-
யேன விஸ்வ ஸ்ருஜோ –விஷ்ணோ அபூர்யத மநோரத-ஸ்ருஷ்டித்த விஷ்ணுவுடைய -மநோ ரதம் நிறைவேறியது –
சங்கல்பத்தாலே பஹுஸ்யாம் என்றவனுடைய மநோ ரதம்
இதனாலே பெரிய நம்பி -இவர் ஆனார் -பெரிய பெருமாள் -பெரிய பிராட்டியார் /பெரிய திரு மண்டபம் /
பெரியாழ்வார் -சாஷாத் மாமனார் -/ பெரிய உடையார் -ஜடாயு மஹா ராஜர் /
பெருமாள் மநோ ரதம் நிறைவேற்றியதால் பெரிய நம்பி –
பூர்ணர் முதல் பகுதியில் அடுத்து மஹா பூர்ணர் ஆகிறார் எம்பெருமானாரை சம்பிரதாயத்தில் கொண்டு வந்ததால் –

இந்த உலகைப்படைத்த பெரிய பெருமாளின் மநோ ரதம் இவரால் நிறைவேறியது
அன்புக்கு வசப்பட்ட ஆச்சார்யரான பெரிய நம்பியை அடியேன் அடைவேனாக
ஸ்ரீ வைஷ்ணவம் தழைக்க இவர் மூலம் அன்றோ அன்றோ பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்தான் அரங்கன்

அவர் நமக்கு மகா ராமானுஜரைக் கொடுத்தார், அதன் மூலம் பிரதம படைப்பாளியின் நம்பிக்கையை நனவாக்கினார்.

பெரிய நம்பிகளும், ராமாநுஜரும் , மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமன் ஸந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.
பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு, அங்கேயே மந்த்ரோபதேசங்கள் ,அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் சொல்லி அருளினார்.
இப்படியாக,பெரிய நம்பிகள் உடையவர் மீது, மிகுந்த கருணையுடன் இருந்து , உடையவர் மூலமாக ஜனங்களையும் திருத்தி,
பெரிய பெருமாளின் திருவுள்ளத்தையும் பூர்த்தி செய்த பகவத் ,ஆசார்ய பூர்ணத்வம் உள்ள
பெரியநம்பிகளை வணங்குகிறேன் —-என்கிறார் , ஸ்வாமி தேசிகன்

—————

மேல் எம்பெருமானாரை ஸ்துதிக்க புகுகிறார் –

10-ப்ரணமாம் லஷ்மண முனி ப்ரதிருஹ்ணாது மாமகம்
பிரசாதயாதி யத் ஸூக்தி ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம் –

பரம புருஷனை தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டு இருந்துள்ள
வேத மாதாவுக்கு எந்த ஸ்ரீ பாஷ்யகாரரின் ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூக்திகள் அணிகலன்கள் ஆகுமோ –
ஸ்ருதியின் பரமார்த்தம் பிரகாசம் ஆகுமோ -அந்த ஸ்ரீ லஷ்மண முனி
அடியேனுடைய பிராணாமத்தை அங்கீகரித்து அருள வேணும் என்று வேண்டுகிறார் –

இராமானுஜரின் உயர்ந்த கிரந்த நூல்கள் பெரிய பெருமாளையே தன் வசப்படுத்திக் கொண்டவை யாகும்
அவை உபநிஷத்துக்களுக்கு எழில் சேர்ப்பவை யாகும்
அப்படிப்பட்ட ஸ்ரீ ராமானுஜ முனி அடியேனுடைய நமஸ்காரங்களை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும்

ப்ரணமாம் லஷ்மண முனி– ப்ரதிருஹ்ணாது மாமகம் -என்னுடைய பிரணாமத்தை எம்பெருமானார் ஸ்வீ கரித்து அருளட்டும் –
இந்த பிராணாயாமம் அவருக்கே உரியது -சர்வ தேவதா நமஸ்காரம் கேசவன் பிரதி கச்சதி –
இவர் சேவா யோக்யர் அன்றோ
எம்பெருமானார் திருவடிகளை அடைகின்றேன் -குரு பரம்பரையா முகமாக பெரிய பிராட்டியார் இன் அமுத திருமகள்
-இரங்கும் திருவாளர் -திரு நாரணன் -அது சரணா கதி -இங்கு பிரமாணம்
ப்ரதிக்ருஹம் -பிரசாதயாதி யத் ஸூ க்தி ஸ்வாதீந பதிகாம் ச்ருதிம் –
எவருடைய ஸ்ரீ ஸூ க்திகள் ஸ்ருதியை முழுவதுமாக பிரகாசிக்கப் பண்ணிற்றோ- பிரசாதம் -ஒப்பனை -பிரசாதனம் அலங்கரித்தல் –
ஸ்வாதீந பதிகாம்-நாயகியை தானே அலங்கரிக்க வேண்டும் -பதியை தனக்கு அதீனமாக்கி-கொள்ள -ஸ்ரீ யபதி
-பதி விசுவஸ்ய-ஏறா ளும் இறையோன் -காளை மாட்டை மட்டும் அவன் இவன் உபய விபூதியையும் –
இவனை நிரூபித்து -சாஸ்த்ரா யோநித்வாத் -ஸ்வரூப ரூப குண விபூதியை காட்டும் நாயகி
சுருதி பெருமை ஸ்ரீ பதி பெருமை யதிபதி பெருமை சொல்லிற்று

ஸ்ருதிகளின் ( வேதங்களின் ) அர்த்தங்களை ஒன்றுக்கொன்று விரோதமின்றி அனைவரும் ஏற்றுப் பாராட்டும்படி
ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீஸுக்தி உள்ளது .
இந்த ஸ்ரீஸுக்தி “சைரந்த்ரீ ” மற்றும் “ஸ்வாதீனபதிகா” என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

ராஜாக்களுக்குப் பல மனைவிகள் இருப்பர்.அவர்களுள் “ஸ்வாதீன பதிகா “ என்பவள் ,தன்னுடைய மயக்குப் போகங்களால் ,
அரசனைத் தன் ஸ்வாதீனத்திலேயே வைத்திருப்பாள் .

இவளுக்கு ஒரு தாதி இருப்பாள். “சைரந்த்ரீ ” என்று பெயர்.
இவள் , அரசிக்குப் பலவகையிலும் பணிவிடை செய்து ,ஸ்நானம் செய்வித்து , கூந்தலில் நறுமணத் தைலத்தைத் தடவி
கூந்தலில் ஒரு சிக்கு இல்லாமல் லாகவமாக எடுத்து , வாரி , பின்னி , முடிந்து ,வாசனைப் பூக்களைச் சூட்டி ,
அணிகலன்களையும் சூடி அரசன் பார்த்து ஆனந்தம் அடையும்படி செய்வாள்.

அதைப்போல , ” ஸ்ருதி “—உபநிஷத் நாயகி .
இவளுடைய புருஷன் புருஷோத்தமன் –பகவான்.
வேத வாக்யங்களுக்கு , பிற மதவாதிகள் அர்த்தங்களை மாற்றிச் சொல்லி, பொய் என்றும் சொல்லி ,
அழுக்கை ஏற்றி விட்டார்கள் .
இந்த மாதிரியான அழுக்குகளை , ராமாநுஜரின் ஸ்ரீஸுக்திகள் என்கிற “சைரந்த்ரீ ”
மீமாம்சம் போன்ற வாசனைத் தைலங்களைத் தடவி,
சிக்கலை எடுத்து, அழுக்கைப் போக்கி ,
உண்மையான ரூப கல்யாண குணவிசேஷங்களை உடைய பகவானையும் வேதங்களையும் சேர்த்து
கைங்கர்யம் செய்யும் ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும்படி மஹோபகாரம் செய்த ராமாநுஜருக்கு
எந்தக் கைம்மாறும் இயலாத நிலையில் ,நமஸ்காரத்தைச் செய்கிறேன் ;
அதை ஏற்று ,ஸ்ரீ உடையவர் ,அடியேனை அனுக்ரஹிப்பாராக என்கிறார் ஸ்வாமி தேசிகன் .

——————

11-உபவீதிநம் ஊர்த்வ புண்ட்ர வந்தம்
த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம்
சரணா கத சார்த்த வாஹம் ஈடே
சிகாயா சேகரிணம் பதிம் யதீ நாம் –

திரு மார்பில் இலங்கிய முந்நூலினாலும் –
அணிந்த ஈராறு திரு நாமங்களினாலும் –
முக்கோல் ஏந்திய திருக் கையினாலும் —
மனசாலும், உடலாலும், வார்த்தைகளாலும் வணங்கும் பகவானை
ஆவாஹநம் செய்திருக்கும் அந்தத் த்ரிதண்ட ஹஸ்தம்–
திரு முடியில் திரு குழல் கற்றையினாலும் எழில் யுற்று விளங்குபவராய் –
எல்லா உலகங்களின் நல் தவப் பயனின் உருவோ என்று
அதிசயிக்கக் கூடியவராக யதி ஸார்வ பவ்மரை ஸ்துதிக்கப் புகுகிறேன் -என்கிறார்

உபவீதிநம் -அழகிய பூணூல்
ஊர்த்வ புண் ட்ரவந்தம்-
த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம் -மூ லோக ஸமஸ்த சேதன பலமாகவே இவர் அவதாரம்
சரணா கத சார்த்த வாஹம் -கோஷ்ட்டி -பிரபன்ன -தானே செய்து அருளி -நமக்கு -முன் நின்று நடத்தி –
ஈடே -விளங்குகிறார்
சிகாயா சேகரிணம் -திரு முடிக்கு அலங்காரம் -உத்தம அலங்காரம் சிகை –
பதிம் யதீ நாம் – நேராக சேவை சாதிக்க -அனுபவிக்கிறார்-கீழே ஸ்ரீ ஸூ க்திகளை அனுபவித்து -திவ்ய மங்கள விக்ரஹம் -இதில் –
யதிபதிக்கு இவை லிங்கங்கள் – சாஸ்திரம் -சொல்லுமே -கர தூஷிணி-பரம ஹம்ஸ லக்ஷணம் -யதி லிங்க பேதம் 65 -th வாதம் –

யஜ்ஜோ பவீதம் தரித்தவர்
திரு நெற்றியில் அழகான ஊர்த்வ புண்ட்ரம் தரித்தவர்
இம் மூன்று லோக புண்ய பலன்களே ஹேதுவாக திரு அவதரித்தவர் என்று காட்டவே த்ரி தண்டம் தரித்தவர்
தன்னிடம் சரண் அடைந்தவர்களை சரியான வழியிலே நடத்தி அருள்பவர்
நேர்த்தியாக சிகை அழகு கொண்டவர்
சந்நியாசிகள் தலைவராக உள்ளவர்
இப்படிப்பட்ட ராமானுஜரை அடியேன் வணங்குகிறேன்

பகவத் அநுபவத்தைப்போல, பூர்வாசார்யர்களை அனுபவிப்பதும், சிஷ்யர்களுக்கு மிகவும் தேவையானது .
இதற்கு உதவுவது ஆசார்யனின் திருமேனி ஸ்வரூபத்தை மனத்தில் க்ரஹிப்பது;
பிறகு, அவர் ஆக்ஜாரூபமான கைங்கர்யங்களைச் செய்வது;ஆகமரீதிப்படி பகவானைத் த்யானித்து, ஆராதிப்பது.
ஸ்ரீ அப்புள்ளார் சொல்ல, ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ உடையவரின் திருமேனி சௌந்தர்யத்தை மனத்தில் தரித்தவர்.
அதனால், த்யாநித்ததை, அப்படியே வருணிக்கிறார்.

யதிராஜரின் சிவந்த திருமேனியில், திருமார்பில் பளிச்சென்று வெண்மையாக விளங்கும் யஜ்ஞோபவீதம்;
பிறகு, திருமுகமண்டலத்தில் பளிச்சிடும் ஊர்த்வபுண்டரம் ( திருமண்ணும் ஸ்ரீசூர்ணமும் );
மனசாலும், உடலாலும், வார்த்தைகளாலும் வணங்கும் பகவானைத் தன்னுடைய த்ரிதண்டத்தில் ஆவாஹநம் செய்திருப்பதால்,
அந்தத் த்ரிதண்ட ஹஸ்தம்; அரசர்களுக்கு,சிரஸ்ஸில் க்ரீடத்தைப் போல,
சிகையாலான க்ரீடத்தை அணிந்திருப்பதால், க்ரீடமான சிகை

ஸ்ரீ நம்மாழ்வாரைப் பின்பற்றி , பெரியபெருமாள் -பிராட்டி–-திவ்யதம்பதியரிடம் ,
பங்குனி உத்ர நந்நாளில் ,சரணாகதியை அனுஷ்டித்தவர்;
இவ்வளவு பெருமைபெற்ற ,எதிராஜரைத் துதிப்போம்.

—————

12-பிரதயன் விமதேஷூ தீஷ்ண பாவம்
பிரபு அசமத் பரி ரஷணே யதீந்திர
அப்ருதக் பிரதி பன்ன யன்மயதவை
வவ்ருதே பஞ்சபி ஆயுதை முராரே

பகவானுடைய சங்கு,சக்ரம், கதை,வாள் ,வில் —என்கிற பஞ்சாயுதங்களும்
யதிராஜன் திருவுருவத்தில் அவதரித்துள்ளன.
வேத விருத்தமாகப் பிரசாரம் செய்யும் பாஷாண்டிகளை அழிக்க, பஞ்சாயுதங்களும் இப்படி, யதிராஜராக
அவதரித்துள்ளன .இப்படிப்பட்ட யதிராஜர், நம்மை,முழுவதுமாகக் காப்பாற்ற வல்லவர்.

ஆஸ்ரிதர்கள் ரக்ஷணத்திலும் –ஆஸ்ரித விரோதி நிரசனத்திலும் தீஷித்து இருப்பதில்
பிரகாசமுள்ள எம்பெருமானின் பஞ்ச திவ்ய ஆயுதங்களின்
ஸ்வபாவத்தையே மாறுபடாமல் கொண்ட ஸ்ரீ யதிராஜரானவர்
தம்மைச் சார்ந்த ஜனங்களின் உஜ்ஜீவனத்திலும் –
பாஹ்ய குத்ருஷ்டிகளின் நிரசனத்திலும் சமர்த்தராக விளங்கினார் –

பிரதயன் விமதேஷூ தீஷ்ண-பாவம் –விமத விரோதி வர்க்கம் விபக்ஷம்-ஆஸ்ரித விரோதிகள் தானே நிரதிசய அனுகூல ஸ்வரூபனுக்கு
-மம பிராணா ஹி பாண்டவ —
குரூரமான ஸ்வ பாவம்-பஞ்சாயுதங்களுக்கும் ஸ்வாமிக்கும் -பற்றலர் வீய பாஞ்ச ஜன்யம் வைத்த போர் ஏறு
பிரபு அசமத் பரி ரஷணே-அஸ்மத் பரி ரக்ஷணம் -சர்வ பிரகார ரக்ஷணம் -சர்வ தர்மான் பரித்யஜ்ய
-பரி உப சர்க்கம் ஆஸ்ரிதர்க்கு ஆபரணம் -இவை –
யதீந்திர
அப்ருதக் பிரதி பன்ன யன்மயதவை -வேறு ஸ்வ பாவம் கல்பிக்க முடியாதே –யன் மயத்வம் -எந்த ஸ்வ பாவம் ஸ்வரூபம்
வவ்ருதே பஞ்சபி ஆயுதை முராரே -பஞ்சாயுதம் -அம்சம் –வவ்ருதே -சமுதாய ஸ்வரூபம் -பூதலம் காப்பதற்கு ராமானுஜ முனி யாயின -ஏகி பூதம் –

ஸ்ரீ பஞ்சாயுதங்களான சங்கு சக்கரம் கதை வாள் வில் அனைத்துமே ஸ்ரீ ராமானுஜராக உருவம் கொண்டு இங்கே வந்தன
வேத பாஹ்ய குத்ருஷ்டிகளை தனது கொடிய தன்மையைக் காண்பித்து வாதம் செய்து வெற்றி கொள்ளும்
ஸ்ரீ ராமானுஜர் நம்மைக் காத்து அருளுவதில் வல்லவர் ஆவார் –

அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன்* கையாழியென்னும்-
படையோடு நாந்தகமும் படர் தண்டும்,* ஒண் சார்ங்கவில்லும்-
புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு* என்று-
இடையே* இராமானுச முனியாயின இந்நிலத்தே -33-பாசுரம் அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோகம் –

—————-

ஸ்ரீ கண்ணனே ஸ்ரீ எம்பெருமானார் -சிலேடையில் அமைந்த ஸ்லோகம் –

13-சமித உதய சங்கராதி கர்வ
ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான்
நநு ராம அவரஜ ச ஏஷ பூய -13

பாணாசூர யுத்தத்தில் சிவபெருமானைக் கண்ணன் வென்றான்
இதே போல் அத்வைதிகள் வான்தங்களை ராமானுஜர் வென்றார்
யாதவர்களின் பெருமையை கண்ணஅவருக்குப் பெருமை அளித்தார் நம் ஸ்வாமி
அர்ஜுனன் தேர் முன் நின்று அவனது எதிரிகளை கிருஷ்ணன் வென்றான்
வேதத்தின் முன்பாக நின்று வேத பாஹ்ய குத்ருஷ்டிகளை நம் ஸ்வாமி வென்றார்
நம்பி மூத்த பிரானின் தம்பியான கிருஷ்ணனே -பார்த்த சாரத்தியே நம் ஸ்வாமியாக திரு அவதரித்து அருளினார்

சமித உதய சங்கராதி கர்வ-
சங்கரர் -ப்ரஹ்மம் இந்திரன் முதலானோர் ஆதி சப்தத்தால் –
கர்வம் உதிக்க அத்தை சமனம் பண்ணி -பாணாசுரன் -வத்சா அபஹரணம் -கோவர்த்தனம் –
சங்கர பாஸ்கர யாதவ -இத்யாதி நம் ராமானுஜர் -பார்ப்பான் ஆறு சமயங்கள் பதைப்ப –
ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
குலம் உத்தரிக்க கோபாலன் -சங்க நிதி பத்ம நிதி கொடுத்து -கடலை ஊடறுத்து படை வீடு செய்து அருளி –
எதிரிகள் விட்ட அம்பை தான் ஏற்று -3-5-திருவாய்மொழி –
யாதவ அப்யுதயம் -ஈடு -முனிவின்றி ஏத்தி குனிப்பார் –
கலந்து பரிமாறி -உன்னதி உண்டு பண்ணி ஸூ பலத்தால்
நம் ராமானுஜர் யாதவ பிரகாசன் ஏக தண்டீ -ஸூ பலத்தால் -மாற்றி அருளி -த்வேஷப் பட்டு -மாற்றி -த்ரி தண்டி யாக்கி -சிகை கொடுத்து தன் திருவடி சேர்த்து –
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான்
பார்த்தன் இல்லாதவன் அபார்த்தன் -கௌரவர்கள் -உன்மதி போக்கி தரை மட்டம் ஆக்கி -கேவல ஸ்ரவணம் மாத்திரம் விஷயம் ஆக்கி
தத்வ ஹித புருஷார்த்தங்கள் -சுருதி -தப்பான அர்த்தங்கள்
அந்தர் ஜுரம் போக்கி -அருளி –
நநு ராம அவரஜ ச ஏஷ பூய -உத்ப்ரேஷை -இதுவே அதுவாகும் -நநு-ஊகம்-சாமான்ய சப்தம் -ஸாத்ருஷ்யம் கொண்டு –
ராமஸ்ய அவரஜ -அனுஜா தம்பி அநு ஜாதியே -இவர் தான் அவரோ -பூய திரும்பியும் -பல ராமானுஜர்
கிருஷ்ணன் -இளைய பெருமாள் -ராமானுஜர் –
சமாக்கியம் -சடாரி பாதுகை போலே -ச ஏஷ பூவ- உத்ப்ரேஷம் / நிர்ணயம் இரண்டும் கொள்ளலாம் -ச ஏவ பூய-பாட பேதம் –

தனது சொந்த படைப்புகளால்  -கீதை மற்றும் ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கக் கூறப்பட்ட- தவறான அர்த்தங்களை நீக்கினார்.

கார்த்திகையானும் கரி முகத்தானும் -22-படியே முக்கண்ணனான சங்கரன் செருக்கை அடக்கிய கண்ணன் –
யது குலத்தில் உதித்து தன் வல்லமையால் யாதவர்களை பிரகாசப் படுத்தியவன் –
பார்த்தனின் விரோதிகளை பெருமை யுறாமல் அழித்தவன்-

பலராமனின் தம்பியான அந்த ஸ்ரீ ராமானுஜன்-ஸ்ரீ பார்த்த சாரதியே தானே
இந்த நம் ஸ்ரீ ராமானுஜன் என்று அதிசயிக்கும் படி அன்றோ

சங்கராதி வேத குத்ருஷ்டிகளின் செறுக்கை தம் ஸ்ரீ ஸூக்திகளாலும் தர்க்க வாதங்களாலும் அடக்கி –
தம் புத்தி சாமர்த்யத்தாலும் கிருபா அதிசயத்தாலும் யாதவ பிரகாசரை வாழ்வித்து –
பிறர் -கல்பித்து -கூறும் ஸ்ருதிகளும் அபார்த்தங்களை களைந்து ஒழித்தவர்-

நாம்-நான் என்கிற அஹங்காரத்தை ஏற்படுத்துகிற அத்வைதக் கருத்துக்களைப் போக்கியவர்
யாதவப்ரகாசரை , அத்வைதத்திலிருந்து, ஸ்ரீவைஷ்ணவராக்கி,ஆட்கொண்டவர்.
ஸ்ரீபாஷ்யாதிகள் மூலமாக, கீதையின் பொருளை உணர்த்தியவர்.
யாதவர்களின் கீர்த்தியை ஓங்கச் செய்து, த்ரௌபதியின் மாங்கல்யத்துக்குக் கேடு வரா வண்ணம்
காத்த, கண்ணனே ஸ்ரீபாஷ்யகாரராக அவதரித்தார்.

—————

14- அபஹூஸ்ருத சம்பவம் ஸ்ருதீ நாம்
ஜரதீ நாம் அயதாயத பிரசாரம்
வி நிவர்த்தயிதம் யதி ஈஸ்வர உக்தி
விததே தா ஸ்த்திர நீதி பஞ்ஜர ஸத்தா-14

அநாதியான உபநிஷத் கருத்துக்களுக்கு ஆழ்ந்த அறிவு இல்லாமல் நேர்மையற்ற முறையில் உரை செய்தார்கள்
இப்படிப்பட்ட புற வாதங்களை ஒழித்து வலிமையான எதிர்வாதம் என்னும் கூண்டில் உபநிஷத் என்னும்
கிளியானது ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யங்களால் பாதுகாக்கப் பட்டது

ராமானுஜர், வேதங்கள் போன்ற பழைய வேதங்களின் பறவைகளுக்கு நிரந்தர சரணாலயமாக
தனது படைப்புகளுக்கு ஒரு கூடு கொடுத்தார், ஏனெனில்
பறவைகள் வேதப் படைப்புகளைத் தவறாகப் புரிந்துகொள்ளும் பாஹ்ய வாதிகளால் சித்திரவதைக்கு ஆளாகின்றன.

அபஹூஸ்ருத சம்பவம் -பஹூசுருதர் -பல படி பலவற்றை கேட்க வேண்டும் இல்லாதார் அல்ப ஸ்ருதர்கள் -இவற்றால் சம்பவிக்கப் பட்ட
ஸ்ருதீ நாம்- ஜரதீ நாம் -அநாதியான வேதங்கள் -ஜீரணம் சரீரம் ஆவதால் ஜரா மூப்பு –
சமன்வயதிகாரணம் -நியோக – த்யான யோகம் ஜர அத்வைதிகள் –
ஜுராசிக் age -முன் காலம் -அநாதித்வம் வயோதிகம் இரண்டும் வேதங்களுக்கு –
அயதாயத பிரசாரம் -யதாயத்த அர்த்தம் இல்லாமல் போக
வி நிவர்த்தயிதம்-விசேஷ நிவர்த்தனம் –
யதி ஈஸ்வர உக்தி– விததே -யதீஸ்வர -யுக்தி
தா ஸ்த்திர நீதி பஞ்ஜர ஸத்தா-பூர்வ உத்தர மீமாம்சம் பஞ்ஜர ஸத்தா-ஆக்கி அருளினார் இவர் ஸ்ரீ ஸூ க்திகளால் -பஞ்ஜர-கூடு-

ஸ்ரீ எம்பெருமானாருடைய திவ்ய ஸ்ரீ ஸூக்திகள் –
அல்ப ஞானம் படைத்த குத்ருஷ்டிகளால் உண்மைக்கு புறம்பான
அர்த்தங்களை பிரசாரம் பண்ணுவதால்
வேதங்களுக்கு ஏற்பட்ட இளைப்பைப் போக்கி –
அவைகளை மறுக்க ஒண்ணாத நியாயங்களால்
நன்றாக ரக்ஷிக்கப் பட்டவைகளாய் ஆக்கி யுள்ளன
உபநிஷத் ஆகிற கிளியை மீண்டும் ரஷித்து அருளினார் —
வேதாந்த விழுப் பொருளை சித்தாந்தப் படுத்தி அருளினார் என்றபடி –

கிளிகள் —பக்ஷிகள்—இவற்றுக்கு சிறகு முளைத்து தத்தித் தத்திப் பறப்பதைப் பார்க்கும் சிறுவர்கள்,
அவற்றைப் பிடித்து, சிறகுகளை இழுத்தும் துன்புறுத்தியும் மகிழ்வர்.
பெரியவர்கள், அவை துன்புறுவதைப் பார்க்கச் சகிக்காமல் , இரும்புக்கூடு அமைத்து, கிளிகளை உள்ளே
வைத்துப் பழம் முதலியவை கொடுத்துப் பாதுகாத்து, அவற்றின் பேச்சை ரசிப்பர் .
அறிவாளிகள் அவை துன்புறுவதைச் சகிக்காமல், அவற்றின் விருப்பப்படிப் பறக்க விடுவர்.
சிற்றறிவுள்ள மதவாதிகள் , வேதங்களாகிற புராதன காலப் பக்ஷிகளை அலைக்கழித்து,
தவறான அர்த்தங்களைச் சொல்லி, துன்புறுத்துவர்.
ஆனால்,நமது ராமாநுஜரோ இவற்றைக் கண்டித்து, வேத வாக்யங்களுக்கு
உண்மையான அர்த்த விசேஷங்களைச் சொல்லி, வேதங்களைக் காத்தார்.

————

15-அமுநா தபந அதிசாயி பூம் நா
யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி
விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வாமியின் தேஜஸ்ஸு ஸூர்யனை விட ஒளி மிக்கதாகும்
நன்கு கற்று அறிந்த ஞானிகள் தங்கள் மார்பில் எப்போதும் ஆச்சார்ய பரம்பரை என்னும்
இரத்தின மாலையை மானசீகமாக அணிந்து இருப்பார்கள்
அந்த குருபரம்பரை மாலையின் நடுநாயகமாக நம் ஸ்வாமி உள்ளார்

(ராமானுஜம்) மையமானது மற்றும் அணிபவரின் இதயத்திற்கு மிகவும் பிரியமானது மற்றும் அருகில் உள்ளது.

அமுநா-அ சவ் -அவர் இவர் உவர் -சப்தம் -வந்தாய் போ வாராதாய் வாராதாய் போல் வருவான் -பிரத்யக்ஷம் இல்லை
மானஸ அனுபவம் -ஆழ்வாருக்கு -உரு வெளிப்பாடு பாவனா பிரகர்ஷம் -பிரத்யக்ஷ சாமானாகாரம்-அத்யந்த ப்ரீதியால்
அனவரத சிந்தனை -ஆண்டாளுக்கு பாவனா பிரகார்ஷம் –
தேனை -அநேந-நடுவில் –அமுநா-என்றபடி
தபந அதிசாயி பூம் நா -தபந-அனந்த கோடி -சூர்யன் தேஜஸ் விஞ்சி –
யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ -நாயக ரத்னம் -மத்திய மணி – பிரதானம் -அலங்கரிக்க
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி-அத்யந்த பிரபாவம் குரு பரம்பரை ஹாரம்
விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி -இருதயத்தில் இருந்து சந்தோஷப்பட வைக்கும்
விபாதி -விளங்கும் யாருக்கு விபுதா நாம் -ஜெயா விபூதி பதே-நிலத்தேவர்கள் -அமரர்கள் -நித்ய ஸூ ரிகளுக்கும்

தேஜோவானான ஸூரியனிலும்-விஞ்சிய தேஜஸை யுடைய நம் ஸ்வாமி
நாயக ரத்னமாக அமைந்துள்ளதால்
மிகவும் பெருமை யுற்ற குரு பரம்பரையான ரத்ன ஹாரமானது மிகவும் பெருமை யுடையதாய்
தத்வ வித்துக்களான வித்வான்களுக்கு சிந்தனைக்கு இனியதாக விளங்குகிறது –

பூர்வாசார்ய பரம்பரையில், யதிராஜர் ஸுர்யனை விடப் ப்ரகாசத்துடன் நடுநாயக ரத்னமாக விளங்குகிறார் .
இதனால், குருபரம்பரைக்கே ஏற்றம் .குருபரம்பரை என்கிற மணிகளால் ஆன ஹாரத்தில் ,
பண்டிதர்களுக்கு , ஹ்ருதய அங்கமாக (மனத்துக்கு உகந்ததாக —மார்பில் பொருந்தியதாக)
இந்த நாயகக் கல்லாக, ஸ்ரீ ராமானுஜர் விளங்குகிறார்

————————

16-அலூந பஷச்ய யதி ஷமாப்ருத
விபாதி வம்சே ஹரி தத்த்வம் அஷதம்
யத் உத்பாவ ஸூ த்த ஸூ வ்ருத்த
சீ தளா பவந்தி முத்தாவளி பூஷணம் புவ –

யதிராஜர் என்று போற்றப்படும் இராமானுஜ சித்தாந்தங்கள் அனைத்தும் அவற்றை எதிர்த்து வீண் வாதம் செய்ய இயலாதபடி உள்ளன
அவர் ஏற்படுத்திய பரம்பரையில் ஸ்ரீ ஹரியின் உண்மையான தன்மை சிறிதும் குறைவின்றி உள்ளது
இந்தப் பரம்பரையில் உள்ளவர்கள் தூய்மையானவர்களாக -சிறந்த ஒழுக்கம் உள்ளவர்களாக
தூய எண்ணம் கொண்டவர்களாக -பரமபதம் சென்றாலும் அங்கு உள்ளவர்கள் வரிசையில் முத்துபோன்று ஒளி மிக்கு ஆபரணம் போல் இருப்பார்கள்

அலூந பஷச்ய யதி -பக்ஷம் சிறகு -லூனம் வெட்டப் பட்ட
மைநாகம் பர்வதம் -கிருத யுகம் மலைகள் இறக்கை இருக்க -இந்திரன் வஜ்ராயுதம் கொண்டு ஷேத்திக்க –
வாயு காத்தது சமுத்திரத்தில் தள்ளப் பட்டதால் சிறகுகள் இழக்காமல் -சிரமம் தீர்க்க இளைப்பாற சொல்லிற்றே
ஷமாப்ருத –ஷாமா பூமி –ப்ருத் -பூதரங்கள் மஹீதாரங்கள் குல பர்வதங்கள் -பாஷ்யகாரர் அலூன பக்ஷம் கொண்ட பர்வதம் –
பகவத் அனுபவ கைங்கர்ய உபகார பரம்பரையை யாராலும் ஷேத்திக்க முடியாதே -பாஹ்ய குத்ருஷ்டிகள் -பக்ஷம் கண்டிக்க முடியாதே
விசிஷ்டாத்வைத பக்ஷம் -ஸ்திரம் என்றவாறு
பர்வதத்தில் மூங்கில்கள் -பச்சை பசேல் என்று இருக்குமே
விபாதி வம்சே ஹரி தத்த்வம் அஷதம்ஹரிதம் பச்சை –ஹரி தத்வம் பசுமை நிறம்
வம்சம் மூங்கில் பரம்பரை –வம்சீ புல்லாங்குழல் வம்சீ விபூதி கரன்
அஷதம்--குறைவற்று /விபாதி -விளங்கும் -தீர்க்கமான கரும் பச்சை நிறம்
சிஷ்ய பரம்பரை –வம்சம் –ஹரி தத்வம் ஸ்ரீ யபதி தத்வம் பொதுவானதே எல்லா சம்பிரதாயங்களில் -பசுமை நன்றாக விளங்கும் –
யத் உத்பாவ-யத்தில் இருந்து உண்டான –ஹரி தத்துவத்தில் இருந்து -விளைந்த முத்துக்கள்
ஸூ த்த – பவந்தி–வெண்மை
ஸூ வ்ருத்த பவந்தி–செறிந்த ஆகாரம்
சீ தளா பவந்தி-குளிர்ந்த
முத்தாவளி பூஷணம் புவ –லோகம் -இட ஆகு பெயர் -லோகத்தார்களுக்கு -என்றவாறு –
திருவடி சம்பந்தம் -திரு முடி சம்பந்தம் -ஏற்றம் பெற்ற பூர்வாச்சார்யர்கள் -வம்ச சப்தம் அனைவரையும் குறிக்கும் -ஸ்ரீ யபதியே பரதத்வம் என்பது குறைவற்று இருக்குமே
முத்துக்கள் -பரம பாகவதர்கள் -ஸமாச்ரயணம் பண்ணி -ஆச்சார்ய துல்யர் -வம்சத்தில் உதித்த முத்துக்கள் பிரபன்ன ஜனங்கள்
ஸூ த்த-தேவ்தாந்தாந்தரா உபாயாந்தர இத்யாதி சம்பந்தம் இல்லாத சுத்தி கொண்டவர்கள் மற்று ஓர் தெய்வம் உளது என்று இருப்பார் உடனும் உற்றாமல்
ஆச்சார்ய சம்பந்தம் விடாமல் –
தீபா உத்பன்ன ப்ரதீபங்கள் போலே இருப்பார்களே –
வ்ருத்தம்-அனுஷ்டானம் -துல்ய சீல வாயோ வ்ருத்தம்-சோபனமான வ்ருத்தம் –
சீதளம் -ராக த்வேஷாதிகள் இல்லாமல் குளிர்ந்த கடாக்ஷம்
1-4-ஆச்சார்ய லக்ஷணம் -வாடைக் காற்று -குளிர்ந்த ஸ்வ பாவம் காட்டும் என்று காட்டி அருளி –
சிலேடைகள் நிறைந்த ஸ்லோகம் -பர்வதம் -எம்பெருமானார் -அலூன பக்ஷம் வைதரம்யா த்ருஷ்டாந்தம்
-மூங்கில்கள் பசுமை -வெண்மை ஆகாரம் குளிர்ச்சி -வம்சம் -முத்துக்கள்

ராமானுஜரின் சிறகுகள் இன்னும் வெட்டப்படாத மைனாக மலை!
அவரது குழுவிலும், சீடர்களின் வரிசையில் (மூங்கில் போல) பசுமையான தன்மை நீடிக்கிறது
மற்றும் ஹரியின் கொள்கை உயர்வாக ஆட்சி செய்கிறது!
வரிசையில் உள்ள அனைத்தும் மிக உயர்ந்த தன்மையுடன் தூய்மையாக பிரகாசிக்கின்றன;
குளிர்ந்த மற்றும் இரக்கமுள்ள; பெரிய ஒளிவட்டத்துடன் உலகை முத்து மாலையாக அலங்கரிப்பார்கள்.
(வம்சம் என்றால் பரம்பரை மற்றும் மூங்கில்;
ஹரி என்றால் இறைவன் மற்றும் பச்சை நிறமும் கூட)

புறச் சமயிகளால் கண்டிக்க இயலாத எம்பெருமானார் தர்சனம் -ஆகிய பரதத்வம் —
ஸமஸ்த கல்யாண குணங்களோடும் -திவ்ய மங்கள விக்ரகத்துடன்
வெட்டிக் களையப் படாத இறகுகளை யுடைய பர்வதம் போலே-
(மைனாக பர்வதம் விருத்தாந்தம் -சிறகுகள் உண்டே பர்வதங்களுக்கு )
ஸூ ரஷிதமாக விளங்குகிறது
இந்த சம்பிரதாயஸ் தர்களான மஹான்கள் சத்துக்களையும்
குளிர்ந்த இதயம் படைத்தவர்களாயும்
பூமிக்கே அணிகலன்களாகயும் யுள்ளனர் –

ஸ்ரீ உடையவர், மைநாக மலையை ஒத்தவர்
மைநாக மலையின் சிறகுகள் துண்டிக்கப்படவில்லை.
அதைப் போல, இவருடைய மதமும் ,ஒருவராலும் துண்டிக்கப்படாதது.
இவருடைய சிஷ்ய பரம்பரையில் ( அதாவது ,பச்சை மூங்கிலாக உருவகப்படுத்துகிறார் )
ஹரிதத்வம் —பகவத் தத்வம் –பச்சையாக இருக்கிறது ( செழிப்பாக இருக்கிறது).
இந்த சிஷ்ய பரம்பரையான பச்சை மூங்கிலில் ( கணுக்கள் –மூங்கிலில் இருப்பதைப்போல, சிஷ்ய பரம்பரை ) ,
சிஷ்யர்கள் சுத்தர்கள், நல்ல ஒழுக்க சீலர்கள், ( குளிர்ச்சி–சீதளம் ), கருணை உள்ளவர்கள்–
இப்படி, முத்துவடம்போல, பூமாதேவிக்கு ஆபரணமாக ஆகிறார்கள்

————————

சந்திரன் உடன் ஒப்புமை —

17-அநபாய விஷ்ணு பத சம்ஸ்ரயம் பஜே
கலயா கயா அபி கலயா அபி அனுஜ்ஜிதம்
அகளங்க யோகம் அஜடாசய உதிதம்
யதிராஜ சந்த்ரம் உபராக தூரகம் –

பகவானின் திருவடிகளை எப்போதும் பற்றி உள்ளவர்
அனைத்து ப்ரஹ்ம வித்யைகளின் மூலமும் சிறிதும் கைவிடாதபடி உள்ளவர்
எந்தவித தோஷத்தாலும் தீண்டப்படாதபடி உள்ளவர்
மூடர்கள் மனதில் நிலை பெறாமல் உள்ளவர்
உலக விஷய ஆசைகளுக்கு அப்பால் உள்ளவர்
தன்னை அடியவர்களுக்கு சந்திரன் போல் ஆஹ்லாதகரமாக குளிர்ந்து உள்ளவர்
இப்படிப்பட்ட ஸ்வாமியை அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –

அநபாய விஷ்ணு பத சம்ஸ்ரயம் பஜே
சிரஸ் சம்பந்தம் உண்டே அபாய தேவதாந்த்ர சிரஸ்
அநபாய விஷ்ணு பாத ஸம்ஸராயம்
கலயா கயா அபி கலயா அபி அனுஜ்ஜிதம் -உஜ்ஜிதம் -விடப்பட்டது –கலா அவயவம் வித்யைகள் –
அகளங்க யோகம் -களங்கமே இல்லையே
அஜடாசய உதிதம் -ஜடம் -அசேதனம் -ஜல சமுத்திரத்தில் இருந்து உதயம் -பரப்ரஹ்மம் சங்கல்பத்தாலே இவர் ஆவிர்பாவம்
யதிராஜ சந்த்ரம் உபராக தூரகம் -அஸூர கிரஹங்கள் பீடிக்கப் படும் -மீமாம்சகர்கள் சேஷஷ்வர -ராகு -சிரஸ் மட்டும் -கேது சரீரம் மட்டும் –
சுருதி சிரஸ் -கர்ம காண்டம் தனியாக பூர்வ மீமாம்சகர்கள் -பாட்ட பிராக்கள் ராகு மீமாம்சகர்கள்
அத்வைதிகள் கேது -கர்ம விசாரம் வேண்டாம் என்பர்
-உபராகம் -கிரஹணம் –தூரகம் -தத் ஸ்பர்சம் அற்றவர்

பகவான் திருவடிகளையே இடைவிடாமல் பற்றியபடியே -தோஷங்கள் தீண்டாமல் -மூடர்கள் மனசில் நிலை பெறாமல்
உலக விஷய ஆசைக்கு அப்பால் உள்ளவர் -தன்னை அண்டியவர்கள் இடம் சந்தரன் போலே குளிர்ந்து இருப்பவர் –
இப்படிப்பட்ட ராமானுஜரை நான் அடைகிறேன் –
விஷ்ணு பதம் -ஆகாசம் -கர்ப்ப லக்ஷணம் – இடை வெளி -மணி வயிறு வாய்த்தவன் என்பதால்
-அபாயம் இல்லாத அநபாயமான விஷ்ணு திருவடிகளில் அன்றோ இந்த சந்திரன்-
ஷயம் இல்லாத -களங்கம் இல்லாத சந்திரன் அன்றோ இவர் –
அஜாடம் அஜலம் -ஜலாசயம் சமுத்திரம் -முட்டாள் கூட்டம் -அறிவற்றார் அறியார்கள் இந்த சந்த்ர பிரபாவம் –
உபராக தூரகம் மறைக்க முடியாத தேஜஸ் கொண்டவர் –

ராமானுஜர் ஒரு உண்மையான சந்திரன்.
பௌர்ணமி நிலவு இறைவனின் பாதமாகிய பாதுகாப்பான வானத்தில் நிலை பெற்றுள்ளதால்.
சந்திரன், இலக்கங்கள் நிறைந்தது (அதாவது 16 கலைகள்), பரிபூரணமாக இருப்பது, குறைபாடுகள் இல்லாதது,
இப்போது நீர் ஆதாரங்கள் காரணமாக, கிரகணத்திற்கு உட்பட்டது அல்ல;
எனவே ராமானுஜரும் பாதுகாப்பான விஷ்ணு வாசஸ்தலத்தை நாடியுள்ளார்,
அனைத்து வித்யாக்களிலும் முழு தேர்ச்சி பெற்றவர்,
புலன் இன்பங்களை அனுபவிக்கும் மக்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளார். அந்த ராமானுஜரை வணங்குகிறேன்

சந்திரன் களங்கம் உள்ளவன்
உபராகத்துக்கு க்ரஹணத்துக்கு உட் பட்டவன் –
ஸ்வாமி இடத்திலோ தோஷத்துக்கு பிரசக்தியே இல்லையே
சகல வித்யைகளையும் பூர்ணமாக அதிகரித்து –
தோஷம் அற்று –
மகான்கள் மனசில் சதா பிரகாசித்து –
ராக துவேஷாதிகளுக்கு புறம்பாயும்
உபராகத்துக்கு உட் படாத யதிராஜ சந்திரனை உபாசிக்கிறேன் –

யதிராஜர் சந்த்ரனுக்கும் மேம்பட்டவர் .
சந்த்ரன் ,நிலவினால் குளிர்ச்சியைக் கொடுத்து, மகிழ்விப்பதைப்போல,
யதிராஜரும் தன் அடியார்களுக்கு, பகவானிடத்தில் ப்ரபத்தியை அநுஷ்டிக்கச்செய்து,
பாபங்களைப்போக்கி மகிழ்விக்கிறார்.
சந்த்ரனைவிட கம்பீரமான தோற்றம் உடையவர்.
பகவானின் திருவடிகளையே எப்போதும் த்யானிப்பவர்.
எவ்விதக் களங்கமும் இல்லாதவர்.
ராகு, கேதுவால் சந்த்ரன் பீடிக்கப்படுகிறான்;
ஆனால், எம்பெருமானாரோ ,காம புருஷார்த்தங்களை விரும்புவாரோடு ஒருபோதும் சேராதவர்.
எம்பெருமானாரின் திவ்ய குணநலன்களில் ஈடுபட்டு அவருக்கு அடிமை செய்ய விரும்பி , பூஜிக்கிறேன்

—————

அவதார பிரயோஜனத்தை அருளிச் செய்கிறார் –

18-அபிகம்ய சம்யகநகா ஸூ மேத்ஸ
யதி சக்ரவர்த்தி பத பத்ம பத்த நம்
ஹரி பக்த தாஸ்ய ரசிகா பரஸ்பரம்
க்ரய விக்ரயார்ஹ தசயா சமிந்ததே

ஸ்வாமியின் திருவடிகள் ஒப்பில்லாத நகரம் போன்று உள்ளன
அந்த நகரத்தை அண்டுபவர்கள் சிறந்த ஞானம் கிட்டப் பெறுகின்றனர்
தங்கள் பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெறுகின்றனர்
அடியார்களுக்குத் தொண்டு செய்வதில் இன்பம் பெரும் நிலை அடைகின்றனர்
உயர்ந்தவற்றை வாங்குவதிலும் விற்பதிலும் –உயர்ந்த கல்வி பெறுவதிலும் அளிப்பதிலும் -தேர்ச்சி பெற்று மேன்மை அடைகின்றனர்

அபிகம்ய சம்யக்
-சேர்ந்து அடைந்து -எங்கே என்றால் -திடமான சித்தம் சாமர்த்தியம் –சம்யக் -ராமானுஜ யதிராஜா ஸார்வ பவ்மன்
திருவடி தாமரை ஆகிய பட்டணத்தில் -அபிமதம் பெற -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி பெற -மற்ற எங்கும் வாழ்வு அற்று
நாடு நகரமும் நன்கு உடன் -அறிய -ஒரு நாயகனே இவர் அன்றோ -நாடு கிராமம் அவிசேஷஞ்ஞர் -நகரம் பட்டணம் விசேஷஞ்ஞர்-
-அல்பம் மகா ரத்னம் வரை பெறலாமே -பலர் வாழும் பட்டணம் -மீண்டும் கிராமம் போகாதவர் -திருவடிகளில் வாழ்வு பெற்று இருப்பார்கள்
அநகா ஸூ மேத்ஸ–
அநகா–தோஷம் அற்ற -ஆச்சார்யர்- பகவத் -துல்ய -பக்தர்கள் -தோஷ ரஹித்தவம் -சத்ருக்னவ் நித்ய சத்ருகன்
– அநகா-கோதில் அடியார் –ஸ்வாபாவிக பகவத் பக்தியை அடியார் இடம் வைப்பவன் –
ஸூ மேத்ஸ-சோபனமான மதி -இத்தால் சம்பவிக்கும் -ஆச்சார்ய அபிமானம் மூலம் -புத்தியில் சகலார்த்தங்களும் பிரகாசிக்கப் படுபவர் –
-அநகா -அத ஏவ ஸூ மேத்ஸ-
யதி சக்ரவர்த்தி –
யதிராஜாக்களுக்கு ராஜா -சர்வ பவ்மன்-
பத பத்ம பத்த நம் –
திருவடி தாமரை ஆகிய -பட்டணம் –
பத்ம ரேகை -சங்க ரங்க கல்பக -த்வஜ –சரணாரவிந்தம் –
இலச்சினை பட நடந்து –தளர் நடை நடப்பான் -அசாதாரண -ஆச்சார்யர் திருவடிகளுக்கு பத்ம ரேகை பிரதான்யம் -சக்கரவர்த்தி லக்ஷணம்
உறுதி உடன் வாழ -சாமர்த்தியம் உடன் சென்று அடைந்த –சம்யக் அதிகம்ய –
ஹரி பக்த தாஸ்ய ரசிகா-பவந்தி-ஹரி பக்தர்களாக இருந்து அனகர் ஆகி வளர்ந்து -அடியார் அடியார் -சேஷ பூத -சரம நிலை -அடைந்து
பரஸ்பரம் க்ரய விக்ரயார்ஹ தசயா-சமிந்ததே –
நன்கு வளர்கின்றார்கள் -இந்ததே –சம் இந்ததே -பிறர் பார்த்து அதிசயிக்கும் படி -எந்த அளவுக்கு என்றால் –
அடியார் அடியார் –அடியோங்களாக வளர்ந்து -புருஷார்த்த காஷ்டை -அடைகிறார்கள் –
நிரவதிக ப்ரீதி உடன் ராகம் உந்த விதி என்பதால் இல்லாமல் –
ரசிகர் -பூர்ண திருப்தி இத்தால் அடைபவர்கள் -இது மேலும் வளர்ந்து –சமிந்ததே –
பரஸ்பரம் க்ரய விக்ரயார்ஹ தசயா -தசை அடைந்து -ஒருவர் ஒருவரை -விற்கும் படி -பரஸ்பரம் –பரகா பரம் -பரி பூர்ண உரிமை என்றபடி –
எம் தம்மை விற்கவும் பெறுவார்கள் -கேசவா என்னும் கிளர் ஒளி யாகிய மூர்த்தி என்று பேசும் அடியார்கள்
நித்ய விபூதி துல்யம் அன்றோ இவர் திருவடிகள் -பரஸ்பரம் இப்படி இருப்பார்களே -சேஷத்வ பாரதந்தர்ய காஷ்டையில் இருப்பார்களே –
பட்டணம் சென்று வேலை பார்க்க படித்து மேலும் மேலும் வளர்வது போலெ எதி சக்ரவர்த்தி திருவடிகளை அடைந்து –
மீட்சி இல்லாமல் இந்த காஷ்டையிலே இருக்கப் பெறுவோம் -ஸ்வரூப ஆவீர் பூதம் – அடைவோம் -மதுரகவி நிலையையை பெறப் பெறுவோம்
ஸ்ரீ ராமாயணம் போலே பகவத் ஸமாச்ரயணம் திருவாய் மொழி போலே ஆச்சார்யர் ஸமாச்ரயணம்

பெரிய மனிதர்களும், களங்கமற்றவர்களும், கற்றறிந்தவர்களும், உண்மையான பெருநகரத்தை நாடுவதன் தகுதியை சரியாகப் பகுத்தறிவார்கள்,
யதி-சக்கரவர்த்தியின் பாதங்கள். அவ்வாறு குடியேறினாலும், அவர்கள் களத்தில் அறிவாளிகள், பக்தர்களுக்கு அடி பணிந்தவர்கள்;
பாகவதங்களால் பொருட்களைப் பண்டம் போல வாங்கவோ அல்லது விற்கவோ,
சரியான மனப்பான்மையுடன், மனதளவில் தயாராக இருக்கிறார்கள்.

முன்பு மந்த மதிகளாயும் நல் நடத்தை இல்லாதவர்களாயும் இருந்தவர்கள்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரும் ஞானம் தலைக் கொண்டு
நாரணற்கு ஆளாயினரே-என்கிறபடியே
நல்ல புத்தி யுடையவர்களாய் குற்றம் அற்றவர்களாய்
எம்பெருமானார் திருவடிகள் ஆகிற திவ்ய நகரத்தை அடைந்து
பாகவத பண்புகளில் நிலை பெற்று
ஒருவருக்கு ஒருவர் விற்கவும் வாங்கவுமாம் படி விளங்குகின்றனர்

குற்றமில்லாத, வித்வான்களான பாகவத கைங்கர்ய அநுபவம் மிகுந்தவர்கள்
யதிராஜரின் திருவடித் தாமரை என்கிற நகரை அடைந்து, ஒருவரை ஒருவர்
விற்கவும் வாங்கவும் இருக்கும் நிலையிலே தங்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
( ஒரு பாகவதருக்கு பகவத் ஆராதனத்துக்குச் சில பொருட்கள் வேண்டியிருக்க பணம் போதாதபோது,
அப்போது அங்கு வந்த பாகவதர், என்னை விற்றுக் கிடைக்கும் பணத்தை, பகவத் ஆராதனத்து செலவுக்கு ,
உபயோகப்படுத்துங்கள் என்றாராம் இப்படி, ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை
இல்லாமல் , ஒருவருக்கொருவர் உதவுவது )

—————

அப்படி உலகோர் திருந்தியமைக்கு தாமே த்ருவ்ஷ்டாந்தம் –

19-புருஷ அதிவாத பரிவாத பைசு ந
ப்ரப்ருதி ப்ரபூத பத நீய பங்கி லா
ஸ்வ ததே மமாத்ய ஸூ பகா சரஸ்வதீ
யதிராஜ கீர்த்தி கதைக விசோதிதா

என்னுடைய வாக்கு என்னும் நீரானது இதுவரை எப்படி இருந்ததது என்னில்
கடுமையான சொற்கள் நிறைந்ததாகவும்
எதனையும் மிகைப்படுத்திக் கூறுவதாகவும் மற்றவர்கள் குற்றங்களைப் பழிப்பதாகவும்
அவர்களை பற்றித் தகாதது கூறுவதாகவும் இருந்தது
இது போன்று பலவிதமான தோஷங்கள் கூடியதாகக் கலங்கிக் காணப்பட்டது
ஆனால் அதில் இடைப்பட்ட ராமானுஜர் சம்பந்தம் என்னும் தேத்தாங்கொட்டை மூலம்
எனது வாக்கு என்னும் நீர் தூய்மை பெற்று இப்போது பரி சுத்தமாகவும் இனிப்பாகவும் உள்ளது

இதன் விளைவாக, சாதுக்களுக்குப் பிரியமாக இருக்க வேண்டிய சரியான உச்சரிப்பு இப்போது என்னிடம் உள்ளது.

புருஷ அதிவாத பரிவாத பைசு –
துன்பம் கொடுக்கும் கடுமையான -இல்லை என்று நெடும் சொல்லால் மறுத்த -நீசன் -பாருஷ்யம் கடும் சொல் –
அதிவாத -மிகைப் படுத்தி -யதார்த்த வாதி இல்லாமல் -சத்யா வாதித்தவம் இல்லாமல் –
வாய்மை எனப்படுவது யாதொன்றும் தீமை இல்லாத சொல் -அயோக வியத்தேசேதம் -தீமை இல்லாத சொற்கள் எல்லாம் வாய்மை இல்லை
பரிவாதம் -குணங்களில் செயல்பாடுகளில் தோஷம் சொல்வது -தோஷம் கிரஹிக்கவே கூடாதே
நம் தோஷம் கண்டால் லாபம் -அசலார் குண கிரஹணம் லாபம் உண்டு நாம் மாற்றி பண்ணுகிறோம் ஹானி விளைவித்து கொள்கிறோம்
பைசு – தோஷம் இல்லாத போது சொல்வது கோள் சொல்வது -பரிவாக்கத்துக்கு மேலே உள்ள குற்றம் இது
தீக் குறளை சென்று ஓதோம்
ந ப்ரப்ருதி ப்ரபூத- பத நீய பங்கிலா –
இவை முதலான மகத்தான பாபங்களால்
அஸூயம் -பதநீயம் – பாபத்தால் –அப்ருதகத -கலங்கி –
ஸ்வ ததே மமாத்ய ஸூ பகா சரஸ்வதீ –
-மம சரஸ்வதி -வாக்கு –
யதிராஜ கீர்த்தி கதைக விசோதிதா-
இன்று யதிராஜர் பெரும் கீர்த்தி சொல்லாத தொடங்கி
தேத்தாங் கொட்டை போலே சுத்தப் படுத்தப் பட்டது
கதகம்-தேத்தாங் கொட்டை-
அப்புள்ளார் கிருபையால் கேட்டு சொல்லி விசோதித்தா -நன்கு சுத்தி கரிக்கப் பட்டது
ஸூபகா
அத்யந்த மங்களம் உண்டாக்கப் பட்டதே மேலும் –
ஸ்வததே
சோபனமும் ஆனதே தன்னாலே –
இனி மேல் சேஷி தம்பதி திருவடிகளில் சேரும் காலம் எண்ணி கால ஷேபம் செய்வதுவே க்ருத்யம் –

முன்பு அடியேனுடைய வாக்கு கொடுமை நிறைந்து –
பிறரை பழித்தும் கோள் சொல்லியும்
அதிவாதம் பண்ணியும் –
இதனால் தூய்மை அற்றதாய் சேறு போலே கலக்கம் உற்று இருந்தது –
ஸ்வாமியைப் பற்றியபின் -ஸ்வாமியுடைய பிரபாவம்
ஆகிற தேத்தாம் கொட்டை யால் தெரிவிக்கப்பட்டு
அனைவராலும் ருசிக்கும் படி அழகாய் அமைந்ததே –

குளத்தில் அழுக்காக இருக்கும் நீர் , தேத்தாங்கொட்டையினால் தெளிவைப் பெறுவதைப் போல,
அடியேன் பேச்சுக்கள், குத்தல்,மிகைப்படுத்துதல், வம்பு, கோள் சொல்லல், இதுபோன்ற குற்றங்களால்
குழம்பி இருந்தபோது, எம்பெருமானாரின் புகழ் பரவிய அடியேனின் சொற்களால் தெளிவடைந்து
பெரியோர்கள் கொண்டாடும் நிலையில் உள்ளது.

——————————

இப்படி தமக்கு வாழ்ச்சி அளித்த எம்பெருமானார் திருவடிகளில் –
அத்திருவடிகளின் பிரபாவத்தை வாயாறப் பேசி சரணம் புகுகிறார் –

20-அனுகல்ப பூத முரபித் பதம் சதாம்
அஜஹத் த்ரிவர்க்கம் அபவர்க்க வைபவம்
சல சித்த வ்ருத்தி விநிவர்த்தந ஔ ஷதம்
சரணம் யதீந்திர சரணம் வ்ருணீ மஹே –

ஸ்வாமியின் திருவடிகள் எப்படிப்பட்டவை என்னில்
ஞானவான்களுக்கு இவை முன்னாக எம்பெருமானின் திருவடிகளும் முக்யம் அற்றவையாகவே தோன்றும்
ஆறாம் பொருள் இன்பம் இவற்றை எதையும் துறக்காமலேயே மோக்ஷ இன்பத்தை அளிக்க வல்லவை
கலக்கம் நிறைந்த மனநிலையைப் போக்கும் மருந்தாகவே உள்ளன
இப்படிப்பட்ட திருவடிகளை அடியோங்களான நாம் சரணம் என்று நாடுவோம்

இந்த பாதங்கள் சரணடைந்தவர்களுக்கு, (தர்மம், அர்த்தம், காமம்,) மற்றும் மோக்ஷம்
ஆகிய இலக்குகளையும் பாதுகாக்கும்.
அவர்கள் பலவீனமானவர்களின் போக்குகளை சரி செய்வதில் வல்லவர்கள்

அனுகல்ப பூத முரபித் பதம் சதாம்
சத்துக்களுக்கு-சதாம் -பாகவத ஆச்சார்ய சேஷத்வ ரதி உடன் உள்ளவர்க்கு
முரபித் பதம் -முராரி -விரோதி நிராசன சீலன் திருவடிகள் -யவரை பற்ற அநு கல்பம் -பிரதான கல்பம் -திவ்ய தம்பதிகள்
-பூமி நீளா-தேவி -நித்ய ஸூ ரீகல் -ஆச்சார்யர் அநு கல்பம் –
சத்துக்கள் ஆராதனத்தில் பாஷ்யகாரர் பிரதானம் -முராரி பதம் அநு கல்பம் ஆக்கப் படும்
-வடுக நம்பி நிலை -நம் பெருமாள் நீர் சேவியும் எம்பெருமானுக்கு நான் பால் காச்சி அமுது செய்விக்க வேண்டுமே
அஜஹத் த்ரிவர்க்கம் -அபவர்க்க வைபவம்
இம்மையும் சாதித்து வானவர் நாடு -நீ கண்டு கொள்-என்று வீடும் தரும் –
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவி அல்லேன் -ஆழி பிரான் எனக்கே உளன் –
இவரும்-அப்படியே அருளுவார் –
அஜஹத் – முக்கிய அர்த்தம் அமுக்கிய அர்த்தம் -காக்கைகள் இருந்து தயிரை காப்பாற்று -பூனை வந்தது -ஒரு காக்காய் வர வில்லை –அஜஹத் -லக்ஷணை
காக்கையும் மற்றவற்றையும் காட்டுவது போலே
அஜஹத் த்ரிவர்க்கம் -அபவர்க்க வைபவம்
இங்கு உள்ள காலம் வரை ராமானுஜர் அடியார் என்ற புகழும் கொடுத்து மேலே அபவர்க்க வைபவம் கொடுக்கும்
சல சித்த வ்ருத்தி விநிவர்த்தந ஔஷதம்
மனஸ் சஞ்சலம் -நிவர்த்திக்கும் -சஞ்சல மநோ வ்ருத்தி -நின்றவா நில்லா நெஞ்சு –
அப்பியாசம் வைராக்யம் கொண்டே வெல்ல வேண்டும் -கீதை -போகாத ஊருக்கு வழி அவன் சொல்ல
-உடையவர் திருவடிகளை வரிக்கவே இது சாத்தியம் ஆகும் -இது ஒன்றே மருந்து –விசேஷ விவிதமான நிவர்த்தனம் –
சரணம் யதீந்திர சரணம் வ்ருணீ மஹே –
ஸ்ரீ பாஷ்யகாரர் திருவடியை -புகலாக வரிக்கிறோம் -அவன் திருவடிகள் ஸ்தானத்தில் இவர் ஒரு திருவடியே
உபாயம் க்ருஹம் ரக்ஷகம்-சரணம் சப்தம் –
வ்ருணீ மஹே –லும் – உத்தம புருஷ பஹு வசனம் -வரித்தோம் ஆகிறோம் –

சத்துக்களுக்கு இத்திருவடிகள் பகவத் சரணாரவிந்தமும்
இதற்கு அடுத்த படியே என்னும்படி பரம ப்ராப்யமாய் இருக்கும் —
பெரு நிலம் அளிக்கும் –
எல்லாம் தந்திடும் –
நிலையில்லா என் பாவி நெஞ்சத்தை தன்னிடத்தில் நிலை நிறுத்த மருந்தாயும் இருக்கும் –

இப்படிப் பட்ட திவ்ய சரணாரவிந்தங்களை புகலாகப் பெற்றேன் என்று ப்ரீதர் ஆகிறார் –

எம்பெருமானாரின் திருவடிகள் ,பகவானின் திருவடிகளையும்விட மேன்மையானவை.
( பகவானின் திருவடி இரண்டாம் பக்ஷம்)
இம்மை, மறுமை பலனை அளிக்கவல்லவை.
சஞ்சல புத்தியைத் தெளிவித்து, தத்வ அர்த்தங்களை உணர்த்தும் .
இப்படிப்பட்ட ,யதிராஜரின் திருவடிகளில் சரணம் அடைகிறேன்.

சோமாசி ஆண்டான் திருநாராயண பெருமாள் செல்லப் பிள்ளைக்கு பாட –
எம்பெருமான் ஆட –
உடையவர் சேவித்து களிப்பார்-
மோக்ஷ சாம்ராஜ்யம் நம் இராமானுசன் இட்ட வழக்காய் இருக்கும் –
உமது ஸூக்ருத பலம் நீர் பாட நீர் களிப்புறம் படி நான் ஆடிக் காட்டுகிறேன் –
உடையவர் தந்தால் உமக்கு பேறு உண்டு -என்றதும்
அன்று முதல் தேவு மற்று அறியேன் என்று அதி ப்ரவணராய்
கைங்கர்யத்தில் ஈடுபட்டு பாவ பந்தத்துடன் -எம்பெருமானார் -என்பர் –
பட்டர் நம்பெருமாள் என்று சொல்வது போலே –

—————

இப்படி பெருமை வாய்ந்த யதிராஜ சரணாரவிந்தத்தை ஆஸ்ரயித்தவர்களுடைய
பெருமையை அருளிச் செய்கிறார் –

21-ஸ்வ சித அவதூத பரவாதி வைபவா
நிகமாந்த நீதி ஜலதே தல ஸ்ப்ருச
பிரதிபாதயந்தி கதிம் ஆபவர்க்கிகீம்
யதி சார்வ பௌம பதசாத் க்ருதாசயா –

ஸ்வாமியின் திருவடிகளை தங்கள் மனத்தில் பதித்தவர்களும்
அவரது திருவடிகளில் தங்கள் மனத்தை வைத்தவர்களும் ஆகிய சான்றோர்களின் வலிமை என்ன
தங்கள் மூச்சுக் காற்று மூலமே தங்கள் வாதங்களை எதிர்ப்பவர்களை வீழ்த்தி விடுவர் .
வேதாந்த நீதி என்னும் ஆழ் கடலின் தரையை அடைபவர்
மோக்ஷத்தைப் பற்றிய உபாயத்தைப் போதிப்பதில் வல்லவர் ஆவார்

ஸ்வ சித அவதூத பரவாதி வைபவா –
உசுவாச நிசவாதம் மூலமே அவதூதம் ஆக்கி
சத் ஸம்ப்ரதாயிகள் இல்லாத பாஹ்ய குத்ருஷ்டிகள் பர வாதிகள் -பிரகட -ப்ரசன்ன-இரண்டு வகைகள் உண்டே
அநாயாசேனே-நிரசித்து –
பதஞ்சலி -ஆதிசேஷனாக இருந்து -பாணினி அஷ்டாத்யாயி வியாக்யானம் மஹா பாஷ்யம் -சேஷாவதாரம்-வாதாசனம் -வாக்கையே உண்டு –
திரைக்கு உள்ளே இருந்து -ஆதி சேஷன் உரு கொண்டு சங்கைகள் தீர்த்து –ஒருவர் திரை விலக்க பஸ்மம் ஆனார்கள் அனைவரும் –
ஒருவர் வெளியில் சென்று வர -ப்ரஹ்ம ரஜஸ் ஒருவர் உஜ்ஜயினியில் இருந்து 3000 வருஷம் –
பச தாது பஸ்மாம் -பாடம் சொல்லி –கோவிந்த பாதர் தொடையில் எழுதி -ஆடு மேய்க்கும் அலமேலு பிழைக்க வைக்க
எழுதின இலைகள் ஆடு சாப்பிட மீதி உள்ளது தான் மஹா பாஷ்யம் என்பர் –
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் -கிருஷ்ணன் உக்தியால் செய்வான் -பெருமாள் ஆர்ஜவ வியாபாரம் -அது போலே ராமானுஜர் -என்பர் –
கலையினால் பெற்றவன் கிருஷ்ணன் –
தொண்டனூர் -நம்பி பிரதிஷ்டை-
அமுதனார் -ஆதிசேஷன் அவதாரமேயென்று சொல்ல வில்லை -யதிராஜா விம்சதியில் சொல்ல வில்லை –
விஷ்வக் சேனர் -பஞ்சாயுதம் என்பர் தேசிகன் –
தங்கள் மூச்சுக்கு காற்றாலே விரட்டி அடிக்கப் பட்ட -சாமர்த்தியம்
நிகமாந்த நீதி ஜலதே தல ச்ப்ருச-
வேதாந்த நியாயங்கள் ப்ரஹ்ம ஸூத்ர -அதிகரண நியாயம் -சமுத்திரம் -கரை காண இயலாத -மூழ்கி முத்து எடுப்பவர்
-தல ஸ்பர்சி மூக்கி முத்து எடுப்பவர்கள் –
பிரதிபாதயந்தி கதிம் ஆப வர்க்கிகீம்
அபவர்க்கம் மோக்ஷ பிராப்தி -இதுதான் பரம புருஷார்த்தம் என்று ஸ்வரூபம் காட்டி
யதி சார்வ பௌம பதசாத் க்ருதாசயா —
ஆசயா சந்தனம் -யதி ராஜ யதி சக்கரவர்த்தி யதி சார்வ பௌம-பூமி முழுவதையும் தனக்கு ஆக்கிக் கொண்ட –
சாத் க்ருதா-ஒன்றிலே சமர்ப்பிக்கப் பட்டு
திருவடிகளில் சமர்ப்பிக்கப் பட்ட ஹிருதயம் உள்ளவர்கள் –
கிருபையா கேவலம் ஆத்ம சாத்க்ரு -ஆளவந்தார் –

ராமானுஜரின் பாதங்களில் அசைக்க முடியாத பக்தியைப் பற்றுபவர்கள், வேதாந்த சாஸ்திரப் பெருங்கடலில் ஆழமாக ஆழ்ந்து
(தேர்ந்த கருத்துகளின் முத்துக்களை எடுக்க), அவர்கள் மற்ற அமைப்புகளிலிருந்து போட்டியாளர்களை
மிகவும் சிரமமின்றி தோற்கடித்து, முக்தியின் பாதையில் நம்மை வழி நடத்துகிறார்கள்.

அன்று ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப-என்றபடி
ஸூஷ்ம அர்த்தங்களை தெரிந்து தெளிவாக உபதேசிப்பார்கள் அன்றோ –
இவர்களுடைய ஹூம் என்ற மூச்சுக் காற்றாலே பிரதிவாதிகள் அனைவரையும் அழிக்கக் கூடியவர்கள் –
எம்பெருமானார் திருவடிகளில் நிலை பெற்ற மனசை உடையவர்களாய்
தாங்களே மோக்ஷ சாம்ராஜ்யம் அளிக்க வல்லவர்கள் –

யதிஸார்வ பௌம —யதீச் சக்ரவர்த்தி ,ஸ்ரீ உடையவர்.
இவருடைய திருவடிகளில் மனத்தையே சமர்ப்பித்தவர்கள் பாகவதோத்தமர்கள்;
வேதாந்த ஞானம் மிக்கவர்கள்; பிறமதப் பிரசாரகர்களை நிரஸிப்பவர்கள்

———————

மீண்டும் உடையவர் சரணம் பற்றுகிறார் —

22-மூலே நிவஸ்ய மஹதாம் நிகம த்ருமாணாம்
முஷ்ணன் பிரதாரக பயம் த்ருத நைக தண்ட
ரங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ச
ராமானுஜ சரணமஸ்து முனி ஸ்வயம் ந

ஆழ்ந்த வேர்கள் கொண்ட பரந்த வேதம் என்னும் மரத்தின் கீழ் எப்போதும் அமர்ந்துள்ளவர்
வேதங்களை வஞ்சகம் மூலம் வீழ்த்த வல்லவர்கள் இடம் இருந்து அதனைக் காத்து அதன் அச்சம் போக்குபவர்
திருக்கையில் த்ரிதண்டம் ஏந்தியவர்
ஸ்ரீ அரங்கன் திரு முற்றத்து அடியார்களின் மனம் என்னும் தடாகத்தில் வாழும் பரம ஹம்ஸர்
இப்படிப்பட்ட ஸ்வாமி தாமாகவே வந்து தனது பேறாகவே அடியோங்களை ரக்ஷித்து அருளட்டும்

மூலே நிவச்ய மஹதாம் நிகம த்ருமாணாம்
வேதாந்தம் மஹத் வர்ஷங்கள்-கல்ப விருக்ஷங்கள் -அநந்தம்-மூல -கல்ப சாகி பர ப்ரஹ்மம் -இவரே ரக்ஷகம் –
மூலம் -வேர் நிவஸ்ய அமர்ந்து –
ஸ்ருதிகளையும் சிறுது சிரசில் உள்ள அவனும் இவரால் ரக்ஷிக்கப்
முஷ்ணன் பிரதாரக பயம் த்ருத நைக தண்ட
பிரதாரக -வஞ்சகர் -ஏமாற்றுபவர் –த்ரி தண்டம் வைத்து நிரசித்து -ரக்ஷித்து –நைக தண்ட -அநேக தண்டம் -த்ரி தண்டம்
ரங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ச
மானஸ சரோவர் -தீர்த்தம் -புனிதம் -அதிலே ராஜ ஹம்சம் -சிரேஷ்ட பஷியில் சிரேஷ்டர்
ராமானுஜ சரணமஸ்து முனி ஸ்வயம் ந –
சர்வத்தையும் சாஷாத்காரித்து -அநவரதம் மனனம்-மனன சீலர் முனி –
நமக்கு உபாய பூதர் -ரக்ஷகராக ஆகக் கடவர் –
வந்தார் தாமே -அசை-சிந்தாமணி மாலை -வந்தார் தாமே -தம்மை நிர்பந்திப்பார் பிரார்த்திப்பார் யாரும் இல்லாமல் வந்தார் -என்ற கருத்தில் –
ஸ்வயம் -நம் இடம் அபேக்ஷிக்காமல் தானே வந்து –

வேத முறைக்கு எதிராகக் கலகம் செய்யும் மதவெறியர்களை விரட்டியடிப்பவர்;
மற்றும் பக்தர்களின் (ராமானுஜரின்) இதயத்தின்  ” மானசரோவரில் ” அரச அன்னம் போல் நிற்பவர்

பரந்து கிடைக்கும் வேதமாகிய பெரிய மரத்தின் நிழலில்
கையில் முக்கோல் ஏந்தி அமர்ந்து வஞ்சனையுள்ள
குத்ருஷ்டிகளால் உண்டாகும் பயத்தை போக்கி அருளி –
ஸ்ரீ ரெங்கநாதன் அடியார்கள் மணம் ஆகிற தடாகத்தில்
ராஜ ஹம்சம் போலே சஞ்சரிக்கும் எம்பெருமானார் அடியேனுக்கு புகலாக வேண்டும் -என்கிறார் –

ராமாநுஜர் பரமஹம்ஸர். இந்தப் பரமஹம்ஸர்,
ஹம்ஸம் மாநஸரஸ்ஸில், பெரும் பெரும் மரங்களின் அடியே கூடு கட்டி வாழ்வதைப்போல,
திருவரங்கச் செல்வனுக்குத் த்ரிகரண சுத்தியாகத் தொண்டு செய்யும் பக்தர்களின்
மனம் என்கிற மாநஸரஸ்ஸில் சுகமாக வாழ்கிறார்.
அதாவது,
உடையவரை, ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆஸ்ரயித்து, அவரைப் பூஜித்து, இதயத்தில் இருத்தி , த்யாநம் செய்கிறார்கள் .
இந்த ஸ்லோகத்தில், ஸ்வாமி தேசிகன் ,உடையவரை ராஜ ஹம்ஸமாகவும், பரமஹம்ஸராகவும்
நினைத்துச் சரணம் அடைகிறார்.

———————

எம்பெருமானாரைப் புகலாக பற்றி அவர் அனுக்ரஹத்தால் விஷய ப்ராவண்யன் அற்றவன் ஆனேன் –

23-சத் மந்திர வித் ஷிபதி சம்யமி நாம் நரேந்திர –
சம்சார ஜிஹ்மக முகை சமுபஸ்த்திதம் ந
விஷ்வக் ததம் விஷய லோப விஷம்
நிஜாபி காட அநுபாவ கருடத்வஜ பாவ நாபி –

ஸம்ஸாரம் என்ற பெரிய நாகத்தின் வாய் மூலம் வெளிவந்த உலக விஷயங்களில் பற்று என்னும் கொடிய விஷமானது நான்கு திசைகளிலும் பரவி உள்ளது
அந்த விஷத்தைத் தனது மந்த்ரங்கள் மூலம் போக்க வல்ல பாம்பாட்டி போன்று யதிராஜர் உள்ளார்
எப்படி என்றால் -மிகவும் பெருமை யுடையவனும் கருடனைக் கொடியாக உள்ளவனும் ஆகிய பகவானைத் த்யானிப்பதன் மூலமே ஆகும்

சத் மந்திர வித் ஷிபதி
மந்த்ரங்களை அறிந்தவர் -சத் மத்ரங்கள் -சர்வ லோக க்ஷேமம் மங்களம் -அனுசந்திப்பார்க்கும் கேட்ப்பார்க்கும் –
மந்த்ரமும் அர்த்தமும் -வித் -அறிந்தவர் -ஸ்திர புத்தி கொண்டவர்
சம்யமி நாம் நரேந்திர –
நரர்களுக்கு -ராஜா -சம்யமி அடக்குதல் -யதி ராஜர் என்றபடி
சம்சார ஜிஹ்மக முகை சமுபஸ்த்திதம் ந
ஜிஹ்மகம் -சர்ப்பம் –ஜிஹ்மம் -அகங்கார மமக வக்ர கத்தி முன்னே பார்த்தோம்
சம்சார சர்ப்பங்கள்மூலம் நமக்கு வந்த
விஷ்வக் ததம் விஷய லோப விஷம் –
தொடர்ந்து சூழலில் அகப்பட்டு –விஷய லோப விஷம் -இந்திரியங்கள் சப்த்தாதி சிற்றின்ப விஷயங்கள் –லோபம்
-தாழ்ந்தது என்று அறிந்தாலும் விடாதே லோபி –
நிஜாபி காட அநுபாவ கருடத்வஜ பாவநாபி –
தனக்கே உரித்தான திட மஹாத்ம்யம்
கருடத்வஜ-கருடக் கொடியாக உடையவன்
பாவநா -த்யானம்
மந்த்ரம் -த்யானம் -சேர்ந்தே -இருப்பவை -பிரணவம் ஷிப ஸ்வாக -கருட மந்த்ரம் -ஆத்மாநாம் கருட இத த்யானம் செய்ய பலம் -கிட்டும் –
ஷிபதி-சப்தம் இதனாலே இங்கே –
சப்தம் அர்த்தம் இரண்டும் முக்கியம் மந்திரத்துக்கு -ஆடி ஆடி -2-4-பிரகலாதன் நரசிம்மன் -தாத்பர்ய ரத்னாவளி –
ஷபீத உஷா வல்லபன் -ஷிப்த லங்கம் -புள் உயர்த்தாய் -2-4-4–
அஷ்டாக்ஷர -ஷடாக்ஷர துவாதச அக்ஷரமந்த்ரம் -வியாபக மந்த்ரம் -சம்சார நிவ்ருத்தி -பக்தி யோகத்துக்கு இவை -அஷ்டாக்ஷரம் ஸ்ரேஷ்டம்
த்வயம் -பரந்யாசம் -பிரபத்தி –
நிஜாபி-ஸ்ரீ பாஷ்யகாரர் பெரிய திருவடி –நிஜ -சப்தம் -சாஸ்திரம் அம்ருதம் -பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் –நிஜம் சப்தம் அங்கும் -மங்கள ஸ்லோகத்தில்
பகவத் சிந்தனை பெரிய திருவடி போலே சிந்தனை பண்ணுபவர் என்றவாறு –

ராமானுஜர், ஆற்றல் மிக்க மந்திரங்களில் வல்லவர், மற்றும் உண்மையான பாம்பைக் கவர்ந்திழுப்பவர் –

விசுவாசிகள் அல்லாத விஷ பாம்புகளால் தனது பக்தர்கள் தாக்கப்படாமல் பார்த்துக் கொள்கிறார்.

உடல் முழுவதும் பரவியிருக்கும் (கருடனைப் பற்றித் தியானிப்பதன் மூலம்) உணர்வுப் பூர்வமான மோகம் என்ற விஷத்தையும் நமக்குக் குணப்படுத்துபவர்.

சதாச்சார்ய உபதேச முகமாய் நலம் தரும் சொல்லான திரு மந்த்ரார்த்தங்களை அளித்தும்
யதிகளுக்கு ராஜாவாகவும்-
நிரதிசய ப்ரபாவமும் யுடைய எம்பெருமானார் –
சம்சாரம் ஆகிய விஷ பாம்பு மூலம்
நம்முள் பரவி சூழ்ந்து இருக்கும் விஷய ப்ராவண்யம் என்கிற விஷத்தை
புட் கொடியனான எம்பெருமான் அனுக்ரஹம் கொண்டு போக்கடிக்கிறார் –

மால் பால் மனம் வைக்க மங்கையர் தோள் பற்று விட்டறும் என்றபடி –

நரேந்த்ரன் என்பவன் விஷவைத்யன் (பாம்பாட்டி )
இவன் ,மந்த்ர ஸித்தி உள்ளவர்களிடம் கருடமந்த்ரத்தை உபதேசமாகப் பெற்று,லக்ஷக்கணக்கான தடவை ஜபித்து,
ஸித்தி அடைந்து, எந்த ஸர்ப்பம் கடித்து இருந்தாலும் பல இடங்களில் பலமுறை கடித்து இருந்தாலும்,
கருட மந்த்ரத்தால் , பாம்பின் விஷம் முழுவதையும் இறக்கி, கடிபட்டவனைப் பிழைக்க வைக்கிறார்.

அதைப்போல, ராமானுஜரும், அஷ்டாக்ஷரம், த்வயம் போன்ற மந்த்ரங்களை பெரியநம்பிகளிடம் உபதேசமாகப்
பெற்று, தத்வ,ஹித, புருஷார்த்தங்களை நன்கு அறிந்து, தன் அடியார்கள் ப்ரபத்தியை அனுஷ்டிக்கச் செய்து,
அடியார்களின் ஸம்ஸார வ்ருக்ஷ விஷங்களை நீக்கி,நல்ல வாழ்வை அளிக்கிறார்.

—————

எந்தன் மெய் வினை நோய் களைந்தான் என்றார் கீழ் –
களைந்து நல் ஞானம் அளித்தனன் என்று போற்றுகிறார் இங்கு –

24-நாத ச ஏஷ யமி நாம் நக ரஸ்மி ஜாலை
அந்தர நிலீ நம் அப நீய தம மதீயம்
விஜ்ஞான சித்ரம் அநகம் லிகதி இவ சித்தே
வ்யாக்யாந கேளி ரசி கே ந கர அம்புஜேந –

ஸ்வாமியின் ஞான முத்திரையில் உள்ள திரு நகங்களில் இருந்து தேஜஸ்ஸூ ப்ரவாஹம்
அடியேன் உள்ளத்தில் நிறைந்த அஞ்ஞானம் என்ற அந்தகார இருளை நீக்குகிறது
உபதேசம் செய்ய வேண்டிய வகை அறிந்து தனது தாமரைத் திருக்கைகள் மூலம்
எனது உள்ளத்தில் சிறந்த ஞானம் என்னும் சித்ரத்தைத் தீட்டி அருள்கிறார்

நாத ச ஏஷ யமி நாம் –
யமி– யதி வாசக சப்தம் யதி நாதர்
ஏஷ– நம்மில் ஒருவர் -சக நித்ய ஸூரிகள்
நக ரஸ்மி ஜாலை –அந்தர நிலீ நம் அப நீய தம மதீயம்-
இருளை போக்கி எழுதுகிறார் -நகத்தில் இருந்து புறப்படும் தேஜஸ் கற்றைகளைக் கொண்டு
மதியம் தம -அந்தர் -உள்ளே உள்ள -அப நீயம் -போக்கி
விஜ்ஞான சித்ரம் அநகம் லிகதி இவ சித்தே
எழுதும் முத்திரை போலே -இவ-சப்தம் -4-1-6-அஸீனா அதிகரணம் -ஆஸீனா சம்பவாத் –
அசலத்தவம் -மலை போல த்யானம் -அசைவு இல்லாமல் இருப்பவை எல்லாம் த்யானம் இல்லை -அது போலே லிகதி இவ
எங்கே -சித்தத்தில் எழுதுகிறார்
எத்தை -தோஷம் அற்ற ஆத்மதத்வம் என்கிற சித்திரம்
அனேகம் ஆத்ம சித்திரம் -பகவத் சரீரம் என்ற உணர்வால் குற்றம் இல்லாத –விஜ்ஞான சித்ரம் அநகம்-
வ்யாக்யாந கேளி ரசிகே நகர அம்புஜேந –
வியாக்கியான முத்திரை –செந்தாமரைக் கைகளால்

ராமானுஜர் தனது வலது உள்ளங்கையில் அமர்ந்து, சைகையில், அறிவுரை மற்றும் அறிவுறுத்தல்.
பொலிவுடன் கூடிய நகங்கள், நம் இதயங்களில் உள்ள இருளை (அறிவை) அகற்றி,
இரு விரல்களையும் ஒருங்கிணைத்து, நம் இதயங்களில் ஒரு ஞானத்தை – தகவலறிந்த
ஓவியம் வரைவதற்குத் தயாராகிறது.

யோகீந்த்ரரான எம்பெருமானார்
என்னுள்ளே மறைந்து —
என்னைத் தீ மனம் கெடுத்து –
மருவித் தொழும் மனமே தந்து –
தம் திருக் கை தாமரைகளால் வியாக்கியான சைலிகளை
ரசித்துப் போற்றக் கூடிய என் உள்ளத்திலே
நல் ஞானம் ஆகிற சித்தரத்தை எழுதுகிறார் போலும் –

உடையவர்,யோகீச்வரன் . இவர், ஊனக்கண்ணால் பார்க்க இயலாததையும் பார்க்கும் சக்தி பெற்றவர்.
இவர், தமது உபதேச முத்ரை உள்ள வலது திருக்கர நகங்களின் காந்தியால், மனத்தில் மறைந்திருக்கும்
அறியாமை இருளை அகற்றி, ஞானத்தை உபதேசிக்கும் விதமாக , உபதேச முத்ரையோடு கூடிய திருக்கைகளில்,
இரு விரல்களையும் குவித்து, ஒப்பற்ற ஓவியர் போல ஒளிர்கிறார்

———————

இனி திருப்பொடு எழில் ஞான முத்திரை வாழியே -என்கிறபடியே
ஞான பிரதராய் எழுந்து அருளி யுள்ள யதிராஜரை சாஷாத் கரித்து மேலும் அனுபவித்து மகிழ்கிறார்
பாஷ்யகாரரை, பக்தி மூலமாக சாக்ஷாத்கரித்து,உபதேச முத்ரையோடு கூடிய திருமேனியை
ஸ்வாமி தேசிகன் ஸேவித்து அனுபவிக்கும் ஸ்லோகம்.

25-உத்க்ருஹணதீம் உபநிஷத் ஸூ நிகூடமர்த்தம்
சித்தே நிவேசயிதும் அல்ப தியாம் ஸ்வயம் ந
பச்யேம லஷ்மண முனே ப்ரதிபந்த ஹஸ்தாம்
உன்நித்ர பத்ம ஸூ பகாம் உபதேச முத்ராம்

நமது உள்ளத்தில் தகாத அறிவு மட்டுமே உள்ளது
இதனைப் போக்குவதற்காகவே யதிராஜர் தனது திருக்கையில் மலர்ந்த தாமரை மலர் போன்ற ஞான முத்திரை வைத்துள்ளார்
இதனைக் காணும் போது அவர் தானாகவே வலிய வந்து வேதாந்த உண்மைகளை நம் உள்ளத்தில் வைத்து அருளுவதாகவே தோன்றுகிறது
அத்தகைய ஞான முத்திரையை நாம் அண்டி இருப்போமாக

உத்க்ருஹணதீம் உபநிஷத் ஸூ நிகூடமர்த்தம்
உபநிஷத் ரகஸ்ய அர்த்தங்களை மேலே எடுத்து –
சித்தே நிவேசயிதும் அல்ப தியாம் ஸ்வயம் ந
மனசிலே வைத்து -முன்பு எழுதுவது போலே -இங்கே உபநிஷத்துக்கள் ரகஸ்யார்த்தங்களை எடுத்து நம் மனசில் வைத்து அருளுகிறார் –
அல்ப ஞானம் உள்ள நமக்கு –
பச்யேம லஷ்மண முனே ப்ரதிபந்த ஹஸ்தாம்
கண்டு -சேவித்து –
உன்நித்ர பத்ம ஸூ பகாம் உபதேச முத்ராம்
குவிந்த தாமரை மொட்டு போலே -உத்போதம் மலர்வது
வியாக்கியான முத்திரை உபதேச முத்திரை பர்யாயம் -திருமலை இன்றும் சேவிக்கிறோம்
ஹயக்ரீவர் -தேசிகன் -நிறைய இடங்களில் சேவிக்கிறோம் –
25 தத்வம் ஜீவாத்மா அறிய வேண்டிய –அஹங்கார மமகாரங்கள் அற்று உய்ய ஒரே வழி உடையவர் திருவடி –என்று-
இந்த 25 ஸ்லோகத்தில் அமைத்து அருளினார்-

உபநிடதங்களில் மறைந்திருக்கும் அர்த்தத்தை, மந்தமான புத்திசாலிகளின் இதயங்களில் ஆழமாக பதிய வைக்கும்
முயற்சியில் எழுப்பப்பட்ட, மலர்ந்த தாமரை போன்ற அவரது கையில் உள்ள முத்திரையை நாம் உணர்கிறோம்.

உபநிஷத்துக்குள் மறைந்துள்ள பொருள்களை மந்த மதிகளான நம்முடைய மனசில் பதிய வைப்பதற்காக –
உயர்ந்து இருப்பதும் –
அலர்ந்த தாமரை மலர் போல் மனத்துக்கு இனியதாய்
நமக்கு ப்ராப்தமான உபதேச முத்திரை யுடைய திருக் கைகளை சேவித்து களிக்கிறோம்-

என்ன உபதேசம் செய்கிறாராம் ?
ஸ்ரீமந்நாராயணனே பரதத்வம்; ஜீவர்களும் அசேதனங்களும் அவருக்கு சரீரம்; அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில்
( உபநிஷத் ) உள்ளதை, உபதேச முத்ரையைக் காட்டி,உபதேசிக்கிறாராம் .
நம்வீட்டில், நமக்குத் தெரியாமல்,இருக்கிற புதையலை , கையை உயரத் தூக்கிக் காட்டுவதைப்
போல, உபதேச முத்ரை இருக்கிறதாம்.
இவர், லக்ஷ்மண முநி
அபாத்ரத்தில் ஞாநோபதேசம் கூடாது என்பதை நன்கு அறிந்து, நம்மை நல்ல சத்பாத்ரம் என்று உணர்ந்து ,
உபதேச முத்ரையோடு ப்ரத்யக்ஷமாகி இருக்கிறார் என்கிறார்

——————

ஞான முத்திரையை கீழ் இரண்டு ஸ்லோகங்களில் அனுபவித்து
இனி ஸ்வாமி திருவாய் மலர்ந்து அருளும் ஸ்ரீ வாக்ய சைலிகளை போற்றுகிறார் –
உபதேசிப்பவர், அவரின் உபதேச முத்ரை,இவற்றை வர்ணித்தவர்
இந்த ஸ்லோகத்தில் உபதேசமொழிகளின் சொற்சுவை, பொருட்சுவையைச் சொல்கிறார்.

26-ஆகர்ஷணாநி நிகமாந்த சரஸ்வதீ நாம்
உச்சாட நாதி பஹி அந்த உபப்லவா நாம்
பத்த்யாநி கோர பவ சம்ஜ்வா பீடிதா நாம்
ஹ்ருதயாநி பாந்தி யதிராஜ முனே வசாம்சி –

யதிராஜரின் புண்ணிய கிரந்தங்கள் வேதாந்த வரிகளையும் அவற்றுள் உள்ள மறை பொருள்களையும் நம் அருகே அழைத்து வந்து விடுகின்றன
நமது உள்ளும் புறமும் நம்மைப் பெரும் தொந்தர வுகளுக்கு ஸம்ஸாரம் என்ற பயங்கரம் ஆட்படுத்தியபடியே உள்ளது
இத்தகைய நோயால் பீடிக்கப்பட்ட நமக்கு நன்மை செய்வதாக நமது உள்ளத்தில் பதிந்து நிற்பதாக அவை உள்ளன –

ஆகர்ஷணாநி நிகமாந்த சரஸ்வதீ நாம்
வேதாந்த வாக்யார்த்தங்கள் -கொண்டும் -இவர் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டு ஆகர்ஷிக்கிறார்
அர்த்தங்களை ஆகர்ஷித்து நம் மனசில் பொருந்துகிறார்
உச்சாட நாதி பஹி அந்த உபப்லவா நாம்
நம்மை பிடித்து ஆட்டும் அநாதி அபராதங்கள் அஞ்ஞானங்கள் கர்மா வாசனை ருசி -இத்யாதி சம்சார பேய்களை
துஸ் சக்திகளை உச்சாடனம் -விரட்டும் மந்த்ரம்
-இவரது ஸ்ரீ ஸூ க்திகள்-வெருட்டி ஓட்டும் -என்றவாறு –
பத்த்யாநி கோர பவ சம்ஜ்வா பீடிதா நாம்
கோரமான சம்சார பீதி –பவ-கோர பவ -ஜ்வரம் -சம் ஜ்வரம் -அந்தரஜுரம் சமனப் படுத்தினார் ஸ்ரீ பாஷ்யகாரர்
விஜ்வர கிருதக்ருத்யர் ஆனார் பெருமாள் –ததா ராம –
ஹ்ருதயாநி பாந்தி யதிராஜ முனே வசாம்சி
வசாம்சி – ஸ்ரீ ஸூக்திகள் -ஹ்ருதயத்தில் பிரகாசிக்கும்

ஸ்ரீ ராமானுஜரின் இலக்கியப் படைப்புகள், உப நிஷத்துக்களில் இருந்து அதிக அளவு வைராக்கியத்துடன் இருக்க “வழி காட்டுகின்றன”.
மந்திரம் உச்சரிப்பதைப் போலவே, உள்ளும் வெளியிலும் நாம் அனுபவிக்கும் சித்திரவதைகள் மற்றும்
சம்சார உலகில் மக்கள் பாதிக்கப்படும் நாள்பட்ட நோய் மற்றும் குறைபாடுகளுக்கு எதிராக
உறுதியான மற்றும் பாதுகாப்பான ஊட்டச் சத்தை இந்த படைப்புகள் அழிக்கின்றன .

எம்பெருமானாருடைய உபதேச பரம்பரைகள் வேதாந்த வாக்யங்களுக்கு மகிழ்ச்சி யுண்டு பண்ணுபவையாயும் –பாஹ்ய குத்ருஷ்டிகளை மாளப் பண்ணுபவையாயும் சம்சார பெரு நோய்க்கு சமனம் பண்ணும் பத்யங்களாய் மனதில் கொண்டு போற்றும்படியான நிதிகளாய் விளங்குகின்றன –

உடையவரின் உபதேசம், அவருக்குத் திருப்தியையும் சிஷ்யர்களுக்குச் சந்தேகமே இல்லாத தெளிவையும் ஏற்படுத்துகிறதாம்.பெரிய பெருமாளுக்கோ,தன்னுடைய சங்கல்பத்தின்படி, உடையவர், வேதாந்த ஸம்ப்ரதாயப் ப்ரவர்த்தகர் ஆனதால், மகிழ்ச்சியாம் -உடையவரின் வாதங்கள், “ஆகர்ஷணானி “–பிறமத வாதிகளைத் தத்வ வாதத்தால், மாற்றி,அவர்களை ஈர்த்து, வசீகரித்து,விசிஷ்டாத்வைதிகளாக மாற்றுகிறதாம் -எந்த ஆதாரமும் இல்லாமல், ப்ரமாணம் இல்லாமல், தர்க்கிக்கும் அத்வைதிகளை, ஸ்ரீஉடையவரின் ஸ்ரீஸுக்திகள் , பேய் பிசாசுகளை விரட்டும் உச்சாடன மந்த்ரங்களைப் போல, விரட்டுகிறதாம். –ஸ்ரீ ஸுக்திகள் —மணி.
இதில் உள்ள மந்த்ர உச்சாடனங்கள் – —மந்த்ரம்இவை ஸம்ஸார தாப ஜ்வரத்துக்குப் பத்தியம்–ஔஷதம்இவ் விதமாக, யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,மணி,மந்த்ரம் , ஔஷதம்.

————————

உபதேச வாக்ய ஸ்ரேணியில் ஈடுபட்டவர்
மேலே ஸ்வாமி திங்களும் ஆதித்யனுக்கும் எழுந்தால் போலே விளங்குவதை கொண்டாடுகிறார்
இந்த ஸ்லோகத்தில், அக்நி ,சந்த்ரன் , ஸுர்யன் மூவரையும்
யதிராஜரோடு ஒப்பிட்டு உடையவரின் மேன்மையைப் பாராட்டுகிறார்.–

27-சீத ஸ்வபாவ ஸூபக அனுபவ சிகாவான்
தோஷ அவமர்த்த நியத உந்நதி ஓஷதி ஈச
தாப அனுபந்த சமன தபன பிரஜா நாம்
ராமானுஜோ ஜயதி சம்வலித த்ரிதாமா –

அருள் என்னும் குளிர்ந்த காரணமாக சந்த்ரன் போலவும் தன்னை ஆஸ்ரயித்தவர்கள் தோஷங்களைப் போக்குவதால் அக்னி போலவும் இவ் வுலகம் வளம் பெற ஸூர்யன் இன்றியமையாமல் இருப்பது போல் இருந்து நமது தாபத் த்ரய பிரவாஹங்களைப் போக்கி அருளுவதால் ஸூர்யன் போலவும் ஆக மூன்று வித தேஜஸ்ஸுக்களும் கலந்து போல் உள்ளார்

அவர் வெற்றியுடன் பிரகாசிக்கட்டும்-

அவர்- அந்த ராமானுஜர், தனது குளிர்ச்சியான மற்றும் கனிவான தாக்கத்தால், அசாதாரண அக்னியாக நடந்து கொள்கிறார்;

அவர்- நம் இருளை (நம் குறைகளை) நீக்கும் விஷயத்தில் நாவல் சந்திரனாக இருப்பவர்;

அவர்- நமக்கு ஏற்படும் மூன்று வகையான துன்பங்களை நீக்குவதில், இரண்டாம் சூரியனாக இருப்பவர்;

இவ்வாறு, நமக்கு இரட்சிப்பை வழங்குவதற்காக அவர் மூன்று பேரின் கூட்டமாக விவரிக்கப்படலாம்.

சீத ஸ்வபாவ ஸூபக அனுபவ சிகாவான்-அக்னிக்கும் சிகா வான் -மேல் நோக்கி ஜ்வாலை -பூர்வ சிக ப்ராஹ்மணர்
-அக்னி உடைய உஷ்ணம் இல்லாமல் -உவமானம் திருத்தி சீத ஸ்வ பாவ -கிட்டி அனுபவிக்கும் படி
-வாடை காட்டு -தூது -ஆழ்வார் -குளிர்ந்த ஆச்சார்ய ஹிருதயம் போலே இருக்குமே -ஸூபக அனுபவ-கிட்டி எளிதில் அனுபவிக்கும் படி
-சிகாவான் ஸ்வாமி –
தோஷ அவமர்த்த நியத உந்நதி ஓஷதி ஈச -ஒஷாதிகளுக்கு அதிபதி சந்திரன் -சோமாயா கந்தர்ப்பாயா இத நம
-ஜயாதி கர்ம ஒஷாயாமி முடித்து ஹோமம் -முடிப்பார்கள் -ராசாதிபன் -சந்திரன் -ரசம் உடைய ஸ்தாவரங்கள் ஓஷதி -ஒளஷதம் என்றால் மருந்து –
தோஷங்களை நசிக்கும் அவமர்த்தம் -அந்தகாரம் இருளை போக்கும் -சம்சாரிக அஞ்ஞானம் போக்கும் ஸ்ரீ பாஷ்யகாரர்
-இருள் தரும் மா ஞாலத்தில் இருந்தும் –நியதி உந்நதி இவருக்கு -தேய் பிறை இல்லையே -பிரகாசம் வளர்ச்சி கொண்டே இருக்குமே –
தாப அனுபந்த சமன தபன பிரஜா நாம்-சூர்யன் -பிரஜைகளின் தாபம் -அனுபந்தம் -சம்பந்தி -தொடர்பு அறுக்கும் -சம்சார தாபம் போக்கி -ஸ்வாமி
-சம்சாரம் ஜரா மரணாதி-இவை அனுபந்தங்கள் -சேர்ந்தே தொடர்ந்து வருமே -ஜரா மரணம் -சோகம் மோகம் பசி தாகம் போல்வன -இவற்றை சனம் பண்ணி அருளுவார் –
சூர்யன் தாபம் உண்டாக்குவான் -சமன சாமர்த்தியம் இல்லையே
தாப த்ரயங்களை போக்கி -ஷடூர்மிகள்-போக்கி அருளி –
யதிராஜர் சப்தத்தால் போகுமே –
ராமானுஜோ ஜயதி சம்வலித த்ரிதாமா-தாம -ஜ்யோதிஸ் -ஜெயந்தி சம்பவம் தாம -வையயந்தி விபூஷணம் –
சூர்யன் சந்திரன் அக்னி – தேஜஸ் பதார்த்தங்கள் -மூன்றின் தேஜஸூம் சேர்ந்து பிரகாசிக்கிறார்
தனக்கு உள்ளே அடக்கி -அப்ருதக் சித்தமாக கொண்டு விளங்குகிறார்
தாமம் -இருப்பிடம் -பரந்தாமன் போலே –த்ரிதாம -சாஷாத் பகவான் -ஸ்ரீ வைகுண்டம் -ஷீராப்தி -சூர்ய மண்டல மதியவர்த்தி –உபாஸ்யமாக
மூன்று -நிலைகள் -பக்த நிஷ்டர்களுக்கு -அம்பஸிய மத்யே -இத்யாதி -வித்யா சஹா ஸவித்ரு மண்டலா மத்திய வர்த்தி
–ஹிரண்யஸ்ய –கப்யாசம் புண்டரீகம் அஷிணி-காயத்ரி மந்த்ரம் -இவனையே குறிக்கும் –
கோயில் திருமலை பெருமாள் கோயில் பிரபன்னர்களுக்கு த்ரிதாமம் –
கருவிலா திருவிலாதார் அணி அரங்கம் என்னா -வேங்கடமே வேங்கடமே என்கின்றாளாள் -அனந்தாழ்வான் –
வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –
பகவானையும் தன்னுள் அடக்கிய ஸ்ரீ பாஷ்யகாரர் –இருப்பிடம் வைகுந்தம் -இத்யாதி –

பாபங்களை எரித்து நம்மை தூய்மை படுத்தும் ப்ரபாவத்தால் அக்னியாய் இருப்பாராயும் –
இனிய குளிர்ந்த ஸ்வ பாவத்தால் -அஞ்ஞானமான இருளை போக்கடிப்பதில்
நியதமான மஹிமையுடைய சந்திரனாக இருப்பவரும் –
ஆத்யாத்மிகாதி தாபங்களின் ஸம்பந்தத்தை ஒழிப்பதில் சூர்யன் போன்றவரும்
இப்படி ஒருங்கே சேர்ந்துள்ள மூன்று தேஜஸ்களை யுடைய எம்பெருமானாருக்கு பல்லாண்டு -என்று
மங்களாசாசனம் செய்து அருளுகிறார் –

அக்நியிடம் , அசுத்தம் நெருங்கினால் சுட்டு, எரித்துவிடும்.
அதனிடம், உஷ்ணம் என்கிற தோஷம் இருக்கிறது.
ஆனால், உடையவரோ,
தானும் பவித்ரம், தன்னை அடைபவர்களையும் குளிர நோக்கி அவர்களையும்
பவித்ரமாக்குகிறார். இது அவரின் மேன்மை.

சந்த்ரன் ,இருளைப் போக்கி, எல்லாரையும் குளிர்வித்து மகிழ்விக்கிறார் .
உடையவர்,
மன இருளைப் போக்கி,வேதாந்தக் கருத்துக்கள் என்கிற சந்த்ர குளிர்ச்சியை—சிஷ்யர்களுக்குக் கொடுக்கிறார்.
மேலும்,அவர்களின் தவறுகளை –கேடுகளை , கோபித்துத் திருத்துகிறார்.
இப்படி ,எல்லாரும் கொண்டாடும் திருமேனியின் பேரழகில் (சந்த்ரனைவிடப் பேரழகு )
அனைவரும் வணங்கும்படி,ப்ரகாசிக்கிறார் .

பல்லாயிரம் ஒளிக் கற்றைகளோடு பிரகாசிக்கும்,ஸுர்யனைப் போல யதிராஜர் ப்ரகாசிக்கிறார் .
ஸுர்யனின் கொடூர வெய்யிலால், பூமி உலர்ந்து வறண்டு விடுகிறது.
ஆனால், உடையவரோ,
ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம் , ஆதிதைவிகம் என்கிற ஸம்ஸாரத் தாபத்ரயங்களைப் போக்கி, ரக்ஷிக்கிறார் .

இப்படி, யதிராஜர்,அக்நி ,சந்த்ரன் ,ஸுர்யன் —-மூன்று பேரின் ஸ்வரூபமாக இருப்பதால்,
(த்ரிதாமா—மூன்று இடங்களை ,திருப்பாற்கடல், ஸுர்ய மண்டலம், ஸ்ரீ வைகுண்டம் –இருப்பிடமாக உடைய பகவான் )
ஸ்ரீமந்நாராயணன் , அவற்றை எல்லாம் விட்டுவிட்டு தன்னையே த்யானித்து, துதித்து,அர்ச்சித்து வரும்
உடையவரின் ஹ்ருதயத்தில் ,நித்ய வாஸம் செய்கிறான்.
ஆதலால் , யதிராஜர் , பகவானால் ஆட்கொள்ளப்பட்டார்
இவர்–குளிர்கிற அக்நி . எப்போதும் வளர்பிறைச் சந்த்ரன் -2வது ஸுர்யன்

————

ஸ்வாமியுடைய தேஜஸை ஸ்துதித்து மகிழ்ந்தார் கீழ் –
மேலே அவருடைய சகல வித்யா வைதுஷ்யத்தையும் –
குத்ருஷ்ட்டி நிரசன சாமர்த்யத்தையும் புகழ்கிறார் –

28-ஜயதி சகல வித்யா வாஹி நீ ஜன்ம சைல
ஜனி பத பரிவ்ருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி சாகீ
நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூர்ய
நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோ யதீந்திர –

அனைத்து வித்யைகளும் நதி போன்று ப்ரவாஹம் எடுப்பதாக உள்ள மலை போன்றும்
ஸம்ஸாரத்தில் உழன்று திரிந்து களைப்பு அடைந்தவர்கள் வந்து இளைப்பாறும் மரம் போன்றும்
புற வாதிகளின் வாதமாகிய அந்தகாரம் இந்த உலகில் சூழ்ந்து விடாதபடி ரஷித்து நிற்கும் பால ஸூர்யன் போன்றும்
வேதம் என்னும் கடல் பொங்கி எழும் படிச் செய்யும் முழு நிலவு போன்றும் ஸ்வாமி உள்ளார்

ராமானுஜம் கிட்டத்தட்ட இப்படி ஜொலிக்கிறார்:

யதீந்திர –ஜயதி சகல வித்யா வாஹி நீ ஜன்ம சைல-
நான்கு வேதங்கள் -ஆறு அங்கங்கள் -சிஷா இத்யாதி -தர்ம சாஸ்திரம் – இதிகாசபுராணம் மீமாம்ஸா நியாய –14 வித்யா ஸ்தானங்கள் சதுர்வித வித்யைகள் –
வாஹி நீ –பிரவஹிக்கும் நதி -மலையில் தோன்றி புவனம் வழியாக சாகரம் சேரும் -ஞானம் பிறந்து லோகம் உஜ்ஜீவித்து பகவான் இடம் சேரும் -ஜென்ம சைல -உத்பத்தி ஸ்தானம் -போலே ஸ்ரீ பாஷ்ய காரர் -உய்ய உடையவர்
-நம்மை மாதவன் அரங்கன் திருவடிகளில் சேர்க்க
யதீந்திர — ஜனி பத பரிவ்ருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி சாகீ-
நிழல் கொடுக்கும் பெரும் மரம் –சாகீ-வா ஸூ தேவ தருச்சாயா -நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் -தாரை பெருமாளை -சாகைகள் -வேத பாகங்கள் –
ஸ்ராந்த– சிரமம் கொண்டவர்களுக்கு – விஸ்ராந்தி-கொடுக்கும் சாகீ ஸ்வாமி -ஜனி -சம்சாரம் -சூழல் ஜென்ம வியாதி –
-ஸ்வர்கம் நரகாதிகள் -பதம் -மார்க்கம் -பரிவ்ருத்தி மீண்டும் மீண்டும் -கத்வா கத்வா நிவர்த்தந்தே -சுற்று சூழல் -என்றுமாம் -பரி சேஷணம் -போலே
கர்மா அவித்யாதிகளில் -அதனாலே சிரமம் -ஸ்ராந்தம் களைப்பை போக்கி விஸ்ராந்தம்-அளிப்பவர் –
யதீந்திர -நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூ ர்ய-சோபனா மதி சுமதி –குஸ்திதா மதி குமதி -பிரயோஜனம் இல்லாமல் –
மாயா வர்க்கமான விப்ரலிம்பம் -பாஷாண்டிகள் வேத பாஹ்யர்கள் -குத்ருஷ்டிகள் -அல்லாத அர்த்தம் கொடுப்பவர்கள் -நிகிலா சப்தம் -அதனால் –
சர்வரீ -இரவு ஞான சங்கோசம் –நன்று இது தீயது இது நடத்திய நான்மறை -நின்ற நம் அன்புடை வானோர் நிலம் அளந்தான்
-இன்று நமக்கு இரவு -ஞான சங்கோசம் -கை விளக்காக -கொடுத்த சாஸ்திரம் -உதிக்கும் சூரியனுக்கு தான் அந்தகார நிவர்த்தகம் –
யதீந்திர – நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோ -சந்திரன் கடலில் இருந்து உதிக்க -சூர்யன் மலையில் இருந்து உதிக்கும் -உதய கிரி -அஸ்தமன கிரி –
பிள்ளான் -யதிராஜர் சமுத்திரத்தில் உதித்த சந்திரன் -தனியன் –ஜலாதி -சமுத்திரம் –வேலா -கடல் கரை -கடல் என்றுமாம்
-வேலை வண்ணனை மேவுகிறாய் -பெரியாழ்வார் –
பாராசார்ய வாசஸ்-வேதாந்த சமுத்திரத்தில் உதித்த சந்திரன் -ஸ்வாமி என்றவாறு

இமயமலையில் இருந்து அனைத்து ஆறுகளும் (கங்கை போன்ற) அனைத்து புராணங்களும் பாய்கின்றன:

அனைத்தையும் வழங்கும் ” கல்பக ” மரம், அதன் நிழலில், மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்புகளால் சித்திரவதை செய்யப்பட்ட ஜீவர்கள் ஓய்வெடுக்க முடியும்;

பலதரப்பட்ட பள்ளிகளில் இருந்து தகராறு செய்பவர்களின் மாயையான இயங்கியல் ஆதிக்கம் செலுத்தும் இரவு இருளை அகற்றும் விடியல் சூரியன்;

வேதங்களின் பாற்கடலில் இருந்து தோன்றும் முழு நிலவு.

எல்லா வித்யைகள் ஆகிற நதிகளுக்கு தோற்றுவாயான உயர்ந்த மலை போன்றவரும் –
சம்சாரம் ஆகிற நெடு வழியில் தொடர்ந்து நடந்து வந்த களைப்பை போக்கும் நிழல் தரும் மரம் போன்றவரும் –
எல்லா குத்ருஷ்டிகளின் பிரமமாகிற இருளை போக்கடிக்கும் பால சூர்யன் போன்றவரும் –
வேதமாகிய கடல் நீர் களித்து பொங்குவதற்கு முழு நிலவு போல் இருப்பவராக
யதிராஜருக்கு பல்லாண்டு என்று மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் –

உடையவர், எல்லா வித்யைகளும், 64 கலைகளும் உற்பத்தியாகும் இடம் போன்ற அசைக்க முடியாத மலை.
பிறமதவாதிகளால், வாதத்தில் இந்த மலையைப் பிளக்க இயலாது;
மலையில் உள்ள நெடிதுயர்ந்த தேவதாரு போன்ற மரங்களின் அடியில் எல்ல ஜீவராசிகளும்,
வெய்யிலுக்கும்,மழைக்கும் பாதுகாப்பாக இருப்பதைப் போல,
உடையவர் என்கிற மலையில் உள்ள தத்வ உபதேசங்கள் என்கிற மரங்களின் அடியில்,
ஸம்ஸார தாபத்தில் அடிபட்ட ஜீவாத்மாக்கள்,இங்கு புகலடைந்து,சந்தோஷிக்கிறார்கள்.

உடையவர், ஸகல கலா வல்லவர்.
வேதங்கள், உடையவரைப் பார்த்து, பௌர்ணமீ சந்த்ரனைப் பார்த்துப் பொங்கி எழும்
கடல்போலக் குதூகலிக்கிறது
இவர் , ஹிமாலய மலை; இவரின் உபதேசங்கள் ,அதில் உள்ள தேவதாரு போன்ற மரங்கள்;
இவர் பால ஸுர்யன் . இவர் பூர்ண சந்த்ரன் ; ஜய , ஜய ,யதிராஜ —-

——————

எம்பெருமானாரின் சகல வித்யா பாரங்கத்தைப் பேசினவர்-
மேலே ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் தமக்கு அனுக்ரஹம் பண்ண வேண்டும் என்று வேண்டுகிறார் –

29-முனி பஹூ மத சாரா முக்தி நிஸ்ரேணிகா இயம்
சஹ்ருதய ஹ்ருதயா நாம் சாச்வதீ திஷ்ட ஸித்தி
சமித துரித கந்தா சம்யமி இந்த்ரச்ய ஸூக்தி
பரிசித கஹ நா ந பிரஸ்நுவீத பிரசாதம்

ராமானுஜர் உலகுக்குத் தந்த இலக்கியத் தலைசிறந்த படைப்புகள்,
நமக்குத் திறந்து, உள் அர்த்தத்தையும் உட்பொருளையும் நமக்குத் தெளிவாகப் புரிய வைக்கட்டும்!
இந்தப் படைப்புகள் , பெரிய முனிவர்களால் பாராட்டப்பட்ட, அத்தியாவசியமானவற்றை வலியுறுத்தும்
மோக்ஷத்தின் படிக்கட்டுகளாக செயல்படும் திறன் கொண்டவை . –
மோக்ஷத்தையே எட்டிப்பிடிக்க உதவும் ஏணி
அவர்கள் மகிழ்ச்சிக்கு ஒரு ஆதாரமாக உள்ளனர்,
நல்ல மனம் படைத்த அனைவருக்கும் அவர்கள் மனத்தில் நிலை பெற்றுள்ள தன்மை உடையவை
பாபங்கள் அனைத்தையும் நீக்க வல்லவை .
அவர்கள் ஆழ்ந்த ஆய்வு, ஆழ்ந்த மற்றும் ஆழமான கருத்துக்கள் சிறந்த இன்பத்தை வெளிப்படுத்துகிறார்கள்,
இப்படிப்பட்ட அவர் திவ்ய கிரந்தங்கள் நமக்கு அருள் புரியட்டும்

1-முனி பஹூ மத சாரா -ரிஷிகள் கொண்டாடும் சாரதமம் -வியாசர் வைசம்பாயனர் போல்வார்
2-முக்தி நிஸ்ரேணிகா இயம் -படிக்கட்டு -நிஸ்ரேணிகா சோபனம் -பர்யாயம் –
3-சஹ்ருதய ஹ்ருதயா நாம்-பரமை ஏகாந்திகள் –
சாச்வதீ திஷ்ட ஸித்தி -திஷ்டம் புண்ணியம் -ஸூ ஹ்ருத சித்தி -ஸ்திரமான
4-சமித துரித கந்தா-பாபங்கள் -வாசனை உடன் போக்கி –
சம்யமி இந்த்ரச்ய ஸூ க்தி-யதீந்த்ரர் ஸ்ரீ ஸூ க்திகள் -நான்கு விசேஷங்கள் இவற்றுக்கு மேலே -அருளிச் செய்தவை
விமதர்கள் பாஹ்ய குத்ருஷ்டிகள் கலக்கம் போக்கும் –சமித விமத கேதா -பாட பேதம்
பரிசித கஹ நா ந பிரஸ்நுவீத பிரசாதம் -நமக்கு மிகவும் ககனமாவை -அனுக்ரஹத்தால் ஆழ்ந்த கருத்துக்களை
பிரகாசிக்கும் -தெளிய அறிவிக்கும் -அவைகளே நமக்கு –ஸூ கம்பீர –
ஸ்ரீ பாஷ்யம்– ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ மன் நாராயணன் -மூவர் அருளாலே ஸ்ரீ பாஷ்யம் ஆழ்ந்த கருத்துக்களை அறியப் பண்ணும்

பராங்குச பரகால நாத யாமுன முனிவர்களால் அருளப்பட்ட சாரமான அர்த்தங்களை உட் கொண்டவைகளும்-
பரமபதத்துக்கு படிக்கட்டு போன்றதும்
சத்துக்களுடைய மனசில் நித்தியமான ஆனந்தம் பொங்கச் செய்பவைகளும்-
ப்ரதிபஷிகளால் உண்டாகும் துக்கத்தை போக்குபவைகளும் –
அனுபவிக்க பரம கம்பீரமாய் இருப்பவைகளுமான ஸ்வாமியுடைய ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூக்திகள்
அடியேனுக்கு நன்றாக விளங்க வேண்டும் படி அனுக்ரஹம் பண்ணி அருள வேண்டும் –

உடையவரின் ,ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், வேதார்த்த ஸங்க்ரஹம் போன்றவைகளில்,
பூர்வாசார்யர்களின் வேதாந்த ரஹஸ்யங்கள் பொதிந்து இருக்கின்றன.
சடகோபமுநி , நாதமுநி, யாமுனமுநி , —முநித்ரய வேதாந்தக் கருத்துக்களும் உள்ளடக்கி இருக்கின்றன.
ஸ்ரீவ்யாஸரின் ப்ரஹ்மஸுத்ரங்களின் வ்யாக்யானமான ,ஸ்ரீபாஷ்யம் ——இது, உடையவரின் ஸ்ரீஸுக்தியான, மடந்தை. உத்தம ஸ்த்ரீ
இதை ஸேவிக்க ஸேவிக்கஉள்ளார்ந்த அர்த்தங்கள் ,ஊற்றுபோலச் சுரந்துகொண்டே இருக்கும் .
இதைப் படித்துப் படித்து, இந்த ஸ்ரீபாஷ்யம் என்கிற க்ரந்தமே( உத்தம ஸ்த்ரீ )
என்னை அநுக்ரஹிக்கவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்

—————

ஸ்வாமியின் ஸ்ரீ ஸூக்திகளின் பெருமைகளை மேலும் பேசி ப்ரீதர் ஆகிறார் –

30-பவ மரு பரிகிந்த ஸ்ப்பீத பா நீய சிந்து
துரித ரஹித ஜிஹ்வா துக்க குல்யா சகுல்யா
சுருதி நயன சநாபி சோபதே லஷ்மண
உக்தி நரக மதன சேவ ஆஸ்வாத நாடிந்தமா ந –

ராமானுஜரின் படைப்புகளின் அனைத்துத் திறனையும் பாருங்கள். அவர்கள்-

வறண்ட பாலைவனத்தில் பயணிக்கும் தாகத்தால் துன்புறுத்தப்பட்ட பயணிக்கு குளிர்ந்த நீரை வழங்கும் நதி போல;

ஆன்மிகப் பணிகளைப் படிக்கும் புனிதர்களுக்குப் பால் ஆறு போல

வேதங்களின் கண்களைப் போல, மிகவும் விலையுயர்ந்த மற்றும் விளக்கத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்

இறைவனுக்குச் செய்யும் சேவையின் பேரின்பத்தை எவரும் அனுபவிக்கும் வகையில், முக்கிய நரம்பு நாண் இயக்கியைப் போல.

நரகத்தை அண்ட விடாமல் தடுக்கும் ப்ரஹ்ம ஞானம் உண்டாக்கி அந்தமில் பேரின்பம் கிட்ட வழி செய்யுமே

பவ மரு பரிகிந்த -சம்சார பாலைவனத்தால் மிகவும் துன்பப்பட்டு -தாப த்ரயத்தால் –
ஸ்ப்பீத பா நீய சிந்து -பருகத் தக்க நிறைந்த -பான யோக்யம் பா நீயம் -நதி போலே
துரித ரஹித ஜிஹ்வா -பாபம் அற்றவர்கள் -நாக்குக்கு
துக்க குல்யா சகுல்யா-ஊற்று எடுத்து வரும் பால் ஆற்றை போலே இருக்குமே -புண்ய சீலர் வாயிலே வற்றாத பாலாறு போலே என்றபடி
சுருதி நயன சநாபி -வேதங்களுக்கு ஸ்திரமான கண்கள் போலே -காதுக்கு கண்கள் போலே -தெளிந்த அர்த்தம்
-த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய -இரண்டும் என்றுமாம் –சநாபி -ஸ்திரம் என்றவாறு
சோபதே லஷ்மண உக்தி-இளைய பெருமாள் -பிராணாயாமம் லஷ்மண முனி -சொல்கிறோமே –சோபதே -விளங்குகின்றன
நரக மதன-நரகாசுரனை அழித்தவன்-சம்சார நரகம் அழிப்பவன் என்றுமாம் -நாரணன் பேர் வைத்த அன்னை நரகம் புகாள்
சேவ ஆஸ்வாத நாடிந்தமா ந-நாடி யை முடிக்கு விட்டு -ஸ்ரீ யபதிக்கு சேவா பண்ணும் படி -பலப்படுத்தும்

வேதாந்தங்களை தெளிவாக பார்த்து அறியும் கண்களாக இருப்பவைகள்-
சம்சாரமாகிற பாலைவனத்தில் அலைந்து மிகவும் களைத்தவர்களுக்கு-தாப ஹரமாக –
பருக இனிதான தீர்த்தமுள்ள நதி போன்றவைகளும்
பாபம் அற்ற மஹான்களுக்கு பால் போலே நாவுக்கு இனியவையாயும் –
நரகாசுரனை முடித்த எம்பெருமானுடைய குண அனுபவத்தை ஆனந்தவாஹமாக செய்வதுமாக விளங்குகின்றன –

எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி பூர்த்தியை ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகளிலே பரக்க
அருளிச் செய்கையாலே –
இவை ஆனந்த ஜனகமான நாடி விஷயத்தை தட்டுமைவாய் இருக்குமே –

யதிராஜரின் ஸ்ரீஸுக்தி, பாலைவனமாகிய ஸம்ஸாரத்தில், தாகம் தாகம் என்று, தவிப்பவர்களுக்கு, வற்றாத நதிநீர் .
புண்ய புருஷர்களுக்கு,அவர்களுடைய நாக்குக்கு பாலாற்று நீர்.
ஸ்ருதிகளுக்குக் கண் . இந்த ஸுக்தி ஸேவிப்பவர்களின் ஆனந்த நாடியைத் தொட்டு, இங்கு மாத்ரமல்ல, ஸ்ரீவைகுண்டத்திலும்
பேரானந்தத்தை அனுபவிக்க உதவுகிறது.

——————

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம்

31-ஹரிபத மகரந்த ச்யந்தின சம்ஸ்ரிதா நாம்
அனுகத பஹூ சாகா தாபம் உன்மூல யந்தி
சமித துரித கந்தா சம்யமி இந்த்ர பிரபன்னா
கதக ஜன மநீஷா கல்ப நா கல்ப வ்ருஷா-

ராமானுஜரின் படைப்புகள் நமக்கு எவ்வளவு பெரிய காரியங்களைச் சாதிக்கின்றன!
அவற்றைப் படித்தால், இறைவனின் பாதங்களிலிருந்து வரும் அமிர்தம் போன்ற தேன் பெருகிக் கொண்டே இருக்கும்,
மேலும் மோக்ஷ  ஆனந்தத்திற்குச் சமமாக இருக்கும்.
படைப்புகள் பன்முகத்தன்மை கொண்ட வேதங்களின்
பாதையைத் தழுவி நெருக்கமாகச் செல்கின்றன என்பதை நாம் உணர்கிறோம்.
அவர்கள் கற்பவர்களின் பாவங்களின் குமட்டல் வாசனையை கடைசி வரை அகற்ற முடியும்.
அவை நம் இதயங்களில் ஒரு ” கல்பக ” மரமாக-மாற்றாத ஞானத்தை
அளித்த படி நமது கற்பனை எண்ணங்களின் வளமான வரிசையை உருவாக்குகிறது.
மேலும், படைப்புகள், வாசிப்பின் போது, ​​மூன்று வகையான தானங்களில் இருந்து நம்மை விடுவிக்கின்றன.

ஹரிபத மகரந்த ச்யந்தின -மோக்ஷம் -ஹரி பதம் -விஷ்ணு பதம் -தத் விஷ்ணோ பரமம் பதம் -தேனை பிரவஹிக்கும்
-திருவடி என்றுமாம் -இடது திருவடி அங்குஷ்டம் தேன் பெருகுவதாக சுருதி -அம்ருத தாரை -போக்யத்தை -உன் தேனே மலரும் திருப் பாதம் –
சம்ஸ்ரிதா நாம் -தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு -சம்யக்கு ஆஸ்ரயம் -ஆச்சார்யர் மூலம் பகவானை ஆஸ்ரயித்து
அனுகத பஹூ சாகா -சாஸ்திரங்களில் -பிரவேசித்து -சாகைகளில் புகுந்து சர்வ அர்த்தங்களையும் சேர்த்து திரட்டி
தாபம் உன்மூல யந்தி -தாபங்களை வேரோடு போக்கி -அடியோடு உன்மூலம்
சமித துரித கந்தா -பாபங்களை வாசனையோடு போக்கி
சம்யமி இந்த்ர பிரபன்னா
கதக ஜன மநீஷா -கதகன் பிரமாணம் கொண்டு வாதம் பண்ணுபவன் -கவிதார்க்கிக ஸிம்ஹம் –கவி கதக கண்டீரன சரண நளின –
மநீஷா-புத்தி கூர்மை
கல்ப நா கல்ப வ்ருஷா-உண்டாக்கி –கல்ப நா -ஸ்ருஷ்ட்டி என்றவாறு -கற்பனை கவி ஸ்ருஷ்ட்டி கர்த்தா -கல்ப வருஷம் போலே –
1-நிரதிசய ஆனந்தம் திருவடி தேனை அருளும் -நால் தோள் அமுதே -கற்பக வருஷம் பணைத்தால் போலே -2-அநு கத சாகைகள்
3–சம்சார தாபங்கள் வேரோடு போக்கி -4-மேல் மேலும் புத்தி கூர்மை அருளும் -வாதம் செய்து புற சமயிகளை நிரசிக்க -ஸூ சம்ப்ரதாயம் ஸ்தாபிக்க -உதவுமே –
கற்பக வ்ருஷங்கள் பஹு வசனம் -நவ கிரந்தங்கள் உண்டே என்பதால் –

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம் -தன்னை கிட்டினவர்களை பகவத் சரணாரவிந்தங்கள் –
சர்வ பாபங்களையும் போக்கி
தேனே பாலே கன்னலே அமுதே என்று மிகவும் போக்யங்களாயும் இருக்குமா போலே
சகல வேதங்களையும் அனுசரித்து சமன்வயப்படுத்தி அவதரித்த ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீ ஸூக்திகளை அப்யசிப்பவர்களை
சகல பாபங்களையும் போக்குபவையுமான அர்த்தங்களைச் சுரப்பதால்
உபபாதனம் பண்ணுகிறவர்களுக்கு கற்பக வ்ருக்ஷத்தை போலே தாபங்களைப் போக்கடிக்கும் –

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள், தேவலோக கல்பவ்ருக்ஷம் போன்றவை. கற்பகம் என்றும் சொல்வர் .
பல அடர்ந்த கிளைகள், இலைகள் , பழங்கள் உள்ள இம்மரம் இளைப்பாறுபவர்களின்,களைப்பைப் போக்கும்.
பசி, தாகத்தைப் போக்கும்; நறுமணக் காற்றைக் கொடுக்கும்;
மரத்தின் அடியில் அமர்ந்துகொண்டு, மனதில் நினைப்பவை (தர்ம வழியில் நினைப்பவை) நடக்கும்;
யதிராஜரின்ஸ்ரீஸுக்திகள் ,
பச்சைத் தேன் ; பசும்பால்;
ஆசார்ய சிச்ருக்ஷையுடன் ,பக்தியோடு தினமும் ஸ்ரீபாஷ்ய அர்த்தங்களைக் கேட்டால், பாவங்கள் எல்லாம் போகும்.
80 க்ருச்ரங்கள் செய்ததற்குச் சமம். ( ஒரு க்ருச்ரம் என்பது , ரூபாய் 12–50 என்று கணக்கு
ஒரு குறிப்பிட்ட பாவம் கழிய, மந்த்ரத்தைச் சொல்லி, வேதபாராயண ஸ்வாமிக்கு ஒரு க்ருச்ரம் என்பது கொடுப்பது சாஸ்த்ர விதி )
பாஷ்யகாரரின் ஸ்ரீஸுக்திகளைக் கற்றவர், உத்தம புருஷர். கல்பவ்ருக்ஷம்போல் உதாரர். வள்ளல்.
வேத ஸம்பந்நர் . பகவத் கல்யாண குணங்களில் திளைத்து, பிறரையும் அனுபவிக்கும்படி செய்பவர்

———

எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் இனியவை -மஹா உபகாரம் செய்பவை என்றார் கீழ் –எம்பெருமானார் சேனையர் கோன் அவதாரமாக வந்து பிறந்து மஹா உபகாரத்தை செய்தார் என்கிறார் –

32-நாநா பூதை ஜகதி சமயை நர்ம லீலாம் விதித்சோ
அந்த்யம் வர்ணம் ப்ரதயதி விபோ ஆதிம வ்யூஹ பேதே
விச்வம் த்ராதும் விஷய நியதம் வ்யஞ்ஜிதா அனுக்ரஹ
சந் விஷ்வக் சேன யதிபதி அபூத் வேத்ர சார த்ரிதண்ட

இறைவன் பல மத அமைப்புகளை உருவாக்கி யிருக்கிறான் – அவை ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன –
இவை எல்லாம் இன்புறும் இவ்விளையாட்டு உடையானுடைய லீலையே .
அவரது முதல்- தொடக்கமற்ற- வியூஹ வடிவம், வாசுதேவர். இருண்ட சாயல் கொண்ட கிருஷ்ணராக பிந்தைய நாள் அவதாரத்தை எடுத்தார்.
கலி யுகத்தில், மக்கள் இன்பத்தில் குடி கொண்டிருக்கும் போது, ​​இறைவன் விஷ்வக்சேனரை அனுப்பினார்,
அவர் தனது அருளால் (ராமானுஜராக பிறந்தார் ,
(சேனாபதி விஷ்வக்சேனர் யதிபதி ஸ்ரீ ராமானுஜராக மாறும்போது, ​​மந்திரக்கோல் திரிதண்டம் ஆகிறது )

நாநா பூதை ஜகதி சமயை -பல பல சமயங்கள் -கலி யுகத்திலே
நர்ம லீலாம் விதித்சோ-லீலா விஷயம் -கேலிக்கு விஷயம் -மா ஞாலம் வருந்தாதோ -மாட்டாயா –ரக்ஷணத்தில் நோக்கு இல்லாமல் லீலா ரசம் செய்து இருக்க
அந்த்யம் வர்ணம் ப்ரதயதி விபோ-ஆதிம வ்யூஹ பேதே-திருப் பாற் கடல் வ்யூஹம் -ஆதி -பர வா ஸூ தேவன் -பாலின் வண்ணம் -கிருத -மஞ்சள் த்ரேதா -த்வாபர நீலம்- கலி கறுத்த வண்ணம் –
விச்வம் த்ராதும் விஷய நியதம்–ஜகத்தை ரக்ஷித்து அருள -சப்தாதி விஷயங்களில் மூழ்கிய ஜகத்தை ரக்ஷிக்க-
வ்யஞ்ஜிதா அனுக்ரஹ சந்-பிராட்டி அனுக்ரஹம் பெற்று
விஷ்வக் சேன யதிபதி அபூத்-சேனை முதலியார் பிராட்டி அனுக்ரஹம் பெற்று
வேத்ர சார த்ரிதண்ட -வேத்ரமே- த்ரி தண்டம் -பிரம்பு -கொண்டே ஜகத் நிர்வாஹம் அவர் -த்ரி தண்டம் கொண்டு இவர்
-உபய விபூதி நிர்வாஹம் -ஜ்யேஷ்ட புத்ரனை தாயார் நியமிக்குமா போலே –திருவவதார ரகஸ்யம் –

பல மதங்களை ஸ்ருஷ்டித்து பரிஹாஸமான தொரு விளையாட்டை விளையாடுவதாக வ்யூஹ மூர்த்தியான
வாஸூ தேவன் கள்ள வேடம் கொண்டு ஒருப்பட்ட போது விஷய ப்ரவணராய் இருக்கிற சம்சாரிகள்
இந்த மதங்களைப் பற்றி நாசம் அடையாக கூடாது என்று
கிருபையால் சேனை முதலியாரே எம்பெருமானாராக திருவவதரித்தார் –
அவர் கை பிரம்பு செங்கோல் த்ரிதண்டம் ஆயிற்று –
சாது பரித்ராணத்துக்காகவே ஸ்வாமி அவதாரம் –
திருவனந்த ஆழ்வான் –
எம்பெருமான் –
சேனை முதலியார்
பஞ்ச திவ்ய ஆயுதங்கள் திருவவதாரமாகவே ஸ்வாமி போற்றப்படுகிறார் –

பகவானுக்கு, இவ்வுலகம் லீலாவிபூதி —-அதுவும்,
கலியுகத்தில் இவனே புத்தர் என்று சொல்லி, வேதத்துக்கு எதிராகப் பேசினான்.
பாசுபதமதத்தை வளரச் செய்தான். இப்படி, விளையாடினான்.
விஷ்வக்ஸேநரோ ,ஏன் இப்படி மக்களைப் புத்தி தடுமாறச் செய்கிறீர் என்று பகவானைக் கேட்காமல்,
இவை அவருடைய லீலாவிபூதியின் விளையாட்டு என்று உணர்ந்து ,
எம்பெருமானாராக அவதரித்தார்.
கஜேந்த்ரனைக்காக்க பகவான், அலைகுலைய ஓடிவந்ததைப் போல, போட்டது போட்டபடி வைகுண்டத்தை விட்டு
இவர் , ஓடிவந்தாராம்.
வைகுண்டத்தில், அவரது செங்கோல் பிரம்பு; அதையும் எடுத்துவரவில்லையாம்.
இந்தச்செங்கோல் பிரம்பே தானும் ஓடிவந்து , யதிராஜரின் திருக்கரத்தில், “த்ரிதண்டமா”க அவதரித்ததாம்.

—————

இப்படி திருவவதரித்து அருளிய எம்பெருமானாருடைய உபதேசங்கள் பெருமையை உபபாதிக்கிறார் –

33-லஷ்யம் புத்தே ரசிக ரசநா லாஸ்ய லீலா நிதானம்
சுத்த ஆஸ்வதம் கிமபி ஜகதி ச்ரோத்ர திவ்ய ஔஷதம் ந
லஷ்ய அலஷ்யை ஸிதி ஜலதிவத் பாதி தாத்பர்ய ரத்னை
லஷ்மீ காந்த ஸ்படிக முகுர லஷ்மணர்ய உபதேச –

நல்ல மனங்கள் இந்தப் படைப்புகளைப் படிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும்.
ஒரு “ரசிகா” ருசிக்கும் மற்றும் அவற்றை எடுத்துக் கொள்ளும் போது அவனது நாக்கு மிகவும் நல்ல விளையாட்டுடன் இருக்கும்.
பேசுவதற்கும் விவாதத்துக்கும் ஏற்ற பொருள்!
காது மிகவும் அன்புடனும் தூண்டுதலுடனும் அவற்றைக் கேட்கும்,
இது ஒரு தனித்துவமான வகை மெய் நிகர் மருத்துவத்தை நிரூபிக்கிறது, அது எவ்வளவு இனிமையானது;
மேலும் அவை இறைவனின் வடிவத்தையும் இயல்பையும் சரியான முறையில் நமக்கு வெளிப்படுத்தும் படிகக் கண்ணாடி.
ராமானுஜரின் படைப்புகளில் உள்ள மையச் செய்திகள் – சில புரிந்து கொள்ளப்பட்டவை மற்றும் சில இல்லை –
ஞானவான்களுக்குப் புலப்படும் -அல்லாதார்க்கு அதன் அர்த்தம் விளங்காது
ஒரு தெளிவான கடலில் பரந்த மற்றும் அளவிட முடியாத கற்கள் சிதறிக் கிடக்கிறது.

நகா லஷ்யம் புத்தே –
-நம்முடைய –புத்திக்கு ஞானத்துக்கு -கிரஹிக்கும் ஞானத்துக்கு லஷ்யம் –
ரசிக ரசநா லாஸ்ய லீலா நிதானம்
-ரசிகர்கள் -ஸ்ரீ ஸூ க்திகளையே –ரஸநா-அருளிச் செயல் வேதம் -இவற்றிலே ஊன்றிய நாக்கு
லாஸ்யம் தாண்டவம் -நாட்டிய பேதங்கள் -முக கை பிரதானம் லாஸ்யம் /கால் பிரதானம் தாண்டவம் –
நாவு துடித்து நடமாடும் -நிதானம் காரண பூதம் -நா துடிக்கும் நாம் ருசித்த ஸ்ரீ ஸூ க்திகளை கேட்க்கும் பொழுது எல்லாம்
சுத்த ஆஸ்வதம்
-தூய்மையான -மதுரமான போக்யம்-ரமணீயம்
கிமபி ஜகதி ச்ரோத்ர திவ்ய ஔஷதம் ந
-ஸ்ரோத்ரத்துக்கு திவ்ய அப்ராக்ருத ஒளஷதம் -நஸ்யம் மூக்கு வழியே -இது காது வழியே
லஷ்ய அலஷ்யை ஸிதி ஜலதிவத் பாதி தாத்பர்ய ரத்னை
-ஆத்மாவுக்கு ஊனமாவது -2-2-11-தேவதாந்த்ர விச்வாஸம் -வியாக்யானம் –
லஷ்யம் அலஷ்யம் அறியப்பட்டதும் அறிய படாததுமான–தாத்பர்ய ரத்னங்களைக் கொண்டு –ஸ்தித ஜலதி -வெண்மை கடல் –பாற் கடல் –
-சில தாத்பர்ய ரத்தினங்கள் அறிவுக்கு எட்டும் -சில எட்டாதே -வேங்கடேசன் -வேங்கட கவி இருவரும் கடைய -அமுதம்
-தாத்பர்ய ரத்னாவளி பிறக்க -மலையை வைத்து அவன் -ஆச்சார்ய பிரஜ்ஜா கொண்டு -சடஜித் உபநிஷத் -அதே போலே பாஷ்யகாரர்
-உபநிஷத் கடைந்து -ஸ்ரீ பாஷ்யம் –சம்ப்ரதாயம் கொண்டு -சஞ்சீவனம் –உபய வேதாந்த ரத்தினங்கள் –
லஷ்மீ காந்த ஸ்படிக முகுர
-ஸ்படிகம் -அருகில் உள்ள வஸ்துவை தன்னுள் காட்டுமே -ஸ்ரீ லஷ்மீ காந்தனை தன்னுள்ளே
உள்ளதாக காட்டும் -எங்கும் தேட வேண்டாம் -ஸ்ரீ யபதியை தெளிவாக ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூக்திகள் காட்டுமே
லஷ்மணர்ய உபதேச
-எம்பெருமானார் உபதேசங்கள் -சாரீர சாஸ்திரம் -சரணாகதி விஷயமாக

எம்பெருமானாருடைய உபதேசங்கள்
தெளியச் சொல்லப் பட்டவை –
புத்தியில் எளிதாக படியும்படி யுள்ளவை –
அப்படிப் படிந்தவர்க்கு மேலும் மேலும் வாசிக்கவும் சொல்ல நாவு துடிக்கும் படியும் உள்ளவை –
வாசிப்பவனுக்கு ஆனந்தம் உண்டாக்குபவை –
கேட்பவனுக்கு பரம ஒளஷதமாய் இருப்பவை –
இன்பம் விளைவிப்பவை –
சர்வேஸ்வரனை கண்ணாடி போலே காட்டித் தருமவை –
இத்தன்மைகள் சார்ந்த எம்பெருமானாரது உபதேச கிரந்தங்கள் –
கடலில் எளிதில் கண்டு எடுக்கக் கூடியவைகளும்-இப்படி சில – காணக் கூடாதவை –
ஆழ்ந்து நோக்கியே அறியத் தக்கவை –
இப்படி சில தாத்பர்யங்களான ரத்னங்கள் நிரம்பிய கடல் போல் விளங்குகின்றன –

யதிராஜரின், ஸ்ரீபாஷ்யம் போன்ற ஸ்ரீஸுகத்திகளின் பெருமையைச் சொல்கிறார்.
ஒரு நூல் என்றால்
1.படிக்கத் தொடங்கியதும், புத்தியைக் கவரவேண்டும்.
2. மேலும், மேலும் படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.
3. அதன் கருத்து, மேலும் மேலும் அனுபவிக்கத் தக்கதாக இருக்கவேண்டும்.
4. அதைவிளக்கிப் பிறருக்கு,அழகாக எடுத்துச் சொல்வதாக இருக்கவேண்டும்
5. இப்படிச் சொல்லும்போது, கேட்போர், இதைத் தொடர்ந்து கேட்கவேண்டும் என்கிற ஆசையைத் தூண்டுவதாக இருக்கவேண்டும்.
6. கேட்பவர்களுக்கு, நன்மை தருவதாக இருக்கவேண்டும்.
7. சொல்லும் கருத்துக்கள், உயர்ந்ததாக இருக்கவேண்டும்.
8. இவை, எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும்.

இந்த 8 குணங்களும், உடையவரின் ஸ்ரீஸுக்திகளுக்கு உண்டு, என்கிறார்.
லக்ஷ்யம் புத்தே—ஸ்ரீஸுக்தியைப் பிரித்ததுமே ,அது நமது புத்தியைக் கவர்கிறது. பார்த்ததும் படிக்கத் தோன்றுகிறதாம்.
கடந்த காலத்தைப் பற்றிய அறிவு–“ஸ்ம்ருதி “. எதிர்காலத்தைப் பற்றிய அறிவு “மதி “. முக்காலத்தையும் அறியும் அறிவு “ப்ரக்ஞா”.
இது, புத்தே லக்ஷ்யம்—பார்த்ததும் படிக்கத் தோன்றும்.
மீதி ஸுக்திகளில் புத்தி இழிவதில்லையாம்.-

”சுத்தாஸ்வாதம்”
”உடையவரின் ஸ்ரீஸுக்தி “ஔஷதம் ”
காதால் கேட்டவுடன், ஸம்ஸாரவ்யாதி போய்விடும். கேட்பதற்கு, சுகமாக இருக்கும்”,

திவ்யதம்பதிகள், திருப்பாற்கடலில், ரத்னங்கள் இழைத்த மண்டபத்தில், தங்கஸிம்ஹாசனத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
தங்கள் சோபையைக் காண விரும்பினால், அவர்கள் கண்ணாடியைத் தேடவேண்டாம்.
சுற்றி இருக்கும் ரத்னங்களும், திருப்பாற்கடலும், அழகைக் காட்டும்.
இவர்களே, தங்கள் கல்யாண குணங்களை அறிய ஆசைப்பட்டால், ஸ்ரீஉடையவரின் ஸ்ரீபாஷ்யாதி க்ரந்தங்களைப்
பார்த்தால் போதும். இவருடைய ஸ்ரீஸுக்திகள் தெளிந்த கடல்;
கடலின் அடியில், முத்து, ரத்நம், சங்கு, பவளம் முதலிய விலைமதிக்கமுடியாத பொருட்கள் நன்கு தெரியும்;
மறைந்தும் தெரியும்; அதைப்போலவே,
ஸ்ரீபாஷ்யம். படிப்பவர்கள மதிநுட்பத்திற்கு ஏற்ப, விசேஷ அர்த்தங்கள் புலப்படும்—என்கிறார்.

————————

யதிராஜரை அண்டிய ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் சொல்கிறார்.

34-ஸ்திதிம் அவதீர யந்தி அதி மநோ ரத சித்தி
மதீம் யதிபதி சம்ப்ரதாய நிரபாய தநோபசிதா
மதுகர மௌளி தக்ன மத தந்துர தந்தி கடா
கரட கடாஹ வாஹி கந சீகர சீபரிதாம்

” ராமானுஜ சம்பிரதாயம் ” எனப்படும் பெரும் செல்வத்தைப் பெற்ற பின் தொடர்பவர்களின் மகத்துவம் –
உண்மையில் ஒரு செல்வத்தை இழக்கவோ அல்லது திருடவோ முடியாது – சில அம்சங்களைக் கொண்டுள்ளது.
உயர்ந்த வரிசையின் செழுமைக்காக அவர்கள் ஒரு செப்புப் பையைப் பொருட்படுத்த மாட்டார்கள்,
அது எப்போதும் எதிர்பார்த்ததை விட அதிக செல்வம் கிடைத்தாலும், யானைக் கூட்டங்கள் சேர்ந்தாலும்
அவற்றை மதிக்க மாட்டார்கள் –
அவர்கள் ராமானுஜர் அடியார் சம்பந்தமே பிராப்யமாயும் பெரும் செல்வமாயும் கருதி
மற்ற அனைத்தையும் புல்லைப் போலவே திரஸ்கரிப்பார்கள்

ஸ்திதிம் அவதீர யந்தி அதி மநோ ரத சித்தி மதீம்-
மநோ ரதம் கடந்த -ஸ்திதிம் -அவதீர யந்தி -த்ருணாய மேனா-தர்மார்த்த காமங்களை மதிக்காமல் -திரஸ்கரித்து –
யதிபதி சம்ப்ரதாய நிரபாய தநோபசிதா
யதிபதி சம்ப்ரதாயம் -ராமானுஜ தர்சனம் -குரு பரம்பரை மூலம் பெரும் சம்ப்ரதாயம் -வேதார்த்தங்கள் –
அழிவற்ற பெரும் தனம் -நிரபாய தானம் -உபசித்தம் -நல்ல வழியிலே பெற்ற சம்பிரதாய தனம் –மனனம் பண்ணி -ரஷித்து-வாசித்து பிரவர்ப்பித்தும் – –
மதுகர மௌளி தக்ன மத தந்துர தந்தி கடா
மத தந்துர தந்தி– மத நீர் பெருக்கும் யானைகள் –மதுகரம் -வண்டுகள் -அத்யந்த ஸூ கந்தம் -பெருக்கில் மூழ்கி -உந்து மத களிறு —
கடா கரட கடாஹ வாஹி கந சீகர சீபரிதாம்
காதுகள் தாடைகள் -வழியே பெருகும் மத நீர் /கடாஹ வாஹி கந சீகர சீபரிதாம் –மூழ்கி திளைக்கும் படி -மத நீர் திவலைகள்
-இவற்றையும் திரஸ்கரிப்பார்கள் என்றவாறு -ஐஸ்வர்யார்த்திகள் இல்ல என்றவாறு –
கூரத் ஆழ்வான் போல்வார் ஐஸ்வர்யங்களை துரந்து எம்பெருமான் ஸ்ரீ ஸூக்திகளையே தனமாக கொண்டவர்கள் என்றவாறு

இவர்கள், உடையவரின் உபதேசங்களைக் கேட்டும்,ஸ்ரீஸுக்திகளை க்ரஹித்தும்
பகவத் விஷயத்தைத் தவிர மீதி எதிலும் பற்றற்று இருந்தார்கள்.
பகவானின் திருவடிகள்தான் அகண்ட ஐஸ்வர்யம் என்று எண்ணினார்கள்.
மதங்கொண்ட யானைகள் பெருக்கும் மதஜலத்தில், வண்டுகள் வந்து மூழ்கும். யானைக்கூட்டத்தை
உடைய சக்ரவர்த்தியின், சாம்ராஜ்ய ஐஸ்வர்யத்தையே , யதிராஜரின் ஸம்ப்ரதாய ஐஸ்வர்யத்தைப்
பெற்றவர்கள் அலக்ஷியப்படுத்துவர்.

எம்பெருமானார் தர்சனம் என்ற மாசற்ற தனத்தைப் பற்றி அதனால் பெருமை யுற்றவர்கள் –
யானைகள் கட்டி வாழ்தல் -ஆகிற பெரும் ஐஸ்வர்யத்தை பெற நேர்ந்தாலும்
அந்த ஐஸ்வர்யத்தை சிறிது அளவும் மதிக்க மாட்டார்கள் –
த்ருணீக்ருத விரிஞ்சாதி –முக்தகம் ஸ்லோகம் அனுசந்தேயம் –

—————

ப்ரபாவத்தை சமத்காரமாக அருளிச் செய்கிறார் –

35-நிருபதி ரெங்க வ்ருத்தி ரசிகான் அபி தாண்டவயன்
நிகம விமர்ச கேளி ரசிகை நிப்ருதை வித்ருத
குண பரிணத்த ஸூ க்தி த்ருட கோண விகட்ட
நயா ரடதி திசா முகேஷு யதிராஜ யச படஹ-

ஸ்ரீ ரெங்கவாசிகள் நாட்டியக்காரர்கள் என்னும் உவமையில் அன்றாட வாழ்க்கையே நாட்டியம் போலவே தானே அவர்களுக்கு ஏற்ற பறை ஸ்வாமியின் கீர்த்தி -புகழ் என்பதே வேதங்களில் உள்ள ஆழ்ந்த பொருள்களை ஆராய்பவர்கள் யாரோ அவர்கள் அந்தப் பறையை அடித்தபடியே உள்ளார்கள் அந்தப் பறையானது ஸ்ரீ ரெங்கநாதனின் கல்யாண குணங்கள் என்னும் கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்டுள்ளது இந்தப் பறையில் அடிக்க உதவும் கோல்களாக யதிராஜரின் நூல்கள் உள்ளன ஸ்ரீ ரெங்கத்தில் வாழவைத் தவிர வேறே ஒன்றையும் மனத்தாலும் நினைக்காத அநந்யார்ஹ சேஷ பூதர்கள் மகிழ்ந்து கொண்டே இருக்கும் படி அந்தப் பறை ஒலித்துக் கொண்டே இருக்கிறது ராமானுஜரின் படைப்புகளைப் படிப்பதன் மூலம் அறிவுப் பூர்வமாக உற்சாகமடைந்து,மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறார்கள்.இந்த மேளம் அடிக்க, நடனம் இசைந்துள்ளது.இது யதிகளின் ராஜாவான யதிராஜாவின் வருகையை உறுதியுடன் பறை சாற்றும்!

1-நிருபதி ரெங்க வ்ருத்தி ரசிகான் அபி தாண்டவயன் –
ஸ்ரீ ரெங்கே வர்த்திக்கும் -ஸ்ரீ ரெங்கம் நாட்டிய மேடை என்றுமாம் -நிருபதி -உபாதி இல்லாமல் -இயல்பான
-ரசிகர்கள் -இவர்களுக்கு ஜென்ம சித்தம் -நல்லார் வாழும் நளிர் அரங்கம் -இயல்பாக தாண்டவம் செய்து விக்கும் யதிராஜர் யசஸ் என்றுமாம்
-முரசு மாடம் உயர வைத்து அடிக்க –
2-நிகம விமர்ச கேளி ரசிகை -வேதாந்த விமர்சனம் -ஸ்ரீ பாஷ்ய முகேன-நன்றாக ஆராய்ந்து -சர்ச்சை பண்ணி மகிழ்ந்து -நல்ல பொழுது போக்கு
நிப்ருதை வித்ருத -நன்கு கவனம் உடையவர்களால் –வித்ருத -தாங்கி அடர்த்தி பிடித்துக் கொண்டு
3-குண பரிணத்த ஸூ க்தி த்ருட கோண விகட்ட நயா –
குணம் -சத்வ குணம் /கயிறு -அநு குண தசார்த்தி தேனை -நூல்களால் செய்யப் பட்ட திரி -ஸமாஹிதா –ஸ்நேஹம் -எண்ணெய் ஸ்நேஹம்
-ஸ்ரீ தர கருணை -தயா சதகம் —த்ரிதாம -பரம பதம் ஷீராப்தி ஆதித்ய மண்டலம் -திவ்ய தாமம் -சிஷ்யர்களை பரீஷை பண்ணி ஸத்பாத்ரம் ஆக்கி
-சம்ப்ரதாயம் ப்ரதீபம் -அனககுணம் -தோஷம் அற்ற திரி -சத்வ குணம் -ஆஹித ஸ்நேஹம் ப்ரீதி கொண்டு -ஆச்சார்யர் க்ருத்யம் –
குணங்களால் நன்கு கட்டப்பட்ட -பொருள் பொதிந்த ஸ்ரீ ஸூக்திகளால் திடமான கோல் கொண்டு முரசை அடிக்க
ரடதி திசா முகேஷு-ரடதி அபிவிருத்தி -திசைகள் எங்கும் ஒலிக்கும்
யதிராஜ யச படஹ-படகம் முரசு பேரி-எம்பெருமானுடைய யசஸ் ஆகிற முரசு

ஸ்ரீரங்கம்–ரங்கம் என்றாலே நாடக மேடை.
இங்கு, உடையவரின், ஸித்தாந்த ப்ரசாரம் அதிகமாக நடந்தது.
இங்கு, உடையவரின் புகழைப் பேசுபவர்களின் வார்த்தைகளைக் கேட்டு,
ரஸிகர்கள் ஆனந்தக் கண்ணீருடன் நர்த்தனம் செய்கிறார்கள்.
உடையவரின் கீர்த்தி ஒரு வாத்யம் –.பேரிகை . அதன் பெயர்–படஹம்.
இதில் , உடையவரின் ஸ்ரீஸூக்திகள் என்கிற கோல்களால் (குச்சிகள் ) ரஸிகர்கள் , அடிக்கிறார்கள் .
இந்தக் கோல்கள் , ஸ்ரீஸூக்திகளில் உள்ள இனிமையான அர்த்தமுள்ள சொற்களால் கட்டப்பட்ட கோல்கள்.
இது சப்த சௌடவம் ,அர்த்த சௌடவம் என்பர். இதனால், படஹவாத்யத்தை ரஸிகர்கள் அடிக்கிறார்கள்.
இந்த ஓசையைக் கேட்டு, ஸ்ரீரங்கவாஸிகள் ஆனந்திக்கிறார்கள்.ஆனந்தத்தில் ஆடுகிறார்கள் .—ரங்கம் அல்லவா !
இந்த வாத்ய ஓசை நாடெங்கும் பரவியது. பரமாத்மா ஸத்யமானவன் ;
அவனை வைகுண்டத்தில் அடைவதே மோக்ஷம் ;இதுவே நித்தியமானது. என்கிற ஸித்தாந்தம் பரவியது

யதிராஜர் யசஸ் ஆகிற படஹம்-பறை -போன்ற வாத்ய விசேஷம் –
வேதாந்த விசாரம் ஆகிற விளையாட்டில் ரசிகர்களால் –
பொருள் செறிந்த திவ்ய ஸூ க்திகள் ஆகிற தண்டத்தால் தட்டப்பட்டு
ஸ்ரீ ரெங்க வாசிகளான ரசிகர்களை தாமாகவே களி நடம் புரியச் செய்து ஒலிக்கிறது –
ஸ்ரீ ரெங்க வாசம் விரும்புவர் நாட்டியகாரர் என்று கொண்டு -நாட்டியம் அன்றாட வாழ்வு –
பறை ராமானுஜர் புகழ் –
வேத விற்பன்னர் பறை அடிப்பவர்கள்
ஸ்ரீ ரெங்க நாதனது திருக் கல்யாண குணங்கள் அந்த பறையில் கட்டப் பட்ட கயிறுகள் –
ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்திகள் பறையை அடிக்கும் குச்சி –
இப்படிப் பட்ட ஸ்ரீ ரெங்க வாழ்வே அநந்ய பிரயோஜனர் மகிழ்ந்து இருக்கும் படி –
அந்த பறை ஓசை திக்கு எட்டும் முழங்கு கின்றதே

————————

ராமானுஜரின் கீர்த்தி நாடெங்கும் பரவியதைப் பேசியவர் , ஸ்ரீஸுக்திகளின் கீர்த்தியைச் சொல்கிறார்.

36-இதம் பிரதம சம்பவத் குமதி ஜால கூலங்கஷா
ம்ருஷா மத விஷா நல ஜ்வலித ஜீவ ஜீவாதவ
ஷரந்தி அம்ருதம் அஷரம் யதி புரந்தரச்ய உக்தய
சிரந்தன சரஸ்வதீ சிகுர பந்த சை ரந்த்ரிகா-

இந்தக் கலிகாலத்தில் விதவிதமான பல மதங்கள் தலையெடுத்து விபரீதமாக புத்தி கொண்டதாக உள்ளனர் அந்தக் கூட்டங்கள் அனைத்துமே வேருடன் அறுக்க வல்லது ஸ்வாமியின் கிரந்தங்கள் பொய் என்பதையே மட்டும் குறிக்கோளாகக் கொண்டு அந்தத் தீ மூலம் ஜீவர்களை விஷம் போல் அழிக்கும் மதங்களில் இருந்து ஜீவர்களை ரக்ஷித்து அருளும் –வேதம் என்ற அரசியின் உபநிஷத் என்ற கூந்தலை அழகாகச் சீவி அலங்கரிக்கும் பணிப் பெண்கள் போன்றவை ஸ்வாமி யுடைய கிரந்தங்கள் அவை அழிவற்ற மோக்ஷம் பெரும் அருளை நம் மேல் பொழிகின்றன இவை அனைத்தும் ராமானுஜரின் படைப்புகளால் சாதிக்கப்படுகின்றன.

1-இதம் பிரதம சம்பவத் குமதி ஜால கூலங்கஷா -இ தம் பிரதமம் சம்பவத் வேதம் -அநாதி -என்றவாறு
குமதி –குத்ருஷ்டா மதி சுமதி ஷோபனா மதி -இவை வேத வ்ருத்தம் -கேவல உக்திகளால் -தர்க்கங்கள் -குமதி ஜாலங்கள்
-அல்ப மதியால் பிரமிக்க -விபரீத புத்தி பண்ண வைக்கும் -கூலங்கஷா-கொழுப்பை அடக்கிய -குருகையில் வந்து கொழுப்பு அடக்கிய
குல பதி தந்ததை குறிப்பினில் வைத்து பரமபத பங்கமும் —
2-ம்ருஷா மத விஷா நல ஜ்வலித ஜீவ ஜீவாதவ -மாயாவதி மதம் -ம்ருஷா மதம் -ஜகத் மித்யா ப்ரஹ்மம் சத்யம் -விஷம் கலந்த அ நலம் -நெருப்பு
-விஷம் போலேயும் நெருப்பு போலேயும் -அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ -அஸ்தானே பய சங்கையால் -அங்கு ஓர் ஆரவாரம் அது கேட்டு
-விஷம் கலந்த அக்னி உமிழ்வானே -அது பிராப்யம் -இது அப்ராப்யம் –ஜீவாது –அமிருதம் பிராணாத்மா சஞ்சீவினி –
-பிள்ளை லோகாச்சார்யார் –சம்சார சர்ப்ப சந்தஷ்ட ஜீவ ஜீவாது -அமிர்தம் -விஷ மாற்று மருந்து இரண்டும் –
3-ஷரந்தி அம்ருதம் அஷரம் -ஒவ் ஒரு ஷரமும் அமிருதம் பெருக்கும்-
யதி புரந்தரச்ய உக்தய -யதீந்த்ரர் -ஸ்ரீ ஸூக்திகள் -நவ கிரந்தங்கள்
4-சிரந்தன சரஸ்வதீ சிகுர பந்த சைரந்த்ரிகா-புராதன நூதன அத்யதன போலே -சிரந்தன
-ஸ்ரீ யதித்வம் மோக்ஷ பிரதத்வம் சன்னியோக சிஷ்ட நியாயம் சேர்ந்தே வரும் –
சிரந்தன சரஸ்வதி -அநாதியான வேத சுருதி -குழல் சிகுரம்-சைரந்திரிகா தலை அலங்காரம் -திரௌபதி வேஷம் -அர்ஜுனன் அலி-வேஷம் ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூக்திகள் வேதம் பெண் கலைந்த திருமுடியை சீர் பண்ணி அலங்க்ருதம் செய்தன கொங்கில் பிராட்டி ஐதிக்யம் -வெள்ளை-கறுப்பு பின்னல் யதிகள் க்ரஹஸ்தர்கள் கலந்து சம்ப்ரதாயம் வளர்க்க –

மிகவும் ப்ராசீனமான வைதிக தரிசனத்தை உபபாதிக்கும் யதீந்திரருடைய திவ்ய ஸூக்திகள் –
வேதத்துக்கு புறம்பான -மிகவும் பிற்பட்ட காலத்தில் உண்டான
குமதிகளுடைய மதங்களை நசிக்கப் பண்ணியும் –
மாயாவாதம் ஆகிற விஷ அக்னியால் தபிக்கும் ஆத்மாக்களுக்கு ஜீவாதுவாய் இருந்து கொண்டும் –
வேத மாதின் அளகபாரமான உபநிஷத்துக்களை சிக்கிவிடுத்து அழகாகப் பண்ணும்
சைரந்திரிகை யாகை யாகப் பணி செய்தும்
நித்தியமான மோக்ஷ சாம்ராஜ்யத்தை அளிக்கின்றன –

புதிது புதிதாகத் தோன்றுகிற துர்ப்புத்தி உடைய பிற மதத்தினரின் கூட்டத்தைப் பேர்ப்பனவாய்
பொய்யையே கொண்ட மதமாகிய விஷம் கலந்த தீயினால் எரிந்த , ஜீவாத்மாக்களை பிழைப்பிக்கும் மருந்துகளாய்
வேதவாக்காகிற அரசியின் உபநிஷத் பாகமாகிய கூந்தலை வாரி முடித்து அலங்கரிக்கிற பணிப் பெண்களாயுள்ள
ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீஸுக்திகள் அழிவற்ற மோக்ஷத்தை மொழிகின்றன என்கிறார் .

குதர்க்கவாதிகளின் கொழுப்பை அடக்குவதாயும் ,
மாயாவாதிகளின் மதமாகிய விஷ அக்னியால் , வெந்துபோன ஜீவராசிகளுக்கு உயிர் ஊட்டுபவையாகவும்
அநாதியான ஸ்ருதி ,
யுவதியின் கலைந்துபோன கேசங்களை (வாக்யங்கள் ) சேர்த்து முடிக்கும் தாதி போன்றவையுமான
யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,குறையாத மோக்ஷமாகிற அமுதத்தைப் பெருக்குகின்றன

4 வது வரியான ” சிரந்தந ஸரஸ்வதீ சிகுர பந்த ஸைரந்த்ரிகா : || “
இது, பழமையான ஐதிஹ்யத்தை உணர்த்துவதாகச் சொல்வர்.
ஸ்ரீபாஷ்யகாரரின் அந்திம காலத்தில்,ப்ரஹ்மவித்துக்களான சில சிஷ்யர்கள்,
தம் ஆசார்யன் பிரிவை எண்ணி வருத்தமும் , பிற்பாடு சித்தாந்தத்தை ஸ்தாபிக்கவல்ல
இத்தகைய ஆசார்யன் இல்லாமல் போவதை எண்ணிக் கவலையும் கொண்டனர்.

இவர்களை நோக்கி, எம்பெருமானார் ,
நீங்கள் என் சிஷ்யையான கொங்குப் பிராட்டியைப் போய்ப் பாருங்கள் உங்கள் கவலை நீங்கும் என்றாராம்.

இவர்களும், அப்படியே சென்று பார்த்து , தங்கள் கவலையைச் சொன்னார்களாம்
இவர்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்ட கொங்குப்பிராட்டி ,வீட்டுக்குள் சென்று, தலைக்குப் பூசும் தைலம் , சீப்பு , சிவப்பு
மற்றும் வெள்ளைப் பட்டுக்கயிறு இவற்றை எடுத்துவந்து, இவர்கள் எதிரே அமர்ந்து , தலைக்கேசத்துக்குத் தைலம் தடவி,
கேசத்திலுள்ள சிக்கல்களை நீக்கி ,நன்கு வாரி, பின்னி அதைச் சிவப்புக் கயிற்றினால் ,நன்றாகக் கட்டினாளாம் .
பிறகு , சிறிது நேரம் சுகமாக இளைப்பாறினாளாம் .
பிறகு, வெள்ளைப் பட்டுக் கயிற்றால் மறுபடியும் இறுகக் கட்டி இவர்களை வணங்கி , விடைகொடுத்து அனுப்பிவிட்டாளாம்

இவர்கள் நேரே உடையவரிடம் வந்தார்கள் ;நடந்ததைச் சொல்லி , எங்களுக்கு ஒன்றும் புரியவில்லையே என்றார்கள்

எம்பெருமானார் , புன்சிரிப்புடன் விளக்கினாராம்
சிஷ்யர்களே—இந்தப் இந்தப்பெண்ணை ,சாதாரணமாக எண்ணவேண்டாம் ;
வேதங்களே இப்பெண்ணுருவம் பூண்டன
நமது வாக்யார்த்தங்கள் ,உபநிஷத் அர்த்த நிர்ணயம் இவைகளினால் நமக்கு சிஷ்யையாக நடித்தாள் ;
இவளுடைய கூந்தலே உபநிஷத் வாக்யங்கள் ;
இவள் கூந்தலை முதலிலே உதறியது , பிற மதஸ்தர் சொன்ன தவறான அர்த்தங்கள் ;
தைலம் தடவியது ,வேதார்த்த நிர்ணயம் செய்தது;சிக்கலை எடுத்தது , கூந்தலைப் பின்னியது எல்லாம்
விபரீத அர்த்தங்களைக் கண்டித்து உபநிஷத் வாக்யங்களின் ஒற்றுமையை உறுதிப் படுத்தியதைக் காட்டும்.
சிவப்பு பட்டுநூலால் கட்டியது, சிவப்பு நிற காஷாயம் அணிந்த நான்,பிற மதஸ்தர்களால் ,
சித்தாந்தத்துக்குக் கேடு வராதபடி ஸ்ரீபாஷ்யாதி நூல்களை இயற்றி,ப்ரசாரம் செய்தது. சிறிது நேரம் சுகமாக இளைப்பாறியது,
வேதவேத்யனான தன்னுடைய நாயகனோடு, சேர்ந்து இன்பமாக இருந்த நிலையைத் தெரிவிக்கிறது.

உடனே அவர்கள், அப்படிஎன்றால், வெள்ளைப் பட்டுநூலால் கட்டியதற்குப் பொருள்—-? என்று கேட்டார்கள்.
அதற்கு,
எம்பெருமானார், நாமே, சிலகாலம் கழித்து, மீண்டும் காஞ்சியில் தூப்புலில் , வேதாந்த தேசிகனாக அவதரிக்கப் போகிறோம்;
ஆயுள் முழுவதும் க்ருஹஸ்தாஸ்ரமத்திலேயே இருந்து,
க்ரந்தங்கள் உபதேசங்கள் மூலமாக நம் சித்தாந்தத்தை மேலும் வளர்ப்போம்;
பிறமதவாதிகளை வாதப்போரில் வெல்வோம்;

இதனால்தான்
வேங்கடசாவதாரோயம் தத்கண்டாம் சோதவா பவேத் |
யதீந்த்ராம்சோதவேத்யேவம் விதர்க்யாயாஸ்து மங்களம் ||
என்று, ஸ்வாமி தேசிகன் ஸ்ரீநிவாசனின் அவதாரமோ,
அவனுடைய திருமணியின் அவதாரமோ, அல்லது யதிராஜரின் அவதாரமோ என்று ஊஹிக்கப்படுபவருக்கு
மங்களம் என்று சொல்வதாக, பறவாக்கோட்டை ஸ்ரீமதாண்டவன் தனது வ்யாக்யானத்தில் சொல்கிறார்.

————

ஸ்ரீ ஸூக்தி பிரபாவத்தை -மேலும் அனுபவிக்கிறார் –

37-ஸூதா அசன ஸூ துர்க்ரஹ ஸ்ருதி சமஷ்டி முஷ்டிந்த்ய
கதா ஆஹவம் அசௌ கதான் கபட சௌகதான் கண்டயன்
முனி மனஸி லஷ்மண முதம் உதஞ்ஜயதி அஞ்ஜசா
முகுந்த குண மௌக்திக ப்ரகர ஸூக்திபி ஸூக்திபி

உப்புச்சாற்றைப் பருகும் தேவர்களாலும் எளிதில் அறிந்து கொள்ள இயலாத ஆழ்ந்த பொருள்களை
யுடைய வேதங்களை மிகவும் எளிதாக ஒரு பிடியில் பருக வல்லவர் நம் ஸ்வாமி,
புத்தாதி பாஹ்யர் வாதங்களை எளிதாக நிரஸித்து அருளினார்
அவருடைய கிரந்தங்கள் அனைத்துமே எம்பெருமானின் கல்யாண குணங்கள் என்னும் முத்துக் குவியல்களை
உருவாக்கிப் பாதுகாக்கும் முத்துச் சிப்பி போல் உள்ளன
இதன் மூலம் நம்மை பேர் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்துகின்றார் .
இறைவன் ஒரு கல்யாண குண சாகரம் என்பதை விளக்கி, முத்துக்களை, அதாவது இறைவனின் குணங்களை
வரிசையாகக் கொண்ட சிப்பி ஓடுகளாகச் செயல்பட்டு நம் இதயங்களை மகிழ்விக்கிறார் .

ஸூ தா அசன –தேவர்கள் -ஸூ தா அமிர்தம் —
ஸூ துர்க்ரஹ –அவர்களாலும் கிரகிக்க முடியாத
சுருதி சமஷ்டி முஷ்டிந்த்ய –சர்வ வேதங்களையும் -கையிலே -முஷ்டியிலே-தயந்தி -பருகுவது –தாத்பர்ய சூஷ்ம ஸமஸ்த அர்த்தங்களையும் -கைக் கொண்டு
கதா ஆஹவம் அசௌ–ஆஹவம் யுத்தம் –கதா ஆஹவம் –வாத யுத்தம் –ஆஹவ புங்கவ ஸ்தோத்ரம் -திருப் புட் குழி பெருமாள் சந்நிதியில் -ஸ்ரீ தேசிகன் அருளி
கதான் கபட சௌகதான்–புத்தர்கள் –கபட சந்யாசிகள் பிரசன்ன புத்தர்கள்
கண்டயன்-நிராகரித்து —
முனி மனஸி லஷ்மண –லஷ்மண முனி
முதம் உதஞ்ஜயதி -ஸந்தோஷம் ஏற்படுத்தி -பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசன பூர்வகமாக கல்யாண குணங்களை அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகளாலே –
அஞ்ஜசா —
முகுந்த குண மௌக்திக ப்ரகர–முத்து குவியல்
சுக்திபி ஸூக்திபி–அருளிச் செய்த ஸூ க்திகளாலே –
குணங்களான முத்துக்கள் -முகுந்தனின் கல்யாண குணங்கள் நிரம்பிய ஸூக்திகளாலே —

உடையவரின் ஸ்ரீஸுக்திகளுக்கு, பெருமை எப்படி வந்தது ? சொல்கிறார்,ஸ்வாமி தேசிகன்.
ஸ்ரீபாஷ்யம் போன்ற ஸ்ரீஸுக்திகள் ,மேலெழுந்தவாரியாக அர்த்தம் பண்ணினால்,
அத்வைதத்தைக் கண்டிப்பதாகத் தோன்றினாலும்,
பகவானின் கல்யாண குணங்களை,உறுதிப்படுத்திச் சொல்கின்றன என்கிறார் .
2வது வரியில், உடையவரை “அஸௌ ” என்பதற்கு, உடையவரே நேரில் ப்ரத்யக்ஷமாகி,
ஸ்வாமி தேசிகனுக்குப் பிற மத கண்டனங்களை உபதேசிக்கிறார் என்று வியாக்யானம் இடுகிறார்கள்.
உடையவரின் ஸ்ரீஸுக்திகள் ,சிப்பிகளைப்போல ! இவற்றில், பகவானின் கல்யாண குணங்கள் என்கிற முத்துக்கள் உள்ளன.
அதனால், எனது மனத்தில், ஆனந்தம் வெள்ளப் பெருக்கு எடுக்கிறது, என்கிறார் .

ஸமஸ்த கல்யாண குணாத்மகன் பகவான் என்று ஸ்தாபித்து –
பகவத் குணங்களான முத்துக்களுக்கு இவை முத்துச் சிப்பி போல் உள்ளன –
அமுதம் உண்ணும் தேவதைகளுக்கும் நிலம் இல்லாத மறைகளின் உட் பொருளை கையிலங்கு நெல்லிக் கனியாகக் கண்டு
கொண்டுள்ள ஸ்வாமி கபடர்களைத் தம் ஸ்ரீ ஸூக்திகளால் கண்டித்து நம் மனத்தில் ஆனந்தத்தை வளரச் செய்கிறார் –

———————

உடையவர், ப்ரஹ்மத்தைக் காத்தவர் என்கிறார்.

38-கபர்த்தி மத கர்த்தமம் கபில கல்பநா வாகுராம்
துரத்யயம் அதீத்ய தத் த்ருஹிண தந்திர யந்திர உதரம்
குத்ருஷ்டி குஹ நா முகே நிபதத பரப்ரஹ்மண
கர க்ரஹ விசஷணோ ஜயதி லஷ்மண அயம் முனி

பர ப்ரஹ்மம் சைவம் என்னும் சேற்றிலே சிக்கியது
கபில முனிவரின் சாங்க்ய வலையிலே சிக்குண்டது
நான்முகன் கண்ட யோக ஸாஸ்த்ரம் என்னும் இயந்திரத்தின் நடுப் பகுதியிலே அகப்பட்டது
இவற்றையும் தாண்டி மாயாவாதிகளின் வாதங்களிலே சிக்குண்டது
இவை அனைத்தையும் நீக்கி பர ப்ரஹ்மத்தை மிகவும் எளிதாக உயர்த்த வல்லவராக
உள்ள ஸ்வாமி அனைவரிலும் மேம்பட்டவராக உள்ளார்-

கபர்த்தி மத கர்த்தமம் –புதை சேற்றில் -கர்த்தமத்தில் –கபர்த்தி மதம் -சைவ மதம் —கபர்த்தி -ருத்ரன் -ஜடா முடிக்கு கபர்த்தம் /
கபில கல்பநா வாகுராம்-கபிலர் கற்பனை ரூபமான வலை–கர்த்தப பிரஜாபதி குமாரர் கபிலர் —பிரக்ருதிக்கு ஸ்ருஷ்ட்யாதி காரணத்வம் சொல்லி
துரத்யயம் அதீத்ய –கடக்க ஒண்ணாத
தத் த்ருஹிண -சதுர்முக ப்ரஹ்ம -யோக மதம் ஆகிய –
தந்திர யந்திர உதரம் –கபடமாக பிடித்து வைக்கும் யந்த்ரம் / சாஸ்திரம் நமக்கு உபாதேயம் –
மதங்கள் த்யாஜ்யம் –தத்வம் ஹிதம் புருஷார்த்தங்கள் இவர்களுக்கு வேறே -/ தட்டான் வைரம் பதிக்க -மாப்பிள்ளையாக முடியாதே –
குத்ருஷ்டி குஹ நா முகே –பாழும் கிணறு –
நிபதத பரப்ரஹ்மண –பர ப்ரஹ்மம் விழுந்து கொண்டே இருக்க –
கர க்ரஹ விசஷணோ ஜயதி -கை கொடுத்து தூக்கி ரக்ஷித்து -ஜெயந்தி -பல்லாண்டு பல்லாண்டு
லஷ்மண அயம் முனி
கரம் / கஜம் குடுமி -அப்பய்ய தீக்ஷிதர் –மேலே குடுமி இருக்குமே -ஐயோ கை தூக்கி தானே கிணற்றில் விழுவார்கள் –

பரப்ரஹ்மம் —
சைவம் என்கிற சேற்றில் விழாமல் அதைத் தாண்டி,
கபிலரின் சாங்க்யமத வலையில் அகப்படாது தப்பித்து,
சிக்கல் உள்ள சார்வாகமத யந்த்ரதந்த்ரங்களில் புகாமல் பிழைத்து, வந்தது.
சங்கரரின் மாயாவாதத்தில் –அதன் வாயில் அகப்பட இருந்த சமயத்தில்,
பரப்ரஹ்மத்தைக் கைகொடுத்துக் காப்பாற்றியவர் , யதிராஜர் .
அதனால், அவர் மேன்மையாக விளங்குகிறார் என்கிறார்
ஜயகோஷம் செய்கிறார்–ஜய ஜய யதிராஜ

பரம் பொருளான புருஷோத்தமனைப் பல பெரிய ஆபத்துக்களின் நின்றும் ரக்ஷித்து அருளினவர் எம்பெருமானார் –கடக்க அரிதான சைவம் என்ற சேற்றைக் கடந்து சாங்கியருடைய அப்ரமாணிகமான மதமாகிற வலையில் இருந்து தப்பி –த்ருஹிண -மதமாகிற -யோக மதம் -சுழலும் யந்திரத்தின்-மத்யத்தையும் தாண்டி குத்ருஷ்டிகளான குகை வாயிலில் விழுந்து கொண்டு இருந்த பர ப்ரஹ்மம்
எம்பெருமானைக் கை கொடுத்து ஆபத்தின் நின்றும் விடுவிக்கும் சாமர்த்தியம் வாய்ந்த இந்த லஷ்மண முனி விஜய ஸ்ரீ யுடன் பிரகாசிக்கிறார் –

—————

39-கணாத பரிபாடிபி கபில கல்பநா நாடகை
குமாரில குபாஷிதை குரு நிபந்தன க்ரந்த்திபி
ததாகத கதா சதை தத் அநுசாரி ஜல்பை அபி
பிரதாரிதம் ஜகத் பிரகுணிதம் யதீந்திர உக்திபி –

ராமானுஜரின் உன்னதமான நூல்கள் களத்தில் இறங்கி மக்களின் மனசாட்சியை சரியான நேரத்தில் உருவாக்கியது.

கணாதாரின் -வைசேஷிகரின் பரம அணுவே காரணம் என்பதையும்
கபிலனின் கற்பனை -சாங்க்ய தத்வம்
ஏமாற்றம் முற்றிலும் நாடகம் மற்றும் புரளி
குமாரிலா பட்டரின் மீமாம்ஸா வாதமும்
பிரபாகரர் போதித்த முடிச்சு போன்ற அவிழ்க்க முடியாத புதர்களாலும்
புத்தரின் பல்வேறு புனைகதைகளாலும் சூன்ய வாதங்களாலும் ,
அவர்களை போன்றே மாயாவாதிகளின் வாதங்களாலும் இந்த உலகம் பெரிதாக குழம்பி நின்றது
இந்த நிலையானது ஸ்வாமிகளின் கிரந்தங்களால் சீராக்கப் பட்டது

கணாத பரிபாடிபி –பரிபாஷைகளால் முதலில் –சப்தம் சொல்லி ஒவ்வாத அர்த்தம் சொல்லி -சாங்கியம் பிரதானம்
-மூல பிரக்ருதிக்கு பரிபாஷை –இவர்களுக்கு –கணாத ரிஷி -வைசேஷிக மதம் -பரமாணுவை —
கபில கல்பநா நாடகை-கற்பனையான நாடகங்கள் –ஈஸ்வரனை ஒத்துக்க கொள்ளாமல் –நிரீஸ்வர –
குமாரில குபாஷிதை–மீமாம்சகர் -குமாரில பட்டர் —குஸ்ஸிதா பாஷ்யம்–நிந்திக்கும் மதம் பிரபாகரன் சிஷ்யர்
-அபிப்ராய பேதம் -குரு மதம் -பரிகாசமாக -குருவுக்கு விஞ்சிய –வேதாந்தம் நிந்தித்து
குரு நிபந்தன க்ரந்த்திபி–முடிச்சுகள் போட்டு -அறிய முடியாத படி —
ததாகத கதா சதை –ததா கதன் -புத்தன் -சூன்யம் இதம் சர்வம் –ததா கதம் நாஸ்திக வாதம் –
-ஜாபாலி -பெருமாள் –வார்த்தை –கதா -வாதங்கள் -பிரமாணங்கள் கொண்டு சொல்லாமல் –சதை -கணக்கற்ற
தத் அநுசாரி ஜல்பை அபி–பிரசன்ன புத்தன் -ஞானம் ஒன்றே -ஜகம் மித்யா ப்ரஹ்மம் ஒன்றே ஜல்பிதம்
பிரதாரிதம் ஜகத்–ஏமாற்றப் படாதே ஜகம் –
பிரகுணிதம் யதீந்திர உக்திபி–தன்னை சுதாரித்து கொண்டதே -வெளி வந்து -ஸ்வாமி களுடைய ஸ்ரீ ஸூ க்திகளாலே
யதார்த்தமான தத்வ ஹித புருஷார்த்தங்களை வெளியிட்டு அருளி –

உலகம் ஏமாந்த தருணம்—-
கணாதர் என்பவரின் பரிபாஷைகள்;
கபிலரின் கற்பனைகள்;
குமாரிலரின் குறையுள்ள பேச்சுகள்;
ப்ரபாகர குருவின்,சிக்கலான நூல் முடிச்சுகள்;
புத்தரின் கட்டுக் கதைகள்;
இவற்றாலெல்லாம் ,பிறந்து பரவிய அர்த்தமில்லாப் பேச்சுகள் ;
இப்படி உலகம் ஏமாந்து இருந்த சமயத்தில், எம்பெருமானார் ஸ்ரீஸுக்திகள் பிறந்து பரவி வளர்ந்தன;
உலகம் தன்னை சுதாரித்துக் கொண்டது.
இப்படி, உண்மையை உலகுக்கு, தன்னுடைய ஸ்ரீஸுக்திகளின் மூலமாக உணர்த்தியவர், யதிராஜர்

தாங்கள் கெட்டது போதாது என்று லோகத்தாரையும் தாங்கள் கல்பித்த அபார்த்தங்களாலே
கெடுத்தவர்கள் கணாதர் கபிலர் குமரில பட்டர் பிரபாகர் புத்தர் இவர்களை
தம் ஸ்ரீ ஸூக்திகளால் நிரசித்து லோகத்தார் க்ஷேமத்தை பெருக்கியவர் நம் ஸ்வாமி –

——————

ஸ்வாமியுடைய சிஷ்ய அக்ரேஸர்களுடைய பெருமையை பரக்க உபபாதிக்கிறார் –

40-கதா கலஹ கௌதுக க்ரஹ க்ருஹீத கௌதஸ்குத
ப்ரதா ஜலதி சம்ப்லவ க்ரசன கும்ப சம்பூதய
ஜெயந்தி ஸூ திய யதி ஷிதிப்ருத் அந்திக உபாசநா
பிரபாவ பரிபக்த்ரிம ப்ரமிதி பாரதீ சம்பத

ஸ்வாமியின் திருவடி நிழலில் எப்போதும் அண்டி நின்று அதனாலேயே
பெருமை -முழுமையான ஞானம் வாக் வன்மை பெற்றவர்கள்
வாதம் செய்ய வல்ல புற சமயிகள் -உத்ஸாகம் என்னும் பிசாசால் பீடிக்கப்பட்ட புற மதவாதிகள் யுடைய
புகழ் என்னும் கடலை அகஸ்தியர் போன்று உறிஞ்சி விடுவதில் வல்லவராக அல்லவா உள்ளனர் –
ராமானுஜரின் காலடியில் அருகாமையில் படிக்கும் பாக்கியத்தைப் பெற்ற அறிஞர்களுக்கு முதிர்ந்த ஞானம் இருக்கிறது,
அதுவே அவர்களின் செல்வம். அத்தகைய அறிஞர்கள் உலகை மகிழ்விக்கப் போகிறார்கள்.

கதா கலஹம் -யுத்தம் -வாய் சண்டை கலகம்-வாதப்போர்
கௌதுக க்ரஹ-குதூகலம் இவற்றால் -க்ரஹம் -பிடித்து துன்புறுத்தும் -நவ க்ரஹம் போலே / முதலை -பிசாசங்களும் க்ரஹம்
–நல்லது செய்யும் சாமர்த்தியம் சர்வேஸ்வரன் ஒருவனே –க்ருஹம் -வீடு வேற — —
க்ருஹீத கௌதச்குத-தார்க்கிகள் –ஏன் ஏன் கேட்டுக் கொண்டே -விச்வாஸ ஹீனர்கள் -தர்க்க மாத்ர நிஷ்டர்கள்
ப்ரதா ஜலதி சம்ப்லவ க்ரசன–சமுத்திரம் -அபரிச்சின்ன தீர்த்தம் -பருகி -க்ரசனம் -வாயில் போட்டுக் கொள்ளுவது –
கும்ப சம்பூதய –ஏக வசனம் -அகஸ்தியர் -இங்கு பல அகஸ்யர்கள் -பஹு வசனம் -கும்பயோனி அகஸ்தியர் —
ஜெயந்தி ஸூ திய –சோபனா மதி தீ -ஞானம் –
கும்ப கரணர்–பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாயில் விழுந்து -தெற்குத் திக்கில் –தோற்றும் உனக்கே பெரும் துயில் –
வேதாந்தத்தில் பகவத் அனுபவம் -ஸூ ஷிப்த்தி தசை –இதுவே துயில் அணை —
கும்ப சம்பூதியையே சொல்கிறாள் ஆண்டாள் -பேயாழ்வார் -பாசுரம் -பெரும் தமிழன் —
வாசல் திறவாதார் -இவரே –
யதி ஷிதிப்ருத்–யதி ராஜர் -பூமியை நிர்வஹிக்கிறவர்-ஷிதி-பூமி / ப்ருத்-நிர்வகித்தால் -பர்த்தா/ பரம் பாரம் பொறுப்பு
–பூ பாலன் -என்றவாறு —பூ ஷிதி பர்யாயம்
அந்திக உபாசநா–அருகில் இருந்து -குருகுல வாசம் –சிசிருஷை பண்ணி -கற்று –
பிரபாவ பரிபக்த்ரிம ப்ரமிதி –பலபூதமான -பரிபக்குவமான தசை அடைந்து -ஒளி விட –
பாரதீ சம்பத–சாஸ்திர ஞானம் -ஐஸ்வர்யம் -நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகள் –

“சிஷ்யஸ்தேஹம் ” என்று, பணிவு பக்தியுடன் தன்னைவந்து ஆச்ரயிக்கும் சிஷ்யர்களுக்கு, உடையவர்,
மறுபடியும் சந்தேகத்துக்கு இடமில்லாமல், கற்பிப்பார்.
இந்த சிஷ்யர்கள்–குட்டி அகஸ்த்யர்கள் பிறமதவாதிகளின் , புகழ் என்கிற சமுத்ரம் பொங்கிய போது,
இந்த சிஷ்யர்கள், குட்டி அகஸ்த்யர்களாக ஆகி, அந்த சமுத்ரத்தையே பானம் செய்துவிட்டார்கள்,
( திருக்குருகைப் பிரான் பிள்ளான், கிடாம்பி ஆச்சான் ,கூரத்தாழ்வான் போன்ற சிஷ்யர்கள் )
இவர்கள் வித்யா ஸம்பன்னர்கள் ;ஸத்ஸம்ப்ரதாய நிஷ்டர்கள் ;ஸ்ரீவைஷ்ணவ வித்வான்கள் .

இப்படி புறச் சமயிகள் வாதம் பண்ணுபவர்கள் எங்கே எங்கே என்று கடல் போலே பொங்கி வந்தாலும் –
அகஸ்தியருக்கு ஒப்பான சிஷ்யர்கள் -கடல் நீர் வற்றும் படி ஆசமனம் பண்ணினது போலே –
இக்கடலையும் உலர்த்த வல்லவர்கள் –
ஆழ்வான் ஆண்டான் பிள்ளான் போல்வார் அவர்களை அடக்க வல்லவர்கள் –
எம்பெருமானார் திருவடிகளில் கைங்கர்ய ப்ரபாவத்தால் இவர்கள் வித்யா பூர்ணர்களாய் –
தத்வ ஞானிகளாய் –
ஜய சீலர்களாய் -விளங்குகிறார்கள் –

—————

ஸ்வாமியுடைய திருவடி சம்பந்திகளுடைய திருவடி சம்பந்த பலத்தை துணை கொண்டு
தற்காலம் உள்ள பாஹ்ய குத்ருஷ்டிகளின் தலை மேல் கால் வைத்து நிரசனம் பண்ண வல்லேன் -என்கிறார் –

41-யதீஸ்வர சரஸ்வதீ ஸூரபித ஆசயா நாம் சதாம்
வஹாமி சரணாம் புஜம் பிரணதி சாலிநா மௌளிநா
ததன்ய மத துர்மத ஜ்வலித சேதஸாம் வாதி நாம்
சிரஸ்ஸூ நிஹிதம் மயா பதம் அதஷிணம் லஷ்யதாம்

ராமானுஜரின் படைப்புகளின் ஞான நறுமணத்தைப் பெற்ற மஹான்களின் தாமரை பாதங்களை என் தலையில் சுமக்கிறேன்.
ஆனால் அதே சமயம் உலகமும் பார்க்கட்டும் என்று சொல்கிறேன்.
எரியும் பைத்தியக்கார வெறியுடன், ராமானுஜரின் அமைப்பை எதிர்த்துப் போட்டியிடுபவர்களின்
தலையில் நான் என் இடது காலை வைக்கத் துணிவேன்.

யதீஸ்வர சரஸ்வதீ--எம்பெருமான் அருளிச் செய்த சாஸ்திர ஞானம் -நவ கிரந்தங்கள்
ஸூ ரபித ஆசயா நாம் சதாம் –ஆசயாம் புத்தி –தேசிகாசாய பிரகாசம் -ஆசை ஹிருதயம் பிரகாசம் —ஸூ ரபி பரிமளம் -எப்பொழுதும் கமழ்ந்து உள்ள
சரணாம் புஜம் -திருவடித் தாமரைகள்
பிரணதி சாலி நா மௌளிநா –தாழ்ந்து வணங்கி சிரஸா
வஹாமி -வகிக்கிறேன் —சதாம் சரணம் புஜம் அந்வயம்
மேலே
ததன்ய மத துர்மத -தத் அந்நிய பாஹ்ய குத்ருஷ்டிகள் மதம் –துர்மதம் -அசூயை -துர் குணங்கள்
ஜ்வலித சேதஸாம் வாதி நாம்–நாம் கல்யாண குணங்கள் பிராப்தி அனுபவிப்பதை சொல்ல -அவர்கள் மனம் அசூயையால் பற்றி எரியுமே–
சிரஸ்ஸூ நிஹிதம் மயா பதம் அதஷிணம் –இடது காலை வைப்பேன் -பீச்சங்கால் –வலது காலை வைக்க கூட மதிக்க மாட்டேன் –தக்ஷிணம் -வலது —
லஷ்யதாம் -லோகம் காணக் கடவது -இத்தை ரகஸ்யமாக செய்ய வில்லை –behold -அனைவரும் பாருங்கோள்-நிஹிதம் -வைக்கப் பட்டது காணீர் —

வேதவிரோதமதங்கள் , உடையவராலும், அவரது ஸ்ரீஸுக்திகளாலும் மீண்டும் தலையெடுக்காதபடி செய்யப்பட்டன.
அவரது பெருமைமிகு சிஷ்யர்கள் பிள்ளான் , ஆச்சான் போன்றவர்கள் திருநாடு அலங்கரித்தார்கள்.
அப்புள்ளாரும் ,ஸுதர்சன ஸுரியும் வயோதிகம் அடைந்து விட்டார்கள்.
இதுதான் தக்க தருணம் என்று, பிற மதஸ்தர்கள் , எதிரிகள் ஒன்று சேர்ந்து,வாதப்போருக்கு ஆயத்தமான சமயத்தில்,
ஸ்ரீவைஷ்ணவர்கள் ,என்செய்வது என்று கலங்கி இருந்தபோது,
எதிரிகளின் மாயாவாதங்களை நிரஸித்த யதிராஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை
மறுபடியும் ஸ்தாபித்தவர்,ஸ்வாமி தேசிகன்.
இந்த ஸ்லோகத்தில், ஸ்வாமி தேசிகன்,
அப்புள்ளார் போன்ற பூர்வாசார்யர்களின் திருவடிகளைத் தலையில் தாங்கினேன் .
அந்த பலத்தினால்,தீய மனம் கொண்ட எதிரிகளின் தலையில் ,
என் இடதுகாலை வைத்து,அவர்கள் தலையை இடறுகிறேன் —என்கிறார்

யதிராஜ திவ்ய ஸூக்திகளின் வாசனை கமழும் மனத்தினரான மஹான்களுடைய திருவடித் தாமரைகளை
சென்னிக்கு அணியாகக் கொண்ட அடியேன் எம்பெருமானார் தரிசனத்துக்குப் புறம்பான மதங்களில்
துர்மானத்தால் மனதை வைத்துள்ள புறச் சமயிகள் தலைகளை
என் இடதுகாலால் மிதிக்கிறேன் -யாவரும் காண்க என்று வீர வாதம் பண்ணுகிறார் –

——————

எம்பெருமானார் தரிசனத்தில் நிலையாய் இருந்து பாபம் அற்று ஸூ கமாய் இருப்பாயாக –
என்று தம் திரு உள்ளத்தை நோக்கிச் சொல்கிறார் –

42-பஜஸ்வ யதிபூபதே அநிதமாதி துர்வாச நா கதத்வ
பரி வர்த்தன ச்ரம நிவர்த்தநீம் வர்த்தநீம்
லபஸ்வ ஹ்ருதய ஸ்வயம் ரத பத ஆயுத அனுக்ரஹ
த்ருத ப்ரஹ்ருதி நிஸ் த்ருடத் துரித துர்வ்ருதிம் நிர்வ்ருதிம்

ஓ என் மனமே! ராமானுஜரின் ஒரு தெளிவான பாதையைத் தேர்ந்தெடுங்கள்,
அதில் இழியவே பல்வேறு பாதைகளில் அலைந்து திரிவதில் இருந்து விடுபடும்.
அது சக்ராயுதம் ஏந்தும் எம்பெருமானின் கிருபா மழையை உங்கள் மேல் பொழிவிக்கும்
அது உங்கள் பாவங்களைக் கழுவுவதற்கு, உங்கள் மீது வேகமாகப் பெருகும்.
இதன் மூலம் அந்தமில் பேர் இன்பம் உடனே கிட்டி விடும்

பஜஸ்வ ஹ்ருதய–உபாயமாக இதை செய் -பஜநம்-ஏக தேசம் -சிரவணம் கீர்த்தனம் -இத்யாதி நவ வித –
-ப்ரீதி பூர்வக அனுசந்தானமே பஜனம்-இங்கு உபாயம் –இது வரை பெறாத ஒன்றை பெறுவது
லாபம் -பிரவ்ருத்தி செய்து பெறுவது – இங்கு யதிராஜர் ராஜ பாட்டை -உபாயமாக அர்ச்சிராதி மார்க்கம்
யதிபூபதே-பூமியா பதி பூ பதி -யதிராஜர் –
அநிதமாதி துர்வாச நா-கதத்வ பரி வர்த்தன–-கதா கதா சிரமம் -மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –
கதத்வம் –தீய மார்க்கம் -தூமாதி -மார்க்கம் சென்று ஸ்வர்க்காதி அனுபவித்து திரும்பி — பரி வர்த்தனம் மீண்டும் மீண்டும் —
காரணம் -துர்வாசனை –க்ருத்ய அகரணம் அக்ருத்ய கரணம் -அநாதி காலமாக -கிற்பன் கில்லேன் –முனை நாள்கள் எல்லாம் –
-கிற்பன் முடியும் என்று இலேன் -கில்லேன் முடியாது என்று இலேன் —
பகவத் ஆஜ்ஜை சித்தம் -என்று உணராமல் ஸ்வரூப ஹானி -முனை நாள்கள் எல்லாம் அல்ப சாரங்கள் அவை சுவைத்து –
-சுவைக்க சுவைக்க உன்னை விட்டு அகன்றேன் –விகிதத்தை செய்யாமை -அவி ஹதம் செய்து -இல்லாத காலமே இல்லை -அநாதி காலம் –
என்னைப் பார்த்தால் பேற்றுக்கு வழி இல்லை -உன்னைப் பார்த்தால் பேறு கொடுக்காமல் இருக்க முடியாதே
-கைக் கொள்ளாமல் இருக்க விரகு இல்லை உன்னைப் பார்த்தால்
முந்நீர் –ஆக்கையின் வழி உழல்வேன் —முன்னாள் எல்லாம் -யதிராஜர் இவற்றை நிவர்த்தித்து -ராஜ மார்க்கம் அடைவாயாக –
ச்ரம நிவர்த்தநீம் வர்த்தநீம் -சிரம நிவர்த்தனீ வர்த்தனீ -மார்க்கம் -அர்ச்சிராதி மார்க்கம் -சன்மார்க்கம் பஜஸ்வ-இத்தால் -அடைவது மேலே
லபஸ்வ ஹ்ருதய -மனமே இதை அடைவாய் -புருஷார்த்தமாக பெறுவாய்
ஸ்வயம் ரத பத ஆயுத அனுக்ரஹ–தேருக்கு பதம் -தேர் சக்கரம் -ரதாங்க பாணி -சக்கரம் –கமன சாதனம் பதம் –
ஆயுதமாக உடையவன் -கையார் சக்கரத்து கரு மேனி அம்மன் -அனுக்ரஹத்தால்
நிக்ரஹ நிவ்ருத்தி பெறுவாய் -ஸ்வாமி ராஜ பேட்டையில்
அதி வேகமான பிரவாகம் -அருள் வெள்ளம் –
த்ருத ப்ரஹ்ருதி நிஸ் த்ருடத் துரித துர்வ்ருதிம் நிர்வ்ருதிம் -துரிதம் -உரு மாய்ந்து போகும் -சகடாசுரன் பட்டது படும்
நிஸ் த்ருடத்-சும்மெனாதே கை விட்டோடி -தூறுகள் பாய்ந்தனவே –
துரித -சஞ்சித பாபங்கள் –துர்வ்ருத்திம் -துக்கம் உண்டாக்கும் பாபங்கள் -பிராரப்த கர்மங்கள் –
நிர்வ்ருதிம் –நிரவதிக ஆனந்தம் லபஸ்வ -அடைவாய் –
பஜஸ்வ –பக்தி பிரபக்தி -சொல்ல வில்லை -எதிராஜர் சம்ப்ரதாயம் –சாது கோஷ்ட்டி அடைந்து –த்வஜ விட்டு ஒழிக்க வேண்டியது
துர்ஜன சம்சர்க்கம் த்வஜித்து -சாது சமாகம் கைக் கொள்ள வேண்டும் -இத்தையே பஜஸ்வ என்கிறார் –
பத-பாத-சப்தங்கள் -பதயத்தி இதி பதம் ப்ராப்யம் -எதனால் சென்று அடைகிறோம் -பரம பதம் -பரம பிராப்யம்
திவ்யாத்மா ஸ்வரூபம் -ப்ரத்யாத்மக ஸ்வரூபம் ஸ்தான விசேஷம் மூன்றும் -பரமபதம் என்பதால் குறிக்கும் –
ஸ்ரீ பதம் -பெரிய பிராட்டியார் திருவடி —பர தத்வம் இது தான் -சாஸ்திரம் பிரவ்ருத்தி திருவைக் கண்டதும் -நின்றதே –
எல்லை அடைந்தோம் என்றதே —
பாத விபக்தி பரிச்சயம் ரகு வம்சம் -காளிதாசர் காவியங்கள் குமார சம்பவம் வாசித்து அறிய வேண்டும் -பாஷா விசேஷம்
-சம்பாஷணை ரூபம் –நாடகங்கள் வாசித்து சாகுந்தலம் -என்னை பேசு என்னை பேசு என்னப் பண்ணும் -பிரயோகங்கள் அறியலாம் 

இந்த ஸ்லோகத்தில் “மனஸ் “ஸுக்குச் சொல்கிறார்–பாகவதர்களுக்கும் சொல்வதாவது –
பிற மதங்கள்—முள்ளும் கற்களும் நிறைந்த பாதை.
அதில் செல்லாமல் ,
யதிராஜரால் நன்கு அமைக்கப்பட்ட ஸித்தாந்த வழியில் செல்வாயாக !
பகவானின் அனுக்ரஹ வெள்ளத்தால் ,பாபமாகிய தடங்கல் அழிய ,
வைகுந்தம் சென்று பரமானந்தத்தை அனுபவிப்பாய் என்கிறார்

ஓ மனமே அநாதியாக துர்வாசனையால் தடம் கெட்டுத் திரிவதால் உண்டான இன்னல்களைப் போக்கும்படி யுள்ள
செப்பன் இட்ட மார்க்கமாகிற சத் சம்பிரதாயத்தைப் பற்றினால்
கை கழலா நேமியனான எம்பெருமானின் அனுக்ரஹத்தால்
பாபம் அற்ற வாழ்ச்சி பெறுவாய் என்று தம் திரு உள்ளத்துக்கு உபதேசிக்கிறார் –

———————

எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் சார தமமானவை –
அதனால் மதிக்க முடியாத பெருமை வாய்ந்தவை -என்கிறார் –

43-குமதி விஹித க்ரந்த்த க்ரந்த்தி ப்ரபூத மதாந்திர
க்ரஹிள மனச பஸ்யந்தி அல்பம் யதீஸ்வர பாரதீம்
விகட முரபித் வஷ பீடீ பரிஷ்கரண உசித குலகிரி
துலா ஆரோஹே பாவீ கியான் இவ கௌஸ்துப-

வீணான இயங்கியல்வாதிகளின் தவறான புத்தகங்களில் உள்ள தவறான எண்ணங்களால் உலகம் நிறைந்துள்ளது.
அவர்கள் மீது சாஃப்ட் கார்னர் உள்ள எவரும், வெறி பிடித்த மனம் கொண்டு வலிய முடிச்சுகளால்
கட்டப்பட்டவர்களாய் இருந்து ராமானுஜரின் படைப்புகளை அளவிலும் மதிப்பிலும் அற்பமாகக் கருதுவார்கள்.
இருப்பினும், அத்தகைய மதிப்பீட்டால் நாங்கள் புண்படுத்தப்படவில்லை, ஏனெனில்
இறைவனின் மார்பில் உள்ள ஸ்ரீ கௌஸ்துப ரத்தினம் ஒரு உயர்ந்த மலைச் சங்கிலியுடன் ஒப்பிடும் போது
அளவில் அற்பமானதாகத் தோன்றும் என்றாலும் எல்லாவற்றிற்கும் மேலாக, மதிப்பிடும் அன்றோ

குமதி விஹித –குஸ்திதா மதி குமதி -குத்ருஷ்டிகள் –வேதத்தை இசைந்து -பாஹ்யர் இசையாமல் -இருவரும் சேர்ந்து குமதி -அவர்களால் பண்ணப் பட்ட
க்ரந்த்த க்ரந்த்தி– ப்ரபூத -நிறைந்த கிரந்தங்கள் —அதி ப்ரபூதான் -பூரித்து வைத்த –கிரந்தம் -எழுதி -கிரந்தி பேசி வைத்தது –
மதாந்திர -மாதாந்தரங்கள் –
க்ரஹிள மனச-அகப்பட்டு விகாரம் அடைந்த மனசை யுடையவர்கள் –
பஸ்யந்தி அல்பம் யதீஸ்வர பாரதீம் -யதீஸ்வரர் வாக் வ்ருத்திகள் ஸ்ரீ ஸூ க்திகளை அல்பம் என்பர் சிலர் –
பிரமாணம் பிரமேயம் -சர்வம் சூன்யம் -என்பர் –
அத்வைதர் -புத்தர் கூடி –கடனை கண்டாகாதி -எல்லா மதமும் தப்பு என்பதே இவர்கள் மதம்
கண்டன கண்ட காவியம் கண்டனத்துக்கு சதா தூஷணி பண்ணினார் -தத்வ முக்த கலாபம் பண்ணினார் -தேசிகன்
ஆல்பமாக கணிசித்தால் தோஷம் ஆகாதோ எண்ணில்
விகட முரபித் வஷ பீடீ பரிஷ்கரண உசித –போக்யமான -பகவான் உடைய வஷத் ஸ்தலம் -மேடை -கோயில் கட்டணம் அன்றோ அவளுக்கு
-அலங்கரிக்க உசிதமான கௌஸ்துபம்
குலகிரி துலா ஆரோஹே பாவீ கியான் இவ கௌச்துப–பெரிய பர்வதம் -கூட கௌஸ்துபத்துக்கு ஒவ்வாதே-
நிரவதிக தேஜஸ் அன்றோ இது –
மந்த புத்தி கொண்டு இவர்கள் செய்த புத்தகச் சும்மை– பொருந்தாதே -ராமானுஜர் மெய்ப்பொருள் பொருந்திய பின் நம் மனசிலே
தங்கம் -குந்துமணி -சாம்யம் -என்பதை கண்டு வருந்தும் -உருக்கி அடித்தாலும் வருந்தாமல் -சாம்யம் எடையில் தான் என்றாலும் -வருந்தும்

பிற மதங்களில் தர்க்கவாத நூல்கள் நிறைய இருக்கின்றன.
அந்த மதவாதிகளுக்கு, உடையவரின் ஸித்தாந்த நூல்கள், சிறியதாகவே தோன்றும்.
பகவானின் திருமார்பில் அணிகலனாக இருக்கும் “கௌஸ்துப மணி” மிகவும் சிறந்தது;
ஆனால், சிறியது.
குலாசலம் என்கிற மலை மிகப் பெரியது.
தராசில் எடைபோட்டால் மலை இருக்கும் தட்டு அடியிலேயே இருக்கும்;
எடையைக்கொண்டு சிறப்புகளைக் கூற முடியுமா ?
பிற மத நூல்கள் நிறைய இருந்தாலும் குலாசலம் என்பதற்காக உயர்வைப் பெறாது.
கௌஸ்துப மணியைப் போன்ற ஸ்ரீபாஷ்ய ஸுக்திகள் உயர்ந்தவை.
ஸாரமான நூல்களும் ஸம்பிரதாயமும் உள்ளவை–என்கிறார்,

இதர மதஸ்தர்கள் அநேக விஷயங்களை சம்பந்தா சம்பந்தம் இன்றி முடித்து இருப்பதால்
அவர்களுடைய கிரந்தங்கள் விஸ்தாரமாய் இருக்கும் -பொருள் இராது –
எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் சாரமாய் இருப்பதால் சிறியவை என்று சொல்லி அவமதிப்பார் சிலர் –
பெரிய பாராங்கல்லை தராசின் ஒரு தட்டிலும்
பெரிய பெருமாள் திரு மார்பை அலங்கரிக்கும் ஒப்புயர்வற்ற கௌஸ்துபத்தை ஒரு தட்டிலும் வைத்தால்
எது எடை அதிகமாக இருக்கும் —
அதிக எடை இருப்பதால் பாராங்கல் உயர்ந்ததாகி விடாது என்றபடி –

—————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகளின் பெருமை மந்த மதிகளுக்கு நிலம் இல்லை என்கிறார் –

44-ஸ்த்தவிர நிகம ச்தோம ஸ்த்தேயாம் யதீஸ்வர பாரதீம்
குமதி பணிதி ஷோப ஷீபா ஷிபந்து பஜந்து வா
ரச பரிமள ச்லாகா கோஷ ஸ்ப்புடத் புட பேதனம்
லவண வணிஜ கர்ப்பூர அர்க்கம் கிம் இதி அபிமன்வதே

ராமானுஜரின் படைப்புகள் பழங்கால வேத வாசகங்களில் முரண்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் அவற்றைத் தீர்க்க நமக்கு உதவுகின்றன.
தர்க்க வல்லுனர்களின் கேடுகெட்ட வாதங்களால் பாதிக்கப்பட்டு, நல்ல புத்தியை இழந்தவர்கள்,
ராமானுஜரின் படைப்புகளை விட்டுவிடலாம், இல்லையென்றால், அந்தப் படைப்புகளைப் படிக்கட்டும். அது என்ன விஷயம்?
பச்சைக் கற்பூரத்தின் சுவையை புகழ்ந்து பேசும் சத்தம் மிக அதிகமாக இருக்கும் ஒரு நகரத்தில்,
சாதாரண உப்பு வியாபாரிகள் பச்சைக் கற்பூரத்தைப் பற்றி எப்படிப் பதிலளிப்பார்கள்? இது வெளிப்படையானது
(அவர்களுக்குத் தெரியாது அல்லது ரசிக்க முடியாது!-இவர்களால் பச்சைக் கற்பூரம் தனது மஹிமையை இழக்காது அன்றோ )

ஸ்த்தவிர நிகம ச்தோம ஸ்த்தேயாம்–ஸ்த்தவிர -நிகம பழைமையான -முதிர்ந்த –ப்ராசீனம் –
-ஸ்தோம -வேதம் – ஸ்த்தேயாம்-கைம்முதல் –தத்வ ஹித புருஷார்த்தங்கள் நிர்ணயம் பண்ண –
யதீஸ்வர பாரதீம்–ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ க்திகள்
குமதி பணிதி ஷோப ஷீபா-குத்ருஷ்டிகள் -பாஹ்யர்கள் -பணிதி இயற்றப்பட்ட நூல்கள் –ஷோபம்-அஹங்காரம் –
ஷிபந்து பஜந்து வா — ஷேபித்தாலும் பஜித்தாலும் சரி-இதனால் ஏற்றமோ தாழ்வோ -கோது என்று இகழ்வினும்-கொள்-வோம் – என்று உகந்தாலும் –
இதுக்கு த்ருஷ்டாந்தம் மேலே
ரச பரிமள ச்லாகா கோஷரசம் -நாவுக்கு –பரிமளம் -ஸூ கந்தம்-கொண்டாடும் கோஷம் –
ஸ்ப்புடத் புட பேதனம்— நகரம் எல்லாம் எதிர் ஒலிக்கும் படி –
லவண வணிஜ கர்ப்பூர அர்க்கம் -கிம் இதி அபிமன்வதே-பச்சை கற்பூரம் –சாதாரணமாக சொல்லும் இது கற்பூரம் இல்லை -வியாவர்த்திக்க
–பச்சை விசேஷணம் –menthaal synthetik பேர் -oliyam -5th deraivative camphor –
அர்க்கம் -விலை மதிப்பு -புல்லிங்க சப்தம் -உப்பு வியாபாரிக்கு எப்படி தெரியும் –நகரம் எங்கும் நான்கு திக்கிலும்
எதிர் ஒலித்து இருந்தாலும் –இவன் என்னவாக நினைப்பான் –பேதனம் -பிளக்கும் படி -ஒலி என்றவாறு
கிம் இதி அபிமன்வதே-அபிமானிக்கிறார் -அபிமானம் -பிரமம் –அபிமன்யதே -பாட பேதம் –உள்ளத்து உள்ளபடி அறிதல் –
யதார்த்த ஞானம் யதார்த்த ஞானம் இரண்டுக்கும் அபிமானம் உண்டே
அபிமன்யதே பாடம் சரி இல்லை என்பர் –
வேதாந்த ச்சார்யார் கிரந்த மாலை -காஞ்சி ஸ்வாமிகள் நன்றாக சிரமம் எடுத்து -பாட பேதங்கள் -சமன்யவப்படுத்துவார்

வேதங்கள் ,உபநிஷத்துக்கள் —இவைகளின் கருத்துக்களை விளக்கும் ,ஸ்ரீ உடையவரின் ஸ்ரீஸுக்திகளை ,
குயுக்தி வாதங்கள் செய்பவர் இகழ்ந்தாலும் , ஏற்றாலும் —இரண்டும் எமக்கு ஒன்றே.
தனது சுவை, வாஸனை இவை பற்றிக் கொண்டாடிப் பேசப்படுபவர்களால் உயர்வாகக் கருதப்படும்
பச்சைக் கற்பூரத்தை, உப்பு விற்பவர்கள் அறியமாட்டார்கள் என்கிறார்

சிக்கல்களை விடுவித்துத் தெளிவாக உண்மைப் பொருளை உபபாதிக்கும் யதீஸ்வருடைய ஸ்ரீ ஸூக்திகளை
புத்தி கேடர்களான புறச் சமயிகளின் பேச்சுக்களால் மனக் கலக்கம் அடைந்து மதி இழந்தோர்
கொண்டால் என்ன -விட்டால் என்ன- ஒரு குறையும் இல்லை –
மிக உயர்ந்த வஸ்து என்று ஊர் அறிந்த கற்பூரத்தின் பெருமையை -விலையை
உப்பு விற்பவன் எப்படி அறிவான்–மூட்டை என்ன விலை – என்று தான் கேட்ப்பான் –

————

45-வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்
மதன கதனை ந க்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா-

மும்மூர்த்திகளில் பிரம்மா வேதம் ஓதும் முகங்களில் தன் மனைவியைத் தன் நாக்கில் சுமந்துள்ளார்.
சிவனின் இடது பாதி முழுவதையும் அவன் மனைவி எடுத்துக் கொள்கிறாள்.
உயர்ந்த பரதத்வமான கண்ணனோ , தனது சொந்த வழியில், கோபியர்களுக்கு அடி பணிந்தார்.
அப்போது, ​​பெண் பால் காதலுக்கு அடி பணியாதவர்கள் ராமானுஜரின் சீடர்கள் மட்டுமே!
யதிராஜ அடியவர்கள் காமாதி தோஷங்களில் சிக்கிக் கொள்வதில்லை என்றவாறு

வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
ஆத்ய -சிருஷ்டியில் முதல் -வேதா -நான் முகன்–வேதஸாம் பிதாமக –தூண் பிதாமகி-ஸ்தம்பம் -பிள்ளை -அவர் பிள்ளை கணக்கற்ற நான் முகன் –
அண்டங்கள் பல பல —
த்ரயீ -வேதங்கள் -எண்ணிக்கை இல்லை -ருக் யஜுவ்ர் சாம -மூன்று வகை -முன்பு யுகங்களில் ஒரே வேதம் -கலிக்காக நான்காக பிரித்து
அதர்வணம் -ருக்கில் சேரும் -என்பர் -வஸிஷ்டர் ராமர்
பட்டாபிஷேகம் அதர்வண வேதம் கொண்டு –
முகரை-இடை விடாமல் -வாசனையே உபாத்தியாயர் -வாய் வெருவுதல் -வெருவாதாள் வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
வேதங்களை வாய் விடாமல் சொல்லி —வஹதி மஹி ளாம்-வகிக்கிறாள் -சரஸ்வதி
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே –
அழகிய -ஸ்ரேஷ்டமான -பகுதியில் -இடது பாகத்தில் -மாறு பட்டு விளங்கும் -சிவனுக்கு -உமை ஒரு பாகன் –
விவர்த்த வாதம் -பரிணாமம் -வாதிகள் -உபாதான காரியம் இரண்டும் சத்யம் -ப்ரஹ்மம் மட்டும் சத்யம் விவர்த்தம்
ஸ்வரூப பரிணாமம் -உபாதி பரிணாமம் -நாம் சரீர பரிணாம வாதிகள் –
வியாவர்த்தகன் -வியாவர்த்தகம் -வேறு பட்டது -முரட்டு ஆண் சரீர பாகத்தி இருந்து வேறு பட்ட அழகிய இடப் பாகம்
வர வர முனி -அழகிய மணவாள முனி –
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்-பர தத்வம் -சர்வ நியாந்தா -அவன் கூட கோபி ஜனங்கள் வசப்பட்டு -நியாமகன்
முன்பு சொன்னவர்கள் அபர தத்வங்கள் -நஹீ நிந்தா நியாயம் -எம்பெருமானார் திருவடி சம்பந்தம் இல்லாத பலனைக் காட்டி அருளுகிறார் –
அமர்யாதா -துர்மானி -அநாத ஸ்தோத்ர ரத்னம் -53 -கூரத் ஆழ்வான் சொல்ல மாட்டார் -ஆளவந்தார் எம்பெருமானார் திருவடி சம்பந்தம் இல்லை சொன்னார் நான் சொல்ல மாட்டேன் என்பாராம் -அழகர் கேட்டு ஆனந்தம் அடைந்தார் –
மதன கதனை ந க்லிச்யந்தே–மன்மதன் -மூலம் கிலேசம் அடைய முடியாதே
யதீஸ்வர சம்ஸ்ரயா–ஸ்ரீ ஸூக்திகள் -பயின்று -கடாக்ஷ உபதேசங்களால் -யத்ர யத்ர யதீஸ்வர ஸம்ஸரய–தத்ர தத்ர இது இல்லை என்றவாறு –

யதிராஜருடைய விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் ,கௌஸ்துபமணி பச்சைக் கற்பூரம் போன்றது –
இதற்குக் காரணம் என்ன ? சொல்கிறார்.
விச்வாமித்ரர் போன்ற ரிஷிகள் ,அப்சரஸ் ஸ்த்ரீகளிடம் மயங்கினார்கள்.
ப்ரஹ்மா , தன் மனைவி சரஸ்வதியை எப்போதும் தன்னுடைய நாவிலேயே வைத்துக்கொண்டிருக்கிறார்.
பரமசிவனோ ,தன் சரீரத்தில் பாதியையே பார்வதிக்குக் கொடுத்து, பிரியாமல் இருக்கிறான்.
பகவானோ, மஹாலக்ஷ்மியைத் தன் திருமார்பில் வைத்துக் கொண்டு இருக்கிறான் ;
இது போதாது என்று, ஆயர்பாடியில் இடைச்சிகளுக்கு வசப்பட்டு இருக்கிறான்.
ஆனால், இப்படி காமத்துக்கு வசப்படாதவர் யதிராஜருடைய திருவடியை ஆச்ரயித்தவர்கள்.
மும்மூர்த்திகளையும் ஆட்டிப்படைக்கும் காமம், யதிராஜரின் ஸித்தாந்தத்தில் மூழ்கி,
அவருக்கு சிஷ்யர்களாக இருப்பவர்களிடத்தில் ,நெருங்கவே பயப்படுகிறது.
ஆக , காமத்துக்கு வசப்படாதவர்கள், யதிராஜரின் ஸித்தாந்தத்தில் நிஷ்டை உடைய சிஷ்யர்கள் —என்கிறார்

எம்பெருமானார் தரிசனத்தை அவலம்பித்தவர்கள் விஷய வைராக்யம் உள்ளவர்களாகப் பார்க்கக் படுகிறார்கள் -என்கிறார் –
அனாதியான வேதங்களை சதா உருச் சொல்லிக் கொண்டு இருக்கும் நான்முகனும் நாவிலே மனைவியை கொண்டுள்ளான் –
சிவனுடைய இடது புறமே பெண்ணாய் விட்டது -பரதத்வமான எம்பெருமானும் கோபியர்கள் வசமாய் விட்டான்
ஆனால் எம்பெருமானார் திருவடிகளை பற்றினவர்கள் காமனால் பீடிக்கப் படுவதில்லை –பரம விரக்தர்களாய் இருப்பார்களே –

ஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதன கதனைர்ன க்லிஶ்யந்தே கதம் ந்விதரே ஜனா: ||– சங்கல்ப ஸூர்யோதய ஸ்லோகம்

வேதம் முழங்கும் தன் திருநாவில்
நான்முகன் தன் மனைவி கலைமகளைத் தாங்கினான்…
சிவனுக்கு ஒரு பாதி உடலே பெண்ணாக ஆனது…
இவர்களை விட கண்ணனென்னும் பெரிய தத்துவமோ
கோபிமார்களின் வசத்தில் ஆட்பட்டு கிடக்கிறான்…
மன்மதனிடம் போரிட்டு இவர்களே தோற்றார்கள் என்றால்
சாமான்ய மக்கள் என்ன ஆவரோ!

வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
ஆத்ய -சிருஷ்டியில் முதல் -வேதா -நான் முகன்–வேதஸாம் பிதாமக –
தூண் பிதாமகி-ஸ்தம்பம் -பிள்ளை -அவர் பிள்ளை கணக்கற்ற நான் முகன் –
அண்டங்கள் பல பல —
த்ரயீ -வேதங்கள் -எண்ணிக்கை இல்லை -ருக் யஜுவ்ர் சாம -மூன்று வகை –
முன்பு யுகங்களில் ஒரே வேதம் -கலிக்காக நான்காக பிரித்து
அதர்வணம் -ருக்கில் சேரும் -என்பர் -வஸிஷ்டர் ராமர்
பட்டாபிஷேகம் அதர்வண வேதம் கொண்டு –
முகரை-இடை விடாமல் -வாசனையே உபாத்தியாயர் -வாய் வெருவுதல் –

வெருவாதாள் வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
வேதங்களை வாய் விடாமல் சொல்லி —வஹதி மஹி ளாம்-வகிக்கிறாள் -சரஸ்வதி
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே –

அழகிய -ஸ்ரேஷ்டமான -பகுதியில் -இடது பாகத்தில் -மாறு பட்டு விளங்கும் -சிவனுக்கு -உமை ஒரு பாகன் –
விவர்த்த வாதம் -பரிணாமம் -வாதிகள் -உபாதான காரியம் இரண்டும் சத்யம் -ப்ரஹ்மம் மட்டும் சத்யம் விவர்த்தம்
ஸ்வரூப பரிணாமம் -உபாதி பரிணாமம் -நாம் சரீர பரிணாம வாதிகள் –
வியாவர்த்தகன் -வி யா வர்த்தகம் -வேறு பட்டது -முரட்டு ஆன் சரீர பாகத்தி இருந்து வேறு பட்ட அழகிய இடப் பாகம்

வர வர முனி -அழகிய மணவாள முனி –
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்-பர தத்வம் -சர்வ நியாந்தா -அவன் கூட கோபி ஜனங்கள் வசப்பட்டு -நியாமகன்
முன்பு சொன்னவர்கள் அபர தத்வங்கள் -நஹீ நிந்தா நியாயம் -எம்பெருமானார் திருவடி சம்பந்தம் இல்லாத பலனைக் காட்டி அருளுகிறார் –
அமர்யாதா -துர்மானி -அநாத ஸ்தோத்ர ரத்னம் -53 -கூரத் ஆழ்வான் சொல்ல மாட்டார் -ஆளவந்தார் எம்பெருமானார் திருவடி
சம்பந்தம் இல்லை சொன்னார் நான் சொல்ல மாட்டேன் என்பாராம் -அழகர் கேட்டு ஆனந்தம் அடைந்தார் –
மதன கதனை ந க்லிச்யந்தே–மன்மதன் -மூலம் கிலேசம் அடைய முடியாதே
யதீஸ்வர சம்ஸ்ரயா–ஸ்ரீ ஸூ க்திகள் -பயின்று -கடாக்ஷ உபதேசங்களால் –
யத்ர யத்ர யதீஸ்வர ஸம்ஸரய–தத்ர தத்ர இது இல்லை என்றவாறு –

மன்மதனிடம் போரிட்டு யதிகளின் அரசனை அண்டியவர்கள் தோற்பதில்லை…

யதி என்பது துறவியைக் குறிக்கும். யதிகளின் அரசனாக ராமானுஜரைக் குறிப்பிடுகிறார்.
ராமானுஜரை அண்டியவர்கள் காமம் என்னும் சிற்றின்பத்துக்கு அடிமையாவதில்லை என்பது கருத்து.

இதில் சில சொல் விளையாட்டுக்களையும் கவி உள்நுழைத்து இருக்கிறார்.
ஆத்யோ வேதா: என்று பிரமன், ஒன்பது பிரஜாபதிகளில் முதன்மையானவன் என்றும்,
முதன்மையானவனே பெண்ணைத் தன் நாவில் தாங்குகிறான் என்றும் குறிப்பிடுகிறார்.
அடுத்து “சிவ”னென்னும் பெயர் தாங்கியவன், இடம் வலமாக மாறி “வசி” என்று வசப்பட்டவனாகி விட்டான் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து கோபிகைகளைக் குறிப்பதற்கு, ஆண்பால் சொல்லான கோபி ஜன: என்று குறிப்பிட்டது,
கோபிகைகள் “இடைப் பேச்சும் முடை நாற்றமுமாக” பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் அழகு என்று சொல்ல முடியாமல் இருந்ததை
சூசகமாக சுட்டிக் காட்டி, அவர்கள் பார்வைக்காகவும் கண்ணன் காத்திருந்தான் என்று குறிப்பிடுகிறார்.

—————

46-நிகம பதிக சாயா சாகீ நிராசா மஹா நிதி
மஹித விவித சாஸ்த்ர ஸ்ரேணீ மநோ ரத சாரதி
திரிபுவன தம ப்ரத்யூஷ அயம் த்ரிவித்ய சிகாமணி
ப்ரதயதி யதி ஷமாப்ருத் பாராவரீம் அபிபர்யயாம்

ராமானுஜர்- வேதங்களின் ஆழ்ந்த பொருளை அறியாமல் வழிப்போக்கர்கள் போல் திரிபவர்களுக்கு
அவற்றை அறிவித்து நிழலை வழங்கும் மரத்தைப் போல் நிற்பவர்,
வேத வழியைப் பின்பற்றுபவர்களால் மகிழ்ந்தவர்;
எல்லா ஆசைகளையும் துறந்த மக்களுக்கான
உத்வேகத்தின் மதிப்பு மிக்க புதையல் -களஞ்சியமாகப் போற்றப் படுபவர்;
அவரது வழியைப் பின்பற்றும் பல்வேறு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற உதவுபவர்;
சீடர்களை நல்ல வழியில் இட்டுச் செல்லும் தேர்ப் பாகனாக இருப்பவர்
மூன்று உலகங்களின் அந்தகார அஞ்ஞான இருளுக்கு விடியல் போல் செயல்படுபவர்;
வைதிகர்கள் தலையில் சூடும் இரத்தினக்கல் போன்றவர்
மற்றும் வேத ஞானத்தின் தலை சிறந்த தலைவன் –
பர ப்ரஹ்மனைப் பற்றிய சரியான அறிவை நம்மில் புகுத்துபவர்
அஞ்ஞானம் ஸம்சய ஞானம் விபரீத ஞானம் போன்ற மயர்வுகளை அறுத்து மதி நலம் அருள்பவர்

நிகம பதிக சாயா சாகீ -நிகமம் -வேதங்கள் -பதிகம் -மூன்று யுகங்களிலும் நல்ல வழி காட்டும் -வழிப் போக்கன் —
நிகமமாகிற பதிகம் என்றபடி -களைத்து போன வேதத்துக்கு நிழல் தரும் வ்ருக்ஷம் போலே ஸ்ரீ பாஷ்யகாரர்
-திருவாய்மொழியும் வேதத்துக்கு களைப்பை போக்கி -என்பர் –
நிராசா மஹா நிதி –நிராசர்களுக்கு -பற்று அற்ற பரமை காந்திகளுக்கு மஹா நிதி போன்றவர் -சாம்சாரிக ஆசை இல்லாமல்
பகவத் விஷயத்தில் ப்ரீதி கொண்ட அநந்ய பிரயோஜனர்களுக்கு –
மஹித விவித சாஸ்த்ர ஸ்ரேணீ மநோ ரத சாரதி -உயர்ந்த -விவித -சாஸ்த்ரர் -சிஷ்ய வர்க்கர் -ஸமாச்ரயணம் பண்ணி -அமர்ந்து கால ஷேபம் செய்பவர்கள் –
ஸ்ரேஷ்டர்கள் -பலர் -சிஷ்யர் சமுதாயத்துக்கு -மநோ ரதத்துக்கு -சாரதியாக இருந்து வழி நடத்துபவர் -மேலும் மேலும் ஆழ்ந்து கற்க ஆசை கொண்டவர்களுக்கு –திரிபுவன தம ப்ரத்யூஷ -மூன்று உலகுக்கும் தமஸ் இருளை போக்கும் -அருணோதயம் முன்னால்–ப்ரபாதம் -ப்ரத்யூஷம் -விடியல் -உஷா காலத் தொடக்கம் -அயம் த்ரிவித்ய சிகாமணி-மூலமான வேதம் அறிந்தவர்களுக்கு நாயகர்-ஸீரோ பூஷணம்
ப்ரதயதி யதி ஷமாப்ருத் -யதி ராஜர் -பிரகாசப்படுத்தி அருளுகிறார் –
பாராவரீம் அபிபர்யயாம் –சமுத்திரம் -மாறாட்டங்கள் இல்லாமல் -விபரீத புத்தி இல்லாமல் -நிர்குணம் நிர் விபூதி -என்பார்கள் குத்ருஷ்டிகள்
-ஸ்திரமான திடமான -விபர்யயம் சம்சயத்துக்கும் உப லக்ஷணம்-பாராவாரம் -அபரிச்சின்னம் -திடம் -கடல் போன்ற -என்றவாறு –

சரி, இவர்கள், காம வசப்படாதவர்கள்–இவர்களுக்குப் பேரின்பம் கிட்டுமோ ?
இப்படி இருக்கும் முமுக்ஷுக்களுக்கு ( மோக்ஷத்தை விரும்புபவர் ) அழிவற்ற,நித்யமான ,
பகவானின் திருவடிகளைச் சரணம் அடையும் வழியைக் காட்டுகிறார், யதிராஜர் .
இந்த சிஷ்யர்கள், பலவிதம்;
க்ருஹஸ்தர்கள் ; ப்ரஹ்மசாரிகள்; ஸன்யாசிகள் ; பெண்கள்;இப்படிப் பலவிதம்.
இவர்கள், ஆசார்ய பக்தியும், பகவத் பக்தியும் உள்ளவர்கள்.
யதிராஜர், அவரவர் மனநிலைக்கேற்ப உபதேசித்து, மோக்ஷ அனுபவத்தை ஏற்படுத்துகிறார்.
இவர், த்ரிவித்ய சிகாமணி –என்கிறார் -மூன்று வேதங்களே ப்ரமாணம் என்று கர்ஜிக்கும்,
வித்வான்களுக்கு , அலங்காரமான சிரோபூஷணம்

எம்பெருமானார் வேதம் காட்டும் வழியில் சஞ்சரிக்குமவர்களுக்கு குளிர்ந்த நிழல் தரும்
பல கிளைகளையுடைய மரமாய் இருப்பவர்
வைராக்ய சீலர்களுக்கு பெரிய நிதி –
பற்றிலார் பற்ற நின்றானே என்னும் படி –
வர்ணாஸ்ரம ஸ்த்ரீ புருஷ விபாகத்தால் பலவிதமான பூஜிக்கத்தக்க சிஷ்யர்கள் மனம் ஆகிற ரதங்களுக்கு சாரதி
எல்லா உலக இருள் போக்கும் உஷஸ் -வைதிக ஸார்வ பவ்மர் –
நித்தியமான ஜீவாத்மா பரமாத்மா -சம்பந்த -சேஷ சேஷி பாவத்தை விளக்கமுறச் செய்து அருளுகிறார் –

———————

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் வைபவம் –

47-ஜடமதி முதா தந்தா தந்தி வ்யதா ஔஷத சித்தய
ப்ரமிதி நிதய ப்ரஜ்ஞா சாலி ப்ரபாலன யஷ்டைய
சுருதி ஸூரபய சுத்த ஆனந்த அபி வர்ஷூக வாரிதா
யம கதி கத விச்சேதின்ய யதீஸ்வர ஸூக்தய

ராமானுஜரின் படைப்புகள் பிரகாசிக்கின்றன:

முட்டாள்களுடன் தொடர்ந்து வாதிடுவதன் விளைவாக –தந்தா தந்தி வ்யதா-பல்லின் கடி வேதனை போல் புத்தியைக் கலக்கும்
இதற்கு ஏற்ற மருந்தாக ஸ்வாமியுடைய கிரந்தங்கள் –ப்ரமிதி நிதய-ஞானத்தின் பொக்கிஷமாக உள்ளன
நமது ஞானம் என்னும் பயிரைக் காப்பாற்றும் யஷ்டைய-நான்கு கொம்புகள் போல் நான்கு வேதங்களும் உள்ளன
இத்தகைய சுருதி ஸூரபய-வேதங்களின் நறு மணத்தை அவற்றின் சேர்க்கை மூலம் ஸ்வாமியுடைய கிரந்தங்கள் நம் மேல் வீசும்படி உள்ளன
எங்கும் ஞானம் ஆனந்தம் என்னும் மழை பொழியும் மேகம் போன்றவை இவை
நாம் யம லோகம் செல்வதற்கு எதிராக ஒரு உறுதியான உத்தரவாதம்-
யமலோகம் என்ற பேச்சையே முற்றிலும் நீக்க வல்லவை-

ஜடமதி முதா தந்தா தந்தி வ்யதா ஔ ஷத சித்தய-ஜடம் -ஞானம் இல்லாமல் -அசுயம் பிரகாசம் –முத்தா -வீணாகா பேசி –
அதனால் பல் வலி –வ்யதா-நல்ல மருந்து போல்வனவும் -பரமமான ஒளஷதம் –
தந்தா தந்தி -விதண்டா வாதம் செய்து -அதனால் பல் நோவும் படி –வாய் சண்டை -என்றபடி –
ப்ரமிதி நிதய-பிரமங்கள் தோஷங்கள் இல்லாத நல்ல யதார்த்த ஞானம் -உடையவர்களுக்கு நிதி –
ப்ரஜ்ஞா சாலி ப்ரபாலன யஷ்டைய -தத்வ தெளிந்த ஞானம் –ப்ரஜ்ஞ்ஞா -விசுவாசம் -கொண்டவர்களை நன்கு வழி நடத்தி
-யஷ்டி-லீலா யஷ்டி -மாட்டை ஓட்ட –கறையினார் துவர் உடுக்கை –அழுக்கும் கறையுமே வைத்து வஸ்திரம் –
கடை ஆவின் கழி கோல் கை -வழி காட்டி ஓட்ட –பசு பாலனம் -புத்தியை நல்ல வற்றை தோன்ற செய்து –
சுருதி ஸூரபய –செவிகளுக்கு அமிருதம் –சுரக்கும் சுரபிகள் போல் சொல் அமுதே —பசுக்கள் -நறு மணம்-கமழும் ஸ்ரீ ஸூ க்திகள்
காதுகளில் மிருத வர்ஷம் -செவிக்கு இனிய செஞ்சொல் –
சுத்த ஆனந்த பிவர்ஷூக வாரிதா–துக்கம் கலப்பற்ற ஆனந்த மேகம் -இடைவீடு இன்றி வர்ஷிக்கும் முகில் -நிரவதிக ஆனந்த பகவத் விஷய ஞானம்
யம கதி விச்சேதின்ய–நமன் கதி -வார்த்தையே பிரஸ்த்துதம் இல்லாமல் –யம வஸ்த்தையே வார்த்தையே இல்லாமல் –
யதீஸ்வர ஸூக்தய-எம்பெருமானார் உடைய ஸ்ரீ ஸூ க்திகள்

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் —–
மூடர்களோடு விவாதித்து விவாதித்து பல்வலி வந்தவர்களுக்கு பரம ஔஷதம் .
இவை சூக்ஷ்மங்களின் புதையல்.
விவேகிகளுக்கு வழிகாட்டும் செங்கோல்கள் ;
வேதமணம் வீசும் ஸ்ரீஸுக்திகள் .
பிறமதங்களை விரட்டித் துரத்தும் தடிகள்.
துன்பத்தையே ஏற்படுத்தாமல், இன்பத்தையே கொடுப்பவை.
நரகத்தைத் தடுக்கும் வல்லமை உள்ளவை–முன்னை வினை அகல-தென் புலத்தார்க்கு என்னுக் கடவுடையேன் யான்  -தனியனில் உண்டே

இராமானுசன் என்னும் கார் தனையே –காரேய் கருணை இராமானுசர் -வேதங்கள் பார் மேல் நிலவிடப்பார்த்து அருளும் கொண்டல் அன்றோ நம் ஸ்வாமி

புத்தி கேடர்களான புறச் சமயிகளுடைய பற்களில் கடியுண்டதனால்
உண்டான வ்ரணத்தை ஆற்றுவதற்கு நல்ல மருந்தாயும் –
உண்மை நல் ஞான நிதிகளாயும் –
அந்த ஞானமான பயிரை நன்றாகக் காக்கக் கூடிய முள் வேலியாயும்-
அந்த ஞானப் பயிரை வ்ருத்தி பண்ண -வேத மணம் கமழ்ந்த பரிசுத்த ஆனந்தமான மழையைப் பெய்யும் மேகங்களாயும்-
எம லோகம் என்ற பேச்சையே அழிப்பதாயும் உள்ள
யதிராஜ திவ்ய ஸூ க்திகள் விஜய ஸ்ரீ யுடன் பிரகாசிக்கின்றன –

—————

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் வைபவம் -பிரத்யக் தத்தவ –ஜீவாத்மாவும் -முதல் இரண்டு வரிகள் பரமாத்மாவும்-அடுத்த இரண்டு வரிகள்

48-ப்ரதி கலம் இஹ பிரத்யக் தத்தவ அவலோகன தீபிகா
எதி பரிப்ருட க்ராந்தாச் சிந்தாம் நிரந்தர யந்தி ந
அகலுஷ பரஞான ஔத் ஸூக்ய ஷுதா ஆதுர துர்த்தசா
பரிணத பல ப்ரத்யா சீதத் பலேக்ரஹி ஸூக்ரஹா

ப்ரதி கலம் -நிமிஷம் தோறும்
இஹ -இங்கு -சம்சாரத்திலேயே ஞானம் பெற -அங்கும் கேட்டாரார் வானவர் -ரஸம் அனுபவிக்க-அங்கு ஸ்வஸ்மை ப்ரகாசமாகவே இருக்குமே –
பிரத்யக் தத்தவ -ஜீவாத்ம பரமாத்மாவைப் பற்றிய
அவலோகன தீபிகா-பார்க்க உதவும் விளக்கு போன்றவை
எதி பரிப்ருட க்ராந்தாச் சிந்தாம் நிரந்தர யந்தி ந-நிரந்தரமாக நித்தியமாக அனுபவிக்கும் படி
அகலுஷ பரஞான ஔத் ஸூக்ய ஷுதா ஆதுர துர் த்தசா பரிணத பல-குற்றம் அற்ற பர ஞானம் இல்லாத –ஷுதா-பசியினால் -துர்கதி-அபி நிவேசம் மிக்கு அறிய விரும்புவார்க்கு பக்குவமான பழமான பலத்தைக் காட்டும்
ப்ரத்யா சீதத் பலேக்ரஹி ஸூக்ரஹா -பக்குவமான அருகிலுள்ள பழம் போல் -கையாலே பறிக்கும் படி-ஸூகமாக க்ரஹிக்கும் படி

ராமானுஜரின் படைப்புகள் எப்போதும் நம் இதயங்களை நிரப்புகின்றன

ப்ரதி கலம் இஹ பிரத்யக் தத்தவ அவலோகன தீபிகா
இருள் தரும் மா ஞாலம் -பிரதி க்ஷணம் -ஆத்மதத்வம் பிரகாசிக்கும் ஞான விளக்கம் -சேஷ பூதம் நியாமாகம் -ஆதேயம் -சரீரம் என்று யாதாம்யா ஞானம் அருளும்
எதி பரிப்ருட க்ராந்தாச் சிந்தாம் நிரந்தர யந்தி ந–எதி சிரேஷ்டர் -யதி பதி -கிரந்தங்கள் -மனசில் புகுந்து இடை வெளி இல்லாமல் நிறைந்து பூர்ணமாக இருக்கின்றன
அகலுஷ பரஞான ஔத் ஸூ க்ய -கலக்கம் அசுத்தி இல்லாமல் -பர விஷய ஞானம் -பெற்று அடைய தீவிர இச்சை -அதி மாத்திரை த்வரை-இத்தால் அடைந்த
ஷிதா ஆதுர துர்த்தசா -பரிணத பல -பசி மிக்கு -சிரம தசை
ப்ரத்யா சீதத் பலேக்ரஹி ஸூ க்ரஹா -தவறாமல் பலன் கொடுக்கும் -நல்ல செயல்கள் போலே –விளங்கும் ஸ்ரீ ஸூ க்திகள் –
வேறு ஒன்றும் நுழைய இடம் இல்லாமல் இவற்றையே அனுபவித்திக் கொண்டு கால ஷேபம் நடத்துவோம் -என்றவாறு -பஹு வசனங்கள் எல்லாம் -தீபங்கள் –

ஜீவாத்மாவின் உண்மையான தத்துவத்தைப் பிரகாசிக்கும் விளக்குகள்,
பெரிய இறைவனைப் பற்றிய அறிவிற்காக, மிகுந்த பசியுடன் ஏங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு,
அவர்களுடைய சிரமத்தை நீக்கி அவர்களுக்கு ஏற்ற
பழங்களை அளித்து அவர்கள் அருகில் ஆதரவாக உள்ள மரங்கள் போன்றன
மிகவும் எளிதாக அடைய வல்லவை -ஒவ்வொரு நொடியிலும் நமது எண்ணங்களை சரியான பாதையில் நடத்த வல்லவை

யதிராஜருடைய ஸ்ரீஸுக்திகள் ,உண்மைத் தத்துவத்தை உபதேசிப்பவை.
ஆசார்ய முகேன , காலக்ஷேபம் செய்தவர்கள் அவற்றிலேயே சிந்தையைச் செலுத்தி, ஆழ்ந்து அனுபவிப்பர்
இப்படி, எளிமை , கம்பீரம், நடையழகு உள்ளவை.

எம்பெருமானாருடைய ஸ்ரீ ஸூக்திகள் ஸூக்ரஹம் –
எளிதில் தெளிய அறியக் கூடியவை –
இவ்விருள் தரும் மா ஞாலத்தில் ஜீவ தத்துவத்தை கண்டு அறிவதற்கு சுடர் விளக்காய் இருப்பவர்களும் –
பரதாத்ம தத்துவத்தை பற்றின உண்மை ஞானம் பெறும் அவா என்ற பசியால் வாடுபவர்களுக்கு
தம் கையாலேயே எட்டிப் பறிக்கும் படி பழுத்த பழங்களை-அடிக் கிளைகளையே -தரும் படியான மரம் போல் உள்ளவைகளும்
எளிதில் கிரஹிக்கக் கூடியவையாயுமாய் யுள்ள எதிராஜருடைய கிரந்தங்கள்
எங்களுக்கு சதா சிந்தனைக்கு விஷயமாய் இருக்கின்றன –

கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்திலனேல்உயிரை
உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே.

தீபம் இருளைப் போக்கும் -யதீந்த்ர கிரந்தம் அஞ்ஞானம் போக்கி சூஷ்மமான ஆத்ம தத்துவத்தையும் விளக்குமே
ஸத் பாத்திரத்தில் ப்ரேம ரூபம் -நெய் போல் ப்ரகாசப்படுத்தும்-தீபம் ஸ்நேஹத்தால் பிரகாசிக்கும்
சாங்க்யர் -கபிலர் -ஜீவஸ்ய கர்த்ருத்வம் நாஸ்தி -குருடன் நொண்டி சேர்ந்து காட்டைக் கடப்பர் என்பர்
ஆத்மா -ஞானம் -செயல்பாடு பிரதானம் -சரீரத்தில் உள்ள கர்த்ருத்வம் பிரதிபலிக்கும் என்பர்
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் -சாஸ்திரம் பொருளாக வேண்டுமே –
வேறே சிலர் ஸ்வ தந்த்ர கர்த்ருத்வம்
பரார்த் து -ப்ரஹ்மத்துக்கு அடங்கின கர்த்ருத்வம்
வேறே சிலர் ஞாத்ருத்வம் இல்லை ஞான மாத்திரமே
விஞ்ஞானம் யஜ்ஜம் பண்ணுகிறது சுருதி -விஞ்ஞாதா -அவனே ஞானமாயும் ஞானம் உடையவனாயும் இருப்பான்
சிலர் ஆத்மா விபு -ஜைனர் எடுத்துக் கொண்ட சரீரம் அளவு என்பர்
அத்வைதி அபின்னம் என்பர்
பாஸ்கரர் பின்னம் அபின்னம் என்பர்
ஆதார ஆதேய நியாம்ய நியமிக்கும் இல்லை என்பர்
இவை எல்லாம் நிரசித்து பாஷ்யத்தில்
பர தந்த்ர கர்த்தா-ஸ்வயம் பிரகாசம் -அஜடம் -அணு -அப்ருதக் சித்தம் -சம்சயம் விபர்யம் இல்லாமல் காட்டி அருளுகிறார்
இதே போல் பரமாத்ம ஞானம் சுலபமாக-அகலுஷம் பர தத்வ ஞானம் ஸூ லபமாகக் காட்டி அருளும்
நிர்குணம் நிர்விசேஷ ப்ரஹ்மம்-மூவரில் ஒருவர் -நிமித்த காரணம் மாத்திரம் -குழப்பங்களைப் போக்கி –
குண விக்ரஹ விபூதி விசிஷ்டன் -அபின்ன நிமித்த உபாதான காரணம்
த்ரிவித காரணமும் இவனே-ப்ரக்ருதி விஸிஷ்ட ப்ரஹ்மம் -ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம்-ஞானாதி ஸமஸ்த குண விஸிஷ்ட ப்ரஹ்மம்-மூன்றுமே த்ரிவித காரணங்களும் ப்ரஹ்மமே ஸ்ரீயப்பதி- ஸூலபமாகக் காட்டி அருளி -மோக்ஷத்தில் விருப்பம் -அபி நிவேசம் பெருக்கும்படி ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள்-தத்வ ஞானம் பெற்ற பின்பு மோக்ஷத்தில் இச்சையும் கொடுக்கும் அன்றோ

——————————————

வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் —சூரணை -162-
ருசி விவசர்க்குப் பாதமே சரணம் ஆக்கும் ஒவ்தார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் —சூரணை -163-

அதே போல் கீழ் ஸ்லோகத்துக்கும் இதுக்கும் சம்பந்தம்

49-முகுந்த அங்க்ரி ஸ்ரத்தா குமுத வன சந்திர ஆதப
நிபா முமுஷாம் அஷோப்யாம் தததி முனி ப்ருந்தாரக கிர
ஸ்வ சித்தாந்த த்வாந்த ஸ்த்திர குதுக துர்வானி
பரிஷத் திவாபீத ப்ரேஷா திநகர சமுத்தான புருஷா –

முகுந்த அங்க்ரி -முகுந்தனுடைய திருவடித் தாமரைகள்
ஸ்ரத்தா குமுத வன சந்திர ஆதப நிபா-ஸ்ரத்தை யாகிய ஆம்பல் காடுகள் சந்த்ரனைக் கண்டு மகிழும் மலரும் -அழகு குளிர்ச்சி சோமவத்
ஸ்வ சித்தாந்த -தங்கள் சித்தாந்தம் -தாங்களே கல்பித்து கொண்டது
த்வாந்த ஸ்த்திர குதுக -தப்பான வாதமாகிய இருளில் மகிழ்ந்து
துர்வானி பரிஷத் திவாபீத ப்ரேஷா -கோட்டான் கூட்டங்களுடைய பார்வைக்கு
திநகர சமுத்தான புருஷா -ராமானுஜ திவாகரன் தேஜஸ்ஸு இவர்களுக்கு குரூரமாக தோற்றும்
அஷோப்யாம் முமுஷாம்-கலக்க முடியாத மோக்ஷ விருப்பம் ஏற்படுத்தி முமுஷுவாக்கவும் வல்லவை

முகுந்த அங்க்ரி ஸ்ரத்தா குமுத வன சந்திர ஆதப நிபா முமுஷாம்-மோக்ஷ பிரதா முகுந்ததோ –மும்-மோக்ஷம் கும் -இஹ லோக பலன் -சிரத்தை –
குமுதம் -சந்த்ர பிரகாசம் -ஆம்பல் மலர் -ஆம்பல் வாய் கூம்பின காண்-காலையில் –
வனம் -சமுதாயம் –நெய்தல் ஏற்றும் ஒரு புஷ்ப்ப வகை -ஆம்பல் சஜாதீயம் —
அற்ற குளத்தில்-அழு நீர் பறவை போல் -உறவு -குட்டியும் ஆம்பலும் நெய்தலும் வற்றி -மூதுரையார் பாசுரம் –
பக்தி மிக்கு இருப்பார்கள் -சந்திரன் ஒளி போஷிக்குமா போலே -திருவடிக்கு அற்று தீர்த்தார்கள் உடைய பக்தி சிரத்தையை வளர்த்து –
நிபா-ஒத்த என்றபடி -நன்கு பிரகாசிக்கும் சந்திரன் -பூர்ண சந்திரன் ஒத்து என்றபடி -முமுஷாம் அஷோப்யாம் தததி முனி ப்ருந்தாரக கிர
மோக்ஷத்தில் தீவிர இச்சை –முமுஷூ –ஷோபமே அடையாத -வற்றாத தீவிர ஆசை என்றபடி -த்வரை மாறாமல் –
வரை இடுதல் படிப்படியாக மாறுதல் -பற்றுதல் -முழுவதுமாக மாறுவது -த்வய மந்த்ரம் அனவ்ரதம் -அனுசந்தானாம் -சொல்லி
பரம புருஷார்த்தம் பற்றுதல் வரை இடாமல் -திருவடி அழகு மனன சீலர்கள் முனி –கிர -வார்த்தை -ஸ்ரீ ஸூ க்திகள் -தததி -அருளும் -ஸூ கம்பீரா –
ஸ்வ சித்தாந்த த்வாந்த ஸ்த்திர குதுக துர்வானி பரிஷத்
தங்கள் -அஞ்ஞானம் இருள் நிறைந்த துர்வானி -அதிலே இருந்து பழகி -அதுவே வெளிச்சமாக கொண்டு –
சூர்யா உதயம் கண் கூசும் இவற்றுக்கு -அதே போலே இவர்களுக்கு -மோஹம் நிறைந்து –
சந்த்ர சூர்யன் போலே யதிபதி கிரந்தங்கள் -என்றவாறு –குமுதா மலர் -அநந்ய ப்ரயோஜனர்களுக்கு சந்திரன் -குத்ருஷ்ட்டி பாஹ்யர்களுக்கு சூர்யன் –
த்வாந்தம் -இருட்டு –அஞ்ஞானம் த்வாந்த ரோதம் –ஸ்திரமாக இருளில் இருந்த தூர்வாதிகள் –
திவாபீத ப்ரேஷா திநகர சமுத்தான புருஷா -கோட்டான் பஷி பகலைக் கண்டால் பயம் -இரவில் -ஆந்தை போலே –
ஓடி ஒழியச் செய்யும் தீவிர சூர்யா பிரபை போல என்றவாறு

ராமானுஜரின் வார்த்தைகள் செயல்படுகின்றன-
முகுந்தனின் பாதத்தில் பக்தி கொண்ட -ஆம்பல் -அல்லி மலர்களின் அணி வகுப்புக்கு நிலவொளி போலவும் ,
மத வெறியர்களின் ஆந்தைகளுக்குக் கொடூரமான சூரிய ஒளியைப் போல கூடியதாக உள்ளன
மேலும் கலங்காத மோக்ஷ விருப்பம் ஏற்படுத்தி முமுஷுவாக்கவும் வல்லவை

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,
படிக்கப் படிக்க மோக்ஷத்தில் ருசியை ஏற்படுத்துகின்றன.
பகவானின் திருவடியில் ,பக்தியை வளர்க்கின்றன.
இருளில் இருக்கும் பிறமதப்பிரதிவாதிகளான கோட்டான்களுக்கு, ஸுர்ய உதயம்

ஜீவ பர யாதாத்ம ஞானம் பெற்றவர்க்கு
பகவத் சரணார விந்தங்களில் பக்தியும்
மோக்ஷத்தில் இச்சையும்
ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூ க்திகளே உண்டு பண்ணுகின்றன –

மோக்ஷ பிரதனான எம்பெருமான் திருவடிகளில் பக்தியாகிற குமுத மலர்களுக்கு நில ஒளிக்கு ஒப்பானதும் –
ஆம்பல் சந்திரனை கண்டு வ்ருத்தி யடையுமே –
தங்கள் மதங்கள் ஆகிற நிலையான இருளில் களிக்கும் துர்வாதிகளான ஆந்தைக் கண்களுக்கு சூரியோதயம் போலே வெறுப்புண்டு பண்ணுபவையுமான
ஸ்ரீ யதீந்திரருடைய ஸ்ரீ ஸூக்திகள் மோக்ஷத்தில் நிலையான இச்சையை விளைவிக்கின்றன –

தத்வ ஞானம் -ஸ்ரீ பாஷ்யம் போல்வன
பக்தி வளர்க்க கீதா பாஷ்யம்
உபாயம் -கத்ய த்ரயம்
காலஷேபம் -நித்ய கிரந்தம்

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்

காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்

வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்

ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54-

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58-

——————

50-நிராபாத போதாயன பணித நிஷ்யந்த ஸூபகா
விசுத்த உபன்யாச வ்யதி புதுர சாரீரக நயா
அகுண்ட்டை கல்பந்தே யதிபதி நிபந்தா நிஜ முகை
அநித்ராண ப்ரஜ்ஞா ரச தமனி வேதாய ஸூதியாம்

ராமானுஜரின் படைப்புகள் வேதாந்த சாஸ்திரத்தின் குறைபாடற்ற ஏற்பாடுகளை வெளிப்படுத்துகின்றன,
போதாயனரின் வர்ணனையின் (ப்ரஹ்ம ஸூத்திரம்) மற்றும் அது போன்றவற்றின் தரத்தை வடி கட்டுகின்றன.(சாரீரக நயா-156 அதிகரணங்கள்)
படைப்புகளில் எந்த முரண்பாடும் இல்லை. அவர்களின் கருத்துக்கள் வலுவானவை, தெளிவானவை
மற்றும் வலியுறுத்தல் தொடர்பாக சுட்டிக் காட்டப்படுகின்றன.
அவை –ப்ரஜ்ஞா ரச தமனி-அறிவுசார் நரம்பு நாண்களைத் தாக்குவதில் திறமையானவை.
மேலும் அவை அறிஞர்களின் அறிவுத் திறனை மலரச் செய்ய உதவுகின்றன.
இதன் மூலம் அவர்களுக்கு இன்பம் ஊட்டுகின்றன

நிராபாத போதாயன பணித நிஷ்யந்த ஸூ பகா
குற்றம் அற்ற -யாராலும் விரோதிக்க முடியாத போதாயான வ்ருத்திகளைக் கொண்டு -ஆளவந்தார் மநோ ரதம்-நிறைவேற்றி
-ஆபாத -தோஷம் நிராபாத தோஷம் அற்ற போதாயனர் வ்ருத்தி கிரந்தம் –
விசுத்த உபன்யாச வ்யதிபுதுர சாரீரக நயா
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகள் -சாரீரக சாஸ்திர நியாயங்கள் -சாரீரக நியாயம்
அகுண்ட்டை கல்பந்தே –
யதிபதி நிபந்தா நிஜ முகை -ஸ்ரீ பாஷ்யகாரர் -நிபந்த்தித்தல் இயற்றியது –நிபந்த -சிகிச்சை பண்ணும் ஊசிகள் –
நாடி பேதங்கள் -சலாக சிகிச்சை -மந்தமான தன்மை மாற்றி -சீனர்கள் இங்கே உள்ளவற்றை புத்தர்கள் கொண்டு போனது -என்பர்
-போதி தர்மர் -என்பவர் கொண்டு போனார் என்பர் -முனை மழுங்காத ஊசியால்–நிஜ முகை -aqu puncture போலே -பிரபந்தங்கள்
அநித்ராண ப்ரஜ்ஞா ரச தமனி வேதாய ஸூ தியாம்
சதாச்சார்யர்களால் சிஷிக்கப் பட்ட ஞானம் உடையவர்களுக்கு சங்கோசம் இல்லாத ரசத்தை -அடைப்பை நீக்கி –தமனி வேதாய -போக்யதை ஊட்டும் படி-
அனுபவிக்கும் படி -யதாவஸ்தித பாகம் கொடுக்கும்

யதிராஜருடைய ஸ்ரீஸுக்திகள் —இவற்றில்,
போதாயனரின் கருத்துக்கள் ப்ரவஹிக்கும் .
வ்யாஸரின் ப்ரஹ்மஸுத்ரத்துக்குத் தெளிவான விளக்கம் ,
பிறமதவாதிகளால் அசைக்கமுடியாத ஸித்தாந்த யுக்திகள் –இவை ப்ரகாசிக்கும் .
அறிஞர்களின் அறிவு நாடியைத் தட்டி, பேரின்பத்துக்கு இழுத்துச் செல்லும்

எம்பெருமானாருடைய ஸ்ரீ ஸூக்திகள் வித்வான்களுக்கு ஆனந்தம் விளைவிப்பவை —
முன்னுக்கு பின் முரண்பாடு ஏதும் இன்றி இருப்பவையாயும்
பகவத் போதாயன க்ருதமான வ்ருத்தி கிரந்தத்தை தழுவியபடியால் தெளிவுற்றதாயும் இருப்பதாயும்
குற்றம் குறை கூற முடியாதபடியான உபபாதனங்களால் விளங்குகின்ற –
அதிகரண நிபந்தங்கள் -விஷயங்களை பாகுபடுத்தி உரைத்தல் -உள்ள ஸ்ரீ ஸூக்திகள்
நன்றாக ஸ்தாபிக்கப் பட்ட பிரதான அர்த்தங்கள் உள்ளவையாய்
வித்வான்களுடைய மலர்ந்த ஞானத்துக்கு ரசம் விளைவிக்க வல்லவையாய் அமைந்துள்ளன –

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

1-உபநிஷத் ஆகிய சமுத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது
2- ஸம்ஸார அக்னியால் தாக்கப்பட்ட- பிரானாகிய பரமாத்விடம் இருந்து பிரிந்து வசிக்கும் ஜீவாத்மாக்களை உஜ்ஜீவிப்பது
3-பலவிதமான அறிவுத் தடுமாற்றங்களால் அகன்று சென்றது
4-பாதாரயனாரின் ஸ்ரீ ஸூக்திகளால் அருகில் கொண்ட வரப்பட்டன
5- இந்த அம்ருதத்தை அறிவுள்ளவர்கள் அன்றாடம் பருகட்டும்

————

ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம் மற்று ஒரு படியால் அருளிச் செய்கிறார் –

51-விகல்ப ஆடோபேந சுருதி பதம் அசேஷம் விகடயன்
யத்ருச்சா நிர்த்திஷ்டே யதி ந்ருபதி சப்தே விரமதி
விதண்டா அஹங்குர்வத் பிரதிகதாக வேதண்ட
ப்ருதநா வ்யாத வியாபார வ்யதி மதன சம்ரம்ப கலஹ

தவறான காரணத்தை அடிப்படையாகக் கொண்ட புற மதவாதிகள் தகாத
வழியில் இட்டுச் செல்ல விதண்டா வாதம் செய்தபடியே இருந்தனர்
மிகவும் கர்வம் கொண்ட யானைக் கூட்டங்கள் போல் ஒருவரை ஒருவர் வாதத்தால் வென்று இருந்தார்கள்
இந்த காட்டு யானைகளின் எரிச்சலூட்டும் சத்தம் (விகல்ப ஆடோபேந-படாடோப விகல்பங்கள் -நாநாவித இறைச்சல்கள் )-டம்பப்போர் -ராமானுஜரின் திரு நாம உச்சாரதாலே (யத்ருச்சா நிர்த்திஷ்டே)–அதே ஷணத்தில் அடங்கி விடும்.

விகல்ப ஆடோபேந சுருதி பதம் அசேஷம் விகடயன்
இதுவா அதுவா -ஸர்வதா கேள்வி –விகல்பம்/ ஆடோபேன -ஆடம்பரம் -/ கட்டணம் பண்ணுவது சேர்ப்பது வளர்ப்பது / விகடயன் குறைப்பது அழிப்பது
நிர்ணய ஞானம் இல்லாமல் சம்சயம் மோக பூர்வகமாக கேள்வியால் -அசேஷ ஸ்ருதியை அழித்தும்
விதண்டா அஹங்குர்வத் பிரதிகதாக வேதண்ட ப்ருத நா
விதண்டா வாதங்களால் -வாதம் ஜல்பம் விதண்டம் -மூன்று வகை -நல்ல வாதம் முதல் -/ பிரமாணம் கொண்டு -மத்யஸ்தரை கொண்டு -தத்வ ஸ்தாபனத்துக்கு –
ஜல்பம் -தான் ஜெயிப்பதே பிரதானம் என்று கொண்டு -அதற்காகவே வாதம் செய்வது ஜல்பம் / பர பக்ஷ தோஷம் சொல்லி
ஸூ பக்ஷ ஸ்தாபனம் இல்லாமை விதண்டா வாதம் -அஹங்காரம் இதனால் கொண்டு -தூர்வாதிகள் –
வேதண்டம்-மாதங்கம் -யானை -11-சப்தங்கள் கஜம் ஹஸ்தி களபம்-ஸ்தம்பேராபம் -அமர கோசம் -பிடித்து பழக்கப் பட்ட யானை மாதங்கம்
-காட்டு யானை வேதண்டம் -காட்டுக்கு அடங்காத காட்டு யானை கூச்சல்
வ்யாத வியாபார வ்யதி மதன சம்ரம்ப கலஹ
கட்டுப்பாடு இல்லாத பெரும் கூச்சல் –
யத்ருச்சா நிர்த்திஷ்டே யதி ந்ருபதி சபதே விரமதி
எம்பெருமானார் பெயரை உச்சரித்தாலே அடங்கும் படி -யதேச்சையாக சொன்னாலும் -அடங்கி போகும் -இருந்த இடமே தெரியாத படி -ஆகுமே -சப்த மாத்திரத்தாலே –

ஒன்றைப் ப்ரணாமாக ஏற்று, அதனால் தெளிவு ஏற்படுபவற்றில் சிலவற்றை அங்கீகரித்தும்
சிலவற்றை நிராகரித்தும் செய்வது, நேர்மையல்ல.
காட்டு யானைகள், மதம் பிடித்து அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து,
பயிர்களை அழித்து, மக்களைத் துன்புறுத்தும் போது ,
அந்த நாட்டு அரசன் ஓடிவந்து வில்லில் நாண் ஏற்றி சப்தத்தை எழுப்பினால்,
யானைகள் பயந்து ,திரும்பவும் காட்டுக்குள் சென்று விடும்.
அதைப் போல,
பிற மதஸ்தர்களின் விதண்டா வாதங்கள் என்கிற பேரிரைச்சல் கேட்டாலும், அங்கு,
எம்பெருமானார் என்கிற திரு நாமத்தைக் கேட்டவுடன் , அவர்கள் நடுங்கி வாய்மூடி மௌனியாவர்

சோபனமான வழியை தம் இஷ்டப்படி சஞ்சரித்து யானைகள் பாழ் படுத்துமா போலே
மனம் போனபடி கூச்சல் இடுவதால் வேத மார்க்கத்தை பாழ் படுத்தும் துர்வாதிகள்
தமது தங்கள் துர்வாதங்களால் பரஸ்பரம் ஜெயிப்பதற்காக விளைவிக்கும் கலகமானது
யதிராஜ ஸ்ரீ ஸூக்திகளின் சப்தங்களை யாதிருச்சிகமாக கேட்டால் கூடத் தானே அடங்கி விடும் —
ஸ்ரீ எதிராஜரின் பெயரைச் சொன்னாலே அடங்கி விடும் என்னவுமாம் –

பிருகு வருணன் -ப்ரஹ்மம் -எதோ வா இமானி –இத்யாதி -எங்கு இருந்து படைத்தார்-அத்தைப் படைத்தவர் யார் -எதற்க்காகப் படைத்தார்-அவாப்த ஸமஸ்த காமத்வம் சேராதே சத்தா அசத்தா –குதர்க்கங்கள்
எது சாதனம் உபாதானம் போன்ற கேள்விகள் -விதண்டா வாதங்கள்
மஞ்சள் வாழைப்பழம் -இரண்டு தன்மை -எது முதலில் -சமவாய சம்பந்தம் -யுகபத் ஒரே சமயத்தில் இரண்டையும் மனதில் கொள்ள முடியாதே
விசேஷயத்துடனும் விசேஷணத்துடன் அடுத்த விசேஷணம் ஏறும்
தத்வமஸி-தத் த்வம் அஸி-வாதங்கள் போல்வன

ந சேத் ராமாநுஜேத் ஈஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்தமாத்ருஸா–என்று-அறிவுடையார் ஈடுபடும்படி மோக்ஷ ஹேதுவான திரு நாமத்தை உடையவர்
ரா அக்ஷரம் கேட்டாலே மாரீசன் பயந்ததாக ராவணன் இடம்
அது ப்ரமேயம் பற்றி-இங்கு பிரமாணம் பற்றி
மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

——————————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் தமது ஞானத்துக்கு தெளிவை அளிக்க வேணும் என்று பிரார்த்திக்கிறார் –

52-பிரதிஷ்டா தர்க்காணாம் பிரதிபதம் ருசாம் தாம யஜூஷாம்
பரிஷ்கார சாம்நாம் பரிபணம் அதர்வாங்க ரசயோ
பிரதீபா தத்த்வாநாம் பிரதிக்ருதி ரசௌ தாபச கிராம்
பிரசித்திம் சம்வித்தே பிரதிசதி யதீசான பணிதி

பிரதிஷ்டா தர்க்காணாம் -தர்க்கம் யுக்தி நியாய வாதம் -ஸாஸ்த்ர அநு க்ருஹீதம் -ஸ்வாமியுடைய கிரந்தங்களில் இருப்பிடம் -பர்யவசான பூமி-ஆர்ஷம் தர்ம உபதேசம் வேத வாக்யத்துக்கு அவி ரோதினம் -மநு -வேதம் சொல்வதை ஸ்தாபிக்கவே தர்க்கம்
பிரதிபதம் ருசாம் -ருக் வேதங்களுக்கு சமமான பதங்கள் கொண்டவை -பர்யாய ஸப்தங்கள் கொண்டவை
தாம யஜூஷாம்-யஜுர்வேத இருப்பிடம் தாமம் –
நா ருக்வேத -கிஷ்கிந்தா காண்டத்தில் சொல்லின் செல்வனைக் கொண்டாடி
ருக் வேதம் விநயம் -யஜுர் வேதம் தாரண சக்தி -சாம வேதம் பாண்டித்யம் தரும்
பரிஷ்கார சாம்நாம்
-சாமவேதத்துக்கு அலங்கரிக்கும்
பரிபணம் அதர்வாங்க ரசயோ -அதர்வண வேதத்துக்கு மூல தனம்
பிரதீபா தத்த்வாநாம் –24 தத்துவங்களுக்கும் -25-ஆத்மா 26-பரமாத்மா தத்வங்களுக்கும் தீபம் யாதாத்ம்ய ஞானம் அளிக்கும்-ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ கீதா பாஷ்யம் விளக்கிக் காட்டுமே
பிரதிக்ருதி ரசௌ தாபச கிராம்-தபஸ் -வால்மீகி பராசரர் மநு போல்வார் அருளிச் செய்த ஸ்ம்ருதிகளுக்கும் இதிஹாச புராணங்களும் பிரதி ரஸம்-பிம்பம் போல்வன
பிரசித்திம் சம்வித்தே பிரதிசதி யதீசான பணிதி–ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் நமது புத்திக்கு ஆனந்தம் கொடுக்கட்டும் – -சந்தோஷம் தெளிவு –

பிரதிஷ்டா தர்க்காணாம் பிரதிபதம் ருசாம் தாம யஜூஷாம்
தர்க்கங்களை -அனுகூலம் -எல்லை நிலம் –பிரதிஷ்டா காஷ்டா -அனுகூல உக்திகளின் பரா காஷடை-
-பிரத்யக்ஷம் அநு மானம் சப்தம் -மூன்று பிரமாணங்கள் அனுகூலமான தர்க்கம் -என்றவாறு –
ருக் வேதம் மொழி பெயர்ப்பை போலே -பிரதிபதம் -இருக்கும் –பிரதிபதம் சப்தங்களை மொழி மாற்றி –
வாக்யார்த்தம் -வாக்கியங்களின் அர்த்தம் -/ தாம இருப்பிடம் யஜுர் வேதங்கள் இருப்பிடம்
பரிஷ்கார சாம்நாம் பரிபணம் அதர்வாங்க ரசயோ
பரிஷ்காரம் திருத்தங்கள் -திருந்து வேதம் -/ பரிபணம் -சமானம் -அதர்வண வேத சாம்யம் -சமமான மதிப்பு என்றவாறு
-சப்தத்தாலும் அர்த்தத்தாலும் –மூல தனம் என்றுமாம் –
பிரதீபா தத்த்வாநாம் பிரதிக்ருதி அசௌ தாபச கிராம்
தத்வங்கள் ஸ்திரம் நித்யம் -உள்ளது உள்ள படி பிரகாசிக்கும் விளக்கு போல்வன /
தபஸ் நிஷ்டர்கள் முனிவர்கள் வசனங்கள் ப்ரதிக்ருதி -உள்ளபடி சொல்லும் -சாயலாக -பிரதி பிம்பம் -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் –
பிரசித்திம் சம்வித்தே பிரதிசதி யதீசான பணிதி
ஈசான நியமனம் -ஈஸ்வர -பணிதி-ஸ்ரீ ஸூ க்திகள்
சம்வித் ஞானம் பிரசித்திம் தெளிவை பிரதிசைதி உண்டாக்கும் -பிரசாதம் -தெளிவு அளிக்கும் -உண்டாக்கட்டும் -வழங்கட்டும்
-பவந்தி பவந்தோ –பாட பேதம் போலே –பிரதி சதி -பிரதி சது–வழங்குகின்றன வழங்கட்டும்
பணிதி –-கத்யம் பத்யம் இரண்டும் -வாக்கில் இருந்து வெளிப்பட்ட காவ்யம் கத்யம் இரண்டும் –

வார்த்தை தர்க்கம் அங்கேயே முடிந்துவிடும், ராமானுஜரின் படைப்புகளில் இடம் இருக்காது.
அவற்றில், ரிக் வேதம் ஏறக்குறைய முற்றிலும் வேறுபட்ட பதிப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது;
அவற்றில் யஜுர் வேதம் உறுதியாக நிலை நிறுத்தப் பட்டுள்ளது;
அவை சாம வேதத்தை முழுமையாக அலங்கரிக்கும் ஆபரணம்.
அவை தத்துவங்களை விளக்கும் விளக்கு.
வால்மீகி போதாயனர் போன்ற முனிகளின் உயர்ந்த வார்த்தைகளின் பிரதிபலிப்பு அவை.
ராமானுஜரின் இந்தப் படைப்புகள் நமக்குப் பார்வைத் தெளிவைத் தரட்டும்!-யாதாத்ம்ய ஞானம் அறிவிக்கும்

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,
நான்கு வேதங்களுக்கு விளக்கம் ;
தத்வங்களுக்கு இருப்பிடம்;
ரிஷிகளின் வாக்யங்களுக்குப் ப்ரதிபிம்பம் ;
இப்படிப்பட்ட ஸ்ரீஸுக்திகள் தெளிவான தத்வ ஞானத்தைஅளிக்கின்றன

சகல வேதங்களையும் அனுசரித்துப் பொருள் கண்டவையும் -நாம் அறிய வேண்டிய தத்துவங்களை
பிரகாசிப்பவைகளுமாய் மகரிஷிகளுடைய வாக்கை பிரதிபாலிப்பதுமாயும் உள்ள
ஸ்ரீ ஸூக்திகள் தாம் நமது ஞானத்துக்கு தெளிவை அனுக்ரஹிக்க வேணும் –

ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்-புற மதங்கள் அனைத்தையும் எதிர்வாதம் செய்யும் யுக்திகள் நிறைந்தவை –
ருக்வேதப் பொருள் போன்றவை –
யஜூர் வேத இருப்பிடம் –
சாம வேதங்களுக்கு பெருமை சேர்ப்பவை –
அதர்வண வேத மூல தனம்
தத்தவங்களை சரியாக விளக்கிக் காட்டும் தீபம்
வால்மிகியாதி முனிவர்களின் சொற்சாயல்-
ப்ரஹ்ம ஞானம் மலர்ந்து தெளிய வைப்பவை

—————————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில்
ஐகாந்த்ய பக்தியை உண்டு பண்ணுகின்றன —

என் நான் செய்கேன்-உபாயாந்தரம் இல்லை யாரே களை கண்–வேறே ரக்ஷகர் இல்லை – என்னை என் செய்கின்றாய் என்று பேற்றை அளிப்பாய் பரம ஐகாந்தி -ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூக்திகளைக் கேட்டு எம்பார் சம்பிரதாயத்துக்கு திரும்பினார் அன்றோ

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.-ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்”-ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷம் பெற்ற பெருமை

53-ஹத அவத்யே ஹ்ருத்யே ஹரி சரண பங்கேருஹ யுகே 
நிபத்தந்தி ஐகாந்த்யம் கிமபி யதி பூப்ருத் பணிதய
சுநா சீர ஸ்கந்த த்ருஹிண ஹர ஹேரம்ப ஹூதபுக்
ப்ரபேசாதி ஷூத்ர பிரணதி பரிஹார பிரதிபுவ

ஹத அவத்யே -ஒழிக்கப்பட்ட தோஷங்களையுடைய ஹ்ருத்யே -மனதுக்கு ஆனந்தம் கொடுக்கும்
ஹரி சரண பங்கேருஹ யுகே -பாபங்களை அபஹரிக்கும் -பரம போக்யமான -பாவானத்வம் போக்யத்வம் -திருவடித்தாமரைகளில்
யதி பூப்ருத் பணிதய-யதி ராஜர் -பூ பூமி தாங்கும்
சுநா சீர-இந்திரன் –ஸ்கந்தத்ருஹிண-நான்முகன் ஹர-ருத்ரன் –ஹேரம்ப -விநாயகர் ஹூதபுக் -ஸூர்யன்
ப்ரபேசாதி ஷூத்ர பிரணதி-போன்ற ஷூத்ர தேவதைகள் -ஏழு ப்ரஸித்தர்களை சொல்லி -அல்ப அஸ்திர பலன்களையே கொடுப்பவர்கள்
அனந்தமாயும் ஸ்திரமாயுமான மோக்ஷம் –மார்க்கண்டேயனும் கரியே -மோக்ஷ பிரதத்வம் நாராயணன் ஒருவனுக்கே
பரிஹார -ப்ரணாமங்களை பரிஹாரம் செய்ய
பிரதிபுவ-எதிர் ஜாமீன் கொடுத்து உத்தரவாதம்
நிபத்தந்தி ஐகாந்த்யம் கிமபி -பரம ஐகாந்திக்கு -அசைக்க முடியாத ப்ரேமங்களை உண்டு படும்
தேவதாந்தங்கள் நிவர்த்தகம் இதில்
ப்ரயோஜனாந்தரங்கள் மேல்
ஆரோக்யம் பாஸ்கரன் -செல்வம் அக்னி- ஞானம் ருத்ரன் -மோக்ஷம் ஜனார்த்தனன் –

ஹத அவத்யே ஹ்ருதயே ஹரி சரண பங்கேருஹ யுகே
அவத்யம் -தோஷம் –ஹத -விலக்கப்பட்ட / ஹ்ருத்யே அளவற்ற ப்ரீதிக்கு விஷயம் -உபய லிங்கம்
ஹரி சரண -ஸ்ரீ பாதார விந்தம் –பங்கம் சேறு –ருஹி மலர்ந்த தாமரை யுகே இணை அடிகள்
நிபத்தந்தி ஐ காந்த்யம் கிமபி யதி பூப்ருத் பணிதய
பரமை ஐ காந்திகள் -அநந்ய பிரயோஜனர்கள் -நிபத்தந்தி திடமாக உண்டாக்குகின்றன –
தேவதாந்த்ர சம்பந்தம் உள்ளாருக்கு பரிஹாரம் நமக்கு ஸ்திர அநந்ய பிரயோஜனர் ஆக்கும்
பாலே மருந்தும் விருந்துமாகுமா போலே –
பூப்ருத் அரசர் -பூமியை தரிக்கும் யதி ராஜர் –பணிதய அருளிச் செயல்கள் -திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள்
கிமபி -இன்னது என்று -சொல்ல முடியாது -கண்டவர் விண்டிலர் -ஐ காந்திய போகம் அனுபவிக்கலாம் ஒழிய -விவரிக்க முடியாதே
சுநா சீர ஸ்கந்த த்ருஹிண ஹர ஹேரம்ப ஹூதபுக்
இந்திரன் -சு நா சீரான -சோபனமான சேனை உடையவன் /ஸ்கந்தன் -தேவ சேனாபதி கார்திகையான் /
த்ருஹினன் சதுர்முக ப்ரஹ்மா -38-ஸ்லோகம் த்ருஹின தந்திரம் -யோக சாஸ்திரம் -/ஹரன்/ஹேரம்பன் விநாயகன்
/ஹூதபுக் அக்னி -ஹுதம் ஹவிஸ் -ஹூ தம் புங்கதே அஸ்னாதி சாப்பிடுவான் –
ப்ரபேசாதி ஷூ தர பிரணதி பரிஹார பிரதிபுவ
பிரபா ஒளி -பிரபேசாதி ஸூ ர்யன் /ஸூத்ர அபர தத்வ தேவதைகளை / வணங்குவதை -பிராயாச்சித்தம் பிரதிபுவ -சிகிச்சை /
வியாதிகளுக்கும் பாவங்களுக்கும் அழிக்க பிரத்திபூ–பரிஹரித்துக் கொள்ள -பிராயாச்சித்தத்தால் ஏற்படும் பரிஹாரம் -பலன் பரிஹாரம்
-அமணன் பாழி சிம்மத்தை காட்டி -ஜைனர் கோயில் -வண்டர் தொண்டர் -மூர்ச்சிக்க
-எம்பெருமானார் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் பாதர் தூளி -சேர்த்து -மாய பிரான் தமர் அடி கொண்டு நீர் தூவுமின் -தீர்ப்பாரை யாமினி —
ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ க்திகள் -இந்த சக்தி உண்டே

ராமானுஜரின் படைப்புகள் குறையற்றவை, இதயத்திற்கு மகிழ்ச்சியானவை,
முன்பு சிவன், இந்திரன், சுப்ரமணியன், விநாயகர், சூரியன், அக்னி முதலிய சிறு தெய்வங்களின் வழிபாட்டுக்குத்
தங்களைக் கொடுத்த மனங்களைக் கூட மாற்றும் திறன் கொண்டவை.
அவர்கள் பிராயச்சித்தத்திற்காகவும், பரமாத்மாவைப் பற்றி ஒரே மனதுடன் பக்தி ஒழுக்கத்திற்காகவும் சேவை செய்கிறார்கள்.
நமது இதயத்திற்கு இனிமையை அளிக்கும் எம்பெருமான் திருவடித்தாமரைகளில் மனம் ஈடுபடும் படி செய்ய வல்லவை

ஸ்கந்தன், இந்த்ரன் , ப்ரஹ்மா , ருத்ரன் , அக்நி , ஸுர்யன் முதலான பரிவார தேவதைகளை வணங்கியவர்களுக்குப்
ப்ராயச்சித்தமாக , யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் , தன்னைக் கற்றவர்களை, பரமைகாந்திகளாக ஆக்குகின்றன .
இதற்கு, தானே ஜாமீனாக இருப்பதாக உறுதி அளிக்கிறார்.

குற்றம் அற்றவை -இன்பம் விளைவிப்பவை –
சிவன் அயன் இந்திரன் கந்தன் கரிமுகன் அக்னி சூர்யாதி சகல பகவச் சேஷமான தேவதைகள் இடத்தில்
ஸ்வாமித்வ புத்தி கொண்டு வணக்கம் செலுத்துவதை பரிஹரிப்பதில்
மிக சமர்த்தங்களாய் இருந்து
எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில் ஐகாந்த்ய பக்தியை உண்டுபண்ண வல்லவனாய் யுள்ளன –

வ்ருத்தாசுரன் -இந்திரனிடம் -குவிந்தனையே நமஸ்காரம் பண்ணுவான்
அம்பரீஷன் -பெருமாளே இந்திரனாக வேஷம் போட்டு வந்தாலும் ஒன்றும் கேட்டுப் பெற மாட்டேன் -நீயே நேரில் வந்தாலும் உன்னை வணங்கி ஒன்றும் கேட்க்காமல் இருப்பேன்
நித்ய நைமித்திக்க கர்மங்களில் அக்னி சூர்யன் வருணன் பித்ருக்கள் வணங்குவது இவர்களுக்கும் அவனே -சர்வ பூத -அந்தர்யாமி என்று எண்ணியே செய்கிறோம்
கவ்யம் ஹவ்யம் -பித்ரு தேவ ஸ்வரூபம் ஏற்றுக்கொண்ட விஷ்ணு
அனைவரும் அவன் சரீரம் தானே-

சாஷாத் அவிரோதம் -ஜைமினி -இந்திரன் சப்தமே நாராயணனைக் குறிக்கும்
வ்ருத்தாசுரனைக் கொன்ற இந்திரனே லிங்கம் அடையாளம் சொல்லும் பொழுது அந்தர்யாமி-அவஸ்திதம் உள்ளுறையும் நாராயணனை குறிக்கும்
ஸ்ரத்தையும் வளர்த்து விடுபவனும் நானே -கீதையில்
அவரவர் விதி வழி அடைய நின்றனரே -அவஸ்த்திதேரிதி

யயாதி இந்திர ஸம்வாதம் -கீழே தள்ள விரகு பாரத்தான் அன்றோ -இவனோ திருவடியில் விழுந்து அடியேன் என்பவர்க்கு சாம்யா பத்தி அருளுவானே
விகற்ப தேசம் சுவேதன் -ஸத்யலோகம் சென்று பசி தாகம் -கீழே சோறு தண்ணீர் கொடுக்காததால் -இதற்குப் பரிஹாரம் நான்முகன் செய்ய முடியாமல் -உத்தர காண்ட சரித்திரம்
ராமனே விராமன் -வரம் கொடுத்த தேவதை வரம் எல்லாம் ஒய்வு எடுக்கலாமே இவன் இடம் -ருத்ரனை அண்டிய பாணாசுரன் வ்ருத்தாந்தம் அறிவோமே -வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி -தீர்த்து அருளுபவன் இவன் ஒருவனே -நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையம் முன் படைத்தான் -தேவதாந்த்ர தாஸ்யம் நிவர்த்தி செய்து நாராயணனை அண்டியவர்களுக்கு தேவ ரிஷி பித்ரு கடன்கள் ஒன்றுமே இருக்காவே

சர்வ ஸ்மாத் பரனாயும் மோக்ஷ பிரதனனாயும் உள்ள எம்பெருமான் இருக்க
தேவதாந்த்ர பஜனம் பண்ணிக் கெடாதீர்கள் -என்றபடி –

சங்கல்ப ஸூரியோதயம் -24 ஸ்லோகம் ஸ்வாமியே இத்தை விளக்கி அருள்கிறார்

————————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் வைதிகர்களின் ஸூக்ருத பலன் -என்கிறார் –

54-யதா பூத ஸ்வ அர்த்தா யதி ந்ருபதி ஸூக்திர் விஜயதே
ஸூதா சந்தோஹ அப்தி ஸூ சரித விபக்தி ஸ்ருதிமதாம்
கதா த்ருப்யத் கௌதஸ்குத கலஹ கோலா ஹல
ஹத த்ரிவேதீ நிர்வேத ப்ரசமன விநோத பிரணயிநீ

யதா பூத ஸ்வ அர்த்தா -இயற்கையாக உள்ள எளிய வார்த்தைகள் –ஸத்யமானவை
ஸூதா சந்தோஹ அப்தி -அமுதக்கூட்ட சமுத்திரம்
ஸூ சரித விபக்தி ஸ்ருதிமதாம்-வைதிகர் பூர்வ ஸூ ஹ்ருத பரிணாமம் போன்றதும்
யதி ந்ருபதி ஸூக்திர் விஜயதே

கதா த்ருப்யத் கௌதஸ்குத -வாதத்தால் மதம் கொண்ட தூர்வாதிகளின்
கலஹ கோலாஹல ஹத த்ரிவேதீ நிர்வேத –வாதக் கூட்டங்களால் வருந்திய வேதம் -பேத அபேத கடக சுருதிகள் கொண்ட வேதம்
ப்ரஹ்ம சரீரமாக கொண்டு பேத அபேத ஸ்ருதியை ஸமன்வயப்படுத்தி –உடல் மிசை உயிர் எனக்கரந்து எங்கும் பரந்துளன் -இது கொண்டு ஸூ த்திரங்களை ஓருங்க விட்டார்
ப்ரசமன விநோத பிரணயிநீ–
சமனம் பண்ணி -வேத மாதா துன்பம் போக்கி -மகிழ வைத்தார் அன்றோ

ராமானுஜரின் படைப்புகள் வெற்றியைக் கூறுகின்றன

யதா பூத ஸ்வ அர்த்தா யதி ந்ருபதி ஸூக்திர் விஜயதே
யதிராஜர் -நரபதி அரசர் -விஜயதே -பல்லாண்டு –யதா பூதம் உள்ளது உள்ளபடி தாத்பர்யம் -இசைந்ததாக -சுருதி ஸ்ம்ருதி இத்யாதிகளுக்கு
ஸூதா சந்தோஹ அப்தி ஸூ சரித விபக்தி ஸ்ருதிமதாம்
அப்தி -கடல் -அம்ருத கடல் -அளவற்ற –சந்தோக-அபரிச்சின்னம் -அம்ருத தன்மை –ஸந்தோஹ சப்தம் ஸூதா உடன் சேர்ந்து
-பிரதாப பந்ததி -நிரவதிக போக்யதை காட்ட –
ஸூ சரித-ஸூ ஹ்ருதம் -சோபனமான சரிதம் –விபக்தி பலன் -விபாகம் தன்மை அடைந்து –ஸ்ருதிமதாம் -வேதம் வல்லவர்கள்
கதா த்ருப்யத் கௌதச்குத கலஹ கோலா ஹல ஹத
வாத கதை -கொழுப்பு ஏறி –வாதம் பண்ணி திமிரு கொண்டு -திருப்த பிரபன்னன் திமிரான பிரபன்னன்
-6–2-திருவாய்மொழி -பிரவேசம் -பெருமாள் விளம்பி வர -பராங்குச நாயகி -த்வரை மிக்கு இருப்பதால் –
ஆர்த்தோவா யதி வா திருப்தா –சப்த வியாக்யானம் -தேக அவசானம் போதும் என்று இருப்பவன்
-வாசி இல்லாமல் அவன் ரஷிப்பான் -சரணாகதன் என்பதே கொண்டு
சரண்யம் ஸ்வபாவம் சொல்ல வந்தது –சரண்ய லக்ஷணம் சொல்ல வந்ததே -இவனுக்கு நாமே உள்ளோம்
-சரணாகதி பண்ணி மோக்ஷம் இப்பொழுதே என்று கேட்க தெரியாத குழந்தை -என்று கொள்ளுபவன்
-பிராணன் அபி -சொல்ல வில்லை -இதை விட பிராணன் பெரிசு இல்லையே அவனுக்கு –
தூது விட்டும் வர வில்லை -பாக்ய ஹானி -முகம் கொடுக்கக் கடவோம் அல்லோம் என்று –
த்ரிவேதீ நிர்வேத ப்ரசமன விநோத பிரணயிநீ
வேதங்கள் தாத்பர்ய அர்த்தம் -பேத அபேத கடக சுருதி -சமணம் பண்ணி –ப்ரீதிக்கு விஷயம் -சர்வம் சமன்வயதா -பண்ணி அருளியதால் –

அவை மேற்பரப்பில் தோன்றும் உண்மையான பொருளைக் கொண்டுள்ளன; இதனால் ஒரு நேர்மை பாதுகாக்கப்படுகிறது;
அவை அமிர்தக் கடல் போல் செயல்படுகின்றன;
வேதங்கள் செய்த தவத்தின் பலனாக அவை விவரிக்கப்படுகின்றன;
தவறாக வழிநடத்தப்பட்ட மத அமைப்புகளின் தொழில் முறை போட்டியாளர்-சர்ச்சை வாதிகளால் ஈடுபடும்
செயலற்ற வாதங்களால் கிழித்தெறியப்பட்ட வேதங்களின் துக்கத்தை அவை துடைத்தழிக்கின்றன.
வேதங்களின் வருத்தங்களை போக்கி அருளி இன்பம் உண்டாக்குவதில் ஆர்வம் கொண்ட ராமானுஜரின் இந்தப் படைப்புகள் வெற்றி பெறட்டும்!

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,அமுதக்கடல்;
நாயகியாக இருக்கும் மூன்று வேதங்களின் உயிர்த்தோழி .
சேதநாசேதநங்களை சரீரமாக உடையவன் பகவான் என்கிற ஐக்யத்தைச் சொல்கிறது.
இப்படி, வேதமாதாவுக்கு, ஏற்பட்ட வருத்தத்தை , யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் போக்குகின்றனவாம்

வேதங்களை பரம பிரமாணமாகக் கொண்ட வைதிகர்களின் ஸூ க்ருதமே வடிவாய் யுள்ளவைகளும் –
உண்மைப் பொருளை உணர்விப்பதால் அமுதமயமான கடல் போல் உள்ளவைகளும் –
செறுக்குற்று துர்வாதம் பண்ணும் புறச் சமயிகளுடைய அட்ட ஹாஸங்களாலே
துயர் உற்ற வேதங்களின் துயரத்தை போக்கடிப்பதிலேயே நோக்குடைய ஸ்வாமி யுடைய
ஸ்ரீ ஸூக்திகள் விஜய ஸ்ரீ யுடன் விளங்குகின்றன –

பேத சுருதிகள் ஸ்வரூபத்தாலும் குணத்தாலும் வேறே வேறே
ஜீவர்களும் ஒருவருக்கு ஒருவர் பேதம்
விஸிஷ்ட ஐக்யம் -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் ஒன்றே -ஏகமேவ அத்விதீயம்
ஸமஸ்த ஜகத் அந்தர்யாமி -நிரீஸன்- ஸ்ரீ லஷ்மி பதி -சரீரீ பிரகாரம் பிரகார பாவம்

———————

எம்பெருமானார் தரிசனத்தில் குறை சொல்லுபவர் தாமே தமக்கு
இழுக்கைத் தேடிக் கொள்கின்றனர் -என்கிறார் —

55-ஸ்ருதி ஸ்ரோணி சூடாபத பஹூமதே லஷ்மணமதே
ஸ்வ பஷ ஸ்த்தான் தோஷான் விததமதி ஆரோபயதிய
ஸ்வ ஹஸ்தேன உத்ஷிப்தை ச கலு நிஜகாத்ரேஷூ
பஹூளம் களத்பிர் ஜம்பாலைர் ககன தலம் ஆலிம்பதி ஜட

இராமானுஜ சித்தாந்தம் -விசிஷ்டாத்வைதம்  வேதங்களால் ஆதரிக்கப்படுகிறது
(தத்துவம் என்பது வேதங்களின் “சிரஸ் ”
(தலை) உபநிடதங்களின் துல்லியமான பொருள் மற்றும் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டது).
பல்வேறு மதங்களில், சில மனச் சோர்வடைந்த மனங்கள் செயற்கையாக
தவறான மற்றும் ஊகிக்கப்பட்ட குறைபாடுகளைக் கூறுகின்றன. அதனால் என்ன?

கண்ணாடி போன்று அவர்கள் மதங்களில் உள்ள குற்றங்களே பிரதிபலிக்கின்றன
ஒரு சக மனிதர் கைநிறைய சேற்றை வானத்தில் எறிந்துவிட்டு, திரும்பத் திரும்ப அப்படிச் செய்தால்,
நிகர முடிவு மற்றும் ஒரே முடிவு: விஷயம் அவன் தலையில் விழுந்து அசுத்தம் செய்யுமே
இது போன்றே அறிவற்ற புறச்சமயிகள் வாதங்களும் உள்ளன

சுருதி ஸ்ரோணி சூடாபத பஹூ மதே லஷ்மண மதே
ஸ்ரீ பாஷ்ய காரர் -சித்தாந்தம் -வேதம் -கணக்கற்ற -சமுதாயம் -சூடா பதம் சிரஸ்-கொண்டு தரிக்கும் படி -வேதாந்தங்கள் ஆதரத்துடன் தரிக்கும் –
தத்வ ஹிதம் புருஷார்த்தங்கள் –தெளிவாக காட்டி -அத்யந்த பஹு மதி –
ஸ்வ பஷ ஸ்த்தான் தோஷான் விதத மதி ஆரோபயதி ய
அ ஸூ யை யால் -தன்னுடைய பக்ஷ தோஷங்களை கல்பித்து -குத்ருஷ்டிகள் -பொருந்தாத அர்த்தங்கள் -அபார்த்தங்கள் -ஆரோபித்து -இல்லாததை இருப்பது போலே –
விததம் -உண்மைக்கு புறம்பான -மதி ஞானம் -தங்கள் மத தோஷங்களை தப்பாக ஆரோபித்து
ஸ்வ ஹஸ்தேன உத்ஷிப்தை ச க லு நிஜகாத்ரேஷூ -பஹூ ளம் களத்பிர் ஜம்பாலைர் ககன தலம் ஆலிம்பதி ஜட
த்ருஷ்டாந்தம் காட்டி -ஜடத்தன்மை -போன்ற அஞ்ஞன்/ தன் சரீரத்தில் உள்ள -வியர்வை சளி –ஜம்பாலைர் -சேறு -கொண்டு ஆகாசம் மேலே எறிய-
வந்து சரீரத்தில் விழுமே -ஆகாசத்தை அழுக்காக பார்த்து -தன் சரீரத்தில் சேறு விழுமா போலே –
இவர்கள் காட்டும் தோஷங்கள் இவர்கள் மதத்தையே அழிக்கும்-
ஆரோபணம் -கல்பித்தல்- அதிஷ்டானம் கயிறு -பாம்பு என்பது ஆரோபணம் -/ ஸமாரோபணம் -நல்ல விஷயத்தில் -அக்னி ஆத்ம ஸமாரோபணம் –
ஜட பதார்த்தம் போலே அத்யந்த ஞான ஹீனர்கள் இவர்கள் -அயதாத்மா மதி முன்பு இப்பொழுது ஜடம் ஆவான் –

விசிஷ்டாத்வைதம் எல்லோராலும் போற்றப்படுவதைப் பொறுக்காத பிறமதவாதிகள் ,
தங்கள் மதங்களில் இருக்கிற தோஷங்களை (குற்றங்கள்) எல்லாம் யதிராஜரின் மதத்தில் இருப்பதாகச் சொல்லி,
தங்கள் அறிவின்மையைக் காட்டுகிறார்களாம்.
ஒரு முட்டாள் குளக்கரையில் நின்றுகொண்டு, குளிக்க வந்தவர்களைப் பார்த்து, இதோ மேலே ஆகாயத்தைப் பாருங்கள்,
இந்த வெளுப்பான ஆகாயத்தைக் கருப்பாக ஆக்குகிறேன் பாருங்கள் ,என்று சொல்லி,
குளத்துச் சேற்றை இருகைகளாலும் எடுத்து, உயரே ஆகாயத்தில் வீசி,வீசி எறிந்தால்
மேலேசென்ற சேறு பலவகையாகச் சிதறி, இந்த முட்டாளின் தலை, உடல், கை, கால் இவற்றில் விழுந்து, இவனையே கருப்பாக்கியது .
ஆனால், வானம் அப்படியே வெளுப்பாகவே இருந்தது.
பிற மதஸ்தர்கள் கூறும் அபத்த வாதங்கள் , யதிராஜரின் விசிஷ்டாத்வைதத்துக்குப் பொருந்தாமல் அந்த மதஸ்தர்களுக்கே பொருந்தும்

வேதாந்தம் -உபநிஷத்துக்களுக்கு அபிமதமாய் இருக்கும் எம்பெருமானார் தரிசனத்தில்
புத்தி கெட்டவனாக எவன் தோஷங்களை ஏறிட்டுச் சொல்லுகிறானோ –
அந்த ஜடபிராயனானவன்-ஆகாசத்தில் சேற்றை பூசுவதாக எறிய
அது முழுவதும் தன் மேலேயே விழுவதால் தன்னையே சேற்றால் பூசிக் கொள்கிறான் –

————————

எம்பெருமானார் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் தீபமாய் இருக்கிறார் என்கிறார் –

56-நிராலோகே லோகே நிருபதி பர ஸ்நேக பரித
யதி ஷமாப்ருத் தீப -யதி ந கலி ஜாஜ்வல்யத இஹ
அஹங்கார த்வாந்தம் விஜஹதி கதங்காரம் அநகா-
குதர்க்க வ்யாள ஓகம் குமதி மத பாதாள குஹரம்

இந்த உலகம் அறியாமையின் இருளில் தவிக்கிறது.
(கடவுள் மீதுள்ள அன்பின் எண்ணெயால் எரியும்)
விளக்கு ராமானுஜம் –அவர் இடம் கொண்ட பக்தியே எண்ணெய்
இந்தத் தீபம் மட்டும் இல்லாவிட்டால், மக்கள் எப்படித் தாங்கள் விரும்பினாலும்,
அகங்காரத்தின் இருளையும், அடிப்படையற்ற வாதங்களையும், போக்க முடியும்
போட்டி அமைப்புகளின் கீழ்த்தரமான பேச்சாளர்களால், -பாம்புகளுக்கு ஒப்பிடலாம்.-இவை நிறைந்த
குகையில் அறிவுள்ளவர்கள் தள்ளப்பட்டு கிடப்பார்களே –

நிராலோகே லோகே நிருபதி பர ஸ்நேக பரித
பிரயோஜனாந்தர தோஷம் அற்று -பர விஷய பக்தி -சிநேகம் -ப்ரீதி -எண்ணெய் -இரண்டு அர்த்தம் –பக்தியால் நிரம்பிய -எண்ணெய் மிகுந்து
யதி -ஷமாப்ருத் தீப -யதி ந கலி ஜாஜ்வல்யத இஹ
ஒருக்கால் நன்றாக பிரகாசிக்கப் போனால் -இந்த தீபம் -யதிராஜர் ஏற்றிய சித்தாந்த தீபம் -யதிராஜராகிய தீபம் -என்றுமாம் –
இஹ -நீராலோகம் இருள் தரும் மா ஞாலத்தில்
அஹங்கார த்வாந்தம் விஜஹதி கதங்காரம் அநகா-குதர்க்க வ்யாள ஓகம் குமதி மத பாதாள குஹரம் -தோஷங்கள் -அநகா –அஹங்காரம் ஆத்மாவை தேகமாக –த்வந்த்தம் இருள் –
/அஹங்காரம் உள்ளவனுக்கு ஞானம் கொஞ்சம் வந்தால் அதனால்
குதர்க்கம் -வியாளம் சர்ப்பம் -பாதாளம் ஆகிற குஹரம் துவாரம் –கீழே ஏழு லோகங்கள் ஸூ ர்யன் உதிக்காதே -/குமதி மத குத்ருஷ்ட்டி மதம் —
ஸ்ரீ பாஷ்ய காரர் தீபம் பிரகாசிப்பதால் இவர்கள் மாய்ந்தார்கள் –

கருணை யதிராஜர் அவதரிக்காமல் இருந்தாலோ,
முதலாழ்வார்கள் ஏற்றிய தத்வ ஞான விளக்கு ,எல்லோருடைய இதயத்திலும் ஆத்ம ஞான ஒளியைப்
பிரகாசிக்கும்படி செய்யாதிருந்தாலோ ,
அறிஞர்களும் ,அனுஷ்டானபரர்களும், பிறமத மாயாவாதம் என்கிற படுகுழியில், விழாமல் இருந்திருக்கமுடியாது.
அதாவது,
வித்வான்களும், அனுஷ்டான பரர்களும், கஷ்டப்பட்டு இருப்பர்

இருள் அடைந்த இவ்வுலகில் எம்பெருமான் நிருஹேதுக கிருபை என்ற
எண்ணெயினால் நிரம்பிய எம்பெருமானார் என்ற தீபம்
ஒளிவிட்டு பிரகாசியா விடில்
சத்துக்கள் -குதர்க்கங்களான பாதாள குகையை எப்படி அண்டாமல் விலகுவார்கள் –

——————

57-யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் –
தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத்
நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய –

ஓ, ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் சமீபத்தியது என்பதில் நீங்கள் திருப்தி அடைகிறீர்கள்.
எல்லாம் சரி. எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியே இருக்கட்டும். என்றால் என்ன?
அப்படியானால், அதற்கு முன்னரே ஏதோ ஒரு மதம் இருந்திருக்க வேண்டும் என்று
நீங்கள் சுட்டிக் காட்டலாம். இது எதை நிறுவுகிறது?

ஒரு பொருள் பழமையானது என்பது பழமையானது என்பதற்கான எந்த தகுதியையும் அளிக்காது.
எதுவானாலும் முதலில் நவீனமானது, அதன் பிறகு பழமையாகுமே காலப்போக்கில்.
மாறாக ஒரு தவறான அமைப்பை இப்போது வரை செழிக்க விடுவது மனிதகுலம் செய்த தவறு.
நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், தங்கர், திராவிடர், குஹதேவர், போதாயனார் மற்றும் பலர்
இந்த அமைப்பை ஆரம்ப காலத்திலிருந்தே வளர்த்து வந்தனர்.
அப்போது எதிர்ப்பு இல்லாததால் மட்டும் விரிவாகவும், அதிகமாகவும் எழுதவில்லை.
அந்த அமைப்பு சமீபத்தியது அல்லது அந்த மதிப்பெண்ணில் அது களங்கத்தை அனுபவிக்கிறது என்று அர்த்தமல்ல.
பூர்வர்கள் ஸித்தாந்தம் என்னும் ஸ்வா ரஸ்யம் ராமானுஜ தர்சன ஸித்தாந்தத்தை உரைத்துப் பார்த்தால் அகப்படும் என்றவாறு

யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் –
நவ நீம் என்பர் -பிராசீன மதம் இல்லை என்பர் -இஹ -லோகத்தில் -யதி ராஜரால் சாஷாத் கரிக்கப் பட்ட இந்த சித்தாந்தம்-வேதத்துக்கு கர்த்தா இல்லை -சாஷாத்கரிக்கப் பட வேணும் –
தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
உரைகல்லில் உரைத்து பார்த்தால் –சாருவாக புத்தர் -சங்கரர் அத்வைதம் விட ப்ராசீனம் –பிராசீனம் என்பதால் கொள்ள வேண்டாமே– தோஷங்கள் நிறைந்து -உள்ளதால் –
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத் -நன்றாக கேள்மின் —
நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய -குட தேவர் -வாமன ரூபம் —பாதாயனார் -வியாசர் –போதாயன-டங்கர் -ப்ரஹ்மனந்தி -வாக்கியங்கள் வாதூல கோத்ரம் என்பர்
-த்ரமிடர்–த்ரவிட ஆச்சார்யர் -வியாக்யானம் -சாந்தோக்யத்துக்கும் -ஆர்த்த்ரேயர் -இவர் என்பர்
-திருமழிசை ஆழ்வார் என்றும் சிலர் சொல்வர் -சிவ பாஷ்யர் -63-நாயன்மாருக்குள்ளும் உண்டே –சாக்கியம் கற்றோம் -இத்யாதி –
குஹதேவர்-நம்மாழ்வார் -நாத யமுனா பாஷ்யகாரர் – நிரா தங்கா –ஆபஸ்தம்பர் –ப்ராசீனர் மூவரையும் காட்டி -ஆதங்கம் இல்லாமல் –நிராதங்கம் –
சாஸ்திர தத்துவங்களை நிர்பயமாக அருளி -திரஸ்கரிக்கும் தகுதி இல்லையே –நிஜமத திரஸ்கார விகமாத்-பயம் கவலை அற்று இருக்க காரணம் –
த்ருதர்களாக இருந்தார்கள் -துர்வாத மத பலம் ஒங்க ஸ்ரீ பாஷ்யகாரர் அவற்றை நிரசித்து ஸூ மத ஸ்தாபனம் பண்ணி அருளினார் –
தரிசன ஸ்தாபகர் இல்லை பிரவர்த்தகர் -என்றவாறு –

யதிராஜரின் விசிஷ்டாத்வைதம் பிற்பாடு தோன்றியது.
சங்கரரின் அத்வைதமோ, முன்னமே தோன்றியது. அதனால், அத்வைதமே சிறந்தது என்றனர், பிறமதத்தினர்.
மதங்களின் சிறப்புக்கும், உயர்வுக்கும் ,பழமையோ புதுமையோ காரணமல்ல.
விசிஷ்டாத்வைதம் பின்னாலே தோன்றியது என்பது, அதன் குறையல்ல !
உயர்ந்த அந்த தத்வத்தை,முன்னமேயே தோற்றுவிக்காதது மனிதனின் குறையே !
டங்கர் ,த்ரமிடர் , குஹதேவர் முதலிய பூர்வாசார்யர்கள் ,
சங்கரரைக் காட்டிலும் பழமையானவர்கள் தாங்கள் சொன்ன விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை எல்லோரும்
அப்போது பாராட்டியதால் , கவலை அற்றவர்களாக, கண்டனத்துக்கான நூல்களை அப்போது எழுதாது விடுத்தனர்

எம்பெருமானார் வளர்த்த இந்த தர்சனம் நூதனமே என்பாரேல்
அதனால் குறை ஒன்றும் இல்லை என்கிறார் –
இதை விட சங்கராதி மதங்கள் தொன்மை வாய்ந்தவை என்பதனால் என்ன பெருமை –
உறை கல்லில் உரைத்துப் பார்த்தால் தெரியும் –
இந்த விசிஷ்டாத்வைத மதத்தை ப்ராசீன காலத்திலேயே ப்ரவர்த்திப்பத்தது-
டங்கர் -த்ரமிட பாஷ்ய காரர் -குஹ தேவர் போல்வார் தெளிந்த ஞானம் யுடையவர் அன்றோ –

————

மீண்டும் ஸ்ரீ ஸூக்திகள் வைபவம் –

58- ஸூதா ஆசாரம் ஸ்ரீ மத் யதிவர புவ ஸ்ரோத்ர குஹரே
நிஷிஞ்சந்தி நியஞ்சத் நிகம கரிமாணப் பணிதய
யத் ஆஸ்வாத் அப்யாச ப்ரசய மஹிம உல்லாசித தியாம்
சதா ஆச்வாத்யம் காலே தத் அம்ருதம் அநந்தம் ஸூ மநசம்

ராமானுஜரின் படைப்புகள், அவற்றின் மதிப்பில், வேதங்களைக் கூட மீறுகின்றன.
கேட்பவர்களின் காதில் அமிர்தத்தைப் பொழிகின்றன-
அடிக்கடி திரும்பத் திரும்பச் சொல்லப்படும் இந்த அமிர்த இன்பம், அவர்களின் மனதை உயர்ந்த ஞானமாக மலரச் செய்கிறது,
அதனால் இறைவனின் அமிர்தம் அவர்களுக்கு நிரந்தரமாக கிடைக்கச் செய்கிறது.
இவை மோக்ஷம் ஏற்படுத்தி அதன் பின்னர் கிட்டும் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் பெறுவிக்கும்-

ஸூதா ஆசாரம் ஸ்ரீ மத் யதிவர புவ ஸ்ரோத்ர குஹரே
யதி ராஜர் —ஸூதா -சாரம் -ஆசாரம் -அம்ருத மழை -என்றவாறு –ஸ்ரோத்ரகுஹரே -காது துவாரம் –
நிஷிஞ்சந்தி நியஞ்சத் நிகம கரிமாணப்பணிதய
பொழிகிறது -நிகமம் வேதம் -அவற்றை விட உயர்ந்த -கரிமா –லகுமா எதிர்தட்டு பணிதய -ஸ்ரீ ஸூ க்திகள்-கேட்ப்பார்கள்
கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ -காதுக்கு பூட்டு இல்லையே -ஸ்வாபாவிகமாக
கேட்ப்பார்கள் செவி சுடும் -பகவத் நிந்தைக்கு ஜீவனம் கொடுத்து கேட்ப்பார்கள் செவியும் சுடும் படி -சிசுபாலனும் தாள் பால் அடைந்தான் –
யத் ஆஸ்வாத் அப்யாச ப்ரசய
போக்யதை அனைவரதும் அப்யஸித்து பெற்ற
மஹிம உல்லாசிததியாம் ஸூ மனசம்
மகிமையால் விகசிக்கப் பெற்ற சுத்த மனஸ் -சாத்விகர்களுக்கு
சதா ஆச்வாத்யம் காலே தத் அம்ருதம் அநந்தம்
ஆராவமுதம் -பர ப்ரஹ்மம் -காலே -அதற்கான உரிய காலத்தில் -மோக்ஷம் அளிக்கும்-சதா ஆசுவாபகவத் அனுபவம்
ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ க்திகளைக் கொண்டே -என்றவாறு-

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,வேதங்களைவிட ,மேன்மையாகக் கேட்பவர் காதுகளில் அமுதமாகப் பொழிகின்றன.
அதனால்தான், இந்த ஸ்ரீஸுக்திகளை நன்கு க்ரஹித்தவர்களுக்கு ,
ஆராத அமுதனாகிய எம்பெருமான் போக்யனாக ஆகிறான்.

ஸ்வாமி தேசிகன், பற்பல – முப்பது -வருஷங்கள், ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் ஸாதித்து ,
அந்தப் பரம ஆனந்தத்தை வெளியிடுகிறார்

செல்வச் சீமானான இளையாழ்வார் இடம் அவதரித்து பரவும் வேதாந்த விழுப் பொருள்கள் -ஸ்ரீ ஸூக்திகள் –
தமது காதுகளில் பெருக்கும் அம்ருத தாரையின் அனுபவங்களால் மலரப் பெற்ற ஞானத்தை யுடைய
வித்வான்களுக்கு அவை நித்தியமாக அனுபவிக்கத் தக்கவை –
அளவிட முடியாத ஆனந்தம் விளைவிப்பவை -மோஷம் அடைவிப்பவை –

—————

எம்பெருமானார் திருவடி சம்பந்தமே உத்தாரகம்-

59-யதி ஷோணீ பர்த்து யத் இதம் அநிதம் போக ஜனதா
சிர ஸ்ரேணீ ஜூஷ்டம் தத் இஹ த்ருட பந்தம் ப்ரபவதி
அவித்யா அரண்யாநீ குஹர விஹரன் மாமக மன
பிரமாத்யன் மாதங்க பிரதம நிகளம் பாத யுகளம்

நான் ஸம்ஸாரம் என்னும் அஞ்ஞான பெரிய காட்டில் ஒரு காட்டு யானையைப் போல் சுற்றித் திரிந்தபோது, ​​
நான் வழிதவறிச் செல்வதைத் தடுக்க, ராமானுஜரின் பாதங்கள் (பரமை காந்திகளால் வணங்கப்படும் பாதங்கள்)
இந்த மதம் கொண்ட எனது மனமான யானையை அடக்க வல்ல
விலங்கு போன்று ஸ்வாமியின் திருவடிகள் உள்ளன –

யதி ஷோணீ பர்த்து யத் இதம் அநிதம் போக
பதி பார்த்தா பர்யாயம் -யதிராஜர் -ஷோணீ-பூமி —அநந்ய
ஜனதா சிர ஸ்ரேணீ ஜூஷ்டம் தத் இஹ த்ருட பந்தம் ப்ரபவதி
பக்தர்கள் -சென்னிக்கு -அது அன்றோ -என் மனசை கட்டிப் படுத்தும் விலங்கு -யத் -தத் -பிரசித்த தமம்-
அவித்யா அரண்யாநீ குஹர விஹரன் மாமக மன
அவித்யை -அஞ்ஞானம் -காடுகளில்–உள்ள பொந்துகளில் -என்னுடைய மனஸ் இஷ்டப்படி திரிந்து
பிரமாத்யன் மாதங்க பிரதம நிகளம் பாத யுகளம்
ஞான ஹீனம் -யானை -அடக்க முடியாதே -மதம் கொண்ட யானை போல -எனது மனஸ் -மாமத மனஸ் -விலங்கு
-முதல் அகப்பட்ட விலங்கு -திருவடி தாமரைகள் இரண்டும் –
யதி ஷோணீ பர்த்து–பாத யுகளம் –/யத் இதம்– அநிதம் போக ஜனதா சிர ஸ்ரேணீ ஜூஷ்டம்-/
தத் இஹ த்ருட பந்தம் ப்ரபவதி-அந்த யத் ததிஹ-பூர்வாகாரம் -வர்த்தமான ஆகாரம் -இஹ ப்ரபவது-பாட பேதம் -இந்த லோகத்தில் விளங்கட்டும் என்றபடி
புஷ்ப்பம்-பிரதம நிகளம் ஆனதே – எனக்கு ஆனால் போலே லோகத்தார் அனைவருக்கும் ஆகட்டும் என்றவாறு –

அஞ்ஞானம் என்பது, காடு.
இதில் மதம்பிடித்துத் திரியும் யானை என்பது “மனஸ் “.
இதை முறையாகக் கட்ட, பரமைகாந்திகளும், ஸார்வபௌமர்களும், ஸிரஸ்ஸால் வணங்கும்
எம்பெருமானின் திருவடித் தாமரைகள் தான் தகுந்த இடம். (காலுக்கு விலங்கு ).
இதைப்போல, யதிராஜரின் திருவடி சம்பந்தம் ,
மதம்பிடித்த யானை போன்ற மனஸ் உள்ளவர்களுக்கு, த்ருடமான உறுதியைக் காட்டும்

எந்த யதி ஸார்வ பவ்மருடைய திருவடிகள் ஐஸ்வர்யாதிகளிலே பற்று இல்லாத பெரியோர்களுடைய சிரங்களால்
வணங்கப் பட்டு அநந்ய பிரயோஜனர்கள் சென்னிப் பூவே-
அஞ்ஞானம் ஆகிற பெறும் காட்டில் விளையாடித் திரியும் அடியேன் மனசாகிற மத யானையை
பிடித்துக் கட்டும் சங்கிலியாக ஆகுமோ
அத்திருவடிகள் இவ்வுலகத்தவருக்கு திடமான சம்பந்தம் யுடையதாக விளங்க வேண்டும் –

——————

காரேய் கருணை இராமானுசரின் அருளின் தன்மையைக் கண்டு வியக்கிறார் –
கருணை வெள்ளத்தை சமத்காரமாக வர்ணிக்கிறார் –

60-சவீத்ரி முக்தா நாம் சகல ஜகதேன பிரசம நீ
கரீயோபி தீர்த்தை உபசித ரசா யாமுன முகை
நிருச்சேதா நிம்ன இதரம் அபி சமாப் லாவயதி மாம்
யத்ருச்சா விஷேபாத் யதிபதி தயா திவ்ய தடி நீ –

முத்துக்களை சுமந்து செல்லும் கங்கை ஓட்டம், யமுனை மற்றும் பிறவற்றில் இருந்து வரும்
நீர் வரத்து காரணமாக அதிகரித்து , சில சமயங்களில் உயர்ந்த நிலங்கள் வழியாகவும் பாய்கிறது.
அதுபோலவே, ராமுனுஜரின் கருணாவின் (தயா) கங்கை, முக்தாக்களை (விமோசனமான ஆன்மாக்களை) உருவாக்கும்,
யமுனாச்சாரியார் மற்றும் பிறரின் கூடுதல் ஆசீர்வாதத்தால் மேம்படுத்தப்பட்டு,
நம்முடைய எல்லா பாவங்களையும் நீக்கி, என்னைப் போன்ற உயர்ந்த கர்வமுள்ள நபரைக் கூட கடந்து,
அதன் தூய்மையான நீரில் என்னையும் மூழ்கடிக்க முடியும்.
நீசர்களில் தலையான அடியேனது பாபங்களையும் போக்கி அருளி முக்தர் ஆக்கியும் அருளும்

சவீத்ரி முக்தா நாம் சகல ஜகதேன பிரசம நீ கரீயோபி
முத்துக்கள் -முக்தர் –நதி -முத்து அலைக்கும் -திவ்ய தேசத்தில் அனைத்தும் உத்தேச்யம் –
பொன்னி பெண்ணை முத்து குவிப்பதை கலியன் -திரு நறையூர் திருக் கோவலூர் பதிகம் -தன்னிடம் தோன்றுவது பிரசவம் -சவீத்ரி-முத்துக்களை -/பாபங்களை போக்கும் –
சகல ஜகத் என்னும் போக்கும் -/
கங்கையால் போக்கப் படாத பாபங்களும் சேது தீர்க்கும் -கயா சேவைக்கு பின் சேது தீர்த்தம் –அஸ்வமேத யாகம் பண்ணி போக்கும் பாபங்கள் –
அனைத்தையும் போக்கும் ஸ்ரீ பாத தீர்த்தம் —
திவ்ய தயை பக்தர்களை முக்தர்கள் ஆக்கும் –சாமான்ய ஜனங்களை முக்தர் ஆக்கும்
தீர்த்தை உபசித ரசா யாமுன முகை
யமுனை போன்ற நதிகள் கலக்கும் -கங்கை -அபிவிருத்தி பண்ணப் பட்ட ரசம் -யமுனை பூர்ண பகவத் பாகவத சம்பந்தம் கலந்ததால் -தூய பெரு நீர் யமுனை அன்றோ –
திருவடி சம்பந்தம் மட்டும் முதலில் –
ஏனக –பாபங்கள் -சாளக்கிராமம் -கண்டகி விரஜா தீர்த்தம் என்பர் -அதனால் பாவானத்வம் –
தீர்த்தம் -ஆச்சார்ய பரமாகவும் -ஆளவந்தார் -விசேஷ கடாக்ஷம் -ஆ முதல்வன் இவன் -ரசம் ஊட்டுவது ஆச்சார்யர் ஸ்ரீ ஸூ க்திகள் என்றவாறு –
பாலும் சக்கரையும் போலே -பூர்வர் ஸ்ரீ ஸூ க்திகளும் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ க்திகளும் என்றவாறு -ரசம் கூடி அன்றோ இருக்கும்

நிருச்சேதா நிம்ன இதரம் அபி சமாப் லாவயதி மாம்
குருச்சேதா -பாட பேதம்

யத்ருச்சா விஷேபாத் யதிபதி தயா திவ்ய தடி நீ
தயா -குணம் இங்கு -காரேய் கருணை இராமானுச -அப்ராக்ருதமான -நதி பிரவாகம் –

பரம ஆசார்யரான யதிராஜரின் கிருபையை, கங்கைக்கு ஒப்பிடுகிறார்.
இத்தோடு, ஆளவந்தார், நாதமுனிகள், நம்மாழ்வார்களின் கருணையும் சேர்ந்திருப்பதால் ,
யதிராஜரின் கருணைவெள்ளம் –த்ரிவேணி சங்கமமாக ஆகிறதாம்.
இந்தக் கருணையை , மழையாக என்மீது பொழிந்து, என்னை ஆட் கொண்டீர் என்கிறார்.
இவை,எனக்குத் தாரகம், போஷகம் , போக்யம் என்கிறார் .
உன் கருணையே கருணை என்று உருகுகிறார்

மோக்ஷ சாம்ராஜ்யம் இவரிட்ட வழக்கு என்பதால் முக்தர்களுக்கு தோற்றுவாய் –
சகல சேதனர்களின் பாபங்களை போக்கி அருளும் –
ஆளவந்தார் போல்வாரின் விசேஷ கடாக்ஷங்களால் விருத்தி பண்ணப் பட்ட பெருமை யுடையது –
தடங்கல் இல்லாமல் பெருகுவது –
யாருக்கும் தாழாமல் அஹங்கரித்து இருக்கும் என்னையும்-
நிர் வியாஜ்யமாக ஏறிப் பாய்ந்து ஆட் கொண்டு விட்டது –
என்னையும் மூழ்கடித்து தனது திருவடிகளில் இட்டுக் கொண்டதே –

———————

61-சிந்தா சேஷ துரர்த்த தந்துர வச கந்தநா சதா கரந்த்திலா-
சித்தாந்தா ந சமிந்ததே யதிபதி கிரந்தத அனுசந்தாயினி
முக்தா சுக்தி விசுத்த சுத்த தடி நீ சூடால சூடாபத கிம்
குல்யாம் கலயேத கண்ட பரசுர் மண்டூக மஞ்ஜூஷிகாம்

ராமானுஜரின் படைப்புகளை ரசிக்கும் பழக்கம் ஒருவருக்கு வந்தபின்பு மற்ற படைப்புகளில் ஆர்வம் காட்ட மாட்டார்; ஏன்?
இந்த (பிந்தைய) படைப்புகள் அற்பங்களை வலியுறுத்துகின்றன;
அவ்வாறு செய்யும் போது, ​​வார்த்தைகள், தர்க்கம் மற்றும் போக்கு அனைத்தும் கடினமானவை
மற்றும் அவை கடினமான பாதைகளில் பயணிக்கின்றன.
முழுப் பயிற்சி இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக முடிச்சுப் போடப்பட்ட பல கிழிந்த துணிக் குவியல்கள் போல் அவை காட்சி யளிக்கும்
அவிழ்க்க முடியாத பல முடிச்சுகள் கொண்ட கந்தல் துணி போல் இவை உள்ளன –
எல்லாவற்றிற்கும் மேலாக, சிவன் தனது தலையின் மேல் , முத்து நிரம்பிய கங்கை நதியைத் தாங்குகிறார்.
ஆனால், தவளைகள் செழித்து வளரும் ஒரு தெரு சாக்கடையைப் பெற்றுத் தாங்க அவர் எப்போதாவது சம்மதிப்பாரா?

சிந்தா சேஷ துரர்த்த தந்துர வச கந்தநா சதா கரந்த்திலா-
அற்பமான அர்த்தங்கள் -ஸ்ருதிக்கு பொருத்தம் இல்லாமல் -தோஷம் நிறைந்த –கரடுமுரடான வார்த்தைகள் –பிரயோஜனம் இல்லாமல்
-வியர்த்தமான சிந்தனை மாத்திரமே மிஞ்சும் -தாபமே மிக்கு -ஆயாசம் மாத்திரமே பலன் –
சித்தாந்தா ந சமிந்ததே யதிபதி கிரந்தத அனுசந்தாயினி
சங்கராதி சித்தாந்தங்கள் இப்படி –யதிராஜர் நவ ரத்ன கிரந்தங்கள் அனுசந்தித்து -சதா காலம்-இருப்பவர்கக்ள் மத்தியில்
-இவர்கள் சித்தாந்தம் ஒரு காலும் விலை பெறாது -எடுபடாது –
முக்தா சுக்தி விசுத்த சுத்த தடி நீ சூடால சூடாபத
முத்து சிப்பிக்கள் நிறைய -பரி சுத்தமான தெளிந்த தீர்த்தம் கங்கை தரித்துக் கொண்டு இருக்கும்
கிம் குல்யாம் கலயேத கண்ட பரசுர் மண்டூக மஞ்ஜூஷிகாம்
கண்ட பரசுர-சிவன் -கைப்பிடி இல்லாத கோடாலி -ஆயுதம் -ருத்ரனுக்கு -காரண பெயர்
தவளை நிறைந்த அழுக்கான ஜல தாரையை மதிப்பானோ -கண் எடுத்தும் பார்க்க மாட்டானே -ஜலதாரை -சாக்கடை என்றவாறு-

தைப்பதற்கே முடியாத நிலையில், வஸ்த்ரங்கள் கிழிந்தால் அதை அங்கங்கு சேர்த்து முடிச்சுப் போட்டு,
உபயோகிக்க முயற்சித்தாலும், எப்படி அந்தக் கந்தல் துணி எதற்கும் பயன்படாதோ
அதைப்போல அடிப்படைப் ப்ரமாணங்கள் எதுவும் இல்லாமல்
சாஸ்த்ர மரியாதையை மீறிய பிற மதங்கள் ஒருவருக்கும் பயன்படாது.
சிவன், கங்கையைத் தலையில் தாங்குகிறான்;
அவனை, நிறையத் தவளைகள் வசிக்கும் வாய்க்காலைத் தலையில் தாங்கு என்று அவன் பக்தர்கள் வேண்டினால்,
சிவன் சரி என்பானா ? மாட்டான்.
அதைப்போல, ஸ்ரீபாஷ்யாதிகளை ஆழ்ந்து கற்றவர்கள் , விபரீதக் கருத்துக்களைச் சொல்லும் பிற மதங்களின்
கருத்துக்களை ஒப்புக்கொள்ளார். அபார்த்தம் என்று ஒதுக்குவர் என்கிறார்

ஸ்ரீ ஸூக்திகளை அனுபவிக்கப் பெற்றவர்கள் மற்ற கிரந்தங்களைக் கண் எடுத்தும் பாரார் –
ஸ்வாமி யுடைய ஸ்ரீ ஸூக்திகளை சதா அனுசந்திப்பார்க்கு
புத்தி கேடு உண்டாக்குவதையே குறிக் கோளாகக் கொண்டு அபார்த்தங்கள் நிறைந்த கந்தல் மூட்டைகளான
இதர மத கிரந்தங்கள் விஷயமாகவே தோன்றாதே
முத்துச் சிப்பிகள் இங்கே நிறைந்து இருப்பதால் –
உயர்ந்த கங்கையை சிரத்தில் அலங்காரமாகக் கொண்ட அரன்-
தவளைகள் நிறைந்த கால்வாயை தலையில் கொள்வானோ –

——————

62-வந்தே தம் யமி நாம் துரந்தரம் அஹம் மான அந்தகார த்ருஹா –
பந்த்தா நாம் பரி பந்த்திநாம் நிஜ த்ருசா ருந்தா நாம் இந்தா நயா
தத்தம் யேன தயா ஸூதா அம்பு நிதிநா பீத்வா விசுத்தம் பய –
காலே ந கரிசைல கிருஷ்ண ஜலத காங்ஷாதிகம் வர்ஷதி

வற்றாத கருணைக் கடலான ராமானுஜர், ஹஸ்திகிரி பகவான் வரதராஜருக்கு, சாலைக் கிணற்றில் இருந்து
சுத்தமான தண்ணீரைக் கொண்டு வந்து வழங்கினார்.
இத்தைப் பருகிய – ஒரு கருமேகம்பேர் அருளாளன் நம் மேல் அந்த நீரையே பலனாகப் பொழிகிறான்
இன்றும் அந்த மேகம், அந்த ஸ்ரீ வரதராஜர், நாம் எதிர்பார்த்ததைத் தாண்டி சரியான நேரத்தில் மழையைப் பொழிகிறது.
(இதற்குக் காரணம் ராமானுஜரின் தீர்த்த கைங்கர்யம்  , இப்போது பகவானால் ராமானுஜர்
அடியாக்களான நமக்கு திருப்பிக் கொடுக்கப் பட்டிருக்கிறது,)
அஹங்காராதி அஞ்ஞானங்களை ஸ்வாமி கடாக்ஷ லேசத்தாலே போக்கி அருளுகிறார்
இதனால் மற்ற மதத்தினர் வழிகளால் ஈர்க்கப்படாமல் நம்மைக் காத்து அருளுகிறார்
யதிகளின் தலைவரான இந்த ஸ்வாமியை அடியோங்கள் வணங்குவோம்

வந்தே தம் யமி நாம் துரந்தரம் அஹம்
யமி -அனைத்தையும் கட்டுப்படுத்தி உள்ள -யதிராஜர் -நாயகர்-அஹம் வந்தே –யேன தயா ஸூதா அம்பு நிதிநா–அந்த அம்ருதக் கடலான இவரை வணங்குகிறேன்
மான அந்தகார த்ருஹா–மமகாராம் -அந்தகாரம் -தேஹாத்ம ஸூ தந்த்ர பிரமங்களை விரட்டி
-பந்த்தா நாம் பரி பந்த்திநாம் நிஜ த்ருசா ருந்தா நாம் இந்தா நயா
மேல் மேல் வரும் தன் சிந்தனை ஞானத்தால் -உண்மைக்கு புறம்பான புற சமயங்களை அடக்கி -ருந்தானாம்
தத்தம் யேன தயா ஸூதா அம்பு நிதிநா பீத்வா விசுத்தம் பய
எந்த தயையின் -அம்ருதக் கடல் –சமர்ப்பிக்கப் பட்ட தீர்த்தம் -சாலக்கிணறு தீர்த்த கைங்கர்யம் –விசுத்தம் –வந்தவாசி போகும் வழியில் -2-மைல் தூரம் –
அவனே ஆசைப்பட்டு -ஆச்சார்யர் நியமனம் -தீர்த்த கைங்கர்யம் -எம்பெருமானார் கர ஸ்பர்சம் பெற்ற தூய்மை
காலே ந கரிசைல கிருஷ்ண ஜலத காங்ஷாதிகம் வர்ஷதி
ஹஸ்தி கிரி -நாதன் -தேவ பெருமாள் -காள மேகம் ஜலத -காலத்திலே-விருப்பத்துக்கு அதிகமான -மனசால் நினைக்க முடியாத பலன்களை வழங்குவான்
தீர்த்தம் பருகி தானே மேகம் பொழியும் -பாஷ்யகாரர் தயை கடல் சமர்ப்பித்த தீர்த்தம் கொண்டே நமக்கு பொழிகிறான்

யதிராஜர் சாலைக் கிணற்றிலிருந்து கொண்டுவந்து சமர்ப்பித்த சுத்த நீரைப் பருகி,
கரிகிரிமேல் நிற்கும் பேரருளாளன் ,எம்பெருமானாருக்கு அருள் மழை பொழிந்தான்.
பிற மதங்களை நிரஸிக்கும் அத்தகைய கீர்த்தி உள்ள எம்பெருமானாரை நமஸ்கரிக்கிறேன்

பரம தயாளுவான எம்பெருமானாரை அடி பணிகிறேன் –
இந்த அருள் கடலான எம்பெருமானாராலே சமர்ப்பிக்கப் பட்ட தூய்மை படைத்த திருமஞ்சன
நீரைப் பருகி அத்திகிரி உச்சியில் உள்ள கரும் கொண்டல் -தேவ பெருமாள்-பேர் அருளாளன் –
நமக்கு உசித காலத்தில் வேண்டுமவை எல்லாவற்றையும் தாராளமாக பொழியுமோ
அஹங்காரமான இருளைப் போக்குபவரும்
சத்ருக்களுடைய மதங்களை தன் கண் பார்வையாலே –
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப -என்னும் படி
மண் உண்ணும் படி செய்பவராக அந்த யதிகட்க்கு இறைவனான ஸ்வாமியை அடி பணிகிறேன் -என்றவாறு –

——————

63-காஷாயேண க்ருஹீத பீத வசநா தண்டைச் த்ரிபிர் மண்டிதா –
சா மூர்த்தி முரமர்த்த நஸ்ய ஜயதி த்ரயந்த சம்ரஷிணீ
யத் பிரயக்க்யாபித தீர்த்த வர்த்தித தயாம் அப்யச்யதாம் யத் குணாத்
ஆசிந்தோ அநிதம் பிரதேச நியதா கீர்த்தி பிரஜாகர்த்தி ந

முன்பு தத்தாத்ரேயராக வேதங்களை ரஷித்து அருளவே காவி வஸ்திரம் -சந்நியாஸ வேஷம் கொண்டு இருந்தான்
அதே போல் நம் ஸ்வாமியின் திரு அவதாரம் இப்பொழுது மற்றொரு அவதாரம்.
ராமானுஜரின் ஆடையைக் கொடுப்பதற்காக இறைவனின் வெள்ளை வஸ்திரம் பிழிந்து குங்கும நீரில் கழுவப்பட்டது.
மேலும் அவர் துறவி வரிசையின் அடையாளமாக திரி தண்டை எடுத்துக் கொண்டார்.
அவ்வளவு தான். இல்லையெனில், அவர் வெறும் மதுசூதன மூர்த்தி மட்டுமே (வேத தத்துவத்தை விசிஷ்டாத்வைதத்தில் பெற்றதற்காக)
இதற்கும் மேலே அவரது திவ்ய கிரந்தங்கள் மூலம் வேதாந்த சித்தாந்தங்களை வெளியிட்டும் அருளினார்
இவற்றால் நாம் அறிவு ஒங்கப்பெற்று அவரது கருணா குணத்தை புகழ்ந்து கொண்டு உள்ளோம்
இதனால் நமக்கும் மிகுந்த வை லக்ஷண்யம் கிட்டுகிறது
தலை, இதயம் ஆகிய குணங்கள் நம்மீது செலுத்திய வசீகர ஈர்ப்பினால் அவருடைய திவ்ய மங்கள விக்ரஹ
அழகைப் பின் பற்றிக் கொண்டிருக்கும் நமக்கு, ஒரு நேர்மையான வகைப் புகழ் என்பது தானாக வரும் வழக்கமான வரப் பிரசாதம்!
இந்த ஸ்வாமியுடைய கீர்த்திப் புகழானது கடற்பரப்பு எது வரையிலும் உள்ளதோ அது வரையிலும் பரவி நிலைத்து உள்ளது

காஷாயேண க்ருஹீத பீத வசநா தண்டைச் த்ரிபிர் மண்டிதா
பீதாக வாடைப் பிரானார் -பட்டு வஸ்திரம் -ஸ்வரூப நிரூபணம் -காஷாயம் -பீதாம்பரம் -க்ரஹிக்கப் பட்ட பீதாம்பரம் –
த்ரிதண்டம் ஏந்தி -சோபை மிக்கு -சங்கு சக்கரம் சேர்த்தி அழகு -மிக்கு அன்றோ இது -அஸி தீக்ஷணா போலே அன்றோ ஸ்வாமிக்கும் இது
-மண்டிதா -அலங்கரிக்கப் பட்ட என்றபடி / கண்டனம் சிதைப்பது -எதிர்மறை மண்டதம்
-சா மூர்த்தி முரமர்த்த நஸ்ய ஜயதி த்ரயந்த சம்ரஷிணீ
முரன் நிரஸ்தன -மது ஸூதன–வேத பாஹ்ய நிரசனம் -மூர்த்தி திவ்ய மேனி -ஜெயந்தி பல்லாண்டு மங்களா சாசனம்
-சா -சப்தம் -அந்த -பிரசித்தம் -தொடர்பு -தத்தாத்திரியனாய் முன்பு அவதரித்து –அத்ர மகரிஷிக்கு திருக் குமாரராக
-ததா -நான் என்னை கொடுத்தேன் -ஆறாவது அவதாரம் என்பர் -த்ரிதண்டம் உடன் அவதரித்து -வர்ண கிரமங்கள் நான்கு யுகம்
-அவரே ஸ்ரீ பாஷ்யகாரராக அவதரித்து -நியாய சித்தி கிரந்தத்தில் இத்தை காட்டி அருளி –
வேதாந்தம் சம் ரக்ஷணம் பண்ணவே —த்ரையந்தம்
யத் பிரயக்க்யாபித தீர்த்த வர்த்தித தயாம் அப்யச்யதாம் யத்குணாத்
தீர்த்தம் -ஞானம் –யது- நன்கு வளர்க்கப்பட்ட ஞானத்தால் –வளர்க்கப்பட்ட சித்தாந்தத்தால் -வேதம் எல்லாம் அவனையே பிரதிபாதிக்கும்
-பூர்வ கண்டமும் உத்தர கண்டமும் –
சர்வ அந்தராத்மா -சரீராத்மா பாவம் -ஸமஸ்த சேதன அசேதனங்கள்-தாத்பர்யம் -காட்டிய குணங்கள் -பக்தி ஞானம் வைராக்யம் அனுஷ்டானம் இவைகள்
-லோகத்தில் ஒப்புமை இல்லாத
ஆசிந்தோ அநிதம் பிரதேச நியதா கீர்த்தி பிரஜாகர்த்தி ந
இந்த குணங்களுக்கு ஒப்பு இல்லையே -ஸ்ரீ வைஷ்ணவர் கீர்த்தியும் உலகு எங்கும் பரவி உள்ளதே –
எம்பெருமானார் திருவடிவாரத்தில் உள்ளதை உணர்ந்த அன்றே கீர்த்தி உண்டே –அளவற்ற கீர்த்தி -கல்யாண குண அப்யாஸத்தால்

பகவான் , பட்டாடையைக் களைந்து சிவந்த காஷாயத்தைத் தரித்து, த்ரிதண்டத்தை ஏந்தி
சிகை, கமண்டலு இவற்றுடன் தத்தாத்ரேயராக வந்து, வேத, வேதாந்த அர்த்தங்களை நிலை நிறுத்தினார்.
யதிராஜரும் அப்படியே அநுசரித்து விசிஷ்டாத்வைதத்தை நிலை நிறுத்தினார்.
அறிவாளிகள் ஒப்புக்கொண்டு பாராட்டுவார்களாம் .
அதனால், பிள்ளான், கிடாம்பி ஆச்சான் போன்ற சிஷ்யர்களின் (அறிவாளிகளின் ) புகழ் நாடு முழுவதும் பரவியது.

” யத்ப்ரக்யாபித தீர்த்த வர்தித தியாம் ” என்பதற்கு,
இதில் “தீர்த்தம்” என்பது , யதிராஜரின் ஸ்ரீபாததீர்த்தம் என்றும் ,
இதை ஸ்வீகரிப்பதால் சிஷ்யர்களுக்கு ,ஞான விருத்தி மிகுதியாகி,
அவர்கள் புகழ் நாடெங்கும் பரவியது என்றும் வ்யாக்யானமிடுவர்

ஸ்ரீ தத்தாத்ரேய மகரிஷியாக திரு அவதரித்து த்ரி தண்டம் ஏந்தி வேதங்களை ரஷித்தான் முன்பு –
அவரைக் காட்டிலும் மேம்பட்ட ஸ்வாமியாக அவரே திருவவதரித்து –
சித்தாங்களை வெளியிட்டு அருளிய கருணையின் புகழ் திக்கெட்டும் என்றும் பரவி உள்ளது –
ஸ்வாமியுடைய கீர்த்தி பிரபாவங்களையும் திவ்ய மங்கள விக்ரக சோபையையும் ஏற்றிப் பேசுகிறார் –

எம்பெருமானாராலே பிரகாசிக்கப் பெற்ற சத் ஸம்ப்ரதாயத்தால்
விளக்கம் உறச் செய்யப் பட்ட புத்தியை யுடையோமான அடியோங்களுக்கு
ஸ்வாமியுடைய குண அனுபவம் பண்ணுவதால் –
அவருடைய சமுத்திர பர்யந்தம் பரவிய கீர்த்தி நெஞ்சுக்கு விஷயம் ஆகிறது –

காஷாயமான பீத வஸ்திரத்தாலும் –
திருக்கையில் ஏந்திய த்ரிதண்டத்தாலும்
எம்பெருமான் யுடைய திவ்ய மங்கள விக்ரஹம் போலே சோபையுடன் விளங்கா நிற்கின்றதே –
பல்லாண்டு பல்லாண்டு –

———

எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை தாம் எப்போதும் அணுக்கராக வேண்டும்
என்று பிரார்த்திக்கிறார் –

64-லிப்சே லஷ்மண யோகி ந பதயுகம் ரத்த்யா பராக சடா
ரஷா ஆரோபண தன்ய ஸூரி பரிஷித் சீமந்த சீமா அந்திகம்
பிஷா பர்யடன ஷணேஷூ பிபராஞ்சக்ரே களத் கில்பிஷா –
யத் வின்யாச மிஷேண பத்ர மகரீ முத்ராம் சமுத்ர அம்பரா

ராமானுஜர் சன்யாசியாக வேண்டிய உணவைப் பெறுவதற்காக, ( மது கரம்  ) தனது அன்றாட வழக்கத்தில் நடக்கும்போது , ​​
அவருடைய பாதங்கள் பூமித் தாயின் மீது ஆழமாகவும் தெளிவாகவும் இருக்கும்.
கடலை ஆடையாகக் கொண்ட பூமி இப்போது தன்னை அதிர்ஷ்டசாலியாகவும் புனிதமாகவும் கருதுகிறது.
அவரது திருவடிகளில் உள்ள கொடி மீன் போன்ற சிஹ்னங்கள் மூலம் தூய்மை பெருகிறதே
பலரும் இந்த பாத தூளிகளைத் தலையால் தரித்து தங்களுக்கு ரக்ஷையாக எண்ணி மகிழ்கிறார்கள்
நித்ய ஸூரிகள் கூட இதைப் போற்றுவார்கள்,
அவர்களைத் தங்கள் முன் தலையில் தாங்குவார்கள் என்று நான் கூறுவேன்.
அந்த பாதங்களை என் தலையில் சுமக்க ஏங்குகிறேன்.

லிப்சே லஷ்மண யோகி ந பதயுகம் ரத்த்யா பராக சடா
அடைய விரும்புகிறேன் –லிப்சே -/ விப்ரலம்பனம் ஏமாற்றுவது /எம்பெருமானார் திருவடி நிலைகளை காதலிக்கிறேன் என்றபடி -எப்படிப்பட்டவை –
ஸ்ரீ ரெங்கத்தில் ஸ்வாமி நடந்த தெரு புழுதி மேல் காதல் கொண்டே -ரத வீதியில் உள்ள பூமி –
ரஷா ஆரோபண தன்ய ஸூரி பரிஷித் சீமந்த சீமா அந்திகம்
நித்ய ஸூரிகள்–விரும்பி –மருந்தே அவர்கள் போக மகிழ்ச்சிக்கு -அந்த மருந்துகளில் இதுவே சீமா பூமி
இதுவே ரக்ஷை -மாயப்பிரான் தமர் அடி பொடி கொண்டு –
அமணன் பாழி என்று தெரிந்து மூர்ச்சிக்க —பிள்ளை உறங்கா வல்லி தாசர் திரு அடி துகளை கொண்டு –தோஷ பரிஹாரமே ரக்ஷை –
பூமிப் பிராட்டிக்கும் இதுவே ரக்ஷை -சீமந்தம் -தலைக்கு அணிய சீமா அதிகம்
பிஷா பர்யடன ஷணேஷூ பிபராஞ் சக்ரே களத் கில்பிஷா –
பிக்ஷைக்கு போகும் பொழுது -மாதுகரம் -பாதுகை இல்லாமல் -ஒரு காலில் சங்கு சக்கரம் -பூமிப் பிராட்டிக்கு ஸமாச்ரயணம்
-நம் போல்வார் செய்யும் அபராதங்களால் புனிதம் அடைய -கிடாம்பி ஆச்சான் ஏகமாக -திருக் கோஷ்ட்டியூர் நம்பி நியமனம்
-சங்கு சக்கர லாஞ்சனம்-நன்றாக பதிந்து -திருவடிகள் உழக்கின பாத தூளிகள் கொண்டு –
யத் வின்யாச மிஷேண பத்ர மகரீ முத்ராம் சமுத்ர அம்பரா
சமுத்திர அம்பரம் -பூமி பிராட்டி –காரார் –கண்ணார் கடல் உடுக்கை -கடலை வஸ்திரமாக கொண்டு
முத்திரைகள் தரித்து -சங்கு சக்கர லாஞ்சனம் என்றவாறு
பரந்யாசம் சம்சார நிவ்ருத்த மோக்ஷம் -ஸமாச்ரயணம் -நரகம் போக மாட்டான் பிறவி இருக்கும் என்பர் தேசிகன் சம்ப்ரதாயம் –
கொங்கில் பிராட்டி -மேல் நாட்டுக்கு போகும் பொழுது -திருவடி நிலை கொண்டு -கண்டார்கள் –

இப்படி, சிஷ்யர்களின் புகழ் பரவக் காரணமான , உடையவரின் திருவடிகள்
தனக்கு வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.
யதிராஜர் ,பிக்ஷைக்கு எழுந்தருளும் போது பூமியில் அவரது திருவடிகள் ஆழமாகவும், கோலமாகவும் பதிந்து,
இந்தத் திருவடிகள் எழுப்பிய பாத தூளிகளை , நித்ய ஸூரிகளும் நெற்றியில் தரித்து, தந்யராகிறார்கள்;
அந்தத் திருவடிகளே எனக்குச் சரண் என்கிறார்

கடலை துகிலாகக் கொண்ட இந்த பூமி -மாதுகரத்துக்கு எழுந்து அருளுவது போன்ற சமயங்களில்
திருவடி சம்பந்தத்தால் திரு ரேகைகள் முத்தரிக்கப் பெற்று சகல தோஷங்களும் விலக்கப் பெற்று
தூய்மை அடைகிறது –
திருவடிகளுக்கு ரஷையான பாதுகைகளை தங்கள் சிரசில் தாங்குவதால் புண்ணியர்களான மஹான்களுக்கு
ஸ்வாமி திருவடிகள் அணித்தாய் உள்ளன –
அடியேனுக்கும் அப்படியே ஆக வேண்டும் –

——————

65-நாநா தந்திர விலோபிதேன மநஸா நிர்ணீத துர்நீ தபி –
கஷ்டம் குத்சித த்ருஷ்டிபிர் யதி பதே ஆதேச வைதேசிகை
வியாச ஹாசபதீக்ருத பரிஹ்ருத ப்ராசேதச சேதச-
க்லுப்த கேளி சுக சுக ச ச முதா பாதாய போதாயன

இணை அமைப்புகளை தவறாக இயக்கிய பல ஆதரவாளர்கள் ராமானுஜரால் பரப்பப்பட்ட அமைப்பின்
பரப்பு மற்றும் திசையிலிருந்து வெகு தொலைவில் சென்று விட்டனர்.
பிறகு, அவர்கள் தங்கள் படைப்புகளால், வியாசரை ஏளனப் பொருளாக ஆக்கி விட்டனர் ;
அவர்கள் மனதில் இருந்து வால்மீகியை விரட்டியடித்தனர்
அவர்கள் சுகரை வெறும் கிளியின் நிலைக்குக் கண்டனம் செய்கிறார்கள்;
அவர்கள் போதாயனாரை பயனற்ற விஷயங்களைப் பேசுபவர் என்று கருதுகிறார்கள்.
அதாவது, அடிப்படையாகவும் அதிகாரமாகவும் இருக்க வேண்டிய நமது பண்டைய படைப்புகளை
அவர்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர்-என்ன கொடுமை இது

நாநா தந்திர விலோபிதேன மநஸா நிர்ணீத துர்நீ தபி –
புதிதாக கற்பனையால் நாநா வித -இதிஹாச புராணங்களை விட்டு -புத்த சாருவாக ஜைனர் -/சாங்க்யர் சைவ -வேதார்த்தங்கள்
புத்த மதங்களை கொண்டே -ஸ்தாபித்து -வேத விருத்தமான அர்த்தங்களால் –
கஷ்டம் குத்சித த்ருஷ்டிபிர் யதி பதே ஆதேச வைதேசிகை
தர்சனம் -மதம் –எம்பெருமானார் உபதேசங்களை மாறாக சொல்லி –குத்ருஷ்டிகளாக –
வியாச ஹாச பதீக்ருத பரிஹ்ருத ப்ராசேதச சேதச-
வியாசர் -வால்மீகி போல்வார் / தத்வ த்ரய ஞானங்களை விளக்கி உள்ளார்கள் -வேத வேதாந்தர்த்தங்களை-
கிருஷ்ண த்வைபாயனர் -வியாசர் -வேதங்களை தொகுத்த காரண பெயர் -புராண தத்வங்கள் / ப்ரஹ்ம ஸூ த்ரங்கள் –
ப்ராதேசஸ் -வால்மீகி -பிதாமஹருக்கு பிதாமகர்-திருமலை நம்பி ஸ்ரீ பாஷ்யகாரருடைய உத்தம தேசிகர் -தாதாச்சார்யர் வம்சம் இவர் இடம்
-லஷ்மீ தாதாச்சார்யர் வம்சம் அனந்தாழ்வான் இடம் இருந்து –
க்லுப்த கேளி சுக சுக ச ச முதா பாதாய போதாயன
சுகர் போதாயனர் /-திரு உள்ளக் கருத்துக்கள் அழிக்கப் பட்டன-கேளி சுகர் –பொழுதுபோக்கு கிளி போலே எண்ணி –
முதா -வியர்த்தமாக -எண்ணி -வியர்த்த ஞான உபதேசங்கள் என்பர் -போதாயனரே இல்லை என்பர் -விதண்டா வாதிகள்-
முதா போதாயன பாதாயனார் -என்றும் பாட பேதம் –

குதர்க்கங்களையே நன்கு கற்று ,அதிலேயே மயங்கி, அதையே பேசி,
வ்யாஸ பகவானையே ஹாஸ்யப் பொருளாக்கி,
வால்மீகி மகரிஷியையே மனத்திலிருந்து விரட்டி,
சுகப் ப்ரம்மத்தை விளையாட்டுக் கிளியாக ஆக்கி,
போதாயநரைப் பாதித்து,
யதிராஜரின் ஸித்தாந்தத்தை ஏற்காமல், மாயாவாதம் செய்கிறார்களே என்று வருந்துகிறார்

பாஹ்ய குத்ருஷ்டிகளை பரிகாசப் பேச்சால் ஏளனம் பண்ணுகிறார் –
வேதாந்தங்களை சரியாக கிரஹிக்க யோக்யதை இல்லாமல் கலக்கமுற்று தெளிவற்ற
புத்தி யுடையவர்களால் நிர்ணயிக்கப் பெற்ற தீதுற்ற நெறியுடைய குத்ருஷ்டிகள்
வியாச மகா ரிஷியை பரிகாசத்துக்கு உள்ளாக்குகிறார்கள்
வால்மீகி முநிவரை மூடராக்கி விட்டனர் –
சுக ப்ரஹ்மத்தை விளையாட்டு கிளியாக்கி விட்டனர் –
யசஸ்வியான பகவத் போதாயனருடைய ஞானத்தையும் வியர்த்தமாக்கி விட்டனர் –
அந்தோ பரிதாபம் –

—————

66-அர்த்த்யா திஷ்டதி மாமிகா மதி அசௌ ஆசனமா ராஜன்வதீ –
பத்யா சம்யமிநாம் அநேன ஜகதாம் அத்யாஹித சேதி நா
யத் சாரஸ்வத துக்க சாகர ஸூதா சித்த ஔஷதா ஸ்வாதி நாம் –
பிரச்வாபாய ந போபவீதி பகவன் மாயா மஹா யாமி நீ–

வாழ்க்கை என்பது இறைவனின் ” மாயா ” என்பதன் கீழ் நாம் வாழ்ந்து துன்பப்படுகிறோம்.
இது மனித குலம் அனுபவித்த ஒரு நீண்ட, மிக நீண்ட, இருள் நிறைந்த இரவு.
ஆனால் உண்மையான நோய் தீர்க்கும் மருந்தான ராமானுஜரின் படைப்புகளின் அமிர்தக் கடலை –
சித்த மருந்தை -ஆழமாக குடித்த மக்களுக்கு,
இந்த மாயா-இரவு அறியாமையின் ஆழ்ந்த தூக்கத்தைக் குறிக்காது.
இந்த உலகில் பிறந்த ராமானுஜரே, அசுபமான மற்றும் தவறான அறிவை ஒழிப்பதற்காகவே,
என் இதயத்தை அவர் வழியில் செல்லச் செய்தார்,
என் எண்ணங்கள் இப்போது அர்த்தமுள்ளதாக இருக்கின்றன.

அர்த்த்யா திஷ்டதி மாமிகா மதி அசௌ ஆசனமா ராஜன்வதீ
என்னுடைய ஞான விசேஷம் -மாநகா-ஸ்த்ரீ லிங்கம் மாமிகா-இப்பொழுது ஸ்திரமாக உள்ளது -அசவ் -இந்த கால சந்நிதி
-நல்ல அர்த்தங்களை கொண்டதாக விளங்குகிறது
நேர் வழியில் -/ நல்ல பொருள்களை கொண்டதாக -விளங்கி-
ஸ்ரீ பாஷ்யகாரர் திருவதாரத்துக்கு பின் -அன்று நான் பிறந்திலேன் போலே – ஆ ஜென்ம -ஸ்வாமி அவதரித்த பின்பு
-பத்யா சம்யமிநாம் அநேன ஜகதாம் அத்யாஹித சேதி நா
சம்யமி -யதிகள்/ ஸ்ரீ பதி சமஷ்டி பதம் -ஸ்ரீ ய பதி – /யதிராஜாராலே -அத்யந்த அஹிதம் -வியாதி துர்பிக்ஷம் தார்த்ர்யம் இவை -போக்கி -அநேக ஜெகதாம் –
ஆத்மாவுக்கு ஏற்பட்ட வியாதி –பேரமர் காதல் -பக்தி உழவன் —ஈர மனஸ் -பக்தி உண்டாக –ரசிகனாக வேண்டுமே
கண் அழகை ரசித்த பிள்ளை உறங்கா வல்லி தாசர் அதிகாரி -ராஸிக்யத்தை மாற்றினால் போதும்
-ஊரவர் கவ்வை -எருவிட்டு -நீர் படுத்தி –அன்னை சொல்லால் –நீர் நித்யம் வேண்டுமே –
-நெஞ்சப் பெரும் செய்யுள் -உலகம் விஸ்தீரணம் மனஸ் அன்றோ – காரமர் மேனி கொண்டே
-நம் கண்ணன் தோழீ கடியன்- தனக்கா பண்ணினான் சொன்னதும்
பொறுக்காமல் -கடியன் கொடியன் நெடிய மால் உலகம் உண்ட அடியான் அறிவரிய மாயத்தால் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடைக்கும் -அவன் என்பதே முக்கியம்
விசேஷணங்களை தாத்பர்யம் தவிர்த்து விசேஷயம் ஒன்றிலே -மாயாவதி -கிருஷீ பலம் –
ஸ்ரீ பாஷ்யகாரர் -ஸமஸ்த லோக அஹிதங்களை போக்கி அருளி -எப்படிப் பட்டவர் -எப்படி அருளினார்
யத் சாரஸ்வத துக்க சாகர ஸூ தா சித்த ஔஷதா ஸ்வாதிநாம்
யத் -சப்தம் -கீழே சொல்லப் பட்டவருடைய -பாற் கடல் -ஸ்ரீ ஸூ க்திகளான -வாக்கால் வெளிப்பட்ட -நாவினில் நின்று மலரும் ஞானக் கலைகள் –
அமிர்தம் -இன்னமுதத்து அமுதம் –சித்த உபாய சோபனம் -பாராசரவ வச ஸூ தாம் -ஸூ த்ரம் கடைந்து எடுத்த அமிர்தம்
–அவற்றை கடைந்த அமிர்தம் –சித்த ஓஷதி வனஸ்பதி சாரங்களின் சாரம் –சகல தாபங்களையும் போக்கும் –
-பிரச்வாபாய ந போபவீதி பகவன் மாயா மஹா யாமி நீ–
பிரகிருதி -மாயை -ஞான சங்கோசம் திரோதானம் –மம மாயா துரத்யாயா –பகவான் மாயா —
சம்சாரமான காள ராத்திரி -நீள் இரவாக நீண்டு -ஊர் எல்லாம் துஞ்சி –பாம்பணையான் வாரானால் –
யாமம் -யாமி நீ -இரவு என்றவாறு -யாமங்களை யுடையது -ஜாமம் -முடிவில்லாதாது அன்றோ
இவர்களை உறக்கத்தில் ஆழ்த்தி -ஞான சங்கோசம் பண்ண முடியாதே –நீண்ட காலம் சம்சாரத்தில் ஆழ்ந்து இருப்பதே பிரஸ்வாபாயம்-

காட்டில் உள்ள ரிஷிகள், வியாதி, பசி, தாகம் —இவை தபஸ் செய்ய இடையூறாக இருப்பதால்,
பல மூலிகைகளால், “ஸித்தௌஷதம் “என்கிற ஔஷதத்தைத் தயாரித்து அருந்துவர் .
இதுபோன்ற ஔஷதத்தை , என்(ஸ்வாமி தேசிகன் ) புத்தியான ஸ்திரீயும் அருந்தி இருக்கிறாள்.
இது–இந்த ஔஷதம் பூமியில் உள்ள பாற்கடலான –யதிராஜரின் ஸ்ரீஸுக்திகளைக் கடைந்து எடுக்கப்பட்டது.
ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் ஏற்படும் அஜ்ஞானம் , என்கிற கெட்ட புத்தியானது ,
யதிராஜரின் உபதேசத்தால் ஏற்படும் தத்வ ஞானத்தால் தானாகவே அகன்று போகும்

எம்பெருமானாருடைய பிரசாதம் அடியாக தமது சித்தம் கட்டுப்பாடுடன் உண்மை பொருள் செறிந்து விளங்குகிறது –
பாற் கடலை கடைந்து பெற்ற அமுதம் போன்ற ஸ்வாமி யுடைய ஸ்ரீ ஸூக்திகள் -ஆகிற
சித்த ஒளஷத்தை யுண்டவர்கள் –
மம மாயா துரத்யயா என்னும் படி பகவானுடைய மாயையான நீண்ட இரவு –
அநாதி மாயயா ஸூப் தா என்கிறபடி தூக்கத்துக்கு காரணம் ஆவது இல்லை
பாரோ உபகாரரான எம்பெருமானாரது அருளாலே பிறப்பு முதலே என் புத்தி கட்டு இன்றி திரியாமல்
ராஜாவை அனுசரித்து நடக்கும் பிரஜை போலே கட்டுப்பாடுடன் ருஜுவாக யுள்ளது
நான் பிறந்தது முதல் எனது புத்தியில் ஸ்வாமியே உள்ளார் –
அதனால் சீரான தெளிந்த புத்தி பெற்று பிரக்ருதியான மாயையால் மயங்காமல் உள்ளேன் –

————————

67-ஸூத்தா தேக வசம் வதீக்ருத யதி ஷோணீச வாணீ சதா –
ப்ரத்யாதிஷ்ட பஹிர்கதி சுருதி சிர பிரசாதம் ஆசீததி
துக்த உதன்வத் அபத்ய சந்நிதி சதா சாமோத தாமோதர –
ச்லஷண ஆலோகன தௌர் லலித்ய லலித உன்மேஷா மனீஷா மம

திருப்பாற்கடலில் இருந்து வந்த பெண்ணமுதம் திரு மார்பிலேயே நித்ய வாஸம் செய்வதால்
நித்ய ஆனந்த மயமாகவே எம்பெருமான் உள்ளான்
அவனது குளிர்ந்த கடாக்ஷ மழை நம்மை நித்தியமாக நனைக்கிறது இதனாலேயே நமது புத்தி தூய்மை அடைந்துள்ளது
இதன் மூலமும் ஆச்சார்ய உபதேசங்களாலும் ஸ்வாமியின் திவ்ய கிரந்தங்களில் ஆழ்ந்த பொருள்கள் நமக்கு கிட்டியது
தூய வேத விதிகளைக் கடைப்பிடித்து, நூற்றுக்கணக்கான ராமானுஜரின் பதிவு செய்யப்பட்ட வாசகங்களால் ஈர்க்கப்பட்டு,
அனைத்து அன்னிய தொடர்புகளையும் விலக்கி, அன்பான ரசனையையும் வளர்த்துக் கொண்டு,
வற்றாத அருகாமையில் இருக்கும் இறைவனின் அருள் கடாக்ஷம் மூலம் பிராட்டியாரைப் போலவே நம் உள்ளம் மகிழ்கிறது.

சுத்தா தேக வசம் வதீக்ருத யதி ஷோணீச வாணீ சதா –
யதி ராஜர் -ஸ்ரீ ஸூ க்திகள்-சத் சம்பிரதாயத்தில் –திரு மடப்பள்ளி மணம்-கிடாம்பி ஆச்சான் வழி வந்த அப்புள்ளார் -உபதேசம் –அஸ்மத் தேசிகன் -ஆதேசம்
ப்ரத்யாதிஷ்ட பஹிர்கதி சுருதி சிர பிரசாதம் ஆசீததி
பஹிர் மதி -பாட பேதம் -/ இரண்டுமே ஞானத்தை தானே குறிக்கும் -கதி வழி-கத்யர்த்தம் புத்யர்த்தம்
-அடையும் தேசம் -என்ன கதி -என்ன வழி ப்ராப்யம் ஞானம் என்றவாறு /
சுருதி சிரஸ் -உபநிஷத் -துர்மதிகளை வென்று –பாஹ்ய -தகர்த்து எறிந்து-உயர்ந்த மாடத்தில் உப்பரிகையில் விளங்குகிறது -ஸ்திரமாக ஆசீததி
துக்த உதன்வத் அபத்ய சந்நிதி சதா சாமோத தாமோதர –
தாமோதரன் தானே அங்கே-சதா -நித்ய நிரவத்ய ஆனந்த ஸூ லபன்-ஆமோத –
ச்லஷண ஆலோகன தௌர் லலித்ய லலித உன்மேஷா மனீஷா மம
என்னுடைய ஞானம் -உபயுக்த ஞானம் -ஷேமுஷீ -பக்தி ரூபா –மனீஷா பஞ்சகம் சங்கரர் அருளி உள்ளார்
-அஹம் அர்த்தமாக ப்ரஹ்மமே நான் -ஞானம் வந்தால் அவனே எனக்கு ஆச்சார்யர்
அந்த மனீஷா இல்லை என்னுடையது -இதுவே உபயுக்த ஞானம் மோக்ஷத்துக்கு

வேத வேதாந்தத்தைச் சொல்லும் யதிராஜரின் ஸ்ரீஸுக்திகளாலே என்னுடைய பெண்ணான புத்தி என்பவள்,
பிறமதவாதிகளையும் அவர்களின் அபத்தக் கருத்துக்களையும் துரத்தி,
எம்பெருமான்
வேதங்கள் என்கிற அரண்மனையில்
உபநிஷத் என்கிற உப்பரிகையில் பேரழகனாய் ,
மிடுக்குடன் வீற்றிருப்பதை அறிந்து,
அவனை அடையப்படிகளில் ஏறி, ஒய்யாரமாக உப்பரிகையை அடைகிறாள்

ஸ்ரீ லஷ்மி சமேத ஷீராப்தி நாதன் குளிர்ந்த கடாஷத்தால் எனது அறிவு மலர்ந்து
சதாச்சார்ய உபதேசத்தினால் பெற்ற யதிராஜர் ஸ்ரீ ஸூக்திகள் ஸ்ரீயபதியின் அருளைப் பெறுவித்து
அடியேன் மனம் அவனையே அனுபவிக்கும் படி பண்ணின -துய்ய மதி பெற்ற சதாச்சார்ய அனுக்ரஹத்தாலே
கையில் கனி என்ன வசப்பட்டவையும்
பாஹ்ய குத்ருஷ்டிகளை மாளப் பண்ணுபவையாயும் உள்ள ஸ்ரீ ஸூக்திகள் என் மனசில் நிரம்பி உள்ளன –
சமுத்திர உத்பாவையான பெரிய பிராட்டி
அகலகில்லேன் இறையும் என்று நித்தியமாய் தன்னிடம் இருப்பதால் ஆனந்திக்கும் எம்பெருமானுடைய
குளிர்ந்த கடாக்ஷத்தால் மலர்ந்த என்னுடைய புத்தியானது –
ஸ்ருதி சிரசி வீதீப்தே -என்றபடி வேதாந்த ப்ரதிபாதனான எம்பெருமானை அடைகிறது –

—————————

68-ஆசதாம் நாம யதீந்திர பத்ததி ஜூஷாம் ஆஜான ஸூத்தா மதி –
தத் அவ்யாஜ விதக்த முக்த மதுரம் சாரஸ்வதம் சாஸ்வதம்
கோ வா சஷூ உதஞ்சயேத் அபி புர சாடோப தர்க்க சடா –
சஸ்த்ரா ச சஸ்த்ரி விஹார சம்ப்ருத ரணா ஆஸ்வா தேஷு வா தேஷு ந

யதிராஜரின் உயர்ந்த மார்க்கத்தை அடைந்தவர்கள் தாங்கள் பிறந்தது முதலாகவே
ஸஹஜமாகவே யதார்த்த ஞானம் பெற்று விளங்குகிறார்கள்
அவர்களிடம் கம்பீரம் அழகு இனிமை ஆகியவற்றுடன் கூடிய நிலையான கல்வி இயற்கையாகவே அமைந்துள்ளது –
தம்பட்டம் கொண்டு எதிர்வாதம் செய்யும் புற சமயத்தார் வாதப்போருக்கு வந்தால்
அவர்கள் முன்பு நாம் சுவையான ஸ்வாமியின் கிரந்தங்கள் உதவியுடன் வாதம் செய்ய நின்றால்
நமக்கு முன் கண்ணைத்திறந்து பார்க்கும் படி யார் தான் நிற்க வல்லவர்கள்

ஆசதாம் நாம யதீந்திர பத்ததி ஜூஷாம் ஆஜான சுத்தா மதி
ஸ்ரீ பாஷ்ய காரர் -சம்ப்ரதாயம் -உணர்ந்து -ஆழ்வான்- பட்டர் பிள்ளான் –நேராக -ஞானம் பெற்ற -அத்யந்த ப்ரீதியுடன் கேட்டு
–தெளிவான மேதாவிலாசம் பிறப்பு தொடங்கியே-ஆஸ்தாம் -அது இருக்கட்டும்
எங்கள் ஆழ்வான் -விஷ்ணு சித்தர் இவரும் என்பர் -பிள்ளான் இடம் ஸ்ரீ பாஷ்யம் கேட்டு நடாதூர் அம்மாளுக்கு சாதித்தவர்
–திரு வெள்ளறை சோழியன் திணவற்று சொல்லுவார் -நான் செற்று வா -அடியேன் -தத் அவ்யாஜ விதக்த முக்த மதுரம் சாரஸ்வதம் சாஸ்வதம்
சாஸ்வதமான சொத்து –வியாஜ்யம் இல்லாமல் -மதுரமாக -ஆஸ்தாம் -இருக்கட்டும் -பத்திரமாக -நிரசிக்க இவை வேண்டாம் –
அபி புர சாடோப தர்க்க சடா –
ஆடம்பம் -தர்க்கங்கள் -வாதங்கள் -பிரதிவாதங்கள் -அசத்தி -தோஷங்கள் காட்டி நிரசித்து -முதலில் -விருத்தங்களை காட்டி
-சாத்தியம் பக்ஷம் ஹேது இவற்றில் தோஷங்களை காட்டி -அதுக்கு மேலே
சஸ்த்ரா ச சஸ்த்ரி விஹார சம்ப்ருத ரணா ஆஸ்வா தேஷு வா தேஷு ந
சஸ்திரம் தடுத்து -பிரத்யர்த்தங்கள் கொண்டு -பயன் அற்று -அக்னி அஸ்திரம் வாயு அஸ்திரம் பிரயோகம் போலே —
பிரயோகங்கள் -வாதி பண்ணின வாதங்களுக்கு பிரதிவாதங்கள் -இவற்றால்
கோ வா சஷூ உதஞ்சயேத்-
வாதப் போரிலே -தலை நிமிர்ந்து -கண்ணாலே பார்க்க முடியாமல் ஒழிந்து போவார்கள் -யாரால் தலை நிமிர்ந்து கண்ணை விழித்து பார்க்க முடியும் –
திருவடி -ராவணன் இடம் நான் தான் துர்பலமானவன் -நானே -அதே போலே இங்கும் -அடியேன் இவர்களை நிரசிப்பேன் -மமதையால் சொல்ல வில்லை –

ஸ்வாமி தேசிகன் பெருமைப்படுகிறார், இந்த ஸ்லோகத்தில். உடையவரின் பரிபூர்ணக் க்ருபைக்குப் பாத்ரமானவன்
ஸ்ரீபாஷ்யம் போன்றவைகளை, சதாசார்யன் மூலமாகக் கேட்டும் ,
பலதடவை காலக்ஷேபம் ஸாதித்தும் ,
பிறமதவாதிகளை வாதம் செய்து தோற்கடிப்பதற்குத் தான் ஒருவரே போதும் என்கிறார்

நல்ல ஆயுத பலம் உள்ளவன் எதிர்த்து போராட முடியாதவனாய் எப்படி இருப்பானோ அப்படி
எம்பெருமானார் சித்தாந்தத்தை அவலம்பித்த நான் தர்க்க பலத்தினால் எதையும் சாதிக்க வல்லேன் –
என் எதிரினில் யார் வாதத்துக்கு நிற்க முடியும் –
ராமானுஜ சித்தாந்தத்தைப் பற்றி ஒழுகுபவற்கு பிறப்பு முதலாக தீதற்ற ஞானம் வாழ்ச்சி பெறுமாக-
பொருள் செறிந்ததாகவும் அழகாகவும் ரஸ கனமாகவும் நித்யமாயும் இருப்பவைகளாயும்
அவர்களுடைய வாக்விந்யாஸங்கள் வாழ்ச்சி பெறுமாக –
படாடோபத்துடன் கூடிய யுக்தி வாதங்கள் ஆகிற ஆயுதங்களைக் கொண்டு வாதப்போர் என்ற விளையாட்டில்
மகிழ்ச்சியுறும் என் முன் எதிர் விழி கொடுத்து நிற்க எவன் வல்லவன் –
ஸ்வாமி சம்பந்தம் அடைந்தவர்கள் பிறந்ததுவே முதலாக ஞானம் படைத்தவர்களாக கம்பீரம் அழகு இனிமை நிறைந்து இருந்து
புற மத வாதிகள் இவர்கள் கண்ணைத் திறந்து பார்த்த ஷணத்திலே மாய்ந்து போவார்கள் –

———

69-பர்யாப்தம் பர்யசைஷம் கண சரண கதாம் ஆஷபாதம் சிசிஷே –
மீமாம்ஸா மாம்சல ஆத்மா சமஜநிஷி முஹூ சாங்க்ய யோகௌ சமாக்க்யம்
இத்தம் தை தை யதீந்திர த்ருடித பஹூ ம்ருஷா தந்திர காந்தார பாந்த்தை –
அந்தர் மோஹ ஷப அந்தை அஹஹ கிம் இஹ ந சிந்த நீயம் தநீய-

கணாதரின் வைஷேஷிகாவை திருப்தியாகப் படித்திருக்கிறோம்.
கௌதமருடைய நியாயம் கற்றோம்.
ஜைமினியின் மீமாமாச மதத்தையும் கற்று அதன் மூலம் கனம் கொண்ட நெஞ்சையும் பெற்றோம்  .
நாங்கள் கபிலரின் சாங்கியம் மற்றும் பதாஞ்சலியின் யோகாவிலும் தேர்ச்சி பெற்றுள்ளோம்.
இவ்வாறு பொய்யான கருத்துக்களை உணர்த்தவல்ல பல மதங்கள் இந்த உலகில் காடு போன்று நிரம்பி உள்ளன –
அந்தக்காட்டில் அஞ்ஞான அந்தகார இருள் பூர்ணமாக உள்ளது-அதில் குருடராகப் பலர் திரிகிறார்கள்
இந்தக்காடுகள் அனைத்துமே ஸ்வாமியுடைய திருப்பாத ஸ்பர்சத்தாலேயே முடியுடன் அழிக்கப் பட்டன
இந்தக் காலத்தில் அந்தப் புற மதங்களின் வாஸனையால் பீடிக்கப் பட்டு சிலர் இன்னமும் உள்ளனர்
அவர்களிடம் கலந்து சிந்திக்க என்ன உள்ளது –
ராமானுஜரால் (ஸ்ரீ பாஷ்யம் போன்ற அவரது படைப்புகளில்) இந்த அமைப்புகளை முற்றிலுமாக
இடித்துத் தள்ளும் போது, ​​தவறான பாதைகளின் அடர்ந்த காடுகளில், அறிவின் இரவில் கண்மூடித்தனமாக
உரத்த குரலில் கர்ஜிக்கும் மக்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? என்றவாறு –

பர்யாப்தம் பர்யசைஷம் கண சரண கதாம்
காணாதர் வைசேஷிக மதம் –தர்க்க நியாயம் -நன்கு அறிந்து -பரியஸைஷம் -பர்யாப்த்தம் -சாஸ்திர பரிச்சயம்
-அநவரதம் வாசித்துக் கேட்டும் -மனனம் பண்ணியும் -எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு வரை -பர்யாப்த்தம் –
ஆஷபாதம் சிசிஷே
கௌதமர் நியாய சூத்திரங்கள் அக்ஷபாதர் -நியாய மதம் –பாஷ்யங்கள் விவரணம் –யுக்த அநு யுக்த பரிகாரங்கள் -காணாதர் சூத்ரகாரர் —
-மீமாம்ஸா மாம்சல ஆத்மா சமஜநிஷி முஹூ சாங்க்ய யோகௌ சமாக்க்யம் -இத்தம் தை தை யதீந்திர த்ருடித பஹூ ம்ருஷா தந்திர காந்தார பாந்த்தை –
இந்த காட்டில் உள்ள எல்லா மரங்களையும் அழித்து
அந்தர் மோஹ ஷப அந்தை அஹஹ கிம் இஹ ந சிந்த நீயம் தநீய-
பாஹ்ய மோகங்கள் -அந்தர மோகங்கள் -அனைத்தையும் போக்கி -அருளினார்

கணாதர் இயற்றிய வைசேஷிக மதத்தை விசேஷமாகப் பயின்றேன்.
ந்யாயசாஸ்த்ரம் , மீமாம்ஸம் படித்தேன். ஸாங்க்ய யோகம் கற்றேன்.
இதனால், எம்பெருமானாராலே கண்டிக்கப்பட்ட அந்தப் பொய்ப் ப்ரசாரங்கள் உள்ள மதங்களை ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டது
( ந்யாய பரிஸுத்தி, ந்யாய ஸித்தாஞ்ஜனம், தத்வ முக்தாகலாபம் போன்றவை )

சாக்கியம் கற்றோம் -சமணம் கற்றோம் -சங்கரனார் ஆக்கிய ஆகம நூல் ஆராய்ந்தோம் -என்கிறபடி
கணாத கௌமத மீமாம்சக சாங்க்ய யோக மதங்களை வேண்டிய அளவு அவ்வவற்றில்
உயர்ந்த பாண்டித்யம் பெறும் அளவுக்கு கற்றுள்ளேன் –
ஆயினும் எம்பெருமானாரால் முறியடிக்கப் பெற்ற பல பல பொய்ச் சமயங்கள் என்கிற காட்டில்
அஞ்ஞான இருளால் குருடர்களாக அலைந்து திரியுமவர்கள் இடம் நமக்கு ஆக்க வேண்டியது ஒன்றும் இல்லை –

கணாதகரின் வைஷிக மதம் –
கௌதமரின் மதம் –
ஜைமினி மீமாம்ச மதம் –
கபிலரின் சாங்க்ய மதம்
பதஞ்சலி யோக மதம் -போன்றவை காடு போலே நிரம்பி உள்ளன
அஜ்ஞானம் இருள் சூழ -பலரும் குருடராக உழல–ஸ்வாமி திருவவதாரத்தால் வேரோடு ஒழிக்கப் பட்டாலும்
மீதி -கொஞ்சம் கொஞ்சம் உள்ளாருடன் தொடர்பு கொண்டு சிந்திக்க என்ன உள்ளது –

————————

70-காதா தாதாகதா நாம் களதி கம நிகா காபிலீ க்வாபி லீநா–
ஷீணா காணாத வாணீ த்ருஹிண ஹர கிர சௌரபம் நார பந்தே –
ஷாமா கௌமாரில உக்தி ஜகதி குருமதம் கௌரவாத் தூர வாந்தம் –
கா சங்கா சங்கர ஆதே பஜதி யதி பதௌ பத்ர வேதீம் த்ரிவேதீம் –

மூன்று வேதங்கள் மூலம் அமைக்கப்பட்ட -திரிவேதி பீடத்தில் -ஸிம்ஹாஸனத்தை அடைந்து ஸ்வாமி எழுந்து அருளி உள்ளார்
உடனே நடந்தது என்ன என்னில் –
புத்தரின் அமைப்பு உடனே சாஷ்டாங்கமாக விழுந்தது;
கபிலரின் சாங்கிய தத்துவம் எங்கோ மறைந்தது;
கணாதரின் வைஷேஷிக உபதேசம் மறைந்தது
நான்முகன் சிவன் இவர்கள் மதங்கள் நறுமணம் இழந்தன
குமாரில பட்டரின் (மீமாம்ஸ வாதம் தோற்றது
பிரபாகரனின் மதம் கற்பனை அதிகமாக உள்ளது என்று விலக்கப் பட்டது .-
இதெல்லாம், ராமானுஜரின் சித்தாந்தத்தை ஏற்றிய போது, ​​நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
அப்படியானால், சங்கரர் போன்றோர் வாதமும் கண்டிக்கப் பட்டதைக் கூறவும் வேண்டுமோ –

தயா சதகம் போலே இந்த யதிராஜ சப்ததியிலும் -ஸ்லோகம் சங்கதி -சூறாவளிக் காற்றில் தாக்கப்பட்டதை எல்லாம் அடைவு கெட அக்ரமமாக அருளுவார்
-பக்தி பிரவாஹம் அன்றோ -74-ஸ்லோகார்த்தங்கள் அறியலாம் –சார தமம் எல்லாமே –
காதா தாதாகதா நாம் களதி
–புத்தர் -தாதாக்கதர்-காதா சகஸ்ரம் -அஞ்ஞானம் மூழ்கடிக்க -500-வருஷம் பின்பு ஹர்ஷர் சமஸ்க்ருதம் புத்தர் வாதம் -முன்பு இல்லை என்பர்
-பிராகிருத பாஷையில் பேசி மக்களை கவர்ந்த -அசோகர் ஹர்ஷர் காலத்தில் தான் சிறப்பு பெற்றது என்பர் -புத்த வாதங்கள் இருந்த இடம் தெரியாமல் நழுவப் பண்ணினார்
-பிரகிருதி ஆத்ம பிரம்மம் -யாதாத்மா ஞானம் வந்தால் நழுவுவது போலே -யதிபதி வீற்று இருந்த ஒன்றாலே இவை நழுவின —
ஜைனரும் ததாகத்தார் சர்வஞ்ஞராக தன்னை சொல்லிக் கொள்வார் -மஹா வீரர் புத்தர் -சம காலத்தவர் என்பர் -புத்தர் ஞான உதயம் ஆன பின்பே இவருக்கு வந்தது என்பர் –
இவர்களும் பிராகிருத பாஷை -சம்ஸ்க்ருதம் வாணி அப்புறம் இவர்களுக்கும் -500-வருஷங்கள் பின்பே வந்தது என்பர் –காதா –அதனால் —
கம நிகா காபிலீ க்வாபி லீநா-
கபிலர் -சாங்க்ய சாஸ்திரம் -தேவ பாதை -திவ்ய மங்கள விக்ரகம் உபாஸ்யம் -என்பர் -வேறே கபிலர் -நிரீஸ்வர சாங்க்யர் இவர்
பிரகிருதி தான் பிரதான ஜகத் காரணம் -புருஷன் உபகாரகன் –சேதன அதிஷ்டானம் இல்லாமல் அசேதனம் செய்வது -ஒவ்வாதே-2–1-பாதம் -சாங்க்யர் நிரசனம்
–சங்கேதங்கள்-இவர்கள் கல்பித்து சொல்வதை -நிரசித்து அருளினார் –சென்று ஒழிந்தது -லீநா-எங்கே தொலைந்தது என்று அறிய முடியாமல் -இன்றும் கூட இல்லையே
ஷீணா காணாத வாணீ –
காணாதர் -அத்யந்த வைராக்ய சீலர் –வைசேஷிகர் -ஷீணா-ஓய்ந்து போனதே -அவர்கள் காதிலும் கேட்க்காத படி ஷீணம் தசை அடைந்தது –
த்ருஹிண ஹர கிர சௌரபம் நார பந்தே –
ப்ரம்மா -த்ருஹிண/ –வார்த்தைகள் –கிர-சாருவாக மதம் -ப்ருஹஸ்பதி -யோக மதமும் -தள்ளப் பட்டன –
ஹர கிர -பாசுபத சைவ மதம் –வேத விரோதம் -வ்ருத்தம்-இவற்றுக்கு மணம் உண்டாக வில்லை
ஷாமா கௌமாரில உக்தி
குமாரிள பட்டார் -ஸ்கந்தன் அவதாரம் என்பர் -/ சாஸ்திரம் வேற மதம் வேற -வியாகரண மீமாம்சம் நியாய சாஸ்திரங்கள் வேதாந்தத்துக்கு உபகரணங்கள் -/
வைகரண நையாயக மீமாம்ச மாதங்கள் இவற்றால் வந்தவை -/ ஜைமினி வேதாந்த விரோதி இல்லையே -2-இடங்களில் ஸூ த்ரகாரர் -விரோதம் -21-இடங்களில் புகழ்வார் –
பசி பட்டினி ஷாமா -இவர்கள் யுக்தி –குசேலர் -ஷாமா -பெயர் ஆகாரம் வழி இல்லா தசை –
ஜகதி குருமதம் கௌரவாத் தூர வாந்தம்
பிரபாகர் மதம் குரு மதம் -குமாரிள பட்டார் சிஷ்யர் -பிரபாகர் மிஸ்ரர் –லகுவாக சொல்லாமல் கனக்க சொல்வது கௌரவம் -குருவான மதம் என்றுமாம்
-இதனாலே இது –தள்ளப் பட்டது –
-கா சங்கா சங்கர ஆதே
கொஞ்சம் புத்த மதம் -கொஞ்சம் சாங்க்ய மதம் -கலந்து -ஞான மாத்திரம் -முன்பே -ஞானம் க்ஷணிகம் சொன்னதை இவர் நித்யம் என்றார் –
-ஞாதா ஜீவன் இல்லை ஞானம் மாத்திரம் ஜீவன் -ஞானான் மோக்ஷம் சாருவாக மதம் –
பஜதி யதி பதௌ பத்ர வேதீம் த்ரிவேதீம் –
சப்தமி -பாவ சப்தமி -யதிபதி -த்ரிவேதி ஆகிய கோப்புடைய சீரிய ஸிம்ஹாஸனம் – ருக் யஜுர் சாமம் –அதர்வணம் யஜுர் வேதத்தில் அடங்கினது என்பர் -/
பேத அபேத கடக சுருதிகள் என்றுமாம் -/–129-அடியேன் சப்தம் திருவாய் மொழியில் -அடியேன் உள்ளான் -மட்டுமே -சேஷத்வம் காட்டும் என்று
திருக் கோஷ்டியூர் நம்பி காட்டி அருளி -கிரியா பதம் இல்லாமல் -என்னிடம் உள்ளான் -சரீரம் இல்லாத ஆத்மா -உடல் உள்ளான் அடுத்த பதம் இருப்பதால் –
-பரிசுத்த ஆத்மா என்பதை இந்த ஒரு அடியேன் பதம் மட்டுமே காட்டும் –
சிங்காசனம் -சீரிய சிங்காசனம் -கோப்புடைய –பத்ர வேதீம் த்ரிவேதீம் –பஜ- தாது -வீற்று இருந்து அருளி -நடந்தவை எல்லாம் பட்டியல் இட்டு அருளுகிறார்

உடையவரின் ஸித்தாந்தம் உறுதி அடைந்ததால்,
பௌத்தம் படுத்தது;
ஸாங்க்யமதம் சிதைந்தது;
வைசேஷிக மதம் மாய்ந்தது;
சார்வாகம் சிதைந்தது;
குமாரிலமீமாம்ஸம் குலைந்தது;
சங்கராதிகளின் சமயமும் நலிந்தது என்கிறார்–

எம்பெருமானார் மூன்று வித ஸ்ருதிகளான சிம்ஹாசனத்தில் வீற்று இருப்பதைக் கண்ட மாத்திரத்திலேயே
இதர மதங்கள் தாமே நசித்துப் போயின –
புத்தர்கள் பாட்டுக்கள் அடங்கின –
கபிலர் காட்டின வழி எங்கேயோ சென்று மறைந்தது –
கணாதனுடைய குரல் ஓய்ந்து விட்டது –
நான்முகன் அரன் பற்றிய பேச்சின் வாசனை கூட தெரியவில்லை –
குமரில பட்டருடைய பேச்சுக்களும் ஒடுங்கின –
பிரபாகர் மதம் மதிப்புள்ள இடத்தில் இருந்து வெகு தூரம் சென்று விட்டது
மற்ற சங்கராதிகளுடைய மதங்களை பற்றி சொல்லவும் வேண்டுமோ -சந்தேகமே வேண்டாம் அதுவும் அழிந்து விட்டது என்றபடி –

அத்வைதிகள் பேத ஸ்ருதிகளுக்கு நிர்வேதத்தை உண்டு பண்ணினார்கள்
த்வைதிகள் அபேத ஸ்ருதிகளுக்கு நிர்வேதத்தை உண்டு பண்ணினார்கள்
இருவரும் சேர்ந்து அந்தர்யாமி ஸ்ருதிகளுக்கு அதிமாத்ரம் நிர்வேதத்தை உண்டு பண்ணினார்கள்
எம்பெருமானார் தான் மூவகை ஸ்ருதிகளையும் சமன்வயப்படுத்தி நிர்வேதம் உண்டாகாதபடி செய்து அருளி
த்ரிவேதீ நிர்வேதத்தை அறவே ஒழித்து அருளினார்

————————

முன் ஸ்லோகத்துடன் எதிராஜ சப்ததி முற்றுப் பெறும் –
இனி இந்த பிரபந்தம் சத்துக்கள் ஆதரிக்கக் கூடியதாய் இருக்கும் என்கிறார் –

71-விஷ்வக் வியாபிநி அகாதே யதி ந்ருபதி யச சம்பத் ஏக அர்ணவே அஸ்மின் –
ஸ்ரத்தா ஸூத்த அவகாஹை சுப மதிபி அசௌ வேங்கடேச அபிஷிக்த –
ப்ரஜ்ஞா தௌர்ஜன்ய கர்ஜத் ப்ரதிகதக வச தூல வாதூல வ்ருத்த்யா –
சப்தத்யா சாரவத்யா சமதநுத சதாம் ப்ரீதிம் ஏதாம் சமேதாம்

யதிராஜரின் புகழ் என்னும் பெரும் கடல் மிகவும் ஆழம் உள்ளதாகவும் எங்கும் பரவியும் உள்ளது
அதில் ஆழ்ந்து ஸ்நானம் செய்தவர்கள் தூய ஞானம் படைத்தவர்கள் ஆகிறார்கள்
இத்தகைய தூய்மையான எண்ணம் கொண்ட அவர்கள் யதிராஜரின் தொண்டுக்காகவே
வேங்கடேசனான அடியேனை முடி சூட்டி மகிழ்கிறார்கள்
இதன் மூலம் நான் பெற்ற மகிழ்ச்சி பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே இந்த நூல் இயற்றப் பட்டது

இதில் உள்ள ஆழ்ந்த சாரார்த்தம் காரணமாக வீணான ஆடம்பரம் கலந்த வாத கோஷம் எழுப்பும்
புற மதவாதிகள் யுடைய வாதங்கள் அனைத்துமே பெரும் காற்று முன்னாக நிற்க இயலாத பஞ்சு போல் ஆயின
இப்படியாக யதிராஜ சப்ததி என்ற இந்த நூலுடன் யதிராஜரின் அடியார்கள் மகிழ்ச்சி கலக்கும் படி ஆனது

அசவ் வேங்கடேச அபிஷிக்த மூர்த்த -விஷ்வக் -வியாபிநீ -அ காதே -எதி நிருபதி -யசஸ் சம்பத் ஏகார்ணவம்
-திக்குற்ற கீர்த்தி –ஐஸ்வர்யம் வாரி வழங்கி யசஸ் -எதிரிகளை ஒடுக்கி கீர்த்தி -பாதித-யசஸ் விஞ்சி இருக்குமே -வாரி வழங்கிய வள்ளல்
மனஸ் ப்ரஹ்ம த்ருஷ்ட்டி -உபாசனம் பலன் -மோக்ஷ பலன் கிடைக்காது -ஏவம் வேத -யசைஸால் விளங்கி கீர்த்தியால் அசலாரை அழித்து-விக்ரமன்
-அதனால் வந்த கீர்த்தி -பரிதபிக்க பண்ணி சத்ருக்களை –
தசரதன் மருமகள் -சத்ரு பரிதபித்தவர் -இருந்தால் -இந்த நிலை வந்து இருக்காதே -அதனால் அவனை முன்னிட்டு -அபராஜிதா -அயோத்யா –
அம்பரமே -யசஸ் -உந்து மத களிற்றன் கீர்த்தி நாயகனாய் இதனால் நின்ற நந்த கோபாலன்
இதனால் அபிஷேகம் –யாரால் -ஸ்ரத்தா சுத்த அவகாகியை -ஸ்ரத்தையால் -தீர்த்தம் – பாவனத்வம் – -சுத்தராலும் –
பெரும் புகழ் -வள்ளல் தன்மை ஏகாரண்வத்தில் மூழ்கி –நீராடி -சுத்த ஸ்வபாவம் உடையவர்கள் ஸூபமதிகள்-
வேத பிரமாண்யம்-மஹா விசுவாசம் கொண்டவர்கள் –வேர்த்த பொழுது குளித்து பசித்த பொழுது உண்டு ராமானுஜர் என்று சொல்லி உஜ்ஜீவனம் —
யதிராஜ சாம்ராஜ்யத்தில் -பட்டாபிஷேகம் – செய்யப்பட்டதும் -பறை சாற்றி -யதிராஜ சப்ததி
பிரஞ்ஞா -உத்க்ருஷ்ட ஞானம் -தெளிந்த ஞானம் –சதாச்சார்யர் இடம் -ஸச் சம்ப்ரதாயம் -குரு பரம்பரை ஸ்ரவணம் -மனனம் -அனவரத பாவனை –
பாஹ்ய குத்ருஷ்டிகள் –இப்படி இல்லையே -இணக்கம் இல்லாதவர்கள் -கர்ஜனை -கூச்சல் இட்டு விலக்குபவர்கள்-பெரும் குரல் மட்டுமே உள்ளது
-பிரதிவாதிகள் -மனம் போன படி பேசி –வசனங்கள் – -பஞ்சு போலே -ஸ்தூலம் –பெரும் காற்று -சூறை காற்றில் பஞ்சு பறப்பது போலே
-ஆக்கி -செயல்பாட்டால் -அத்யந்த சாராம்சம் -சார பூதம் -இந்த சப்ததி -சமேதாம்-இமாம் -70-ஸ்லோக ஸ்துதிகளை –
சதாம் ப்ரீதி -சத்துக்களுக்கு ப்ரீதி விஷய பூதம் ஆகும் -மோதம் பிரமாதம் ஆமோதம் –குண விசேஷங்கள் –ஸ்துதிம்-வேதாந்த தேசிகன் இத்தை நன்கு வழங்கினார் –
பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்டார் -பின்பு என்ன பண்ணினார் -இரண்டையும் சொல்லும் ஸ்லோகம் –

இந்த யதிராஜ ஸப்ததியை ,பாகவதோத்தமர்களின் நியமனத்தின் பேரில் எழுதினேன் .
யதிராஜரின் ஸித்தாந்த ஸாம்ராஜ்ய கீர்த்தி என்பது கங்கா நதி. இதில் தீர்த்தமாடினேன் .
ப்ரபல பண்டிதர்களாலே ,எனக்குப் பட்டாபிஷேகம் ஆயிற்று.
எதிரிகள் துர்ப்புத்தியாலே பிதற்றப்படும் வாதப்பேச்சு என்கிற பஞ்சு ,
யதிராஜ ஸப்ததி என்கிற பெரிய காற்றாலே ஒதுக்கித் தள்ளப்பட்டது.
இந்த ஸ்தோத்ரத்தினால் பெரியோர்களின் உகப்பை அடைந்தேன்

எங்கும் பரவியுள்ளதும் ஆழம் காண அரியதாயும் யுள்ள யதிராஜ ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற பெறும் கடலில்
மூழ்கிப் பாவனம் ஆக்கப் பெற்று நல் ஞானம் அடைந்த சத்துக்களால் கொண்டாடப் பெற்ற
வேங்கடேசன் என்று அழைக்கப்படும் அடியேனால் பணிக்கப் பட்டு ஞான சம்பத் இன்றி
கேவலம் சப்தம் மட்டும் செய்கின்ற ப்ரதிபஷிகளின் வாக்குகள் ஆகிற பஞ்சை அடித்துத் தள்ளும்
பெறும் காற்றின் பணியைச் செய்யுமதாயும்
சாரமான பொருள்களை யுடையதுமான இந்த யதிராஜ சப்ததியானது
பாகவதர்களுக்கு இன்பம் தர வல்லதாய் உள்ளது –
என்ன பாக்யம் இது -என்றபடி –

————————

72-ஆசா மதங்கஜ கணான் அவிஷஹ்ய வேகான் –
பாதே யதி ஷிதி ப்த ப்ரசபம் நிருத்தன்
கார்ய கதா ஆஹவ குதூஹலிபி பரேஷாம் –
கர்ணே ச ஏஷ கவிதார்க்கிக சிம்ஹ நாத –

தாங்கள் கூறியதை ஸ்தாபிக்க வேணும் என்னும் பேராசை கொண்ட மற்ற மதத்தினர் அடக்க இயலாத யானை போன்று அடக்க இயலாமல் உள்ளனர்
அவர்களைக் கட்டி இழுத்து வந்து யதிராஜரின் திருவடிகளில் வலியக் கட்டி வைப்பது ஓன்று உண்டு
எது என்றால் கவி தார்க்கிக ஸிம்ஹத்தின் கர்ஜனை என்னும் அடியேனது முழக்கம்
அவர்களின் செவிகளில் புகுந்து வாதப்போரில் உத்ஸாகம் கொண்ட அவர்களுக்கு இந்த நிலையை ஏற்படுத்தி விடும்

ஆசா மதங்கஜ கணான் அவிஷஹ்ய வேகான்
பொறுக்க மாட்டாத மிகுந்த ஆற்றாமையால் –சம்பிரதாயத்துக்கு தோஷங்கள் கல்பித்து
-யானை கூட்டங்கள் -ஆசா மாத்திரம் -சாமர்த்தியம் இல்லாமல் -உள்ளவர்கள்
-பாதே யதி ஷிதிப்த ப்ரசபம் நிருத்தன்
தந்தங்கள் கால்களால் ஸ்ரீ பாஷ்ய காரர் பெரிய மலை யாகிய பாறைகளில் குத்தி -உடையப் பெற்று
கார்ய கதா ஆஹவ குதூஹலிபி பரேஷாம் -கர்ணே ச ஏஷ கவிதார்க்கிக சிம்ஹ நாத –

மலைகளில் உள்ள காடுகளில், மதம் பிடித்த யானைகள் மரங்களை முட்டிக் கீழே சாய்த்து, காட்டையே சின்னாபின்னமாக்கி,
அட்டகாசம் செய்து, தண்ணீர் குடிக்க ,மலையடிவாரத்தில் உள்ள நீர்நிலைக்கு வரும்.
யானைகளின் அட்டகாச சப்தத்தினால் கண்விழித்து சோம்பல் முறிக்கும் சிங்கம் கர்ஜிக்கும் .
இந்த கர்ஜனையைக் கேட்கும் யானைகள், மலையில் உள்ள காட்டுக்குள் மறுபடியும் போகாமல்,
சிங்கத்துக்குப் பயந்து, அடிவாரத்திலேயே தங்கிவிடும்.

இதைப்போல, துர்வாதிகள் ரொம்ப வேகத்துடன் சாஸ்த்ரங்களுக்குக் கட்டுப்படாமல் அட்டகாசமாக வாதம் செய்யும்போது,
கவிதார்க்கிக ஸிம்ஹத்தின் யதிராஜ ஸப்ததியை அவர்கள் எதிரில் படித்தால்,
பயந்து, நடுங்கி, விசிஷ்டாத்வைதிகளாக மாறி விடுவர்

கவிதார்க்கிக ஸிம்ஹம் என்ற பட்டப் பெயரை யுடைய வேதாந்த வாரியன் பணித்த யதிராஜ சப்ததி என்ற சிம்ம நாதம் ப்ரதிபஷிகளுடைய காதில் பட்டால்
அவர்களும் எம்பெருமானாரை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்பர்கள் என்கிறார்
புற மதத்தார் யானை போலே மதம் கொண்டு பேராசையால் திரிய சிம்ஹம் போலே கர்ஜித்து
யதிராஜர் திருவடிகளில் வலியக் கொண்டு வந்து கட்டினேன்
கவிதார்க்கிக சிம்ஹ கர்ஜனை அவர்கள் செவியில் புகுந்து இந் நிலைமை ஏற்படுத்தி விட்டது –

—————————

73-உபசமித குத்ருஷ்டி விபலவா நாம்
உபநிஷதாம் உபசார தீபிகா இயம்
கபளித பகவத் விபூதி யுக்மாம்
திசது மதிம் யதிராஜ சப்ததி ந

மற்ற மதவாதிகள் உபநிஷத் வரிகளுக்கு தங்கள் விருப்பம் போன்ற பொருள்களைக் கூறி அவற்றுக்குப் பெரும் துன்பம் ஏற்படுத்தினார்
இந்தத்துன்பத்தை எதிராஜர் நீக்கி அருளினார்
இப்படிப்பட்ட யதிராஜரின் பெருமைகளை விளக்கும் இந்தக் க்ரந்தம் உபநிஷத்துக்களுக்கு
இரண்டு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட தீபம் போன்றது
இந்த கிரந்தத்தைக் கற்பதன் மூலம் உபய விபூதியையம் விபூதிமானையும் பற்றிய தெளிந்த ஞானத்தை இந்த நூல் அளிக்க வேண்டும்

உபநிஷத்களுக்கு விபரீத அர்த்தங்கள் சொல்வதால் வந்த விபத்துக்கு யதிராஜ ஸப்ததி ,
அந்த விபத்தைப் போக்குகிற தீபஹாரத்தி போன்றதாகும்.
இதை அனுசந்திப்பவர்களுக்கு பகவானிடம் பரம பக்தி ஏற்படும்

பங்கம் அடைந்த குத்ருஷ்டிகளால் ஏற்படக் கூடிய உபத்ரவங்கள் நீங்கிய வேதங்களுக்கு
கை விளக்காய் அமைந்த இந்த யதிராஜ சப்ததியானது நமக்கு மதி நலத்தை அருள வேணும்

புற மத வாதங்களால் துன்பம் அடைந்த உபநிஷத்துக்களை யதிராஜர் நீக்கி அருளினார் –

ஸ்வாமி பெருமைகளை விளக்கும் இப்பிரபந்தம் இரு பக்கம் ஏற்றி வைக்கப் பட்ட தீபம் போன்றதாகும் –

உபய விபூதி யாதாம்ய ஞானமும் இதனால் பெறலாம் –


இந்த நூலைப் பாராயணம் செய்பவர்களுக்கு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய மார்க்கமானது
உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாகப் புலப்பட்டு விடும்
அவர்களின் சொற்கள் அனைத்தும் வேதங்களின் தலைகளில் வைக்கப்படும்
மேலும் அவர்கள் செய்வது-யதிராஜருடைய சித்தாந்தத்தின் மீது பொறாமை கொண்ட
அனைவரையும் பகல் நக்ஷத்ரம் போன்று ஒளி குன்றும்படி செய்வார்கள்

இந்த யதிராஜ ஸப்ததியை அனுசந்தித்தால் பகவத் கல்யாண குணங்கள் தெளிவாகத் தெரியும்.
இந்த ஸ்துதியின் பக்தர்கள் , பொறாமை உடைய பிறரை,நக்ஷத்ரங்கள் எப்படிப் பகலில் ப்ரகாசிக்காதோ அந்த மாதிரி, ப்ரகாசத்தை இழக்கச் செய்வர்

இந்த யதிராஜ சப்ததியைக் கற்பதில் விஷயத்தில் ஆதரம் யுடையவர்கள் சத் ஸம்ப்ரதாயத்தைக் கைக் கொண்டவர்களாய்
நல்ல விஷயங்களையே எப்போதும் கேட்பவர்களாய் மாச்சர்ய லேசமும் இல்லாதவர்களாய் விளங்கட்டும் –

நிகமத்தில் –
இந்நூலைக் கற்றார்க்கு மார்க்கம் உள்ளங்கை நெல்லிக் கனி போலே தெளிவாக புலப்படும் இவர்கள் வார்த்தைகள்
வேதங்களின் தலை மேல் வைக்கப்படும்
புற மதத்தினரையும் ஸ்வாமி மேல் பொறாமை கொள்பவர்களையும் பகல் வேளை நஷத்ரம் போலே
ஒளி குன்றும் படி செய்து விடுவார்கள் –

—————————————–

ஜயதி யதிராஜ ஸூக்தி ஜெயந்தி முகுந்தஸ்ய பாதுகா யுகளீ
ததுபயதன த்ரிவேதீம் அவத்யயந்த ஜெயந்தி புவி சந்த –

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

செல்ல வேண்டிய திசையை சரியாக காட்டுபவனே தேசிகன்.தூப்புல் வேதாந்த மஹாதேசிகன் :

ஆசார்யன் என்பதும் இதை போலவே.
சாரி என்றால் சஞ்சரிப்பவன்.
பாத சாரி காலால் நடந்து செல்பவன்.
கஜாச்சாரி யானைமேல் செல்பவன்.
எனவே சரியான பாதையில் நடந்து சென்று மற்றவர்க்கு வழிகாட்டுபவன் ஆசார்யன்.

இவர் ஒரு மஹா ஆசார்யனாய் இருந்து வைணவ சமயம் காத்த உத்தமர்.

அனந்தசூரியார் – தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு திவ்ய குமாரனாய்
தொண்டைமண்டல
காஞ்சி மாநகரில்
பொய்கையாழ்வார் அவதரித்த விளக்கொளி எம்பெருமான் ஆலய பகுதியான
தூப்புல் எனும்
திருவிடத்தே திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக
கி.பி. 1268ஆம் ஆண்டு,
விபவ வருஷம்,
புரட்டாசி மாஸம்,
சிரவணம் நட்சத்திரம் கூடிய
புதன்கிழமையில்
அவதரித்தார்.

ஒரு வெண்கல மணியை பெருமாள் தனக்கு கொடுத்து அதை தான் விழுங்கியதாக கனவு கண்டாள் அவர் தாய்.

ராமானுஜரைப் போன்று இவரால் கணீரென்று வேத நாதம் எங்கும் ஒலிக்க பிரகாசிப்பார் என்று பெருமாளே அருளினார். அதனால் தான் பெருமாள் சந்நிதியில் மணி கிடையாது. திருவாராதனம் போது வெளியே உள்ள மணி மட்டும்
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன் என்பதாம்.

பின்னாளில் இவர் ‘சுவாமி தேசிகன்’,
‘தூப்புல் நிகமாந்த தேசிகன்’,
‘தூப்புல் பிள்ளை’,
‘உபய வேதாந்தாசாரியர்’
‘சர்வ தந்திர சுதந்திரர்’
மற்றும்
‘தூப்புல் வேதாந்த மஹாதேசிகன்’
என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார்.

இராமனுசரின் உறவினரான நடாதூர் அம்மாளின் நேரடிச் சீடரும் இவரது தாய்மாமனுமான கிடாம்பி அப்புள்ளாரிடம் வடமறையான வேதங்களும்,
தென் மறையான
திவ்ய பிரபந்தமும்,
புராணங்களும் மற்றும்
சாத்திரங்களையும் குறைவறக் கற்றார்.

ஏழாம் வயதில் கிடாம்பி அப்புள்ளாரினால் உபநயனம் செய்விக்கப் பட்டதோடு,
கல்வியும் கற்றவர், தன் இருபத்தோராம் வயதில் திருமங்கை என்றழைக்கப்பட்ட கனகவள்ளி எனும் மங்கையை மணம்புரிந்தார்.
தன்னுடைய இருப்பத்தேழாம் வயதில் வைணவ குரு எனும் நிலையை அடைந்த இவர் தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி
கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்தரபுரம் சென்று சில காலம் வாழ்ந்தார்.
திருப்பதி,
மேல்கோட்டை,
காஞ்சிபுரம்,
அயோத்தியா,
பிருந்தாவனம்,
பத்ரிநாத்,
திருவரங்கம்
உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஜெகத்குரு இராமனுசரின் தத்துவங்களை பரப்பினார்.
இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருஷங்கள் வாழ்ந்தார்.

இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.

மாமன் அப்புள்ளார் ஐந்து வயதில் அவரை நடாதூர் அம்மாள் பிரசங்கத்திற்கு அழைத்து சென்றபோது அவர் ஒரு கணம் சிறுவனைப் பார்த்து பிரமித்து
”எங்கே பிரசங்கத்தை நிறுத்தினோம்” என்பதை மறந்து போனார்.
மீண்டு யோசிக்கையில், சரியாக அந்த ஸ்லோகத்தை எடுத்து சொன்னார் தேசிகர்.

20 வயதில் சகல சாஸ்திரங்களும் அறிந்தார். அப்புள்ளாரிடம் கருட மந்திர உபதேசம் பெற்றார்.

திருவஹீந்த்ரபுரம் என்ற பெயர் இப்போது சுருங்கி திருவந்திபுரம் ஆகிவிட்டாலும் தேசிகரின் சரித்திரம் கொஞ்சமும் சுருங்கவில்லை.
இங்கு தான் ஒரு சிறு குன்றில் பலநாள் அன்ன ஆகாரமின்றி
கருட மந்த்ரம் ஜபித்தார்.
ஶ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜபிக்வே எம்பெருமானும்
திவ்ய தரிசனம் தந்துஅவருக்கு ஹயக்ரீவ மந்திராபதேசம் செய்து
ஶ்ரீ தேசிகன் விருப்பப்படி அவரது நாவில் குடிகொண்டார்.
தனது சிலா ரூபத்தையும் கொடுத்தார்.
அந்த ஹயக்ரீவ விக்ரஹத்தை இன்றும் தேவநாத பெருமாள் சந்நிதியில் காணலாம்.

காஞ்சி விஜயம் செய்து பிறகு பல திவ்ய தேச யாத்ரை சென்ற தேசிகன் ”பிரபத்தி’ எனும் சரணாகதி தத்தவத்தை விளக்கி வைஷ்ணவ சமூகம் பயன்பெற செய்தவர்.
நியாச விம்சதி,
நியாச தசகம்,
நியாச திலகம் என்று வடமொழியிலும்,
அடைக்கலப் பத்து,
அர்த்த பஞ்சகம் என்று தமிழிலும் அளித்த பெரிய ஞானி.
சகல கலைகளும் கைதேர்ந்து சர்வ தந்திர ஸ்வதந்திரர் என்று அழைக்கப் பட்டார்..

திருப்பதி சென்று தயா சதகம் இயற்றினார். பெருமாளால் வேதாந்தாச்சார்யா என்று கௌரவிக்கப் பட்டவர்.

ஸ்ரீ ரங்கம் போகும் வழியில் ஸ்ரீ பெரும்புதூர் சென்று ஸ்ரீ ராமானுஜரை வழிபட அங்கே யதிராஜ சப்ததி என்ற ஸ்லோகம் உருவானது.

ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் மகிழ்ந்து அளித்த பெயர் தான் வேதாந்த தேசிகர் என்று நாம் இன்றும் அவரை அறிவது..
ரங்கநாயகி தாயார் அளித்த பெருமை தான் சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்.

1327ல் அலாவுதினின் தளபதி மாலிக் காப்பூர் தெற்கே பல ஆலயங்களை அழித்தபோது ஸ்ரீரங்க பெருமாள் திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டும் ஸ்ரீ பாஷ்ய க்ரந்தங்கள் கர்நாடகத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த பொறுப்பை தேசிகன் ஏற்றார். ஒரு இரவு செத்த பிணங்களோடு பிணமாக கிடந்து மிலேச்சர்களிடம் இருந்து அரிய வைஷ்ணவ செல்வங்களை காப்பாற்றியவர் ஶ்ரீ மஹா தேசிகன்

”ஸ்ரீ ரங்கம் மீண்டும் பழம் பொலிவை பெற நீ அருள்வாய்” என்று பெருமாளை அவர் பாடியதே அபிதி ஸ்தவம் என்ற ஸ்லோகம்.

தேசிகர்
ஸ்ரீ ரங்கத்தில் தான் பெருமாள் திருவரங்கனை பாதாதி கேசம் வரை வர்ணித்த பகவத் த்யான சோபனம் ஸ்தோத்ரம் இயற்றினார்.
இதை படிக்கும் போது திருப்பாணாழ்வாரின் அமலனாதி பிரான் பாசுரங்கள் படிப்பதுபோல் எண்ணம் தோன்றுகிறது.

”நீரென்ன பெரிய ஞானஸ்தர், பண்டிதர் என்ற நினைப்போ?
ஒரே நாளில் 1000 பாக்களை ரங்கநாதர் மேல் இயற்ற முடியுமா உம்மால்?” என்று சில பெரிய கனத்த தலைக்காரர்கள் சவால் விட ”ரங்கநாதனைப் பாட முடியாமலா போகும் என்று தேசிகர் சவாலை ஏற்றாரே தவிர, அன்று முழுதும் சிஷ்யர்களுக்கு பாடம் கற்பித்ததில் போய்விட்டது.
அடடா நாளை காலையில் 1000 பாக்களை இயற்றியதை காட்ட வேண்டுமே, என்று இரவு யோசித்தார். ”தேசிகா, என் பாதுகையிலிருந்து ஆரம்பியேன் ” என்று ஸ்ரீ ரங்கநாதனே எடுத்துக் கொடுக்க, விடிகாலை 4 மணிக்கு எழுத்தாணியை பிடித்தார்.
மூன்றே மணி நேரத்தில் 1008 பாதுகா ஸ்துதி ஸ்லோகம் உருவானது. அதை உச்சரிக்கவே குறைந்தது 7 மணி நேரம் ஆகும் நமக்கு.
மறுநாள் காலை பண்டிதர்கள் அனைவரும் மூக்கில் மேல் விரலை வைக்க மறந்தாலும் தேசிகரை ”கவிதார்க்கிக சிம்ஹம்” என்ற பட்டத்தை அவருக்கு அளித்து கௌரவிக்க மறக்கவில்லை.

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆண்டாளை வழிபாட்டு கோதா ஸ்துதி உருவானது. ஆண்டாள் உத்சவத்தின் போது திவ்ய பிரபந்தத்துடன் ஆண்டாளின் விருப்பப் படியே,
கோதாஸ்துதி ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு வருகிறதே.

காசு, தங்கம், நாணயம் இதெல்லாம் தேசிகர் பார்த்ததில்லை, வாங்கிக்கொள்ள மாட்டார். எனவே உஞ்சவ்ரித்தியில் வாழ்ந்த அவருக்கு அரிசியோடு தங்கமணிகளை கலந்து கொடுத்து, அதை அவர் மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்ல, அவளோ இதெல்லாம் என்ன அரிசியோடு என்று கேட்க, ஏதாவது பூச்சி முட்டையாக இருக்கும் என்று கையால் கூட தங்கத்தை தொடாமல் தர்ப்பையால் அவற்றை ஓதுக்கி வெளியே எறிந்து விட்டார்.

தேசிகரின் பால்ய நண்பன் வித்யாரண்யன்
விஜயநகர சாம்ராஜ்யத்தில் பெரிய பதவியில் இருந்ததால்,

”தேசிகா, நீ எதற்காக ஏழ்மையில் வாடுகிறாய்,
வா என்னிடம், இங்கு உனக்கு நிறைய பரிசு வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்றான் ” வித்யாரண்யனுக்கு அவர் பதிலாக எழுதியதே நமக்கு பொக்கிஷமாக கிடைத்த
”வைராக்ய பஞ்சகம்”.

”வித்யாரண்யர்
நமக்கல்லவோ மிகப்பெரிய பரிசை அளித்துவிட்டார்.”.

ஆதி சங்கரர் ஒரு ஏழைப் பெண்ணுக்கு பொன் மழை பெய்ய வைத்த கனக தாரா ஸ்தோத்ரம் தெரியுமல்லவா. அதே போல் இன்னொன்றும் காஞ்சியில் நடந்திருக்கிறதே.

காஞ்சிபுரத்தில் தேசிகர் வாழ்ந்தபோது, அவரை அவமானப் படுத்த சில விஷமிகள்,

ஒரு ஏழைப்பையன் தனது திருமணத்துக்கு உதவி கேட்டபோது ”தம்பி நீ தேசிகர் என்று ஒருவர் ரெண்டு தெரு தள்ளி வசிக்கிறார். பணக்காரர்.
யார் கேட்டாலும் பணம் தருவாரே, அவரைப் போய் கேள்” என்று அனுப்ப,
அந்த அப்பாவி அவரது எளிய வாழ்க்கை நெறி தெரியாமல் அவரை நிதி உதவி கேட்க, அவனை அழைத்துக்கொண்டு நேராக வரதராஜ பெருமாள் கோவில் சென்று தாயாரின் சந்நிதியில் அவளை உதவி செய் என வேண்டினார் தேசிகர்.

”அவரது மனதைத் தொடும்

”ஸ்ரீ ஸ்துதி” தாயாரை உடனே அங்கே ஒரு பொன்மழை பெய்ய வைக்க காரணமானது..

ஒரு பாம்பாட்டி தேசிகரிடம் ”என்னுடைய விஷ பாம்புகளை உங்களால் சமாளிக்க முடியுமா?” என்று சவால் விட,
அவர் தரையில் ஒரு கோடு போட்டு
” உன் பாம்புகள் இந்த கோட்டைத் தாண்டட்டும்” என்றார்.
சில விஷ பாம்புகள் கோட்டைத் தாண்ட முயன்றபோது தேசிகர் உச்சரித்த கருட மந்திர ஸ்லோகம் கேட்ட கருடன் வந்து அத்தனை பாம்புகளையும் அன்றைய காலை உணவாகத் தூக்கிக் கொண்டு போய் விட்டான்.

பாம்பாட்டி அவர் காலில் விழுந்து ”என் பிழைப்பே இந்த பாம்புகள் தான் ” தயவு செய்து அவற்றை திரும்ப தரவேண்டும் என்று கெஞ்சினதால், மீண்டும் கருட மந்த்ரம் சொல்லி கருடனை அந்த பாம்புகளை திரும்ப தர வைத்தார் .

”உங்களால் எல்லாமே செய்ய முடியும் என்கிறார்களே, என்னைப்போல் கட்ட முடியாவிட்டாலும் ஒரு சாதாரண கிணறு கட்ட முடியுமா உங்களால்?” என்று ஏளனமாக கேட்டானாம் ஒரு மேஸ்திரி.

”சரியப்பா கட்டுகிறேன்”

‘ நான் கொடுக்கும் கற்களை மட்டுமே கொண்டு அதைக் கட்டவேண்டும்”

”ஆஹா அப்படியே.’ என்ற தேசிகர் அவன் கொடுத்த அளவு சரியில்லாத கோணா மாணா கற்களைக் கொண்டே கட்டிய அந்த வினோத கிணறு இன்றும் திருவஹிந்திர புரத்தில் இருக்கிறது.
எங்கே நீர் வற்றினாலும் அந்த கிணற்றில் நீர் வற்றுவதில்லை. சுவையிலும் குன்றவில்லை.

மற்றொரு சிற்பி தனது பங்குக்கு அவரை சவாலுக்கு இழுக்க, அவன் விரும்பியவாறே, அவன் அமைத்த பீடத்தில் தனது உருவத்தையே தத் ரூபமாக சிலையாக வடித்துக் காட்டியபோது அசந்து போனான். அவனமைத்த பீடம் போதாததால் அங்கங்கே அவர் உருவச்சிலையை உளியால் வெட்டும்போது அவன் வெட்டிய பாகங்கள் அவருடைய உடலிலிருந்து ரத்தத்தை சிந்த வைக்க, பயந்தே போய் அவர் காலடியில் விழுந்து மன்னிக்க வேண்டினான் அந்த சிற்பி.

தனது உருவத்தை தானே தேசிகர் வடித்த சிலாரூபம் இன்றும் தேவநாதர் ஆலயத்தில் இருக்கிறதே.
மேலே சொன்ன அவர்
கட்டிய கிணறையும் பார்க்க தவறவேண்டாம். கோவிலுக்கு அருகாமையில் சற்று தள்ளி
ஒரு மண்டபத்தில் உள்ளது.

நமது தூப்புல் குலமணியும் ஸாக்ஷாத் திருமலைமால் கண்டாவதாரமும் ராமானுஜ முனி அபராவதாரமாவார்.
அவர் ஆழ்வார் மீது வைத்திருக்கும் பற்றை அளவிடமுடியாது, வேறு எந்த ஆசார்யனும் தன்னை “சந்தமிகு தமிழ் மறையோன்” என்று பறைசாற்றி கொண்டதில்லை. அவர்காலத்தில் அத்வைத சித்தாந்தம் தலைஓங்கி நிற்க அதை நிஷ்கர்ஷித்து உண்மைபொருளை நிலை நாட்ட இவர்களுக்கு ஆழ்வார் ஸ்ரீஸூத்திகள் துணைபுரிந்தன. அதையும் நம் ஸ்வாமி “தெரியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்றுசாதித்தார். ஆளவந்தார் இராமானுஜ முனிகாலம் தொடங்கி தேசிகரது காலம் ஏன் இன்றைய அளவிலும் ஆங்காங்கே பூர்வபக்ஷம் தலை ஓங்குகிறது அப்பொழுது அவர்கள் வேத வேதாந்தத்தை கொண்டேவாதம் செய்கிறார்கள்.
நமது ஆசார்யர்களோ ஆழ்வார்களோ திவ்ய பிரபந்தங்களைக் கொண்டு உண்மை பொருளை உணர்த்துகின்றனர். இது நமது சித்தாந்துக்கே உரிய சிறப்பு.

தேசிகர் 101 வருஷம் வாழ்ந்தார். தனது அந்திம நேரம் நெருங்கியதை உணர்ந்த தேசிகர் தனது குமாரர் குமார வரதாசாரியாரை அழைத்து அவர் மடியில் தலை வைத்து, அவரை ”திருவாய் மொழி, உபநிஷத் எல்லாம் சொல்லப்பா. கேட்டுக்கொண்டே செல்கிறேன்” என்றார். பரமபதம் அடைந்தார். தாயார் ரங்கநாயகி தன்னருகே ஒரு சந்நிதியில் தேசிகரை இருத்திக் கொண்டாள்.
வேறு யாருக்கும் இங்கு இடமில்லை என்ற அவள் ஆணை இன்றும் நிலுவையில் இருக்கிறது.

வேதாந்த தேசிகரே !

வேதாந்தாசார்யரே !

சீரார் தூப்புல் பிள்ளையே !

இன்னும் ஒரு நூறாண்டிரும் !

இல்லை இல்லை . . .

அது போதாது !

இன்னும் பல ஆயிரமாண்டிரும் .

———–

ஜயதி யதிராஜ ஸூக்தி ஜெயந்தி முகுந்தஸ்ய பாதுகா யுகளீ
ததுபயதன த்ரிவேதீம் அவத்யயந்த ஜெயந்தி புவி சந்த –

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வார்த்தா மாலாவில் ஸ்ரீ எம்பெருமானார்– அருளிச் செய்த முத்துக்கள்-

January 26, 2026

ஒரு அதிகாரிக்கு த்வய மொழிய மந்திரமில்லை. மிதுநமொழிய வஸ்து வில்லை. மிதுந கைங்கர்ய மொழியப்‌ புருஷார்த்த மில்லை -ஆசார்ய அபிமான மொழிய மோக்ஷோபாயமில்லை. பாகவத அபசார மொழிய மோக்ஷ விரோதி யில்லை என்பது எம்பெருமானாரது வைதிகக் கொள்கைகள்‌. பாகவத அபசாரம்‌ பன்னிரண்டு வகைப்படும்‌. அவை யாவன: முறையே ஜன்ம நிரூபணம்‌ (உயர்ந்த ஜன்மம்‌ என்ற செருக்கு] சரீர நிரூபணம்‌(புருஷ, ஸ்திரி விலங்கு, பறவை] என்ற பாகுபாடு; பாவநிரூபணம்‌ (பாலன்‌, விருத்தன்‌) என்ற பாகுபாடு, ஆஸ்ரம நிரூபணம்‌ (பிரம்மச்சாரி, ஸந்யாசி போன்ற பாகுபாடு) அவயவ நிரூபணம்‌ (நொண்டி, முடம்‌ என்ற பாகுபாடு) ஆலஸ்ய நிரூபணம்‌ (விண்ணப்பஞ்‌ செய்வார்‌ என்ற பாகுபாடு) வாஸ நிரூபணம்‌(கோயில்‌, திருமலை, பெருமாள்‌ கோயிலில்‌ வாழ்பவர்‌ என்றபாகுபாடு) பந்து நிரூபணம்‌ (சொந்தம்‌, உறவு அல்ல என்ற பாகுபாடு, பிரகாஸ நிரூபணம்‌ (ஆசார்யர்களையும்‌-கைங்கர்யர்களையும்‌ சமமாகக்‌ கருதுதல்‌, பிரகார நிரூபணம்‌ (நந்தவன கைங்கர்‌யம்‌ செய்யும்‌ தொண்டர்களைக்‌ கேவலமாக நினைத்தல்‌) வர்த்தக நிரூபணம்‌, தோஷ நிரூபணம்‌ எனக் கொண்டனர்‌. பகவத்‌ அபசாரத்‌தை விடப்‌ பாகவத, அபசாரம்‌ மிகக்‌ கொடுமையானது. பாகவத அபசாரம்‌ ஒன்று செய்தால்‌ அது பலவாகப்‌ பெருகும்‌. இவற்றைத்‌ தாம்‌ பண்ணுவது கூடாது என்பதோடன்றித்‌ தன்‌ மதிப்புக்குரிய ஆச்சார்யனே பண்ணினாலும்‌, ஆச்சார்யன்‌ செய்யும்‌ வரம்பு மீறிய செயல்களைச்‌ சிஷ்யன்‌ ரஹஸ்யத்தில்‌ உணர்த்த வேண்டும்‌ என்கிற படி ஆச்சார்யனும்‌ பாகவத அபசாரம்‌ செய்யாதிருக்கும்படி எடுத்‌துச் சொல்ல வேண்டும்‌.-வைஷ்ணவர்கள்‌ ஒருவருக்கொருவர்‌ அபசாரம்‌ செய்தால்‌ அவர்களை நல்ல முறையில்‌ கெஞ்சி விலக்க வேண்டும்‌. அவர்கள்‌ தனிமையில்‌ செய்த குற்றங்களை வெளிப்படுத்தக்கூடாது பிரகிருதி வாசனையால்‌ குற்றம்‌ செய்து மன்னிப்புக்‌ கேட்டவர்களை வெளிப்படுத்துதல்‌ பாகவத அபசாரமாகும்‌.-எம்பெருமானார்‌ தீர்த்தமாடி சேவித்தெழுந்து வருகிறவர்‌;பிள்ளை உறங்காவில்லிதாசர்‌ கையைப்பிடித்து வருவதற்குக்‌ காரணம்‌ கேட்க, பிராமண குலத்தில்‌ பிறந்தவர்களுக்கு, நாம்‌ உயர்ந்த குலத்தில்‌ பிறந்தும்‌ அடிமை செய்கிறோமே என்ற வருத்தமும்‌ தயக்கமும்‌ வரும்‌. ஆனால்‌ பிறருக்குக்‌ கைங்கர்யம்‌ செய்யவே பிறந்த சூத்திர வர்ணத்தவருக்கு, அந்த வருத்தம்‌, தயக்கம்‌ ஏற்படாது. உள்ளத்தால்‌. பரிசுத்தமான அவருடைய ஸ்பரிசம்‌ தமக்கும்‌ வர்ணாஸ்ரம அபிமானத்தைப்‌ போக்கி பரிசுத்தி யளிக்கிறது என்றார்‌ இராமானுஜர்‌.

ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் –

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம் யஹம்-முதலியாண்டானின் தனியன்

ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம் ராமானுஜ ஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம் ரங்கேச மங்களகரம் தநுர் தாஸம் அஹம் பஜே-பிள்ளை உறங்காவில்லி தாஸரின் தனியன் :

ஸ்ரீ உடையவர்  ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் விஷயமாக
ஸ்ரீ முதலியாண்டானுக்கு பணித்த பத்து வார்த்தைகள் –

ஸ்ரீ முதலியாண்டான் உள்ளம் விம்மிப்  புறம் பொசிந்து ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்திலே தண்டன் இட்டு நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றம் அருளிச் செய்ய வேணும் என்ன –

ஸ்ரீ உடையவரும்
நாமே உமக்கு சொல்ல வேணும் என்று இருப்பதொரு அர்த்தத்தை நீர் தாமே கேட்டீரே என்று ப்ரீதராய்
சகல வேத சாஸ்திரங்களிலும் இதிஹாச புராணங்களிலும் உள்ளதைப் பொறுக்கிச் சேர்த்து
நம் ஆழ்வார்கள் அருளிச் செயல்களிலும் சொல்லப்பட்ட குஹ்யமாய் இருப்பதொரு அர்த்தத்தை
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு இப் பத்து வார்த்தைகளால் அருளிச் செய்கிறார் –

இதில் முதல் வார்த்தை –
நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
பூணூல் சாத்திய நமக்கும் சாத்தாத தாசர் போன்றவர்களுக்கும் உள்ள வாசி –
நாம் (ஆச்சார்யர்கள்)நாடு பரிக்ரஹிகைக்காகச் செய்வுதோம் –
அவர்கள் நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி இருப்பர்கள் -திருவாய்மொழி -10-6-2–

( உலகைத் திருத்துவதற்காக நாம் உழல வேண்டும் -அவர்களுக்கு இக் கடமை இல்லையே -நாராயணனுக்குக்கே எப்பொழுதும் பற்றியே இருக்கும் பெருமை அவர்களுக்கு உண்டே)

(வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-அஹங்கார மமகார வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே –உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு –பெருமாள் திருமொழி -3-4-தொற்று அற பெற்றபடி கண்டாயே –
யானே என் தனதே -2-9-9-என்று யான்-எனது -என்னும் செருக்குகளுக்கு வசப் பட்டவர்களாய்-இருப்பவர்களோடு சம்பந்தம் அறப் பெற்றோம் –-ஒ ஒ உலகினது இயல்பே -திருவாசிரியம் -6-இவை என்ன உலகு இயற்கை -4-9-1- கொடு உலகம் காட்டேல் -4-9-7-என்னப் பண்ணினபடி கண்டாயே –உங்களோடு எங்களிடை இல்லை -8-2-7- என்று கழிந்தவரே அன்றோ – –நாரணனை நண்ணினமே--நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக் கிட்டப் பெற்றோம் -ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களை விட்ட அளவேயோ-ஒரு காரணமே இல்லாமல் பந்துவாக இருக்கும் சர்வேஸ்வரனை பற்றவும் பெற்றோம் –விட்டவர்கள் தம்மை வேறு ஒரு தன்மையாலே பற்றுகிறார் காணும் –ஆகாராந்தரம் -நார சப்தத்துக்குள் உண்டே -இதனாலே தானே உபதேசிக்கிறார் –
முக்தனுக்கு இவை எல்லாம் சர்வேஸ்வரன் உடைமைப் பொருள் -என்னும் தன்மையாலே உத்தேச்யம் ஆகின்ற அன்றோ இவைதாம்-தானே ஆக்கி உண்டு களித்தல் தவிர்ந்து-தந்தையோடு ஒன்றாக உண்டு களித்து ஜீவிப்பாரைப் போலே காணும் –படுக்கைக்கு கீழே மிகப் பெரிய நிதி கிடக்க-புறங்கால் வீங்கி சாவாரைப் போலே அன்றோ- நாராயணனாக -அந்தர்யாமியாக -இருக்கச் செய்தேயும் நண்ணாமல் இருந்த படி–கேட்டாயே மட நெஞ்சே-பவ்யமான நெஞ்சே கேட்டாயே –என்று உபகார ஸ்ம்ருதி தொடராக கூறிக் கொள்ளுகிறார் – சப்ததோஸ்மி – திமிர் கொண்டால் போல் நிற்குமே –பெற்ற பேற்றின் கனத்தை நினைத்து-வகாதது வகுத்தது என்று திமிர்த்து இருக்கிறாயோ-இதனை அனுபவியா நின்றாயோ –

இரண்டாம் வார்த்தை –
திருப்பதிகளுக்கும் கோயில் திருமலை பெருமாள் கோயிலுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
நாம் தெப்பக் கையரைப் போலே இரண்டையும் விடோம்
அவர்கள் சாரஞ்ஞராய்க் கொண்டு விட்டத்தில் இருப்பாரைப் போலே முதல் அடியிலே நிற்பர்கள்
பிரதான ஷேத்ரம் ஒன்றில் வாழ்ந்து நிர் பரராய் இல்லாமல் –
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் -இராமானுச நூற்றந்தாதி -60-புக்கு நிற்போம் —

(வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி
தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும்
நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும்
தத் சாத்திய பகவத் கிருபையையும் அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -திருவாய் -6–9–9 -என்றும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை பண்ணா நிற்பார்கள் என்கை-)

(உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்
மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக் கொழுந்தே.–60-ஆத்ம குண  ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்மகுணங்கள் தன்னை சர்வ விஷயமாகஉபகரித்து அருளும் பரம ஔ தாரராய் -எங்கள் குலத்துக்கு தலைவரான எம்பெருமானார்-ஞாதவ்யார்தங்களை அடங்க அறிந்து இருந்தும் -யதா ஞான யுக்தரானவர்கள் கூட்டுரவு தோறும் –திரு வாய் மொழியினுடைய பரிமளிதமாய் விலஷணமான இசை நிரந்தரமாக நடக்கும் ஸ்த்தலங்கள் தோறும் –பெரிய பிராட்டியாராலே நித்ய வாசம் பண்ணப்பட்ட அழகிய திரு மார்வில் உடையவன் உகந்தருளி-வர்த்திக்கும் திருப்பதிகள் தோறும் –-அவ்வவற்றை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே புக்கு அவற்றிலே ஆழம் கால் பட்டு-நில்லா நிற்பர்-இது அவருடைய பக்தி வைபவம் இருக்கும் படி-)=எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை பேசின அநந்தரம் -அவருடைய பக்தி வைபவத்தை தாமே அனுசந்தித்து -ஏவம் பூத குண ஔஜ்ஜ்வலராய் இந்த பிரேமத்தை எல்லாருக்கும் உபகரிக்கும்-பரம ஔதாரரான எம்பெருமானார் எம் குலக் கொழுந்து என்கிறார்-எம்பெருமானார் தாம் கொழுந்தாய் கொண்டு -வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே -எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்பட தம்முடைய முகம் வாடி இருக்குமவர்-பொருந்தும் பதி -எனவே பொருந்தாத பதியும் உண்டு என்று தோற்றுகிறது-அந்த பொருந்தா பதியே .-பரம பதம்அவன் மேவி உறை கோயில் -என்னும் இடத்தில் –அவன் பரம பதத்தில் உள் வெதுப்போடே போலே காணும் இருப்பது .சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து -இவை என் படுகின்றனவோ  என்கிற திரு உள்ளத்தில் வெதுப்போடே யாயிற்று அங்கு இருப்பது -4 10-2 — – என்னும் ஈட்டு ஸ்ரீ ஸூக்தி

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -என்றும் த்யக்த்வா வைகுண்ட முத்தமம் -என்னும் பரம-பதத்தில் வைராக்கியம் பிறந்து -அதனை விட்டு திருப்பதிகளிலே உகந்து அருளி பொருந்தி உள்ளமைக்கு-ஹேது-மலராள் புணர்ந்த பொன் மார்பினன் ஆனதால் .திவ்யதம்பதிகள் இங்கேயே-இமயத்து பரம பதத்தை துறந்து மறந்து ஒழிந்தனர்-என்க-திருமங்கை ஆழ்வாரைப் போலே –தான் உகந்த திருப்பதிகள் தொறும் மண்டி அனுபவிக்க புக்கு நிற்பவர்-எம்பெருமானார் இனி இவற்றில் புகாத போது கால் பாவி நிற்க மாட்டாது -புகுந்து பின்னர் தரித்து கால் பாவி நிற்கிறார்

மூன்றாம் வார்த்தை –
ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில்
நாம் கலக்கங்களும் தேற்றமுமாய்-திருவாய்மொழி -6-3-2- போருவுதோம்
அவர்கள் கலக்கம் இல்லா நற்றவர்களாய் —
கலக்கமிலா நல்தவ முனிவர் -திருவாய்மொழி -8-3-10-என்னும் பெருமை உடையவர்களாய்
பல்லாண்டு கூறி இருப்பர்கள் –
(திருப்பல்லாண்டு 3/11)பல்லாண்டு கூறுதுமே பல்லாண்டு கூறுவனே என்று மங்களாசாசன பரராய் இருப்பர்கள் – 

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-பரிச்சின்ன ஸூகம் -ப்ரத்யக்ஷ சித்தம் அன்றிக்கே -சாஸ்திர ஸித்தமாய்-அபரிச்சின்னமான ஸூகத்திலே இறே தமக்கு அந்வயம்-அதற்கு எதிர்த்தட்டான துக்கம்-அஞ்ஞானங்கள் -ஞானம் –இதர விஷயங்களைப் பெறாமையால் வரும் கலக்கமும், அவற்றைப் பெற்றால் வரும் தேற்றமும்.-கோபமும் அருளும்.-கோபம் -பிரசாதம் -உஷ்ணத்தை பண்ணும் அக்னியும் -சீதா ஸ்வ பாவமான நிழலும்

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10–தங்கள் ஞானத்துக்கு விஷயங்களால் கலக்கம் இன்றிக்கே மஹா தபஸ் ஸூ க்களை யுடைய மனன சீலரான சனகாதிகள்-முக்தர் –முதலிலே சம்சார ஸ்பர்ஸ கந்தம் இல்லாத நித்ய ஸூரிகள்-துளக்கம் -சலனம் -அதாவது ஞானக் குறைவு -அது இல்லாத நித்ய ஸூரிகள்

ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரிய ஆழ்வார்-சூரணை-250-அவர்களுக்கு இது காதா சித்தம் –இவர்க்கு இது நித்யம் –சூரணை -251-அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –சூரணை -252-அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து
ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது -விருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –சூரணை -253-1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது4-பிராப்தி பலமும் இதுவே எனபது –5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் -சூரணை -254-)

நாலாம் வார்த்தை
அந்தரத்துக்கும் -(கரைக்கும் )-கடலுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில் –
நாம் சம்சாரம் ஆகிற கடலிலும் மழையிலும் பெரும் காற்றிலும்
அவற்றின் உடைய லாபச் சேதங்களாலும் சோக ஹர்ஷங்களைப் பண்ணா நிற்புதோம் –

ஆவாரார் துணை என்று அலைநீர் கடலுள் அழுந்தும் நாவாய் -திருவாய்மொழி -5-1-9- போலே –
அவர்கள் இரண்டிலும் தளர்தல் அதன் அருகும் சாரார் -இரண்டாம் திருவந்தாதி-45-என்றும்
தரு துயரம் தடாயேல் -பெருமாள் திருமொழி -5-1-என்கிறபடியே நிற்பர்கள்—

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–இத்தசையில் நமக்கு துணையாவார் யார் என்று-ஷூ பிதமான கடலுக்கு உள்ளே அழுந்துகிற நாவாய் போலே சம்சார ஆர்ணவத்திலே நான் நின்று துளங்க-நாவாய் என்று அதில் நிற்கிறவர்களை சொல்கிறது -மாஞ்சா க்ரோசந்தி இத்யாதி -கேவலம் நாவாயைச் சொன்ன போது கரையிலே நின்றார் இதுக்கு துணை யாவார் யார் என்கிறார்கள் ஆகக் கடவது -அப்போது தனக்கு ஓடுகிற தசையை உணர மாட்டாத அளவைச் சொல்லுகிறது -நாவாய் (-பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -சூர்ணிகை -180-)ஆவாரார் துணை -என்கை யாவது -வ்ருஷடீ பிரதீஷாத் சாலையை என்றால் போலே யாகக் கடவது –நடுங்குகை யாவது -அசைந்து வருகை -இந்த நடுக்கத்தில் அவன் செய்வது என் என்ன-அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடும் -அவ்வடிவுக்கு சேர்ந்த திவ்ய ஆயுதங்களோடும் ஆழ்வார்களை சேர்த்துக் கொண்டால் போலே என்னையும் சேர்த்துக் கொண்டான் -என்று ஆளவந்தார் நிர்வாஹம்- எம்பெருமானார் –கூராழி வெண் சங்கு ஏந்தி –வாராய் என்று இவர் உகந்த படி வந்தான் என்று அருளிச் செய்வார் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானமே யாகிலும் பூ வேளைக் காரரைப் போலே ஆழ்வார்களை ஒழிய காண மாட்டார்

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-தரித்ரர் அர்த்தம் உண்டானவாறே மாதா பிதாக்களையும் ஆச்சார்யர்களையும் அவமானம் பண்ணுவர்கள் -இவர்கள் இப்படி செய்யார்கள்-தன்னுடைய பூர்வ அவஸ்தையை அறியாதே நடுவே நாலு நாள் இது உண்டானதுவே அடியாக மாதா பிதாக்களையும் ஆச்சார்யனையும் அவமானம் பண்ணுவது –உத்க்ருஷ்ட ஜன்மங்களை அவமானம் பண்ணுவது – பர லோக கதை சொன்னார் யுண்டாகில் சிரிப்பதுமாய் திரியும் ஆய்த்து –சர்வேஸ்வரனைப் பற்றி இருக்குமவர்கள் இப்படி இருப்பது ஓன்று யுண்டாகில் அத்தை ஒன்றாக மதித்து இராமையாலே அது உண்டு என்னும் இடம் தோற்றி இரார்கள்  -இல்லை என்று தளரார் என்னாதே-உண்டு இல்லை என்று தளரார் என்றது என் என்னில் நித்ய தரித்திரன் சோகம் அறியான் –ஒரு நாள் உண்டாய் அது இல்லை யானவாறே பாவியேன் பண்டு சுகமே ஜீவித்தோம் இப்போது இடி படா நின்றோம் என்று மிகவும் தளர்த்திக்கு உடலாம் என்று –உண்டு இல்லை என்று தளரார் – என்று சொல்லுகிறது-ஒரு நாள் யுண்டாய் இல்லை யானவாறே பாவியேன் பண்டு ஸூகமே ஜீவித்தோம் இப்போது மிடிபடா நின்றோம் -என்றுமிகவும் தளர்த்திக்கு யுடலாமே –-அர்த்தார்த்தி யானால் கிடையா விடில் சோகம் இல்லை -ஆர்த்தனுக்கு இறே சோகம் உள்ளது –பகவத் விஷயத்தில் பேறும் பிரிவும் அனர்த்தமாம் 0பகவத் விஷயத்தில் பிரிவும் உத்தேச்யமோ என்னில் –அழு நீர் துளும்ப  அலமருகின்றன வாழியரோ -திரு விருத்தம் -2-என்னக் கடவது இறே

கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் -வாரி ஸ்ரவதி சோகஜம் –சுந்தர -33-4-சம்சாரியில் காட்டில் ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி யன்றோ-இத்தை அன்றோ உண்ணும் சோறில் முற்கூறும் துவளில் மா மணியும் சொல்லுகிறது –-முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ -திருவாய் -6-5-7- நான் பண்ணின ஸூஹ்ருதமோ-அவன் தன்னுடைய கிருபையோ – நிர்குண பரமாத்மா சௌ தேஹம் தே வ்யாப்ய திஷ்டதி -பீமசேனன் அனுமன் உடலில்  துவட்சி கண்டு சொன்னான் இறே – இத்யாதிகளால் பிரிவும் உத்தேச்யம்-இன்னம் இவ்வளவே அன்றிக்கே –அதனருகும் சாரார் –-இப்படிப் பட்ட ஜீவனத்தை இழந்தோம் என்னும் தளர்த்தி இல்லாத ஜ்ஞானவானுக்கும்-அவ் விழவாலே வருவதொரு அனுதாபம் யுண்டாய் இருக்கும் இறே-அங்கனே வருவதோர் அனுதாபமும் இன்றிக்கே இருப்பார்கள் இவர்கள் – அத்தை ஒரு வஸ்துவாக  புத்தி பண்ணும் அன்று இறே அத்தை இழந்ததாலே வருவதோர் அனுதாபத்தை யுடையராய் இருப்பது-ஸ்திரம் என்று நினைத்து பின்னை அஸ்திரம் என்று இருக்கும் அவர்கள் அன்றே –-ஸ்திரமானது அஸ்திரமாய்த்து என்னில் அன்றோ சோகம் உள்ளது-என் தான் இவடினுடைய லாப அலாபங்களில் நாட்டார்க்கு வரக் கடவதான சோக ஹர்ஷங்கள் இவர்களுக்கு இன்றிக்கே இருப்பான் என் என்னில் இவர்கள் பற்றி இருக்கும் விஷயத்துக்கு அவை இரண்டும் இல்லை

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-நீயே தருகிற துக்கத்தை நீயே மாற்றாயாகில்-தன்னாலே தனக்கு விரோதி வந்தது என்றும்-தானே சாதன -அனுஷ்டானத்தாலே அது போக்கிக் கொள்வான் என்றும்-சாஸ்திரங்கள் சொல்லிக் கிடக்கச் செய்தே-இவர் அவனே துயர் தந்தான் என்பான் என் என்னில் பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இருப்பார் ஒருவர் ஆகையாலே சொல்லுகிறார் –தானே கர்மம் பண்ணினவன் தானே சாதன அனுஷ்டானம் பண்ணித் தவிர்த்துக் கொள்ளுகிறான் என்று நம்மைப் பழியிட்டு தள்ள நினைத்தான் ஆகிலும் நானும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் –நான் செய்த கர்மமும் பரதந்த்ரம் –நான் பண்ணும் சாதன அனுஷ்டானத்துக்கு பலபிரதன் ஆகையாலே அதுவும் தன்னைக் குறித்து பரதந்த்ரம் ஆகையாலே –தரு துயரம் -என்கிறார் –ஸ்ரீ முதலிகள் எல்லாரும் கூட ஸ்ரீ பெரிய திரு மண்டபத்துக்கு கீழாக இருந்து ரகஸ்யார்த்தங்கள் விசாரித்து எழுந்து இருப்பார்களாய்த்து- ஒரு நாள் நித்ய சம்சாரியாய்ப் போந்தவனுக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடி என் என்று விசாரிக்கச் செய்தே – யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஜ்ஞ்ஞாத ஸூஹ்ருதம் என்னப் பிறந்தது –அவ்வளவிலே ஸ்ரீ கிடாம்பி பெருமாள் இருந்தவன் நமக்கு ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் போலே
ஸ்ரீ ஸூக்ருத தேவர் என்று ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயன் என்றான் –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிற நீர் தாம் நினைத்து எத்தைக் காண் என்றார் —அதாவது-ஒன்றை ஆராயப் புக்கால் அதுக்கு அவ்வருகு வேறு ஓன்று இன்றி இருப்பது இறே -அடியாவது –யாதொன்று பல பிரதமானது இறே உபாயமாவது -அல்லது நடுவே அநேக அவஸ்தை பிறந்தால் அவற்றின் அளவில் பர்யவசியாது இறே-இளைப்பாறுவது இதிலே சென்று இறே -நடுவு இளைப்பாறாது இறே -தரு துயரம் -என்னலாம் -இறே -தடாயேல் – நீ விளைத்த துக்கம் நீயே போக்காயாகில் –
மம மாயா துரத்யயா -என்றும் –மா மேவயே ப்ரபத்யந்தே மாயா மேதான் தரந்திதே -என்றும் –நம்முடைய மாயை ஒருவரால் கடக்க ஒண்ணாது காண் என்றும் –இது கடக்க வேண்டி இருப்பவன் நம்மைப் பற்றி கழித்துக் கொள்வான் என்றும்-நீயே சொல்லி வைக்கையாலே நீயே துயர் தந்தாய் என்னும் படி தோற்றப் படுகிறது இறே –துக்கத்தை விளைப்பான் ஒருவனும் போக்குவான் ஒருவனுமாய் அன்று இறே இருப்பது –-பண்ணினவன் தானே போக்கும் இத்தனை இறே-ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் –ஒரு -குருவி பிணைத்த பிணையல் ஒருவரால் அவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை-ஒரு சர்வ சக்தி பிணைத்த பிணையை எலி எலும்பனான இவன் அவிழ்க்க என்று ஒரு கார்யம் இல்லை இறே –அவன் தன்னையே கால் கட்டி போக்கும் அத்தனை இறே -என்றார்-

ஐந்தாம் வார்த்தை –
அணுவுக்கும் மஹா மேருவுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் சம்பந்தமும் -குடி கோத்ரமும் ஸூத்ரமுமாகப் பண்ணுவுதோம் –
அவர்கள் சம்பந்த ஜ்ஞான அனுஷ்டானமே குடி கோத்ர ஸூத்ரம் என்று இருப்பர்கள்
நாம் பண்டைக் குலம் ப்ராஹ்மாண்யம் பற்றி நின்று குடி கோத்ரம் ஸூத்ரம் என்றும் —
அவர்கள் தொண்டக் குலம் -ஜீவ பர சம்பந்த ஜ்ஞானம் ஒன்றே என்று இருப்பர்கள்—

(விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்
பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் .-சூரணை -36-)

ஆறாம் வார்த்தை –
கரும்புக்கும் (கல்)கண்டுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில் –
நாம் வேதம் ஆகிற கரும்பைக் கடித்து -(மறையாய நால் வேதம் -சக்கை கலந்த கரும்பு )
பல்லு முறிவுதோம் –
அவர்கள் சாரத் த்வயம் ஆகிற கண்டைக் கடித்து இன்புருவர்கள் —

(அறக் கற்கை அரிது என்று இறே-வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில்-முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-சூரணை-16-)

ஏழாம் வார்த்தை
மண்ணுக்கும் விண்ணுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
நாம் -மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா -திருவாய்மொழி -7-1-6- என்றும்
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-1- என்றும் –
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ-திருவாய்மொழி -6-9-9- என்றும் –
திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன் -பெரிய திருமொழி -7-7-9- என்றும் –
பயப்பட்டு கலங்கா நிற்புதோம்

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-தம் நிலமான சம்சாரத்திலே–சம்சாரிகளுக்கும் அவ்வருகாய் இருக்கிற என்னைப் பெற்றால் இந்திரியங்கள் அளவுடையாரையும் அகப்படுத்த வல்லவை -அவை அகப்படுத்த வேண்டாதே மேல் விழுமவன் நான் -ஆனால் எல்லாம் படுத்தவோ-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடர் ஆழி வல்லானே உலகுண்ட வொருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை என்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் 
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-1-ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன –
உண்ணிலாவிய -என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியாலே நலியா நின்றுள்ள ஐந்து இந்திரியங்கள் என் பக்கலில் வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறன  இல்லை –என்னுடைய விஷயத்தை காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்று இவை தனித் தனியே அலைத்து நெருக்க அவற்றுக்கு அஞ்சி வந்து சர்வ ஸ்வாமியான உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?

தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-நெஞ்சு கலங்கும் படி-பஞ்ச இந்திரியங்களும் விஷயங்களில் மூட்டி நலியும் படியான -ஐவர் -என்று சேதன சமாதியாலே சொல்லுகிறது -நலிவின் மிகுதியால்-பகவத் விஷயத்தை இழப்பிக்க வேண்டுவதுண்டாய்-தன் பக்கல் அனுபாவ்யம் ஒன்றும் இன்றிக்கே இருக்கும் ஷூத்ர ஸூகத்தை அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து சப்தாதிகள் நடையாடுகிற தேசத்திலே இருக்கும் படி பாபத்தை பண்ணின என்னை -வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் -என்றவர் இறே இங்கனம் சொல்லுகிறார்-பைதல் கைசு -நோய் முக்கைசு -என்று தம் அளவன்றிக்கே பலவாய் இருக்கை-ரக்ஷகனான நீ காட்டி முடிக்கப் பார்க்கிறாயோ -சப் தாதி விஷயங்களின் உடைய தர்சன மாத்திரத்திலே முடியும்படி யாயிற்று இவர் பகவத் குணங்களிலே நைந்த படி -நாம் காணாவிடில் முடியும்படியான விஷயங்கள் இவருக்கு காணில் முடியும்படி யாயிற்று

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்-கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –நான் அவரை பொறுக்க மாட்டேன்-நீரே போக்கும் விரகு பார்க்கலாகாதோ
கிருபை ஒன்றே நான் அறிவேன் என்கிறார் 

அவர்கள் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் -திருவாய்மொழி -8-10-4- என்றும் –
வான் உயர் இன்பம் எய்தில் என் நரகமே எய்தில் என் -திருவாய்மொழி -8-1-9 -என்றும் –
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -கண்ணி நுண் -11 -என்றும்
செய்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9- என்றும்
சொல்லுகிறபடியே நித்ய விபூதியில் இருப்பவர்களைப் போலே கலக்கமும் பயமும் இல்லாமல் இருப்பர்கள்–

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4–பாகவத கைங்கர்யத்துக்கு வர்த்தகமான பகவத் அனுபவம் பூர்ணமாக கிடைப்பது பரம பதத்தில் யன்றோ என்ன -அவ்வனுபவம் அவன் பிரசாதத்தாலே இங்கேயே கிடைக்குமாகில் இங்கேயே வர்த்தித்தால் சேதம் என் என்கிறார் என்றுமாம் –அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் பிரசாதமே இறே ஹேது -இங்கேயே கிடைக்குமாகில் சேதம் என் -என்கை -தண்ணிதானது என்-மநோ வாக் காயங்கள் அவன் திருவடிகளிலே நிரந்தரமாக அடிமை செய்யும் படி -அவன் பிரசாதத்தை பெறில் –பாகவத ப்ரிய ரூபமான -பகவத் கைங்கர்யத்தை -அவன் பிரசாதத்தாலே -இங்கே பெறில் -அதுவே புருஷார்த்தம் -என்கை –

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-இச் சேஷத்வ ஞானத்தோடு திரு நாட்டிலே போய் நிரதிசய ஆனந்தத்தை பெற்று இருக்கில் என் -உயர் இன்பம் -நிரதிசய ஆனந்தம் –ஸூ கத்துக்கும் சேஷத்வ ஞானத்துக்கும் எதிர்தலையான சம்சாரத்திலே இருக்கில் என் –சேஷ வஸ்து வானால் சேஷியினுடைய எல்லைக்கு உள்ளே -அவன் செய்தபடி செய்கிறான் -என்று இருக்குமது ஒழிய அவனை நிர்பந்திக்கக் கடவன் அல்லன் என்பதோர் அர்த்தமும் உண்டு-எனினும் உடையவன் வைத்த இடத்தில் கிடக்கும் அத்தனை அன்றோ என்று ஓர் அர்த்த தத்வம் உண்டு-இந்த உண்மை இப்படி இருந்தாலும் —இந்த சம்சாரம் உனக்கு புறம்பு என்கிற ஆகாரத்தால்-தன்மையால் அன்றிக்கே-நான் உனக்கு அத்யந்த சேஷமாய் இருப்பவன் என்கிற தெளிவு பிறக்க பிறக்க-சேஷத்வ ஞானம் உண்டான பின்பு–சேஷமாய் இருக்கும் பொருள்–சேஷி செய்தபடி கண்டு
அவன் எல்லைக்குள் கிடக்கும் இத்தனை அன்றோ–நம்மை நிர்பந்திக்கக் கடவதோ-
என்பதே அன்றோ தேவர்க்கு நினைவு-உனக்கு இது நினைவு ஆனாலும் இந்த சம்சாரத்தில் இருப்பை நான் மிகவும் அஞ்சா நின்றேன்-அடிமை என்கிற எண்ணத்துக்கு விரோதி ஆகையாலே–சேஷத்வ பிரதிபத்தியே குலையும் படி அன்றோ இங்கு உள்ளது –

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–இது கற்றாருக்கு வாசஸ் ஸ்தானம் ககலங்கா பெரு நகரான பரமபதம் – இது வ்யாஹத பாஷணமாய் இருந்ததீ-ஆழ்வாரை ப்ராப்யமாகச் சொன்னால் திரு நகரியே ப்ராப்ய தேசமாக வேண்டாவோ என்னில் திரு நகரியிலே பொலிந்து நின்ற பிரான் ஆணையும் ஆழ்வார் ஆணையும் கூடச் செல்லுவது
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ என்கிறபடியே ஆழ்வார் ஆணை ஒன்றுமே யாய்த்து அங்குச் செல்லுவது – சேதனனுக்கு ப்ராதி கூல்யத்தில் நின்றும் நிவ்ருத்தன் ஆனேன் என்று தோற்றும் போது ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்க விடுக்கும்
ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்கை யாவது அவன் அடியார் அளவும் ஸ்நேஹித்து இருக்கை-அவர்கள் எல்லாருக்கும் ப்ரியம் செய்கையாவது ஜ்ஞான ப்ரதன் பக்கலிலே ஸ்நேஹித்து இருக்கை இறே-ஆகையாலே திரு நாட்டை ப்ராப்யமாகச் சொல்லிற்று
அதவா நம்புவார் இருந்த இடமே வைகுந்தம் என்னவுமாம்-திரு நாடு என்றும் லீலா விபூதி என்றும் விபாகம் இல்லையோ வென்ன நம்பி திருவழுதி வள நாடு தாசர் வார்த்தை -கூரத் தாழ்வான் மகன் பிறந்த பின்பு இடைச் சுவர் தள்ளி ஒரு போகியாய்த்துக் காண் -என்று பணித்தான் –

கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு  என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே   அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9-செய்த் தலையிலே விளைந்த நாற்று உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள-கழுத்தே கட்டளையாக நீரை பருகையாலே கறுத்து பெருத்து இருந்துள்ள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவன் பக்கலிலே இவள் வளரும்படியாக நீங்களே சேர்த்து விடும் கோள்-என்று இப்படி பந்துக்கள் சொன்னார்கள் என்கிற இத்தனையும் இவ் விடத்தில் அபிப்ரேதம் –அதுக்கடி-தாயுரை செய்ததனை–(3-7-11) -என்று திரு மொழி முழுவதம் தாயார் வார்த்தை என்று நியமிக்கையாலே –

எட்டாம் வார்த்தை –
இரவுக்கும் பகலுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில்
நாம் வேதம் ஆகிற அந்த காரத்திலே தடுமாறா நிற்புதோம் –
அவர்கள் பேர் ஆயிரமும் ஓதின -பெரிய திருமொழி -1-5-10-விளக்கு ஒளியாலே
மாதவன் தன் துணையா நடந்து -மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய
கீதையின் செம்மைப் பொருள் -இராமானுச நூற்றந்தாதி -68–வழியே நடப்பர்கள் —

தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10-லோகத்தில் அறிவு உடையாராய் இருப்பார் –நித்ய சூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம்
அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாருங்கோள் –அங்கன் இன்றிக்கே
இவற்றையே அடைவு கெட சொல்லப் பாருங்கோள்-திரு நாமம் சொல்லுங்கோள்-இல்லையே வேதம் சொல்லுங்கோள் சுருதி–இங்கு திரு மொழி -வேதம் தமிழ் செய்த மாறன் -அங்கம் அன்றோ

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்

பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –சாரத்திய வ்ருத்தாந்தாலே தன்னுடைய ஆஸ்ரித பார தந்த்ர்யத்தை-ஜகத் பிரசித்தம் ஆக்கின ஆச்சர்ய பூதன் –ரதியான அர்ஜுனன் கையில் வில்லையும் பொகட்டு சோகாவிஷ்டனாய்–சிஷ்ய ஸ்தேஹம் சாதிமாம்   த்வாம் பிரபன்னம் –கீதை -7-2 – -என்கிற-அக்காலத்திலே பாண்டவர்களுடையதாய் தன்னுடைய திருவடிகளோட்டை ஸ்பர்சத்தாலே திவ்யமாய் இருந்துள்ள திருத் தேர்த்தட்டிலே -நின்று அருளிச் செய்த -ஸ்ரீ கீதையினுடைய ஸ்வ ரசமான அர்த்தத்தை -ஸூவ்யக்தமாம் படி -தேரிலே அர்ஜுனைக விஷயமாக அவன் அருளிச் செய்தால் போல் அன்றிக்கே –-பாரிலே சர்வ விஷயமாக அருளிச் செய்த எம்பெருமானாரை ஆஸ்ரயித்து இருக்கும் விலஷணரானவர்கள் உடைய    கல்யாண குணங்களிலே இவ்வருகு ஒன்றில் கால் தாழாதே சென்று என்னாத்மாவும் மனசும் அத்தை விடில் முடியும் என்னும்படி ப்ரவணமாய் விட்டது .

சொல்லுமளவில் யார் தான் எனக்கு இன்று சத்ருசர்

ஒன்பதாம் வார்த்தை –
ரத்னத்துக்கும் பாஷாணத்துக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே -திரு நெடும் தாண்டகம் -4- என்று
அந்தி தோறும் மந்திரத்தை சொல்லா நிற்புதோம்(இங்கு மந்திரத்தால் என்றும் திருமந்த்ரத்தையே ஆழ்வார் அருளிச் செய்தால் காயத்ரி மந்த்ரத்தைத் சொல்லி நிற்பதற்குப் பிரமாணம்)
அவர்கள் பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் அந்தியாலாம் பயன் எங்கன் -முதல் திருவந்தாதி -33-என்று
(காயத்ரி ஜெபத்தில் ஈடுபடாமல் )மந்திர ரத்னம் த்வயத்தைச் சிந்திப்பர்கள் —

இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித் திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே–4-கீழ் உக்தமான இவ் வஸ்து வேத சிரஸ்சிலே குஹ்யமாய் இருக்கும் -என்கிறார் –ப்ராஹ்மனர்க்கு தனம் வேதம் இறே-பிரமாண முகத்தாலே இறே -பிரமேய பூதனான ஈஸ்வரனை தனம் என்று அறிவது –மந்த்ரம் -என்று–பிரதிபாத்யமும் அங்கேயாய்-பிரதிபாதகமும் அங்கேயாய்
இருக்கிறபடி ஈஸ்வரனுக்கு திரு நாமமாக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமாவில் சொல்லிற்றே-1-ஜகத் காரண பூதனை –-2-சர்வாந்தராமியாய் –-3-துர் ஜ்ஜேயனாய் –-4-தத் கத தோஷை ரசம் அஸ்பர்ஷ்டனாய் இருக்கிறவனை அனுபவிப்புதியாகில்-அவ் விஷயத்தை அனுபவிக்கும் இடத்தில் -வேதாந்த முகத்தாலே யாதல் –இதிஹாச புராணத்தாலே யாதல் -அனுபவிக்கப் பாராதே நான் இழிந்த துறையில் அனுபவிக்கப் பார் –திரு மந்த்ரத்திலே அனுபவிக்கப் பார் –திரு மந்தரத்தால் அனுபவிக்குமா போலே ஸூகரமாய் இராது இறே – சர்வம் அஷ்டாஷராந்தஸ்தம் –என்கிறபடியே –சர்வார்தங்களையும் திரளச் சொல்லும் மந்த்ரம் இறே –மறவாது வாழ்தியேல் –விஸ்மரியாதே அனுபவிப்புதியேல்-பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேது விஷயாந்தர ஸ்பர்சம் ஆகையாலே-விஷயாந்தரம் கலசாதபடி அனுபவி -என்கிறாரோ -என்னில் –அது இவர்க்குச் சேராது –சரம தசையில் சாஷாத் கரித்து அனுபவிக்கிறவர் ஆகையாலே-இனி இவர்க்கு விஸ்ம்ர்தி ஹேது என் என்னில் –
தாபத் த்ரய ஆஸ்ரயமான தேக சம்பந்ததோடே இருக்கையாலே தேகத்தைப் பாரார் –
பூர்வ வ்ருத்தத்தைப் பாரார் – விஷய வைலஷண்யத்தைப் பாரார் – தந் நிவ்ருத்திக்கும் அபிமத சித்திக்கும் உறுப்பாக ஈஸ்வரனை உபாயமாக அனுசந்திப்பதொரு அனுசந்தானம் உண்டு –அது பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேதுவாகக் கடவது-ஆகையாலே பூர்வார்தத்தில் இழியாதே அனுபவிக்கப் பார்–இவர் தாம் த்வய நிஷ்டர் அன்றோ-இங்கனே சொல்லுவான் என் என்னில்-அடியிலே ஒருக்கால் ஈஸ்வரன் கையில் நம் கார்யத்தை சமர்ப்பித்து விட்டோம் ஆகில்-இனி ஸ்வ உஜ்ஜீவனதுக்கு சிந்திக்கை யாவது பிறர் கார்யத்தில் இழிகை இறே –பிறர் கார்யம் -ஈஸ்வரன் கார்யம்
ஸ்வ ரஷணத்தோடு ஜகத் வியாபாரத்தோடு வாசி இல்லை இறே பிராப்தி இல்லாமைக்கு-வாழ்தியேல் –அவனுடைய பரத்வத்திலும் சாதனத்திலும் இழியாதே – போக்யதையில் இழிந்து அனுபவிப்புதி யாகில் –-வாழ்ச்சி உன்னதே இறே-நானும் உனக்கு சஹகாரியாம் இத்தனை இறே –வாழ்தியேல் -என்று தமக்கு கரணமான மனசை சேதன சமாதியாலே கர்த்தாவாகப் பேசுகிறார் இறே –மன பிரதானம் தோற்ற –யாவதாயுஷம் பகவத் அனுபவத்துக்கு பரிகாரம் இதுவாகையாலே -தத் சாபேஷனாய்  இறே முமுஷூ இருப்பது –என்றும் வாழலாம் –நித்ய ஸூரிகள் நடுவே இருந்து -யாவதாத்மபாவி வாழலாம் –எங்கும் ஒக்க அனுபவம் இறே இவனுக்கு உள்ளது வைஷ்ணவன் ஆகிறான் ராஜ குமாரன் இறே- மட நெஞ்சமே-எனக்கு பவ்யமான நெஞ்சே-விஷய ப்ராவண்ய நிவ்ருத்தி வேளையோடு
உஜ்ஜீவன வேளையோடு போக வேளையோடு வாசி அற என் பின்னே ஒழுகும் படி எனக்கு விதேகமாகப் பெற்றேனே என்று திரு உள்ளத்தைக் கொண்டாடுகிறார் – நெஞ்சமே நல்லை நல்லை -என்னுமா போலே –

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என்
 -33–சத்தையையும் வெளிச் சிறப்பையும் பண்ணிக் கொடுக்கக் கடவனவனுடைய திரு நாமத்தையே புத்தியாலே அனுசந்தியாதே-அவன் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ஸ்வா பாவிக சம்பந்தத்தை அனுசந்தித்து அவனை உகப்பியாதே இடக்கை பத்துருக் கொண்டு வாயாலே சொல்லுகிற இத்தால்
அவ்விடத்தில் பிரயோஜனமாய்த் தலைக் கட்டுவது ஏதோ-நெஞ்சு விஷயாதிகளைப் பற்றிக் கிடக்க வாயாலே சொல்லுவது கையாலே எண்ணுவதாகிற இவ்விருத்திகளால் என்ன கார்யம் உண்டு-எம்பெருமானை அகலுகையே பலித்ததாய் விடுமத்தனை-சந்த்யையாலே
எல்லா அனுஷ்டானங்களையும் நினைக்கிறது  –

பத்தாம் வார்த்தை –
பதி வ்ரதைக்கும் பர நாரிக்கும்(ஆபாச ப்ரதீதி -சந்தேகப்பட இடமுண்டு) உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் ஆக்நேயாதி களுக்கு சேஷமாய் இருப்புதோம் -(வைதிக கர்மங்களைப்
பற்றி இருப்போம்)
அவர்கள் அவனுக்கே சேஷம் என்று -அவனை ஒழிந்தவர்களுக்கு சேஷம் அன்று என்று
அறுதி இட்டு இருப்பர்கள் –
இது இருவருக்கும் உள்ள தன்னேற்றம்

இந்தத் தன்னேற்றம் தான்
1-பெருமாள் பக்கலிலும் (-ரிஷிகள் விட குகப் பெருமாள் வானர முதலிகள் விபீஷண ஆழ்வான் போல்வார் இடமும்)
2-நம்பெருமாள் பக்கலிலும் -(லோக சாரங்கர் விட திருப் பாண் பெருமாள் இடமும்)
3-அப்பன் பக்கலிலும் -(தொண்டை மான் சக்ரவர்த்தி விட்டு குறும்பு அறுத்த நம்பி இடமும்)
4-பெரிய நம்பி பக்கலிலும் -(மாறனேர் நம்பிக்கு ப்ரஹ்ம ரதம் ஏற்றி அருளினது மூலம்) காணலாம்

இதின் ஏற்றம் தான் நமக்கும் உமக்கும் பெரியோர்களுக்கும் நித்ய அநுசந்தானம்
என்று ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்தார்

ஸ்ரீ முதலியாண்டானும் -அடியேன் இத்தனை காலமும் அபசாரம் பண்ணிப் போந்தேன்
இனிச் செய்ய அடுப்பது என் -என்று விண்ணப்பம் செய்ய –

சரணாகதனான முமுஷுவுக்கு இப் பத்து வார்த்தையும் நெஞ்சிலே பட்ட வன்று
திருவடிகள் ஸித்திக்கும் என்று ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்தார் –

இந்தத்‌ தன்னேற்றங்களை பெருமாள்‌ பக்கமும்‌, நம்பெருமாள்‌ பக்கமும்‌ பெரிய நம்பியிடத்தும்‌ காணலாம்‌. எம்பெருமானாருக்கு ஒரு நிர்ப்பந்தம்‌ உண்டு. பிறருடைய துர்க்கதியைக்‌ கண்டால்‌ திருஉள்ளத்தில்‌ இரங்கி அருளிச்‌ செய்வது த்வயத்தை. அடியார்‌,தொண்டர்‌ போன்ற பிரபந்ந ஜனங்களுக்குக்‌ கூடஸ்தர்‌ என்று பெயர்‌. ஆகவே நம்மாழ்வார்‌, மங்கை மன்னன்‌ தொடக்கமான ஆழ்வார்களும்‌ எம்பெருமானார்‌ முதலான ஆச்சார்யர்களும்‌ உபதேச அனுஷ்டானங்களினாலே பிரபத்தி மார்க்கத்தைத்‌ தலைப்பெறுத்தி வளர்த்தவர்களாகையாலே பிரபந்த ஜன கூடஸ்தர்‌ என்று அழைக்கப்பட்டனர்‌.வாமனாவ தாரத்திலே தன்னுடைமையைப்‌ பெறுவதற்குத்‌ தான்‌ அர்த்தியானாற்போலே, அர்த்தியாய்‌ நின்று பாஷ்யகாரர்‌ பக்கலிலே வேதாந்தார்த்தம்‌ கேட்டு சிஷ்யனாய்‌, நாமும்‌ நம்‌ இராமானுசனை உடையோம்‌ என்‌ கையாலே, ஸ்ரீ வைஷ்ணவ நம்பி என்று திருநாமமாய்‌ வாமனாதார அம்சமாகப்‌ புராண ஸித்தராய்‌ இருக்கிற நம்பியுடைய திருப்பதி என்று காட்டவே திருக்குறுங்குடி என்னாதே வைஷ்ணவ வாமநம்‌ என்றது.

எம்பெருமானாரது அந்திம தசையிலே, எங்களுக்குத்‌ தஞ்சமாய்‌ இருப்பதொன்றை அருள வேண்டும்‌ என்று முதலிகள்‌ கேட்கவே ‘எல்லோரும்‌ பாஷ்யத்தலே வாஸநை பண்ணுகையே நமக்குப்‌ பிரியம்‌. அது இயலாதவர்கள்‌ நத்தவனம்‌ அமைத்துத்‌ திருப்படித் தாமம்‌ (துளஸிபுஷ்பம்‌) பறித்துத்‌ திருமாலை எடுக்கையும்‌ பிரியமாய்‌ இருக்கும்‌. அது எல்லோராலும்‌ செய்ய முடியாததால்‌ ‘த்வயம்‌’ மந்திரத்தை ஜபித்து, ஸ்மரித்து அதையே விசுவாசியாய்‌ இருப்பது மிகவும்‌ பிரியமாய்‌ இருக்கும்‌ என்றார்‌.விஷ்ணுவானவர்‌ அனைவருக்கும்‌ சேஷியாய்‌ இருப்பவர்‌.நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார்‌ அவருடைய திருமேனியாவார்‌. கைங்கர்யச் செல்வம்‌ நிறைந்த எம்பெருமானார்‌ அந்த நம்மாழ்வாருடைய திருவடித் தாமரை யணையாய்‌ விளங்குகிறார்‌. அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆச்சார்ய ஸப்தம்‌ நிறை பொருளாய்‌ இருக்கிறது. அவருடைய அபிமானமே ஆத்ம ஜீவனத்தை விரும்பும்‌ எல்லாச்‌ சேதனர்களுக்கும்‌ ஸம்ஸாரக் கடலிலிருந்து கரையேறும்‌ உபாயமாகும்‌. அவரது குணானுசந்தானமே போது போக்குக்கு விஷயம்‌. அவருக்கு முன்னும்‌ பின்னும்‌ உள்ளமற்ற ஆச்சார்யர்களுக்கு உபகாரத்வம்‌ உண்டே ஒழிய உத்தாரகத்வம்‌ கிடையாது. அவர்கள்‌ எல்லோரும்‌ அவ்வெதிராசனால்‌ சத்தைப்‌ பெற்றவர்கள்‌. ஆகவே அவ்வெம்பெருமானாருடைய திருவடிகளையே ஸம்ஸாரம்‌ அடியோடு நீங்குவதற்கு ஆஸ்ரயிக்க வேண்டும்‌ என்று நம்‌ ஜீயர்‌, வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌கூறுவர்‌. ஸோமாஸி ஆண்டான்‌ வடுக நம்பி போன்ற பலரும்‌ இக் கருத்தையே அருளியுள்ளார்கள்‌.“ஸத்யம்‌ ஸத்யம்‌ புநஸ் ஸத்யம்‌யதி ராஜோ ஜகத் குரு’என்று கணியனூர்‌ சிறியாச்சான்‌ சத்தியம்‌ பண்ணினார்‌.-இராமானுஜாச்சாரியரிடம்‌ காணும்‌ முக மலர்த்தி, அர்ச்சாவதாரத்தில்‌ விளைவதால்‌; குளிரக் கடாக்ஷித்தல்‌, வாய் திறந்து பேசுதல்‌, வாரி அணைத்தல்‌, போன்ற பேறுகள்‌, அவரோடு ஓரே காலத்தில்‌ வாழ்ந்த முதலியாண்டான்‌, கூரத்தாழ்வான்‌, அவரது குமாரர் பட்‌டர்‌, எம்பார்‌, திருக் குருகைப் பிரான்‌ பிள்ளான்‌ முதலானோருக்கு,எல்லை யற்றதும்‌, நினைத்தற் கரியதுமான ஆஸ்ரித வாத்சல்யம்‌, செளலப்யம்‌ முதலியன உள்ளங்கை நெல்லிக்கனி போல நேரில்‌ காணலாமாமிருந்தது. எம்பெருமானாருக்கு முற் காலத்தில்‌ இருந்த மணக்கால்‌ நம்பி, உய்யக் கொண்டார்‌, ஆளவந்தார்‌. நாதமுனி முதலியோருக்கு அம்முக மலர்த்தி அப்ரதஷணமாகவே இருந்தது.முதலிகள்‌ ஆழ்வானிடம்‌ எம்பெருமானார்‌ ஆளவந்தார்‌ இருவரில்‌ யாருக்குச்‌ சிறப்புண்டு என்று வினவிய பொழுது, ஆளவந்தார்‌ எம்பெருமானாருக்கு ஆச்சார்யார்‌ ஆன போதிலும்‌ அவருடைய கிருபா கடாக்ஷ்த்தாலேயே எம்பெருமானார்‌ உய்வு பெற்றவரானாலும்‌, ஆளவந்தாருக்கே சிறப்பு இருந்த போதிலும்‌, ஆசையுடையோர்க்கெல்லாம்‌ ஆரியர்கள்‌ கூறும்‌ என்ற கிருபாமாத்ர பிரசந்நாச்‌சார்யாத்வம்‌, காரேய்‌ கருணை இராமானுசரிடத்திலேயே நிலை நிற்கையாலே இவர்க்கே சிறப்பு என்றார்‌ ஆழ்வான்‌.யதிராஜரது நித்ய கர்மங்கள்‌ உடையவர்‌ பெருமாளுடைய ஸ்ரீகார்யம்‌ ஆராய்ந்து கொண்டு பகலில்‌ ஸ்ரீபாஷ்யம்‌ காலட்சேபம்‌ செய்து இரவில்‌ திருப்பள்ளியேறினால்‌, திருவாய்மொழி சேவித்த படியே கண்‌ வளர்ந்தருளுவார்‌.இரவில்‌ உறங்காவில்லிதாஸர்‌, ஸ்ரீ குண தாஸர்‌ போன்ற இராமானுஜ வேளைக்காரர்‌ இவருக்குக்‌ காவலாயிருப்பர்‌. காலையில்‌ அவரை வைணவ முதலிகள்‌ இராமனுஜ சுப்ரபாதம்‌ ஓதி துயிலெழுப்புவார்கள்‌. உடையவர்‌ கண் விழித்த பின்‌, பிரபந்தப் பாடல்களை அனுசந்தித்துப்‌ பின்பு நீராடுவார்‌. திருவீதியிலுள்ள ஆசார்ய புருஷர்‌கள்‌ வணங்கி நிற்க காவேரியிலிருந்து மடத்துக்கு எழுந்தருளுவார்‌. எல்லாத்‌ திவ்ய தேசத்துப்‌ பெருமான்களுடைய பவித்திரங்களைத்‌ திருமுடியிலும்‌, கழுத்திலும்‌ சாத்திக் கொண்டு திருப் பல்லாண்டு, திருப் பள்ளி யெழுச்சி, திருப் பாவை, ஸ்ரீ ஸ்தோத்ர தனியன்களை அனுசந்தித்துக்‌ கொண்டு திருமண்‌ காப்பணிந்து தியானத்தில்‌ ஈடுபடுவார்‌. பின்னர்‌ பேரருளாளன்‌ தொடங்கி அழகிய மணவாளனை மங்களாசாசனம்‌ செய்ய கோவிலுக்குச்‌ செல்வார்‌. நம்‌ பெருமாளுக்கு ஸகல கைங்கர்யங்களும்‌ காலாகாலங்களில்‌ நடக்கும்படி பத்துக்கொத்தலுள்ளவர்களுக்கும்‌ கட்டளை இட்ட பின்‌ கோயிலிலிருந்து மடத்‌திற்கு வந்து பேரருளாளர்‌ திருவராதனம்‌ பூர்த்தி செய்து தளிகை மாறிய பின்‌ சிஷ்யர்களுக்குத்‌ தீர்த்தப் பிரசாதம்‌ வழங்கிய பின்‌ தாமும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ (பிரஸாதப்படுதல்‌) உணவு உட்கொள்ளுவர்‌.அதன்‌ பின்னர்‌ ஆளவந்தாரை நினைத்துத்‌ தியானம்‌ செய்த பின் பட்‌டரையும்‌, ஸ்ரீராமப்பிள்ளையையும்‌ கொண்டு இராமாயணம்‌ படிக்‌கச்‌ சொல்லிக்‌ கேட்பார்‌. சாயங்காலம்‌ காயத்ரி ஜபம்‌ செய்து
அனுஷ்டானங்களை முடித்தபின்‌ பேரருளாளன்‌ முன்பு பல்லாண்டு முதலியனவற்றைச்‌ சிஷ்யர்களை சேவிக்கச்‌ சொல்லுவார்‌. பின்னர்‌ அழகிய மணவாளனைச்‌ சென்று சேவித்து கோயில்‌ முழவதும்‌ திருவிளக்கேற்றி ஸந்நிதியில்‌ பொன் குத்து விளக்கிலே தெய்விளக்‌கேற்றி, மலர்மாலைகள்‌ சாத்தி இளநீர்‌ அமுது செய்வித்தருளுவார்‌.இரவிலும்‌ பகலைப் போலவே திருவாராதனம்‌ நடத்துவித்து திருவரங்கச்‌ செல்வரை எழுந்தருளுவித்து நடைப் பலிகளை நடத்தி யாகசாலை ஹோமங்களை நடத்தச்‌ செய்வார்‌.பள்ளி கொள்ளுமிடத்தில்‌ செல்வரை எழுந்தருளச்செய்து சம்பா அமுது செய்வித்து தன்வந்திரி வம்சத்தவர்‌ தயாரித்த கஷாயமும்‌ அமுது செய்வித்து, ஸ்ரீரங்கநாயகியார்‌, கோவிலையும்‌ அலங்கரிப்பித்து என்‌ திருமகள் சேர்‌ மார்பனானை’ சேர்த்தியிலே எழுந்தருளப்பண்ணி, பலவிதமான சுகந்தங்களைச்‌ சாத்துவித்து வெள்ளிக்‌ கிடாரங்களிலே பாற்குழம்பு சேர்த்து ௮முது செய்வித்து அரம்பையர்கள்‌ தாலாட்ட யாழ் குழல்‌ வீணை வாசிக்க பெருமாள்‌ பள்ளி கொண்டருளும்படி செய்து சங்குசக்கரத்தாழ்வார்களை பள்ளியறைக்குக்‌ காவலடைத்து ஸ்ரீநிதி இருக்கும்‌ இடத்தற்கு திருக் காப்புச் சேர்ப்பித்து புறப்படுவார்‌. மடத்தில்‌ பேரருளாளர்க்கும்‌ எல்லாம்‌ செய்து தாமும் பள்ளி கொள்வார்

இன்னமுத மூட்டுகேன்‌ இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம்‌ பாடவல்ல சீர்ப்பெருமாள்‌ – பொன்னஞ்‌
சிலைசேர்‌ நுதலியர்‌ வேள்‌ சேரலர்‌ கோன்‌, எங்கள்‌
குலசேகரனென்றே கூறு
-எம்பெருமானார்‌ அருளிய பெருமாள்‌ திருமொழித் தனியன்‌
வாழிபரகாலன்‌ வாழிகலிகன்றி
வாழிகுறையலூர்‌ வாழ்வேந்தன்‌ – வாழியரோ
மாயோனை வாள்வலியால்‌ மந்திரங்‌ கொள்‌, மங்கையர்கோன்‌
தூயோன்‌ சுடர்மான வேல்‌
-எம்பெருமானார்‌ அருளிய பெரிய திருமொழித் தனியன்‌
முந்துற்றநெஞ்சே முயற்றித்‌ தரித்துரைத்து வந்தித்து வாயார வாழ்த்தியே – சந்த
முருகூரும்‌ சோலை சூழ்‌ மொய்பூம்‌ – பொருதல்‌ குருகூரன்‌ மாறன்‌ பேர்கூறு
-எம்பெருமானார்‌ அருளிய பெரிய திருவந்தாதி தனியன்‌

சீரார்‌ திருவெழு கூற்றிருக்கை யென்னும்‌ செந்தமிழால்‌
ஆராவமுதன்‌ குடந்தைப் பிரான்‌ றனடியிணைக்கீழ்‌
ஏரார்‌ மறைப் பொருளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
‘சேராமர்சொன்ன வருள்மாரிபாதம்‌ துணை நமக்கே.
-திருவெழு கூற்றிருக்கை தனியன்‌

“அழுக்கென்றிவையறிந்தேன்‌ அம்பொன்‌ அரங்கா
ஒழித்தருள்வாய்‌ உள்ளில்‌ வினையை பழிப்பிலா
என்னாரியர்க்காக எம்பெருமானர்க்காக
உன்னாருட்காக உற்று’
-விளாஞ்சோலைப்பிள்ளை அருளிச் செய்தது

சீராரும்‌ எதிராசர்‌ திருவடிகள்‌ வாழி.
திருவரையிற்‌ சாத்திய செந்துவராடை வாழி.
ஏராரும்‌ செய்ய வடிவு எப்பொழுதும்‌ வாழி.
இலங்கிய முந் நூல்‌ வாழி இணைத் தோள்கள்‌ வாழி.
சோராத துய்ய செய முகச்சோதி வாழி.
தூ முறுவல்‌ வாழி துணை மலர்க்‌ கண்கள்‌ வாழி.
ஈராறு திருநாம மணிந்த எழில்‌ வாழி.
இனி திருப்போடெழில்‌ ஞான முத்திரை வாழியவே.

அறு சமயச்‌ செடி யதனை யடி யறுத்தான்‌ வாழியவே.
அடர்ந்து வரும்‌ குதிட்டிகளை யறத் துறந்தான்‌ வாழியவே.
செறு கலியச்‌ சிநிதுமறத் தீரத்து விட்டான்‌ வாழியவே.
தென்னரங்கர்‌ செல்வ முற்றும்‌ திருத்தி வைத்தான்‌ வாழியவே.
மறையதனில்‌ பொருளனைத்தும்‌ வாய் மொழிந்தான்‌ வாழியவே.
மாறனுரை செய்த தமிழ்‌ மறை வளர்த்தோன்‌ வாழியவே.
அறம் மிகு நற் பெரும்புதூர்‌ அவதரித்தான்‌ வாழியவே.அழகாரும்‌ எதிராசர்‌ அடியிணைகள்‌ வாழியவே.

சங்கர பாற்கர யாதவ பாட்டப்‌ பிரபாகர்‌ தங்கள்‌ மதம்‌
சாய்வுற வாதியர்‌ மாய்குவரென்று சதுமறை வாழ்ந்திடுநாள்‌
வெங்கலி யிங்கினி வீறு நமக்கிலை யென்று மிகத் தளர்நாள்‌
மேதினி நஞ்சுமையாறு மெனத் துயர்விட்டு விளங்கிய நாள்‌
மங்கையராளி பராங்குச முன்னவர்‌ வாழ்வு முளைத்திடு நாள்‌
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்று முவந்திடுநாள்‌
செங்கயல்‌ வாவிகள்‌ சூழ் வயல்‌ நாளும்‌ சிறந்த பெரும்பூதூர்ச்‌
சிமானிளையாழ்வார்‌ வந்தருளிய நாள்‌ திருவாதிரை நாளே

அத்தகிரி யருளாளரடி பணிந்தோன்‌ வாழியவே.
அருட்கச்சி நம்பியுரை யாறு பெற்றோன்‌ வாழியவே.
பக்தியுடன்‌ பாடியத்தைப்‌ பகர்ந்திட்டோன்‌ வாழியவே.
பதின்மர்‌ கலையுட்‌. பொருளைப்‌ பரிந்து கற்றோன்‌ வாழியவே.
சுத்த மகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன்‌ வாழியவே.
தொல்‌ பெரிய நம்பி சரண்‌ தோன்றினான்‌ வாழியவே.
சித்திரையில் லாதிரை நாள்‌ சிறக்க வந்தோன்‌ வாழியவே.
சீர் பெரும்புதூர்‌ முனிவன்‌ திருவடிகள்‌ வாழியவே.

எண்டிசை யெண்‌இளையாழ்வார்‌ எதிராசன்‌ வாழியவே.
எழுபத்து நால்வர்க்கெண்ணான்‌ குரைத்தான்‌ வாழியவே.
பண்டை மறையைத்‌ தெரிந்த பாடியத்தான்‌ வாழியவே.
பரகால னடிஇணையைப்‌ பரவுமவன்‌ வாழியவே.
தண்டமிழ்நூல்‌ நம்மாழ்வார்‌ சரணானான்‌ வாழியவே.
தாரணியும்‌ விண்ணுலகும்‌ தானுடையோன்‌ வாழியவே.
தெண்டிரைசூழ்‌ பூதூரெம்பெருமானார்‌ வாழியவே.
சித்திரையிற்‌ செய்ய திருவாதிரையோன்‌ வாழியவே.

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருப்பாவையும் ஸ்ரீ திருப்பாவை ஜீயர்-ஸ்ரீ எம்பெருமானாரும்-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்

January 21, 2026

நம்முடைய ஸம்பிரதாயத்தில் எம்பெருமானார்க்குத் திருப்பாவை ஜீயரென்று ஸுப்ரஸித்தமான வ்யபதேசமுள்ளது. திருப்பாவையில் மிக்க ஈடுபாடு கொண்டு அதை யநுஸந்திப்பதில் போர அபிநிவிஷ்டரா யெழுந்தருளி யிருந்தது பற்றி அங்ஙனே வ்யபதேச முண்டாயிற்று என்பது தவிர மற்றுமோர் சிறந்த ஹேதுவுமுண்டு. அதாவது, திருப்பாவையில் ஒவ்வொரு பாசுரத்திலும் எம்பெருமானாரைச் சிந்திக்க வேண்டும் படியான சொற்றொடர்கள் அமைந்திருக்கின்றன வென்பதே.இஃது ஏறிட்டுரைக்யம் முறையிலன்றிக்கே ஏற்ற முறையில் விவரிக்கப்படுமாறு காண்க. மீமாம்ஸா சாஸ்திரத்தில் விநியோக பநக்த்வம் என்கிற நியாயம் ஈண்டு பெரும் பாலும் அநுஸந்திக்கத் தக்கதாம்.

மதி நிறைந்த நன்னாள் * என்பதற்கு சந்திரன் நிறைந்த நன்னாள் – பரிபூர்ண சுக்ல பக்ஷம் என்பது ஒரு பொருள். மதி – ஞானம்; அது நிறையப் போகிற நல்ல நாள் என்பது உள்ளுறை பொருள். எம்பெருமானார் அவதரித்த நாள் இருள் தரு மா ஞாலத்தவர்களுக்கு ஞானம் நிறைவதற்கு ஹேதுவான நன்னாளன்றோ ? ‘நிறையப் போகிற என்ன வேண்டு மிடத்து (நிறைந்த) என்றது கால வழுவமைதி யென்பர் தமிழர். “ஆசம்ஸாயாம் பூதவச்ச” என்பது வடமொழி வியாகரணம். யதிராஜ ஸப்ததியில் * அநபாய விஷ்ணு பத ஸம்ச்ரயம் பஜே* என்கிற ஸ்லோகத்தினால்-எம்பெருமானார் விலக்ஷண சந்திரனாக ப்ரதிபாதிக்கப் பட்டுள்ளார். அந்த யதிராஜ சந்திரன் தோன்றிய நன்னாள் என்னவுமாம். சித்திரைத் திங்களானது மனிதர்களுக்கு முதல் மாதம். மார்கழித் திங்களானது தேவர்களுக்கு முதல் மாதம் என்னும் பொருத்தமுளது. இது வியாக்கியானங்களிலும் விசதம். ஆகவே, ஸ்வாமியின் அவதாரம் முதல் மாதத்திலென்கிற ப்ரஸித்திக்குக் குறை யில்லை

அநபாய விஷ்ணு பத சம்ஸ்ரயம் பஜே
கலயா கயா அபி கலயா அபி அனுஜ்ஜிதம்
அகளங்க யோகம் அஜடாசய உதிதம்
யதிராஜ சந்த்ரம் உபராக தூரகம் –ராமானுஜர் ஒரு உண்மையான சந்திரன். பௌர்ணமி நிலவு இறைவனின் பாதமாகிய பாதுகாப்பான வானத்தில் நிலை பெற்றுள்ளதால். சந்திரன், இலக்கங்கள் நிறைந்தது (அதாவது 16 கலைகள்), பரிபூரணமாக இருப்பது, குறைபாடுகள் இல்லாதது, இப்போது நீர் ஆதாரங்கள் காரணமாக, கிரகணத்திற்கு உட்பட்டது அல்ல; எனவே ராமானுஜரும் பாதுகாப்பான விஷ்ணு வாசஸ்தலத்தை நாடியுள்ளார், அனைத்து வித்யாக்களிலும் முழு தேர்ச்சி பெற்றவர்,
புலன் இன்பங்களை அனுபவிக்கும் மக்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளார். அந்த ராமானுஜரை வணங்குகிறேன்

(பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்) திருப்பாற்கடலிலே துயின்ற பரம புருஷன் ஷீராப்திநாதன். நம்மாழ்வார் “உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன்”என்கிற பாசுரத்தினால் பகவத் குணங்களைப் பாலாகப் பேசினார். அவர் தாமே அக்குணங்களைக் கடலாகவும் பேசினார் “சீர்க்கடலையுள் பொதிந்த” என்ற பாசுரத்தினால். இவற்றுக்குச் சார்பாக “அநந்த குண ஸாகரம் பரஹ்ம” (அனந்தமான குண ஸாகரத்தை யுடையவர்] பரம புருஷர் என்றருளினார் ஸ்ரீ பாஷ்யகாரர். அவ்வளவோடு நில்லாமல் அக் குணங்களையே தமது திவ்ய க்ரந்தங்களில் வாய் வெருவுவதும் செய்கின்றார். ஏவஞ்ச, பகவத் குண ஸாகரத்திலே அஸ்தமிதாந்ய பாவராய் இன்புறும் பரமர் எம்பெருமானாரென்க.

மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து” “ஞானங் கனிந்த நலங் கொண்டு”இத்யாதிகளான நூற்றந்தாதிப் பாசுரங்களிற் படியே எம்பெருமானை விட ஓங்கி-அதிசயித்து, உலகத்தை யெல்லாம் ஸ்வாதீனமாக்கிக் கொண்ட உத்தமர் ஸ்ரீராமாநுஜ ரொருவரே. ஒருவர்க்கும் ஒன்றுஞ் சொல்லாதவர் அதமர். நிர்ப்பந்தத்தினால் சொல்லுபவர் மத்யமர். தம்முடைய கருணையினால் தாமே சொல்லுமவர் உத்தமர்.-*ஓராண் வழியா யுபதேசித்தார் முன்னோரென்கிற உபதேச ரத்தின மாலையின் படி உத்தமர் ஸ்ரீராமாநுஜ ரொருவரே யாவர். நூற்றந்தாதியில் மற்றொரு பேறு மதியா தென்கிற பாசுரத்தில் உத்தமனாகவுங் கூறப்பட்டுள்ளார்.

மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக் காள்
உற்றவரே தனக் குற்றவ ராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனை யிந் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்றறி யேனொரு பேதைமையே
.–57-மாதவன் திருவடிகளை உபாயமாகவும் -உபேயமாகவும்-கொள்ளுமவன் உத்தம அதிகாரி எனப்படுவான் .
எம்பெருமானார் அத்தகைய அதிகாரி ஆதலின் அவரை உத்தமன்-என்கிறார் .
த்வயார்த்த நிஷ்ட்டர் -என்றபடி .கீழ் சொன்ன அதிகாரிகளில் அரங்கனையும் சேர்த்து
உத் புருஷன் உத்தர புருஷன் ஆழ்வார்கள் உத்தம புருஷன் ஆச்சார்யர்கள் என்ற படி.

எம்பெருமானுடைய ஆழியும் சங்கும் சார்ங்கமும் வருவதனால்-“அடையார் கமலத் தலர் மகள் கேள்வன்’‘ என்கிற நூற்றந்தாதிப் பாசுரப்படிக்கும், வவ்ருதே பஞ்சபிராயுதைர் முராரே:” என்கிற யதிராஜ ஸப்ததிப் படிக்கும் பஞ்சாயுதாழ்வார்களின் ப்ராதுர்ப்பாவ விசேஷமான எம்பெருமானார் நினைப்பூட்டப் படுகிறார். ஒன்றும் நீ கை கரவேல்— அருமையாகப் பெற்ற அர்த்த விசேஷங்களை ஒன்றும் ஒளித்திடாமல் வர்ஷித்த மேகம் *இராமாநுச னென்னுஞ் சீர் முகிலே. ஆழி யுள் புக்கு எனற விடத்து “உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்’‘ என்கிற ஸ்ரீ பாஷ்யகார திவ்ய ஸூக்தி மிகப் பொருத்தமாக அநுஸந்திக்கத்தகும்.

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது,வெந் தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின் றானென்ன புண்ணீயனோ!
தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர் முகிலே
.–82-சீர் முகில் -என்னும் இராமானுசன் -என்று மாறுக-சீர் -இங்கே வள்ளன்மை குணம்-வள்ளன்மை உடைய முகிலாக சொல்லப் படுபவர் ஸ்ரீ இராமானுசன் -என்க-இன்று கண்டு உயர்ந்தேன் –இராமானுசன் என்னும் கார் தன்னையே -24- காரேய் கருணை இராமானுச -25- திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையால் மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை -26--விசேஷஜ்ஞ்ஞர் அவிசேஷஜ்ஞ்ஞர் என்னும் விபாகம் அற எல்லார்க்கும் பிரகாசித்து இருந்துள்ள குணவத்தா பிரதையை வுடையராய்-குணம் திகழ் கொண்டல் – 60- என்னும்படியே-பரம உதாரரான எம்பெருமானார் என்ன தார்மிகரோ !-கொண்டல் அனைய வண்மை ஏரார் குணத்து எம் இராமானுசன் -74-கார் கொண்ட வண்மை இராமானுச -83-இராமானுசன் –சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் -84உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –இராமானுச என் செழும் கொண்டலே -104

ஆயர் குலத்தினில் தோன்று மணி விளக்கு எம்பெருமானார். இடக் கை வலக் கை யறியாத இடையர்கள் வாழ்ந்த விடம் திருவாய்ப்பாடி. அதில் தோன்றிய அணி விளக்கு ‘ஆயர் பாடிக் கணி விளக்கே!‘ என்று யசோதைப் பிராட்டியா லழைக்கப்படுகிற அச்யுத பாநுவான கண்ண பிரான். ந்ருபசு: என்று ஆளவந்தாரும், வ்ருத்த்யா பசுர் நரவபு : என்று மணவாள மா முனிகளு மருளிச் செய்த படி பசு ப்ராயர்களான அஸ்மதாதிகள் வர்த்திக்குமிடமும் ஆயர் குல மாதலால் இருள் தரு மா ஞாலமாகிற இவ் வாயர் குலத்திலே தோன்றிய அணி விளக்கு-ராமாநுஜ திவாகரர். ”புண்யாம் போஜ விகாஸாய பாப த்வாந்த க்ஷயாய ச, ஸ்ரீமாநாவிரபூத் பூமெள ராமாநுஜ திவாகர “‘ என்னக் கடவதிறே.

”புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கு’‘ என்பது எம்பெருமானார்க்கு மிகச் சிறந்த ப்ரத்யபிஞாபகம். “பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே” என்றபடி பால் போன்ற நிறத்தது சங்கு; ஸ்வாமி யெம்பெருமானாரும் “துக்தோ தந்வத் தவள மதுரம் சுத்த ஸத்வைக ரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதிதராம் யம் பணிந்த்ராவதாரம்” என்றபடி பால் போன்ற திரு நிறந்தவர். இந்தச் சங்கு எங்கு வாழ்ந்ததென்னில் [புள்ளரையன் கோயில்.] “பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் கெழ் குழறும் புனலரங்கமே “ என்று பெரியாழ்வார் புள்ளரையன் கோயிலாகக் கூறிய திருவரங்கத்தில் வாழ்ந்தது. சக்கரம் சங்கு என்ற இரண்டு தில்யாயுதங்களில் சக்கரமானது “கருதுமிடம் பொருது” என்ற அருளிச் செயலின் படியே காசீ விப்லோஷாதி நாநா கார்ய விசேஷங்களுக்காக பாஹ்ய ஸஞ்சாரங்கள் செய்து கொண்டே யிருக்கும். திருச் சங்கு அப்படி யன்றியே “உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம், கண் படை கொள்ளல் கடல் வண்ணன் கைத் தலத்தே” என்னும்படி யிருக்கும். ஸ்வாமி தாமும் “யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” [சரணாகதி கத்யே] என்ற ஸ்ரீரங்கநாதன் கட்டளையைப் பெற்றுக் கோயிலே கதியா யிருந்தவர். ஆகவே ‘கோயில் சங்கு ‘ என்றது ஸ்வாமி யெம்பெரு மானார்க்கு மிகப் பொருத்தம்.

[கலந்து பேசின பேச்சரவம்.] பூர்வாசார்ய ஸூக்திகளோடே கலந்திருக்கும்படி [அவற்றுக்கு முரண்படாதபடி) ஸ்ரீஸூக்தி யருளிச் செய்தவர் ஸ்ரீராமாநுஜர் என்பது இவருடைய திவ்ய ஸூக்தியினால் ஸித்தம். ஸ்ரீபாஷ்யம் தொடங்கும் போதே “பகவத் போதாயந க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம் பூர்வாசார்யாஸ் ஸஞ்சி பு:; தந்மதாது ஸாரேண ஸூத்ராக்ஷராணி வ்யாக்க்யாஸ் யந்தே” என்றருளிச் செய்தவர் ஸ்வாமி யொருவரே யன்றோ. அன்றியும் கலந்து பேசுவதாவது வட மொழி தென் மொழிகளைக் கலந்து மணி ப்ரவாளமாகப் பேசுவது. இத்தகைய கரந்தம் முதன் முதலாகத் திருவாறாயிரப்படியே தோன்றியது. அது பிள்ளானருளியதாயினும் “எதிராசர் பேரருளால்” என்று மணவாள மாமுனிகளருளிச் செய்தபடியே ஸ்வாமி கற்பித்த நடையே யாம் அது. ஆகவே இரு மொழிகளைக் கலந்து பேசின பேச்சுக்கு நிதான பூதர் ஸ்வாமி யென்று குறிப்பிட்டவாறு.

”மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து”என்றதில் ஸ்வாமியின் ப்ரபாவமே நன்கு ஸ்புரிக்கும். “அர்வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வ மாச்ரித்ய, பூர்வே மூர்த்நா யஸ்யாந்வய முபகதா தேசிகா முக்தி மாபு’ என்ற பட்டர் ஸ்ரீ ஸூக்திப் படிக்கும், “பாத கோடீராஸ் ஸம்பந்தேந ஸமித்யமா ந விபவாங் என்ற நிகமாந்த மகா குரு ஸூக்திப் படிக்கும் திருவடி ஸம் பந்தத்தாலே பின்னோர்களையும் திருமுடி ஸம்பந்தத்தாலே முன்னோர்களையும் வாழ் வித்தவர் ஸ்வாமி யெம்பெருமானார்.மிக்குள்ள பிள்ளைக ளென்றது ஸ்வாமிக்கும் பூஜ்யர்களாயிருந்த பூருவர்களை. அவர்களைப் போகாமல் காந்து என்றது தாம் அவதரித்து அவர்களை நற் கதி யெய்துவித்த படியைக் காட்டுமதாம்.

[மணிக் கதவம் தாள் திறவாய்] மணி யென்று ரத்னத்திற்குப் பெயர். நவ ரத்னங்களாகையாலே ஒன்பது என்கிற ஸங்க்யை ஸூசிதமாகிறது. கதவு என்பது ப்தார்த்தங்களைச் சேமித்து வைப்பது. ஸ்வாமியினுடைய திவ்ய க்ரந்தங்களே இங்குக் கதவென்பன. ஸ்வாமி யருளிச் செய்தவை ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம்,கீதா பாஷ்யம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம். நித்யம் என்று ஒன்பது திவ்ய க்ரந்தங்களாகையாலே அவையே இங்கு மணிக் கதவமெனப் படுகிறது. அவற்றைத் திறக்க வேணுமென்றது- அவற்றிலுள்ள அர்த்த விசேஷங்கள் எங்களுக்கும் நிலமாம்படி விளக்கி யருள வேணு மென்றபடி.

*நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்? அருங்கலமே! என்ற இரண்டு விளிகளிலும் ஸ்வாமியின் ப்ரத்யபிஞை நன்கு உண்டாகும். நோற்று என்றது மஹாபாக்ய வசத்தாலே என்றபடி. ஸுவர்க்கம் புகுகின்ற –ஸுவர்க்கமென்று ஸமூஹத்திற்குப் பெயர் ; ஒரு வகுப்பு என்றபடி. ( ) என்பதனால் மிகச்சிறந்த வகுப்பு என்றதாகும். யாதவ பரகாசரிடத்திலே வாசித்துக் கொண்டிருந்து அவர் சாயையிலே ஒதுங்கி யிருந்த ஸ்வாமி அவருடைய கருத்தின் படியே ஆபத்துக்களை யடைந்து போகாமல் நம் போல்வர்களின் பாக்ய வசத்தாலே பெருந்தேவி மணவாளனான பேரருளாளனது பரம க்ருபைக்கு இலக்காகி ஸ்ரீ வைஷ்ணவ வகுப்பிலே புகுந்து அனைவர்க்கும் தாயாயிருந்தவர்.சுவர்க்கம் என்பதற்கு ஸ்வர்க்கமென்றே பொருளானாலும் “யஸ் த்வயா ஸஹஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா” என்ற ஸ்ரீராமாயணத்தின் படி எம்பெருமானோடு கூடப் பெற்றவ ரென்றதாகும். ஸித்தாச்ரமத்தில் நின்றும் வருகிறோமென்று சொல்லிக் கொண்டு வந்த வேடனும் வேடுவிச்சியுமான பகவத் தம்பதிகளோடே கூடப் பெற்றமை கூறினபடி. அருங்கலமேt என்றது அருமை பெருமை வாய்ந்த ஆபரணமே! என்றும், உத்தம ஸத் பாத்ரமே! என்றும் பொருள்படும். நம்முடைய குரு பரம்பரையிலே மஹா பூஷணமாக விளங்குமவர் ஸ்வாமி. “தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதிச பதம் பாதி நாந் யத்ர”என்னும்படிக்குப் பொருத்தமாக உத்தம ஸத் பாத்ரமாயும் விளங்குமவர்.

இப் பாசுரத்தில் கற்றுக் கறவை யென்று தொடங்கி கோவலர் தம் பொற்கொடியே!என்னுமளவுமுள்ள விளி பூர்த்தியாக எம்பெருமானார் தன்மையையே தெரிவிக்குமதாயிருக்கும். கற்று – சொல்லார் தமிழொரு மூன்றும், சுருதிகள் நான்குமெல்லை யில்லா வற நெறியாவும் தெரிந்தவன்? என்ற நூற்றந்தாதிப் பாசுரப்படியே எல்லாக் கல்விகளையும் கற்று; [கறவைக் கணங்கள் பல கறந்து)-பஞ்சாசார்ய பதாச்ரித: என்று யதிராஜ வைபவத்தில் கூறியுள்ளதை விவரிக்கிறபடி. “கலாமங்கேஷு திஷ்டந்தி புவநாநி சதுர்தச” என்கிறபடியே கோக்கள் பதினான்கு லோகங்களையும் தம்முள் வஹிக்குமா போலே சதுர்தச வித்யைகளையும் தம்முட்கொண்டு நன்றாகக் கறக்கு மாசாரியர்கள் பலரிடத்திலும் ஸ்த் ஸம்ப்ரதாயார்த்தங்கள் கேட்டு உய்ந்தவர் ஸ்வாமி. பெரிய நம்பி பக்கலிலே பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்று மந்த்ரார்த்தங்கள் கேட்டும், பெரிய திருமலை நம்பி பக்கலிலே ஸ்ரீராமாயணார்த்தம் கேட்டும் திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே ரஹஸ்யார்த்தங்கள் சிக்ஷித்தும், திருமாலை யாண்டான் பக்கலிலே திருவாய்மொழிப் பொருள் கேட்டும், ஆளவந்தாராழ்வார் ஸ்ரீபாதத்திலே அருளிச்செயல் கற்றும் நல்வார்த்தைகள் கேட்டும் போந்தவராகையாலே கறவைக் கணங்கள் பலகறந் தென்றது ஸ்வாமிக்கு மிகப் பொருத்தம். அதற்கு மேல் செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்] எம்பெருமானை நிர்க் குணனென்றும் நிர் விபூதிகனென்றும் நிர் லக்ஷ்மீகனென்றும் திவ்ய மங்கள விக்ரஹ சூந்யனென்றும் சொல்லுமவர்கள்-செற்றார்; அவர்களுடைய நிறலழிய வாக்கு மிடுக்குத் தொலையும் படியாக, திசை தொறு மெழுந்தருளி வாதப் போர் நிகழ்த்தியவர் ஸ்வாமி “விப்ரம் நிர்ஜித்ய வாதத ” என்கிறபடியே இது குற்றமாகை யன்றிக்கே ஸித்தாந்த ரக்ஷணார்த்தமாகச் செய்ததாகையாலே நற்றமே யாயிற்றென்று காட்ட“குற்றமொன்றில்லாத என்றது. கோ என்னும் வடசொல் நாநார்த்தமாகையாலே ஸ்ரீ ஸூக்தியையும் சொல்லக் கடவது; “யத் கோ ஸஹஸ்ர மபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் ” என்ற விடத்திலுமிது காணலாம். கோ வல்லவர் –மஹா வித்வான்கள். அவர் தம் பொற் கொடி –ஸ்வாமி. கோ அ(ல்)லர்-ஸ்வதந்திரரல்லர்.

ஸ்வாமியின் திருவவதார ஸ்தலமான ஸ்ரீபெரும் பூதூரில் இரட்டித்து ஸேவிக்கும் பாசுரமிது-.பூருவாசாரியர்களும் தங்கள் வியாக்கியானங்களின் முடிவிலே
எம் பெருமானாரை ப்ரஸ்தாவித்திருக்கும் பாசுரமுமிது. இங்கு இவ்வளவே நாமெழுதப் போதும். ஆயினும் சிறிது விவரிக்கலாகிறது. இப் பாட்டில் நற் செல்வனென்றது ஸ்வாமியைக் கருதி.நற் செல்வ னென்பதை வடமொழியிற் கூற வேணுமானால் லக்ஷ்மி ஸம்பந்ந: என்ன வேணும். ஸ்ரீராமாயணத்தில் *லக்ஷ்மண லக்ஷ்மிஸம்பந்த:* என்னப்பட்ட இளைய பெருமாளே யன்றோ இளையாழ்வாராகத் திருவதரித்தவர் . அவர் ”அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்று விபவாவதாரத்திலே அடிமை செய்யப் பெற்றார் ; இவர் “நித்ய கிங்கரோ பவாநி” என்று அர்ச்சா ஸ்தலங்களிலே ஒப்புயர்வற்ற அடிமைகள் செய்யப் பெற்றார். “மன்னிய தென்னரங்கா புரி மா மலை மற்று முவந்திடு நாள்

இப் பாட்டில் கள்ளத் தவிர்ந்து கலந்தென்றது உயிரான சொற்றொடர். ‘‘கிம்
தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்மாப ஹாரிணா” என்றபடி ஆத்மாபஹாரக்
கள்வமென்றுண்டு; அது தவிர மற்றொரு கள்வம் கேண்மின்; “ஏகஸ் ஸ்வாது ந
புஞ்ஜீத புஞ்ஜீத பஹுபிஸ் ஸஹ “‘இன் கனி தனி யருந்தான்” என்கிறபடியே
போக்ய பதார்த்தங்களைப் பலரோடுங்கூடி யநுபவித்துக் களிக்கை யன்றிக்கே அசலறியாதபடி யனுபவிக்கை கள்வம்; எம்பெருமானார்க்கு முற்பட்ட ஆசாரியர்களிடத்து இத்தகைய கள்வமிருந்தது; அதனைத் தவிர்ந்தவர் ஸ்வாமி யொருவரே–தவிர்ந்து எல்லாரோடுங் கலந்து அனுபவித்தவர். “பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம் புக்கார் “ என்றதும் ஸ்வாமியின் பெருமையை நினைப்பூட்டும். பாவைக்களமென்பது கால க்ஷேப மண்டபம்; அதில் எல்லாரும் புகப் பெற்றது ஸ்வாமிக்கு முன்பு இல்லை; அதிகார பரீக்ஷை பண்ணிப் பலர் விலக்கப் பட்டிருந்தார்களன்றோ-ஆசைக்கு மேற்பட அதிகார ஸம்பத்தி யில்லை யென்று கொண்ட ஸ்வாமியின்காலத்தில் தான் பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம் புக்கார். அதனை நன்கு காட்டின படி.

இப் பாட்டில் “செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின” என்பதில் ஸ்வாமியின் திவ்ய ப்ரபாவமொன்று நினைவுக்கு வரும். ஸ்வாமி யாதவ ப்ரகாச ரிடத்திலே பூர்வபக்ஷ வேதாந்தம் வாசித்தபோது ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம ‘ஐத தாத்ம்ய மிதம் ஸர்வம் ‘தத் த்வமஸி இத்யாதி ஸ்ருதி வாக்யங்களுக்கு அவர் அபார்த்தம் கூற, ஸ்வாமி இப்படி யன்றோ பொருள்’ என்று உபபந்நமான அர்த்த மருளிச் செய்ய, மேல் வாய் திறக்க மாட்டாதே ஹுங்காரமே பண்ணிப் போந்ததாக வைபவ நூல்கள் விளம்புகின்றன. அது இங்கு நினைவுக்கு வரும். ஸ்வாமி திருவாய் மலர்ந்தருளியது செங்கழுநீர் வாய் நெகிழ்ந்தமை; யாதவர் மறு மாற்றம் சொல்ல மாட்டாமே வாய் மூடிக் கிடந்தது ஆம்பல் வாய் கூம்பினமை. மேலே *செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்” என்றதும் ஸ்வாமிக்கு மிகப் பொருத்தம். செங்கல் பொடிக் கூறை=*காஷா
யேண க்ருஹீத பீத வஸநா* என்று ஸப்ததியில் போற்றப்பட்ட திவ்ய மூர்த்தி. வெண் பல்=*அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே . என்னும்படி மஹா விரக்த ஸார்வ பெளமராகையாலே “யத் தஸ்மை திஷ்ட தேந்ய: க்ருபணமசரணோ தர்சயந் தந்தபங்க் தீ” என்னும்படி பிறர் பாடே பல்லைக் காட்டப் பெறாதவர். தவத் தவர் மம . மம என்னாதே ‘தவ, தவ’ என்று சேஷத்வம் பரிமளிக்க நிற்பவர். தங்கள் திருக் கோயில்= அமுதனாருடைய ஆதீனத்தி லிருந்த கோயில் தங்கள் திருக் கோயிலென்னும்படி தம்மதீனமாகப் பெற்றவர். சங்கிடுவான்—’சங்க:’ என்ற வடமொழி சங்கு என்று திரிவது போல் சங்கு:’ என்ற வடமொழியும் சங்கு எனத் திரியும். இச்சொல் திறவு கோல் என்னும் பொருளைத் தரும். ஆறாயிரப்படியில் இப் பொருளும் பணிக்கப் பெற்றது . ஆழ்வான் மூல மாகத் திருக் கோயில் திறவு கோலைப் பெற்ற இதிஹாஸம் இச் சொற்றொடரில் அநு ஸந்திக்கலாகிறது.

இப் பாட்டில் “உனக்கென்ன வேறுடையை” என்னுஞ் சொற்றொடர் நிதியானது. உமக்கு மட்டும் அஸாதாரணமான பெருமை என்னே! என்று வியந்து கூறப் பட்டுள்ளது. ஸ்வாமிக்கு முன்னே நம்மாழ்வாரும் ஸ்ரீமந் நாதமுனிகளும் ஆளவந்தாரும் நம் தர்சனத்திற்கு நிர்வாஹகர்களா யிருக்கச் செய்தேயும், ‘நம்மாழ்வார் தரிசனம்’ என்றோ, ‘நாதமுனிகள் தரிசனம்’ என்றே ‘ஆளவந்தார் தரிசனம் என்றோ வ்யவஹாரம் வாராமே ‘எம்பெருமானார் தரிசனம்’ என்றே வ்யவஹாரம் நிகழ்ந்து வருகைக்கீடான ஸ்வாமியின் அஸாதாரணமான பெருமை இங்கு அநு ஸந்திக்க வரியது. மாற்றாரை மாற்றழிக்க வல்லானென்ற விடத்தில் பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹநச் சார்வாக சைலாசநி: பெளத்த த்வாந்த நிராஸ வாஸர பதிர் ஜைநேப கண்டீரவ:, மாயாவதி புஜங்க பங்க கருட:” * தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும்…… நீசரும் மாண்டனர்* “சாறுவாக மத நீறு செய்து” இத்யாதிகள் நினைவுக்கு வரும்.

யதிராஜஸப்ததியில் ” அமுநா தபநாதிசாயி பூம்நா யதிராஜேந நிபத்தநாயகஸ்ரீ :, மஹதீ குருபங்க்திஹாரயஷ்டி” என்று பணித்தபடியே நம்முடைய குருபரம்பரா ஹாரத்தில் நாயகமணியாய் விளங்குமவர் ஸ்வாமி. [நந்தகோபன்]]தனக்கு ஒளரஸ புத்திரனில்லாமல் ஆயர் புத்திரனல்லன் அருந்தெய்வம் “ என்னப்பட்டவொரு தெய்வத்தைப் புதல்வனாகக் கொண்ட நந்தகோபன் போலே ஸ்வாமியும் ‘யதிராஜ ஸம்பத் குமாரா !’ என்னும்படி செல்லப் பிள்ளையைத் தம்புத்திரராகப்பெற்றவர். (உடைய] உடையவரென்கிற திருநாமம் ஸுசிதமாகிறதென்று கொள்ளக்குறையில்லை. (கோயில் காப்பான்] •ஸ்ரீமந்! ஸ்ரீரங்கச்ரிய மநுபத்ரவாமநுதிநம் ஸம்வர்த்தய என்னும்படி ஸ்ரீரங்க ஸ்ரீயைக்காத்தருளினவர் ஸ்வாமி. (கொடித்தோன்றும் தோரணவாசல் காப்பான்] “உபய வி பூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷிக்தா!” என்பது ஸ்வாமிக்குக் கட்டியம். கீழ் கோயில் காப்பானே ‘ என்பதனால் லீலா விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் சொல்லிற்று, இங்கு நித்ய விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம்
சொல்லுகிறது. ”கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்” “நெடுவரைத்தோரணம் நிறைத்து எங்கும் தொழுதனருலகே” என்னும்படி கொடித் தோன்றும்தோரண வாசல் நித்ய விபூதிவாசல்; அதையும் பிறர்புகாதபடிகாத்தருள்பவர்ஸ்வாமி.

அம்பரத்தையும் தண்ணீரையும் சோற்றையும் அறம் செய்தவர் ஸ்வாமி.
”அம்பரம் வ்யோம வஸ்த்ரயோ என்றநிகண்டின்படி அம்பரமாவது ஆகாசம்;
பரமாகாச மெனப்படுகிற பரமபதம். அதையும், விரஜையாகிற தண்ணீரையும்,
அந்நம் ப்ரஹ்மேதி வ்யஜாநாத் என்று உபநிஷத்தில் அன்னமாகச் சொல்லப்
பட்ட பரப்ரஹ்மாநுபவத்தையும், அறஞ்செய்யுமெம்பெருமான்-க்ருபாமா த்ரப்ரஸந்நா
சார்யராய் உபகரித்தருளினவர் எம்பெருமானார். மேலே” அம்பர மூடறுத்து
ஓங்கியுலகளந்த வும்பர் கோமான்” என்றதும் எம்பெருமானாரை நன்கு நினைப்
பூட்டும். ஆளவந்தாருடைய சரம திருமேனியை ஸ்வாமி ஸேவிக்கப்பெற்றபோது
“ஆளவந்தாரோடே நான் சேர்ந்து வாழப்பெறில் பரமபதத்திற்குப் படிகட்டி
யிருப்பேனே!” என்று ஸ்வாமி பணித்ததாக ப்ரஸித்தி. ஆளவந்தாரோடே
சேர்ந்துவாழப் பெறாமற் போனாலும் *யத்பதாம் போருஹ த்யாந ஸ்லோகப்படியும்
“ஏகலவ்யனன்றோ நான்” என்ற ஸூக்திப்படியும் அவருடைய விலக்ஷணாநுக்ரஹ
பாத்ரமாயிருக்கப் பெற்ற பெருமையினால் நித்யவிபூதிக்கும் லீலாவிபூதிக்கும்
இடைச்சுவர் தள்ள உபய விபூதியையும் ஓரு போகி யாக்கினவர் நம் ஸ்வாமி
யென்று ப்ரஸித்தமாயிற்று. “மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தங்
காண்மினே” என்ற விடத்தே வியாக்கியானத்தில் உபய விபூதிக்கும் இடைச் சுவர்
தள்ளின பெருமை பட்டருடையதாக அருளிச் செய்யப்பட்டிருந்தாலும் அப் பெருமை ஸ்வாமிக்கு கிம்புநர் ந்யாய ஸித்தமே. அம்பரத்தை- பரமாகாசத்தை,ஊடறுத்தவர் என்றதாயிற்று.
  இப் பாசுரம் மூலமாகவே ஸ்வாமிக்குத் திருப்பாவை ஜீயரென்று வ்யபதேச முண்டாயிற்றென்றும் ப்ரஸித்தமாதலால் இங்கு நாம் வேறு எதுவும் விவரிக்க வேண்டிற்றிலை. ஆனாலும் கீழும் மேலுமுள்ள விவரணங்களுக்குச் சேர இங்கு மொன்றுரைப்போம். கந்தங்கமழுங்குழ ! என்று கேச பாசத்தை யிட்டுச் சொன்னது ஸ்வாமியின் திருவுள்ளத்திற்கு மிகவுகப்பான ஸம்போதனமாம். மதாந்தரஸ்தர்களான யதிகள் சிகையை வஹியாதே முண்டனம் செய்து போருவர்கள்;அங்ஙனன்றிக்கே “காரிசுதன் கழல் சூடிய முடியும் கன நற்சிகை முடியும் “ என்றும்
“கமநீய சிகாநிவேசம்” என்றும் ”சிகயா சேகரிணம் பதிம் யதீநாம்” என்றும் நம் முதலிகள் உள் குழைந்து பேசும்படி கமநீய சிகா பந்தத்தோடு ஸ்வாமி ஸேவை
ஸாதித்த வழகு நெஞ்சு குளிர அனுபவிக்கப்பட்டதாயிற்று.

திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம்
எழுந்தருளி ரஹஸ்யார்த்த விசேஷம் பெற்று அவ்விடத்திலேயே அதைச்சிலர்க்கு உபதேசித்தருளின இதிஹாஸம் இப்பாட்டில் நன்கு ஸூசிதமாகிறது
தோரண விளக்கு, குத்துவிளக்கு என்று இருவிளக்குண்டு. தோரணவிளக்கு
ஸ்தாவரமாயிருக்கும். குத்துவிளக்கு ஜங்கமமாயிருக்கும். ஸ்வஸ்தானத்திலேயே ஸ்தாவரராகவிருந்த திருக்கோட்டியூர் நம்பி தோரண விளக்காவார். பலகால் கதாகதம் செய்தருளின எம்பெருமானார் குத்துவிளக்காவர். இந்தகுத்துவிளக்கு எரிய நம்பிபக்கலிலே அர்த்தவிசேஷம் கேட்டு ஜ்வலிக்கஎன்றபடி. [கோட்டு] “ஏகதேச விக்ருதம் அநந்யவத் பவதி” என்கிற வடமொழி வியாகரண முறையின்படி கோட்டி என்றதாகக் கொள்க. கோஷ்டீ என்னும் வட சொல் கோட்டியென்று தானே திரியும். திருக்கோட்டியூரென்றதாயிற்று. இவ்விடத்திலேயே [கால் கட்டு] ரஹஸ்யார்த்த முபதேசித்தருளா நின்ற நம்பிகள் தம் திருவடியைத் தொட்டு சபதம் செய்து கொடுக்கும்படி நியமித்தாரன்றே;அந்த கால் கட்டு ஸூசிதமாகிறது. (மேலேறி] ஏற்கெனவே தம்மை அநுவர்த்தித்துக் கொண்டிருந்த சில விலக்ஷணர்களுக்கு உபதேசிக்கத் திருவுள்ளம் பற்றிய ஸ்வாமி ஸன்னிதியின் மேல் தளத்தி லேறின படியைக் காட்டுகிறது. இப்படி ஆசார்ய திவ்யாஜ்ஞையைக் கடந்து உபதேசித்திருப்பரோ சாஸ்த்ர வச்யரான ஸ்வாமி? என்கிற சங்கைக்குப் பரிஹாரம் செய்கிறது [மலர் மார்பா!) என்னும் விளி. ஸ்வாமியினுடைய ஹ்ருதய வைசால்யமே அதற்குக் காரணமென்று காட்டினபடி. மலர்ந்த ஹ்ருதய முடையவரே! என்று விளித்தபடி.

இப்பாட்டில் ‘செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பங்கொடுக்கும் விமலா! என்னும் விளிகள் ஸ்வாமிக்கு மிகவும் ஏற்றிருப்பவை. வடமொழியில் ஆர்ஐவமெனப்படும் குணம் தமிழில் செப்பமெனப்படும். மநோ வாக் காயங்களின் ஒற்றுமையாகிற கரண த்ரய ஸாரூப்யமே ஆர்ஜவம்; அது தான் செப்பம். ஸ்வாமியினுடைய திவ்ய ஸ்ரீஸூக்திகளை ஸேவிக்கும் போது ஒவ்வோரக்ஷரமும் அவருடைய ஆர்ஜவத்தை யன்றோ தெரிவிக்கின்றது! பர நிந்தை முதலியவற்றை நெஞ்சாலும் நினையாமலும் வாக்கிலும் காட்டாமலுமிருந்த
பெருமை ஸ்வாமிக்கும் ஸ்வாமியின் புநரவதார பூதரான மணவாள மா முனிகளுக்கும் அஸாதாரணமன்றோ. [திறலுடையாய்!] திறலாவது பராபிபவந ஸாமர்த்தியம்.நீறு பூத்த நெருப்புப் போலே யிருந்து இதர வாதிகளின் துர் வாதங்கள் தலையெடுக்க வொட்டாதபடி செய்தருளுமாற்றலும் ஸ்வாமிக்கு அஸாதாரணம்.
[செற்ர்க்கு வெப்பம் கொடுக்குப்] செற்றாராகிறார் எம்பெருமானுடைய பெருமையை ஸஹியாதே “குணிநமபி குணைஸ் தம் தரித்ராணம் – ஆஹு” என்ற பட்டர் ஸ்ரீ ஸூக்திப்படியே அப்பெருமானை ஸர்வ தரித்ரனாகப் பேசி வைத்தவர்கள்;அவர்களுக்கு வெப்பம் கொடுத்தவர் ஸ்வாமி. வெப்பமாவது ஜ்வரம். பீதி ஜ்வரம். ‘தஸ்மை ராமாநுஜார்யாய நம : பரம யோகிநே, ய: ஸ்ருதி ஸ்ம்ருதித்ராணாம் அந்தர் ஜ்வரமசீசமத்’ என்று ஸ்வாமி ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரங்களுக்கிருந்த அந்தர் ஜ்வரத்தைப் போக்கடித்ததாகச் சொல்லிற்று. அதை எங்கே போகவிட்டார் தெரியுமோ? செற்றருடைய உள்ளத்திலே போக விட்டாராயிற்று. திருவடி இலங்கையைக் கொளுத்தினாரே, எந்த நெருப்பைக் கொண்டு கொளுத்தினாரென்று கேட்க, வாலில் அரக்கர் பற்றவைத்த நெருப்பினால் என்றார்களாம்; அன்று அன்று; சோகவஹ்ம் ஜநகாத்மஜாயா : ஆதாய தேநைவததாஹ லங்காம்’ என்று பிராட்டி திரு வயிற்றிலே மண்டிக் கிடந்த சோகாக்னியை அங்கு நின்றும் கிளப்பி அதனாலேயே இலங்கையைக் கொளுத்தினா ரென்றார் மர்மஜ்ஞர். அது போலவே யிங்கும். ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரங்களின் அந்தர் ஜ்வரத்தை யெடுத்துச் செற்றார் வயிற்றி லெறிந்தபடி.

“வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்” என்னும் போது ஸ்வாமியின் பெருமை தவிர வேறு எதுவும் நினைவுக்கு வாராது. ஸ்வாமிக்கு முன்பிருந்த ஆசார்யர்களை யெடுத்துக் கொண்டு அவர்களுக்கு எத்தனை சிஷ்யர்கள்? என்று கேட்டால் இருவர் மூவர் நால்வர் ஐவர் என்ன வேண்டுமத்தனை;ஸ்வாமியின் சிஷ்ய வர்க்கங்களைப் பற்றிக் கேட்டாலோ “ஏகாந்திபிர் த்வாதசபிஸ் ஸஹஸ்ரை: ஸம் ஸேவிதஸ் ஸம்யமி ஸப்த சத்யா” என்று உடனிருந்தவர்கள் பேசும்படியாயிருக்கும் அன்றியும், மஹா ஜ்ஞான நிதிகளாகத் தேர்ந்தெடுத்து எழுபத்து நான்கு ஸிம்ஹாஸநாதிபதிகளென்று ஸ்தாபிக்கப் பட்டுள்ளார்கள்.அவர்கள் தாம் எப்படிப்பட்டவர்களென்னில்; [ஏற்ற கலங்கள்] ஆசார்ய ஸார்வ பெளமர்க்கு ஏற்றிருக்குந் தன்மையை யுடைய ஸத்பாத்ர பூதர்களான ஸச் சிஷ்யர்கள். பின்னையும் எப்படிப்பட்டவர்களென்னில்; (எதிர் பொங்கி மீதளிப்ப] “சிஷ்யாதிச்சேத் பராஜயம்” என்னும்படி ஆசார்யரையும் விஞ்சினவர்களா யிருப்பர்கள்.காச்மீரத்தில் சாரதா பீடத்தில் ஸ்வாமியும் ஆழ்வானும் போதாயந விருத்தியைக் கடாக்ஷியா நிற்க அதற்கு இடையூறு விளைந்த போது ‘க்ரந்தத்தைப் பூர்த்தியாகப் பார்க்க முடிய வில்லையே!) என்று ஸ்வாமி க்லேசிக்க, அந்த வருத்தி கரந்தத்தைப்பூர்த்தியாகக் கடாக்ஷித்து அத்தனையும் ஹ்ருதி தரித்துக் கொண்டிருந்த ஆழ்வான் “இங்கே விண்ணப்பஞ் செய்யவோ? இரண்டாற்றின் நடுவே விண்ணப்பஞ் செய்யவோ ‘ என்று பணித்தாரென்று ப்ரஸித்தம். இப்படியே யன்றோ மேன் மேலுமுள்ள சிஷ்ய வர்க்கங்களின் சரித்திரமும். அவர்கள் இன்னமும் எப்படிப் பட்டவர்களென்னில்;[மாற்றாதே பால் சொரியும்] அவ்வாசாரியர்களின் பரம்பரை பெரும்பாலும் அநுஸ்யூதமாக நிகழ்ந்து வந்து பால் போன்ற அர்த்த விசேஷங்களைச் சொரிந்து கொண்டிருக்கும்படி சொன்னவாறு. இத்தகைய வள்ளல் பெரும் பசுக்களை ஆற்றப் படைத்தவர் ஸ்வாமி. ஆற்ற அபரிமிதமாக. மேலே”‘மாற்றாருனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்” என்றவிடத்து யாதவ ப்ரகாசர் வந்து பணிந்த விருத்தாந்தம் மிகப் பொருத்தம்.

திங்களுமாதித்தியனு மெழுந்தாற் போல் அங்கணிரண்டுங் கொண்டு ” என்றதில் ஸ்வாமியினுடைய உபய வேதாந்த க்ரந்த ப்ரவசநபடுத்வம் பேசப்படுகிறது. திங்களும் ஆதித்தியனும் ஏக காலத்தில் எழுவது அஸம்பாவிதம். ஆதித்யனெழும் போது தீக்ஷ்ணதையும், திங்கள் எழும் போது தண்ணளியும் அநுபவிக்கலாயிருக்கும்.உபய வேதாந்த ப்ரவர்த்தகரான ஸ்வாமி காலை வேளைகளில் ஸ்ரீபாஷ்ய காலஷேபம் ஸாதிப்பதும், மாலை வேளைகளில் அருளிச்செயல் [பகவத்விஷய ] கால ஷேபம் ஸாதிப்பது மாயிருப்பவர். மதாந்தர ப்ரத்யாக்க்யாந தத் பரமான ஸ்ரீபாஷ்யத்தின் அர்த்தங்கள் அநுபவிக்கப்படும் போது தீஷ்ணதையும், செவிக்கினிய செஞ்சொல்* சீர் கலந்த சொல் ஈரச் சொல்.* என்ன நின்ற அருளிச் செயல்களின் அர்த்தங்கள் அநுபவிக்கப்படும் போது ஸெளம்யதையும் காணலாயிருக்கும். இரண்டிலுமிரண்டு முண்டானாலும், “இப்படிச் சொல்லுகிறதும் ஊற்றத்தைப் பற்ற” என்ற ஸ்ரீவசந பூஷண ப்ரக்ரியையிலே கொள்ளக் கடவது. மேலே அங்கணிரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், என்ற விடத்திலும் உபய வேதாந்தப் பொருள்களையும் எங்களுக்குக் கடாக்ஷித் தருள வேணுமென்ற பிரார்த்தனை யுள்ளது. “சஷுஷ்மத்தாது சாஸ்த்ரேண” என்றபடி கண்ணென்பது சாஸ்த்ரமேயாம். உபய வேதாந்தங்களும் ஸ்வாமிக்கு இரண்டு திருக் கண்களென்க. ஒன்றில் ஆதரமும் மற்றொன்றில் அநாதரமும் கொண்டிருக்கையே சாபமாகும். அது தொலைய வேணுமென்றவாறு. ஸ்வாமி பக்கலிலே சிஷ்யர்கள் பிரார்த்திப்பது இது.இதற்கு மலையும் முழஞ்சும் விலக்ஷணமாயிருக்கும். முந்நூறாண்டு வேதமோ தின பரத்வாஜ மஹர்ஷிக்கு தேவேந்திரன் வேதங்களை மலையாகக் காட்டினனென்று வேதமே சொல்லுகையாலே வேதமே மலையாகக் கொள்ள வுரியது. அதில் முழஞ்சாவது தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம்* என்னும்படி தர்ம க்ஷ்மங்கள் பொதிந்திருக்குமிடம், அதிலே மன்னிக் கிடந்து லௌகிக விஷயங்களில் திருக் கண் செலுத்தாதே* ஆத்மயேவ ஆத்மாநம் பச்யந் ஸுகித்திருப்பவர் ஸ்வாமி-(அறிவுற்று.) ‘நாம் அவதரித்தது எதற்காக?’ என்று தம் அவதார ப்ரயோஜனத்தைக் குறிக் கொண்டு என்றபடி-“அமர கோச” தீ விழித்து- புத்திர் மநீஷா திஷணா தீ:என்றவிடத்து புத்தி பர்யாயமாகப் படிக்கப்பட்ட கடாக்ஷமே என்பது இங்குத் தீ யென நிற்கின்றது. அது விழித்கிருப்பது-விகஸித்திருப்பது ஸ்வாமிக்கே யென்க-[எப்பாடும் பேர்ந்து உதறி] ஸ்ரீரங்கம் கரிசைல மஞ்ஜந கிரிம் தார்க்ஷ்யா த்ரிஸிம்ஹாசலௌ ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம். ஸ்ரீமத் த்வாராவதீ ப்ரயாக மதுரா யோ த்யா கயா புஷ்கரம் ‘ஸாளக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமாநுஜோயம் முநி- என்கிறபடியே எண்டிசையும் பாத சாரத்தாலே ஸஞ்சரித்து,ஆங்காங்கு விபக்ஷர்களுண்டாகில் அவர்களை உதறி யருளினவர் ஸ்வாமி.

”அறிவுற்றுத் தீ விழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்துமுழங்கிப் புறப்படும் சீரிய சிங்கம்” நம் யதி ஸார்வபெளம ஸிம்ஹம் தவிர வேறுண்டோ? நூற்றந்தாதியில் “கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமானொலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயமிராமாநுசன்” என்று சீரிய சிங்கமாகச் சொல்லப்பட்டவர் ஸ்வாமி. உலகில் சிங்கம் ஹேயமான வுணவை யுண்டு செருக்கியிருக்கும்; யதிராஜ ஸிம்ஹம் திருமங்கையாழ்வா ருடைய திவ்ய ஸூக்திகளை யுண்டு அதனால் தடித்திருக்கு மென்கிறார் அமுதனார்.

இதில் “வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி” என்றதை உயிராகக் கொள்க. “கொல்வது கோல்’ என்னுமாபோலே வெல்வது வேல் எனப்படும். கண்ணபிரான் திருக்கையில் வேலாகச் சொல்லப்படுவது திருவாழியாழ்வான். ஸ்வாமி திருக்கையில் வேலாகச் சொல்லப்படுவது த்ரிதண்டம். ஸப்ததியில் ‘ விஸ்வக்ஸேநோ யதிபதிரபூத் வேத்ரஸாரஸ் த்ரிதண்ட:” என்று சேனையர் கோன் ஸ்வாமியாகத் திருவவதரிக்க, உபயவிபூதி நிர்வாஹ நிபுணமாய் அவருடைய திருக்கையிலுள்ள திருப்பிரம்புதானே த்ரிதண்டமாயிற்று என்னப்பட்டது.அந்தத் திருப்பிரம்புக்கு எவ்வளவு சக்தியோ அவ்வளவும் ஸ்வாமியின் த்ரிதண்டத்துக்கு முண்டென்க. தாடீபஞ்சகத்தில் ஸ்வாமிக்குப் பேசவேண்டிய பெருமைகளெல்லாம் த்ரிதண்டத்தின் மேலும் யஜ்ஞஸூத்ரத்தின் மேலும் ஏறிட்டுப் பேசப்பட்டுள்ளன. அங்ஙனம் பேசுகையில் “பாஷண்டஷண்ட கிரிகண்டந வஜ்ர தண்டா:…ராமாநுஜஸ்ய விலஸந்தி முநேஸ் த்ரிதண்டா?” என்றும், “தத்தேராமா நுஜார்ய: பரத்திகதக சிரோ வஜ்ரதண்டம் த்ரித்தண்டம்” என்றும் பேசப்பட்டதுண்டே,அதுதான் வென்று பகை கெடுக்குமென்றதற்கு விவரணம். அப்படிப்பட்டகையில் வேலாகிய முக்கோலுக்கு மங்களாசாஸனம் செய்தது முக்கோல் பிடித்த முனிக்கே மங்களாசாஸனம் செய்தபடியாமென்றுணர்க.

தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கஞ்சன் கருத்தைப் பிழைப்பித்து அவன்
வயிற்றில்நெருப்பென்னநின்றவர்ஸ்வாமி.
கம்ஸன் கண்ணனிடத்திலே அனர்த்தம்
விளைக்க வழிதேடியிருந்ததுபோல, நம் ஸ்வாமிக்கு அனர்த்தம் விளைக்க வழிதேடியிருந்தவர் ஒருவர் ப்ரஸித்தர். அவருடைய கருத்தைப் பிழைப்பித்து [பிழைப்படச்
செய்து] ஓரிரவில் ஒளித்து வளர்ந்தவர் ஸ்வாமி. விந்த்யாடவியெங்கே! ஸத்யவிரத க்ஷேத்ரமெங்கே !ஓரிரவில் அங்கு நின்றும் இங்கு வந்து சேர்ந்தவர் தம் ப்ரபா
வங்களையெல்லாம் ஒளித்துவைத்திருந்தாரத்தனையன்றே
. அன்ன வர் ஆஸுர ப்ரக்ருதிகளின் வயிற்றில் நெருப்பென்ன நின்றார். ‘ பாஷண்ட ஸாகர மஹாபடபா முகாக் :” என்று நெருப்பாகவேயன்றோ பேசப்பட்டார் ஸ்வாமி. [நெடுமால்-வியாமோஹங் கொண்டவர். ” அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹத:.’

இதில் *ஆலினிலையாய்! * என்ற விளி இன் சுவை மிக்கது. ஆலின் இலை யதன் மேல் பைய வுயோகு துயில் கொண்ட பரம் பரன் கண்ணன்.[ஆலின் நிலையாய்!ஆலமரத்தின் நிலைமை போன்ற நிலைமை யுடையவர் ஸ்வாமி. எம்பெருமான் பாஹச் சாயா மவஷ்டப் தோ யஸ்ய லோகோ மஹாத்மந.” என்கிறபடியே தன் பாதச் சாயையிலே ஒதுங்கினவர்களுக்கு நிழல் கொடுத்துத் தாபம் தீர்ப்பவன்.ஸ்வமியோ வென்னில் “ப்ராப்தாநாம் பாத மூலம் ப்ரக்ருதி மதுரயாச் சாயயா தாப ஹ்ருத் வ ” என்றாப் போலே அடி பணிந்தார்க்குத் திருவடி நிழல் கொடுத்துத் தாபம் தணிப்பவர். இதுதானே ஆலின் நிலைமை. நூற்றந்தாதி தொடங்கும் போதே “பல் கலையோர் தாம் மன்ன வந்த விராமாநுசன் சரணாரவிந்தம்” என்றன்றோ தொடங்கிற்று: பல் கலையோர் தாம் மன்ன வந்த என்ற விசேஷணத்தை இராமானுசனுக்கு ஆக்குவது போலவே அவருடைய சரணார விந்தத்திற்கு மாக்கலாமே. “நயக்ரோதோ பஹுபாத் வட ” என்ற அமர கோசம் ஆல மரத்திற்கு [பஹுபாத்] என்று பெயர் படித்தது. உண்மையில் ஆல மரமானது மற்ற மரங்களைப் போலன்றிக்கோ அபரிமிதமான பாதங்களை யுடைத்தாயிருக்கும். ஸ்வாமிக்கும் திரு வடிகள் அபரிமிதங்கள். [சிஷ்யர்களே திருவடிகள் இப் பாட்டில் சொன்ன ‘சங்கம் பெரும் பறை பல்லாண்டிசைப்பார் கோல விளக்கு கொடி விதானம்‘ என்னுஞ் சொற்களை ஊன்றி நோக்கினால் இவை யெல்லாம் ஸ்வாமியே யென்னப் பொருந்தும். [சங்கம்] த்ருவனிடஞ்சென்ற பகவான் சங்க ஸ்பர்சத்தினால் அவனை ஸர்வஜ்ஞ னாக்கினதாகப் புராணங் கூறும்; அது போல, ஸ்வ ஸம்பந்தத்தாலே ஆழ்வான் ஆண்டான் அனந்தாழ்வான் எம்பார் பிள்ளான் முதலானாரை ஸர்வஜ்ஞராக்கினவர் ஸ்வாமி.[பறை] பகவத் குணங்களை எங்கும் பறை சாற்றினவராகையாலே தாமே பறை யென்னத் தகுவர். (பல்லாண்டிசைப்பார்] பெரியாழ்வார் போலே எம்பெருமானுக்குத் தாம் பல்லாண்டு பாடினது மட்டுமன்றியே பல்லாயிரவரைப் பாடுவிக்கவும் வல்லராயிருந்தார். (கோல விளக்கு] ஸ்ரீவைஷ்ணவகுல ப்ரதீபமாயிருந்தவர் –(கொடி] ‘ஸ்ரீமல்லமண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜ’மென்று பிறரைச் சொல்லும்போது ஸ்வாமிக்குச் சொல்ல வேணுமோ? விசிஷ்டாத்வைத ஸித்தாந்த விஜயத்வஜமென்க. (விதானம் ] கண்ணன் வடமதுரையிலிருந்து திருவாய்ப்பாடிக் கெழுந்தருளும்போது “தொடுத்து மேல் விதானமாய பௌவ ரராவணை” என்ற திருச்சந்தவிருத்தத்தின்படியே விதானமாயிருந்தவர் ஆதிசேஷனான திருவனந் தாழ்வான்; அவரேயன்றோ ஸ்வாமியாக வடிவெடுத்தார்.

யஜ்ஜ மூர்த்தி போல்வாரான பல பல அத்வைதிகள் முதலிலே ஸ்வாமியோடு எதிரம்பு கோப்பவர்களாய் (கூடாதவர்களாய்] இருந்து பிறகு கூடினவர்களாய் ஸ்வாமிக்கு வெற்றியைத் தந்தார்கள். அவர்களை வெல்வதற்கு உறுப்பாயிருந்த சீர்களை யுடையவர் ஸ்வாமி. அந்தச் சீர்கள் எவை யென்னில்; கேவலம் வைதுஷ்யம் மட்டுமல்ல; திவ்ய மங்கள விக்ரஹ குணங்களும், திவ்யாத்ம குணங்களும் பல பல. ஸ்வாமியின் வடிவழகை ஸேவித்த மாத்திரத்திலேயே யீடுபட்டவர்கள் பல பலர். கோவிந்தா] பசுக்களை மேய்ப்பதனாலே கண்ணன் கோவிந்தனாயினன்-ஸ்ரீஸக்திகளும் கோ சப்தார்த்த மென்று கீழே காட்டினோமாகையாலே ஸகல ப்ரமாணங்களையும் ”பிபேத் யல்ப ஸ்ருதாத் வேதோ மாமயம் ப்ரதரி யதி” என்னும்படியான பீதியைப் போக்கி ரக்ஷித்தமையாலே ஸ்வாமியும் கோவிந்தர்..-பசு ப்ராயர்களான நம்மைக் காத்தவரென்றுமாம்.

“குறை யொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னைப் பிறவி பெறுந் தனை புண்ணியம் யாமுடையோம்” என்னும் வார்த்தை ஸ்வாமி யெம்பெருமானாரை நோக்கி ஸ்ரீவைஷ்ணவ குலத்தவர்கள் யாவரும் சொல்லத் தக்கது. ஞானம் அனுட்டானம் பர ஸம்ருத்தியேக ப்ரயோஜநத்வம் ஆகிய மூன்றும் ஆசார்ய பீடஸ்தர்களுக்கு அவச்யாபேக்ஷிதங்கள் இவை மூன்றும் நன்கு நிறையப் பெற்றவர் ஸ்வாமியே– 1-குறை யில்லாத – 2-குறை யொன்றில்லாத – 3-குறை யொன்று மில்லாத என்று யோஜித்து மேற் சொன்ன மூன்றாலும் குறையற்றிருப்பவர் ஸ்வாமியே என்று கொள்வது. கூரத்தாழ்வான் ஸ்வாமிக்கிட்ட தனியனில் “தயைக ஸிந்தோ: என்று விசேஷணமிட்டது பர ஸம்ருத்த்யேக ப்ரயோநத்வத்தையே காட்டின படி.–இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்வாமி நமக்குக் குல கூடஸ்தராகித் திரு வவதரிக்கப் பெற்றது வாசா மகோசரமான நமது பெரும் பாக்கிய மன்றோ! இந்த ஹர்ஷ ப்ரகர்ஷத்தைக் காட்டுவதாம் உன்றன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோமென்பது. உன்றன்னை யென்பதற்கு ‘உன்றன்னைக் கொண்டு’ என்று பொருள் கொள்வது மிகச் சிறக்கும். உன்றன்னால் என்றபடி.(உருபு மயக்கம்.) ஸ ஹி வித்யாதஸ் தம் ஐநயதி தத் ஸ்ரேஷ்டம் ஜந்ம என்கிறபடியே நாங்கள் ஸ்ரேஷ்டமான வித்யா ஜன்மத்தை தேவரீர் திருவருளாலன்றோ பெற்றிருக்கிறோம். ஸ்வாமி திருவம்சத்திலே நாம் பிறக்கப் பெற்றது, நம் குல விளக்காக ஸ்வாமி அவதரிக்கப் பெற்றது ஆகிய இரண்டும் இங்கு விவக்ஷிதமென்க.

எற்றைக்கு மேழேழ் பிறவிக்கு முன் றன்னோடுற்றோமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோமென்பது நாமெல்லோரும் ஸ்வாமியை நோக்கியே சொல்லத் தகுந்த வார்த்தை. ஆழ்வார்கள் *இருள் தருமா ஞாலத்துளினிப் பிறவி யான் வேண்டேனென்றும், இயக்கறாத பல் பிறப்பிலென்னை மாற்றி யென்றும், ஆதலால் பிறவி வேண்டேனென்றும் புநர் ஜன்மத்தை வெறுத்துப் பேசுவர்கள். நாம் அப்படி வெறுக்க வேண்டா; எத்தனை ஜன்மங்களும் யதேஷ்டமாக நேரட்டும்; நேருகிற ஜன்மங்கள் தோறும் இப்போது நமக்கு வாய்த்திருப்பதுபோலவே எம்பெருமானார் திவ்ய ஸுக்தி ஸுதைகளையே பருகும் பாக்கியம் வாய்த்திடுமானால் பிறவியில் வெறுப்பு நமக்கேதுக்கு? ஒரு பிறப்பன்று, ஒன்பதினாயிரம் பிறப்புமெடுப்போமாக-அதற்குச் சளைப்போமல்லோம்; ஆனால் அப் பிறவி தோறும் . (உன்றன்னோடுற்றோமே யாவோம்] ‘இராமாநுசனடியார்’ என்னும் விருதுக்கு லோபமின்றிக்கே யிருக்கக் கடவோம் . (உனக்கே நாம் ஆட் செய்வோம் வடுக நம்பியைப் போலே ஸ்வாமிக்கே அடிமை செய்து கொண்டிருக்கக் கடவோம். *கையில் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரினும், உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் என்ற அமுதனாரநுஸந்தானமே உறைத்திருக்கக் கடவது நமக்கு.

திருப்பாவை முப்பதுக்கும் வங்கக் கடல் கடைந்த மாதவன் தான் லக்ஷ்யபூதன். கண்ண பிரானை லக்ஷ்ய பூதனாகத் கொள்ளுமவர்கள் தேவர்களின் பிரார்த்தனையினால் கடலைக் கடைந்து அமுதங் கொடுத்து “பலே க்ரஹிர் ஹி கமலாலாபே ஸர்வச் ச்ரம:” என்று பட்டரருளிச் செய்தபடியே பிராட்டியையும் பெற்று மகிழ்ந்த எம்பெருமானைப் பொருளாகக் கொள்க.திருப்பாவை ஜீயரென்ற திருநாமத்திற்கேற்ப எம்பெருமானாரையே திருப்பாவைக்கு லக்ஷ்ய பூதராகக் கொள்ளுமவர்கள் இங்ஙனே பொருள் காண்க; நிர்மத்த்ய ச்ருதி ஸாகராத் என்றும்- நமாம் யஹம் த்ராவிட வேத ஸாகரம்” என்றும் கடலாச் சொல்லப்பட்ட ஸம்ஸ்க்ருத த்ராவிட உபய வேதங்களையும் திரு நாவின் மந்தரத்தால்
கடைந்து ” வசஸ்தாம்…ஸுமநஸோ பெளமா : பிபந்த் வந்வஹம்”
என்று ஸ்வாமி தாமே யருளிச் செய்தபடி நிலத் தேவர்கள் நித்யா நுபவம் பண்ண அமுத மளித்தவர் ஸ்வாமி. மாதவனை] மா-மஹத்தான, தவனைா–தவத்தை(தபஸ்ஸை] யுடையவரை; மஹா தபஸ்வியை யென்றபடி. தபஸ்விகளில் தலைவரன்றோ ஸ்வாமி எம்பெருமானார். [இங்கு இப் பரிசு உரைப்பார்] இங்ஙனே முப்பது பாசுரங் களுக்கும் நாம் காட்டின நிர்வாஹமும் ‘அணி புதுவைப் பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோதை திருவுள்ள முகந்ததே யென்று கொண்டு உபந்யா கோஷ்டிகளிலெடுத்துரைக்குமவர்கள். *”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலா லெங்குந் திருவருள் பெற்று இன்புறுவர்”= பீதகவாடைப் பிரானார் பிர குருவாகி வந்து என்ற பெரியாழ்வாரருளிச் செயலின்படியும், ஸா மூர்த்திர் முரமர்தநஸ்ய ஜயதி என்ற ஸப்த ஸுக்திப்படியும் ஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணாவதாரமான எம்பெருமானாருடைய திருவருளை எங்கும் பெற்று அம்ருத ஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவாஸ் ஸுகமாஸ்தல் என்று தலைக் கட்டிற்றாயிற்று .

மன்னு மணவாள மா-முனிவன் மாண்புரைக்கு மன்ன புகழண்ணங்கராசிரியன் சொன்ன திருப்பாவைச் சீயர் சிறப்புரைக்கு மிந் நூல் விருப்பாலுரைப்பார்க்கு வீடு.
திருப்பாவை ஜீயர் திருவடிகளே சரணம்.

—————————————————————-

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

கப்யாஸ ஸ்ருதியின் பொருள் விளக்கம்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

January 12, 2026

கம்பீராம்பஸ் ஸமுத்பூத-ஸும்ருஷ்ட நாள- ரவி கர விகஸித புண்டரீக தலாம
லாயதேக்ஷ :*

கம்பீராம்பஸ்ஸமுத்பூதமாயும், ஸும்ருஷ்டநாளமாயும், ரவிகரவிகஸித
மாயுமிருக்கிற புண்டரீகத்தை எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு உவமை
யாகச் சொல்லுவது பொருத்தமென்று எம்பெருமானாருடைய திருவுள்ளத்திலே
தோன்றினது

திவ்யப்பிரபந்தங்களில் அவர் ஆழ அவகாஹித்திருந்ததனாலேயே.
ஆழ்வார்கள் எம்பெருமானுடைய திருக்கண்ணழகைப்பற்றிப் பேசுமிடங்களில்
மேலே காட்டிய மூன்று விசேஷங்களையும் வெகு அற்புதமாகப் பேசியுள்ளார்கள். 

கம்பீராம்பஸ் ஸமுத்பூத புண்டரீக] ஜல மென்றும் அம்புஜமென்றும்-அம்போஜமென்றும் நீரஜமென்றும் பேர்பெற்ற புண்டரீகமானது நீரில் நின்று முண்டாகாமல் மற்றொன்றினின்று உண்டாக ப்ரஸக்தியில்லாமையாலே அம்பஸ் ஸமுத்பூத” என்றதன் கருத்து, நீரை விட்டுப் பிரியாமலிருக்கையைச் சொல்லுவதேயாம்.

‘தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன்தானே நீரைப் பிரிந்தால் அத்தை யுலர்த்துமாபோலே” என்கிற ஸ்ரீவசனபூஷண ஸ்ரீஸூக்தியும், “கமலம் ஜலாதபேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி” என்கிற ப்ரமாணமும் இங்கே அநுஸந்தேயம். நீரைவிட்டுப் பிரியாமலிருக்கிற தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவன் என்றதாயிற்று.

நீரார் கமலம் போல் செங்கண்மாலென்றொருவன்”-என்கிற சிறிய திருமடற் பாசுரத்திலும்‘அழறலர் தாமரைக் கண்ணன்” (58)என்ற திருவிருத்தப் பாசுரத்திலும் ஆழ்வார்கள் திருவுள்ளம் பற்றிய அர்த்த மென்றே இஃது எம்பெருமானாரால் ஆதரிக்கப்பட்டது. ‘நீரார் கமலம் போல்” என்றவிடத்தில் (நீரார்) என்ற விசேஷணம் எதுகை யின்பத்திற்காக மாத்திரம் இடப்பட்டதன்று. ” அழறலர் தாமரைக் கண்ணன்” என்றவிடத்து நம்பிள்ளை யீட்டில் கப்யாஸ ஸ்ருதி ஸ்பஷ்டமாகவே உதாஹரிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்து ஸ்ரீஸூக்தி வருமாறு-” அழறலர் தாமரைக் கண்ணன்) அழற்றிலே நின்றலர்ந்த தாமரைப் பூப் போலே யிருந்துள்ள திருக் கண்களை யுடையவன். யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணீ.என்னக் கடவதிறே.” இங்கு வாதி கேசரியின் ஸ்வாபதேச வுரை வருமாறு- அழறு என்று அளறு; நீரிலும் சேற்றிலும் நின்று அலர்ந்து செவ்வி மாறாத தாமரை போன்ற கண்ணை யுடையவனென்ற படி

நீரார் கமலம் போல் செங்கண் மால் -என்று ஒருவன் –ஒரு தடாகம் பரப்பு மாறத் தாமரைப் பூத்தால் போலே திருக் கண்கள் –ஒரு தடாகத்தை ஒரு தாமரையே கண் செறியிட அலர்ந்தால் போலே ஆயிற்று வடிவடையக் கண்ணாய் இருந்தபடி –கமலம் போல் செங்கண் -என்கையாலே குளிர்த்தி மென்மை நாற்றம் விகாசம் எல்லாம் சொல்லுகிறது 

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரே இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-

ஆக, நீரார் கமலம்போல் செங்கண் மாலென்றொருவன்’ என்ற சிறிய திரு
மடற் பாசுரத்தையும், அழறலர் தாமரைக் கண்ணன்’ என்ற திருவிருத்தப் பாசு
ரத்தையும் “தண்பெருநீர்த்தடந்தாமரை மலர்ந்தாலொக்குங் கண் பெருங் கண்
ணன் ‘ என்கிற திருவாய் மொழிப் பாசுரத்தையும் திருவுள்ளம்பற்றியே கம்பீராம்
பஸ்ஸமூத்பூத’ என்ற விசேஷணத்தை ஸ்வாமி யிட்டருளினாரென்பது பொருத்த
மாக முடிந்தது.

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன்
நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-9-5-9-குளிர்ந்த பெரிய நீரை யுடைய பொய்கையிலே தாமரைப் பூ அலர்ந்தால் போலேயாய் அவ்வளவு இன்றிக்கே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன்

[ஸும்ருஷ்டநாள புண்டர்க] நீரை விட்டுப் பிரிந்த தாமரைக்கு சோபையில்லாதது போலவே நாளத்தை விட்டு நீங்கின தாமரைக்கும் சோபையில்லாமையாலே தாமரைக்கு நாளத்திலிருப்பும் அவச்ய வக்த யமாயிற்று. இதுவும் ஆழ்வாரருளிச் செயலிலுள்ளது. திருவிருத்தத்தில் “வன்காற்றறைய’ என்கிற பாட்டிலே “எம்பிரான்தடங்கண்கள் – மென்கால் கமலத் தடம் போல் பொலிந்தன” என்றருளிச் செய்யப்பட்டிருக்கிறது. கமலத்திற்கு இடப்பட்டிருக்கிற ‘மென்கால்’ என்னும் விசேஷணத்திற்கு ‘மெல்லிய நாளத்திலே யிருக்கின்ற’ என்பது பொருள்.(நாளமாவது தண்டு). கமலத்திற்கு அது கால் போன்றிருத்தலால் கால்என்னுஞ் சொல்லால் குறிக்கப்பட்டது. நாளமென்கிற பொருளையே பூருவர்களும் உரை செய்துள்ளார்கள். ஆக இந்த திவ்ய ஸூக்திக்குச் சேர (ஸும்ருஷ்டநாள) என் றருளிச்செய்யப்பட்டது.

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே
-42-மென் கால் கமலம் என்றது –
ஆபி முக்ய ஸூசகமான மானஸ ப்ரபத்தியையும் பொறாத அவனுடைய ஸுவ்ஹார்த்தம்–ஸூஹ்ருத் பாவம்-வன் காற்று -பூர்ண பிரபத்தி அறைகை –ஆர்த்த பிரபத்தி )மென் கால்
ஒரு முகத்திலே சாய்கைக்கு அடியான தண்டில் மார்த்தவத்தை யுடைய-கமலத் தடம் போல்
தாமரைத் தடாகம் போலே-பொலிந்தன-அழகினுடைய அபி விருத்தியை யுடையவாயின –இவ் விடத்தில் கண்களுக்குக் காற்றாவது அப்ரதிஹத கதியான கிருபா ப்ரேரிதமாகை –
(தடங்கல் இல்லாத சீதளமான திருக்கண்கள் திருக்கச்சி நம்பி )ஒருங்கே மறிகை யாவது
ஆழ்வார் பக்கலிலே ஒருபடிப்பட்ட ஆபி முக்யத்தை உடைத்தாகை-கிடந்து அலரு கையாவது
இவைரை விஷயீ கரிக்கையாலே கண்ணுக்கு விகாஸம் உண்டாகை-மென் காலாவது
இக் கடாக்ஷத்துக்கு மூலமாய்கிருபா கார்யமான சித்த மார்த்தவம் (ஸுஹார்த்தம்)-கமலத் தடம் என்று நிறத்தாலும் குளிர்த்தியாலும் பரப்பாலும் போக்யமாய் இருக்கை-பொலிவாவது
காலம் மாறி மலரும் தடம் -போது செய்யாத்- திருக்கண் அழகுக்குப் போலி அல்லாத மிகுதியைச் சொல்லுகிறது –(இதுவோ குவியாமால் எப்போதும் மலர்ந்தே -மாறாமல் -போது செய்யாமல் இருக்குமே )-ஊர்த்தவ லோகங்களும் என் காலுக்கு அளவு போராது நீங்கள் காணுங்கோள் என்று தத் தத் தேச வாசிகளுக்கு உபதேசிப்பாரைப் போலே ஒண் மிதியில் புனலுருவி -திருநெடும் தாண்டகம் என்கிற பாட்டின் படியே ஊர்த்வ லோகங்கள் அடைய வியாபாரித்து-த்ரை விக்ரம அபதானத்தாலே அசாதாரணமான ஸம்பந்தத்தை அறிவித்த ஸ்வாமியினுடைய பெரிய திருக்கண்கள்

ரவிகரவிக“த புண்டரீக.) தாமரை நீரிலிருந்தாலும் நாளத்திலிருந்தாலும் ஸூர்ய கிரணங்களால் அலர்த்தப்பட்ட நிலையில்தான் எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு ஒப்பாகு மாதலால் இந்த விசேஷணமும் ஆவச்யகமாயிற்று.இதுவும் ஆழ்வாரருளிச் செயலிலுள்ளது. திருவாய்மொழியில் (5-4-9) “செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வன்” என்றுள்ள பாசுரம் இங்கே கொள்ளக்கடவது.இவ்விடத்து ஈட்டிலும் கப்யாஸ ச்ருதியை உதாஹரித்தருளி யுள்ளார். இதில்(செஞ்சுடர்த் தாமரை) என்பதற்கு செவ்விய சுடரையுடைய தாமரை என்று பொருளாகிறது. அச்செவ்விய சுடர் அதற்கு எங்ஙனம் வந்ததென்னில், அதற்கு முன்னடியில் ‘அஞ்சுடர வெய்யோன்’ என்று ஸூர்யனை ப்ரஸ்தாவித் திருக்கையாலே தததீநமென்று காட்டப்படுகிறது. ஆக ஸூர்ய ப்ரகாசமடியாக வந்த செவ்விய சுடரை யுடைய தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையவன் என்றதாயிற்று.இந்த ஸ்ரீக்தியைத் திருவுள்ளம்பற்றியே, “ரவிகரவிகளித புண்டரீக” என்றருளிச் செய்தது. “செந்தண்கமலக்கண் சிவந்த வாயோர் கருநாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்த தொக்குமம்மானே” என்கிற திருவாய்மொழிப் பாசுரமும் இங்கு யோஜிக்க வுரியது.( ‘செங்கமலம் அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்” என்கிற பெருமாள் திருமொழிப் பாசுரமும் இங்கு நினைக்கத்தக்கதுஆனால் அப்பாசுரத்தில் திருக்கண் ப்ரஸ்தாவ மில்லாமையுணர்க.]

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–தன்னுடைய தோற்றத்தில் இருளை போக்கி துக்க நிவ்ருத்தியை பண்ண வல்ல ஒளியோடு கூடின ஆதித்யனுடைய அழகிதான உதய ஸூ சகமான தேரும் தோன்றுகிறது இல்லை-இத்தசையில் புண்டரீ காஷனான ஸ்ரீ யபதியும் வருகிறிலன் –சிவந்த ஒளியை யுடைய தாமரைப் பூ போல் இருக்கிற திருக் கண்களை யுடைய ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -இந்த துர்த்தசையிலே குளிர நோக்கிக் கொண்டு இருவருமாய் வர ப்ராப்தமாய் இருக்க அது கிட்டிற்று இல்லை -ஆதித்யன் உதித்தாலும் ராத்திரி வர சம்பாவனை யுண்டு -அஸ்தமியாத ஆதித்யன் வருகிறிலன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்ன கடவது இறே

‘கப்யாஸம் புண்டரீகமேவ மக்ஷி ” என்கிற உபநிஷத்வாக்யத்திற்கு விவரணமாக ஸ்வாமியருளிச்செய்த கம்பீராம்பஸ் ஸமுத் தேத்யாதி திவ்யஸுக்தியில் “புண்டரீகதளாமலாயதேக்ஷண என்றிருக்கின்றதன்றோ? மூல ச்ருதியில்
புண்டரீகமேவ மக்ஷி” என்றிருக்கிறதேயொழிய வேறில்லை; உள்ள மூலத்திற்குச்சேர “புண்டரீகக்ஷிண என்றிவ்வளவே அருளிச்செய்திருக்க வேண்டும்; அதிகப்படியாக மூன்று பதங்களைச் சேர்த்திருக்கிறார். (1) தள . (2) அமல. (3) ஆயத. என்னுமிந்த மூன்று சொற்கள் எந்த ஆதாரத்தைக் கொண்டு ஸ்வாமியாலருளிச் செய்யப்பட்டனவென்று விசாரம் செய்யுமளவில், ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளை ஆதாரமாகக் கொண்டுதானென்று நிர்ணயிக்க ப்ராப்தம்.-ஆழ்வார்கள் ‘தாமரைக்கண்ணன்‘ என்று சிலவிடங்களிலும் “தாமரைத்தடங்கண்ணன்” “கமலத்தடங்கண்ணன்” “கமலத்தடம் பெருங்கண்ணன்” என்று பல விடங்களிலுமருளிச் செய்து போருகிறார்கள்-வடமொழிலுள்ள லகரமும் ளகரமும் தன்மொழியில் டகரமாக மாறுபடுவதுமுண்டு; “லடயோரபேத: ”என்கிற நியாயம் ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரஜ்ஞர்களுமிசைந்ததே. தமிழர்கள் எழுத்துப்போலி யென்பர்கள். ஏவஞ்ச, ” பத்ரம் பலாசம் சதனம் தளம் பர்ணம் சது: புமாந்”என்ற அமர கோசத்தில் படிக்கப்பட்ட தலமென்கிற வடசொல்லே தமிழில் தட மென்றாயிற்று என்று திருவுள்ளம் பற்றிய எம்பெருமானார் கமலத்தடங்கண்ணன் தாம்ரைத் தடங்கண்ணன்‘ என்னுமிடங்களிலே மன்னும் பொருளிலே தட மெனவந்ததென்று கொண்டு “புண்டரீகதள”என்றருளிச்செய்தார். தடமென்னுஞ் சொல்லுக்கு விசால மென்கிற பொருளும் தடாகமென்கிற பொருளும் தள மென்கிற பொருளும் ஆங்காங்கு வியாக்கியான கர்த்தாக்களால் ஆதரிக்கப்படு கின்றன. “நீலத்தடவரைமேல் புண்டரீக நெடுந்தடங்கள் போல…. எம்பிரான் கண்ணின் கோலங்களே” என்ற திருவிருத்தப் பாசுரத்தில் தடமென்பதற்கு தடாகமென்பது பொருள்.

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே
-39-நீல ரத்ன மயமான பெரிய மலையின் மேலே தாமரையை யுடைத்தான நெடிய தடாகங்கள் போலே-பொலிந்து
தாமரைத் தடாகம் போலி சொல்லும் படி அழகு விஞ்சி-எமக்கு எல்லா இடத்தவும்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய் -7-7-1-என்கிறபடியே
ஸர்வ பிரதேசத்திலும் பிரகாசியா நின்றன-பொங்கு முந்நீர் ஞாலப் பிரான்-கிளம்பின முன்னீரை யுடைய லோகத்துக்கு ஸ்வாமி யானவன்–இத்தால்-ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலத்தாலே கடல் முந்நீர் ஆனால் போலே-அர்த்த காம அபிமான நீர்மையாலே (ஸ்வ பாவத்தால் ) விஞ்சின ஜகத்தை-ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஜிதந்தா ஸ்தோத்ரம் -1-என்னும்படி
போக ப்ரதனாயக் கொண்டு தன் கண் அழகாலே தோற்பித்த ஸ்வாமியானவன் என்றபடி-விசும்புக்கும் பிரான்-வெளி நாடான நித்ய விபூதிக்கும்-தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -திருவாய் -2-6-3-என்கிறபடியே தன் கண் அழகாலே போக பிரதனாய்க் கொண்டு நிர்வாஹகனானவன் என்கிறது

“கமலக் கண்ணன் ….அமலங்களாக விழிக்கும்” என்கிற நம்மாழ்வார் பாசுரத்தை யுட்கொண்டே“புண்டரீகதளாமல்.. ஈஷண” என்றார் ஸ்வாமி. கீழே காட்டிய பாசுரங்களையும் “கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்பெரியவாய கண்கள்’ என்கிற அத்தீயான திருப்பாணாழ்வார் பாசுரத்தையுமநுஸந்தித்துக் கொண்டே “புண்டரீக… ஆயதேக்ஷண: என்றார்.

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவையில் –மீண்டும் மீண்டும் பத பிரயோகங்கள் —அவற்றின் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள்–

January 12, 2026

நாராயணன் -3- பிரயோகங்கள் –
உலகளந்த – 3-பிரயோகங்கள் –-
கோவிந்தன் -3- பிரயோகங்கள் –
புண்ணியன்-2-நப்பின்னை -4- பிரயோகங்கள் –
நந்தகோபன் -5- பிரயோகங்கள் –
ஆராய்ந்து -2-பிரயோகங்கள் –புள்-4-பிரயோகங்கள் –
தூயோமாய்-5-பிரயோகங்கள் –
மாயனை -4-பிரயோகங்கள் –
மால்–3–பிரயோகங்கள் –
செல்வம்–6–பிரயோகங்கள் –
கறவை-3-பிரயோகங்கள் –
வந்து-8-பிரயோகங்கள் –
சென்று-4-பிரயோகங்கள் –
நாம்-யாம் -எங்கள் -21-பிரயோகங்கள் –
பறை–10 -பிரயோகங்கள்
நீராட்டம்–6-பிரயோகங்கள்
அடி–6 -பிரயோகங்கள்
பாடி- 18-பிரயோகங்கள் –
எழுந்திராய் -19- பிரயோகங்கள் –
எம்பாவாய் -30– பிரயோகங்கள் –

————–

நாராயணன் -3- பிரயோகங்கள் –

மார்கழி —நாராயணனே நமக்கே பறை தருவான்
கீசு —நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்
நோற்றுச் –நாற்றத் துழாய் முடி நாராயணன் –

1-மார்கழி —நாராயணனே நமக்கே பறை தருவான்–வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-(நாரங்களை அயனமாகக் கொண்டவன் உள்ளேயே இருந்து பதி கிடக்கிறான் அன்றோ )நாராயண அநுவாக ஸித்தமான வஸ்து இடைச்சிகளுக்கும் கூட ஸூலபனான படி –தேவதாந்தரங்கள் அறியாத கோப வ்ருத்தர்கள் நோன்புக்கு அங்கமாக ஜெபிக்கும் மந்த்ரமாக உபதேசிக்கையாலே சொல்லுகிறார்கள்-இன்னவும் தன்னுடைய தமப்பன் மார் சொல்லவும் கேட்டு இருக்கும் இறே –கோவர்த்தன உத்தரணாதி அதிமாநுஷ சேஷ்டிதங்களாலே சர்வேஸ்வரத்வம் பெண்களுக்கு தெரியும் படி -யாய் இறே இவ் வவதாரம் தான் இருப்பது –நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் -என்றும் –நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்றும்-திண்ணம் நாரணம் -என்றும்-நாரணனை நன்கு அறிந்தேன்-என்றும்
இவ் வர்த்தத்தில் ரிஷிகளும் நாராயணா சப்தார்த்தம் -என்றும்-ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்றும் ஸ்ருதியும் நாராயண பரம் ப்ரஹ்மம்-என்றும் பல விடத்திலும் சொல்லிற்று-ஓட்டொட்டியாய்-பெண்களை விடாதே இருக்குமவன் –இத்தனை நல்லது நமக்கு கிடைக்குமோ என்னில்-நாம் அல்லோம் -என்று இருக்கும் காலத்திலும் தான் ஆவேன் என்று இருக்குமவன் ஆசைப்பட்ட விஷயமே வகுத்த விஷயமாய் இருக்கிறபடி-சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே-தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற- சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –

2-கீசு —நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்நாராயணன்–முகம் தோற்றாமே நின்று-
வாத்சல்யத்தாலே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன் –மூர்த்தி –தன்னுடைய சௌசீல்யத்தாலே பிறந்தது-கேசவன் –கண்ணுக்கு தோற்ற நின்று-நம் விரோதிகளை போக்குமவன்-வாத்சல்யத்தையும் – சௌசீல்யத்தையும்- ஆஸ்ரித விரோதி நிரசனத்தையும்–பாடவும்-கண்ணுக்குத் தோற்றாதே நின்று ரஷிக்கும் சர்வேஸ்வரன் – ஆஸ்ரித வத்சலனாய் இங்கே வந்து அவதீரணன் ஆனான்-அங்கே கேசி வந்து கிட்டினான் காண் என்கிறார்கள்-நிருபாதிக ஸ்வாமியான சர்வேஸ்வரன்-ஆஸ்ரித வத்சலனனாய் கிருஷ்ணனாய் வந்து அவதரித்த இடத்தில் கேசி வந்து நலியப் புக- அவனை கிருஷ்ணன் கொன்றான் காண் –

3-நோற்றுச் –நாற்றத் துழாய் முடி நாராயணன் –அவனுக்கு எங்களைப் போலே கதவு திறக்கப் பார்த்து இருக்க வேணுமோ –வ்யாப்திக்கு பிரயோஜனம் -வேண்டின இடத்தே -ஸ்புரிக்க வல்லனாகை அன்றோ –உகவாதாரையும் விடாதவன் உகந்த உன்னை விடுமோ –அவனுக்கு உன் பக்கல் புகுந்தால் புறப்பட வன்றோ வழி அரிது –ஜீவ த்வார வன்றோ அநு பிரவேசம் –விட்டுப் போகாதார் பேறு வன்றோ இது-உகவாதார்க்கும் சத்தையை நோக்கி உகந்தார்க்கு வத்சலனாய் இருக்குமவன் அன்றோ –ஆசைப்பட்ட உன்னை விடுமோ –
வியாப்திக்கு பிரயோஜனம் வேண்டிய இடத்தே ஸ்புரிக்க வல்லனாகை அன்றோ
(முன்பே எங்கும் வியாபித்து இருந்தாலும் எங்கும் உளன் கண்ணன் என்றதும் ஸ்புரித்துக் காட்டினான் அன்றோ )நாற்றத் துழாய் முடி நாராயணன்-ஆசைப் பட்டாரை ரஷிக்கைக்கு தோள் மாலை இட்டு இருக்கிறவன் அன்றோ(தீஷிதம் விரதம் சம்பன்னம் )–இங்கு மூன்றாவது-நாரங்கள் -ரிங் க்ஷய -அழியாத பொருள்கள் –அழியாத குணக் கடல் நிறைந்தவன்-கீழ் இரண்டும் macro minute -பஹு வ்ரீஹீ தத் புருஷ சமாஹ அர்த்தங்கள் -புறமும் உள்ளும் வியாபித்து –

—————————————————

உலகளந்த – 3-பிரயோகங்கள் –

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நமக்கே பறை தருவான் –
அம்பரமே –அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –

1-ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நமக்கே பறை தருவான் –ஜகத் ரஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது ஆர்த்த ரஷணம் பண்ணப் பெறாமையாலே- பனிப்பட்டு சாய்ந்த மூங்கில் போலேயாய் அது ஆதித்ய கிரணம் பட்டு கிளம்புமா போலே-மகா பலியாலே நோவு பட்ட தேவர்கள் ஆர்த்த த்வனி கேட்ட பின்பு பேர்ந்து வளர்ந்தபடி –பிறர் கார்யம் செய்யப் பெருகையால் வளர்ந்தபடி –சதைக ரூப ரூபாய -என்கிற தத்வம் இறே-சிறுப்பது பெருப்பதாகிறது–சம்சாரிகளுடைய வ்ருத்தி ஹ்ராசாதிகள் கர்ம அனுகுணம் ஆகையாலும்- ஸ்வார்த்தமாகையாலும் – தோஷாய ஆகா நிற்கும் –ஸர்வேஸ்வரன் செயல் பரார்த்தமாகையாலும் கிருபையால் யாகையாலும் குணாயாவாம் அத்தனை இறே –உலகு அளந்த-குணாகுணம் நிரூபணம் பண்ணாதே சர்வ பிராணிகள் பக்கலிலும் திருவடிகளை வைத்த படி –வ்யாப்தியில் வரைதல் இல்லாதாப் போல் ஆய்த்து இதுவும்-வ்யாப்திக்கு கருத்து-இவற்றின் உடைய சத்தையை உண்டாக்குகைகாக – இங்கு இவற்றோட்டை ஸ்பர்சம் தனக்கு தாரகமாக இறே நினைத்து இருப்பது இவற்றுக்கு அபேஷிதம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்- உறங்குகிற பிரஜையை அணைத்துக் கொண்டு கிடக்கும் மாதாவைப் போலே இவற்றோடு ஸ்பர்சம் தனக்குத் தான் உகக்கிறான் இறே-இத்தால் அஹங்கார க்ரஸ்தர் ஆனவர்களை மகா பலி அபிமானத்தின் நின்றும் பூமியை மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டால் போலே இத்தால்
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டமையை சொல்லுகிறது-உத்தமன்-தன்னை அழிய மாறி ஆகிலும் பிறர் கார்யம் செய்யுமவன் ஆகையாலே உத்தமன் என்கிறது-தனக்காய் இருத்தல் செய்யாதே- தென்றலும் நிலாவும் போலே பிறர்க்கேயாய் இருத்தல் –ந தே ரூபம் ந சாகார–நிஷேதம் தன்னது என்கையைத் தவிர்க்கிறது நமக்கு -அஹமபி ந மம பாகவத ஏவாஹமஸ்மி போலே இவனுக்கும் ந தே ரூபம் –பக்தா நாம் -என்கை-
சர்வாதிகன் -என்கை –தான் நிர்ஹேதுகமாக ரஷிக்கையும்–அது தன் பேறாய் இருக்கையும் –-ஈஸ்வரர்களும் அகப்பட இவன் காலிலே வணங்கப் புகுகையாலே-இவனே பரதத்வம்-தன் திருவடிகளை கிருபையால் தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே – ப்ராப்யமும் ப்ராபகமும் தானே –( பர கத ஸ்வீ காரம் )

2-அம்பரமே –அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே-பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்காக ஆகாச அவகாசம் எல்லாம் அடங்க ஒரு பிரதேச நியதி இல்லாதபடி
ஊடருத்து-விம்ம வளந்த –இத்தால் நிருபாதிக ரஷகன் ஆகையாலே-ரஷகத்வமே விளை நீராக வளர்ந்த படி –உறங்குகிற பிரஜையை-தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
இருந்ததே குடியாக எல்லார் தலையிலும் ஊர் எண்ணெய் வார்த்தாப் போலே திருவடிகளை குளிர வைத்தபடி –நமக்கு சிரோ பூஷணமான திருவடிகளை இட்டு காடும் ஓடையும் அளப்பதே இது ஒரு வாத்சல்யமே -என்று வாத்சல்யத்துக்கு தோற்கை –உம்பர் கோமானே –
இச் செயலால் தேவ ஜாதியை எழுதிக் கொண்டவனே-நித்ய ஸூரிகளை என்னவுமாம்
அதாவது நமக்கு சிரோ பூஷணமான திருவடிகளை இட்டு காடும் ஓடையும் அளப்பதே
இது ஒரு வாத்சல்யமே -என்று வாத்சல்யத்துக்கு தோற்கை –

3-அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –தன் விபூதியை மகாபலி அபஹரிக்க நோவு பட்டு இருக்கிற அன்று-தன்னைப் பிரிந்து நாங்கள் ஆர்த்தியால் நோவு பட்ட இன்று –
ஜகத்தை மகா பலி யினுடைய அபிமானத்தின் நின்றும் மீட்ட அன்று-எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தின் நின்றும் மீட்ட இன்று –நாட்டுக்கு எல்லாம் தன் திருவடிகளை தூளிதானம் பண்ணின அன்று-அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளிதானம் பண்ணின இன்று-
இது இறே ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் சாம்யம்-பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு-காடும் ஓடையும் அகப்பட அளப்பதே -என்கை –
அன்று எல்லை நடந்து மகாபலி பக்கல் நின்றும்-பூமியை மீட்டுக் கொண்டால் போலே
நடை அழகைக் காட்டி விஸ்லேஷத்தின் நின்றும்-மீட்டுக் கொண்டான் -என்கை –யடி போற்றி-தாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு
உலாவி அருளின படி – திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்கள்-திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது –
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –திரு உலகு அளந்து அருளின அன்று
இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்-மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான்
தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்றுமாம் –அடி போற்றி –உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்னுமவர்கள் இறே-கொண்ட கோல குறள் உருவாய் –பண்டு கொண்ட முன் -மூன்று சப்தங்கள்-கொண்ட கோலம் –
இவனே நினைத்தாலும் கொள்ள முடியாத கோலம் யாசிக்க நினைத்த பொழுதே திருமேனி சுருங்கி-கொள்ள வேணும் என்று அவனே நினைத்தாலும் அப்படி கொள்ள முடியாத அழகு–பிரகிருதி சம்பந்த நிபந்தனமான அஹங்காரம் ஜகத்தை ஆக்ரமித்த அன்று – அஹங்கார க்ரஸ்தமான இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்காக்கிக் கொண்டவனே – உன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் –

——————————————————
கோவிந்தன் -3- பிரயோகங்கள் –

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
கறைவைகள் –குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா

1-கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா—ஆந்தனையும் பார்த்தால் – ந நமேயம் -என்பாரை வெல்லும் இத்தனை – அவர்களை வெல்லுமா போலே கூடினார்க்கு தான் தோற்கும் இத்தனை –கூடுவோம் அல்லோம் என்கிற அபிசந்தி இல்லாத மாத்திரத்தில் கூடுவோம் என்ன அறியாதாரையும் ரக்ஷிக்குமவன் அன்றோ-பொருந்தோம் என்னும் துர் அபிமானமும் இன்றிக்கே- ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவனே-எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே –வில் பிடித்த பிடியைக் காட்டி விரோதிகளைத் தோற்பிக்கும் –அனுகூலரை அழகாலும் சீலத்தாலும் -நீர்மையாலும் -தோற்பிக்கும் –சர்வஞ்ஞரை -எத்திறம் -எண்ணப் பண்ணும் குணம் இறே-தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்-ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய-வை லஷண்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்
இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்-சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –

2-கறைவைகள் –குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா-எங்களுக்கு அறிவு ஒன்றும் இல்லை என்றோம் அத்தனை போக்கி-எங்கள் புண்ணியத்துக்கு ஏதேனும் குறை சொல்லிற்று உண்டோ –எங்களுடைய அறிவொன்றும் இல்லாமைக்குப் போராதோ உன்னுடைய குறை ஒன்றும் இல்லாமை –எங்கள் குறையாலே எங்களுக்கு இழக்க வேண்டுவது –
உன்னுடைய பூர்த்தியால் ஏதேனும் குறை உண்டாகில் அன்றோ -என்கிறார்கள் –
இப் பள்ளத்துக்கு அம் மேடு நிரப்பப் போராதோ – இப் பாதளத்துக்கு அப் பர்வதம் நேர் என்கை –எங்கள் பக்கல் ஞான வ்ருத்தாதிகள் ஏதேனும் உண்டோ -நாங்கள் இழக்கைக்கு -என்று கருத்து-இத்தால்-உபாய நைரபேஷ்யம் சொல்லிற்று –நிரபேஷமான பரம பதத்தில் வந்தோமோ –எங்களை ஒழியச் செல்லாமையாலே வந்து அவதரித்து எங்களுக்கு கையாளாக இருந்த இடத்தே அன்றோ நாங்கள் அபேஷிக்கிறது –இத்தால்-சௌலப்யம் சொல்லுகிறது-நீயோ தான் சால அறிவுடையாய் இருக்கிறாய் –
உனக்கு ஸ்வரூப ஞானம் யுண்டாகில் ஸூரிகள் நடுவே இராயோ- அவனுடைய அறியாமை இறே நமக்கு பற்றாசு –நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று உன்னை அறிந்தாய் யாகில் பசுக்களின் பின்னே போகப் பெறுவிதியோ –அவன் தன்னை அறிந்தாலும் பெற விரகு இல்லை –நம்மை அறிந்தாலும் விரகு இல்லை அவன் ஸ்வா தந்தர்யத்தையும் மறந்து
நம்முடைய அபராதத்தையும் மறைக்கை இறே நமக்குத் பெறலாவது –கன்றுகள் மேய்த்து கோவிந்த அபிஷேகம் பண்ணி கோப குலத்திலே கலந்து பரிமாறி காலிப் பின்னே வருகின்ற வேடத்தை எல்லார்க்கும் காட்டி – ஏற்கவே அறிந்து கோவர்த்தனத்தை எடுத்து ரஷித்து போருகையாலே வாத்சல்யாதிகளாலும் ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணன் ஆனவன் அன்றோ-கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும் –
கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும் மறித்துத் திரிகிற போது திருவடிகளில் கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும் குளிர் முகத்தின் கோடாலமுமாய் நிற்கிற உபாய வேஷத்தை கோவிந்தா எ
ன்கிறார்கள் –

3-சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா-இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போக வந்தோம் அல்லோம் காண் நாங்கள் –யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் நீ –தாத்பர்ய ஞானம் பிள்ளையாய் இருந்ததீ –அபிதான விருத்தி ஒழிய தாத்பர்யம் போகாதே இருந்ததீ-லோக சம்வாதத்துக்கு ஓன்று சொன்னோம் அத்தனை என்று இருக்க வேண்டாவோ –அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று தண்ணீர் என்றால் தண்ணீரை வார்ப்பார்களோ –சொல்லுகிற வார்த்தையையும் எங்களையும் அறிந்து அன்றோ பரிமாறுவது –நாங்கள் பறை என்றால் வேறு ஒன்றை த்வனிக்கிறது என்று அறிய வேண்டாவோ –எங்களை நீ கொள்ளுவான் அத்தனை ஒழிய நாங்கள் உன் பக்கலிலே உன்னையும் ஒழியவும் கொள்வது ஓன்று உண்டு என்று இருந்தாயோ –கோவிந்தா –
பாவ ஜ்ஞானம் இல்லாத ஜன்மம் இறே-பசுக்களின் பின்னே திரிவார்க்கு பெண்களின் வார்த்தையின் கருத்து தெரியாது இறே –பசுக்களின் பின்னே திரிவார்க்கு அவற்றுக்கு உள்ள ஞானம் இறே உள்ளது –நாலு நாள் எங்களை விட்டுக் கெட்ட கேடு என் தான் –
நீ பசுக்களையே விரும்பி எம்மைத் துறந்தால் இதுவோ பலம்-கோவிந்தாஎங்களையும் எங்கள் ப்ராப்யத்தையும் மறந்தால் போலே உன்னையும் உன் பிறவியையும் மறந்தாயீ-போகு நம்பி (6-2) என்று சொல்ல வர நிற்குமவன் அல்லையோ என்கை பசுக்களின் பின்னே திரிவார்க்குப் பெண்கள் ஸ்ரோத்ரியராகப் போமோ(ஸ்தோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் )

——————————————————

புண்ணியன்-2-

போற்றப் பறை தரும் புண்ணியனால் -10-
உன் தன்னைப் பிறவி பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம் -28-

1-போற்றப் பறை தரும் புண்ணியனால் -10-வெறுமையே பச்சையாக-இடைச்சிகளும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –இவர்களுடைய ஆஸ்ரயணம் உபாயம் அன்று-ருசியாலே-புண்ணியன் –இவர்கள் உபாயம் அவன் தானே இறே -வெறுமையே பச்சையான இடைச்சிகளுக்கும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற தார்மிகன்
(நம்முடைய மால் பித்தன் )புண்ணியனால்1-அத்வேஷம் மாத்திரம் உடையோருக்கு தன்னைப் பெறுகைக்கு ஸூஹ்ருதமும்2-ருசி ஜனகனும்3-உபாயமும்4-ப்ராப்யனுமாய் –இருக்கிறவனாலே –கிருஷ்ணம் தர்மம் சனாதனம்புண்ணியன் ஆகையாவது –
சர்வ விஷயத்திலும் தண்ணீர் போலே பொதுவாய் இருக்கை யாயத்து –

2-உன் தன்னைப் பிறவி பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம் -28-நாட்டார் ஆஸ்ரயணீயன் இருந்த இடத்தே போய் ஆஸ்ரயிப்பார்கள்-அவர்களைப் போலேயோ நாங்கள் ஆஸ்ரயணீயனான நீ தானே நாங்கள் இருந்த இடத்தே எங்களோடு சஜாதீயனாய் வந்து அவதரிக்கும் படி அன்றோ எங்கள் உடைய ஏற்றம் –புண்ணியத்தை பற்றினவர்கள் அன்றோ –சித்த சாதனத்தை பற்றினவர்களில் காட்டில் இருந்த இடத்தே சென்று ஆஸ்ரயிக்க வேண்டாத படியான ஏற்றத்தை உடையவர்கள் நாங்கள் – நினைத்த படி விநியோகம் கொள்ளலாம் படி கைப்புகுந்த உன்னை உடையோம் அன்றோ-புறம்பு உண்டான புண்ணியங்களை உன்னாலே பெறலாம் – உன்னைத் தர வல்லது உன்னில் விஞ்சினது இல்லையே-பறை தரும் புண்ணியனே இறே தன்னையும் தருவது –
பிறக்கைக்கு ஹேதுவே இறே தருகைக்கும் ஹேது-எங்கள் புண்யம் முதல் இல்லாதார்க்கு முதலும் பலிசையும் கொடுக்கும் புண்யம் காண்

———

நப்பின்னை -4- பிரயோகங்கள் –

உந்து –நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
குத்து –கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா
முப்பத்து —நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
மாலே–கோல விளக்கே

1-உந்து –நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்–ஸ்ரீ கும்பர் மகளே என்னாதே -மாமனாரைச் சொல்லிற்று –அதிலும் இவளுக்கு இது பிரியம் ஆகையாலே-கிருஷ்ணனுக்கு மச்சினியாய் முறையால் பால்யத்திலே இங்கேயே வளருகையாலும் –
இங்கே வாழ்க்கைப் பட்ட படியாலும் –இவர் மருமகள் என்று தன்னை நினைத்து இருக்கையாலும் –இவள் உகக்குமது ஆகையாலும்-இவள் விரும்பி இருப்பது இவருடைய சம்பந்தம் –முக்தனுக்கு சம்சாரம் போலே -இவளுக்கு பிறந்தகம் – புருஷகாரம் ஆவதற்கு கிருபை வேணும் இறே –இப்படிச் சொன்னவாறே திருவாய்ப்பாடியிலே கம்பும் காற்றையும் அகப்பட நந்தகோபாலன் மருமகள் அல்லாதார் உண்டோ-நமக்கு ஏன் என்று பேசாதே கிடந்தாள் அதுக்காக நப்பின்னாய் என்று விசேஷிக்கிறார்கள்-தங்களுடைய கிலேசம் தீர்க்கைக்கும் – தங்களுடைய ஆர்த்தி இவள் நெஞ்சிலே படுத்துகைக்காகவும்
நப்பின்னாய் -என்று பேரைச் சொல்கிறார்கள் –ஹே கிருஷ்ணா ஹே யாதவ ஹே ஸஹ என்று அர்ஜுனன் கிருஷ்ணனை அஸத் கரித்து வார்த்தை சொல்லுமா போலே –
நப்பின்னாய் -என்று சிவிட்க்கு என்கிறார்கள் 

2-குத்து –கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா-திருக் குழலில் ஸ்பர்சத்தாலே கொத்துக் கொத்தாக-அலரா நின்றுள்ள பூவை உடைத்தான குழல்-காலம் அலர்த்துமா போலே-அவனோட்டை பிரணய கலகத்தால் அலருகை –வாசம் செய் பூம் குழலாள் இறே-கேசவனையும் பிச்சேற்ற வல்ல குழலை யுடையவள் –இவள் குழல் வாருகைக்கு அக் காக்கை வருவது-பின்னை மணாளனை என்று இவளோட்டை சம்பந்தம் சொன்னாலாய்த்து-கொங்கையைத் தன மேலே வைத்துக் கிடத்தல் –கொங்கையின் மேலே தன்னை வைத்துக் கிடத்தல் –ந சாஸ்திரம் நைவ ச க்ரம-பர்யா யேண ப்ரஸூப் தாஸ்ச-(மந்தாகினி நதிக்கரையில் மடியில் மாற்றி மாற்றி சயனம் )மலராள் தனத்துள்ளான் –மலைப் பார்ஸ்வத்தைப் பற்றி ஜீவிப்பாரைப் போலே-நப்பின்னை பிராட்டி உடைய- போக உபகரணமான பக்தியை ஸ்வ விஷயத்தில் வைத்துக் கொண்டு அத்தால் விகஸித ஹ்ருதயன் ஆனவனே –

3-முப்பத்து —நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்பூர்ணை ஆனவளே-பூர்த்தி ஆகிறது –அநுக்த சௌந்தர்ய சமுச்சயம் –சொல்லிச் சொல்லாத ஸுந்தர்யங்கள் எல்லா வற்றாலும் பூர்ணை யானவளே-ஆய்ப்பாடி வளர்ந்த நம்பியினுடைய பூர்த்திக்கும் அடியான பூர்த்தியை யுடையவளே –ஒசிந்த ஒண் மலராள் என்னுமா போலே – சம்ஸ்லேஷத்தால் வந்த துவட்சி -சம்போக ஸ்ரீ உடையவள் –ஸ்ரத்தாயா தேவோ தேவத்வம் அஸ்நுதே-என்னும்படியாய் இருக்கை –அழகு அவளாலே –குணங்கள் அவளாலே –மேன்மை அவளாலே –நீர்மை அவளாலே –நிரூபித்தால் அனைத்தும் அடங்கலும் அவள் தோயலாய் இருக்குமே –பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடுடை –பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதல் -1-7-8-செப்பன்ன மென்முலை என்று தொடங்கி
இச் சுழிகளிலே அகப்பட்டவன் தப்பி ஏறினால் இறே நம் கார்யம் செய்வது-இருவரையும் திருத்துவது உபதேசத்தால் உபதேசத்தால் மீளாத போது அவனை அழகாலே திருத்தும் நம்மை அருளாலே திருத்தும் செப்பன்ன மென்முலை-விஷய க்ராஹகமாய்- விஷய விரஹ அசஹிஷ்ணு வாய் -பகவத் விஷய பக்தியையும்-செவ்வாய்-அவனுக்கு மிகவும் போக்யமான பரம பக்தியையும் -பக்தி பழுத்து கனி போன்ற வாய்-சிறு மருங்குல்-
விஷயாந்தர வைராக்யத்தையும் உடையையாய்-நப்பின்னை நங்காய் திருவே
நப்பின்னை என்கிற திரு நாமத்தை உடையையாய்-நங்காய்-பிராப்யத்வ
புருஷகாரத்வோப யுக்த கல்யாண குண பூர்னையான பெரிய பிராட்டியாரே நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும் –

4-மாலே–கோல விளக்கே-பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் -மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்–பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு அத்யந்தம் மனோஹரம் ஆக்குகிற–பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –

———————————————

நந்தகோபன் -5- பிரயோகங்கள் –

மார்கழி –கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் குமரன்
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
அம்பரமே –எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
உந்து —நந்த கோபாலன் மருமகளே நப்ப்பின்னாய்
ஏற்ற —ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

1-மார்கழி –கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் குமரன்–சக்ரவர்த்தி வில் பிடிக்க பிள்ளைகள் வில் பிடித்தால் போலே-இக்குடிக்கு வேலே ஆயுதம்-பிள்ளையைச் சொல்லும் இடத்தில் நின் கையில் வேல் போற்றி -என்று இறே சொல்லுவது –ஸ்ரீ நந்த கோபர் முன்பு பசும்புல் சாவ மிதியாவராய் ஆய்த்து –நம் சிறியாத்தானைப் போலே ஆன்ரு சம்சய பிரதானராய் போருவது –பிள்ளைகள் பிறந்த பின்பு அவர்கள் மேல் உண்டான வாத்சல்யத்தாலே –அவர்களுக்கு என்ன வருகிறதோ -என்று அஞ்சி- வேலைப் புகர் எழ கடைந்து பிடிக்கத் தொடங்கினார் –தொட்டில் கீழே எறும்பு புகுரிலும் சிம்ஹத்தின் மேல் விழுமா போலே சீற்றத்தின் மிகுதியால் உதிரக் கையரானார்-ந ஹிம்ஸ்யாத் சர்வா பூதானி -என்கிற சாமான்ய விதி அக்னீ ஷோமீயம் பஸூ மாலபதே -என்கிற விசேஷத்தில் வாராது இறே-ஸ்வார்த்தமாக செய்யும் அன்று இறே நிஷித்தமாவது அத் தலைக்கு என் வருகிறதோ என்று அஞ்சிச் செய்யுமன்று தர்மமாகக் கடவது –நந்த கோபன் –நந்தாமி பஸ்யன் நபி தர்சநேந தாம் ஜராம்-பிள்ளையைக் கண்ட ப்ரீதியாலே ஆனந்தத்தை உடையவர் என்னுதல்-நாம தேயமாதல் –இப்போது இவரைச் சொல்லுவான் என் என்னில் உத்தேஸ்ய வஸ்துவை நோக்கித் தருபவர் என்னும் பிரீதியாலே நந்த கோபாலா -எழுந்திராய் என்று எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி இறேஇவர்களுக்கு அவர் விதேயமாய் இருப்பது -பிள்ளையைக் கண்டு இளகிப் பதித்து உகப்பு ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவர் 

2-நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய–ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகைக்கு காவலாய்
எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –நாயகன் என்று ஸ்ரீ நந்த கோபரைச் சொல்லிற்று ஆகவுமாம் –இவர்களால் பெறுமவன் அன்றோ நாயகன் -ஆவான் –இவனை நாயகன் என்கிறது என் என்ன –பல சித்தி ஆச்சார்யனாலே ஆகையாலே -உபகாரகனை நாயகன் என்கிறார்கள்-பிரதான சேஷியைக் காட்டில் த்வார சேஷிகளே எங்களுக்கு சேஷிகள் என்கிறார்கள் –உந்தம் அடிகள் முனிவர் -என்று பிரசித்தமாம் படி ஸ்வாமிகளாய் நியமிக்கிறார் ஸ்ரீ நந்தகோபர் ஆகையால் உபய விபூதி நாயகனான கிருஷ்ணனுக்கும் நாயகர் ஆகையால்-ஸ்ரீ நந்த கோபரை-நாயகனாய் நின்ற நந்தகோபன் –நந்த கோபனுடைய-
பகவத் அனுபவ ஜனித ஆனந்த நிர்பரனாய்- சம் ஸ்ரீ தர ரஷகனான ஆச்சார்யன் உடைய-நந்த கோபனுடைய கோயில்-கிருஷ்ணன் உகப்பது பாரதந்தர்யம் ஆகையால் –ஸ்ரீ வைகுண்டத்தில் இழவு தீர -ஸ்ரீ நந்த கோபற்குப் பிள்ளையாய்-நந்தகோபன் மகன் -என்று அவரை இட்டுத் தன்னைச் சொல்லும் படி தான் பரதந்த்ரனாய் க்ருதார்த்தனான இடம் ஆகையால் அவர் அபிமானத்தில் இவன் ஒதுங்கினான் என்னும் இடம் தோற்ற
கிருஷ்ணனுடைய கோயில் என்னாதே நந்த கோபனுடைய கோயில் என்கிறது

3-அம்பரமே –எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்-எங்களுக்கு தாரக போஷக போக்யங்கள் எல்லாமான கிருஷ்ணனைப் பெற்றுத் தந்த ஸ்வாமி-எழுந்திராய் –
வாஸூதேவ சர்வம் இதி-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லா பேறும் தானே யானவன் இறே கிருஷ்ணன் –ஏகைக பல லாபாயா சர்வ லாபாய கேசவ -என்றும் எங்களுக்கு கிருஷ்ணனை உபகரிக்கையாலே விசேஷித்து எங்களை எழுதிக் கொண்டவனேநந்தகோபன் குமரன் என்று உம்முடைய ஆன்ரு சம்சயத்தைக் கொண்டு
உம்முடைய பிள்ளை என்று அன்றோ நாங்கள் ஆசைப்பட்டது –வேண்டுவார்க்கு வேண்டுவது கொடுக்கிறவர் ஆகையாலும் –அறம் செய்கிறவர் ஆகையாலும்-எங்களுக்கு ஸ்வாமிகள் ஆகையாலும் நீர் தாம் கோபாலர் ஆகையாலும் ஜீவ லோக ரக்ஷணம்
ஸ்வ ஜன ரக்ஷணம் –ஸ்வ தர்ம ரக்ஷணம் பண்ணாதே உறங்கக் கடவீரோ –இவர் மகன் தூரஸ்தன் ஆனாலும் பேர் சொல்ல புடவை வழங்குகிறதும் –இனிது மறித்து நீரூட்டுகிறதும்
வேண்டு அடிசில் உண்ணும் போதுகளிலே சோறு வாங்கி இடுகிறதும் இவர் வயிற்றில் பிறப்பால் இறே ஹித புத்தி இறே பிதாவின் பக்கலில் உள்ளது –ஆத்ம ஸ்வரூபமான ஈஸ்வர முக விகாசத்தையும் தத் வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும் தத்தேதுவான கைங்கர்யத்தையும் ஓர் ஒன்றையோ இவன் கொடுப்பது–தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே ஸுவயம் புருஷார்த்தமாக கொடா நின்றுள்ள நமக்கு வகுத்த சேஷியாய்
ஆனந்த நிர்ப்பரனாய் ஆஸ்ரித ரஷகனான ஆசார்யனே -நீ உணர வேணும் –கிருஷ்ணனைப் பெற்று தந்த நீர் குறையும் நாங்கள் பெறும்படி பாரீர் -என்கிறார்கள்

4-உந்து —நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்–பிரதி பஷத்தைக் கண்டால் பிற்காலியாத தோள் வலியை உடையவன் – நாட்டில் நடையாடாத தோள் வலியன்-இப்போது இவர்கள் உடைய மிடுக்கைச் சொல்லிற்று தங்களுக்கு தனமான இம் மிதுனத்துக்கு காவல் உண்டு என்று தங்கள் பய நிவ்ருத்திக்காக –அங்கோர் ஆய்க் குலம் -என்று கம்சன் படைவீடான ஸ்ரீ மதுரையை நினைத்து அஞ்சினார்க்கு அஞ்ச வேண்டாத ஊர் இறே –நம்முடைய அநீதிகளை நினைத்தால் எம்பெருமான் தோள் வலியை நினைத்து பயம் கெடுமா போலே – கிருஷ்ணன் உடைய தீம்புகளை நினைத்தால் இவருடைய தோள் வலியை நினைத்து பயம் கெடலாய் இருக்கை –கம்சன் மாளிகை நிழல் கீழ் கிருஷ்ணனுக்கு
ஒரு தீங்கு வாராதபடி வளர்க்க வல்ல மிடுக்கை உடையவர் இறே –கிருஷ்ணன் தீம்பை அனுசந்தித்து அஞ்சின பெண்களுக்கு இவர் தோள் மிடுக்கை நினைத்து அச்சம் கெட்டு இருக்கலாய் இருக்கை –நந்தகோபாலன் –ஆனந்த நிர்பரனாய்-ஆஸ்ரித ரஷகனான
ஆச்சார்யன் உடைய ––ஜகத் விலஷணமான-ஞானபலத்தை உடையவனாய் –ஞானக் கை -என்னக் கடவது இறே –அஹங்காரத்துக்கு பிற்காலியாத-ஞான பலத்தை உடையவன்-

5-ஏற்ற —ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்மிகவும் படைத்தான் –ஸ்ரீ நந்தகோபர்க்கு சம்பத்து ஸ்வயம் ஆர்ஜிதம் ஆகையால் தான் தோன்றியாய் இருக்கும் –இவர் பிறந்து படைத்தது ஆகையால் அடியுடைய ஐஸ்வர்யம் –பதிம் விசுவஸ்ய -என்கிற ஐஸ்வர்யத்தில் காட்டிலும்-ஸ்ரீ நந்தகோபர் ஐஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவனே-பரம பதம் போலேயும்
நாராயணத்வம் போலேயும் ஸ்வதஸ் சித்தம் அன்று இறே-கோப குலமும் கோபாலத்வமும்-
நந்தன் பெற்ற ஆனாயனுக்கு அல்லது சித்தியாதே(அந்த இரண்டுக்கும் இந்த இரண்டு
அவை இருந்த சொத்து இவை பிறந்து பெற்ற சொத்து )

——————————————————————

ஆராய்ந்து -2-பிரயோகங்கள் –

கீழ் வானம் –தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
மாரி- மலை முழைஞ்சில் —சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் –

1-கீழ் வானம் –தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்–நம்மாலே பேறு என்று நாம் வரப் பார்த்து இருக்குமவர்கள்-
நாம் இருந்த இடத்தே வந்தது இவர்கள் செல்லாமை இறே-என்று இரங்கி நமக்கும் உகந்து அருளும் காண் – பிரணயித்வம் போனாலும் ஆர்த்த ரஷணம் தவிருமோ-அனுஷ்டியாது ஒழியுமோ ஆன பின்பு அவன் அருளுக்கு ஹேது பூதையான நீ எழுந்து இராய்-ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம -என்று சொல்லி வைத்தும் அது அனுஷ்டியாதே இருக்குமோ
அவன் பக்கல் ஒரு தட்டில்லை- நம் குறை அத்தனை – கடுகப் புறப்பட வமையும்-என்கிறார்கள் –

2-மாரி- மலை முழைஞ்சில் —சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் –நீங்கள் என் பட்டி கோள்-என் செய்தி கோள் -என்கை-அதாவது
பெண்களை எழுப்புவது –வாசல் காப்பானை எழுப்புவது –ஸ்ரீ நந்த கோபர் உள்ளிட்டாரை எழுப்புவது –நம்மை எழுப்புஅண்ணரை எழுப்பி மீளவும் நம்மை எழுப்பி போர வியசனப் பட்டி கோளே-என்று திரு உள்ளம் பற்றி கிருபை பண்ணி அருள வேணும் – –எதிர் சூழல் புக்குத் திரியுமவனுக்கு இவை எல்லாம் தன் குறையாகத் தோற்றும் இறே –வந்த கார்யம் -இப்போது சொல்லார் –சிற்றம் சிறு காலைக்கு -29-வைக்கிறார்கள்-

————————————————————

புள்-4-பிரயோகங்கள் –

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
புள்ளின் வாய் கீண்டானை —புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்

1-2-புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்–போது விடிந்தது-பஷிகள் அகப்படக் கிளம்பி இரை தேடித் போகா நின்றன — காண்-பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கிற பஷிகளின் நாதம் அல்லது-இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும் —என்று அருளிச் செய்வர்-மார்கழி நீராட வேணும் என்னும் த்வரையும் இன்றிக்கே-வைகி (காலம் தாழ்ந்து )எழுந்து இருக்கில் ப்ரத்யவாயமும் இன்றிக்கே காலம் உணர்த்த உணருமவை அன்றோ புட்கள் –நீங்கள் பிறந்த ஊரில் பஷிகளுக்கு உறக்கம் உண்டோ –காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்-மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ –என்று அன்றோ இருப்பது -ஆண்டாள் பிறந்த ஊரில் பக்ஷிகளுக்குத் தான் உறக்கம் உண்டோ -என்று ஆச்சான் பிள்ளை -இப்போது இவள் புள் என்கிறது -சேர்ப்பாரையில் சொல்லுகிறபடியே-ஞான அனுஷ்டங்களாலே-பகவத் சம்பந்தம் கடகரான பாகவதர்களை ஆகையால் சத்வோத்தரமான காலம் ஆனவாறே சாத்விகரான பாகவதர்கள் –பகவத் குண அனுசந்தான பூர்வகமாக பகவத் கைங்கர்ய ரூபங்களாய்- தத் தத் வர்ண ஆஸ்ரம உசிதங்களான காலிக கர்மங்களை அனுஷ்டிக்கைகாக சர்வவோதிக்கமாக எழுந்து இருந்து புறப்பட்டார்கள் –

2-புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ–புள்ளுக்கு நிர்வாஹகனான பெரிய திருவடி உண்டு –அவனுடைய கோ உண்டு -சர்வேஸ்வரன்
அவனுடைய இல் -என்னுதல்-புள் -என்று பஷியாய்-அத்தாலே பெரிய திருவடியாய் –
அவனுக்கு நிர்வாஹகனானவனுடைய கோயில் -என்னுதல் –சக்கரவர்த்தி திருமகன் திருவவதாரம் பண்ணி-இருந்ததே குடியாக அவன் அழகிலே ஈடுபட்டு செல்லா நிற்க –
சஹா பத்ன்யா விசாலாஷி நாராயண -என்று- அவர் பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்குமா போலே-கிருஷ்ணனையும் கும்பிடு கொள்கைக்கு ஒரு திரு முற்றம் உண்டு-புள்ளரையன்
அவனுக்கு நிரூபக தர்மம் ராமானுஜம் லஷ்மணம் பூர்வஜம் ச(சீதா பிராட்டி -இருவரையும் மாய மான் பின் அனுப்பிய பின் )அகஸ்திய ப்ராதரம்-நாராயணன் (நாரங்களை வைத்தே இவனுக்கும் )என்னுமா போலே வழியே இழியுமவர்கள் ஆகையால் பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே (திரு விருத்தம் -3-)-என்னக் கடவது இறே–புள்ளரையன் கோ -பெரியாழ்வார் ஸூசகம்

3-4-புள்ளின் வாய் கீண்டானை —புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்–பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்ட கள்ள அசுரன் (பெரியாழ்வார் 2-5-4 )-
கள்ளச் சகடம் -என்னுமா போலே –மேய்க்கிற கொக்கிலே அசுரன் ஆவேசித்து நலியப் புகுந்தான் –பொதுக்கோ -என்று கீண்ட சடக்கைச் சொல்கிறது –இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி –இத் தலைக்கு அனுமதி இறே வேண்டுவது –விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கை இறே அவன் பணி –இவனுடைய அனுமதியும் அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகும் அத்தனை(காக்கும் இயல்பினன் இயல்பு -ஸ்வரூபம் தானே -பிரபாவம் அல்ல-அனுமதியும் நமக்கு ஸ்வரூபம் )கர்ம ஞானங்களை சஹகாரியாகக் கொண்டு பக்தி உபாயம் என்று இருக்குமவர்கள் அன்று இறே இவர்கள் –தன்னுடைய அஞ்ஞான அசக்திகளையும்-அவனுடைய ஞான சக்த்யாதிகளையும் சஹகாரியாய்க் கொண்டு அவனே உபாயம் என்று இருக்குமவர்கள் அன்றோ இவர்கள் –புள்ளின் வாய் கீண்டானை –ஸ்வ ஆஸ்ரிதருக்கு ஸ்வ அனுபவ விரோதியான காமாதி தோஷ நிவர்தகனாய்

4-புள்ளும் சிலம்பின காண் –புட்கள் உணர்ந்த மாதரம் அன்றிக்கே-இரை தேடி சிலம்பி போயிற்றன –கீழேயும் புள்ளும் சிலம்பின் காண் -என்றது –அங்கு கூட்டில் நின்றும் சிலம்பின படி சொல்லிற்று-இங்கே கூடி வழியே போம் இடம் எல்லாம் போய் ஆஹாரார்த்தமாக சிதறின படி சொல்கிறது –புள்ளும் சிலம்பின காண் –மற்றுள்ள பாகவதர்களும் த்வரித்துக் கொண்டு போந்தார்கள் –

——————————————-

தூயோமாய்-3-பிரயோகங்கள் –

மாயனை —தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
நாயகனாய் —தூயோமாய் வந்தோம்
தூ மணி மாடத்து

1-மாயனை —தூய பெரு நீர் யமுனைத் துறைவனை –விரஜை போலே போந்த இடத்துக்கு ஒரு ஆறு உண்டானபடி -விட்ட வற்றை (நாட்டை -பரம பதத்தை -நதியை -விரஜையை ) மறக்கும் படியான ஆறு –பரம பதத்தில் நின்றும் வந்து அவதரிக்கைக்கு இவ் வூர் உண்டானால் போலே பரம பதத்துக்கு விரஜை போலே இவ்வூருக்கு இவ்வாறு தூய-1-ஸ்ரீ வசுதேவர் எழுந்து அருளுவித்துக் கொண்டு போகிற போது பாங்காக வற்றிக் கொடுத்த படி –2-ஸ்ரீ கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறிப் கொப்பளிக்கையால் வந்த தூய்மை ஆகவுமாம் –3-நீரில் தெளிவை சொல்லிற்று ஆகவுமாம்-அடி அறிவார் கூடப் போந்து கருத்து அறிந்து கார்யம் நடத்துமா போலே –திருவடி திருவனந்த ஆழ்வான் போலே கருத்து அறிந்து
அவ் விருளிலே கிருஷ்ணனை எழுந்து அருளுவித்துக் கொண்டு போக முழங்கால் மட்டாக வற்றிக் கொடுத்த சுத்தியைச் சொல்கிறது-யமுனாஞ்சாதி கம்பீராம் நானாவர்த்த சஷாகுலாம் வஸூ தேவோ வஹான் கிருஷ்ணம் ஜானு மாத்ரோத கோயயவ்-என்ற ஸ்ரீவிஷ்ணுபுராண வசநம்-பிராட்டி சரணம் புகவும் ராவண பயத்தால் அஞ்சி இருந்த கோதாவரி போல் அன்றிக்கே கம்சன் மாளிகை நிழல் கீழே வற்றிக் கொடுத்த படிப்ராயேண தேவி பவ தீவ்யபதேச யோகாத்
கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே|
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .-ஸ்ரீ கோதா ஸ்துதி -12.அம்மா கோதா தேவியே! உன் பெயரை வஹித்த ஸம்பந்தத்தாலும், பாக்யத்தாலும் கோதாவரீ நதி
இவ்வுலகத்தைத் தன் தீர்த்தத்தால் மிகவும் புண்யமாக(சுத்தமாக)ச் செய்கிறாள்.)

2-தூயோமாய் வந்து நாம் – அங்குத்தைக்கு நாம் யோக்யரோ அயோக்யரோ என்று பாராதே-
இருந்தபடியே வந்து –இருந்தபடியே-வருகைக்கு மேற்பட சுத்தி தேட வேண்டா இறே-
ஸ்ரீ மான் என்றது இறே இருந்த படியே வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானை-அவனே உபாயம் என்று இருக்கிற நாம்-அவன் வர இருக்கக் கடவ நாம் வந்து-முறை கெட வருவான் என் என்னில்-உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாதது போலே- உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒட்டாது இறே-தூயோமாய்-இடைச்சிகள் தூய்மை இறே –
தலை  இருக்க உடம்பு கழுவியும் -உடம்பு இருக்க தலை  கழுவியும் போருவர்கள் இறே
பகவத் சம்பந்தம் ஒழிய தனக்கு ஒரு சுத்தி சம்பதிக்கையாவது அசுத்தனாய் விடுகை இறே –
அவனுடைய சம்பந்தத்தை அனுசந்திக்கை ஒழிய தனக்கு ஒரு சுத்தி இல்லையே –
(தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே -அவனால் வரும் நன்மை முலைப்பால் போல் அன்றோ )
விபீஷணன் கடலிலே ஒரு முழுக்கு இட்டு இன்று இறே வந்தது –
அர்ஜுனன் யுத்தத்தின் நடுவே முழுக்கு இட்டு இன்று இறே சரம ஸ்லோகம் கேட்டது –
திரௌபதி முழுகி யன்றே பிரபத்தி பண்ணிற்று-தூயோமாய்அநந்ய பிரயோஜனத்தை சொல்லிற்று ஆகவுமாம்நாம்க்ரம பிராப்தி பற்றாத நாம்

3-தூ மலர் – மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவம்-என்றும் சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -என்றும்- அநந்ய பிரயோஜனமான பூ விறேபிரயோஜனத்தை கணிசியாது இட்ட மலர்பத்ரம் புஷ்ப்பம்-த்ரவ்ய தார தம்யம் பார்ப்பது இல்லை – இடுகிறவன் நெஞ்சிலே ஈரமே பார்ப்பது – எல்லாம் கூட அஸ்நாமி இறே

4-நாயகனாய் —தூயோமாய் வந்தோம்–நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை-எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய-ஸ்வ யத்னமாதல்-ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் –உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் – பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –திருவடி -திருவாழி மோதிரமும் -தன் வடிவும் காட்டாதே மிடற்று ஓசை காட்டி விசுவசித்திப்பித்தால் போலே
இவர்களும் தங்கள் ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்-தூயோமாய் வந்தோம் –
பறை என்றது வியாஜ்ய மாதரம்-நாங்கள் அநந்ய பிரயோஜனராய் வந்தோம் –

5-தூ மணி மாடத்து—நிர் தோஷங்களான ரத்னங்களாலே செய்த மாடம் —இவர்கள் விரஹ தாபம் தீர சுபாஸ்ரயமாக அனுசந்திக்கிறார்கள் –துவளில் மா மணி மாடம் -என்று குற்றம் எடுத்துக் கழிக்க வேண்டாத-நன்மையை உடைய மணியாலே செய்த மாடம் –சம்சார கந்தம் உண்டாய் கழிந்த முக்தருக்கும்-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்யருக்கும் உண்டான வாசி-போந்து இருக்கை –ஆழ்வான் -ஹிதாம்சத்துக்கு ஒரு வைஷ்ணவனுடைய க்ருஹ யாத்திரையை அனுசந்திக்க அமையும் -என்றால் போலே இவர்களும் இவளுடைய மாளிகையின் அழகை அனுபவிக்கிறார்கள்—திருத் தொலை வில்லி மங்கலம்- திரு நறையூர் மணி மாடக்கோயில் -திரு நாங்கூர் மணி மாட கோயில் -இவற்றை விட ஸ்ரேஷ்டம் இவள் இருக்கும் தூ மணி மாடம்

———————————–

மாயனை -4-
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைபரம பதத்திலே —விஸ்ருங்கல ஜ்ஞாநிகளான நித்ய ஸூரிகளாலும்-கறை காண ஒண்ணாத பரத்வத்தை உடையவனை அயர்வறும் அமரரர்கள் அதிபதியாய்க் கொண்டு தன் ஐஸ்வர்ய வ்யாவ்ருத்தி தோற்ற இருக்கும் இருப்பை நினைத்து அது தான் வாசாம் அகோசரம் ஆகையாலே –மாயன் -என்கிறது –கிருஷ்ண அவதாரத்தில் நீர்மை தங்களுக்கு நீர்மை இல்லாமையாலே பரம பதத்திலே அனுபவிக்கக் கோலி அது தானும் நிலம் அல்லாமையாலே எத்திறம் -என்கிறார்கள் –மாயனை –ஒரூருக்கு தன்னைக் கொடுத்த நீர்மை இறே இது-ஒரு நாட்டுக்காக தன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற நீர்மை யாகையாலே ஏற்றம் உண்டே அங்குத்தைக்கு-அன்றிக்கே நித்ய ஸூரிகளும் நேர் நின்று பார்க்க ஒண்ணாத நிரந்குச ஐஸ்வர்யத்தை உடையவன் கிடீர்- அவதரித்தான் என்று- அவதார சௌலப்யத்தை அனுசந்தித்து- அந்த ஆச்சர்யத்தை சொல்லுவதற்கு முன்பே-ஆழம் கால் பட்டு – எத்திறம் -என்கிறார்கள் -ஆகவுமாம் –மாயனை –ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் –நிரதிசய ஆனந்த பரிபூர்ணனாய் – உபய விபூதி உக்தனாய் – ஸ்ரீ யபதியாய்-ஏகார்ணவம் போலே -நித்ய விபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுமாமாயன்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே அபலைகளான பெண்களை எழுதிக் கொண்டு அவர்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம் படி பவ்யனாய் இருக்குமவன்-பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்-மேன்மைக்கும் நீர்மைக்கும் – இரண்டுக்கும் நிதானமான ஸ்ரீ யபதித்வத்துக்கும் வாசகங்களான திருநாமங்களை அநேகம் சொன்னோம் -மஹா மாயன் -172–மாதவன் -73
வைகுண்ட 406

வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-மாயனைப் –தன் கையில் அவர்கள் படுமத்தனை-பெண்கள் கையில் பட்டு நமக்குத் தோற்று –அத் தோல்வியால் நம்மை வென்று இருக்குமவனை-குவலயா பீடத்தை அழித்தால் போலே நம்முடைய ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தைப் போக்கி –மல்லரை நிரசித்தால் போலே –தன் தோளோடு அணைய ஒட்டாத இடையருடைய சங்கல்பத்தை போக்கி எதிரிகள் தனக்குத் தோற்றால் போலே நமக்குத் தான் தோற்று இருக்கிற ஆச்சர்ய பூதனை –

மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்மாயன் –பெண்கள் கோஷ்ட்டியில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்துப் பரிமாறின படி-எங்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹனானவன்-எங்கள் கோஷ்டியிலே தாழ நின்று கையைக் காலைப் பிடித்த படி-ஆஸ்ரித பரதந்த்ரனாய்-சுலபனாய்-ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய்-எம்பெருமான் நென் நேற்றே பறை தருகிறேன் என்று மன பூர்வகமாக சொல்லி வைத்தான் –

—————-

மால்–3-
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை அருத்தித்து வந்தோம்
மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்

1-நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும்–இடைப் பெண்களும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –நம்மால் -நம்முடைய மால் -கைக் கொள்ள துழாய் மேல் வைக்கும் வியா மோஹம் நம்மிடம் வைத்துள்ளவன் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் அன்பன் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ-குழல் இனிது யாழ் இனிது -தம் மக்கள் அழு குரல் இனிது –-கண்ணன் தனது புல்லாங்குழலை விட பக்த நாரதர் வீணை ஒலியை மிக இனியது என்றும் நம் போல்வார் அழுகையையும் ஸ்தோத்ரமாகக் கொள்ளும் மால் அன்றோ

2-நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை அருத்தித்து வந்தோம்–ஸ்ரீ வசுதேவர் பக்கலிலும் ஸ்ரீ தேவகியார் பக்கலிலும் திரு உள்ளம் மண்டி –-ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் –காணுமாறு இனி யுண்டு எனில் அருளே என்று அவள் பட்ட இழவுகள் எல்லாம் தீர முலைப் பால் திரு மேனியில் பாய அவளுக்கு நின்று பால சேஷ்டிதங்களைக் காட்டின வ்யாமோஹத்தை அவள் தான் காண்பதற்கு முன்னே மஞ்சங்களில் பெண்கள் கண்டு வாழும் படி வ்யாமோஹ அதிசயத்தை நெடுமாலே என்கிறது –

3-மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்முன்பு -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அபரிச்சேத்யமான மேன்மையையும் நினைத்து இருந்தார்கள் –
இப்போது இத்தலைக்கு -வாத்சல்யமே ஸ்வரூபம் என்று நிலை இட்டார்கள் –
சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள் மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை –மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் –-இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —நாங்கள் தெளிந்து நோன்பு நோற்க வாகிலும் வல்லோம் ஆனோம் –நோற்கவும் ஷமன் அன்றிக்கே நாங்கள் வந்து எழுப்பும் அளவும்
எழுந்து இருக்கவும் மாட்டாதே வ்யாமோஹம் இருந்த படி என் –மாலே –மாலை உடையவனே சொல்லாமல் அன்பே–அன்பு வேற அவன் வேற இல்லை-வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் இவர்–ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து –தான் என்னை முற்ற பருகினான்-இவர் விழுங்க திட–பருகினான் -த்ரவ்ய–வ்யாமோஹம் கண்டு ஆழ்வார் உருக அத்தை பருகினான் –

———

செல்வம்–6-
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்-1-
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்-1-லஷ்மணோ லஷ்மி சம்பன்னஅந்தரி ஷக்த ஸ்ரீ மான்சது நாகவர ஸ்ரீ மான்-இங்கு ஐஸ்வர்யமாக சொல்லுகிறது கிருஷ்ண ப்ரத்யாசத்தியை-அதாவது-வழி பாதி வழக்கு பாதி தர்மம் பாதி யாக-பஞ்ச லஷம் குடியில் பெண்களில் இவனால் புஜிக்கப்படாதார்-ஒருவரும் இல்லை-வலி  யாகிறது -தன் செல்லாமை-வழக்கு ஆகிறது -மைத்துனமை-தர்மம் ஆகிறது -சம்சயம்-வலி பாதி -வழக்கு பாதி தர்மம் பாதியாக -கிருஷ்ணனால் எச்சில் (அனுபவிக்கப் )படுக்கை -என்னவுமாம் –
தர்மமாவது -ஆந்ரு சம்ஸ்யத்தாலே மனிச்சு கலக்கும் படி-வழக்கு மைத்துனமை கொண்டு கலக்கும் படி-வலியாவது-தன் செல்லாமை கொண்டு மேல் விழும்படி-அஹங்கார ஸ்பர்சமாதல் –தேவதாந்த்ர ஸ்பர்சமாதல் அன்றிக்கே இருக்கை –இத்தால் சொல்லிற்று ஆயத்து- அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இன்றிக்கே இருக்கை –

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-ந கச்சின் ந பராத்யதி -என்னும்
அவள் அடியாக வந்த சம்பத் ஆகையால் ஊற்று மாறாத சம்பத்து இறே –-அழிவில்லாத சம்பத்து நிரவதிமாம்படி-சேதனர் உடைய புண்ய பாப அனுரூபமாக படி விடும்-சர்வேஸ்வரன் அடியாக வந்த சம்பத்தாகில் இறே அளவு பட்டு இருப்பது-பகவத் ஸ்பர்சத்தால் வந்த சம்பத் ஊற்று உடைத்தாய் இருக்கும் இறே-ஆகையால் நீங்காத செல்வம் -என்கிறது-ஈஸ்வரன் பார்த்த இடம் போலே சாவதி அன்று இறே இவர்கள் பார்த்த இடம் – புண்யம் அடியாக வருதல் ஈஸ்வர கடாக்ஷம் அடியாக வருதல் செய்யுமவை போல் அன்றுஅவனுடைய ஐஸ்வர்யத்துக்கு அடியான கடாக்ஷம் உள்ளவர்கள் இறே இவ்வைஸ்வர்யத்துக்கு அடிபிற் காலியாமல் குருகுலத்திலே பிரவேசித்து ஸூத்த ஸத்வராய் இருந்து தன்னைப் பற்றினார்க்கு பரம பத நாதனோடுபரம சாம்யா பத்தியைப் பண்ணிக் கொடுக்கும் சீர்மை உடையனாய்பிரஜைக்கு முலை போலே சிஷ்யனுக்கு தாரகமான திருவடிகளைப் பற்றி பிரார்த்திக்க உபதேச பாத்ர பூதரான சிஷ்யரை பரி பூர்ணஜ்ஞானிகள் ஆக்குமவர்களாய்
சிஷ்ய விதேயராய்-நிரந்தர பகவத் குணானுபவத்தாலே-பரிபுஷ்டரான ஆசார்யர்கள் உடைய-அவிச்சின்னமான சம்பத்து பரிபூர்ணம் ஆய்த்து –இவர்கள் -கடி மலர்ப் பாவைக்கு ஒப்பு உள்ளவர்கள் அன்றோ

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ–பகவத் குணங்களை ஒரு மடை செய்து-புஜிக்கை யாகிற சம்பத்தை உடைய-நிருபாதிக பார தந்த்ரியம் உடையவளே -நீ -உன்னோடு கூடுவது எங்களுக்கு எல்லா ஐஸ்வர்யமுமான நீ கிருஷ்ண குண அனுசந்தத்தாலே புஷ்கலையான நீ –

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்–தோற்றி மாயும் சம்பத் அன்றிக்கே-நிலை நின்ற சம்பத்து –அதாகிறது –கிருஷ்ணன் திருவடிகளில் நிரந்தர சேவை-லஷ்மணா லஷ்மி சம்பன்ன போலே-கைங்கர்ய லஷ்மி இறே இவ்வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து –லஷ்மி சம்பன்ன -என்றது-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி-தன் வைஷ்ணவ ஸ்ரீ யாலே ஜகத்துக்கு அடைய-வைஷ்ணத்வம் உண்டாம்படி இருக்கை –கர்மத்தாலே யாதல் –தேவதாந்த்ர பஜனத்தாலே யாதல் வரும் ஐஸ்வர்யம் அந்தவத்தாய் இருக்கும்-பெருமாளை பிரியாத இளைய பெருமாள் உடைய ஐஸ்வர்யம் போலே –-கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அன்றிக்கே-அவனை நோக்குகிற ஐஸ்வர்யம் இறே நிரந்தர சேவை போலே நிலை நின்ற ஐஸ்வர்யம் –

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா–கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய இட்டுப் பிறந்த ஸ்ரீ மானே –இளைய பெருமாள் பின் பிறந்து பெற்ற சம்பத்து முன் பிறந்து பெற்றவன் அன்றோ நீ –கிருஷ்ணனையும் பெண்ணையும் சேர விடும் ஏற்றம் உடையவன் அன்றோ நீ –

செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்–செல்வத் திருமாலால்-உபய விபூதி ஐஸ்வர்யத்தை யுடைய ஸ்ரீ யபதியாலே-திருத் தக்க செல்வமும் -என்றபடி-செல்வத்துக்கு தகுதியானவள்-உபய விபூதி உக்தனான ஸ்ரீ ய பதியாலே –இப்பாட்டில் உபக்ரமத்திலே பிராட்டி சம்பந்தம் சொல்லி முடிவிலும் சொல்லுகையாலே த்வயத்தில் சொன்ன படியில் இங்கும் சொல்லிற்று என்கை –இங்கு
உத்தர வாக்கியத்தில் ஸ்ரீ மத் சப்தார்த்தம் சொல்லுகிறது-ரகஸ்ய த்வயத்திலும் மறைந்து கிடந்த லஷ்மீ சம்பந்தம் வாக்ய த்வயத்தாலே வெளியாகிறது –பஞ்ச லக்ஷம் பெண்களைப் பெற்ற பூர்ணனான திருமால் -பேற்றுக்கு உகப்பானும் அவனே அன்றோ

———————

கறவை-3-பிரயோகங்கள் –

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்துகறக்கும் பருவமாய் இருக்கச் செய்தே கன்று நாகாய் இருக்கை –முக்தர் பஞ்ச விம்சதி வார்ஷிகராய் கீழ் நோக்கி வயசுஸூ புகுமா போலே இவையும் இளகிப் பதித்து இருக்கும் – அவர்கள் பரத்வ அனுசந்தானத்தாலே –
இவை மனுஷத்தவே பரனான கிருஷ்ணனுடைய கர ஸ்பர்சத்தாலே

கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி-உதாரர் கொடுக்கப் பெறா விட்டால் (துன்பம் )படுமா போலே – ஆஸ்ரிதர் கார்யம் செய்யப் பெறா விட்டால் – ரிணம் ப்ரவ்ருத்தம் -என்னுமா போலே ஈஸ்வரன் –இளம் கன்றான எருமை என்னுதல்-இளம் கன்றை யுடைய எருமை என்னுதல் –இரண்டாலும் பாடு ஆற்றாமை சொன்ன படி-தன் முலைக் கடுப்பு கிடக்க கன்று என் படுகிறதோ -என்று இரங்கி- எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில்-ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -என்று அவன் படும் பாட்டுக்கு நிதர்சனமாய் இருக்கிறது –எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்குமா போலே -(கஜேந்திர மோக்ஷம் )
அவன் எருமை கறவா விட்டால் அவை படும் பாடு நாங்கள் உன்னாலே படா நின்றோம் –

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்–அறிவு கேட்டுக்கு நிதர்சனமான பசுக்கள் –அறியாமைக்குக் கன்று காலி என்கை –ஞாநேந ஹீந பஸூபிஸ் சமாந -இறே
அறிவில்லாதவரை பசுக்களோடு ஒப்பர் என்னக் கடவது -(மா முனிகள் விருத்தத்தில் பசு நர வபுஸ் -பசு பிராயர் )-நாங்கள் தேவரைப் பெருகைக்கு குருகுல வாசம் பண்ணின படி –
இவற்றை அனுவர்த்தித்தோம் -இத்தனை – எங்களைப் பார்த்தால் -பசுக்கள் -வசிஷ்டாதிகளுக்கு சத்ருசமாக போரும் – பசுக்கள் அசுக்காட்டில் -அனுகரிக்கையில் -ஆர்ஜவம் –கறவைகள் பின் சென்று-இவர்கள் சேவித்த ஆச்சார்யர்கள் இருக்கிறபடி-பசுக்களும் வசிஷ்ட பராசராதிகள் கோடியிலே யாய்-எங்கள் இளிம்பு கண்டு சிரித்து
எங்கள் ஆர்ஜவத்தை அநுகரித்து அவை வழி காட்ட அவற்றின் பின்னே திரிந்தோம் சிலர்-காலிகள் பின் சென்று என்னாதே – கறவைகள் பின் சென்று -என்றது தர்ம புத்தயா ரஷித்தது அன்று – பிரயோஜன புத்தயா செய்தது என்கைக்காக –எருதுகள் வறடுகள்
ஈற்று மறுத்தவை ரஷித்து அறியோம் –

————————————————-

வந்து-

தூயோமாய் வந்து -5-
கூவுவான் வந்து நின்றோம் -8-
தேற்றமாய் வந்து திறவேலோ -10-
தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் -11-
தூயோமாய் வந்தோம் -16-
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்–சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் -18-
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து -23-
சிற்றம் சிறு காலே வந்து உன்னைச் சேவித்து -29-

தூயோமாய் வந்து -5-அவனே உபாயம் என்று இருக்கிற நாம்-அவன் வர இருக்கக் கடவ நாம் வந்து-முறை கெட வருவான் என் என்னில்-உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாதது போலே-
உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒட்டாது இறே-வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்று-அவன் வரவை நாம் செய்யக் கடவோம் –உபஸ்தேயை ரூபஸ்தித-என்றும் –பத்ம்யாமபி கமாச்சைவ-என்றும்-இட்ட நாலடிக்கும் புண் பட்டு இருக்குமவன் இறே

கூவுவான் வந்து நின்றோம் -8-தேச பிராப்தியே பிரயோஜனம் போலே -வந்து-போகை தானே உத்தேச்யமாகப் போனால் போலே உன்னைக் கூவுகை தானே பிரயோஜனமாக வந்தோம்-வந்து நின்றோம் –உத்தரம் தீர மாஸாத்ய கஸ்த ஏவ வ்யதிஷ்டித்த –என்னும் படியே
உன் பக்கலிலே வந்து நின்றோம் –கால்கள் தரையிலே பாவி நிற்கப் பெற்றோம்

தேற்றமாய் வந்து திறவேலோ -10-இவர்கள் ஆர்த்தியைக் கேட்டு துணுக் என்று வர புக்காள்- இரண்டாம் நிலத்தில் -மேல் மெத்தையில் -கிடக்கிறவள் ஆகையாலே-தடுமாறாதே தெரிந்து வந்து திற -என்கிறார்கள் –ஊராகத் திரண்டு கிடக்கிறது-படுக்கையில் கிடந்தபடி வாராதே
சதஸ்தையாய் வந்து திற

தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் -11-இவ்வூர் அடங்க இவளுக்கு தோழிமார் உறவு -இவளுடைய சம்பந்தம் இவள் போல் அனன்ய ப்ரயோஜனராய் அது தான் தோழமை
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெரில் ஓன்று நூறாயிரமாக –
கொண்டத்துக்குக் கைக் கூலி கொடுக்கும் ஜாதி எல்லாரும் வந்து உன்னை ஒழிய வேறு பிரயோஜனம் இல்லாமல் நீயே பிரயோஜனம்

தூயோமாய் வந்தோம் -16-அவள் செய்வதை நாங்கள் செய்தோம்-நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –
அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய ஸ்வ யத்னமாதல்
ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் – உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் –பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –

வந்து எங்கும் கோழி அழைத்தன காண்–சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் -18-வந்து எங்கும் கோழி அழைத்தன காண் –துடை தட்டி எழுப்புவாரைப் போலே-சர்வதோதிக்கமாக கோழி கூவா நின்றன –சத்வோத்தரமான காலம் ஆனவாறே சர்வோதிக்கமாக பாகவதர் எழுந்து இருந்து பகவத் கைங்கர்யார்தமாக ஒருத்தரை ஒருவர் எழுப்பா நின்றார்கள்-வந்து திறவாய் –யந்த்ரத்தாலே திறக்க ஒண்ணாது -உன்னுடைய நடை அழகு காணும்படி வந்து திற –எங்களுக்காக நாலடி வந்தாய் என்னும் தரம் நாங்கள் பெறும்படி வந்து திறக்க வேணும் –நாலடி போய் வந்தாகிலும் திறக்க வேணும்-அவனும் நாங்களும் உன் நடை அழகைக் கண்டு வாழும் படி வர வேணும் –நம்முடைய பிரயத்னத்தை அபேஷியாமல்
நீயே வந்து ஸ்வரூப உபாய புருஷார்த்த விஷய விரோதியான தத் தத் அஞ்ஞானத்தைப் போக்காய்-

யாம் வந்த கார்யம் ஆராய்ந்து -23-அநந்ய பிரயோஜனைகளான நாங்கள் வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும் ––விரஹ துர்பல்யத்தாலே கால் நடை தாராத நாங்கள் அன்றோ வந்தோம்-இன்னம் இரண்டு அடி புகுர நின்ற வாறே – உற்றோமே யாவோம் -என்கிறோம் என்று கார்யம் இன்னது என்னும் இடத்தை கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-சிற்றம் சிறு காலைக்கு வைக்கிறார்கள்

சிற்றம் சிறு காலே வந்து உன்னைச் சேவித்து -29-இரண்டு ஸ்வரூபத்தையும் அழித்தோம்-ஸ்வரூபம் நிலையிட்டவர்கள் இறே(நாராயணனே நமக்கே பறை தருவான் என்றார்களே )
பத்ப்யாம் அபிகமாச்சைவ ஸ்நேஹ சந்தர்ச நேந ச -என்று சொல்லுகையாலே
அவன் இருந்த இடத்தே நாலு அடி இட்டுச் செல்ல இட்ட இட்ட பதம் தோறும் நெஞ்சு உளுக்கும்-பொறுக்க மாட்டான் -என்கை

————–

சென்று-

தீக்குறளைச் சென்று ஓதோம்-2-
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் -8-
செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் -11-
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று -20-

தீக்குறளைச் சென்று ஓதோம்-2-பிறர்க்கு அநர்த்தரவஹமாக பொய் சொல்லக் கடவோம் அல்லோம்-நம்மில் நாம்-நப்பின்னை நங்காய் -என்றும்-நாயகப் பெண் பிள்ளாய் -என்றும் –
நிர்வாஹகையாக இருந்த படி இதுவோ -என்று வெறுத்து சொன்ன வார்த்தை –
பேய்ப் பெண்ணே -என்றும்-ஒருவருக்கு ஒருவர் இட்டீடு கொண்டு சொன்னவை
கிருஷ்ணன் செவிப் படுத்த கடவோம் அல்லோம்-பிறர் செய்யுமவை அறிவிக்கச் சென்றாலும் அவன் முகத்தில் தண்ணளி கண்டால் அறிவிக்க ஒண்ணாத படி இருக்குமே-சென்று ஓதோம்-அவன் தான் கலந்து நின்று அறியுமாகில் செய்யலாவது இல்லை –

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் -8-விரஹம் தின்று குறைக் கொள்ளியான நம் சரீரத்தை அவன் கண்டு புண் படும்படி அவன் இருந்த விடத்தே செல்லக் கடவோம்-அவன் வர பிராப்தமாய் இருக்க நாம் சென்று – இவர்கள் நம -சொல்லுகையும் அத்தலைக்கு மிகுதியாய் இறே இருப்பது –அத்தலை இத்தலையாய் –அவன் வருகையும் சேவிக்கையும் தவிர்த்தால்-நாம் சென்று சேவிக்கை அத்தனை அன்றோ அப்படி செய்தால் நம் கார்யம் செய்யாது ஒழியுமோ –

செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் -11- எதிரிகள் வந்தால் பொர இருக்கை அன்றிக்கே -இருந்த இடங்களிலே சென்று பொருகை –அபியாதாப் ரஹர்த்தாச -என்ற
சக்கரவர்த்தி திரு மகனைப் போலே இவர்கள் வீரம் –எதிரிகள் வந்து ஊரை அடை மதிகள் படுத்த வெல்லுகை குற்றம் ஆனால் போலே நாங்கள் வர புறப்படாதே இருக்கை உனக்கு குற்றம் அன்றோ –

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று -20-நோவு வருவதற்கு முன்னே சென்று
ஏற்கவே ரஷிக்க கடவ நீ நோவு பட்டு வந்த எங்களை ரஷிக்க லாகாதோ –நீ சென்று உதவக் கடவ உனக்கு – உன் வாசலிலே வந்த எங்களுக்கு உதவலாகாதோ – உன் பக்கலிலே வருகை மிகை என்னுமவன் அல்லையோ – எழுதும் இன்னுமது மிகையாய் அன்றோ இருப்பது-

——–

நாம்-

நமக்கே பறை தருவான் -1-
நாமும் நம் பாவைக்கு –மலரிட்டு நாம் முடியோம் -2-
நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் -3-
நாங்களும் மார்கழி நீராட -4-
நாம் தூ மலர் தூவித் தொழுது -5-
சென்று நாம் சேவித்தால் -8-
நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் -10-
நானே தான் ஆயிடுக -15-
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் -21-
எம் மேல் விழியாவோ –எங்கள் மேல் நோக்குதியேல் –எங்கள் மேல் சாபம் இழிந்து -22-
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோ -23-
யாம் பெரும் சம்மானம்–யாம் அணியோம் -27-
புண்ணியம் யாம் உடையோம் –உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -28-
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –உற்றோமே யாவோம் —
உனக்கே நாம் ஆட் செய்வோம் –நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் -29-

1-நமக்கே பறை தருவான் -1--அத் தலையாலே பேறு என்று இருக்கிற நமக்கு -என்றபடி –
அகிஞ்சநராய்-அவன் கை பார்த்து இருக்கிற நமக்கே -என்றுமாம் –சம்பந்த ஞானம் உடைய நமக்கே –ஸ்வ ரக்ஷணத்திலே அன்வயம் இல்லாத நமக்கே (தருவான் )-நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் –உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –இதில் (நமக்கே )அவதாரணம்-ப்ராப்தாவினுடைய ஆகிஞ்சன்யத்தை அறிவிக்கிறது-அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூப அந்தர்கதம்- அத்தலையில் நிறைவாலும் அவனே உபாயம் – உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்-இத்தலையில் குறைவாலும் அவனே உபாயம் –ஸ்வரூபத்தில் உணர்த்தியும் -ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையவனுக்கே -என்கிறது –

2-நாமும் நம் பாவைக்கு –மலரிட்டு நாம் முடியோம் -2—அத்தலையால் பேறு என்று இருக்கிற நாமும் –நம்மில் நாம் வக்தாக்களும்-ஸ்ரோத்தாக்களுமாக -இருந்தோமே யாகிலும் –
லாப அலாபங்களில்-சம துக்க ஸூகராம் படி இருக்கிற(நப்பின்னைப் பிராட்டியும் கோபிகளில் ஒருத்தியாகவே தன்னை எண்ணிக் கொள்கிறாள் அன்றோ
நாம் அனைவரும் -கண்ணனும் இங்கே )இந்தப் பலம் நமக்கு ஒரு நாள் கை வரவற்றே என்று இருந்த நாமும்(அவனாலே அவனை அடைவோம் என்று விஸ்வசித்து உள்ள நாமும் )நமக்கும் சில க்ருத்ய அக்ருத்யங்கள் யுண்டு –-உபாய உபேயங்கள் அவனே யாகையாலே இவை அவற்றில் புகாது-வேறு ஒன்றைக் கொண்டு போது போக்க ஒண்ணாது –
ருசி கிடந்த இடத்திலே கிடக்க ஒட்டாது –அதனாலே அலமருகிற நாமும் – நாராயணனே உபாயம் என்று அறுதியிட்டு — இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -என்று பேற்றை அறுதியிட்டு நாமும்

நம் பாவைக்கு –நம்முடைய நோன்புக்கு--அவனையையும் அவனுடையாரையும் அழிக்கைக்குப் பண்ணும் இந்த்ரிஜித் பிரப்ருதிகள்-பௌண்டரீக வாசுதேவாதிகள் போல்வார் உடைய யாகம் போல் அன்றியே- ததீயரும் அவனும் வாழுகைக்குப் பண்ணும் யாகம் –மம ஸூதா -மமகாராம் அற்றவனையும் சொல்லப் பண்ணுமா போல் நம் பாவை பிரயோஜனாந்த பரமான நோன்பு அன்றிக்கே(அவனையே பிள்ளையாகப் பெற சக்ரவர்தியாதிகள் செய்த யாகம் -நோன்பு -போல்வனவும் அன்றிக்கே ) கிருஷ்ண விபூதியும் உண்டாக்குகைக்கு பண்ணுகிற நோன்பு –ப்ராப்ய ருசி பரவசராய் நாம் அனுஷ்டிக்கிற நோன்புக்கு-அவனும் அவன் விபூதியும் வாழ்க்கைக்கு பகவத் விஷய மங்களா சாசன பரரான நாம்

நாம் முடியோம் –அவன் தானே வந்து சூட்டில் செய்யலாவது இல்லையே-அப்போது அலர்ந்த செவ்விப் பூவினின்றும் வண்டுகள் கால் வாங்கி-இவள் குழலிலே படியும் படி இறே திருக் குழலில் செவ்வி இருப்பது –தான் மாலை சூட என்று தொடங்கினால் -குறையும் அவன் வந்து சூட்டி அலங்கரிக்கும் இறே அதுக்கு அவனுக்கு அவகாசம் வையோம் என்கை –நாமாய் அனுஷ்டிக்கிற போதும் அவன் கொடுக்க நாம் பரிக்ரஹியாத போதும் ஸ்வ ஸ்தவாந்தர்யம் குலையாமையாலே –அது குலைக்கைக்காக நாமாய் அனுஷ்டியாது ஒழிகையும் வேணும் –அவன் தர நாம் பரிக்ரஹிக்கையும் வேணும் –நாமாய் பகவத பிராப்தி சாதனங்களாக ஞான யோக பக்தி யோகங்கள் இரண்டிலும் அந்வயியாது ஒழிகையே வேண்டுவது-அவன் தானே இவ்வாத்மா வஸ்துவை அனுபவிக்கும் போது-ஞான பக்திகள் இரண்டையும் கொடுத்து –இவற்றை நீ தவிராது ஒழிய வேணும் என்று நிர்பந்திக்கும் போது-நம்மால் செய்யலாவது ஓன்று இல்லை இறே

5-நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் -3-நாங்கள்-திரு நாமத்தை வாயால் சொல்லா விடில் தரிக்க மாட்டாத நாங்கள்-நெஞ்சு காவல் இடுகிற ஊரிலே இது நமக்கு சித்திப்பதே என்று ப்ரீதைகளாய்-தங்களை ஸ்லாக்கிக்கிறார்கள் என்னவுமாம்-பாடி மடி கோலாதே-
இது தானே பிரயோஜனமாக யுடைய நாங்கள் ––பாடி நெய் உண்ணோம் -என்றவர்கள் பாட்டு இறே-இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்-என்று இருக்குமவர்கள் இறே-என்னையும் கொடுத்து என்னுடைமையும் கொடுத்து என்கிறார்கள்-பேர் பாடா விடில் தரியாத நாங்கள் -உபாய அம்சம் அவனேயானால் தாரகமும் அவனேயாம் அத்தனை இறே

6-நம் பாவைக்கு-ப்ராபகதயா வன்றிக்கே பிராப்ய ருசி இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் செய்கிற நோன்புக்கு-நாட்டார்க்கு நோன்பு என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு நம்முடைய-விரஹ தாபம் போக நாம் குளித்தால்-நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு கிருஷ்ண சம்ச்லேஷத்தைப் பண்ணினால்-அனுஷ்டானமும் அநநுஷ்டானமும் விகல்பிக்கலாம் படி இருக்கை — அனுஷ்டித்ததாகில் சாதனம் என்று கொள்ள ஒண்ணாதே ப்ராப்ய ருசியால் வந்தது என்கை அனுஷ்டித்தது இல்லையாகில்-அவனே உபாயம் என்கையாலே பலத்தில் அழிவில்லாமை பெறுமதுவும் கிருஷணனேயாய்-பெறுவிப்பவனும் கிருஷ்ணனேயான நோன்பு -என்றுமாம் (நோன்பு -உபாயம் அல்லவே -பெறு வித்தவனுக்கு கைங்கர்ய மாத்திரமே)

7-நாங்களும் மார்கழி நீராட -4-பகவத் கைங்கர்ய ஏக போகரான நாங்களும் -நோன்பு -என்கிற-வ்யாஜ்யத்தாலே- பகவத் சம்ஸ்லேஷத்தைப் பண்ணி மகிழக் கடவோம்-அதாவது-
பகவத் அனுபவ சஹகாரிகள் இத்தனை பேர் உண்டாவதே என்று அவர்களோடு கலந்து-பகவத் அனுபவத்தைப் பண்ணி ஆனந்திக்கை-நாங்களும் கிருஷ்ணனும் சேரக் குளிக்கை உனக்கு கிடைப்பது ஒன்றோ – நாங்கள் உன் வடிவைக் கண்டு த்வனியைக் கேட்டு எங்களுடைய தாபத்தை ஆற்றிப்ரீதிகளாய்க் கொண்டு மார்கழி நீராடுகிறோம் –
இவர்களை யுகப்பிக்கை இறே இவனுக்கு ஸ்வரூபம் ப்ரகர்ஷ இஷ்யாமி யிலே இறே அந்வயம்

நாம் தூ மலர் தூவித் தொழுது -5-க்ரம பிராப்தி பற்றாத நாம்-அவனே உபாயம் என்று இருக்கிற நாம்-உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாதது போலே- உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒட்டாது இறே-

சென்று நாம் சேவித்தால் -8-ஏஹி பஸ்ய சரீராணி -என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறோம்-மாசுடை யுடம்போடு தலை யுலறி-உபவாச கிருஸாம் தீ நாம்-அவன் நெஞ்சு புண்படுகைக்கு உடலாக-அவன் இருந்த இடத்தே சென்று அவன் செய்வதை நாம் செய்து விடுகிறோம்

நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் -10–வெறுமையே பச்சையாக யுடைய நம்மால்-இடைப் பெண்களும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –நம்மால் -நம்முடைய மால் -கைக் கொள்ள துழாய் மேல் வைக்கும் வியா மோஹம் நம்மிடம் வைத்துள்ளவன் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் அன்பன் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ

நானே தான் ஆயிடுக -15-இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் -இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –ஒருவனுக்கு வைஷ்ணத்வம் ஆவது ஸ்வ தோஷத்தை இல்லை செய்யாதே இல்லாததையும் சிலர் உண்டு என்றால்
அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்று ஆகிறது

போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் -21-பெரியாழ்வாரைப் போலே யன்றோ நாங்கள் வந்தது என்கை-தம்மைப் பேணாதே அத் தலையைப் பேணுமவர்-நாங்களும் எங்களைப் பேணாதே உன் வாசலிலே வந்தோம் என்கை-நாங்களும்-உன்னுடைய நிருபாதிக சேஷித்வத்துக்கு தோற்று-தேகாத்ம அபிமானத்தையும் ஸ்வ ஸ்வாதந்தத்ர்யத்தையும் அந்ய சேஷத்வத்தையும் ஸ்வாதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் பந்துக்கள் பக்கல் சிநேகத்தையும் உபாயாந்தர
உபேயாந்தரங்களையும் விட்டு இவற்றை நீ கொடுத்தாலும் பழைய துக்கத்தை நினைத்து வேண்டோம் என்று உன் திருவாசலிலே வந்து –நீயே சமஸ்தவித பிராப்யங்களும் பிராபகங்களும் என்று உன் திருவடிகளை ஸ்துதித்து மங்களா சாசனம் பண்ணி வந்து ஆஸ்ரயித்தோம் –

எம் மேல் விழியாவோ –எங்கள் மேல் நோக்குதியேல் –எங்கள் மேல் சாபம் இழிந்து -22-எம் மேல் விழியாவோ-கடாக்ஷமே தாரகமான எங்கள் மேலே கோடை யோடின பயிரிலே ஒரு பாட்டம் -என்னுமா போலே –சாதகம் வர்ஷ தாரையை ஆசைப் படுமா போலே – விழியாவோ -என்று தங்கள் மநோரதம் –எங்கள் மேல் –உன் நோக்குப் பெறாதே உறாவின எங்கள் பக்கல் –எங்கண் மேல் நோக்குதியேல்-உன் நோக்குப் பெறாதே ஒரு நீர்ச் சாவியாய் உறாவின எங்கள் பக்கலிலே-எங்கள் மேல்அவை இரண்டு கண்ணுக்கும் தங்கள் பக்கலிலே விஷயம் உண்டு –1-சேர ஒட்டாதார் பக்கலிலே பிரதாபமும்-2-தங்கள் பக்கலிலே தண்ணளியும்-சீற்றத்தோடு அருள் பெற்றவன்(3-6) ஹிரண்யன் பக்கல் சீற்றம் செல்லா நிற்க
பிரகலாதனுக்கு அனுகூலமாய் இருந்தது இறே கண்ணில் வாத்சல்யம் இருந்த படி-ஸிம்ஹம் ஆனையோடே பொரா நின்றாலும் குட்டிக்கு முலை கொடுக்குமா போலே -என்று பட்டர் இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும் குழவி இடை கால் இட்டு எதிர்ந்து பொரும் -(பெரியாழ்வார்-3-5 )எங்கள் மேல் சாபம் இழிந்து-தங்கள் யாதனா சரீரம் போலேயும்
சாபோபஹதரைப் போலேயும் விஸ்லேஷ வ்யசனமே படுகிற எங்கள் துக்கம் –
அனுபவித்தே விட வேண்டுகையாலே -சாபம் -என்கிறது –1-ப்ரஹ்ம சாபம் மார்பிலே வேர்ப்பாலே போக்கலாம் –2-துர்வாசாவினுடைய சாபம் மார்பில் இருக்கிறவர்களுடைய கடாக்ஷத்தாலே போக்கலாம்-3-கௌதம சாபம் காலில் பொடியால் போக்கலாம் –
4-தக்ஷ சாபம் ஒரு தடாகத்தில் முழுக்கிட்டு போக்கலாம்-எங்கள் சாபம் போக்குகைக்கு இத்தனையும் வேணும் –-1-வேர்த்து நின்று விளையாடக் காண வேணும்(நாச்சியார் )
2-எங்கள் மேல் நோக்க வேணும்-3-பொடி தான் கொணர்ந்து பூச வேணும் (நாச்சியார் 13)
4-இப்போதே எம்மை நீராட்ட வேணும்

யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோ -23-அநந்ய பிரயோஜனைகளான நாங்கள்
வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும் –நப்பின்னைப் பிராட்டி பரிகிரமாய் இருக்க-
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம் -என்று அநந்ய கதிகளாக சொல்லுவதே -யாம் வந்த-எங்களை அறிவுதி இறே –நீ வர இருக்குமவர்கள் அன்றோ நாங்கள்

யாம் பெரும் சம்மானம்–யாம் அணிவோம் -27-யாம் பெரும் சம்மானம்-தேவகீ புத்ர ரத்னமான உன் வாசி அறிந்து பற்றி உன்னை ஆச்ரயித்தார்க்கு பேறு தப்பாது என்கிற வ்யவசாயம் யுடைய நாங்கள்-அநாதி காலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும் படி அவள் கொண்டாடும்படி சொல்கிறது –யாம் அணிவோம் –வ்யதிரேகத்திலே-மலரிட்டு நாம் முடியோம் -என்கிறவர்கள் பூண்போம் -என்கிறார்கள் அவனுக்கு இவர்கள் அனுமதி பண்ணுகையே அமையும் -ஆபரணங்களுக்கு அழகு கொடுக்க வல்ல அவயவங்களிலே கிடந்து தானும் நிறம் பெற்று – பூட்டின தானும் நிறம் பெற்று போம்படி வடிவு படைத்த நாங்கள் –யாம் அணிவோம்-ஒருவரை ஒருவர் மாறி மாறி ஒப்பிக்கக் கணிசிக்கிறார்கள் –

புண்ணியம் யாம் உடையோம் –உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -28-புண்ணியம் யாம் யுடையோம் ஸாத்ய தர்மத்தைப் பற்றினோமோ ஸித்தமாய் வடிவுள்ளதொரு தர்மத்தைப் பற்றினோம் -இதுவோ எங்கள் குற்றம் –புண்ணியத்தை பற்றினவர்கள் அன்றோ சித்த சாதனத்தை பற்றினவர்களில் காட்டில் இருந்த இடத்தே சென்று ஆஸ்ரயிக்க வேண்டாத படியான ஏற்றத்தை உடையவர்கள் நாங்கள் – நினைத்த படி விநியோகம் கொள்ளலாம் படி கைப்புகுந்த உன்னை உடையோம் அன்றோ-அவள் பெற்று (புண்ணியம்) உடையளானாள் – நாங்கள் பிறந்து (புண்ணியம் )உடையோம் ஆனோம் –
அஹோ பாக்யம் அஹோ பாக்யம் நந்த கோப விரஜவ்கசாம் -என்று ஊருக்காக பலித்தது இறே –எங்கள் ஸூஹ்ருதத்தில் பாதக ஸ்பர்சமும் இல்லை –மஹா பாதக ஸ்பர்சமும் இல்லை(உபாயாந்தர சம்பந்த பாதகமும் ஸூவ ப்ரயோஜன பிரபல விரோதியும் இல்லை )உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது –உன்னோடு உண்டான சம்பந்தம் -உன்னாலும் விட ஒண்ணாது –எங்களாலும் விட ஒண்ணாது – இருவரும் கூட க்ருத சங்கேதர் ஆனாலும் விட ஒண்ணாது –பிரகாரியை ஒழிய பிரகாரத்துக்கு ஸ்திதி உண்டோ –ப்ருதக் ஸ்தித்யாதிகள் இல்லாத வஸ்துவை சக்திமான் என்னா உன்னால் பிரிக்கலாமோ-நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அடியிலே சொன்னோம் -என்றபடி –நீ சர்வ பிரகார பரி பூரணன் ஆகையாலே-நாங்கள் நித்ய சாநித்யசாபேஷராய் இருக்கிற உறவு -என்றுமாம்- தயா பூர்ணனான உன்னோடு தயநீயதயா பூரணை களான -எங்களுக்கு உண்டான உறவு -என்றுமாம் –உன்னுடைய ஞானவான்களுடைய பந்தம் அல்ல காண் நாங்கள் சொல்லுகிறது —(நாராயண -உறவு இல்லையே நாங்கள் சொன்னது )
இடையிலே வந்த உறவு காண் எங்களது –அறிவில்லாதார்க்கு மறக்கலாம் அந்த உறவு –
அறிவில்லாதவர் இட்டீடு கொள்ளும் உறவு காண் இவ் உறவு-நீ மைத்துனன் நம்பி -(நாச்சியார் )-நாங்கள் மாமியார் மக்கள் -எங்கனே ஒழிக்கும் படி –இங்கு ஒழிக்க ஒழியாது
அங்கு ஒழிக்கலாம் இங்கே ஒழிக்க ஒண்ணாது காண்-ஸ்வ தந்த்ரன் தாழ்ந்த இடத்திலே பண்ணின உறவு போலேயோ பரதந்த்ரரை தாழ நின்று கையைக் காலைப் பிடித்துப் பண்ணின உறவு –

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –உற்றோமே யாவோம் —
உனக்கே நாம் ஆட் செய்வோம் –நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் -29-குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
எங்களை–தாஸ்யத்தில் சுவடு அறிந்து –அதில் ருசியும் த்வரையும் விளைந்து-க்ரம பிராப்தி பொறுக்க மாட்டாத படி வந்து மேல் விழுகிற எங்களை-அனந்தர க்ஷணத்துக்கு நாங்கள் இருப்புத்தோம் என்று தோற்றி இருந்ததோ என்று
தங்கள் ஆற்றாமையை அணித்துக் காட்டுகிறார்கள்-சிறிது விட்டுப் பிடிக்க அறியாத எங்களை-ஒரு படுக்கையிலே ஓக்க இருக்க பிரிவதற்கு இரங்கும் எங்களை-ஸ்வரூப ஞானம் யுண்டாய் இசைவும் யுண்டான இன்று நழுவ விடுவுதோமோ-உண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்-ஆசையை விளைத்த யுனக்கு அதின் கார்யம் செய்ய வேண்டாவோ-பெரும் பசியராய் இருப்பார் -உண்ணப் புக்கு கலத்திலே கேச லேஸம் கண்டால் பின்னை உண்ணாதே பொகட்டுப் போமா போலே சப்தாதிகள் போக்யாதிகளாய் இருக்கிற எங்களை வடிவு அழகைக் காட்டி உண்ணும் சோறு -முதலானவைகளை எல்லாம் நீ என்னப் பண்ணி-
ஸ்வரூப அனுரூபமான அடிமை தாராதே போகைக்கு உன் தரமோ- என்கை-உன் தரமோ நாங்கள் -நீ தான் உனக்கு உரியையோ என்னை நெகிழக்கிலும் -இத்யாதி -நப்பின்னை பிராட்டி பரிகரம் –ஆணை இட்டவர்கள் பெண் பிள்ளை அன்றோ –உன் தன்னோடு உற்றோமே ஆவோம் –நீ ஸ்வாமியாகவும்-நாங்கள் ஸ்வம் ஆகவும்-இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது -என்கிறார்கள்-ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்-இற்றை அளவிலே போகாது காண் –-இப் பிறவி அளவிலே போகாது காண்-ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு நிலை வரம்பில் பல பிறப்பாய் சம்சார மண்டலத்தில் அநேக அவதாரம் பண்ணவுமாம்- அதில் ஒரு நிர்பந்தம் இல்லை –உன் தன்னோடு-நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும்
கூடத் திரியும் அத்தனை-அங்கே உருவார் சக்கரம் சங்கு சுமந்து உன்னோடு திரிகையும் –
செறி வில்லும் செண்டு கோலும் கைக் கொண்டு இங்கே திரியவும் பெறுவோமாக வேணும் –உனக்கே நாம் ஆட்செய்வோம் –சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே-ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் ––உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து-நீ உகந்த அடிமை செய்வோம் –உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து-தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –ஆட் செய்யும் இடத்தில்-எங்களுக்கு உறவை அறிவித்து அடிமை கொண்டு சாபேஷனாய் நிற்கிற யுனக்குச் செய்ய வேணும்-நாம்
உனக்கு அபிமதம் ஆனத்தை எங்கள் நிர்பந்தம் ஒழிய நீ ஏவ-( நாங்கள் ) -செய்த போது அன்றோ -எங்களுக்கு ஸ்வரூப சித்தி உண்டாயிற்று ஆவது-நங்காமம் –மாற்று
ஆட் கொள்ளும் இடத்திலே எங்களுக்கு ஒரு இந்திரிய சாபல்யம் நடக்கும் –
அந்த ஸுந்தர்ய ரூபமான அந்தராயத்தையும் பரிஹரிக்க வேணும் –
(நடை அழகைப் பார்க்காமல் கைங்கர்யம் அப்பாஞ்ச ஜன்யம் )நாங்கள் செய்கிற அடிமை கண்டு நீ உகந்தால்- அவ் வுகப்பு கண்டு உகக்கமது ஒழிய போக்த்ருத்வ பிரதிபத்தியும்
மதீயத்வ பிரதிபத்தியும் போஜனத்துக்கு க்ரீமி கேசங்கள் போலே பொகட வேண்டும்படி
விரோதமாய் இறே இருப்பது – அந்த விரோதிகளையும் தவிர்த்து தந்து அருள வேணும் என்கிறார்கள் –-இங்கே நமக்கே என்கிற அதிகார ஸ்வரூபம் இரண்டு பட்டாலும் விசதமாகிறதுஅநந்ய போக்யத்வமும் –அநந்ய உபாயத்வமும் –அநந்யார்ஹத்வமும் -இறே ஸ்வரூபம்-(நாராயணாயா -கைங்கர்யமே பிரதானம் என்பதால் அத்தை முதல் காட்டி அருளுகிறார் )

செல்வச் சிறுமீர்காள் –
வையத்து வாழ்வீர்காள் நாமும் –
நாங்கள் நம் பாவைக்கு –
நாங்களும் மார்கழி நீராட –
எம்மை நீராட்டு –
யாம் வந்தோம் –
யாம் பெறு ஸம்மானம்
புண்ணியம் நாமுடையோம் –
நாங்கள் என்பது
எங்களுடையது என்பதாய்
பாட்டுத் தோறும் தங்களை உறைத்துக் காட்டிற்று

ஸ்வரூபத்திலும்
உபாயத்திலும்
பலத்திலும்
தாங்கள் இருக்கும் இருப்பை வெளியிடா நின்று கொண்டு
நமக்கே என்ற பதத்தை விவரித்த படி இறே –

————————————————————————–

பறை–10 -பிரயோகங்கள்

மார்கழி –நாராயணனே நமக்கே பறை தருவான் –
கீழ் வானம் –பாடிப் பறை கொண்டு
நோற்றுச் சுவர்க்கம் –நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
நாயகனாய் நின்ற –அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
ஒருத்தி –அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்
மாலே –சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கூடாரை –பாடிப் பறை கொண்டு
கறவைகள் –இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்ற காண் கோவிந்தா
வங்க –அங்கு அப்பறை கொண்ட வாற்றை –

1-மார்கழி –நாராயணனே நமக்கே பறை தருவான் – –நாட்டுக்கு பறை என்று ஒரு வ்யாஜமாய்- தங்களுக்கு அபிமதமான அடிமையை யாய்த்து நினைக்கிறது-நோன்புக்கு உபகரணங்களைப் பறை என்கிறது
அவனோட்டை சம்ஸ்லேஷம் அவர்களுக்குப் பறை -நமக்கு கைங்கர்யம் –

இது இடைச்சிகள் துடைப் பேச்சு -ச கோத்ரிகள் அறியுமத்தனை -( ஸங்கேத பதம் )-உக்கமும் தட்டொளியும் -என்று நாட்டுக்கு ஒரு பேர் சொல்லிக் கிட்டின வாறே
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்னா நின்றார்கள் இறே –இற்றைப் பறை கொள்வான் அன்று காண் -என்கையாலே–யாவதாத்மா பாவியான அடிமையை நினைக்கிறது

2-கீழ் வானம் –பாடிப் பறை கொண்டு –இதுக்கு முன்பு நாம் பெற்ற ஐஸ்வர்யம் போலேயோ-
இப்பொழுது நாம் பெற புகுகிற ஐஸ்வர்யம்–முன்பு கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டாருக்கு தெரியாதபடி நெஞ்சால் கிருஷ்ணனை அனுபவித்து-
அவ் வனுபவ ஜனித ப்ரீதியானது -புறம்பு ஒசியாதபடி அடங்கிப் போந்தோம்-
இப்போது நாட்டார் தாங்களே அனுமதி பண்ணுகையாலே-வாய்க்கால் வெட்டி நெஞ்சிலே கங்கும் கரையும்- அறப் பெருகுகிற கிருஷ்ண அனுபவ ப்ரீதிக்கு போக்கு-அணை வெட்டிவிட்டு கிருஷ்ண குணங்களை நாம் வாயார நினைத்த படி பாடக் கடவோம் –பாடுகையாகிற புருஷார்த்தத்தை லபித்து-

3-நோற்றுச் சுவர்க்கம் –நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்–போற்ற
குடிப் பிறப்பால் வந்தது(வழி வழி ஆட் செய்கின்றோம் )-உபாயம் அல்ல-பறை தரும்
இப்படி பெரியவன் நமக்குப் பறை தருமோ என்னில் – நாராயணன் அன்றோ –போற்றாதார் பாடும் புக்கு இருக்கிறவன் அன்றோ -தரும் என்னவுமாம்-நம்மால் –நம்முடைய மால் -கைக் கொள்ள துழாய் மேல் வைக்கும் வியா மோஹம் நம்மிடம் வைத்துள்ளவன் –நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் அன்பன் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ-வெறுமையே பச்சையான இடைச்சிகளுக்கும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற தார்மிகன்(நம்முடைய மால் பித்தன்)

4-நாயகனாய் நின்ற –அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்அறை பறைநோன்புக்கு பறை வேண்டி வந்தோம்–புருஷார்த்தம் வேண்டி வந்தோம் என்ன என்று தங்கள் மௌக்யம் தோற்ற சொன்னார்கள்

5-ஒருத்தி –அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்–எங்களுக்கு உத்தேச்யம் செய்ய நினைவாகில் (ஆகில் -கொடுக்க நீ திரு உள்ளம் பற்ற வேண்டுமே உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் )-இவன் எல்லாம் செய்தாலும் அவன் அல்லேன் என்றவாறே
ஸ்வ தந்த்ரனை வளைப்பிட ஒண்ணாதே-இவர்கள் அர்த்தித்தவம் அவன் ஸ்வாதந்தர்யத்தை போக்க மாட்டாதே – ஆகையால் தருதியாகில் என்கிறார்கள்-தாழ்ந்தார் உயர்ந்தாரை திரு உள்ளமாகில் செய் என்னுமா போலே-உன் அழகாலே எங்களை மயக்காதே –செய்து அருளப் பார்த்தாயாகில் -செருக்கு அடியாதே செய்து அருளப் பார்த்தாயாகில்-நெறி காட்டி நீக்குதியோ -கரு மேனி காட்டுதியோ-அழகைக் காட்டி மயக்கி கைங்கர்யம் கொடுக்காமல் – ஸ்வா தந்தர்யத்தாலும் கைங்கர்யம் கொடுக்காமல் எத்தனையேனும் மேலானவர்களை எத்தனையேனும் தாழ்ந்தவர்கள் திரு உள்ளம் ஆகில் செய்து அருள வேணும் -என்று இறே சொல்வது

6-மாலே –சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே–ஒரு மன்று அளவில் த்வநிக்கை அன்றிக்கே எங்கும் கேட்க த்வநிக்கிறது ஒரு பறை வேணும் –மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான–ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்–சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் -நிவர்ப்பிக்குமதாய் மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்-உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –

7-கூடாரை –பாடிப் பறை கொண்டு—பாடுவதே பறை -ஸ்வயம் பிரயோஜனம்-பாடிப் பறை கொண்டு என்று அடியில் சொன்ன படியே-ஊரார் இசைந்த பறையைக் கொண்டு –ப்ராப்யத்தில் ப்ராபக வியவஹாரம்-பண்ணுகிறார்கள் ஆற்றாமையால் -ஊருக்கு இறே-தங்களுக்கு ப்ராப்யம் இறே-பாடுவதே இவர்களுக்கு ப்ராப்யம் இத்தை உபாயமாக த்வனிக்க ஊராருக்காகப் பாடுகிறார்கள் இப்படி-

8-கறவைகள் –இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-விலக்காமை பார்த்து இருக்கும் நீ எங்கள் அபேஷிதம் செய்யாய் –சாது பரித்ராணாம் பண்ணுகைக்கு அன்றோ
இங்கு வந்து பண்ணி அருளிற்று –பறை தாராய் என்றவாறே-கோபீ ஜனத்தினுடைய மிகுதி குறை ஆராய்வாய் நீ அன்றோ –இவர்கள் சொல்லுகிறவற்றை ஆராய்ந்து கொடு என்றான்
அருகில் இருக்கிறவளை( நப்பின்னைப் பிராட்டியை)-நீ தாராய்-அவள் தருவது தந்தாள் –
நீ தரும் அத்தைத் தாராய் –உபாய நிஷ்டை அன்றோ அவள் தருவது –மேல் உள்ளது உன் பணி அன்றோ(அஸ்து தே -உபாய அத்யாவசிய அவள் முன்பே கொடுத்தாளே)அஸ்துதே என்று அவள் அது செய்தால் –அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்னக் கடவ நீ பேசாது இருக்கவோ-நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-ஸ்வீ காரத்தால் செய்யும் அத்தனையும் நீ செய்து அனுதாபமுமம் அத் தலையிலே யாக வேணும்-ஏகம்-என்றபடியே செய்து அருளாய் -என்கை –உபாயம் தன்னைப் பொறுக்கும்-உபாயாந்தரம் இருவரையும் பொறுக்கும்
இது ஒன்றையும் பொறுக்காதே-

பறை தரு மாலை -சாற்றி அருளுகிறாள்-இறைவா நீ தாராய் பறை–நாராயணனே நமக்கே பறை தருவான்–கீழ் வானம் –பாவாய் எழுந்திராய் பறை கொண்டு-நோற்று —நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் -கும்பகர்ண நிஹந்தாவான சக்கரவர்த்தி திருமகன் –
மாலே –சாலப் பெரும் பறையே -வாத்திய விசேஷம்-அன்று இவ்வுலகம் அளந்தாய் -பல்லாண்டு பாடுவதே பிரயோஜனம்-இன்று இப்பறை கொள்வான் வந்தோம் –குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -இதுவே அபேஷிதம்-கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு-வள்ளல் மால் இரும் சோலை மணாளர் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக் கொள்ளுமாகில் –இற்றைப் பறை கொள்வான் அன்று -இன்று மட்டும் இல்லை யாவதாத்மபாவி கைங்கர்யமே அபேஷிதம்-எட்டாம்பாட்டில் -கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு-கூடாரை வெல்லும் சீர் –பாடிப் பறை கொண்டு
பறை கொண்டதாக அன்றோ அருளிச் செய்கிறாள்-அங்கு பாடுகையாகிற உத்தேச்யம் பெற்றதாக கொண்டு –பறை கொண்டு -பறை கொள்ள -என்றே பொருள் அங்கும்-சொல் திரியினும் பொருள் திரியா வினைத்தொகை–நன்னூல் ஸூத்தரம்–இறைவா நீ தாராய் -பறை என்றதன் உட்கருத்தை விவரணம் அடுத்த பாசுரம்

9-சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்ற காண் கோவிந்தா–இப்போது –
பறை தருவான் -என்றும் –
பாடிப் பறை கொண்டு -என்றும் –
போற்றப் பறை தரும் என்றும் –
அறை பறை என்றும் –
இற்றைப் பறை கொள்வான் என்றும்
பறை தருதியாகில் -என்றும் –
சாலப் பெறும் பறை -என்றும் –
உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு -என்றும் –
நீ தாராய் பறை -என்றும் –
ஒருக்கால் சொன்னால் போலே ஒன்பதில் கால் சொன்ன பறையை இற்றைக்கு கொள்ளுங்கோள் என்று-பறையை எடுத்துக் கொண்டு வாருங்கோள் என்றான் இவர்கள் சொன்ன சமனந்தரத்திலே நோன்புக்கு அங்கமானவற்றை கொண்டு போம் இத்தனை அல்லது வேறு நீங்கள் அடிமை என்று சொல்லுகிறவை எல்லாம் என் -என்று பறையைக் கொடுக்கப் புக –இற்றைப் பறை கொள்வான் அன்று காண் –இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போக வந்தோம் அல்லோம் காண் நாங்கள் – யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் நீ –கெடுவாய் யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் –தாத்பர்ய ஞானம் பிள்ளையாய் இருந்ததீ –அபிதான விருத்தி ஒழிய தாத்பர்யம் போகாதே இருந்ததீ-லோக சம்வாதத்துக்கு ஓன்று சொன்னோம் அத்தனை என்று இருக்க வேண்டாவோ –அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று தண்ணீர் என்றால் தண்ணீரை வார்ப்பார்களோ –சொல்லுகிற வார்த்தையையும் எங்களையும் அறிந்து அன்றோ பரிமாறுவது –நாங்கள் பறை என்றால் வேறு ஒன்றை த்வனிக்கிறது என்று அறிய வேண்டாவோ –இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போமவர்களோ நாங்கள் –உன்னை அங்கனே விடுவுதுமோ-இவர்கள் சொல்லிற்று கேட்டு -இவர்கள் நம்மை விடார்களாய் இருந்தார்கள் –நம்மைத் தடுத்தும் வளைத்தும் கொள்வர்கள்-என்று –பறையை எடுத்துக் கொள்ளுங்கோள்-என்ன
தேஹி மே ததாமி தே -என்றுஒரு கையாலே கும்பிட்டு ஒரு கையாலே பிரயோஜனம் கொண்டு போமவர்களோ நாங்கள் –

10-வங்க –அங்கு அப்பறை கொண்ட வாற்றை –ஆஸ்ரயணீய ஸ்தலம் இருக்கிறபடி-அங்கு திருவாய்ப்பாடியிலே ஸ்ரீ நந்தகோபருடைய கோயிலிலே நப்பின்னை பிராட்டி கட்டிலிலே திவ்ய ஆஸ்தானத்திலே திவ்ய சிம்ஹாசனத்திலே இருந்த இருப்பில்–நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு அடிமை கொண்ட படியை –நாட்டுக்குச் சொன்ன பறையைக் கழித்து –எற்றைக்கும் என்ற பறையை –அப் பரிமாற்றத்திலே நின்று அவனை
ஸர்வ ஸ்வமும் கொண்ட படியை-நீ தாராய் என்கிறபடியே அவன் தரப் பெற்ற படி-கொண்ட பிரகாரத்தை –தங்கள் வெறுமையையும் அவன் பூர்த்தியையும் பந்தத்தையும் முன்னிட்டுத்
தப்புக்கு பொறை கொண்டு ருசியையும் த்வரையையும் காட்டி வளைப்பிட்டு அடிமையை அபேக்ஷித்துக் கொண்ட பிரகாரத்தை –ஆஸ்ரயணீய பலமும் பல சித்தி க்ரமும் சொன்ன படி –மறந்து நில்லாதே நாட்டுக்குப் பறை என்று அடிமை கொண்ட படியை-

—————————————————————–

நீராட்டம்–6-பிரயோகங்கள்

மார்கழி —நீராடப் போதுவீர் போதுமினோ
ஓங்கி –நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
ஆழி –நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
புள்ளின் வாய் –குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
முப்பத்து மூவர் –இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
மாலே –மார்கழி நீராடுவான்

1-மார்கழி —நீராடப் போதுவீர் போதுமினோ-கிருஷ்ண விரஹத்தால் பிறந்த தாபம் ஆறும்படி குளிக்கை-இத்தால் இவர்கள் நினைக்கிறது -கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறி முழுக்கிட –-கிருஷ்ண சம்ச்லேஷம்-தமிழரும் கலவியை –சுனையாடல் -என்றார்கள்-இவர்கள் தங்களுக்கு நீராட -என்று நோயாசை இறே –யமுனா ஜலம் ஒருத்தியுடைய விரஹ அக்னியாலே சுவறுமே-ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ ஸ்மிக்ரீஷ் மே ஸீதே மிவ ஹ்ரு தம்-என்று பகவத் சம்ச்லேஷத்துக்கு கிரீஷ்ம காலத்தில் குளிர்ந்த மடுவை திருஷ்டாந்தமாக சொல்லிற்று இறே-தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தில் இறே -(10-1)-நீராட –என்றது மாறி மாறித் தங்கள் மெல்லிய தோளில் அவன் தோயவும் -இவர்கள் அவன் மார்பில் தோயவும் இறே(வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் )அதாவது –அப்பன் திருவருள் மூழ்கினாள் -(8-9-5-)-இறே

2-ஓங்கி –நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்–நாட்டார்க்கு நோன்பு என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு நம்முடைய-விரஹ தாபம் போக நாம் குளித்தால்-நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு கிருஷ்ண சம்ச்லேஷத்தைப் பண்ணினால்-பேர் பாடி -நீராடினால் –
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக-கிருஷ்ண சம்ஸ்லேஷம் பண்ணினால்-பலமும்-பல பிரதாதாவான உலகு அளந்தவன் படியாகை-சாற்றி நீராடினால்நாட்டுக்கு புண்யம் -நமக்கு விரஹ சமனம்- வ்ருத்த ப்ரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் -ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே என்கை – ந மே ஸ்நானம் பஹுமதம் -இத்யாதியால் சொல்லுகிறபடியே அவனுடைய விரஹ தாபம் தீரும்

3-ஆழி –நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–நாங்கள் காலத்திலே போய் மார்கழி நீராடக் கடவோம்– அதுவும் முன்பே ஊராக நிச்சயித்த தொன்று அன்றோ –நாங்களும் நோன்பு நோற்றோமாய் அந்த நோன்புக்கு பலமான வர்ஷமும் உண்டாய்த்தாய்-
கிருஷ்ணனோட்டை சம்ஸ்லேஷத்தால் மகிழ்ந்து நீராடக் கடவோம்-உனக்கு பிரிய கரமாக புருஷார்த்தமாக – கிருஷ்ணனும் நாங்களும் மகிழ்ந்து குளிக்கிறோம்-நாங்களும் கிருஷ்ணனும் சேரக் குளிக்கை உனக்கு கிடைப்பது ஒன்றோ – நாங்கள் உன் வடிவைக் கண்டு த்வனியைக் கேட்டு எங்களுடைய தாபத்தை ஆற்றி ப்ரீதிகளாய்க் கொண்டு மார்கழி நீராடுகிறோம் – இவர்களை யுகப்பிக்கை இறே இவனுக்கு ஸ்வரூபம்-ப்ரகர்ஷ இஷ்யாமி யிலே இறே அந்வயம் என்னுயிர்க்கு அது காலன்-என்ன வேண்டாவே கிருஷ்ணன் கூட நீராடுகையாலே –

4-புள்ளின் வாய் –குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே–கிருஷ்ண விரஹ ஆற நீராடப் போகாதே நமக்கு கிருஷ்ண விஸ்லேஷம் பிறவாமைக்கும் கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்து அனுபவிக்கப் பெறாதே-தாங்கள் ஆகையாலே உள்ளே கிடந்தாலும் தங்கள் சம்பந்தத்தாலே (விரஹ தாபத்தால் )கொதிக்கும் என்று அறிகிறிலள்-சரயூமவகாஹதே-என்னுமா போலே (பரதன் ஊரார் வரும் முன் நீராட சரயு போவான் -பெருமாள் லஷ்மணன் பேசி –கோதாவரியில் குள்ளக் குளிர பேசிக்கொண்டது –தாபம் இல்லாம்நாள் லஷ்மணனுக்கு குளிரும் –அவன் அத்யந்த ஸூ குமாரன் அபர ராத்திரியில் எப்படி நீராடுவானோ )-நீராடாதே-பகவத் அனுபவத்தைப் பண்ணாதே –

5-முப்பத்து மூவர் –இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-எங்களையும் அவனையும் கூட நீராட்ட வேணும் –இவன் முழுக் கூட்டுகைக்காக நிற்கில் முழுக்க அஞ்சுவோம் என்பார்கள் –கையைப் பிடித்துக் கூட முழுகும்-தாரா பித்ரு க்ருதா இதி -என்று பெருமாள் பிராட்டியுடைய சவுந்தர்யாதிகள் கிடக்க பிராட்டியை உகப்பது -ஐயர் பண்ணிய விவாஹம் என்று ஆய்த்து –அப்படியே இவள் தந்த கிருஷ்ணன் என்று இவர்களும் உகப்பார்கள் ஆயிற்று –நீராட்டு மாலை–சாற்றி அருளுகிறாள்-இப்போதே எம்மை நீராட்டு -தாபத் த்ரயம் தீர எம்பெருமானுக்கு தாபம் -நான் அடிமை செய்ய விடாய் நானானேன்– எம்பெருமான் தாம் அடிமை கொள்ள விடாய் தானானான் ஆனதற்கு பின் வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம் உள்ளக்குளத் தேனை ஒத்து-மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய ஷணம் அபி தே யத் விரஹோதி துஸ் சஹ -ஸ்தோத்ர ரத்னம் -56–ஷூத்ருட் பீடித நிதநரைப் போலே கண்டு கொண்டு பருகி –ஆச்சார்ய ஹிருதயம்-

6-மாலே –மார்கழி நீராடுவான்–ஊராக சங்கல்பித்த கார்யம் தலைக் கட்டுகைக்காக –மார்கழி நீராடுகைக்கு உப கரணங்கள் வேண்டி வந்தோம்-ஆஸ்திக்யாதிரேகத்தாலே -அங்கி கைப்படத் இருக்கச் செய்தேயும் –அங்கத்தை விடாது ஒழிகிறார்கள் –இவர்கள் சொல்லுமது கேட்க்கைக்காக இத்தை ஷேபித்து இது எங்கே உள்ளது என்று தான் என்றான்-இது இங்கனே அப்ரஸித்தமாய் இருந்ததோ -என்றார்கள் –ஆள் அறிந்து வார்த்தை சொல்லாய்
நாராயணனே நமக்கே பறை தருவான் என்பவருடைய அனுஷ்டானம்-மார்கழி மாசத்தில் நோன்புக்கு அங்கமாக குளிக்கை —இந்நோன்பு தான்–காம்யார்த்திகளுக்கு சாதகமாயும்
நிஷ்காமருக்கு நித்தியமாயும்–பிரபன்ன அதிகாரிகளுக்கு பகவத் கைங்கர்யமாயும் -இருக்கும்-ஆகையாலே பிரபன்ன அதிகாரிகளுக்கு சொல்லுகிற கர்ம த்யாகம்–சாஸ்த்ரோக்தமான ஆகாரத்தாலே அனுஷ்டியாது ஒழிகை ஒழிய கேவலம் அனநுஷ்ட ரூப த்யாகமாகம் அன்று என்றது ஆய்த்து-

—————————————————————

அடி–6 -பிரயோகங்கள்

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
அம்பரமே –செம் பொற் கழல் அடி செல்வா பலதேவா
ஏற்ற –ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி –-அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி-அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –
சிற்றம் –உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

1-வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி–அவனுடைய ஆதிக்யத்தின் எல்லையை அனுசந்தித்தால்- பின்னை தங்கள் தாழ்ச்சியின் எல்லையில் நிற்கும் இத்தனை இறே-
ஔசித்யத்தாலும் போக்யதையாலும் கிருஷ்ணன் திருவடிகளைப் பாடாதே-
திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளுகிறவனை பாடுவான் என் என்னில் –
இரண்டு இடமும் ஒருவனே ஆகையாலே நோன்பு நோற்க புக்கவர்கள் கிருஷ்ணனைப் பாடா நின்றார்கள் என்று சொல்லாமைக்காக- ஒரு தெய்வத்தின் பேரைச் சொல்லிற்றாக சொல்லுகிறார்கள்-மகிஷிகளோடு அல்லாதாரோடு வாசி யற-சேஷத்வம் சமானமாய் இருக்கையாலே-திருவடிகளைப் பாடி -என்கிறார்கள்-பள்ளி கொள்ளும் இடத்து அடி கூடிட -என்னக் கடவது இறே--அவனுடைய வடிவழகை ப்ரீதி ப்ரேரிதைகளாய்க் கொண்டு பாடி-அவன் சேஷித்வத்துக்கு சமைந்தால் போலே இவர்கள் சேஷத்வத்துக்கு சமைந்த படி
ஸ்தநந்த்ய பிரஜை முலையிலே இறே வாய் வைப்பது -செவ்வடி செவ்வி திருக்காப்பு என்னுமவர்கள் இறே-மடலூர்ந்தால் தலைமை கிடக்கும்-ஸ்வ பாவம் மாத்திரம் அழியும் -ஆர்த்திக்கு உதவிற்றிலன் என்னில் ஸ்வரூபம் அழியும்

2-அம்பரமே –செம் பொற் கழல் அடி செல்வா பலதேவா-கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய இட்டுப் பிறந்த ஸ்ரீ மானே –-இளைய பெருமாள் பின் பிறந்து பெற்ற சம்பத்து முன் பிறந்து பெற்றவன் அன்றோ நீ –லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்ற
அவரைப் போலே முன் பிறந்து கைங்கர்ய ஸ்ரீ யைப் படைத்தால் – அவரைப் போல் உறங்காது இருக்கவும் வேண்டாவோ – பெருமாளும் பிராட்டியும் கண் வளரும் போது புறம்பு மதிளாய் நின்று நோக்கும் அத்தனை இறே அவர்-கிருஷ்ணனையும் பெண்ணையும் சேர விடும் ஏற்றம் உடையவன் அன்றோ நீ – சந்தே சைஸ் சாம மதுரை ப்ரேம கர்ப்பை ரகர்விதை ராமேனாச்வா சீதா கோபியோ ஹரினா ஹ்ருத சேதச -என்கிறபடியே எங்களையும் அவனையும் பொருந்த விடுகிற உனக்கு உறங்க விரகு உண்டோ

3-ஏற்ற –ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே –சத்ருக்கள் ஆனவர்கள் உன் மிடுக்குக்குத் தோற்று போக்கடி இல்லாமையாலே உன் திருவடிகளிலே வந்து விழுமா போலே – மாற்றார் தங்கள் வலி மாண்டு வந்து விழுமா போலே-ப்ரஹ்மாஸ்திரம் விட வேண்டும் படி பிராட்டி பக்கலிலே அபராதத்தைப் பண்ணி-த்ரீன் லோகான் சாம் பரிக்ரமய-என்னும் படி அலமந்து-சபித்ரா ச பரித்யக்த -என்னும் படி ஓர் இடத்திலே புகல் அற்று –
தமேவம் சரணம் கத -என்று பெருமாள் திருவடிகளில் விழுந்த காகம் போலே உன் வாசலிலே வந்து உன் காலில் கீழே விழுந்தோம் –அம்புக்குத் தோற்றாரோ பாதி நாங்களும்
குணங்களுக்குத் தோற்று வந்தோம்
–அம்பு பிடரி தள்ளாத தள்ள வருவாரைப் போலே
ஸுந்தர்ய குண பலாக்ருதைகளாய் வந்தோம் அம்பு நற் கொலையாகக் கொல்லும் –
குணம் உயிர்க் கொலையாகக் கொல்லும்- வல் வினையேனை ஈர்கின்ற குணங்கள்

4-அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி –தன் விபூதியை மகாபலி அபஹரிக்க நோவு பட்டு இருக்கிற அன்று-தன்னைப் பிரிந்து நாங்கள் ஆர்த்தியால் நோவு பட்ட இன்று –
ஜகத்தை மகா பலி யினுடைய அபிமானத்தின் நின்றும் மீட்ட அன்று-எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தின் நின்றும் மீட்ட இன்று –நாட்டுக்கு எல்லாம் தன் திருவடிகளை தூளிதானம் பண்ணின அன்று-அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளிதானம் பண்ணின இன்று-
இது இறே ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் சாம்யம்-பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு-காடும் ஓடையும் அகப்பட அளப்பதே -என்கை –
அன்று எல்லை நடந்து மகாபலி பக்கல் நின்றும்-பூமியை மீட்டுக் கொண்டால் போலே
நடை அழகைக் காட்டி விஸ்லேஷத்தின் நின்றும்-மீட்டுக் கொண்டான் -என்கை –தாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு உலாவி அருளின படி திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்கள்-திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது –
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே
–திரு உலகு அளந்து அருளின அன்று
இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்-மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான்
தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர-திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்னுமவர்கள் இறே-வடிவுக்கு இணை இல்லாத பெரிய பிராட்டியாரும் எடுத்துக் கழிக்கைக்கும் ஒப்பு இல்லாத ஸ்ரீ பூமிப பிராட்டியும்
நாம் பிடுக்கை சாஹசம் என்னும் படியாய் பூத் தொடுமா போலே கூசிப் பிடிக்கும்
மெல்லடிகளைக் கொண்டு இவ்வெவ்விய நிலத்திலே வியாபாரிப்பதே-பிரமாணித்தார் பெற்ற பேறு-என்று உபகார சுருதி பண்ணாத அளவு அன்றிக்கே யுகக்கவும் அறியாத பூமியை திருவடிகளின் கீழே இட்டுக் கொள்வதே-அக் காலத்திலே சிலர் இழவோடே போனார்கள் – சிலர் அப்பன் அறிந்திலேன் என்று ஆணை இடத் தொடங்கினார்கள்
சிலர் பிரயோஜனம் கொண்டு போனார்கள் – அப்போது பரிந்து காப்பிட்டார் இல்லை என்கிற இழவு தீருகிறார்கள்-திசை வாழி எழ -என்கிற அப்போதே பல்லாண்டு இசைக்கை –பிரகிருதி சம்பந்த நிபந்தனமான அஹங்காரம் ஜகத்தை ஆக்ரமித்த அன்று –அஹங்கார க்ரச்தமான இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்டு தன் திருவடிகளாலே அளந்து
தனக்காக்கிக் கொண்டவனே – உன் திருவடிகளுக்கு மங்களா சாசனம்

5-பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி-காம குரோதங்களை-ஸ்வரூபேண நசிக்கும்படி -உன் திருவடிகளாலே உதைத்தவனே –உன்னுடைய யசஸ் ஸுக்கு பல்லாண்டு –செய்ய பாதமொன்றால் செய்த நின்சிறுச் சேவகமும்-5-10-3-காலை நிமிர்த்த கன்னிப் போர் என்பதால் பல்லாண்டு பாடுகிறார்-கன்னி சேஷ்டித்ததுக்கு பல்லாண்டு பாடுகிறார்கள் –தாயும் உதவாத தசையில் திருவடி உதவினதே புகழ் ஆவது-பெற்ற தாயும் கூட உதவாத சமயத்தில் பெரும் படையாண்டு செய்த செயல்களை கால் கூறாக்கி விட்ட படி – திருக் காலாண்ட பெருமானே –பெருமாள் கைக்கு வில் பிடித்த தழும்பு போலே -கிருஷ்ணன் திரு வடிகளுக்கு சாடுதைத்த தழும்பு ––தழும்பிருந்த சார்ங்க நாண் தோய்ந்த மங்கை,
தழும்பிருந்த தாள் சகடம் சாடி, – தழும்பிருந்த-பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்ப்பிடந்த, வீங்கோத வண்ணர் விரல்.–

6-அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு எறிவதாக இச்சித்து நடந்த போதைக் குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும் அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்-கனை கழல் காண்பதற்கு என்று யம வஸ்யத்தைக்கு நிவர்த்தகம் என்று இருத்தல் செய்யாதே
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –அடி போற்றி -கழல் போற்றி-நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும்-சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்

7-சிற்றம் –உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்-மகார்க்கமுமாய்
போக்யமுமாய் பிராப்தமுமாய் இருந்த திருவடிகளிலே –அடியே -என்று
அவதாரணத்துக்கு கருத்து – வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை
சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே-கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை பாராய்-அடியே –போற்றும்
அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி –
தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே தன்னை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை–அடியானுக்கு அடியிலே இறே பிராப்தி – அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இறே(திருமார்பை ஆசைப்படும் அத்திரு திருவடியை ஆசைப்படும் இத்திரு )–உன் –பொன்–அடி-உலகம் அளந்த பொன்னடி போற்றுவர்களோ – காடுறைந்த பொன்னடி போற்றுவர்களோ நாங்கள்-அவை –உலகம் எலாம் தலை விளாக் கொள்ளுதல் —
வானவர் தம் சென்னி மலர் ஆவுதலாய் இறே அந்தப் பொன்னடிகள் இருப்பது –இது
மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் (பெரிய திருமொழி -5-8 )என்று இறே
இப் பொன்னடி இருப்பது –பொற்றாமரை அடி அன்றோ – சாதனத்வமும் சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –பாவனத்வமும் போக்யத்வமும் ப்ராப்யமாயும் ப்ராபகமாயும்
பொன்னும் தாமரையும்
-தாமரை அன்ன பொன்னார் அடி இறே -(பெரிய திருமொழி 7-3)
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -(ஸ்தோத்ர ரத்னம் )-எங்களுக்குப் பொன்னும் பூவும் புறம்பே தேட வேணுமோ –கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை என்று ஆசிரயணீயமும் இதுவே –அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் -என்று ஆசைப்படுவதும் இதுவே-ஆசானுகுணமாக
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே என்று (திருவாய் -10-4 )
இவர்கள் சென்னிக்கு கோலமாகச் சூடுவதும் இதுவே –பரமன் அடி பாடி –அடி போற்றி –
கழல் போற்றி -என்று முடியச் சொல்லிக் கொண்டு போந்தார் இறே-கண்ணன் தாள் வாழ்த்துமது (பெரிய திருவந்தாதி ) ஸ்வரூப பிரயுத்தமாய் இருக்கும் இறே
–-அடியே போற்றும் பொருள் – சூட வந்த பூவுக்கு விலையிடுவாரைப் போலே -உனது பால் என்றுமாம்(அடி -ஸ்வாமி உன்னையே என்றவாறு )உபாய உபேயங்கள் இரண்டும் தானே
ஸ்வீகார மாத்ரத்திலே நிற்கப் போகாமையாலே போற்றுகிற படி-ருசிக்கு அவ்வருகு பட்டால்
பலத்திலே மூளும் அத்தனை-கவிழ்ந்து நிற்கச் செய்தே விண்ணப்பம் செய்கிறது -(முகத்தின் அழகைப்பார்த்தால் கைங்கர்யத்துக்குப் போக ஓட்டாதே )(வந்து உன்னைச் சேவித்து ஸ் வீகாரம் -மேல் உன் பொற்றாமரை அடியே போற்றி -அதுக்குப் பிரயோஜனம் பொருள் இவ்வாறு மூன்றும்)-இவர்கள் அடியே போற்றா நிற்க தான் இவர்கள் காலைப் பிடிக்கக் கணிசியா நின்றான் என்கை அவன் இவர்கள் திருவடிகளை பார்க்க –இது அன்றோ எழில் ஆலி என்னார் தாமே

————————————————————-

பாடி- 18-பிரயோகங்கள் –

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –
மாயனை –தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
கீசு கீசு என்று –நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
கீழ் வானம் —பாடிப் பறை கொண்டு
தூ மணி –மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று
நோற்றுச் –நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
கற்றுக் கறவை –முகில் வண்ணன் பேர் பாட

கனைத்து இளம் —மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
உங்கள் –பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
எல்லே –மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்
நாயகனாய் –துயில் எழப் பாடுவான்
உந்து –உன் மைத்துனன் பேர் பாட
ஏற்ற –போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அன்று –என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
ஒருத்தி –திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
கூடாரை –உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு
கறைவைகள் –உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும்
சிற்றம் –உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் –

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி–பாடி –உகந்து -செய்வதே சந்தோஷம்- உபாயம் இல்லையே இதுவே பிராப்தம் -பலானுபவம் இது பரம பதத்தில் நின்றும் சம்சார சேதன சம்ரஷணார்த்தம்–திருப் பாற் கடலிலே அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே வந்த குணாதிசயத்துக்கு ஒப்பு இல்லாதவனாய்–திரு அநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளுகையால் வந்த– பரபாக சோபைக்கு ஒப்பு இல்லாதவனாக இருக்கிற எம்பெருமான் உடைய திருவடிகளை ப்ரீதிக்கு போக்கு வீடாக–பாடி போக்யாந்தராங்களிலே அந்வயியோம்உண்டார்க்கு உண்ண வேண்டா விறே –நீராடி பின்பே- அடி பாட நீராடித் தான் பாட வேண்டும் நியதி இல்லையே -இதுவே பாதேயம் புண்டரீகாக்ஷ திருநாம சங்கீர்த்தனம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ப்ரீதி பூர்வகமாக பாடி –திருநாம சங்கீர்த்தனம் இதிலிருந்து 18 தடவை-ஆர்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாடல்ல -(பெரிய திருமொழி-11-7-4 )–என்று இறே பாட்டுக்கு லக்ஷணம் -உத்தமனை விட உயர்ந்த பேர் -கார்மேனி முதலில் அதை விட உயர்ந்த -பரமன் அடி -அதை விட உயர்ந்த -இங்கு பேர் –

மாயனை –தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க–வாய் படைத்த லாபம் பெற்றோம் என்று திரு நாமத்தைச் சொல்லி –மனஸ் சஹகாரம் இன்றிக்கே -என்றுமாம்-வருவதற்கு மேலே-சொல்லுவதும் செய்தோம் என்று அவனை நோவு படுத்துகை –-என்னவுமாம் –ஏத்து கின்றோம் நா தழும்ப (10-3)-என்று தோற்றவர்கள் பாடுமா போலே–வாயினால் பாடி -என்று அவதார க்ரமம் பாடின படி சொல்லிற்று –

கீசு கீசு என்று –நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ-வாத்சல்யத்தையும் –சௌசீல்யத்தையும்-ஆஸ்ரித விரோதி நிரசனத்தையும் பேசின விடத்திலும்-பின்னையும் இவர்கள் பேச்சே தனக்கு தாரகமாக கிடைக்கையாலே-அவனுடைய விஜயத்தைக் கேட்டு-கேசி வந்து கழியப் புக்கான் என்ற துணுக்கும் கேட்டு
கர வத அநந்தரம் சக்கரவர்த்தி திருமகனை-ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்-அணைத்தால் போலே நீயும் கிருஷ்ணனை அணைக்க-புறப்படுவாயோ -என்று சொன்னோம் –
அதுவும் உனக்கு கிருஷ்ண விரோதி பயம் தீர்ந்து-மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி ஆவதே -உன்னைக் கண்டு நாங்கள் வாழும்படி வாய் திறவாய் என்கிறார்கள் –கேசவனைப் பாட -என்றும்-பாடிப் பறை கொண்டு -என்றும் –கீர்த்திமை பாடி -என்றும் -விரோதி நிவர்த்தகம் பாடின படி சொல்லிற்று

கீழ் வானம் —பாடிப் பறை கொண்டு–இதுக்கு முன்பு நாம் பெற்ற ஐஸ்வர்யம் போலேயோ-
இப்பொழுது நாம் பெற புகுகிற ஐஸ்வர்யம்-முன்பு கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டாருக்கு தெரியாதபடிநெஞ்சால் கிருஷ்ணனை அனுபவித்து-அவ் வனுபவ ஜனித ப்ரீதியானது -புறம்பு ஒசியாதபடி அடங்கிப் போந்தோம்-இப்போது நாட்டார் தாங்களே அனுமதி பண்ணுகையாலே-வாய்க்கால் வெட்டி நெஞ்சிலே கங்கும் கரையும்-அறப் பெருகுகிற கிருஷ்ண அனுபவ ப்ரீதிக்கு போக்கு-அணை வெட்டிவிட்டு கிருஷ்ண குணங்களைநாம் வாயார நினைத்த படி பாடக் கடவோம் –கிருஷ்ணன் பெண்கள் கிருஷ்ணன் -என்று வாய்க் காவல் இட்டுக் கிடக்கிற வூரிலேஇவ்விரண்டு நாளும் கழிந்தால் அவனை நமக்குத் பாடக் கிடைக்குமோ-ஆஸூர ப்ரக்ருதிகளான ஹிரண்யாதிகள் படை வீடுகள் போலேதிரு நாமம் சொல்லப் பொறார்கள் யாய்த்துபெண்கள் பிரசங்கத்தில் மோஹிப்பர்கள் என்று அவ் விழவு தீரகிருஷ்ண நாம புன புன என்கிறபடி வாயாரத் திரு நாமத்தைப் பாடி-பாடுகையாகிற புருஷார்த்தத்தை லபித்து-

தூ மணி –மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்றுமேன்மைக்கும் நீர்மைக்கும் ஸ்ரீ யபதித்வத்துக்கும் ஏகாந்தமான திரு நாமங்களை அநேகம் சொன்னோம் -சஹஸ்ர நாமம் உட்படச் சொன்னோம் –

நோற்று –நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்-இவர்கள் (ஆர்த்திகள்)-அர்த்திகள்- ஆகையாவது போற்றுகை போலே–குடிப் பிறப்பால் வந்தது(வழி வழி ஆட் செய்கின்றோம் )-உபாயம் அல்ல-போற்றுதலே அர்த்தித்தல் -உபாயம் அல்ல -புருஷனால் அர்த்தித்தே -வேண்டியே -பெறுவது தானே புருஷார்த்தம் –அறிவித்தல் பசி உள்ளது என்று காட்டுமா போல் அதிகாரி ஸ்வரூபம்)

கற்றுக் கறவை –முகில் வண்ணன் பேர் பாடமுகில் வண்ணன் –நிறம் -வள்ளல் தன்மையைப் பாட வேண்டும் –வடிவு அழகுக்குத் தோற்று பாடின படி-நாங்களும் உன் பக்கமே நின்று அத்தைப் பெறுகைக்காக-நீ உகக்கும் வடிவு அழகிலும் உதார குணத்திலும் ஈடு பட்டுத் திரு நாமத்தை பாட-நாங்கள் உன் பஷத்தே நின்று கூட்டம் பற்ற நீ அவன் அழகிலே ஈடுபட்டுப் பாட -உன்னீடுபாடு கண்டு நாங்கள் ஈடுபட்டுப் பாட

கனைத்து இளம் —மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்-கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்று நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரை காற்கடைக் கொண்டு
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும்படியான சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும்- வாய் திறக்கிறது இல்லை -எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்க வல்லை யாவதே-ப்ரீதிக்கு போக்கு விட வேண்டாவோ –எங்களுக்காக அன்றிக்கே உன் ஹர்ஷத்துக்காக போக்கு விட வேண்டாவோ

உங்கள் –பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்–உன் ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாட –ஒரு நீர்ச்சாவி போலே கிடக்கிற இத் திரள் உஜ்ஜீவிக்கும் படி வர்ஷியாய்-

எல்லே –மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-நம்முடைய தோல்வியையும்
அவனுடைய வெற்றியையும் -தோற்ற பாட –ஏத்து கின்றோம் நா தழும்ப (10-3)-என்று தோற்றவர்கள் பாடுமா போலே-வாயினால் பாடி (5)-என்று அவதார க்ரமம் பாடின படி சொல்லிற்று –கேசவனைப் பாட (7)-என்றும் பாடிப் பறை கொண்டு -என்றும் –
கீர்த்திமை பாடி -என்றும் -விரோதி நிவர்த்தகம் பாடின படி சொல்லிற்று-முகில் வண்ணன் பேர் பாட -என்று வடிவு அழகுக்குத் தோற்று பாடின படி சங்கோடு சக்கரம் ஏந்தும் -என்று திவ்ய ஆயுதங்களும் அவயவ சோபைக்கும் தோற்றுப் பாடின படி-இங்கு (15 )வெறும் கையோடு நின்ற படிக்கும் –தங்களுக்குத் தோற்ற படியையும் பாடுகிறார்கள் –இவ் விஷயத்திலே விஐயம் பிரணயித்தவத்துக்குக் கொத்தையாய் -தோற்க
அத் தோல்விக்கு அவனைப் பாட வேணும் –

நாயகனாய் –துயில் எழப் பாடுவான்-திருப்பள்ளி எழுச்சி பாட வந்தோம் –அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -என்னுமவர்கள் பெண் பிள்ளைகள் இறே இவர்கள் –ச மயா போதிதஸ் ஸ்ரீ மான் -என்று பிராட்டி உறங்குகிற படி கண்டு உகந்தாள்–இவர்கள் உணரும் படி காண ஆசைப்படுகிறார்கள் -பிராட்டி பெருமாள் உறங்குகிற படியைக் கண்டு உகந்தாள் இவர்கள் இவன் உணருகிறபடியைக் காண ஆசைப் படுகிறாள்அவன் உணர்ந்து அருளும் போதை அழகுக்கும் மங்களா சாசனம் பண்ண வன்றோ நாங்கள் வந்தது –பிரயோஜனாந்தர பரர்கள் அன்றோ ஓலக்கத்தில் புகுவார் –அநந்ய பிரயோஜனர் இறே கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே புகுரப் பெறுவார் –மூன்று உலகும் தம் வயிற்றில்-நெறியாகக் கொண்டு-நின்று ஒழிந்தார் -உடையவன் உடைமையை நோக்குவது முறையாலேயாய்-இருக்கும் அன்றோ 

உந்து –உன் மைத்துனன் பேர் பாட–நீயும் அவனும் மைத்துனமை யாடி ஒருவருக்கு ஒருவர் ஒன்றுக்கு ஒன்பது சொல்லி இட்டீடு கொள்ளும் போது உன் பஷத்தில் நாங்கள் நின்று -அவன் தோல்விக்கு வசை பாட அவனுக்கு உள்ளது எல்லாம் சொல்லிக் கொடுக்கைக்கும்
இருவரும் ஒன்றாய்ச் செல்லுமன்று செல்லவும் பிரிந்தால் தாய் பஷத்தில் இறே பிரஜைகள் நிற்பது –நீயும் அவனும் பந்தடிக்கையில் உனக்கு அவன் தோற்ற தோல்விக்கு அவன் திரு நாமங்களைப் பாட-பெருமாள் தோல்வியைப் பிராட்டி இளைய பெருமாளுக்கு அருளிச் செய்ய அவர் பிராட்டி பக்ஷத்தில் நின்றால் போலே-நாமும் பலவுடை நாரண நம்பி இறே –
இன்னாள் அடியான் இன்னாள் அடியான் -என்று படைத்த பேருக்கு ஒரு அவதி இல்லை இறே

ஏற்ற –போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்போற்றுகையாவது -திருப் பல்லாண்டு பாடுகை-பெரியாழ்வாரைப் போலே வந்தோம் –அவர் தன்னைப் பேணாதே
உன்னைப் பேணினாப் போலே-நாங்களும் எங்கள் ஸ்வரூபத்தைப் பாராமல் ஆற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே – வந்தோம்-நசை முடிய ஒட்டாது – ஆற்றாமை இருந்த இடத்தே இருக்க ஒட்டாது இறே –தோற்றார் -போற்றி -என்னும் அத்தனை இறே -புகழ்ந்து –எங்களை தோற்பித்த குணங்களைச் சொல்லி –போற்றி –புகழ்ந்து –வந்தோம்
பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் –அல்லாதாரைப் போலேயும் வந்தோம் –

அன்று –என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்-உன்னுடைய வீர சரித்ரமே ஏத்தி -உன்னை அனுபவிக்கைக்காக –-உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –என்னுமவர்கள் இறே –(ஏத்துதலே எங்கள் பலம் )நாட்டார் பலம் பெறுவதாக –பலம் ஏத்துகை-பின்பு அபிமதம் ஊரார் ஸம்ருத்தி –உத்தேச்ய பலமும் ஆனு ஷங்கிக பலமும்

ஒருத்தி –திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி-உன் பேர் சொல்லப் பெறாத நாங்கள்
உன் பேர் சொல்ல ஒட்டாதார் முன்னே உகப்போடே பாடி –புள்ளின் வாய் கீண்டானை (கீர்த்திமைப்பாடி )என்று ஊர் எல்லாம் பாடிக் கொண்டு திரிகிறார்கள் இறே-யாம் பாடி-வருத்தமும் தீர்ந்து-வருத்தம் உன்னை நீ கண்டு அறியாயே-பிரிந்தார் படும் பாடு பாராய் -என்கை-சொல்லப் பெறாத நம் வருத்தமும் தீர்ந்து

கூடாரை –உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு-வகுத்த உன்னுடைய பேரை ஸ்வயம் பிரயோஜனமாகப் பாடப் பெறுகையாலே –வாயினால் பாடி( 5 )-என்று உபக்ரமித்தபடி
நா படைத்த பிரயோஜனம் கொள்ளப் பெற்றோம்-பெண்கள் புணர்ப்பே தாரகமாகப் பாடித் திரியும் உன்னைப் பாடுகையே பிரயோஜனம்

கறைவைகள் –உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும்-கோவிந்த அபிஷேகம் பண்ணின பின்பு முதல் திரு நாமம் சொல்லுகை குற்றம் இறே – முடி சூடினவனை தட்டியில் பேர் சொல்லுகைக்கு மேற்பட்ட உண்டோ குற்றம் –இப்போது சிறு பேர் என்று நினைக்கிறது –
நாராயணன் -என்றத்தை – தங்களுக்கு அசாதாரணனாய் இருக்கிறவனை சாதாரணன் என்று சொல்லுகை குற்றம் இறே –அது தன்னை ஒருக்கால் சொல்லி விடாதே –
நாராயணனே என்றும் –நாற்றத் துழாய் முடி நாராயணன் என்றும் நாராயணன் மூர்த்தி -என்றும் பலகால் சொன்னார்கள் இறே

சிற்றம் –உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் –பரமன் அடி பாடி –
அடி போற்றி – கழல் போற்றி -என்று முடியச் சொல்லிக் கொண்டு போந்தார் இறே-கண்ணன் தாள் வாழ்த்துமது (பெரிய திருவந்தாதி ) ஸ்வரூப பிரயுத்தமாய் இருக்கும் இறே –

——————————————————-—————————————————
எழுந்திராய் -19- பிரயோகங்கள் –

பிள்ளாய் எழுந்திராய்
பேய்ப்பெண்ணே –நாயகப் பெண் பிள்ளாய் –நீ கேட்டே கிடத்தியோ –
கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய்
உன் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய் –கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே –
பொற்கொடியே புற்றரவல்குல் புனமயிலே –செல்வப் பெண்டாட்டி எற்றுக்கு உறங்கும் பொருள் –
நற்செல்வன் தங்காய்–நீ வாய் திறவாய் –ஈது என்ன பேர் உறக்கம்
போதரிக் கண்ணினாய் –பாவாய் –கள்ளம் தவிர்ந்து கலந்து
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ –

அடியார் இடம் உண்டான கலவியின் இன்பம் அறியாத கோபிகை
அந்த இனிமையை உணர்ந்தும் உணராத கோபிகை
கண்ணன் தனது தலையினால் தாங்கி ஆதரிக்கும் சீர்மை உடைய கோபிகை
எம்பெருமானே ரட்ஷகன் என்று உணர்ந்து மார்பில் கை வைத்து உறங்கும் கோபிகை
எம்பெருமான் தானும் தனக்கு தாரகமாய் அபிமானித்து இருக்கும் கோபிகை
எம்பெருமான் உடன் இடையறாத தொடர்பு உள்ள மஹா நீயர் குலத்தில் பிறப்புடைய கோபிகை
கிருஷ்ணன் கைங்கர்யத்தில் ஈடுபட்டு தன் தர்மத்தை செய்ய மாட்டாமல் இருக்கும் செல்வனே இருக்கும் கோவலன் தங்கையான கோபிகை
ஞானம் பக்தி வைராக்யங்கள் நிறைந்த கோபிகை
நிறைவும் நிர்வாகத் தன்மையும் நிறைந்த கோபிகை
அடியார்கள் குழாங்களை ஓன்று சேர காணும் ஆசை உடைய கோபிகை -ஆகிய 10 கோபிகைகள்

———-

நந்தகோபாலா எழுந்திராய்
யசோதா அறிவுறாய்
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
பலதேவா உம்பியும் நீயும் உறங்கேல்
மலர்மார்பா வாய் திறவாய்
கலியே துயில் எழாய்
விமலா துயில் எழாய்
மகனே அறிவுறாய்
சுடரே துயில் எழாய்

——————————————–

எம்பாவாய் -30– பிரயோகங்கள் –

மார்கழி –படிந்தேலோ ரெம்பாவாய்
வையத்து –உகந்தேலோ ரெம்பாவாய்
ஓங்கி –நிறைந்தேலோ ரெம்பாவாய் —

ஆழி -மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் ——
வையத்து –உகந்தேலோ ரெம்பாவாய் —
உந்து –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் –
அங்கண்–மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-
ஒருத்தி –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் –
வங்கம் -இன்புறுவர் எம்பாவாய் -7

மாயனை –செப்பேலோ ரெம்பாவாய்

புள்ளும் –குளிர்ந்தேலோ ரெம்பாவாய் –
கூடாரை –குளிர்ந்தேலோ ரெம்பாவாய் -2-

கீசு –திறவேலோ ரெம்பாவாய்

கீழ் வானம் -அருளேலோ ரெம்பாவாய் —
மாரி –அருளேலோ ரெம்பாவாய் –
மாலே –அருளேலோ ரெம்பாவாய்–3-

தூ மணி –நவின்றேலோ ரெம்பாவாய்
நோற்றுச் –திறவேலோ ரெம்பாவாய்
கற்றுக் –பொருளேலோ ரெம்பாவாய்
கனைத்து–அறிந்தேலோ ரெம்பாவாய்
புல்லின் –கலந்தேலோ ரெம்பாவாய் –

உங்கள் –பாடேலோ ரெம்பாவாய் —-
மாயனை –செப்பேலோ ரெம்பாவாய் –
தூ மணி –நவின்றேலோ ரெம்பாவாய் –
எல்லே –பாடேலோ ரெம்பாவாய் -3-

எல்லே –பாடேலோ ரெம்பாவாய்
நாயகனாய் –நீக்கேலோ ரெம்பாவாய்
அம்பரமே –உறங்கேலோ ரெம்பாவாய்
உந்து –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
குத்து –தகவேலோ ரெம்பாவாய்
முப்பத்து –நீராட்டேலோ ரெம்பாவாய்
ஏற்ற –புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அங்கண்–மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
மாரி –அருளேலோ ரெம்பாவாய்
அன்று –இரங்கேலோ ரெம்பாவாய்
ஒருத்தி –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
மாலே –அருளேலோ ரெம்பாவாய்
கூடாரை –குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
கறவைகள் –பறையேலோ ரெம்பாவாய்
சிற்றம் -மாற்றேலோ ரெம்பாவாய்
வங்கம் -இன்புறுவர் எம்பாவாய்-

ஏல் ஓர் எம்பாவாய் -அனைத்திலும் காதாலே கேட்டு அனுஷ்ட்டித்து சொல்லி வழிபட்டு அனுபவம்
அம்பரமே -மாற்றி– ஓர் எம்பாவாய் -கேட்டது போதும் -அனுஷ்ட்டித்து வழிபட்டு அனுபவம்
வங்க கடல் –எம்பாவாய் -அனுபவத்தை ஆனந்தமாக இருப்பதே கர்த்தவ்யம்

—————

1-பாரோர் புகழ் மாலை –பாரோர் புகழப் படிந்து நீராடப் போதுவீர் போதுமினோ
2-உய்வு மாலை–உய்வுமாறு எண்ணி –
3-செல்வ மாலை –வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம்
4-மகிழ் மாலை-நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து –
5-பிழை மாயும் மாலை –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
6-குளிர் மாலை-அரி என்ற பேரரவம் -உள்ளம் புகுந்து குளிர்ந்து
7-தேச மாலை –தேசமுடையாய் -தேசம் -தேஜஸ் இரண்டு பொருளும் விவஷிதம்
8-அருள் மாலை-ஆவா வென்று ஆராய்ந்து அருள் –
9-திரு நாம மாலை –மா மாயன் மாதவன்வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று –
10-தேற்ற மாலை –தேற்றமாய் வந்து திற
11-பொருள் மாலை –எற்றுக்குறங்கும் பொருள் –
12-அறிவு மாலை –அனைத்து இல்லத்தாரும் அறிந்து –
13-கள்ளம் தவிர் மாலை-கள்ளம் தவிர்ந்து கலந்து –
14-பாடல் மாலை –சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -பங்கயக் கண்ணானைப் பாட –
15-வேறோர் பாடல் மாலை –மாற்றாரை மாற்று அழிக்கும்-
16-நேய மாலை-நேச நிலைக் கதம் நீக்கு
17-உறங்கா மாலை –உம்பியும் நீயும் உறங்கேல்
18-மகிழ்ச்சி மாலை –செந்தாமரைக் கையால் வளை ஒலிப்ப மகிழ்ந்து வந்து திறவாய் –
19-தகவு மாலை –தத்வமஸி க்கு பிறர் கூறும் பொருள் தகுதி அற்றது
20-நீராட்டு மாலை —இப்போதே எம்மை நீராட்டு –
21-புகழ் மாலை-போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து –
22–சாப நிவாரண மாலை –
23-ஆராய்ச்சி மாலை –யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்
24-இரக்க மாலை –இன்று யாம் வந்து இரங்கு –
25-வருத்தம் தீர் மாலை-வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து –
26-ஆலினிலையான் மாலை –ஆலினிலையாய் அருள் –
27-கூடி இருந்து குளிர் மாலை –
28-பறை தரும் மாலை –இறைவா நீ தாராய்
29-காமங்கள் மாற்று மாலை
30-திருவருள் மாலை-எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்

ப்ரபந்ந அம்ருதம் -ஆண்டான் 30  நாள்களும் நோன்பு நோற்று -அரங்கனை கனவில் திருக்கல்யாண போகம் அனுபவித்த நாளை -நாமும் திருக் கல்யாணம் சேவித்து இன்றும் அனுபவிக்கிறோம் -திருக் கல்யாணம் பங்குனி உத்தரம் நடந்ததையும் ப்ரபந்ந அம்ருதம் காட்டி அருளும் –

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

இன்னார் என்று அறியேன் என்றவரே அறிந்தேன் நான் என்கிறார்-

January 6, 2026

என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன —1-8-8-
–– நாலாயி:104/1,2-என்னுடைய பிதாவானவன் உன்னுடைய வஞ்சகத்தில் அகப்பட்டு உன்னுடையபடி ஒன்றும் அறிந்திலேன்–-மின்னு முடியானே அச்சோ அச்சோ-திரு உலகு அளந்த வ்ருத்தாந்த்தாலே சேதனருடைய அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்யங்களை அறுத்த பின்பு ஆய்த்து சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகம் ஒளி பெற்றது –

——–

அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-1 –
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-2
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 3-1-3-
ஐயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-4 – –
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1- 5- –
அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1 6- –
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 -1-7 – –
நந்தன் காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-8 –
ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 -1-9 – –
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3-1-10 –

———–

மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே 85- நாலாயி:836/3-ஒருத்தனை கேள்வி கொண்டு கார்யம் வேண்டாதபடி வஸ்துவை -வஸ்த்வந்தரம் ஆக்க வல்ல சக்தியை உடையை யாகையாலே உன்னை ஸ்வ தந்த்ரன் என்று அறிந்து கொண்டேன் –

———

அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு -2-7-9- நாலாயி:1116/2,3-சங்கம் அடியாக உம்முடைய பக்கல் பிறந்த காமம் ஆனது அறப் பெரிது –பிறர்க்கு இப்படி தன் பக்கலிலே ஆதரம் பிறக்கும்படி அழகை உடைய விலஷணையான இவளுக்கு –இவளுக்கு முருடு கொளுந்தும் படி-( காடின்யம் அடையும் படி ) பிறந்த நோய்
இன்னது யென்று அறிகிலேன்-பயலை பூத்தாள் கண் துயில் மறந்தாள்-அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது யென்று நோவும் சொல்லி நோவுக்கு நிதானமும் சொல்லா நிற்க
அறியேன் என்கிறது இவ்விஷயம் தன்னில் நிதான விசேஷத்தைப் பற்ற – அதாகிறது
முறுவலிலேயோ நோக்கிலேயோ வடிவிலேயோ சீலத்திலேயோ அகப்பட்ட துறை விசேஷம் அறிகிறிலேன் –

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே
-4-9-6–நாலாயி:1333/4–நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்-விரஹ அஸஹிஷணத்வம் உடைய நன்மை ஸஹிஷணத்வம் உடைய தீமை அறிவீர்நமக்கு-விரஹ அஸஹிஷணத்வம் உடைய மென்மை மார்த்வம்–சொல்லாது ஒழிய கில்லேன் –-சேஷி சந்நிதியில் சேஷ பூதன் பரிமாறும் முறையில் பரிமாற ஷமன் ஆகிறிலேன் சேஷி செய்த படி கண்டு இருக்கைக்கு மேற்பட சேஷ பூதன் நிர்பந்திக்கக் கடவன் அன்று இறே-இப்படி இருக்க மாட்டு கிறிலேன்–அறிந்த சொல்லில்–அறிந்தவற்றைச் சொல்லில் முறை செய்யக் கடவது அல்லாதாகப் பார்த்த பின்பு இனி அதுக்கு ஈடாக பிரதிபன்னங்களைச் சொல்லில்–நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-உம்மைப் பிரிந்து பின்னையும் காணலாம் என்னும் நசையாலே பத்து மாசம் தரித்து இருக்கைக்கு ஈடான எலும்பு  முற்றின பிராட்டியோ பாதியாக நினைத்து  இரா நின்றீர்-அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்
உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்
அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்
(ஸூ கந்த வன நாயகியைப் பற்றி அன்றோ பரிமள ரெங்கனைப் பற்றினார் இவர்
அவன் ஸ்வா தந்தர்யம் அறிந்து வேறே கடகர் இல்லாமையால் அவன் வரும் வரை ஆறியே இருக்க வேண்டும் )ஜீவிக்கிலும் சில நாள் தரித்து இருக்கும்படி ஜீவித்து பட்டினி விடிலும் சில நாள் பொறுக்க வல்லாரைப் போலே யாய்த்து நம் ஆழ்வார் போல்வார் ப்ரக்ருதி-
(மலையாள ஊட்டு போல் உடைய நங்கை திரு மகன் அன்றோ )-உண்ணவும் பொறாது
பட்டினி விடவும் பொறாது என்னும் சுகுமாரரைப் போலே யாய்த்து இவருடைய சௌகுமார்யம்-தூது விடப் புக்கு தூது அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்பே பற்றாமை தாம் கிடந்து கூப்பிடுகிறார் இறே தூ விரிய மலருழக்கியிலே  –நல்லார் அறிவீர் – தேவரை ஒழியச் செல்லாதார் பிரகிருதியும் அறிவீர்-நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் – தேவரை ஒழியவும் ஜீவித்து இருப்பார் பிரகிருதியும் அறிவீர்-இங்கன் தனித் தனி பிரித்து சொல்லுகிறது என்-நமக்கு இவ் உலகத்து எல்லாம் அறிவீர் –-அஞ்ஞாதன் நாஸ்தி தே கிஞ்சித் த்ரிஷூ லோகேஷூ ராகவ -(ஸூக்ரீவன் வார்த்தை அபய பிரதான கட்டம் )
இந்த லோகத்தில் உம்முடைய ஞானத்துக்கு அவிஷயமாய் இருப்பது ஓன்று இல்லை –ஈதே அறியீர் –சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும் இவருடைய பிரகிருதி மார்த்தவம்-இந்தளூரீரே – தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும் அவத்யத்தை பரிஹரிகைக்கு  அன்றோ நீர் திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது
போந்த கார்யத்தை மறக்கிறது என் –

பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்-8-1-9- – நாலாயி:1656/3-முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ   –எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – என்னும்படியாய் இருக்கும் –நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி-சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது  காட்டுமோ – பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் ) எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)-(பிரதமத்தில் முன் கண்டால் போலேயும் –
காணாமல் இருந்தது போலேயும் அன்றோ இந்த சப்த பிரயோகம் –சுரம் கொண்டே இரண்டு அர்த்தங்களும் காட்டுமே-பரி சீலிக்க பரி சீலிக்க பார்த்தது போலே இருக்குமே-இல்லையாகில் லௌகிக விஷய வியாவ்ருத்தம் இருக்காதே )

————-

இன்னார் என்று அறியேன் என்றவரே அறிந்தேன் நான் என்கிறார் அடுத்து

இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னார் என்று அறியேன்
—10-10-9-தேவனோ
மனுஷ்யனோ அறிகிறிலேன்-தேவத்வ ஸூ சகமான திரு ஆழியையும் மனுஷ்யத் வைகாந்தமாய் ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய   -ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் – இன்னார் என்று அறியேன் –சாரங்க பாணியின் படியையும் ஆராவமுத ஆழ்வாரையும் அனுபவித்து அவர்களுடைய போக்யதை நெஞ்சில் ஊறி முன்னே வந்தால் போல் இவளுக்குப் பட மனுஷ்யத்தவே பரத்வம் இவருக்கு அடையாளம் என்று சொல்லிக் கூப்பிடுகிறாள்-ஆழியும் சார்ங்கமும் சேர்ந்து அனுபவம் இதில் –சக்ர பாணி சாரங்க பாணி -சேர்ந்தே புறப்பாடு இங்கு)

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே  –11-3-3-அந்தாதி தொடையில் அமைந்த ஒரே திருமொழி இதுவேநெருங்க கலந்த போதாக –இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –காதாசித்கமாக சம்ஸ்லேஷித்த போது-ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –(இன்னார் என்று அறியேன் என்றவர் அன்னே இவரை அறிவன் என்கிறாரே –நீர்மை காணப்போகாதே -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணுமே )என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே 
இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே-உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் —10-10-9-
– நாலாயி:1950/4–தேவனோ மனுஷ்யனோ அறிகிறிலேன்-தேவத்வ ஸூ சகமான திரு ஆழியையும் மனுஷ்யத் வைகாந்தமாய்
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய   -ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் –
இன்னார் என்று அறியேன் –

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே
  –11-3-3– நாலாயி:1974/4-நெருங்க கலந்த போதாக –இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –காதாசித்கமாக சம்ஸ்லேஷித்த போது-ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –இன்னார் என்று அறியேன் என்றவர் அன்னே இவரை அறிவன் என்கிறாரே –
நீர்மை காணப்போகாதே -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணுமே
-பிரளய காலத்திலே சப்த ராசியும் அகப்பட அழிய ஒரு பதார்த்தம் இன்றிக்கே இருக்கிற சமயத்தில் இவ் வநு  பூர்வியை ஸ்மரித்துக் கொண்டு இருந்து பின்னை அத்தை உபதேசித்து ஹித அனுசாசானம் பண்ணினவர் –இதாயிற்று இதனுடைய நித்யத்வ அபௌருஷேயத்வங்கள் – உபாத்யாயன் உறங்கா நின்றாலும் சம்ஸ்காராத்மா வாய்க் கிடக்கும் இறே –அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் –தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து அது பலிக்கும் அளவானவாறே
ஸ்ப்ருஹணீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்ம வஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே
உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே
—11-3-4-ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் –யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில்
அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே –பரிமள பிரசுரமாய் இருந்துள்ள பொழிலாலே சூழப் பட்டு விஸ்மயநீயமாய் இருக்கிற திருக் குடந்தையிலே வந்து சாய்ந்து அருளி –இவன் இது களவு கண்டான் -யென்று சொல்ல ஒண்ணாத படி மௌக்த்யத்தை உடையனாய் – பொய்யடி இட்டு போய்ப் புக்கு –உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –

இவரை அறிவேன் என்ற படி எங்கனே -என்ன –ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யம் ஒழிய
தமக்கு தாரகம் இல்லையாம் படி யிருக்கிறவரை எங்கனே நாம் அறியோம் -என்னும் படி தான் –

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே—11-3-4–ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் –யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில்
அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே –உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு – -நான்முகன் திருவந்தாதி -3
— நாலாயி:2384/2-ப்ரஹ்மாதிகளுக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு பண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-சம்சாரிகளுக்கு ஸூலபனாய் லோயிலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-ஜகத்தை பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் கொண்டு வட தளத்திலே கண் வளர்ந்து அருளின படியையும்-அறிய வல்லார் -இல்லை –சம்சாரத்திலே திருவவதாரம் பண்ணிக் கோயில்களிலே யுகந்தருளி இருப்பதும் செய்து ஏகார்ணவத்தில் கண் வளர்ந்து  அருளின பரம காரணனை நான் அறிந்த படி –ஞாலத்தொரு பொருளை -என்றது கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே-அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே-4-7-6- –
நாலாயி:3302/4—அடுத்து அடுத்து பார்த்து-சர்வாதிகனாய் துர்லபனான உன்னை காண் கைக்காக-அதிசபலனான நான்-வாயால் சொல்ல மாட்டாதே நெஞ்சினுள்ளே ஆசைப்படா நின்றேன்-இதுக்கு அடி என் அறிவு கேடு இறே-இவ்விஷயத்தில் ஆசையும் அறிவு கேடு ஆகிற படி என் என்னில்-சதா ஸந்நிஹிதனாய் சக்தனாய் இருக்க முகம் காட்டாது ஒழிகிறது -வர நினையாமை என்று இருக்க மாட்டாது ஒழிகிறது அறிவு கேட்டாலோ என்றோ–சர்வ காலமும்-பேற்றுக்கு பிரதி பந்தகமான சரீரத்தின் உள்ளும்-பெறுகைக்கு இருக்கிற ஆத்மாவினுள்ளும்-மற்றும் இந்த்ரியங்களிலும்-பிரியாதே எங்கும் வியாபித்து நின்றாய்-இப்படி ஸந்நிஹிதனாய் வைத்து செய்யாது ஒழி கிறது செய்ய நினையாமை என்று மிகவும் அறிந்து வைத்தே ஆசைப்படுகிறது மதிகேடு இறே

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–,-4-7-7-
பரத்வம் என்ன -பஜ நீயத்வம் என்ன -ஸுலப்யம் என்ன -அபராத சஹத்வம் என்ன -இவ்வடைவிலே ஞானம் பிறக்க பிறக்க அந்தக்கரணமும் க்ரமத்தாலே தெளிந்து-ஞானம் பிறந்த நான் –-பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து-பிறப்பதும் இறப்பதுமாய் நின்று நான் தடுமாறித் திரிகிற அறிவு கேடு போகப் பெற்றேன் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்று நான் அபேக்ஷித்து பெற்றேன்-இவ்வளவு பெறுகைக்கு முதல் காட்சியைச் சொல்கிறார் -வைத்த வளையத்தை காட்டி யாற்று இவரை அநந்யார்ஹர் ஆக்கிற்று-பெற்ற அம்சத்தாலே திருப்தி பிறவாத நான் – நிரதிசய போக்யனான உன்னைக் கண்டு கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -என்று அந்வயம் –

எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே -5-5-10- – நாலாயி:3394/4-உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்-இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு -தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்
என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே-அத்திரளோடே அவ்வடிவு என் நெஞ்சில் பிரகாசியா நின்றது -அது நாங்கள் காண்கிறிலோமே என்ன –ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கும் அறிய ஒண்ணாது -த்வரை இல்லார்க்கு அறிய ஒண்ணாது -எனக்கு மறக்க ஒண்ணாதாப் போலே பிறர்க்கு நினைக்க ஒண்ணாது –

——————————–

நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய என்று – நாலாயி:4/3–நாடு -என்று அவிசேஷஜ்ஞரை சொல்லுகிறது –-நகரம் -என்று விசேஷஜ்ஞரை சொல்லுகிறது –
ராஜாவுக்கு ப்ரத்யா சந்னர் இ றே நகரஸ்தர் -நாட்டார் தூரஸ்தர் இ றே -ஆகையாலே அருளிச் செய்கிறார்-நன்கறிய –நன்றாக அறிய –பகவத் ப்ரத்யா சத்தியாலே அவிசேஷஜ்ஞர் விடும்படியாகவும் -அது தானே ஹேதுவாக விசேஷஜ்ஞர் பரிக்கிரஹிக்கும் படியாகவும் –
நன்கறிய –இந் நன்மையை அறிய என்றுமாம்-நாமோ நாராயணா என்று –இவ்வளவும் போராது -தன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தை பெற வேணும் -என்று வைஷ்ணவனாய் வர வேண்டும் என்று –
அஹமபிநமம -பகவத ஏவாஹமஸ்மி -என்று இறே  நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் இருப்பது
ஸ்வாமி பக்கல் பண்ணும் அநுகூல வ்ர்த்தி இறே புருஷார்த்தம் ஆவது –

அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே -1-1-4- நாலாயி:16/4-திருவாய்ப்பாடியில் உள்ள கோபர்கள்-பாலும் தயிரும் இருக்கிற உறிகளை முற்றத்திலே உருட்டி நின்று
ஆடுவாரும் மணம் மிக்க நெய் முதலியவற்றை நிச்சேஷமாக தானம் பண்ணுவாருமாய்
நெருங்கி மெத்தென்ற மயிர் முடியானது அவிழ்ந்து களையும் படி நர்த்தனம் பண்ணி
சேரி அடங்கலும் மதுவனம் அழித்த முதலிகள் போல் கிருத்ய அக்கருத்ய விவேக சூன்யர் ஆனார்கள்

தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்-1 4-4 –- நாலாயி:57/3–உனக்குத் தகுதியானது அறிதி யாகில் –எல்லாருக்கும் ஆஹ்லாத கரனாய் இருக்கும் நீ- இவனுக்கு வெறுப்பு செய்யாதே-பிள்ளைகள் பெறாத வந்த்யன்  அல்லவாகில் வந்து கொடு -நில் கிடாய் –

ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் –1-5-6– நாலாயி:69/3—ஆயம் அறிந்து -மல்ல யுத்தம்  செய்யும் வகை அறிந்து
அந்தரம் இன்றி -உனக்கு ஒரு அபாயமும் இல்லாதபடி-ஆடிய -இன்னும் வருவார் உண்டோ -என்று கம்பீரமாய் சஞ்சரித்தமல் பொரும் கூறு அறிந்த பொரு வதாக எதிர்த்து வந்த மல்லரை வியாபரிக்கைக்கு இடம் இல்லாமல் -நிரசித்த இன்னம் வருவார் உண்டோ என்று மனோ ஹர மான இடை வெளி இல்லாமல் அபாயம் இல்லாமல் என்றுமாம் அவர்களே தங்களில் மாய்ந்து போம்படி என்றுமாம் –

அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
சட்டி தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் –1 6-5
–– நாலாயி:79/2,3-ஓடிப் போய் உள்ளே புக்கு –வைத்த நான் அறியாதபடி –சட்டிகளிலே தோய்த்து வைத்த தயிரையும் –தடாக்களிலே சேர்த்து வைத்த வெண்ணெயையும் அமுது செய்யா நிற்கும் –

மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின்- -1 7-8 — – நாலாயி:93/3–லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –தகுதியான -நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர் திருமகன் தளர் நடை நடவானோ –

என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன —1-8-8-
–– நாலாயி:104/1,2-என்னுடைய பிதாவானவன் உன்னுடைய வஞ்சகத்தில் அகப்பட்டு உன்னுடையபடி ஒன்றும் அறிந்திலேன்–-மின்னு முடியானே அச்சோ அச்சோ-திரு உலகு அளந்த வ்ருத்தாந்த்தாலே சேதனருடைய அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்யங்களை அறுத்த பின்பு ஆய்த்து சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகம் ஒளி பெற்றது –

இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை– 2-2 2– – நாலாயி:129/2-பழுதற உருக்கி வைத்த நெய்யும் –செறிவுறக் காய்ந்த பாலும் –நீர் உள்ள்து வடித்து கட்டியாய் இருக்கிற தயிரும் –செவ்வையிலே கடைந்து எடுத்த நறுவிய வெண்ணையும்-என்னுடைய நாயகனே நீ பிறந்த பின்பு –இவை ஒன்றும் பெற்று அறியேன் –அன்றிக்கே –
இத்தனையும் என்றது –ஏக தேசமும் என்றபடியாய்-இவற்றில் அல்பமும் பெற்று அறியேன் என்னுதல்

ஆன் நிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட –
–2 7-1 – –-நாலாயி:182/1,2-உன் வாசி அறியாதே -தனக்கு மேய்ச்சல் உள்ள இடம் தேடி ஓடா நிற்கும் பசு நிரையை மேய்ப்பைக்காக ஸூகுமாரனான நீ போகா நின்றாய்-நீ (சேதனர்கள் அனைவரும் )உன்னை பெறுதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறது இல்லை-இங்கு உள்ளார்களுக்கு -நோய்கள் அறுக்கும் மருந்தாய்-அங்கு உள்ளார்க்கு -போக மகிழ்ச்சிக்கு மருந்தாய் -இறே இவன் தான் இருப்பது

ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் – -2-7- 8–நாலாயி:189/3-சத்ரு நிரசனம் -ஆஸ்ரித ரஷணம் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றில் புகுந்தால் மேல் விளைவது அறியும் உபகாரகன் ஆனவனே-இங்கே கிடந்தால் நமக்கு முமுஷுக்களை லபிக்கலாம் -என்று சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோவிலிலே பள்ளி கொண்டு அருளுகிறவனே

உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய்—2 8-7 – நாலாயி:198/3-உள்ளபடி ஒன்றும் அறிகிறேன் இல்லை-அதாவது –இன்னமும் அப்படிக்கு ஒத்தவற்றை செய்குதியாகில் –ஒரூ நாள் அல்ல ஒரு நாள் அபாயம் விளையும் -என்று பயப்படா நின்றேன் என்கை

பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான் –  2-9- 7–
நாலாயி:208/2,3-பன்னிரண்டு திருவோணம் வ்ரதாங்கமாக பாயாசபூபங்கள் சமைத்தேன் –-முன்பும் இப்பிள்ளை பிரகாரம் அறிவன்-அதாவது –திருவோண வ்ரதத்துக்கு  என்று ஆரம்பித்து -இவை சமைத்த போதே –இவனும் தீம்பிலே ஆரம்பித்து –தேவார்ச்சனம் செய்வதற்கு முன்பே இவற்றை வாரி ஜீவித்து விடும் -என்கை –இப்போதும் அப்படியே -எல்லாம் விழுங்கிட்டு –இத் திருவோணத்துக்கு என்று சமைத்தவை எல்லாம் ஒன்றும் சேஷியாதபடி விழுங்கி

அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-1 –- நாலாயி:223/4-அதாவது -அம்மே -என்று அச்சத்தால் சொல்லுகிற வார்த்தை-முன்பு எல்லாம் என் பிள்ளையாகவும் -நான் தருகிற அம்மம் முதலானவை உனக்கு தாரகாதிகளாகவும்  நினைத்து இருந்தேன் -உன் படிகள் அதி மானுஷ்யங்கள் ஆகையால் ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் -என்கிறபடியே இவன் நம்மோடு சஜாதீயனும் அல்லன்நாம் கொடுக்கிறவை இவனுக்கு தாரகாதிகளும் அல்ல என்று நன்று அறிந்து கொண்டேன் –இப்படி இருக்கிற உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –தவழுகை பொய் என்றவோபாதி அம்மம் என்கிற இவன் சொலவும் பொய் என்று தோற்றா நிற்கச் செய்தேயும் அவன் சொலவை அனுசரித்து சொல்கிறாள்-
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-2 – ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பா -குணமே குணி )கண்டது ஒன்றிலே மேல் விழும்படியான சிநேகத்தை உடையவனே
இத்தால்-தீம்பன் -என்ற படி –இவன் நம்மோடு சஜாதீயன் அல்லன் -வ்யாவர்த்தன் என்று
உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்-ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3-1-3- –- நாலாயி:225/4-உன்னை உன் வாசி அறியாத நடு நின்றவர்கள்- என்னுடைய மகன் -என்று சொல்லுவார்கள் –நான் அங்கன் இன்றிக்கே -என் மகன் அன்று -என்றும் –எல்லார்க்கும் ஸ்வாமி -என்றும் –உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – –3 1-4 – –-நாலாயி:226/4-ஐயா இது என்ன தெளிவு தான்  என்று கொண்டாடுகிறாள்-அன்றிக்கே
ஐயா என்று க்ரித்மர்க்கு எல்லாம் ஸ்வாமி யானவனே என்கிறாள் ஆதல்-உன்னை அதி லோகமான வுக்தி சேஷ்டிதங்களை உடையவன் என்று அறிந்து கொண்டேன் –ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – -3-1- 5–நாலாயி:227/4-இந்த அதி மானுஷ சேஷ்டிதத்தை உடைய பெரியோனே -உன்னை
மனுஷ்ய ஜாதி அல்லன் -என்று அறிந்து கொண்டேன்-ஆன பின்பு உனக்கு அஞ்சம் தர அஞ்சுவன்-
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3-1 6- நாலாயி:228/4-தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் திருக் கண்கள் ஆகிற வலையை
எப்போதும் ஒக்க அவள் விஷயத்தில் வைத்து -அகப்படும் அளவும் – அந்ய பரரைப் போலே சஞ்சரிக்கிற தீம்பன் ஆனவன்-ஏவம் பூதனானவனை நன்றாக அறிந்து கொண்டேன் ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
அரட்டா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே- -3 -1-7 – – நாலாயி:229/4-என்னுடைய நாதனானவனே–இப்படி தீம்பனான உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றம் ஒழிய-இவ் ஊரில் உள்ளார் என்னோடு காறுகாறு என்ன – எவர்களோடும் ஓரர்த்த தாயம் உடையேன் அல்லேன் –இப்படி தீம்பனானவனே-உன்னை நன்றாக அறிந்து கொண்டேன் -ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
காளாய் உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3 1-8 –- நாலாயி:230/4-பசும் புல்லு சாவம் மிதியாதே ஸ்ரீ நந்தகோபர் பிள்ளையான நீ இப்படி செய்யக் கடவையோ-அன்றிக்கே -அவர் உன்னை நியமித்து வளர்க்காமை இறே நீ இப்படி தீம்பனாய் ஆய்த்து என்னுதல்-பருவம் இதுவே இருக்க -செய்கிற செயல்கள் இது வாகையாலே உன்னை நாட்டார் படி இல்லை -என்று அறிந்து கொண்டேன் -ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன்–-
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 -1-9 நாலாயி:231/4–காய்வார் அன்றிக்கே -உனக்கு நல்லவர்களாய் நீ செய்கிற வியாபாரங்களை கண்டவர்கள் நீ செய்கிற தீம்பு பொறாமல் நியமிக்கும்படி திரியா நிற்கிற ஆயனே – குல மரியாதை தன்னையும் பார்கிறிலையே என்கை -நீ இப்படி திரிந்தாய் ஆகிலும் உன்னுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களை கண்ட பின்பு –உன்னை மனுஷ்ய சஜாதீயன் அல்லன் -என்று அறிந்து கொண்டேன்-ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் ––
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3-1-10 –-என்னுடைய நாதனே -உன்னை அறிந்து கொண்டேன் –உன்னுடைய அதிமானுஷம் கண்ட பின்னை -அநியாம்யன் -என்று அறிந்து கொண்டேன் -ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் ––

அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில்- 3-4-6- – – நாலாயி:259/3-ஒப்பனை அழகும் -வருகிற அலங்காரமும் – லீலா வியாபாரமும் -ஒர் ஒன்றே
எத்தனை யேனும் அளவுடையாராலும் எல்லை காண ஒண்ணாத இடைப் பிள்ளை-தன்னை ஒழிய எனக்கு செல்லாமையும் –என்னை ஒழிய தனக்கு செல்லும்படியான தீம்புகளையும் அறிந்தால் –இத் தெருவில் வரக்கூடாது –இவற்றை அறிந்து வைத்தும் இத் தெருவே வந்தானாகில்

மூழை உப்பு அறியாது என்னும் மூதுரையும் இலளே – – 3-7- 4–நாலாயி:289/4-இவள் படி பார்த்தால் –முகந்து பரிமாறுகிற மூழை யானது தான் முகக்கிற பதார்த்தத்தின் ரசம் அறியாது-என்னும் அந்த மூதுரையும் தன் பக்கல் இல்லாதவள் -கிடீர்

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல் –3-7-5 – நாலாயி:290/1-தானும் தன்னை அணைந்த பந்து வர்க்கமும் அறிந்த அளவாக அவன் பக்கலிலே பிரவணையாய்-
அகம் விட்டு புறப்படாமல் இருக்கை அன்றிக்கே – திரு ஆய்ப்பாடி சூழ்ந்த நாடும் –
திரு ஆய்ப்பாடி யான ஊர் தானும் – இருந்ததே குடியாக அறியும்படி -க்ரஹத்தை விட்டு புறம்பே போய்

ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத உருவறை கோபாலர் தங்கள்-3-8 -2- – – நாலாயி:298/1-பொருந்தின அறிவு ஒன்றும் இல்லாத லௌகிக வைதிகங்களோடு சேர்ந்த அறிவு அல்பமும் இல்லாத-அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் இறே காட்டிலே பசு மேய்க்க போன இடங்களிலே -வழி திகைத்தால் வழி காட்டுவது பசுக்களாம்  படி இறே இவர்கள் அறிவு இருப்பது

தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி-3- 8-3 – – நாலாயி:299/2-பந்துக்களும் மற்றும் உள்ளாறும் அறியும்படி–தாமோதரனுக்கு இவளைக் கொடுக்க புகா நின்றோம் -என்று பிரசித்தமாக்கி-தாமோதரன் -என்றது –மாதாவானவள் கட்டின கட்டு அவிழ்த்துக் கொள்ள சக்தன் அன்றிக்கே அவள் நியமனம் தப்பாமல் இருந்த நீர்மையை உடையவன் -என்றபடி

நாடும் நகரும் அறிய நல்லது ஓர் கண்ணாலம் செய்து –3-8-6-– நாலாயி:302/3-இரண்டு குடிக்கும் பழி வாராதபடி-திரு ஆய்ப்பாடி சூழ்ந்த நாடும் – திரு ஆய்ப்பாடி ஆகிய நகரமும் அறியும் படியாக – இதுக்கு முன்பு இப்படி இல்லை -என்னும்படி விலஷணமாய் அத்வீதியமான கல்யாணத்தைச் செய்து – ஜாதி உசிதமான தர்மத்துக்கு தகுதியாக பாணி க்ரஹணம் செய்யுமோ

அறிந்து அரசு களைகட்ட அரும் தவத்தோன் இடை விலங்க–3-10-1– – நாலாயி:318/3-இயம் ஸீதா மமஸூதா ஸஹ தர்ம சரீதவ-ப்ரதீச்ச சைநாம் -பத்ரந்தே –பாணிம் க்ருஹணீஷ்வ பாணிநா (பால)-என்கிறபடியே இவளைக் கைக் கொண்டு அருள வேணும் என்று சமர்ப்பிக்க
தேவரீரை பாணி கிரஹணம் பண்ணிக் கொண்டு போந்த சேதியை அறிந்து-இருப்பத் தொரு படி கால் துஷ்ட ஷத்ரியரான ராஜாக்கள் ஆகிற களையை நிரசித்தவனாய் –
ஒருவரால் செய்ய ஒண்ணாத தபஸ்ஸை யுடையனாய் இருந்துள்ள பரசுராமன்
(பெருமாள் முதலோர் )திரு அயோத்யைக்கு எழுந்து அருளா நிற்கச் செய்தே
இடை வழியிலே -என் வில் வழி கண்டு போ -என்று வந்து தகைய-விலங்க-என்றது –
விலக்க-என்றபடி –

நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு – –4- 6-6 -நாலாயி:386/1–நாட்டில் உள்ளாரோடு நகரத்தில் உள்ளாரோடு வாசியற எல்லாரும் –இவன் அசாதாரணன் -என்று அறியும் படி சூத்திர மனுஷ்யர் பேர் இட்டு -அவர்களோடு கூடி -அவர்கள் பக்கலிலே கால் தாழ்ந்து- அவர்கள் விழுந்த  குழியில் விழுந்து ஒளி மழுங்கி – தவறி வர்த்தியாதே 

ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியா பெருமையோனே -4 -10-4 –- நாலாயி:426/1-சர்வ காரண பூதனாய்-சர்வ ரஷகனாய் –சர்வ சேஷியாய் –சர்வ சரீரியாய் -இருக்கும் உன்னை-உள்ளபடி அறிய ஒண்ணாது இருக்கும் பெருமையை உடையவனே –யன்ன தேவா ந முநயோ ந சாஹம் ந ச சங்கர ஜானந்தி பரமேசஸ்ய தத் விஷ்ணோ பரமம் பதம் –என்று விஷ்ணு உடைய பரமமான ஸ்வரூபத்தை தானும் – ருத்ரனும் –மற்றும் உண்டான தேவர்களும் –ரிஷிகளும்அறியார்கள் என்னும் இடம் பிரம்மா  தானே சொன்னான் இறே –கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி – என்று அவன் எழுந்து அருளி இருக்கிற தேசத்தையும் உட்பட அவர்கள் அறிய மாட்டார்கள்- என்று இறே ஸ்ரீ திரு மழிசைப் பிரான் (நான்முகன் திருவந்தாதியில் )அருளிச் செய்தது-

நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த — 4-10- 8– நாலாயி:430/1-அதீத அநாகதங்களில் ஒன்றும் அறியாத நான்(அதீத அநாகதங்கள் -முன்பு போன கர்மங்கள் -மேல் வரும் கர்மங்கள் ) சர்வ சக்தியான உன்னுடைய மாயைகளில் ஏதொன்றும் அறியேன் –இப்போது இவர் -உன் மாயம் -என்கிறது – போமிடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை -என்று சொன்னது போலே இருக்குமவற்றை இறே –அதாவது –கர்ம அனுகுணமாக இச் சேதனர் விஷயத்தில் அவன் பண்ணி வைக்கும் வஞ்சனங்கள் அநேகம் இறே –அவை தான் அவன் தான் அறியும் அத்தனை ஒழிய –எதிர்  தலைக்கு தெரியாதபடி இறே இருப்பது –அத்தைப் பற்ற அருளிச் செய்கிறார் –

அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னை பற்றும்-போது -4-10-9
–- நாலாயி:431/2,3–சர்வ காரணமாய் – விலஷண தேஜோ ரூபமான உன்னுடைய விக்ரகத்தை மறந்து அறியேன் 

நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று –5-1- 1– நாலாயி:433/2-ரசம் அறிந்தார்க்கு -சர்வ ரசனான உன்னை அல்லால் அறியாது –
(ரசம் சுவை என்றும் –ரஸோவைக -சர்வரஸ ஸர்வ கந்தனான அவனும் என்றுமாம் )

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் – —-உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோநாரணா என்பன்-5- 1-3 – – நாலாயி:435/3-நான் திரு நாமம் சொல்லுகை அத்தலைக்கு நன்மையாய் தலை கட்டுகிறதோ –தீமையாய் தலை கட்டுகிறதோ –அறிகிறிலேன் –

ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை-5-3- 6– – நாலாயி:458/2-ஒரு சேதனரும்-இஜ் ஜன்மம் ஆகிற வியாதிக்கு ஒவ்ஷதம் அறிவார் இல்லை
சம்சாரத்துக்கு மருந்து அறியும் இத்தனை -அத்தை வெளி இடுகைக்கு ஆய்த்து –
கைலாச யாத்ரையிலே கண்டா கர்ணனுக்கு மோக்ஷத்தை கொடுத்து ருத்ரன் பக்கலிலே- பிள்ளை வரம் வேண்டி சென்றது ஆகையாலே சம்சார வர்த்தகர்

சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய் -5- 3-8 –- நாலாயி:460/4-சர்வஞ்ஞனான நீ தானே அறியாயோ-விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனான உனக்கு தெரியாதோ –விட்டு சித்தன் தன் மனம்
உன்னுடைய வ்யாப்தி விபூதி அளவிலே(குணங்களோடு வியாபிக்கிறார் என்னும் போது குணத்தில் வியாபித்தால் ஆத்ம ஆஸ்ரய தோஷம் வருமே )என்னுடைய மநோ வ்யாப்தி உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே –

அறிவை என்னும் அமுத ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே –5- 4-2 –– நாலாயி:464/4-ஞானம் அம்ர்தமாகிற ஆறு பெருகி   வாய் அளவாய் தலைக்கு மேல் போகா நின்றது
அதனில் பெரிய என் அவா -என்றபடி-நீ என்னைக் கை கொண்ட -என்றது –
என் தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஓட்டேன் நாம்மாழ்வார் -என்றபடி
அநு கூல ஞானம் ஆகிற பெருக்காறு அனுகூல ஞான வர்ஷம் எல்லாம் மென்மேலே ஒரு முகமாய் பெருக்கிடா நின்றது –-சேதன கதமாக வந்த ஞானம் ஆகில் இறே பின்பு வற்றி வருவது சஹ்யம் பற்றி வருகிற ஆறு இறே திரு மலை இறே சஹ்யம் வர்ஷிக்கிறது ஒரு காள மேகம் இறே(ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் )

அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:485/8–பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலிலே அழைக்கிறமை ஊராக அறிய வேணும் என்று இருந்தாய் ஆகில் எல்லாரும் அறிந்தது –பர ஸம்ருத்தியே ஏக பிரயோஜனம் ஆகையால்
பாலைகளாய் இருப்பாரும் உணர்ந்து வர வேணும் என்று இருக்கிறாயாகில் –அது எல்லாம் செய்தற்றது –நாங்கள் உன் வாசலில் வந்து எழுப்பவும் நீ சிறிது போதும் உணராது ஒழியவும் –இத்தால் வந்த மதிப்பு எல்லாரும் அறிய வேணும் என்று இருந்தாயாகில் –
அது எல்லாரும் அறிந்தது

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக – நாலாயி:488/3,4-
-நங்கைமீர் -என்று உறவற்ற சொல்லால் வெட்டிமை எல்லாம் சொல்ல வல்லை என்னும் இடம்-நாங்கள் இன்றாக அறிகிறோமோ –சொல்லிற்றைச் சொல்லி எங்கள் தலையிலே குற்றமாம்படி வார்த்தை சொல்ல வல்லை என்னும் இடம்-எங்கள் தலையிலே குற்றம் சொல்லலாவது எல்லாம் சொல்லி உன் தலையிலே குற்றம் இல்லை என்னலாம் படி உபபாதிக்க வல்லை இறே-நங்கைமீர் என்று உறவற்ற சொல்லாலே வெட்டிமை சொல்ல வல்லை என்னும் இடம்
நாங்கள் இன்றாக அறிகிறோமோ – பண்டே அறியோமோ –குண தோஷங்கள் என்று ஓன்று உண்டோ –நீ சொல்லிற்று வார்த்தையாம் அத்தனை அன்றோ –உன் வாசலிலே நாங்கள் எத்தனை காலம் உண்டு துவளுகிறது-என்ன-நங்கைமீர் என்ற உறவற்ற சொல்லாலே
நீ சொல்லிற்றவற்றைச் சொல்லி எங்கள் திறத்தே குற்றமாம் படி வார்த்தை சொல்ல வல்லை என்னும் இடம் இன்றே யல்ல அறிகிறது -எத்தனை காலமுண்டு உன்னோடே பழகுகிறது -பண்டே அறியோமோ-

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த – நாலாயி:490/4,5--ஸ்ரீ நந்த கோபரைப் போல் அன்றியே சஜாதீயை யாகையாலே நோயும் அறியுமவளே –ஹித காமரான ஸ்ரீ நந்த கோபர் எழுந்து இருக்கச் செய்தேயும் பிரிய காமையாய் இருக்கிற நீ கிடக்கக் கடவையோ –நீ அறிந்தால் எங்களுக்கு ஒரு குறை உண்டோ -என்கை-அவள் சம்வதத்தாலே உள்ளே புக்கு-கிருஷ்ணனை எழுப்புகிறார்கள் –இவள் அறிய அமையும் -பின்னை தங்களுக்கு ஒரு குறை இல்லை என்று இருக்கிறார்கள் –
ஸ்ரீ நந்த கோபரை -எழுந்திராய் என்றும் இவளை அறிவுறாய் என்றும் சொல்லுகையாலே
இவள் நெஞ்சில் உணர்த்தி உண்டானால் நமக்கு அவனைப் பெறலாவது என்று குவாலாக உணர்த்துகிறார்கள் – அவளுடைய சம்வதம் கொண்டு உள்ளே புக்கு கிருஷ்ணனை எழுப்புகிறார்கள்–பகவத் மந்தரங்களுக்கு எல்லாம் ஸ்ரேஷ்டமாய் பிரபன்ன குலத்துக்கு பிரகாசகமாய் எங்களுக்கு நிருபாதிக ஸ்வாமியாய் தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜாத்யாதி சகல அதிசய பிரதமான திருமந்த்ரமே -அறிவுறாய் – திருமந்தரம் அறிவுறுகையாவது – ஸ்வார்த்த பிரகாசகமாகை

ஆற்ற படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் –
நாலாயி:494/3,4-சர்வஞ்ஞனானவனை உணர்த்த வேண்டி இறே உள்ளுச் செல்லுகிறது –கைப்பட்ட பெண்களை சரக்கிலே வாங்கி கைப் படாதவர்களைக் கைப் படுத்துகைக்காக உண்டான உபாய அந்ய பரதையாலே
எழுப்புகிறார்கள்-மகனே அறிவுறாய்-உன் ஐஸ்வர்யம் இருந்த படியால் எங்களை நினைக்கைக்கு விரகு இல்லை – ஐஸ்வர்ய செருக்கால் ஆர்த்தவ த்வனி செவிப்பட்டது இல்லை யாகிலும் உன் பிறவியை புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்

சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து – நாலாயி:496/2-மேலிட வல்லது ஓன்று இல்லை –
கிட்டி எழுப்புவார் இல்லை –-பூ அலர்ந்தாப் போலே காலம் உணர்த்த உணருகை –சம்சாரிகள் காலம் உணர்த்த உணருவர்கள்-இவன் ஆஸ்ரிதர் ஆர்த்தி உணர்த்த உணரும் –அறிவு இல்லாத தொரு பதார்த்தத்துக்கு அறிவு புகுந்து நடை யாடினால் போலே இருக்கை –
ஆஸ்ரித அர்த்தமாக உணர்ந்த போது இறே இவன் அறிவுடையவன் ஆவது –இவன் உறக்கம் வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வருமளவும்(ஜகத் சிந்தனை -யோக நித்திரை -உறங்குவான் போல் யோகு செய்து )

அறிவு ஒன்றும் இல்லாத ஆய் குலத்து உன் தன்னை —–அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை – நாலாயி:501/6–1-அறிவில்லை-2-அறிவு ஓன்று இல்லை
3-அறிவு ஒன்றும் இல்லை–1-கர்ம யோகத்தில் உண்டான –2-ஆத்ம யாதாம்யா ஞானம் இல்லை –3-பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையால் அந்த ஆத்ம ஞானம் அடியாக
யுன் பக்கல் ஞானம் பிறந்து நீ உத்தேச்யன் என்று புத்தி பண்ணி உன் பக்கலிலே யுண்டான அனவரத பாவன ரூபமாய் வரும் பக்தி ரூபா பன்ன ஞானம் இல்லை –இவை இரண்டுக்கும் அடியான பிரகிருத ஆத்ம விவேகாதிகள் சம தமாதி சாதன சமபக்தி தொடக்கமானவை யுண்டாய் முமுஷுவாகைக்கு யோக்யமாய் இருக்கும் அவற்றிலும் ஓர் அன்வயம் இல்லை –ஆஹார சுத்தி உண்டானால் அன்றோ ஞானம் பிறப்பது –அறியாத பிள்ளைகளோம் –1-அநவதானத்தாலே (கவனக்குறைவாலே )சொல்லுவது அறிந்திலோம் –2-பால்யத்தாலே சொல்லுவது அறிந்திலோம் –3-ப்ரேமத்தால் வந்த விருட்சியாலே சொல்லுவது அறிந்திலோம் 

பேதம் நன்கு அறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன் சுவை யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் -2-7 – நாலாயி:520/2-நீ சொல்லுகிற வற்றினுடைய கருத்து அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு இத்தால் பிரயோஜனம் உள்ளது-எங்களோடு சொன்னால் என்ன பிரயோஜனம் உண்டு –வார்த்தை வாசி அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –அவர்கள் ஒன்றுக்கு பத்தாக மர்மத்தில் சொல்லுவார்களே – அது உனக்கு மிகவும் இனிதாய் இருக்கும் இறே
தண்ணீர் -என்றால் தண்ணீரே கொண்டு வரும்படி பாலைகளாய் இருக்கிற எங்களை
நெருக்கினால் உனக்கு என்ன பலம் உண்டு –

கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்வண்ணனே – -2-8-நாலாயி:521/4-கருப்புக் கட்டியே யானாலும் நெஞ்சு கைத்தால் இன்னது என்னும் இடம் அறிதியே -கடல் வண்ணன் -என்கிற இவ் விசேஷணம் இட்டதுக்கு கருத்து –கண்டு விடுமதுக்கு மேற்பட செய்யலாவது இல்லை-ஒரு கை அள்ளி முகத்தைக் கழுவுதல் -குடித்தல் -செய்ய ஒண்ணாதே கடலில் நீர் –
அப்படியே யன்றோ நீ -என்கை –

குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடை கூறை பணியாய் –3-8- நாலாயி:527/4-காபேயமாக சிலவற்றைச் செய்யத் தொடங்கினான் –குரக்கு அரசு ஆவது அறிந்தோம் –என்கிறார்கள் ஆதல் –கையிலே பர்யட்டங்களை குருந்திலே பொகட்டு-நம்மை அலையாதே நீங்களே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள் -என்றான் –மரம் ஏறு வார்க்கு நிர்வாஹகர் ஆனாரோ தருவார்-ஏற மாட்டாதாரோ தருவார் -எங்களாலே முடியுமோ -என்றார்கள் –எம்பெருமானே உபாயம் ஆவது ஒழிய சேதனனுடைய முயற்சி உபாயம் அன்று -ஸ்வாபதேசார்த்தம் 

அன்பு உடையாரை பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே -5-4— நாலாயி:548/3-பிரிவாற்றாமையாலே படுகிற வியசனம் நீ அறியாமை இல்லை இறே –சேர இருக்கச் செய்தே நீயும் அறிதி என்னும் படி எங்கனே என்னில்-சம்ஸ்லேஷம் ஆகில் விஸ்லேஷாந்தமாக அல்லது இராது என்று இருக்குமவள் ஆகையாலே சொல்லுகிறாள் –
தனக்குத் துன்பக் கடலை விளைத்தான் இறே அவன்

நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும்
தேம் கனி மாம் பொழில் செம் தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
5-8- – நாலாயி:552/2,3-பிறருக்கு தெரிவது ஓன்று இல்லை காண் எங்கள் நிலை –அதாகிறது -இன்றியமையாமை ஒருவரை ஒழிய ஒருவர் உளோம் ஆகிறோம் -என்று எங்களில் நாங்கள் பண்ணி வைக்கும் சமயம் நானும் அவனும் அறியும் அத்தனை அது நிர்வஹிக்கை உனக்கு பரமாய் இருக்கச் செய்தே ஆறி இரா நின்றாய்–கச்சங்கம் -பிரதிஜ்ஞ்ஞை -வ்யவஸ்தை–சமயம் பண்ணின இடம் இதுவோ என்னில் – இருவருமான போது-நான் உன்னை ஒழிய ஜீவியேன்-
நான் உன்னை ஒழிய ஜீவியேன் -என்று இறே இருவருக்கும் வார்த்தை
தூதர்க்கு உட்படச் சொல்லக் கடவ –ந ஜீவேயம் ஷணம் அபி – ஊர்த்த்வம் மாசாந்த ஜீவிஷ்யே –அவர்கள் சேர இருந்தால் சொல்லாது இருப்பாரோ –

தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன் என்றும் இ காவில் இருந்திருந்து என்னை ததைத்தாதே நீயும் குயிலே–5-10- – நாலாயி:554/2,3-அதில் வாசி அறியாதவர்கள் என்னை நலியும் முறைமை அறிகிறிலேன்–அடிமையில் வாசி அவை அறியா விறே-அவன் அளந்த கால் வாசியும் கூட அறியாதவை இறே-ராவணன் நடுவே வந்து நலிந்தால் போலே தென்றலும் சந்திரனும் நடுவே வந்து என்னை நலிகைக்கு ஈடாக இருப்பதொரு முறை யுண்டாக அறிகிறிலேன்-தங்களுக்கு கடவார்க்கு -கடவாரைச் சேர்க்க முறை யுண்டு –தங்களுக்கு கடவார் -அவன் –அவனுக்கு கடவார் -அவள் —அப்படி சேர்த்து செய்த திருவடிக்கு உண்டான ஆகாரம் இல்லை-அத்தனை அல்லது நலிகைக்கு முறை இல்லை இறே-புத்ரனுக்கு உண்டான பரிவிலே கால் கூறும் இல்லை காண் -இக்காற்றுக்கு –
அவனால் படைக்கப் பட்ட இவை புத்ர ஸ்தானம் இறே –தன்யா லஷ்மண சேவந்தே பாம்போ பவன மாருதம் –கிஷ்கிந்தா -1-105-என்று அவனும் கால் கண்ட மாத்ரத்திலே படுமது அறியானே – கார் ஏறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை –13-4– தான் கிடக்குமா போலே இறே அவன் காலால் துகை உண்ணும் படி

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை-12-1 – நாலாயி:617/1-வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –-மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-இருந்தீர்கட்கு அறியலாகா –ஏக தேச வாசமே போராது காணும் கோள்-
எனக்கு ஓடுகிற தசை அறிகைக்கு-இருந்தீர்கட்கு–நான் இருந்த தேசத்திலே நீங்களும் இருந்தி கோள் என்னா-எனக்கு ஓடுகிற தசை உங்களால் என்னை அறியப் போகாதே –

நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் –12-2– நாலாயி:618/1-இது தான் பிறர் அறியாமைக்கே தான் பரிஹரிக்கப் பார்க்கிறது –இது அறியாதார் சிலர் உண்டாய் பரிஹரிக்க வேணுமே-இவள் தான் முந்துற அறியாமே பரிஹரித்து அநந்தரம்
அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து-அநந்தரம் அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து – இப்படி போரா நிற்கச் செய்தே ஓர் அசல் அறிந்து- மற்ற வசல் அறிந்து -அவ்வளவில் அடங்காதே அவ் ஊரில் உள்ளவர்கள் அறிந்து அது தான் புற வெள்ளம் இட்டு அவ் வழியாலே எங்கு உள்ளார்களும் அறிந்தார்கள் ஆய்த்து-

ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே-12-5- – நாலாயி:621/1-இந் நோவு விளைத்தவனுக்கும் இவ்வளவு என்று பரிச்சேதிக்க ஒண்ணாது-இது மிக்க பெரும் தெய்வம் இசைப்பின்றி நீர் அணங்காடும்-இளம் தெய்வம் அன்று இது -திருவாய் -4-6-2- என்னக் கடவது இறே –யஸ்யா மதம் தஸ்ய மதம் –கேன -2-3-என்றதுக்குள்ளே புக்கான் இறே அவனும்-தாம் தம் பெருமை அறியார் -பெரிய திரு மொழி -5-2-1- –தன்னைப் பரிச்சேதித்தால் இறே என் நோயைப் பரிச்சேதிக்கலாவது

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக-13-1– – நாலாயி:627/3–கிருஷ்ண சப்தார்த்தம் -கரியவன் -மெய்யாகி விட்டது –புறம்பு போலும் உள்ளும் கரியனாய் இருக்கிறான்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் – உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ – முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இறே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இறே
சாந்தீபிநி சிஷ்யனை இறே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்
பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே
பிரிந்த போது கண்ணன் பெருமானாய் இருந்தான் -என்றபடி –

தருமம் அறியா குறும்பனை தன் கை சார்ங்கம் அதுவே போல் -14-6— நாலாயி:642/1-ஆன்ரு சம்சயம் இருக்கும் படி முதலிலே வ்யுத்புத்தி பண்ணி அறியான் –ஆன்ரு சம்சயம் பரோ தர்மஸ் த்வத்த ஏவ மயா ஸ்ருத -சுந்தர -38-41–நீர் வரவிட்ட ஆளின் வாயிலே கேட்ட வார்த்தை அன்றே –அதுக்கு முன்னம் தம்முடைய வாயாலே அருளிச் செய்ய என் செவியாலே கேட்ட தன்றோ-இருவருமாகக் கலந்து ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் அளவிலே –நீர் விரும்பி இருப்பது என் -என்று கேட்க –பிறர் நோவு படக் கண்டால் பொறுக்க மாட்டோம் -அதுவே காண் நாம் விரும்பி இருப்பது -என்றார்-இருவரும் ஒன்றை நினைத்துக் கிடக்கிறார்கள்
இக் கலவிக்கு பிரிவு வரில் செய்வது என் -என்று கேட்டாள் அவள் –நம்மைப் பிரிந்து நோவு பட விடோம் காண் நாம் -என்று அருளிச் செய்தாரானார் அவர் –இரக்கமே சிறந்த குணம் என்று -மயா ஸ்ருத -என்னால் கேட்க்கப் பட்டது –இது ஸ்ரவண மாத்ரமாய் போம் அத்தனையோ அனுஷ்டான பர்யந்தமாகப் போகக் கடவது அன்றோ -என்று கேளீர் –

கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன் தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட மலை மேல் – 4-7– நாலாயி:683/2,3–ஆகாசப் பரப்புக்கு எல்லாம் சந்தரன் ஒருவனுமே யானாப் போலே லோகம் எல்லாம் தன் வெண் கொற்றக் குடைக்கீழே ஒதுங்கும் படியாக-நஷத்ர தாரா கணங்கள் சந்த்ரனை சேவித்து இருக்குமா போலே ராஜாக்கள் எல்லாம் வந்து சேவித்து இருக்கும் படி ராஜராஜனாய் வேறு பட இருந்து கொண்டாடும் சம்பத்து எனக்கு பிரதிபத்தி விஷயமாய் இருக்கிறது இல்லை

கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல் – 5-2– நாலாயி:689/2–தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் பிரணய கலஹங்களுக்கும் பரிஹாரங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே- அப்படி அன்றியே இவர்கள் கார்யம் கொண்டு கார்யம் இல்லாத உதாசீனரும் இகழும் படிக்கு ஈடான அசஹ்யங்களை அவன் பண்ணினாலும்-பிரேமத்தை யிட்டு நிரூபிக்க வேண்டு இருக்குமவன்-இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே நினைத்து இருக்குமவளைப் போலே-அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே –பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று

மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யை கேட்டு – 6-1– நாலாயி:698/2-அநேகம் பெண்கள் உள்ள ஊருமாய் -நீயும் சர்வ சாதாரணனுமானால் –
உன் மார்வை யாசைப் படக் கடவதன்று என்று அறிந்து வைத்து-உன் தன் பொய்யை கேட்டு
உன் ஸ்வரூபத்தை உணர ஒட்டாது இறே-உன் வார்த்தை –நீ யல்லது புகல் உண்டோ –
உன்னை யல்லது நான் அறிவேனோ –என்று தாழ்ச்சி தோன்ற நீ சொல்லும் வார்த்தையைக் கேட்டு –

தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே-6-2- – நாலாயி:699/4-உன் நெஞ்சுக்கு பொருந்தின தயிர் கடைந்த படி – இவள் சொன்னவாறே இங்கனே இருப்பன சில எனக்கு வேண்டா என்ன-உன் உடம்பில் தழும்பை மறைக்கலாமாகில் அன்றோ உன் செயல்களை மறைக்கலாவது –

அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே -70-– நாலாயி:821/4-ருத்ரன் கொன்றையும் தும்பையும் ஜடையும் குலைய கேட்டுப் போன பாரவஸ்யமும் போக்கற்றவாறே கலங்கி க்ர்ஷ்ணனுடைய முகம் பெறுகைக்கு ஸ்தோத்ரம் பண்ணின பாரவஸ்யமும்-பாரவஸ்யம் சமாயாதஸ் சூலி ஜ்ர்ம்பித தேஜஸா
பாஞ்ச ஜன்யச்ய யகோ ஷேண சாரங்க விஷ்ப் பூர் ஜி தே ந ச
-என்றும்
க்ர்ஷ்ண க்ர்ஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம்-பரிசம் பரமாத்மாநமநாதி நிதநம் ஹரிம் -என்னக் கடவது இறே-அமரரே யறிவரே-ஆக இப்படி இரண்டு வகைப்பட்ட ஆகுலத்துக்கும் கெட்டுப் போன தேவர்களே சாஷி நான் இன்று சொல்ல வேண்டி இருந்ததோ –

அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் -74— நாலாயி:825/1-தன்னுடைய உடைமையை லபிக்கைகாக தான் அர்த்தியாய் வந்தவன் திருவடிகளை –ப்ராப்யமும் ப்ராபகமும் அதுவே -என்று அத்யவசித்து –அத்திருவடிகளில் ந்யஸ்தபரன் ஆதல் –வாமனன் அடி இணை -என்று -வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே -சர்வ சுலபன் ஆனவன் திருவடிகளை -என்றுமாம் –அறிந்து அறிந்து -என்று சாஸ்திர ஸ்ரவணத்தாலும் -ஆசார்ய உபதேசத்தாலும் –என்றுமாம் –

அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன்-கொல் ஆழியான் – –தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன் -84-— நாலாயி:835/3-விச்சேதம் இல்லாதபடி தன் திருவடிகளிலே அன்பை உறைக்க வைத்து அனுபவிக்கும் நாள் எனக்கு உண்டாகும்படி நினைத்து இருக்கிறானோ –அன்பு உறைக்கை யாவது -பரம பக்தி உக்தனாகை –வைத்து அனுபவிக்கும் நாள் -என்கிறது -ஒரு தேச விசேஷத்தில் அனுபவத்தை –இத்தால் –
இச் சேதனனுக்கு ஜன்மமும் விஸ்ம்ர்தியும் விநாசமும் -பக்தி இல்லாமை –உஜ்ஜீவனம் -பரம பக்தி உக்தனாகை -என்றது ஆய்த்து –ஜன்மம் ஆகிறது -விஷயாந்தர ப்ராவண்ய ஹேது –
விஸ்ம்ர்தி ஆகிறது -விஷயாந்தர ப்ராவண்ய கார்யம் ஆகையாலே ஆத்மாவுக்கு உபயமும் விநாசம் இறே

மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே 85- நாலாயி:836/3-ஒருத்தனை கேள்வி கொண்டு கார்யம் வேண்டாதபடி வஸ்துவை -வஸ்த்வந்தரம் ஆக்க வல்ல சக்தியை உடையை யாகையாலே உன்னை ஸ்வ தந்த்ரன் என்று அறிந்து கொண்டேன் –

புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர் – -திரு மாலை-6- நாலாயி:877/2–தேகத்தை புருஷார்த்த உபயோகியாக ஈஸ்வரன் தந்த சரீரத்தைக் கொண்டு
விஷயாந்தர பிராவண்யம் ஆக்குகையாலே –-புறஞ்சுவர் -என்கிறது-இத்தைக் கொண்டு ஆத்மாவுக்கு ஒரு நன்மை தேடினான் ஆகில்-அது தானே உத்தேச்யமாம் இறே-அப்பொழுது விழுந்தது இப்பொழுது விழுந்தது -என்னும்படி அஸ்த்ரிமாய் இருக்கையாலே –ஓட்டை மாடம்-சொல்லுகிறார் -ஓடும் பூட்டும் கொண்டு சமாதானம் பண்ணி நிற்க வேண்டும்படி இருக்கை-மாடம் -என்கிறது சம்சாரிகள் அபிப்ராயத்தாலே-ஓட்டை மாடம் என்றும் இச் சரீரத்திற்கே நாமாந்தரம் போலும்-நீர் ஹிதம் சொல்லுகிறது இப்போது அன்றே
க்ரமத்தில் செய்கிறோம் -என்ன-புரளும் போது அறிய மாட்டீர் –ஜீவிக்கும் காலம் இன்னளவு என்று அறிய மாட்டி கோள்-கெடுவிகாள்-மரணம் அன்றோ தோள் தீண்டியாக வந்து நிற்கிறது –க்ரமத்தில் செய்கிறோம் என்று ஆறி இருக்கலாமோ –

அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை – -9-நாலாயி:880/3–அற்றம் -மறை பொருள்-அறியாமைக்கு அடி ஆயிதான விருத்திக்கு மேல்பட தாத்பர்ய விருத்தி யறிகிலி கோள் –வசஸாம் வாச்ய முத்தமம் -என்றும்-வேதைச சர்வை ரஹமேவ வேத்ய -என்றும்-நாராயண பரா வேதா -என்றும் -சொல்லக் கடவது இறே

அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில் -13-– நாலாயி:884/3–மனுஷ்ய ஜன்மத்திலே பிறந்து வைத்து அறிவின்றிக்கே இருந்தார்களே யாகிலும் திருவரங்க பிராவண்யம் வேண்டா உக்தி மாத்ரமே அமையும் –ஆகில் –என்றது –பாப பிரசுரர்க்கு இது தானும் சித்தியாது -என்கை

ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன்-22- – நாலாயி:893/2–இதர உபாயங்கள் பல பிரதமாம் இடத்தில் அவனுடைய அனுக்ரஹம் பார்த்து இருக்க வேணும் –-இதர உபாயங்களை விட்டு தன்னையே உபாயமாகப் பற்றினார்க்கு அல்லது – தன்னை உள்ளபடி அறியலாய் இருப்பான் ஒருவனும் அல்லன் –

உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார் ஆனைக்கு ஆகி – 28-நாலாயி:899/1-ப்ரஹ்மாதிகளால் அறிய ஒண்ணாத ஒளி உண்டு -ஸ்ரீ வைகுண்டம் அத்தை வாசஸ் ஸ்தானமாக வுடையவர் –ஜ்ஞானாதிகர் ஆனாலும்-ஈஸ்வரோஹம் -என்று இருப்பார்க்கு பரம பதம் நிலம் அன்றே
பிராபிக்கை முடியாமையே யன்று அறியவும் முடியாது என்கை –

மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய–32- – நாலாயி:903/3–உன்னைப் பெறுகைக்கு உறுப்பாக நீர் உபதேசித்து வைத்த மார்க்கம் உண்டு -வழி -அதாகிறது -உபாயம் –அவை யாகிறன –கர்ம யோகம் –தத் சாத்தியமான ஜ்ஞான யோகம்-உபய சாத்யமான பக்தி யோகம்-அவதார ரஹஸ்யம்-புருஷோத்தம வித்யை-அனுக்தமான திரு நாம சங்கீர்த்தனம்-புண்ய ஷேத்திர வாஸம்-இப்படி சேதன பேதத்தோபாதி போரும் இறே உபாய பேதமும் –இவற்றில் ஒன்றை அனுஷ்டிக்க மாட்டாமை அன்றிக்கே ஒன்றையும் கூட அறிய மாட்டாதவன் ஆய்த்து –

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று –34- நாலாயி:905/3–நினைவுக்கு வாய்த் தலையைப் பற்றி இருக்கையாலே அனுசந்திப்பார் அனுசந்திக்கும் எல்லாவற்றையும் சர்வஞ்ஞனாய் –சர்வ நியந்தாவாய் இருக்கிற நீ உடனே கூட இருந்து அறுதி என்று –

ஆம் பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி –38- நாலாயி:909/2–பிரக்ருது ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து மேலும் ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் –
பின்னையும்-ஆம் பரிசு ஆவது – கைங்கர்யமே யாய்த்து –ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து –ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –1-தன்னை திர்யக்காக அபிமானித்த போது -தர்ண சமூஹம் ஆய்த்து வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –2-மனுஷ்யோஹம் -என்று அபிமானித்த போது-அன்னம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –3-தேவோஹம் -என்று அபிமானித்த போது -அம்ருதம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –4-தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –அறிந்து கொண்டு – நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே பிரகிருதி பிராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் – ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும் பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும்
இறே சேதனனுக்கு வேண்டுவது –விடுவிக்கையும் பற்றுவிக்கையும் உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இறே-மேம் பொருள்மெய்ம்மைஆம் பரிசு என்கிற இவை அவ்வவோ பதார்த்தங்களுக்கு வாசகம் அன்றிக்கே இருக்க தத் தத் ஸ்வ பாவ வாசியான சப்தங்களால் மறைத்து அருளிச் செய்கிறார் – அர்த்த கௌரவத்தாலே –

வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் -41-– நாலாயி:912/1-பிரஹ்மாதிகளால் துர்ஜ்ஞேயமான பரமபதத்தில் நித்ய வாசம் பண்ணுபவனே –ஆகா -என்கிறது சண்டாளன் அக்னி ஹோத்தரத்திலே ஆகாது என்னுமா போலே நிஷேதத்தை சொல்லிற்று ஆகவுமாம்-பரணிலே உயர இருந்தால் பரமபத நிலையனை அறியலாமோ – மனுஷ்யர்களில் காட்டில் வ்யாவ்ர்த்தி உண்டே -அது கொண்டு அங்கே செல்லலாமா –அகிஞ்சனஅநந்ய கதி –
என்று இருப்பார் அறியும் அத்தை-ஈஸ்வரோஹம் –என்று இருப்பார்க்கு அறியலாமோ –

கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு –5— நாலாயி:931/3–இப் பேற்றுக்கு அடி என் என்று பார்த்தார் —இந்திரியங்களை ஒறுத்து மஹா தபஸை பண்ணினேனோ அறிகிறிலேன் –நான் அறிய ஒன்றும் இல்லை –இப்படி சங்கிப்பான் என் என்னில் –பெற்ற பேறு அப்படிப்பட்டாருக்கு கிடைக்குமது யாகையாலே –அவன் தானே நதீ தீரத்திலே கிடந்து தபஸ்ஸூ பண்ணினானோ அறிகிறிலேன் —கோரமான தபஸ்ஸூ ஆகிறது –அத் தலையாக தம்மை அழிய மாறின பெரிய வுடையாரைப் போலே இருக்கை
எந் நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே -என்னுமா போலே-

தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி -2- – நாலாயி:938/3-ஆழ்வாரை ஒழிய வேறு ஒரு ஆஸ்ரயணீய வஸ்து உண்டு என்று அறியேன் – மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொன்னார் -தேவு மற்று அறியேன் -என்கிற இடம் வ்யதிரே கத்தாலே சொல்லுகிறார்
மற்று அறியேன் என்கிறது எத்தை என்னில் -கீழ் விட்டவற்றை எல்லாம் என்கிறார்
ஐஸ்வர்யம் என்ன -ஆத்மலாபம் என்ன -அவற்றை விட்டு பகவல் லாபத்தளவிலும் நில்லாதே அதின் எல்லையான ஆழ்வார் அளவும் போந்தவர் ஆகையாலே அவற்றை எல்லாம் நினைக்கிறார் –நான் அப்படி இருப்பதொரு ஸ்வாமி யுண்டாக வ்யுத்பத்தி பண்ணி வைக்கில் அன்றோ வேண்டுவது-தேவு அறிவன் -ஆழ்வாரை ஒழிய வேறு அறியேன் -சாஸ்திரம் காட்டித் தந்தது அன்றோ தெய்வம் ஆவது -அது தானே ஆச்சார்ய தேவோ பவ என்று விதித்ததே-தேவதா வ்யுத்பத்தி யுள்ள விடத்தே யன்றோ தேவதா பிரதிபத்தி உள்ளது
ஆகையாலே நான் தேவதையாக வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வாருக்கு மேற்பட இல்லை
ஆனால் என்னப்பன் என்று கீழே பகவத் விஷயத்தை ஸ்வாமி யாக அனுசந்தித்தீரே என்ன
அது ஆழ்வார் ஆதரித்த விஷயம் என்று ஆதரித்தேன் இத்தனை போக்கி தேவதா பிரதிபத்தி பூர்வகமாகச் சொன்னேன் அன்று-இது சத்தியமே-மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன்ஸ்ரீ சடகோபனைத் தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்லுவார் உண்டோ

எண் திசையும் அறிய இயம்புகேன் -7- நாலாயி:943/3-விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசி அற எல்லாரும் அறியச் சொல்லுகிறேன் –ஸ்வ ரஷணத்திலே தத் பரராய் இருப்பாரும் தேவ தாந்த்ரங்கள் ரஷகர் என்று இருப்பாருமான கோஷ்டிகளிலே சென்று-ஆழ்வாருடைய கிருபையை வெளியிடக் கடவேன்-எண் திசையும் என்று -பத்து திக்குகளுக்கும் உப லஷணம்-மேல் ஏற மாட்டாமாலும் கீழ் இழிய மாட்டாமலும் எண் திசையும் என்கிறார்-ஆழ்வாருடைய அருள் உண்டாகையாலே அத பத்யமில்லை-ஆழ்வார் போனால் அல்லது போகாதவர் ஆகையாலே மேல் ஏற மாட்டார்-அறிய இயம்புகேன்
நாடு நகரமும் நன்கு அறிய -என்னுமா போலே எல்லாரும் அறியும் படியாக இயம்புகேன்
ஆழ்வாருடைய கிருபா பிரபாவத்தையும் அது தம்மளவிலே பலித்த படியையும்
தம்முடைய பாபம் போனபடியையும் தமக்கு அபிமத லாபம் உண்டானபடியையும் இவையாய் இருந்தது இவர் இயம்புகிறது

இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் – 1-1-7-நாலாயி:954/1—அவர்கள் கார்ஹஸ்யத்தில் நின்ற நிலை அறியிகோள் – அவர்கள் ஜன்மம் அறியிகோள்-இவர் அவர் என்னீர்  -ஒரே சொல்லாய் -ஒருவர் வாசியும் அறியீர் என்னவுமாம்-பண்டு தரித்ரனாய் கிலேசப்பட்டு போந்தான் ஒருவன் இப்போது ஜீவிக்க புக்கால் இது இவன் அளவு அன்றிகே இருந்தது -இது வேறு ஒருவன் அடியாக வேணும் -என்று அறிய மாட்டாதே ஸ்ரீயபதியைப் போலே- பிறப்பே பிடித்து ஸ்ரீ மானாக போந்தானாக நினைத்து இருப்புதி கோள் –

அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொல்லி -—1-3-3–ஜ்ஞான ப்ரசுர த்வாரம் ஆகையாலே அவன் பக்கலில் அன்பை உடையையாய் சிலவற்றை சொல்லி மீள வேண்டாதபடி

அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே – 1-3-10--நாலாயி:977/4-ஸ்ரீ பரம பதம் அல்லது அவர்க்கு ஆட்சி அறியோம் என்னுதல்-அன்றிக்கே-நீள் விசும்பு என்கிறது ஸ்ரீ பரம பதமாய்-அது அல்லால் மற்று ஓர் அண்டம் அவர்க்கு ஆட்சியாக அறியோம் என்னுதல் –ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில்-இவர் அருளிச் செய்த தோஷம் ப்ரத்யஷித்து அநுபவியா நின்றோம் அவ்வோபாதி ஸ்ரீ பகவத் விஷயமாக இவர் அருளிச் செய்ததும் மெய்யாக இருக்கும் இறே –ஆன பின்பு இவர் விடச் சொன்னவற்றை விட்டு இவர் பற்றச் சொன்னவற்றை பற்றுகை இறே சேதனராய் இருப்பார்க்கு செய்ய அடுப்பது-

ஆர்ஆர் உலகத்து அறிவு உடையார் அமரர் நல் நாட்டு அரசு ஆள -1-5-10– நாலாயி:997/3-லோகத்தில் அறிவு உடையாராய் இருப்பார் –நித்ய ஸூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம் அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாருங்கோள் –

என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன் குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா – -1-9-3-நாலாயி:1030/2,3-இட்டறியேன் என்பது அதுக்கு பிரசங்கம் உண்டாகில் இறே

மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே -1-9-9-– நாலாயி:1036/2-பகவத் சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு கை கழியப் போன வஸ்துவுக்கு பகவத் ப்ராப்திக்கு ஈடாக சொல்லலாவதொரு ஸூஹ்ருதம் இல்லை – அது இல்லாமையாலே பாபங்களையே பண்ணி பின்னை நிரூபிக்கும் இடத்தில் ஞான ஆனந்தாதிகளை ஒழிய பாபங்களை இட்டு நிரூபிக்கும் படி யானேன் –ப்ராப்திக்கு ஈடான உபாய விஷய ஞானம் இல்லை –
அஹமஸ்ம் யபராதாநாம் ஆலய -அகிஞ்சனன் அகதி –ப்ரார்தனா மதி சரணாகதி-

ஆயன் அடி அல்லது மற்று அறியேனே -1-10-8– நாலாயி:1045/4–ஆய –
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் என்னும் இடத்துக்கு ஸூஸகம் இறே இது –இதர நிர பேஷனான அவன் அநந்ய கதியாய் கொண்டு என் பக்கலில் வந்து புகுர ஸா பேஷனான நான் அவனை விட்டுப் போவேனோ –

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா திருவல்லிக்கேணி கண்டேனே – 2-3-7-நாலாயி:1074/4-ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று –பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று-(ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ-(பகதர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )

அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்-–2-7-1- – நாலாயி:1108/2-வடிவு அழகாலும் பருவத்தாலும் பிறப்பாலும் வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் –அவளுக்கும் கூட ஸ்ப்ருஹணீயமான மார்பு ஆயிற்று –
அகலகில்லேன் இறையும்-என்கிற படி – இம் மார்பில் இருப்புக்கு ஏதேனும் இழவு வரில்
செய்வது என் என்று துணுக்கு துணுக்கு என்று ஆயிற்று வர்த்திப்பது –இருந்தால் கலந்தாளாய் பின்னை பிரிவும் பொறுக்க மாட்டாள் –( இருப்பதும் கலப்பதும் வேறே வேறே இல்லையே -தொழுவதும் எழுவதும் ஒன்றே போல் )அவள் மார்விலே இருக்கிறது அறியாமை பற்றினாள் என்ன ஒண்ணாதே – அவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று பற்றினவளை-அவளும் அங்கே இருக்கச் செய்தே எனக்கு இழக்க வேண்டுகிறது என் -என்று அது தானே இவளுக்கு ஆசைக்கு உடலாயிற்று – அதுவாயிற்று இவளுக்கு ஆசைப்படுகைக்கு ஆலம்பனம்-(அறிந்தும் -உம்மைத் தொகை -விஸ்லேஷ பயம் அறிந்தும் அதி சங்கையே விசேஷம் -நிலைக்குமா நித்ய அநபாயினியும் நித்ய அதி சங்கை பண்ணி இருக்க அவளோடு-சாம்யம் கொண்ட இவளும் துணுக் துணுக் என்ன ஆசை
அன்றிக்கே பிராட்டிக்கு கடகர் இல்லை -இவளுக்கு அவள் இருப்பதால் பயப்பட வேண்டாம் அதி சங்கையும் பண்ண வேண்டாம் )

அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு -2-7-9- நாலாயி:1116/2,3-சங்கம் அடியாக உம்முடைய பக்கல் பிறந்த காமம் ஆனது அறப் பெரிது –பிறர்க்கு இப்படி தன் பக்கலிலே ஆதரம் பிறக்கும்படி அழகை உடைய விலஷணையான இவளுக்கு –இவளுக்கு முருடு கொளுந்தும் படி-( காடின்யம் அடையும் படி ) பிறந்த நோய்
இன்னது யென்று அறிகிலேன்-பயலை பூத்தாள் கண் துயில் மறந்தாள்-அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது யென்று நோவும் சொல்லி நோவுக்கு நிதானமும் சொல்லா நிற்க
அறியேன் என்கிறது இவ்விஷயம் தன்னில் நிதான விசேஷத்தைப் பற்ற – அதாகிறது
முறுவலிலேயோ நோக்கிலேயோ வடிவிலேயோ சீலத்திலேயோ அகப்பட்ட துறை விசேஷம் அறிகிறிலேன் –

அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து -2-8-4
– நாலாயி:1121/2,3-இதுக்கு முன் பயம் வுயுத்புத்தி பண்ணி அறியாதது பயப்பட-அதினுடைய கொம்பை குப்பைக் கீரை பிடுங்குமா போலே அநாயாசேன வாங்கும் ஆனை வாசி அறியாமையாலே
பலித்துக் கொண்டு நின்றது இத்தனை-அவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-

எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார் – 2-8-6-நாலாயி:1123/1–ஆபாத ப்ரதீதம் மாதரம் அன்றிக்கே நம்முடைய இயற்றி எல்லாம் கொண்டு
இவரை உள்ள அளவு எல்லாம் அறிய வேணும் என்று பார்த்தால் (அறிந்து அறிந்து தேறி தேறி ) ஒன்றும் அறியப் போகிறது இல்லை-அட்டபுயகரத்தேன் என்றாரே–நீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்றார்-உனக்கு பற்றுக்கோடாக இருக்கவே இப்படி சேவை

நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறிய மாட்டேன்
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே––2-8-9-
– நாலாயி:1126/3,4–இவர் பார்க்கிற பார்வை விபாகத்தில் நம்மை முடிக்கும் போலே இரா நின்றது சொன்ன வார்த்தையை கிரயம் செலுத்துவாரைப் போலே இரா நின்றார் –
அது ஒரு உக்தி மாத்ரம் ஆகாமே அத்தை அர்த்த க்ரியா காரியாக்கி நினைக்கிறார் போலே இரா நின்றது –இவர் ரஷகராய் இருக்கிறாரோ- நம்மை முடித்தே விட இருக்கிறாரோ –
அறிகிறிலேன்

ஆவர் இவை செய்து அறிவார் அஞ்சன மா மலை போல–3-3-7- – நாலாயி:1174/1-ஆனைத்தொழில்கள் சேஷ்டிதங்கள் செய்வது அறிவார் யார்-அஞ்சன மலை -விசேஷணம் யானைக்கும் கண்ணனுக்கும் வேழப் போதகம் அன்னவன் அன்றோ-எவர் இவை செய்வது அறிவார் இப்படிப்பட்ட -ஜென்ம கர்ம மே திவ்யம்-அறிவார் இல்லை ஆழ்வார் நொந்து எத்தனை உபதேசித்தாலும் திருத்துவார் இல்லையே
அன்றிக்கே-ஆஸ்ரிதற்காக இப்படி செயல்களை செய்தவர் யார் இல்லை
அன்றிக்கே மதுரைப் பெண்கள் ஈடுபாடாய் -கை கூப்பிச் சொன்ன படி

பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே ––3-6-2-– நாலாயி:1199/4–(பணி செயல்-உக்தி- சொல் ஓன்று பணித்தது உண்டு போல் )
1-என்னை அணைக்கையே தொழிலாய்-இங்கு ஏற வருகையில் ஒருபடிப்பட்டு இருக்கிறானோ
அன்றிக்கே-2-ஜாம்பவதி போல்வார்க்கு பூப் பறித்து தொடா நிற்குமோ அறியேன் –
அன்றிக்கே-3-பணி என்று சகுந்தலையை உபேஷித்த துஷ்யந்தனைப் போலே
அறியாமை பாவித்து இருக்குமோ -அதுவும் அறியேன்
அன்றிக்கே-4-நா விலும் பல்லிலும் நீர் அற்று -என் செய்தாள் – என் பட்டாள் –
என்று கேட்கிறானோ
உக்தியிலும் கிரியையிலும் கொள்ளக் கடவது – அவன் படி நிச்சயிக்க ஒண்ணா விட்டாலும்
நமக்கு அவனை ஒழிய செல்லாது இறே –

கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே –3-6-3– நாலாயி:1200/4-அவன் கருத்து அறிந்து வந்து எனக்கு சொல்லுதல் என்னுதல் – நான் ஆற்றாமையாலே கண்ணாஞ் சுழலை இட்டு சொன்னவற்றை எல்லாம் அங்குச் சொல்லாதே -அவன் தரிக்கும்படி அளவு அறிந்து வார்த்தை சொல் என்றுமாம் –மிகச் சொல்லில் அவனைக் கிடையாது-அவன் நைராச்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் –
நம் தசையை அறிவித்தால் நமக்கு அத்தலை வேணும் -என்றான் ஆகில்
நம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க நமக்கு அத்தலை வேண்டா -என்றான் ஆகில் – நாம் முடிந்து பிழைக்கும் படி —

ஆன் ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே –3-6-4- நாலாயி:1201/4-திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே திரு ஆலியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால்
பின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ-அறியாமை வாராது ஒழிந்தான் இத்தனை நீ போய் அவன் அறியும் படி போய் சொல்லு
(சர்வஞ்ஞன் சர்வ அந்தர்யாமி யந்த்ரா ரூடாநீ -இருந்தும் என் நோய் அறியாமை இருந்தால் )
அன்றிக்கே -அறியச் சென்று உரை – உன்னடையிலே தளர்த்தியிலே இத்தலை ஆற்றாமை அடைய அவன் அறிந்து நாவிலும் பல்லிலும் நீர் அற்று உடம்பு வெளுக்கும்படி சென்று சொல் என்றுமாம் —

கள்வன்-கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -3-7-1–– நாலாயி:1208/1-சோரேண என்று இவனுடைய ஆத்மா அபஹாரத்தோபாதி யாய் இருக்கிறதாயிற்று
உடையவன் தன்னுடைய உடைமை கொண்டு போனதும் – என்னது என்று போந்த வாசனையாலே-உடையவன் உடைமை கொண்டு போனானே யாகிலும் காணும் பொழுதே எடுத்துக் போகையாலும் – கள்ளன் என்ற இது மமகாரத்தின் ஊற்றத்தாலே-
(மம ஸூ தா -மமகாரம் விட்டவனுடைய மமகாரம் இது குண சம்பூர்ணத்தால் சொல்ல வைத்ததே )காத்துக் கிடக்கிற தான் அறியாள் ஆகில் கொண்டு போனவனைப் போலே காணும் கேட்பது –

தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன் மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் —3-7-4-– நாலாயி:1211/2,3–உகவாதார் இருந்த இடத்தே -வெறும் கையே செல்லுமவன் உடைய ஊர் ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்
இடையனாய் பிறந்தான் என்று ஆசைப் படுவாராய் ஆசைப்படா நின்றீர் கோள்
எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை –ஆழம் காலை மிதப்பு என்று புத்தி பண்ணினாள்
அளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால் தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்-

தேசம் அறிய உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு -4-9-4-– நாலாயி:1331/2–சேஷ பூதன் சேஷியை ஆசைப் பட்டு ஏத்துகை முறை அன்றோ என்று இருக்கை அன்றிக்கே
இது தன்னை அவத்யமாய் உப பாதிக்கும் படியாக வந்து விழுந்தது–உமக்கு வருமதில் வேணுமாகில் ஆறி இருக்கிறீர் எங்களுக்கு வருமதில் உமக்கு ஆறி இருக்கப் போமோ-பாவியோம் விழுக்காடு அறியப் பெற்றிலோம் இப்படி விளைவது அறிந்தோம்  ஆகில்
நீரும் நாங்களும் அறிந்தது அறிவாக ஸ்நேஹித்து விடலாய்த்தே-லோகம் அடங்க இருந்ததே குடியாக அறியும் படி வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்–இன்னமும் வேறு ஒரு ரஷகன் உண்டாய் அவன் வாசலிலே சென்று தான் தன் கார்யம் குறையும் தலைக் கட்டிக் கொள்கிறான் என்று தான் ஆறி இருக்கிறீரோ(அகாரத்துக்கே மகாரம் அநந்யார்ஹன் என்று உகாரத்தால் சொல்லிக் கொடுத்தீரே )

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே
-4-9-6–நாலாயி:1333/4–நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்-விரஹ அஸஹிஷணத்வம் உடைய நன்மை ஸஹிஷணத்வம் உடைய தீமை அறிவீர்நமக்கு-விரஹ அஸஹிஷணத்வம் உடைய மென்மை மார்த்வம்–சொல்லாது ஒழிய கில்லேன் –-சேஷி சந்நிதியில் சேஷ பூதன் பரிமாறும் முறையில் பரிமாற ஷமன் ஆகிறிலேன் சேஷி செய்த படி கண்டு இருக்கைக்கு மேற்பட சேஷ பூதன் நிர்பந்திக்கக் கடவன் அன்று இறே-இப்படி இருக்க மாட்டு கிறிலேன்–அறிந்த சொல்லில்–அறிந்தவற்றைச் சொல்லில் முறை செய்யக் கடவது அல்லாதாகப் பார்த்த பின்பு இனி அதுக்கு ஈடாக பிரதிபன்னங்களைச் சொல்லில்–நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-உம்மைப் பிரிந்து பின்னையும் காணலாம் என்னும் நசையாலே பத்து மாசம் தரித்து இருக்கைக்கு ஈடான எலும்பு  முற்றின பிராட்டியோ பாதியாக நினைத்து  இரா நின்றீர்-அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்
உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்
அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்
(ஸூ கந்த வன நாயகியைப் பற்றி அன்றோ பரிமள ரெங்கனைப் பற்றினார் இவர்
அவன் ஸ்வா தந்தர்யம் அறிந்து வேறே கடகர் இல்லாமையால் அவன் வரும் வரை ஆறியே இருக்க வேண்டும் )ஜீவிக்கிலும் சில நாள் தரித்து இருக்கும்படி ஜீவித்து பட்டினி விடிலும் சில நாள் பொறுக்க வல்லாரைப் போலே யாய்த்து நம் ஆழ்வார் போல்வார் ப்ரக்ருதி-
(மலையாள ஊட்டு போல் உடைய நங்கை திரு மகன் அன்றோ )-உண்ணவும் பொறாது
பட்டினி விடவும் பொறாது என்னும் சுகுமாரரைப் போலே யாய்த்து இவருடைய சௌகுமார்யம்-தூது விடப் புக்கு தூது அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்பே பற்றாமை தாம் கிடந்து கூப்பிடுகிறார் இறே தூ விரிய மலருழக்கியிலே  –நல்லார் அறிவீர் – தேவரை ஒழியச் செல்லாதார் பிரகிருதியும் அறிவீர்-நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் – தேவரை ஒழியவும் ஜீவித்து இருப்பார் பிரகிருதியும் அறிவீர்-இங்கன் தனித் தனி பிரித்து சொல்லுகிறது என்-நமக்கு இவ் உலகத்து எல்லாம் அறிவீர் –-அஞ்ஞாதன் நாஸ்தி தே கிஞ்சித் த்ரிஷூ லோகேஷூ ராகவ -(ஸூக்ரீவன் வார்த்தை அபய பிரதான கட்டம் )
இந்த லோகத்தில் உம்முடைய ஞானத்துக்கு அவிஷயமாய் இருப்பது ஓன்று இல்லை –ஈதே அறியீர் –சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும் இவருடைய பிரகிருதி மார்த்தவம்-இந்தளூரீரே – தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும் அவத்யத்தை பரிஹரிகைக்கு  அன்றோ நீர் திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது
போந்த கார்யத்தை மறக்கிறது என் –

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மை பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே -4-9-7-
– நாலாயி:1334/1,2-சேஷத்வத்தை இப்போது உம்மாலே உண்டாக்குதல் ஒழித்தல் செய்ய ஒண்ணாதே(திருமாலே நானும் உமக்கு பழ அடியேன் )இதனுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை
பண்ணுவித்துக் கொள்ள மாட்டீர் ஆனீர்  –உம்மை ஒழியச் செல்லாத ஸ்வபாவத்தை உடைய எங்களை உம்முடைய திருவடிகளில் அடிமைச் சுவட்டை அறிவித்து பொகட்டீர் –இத்தை அல்லாதவை போல் அன்றியே வ்யாவ்ருத்தமாகச் சொன்னோம்- (கீழே அறியீர் மாட்டீர் இங்கு வீட்டீர் -பெரும் குற்றம் அன்றோ )

விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே-4-10-8– – நாலாயி:1345/4-அங்கு உள்ளாருக்கு திவாராத்ரா விபாகம் பண்ண ஒண்ணாத படியாய் இருக்கும் ஆய்த்து இவை தான் ஒரு கால விசேஷங்களிலே உண்டாகையாலே சொல்லிற்று ஆகவுமாம்-அன்றியே இவருடைய உகப்புக்கு அவதி இல்லாமையாலே ஆகவுமாம்-உகந்த விஷயங்களில் எல்லா நன்மைகளும் உண்டாகத் தோற்றும் இறே –

அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான் – –5-1-1-நாலாயி:1348/1-ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு அப்பால் பட்டவன்-என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன்-அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி -உடையான் வேறே ஆளுடையான் வேறே-அடியேன் இடம் கைங்கர்யம் பெற்றுக் கொண்டவன் 

மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால் –5-4-9— நாலாயி:1386/2–தூரஸ்தனாய்
சர்வேஸ்வரனாய் இருக்கும் இருப்பு ஸூஷ்மத்வத்தில் அதி ஸூஷ்மமான பதார்த்தங்கள் எங்கும் புக்கு வியாபித்து தரித்துக் கொடு நிற்கை யாகிற இந்த ஆச்சர்ய சக்தி யோகம் –எத்தனை ஏலும் அளவுடையராலும் ஒரு நாளும் அறிய ஒண்ணாத படி இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –

மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி  யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே–5-5-3-பசுக்களை மேய்க்கும் அவனோ தான்-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா-என்கிற
பகவத் உத்கர்ஷத்தை சிறிது அறியலாம்-ப்ரணய தாரையில் அவன் செய்து நிற்கிற இவை
என்னால் ஒன்றும் அறியப் போகிறன வில்லை   –அறிகிறிலேனே-கீழ் சொன்னவை ஒரு திங் மாத்ரம் இத்தனை-என்னால் அறியப் போகாது – திங் மாத்ரம்-திக்கு ஏக தேசம் அல்பம் என்றபடி

ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் -நாள் மலராள் நாயகனாய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி – -5-5-5–நாலாயி:1392/3-ஸ்ரீ யபதி என்று ஒருத்தியை இட்டு அன்றோ தம்மை வ்யபதேசிப்பது(தன்னைப் படுத்தின -அவன் ஸ்ரீ யபதித்தவம் வெறுப்பாக தாத்பர்யம் -இப்படி படுத்தினால் அவள் முகம் கொடுப்பாளோ என்றபடி-இவனது ஸ்வரூப நிரூபகமே அவளாலே தான் )நாம்  அறிய – இது ஒரு பழங்கிணறு காண வர வேணுமோ இவ்விசை இருந்தபடி எல்லாரும் அறியாமோ
(தூறு வார வேண்டுமோ-ஸ்ரீ பூமி நீளா தேவிமார் உடன் அமர் காதல் மகளிர்
ஆஷேபமே இல்லையே )

உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என் மகளைச்   செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே—-5-5-8--நித்ய ஸூரிகள் தன் ஆன்ரு சம்சயத்தைக் கொண்டாட அவர்களுக்கு ஓலக்கம் கொடுக்குமவன் –இவள் அளவில் அவன் பண்ணின ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள் என்னால் பேசி முடிக்கப் போகாது  –ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள்-விபரீத லக்ஷணையால்-இவள் தீர்க்க சிந்தயந்தி அன்றோ-

பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ  என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-9-ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால் இதுக்கு மேல் என்னால் போக்கடி தேடப் போமோ

ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே – 5-7-6-நாலாயி:1413/3–அவனாலே  பீடிதரான தேவர்கள் அடங்கலும் அநந்தரம் திரு நாமங்கள் ஆயிரமும் சொல்லி ஆஸ்ரயிக்க யோக நித்ரையை ஸ்வ சந்நிதானத்தாலே கழித்து
திரை மோதா நின்றுள்ள கடலின் நடுவே

கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன் – -–5-8-3--நாலாயி:1420/3-தரித்ரனானவன் தநிகனை அடையுமா போலே-சீற்றம் உண்டு என்று ஆய்த்து இவர் பற்றுகிறது –ஆஸ்ரயிப்பாருக்கு உறுப்பான  குணங்கள் இறே சௌலப்யாதிகள்-விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்   –

நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன உள அதற்கு அடியேன் – 5-8-4-
நாலாயி:1421/2,3–பெரிய திருவடி கையிலே காட்டிக் கொடுத்து அவனை இட்டு ரஷிப்பித்தாய்- ஈஸ்வர ஹிருதயத்துக்கு ஒரு பிரியம் இறே இது -ந ஷமாமி
நத்யஜேயம்-என்கிற இவ்விரண்டும் சேர விட வேணுமே இவனுக்கு–அவனை இட்டு இறே ரஷித்தது-தான் ஏறிட்டுக் கொண்டு ரஷித்தாலும் அவன் துணுக் துணுக் என்கை போகாது இறே-தானே ரஷிக்க வல்லனாய் இருக்க- நம் கையிலே காட்டித் தருவதே என்று
இவனைக் கைக் கொண்ட போதே அவன் பசியும் தீர்ந்தது-இனி இருவருக்கும் அந்யோந்யம்
ரஷ்ய ரஷக பாவம்  இறே உள்ளது- பாத்ய பாதக சம்பந்தம் போய்த்தே–முன்பு சஹஜ சாத்ரவம் உண்டே யாகிலும் பகவத் ஆஸ்ரயணம் பண்ணினால் ஒரு நீராய் விடும் இத்தனை இறே –தன் கையிலே காட்டிக் கொடுத்தால் ரஷிக்க வேண்டுகிறது சேஷியினுடைய நினைவே நடக்க வேண்டுகை யாலே இறே- சேஷ பூதர் இருவருக்கும் வந்த விரோதத்துக்கு சேஷி உடைய முகம் இறே வாடுவது-

வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் – 5-8-9-நாலாயி:1426/3-அவனுக்கு திரு மந்த்ரத்தை உபதேசித்து ததீய சேஷத்வத்தை உண்டாக்கின படி குறும்பறுத்த நம்பி யோடு சேர்த்து விட்ட படியைச் சொல்லுகிறது (பணிப்பூவும் -முடி மன்னவன் -அனுவர்த்தித்தானே -நாயனார் )-பதி வ்ரதையோடு உண்டான ஏகாந்தத்தில் அனுபவத்தை திரளிலே வெளியிடுவாரைப் போலே தானும் நானும் அறிய அனுபவித்த இத்தை இங்கன் வெளியிடுவதே திருவேங்கடமுடையான் அலவலை யாகாதே என்கிறார் இறே –(அலவலை–பஹு ஜல்பம் ஓட்டை வாய் உளறுவது )அடியேன் அறிந்து –
இவர் உடைய நான் இருக்கிற படி (நாம் அடியேன் சொன்னாலும் நான் அர்த்தம்
ஆழ்வாராதிகளுக்கு மாற்றியே உண்டே )

அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள்–5-9-8– – நாலாயி:1435/1-ஓர் இடைச் சேரி மாத்ரம் அன்றிக்கே ஸ்லாக்கியமான ஏழு லோகங்களும் அறிய

அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் –5-10-9-
நாலாயி:1446/2,3-அவனுடைய வார்த்தையை சிரசா வஹிக்கக் கடவ சேஷ பூதர் ஆனவர்கள்
பிரளய ஆபத்துக்கு ஹேதுவான கர்மம் அனுபவியார்கள்-அறிதியேல் – சைதன்ய பிரசுரமாகில் –

அறிவு அரும் நிலையினையாய் – -6-1-6–நாலாயி:1453/3–சதுர் தச புவநேஸ்வரனான சதுர்முகன் தொடக்கமான ப்ரதானர் ஆனவர்களாலும் இவ்வளவு என்று பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்வ பாவத்தை உடையையாய்(யஸ்ய ஆத்மா சரீரம் ந வேத இத்யாதி )

அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி-6-2-4- – நாலாயி:1461/2–(அறிந்தேன் -பிறிந்தேன் -செறிந்தேன் –மூன்று வினைச் சொற்களால் சித்தாந்தம்
சரம ஸ்லோக வார்த்தை எப்பொழுதும் உண்டே -இருள் நீங்கிய பின்பு அறிவது போல் அறிந்து செறிந்தேன் )அறிந்தேன் –பிறிந்தேன் –ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்
த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை –-இவ்வருகு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்-இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே அது இப்போது வாரா உதவிற்று

தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே –6-3-6— நாலாயி:1473/4–தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயணீயனாக நினைத்து இரேன் –இப்படி திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய பரதத்வமும் அறியேன் –(பர ப்ரஹ்மம் பர தத்வம் பர தேஜஸ் பர ஆத்மா அனைத்தும் நாராயணனே )

அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்-7-2-4- – நாலாயி:1561/3–சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து-அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே
பரம பதம் போலே இடம் பெற இருந்து-என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் – அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் –அறியாது இருந்தறியேன்-தெரிந்து கொள்ளாத நாள்களும் உண்டே -அத்தையும் காட்டி அருள-இரண்டு எதிர் மறை சொற்கள் இதில்

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை -7-3-3- நாலாயி:1570/1–பிரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சை உண்டாய்
அதுக்கு உபகரித்தான் ஆகில் இறே இந்நாள் என்னல் ஆவது – அங்கன் ஓன்று இல்லாமையாலே பிரதம ஸ்வீகாரத்தை -வந்த நாள் -என்னும் இத்தனை யாய்த்து சொல்லல் ஆவது –ஆவா சந்த்வஹ மிச்சாமி -என்கிறபடியே –(நீர் காட்டும் இடத்தில் குடிசை கட்டி வாழ பெருமாள் ரிஷிகள் இடம் பிரார்த்தித்து போல் ) என்னுடைய ஹிருதயத்தை தனக்கு இடமாக்கிக் கொண்டான் -திருவடி -திரு வநந்த வாழ்வான் தொடக்க மானவர் பக்கலிலும் போவானாய் இருக்கிறிலன்–அனந்தன்  பாலும்  கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -பெரியாழ்வார் -5-4-8–என்றும்-இட வகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் –5-4-10–என்றும்
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல்-என்றும்
சொல்லுகிறபடியே-இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் – பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு   அனுபவித்தால் போலே இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி –(இளம் கோயில் கை விடேல் என்று இவர்கள் பிரார்த்திக்கும்படி )

ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் என் அன்பு தானே –7-4-7 நாலாயி:1584/4–ஸ்ரமஹரமான திருச்  சேறையிலே நிற்கிற நாயனார் உடைய ஸ்லாக்கியமான வடிவு அழகை அனுசந்தித்தேற்கு  –ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான
வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் –அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி –ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை –
அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது என் அன்பானது –

அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-2–நாலாயி:1609/4-வேறேயும் சில ரஷகரும் யுண்டாய் -அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று –
உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் –அநந்ய கதியான நான் உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் –அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –

ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-3-நாலாயி:1610/4-நிருபாதிக பந்துவே உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகல் யுடையேன் அல்லேன் –நிருபாதிக பந்தம் தோற்ற வந்து நிற்கிறவனே-

கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை கருமம் ஆவதும் என்தனக்கு அறிந்தேன்
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-5-
நாலாயி:1612/3,4-இக் கலியுகத்தின் யுடைய ஸ்வ பாவத்தை நான் அழகியதாகக் கண்டேன் –
உன் பக்கலிலே வைமுக்யத்தை யுண்டாக்கி –பின்பு விஷய ப்ராவண்யத்தையும் பிறப்பித்து
முடிக்கும் -சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் –எனக்கு ஹிதமாவதும் உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமதுவே என்று அறிந்தேன் –ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கும்
இடையருக்கும் பசுக்களுக்கும் உதவியது போல் பிற்பாடாருக்கும் உதவவே இங்கு வந்து நிற்கிறது —

ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-6-நாலாயி:1613/4-காலம் நீ இட்ட வழக்கு அன்றோ – உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன்-அந்த கிருஷ்ணாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு  அன்றோ
நீ இங்கே வந்து நிற்கிறது –

தீ வாய் நாகஅணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன்
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-9-
நாலாயி:1616/3,4–ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனே- உனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாத படி சத்ருக்கள் மேலே நெருப்பை உமிழ்கிற திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளினவனே –அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்-கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –கிருபை ஒன்றே நான் அறிவேன் என்கிறார் –

உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே -7-9-3— நாலாயி:1630/4-சிறு புலியீர் சல சயனத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற சர்வேஸ்வரன் உடைய
திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை த்யாஜ்யதயா வாகிலும் அறிவது ஓன்று இல்லை –

சிறு புலியூர் சல சயனத் தானாயனது  அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே-7-9-4- – நாலாயி:1631/4-கிருஷ்ணாவதாரம் தீர்த்தம் பிரசாதித்தது என்று வெறுக்க வேண்டாதபடி -பிற்பாடருக்கும் அனுபவிக்கலாம் படி அவ்வதார்ரத்தின் படியே வந்து சாய்ந்தவன் – அவன் திருவடிகள் அல்லது வேறு ஒன்றையும் அறியேன் – அதுக்கடி அவன் சேஷ பூதன் ஆகையாலே –

தாயோ உனது அடியார் மனத்தாயோ அறியேனே-7-9-7- – நாலாயி:1634/4-உன் திருவடிகளில் அசாதாரணராய்  இருப்பார் ஹிருதயங்களில் உள்ளாயோ –அடியேன் அறிகிறேன் இல்லை எனக்கு இது தெரிய அருளிச் செய்ய வேணும் –இத்தால் சொல்லிற்று ஆய்த்து –சௌபரி பல வடிவு கொண்டால் போலே இவ்வோ இடங்கள் தோறும் இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான் –

பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்-8-1-9- – நாலாயி:1656/3-முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ   –எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – என்னும்படியாய் இருக்கும் –நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி-சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது  காட்டுமோ – பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் ) எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)-(பிரதமத்தில் முன் கண்டால் போலேயும் –
காணாமல் இருந்தது போலேயும் அன்றோ இந்த சப்த பிரயோகம் –சுரம் கொண்டே இரண்டு அர்த்தங்களும் காட்டுமே-பரி சீலிக்க பரி சீலிக்க பார்த்தது போலே இருக்குமே-இல்லையாகில் லௌகிக விஷய வியாவ்ருத்தம் இருக்காதே )

தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே -8-5-2– நாலாயி:1689/4-ஆஸ்வாச கரனான ஆதித்யனும் போனான் –தனக்கு சஞ்சரிக்கைக்கு ஸ்தலம் இல்லாமை போனானோ-அவன் போனாலும் அவன் சஞ்சரிக்கும் ரத சந்நிதி
உண்டாகில் நான் ஜீவியேனோ-அவன் சந்நிதி கொண்டு இறே திக் விபாகம் பண்ணுவது
அவையும் போய் மறைந்தன –புறம்பு உள்ளார் ஒருவரும் இல்லை யாயிற்று –அகவாய் குடி போயிற்று –நாயகனோ வந்து அணைகிறிலன்-இனி எத்தைச் செய்வது –

கரிய நாழிகை ஊழியின் பெரியன கழியும் ஆறு அறியேனே -8-5-6-– நாலாயி:1693/4-தனக்கு அநபிமதமான ராத்திரி கறுத்து இருக்கையாலே-அதுக்கு அவயவமான நாழிகையும் கறுத்து இருக்குமோ -என்கிறாள்-அன்றிக்கே-கரிய-கொடிதான நாழிகை என்னவுமாம்-அன்றிக்கே
அந்த சந்த்யா காலமானது – கரிய நாழிகை -அந்தி  காலம் –ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே –இது ஒரு கால் கால் வாங்கிற்றாம்படி அறிகிறிலேன்-பண்டு சில கல்பங்கள் கழியும்படி கேட்டிருந்தோம்  –இந் நாழிகை கால் வாங்கவும் காண் கிறிலோம்  –

விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே -8-5-7- நாலாயி:1694/4-இடையன் உடைய கையில் அபிஜாதமாய் இருந்துள்ள குழல் ஓசையுமாய்
என்னை முடியா நின்றது –(மூங்கில் மட்டுமே வில்லாகவும் புல்லாங்குழலாகவும் ஆன பாக்யம் பெற்றதே )நான் முடியவே அவனைக் கிடையாது –அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்-ஆன பின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் –(நித்ய விபூதியும் கூட அழியுமாகும் தசை அன்றோ இவளுக்கு இதில் )

தழுவும் நள்ளிருள் தனிமையின் கடியது ஓர் கொடு வினை அறியேனே-8-5-8- – நாலாயி:1695/4–பிரிந்து தனி இருக்கிற இருப்பில் காட்டிலும்-கொடியதோர் கடு வினை அறியேனே –அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே-அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு பாபம் உண்டாக அறிகிறிலேன் –இன்னம் இதில் காட்டில் நரகத்தில் போய் அனுபவிப்பதோர் அனுபவம் தான் உண்டாக அறிகிறிலேன் –(வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் -அம்பில் பட்ட பாடே போதுமே -இதுவே பெரிய நரகம் –
நரகத்தை நகு நெஞ்சே -சம்சாரமே நரகம் )

ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை அறிந்து முன் உரைசெய்த-8-5-10- – நாலாயி:1697/2-அபிநிவேசம்  கரை புரண்டு கூப்பிட்ட கூப்பீட்டைப் புத்தி பண்ணி அவ் வவஸ்தை பிறந்து கூப்பிட்ட  –

எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ–8-9-5– – நாலாயி:1732/2–என் ஸ்வாமி யானவனே – ஸ்வாமி ஆனபடியால் சொத்தை விடமாட்டாமல் வந்து புகுந்தாய்
புகுந்த பின்பு அடியேனுக்கு நீயே எந்தாய் என்ற ஞானத்தையும் அளித்து அருளினாய்-நித்ய ஸூரிகள் பக்கலில் போவதாகவும் நினைக்கிறது இல்லை –இனி இதுக்கு மேற்பட ஒருவனுக்கு பேறு ஆகையாவது என்-

அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே – -8-10-10-நாலாயி:1747/4-இவற்றை நிதியாகக் கொண்டு பாடும் அடியார்களுக்கு கால தத்வம் உள்ளதனையும்
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே பரமபதம் ஆட்சியாகக் கடவது – அண்டம் -ஆகாசம் -பரமாகாசம்-சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபடி(ஒர வஞ்சனை பார பக்ஷம் -ஆஸ்ரித வ்யாமோஹன் )-இத்தை அப்யசித்தவர்களுக்கும் அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம் –

தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு –9-2-6- நாலாயி:1763/2–ஒப்பித்து இருக்கிற பெண்கள் உடைய நெஞ்சை தமக்கு அபாஸ்ரயமாக
உடையவர் போலே இரா நின்றார் –என்னால் ஒன்றும் சொல்லலாய் இருக்கிறது இல்லை –
தாமரைக் கண்கள் இருந்தவாறு –அது தன்னை நோக்காலே தெரிவியா நின்றார் –
நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கு அன்றோ என்றாப் போலே இரா நின்றது -நோக்கிப் பார்த்த வாறே –(நயன பாஷை -கண்ணால் பேசியது இது )

பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன்
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – 9-2-7-
நாலாயி:1764/1,2–என்னால் இவர் படி பரிச்சேதிக்கலாய்   இருக்கிறது இல்லை –பணியும் என்னெஞ்சம் –என் பக்கல் ஒரு நினைவு இன்றிக்கே இருக்க செய்தே என் நெஞ்சானது வணங்கி நில்லா நின்றது-இது என் கொல் தோழி--உன்னை அறியாமை வருவதொரு நன்மை இல்லை இறே எனக்கு நாம் இவரிடை யாட்டம் நினைத்து அறிவுதுமோ –பண்டிவர் தம்மையும் கண்டறியோம் –பழைமை யாலே செய்கிறது ஒன்றும் சொல்லவுமாய் இருக்கிறதில்லை –

மண்டி ஓர் ஆலிலை பள்ளிகொள்ளும் மாயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் – 9-2-9-
நாலாயி:1766/2,3–மௌக்த்யத்தாலே ஒருவராலும் எழுப்ப ஒண்ணாத படி ஒரு பவனான ஆலந்தளிரிலே    பள்ளி கொள்கிற ஆச்சர்ய  பூதன் என்று தோற்றும்படி இரா நின்றார் –
கண்டவாறே இவருடைய அகடிதகட நா சாமர்த்தியம் எனக்குத் தோற்றா நின்றது –
(நீசனான என்னையும் சேர்ந்ததே மிகப் பெரிய அகடிதகட நா சாமர்த்தியம் )

செவ்வி அறியாது நிற்கும்-கொல் நித்திலங்கள்-9-4-3- – நாலாயி:1780/2–நாயகன் பிரிந்து போகிற போது தோளில் இட்டதொரு மாலையிலே ஒரு தலையைப் பிடித்து கொடு போய்த்ததாயிற்று – நெஞ்சு அவன் பக்கத்தில் அணுக்கத்தைக் கொண்டு இத் தலையை உதறிப் போன படி –நம்மாள் அங்கே நின்றதாகில் ஆசை அற்று வந்தால் அன்றோ நமக்கு முடியல் ஆவது என்று இருக்கிறாள் -என்று இருக்கிறதோ –நிற்குங் கொல் -நிற்குமோ -என்றபடி –

நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை – 9-5-6-நாலாயி:1793/2–அவர்கள் விலஷணைகள் அன்றோ – ஆபரணங்களை சுமந்து கொண்டு இருக்க வல்லவர்கள் என் சொல்லாதார் –நம் இடையாட்டம் அவர்கள் அறியும் அன்று இறே –
அவர்கள் இடையாட்டம் நாம் அறிவது –நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை –
நம்முடைமை நம் கையதாகில் அன்றோ நமக்கு ஸ்மரிக்கல்  ஆவது –அவர்களுக்கு ஸ்த்ரீத் வாதிகள் குறி அழியாது இருக்கையாலே சொல்லலாம் –நம்முடைய ஸ்த்ரீத் வாதிகள் நம் கையில் இல்லை –

ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன்
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – –9-5-7-
நாலாயி:1794/3,4-அவன் பிரிவை உணர்த்தினான் – காமன் சர வர்ஷமாக வர்ஷிக்கத் தொடங்கினான்-வீர பத்னி என்று பாராதே நலியா நின்றான்-அவன் கை விட்டமை அறிந்தான் ஆகுமே  –

கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் –9-5-8- நாலாயி:1795/4-அவன் திரு உள்ளக் குறிப்பறிந்து யென்னை அங்கே கொடு போய் பொகடப் பாருங்கோள்-அவன் வேணும் என்று இருந்தான் ஆகில் அங்கே கொடு போய்ப் பொகடுவது
வேண்டாம் என்று இருந்தான் ஆகில் இங்கே கிடந்தது முடிந்து போக –

போர்ப்பது ஓர் பொன் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை – 9-5-9–நாலாயி:1796/2-போனாலும் ஆறி இருக்கலாம் இறே போன ஊரைச் சொல்லிப் போனான் ஆகில் –அவன் சொல்லிப் போகாமை இல்லை –இவள் குறிக் கொள்ள மாட்டாமை இழந்தாள்-இத்தனை இறே-இங்கு இருந்த நாள் அவன் வாய் வெருவும்படி அறிந்து இருப்புதோமே-அத் தேசத்திலே என்னைக் கொடு போய் பொகடப் பாருங்கோள்   –

சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் – 10-2-2-நாலாயி:1859/2-ரஷகனானவன் போகையாலே-செய்வது அறியாத நாங்கள் –அறிவு கேடரான நாங்கள் 

யாயும் பிறரும் அறியாத யாமத்து -10-5-8- நாலாயி:1895/1–பெற்ற தாயும் மற்று உள்ளவர்கள் ஒருவரும் அறியாத நடுச்  சாமத்திலே –

அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை-10-8-7- – நாலாயி:1928/2-முருடராய் இருப்பார் அன்றோ உம்முடைய் செவ்விக்கு இட்டுப் பிறந்தவர்கள் – ஆசை உடையார்க்கு கிடையாது இறே –இரவு கலக்கிற போதே நினைவு ஒன்றும் -செயல் ஒன்றுமாய் -இருந்தது என்னும் இடம் அறிந்தோம் –உம்மை நீர் அறிந்தால்-காலத்தைக் குறித்தோ போவது-எங்களை அறிந்தால் -சொன்ன போதிலே வர வேண்டாவோ-எல்லே –உறவு முறையாரைப் போலே
நீர் கவிழ்ந்து இருக்கிறது என் – இங்கே வாரீர் –இது என் இது என் இது என்னோ –உம்மை நீர் அறிய வேண்டாவோ –எங்களை அறிய வேண்டாவோ –

அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை-கொலோ அறியேன் நான் –—10-9-2- நாலாயி:1933/2–கோ கோபீஜ ந சங்குலம் -அதீவார்த்தம் -என்கிறபடியே பசுக்களும் இடையரும் நோவு படாத படி ரஷித்த ஆண் பிள்ளைத் தனைத்தை நினைத்தோ -அறிகிறிலேன் 

அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான் -10-9-5– நாலாயி:1936/2-ஆயுதம் எடுக்க ஒட்டாமே அத் தேரின் மிடுக்கையே கொண்டு
(சித்திரத்தேர் வலவன் அன்றோ ) கேவலம் போக வரிய வீர ஸ்வர்க்கத்துக்கு போவார் இல்லாமையாலே புல் எழுந்து கிடந்தவற்றை பெரு வழியாம்படி கண்ட ஆண் பிள்ளைத் தனைத்தை நினைத்தோ செய்தது –

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் —10-10-9-
– நாலாயி:1950/4–தேவனோ மனுஷ்யனோ அறிகிறிலேன்-தேவத்வ ஸூ சகமான திரு ஆழியையும் மனுஷ்யத் வைகாந்தமாய்
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய   -ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் –
இன்னார் என்று அறியேன் –

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே
  –11-3-3– நாலாயி:1974/4-நெருங்க கலந்த போதாக –இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –காதாசித்கமாக சம்ஸ்லேஷித்த போது-ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –இன்னார் என்று அறியேன் என்றவர் அன்னே இவரை அறிவன் என்கிறாரே –
நீர்மை காணப்போகாதே -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணுமே
-பிரளய காலத்திலே சப்த ராசியும் அகப்பட அழிய ஒரு பதார்த்தம் இன்றிக்கே இருக்கிற சமயத்தில் இவ் வநு  பூர்வியை ஸ்மரித்துக் கொண்டு இருந்து பின்னை அத்தை உபதேசித்து ஹித அனுசாசானம் பண்ணினவர் –இதாயிற்று இதனுடைய நித்யத்வ அபௌருஷேயத்வங்கள் – உபாத்யாயன் உறங்கா நின்றாலும் சம்ஸ்காராத்மா வாய்க் கிடக்கும் இறே –அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் –தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து அது பலிக்கும் அளவானவாறே
ஸ்ப்ருஹணீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்ம வஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே
உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே
—11-3-4-ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் –யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில்
அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே –பரிமள பிரசுரமாய் இருந்துள்ள பொழிலாலே சூழப் பட்டு விஸ்மயநீயமாய் இருக்கிற திருக் குடந்தையிலே வந்து சாய்ந்து அருளி –இவன் இது களவு கண்டான் -யென்று சொல்ல ஒண்ணாத படி மௌக்த்யத்தை உடையனாய் – பொய்யடி இட்டு போய்ப் புக்கு –உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –

முன் உலகங்கள் ஏழும் இருள் மண்டி உண்ண முதலோடு வீடும் அறியாது
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – 11-4-8-
நாலாயி:1989/1,2–முன்பு ஒரு காலத்தில் சர்வ லோகங்களும்(ஸூர்ய லோகத்துக்கு மேல் உள்ள ஏழு லோகங்களும் ) அஞ்ஞான அவ்ருத்தங்களாக துடங்கிற்று இது விடுகிறது இது என்று அறியாதே அஸ்த்தானே நமக்கு வந்ததிது என்னோ  என்று லோகத்துக்கு வெளிச் சிறப்பைப் பண்ணும் தேவதைகளும் அகப்பட அறிவு கெட – யோவை வேதாம்ச ப்ரஹிணோதி தஸ்மை (ஸ்வேதாஸ்வர )-என்று தான் முதலிலே அறிவிக்க கைம் முதலான இவ் வேதங்களும் அபஹ்ருதமாக –

அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகி போய் ஆய்ப்பாடி -11-5-4- நாலாயி:1995/1–மனுஷ்யத்வே பரத்வம் அறியாதார்க்கு-தயிரை வருந்திக் கடைந்து உறியிலே  சேமித்து வைத்த அன்று
கடைந்த வெண்ணெயை உண்டு உகந்தான் –சம்சாரிக்கு பகவல் லாபம் போலே அவனுக்கு இது –இவ் வயிற்றுக்கு கடல் சூழ்ந்த லோகம் அடையப் போராது காண் –

எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் – அல்லாதார் தாம் உளரே அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே -11-6-2-– நாலாயி:2003/4-மிடுக்கை உடைத்தான திண் தோள் ஆகிற பெரிய கையாலே பஹிரண்டங்களையும் அகப்படுத்தின காலம்-இவ்வர்த்தம் அறியாதார் உண்டோ –இவனுக்கு புறம்பாய் இருப்பது ஒன்றைப் பற்றி
இவனைக் கை விட்டி கோளோ-லோகத்தின் உடைய சத்தை அவனுடைய பிரசாதா யத்தம்
என்னும் இடம் அறியீர்களோ –

யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன – 11-6-10-நாலாயி:2011/2

அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே – -11-7-8-நாலாயி:2019/4-ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் –மேன்மையால் குறையற்று-சிவந்த கண்களை உடைய சர்வேஸ்வரனை –நினைத்து  அறியாதவர்கள் –இங்குத்தை எளிமையும் மேன்மையும் இரண்டையும் அறியாதவர்கள் –

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–திருக் குறும் தாண்டகம் –10-அழகுக்கு தோற்று -என் ஆயன் -என்கிறார் –நீர் சித்தமும் செவ்வை நில்லாது என்பது-
தீ வினையேன் -என்பதே கிடந்தது-என் இப்படிப் படுகிறீர் –இத்தை விட்டு வேறு ஒன்றோடு போது போக்கினாலோ என்ன –உன் திருவடிகளில் கைங்கர்யம் ஒழிய வேறு ஓன்று அறியேன் –மறந்தேன் உன்னை முன்னம் -என்றது போக்கி ஏது செய்தால் மறக்கேன் -என்னும்படி பண்ணி வைத்த பின்பு வேறு ஒன்றை அறிய விரகு உண்டோ(மறந்தேன் உன்னை முன்னம்*  மறந்த மதி இல் மனத்தால்* -இறந்தேன் எத்தனையும்*  அதனால் இடும்பைக் குழியில்* பிறந்தே எய்த்து ஒழிந்தேன்*  பெருமான்! திரு மார்பா!* சிறந்தேன் நின் அடிக்கே*  திருவிண்ணகர் மேயவனே)(ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின் பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம் போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-)(வடிவழகிலே யீடுபடுமவர்கள் ”தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே” என்றாற்போல ஒவ்வொரு திவ்யாவபவத்திலும் நெஞ்சு நீர்ப்பண்டமா யுருகி ஈடுபட்டிருக்குமத்தனை யொழிய,
தரித்து நின்று கைங்கரியம் பண்ண முடியாதாதலாலும், தமக்குக் கைங்கரியம் பண்ணுவதிலேயே அதிகமான ஆவல் இருப்பதனாலும்”பக்திமைக்கு அன்புடையேனாவதே பணியாயெந்தாய்!” என்று வேண்டும்படி யாயிற்றென்பதை ஈற்றடியினால் விளங்கக் காட்டினாராயி்ற்று.)

அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த – 4-நாலாயி:2055/3–ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களுக்கும் அறிய ஒண்ணாது இருக்கை –
யமாத்மா ந வேத -என்று யாவன் ஒருவனை ஆத்மா அறியான் – அவன் அந்தரனான -அந்தராத்மா -என்னக் கடவது இறே -(உம்மைத்தொகை -அறிவால் சிறப்புற்ற இவர்களாலும் என்றபடி ) அது தோற்ற துர்ஞ்ஞேயன் -என்கிறார் –அந்தரத்தில் -வ்யாபிகிறான்-அயன சப்தம்-அகடிகடதாக சாமர்த்தியம்–வியாபிக்கும் இடத்தில் வியாபிக்கும் காலத்தில்-அந்தரத்தில்–தேவர்க்கும் அறியல் ஆகா —என் இடம் வ்யாபித்ததை என்னாலே அறியல் ஆகா –யா  ஆத்மா வ ந வேத –யா பிரத்வி ந வேத -ஞானம் இருக்கும் ஆத்மா கூட அறிய முடியாதே–அப்ரமேயன்-தேவர்களுக்கும் விசேஷித்து -சொன்னது -ஞான சக்திகளால் அதிகம் கொண்டவர்கள்–என்பதால்–

என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன் உலகம் ஏத்தும் – 10-நாலாயி:2061/2-நான் அடைவு பட -சாஸ்திர க்ரமத்திலே -ஓன்று அறிவேனோ –1-அமாநித்வாத்யாத்ம குணங்களை அறிவேனோ(ஸ்ரீ கீதை 13-7 ஸ்லோகம் தொடங்கி-13-11-வரை -20 ஆத்ம குணங்கள் )2-கர்ம யோகத்தை அறிவேனோ-3-ஜ்ஞான யோகத்தை அறிவேனோ-4-உபய சாத்யமான பக்தி யோகத்தை அறிவேனோ –நான் எத்தை அறிந்தேன் –உறங்குகிறவனுக்கு விடிந்தால் போலே விஷயாந்தரங்களை ஒழியவே ஓன்று அறியாதே திரியச் செய்தே உன்னுடைய வைலஷண்யத்தைக் காட்டக் கண்டேன் இத்தனை போக்கி –
சாதனாந்தரங்களை எங்கே கண்டேன் -என்கை –

நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் -12- நாலாயி:2063/1-தன் கார்யம் தலைக் கட்டின படி இது –என் கார்யத்தில் இவள் நின்ற நிலை இது –இவளுடைய ஊணும் உறக்கமும் போலே காணும் -தனக்கு உத்தேச்யம் –உண்கிறிலள் -என்கை அன்றிக்கே
முதலிலே ஊணை மறந்தாள் என்கிறாள் சம்ச்லேஷ தசையில் –
உண்ணா நாள் பசி யாவது ஓன்று இல்லை -என்றும்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்றும் இருக்கையாலே-ஊண் இல்லை –தத் விஸ்லேஷத்தில் உபவாச க்ர்சையாய் இருக்கையாலே ஊண் இல்லை –

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி
———3–-நீ நின்ற நிலைக்கு மேலே மாறி ஓர் அடி இடுகைக்கு இடம் காணாமையாலே நீயும் இவற்றை அளந்து கொண்டாய் என்று சொல்லுகிற இது நான் அறிகிறிலேன்-என் தான் உமக்கு அறியப் போகாது ஒழிவான் என் என்னில்  – சூருருவின் பேயளவு கண்ட பெருமான்– இது வன்றோ உன்னை அளவுபடுத்தி அறியப் புகுவார் படும்பாடு -என்கிறார் ஒருவராலே அளவிட்டு அறியலாயோ நீ இருக்கிறது –பேயாகப் பரிச்சேதித்த -அதாவது முடிக்கை –அவன் தன்னை பரிச்சேதித்து முடிப்பதாக வந்த அது தன்னைப் பரிச்சேதித்து முடித்து விட்டான் ஆயிற்று-நீ சிலரைப் பரிச்சேதிக்கும் போது வருத்தம் இல்லை-உன்னைப் பரிச்சேதிப்பார் முடிந்தே போம் இத்தனை –அறிகிலேன் -நீ யளவு கண்ட நெறி –நீ நினைத்து இருக்கிற பிரகாரம் ஏதோ ஓன்று நான் அறிகிறிலேன் உணராது ஒழியப் பண்ணுகிறாயோ -உணரப் பண்ணுகிறாயோ-நீ செய்த ஒரோ செயலை என்னால் பரிச்சேதிக்கப் போகிறது இல்லை -என்னவுமாம்-மகாபலியாலே பூமியை அளந்து-உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டால் போலே-என்னையும் உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டு – பூதனையைப் போக்கினால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி என்னை விஷயீகரித்த படி அறிகிறிலேன் -என்னவுமாம் –

பொறி வாசல் போர் கதவம் சாத்தி அறிவானாம்
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த –4-
நாலாயி:2085/2,3–இந்த்ரியங்களை விஷயாதிகளில் போகாத படி முட்ட நியமிக்க ஒருவருக்கும் முடியாது –அறிவானாம் –
ஓம் இந்த ஜிதேந்த்ரியன் அறியானோ என்று கொண்டு ஷேபோக்தி இருக்கிறபடி

அவரவர் தாம்தாம் அறிந்தவாறு ஏத்தி -14- நாலாயி:2095/1-ரஜஸ் தமஸ்ஸூக்களால் அபிபூதராய் பின்ன ருசிகள் ஆகையாலே -அவர் அவர் -என்று அநாதரித்துச் சொல்லுகிறார் –தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி –கர்மம் அடியாக வந்த ருசியும் அதுக்கீடான ஜ்ஞானமுமாய் இறே இருப்பது –சாஸ்திரத்தின் பின் செல்லார்களே-ஆகையாலே தாம் தாம் அறிந்த பிரகாரங்களாலே ஸ்தோத்ரம் பண்ணி –

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி –21-திரு வடி முதுகிலே ஏந்தித் தரிக்க வல்லவனும் திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும்–சர்வேஸ்வரன் -ஆகிறான்–இப்படிப் பட்டவன் திருவடிகளைக் கிட்டி மகா பலியைப் போலே கழஞ்சு மண்ணைக் கொடுத்து விடாதே-உன்னைக் கொடு

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் -22-– நாலாயி:2103/1-இது ஜகத் பிரசித்தம் அன்றோ-நான் சொல்லுகிறேன் என்று இருக்க வேண்டா-சிஸூ பாலனும் கூட அறியானோ

ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க – நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய –45- நாலாயி:2126-ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனை அறிந்ததாகப் போமோ-இவர்களால் அறியப் போகாமைக்கு மேன்மையோடு நீர்மையோடு வாசி இல்லை –அதுக்கு மேலே –அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளும் மதி கெட்டுக் கிடக்க நாமே அவனை அறியப் புகுகிறோம்-அங்கன் அன்றிக்கே அது கிடக்க நாம் ஆகில் அவனை அறிவுதோம் -என்றுமாம் – அவன் தானே காட்டக் கண்ட நமக்குக் காண வரிதோ –

ஆரே அறிவார் அது நிற்க நேரே –56- நாலாயி:2137/2-என் நாயகன் ஆனவனை யார் தான் அறிவார்-இவருக்கு அவன் தானே காட்டின படி –அவ் விடை யாட்டம் கிடக்கிடீர்-அறிவார் கிடக்கிடீர்-அறியாதாரைக் கேட்கல் ஆகாதோ –சர்வேஸ்வரன் உடைய பரிமளத்தை யுடைத்தான திரு நாபீ கமலத்திலே அவ்யவதாநேன பிறந்து அவ்விடம் தன்னையே இருப்பிடமாக யுடையனான சதுர்முகன் ஆனவன் இன்னம் திருவடிகளைக் காணப் பெற்றிலன் –

பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓர் ஆழி சூழ்ந்த உலகு -60-
நாலாயி:2141/3,4–ரஷணத்துக்குப் பரிகரமான திரு வாழியைக் கையிலே உடையவனான உபகாரகனை யல்லது –கடல் சூழ்ந்த பூமியானது வேறு அறியாது
சிறியாரோடு பெரியாரோடு வாசியறத் தம்தாமுடைய ரஷணம் தாம் தாம் அறியார்கள்
லோகம் எல்லாம் இப்படி அவனே என்று இரர்களோ என்னில்-உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டே -என்று அறிவுடையாரை இட்டு இறே லோகத்தைச் சொல்லுவது-அப்படியே யாகில்
ஓராழி சூழ்ந்த வுலகு –என்று கொண்டு கடலுக்கு உட்பட்ட பூமியைச் சொல்லுகையாலே
விலஷணர் தலையிலே ஒதுங்க ஒண்ணாது ஆன பின்பு அவனை ஒழிய இவை வேறு ஒன்றை அறியாது-இத்தால் அவனே அறிந்து ரஷிக்கும் அத்தனை -என்றபடி-சம்சாரம் வளர்க்கைக்கு உபாயம் அறிவார்கள் அத்தனை மோஷத்துக்கு எம்பெருமானே வேணும்

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து –84-
நாலாயி:2165/1,2-எத்திறம் என்கிறார் –
உபாகாரகனான உன்னுடைய பெருமையை நீ அறிதி -அறியாய் -என்று சந்தேஹிக்கும் அத்தனை போக்கிப் பிறர் அறிவார்கள் என்று சந்தேஹிக்கைக்குத் தான் விரகு உண்டோ-ஸோ அங்க வேத யதி வா ந வேத -என்னக் கடவது இறே-

படி கண்டு அறிதியே பாம்புஅணையினான் புள் – நாலாயி:கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில் – 85-நாலாயி:2166–அவனுடைய பிராகாரங்களைக் கண்டு அறிதியே-அன்றிக்கே அவனுடைய திரு மேனியைக் கண்டு அறிதியே -என்றுமாம்-படி -என்று திரு மேனிக்கு பேர்
இந்த பிரகார விசேஷமாய்ப் புகும் இறே திருமேனி –பாம்பணையினான் கண்டு அறிதியே-அவன் திருவநந்த ஆழ்வானுக்கு உடம்பு கொடுத்து இருக்கும் படி கண்டு அறிதியே
புட்கொடி கண்டு அறிதியே-த்வஜம் முன்னாக அவன் வந்து தோற்றும் தோற்றரவு கண்டு அறிதியே –

நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு-87 – நாலாயி:2168/4-நாவலம் சூழ் நாடு நன்கறிந்த –
ஜம்பூத் வீபமானது விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளை அழகிதாக அறிந்தது –
அதாகிறது –திருக் கோவலூரோடு சூழ்ந்த பூமியை விட்டு அவ்வருகே போவோம் என்று இரார்கள் போலே ஏக தேச வாசத்தால் வந்த சம்பந்தமே அமையும் இறே ரஷிக்கைக்கு –
பவத் விஷய வாஸின- திருக் கோவலூர் உப லஷணம்-உகந்து அருளின தேசங்கள் அடைய நினைக்கிறது –நாவலம் சூழ் நாடு –ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடின இடமே நாட்டுக்கு உடல் என்று இருக்கிறார் –

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-ஹேய உபாதேய விபாகத்தைப் புத்தி பண்ணி – பகவத் விஷயத்தினுடைய வை லஷண்யத்தையும் – சப்தாதி விஷயங்களினுடைய  பொல்லாங்கையும் அறிந்து – சரீரத்தினுடைய ஹேயதையை அறிந்து -அந்த ஹேயமான சப்தாதி விஷயங்களிலே ஸ்ரோத்ராதி அஞ்சு  இந்த்ரியங்களும் போகாதபடி நியமித்து பிரத்யகாக்கி -உள்ளே விஷயம் காட்டிக் கொடுக்கிறபடி பட்டிப் பசுவுக்கு அகத்தே கட்டி இரையிடுமாப் போலே அவன் வடிவு அழகிலே மூட்டுகை –சத்ருசமான புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு -செவ்விப் பூக்களைக் கொண்டு –ஸ்நேஹம் மிக்க
மனசை யுடையராய் அபி நிவேசம் நெருங்கின மனஸ்ஸூ-அவன் சேஷீ-நாம் சேஷ பூதர் -என்கிற முறையை நேரே புத்தி பண்ணி-அவன் திரு நாமங்களைச் சொல்லி அவனை ஸ்தோத்ரம் பண்ணும் பாக்யாதிகர்-இதுவே யாத்ரையாக இருக்குமவர்கள் –ஸ்ரமஹரமான கருத்த கடல் போலே இருக்கிற வடிவை யுடையனானவன் திருவடிகளைக் காணப் பெறுவார் –காண்பரே –தம்முடைய நோயாசை -நப்பாசை –காரோத வண்ணன் –அயர்வறும் அமரர்களுடைய சாத்துப்படியான உடம்பு –காண்பரே –இது நிச்சயம் –

தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும் மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை – 16-நாலாயி:2197/1,2–பரவா நஸ்மி -ஆரண்ய -15-7- என்றும் –
தவாஸ்மி-ஸ்தோத்ர ரத்னம் -60 -என்றும் – ஸ்வத்வம் ஆத்மனி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்கிறபடியே இவ்வாத்மா தனக்குக் கூறுபட்டது சேஷத்வம் –எம்பெருமானுக்கு கூறுபட்டது சேஷித்வம் -என்னும் இம்முறை அறியானே யாகிலும் – ஆத்மதாஸ்யம் ஹரேஷ் ஸ்வாம்யம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்னக் கடவது இறே-இப்படி இவருடைய ஸ்வரூபத்தையும் அறிந்திலேன் ஆகிலும் –தனக்கு சேஷத்வ ஞானம் இன்றிக்கே ஒழிந்ததே யாகிலும் – சம்யக் ஞானம் இன்றிக்கே இருந்ததே யாகிலும்-இப்படி பிரமாண பிர சித்தியாலும் ஆச்சார்ய சேவையாலும் -இருந்தபடிகள்   எல்லாம் அறிய மாட்டானேயாகிலும்-எம்பெருமான் தனக்கு இவன் அடிமைப் பட்டது அறிந்திலனே ஆகிலும் -தனக்கு அடைத்தத்தைச் செய்வான் வேதாந்தத்தில் பழக்கத்தாலே சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் என்று அறிந்து இருந்தால் என்றுமாம்-மனத்தடைய வைப்பதாம் என்றதற்கு செய்வார் செய்தவற்றை கண்டு ஆஸ்ரயிக்கை என்றும் ருசி மாத்ரமே உடையானாகை என்றும் ருசியும் அவன் பிறப்பிப்பான் என்றும் மூன்று பொருள்-ஓன்று பட்டரது-ஓன்று திருமலை நம்பியது-ஓன்று ஆழ்வானது-

அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று –36-
நாலாயி:2217/2,3-அதி ஷூத்ர ரானர்கள் ஈச்வரோஹம் என்று தங்களைப் பெரியாராக அபிமாநித்தாலும்
பின்னையும் அது சிறுமையே யாய்த் தலைக் கட்டும் –தாங்கள் அஜ்ஞராய் இருக்கச் செய்தேயும் தங்களை சர்வஜ்ஞராக அபிமானித்து இருக்குமது பின்னையும்  பழைய அஜ்ஞானத்தோடே தலைக் கட்டும் –அவர்களுக்கு நாம் சாதிக்க வேண்டா -தாங்களே சாதித்து வைப்பார்கள்-நாம் இனி அறிவுடையார் போன வழி போவோம்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேன -பெரிய திரு -7-4-4-
அதாவது –அவனாலே அவனை அறிந்து -அவனாலே அவனைப் பெற விருக்கை –சர்வேஸ்வரன் செயலைச் செய்தான் என்று தோற்றாத படி –ஆஸ்ரித விஷயங்களில் பண்ணும் ரஷணங்களுக்கு எல்லை காண ஒண்ணாத ஆச்சர்ய சக்தி யுக்தன்-நம் சக்தியைக் கொண்டு போயிருத்தல் – அவன் சக்தியை அறியாதே இருத்தல் -செய்யில் அன்றோ அஞ்ச வேண்டுவது –மாஸூச -என்ற அனந்தரம் இருக்குமா போலே நிர்ப்பரமாய்க் கொண்டு இருக்கப் பார்-எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த விருத்தம் -115-

தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும் –38- நாலாயி:2219/2-எமக்கு என்றும் ஒக்க புகலிடமாய் இருக்கும் என்னும் இடத்தை புத்தி பண்ணு – நமக்கு நித்தியமான ஆஸ்ரயம் என்று அறிந்து –இவன் தனக்கு என்ன அறியாத காலத்திலும் -இவனைத் தனக்கு என்று இருக்குமவன் –

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–-எல்லாத்துக்கும் பிரகாரியாய் இருந்துள்ளவனுடைய திரு நாமத்தை யேத்துகை-சாங்க அத்யயனத்தைப் பண்ணி-வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே வல்லீர்கள் ஆகில் அறியுங்கோள்-அப்படி அறிய மாட்டிகோள் ஆகில்-ஒத்தினுடைய சங்கரஹம் லஷ்மி பதியினுடைய திரு நாமத்தை சொல்லுகை-அவன் பிரசாதம் அடியாக பிறந்த ஞானம் உடையார் சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் –

ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள் –40– நாலாயி:2221/3,4-பகவத் விஷயத்தை அறிந்து வைத்தும் அறியாதாரோடு வ்யாவர்த்தமாகப் பண்ணக் கடவதான ப்ராக்ருத போகங்களால் ஒரு பிரயோஜனம் இல்லை – ஜ்ஞானாதிகனானவனையும் அஜ்ஞ்ஞானவனோடு ஒக்கச் சொல்லும்படிக்கு ஈடாகப் பண்ணுவித்துக் கொள்ளுகிற சப்தாதி போகங்களால்  வரக் கடவதொரு பிரயோஜனம் இல்லை-மஹா ராஜற்கு ராம பக்தி குறைவற்று இருக்கச் செய்தேயும் நாலு நாள் போகப் பிராவண்யத்தாலே அல்லாதாரோடு ஒக்க உணர்த்த வேண்டும்படியாய் விழுந்தது இறே-பொல்லாது என்று அறிந்து இருக்கச் செய்தே கை விடப் போகாத வர்த்த ஸூகத்தால் பிரயோஜனம் இல்லை -அந்த சப்தாதி போகங்கள் தானே அவ்வளவு யுண்டு -அவ்வளவும் அறிந்தாலும் பின்னையும் அறியாதார் படியேயாய்த் தலைக்கட்டும்படி பண்ணக் கடவதான போகங்களில் வருவதொரு பிரயோஜனம் இல்லை –ப்ராப்த விஷயத்தைப் பற்றாத ஜ்ஞானம் அஜ்ஞ்ஞானம் என்னக் கடவது இறே-பகவத் வ்யதிரிக்தங்களை அடங்க அறிந்தானே யாகிலும் அது ஒன்றையும் அறியாது ஒழியவே அவனை அஜ்ஞ்ஞன் என்னக் கடவது இறே-வ்யதிரிக்த விஷயங்கள் ஒன்றும் அறியாதே ஒழிந்தாலும் பகவத் விஷயம் ஒன்றையுமே அறியவும் அவன் சர்வஜ்ஞ்ஞனாகக் கடவன்

செய்ய நெடு மலராள் மார்வன் அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த-52- – நாலாயி:2233/2–மேகத்தில் மின்னினாப் போலே அவ்வடிவுக்கு பரபாகமான சிவந்த நிறத்தை யுடைய பெரிய பிராட்டியார் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள திரு மார்பை யுடையவன் – அவளோட்டைக் கலவியாலே ஆன்ரு சம்ச்யத்தால்  சாலவதிகன் –அவன் கிருபைக்கு ஊற்று இவள் -இவள் ஐஸ்வர் யத்துக்கு ஊற்று அவன் –அந்த  ரஹச்யம் பத்தொன்பதாம் பாஷை -ஒருவருக்கும் தெரியாது –ஆழ்வார்கள் அறிதல் -அவர்களை அடி ஒற்றின நம் முதலிகளில் சிலர் அறிதல் செய்யும் அத்தனை –அவன் அகவாய் அறிவார் யார் –புறவாய் அறிவார் யார்–எம்பெருமான் தன்னைக் கூடு பூரித்து வைக்க அறிவாராய் பெறு கிறிலோம்-

அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது -53– நாலாயி:2234/2-அங்குத்தைப் பூங்கொடிகள் ஆனவை -இவர்கள் சலியாதே மூச்சு விடுதல் –உடம்பு ஆடுதல் செய்யாதே இருக்கிற இருப்பைக் கொண்டு-சில சேதனர் என்று புத்தி பண்ணாதே —இவை சில சிறு மலைகள் என்று பார்த்து முன்னின்று பின்னே வந்து படர்ந்து –முன்னின்று பின்னே தாழ்ந்த குழல் கற்றை யுடைய நெறியார் பக்கலிலே என்னவுமாம் –அதாகிறது-தங்கள் பெருமையாலே தன்னிலே ஒன்றாக முன்னும் தாழ்ந்த குழல் கற்றையை யுடையர் என்றுமாம் –

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-
நாலாயி:2236/3–தேவரை ஒரு காலமும் மறந்து அறியேன் -கண்டால் இழவு மறக்கும் படி இருக்கை-அதுக்கடி-ஸ்ரவண மநந  நிதித்யாசன அநந்தரம் பிறக்கும் உபாசன த்ருவாநு ஸ்ம்ருதியாலேயோ   மறவாது ஒழிகிறது -என்னில் –எல்லா ஜன்மங்களிலும் -எல்லா அவஸ்தைகளிலும்-தேவர் எதிர் சூழல் புக்கு நின்று இவன் நம்மை மறவாதே பெற்றிடுவானுக்கு என்று அனுசந்திக்கிற இவ் வனுசந்தானம் ஒரு நாளும் மறவாத ஸ்வ பாவத்தாலே இப்பொழுது நினைத்த படியாலே எல்லாக் காலமும் மறந்து அறியேன் -என்கிறார்-எம்பெருமான் விடாதே இருக்கையாலே மறக்க விரகு இல்லை –
என்னுடைய ஞானம் குறைவற்று இருக்கை அல்ல -உன் நினைவாலே –இவனுடைய ஞானமும் பண்டாரத்து நின்றும் புறப்பட வேண்டி இருக்கிறபடி –தர்ம பரதந்த்ரமான மாத்ரமே யல்ல -ஆத்மாவினுடைய தர்மபூத ஞானமும் பரதந்த்ரம் –சத்தை பராதீனமான போது ஞானமும் பராதீனமாய் இருக்கை-இத்தால்-ஞான கர்ம அனுக்ருஹீதையான பக்தியாலே யன்று -நீ யாகிற சித்த உபாயத்தாலே என்றபடி –நாம் செய்த அம்சம் செய்தோம் இறே -எல்லாம் செய்ய வேணும் என்று நிர்பந்திக்கக் கடவதோ என்ன-பிரபல பிரதி பந்தங்களைப் போக்குகைக்கு ஈடான பரிகரத்தை யுடையாய்-அதுக்கு மேலே உன்னை அறிவுதி -என்னை அறிவுதி-என்னாலே உன்னைப் பெற ஒண்ணாது –உன்னாலே உன்னைப் பெற வேணும் என்னும் இடம் நீயே அறிவுதி –சர்வஜ்ஞன் சர்வ சக்தி அல்லையோ –இத் தலைக்கு அஜ்ஞ்ஞான அசக்திகள் போலே அத்தலைக்கும் ஞான சக்திகள் ஸ்வரூபமாகை- உன் பக்கல் ஒரு ஞான சக்திகளுக்கு வைகல்யம் காண்கிறிலேன் -ஆன பின்பு பேற்றுக்கு உறுப்பான ஞானத்தில் கண் அழிவு அறுத்துத் தந்த நீயே
பெற்றால் அனுபவிக்கக்   கடவதான நிரதிசய ஆனந்தத்தையும் பண்ணித் தந்தருள வேணும்-ஞான சங்கோசம் அறுத்தாப் போலே -யேஷஹ்யேவா நந்தயாதி -தைத் ஆன -7-எண்ணப் பண்ணி அருளவும்  வேணும் – கண்டால் பிறக்கும் ஸூ கத்தையும் பண்ணித் தந்து அருள வேணும் அரியது செய்தால் எளியது செய்ய ஒண்ணாதோ

ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர் நீதியால் மண் காப்பார் நின்று–-60- – நாலாயி:2241/3–ஜகத் காரணாமாய் இருப்பது என்னும் இடத்தை அறிந்தவர்கள் கிடீர் –எல்லார்க்கும் சத்தை அவன் என்று அறிந்த வைஷ்ணவர்கள்-ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது-முறை தப்பாமல் நின்று ஜகத் ரஷணம் பண்ணுகிறார் ஆகிறார்-ஸ்வ தந்த்ரன் என்னா ஜகத்து கை விட்டுப் போம் –எளியன் என்னப் பிழைத்துப் போம் –அருமை சொல்லுகிறவர்கள் ஜகத்தை வெளிப்படுத்துகிறார் –அஜ்ஞானத்தாலே முன்பு கை விட்டாப் போலே இப்போது ஜ்ஞானத்தாலே கைவிடப் பார்க்கிறார் –

பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால்-62- – நாலாயி:2243/1-இதுக்கு முன்பு ஒரு நாளும் இந்த பகவல் லாபம் அறியப் பெற்றிலேன் –இவ்வறிவு இல்லாமையாலே இதுக்கு முன்படங்க இப் பேற்றை இழந்து போனேன் –அறிந்து ஆசைப் பட்டார்க்கு வருமதிறே -அதுவும் இல்லை-அறியாமையும் பெறாமைக்கும் நிதானம் இருக்கும்படி சொல்லுகிறார் –ஐயே அறிவு கேடு என்ன பண்ணாதது தான் –இதுக்கு முன்பு அடங்கலும் உள்ளே புகுர நில்லாதே புறம்பே நின்று பண்ணின கர்மங்களின் பலமானது
என் பக்கலில் வாராதபடி அவற்றுக்கு அவன் தடையாக ஆஸ்ரயித்தேன்-முறை அறிந்து பற்றினேன் அல்லேன் -விரோதி நிரசன சமர்த்தன் என்று பற்றினேன்-இத்தால் சொல்லிற்று ஆய்த்து –நப்பின்னைப் பிராட்டி யோட்டைக் கலவிக்கு பிரதிபந்தகமான எருது ஏழையும் அடர்த்தாப் போலே என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி எனக்குத் தன்னைத் தருவானும் தானாகப் பற்றினேன்  –

போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த-72- – நாலாயி:2253/1-காலம் அறிந்து –ரஜஸ் தமஸ் ஸூ க்கள் கழித்து சத்வ நிஷ்டரான ரிஷிகள் ப்ராஹ்மமான முஹூர்த்தத்திலே யுணருமா போலே வானரங்கள் ஆனவை காலம் அறிந்து உணர்ந்து போய்-ஏகாகிளைப் போலே உறக்கம் இல்லை –

ஆதி-கண் நின்ற அறிவன் அடி இணையே – 76-நாலாயி:2257/3–ஆதி காலத்திலே நின்றுள்ளவன்-இத்தால் இவை இழந்த வன்று தான் உளனாய் இருப்பானாய்-அதுக்கு மேலே –இவற்றுக்கு அடங்கத் தான் காரண பூதனாய் யுள்ளவன்-உபாய  வஸ்து ஏது என்ன –
காரணந்து த்யேய -என்று ஜகத் காரண வஸ்து என்கிறதே -இப்படி உபாச்யனுமாய் –
இவன் ஒருநாள் அல்ப அனுகூல்யம் பண்ணினால் பின்னை-கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசிநம் ருணம் ப்ரவ்ருத்த மிவ -பார உத் -47-22-என்கிறபடியே
பின்னை ஒரு நாளும் மறக்கக் கடவன் அல்லாத சர்வஜ்ஞ்ஞனும் ஆவான் -இத்தனை செய்தானாகில் இதுக்கு மேற்பட இவன் செய்வது என் என்னும் ஜ்ஞானத்தை யுடையவன் –

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை -87-– நாலாயி:2268/1-இன்றாக அறிகிறேனோ –இப்போது அறியத் தொடங்கினேன் அல்லேன் –பண்டே அவனுடைய பிரசாதம் யுடையேன் –

திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை -88– நாலாயி:2269/1-ஸ்வ யத்னத்தால் பெறுவோம் என்றவர்களுக்குத் தப்பிற்று –இப்போது அறிந்தேன் –

நூல் கடலான் நுண் அறிவினான்–மூன்றாம் திருவந்தாதி 11- – நாலாயி:2292/4-கூரிய அறிவாலே அறியப் படுமவனாய் உள்ளான் –ஸ்வ யத்னத்தாலே அறிவார்க்கு துர்ஜ்ஞேயன் 

அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் – -மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -12-நாலாயி:2293/1-வ்யதிரிக்த விஷயங்களில் மனஸ் ஸூ போகாதபடி-அறிவாகிற தாளைக் கொத்துத் திண்ணிதான ஸ்ரவண ஜ்ஞானத்தை மூட்டி –

இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய -56-– நாலாயி:2337/2–இறையினுடைய திரு நிறமானது வெளுத்து இருக்கும் சிவந்து இருக்கும் கருத்து இருக்கும்
பச்சென்று இருக்கும் என்று கொண்டு ஆராயும் இடத்தில் நம்மால் ஏக தேசமும் அறியப் போகாது –எண்ணாதே பக்தியால் பேசிக் கொண்டு நிற்கில் நிற்கும் இத்தனை –ஸ்ரீ யபதியினுடைய சம்ருத்தியைச் சிலராலே பேசப்போமோ- அவனும் அவளுமாய் நிற்கிற இடத்திலே சொல்லலாமோ-அவன் கொண்ட வடிவு ஒன்றுக்கும் இத்தனை – அவன் கல்யாண குணங்களைப் பேச முடியுமோ என்றபடி –

வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய் -59-– நாலாயி:2340/1-வாழும் பிரகாரம் அறிந்து கொண்டேன் –சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு வகுத்த சம்பத்து இது வென்று
வ்யுத்பத்தி பண்ணினேன் –புத்தி நாசாத் ப்ரணச்யதி -கீதை -2-62/63-என்னும் படியே –
சப்தாதி விஷயங்களை விநாச்யத்துக்கு உபாயம் அறிந்த இத்தனை இறே முன்பு
பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் மொழி -6-9-9-என்னும் படியே – பகவத் விஷயத்திலே இவனுடைய இச்சையும் அநிச்சையும் இறே உஜ்ஜீவனத்துக்கும் விநாசத்துக்கும் ஹேது-
யதி ஜீவிது மிச்சசி -சுந்தர -21-20- மை போல் நெடு வரை வாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப – விநாசத்தை பண்ணினாலும் விட ஒண்ணாது –

அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை-நான்முகன் திருவந்தாதி –1- நாலாயி:2382/3-ப்ரஹ்மாவை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான் –ஈஸ்வரனும் அறிய வேண்டாதே ப்ரஹ்மா தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –அப்படி நானும் சொல்ல வல்லேனாய் அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –ஆழ்  பொருள்-மங்கிப் போகிற பொருள் -என்றுமாம் –நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு – -நான்முகன் திருவந்தாதி -3
— நாலாயி:2384/2-ப்ரஹ்மாதிகளுக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு பண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-சம்சாரிகளுக்கு ஸூலபனாய் லோயிலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-ஜகத்தை பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் கொண்டு வட தளத்திலே கண் வளர்ந்து அருளின படியையும்-அறிய வல்லார் -இல்லை –சம்சாரத்திலே திருவவதாரம் பண்ணிக் கோயில்களிலே யுகந்தருளி இருப்பதும் செய்து ஏகார்ணவத்தில் கண் வளர்ந்து  அருளின பரம காரணனை நான் அறிந்த படி –ஞாலத்தொரு பொருளை -என்றது கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே-அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை

————–

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5-–:2386/4-தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராத் மகமான ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனானவனே-இத்தை புத்தி பண்ணு

வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்தி-13- – நாலாயி:2394/1-மோஷத்தை வருவிக்க வல்ல விரகு அறியாதே உடம்பை வருத்தப் பண்ணி கூடாம்படி முடித்து துக்கப் படுகிற உங்களுக்கு மோஷத்தைத் தருவிக்கும் மெய்யான உபாயமும் வேதை க சமதி கம்யனுமாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்- பிராப்யனுமாய் இருக்கிறானும் சர்வேஸ்வரன்-

மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ஆற்றம்–50- – நாலாயி:2431/2–எனக்கு மிருத்யு பயம் இல்லாமைக்கும் கொடிய பாபங்கள் என்னை விடுகைக்கும் அனர்த்த பிரசங்கம் இல்லாமைக்கும் காரணம் அறிந்தேன் –திருக் கபிஸ்தலத்திலே காவேரி தீரத்திலே கண் வளர்ந்து அருளுகிற அனுக்ரஹ சீலனான கிருஷ்ணன் யுடைய உக்தியான உத்தம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடந்தது –திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனான அவனுடைய திருநாமங்கள் -என்றுமாம் –

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை –70– நாலாயி:2451/3-சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த பிள்ளை யானவன்-பிரளயம்  கொண்ட பூமியை இடந்து  எடுக்கைக்காக நீருக்கும் சே ற்றுக்கும் இறாயாத-அத்விதீயமான ஸ்ரீ வராஹமாய் பூமியைத் திரு எயிற்றிலே தரித்தது-நான் ஒருவனும் இன்றாக அறிகிறேன் அல்லேன் இது சர்வ லோக பிரசித்தமாய் இருப்பது ஓன்று-

ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த –73- நாலாயி:2454/1–சர்வ லோகத்தையும் யுண்பது உமிழ்வதாய் பிரதிகூல  நிரசனத்துக்கு உறுப்பான திரு வாழியை யுடையவன் –உபாயாந்தரங்களை யருளிச் செய்யாதே தன்னையே யுபாயமாகச் சொன்ன மஹா குணத்தை யறிய வல்லார் யார் –கறுத்த கண்டத்தை யுடைய ரூத்ரனோடு கூடின எட்டுக் கண்களை யுடைய ப்ரஹ்மாவும் அறிய மாட்டான் –

தற்பு என்னை தான் அறியானேலும் தடம் கடலை–77 – நாலாயி:2458/1-என்னுடைய தோஷத்தை உள்ளபடி நான் அறியேன் ஆகிலும்-பிராட்டி பக்கல் யுண்டான வ்யாமோஹ அதிசயத்தாலே பெரிதான கடலைக் கல்லைக் கொண்டு தூர்ப்பதும் செய்து ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –என்னை விஷயீ கரித்து சமஸ்த துக்கங்களும் போம்படி என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்தான்-அவன் விஷயீ காரத்தைக் கண்டே பாபங்கள் எல்லாம் நசித்தன –

பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் -89-– நாலாயி:2470/1—பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன் பழுது போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –-அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு   திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் –
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன் –
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை –
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –
நாலாயி:2477–ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்-என்னுடைய நாதனான யுன்னை –
அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்-இப்போது அறிந்தேன்-சர்வ காரணமும் நீயே-பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய் சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –
நான் அழகிதாக அறிந்தேன் –

காலம்-கொலோ அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே-7- – நாலாயி:2484/4-குளிர்ந்து அழகிதான காலமோ -அறிகிலேன் சம்போக யோக்யமான காலம் தானோ -என்றபடி –

பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும் – 8-
நாலாயி:2485/2,3-தன் உடைமைக்கு  தான் செய்யும் அளவன்றிக்கே பெறாப் பேறு பெற்றால் போலே செய்கிற
இவற்றின் ஹேது அறிந்தோம் –உம்முடைய மநோ ரதம் நாம் ஸூ வியக்தமாக அறிந்தோம்

ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே -10– நாலாயி:2487/4-இன்ன வ்யக்தி என்று அறிகிலேன்-அறிய ஒண்ணாமைக்கு அறையோ அறையோ  – நாவலோ நாவல் -என்றால் போலே –என்னுடைய பாதிப்பு எனக்கு அஸஹ்யமாய் இருக்கிறது
இதற்க்கு ஹேது ஆராய்ந்த அளவில் உன்னுடைய அவயவ சவுந்தர்யமோ
கிளியும் தோற்று இரை எடுக்கவும் தவிர்க்கும் படி குருவி ஓட்டும் ஆயோ என்னும் சொல்லோ
உனது அதரத்தின் தொண்டைப் பழம் போன்ற அழகோ என்று அறிய வில்லையே
ஆகவே அறியாமை வெற்றி கொள்ளட்டும் என்கிறான்

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த-15- நாலாயி:2492/2-தானும் உள்ளான படி இதற்க்கு இணங்காதார் எல்லாரையும் அயலார் என்கிறாள் — பகவத் விஷயத்தில் இத்தனை துவரை இல்லாதவரை அயலார் என்கிறாள் -அவர்களில் தனக்கு உண்டான வ்யாவர்த்தி சொல்கிறது-அறியிலும் அறியக் கூடாது என்று இருக்கிறாள்-
இவள் விரஹம் தான் அவகாகித்த பின்பும் வாய் புகு நீரும் நில நீருமாய் இருக்கிற படியாய் இருக்கையாலே , அவகாகியாதார்க்கும் ,அறியலாமோ என்று இருக்கிறாள் .-பண்டு இவரை  கண்டு அறிவது எவ் ஊரில் என்னா – இன்னார் என்று அறியேன் என்பாரை போலே
கிட்டின போது சம்சயமாய் , உள் புக்கவாறே அறியாமையாலே நிர்ணயமாய் இருக்கிறபடி–
பாஷிக  தோஷம் பரிகரிக்க வேணும்  இறே-

பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற்பாலதுவே -34– நாலாயி:2511/4-க்ரம பிராப்தியும் இவள் உடைய த்வரையும் சாதனம் இல்லை- அப்ரயோகம்  – பலம் அவன் தன்னாலே இருந்த படி-

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை-41– – நாலாயி:2518/1–சிறை கூடத்தில் பிறந்து வளர்ந்தாரை போலே காற்றுக்கு உடல் கொடுத்து போந்த படி –இப்படி ஒத்தது ஓன்று கண்டு அறியோம் –போந்ததை  இது என்று சொல்வான் என் எனில்
சர்வதா சாத்ருச்யம் உண்டாய் இருக்கும் அவை எல்லாவற்றிலும் தத் தத் வியவகார யோக்யதையும் உண்டாகையாலே —ஜாதியை சொன்ன அத்தனை ஒழிய வியக்தியை சொல்லிற்று அன்று –பிரிவாற்றாமை ஒன்றையே அதிகப்  படுத்தும் ஜாதி-இது என்று படுத்தும் ஸ்வ பாவம் -ஜாதி வாடை என்று இந்த வியக்தி -இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்  –இப்படி பட்ட வெவ்விய ஸ்வாபத்தை உடைத்ததாய் இருப்பது ஒன்றும் காண்கிறிலோம்   —

கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள_வண்ண -49-– நாலாயி:2526/2-இவ்விருளை தப்பி ஒதுங்க ஒரு நிழல் இல்லாதபடி பிரளயம் வந்தால் போல் –கண்ட இடம் எங்கும் தானே போந்தது – இவ்விருள் போலே இருப்பது ஒன்றும் நாம் இதுக்கு முன்பு கண்டு அறியோம் –

அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் –56- நாலாயி:2533/3–தென்றல் எல்லாம் பாதகமாய் இறே இதுக்கு முன்பு போந்தது – இப்போது குளிர்ந்தததொரு தென்றல் வந்தது என்கிறாள் –தென்றல் குளிருவது சம்ச்லேஷம் வ்ருத்தம் ஆனவாறே சம்ஸ்லேஷம் வ்ருத்தம் என்னும் இடத்தை அக்ராம்யமாக (மறைத்து )சொல்லுகிறாள்  –அயலிடை ஒருவரும் அறிந்தார் இல்லை -என்கிறாள்–

வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையை –74- நாலாயி:2551/2-பிரளயம் வந்து நலியப் புக்கவாறே -இவற்றின் உடைய ரஷண அர்த்தமாக –  நாம் வந்து கிடக்கச் செய்தே இவற்றை நோவு பட விட்டு இருக்கை யாவது என் -என்று உணர்ந்து அருளியும் –

தளரின்-கொலோ அறியேன் உய்யல் ஆவது இ தையலுக்கே – 83-நாலாயி:2560/4-இத் தையலுக்கு  உய்யலாவது –இப் பெண் பிள்ளைக்கு ஜீவிக்கலாவது -தளரிற் கொலோ –
இஜ் ஜல்பம் இன்றிக்கே ஒழியும்படி வரும் தளர்த்தி யாவது -முடிகை இறே – முடியிலாகாதே -இவளுக்கு   பிழைக்கல்  ஆவது -அறிகிறிலேன்-

எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து -1- நாலாயி:2578/11–அறிவே வடிவாக உடைத்தாய் இருந்துள்ள நித்திரையில் பொருந்தி – அல்லாதார்க்கு முதல் தன்னிலே ஓன்று தோன்றாதே நெஞ்சு இருண்டு இருக்கும்- சஷுராதி கரணங்களாலே பதார்த்த தர்சனம் பண்ணிப் போது போக்குவார்கள்-அக்கண் தன்னையும் செம்பளித்தால் உள்ளொடு புறமோடு வாசியற இருண்டு இருக்கும் இவன் தான் திருக்கண் செம்பளித்தால் பிரகாசம் உள்ளே இறைத்து இருக்கும் அத்தனை –ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுதல் – த்யேய வஸ்து தனக்கு புறம்பு இல்லாமையால் ஸ்வ அனுசந்தானம் பண்ணுதல் – திருவானந்தாழ்வான் மேல் சாய்ந்து அருளினால் இருக்கும் படி –

கடவுள் நிற்ப புடை பல தான் அறி-தெய்வம் பேணுதல் தனாது – நாலாயி:2583/4,5
ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல்
தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6–-பிராமண ப்ரஸித்தமாய் இருப்பது ஓன்று அன்றே -ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் மிக்கு இருக்கிற தான் அறியும் தெய்வத்தை யாயிற்றுப் பற்றுகிறது-அவை தனக்கு என்ன ஒரு உத்கர்ஷம் இல்லாமையால் -மொட்டைத் தலையனை-பனி இரும் குழலன் -(குளிர்ந்தும் பரந்தும் இருக்கிற மயிரை யுடையவன் )-என்று கவி பாடுவாரைப் போலே ஆஸ்ரயிக்கிற இவனுக்கே பரமாயிற்று

இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம் -3-பெரிய திருவந்தாதி- நாலாயி:2587/2–புகழோம் மதியோம் –மதியோம் இகழோம் –என்கிற இவை நல்ல-புகழ்வோம் பழிப்போம் என்கிற இவை பொல்லாது-இவை இப்படி என்று பரிச்சேதித்து அறிந்தேன் ஆகிலும்-த்யாக பரிக்ரஹாதிகள் எல்லாம்-என்னால் பரிக்ரஹவும் போகாது த்யஜிக்கவும் போகாது

முறி மேனி காட்டுதியோ மேல் நாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈது உரையாய்
– 6-நாலாயி:2590/2,3-அறியாதவர்களான எங்களை -அஞ்ஞான் அசக்தன் -நெறி காட்டினால் உபயோகிக்க ஞானாதிகர் இல்லையே-அதனால் நிர்ஹேதுக கிருபை ஒன்றே வேணும்

சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி
–14-நிறத்தால் கரியனாய் யுள்ளவனை-ஆழ வநுபவிக்க அறியாராய்(பிள்ளைத் தனத்தை கண்டு ஈடுபடாமல் வஞ்சித்தாள் என்னுதல் ) ஸர்வேஸ்வரன் என்று உள்ளபடி அறியாராய் என்றுமாம்–நீ யார் போய்த் பூதனை மணிச்சியாய் வஞ்சித்தாள் அன்றே பேயாகையாலே வஞ்சித்தாள் அத்தனை இறே
உன்னைப் பார்த்தால் பூதனை நித்ய ஸூரிகளோடே ஒக்கும் இறே-ஆத்மா தேயும் படிக்கு ஈடாக சப்தாதிகளை புஜித்து-அதனுடைய விபாகத்தை அறிந்து அறிந்து அநர்த்தத்தைப் பலிக்கக் -(பலிப்பிக்க) கடவதாய் இருக்கிற பாம்பில் வாயிலே கை நீட்டுவாரைப் போலே இருக்கிற நீ பூதனைக்கு யார் உனக்கு அண்ணியளோ பூதனை அயோக்யன் என்று அகலுகிற பக்ஷத்தில் – ஈஸ்வரனுக்கு அவத்யம் பிறைக்கைக்கு ஈடாக வளைந்து (அணைந்து) உன் அணைவு பொல்லாது என்னும் இடத்தை அறிந்து அறிந்தும் கிட்டுகிறாய் அன்றோ என்றுமாம் —

சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து – -16-நாலாயி:2600/4–நீ இப்படி எளியையாய்-அது இருக்கைக்கு அடி சூழ்ந்து சொல்லு -புத்தி பண்ணி அருளிச் செய்ய வேணும்

தொல் உருவை யார் அறிவார் சொல்லு -18- நாலாயி:2602/4–இப்படி ஸம்ஸாரிகள் வை முக்யம் பண்ணினார்கள் என்று சோம்பாதே நம் கார்யம் செய்கை நமக்கு எளிவரவோ என்று
காளியனில் காட்டில் தோலாதாராய் இருக்கிற பிரஜைகளை எல்லாம் விஸ்திருதம் ஆக்கின
(காளியன் இடம் தோற்காமல் அவனிலும் நீசர்கள் அன்றோ நாம் ) காரணத்வ ப்ரயுக்தமான குடல் துடைக்கை யுடையவனே பழையதான உன்னுடைய வடிவை -ஸ்வரூபத்தை-வேறு சிலர் அறியப் போமோ-நீயே சொல்லு-பரிபவம் பண்ணின போதோடு பண்ணாத போதோடு
வாசியற ஏக ரூபமான உன்னுடைய ஸ்வரூபத்தை வேறு சிலர் அறியப் போமோ – நீயே சொல்லு

சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே -19- நாலாயி:2603/1-பகவத் விஷயம் நன்று என்றும் விஷய ப்ராவண்யம் அநர்த்தம் என்றும் விடவும் பற்றவும் அறியாத நெஞ்சமே
சூது -விரகு (விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம் -எவற்றை விட்டோம் எவற்றைப் பற்றினோம் என்று அறியாத நெஞ்சமே )

காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம் – 20-நாலாயி:2604/1-நாம் அறியாதே காணப் புகுதல்-அர்த்த தத்வம் இருந்த படியே பேசப் புகுதல் செய்தால் அறிவுக்கு வாய்த் தலையான நெஞ்சுக்கு நாண வேண்டாவோ

அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27–இப்போது உனக்கு ஓடுகிற ஹர்ஷம்-முத் -வடசொல் -ஹர்ஷமே –திருவடிகளில் கீழே பூமியை இட்டுக் கொண்ட ஹர்ஷமோ-திரு முடியாலே ஆகாச அவகாசத்தை எல்லாம் வியாபித்த ஹர்ஷமோ-செறி கழல் -என்கையாலே-திருவடிகளிலே முத்து உண்டாகையாலும்-நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய் —என்கையாலே திரு முடியிலே முத்து உண்டாகையாலும்-அடியிலே படியை அளந்தன முத்துக்களோ முடியாலே விசும்பை அளந்தன முத்துக்களோ-உள்ளீடான முத்து ப்ரகாசமாதல் சாத்தின முத்தாதல்

அழகும் அறிவோமாய் வல்வினையை தீர்ப்பான் -31– நாலாயி:2615/1-புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமா போலே எலி எலும்பான -அல்ப சக்திகரான -நாம் கர்மத்தாலே நம்முடைய பாபத்தைப் போக்குகை அன்றிக்கே ஸர்வேஸ்வரனைக் கொண்டு நம் பாபத்தைப் போக்கும் அழகை யுடையோமாய் ஸர்வேஸ்வரனுக்கு சாயை போலவும் -பாதுகை -பாத ரேகை போலவும் ஆனோம்

யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என்-கொலோ -33– நாலாயி:2617/1-ஏதேனும் ஒரு பதார்த்தத்தை அறியில்-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு என்னும்படியே ஏதேனும் ஒன்றினுடைய ஞானத்துக்கும் அவனை முன்னிட்டு அறிய வேண்டுகையாலே அவனை அறிந்ததாய் விடும் –இதம் என்று புரோ நிட்ட -(நிஷ்ட முன் நிற்கும் )பதார்த்தங்களில் ஒன்றை அறியும் போதும் ஸர்வ ஸப்த வாஸ்யனானவன் ஆகையால் இத்தை அறியும் ஞானம் அவன் அளவிலும் போம் என்றபடி

ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே -37-நாலாயி:2621/1-வழியான அறிவுடையார் யாவது அரிது அன்றேயுக்தமான அறிவுடையாராகை கிடையாது-ஆமாறு -ஆறு -வழி-நாம் நல்ல அறிவுடையோம்-(ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய் )

அறி கண்டாய் சொன்னேன் அது – நாலாயி:2650/4
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-பரிமளம் திரண்ட திருத் துழாயை யுடையனுமாய்-வேதங்களாலேயே ப்ரதிபாத்யனுமானவனை-நெஞ்சே-அறி கண்டாய்-சொன்னேன் உனக்கு அத்தை-1-விரோதி நிரஸனம் பண்ணுவானுமாய்-2-போக்யனுமாய்-3-வகுத்தவனுமானவனை-அறி என்று சொன்னேன்-இது சிலருக்குச் சொல்லுமது அன்று-இத்தைப் புத்தி பண்ணு

யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு –75-
நாலாயி:2659/3,4–உபய விபூதியை யுடைய நீயோ
விபூதிமானை யுடைய நானோ-பெரியார் யார் என்று அறிவார் யார்–சத்ரு சரீரங்களைப் பருகுகிற திருவாழி-அப்ரதிஹத சக்தியான நீ அறிவுதி யாகில் சொல்லு

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை
-நாலாயி:2672/19-–கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –இனி சம்சார பய பீதராய் முமுஷூக்களாய் இருப்பாருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்கிறது- ஸர்வ பல பிரதத்வம்முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை– – நாலாயி:2672/21–தேவர்களாலும் அறிய முடியாத பெருமை-தம்தாமுடைய கண்களின் மிகுதியாலும் ஜ்ஞாதிக்யம் என்கிற இதுவே ஏற்றமாகக் கணிசிப்பார்க்கும் – அவர்களுக்கும் எட்டாத ஸ்வபாவத்தை யுடையவன் என்கிறது -அபிமாநிகளாய் இருப்பார் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானராய் இருந்தார்களே யாகிலும்- அவர்களுக்கும் அறிய ஒண்ணாத படியான உத்கர்ஷம் சொல்லுகிறது ––நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின்-முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –நாலாயி:2672/28-புருஷகாரம்– –தம்முடைய அபேஷிதம் பெறுகைக்கு புருஷகாரம் யுண்டு என்கிறார் – எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ

அறு வகை சமயமும் அறிவு அரு நிலையினை – நாலாயி:2672/33-அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே – நாலாயி:2672/45-நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்-உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –இத்தை அனுபவிக்கைக்கு விரோதியைப் போக்கி அருள வேணும் –இத்தால் –
இஷ்டப் பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் சித்தமான உபாயத்தை பற்றிவிடுகிறார் –என்னுடைய ஸ்வரூப அனுரூபமாக தேவரீர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –நீயும் உன்னுடைய ஸ்வரூப அனுரூபமாக என்னுடைய சம்சாரிக வருத்தத்தைக் கழித்துத் தர வேணும் -என்கிறார்-

ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து – நாலாயி:2678/5–பிரியம் சொல்லுவாரும் ஹிதம் சொல்லுவாரும் சொல்லும் வார்த்தைகளை கொள்ளேன் –கேட்கைக்கு பரிகரம் இல்லாமையாலே

ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார் – நாலாயி:2681/3-தங்களை அழியாது இருக்கச் செய்தே மூதறிவாட்டிகள் ஆனவர்கள் சொல்லுகிறார்கள்–இந்த்ரன் படிகள் இருக்கும்படி என் -என்று ஒருத்தி ஒருத்தியை கேட்க தொண்ணூற்று எட்டு இந்த்ராதிகளை சேவித்தேன் இந்த்ரன் படி கேட்கிறாய் வேணுமாகில் சொல்கிறேன் -என்றாள் இறே
அப்படியே பழையராய் நோய்களையும் அறிந்து நோய்க்கு நிதானமும் அறிந்து பரிஹாரமும் பண்ணுவித்து போரும் மூதறி வாட்டிகள் சொல்லுகிறார்கள் –

ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் -கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறிய கூறுகேனோ – நாலாயி:2684–இவள் நோய் படும் காட்டில் உங்களையும் மறக்க வேணுமோ
உங்கள் வயிற்றில் பிறந்தாரை அவர தேவதைகளால் நோவப் பார்க்க ஒண்ணுமோ-நாய் தீண்டிற்று இல்லை –ஸ்வ யத்னத்தாலே காணப் புக்கு –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றியே அவன் காட்டின வெளிச் செறிப்பாலே அவனைக் கண்ட நான் அறிந்தேன் –அறிந்தாள் ஆகில் இவள் ஆர் என்று தலைக் கட்ட புகுகிறாள் என்று சொல்லி எல்லாரும் ஒக்க தன்னை கூர்க்க பார்த்துக் கொண்டு நின்றவர்களை சம்போதிக்கிறாள் -உமக்கு அறியக் கூறுகேனோ – இவளுடைய நோய்க்கு தேவதாந்தரங்களின் காலிலே விழும்படி கலங்கி இருக்கும் நீங்களும் கூட அறியும்படி வார்த்தை சொல்லவோ –

ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று – நாலாயி:2685/10-இவனுக்கு வேறு ஒரு நினைவு இல்லை -உறக்கமோ -என்று தோன்றக் கிடந்தபடி –அறிவுற்று –சில அசித் பதார்த்தங்களுக்கு அறிவு குடி புகுந்தால் போலே இருக்க உறங்கி உணர்ந்தானாக இருந்தபடி –அவள் போனவாறே உறங்கி உணர்வார் உணருமா போலே உணர்ந்த படி –
நடுவே வந்து அவள் புகுந்தாலே யாகிலும் உறங்கினவன் உணர்ந்தான் -என்று அவளுக்கு தோற்ற கிடந்தான் என்றபடி – அறிவு குடி புகுந்து மூரி நிமிர்வது கொட்டாவி கொள்வதாய் யுணர்ந்த படி –

தண் வாடை சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் – நாலாயி:2698/2–நஞ்சூட்டின ஆயுதம் போலே குளிர்த்தியை யுடைத்தான வாடை–சோரவும் பண்ணா நின்றது
மறுக்கவும் பண்ணா நின்றது-திரள சோரப் பண்ணா நின்றது என்று சொல்லும் இத்தனை ஒழிய செய்கிற வகைகள் பேச்சுக்கு நிலம் அல்ல –

காரார் கடல் போலும் காமத்தர் ஆயினார் ஆரே பொல்லாமை அறிவார் அது நிற்க – நாலாயி:2704/2–இங்கன் சொல்லலாமோ – பத்து மாசம் ஆறி இருந்திலளோ ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் அப்படி இரா விடில் போல்லாதாகாதோ -என்னில் பேர் ஆழமான கடல் போலே ஆசை கரை புரண்டு போரா நிற்க – பொல்லாங்கு சொல்லுவார்கள் -என்று ஆறி இருக்கப் போமோ – ஆறி இருந்தவர்களுக்கு ஆசை அளவு பட்டதாம் இத்தனை இறே –
ஸ்வரூப ஜ்ஞானத்தாலே ஆற்றலாமோ அவ்வடிவைக் காண வேணும் என்னும் ஆசை கரை புரண்டு இருப்பார்க்கு ஸ்வரூப ஜ்ஞானத்தால் ஆற்றினார் உண்டாகில் அவர் ஆசை மட்டமாம் இத்தனை இ றே –

இன்னதோர் காலத்து இனையார் இது பெற்றார்  என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் – நாலாயி:2718/5–இன்னதோர் காலத்திலே ஏவம் வித ஸ்வ பாவராய் இருப்பார் இப்பேறு பெற்றார்கள் என்று சொல்லக் கேட்டு அறிவது இல்லை – மோஷத்து ஏறப்  போனார்கள் என்று சாஸ்த்ரங்களிலே ஸூகோ முக்தோ வாம தேவோ முக்த -என்று சொல்லக் கேட்டு இருக்கும் இத்தனை – நான் கண்டேன் நான் போனேன் என்பார் இல்லை
ஆஸ்திக்யத்தாலே சில சொல்லும் இத்தனை  –உண்டு என்று சொல்லில் அதுக்குப் போம் வழியின் அருமையைக் கேட்கலாகாதோ-

அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு – நாலாயி:2720/2-மோஷம் என்று சொல்லப் படும் பழையதான ப்ராப்யத்தை லபித்தவர்களை இன்னார் என்று சொல்லுங்கோள்-என்று கேட்டால் சொல்லாதே இதுக்கு உத்தரமாக முன்பு சொன்னதையே சொல்லா நிற்பார்கள் அதுக்கு அடி அறிவு கேடராகை –மேல் அறிவு உண்டாக்கிக் கொள்ளவும் ஒண்ணாதபடி அல்ப மனாக்கள்

தென் உரையில் கேட்டு அறிவது உண்டு – நாலாயி:2732/4–அபிமதம் எல்லாம் பெற்று அல்லது மீளாத படியான மடலூரக் கடவர் அல்லர் என்று கொண்டு இங்கனே சொல்லிக் கொண்டு போருவதொரு நிரர்த்தக சப்தம் உண்டு –

அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் – நாலாயி:2733/3-சொல்ல வாய் வேம் தன்மை அறியாதார் – தலை மகனைப் பிரிந்தால் சந்தனம் கொப்பளிக்கும்  என்று அறியாதார் –குழல் ஓசை துடை குத்த உறங்க வல்லார் –ப்ராஹ்மணர்க்கு ஒத்தும் -பாணர்க்கு பாட்டும் போலே -இடையர்க்கு குழல் –அந்த ப்ரஹ்மாச்த்ரத்துக்கு ஈடுபடாதார் –

முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே சூழ் கடலுள் – நாலாயி:2746/3-ந காம தந்த்ரே தவ புத்தி ரஸ்தி -என்று காமதந்த்ரம், அறிந்திலிகோள்  ஆகில் தவிருகிறிகோள்  – பாபம் போகைக்கு பாவனம் என்றாகிலும் மஹா பாரதம் கேட்டு அறியீர்களோ –

அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
– நாலாயி:2756/4,5-அப்படிப் பட்டது என்னுமத்தை யன்றி இவ் வழகுக்கு தக்க வாசகம் இல்லை –அறிவு கெட்டு-
அறியாமையனபடி எங்கனே என்னில் பருப்பருத்தன சில பேசி முடியப் பேச மாட்டாமையாலே பிரித்துப் பேசும் போது பேசலாம் இருவரும் கூடி நின்றால் பேச முடியாது
கண்ணுக்கும் மனசுக்கும் அளக்க ஒண்ணாத விஷயம் ஆகையாலும் கண்டாரைக் குமிழ் நீரூட்டும் விஷயம் ஆகையாலும் அறியாதே -என்றுமாம் –நெஞ்சாவது அறிவு இட்டு வைக்கும் கலம்-வெறும் தரையாகப் போந்தேன் வாழச் சென்று உள்ளது எல்லாம் கொடுப்பாரைப் போலே சர்வத்தையும் இழந்து கடலிலே துரும்பு போலே சௌந்த்ர்ங்கள் வீச
மடலோ -என்று புறப்பட்ட படி-

மன்னும் மருந்து அறிவீர் இல்லையே மால் விடையின் – நாலாயி:2760/4-சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி -யுத்தம் -19-31-என்று கடலைச் சரணம் புக என்றால்  போலே –
மடலைச் சரணம் புகு -என்பாரில்லையே இங்கு ஓர் அந்தராளிகர்-கடகர் – இல்லையோ -என்று கேட்கிறாள்  -என்று பட்டர் –

தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர் – நாலாயி:2768/1-சில சொன்னோமாம் இத்தனை யல்லது என்னால் முடியப் பேசித் தலைக் கட்டப் போகாதே – அப்படிப் பட்ட திருவுருவை –அன்ன திருவுருவம் -என்னலாம் இத்தனை இ றே சொல்லலாவது-மருங்கே நின்றது அறியாதே அறிந்தேன் ஆகில் கால் வாங்கிப் பிழைக்கலாம் கிடீர்-அறியாமையாலே இழிந்து கிடீர் நான் இப்படி பட்டது-என்னுடைய நெஞ்சும் அறிவும் –ஒன்றுக்கும் அழியாதே இருக்கக் கடவ என்னுடைய நெஞ்சு கிடீர் அறிவை இட்டு வைக்கைக்கு கலமான  என் நெஞ்சும் –

தன்னை பிறர் அறியா தத்துவத்தை முத்தினை – நாலாயி:2775/2-சௌலப்யத்தாலே தாழ நிற்க -சிசூபாலாதிகள் அறியாதே வையும்படியாய் இருக்காய்- பரம் பாவ மஜா நந்த அவஜா நந்தி மாம் மூடா -ஸ்ரீ கீதை -9-11-தானான தன்மையைத் தானே காட்டில் அறியலாய்
அல்லாதார்க்கு அறிய ஒண்ணாத அர்த்த தத்தவத்தை – நின்னை யாவர் காண வல்லர்–திருச் சந்த விருத்தம் -8-என்றார் இ றே திரு மழிசைப் பிரானும் –

என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் – நாலாயி:2784/4-மடலிலே துணிந்த படி –என்னிலைமை எல்லாம் அறிவித்தால் –என்னுடைய ஸ்த்ரீத்வத்தையும் குலைத்து மடலூருகை தவிரேன் என்கிற என்னுடைய துணிவை அறிவித்தால் –
உன்னைக் காண்பதோர் ஆசையினால் -1-9-1–என்று  தாயே தந்தையே  யில் ஆசைப் பட்ட படியும்-ஆகிலும் ஆசை விடாளால் -2-7-1–என்று பிறர் -தாயார் -சொல்லும்படி அவ்வாசை முடிய நடந்த படியும்-என் சிந்தனைக்கு இனியாய் -3-5-1- என்றும்
இனியையாம் படி புகுந்த உன்னைப் போகல ஒட்டேன் –3-5-6-என்றும்
கால் கட்டத் தாம் போய்த் திரு வாலியிலே தூது விட இருந்தபடியும் -3-6–ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன்-4-8-3-என்று தம்முடைய பிரணயித்வத்தை அனுசந்தித்து சொல்ல வென்று-ஒருப்பட்டு மோகன்கதையாய்-கொல்லையானால் பரிசளிந்தாள்-4-8-4-என்று பார்த்தன் பள்ளியிலே பரிசளிந்த படியும்
திரு இந்தளூரிலே அயலாரும் எச உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து -4-9-3-
அறிவித்த படியும்
வெருவாதாளிலே-5-5–
வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்றும்
அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ -என்றும்
தாதாடு வனமாலை தாரானோ -என்றும் வாய் வெருவிக்
கோயில் திரு வாசலலிலே முறை இட்ட படியும்
சினவில் செங்கணிலே-7-3-திரு நறையூரிலே கனாக் கண்ட படியும் –
தந்தை காலில் பெரு விலங்கிலே -7-5-திரு அழுந்தூரிலே
என் ஐம் புலனும் எழிலும் கொண்டு  பொன்னம் கலைகள் மெலிவெய்திப் போன படியும்-தெள்ளியீர் தேவரிலே -8-2- கண்ணபுரம் என்று பேசி உருகி வாய் வெருவின படியும்
கரை எடுத்த -8-3- யிலே வளை இழந்த படியும்
தந்தை காலிலே -8-5- நெஞ்சு தாரின் ஆசையில் போகத் துணை யற்று
நாழிகை ஊழியில் பெரிதான படியும்
காவார் மடலிலே -9-4- திருப் புல்லாணியிலே பொய் சொல்லிப் போன படியும்
தவள இளம் பிறையிலே -9-5-தரை கிடந்த படியும்
மூவரில் முன் முதல்வனில் -9-9- திருமலையிலே கூட ஆசைப் பட்டுக் கிடையாமே
திருத் தாய் செம்போத்திலே -10-10-நிமித்தம் பார்த்து இருந்த படியும் -இப்போது மடல் எடுக்கைருக்கிற நிலையையும்-ஆக இந்த நிலைகள் எல்லா வற்றையும் சொல்லுகிறது -எம்பெருமான் —-
தன்னை அழிய மாறியும் பெற வேண்டும்படி யன்றோ அத்தலையில் வைலஷண்யம்
அவன் வரும் தனையும் பார்த்து இருக்கலாம் படியோ என் தசை -என்கிறாள் –

தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் – நாலாயி:2785/4-இவ்வடிவைக் காட்டி ஆற்றாமையை விளைத்து-மடல் எடுக்கும் படி பண்ணி என்னுடைய உடம்பு கொடுப்பதில்லை -என்று இருக்கிற தன் துணிவை எல்லாம் அறிவிப்பேன்-நான் ஆகாது என்று இருந்தான் அத்தனை -என்கிறாள்-இனி அதுக்கு உனக்கு என் -என்ன-லோகம் அடையக் கை விடும்படியாகப் பண்ணக் கடவேன்-பொரி புறம் தடவி தன்னை ஈஸ்வரன் என்று இருப்பார் பக்கல் அவன் இருக்கும் இருப்பை நாட்டிலே வெளியிடக் கடவேன் –

உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான் – நாலாயி:2790/1–நினைத்து முடிய மாட்டா (வாசாம கோசரம்)-அப்படிப்பட்ட சேஷ்டிதங்களை யெல்லாம் உலகத்தாரறியும்படி பிரகரப்படுத்திக் கொண்டு-பரகால நாயகியாகிய நான்-முன்னே முளைத்து எழுந்து வளர்ந்து விளங்குகின்ற சிறந்த அழகிய பனைமடலைக்கொண்டு மடலூரக்கடவேன்.

உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே-2- – நாலாயி:2792/4-விண்டு நீங்காத சிநேகத்தை உடையராய் இருந்துள்ள எம்பெருமானார் உடைய நிரவதிகமான சீல குணத்தை ஒழிய என்னுடைய நெஞ்சானது-வேறு ஒன்றையும் சிந்திக்கிறது இல்லை –எம்பெருமானார் சரம பர்வத்தில் ஊற்றமுடையவர் ஆகையாலே அவ் ஆழ்வாருடைய-திருவடிகளிலே –இவ் இராமானுசக்கோ குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு- திருநகரியில் இன்றும் திருமங்கை ஆழ்வார் அடிக்கீழ் எம்பெருமானாரை சேவிக்கிறோமே –தாம் மகானுபவராய் இருந்து வைத்தும் -என்போலாம் மந்த மதிகளோடே -புரையறக் கலந்து பரிமாறின சீல குணம் ஒன்றிலே ஈடுபட்டு -அது ஒழிய வேறு ஒன்றிலும் போக மாட்டாது- இப்படி ப்ரவணனாய் ஆகுகைக்கு விரகு ஒன்றும் அறிகிலேன்-

அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே -19- நாலாயி:2809/4-இவ் அர்த்தத்தை விச்தீர்னையான இந்த ப்ர்திவியில் உள்ள சேதனருக்கு அஞ்ஞான ஜ்ஞாபனம் பண்ணுகைக்கு நின்று அருளின –அன்றிக்கே –இவ் அர்த்தத்தை மகா பிருத்வியில் உள்ளோர் எல்லாரும் அறியும் படி நின்று அருளின -என்னவுமாம் –ஏதத் வ்ரதம் மம – என்கிறபடியே பக்த கங்கணராய் இருக்கிற என்றபடி –ஸ்ரீ எம்பெருமானார் –அடியேனுக்கு அபர்யாப்த்தாம்ர்தம் -நிரதிசய போக்யர் -என்றபடி –கற்றவர் மற்றவர் என்கிற வேறுபாடு இன்றி உலகம் எங்கும் உள்ள மக்கள் அனைவரும் செல்வம் தொடங்கி-தெய்வம் ஈறாக நமக்கு பயன்படுவது திருவாய் மொழியே -என்று உணர்ந்து – கொள்ளும்படி ஸ்ரீ எம்பெருமானார் செம் தமிழ் ஆரணத்தை பரப்பி பேணினார் -என்றபடி 

ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு -25- நாலாயி:2815/2-தெளிந்தவர் தான் யார் –நித்ய விபூதியில் இருந்தவர்கள் ஆகில் -சதா பச்யந்தி -என்றும் -விப்ராச -என்றும் -ஜாக்ர்வாசா -என்றும் –சர்வஜ்ஞம் உடையவர் ஆகையாலே -அறியக் கேட்டவர்கள் இத்தனை –யாநிசா சர்வ பூதாநாம் தஸ்யா ஜாகர்த்தி சமயமி – என்னும்படி அஜ்ஞானத்தை விளைப்பிக்கும் பூலோகத்தில் இருந்தவர் தெரிகிலர்-என்றபடி –

பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே -57- நாலாயி:2847/4-எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு முன்பு அநாதி காலமே தொடங்கி ஆவிர்பூதமாய் இருக்கிற என்னுடைய -தேகாத்ம – பிரமமும்-ஸ்வ ஸ்வா தந்த்ர்யா பிரமமும்-அந்ய சேஷத்வ பிரமமும் -அநுபாய உபாயத்வ பிரமமும் -எங்கே சென்றது கண்டிலேன் –அஞ்ஞானமானது மனசுக்கு தோற்றுகிறது இல்லை –பிரத்யஷமாக காணப்படுகிறது இல்லை -பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணாதே -கண்ட ஒன்றிலே மேல் விழுந்து மண்டிகைக்கு உறுப்பான அஞ்ஞானம் வாசனையோடு போய்த்து என்றபடி –த்யஜபட தூரதரென தான பாபான் –என்றாப் போலே அஞ்ஞானம் அடங்கலும் தூரதோ நிரச்தம் என்றது ஆய்த்து –பெறற்கு அரிய எம்பெருமானார் ஆகிய பேறும் பேற்றினை இவ்வுலகிலே பெற்று விட்டேன் .
பெற்றனன் என்று கூறி -மீண்டும் பெற்ற பின் என்று அநுவாதம் செய்கையாலே இதனது பெறாப் பேறாம் தன்மை புலப்படுத்தப் படுகிறது .-இப் பேற்றினை பெற்ற பிறகு -தக்கது இது -தகாதது இது -என்று பகுத்து பாராது கண்ட ஏதேனும் ஒரு பொருளிலே
ஈடுபடுகைக்கு உறுப்பான பேதைமை -அறியாமையை நான் –கண்டிலேன் .என்கிறார் .
பேதமையை பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியாத படி அடியோடு அது ஒழிந்தமையின்
இனி அது தலை காட்டவே முடியாது என்பது கருத்து – தன் இயல்பினை விஷய வைலஷண்யம் மாற்றியது போலே இருள் தரும் மா ஞாலத்தின் இயல்பையும் மாற்றி விட்டது -என்பது உட் கருத்து–அறியேன்-தெரியவே தெரியாது என்கிறார்– தெரிந்து விட வில்லை வாசனையே தெரியவே தெரியாது-ஸ்வாமி திருவடிகளைப் பெற்ற பின்–

உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே -59– நாலாயி:2849/4-தன்னை ஒழிந்தது அடங்கலும் பிரகாரமாய்-தான் பிரகாரியாய் இருக்கையாலே ஸ்ரீ நாராயண சப்த வாச்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன் இந்த த்ரிவித சேதன-வர்க்கத்தையும் தனக்கு சேஷமாக உடையானாய் இருப்பான் என்று –அத்யவசித்து -விசதமாக தெளிந்து கொண்டு –அறியத் தக்கார் இல்லை –பிபேத் அல்ப்ஸ் ருதாத் வேதொமாமயம் பிரதியிஷ்யதி -என்கையலே- அத்தாலே ஸ்வரூப நாசமே சித்திக்கும் இத்தனை ஒழிய ஸ்வரூப சித்தி இல்லை என்றது ஆய்த்து –இங்கனம் உயிர்களை உடலாக உடையவன் நாரணம் என்னும் பொருளை எம்பெருமானார் காட்டிலரேல்-
யாரே ஆராய்ந்து அறிய வல்லார் –இனி உலகில் ஜீவாத்மா தன் பயனுக்காகவே உடலை பயன் படுத்திக் கொள்வது போல பரமாத்மாவும் தனது போகம் அல்லது லீலை என்னும் பயனுக்காகவே எல்லாப் பொருளையும் உபயோகப் படுத்திக் கொள்வதனால்-
உடலுக்கு ஆத்மா போலே உலகிற்கு ஈஸ்வரன் சேஷி யாகிறான் -என்க .

ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே-79- – நாலாயி:2869/4-பூ லோகத்தில்-இருக்கிற சேதனர்கள் நல்ல பரி சுத்த ஜ்ஞானத்தை இழந்து போனார்களே –அத்தால் நம்முடையுபதேசமும் வெறிதே தலைக் கட்டிற்று –சம்சயாத்மா விநச்யதி -என்று இவர்கள் நசித்துப் போனார்களே ஐயோ -என்று சர்வ பூத ஸூஹ்ருதர்-ஆகையாலே அவர்களுக்காக ஸ்ரீ அமுதனார் அவசாதப் படுகிறார் காணும் –ஸ்ரீ இராமானுசன் உய்யக் கொள்ள வல்ல தெய்வமாக காத்து இருக்க -வையத்து உள்ளோர் வேறு தெய்வத்தை தேடுவது – அவரது மகிமையை அறியாது தம்மிலே அவரும் ஒருவர் தானே -என்னும் எண்ணத்தாலே –
அவரை உபஷித்தமை யினாலேயே என்க-தேடும் உய்யக் கொள்ள வல்லதான தெய்வம் வேறின்மையின் கிடைக்கப் பெறாமையின் – மனக்கிலேசம் மிக்கு உடம்பு உலர்ந்தது -என்க –நல் அறிவை -உண்மை ஞானத்தை -தருமவர் காத்து நிற்கிறார் .-உய்யும் வேட்கைக்கும் குறை இல்லை-நல் அறிவைத் தரும் ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றி -நல் அறிவைப் பெற்று -உய்வுறாமல் இழக்கின்றனரே என்று இரங்குகிறார்-அவமே ஐயப்படா நிற்பார் –
தாமாக அறிந்து பற்றுகின்றிலர் ஆயினும் -ஸ்ரீ எம்பெருமானாரை பற்றுவதாலேயே நீங்கள் உய்வுற முடியும் –என்று அறிவுறுத்தினால் -அதனையும் நம்பகில்லாது –ஐயப்படா நிற்பர்–
தமக்கும் தெரியாது சொன்னாலும் புரியாது . இவ் வையத்தில் உள்ளோர் நிலை இருந்த படி ஏன் ! என்கிறார் 

சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர் –85- நாலாயி:2875/2–வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய –என்றும் – வேத வேத்யே பரே பும்சி -என்றும் – வேதே ராமாயனே புண்யே -என்றும் ஆதவ் மத்யே ததான் தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்றும் –
உளன் சுடர் மிகு சுருதியுள் -என்றும் -ஸ்ருதி ஸ்ரசி விதீப்தே–என்றும் சொல்லுகிறபடியே-வேத சிரச்சுகளால் கட்டடங்க பிரதி பாத்யனாய் – ஜ்யோதிஷாம் ஜ்யோதி -தேஜசாம் ராசிமூர்ஜிதம் – என்கிறபடியே நிரவதிகமாக பிரகாசிக்கிற சர்வேஸ்வரனை –
பதிம் விச்வச்ய -என்கிறபடியே -நமக்கு பிராப்த சேஷி என்று அறிய மாட்டாதே –வேதத்தின் உட் பொருளும் -அதன் உச்சியில் மிகவும் பிரகாசிக்கும் ஸ்வயம் பிரகாசமான வஸ்த்வுமான ஸ்ரீ இறைவனை வேதியர்கள் ஓதி இருந்தும் -அவர்களால் ஓதப்படுவது ஸ்ரீ இறைவனைத் தெரிவிக்கும் நூலாய் இருந்தும் – நமக்கு -ஸ்ரீ நாதன் -என்று அவ் இறைவனை அறியாது புறம்பே தொண்டு பட்டு உழல்கின்றனரே என்று வருந்துகிறார் .-பிரதானம் ஆகிய அசித்துக்கும் -ஷேத்ரஞ்ராகிய சித்திற்கும் -அவனே பதி என்று அறியாமையாலே
புறம்பான உலகியல் இன்பங்களிலே உள்ளம் ஈடுபட்டு -அதற்காக கண்ட கண்ட வர்களுக்கு தொண்டு பட்டு உள்ள வேண்டியதாயிற்று -வேதம் கற்றது பயன் அற்றதாய் ஆயிற்று –-ஸ்ரீ இறைவன் நாதன் -நாம் சேஷப்பட்டவர் -என்று அறிந்து -அவன் நல் தாள் தொழ வில்லையானால் –கற்றதனாலாய பயன் என் கொல் –சதுர்வேத தரோ விப்ரோ வாசுதேவம் நவிந்ததி வேதபார பராக்ராந்த சவை ப்ராஹ்மண கரதப -என்று எந்த பிராமணன் நால் வேதங்களையும் நெஞ்சில் தாங்கி கொண்டு இருப்பினும் ஸ்ரீ வாசுதேவனை அறிய வில்லையோ –அவன் வேதச் சுமையின் பழுவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பிராமணக் கழுதை யாவான் -என்றபடி குங்குமம் சுமந்த கழுதை போல் ஆயினரே –இது என்ன பேதமையோ-என்கிறார் .

தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே – 97-
நாலாயி:2887/3,4–தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்டே ப்ரிய தர்சனம் -என்னுமா போலே இது-தான் துர்லபம் –
விஷய ப்ரவணனுக்கு அத்தை விட்டு ஸ்ரீ பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல்-அன்றிக்கே –பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே வருகைக்கு உள்ள வருமை -என்றும் சொல்லுகிறபடியே மேட்டுமடையான இவ் அத்யாவச்யத்தை உடையவர் ஒருவரும் இல்லை என்று அறிந்து – இல்லை என்று திரு உள்ளம் பற்றி -என்றபடி –இந்த ஸூஷ்ம அர்த்தத்தை தெளிந்து இருக்குமவர் இவர் ஒருவரே என்று இருக்கிறார் காணும் ஸ்ரீ அமுதனார் –

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –2903-1-1-5–அவரவர்-சத்வாதி குண பேதத்தால் வந்த பிரகிருதி பேதத்தைச் சொல்லுகிறது–தமதமது குண பேதத்தால் வந்த பல பதத்தைச் சொல்லுகிறது-அறிவறி-அதுக்கு அடியான ஜ்ஞான பதத்தைச் சொல்லுகிறது-வகைவகை-மார்க்க பேதங்களாலே-அவரவர்-அவ்வோ பல பிரதானத்துக்கு சக்தராக ஸ்வீகரித்த தேவதைகளை இறையவர் என-அவர் அவர்களே தம்தாமுக்கு ஸ்வாமிகள் என்று-வடி யடைவார்கள் ஆஸ்ரயிப்பவர்கள்-அடி அடைவார்கள் -என்று ஸ்வ கோஷ்டி பிரசத்தியாலே அருளிச் செய்கிறார்

சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் – —புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே-1-1-8- – நாலாயி:2906/3,4–தேவர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய ஒண்ணாத நிலையை யுடைத்தான-ஆகாசம் முதலாய் யுள்ள சமஷ்டி ரூப ஸமஸ்த வஸ்துக்களும்-வரிஷ்டமான காரணமாய் அவற்றை நிஸ் சேஷமாக உப சம்ஹரிப்பதும் செய்கையாலே வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி சம்ஹார கர்த்தாக்களாய்க் கொண்டு பரரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் பரனானவன்-ருத்ரனும் -ப்ரஹ்மாவும் என்று பிரசித்தராம்படி-அத்விதீயமான புர த்ரயத்தை தஹித்தும் தேவர்களுக்கு ஞானத்தை உபதேசித்தும்-அண்டாந்தர வர்த்தி லோகங்களை சம்ஹரித்து அவற்றை ஸ்ருஷ்ட்டித்தும் அவர்களுக்கு உள்ளே ஆத்மாவாய் நிற்குமவன் –

அமைவு உடை நாரணன் மாயையை அறிபவர் யாரே-1-3-3- – நாலாயி:2923/4–தான் என்கிற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அன்வயிக்கையாலே நாரணன் -என்னும் திரு நாமத்தை யுடையவன்-சகல சேதன அசேதனங்களையும் தனக்கு பிரகாரமாக யுடைய தான் தன்னுடைய விபூதியிலே ஒரு பிரகாரத்துக்கு தான் பிரகாரமாய் -அவர்களுக்கு நியாம்யனாய் இருக்க ஆச்சர்யம் ஒருவர்க்கும் நிலமோ-பிதா புத்ரேண பித்ருமான் யோநியோ நௌ நாவேத வின்மநுதே தம் ப்ருஹந்தம் -இத்யாதி-நித்ய ஸூரிகள் அனுபவத்திலே அந்ய பரர் ஆகையாலே அறிய மாட்டார்கள்-ப்ரஹ்மாதிகள் துர்மாநத்தாலே அறிய மாட்டார்கள் சம்சாரிகள் விஷய பிரவணராய் அறியார்கள்-இவர் போல்வார் -எத்திறம் -என்று மோஹித்து கிடப்பார்கள்-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம் பெருமான் -யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம் பெருமான்-1-3-4- – நாலாயி:2924/2–அநாஸ்ரிதர் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளே யாகிலும் ஒரு ஸ்தூல ஆகாரமும் அறிய அரியனாய் இருக்கும் –தன்னை உட்புக்கு அறிய மாற்றிற்று இலர்களே யாகிலும் ஆபாதப்ரதீதி யாகவும் அறியப் போகாத படியாய் இருக்கும் –நேரே கடிக்கமலத்து உள்ளிருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை யான் -என்னக் கடவது இறே-எம்பெருமான் உகவாதார் கண் படாதபடி இருக்கிற இடம் தன் பேறாக உகக்கிறார்-அறிவில் குறைந்த இடைச்சிகள் -குரங்குகள் -ஆகிலும் ஆஸ்ரிதர்க்கு இப்படிப் பட்டான் என்று பரிச்சேதிக்கலாம் படி இருக்கும்
எம்பெருமான் ஆஸ்ரிதர்க்கு கை புகுந்து இருக்கிற இடமும் தம் பேறாக உகக்கிறார்

ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற -1-3-7-– நாலாயி:2927/1-மூர்த்தி த்ரயமும் ஏகாத்ம அதிஷ்டதமோ–அநேக ஆத்ம அதிஷ்டிதாமோ-அநேக ஆத்ம அதிஷ்டிதமானால் அவர்களில் பிரதானன் எவன் என்று அறிய ஒண்ணாத ஸ்வ பாவத்தை யுடையராய் நின்ற

சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்-1-5-3– – நாலாயி:2945/3-ஜ்ஞாநாதிகரரான ப்ரஹ்மாதிகள் உடைய ஜ்ஞானத்துக்கும் கோசரம் அல்லாதான்
யன்நாயம் பகவான் ப்ரஹ்ம ஜ்ஞாநாதி புருஷோத்தமம்

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை -1-5-7– நாலாயி:2949/1-இப்போது அடியேன் என்கிறது அடிமைக்கு இசைந்து அன்று-ஜ்ஞானா நந்தகளோபாதி நிரூபகமாக சேஷத்வத்தை பிரதிபத்தி பண்ணி இருக்கையாலே-அஹம் என்கிறவோ பாதி -அடியேன் -என்கிறார்-அல்ப ஜ்ஞானத்தை யுடையவன்-ஜ்ஞானாதிகரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் அறிய அரியவனை ஷூத்ர விஷயங்களையும் பரிச்சேதிக்க மாட்டாதவன் நான் –அவன் அதிகராலும் அபரிச்சேத்யன்-ஸ்வ தஸ் சர்வஜ்ஞனான தனக்கும் அறியப் போகாது -தனக்கும் தன் தன்மை அரியான் இறே-பர்வத பரமாணுக்களுக்கு உண்டான சேர்த்தி போலே இறே 

மிகும் சோதி மேல் அறிவார் எவரே –2-2-5- நாலாயி:3024/4–இவனை ஒழிய வேறே சிலர் உண்டு என்று சொன்னால் வைதிகராய் இருப்பாரில் இசைவார் உண்டோ -என்கை
இவ் உபநிஷத் பிரசித்தி வேறு ஒருவர்க்கு உண்டோ என்கை-வைதிக –க — தஸ் யோத்பத்திர் நிரூப்யதாம்-

உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –2-2-7-
– நாலாயி:3026/3-அத்யகாதமாய் ஒருவருக்கும் தெரியாதே
அறிந்த தோற்றம் -ஆச்சர்யமான மானஸ வ்யாபாரமானது ஒருவருக்கும் அறிய ஒண்ணாது
அவனுடைய பாஹ்யமான வியாபாரமும் நிலம் அன்று மானஸ வியாபாரமும் ஒருவருக்கும் அறிய நிலம் அன்று என்கிறது –

அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-
நாலாயி:3032/3,4–வளர்த்த தாயை வ்யாவர்த்திக்கிறது –எனக்கு பிரியமே செய்யக் கடவ தாயாய்–நேரே உத்பாதகனாய் கொண்டு ஹிதைஷையாய்-சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்
ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இறே–ஸ்வாமி-இவ் உபகாரங்களை -உடையவன் ஆகையால் செய்தாய் என்கிறார்-மாதா பிதா பிராதா -இத்யாதி
நாராயண -என்கிறார்-நீ செய்தன -பேசவும் போகாது -நினைக்கவும் போகாது -நீ செய்யும் என்னும் அத்தனை-உபகரித்த நீயே அறியும் அத்தனை –நான் அதுக்கு இலக்காய் குமிழ் நீர் உண்ணும் அத்தனை -என்கிறார் –

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே
–2-3-3– – நாலாயி:3033/3–கண் அன்பு செய்வித்து-வைத்தாயால்-அறிவு கேட்டைப் பண்ண வற்றாய்-துஸ்தரமான சம்சாரத்திலே இருக்கிற என்னை –அடியேன் -என்கிறது -அஹம் சப்த பர்யாயம் –அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே -பிராப்தி பலமான அடிமையிலே ஸ்நேஹத்தை பிறப்பித்து வைத்தாய்-அடியேன் என்கிறது -நமக்கு அர்ஹமான வஸ்து இப்படி எளிவரவு படுவதே –என்று செய்து அருளின அத்தனை இறே என்றுமாம் –இங்கே வைத்து பகவத் விஷயத்தை அவஹாகிப்பித்தது-அத்தாலே ஒரு தேச விசேஷத்திலே பெறும் பேறு சாத்மிக்கைக்காகவும்-
ப்ராப்யத்தில் த்வரை விஞ்சுக்கைக்காகவும் இறே-போக்யதை மிக்கு இருக்கிறபடி –
மேல் தம்மை வசீகரித்த படிக்கு நிதர்சனம்–தன் நெஞ்சை ஒளிப்பாரைப் போலே பிராட்டியும் அறியாத படி –சேர்ப்பால் போலே போக்யதை மிக்கு இருக்கிறபடி –தன்னைத் தாழ விட்டு அர்த்தியான படி – நிலம் என்றால் -அவன் முகம் பாராமையாலே மா வலி என்றான் -முதல் பேர் சொல்லுவார் இல்லாமையால் அவன் பார்த்து உனக்கு வேண்டுவது என் என்ன மூவடி என்றான் இப்படி அந்நவிதமான பேச்சாலே வசீகரிக்கை-சுக்கிராதிகள் இவன் சர்வேஸ்வரன் -தேவ கார்யம் செய்ய வந்தான் -என்ற வார்த்தை செவிப் படாத படி தன் பேச்சாலே வஞ்சித்தான் –அந்நிய பரமான என் ஆத்மாவில் புகுந்து -தன் குண சேஷ்டிதாதிகளாலே வசீகரித்து –
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று-அறியாமை வஞ்சித்தால் போலே – எனதாவியுள் கலந்தே-
அறியா மா மாயத்து அடியேனை-அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து- வைத்தாயால்-என்று அந்வயம்

பட்ட போது எழு போது அறியாள் விரை – 2-4-9-நாலாயி:3050/1–உதித்ததும் அஸ்தமித்ததும் அறிகிறிலள் -இனிச் செய்வது என் -இது தாயார் இருந்தபடி என் என்னில்
ராத்திரியில் நித்திரை காணாமையாலும் -பகலில் வார்த்தை சொல்லிப் போது போக்காமையாலும்

பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே-2-6-2- – நாலாயி:3065/4-பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் – இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி –

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-3084-ஜ்ஞான பிரகாச த்வாராமிகில் -நெஞ்சே வணங்கு -ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான ஏற்றம் உனக்கு உண்டாகில் உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே விழப் பார் –திண்ணம் அறி-இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு-அறிந்து அறிகை தானே போரும் பிரயோஜனம் -அதுக்கு மேலே
மருடி யேலும் விடேல் கண்டாய்-உனக்கு ஒரு பிச்சு உண்டு இறே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது – நாம் இவ்விஷயத்தை தூஷிக்கை யாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப் பார் கிடாய் –

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –
2-7-12– நாலாயி:3086–ப்ரஹ்மாதிகள் பாசுரம் இருக்கிற படி -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஒருவருக்கும் தரை காணப் போமோ –சதேவ என்கிறபடியே -ஜகத்துக்கு த்ரிவித காரணமும் தானே யாய் இருக்கிற படியை தான் அறியப் போமோ –ஆபத் ஸகத்வத்தைத் தான் அறியப் போமோ
ஆமோ தரமறிய ஒருவர்க்கு -என்றே தொழுமவர்கள்-தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய- எங்களை ஒழிய ஒருவருக்குத் தான் அறியப் போமோ என்பர்கள் -இப்படி சொல்லிக் கொண்டு தொழும் ஸ்வ பாவருமாய்-அவனுக்கு சரீரவத் அந்தரங்கரான ருத்ரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் தான் அறியலாமோ-தன் குண ஆர்ணவத்தை என் பக்கலிலே மடுத்து என்னை அடிமை கொண்டவனை –
எம்மானை என்னாழி வண்ணனையே-தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை-ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்களாய் -தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்- தரமறிய ஆமோ–என்று அந்வயம்-

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன் – -2-9-9-
நாலாயி:3107/1,2-அவனுக்கு கலக்கம் இல்லாமையால் -தன்னைத் தருகைக்கு எதிர் சூழல் புக்கு திரிய -நான் என்னை முடிய சூழ்த்துக் கொண்டேன்-தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்-

இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே-3-1-10- – நாலாயி:3130/4-பிறையை ஸீரோ பூஷணமாக உடையவன் ஆகையால் போக பிரதன் ஆகையும்-ஜடாதரன் ஆகையால் அந்த போகம் தபஸாலே சாத்தியம் என்கையும்–சதுர்முகோ ஜாயதே -என்று உன்னாலே ஸ்ருஷ்டனாய் ருத்ரனுக்கும் கூட ஜனகனான ப்ரஹ்மாவும் ஷேத்ரஞ்ஞதயா ஸம்ப்ரதிபன்னனான இந்திரனும்-நீ ஸ்வாமி என்று அறிந்து ஏத்த அத்தாலே சர்வேஸ்வரனாய் இருக்கும் இது விஸ்மயமோ உன்னாலே ஸ்ருஜ்யரான ப்ரஹ்மாதிகள் உன்னை ஸ்தோத்ரம் பண்ண நீ இருக்கும் இருப்பு உனக்கு அவத்யம் அன்றோ –

கூவும் ஆறு அறியமாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ-3-4-2- – நாலாயி:3155/1-பக்தி பாரவசியத்தாலே-பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டேன் என்னுதல் – இயத்தா ராஹித்யத்தாலே சொல்ல மாட்டேன் என்னுதல் அல்லது அர்த்தங்களில் அவிசதமாய் இருப்பது ஓன்று உண்டாய் சொல்லுகிறார் அல்லர்

எண்ணும் ஆறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே -3-4-9— நாலாயி:3162/4-இவன் படிகளுக்கு என்னால் பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது-சேதன அசேதனங்கள் உடையான் என்று பிரயோஜகத்தை சொல்லலாம் அத்தனை -என்கிறார் –

அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும் -3-10-10-– நாலாயி:3229/2-அளவுபட்ட இந்திரியங்கள் -பரிச்சின்ன விஷய க்ராஹங்கள் இறே -அவற்றுக்கு அறிய ஒண்ணாத படி அவிஷயமாக நிற்கும்

தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-சத்ருசமாகவும் சம்பந்தியாகவும் உள்ள பதார்த்தங்களை அவனாக அனுசந்திக்க நித்ய ஸூரிகள் வடிவு போலே இவள் வடிவும் அப்ராக்ருதமாய் இருக்கிறபடி-அவர்களைக் காட்டில் இவளுக்கு வாசி –பருவத்தாலே இளையளாய் முக்தையாய் இருக்கும் –-அவர்கள் பிரதம ஜா யே புராணா-என்னும் படி இறே இருப்பது-இவள் தொடங்குகிறது எது-தலைக் காட்டுகிறது எது -என்று ஒன்றும் தெரிகிறது இல்லை –

அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – -4-4-3-நாலாயி:3266/1-தாஹகம் என்று அறிந்து போருமத்தை தழுவா நின்றாள்-மந்த்ர யவ்ஷாதிகளாலே பிரதிபந்தக சக்தி தான் உண்டாயத் தழுவுகிறாள் அன்றே-தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம் -என்று ஒளி உடைமையை பார்த்து தழுவா நின்றாள் –பொரு நீர்க் கடல் தீப்பட்டு எங்கும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப -என்னுமா போலே மாணிக்கப் படி சாத்தி வந்து தன்னோடே அணைவதாக நிற்கிறானாக கொண்டு தழுவா நின்றாள் –

ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற -4-4-5-– நாலாயி:3268/3-சர்ப்பம் என்று மீள மாட்டு கிறிலள்-இது என்னாய் விழக் கடவது -என்கிறாள் -இவளைக் கிடையாது ஒழிய அவனைக் கிடையாது-அவனைக் கிடையாது ஒழிய உபய விபூதியும் கிடையாது -சர்வ சம்ஹாரமாக புகுகிறதோ என்கிறாள்

ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே -4-5-4-– நாலாயி:3278/4-ஆவி -நிருபாதிகமான சர்வாத்மா –ஆத்மன ஆகாசஸ் ஸம்பூத–சர்வாத்மா –என் ஆவியை -அத்யந்தம் நிஹீனனான என்னை செய்த ஆற்றையே.-யான் அறியேன்-விபுவான தான் அணு பரிமானனான என்னைத் தன்னோடு ஒத்த ஆனந்தத்தை உடையேனாம் படி பண்ணினான்-ஏஷ ஹ் யேவா நந்தயாதி – வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் -என்னப் பண்ணினான் – சர்வ சரீரியானவன் ஸ்வ சரீரத்தில் ஒன்றைப் பெறப் பேறாகத் தலையால் சுமப்பதே-யான் அறியேன் -உபகாரத்தில் குமிழ் நீர் உண்ணும் அத்தனை போக்கி பாசுரம் இட்டுச் சொல்லப் போமோ உபகார ஸ்ம்ருதியும் அவனது என்னவுமாம் தன்னோடு ஒத்த ஆனந்தத்தை உடையனாம் படி பண்ணி அதுக்கே மேலே என் பக்கல் பண்ணுகிற விசேஷ கடாக்ஷம் என்னால் பாசுரம் இடப போமோ -என்கிறார்

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே-4-7-6- –
நாலாயி:3302/4—அடுத்து அடுத்து பார்த்து-சர்வாதிகனாய் துர்லபனான உன்னை காண் கைக்காக-அதிசபலனான நான்-வாயால் சொல்ல மாட்டாதே நெஞ்சினுள்ளே ஆசைப்படா நின்றேன்-இதுக்கு அடி என் அறிவு கேடு இறே-இவ்விஷயத்தில் ஆசையும் அறிவு கேடு ஆகிற படி என் என்னில்-சதா ஸந்நிஹிதனாய் சக்தனாய் இருக்க முகம் காட்டாது ஒழிகிறது -வர நினையாமை என்று இருக்க மாட்டாது ஒழிகிறது அறிவு கேட்டாலோ என்றோ–சர்வ காலமும்-பேற்றுக்கு பிரதி பந்தகமான சரீரத்தின் உள்ளும்-பெறுகைக்கு இருக்கிற ஆத்மாவினுள்ளும்-மற்றும் இந்த்ரியங்களிலும்-பிரியாதே எங்கும் வியாபித்து நின்றாய்-இப்படி ஸந்நிஹிதனாய் வைத்து செய்யாது ஒழி கிறது செய்ய நினையாமை என்று மிகவும் அறிந்து வைத்தே ஆசைப்படுகிறது மதிகேடு இறே

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–,-4-7-7-
பரத்வம் என்ன -பஜ நீயத்வம் என்ன -ஸுலப்யம் என்ன -அபராத சஹத்வம் என்ன -இவ்வடைவிலே ஞானம் பிறக்க பிறக்க அந்தக்கரணமும் க்ரமத்தாலே தெளிந்து-ஞானம் பிறந்த நான் –-பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து-பிறப்பதும் இறப்பதுமாய் நின்று நான் தடுமாறித் திரிகிற அறிவு கேடு போகப் பெற்றேன் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்று நான் அபேக்ஷித்து பெற்றேன்-இவ்வளவு பெறுகைக்கு முதல் காட்சியைச் சொல்கிறார் -வைத்த வளையத்தை காட்டி யாற்று இவரை அநந்யார்ஹர் ஆக்கிற்று-பெற்ற அம்சத்தாலே திருப்தி பிறவாத நான் – நிரதிசய போக்யனான உன்னைக் கண்டு கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -என்று அந்வயம் –

அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே-4-8-5- – நாலாயி:3312/4–இந்த ஸம்ஸா: மண்டலத்திலே மிகுந்த அருளையுடையவன்-பரமபதவாஸத்திற்காட்டிலும் இந்நிலவுலகில் வஸிப்பதே எம்பெருமானுக்கு மிகவும் ப்ரியம் என்றவாறு.-‘த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க அது உண்டதுருக்காட்டாதே தேஸரந்தரமதனாக புத்ரன் பக்கலிலே பித்ரு ஹ்ருதயம் கிடக்குமாபோலே ஸம்ஸாரிகள் பக்கலிலே திருவுள்ளம் குடிபோய்” என்கிற ஸ்ரீ வசநபூஷண ஸ்ரீஸூக்தி-இப்படிப்பட்ட எம்பெருமான் விரும்பாத அறிவு எனக்கு எதற்கு?-ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்கிறபடியே அவனை நோக்கும் அறிவே அறிவு;  என்று ஸித்தாந்தமாயிருப்பதுபோல, அவனால் விரும்பப்படும் அறிவே அறிவு-

அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி
–4-8-6- நாலாயி:3313/1,2–பகவத் விஷயத்தில் அறிவு கொண்டு ஒரு கார்யம் இன்றிக்கே இருக்கை –-அன்ன பா நாதிகள்-பெறா விடில் செல்லாதாய் இருக்கும் அறிவு ஒன்றிலுமாயிற்று நிரபேஷராய் இறே இருப்பது

ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவுஅணையாய் அம்மானே -4-9-2– நாலாயி:3320/3-சம்பந்தம் ஒத்து இருக்க அவர்களுக்கு அப்படிப்பட்ட வேண்டிற்று சரீர சம்பந்தத்தால் யன்றோ எனக்கும் அது கிடந்த பின்பு நானும் எதுக்கு கூப்பிடப் புகுகிறேன் என்று அறியா நின்றேனோ இவர்கள் உஜ்ஜீவிக்கும் உபாயம் அறிகிறி லேன் -என்றுமாம் 

அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை-4-9-6- – நாலாயி:3324/2-தர்ம தத்துவத்தை ரக்ஷகமாக அறிந்து அதனுடைய நிரூபணத்தை பண்ணையார்கள்
ஓரார் -பர ஹிம்சையில் நின்றும் நீங்கார்கள்-என்றுமாம்-ஓர்தல் -ஒருவதலாய்–நீங்குதலாய் -அதில் நின்றும் நிவ்ருத்தராகார்-அர்த்த புருஷார்த்தத்திலே மிகவும் பிரவணராய் வேறு ஒன்றை ஆராயார் என்றுமாம் –இது ஒரு லோக யாத்திரையை பண்ணி வைக்கும் படியே

ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன்
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல –4-9-9-
நாலாயி:3327/2,3-நீ உகந்தாரை உன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுதி-தேவர்களே யாகிலும் நீ நினையாதாரை உன்னை அனுபவிக்க ஒண்ணாத படி விஷயங்களை காட்டி அலமந்து திரியப் பண்ணுதி-அரவணையாய்!-திருவடிகளிலே கூட்டும் கொள்ளும்படிக்கு உதாஹரணம் – அடியேனும் அஃது அறிவன்; லோக வேதங்களில் பிரசித்தமான உன்னுடைய இந்தப்படியை நானும் அறிவன்

ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடுமினே -4-10-6-– நாலாயி:3335/4-மிகவும் வல்லவன் –அதிசயித சக்திகன் -சேதனர் பண்ணின புண்ய பாபங்கள் கலசாத படி பல அனுபவம் பண்ணுவிக்க வல்லவன் –மம மாயா துரத்யயா -என்கிறபடியே தான் அகற்ற நினைத்தாரை தன் பக்கல் பிரக்ருதியை இட்டு வஞ்சித்து வைத்த படி கிடி கோள்-அத்தை அறிந்து மாயா தரண உபாயமான ப்ரபத்தியைப் பண்ணி சம்சாரத்தை தப்ப பாருங்கோள்
மாமேவயே பிரபத்யந்தே -என்கிறபடியே அவனையே கால் கட்டி அவனை வெல்லப் பாருங்கோள் -என்கிறார் –

பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம் -5-3-1-– நாலாயி:3363/3-அறிவு இழந்தது அநேக காலம் உண்டு -நாம் அறிவு இழந்தது எத்தனை காலத்தோம் -திர்யக்குகளின் காலிலே விழுந்து தூது விட்ட போதே போயிற்று இல்லையோ அறிவு –மதி எல்லாம் உள் கலங்கி அன்றோ அப்படிச் செய்தது 

அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும் -5-3-5– நாலாயி:3367/2–வடிவைக் கண்டால் -ஸர்வஸ்வாதானம் பண்ண இருக்கிறானோ –ஸர்வஸ்வாபஹாரம் பண்ண இருக்கிறானோ என்று தெரியாதபடி ஆச்சர்ய ஸ்வ பாவன்–என்னுடைய ஆத்மாத்மீயங்கள் உன்னது என்று சொல்லி வைத்து இத்தலையில் உள்ளவற்றை எல்லாம் –ஸர்வஸ்வாபஹாரம் பண்ணினவன் –ஆகிலும் 

மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே -5-4-3– நாலாயி:3376/4–அபிமதர் வாரா விட்டால் முடிகை இ றே பிரியம் அதுக்கு விரகு அறிகிறிலன் -காலோ ஹி துரதிக்ரம -என்றாள் இறே பிராட்டி-அவன் வாராமைக்கு அடியான பாபத்தை பண்ணினேன் -முடியவும் அரிதான பாபத்தை பண்ணினேன் -பாபம் மரண ஹேது வன்றிக்கே ஜீவிக்கைக்கு ஹேது வாய் இருக்குமது யாகாதே -ஜீவிக்கை தேட்டமான போது அரிதாம் -முடிகையும் தேட்டமான போது அரிதாம் -அநிஷ்டாவஹம் பாபம் இத்தனை இறே-முடிகையும் ஜீவிக்கையும் ஸ்வ அதீனம் இல்லாத ஜன்மத்தே பிறந்தேன் -எல்லா வளவிலும் அவனை நோக்க வேண்டும் ஜென்மம் இறே — முடியும் போது ஆண் பிள்ளையுமாய் ஸ்வ தந்திரனுமான சக்ரவர்த்தி போல்வார் வேணும் ஆகாதே –

எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே -5-5-10- – நாலாயி:3394/4-உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்-இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு -தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்
என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே-அத்திரளோடே அவ்வடிவு என் நெஞ்சில் பிரகாசியா நின்றது -அது நாங்கள் காண்கிறிலோமே என்ன -ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கும் அறிய ஒண்ணாது -த்வரை இல்லார்க்கு அறிய ஒண்ணாது -எனக்கு மறக்க ஒண்ணாதாப் போலே பிறர்க்கு நினைக்க ஒண்ணாது –

அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி – —அறிய கற்று வல்லார் வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே-5-5-11- – நாலாயி:3395/4–ஸ்வ யத்னத்தாலே அறியுமவர்களால் அறிய ஒண்ணாது ஒழியப் பெற்றோமே என்கிறார் -இக்குடியில் உள்ளார் ஸ்வ யத்னத்தாலே அறியுமவர்களோ என்னில்-இவளால் மீளலாம் என்று மீட்கப் பார்த்த போதே -தம் தம்மாலே பெறவுமாம் -என்று இருந்தார்களாம் இறே–பரம பதத்திலும் அவதாரங்களிலும் திருக்குறுங்குடி நிலையிலே அழகாலும் சீலத்தாலும் உண்டான ஏற்றம் அறிந்து கற்க வல்லவர்கள் -குணாதிக்யம் இறே வஸ்துவுக்கு ஏற்றம் -வியக்தமாக கற்க வல்லார்கள்

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் – 5-7-1-நாலாயி:3407/1–அறிவிலேன் என்னாதே -நுண்ணறிவிலேன்-என்றது ஸ்வரூப ஞான பூர்வகமாக பர ஸ்வரூபத்தை சாஷாத்கார பர்யந்தமாக அறியும் அறிவை அறிவை யுடையேன் அல்லேன் -கர்மம் இல்லை என்ற போதே -தத் சாத்தியமான ஞானம் இல்லை என்னும் இடம் அர்த்த ஸித்தமாய் இருக்க ஞானம் இல்லை என்றது என் என்னில்-பூர்வ ஜென்மத்தில் கர்மத்தை அனுஷ்ட்டித்து தத் பலமான ஞானம் இந்த ஜென்மத்தில் நைசர்க்கிகமாக பிறக்கலாம் இ றே -அத்தாலே சொல்லிற்று -அன்றிக்கே-புராணங்களில் தனித் தனியே கர்ம ஞானங்களே சாதனமாக சொல்லுகையாலே சொல்லிற்று ஆகவுமாம்-பக்தி இல்லை என்னாது ஒழிவான் என் என்னில் -பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையாலே ஞானத்தை சொன்ன போதே அத்தையும் சொல்லிற்று ஆயிற்று

அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3– நாலாயி:3409/4–சி ரீ வர மங்கல நகரில் உள்ளார் அர்த்திக்க அன்றிக்கே அவர்கள் பக்கல் தண்ணளி யாலே வந்து இருந்தவன் -என்னை அடிமை கொள்ளுகைக்காக அங்கே வந்து இருந்தாய் என்றுமாம் -கைங்கர்யத்து அளவும் வர புகுர நிறுத்தினோம் -அதுக்கு அவிச்சேதம் யுண்டான போது நம் சந்நிதி வேணும் என்று அங்கே இருந்தாய்-அறியேன் ஒரு கைம்மாறே-இவ்வளவு உபகரித்ததுக்கு நான் ஒரு பிரதியுபகாரம் பண்ணினேனாக அறிகிறி லேன்-பிராங்நியாயத்தாலே மேல் உள்ளதும் நீயே செய்யும் அத்தனை என்கை –

அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் -5-7-8-
நாலாயி:3414/1,2–அத்யாச்சர்யமான செயல்களை யுடைத்தாய் ஒருவரால் தப்ப ஒண்ணாதே இருக்கிற ஐந்து இந்திரியங்களும் -நீ வேண்டாதாரை யகற்ற வைத்தாய் என்னும் இடம் வ்யக்தமாக அறிந்தேன் -மயர்வற மதி நலம் அருள பெற்றவன் ஆகையால் அழகிதாக அறிந்தேன்-

யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே -5-8-6– நாலாயி:3423/4–ஞானத்துக்கு பிரயோஜனமான விஷயம் -மனஸூக்கு போக்யமாய் இருக்கிற படி

உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது-கொண்டு செய்வது என் –6-2-1- நாலாயி:3462/3–உன்னுடைய க்ரித்ரிம லீலை என்னுமிடம் நான் அறிவேன்நான் அறிந்த பின்பு அத்தை முன்னிட்டு என் பக்கல் பிரயோஜனம் இல்லை –அபூர்வை கள் பக்கலிலே போ என்ன -கைப் பட்டத்தை செய்யலாவது இல்லை இறே என்று பந்தையும் கழலையும் கொண்டு போகிறோம் என்று போகப் புக்கான்

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்ய -6-2-3— நாலாயி:3464/1-உன் பொய்யில் பழகின எங்கள் பக்கல் உன் பொய் விலை செல்லாது -இங்கு நின்றும் போய்-உன் பொய் அறியாதவர்கள் கோஷ்ட்டியில் இருந்து சொல்லு –நினைவு ஒன்றும் செலவு ஒன்றுமான உன்னை அறியாதே பிரமிக்கைக்கு பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் உண்டே

கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் திண் சக்கர – 6-2-5-நாலாயி:3466/1-உன் கிரித்திரிமம் உபய விபூதியும் நன்கு அறியும் – தானும் அவனுமானால் உபய விபூதியும் தன் பக்ஷத்தில் நிற்கும் என்று இருக்கிறாள் ஆதல் -வாயும் திரை யுகளில் படியே எல்லாரும் தன்னைப் போலே இழவாளர் என்று இருக்கிறாள் ஆதல்-

அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே – 6-9-7-நாலாயி:3545/4–சேதனர்க்கு தொகை உண்டாகிலும் என் அறிவுகேட்டுக்கு எண்ணில்லை-என்னளவு இதான பின்பு நீயே கிருபை பண்ணி அருளும் அத்தனை அன்றோ -அறிவை உண்டாக்கி -அத்தை பக்வமாக்கி -அதன் பலமான உன்னையும் தந்து அருள வேணும் –

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8-
– நாலாயி:3546–அறிவி லேனுக்கு அருளாய் -உன்னைக் கிட்ட முதல் இல்லாத எனக்கு அருளாய் -அறிவு இல்லை யாகில் அருளக் கடவதோ என்ன -சர்வஞ்ஞரான நித்ய ஸூரிகளுக்கு கிருபை பண்ணவோ -தளர்ந்த இடம் அன்றோ கிருபைக்கு விஷயம் -பொய் நின்ற ஞானத்தை உடைய எனக்கு ஞானப் பிரானான நீ கிருபை பண்ணி அருளாய்-அறிவார் உயிரானாய்!-உன்னை உள்ளபடி அறிவார்க்கு தாரகனாகை உனக்கு ஏற்றமோ -பத்தராவி என்கிறபடியே அறிவார்க்கு உயிராம் அவன் என்னுதல் -ஞானீத்வாத் மைவ -என்கிறபடியே அறிவாரை உயிராக யுடையவன் என்னுதல்

சூது நான் அறியா வகை சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன் அடி-7-1-4- – நாலாயி:3564/1-உறுவது இன்னது என்று நான் அறியாதபடி பிரமிப்பித்து -பகவத் பிரவணமாவது -அதுவே உறுவது -விஷய ப்ராவண்யம் அனர்த்த ஹேது என்று விவேகிக்க ஒண்ணாத படி மனசைக் கலக்கி

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் – 7-2-1-நாலாயி:3572/1-உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயி நிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்

முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் மூ_உலகு ஆளியே என்னும் – 7-2-10-நாலாயி:3581/1-இவள் தனக்கு ஒரு முடிவு காண்கிறிலேன் என்னா நின்றாள் –

தாள்-பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே -7-5-3– நாலாயி:3607/4-இந்தக் குண ஞானமுடையாரை அறிந்து வைத்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றுக் கேட்பரோ-

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ –7-5-4- நாலாயி:3608/1–தத்துவ ஸ் திதியை உள்ளபடி அறியுமவர்கள் –தன்மை -உண்மை -காரணந்து த்யேய–ஜன்மாத் யஸ்யத -என்று உபாசன வாக்கியங்களையும் காரண வாக்கியங்களையும் அறியுமவர்கள் -ஜகத் காரணம் இன்னது என்று அறிந்து -அதுவே உபாஸ்யம் -என்று அறியுமவர்கள்

மல்லல் அரி உருவாய் செய்த மாயம் அறிந்துமே – 7-5-8-நாலாயி:3612/4-மஹா விஷ்ணும் -என்கிற படியே அவன் உடம்பு குளப்படியாம் படி பெரிய வடிவைக் கொண்டு -மல்லல் -பெருமை –மல்லரி உரு என்று -லஷ்மீ நரஸிம்ஹம் -என்றுமாம் -திருவோடு புணர்ந்த ஸிம்ஹம் என்று ஒரு தமிழன் சொல்லி வைத்தான் –நரம் கலந்த சிங்கமாய் கண்ட திருவன்

மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே – தேசம் அறிய ஓர் சாரதியாய் சென்று சேனையை – -7-5-9-நாலாயி:3613–அத்யாச்சர்யமான அவனுடைய ஆஸ்ரித பவ்யதையை அறியுமவர்கள்-மேன்மையை கரை காணிலும் கரை காண ஒண்ணாத பவ்யதையை உடையவர்க்கு-வரபல புஜ பலங்களாலே திண்ணிதான உடம்பை பெரிய சீற்றத்தோடே சென்று அநாயாசேன கிழித்து பொ கட்ட ஆச்சர்யத்தை அனுசந்தித்தும் -செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ – -7-5-10-நாலாயி:3614/1-ப்ரஸ்துதமான மஹா பாரதம் கடலோசை என்னும் படி சாரமான மாமேகம் சரணம் வ்ரஜ என்கிற வார்த்தையை அறியுமவர்கள் –ஆச்சர்யமான ஸுலப்யத்தை யுடையவனுக்கு -திரௌபதியினுடைய குழலை முடிக்கைக்காக ஹ்ருதகதமான அர்த்தத்தை வெளியிட்ட ஆஸ்ரித பவ்யதை யுடையவனுக்கு –அவனுக்கு அல்லது ஆளாவாரோ -சர்வாதிகன் தன்னளவில் வர தாழ்ந்தால்-புறம்பே போகக் கடவதோ -அவன் தன் ஸ்வரூபத்தை அழிய மாறினால் -தன் ஸ்வரூபத்தில் குறைய நிற்கக் கடவதோ –

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீல சுடர் தழைப்ப -7-6-6– நாலாயி:3621/1-நீயே வந்து கிட்டுமது ஒழிய நான் சாதன அனுஷ்டானம் பண்ணிக் கிட்டும் விரகு அறிகிறிலேன் -கிட்டுக்கைக்கு இச்சை இறே இத்தலையில் உள்ளது -நீ வந்து கிட்டினால் விலக்காமைக்கு வேண்டுவது உண்டு-பரம ஆப்தனான என்னைப் பெற்றால் -அவனை விட்டு வேறு சிலருக்கு ஆளாவாரோ

ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம்-கொலோ அறியேன் ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் – ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் – -7-7-1-நாலாயி:3627/2,3–ஆசைப்பட்ட விஷயம் கிடையாது என்றாலும் மீள மாட்டாத சபலைகள் யுடைய பிராணனை முடிக்கும் -ராம சரம் போலே ஒப்பனை குறி அழியாது இருக்க பிராணனைத் துணிக்கும்-புருஷர்க்கும்-பருவம் நிரம்பி ஹிதம் சொல்லும் ஸ்த்ரீகளும் பாதை இல்லை –ஒரு மிருத்யுவால் முடிக்க ஒண்ணாது என்று இரண்டு மிருத்யு க்ருத சங்கேதிகளாய் வந்தால் போலே யாயிற்று இருக்கிறது-அறியேன்–சபலைகளையே நலிய வேணும் என்னும் நிர்பந்தம் இல்லையே பும்ஸாம் த்ருஷ்டா சித்த அபஹாரியும் இறே-அன்றியே பெண் பிறந்தாரை நலியுமவை தானேயோ -உபகார சீலனான கிருஷ்ணனுடைய கடல் போலே இருந்துள்ள திருக் கண்கள் என்னுதல் –கடல் போலே சிரமஹரமான நிறத்தை யுடையவனுடைய திருக் கண்கள் என்னுதல் -கையிலே திரு வாழி யை யுடையவனுடைய திருக் கண்கள் என்னுதல் –அறியேன்-உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண் -என்று இறே இவள் பிரதிபத்தி இருப்பது –முதல் உறவு பண்ணினவை தானே இறே இப்போது பாதகமாய் இருக்கிறது –ஒன்றை நிர்ணயிக்க மாட்டாமையாலே அறியேன் என்கிறாள்

மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே –7-7-2- நாலாயி:3628/2,3-இஸ் ஸம்சயத்தை அறுத்து தர வல்லி கோள் ஆகில் பிரயோஜனம் உண்டு -கண்ணின் பாடே உன்னசம் என்கிறபடியே உயர்ந்த -கடலின் அருகே அது ஊற்றாக வளர்வது ஒரு கொடி போலே -அதன் நீர்மையாலே வளர்ந்ததொரு கற்பகக் கொடியோ -ஒழுகு நீண்டு இருக்கையாலே கொடி என்னவுமாய் -ச்ரத்தை யாலே கொழுந்து என்னவுமாய் இரா நின்றது -ஸர்வதா சாம்யத்தாலே இன்னது என்று நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை -எங்களைக் காட்டில் இவ்விஷயத்தில் அவஹாகித்த நீ சொல்லிக் காணாய் என்ன

கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன் நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய் -7-7-3- – நாலாயி:3629/2,3-அழகினுடைய திரளான பவளத்தின் ச்ரத்தை உடைய முறியோ -முறி என்கிறது முறிந்த போதை அகவாயில் நெய்ப்புத் தோற்றி இருக்கை-அறியேன்--நிர்ணயிக்க மாட்டு கிறி லேன்

அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்-கொலோ அறியேன் குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்வு இடமே – 7-7-5-நாலாயி:3631/4–என் பிராணனை முடிக்கிற திரு முத்து நிரை தானேயோ அறிகிறிலேன்–இவை நலியாதபடி ஒதுங்கலாவது ஓர் இடமும் கான்கிறிலேன் -என்னுதல் -அழகுகளில்-உஜ்ஜீவன ஹேது என்று ஒதுங்கலாவது ஒன்றும் கான்கிறிலேன் என்னுதல் -அழகு ஆகில் பாதகமாய் அல்லது இருக்கிறது இல்லை –

காண்-மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன் நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலை-கொல் –7-7-7- நாலாயி:3633/1,2-தாய்மாரான நீங்கள் காணுங்கோள் என்று வைத்து காட்டும் பிரகாரம் அறியேன் -என் கைக்கு பிடி தருதல் -உங்களுக்கு உருவு வெளிப்பாடு உண்டாதல் செய்யில் இ றே காட்ட விரகு உள்ளது -புருஷர்களுக்கு காட்டில் இ றே பருவம் நிரம்பினானுங்களுக்கு காட்டலாவது

கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர் கழறா நிற்றிரே –7-7-9- நாலாயி:3635/4-உங்களுக்கு ஒரு வ்யஸனம் இன்றிக்கே இருக்க என்னுடைய பிராணனை களவு காண்கிற படி அறிகிறிலிகோள் -களவாவது -இத்தலையில் இசைவு இன்றிக்கே இருக்க அபஹாரம் பண்ணுகை -இத்தலை அத்தலை யாயிற்று -அப்ராப்தன் களவு கண்டால் பரிஹரிக்கலாம் -ப்ராப்தரானார் களவு கண்டால் பரிஹரிக்க ஒண்ணாது -கைப்பட்ட வாறே தன்னது என்று பிரமாணம் காட்டுகையாலே

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை – நாலாயி:3648/1ஆம் வண்ணத்தால் குருகூர் சடகோபன் அறிந்து உரைத்த–7-8-11- – நாலாயி:3648/2-ஒருவராலும் ஒரு வகையாலும் உள்ள அளவு இது என்று அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரனை இறே கவி பாடிற்று -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஸ்வரூப ரூப குண விபூதிகளில் ஒரு வகையும் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –அவனை உள்ளபடி அறிந்து அங்குத்தைக்கு சத்ருசமாக அருளிச் செய்தார் யாயிற்று இவர் –விஷயம் அபரிச்சின்னமாய் இருக்கச் செய்தேயும் -மயர்வற மதி நலம் அருளினன்- என்று அவன் தானே கொடுத்த ஞானம் ஆகையால் உள்ள படியை அறிந்து அருளிச் செய்தார் –ஸ்வ யத்னத்தாலே காண ப் பார்க்கில் இறே அறிகை யில் அருமை உள்ளது

சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை – 7-10-10-
நாலாயி:3669/1,2—திருவாறன் விளை ஒழிய வேறு ஒன்றில் ப்ராப்ய புத்தி இல்லை என்னும் இடம் சர்வேஸ்வரன் அறியும் -உம்முடைய நினைவுக்கு சர்வேஸ்வரனை சாக்ஷி யாக்கைக்கு ஹேது என் என்னில்-நினைவுக்கு வாய்த்தலையில் இருக்கிறவன் அறியானோ -மனசாலே செய்யுமவற்றில் அவன் அறியாத வஞ்சகங்கள் ஒன்றும் இல்லை

அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் – 8-1-4-நாலாயி:3674/2–அத்யாதரத்தை பண்ணி -பிரயோஜன நிரபேஷமாக கிட்ட வேண்டும் செயல்கள் –உன்னுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்கள் –அறிவொன்றும் சங்கிப்பன்-தன்னை ஆஸ்ரிதர் இட்ட வழக்காகும் அறிவே யாயிற்று இவர் உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் சங்கை பண்ணா நின்றேன்

சிறந்த நின் தன்மை அது இது உது என்று அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் — 8-1-7-நாலாயி:3677/2-தூரஸ்தமாயும் சந்நிஹிதமாயும் அதூர விபக்ருஷ்டமாயும் உள்ள பதார்த்தங்கள் உனக்கு பிரகாரமாயற்றால் காலத்ரய வர்த்தி சகல பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு ஆகையால் சகல பதார்த்தங்களும் உனக்கு பிரகாரம் என்னுதல் – அறிவொன்றும் சங்கிப்பன்-சரீரகதமான துக்கம் ஆத்மாவுக்கு ஆனால் போலே எல்லாருடைய துக்கங்களும் பிரகாரியான உன்னது என்றும் -சம்பந்த ஞானம் ஒன்றுமே யாயிற்று எனக்கு உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் அதி சங்கை பண்ணா நின்றேன் –

வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே –8-1-8- நாலாயி:3678/4- -பரமபதத்தை விட்டு திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து என்னுடைய ரக்ஷணத்துக்கு முற்பாடானாய் இருக்கிற உனக்கு நான் ஒரு கிஞ்சித்காரம் பண்ணினேனாக ஒரு விரகு அறிகிறிலேன்

ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணி தான் என்-8-2-3- – நாலாயி:3684/2-யாம் மடலூர்ந்தும் என்று அன்று தொடங்கி பழி சுமந்து போருகிறேன் அன்றோ 

எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி -8-3-1- நாலாயி:3693/2–உன்னை இனைய என்று -சர்வ சேஷியான உன்னை இப்படிப்பட்டவன் என்று -நிரதிசய ஸுகுமார்ய யுக்தன் என்று -இவர் திரு உள்ளத்திலே அவன் ஸுகுமார்யமே உறைத்தாயிற்று இருப்பது -கருமுகை மாலையைப் போலே இ றே இவர் நினைத்து இருப்பது-அறியகிலாது -அறியாதே –பரிவதற்கு அறியாமைக்கு -அனுகூலரான தேவர்களோடு -பிரதிகூலரான அஸூரர்களோடு-இரண்டும் கலசின மனுஷ்யரோடு -வாசியில்லை -அவனைப் பரிய -கண்டவர்கள் எல்லாரும் என்று -இருக்கிறார் யாயிற்று இவர்

பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என் -8-3-9– நாலாயி:3701/2-சர்வேஸ்வரனான உன்னுடைய ஸுகுமார்யத்தை-யார் அறிகிற்பார்-யார் அறிகிறவர்-அந்நிய பரராய் இருக்கிறவர்கள் உன் ஸுகுமார்யத்தை அறிவார்களா –அநந்ய பரரானால் தான் தேவருடைய ஸுகுமார்யம் சிலருக்கு அறிய நிலமோ

அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – 8-4-4-நாலாயி:3707/4–திருச்சிற்றாரில் உள்ளார் சர்வேஸ்வரன் என்று அறியும்படியாக-மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்-ஆத்மாநம் -மானுஷம் மன்யே என்றும் -அஹம் வோ பாந்தவோ ஜாத -என்றும் -மறைக்க வேண்டாத படி பத்தும் பத்தாக நின்ற என் ஸ்வாமி –
அடி இணைய யல்லதோர் அரணே-–அவன் திருவடிகள் அல்லது ஒரு ரக்ஷகம் இல்லை -அடி இணை யல்லதோர் அரண் –பிறிதில்லை எனக்கு–

தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை-8-4-6- – நாலாயி:3709/2–ஸ்வதஸ் சர்வஞ்ஞனான தன்னாலும் தன்னை பரிச்சேதிக்கப் போகாது –

புகழுமாறு அறியேன் பொருந்து மூஉலகும் படைப்பொடு கெடுப்பு காப்பவனே – 8-4-8-நாலாயி:3711/4-அவனுக்கு ஒரு குறையில்லை -என் குறை தீர புகழ்வது ஒரு பிரகாரம் அறிகிறி லேன் -புகழாது ஒழியவும் மாட்டுகிறி லேன் -ஆனால் செய்ய அடுப்பது என் என்னில் -தனக்கு விதேயமான சர்வ ஜகத்தின் யுடையவும் ஸ்ருஷ்ட்யாதிகளை பண்ணுமவன் என்று திரளச் சொல்லும் அத்தனை -பிரித்து வகையிட்டுச் சொல்லப் புக்கால் சொல்லி முடிக்கப் போகாது -பிரயோஜகத்தில் சொல்லும் அத்தனை –

தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே-8-7-2- – நாலாயி:3738/4-நாலாயி:3739/1-தரும் அருள் -தந்த அருள் -தரும் என்கிற இது காலத்ரயத்திலும் சொல்லலாய் இருக்கையாலே -ஆஸ்ரிதற்குச் செய்தது தமக்குச் செய்ததாக இ றே இவர் நினைத்து இருப்பது –எனக்கு உதவின பின்பு நான் அத்தை ஒன்றாக நினைத்து இரேன் -ஆனை நோவு பட்டத்து ஆயிரம் சம்வத்சரம் -அகப்பட்ட பொய்கை பரிச்சின்னம் -முதலை ஓன்று-எனக்கு காலம் அநாதி -அகப்பட்டது சம்சார ஆர்ணவத்திலே -முதலை ஐந்து –இத்தை மீட்டுக் கொண்ட மஹா குணத்துக்கு அது ஒரு குணமாயற்றதோ -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பண்ணின அருளை இட்டு புறம்புள்ளார் பக்கலில் பண்ணின அருளை வ்யாவர்த்தித்தார்-தமக்கு பண்ணின அருளை இட்டு அது தன்னை வ்யாவர்த்திக்கிறார் –

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் –8-7-3- என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த இது தன்னையும் நான் -அவன் என்னுடைய ஹ்ருதயத்தில் அஞ்ஞானாதிகள் எல்லாம் போம்படி -தன் குறைவு தீர்ந்தானாய்-பெறாப் பேறு பெற்றானாய்– -அத்தாலே வந்த வேறுபாடு தோற்ற இருந்தான் –

அவ் வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே-8-7-7- – நாலாயி:3743/4-அவ்விடம் அன்றி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு இருந்த இருப்பு அல்லது –காந்த ஸ்மிதா-என்று ஸ்வரூபத்தை சொல்லி ஜாத ஹாஸா-என்றது இ றே -அப்போதைய ஹர்ஷத்தால் உண்டான விக்ருதி என்னும் இடம் தோற்ற -மற்று உண்டான அருளை நான் அறியேன் -இதுவே அமையும் -மற்று ஒன்றும் வேண்டா என்கை –

அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் -8-7-8-– நாலாயி:3744/1- –மற்று அருள் அறியேன்-வேறு ஒரு அருளும் அறியேன் –என்னை அடிமை கொள்ளுகிற உபகாரகர் ஆனவர் –நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –

நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே –8-8-5- நாலாயி:3752/4-தேகம் -தேஹத்தைக் காட்டிலும் இந்திரியம் -அத்தைக் காட்டிலும் மனஸ் ஸூ -அதில் காட்டிலும் பிராணன் -அதில் காட்டிலும் புத்தி -என்கிறதில் வை லக்ஷண்யம் உண்டாகிறாப் போலே -ப்ராக்ருதங்களில் உண்டான நன்மை தீமைகள் சொல்ல ஒண்ணாது இருக்கை-இவற்றில் காட்டில் அதி வி லக்ஷணமாய்-இந்திரிய ஞானத்துக்கு எட்டாது இருக்கும் –
கீழில் அவை ஒன்றுக்கு ஓன்று நெடு வாசி உண்டாய் இருக்கச் செய் தேயும் ஏக பிராமண கம்யத்வ சாம்யம் உண்டு -அதுவும் இல்லை என்கிறது இப்பாட்டில் -சாங்க்யத்தில்-தத்வ சங்க்யான க்ரமத்தால்-ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லும்படியைச் சொல்லிற்று-

அறிந்தன  வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3–:3805-அறிந்தனவாய் இருக்கிற  துர்ஜ்ஜேயார்த்த ஸூசகமான வேதங்கள் சர்வேஸ்வரனை துர்ஜ்ஜேயன் என்று அறிந்த -மற்று அறிந்தாராய் இருக்கிற ரிஷிகளும் சம்சார துரித பேஷஜம்  என்று அறிந்தார்கள் –வேதங்களுக்கும் ரிஷிகளுக்கும் அறிய நிலம் இல்லாத எம்பெருமான் தன்னை எனக்கு பூர்ணமாக அறிவித்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –

தழுவுமாறு அறியேன் உன தாள்களே –9-3-9- நாலாயி:3811/4-உன் திருவடிகளை அணையும் விரகு அறிகிறி லேன் -பல ஹானியாலே முதலிலே கிட்டுகை அரிது -கிட்டினாலும் சீலாதிக்யதையை அனுசந்தித்து ஒரு பிரவ்ருத்தி பண்ண ஷமன் ஆகிறிலேன் –

அறிவது அரிய அரியாய அம்மானே -9-4-4- நாலாயி:3817/4-தேவா நாம் தானவா நாஞ்ச -என்று சம்பந்தம் ஒத்து இருக்க தேவ தானவர்களுக்கும் என்றும் ஓக்க அறிய ஒண்ணாத நரஸிம்ஹமான ஸர்வேஸ்வரனே -ஆஸ்ரித ஸுலப்யத்தோடு சர்வேஸ்வரத்தோடு வாசி அற அவர்களுக்கு அறிய அரியவன் என்கை -இத்தால் ப்ரஹ்லாதனுக்கு எளிமையான கோடியிலே ஆகிறேனோ -தேவதைகளுக்கு அரியை யாகிற கோடியிலே ஆகிறேனோ என்று அஞ்சா நின்றேன் -தேவாசுர விபாகம் பண்ணின சமனந்தரம் நாம் எக்கோடியிலே ஆகிறோமோ என்று அர்ஜுனன் அஞ்சினால் போலே அஞ்சா நின்றேன் –

கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன்-9-6-3- – நாலாயி:3838/4-முகப்பிலே ஒன்றாய் -முடிவிலே ஒன்றான செயல்கள் தெரிகிறதில்லை -அடிமை கொள்ள வென்று புகுந்து அச் செயலை தானே செய்கிற நிலை எனக்கு ஒன்றும் தெரிகிறதில்லை

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க – -9-6-4-நாலாயி:3839/1-உகப்பாலே செய்தானோ -இவ்வஸ்துவை அழிக்கச் செய்தானோ -அறிகிறிலேன் –தன் சங்கல்பத்தைப் பற்றி -சகல லோகங்களும் நிற்க -சகல அபாஸ்ரயவன் கிடீர் என்னைத் தனக்கு அபாஸ்ரயமாக நினைத்தான் –சர்வாதிகன் இப்படித் தாழ பரிமாறுகை கூடாது -நான் பிரமித்தேனோ –சம்ச்லேஷத்திலும் மருள் தானீதோ-என்றவர் இறே –

அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே -9-8-3-– நாலாயி:3860/4-திரு நாவாயிலே பேரோலக்கமாய் இருக்க அத்திரளிலே சென்று கூடப் பெறும் நாள் என்று என்று அறிகிறிலேன் -அடியார்கள்  குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ–என்று இருக்குமவராகையாலே அந்நாளை யாசைப்படுகிறார்-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும் –9-8-4- நாலாயி:3861/1-பெறக் கடவ நாள் என்று என்று அறிகிறிலேன் -என்னுதல் -பிரிந்து இருக்கக் கடவ நாள் எத்தனை என்று அறிகிறிலேன் என்னுதல் 

புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ -9-9-1- நாலாயி:3869/4-வ்யதிரேகத்தில் தென்றல் முதலான பதார்த்தங்களைத் தப்பிச் சென்று புகுகைக்கு இடம் காண்கிறிலோம் -ஷாம காலத்தில் பஹு பிரஜராய் இருப்பார் தங்கள் பசி கிடக்க பிரஜைகள் அலைப்புக்கு அலைந்து புகலிடம் அறியாதா போலே -நான் ஜீவித்த படி ஜீவிக்கின்றேன் -இவற்றைக் கொண்டு புகுமிடம் காண்கிறிலேன் -என்கிறார் –

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ -9-9-2- நாலாயி:3870/1-மேல் வர புகு கிற பாதக வர்க்கத்தை நினைத்து சொல்லுகிற வார்த்தை யாதல் -கீழ் நலிந்த வற்றுக்கு அஞ்சி அவ்வச்சம் பின்னாட்டுகிற அனு பாஷாணம் ஆதல்-

யாதும் ஒன்று அறிகிலம் அம்மஅம்ம மாலையும் வந்தது மாயன் வாரான் –9-9-9- நாலாயி:3877/4–அது பாதகம் ஆகிறபடி எனக்கு ஒன்றும் தெரிகிறதில்லை-

தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறிய சொன்னோம் –10-2-3- நாலாயி:3904/3–சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருத்ய புஜம் உச்யதே-வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் -பாரதம்-என்னுமாறு போலே –அனுபவித்து கை வந்த நாங்கள் -ஒருத்தருக்கும் தெரியாத ரகஸ்யத்தை வியக்தமாக அறியும் படி சொன்னோம் -இது யுண்டாய்க் கழிந்தார் வார்த்தை யாகையாலே ஆப்தம் -என்கை –திண்ணமாக அனுபவத்தாலே கை கண்ட நாம் இதில் வாசி அறியாத நீங்களும் இழக்க ஒண்ணாது என்று உங்கள் நெஞ்சில் படும்படி சொன்னோம்-பல நாள் துன்பப் பட்டு கரை கண்டவர் ஆகையாலே -நாம்-என்கிறார்-இனி கர்மங்களுக்கு கட்டுப் பட்டவர்களாய் படுமவர்கள்
சொன்ன வார்த்தையை நினையாமையாலே படுகிறார்கள் அத்தனை நம் மேல் குறையற நாம் சொன்னோம் -என்பார் -சொன்னோம் -என்கிறார்பிரதிபத்தி பண்ணாதார் இழக்கும் அத்தனை -துக்க நிவ்ருத்திக்கு தேச ப்ராப்தியே அமையும் –

திண்ணம் நாம் அறிய சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து-10-2-5- – நாலாயி:3906/3-வியக்தமாக -மதிநலம் அருள பெற்ற நாம் -தேஹாத்ம அபிமானிகளான -நீங்கள் அறியும் படி உங்கள் அநர்த்தத்தைப் பார்த்துச் சொன்னோம் –

நடமினோ நமர்கள் உள்ளீர் நாம் உமக்கு அறிய சொன்னோம்–10-2-8- – நாலாயி:3909/4-என்னோடு குடல் துவக்கு உடையார் அடைய நடவுங்கோள்-வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் கழல் காணக் கருதும் கருத்தே -என்று சபலரான நாம்–திரு அத்த்யயனம் பாடா நிற்க -இதனைக் கேட்டருளி-ஆளவந்தார் –நமக்கு ஆழ்வார் உடன் ஒரு சம்பந்தம் உண்டாக வேண்டும் -என்று-அப்போதே ஸ்ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு-எழுந்து அருளினார்-இத்தைச் செய்தாவது ஆழ்வார் சம்பந்தம் பெறலாம் என்று -நாமோ -ஆழ்வார் சம்பந்திகள் என்று இறுமாப்புடன் போவோமே –நாம் -திருக் கண் வளர்ந்து அருளுகிற அழகில் சுவடு அறிந்து எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -8-7-1-என்னக் கடவ நாம் – -ஏகம் துக்கம் ஸூகஞ்ச நவ் -என்னும் படி இருக்கிற உங்களுக்கு நெஞ்சிலே படச் சொன்னோம் –அவ்வடிவினைக் காண வேண்டும் என்னும் விருப்பத்தினைக் உடைய நீங்கள் அறியும்படி சொன்னோம்

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான-10-2-9-நாளேல் அறியேன் –என்றும் -மரணமானால் என்றும் -நாம் உங்களுக்குச் சொன்ன காலம் அணித்தாய்த்து தஸ்மின் அஸ்தமிதே பீஷ்மே கௌரவானாம் துரந்தரே-ஜ்ஞானானி அல்பீபவிஷ்யந்தி தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் -பாரதம்-தர்ம புத்திரன் இடம் கிருஷ்ணன் அருளியது-
வீடுமன் முடியா நின்றான்-பின்னை இவ்வர்த்தம் கேட்கலாவார் இலர் -என்று-அவன் அருளிச் செய்த வார்த்தையை இப்போது இவர் தாம் அருளிச் செய்கிறார்-இதற்கு பட்டர் -அருளிச் செய்ததாக பரிஞை என்கிற ஊரில் -அப்பர் பணிக்கும் ஒரு மதிப்பன் தலையில் கிடவாத அன்று-கொள்வார் கொடுப்பார் இன்றியே-எளி விலையனாய்ப் போம் -என்று அருளிச் செய்வார்-தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் –ஆகையால் காண் உன்னை விரைவு படுத்தி-அவன் பக்கலிலே போய்க் கேள் -என்கிறது-

சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே – 10-3-2-நாலாயி:3914/2–அந்த ஸூகம் அபரிச்சின்னமான ஆகாசத்தைக் கடந்து -மயர்வற மதி நலம் அருள பெற்ற அறிவையும் மூழ்த்தும் படி பெருகிற்று என்னுதல் –-விசும்பு -என்று பரம பதம் –அறிவு -ஆகிறது -உபய விபூதியையும் விளாக் குலை கொள்ளும் தன்னறிவு என்னுதல்-

நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் 10-7-1--நாலாயி:3957/3-நெஞ்சு என்று -சரீரத்துக்கு உப லக்ஷணம் –உயிர் என்கிறது ஆத்மாவை -சரீரத்தோடு ஆத்மாவோடு வாசியற புகுத்தி தன் பேறாக அவகாஹியா நின்றான் -முறை அத்தலை இத்தலையாய் என்னை சிரஸா வஹியா நின்றான் –நின்றார் அறியா வண்ணம்-கலவிக்கு தேசிகரான பிராட்டி திருவனந்த ஆழ்வான் முதலானோர்க்கும் அபூமியாம் படி யாய்த்து என்னோடு கலந்து -ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது -என்றார் இறே

ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான் –10-10-3- நாலாயி:3992/2-அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்ன -ஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி-கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –
நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31-நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன் தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான் -என்கிறபடியே-

அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே – -10-10-11-நாலாயி:4000/4–இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூரிகளோடே ஒப்பர்கள் –
சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம்-இவர்களுடைய பிறப்பும் –பிறக்க பிறக்க அவனுக்கு உதகர்ஷம் உண்டானாப் போலே -அனுக்ரஹ நிபந்தனம் சர்வேஸ்வரன் அவதாரம் —

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –