ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
1-ஸம்ஸாரத்தை அடியறுக்கும் மந்த்ரங்கள் இரண்டு -குரு தரமான பக்தி யோகமும் -லகுதரமான ந்யாஸ யோகமும்
தோஷ சப்தகங்கள் –துக்க மூலம் -துக்க மிஸ்ரம் -துக்க உதர்க்கம் -அல்பம் -அஸ்திரம் -விபரீத அபிமான மூலத்வம் -ஸ்வாபாவிக ஆனந்த வ்ருத்தம் -அதாவது
துன்பத்திலிருந்து பிறப்பது – துன்பத்துடன் கலந்திருப்பது -துன்பத்தை உண்டாக்குவது-அளவில் மிகக் குறைவானது -நிலையற்றது -தகாத ஆசைக்கு கருவியாய் இருப்பது -எம்பெருமானை அனுபவிப்பது என்னும் இட்டுப் பிறந்து வைத்தால் இயற்க்கைக்கு மாறாக இருப்பது-ஆகிய ஏழுவித குறைகள் இல்லாத நிலையில்லா –பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் -இதற்குத்தடையாய் பிறப்பு இறப்பில் சுழன்று நிற்கும் கூடிய நரகமே இந்த ஸம்ஸாரம்-இதன் நின்றும் மீள பக்தியோகமும் பிரபத்தியும் இரண்டு மார்க்கங்கள்
2-இவற்றில் பக்தி யோகம் -யாதொருவனை இவன் வரிக்கிறானோ என்னும் ஸ்ருதி வாக்யத்தாலும் -பக்த்யா லப்ய து அநந்யயா -ஸ்ரீ கீதா வாக்யத்தாலும் -இத்யாதிகளாலும் ப்ரதிபாதிக்கப்படுகிறது
நாயமாத்ம ப்ரவசனேன லப்4யோ ந மேத4யா ந ப3ஹுனா ஶ்ரதேன |
யமேவைஷ வ்ருணுதே தேன லப்4யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம்ஸ்வாம் ||-கட ஸ்ருதி-23-ஈஸ்வரன் எதன் அடிப்படையில் மனிதனை ஆத்ம ஞானம் அடைவதற்கு தேர்ந்தெடுப்பார் என்றால் எவனொருவன் மோட்சத்தை அடைவதில் தீவிர வைராக்யத்துடன் இருக்கின்றானோ அவனைத் தான் தேர்ந்தெடுக்கின்றார். அவர்களுக்குத்தான் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு அனுக்கிரகம் செய்கின்றார்.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந:-9-26-நல்ல மனமுடையாரது பக்திவலையொன்றில் மட்டும் அவன் படுகிறான்
சர்வாதிகாரமாய் -சர்வ அநிஷ்ட நிவர்த்தந ஷமமாய்-சர்வ இஷ்ட சாதனமாக வற்றாய்-
ஸூ கரமாய் -சக்ருத் கர்தவ்யமாய் -ஆசுகாரியாய் -ப்ரதிபன்னா நர்ஹமாய்
ப்ரஹ்மாஸ்த்ர பந்தம் போலே ஸ்வ பலத்திலே உபயாந்தர பிரயோக அசஹமாய் இருந்துள்ள ப்ரபத்தி
3-இத்தாலே -ஸ்வ கத ஸ்வீ கார அநுபாயத்வமும் -பரகத ஸ்வீ கார உபாயத்வமும் -சொல்லப்படுகின்றன என்று சிலர் சொன்னார்கள்–கீழ் சொன்ன ஸ்ருதி வாக்யத்தை பக்தி பரமாக யோஜிக்கிற ஸ்ரீ பாஷ்ய ஸூக்திக்கும் விரோதிக்கும்
பலம் அத உபபத்தே —3-2-37--இவன் இடம் இருந்தே கர்ம பலன் பெறுகிறார்கள்
கர்மம் க்ஷணிகம்-ஸர்வஞ்ஞன்-ஸர்வசக்தன் -காருணிகன் -உதார குணம் -ஆதியும் அந்தமும் இல்லாதவன்-ஆகவே கர்மத்தால் ப்ரீதனாகி இவனே பலன் அருளுகிறார் -நாம் உபாஸனம் செய்யத் தேவையில்லை என்பது பொருந்தாது-
4-பக்தியால் அஹங்கார வாதம் -நான் செய்கிறேன் என்னும் வாதம் -விலக்கத்தக்கது -ஸ்வ ஆத்ம சரீரகதயா பரமாத்ம உபாஸந விதாயக -தன்னை சரீரமாக யுடையவனாக பகவானை உபாஸிக்கும் படி யாணையிடும் -ஸ்ருதி ஸூத்ர பாஷ்யாதி பரிசய வைதேசிகருக்கும் -தேர்ச்சி இல்லாதவருக்கும் கூட அருசிக்கும் -சுவைக்காது
அஹம் என்ற மாத்ரத்தாலே -என்பதாலே மட்டுமே -அஹங்காரம் வரில் -வரும் என்றால் -பகவத் கைங்கர்யாதிகளிலும் இது துஷ் பரிஹரமாம் -தவிர்க்க முடியாத ஓன்று அன்றோ -கைங்கர்யத்தையும் விட்டு விடலாமோ -கூடாதது அல்லவா-வ்யாஸாதிகளுடைய தன்னிஷ்டையும் -அதன் நிலைப்பும் -விரோதிக்கும் -வ்யாஸாதிகளுக்கும் பகவத் பாரதந்தர்ய ஞானத்தில் -தத் உபதேஸம் கடியாது –
கர்ம யோகங்கள் தேவதா அந்தர்யாமி -பரமாத்ம பரங்கள் -எம்பெருமானார் சரீரங்களாகக் கொள்பவை -ஆகையால் தத் அங்கத்வத்தால் -கர்ம யோகங்கள் அங்கமாக இருப்பதால் -வரும் அவத்யம் கேடு இல்லை -அவ்வாறு உண்டாகில் நைமித்திகங்களும் த்யாஜ்யமாம் -விட வேண்டியவையே –
இஷ்டாபத்தியில் -பிடித்த கர்மாக்களைச் செய்வதில் -மநீஷீ வைதிக ஆசாரம் மநஸாபி ந லங்கயேத் -லஷ்மீ தந்த்ரம் -17-94-அறிவுள்ளவன் வேதத்தில் விதித்த நடைமுறைகளை மனதாலும் மீறக்கூடாது -இத்யாதி பிரமாணங்களும் தந் நிஷ்டாசாரமும் -அதில் நிலைத்தவர்களின் செயலுக்கும் விரோதிக்கும்-
மஹா பாரதத்தில் -சாந்தி பர்வாவில் -யஞ்ஞ அக்ரஹர அத்தியாயத்தில் -தேவர்களைக்குறித்து செய்யும் யாகத்தின் ஹவிஸ்ஸை ஏற்றுக் கொண்டு அவர்களின் அந்தர்யாமியான எம்பெருமான் மகிழ்ந்து பாலன்ஸ் அளிக்கிறான் -அக்னி -அக்ரம் நயதி -முன் நின்றும் ஜீவர்களை நடத்திச் செல்பவன் என்றும் எம்பெருமானையே குறிக்கும் -இதே போலவே இந்திரன் சிவன் சப்தங்களும் அவனையே குறிக்கும் –
ஸாஷாத் அபி அவிரோதம் ஜைமினி -1-2-29–அனைத்துப் பெயர் சொற்களும் நேராகவே கூட எம்பெருமானையே குறிக்கும் எனக்கொள்வதில் முரண்பட்டு இல்லை என்கிறார் ஜைமினி
ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யத்திலும் ப்ரம்மா வேள்வியைச் செய்ய பரஞ்சுடர் உகந்து பேர் அருளாளன் ஆவிர்பவித்து அருளினார் அன்றோ –
பக்தி த்யாகத்தில் ஹேது -தத் அசக்தியும் விளம்ப அஷமதையும் அபிராப்தமாயுமாகையும் -ஆழ்வார்களில் விளம்ப அஷமதையும்-அபிராப்தமாயுமாகையும் -நம்மிடம் அசக்தியும் காணலாம்–பாலாழி நீ கிடைக்கும் பண்பை யாம கேட்டேயும்
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
நீலாழிச் சோதியாய் ஆதியாய் தொல்வினை என்பால் கடியும்
நீதியாய் நிற் சார்ந்து நின்று—ஆழ்வார்களும் பக்தி அனுஷ்டான அசக்தியும் சொல்லலாம்
அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||-ஶ்லோகம் 54 –
என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ, அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.
நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||-ஶ்லோகம் 64 –
ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்
“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,
நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான்,உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?-ப்ரபன்னர் பக்தி பிரார்த்தனையும் ஸ்வயம் ப்ரயோஜநமாகவும் –ரஸ்யதா அதிசயத்தாலே ஒழிய சாதந புத்தியால் அன்று–பஜந ஸூகம் ஏகஸ்ய விபுலம் -பல ரூபமான பக்தி மூலம் பெரும் பகவத் அனுபவம் அபரிச்சேதம்
யா ப்ரீதி அவிவேகாநாம் விஷயேஷு அநபாயிநீ த்வாம் அநு ஸ்மரத ஸா மே ஹ்ருதயாத் மாபஸர்ப்பது – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-19-(விவேகம் அற்றவர்களுக்கு சிற்றின்பத்தில் மிக்க ஈடுபடக் உள்ளது போல் உன்னையே அனைவரதும் நினைத்துக்கொண்டு இருக்கும் அடியேனுக்கு உம்மிடம் ஈடுபடக் விலகாமல் இருக்காய் அருளிச் செய்யவேணும் -ப்ரஹ்லாதாழ்வான் பிரார்த்தனை –இத்யாதிகள் படியே) ரஜஸ் தமோ குண உன்மேஷம் இல்லாத -ஸத்வஸ்தருக்கு -சத்வ குணம் மிக்கிருப்பாருக்கே பக்தியானது ரஸ்ய தமமாய் இருக்கும் –
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11-காமினிகளுக்குக் காமுகர் எவ்வளவு, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவ்வளவு ஆவர் இதனைக் கற்க வல்லவர்கள்.
பூர்வோக்த பக்தி பரித்யாக ஹேது -உடையவனுக்கு ப்ரபத்தியில் அதிகாரம்-பக்தியில் அசக்தியே ப்ரபத்திக்கு அதிகாரம் –
நயநே வ்ருஷாசல இந்தோ தாரா மைத்ரீம் ததா நயா கருணே
த்ருஷ்டஸ் த்வயா ஏவ ஜனிமான் அபவர்க்கம் அக்ருஷ்ட பச்ச்சயம் அநு பவதி —தயாசாதகம் -20-தயா தேவியே! திருமலையில் உதித்த குளிர்ந்த சந்திரன் போன்ற ஸ்ரீநிவாஸனின் திருக்கண்களின் விழியினுடைய நட்பை நீ கொண்டுள்ளாய் . உன்னால் பார்க்கப் பட்ட மனிதன் ஒருவன், உழவு போன்ற சிரமம் இன்றி கிட்டும் பலன் போன்று, எந்த விதமான முயற்சியும் இன்றி மோக்ஷம் அடைகிறான்.
இப் பிரபத்தி தான்-அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகுக்கும் – ஸர்வாதிகாரமாய் -ஸர்வ பல ப்ரதமாய் -சதுர்வித பலத்துக்கும் ஸாதனமாய் -ஆநு கூல்ய சங்கல்பம் -பிரதிகூல வர்ஜனம் -மஹா விஸ்வாஸம்-கார்ப்பண்யம் -கோப்த்ருத்வ வரணம் என்னும் அங்க பஞ்சக உபேதமாய் -இச்சா அநு குணமாக பிராரப்த கர்மங்களையும் போக்குவதாய் இருக்கும் –
தாவதார்த்தி ததாவாஞ்சா தாவந் மோஹா ததா அ ஸூகம் -யாவந் ந யாதி சரணம் த்வாம் அசேஷ அக நாஸகம் -விஷ்ணு -1-9-73-சரணாகதி செய்யாத வரையில் தானே ஜீவர்களுக்கு இழந்த செல்வத்தைப் பெறவும் புதிதாக செல்வத்தைப் பெறவும் ஆத்ம அனுபவத்தை பெறவும் ஆசையும் அனுபவிக்கப் பெறாத நிலையும் கவலையும் இருக்கும்
மோக்ஷத்தையே மட்டுமே குறித்துச் செய்யும் பிரபத்திக்கு பல -சங்க -கர்த்ருத்வ த்ரிவித -தியாகமும் வேண்டும் –
ப்ராரப்தே தர பூர்வ பாபமகிலம் ப்ராமதிகம் சோத்தரம்
ந்யாசேன ஷபயன் நநப்யுபகத பிராரப்த கண்டம் ச ந
தீ பூர்வோத்தர பாப்மா நாமஜந நாஜ் ஜாதே அபி தன்நிஷ்க்ருதே
கௌடில்யே சந்திம் சிஷயா அப்ய நதயநம் க்ரோடீகரோதிம் ப்ரபு –அபராத பரிஹார அதிகாரம்-18-
இவ்வர்த்தத்தில் ஸ்ரீ பாஞ்சராத்ரம் அத்யந்த ஜாகரூபமாய் இருக்கும் -இதனுடைய மஹாத்ம்யம் பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயண ஸ்வயம் -சாந்தி பர்வம் -359-58-இத்யாதிகளிலே கண்டுகொள்வது
-ஆநு கூலஸ்ய ஸங்கல்ப பிராதி கூலஸ்ய வர்ஜனம் ரஷிஷ்ய தீதி விஸ்வாஸ கோப்த்ருத்வ வரணம் ததா ஆத்மநிஷேப்ய கார்ப்பண்யே ஷட் விதா ஸரணாகதி அஹிர்புத்ந்யா ஸம்ஹிதை -37-28-29-
ஸத் கர்ம நிரதா ஸூத்தோ சாங்க்ய யோக விதஸ் ததா -நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடி தமீமபி -லஷ்மீ தந்த்ர -16-62-
நிஷே பாபர பர்யாய ந்யாஸ பஞ்சாங்க ஸம்யுத ஸந் ந்யாஸ ஸத்யாக இத் யுக்த ஸரணாகதி ரித்யபி -லஷ்மீ தந்த்ர-17- 74-இத்யாதிகளைக் கொண்டு அறியலாம் –
தயிரில் வெண்ணெய் -உயிர் இனத்தில் அந்தணன் -வேதங்களில் ஆரண்யகம் -ஒவ்ஷதங்களில் அம்ருதம் – இதே போல் பாஞ்சராத்ரம் நான்கு வேதங்களுக்கும் சமம் -ஸாரம் –ஸ்வயமாக தானே அருளிச் செய்த ஏற்றமும் உண்டு -முனி ஸ்ரேஷ்டர்களால் ப்ரமாணமாகக் கொள்ளப்பட்டது -தர்க்கபாதம் –
ஸூத்ரம் –211-விஞ்ஞானாதி பாவே வா தத் அப்ரதிஷேத –2-2-41-வேதாந்தத்தில் கூறப்பட்ட பரம புருஷனின் உபாசனத்தையும் அவனை அர்ச்சிப்பதையும் பாஞ்ச ராத்ரம் விளக்குவதால் அது முழுவதுமே பிரமாணம் என்பது சித்தம் –ஸூத்ரம் –212–விப்ரதிஷேதாச் ச -2-2–42--இந்த பாஞ்சராத்ரத்திலும் ஜீவனின் உத்பத்தியை விசேஷமாக நிஷேதித்து இருப்பதால் இது வேதத்துக்கு முரண் அற்றது-அசேதநா பரார்த்த ச நித்யா சதத விக்ரியா த்ரி குணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே வ்யாப்தி ரூபேண ஸம்பந்த தஸ் யாச்ச புருஷஸ் யச ஸஹ்ய நாதி ரநத் தச்ச பரமார்த்தே நிச்சித -என்று பாஞ்ச ராத்ரத்திலே ஜீவனுக்கு உத்பத்தி நிஷேதிக்கப்பட்டது ஆகையால் ஸ்ருதியுடன் சிறிதும் முரண்பாடு இல்லை-பாஞ்சராத்ரத்தின் அப்ரமாண்யம் பரபக்ஷமாகையாலே தந் நிராகரணமும் இப்பாத சங்கதமாகக் குறையில்லையே -இதை உத்சர்க்க அபவாத முறை –
பாஞ்ச ராத்ரே ச பவ்த்தே ச ஸ்காந்த புராணம் இத்யாதிகள் தாமஸகங்கள் ஆகையால் ஸாத்விக ப்ரதிபன்னமான ஏதத் ப்ராமண்யத்திற்கு பாதகங்களாக மாட்டா-
சிலர் ஸ்வார்த்த ப்ரபந்நன் -என்ற ஒரு அதிகாரி உண்டு என்றார்கள் -பூனைக்குட்டியைத் தாய்ப்பூனை காப்பது போல் அவனே நன்மை காத்தருள இருக்க-மோக்ஷ பலனுக்காகவும் நாமே செய்யும் ப்ரபத்தியும் கூடாதே –ஸ்வாதீந கர்த்ருத்வ போக்த்ருத்வ -ஸ்வார்த்த கர்த்ருத்வ போக்த்ருத்வ ப்ரம ரூபங்களான அஹங்கார மமகாரங்கள் அடி அறுத்தவர்களே -அஹங்கார ரஹிதர்களுக்கே முமுஷுத்வம் ஸாஸ்த்ர ஸித்தமாகையாலே மோஷார்த்த ப்ரபத்தியில் ஸ்வார்த்ததா ப்ரபத்திக்கு அவகாசமில்லை -ஆகையால் இது அத்யந்த ஹாஸ்யம்-என்பர்-ஆநு கூல்ய ஸங்கல்ப-ப்ராதி கூல்ய வர்ஜனங்கள் ஸம்பாவித ஸ்வபாவங்களாம் இத்தனை ஒழிய அங்கங்கள் அன்று என்று சிலர் சொன்னது -தத் அங்கத்வ போதக வசன ஸத பாதிதமாகையாலே அநுப பந்நம் -பிரபத்தி காலத்தில் இவை தேவைதான் -அதற்குப்பிறகு தொடர்பு நாட்களில் ஒருகால் இவை இல்லாது போனாலும் தகுந்த ப்ராயச்சித்தம் செய்து கொண்டால் செய்த பிரபத்திக்கு பலன் குறைவற்று இருக்கும் என்பதே தாத்பர்யம் –ஸாத்ய உபாய சோதன அதிகாரத்தில் தேசிகர் ஸாதித்து அருளுகிறார்-பராபேஷா ந வித்யதே -அங்கங்களை எதிர்பார்ப்பதில்லை -ஸநத்குமார ஸம்ஹிதை -என்றது பிரபத்தியைப் பற்றியது அல்ல -மற்ற உபாயங்களைப் பொறுத்தே விதிக்கப்பட்டவை -ஸாமான்ய நிஷேதத்துக்கு விஹித வ்யதிரிக்த விசேஷம் விஷயத்வம் -பொதுவானவற்றை விலக்குவதற்கு குறிப்பிட்டுச் சொல்லும் வசனம் -வேண்டுமிறே -இல்லையாகில் நிர்விசேஷ வாதம் பிரசங்கிக்கும்
பராபேஷா ந வித்யதே –இதற்கு முன்பு பிரபத்தே க்வசித்தபி ஏவம் என்றும் கீழ் பக்தியோகத்தின் அங்கங்களை விளக்கி மற்றொரு நிவ்ருத்தி தர்மமான ப்ரபத்திக்கும் அவ்விதம் இருக்கும்போதே என்கிற சங்கைக்கு பதிலாக அங்கங்களை எதிர்பார்க்காது என்றுள்ளது
விஸ்வாஸம் அங்கம் -மற்றவை அங்கங்கள் அன்று என்பதாலேயே – விஸ்வாஸ பூர்வகம் (பாஷ்யகாரரின் முக்தக வாக்யம் என்று நிஷேப ரக்ஷையில் பூர்வபக்ஷ ப்ரகரணத்தில் ) என்று அருளிச் செய்ததும் தத் ப்ரதான்ய அபிப்ராயத்தாலே தான் -இல்லையாகில் துல்ய நியாயதையாலே இதற்கும் அங்கத்வம் இல்லையாம் -ஸாஸ்த்ர பிரதிபன்னங்களில் -ஒன்றைச் சொன்னது ஹானோ பாதாந ந்யாயத்தாலே மற்றவைகளுக்கும் உப லக்ஷணம் -மந்திரத்தில் இவ் வுருப்புக்கள் இருக்கும்படியை ரஹஸ்ய த்ரய சாராதிகளிலே அருளிச் செய்கிறார் -த்வயத்தில் இவ்வைந்து அங்கங்களும் குறிப்பிட்டு இருக்கும்படியை ரஹஸ்ய த்ரய ஸாரம் -நிஷேப ரக்ஷை -சில்லறை ரஹஸ்யங்களிலும் அருளிச் செய்கிறார் –இதில் பர ந்யாஸம் ப்ரபத்தியின் அங்கிது சாங்க அனுஷ்டானத்துக்கு நடாதூரம்மாள்(இவர் ஸ்ரீ வாத்ஸ்ய வரதகுரு. தேசிகனின் ஆசார்யரான அப்புள்ளாரின் ஆசார்யர் ) அருளிச் செய்யும் சுருக்கு –அநாதி காலம் தேவரீருக்கு அநிஷ்டாசரணம் பண்ணுகையாலே சம்சரித்துப் போந்தேன்-இன்று முதல் அனுகூலனாய் வர்த்திக்கக் கடவேன் –பிரதிகூலாசரணம் பண்ணக் கடவேன் அல்லேன் –தேவரீரைப் பெறுகைக்கு என் கையில் ஒரு கைம் முதல் இல்லை –தேவரீரையே உபாயமாக அறுதி இட்டேன் –தேவரீரே உபாயமாக வேணும் –அநிஷ்ட நிவ்ருத்தி இலாதல் இஷ்ட ப்ராப்தி இலாதல் எனக்கு இனி பரமுண்டோ–
க்வசித் ததஸ்கத்வ (அதுவே என ) வாதம் -உபாய கோப்த்ரு பத ஏகார்த்த அபிப்ராயம் தத் பேத வ்யபதேசம் (அவற்றுள் வேறுபாடு என்ற குறிப்பு ) உபாயே க்ருஹ ரஷித்ரோ இத்யாதி பிரமாண ஸித்தம் -அங்காதிகளுக்கு பிரமாண ஸம்ப்ரதாய அனுகுணமாக ஈஷத் பேதம் (சிறிது வேறுபாடு கண்டு கொள்வது ) -உபாயத்வ யாஸ்ந அங்கத்வம் சொல்லுகிற இடத்திலும் உபாய ஸப்தம் கோப்த்ருத்வ பரம் -கோப்த்ருத்வ வரண அங்கித்வம் சொல்லுகிற வசனங்களில் கோப்த்ருத்வ பரம் உபாயத்வ பரம்-பிரபத்யங்க பக்தி பலத்தை பிரபத்தி மாத்ரத்தாலே தருகையாலே ப்ரபன்னனுக்கு ஈஸ்வரன் விசேஷத-குறிப்பாக -உபாயம் -என்றது–
பிரபத்தி மோக்ஷ உபாயம் அன்றாகில் பஹு பிரமாண ஸம்ப்ரதாய விரோதங்கள் ப்ரசங்கிக்கும் -ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு -ஓமிதி ஆத்மாநம் யுஞ்ஜீத -பக்த்யா பரமயா வாபி ப்ரபத்யா வா மஹாமதே ப்ராப்யோஹம் -பல பிரமாணங்கள் உண்டு -அகலகில்லேன் இத்யாதியாலே ஆழ்வார் பிரபத்தி பண்ணுகிறார் -இதிலே த்வயத்தில் போலே பர ந்யாஸ ப்ரதிசம்பந்தி -சேஷி விசேஷண தயா பெரிய பிராட்டியாரைச் சொல்லுகையாலே அவனுக்கும் உபாயத்வம் தோற்றுகிறது –
1-லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஸ தேவ்யா காருண்ய ரூபயா-ரஷக ஸர்வ சித்தாந்தே வேதாந்தேஷு ச கீயதே -லஷ்மீ தந்த்ரம் -ஆணையிடுபவன் எம்பெருமான் -கருணையே வடிவெடுத்தவளும் இந்த விபூதியில் விளையாட்டு நிலமாக்கி லீலா ரஸத்தை அனுபவிப்பவளுமான பெரிய பிராட்டியாருடன் கூடி நின்றே அனைத்தையுமே காப்பவனாகிறான் என்று எல்லா ஸித்தாந்தங்களாலும் உபநிஷத்துக்களாலும் புகழப்படுகிறான் –
2-ஆத்ம வித்யா தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ -விஷ்ணு புராணம் -ஹே தேவி மோக்ஷம் அடைவிக்கும் வித்யைக்கு அதிபதியானவளும் ஸம்ஸார பந்தத்தில் இருந்து விடுவிப்பவளும் நீயே
3-ஸர்வ ஐஸ்வர்ய குணோபேதா நித்யம் தத் தர்ம தர்மிணீ -லலிதா ஸஹஸ்ரநாமம்-அனைத்தையும் நியமிக்கும் குணமுடையவளும் -எல்லா நன்மைகளையும் பெற்றவளும் எப்போதும் எம்பெருமான் செயல்களையே ஒட்டியே நடப்பவளும் நீயே-4-ஸர்வேச்சா பரிபூரிகா -லலிதா ஸஹஸ்ரநாமம் -அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் திறன் உடையவளும் நீயே-5-தர்ம காமார்த்த மோக்ஷதா -லலிதா ஸஹஸ்ரநாமம் -அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய அனைத்து பலன்களை அளிப்பவள் நீயே -6-பர நிர்வாண தாயிநீ -லலிதா ஸஹஸ்ரநாமம் –உயர்ந்த பலமான மோக்ஷத்தையும் அளிப்பவளும் நீயே –
7-வாச பரம் ப்ரார்த்தயிதா பிரபத்யேத் நியத ஸ்ரியம் -சவ்ந ஸம்ஹிதை -வேதத்தில் சொன்ன உயர்ந்த புருஷார்த்தத்தைத் பெற விரும்புபவர்கள் தவறாமல் பெரிய பிராட்டியாரை சரணம் அடைய வேண்டும் –
8-ஸர்வ காம ப்ரதாம் ரம்யாம் ஸம்ஸார ஆர்ணவ தாரிணீம் -ஸ்வயாம்புவம் -அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுபவளும் நம் ஹிதத்தை விரும்புபவளும் ஸம்ஸாரமாகிற கடலைக் கடத்து விப்பவளும் நீயே –
இத்யாதி பிரமாணங்களையும் இங்கே பராமர்சிப்பது -விசிஷ்டேண மோக்ஷ உபாயம் என்பதை நிரூபிக்க எட்டு பிரமாணங்களை நிரூபிக்கிறார் –
அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||–ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-
இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
1- ஸ்ரீ நிவாஸனுக்கு லோகங்களைப் படைத்தல் காத்தல் அழித்தல் விளையாட்டு போல் எளிதானவை
2-சிந்தனை எப்போதும் அடியார்களை ஸம் ரக்ஷணம் செய்வது மட்டுமே
3- வேதாந்தங்களில் இரத்தினம் போல் ஒளிவிடும் ப்ரஹ்மம் அவனே
4- மென்மையான அவனிடம் எனக்கு பக்தி ரூபாபன்ன ஞானம் உண்டாக அவன் அருளட்டும்
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரங்களில் எங்குமே ப்ரஹ்ம லக்ஷ்மீ சம்பந்தம் குறிப்பிடப்படக் காணோம்.
ஆகிலும் ஸ்ரீ எம்பெருமானார் நூல் சுருக்கமே போலத் தோற்றும் முதல் ச்லோகத்திலேயே ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ நிவாசன் என்றார்.
இது ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லார்க்கும் மிக்கோனான எம்பெருமானை ஸ்ரீரிய:பதி என்றே கண்டதாலும்,
திரு இல்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு என்றதாலுமே ஆகும்.
பிரஹ்மணி! ஸ்ரீநிவாஸே – அவனே ஸ்ரீநிவாஸ பர பிரஹ்மம் என்று
1. ஸ்ரீயப் பதித்தவம்;
2. ஸ்ருஷ்டி ஸ்திதி லயகாரகத்வம் ;
3. ஸர்வாத்ம ஸம்ரக்ஷகத்வம் ;
4. பிரஹ்மணத்வம்
இத்யாதி விசேஷண விசிஷ்ட பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்பதாக தொடக்கத்தேலேயே
குணாஸ்ரய உபய லிங்க விசேஷ விசிஷ்ய பிரஹ்ம தத்வத்தை பிரதி பாதித்து
அத்வைதிகளின் மிடற்றைப் பிடிக்கிறார் ஸ்வாமி.-ஐஸ்வர்யம் -உபய விபூதி நாதன் –
“ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“-ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ – 3வது ஸ்லோகம் “இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.-அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பல வகையாகத் தோற்றமளிக்கிறது.-ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத் தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ”
ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.
வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84-
பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே (தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )பாழ்த்த விதி என்று தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம் பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பலம் கொடுப்பாள் பெரிய பிராட்டி,’ என்கிறது
இவளை -ஸ்ரியம் தேவீம் தேவஜூஷ்டாம் உதாராம் -ஸ்ருதி பறை சாற்றும் -அப்படி இருக்க- மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச -இத்யாதிகள் சேரும்படி எங்கனே என்னில் –விஸிஷ்ட தாத்பர்யத்தாலே கூடும் -இல்லையாகில் நிர்விசேஷ சரண்யதை பிரசங்கிக்குமே –விஸிஷ்ட அத்வைத ஸித்தாந்தம் அன்றோ வேதாந்த-நம் ஸித்தாந்தம்-ஆகையாலே ஸ்ரீ விஸிஷ்டனே மோக்ஷ உபாயம் எனத் தட்டில்லை -விஸிஷ்ட பரத்வமிறே பதங்களுக்கு ஸ்வபாவ ஸித்தம்–ஸ்வரூபத்தைச் சொல்லும் போது அவ்வோ தர்மங்களைக் இட்டல்லது சொல்ல ஒண்ணாது -அவற்றைக் கழித்துப் பார்க்கில் ஸஸ விஷாண துல்யமாம் –தத்வத்ரய சிந்தன அதிகாரம்
ஸ்ருதி ஸ்ம்ருதி பாஞ்சராத்ர ஸம்ப்ரதாய விருத்தங்களாக -கேவல தர்க்கங்களாலே ஓர் அர்த்தம் ஸித்தியாது -ஸித்திக்குமாகில் ஸ்வ அபிமத புருஷகாரத்வாதிகளும் நிர்விசேஷங்களாக ப்ரசங்கிக்கும்
ஸ்ருதேஸ் து ஸப்த மூலத்வாத் –2-1-27-என்றார் இறே ஸூத்ரகாரர் -ப்ரஹ்மத்தை அவயவம் கிடையாதா போது பஹுஸ்யாம் -ப்ரஹ்மமே பலவாகக் ஆயிற்று என்பதை எவ்வாறு பொருந்தும் எனில் விலக்ஷணமான தர்மம் -பிராட்டிக்கு எப்போதும் சேர்ந்தே இருப்பது -என்று வேதம் சொல்வதைக் ஒத்துக் கொள்ளத் தானே வேண்டும் என்கிறது இதில்-
து சப்தம் பக்ஷத்தை விலக்குவது
ஸ்ருதேஸ்–ப்ரஹ்மத்தின் இருப்புக்கு ஸ்ருதியே பிரமாணம் ஆகையாலே -இப்படி நேராது
சப்த மூலத்வாத்-ஸ்ருதி என்னும் சப்தத்தையே ஆதாரமாக -நம்பிக்கை காரணமாக -ஏற்று இருப்பதால்-பிரமாணாந்தரங்களுக்கு விஷயமாகாத ப்ரஹ்மத்திற்கு ஸ்ருதி கூறியபடி
நிர் அவயவத்வம் -காரணத்வம் -சர்வ சக்தத்வம் -முதலிய தர்மங்களை ஏற்றுக் கொள்வதால் எல்லாம் பொருந்தும்-இதனால் விரோதம் இல்லை-ஆகையால் ஸ்ருதி ஸ்ம்ருதி பாஞ்சராத்ர ஸத் ஸம் ப்ரதாயாதி ஸித்தமான இவ்வர்த்தம் -ஸ்ரீ விஸிஷ்டமான எம்பெருமானே மோக்ஷ காரணம் -என்னும் இவ்வர்த்தம் -ஒருவராலும் ஒரு ஹேதுவாலும் சலிப்பிக்க ஒண்ணாது –
பரதேவதா பாரமார்த்யாதிகார ஆரம்ப ஸ்லோகத்தில்-
ஆத்மைக்யம் தேவதைக்யம் த்ரிகசமதிகதா துல்ய தைக்யம் த்ரயாணாம்
அந்யத்ர ஐஸ்வர்யம் இத்யாதி அநிபுணா பணிதீ ஆத்ரியந்தே ந சந்த
த்ரயந்தை ஏக கண்டை தத் அனுகுண மனு வியாச முக்ய உக்திபி ச
ஸ்ரீ மான் நாராயணோ ந பதி அகிலதநு முக்தித முக்த போக்ய —சாஸ்த்ர அறிவு முற்றும் அற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் எனில் ,-ஆத்மாக்கள் எல்லாம் ஒன்றே ; தேவதைகள் யாவரும் ஒன்றே ; த்ரிமூர்த்திகளின் தன்மையும் ஒன்றே;-இவர்களின் ஆத்மஸ்வரூபமும் ஒன்றே; இந்த மூவரையும்விட மேலாக இருப்பவன் ஒருவனே ஈச்வரன். ஆனால், இது ஸாரமுள்ளது , இது ஸாரமில்லாதது என்று பிரித்து அறியும் வல்லமையுடையவர்கள், இவைகளை ஏற்பதில்லை-ஒரே கருத்தைச் சொல்லும் உபநிஷத்துக்களினாலும் ,அவைகளோடு ஒத்திருக்கிற , மநு , வ்யாஸர் முதலியவர்களின் ஸூக்திகளாலும் ,எல்லாவற்றையும் சரீரமாக உடையவனும் ,மோக்ஷத்தை அளிப்பவனும், முக்தர்களால் அநுபவிக்கப்படுபவனுமான பிராட்டியுடன் எப்போதும் பிரியாமல் இருக்கிற நாராயணனே , நமக்கும் அனைவருக்கும் எஜமானன் –சேஷீ என்பதாகும்
அர்த்த ஸ்வபாவ அனுஷ்டாந லோக த்ருஷ்ட்டி குரூக்திபி -ஸ்ருதி ஸ்ம்ருப்தியாம் ஸம் ஸித்தம் கடகத்வம் ஸ்ரியோ விது –லஷ்மீ புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி -பிராட்டியுடைய புருஷகாரத்வத்தை நிரூபிக்கும் பிரமாணம் -ஆறு ஹேதுக்கள் –1-அர்த்த ஸ்வ பாவம் -பெயரின் பொருளால் கிடைப்பது –2-அனுஷ்டானம் -முன்னோர்கள் செய்து காட்டியது -3-லோக த்ருஷ்ட்டி -உலகு நடப்புப்படி நடப்பது –4-குரூக்தி -ஆழ்வார் முதலானோர்களின் அருளிச் செயல்கள் –5-ஸ்ருதிகள் சொல்லுவது –6-ஸ்ம்ருதிகள் சொல்லுவது-
ஸ்ரீயதே -ஸ்ரயதே -ஸீதா சமஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத் –ரா -3-15-6-
நித்யம் அஞ்ஞான நிக்ரஹாம்-கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-தேவஜூஷ்டாம் -ஸ்ருதி
வாசஸ் பரம் பிரார்த்தயிதா பிரபத்யேத் நியத ஸ்ரியம் -ஸ்ம்ருதி
அர்த்த ஸ்வ பாவ அனுஷ்டான லோக திருஷ்ட்டி குரூக்திபிர் -ஸ்ருத்யா ஸ்ம்ருத்யா ச ஸம் ஸித்தம் கடகார்த்த அவலம்பநம் -நிஷேப ரக்ஷை வசனம் –
ஸ்ரியம் கடக பாவேந ப்ரபத்ய ப்ரதமம் தத-
ஸ்ரீ மந் நாராயணஸ் யாங்க்ரி பஜேதா பீஷ்ட காங்ஷாய -இத்யாதி பிரமாணங்களை இங்கே அனுசந்திப்பது –
இவ்விடத்தில் சிலர் காருண்ய ரூபையான இவள் விபரீதர் அளவாகவும் க்ருபார்த்த ஹ்ருதயை யாகையாலே இவளிடத்தில் சரண வரணம் பண்ண வேண்டுவதில்லை -என்றார்கள் —மாதர் மைதிலி ராக்ஷஸீஸ் த்வயி ததைவ ஆர்த்த அபராதஸ் த்வயா ரஷந்த்யா பவனாத்மஜாத் –லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா –குணரத்னகோசம் -50-
இது அதிவாதம் ரஸோக்தி -அவளை சரணம் புகுந்த பின்பே அவனை சரணம் அடைய வேண்டும் -கத்யத்ரயத்திலும் பார்க்கிறோம் -அது-இவளிடத்தில் சரண வரணம் பண்ண வேண்டுவதில்லை என்பது – மந்த்ர ரத்ன பிரதம பத வ்யுத்பத்தி –ஸ்ரீ யதே இதி ஸ்ரீ -நம்மால் அடையப்படுபவள் -அதைச் சார்ந்த பிரமாண நிர்த்தேச வையர்த்த்ய ப்ரசங்கங்களாலே ஸூதராம் அப ஹாஸ்யம்
ஸ்ரீ நரஸிம்ஹ அவதார வ்ருத்தாந்தத்தில் கொண்ட சீற்றம் தணிக்க பிராட்டியாரை முன்னிட்டு வேண்டி நின்றதை நினைத்துப் பார்க்க வேண்டும் –
இவ்விடத்தில் இவளுக்கு ஈஸ்வரேண ஸ்வரூபத அபி நித்ய ஸம்ஸ்லேஷம் விவஷிதம் என்றும் ஸத்துக்கள்-அல்வழக்கில் நம்மைப் படிய ஒட்டாதவர்கள் – அருளிச் செய்வர்கள்
“சாந்தானந்த மஹாவிபூதி பரமம் யத்ப்ரஹ்ம ரூபம் ஹரே:
மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்
யாந்யந்யானி யதாஸுகம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாநி
ஆஹுஸ்வைரநுரூபரூபவிபவைர் காடோப கூடாநி தே“—சது:ஶ்லோகீ – ஸ்லோகம் 4–
“பகவானுடைய எல்லா வகையான உருவங்களிலும் உன் சம்பந்தம் உண்டென்பது இதில் பேசப்படுகிறது. அமைதியோடு முடிவில்லாத மகாவிபூதி என்னும் பரமபதத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்குத் திருமேனியாக உள்ள எந்த உருவமோ அதைவிட மிகவும் பிரியமான உருவம் எதுவோ, எது ஆச்சர்யமானதோ சுகத்துக்கேற்றவாறு அவ்வப்போது எடுக்கப்பட்ட லீலையாக எடுக்கின்ற வேறு பல உருவங்களோ அந்த எல்லா உருவங்களும் தனது தகுந்த உருவங்களுடன் பெருமையுடனும் அழுந்தி ஆலிங்கனம் செய்யப்பட்டவையே. இதனால் பகவானுடைய எல்லா நிலைகளிலும் பிராட்டியின் சேர்த்தி சொல்லப்பட்டது.”ப்ரபந்ந பாரிஜாதத்தில் வரத குரூபாத்தா -நடாதூர் அம்மாள் மேற்கோள் காட்டி அருளிய ஸ்ரீ விஷ்வக்ஸேன ஸம்ஹித ஸ்ரீ ஸூக்தியை இங்கே அனுசந்திப்பது
மயா யதா ₂ ஜக₃த்₃வ்யாப்தம் ஸ்வரூபேண ஸ்வபா₄வத ꞉ ।
தயா வ்யாப்த மித₃ம் ஸர்வம் நியந்த்ரீ ச ததே₂ஶ்வரீ ॥॥
மேற் சொல்லிய படி ஸ்வரூபத்தினாலும் குணத்தினாலும் என்னால் இவ்வுலகம் எவ்வாறு வியாபிக்கப்பட்டு இருக்கின்றதோ அவ்வாறே இம்மஹா லஷ்மியினாலும் வியாபிக்கப்பட்டு இருக்கின்றது -என்னைப் போலவே இவளும் இவ்வுலகத்துக்கு நியாமிகையாகவும் ஈஸ்வரியாகவும் இருக்கின்றாள் –
ஸ ஏகோ விபூ –எம்பெருமான் ஒருவனே வியாபித்து இருப்பவன் -என்னில் விபு -நியந்த்ரு பரம் -ஆளும் தன்மையைக் குறிக்கும் என்பதால் ப்ரக்ருத பாதமில்லை –இல்லையாகில் ஞான விபுத்வங்களும் ஸித்தியாது –எங்கும் பரந்து நிற்கும் பொருள்களிலும் ஞானத்தையும் சொல்கிறோமே -அதே கணக்கில் இவளுக்கு சொல்லலாம் அன்றோ –
அணுத்வே சதி சேதனத்வம் –மிதுன சேஷமே சேதன லக்ஷணமாகக் கடவது யதா ஸர்வகதோ விஷ்ணு : ததைவ இயம் த்விஜோத்தம”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுராணம், 1. 8 : 17 -இத்யாதிகளை இங்கே அனுசந்திப்பது -ஈஸ்வரனைப் போலவே இவளையும் ஸூஷ்மை என்றால் -அவ்யாஹத ஸர்வாந்த ப்ரவேஸ சமர்த்தை -என்றதாம் -அளவில் சிறியவள் என்னும் பொருளில் இல்லை –எல்லா வஸ்துக்களிலும் உள்ளே புகுந்து நியமிக்கும் திறன் உள்ளவள் என்பதையே சொல்லிற்றாம் –
விப்வீ ச -எங்கும் பரந்தவள் என்றும் அபியுக்தர் சொன்னார்கள் –
வந்தே ஸர்வ கதாம் விஷ்ணு வல்லபாம் விஸ்வ ரூபிணீம் -எங்கும் நிறைந்த யாவுமாய் இருந்து எம்பெருமானுக்கு இனியவனாய் இருப்பவள் -என்று நஞ்சீயர் அருளிச் செய்தார் –
ஸ்ரீ ரிதி விஸ்வ வ்யாபிநீ லஷ்மீ அபி தீயதே -ததா விஷ்வக்ஸேன ஸம்ஹிதாதிஷு அபி தீயதே -உலகெங்கும் பரந்த பிராட்டிமார் ஸ்ரீ என அறியப்படுகிறாள் -இவ்விதமே விஷ்வக்ஸேன ஸம்ஹிதை முதலியவற்றால் அறியப்படுகிறாள் -என்று இவளுடைய விபுத்வத்தை அருளாளப்பெருமாள் எம்பெருமானாரும் த்வய விவரணத்திலே ஸமர்த்தித்தார் –
முகுந்தப்பெருமாளும் தத்வ நிரூபணத்தில் -ஸ்ரீரபி நாராயணவத ஏவ ஸ்வரூபேண குண தஸ்ச விப்வீ -யதா ஆஹ பராசர யதா ஸர்வ கதோ விஷ்ணு ததைவேயம் இதி -எம்பெருமானைப் போலவே இவளும் ஸ்வரூபத்தாலும் குணத்தாலும் எங்கும் பரந்தவள் -பராசரரும் விஷ்ணு புராணத்தில் இவ்வாறு அருளிச் செய்கிறார் -என்று ஸ்பஷ்டமாக இவளுடைய விபுத்வத்தை உபபாதித்தார் -கடாம்புப் பெருமாளும் -தஸ்மாத் ஸ்வரூபதஸ் ஸ்வபாவதஸ் ச ஸ்ரியா வ்யாப்த பரமபுருஷ இதி ஸித்தம் என்று மிதுன நிர்ணயத்தில் விஸ்தரமாக ப்ரதிபாதித்தார்-
சோமாசி யாண்டானும் தத்வ ஸங்க்ரஹத்தில் -ஸேயம் ஸ்ரீ பகவான் இவ முமுஷு உபாஸ்யா ஸர்வ வ்யாபிநீ ச இதி அவ கம்யதே -மோக்ஷ உபாய ஞான விஷயீ பூதஸ்ய பகவத ஸ்ரீ நிவாஸத்வே விசேஷணாத் -ஸ்ரீ யதே இதி ஸர்வ ஸமாஸ்ரயணீய தாயா ஸ்ரீ ஸப்தத ஏவ ப்ரதிபாதநாத் -என்று அந்த உபாசனத்துக்கு விஷயமான ஸ்ரீ நிவாஸனுடன் எப்போதும் கூடியிருப்பவள் என்பதால் மோக்ஷம் விரும்புபவர்களால் எம்பெருமானைப் போலே இந்தப் பிராட்டி மோக்ஷத்துக்கான அறிவுக்கு விஷயமான எம்பெருமான் ஸ்ரீ நிவாஸனின் விசேஷணமாக உபாசிக்கத் தகுந்தவள் -எங்கும் பரந்தவள் என எண்ணப்படுகிறவள் -ஸ்ரீ யதே இதி ஸ்ரீ -அடையப்படுபவள் -என்பதை பெயரே காட்டும் –
வேதார்த்த ஸங்க்ரஹே -பகவத் பாஷ்யகாரர் -பகவத் ஸ்வரூப அனுரூபத் வஸ்ய லஷ்ம்யா ப்ரதிபாதநாத்
ஐஸ்வர்யமபி கைவல்யம் பகவத ப்ராப்தி மேவ ச
ததாதி பஜதாம் ஏஷா தயிதா பரமாத்மந
தயா பரேண பும்ஸேவ வ்யாப்தம் ஏதத் சராசரம்
தயா தேநாபி ரஹிதம் வித்யதே நது கிஞ்சன
ப்ரீதா ஸா சரணாகத்யா ஸஹைவ பரமாத்மநா
போகான் அபவர்க்கம் ச விதரதி அனுகம்பயா
ஞானதஸ் ச ஸ்வரூபேண விஸ்வம் வியாப்ய வ்யவஸ்திதாம் ஞானதஸ் ச ஸ்வரூபேண வியாப்ய தேவ ஸ்திதோ ஹரி
வ்யாப்த ப்ரியாபி அந்யாபி ஞானத பரமேஸ்வர
ந ஸ்வரூபத இத்யேஷ விஸேஷோ ஹி ஸ்ரியோ அநயோ
ஸ்ரிய புருஷகாரத்வ ஸ்த்ரீத்வாத்யா பேதகா ஹரே
பத்யு தண்ட தரத்வாத்யா வதான்யத்வாதய ஸமா -இத்யாதி லஷ்மீ தந்த்ர பரிஸிஷ்ட பாரத்வாஜ ஸம்ஹிதா பரிஸிஷ்ட வசநை
யுக்தார்த்த த்வயஸ்யாபி ப்ரதிபாதநாத் -என்று ஸ ப்ரமாணமாக லஷ்மீ ஸ்வரூபத்தை நிரூபித்தார்
ஸ்ருதியும் ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ந்யவ் –அஸ்ய ஈசானா ஜகத விஷ்ணு பத்நீ –-இவையும் பிரமாணங்கள்-லஷ்மீ தந்திரத்தில் அடங்கிய பாரத்வாஜ ஸம்ஹிதையிலும் -எம்பெருமானின் பிரிய மனைவியான பிராட்டிமார் தன்னை வணங்குபவருக்கு -செல்வம் கைவல்யம் மோக்ஷம் -ஆகிய அனைத்தையுமே வழங்குபவள் -எம்பெருமானைப் போலவே உலகனைத்தும் இவளால் சூழப்பட்டவை –அவர்கள் இருவராலும் சூழப்படாத வஸ்து ஒன்றுமில்லை -சரணாகதியால் எம்பெருமானிடம் சேர்ந்து அவளும் மகிழ்பவளாய் கருணையினால் இவ்வுலக மற்றும் மேல் வுலக இன்பங்களையும் அளித்து அருளுகிறவள் -தனது ஸ்வரூபத்தாலும் ஞானத்தாலும் உலகை சூழ்ந்து நடத்துகிறாள் -ஹரியும் இப்படியே தான் ஸ்வரூபத்தாலும் ஞானத்தாலும் உலகைச் சூழ்ந்து இருக்கிறான் -பிராட்டியினுடையவும் மற்றவர்களுடையவும் ஞானத்தால் எம்பெருமான் சூழப்பட்டு இருக்கிறானோ -ஞானத்திற்கு விஷயமாகிறான் – மற்றவர்கள் ஞானத்தால் மட்டுமே சூழ்கிறார்கள் -பிராட்டியைப் போல் ஸ்வரூபத்தால் அல்ல
ஹரியைக் காட்டிலும் இவள் வேறுபட்டு இருப்பது -பெண்களுக்கே உரிய தன்மையாலும் -பரிந்து பேசும் புருஷகாரத்வத்தாலும் -இவளைக் காட்டிலும் அவனுக்கு தண்டகரத்வம் உண்டு -இருவருக்குமே காருண்யம் பிரியவசனம் போன்றவை பொதுவானவை –
இவற்றால் பிராட்டியினுடைய ஸ்வரூபம் இன்னது என்றும் நிரூபிக்கப்பட்டது –
கூரத்தாழ்வானும் மந்த்ர விவரணத்திலே –அத்ர அயம் அகார அவ ரக்ஷணே இதி தாதோ நிஷ்பன்ன பரம புருஷம் அபிததாதி-அத்ர ஸ்ரீ மத்வம் விவஷிதம் ஸ்ரீ மத ஏவ ரக்ஷகத்வாத் -என்று திருமந்திர பிரகரணத்தில் அருளிச்செய்து –
த்வய பிரகரணத்திலும் –மந்த்ர அபிப்ரேதம் பகவதோ ரக்ஷகத்வ உபயுக்தம் விசேஷம் அத்ர கண்டத உபாதத்தே ஸ்ரீ மத் பதேந ப்ராப்யத்வம் இவ ப்ராபகத்வம் அபி ஹி ஸ்ரீ மதே ஏவம் -ஸ்ரீமாந் ஏவ ஹி ரக்ஷகோ பவதி -என்று அருளிச் செய்தார்-தேவத்வமும் ரக்ஷகத்வமும் -திருவுடன் சேர்ந்தவனுக்கே –ஸ்ரத்தயா தேவ தேவத்வம் அஸ்னுதே -திருவில்லாத்தாத் தேவரை தேறேன்மின் தேவு –
த்வயத்தில் ஸ்ரீ மத் பதம் -மந்திரத்தில் சொல்லப்பட்ட நாராயணனுக்கு ரக்ஷகத்வத்துக்குப் பொருத்தமான விசேஷணம் -அதாவது அடையப்படுபவனாகவும் அடைவிப்பவனாகவும் உள்ள தன்மை பிராட்டியுடன் சேர்ந்தவனுக்கே —பிராட்டியை யுடையவனே ரக்ஷகனாவான்
அவர் தாமே -சாரீரிக சாரத்தில் –ஆனந்தா தய ப்ரதாநஸ்ய -என்ற ஸூத்ரத்தில் -ஆதி சப்தேந -அத்ர ஸ்வரூப நிரூபகம் ஸ்ரீயபதித்தவம் ச பராம்ருஸ்யதே -அத ஸ்வரூப நிரூபகத்வாத் யத்ர யத்ர பகவான் அபிதீயதே தத்ர தத்ர ஸ்ரீரபி –ததா ச சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு (விஷ்ணு தர்மம் ) பலம் அத இத்யாதி ஷு அபி ஸா தத் விசேஷணம் பவதீதி -ததேவம் பகவத இவ அஸ்யா அபி சகல பல சாதனத்வம் அபி -என்று மோக்ஷ உபாயத்வத்தை அருளிச் செய்தார் –
ஆனந்தாதய ப்ரதா நஸய —3-3-11-ஞான ஆனந்த அமல அந்நதத்வ ரூபங்களான ஸ்வரூப நிரூபக தர்மங்கள் ஸர்வ பர வித்யைகளிலும் உப ஸம்ஹரிக்கத் தக்கவையா இல்லையா என்று சம்சயம்-ஒரு பிரகரணத்தில் உள்ள குணங்களை வேறு பிரகரணத்தில் உப ஸம்ஹரிக்கையில் பிரமாணம் இல்லாமையால் உப ஸம்ஹார்யங்கள் அன்று என்று பூர்வ பக்ஷம்
அதை நிரசிக்கிறார்-ஸர்வ அபேதாத் -என்ற ஸூத்ரத்தில் இருந்து -அபேதாத் -என்பது இங்கு அனுவர்த்திக்கிறது
ஆனந்தாதய ப்ரதா நஸய-ஆனந்தாதி குணங்கள் எல்லா வித்யைகளிலும் உப ஸம்ஹரிக்கத் தக்கவையே-ப்ரஹ்மத்துக்கு சர்வ வித்யைகளிலும் அபேதத்தாலே -ப்ரஹ்ம ஸ்வரூபத்துக்கு இன்றியமையாத ஆனந்தாதி குணங்கள் அனுசந்திக்கக் கூடியவையே
இதனால் ப்ரஹ்ம குணங்கள் அநந்தமாய் இருந்தாலும் உப ஸம்ஹரிக்கக் கூடியவையே என்று கருத்து –-ப்ரஹ்மத்தின் ஆனந்தம் போன்ற தன்மைகள் அனைத்து இடங்களிலும் பொருந்தும் –ஒரு சில குணங்களே சில வித்யைகளுக்கு கூறப்பட்டாலும் –அனைத்து குணங்களுன் கூடிய ப்ரஹ்மம் அனைத்து உபாசனைகளிலும் ஒன்றாகவே இருப்பதால்
எம்பெருமான் ஸ்வரூபத்தை நிரூபிக்கும் தன்மையாக பிராட்டி இருப்பதால் எங்கெல்லாம் அவன் சொல்லப்படுகிறானோ அங்கெல்லாம் இவளும் சொல்லப்பட்டவளாகிறாள் -ஆகையால் அனைத்து பலன்களை அளிப்பவன் விஷ்ணுவே -மாங்கல்ய ஸ்தவம் -49-
பலம் அத உபபத்தே —3-2-37–யாகாதிகளில் கர்மமே அபூர்வத்தின் மூலமாக பலன் தரும் என்று பூர்வ பக்ஷம்
பரம் பொருளின் இடம் இருந்தே பலம் கிட்டுகின்றன -இதுவே பொருந்தும் –
எங்கும் உள்ளவன் -அனைத்தும் அறிந்தவன் -சர்வ சக்தம் -உதாரன் –
யஜ்ஞம் தானம் ஹோமம் உபாசனம் இவற்றால் மகிழ்ந்து அளிக்கின்றான்
ஷணம் நேரம் அழியக் கூடிய கர்மங்கள் பலன்களை தர வல்லமை அற்றனவே என்றவாறு-
நிகரில் புகழாய் –என்று வாத்சல்யம் சொல்லப்படுகிறது -தோஷ போக்யத்வம் வாத்சல்யம் என்று சிலர் மிகையாகச் சொல்லில் -தோஷங்கள் உபாதேயங்களாகும் –தோஷ அதர்சித்வம் -என்றால் ஸார்வஞ்ஞ ப்ரதிபாதிக ஸ்ருதி -ஸ்ம்ருதிகள் விரோதிக்கும்-பக்த தோஷேஷு அதர்ஸனம்--பாவிதம் -நடிப்பு – -தயா சதகம் -அடியார்களின் குற்றங்களை பொருள் படுத்தாது இருக்கச் செய்யும் அன்பு-அவனது சரீரமாகிய நம் மேல் அவன் ஆசை கொள்ளாமல் இருப்பானோ -சாரீரிக மீமாம்ஸைக்கு இதுவே தாத்பர்ய விசேஷமாக இருக்கும் -முமுஷுக்களுக்கு நித்ய அனுபாவ்யமாய் இருக்கும் –
உலகம் மூன்றுடையாய் -என்று ஸ்வாமித்வம் சொல்கிறது –ஸ்வ ரக்ஷண ப்ரவ்ருத்தி அர்ஹன் -உடையவன் உடைமையை ரக்ஷிக்குமதே பிராப்தம் -பிரதான பிரதிதந்தர அதிகாரம் –
என்னை ஆள்வானே -ஸுசீல்யம் ப்ரதிபாதிக்கப்படுகிறது –மஹதோ மந்தை ஸஹ நீரந்த்ர ஸம்ஸ்லேஷ ஸ்வ பாவம் இறே -இது ஸர்வாதிகாரமான ந்யாஸத்தை -ஸரணாகதியை -உள் கொண்டு இருக்கிறபடியை வித்யாபேத அதிகரணத்திலும் -விகல்ப அதிகரணத்திலும் ப்ரஹ்ம ஸூத்ரத்தில் ஸ்பஷ்டமாகக் காணலாம் -பலவான ப்ரஹ்ம வித்யைகள் இருக்க ஏதேனும் ஒன்றைச்செய்ய வேணும் -ந்யாஸ விதியையும் இவற்றுள் ஓன்று –இவற்றுக்கு எல்லாமே ஸுசீல்ய குணம் உறுப்பாய் இருக்கும்
திருவேங்கடத்தானே-அர்ச்சாவதார ப்ரதிபாதகம் -ஸுலப்யம் —ஸ்ருதி ஸ்ம்ருதி பாகத்திலும் -விவஷித குண உப பத்தேஸ் ச இத்யாதி -1-2-2-ஸூத்ரம் தன்னிலும் ப்ரஸித்தம் -ஸூத்ரம் -34–விவஷித குணோபபத்தே —1-2-2-குணங்கள் பொருந்த வேண்டும் என்றால் பரம் பொருளைக் குறித்தே ஆக வேண்டும்-
புகுந்தேன் என்று பர ஸமர்ப்பணம் வ்யஞ்சிதம் ஆயிற்று -தத் அங்கமான விஸ்வாஸமும் இவ்விடத்தில் கண்டோக்தம்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே –பிராதிகூல்ய வர்ஜனமும் ஆனுகூல்ய சங்கல்பம் திருவடியை நினைத்தாலே தோன்றும்படி -அபயமளிப்பதும் -அணுக எளியதாயும் -போக்யமாயும் -பாவனமாயும் -இருக்கும் திருவடிகளே–அவனும் அவளும் கைவிட்டாலும் விடாத திண் கழலாய் இருக்கும் அன்றோ-
புகல் ஒன்றில்லா -என்று கார்ப்பண்யமும் யுக்தமாயிற்று –புகுந்தேன் என்று அங்கி தோன்றுகிற விடத்தில் கோப்த்ருத்வம் வரணம் தோன்றும்-
இவையெல்லாம் யாமுநாதி சரணாதிகளிலும் உண்டு என்றும் ஸ்தோத்ர பாஷ்ய -ரஹஸ்யத்ரய சாரா -அபய பிரதான சாராதிகளிலே பிரபஞ்சித்தோம்
நிகமன காரிகை ஸ்லோகங்கள்
1-பக்த்யா வ்யாஸாதய ஸக்தா அஸக்தாஸ் ச ப்ரபத்தித
ப்ராப்நுவந்தி பரம் பூர்வே விலம்ப்ய ஸஹஸா அபரே
ஸக்தா-திறனுள்ளவர்களான
வ்யாஸாதய-வ்யாஸர் முதலானோர்
பக்த்யா-பக்தி யோகத்தாலும்
அஸக்தாஸ்-திறன் அற்றவர்கள்
ச ப்ரபத்தித-ப்ரபத்தியாலும்
ப்ராப்நுவந்தி பரம்-பரம புருஷனாலே எம்பெருமானை அடைகிறார்கள்
அதில்
பூர்வே -முதலில் சொன்ன பக்தி யோகிகள்
விலம்ப்ய -தாமதமாகவும்-இனிமையாக இருந்தாலும் -ப்ராரப்தம் அனுபவித்து கழித்த பின்பே-பல பிறவிகளில் பின்பே பலம்
அபரே -மற்றவரான ப்ரபன்னர்கள்
ஸஹஸா -தாமதம் இல்லாமலும் அடைகிறார்கள்
வேண்டிய பொழுதிலேயே பலனைத் தரும் இன்றே இசையின் இணையடி சேர்ப்பர் -இனிப் பிறவோம்
2- கேநாபி ஸூக்ருதேந ஆர்த்தி கேஷாஞ்சித் இஹ ஜாயதே
கேஷாஞ்சித் ததபாவேந ஸஹஸா ஸா ந ஜாயதே
இஹ-இவ்வுலகில்
கேநாபி ஸூக்ருதேந -ஏதோ ஒரு நல்வினையால்
ஆர்த்தி -இந்த ஷணத்திலேயே மோக்ஷம் வேணும் என்னும் துடிப்பு
கேஷாஞ்சித் ஜாயதே -எவருக்காவது பிறக்கும்
கேஷாஞ்சித் -மற்றவருக்கு
ததபாவேந -இவ்வித நல்வினை இல்லாமையால்
ஸா-இத்துடிப்பு
ஸஹஸா ஸா ந ஜாயதே -உடனே பிறப்பதில்லை
3-அத அதிகாரி பேதேந சாதன த்வய ஸம்பவ
பலே து நாநயோ பேத விகல்ப கில ஸூத்ரித
அத -ஆதலால்
அதிகாரி பேதேந-செய்யத் தகுதி உள்ளவர்களுக்குள் உள்ள வித்யாஸத்தைப் பொறுத்து
சாதன த்வய ஸம்பவ -இவ்விரு உபாயங்களும் நேரும்
விகல்ப கில ஸூத்ரித-ஸூத்ரத்தில் இதுவோ அதுவோ என்று சொல்லி யிருக்கிறது அல்லவோ -இது நியத விகல்பம்
பலே து ந அநயோ பேத -ஆனாலும் இருவருக்குள் பலனைப் பொருத்த வரையிலும் வித்யாஸமில்லை
4-கஸ்ஸித் க்ருதீ ஸ்வ யத்நேந நிஹத்ய ரிபு மண்டலம்
புங்க்தே போகான் மஹாராஜ தமேவ ஆஸ்ரித்ய கஸ்ஸன
கஸ்ஸித் க்ருதீ -ஒரு செயலைச் செய்யும்
மஹாராஜ-அரசன்
ஸ்வ யத்நேந-தன் முயற்சியினால்
நிஹத்ய ரிபு மண்டலம் -பகைவரின் கூட்டத்தை அழித்து
புங்க்தே போகான் -அதன் போகத்தை அனுபவிக்கிறான் –
அதே நேரத்திலே ஒரு உயர்ச்சியும் செய்யாமலே
தமேவ ஆஸ்ரித்ய கஸ்ஸன -அவனை அண்டியதாலேயே அப்பலனை அனுபவிக்கிறார்கள் அன்றோ
5-தஸ்மிந் ந்யஸ்த பர தேந துல்ய போகோ மஹீ பதே
தத்வத் பக்தே பிரபத்தேஸ் ச யுஜ்யதே துல்ய போகதா
தஸ்மிந் மஹீ பதே -அந்த எம்பெருமானிடத்தில்
ந்யஸ்த பர-பக்தி யோகம் செய்ய வேண்டிய பளுவை வைத்தானாகில்
தத்வத் தேந துல்ய போக யுஜ்யதே-உண்மையில் எம்பெருமானுக்கு நிகரான இன்பத்தை அடைகிறான் –
பக்தே பிரபத்தேஸ் ச -பக்தியோகம் செய்பவனுக்கும் பிரபத்தி செய்பவனுக்கும்
துல்ய போகதா -அனுபவம் ஒன்றே தான்
6-உபாஸித குணாதே யா ப்ராப்தாவபி அபஹிஷ்க்ரியா
ஸா தத் க்ரது நய க்ராஹ்யா நாகாராந்தர வர்ஜனம்
உபாஸித குணாதே -உபாஸிக்கப்பட்ட குணம் முதலியவைகள்
ப்ராப்தாவபி-பகவானை அனுபவிக்கும் போதும்
யா அபஹிஷ்க்ரியா -எப்படி தள்ளப்பட வில்லையோ
ஸா தத் க்ரது நய க்ராஹ்யா -அவை தத் க்ரது நியாயப்படி அறியத்தக்கது -அதாவது
நாகாராந்தர வர்ஜனம் -உபாஸிக்கப்படாத ஆகாரங்கள் இல்லை என்பது இல்லை –
இருதி நேரத்தில் உபாஸிக்கும் போது தியானித்த குணங்களையே அங்கும் அனுபவிக்கிறான் என்பதால் மற்ற குணங்கள் இல்லை என்பதை இல்லையே
7-க்ருதே த்யாயந் யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயந்
யதாப்நோதி ததாப்நோதி கலவ் சங்கீர்த்ய கேஸவம்
க்ருதே த்யாயந் -க்ருத யுகத்தில் த்யானத்தாலும்
யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் -த்ரேதா யுகத்தில் யாகங்கள் செய்தும்
த்வாபரே அர்ச்சயந் –த்வாபர யுகத்தில் பூஜிப்பதாலும்
யதாப்நோதி -எவரை அடைவார்களோ
தத் கேஸவம்-அந்த கேஸவனை
தத் ஆப்நோதி கலவ் சங்கீர்த்ய -கலியுகத்தில் ஸ்தோத்ரம் செய்வதாலேயே ஒருவன் அடைகிறான் –
இவ்வாறு ஸ்தோத்ரம் செய்து பின்பு பக்தி யோகத்திலோ பிரபத்தியிலோ மூட்டி பலனை அளிக்கும் -ஆக பரம்பரை யாகக் காரணம் கொள்ள வேண்டும் –
8-நஹி ஸாஸ்த்ர விரோதேந கஸ்ஸின் ந்யாய ப்ரவர்த்ததே
தஸ்மான் ந முக்தி பேதோஸ்தி இத்யாஹு ஆகம வேதிந
ஸாஸ்த்ர விரோதேந-ஸாஸ்த்ரங்களுக்கு விரோதமாக
கஸ்ஸின் ந்யாய-நியாயங்கள் ஏதும்
நஹி ப்ரவர்த்ததே -சொல்ல இயலாது
தஸ்மான் –ஆகவே
முக்தி பேத-மோக்ஷத்தில் வித்யாஸம் ஏதும்
ந அஸ்தி இதி -இல்லை என்பதாக
யாஹு ஆகம வேதிந–ஆகமங்களை நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்
பரம்பரையாகக் காரணங்கள் சொல்வதே பொருத்தம் என்றவாறு –
—————————-
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
———————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply