சிறுமையின் வார்த்தையை மாவலியிடை சென்று கேள் – நாலாயி:61/2
சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலி இடைச் சென்று கேள்
சிறுமை பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்
நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் –1 4-8 –
இவனுடைய பால்யத்தினுடைய விசேஷத்தை –வாமனனாய் சென்று –தன்னை வசீகரித்து மூவடி -என்று இரந்து-இரண்டு அடியாலே ஜகத்தை அடைய வளந்து –ஓரடிக்கு தன்னை சிறையிலே வைக்கப் பட்ட மஹா பலி பக்கலிலே சென்று கேட்டுக் கொள் -அவன் சிறுமைப் பெருமை அறிந்திலை –மகா பலி பாதாள லோகத்தில் கர்ம பாவனையாலே வந்த ஔதார்ய செருக்குப் போய் ப்ரஹ்ம பாவனையோடு இருக்கிறான் – அங்கே சென்று கேட்டுக் கொள் –
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை உணாயே – நாலாயி:133/4
மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே -2 2-6 – –
நாட்டில் பிள்ளைகள் போல் அன்றிக்கே -ரூப குண சேஷ்டிதங்களால் வ்யாவர்தனாய் இருக்கிற உன்னைக் கண்டவர்கள் –நாட்டிலே பாக்யாதிகைகளாய் விலஷணமான பிள்ளைகளை பெறுவாரும் உண்டு இறே –அவ்வளவு அன்றிக்கே –லோகத்தில் கண்டு அறியாத வைலஷண்யத்தை உடைய இவனைப் பெற்ற வயிறு உடையவள் –இதுக்கு உடலாக என்ன தபஸை பண்ணினாளோ என்று ஸ்லாகித்து சொல்லும் வார்த்தையை –எனக்கு உண்டாக்கித் தந்த
உன்னைக் கண்ட பாக்யாதிகர் –ஸூக தாதம் -என்னும்படி யான வ்யாசாதிகள் உடைய உபாசன மாத்ரங்கள் அன்றிக்கே இதுவே இறே ஒரு படியாய் இரா நின்றதீ -என்று விஸ்மிதராய்-இவனைப் பெற்ற வயிறு யுடையாள்-என்ன நோன்பு நோற்றாள் கொலோ-என்று பல காலும் சொல்லும் படியான வார்த்தையால் வந்த பிரசித்தியை யுன்டாக்கித் தந்த
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பது ஓர் வார்த்தையும் உண்டு – நாலாயி:197/2
கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ மணி மாட மதிள் திரு வெள்ளறையில் நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் -2- 8-6 – –
இருள் தான் ஒரு வடிவு கொண்டால் போலே கருத்த நிறத்தையும் அக்னி ஜ்வாலை போலே சிவந்த தலை மயிரையும் உடையாளாய் இருக்கிற பேய்ச்சியை- நேர் கொடு நேர் சென்றால் அவனை உன்னால் சாதிக்கப் போகாது –வஞ்சனத்தால் சென்று சதி – பேய்ச்சியை
நீ நேர் கொடு வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு
நேரே சென்றால் அவனை உன்னால் சாதிக்கப் போகாது – நீ க்ருத்ரிம ரூபத்தால் சென்று சாதிக்க வேணும் காண் -என்று சொன்னான் என்கிற வார்த்தையும் உண்டு காண் பிறக்கிறது ––பிறக்கிற போது –இவ் வார்த்தை தான் ஸ்ரீ நந்தகோபர் வசுதேவர் பக்கல் கேட்டு வந்து சொன்னார் ஆதல் –ஸ்ரீ மத் துவரையில் –பரவை வழக்கம் -செவி வழிச் செய்தி -உலக வழக்கம்- இங்கே வந்து பிறந்தது ஆதல் –
———
மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன் – நாலாயி:295/3
பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் இல்லத்துள்ளே
இருத்துவான் எண்ணி நான் இருக்க இவளும் ஓன்று எண்ணுகின்றாள்
மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன்
ஒருப்படித்திடும் இனி இவளை உலகளந்தான் இடைக்கே -3-7-10 –
நம்முடைய எண்ணுதலுக்கு விபரீதமாக இவளும் ஒன்றை எண்ணா நின்றாள்
அதாவது –இங்குத்தை இருப்பு காராஹ்ரக வாசமாய்-அவன் பக்கலிலே போகவே மநோரதியா நின்றாள் -என்கை-மருத்துவனானவன் சமைக்கிற ஒவ்ஷதத்திலே -பாகம் பார்த்து செய்யாத போது –அது கை தவறுமா போலே –இவள் பதம் பார்த்து நாம் செய்யாமையாலே இவள் கை கழிந்தாள் என்னும் வார்த்தை லோகத்தில் உண்டாவதுக்கு முன்பே-நீங்கள் சேராத போது-இவள் ஸ்வபாவத்தாலும் இரண்டு தலையும் சேர்ந்தே விடும்
ஆன பின்பு ஏற்கவே நீங்களே சேர்த்து விடும் கோள் என்று த்வரிப்பிக்கிறார்கள்-
—————
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
காசின் வாய்க் கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியர்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே – 4-4 -10-
யஜஸ் கரமான வார்த்தைகளை படைக்கும்-அதாவது-இருந்தார் இருந்த இடங்களிலே -தங்களுடைய ஒவ்தார்யம் கிருபை முதலான குணங்களை சொல்லிக் கொண்டாடும்படி யாகை –இவர்கள் புகழை நச்சி செய்யாது இருந்தாலும் தன்னடையே வந்து உண்டாமிறே இது
———–
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே – நாலாயி:578/2
மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே—8-2-
வேங்கடத்து-ஏக தேச வாசித்வத்தால் உங்களுக்கு தெரியாமை இல்லை இறே-சாமத்தின் நிறம் கொண்ட-அவ்வளவு இன்றிக்கே வடிவிலேயும் போலி யுண்டே இறே உங்களுக்கு-தாளாளன் –இவற்றுக்கு இன்றிக்கே அவனுக்கு உண்டான ஏற்றம்-பிறருக்காக கண்ட உடம்பை தனக்கு என்று இருக்குமவன் ஆயத்து-பக்தாநாம் –என்று இருக்கிற உடம்பை தனக்கு என்று இருக்கிறவன் –இவ்வடிவு படைத்த நாமோ சென்று அணைவோம்-
இதில் அபேஷை உடையார் வேணுமாகில் தாங்களே வருகிறார்கள் -என்று எழ வாங்கி இருக்குமவன்-வார்த்தை என்னே –இங்கே வாராராகிலும் -இழவு தமக்கு என்று இருந்தாராகில் வார்த்தை சொல்லி விடாமை இல்லை இறே-என்னே-நாம் முற்பாடராய் உதவப் பெற்றிலோம் -என்ற லஜ்ஜையாலே நீங்கள் அவள் செய்தது என் என்று அறிந்து வாருங்கோள் என்னுதல்-அன்றிக்கே –ந ஜீ வேயம் ஷணம் அபி -என்னுதல்-அங்கன் இருப்பார் உண்டாவதாக நாம் அறிந்திலோமே என்னுதல்-துஷ்யந்தனுடையவும் சகுந்தலையுடையவும் கதையைச் சொல்லிக் கொள்வது -ஒன்றும் சொல்லாமை இறே-ஒரு வார்த்தை கொண்டு தரித்து இருக்கலாமோ இவளுக்கு -என்னில் –-ஒரு வார்த்தை கேட்கில்-ஸ்திதோச்மி-ஸ்ரீ கீதை -18-73-என்று இருக்கலாம் இறே-பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -திருவாய் –4-7-3– என்றாவது கேட்க ஆசைப் பட்டார் அன்றோ-வார்த்தை என்னே -என்ற இடத்தில் இன்னது என்று சொல்லக் கேட்டிலள்-
——————
பதியாக வாழ்வீர்காள் பாம்பு_அணையான் வார்த்தை என்னே – நாலாயி:585/2
மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-
வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்-வந்தேறிகளாய் திருநாள் சேவித்து போவாரைப் போலே போராதே-அங்கே நித்ய வாசம் பண்ணப் பெறுவதே நீங்கள் –சேறு தோய்ந்து கழுவினவர்கள் அன்றிக்கே –முக்தரைப் போலே அன்றிக்கே –நித்ய சித்தரைப் போலே யாய்த்து –அங்குத்தை வர்த்தநத்தை இறே வாழ்வாகச் சொல்லுகிறது-கீழே முமுஷுக்களில் வ்யாவ்ருத்தி சொல்லி-இங்கே முக்தர்களில் வ்யாவ்ருத்தி சொல்கிறது-இரண்டு ஆற்றுக்கும் நடுவில் வாசம் போலே –நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -11-5- என்னக் கடவது இறே-பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9- என்றும் –புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ -6-9-8-என்றும்-இதர விஷய ப்ராவண்யம் விநாச ஹேதுவாய் இருக்கும் –பகவத் ப்ராவண்யம் வாழ்வாய் இருக்கும்–பாம்பணையான் வார்த்தை என்னே-படுக்கைத் தலையில் சொல்லும் வார்த்தைகள் –வேங்கடத்தை பதியாக உடைய உங்களுக்கு -அந்தரங்கர்க்கு தெரியும் இறே-கருதாது ஓர் பெண் கொடியை வதை செய்தான் என்னும் சொல்-தனக்கு வருகிற ஸ்வரூப ஹானியை புத்தி பண்ணாது-ஒரு கொள் கொம்பிலே சேர்க்க வேண்டும் கொடியை தரையில் இட்டு வைக்கையாவது -வதைக்கை இறே-ந ச சீதா த்வயா ஹீ நா —அயோத்யா -53-31–பகவத் விச்லேஷமும் பர்யாயம் காணும் –வையகத்தார் மதியாரே–அத் தலையிலே சத் பாவத்தாலே இத் தலையில் சத்தை என்னுமது போய்த்தே-ஒரு கால் முடிந்தார்க்கு இரு கால் முடிய வேண்டாவே-இனி நாட்டார் தம்மை ரஷகர் என்று விரும்பார்கள் என்று சொல்லுங்கோள் –தம் தாம் அழிந்தாலும் அத் தலைக்கு வரும் அவத்யம் பரிஹரிக்கும் குடி அன்றோ –
———–
ஆலின் இலை பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே – நாலாயி:594/4
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-
எல்லாருடையவும் ரஷணத்தில் ஒருப்பட்டு இருக்கிறவன்-பதினாறாயிரம் பெண்களோடு ஆனைக்கு குதிரை வைத்து பரிமாறின பரம ரசிகன்-ப்ரணய தாரையிலே விஞ்சி இருக்கும் பெருமான்-அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையவன்-அவன் வார்த்தை சொல்லா நின்றான்–
——————-
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் – நாலாயி:616/2
செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-
செம்மை யுடைய திருவரங்கர் –மநோ வாக் காயங்கள் மூன்றும் மூன்று படியாய் இருப்பாரை ஒருங்க விடுகைக்கு –தாம் மநோ வாக் காயங்கள் மூன்றும் ஒருபடிப் பட்டு இருக்குமவர் –ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் -ஸ்ரீ கீதை -5-29-என்கிறபடியே –சோபனமான ஹ்ருதயத்தை உடையராய் இருப்பார்-குற்றம் செய்தாரையும் விட மாட்டாதே –ந த்யேஜ்யம்-என்று வார்த்தை சொல்லுமவர்-அது தன்னை அர்த்த க்ரியாகாரியாக்கிக் கொண்டு கோயிலிலே சாய்ந்து அருளினார் –தாம் பணித்த-நினைவும் சொலவும் செயலும் ஒருபடிப் பட்டவர் தாம் அருளிச் செய்த –மெய்ம்மைப் பெரு வார்த்தை –யதார்த்தமுமாய் ––மெய்மை –சீரியதுமாய் —பெரு —ஸூ லபமுமான –வார்த்தை என்பதால் –மூன்றும் சேர்ந்த வார்த்தை யாய்த்து -அதாவது –உன் கார்யத்துக்குனான் உளேன் -நீ ஒன்றுக்கும் கரையாதே –உன் சர்வ பரத்தையும் என் தலையிலே சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இரு -என்று திருத் தேர் தட்டிலே அருளிச் செய்த வார்த்தை-பிள்ளை அர்ஜுனனுக்கு அன்றோ சொல்லிற்று இவர்க்கு என் என்னில்-அவன் சர்வ சமனாகையாலே–என் கார்யம் என்னால் செய்ய ஒண்ணாது -என்று இருப்பார் எல்லாருக்குமாக அடியிலே சொன்ன வார்த்தை இறே-ஆகையாலே இவர் கேட்டிருக்கக் குறை இல்லை –
—————–
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை பெற்றிருந்தாளை ஒழியவே போய் பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி – நாலாயி:617/2,3
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–12-1-
மற்று –வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-இருந்தீர்கட்கு அறியலாகா –ஏக தேச வாசமே போராது காணும் கோள்-
எனக்கு ஓடுகிற தசை அறிகைக்கு-இருந்தீர்கட்கு–நான் இருந்த தேசத்திலே நீங்களும் இருந்தி கோள் என்னா-எனக்கு ஓடுகிற தசை உங்களால் என்னை அறியப் போகாதே –மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்று இருந்தேனுக்கு –ப்ரஹ்மசாரி எம்பெருமானை ஆசைப் பட்டேன் ஆகில் தான் ஆறி இரேனோ–மாதவன் விஷயமான அன்பு -என்னுதல் –
மாதவன் ஆகிற அன்பு -என்னுதல்-அன்பு -என்றும் – அன்புக்கு ஆஸ்ரயம் என்றும் தோன்றாதே –அன்பு தான் என்னலாய்த்து இருப்பது-தான் முந்துற இத்தலையிலே அன்பைப் பண்ணி –பின்னை யாய்த்து இத்தலையில் அன்பை விளைத்தது –கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -திருவாய் -10-10-7-என்னுமா போலே – சர்வ பிரகாரத்தாலும் விலஷணமான விஷயத்தை இறே இவள் தான் ஆசைப் பட்டது – அப்படிப் பட்ட வைலஷண்யம் உள்ளது ஸ்ரீ யபதிக்கு இறே – அவன் பக்கலிலே யாய்த்து இவள் அன்பைப் பண்ணிற்று –அன்பு தன்னை உற்று –அவனைக் கிட்டி -என்னுதல்-அவன் விஷயமான பக்தியை மாறுபாடுருவ உடையேனாய் -என்னுதல்-இருந்தேனுக்கு –இப்படி அவனை ஒழிய செல்லாமை உண்டானால் அவன் இருந்த இடத்தில் சென்று கிட்ட இறே அடுப்பது –அதுக்கு கால் நடை தாராத படி இருக்கிற எனக்கு –உரைப்பது எல்லாம் – அங்கே சென்று கிட்ட ஆசை உடைய எனக்கு –நான் சென்று சேராமைக்கு உறுப்பாகச் சொல்லும் வார்த்தை எல்லாம்-மற்று –உரைப்பது எல்லாம் – அவனோடு கிட்டாமைக்குச் சொல்லும் வார்த்தை எல்லாம்-ஊமையரோடு செவிடர் வார்த்தை-என் தசையை அறியாத உங்களுக்கு தோற்றினபடி சொல்லுகைக்கு பரிகரம் இல்லை-எனக்குக் கேட்கைக்கு பரிகரம் இல்லை
ஊமைக்கு வ்யவஹார யோக்யதை இல்லை-செவிடர்க்கு கேட்கைக்கு யோக்யதை இல்லை
செவிடரோடு ஊமையர் வார்த்தை என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
————-
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் – நாலாயி:1113/2
தன் குடிக்கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயிலங்கை
வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயத்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-6-
ஊரிலே அரணே அன்றிக்கே வர பலத்தாலே பல்கிப் பரந்துள்ள குடியானது திரியட்டும் முடிந்து போம் படியாக – ராஷசரைப் போலே மாயையால் அன்றிக்கே-நிறம் உடைத்தான பூசலிலே வன் குடி மடங்க துளைத்த வார்த்தை உண்டு -ஸ்ரீ இராமாயண வ்ருத்தாந்தம் –
அத்தைக் கேட்டு-நம் அவஸ்தை உடையாள் இருப்பாள் ஒருத்திக்கு உதவின போதே
எனக்கும் உதவினவன் அன்றோ -என்று அத்தாலே இனியளாம்-உதவாதவன் உதவாது ஒழிகை அன்றிக்கே உதவும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து நம் தசை இதுவாய் இருக்க உதவாது ஒழிவதே – என்று மோஹிக்கும்-
—————–
வார்த்தை பேசீர் எம்மை உங்கள் வானரம் கொல்லாமே – நாலாயி:1868/3
ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1-
முன்பு பிராட்டியை பிரித்த பையலுக்கு பரிகரமாய் நின்று இன்று வந்து அனுகூலிக்கும் காட்டில் ரஷிக்கையாவது என் -என்று பேசாதே நின்றார் –அவ்வளவிலே முதலிகள் வந்து கைக் கொள்ளப் புக்கார்கள் –அல்லாதது பார்த்துக் கொள்ளுகிறோம் -எங்களோடு வார்த்தை சொல்ல அமையும் -ராஜாவோடு வார்த்தை சொல்லுகிறவர்கள் என்று முதலிகள் கொல்லாதபடி -என்கிறார்கள் –
———————-
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த – நாலாயி:2492/2
கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-
அறியிலும்-அறியக் கூடாது என்று இருக்கிறாள்-இவள் விரஹம் தான் அவகாகித்த பின்பும்
வாய் புகு நீரும் நில நீருமாய் இருக்கிற படியாய் இருக்கையாலே ,-அவகாகியாதார்க்கும் ,அறியலாமோ என்று இருக்கிறாள் .-பண்டு இவரை கண்டு அறிவது எவ் ஊரில் என்னா –
இன்னார் என்று அறியேன் என்பாரை போலே-கிட்டின போது சம்சயமாய் ,-உள் புக்கவாறே அறியாமையாலே நிர்ணயமாய் இருக்கிறபடி–பாஷிக தோஷம் பரிகரிக்க வேணும் இறே-ஈது என்ன வார்த்தை –1-(வெறுப்பில் )இச் சேராச் சேர்த்தியான வார்த்தை எங்கே உள்ள-முகம் அறியாதார் ஒருவர் வந்து நின்று முகம் அறியாத வார்த்தைகளை சொல்லா நின்றீர்- –2-ஆற்றாமை தோற்ற இங்கனம் சொல்லில் புறம்புள்ளார் என் நினைத்து இருப்பார்கள் –நாங்கள் பரண் இடுவது ஆயோ வென்பதாய் கோபிக்கிறதை எல்லாம் வெளியிடா நின்றீர் –3-(கொண்டாட்டம் )தென்றலும் சிறு துளியும் போலே-உத்தேசியத்தோடே சேர்ந்ததொரு வார்த்தை இருந்தபடி என்-(கலங்கி இருப்பவனைப் பார்ப்பதே காதலிக்கு உத்தேச்யம் )
வார்த்தையைக் கேட்டு எத்திறம் என்கிறாள் –4-நீர் வார்த்தைக்கு பாவிகளோ என்கிறாள் –
உம்முடைய பாடு வார்த்தை இறே -அனுஷ்டானம் இல்லை என்கிறாள்- ஷேபம் -கேலி -ஆச்சர்யம் -கொண்டாட்டம் -நான்கு நிர்வாகம் )எங்கள் பாடு அனுஷ்டானம் இல்லையே யாகிலும் உங்கள் பாடு அனுஷ்டானம் உண்டோ என்ன –(இது பகவான் வார்த்தை-எனது பக்கம் இல்லை என்றால் உங்கள் இடம் உண்டோ என்ன-திவ்ய தேசம் சேவை சாதிக்கா விட்டாலும் நாங்கள் ரக்ஷித்து உள்ளோமே )உமக்காக வன்றோ -நாங்கள் குடில் கட்டிக் கொண்டு கிடக்கிறது என்கிறாள் –
—————-
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்ததும் – நாலாயி:3441/1
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்ன லாவன அல்ல என்னைஉன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனைஎன்று தலைப்பெய்வனே?–5-10-2-
வதுவை-விவாஹம் -வார்த்தையில் -எருதுகள் ஏழையும் நிரசித்தார்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம் என்று பிறந்த பிரசித்தி –எருதுகள் மேலே விழுந்த படி -இவருக்கு ம்ருத்யுவின் வாயிலே விழுந்தால் போலே யாயிற்று இருக்கிறது -பொய்கையில் பாய்ந்தது போலே இறை நின்றது அவனுக்கு -கருமாரி பாய்ந்தால் ஆகாதோ -காமாஷி ஆலயம் சங்கு த்வயம் மத்யம் விழுகை-என்னும் படி இறே -இவளுடைய போக்யத்தை –
————————–
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரை கண்கள் நீர் மல்க – நாலாயி:3442/3
பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-
———————
ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு – நாலாயி:3472/1
ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.–6-2-11-
அன்னை என்று பொதுவில் சொன்னால் -தேவகி பிராட்டி பக்கலிலும் ஏறும் என்று ஆய்ச்சியாகிய என்று விசேஷிக்கிறார் -தேவகிப் பிராட்டியார் அடிக்கில் இத்தனை நோவாது காணும்.–முலை உண்டு வளர்ந்த இடத்திலே இறே அச்சம் உள்ளது –வெண்ணெய் களவு போயிற்று என்கிற வார்த்தையிலே -இவனே செய்தான் -என்று தாயார் பொடிய பொடி யுண்டு கண்ணும் கண்ண நீருமாய் நின்றால் போலே யாயிற்று -இன்று இவர்கள் திரளில் புகுற வேண்டா என்ற போது நின்ற நிலை-அழு-கூத்த அப்பன்-அழுகிற தசையில் கால் மாறி இட்ட போது வல்லார் ஆடினால் போலே இருந்த படி-“தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி” -இது, பெரிய திருமொழி, 8. 3 : 5.-என்கிறபடியே,‘இவள் நம்மை அதட்டுவதே!’ என்று உளைந்தன்றோ கிடப்பது.-தெய்வம் அறியத் தாய் ஆயினமை அன்றோ தேவகியார் பக்கல் உள்ளது;-முலைச் சுவடு அறிந்ததும் முகம் பழகிற்றும் வளர்ந்ததும் எல்லாம் இங்கே அன்றோ.ஊரில் ‘வெண்ணெய் களவு போயிற்று’ என்றார்கள்; அவ்வளவிலே ‘நாம் அன்றோ இதற்கு இலக்கு’ என்று அழப் புக்கான்.-‘மடம் மெழுகுவார் யார்?’ என்ன, ‘அஸ்ரோத்திரியன்’ என்றார்கள்; ‘இப் பரப்பு எல்லாம் என்னாலே மெழுகப் போமோ’ என்றான்; அதுபோலே.
யாரேனும் ஏதேனும் செய்யிலும் இவனைச் சொல்லும்படி யன்றோ இவனுடைய தீம்பு தான் இருப்பது!“பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன்
மேலன்றிப் போகாது” -பெரியாழ்வார் திருமொழி, 2. 8 : 5.-என்னும்படியன்றோ இருப்பது.
—————
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லிமங்கலம் என்று அல்லால் – நாலாயி:3501/2
அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-
தொலை வில்லி மங்கலம் என்கை ஒழிய ஏதேனும் ஒரு வார்த்தையும் கேட்க்கிறீலள் -என்னுடைய வார்த்தையும் கேட்க்கிறீலள் -உங்களை மறைத்ததும் சொல்லுவது எனக்கு இறே-தன் நினைவினை யான் சொல்லிலும் மீட்பதற்கு நினைத்துச் சொல்லுகிறேன் என்று,
என் வார்த்தையையும் கேட்கை தவிர்ந்தாள். -அவ் வூரை நான் சொல்லிலும் கேட்க்கும் –திருத் தொலைவில்லி மங்கலம் என்னில் நான் சொன்னதையும் கேட்பாள்.
———————–
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே – நாலாயி:3536/4
பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த்திரை மேல்உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன் விண்ணவர்கோனைக்கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9-
கறுப்பு எல்லாம் திரண்டால் போல் இருக்கிற மஹா மேகம் போன்ற வடிவை உடையவன் -கார் காலத்தில் திரண்ட மேகம் என்றுமாம் –மா முகில் -மாறாதே கொடுக்க வல்ல முகில் –கண்ணன் -தன்னை பிறருக்கு ஆக்கி வைக்குமவன் –விண்ணவர்கோனை-மத்ஸ்யத்துக்கு தண்ணீர் வார்பாரை போலே இவ் வழகையும் குணத்தையும் நித்ய ஸூ ரிகளை அனுபவிப்பித்து இருக்கிறவனை-பிரிவதற்குச் சம்பாவனை இல்லாதார்க்குத் தன்னைக் கொடுத்துக் கொடு நிற்கிறவனைக் –கண்டு -வார்த்தைகள் -காணப் பெற்று சொல்லும் வார்த்தைகளை கேட்க்க கடவி கோள் இறே -மாஸூச என்ற பலத்தோடு வியாப்தமான வார்த்தைகளைக் கொண்டு-கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–என் பக்கலிலே கிருபை பண்ணி -அங்குத்தை வார்த்தைகளைக் கேட்டு வந்து இருந்து -நாள் தோறும் எனக்குச் சொல்லி உஜ்ஜீவிப்பிக்க வேணும் –வந்திலனாகிலும் சில வார்த்தைகள் சொல்லக் கடவன் அன்றோ.-காட்சிக்கு மேலே வார்த்தையும் கேட்க அன்றோ நீங்கள் புகுகிறது;-“பாவி நீ என்று ஒன்று சொல்லாய்” –திருவாய். 4. 7 : 3.-என்னுமவரன்றோ.
இப்போது இவர்க்கு ‘மாட்டேன்’ என்னும் வார்த்தையும் அமையும்.-விண்ணவர் கோமானான கண்ணனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு-“மாசுக:” என்று பலத்தோடே முடிவு பெற்றிருக்கிற வார்த்தைகளைக் கொண்டு, என் பக்கலிலே கிருபையைச் செய்து வந்திருந்து வைகலும் உரையீர்-வாரான் என்றோ பல வ்யாப்த வார்த்தை யாகவோ –மாட்டேன் என்கிற வார்த்தை -தனது சத்தை தரிக்க அவன் பக்கலில் இருந்து ஏதேனும் -தாராயினும் –போலே -வேண்டும் –ஜீவிஷ்ய பேஷஜம் போலே சீதை வார்த்தை சொல்லு அத்தைக் கொண்டு ஜீவிப்பேன் -என்றாரே பெருமாள் திருவடி இடம் –
—————-
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே – நாலாயி:3613/4
மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமோ.–7-5-9-
தன் க்ருஹத்திலே புக கொண்டு சிறை செய்யத் தேடும் துரியோதனாதிகள் போல்வார் இருக்கிற தேசத்தை விட்டு எல்லாரும் ஓக்க பரியும் தேசத்திலே நிரபாயமாக எழுந்து அருளின படியை பேசின பிராமண ஸ்ரேஷ்டமான மஹா பாரதத்தை அறிந்து வைத்தும் -மாயவற்கு ஆளன்றி ஆவரோ?– –தன் மேலே அம்பு மழையாகப் பெய்கிற இத் தண்ணிய பூமியினின்றும் தன் வரவுக்கு எதிர் கொள்வார் இருந்த இடத்தே போய்ப் புக்கான் என்கிற பெரிய வார்த்தையை அறிந்தும்-‘நீண்ட கண்களை யுடைய கண்ண பிரான் பூமியினுடைய பாரத்தைப் போக்கி உலகத்தை எல்லாம் மோஹிக்கச் செய்து மேலான தம் இருப்பிடத்தை அடைந்தார்’ என்கிறபடியே,துரியோதனாதியர்கள் இல்லாத இடத்தே போய்ப் புகப் பெற்றது அன்றோ?
‘க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந:
மோஹயித்வா ஜகத் ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநமுத்தமம்’-என்பது, பாரதம், மௌசல். பர்.
‘மேலே கூறிய செயல்கள் அடங்கலும் தன் ஸ்வாதந்திரியம் கிடக்கச் செய்தே செய்தவை அன்றோ?தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதற்குத் திரு உகிராலும் உண்டே அங்கு; அவை போல அன்றே இங்கு?தன்னை அடைந்தவர்க்குப் பரதந்திரனாய்த் தன்னை அழிய மாறி,பாண்டவர்களுக்கு உடம்புக்கு ஈடு இடாதே-ஈடு -கவசம் –எதிரிகள் அம்புக்கு இலக்கு ஆக்கின இந்நீர்மைக்குப் போருமோ. மேலே கூறிய குணங்கள்?’ என்கிறார்.
————————
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3614/1
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-
ப்ரஸ்துதமான மஹா பாரதம் கடலோசை என்னும் படி சாரமான மாமேகம் சரணம் வ்ரஜ என்கிற வார்த்தையை அறியுமவர்கள் –ஆச்சர்யமான ஸுலப்யத்தை யுடையவனுக்கு -திரௌபதியினுடைய குழலை முடிக்கைக்காக ஹ்ருதகதமான அர்த்தத்தை வெளியிட்ட ஆஸ்ரித பவ்யதை யுடையவனுக்கு -பரம ஆப்தனான என்னைப் பெற்றால் -அவனை விட்டு வேறு சிலருக்கு ஆளாவாரோ-மஹாபாரதம் எல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்றது ஒரு வார்த்தை அன்றோ?-வார்த்தையாவது, பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அன்றோ?
‘என் ஒருவனையே சரணமாகப் பற்று,’ என்றதனை அன்றோ இங்கு வார்த்தை என்கிறது?
மேலே சொன்னவை அடங்கலும் கடல் போலே; அதில் அமிருதம் போலே இது.-
கீதையிலும் இத் திருவாய்மொழியிலும்-அவன் ‘என்னையே பற்று’ என்று சொல்லா நின்றார், இவர்கள் அவனை ஒழியவும் பற்றுவார்களோ? ரஹஸ்யங்கள் எல்லாவற்றையும் வெளியிட்டான் அன்றோ அவள் சூழல் முடிக்கைக்காக?
————-——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply