வார்த்தை -275-
நம் மனிச்சர் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் தங்களோபாதி பிரகிருதி மான்களாக
நினைத்து இருக்கும் புல்லிமை இன்றிக்கேயாய் யற்று இருப்பது –
திரு உடை மன்னர் -திருவாய்மொழி -4-4-8-
செழு மா மணிகள் -திருவாய்மொழி -5-8-9-
நிலத்தேவர் -திருவாய்மொழி -7-10-10-
தெள்ளியார் -நாச்சியார் திருமொழி -4-1-
பெருமக்கள் -திருவாய்மொழி -3-7-5-
பெரும் தவத்தார் -திரு நெடும் தாண்டகம் -24-
உரு உடையார் இளையார் -நாச்சியார் திருமொழி -1-6-
சிறு மா மனிசர் -திருவாய்மொழி -8-10-3-
எம்பிரான் தன் சின்னங்கள் அவர் இவர் -பெரியாழ்வார் திருமொழி -4-4-9-
எம் குல நாதரான ஆழ்வார்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இப்படி திரு நாமம்
சாத்துகையாலே கேவலம் தன்னோடு ஒக்க மனுஷ்யன் என்று நினைத்து இருக்ககை அபசாரம்
(ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த- -ஸ்ரீ மாணிக்க மாலை-நல்லடிக் காலத்தில் நம்மாச்சார்யர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களை தங்களோ பாதி பிரக்ருதிமான்களாக நினைத்து இருக்கும் புல்லிமை இன்றிக்கே யாயிற்று இருப்பது –
திருவுடை மன்னர் –
செழு மா மணிகள் –
நிலத் தேவர் –
தெள்ளியார் –
பெரு மக்கள் –
பெரும் தவத்தர் –
உருவுடையார் இளையார்
ஒத்து வல்லார் –
தக்கார் மிக்கார் –
வேதம் வல்லார் –
வேத விமலர் –
சிறு மா மனிசர் –
எம்பிரான் தன் சின்னங்கள் -என்று
நம் குல நாதரான ஸ்ரீ ஆழ்வார்கள்- ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இப்படி திரு நாமம் சாற்றுகையாலே
கேவலம் தன்னோடு ஒக்க ஒரு மனுஷ்யர் என்று- ஸ்ரீ வைஷ்ணவர்களை நினைத்து இருக்கை -ஸ்ரீ பாகவத அபசாரம் –
ஸ்ரீ பகவத் அபசாரம் பண்ணுகையாவது – ஸ்ரீ எம்பெருமானுடைய நல் சீவனான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்துப் பண்ணும் அபசாரம் –
ஸ்ரீ பாகவத அபசாரம் பண்ணுகை யாவது -ஸ்ரீ வைஷ்ணவர்கள் யுடைய உயிர் நிலையான ஸ்ரீ எம்பெருமான் திறத்துப் பண்ணும் அபசாரம் –
ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷத்தைப் பிறப்பிக்கும் –
ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷ பர்யந்தம் அல்லது இராது-
அபாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து -ஸ்ரீ பகவத் விஸ்லேஷத்தையும் பிறப்பித்து -இவனையும் முடித்து விடும் –
ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷத்தையும் பிறப்பித்து -அபாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து
இவனையும் எடுத்துக் கரை மரம் சேர்த்து விடும் –
இவ் வெல்லை மயக்கு ஸ்ரீ ஆசார்யன் கண் வட்டத்திலே வர்த்திக்குமவனுக்கு வாராது –
ஸ்ரீ ஆசார்யன் கண் வட்டம் விட்டால் -நித்ய சம்சாரியாய்ப் போம் இத்தனை –
ஸ்ரீ ஆசார்யனாவான் ஓட்டை ஓடத்தோடே ஒழுகல் ஓடமாய் தன்னைக் கொண்டு முழுகுமவன் அன்று –
தன்னைக் கரை ஏற்ற வல்லனாய் -தன்னை அடைந்தாரையும் கரை ஏற்ற வல்லனான ஜ்ஞானாதி பரிபூர்ணனாய் இருப்பான் ஒருவன் –
ஸ்ரீ ஆசார்யனுடைய ஜ்ஞானம் வேண்டா -சிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும்
கருட த்யானத்துக்கு விஷம் தீருமா போலே ஸ்ரீ ஆசார்யனை த்யாநிக்கவே சம்சாரம் ஆகிற விஷம் தீர்த்துக் கொள்ளலாம் என்று அருளிச் செய்வார்கள் –
குரோர வஜ்ஞாயா ம்ருத்யு மந்த்ராவஜ்ஞா தரித்ரதா குரு மந்த்ர பரித்யாகீ ரௌரவம் நரகம் வ்ரஜேத் -என்றும் யுண்டு-)
————–
திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-
குறைவற்ற ஐஸ்வர்யத்தை உடைய ராஜாக்களை காணில் ஸ்ரீ யபதியைக் காணப் பெற்றேன் என்னும்-குறைவற்ற ஐஸ்வர்யம் உடையான் ஸ்ரீ யபதி இறே-பெரிய முதலியார் ஒரு ராஜாவைக் கண்டு அவன் பின்னே தொடர்ந்து போனார் என்னவும்-ஒரு சாமந்தன் தலையிலே அடியிட்டு ஆனையிலே ஏறுகிற போதுஅத்தைக்கு கண்டு மோஹித்தார் என்னவும் கடவது இறே-இராஜா தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச்செய்தே,பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச் செய்தே, பெண் பிள்ளை வந்து,‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே,‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திர வியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய்,முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே,‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ?’ என்று வாசலில் அவர்களைப் பார்த்துக் கேட்க,அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே காரணமாகத் திரு நாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?-காணும் அளவும் போனாரே-
—————-
இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9-
ஆராமுத ஆழ்வார் ஆதல் -திரு மழிசைப் பிரான் போல்வார் ஆதல் -புருஷ ரத்தினங்கள் சேருமூர் யாயிற்று
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-நித்ய ஸூ ரிகளைப் போலே மநோ வாக் காயங்களினால் பூ ஸூ ராரான முமுஷுக்கள் திரள் திரளாக வந்து ஆஸ்ரயிப்பார்கள்-கார்ய காரண விசாரம் -சிந்தித்தல் மனசின் கார்யம் போலே-மனம் மொழி மெய் -மூன்றாலும் செய்யும் கார்யங்களை சொன்னவாறு-
தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-
தெள்ளியார் – அவர்களும் சிலரே –அலாபத்தோடே இருந்து கூடல் இழையாதே-லாபத்தோடு இருந்து -போது போக்குகிற வர்களும் சிலரே –பிரியில் சர்வதா கூடல் இழைக்க வேணும் என்று அறிந்து-பிரியாதே நித்ய அனுபவம் பண்ணும் அத்தனை -அளவுடையவர்கள் ஆயத்து (கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-)
பலர் –த்ரிபாத் விபூதியாக அனுபவத்தோடு காலம் செல்லுகிறது இறே-இங்கு தான் ஒருத்தியுமாய் -கூடல் இழையா நின்றாள்-இங்கு வ்ருத்த கீரத்த நத்துக்கும் ஆளில்லை –
அங்கு வ்ருத்த கீர்த்தனம் பண்ண வேண்டா –பெற்ற அனுபவத்தை பேசிப் போது போக்காமல் நித்தியமாய் அனுபவம் செல்லுமே-கைந்தொழும்-நித்ய அஞ்சலி புடா -என்கிறபடியே தொழுகையே யாத்ரையாய் இருக்குமவர்கள்
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5-
பெருமக்கள்–நித்தியசூரிகள்; ‘பெரியோர்’ என்றபடி. ‘பேராளன் பேர் ஓதும் பெரியோர்’ என்பது அன்றோ மறைமொழி?–‘மஹாத்துமாக்களோ என்றால்’ என்றும், ‘என்னையே அடைகின்றவன் மஹாத்மா ஆவான்; அவன் கிடைப்பது அரிது,’என்றும்,‘இவர்கள் நல்ல மஹாத்மாக்கள்,’ என்றும் வருவன இறைவன் வார்த்தை அலவோ? சமுசாரத்திலே முமுக்ஷீவாய் எதிர்முகம் பண்ணின மாத்திரத்திலே சொல்லுகிறபடி இதுவானால்,நித்தியசூரிகளை இப்படிச் சொல்லக் கேட்க வேண்டா அன்றே?
உள்ளவர் –‘பரம்பொருள் இலன் என்று அறிந்தானாகில் இவனும் இல்லாதவன் ஆகிறான்,’ என்பது, ஒரு நாள் வரையிலே ‘பரம் பொருள் உளன் என்று அறிந்தானாகில் இவனும் உள்ளவன் ஆகிறான்,’ என்பதாகாதே, என்றும் ஒக்க உள்ளவர்கள் என்பார், ‘உள்ளவர்’ என்கிறார்.-அசந்நேவ-சந்தமேவ ஆகாமல் நித்யர்கள்–‘சொரூபமான அடிமை ஞானம் அழியாமையாலே உள்ளவர்கள் என்கிறார்,’ என்றபடி.-நிரூபகம் இல்லையானால் நிரூபிக்கப்படும் பொருள் இல்லையாம் அன்றே?ஆக, ‘அடிமையாயிருக்கும் தன்மைக்கு ஒரு நாளும் குறைவு வாராதவர்கள்’ என்றபடி.
இரு கையில் சங்கிவை நில்லா வெல்லே பாவம்
இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட
பெரு வயிற்ற கரு முகிலே யொப்பர் வண்ணம்
பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து
புனலரங்க மூரென்று போயினாரே –24–
பெரும் தவத்தர் இத்யாதி –ஒருவர் இருவராய் சென்று கிட்டுகிறாரோ –அம்ருதத்தை அமரர்கள் சூழ நின்று காக்குமா போலே காண்-என்னைப் பிரிந்த சமனந்தரம் பரிகரம் வந்து சூழ்ந்து கொண்ட படி இது காண் -என்கிறாள் –
பக்த்தைர் பாகவதைஸ் ஸஹ-என்றும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்கிறபடியே
நித்ய ஸூரிகளை சொல்கிறது –பகவத் பிரேமத்தால் அதிசயித்தவர்கள் –-வணக்குடை தவ நெறி -என்று பக்தியை தபஸ் சப்தத்தால் சொல்லக் கடவது இறே –-தங்களுடைய சேஷத்வத்தையும்-அவனுடைய ஸ்வாமித்வத்தையும் உணர்ந்து இருக்குமவர்கள் பரிவராய்க் கொண்டு ஒருவர் கிட்ட ஒண்ணாத படி எங்கும் ஒக்க சூழ்ந்து நிற்கையாலும் கிட்டப் போய்த்தில்லை –
உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா
கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்க எனக்கு அருள் கண்டாய் -1-6-
வடிவுடையாராய் –யுவாக்களாய் –வ்ருத்தவான்களாய்-காம ஸூத்ரம் கண்ணழிவு அற கைவந்து இருப்பாராய்-இருக்கிறவர்களை முன்னாகக் கொண்டு-நாள் தோறும் அவன் வருகிற வழியிலே எதிர் கொண்டு-பெரிய திரு நாளிலே கலங்காதே தெளிந்து இருந்து –
உன்னை ஆஸ்ரயிக்கும் படி அன்றோ எனக்கு உண்டான த்வரை –
உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே-8-10-3-
ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை -சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –என் கண் வட்டத்திலே சஞ்சரியா நிற்க-இவருடைய கண்ணி நுண் சிறு தாம்பு இருக்கிறபடி– ஸ்ரீ மதுர கவிகட்கும் அடி இது அன்றோ – பொய் நின்ற ஞானம் தொடங்கி-முனியே நான்முகனே -என்ற திருவாய் மொழி முடிய இவரைத் தொடர்ந்து பின் பற்றிய இடத்து-ஆழ்வார் தமக்கு பிரயோஜனமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி – நெடுமாற்கு அடிமை- என்னும் திருவாய் மொழி களையே தமக்கு தஞ்சமாக பற்றினார்-
கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4- 9-
ப்ரீதிக்கு போக்கு விட்டு சொல்லுவார்களைக் கண்டக்கால் -கண் படைத்த பிரயோஜனம் பெறலாம்-ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே (பெருமாள் திருமொழி )-என்னக் கடவது இறே-எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று –சின்னம் என்று -அவனுடைய அடையாளம் –இவர்களைக் கண்டக்கால் -அவன் -சாத்விக சேவ்யன்-என்று தோன்றும் –அவநீத ப்ர்த்யவர்க்கன் (விநிதம் இல்லாதவ் பூத கணங்கள் )என்று இறே அவனை (ருத்ரனை )கழித்தது –கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் -என்று அவற்றோடு வாராத போது -போகாய் -என்று இறே இவர் இருப்பது-என் ஆவி சேர் அம்மானுக்கு அந்தாம வாண் முடி சங்காழி நூலாரமுள-என்னக் கடவது -இறே-ஆசைகள் தீர்வேனே–ஆசைகள் -என்று-காண -என்றும் –கிட்ட -என்றும் –கூட இருக்க என்றும் இறே இவர்களுடைய ஆசைகள்-அவனைக் காண வேணும் -என்கிற ஆசைகள் தீரும் உகந்து அருளின நிலங்களை அனுபவித்தால் அடியார்கள் குழாங்ளை உடன் கூடுவது என்று கொலோ -என்கிற இழவுகள் தீரும் இங்கே-ஸ்ரீ வைஷ்ணவ திரள்களைக் கண்டால்-கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் (திரு விருத்தம் )-என்கிறபடியே கண்டவாறே ஆசைகள் தீரும் இறே
ஈஸ்வரனைக் கண்டால் ஆசைகள் தீராது இவர்களைக் கண்டால் ஆசை தீரும்–கடிவார் தண் அம் துளி கண்ணன் (2-3-9 )-இத்யாதி-அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேனே -என்று பூர்ண அனுபவம் பண்ணின பின்பு இறே-அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -என்று பிரார்த்தித்து-தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே (3-6-10 )-என்று ஆசைகள் தீர்ந்தது-பயிலும் சுடர் ஒளி யிலே (3-7 ) இறே-திரு நாவாய் அவையுள் புகலாவதோர் நாள் ( 9-8 )-என்று அத் திரள் இறே உத்தேச்யம்-ஒண விழவில் ஒலி அதிர பேணி வரு வேம்கடவா என்னுள்ளம் புகுந்தாய் (நான் முகன் )-என்று
அவன் வரும் இடத்தில் அவர்களும் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு கூட வந்து புகுவார்கள் –
தக்கார் மிக்கார்களை சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
எக் காலமும் சென்று சேவித்து இருக்கும் அடியரை
அக் கான் நெறியை மாற்றும் தண் மால் இரும் சோலையே – 4-2- 3-
தக்கார் –ஈஸ்வரனோடு கிருபை ஒத்து இருக்கும் அவர்கள்-ஈஸ்வரனுக்கு தகுதியானவர்கள்
அதாவது-நினைவு ஒன்றாய் இருக்கை-சர்வாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணும் -என்கிற கிருபை ஒத்து இருக்கை –மிக்கார்களை –அவனைப் போலே ஸ்வதந்த்ரராய் –
அபராதங்களைக் கண்டவாறே –ஷிபாமி ந ஷமாமி என்கை அன்றிக்கே-எப்போதும் ஒக்க அனுக்ரஹ சீலராய் இருக்கையாலே – அவனிலும் காட்டிலும் அதிகராய் இருக்கும் அவர்களை-ஆகையால் இறே இவர்களை பற்றும் இடத்தில் புருஷகார நிரபேஷமாக பற்றலாய் இருக்கிறது –
அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம்கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7-
அவனுடைய ஆச்சர்ய குண சேஷ்டிதங்களுக்கு தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆஸ்ரயிங்கோள் –வேதம் வல்லார் என்கிறது –நாராயண பரா வேதா -வேதைச்ச சர்வைரஹ மேவ வேத்ய-என்று சகல வேத தாத்பர்யமும் கைப்பட்டவர்கள் என்கை –சகல தேவதைகளும் பகவத் பரதந்த்ரம் ஆகையால் அவற்றுக்குத் தனித்து உயிர் இல்லை என்று இருக்குமவர்கள் வேதம் வல்லவர்கள்-(பரன் திறம் அன்று பல்லுலகீர் தேவம் ஒன்றும் இல்லையே )
‘தேவதைகள் தோறும் தனித்தனியே காரியம் உண்டு’ என்று இராமல்,
‘எல்லாச் சொற்களும் ஒரே பொருளைச் சொல்லுவது’ என்று இருக்குமவர்களைப் பற்றப் பாருங்கோள் என்கிறாள்’ என்றபடி.
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-
சர்வேஸ்வரனே-ப்ராப்யமும் ப்ராபகமும்-என்கிற வேத தாத்பர்யம் கைப் பட்டவர்களை புருஷகாரமாகக் கொண்டு-வேறாக வேத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம், என்கிறபடியே அவர்கள் தாங்களே ஆஸ்ரயணீயர்–சஜாதீய பாவத்தால் அத்தனை ருசி விசுவாசங்கள் வாராதாகில் அவர்களை புருஷகாரமாக வாகிலும் கொள்ளப் பாருங்கோள்-வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை –பிதாமஹம் நாதமுனிம் வி லோக்ய ப்ரஸீத-இங்கு இருக்கும் நாள்களுக்குப் புருஷகாரமாக முமுக்ஷூக்கள் உளர்; அங்குதானே நித்தியசூரிகள் உளரே அன்றோ? ‘அந்த அமாநவன் முத்தர்களைப் பரம்பொருளிடம் சேர்ப்பிக்கின்றான்,’ என்கிறபடியே, அவர்கள் கொடுபுக்கு இருத்தலே அன்றோ அவ்வோலக்கத்தில் இருப்பது?
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-
பகவத் ப்ரேமத்தால் அதிசயித்தவர்கள்-வேதத்திலே நிர்மலராக ப்ரஸித்தர் ஆனவர்கள் –யத்ர ருஷய பிரதமஜா யே புராணா-நித்ய அனுபவம் பண்ணும்-அவர்களுக்கு சர்வ வித போக்யமும் தானே என்னும் இடத்துக்கு உப லக்ஷணம் –அக்காராம் போலேயும் கனி போலேயும் இருக்கை –அக்காராம் வ்ருஷ ஸ்தானே யாய் -அது கோட் புக்கு பலித்தால் போலே இருக்கை -அவர்களுக்கு நிரதிசய போக்யனான உன்னை எனக்கு காட்டினவனே
—————————————————————————–———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply