ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -4-தனி நெஞ்சம் முன் அவர் –ஓடும் புள்ளேறி -1-8-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

————–

தன் நிகர் அற்ற அத்விதீயமான நெஞ்சு-ஒரே மனஸ்ஸூ -ஒன்றே ஓன்று என்றுமாம்
முன் -அவரது திருவடி -அவனுக்கே சேஷம் -கவர்ந்து சென்றார் –
இனி அவனது குளிர்ந்த -வியர்வை கமழும் திருத்துழாய்க்கு கவர நம்மிடம் நெஞ்சம் இல்லையே
மூன்றாவது மாருதம் -தனியாக வராமல் -துழாய் வாசனையைக் கொண்டு வீச
நேர் சம்பந்தம் உள்ள துழாக்கே இல்லையே-நீ குறுக்கே வந்தாயே -கருடன் துழாய் நான் -எங்கள் நடுவே
பூதனா சம்ஹாரம் பண்ணி அருளிய கண்ணன் திருமுடியில் சூடும் திருத்துழாய் -பனி வாசனை கவர்ந்து வந்தாயே – கவர்ந்து போக ஒன்றும் இல்லையே-உனக்கும் எனக்கும் -உனக்கும் அவனுக்கும் -நேர் தொடர்பு இல்லையே-சஜாதீயர் –ஆவி பிராணன் -மாருதம் -நீ நலிய வரலாமோ கருடன் துழாய் விஜாதீயர் -நலிவது போல் நீயும் நலிய வேண்டுமோஇமையோர் தலைவா -என்னும்படியே
நித்ய விபூதியைக் காட்டிக் கொடுக்கையாலே அங்குள்ள பதார்த்தங்கள் ஸ்மாரகமாய் நலிகிற படியைச் சொல்லுகிறது –

ப்ராப்ய விஷயத்திலே பிரமாண அதீனமாக நெஞ்சு பற்றி–அத்தால் ப்ராப்தி த்வரா அதிசயத்தாலே
ப்ராப்ய லாபத்து அளவும் பதார்த்தாந்தர ஸந்நிதியும் அஸஹ்யம் என்னும் இடத்தை
வாடைக்கு ஆற்றாளாய்த் தலைமகள் வார்த்தையாலே அருளிச் செய்கிறார்

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே
  —-4—-தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் –

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது
விலக்ஷணமான நெஞ்சை முன் அவர் புள்ளே கவர்ந்தது-முன்பு வேறே சிலருக்கு சேஷியாத படி -முழுவதுமாக -பிரித்துக் கொண்டான்-பருந்து இறாஞ்சிக் கொண்டது

தனி நெஞ்சம் –
பாத்யத்தின் அளவன்றிக்கே பாதகம் இருக்கிற படி –(இங்கு மூவர் பாதகர் அன்றோ –ஒவ்வொருவரும் பலிஷ்டம் –திருவடி திருத் துழாய் காற்று நெஞ்சு தனி ஒன்றே -ஸ்தூலம் அன்றோ -)

முன்னவர் புள்ளே கவர்ந்தது-
திருவடி மேலே இருக்கிற  இருப்பிலே-தோளின் மாலையோடு அணைக்கக் காணும் ஆசைப் படுகிறது –
அவ்வளவும் கிட்டுவதற்கு முன்பே ஒரு திருவடி வழி பறித்துக் கொண்ட படி(சாடு -திருவடி -பாதம் -ஸூசகம் கொடுக்கும் இயல்பான உள்ள திருவடி பறித்துப் போவதே )

அவர் புள் – அங்குத்தைக்கு அசாதாராணம் என்று -தான் ஈடுபட்ட படி(கோபத்தால் மட்டும் அல்ல -அபகரித்ததும் அவனுக்கு அசாதாரணம்-திருவல்ல வாழ் கோனாரை அடியேன் போல் -அங்கு அநந்யார்ஹம் சொல்ல ஏவகாரம் இல்லை –அவர் புள்ளே என்றது-வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய –15-15-என்று ப்ரமேயத்தோடு ப்ரமாணத்துக்கு உண்டான அவிநா பாவம்
(பிரியாமை -அப்ருதக் ஸித்தம் -அவரே வேதம் -அவர் வேதமே )புள் -என்றது
ப்ருஹத் ரதந்தரே பஷவ் -யஜுர் -4-1-42-என்று முதலாக ஸூ பர்ணோஸி கருத்மான் -யஜுர் 4-1-42- என்று
(இரண்டு சாமம் இரண்டு இறகுகள் ) வேதத்தினுடைய கருடாத்மகதை-
புள்ளே என்று உபபத்தி வேண்டாத நைர பேஷ்யம்உப மானம் உபமேயம் இரண்டும் சொல்ல வேண்டாமே-தாவி தடம் கொண்ட தாமரையே -முற்று உவமை போல்-வேதமே பெரிய திருவடி வடிவம் )

இங்கு அவர் புள்ளே-உறங்கா வல்லி தாசர் பொன்னாச்சியார் –காது தோடு -பாகவதர்கள் அபகரித்த வ்ருத்தாந்தம் )புள்ளே –-சஜாதீயருக்கும் வையாது ஒழிந்த படி (திருத் துழாய்க்கும் வைக்காத படி )கவர்ந்தது-தனக்கும் அரை வயிறாய் இருந்த படி–கவர்ந்தது என்று-வலிய மீட்க ஒண்ணாத படி நெஞ்சு வசீக்ருதமாகை-முன் -திருத் துழாய்க்கு முன்னே திருவடி முற்பட்ட படி –நிர் விசேஷமாக அப் புள்ளே விழுங்கிற்றே-இது வேத மார்க்க அநு சாரிகளை -தத் விரோதிகள் பாதிக்க வர உலகு உண்டவனைப் போலே-இத்தை -நம்மை நம்பி வந்ததே -என்று உகந்து அபிமானித்துத் தன் திரு வயிற்றிலே வைத்துக் கொள்ளுகை

தண்ணம் துழாய்க் கினி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம்
அவனோடு ஸ்பர்சம் உண்டான திருத்துழாய்க்கு கவர்வதற்கு நெஞ்சு இங்கே இல்லையே–குளிர்ந்த திருத் துழாய்க்கு-இனி நெஞ்சம்–மரம் போலே திமிர்த்து இருந்தாலும் ஆவது உண்டோ-ஓரடி முற்பட பெற்றது இல்லை-ஒப்பூணாக உண்ணலாயிற்று-உங்கள் அபேஷிதம் இல்லை(ஸாயுஜ்யம் -ஸோ ஸ்னுதே -அங்கு குணம் அனுபவம் சேர்ந்து – அது போல் இங்கு இல்லையே )-இங்குக் –-விளக்கு ஏற்றிக் காட்டுகிறாள்-கவர்வது யாமிலம் – திருவடி பாடே போம் இத்தனை-பாவியேன் பல நெஞ்சு படைக்கப் பெற்றிலேன்-தண்ணம் துழாய்க்கு கவர்வதான நெஞ்சுக்கு யாம்  இனி இங்கே உடையோம் அல்லோம்–இப்படி ஸ்ருதி பிராமண வஸீக்ருதமான நெஞ்சில் அர்த்த ஸாமர்த்ய ரூபமான போக்யாதிகளாலே
கர்த்தவ்ய அம்சம் இல்லை
என்று கருத்து-அங்கியே கைப்பட்டதால் அங்கங்கள் வேண்டாமே
மேலே அறிந்து கொள்ள வேண்டிய அம்சம் இல்லையே தவிர ராமாயனாதிகள் த்வரையை மூட்டி வளர்க்க வேண்டுமே -இனி கவர்வது யாமிலம் –என்று ப்ரதமத்திலே சரம ஞானம் பிறந்தவர்களுக்குப் பின்பு ஞாதவ்ய அம்சம் இல்லை என்று கருத்து

கீழே அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே -சொன்னது திட்டமானது
வேத பிராமண வழியிலே இவர் திரு உள்ளம்-ஊன்றி இருந்தமை காட்டப்படுகிறது
தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சு இங்கு இலம் என்று பிரகிருதி இனி ஆக்கிரமிக்க இயலாது என்றபடி-அன்றிக்கே 
பிரிவில் அவன் சம்பந்தம் உள்ள திருத் துழாய் தடவி வந்த தண் காற்றும் தமக்கு அஸஹ்யம் என்று
அருளிச் செய்கிறார் என்னவுமாம்-நெஞ்சு இரண்டு உடையார்க்கு இறே இழக்க வேண்டுவது
பிரிந்தாரை ஈடுபடுத்துகைக்கு அவனோடு சம்பந்தமுடையாரில் திர்யக் ஸ்தாவர விபாகம் இல்லையாய் இருந்தது இறே –

நீ நடுவே
பாத்ய பாதக தொடர்பு இல்லாத நீ-சம்பந்த சத்ருச சம்பந்தம் துழாயுக்கும் திருவடிக்கு போல் காற்றுக்கு இல்லையே-நேர் அடித் தொடர்பு இல்லையே-ததீய சம்பந்த ஏற்றம் எனக்கே என்று காற்று வந்து
பண்டே நோவு பட்டு இருக்கிற எங்கள் பிராணனை நோவு படுத்தாமல் போ-திருத் துழாய் ஆழ்வார் -மரம் போலே திமிர்த்து இருந்தார் என்று பார்த்து(திருத்துழாய் ஆழ்வார் ஒன்றும் கிடைக்காமல் மரம் போல் நிற்க ) அவ்வளவிலே –கால் கடுகி  வந்து(கால் காற்று வேகமாக காலால் ஓடி என்றும் சாடு )அசாதாரணர் பட்டினி விடா நிற்க -உனக்கு என் -என்கிறாள் நீ நடுவே என்று-ஞாதவ்ய அம்சம் இல்லையே யாகிலும் ஸ்மாரகம் த்வரா ஜனகம் என்றதாயிற்று –

அங்கு சம்பந்தம் உண்டாதல் இங்கு விஷயம் உண்டாதல் அன்றியே நடுவே –(அலைந்து வீசுவதே ஸ்வ பாவமான காற்றே ) அத் தலையில் சம்பந்தம் அடியாக எனக்கும் அவற்றுக்கும் பாத்ய பாதக பாவம் நடக்க ப்ராப்தம் நீ ஏதுறவாக நலிகிறாய் என்று கருத்து (பிடித்தாரைப் பிடித்தார் அன்றோ நான் என்னுமாம் காற்று )-கிருஷ்ணனுடைய திரு அபிஷேகத்திலே சாத்தின திருத்துழாயின் குளிர்ந்த
மது பலத்தாலே நஞ்சூட்டியது போல் இருக்கிற காற்றே-அத்தலையிலே சம்பந்தம் தோற்றத் திருத்துழாயின் குளிர்த்தியையும் கூட்டிக் கொண்டு வந்தாயோ

முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப் பனி நஞ்ச மாருதமே
முனிவை யுடைய பூதனைக்கு பண்பு முன்பு-இங்கு முனிந்து சீறிச் சுவைத்து அவளை முடித்த கண்ணன் திருமுடியில் சூட்டப்பட்ட குளிர்ச்சி யுடைய பாதகமான திருத்துழாய் தடாவி-ததீய சம்பந்தம்-திருத் துழாயிலே பனி நீரிலே தோய்ந்து நைந்த காற்றே என்றுமாம்

முனி வஞ்ச –
பூதனை முலையை நஞ்சைக் கலந்து வந்தது போல்-இங்கு திருத்துழாய் உடைய பரிமளம் கலந்த மாருதம்-முனி வஞ்சப் பேய்ச்சி-முனியையும் க்ரித்ரிமத்தையும் உடைய பூதனை –

முலை சுவைத்தான் –
தன் நாவில் பசை கொடுத்துச் சுவைத்தான்-பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை வற்ற வாங்கு உண்ட வாயான்(வதரி வணங்குதுமே கலியன் )–சுவைத்தான் -சுவை மிக்கு இருந்தது போல் அனுபவித்தான் –

வஞ்சகப் பேய் போல்வாரை முடிக்கும் ஸ்வ பாவம் அவனுக்கு – இப்பொழுது அன்பு பூண்ட அடியேனை முடிக்க முயல்வதே-வெறுத்து வஞ்சித்தாரை நலிகை அன்றிக்கே உகந்து செவ்வை யுடையாரையும் நலிவான் ஒருவன் இறே (ஆழ்வார் -உகந்து -செவ்வாய் நேர்மை அன்றோ )-பேயினார் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ (பெரிய திருமொழி -8-5-3 ) என்று பேய் என்று பாராதே பெண்ணாக அமையும் இறே பிணம் ஆக்குகைக்கு–அவள் பாடு முலை நலம் கொண்டு காணும் முடியச் செய்தது-முனி நஞ்சப் பேய்ச்சி -என்றும் பாட பேதம்-

முனி வஞ்சகம் என்று தொடங்கி விரோதி நிரசன சீலனானவனுடைய சேஷித்வ போக்யத்வ ஸூசகமான திருத்துழாயின் சைத்யத்தோடே ஸம் ஸர்க்கத்தை யுடைத்தான மாருதம் என்கையாலே
ரக்ஷகத்வ
சேஷித்வ
போக்யத்வங்கள் இவர்க்குக் காற்று வளத்தில் தோற்றின படி
-(பிறக்கும் போதே சட கோபித்து முனிந்து காற்றிலே அனைத்தையும் அறிந்தவர் அன்றோ
முடி -சேஷித்வம்
முலை சுவைத்தான் முடி -ரக்ஷகத்வம்
திருத்துழாய் போக்யத்வம் )

முனிந்து வஞ்சனை யுடையளான பேய்ச்சி முலையைச் சுவைத்தான் -என்கையாலே
அநர்த்த காரிணியாய் இருக்கச் செய்தே ஸ்வ போக்ய புத்தி ஜனனியான ப்ரக்ருதியைப்
பசை அறுக்கும்
என்னும் இடம் தோற்றிற்று

முடி சூடு துழாய் என்கையாலே
சேஷித்வமானது போக்யத்வ விசிஷ்டம் என்னும் இடம் தோற்றிற்று-முடி சூடு துழாய்-இத்தால் ஸத் குண சீலரை சிரஸா வஹிக்குமவன் என்றதாயிற்று

முடி சூடு துழாய்ப் –
அத் தலையில் உள்ளத்தைக் கொண்டு வந்து வாயு பிரேரிக்கிற படி (அத்தலையில் -அவன் இடத்தில் -அவன் திருமுடியில் சாடு ) சஹ்யத்திலே நீரை ஆகாசத்திலே முகந்து நின்று இறைக்குமா போலே-திருத் துழாயை முடித்து வந்து போலே காணும் பூதனையை முடித்தது –திரு அபிஷேகத்திலே திருத் துழாய் என்று அறிந்த படி என் தான்-பனி நஞ்ச மாருதமே–குளிர்ந்த காற்று அகவாய் நஞ்சாய் இருக்கிற படி

பனி நஞ்சம் என்று திருத்துழாயின் குளிர்த்தியிலே நைந்தது என்ற பொருளாய்-தத் ஸம் சர்க்கம் ஆரேனையுமாகிலும் நைவிக்கும் என்றதாகவுமாம் –அந்தத் துழாயில் தங்கின பனி யாகிற நஞ்சு மயமான மாருதமே-அவளோடும் அத் துழாயோடும் சீலித்த நீ என்னைப் பாதிக்கத் தகுவையோ என்றபடி

எம்மதாவி- சென்று அற்று இருக்கிறபடி-பாதகங்களின் கையிலே அகப்பட்டு அவ சேஷித்த பிராணன் –
(நெஞ்சு கிடைக்காததால் மீதம் உள்ள பிராணனை திருத்துழாயும் மருதமும் நலிந்த படி )-நெஞ்சு போனால் போலே ஆவியும் அவன் இடம் போய் ஒழியக் கூடாதோ – அவ்வளவு துணிவு இல்லாத பாழும் உயிர் என்கிறாள்-

பனிப்பியல்வே  –நடுங்குகை ஸ்வ பாவமே விசஜாதியர் செய்யுமத்தை சஜாதீயமான நீ செய்யக் கடவையோ–அனைவர் தாபத்தை தீர்க்கும் நீ இப்பொழுது நெஞ்சு இழந்த என்னை வாட்டுவதே-

எம்மதாவி பனிப்பியல்வே —
பண்டே நோவு பட்டு இருக்கிற ஆழ்வார் -போல்வார்-முன்பே கவரப்பட்ட -மேலும் திருத் துழாயால் நலிவு படுத்தப்பட்ட எம்மை நீயும் நலிய வேண்டுமோ-இது உனக்குத் தக்கதோ -இயல்பு இல்லையே–தருகைக்கு நெஞ்சு இல்லாத எங்களுடைய பிராணனை நடுங்கப் பண்ணுகை ப்ராப்தமோ
அவர் பாடும் போகை அஞ்சுமவை இறே –(இயல்பு அல்ல ஈற்று ஏகாரம் )

மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே-என்கையாலே
ஸ்மாரகமாய் த்வரையை ஜெனிப்பித்தாலும்-ப்ராப்தி தத் அதீனம் ஆகையாலே அத் தலையில் த்வரையே வேண்டும் என்று கருத்து-பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –

முன்னவர் புள் –என்று பன்மையிலும்– சுவைத்தான்  என்று ஒருமையிலும் — பிரிந்து போன கோபத்தால் அவர் -என்றும் பூதனா நிரசனத்தால் தமக்கு செய்து அருளிய உபகாரம் அனுசந்தித்தவாறே இயல்பாக சுவைத்தான் -ஒருமை –

இத்தால்
இவர் திரு உள்ளத்துக்குத் தனிமை யாவது-மதாந்தரங்களை அவலம்பியாமல் ஸ்வரூபேண அவஸ்திதமாகை-(சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் போல்வர் அல்லரே இவர் )

ஸ்வாபதேசம்
துக்கப் பட்ட மனஸ்ஸுக்கு சர்வம் அஸஹ்யம் எத்தையும் தாங்காதே –-பகவத் விஸ்லேஷத்தாலே சர்வமும் அஸஹ்யமான படியை அருளிச் செய்கிறார் –

தாத்பர்யம்-இப் பாசுரத்தில் சர்வேஸ்வரனை ஆழ்வார் முன்பு மாநசமாக அனுபவித்ததால்
அவனோடே சம்பந்தித்த பதார்த்தங்கள் இப்போது ஆழ்வாருக்கு ஸ்ம்ருதி விஷயமாக அலாபத்தால் பாதகமான படியை-நாயகனைப் பிரிந்த நாயகியை வாடைக் காற்றுக்கு ஆற்றாதவளாய் சொல்லும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்-விஷத்தை கொண்டு வீசுவது போல் எனக்கு அத்யந்த பாதகமாய் குளிர்ந்து வீசுகிற ஓ மாருதமே சர்வேஸ்வரன் பெரிய திருவடியை நடத்திக்கொண்டு வர சேவித்து
எனக்கு இருந்த ஒரு மனஸும் முன்பே போனது-இனி மேல் பட கொண்டு அவன் சாத்திக் களைந்த திருத்துழாய்க்கு கொண்டு போகைக்கு வேறே என்னிடம் வேறே மனஸ் ஸூ இல்லை
இப்படி மனசைப் பறி கொடுத்து அவஸ்தை படும் சமயத்தில் நீயும் வந்து தன்னை முடிக்க நினைத்து சீறிக்கொண்டு கபடத்தால் -தாய் வேஷம் கொண்டு வந்த பூதனையை- நமக்கு உபகரிக்கைக்காக முடித்த சர்வேஸ்வரன் திருமுடியில் சாத்தின பரிமளம் கொண்டு நலிய வந்த உனக்கு இது தர்மம் அன்று காண்-தத்துவம் அன்று தகவும் அன்று ஆகையால் நீ என்னை பாதியாது ஒழிய வேணும் -என்கிறாள் –

—-

1-8-ஓடும் புள் -பிரவேசம் –

கீழில் திருவாய்மொழியில் நிரதிசய போக்யன் என்றார்; 
அவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்கிறார் இத் திருவாய்மொழியில்.
‘பத்துடை அடியவரில்’ சௌலப்யமும், ‘வளவேழ் உலகில்’ சௌசீல்யமும் அருளிச் செய்தார்;
இத் திருவாய்மொழியில் ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்;
இவற்றின் வேறுபாடு என்னை?’ எனின்,
சௌலப்யமாவது, ஸ்ரீவைகுண்டத்தைக் கலவிருக்கையாக வுடையவன், அங்கு நின்றும் சம்சாரி சேதனர்
நின்ற இடத்தே வந்து அவதரித்து எளியனாகை. 
சௌசீல்யமாவது இப்படித் தாழ விட்டால், ‘சிறியார் அளவிலே நம்மைத் தாழவிட்டோமே!’ என்று
தன் திரு வுள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை. 
ஆர்ஜவமாவது, இப்படிப் பொருந்தினால், நினைவும் சொல்லும் செயலும் ஒரு படிப்பட்டு இராமல், பல வகைப்பட்ட சேதநரோடு
தான் பரிமாறும் இடத்தில், அவர்கள் போன வழி தனக்கும் வழியாம்படி தான் அவர்களுக்குச் செவ்வியனாய்ப் பரிமாறுகை. 

‘சௌசீல்யம்-ஆர்ஜவம்’ என்னும் இரண்டும் ஒன்று போலக் காணப் படினும், வேறு வேறு என்பதே
நம் பெரியோர்களுடைய திருவுள்ளம். 
ஸ்ரீ ஆளவந்தார் ‘குணவான்’ என்று சௌசீல்ய குணத்தை முன்னர் அருளிச் செய்து,
பின்னர் ‘ருஜூ’ என்று ஆர்ஜவ குணத்தைப் பிரித்து வேறாக அருளிச் செய்தார்.

இத் திருவாய்மொழி சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்யம் கூறுகிறது என்பாரும்  
ஈச்வரத்வ லக்ஷணம் கூறுகிறது என்பாரும் –
கீழ் ‘பாடி இளைப்பிலம்’ என்றார், அப்படியே பாடி அனுபவிக்கின்றார் என்பாரும் உளர்.
‘ஆயின்’  இறைவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்லுகிறது என்பதுவே ஸ்ரீ பட்டருடைய  திருவுள்ளம்.

இத் திருவாய்மொழியில் வருகின்ற ‘ஓடும் புள் ஏறி,’ ‘சூடும் தண்துழாய்’,‘நீர் புரை வண்ணன்’ என்ற திருப்பாசுரங்களை நோக்கி
‘ஆர்ஜவ குணத்தைச் சொல்லுகிறார் இத் திருவாய்மொழியில்’ என்கிறார்.
இத் திருவாய்மொழியில் வருகின்ற ‘கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு’ என்பது முதலான
திருப் பாசுரங்களை நோக்கிப்‘பரத்துவத்தைக் கூறுகிறது’ என்பர்.
‘ஓடும் புள் ஏறி’, ‘சங்கு சக்கரம் அங்கையிற் கொண்டான்’ என்பன முதலான திருப் பாசுரங்களை நோக்கி
ஈச்வரத்வ லக்ஷணம் கூறுகிறது, என்பர்.
‘அம்மான் சீர் கற்பன் வைகலே என்ற திருப் பாசுரத்தை நோக்கிப் ‘பாடி அனுபவிக்கின்றார்’என்பர்.
ஸ்ரீ பட்டர் ‘நீர் புரை வண்ணன்’ என்பது முதலான திருப் பாசுரங்களைக் கடாக்ஷித்து,
ஆர்ஜவ குணத்தைக் கூறுகிறது’ என்று அருளிச் செய்வார்.

இப்படி சரசனான சர்வேஸ்வரன் நிர்த்தோஷரான நித்ய ஆஸ்ரிதரோபாதி இன்று ஆஸ்ரயிக்கிற நிகில ஆஸ்ரிதருடைய லீலா விபூதி சம்பந்தம் அடியான
செவ்வைக் கேட்டைச் செவ்வையாம் படி தன்னை ஓக்க விட்டுச் சேரும்படியான ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்வதாக -அதுக்கு
1-பிரதமபாவியான நித்ய புருஷ சம்ச்லேஷ பிரகாரத்தையும் –
2-நிகில ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமான அவதார வை லக்ஷண்யத்தையும் –
3-உபய விபூதி சாதாரணமான அர்ச்சாவதார ஸ்திதி யையும் -4-ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமான ஆபத் ஸகத்வத்தையும் –
-5-அந்த சம்ச்லேஷத்துக்கு எல்லையான ஸ்வ சம்ச்லேஷத்தையும் –
6-இது சகல சம்ச்லேஷ சாதாரணம் என்னும் இடத்தையும் –
7-ஆஸ்ரிதர் நினைவே தன் நினைவாம் படி கலக்கும் என்னும் இடத்தையும் —
8-ஆஸ்ரித சங்கம் அடியான அவதாரத்துக்கு ஸங்க்யை இல்லை என்னும் இடத்தையும் —
9–அவதாரங்கள் ஆஸ்ரித அனுபாவ்யமான அசாதாரண சிஹ்னங்கள் என்னும் இடத்தையும் –
10-ஏவம்வித ஸ்வ பாவன் வேதைக சமதி கம்யன் என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து ஆஸ்ரித அர்த்தமான அவனுடைய ஆர்ஜவ குணத்தை ப்ரதிபாதித்து அருளுகிறார் –

—————

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே
 –1-8-1-

நித்திய விபூதியில் உள்ளாரோடு செவ்வியனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறார் இப் பாசுரத்தில்.‘ஆயின், அங்குள்ள அவர்களுக்குச் செவ்வைக் கேடு இல்லையே?
அங்ஙனம் இருக்க, அங்கு ஆர்ஜவ குணம் எற்றிற்கு?’ என்னில்,
அவர்கள் பலராய் இருத்தலானும், அவர்கட்கும் ருசி பேதம் உண்டு ஆதலானும்,
அவர்கள் நினைவு அறிந்து பரிமாறுதற்கு அங்கும் ஆர்ஜவ குணம் வேண்டும்.

ஓடும் புள்ளேறி-திருவடி ‘இப்பொழுது அடியேன் மேல் எழுந்தருள வேண்டும்’ என்று விரும்பினால், ‘வேண்டா’ என்னாது மேற்கொள்ளும் ஆர்ஜவமாம்.-பெரிய திருவடியை மேற்கொள்ளுமது தான், அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கைக்கும், பெரிய திருவடியினுடைய ஸ்வரூப லாபத்துக்காகவும் இருக்கும்.-சூடும் தண் துழாய் -திருத்துழாய் ‘இப்போதே பறித்துத் திருக்குழலில் வளையமாக வையாது ஒழியில் செல்வி அழிவேன்’ என்னும்-அரசனுடைய சந்நிதியில் கூனர் குறளர்களாய் வசிப்பது போன்று, விரோதியாய் உள்ள-சைதன்யமே – அறிவுத் தன்மையே கழியப் பெறுவர்.-அதாவது, அவ்வவ்விடங்கட்குத் தடையாயுள்ள அறிவு மட்டும் நீங்கப் பெறுவர் என்றபடி.-பரம பதத்தில் மேற்கொண்ட சரீரங்கள், அவர்களுடைய இச்சைக்கு உரிமைப் பட்டவைகளாய் இருப்பனவாம்.-எல்லார்க்கும் விஷயம் ஒன்றேயாகிலும், அவ் விஷயந்தன்னில் விருத்தி பேதத்தால் ருசி பேதம் உண்டாம்.ஆடும் –சர்வேஸ்வரனுக்கு அவர்களோடே அணைவது, விடாயர் மடுவிலே புக்கு ஆடியது போன்று இருக்கையாலே, அவற்றோடே ‘பரிமாறும்’ என்னாது,‘அவை ஆடும்’என்கிறார். அம்மானே--நித்திய ஸூரிகளோடு நித்திய சம்சாரிகளோடு வேற்றுமை அற எல்லாரினும்-சர்வாதிகனாய் இருந்து வைத்து – அறப் பெரியவனாய் இருந்தும் இப்படிப் பரிமாறுகிறான்’ என்பார், ‘அம்மான்’ என்கிறார்-

———

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே 
–1-8-2-

நித்திய விபூதியில் நின்றும் வந்து அவதரித்து விரோதிகளைப் போக்கிச் சம்சாரிகளுடன்
செவ்வையனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறது.-அவ் வவதாரத்தோடு முடிவு பெறுதல் இன்றிப்–பஹுநி ‘பல படியாகப் பிறக்கிறேன்’ என்கிறபடியே, அதற்கு மேல் பல அவதாரங்களை எடுத்தான்.-பரத்துவத்திலும்-மனுஷத்வே பரத்வம் – மனித உருவத்தால் வந்த பரத்துவத்தினது அழகை, ஈண்டு ‘மாண்பு’ என்கிறார்.-மாண்பு என்று திருவவதாரங்களை சொல்லுகிறது-

————

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
 –1-8-3-

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாயானவள் இருவர்க்கும் பால் கொடுக்கத் தகுதியாக நடுவே கிடக்குமாறு போன்று, நித்திய ஸூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கின்ற நீர்மையை அருளிச் செய்கிறார்-
( திருவாய் மொழியில் முதல் ஸ்பஷ்டமாக திவ்ய தேச மங்களா சாசனப் பாசுரம் -)

கண்ணாவான்-சஷுர் தேவா நாம் உதமர்த்யாநாம் ‘விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் கண்’ என்கிற ஸ்ருதி அர்த்தத்தை அருளிச் செய்கிறார்-கண்ணாமவன் என்றபடி.
இனி, இதற்குக் நிர்வாஹகானாவான் ‘காப்பாற்றுகின்றவன்’என்று பொருள் கூறலுமாம்.
கண்ணாகைக்காக -என்னுதல்-மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் –
இதனால், தங்கள் காரியம் தாங்கள் செய்து கொள்ள மாட்டாமைக்கு, நித்திய ஸூரிகளோடு சம்சாரிகளோடு வாசி இன்மையைத் தெரிவிக்கிறார்.-விண்ணோர் வெற்பன்--‘வானவர் நாடு’ என்னுமாறு ‘விண்ணோர் வெற்பு’ என்கிறார்.-இரண்டு உலகத்தில் உள்ளார்க்கும் முகம் கொடுக்க வந்து நின்றானே யாகிலும், திருமலை தான் நித்திய ஸூரிகளுடையது என்றபடி.-விண்ணோர் வெற்பன் என்கிற இடம் நித்ய ஸூரிகள் அபிப்ராயத்தாலே
விண்ணோர் எங்களது -என்று அபிமானிக்கும் படியான தண்ணார் வேங்கட வெற்பை உடையவன் 

————–

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே
 –1-8-4-

அவனுடைய ஆர்ஜவ குணம் தம் அளவிலே பலித்த படியை அருளிச் செய்கிறார்.-சீர் கற்பன்-
அவன் மலையை எடுத்துக் காப்பாற்றத் தக்க பொருள்களை நோக்கின நேர்மையை நினைத்து,-குணைர் தாஸ்யம் உபாகத  ‘குணங்களால் அடிமைப்பட்டேன்’ என்று ஸ்ரீ இளைய பெருமாள் கூறியது போன்று,-அவனுடைய கல்யாண குணங்களை அந்த நற்குணங்களாலே -பிரேரிதனாய் தூண்டப்பட்டவனாகிச் சொல்லுவன்.-அப்யசிப்பேன்-வைகலே- ஒருகால் இதனைச் சொல்லி, பின்னர் என் காரியத்திற்குப் போமவன் அல்லேன்;
விபன்யவ -‘எப்பொழுதும் ஸ்துதித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்கிற நித்திய ஸூரிகளைப் போன்று நானும் இதுவே தொழிலாக இருப்பன்.

——–

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே 
–1-8-5-

நான் அவனை விட்டு அவன் குணங்களை விரும்புவது போன்று,-அவனும் என்னை விட்டு எனது தேகத்தை விரும்புகிறான்,’ என்கிறார்.‘கற்பன் வைகலே’ என்கிறபடியே, எனக்கு அவன் குணங்கள் என்றும் தாரகமாக இருப்பது போன்று அவனுக்கும் -ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் -அடியார்கள் தீண்டிய பொருள்கள் என்றும் ஒக்கத் தாரகமாக இருக்குமாதலின், ‘வைகலும்’ என்கிறார்.அழுக்குடம்பு’ என்று யான் வெறுக்கும் ‘இச் சரீரம் இறைவனுக்கு -ஆதரணீயம் -விரும்பத் தக்கது ஆவதே!’ என்பார், ‘என் மெய்’ என்கிறார்.
இதனால், அவன் மேல் விழ மேல் விழ -தாம் மேன்மையைக் கண்டு இறாய்க்கிறார் ஆயிற்று
அவன் மேல் விழுகிறதும் இத்தாலே யாயிற்று –

—————

கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே 
–1-8-6-

இப்படிக் கலந்து செய்தது என்?’ என்ன, தேஹத்து அளவிலே விரும்பி விட்டிலன்;
என் ஆவி நலத்தையும் கொண்டான்,’ என்கிறார்.கலந்து என் ஆவி நலம் கொள் நாதன்-
என்னோடே ஒரு நீராகக் கலந்து, பின்னர் என் ஆத்துமாவினுடைய நற் ஜீவனைக் கொண்டான் -அவ்வளவேயோ? –நாதன்-‘என்னை ஆளும் கொண்டு’ என்கிறபடியே, நான் எனக்கு உரியேனாய் இருக்கிற இருப்பையும் தவிர்த்தான்.
‘இப்படி அகப்பட்டார் நீரேயோ?’ என்ன, மகாபலியும் அகப்பட்டான்.புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே — ஸர்வேந்த்ரிய அபஹார ஷமமான குறள் வடிவைக் காட்டி மஹா பலியிடம் நிலம் கொண்டால் போலே – ஆயின், அவன் ஆவி நலம் கொடுத்திலன்; கழஞ்சு மண் கொடுத்தான் இத்தனை.

————-

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே
 –1-8-7-

தன் பக்கல் உண்டான என்னுடைய மநோ ரதத்தை என் பக்கலிலே தான் பண்ணினான் -ஆவி நலம் கொண்ட அளவேயோ? நித்ய விபூதியில் -பரம பதத்தில் செய்யும்
ஆதாரத்தை -அன்பையும் என் பக்கலிலே செய்தான்,’ என்கிறார்.

உண்டான் ஏழ் வையம்--பிரளய ஆபத்தில் பூமி தன் வயிற்றில் புகா விடில் தரியாதது போன்று, தான் என் பக்கலில் புகுந்து அல்லது தரியாதவன் ஆனான்.

தண் தாமம் செய்து – குளிர்ச்சியை யுடைத்தான பரம பதத்தில் செய்யும் விருப்பத்தையும் என் பக்கலிலே செய்தான்.
இனி, ‘தண் தாமம் செய்து’ என்பதற்கு,  இவ் வுலகில் இருக்கிற என்னைப் பரம பதத்தில் இருப்பவர்களுள் ஒருவனாக ஆதரித்து’ -தத் விபூதிகனாகவே – என்று பொருள் கூறலுமாம்

என் எண் தான் ஆனானே – நான் மநோரதித்தபடியே விரும்பியபடியே எனக்குக் கை புகுந்தான்.
அன்றிக்கே ‘என் மநோ ரதத்தைத் தான் கைக் கொண்டான்,’ என்று கூறலுமாம்.
அதாவது, ‘மாக வைகுந்தம் காண்பதற்கு என்மனம், ஏகம் எண்ணும்,’ 
‘கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்,’ என்கிறபடியே,
ஸ்ரீ வைகுண்டத்திற்குச் சேறல் வேண்டும்’ என்றும்,
‘அங்கே அனுபவிக்க வேண்டும்’ என்றும் நான் ஆசைப்பட,
ஸ்ரீ திருநகரிக்கு ஏறப் போக வேண்டும்;
ஸ்ரீ ஆழ்வாரை அனுபவிக்க வேண்டும்,’ என்று அவன் பாரிக்கிறான்’ என்றபடி.-என் எண்ணிலே தன் கை புகுந்தான் -என்றுமாம் 

———

ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே
 –1-8-8-

என் பக்கல் சங்காதிசயத்தாலே என்னைப் பற்ற அவன் பட்டதுக்கு ஓர் அளவில்லை -என்னைக் கருதி அவன் பிறந்த பிறவிகளுக்கு ஒரு முடிவு இல்லை,’ என்கிறார்.தானாய சங்கே-என் பக்கல் தனக்கு உண்டான-சங்காதிசயத்தாலே – அன்பின் மிகுதியே.
இனி, இதற்கு, ‘என்னைக் குறித்துத் தான் எடுத்த அவதாரங்கள்-மஹா ஸங்க்யை –
மகாசங்கம் என்னும் அளவே,’ என்று கூறலுமாம்.
இனி, ‘சங்கே’ என்பதற்கு, ‘மகாசங்கம் என்னும் அளவேயோ! முடிவு உண்டோ!
பஹு நி  ‘பல’ என்னும் இத்தனை’ என்று கூறலும் ஒன்று.

——–

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே 
–1-8-9-

இப்படி அவதரிக்குமிடத்து ஐஸ்வர்யமான சிஹ்னங்களோடே அடையாளங்களோடே
வந்து அவதரிப்பான்,’ என்கிறார்.-சிலரை வசீகரிக்க நினைத்தவர்கள், கையிலே மருந்து கொண்டு திரியுமாறு போன்று, அவதாரங்கள் தோறும் திவ்விய ஆயுதங்களோடே வந்து அவதரிக்கும்

———–

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரனே
 —1-8-10-

அவன் நீர்மையைப் பேசப்புக்கு -நம்மால் பேசப்போமோ – கடல் கிளர்ந்தால் போலே வேதமே பேச வேண்டாவோ -என்கிறார்-நாதன்-முதல் பாட்டில் சொன்ன சேஷித்வத்தை யுடையவன்-ஞாலம் கொள் பாதன்-இரண்டாம் பாட்டில் சொன்ன அவதார ஸுலப்யத்தை யுடையவன்-என் அம்மான்-எனக்கு கிட்டலாம் படி திருமலையில் வந்து அடிமை கொண்டவன் –
மூன்றாம் பாட்டில் -கண்ணாவான் -என்றத்தை நினைக்கிறார்-ஓதம் போல் கிளர் வேத நீரனே – இவனுடைய இந் நிலைமைகளைப் பேசும் போது-கடல் கிளர்ந்தால் போலே கிளரா நின்றுள்ள வேதத்தாலே ப்ரதி பாதிக்கப்பட்ட நீர்மையை யுடையவன் – நீர்மையாவது -ஆர்ஜவம் –எம்பெருமானுடைய படி வேதைக ஸமதி கம்யம்-என்கிறார் –

————–

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –
1-8-11-

அவனுடைய ஆர்ஜவ குணத்தை நினைத்த இடத்திலே கொடு போகலான நீரின் தன்மையை உடையவனுடைய குணத்தை ஆராய்ந்து சொன்ன பத்து’ –என்கிறார்.-நீர் புரை வண்ணன் சீர் –நீரோடு ஒத்த தன்மையை யுடையவனுடைய ஆர்ஜவ குணத்தை.-சம்சாரிகளுடைய செவ்வைக் கேட்டை நினைந்து, அத்தால் இழக்க வேண்டாதபடி அவனுடைய ஆர்ஜவ குணத்தை நினைத்து அருளிச் செய்யப் பட்டவை என்பதாம்.இனி, ‘இவை ஓர்தல்’ என்பதற்கு, சம்சாரிகள் ஓரப்படுமவை என்று கூறலுமாம்.

—————-

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடறிய
ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை-————-8-

ஆஸ்ரயிக்கிறவர்கள் கரணத்த்ரயத்தாலும் செவ்வைக் கேடரான சம்சாரிகள் ஆகையாலே
பரிமாற்றத்தில் அருமை தட்டி இராதோ என்னில்
நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப் போலே
இவர்களுடைய செவ்வைக் கேடே தனக்கு செவ்வையாகும் படி இன்று ஆஸ்ரயிக்கிற இவர்கள் அளவிலும் செவ்வியனாய் பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தன் என்கிற –ஓடும் புள்ளில் அர்த்தத்தை
ஓடு மனம் செய்கை-இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-ஓடும் புள்ளேறிச் சூடும் தண் துழாய் நீடு நின்றவை யாடும் அம்மானே -என்று
நித்ய சூரிகள் திறத்தில் பரிமாறும் ஆர்ஜவத்தையும்
அம்மனாய் -என்றும்
கண்ணாவான்-என்றும்
நீர் புரை வண்ணன் -என்னும் அளவும் நித்ய சம்சாரிகளோடே செவ்வையனாய் பரிமாறும் ஆர்ஜவத்தையும்
அருளிச் செய்தார் -என்கை–இப்படி உரை செய்த –ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்த
ஆழ்வார் என்று அனுசந்திக்க –ஸ்வரூப அனுரூபமான சம்பத்தாய் உள்ளவை எல்லாம் பொருந்தி
சென்று ஒன்றி நின்ற திரு -என்னும்படி நிலை நிற்கும் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading