Archive for July, 2021

ஸ்ரீ நம் ஆழ்வார் தம் திரு வாக்கால் –மூன்றாம் பத்தில் ஸ்ரீ திருவாய் மொழி -பற்றி அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள் – –

July 19, 2021

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழி தானே இது கற்றாரை உஜ்ஜீவிப்பித்து
பின்னர் -சாம்சாரிகமான -சகல துரிதத்தையும் போக்கும்,’ என்கிறார்-

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக் கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே–3-1-11–

வியப்பு ஆய வியப்பு இல்லா –
வேறு சில வ்யக்திகளிலே கண்டால்-விஸ்மய ஹேதுவாய் இருக்குமடைய இவன் பக்கலிலே கண்டால் ப்ராப்தமாய் இருக்கும்.
ஒருவன் நான்கு பசுக்களைத் தானம் செய்தான் என்றால், அது விசமய ஹேதுவாய் இருக்கும் ;
‘பெருமாள் செய்தார்’ என்றவாறே, ப்ராப்தமாய் இருந்தது இறே – என்றது, –
சர்வ ஸ்வ தானம் பண்ணிக் கையொழிந்த அளவிலே ‘திரிஜடன்’ என்பான் ஒரு பிராஹ்மணன் வர,
அப்பொழுது ஒன்றும் தோன்றாமையாலே ‘உனக்கு வேண்டும் பசுக்களை அடித்துக்கொண்டு போ,’ என்ன,
தண்டைச் சுழற்றி எறிந்து அதற்கு உட்பட்ட பசுக்களையடைய அடித்துக் கொண்டு போனான்’ என்னும் சரிதப் பகுதியை உணர்த்தியவாறு.

மெய்ஞ்ஞான வேதியனை –
யதாபூதவாதியான -உண்மையைக் கூறுகின்ற வேதங்களாலே -ப்ரதிபாதிக்கப்பட்ட -சொல்லப்படுகின்ற –
உத்கர்ஷத்தை — ஏற்றத்தை (முதன்மையை) உடையவனை.

சயம் புகழார் பலர் வாழும் தனம் குருகூர்ச் சடகோபன் –
‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்ற இவர் தம்மைப் போன்று சம்சாரத்தை ஜெயிக்கையால் வந்த புகழையுடைய
ஸ்ரீ வைஷ்ணவர் பலரும் ஆழ்வாரை அனுபவித்து-வர்த்திகைக்கு – வாழ்க்கைக்குத் தகுதியாகப்
பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.

துய்க்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப்பத்தும் ஒலி முந்நீர் ஞாலத்தே உய்யக்கொண்டு பிறப்பு அறுக்கும் –
துயக்காவது மனம் திரிபு–சம்சய விபர்யய ரஹிதமாக சாஷாத் கரித்து –
அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்தும், ஒலியையுடைத்தான முந்நீரையுடைய பூமியிலே-
அசன்நேவ -‘பரம்பொருள் இலன் என்று அறிவானாகில் அவனும் இல்லாதவனாகிறான்,’ என்கிறபடியே,
அசத் கல்பரானவர்களை,சந்தமேநம் ததோ விது ‘பரம்பொருள் உளன் என்று அறிவானாகில் அவனும் உள்ளவனாகிறான்,’ என்கிறபடியே,
உஜ்ஜீவிப்பித்து விரோதிகளையும் போக்கும். என்றது,
அராஜகமான தேசத்திலே ராஜ புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமா போலே ,
அழகர் திருவடிகளிலே செய்யும் கைங்கர்யத்தில் அந்வயிப்பித்துப் பின்பு
தத் விரோதியான சமுசார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் என்கிறார்,’

——————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யசித்தாருக்கு சரீர சம்பந்தம் அறுத்துக் கொடுக்கும் என்கிறார்
தம்முடைய வருத்தமெல்லாம் போம்படி அவன் வந்து முகங்காட்ட,
‘நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்றார் இவர்;
அவன் முகத்தைப் பார்த்தவாறே அவன் உயிர் நீடுபெற்றதாயிருந்தது.

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே–3-2-11-

எல்லா உயிர்கள் எல்லா உலகமும் உடையவனை –
‘இவர் தரித்த பின்பாயிற்று அவன் எல்லா வுயிர்களையும் எல்லா உலகங்களை யுமுடையவனாயிற்று;
இங்கு இவர் ஒருவரையுமே ஆயிற்று இழக்கப்புக்கது;
அங்கு ஸவிபூதிகனானவனை ஆயிற்று இழக்கப்புக்கது’ என்றபடி.
இனி, ஏக அங்கம் விகலமானாலும் -‘உறுப்புகளில் ஒன்று குறையினும் -அங்க வை கல்யம் -உறுப்புக்குறைவு உண்டு அன்றோ?
அப்படியின்றிக்கே, இவரைப் பெற்ற பின்பாயிற்று ஈஸ்வரத்வம் பூர்ணமாயிற்று ’-என்னுதல்.

குயில் கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன் –
பிரகாரியானவன் தரித்து,
பிரகாரரான இவரும் தரித்து,
இவர் தம்மளவேயன்றித் திருநகரியும் தரித்து,
அங்கு உண்டான சோலைகளும் தரித்து,

அங்கு உண்டான திர்யக்குகளினுடைய – பறவைகளுடைய-ஹர்ஷ ஸூசகமான த்வனியும் -மகிழ்ச்சிக்கு
அறிகுறியான ஒலியும் கேட்கும்படியாயிற்று,’ என்பதாம்.
அகால பலிநோ வ்ருஷ -‘காலம் அல்லாத காலங்களிலும் பழங்களையுடையனவாயும்,
தேன்களைப் பொழிகின்றனவாயும்’ என்னும்படியாயிற்று என்றபடி.

செயிர் இல் சொல் இசை மாலை –
குற்றமற்ற இயலையும் இசையையுமுடைத்தான மாலை;
ஈண்டுக் குற்றமாவது, சரீர சம்பந்தத்தோடே பொருத்தம் உண்டாயிருக்கச் சொல்லுதல்;
அது இல்லாத மாலை எனவே, பகவல் லாபம் ஒழியச் செல்லும்படியாயிருத்தல் செய்யச் சொன்ன மாலையன்று என்பதனைத் தெரிவித்தபடி.
‘எங்கு இனித் தலைப் பெய்வனே’ என்ற உக்திக்கு -வார்த்தைக்கு நினைவு தப்பியிருக்குமாகில், அது குற்றமேயன்றோ?
‘இப்பத்தும் செய்வது என்?’ என்னில்

உயிரின் மேல் ஊனிடை ஆக்கை ஒழிவிக்கும் –
ராஜபுத்ரனையும் -அரசகுமாரனையும் வேடுவனையும் ஒருங்கு பிணைத்தாற்போன்று, நித்யமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய்
ஈஸ்வரனுக்கு சேஷமாய் -அடிமையாயிருக்கிற ஆத்மாவையும்,-
பரிணாமி த்ரவ்யமான அசித்தையும் -வளர்தல் குறைதல் முதலிய மாறுபாடுகளையுடைய சரீரத்தையும்
தன்னிலே-பந்தித்துக் – கட்டுவித்துக் கிடக்கிற அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்குவிக்கும்.
இவர்க்கு இப்போது உண்டாய்ப் போக்குவிக்குமென்கிறது அன்று;
‘இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை’ என்றபோதே ஈஸ்வரன் இவர்க்கு இது போவதாக நினைப்பிட்டான்.
‘ஆயின், ‘பொல்லா ஆக்கையின் புணர்வினை யறுக்கலறா’ என்கிறது என்னை?’ எனின்,
பாதிதாநுவ்ருத்தியாலே அருளிச்செய்கிறார்.
ஆனாலும், இவர் கூப்பீட்டுக்கும் ஒரு பலன் வேண்டுமே?
இவரோடு சம்பந்தமுடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.

——————–

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் அப்யஸிக்க வல்லவர்கள்,
ஆழ்வார் பிரார்த்தித்த படியே திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட
அடிமைகளும் செய்யப்பெறுவர்,’ என்கிறார்.

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே–3-3-11-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை –
கடின ஸ்தலத்தில் பூவைப் பரப்பினால் போலே ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு
காடும் மலையுமான பூமியை அநாயாசேந அளந்து கொண்ட சர்வேஸ்வரனை யாயிற்று கவி பாடிற்று

ஆயின், திருவேங்கடமுடையானையன்றோ பாடிற்று இத்திருவாய்மொழியில்?
மண்தாவிய ஈசனைப் பாடிற்று என்றல் யாங்ஙனம்?’ எனின்,

’கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா!’ என்றும்,
’மண் அளந்த இணைத் தாமரைகள்’ என்றும்,
‘உலகம் அளந்த பொன்னடியேயடைந்து உய்ந்து’ என்றும்
ஆழ்வார்கள் அருளிச் செய்வர்கள்;

அன்றியும்,
எல்லாரையும் க்ரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும்,
வரையாதே கானமும் வானரமுமான இவற்றுக்கு முகம் கொடுத்துக்கொண்டு நிற்கிற படியாலும்
திருவேங்கடமுடையானை ஸ்ரீவாமனனாகச் சொல்லக் கடவது இறே

நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் –
திருவுலகு அளந்தருளின திருவடிகளுக்கு அணுக்கன் இட்டாற் போன்று நிழல் செய்யும்படி
வளர்ந்த பொழிலை யுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த. ‘

கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் –
கேழ்-என்று ஒப்பாய் -ஒப்பில்லாத இப்பத்தையும் அப்யஸிக்க வல்லவர்கள்.
இப் பத்துக்கு ஒப்பு இல்லாமையாவது, ஆத்மாவினுடைய ஸ்வரூபத்திற்கு அனுரூபமான கைங்கரியத்தை
மனோ ரதித்த பத்து ஆகையாலே வந்த ஒப்பு இல்லாமை.

ஞாலம் புகழவே வாழ்வு எய்தி வாழ்வர் –
‘இளைய பெருமாள் ஒருவரே! அவர் பெற்ற பேறு என்?’ என்று இங்ஙனே படை வீடாகக் கொண்டாடியது போன்று,
எல்லாரும் புகழும்படியாக
அன்றிக்கே –
கைங்கரியத்தை மநோ ரதித்து விடுகை அன்றி இவருடைய மநோ ரதமே மநோ ரதமாக
கைங்கரியமாகிற சம்பத்தைப் பிராபித்து அனுபவிக்கப் பெறுவர்கள்.

இனி, ‘வாழ்வு எய்தி ஞாலம் புகழ வாழ்வர்,’ என்று கொண்டு கூட்டி,
கொடியராயிருக்கும் பிரபுக்களை, அவர்கள் செய்யுங் கொடுமையும் நெஞ்சிலே கிடக்கவும், பிழைக்க வேண்டி ஏத்துவார்களே அன்றோ?

அங்ஙனன்றி,
இவனை ஏத்தப் பெற்றோமே! இற்றை விடிவும் ஒரு விடிவே!’ என்று
பிரீதியோடே ஏத்தும்படியாக வாழ்வர் என்னுதல்.

‘விசேஞ்ஞர்கள் ஏத்துதலே யன்றி,
அவர்களில் சிலர் நெஞ்சிலே த்வேஷமும் கிடக்க ஏத்துதலேயன்றி,
இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.

————

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்கள் நித்ய கைங்கரியத்தைப் பெற்று,
அயர்வறும் அமரர்களாலே விரும்பப்படுவார்கள்,’ என்கிறார்.

கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே–3-4-11-

கூடி வண்டு அறையும் தண் தார் கொண்டல் போல் வண்ணன் தன்னை –
‘கிண்ணகத்திலே இழிவாரைப் போன்று வண்டுகளானவை திரண்டு தேனைக் குடித்து ஒலிக்கின்ற
ஸ்ரமஹரமான -சிரமத்தைப் போக்குகின்ற மாலையையும், ஸ்ரமஹரமான சிரமத்தைப் போக்குகிற மேகம்
போன்றிருக்கின்ற திருமேனியையுமுடைய சர்வேஸ்வரனை.

இத் திருப்பதிகத்தில் பரக்கச் சொன்ன விபூதி முழுதும்,
தோளில் தோள் மாலையைப் போன்று அவனுக்குத் தகுதியாயிருக்கிற படியைக் கண்டு
அருளிச் செய்தமை தோற்ற ‘வண்டு கூடி அறையும் தண்தார் கொண்டல்போல் வண்ணன்’ என்கிறார்.

மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன –
பர்யந்தங்களிலே -பக்கங்களிலே அலர்ந்த சோலையையுடைய திருநகரிக்கு-நிர்வாஹகராய் – உரியவராய் –
பரம உதாரரான – ஆழ்வார் அருளிச் செய்த.

பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் –
புஷ்பம் -மலர்கள் பரிமளத்தோடே -மணத்தோடே மலருமாறு போன்று இசையோடு கூடின ஆயிரத்திலும்
வைத்துக் கொண்டு இப் பத்தையும்-அப்யஸிக்க – கற்க வல்லவர்கள்.

வீடு இல போகம் எய்தி –
விச்சேத சங்கை -பிரிவின் ஐயம் ஒருநாளும் இல்லாத மோக்ஷ இன்பத்தையடைந்து.

அமரர் மொய்த்து விரும்புவர் –
அமரராலே மொய்த்து விரும்பப்படுவர்.
‘லீலா விபூதியை-ததீயத்வ ஆகாரத்தாலே – அநுசந்திப்பார் நித்ய ஸூரிகளாகையாலே,
தாங்கள் அனுபவிக்கக்கூடிய அநுபவத்தை, ‘இவ்வுலகத்தே இருந்து வைத்தும் இப்படி இருப்பதொரு ஞான விசேஷம் பிறந்து அநுசந்திப்பதே!’
என்று ஆழ்வார் பக்கல் பண்ணின பிரேம அதிசயத்தாலே,
அவருடைய பிரபந்தங்களைக் கற்றவர்களை, சர்வேஸ்வரனை விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பார்கள் நித்தியஸூரிகள் ஆதலின்,
‘அமரர் மொய்த்து விரும்புவர்,’ என்கிறார்.

———

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழி கற்றார், பகவத் குண அநுசந்தானம் பண்ணினால்,-
அவிக்ருதராய் – விகாரம் இல்லாதவராய் -இருக்கைக்கு அடியான மஹா பாவத்தை
இது தானே-நிஸ் சேஷமாக அடியோடு போக்கும்,’ என்கிறார்.

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே–3-5-11-

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல –
‘பிராப்யப் பிராபகங்கள் அவனே’ என்று இருக்குமவர்கள் ஆயிற்றுத் தீர்ந்த அடியவராகிறார்;

அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகை யாவது,
அவர்களுடைய பிராப்யப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை.
அஹம் சர்வம் கரிஷ்யாமி –
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்று இருந்தாலும்,
க்ரியதாம் இதி மாம் வத-
‘முகப்பே கூவிப் பணிகொள்ளாய்’ என்கிறபடியே,
அடிமை கொள்ள வேண்டுமாதலின், ‘திருத்திப் பணி கொள்ள வல்ல’ என்கிறது.

ஆர்ந்த புகழ் அச்சுதனை –
குறைவற்ற கல்யாண குணங்களை யுடையவனாய்,
‘தன்னை -ஆஸ்ரயித்தாரை-அடைந்தாரை நழுவவிட்டான்’ என்னும் வார்த்தையை ஒரு நாளும் கேட்டு அறியாதவனை.

அமரர் பிரானை எம்மானை –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான -சம்சாரத்தின் வாசனை சிறிதும் இல்லாதவரான நித்ய ஸூரிகளைக் கொள்ளும்
அடிமையைத் தன் பக்கல் -ஆசாலேசமும் -ஆசை சிறிதுமின்றிக்கே இருக்கிற என்னைக் கொண்டவனை.
இதனால், அடியார்களை நழுவ விடாதவன் என்னும் தன்மை கேட்டார் வாய்க் கேட்டு அன்றிக்கே,
தம் பக்கலிலே அநுஷ்டான பர்யந்தமாகக் கண்டு சொல்லுகிறார் என்பது போதரும்.

வாய்ந்த –
பகவானுடைய குணங்களைச் சொல்லுகையும்-அனுசந்திக்கையும் –
அவ்வனுசந்தானம் -அச்சொல்லுகை ஒழியச் செல்லாமையுமாகிற
இவ்வளவேயன்றி,
பகவானுடைய குணங்களைக் கேட்டால் -அவிக்ருதராய் -விகாரமில்லாமல் இருப்பாரை நிந்தித்தும்,-
விக்ருதராய் – உரையும் செயலும் வேறுபடுகின்றவர்களாய் இருப்பாரைக் கொண்டாடியும் போரும்படி
அவ்விஷயத்திலே-அவகாஹித்துச் மூழ்கிச்சொன்ன. வாய்கை – கிட்டுகை.

வளம் வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சடகோபன் நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து
வயலுக்குச் சொல்லுகிற சிறப்பையும் நகரங்களுக்குச் சொல்லுகிற சிறப்பையும் உடைத்தான திருநகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச்செய்த ஒப்பற்ற ஆயிரத்திலும் இப்பத்து.
தண்-குளிர்த்தி –
நேர்ந்த -சொன்ன என்றபடி –
பகவானுடைய குண அநுசந்தானத்தாலே விக்ருதராய்க் கொண்டு -உரையும் செயலும் வேறுபட்டவராய்க் கொண்டு
சொன்ன ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப் பத்து என்பார், ‘வாய்ந்த சடகோபன் நேர்ந்த இப்பத்து’ என்கிறார்.

அருவினை நீறு செய்யும் –
பகவானுடைய குணங்களைக் கேட்டால் விக்ருதாராகாமல் -வேறுபடாதே திண்ணியராய்
இருக்கைக்கு அடியான மஹா பாவங்களைச் சாம்பல் ஆக்கும்.

————–

நிகமத்தில் ‘இத் திருவாய் மொழியைக் அப்யஸிக்கவே பகவத் ப்ரேமம் உண்டாம்
இத்தை அப்யசியுங்கோள் -என்கிறார்

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள் செய்யும் வானவர் ஈசனைப்
பண் கொள் சோலை வழுதி வள நாடன் குருகைக் கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே–3-6-11-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய் –
காணப் பெறாத இன்னாப்போடே சொல்லுகிறார்.
கண்களாற்காண அரியனாய், ‘காண ஒண்ணாது’ என்று மறந்து பிழைக்க ஒண்ணாதபடி
நெஞ்சுக்கு மிகவும் முன்னிலையாய்

இவர்க்குப் பிரிவாவது,-விஸ்லேஷமாவது -பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே – புறக் கண்களால் காண வேண்டும்
என்னும் நசையாலே- மனத்தின் அனுபவத்துக்கு வரும் கலக்கம்.
சம்ச்லேஷம் -கலவியாவது -ப்ரத்யக்ஷ சமானாகாரமான -புறக் கண்களால் நேரே காண்டலைப் போன்று-
ஞான சாஷாத்காரம் – உட் கண்ணால் காண்டல்.

மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும் வானவர் ஈசனை –
நித்ய ஸூரிகளுக்கு-அனுபாவ்யனானால்- அனுபவிக்கத் தக்கவன் ஆனால் போலே, சம்சாரிகள் என்று
வாசி வையாமல் அர்ச்சாவதார முகத்தாலே வந்து ஸூலபன் ஆனவனை.

பண்கொள் சோலை –
வண்டுகளின் மிடற்று ஓசையாலே பண் மிக்கிருந்துள்ள சோலை;
முக் கோட்டை போலே காணும் சோலை இருப்பது.

வழுதி நாடன் குருகைக் கோன் சடகோபன் சொல் –
திருவழுதி நாட்டுக்கும் திருநகரிக்கும் நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த.

பண் கொள் ஆயிரம் –
வண்டுகளின் நினைவு இன்றியே அவற்றின் மிடற்றோசை பண் ஆனால் போன்று,
பகவானுடைய குணங்களை அனுபவித்த அனுபவம் வழிந்த பேச்சுகள் விழுக்காட்டாலே பண்ணானபடி.

இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமின்
எல்லாம் கிடைக்கிலும் கிடையாதது ஒன்று, மக்கட்குப் பகவானிடத்தில் பத்தி;
இத் திருவாய் மொழியைக் கற்க அதுவும் கிடைக்கும்

பத்தராகக் கூடும் பயிலுமின்
பரத்வ ஞானத்துக்கு அடியான -ஸூஹ்ருதம் -புண்ணியமாதல்,
சாஸ்திர ஞானமாதல்,
சதாச்சார்ய -நற்குருவின் உபதேசமாதல்,
பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் -பகவத் கடாக்ஷம் –
இவை யனைத்தும் இல்லாதார்க்கும் அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே பகவானிடத்தில் பத்தி
உண்டாகக் கூடும் என்பார், பத்தராகக் கூடும் பயிலுமின் . ’ என்கிறார்.

அவாப்த ஸமஸ்த காமனான ஒரு பொருளிலும் விருப்பம் இல்லாதவனான சர்வேஸ்வரன்-ஆஸ்ரித வாத்சல்யத்தாலே
அடியார்களிடத்து வைத்த வாத்சல்யத்தாலே இவன் உகந்தது ஒன்றைத் திருமேனியாக விரும்பி,
‘இவன் உண்பித்ததை உண்டு, அகங்கள் தோறும் புக்கு விட மாட்டாமல் இருந்தால்,
‘இவன் நம்மை விட மாட்டாதே இருந்த பின்பு நாமும் இவனிடத்தில் அன்பு வைத்தல் ஆகாதோ?’
என்னக் கூடும் அன்றோ?’ என்றபடி.

‘‘பயிலுமின்’ என்றால், பயில்வர்களோ?’ எனின், ‘நிதி இங்கே உண்டு’ என்ன,
அவ் விடத்தைத் தோண்டுவார்களே -கல்லுவர்களே அன்றோ?
அப்படியே, ‘பத்தி உண்டாம்’ என்ன, கற்பார்கள்-அப்யசிப்பார்கள் – என்று அருளிச் செய்கிறார்.

————-

நிகமத்தில் ‘பாகவத சேஷத்வ ப்ரதிபாதகமான இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள்,
இப் புருஷார்த்தத்துக்கு விரோதியான சம்சாரத்தைக் கடப்பர்கள்,’ என்கிறார்.

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே–3-7-11-

அடி ஓங்கு நூற்றுவர் வீய –
பாண்டவர்களை அரக்கு மாடத்திலே அகப் படுத்தியும், சூதிலே தோற்பித்தும்,
வன வாசம் முதலியவைகளைப் பண்ணுவித்தும், தாங்கள் புத்திரர் மித்திரர் முதலியவர்களாலே நிறைந்து -பல்கி –
ராஜ்யத்திலே வேர் விழுந்த துரியோதனாதிகள் நூற்றுவரும் முடியும்படி.

அன்று –
அவர்களாலே-நிரஸ்தரான – தள்ளப்பட்ட அன்று.

ஐவர்க்கு அருள் செய்த நெடியோனை –
இரண்டு இடத்திலும் ஒக்கும் காணும் ஐவர்க்கு அருள் செய்கை.
இங்குத் திசை திசை வலித்து எற்றுகின்ற ஐவர்க்கு அருள் செய்தான்;
அங்கு அவர்களாலே எற்று உண்ட ஐவர்க்கு அருள் செய்தான்.
இவர்களுடைய யானை குதிரை உள்ளிட்டவை அவர்கள் பறித்துக் கொள்ள,
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ‘எவனுக்கு மந்திரியாயும் காக்கின்றவனாயும் இருக்கின்றானோ’ என்கிறபடியே,
இழந்தவை எல்லாம் தானேயாய் நின்றான் ஆதலின். ‘அருள் செய்த’ என்கிறார்.

நெடியோனை –
பாண்டவர்கள் காரியம் செய்து போகிற அன்றும்,
நாதிஸ் வஸ்த்தமநா ‘நிறைவு பெறாத மனத்தையுடையவனாய் இருக்கிறேன்,’ என்கிறபடியே,
அவர்கள் காரியம் ஒன்றும் செய்யப் பெற்றிலோம்,’ என்றிருந்தபடி.

தென் குருகுகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் –
ஆழ்வார்-பாகவத சேஷத்வ பர்யந்தமான – பாகவதர்களுக்கு அடிமைப் பட்டிருக்கும் அடிமையை எல்லையாக வுடைய
கைங்கரியத்தை வாசிகமாகப் பண்ணுகையாலே அந்தரங்க அடிமை ஆயிற்றுச் சர்வேஸ்வரனுக்கு.

அடி ஆர்ந்த ஆயிரத்துள் –
இருக்கு வேதம் போலவும்,
பாத பத் ஸ்தோ அக்ஷர சம ‘நான்கு அடிகளோடு கூடியதும் ஒவ்வோரடியும் எழுத்துக்களால் ஒத்திருப்பதும்’ என்கிற
ஸ்ரீ ராமாயணம் போலவும் அடிகள்-பூரணமான – நிறைவுற்ற ஆயிரம்.

அவன் தொண்டர் மேல் முடிவு இவை பத்து –
இதில் சர்வேஸ்வரனைச் சொன்ன இடங்கள் உப சர்ஜ்ஜன கோடியிலேயாமித்தனை.

ஆரக்கற்கில் –
நெஞ்சிலே படும்படி கற்க ஆற்றல் உள்ளவர்களாகில்.
இனி, ‘இதில் ஒரு பாட்டும் விழ விடாதே கற்கில்’ என்னுதல்.

சன்மம் செய்யாமை முடியும் –
ததீய சேஷத்வ -அடியார்கட்கு அடிமையாம் தன்மைக்கு விரோதியான பிறவியிலே சேர்தல்-ஜென்ம அந்வயம் – அறும்.

————

நிகமத்தில் இத்திருவாய் மொழியில் -சப்த மாத்ரத்தாலே இதில் பிரார்த்தித்த படியே
அனுபவிக்கலான -பரம பதத்தைச் செல்லப் பெறுவர் என்கிறார் –
( சொன்னாலே -–ஒவ் ஒரு இந்த்ரியமும் -மற்ற வியாபாரம் பெற அங்கே தானே நடக்கும் –)

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை
நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-

புலம்பு சீர்ப்
இவர் புகழுமா போலே லோகம் அடைய புகழும்படி யாயிற்று அவன் குணங்கள் –

பூமி யளந்த பெருமானை
பூமியை அளந்து –அந்ய சேஷத்வ -ஸூவ ஸ்வாதந்த்ர்யம் -இரண்டையும் தவிர்த்த –
சர்வ ஸ்வாமியை யாயிற்று இவர் கவி பாடிற்று –

நலங்கொள் சீர்-நன் குருகூர்ச் சடகோபன் சொல்
கரணங்களும் சேதன சமாதியால் விடாய்த்து
அவை தான் ஓர் இந்த்ரிய வ்ருத்தியை ஓர் இந்திரியம் ஆசைப்பட்டு-
இவை எல்லாவற்றின் விருத்தியையும் தாம் ஆசைப்பட்டு-
இப்படி பகவத் விஷயத்திலே விடாய்க்கும் படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ உடைய ஆழ்வார்
அனுபவ அபி நிவேசம் ஆகிற நன்மையையுடைய ஞானாதி குண விசிஷ்டராய்-
நன்றான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் சொல்

வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து
பிரதிபாத்யத்தை விளாக்குலை கொண்ட -என்னுதல்
ப்ரதிபாதந சாமர்த்யத்தை உடைய என்னுதல் -அத்விதீயமான இப்பத்து

இலங்குவான் யாவரும் ஏறுவர் இப் பத்தைச் சொன்னாலே-
இன்னார் இனையார் இல்லாத
பகவத் அனுபவத்துக்கு விச்சேதம் இல்லாத வை லக்ஷண்யத்தை யுடைய பரம பதத்தை பிராபிக்கப் பெறுவார்
ச ஏகதா பவதி -என்றபடியே -அநேக சரீரங் களைப் பரிக்ரஹித்து
அவ்வோ சரீரங்களிலும் கரணங்களும் ஒவ் ஒரு இந்த்ரியமும் மற்றவற்றை எல்லாம் விரும்பி அனுபவித்து
பூர்ண அனுபவம் பண்ணலாம் படி
தேசத்திலே பெறப் பெறுவர் – என்றபடி –

————-

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழியின் இயல் மாத்திரத்தை அப்யசித்தார்களுக்கு
பிறரைக் கவி பாட யோக்கியமான ஜென்மம் இல்லை,’ என்கிறார்.

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு –
தகுதியான மிக்க புகழை யுடையவனாய், நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய்,
அம் மேன்மையோடே வந்து அவதரித்து மனுஷயத்வே- மனிதத் தன்மையிலே பரத்வத்தையுடையவன் தனக்கு.
மனுஷ்யத்வே ‘மனிதத் தன்மையில் பரத்வம் சொல்லப்பட்ட இடம் உண்டோ?’ எனின்,
ஸ்ரீ கீதையில் ஒன்பதாம் ஓத்திலே நின்று மனுஷ்யத்வே- மனிதத் தன்மையிலே பரத்துவத்தைப் பரக்கப் பேசாநின்றதே அன்றோ?

ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் –
‘அவன் உபய விபூதிகளை யுடையவன்’ என்றால், தக்கு இருக்குமாறு போன்று சர்வேஸ்வரன் கவி இவர்’ என்றால்
அதற்குப் போரும்படி யிருக்கிற ஆழ்வார் அருளிச் செய்த.

ஏற்கும் பெரும் புகழ் ஆயிரம் –
யாதோ வாசோ நிவர்த்தந்தே -அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன,’ என்னும்படியான
பரம் பொருளை விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதற்குப் போரும்படியான ஆயிரம்.

ஏற்கும் பெரும் புகழ் ஓர் இவை பத்தும்-
ஆயிரத்திலும் இப்பத்து, தகுதியான பெரும் புகழை யுடைத்து. என்றது,
‘இவ்வாத்மாவினுடைய சொரூபத்துக்குச் அநனுரூபமாக -சேராத வகையிலே பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்றும்,
ஸ்வரூபத்திற்குத் தகுதியாக -ப்ராப்தமான -அனுரூபமாக -அடையத் தக்க பரம் பொருளைக் கவி பாட வம்மின்’ என்றும்
சொன்ன பத்து ஆகையாலே, சொன்ன சொன்ன ஏற்றம் எல்லாம் தகும்படி இருக்குமாயிற்று.

சன்மம் இல்லை –
நித்ய ஸூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே?
பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது?
பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும் படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.

———

நிகமத்தில் இத்திருவாய்மொழியை அப்யசித்தாரை சர்வ லோக பிரசித்தமாம்படி
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யில் -செல்வத்திலே நடத்தி,
மேலே பரமபதத்திலே சென்றால்
தன் ஐஸ்வர்யம் -செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ என்கிறார்.

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே–3-10-11–

கேடு இல் விழுப் புகழ் கேசவனை –
கேடு இல்லாமல் விழுப்பத்தை யுடைத்தான நித்யமாய் இருக்கிற மங்களம் பொருந்திய
கல்யாண குணங்களையுடைய,கேசி ஹந்தாவை – கேசியைக் கொன்ற கிருஷ்ணனை.

குரு கூர்ச் சடகோபன் சொன்ன –
ரகுவீர சரிதம் முனி ப்ரணீதம்
‘முனிவரான வால்மீகி பகவானால் சொல்லப்பட்ட ஸ்ரீராகவனுடைய சரிதம்’ என்கிறபடியே,
அவதாரத்துக்கு அவ் வருகு போகமாட்டாத ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட.

பாடல் ஓர் ஆயிரம் –
பாட்யே கேயேச மதுரம் ‘பாடத்திலும் கானத்திலும் கேட்பதற்கு மதுரமாய் இருக்கிற’ என்கிறபடியே,
இசையோடே சேர்ந்த -யாயிற்றுப் பிறந்தது

ஆயிரத்துள். இவையும் ஒரு பத்தும் –
முத்துகளை முகம் அறிந்து கோத்துச் சேர்வை பார்க்குமாறு போன்று, ‘இவையும் ஒரு பத்து’ என்கிறார்.

பயிற்ற வல்லார்கட்கு –
சொல்ல வல்லார்க்கு -பயிற்ற என்பதை -பயில என்று கொண்டு -அப்யஸிக்க கற்க வல்லவர்கட்கு.
‘பயிற்ற’ என்னும் பிறவினை, ஈண்டுத் தன்வினையின் கண் வந்தது. ‘அவன் தரும்’ என்று அந்வயம்

நாடு –
த்ரவ்ய -பொருளின் விசேஷத்தை அறியாத சாதாரண மக்கள். -அவிசேஷஞ்ஞர்

நகரம் –
த்ரவ்ய பொருளின் விசேஷம் அறிந்திருக்கும் பெரியோர்கள். -விசேஷஞ்ஞர்

நன்கு உடன் காண –
நன்மையோடே காண. ‘இவனும் ஒருவனே!’ என்று கொண்டாட என்றபடி.

நலன் இடை ஊர்தி பண்ணி –
நன்மைக்கு நடுவே நடக்கும்படி செய்து. நன்மையாவது, ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ.

வீடும் பெறுத்தி –
பரம புருஷார்த்த மோக்ஷத்தையும் கொடுத்து.

தன் மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகம் –
தன்னதான த்ரிவித -மூன்று விதமான-ஆத்ம வர்க்கத்துக்கும் – உயிர்களின் கூட்டத்துக்கும் இவன்தான்-
அத்விதீய – ஒப்பு அற்ற தலைவன்-நாயகன் – ஆம்படி பண்ணிக் கொடுக்கும்.

ஆயின், சர்வேஸ்வரனைப் போன்றவனோ இவனும்?’ எனின்,
அவன் தன்னதான ஐஸ்வர்யத்தை இவன் ‘என்னது?’ என்னும்படி செய்யும். என்றது,
இவனுக்கு ஐஸ்வர்யம் கொடா நிற்கச் செய்தே, இது தனக்குப் புறம்பாம்படி இருக்கை அன்றித்
தன் ஐஸ்வர்யத்திலே அந்தர் பூதமாம் -அடங்கியதாகும் -படி பண்ணிக் கொடுக்கும் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பேர் அருளாளன் மஹாத்ம்யம் -ஸ்ரீ அநந்த பத்ம நாப ஸ்வாமிகள் –

July 19, 2021

ஆனையின்‌ துயரம்‌ தீரப்‌ புள்ளூர்ந்த (கருடன்‌ மீதேறிய) வரதன்,‌ கஜேந்த்ர வரதனாக விளங்குகிறான்‌.
வடமொழியில்‌ ‘ஹஸ்தீ’ என்றால்‌ ‘யானை‘ என்று பொருள்‌.
யானையே மலையாக இருந்து எம்பெருமானைத்‌ தாங்குவதால்‌, வரதன்‌ ‘ஹஸ்தீசன்’ ‌– ‘யானைமலையரசன்‘‌.
மேலும்‌ அஷ்டதிக்கஜங்கள்‌ அவனை ஆராதித்ததனால்‌ ‘ஹஸ்தீசன்‘.
ஹஸ்த நக்ஷத்ரத்தில்‌ பிறந்ததினால்‌ ‘ஹஸ்தீசன்’.. அனைவர்க்கும்‌ வாரி வழங்குவதால்‌ ‘ஹஸ்தீசன்’..
பின்னர்‌ த்ரேதாயுகத்தில்‌ முதலையால்‌ கஷ்டமடைந்த யானையை மீட்டு பரதத்வ நிர்ணயம்‌ –
வரதனைத்‌ தவிர்த்து மற்றோர்‌ தெய்வம்‌ பரதைவமில்லை

இன்றும்,‌ தேவப்‌பருமாள்‌ ப்ரம்மோத்ஸவம்‌ ஆறாம்‌ திருநாள்‌ மாலை புறப்பாட்டில்,‌
யானை மீது ஆரோகணித்து எழுந்தருளும்‌ அழகு அவச்யம்‌ சேவிக்க வேண்டியது.
அதில்‌ யானை வாகனத்திற்குக்‌ கால்கள்‌ இல்லாமலிருப்பது ஓர்‌ சிறப்பம்சம்‌
(முதலையால்‌ இழுக்கப்பட்டுத்‌ தண்ணீரில்‌ கால்கள்‌ மூழ்கியுள்ளதைக்‌ காண்பிப்பதாக).
பர தத்வ நிர்ணயமாக ஏகாம்பரேச்வரர்‌ திருக்கோயில்‌ வாசலில்‌ ஏசலும்‌ நடைபெறுகிறது.

இதை யடி யொற்றியே ஏனைய விஷ்ணுவாலயங்களிலும்‌ இவ் வழக்கம்‌ இன்றளவும்‌ பின்பற்றப் பட்டு வருகின்றது.

————-

ஸ்ரீ ஆலிநாடனுக்கு பேர் அருளாளன் அருள் -.

கனவில் வந்த கருணாகரன் (நதியில் கிடைத்த நிதி)
பல நாட்களாகப் பட்டினி இருந்த களைப்புடன் மெதுவாகக் கண்களை மூடினார் ஆலிநாடன்.
இமையோர் தலைவனை உள்ளத்தில் த்யானம் செய்துகொண்டே அவரின் இமைகள் மெதுவாக மூடின.

பரம்பொருளை எளிதில் அறிய முடியாது என்கிறது வேதம்.
இதனை நாமறிய ஒரு அழகிய உதாரணத்தையும் உரைக்கிறது.
புதையலை விரும்பாத மனிதன் உலகினில் உண்டா?
பெரும்புதையலுக்கு ஆசைப்பட்டு எல்லோரும் பூமியில் புதையுண்டு போகின்றனர்.
“பல ஆண்டுகளாக நாம் வசிக்கும் வீட்டிலேயே புதையல் மறைந்திருக்கிறது“ என்றால் எவராவது நம்பிக்கையுடன் ஏற்பார்களா?

எட்டெழுத்து எனும் மகாமந்திரம் கொண்டு கண்களை மூடிக்கொண்டு பார்த்தால் உள்ளத்தே உறையும் திருமாலை உணரலாம்.
மந்திர மையினால் புதையலை அறிவது போன்று எட்டெழுத்து மந்திர மகிமையால் வரதனை அடையலாம்.
கண்களை மூடிக் கொண்ட கலியன், கார்மேனி அருளாளனின் திருமேனியைத் தனது உட்கண்ணால் சேவித்துக் கொண்டிருந்தார்.

அமைதியான அவரின் த்யானத்திற்கு இடையூறு செய்ய விரும்பாத துறிஞ்சல்கள் (வௌவால்கள்) தம் இறகுகளைக் கூட அசைக்காமல் மௌனம் காத்தன.
பிணியவிழ் தாமரை மொட்டலர்த்துவது போன்று அவரின் இதயத்தாமரை மெதுவாக இதழ் விரித்தது.
தாமரையினுள் உறங்கும் கருவண்டு போன்று கரியமாணிகத்தைத் தன் இதயத்துள் கண்டார்.

“வையமெலாம் மறைவிளங்க வாள், வேல் ஏந்திய மன்னவனே! ஏனிந்த மனக்கலக்கம்?” எனும் குரல் கம்பீரமாக ஒலித்தது.
அடங்காத தன் கரணங்களை (புலன்களை) அடக்க முயன்று பிரமன் தவித்த போது, ஓர் அற்புத ஆகாசவாணி உரைத்ததே!
அஃதே போன்ற குரல் இன்று நெஞ்சத்துள்ளும் நியமித்தது!!

“தொண்டை நாட்டின் பெருநதியான வேகவதியின் கரையினில் நிதி நிறைந்துள்ளது. நீர் அங்கு வாரும்!!”
என ஒலித்த குரல் அடங்கியது. மங்கை மன்னனின் இதயத்தாமரையும் இதழ் மூடியது.

திடுக்கிட்டுக் கண் விழித்தார் திருமங்கையாழ்வர். “தயாநிதியே! தேவதேவா!” எனத் தொழுதார்.

“யாரங்கே!…..” அவரின் அதிகாரக் குரலில் பாழடைந்த மாளிகை பலமாகக் குலுங்கியது.
மௌனத்தில் ஆழ்ந்திருந்த துறிஞ்சல்கள் துடிதுடித்துப் பறந்தன.
வாசலில் காத்திருந்த சேவகர்கள் விரைந்து வந்தனர். “கட்டுண்டு கிடந்தவர் கட்டளை யிடுகின்றாரே!” எனத் திகைத்தனர்.

“சேவகர்களே! விரைவாக என்னை காஞ்சிக்கு அழைத்துச் செல்லுங்கள்
மன்னன் கேட்ட கப்பத்தினை அங்கு செலுத்துகிறேன்… ம்…. ஆகட்டும்…“ என அவரின் கட்டளை தொனியைக் கேட்ட
காவலர்கள், கிடுகிடுத்துப் போனார்கள்.

உடனடியாக மன்னனிடம் செய்தி தெரிவிக்கப்பட்டது. ஆச்சர்யத்துடன், நடப்பதைக் காணும் ஆவலுடன்
அவனும் உடன்வர சம்மதித்தான். வழியெங்கும் நிற்காமல் விரைந்து காஞ்சியை அடைந்தனர்.

வரதனை திருவடி தொழுது ஆழ்வார், “ஸ்ரீநிதி, ஸ்ரீநிதி“ என உள்குழைந்தார்.
“நிதியைப் பொழியும் முகிலாக நீயிருக்க, நீசர்தம் வாசல் அடைவேனோ!” என உரத்த குரலில் உணர்ச்சியுடன் உரைத்த போது,
அருகே நின்றிருந்த சோழ மன்னன் தலை குனிந்தான்.

அடுத்து வேகவதியின் கரைக்கு விரைந்தார் கலியன்.
ஆர்ப்பரித்துப் பெருகும் சரஸ்வதி, அன்று அலைகளால் அமைதியாகத் திரண்டாள்.
அருள்மாரியாம் கலியனின் காலடிபட்ட பாக்கியத்தை உணர்ந்து, அவளின் ப்ரவாகம் பொறுமையானது போலும்!!
அழகான அன்னங்கள் ஆங்காங்கு நீந்திக் கொண்டிருந்தன.
நதியின் நடுவிலிருந்த மணல் திட்டுக்களில் நாரைக்குஞ்சுகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.
நாணற்புதர்களின் வெண்பூக்கள் வேகவதியின் நுரையுடன் கலந்து மேலும் வெண்மையாகத் தண்ணீரில் மிதந்தன.

கரைக்கு வந்த கலியன், வேகவதியின் வெள்ளத்தினை உற்றுப் பர்த்தார். அவர் கண்களின் கூர்மை இருகரைகளையும் தொட்டது.
அங்குலம் அங்குலமாகத் தனது விழிகளை அகல விரித்து உருட்டியவர், குறிப்பிட்ட இடம் வந்தவுடன் நிலைத்து நிறுத்தினார்.
நதிக்கரையில் நிதி இருக்கும் இடத்தை கருணாநிதியான வரதன் கனவில் குறிப்பிட்டிருந்தானே!,
அந்த இடத்தை நெருங்கியவர், “அரசே! இங்கு தோண்டச் செய்யுங்கள்!!” என்றார்.

அடையார்சீயமாம் ஆழ்வாரின் கட்டளைக்கு அரசனும் கீழ்படிந்தான்.
தோண்டத் தோண்ட புதையல் வெளிவந்தது!!!!
தங்கம், வைரம், வைடூரியம் என அரசன் கப்பமாக எதிர்பார்த்ததை விட, நதியின் வெள்ளத்தைக் காட்டிலும் மேலான நிதி தென்பட்டது.

“அரசே! தங்களுக்குத் தேவையானதை அளித்து விட்டேன். இனிமேலாவது பாகவத கைங்கர்யத்துக்கு
எனக்கு அனுமதி அளியுங்கள் என உரைத்த கலியன், அரசனின் உத்தரவுக்குக் காத்திராமல் அங்கிருந்து விலகினார்.

“மங்கையர்கோனே! இவையனைத்தும் எனக்கா! செலுத்த வேண்டிய தொகையைவிட அதிகம் உள்ளதே!” என்றான் சோழன்.

“ஆம் மன்னா! என் நிதி ஸ்ரீநிதியாம் வரதன். இனி இடையூரின்றி அவன் கைங்கர்யம் எனது வாழ்க்கையின் வைபவம்“
என்ற மங்கை மன்னன் அத்திகிரி நோக்கி நடந்தான்.

ஆழ்வார் சென்ற திசை நோக்கி கைதொழுவது தவிர சோழனால் வேறென்ன செய்திட முடியும்?

—————

அனந்தசரஸின் அழகிய தோற்றம் நிலவொளியில் நன்கு தெரிந்தது.
இரண்டொரு நாட்களுக்கு முன்னர் தான் பௌர்ணமி தினமாதலால் சந்திரனின் ஒளி இன்னமும் குறையவில்லை.
குளத்தில் ஆங்காங்கு சிறிதுசிறிதாகத் தேங்கியுள்ள தண்ணீரில், நிலவின் பிம்பத்தைக் காணும்போதும்,
சிறு காற்றின் அசைவில் அத்தண்ணீர் அசையும்போது நிலவின் பிம்பம் அசைவதையும் கண்டால்,
அக்குளத்தினுள் சந்திரன் எதையோ தேடுவது போன்றிருந்தது.

இன்று சந்திரனும் என்னைப் போன்றுதான் இளைத்து வருகிறானோ?
சுக்லபட்சத்தில் சுடர்விட்டு ப்ரகாசித்தவன், இப்போது தேய்பிறையில் ஏனோ தேம்புகிறான்!

நைவாய எம்மே போல் நாள் மதியே! நீ இந்நாள்
மைவானிருள கற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐவாய ரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந் நீர்மை தோற்றாயே! – திருவாய்மொழி 2.1.6)

முழுமதி இளைத்துள்ளது கண்டு ஆழ்வார் வினவுகிறார்.
வரதனைப் பிரிந்த ஏக்கத்தில் தலைமகளாக (பராங்குச நாயகியாக) ஆழ்வாரின் பிரிவுத்துயர் பாசுரம் இது.
“என்னைப் போன்றே சந்திரனே! நீயும் இளைத்துள்ளாயே!” என வினவுகிறார்.
“நிற்கின்றதெல்லாம் நெடுமால்“ என எல்லாவற்றிலும் எம்பெருமானைக் காணும் ஆழ்வார்,
இப்போது சந்திரனும் பெருமாளின் பிரிவினால் வாடுகிறதோ! என்று எண்ணுகிறார்.

“அமுதைப்பொழியும் நிலவே! நீ இப்போது இந்த இருளை ஏன் அகற்றவில்லை? உன் ஒளி ஏன் மங்கியது?
உன் மேனியின் வாட்டத்தின் காரணம்தான் என்ன? ஓ… நீயும் என்னைப் போன்று எம்பெருமானின் வார்த்தையில்
நம்பிக்கை வைத்துப் பின்னர் அவனால் ஏமாற்றத்திற்குள்ளானாயோ?”
“மாசுச:” “கவலைப்படாதே” என்று அபய முத்திரை அளித்தவன் ஏமாற்றினானே.

“ஓ அவன் பழகுமவர்களின் இயல்பினைப் பெற்றிருப்பவன் தானே“ என்ற ஆழ்வார்,
“அப்படி யாருடன் பெருமாள் பழகினான்? அவர்களைப் போன்று இவனும் எப்படி பொய்யனானான்?”
விதியின் பிழையால் ஒளியிழந்த மதியின் நிலை கண்டு மேலும் விவரிக்கிறார் ஆழ்வார்.

“நம் வரதன் கொடுமையான இக்கலியுகத்தில் “அனந்தன்” எனும் ஆதிசேஷனால் ஆராதிக்கப்படுகிறானல்லவா!
மேலும் அனந்தசயனனாக ஆதிசேஷன் மீது (அனந்தசரஸில்) பள்ளி கொள்கிறானன்றோ!
அனந்தன் எனும் பாம்புக்கு இரண்டு நாக்குகள் உண்டோ? அதாவது,
‘பொய் பேசுபவரை இரட்டை நாக்குடையவர்‘ என்பர் பெரியோர்.
அனந்தனான ஆதிசேஷனுடன் பழகுபவனான வரதனும் பொய் பேசி உன்னை ஏமாற்றினானோ வெண்ணிலவே!” என்கிறார்.

“மேலும், வரதனின் ஆயுதங்கள் அழகு. அவற்றினுள் அழகோ அழகு சுதர்ஸந சக்ரம்.
எதுவொன்று மேன்மேலும் பார்க்கத் தூண்டுமோ, அதுதானே சுதர்ஸனம்”. அந்த திவ்ய சக்ரத்தின் கதையைக் கேளுங்கள்.
“கௌரவ, பாண்டவ யுத்தத்தில் அபிமன்யுவை அந்யாயமாகக் கொன்றான் ஜெயத்ரதன்.
இன்று சூரிய அஸ்தமனத்திற்குள் அவனைக் கொல்கிறேன் என சபதம் செய்தான் அர்ஜுனன்.
அர்ஜுனனின் சபதம் காக்க “சுதர்ஸந சக்ரம் சூரிய ஒளியை மறைத்து, பகலின் நடுவே இரவு வந்தது போன்றதொரு
மாயத் (பொய்த்) தோற்றத்தை விளைவித்தது. “இருள் சூழ்ந்தது“ என எண்ணி குதூகலித்த ஜயத்ரதன் வெளியே வர,
சுதர்ஸன சக்ரம் விலகி, சூரியன் ஒளிவிட, அர்ஜுனன் அவரைக் கொன்றான்.”

இப்படி “பகல் நடுவே இரவழைக்க வல்லான்“ சுதர்ஸனன் செய்ததும் வஞ்சனை தானே.
இருநாக்கு பாம்புடனும், வஞ்சனை செய்யும் சக்கரத்துடன் பழகும் வரதன், ஏமாற்றாமலிருப்பானா!”

ஆழ்வார் ப்ராகாரத்தின் நடுவே கம்பீரமாகத் தோன்றும் நம்மாழ்வாரின் சன்னிதியும்,
அதன் மேலே முகிழ்த மதியும் கண்ட போது, நமக்குள்ளும் ஆழ்வாரின் இந்த பாசுரமும், அர்த்தமும் தோன்றியது.
அப்படியானால் வரதன் வஞ்சனை செய்பவந்தானா! நாயகி நிலையில் ஆழ்வார் பாடியது நம்மைப் பொறுத்த வரையில்
இன்று நிஜமாகத் தோன்றுகிறதே! என் விதியை என் என்பது?
“எப்போதும் உடன் இருப்பதாகச் சொன்னவன், இன்று விட்டுச் சென்றுவிடுவானோ?
அப்படியெனில் “கவலைப்படாதே“ என்பதின் பொருள் ப்ரமையா?

தொண்டரடிப் பொடியில் பூத்துக் குலுங்கும் மகிழ மரத்தின் சுகந்த பரிமள வாசனையை சுமந்து வரும் காற்று, நெஞ்சத்தை நிறைத்தது.
சோகத்தால் கனத்திருந்த நம் இதயத்தில் நுழைந்து, நுரையீரலில் புகுந்த அந்த வாசனை, சற்றே ஆறுதலளித்தது.
இதுபோன்ற அமைதியான சூழலில், ஆழ்வார் பாசுரங்களையும், ச்லோகங்களையும் அர்த்தத்துடன் அசை போடுவது ஆனந்தமளிக்கும்.
ஆனால் இப்போதோ, உள்ளத்தில் ஓசையில்லை… உதடுகள் ஒட்ட மறுக்கின்றன. ஒளியில்லாத பார்வையுடன்,
எதையும் கவனிக்கும் மனநிலையின்றி, ஒலியில்லாத வார்த்தைகள் இதழின் ஏக்கத்தைத் தெரிவித்தன.
இதயம் கனத்திருந்தால் இதழால் இயம்ப முடியுமா? உலர்ந்த உதடுகள் ஒலியின்றி உச்சரித்தன. “வ…. ர….. தா…. வ….ர…..தா….” என்று…

பாக்கியத்தின் பக்குவத்தில் எழுந்த ஓசையெனில் விண்ணதிர “வரதா“ என ஒலித்திருக்கும்.
சோகத்தின் சாயலில் சுவாரஸ்யமின்றி சுருண்டன அந்த வார்த்தைகள்.
ஆம்… இன்னும் சற்று நேரத்தில் எம் அத்திவரதன் அனந்தசரஸினுள் அமிழப் போகிறான்!!
சம்சார சாகரத்தில் அமிழ்ந்த எம்மைக் காக்கப் பிறந்தவன், பாற்கடலுள் பையத்துயிலும் பரமன்,
அனந்தன் மீது பள்ளிகொள்ளும் ஆதிப்பிரான், அனந்த கல்யாணகுணங்களுடையவன்,
அனந்தசரஸினுள் மீண்டும் செல்லப் போகிறான்!!

பிரியமானவனைப் பிரிய மனமின்றி பிரியாவிடை கொடுக்கத் தெரியாமல் தவியாகத் தவிக்கும் போது,
உதடுகள் உலர்ந்துதானே போகும்… தனிமையில் உள்ளத்துள் அழுவதை இந்த ஊருக்குப் புரிய வைத்திட முடியுமா?
ஆயாசத்தின் ஆதிக்கத்தால், நெஞ்சத்தின் பாரத்தை சுமக்க முடியாமல் நூற்றுக்கால் மண்டபத்தின் குளக்கரைப் படிகளில் அமர்ந்தேன்.
கனத்த இதயம் கண்களைத் தானாக மூடியது. “வ….ர….தா…“ என ஒருமுறை வாயால் சொன்னாலும்
மூச்சுக்காற்றின் வெம்மை உள்ளத்தின் வெறுமையைக் காட்டியது.

கலக்கத்தில் கண்கள் மூடினவேயன்றி களைப்பில் மூடவில்லையன்றோ! அதனால் உறக்கம் எப்படி வரும்?
சில நொடிகள் சென்றிருக்கும். சிலீரென்று ஒரு ஸ்பரிசம்!!!! இதுவரையிலும் உணர்ந்திராதது!!
ஆயிரம் வெண்மதியின் அனைத்து குளிர்ச்சியும் ஓரிடத்தில் ஸ்பரிசித்தால் எப்படி இருக்குமோ அதுபோன்று…
மேனி சிலிர்த்த அந்த ஸ்பரிசம் தொடர்ந்திடாதா? என ஏங்க வைத்தது.

‘தனிமையில் தவிக்கும் நம்மைத் தொடுபவர் யார்?’ என தலையைத் திருப்பினால்….
திசைகள் அனைத்தும் எழும்பிட ஒரு திகைப்பு உண்டானது. இது திகைப்பா! அல்லது தித்திப்பா?
என் எதிரே நிற்பவன் …. நிற்பவன்…. தடுமாறித்தான் போனது உள்ளம்..

“என் எதிரே நிற்பவன் தேவாதிராஜனா!!!. அத்திவரதனா!!! மும்மறையின் முதல்வனா!!! மூலமென ஓலமிட நின்றவனா!!!”
திருவபிஷேகமும், திருக்குழைக்காதுகளில் கர்ணபத்ரமும், பங்கயக்கண்களும், பவளச் செவ்வாயும்,
திருக்கையின் திவ்ய ஆயுதங்களும், காண்தகு தோளும், திருமார்பு நாச்சியாரும், அனந்தநாபியும், அரைச்சிவந்த ஆடையும்,
ஆதிவேதத்தின் அனுபவம் கமழும் பாதகமலங்களும் சோதிவெள்ளமென சுடரிடும் ஆபரணங்களுடன் அருள்வரதன்
என் முன்னே நின்ற பெருமையை எவ்வண்ணம் பேசுவேன்? எவரிடம் விளக்குவேன்?

என்னைத் தொட்ட கைகள் இமையோர் தலைவனதா? கருடனையும், அனுமனையும் அணைத்த கைகளா?
பெருந்தேவியுடன் பிணைந்த கைகளா? ஹஸ்திகிரிநாதனின் ஹஸ்தமா(கையா) அடியேனை ஸ்பரிசித்தது!!!!!
என் உள்ளத்தை உணர்ந்தான் உரக மெல்லணையான்-
ஓதநீர் வண்ணன் மெலிதாக நகைத்தான். மந்தகாசப் புன்னகையின் மாறாத பொருள் “கவலைப்படாதே“..
“வ…. ர….. தா..” திகைத்தவன், திடுக்கிட்டு நான் எழுவதற்குள், தோளைத் தொட்டு அழுத்தி அமர வைத்தான் துழாய் முடியான்.
அவனும் அருகே அமர்ந்ததை யாரிடம் சொன்னால் நம்புவர்?!!!!!!

பிரமனின் யாகத்தில் “வபை“ எனும் திரவியம் சேர்த்த போது அவதரித்தான் வரதன்.
அதனால் அவனது அதரத்தில் இன்றும் வபையின் பரிமளம் வீசுகிறது. வபையின் வாசனை,
பெருந்தேவியின் தழுவலில் அவளின் திருமார்பக சந்தனத்தைத், தான் ஏற்றதால் வந்த பரிமளம்,
“தனக்கு நிகர் எவருமில்லை“ என தன்னொப்பாரைத் தவிர்த்திடும் துளசிமாலையின் திவ்யசுகந்தம்
என வேதக்கலவையின் பொருளானவன் இன்று வாசனைக் கலவியில் வந்தமர்ந்தான்.

இமைக்க மறந்து இமையோர் தலைவனைக் கண்டேன்! எழுதவறியாத எம்பெருமானைக் கண்டேன்.
ஓவியத்தில் எழுதவொண்ணா உருவத்தைக் கண்டேன். ஆர்ப்பரிக்கும் உணர்ச்சிகள் உந்தித்தள்ள நிலைதடுமாறின என்னை,
மென்மையாக ஆச்வாசம் செய்தான் ஆனைமலை நாயகன்.

“முப்பது நாட்களுக்கு முன்பு நமது உரையாடலை நாடறியச் செய்தாயே! இன்று உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இந்த வாட்டம்?”
அனைத்துலகும் காக்கும் அருளாளன், அனைத்துக்கும் அதிபதியானவன், அடியேனை ஆறுதல்படுத்தக் கேட்கிறான்.
இது உண்மையா? அல்லது பிரமையா?

“வரதா….. வரதா…. என் ப்ரபோ! தேவாதிராஜா! “மாயம் செய்யேல் என்னை“…. உன்னைப் பெற்று அடியேன் எப்படி இழப்பேன்“ என்று தேம்பினேன்.

“என்னது என்னைப் பிரிகிறாயா? யார் சொன்னது? உன்னையும், என்னையும் பிரிக்க யாரால் முடியும்?” சற்றே குரலில் கடுமையுடன் வரதன்.

“இல்லை வரதா! இன்னும் சற்று நேரத்தில் நீ குளத்தில் எழுந்தருளி விடுவாயே!
அப்புறம் உனைக்காணும் பாக்கியம் எனக்குண்டா?” அந்த ஏக்கம் எனக்கில்லையா?” என்றேன்.

நிவந்த நீண்முடியன் சற்றே குனிந்து எனது முகத்தை நிமிர்த்தி என் கண்களை ஊடுருவிப் பார்த்தான்.

அம்புஜலோசனின் பார்வையின் கூர்மை தாளாமல் தலையை கவிழ்த்துக் கொண்டேன்.

“இந்த உலகம்தான் பைத்தியக்காரத்தனமாக உளறுகிறது என்றால், உனக்கென்ன ஆயிற்று?” வரதன் குரலில் கடுமை…

புரியாமல் பார்த்தேன்.
“உன்னுள் மறைந்திருக்கும் நான், இக்குளத்தினுள் மறைந்தால், வாடுவாயோ?”
“இதோ…. தூர்வாரி, பழுதுகளை நீக்கி பராமரித்து, தெளிந்த தீர்த்தத்துடன் உள்ள இக்குளத்தில் இருப்பது
போன்றுதானே உன் மனதிலும் மூழ்கிட ஆசைகொண்டேன்…“
“கோபம், பொறாமை, ஆசை, கள்ளம், கபடம் என்று மனதில்தான் எத்தனை வகையான சேறுகள்!!
அதையெல்லாம் தூர்வாரி துடைத்தெறிந்து என்னை அனுபவிக்கத் தெரியாத நீ,
குளத்தினுள் நான் செல்ல கவலைப்படுகிறாயா? முட்டாள்….” என்று சீறினான் வரதன்.

வ….ர….தா…. என நான் பேசத் தொடங்குமுன், “நில்.. குறுக்கே பேசாதே! நாற்பது நாட்களுக்கு மேலாக
மலையில் சென்று மூலவரையும், உற்சவரையும் சேவிக்க முடியவில்லையே! என்று ஏங்கியவன்தானே நீ!!…” – வரதன்.

“ ஆமாம்..” – அடியேன்.
அங்குள்ளவனும் நான்தானே! என்னை வெளியே வைத்தாலும், உள்ளே வைத்தாலும் உற்சவரின்
உற்சவங்களால்தானே காஞ்சிக்கும் எனக்கும் பெருமை….” – வரதன்.

தலையாட்டினேன் “ஆமாம்“ என்று.

“இப்போது எந்த உற்சவமாவது பழைய பொலிவுடன் பெருமையுடன் கம்பீரமாக நடந்ததா? சொல்…“ என்றான்.

“ஆனால் வரதா! அத்திவரதரை தரிசிக்கத் தான் நாள்தோறும் பக்தர்கள் அலையலையாகப் படையெடுக்கின்றனரே!”

“நான் அதையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த மண் பக்தி மணம் கமழும் மண் என்பது
மறுபடியும் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனாலும் இந்த மக்களின் செயல்பாடு சற்று வருத்தமளிக்கிறது“ – வரதன்.

வரதனே பேசட்டும் என மௌனம் காத்தேன்.
“இப்போது ஓடோடி வருபவர்கள் இதே பக்தியினை இனியும் வெளிப்படுத்துவார்களா?
அத்திவரதர் ஊடகங்களுக்குச் செய்தியாகிவிட்டார். “அத்திவரதர் உள்ளே போகலாமா? கூடாதா?” என்றும்
பட்டிமன்ற பொருளாகிவிட்டார்? ஆதியுகத்து அயன் கண்ட அற்புத உற்சவங்களைத் தடுப்பதற்கு அவதரித்தவராகி விட்டார்“.

எம்பெருமானின் இந்தப் பேச்சின் வேகத்தில் திடுக்கிட்ட சில பறவைகள், ராஜகோபுரத்தின் பொந்திலிருந்து படபடத்துப் பறந்தன.
“இப்படியெல்லாம் ஊரார் என்னைப் பேசும்படி செய்துவிட்டனர் சிலர்.
நான் பத்திரமாக உள்ளே எழுந்தருள வேண்டும் என நீயும்தானே விரும்பினாய்?” வரதனின் கேள்வி.

“நிச்சயமாக வரதா! அதுவும் உனது திருவுள்ளம்தானே! உனது தரிசனம் பக்தி வளர்த்தது நிதர்சனம்.
ஆனால் நடைமுறைக்கு ஒவ்வாத திட்டங்களை சிலர் செயல்படுத்த முனைந்தனர்.
அவ்விதம் நிகழ்வது பல பெரிய குழப்பங்களை உண்டாக்கும்.
ஆதலால் நன்கு தீர்மானித்து எல்லோரும் விரும்பும்படியான ஒரு நல்ல தீர்வை எடுக்க வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன்.
ஆ……னா….ல்….

“ஆனால் என்ன?”… வரதன்.

“எனது கருத்தில் முக்யமானதை விட்டுவிட்டு, அவரவர்கள் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் பேசவாரம்பித்து விட்டனர்.
இது வருத்தத்தினால் விளைந்த கருத்து என்பதை உணராமலேயே தங்களின் சுய காழ்ப்புணர்ச்சியை விமர்சனமெனும் பெயரில் வெளியிட்டனர்.”
“இங்குள்ள மக்களும் இங்கு வரும் பக்தர்களும் படும்பாட்டைக் காணும்போது, எவருக்குமே இது புரியுமே!!
அதற்காக உன்னைப் பிரிய நாங்கள் இசைந்தோம் என்பது பொருளாகிவிடுமா?
நடைமுறையின் சில அசாத்யங்களை இவ்வுலகம் உணரவில்லையே!
ஏறத்தாழ ஒரு நாஸ்திகனின் நிலையில் அடியேனை விமர்சிக்கின்றனரே!” – அழுகையுடன் அடியேன்….

ஹா…… ஹ…… ஹா….. எனச் சிரித்தான் அருளாளன்.
“இதற்குத்தான் வருத்தப்படுகிறாயா என் குமரா?!!” என்றான்.

விழிகளின் ஈரத்திரைகளின் ஊடே புரியாமல் அவன் முகத்தைப் பார்த்தேன். புன்னகை மாறாமல் பேசினான் புண்யகோடீச்வரன்.

“நல்லதொரு ஆசார்யன் மூலமாக நம் சம்ப்ரதாய அர்த்தங்களை அறிந்தவன் தானே நீ?” வரதனின் கேள்வி.

“என்ன சொல்ல வருகிறான் எம்பிரான்?” எனப் புரியாமல் “ஆ..மா..ம்“ என மெதுவாகத் தலையசைத்தேன்.

“கீதையில் நான் சொன்னதை உனது ஆசார்யார் விளக்கியிருப்பாரே!” நினைவுபடுத்திகிறேன் கேள்.
‘அர்ஜுனா! இன்னமும் இந்த உலகம் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. மனித பாவனையுடனே என்னைப் பார்ப்பதால்
எனக்குரிய மதிப்பளிப்பதுமில்லை‘ என்று சொன்னேனே…. என்னையும், எனது உபதேசங்களையும் புரிந்து கொள்ளாத இவ்வுலகம்,
உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாம்!! இன்னமும் நான் நாலாயிரம் அவதாரம் எடுத்தாலும் இவர்கள் இப்படித்தான்….”

சத்ய வ்ரதன் சத்யமான உலகியல்பைப் பேசினான்.

“ஆம் ப்ரபோ! எனது சுவாமி தேசிகனும் உன் விஷயமான ஸ்தோத்ரத்தில்,
“நிலையில்லா மனமுடைய மாந்தர், நிலையான உன்னை, உன் உண்மையை உணரவில்லையே!” என ஏங்குகிறாரே!” – அடியேன்.

“ம்ம்.. சரிதான். இதையெல்லாம் அறிந்துமா உனக்கு வருத்தம்! ராமனையும், கண்ணனையும் ஏன்
ராமானுஜனையும் தேசிகனையுமே குறைகூறும் இவ்வுலகம், உன்னை மட்டும் ஏற்கும் என்று எதிர்பார்க்கிறாயா?”

பதில் சொல்லத் தெரியாமல் மௌனமாகத் தலை குனிந்தேன்.

“ஸர்வஜ்ஞனாகிய (எல்லாம் அறிந்தவனாகிய) என்னாலேயே இவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சாமான்யன் உன்னால் முடியுமா?”
“அது சரி, நான் இன்னமும் எவ்வளவு நாட்கள் தரிசனம் தந்தால் எல்லோரும் விரும்புவார்கள்?” என்றான் வரதன்.

“ஒருசிலர் நூற்றியெட்டு என்கின்றனர். வேறு சிலர் நிரந்தரமாகவே நீ வெளியே சேவையாக வேண்டுமென்கின்றனர்.
உன் திருவுள்ளம் என்ன வரதா?” – அடியேன்.

மறுபடியும் ஹா…. ஹ….. ஹா…… என்றவன், “என்னை என்றுமே அனுபவிக்க வேண்டுமெனும் ஆவலில் அவர்கள் பேசுகின்றனர்.
அதிலொன்றும் தவறில்லை. ஆனால் எனது இந்த அர்ச்சா மூர்த்தியும் அவதாரம் தானே?!” – வரதன்.

“அதிலென்ன சந்தேகம் வரதா! ஆகமங்கள் உனக்கு ஐந்து நிலைகளை அவதாரங்களாக அறிவிக்கின்றன.” – அடியேன்.

“அப்படியானால் ராம க்ருஷ்ண அவதாரங்களைப் போன்று, ஒரு காரண கார்யத்தில் அவ்வப்போது
அவதரிக்கும்(தோன்றும்) நான், அது முடிந்தவுடன் அந்த அவதாரத்தை முடித்துக் கொள்கிறேனல்லவா!” – வரதன்.

நான் மௌனமாகவே இருந்தேன்.

“நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை இக் குளத்திலிருந்து வெளியே வந்து அருள் பாலிப்பது ஒரு அவதாரம் போன்று தானே!
அது முடிந்தவுடன் மறுபடியும் மறைகிறேன். இதை உலகம் புரிந்து கொள்ளாமல் போகலாம். உனக்குமா புரியவில்லை?” – வரதன்.

“ராமனும், கண்ணனும் தங்களது அவதாரத்தை முடித்துக் கொண்டு சென்றபோது, இவ்வுலகம் பட்டபாட்டை
புராணங்களில் அறிகிறோமே வரதா!!! அதுபோன்றுதான் உன்னைப் பிரிய மனமின்றி தவிக்கிறோம்“ – எனது ஏக்கம்.

மீண்டும் ஹா….. ஹா…..

“ஊருக்கெல்லாம் உபந்யாசம் செய்யும் திறமை பெற்றவன் நீ – எனக்கும் நன்கு உபதேசிக்கிறாய்!” – வரதன்.

“ஐயோ! ப்ரபோ! ப்ரபோ! அபசாரம்…..” பதறினேன்.

“ஏனடா பதறுகிறாய்? நான் பழக்கி வைத்ததை, ஒரு கிளி போன்று என்னிடம் பேசுகிறாயே!
நான் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்“ இது உனது ஆசார்யன் சொன்னதுதானே!.”

“அடியேன்… தேசிகனல்லால் தெய்வமில்லை..”

“ம்ம்…. ம்….” என வரதன் விழிகளைச் சுழற்றி உதடுகளைக் குவித்தது அதியத்புதமாக இருந்தது.
அந்த அழகில் மயங்கி அப்படியே நின்றேன்.

“ஏன் பேசவில்லை பிள்ளாய்? உன் மொழி கேட்கத்தானே நான் வந்தேன்“… வரதன்.

“என்னுடை இன்னமுதே! வானவர்தம் ஈசனே! மெய்நின்று கேட்டருள். அடியேனின் விண்ணப்பம்…
ராமாவதாரத்தில், உன்னைப் பிரிய மனமின்றி நதிகளும், குளங்களும், மரங்களும், பறவைகளும், மீன்களும்கூட கதறியழுதன என்றில்லையா!”
“கண்ணனாக மாயம் செய்த உன்னைக் காணாமல் உயிர் தரியேன் என உத்தவர் ஓலமிட்டு அழவில்லையா?
நாங்கள் தபோவலிமையற்றவர்தாம்…. ஆனால் உனது பிரிவு எங்களுக்கு இனிக்குமா?
இத்தனை நாட்களும் உன் பெருமை பேசிவிட்டு இனி வெறுமையாக எப்படி இருப்பது?”

“நன்று நன்று..” என ஆனந்தமாகத் தலை யசைத்தான் ஆனையின் துயர் தீர்த்தவன்.

“ராமாவதாரம் போன்று என்னுடன் எல்லோரும் வருவதற்குத் தயாராகவுள்ளனரா?
அல்லது க்ருஷ்ணாவதாரத்தில் கோபிகளைப் போன்று என் நினைவிலேயே இருப்பவர் எத்தனை பேர்?” வரதன் வினவினான்.

“உண்மைதான்… அந்த அளவிற்குப் பக்குவப்பட்ட பிறவிகள் இல்லை நாங்கள். ஆனாலும் உனது பிரிவு பேரிழப்புதானே” – அடியேன்.

“பிரிகிறேன், பிரிகிறேன் என்கிறாயே! நான் எங்கு செல்கிறேன்? இதே குளத்தினுள்தானே!.
மேலும் எனது ஏனைய நிலைகள் மூலவர், உற்சவர் என்றுமே உங்களுடன்கூடியது தானே… ராம, க்ருஷ்ண அவதாரம் போன்று
ஒட்டு மொத்தமாக விடுத்துச் செல்லாமல், என்றுமே என்னை அனுபவிக்க அளித்த அர்ச்சையின்
மேன்மைதனை எப்பொழுது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?”
“அத்திவரதனாகிய நான், உனது அந்தர்யாமி. உன் உள்ளத்துள் உறைபவன் தானே…
ஏதோ காரண காரியத்தால் இக்குளத்தினுள் அமிழ்ந்துள்ளேன். இது தேவரகசியம்!!!!
தேவாதிதேவன் எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!! உள்ளே செல்லும் எனக்கு வெளியே வரத் தெரியாதா?
நான் எந்த அரசாணைக்குக் காத்திருக்க வேண்டும்?
“தர்மத்தை நிலைநிறுத்த எனது அவதாரம். அதைத்தான் எவ்வளவு பேர்கள் புரிந்து கொண்டு அதன்படி நடக்கின்றனர்?
இந்த நாற்பது நாட்கள் என்னைக் கொண்டாடுமவர்கள், தொன்று தொட்ட பழக்கங்களான உற்சவங்கள்
செவ்வனே நடைபெறவில்லை என்று உணர்ந்தனரா!”

வரதனின் வார்த்தைகள் நடுவே குறுக்கிடுவது கூடாது என்று அமைதி காத்தேன்.

சற்றே வேகம் தணிந்தவனாக என்னைப் பார்த்து கனிவான குரலில் மீண்டும் பேசினான்.

“அதுசரி! என்னை நினைத்திருக்கும் நீ நித்யோத்சவரை மறந்து விட்டாயா? அவர்தானே என்றுமே உங்களுடன் கலந்திருப்பவர்!!”.

திடீர் தாக்குதலாக வரதனின் கேள்வியில் நிலைகுலைந்து போனேன்.

“என்ன! என் பெருமானை மறப்பதா? அவனை சேவிக்க முடியவில்லையே எனும் ஏக்கத்தில்தானே ஓர் அறிக்கை சமர்ப்பித்தேன்.
ஆனால் அதன் கருத்தை ஆஸ்திகர்கள்கூட சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே!
இன்னமும் என்னை திட்டித் தீர்த்து வருகின்றனர்“ என் இயலாமையைக் கொட்டினேன்.

ஆறுதலாகக் கரம் பிடித்து ஆச்வாசம் செய்தான் அரவிந்தலோசனன்.

“நீ பெரியோர்கள் தாள் பணிந்து சம்ப்ரதாய பொருள் அறிந்தவன்தானே!
இவர்கள் உன்பால் கொண்ட விரோதம் உனது பாபங்களைப் போக்குமென்பதை நீ அறியாயோ?”

வாஞ்சையுடன் வரதன் விரல் பிணைத்தான். அந்தத் தீண்டுமின்பத்தில் திளைத்த அடியேன் திக்குமுக்காடிப் போனேன்.

“வரதா! ஒரு பாசுரம் பாடட்டுமா?” என்றேன்.

ஹா.. ஹா… எனச் சிரித்தவன், “நான் வருவதற்கு முன்பு நம்மாழ்வார் பாசுரத்தைக் கொண்டு சந்திரனைக் கண்டாயே!
அது போன்று மறுபடியும் பாசுரமா?” வினவினான் வரதன்.

வெட்கத்தில் தலை கவிழ்ந்தேன். “என் உள்ளத்துள் உறையும் இவனை அறியாது ரகசியமாக
என் எண்ணங்களை வளர்த்தேனே! இஃதென்ன முட்டாள்தனம்!”.

என் மௌனம் கலைத்து ஆதிப்பிரான் பேசினான்.
“நானன்றி உன்னை உரிமையுடன் யார் சீண்டுவார்? சரி.. சரி.. அந்த பாசுரத்தைச் சொல்.
உன் உபந்யாசத்தை நான் ரசிப்பேன்“ – வரதன்.

“விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை
நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதனை”–(திருவாய்மொழி 1–7–5)
என்று முடிப்பதற்குள் முந்திக் கொண்ட வரதன், “இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்றான்.

“வரதா! பூர்வர்கள் காட்டிய விரிவுரை ஒருபுறம்…. இங்கு இப்போது எனது அனுபவம் மறுபுறம்“ என்றேன்.

“அதைத்தான் சற்று விளக்கமாகக் கூறேன்..” என்றான் ஆழியான்.

“என் விளக்கை – அதாவது, வரதா, எனக்கு ஜ்ஞானம் தந்து ஆட்கொண்ட விளக்கு நம் வரதன்.
கரி கிரி மேல் நின்றனைத்தும் காக்கும் கண்ணன்..“.

“ம்… சரி…“ வரதன்.

“என் விளக்கை விடுவேனோ! – என் வரதனை மறப்பேனா?”.
“என் ஆவியை விடுவேனோ? – என் ஆவி பெருந்தேவி…
இந்த ஆத்மாவுக்கு உயிரளித்து என்னைக் காக்கும் அன்னை.. அவளை விடுவேனா.. மறப்பேனா?..” அடியேன்.

“அடடே… ம்… அப்புறம் மேலே சொல்…. “ வரதன்.

“நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதனை விடுவேனோ?” – என அத்தி வரதனைக் கை காட்டினேன்…

“பேஷ்…. பேஷ்…“ என்றான்.

“வரதா….
இவர்கள் நடுவே வந்து என்னை உய்யக் கொண்டாய்…
என் வாழ்வின் நடுவே வந்து உய்யக் கொண்டாய்…
குளத்தின் நடுவே வந்து உய்யக் கொண்டாய்…
நாற்பது நாட்கள் நடுவே வந்து உய்யக் கொண்டாய்…“
மேலே சொல்ல முடியாமல் தழுதழுத்த என் தலை கோதின தேவராஜன்,
“உன் மனது எனக்குத் தெரியும் பிள்ளாய்..” என இதயம் வருடுகிற வார்த்தைகளை ஒலித்தான்.

“வரதா! தரிசனம் காக்கவே இன்று தரிசனம் தந்தாய் நீ… ஆனால் தரிசு நிலமான இம்மனசில் உன் அனுபவம்
இன்னமும் நிறையவில்லையே என ஏங்குகிறேன்“ என்று தேம்பினேன்.

“அதை அனுபவிக்க ஆழ்வார்களே ஆசைப்பட்டனர். நீ எம்மாத்திரம்“ எனப் புன்னகைத்தான்…

“பிள்ளாய்… உரையாடல்கள் போதும். உள்ளத்தில் வருத்தத்தை விடு..
உயர்வான உற்சவங்களும், உற்சாகமான உபய வேத கோஷ்டியும் காத்திருக்கிறது.
இனியென்ன கலக்கம்?” வரதன் விழி துடைத்தான்.

உண்மைதான். மயர்வற (சந்தேகமற) என் மனத்தே மன்னினான் அத்திவரதன்.
அயர்வில் அமரர் ஆதிக் கொழுந்தாகச் சுடர்விட்டவனை, பாதாதிகேசம் தொழுதேன். எனது துயரங்கள் பறந்தோடின.
நான் ஏன் கலங்க வேண்டும்? எனக்கென்ன குறை!! ஆள்கின்றான் ஆழியான்… ஆரால் குறை நமக்கு?…
இதோ இக்குளமும் உண்டு. இக்குளத்தில் நித்யகர்மானுஷ்டானம் செய்யும் பரமைகாந்திகளின் குலமும் உண்டு…
என்றுமே வரதன் எமக்கெதிரே சேவையாகிறான்… என் பாட்டனாராம் ப்ரம்மதேவன் சேர்த்த அழியாத பெருஞ்செல்வம்,
அத்திமலையில் நிரந்தரமாகக் குவிந்துள்ளதே…. அள்ள அள்ளக் குறையாத செல்வமன்றோ!
துயரறு சுடரடி தொழுதேன்.. வரதா…. வரதா…. என்றேன்..

இப்போது அவனது திருக்கையில் “மாசுச: – கவலைப்படாதே” எனும் எழுத்துக்கள் தெளிவாக மின்னியது..
திவ்யமான தேஜோமயமாகத் திருக்குளத்தினுள் இறங்கினான் அத்திகிரியான்.
சரயூவில் இறங்கிய ராமனைத் தழுவிய சரயூ போன்றும், கண்ணனின் காலடி வைப்பில் களித்த யமுனை போன்றும்,
அனந்தசரசின் புன்ணியதீர்த்தம் வரதனின் திருமேனியைத் தீண்டி மகிழ்ந்தது.
அனந்தனாம் நாகராஜன் அழகிய படுக்கையாகக் காத்திருந்தான்.
வரதனின் முழுதிருவுருவமும் நீருக்குள் மறைந்தது. குளத்தின் தண்ணீர் போன்று என் நெஞ்சமும் தெளிந்தது.

ஆம்… வரதன் அனந்தசரஸினுள் புகவில்லை. இந்த அனந்தன் எனும் அடியேனின் உள்ளக் குளத்தினுள் அமிழ்ந்தான் –
திருமாமகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட பேரருளாளனார்.
இருபத்திநான்கு படிகளிலும் நீர் நிறைந்தது. இருபத்திநான்கு அதிர்வேட்டுக்கள் முழங்கின!!!
விழிகளின் ஓரம் திரண்ட துளிகளைத் துடைத்துக் கொண்டேன். இது சோகத்தின் வடிவமல்ல… ஆனந்தத்தின் அலைகள்.
ஆகையால் இந்தக் கண்ணீரை வரதனும் விரும்புவான்.

ராமனைப் பிரிகிறோமோ என்று குளத்து மீன்கள் வெந்தன அயோத்தியில்!
வரதனைத் தாங்கள் மீண்டும் பெற்றோமே என்று அனந்தசரஸ் மீன்கள் துள்ளிக் குதித்தன!!
மீன்களாம் நித்யசூரிகளுக்கு இங்கேயும் வரதானுபவம்!!
பொழுது புலரும் பின்மாலைப் பொழுதாகியது. இப்பொழுது பார்த்தபோது வானத்து சந்திரன் சுடர்விட்டுத்தான் விளங்கினான்.
எனது கலக்கம் நீங்கியது போன்று அவனது களங்கமும் நீங்கியது. கதிரவன் தனது கிரணங்களை புண்யகோடி விமானத்தின் மீது படரவைத்தான்.

ஏறத்தாழ ஒரு மண்டலம் தவிர்ந்து வைதிகர்கள் தங்கள் நித்யகர்மானுஷ்டானத்திற்கு திருக்குளத்தில் நீராட வந்தனர்.
அடியேன் மெதுவாக திருக்குளத்தை வலம் வந்தேன். தூரத்தே உடல், திருச்சின்னம் சப்தம் கச்சியின் மதிள்களில் எதிரொலித்தது.
ஆஹா, இதைக் கேட்டு எவ்வளவு நாட்களாகி விட்டன. அமைதியான காலையில் ராமானுஜரின் சாலைக்கிணறு தீர்த்தம்
வரதனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அதற்காகத்தான் திருச்சின்னம் ஊதுகின்றனர்.
சோதி யனந்தனாக, கலியில் ஸ்ரீராமானுஜர் அன்றோ வரதனுக்கு திருவாராதனம் செய்கிறார்!
இனி தீர்த்தாமாடி மலைக்குச் சென்று, பெருமாளையும் பெருந்தேவியையும் சேவிக்கவேண்டும்.
காஞ்சியின் வீதிகளில், பெண்கள் கோலமிடத் தொடங்விட்டனர். வேதபாராயணம் மாடவீதி ப்ரதக்ஷிணம் செய்கின்றனர்.
ஆனிரைகளும் அழகாகச் சாலைகளில் படர்கின்றன. இனி வாசலில் எழுந்தருளப் போகும் வரதனை வரவேற்கக் காத்திருப்போம்!!

———–

உயர்வற உயர் நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதி நலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே! –– திருவாய்மொழி (1-1-1),

அதன் கடைசி வரிகள் “ துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே!” என ஆழ்வார்
தனது நெஞ்சத்தை நோக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.
தற்போது கலியனின் கனவில் ஆழ்வார் தோன்றி, தனக்கு விருப்பமானதைத் தெரிவித்தார்.
அதன்படி பார்த்தால் நம்மாழ்வார் திருவாய்மொழியின் முதல் நூறு பாடல்களை வரதன் விஷயமாகவே அருளியது தெள்ளென விளங்குகிறது.
வரதனின் திருவடியன்றி வேறு புகலறியாத ஆழ்வார், தனது நெஞ்சத்தில் கைவைத்து,
தனது உள்ளக் கருத்தை உலகோர் அறிய வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
அதனால்தான் கலியன் வடித்த ஆழ்வாரின் சிற்பம், கைமாறிய கோலத்தில் காட்சி தந்தது.

இவ்வுண்மையை நன்கு தெளிவாகப் புரிந்து கொண்ட ஆலிநாடன், உடனடியாக ஆழ்வாரின் தெய்வீகத் திருவுருவை
நம்மாழ்வார் விரும்பிய நிலையிலேயே ப்ரதிஷ்டை செய்தார்.
அந்தத் திருவுருவமே இன்றும் நாம் சேவிக்கும் மகிழ்மாறனின் எழிலுருவம்.

————

பத்தி முதலாமவற்றில்‌ பதி யெனக்குக்‌ கூடாமல்‌
எத்திசையு முழன்றோடி இளைத்து விழும்‌ காகம் போல்‌
முத்தி தரும்‌ நகரேழில்‌ முக்கியமாம்‌ கச்சி தன்னில்‌
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம்‌ நான்‌ புகுந்தேனே–– அடைக்கலப்பத்து (1), ஸ்ரீஸ்வாமி தேசிகன்

பகவத்‌ ராமாநுஜர்‌ ஸ்ரீரங்கத்தில்‌ நம்பெருமாள்‌ ஸன்னிதியில்‌ சரணாகதி செய்தாலும்‌,
அங்கும்,‌ அர்த்தி கல்பக, ஆபத்ஸக, ப்ரணதார்த்தி ஹர என்றே அநுஸந்தித்தார்‌.

அவரின்‌ மறு அவதாரமான நம்‌ ஸ்வாமி, வரதன்‌ திருவடியில்‌ நேரிடையாக சரணாகதி செய்து,
இதுவே மோக்ஷமெனும்‌ பெரும் பயன்‌ பெறும் வழியென்று காட்டினார்

இன்றைக்கும்‌ இக்கலியில், தன்‌ பக்தர்களுக்கு அபீஷ்டங்களை வாரி வழங்குபவனாக, ஸ்ரீஸ்வாமி சாதித்தபடி,
வாரண வெற்பின்‌ மழை முகிலாகக், கேட்டதைக்‌ காட்டிலும்‌ அதிகமாகத்‌ தருகிறான்.

மாம்‌ மதீயம் ச நிகிலம்‌ சேதனா சேதனாத்மகம்‌ |
ஸ்வ கைங்கர்யோபகரணம்‌ வரத ஸ்வீகுரு ஸ்வயம்‌ ||–– ந்யாச தசகம் (7), ஸ்ரீ வேதாந்த தேசிகர்

———

ஸ்ரீமணவாளமாமுனிகள்,‌ தானருளிய ஸ்தோத்ரத்தில்‌ குறிப்பிடுகிறார் :

ஸ்ரீகாஞ்சீ பூர்ணமிச்ரேண ப்ரீத்யா ஸர்வாபி பாஷிணே |
அதீத அர்ச்சா வ்யவஸ்தாய ஹஸ்த்யத்ரீசாய மங்களம்‌ ||

——–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அநந்த பத்ம நாப ஸ்வாமிகள் – திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நம் ஆழ்வார் தம் திரு வாக்கால் –இரண்டாம் பத்தில் ஸ்ரீ திருவாய் மொழி -பற்றி அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூ க்திகள் – –

July 18, 2021

‘இத்திருவாய்மொழி கற்றார், கண்ணாற் காணப்பட்டன எல்லாம் பகவானைப் பெறாமையாலே -அலாபத்தாலே –
நோவு படுகிற சம்சாரத்திலே இருந்து நோவுபடாமல்,
( கண்டார் எல்லாம் பகவானைப் பெற்று -லாபத்தாலே-களித்து வாழும் நாட்டிலே புகப்பெறுவர்’ என்கிறார்
இவை பத்தும் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே–பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
ஆழ்வாருடைய பாவ வ்ருத்தி உண்டாகும் என்று தாத்பர்யம் )

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே–2-1-11-

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கு –
இவ்வளவிலே வந்து இவரோட கலந்து இவரை உளராக்குகையாலே, ஒன்றும் ஒழியாதபடி
எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனுமாய்,
இவரோடே வந்து கலந்து அத்தாலே-உஜ்ஜவலனுமாய் – ஒளி உருவனுமாய் இருந்தான்.

இவர் ஒருவரையும் சோரக் கொடுக்கவே, எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனாயுள்ள தன்மை அழியுமாதலின,
இவர்க்கு வந்து முகங்காட்டுதற்கு முன்பு எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனாய் உள்ள தன்மையும் அழிந்தது போலே கிடந்தது;

இவர் இழவு தீர வந்து முகங்காட்டின பின்பு எல்லாப்பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆனான் என்பார்,
‘சேராத எப்பொருட்கும் ஆதி’என்கிறார்.

பேறு இழவுகள் இவரது அன்றி, ‘தன்னது’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற நின்றானாதலின் ‘சோதிக்கு’ என்கிறார்.
இதனால்,க்ருதக்ருத்யனானான் -‘செய்ய வேண்டியனவற்றைச் செய்து முடித்தவனாய் இரா நின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி.

(பிரணயித்வ நிபநந்தனமாகவும் வாஸ்தவமான ஆகாரத்தாலும் இரண்டு விதமாக அருளிச் செய்து
இவருடன் கலந்ததனால் உஜ்ஜவலனாயும் தனது பேறாகவும் கொண்டமையும் தோற்ற அருளிச் செய்கிறார் )

ஆராத காதல் –
இத் திருவாய் மொழியில் சொல்லப்பட்ட பொருள்; கண்ணால் காணப்பட்ட பொருள்கள் எல்லாம்
பகவானைப் பெறாத காரணத்தாலே தம்மைப் போலே நோவு படுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம் நோவுபடும்படியான அபிநிவேசமாதலின் அதனைத் தெரிவிப்பதற்கு ‘ஆராத காதல்’ என்கிறார்.

காதல் குருகூர்ச் சடகோபன் –
காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார்.
‘இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின், தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே.
(அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே –
இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)

சொன்ன அவற்றுள் –
இக் காதலோடே அருளிச் செய்த ஆயிரத்துள் அவற்றுள் இவை பத்தும் –
அல்லாதவை ஒரு தலையாக, இத்திருவாய்மொழி ஒரு தலையாம் படி அக்காதலை வாய் விட்டுக் கூறிய பதிகமாதலின்,
‘அவற்றுள் இவை பத்தும்’ என்கிறார்.

இவை பத்தும் சோரார் விடார் கண்டீர் வைகுந்தம்.
இங்கே இருந்து, கண்ணுக்கு இலக்கான பொருள்கள் அடங்கலும் பகவானைப் பெறாத காரணத்தால்
நோவுபடுகின்றனவாக அநுசந்திக்குமவர்கள்,
இவ்விருப்பை விட்டுக் கண்ணால் கண்டார் அடங்கலும் பகவானைப் பெற்றமையால் களிக்கும்
நித்திய விபூதியை விடாமல் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர்கள்.

‘கண்டீர்’ என்று கையெழுத்துக் கூப்பிடுகிறார்.

‘திண்ணன’ என்றது, -ஸூ நிச்சிதம் -ஐயமின்மையைக் குறிக்க வந்தது.

இங்கே உள்ள சிலரைப் பற்றிச் சொல்லிற்று ஓர் அர்த்த மாகிலன்றே, ஐயம் திரிவுகள் உள்ளனவாம்?
பகவானுடைய பிரபாவத்தைப் பற்றிச் சொன்னதாகையாலே இது தனக்கு எங்கேயாயினும் சூளுறவு செய்யலாம் என்றபடி.
(விஞ்ஞான சாரதிர் மனஸ் ப்ரக்ரஹவாந் நர -ஸோ அத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
ச கல்வேவம் வர்த்தயந் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி சம்பத்யதே -என்றும் உச்யமானம் அன்றோ பரமபதம் )

இத்திருவாய்மொழியில், முதற் பாட்டிலே தொடங்கி,
நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய
இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து
மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட,
‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி,
இத் திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக் கட்டினார்

——————

நிகமத்தில் – ‘இத்திருவாய் மொழியைக் கற்று உணர வல்லவர்கட்கு, -தேவதாந்த்ரங்கள் பக்கல்
ஈஸ்வரத்வ புத்தி பண்ணுகையாகிற ஊனம் குற்றம் இல்லை,’ என்கிறார்

ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே–2-2-11-

ஏழ் உலகம் ஏத்த ஏழ் உலகும் கொண்ட –
சங்கைஸ் ஸூ ராணாம் ‘வானத்திலும் பூமியிலும் உள்ள அமரர் கூட்டமும், அவ்வாறே மனிதர்களும்,
அங்கேயே சஞ்சரிக்கிற தேவர்களும் ஸ்துதிக்க, இவ்வுலகங்களை எல்லாம் தன் அடிகளால் அளந்தவன் எவனோ,
அவ்விறைவனான திரிவிக்கிரமன், என்னுடைய மங்களங்களின் விருத்தியின் பொருட்டு
எனக்கு எப்பொழுதும் அருள் புரிய வேண்டும்,’ என்கிறபடியே, ஏத்தி ஸ்துதிக்க,
அந்த ஹர்ஷத்தாலே -அம்மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின் கீழே இட்டுக் கொண்ட.

சங்கைஸ் ஸூ ராணாம் திவி பூதலைஸ் தைஸ் ததா மனுஷ்யைர் ககநே ச கேஸரை
ஸ்துத க்ரமாக் பிரசகார ய ஸர்வதா மமாஸ்து மங்கள்ய விருத்தயே ஹரி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –

கோலக் கூத்தனை –
திருவுலகு அளத்தருளின போது வல்லார் ஆடியது போன்று இருந்தானாதலின் ‘கூத்தனை’ என்றும்,
அப்போதைய வடிவழகின் மிகுதியினைக் கூறுவார்,‘கோலக் கூத்தனை’ என்றும் அருளிச் செய்கிறார்.

இதனால், இந்திரன்-ராஜ்ய ஸ்ரத்தை – இழந்த தனது ராஜ்யத்தைப் பெறும் பொருட்டு வணங்கியது போன்று,
இவர் ஒரு பயனைக் கருதி வணங்குமவர் அல்லர் என்பதுவும் ,
அவ்விறைவனுடைய வடிவழகினை அனுபவித்தலே இவர்க்குப் பேறு என்பதுவும் போதரும்.

குருகூர்ச் சடகோபன் சொல் –
ஆப்திக்கு இன்னார் கூறியது என்ன வேண்டுதலின், ‘குருகூர்ச் சடகோபன்’ என்கிறார்.
இதனால், (த்ரீணீ பதா விசக்ரமே )வேதாந்தத்தைக் காட்டிலும் ஆழ்வாரிடத்தில் பிறந்த திருவாய்மொழிக்குள்ள
ஆபி ஜாத்யம் — உயர்குடிப் பிறப்பின் சிறப்பினைக் கூறியபடி

வாய்ந்த ஆயிரம்
இத்தனை போது இவர் கூறி வந்த பரம் பொருள் நேர் பட்டாற் போலேயாயிற்று இப்பிரபந்தமும் நேர் பட்டபடி.
அன்றி,வாச்சியத்திற் காட்டில் வாசகம் நேர் பட்டபடி என்றுமாம்.
அதாவது, விஷயத்தை உள்ளபடி பேசவற்றாய் இருக்கை.

இவை பத்து உடன் ஏத்த வல்லவர்க்கு –
இத் திருவாய்மொழியை-சஹ்ருதயமாக – மனமாரத் ஸ்துதிக்க வல்லவர்கட்கு.

ஓர் ஊனம் இல்லை – இவ்வாத்துமாவுக்கு ஊனமாவது -அபர தேவதைகள் பக்கல் – இறைவர் அல்லாதாரை-
பரத்வ புத்தி பண்ணுகையும் இறைவர் என்று எண்ணுதலும்,
பர தேவதை பக்கல் -இறைவனை -பரத்வ பிரதிபத்தி பண்ணாமையும் -இறைவன் என்று எண்ணாமையும்.
இப்படி வரக்கூடிய ஊனம் இது கற்றார்க்கு இல்லை.

முதற்பாட்டில், மேல் பரக்க அருளிச் செய்கிற இத்திருவாய் மொழியின் அர்த்தத்தைத் தொகுத்து –
ஸங்க்ரஹேன -அருளிச் செய்தார்.
துக்கத்தைப் போக்குமவன்-நிவர்த்தகன் – ஆதலானும்,
சீலவான் ஆதலானும்,
ஸூகுமாரன் ஆதலானும், புண்டரீகாக்ஷன் -தாமரைக்கண்ணன் ஆதலானும்,
ஆபத் சகன் ஆகையானும்,
அகடிதகடநா சமர்த்தன் ஆதலானும்,
ஸ்ருஷ்ட்டி ஸ்திதிகளை -படைத்தல் காத்தல்களைச் செய்கையாலும்,
அழித்தலைச் செய்கையாலும்,
ஈஸ்வர அபிமானிகளாய் இருக்கிறவர்களுடைய ஸ்துதிகள் முதலியவைகளாலும்,
இப்படிப் பல வகைகளாலே அவனுடைய பரத்துவத்தை அருளிச் செய்து,
இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

———

நிகமத்தில் , ‘இத்திருவாய்மொழியை ‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’ என்று
இருக்கும் அடியவர்கள்,-பகவத் ஏக போகராய் இருப்பார் –
என்னைப் போன்று தனித்திராமல் திரளாக அனுபவியுங்கள்,’ என்கிறார்.
கூட்டமாக இந்தத் திருவாய் மொழியையே அனுபவிப்பதே பலம் என்றவாறு –

குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-

குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை –
கரிஷ்யே மைதிலீ ஹேதோர பிசாசம ராக்ஷஸம் -ஆரண்ய –46-) ’சீதா பிராட்டியின் பொருட்டு, பாணங்களால்
இவ்வுலகத்தில் பிசாச சாதி அற்றதாயும், இராக்கத சாதி அற்றதாயும் செய்வேன்’ என்கிற படியே,
புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் உறவினர்களுமான இவர்களாலே குழாங்கொண்டு –
வர புஜ பலத்தால் – வரத்தின் வலிமை தோள் வலிமை என்பனவற்றால் தழைத்து வேர் ஊன்றின
ராக்ஷஸருடைய ஜாதியினைக் கிழங்கு எடுத்த சக்கரவர்த்தி திருமகனை.

குழாம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் –
அடியார்கள் கூட்டத்தைக் கொண்ட அழகிய திருக் குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர்.
ஜன ஸ்தானம் அடியறுப்பு உண்ட பின்பு தண்ட காரண்யத்தில் முனிவர்கள் குடி ஏறியது போன்று,
‘வாயும் திரையுகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான நிலையினின்றும் தப்பிய ஆழ்வாரைக்
காண வேண்டும் என்னும் பேரவாவோடு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடையத் திரண்டு வந்து சேர்ந்தார்களாதலின்,
‘குழாங்கொள் தென் குருகூர்’ என்கிறார்.

‘நல்லார் நவில் குருகூர்’ அன்றோ?
சத்துகள் இருந்த இருந்த இடங்களிலே வாய் புலற்றும்படியான தேசமானால்,
அத் தேசத்திலுள்ளார் திரளச் சொல்ல வேண்டா அன்றோ?
திரண்டவர்களுக்கு ஜீவனம் வேண்டும் இறே

தெரிந்து உரைத்த குழாம் கொள் ஆயிரத்துள் –
உள்ளபடி அநுசந்தித்துச் சொன்ன
பத்துப்பாட்டு ஒரு திருவாய் மொழியாய், பத்துத் திருவாய்மொழி ஒரு பத்தாய்,
இப்படிப் பத்துப் பத்தான ஆயிரம். திரண்ட ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஜீவனமாக இவை இருத்தலின்,
‘குழாம் கொள் ஆயிரம்’ என்கிறார்.

‘ஆயின் திருவாய்மொழி ஜீவனம் ஆகுமோ?’ எனின்,
‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே’ என்பது இவருடைய திருவாக்கு.

இவை பத்தும் உடன் பாடி –
சாபிப்ராயமாக அப்யஸித்து-
இவை பத்தையும் பொருள் உணர்ச்சி நிறைந்த கருத்தோடு பாடி.

குழாங்களாய் –
என்னைப் போன்று பருகிக் களித்தேனே’ என்று கூறி,
குழாம் தேட இராதே,
முற்படவே திரளாக இழியப் பாருங்கள்.

அடியீர் உடன் கூடி நின்று ஆடுமின் –
அவன் பக்கலிலே நிக்ஷிப்தபரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர் இங்கிருக்கும்
நான்கு நாளும் தள்ளத் தக்க அர்த்த காமங்களைப் பற்றிச் ‘சீறு, பாறு’ என்னாதே,
நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கள்.

(ஆடுகை -அவகாஹியாய் -அனுபவிக்கப் பாருங்கோள் -என்றபடி )

அனுகூலர் கிடையாமையாலே ‘நால்வர் இருவர்’ என்கிறார்;
நம்பிள்ளை நஞ்சீயரைப் பார்த்து, ‘இதர உபாயங்களுக்கு அனுஷ்டாதாக்கள் பலராய் இருக்க,
இதற்கு அநுஷ்டாதாக்கள் மிகச் சிலராய் இருத்தற்குக் காரணம் யாது?’ என்று கேட்க,
‘உலகத்தில் இருந்ததே குடியாக அனைவரும் சம்சாரிகளாக இருக்க,
அதில் நாலிரண்டு பேர் உத்தம ஆஸ்ரமிகளானால்
சம்சாரிகளுக்கு ஒரு உத்கர்ஷமும் சந்யாசிகளுக்கு ஒரு அபகர்ஷமுமே உண்டோ?
ஸ்வர்க்க அனுபவத்துக்கு ஜ்யோதிஷ்டோமம் முதலிய யாகங்களைச் சாதனமாகச் சாஸ்திரங்கள் விதிக்கின்றன;
ஓர் ஊரில் ஒரவனன்றோ யாகம் செய்தான் என்று கேள்விப்படுகிறோம்?
ஆதலால், இதற்கோ உமக்கு ஆள் பற்றப் போகிறது?’ என்று நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச் செய்தார் –

முதற்பாட்டில், திருவுள்ளத்தைக் கொண்டாடினார்;
இரண்டாம் பாட்டில், அதனையும் இசைவித்த இறைவனைக் கொண்டாடினார்;
மூன்றாம் பாட்டில், தம் நெஞ்சிற்பட்டதோர் உபகாரத்தைக் கூறினார்;
நான்காம் பாட்டில், அவ்வுபகாரத்திற்குக் கைம்மாறாக ஆத்தும சமர்ப்பணம் பண்ணி அது தனக்கு வருந்தினார்;
ஐந்தாம் பாட்டில், ‘எனக்குப் பிரதம ஸூஹ்ருதமும் நீயேயான பின்பு உன் திருவடிகளைக் கிட்டினேனேயன்றோ?’ என்றார்:
ஆறாம் பாட்டில், ‘இன்றோ கிட்டிற்று? தேவரீர் எனக்கு விசேஷமான கடாக்ஷம் – திருவருள் பண்ணின அன்றே பெற்றேனே அல்லேனோ?’ என்றார்;
ஏழாம் பாட்டில்-அவனுடைய போக்யதையை அனுசந்தித்து – இனிமையை நினைத்து ‘உன்னைப் பிரியில் தரியேன்’ என்றார்;
எட்டாம் பாட்டில், யிப்படி நிரதிசய போக்யனானவனை -எல்லையற்ற இனியனானவனை எளியது ஒரு விரகாலே அடையப் பெற்றேன்’ என்றார்.
அன்றியே ‘பல காலம் கூடிச் செய்து பெறக் கூடிய தவத்தின் பலத்தை அவனைப் பின் சென்று மிக எளிதில் அடைந்தேன் என்கிறார்’ எனலுமாம்.
ஒன்பதாம் பாட்டில், ‘என்னுடைய எல்லாத் துக்கங்களும் போகும்படி அனுபவித்துக் களித்தேன் என்றார்
பத்தாம் பாட்டில் -இப்படி அனுபவித்துக் களிப்பார் திரளிலே போய்ப் புகப்பெறுவது எப்போதோ?’ என்றார்;
நிகமத்தில் ,’ இத்திருவாய்மொழியைக் கருத்தோடு கூடிக் கற்று-அப்யஸித்து , நான்கு நாளும் நால்வர் இருவர்
உள்ளார் கூடியிருந்து அனுபவிக்கப் பாருங்கோள்,’ என்றார்.

———–

நிகமத்தில்-‘இத்திருவாய்மொழியினைக் கற்க வல்லவர்கள் இவர் பிரார்த்தித்தபடியே
நித்திய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்குச் சர்வேஸ்வரன் திருவடிகளிலே,
‘சூட்டு நன்மாலை’ப்படியே திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள்’ என்கிறார்.

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி, வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அடி
சூட்ட லாகும் அம் தாமமே–2-4-11-

வாட்டம் இல் புகழ் வாமனனை –
இவ்வளவில் வந்து முகம் காட்டிற்று இலனாகில் புகழுக்கு வாட்டம் வரும் இறே
‘நோக்கு ஒன்றும் வாட்டேன் மினே’ என்றவாறே, ‘புறப்பட்டோம்’ என்று நாணத்தோடே வந்து தோன்றினான்;
இவள் வாட, அவன் புகழாயிற்று வாடுவது.
இத் துன்ப நிலையிலே வந்து முகம் காட்டுகையாலே பூர்ணமான கல்யாண குணங்ளை யுடையவன் ஆனான் என்கிறாள்.
தன் உடைமை பெறுகைக்கு இரப்பாளனாமவன் ஆகையாலே ‘வாமனன்’ என்கிறாள்.

இசை கூட்டி –
பரிமளத்தோடே பூ அலருமாறு போன்று, இசையோடே புணர்புண்டவைகள்.

வண் சடகோபன் சொல்
உதாரதீர் முநி –‘உதார குணத்தை யுடையவரும் மனன சீலருமான ஸ்ரீவால்மிகி இராகவனுடைய கீர்த்தியினை
உண்டு பண்ணுகிற இந்தக் காவியத்தைச் ஸ்லோகங்களாலே செய்தார்’ என்கிறபடியே,
மானச அனுபவத்தோடு அல்லாமல் வாசிகம் ஆக்கி நாட்டை வாழ்வித்த வண்மையர் ஆதலின்,
‘வண் சடகோபர்’ என்கிறார்.

அமை பாட்டு ஓர் ஆயிரத்து –
அமைவு -சமைவாய், சொல்லும் பொருளும் நிறைந்திருத்தல்.

இப் பத்தால் அம் தாமம் அடி சூட்டலாகும் –
இப்பத்தையும் கற்க வல்வர்கட்குச் செவ்வி மாலையைக் கொண்டு
அவன் திருவடிகளிலே நித்திய கைங்கரியம் பண்ணப் பெறலாம்.

‘ஆயின், நித்திய கைங்கரியத்தைச் செய்வதற்கு இவர்க்குப் பிறந்த ஆற்றாமை
இதனைக் கற்குமவர்கட்கும் உண்டாக வேண்டாவோ?’ எனின், வேண்டா;
தொண்டினைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது பெறாமையாலே போலே காணும்
இவ்வாற்றாமை எல்லாம் இவர்க்குப் பிறந்தன;
பித்ரு தனம் -தமப்பன் செல்வம் புத்திரனுக்குக் கிடைக்க வேண்டியது முறையாமாறு போன்று,
இவ் வாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல்,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே
அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப்பெறுவர்.

முதற்பாட்டில், ‘அடியார்களுடைய ஆபத்தே செப்பேடாக உதவும் தன்மையினை உடையவன், இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகின்றிலன்,’ என்றாள்;
இரண்டாம் பாட்டில், ‘‘விரோதி உண்டே’ என்பது இறைவனுக்கு நினைவாக, ‘வாணனுடைய பாஹு தோள் வனத்திலும் வலிதோ இவளுடைய விரோதி?’ என்றாள்;
மூன்றாம் பாட்டில், ‘இப்படிச் செய்ய நினைத்த நீர், முன்பு அச் செயலை எதற்காகச் செய்தீர்?’ என்றாள்;
நான்காம் பாட்டில், ‘அது பொறுக்க மாட்டாமல் அது தன்னையே உபகாரமாகச் சொல்லா நின்றாள்,’ என்றாள்;
ஐந்தாம் பாட்டில், ‘அவ்வளவிலும் வாராமையாலே, -நிர்த்தயன் -அருள் இல்லாதவன்’ என்றாள் திருத்தாய்;
ஆறாம் பாட்டில், அது பொறுக்கமாட்டாமல், ‘கெடுவாய்! ஆகரத்தில் தகவு மறுக்குமோ? அது நம் குறைகாண் என்கிறாள்,’ என்றாள்;
ஏழாம் பாட்டில், ‘அவன் குணம் ஹானியை -இன்மை தன்னையே குணமாகக் கொள்ளும்படி இவளை வஞ்சித்தான்,’ என்றாள்;
எட்டாம் பாட்டில், ‘உம்மைத் தஞ்சமாகப் பற்றின-அபாஸ்ரயமாகப் பற்றின – இவள் படும் பாடே இது?’ என்றாள்;
ஒன்பதாம் பாட்டில், ‘இவள் பேற்றில் நீர் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்றாள்;
பத்தாம் பாட்டில்,சேஷித்தது -‘எஞ்சி நிற்பது நோக்கு ஒன்றுமேயாயிற்று; இஃது ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்,’ என்றாள்;
நிகமத்தில் , இத் திருவாய் மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

————

நிகமத்தில் , ‘இத் திருவாய்மொழியைக் கற்க வல்லவர் உளராகில்,
அவர் பரம பதத்தில் போய் நித்திய அனுபவம் பண்ணப் பெறுவர்’ என்கிறார்

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே–2-5-11-

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானை –
தன் படிகளைப் பேசப் புக்கால்,ஆனந்த வல்லியில் சொல்லுகிறபடியே, பேசித் தலைக் கட்ட ஒண்ணாதிருக்கிறவனை.
அவ்வாறு பேச ஒண்ணாது ஒழிந்தது பரத்துவத்தை அன்று;
குடக்கூத்து ஆடிய செயல் ஒன்றுமே ஆயிற்று.
விஷ்ணோர் ஜிஷ்ணோர் வஸூ தேவாத் மஜஸ்ய –‘மகாத்துமனும், ஐந்து ஆயுதங்களைக் கையில் தரித்திருப்பவனும்,
ஜெயசீலனும், வசுதேவருக்குப் புத்திரனும், எங்கும் நிறைந்தவனுமான கண்ணபிரானுடைய நற்குணங்கள் உலகங்கள்
அனைத்தும் சேர்ந்து பதினாயிரம் வருஷங்கள் கூறினாலும் கூறி முடிவு பெறா,’ என்பது பாரதம்.

அம்மானை –
குடக் கூத்தாலே என்னைத் தனக்கே உரிமை யாக்கிக் கொண்டவனை.-அநந்யார்ஹம் ஆக்கினவனை

கூறுதலே மேவி –
‘நான் சொல்லுவது என்? சொல்லீரே!’ என்னா, மீண்டும் ‘சொல்லீர் என் அம்மானை’ என்று தொடங்குமவர் ஆதலின்,
‘பேச நிலம் அன்று’ என்று வேதங்கள் மீண்ட விஷயம் என்று, தாமும் ‘பேச ஒண்ணாது’ என்று கை வாங்காதே,
அழகிதாகப் பேசக் கடவோம் என்று உறுதி கொண்டார்.
‘உறுதி கொண்ட அளவேயோ, கூறியதும் உண்டோ?’ என்னில்,
‘குருகூர்ச் சடகோபர் அன்றோ? கூறச் சொல்ல வேண்டுமோ?
மயர்வற மதிநலமருளப் பெற்றவர்க்குப் பேசத் தட்டு உண்டோ?’ என்றபடி.

கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் கூறுதல் வல்லார் உளரேல் –
விஷயத்துக்குத் தகுதியாகப் பேசித் தலைக் கட்டின அந்தாதி ஆயிரத்திலும் இப்பத்தையும் கற்க வல்லவர் உளராகில்.

கூடுவர் வைகுந்தம் –
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ’ என்று ஆசைப் பட்டுப் பெறாது
‘ஆடியாடி’யாய் விசனப் படாமல், இப் பாசுர மாத்திரத்தைச் சொல்லவே நான் பிரார்த்தித்துப் பெற்ற பேறு பெறுவார்கள்.

‘ஆயின், இவரைப் போன்று, ஆற்றாமை இல்லாதவர்களும் பெறுதல் கூடுமோ?’ எனின்
தமப்பனது தனம் கிடந்தால் புத்திரன் அழித்து ஜீவிக்குமத்தனையன்றோ?
அது போன்று, இங்கும் ஆழ்வார் பட்ட வியசனம் பட வேண்டா;
இவருடைய அனுபவத்தைப் பரம பதத்திலே அனுபவிக்கப் பெறுவர்.

முதற்பாட்டில், இவர் ஆசைப்பட்ட படியே அடியார்கள் குழாங்களோடே வந்து கலந்தபடி சொன்னார்;
இரண்டாம் பாட்டில், தம்மோடு கலந்த பின்பு திருமேனியும் திவ்விய அவயவங்களும் திவ்விய ஆயுதங்களும் நிறம் பெற்றன என்றார்;
மூன்றாம் பாட்டில், தம்மோடே கலந்து தன் சத்தை பெறுதல். இன்றேல், இல்லையாம் படியாய் வந்து கலந்தான் என்றார்;
நான்காம் பாட்டில், மேல் உவமையாகச் சொன்ன பொருள்கள் நேர் நில்லாமையாலே, அவற்றைச் சிக்ஷித்துச் சேர்த்துக் கூறி அனுபவித்தார்;
ஐந்தாம் பாட்டில், அவைதாமும் உவமையாக நேர் நில்லாமையாலே, அவற்றைக் கழித்து உபமேயந்தன்னையே அனுபவித்தார்.
ஆறாம் பாட்டில், ‘இப்படி எல்லாரைக் காட்டிலும் வேறுபட்ட தன்மையினை யுடைய இவன், முத்தன் தன்னை
அனுபவிக்குமாறு போன்று, தான் என்னை அனுபவித்தான்’ என்றார்;
ஏழாம் பாட்டில், தமக்காக இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தான் என்றார்;
எட்டாம் பாட்டில், ‘அவனை என்னால் பேச முடியாது’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், துணை தேடிக் கொண்டு மீண்டும் பேசுவதற்குத் தொடங்கினார்;
‘பத்தாம் பாட்டில்’, ‘இப் படிகளால் என்னோடே கலந்து இம் மகாகுண ஒன்றையும் பேச என்றால் சால மிறுக்குடைத்து’ என்றார்;
நிகமத்தில் , இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

————-

நிகமத்தில் ‘இத் திருவாய் மொழியினைக் கற்க வல்லவர்கள் யாரேனுமாகவுமாம்;
அவர்களுக்குக் குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள்-அப்ரயோஜம் – பிரயோஜனம் அற்றவைகள்;
இவ் வாகாரத்தாலே -இத் தன்மையாலே அவர்கள்-பகவதீயர் – பகவானுக்கு உரிமைப் பட்டவர்கள்,’ என்கிறார்

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்
பண்ணில் பாடவல்லார் அவர் கேசவன் தமரே!–2-6-11-

கண்ணி தண் அம் துழாய் முடிக் கமலம் தடம் பெரும் கண்ணனை –
இப்போதாயிற்று-வளையம் – மாலை செவ்வி பெற்றதும்,
முடி நன்கு தரித்ததும், திருக்கண்கள்-விக்ஷிதம் – மலர்ச்சி பெற்றதும்.

புகழ் நண்ணி –
இவன், தம் பக்கல் செய்த -வ்யோமோஹ -காதலாகிய குணத்திலே -அவகாஹித்து -மூழ்கி.

தென்குருகூர்ச் சடகோபன் மாறன் –
ஒன்று திருப் பெயர்;
ஒன்று-சத்ரு வர்க்கத்துக்கு – பகைவர் கூட்டத்துக்கு-ம்ருத்யுவாய் – யமனாக உள்ளவர் என்பதனைக் காட்ட வந்தது.

எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து –
அவன் தம் பக்கல் பண்ணின வியாமோகத்தின் மிகுதியை நினைத்து,
அவற்றில் ஒன்றும் குறையாமல் அருளிச் செய்த ஆயிரத்தில் இப் பத்து.

இசை யொடும் பண்ணில் பாட வல்லார்-
இதில் அபிநிவேசத்தால் -ஆசையாலே இசையோடும் பண்ணோடும் பாட வல்லவர்கள்.
பண்ணாவது, கானம்.
இசையாவது, குருத்துவம் லகுத்துவம் முதலானவைகள் தம்மிலே நெகிழ்ந்து பொருந்துகை.
‘தொனியாலும் திறத்தாலும்’ என்றபடி.

அவர் கேசவன் தமரே –
அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் -அப்ரயோஜம் -பயன் அற்றவைகள்;
‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத் தன்மையாலே அவர்கள் பகவதீயர் -பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.

முதற்பாட்டில், எம்பெருமான் ‘இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்று கொண்ட அதிசங்கையை -ஐயத்தைப் போக்கினார்;
இரண்டாம் பாட்டில், அது போன பின்னர் அவனுக்கு உண்டான புதுக் கணிப்பைச் சொன்னார்;
மூன்றாம் பாட்டில், தமக்கு அவன் செய்த கொடையினைச் சொல்லி-அனுசந்தித்து வித்தரானார் – ஈடுபட்டார்;
நான்காம் பாட்டில், ‘அவன் உமக்குப் பண்ணின உதவி எது?’ என்ன, ‘இதர விஷய வைராக்கியம்’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், இதர விஷய வைராக்கியம் முன்னாக ஆத்மா உள்ள வரையிலும் உள்ள அடிமையிலே அதிகரித்த நான் இனி ஒருநாளும் விடேன்’ என்றார்;
ஆறாம் பாட்டில,ஆஸ்ரிதற்கு ‘அடியார்கட்கு உதவுவாய் ஆன பின்பு எனக்கு ஒரு குறை உண்டோ?’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘என்னுடைய சம்பந்தி சம்பந்திகளுக்கும் ஒரு முறை இல்லை’ என்றார்;
எட்டாம் பாட்டில், இதற்குத் தாம் செய்த உபாயம் இன்னது என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘இவர் அகவாய் அறிய வேண்டும்’ என்று ஓரடி பேர நிற்க, ‘இனிப்போக ஒண்ணாது’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘நாம் போகாதொழிகிறோம்; நீர்தாம் போகாதொழிய வேண்டுமே?’ என்ன, ‘காலத்ரயத்திலும் -முக்காலத்திலும் –
ஸர்வ வித எல்லா விதமான பந்துவுமான உன்னை விடக் காரணம் இல்லை’ என்றார்;
நிகமத்தில் , இது கற்றார்கட்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

———

நிகமத்தில் -‘இத்திருவாய்மொழி கற்றவர்களை இத் திருவாய்மொழி தானே எம்பெருமான்
திருவடிகளில் சேர்த்து விடும்,’ என்கிறார்.

வண்ண மாமணிச் சோதியை அமரர் தலை மகனைக்
கண்ணனை நெடு மாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்கும–2-7-13-

வண்ணம் மா மணிச் சோதியை –
அழகிய நிறத்தை யுடைத்தாய்ப் பெரு விலையதான இரத்தினம் போலே இருக்கிற விக்கிரகத்தை உடையவனை.
‘நீல ரத்தினம் போன்ற வடிவில் தேஜஸ்ஸை – ஒளியை உடையவன்’ எனலுமாம்.
வண்ணம் – நிறம்-
மா-கருமை–
இவ்வடிவழகினைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறார் மேல்:

அமரர் தலைமகனை –
ஒரு நாடாக அனுபவித்தாலும் தன் அழகினைப் பரிச்சேதிக்க ஒண்ணாதிருக்கின்றவனை.

கண்ணனை –
அவர்களே அனுபவித்துப் போகாமல் இங்குள்ளாரும் அனுபவிக்கும்படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை.

நெடுமாலை –
ஒருவனை அங்கீகரித்தால் அவன் அளவில் முடிவு பெறாத வியாமோகத்தை யுடையவனை.

தென் குருகூர்ச் சடகோபன் பண்ணிய –
வேதம் போன்று பிறப்பிலி அன்று; அபவ்ருஷேயம் ‘புருஷனால் செய்யப்படாதது’ என்னுமதிலும்
வீறு உண்டாய் இருக்கிறதாயிற்று -வக்த்ரு விசேஷத்தாலே – இயற்றினார் சிறப்பாலே.

பண்ணில் ஆயிரத்துள் இவை பன்னிரண்டும் –
இவை பண்ணிலே யாயிற்று நடந்தது.

பன்னிரு நாமப் பாட்டு –
வைஷ்ணவத்திற்கு அடையாளமான திருநாமங்களை வைத்துப் பாடினவை. ‘இது செய்வது என்?’ எனில்,

அண்ணல் தாள் அணைவிக்கும் –
சர்வேஸ்வரன் திருவடிகளோடே சேர்த்துவிடும்;
‘இத்திருவாய்மொழியின் சம்பந்தந்தானே கேசவன் தமராக்கி விடும்,‘ என்பதாம்.

முதற்பாட்டில், தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போன்று இவனுடைய அங்கீகாரத்திற்கு ஆளானார்கள்-விஷயீ க்ருதரானார்கள் என்றார்;
இரண்டாம் பாட்டில், இதற்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும், அந்நாராயண மந்திரத்தின் பொருள் இன்ன தென்றும் அருளிச் செய்தார்;
மூன்றாம் பாட்டில், இப்படி -விஷயீ கரிக்கைக்கு ஹேது -அங்கீகரிப்பதற்குரிய காரணத்தைச் சொன்னார்;
நான்காம் பாட்டில், சர்வ -எல்லாக் காலங்களிலும் தன்னையே அனுபவிக்கும்படி செய்தான் என்றார்;
ஐந்தாம் பாட்டில், இப்படித் தம்மை அனுபவித்ததனாலே அவன் வடிவில் புகரைச் சொன்னார்;
ஆறாம் பாட்டில், ‘இப்படி என்னை அடிமை கொண்டதற்கு அடி நிர்ஹேதுகமான கிருபை -திருவருள்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘தன்னையே எல்லாக் காலமும் அனுபவிக்கும்படியான மனத்தினைத் தந்தான்’ என்றார்;
எட்டாம் பாட்டில்; தந்த அளவு அன்றியே தீ மனத்தினையும் போக்கினான்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘தன்னுடைய கல்யாண குணங்களையே நான் அனுபவிக்கும்படி என் மனத்திலே புகுந்தான்,’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘அனுபவத்திற்கு விரோதியாய் இருந்த இந்திரியங்களையும் தன் வழி யாக்கிக் கொண்டான்’ என்றார்;
பதினோராம் பாட்டில்,ஏவம் விதமானவன் ‘இவ்விதமான இவன் என்னை அல்லது அறியான் ஆனான்,’ என்றார்;
பன்னிரண்டாம் பாட்டில், ‘என்னைப் போலே காண்பார்க்குக் காணலாவதொழியத் தன் முயற்சியால் -ஸ்வ யத்னத்தால் -அறியப் போகாது’ என்றார்;
நிகமத்தில் , பலம் சொல்லி முடித்தார்.

————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய்மொழி அப்யசிக்க வல்லார்கள்
இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த ப்ராப்ய போகத்தைப் பெறுவார் -என்கிறார் –

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை –
பூ தலங்கள்-என்னுமா போலே திருக் கண்களின் பரப்பைப் பற்றச் சொல்லுகிறது
பரந்த சிவந்து இருந்துள்ள திருக் கண்களையும் –
அவற்றுக்கு பரபாகமாம் படி கறுத்த திரு மேனியையும் உடைய
சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று
பிரதிபாத்ய வைலஷ்யண்யத்தை சொல்கிறார்-

வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன் -பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் –
வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய
திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார் அருளிச் செய்தது –
வக்த்ரு வைலஷ்யண்யத்தை சொல்கிறார்
தலையான பண்ணிலே மேலே சொன்ன தமிழ் யாயிற்று இப்பிரபந்தம் தான்
அன்றியே –
பண்ணின் மேலே சொன்ன -என்னுதல்
பிரபந்த வைலஷ்யண்யத்தை சொல்கிறார்-

ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –
நாகஸ்ய ப்ருஷ்ட்டே -என்கிறபடியே பரமபதத்தில் தங்கள் வ்யாவ்ருத்தி தோற்ற இருந்து –
எவ்வகையாலும் விலஷணமான மோஷமானது தங்களுக்கு விதேயமாம் படி பெறுவார்
நாராயண வல்லி–நா கஸ்ய -ந அஹம் பவதி -துக்கம் இல்லாத -கலசாத தேசம் –
பரமாகாசம் உபரி பிரதேச -வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத
அம்பச்ய -கனை கடலும் புவனச்ய -கல்லும்-

விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –
விண் தலை -தலையான விண்ணிலே என்னுதல்
அங்குள்ளார் தங்கள் ஆஜ்ஞ்ஞா அநு வர்த்தனம் பண்ணும் படியாகப் பெறுவார்-

எம் மா வீடே —
ஆத்மா லாபத்து அளவும் அன்றிக்கே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை ஆளப் பெறுவார் –
இனிமையான உயர்ந்த வீடு –

வீற்று இருந்து –
சாம்சாரிகமான சங்கோசம் எல்லாம் தீரும் படி வீறு பட்டு இருந்து –
வீற்று இருந்து -பார்த்தாலே அனுபவம் மிக்கு இருப்பது தோன்றுமே –

ஆள்வர் எம்மா வீடே –
தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் -1-5-10-என்று எனக்கும் என் பரிகரத்துக்கும்
தருவானாக சமைத்து நிற்கிற பரம பதத்தை ஆளப் பெறுவார் –
ஆழ்வார் சம்பந்தம் அடியாகவே ஆளப் பெறுவோமே –

முதல் பாட்டில் இத் திருவாய் மொழியில் பரக்கச் சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்யா நின்று கொண்டு
சம்சாரம் ஆகிற இக் கடலைக் கடக்க வேணும் என்று இருப்பவர்களுக்குக் கடத்திக் கொடுக்கும் என்றார்
இரண்டாம் பாட்டில் -அவன் வேணுமோ அவனோட்டை சம்பந்தமே கடத்தும் என்றார்
மூன்றாம் பாட்டில் அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் பிரத்யஷிக்கலாம் என்றார்
நாலாம் பாட்டில் –அந்தமில் பேரின்பத்தைப் பெற வேணும் என்று இருப்பார் அவனை ஆஸ்ரயிங்கோள் என்றார்
அஞ்சாம் பாட்டில் -கீழ் இணைவனாம் எப்பொருட்கும் என்றத்தை விவரித்தார்
ஆறாம் பாட்டில் இவ் உத்கர்ஷம் எல்லாம் அவனுக்கு உண்டோ என்ன நாம் ஆராய வேண்டாதபடி அர்ஜுனன் பண்டே தெரிந்து அறுதியிட்டான் என்றார்
ஏழாம் பாட்டில் -ஒருவன் அநுவர்த்தனம் கொண்டு அறிய வேணுமோ –அவனுக்கு இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ ஜகத்து இருக்கிறது என்றார்
எட்டாம் பாட்டில் வ்யாப்தி தொடக்கமான அவனுடைய அபதானங்கள் ஒருவரால் பரிச்சேதிக்க முடியாது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் –அவனுடைய வ்யாப்தியை இசையாதார் ஹிரண்யன் பட்டது படுவர் -என்றார்
பத்தாம் பாட்டில் –ஏவம் பூதனானவனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

(எட்டாம் பாட்டில்-வியாப்தி தொடக்கம் -அபதானங்கள் -ஸ்வரூபமும் சேஷ்டிதங்களும் -எத்தையும் – -பரிச்சேதிக்க முடியாதே –
உகந்த உள்ளத்தான் -வேதத்துக்கு உகப்பு -மகா பலி உதாரன் உகப்பு -இந்த்ரன் உகப்பு –ஆழ்வாருக்கு உகப்பு -பெருமாளுக்கு உகப்பு ஐந்தும் உண்டே
அகில ஜகன் நியமன /அவதரண /ஆஸ்ரித பராதீன /வயிற்றில் வைத்து ரஷித்து உமிழ்ந்து /எங்கும் வியாபித்து
-தத் பிரத்யுக்த வியாபாரங்கள் எல்லாம் -பரிச்சேதிக்க முடியாது என்றபடி-)

——————

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியை அப்யஸிக்க வல்லவர்
இதில் சொன்ன ப்ராப்யத்தைப் பெறுவர்,‘ என்கிறார்.

விடலில் சக்கரத்து அண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே–2-9-11-

விடல் இல் சக்கரத்து அண்ணலை’
நாம் விடுகிறோம்’ என்று அதி சங்கை பண்ணுவது என்?
நாம் ஒருவரையும் விடோங்காணும்’ என்று கையில் திருவாழியைக் காட்டினான்;
‘விடல் இல் சக்கரத்து அண்ணலை’ என்கிறார்.
அதாவது,
‘ஒருநாளும் விடாத திருவாழியைக் கையிலேயுடைய சர்வேஸ்வரனை’ என்கிறார்.

மேவல் விடல் இல் வண் குருகூர்ச் சடகோபன் சொல் –
அவன் ஸ்வபாவத்தாலே கிட்டி அவனைப் பிரியில் தரியாதபடி பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த.
வண்மையாவது,
இவ் வனுபவத்துக்குப் பாசுரமிட்டு உபகரித்த உபகாரம்.

கெடல் இல் ஆயிரத்துள் இவை பத்தும் –
இவ் வாத்துமாவுக்குக் கேட்டின் வாசனையும்-அநர்த்த கந்தமும் – வாராதபடி நன்மையை ஆராய்ந்து
அருளிச் செய்த ஆயிரத்துள் இப்பத்தும்.

கிளர்வார்க்குக் கெடல் இல் வீடு செய்யும் –
‘வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றி, -ஸ்ரத்தாநராய் இருப்பார்க்கு -நம்பிக்கை யுடையவர்க்குக்-
அநர்த்த கந்த ரஹிதமாய்- கேட்டின் வாசனையும் இல்லாததாய்- அகங்கார மமகாரங்களை உடைத்து அன்றிக்கே,
‘தனக்கே யாக வேணும்’ இவர் பிரார்த்தித்த படியே இவ் வாத்மாவினுடைய
ஸ்வரூபத்திற்குத் தகுதியான-அனுரூபமான பேற்றினைச் செய்து கொடுக்கும்.

முதற்பாட்டில், காயிகமான பேற்றை அபேக்ஷித்தார் ;
இரண்டாம்பாட்டில், மானஸீகமான பேற்றினை அபேக்ஷித்தார் ;
மூன்றாம் பாட்டில், வாசிகமான பேற்றினை அபேக்ஷித்தார் ;
நான்காம் பாட்டில், ஸ்வரூபத்திற்கு அனுரூபமான ப்ராப்யத்தை நிஷ்கரிஷித்தார் ;
ஐந்தாம்பாட்டில், ‘நீர் யாராய் இப் பேற்றினை அபேஷித்தீர் ?’ என்ன,
‘நான் யாராயினுமாக; உன்னை அனுபவித்து மகிழும்படி செய்தருளவேண்டும்’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘த்ரிவித கரணங்களாலும் உன்னைப் பிரீதி புரஸ்ஸரமாக அனுபவிக்கச் செய்தருள வேண்டும்’ என்றார்;
ஏழாம் பாட்டில், அப்படிச் சடக்கெனச் செய்யாமையாலே இன்னாதானார்;
எட்டாம் பாட்டில், ‘ஸ்வரூபத்திற்குத் தகுதியாக நீ ஷண நேரம் என்னோடே அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலமெல்லாம் வேண்டேன்’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாதபடி நானே அநர்த்தத்தைச் சூழ்த்துக் கொண்டேன்’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘ஞான விசேஷத்தைப் பண்ணித் தந்தோம் அன்றே?’ என்று,
என்னை ஒருநாளும் என் கையில் காட்டித் தாராதொழிய வேண்டும் என்றார்;
நிகமத்தில் , இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

———–

நிகமத்தில்‘இத்திருவாய் மொழி கற்றாரை, இத் திருவாய் மொழி தானே –
ஜென்மத்தை -பிறப்பினைப் போக்கி அழகர் திருவடிகளிலே சேர்த்து விடும்,’ என்கிறார்.

பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே–2-10-11-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ்மேல் மருள் இல்வண் குருகூர் வண்சடகோபன் சொன்ன ஆயிரம் –
ப்ரயோஜனப்படும் -பயன்படும் என்று இல்வுலகங்களை உண்டாக்கினவனுடைய கல்யாண குணங்கள் விஷயமாக –
அஞ்ஞான கந்தமும் -அறிவின்மையின் வாசனையும் இல்லாத ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட ஆயிரம்.
இவற்றை உண்டாக்கி-கரண களேபரங்களை – உடல் உறுப்புகளைக் கொடுத்து விட்டால்,
கொடுத்த உறுப்புகளைக் கொண்டு-சப்தாதி விஷயத்தில் – ஐம்புல இன்பங்களில் -ப்ரவணராய் -ஆசை யுடையராய்க்
கை கழியப் புக்கால், ‘நம் நினைவு தப்பியது அன்றோ?’ என்று நெகிழ்ந்து கை வாங்குகை யன்றி,
‘ஒருநாள் அல்லா ஒருநாளாகிலும் பயன்படாதோ?’ என்று பலகாலும் உண்டாக்கா நிற்கும் –
ஆதலால் -, ‘பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன்’ என்கிறார்.

மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் ஆகையாலே, அவனுடைய குண விஷயமாக
மருள் இல்லாதவர் ஆதலின், ‘மருளில் சடகோபன்’ என்கிறார்.

‘பிரபந்தமோ?’ எனில்,
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரம் –
மருள் உண்டாய்க் கழிய வேண்டிற்று இவர்க்கு.
இவருடைய பிரபந்தத்தைக் கற்றார்க்கு-அப்யசித்தார்க்கு – முதலிலே அறிவின்மை தான் இல்லை.
கேட்டார்க்குத் தெளிவைப் பிறக்கும்படி அன்றோ அருளிச் செய்தது?

தம்முடைய ஞானத்துக்கு அடி, சர்வேஸ்வரன்;
இவர்களுடைய ஞானத்திற்கு அடி, தாம் என்றபடி.

‘பிரபந்தந்தான் செய்வது என்?’ என்னில்,
அருளுடையவன் தாள் அணைவிக்கும்.
அருளை யுடையவன் திருவடிகளிலே சேர்த்து விடும்.
அருளைக் கொண்டே பரம் பொருளை நிரூபிக்கவேண்டி இருத்தலின், ‘அருளை யுடையவன்’ என்கிறார்.

முடித்து –
அது செய்யுமிடத்துச் சம்சார சம்பந்தத்தை வாசனையோடே போக்கித் திருவடிகளிலே சேர்த்து விடும்.
ஒரு ஞான லாபத்தைப் பண்ணித் தந்து விடுதலே அன்றி,
அர்த்த கிரியாகாரியாய் இருக்குமாதலின், ‘முடித்தே’ என ஏகாரங் கொடுத்து அருளிச் செய்கிறார்-

முதற்பாட்டில், ‘திருமலையாழ்வாரைக் கடுக ஆஸ்ரயியுங்கோள் அடைமின்,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘திருமலையோடு சேர்ந்திருக்கின்ற ஸ்ரீ பதியை -திருப்பதியை ஆஸ்ரயியுங்கோள் அடைமின்,’ என்கிறார்;
மூன்றாம் பாட்டில், ‘அதனோடு சேர்ந்த அயன் மலை அமையும்,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘திரிதந்தாகிலும்’ என்கிறபடியே ‘மீண்டும் திருமலையை ஆஸ்ரயியுங்கோள் அடைமின் என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘அதனோடு சேர்ந்த புற மலையை ஆஸ்ரயியுங்கோள் அடைமின்’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘திருமலைக்குப் போகும் மார்க்க சிந்தனை -வழியை நினைத்தலே அமையும்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘அவ் வழியோடு சேர்ந்த திருமலையை ஆஸ்ரயியுங்கோள் அடைமின்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘நித்திய ஸூரிகளுக்குக் கூட ப்ராப்யம் – அடையத் தக்கது,
ஆகையால், திருமலையே பரம ப்ராப்யம் அடையத் தக்கனவற்றுள் உயர்ந்தது’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘திருமலையைத் தொழக் கடவோம்’ என்கிற துணிவே வேண்டுவது என்றார்;
பத்தாம் பாட்டில், ‘எல்லாப் படியாலும் திருமலை யாழ்வாரை-ஆஸ்ரயிக்கையே புருஷார்த்தம் -அடைதலே பேறு,’ என்று தலைக் கட்டினார்;
நிகமத்தில் இது கற்றார்க்குப் பலம் அருளிச் செய்தார்.

இரண்டாம் பதிகத்தில்
முதல் திருவாய்மொழியாலே, ‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்கிறபடியே,
‘விலக்ஷண விஷயமாகையாலே பிரிந்தாரைக் கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும்,’ என்றார்;
இரண்டாம் திருவாய்மொழியாலே, ‘கூடினாலும் அதனைப் போன்று மறப்பிக்கும்,’ என்றார்;
மூன்றாம் திருவாய்மொழியால், ‘கூடிய பொருள் தான் நிரதிசய ஸூக ரூபம்,’ என்றார்;
நான்காம் திருவாய் மொழியில், அவ் விஷயத்துக்குத் தேசிகரோடு அனுபவிக்கப் பெறாமையாலே –
மோஹங்கதரானார்- மோகத்தை அடைந்தார்;
ஐந்தாம் திருவாய்மொழியால், தாம் ஆசைப்பட்டபடியே வந்து கலந்தமை சொன்னார்;
ஆறாம் திருவாய் மொழியால், தம் இழவுக்கும் அவன் அதி சங்கை கொள்ளும் என்றார்;
ஏழாம் திருவாய்மொழியால், தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீ கரித்த-ஏற்றுக் கொண்டபடியைச் சொன்னார்;
எட்டாம் திருவாய்மொழியால் அவனுடைய மோக்ஷ ப்ரதத்துவத்தை அருளிச்செய்தார்;
ஒன்பதாம் திருவாய்மொழியால், பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்;
பத்தாம் திருவாய்மொழியால், நிஷ்கர்ஷித்த- அறுதியிட்ட பிராப்யத்தைப் பெறுகைக்குத் -லபிக்கைக்கு
திருமலையாழ்வாரை -ஆஸ்ரயிக்க அடையச் சொன்னார்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம் ஆழ்வார் தம் திரு வாக்கால் -பத்தாம் பத்தில் ஸ்ரீ திருவாய் மொழி -பற்றி அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூ க்திகள் – –

July 18, 2021

பரம உதாரமான -மேலான வண்மையை உடைய திரு மோகூருக்கு கொடுத்த
இத் திருவாய் மொழியை அப்யஸிக்க – கற்க -வல்லார்க்கு துக்க நிவ்ருத்தி யுண்டாம்-என்கிறார்

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-

ஏத்துமின்-நமர்காள் என்று தான் குடமாடு கூத்தனை-
நம் சேஷ்டிதங்களை -செயல்களை உகப்பார் எல்லாரும் கண்டு
வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி ஏத்துங்கோள் என்று தான் சொல்லி
அதற்கு விஷயமாக தான் குடக் கூத்து ஆடினவனை –

மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நால் திசையும் போற்றத்
தொடர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே
நாராயணா என்னா நா என்ன நாவே -சிலப்பதிகாரம் -ஆய்ச்சியர் குரவை –

குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் –
ஆழ்வார் உடைய அந்தரங்க விருத்திகள் -குற்றேவல்கள் என்றது
அவன் குடக் கூத்தினை அனுசந்தித்து -நினைத்து
இவர் நாவினால் பாடுகிற அடிமையிலே அதிகரித்தனர் -மூண்டார் -என்றபடி –

வாய்த்த வாயிரத்துள் இவை –
சர்வேஸ்வரனுக்கு நேர் பட்ட ஆயிரத்துள்ளே வாய்த்தவை ஆயின இவை –

வண் திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை –
பரம உதாரமான -மேலான வண்மையை உடைய திரு மோகூர்க்கு கொடுத்த பத்து
கவாம் சத சஹஸ்ரேன தீயதாம் சோபனா மம
ரத்னம் ஹி பகவத் ஏதத் ரத்ன ஹரீச பார்த்திப -பால -58-9-
ஸ்ரீ வசிஷ்ட பகவானைக் குறித்து ஸ்ரீ விஸ்வாமித்ரர் கூறியது
இந்த காம தேனு பசுக்களில் ரத்னம் -போலே என்பது பிரசித்தம்
தர்ம சாஸ்திர விதிப்படி -ரத்தினத்துக்கு உரியவன் அரசன் -என்னுமாறு போலே
இத் திருவாய் மொழியின் இனிமையாலே திரு மோகூர்க்காய் இருந்தன என்று கொடுத்தார் –

இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே –
இப்பத்தினை அப்யஸிக்க -கற்க வல்லார்க்கு-சரீர அவசானத்திலே –
உடலை விட்டு உயர் நீங்குகிற காலத்திலேயே
வழித் துணை இல்லை என்று கிலேசப்பட – வருந்த வேண்டாதபடி
காளமேகம் வழித் துணையாம்-

———————–

நிகமத்தில்-இத் திருவாய் மொழி வல்லார் திரு நாட்டில் உள்ளாருக்கு போக்யர் -இனியர் ஆவார் என்கிறார்

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை –
திரு வனந்த புரத்திலே-நிரவதிக – எல்லை இல்லாத நற் குணங்களை உடையனாய்
உலகத்திற்கு எல்லாம் காரணனாய் உள்ளவனை –
ஆஸ்ரயிக்கிறவர்களும் -அடைகின்றவர்களும் அந்தமில் புகழினார்கள் –
ஆஸ்ரயணீயனும்- அடையப் படுகின்றவனும் அந்தமில் புகழினான் காணும் –
பரம பதத்தை விட்டு திரு வனந்த புரத்திலே வந்து-ஆஸ்ரிதர்க்காக – அடியார்களுக்காக திருக் கண் வளர்ந்து
அருளுகையாலே புகழிற்கு ஒரு முடிவு இல்லை ஆயிற்று அவனுக்கு –
சம்சாரத்தை -பற்றினை விட்டு உகந்து அருளின நிலத்தில் அடிமை செய்கையாலே
புகழிற்கு அந்தம் இல்லை ஆயிற்று இவர்களுக்கு –
இவனுக்கு அடிமை கொள்ளுகையாலே புகழிற்கு எல்லை இல்லை ஆயிற்று அவனுக்கு
அவனுக்கு அடிமை செய்கையாலே புகழிற்கு அந்தம் இல்லை ஆயிற்று இவர்களுக்கு
இந்த சம்சாரத்தில் -உலகத்திலே பிறப்பு இறப்புகளிலே உழன்று திரிகிற இவனுக்கு புகழ் உண்டாகில் ஆயிற்று
பரம பதத்தில் இருந்தால் அவனுக்கு புகழ் உண்டாவது
இந்நிலத்தை விட விட இவனுக்கு புகழ் உண்டாமாறு போலே
அந்நிலத்தை விட விட அவனுக்குப் புகழ் உண்டாம்
இருவருக்கும் இரண்டும் அலாப்ய லாபம் -கிடைக்காத பேறு ஆம் அன்றோ –

கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள் –
நித்ய வசந்தமான -எப்பொழுதும் மலர்களை உடைய சோலைகளால்
சூழப் பட்ட திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த –

ஐந்தினோடு ஐந்தும் வல்லார் –
ரத்தினங்களை முகம் அறிந்து கோத்துச் சேர்த்தியைக் கொண்டாடுமாறு போலே
ஐந்து ஐந்தாக ஆயிற்று அனுபவிக்கிறது –

அணைவர் போய் அமர் உலகில் பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள்இணையே –
ஸ்ரீ வைகுண்டத்து ஏறப் போய்
தம் பஞ்ச சதானி அப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா -கௌஷீதகி உபநிஷத்
நூறு பேர்கள் மாலைகளைக் கையில் உடையவர்களாய்
அந்த முக்தனை எதிர் கொண்டு அழைக்கிறார்கள் -என்பது போன்றவைகளில் சொல்லுகிறபடியே
அங்குத்தை அப்சரஸ் ஸூ க்களுடைய ஆதரத்துக்கு விஷய பூதராய் – விருப்பத்துக்குப் பொருளாக இருப்பார் -என்றபடி
முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ள -10-9-10-என்றதனோடு
வேய் மரு தோள் இணை அணைவர் -என்கிற இதனோடு வாசி இல்லை
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -10-9-10-என்னக் கடவது அன்றோ

———

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே–10-3-11-

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு –
அவ் வயிர உருக்கான முறுவலாலே எங்களைத் தோற்பித்தால் போலே
தன் பருவத்தில் பிள்ளைகளையும் தோற்பித்த-
சர்வ ஸ்வாமி – எல்லார்க்கும் ஒக்கத் தெய்வம் ஆனவன் திருவடிகளில் சொல்லிற்று –
செங்கனி வாய் ஆயர் தேவு –
செங்கனி-
என்கையாலே-தங்களைத் தோற்பித்த படி சொல்லிற்று –
ஆயர் தேவு –
என்கையாலே -தன் பருவத்தில் உள்ளாரை தோற்பித்த படி சொல்லிற்று –
சந்திர காந்தானனம் ராமம் அதீவ பிரிய தர்சனம்
ரூபௌதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிணாம்-அயோத்யா -3-27-
ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய்
தாடகை என்பது அச் சழக்கி நாமமே -கம்ப நாட்டு ஆழ்வார் –

அத் திருவடி திருவடி மேல் –
சர்வ ஸ்வாமி -எல்லாருக்கும் தெய்வமான அவ் வெம்பருமான் திருவடிகளில் –
அவன் சேஷியாம் தன்மையை காட்டிக் கொடுத்தான் –
திருவடி மேல் –
என்கையாலே இவரும் சேஷத்வத்தில் -அடிமையில் நின்றார்

பொருநல் சங்கணி துறைவன் –
தாம் இருந்த இடத்தில் சத்துக்கள் -மேன்மக்கள் அடங்கலும் வந்து சேருமாறு போலே ஆயிற்று –
திருப் பொருநலில் சங்குகள் வந்து சேரும்படி –

மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை –
அவனுடைய பிரிவு பொறுக்க மாட்டாமையாலே
ஒரு பருவத்தில் ஆயர் பெண்கள் கூறிய தொடையாய் –

தையல் அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன –
சபை -அவை போன்று எல்லாரும் திரண்டு வார்த்தை சொன்னால் செவிப்படாது -என்று பார்த்து
அவனுக்கு மறுக்க ஒண்ணாத படி
நப்பின்னை பிராட்டியின் தரமுடையவள் ஒருத்தி
பசு மேய்க்க போகாமை மீட்கைக்காக சொன்னவை ஆயிற்று –
இப்படியானால்
அடிச்சியோம் -என்றும்
தொழுத்தையோம் -என்றும்
ஆழும் என் ஆர் உயிர் என்றும் –
என் சொற்கொள் -என்றும்
சொன்ன பன்மைக்கும் ஒருமைக்கும் எல்லாம் சேரும் அன்றோ –

இவையும் பத்து அவற்றின் சார்வே –
அவை -என்கிறது கீழில் போந்த திருவாய் மொழிகளையாய் –
அவற்றின் அருகே இதுவும் ஒரு திருவாய் மொழியே என்ற ஆச்சர்யத்தில் ஆக்கி
ஆயிற்று சீயர் அருளிச் செய்ததும் -9000 படி வியாக்யானம் செய்ததும்

அன்றிக்கே –
இவையும் பத்து அவற்றின் சார்வே —
கீழ் திருவாய் மொழி களுக்கு சொன்ன பலம் இதற்கு பலம் என்கிறது ஆகவுமாம்

அன்றிக்கே
அவை -என்கிறது-மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை -என்கிறவற்றையாய்
இவையும் அவற்றோடு ஒக்கும் என்னுதல் -என்றது
அதனுடைய பலமே இதற்கும் பலம்
அது பலத்தோடு கூடியதாயின் இதற்கு பேறு உண்டாம் -என்றபடியாம் –
அவர்கள் நீ போகாதே கொள் -என்ன
அவன் தவிர்ந்து அவர்கள் உடன் கலந்தால் போலே
இது கற்றாரும் அவனோடு நித்ய சம்ச்லேஷம் -நீங்காத கலவியைப் பெறுவார் -என்றவாறு –

————–

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-

பற்று என்று பற்றி பரம பரம்பரனை மல் திண் தோள் மாலை –
பரம்பரனை-மல் திண் தோள் மாலை-பற்று என்று பற்றி-
பரம் பரனை -பிராப்யம்
மல் திண் தோள் மாலை -பிராபகம்
சர்வேஸ்வரனை -பிராப்ய பிராபகம் என்று பற்றி
இவன் பிரபத்தியைச் செய்து-அத்யவசிக்கும் – உறுதி உடையவனாய் இருக்கும் அத்தனையே வேண்டுவது –
ரக்ஷணத்தில் -காப்பாற்றுவதில் அவன் இடத்தில் ஒரு குறையும் இல்லை –
இவர்கள் விரோதிகளைப் போக்குக்கைக்கு தகுதியான மிடுக்கையும் வ்யாமோஹத்தையும் -அன்பையும்
உடையவன் -என்பார் -மல் திண் தோள் மால் -என்கிறார் –

வழுதி வள நாடன் சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் கற்றார்க்கு –
பாட்யே கேயேச மதுரம் ப்ரமாணை த்ரிபி அந்விதம் -பால -4-3-
மூன்று வகையான பிரமாணங்களோடு கூடினதாயும்
பாடத்திலும் கானத்திலும் இனிமை பொருந்தியதாயும் – என்கிறபடியே
அழகிய சொற்களால் தொடுக்கப்பட்ட அந்தாதியான ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு
இந்தப் பத்தும் கற்றார்க்கு –

ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே –
தாமோதரன் தாள்கள் தவ நெறிக்கே சார்வே -என்கிறபடியே கிருஷ்ணன் திருவடிகளே –
இனி அவ்வருகு போய் ஓன்று தேடித் பற்ற வேண்டாதபடியான பற்றாகும்-

—————-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன் –
சர்வேஸ்வரன் திருவருளுக்கு பாத்திரமாகும் தன்மையரான ஆழ்வார் -என்றது
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் –4-5-5-என்று
தன் குணங்களையும் சேஷ்டிதங்களையும் செயல்களையும்-சாத்மிக்க சாத்மிக்க பொறுக்கப் பொறுக்க
அனுபவிப்பித்துக் கொண்டு போந்த படியை அனுசந்தித்து விஸ்மிதர் – நினைத்து ஈடுபட்டார் மேல் –
இப்போது அவன் கொடுத்த அருள் எல்லாம் உண்டு அறுக்க வல்லார் ஆனார் ஆயிற்று -என்றபடி

நொடிதல் –
சொல்லுதல்

ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே –
இப்பத்து தானே இதனைக் கற்றார்க்கு-அப்யசித்தார்க்கு – நெடியான் அருள் சூடும் படியான் -என்றதுவே பேறாக்கும்
ஈஸ்வரன் கொடுத்த பேறு-சாதர்மயம் – ஆழ்வாரால் கொடுக்க மாட்டாமை இல்லை இறே

———————-

வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-

வளம் குருகூர்ச் சடகோபன் –
அழகியதான திரு நகரியை -தம்மதாக உடையரான ஆழ்வார் –

பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் கேட்டு-
பாடத்திலும் இசையிலும் இனியதான -பாட்யே கேயோ மதுரம் -பால -4-8-
பாட்டு -இசை
இசையிலே புணர்ப்புண்ட திருவாய் மொழி ஆயிரத்திலும் – இப் பத்தினையும் கேட்டு –

ஆரார் வானவர்கள்-
இதனைச் சொல்ல கேளா நின்றால்-இன்னம் சொல் இன்னம் சொல் -என்னும் இத்தனை போக்கி
கேட்ட அம்சத்தில் -கேட்டவற்றைக் கொண்டு மனம் நினைவு திருப்தி பெறார்கள் ஆயிற்று
பகவான் உடைய குணங்களை அனுபவித்து அதற்கு போக்கு விடுகைக்கு பாசுரம் இன்றிக்கே
விம்மல் பொருமலாய் படுமவர்கள்-இப்பாசுரம் கேட்டால் விடார்கள் அன்றோ –
அதற்கு ஹேது -காரணம் என்
அவனுடைய சீல குணங்களை அனுபவித்தோ என்னில்
இப்பாசுரத்துக்கு தோற்று -என்கிறார் –

செவிக்கு இனிய-
கேட்ட போதே இன்பம் பயப்பது -என்றபடியே
ஏவம் பஹூவிதம் சிந்தாம் சிந்தயித்வா மகா கபி
சம்ச்ரவே மதுரம் வாக்யம் வைதேஹ்யா வ்யஜஹார ஹா -சுந்தர-91-1-என்கிறபடியே
செவி வழியே புக்கு நெஞ்சுக்கு இனிதாகை அன்றிக்கே
செவியில் பட்ட போதே பிடித்து இனிதாய் இருக்கையாலே
அதற்குக் காரணம் என் என்னில் –

செஞ்சொல்லே –
நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்டு இருக்கையாலே
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே -8-5-11- என்னா
செந்தமிழ் பத்தும் -என்றார் அன்றோ இவர் தாமே –

——————

தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் மான் ஆங்காரத் திவை பத்தும் –
வண்டுகள் உடைய அபிமானமே -செருக்கேயான பொழில்களை உடைய
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்-அருளிச் செய்த ஆயிரத்திலும்
மகத்து முதலானவற்றின் உருவமான ப்ரக்ருதி நிரசனமான -இச் சரீரத்தினை
ஒழித்து அருள வேண்டும் என்று சொன்ன இப்பத்தும்
அன்றிக்கே
மான் ஆங்காரத்து இவை பத்து -என்பதற்கு
பெரிய செருக்கோடு சொன்ன இப் பத்தும் -என்னுதல் –

திருமால் இரும் சோலை மலைக்கே –
திருமலை விஷயமாய ஆயிற்று சொல்லிற்று –
அழகரைச் சொன்ன இடம் உண்டாகில் அதில் கற்பகத் தருவினை சொன்னதைப் போன்று
திருமலையில் உள்ளன அடங்க உத்தேச்யமாக கடவன அன்றோ
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10
என்றும் சொன்னார்கள் அன்றோ –

————

————–
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள் வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்-
விலக்ஷணர்- பெரியார் பலரும் தம்மை அனுபவித்து இனியராய் இருக்கும் திரு நகரியை உடையராய்
இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது
நல்லார் நவில் குருகூர் -திரு விருத்தம் -100-அன்றோ
சர்வதா அபிகத சத்பி சமுத்ர இவ சிந்துபி
ஆர்ய சர்வ சமச்சைவ சதைக பிரியதர்சன -ஸ்ரீ சங்ஷேப ராமாயணம்
நதிகளால் அடையப் படுகின்ற கடல் போன்று சத் புருஷர்கள் ஆகிய பெரியோர்களால் அடையப் படுகின்றவர் என்றபடி –

சொல்லார் தமிழ் ஆயிரத்துள் –
சொற்கள் தாமே வந்து சேர்ந்த தமிழான ஆயிரம் -என்னுதல்
அன்றிக்கே
இனிமைக்கு சொல்லே அமைந்த தமிழான ஆயிரம் -என்னுதல் –

இவை பத்தும் வல்லார் தொண்டர் –
இப் பத்தினை அப்யஸிக்க கற்க வல்லவர்கள்
செஞ்சொற் கவிகாள் 10-7-1- -என்கிறபடியே வாக்காலே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –

ஆள்வது சூழ் பொன் விசும்பே-
நிரதிசய -எல்லை இல்லாத தேஜோ மயமான பரம பதத்தை ஆயிற்று ஆளுவது
இத் திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் – கற்றவர்கள் சென்றால்
ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று அங்கு உள்ளார் சொல்லுவது-

—————

கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நித்ய வசந்தமான -எப்பொழுதும் மலர்களை உடைத்தான சோலையாலே சூழப் பட்ட
திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த –
போக்கிலே ஒருப்பட்ட வாறே திரு நகரியே தொடங்கி போலே காணும் சோலை செய்வது –
அலர் –சந்தங்கள் ஆயிரத்து –
சந்தஸ் ஸூ -விருத்தங்களை உடைத்தான ஆயிரம் -என்னுதல்
சந்தஸ் ஸூ -வேதத்தின் உருவான ஆயிரம் -என்னுதல் –

இவை வல்லார் முனிவரே –
இப் பத்தினை அப்யஸிக்க -கற்க வல்லார்
அப் பரம பதத்திலே பகவான் உடைய குணங்களை அனுபவித்து அவற்றிலே வித்தராய் -ஈடுபட்டவராய்
அதற்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே ஆவார்கள்-

————-

அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து –10-10-11-

அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –
பக்தியின் தூண்டுதலாலே பலாத்காரத்தாலே -பிறந்த ஆயிரம்
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –
அன்றிக்கே-அவா உபாத்தியாராக நடத்த -நடந்த ஆயிரம் -என்னுதல்
ஆழ்வாருக்கு பிறகு நூறாயிரம் கவிகள் போரும் உண்டானார்கள்
அவர்கள் கவிகளோடு கடல் ஓசையோடு வாசி அற்று
அவற்றை விட்டு இவற்றைப் பற்றி துவளுகைக்கு அடி
இவருடைய பக்தி அபிநிவேசம் -காதல் பெருக்கு வழிந்து புறப்பட்ட சொல் ஆகை அன்றோ –

முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து
தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்த தாயிற்று இத் திருவாய்மொழி
இந்த அவாவிற்கு உதவிற்றிலன் ஆகில் ஈஸ்வரனுக்கு சைதன்யம் இன்றிக்கே ஒழியும் –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழிக்கு முன்பு பர பக்தியாலே சென்றது –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழி -பர ஞானத்தால் சென்றது
இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே –
பகவானுடைய பிரசாதம் -திருவருள் பாதியும் தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு
சரீரத்தின் அவசானத்திலே -முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே
எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின –
கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற -அனுக்ருஹீதையான -பக்தியினுடைய இடத்திலே
சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க அது அடியாக பிறந்த
பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

“என் நாதன் தேவி” /‘என் திரு மகள் சேர் மார்பனே!’/”உன் திரு மார்வத்து மாலை நங்கை”/”கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ”–வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள் —

July 16, 2021

என் நாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாத புள்ளால் வலியப் பறித்திட்ட
என் நாதன் வன்மையை பாடிப் பற
எம்பிரான் வன்மையை பாடிப் பற -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-9-1-

என் நாதன் தேவிக்கு–ஸ்ரீ மா முனிகள் வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள் –

என் நாதன் தேவிக்கு
என்னுடைய நாதனாவனுடைய தேவிக்கு நாதன் -என்கிறது –
சேஷி என்றபடி

ஸ்வரூபத்தை உணர்ந்தால் எல்லார்க்கும் தனித் தனியே -என் நாதன் என் நாதன் –
என்னலாம் படி இறே வஸ்துவோட்டை ப்ராப்தி இருக்கும் படி –

இவ் வாத்மாவினுடைய சேஷத்வம் தான் -கேவலம் அவன் அளவு அன்றிக்கே
மிதுன விஷயமாய் இறே இருப்பது
ஆகையால் இறே -என்னாதன் தேவிக்கு -என்றது –

விஷ்ணு பத்நீம் -என்கிறபடியே
இவளுக்கு நிரூபகம் -அவனுடைய தேவி -என்னும் அது இறே
தேவி-என்கையாலே
சத்ய பாமை பிராட்டி உடைய  வால்லப்யம் சொல்லுகிறது-

———

என் நாதன் தேவிக்கு –ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாபதேச வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள்

பிராட்டிமாருடன் உண்டான சம பாவத்தாலும்
மிதுனச் சேர்த்தி ப்ராதான்யத்தாலும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -என்னுமா போலே
என் நாதன் -என்று
அவன் தனக்கு சேதன விசேஷண நிரூபகமான பின்பு இறே
நாதன் தேவிக்கு -என்றது

(பிரணவம் போல்-அகாரத்துக்கே மகாரம் – நாதனுக்கு அடியேன் என்னாமல் –
என் என்று முன்னே சொல்லி
அவனுக்கு சேதனன் சேஷபூதன் என்று நிரூபகம் என்கிறார் )

உன் திரு (மார்பத்து மாலை நங்கை -10-10-நாதன் தேவி )என்னுமா போலே
ஆகிய அன்பே -என்று
ஆஸ்ரயம் தோற்றியும் தோற்றாததுமாய் இரா நின்றது இறே

(கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –
அன்பன் -என்றால் அன்பு வேறே அன்பு உடையவன் வேறே
என்றாகும் அன்பே வடிவாக உடையவன் என்று காட்ட வேண்டுமே )

————

‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–ஸ்ரீ திருவாய் மொழி -7-2-9-

என் திரு மகள் சேர் மார்பனே என்னும் –ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள்

என் பேற்றுக்குப் புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ?’ என்னும்.
‘என்’ என்பது -விசேஷ அம்சத்தில் -திரு மகளுக்கு அடைமொழி.
விசிஷ்டத்தில் -மார்பனுக்கு அடைமொழி ஆக்கலாகாது.
அனந்தாழ்வான் தன் பெண் பிள்ளையை‘என் திருமகள்’ என்று திரு நாமம் சாத்தினான்.
பட்டர், பெருமாளிடத்தில், ‘அடியேனை ‘ஸ்திரீதனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திரு வுள்ளம் பற்றவும்;
நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ் வழியே
‘அழகிய மணவாளப் பெருமாள்’ என்று நினைத்திருக்கவுமாக வேணும்,’ என்று வேண்டிக் கொண்டார்,
‘சேர் மார்பன்’
என்பது, நிகழ் கால வினைத் தொகையாலே ரஹஸ்யத்தில் நித்ய யோகத்தைச் சொல்லுகிறது: என்றது,
அவள் ஒரு ஷணம் பிரிய இருக்கில் அன்றோ எனக்குப் பேறு தாழ்க்க வேண்டுவது?’ என்கிறாள் என்றபடி.
பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யுமவை கேட்கைக்காக நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுது செய்யா நிற்கச் செய்தே
இத் திருவாய் மொழி இயலைக் கேட்டருளா நிற்க, இப் பாட்டளவில் வந்தவாறே
‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச் செய்ய,
அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்க நாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச் செய்வர்.
அப்போது திருமேனியிலே பிறந்த விக்ருதியை -வேறுபாட்டினைக் கண்டு,
‘இவர்க்குப் பகவானை அடைவது -பிராப்தி -அணித்தாகிறதோ?’ என்று அஞ்சி யிருந்தேன்,’ என்று ஜீயர் அருளிச் செய்வார்.
இவர்க்குப் பிரமாணம் ஒரு வாயு -காற்று விசேஷம் அன்று: ஒரு மிதுநமாயிற்று.
‘திரு மகள் சேர் மார்பனாய்க்கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.

—————

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

உன் திரு மார்வத்து மாலை நங்கை–ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள்

நித்யைவ ஏஷா ஜகத்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ
யதா சர்வகதா விஷ்ணு ததைவ இயம் த்வ்ஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17
விஷ்ணுவுக்கும் செல்வமாய் இருப்பவள் -என்கிறபடியே
உலகத்துக்கு எல்லாம் சம்பத் -செல்வம் அவன் -அவனுக்கும் சம்பத் செல்வம் இவள் –
அன்றிக்கே
விஷ்ணுவுடைய திரு -என்றபடி
உன்னுடைய செல்வம் -என்னுதல்
திருவுக்கும் திருவாகிய செல்வா -பெரிய திருமொழி -7-7-1-என்றும்
ஸ்ரிய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்
சமர்த்ததம் ஆபத்சகம் அர்த்தி கல்பகம் -ஸ்தோத்ர ரத்னம் -45-
தாம் ஸ்ரீ இதி த்வத் உபசம்ஸ்ரயநாத நிராஹூ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -29
திருமகளாலே சர்வேஸ்வரன் தெய்வத் தன்மையை அடைகிறான் –
யாவர் ஒருவனுக்கு அந்த ஜனக ராஜன் குலத்தில் பிறந்த பிராட்டி மனைவியாய் இருக்கின்றாளோ
அவருடைய ஆற்றல் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது -என்கிறபடியே
ஆதாரப் பிரதானமாய் இருத்தல்
ஆதேயப் பிரதானமாய் இருத்தல் –
ஆதேயத்துக்கு ஆதாரத்தை ஒழிய உளதாம் தன்மையும் இல்லை
நிரூப்யத்துக்கு நிரூபகத்தை ஒழிய ஸ்வரூபத்தின் நிலை இல்லை –
ஒன்றை ஓன்று ஒழியில் ஸ்வரூபம் நிலை பெறுதல் இல்லை –
தன் ஆகத் திரு மங்கை தங்கிய திரு மார்வன் -நாச்சியார் திருமொழி -8-4-
தான் உளன் ஆகைக்காக -தன் சத்தை பெறுகைக்காக
நித்ய யுவதியான பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்யும் வீறு உடைய திரு மார்பு –
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணா-யுத்தம் -66-10-
பிராட்டியைப் பிரிந்தால் ஒரு ஷண நேரமும் உய்யேன் -உளேன் என்கிறபடியே –

மார்வத்து மாலை –
கேவலம் சம்பத்தாய் -செல்வமாய் இருக்கை அன்றிக்கே திரு மார்புக்கு அலங்காரமாய் இருக்கை –
மார்புக்கு அலங்காரம் அவள்
அவளுக்கு அலங்காரம் மார்பு –
ந தே ரூபம் நா ஆகார ஆயுதானி நச ஆஸ்பதம்
ததாபி புருஷாகார பக்தாநாம் த்வம் பிரகாசசே -ஜிதந்தே -5
அடியார்களுக்காகவே தேவரீர் உடைய ஸ்வரூபம் திரு மேனி
அடியார்களுக்காகவே பிரகாசித்துக் கொண்டு இருக்கிறீர் -என்றபடி –

நங்கை-
வடிவு ஒழிய-மற்றை ஸ்வரூபம் குண விபூதிகளும் -அவளாலே என்கை-
பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் சாஸ்வதம் சிவம் அச்யுதம் –
உலகங்கள் எல்லாவற்றுக்கும் தலைவன் -என்கிறவனுக்கும் இவள் நினைவால்
பொறி புறம் தடவ வேண்டும்படி இருக்கை –
பிரமன் சிவன் மற்றையோரைக் காட்டிலும் வ்யாவ்ருத்தி -வேறுபாடு இத்தனையுமே அன்றோ
ஸ்ரீ மானுக்கு -திருவாளனுக்கு -நஸ் ஸ்ஸ்ரீகர் -திரு இல்லாதவர் -சத்ருசர் -ஒப்பு ஆகார் அன்றோ –
ஜ்ஞானமே வடிவாக இருத்தலில் ஒற்றுமை
நரநாரீ மயோ ஹரி -பெருமானும் பிராட்டியும் சேர்ந்த உருவமே ஹரி என்னும் பொழுது
உன்னுடைய திரு -என்பது ஆதார பிரதானமாக இருத்தலால் –

வாசம் செய் பூங்குழலாள் –
நாற்றத்துக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்
சர்வகந்த -என்பவனுக்கும் பரிமளம் -நாற்றம் கொடுக்கும் குழல்
சர்வ கந்த -என்னும் ஏற்றம் அவனுக்கு இத் தலையாலே காணும் அவனுக்கு வந்தது
இத் தலை மயிராலே ரசோக்தியாக அருளிச் செய்கிறார்

பூங்குழல்
பூவை உடைத்தான குழல் -என்னுதல்
அழகிய குழல் -என்னுதல்

——————

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ –ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள்

பிராட்டி பக்கல் உள்ள ஸ்நேஹ அதிசயத்தாலே -அன்பின் மிகுதியாலே
அந்த ஸ்நேஹமே -அன்பே காரணமாக அவளால் அங்கீ கரிக்கப் பட்ட-அவள் பரிக்ரஹமான –
என் பக்கலிலே மிக்க அன்புள்ளவன் ஆனவனே
பட்டர் தம்முடைய அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை
பெரிய பிராட்டியார்க்கு அன்பன் ஆகையாலே
அவளால் அங்கீ கரிக்கப் பட்ட நமக்கும் அன்பனாம் என்று
இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது
திரு மால் என்னை ஆளும் மால் -10-7-6-என்னும்படியே
தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –
அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ – என் அன்புக்கு அடி இல்லையோ –

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அருளிச் செயல்களில் -வளை விசேஷங்கள் —

July 9, 2021

கலை வளை
அஹம் மம கிருதிகள் —ஆச்சார்ய ஹிருதயம்-சூரணை -147-

( கலை அஹம் கிருதி -வளை மம கிருதி
மேகலை மேம் பொருள் -சரீரம் பற்றிய -அஹங்காரம் –
கை வளை-என்னுடைய மமகாராம் )

அதாவது –
கைவளையும் மேகலையும் காணேன் -திரு நெடும் தாண்டகம் -22-என்றும்
கலையாளா அகல் அல்குல் கன வளையும் கையாளா –பெரிய திருமொழி -5-5-2–இத்யாதிகளில் சொல்லுகிற
கலையும் வளையுமான – பகவத் அனுபவ விரோதி ஆகிற அஹங்காரமும் -மம கிருதியும் என்கை-
அஹங்காரம் மமகாரங்கள் இரண்டும் பகவத் அனுபவ விரோதி ஆகையால் இறே
மத்யம பதத்தாலே இவை இரண்டையும் கழித்து கொண்டு
த்ருதீய பதத்தாலே பகவத் அனுபவம் சொல்லிற்று —

கழல் வளை பூரிப்ப யாம் கண்டு ,கை தொழக் கூடும் கொலோ –திருவாய் -5-9-9-–என்றும் ,
ஈண்டிய சங்கும் நிறையும் கொள்வான்-திருவாய் -8-2-2-என்றும் ,
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையும் –திருவாய் -9-7-6–என்கிற இடங்களிலே
த்யாஜ்யமான அஹம் மம காரங்கள் அன்றிகே ,
சேஷோஹம்-
என்னுடைய திருவரங்கர் -என்றார் போலே இருந்துள்ள
அஹம் மம தைகளைச் சொல்லிற்றாகக் கொள்ளலாம் ஆகையாலே
அங்குத்தைக்கும் இதுவே ஸ்வாபதேசமாக கொள்ளக் குறை இல்லை —

( அஹங்காரம்-ஆத்ம விஷயம் -தேகாத்ம அபிமானம் –கைவல்யம் வைராக்கியம் என்றுமாம் –
மமகாராம் -தேக விஷயம்-ஸ்வ ஸ்வா தந்தர்ய அபிமானம் – -ஐஸ்வர்யாதிகள் வைராக்கியம் -என்றுமாம்
சித் ஈஸ்வரன் வ்யாவ்ருத்தி -சேஷத்வம்
அசித் சித் வ்யாவ்ருத்தி -ஞாத்ருத்வம் )

————

சொல்லிலரசிப் படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையை கழற்றிக் கொண்டு
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே -2 9-10 – –

இல்லம் புகுந்து என் மகளைக் கூவி
என் அகத்திலே புகுந்து
என் மகள் பேரைச் சொல்லி அழைத்து
கையில் வளையை கழற்றிக் கொண்டு
அவள் கையில் அடையாள வளையலைக் கழற்றிக் கொண்டு போய்
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
கொல்லையில் நின்றும் கொண்டு வந்து
அங்கே நாவல் பழம் விற்றுத் திரிவாள் ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து –

நல்லன நாவற் பழங்கள் கொண்டு
செவ்வி குன்றாத பழங்களைத் தெரிந்து கொண்டு -போரும் போராது -என்று சொல்லுகிற அளவிலே

நான் கண்டு -இவ்வளை உனக்கு வந்தபடி என் -என்று அவளைக் கேட்க

அவள் -இவன் தந்தான் -என்ன

நீயோ இவளுக்கு வளை கழற்றிக் கொடு வந்து கொடுத்தாய்-என்ன –

நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே –
நான் அல்லேன்
என் கையில் வளை கண்டாயோ
நான் உன் இல்லம் புகுகிறது கண்டாயோ
உன் பெண்ணைப் பேர் சொல்லி அழைக்கிறது கேட்டாயோ
கையில் வளை கழற்றுவது கண்டாயாகில் உன் வளையை அங்கேயே பறித்துக் கொள்ளாமல் விட்டது என் –
என்றால் போலே சில மித்யைகளைச் சொல்லி
மந்த ஸ்மிதம் செய்கிறதைக் கண்டு
இவனைப் பிடித்தவள் வளையை மறந்து இவனை விட்டு
உன்னைத் தீம்பு அற நியமிக்கும் படி அவளைச் சொல்லுகிறேன் -என்று போந்து
அவனுடைய சூழல்களை இவளுக்குச் சொல்லி முறைப்படுகிறார்கள் –

————

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றால் எறிந்து வளை துகில் கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் -2 10-1 – –

சேற்றால் எறிந்து வளை துகில் கைக் கொண்டு
நாங்கள் எங்களுடைய லீலா உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு –விமுகைகள் ஆன அளவிலே
எங்களைச் சேற்றில் இருந்து எங்கள் வளைகளையும் துகில்களையும் கைக் கொண்டு

காற்றில் கடியனாய் ஓடி
ஓடுகிற காற்றைப் பிடிக்கிலும் அகம் புக்கு-இவனைப் பிடிக்க ஒண்ணாதபடி தன்னகத்திலே சென்று புக்கு

மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
நாங்கள் கிருஷ்ணா கிருஷ்ணா என்று அழைத்தாலும் ஏன் என்கிறான் இல்லை –
ஏன் என்றாகில் இன்று முடியார்கள் இறே
ஏன்-என்னும் போது-அவன் குரலிலே தெளிவும் கலக்கமும் கண்டு தரிப்பர்கள் இறே –

வளைத் திறம் பேசானால் இன்று முற்றும்
ஏன் என்கை அரிதாய்-உறவு அற்றாலும்
எங்கள் கையில் வளை -கலை -முதலாகத் தர வேணும் – என்று நாங்கள் பல காலும் சொன்னால்
அதுக்கு ஒரு உத்தரம் சொல்ல வேண்டாவோ தான் –

வளைத் திறம் பேசானால்-என்கையாலே
வளை பெறுவதிலும் பேச்சுப் பெறுவதில் காணும் இவர்களுக்கு அபேக்ஷிதம்
பிரணயினிகள் -வளை -கலைகள் -என்றால் போலே காணும் தம் தாம் அபிமதங்களைச் சொல்வது –

இத்தால்-
அநந்ய ப்ரயோஜனராய் -அநந்ய ஸாதந பரராய் இருப்பாரையும் விஷயீ கரிக்கும் என்னும் அர்த்தம் தோற்றுகிறது
ஆற்றில் இருந்து விளையாடுபவர்கள் -ஓம் நம–அநந்ய ப்ரயோஜனராய் -நம நம -அர்த்தம் புரிந்தவர்கள்–அநந்ய ஸாதந பரராய்-

ஸாதனம் ஆகையாவது -அவனுடைய வ்யாமோஹ ஹேது -என்று இறே அறிவுடையார் நினைத்து இருப்பது –
(வளை -துகிலை கழற்றி ஒன்றும் இல்லை நம்மிடம் என்று அறிந்தவர்கள் )

சேற்றால் எறிந்து -என்கையாலே அவன் நீர்மையாலே தாங்கள் ஈடுபட்டார்கள் என்னும் இடம் தோற்றுகிறது –
(இறங்கி -தாழ விட்டு வந்தமை அறிந்தவர்கள் )

எறிந்து -என்கையாலே அவன் ஈடுபாட்டிலன் என்னும் இடம் தோற்றுகிறது –
(தூவி என்று இருந்தால் ஈடுபட்டமை தோற்றும்
வீட்டில் இருந்து விளையாடி இருக்க வேண்டுமே -ஆற்றில் வந்ததால் கோபம் )
அடையாளம் குறித்துப் போனானாய் இறே அவன் இருப்பது –

வளை -துகிலைக் கொண்டு -என்கையாலே
சேஷத்வத்தையும் பாரதந்தர்யத்தையும் பறித்துக் கொண்டான் என்கிறது
(அவனுக்கு பிடிக்காத சேஷத்வம் பாரதந்தர்யம்-தன்னை நோக்காமல் ஈஸ்வரனைப் பார்த்து இருக்க வேண்டும்
ஆட் செய்
எனக்கு ஆட் செய்
எனக்கே ஆட் செய்
எக் காலத்திலும்
இடைவீடு இன்று
என் மனத்தே மன்னி
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -பார்த்தால் அழகிலே ஈடுபடுவோம் ஆகவே படர்க்கை -)

சேஷத்வத்தை பறிக்கை ஆவது -தன் வயிறு நிறைத்துப் போகை இறே
பாரதந்தர்யத்தைப் பறிக்கை யாவது -இவர்களை அலைவலை -ஆக்குகை இறே

காற்றில் கடியனாய் ஓடி என்கையாலே (ரூப ரஹித ஸ்பர்ஸவான் காற்று )
ஸ்பர்ச இந்திரிய க்ராஹ்ய துர்லபன் -என்கிறது

அகம் புக்கு என்கையாலே
ஸ்வ போக்த்ருத்வ நிபந்தமான ஸ்வ தந்தர்ய ஸ்தானத்திலே புக்கான் என்னும் இடம் தோற்றுகிறது
(ப்ராப்தாவும் ப்ராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே )

மாற்றமும் தாரானால் என்கையாலே
அவாக்ய அநாதர அம்ருத போகி -என்னும் இடம் தோற்றுகிறது

(கிருஷ்ணா கிருஷ்ணா என்று கூப்பிட்டாலும் ஏன் என்கிறான் இல்லை
ஏன் என்னும் பொழுது அவன் தெளிவும் கம்பீரமும் தெரியுமே -இதனால் முடிய மாட்டார்களே )

வளைத் திறம் பேசானால் -என்கையால்
விஷய அநுரூப ப்ராப்ய ப்ரகாசன் என்னும் இடம் தோற்றுகிறது

(அனுக்ரஹ விஷயமாக இருப்பவர்கள் -உங்களுக்கு வளையல் வேண்டாம் -தானே ப்ராப்யம் அறிவிக்கிறான்
துரியோதனன் கேட்ட ஒரு கோடி சைன்யம் கொடுத்து -அவனுக்குத் தக்கபடி செய்பவன் )

இன்று முற்றம் -என்ற இத்தால்
சரம அதிகாரம் நாசத்தை நிரூபித்தால் -உஜ்ஜீவனத்தில் நிரூபித்தால் ஒழிய
நடுவு நிலை இல்லை என்று நம்பி அருளிச் செய்த வார்த்தையும் தோற்றுகிறது –
(binary போல் பூஜ்யமும் ஒன்றுமே இங்கும் )
அதாவது
பர்வ க்ரமமாக நசிக்கிறான் என்னுதல் உஜ்ஜீவிக்கிறான் என்னுதல் செய்யாது என்றபடி –

——–

இந்திரன் போல் வரும் ஆயப் பிள்ளை எதிர் நின்று அங்கு இனவளை இழவேல் என்னச்
சந்தியின் நின்று  கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல் கின்றதே – 3-4-8-

எதிர் நின்று அங்கு இன வளை இழவேல் என்ன –
அவன் வரவுக்கு எதிராக -அந்த ஸ்தலத்திலே நின்று –
உன்னுடைய இள வளைகளை இழவாதே கொல் என்று நான் சொல்ல –
எதிர் நிற்கை -என்றும் வளை இழக்கை -என்றும் இரண்டு இல்லை போலே காணும் –

இன வளை -என்கையாலே –
எதிர் நின்றவர்கள் கையில் ஒரு வளையும் தொங்காது என்னும் இடம் தோற்றுகிறது –

வளை இழக்கை யாவது   -ஸ்த்ரீத்வம் அழிகை இறே

சந்தியில் நின்று கண்டீர் –
என் சொல் கேளாமல் ஊர் பொதுவான அவன் வருகிற வழியான சந்தியிலே நின்று கண்டீர்

நங்கை தன் துகிலொடு சரி வளை கழல் கின்றதே –
முன்பு ஸ்த்ரீத்வத்தால் பரி பூரணையாய் இருந்த இவளுடைய பரிவட்டத்தோடே கூடச்
சரி வளையும் கழலா நின்றது

கோல் வளை -கழல் வளை -வரி வளை -என்னுமா போலே
சரி வளை என்றும் ஒரு வளை விசேஷம்

கழல் வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினர் (நாச்சியார்-11-2 )-என்கிறபடியே முன்பே
சரி வளை -என்ற பேராய் இருந்த இத்தை -நாமம் மாத்ரம் அன்றிக்கே –
கையில் தொங்காமல் சரிந்து கழன்று போம்படி
பண்ணினான் ஆய்த்து -அவன் தன்னுடைய காட்சியாலே –

———

அலங்காரத்தால் வரும் மாயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு
விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே – 3-4-9-

அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை –
ஏவம் பிரகாரங்களான அலங்காரங்களோடு வரும் இடைப் பிள்ளை உடைய –

பிள்ளை -என்கையாலே –
யுவாகுமாரா -என்கிற பருவத்தை சொல்கிறது

அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு
மேலீடான ஸுந்தர்ய பூர்த்தியைக் கண்டு மிகவும் விரும்பி

விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர்
விலங்கி நில்லா விட்டால் மத்த கஜத்தின் முன்னே நிற்பாரைப் போலே பிராப்தி அளவும் செல்ல ஒட்டாத அளவே அன்றிக்கே
ரக்ஷகத்வாதி குணங்கள் அளவும் செல்ல ஒட்டாத சவுந்தர்யத்தின் முன்னே விரும்பி நின்று ஆசைப்படுவாரும் உண்டோ –

வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே
என்னுடைய நியந்த்ருத்வத்தையும் மறுத்தால் தான் தன்னுடைய
ஸ்த்ரீத்வ அபிமானம் தான் நோக்கலாய் இருக்கிறதோ
மிக்க தேஜஸ்ஸை யுடைத்தாய் சுத்தமுமான வளைகள் கழன்றோ தான் உடம்பு மெலிவது –
வளை கழலத் தக்கது அமையாதோ மெலிய
மெலிகின்றதே என்ற வர்த்த மானத்தாலே –
இனி வளைக்கு ஆஸ்ரயம் இல்லையோ என்று தோற்றா நின்றதே என்னுதல் –

வளை –தோள் வளை யாகையாலே
பலகாலும் கழலுவது அணிவதாய்ப் போருகையாலே அதுவோ என்று இருந்தாள்
எடுத்து அணியத் தொங்காமையாலே -மெலிவு கண்டாளாய்
கண்ட பிரகாரத்தைச் சொன்னாள் ஆதல் –

———–

காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன் கோவைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்
மாறு இல் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுருகின்றாளே – 3-7-8- –

தன் கையில் வளை குலுக்கும்-
தானே கழலுகிற வளைகளும் குலுக்கினால் மிகவும் விழ விறே ப்ராப்தம் –
விழுந்தவை விழுந்தே போயிற்றன
விழாதவை கழலா நிற்கச் செய்தே மநோ ரத சமயத்திலே பூரித்தன இறே
அவன் குணங்களை நினைத்து இருந்த கனத்தாலே குலுக்கக் குலுக்கப் பூரித்தன என்னுமது ஒழிய
சிதிலமாய் விழுந்தன என்கை மார்த்தவதுக்குப் போராதே –

ஆச்சார்ய வசன அபிமானத்தாலே இதர அபிமானம் குலைந்து ப்ராப்த அபிமானத்துடைய மிகுதி
இவள் தன்னாலும் ஆச்சார்யன் தன்னாலும் குலைக்க ஒண்ணாது என்னும் இடம் தோற்றுகிறது –
கையில் வளை குலுக்கும் -என்கையாலே –

———-

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர் –4-6-3-

பிள்ளைக்கு உச்சியில் தடவத் தக்க எண்ணையையும்
நெற்றியிலே அலங்காரமாக தொங்கும்படி கட்டத் தக்க சுட்டியையும் –
கைக்கு அலங்காரமாக இடத் தக்க வளையையும்-
இத்தால்
பிள்ளை தலை காயாமல் தடவ -தப்புகைக்கு -எண்ணி பெறலாம்
பிள்ளை பணிகள் ஆனவை பெற்று பூட்டலாம் -என்று ஆய்த்து -பிறர் பேர் இடுகையில் இழிகிறது

———

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–திருப்பாவை–18–

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப –
நீ தானே வந்து திறக்க வேணும் செந்தாமரைக் கையால் – அவனும் ஆசைப் படும் கை –
ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம் என்னும் கை –
அவள் -அப்படியே செய்கிறோம் -என்று
முன் கையில் வளையைக் கடுக்கி திறக்கப் புக்காள் –

சீரார் வளை ஒலிப்ப –
வளைக்கு சீர்மை யாவது -கழலாய் இருக்கை –
சங்கு தங்கு முன்கை நங்கை -இறே – நாங்களும் அத் த்வனி கேட்டு வாழும்படி –
தங்கள் கைகள் -இருக்கையில் சங்கு இவை நில்லா -என்று இறே இருப்பது –
சூடகமே -தோள் வளையே -என்று அவர்கள் இருவரும்
கூட்டிப் பூட்டினால் இறே இவர்களுக்கு உள்ளது –
தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ-
யாமுகக்கும் எம் கையில் சங்கம் எனது இழையீர்-என்றும்
என்னுடைய கழல் வளையை தாமும் கழல் வளையே ஆக்கினரே -என்றும்
செந்தாமரைக் கை–
மாஸூச கை பார்த்து இருப்பாரோ நாங்கள்–சரணம் பற்றாத உங்களுக்கும் நான் இருப்பேன் ராஷசி –
லகு தரா ராமஸ்ய கோஷ்டி கிருதா -பட்டர்–நீங்கள் செய்த பாபத்துக்கு அஞ்ச வேண்டாம்
அவன் ஸ்வா தந்த்ர்யம் அஞ்ச வேண்டாம் வைத்த அஞ்சல் கை செந்தாமரைக் கை
அவனும் ஆசைப் படும் கை -கை மேல் என் கை வைத்து–
பெண் கை மேலே —அணி மிகு தாமரைக் கை மேலே செந்தாமாரைக் கை
பந்து பிடித்து சிவந்த கை
மேகம் முழங்கி சீரார் வளை ஒலிப்ப–பசியர் சோற்றை வர்ணிப்பது போலே–கையிலோ நின்றும் கழலாத சீர்மை
வளை ஒலி கண்ணன் எழ வேண்டும்–நாங்களும் ஒலி கேட்டு வாழ–
கிடந்த இடத்தே இருந்து–நாலடி நடந்து வந்து -அவனும் நாங்களும் நடை அழகு காண
மகிழ்ந்து திறவாய்-தலை விதி என்று வராமல்–ஆர்த்தி சாஸ்திரம் அர்த்தம் பரிதாபம்
உகந்து வந்து–மகிழ்ந்து மார்கழி நீராட–எதோ உபாசனம் ததோ பலம்–நாங்கள் நோற்ற நோன்பு நீ மகிழ தான்
உன்னுடைய மகிழ்ச்சி தான் எங்கள் மகிழ்ச்சி–இதுவே பலம்–
தர்மத்துக்கு திறவாமல்–மகிழ்ந்து–பேறு உன்னதாக வேண்டும்
அவன் உடையார் பக்கல் அவனை விட–முக விகாசத்தில் தோற்றும்படி–
கண்ணுக்கு இறை வந்து
வளை
செவி பட்டினி தீர–
பேர் பாட நாக்கு பட்டினி–
செந்தாமாரைக் கை ஸ்பர்சம்–கந்தம் நுகரும்–சர்வ இந்த்ரியங்கள் விடாய் தீர்க்க
மனஸ் மகிழ்வு உன்னதாக இருக்க

சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்களாலே–தாமரை போன்ற திருக் கையாலே –
இவ்விடத்தில் -கையாவது -ஜ்ஞானம்
ஜ்ஞானக் கை என்றார் – ஆழ்வார் –
ஞானத்துக்கு சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்கள் ஆவன இதர விஷய நிவ்ருத்தி –
சௌந்தர்யம்-ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தி –
சௌகுமார்யம் -நிரதிசய ப்ரேமாத்மகத்வம்-
சௌகந்த்யம் -இப்படி இருந்துள்ள ஞானத்தாலே –
சீரார் வளை ஒலிப்ப—
நிரந்தர பகவத் சம்பந்தத்தாலே பூர்ணங்களாய்-பகவத் சம்பந்த சூசகங்களான-
ரகஸ்ய த்ரய அர்த்தங்கள் பிரகாசிக்க –

———-
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்–24-

சூடகமே-
பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்–
பரம பிரணயி ஆகையாலே தன் தலையிலே வைத்துக் கொள்ளும் கை –
சூடகமே –
அணி மிகு தாமரைக் கை இவர்கள் ஆசை படுவது போலே-
அடியார் கையை தான் அணிய ஆசை படுகைக்கு இட கடவ ஆபரணம்
வெள்ளி வளைக் கைப் பற்ற -என்கிறபடியே
அநன்யார்ஹைகளாகப் பிடித்த கைகளிலே இறே முதல் ஆபரணம் பூட்டுவது
அடிச்சியோம் தலைமிசை நீ யணியாய் -என்னுமா போலே
அவன் சொல்லி மார்விலும் தலையிலும் வைத்துக் கொள்ளூம் கைக்கு இடும் சூடகம்
தம் மணிம் ஹ்ருதயே க்ருத்வா -இத்யாதி வைத்த -முந்துறக் காணும் இடம் –
முந்துறத் தான் உறவு பண்ணும் இடம்

தோள் வளையே –
அந்த ஸ்பர்சத்தாலே-அணைக்க வேண்டும் தோளுக்கு இடும் ஆபரணம் –

தோடே –
பொற்றோடு பெய்து -என்று-பண்டே தோடு இட்டாலும்-அவன் இட்டாப் போலே இராது இறே –

செவிப் பூவே –
அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே-
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு விஷயமான இடம் –

பாடகமே –
அணைத்தால் தோற்றுப் பிடிக்கும் காலுக்கு இடும் ஆபரணம் –

என்றனைய பல்கலனும்-
பருப்பருத்தன சில சொன்னோம் இத்தனை –நீ அறியும் அவை எல்லாம் என்கை –
பல பலவே யாபரணம் இறே –
அனைய -பல
கிரீட -ஹார –கௌச்துப நூபுராதி அபரிமத திவ்ய பூஷணம்-
பல பலவே ஆபரணம்-ஆபரணங்கள் அழகு கொடுக்கும் அவயவங்கள் இவர்களுக்கு

யாம் அணிவோம் –
வ்யதிரேகத்திலே-மலரிட்டு நாம் முடியோம் -என்கிறவர்கள்–பூண்போம் -என்கிறார்கள்
அவனுக்கு இவர்கள் அனுமதி பண்ணுகையே அமையும் -என்கை-

———-

வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–நாச்சியார் திரு மொழி-–2-3-

நாங்கள் பட்ட பிரயாசத்தைப் பாராய் -வண்டல் உள்ள இடம் தேடி –அதிலே நுண்ணிய மணல் தேடி —
அது தன்னை தெள்ளி -துர்ப்பலைகளாய் இருக்கிற நாங்கள்-
வளை கொண்டு பாடாற்றுகையே தொடங்கி அரிதாய் இருக்கிற கைகளைக் கொண்டு கிலேசப் பட்டோம் –
அவன் ஸ்பர்சித்த வளையாதலால் சிரமப் பட்டோம் –

————

மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே–5-1-

எல்லா பதார்த்தங்களையும் முறையிலே நிறுத்தக் கடவ அவன் –மணி முடி மைந்தன் அன்றோ –
முறை செய்யா விடில் பொருந்த விடுகை உனக்கு பரம் அன்றோ -என்கிறாள்
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக -என் சங்கு இழக்கும்-
இத்தலையிலே குறை உண்டாய் இழக்கிறேனோ –
தன் பக்கல் குறை உண்டாய் இழக்கிறேனோ
மன்னு –
தர்மி உண்டாய் -குணங்கள் -நடையாடாத ஒரு போது உண்டாய் -நான் இழக்கிறேனோ –
பெரும் புகழ் –
குணங்களுக்கு அவதி உண்டு என்றும் -அது என் பக்கல் ஏறிப் பாயாது என்றும் நான் இழக்கிறேனோ –
புகழ் –
கல்யாண குணங்களே -கொண்டவன் அன்றோ -ஹேய குணங்களும் கலசித்தான் நான் இழக்கிறேனோ
உயர்வற உயர் நலம் உடையவன்–நிஸ் சீமம் – -நிஸ் சங்க்யம் -ச்லாக்யதை மூன்றுமே உண்டே
ஸ்வ பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண-என்றால் போலே இருக்கிறது யாய்த்து –
மாதவன் –
இப்போது இக்குணங்கள் இன்றிக்கே ஒழிக –
அருகே இருந்து ந கச்சின் ந அபராத்யதி –யுத்த -116-44-என்று சேர்ப்பார் இல்லாமையால் தான் இழக்கிறேனோ
ஸ்ரீ வல்லப -என்றால் போலே இருக்கிறது
மாதவன் -மணி வண்ணன் –
தனக்காக வடிவு படைத்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ
இழக்கலாம் வடிவாய்த் தான் இழக்கிறேனோ
ந தே ரூபம் ந சாகாரோ நாயுதா நி ந சாஸ்பதம்-ததா அபி புருஷாகாரோ பக்தா நாம் தவம் பிரகாசசே -ஜிதந்தே -1-5-
மணி முடி மைந்தன் –
இத்தனையும் உண்டானாலும் என்னைப் போலே பிறர் கை பார்த்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ –
ஸ்வ தந்த்ரனாவது -ரஷணத்திலே தீஷித்து இருப்பான் ஒருவனாய்த்து –
மைந்தன் –
ரஷணத்தை ஏறிட்டுக் கொண்டாலும் பிரயோஜனம் இல்லை இறே -அசக்தனாய் இருக்குமாகில்
மைந்து -என்று வலியாய்-வலியை உடையவன் -என்றபடி –
தன்னை உகந்தது காரணமாக –
அப்ராப்த விஷயத்தை ஆசைப்பட்டேனா -இழப்பேன் நானோ
தன் திருவடிகளிலே சிலர் சாய்ந்தால் அநு பாவ்யங்கள் பின்னை அவர்கள் அநு பவிப்பார்களோ –
தான் அநு பாவித்தல் பரிஹரித்தல் -செய்யும் அத்தனை அன்றோ —சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்பவன் அன்றோ –
விஸ்ருஷ்டம் பகதத்தேன ததஸ்த்ரம் சர்வகாதுகம் -உறசா தாரயாமாசா பார்த்தம் சஞ்சாத்ய மாதவ -துரோண பர்வம் -29-18-
வழக்குண்டே
என் ஆர்த்தியைக் கண்டே ஓரம் பண்ணச் சொல்லுகிறேன் அல்லேன் –
மத்யஸ்த புத்தியாலே பார்க்கச் சொல்லுகிறேன் அத்தனை
ந வாஸூ தேவ பக்தா நாம ஸூ பம் வித்யதே கவசித் -என்றும்
ந மே பக்த ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -9-31-என்றும் சொல்லக் கடவது இறே
கௌந்தேய பிரதீஜா நீஹி –அர்ஜுனா இவ்வர்த்தத்தில் நின்றும் நம்மை விச்வசித்து பிரதிஜ்ஞை பண்ணு
ந மே பக்த ப்ரணச்யதி -நம்மைப் பற்றினார்க்கு ஒரு காலும் அநர்த்தம் வாராது காண்-

———

சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்–5-9-

குயிலே நீ இச் சோலையில் இருந்து ஜீவிகிக்க வேணுமே-என்னை அலட்ஷியம் செய்தால் இதிலே உனக்கு வாழ முடியுமோ
நான் முடிந்து போனால் இச் சோலையை உனக்கு நோக்கித் தருவார் யார்
வலங்கை ஆழி இடக்கை சங்கம் உடையானான எம்பெருமான் இங்கே வரும்படி கூவுதல் ஓன்று
என் கையில் வளைகளைக் கொண்டு வந்து கொடுத்தல் ஓன்று-இவை இரண்டினுள் ஒன்றை நீ செய்தாக வேணும் என்கிறாள்-
கை வளை தங்குவது எம்பெருமான் சம்ச்லேஷத்தால் மட்டுமே ஆகும்-அதுவும் அவன் வந்தால் அன்றி ஆகாதே
இரண்டு பஷமாக அருளிச் செய்வான் என் என்னில்
சத்யவான் உயிர் மீட்ச சாவித்திரி யமன் இடம்-பல பிள்ளைகள் பிறக்கும்படி அருள வேணும் என்றால் போலே
இதுவும் ஒரு சமத்காரமான உக்தி-ஒரு கார்யத்தாலே இரண்டும் தலைக் கட்டும் இறே

நாராயணாதி நாமங்களை குறிப்பிடாதே சங்கோடு சக்கரத்தான் -என்கையாலே
அவனுடைய ஆபரணத்தை யாவது இங்கே கொண்டு சேர்
அல்லது
என்னுடைய ஆபரணத்தை யாவது கொண்டு கொடு -என்கிற ரசோக்தி

———

ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே–8-5-

ஆஸ்ரித விரோதிகளை தானே கை தொடானாய் போக்கு மவன்
இரணியனை -யுடலிடந்தான்-
விரோதியைப் போக்கவும் தன்னை அழிய மாறவும் வேணும் என்று சொல்லுகிறேன் அல்லேன்
தன் உடைமை தான் பெறுவாள் என்று நினைக்க அமையும்

தான் கொண்ட சரி வளைகள்
கழலுகிற வளையல்கள்
சரி என்னும் ஆபரணமும் வளையல்கள் என்னும் ஆபரணமும் என்னுமாம்
அவன் வந்தாலும் தொங்காது போலே காணும்
தருமாகில் சாற்றுமினே–
தாராது ஒழிகையே-ஸ்வ பாவம் என்று இருக்கிறாள்
ஸ்வ தந்த்ரராய் இருப்பார் தாராது ஒழியிலும் ஒழிவர் இ றே-ஆனாலும் நமக்கு நசை அறாது இ றே

சாற்றுமினே
அவன் தரிலும் தருகிறான்
தவிரிலும் தவிருகிறான்
நீங்கள் அறிவித்துப் போருங்கோள்-

————-

திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –9-3-

பிரணயி இல்லாதான் ஒருவன் அல்லன்
ஒரு நத்தத்தில் பிறவாதான் ஒருவன் அல்லன்
ஒரூரிலே பிறந்து வளர்ந்தார் வந்தியிடார்கள் இறே -பிறர் துன்புரும்படி சண்டையிட மாட்டார்களே
திரு விளையாடு திண் தோள்
பெரிய பிராட்டியாருக்கு லீலார்த்தமாக சேண் குன்று சமைத்தால் போலே யாய்த்து திருத் தோள்கள் இருப்பது
திருமால் இரும் சோலை நம்பி-
ஆரியர்கள் இகழ்ந்த மிலேச்ச பூமியில் உள்ளாருக்கு ஸூலபனானவன்
இனக் குறவர் புதியது உண்ணும் எழில் மாலிரும் சோலை எந்தாய் -பெரியாழ்வார் -5-3-3-
அதுக்கு உள்ளே உண்டு இறே சீலமும்
நம்பி –
சொல்லிச் சொல்லாத குணங்களால் பூரணன் ஆயத்து –

வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –
தாம் இருந்த இடத்தில் நாங்கள் சென்றோம் ஆகில் எங்களை நலிய பிராப்தம்
நாங்கள் இருந்த இருப்பிலே தாமே வந்து எங்களுடைய உயிர் நிலை அறிந்து -வளையை அறிந்து
வந்தி பற்றும்
எங்கள் இசைவு இன்றிக்கே இருக்க -எங்கள் வளை கைக் கொள்ளுகைக்கு வழக்கு உண்டோ
தாம் விரும்பின வளை என்று நாங்கள் இத்தைக் கொண்டு தரிப்போமானால் இத்தையும் கைக் கொள்ளுகைக்கு வழக்கு உண்டோ
வழக்கு உள்ள இடத்தில் அன்றோ கைக் கூலி கொள்ளுவது -கைக்கூலி -கையில் வளையை -கையில் உள்ள பொருளை –
ஆன பின்பு எனக்கு ஜீவிக்கைக்கு ஒரு விரகு சொல்லி கோளே
இல் புகுந்து –வரி வளை வந்தி பற்றும் -வழக்குளது -என்று அந்வயம்

———-

தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே–11-1-

இவ் வவசாதத்தில் வந்து நீர் உதவாது ஒழிந்தது என் -என்று கேட்டால்
இன்னத்தாலே என்று தமக்கு மறுமாற்றமாக சொல்லலாவது ஓன்று உண்டு என்று நினைத்து இருக்கிறாரோ கேளி கோள்-
என் உகப்பில் குறை உண்டாயோ -வளை இழந்து அவன் வளையை ஆசைப்படுகை -என் உகப்பு –
தம் உகப்பில் குறை உண்டாயோ -தம் உகப்பு -என் வளையைக் கைக் கொள்ளுகை
தம்முடைய ரஷணத்தில் குறை உண்டாயோ -கோயிலிலே சேருகையே ரஷணம்-
என்னுடைய ரஷ்ய ரஷண பாவத்தில் குறை உண்டாயோ -முகத்தை நோக்காரால்-என்று இருக்கை-
எத்தாலே நான் உதவிற்றிலன் -என்று சொல்ல இருக்கிறார்
தம் கையில் குறை இல்லை
என் கையில் குறை இல்லை
இனி என் சொல்லுவதாக இருக்கிறார் –
ஸ்வ தந்த்ரராய் இருப்பார் தாம் நினைத்தது செய்து தலைக் கட்டும் இத்தனை யன்றோ -என்று சொல்ல நினைத்து
இருக்குமதுவும் வார்த்தை அல்ல –
பரம பிரணயி அன்றோ-
பர தந்த்ரராய் இருப்பார் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது நிர்பந்திக்கக் கடவர்களோ என்று நினைத்து
இருக்குமத்தும் வார்த்தை யல்ல
எனது ஆற்றாமையை அறிவாரே
நம் கையில் உள்ளது ஒன்றும் கொடோம் –பிறர் கையில் உள்ளது கொள்ளக் கடவோம் -என்று நினைத்து
இருக்குமதுவும் வார்த்தை யல்ல
வன்மையுடையார் செய்தபடி கண்டிருக்கும் அத்தனை அன்றோ மென்மையுடையார் என்று நினைத்து இருக்கக் கடவர் அல்லர்
உம்முடைய கையில் வளை நீர் கொடாது ஒழிகிறது என் என்று கேட்டால் -நான் உகந்து இருக்கையாலே -என்று சொல்ல
நினைத்து இருக்கிறாரோ -அது பின்னை பிறர்க்கு இல்லையோ
கையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமுமான அழகை போலே காணும் இவள் தானும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு கிடக்கிறது –
நாமும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு -கிடப்பது இத்தை அன்றோ என்று சொல்ல இறே அவரும் நினைத்து இருப்பது
அது தமக்காகக் கண்டதோ —ந தே ரூபம் நா யுதா நி —பக்தாநாம் -என்று அன்றோ இருப்பது
தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ-யாமுகக்கும் என் கையில் சங்கமும் -என்று சேர்த்து
தாம் உகந்தது நம் கையில் கிடக்கும் அத்தனை
பிறர் உகந்ததும் நம் கையில் கிடக்கும் இத்தனை
நாம் உகந்ததும் கொடோம் -பிறர் உகந்ததும் கொடோம் -என்று நினைத்து இருக்குமது அழகோ
உகந்தார் உகந்தது பெறுதல் -உடையார் உடையது பெறுதல் செய்ய வேண்டாவோ
உகந்தார் உகந்தது பெறும் போது-தன் கையில் உள்ளவை என் கையில் வர வேணும்
உடையார் உடையது பெறில் என் கையிலவை என் கையில் கிடக்க வேணும்
இரண்டும் சம்ச்லேஷத்தை ஒழியக் கூடாது இ றே
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் -5-2-என்று ஒரு சங்கு பெற ஆசைப் பட்ட என்னை
தான் கொண்ட சரி வளைகள்-8-5-என்று ஒரு ஜாதியாக இழக்கும் படி பண்ணுவதே
ஈஸ்வர ஜாதி -என்ற ஒரு ஜாதி உண்டாகில் இ றே தம் கையில் வளையோடு சஜாதீயம் உண்டு என்று சொல்லலாவது –
தம் கையில் வளை ஆபரணமாகத் தோற்றுகையாலே-அவன் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் ஆபரணமாக தோற்றுகிறது
அத்தனை அல்லது ஆயுதமாகத் தோற்றுகிறது இல்லை காணும் இவளுக்கு
நாரீணாம் உத்தமையாய் வளை இட்டால் போலே அவன் புருஷோமத்வத்துக்கும் வளை இட்டான் என்று இருக்கிறாள் யாய்த்து –

ஏந்திழையீர்
ஏந்தப் பட்ட இழையை உடையீர் -தரிக்கப் பட்ட ஆபரணத்தை உடையீர்
பிரளயத்திலும் தப்பிக் கிடப்பாரைப் போலே நீங்கள் எங்கே தப்பிக் கிடத்தி கோள்
மயூரச்ய வநே நூநம் ரஷசா ந ஹ்ருதா ப்ரியா -கிஷ்கிந்தா -1-40-என்று இருவராய் இருப்பாரை எல்லாம் பிரித்தான் என்று
இருந்தார் இ றே பெருமாள் -அப்படியே வளை கையில் தொங்கினார் ஒருவரும் இல்லை என்று இருந்தாள் போலே காணும்
நீங்கள் தப்பிக் கிடந்தபடி எங்கனே -என்கிறாள்
அவனோடு கலந்து பிரிந்த படியால் ப்ராதேசிகம் ஆகமாட்டாது என்று தோற்றி இருந்தது ஆய்த்து –
ஆபரணம் இழந்தார் வழக்கு ஆபரணம் பூண்டு இருந்தார் பக்கலிலே கேட்கும் அத்தனை இ றே
குறையாளர் வழக்கு குறைவற்றார் பக்கலிலே இ றே கேட்பது
யுவாக்கள் வழக்கு சன்யாசிகள் பக்கலிலே அன்றே கேட்பது -யுவாக்கள் பக்கலிலே இறே கேட்பதுவும்
நீயும் சில நாள் வைத்துக் கொண்டு இரு -என்பார் பக்கல் அன்றே கேட்பது
ஆண்களோ பாதி இறே இவளுக்கு ஓடுகிற தசை அறியாமைக்கு இவர்களும் –

———

எழில் உடைய அம்மனை மீர் என்னரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே–11-2-

எம்மானார் –
ஜிதந்தே -என்னுமா போலே ஸ்வா பாவிகமான சேஷித்வத்துக்குத் தோற்றுச் சொல்லும் வார்த்தை அல்ல
இப்படி அழகு குவியலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவர் –

என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே-
எழில் கொண்டார் என்று அவர்க்கு இத்தை எங்கனே நாம் குற்றமாகச் சொல்லும்படி
பிரணயித்வத்தில் ஏதேனும் தப்ப நின்றாராகில் அன்றோ நம்மால் அவர்க்கு குற்றம் சொல்லலாவது
ஏக கண்டரானவர்க்கு -நம்மோடு ஒத்த மனத்தராய் -நாம் என்ன குற்றம் சொல்லுவது
அவர் பிரிந்தாலும் கழலாத படி திண்ணிய வளை தேடி இட்டோம் ஆனோம் நாம்
அவர் இதினுடைய நாமத்தையே மெய்யாக்கினார்
விச்லேஷத்திலும் தொங்கும் வளையை தேடி இட்டோம் ஆனோம் நாம் -அவர் ஒரு ஷணமும் தொங்காத படி ஆக்கினார் -என்ற அழகு பாரீர்
இது அங்கும் ஏறப் பற்றது இல்லை
அவர் கையில் வளை கழன்றதாகில் இவள் கையில் வளை தொங்கும் இறே
அவர்க்கும் இச் செல்லாமை உண்டு என்று அறிந்தால் இவர் கையில் வளை கழலாதாயத்து –சலிக்கிற படி
நீ ஒருத்தியே இழந்ததாகச் சொல்லுகிறது என் -இங்கனே யன்றோ எல்லாரும் இருப்பது -என்ன
என்னை ஒழிய ஆரேனும் வளை இழந்தார் உண்டோ -என்கிறாள் –என்னுடைய கழல் வளையையே -என்ற ஏவகாரத்தால் –

——————

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே –11-3-

செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
தம்முடைய ஆஜ்ஞா அனுவர்த்தனம் -ஸ்வ சங்கல்பத்தினாலே நடத்துமது போராது என்று கோயிலிலே வந்து சாய்ந்தவர்
பெரிய பெருமாளோ பின்னை உபய விபூதியையும் ஆள்கிறார் -என்னில்
அல்ல –அவர் இட்டதோர் ஏவல் ஆள் -பெரிய பெருமாளும் அல்லர் காண் -செங்கோல் தானே ஆள்கின்றது –செங்கோல் -ஆஜ்ஞை

எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே —
தமக்கு ஒரு குறை உண்டாய் -என் கையில் வளை ஒழியச் செல்லாமை குறைப்பட்டு அவ்விடர் தீருகைக்காக கொண்டாரோ-
எனக்கு கிலேசத்தை விளைக்கைக்காக செய்தார் அத்தனை அன்றோ
கழலாத படி திண்ணியதாக இட்ட வளையையும் கொண்டார் -கீழ்ப் பாட்டில் சொன்னபடியே –கோல் வளையையும் கொண்டார் -இங்கே

————

மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே—11-4-

பிச்சைக் குறையாகி –
மகா பலி பக்கல் பெற்றுக் குறை உண்டாய்
அது என் கையால் பெற வேணும் என்னும் இச்சையாலே
என்னுடைய பெய் வளை மேல் இச்சை யுடையரேல் –
அம் மண்ணோ பாதி இச்சையும் என் வளையில் உடையராகில் -என்றுமாம்
தாம் இரந்த மண்ணில் வீறும்-என் கையில் வளையில் வீறும் தாம் சொல்லக் கேட்டு இருக்கும் அத்தனை இறே நாம்
தாம் இரந்த பூமியாருக்கு ஆபரணமாக வற்று -இடப்பட்ட வளையின் மேல் –
ஸ்ரீ யபதியாய் கொடுத்து வளர்ந்த கையை உடையவராய் இருக்கிறவர் தாம் கழஞ்சு மண் பெறுகைக்கு தம்மை இரப்பாளராக்கி
அதில் பண்ணின விருப்பம் என் பக்கலிலே பண்ணி இருந்தாராகில்
என் கையில் வளையாலே குறை தீர வேணும் என்னும் இச்சை உண்டாகில்
என் கையில் வளையாலே குறை நிரப்ப வேணும் என்னும் இச்சை உண்டாகில்
இத்தெருவே போதாரே—
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு-4-5- -என்கிறபடியே எங்கள் தெருவில் எழுந்து அருளாதோ பின்னை –
அசுரனுடைய யஜ்ஞ வாடத்தில் நடந்த நடையை இத்தெருவில் நடந்தால் ஆகாதோ –
என் கண் வட்டத்தில் நடந்தால் ஆகாதோ
தன உடைமை அல்லாததைக் கொடுத்து ஔதார்யம் கொண்டு இருக்கிறவனைப் போலே இருப்பேனோ நான்
ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன் -என்று இருக்குமவள் அன்றோ நான்-
கொண்டானை யல்லால் கொடுத்தானை யார் பழிப்பர்
தன்னது அல்லாதவற்றைக் கொடுத்தவனை குறை சொல்லுவார் இல்லை
தனக்குக் கொடுத்தவனுக்கு அபகாரத்தைப் பண்ணுவதே -இவன் தன்னில் க்ருதக்னர் இல்லை -என்னா நிற்பார்கள்
தன்னது அல்லாதவற்றைக் கொடுத்தவனை அன்றோ நெல்லிலே வைத்துத் தெரிக்க வேண்டுவது -என்கிறார் –
என்னது -என்று இருந்த வன்று -அவனுக்கு -என்று கொடுக்க பிராப்தம்
பிரமித்த அன்றாய்க் கொடுக்க பிராப்தி உள்ளது
உணர்த்தி உண்டானவாறே –அதவா கிந்நு சமர்ப்பயாமி தே-என்னா நின்றார்களே இ றே
ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தால் அவனுடைய ஸ்வரூப குணங்களோ பாதி அங்கே தோற்றக் கடவதாய்த்து இது
அவனுடைய ப்ராப்யத்வத்தில் ஏக தேசமாய் அந்வயிக்கும் அத்தனை
ஆத்ம யாதாம்ய ஜ்ஞானம் முன்னாக பற்றினால் அனுபவ சமயத்திலும் ஆத்ம யாதாம்ய ஜ்ஞானம் முன்னாக வி றே அனுபவிப்பது
-யதோபாசனம் பலம் ஆகையாலே

—————

மாந் தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே -2-7-3-

வளைகளும் இறை நில்லா-
ஆகாசத்தில் நிற்பது ஒரு வளை இல்லையே
சைதில்யம் உபாயாந்த சுரேஷூ யாச்யபி -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -பக்தியால் -விரஹ தாபத்தால் )
இன்னம் இவற்றில் அவனுக்கு வாசி உண்டு
அவன் பிரியேன் என்று பிரிவை உணர்த்தி யாகிலும் போம் இறே
இவையோ சடக்கெட போய்க் கொடு நின்றது

என் தன் ஏந்திழை இவளுக்கு-
என்னுடையவள்- தரிக்கப்பட்ட ஆபரணத்தை உடையவள் –
இவள் ஆபரணங்களால் அலங்க்ருதையாய்
இருக்கும் இருப்பைக் கண்டு கொண்டு இருக்குமதே தாரகமாக
காணுமவள் தான் நினைத்து இருப்பது –
இவள் ஆபரணம் பூண்டு இருக்கும் இருப்பை
கண்டு அனுபவிக்க எனக்கு இவளோட்டை பர்யவசிக்குமா போலே இருந்தது –

——————

தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன்
போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும்
காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ–3-6-6-

ஸ்ரமஹரமான வடிவைக் காட்டி பஞ்ச லஷம் குடியில் பெண்களை வளை கவர்ந்தவன்
என் கையில் வளை பெறா விடில் உண்டது உருக் காட்டானாய் இரா நின்றான் –
சம காலத்தில் பிறவாதார் வளையும் கொள்ள வேணுமோ
இவனுக்கு ஓர் ஊராக வளை கொண்டதுவும் உண்டது உருக் காட்டுகிறது இல்லை காணும்
இவள் கையில் வளை சேஷிக்கில்

வயலாலி மைந்தா !என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ!–3-6-7-

திருவாலி யிலே உத்தேச்ய வஸ்து சுலபமாயிற்று என்றவாறே கண்ணுறக்கம் குடி போயிற்று ஆயிற்று
என் கன வளையும் கடவேனோ!
என் உடம்பில் உள்ளது வேணுமாகில் கொள்ளுகிறாய்
நான் பொன்னிட்டு கொண்ட வளையில் என் பிராப்தி உண்டு
அவனும் பொன் கொடுத்து இறே கொண்டு போகுகிறது -வைவர்ண்யத்தைக் கொடுத்து –
இவனுக்கும் இவள் உடம்பில் உள்ளது கொள்ளும் போது
இவள் மேல் எழுத்து இட வேண்டாம் காணும்
(மேல் எழுந்தது வேண்டா காணும் -மேல் எழுந்த வளையை கொள்ளுவான் என்
சாமான்யமானது கூடாது ஸ்லாக்யமான வளையல் என்றுமாம் )
ஸ்வாபாவிக மானத்தோடு-(என் கண் துயில் கொண்டு) ஔபாதிக மானத்தோடு-(என் கன வளையும்) வாசி
இன்றிக்கே ஏதேனும் இத்தனையோ நீ கொள்ளுகைக்கு வேண்டுவது –
அவன் இத்தை விரும்பப் புக்கவாறே என்னது என்று ஒரு தலை தானும் பற்றுகிறாள்-
(ஆழ்வார் தன்னது என்னுமவை எல்லாம் இவனுக்கு உத்தேச்யம் -என்னுடைய பந்தும் தந்து போ போல்
மன் மநா பவா –மாம் நமஸ் குரு-அவன் என்னது என்னிடமே சொல்வது போல் )

இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயலாலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே !–3-6-8-

தன் உடம்பில் துள்ளுகிற முயலைப் போக்கவும் மாட்டாதே
பருவம் நிரம்பாதே இருக்கிறவனுக்கு-இள மதிக்கு அன்றோ நான் – வளை இழந்தேற்கு
இது நடுவே இத்யாதி –
விபூதியை -நீ வைத்த ஆளான சந்திரனை -இட்டு நலிகை அன்றிக்கே நீரும் தூசி ஏறப் புக்கீரோ
போரிலே த்வந்த யுத்தம் பண்ணா நிற்கச் செய்தே-நடுவே வந்து பொருவாரைப் போலே-
விடு நகமும்-( கிட்டிக் கோல் ) சம்மட்டியும் இட்டு நலியா நிற்க அது போராது
என்று உடையவன் தானே நலியுமா போலே —
விபூதியை இட்டு நலிகை தவிர்ந்து நீ தானே கை தொடானாய் நலியப் பார்த்தாயோ –

சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய
மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே–3-6-9-

திரு மெய்ய மலையாளா ! அவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று –
நீ யாள வளையாள மாட்டோமே –
இருந்தபடியால் உன் பரிக்ரமாகையும்-கையில் வளை தொங்குகையும் என்று ஒரு பொருள் உண்டோ –
இப்போது தன் ஆற்றாமையாலே ஒன்றைச் சொல்லுகிறாள் அத்தனை போக்கி
ஒரு காலும் கையில் வளை தொங்குகைக்கு விரகு இல்லை காணும் –
கிட்டினால் தானே ஹர்ஷத்தால் பூரித்து நெரிந்து இற்று போம்
பிரிந்தான் ஆகில் தானே கழன்று போம் –
உன்னுடைய பரிக்கிரமாய் எங்களுடைய ஸ்த்ரீத்வம் கொண்டு நோக்குகை என்று ஒரு பொருள் உண்டோ
அம்மங்கி அம்மாள் உடைய சரம தசையில் நஞ்சீயர் அறிய எழுந்து அருளினவர்
அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து
முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே
என்று அருளிச் செய்தார்-
ஆக இப் பாட்டால்
பிராப்ய நிஷ்கர்ஷமும்
ருசி உடையார் படியையும்
சரண்யன் படியையும்
அவனுக்கு ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும் –
இத்தலையில் அபேஷை குறைவற்று இருக்கிறபடியையும் –இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது –

—————

கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று
வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1-

வெள்ளி வளைக்கை பற்றப்-
உக்தியிலே துவக்குண்டு சப்தையாய் நின்றாள்-அவ்வளவிலே வந்து கையைப் பிடித்தான் –
ந பிரமாணீ க்ருத பாணீர் பால்யே பாலேந பீடித்த -என்கிறபடியே
(அக்னி பிரவேசம் பண்ணும் சீதாபிராட்டி வார்த்தை )
பிடித்த பிடியிலே -அங் கண்ணன் உண்ட என்னுயிர்க் கோதிது-திருவாய்மொழி–என்னும்படியாயிற்று பிடித்தது
முன்பு நெடுங்காலம் தாய் பக்கல் பண்ணின வாசனை-முதலடியிலே வந்து அழியும்படி-கழியும்படி – யாயிற்று பற்றின பற்று
இடைச்சிகள் பொன்னையும் மாணிக்கத்தையும் அழிய மாறி -வெள்ளி வளை யாயிற்று இடுவது-

———

இங்கு வளையல்களை மட்டும் இழந்தவற்றை பத்தும் பத்துமாக அருளிச் செய்கிறார்
இழந்தேன் என் வரி வளையே —8-3-1-
இழந்தது என் கன வளையே —8-3-2-
என் செறி வளையே —8-3-3-
இழந்தேன் என் பொன் வளையே —8-3-4-
இழந்தேன் என் வரி வளையே—8-3-5-
இழந்தேன் என் ஒளி வளையே—8-3-6-
இழந்தேன் என் ஒளி வளையே —8-3-7-
இழந்தேன் என் செறி வளையே —8-3-8-
இழந்தேன் என் பெய் வளையே —-8-3-9-

வரை யெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே —8-3-1-

கோவர்த்தன கிரியை தோள் அசையும்படி எடுத்துக் கொண்டு நின்றான் ஆயிற்று –
மிக்க பரிமளத்தை உடைத்தான திருத் துழாய் மாலையையும் உடைத்தாய்
பெரிய மிடுக்கையும் உடைத்தாய்-மலை போலே இருக்கிற திருத் தோள்கள் அசையும் படியாக
மலையை எடுத்து பரிஹரித்த ஆபத் சகனான சர்வேஸ்வரனுக்கு-என்னுடைய தர்ச நீயமான வளையை இழந்தேன் –
(அரியன செய்தவன் என்னை அறியாமல் இருக்கிறானே )

மருப்பு ஒசித்தார்க்கு இழந்தது என் கன வளையே —8-3-2-

அதன் கொம்புகளை அநாயாசேன முறித்துப் பொகட்ட அச் செயலுக்கு வளை இழந்தேன் –
மாடங்கள் அழகிலும் -படுக்கை வாய்ப்பாலும் -களிறு தரு புணர்ச்சி -உலக இயல்பு -வளை இழவாமை-
இங்கு தன்னையே நமக்கு ரஷித்து அளித்த செயல்

செங்கண் மால் யம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-3-

புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு ஒரு காலும் கழற்ற ஒண்ணாத வளையை இழந்தேன் –
சங்கு தங்கு முன் கை நங்கையாய் இருக்க வேண்டியவள் அன்றோ இழந்தேன் –

புணர் மருதம் இற நடந்தாற்க்கு இழந்தேன் என் பொன் வளையே —8-3-4-

இரண்டு எண்ண ஒண்ணாத படி நிர் விவரமாய் இருக்கிற மருதுகள்
முறிந்து விழும்படியாக போன முக்தனுக்கு என்னுடைய ஸ்லாக்கியமான வளையை இழந்தேன் –

தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே—8-3-5-

முகம் எங்கும் தடவிக் கொள்ளுகிற இளிம்பனுக்கு நான் இளிம்பு பட்டேன் –

அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே—8-3-6-

தன்னுடைய ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவனுக்கு என் பருவத்தில் ஒருவனுக்கு உதவினான் அன்றோ
என்று இருந்தாயிற்று வளை இழந்தது –
(ஈஸ்வரனாக தன்னை நினைத்தவனை நஸ்வரன் என்று காட்டிய அவதாரம் அன்றோ )

உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே —8-3-7-

பிரளய காலத்தில் எடுத்து வைத்து பின்னே வெளி நாடு காண உமிழ்ந்த சர்வேஸ்வரனுக்கு
அவனுடைய ஆபத் சகச்வத்தை விஸ்வசித்து கிடாய் நான் கெட்டேன் -என்கிறார் –

செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-8-

சிவந்த கமலத்தை உடைத்தான திரு நாபியை உடையவனுக்கு -உத்பாதகனை -விஸ்வசித்து முடிந்தேன் -என்கிறாள் –

பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே —-8-3-9-

தூங்கு மெத்தை போலே அசையா நின்றுள்ள திரு வநந்த ஆழ்வான் மடியிலே ஏறட்டுக் கொண்டு
ஆயிரம் வாயாலும் அனுபவத்துக்கு பாசுரமான ஆயிரம் திரு நாமங்களையும் சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணுகையால் வந்த பெருமையை உடையவனுக்கு
யசோதை பிராட்டி தன் மடியிலே வைத்துக் கொண்டு ஆடுமா போலே ஆயிற்று –
(அது எளிமையால் மேன்மை இது மேன்மையால் மேன்மை )
இழந்தேன் என் பெய் வளையே-
தன்னை ஒழியச் செல்லாமை உடையாருக்கு தன்னை கொடுக்குமவன் அன்றோ –
நம் செல்லாமை பரிஹரியானோ விஸ்வசித்து வளை இழந்தேன் -என்கிறாள் –

—————————

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;–4-4-2-

பெய் வளைக் கைகளைக் கூப்பி-
அவனைத் தொழுவித்துக் கொள்ளும் பரிகரம் உடையவள் தான் தொழா நின்றாள்-
அவளைத் தொழுவிக்கப் போலே காணும் கையில் வளை கொண்டது
அவன் சங்கு சக்கரம்-கடல் வண்ணன் என்றவாறே -கழன்ற வளைகளை ஒழிய -சரிந்த வளைகள் பூரித்தன-காணும் –
கையிலே பிரம்மாஸ்திரம் இருக்க இவள் படும் பாடு இது –
பரகால நாயகி திருக்கையில் மடல் போலே –
வீரக் கழல் உடன் பட்டு கிடப்பாரைப் போலே இவள் கிடக்கிற கிடை –

———-

வினை யுடையாட்டியேன் பெற்ற
செறிவளை முன் கைச் சிறுமான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?–4-4-3–

முன் கையிலே செறிந்த வளையை யுடையவள்;
இதுவன்றோ இருக்கத் தகும்படி!
முன்பு இருக்கும்படியாதல்,
பின்பும் அப்படியே இருக்கத் தகுமவள் என்னுதல்.
அன்றிக்கே, ‘இவள் வளைத்தழும்பு அவன் உடம்பில் காண்கை அன்றிக்கே,
இவள் உடம்பிலே அவன் உடம்பில் திருத்துழாய் காணுமத்தனையாவதே!’ என்பாள்,
‘செறிவளை முன்கை என்கிறாள்’ என்னுதல்.

——–

வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறையிலமே–4-8-7-

நீல மணி போலே வளரா நின்றுள்ள ஒளியை யுடையவன்.
கை மேலே இலக்கை-(மாத ஜீவனமான பணமும், இலட்சியமும்) பெறாதார்க்கு-அன்றாடு – நாடோறும்
படி ( ஜீவனமான பணமும், இலட்சியமும். படி – ) விட வேண்டுமே அன்றோ?
படி விடாத போது அரை ஷணமும் நில்லார்களே அவர்கள்.
படி கண்டறிதியே’-முதல் திருவந். 85. என்றபடி இப்படிக் கண்டு ஜீவிக்குமது இறே

சதா பஸ்யந்தி ஸூரய எப்பொழுதும் பார்த்துக் கொண்டே யிருக்கிறார்கள்,’ என்கிறபடியே,
இப்படிக் கண்டு ஜீவிக்குமதே யன்றோ உள்ளது?

மணி நீல வளர் ஒளி’ என்பது என்? அப்போது திருமேனி வெளுத்து அன்றோ இருந்தது?’ என்னில்,
சிறுக்கன் துன்பம் தீரப் பெற்றோமே!’ என்று திருமேனி குளிர்ந்த படியைச் சொல்லுகிறது.

அவ் வடிவை யுடையவன் தானே வந்து மேல் விழுந்து விரும்பி வாங்கி இட்டுக் கொள்ளாத
இவ் வளையால் எனக்கு என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.

————

வரி வளையால் குறையில்லாப் பெரு முழக்கால் அடங்காரை-4-8-8-

ஸ்ரீ பாஞ்சஜன்யத்தாலே. வளை – சங்கு.முகத்திலே வரியை யுடைய –

குறை இல்லாப் பெரு முழக்கால் –
சகோஷா தார்த்த ராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் – அந்த ஒலியானது திருதராஷ்டிரன்
புத்திரர்களுடைய நெஞ்சுகளைப் பிளந்தது,’ என்றும்,
ஜகத் சா பாதால வியத்தி கீஸ்வரம் ப்ரகம் பயாமாச – அந்தப் பாஞ்சஜன்யமானது, பாதாளம் ஆகாயம் திக்குகள்
திக்குப்பாலர்கள் ஆகிய இவற்றோடு கூடின உலகத்தை நடுங்கச் செய்தது,’ என்கிறபடியே,
பகைவர்கள் அளவு அல்லாத மஹா த்வனியால் -பெரிய ஒலியாலே.
ஹஸ்தேந ராமேண – கையினாலே ஸ்ரீராமனாலே’ என்னுமாறு போலே
வரிவளையால் பெருமுழக்கால்’ என்பது வேற்றுமை உருபு மயக்கம்.

——

என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

என்னுடைய பந்தும் கழலும்
கைப்பட்ட பந்தையும் கழலையும் போர விரும்பப் புக்கான்.
என்னுடைய பந்தும் கழலும் –
பாவியேன், நீ எங்கே செய்ய வேண்டியன வற்றை எங்கே செய்கிறாய்?
அவை நீ நினைக்கின்றவர்களுடைய பொருள்கள் அல்ல காண்; அவை எங்களுடைமை காண்’ என்றார்கள்.
அதுதான் மெய்யே’ என்றான். இவன் விருப்பத்துக்கு அது தானே யன்றோ வேண்டுவது;
யஸ்யை தே தஸ்ய தத் தனம் -அரசனே! மனைவி வேலைக்காரன் மகன் ஆகிய இவர்கள் ஒருவனுக்கு
அடிமைப்பட்டவர்களே; இவர்கள் எவருக்கு அடிமைப் பட்டவர்களோ அவருக்கு இவர்களுடைய பொருள்களும்
அடிமைப்பட்டனவாம்” என்கிறபடியே, மற்றையது அநந்தரத்தே -உடனே -வரும் அன்றோ.

அதாவது ஸ்வரூப ஞானமுடைய உன்னுடைய மமகார விஷயம் அடங்கலும்
என்ன தன்றோ என்று போகத் தொடங்கினான் –
இனி, இத் திருவாய் மொழியினுடைய ப்ரவேசத்திலே ‘முடியப் பார்க்கிறாள்’ என்று சொல்லிற்று ஒன்று உண்டு.
அது, இப் பதத்திலே தோற்றுகிறது.
அவன் சந்நிதியிலே ‘என்னது’ என்று சொல்லுகைக்கு மேற்பட்டது ஒரு முடிவு இல்லை அன்றோ.
த்வ்யக்ஷரஸ்து பவேத் ம்ருத்யு: த்ர்யக்ஷரம் ப்ரஹ்மண: பதம்
மமேதி த்வ்யக்ஷர: ம்ருத்யு: நமமேதி ச சாஸ்வதம்”- பாஞ்சராத்திரம்

யானென தென்னும் செருக் கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். -திருக்குறள்.

மம என்ற இரண்டு எழுத்துக்கள் நாசத்துக்குக் காரணமாகின்றன”“ என்பது அன்றோ சாஸ்திரம்.
தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யயுத்ஸவ: மா மகா: பாண்டவாஸ்
சைவ கிம் அகுர்வத ஸஞ்ஜய” , ஸ்ரீ கீதை. 1 : 1.
என்னுடைய புத்திரர்களான துரியோதனன் முதலியோர்களும், பாண்டவர்களும்” என்கிற விடத்துச் சிறியாத்தான் சொல்லும்படி:
என்னுடையவர்கள் என்றும், பாண்டவர்கள் என்றும் பிரித்தான், அது வன்றோ விநாச பர்யந்தம் ஆகி விட்டது” என்று.
இது தான் தத்தவ கதையே -உண்மை நிலையை மாத்திரம் பற்றிய வார்த்தை அன்று,
பிரணய கோஷ்டியிலும் கலவியிலே வந்தால் ‘உன்னது, என்னது’ என்கை யன்றோ உறவு அறுகையாவது.

என்னுடைய பந்தும் கழலும்-
ஆத்மே த்யேவது க்ருஹணீயாத் – தான் என்றே பரமாத்மாவைத் தியாநிக்கக் கடவன்” என்கிறபடியே,
ஒன்றை ஒன்று உபாசியா நிற்கச் செய்தே, தன்னை உபாசித்தது என்று சொல்லலாம்படி அன்றோ
இரண்டு வஸ்துக்களுக்கும் -ப்ரத்யாசத்தி -தொடர்பு- இருக்கிறபடி.
ஸ்வரூபம் விசதமானால் -தெளிவானால் ‘நான்’ என்னவுமாய், ‘அடியேன்’ என்னவுமாய்க் காணும் இருப்பது.

தந்துபோகு நம்பி-
நீ இங்கே கால் தாழாநின்றாய்;
இதற்கு ஒரு தாத்பர்யம் -கருத்து அறியாதே உன்னை உபேக்ஷிக்கத் தொடங்குவர்கள்; அதற்கு முன்னே போ.
நம்பீ
முகப் பழக்கமும் இன்றிக்கே இருந்தது; முதலியாருமாய் இரா நின்றீர்;
கடுகப் போகப் பாரும் என்பாள் ‘நம்பீ ’ என்கிறாள்.
கண்ட காட்சி புல்லெழுந்து போனபடி யன்றோ இவள் இங்ஙன் சொல்லுகிறது” என்று பெரிய முதலியார் பணிப்பர்.
என்னுடைய பந்தும் கழலும்’ என்ற இடம், அவன் பொகடுகைக்குச் சொன்ன வார்த்தை.
தந்து போகு’ என்றதனால், அவன் விரும்பினவை ஒழியத் தனக்குச் செல்லாது என்னுமிடம் தோற்றுகிறது.
நம்பி –
ஷோடச ஸ்திரீ ஸஹஸ்ராணி சதமேகம் ததோதிகம்
தாவந்தி சக்ரே ரூபாணி பகவாந் தேவகீ ஸுத:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 31 : 17.
பதினாறாயிரம் பெண்களையும் அதற்கு மேலே ஒரு நூறு பெண்களையும் ஸ்ரீ கிருஷ்ண பகவான் விவாகம் செய்து கொண்டார்”
என்கிறபடியே, உமக்குப் போனவிடம் எங்கும் கொண்டாட்டத்தால் குறை இல்லை;
எங்களுக்கு உம்மை ஒழிய வேறு கதி இல்லை;
இனி, உம்முடைய திருக் கரங்களின் ஸ்பர்சம் -சம்பந்தமுண்டாய்ப் பொகட்டவை கொண்டாகிலும்
எங்களுக்கு ஜீவித்துக் கிடக்க வேணும்;
ஆன பின்னர், அவற்றை எங்களுக்குத் தந்து போம்.
அன்றிக்கே
உயிரை வைத்துப் போம்” என்பாரைப் போலே ‘தந்து போகு’ என்கிறாள் என்னுதல். என்றது,
இவன் இவற்றைக் கைவிட்டுப் போக மாட்டான் என்று அறிந்து-
மர்மஞ்ஜை -அவன் மனக் கருத்தை அறிந்தவர்கள் -ஆகையாலே ‘தந்து போகு’ என்கிறார்கள்

——–

கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே–6-6-1-

தர்ச நீயமாய் -காட்சிக்கு இனியவாய் வாத்சல்யத்தாலே சிவந்து,
விகாசாதிகள் -மலர்ச்சி முதலானவைகளை யுடையவான திருக் கண்களை யுடையவனுக்கு.
தாமரைத் தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான்” என்று திருக் கண்களாலே யாயிற்று அகப்படுத்திக்கொண்டது.
விசேஷணம் தோறும் அவனுக்கு என்று தனித் தனியே அகப்பட்ட துறைகளைச் சொல்லுகிறாள்.
மாலுக்கு’ என்று தொடங்கி, தன் மகள் மேல் பட்ட அம்புகளை எண்ணுகிறாள்;
இது ஒரு குத்து, இது ஒரு வெட்டு, இது ஒரு அம்பு என்று.

என் கொங்கு அலர் ஏலம் குழலி –
மதுஸ்யந்தியாய் தேன் பெருக்கு எடுக்கின்ற பூக்களை யுடைத்தாய்,
நறு நாற்றத்தை யுடைத்தான குழலை யுடைய என் பெண் பிள்ளை.
கொங்கு – தேன், அலர் – பூ, ஏலம் – நறுநாற்றம்.
இவள் மயிர் முடி ஒன்றுக்குத் தோற்றுக் குமிழி நீர் உண்ணும் அவன் கண்டீர் இவளை அழித்தான்!
பங்களப் படை கொண்டு, தனி வீரம் செய்வாரை அழிக்குமாறு போலே-

இழந்தது சங்கே –
இவள் மயிர் முடி கண்டு அவன் இழக்கக் கடவதனை இவள் இழந்தாள்.
சங்கு -வளை

————

நங்கள் வரி வளை யாயங்களோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தட முலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

நங்கள் வரிவளை –
முன்பு உங்களோடு என்னோடு வாசியற எல்லார்க்கும் உண்டான வளை-என்னுதல் –
அன்றிக்கே
த்வம் வ்யச்ய அஸி மே ருத்ய ஹி ஏகம் துக்கம் சுகம் ச நௌ
சுக்ரீவோ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரக்ருஷ்டவத் -கிஷ்கிந்தா 5-18-
இன்ப துன்பங்கள் நம் இருவருக்கும் ஒன்றே -என்கிறபடியே
இன்ப துன்பங்கள் ஒன்றாக சொல்லிப் போந்த நீங்கள் அனுஷ்டானத்தில் வந்தவாறே
பேதிப்பதே -வேறுபடுவதே -என்கிறாள் -என்னுதல்
இப்போது அனுஷ்டானத்தில் -செய்கையில் வேற்றுமை என் என்ன –
கை மேலே கண்டிலேமோ -நான் சங்கை அற்று இருக்கிறேன்
நீங்கள் சங்கை உடையீர் கோளாய் இருக்கின்றீர் கோள் அல்லீரோ –

வரி வளை
வரியை உடைய வளை -என்னுதல் -தர்ச நீயமான -அழகிய வளை -என்னுதல் –
இவளைத் தரிப்பிக்கைக்காக அவர்களும் வருந்தி தரித்து இருப்பார்கள் அன்றோ –
பிராட்டியை பிரிந்த இடத்தில் பெருமாளைக் காட்டிலும்
தம்முடைய காவல் சோர்வாலே வந்தது என்று தளர்த்தி இரட்டித்து இருக்கச் செய்தேயும்
பெருமாள் தளருவர் என்று தம்முடைய தளர்த்தி தோற்றாதபடி இளைய பெருமாள் தரித்து இருந்தாப் போலே
இவர்களும் தரித்து இருப்பார்கள் வளையை –

சங்கம் சரிந்தன –
நான் இத்தை யாருக்கு மறைத்து யாருக்கு வெளி இடுவது
ஜகத் அஸ்தமிதம் -உலகமே அழிந்தது என்றது போலே காணும் இருக்கிறது –
இவளைக் கிடையாத போதை நாயகன் இலன்-
நாயகன் இல்லாத போது உபய விபூதியும் இல்லை -என்றது
இவள் கையும் வளையுமாக இராத அன்று நாயகன் உளனாக மாட்டான் –
இருவருமான சேர்த்தியில் உண்டாகக் கூடிய உபய விபூதியும் அழியும் என்றபடி –

——

காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

காணப் பெற்றால்
ஈண்டிய சங்கும் –திரண்ட வளையையும்
ஒரு வலம்புரி கிடந்த இடத்தே ஆயிரம் சங்குகள் சேரும்
வலம் புரி ஆழியன் வேங்கட வேதியன் -அன்றோ –
நிறைவும் –அடக்கத்தையும்
கொள்வான் -கொள்கைக்காக
தன் பக்கல் தொங்காதவை எல்லா வற்றுக்கும் புகல் அங்கே என்று இருக்கிறான் –
இவளுக்கு கை முதல் அங்கே அன்றோ
இது வாகில் உன் துணிவு காலம் சென்றவாறே நீயே இளைத்து மீளுகிறாய் -என்ன
எத்தனை காலம் இளைக்கின்றேனே
இது சொல்லி பகட்டக் கேட்பேனோ-இந்த ஆசையோடு எத்தனை காலம் உண்டு இளைத்துப் போருகிறது-

——

நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான் எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-

நீலமான நிறத்தை யுடையதாய்
மலர்-விஸ்த்ருதமாய்
நெடு-அபரிச்சேத்யமாய்
சோதி இத்யாதி-தேஜஸ்ஸாலே சூழப் பட்டு -அபரிச்சேதயமாய் இருப்பதொரு காளமேகத்தின் நிறம் போலே
இருக்கிற நிறத்தினை யுடையனாய்
அவ்வடிவை பரார்த்தமாக்கி வைக்கும் அவன் அபஹரித்த தர்ச நீயமான வளையோடே கூட
அவன் வாய் புலற்றும் நிறத்தையும் மீட்டுக் கொள்ளுகைக்காக
காலம் எல்லாம் கூடச் சென்றும் ஞாலம் அறியப் பழி சுமந்தேன்
நன்னுதலீர் இனி நாணித் தான் என்
எத்தனை காலம் கூடச் சென்று-நெடும் காலம் சம்ஸ்லேஷார்த்தமாகக் கூடச் சென்று என்னுதல்

—–

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன் கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன்பு பரிசு இழந்தேன்–8-2-4-

இனி என் கொடுக்கேன் –-பண்டே எல்லாம் இழந்த பின்பு இனி எதனை இழப்பது –
கோல் வளை நெஞ்சம் தொடக்கம் எல்லாம் பாடு அற்று ஒழிய இழந்து –
தர்ச நீயமான -அழகிய வளை –நெஞ்சு -தொடக்கமானவற்றை எல்லாம் என் பாடு அற்று
வாசனையோடு போம்படியாக இழந்து
எல்லாம்-அவன் விபூதியைப் போலே யாகும் இவள் பரிகரத்தின் பரப்பும்
ஆதலின் எல்லாம் என்கிறது
வைகல் பல் வளையார் முன் பரிசு இழந்தேன் –
கழற்றிப் பூணும் ஆபரணமும் இழவாதவர்கள் முன்பே கழற்ற வேண்டாத ஆபரணமான பரிசு உண்டு –
பிரகாரம் -நாணம் -அதனையும் இழந்தேன்

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்–8-2-8-

நம்முடையவான நிறமும் வளையும் நெஞ்சும் ஆகிய
பாஹ்யங்களோடு -புறப் பொருள்களோடு ஆந்தரங்களோடு -உட் பொருள்களோடு வாசி அற
நம் பக்கல் ஒன்றும் எஞ்சாதவாறு கைக் கொண்டான்
அடையும் வைகுந்தமும்-சேரும் பரமபதமும்
இத் தலையில் உள்ள எல்லாமும் நேராகக் கொண்டு
எட்ட ஒண்ணாத நிலத்தில் போய் பாரித்து வெற்றி கொண்டாடி இருந்தான் -என்கை

—————–

மாதரைத் தம் மார்பகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே–9-7-6-

என் வார்த்தையான தூது வார்த்தையைச் சொல்லப் பார்த்தீர் கோள் ஆகில்
என்னுடைய அழகிய வளையும் கலையும் சீர் கேடு அடைந்தபடியைச் சொல்லும் கோள்
அன்றிக்கே
செப்புதிரே யாகில் -அது தானே எனக்கு சுடர் வளையும் கலையும் ஆம் -என்னுதல்
அறிவிக்கும் அதுவே குறை–அவன் வரவு தப்பாது –

சுடர் வளையும் கலையும் கொண்டு அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக் களத்து உறையும் –9-7-7-

இத்தலையில் தனக்கு பிரயோஜனமான அம்சத்தை -பாகத்தை கொண்டு
என்னைப் பொகட்டுப் போனான் -என்றது
தனக்கு தாரகமானவற்றைக் கொண்டு அல்லாதவற்றை பொகட்டுப் போனான் -என்றபடி –
சங்கம் சரிந்தன -என்ற திருப் பாசுரத்தில் கூறிய படியே
எல்லாப் பொருள்களும் உருக் குலைந்து கிடக்க –
சுடர் வளையும் கலையும் -என்று விசேஷித்து கூறியது என் என்ன –
கைக்கு அடங்கியதையும் கொண்டு மடிச் சரக்கையும் கொண்டு போனான் என்றது
முக்கிய பொருள்களை மாத்ரம் கொண்டு போனான் என்றபடி –

———

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ-10-3-7-

விரஹ கார்ஸ்யத்தாலே -பிரிவினால் உண்டாகிய மெலிவால் வெள் வளைகளும் மேகலைகளும் கழன்று விழும்படியாகவும்
வெள் வளை –சங்கு வளை- பிறர் அறியாதபடி பல் காலும் எடுத்து இடுவது பேணுவது ஆனாலும்
அவை நிராஸ்ரயமாக- பற்றுக் கொடு இன்றி நில்லாவே ஆகாசத்தில் தொங்காவே –
அப்படி காணும் உடம்பு இளைத்தபடி –

——-

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
தினி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே–திரு விருத்தம்–13-

துக்கம் வளரா நின்றுள்ள காதலை உடைத்தான துழையை துழாவி வருகிற குளிர்ந்த வாடையை
இரு முறியாக வெட்டி இனி வளையை காப்பவர் ஆர் ?தண் வாடை அமூர்தம் மூர்த்தம் ஆகிற படி பாதகத்வத்தில் உறைப்பு
இனி வளை காப்பவர் ஆர் ? -வந்து கிட்டுவது காணும் என்று இருக்கிறாள்
எனை வூழிகள் ஈர்வனவே –அநேகமான கல்பங்கள் ஈரா நின்றன ..
ஆழ்வாருக்கு சம்சாரத்தோடு பொருந்தாமை இருந்த படி சொல்கிறது-

——

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்திகள் ளூரும் துழாய்
கொயல்வார் மலர் மேல் மனத்தொடு என் னான்கொல் எம் கோல வளைக்கே –24–

கொயல்வாய் மலர் மேல்-வட்டமாய் செவ்வியை உடைத்தான மாலையிலே மனம் ஆயிற்று-
எம் கோல் வளைக்கே -என்னால் முடிய புகுகிறது என்று அறிகிலேன்
மலர் மேல் மனத்தொடு -அந்த கரணம் பிரவணம் ஆன படி-

——–

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-

என்னுடைய வளை நிமித்தமாக-
கண்ணன் இத்யாதி–சர்வேஸ்வரன் உடைய மண்ணையும் விண்ணையும்
ரஷியா நின்ற வாஞ்சையை பக்னம் ஆக்கா நின்றது
நம் கோன் உகக்கும் துழாய் –சம்சாரத்தின் அபலையான இவளை பெற்றால்
என் செய்யாது–சர்வேஸ்வரன் தானே உபய விபூதியையும் ரஷிக்க கடவ ஆக்ஜையை
பக்னம் ஆக்கா நின்றான்-என் உடையவளை நிமித்தமாக
இவனை அழிக்க தொடங்கினால் வேறு ரஷிப்பார் யார் என்றுமாம்

———

கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை விரிகின்றது–47-

இத்தால் ஆழ்வாருடைய ப்ரக்ருதியா உண்டான மார்த்வத்தையும் ஆற்றாமையையும் இவர் ஆசைப்பட்டது அந்தரங்க விருத்திகள்
ஆகையால் அது பெறாமையால் வரும் ஆற்றாமை பாடாற்றலாம் அல்லது என்னும் இடத்தையும் கேட்டவர்கள்-
இனி இவரைக் கிடைக்க மாட்டாதோ என்னும்படியான தம் தசையைப் பார்ஸ்வத்தவர்கள் பாசுரத்தால் தாம் அனுபவிக்கிறார் –

——-

சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –

வளை விற்கும் செட்டிகள் பக்கலிலே விலைக்கு கொண்ட சங்கங்களை வாங்கிக் கொள்ள பாரா நின்றது –
நாங்கள் தன்பாடே சென்றோமோ-தன்னை நெருக்கி கொண்டோமோ
வேரித் துழாய் துணையா –
நறு நாற்றத்தை உடைய திருத் துழா யை தனக்கு கூட்டுப் படையாக கொண்டு –
அங்கு நின்று மிலை யமுது கொண்டு வந்து காணும் நலிகிறது –
சக்கரவர்த்தி திருமகனை அண்டை கொண்டு மகாராஜர் வாலியை அறை கூவினால் போலே-
திருத் துழையை அண்டை கொண்டு நலியத் தொடங்கிற்று –

———

நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன் வளைத் திறமே – -69 – –

உன் வளை இடையாட்டமாக நீ வருந்த வேண்டா -வேணுமாகில் அவன் கையில் வளை இடையாட்டமாக
வருந்தில் வருந்து -அப்பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்றது நங்கையிலே அகப்பட்டு இருப்பதொன்று –
அதற்கு மங்களாசாசனம் பண்ணு –
இத்தால் அவனுடைய குண ஞானத்தாலும் -அவன் இத்தலையை அவஹாகித்த படியாலும்
தரிப்பித்த படியை சொல்லிற்று கீழ் –
இதில் அது வேண்டாதே இருவருடையவும் தர்மிஹ்ராக பிரமாணமே அமையும் தரிக்கைக்கு என்கிறது –
அவனாகில் ரஷகனாய் -இத்தலையாகில் ரஷ்யகமாய் இருக்கும் இறே –
வருந்தேன் உன் வளைத் திறமே -மாசு ச -என்கிறாள் -அஹம் த்வா -என்று இருவருடையவும் சொல்லி வைத்து இறே -மாஸூச -என்றது –
இருளாகிற காரேறு செகிலேற்றின் சுடருக்கு உளைந்து செல்வான் போரேற்று எதிர்ந்தது -பிரத்யஷ்யமான சந்த்யையை-
ருஷபங்கள் என்று சொல்லுகிறது என் என்ன -புன் தலை மாலை ஆகையாலே –
புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே –
வாரேற்றின இள முலையாய்-உன் வளைத் திறம் வருந்தேல் -என்று அந்வயம்

———

இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே–76-

நம்முடைய சங்கு வளையின் மேலே விஷம் போலே பரக்கும் இது ஒரு விஸ்மயமோ –
வெள் வளைக்கே -தம்தாமுக்கு பிராப்தியாய் உள்ள இடங்களிலே நலிகை முறை இறே –
தானும் வெண் திங்களாய் -இதுவும் வெள் வளை யாகையாலே -நிறத்திலே சாம்யம் கொண்டு -நலியலாம் இறே –
வியன் தாமரை இத்யாதி -வாசி அறியாதார் என் செய்யார்கள் -விஸ்மயநீயமான தாமரையினுடைய பெருத்த பூவானது ஒடுங்கவும் –
ஷூத்ரமுமாய் புல்லிதமுமான ஆம்பல் அலரும்படியாகவும்
பண்ணுமதான வெண் திங்கள் -நங்கள் வெள் வளைக்கே விடம் போலே விரிதவிது வியப்பே –
ஸ்வா பதேசம்
இத்தால் -திரு உலகு அளந்து அருளின போது -சாத்தின அச் செவ்வி மாலையை இப்போது
பெற வேணும் என்று ஆசைப்பட்டு பெறாமையாலே அனுகூல பதார்த்தங்கள் அடைய பாதகமாய் இருக்கிறபடியை சொல்லுகிறது –
முதலியாராக -ஸ்வாமி ஆகைக்காக-

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீபாஞ்சராத்ரம்–ஸ்ரீ ரெங்க பங்கஜம் –ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள்–

July 8, 2021

ஸ்ரீபாஞ்சராத்ரம்

நமஸ் ஸகல கல்யாண தாயிணே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரண ஹேதவே!
நமஸ் சாண்டில்ய குரவே சனகாயன நமோ நம:
ஔபகாயண சாண்டில்ய பாரத்வாஜஸ்ச கௌசிக:
மௌஜ்யாயநஸ்ச பஞ்சைதே பாஞ்சராத்ர ப்ரவர்த்தகா:
தீக்ஷாச்சார்ய: ஜகத் ப்ரக்ஞா: திசந்து ஞானமத்புதம்

இது ஸ்ரீரங்கதிவ்ய க்ஷேத்திரத்திலே நம்பெருமாளின் அர்ச்சகர்கள் அநுதினமும் அநுசந்திக்கும் ஸ்ரீபாஞ்சராத்ர தியான ஸ்லோகம்.

என்ன சொல்லி துதிக்கின்றது இந்த ஸ்லோகம்..?

உன்னை ஆராதிக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும்,
ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் ஆகிய ஐந்து ரிஷிகளுக்கும் போதித்து
அவர்களை பாஞ்சராத்ர ப்ரவர்த்தகளாகவும், இந்த ஜகத்திற்கே பிரகாசம் அளிக்கக் கூடியவர்களாக்கி,
அத்புதமான ஞானத்தினை அவர்களுக்கு அருளிய சகலவிதமான கல்யாண குணங்களையும் உடைய,
சக்கரத்தினை கையில் தரித்துள்ள ஸ்ரீமந் நாராயணனை வணங்குகின்றேன்.
சாண்டில்ய மகரிஷியினையும், சனகரையும் வணங்குகின்றேன்!

இந்த ஸ்லோகத்தில் “சக்ர பாணயே“ என்று துதிப்பதற்கு என்ன காரணம்..? யார் இந்த ஐந்து ரிஷிகளும்..?
ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் ஆகிய இந்த ஐந்து ரிஷிகளுமே பஞ்சாயுதங்களின் அம்சம்!
இதில பிரதானமானது ஸ்ரீசுதர்ஸனர்!.

இந்த ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரிகளில் பகவான் தனித்தனியே தன்னை ஆராதிக்கும் முறையை கற்பித்தான்.
ஐந்து ராத்ரிகளில் இது உபதேசிக்கப்பட்டமையால் இது பாஞ்சராத்ரம் என்றழைக்கப்படுகின்றது.

விஹகேந்திர ஸம்ஹிதை என்றவொரு க்ரந்தமானது, அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனர், பிரம்மா, சிவன்
ஆகிய ஐவருக்கும் முறையே ஐந்து ராத்ரிகளில் உபதேசித்தார், என்கிறது.

பாரத்வாஜ ஸம்ஹிதை என்கின்ற க்ரந்தமானது வேறொரு விதமாக பாஞ்சராத்ரத்தினை கூறுகின்றது.

நாம் இங்கு ஸ்ரீரங்கத்தில் எது பிரமாணமாக உள்ளதோ, ஸ்ரீரங்கத்தில் வழக்கத்தில் உள்ள தியான ஸ்லோகத்திலுள்ளபடி எடுத்துக் கொள்வோம்.

“ராத்ரி” என்றால் “இருள்” இந்த இருள் அறியாமையைக் குறிக்கும்.

“பாஞ்ச” என்றால் சூரியன் என்ற ஒரு பொருளுண்டு.

இந்த சூரியன் அறியாமையாகிய இருளை விரட்டவந்தபடியால் “பாஞ்சராத்ரம்”.

எது அறியாமை..?

எது முக்யமாக அறியப்பட வேண்டுமோ அதனை அறியாதது அறியாமை..!

எது முக்யமாக அடையப்பட வேண்டுமோ அதனை விடுத்து மற்றவற்றையெல்லாம் அடைதல், அடைய ஆசைப்படுதல் அறியாமை..!

பாஞ்சராத்ரம் சொல்கின்றது..

“யஸ்மின்யுக்தம் வாஸூதேவனே சாக்ஷாத்
ஞானம் யோக: கர்ம பக்தி: விபுக்தி:
ஏதத் ஞாத்வா ப்ரம்மபூதோ மஹாந்த:
தத்வத் சாஸ்த்ரம் பாஞ்சராத்ரம் ப்ரபத்யே..”

”பரம்பொருள் சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனே. நாம் ஞானத்தினாலோ, யோகத்தினாலோ, கர்மங்களினாலோ
அடையப்பட வேண்டியவன் இவனே“ என்கின்றது.

மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலா மானிடங்காள்*
உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்*
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவனல்லால் தெய்வமில்லை*
கற்றினம் மேய்ந்த எந்தை கழலிணை பணிமின்நீரே !

பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் கூட எளியவனாய் இருக்கும் இந்த கண்ணனின், நம்பெருமாளின் பொற்பாதங்களை பணிமின்!
இவனைத் தவிர ”நானே ஈஸ்வரன்” என்று சொல்லிகொண்டிருக்கும் தெய்வங்கள் பல உண்டானாலும், இவனல்லால் வேறு தெய்வமில்லை..!
இந்த பரம பருஷனிடத்து, அபயமளித்துக் காக்கும் எளியவனிடத்து அன்பில்லாது மதிகெட்டு நிற்கும் மானிடர்காள்!
உற்ற போது வரும்வரை இவனை நீங்கள் உணரமாட்டீர்கள்! ஸர்வேஸ்வரனான இவன் ஒருவனால் மட்டுமே நமக்காக அவதரித்து,
தம் நிலை தாழ நின்று தன்னைப் பற்றினார்காக தன்னோடு ஒத்த போகத்தினைத் தர காத்திருப்பவன்!.

பாரமேஸ்வர ஸம்ஹிதை (1,39-41) சொல்கிறது.

“அடர்ந்த இருளைப்போன்று, பஞ்சபூதங்களான நிலம், நீர், அக்னி, வாயு, ஆகாயம் ஆகிய பிரகிருதியின்
சம்பந்தமுடைய அனைத்தும் உண்மை நிலையறியாது அஞ்ஞானத்தினால் மூடப்பட்டு கிடக்கின்றன.
இந்த அஞ்ஞானத்தினை அகற்றி, ஞான விளக்கேற்ற வந்த தீபமே பாஞ்சராத்ரம்“ என்கிறது.

விஸ்வாமித்ர ஸம்ஹிதை (2.3.5) சொல்கிறது

பஞ்சேந்திரியங்களினால் இயங்கும் இந்த மனிதனுக்கு “பஞ்சரா“ என்று பெயர்.
இந்த பஞ்சேந்திரியங்களினாலும் எது அறியப்படவேண்டுமோ, எது அடையப்பட வேண்டுமோ,
அதற்கான வழிமுறையை வகுத்து அவனை வழிநடத்திக் கொண்டுபோகும் சக்தி “பாஞ்சராத்ரம்“ என்கின்றது.

புருஷோத்தம ஸம்ஹிதை (1.4) சொல்கிறது

பக்தி ஒன்று மட்டுமே ஒருவனை பிறவிதனிலிருந்து விடுவிக்கக்கூடியது.
இந்த பக்தியை ஊட்டுவது, பரப்புவது பாஞ்சராத்ரம் என்கிறது.

பிள்ளைலோகாச்சாரியாரின் “முமுக்ஷுபடி“ வ்யாக்யனத்திற்கான மாமுனிகளின் அவதாரிகையில் மாமுனிகள் கூறுகின்றார்.
இவர் பாஞ்சராத்ரத்தைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லவில்லை யானாலும் இங்கு இத் தருணத்தில் நினைவுகூறத் தக்கது..

“நித்ய ஸூரிகளோ பாதி தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரஸராய் வாழ்க்கைக்கு ப்ராப்தி உண்டாயிருக்கச் செய்தேயும்,
அத்தை இழந்து “அஸன்னேவ” என்கிறபடியே அசத் கல்பராய் கிடக்கிற ஸம்ஸாரி ஸேதனருடைய இழவை அனுசந்தித்து
அத்யந்த வ்யாகுல சித்தனாய் இவர்கள் கரண களேபரங்களை இழந்து,
இறகொடிந்த பட்சிப் போல கிடக்கிற தசையிலே, கரணாதிகளைக் கொடுத்து…….”

பகவானை அனுபவிக்க முடியாது அசக்தராய் அஞ்ஞானத்தில் உழன்று, சிறகொடிந்த பறவை போல தவிக்கின்ற ஸம்ஸாரிகளை,
நித்ய ஸூரிகளைப் போன்று நித்யம் கைங்கர்யம் செய்யும் ஆசையுண்டாகி, அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு ஒரு “ப்ராப்தி“ உண்டாக,
இந்த வாழ்க்கையில் கடைத்தேற, இந்த சேதனருடைய வாழ்க்கை வீணாகிவிடுமோ என்ற கவலையினால்
பகவான் கவலைப்பட்டுக் கொண்டே யோசித்து. அவர்கள் உய்யும் வழிக்கான ஞானத்தினை அளிக்கின்றான் என்கிறார்.

பாஞ்சராத்ரம் இந்த உலகம் உய்யும் வழிக்கான ஞானம். இந்த ஜீவன்கள் கடைத்தேற பகவானாலேயே அருளப் பெற்ற வழிமுறை.

எல்லாமுமாய் அனைத்தையும் தன்னுள் அடக்கி ஏகமாய் நிற்கும் அவனைத் தொழும் வழிக்கு,
நம்மை அழைத்துச் செல்லும் அயனம் (பாதை) – அதாவது “ஏகாயனம்”.

பாஞ்சராத்ரமானது “ஏகாயன வேதம்” என்றும் அழைக்கப் பெறுகின்றது.
சாந்தோக்ய உபநிஷத்“ என்று ஒரு உபநிஷத். இதில் நாரதரும் சனகரும் இருவரும் தம்தம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு பகுதி
இதில் “ருக்வேதம் பகவோத்யேபி, யஜூர் வேதம், சாமவேதம், ஹ்யதர்வணம், வாகோவாக்யம், ஏகாயனம்…“என்று
பாஞ்சராத்ரத்தினை ஏகாயனம் என்று குறிப்பிட்டு ஒரு சொற்றொடர் வருகின்றது.
இதன் மூலம் நாரதர் பேசுவதாக வரும் ”சாந்தோக்ய உபநிஷத்“ தின் காலத்திற்கு பலகாலம் முன்பே உள்ள
பாஞ்சராத்ரத்தின் அருமையினை தெரிந்து கொள்ளலாம்.
(இந்த பாஞ்சராத்ர ஆகமத்தினை பகவான் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்து பிரம்மாவினால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்டு
பின்னர் நாரதர் ஐந்து ரிஷிகளிடத்தும் உபதேசித்தாகவும் ஒரு கருத்துண்டு..!)

ஒரு காலத்தில் சில முக்கிய பாஞ்சராத்ர ஆகம முறைப்படியுள்ள கோவிலில் பூஜை செய்தவர்கள் அனைவருமே
ஔபகாயன, சாண்டில்ய, பாரத்வாஜ, கௌசிக, மௌஞ்யாயன ஆகிய ஐந்து கோத்ரத்தினை சேர்ந்தவர்களாக மட்டுமேயிருந்தனர்.
அது போன்று அவர்கள் சுக்ல யஜூர் வேதம், காண்வ சாகை என்ற பிரிவைச் சார்ந்தவர்களாயும் மட்டுமே இருந்தனர்.

தற்சமயம் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், மேல்கோட்டை ஆகிய மூன்று திவ்ய தேசங்களில் மட்டும் இந்த ஐந்து கோத்ரத்தினைச் சார்ந்தவர்கள்
மட்டுமே அர்ச்சகர்களாய் கைங்கர்யம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் அருகிலுள்ள பல பாஞ்சராத்ரகோவில்களிலும் பணியாற்றியுள்ளனர்.
இப்போதும் ஸ்ரீரங்கம் கோவிலின் சில அர்ச்சகர்களுக்கு திருவெள்ளறை கோவிலில் முறைகள் உள்ளன.

வெகு வருடங்களுக்கு முன் காஞ்சிபுரத்திலும், கீழ் திருப்பதி அலர்மேல் மங்காபுரத்திலும் முறைகள் இருந்து வந்தன.

மேல்கோட்டையில் செல்லப்பிள்ளைக்கு இராமானுஜர் சில காலம் திருவாராதனம் செய்து வருகையில்
கிரஹஸ்தர்கள் செய்தால் நன்றாகயிருக்குமே என்று தோன்றிமையினால் ஸ்ரீரங்கத்திலிருந்து “மௌஞ்யாயன“ கோத்திரகாரர்கள்
அனைவரையுமே மேல் கோட்டைக்கு அழைத்து சென்றதால் ஸ்ரீரங்கத்தில் இந்த கோத்திரம் விடுபட்டுப் போனதாக ஒரு செய்தி யுண்டு.

அப்படியிருக்க ஏன் ஸ்ரீரங்கத்திலும் காஞ்சிபுரத்திலும் உள்ள அர்ச்சகர்கள் வடகலை திருமண்காப்பும்,
மேல்கோட்டை அர்ச்சகர்கள் தென்கலை திருமண்காப்பும்
இட்டுக் கொள்கின்றனர்..?
இந்த அர்ச்சகர்கள் அனைவருமே வடகலை மற்றும் தென்கலை இதில் எந்த கலையும் சார்ந்தவர்கள் இல்லை..!
இந்த கலாபேதம் சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்தது தான்..! திருவாய்மொழியில் ஒரு பாசுரம்..!

கரியமேனிமிசை வெளிய நீறு சிறிதேஇடும்
பெரியகோலத்தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசை மாலைகள்-ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு ? இன்று தொட்டும் இனி என்றுமே–( திருவாய் மொழி 4-5-6)

“இதில் வெளிய நீறு சிறிதேஇடும்“ என்பதற்கு பன்னீராயிரப்படி திருவாய்மொழி வியாக்யானத்தில்
”கற்பூர தூளிதவளம் க்ருத்வா தேவஸ்ய விக்ரஹம்” என்று உள்ளது.

“அதாவது பச்சை கற்பூரத்தினால் பகவானிடத்து (திருமுக மண்டலத்தில் ஊர்த்வமுகமாக) தூவுதல்“ என்று பொருள்.

இந்த அர்ச்சகர்களும் இந்த விதமாகதான் திருமணைக் குழைத்து ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
காலப்போக்கில் வாரிசுகள் இல்லாது வடகலை குடும்பத்தார்களிடத்திலிருந்து ஸ்வீகாரம் நிறைய வந்தமையாலும்
மற்றுமுள்ள சூழ்நிலை காரணமாகவும் இந்த ஊர்த்வபுண்டரம் வடகலையாகவும்,
மேல்கோட்டையில் நிலவிவந்த சூழ்நிலை காரணமாக தென்கலையாகவும் மாறிப்போயிருக்கலாம்..!

இந்த அர்ச்சகர்கள் “சுயம் ஆச்சார்யர்கள்“ – இந்த அர்ச்சகர்களுக்குள்ளேயே எவர் தகுதியுள்ளவரோ அவரே ஆச்சார்யன் ஆவார்.
இவர்களுக்கு வேறு ஆச்சார்ய தனியன்கள் கிடையாது. இன்றும் திருமணப் பத்திரிக்கைகளில்
ஸ்ரீசுக்ல வேத ரிஷியான “ஸ்ரீயாக்யவல்க்ய மஹாகுரவே நம:“ என்றுதான் குறிப்பிடுகின்றனர்.

இவர்களுக்கு “பரந்யாஸம்“ கிடையாது.

இன்றும் வீட்டில் நடக்கும் விசேஷங்களில் “ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும்….“ என்று தொடங்கி தான் சங்கல்ப்பம்..! ஆரம்பமாகும்.

இந்த ஏகாயன வேதமானது “ஸ்ரீமந் நாராயணனைத் தவிர இதர தெய்வங்களை நாடாதே“ என்கிறது.

“யஸ்து ஸர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தப:
வாஸூதேவைக நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:”

“ஸ்ரீவாஸூதேவனை மட்டுமே தியானி – இதர தேவதைகளை நாடவேண்டா ” என்று கூறுகின்றது.

மறந்தும் புறம் தொழா மாந்தர், என்னும் மாண்பை ஆழ்வார்களை போல் ஆகமமும் பறை சாற்றியது.
ஸ்ரீவைஷ்ணவ சம்பரதாயத்தின் முக்கியமான இந்த கொள்கை பாஞ்சராத்ரத்தில் ஆழமாக எடுத்துரைக்க பட்டுள்ளது.

இந்த பாஞ்சராத்ரமானது ஸ்ரீமந் நாராயணனை எப்படியெல்லாம் வழிபடுதல் வேண்டும் –
நாம் எந்த ஒரு திடமான முடிவோடுயிருக்க வேண்டும் – எப்படி அணுக வேண்டும் என்றெல்லாம் சொல்லுகின்றது.
ஆகமம் என்பதற்கு அணுகுதல் (approach) என்ற ஒரு பொருளும்,
a traditional doctorin or percept, a sacred writing or scripture, sastra, a tantra என்று பலவித பொருள் கூறுகின்றது.
சமஸ்கிருத – ஆங்கில அகராதி. இங்கு அணுகுதல் என்று கொள்ளுதல் எல்லா அர்த்தங்களைவிட சாலப் பொருந்தும்.

பகவான் ஜீவன்கள் உய்விப்பதற்கு, தன்னை வந்தடைய தானே வந்து கற்பித்ததுதான்
இந்த பாஞ்சராத்ரம் என்கின்ற அணுகுமுறை – அதாவது பாஞ்சராத்ர ஆகமம்.

மணவாள மாமுனிகள் முமுக்‌ஷூப்படியில் சொன்னார் போல, நாம் படும் இழவை அனுசந்தித்து,
அரங்கன், நாம் அவனை வந்து அடைய செய்யாத பிரயத்தனங்கள் இல்லை.
நமக்கு அறிவு வர வேண்டி பல சாத்திரங்களை கொடுத்தான். அதில் ஒன்று தான் பாஞ்சராத்ரமாகிற இந்த ஆகம சாத்திரமும்.

அவன் கொடுத்த இந்த அறிவின் பயன், அவனை அடைவதே.
அவனை அடைய, அவனே உபாயம் என்பதை அரங்கன், அழகாக வலியுறுத்தினான்.

ஆகமம் என்பது வேதத்தினை ஒரு சிலவிடங்களில் கையாண்டிருந்தாலும் அது குறிப்பாக
அந்த ஆகமம் எந்த தெய்வத்தினைப் பற்றி பிரதானமாக கூறுகின்றதோ, அந்த தெய்வத்தினைப் பற்றிய வேத குறிப்புகள்,
எப்படி வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும், விழாக்களை எங்கெங்கு- எப்படிக் கொண்டாட வேண்டும்,
பூஜை செய்பவருக்கான தீக்ஷாவிதிகள், எப்படி தீக்ஷைத் தரவேண்டும் ஆகியவற்றினைப் பற்றிதான் பரவலாகக் கூறுகின்றது.

நிகமம் என்பது நான்கு வேதங்கள், வேத ஸம்ஹிதைகள், உபநிஷத்துக்கள், உபவேதங்கள் (தனுர் வேதம், ஆயுர் வேதம் முதலானவைகள்) ,
ஜோதிடம், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிஹாசங்கள் முதலானவைகள். இவைகளனைத்தும் நிகமம் என்றழைக்கப்படும்.

ஆகம ரஹஸ்யம் என்னும் க்ரந்தத்தில்,

”ஆகதம் சிவ்வக்த்ரேப்யோ, கதஞ்சவ கிரிராஜாஷ்ருதௌ! மதம் ஸ்ரீவாஸூதேவஸ்ய தஸமாத் ஆகம உச்சேய்தே!“

– வாசுதேவரை பற்றி பேசும் ஆகமங்கள், சிவன் சொல்ல பார்வதி கேட்டதாக பேசபடுகிறது.

ஸ்ரீவாசஸ்பதி மிஸ்ரா என்பவர்,

ஆகச்சந்தி புத்திமாரோஹந்தி யஸ்மாத் அப்யுதயநி: ஷ்ரேயஸோபாயா: ஸ ஆகம:”

இந்த ஆகமங்கள் மூலமாக ஒருவன் மோட்ஷத்திற்கான உபாயாத்தை அறிந்து கொள்கிறான்.

வராஹி தந்தரம் என்னும் க்ரந்தம் ஆகமத்தினை ஏழு தலைப்புகளாகப் பிரிக்கின்றது.

1. படைத்தல்: இந்த தலைப்பில் படைத்தல் மற்றும் காத்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

2. அழித்தல்: இந்த தலைப்பில் அழித்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

3. வழிபாடு : இந்த தலைப்பில் வழிபடுதல் முறைகள் பற்றி விளக்கப்பட்டு உள்ளது.

4. தெய்வீக காரியங்கள் : பகவத் ஆராதனமாக செய்யும் கைங்கர்யங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

5. புரஸ்சரண் : மந்திரங்கள் மற்றும் அதனை உச்சரிக்கும் முறைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

6. வினை : அந்தணர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஆறு தொழில்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

7. தியானம் : நான்கு வகை தியானங்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

எல்லா ஆகமங்களும் மேற்ச் சொன்ன வரையரைக்கு உட்பட்டு இல்லாத போதிலும்,
பொதுவாக ஆகமம் என்பது வழிபாட்டு வகைகளையும் அதன் முறைகளையும் எடுத்துரைக்கும் நூலாகவே கொள்ளப்படுகிறது.
ஆனால், ஸ்ரீபாஞ்சராத்ரம் இந்த ஏழு வரையரைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இது ஒரு தனி சிறப்பு.

ஆகமம் என்பது பொதுவில் வழிபாட்டுமுறையாகும். இது ஒரு குறிப்பிட்ட தெய்வ வழிபாட்டு முறையல்ல.
அவரவர்கள் வழிபடும் தெய்வத்திற்கு பலவிதமான ஆகமங்கள் உள்ளன.

இந்த ஆகமங்கள் இரண்டு வகைப்படும்.

வைதீக ஆகமம் (Vedic Agamam) இது நமது வேதங்களின் கோட்பாடுகளுடன் திகழ்வது அல்லது ஒத்துப் போவது.

அவைதீக ஆகமம் (Non-Vedic Agamam). உதாரணம் புத்த ஆகமம் மற்றும் ஜைன ஆகமம்.
இவைகள் வேதங்கள் கூறும் கருத்திற்கு மாறுபட்டு விளங்குகின்றன. புத்த வழிப்பாட்டு முறையில் மட்டும் சுமார் 72 ஆகமங்கள் உள்ளன.
மாறுப்பட்டு விளங்கும் இந்த புத்த ஆகமத்தில் சில பாஞ்சராத்ர ஆகமத்திலுள்ள தந்தரங்களோடு ஒத்துப் போவது ஆச்சர்யமானது.

ஜைன ஆகமத்தில் சில 3வது நூற்றாண்டிலும் மற்றும் 11வது நூற்றாண்டிலும் உருவானவை.
இவை “தீர்த்தங்கரர்” என்றழைக்கப்படும் அவர்களது ஆச்சாய புருஷர்களால் பிரபலமாயிற்று.

இந்த ஆகமங்கள் அனைத்தும் குருவினால் சிஷ்யர்களுக்கு உபதேசம் மூலமாக வந்த ஒரு சாஸ்த்ரம். பல நூறு வகையான ஆகமங்கள் உள்ளன.
இதில் வைஷ்ணவ ஆகமமானது வைகாநஸம், பாஞ்சராத்ரம் என்று இரு வகை ஆகமங்களாகும்.

இதுவரை நாம் பாஞ்சராத்ரம் என்றால் என்ன..? ஆகமம் என்றால் என்ன..? என்பதனைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டோம்..!
நாம் எடுத்துக் கொண்ட சங்கல்ப்பம் ஸ்ரீபாஞ்சராத்ரம் மட்டுமே என்பதால் இனி நாம் ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமம் பற்றிக் காண்போம்….

பெருமாள் ஐந்து நிலைகளில் வீற்றிருக்கின்றான். அவையாவன:

பரம்
வ்யூகம்
விபவம்
அர்ச்சை
அந்தர்யாமி

விண் மீதிருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண் மீது உழல்வாய்! இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!
எண்மீதியன்றபுற வண்டத்தாய்! எனதாவி *
உள்மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ ?– (திருவாய்மொழி 6-9-5)

விண்மீதிருப்பாய் – பரத்வம்
கடல் சேர்ப்பாய் – வ்யூஹம்
மண்மீது உழல்வாய் – விபவம்
மலைமேல் நிற்பாய் – அர்ச்சை
மறைந்துறைவாய் – அந்தர்யாமி

பரம் என்பது பரமபதம். இது நித்திய விபூதி என்றழைக்கப்படும்.

வ்யூகம் என்பது வாஸூதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தர் என்னும் எம்பெருமானின் சக்திகள் தனித்தனியேப் பிரிந்து வெளிப்படும் ஸ்வரூபங்களாம்.

விபவம் என்பது எம்பெருமானின் அவதாரங்களாம்.

அர்ச்சை என்பது இப்போது நாம் வணங்கி ஆராதித்துக் கொண்டிருக்கும் எம்பெருமானின் திருவுருவங்களாம்.

அந்தர்யாமி என்பது எம்பெருமானின் சக்தி எங்கும் பரந்து எல்லாவற்றிலும் சூக்கும்மாய் உறைந்திருக்கும் சக்தியாம்.

இதில் ஆழ்வார்கள் அனைவரும் மோகித்து ஆழங்கால்பட்டது அர்ச்சையில் மட்டுமே.
பாஞ்சராத்ரமும் இந்த அர்ச்சையின் ஆராதனையைதான் சொல்லித் தருகின்றது.

பாஞ்சராத்ரம், இதிஹாஸம், புராணங்கள், ஆழ்வாரின் பாடல்கள் ஆகியவற்றில் பகவானின்
ஸ்வரூபம், ரூபம், குணம், நெறி, விபூதி, லீலைகள் ஆகிய எல்லாம் சொல்லப்பட்டிருந்தாலும்,

பாஞ்சராத்ரத்திற்கு பகவானுடைய ஸ்வரூபம், குணம் -அதற்கேற்ப என்னென செய்யலாம் என்பதில் தான் கவனம்.
இதிஹாஸங்கள் அவதாரங்களைப் பற்றிச் சொல்லுவதிலும், புராணங்கள் உலகங்களின் விரிவினைச் சொல்லுவதிலும்,
ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு திவ்ய மங்கள விக்ரஹங்களை அனுபவிப்பதிலும் ஈடுபாடு.

சாமான்யர்களான நமக்கு பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி ஆகிய நிலைகளிலுள்ள எம்பெருமானை அனுபவித்தல்
என்பது இயலாத ஒரு காரியம். இந்த கலியுகத்தினுள் அர்ச்சாவதாரம் என்பது எம்பெருமானால்
நம்மை இங்கிருந்து நம்மை மீட்க எடுத்துக் கொள்ளப்பட்ட, நாம் சுலபமாக அவனை அணுக அவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு உபாயம்.

“உடைமைக்கு ஒரு முழுக்கு – உடையவனுக்கு நூறு முழுக்கு“ என்பார்கள்.

ஒரு பெரிய கிணறு. அதில் ஒரு சிறிய வெள்ளிச் சொம்பு வீழ்ந்து விட்டால் அது ஒரு முழுக்கில் அடியில் அமிழ்ந்து விடும்.
அதன் உடைமையாளன் அதனை எடுப்பதற்குள் சில சமயம் நூறு முழுக்குக் கூட போட நேரிடலாம்.

அது போன்று அவனது உடைமை நாம். இந்த ஆன்மா அவனது சொத்து.

நாம் இந்த சம்சார ஸாகரமாகின்ற கிணற்றுக்குள் அமிழ்ந்து விட்டால் நம்மை மீட்பதற்குள் அந்த பரந்தாமன்,
பரமாத்மா நூறு முழுக்குப் போட வேண்டியுள்ளது. நம்மை மீட்டு அவன் தன்னுள் வைத்துக்கொள்வதற்காக ஏற்பட்ட ஒரு உபாயம் அர்ச்சை.

அர்ச்சையில் தம்மை தாமே கூண்டில் அடைத்துக் கொள்வது போல் அவன் அடைத்துக் கொண்டும்,
ஆழ்வார்கள் தன்னுள் ஆழும்படியாகச் செய்தும், தம்மிடத்து ஆழங்கால் பட்டோரிடத்து அவர்கள் சொன்ன வண்ணம் செய்தும்,
எழுந்திருந்து பேசியும், எங்கோ யாரோ ஒரு பாட்டி தன் பேரனைக் காவிரிக் கரையில் காணாது அவனது பெயரான “ரங்கா“ என்று
கதறிய மாத்திரத்தில் தம் பெயரைச் சொல்லி கதறுவோர் மனவருத்தம் கொள்ளல் ஆகாது என்று தாம்
அவள்தம் பேரனைப் போன்று சவரம் செய்து கொண்டு, நீராடி, அந்தம்மையார் கொடுத்த பழைய சோற்றையும், மாவடுவினையும் ரசித்து உண்டும்,
“வாராய் செல்லப் பிள்ளை” என்றழைத்தவுடனேயே தளிர்நடையிட்டு உடையவர்தம் மடியில் ஏறி அமர்ந்து,
ஏதுமறியா குழந்தையைப் போன்று அவரின் கைக் குழந்தையாகவே மாறியும்.
மாமுனிகளிடத்து அர்ச்சகரின் குமாரனாய், அவரின் சிஷ்யனாய் தோன்றி ஆச்சார்ய தட்சிணையாக தமது சேஷ பீடத்தை அர்ப்பணித்தும்,
இந்த மாயவன் செய்த லீலாவினோதங்கள் சொல்லி மாளாது.

ஸ்ரீபாஞ்சராத்ரமே அர்ச்சைக்கான வழிபாட்டு முறைதான். எனவே முதலில் நாம் அர்ச்சையின் விசேஷத்தினை, அருமையினை
உணர்ந்து அதனிடத்து பேரன்பு கொள்ளுதல் வேண்டும். இவ்விதமாக அன்புடன் ஆராதிக்கும் அர்ச்சைதான் தேஜஸ்ஸோடு விளங்கும்.
ஆராதகனுக்கு முதல் தேவை –தகுதி, அவன் ஆராதிக்கும் அர்ச்சையினிடத்து அளவிலாத உள்ளன்புதான்.

– பூதக ஜலம் போலே அந்தர்யாமித்வம்
– ஆவரண ஜலம் போலே பரத்வம்
– பாற்கடல் போலே வ்யூகம்
– பெருக்காறு போலே விபவங்கள்
– அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் – ஸ்ரீவசனபூஷணம்(40)

பூமிக்கடியில் கண்ணுக்குத் தெரியாதிருக்கும் ஜலம் போன்று அந்தர்யாமித்வம். மஹாயோகிகளுக்கு மட்டுமே சித்தி தருவது இது.

பரத்வம் இந்த அண்டத்திற்கு புறம்பாக எங்கும் சூழ்ந்திருக்கும் ஆவரண ஜலம் போன்று அதாவது கடல் நீரைப் போன்றது பரத்வம்.
இதுவும் சாமான்யர்களாகிய நம்மால் சாத்தியபடாத ஒன்று.

சென்றடையமுடியாத பாற்கடல் போன்றது வ்யூகம்.

காட்டாறு போன்றது விபவதாரங்கள். அந்த காலத்தில் இருந்தவர்களைத் தவிர யாரும் அடையத் தக்கதல்லதான அவதாரங்கள்.

அர்ச்சாவதாரம் ஆங்காங்கு தேங்கிய மடுக்கள் போன்றதாம். வேட்கைக் கொண்டவனின் தாகம் தீர பருகலாம் இங்கு.
கோயில்களிலும், வீடுகளிலும் வணங்கத்தக்கதான அர்ச்சை எல்லாரும் அணுகக்கூடியது. அடிபணிந்து வணங்கக் கூடியது.

”ஸௌலப்யத்திற்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்” – (முமுக்‌ஷுப்படி-139)

அர்ச்சை நிலைக்குக் கைங்கர்யம் செய்தல்

மூலம் – அப்போது, நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ
ஸந்நிதிம் வ்ரஜேத் என்றும், யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம்
ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: என்றும் சொல்லுகிறபடியே

ஓர் அதிகாரி விசேஷத்துக்காக ஸாந்நித்யாதிகளைப் பண்ணிப் பரமைகாந்தியான தன்னையுகந்து வந்து
அர்ச்சாவதாரம் பண்ணியிருக்கிற எம்பெருமான் பக்கலிலே ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: என்கிற பூர்த்தியையும்,
ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் என்கிற பாவநதமத்வத்தையும்,
ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் என்கிறபடியே ப்ரத்யக்ஷாதி ப்ரமாணத்ரயத்திலும்
ஹேதுபலபாவத்தாலே வரும் மதிமயக்குகளெல்லாவற்றுக்கும் மருந்தாய் இருக்கிற படியையும்,
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் என்றும்,
“தமருகந்தது எவ்வுருவம்” என்கிற பாட்டிலும் சொல்லுகிறபடியே அவாங்மனஸாபரிச்சேத்யமான ஆச்ரித பாரதந்த்ர்யத்தையும்,
“கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா” என்கிற ஆகர்ஷகத்தையும் அநுஸந்தித்து,

ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம்
ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம்
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா
பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ:
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம்
யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத்
யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம்–என்கிறபடியே
அவ்வோ ஸம்பந்தவர்க்க பரத்வ ஸௌலப்யாதிகளுக்கு அநுரூபமான வ்ருத்தியைப் பண்ணவும்.

விளக்கம் –

அவ்விதம் கைங்கர்யம் செய்யும்போது, தனக்கும் ஸர்வேச்வரனுக்கும் உள்ள உறவுமுறைக்கு ஏற்றபடியும்,
ஸர்வேச்வரனின் எஜமானத்தன்மை மற்றும் எளிமை ஆகியவற்றுக்கு ஏற்றபடியும் செய்தல் வேண்டும்.

தன்னிடம் ஆழ்ந்த அன்பு கொண்ட அடியார்களுக்காக அர்ச்சை ரூபமாக வந்துள்ள ஸர்வேச்வரனுக்கு ஏற்றபடி கைங்கர்யம் செய்யவேண்டும்.

பௌஷ்கர ஸம்ஹிதை – நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் –

எப்போதும் நிலையாக உள்ள ஸர்வேச்வரனின் திருமேனி குறித்தும், அவன் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்பது குறித்தும்
யார் மனதில் உள்ளதோ அவன் அருகில் ஸர்வேச்வரன் எப்போதும் வருவான் – என்றும்,

பௌஷ்கர ஸம்ஹிதை – யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: –
கடலில் உள்ள நீரைப் பருகிய மேகங்களால் மழையாகப் பொழியப்பட்ட பின்னர், அந்தக் கடல்நீரே அனைவராலும் பருகும்படியாக உள்ளது;
இது போன்று எம்பெருமான் அர்ச்சையாக நின்ற பின்னர் அனைவராலும் கைங்கர்யம் செய்து,
அனுபவிக்கும்படியாக உள்ளான் – என்றும் கூறியது காண்க.

விஷ்வக்ஸேந ஸம்ஹிதை – ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: –
மந்த்ரங்களில் காணப்படும் எம்பெருமானின் ஞானம் உள்ளிட்ட ஆறு குணங்களானவை அர்ச்சையாக உள்ள
அவனது வடிவத்தில் காணப்படுகின்றன – என்பதன் மூலம் பூர்ணமாக உள்ளது கூறப்பட்டது.

சாண்டில்ய ஸம்ஹிதை (2-89) – ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் –
அர்ச்சையாக நிற்கின்ற புருஷோத்தமின் ரூபத்தை திருவடிப்பீடம் தொடங்கி திருமுடிவரை காண்பவனின் அனைத்துப் பாவங்களும் உடனே அழிந்துவிடும்,
இப்படி உள்ளபோது சிறு பாவங்கள் குறித்துக் கூறவேண்டுமா – என்பதன் மூலம்
அவனது அர்ச்சை ரூபமானது அனைத்து பாவங்களையும் நீக்கவல்லது என்பதை அறியலாம்.

பௌஷ்கர ஸம்ஹிதை (1-31-32) – ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் –
மதிமயக்கம் கொண்டவர்கள் அர்ச்சையாக நிற்கும் எம்பெருமானின் ரூபத்தைத் தற்செயலாக வணங்கினாலும்
அவர்களது தீயவாஸனை, வஞ்சனைகளின் தொகுப்பு, தீய காரணம், தீய எண்ணங்கள் மற்றும் நாஸ்திகத்தன்மை ஆகியவை அழிந்துவிடும் – என்றது.
இப்படியாக அறிவுதடுமாற்றம் என்னும் நோய்க்கு ஏற்ற மருந்தாக அர்ச்சாரூபம் உள்ளது.

மனம் மற்றும் வாக்கால் அளவிட இயலாதபடி உள்ள எம்பெருமான், தனது அடியார்களின் பொருட்டு,
அவர்களுக்காகத் தன்னையும் கொடுத்தபடி நிற்கும் நிலையை எண்ணி த்யானித்தல் வேண்டும்.
இதனை – கீதை (4-11) – யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் –
என்னை அடைய விரும்புகிறவர்கள் எந்த வடிவில் என்னை அமைக்கின்றனரோ,
அந்த வடிவிலேயே நான் என்னை அவர்களுக்குக் காண்பிக்கிறேன் – என்றும்,

முதல் திருவந்தாதி (44) – தமருகந்தது எவ்வுருவம் – அடியார்கள் அந்த உருவத்தை விரும்புகின்றனரோ – என்றும் கூறியது காண்க. மேலும்

அமலனாதிபிரானில் (10) – கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா – என்னும்படியாக
அவனது அர்ச்சா ரூபத்தில் உள்ள ஈர்ப்பை அனுபவிக்க வேண்டும்.
அடுத்து அவனது எளிமை மற்றும் எஜமானத்தன்மை ஆகியவற்றுக்கு ஏற்றபடி கைங்கர்யம் செய்தல் வேண்டும்.

கீழே உள்ள பல வரிகள் காண்க:

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-37) – ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம் ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம் –
உண்மையான மனைவி தனது கணவனையும், பெற்ற தாய் தனது குழந்தையையும், சிஷ்யன் தனது ஆசானையும்,
நண்பன் தனது நண்பனையும் உபசரிப்பது போன்று ஸர்வேச்வரனை உபசரிக்க வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-38) – ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ: –
மஹாலக்ஷ்மியைத் தரித்த எம்பெருமானை எப்போதும் எஜமானன், நண்பன், ஆசார்யன், தந்தை, தாய் என எண்ணியபடி இருத்தல் வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-31) – யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம் யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத் –
இளவரசன் மற்றும் மதம் கொண்ட யானை ஆகியவர்களை எவ்விதம் பயந்து உபசரிப்போமோ, அது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும்.
இதே போன்று வீட்டிற்கு வந்த விருந்தினரை மகிழ்வுடன் உபசரிப்பது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும்.

• யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம் – தனக்குப் பிரியமான குழந்தையைக் கொண்டாடுவது போன்று எம்பெருமானைக் கொண்டாட வேண்டும்.

அர்ச்சாவதாரம் பகவானுடைய அளவிடமுடியாத காருண்யத்தின் பிரதிபிம்பம்.
இதில் விந்தையென்னவென்றால் அவன் நம்மை ரக்ஷிக்க எடுத்த இந்த அவதாரத்தில்,
அவனை ஒருவனால் (அர்ச்சகனால்) ரக்ஷிக்கப்படுவனாய் மாறியது தான்.

ஸர்வ சக்தி படைத்த அவன் சக்தியே யில்லாத ஒரு குழந்தை போல மாறி அர்ச்சகரை எதிர்பார்த்திருப்பதுதான்!.

ததிச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல
ஸ்நானம் பாநம்ததா யாத்ராம் குருதே வை ஜகத்பதி:
ஸ்வதந்த்ரஸ் ஸஜகந்நாதோ ப்யஸ்வதந்த்ரோயதாததா
ஸர்வசக்தி: ஜகத் தாதாப்ய சக்த இவசேஷ்டதே—விஷ்வக்ஸேன ஸம்ஹிதை-

ஸ்வதந்தர ஸஜகந்நாதோ – ஸர்வ சுதந்திரம் பெற்றவனாயிருக்கும் இந்த ஜகத்திற்கே அதிபதியான ஜகந்நாதன் –

ப்யஸ்வதந்த்ரோயதாததா – ஸ்வதந்தரம் இல்லாதவன் எப்படியிருப்பானோ அம்மாதிரியாக மாறி

த்திச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல – அடியார்களது குற்றங்களை பொருட்படுத்ததாது
அந்த பரம்பொருள் தன்னை ஆஸ்ரயித்தவர்களின் விருப்பப்படி உண்கின்றான்!

ஸ்நானம் பானம்த்தா யாத்ராம் குருதே ஜகத்பதி: – தன்னை ஆராதிப்பவர்களுடைய விருப்பத்தின்படி நீராடலையும்,
நீர் பருகுதலையும், புறப்பாடு(யாத்ரை) கண்டுருளுதலையும் செய்கின்றான்!

ஸர்வசக்தி: ஜகத் தாதாப்யசக்த இவசேஷ்டதே – எல்லா சக்திகளையும் அடைந்தவனாயிருந்தும், சக்தியில்லாதவனைப் போன்று நடிக்கின்றான்!

தான் நினைப்பதற்கு அரியவனாயிருப்பின் தன்னுடைய சொத்து தன்னை விட்டு விலகிவிடுமோ என்ற அச்சத்தினாலேயே,
நம்மை தடுத்து ஆட்கொள்ள அந்த அரியவனாகிய ஹரி எளியவனாய் அர்ச்சையில் தாமே வந்து அகப்பட்டு கொள்கின்றான்!

ஆழ்வார் சொல்கின்றார், ”இந்த அர்ச்சாவதாரத்தினை நான் ரஸித்து பருக வேண்டிய அமுதமாக இருக்க,
அதற்கு மாறாக இவன் என்னை முழுவதுமாய் பருகிவிட்டானே“ என்கிறார்.

தன்னழகைக் காட்டி நம்மை ஆட்கொள்ளத்தானே அவன் அர்ச்சையாய் அவதரிக்கின்றான்!

தானேயாகி நிறைந்து எல்லாவுலகும் உயிரும் தானேயாய் *
தானேயானென்பானாகித் தன்னைத்தானே துதித்து* எனக்கு
தேனே பாலே கன்னலேயமுதே திருமாலிருஞ்சோலை *
கோனேயாகி நின்றொழிந்தான் என்னைமுற்றும் உயிருண்டே!-திருவாய்மொழி 10-7-2

“ வாரிக்கொண்டு ன்னை விழுங்குவான் காணில்“ என்று *
ஆர்வுற்ற என்னை யொழிய – என் னில்முன்னம்
பாரித்து * தான் என்னை முற்றப் பருகினான் *
காரொக்கும் காட்கரை யப்பன் – கடியனே .—திருவாய்மொழி 9-6-10–

பாஞ்சராத்ர ஆகமங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது மூன்று ஆகமங்கள் ஆகும். அவைகள்
ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் ஆகியவையாம். இவைகள் “ரத்ன த்ரயம்“ என்றழைக்கப்படுகின்றது.

இந்த மூன்றுக்கும் உப ப்ரஹ்மணங்களாக, அதாவது விவரணமாக
ஸாத்வதத்த்திற்கு -ஈஸ்வர ஸம்ஹிதையும்,
பௌஷ்கரத்திற்கு – பாரமேஸ்வர ஸம்ஹிதையும்,
ஜயாக்யத்திற்கு – பாத்ம ஸம்ஹிதையும் உள்ளன.

இம்மூன்றும் மூன்று முக்கிய திவ்ய தேசத்தில் கடைப்பிடிக்கப் படுகின்றது.
மேல்கோட்டையில் ஈஸ்வர ஸம்ஹிதையும்,
ஸ்ரீரங்கத்தில் பாரமேஸ்வரமும்,
காஞ்சியில் பாத்மமும் அனுஷ்டானத்தில் உள்ளன.

நாம் இனி இங்கு ஸ்ரீரங்கத்தில் அனுஷ்டானத்திலுள்ள பாரமேஸ்வர ஸம்ஹிதையிலிருந்து முக்யமானவற்றைக் காண்போம்.!

பாரமேஸ்வர ஸம்ஹிதையின் முதல் ஸ்லோகமே
“நமஸ் ஸகல கல்யாண தாயிநே சக்ர பாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரணஹேதவே”–என்று தொடங்குகிறது
.
”ஸகல கல்யாண தாயிநே” என்றால் என்ன..? “ஸகல கல்யாண குணங்களும் நிரம்பிய“ என்று பொருள்!

பிள்ளைலோகாச்சாரியார் தமது முமுக்‌ஷுப்படியில் (136)
”புருஷகார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலை சாய்ந்தால் தலையெடுக்குங் குணங்களைச் சொல்லுகிறது நாராயண பதம்” என்கிறார்.

சேதனர்களாகிய நாம், நாம் செய்த குற்றங்களையெல்லாம் எண்ணி, அந்தோ! இத்தனைக் குற்றங்களை நாம் செய்துள்ளோமே.?
நாம் எப்படி பெருமாளின் திருவடிகளில் சென்றடைவது..! என்று அஞ்சி அவனை விட்டு நாம் அகன்று ஓடிவிடாதபடி,
நம்மை திருத்தி பணிகொள்வதற்காகவே, வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், ஸௌசீல்யம், ஸௌலப்யம், ஜ்ஞானம், சக்தி
முதலான திருகல்யாண குணங்களோடு எம்பெருமான் அர்ச்சையிலே காத்திருக்கின்றான்!

வாத்ஸல்யம் – தன்னை வந்தடைந்த சேதனின் குற்றங்களைப் பாராமல், எப்படி பசு தான் ஈன்ற கன்றினிடத்து பாசமுடன் விளங்குகின்றதோ,
அதுபோன்ற அவனிடத்து இன்னருள் சுரந்து, “கதஞ்சன நத்யஜேயம்” ஒருபோதும் கைவிடுபனல்லேன் என்ற
வைராக்கியத்துடனே சேதன்னுக்கு பல நன்மைகளைச் செய்யும் இயல்புடையவனாய் விளங்குகின்றான்.

ஸ்வாமித்வம் – சேதன்ன் ஈஸ்வரனை நினையாமல் பாராமுகமாயிருந்தாலும், எம்பெருமான் இவனை விடாமல் நின்று காப்பாற்றுகின்றானே!
இந்த ஒரு பந்த விசேஷத்திற்குதான் “ஸ்வாமித்வம்“ என்று பெயர்

ஸௌசீல்யம் – தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் சிறிதுமின்றி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பாராது
சேதன்னுடன் இரண்டற கலத்தல் ஸௌசீல்யமாகும்!

ஸௌலப்யம் – அணுகுதற்கு எளியவனாய் இருத்தல்

ஞானம் – அறிவு – சேதனனைக் காப்பாற்றி தன்னடி கீழ் சேர்க்கக் கூடிய சாமர்த்தியம்.

சக்தி – எதையும் செய்யக்கூடிய ஆற்றல். தாழ்ந்த நிலையிலுள்ள சம்ஸாரிகளை நித்ய ஸூரிகளோடு ஒப்ப சேர்த்து வைக்கக்கூடிய ஒரு ஆற்றல்!

”குற்றங்கண்டு வெருவாமைக்கு வாத்ஸல்யம் – கார்யஞ்செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
ஸ்வாமீத்வம் கொண்டு அகலாமைக்கு ஸௌசீல்யம் – கண்டு பற்றுகைக்கு ஸௌலப்யம் –
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள்” (முமுக்‌ஷுப்படி-138).

இவ்வளவு கல்யாண குணங்களோடு சேதனுக்காகக் காத்திருக்கும் அந்த எம்பெருமானுக்கு நாம் செய்ய வேண்டியது யாது?

ப்ராப்தியும்.., பூர்த்தியும்…!அப்படியென்றால்..?

ப்ராப்தி யென்றால் அடைய வேண்டியது.
பூர்த்தி யென்றால் வேண்டுவனயாவும் நிறைந்திருக்கை.
அதாவது நாம் அவனடி சரணமடையத் தேவையான குண பூர்த்தி நிறைந்திருக்கை!
ப்ரபத்தி!
இவ்விரண்டையும் சேர்த்து அதாவது ப்ரபத்தியென்றால் அவன் தம் திருவடிகள்தாம் தஞ்சமென்றிருக்கை!

சரி….! மேலேகூறிய இந்த கல்யாண
குணங்கள் அனைத்தையுமே நாம் அர்ச்சையில் காண இயலுமா..?

காணலாம்..! நான் சொல்லவில்லை! முமுக்ஷுப்படியில்(141)

பிள்ளைலோகாச்சாரியார் சொல்லுகின்றார்.

”இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம்”

மேலும் சொல்கின்றார்

”திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும்,
ஆஸந பத்மத்திலேயழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்” (முமுக்‌ஷுப்படி-142).

‘முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்த்துவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதியாடையொடும் பல்கலனாய்* நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே! கட்டுரையே! -திருவாய்மொழி (3.1.1)-

————————————

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
முதல் அத்யாயம்

தோதாத்ரி மலை…! தற்போது வானமாமலை என்றழைக்கப்படும் மிக உன்னதமான க்ஷேத்திரம்.!
இங்கு தேவர்களும் கந்தர்வர்களும் இங்குள்ள பெருமாளை அனுதினமும் ஸேவித்தவாறு இருக்கின்றார்கள்.
பல புண்ய தீர்த்தங்கள் இந்த புனிதமான இடத்தினுள் உள்ளது. அனைத்து வகை ஜாதிபுஷ்பங்களும் பூத்து குலுங்குகின்றது.
பலவிதமான ஆஸ்ரமங்கள் அமையப் பெற்றது, அதில் பல தப ஸ்ரேஷ்டர்கள் வசித்து வருகின்றார்கள்.
வேதம் மற்றும் வேதாந்தாத்தில் நாட்டமுடைய அறிஞர்களும், தவத்தில் நாட்டமுடைய முனிவர்களும்,
சாங்க்ய சித்தாந்தத்தில் (இது கபில மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம்) சிறந்தவர்களும்,
யோக சித்தாந்தாத்தில் (இது பதஞ்சலி மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மார்க்கம்) ஈடுபட்டுள்ளவர்களும்,
இதிஹாஸ புராணங்களில் வல்லுனர்களும், தர்ம சிந்தனையுடையோர்களும் நிரம்பி வழிந்துள்ள ஒரு
அற்புதமான க்ஷேத்திரம்! தேவரிஷிகள் மற்றும் ராஜரிஷிகளும் அங்கு காணப்படுகின்றனர்.
மந்த்ர சித்தியடைந்த மஹான்கள் பலர் உள்ளனர்!

”தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர் *
ஏற வீற்றிருந்தாய்! உன்னை எங்கெய்த கூவுவனே”—திருவாய்மொழி 5-7-4

இத்தகைய பலரது இருப்பினால் “இருப்பிடம் வைகுந்தம்” ஆன இந்த புண்யமான மலையினில்
பிரும்மாவினுடைய புத்ரர் ஆன “சனகர்“ என்பவர் பரம்பொருளை அடைய விரும்பி கடுமையான தபஸ் செய்கின்றார்!

ஒரிரு வருடங்கள் அல்ல..! நூறு வருடங்கள் காம க்ரோதங்கள், இந்திரியங்களை அடக்கி அந்த பரம்பொருளான பகவானைக் குறித்த கோரத்தவம்..!

இவ்வளவு புனிதமான அதிர்வலைகள் கூடிய ஒரு புண்யமான இடத்தில் சிந்தை கலையாமல்
சிரீவரமங்கையில் தவமிருந்தும் பகவான் அவருக்குக் காட்சி தரவில்லை!

அந்த தபஸ்ரேஷ்டர் தவித்துப் போனார்..! சோகம் அவரைத் தொற்றிக் கொண்டது..!

தீடிரென்று அவர் தபஸ் செய்த இடமே பிரகாசமானது..!
அந்த புருஷோத்தமன், சாதாரண பக்தன் தவித்தாலே பொறுக்காத அந்த பக்தவத்ஸலன், அசரீரியாய் அந்த
சனகரிடத்து பேச ஆரம்பித்தான்..!

நூறு வருடங்கள் கடுமையான தபஸ்ஸின் பயனோ, அல்லது ஒரு சில நிமிடங்கள் பகவானைக் காணாது
சனகர் தவித்த தவிப்பு, சோகம் முதலானவற்றால் ஏற்பட்ட பரிவோ, ஸ்ரீவாஸூதேவன் அவரிடத்து பேச ஆரம்பித்தார்.

”ஹே! தவ உத்தமரே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்!
இதே மலையில் மற்றொரு இடத்தில் சாண்டில்யர் என்னும் ஒரு மஹாதபஸ்வி உள்ளார். நீ உடனடியாக அவரை ஆஸ்ரயிப்பாயாக!
உண்மையான பகவத் தர்மத்தை, இம்மையிலும், மறுமையிலும் செம்மை தரும் வழியினை,
என்னை அடையும் மார்க்கத்தினை அவர் உனக்கு உபதேசிப்பார்“ என்று ஆசீர்வதித்தது அந்த அசரீரி!

சனகர் அந்த தோதாத்ரி மலையில் சாண்டில்யரைத் தேடி வலம் வரலானார். ஒரிடத்தில் அழகிய தாமரைத் தடாகத்தினைக் கண்டார்.
ஒவ்வொரு ருதுக்களிலும் மட்டும் பூக்கும் புஷ்பங்கள் அங்கு ஒரு சேர பூத்து குலுங்குவதை கண்ணுற்றார்.
பல தபஸ்விகள் அந்த இடத்தில் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர். மஹா தேஜஸ்வியாய் அவர்களில் நாயகனாய் சாண்டில்யர் விளங்கக் கண்டார்.
அவரைப் பணிந்து வீழ்ந்து வணங்கினார்.

சனகரை பார்த்தவுடனேயே சாண்டில்யர் உணர்ந்து விட்டார். சனகரை ஆசீர்வதித்தார். ”தபோ சிரேஷ்டா!
உண்மையான பகவத் தர்மத்தை நாடி நீ இங்கு வந்துள்ளாய்! நான் பல ஆண்டுகள் இதனைப் பெற கடுமையான தவம் செய்தேன்!
அப்போது அச்சுதன் தோன்றி எனக்கு வேதங்களை உபதேசித்தான். இந்த வேதங்கள் அனைத்துமே எம்பெருமானே பரம்பொருள்
என்று சில பாகங்களில் மட்டுமே சொல்லி பெரும்பாலான இடங்களில் இதர தெய்வங்களையும்
போற்றுவதாகயுள்ளது. ஆகவே எனக்கு இந்த வேத அறிவு நிறைவுத் தரவில்லை.

“யஸ்து சர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தர:
வாஸூதேவஹை நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:
தத்திஞ்ஞாஸ்ச்சா பலவதி ததாத் வாவி ரபூந் மம
ததோத்ர பர்வத ஸ்ரேஷ்டே தபஸ்த்தத்வம் மஹோத்தமம்
அநேகாணி சஹஸ்ராணாம் வர்ஷணாம் தபோஸோன் தத:
த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதௌ கலியுகஸ்யச
சாக்ஷாத் சங்கர்ஷணாத் வ்யக்தாத் ப்ராப்தயேஷ மஹத்தர:
ஏஷ ஏகாயனோ வேத: ப்ரக்யாத சாத்வதோ விதி:
துர்விக்ஞயோ துஷ்கரஷ்ச ப்ரதிபுத்யேர் நிஷ்வ்யதே
மோக்ஷாயனாய வைபந்தா: ஏத தன்யோ ந வித்யதே“

பொருள்
”எது உண்மையான பரம பகவத் தர்மம்? பொய்யான அறிவு விடுத்து எது உண்மையான ஞானம்?
இதர தெய்வங்களை நாடாது பரம்பொருளான வாஸூதேவனை மடடும் அடையச் செய்யும் மார்க்கம் எது?
இது குறித்து இந்த உன்னதமான மலையிலே நான் மேலும் பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்தேன்!
இந்த தவத்தின் பயனாக சாக்ஷாத் சங்கர்ஷணனே என் முன் தோன்றி “ஏகாயன வேதம்” என்றழைக்கப்படும்
இந்த பாஞ்சராத்ரத்தினை எனக்கு உபதேசித்தான். இது பகவானை அடையவேண்டும் என்ற ஒரே சிந்தையுள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும்!
துர்சிந்தனையுள்ளவர்களுக்கும், வேறு தெய்வங்களை நாடுபவர்களுக்கும் உபதேசிக்கவே கூடாது!.
மோக்ஷத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த உபாயம், வித்யை இதுதான்..” என்று கூறுகின்றார்

சாண்டில்யர் தொடர்கின்றார் “இந்த பாஞ்சராத்ரமானது வேதமாகிய மரத்திற்கு வேர் போன்றது..!
எம்பெருமான் ஒருவனைப் பற்றிச் சொல்வதையே குறிக்கோளாய் கொண்டது.! சந்தேகமேயில்லாதபடி எம்பெருமானைப் பற்றித்
தெள்ளத் தெளிவாகச் சொல்லி அஞ்ஞானமாகிய இருட்டினை அகற்றக் கூடியது, இந்த உயர்ந்த பகவத் சாஸ்திரம்..! “

இதனை பகவான் வைஸ்வமனுவிற்கு உபதேசித்துள்ளான்.
ஸ்வேத த்வீபத்தில் (திருப்பாற்கடலினை ஒட்டியுள்ள கரையோரம்.!) நாரதருக்கு உபதேசிக்கப்பட்டது.
நாரதருடன் கூட ஸநத் சுஜாதர், ஸனந்தனர், ஸனத்குமாரர், கபிலர் முதலிய மஹாஞானிகள் இதனை அத்யயனம் செய்து வந்தனர்.

மரீசி, அத்ரி, அங்கீரஸர், புலஸ்யர், புலஹர், க்ரது, வஸிஷ்டர் மற்றும் ஸ்வாயம்புவ மனு ஆகிய எட்டு மஹரிஷிகளும்
இந்த பாஞ்சராத்ரத்தில் கூறியுள்ளபடி பகவானை வழிப்பட்டனர்.

இந்த அற்புதமான சாஸ்திரமானது அவ்வளவு எளிதில் கிட்டியதில்லை. பல ஆயிரக்கணக்கான தவத்தின் பயனாய் எனக்குக் கிடைத்தது.
பல லக்ஷக்கணக்கான ஸ்லோகங்களைக் கொண்டது. இதனைப் பிரித்து ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என பல ஸம்ஹிதைகளாகச் செய்தனர்.

மனு முதலானவர்கள் “மனு ஸ்மிரிதி“ பண்ணினார்கள்.

இதுவே எல்லா சாஸ்திரங்களுக்கும் ஆதாரம்..!

இதில் தர்மார்த்த காம மோக்ஷங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!

அஸ்வமேதம் முதலான யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.!

எம்பெருமானுக்கே உண்டான பல அரிய மந்த்ரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!

“உபரி சரஸ்“ என்ற வசுக்களின் அரசன் ஸவர்க்கத்தினை அடைய அஸ்வமேதம் முதலாக யாகங்களை இதில் கூறியபடி அனுஷ்டித்து அடைந்தான்.!

இதனை நான், சுமந்து, ஜெய்மினி, ப்ருகு, ஓளபகாயநர் மற்றும் மௌஜ்யாயனர் ஆகியோருக்குச் சொல்லிக் கொடுத்துள்ளேன்..!

லோகத்திற்கு நன்மையைச் செய்யும் பொருட்டு, பத்ரிகாஸ்ரமத்தில். ஸ்ரீமந் நாராயணன்,
இதில் சொல்லப்பட்டுள்ள மூலமந்திரத்தினை, நரனுக்கு உபதேசம் செய்துள்ளார்.

க்ருத யுகத்தில் இந்த தர்மமானது எல்லாராலும் ஒரே மனதாக அனுஷ்டிக்கப்பட்டு எல்லோரும் உயர்ந்த கதியினையடைந்தனர்.
த்ரேதா யுகத்தில் மக்கள் பல ஆசைகளைக் கொண்டவர்களாய் மாறி சில தேவதாந்திர வழிபாட்டில்
(எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து இதர தெய்வ வழிபாடு.) ஈடுபாடு காட்டினர்.
அப்போது இந்த உயர்ந்த பகவத் தர்மமானது மறையத் தொடங்கியது. பகவான் யார் உண்மையான தாபத்துடன் உள்ளனரோ,
யார் உரிய யோக்யதாம்சங்களுடன் விளங்குகின்றனரோ அவர்களுக்கு மட்டுமே இந்த பகவத் தர்மத்தினை வெளிப்படுத்தினான்..!
அப்படிப்பட்ட எம்பெருமானிடமிருந்து நானும் இதனை கடும் தவத்தின் பயனாய் கைவரப் பெற்றேன்.
இதைத் தவிர இரண்டு விதமான ஞானம், 13 விதமான கர்மாக்கள், 12 விதமான வித்யை ஆகியவனவும் அடையப்பெற்றேன்
(இதில் சாண்டில்யர் குறிப்பிட்டுள்ள ஞானங்கள், கர்மாக்கள் மற்றும் வித்யைகள் எவைஎவையென்று
இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கான வியாக்யனம் ஏதும் கிடைக்காதப்படியினால் அறிய முடியவில்லை..!)” என்று சொல்லி
சனகரிடத்து இந்த பாஞ்சராத்ரமாகிய ஏகாயன வேதத்தினை உபதேசிக்கின்றார். பல ஆண்டுகள் உபதேசம் ஆகின்றது.

முடிவில் சனகர், சாண்டில்யரிடத்து கேட்கின்றார், ”தேவரீருடைய பரம அனுக்கிரஹத்தினால் மோக்ஷத்தினைத் தரக்கூடிய
இந்த உயர்ந்த தர்மமானது அடியேனால் அறியப்பட்டது. தபஸ்விகளான நமக்கே பல லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட
இந்த தர்மத்தினை அறிய பல ஆண்டுகள் ஆகும் போது, பாவம்..! இந்த ஸம்சாரிகள் எவ்விதம் அறிவது..?
எப்படிக் கடைத்தேறுவது..? என்று, நமக்காக பரிவுடன் வினவுகின்றார் !

சாண்டில்யர் சனகரிடத்து கூறுகின்றார், “உம்மைப் போலவேதான் நானும் சங்கர்ஷணரிடத்து சாமானிய மக்களும் கடைத்தேற வேண்டி
இந்த ஏகாயனசாகையினை எளிமையாகத் தரக் கோரினேன்.
அதற்கு சங்கர்ஷணரும் இரங்கி, இந்த லக்ஷம் ஸ்லோகம் கொண்ட ஏகாயனசாகையிலிருந்து 16000 ஸ்லோகம் மட்டிலும் கொண்ட
மிகச் சிறந்ததான இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதையினை எனக்கு அருளினார்.
இதனை திருப்பாற்கடலில் திருமாலிடமிருந்து நாரத மஹரிஷியும் கேட்டறிந்துள்ளார்..“ என்று கூறி
ஸ்ரீபாரமேஸ்வர ஸம்ஹிதையினை சனகருக்கு உபதேசிக்கின்றார் சாண்டில்யர்!

இதில் எம்பெருமானின் திவ்யாத்ம ஸ்வரூபங்களும், கல்யாண குணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதை, ஞான காண்டம், க்ரியா காண்டம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஞான காண்டத்தில் எம்பெருமானின் ஆறு குணங்கள்,
திவ்யமங்கள விக்ரஹம் சிறப்பு, விபவ அவதாரம்,
லக்ஷ்மி, புஷ்டி (ஸ்ரீதேவி, பூதேவி) இருவரின் சிறப்பு,
திவ்யாயுதங்கள், கருடன் முதலான நித்யஸூரிகள், பரமபதம், வ்யூக மூர்த்திகள், அவர்களது ஸ்தானங்கள்,
பரமபதத்தில் உள்ள சாலைகள், அதன் அழகு மற்றும் அளவுகள், ஜீவாத்மா ஸ்வரூபம், முக்தன் – பத்தன்,
முக்திக்குண்டான மார்க்கம், பகவத் மந்த்ரங்கள், முத்ரைகள், யோகங்கள் முதலானவைகள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார் சாண்டில்யர்.

நம்முடைய துரதிர்ஷ்டம் – இந்த பல அரிய சூக்குமமான விஷயங்கள் கொண்ட, 8000 ஸ்லோகங்கள் கொண்ட,
இந்த ஞானகாண்டம், இதனுடைய முதல் அத்யாயத்தினைத் தவிர இதர பாகங்கள் கிடைக்கவேயில்லை..!

சுமார் 200 வருடங்களுக்கு முன் ஸ்ரீநாராயண சூரி என்பவர் இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கு வியாக்யானம் செய்துள்ளார்.
அவருக்கே இந்த ஞான காண்டம் கிடைக்கவில்லை என்கிறார். ஆக 200 வருடங்களுக்கு முன்பே இதனுடைய ஞான காண்டம் மறைந்து விட்டது

1953ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீ உ.வே. கோவிந்தாச்சாரியார் என்னும் மஹா பண்டிதரின் கடும் உழைப்பின் பயனாய்
நாம் இன்று இப்போது நாம் படிக்கும் “க்ரியா காண்டம்“ கிடைத்துள்ளது.

இந்த “க்ரியா காண்டத்தில்“ இனி அடுத்து வருவது “ஸ்நானவிதி்“..!
ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

பகவானை ஆராதனம் செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை நியமங்களை
இந்த இரண்டாம் அத்யாயத்தில் விவரிக்கின்றார் ஸ்ரீசாண்டில்ய மஹரிஷி..!

ஆராதகன் பிரம்ம முஹூர்த்தத்தில் (அதிகாலை -சூரியன் உதிக்கும் முன்பு) எழவேண்டும்.

படுக்கும் போதும், எழும் போதும்

“ஓம் நமோ வாஸூதேவாய நம: சங்கர்ஷணாய தே (ச)|
ப்ரத்யும்னாய நமஸ்தேஸ்து – அனிருத்தாய தே நம: ||–என்றும்

“நமோ நம: கேசவாய, நமோ நாராயணாய ச
மாதவாய நமஸ்ச்சைவ, கோவிந்தாய நமஸ்தத:
விஷ்ணவே த நமஸ்குர்யாத் நமஸ்தே மதுசூதன
நமஸ் த்ரிவிக்ரமாயத, வாமனாய நமஸ்தத:
ஸ்ரீதராய நமஸ்ச்சாத, ரிஷிகேசாய ஓம் நம:
நமஸ்தே பத்மநாபாய, நமோ தமோதராய ச”–என்று மேலே சொல்லப்பட்ட பகவானின் 16 நாமாக்களையும்
(முதல் ஸ்லோகத்தில் நான்கு நாமாக்கள் – இரண்டாவது ஸ்லோகத்தில் 12 நாமாக்கள்)
மற்றும் எம்பெருமானின் தச அவதாரங்களின் நாமாக்களையும், சொல்லியபடியே படுக்க வேண்டும் – எழ வேண்டும்.

இந்த நாமாக்களை மனதிற்குள்ளேச் சொல்லக்கூடாது.
உரத்தகுரலில் சந்துஷ்டியுடன் சொல்ல வேண்டும்.
கீர்த்தனையைப் போல உரத்து பாடவும் செய்யலாம்.
(இவ்வாறு சொல்வதால் நாம் மட்டுமின்றி அருகில் இருப்பவரும் இந்த பகவானின் நாமாக்களைக் கேட்பார்கள் –
அவர்கள் மனதிலும் பதியும் அல்லவா…?)

படுக்கையிலிருந்து எழும் போது, “ஹரி.., ஹரி…,“ என்று சொல்லியபடியே எழ வேண்டும்.

அவ்வாறு எழும் போது, “நம: க்ஷிதிதராய“ என்று சொல்லிக் கொண்டு முதலில் இடது காலை பூமியில் பதித்து எழுதல் வேண்டும்..“

இதன் பிறகு “சௌச ப்ரகாரம்“ (மலங்கழித்தல், சுத்தம் செய்தல்) சொல்கின்றார். இதனை விவரணமாக எழுதுதல் என்பதும் கடினம் –
கடைப்பிடித்தல் என்பது ஏறத்தாழ தற்கால சூழ்நிலைக்கு இயலாத ஒன்று – அந்த காலத்தில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துள்ள
ஒரு காலகட்டத்தில் இதனையெல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்துள்ளனர் நம் பெரியோர்கள். ஒரு சிறிய உதாரணம் சொல்கின்றேன்.
மலத்தினை நேரடியாக பூமியின் மீது கழித்தல் கூடாது என்கின்றார். புற்செடிகளைப் பிடுங்கி பூமி மீது பரப்பி அதன் மீது கழிக்கச் சொல்கிறார்..

தற்போதுள்ள கால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நமக்கு ஒத்துவரக்கூடிய செயல்கள் சிலவற்றைக் காண்போம்..!

இயற்கையோடு மனிதர்கள் ஒன்றி வாழ்ந்துள்ள காலகட்டத்தில் எழுதப்பட்டமையினால்
இதில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் நமக்கு அதிசயமாக உள்ளது.

செளசம் (மலஜலங்கழித்தல்) பற்றிச் சொல்லும் போது
பகலிலும், சந்த்யாகாலங்களிலும் மலஜலங்கழிப்பதனால் வடக்கு நோக்கி அமர்ந்தும்,
இரவில் தெற்கு நோக்கி அமர்ந்தும் கழித்தல் வேண்டும்.
சௌசத்திற்கு பின் மண் இட்டுக் கொள்வதற்காக மண்ணை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த மண்ணை தெய்வ அக்னியுள்ள இடம், மலை, மாட்டுக் கொட்டில், நதியிலிருந்து, மசானத்தில், புற்றில், எலிவலை,
மரத்தடி, கோவிலருகில், ஜலத்தின் நடுவில், வழிப்பாதையில் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கக் கூடாது.

அந்த மண்ணில் பிராணிகளின் எலும்புக்கூடு, உமி, சாம்பல், சிறு மரக்கட்டைகள், கரித்துண்டு ஆகியவைக் கலந்திருக்கக்கூடாது.

நதிக்கரையோரம் மேலேச் சொன்னவற்றைக் கருத்தில் கொண்டு நல்ல மண்ணாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜல பாத்திரத்தினை “அஸ்த்ர“ மந்த்ரம் சொல்லி எடுக்க வேண்டும்.
(இங்கு சில மந்த்ரங்களின் பெயர் மட்டும் கூறியுள்ளேன் – அவரவர் ஆச்சார்யர்களைக் கேட்டு இந்த மந்திரங்களை அறிந்து கொள்ளவும்…)
மண் எடுக்கும் போதும் அஸ்திர மந்திரம் சொல்லி சேகரித்துக் கொள்ளவும்.

வன்னித்துளிர், அத்தி, அரசம், இச்சிமரம், தர்ப்பம், மூங்கில்,
மாமொட்டு, நாயுருவி, மருதம் இதில் எது சாத்தியமோ அவற்றையெல்லாம் சேகரிக்க வேண்டும்.
இதில் சில பல் துலக்குவதற்கும், மண்இட்டுக்கொள்ளும் போது பயன்படுத்திக் கொள்வதற்கும், வைத்துக் கொள்ளவும்.

பல் துலக்கும் குச்சியானது 12 அங்குலமுள்ளதாக இருக்கவேண்டும். அது வளைந்தோ அல்லது முடிச்சுக்களுடன் இருத்தல் கூடாது.
பல் துலக்குவதற்கு முன், கைகால்கள் அலம்பிக்கொண்டு, ஆசமனம் செய்து,
கிழக்கு முகமாகவோ அல்லது வடக்கு முகமாகவோ பல்துலக்க வேண்டும்.

குச்சியின் மிருதுவான பாகத்தினைக் கடித்து பல்துலக்க வேண்டும். குச்சியிலிருந்து வெளிப்படும்
துவர்ப்பான அல்லது கசப்பான சாற்றினை சுவைத்தப்படி பல் துலக்கச் சொல்கின்றார்.

குச்சி கிடைக்காவிட்டாலோ அல்லது அசக்தமாய் இருந்தாலோ ஆட்காட்டி விரலினால் 12 முறை ஜலத்தினால் பல் துலக்க வேண்டும்.

நாக்கு வழிப்பதற்கு 16 அங்குல நீளமுள்ள குச்சி வேண்டும். முடிச்சுடன் கூடாது.
உயர்ந்த உலோகங்களால் செய்யப்பட்ட குச்சியாலும் நாக்கு வழிக்கலாம்.

சாண்டில்யர் அடுத்து “ஸ்நானம்“ பற்றிச் சொல்லும் போது, “ஒரு ஊரில் குளங்கள் இருக்கும் போது கிணற்றில் ஸ்நானம் செய்தல் கூடாது
மற்றும் எந்த குளத்தில் அதிகம் நீர் உள்ளதோ அந்த குளத்தில் குளிக்க வேண்டும் எனவும்,
அந்த ஊரில் ஓடுகின்ற நதியிருக்குமாயின் நதியில்தான் குளிக்க வேண்டும்“என்றும் குறிப்பிடுகின்றார்.

இந்த நதிகளைப் பற்றி சில குறிப்புகளைச் சொல்கின்றார்.

எந்த நதியானது சமுத்திரத்தில் சென்று கலக்கின்றதோ அந்த நதி மிகச் சிறந்த புண்ய நதியாம்!

இதில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பிரவாகம் எடுத்து ஓடும் நதி மிகமிகச் சிறந்த புண்ய நதியாம்!

இவற்றில் எந்த பக்கத்து நதிக்கரை நித்ய அனுஷ்டானம் பண்ணுவதற்கு ஏற்றது..?

கிழக்கு நோக்கி ஓடும் நதிகளின் தென்கரை வடக்குக் கரையினைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தது.

வடக்கு நோக்கி ஓடும் நதிகளுக்குக் கிழக்குக் கரை நல்லது!

இதில் ஒவ்வொன்றைக் காட்டிலும் சிறந்தவற்றில் 10 மடங்கு பலன் அதிகமாம்!

நம் பூர்வாச்சார்யர்களை நாம் தற்சமயம் நினைவு கூறுவோம்..!

ஸ்ரீரங்கத்தில் ஓடும் இரு நதிகளுமே வடக்கிலிருந்து கிழக்கு நோக்கித் தான் பாய்கின்றது.
அதில் நம் பூர்வாச்சார்யர்கள் அனைவருமே கொள்ளிடக்கரையின் தென்கரையில் தற்சமயம் சிதிலமடைந்து காணாமலே போய்விட்ட
ஆதிகேசவ பெருமாள் சன்னிதியினைச் சுற்றியுள்ள (மணவாள மாமுனிகள் திருவரசு இருந்த இடம்.!) சதுர்வேதி மங்கலத்தில்
அன்றாட அனுஷ்டானங்களுக்கு ஏதுவாக வசித்து வந்துள்ளார்கள்!
அவர்கள் எவ்வளவு தெளிவான வாழ்க்கை வந்துள்ளனர் என்பதினை நினைக்கும்போது மனம் பூரிப்படைகின்றது..!

நதியினில் நீராடுவதற்கு முன் முதலில் ஆசமனம் செய்ய வேண்டும். இதன் பிறகு நீரில் மூழ்க வேண்டும்.
நம் சரீரம் நன்கு நனைந்த பின்பு முதலில் கோமயம் கொண்டு உடம்பை தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மண் கொண்டு தேய்த்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் பாசிப்பருப்பு அல்லது உளுந்து ஆகியவைகளின்
மாவுப்பொடியினைக் கொண்டு தேய்த்துக் கொள்ள வேண்டும். கவச மந்திரத்தினைச் சொல்லியபடியே நீராட வேண்டும்.
பின்பு ஹ்ருண் மந்த்ரத்தினை உச்சரித்தப்படியே கந்த பொடிகளைக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.

ஒரு நெல்லிக்காய் அளவு நதியிலுள்ள ஈரமண்ணை எடுத்து இடது கை மணிக்கட்டின் அருகில் வைத்துக் கொண்டு
அஸ்த்ர மந்த்ரம் மற்றும் மூல மந்த்ரம் முதலானவற்றை உச்சரித்தப்படி அந்த மண்ணை ஸ்பர்ஸித்து,
அந்த மண்ணில் ஒரு பாகத்தினை ஒரு கையில் எடுத்துக் கொண்டு மீதமுள்ள ஒரு பாகத்தினை நாம் நிற்கின்ற இடத்தினில் விட வேண்டும்.
கையிலுள்ள ஒரு பாகத்தினை இரண்டாக பண்ணி இதில் ஒரு பாகத்தினை நதியினில் சேர்த்தும்,
மீதமுள்ள ஒரு பாகத்தினை உடம்பினை தேய்த்து பின்னர் நீராடுதல் வேண்டும்.
இம்மாதிரி செய்வதனால் அந்த தீர்த்தத்தினில் கங்கை, யமுனை, ப்ரயாகை, சக்ர தீர்த்தம், ப்ரபாயம், புஷ்கரம்
முதலான தீர்த்த சக்திகள் அனைத்தும் அங்கே சூக்கும ரூபத்தில் வந்து விடும்..!
மேலும் ஸ்நானத்திற்கு உண்டான இடைஞ்சல்கள் பலமற்று போய்விடும்..

மீண்டும் ஒரு நெல்லிக்காய் அளவு நதியினில் நாம் குளிக்குமிடத்திலுள்ள மண்ணை எடுத்து சூரிய கிரணங்களிடத்துக் காண்பித்து,
ஒருக்கால் சூரியகிரணங்களை மேககூட்டம் மூடி அந்த கிரணங்கள் இல்லையென்றால் மனதில் அந்த மண்ணின் மீது சூரிய கிரணங்கள்
படுவதாக மனதினால் பாவித்து, நம் உடலின் அனைத்து அங்கங்களையும் அந்த மண் கொண்டு தொட வேண்டும்.
பின்னர் கவச மந்திரம் சொல்லி நம் அங்கங்கள் மற்றும் கையிலுள்ள மண்துகள்களைப் போக்கிக் கொள்ளவேண்டும்.

பின்னர், வலது கையினால் ஒரு தர்பமுஷ்டியை எடுத்துக் கொண்டு ஒடும் ஜலத்தில் “அப்பு சூக்த“ மந்திரத்தினால்,
ஜலத்தினைச் சுற்றி பின்பு உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றாய் குவித்து கும்பம் போல் வைத்துக் கொண்டு,
அப்படியே இருகைகளினாலும் ஜலம் எடுத்து தலை, காதுகள், கண்கள், முகம் மற்றுமுள்ள அங்கங்களை ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். ஜ்யோதிர்மயமான நம் ஹ்ருதய புண்டரீகத்தில் இருக்கும் ஹரியைத் தியானம் செய்ய வேண்டும்.
புருவ மத்தியில் எம்பெருமானைத் த்யானிக்கவும்.

இது “அகமர்ஷண ஸ்நானம்“ எனப்படும். இது அனைத்து பாபங்களையும் போக்கக் கூடியது.

ப்ராணயாமம் செய்து எழுந்து சூர்யமண்டலத்தினை இரு கை விரல்களையும் கோர்த்து
(இந்த விரல்களைக் கோர்ப்பதற்கு ஒரு முறையுள்ளது. பெரியோர்களிடம் கேட்டு அறிக.!) இருகைவிரல்களுக்கும் இடையே தரிசிக்கவும்.

கரையேறி ஈரவஸ்திரத்தினைக் களைந்து மாற்று வஸ்திரம் உடுத்தி, நம் வலதுபுறமாக அனைத்து சிகையையும் தள்ளி
சிகையினைப் பிழிந்து அந்த தீர்த்தத்தினை சேகரித்து, ‘அஸ்த்ர’ மந்திரம் சொல்லி அந்த தீர்த்தத்தினை பூமியினில் ப்ரோக்ஷிக்கவும்.
இது அனைத்து தோஷங்களையும் போக்கவல்லது.

சிகையினை முடிந்து கொண்டு ஆசமனம் செய்க.
பின்னர் நித்ய தர்ப்பணம் செய்க. கட்டை விரல்கள் மூலம் ரிஷி தர்ப்பணம். மற்ற விரல்களின் மூலமாக கையை நேராக வைத்து தேவ தர்ப்பணம்,
கட்டை விரலுக்கும் இதர விரல்களுக்குமிடையே பித்ரு தர்ப்பணம் என்ற கிரமத்தில் செய்ய வேண்டும்.
ரிஷி தர்ப்பணம் முடிந்தவும் தீர்த்தம் சிறிது பருக வேண்டும். தேவ தர்ப்பணம் முடிந்தவுடன் அங்க ந்யாஸம் செய்க.
பித்ரு தர்ப்பணம் முடிந்தவுடன் தேகத்தினைத் துடைத்துக் கொள்க. இந்த தர்ப்பணாதிகளை விருப்பப்பட்டால் செய்யலாம்.

வலது கையினால் ஜலத்தினை சேகரித்து, நாசிக்கு அருகில் கொண்டுவந்து, ‘ஹ்ருண்’ மந்திரத்தினைச் சொல்லி முகர்ந்து
‘கவச’ மந்த்ரம் சொல்லி பின்பு ‘அஸ்த்ர’ மந்த்ரம் சொல்லி பூமியினில் தெளிக்கவும்.

பின்னர் இரு கைகளினாலும் தேஹ ந்யாஸம் செய்க.!

ஜலத்தினைக் கையில் அஞ்சலி செய்வது போல் எடுத்துக் கொண்டு சூர்யமண்டலத்தின் நடுவில்
எம்பெருமான் வீற்றிருப்பதாக தியானித்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஆஸநத்தில் அமர்ந்து, கையில் பவித்ரம் தரித்து, ஆஸநத்தில் அமர்ந்து ஜபிக்கத் தொடங்க வேண்டும்.

யார் யாரைத் தியானித்து ஜபிக்க வேண்டும்…?

முதலில் ஆஸநத்தில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து,

1) இந்திரன் முதல் விஷ்ணு வரையிலும்
2) வாஸூதேவன் தொடங்கி அநிருத்தன் வரையிலும்
3) கேசவன் தொடங்கி தாமோதரன் வரையிலும் (த்வாதசம்)
4) பரமாத்மா
5) ப்ருதிவ்யாதி பஞ்சபூதங்கள் (நீர் தொடங்கி ஆகாயம்வரை)
6) ரிஷிகள் வரை தியானித்து ஜபம் செய்க.
7) பித்ருக்களைத் தியானித்து தெற்கு நோக்கி அமர்ந்து எள் கொண்டு அனைவருக்கும் தாந்தரீக தர்ப்பணம் செய்யவும்.

பின்னர் பவித்ரம் விசர்ஜனம் – ஆசமனம் – திக்குகள் அனைத்திற்கும் அந்தந்த திக்கு நோக்கி நமஸ்காரம் செய்யவும்.

திக்பந்தனம் செய்து, பிராணயாமம் முடித்து, பூதசுத்தி செய்யவும்.

ஜலமத்தியில் எம்பெருமானை தியானித்து, மானஸீகமாக எல்லா உபசாரங்களையும் செய்யவும்.
முடியுமாயின் புஷ்பங்களால் மானஸீகமாய் தியானித்துள்ள எம்பெருமானிடத்து அர்ச்சிக்கவும்.

எள், ஸமித்து, பசுநெய் கொண்டு ஹோமம் செய்க.

சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்க.

இத்துடன் தீர்த்த ஸ்நானம் நிறைவுற்றது.

இவ்விதம் செய்யும் கார்யகிரமமானது, நம் குறைபாடுகள் அனைத்தையும் நீக்கி, நிறைவடையச் செய்யும்.

சரி..! இதுவரையில் நதிக்கரையினில் நாம் அன்றாடம் செய்யக்கூடிய கார்யகிரமங்கள் அனைத்தையும் பார்த்தோம்..!

இயற்கைச் சீற்றம், வெள்ளப் பெருக்கு, ஏதேனும் நதி தீரத்திற்குப் போக முடியாத அளவுக்குக்
கஷ்டங்கள் அல்லது நமக்குத் தள்ளாமை – அப்போது என்ன செய்யலாம்….?
கை மற்றும் கால்களை நன்கு அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்யவும். 10 திக்குகளிலும் (8 திக்குகள், ஆகாயம் + பூமி)
ஜலத்தில் ப்ரோக்ஷித்து சுத்தி செய்யவும்.
நடுவில் அமரவும். மூலமந்திரம் சூழ்நிலைக்கேற்ப ஜபம் செய்யவும். பின்னர் பிராணாயாமம். பிறகு பூதசுத்தி செய்யவும்.
இதற்கு மந்திர ஸ்நானம் என்று பெயர்.
சிரத்தையுடன் செய்வோமாயின், பிரயாகை முதலான தீர்த்த ஸ்நானத்தினைக் காட்டிலும் இது மிகவும் உயர்ந்தது.

தியான ஸ்நானம்

மேற்கூறியவாறு செய்து முடித்தவுடன் ஆகாயத்தில் மந்த்ரமூர்த்தியாய் இருக்கும் ஸ்ரீமந் புண்டரீகாக்ஷனை
“ஓம் புண்டரீகாக்ஷாய நம:” என்று தியானித்து தேஜோ மயமான அவனது திருவடிகளில் இருந்து தீர்த்தம் பெருகி
நமது சிரஸ்ஸின் பிரும்மரந்தரத்தின் வழியே நமது சரீரத்தினுள் அந்த புண்ணிய தீர்த்தம் விழுவதாக மனதினால் பூரணமாக தியானிக்கவும்.
இது தீர்த்த ஸ்நானம், மந்த்ர ஸ்நானத்தினைக் காட்டிலும் மிக மிக உயர்ந்தது. ஒரே ஒரு விஷயம் நம் மனம் ஒருநிலைப்பட்டு,
வேறெந்த சிந்தனையுமில்லாது ஆத்மார்த்தமாக செயல்படுதல் மிக முக்கியம்.

திவ்ய ஸ்நானம்
சூர்யனின் கிரணங்களோடு கூடிய மழையில் ஸநானம் செய்வது.

பஸ்ம ஸ்நானம்
கோமயம், ஸமித்துக்களால் எரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தூய வெண்மையான பஸ்மத்தில், நெற்றி முதலான அங்கங்களில்
அந்தந்த ஸ்தானத்திற்குரிய மந்திரங்களைச் சொல்லி ஊர்த்வ புண்டரமாக இட்டுக் கொள்ளுதல்.
(சாண்டில்யரின் காலத்தில் நாம் இப்போது இட்டுக் கொள்ளும் திருமண் என்பது வழக்கத்தில் இல்லை..!)

வாயவ்ய ஸ்நானம் அல்லது கோதூளி ஸ்நானம்
கோமாதா செல்லும் போது அதன் குளம்பிலிருந்து கிளம்பும் கோதூளிகள்(மண் துகள்கள்) நம் சரீரத்தில் படுவது.

பார்த்திவ ஸ்நானம்
உயர்ந்த மலையுச்சி, புண்ணிய க்ஷேத்திரங்கள் முதலான இடங்களில் பெறப்பட்ட வெண்மையான மண்ணினால்
கேசவாதி நாமங்களைச் சொல்லி நம் அங்கங்களில் ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொள்ளுதல். இது அனைத்து பாவங்களையும் போக்கக் கூடியது.

இந்த ஏழு விதமான ஸ்நானங்களில் ஏதாவது ஒன்றை அவஸ்யம் செய்யவேண்டும்.

இந்த ஸ்நானம், ஆசமனம், பிராணயாமம் முதலியவைகளால் சரீரத்தின் உள்ளும், புறமும் தூய்மையானவனாய் செய்யப்படும்
கிரியைகள் அனைத்தும் நிச்சயமாக பலனைத் தரும்.

இத்துடன் இரண்டாம் அத்தியாயம் “ஸ்நானவிதி“ முடிந்தது.

—————-

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

இந்த அத்யாயத்தினில் ஸ்நானத்திற்கு பிறகு செய்யவேண்டிய கர்மாக்களைப் பற்றி சாண்டில்யர் விரிவாக எடுத்துரைக்கின்றார்.

ஸ்நானம் முடிந்து சிகை முடிந்தபின், சிகையுள்ள இடத்தினில், இளம் அருகம்புல்லையோ, புஷ்பத்தினையோ அல்லது எள்ளையோ
தீர்த்தம் சிறிது சேர்த்து அஸ்த்ர மந்த்ரம் சொல்லி சேர்த்துக்கொள்ளவும்.

பின்பு தீர்த்தம் நிறைந்த பாத்திரத்தினை வஸ்திரம் கொண்டு மூடி கையில் எடுத்துக்கொண்டு ஜனங்கள் அதிகம் செல்லாத வழியே,
ஏகாந்தமாய், அழகானதாய், தோஷங்கள் அற்றதாய், மனதினை ஒருநிலைப்படுத்துவதற்கு ஏற்றதாய், சுத்தமாக இருக்கக்கூடிய
எம்பெருமானின் திருக்கோவிலை நோக்கி, ஹ்ருதயத்தினில் வீற்றிருக்கும் ஞான, ஆனந்தமயனான எம்பெருமானை
சிந்தையினில் வைத்து வேறு எந்த திக்கினையும் பாராது மௌனியாய் செல்ல வேண்டும்.

த்வாதசாக்ஷரியை ஜபம் செய்தவண்ணம் ஸந்நிதியின் உள் நுழைந்து ஸந்நிதியைச் சுற்றியுள்ள உட்பிராகாரத்தினை சுத்தம் செய்து,
தாம் கையில் நதிதீரத்திலிருந்து கொண்டுவந்த ஜலத்தினால் பிராகாரம் சுற்றி ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

கர்ப்பகிரஹ வாயிலில் இருந்து பலிபீடம் வரையிலும் உதவியாளர்களைக்(பரிசாரகர்கள்) கொண்டு தூய ஜலம் கொண்டு சுத்தம் செய்க.

பின்பு, ஆச்சார்யன் பாதத்திலிருந்து முழங்கால் வரையிலும், உள்ளங்கையிலிருந்து மணிக்கட்டு வரையிலும்
கைகால்களை சுத்தம் செய்தபின்பு ஊர்த்வபுண்டரம் இட்டுக்கொண்டு ஆசமனம் செய்க.

ஊர்த்வபுண்டரத்தோடு சந்தனம் முதலான சுகந்த வஸ்துக்களை சேர்த்து குழைத்து ஊர்த்வபுண்டரம் இட்டுக் கொள்ளவும்.

சரி…! இந்த ஊர்தவ புண்டரம் இட்டு கொள்ள உதவும் மண் எங்கிருந்து எடுக்கலாம்..?

கீழ்கண்ட இடங்களிலிருந்து சேகரித்துக்கொள்ளலாம்..!

1) புண்ய க்ஷேத்திரம்
2) மலையுச்சி
3) நதிக் கரை
4) சமுத்திரக் கரை
5) புற்று
6) துளசிச் செடி அடிப்பாகத்திலுள்ள மண்

மண் எந்த நிறத்தில் எல்லாம் இருக்கலாம்..?

1) சிகப்பு
2) மஞ்சள்
3) கருப்பு
4) வெண்மை – ஆகிய நிறங்களில் இருக்கலாம்.

எந்தெந்த நிறத்திற்கு என்ன பலன்கள்..?

1) சிகப்பு :: அனைவரையும் வசப்படுத்த விரும்புபவன்
2) மஞ்சள் :: தனத்தை அடைய விரும்புபவன்
3) கருப்பு :: மன அமைதி அடைய விரும்புபவன்
4) வெண்மை :: மோக்ஷத்தினை விரும்புபவன்

இந்த ஊர்த்வ புண்டரமானது எந்த வடிவினில் இருக்க வேண்டும்..?

1) திரியில் பிரகாசிக்கக்கூடிய தீபம் போன்றோ..
2) மூங்கில் இலை போன்றோ..
3) தாமரை மொட்டு போன்றோ..
4) அல்லி மொட்டு போன்றோ
5) மீன் அல்லது ஆமைப் போன்றோ..
6) சங்கு போன்றோ…

மேற்கூறிய ஆறு அம்சங்களில் ஏதேனும் ஒன்று போன்று தரித்துக் கொள்ள வேண்டும்.

எந்தெந்த விரலினால் இட்டுக் கொள்ளலாம். அந்த விரல்களுக்கானப் பலன்கள்…?

புஷ்டி வேண்டுமானால் … கட்டை விரல்
மோக்ஷம் வேண்டுமானல் … ஆட்காட்டி விரல்
விரும்பியதை அடைய .. மோதிர விரல்
ஆயுள் வேண்டின் … நடு விரல்

எக்காரணம் கொண்டும் நகத்தினால் இட்டுக் கொள்ளவேக் கூடாது.

நம் உடலில் எவ்வளவு ஊர்த்வ புண்டரம் இட்டுக் கொள்ளலாம்..?
நான்கு பட்சமாக ஊர்த்வ புண்டரம் இட்டுக் கொள்வோமேயானால்

நெற்றியில் – ஸ்ரீவாஸூதேவனையும்,
ஹ்ருதயத்தில் – ஸ்ரீசங்கர்ஷணனையும்
வலதுதோள் – ஸ்ரீப்ரத்யும்னனையும்
இடது தோளில் – ஸ்ரீ அநிருத்தனையும்

தியானித்தவண்ணம் இட்டுக் கொள்ள வேணும்.

12 பட்சத்தில்

நெற்றி – கேசவன்
உதரம் – நாராயணன்
ஹ்ருதயம் – மாதவன்
கண்டம் – கோவிந்தன்
வலதுபக்க உதரம் – விஷ்ணு
வலது தோள் – மதுசூதனன்
வலது கழுத்து – த்ரிவிக்ரமன்
இடது உதரம் – வாமனன்
இடது தோள் – ஸ்ரீதரன்
இடது கழுத்து – ரிஷிகேசன்
பின்புறம் பிருஷ்டபாகத்திற்கு மேல் – பத்மநாபன்
கழுத்து பின்புறம் – தாமேதரன்.
சிரஸ்ஸின் மேல் – ஸ்ரீவாஸூதேவன்
(இது சம்ஹிதையில் சொல்லப்படவில்லை ஆனால் சிலர் அனுஷ்டானத்தில் தற்சமயம் உள்ளது).

யக்ஞம், தானம், தபஸ், ஹோமம், போஜனம், பித்ரு கர்மாக்கள் இவையனைத்தும்
ஊர்த்வபுண்டரம் இன்றி செய்வோமாயின் பலனற்றதாகிவிடும்.
ஆகையினால் அனைத்து சித்தியையும் கொடுக்கக்கூடியதான ஊர்த்வ புண்டரத்தினைச் சிரத்தையுடன் தரிக்க வேண்டும்.

ஊர்த்வபுண்டரங்கள் தரித்து அனுஷ்டானங்கள் முடிந்தவுடன் இரண்டு கைகளிலும் மோதிர விரலில் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டும்.
(தற்சமயம் எல்லா அர்ச்சகர்களும் ஒரு கையில் (வலது கை) மட்டும் பவித்ரம் தரித்துக் கொள்கின்றனர்.
ஒருசிலர் தங்கத்தினிலான பவித்ர மோதிரம் மட்டும் தரித்துக்கொள்கின்றனர்.
மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் மட்டுமே இன்று வரை அர்ச்சகர்கள் இரு கைகளிலும் பவித்ரம் தரித்துத்
திருவாரதனம் முதலானவற்றைச் செய்து வருகின்றார்கள்
அங்கு அர்ச்சகர்கள் மட்டுமல்ல அங்குள்ள உடையவரின் திவ்யமங்கள வி்க்ரஹத்திலும் உடையவர் இரு கைகளிலும் பவித்ரம் அணிந்துள்ளார் ).
பவித்ரம் அணியாமல் பெருமாளுக்குச் செய்யப்பட்ட ஸ்நானம், நைவேத்யம், அர்ச்சனம், நாம் செய்யக்கூடிய
தானம், ஜபம், ஹோமம், பித்ருதர்ப்பணம் இவையெல்லாம் பயனற்றது.
ஆகையினால் இக்காலங்களில் அவசியம் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டும்.

என்னென்ன அலங்காரங்கள் அர்ச்சகர்கள் தமக்குச் செய்து கொள்ள வேண்டும்..?

உச்சந்தலையில் க்ஷோபன அக்ஷதைகளோடு விளங்க வேண்டும்.
தூய்மையான வ்ரதத்தினைக் கடைப்பிடிக்கவேண்டும்.
வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ள வேண்டும்.
மணம் கமழத் திகழ வேண்டும்.
தாம்பூலம் தரித்துக் கொள்ள வேண்டும். (கோவிலுக்குச் செல்வதற்கு முன்பே வாயைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோவிலின் எல்லைகளுக்குள் எங்கும் உமி்ழ்வதோ, துப்புவதோ கண்டிப்பாகக் கூடாது.
வாய் துர்நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.)
மாலைகள் அணிந்து கொள்ள வேண்டும்.
தூய்மையான நல்ல வெண்மையான வஸ்திரங்கள் அணிந்து கொள்ளல் வேண்டும்.
கர்ணபூஷணம் (காதுகளுக்கான கடுக்கண் போன்ற ஆபரணங்கள்) அணிந்து கொள்ள வேண்டும்.
கழுத்துக்கு ஹாரங்கள் (ஆபரணங்கள்) அணிந்து கொள்ள வேண்டும்.
கைக்குக் கடகம்
கைவிரல்களில் மோதிரங்கள்.
இவை எதற்கும் வசதியில்லாவிடின் கைவிரலில் ஒரு மோதிரமாவது தரிக்க வேண்டும்.
தம்முடைய சுவாசக்காற்று எம்பெருமான் மேல்படாதவாறு நாசித் துவாரங்களை வஸ்திரத்தினால் மூடிக்கொள்ள வேண்டும்.
(இதனால்தான் பெரும்பாலான அர்ச்சகர் மூன்றாவது உத்தரீயமாக தமது வலதுதோளில் இன்னொரு வஸ்திரத்தினை அணிந்து கொள்கின்றனர்)

இவையனைத்தும் செய்து கொண்டுபின் அர்ச்சகர்கள் எம்பெருமானைத் திருப்பள்ளி உணர்த்த வேண்டும்.

சரி..? எப்படி திருப்பள்ளியெழுச்சிச் செய்ய வேண்டும்..?

(இங்கு நாம் சற்று சிந்திக்கவேண்டும். அர்ச்சகர்கள் இவ்வளவு அலங்காரங்கள் செய்து கொள்ள வேண்டுமா..? என்றால்,
ஆமாம் என்றுதான் சொல்லவேண்டும். எல்லோருமே முக்தி ஒன்றே பிரதானமாகக் கொண்டு கோவில்களுக்கு வருவதில்லை..
பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு வேண்டுகோளுடனோ அல்லது ஏதேனும் கஷ்டங்கள் நிவர்த்திக்காகவோ வருகின்றனர்.
அவர்கள் அனைவருக்குமே கடவுளிடத்தில் அவர்களது பிரார்த்தனைகளை எடுத்துச் செல்வது – சொல்வது அர்ச்சகர்கள்தாம்.
அவர்களே உடலில் துர்நாற்றம் பிடுங்க அழுக்குமூட்டையாயிருந்தால் சேவார்த்திகளிடத்து அவநம்பிக்கைத்தான் பெருகும்.
எனவே அர்ச்சகர்கள் மேற்கூறியவற்றில் எவையெவைக் கடைப்பிடிக்க முடியுமோ அவற்றை செய்தல் நன்று.
குறிப்பாக சுத்தமாயிருத்தல் மிக மிக அவசியம்.
இன்னொரு விஷயம் அர்ச்சகர்களே இவ்வளவு அலங்காரம் செய்து கொள்ள வேண்டுமாயின் அவன் ஆராதிக்கும் பெருமாள்
இந்த அர்ச்சகனைக் காட்டிலும் பலமடங்கு சுத்தமாகவும் பரிமளத்துடனும், தேஜஸ்ஸூடனும்
இருக்க வேண்டியது மிகமிக அவசியம். இதனை அனைத்து அர்ச்சகர்களும் உணர்ந்து பணியாற்றுதல் வேண்டும்.)

திருபள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சியின் போது துதிப் பாடகர்களலோ அல்லது அங்கு குழுமியுள்ள பாகவதர்களோ
“ஜய ஜய” என்று ஒருமித்த உரத்தக் குரலில் கோஷமிடவேண்டும்.
சங்கநாதம் ஒலிக்க வேண்டும்.
சுப்ரபாத (ப்ரபோத) சுலோகங்களைச் சொல்லி எம்பெருமானை பள்ளியெழுப்ப வேணும்.
த்வாரம் அருகே சென்று தச திக் பந்தனம் (8 திக்குகள்+ஆகாயம்+பூமி) செய்து தர்ஜனி விரலால்(ஆட்காட்டி விரல்) அவகுண்டனம் செய்து,
கவச மந்திரத்தினை உச்சரித்தவாறு, கருடன் முதலிய பரிவாரத்தோடு கூடிய ஏம்பெருமானை ப்ரணவம், நமஸ்ஸூக்களாலே
புஷ்பங்களைக் கொண்டு “ஸமஸ்த பரிவாராய அச்சுதாய நமோ நம:“ என்று துதிக்க வேண்டும்.

பிறகு யதாக்ரமம் ‘வாஸ்து புருஷன்’ தொடங்கி அர்ச்சிக்க வேண்டும்.

ந்யாஸங்களோடோ அல்லது ந்யாஸங்கள் இல்லாமலோ, மூலமந்திரத்தினைச் சொல்லி, மூன்று தடவை “தாளத்ரயம்“ செய்யவேண்டும்.

மூல மந்திரத்தினை உச்சரித்தவாறு திருக் கதவுகளைத் திறக்கவேண்டும்.

பிறகு நேத்ர மந்திரத்தினை ஜபித்தவாறு திருவிளக்கு ஏற்றி விட்டு, தீர்த்தம் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்க.

பின்பு தம் உதவியாளர்களையோ அல்லது சிஷ்யர்கள் அல்லது புத்ரர்களை ஒத்தாசைக்கு அழைத்து
முதலில் அவர்களை பாத்ரசுத்திக்கு கட்டளையிட வேண்டியது.

(ஒத்தாசைக்கு வருபவர்கள் அனைவரும் நல்ஒழுக்கம், பகவத்சிந்தனை முதலியனை உடையவர்களாகவும்,
தீர்த்தமாடியவர்களாகவும் இருத்தல் அவசியம்)

பாத்ரங்களை எதனைக் கொண்டு சுத்தம் செய்யலாம்..?

தங்கம் மற்றும் தாமிரம் – புளி கரைசல்
வெள்ளி – புகை மற்றும் கரி சாம்பல்
இரும்பு பாத்ரங்கள் – சாம்பலும் தீர்த்தமும் கொண்டு
சங்குகள் – உப்பு
மரபாத்திரங்கள் – மண்ணும், தீர்த்தமும் கொண்டு

இந்த சுத்தம் செய்யபட்ட பாத்ரங்களை, அதனை சுத்தப்படுத்த பயன்படுத்திய வாசனை நீங்கும் வண்ணம் நன்கு அலம்பவேண்டும்.

சூர்யோதயம் ஆரம்பத்திற்கு முன்பே இந்த கர்மாக்களைத் தொடங்கவேண்டும்.

ஒரு அர்ச்சகர் கோவிலே இல்லாத ஒரு இடத்திற்குச் செல்ல நேரிட்டால்…..

அந்த அர்ச்சகர் சுத்தமான ஒரு பிரதேசத்திற்குச் செல்ல வேண்டும். மூல மந்திரத்தினைச் சொல்லிய வண்ணம்
அங்கு மனதினால் ஒரு கோவிலைக் கற்பனைச் செய்ய வேண்டும்.

மூல மந்திரத்தினைச் சொல்லி, கோடி சூர்ய பிரகாசமாயுள்ள எம்பெருமானை அங்கேத் தியானிக்க வேண்டும்.

அந்த எம்பெருமானின் ஹ்ருதயமாக “ஹ்ருண் மந்த்ரம்“
பிரும்ம நாடியாக “சிகோ மந்த்ரம்”
எம்பெருமானது க்ரியா சக்தி “கவச மந்த்ரம்“
இந்த மானஸீகக் கோவிலின் திருக்கதவுகள் மற்றும் ஜன்னல்கள் “நேத்ர மந்த்ரம்”
கர்ப்பகிரஹத்தில் ஆயிரம் அக்னிப் பொறிகள் சூழ்ந்து ஒளிமயமாகவும், அனைத்து விக்னங்களையும் போக்கக்கூடிய ஜோதியாக “ அஸ்த்ர மந்த்ரம்” —
ஆகிய இந்த மந்திரங்களைச் சொல்லி மேற்கூறிய ஸ்தானங்களைத் தியானிக்க வேண்டும்.

இந்த மானஸீக கோவிலின் த்வாரத்தினை (கர்ப்பக்கிரஹ நுழைவு வாயில்) மூன்றாக பிரித்து
அதன் நடுபாகத்தினை மீண்டும் இரண்டாக பிரித்து, பின்பு இந்த இரண்டுபாகத்தின்,
இடது பாகத்தில் மெதுவாக வலதுகாலை முன்வைத்து நுழைய வேண்டும்.

பூமியினை கொஞ்சமாக பறித்து, எம்பெருமானையும், ஆச்சார்யனையும் மனதினால் வணங்கி
அவர்களுடைய ஆக்ஞையினை சிரமேற்கொண்டு, தமக்கு விரும்பிய பலனை மனதினால் எண்ணி,
அதனை அங்குள்ள எம்பெருமானிடத்துத் தெரிவி்க்கவேண்டும். பின்பு அந்த குழி பறித்துள்ள இடத்தின் நடுவில்
நாம் தியானித்து கற்பனைச் செய்த எம்பெருமானின் விக்ரஹத்தினை மனதினால் அங்கு பொருத்தி,
தர்பத்தினால் அந்த இடத்தினைத் துடைக்கவேண்டும்.

நிறைய தீர்த்தத்தினைச் சேர்த்து, கோமயத்தினால் அந்த மூலஸ்தானத்தினை சுத்தம் செய்து,
பஞ்சகவ்யம், சந்தனம், தீர்த்தம் இவைகளை அஸ்த்ர மந்திரம் சொல்லி, அவ்விடத்தில் ப்ரோக்ஷணம் செய்யவேண்டும்.

குங்குமம், அகில், பச்சைக்கற்பூரம் ஆகிய கலவைக் கொண்டு மொழுக வேண்டும்.

தர்ப்பங்கள், அருகம்புல், அக்ஷதை ஆகியவற்றை அவ்விடத்தில் தூவவேண்டும்.

இவ்விதமாக கர்ப்பகிரஹத்தினை சுத்தம் செய்து பின்பு மௌனியாக எம்பெருமானுக்கு முன்பே அல்லது
வலதுபுறமான இருந்து, வழக்கம் போல் ஆராதனம் செய்யவேண்டும்.

சரி..! எப்போதும் கோமயம் (பசுவினுடைய சாணம்) எப்படி எடுக்கவேண்டும்..?

புதிதாக இடப்பட்ட சாணமாகயிருக்க வேண்டும்.
கொழகொழவென்றோ, புழுக்கள் உள்ளதாகவோ இருக்கக்கூடாது.

திருவாராதனம் தொடங்கும் சமயம் திரைப் போ்ட்டுக்கொள்ள வேண்டும்.
இதற்கானக் காரணத்தினையும் சொல்கின்றார் சாண்டில்யர்.
“பாபிகளும், ப்ரஷ்டர்களும் (தங்களது தர்மத்திலிருந்து நழுவியவர்கள்),
நாஸ்திகர்களும், திருவாராதனத்தினைக் காணல் ஆகாது. எனவே திரையிடுக” என்கிறார்.

பின்னர் திருமணி அடிக்க வேண்டும்..! திருமணி ஒலிக்கச் செய்வதற்கும் காரணம் சொல்கிறார்..!
”தேவர்கள் வருவதற்கும், ராட்சஸர்கள் போவதற்கும், தேவர்களை அழைப்பதற்கும் சின்னமாயுள்ள
மணியோசையை ஒலிக்கச் செய்ய வேண்டும்..”

திருமணியோசையோடு என்னென்ன ஒலித்தல் வேண்டும்..?

திருமணியோசையோடு சங்க முழக்கமும், நாதஸ்வரத்தின் மங்கல ஓலியுடன் கூட திருமணியோசை ஒலிக்க வேண்டும்.

எவ்வப்போது ‘சங்கொலி’ முழங்க வேண்டும்..?

1) ஆவாஹணம் சமயத்தில்
2) எண்ணைக் காப்பு சாற்றும் போது
3) திருமஞ்சனம் ஆரம்பத்திலும் முடிவிலும்
4) திலகமிடும் போது
5) தீபம் சமர்ப்பிக்கும் போது
6) ‘மாத்ரா’ (பச்சரிசி) நிவேதனம் போது
7) கற்பூர ஹாரத்தியின் போது
8) திரு மடப்பள்ளியிலிருந்து நைவேத்தியங்கள் கொண்டு வரும் போது
9) நைவேத்தியம் கண்டருளும் போது
10) பூர்ணாஹூதியின் போது
11) தீர்த்தம் கொண்டுவரும் போது
12) பெருமாள் வாகனங்களில் ஏறும் போதும், இறங்கும் போதும்.
13) திருக்கதவுகள் தாளிடும் போதும் – விலக்கும் போதும்.

மேற்கூறிய சமயங்களில் சங்கொலி முழங்க வேண்டும். எத்தனை முறைத் தெரியுமா..? – “மூன்று முறை“.

இதெல்லாம் திருவாராதன காலத்தில் செய்யவேண்டிய கிரமங்கள். சரி..! நாம் என்ன கடைப்பிடிக்க வேண்டும்..

எம்பெருமானுக்கு திருவாராதனம் செய்யும் சமயம் ஆரம்பம் முதல் மௌனமாயிருந்து, நம் புத்தியினை அலைப்பாய விடாமல்,
எம்பெருமானிடத்தில் செலுத்தி சிரத்தையுடன் செய்யவேண்டும்.

திருவாராதன சமயத்தில் எக்காரணம் கொண்டும் பேசுதல் கூடாது.
இச்சமயத்தில் பேசுவது பலமான விரோதத்தினை ஏற்படுத்தும்.

எவ்விதமான ஜாடைகளோ, செய்கைகளோ, மூக்கினால் முனகுவதோ கூடாது. இதனை மீறினால் நமது சித்தியானது தடைப்படும்.

மௌனம் ஸர்வ சித்திகளையும் தரவல்லது.

தியான முத்ரையோடு, அஸ்த்ர மந்திரத்தினால் உள்ளங்கை, புறங்கை, விரல்கள் முதலானவற்றை அலம்பிக்கொள்ள வேண்டும்.
இந்த கரசுத்தி முடிந்தவுடன் ஸ்தான சுத்தி செய்யவேண்டும்.

சூரியனை ஒத்த ஒளியுடையவனும், ஜ்வாலை போன்று பிரகாசிக்கும் திருமுகமண்டலமுடைய எம்பெருமானை தியானித்து,
அவனாலே பிரம்மலோகம் வரையுள்ள உலகங்கள் ஒளிபொருந்தியதாய் தியானிக்க வேண்டும் –
அனைத்துத் திக்குகளும் அவனது தேஜஸ்ஸினால் ஜ்வலிப்பதாக எண்ண வேண்டும்.

மண்ணால் ஆன பாத்திரம் நெருப்பினால் சுடப்பட்டு பயன்பாட்டுக்கு உதவுவது போல, இந்த பூமியான பாத்திரம்,
எம்பெருமானாகிய நெருப்பினால் சுடப்பட்டு, அம்ருத அலைகளால் அனைத்து இடங்களும் நினைந்து, பவித்ரமானதாய் எண்ண வேண்டும்.

பின்பு திக்பந்தனம் செய்யவேண்டும்.

பிராணயாமம் செய்யவேண்டும்.

பிராணயாமம் எதற்காக செய்யவேண்டும்..? காரணம் சொல்கின்றார் சாண்டில்யர்..!

மன உளைச்சலையும், நிலையற்ற தன்மையையும் உடைய மனதினை ஒருநிலைப்படுத்துவதற்கும்,
பிராணன் முதலான வாயுக்களை ஜெயிப்பதற்கும், நம்முடைய “தமோ“ குணத்தினைப் போக்குவதற்காகவும்
பிராணயாமத்தினைச் செய்யவேண்டும்.

சரீரத்திலுள்ள நாடிகளின் அமைப்பையும், பிராணன் முதலிய வாயுக்கள் இருக்கும் இடத்தினையும்,
ப்ராணயாமத்தின் சொரூபத்தினையும் அறிந்து கொண்டு பிராணயாமத்தினைச் செய்யவேண்டும்.

நாடிகளைப் பற்றி விரிவாக கூறுகின்றார் சாண்டில்ய மஹரிஷி..!

இந்த நாடிகள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானம் “கந்த நாடி“ என்றும் (கந்தம் = ஹ்ருதயம்..? ).
நமது தேஹம் முழுவதும் 14000 நாடிகள் வியாபித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.

நாடிகளைப் பற்றி விரிவாக கூறுகின்றார் சாண்டில்ய மஹரிஷி..!

இந்த நாடிகள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானம் “கந்த நாடி“ என்றும்

(கந்தம் = ஹ்ருதயம்..? ). நமது தேஹம் முழுவதும் 14000 நாடிகள் வியாபித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.

இதில் மேலே போகக்கூடிய நாடிகள் “ஆக்நேய“ நாடிகளாகும்.

கீழே போகக்கூடிய நாடிகள் “ சௌம்ய“ நாடிகளாகும்.

குறுக்கே போகக்கூடிய நாடிகள் “சௌம்யாக்நேய“ நாடிகளாகும்.

இந்த 14000 நாடிகளில் மிக முக்யமானவை 10 நாடிகளாகும்.

அவைகள்

(1) இடா (2) பிங்களா (3) மேலே செல்லக்கூடிய “சுழும்னா“
(4) காந்தாரி (5) ஹஸ்திஜிஹ்வா (6) பூஷா (7) யஸஸ்வினி
(8) அலம்புஸா (9) குஹூ (10) கோசினி.

இந்த நாடிகள் நமது தேஹத்தில் எங்கெங்கு உள்ளன..?

“சுழும்னா” என்கிற மத்ய நாடி கந்தபாகத்திலிருந்து மேல்நோக்கிச் செல்கின்றது.
இந்த “சுழும்னா“ நாடியின் இடது புறம் “இடா“ என்கிற நாடியும்
வலது புறம் “பிங்களா“ என்ற நாடியும் நமது மூக்குவரை வியாபித்துள்ளது.
இந்த “சுழும்னா“ நாடிக்கு முன்புறம் “காந்தாரி” என்கிற நாடி நமது இடது கண் வரையிலும்
”ஹஸ்திஜிஹ்வா” என்னும் நாடி வலது கண் வரையிலும் வியாபித்துள்ளது.
கந்த பாகத்திலிருந்து மேல் நோக்கிய வண்ணம் இரு காதுகள் வரை ’பூஷா“ மற்றும் “யஸஸ்வினி” ஆகிய இரு நாடிகளும் உள்ளன.
கந்தபாகத்திலிருந்து, பாதம் வரை உள்ளது “அலம்புஸா“ என்கிற நாடி. இரகஸ்ய பிரதேசம் வரை உள்ளது “குஹூ“ நாடி.
கால் கட்டைவிரலில் “கோசினி“ என்னும் நாடி உள்ளது.

இந்த நாடிகளின் நிறங்கள்…

இடா – வெள்ளை
பிங்களா – சிகப்பு
காந்தாரி – மஞ்சள்
ஹஸ்திஜிஹ்வா – கருப்பு
பூஷா – கருமஞ்சள்
யஸஸ்வினி – பச்சை
அலம்புஸா – சிகப்பரக்கு (Redish Brown)
குஹூ – இளஞ் சிகப்பு
கோசினி – கருப்பு
இவைகள் பிரதானமாக விளங்கும் 10 நாடிகளாம்.

இந்த 10 நாடிகளிலும் விளங்கும் 10 வாயுக்கள்.

இடா – பிராணன்
பிங்களா – அபானன்
அலம்புஸா – சமானன்
குஹூ – வ்யானன்
சுழும்னா – உதானன்
பிங்களா – நாகன்
பூஷா – கூர்மன்
யஸஸ்வினி – க்ருகரன்
ஹஸ்திஜிஹ்வா – தேவதத்தன்
கோசினி – தனஜ்ஜயன்

இந்த வாயுக்களின் நிறம்

பிராணன், நாகன் – பவள நிறம்
கூர்மன், அபானன் – இந்திர கோபன்
சமானன், க்ருகரன் – ஆகாய நிறம்
தேவதத்தன், உதானன் – தாமரை மகரந்த நிறம்
தனஜ்ஜயன், வ்யானன் – கடல்நுரை போன்ற நிறம்.

இவ்வளவு விவரங்களையும் தெளிவாகச் சொல்லிவிட்டு “ப்ராணயாம“த்தினைப் பற்றி விளக்குகின்றார் சாண்டில்ய மஹரிஷி.

(மெய்ஞானம் கொண்டு அறிந்த இந்த நாடி அறிவிற்கு ஏதும் சமமாகுமா..?
நம் மஹரிஷிகள் காட்டிச் சென்ற பாதையினை நாம் மறந்து மேலைநாட்டு விஞ்ஞானத்தில் ஆழ்ந்து
இன்று பல குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளோம்.
நாடி பார்த்து நோய் தீர்க்கும் மிகச் சிறந்த வழிமுறை மறந்து போனோம்..! )

ப்ராணாயாமம் ::

ப்ராணயாமம் என்பது சுவாசத்தினைக் கட்டுப்படுத்துவது.
சுவாசம் என்பது மூன்று செயல்பாடுகள் உடையது.
வெளிக்காற்றின் உபயோகத்தோடு மூக்கினால் காற்றை உள்ளே இழுத்துக் கொள்வது – இது “நிஷ்வாஸம்“ எனப்படும்.
உள்ளேயிருக்கும் காற்றினை வெளியேற்றுதல் “ உச்வாஸம்“ எனப்படும்.
இதன் இரண்டிற்கும் நடுவே சிறிது நேரம் மூச்சுக்காற்றை நிலைநிறுத்துதல் “ஸ்தம்பனம்“ எனப்படும்.

இதில் நிஷ்வாஸம் – “ரேசகம்“ என்றும்
உச்வாஸம் – “பூரகம்“ என்றும்
ஸ்தம்பனம் “கும்பகம்“ என்றும் அழைக்கப்படுகின்றது.

இதில் “ரேசகம் “ – அதமம் என்றும்,
“பூரகம்“ – மத்திமம்“ என்றும்
“ஸ்தம்பனம்“ – உத்தமம் என்றும் சொல்கின்றார் சாண்டில்யர்.

(இது இப்போது விஞ்ஞானப் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேக வேகமாக சுவாசத்தினை உள்ளிழுத்தலும் வெளியேற்றுதலும்
ஆயுளைக் குறைக்கும் என்றும் எவ்வளவுக்கெவ்வளவு உள்ளிழுத்த மூச்சுக்காற்றினை நிறுத்தி நிதானமாக சுவாசிக்கின்றோமோ
ஆயுள் விருத்தி என்பதனை யோகம் கற்பிக்கின்றவர்களும், ஆழ்நிலை தியான பயிற்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.
நமது ஆயுளானது நாம் விடும் சுவாசித்தினைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது.)

சரி..! எந்தளவு காற்றினை உள்வாங்கலாம்.., அடக்கலாம்.., வெளியிடலாம்..?
இது தெரிந்து கொள்வதற்கு ஒரு கால அளவு உள்ளது. அது “மாத்திரை“ எனப்படும்.
இதனை எப்படி கணக்கிடுவது…?

உங்களது முழங்காலைச் சுற்றி வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இன்றி நிதானமாக உங்கள்
கைவிரல்களால் ஒரு சொடுக்குப் போடும் காலத்தின் அளவே ஒரு மாத்திரையாகும்.

இப்போது சுவாசத்திற்கு வருவோம்.

ரேசகம் – 12 மாத்திரை அளவு
பூரகம் – 24 மாத்திரை அளவு
கும்பகம் – 36 மாத்திரை அளவு.

இந்த கணக்கின்றி வெறுமனே காற்றினை உள்வாங்கி வெளியிடுவதற்கு “ரேசகம்“ அதாவது “அதமம்“ என்றே பெயர்.

பிராணனை அடக்க விரும்புவன் இந்த மாத்திரைகளை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
மாத்திரைகள் மாறினாலோ அல்லது குறைந்தாலோ அது பயன் தராது. அது அதமம்.

ரேசகம் செய்யும்போது வலதுகை விரல்களாலே இடது நாசிகா துவாரத்தினை மூடிக்கொண்டு நாபிதேசத்தில்
இருக்கக்கூடிய “ஸ்ரீமந் நாராயணனை“ மூலமந்திரத்தினால் தியானம் செய்தவண்ணம்
குறிப்பிட்ட மாத்திரையளவு காற்றினை உள்வாங்கவேண்டும்.

இந்த ப்ராணயாமம் இரு வகைப்படும்.
அவை (1) அகர்ப்பம் (2) சுகர்ப்பம்.

ஜபம் மற்றும் தியானம் ஆகிய ஏதும் இல்லாது செய்யும் ப்ராணயாமம் “அகர்ப்பம்“ – இவைகளை உடையது “சுகர்ப்பம்“.
அகர்ப்ப ப்ராணயாமத்தினைக் காட்டிலும் “சுகர்ப்ப“ ப்ராணயாமம் நூறு மடங்கு உயர்ந்தது

::பூத சுத்தி ::

“கந்த சக்த“யினை “ரேசக“த்தினாலே வெளியகற்றிய பின்பு
சமுத்திரம், நதிஈ ஓடை இவைப் போன்ற நீர்நிலைகள் எவைகள் உள்ளனவோ,
இவைகளைப் “பிறைச் சந்திரன்“ போன்ற உருவத்தினை உடையதாயும், தாமரைக் கொடி உடையதாயும்,
நமது சரீரத்திற்கு வெளியே மனதினால தியானித்து பின்பு “பூரக“த்தினாலே மெதுவாக நம்முடைய தேகத்தினுள் நிரப்பவேண்டியது.

அடித்தொடைப் பாகம் முதல் முழங்கால் வரை அந்த ஜலத்தினால் வியாபிக்கப்பட்டதாய் “கும்பக“த்தினால் தியானிக்கவும்.

இதன் நடுவே வாருண மந்திரத்தினால் தியானிக்க வேண்டியது.
இம்மந்திரத்தினாலே ஜலமயமான அனைத்து பதார்த்தங்களும் லயமடைந்ததாக தியானிக்கவும்.

பிறகு ஜலமயமான அனைத்து விபவங்களையும், ரச சக்தியினாலேயும்,
அந்த ரச சக்தியினை அக்னியினாலேயும் “ரேசக“த்தினால் நுழைக்க வேண்டியது.

இங்கு அக்னியுடைய உருவத்தினை விவரிக்கின்றார் சாண்டில்யர்.

அக்னியானது திரிகோண வடிவம் – மின்னல், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், ரத்னங்கள், தாதுக்கள்
மற்றும் ஒளி கொண்ட அனைத்து வஸ்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டது.
மேலும் தானே பிரகாசிக்கக்கூடிய சரீரம் உடையவர்களும், சரீரமில்லாதவர்களுமான ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்களுடன்,
மங்கள ஸ்வரூபியான தேவதைகளுடன் கூடிய இந்த அக்னியைத் தியானிக்க வேண்டியது.

பின்பு, அக்னி மந்திரத்தினைக் கூறி அந்த அக்னி மண்டலத்தினுள் இருக்கக்கூடிய எம்பெருமானைத் தியானிக்கவும்.
இந்த அக்னி விபவத்தினை “பூரக“த்தினால் நாபியிலிருந்து அடித்தொடை வரை வியாபித்ததாய் தியானிக்கவும்.

பிறகு அனைத்து ஒளிமயமான வஸ்துக்களை தியானிக்கவும்.
பிறகு அக்னி தத்வமானது “ரூப சக்தி“யில் லயமடைந்ததாக தியானிக்கவும்.
இந்த “ரூப சக்தி“ ஞானமயமானது. பிறகு இந்த ரூபசக்தியை வாயுவிலே ரேசகத்தினாலே வெளியேற்ற வேண்டியது.

பிறகு வெளியே இருக்கக்கூடிய வாயுதத்துவத்தினைத் தியானிக்கவும்.
இந்த வாயுவானது பலவிதமான கந்தங்களோடு கூடியது.

பிறகு வாயுமந்த்ரத்தினை உச்சரித்து இந்த வாயுவின் சொரூபத்தினைத் தியானிக்கவும்.
பிறகு பூரகத்தினால் கழுத்திலிருந்து நாபி வரை இந்த வாயுவினால் வியாபிக்கப்பட்டதாய் நினைக்கவும்.
பிறகு இந்த வாயு தத்துவத்தினை “ஸபர்ச“ சக்தியிலே லயமடைந்ததாய் தியானிக்கவும்.
இந்த ”ஸ்பர்ஸ” சக்தியினை ஆகாய மண்டலத்தில் சேர்க்க வேண்டும்.
பிறகு வெளியே அனைத்து சப்தங்கள் கொண்டதும், நிறமற்றதும்,
பல உருவமற்ற, உடலற்ற சித்தர்களாலே நிரம்பியதுமான ஆகாயத்தினை அதற்குரிய மந்திரத்தினைக் கூறி தியானிக்கவும்.
பிறகு பூரகம் மூலமாக இந்த ஆகாயத்தினாலே கழுத்திலிருந்து ப்ரும்மரந்த்ரம் வரை வியாபிக்கப் பட்டதாய் நினைக்க வேண்டியது.
பின்பு தந்மந்த்ரமாகவே மாறிய அந்த ஆகாய தத்துவத்தை கும்பகத்தினாலே தியானிக்க வேண்டியது.
இந்த மந்த்ரமாக மாறிய ஆகாய தத்துவத்தினை பிறகு சப்த சக்தியாக மாறுவதாக தியானிக்கவும்.
பிறகு சப்த சக்தியை ப்ரும்மரந்தரத்தின் வழியே வெளிக் கிளம்பி, மற்ற நான்கு சக்திகளோடும் சேருகின்றதாக தியானிக்கவும்.

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வராஹ நாயனார் பிரபாவம் —

July 6, 2021

வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ்க் குலம் புக்க வராஹ கோபாலரைப் போலே
இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்-ஆச்சார்ய ஹிருதயம்–84-

(வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம்-யாதவ குலம் – புக்க கோபாலனைப் போலேயும்
பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்
இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்-)

வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம் புக்க கோபாலனைப் போலேயும்
அதாவது
யயாதி சாபாத் வம்சோயம் ராஜ்யாநர்ஹோ ஹி சாம்ப்ரதம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12- -என்கிற படி
யயாதி சாபத்தாலே ராஜ்யார்ஹம் இல்லாத படி நிஹீனமான யது வம்சத்தை –
அயம் ச கத்யதே பிராஞ்சை புரானார்த்த விசாரதை
கோபாலோ யாதவம் வம்சம் மக்னப் உத்தரிஷயதி–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-49 -என்கிற படி
உத்தரிப்பிக்கைக்காக-
அங்கோர் ஆய்க் குலம் புக்கதும் -திருவாய் -6-4-5–என்கிற படியே
கோப குலத்தில் உள் புக்கு கோபாலனான ஸ்ரீ கிருஷ்ணனைப் போலவும் –

பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்-
அதாவது –
ஹிரண்யாஷா பலத்தாலே நிலை குலைந்து பிரளயங்கதையான பூமியை-
உத்த்ரு தாஸி வராஹேண கிருஷ்னேண சத பாஹுந -தைத்ரியம் – –என்றும்
நமஸ்தஸ்மை வராஹாயா லீல யோத்தரதே மஹீம்—ஸ்ரீ வராஹ புராணம் என்றும்
சொல்லுகிற படி உத்தரிக்கைக்காக –
கேழலாய் கீழ் புக்கு இடந்திடும்–திருவாய் -2-8-7–என்கிற படியே
பாதாளத்தில் தாழ வீழ்ந்த வராஹா ரூபியை போலவும் –

இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்
அதாவது
குலம் தாங்கும் அபிமானத்தாலே சம்சாரத்தில் நிமக்னர் ஆனவர்களை ,
அந் நிலையில் நின்றும் பேதித்து –
அபிமான துங்கன்–திருப்பல்லாண்டு –11-என்னும்
உயர்த்தியை உடையவர் ஆக்குகைக்காக அஹங்கார ஹேதுவான வர்ணங்கள் அனர்த்த கரம் என்று தோற்றும் படி
தத் ரஹீதமான சதுர்த்த வர்ணத்திலே தாழ இழிந்தார் என்கை ..

இத்தால்- நாம் உத்க்ருஷ்ட வர்ணம் என்னும் துர் அபிமானத்தாலே -சம்சாரத்திலே
அழுந்துகிறவர்கள் அது ஹேயம் என்று அறிந்து -அவ் அபிமானம் அற்று கரை யேறுகைக்காக-
அவர்கள் உத்க்ருஷ்டமாக நினைத்து இருக்கும் வர்ணங்களை ஹேயம் என்று விட்டு
நித்க்ருஷ்ட வர்ணத்தில் தாழ இழிந்தார் என்று ஆய்த்து ..

( கோலதாம் வல்லபதாம் கோ மண்டல உத்தரம்-ஸ்லோகம் இது போலே உண்டே -)

————-

ஸ்ரீ வராஹ புராணம்–ஸ்ரீ கௌசிக புராணம் -ஸ்ரீ பராசர பட்டர்–

பரமபத நிலையன் அருளிச் செய்யும் வார்த்தை பரன் வாக்கியம் ஆகையால் பந்தம் இல்லாதார் கேட்கும்படியாய் இருக்கும்

ஷீராப்தி நாதன் வாக்யங்களைப் பார்த்தால் கடலோசை யோடே கலந்து அர்த்த ப்ரத்யாயம் ஆகாது –

மத்ஸ்ய ரூபியானவன் வாக்யத்தைப் பார்த்தால் ஒரு காலும் கரை ஏற்றம் அற்றவன் வார்த்தை யாகையாலே
ஜடாசய சம்பந்தம் தோற்றும்படியாய் இருக்கும்

கூர்ம ரூபியானவன் வார்த்தையைப் பார்த்தால் கம்பீரர் ஆகையாலும் ஸ்திரர் ப்ரமிக்கையும் கீழ்மை விடாமல் இருக்குமவன்
சொல்லும் வார்த்தை ஆகையாலே மேற் கொள்ளும் வார்த்தையாய் இராது –

ஸ்ரீ ந்ருஸிம்ஹன் வாக்யம் கழுத்துக்கு மேல் ஒரு படியும் கீழ் ஒரு படியும் ஆகையாலே ப்ரதோஷதிதமாய் இருக்கும்

ஸ்ரீ வாமனன் வாக்யம் -அடியில் சொன்னபடி அன்றிக்கே விஷம பதமாய் இருக்கும்
இவ்வளவும் அன்றிக்கே கவியாய் இருப்பான் ஒருத்தன் அளவிலே கண் அழிவை உடைத்தாய் இருக்கும்

பரசுராமன் வாக்யம் -பரசு தாரணம் பண்ணி சர்வ அவஸ்தைகளிலும் க்ஷமை விட்டவன்
வார்த்தை யாகையாலே ப்ரத்யயம் பிறக்கும் படி இராது

சக்ரவர்த்தி திருமகன் வாக்யம் கபிகளோடே கலந்து புண்ய ஜன பாதா பர்யந்தமாய் இருக்கும்

பல பத்ரன் வாக்யம் -சரஸ் ஸ்ரோதஸ்ஸாலே தாழப் போவாரையும் உதோத்த ப்ரவ்ருத்தர் ஆக்கினவன்
வார்த்தை யாகையாலே மத விகாரம் தோற்றி இருக்கும்
அவ்வளவு இன்றிக்கே சுத்த வர்ணனாய் இருக்கச் செய்தேயும் கலப்பை உடையவன் வார்த்தை ஆகையாலே
விஸ்வசிக்க ஒண்ணாத படியாய் இருக்கும் –

ஸ்ரீ கிருஷ்ணன் வாக்யம் பிறந்த அன்று தொடங்கி கை வந்த களவிலே காணலாம் படி இருக்கும்

கல்கி அவதாரத்தின் வாக்யம் வரப்போகிறது என்றுமது போக்கி ஒருவருக்கும் கை வந்து இருக்கும் வார்த்தை அன்று
அவ்வளவும் அன்றிக்கே அனுமானித்தே அறியவேண்டியதாய் இருக்கும்

இப்படிக்கு ஒரு அந்யதா சங்கை பண்ண ஒண்ணாதபடி
ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்ட ஞானத்தின் ஒளி உரு என்றும்
ஏனத்துருவாய் கிடந்த ஞானப்பிரான் -என்றும் –
சொல்லுகிறபடி சம்யக் ஞான உபகாரகன் ஆகையாலும்

பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே நன்று நான் உய்ய -என்று
ஞானவான்கள் விஸ்வசித்துக் கைக் கொள்ளும் படியான கிருபாதிசயத்தை யுடையவன் ஆகையாலும்

ஆதி முன் ஏனமாகி அரணாய மூர்த்தி யது எம்மை யாளும் யரசே -என்றும் சொல்லுகிறபடியே
ரக்ஷகத்வ பூர்த்தியை யுடையவன் ஆகையாலும்

இரும் கற்பகம் சேர் வானத்தர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும் ஏனத்துருவாய் கிடந்த ஞானப்பிரானை
அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்று ஆழ்வாரும் பிரதம பிரபந்தத்தில் சர்வருக்கும்
இவனை ஒழிய ரக்ஷகாந்தரம் இல்லை என்று அறுதியிட்டு

சரம பிரபந்தத்தின் முடிவிலும்
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் யுன்னைப் பெற்று இனிப் போக்குவனோ -என்று அவதாரங்கள் எல்லாம் கிடக்கச் செய்தே
இந்த அவதாரத்தில் தாம் அந்தமில் பேரின்பம் பெற்ற படியை அருளிச் செய்கையாலும்

அவனுடைய ரக்ஷகத்வமானது உத்தாரகமான ரக்ஷகத்வம் ஆகையாலும்
இப்படி பண்ணுகிற ரக்ஷணம் வாத்சல்ய மூலம் என்று தோற்றும்படி
ஏனமாய் நிலம்கொண்ட என் அப்பனே -என்றும்
அப்பன் ஊன்றி எடுத்து எயிற்றில் கொண்ட நாள் -என்றும்
வாத்சல்ய அவி நா பூதமான பித்ருத்வம் இவனுக்கு உண்டு என்று சொல்லுகையாலும்
ஸ்ரீ வராஹ அவதாரமே சர்வ உத்க்ருஷ்டமாகக் கடவது

இது சர்வேஸ்வரன் நாச்சியாரைப் பார்த்து அருளிச் செய்யும் வார்த்தை யாகையாலே
பாம்பணையாருக்கும் தம் பாம்பு போலே நாவும் இரண்டு உளவாய்த்து -என்கிறபடியே
இதுவும் உபாலம்ப விஷயம் ஆகிலோ என்னில் அவ்வார்த்தையும்
செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் -என்று
அறிந்து இருக்கச் செய்தேயும் விஸ்லேஷ கிலேசம் பொறுக்க மாட்டாத படியான த்வரா அதிசயத்தாலே
பாம்பணையாருக்கும் தம் பாம்பு போலே நாவும் இரண்டு உளவாய்த்து –என்று
அநந்த புஜக சம்சர்க்க தோஷத்தால் பொய்யாகிறதோ என்று அதி சங்கை பண்ணினாள் அத்தனை –

இவ்வார்த்தை அப்படி இன்றிக்கே -பார் வண்ண மடமங்கை பத்தர் -என்கிறபடியே
நாச்சியார் பக்கல் உண்டான பாவ பந்தத்தாலே பிரளய ஆர்ணவ மக்னையான இவளை அதில் நின்றும் மேல் எடுத்து
இவளுடைய கிலேசத்தைத் தவிர்த்து வைத்த அளவிலும் -சம்சார ஆர்ணவ மக்நரான தம் பிரஜைகளுடைய
துக்க நிவ்ருத்திக்கு ஒரு ஸூகர உபாயம் காணாமையாலே விஷண்ணையாய் இருக்கிற இவளைக் கண்டு
அருளின பகவான் இவள் தேறும்படியாகச் சொன்ன வார்த்தை யாகையாலே அதி சங்கை பண்ண வேண்டியது இல்லை –
ஆகையால் அவஸ்தாந்த்ரங்கள் போல் அன்றிக்கே ஸ்ரீ வராஹ அவஸ்தையில் தமக்கு அருளிச் செய்யும் வார்த்தை தப்பார் என்னும் அர்த்தத்தை
பாசி தூர்த்து கிடந்த பார் மகட்க்குப் பண்டு ஒரு நாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே – என்று நாச்சியார் தாமே அருளிச் செய்தார் –
ஆகையால் இந்தப் புராணம் எல்லாப் புராணங்களிலும் உத்க்ருஷ்டமாகத் தட்டில்லை

————

வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய் இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 -10-9 –

ஆகாசத்தில் நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே –இத்தால்-திருமேனியின் நிறத்தை சொல்கிறது
எங்கும் கானத்து மேய்ந்து –காட்டிலே ஒரு பிரதிபஷ பயம் அற எங்கும் சஞ்சரித்து – கோரைக் கிழங்கு முதலானவற்றை ஜீவித்து –
களித்து விளையாடி –ஜாத் உசிதமான கர்வத்தோடு கூடிக் கொண்டு விளையாடி –
ஏனத் துருவாய் –நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ வேஷத்தை உடையனாய்
இடந்த இத்யாதி –அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்த இந்த பூமியை –
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே -என்னும்படி
ஸ்வ ஸ்தானத்திலே வைத்தவனாலே இன்று முடிவுதோம் –
தரணி இத்யாதி-இப்படி நிமக்நையான பூமியை எடுத்தவனால் இன்று முடிவுதோம் –
இத்தால்
பிரளய ஆபன்னையான பூமியை எடுத்தவன் –எங்களை விரஹ பிரளயத்தே தள்ளா நின்றான் –
ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை-

—————–

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா–ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-3-7-

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய
மத்ஸ்யாதி அவதாரங்கள் பிரஸித்தமாய் இருக்கச் செய்தேயும்
அன்னமும் மீன் யுருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே(ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-5-11) என்பது
ஆனாயன் ஆனான் மீனோடு ஏனமும்(திருவாய் -1-8-) என்பது
இப்படியே பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய என்று மாறாடி அனுசந்திப்பது
மீனோடு ஆமை கேழல் (8 -10-10-) என்று அடைவே அனுசந்திப்பது ஆகிறது –
யுகே யுகே ஸம்பவாமி -என்கிற நியாயத்தையும்
வையம் காக்கும் உருவும் பேரும் செய்கையும் –ஊழி தோறு ஊழி வேறவன் (திருவாய்-7-3-11 ) -என்கிற
அவதார ரஹஸ்யங்களையும் விஸதமாக அறிந்தவர்கள் ஆகையாலே இறே –

வராஹ அவதாரத்தை முற்படச் சொல்லிற்று -பிரளய ஆர்ணவ மக்னையான
பூமியை எடுத்த அளவு அன்றிக்கே -சம்சார ஆர்ணவ மக்நரான சேதனரை உத்தரிப்பைக்காக
தத் அநுரூப உபாயங்களை உபதேசித்த ஏற்றத்தைப் பற்ற –
ஏனத் துருவாய்  இடந்த பிரான் –  ஞானப் பிரான்-(திரு விருத்தம் -99-) -என்றார் இறே ஆழ்வாரும்
திரு மங்கை ஆழ்வாரும் -ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான் ( 2-7-)-என்ற
அநந்தரம்-ஞானத்தின் ஒளி உருவை -என்றார் இறே
பெரியாழ்வாரும் -எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து-( 4-2 ) -என்று மேலே அருளி செய்கிறார் இறே

————

வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை
கானக் களியானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து
கூனர் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 -5-5 –

சப்த த்வீயாப்தி மஹீதரையான பூமி இடிய விழுந்து -கீழில் -அண்ட பித்தியோடே சேர்ந்து கிடக்க –
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத ஸ்ரீ வராஹ வேஷம் கொண்டு –
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட –(திருவாய் -7-4-3-ஆழி எழ )என்கிறபடியே –
மாறுபாடு உருவக் குத்தி அண்ட பித்தியினின்றுமொட்ட விடுவித்து –
ஆகாசத்தில் ஏறிட்டு -திரு எயிற்றிலே தரித்த சக்திமானாய் –
தன்னை ஒழிந்த சமஸ்த பதார்த்தங்களும் தான் இட்ட வழக்காம்படி நடத்த வல்ல சர்வ நியந்தாவாய் –
அவற்றினுடைய சத்தை ஸ்வ அதீனமாம் படி இருக்கும் சர்வ காரண பூதன் ஆனவன்
(பூமி வம்ச–உத்தாரணம் – வராஹ கோபாலர்கள் )
இடவன் எழ வாங்கி எடுத்த மலை –
வேர் பற்றோடே ஒரு கட்டி போலே கிளரும்படி வாங்கி எடுத்துக் கொண்டு நின்ற மலை –
இடவன் எழப் பறித்து என்னுதல்-பேர்த்து என்னுதல் செய்யாதே–வாங்கி என்கையாலே-அனாயேசன எடுத்தமை சொல்லுகிறது
பர்வதங்களோடே கூட பாதாள கதையான பூமியை -திரு எயிற்றிலே குத்தி ஓட்டுவித்து
எடுத்த சக்திமானுக்கு -ஒரு கட்டியை இடந்து எடுத்தால் போலே
இம் மலையை இடந்து எடுக்கையில் ஓர் அருமை இல்லை இறே –

————-

மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 -1-9 –

அழகாலும் வடிவில் பெருமையாலும் மனஸ்ஸாலே பரிசேதிக்க ஒண்ணாத படி இருக்கையாலே
அத்வீதியமான மகா வராகமாய் இருநிலம் புக்கு இடந்து
மகா ப்ர்த்வியை பிரளயத்திலே முழுகி அண்டப்பித்தி யினின்றும் ஒட்டு விடிவித்து எடுத்து –
தன்னுடைய அபிமான அந்தர்பூதையான பூமியை இப்படி பிரளயத்தின் நின்றும்
எடுத்தமையை கண்ட ஹர்ஷத்தாலே -அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டி வந்து அணைக்க –
அழகியதாய் கறுத்து இருந்துள்ள திருக் குழலை உடையவளோடு கலந்தவனைக் கண்டார் உளர் –

——–

ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-

கேசவா க்லேச நாசன -என்னப் பாரும் கோள்
கெடும் இடர் ஆயவெல்லாம் கேசவா என்ன -என்று சொல்லக் கடவது இறே
புருடோத்தமா-=ஒவ்தார்யம்-அதாவது-அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பண்ணுகை
என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
இவர்கள் கேடு போனால் தன் கேடு போச்சுதாக நினைத்து இருக்கை

——-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-

வலிதான எயிறுகளை உடைய வராஹமுமாய் –
எயிற்றுக்கு வன்மை யாவது -ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட -என்கிறபடியே
அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை மறுபாடுருவ குத்தி இடந்து எடுத்து
தன் பக்கலிலே தரிக்க தக்க பலம் -கேழலாக வேண்டிற்று –பிரளயம்கதையான பூமியை
எடுக்கும் போது நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவு கொண்டு எடுக்க வேண்டுகையாலே
நீரும் சேரும் காண பணைக்கும்படி இறே வராஹா ஜாதி இருப்பது
ஆய் என்றது அவ் அவதாரத்தில் புரை அற்று இருக்கை
மாயா மிருகத்தை மோந்து பார்த்து -ராஷச கந்தம் உண்டு -என்று வெருவி ஓடி போயிற்றின இறே
மற்று உண்டான மிருகங்கள்
அப்படி இன்றிக்கே சஜாதீயங்கள் மோந்து பார்த்து -தன்னினம் -என்று விச்வசிக்கும் படி இருக்கை
மனுஷ்ய யோனியில் அவதரித்த இடத்தில் -ஈச்வரத்வ அபிமான கந்தம் அற்று
ஆத்மானம் மானுஷம் மன்யே -என்று இருந்தால் போல் ஆய்த்து
திர்யக் யோநியில் அவதரித்தாலும் இருக்கும்படி –
மானமிலா பன்றியாம் -என்றார் இறே இவர் திருமகளார்
மானம் இல்லாமை யாவது -ஈச்வரத்வ அபிமானம் மறந்தும் இல்லாதபடி இருக்கை
வராஹா கல்பம் வாசியா நிற்க செய்தே -ஸ்ரீ வராஹா நாயனாருக்கு முத்தக்காசை அமுது செய்விப்பது
என்று கிடந்ததாய்-இது என்ன மெய்ப்பாடு தான் -என்று நஞ்சீயர் வித்தராய் அருளுவர் -என்று பிரசித்தம் இறே

————-

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

பிரளயங்கதையாய் அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை உத்தரிப்பிக்கைக்கு ஈடான ஸ்ரீ வராஹ அவதாரமாய்

———

கேழல் ஒன்றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே- 5-1- 5- –

சர்வ லோகங்களும் பிரளயத்தில் அகப்பட -ஊன்றி இடந்து எடுத்து–தானத்தே வைத்தானால் –
என்கிறபடியே ஸ்வ ஸ்தானத்திலே வைத்தான் என்கை
கொள்கையினானே -இது தான் ஸ்வபாவம் ஆனவன் என்கை –

———

எயிற்றிடை மண் கொண்ட எந்தை யிராப்பகலா ஓதுவித்து என்னை
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5- 2-3 –

பிரளய ஆவர்ணத்திலே அகப்பட்டு கிடக்கிற பூமியை எடுத்தால் போலே -சரீர வச்யனான என்னை எடுத்த ஸ்வாமி –
யிராப்பகலா –திவா ராத்ர விபாகம் அற-சர்வ காலமும் -என்றபடி –
ஓதுவித்து– என்னை சிஷிப்பித்து –
அதாவது -கர்ப்ப வாசமும் –இந்திரிய வச்யத்வமும் -கர்ம வச்யத்வமும் -யம வச்யத்வமும் – த்யாஜ்யம்
என்னும் அத்தை அறிவித்து
கீழில் பாட்டில் சொன்ன
தன்னுடைய சர்வ சேஷித்வத்தையும் -நிரதிசய போக்யதையும் -தமக்கு சேஷத்வம் ஸ்வரூபம்
என்னும் இடத்தையும் ஆய்த்து -ஒதுவித்து
பயிற்றிப் –
இத்தை அனுஷ்டான பர்யந்தமாக்கி –செய்யேல் தீ வினை -என்று
பணி செய்யக் கொண்டான் –
ஓதுவித்த பிரயோஜனம் பெற்ற படி –
நித்ய கைங்கர்யம் கொள்ளக் கடவோம் -என்று திரு உள்ளத்தாலே அறுதி இட்டு -கொண்டபடி –
பண்டன்று –
இந்திரியங்களுக்கு சேஷ வர்த்தி பண்ணிப் போந்த பண்டு போல் அன்று
என்னை ஆளும் வன் கோ -என்னக் கடவது இறே
பட்டினம் காப்பே –
இந்த ரஷை உண்டாகையாலே -என் கோலாடி குறுகப் பெறா -என்கிற அர்த்தத்தை சொல்லுகிறது
இராப்பகல் என்று -மூதறிவாளர் படியாய்
திவாராத்ரி விபாகம் அற்ற படியால் அகால கால்யமான தேசம் போலே -என்றபடி –

———-

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-

பூமியானது பிரளயம் கொண்டு நீர்ச் செழும்பு ஏறிக் கிடந்ததாய்த்து -பாசி ஏறிக் கிடந்ததாய்த்து
இது தான் இதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டி உடம்பில் ஏறின அழுக்காய் இருக்கும் இறே -இது அவளுக்கு பிரகாரம் ஆகையாலே
ரசிகராய் இருப்பார் பிரணயிநிகள் உடம்பு அழுக்கு ஏறி இருக்க தங்கள் உடம்பு பேணிக் குளித்திரார்கள் இறே
அப்படியே ஸ்ரீ பூமிப் பிராட்டி உடம்பு அழுக்கு ஏறின வாறே தானும் நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டான் யாய்த்து
பண்டு ஒரு நாள் –சம்ச்லேஷித்த -அன்றும் ஒரு நாள் -விச்லேஷித்த -இன்றும் ஒரு நாளே தான் –

மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை –அழுக்கு உடம்பு -திரு விருத்தம் -1–என்று சொல்லுமவர்கள்
உடம்பு அளவிலும் அன்றிக்கே தேஹாத்மா அபிமானம் பண்ணி உடம்பையே விரும்பி இருக்குமவர்கள் உடம்புக்கும் அவ்வருகே
யாம்படி ஆக்கினான் -முமுஷூக்கள் படியும் அளவு அன்றிக்கே சம்சாரிகளிலும் காட்டிலும் தாழ்வாய் -என்றபடி –
உடம்பு அழுக்கு ஏறிற்று என்று லஜ்ஜிக்க வேண்டாத ஜென்மத்தை யாய்த்து ஏறிட்டுக் கொண்டது –
மானமிலா-
அஹம் வோ பாந்தவோ ஜாத -என்றும் –ஆத்மானம் மானுஷம் மன்யே -என்றும் சொல்லும் அளவு அன்றிக்கே
தாரக த்ரவ்யங்களும் வேறுபட்டு -அஜ்ஜாதிக்கு அடைத்தவையே – தாரகமுமாய் -ஸ்வ பாவமுமாய் யாம்படியாக வாய்த்து
அவற்றோடு தன்னை சஜாதீயம் ஆக்கின படி
முத்தக்காசை -கோரைக் கிழங்கை -அமுது செய்யும் படி இ றே தாழ விட்ட படி –
மாயா மிருகத்தைக் கண்டு -அல்லாத மிருகங்கள் மோந்து பார்த்து வெருவி ஓடின-விறே –
அப்படி அன்றிக்கே
சஜாதீயங்கள் மோந்து பார்த்தாலும் -நம்மினம் -என்று மருவும்படி யாய்த்து –
மானமிலா –-ஈஸ்வர அபிமானம் வாசனையோடு போனபடி
பன்றியாம் தேசுடை தேவர்
ஆஸ்ரீத அர்த்தமாக தன்னை அழிய மாறுகையாலே வந்த தேஜஸ் ஸூ
தனக்கு வேண்டு உருக் கொண்டு –திருவாய் மொழி -6-4-7-என்கிறபடியே
இச்சா க்ருஹீதமான வடிவாகையாலே எறித்து இருக்கும் இ றே ரஷகத்வம் –
திருவரங்கச் செல்வனார்
அவ்வதாரத்துக்கு உதவினோம் இல்லை என்கிற இழவு தீரும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறவர்
அடிமை கொள்ளுவதற்க்காக-என்றே பள்ளி கொண்டு அருளுகிறான்

———

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -பெருமாள் திருமொழி-2-3-

ஸ்ரீ பூமிப் பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச்சுவரான விரோதியாய் -அவர்களுக்கு பிரகாரமான பூமியை
பிரளயம் கொள்ள உதவிற்றிலன் என்னும் அவத்யம் வாராத படி மஹா வராஹமாய் அண்ட புத்தியிலே புக்கு
ஒட்டின பூமியை ஒட்டு விடுவித்து–இவ்வபதானங்களைச் சொல்லி ப்ரீதி பிரகர்ஷத்தாலே பாடி –
காவேரி பெரு வெள்ளமாய் மலைப் பண்டம் கொண்டு வருமா போலே அமைக்க நில்லாதே கடல் குடமாக
வெள்ளம் இடுகிற கண்ணீரைக் கொண்டு
அங்குப் பாங்காக திரு அலகு பணி செய்து வைத்தால் இவர்கள் கண்ணா நீராலே சேறாக்குவார்கள் யாய்த்து
அமங்கலமான புழுகு நெய்யாலே அலங்கரித்து உள்ள தோஷம் தீர மங்களார்த்தமான ஸ்ரீ வைஷ்ணவர்களின்
திருவடிகளில் அழகிய சேற்றை யணிவன்-

———–

படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே -திருச்சந்த விருத்தம்–28-

ப்ரஹ்மாவாலே ஸ்ரஷ்டமான பிரளய ஆர்ணவத்திலே அந்தர்பூதையான
பூமியை -ஸூரி போக்யமான திவ்ய விக்ரஹத்தை வராஹ சஜாதீயமாக்கி அண்ட புத்தியிலே
புக்கு இடந்து எடுத்து -இது சங்கல்ப்பத்தாலே செய்ய முடியாதது ஓன்று அன்றே –
சம்சார பிரளய ஆபத்தில் நின்றும் எடுப்பவன் இவனே -என்று ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக இறே

——–

ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –ஸ்ரீ பெரிய திருமொழி–1-4-1-

முன் ஏனமாகி –
ஸ்ரீ வராஹ கல்பத்தின் உடைய ஆதியிலே -அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்து –
பரப்பை உடைத்தான பூமியை –
அத்தை எடுக்கைக்கு ஈடான செருக்கை உடைய மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு-
(ஸ்வேத வராஹ கல்பம் -28-மனுவில் நாம் உள்ளோம் -ஒவ் ஒரு மனுவுக்கு -71-சதுர் யுகம் -இதன் ஆதியில் -)
நமஸ்தஸ்மை வராஹாய லீல யோத்த்ரதே மஹம் குர மத்யகதோ யஸ்ய மேரு கணா கணா யதே –
என்கிறபடி வளர்ந்த திரு மேனி யாகையாலே –
அன்று இணை யடி யிமையவர் வணங்க-
அப்போது அந்த உளை மயிர்களிலே-பிடரி மயிர்களிலே – ஒதுங்கிக் கிடந்த ப்ரஹ்மாதிகள்
சேர்த்தி அழகை உடைத்தான -திருவடிகளை ஆஸ்ரயிக்க –
ஸூ கவி கடஸடா ஸங்கமை -என்னக் கடவது இறே-
உத்திஷ்ட தஸ் தஸ்ய ஜலார்த்ரகுஷேர் மஹா வராஹஸ்ய மஹீம்
ப்ரக்ருஹ்ய விதிர்ந்த்வதோ வேத மயம் சரீரம் ரோமாந்த்ரஸ்தா முநயஸ் ஸ்துவந்தி -என்னக் கடவது இறே –
ஜலார்த்ரகுஷேர்-பாசி தூர்த்த-இத்யாதி என்றபடி

——-

ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்துறை கின்ற
ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே -2-6-3-

பழைய வடிவை அழித்தான்-
அபிமத விஷயத்தோடே கலக்கைக்காகஅவர்கள் உகக்கும் படியே ஒப்பிப்பாரைப் போலே –
படுக்கைப் பற்றை நோக்கி பிரதான மகிஷிகள் பக்கல் முகம் பெறுவாரைப் போலே
மஹா வராஹமான வடிவில் எழிலைக் காட்டிஇவள் எழிலைக் கொண்டான் –
(கோல வராஹம் ஒன்றாய் -பெரும் கேழலார் -புண்டரீகம் )
பூமிப் பிராட்டி உடைய விபூதியை பிரளயம் கொள்ள-அத்தை எடுக்கைகாக
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு வந்து எடுத்து நோக்கி
நித்ய ஸூரிகள் நடுவே ஓலக்கம் இருக்கக் கடவன்
இவ் வடிவைக் கொண்டது நமக்காக விறே என்று-அந் நீர்மையிலே தோற்று எழில் இழந்தாள் ஆயிற்று –

———–

திவளும் வெண் மதி போல் திரு முகத் தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லி யம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே–2-7-1-

கலங்கா பெரு நகரில் புகப் பெறாதே(கலங்கா பெரு நகர் காட்டுவான்0 மூன்றாம் திருவந்தாதி )
கை கழியப் போனாரும்-பிழைக்கைக்காக திருவிட வெந்தையிலெ
வந்து நிற்கிற என் குல நாதன் ஆனவனே பின்னானார் வணங்கும் -என்கிறபடியே
(பின்னானார் வணங்கும் ஜோதி திரு மூழிக் களத்தான் )-சொல்லு என்று கிரியை

இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-2-

இவளுடைய பிரகிருதி அறிந்து கலக்கைக்காக திருவிட வெந்தையில் வந்து எழுந்து அருளி இருக்கிற நீ
உன்னுடைய திரு உள்ளத்தாலே நினைத்து இருக்கிறது என் –

ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே -2-7-3-

நை வார்த்தைர் ந ச பூஷணை-( ராக்ஷஸிகள் மத்யம் சீதாப்பிராட்டி புலம்பல் ) -என்னும்படி பண்ணுகைக்குகோ
நீ இங்கே வந்து இருக்கிறது-ராம அவதாரத்தில் இழவு தீர்க்கைக்கு அன்றோ இங்கு வந்து இருக்கிறது

ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-4-

கிடையாதது தான் என்றால்-கிடைக்கும் அதில் போலே சாபலத்தை பண்ணுமவள்
பொன்னுக்கு-இவளும் தன் சாபலமும் பட்டது படுகிறாள் என்று ஆறி இருக்க ஒண்ணாத படி இருக்கும் மகள் –
இடவெந்தை – உக்தியாலே தன் சாபலம் தோற்ற இருக்கிற இவளைப் போல் அன்றிக்கே
கிரியையாலே சாபலம் தோற்ற இருக்கிற நீ நினைத்து இருக்கிறது என்
(கிரியை-இடந்து எடுத்து இடது பக்கம் வைத்துள்ளாய் )

ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-5-

ஆசைப்பட்டாய் இறே — அழகிதாய உண்டாயுது இறே என்று ஏசுகிற சத்ருக்கள் முன்பே –
வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே –
த்வத் அக்ரே சரணாகதானாம் பராபவ ந தே அநுரூப-ஸ்தோத்ர ரத்னம்
உகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப் பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் –
நதேநுரூப-நாத ந அநுரூப -ஸ்தோத்ர ரத்னம்
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது-

என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-6-

இவளுடைய
வை வர்ண்யமும்
அத்யாவச்யமும்
செல்லாமையும்
வடிவு அழகும்
பிறப்பும்
இருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ-
இடவெந்தை யெந்தை பிரானே –
இவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய உத்யோதகம் இறே திருவிடவெந்தை யில் இருப்பு –
உடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே –
உம்முடைய வைவர்ண்யம் தோற்ற திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-
(தேவிகளைப் பிரிந்து விரஹத்தால் அன்றோ ஸ்ரீ பூ வராஹப் பெருமாள்
மகாத்மாக்கள் பிரிந்து இருக்க முடியாத மார்த்வம் உமக்கும் உண்டே )

இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-

நீர் வில்லை முறித்துச் சென்று கைப்பிடித்த ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளிலும் இளையவள் இவள் –
உம்மைப் பிரிந்தால் அவளைப் போலே
சமா த்வாதச தத்ராஹம் –அமானுஷன் போகான் -யென்று ஆசை இட்டு தரிக்க வல்லவள் அன்று
இப்படி பருவம் இளையாள் ஆகில்
முன்பே சம்ஸ்லேஷம் ப்ரவர்த்தம் ஆகில் அன்றோ இப்படி படக் கடவது என்றில் –
இயற்கையிலே அவள் கலந்து வைக்குமே – அத்தை தாயார் அறியாளே-
என் இத்யாதி –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளைக் கை பிடிக்கைகாக ஸ்ரீ மிதிலையிலே புறச் சோலையிலே
விட்டுக் கொண்டு இருந்தால் போலே
இவளைப் பெறுகைகாக
திருவிடவெந்தையில் விட்டுக் கொண்டு இருக்கிற நீர் இவள் விடை யாட்டத்தில் என் நினைந்து இருந்தீர் –

இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-8-

கீழ் சொன்னதுக்கு எல்லாம் மேலே அழகிதான தோள்களை உடையளான இவளுக்கு –
ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னும்படியே
உனக்கு தகுதியாம்படியாய் இருக்கிற இவளிடை யாட்டத்தில் நீர் நினைத்து இருக்கிறது என்-

என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-9-

தாய் கை விட்டமை தோற்ற சொல்லுகிற வார்த்தை – இவளுக்கு எவ்வளவாக தலைக் கட்டக் கட்டவதோ –
தாய் கை விடுதல்
தான் கை விடுதல்
செய்தால்-அதைக் கொண்டு நோக்குகைக்கு ஈடாக
திருவிடவெந்தையில் வந்திருக்கிற நீர்
உம்முடைய திரு உள்ளத்தால் நினைந்து இருக்கிறது என் –
வாலி பக்கலிலே கண்டோம் இறே ப்ராதாக்கள் உதவாதபடி –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே கண்டோம் இறே தமப்பன் உதவாதபடி
தான் தன்னை அனுசந்தித்து அஞ்சின அர்ஜுனனுக்கு
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னக் கண்டோம் இறே அவன் உதவும் படி

என்னும் இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை–2-7-10-

ருசியை உடையராய் அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக திருவிடவெந்தையில்
வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –

——–

இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம்—திருவயிந்திரபுரமே–3-1-1-

இத்தை பிரளயம் கொண்ட இடத்தில் சேதனருக்கு உறுப்பாகாத ஆகாரமே ஆயிற்று திரு உள்ளத்தில் பட்டுக் கிடக்கிறது
கார்யம் தெரிந்தவாறே தன்னை அழிய மாறினான்
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ விக்ரஹத்தைப் பரிகரித்தான்
வளைந்த கொம்பில் அகவாயில் ஏக தேசத்திலே அடக்கினான் –
இத்தால் ரஷ்யத்தின் அளவில்லாத ரஷகனுடைய பாரிப்பைச் சொன்னபடி
இது ஸூரஷிதம் என்று திரு உள்ளத்தில் பட்டவாறே-கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –

———-

வையணைந்த நுதிக் கொட்டு வராகம் ஒன்றாய் மண்ணெல்லாம் இடந்து எடுத்து —
தாள் அணைகிற்பீர் காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே -3-4-3-

கூர்மை மிக்கு இருந்துள்ள முனையை உடைய கொம்பை உடைத்தான அத்விதீய மகா வராஹமாய்
பூமிப்பரப்பு அடைய இடந்து எடுத்துக் கொண்டு
ஈஸ்வரத்தால் வந்த செருக்காலே மத கார்யமான வ்யாபாரங்களைப் பண்ணி
(கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்)

———

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம்
குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
இலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும்
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-8

சிலம்பினிடை இட்ட சிறு பரல் போலே–பெரிய மகா மேருவானது
திருக் குளம்பிலே-மேரு கணா கணாயதே-என்னும்படியே கண கணப்ப
(பெரும் கேழலார் மஹா வராஹ ஸ்புட பத்ம விலோசன )
திருவாகாரம் குலுங்க -அகலகில்லேன் இறையும் என்று பிராட்டி இருக்கும் இருப்பு குலுங்கும்படிக்கு ஈடாக
நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
பூமியை இடந்து அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி
கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே வைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்

——–

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-

மத்ஸ்யமும் ஸ்ரீ வாமனனும் அன்னமும் ஸ்ரீ வராஹமும் ஸ்ரீ நரசிம்ஹமும் ஸ்ரீ ஹயக்ரீவரும்
விபூதியும்-அது தனக்கு பிரகாசம் பண்ணக் கடவ சந்திர சூர்யர்களும்
மற்றும்–யத்யத் விபூதி மத் சத்வம் ஸ்ரீ மதூர் ஜிதமேவவா -என்கிற படியே
(ஸ்ரீ கீதை -உயர்ந்த பதார்த்தங்கள் எல்லாம் எனது தேஜஸ்ஸின் சிறு திவலையே )
விபூதியில் உச்சரிதமான பதார்த்தங்களும் எல்லாம் தான் என்று சொல்லலாம்படி இருக்கிறவன்
வலி உடைத்தாய்–நித்தியமான பதார்தங்களாய் நின்ற என் ஸ்வாமி-

———

மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2-

காவலாக இட்டு வைத்த கடல் தானே பாதகம் ஆனவாறே
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு பூமியை இடந்து எடுத்து

——-

வராக மதாகி யிம் மண்ணை யிடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8-

பூமியை பிரளயம் கொள்ள பிறப்பே பூமியை யிடக்க வல்ல -ஒட்டு விடுவிக்க வல்ல-வராஹமாய் பூமியை இடந்தாய்-
நாராயணனே – பிரஜை அறியாதே இருக்கக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
சம்சாரிகள் அறியாதே இருக்க வத்சலன் ஆனவனே-

———

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை–4-10-10-

வராஹ கல்பத்தின் ஆதியிலே–முன்–அண்ட பித்தியிலே ஒட்டின பூமி உரு மாய்வதற்கு முன்பே
ஏனமாகி –மகா வராஹமாகி
அன்று –அன்றைக்கு நான் உதவப் பெற்றிலேன் என்னும் அர்த்தத்திலே
ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை-
பூமியை இடந்து-திரு எயிற்றினில் கொண்டு–அந்த ஸ்ரமம் ஆறும்படியாக–கடல் திரைகளில் குருந் திவலைகள்
துடை குத்தி உறக்கத் திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து-திரு வெள்ளியங்குடியிலே சந்நிஹிதன் ஆனான் –

————

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே–
திரு வெள்ளறை நின்றானே —5-3-5–

இலை யகன்ற வேல் போலேயாய்-தர்ச நீயமாய் இருக்கிற திருக் கண்களை உடையாளாய்
ஷமை துடக்கமான ஆத்ம குணங்களால் மிக்கு இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டி தன் விபூதி முகத்தாலே புக்கு அழுந்த –
முந்நீர்ப் பரப்பில் –பிரளயத்தில் அகப்பட நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத ஸ்ரீ வராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே –அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனே –
எனக்கு அருள் புரியே –அர்த்திக்கவும் மாட்டாதே பூமியை ரஷித்த உனக்கு
அர்த்தித்த என்னுடைய ரஷணம் பண்ணுகை பெரிய பணியோ –

——-

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-

பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்துக் கொண்டு ஏறுகைக்காக வராஹ வேஷத்தை பரிக்ரஹித்தும்
அப்படிப் பட்ட பிரளயம் தன்னை தன் செலுவிலே அடக்க வற்றான மத்ஸ்யமாயும்
மந்தரம் கீழ் விழாதபடி தரிக்க வல்ல ஆமையாயும்
இப்படி ஒரு வடிவு கொண்டு உதவுகை அன்றிக்கே
சேராத வடிவைச் சேர்த்துக் கொடு வந்து தோற்றின நரசிம்ஹமாயும்
நாட்டில் வாமனர்கள் அடங்கலும் வளர்ந்து அருளின இடம் என்னும்படி குறள் வடிவைக் கொண்டும் –

———

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே—5-6-3-

பூமியை பிரளயம் கொண்ட அன்று ஏனமாய் இத்தை இடந்து எடுத்து –
இரு நிலமும் பெரு விசும்பும் தானாய பெருமானைத்-
பூம் யந்தரிஷாதிகள் அடைய தான் என்ற சொல்லில் அடங்கும்படி இத்தை பிரகாரமாக உடைய சர்வேஸ்வரனை –
தன் அடியார் மனத்து என்றும் தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை
ஒருவன் காலில் முள் பாய்ந்தால் சரீரி யானவன் நோவு படுமா போலே
ஜகத்துக்கு வந்த ஆபத்து தன்னதாம் படி இதுக்கு அபிமானியாய் இருக்கிற இருப்பை அனுசந்தித்து இருக்கும்
தனக்கு அசாதாராணர் ஆனவருக்கு சர்வ வித போக்யனாய்
அத்தாலே உஜ்ஜ்வலனாய்-இருக்குமவனை –

————

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர் தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளி யக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-

என்னுடைய துக்க நிவ்ருத்திக்கு நான் பட்டது பட அமையாதோ –
நானும் பிறவாத பிறவிகளை அன்றோ நீ வந்து பிறந்தது –(நாட்டில் பிறந்து மனிசர்க்காய் படாதன பட்டு )
அன்னமாயும்-வராஹமாயும்-செயலைக் காட்டி என் ஹிருதயத்தைக் கொண்டான் ஆய்த்து-
(என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் )
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயா -என்று பந்த ஹேதுவான தன்னையே
மோஷ ஹேதுவாம் படி பண்ணி அருளினான் –
(யஜமான சம்ஹயை இத்யாதி –2-57-60-நான்கு ஸ்லோகங்கள் கீதையில் )

——

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

முன்பு வராக கல்பத்தின் உடைய ஆதியிலே மகா வராஹமாய் – அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை எடுத்துக் கொண்ட
ஏறின நீர்மையை உடையவனே –என்று மாறாதே சொல்லி-அந் நீர்மையிலே தோற்று-தேவர் திருவடிகளிலே அடிமை யானேன் –
திருவடியே துணை அல்லால் துணை இலேன் –
தேவர் திருவடிகளே எனக்குத் தஞ்சம் –வேறு ஒரு ஆஸ்ரயத்தை (அபாஸ்ரயத்தை) உடையேன் அல்லேன் –

——-

நரனே நாரணனே திரு நறையூர் நம்பீ எம்பெருமான் உம்பாராளும்
அரனே ஆதி வராஹ முன்னானாய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே—7-7-4-

மேல் யுண்டான தேவதைகளை நிர்வஹிக்கிற ருத்ரனுக்கு அந்தராத்மாவாய் நின்று
அவர்களை நிர்வஹிக்கிறவனே-
ருத்ரம் சமாஸ்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரிதா
ப்ரஹ்மா மாமாஸ்ரித்த ராஜன் நாஹம் கஞ்சிது பாஸ்ரித -என்னக் கடவது இறே-
(பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரம் )
ஆதி வராஹ முன்னானாய் –
ஒருவனுக்கு உள்ளீடாய் நின்று ரஷிக்கை அன்றிக்கே வராஹ கல்பத்தின் யுடைய ஆதியிலே
மகா வராஹமாய் வந்து அவதரித்து கண்ணுக்கு இலக்கை நின்று நோக்கினவனே-
(சகல மனுஷ நயன விஷய தாங்கதன் )
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
அது தன்னை பழம் கதை யாக்கி இப்பொழுது இங்கே வந்து நிற்கிறவனே

——-

சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய வெம் மீசன் காண்மின்–7-8-4-

சிலம்பு துடக்கமான ஆபரணங்கள் பலவற்றையும் அணிந்து ஒரு மேருவானது நின்று விளங்குமா போலே
வராஹ வேஷத்தை உடையனாய் –
இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய வெம்மீசன் காண்மின் –
அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி –
அந்த பூமிக்கும் அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை அணைத்து- அந்த பூமி தன்னை திரு எயிற்றிலே
ஒரு நீல மணி அழுத்தினால் போலே வைத்து அருளின அச் செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் கிடீர் –

பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை-7-8-10-

ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால் தன்னைப் பேணாமையும் ரஷிக்குமவன் ஆய்த்து –
பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை –-பூமியை சிருஷ்டித்து
பன்றியாய் இத்யாதிகளால் காத்து -அத்தை ரஷித்து திரியவும் பிரளயம் வர -வயிற்றிலே வைத்து –
திரிய வெளிநாடு காணப் புறப்பட விட்டு
இப்படி சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில் தன்னை எண்ணினால் பின்னை
ஒருவரையும் எண்ணாது இருக்கிற சர்வாதிகனை –

———

பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

சம்சார பிரளயத்தில் இருந்து எடுத்து அருளும் -ஏனத்துருவாய் கிடந்த ஞானப்பிரானே நான் கண்ட நல்லதுவே –
கோல வராஹம் ஒன்றாய் கோட்டிடைக் கொண்ட அம்மான்
ஞான வேத பிரதானம் -பாரங்கள் சுமந்து -மட்டும் இல்லாத இதன் ஏற்றம்
பூமிப் பரப்பு அடைய கடல் கொண்ட காலத்து வளைந்த கொம்பை கொண்ட ஏனமாய் –
ஏரார் உருவத் தேனமாய் –
ஆயிரம் பண்ணை பிரளயம் கொண்டால் ஆகாதோ இப்படி அழகு நிறைந்த வராஹ விக்ரஹத்தை
ஒரு கால் காணலாம் ஆகில் –
எடுத்த வாற்றல் அம்மானை-
அண்ட பித்தியிலே சென்று சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறுகைக்கு ஈடான
வலியை உடைய சர்வேஸ்வரனை –

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-

(1-வேதம் கொடுத்து ரக்ஷணம் மத்ஸ்யாவதாரம்
2-அமுதம் கொடுத்து ரக்ஷணம் கூர்மாவதாரம்
3-பக்தர் – பூமா தேவியை -இடந்து -சம்சார பிரளயத்தில் இருந்து ரக்ஷணம் வராஹ அவதாரம்
4-பக்த விரோதிகளை அழித்து ரக்ஷணம் நரஸிம்ஹ அவதாரம்
5-சொத்தை -இரந்தும் -ரக்ஷணம் -ஸ்வ ஸ்வா தந்தர்யம் போக்கி ரக்ஷணம் வாமன அவதாரம்
6-ப்ரக்ருதி பிராகிருத பிரதிபந்தங்கள் போக்கி ரக்ஷணம் பரசுராம அவதாரம்
7-மரியாதை ஸ்தாபித்து தர்ம ரக்ஷணம் ராமாவதாரம்
8-துஷ்ட நிரஸனம் பண்ணி ரக்ஷணம் பலராம அவதாரம்
9-பூமி பாரம் போக்கி ரக்ஷணம் தாமோதர அவதாரம்
10-கலி போக்கி கிருத யுகம் நாட்டி ரக்ஷணம் கற்கி அவதாரம் )

——-

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல் காலத் துயர் கொடி யொளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன் மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-4-

வெற்றியை உடைத்தாய் திண்ணியதாய் மலை போலே பெரிய வடிவையும் வெளுத்த எயிற்றையும் உடைத்தாய்
அக்னி கல்பமாய் ஜாதி உசிதமான வட்டணித்த கண்ணை உடைத்தான –
(நீல வரை இரண்டு பிறை கவ்வி -கோல வராஹம் )
வராஹமாய் பூமியை பிரளயம் கொண்டது என்று அத்தை எடுத்து
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வந்த வை வர்ண்யத்தைப் போக்கினவன் – பாண்டவர்களுக்கு சாரதி யானவன் –

——–

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-

இழந்த வேத சஷூசை மீட்டுக் கொடுக்கைக்கு ஈடான அன்னமாயும்
ஸ்ரீ வராக புராணத்தை அருளிச் செய்தும்-ஸ்ரீ மத்ஸ்ய புராணத்தை அருளிச் செய்தும்
(ஸ்ருதி ஸ்ம்ருதி -வேதம் ஸ்ரீ வராஹ புராணம் -மத்ஸ்ய புராணம் )

இப்படி தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த ஜகத் காரண பூதனானவன் –
(தான் உண்டாக்கிய ஜகத்தை ரக்ஷணம் தானே தானே பண்ண வேண்டும் )
திரு நாகையிலே தன் அழகாலே விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று –

——–

கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர்—குறுங்குடியே –9-6-3-

ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமாக கைக் கொள்ளும்
வடிவு ஒழிய தனக்கு என்ன ஒரு ரூபம் இல்லையாயிற்று –
செங்கண்-மா முகில் வண்ணர் மருவுமூர் –
மஹாஸ் வராஹஸ் ஸ்புட பத்ம லோசன -என்கிறபடியே
(ஸ்ரீ யபதி கேசவன் புண்டரீகாக்ஷன் -எல்லா அவதாரங்களிலும் உண்டே )
காணவே தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிர்ந்து முகில் போலே இருக்கிற வடிவை உடையனாய் இருகிறவன் –
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதித்து போகாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

———

தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே
மாதிர மண் சுமந்த வட குன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –11-4-3-

தர்ச நீயமாய்-கண்ணுக்கு குளிர்ந்து இருக்கும் சந்தரன் கண் வைக்க ஒண்ணாத சஹஸ்ர கிரணனான ஆதித்யன்
தேவர்கள் உபரிதன லோகங்கள் ஏழு உடன்
மாதிர மண் சுமந்த வட குன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும் –
மாதிரம் -யென்று – திக்கு-பூமிக்கு தாரகமான மேரு-அது போக்கி சேஷித்து நின்ற குல கிரிகள் ஆறும்
(ஸப்த குல பர்வதங்களும் என்றவாறு ) ஏழு கடலும் –
பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் – இவை அடையத் திருவடிகளிலே சேர்ந்து
பரப்பை உடைய திருக் குளம்பில் அந்தர் வலயத்தின் ஏக தேசத்தில் அடங்கும் படி வளரா நிற்பானாய்-
(திருவடிகளிலே சேர்ந்து-ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -பரகத ஸ்வீ காரம்
பூமி போல் அசித் வத் பாரதந்தர்யம் காட்டினாலே போதுமே -நீ ரஷிக்க வேணும் என்று கூப்பிடவும் வேண்டாமே – )
சேர் ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –
அனுரூபஸ் சவை நாத – என்னுமா போலே–இதுக்கு அடைய தகுதியான காரணம்
வராஹ கல்பாதியிலே மஹா வராஹமாய் ரஷித்த திரு மேனி – அது நம்மை அடிமை கொள்ளும் நிர்வாஹ வஸ்து –

————————-

கேட்க யானுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட,
பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்,
வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!—ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -4-

எம்பெருமானை ஒரு கேள்வி கேட்கிறே னென்கிறார் சமத்காரமாக.
மஹா வாரஹ மூர்த்தியாகத் திருவவதரித்துப்
பூமியை எயிற்றிற் கொணர்ந்த எம்பெருமான் கனவிலெழுந்தருளிக் காட்சி தந்தவாறே
அப்பெருமானை மன மொழி மெய்களால் அன்போடு பிடித்து விழுங்கி விட்டேன்;
விஷயாந்தரங்களை யநுபவித்து ரஸித்துப் போந்த எனக்கு இவ் விஷயம் பரமரஸ்யமாயிருந்தது;
இப்படி இருந்ததற்குக் காரணமருளிச் செய்ய வேணுமென்று கேட்கிறேனென்கிறார்.

புஷ்பஹாச ஸூகுமாரமான வடிவை-மானமிலாப் பன்றி யாக்கி –
நிலம் கோட்டிடைக் கொண்டது – இந்தக் கழஞ்சு மண்ணும் அழிந்தால்
பின்பு ஸ்ருஷ்டிக்கை அரிதாய்ச் செய்து அருளிற்றோ –இத்தை எனக்கு அருளிச் செய்ய வேணும் –
பிரளயம் கொண்ட பூமி -தன்னை எடுக்க இறே -இவன் இதுக்கு உத்தரம் சொல்லுவது –
போதரக் கனவில் கண்டு –
மிகவும் நெஞ்சிலே கண்டு –இந்த்ரியங்களால் வ்யவச்சேதம் இன்றிக்கே அவயவதாநேன விசதமாக கண்டு –
கனவு -மானஸ அனுபவம்
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி –
மநோ வாக் காயங்களாலும்-ஸ்ரத்தையாலும்=மிக்க அபிநிவேசத்தை உடையவனாய் –
விழுங்கினேற்கு இனியவாறே –
விழுங்கி னேனுக்கு இனிதாய் இருந்தது –விழுங்குகை -அனுபவிக்கை –
எவ் விஷயங்களை அனுபவித்து ரசித்துப் போந்த எனக்கு எவ் விஷயம் ரசிக்கிறது –
விழுங்கினேற்கு இனியவாறே —
எனக்கு இனிதான வழி என் தான் –எவ் வழியாலே முடிக்கப் போந்த விஷயம்
எவ் வழியாலே இனிதாயிற்று –
இது இனிதான வழியை அருளிச் செய்ய வேண்டும் –
இதுக்கு அவன் என்ன உத்தரம் சொல்லுவது –
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தது உடைமை மங்காமைக்கு அன்றோ –
அவ்வோபாதி மங்க ஒண்ணாது என்று
சம்சார பிரளயத்தில் நின்றும் இவரை எடுத்தான் இத்தனை இறே –

இனிய வாறு கேட்க –நான் உற்றது உண்டு -என்று அந்வயம்

———

பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –திரு நெடும் தாண்டகம்–20–

பாராளன்-பூ பாரமான பாணனை அழியச் செய்கையாலே பூமிக்கு நிர்வாஹகன் ஆனவனே –
பாரிடந்து-தன் நிலை குலையாமல் நிற்கச் செய்தே வந்த ஆபத்தைப் போக்கி விட்ட அளவு அன்றிக்கே –
அவள் தான் பாதாள கதையான போது ரஷித்த படியை சொல்லுகிறது –
தன்னிலை குலையாமல் நின்று சங்கல்ப்பத்தாலே ரஷிக்கை அன்றிக்கே
ஸூரி போக்யமான வடிவை அழிய மாறி
தத் அனுரூபமான வடிவைக் கொண்டு பிரளயம் கதையான பூமியை உத்தரித்து –
கீழ் பிராட்டியை ரஷித்த படியைச் சொல்லிற்று –
இவை இரண்ட்டாலும் ஸ்ரீ பூமி பிராட்டியை ரஷித்த படியைச் சொல்கிறது –
பாரையுண்டு – பூமியை பிரளயம் கொள்ளப் புக அந்த ஆபத்தே ஹேதுவாக திரு வயிற்றிலே வைத்து ரஷித்து
பாருமிழ்ந்து –அவ் அபேஷையும் இன்றிக்கே இருக்க-தயமானமனவாய்க் கொண்டு சிருஷ்டித்து –
பாரளந்து – அபேஷை இல்லாத அளவன்றிக்கே -இவர்கள் விமுகராய் இருக்க
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தலும்-அந்ய சேஷத்வத்தாலும் ஸ்வரூபம் நசித்த படியைக் கண்டு
ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து முறையை உணர்த்தி –
பாரை யாண்ட –இப்படியால் பூமியை ரஷித்தவன் –உண்டு உமிழ்ந்து அளந்து இடந்து -என்னாதே
பலகால் பார் –என்கிறது-அவவவ அபதானங்களில் தமக்கு உண்டான ஆதர அதிசயத்தாலே
பேராளன் – இப்படி ரஷிக்கைக்கு ஹேதுவான குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களுக்கு தொகை இல்லாதவன் –
இவளுக்கும் அத்தைப் பற்றி இறே திரு நாமத்தாலே சம்பந்தம் –

—————-

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மரா மரம் எய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ?–1-7-6-

பிரான் –நிலா, தென்றல், சந்தனம் என்னுமிவை பிறர்க்கேயாக இருக்குமாறு போன்று,
தன் படிகளை அடையப் பிறர்க்கு ஆக்கி வைக்குமவன்.
சர்வ-எல்லாப் பொருள்கள் விஷயமாகவும்-ஆஸ்ரித – அடியார்கள் விஷயமாகவும் செய்யும் உபகாரத்தை
நினைத்துப் ‘பிரான்’ என்கிறார்.-அதனை -உபபாதிக்கிறார் -விரிக்கிறார் மேல்:

பெரு நிலம் கீண்டவன் –
பிரளயம் கொண்ட பூமியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு எடுத்தது போன்று,
சம்சாரப் பிரளயங் கொண்ட என்னை எடுத்தவன்.- இது-சர்வ- எல்லாப் பொருள்கள் விஷயமாகவும் செய்த உபகாரம்.

பின்னும் விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் –
நெருங்கத் தொடை யுண்டு-பரிமள பிரசுரமாய் – வாசனை மிக்குள்ளதாய், செவ்வி பெற்று இருந்துள்ள
திருத் துழாய் மாலையாலே சூழப்பட்ட -திரு அபிஷேகத்தை -திருமுடியை யுடையவன்.
விரை – வாசனை. விராய் என்றது, நீட்டும் வழி நீட்டல் விகாரம்.
இனி, ‘மலர் விராய்’ என்பதற்கு, மலர்கள் கலந்த’ என்று பொருள் கூறலுமாம்.
இதனால், ஒப்பனை அழகோடே பிரளயத்தில் மூழ்கினான் என்பதனைத் தெரிவித்தபடி.

————-

ஆனான் ஆன் ஆயன், மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில், தானாய சங்கே–1-8-8-

சர்வாதிகனான -எல்லாரினும் அறப் பெரியனான தான், இவற்றோடு ஒத்த ச ஜாதியன் ஆனான்.
இறைவன் ஒவ்வொரு கால விசேடத்திலே முறைப்படி பிறந்திருந்தும், அனுசந்தானத்தின் பதற்றத்தாலே
ஒரே காலத்தில் எடுத்த இரண்டு அவதாரங்கள் போன்று,‘மீனோடு ஏனம்’ என்று ஒரு சேர அருளிச் செய்கிறார்.
வடிவும் செயலும் சொல்லும் அவ் வக்குலத்திற்கு-தத் ச ஜாதியருக்கு அடுத்தவையாய் இருத்தலின், ‘ஆனான்; என்கிறார்.
இவை தாம் வித்யாவதாரங்கள். இவ் வவதாரங்களைப் பார்க்குமிடத்து,
மேற்கூறிய ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் அயர்வறும் அமரர்கள் அதிபதியைப் போன்று இருப்பது ஒன்று அன்றே?

——-

சூழல் பல பல வல்லான் தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகலிலானே–1-9-2-

தொல்லை அம் காலத்து உலகைக் கேழல் ஒன்றாகி இடந்த கேசவன்-
ஸ்ரீ வராக கல்பத்தின் ஆதியிலே ஆதலில் ‘தொல்லை’ என்கிறார்.
தன் வடிவைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின காலமாதலின், ‘அம் காலம்’ என்கிறார்.
‘ஒரு ஸ்ரீ திருவடி, ஸ்ரீ திருவனந்தாழ்வானுக்காகத் தான் இங்ஙனம் செய்தானோ!
உலகை-சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமிக்காகச் செய்தான்,’ என்பார், ‘உலகை’ என்கிறார்;
கேழல்-தன் மேன்மையோடு அணைந்து இருப்பது ஒரு வடிவைத் தான் கொண்டானோ!’ என்பார், ‘கேழல்’என்கிறார்.ஒன்றாகி-
பின்னர், சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ள வேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி
இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘ஒன்றாகி’ என்கிறார்.
அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி.
‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியார். -பன்றியின் ஜாதிக்கு உள்ளது ஒரு குணமாயிற்றுச் செருக்கு.
இடந்த- ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் அவ்வடிவைக் கொண்டால் செருக்குச் சொல்ல வேண்டாவே! ஆதலின், ‘இடந்த’ என்கிறார்.
அதாவது, ‘அண்டப்பித்தியிலே சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக்கொண்டு ஏறினான்,’ என்பதாம்.
கேசவன்-அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.
என்னுடை அம்மான் –சம்சாரப் பிரளயங்கொண்ட என்னை எடுத்தவன்.

————-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் –
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ வேஷத்தை பரிக்ரஹித்து -பிரளய சலிலத்துக்கு உள்ளே முழுகி
அண்டபித்தியிலே சேர்ந்த பூமியைப் பிரித்து எடுக்கும் –
(ஸ்திரம் -யஜ்ஞ மூர்த்தி -மகா வராஹ-ஸ்புட பத்ம லோசனன் பெரும் கேழலார் –
நீல வரை -கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்)
தன்னுள் கரக்கும்
ரஷிக்க என்று ஒரு பேரை இட்டுக் கொண்டு கொம்பிலும் குளம்பிலும் கொள்ளாதே வயிற்றிலே வைத்து ரஷித்த படி –
உத்தர உத்தர ஆதிக்யம் சொல்லி –
கிடந்து-தொடங்கி-இடந்த —கரந்த -வயிற்றில் வைத்து ரஷித்த விருத்தாந்தம்
மேலொரு காலம் பிரளயம் வரும் -என்று ஏலக்கோலி -ஆராய்ந்து -பிரளயம் வந்தாலும் இங்குண்டோ என்று இளைத்துக் காட்டலாம் படி
முன்புத்தையது ஒன்றும் தெரியாதபடி வைக்கும்-

—————–

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என் தன் மடந்தையே–4-2-6-

ஏனமாய் –
பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்’ என்கிறபடியே,
ப்ரணயிநி- காதலி உடம்பு பேணாமல் கிடக்க,-ப்ரணயி – காதலன் உடம்பு பேணி இருக்கை காதலுக்குத் தக்கது அன்றே?
ஆதலால், ‘மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றியாம் தேசு’ என்கிறபடியே,
நீருக்கும் சேற்றுக்கும் இளையாத வடிவையுடையவனாய்.
ஆதி –
வராக கல்பத்தின் ஆதியிலே.
அம் காலத்து –
அழகிய காலத்தில் . ரக்ஷகனானவன் -காப்பாற்றுகின்ற சர்வேஸ்வரன் தன் விபூதியைக் காப்பதற்காக-ரக்ஷணத்துக்காக –
கொண்ட கோலத்தை அனுபவிக்கிற காலம் ஆதலின், ‘அம் காலம்’ என்கிறது.
அகல் இடம் கீண்டவர் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் மால் எய்தினள் –
மஹா பிருத்வியை -பெரிய இவ்வுலகத்தை அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து எடுத்துக்கொண்டு ஏறினவனுடைய திருவடிகளிலே
ரோமாந்தரஸ்தா முநயஸ் ஸ்துவந்தி ‘அந்த வராக நயினாருடைய மயிர்க் கால்களில் உள்ள மஹரிஷிகள் ஸ்துதி செய்கிறார்கள்,’ என்கிறபடியே,
‘சனகன் முதலானோர் இட்ட திருத் துழாயை ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது.
இதனையே எப்போதும் சொல்லும்படி பிச்சு ஏறினாள்’ என்பாள், ‘மால் எய்தினள்’ என்கிறாள்.

—————-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–4-5-10-

உண்டும் –பிரளய ஆபத்திலே திருவயிற்றிலே வைத்து நோக்கியும்.
உமிழ்ந்தும் –திருவயிற்றிலே யிருந்து நெருக்குப் படாதபடி வெளி நாடு காணப் புறப்பட விட்டும்.
கடந்தும் –மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற் போலே பறித்துக்கொண்டால் எல்லை நடந்து மீட்டும்.
இடந்தும் –பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாய் அண்ட பித்தியிலே செல்ல முழுகி எடுத்துக் கொண்டு ஏறியும்,
மணம் கூடியும் –
பதினோராயிரம் ஆண்டு தன் படுக்கைப் பற்றான பூமியைக் காப்பாற்றுகையாலே ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்க,
அவளோடே கலந்தும்.

———

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக் குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே–4-10-3-

இடந்தது –
பிரளயத்திலே அழுந்தி அண்ட பித்தியிலே சேர்ந்த இந்த உலகத்தை மஹா வராஹமாய்ப் புக்கு
ஒட்டு விடுவித்து எடுத்து. இப்படிச் செய்த இவற்றை,
கண்டும் –
இவர்க்குப் பிரத்யக்ஷத்திலும் சாஸ்திரம் விளக்கமாகக் காணப்படுகிறது காணும்.
தெளியகில்லீர் –
அதி மானுஷ சேஷ்டிதங்களை -மக்கள் செயலுக்கு அப்பாற்பட்ட இத்தகைய செயல்களைக் கொண்டே
அவனே ஆஸ்ரயணீயன் -அடையத்தக்கவன்’ என்று அறியலாய் இருக்க, அறிய மாட்டுகின்றிலீர்கோள்.
இவர்கள் தெளிவும் தெளியாமையும் ஒழிய, உண்மை நிலையில் மாறாட்டம் அற்று இருக்கிறது ஆதலின்,
கண்டும் தெளியகில்லீர்’ என்கிறார். ‘உங்கள் கலக்கமும் தெளிவும் ஒழிய,
அவனை ஈஸ்வரன் அல்லனாகச் செய்தல், இவர்களை ஈஸ்வரர்கள் ஆக்குதல் செய்ய ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.

———–

ஆனான் ஆளுடையான் என்றஃதே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமு மாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே–5-1-10-

கான் ஆர் ஏனமும் ஆய் –
சம்சார ஆர்ணவத்தில் -பிறவிப் பெருங்கடலில் நின்றும் என்னை எடுக்கைக்கு வராகத்தினது உருவத்தைக் கொண்டான்.
சோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா அத்ருஸ்யத ததா ராமோ பாலசந்த்ர இவோதித:- ஆரண். 38 : 15.
ஸ்ரீ ராமபிரான் தன் திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு
அப்போது தோன்றிய இளஞ்சந்திரனைப் போன்று காணப்பட்டார்” என்கிறபடியே,
காடு அடங்க மயில் கழுத்துச் சாயல் ஆக்கும் படியான வடிவை யுடையவன் என்பார்‘கானார் ஏனம்’ என்கிறார்.
காடு அடங்கக் கோலம் செய்தலைக் குறித்தபடி.
அன்றிக்கே, மனித சஞ்சாரம் இல்லாத காட்டிலே வாழ்கின்ற ஏனம் என்பார் ‘கானார் ஏனம்’ என்கிறார் என்னலுமாம்.

(தீ செங் கனலியும் கூற்றமும் ஞமனும் மாசிலா யிரங்கதிர் ஞாயிறும் தொகூஉம்
ஊழி ஆழிக்கண் இருநிலம் உருகெழு கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும்–என்ற பரிபாடல் பகுதியையும்,
இவை கூடும் ஊழி முடிவினுள் ஏழும் ஒன்றாகிய ஆழிக்கண் அழுந்துகிற நிலமகளை அழகிய வராகமாகி
மருப்பாற் பெயர்த்தெடுத்தோய்’ என்ற அதன் உரை)

—————-

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ?
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே–5-6-1-

கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும் –
அசுரத் தன்மை வாய்ந்தவர்களாயிருப்பார் இதனை அழித்தல் அன்றிக்கே, பூமிக்குக் காவலாக வைத்த கடல் தானே இதனை அழிக்க,
அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த இதனை இடந்து எடுத்தேனும் யானே என்னா நின்றாள்.
அமிழ்ந்து கிடக்கிற பூமி, ‘என்னை எடுக்க வேணும்’ என்று விரும்பியது இல்லையே அன்றோ;
தானே செய்தானாதலின் ‘யானே’ என்கிறது.

——–

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்க லத்தவர் கை தொழ உறை
வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே–5-7-6-

ஏனமாய் நிலம் கீண்ட –
ஆபன்னரானார் -ஆபத்தை அடைந்தவர்கள் அறிவிக்கையும் மிகையாம் படி அன்றோ உன் படி இருப்பது.
ரக்ஷணம் -காத்தல் ஒரு தலை யானால் உன்னைப் பேணாதவன் அன்றோ என்றபடி.

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா-
பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாகி எடுத்தாய்,
சம்சார பிரளயம் கொண்ட என்னை ஸ்ரீ கிருஷ்ணனாய் எடுத்தாய்.

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே-
பிரளயத்தால் கொள்ளப்பட்ட பூமிக்கு உபகரித்தது -உதவி செய்தது தமக்கு உதவி செய்ததாயிருக்கிறபடி.

என் அப்பனே கண்ணா –
என்னைக் காப்பாற்றுவதற்கு-ரக்ஷணத்துக்கு – ஏதேனும் முகம் பண்ண வேண்டுமோ?
என்னைக் காப்பாற்றுவதற்கு ஏதேனும் ஒரு கோலம் கொள்ள வேண்டுமோ?
கண்ணன் கோள் இழை வான் முகமே-திருவாய்மொழி, 7. 7 : 8. அன்றோ இவர்க்கு ரக்ஷகம்.
(என்னப்பனே கண்ணா” என்பதற்கு, வெறுப்பிலே நோக்காகச் சிலேடையில் வைத்து, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
என்னை’ என்று தொடங்கி. முகம் – வேறொரு பிரகாரமும், வராகத்தினது முகமும். கோலம்– வராகமும், அலங்காரமும்.)

———–

வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச்
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

உனக்கு ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும் பாதுகாப்பவன் அல்லையோ நீ!
ஆன பின்பு உனக்கு இது போருமோ?’
திரு அபிஷேகம் – தொடக்கமான திவ்ய ஆபரணங்களைத் தரித்துக் கொண்டு நித்ய ஸூரிகள் நடுவே இருக்கக் கடவ நீ,
உலகத்திற்கு எல்லாம் காரணனாய்ப் பரப்பை யுடைத்தான பூமியைப் படைத்து,
பின் பிரளய ஆபத்து வர வயிற்றிலே எடுத்து வைத்து,
அநந்தரம் வெளி நாடு காணப் புறப்பட விட்டு,
பின் மஹாபலி கவர்ந்து கொள்ள எல்லை நடந்து மீட்டுக் கொண்டு,
பின் நைமித்திகப் பிரளயத்திலே மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி,
இப் படிகளாலே சர்வ ரஷணங்களையும் செய்யுமவன் அல்லையோ?

தொண்டனேன் மதுசூதனனே –
இவன் ரஷகன் என்னுமிடத்துக்கு முன்னே ஒன்று தேடிச் சொல்ல வேணுமோ?
மதுவைப் போக்கினால் போலே நான் இந்திரியங்கட்குக் கட்டுப்பட்டிருத்தலை
இன்று இருந்து போக்கினவன் அன்றோ?
தன் படிகளைக் காட்டி எனக்குப் புறம்பு உண்டான வாசனையைப் போக்கி-
இன்று கைக்கு எட்டாதிருக்கிற இதுவே விறே குறை?

————-

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே–7-4-3-

மஹா வராஹ வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார்
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே-
ஏழு பூமியும் நாலாதபடி எடுக்கை. என்றது,
ஏழு தீவுகளாய் இருக்கின்ற பூமியை எடுக்கச் செய்தே, ஒன்றும் நாலாதே முன்பு போலே
ஸ்வ ஸ்வ ஸ்தானத்தில் -தன் தன் இடத்திலே கிடக்கும்படி.
இவன் பெரிய யானைத் தொழிலைச் செய்யா நிற்கச் செய்தேயும், முன்பு போலே ஒரு குறை அற,
உண்பார் உடுப்பாராய்ச் செல்லுகிறபடி.
ஆதாரமானவன் கூட நிற்கையாலே இவற்றுக்குஒரு குறை வாராதே.
ஸப்த -ஏழு தீவுகளும் சலித்தன இல்லை: தனது தனது இடத்தில் இருந்தன ஆயின.

பின்னும் –
அதற்கு மேலே,

நான்றில ஏழ் மலை தானத்தவே –
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற ஏழு குல மலைகளும் ஒன்றும் குலையாமல்
தன் தன் இடத்தில் நிற்கும்படி. என்றது,
ஒரு கோத்ர ஸ்கலனம் பிறந்தது இல்லை’ என்றபடி.

பின்னும் பின்னும்’
என்று வருவதற்குக் கருத்து, ‘இவற்றிலே ஒரு வியாபாரமே -செயலே அமையும் கண்டீர்!
அதற்கு மேலே இவையும் செய்தான்’ என்கைக்காக.

நான்றில ஏழ் கடல் தானத்தவே –
அவை தாம் கடினத் தன்மையாலே குலையாதே ஒழிந்தன என்னவுமாம் அன்றோ?
அதுவும் இல்லை அன்றோ இதற்கு? நீர்ப் பண்டம் அன்றோ தண்ணீர்?
அதுவும் தன் இடத்திலே கிடக்கும்படியாக.
அவற்றின் கடினத் தன்மையும் இதனுடைய நெகிழ்ச்சித் தன்மையும் பயன் அற்றவை;
அவன் திருவுள்ளக் கருத்து யாது ஒன்று? அதுவே காரியமாக முடிவது,’ என்கை.
இவை இப்படிக் கிடத்தல் அவன் அவஹீதானாயக் கொண்டு -குறிக்கோளுடையவனாய்க்
கொண்டு காப்பாற்றும் போதோ?’ என்னில்,

ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே-
மாறுபடுருவத் தைக்கும் படியாகக் குத்தி. அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடிவித்து எடுத்து ஏறட்டு,
எயிற்றிலே எற்றிக் கொண்டு வ்யாபாரித்த -செயல் செய்த போது:
மண்ணெலாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து’ பெரிய திருமொழி, 3. 4 : 3. என்கிறபடியே.
அவன் இப்படி முக்யமாகக் ரஷிக்கப் புக்கால் அவை சலிக்கமோ?
அசையாத பொருள்களோடு அசையும் பொருள்களோடு வாசியற ஸ்வ ஸ்வ ஸ்தானத்தில் தம் தம் இடத்திலே நின்றன-

————-

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–7-5-5-

உலகத்தைப் படைத்தது ஓர் ஏற்றமோ, படைக்கப்பட்ட உலகத்தைப் பிரளயம் கொள்ள
மஹா வராகமாய் எடுத்து ரஷித்த குணத்துக்கு?’ என்கிறார்.
சூழல்கள் சிந்திக்கில் –
தான் தன்னோடு உறவு அற ஜீவிக்கைக்கு உறுப்பான விரகு பார்க்கில்.
தாங்கள் தாங்கள் அபிமதங்கள் -விரும்பிய பொருள்கள் சித்திப்பதற்கு விரகுகள் பார்க்கில்.

மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ –
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரக்ஷணம் -ஒரு தலையானால் தான் தன்னைப் பேணாத நோக்கும்
ஆச்சரியத்தை யுடைய இறைவனது திருவடிகளை அல்லது பற்றுவரோ?

ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை –
ஆழத்தையுடைத்தான மிக்க தண்ணீரிலே அழுந்தின பூமி’ என்னுதல்.
பெரும்புனல் தன்னுள் ஆழ -அழுந்திய பூமி’ என்னுதல்.
அழுந்திய ஞாலம் –
அண்டப்பித்தியில் சென்று ஒட்டின பூமி.

தாழப்படாமல் –
தரைப்படாமல்; மங்காமல். என்றது,
உள்ளது கரைந்து போனபின்பு இனிச் சத்தையும் கூட அழிந்து போக ஒண்ணாது என்று பார்த்து’ என்றபடி.

தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட –
மஹா பிருத்வியை -பெரிய பூமியைத் தன் எயற்றிலே நீலமணி போலே கொண்ட; –
தன் திரு எயிற்றிலே ஒரு கூற்றிலே கொண்ட.-உதாரராய் இருப்பார் நாற்பது பேருக்குச் சோறு இட நினைத்து
நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே,
ரஷ்யத்தின் அளவு -அன்று காணும் கொண்ட எயிற்றின் பெருமை;
முகாந்தரத்தாலே -வேறு முகத்தாலே காத்தல் அன்றியே, தன் முகத்தாலே எடுத்துக் காத்தபடி
தான் கொண்ட
கரைந்து போன பூமி அர்த்திக்க -வேண்டிக் கொள்ளச் செய்தது -அன்று ஆதலின்-தான் கொண்ட- என்கிறார்.

கேழல் திரு உரு ஆயிற்று –
அழிவுக்கு இட்ட வடிவிற்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருந்தபடி.
ஆஸ்ரித ரக்ஷணத்துக்காக வந்து தன்னைப் பேணாதே ஒழிய ஒழிய அது தானே
நிறம் பெறும் படியாய்க் காணும் இருப்பது;
மானம் இலாப் பன்றியாம் தேசு’நாச்சியார் திருமொழி, 11 : 8. என்னும்படியே.
மாசு உடம்பில் நீர் வாரா – எங்கேனும் உண்டான அழுக்கும் வந்து சேரும்படி இருப்பது ஒரு வடிவைக் கொண்டு.
மானம் இலாப் பன்றியாம்-ஈஸ்வரனாம் தன்மை பின்னாட்டாதபடி இருக்கை.
தன் இனங்கள் மோந்து பார்த்துத் ‘தன்னினம்’ என்று நம்பும்படி அக வாயில் புரை அற்று இருக்கை.
மாரீசனாகிய மாய மானை மோந்து பார்த்து ‘ராக்ஷஸ வாசனை உண்டு’ என்று போயின அன்றோ மற்றைய மான்கள்?
பன்றியாம் தேசுடை தேவர் – இவ்வடிவு கொண்டிலனாகில் அருமந்த ஒளியை எல்லாம் இழக்கு மத்தனை யன்றோ.
நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து அங்கே இருப்பதைக் காட்டிலும் தாழ விட்டதால் வந்த ஏற்றம்?’
கேட்டும் உணர்ந்துமே-
ஸ்ரவண மனன -கேட்டும் மனனம் செய்தும், அதனாலே தம் முயற்சியை விட்டவர்கள்
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?

தான் உலகத்திற்குக் காரணனாய் இருத்தல் முதலிய குணங்களுள் ஒன்றும் குறையாதபடி
சங்கற்பத்தாலே உலகத்தைப் படைத்தான் என்னுமது ஓர் ஏற்றமோ,
பிரளயம் கொண்ட பூமியைத் தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு எடுத்த இந்த உபகாரத்துக்கு?

—————–

ஆருயிரேயோ ! அகலிட முழுதும் படைத் திடந் துண்டுமிழ்ந் தளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்கு றைந்தது கடைந் தடைத் துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

உயிர் நீராய் இருக்க நான் என்ன சாதனத்தை செய்து-அனுஷ்ட்டித்து – வந்து கிட்டுவேன் -என்றது –
சரீரத்தை காப்பது -ரஷிப்பது- ஆத்மாவின் கார்யம் அன்றோ
சரீரம் தன்னை தானே ரக்ஷித்து பாதுகாத்துக் கொள்ளவா -என்றபடி –
சம்பந்தம் மாத்ரமேயோ -அனுஷ்டானமும் இல்லையோ -என்கிறார் -மேல் –

அகல் இடம் முழுதும் படைத்து-இடந்து -உண்டு -உமிழ்ந்து -அளந்த பெரியரேயோ –
பஹுச்யாம் -தைத்ரியம் –பல பொருள்களாகக் கடவேன் –என்று பூமிப் பரப்பு அடங்கலும் ஸ்ருஷ்டித்து -உண்டாக்கி
பிரளயத்தில் நோவு பட மகா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி –
மீண்டும் பிரளயம் வர வயிற்றில் வைத்து நோக்கிக் கொண்டு –
உள்ளே கிடந்தது தளராதபடி வெளி நாடு காண உமிழ்ந்து
மகா பலியாலே கவரப்பட்ட நிலையிலே எல்லை கடந்து நடந்து மீட்டு
இப்படி அந்த துர் தசையிலே என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அபேஷா நிரபேஷமாக -விரும்புவார் இல்லாது இருந்தும்
உணர்ந்து நோக்கும் நீயே இது கிட்டும் விரகு பார்க்க வேண்டாமா

————

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே –
விஸ்த்ருதமான அகன்ற பூமியை உண்டாக்கி
பிரளயம் கொண்ட பூமியை மஹா வராகமாய் எடுத்தானும் அவனே
அவனே -என்ற ஏ காரத்தால்
படைத்தல் முதலான கார்யங்களில் ஸஹ காரி நைரபேஷ்யம் -வேறு
துணைக் காரணம் இல்லாமையைச் சொல்லுகிறது –

———-

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

தானே உலகு எல்லாம் –
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம – தஜ்ஜலான் எல்லா பொருள்களும் ப்ரஹ்மமாகவே இருக்கின்றன –
தத் த்வம் அஸி -அது நீ ஆகின்றாய் –
என்றும் சொல்லக் கடவது அன்றோ –

தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே –ஆகையாலே
தானே உலகு எல்லாம் -என்கிறது –

தஜ்ஜலான்
தஜ்ஜத்வ-அந்த பரம் பொருள் இடத்து உண்டாவதாலும் –
தல்லத்வ – அந்த பரம் பொருளில் லயம் அடைவதாலும் –
தத் நத்வ -அந்த பரம் பொருளால் காப்பாற்றப் படுவதாலும்
இதம் சர்வம் -காணப் படுகிற இவை எல்லாம்
ப்ரஹ்ம கலு -அந்த பரம் பொருள் அல்லவா –
தத் அநத்வம் -உயிர்பித்தல் -காப்பாற்றுதல்
தஜ்ஜத்வ தல் லத்வங்களில் –
தச் -சப்தம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்ம பரம்
தத் அநத்வத்தில்-தச் சப்தம் கேவல ஸ்வரூப மாதரம்
ஸ்வேன ரூபேண நின்று ஸ்திதிப்பிக்க வேண்டுகையாலே –
இங்கு சொல்லுகிற தாதாத்மியம் -ஓன்று பட்டு இருத்தல் -ஸ்வரூபத்தால் ஐக்கியம் சொல்லுகிறது அன்று
சரீர ஆத்மா பாவத்தால் சொல்லுகிறது –
காரணனாய் இருக்கும் தன்மையை சொல்லில்
விகாராஸ் பதமாம் -வேறு படுகின்ற விகாரங்களுக்கு இடமாம் என்று சங்கித்து
சரீர ஆத்மா பாவத்தாலே சொல்லுகிறது
சரீரத்துக்கு உளதாகும் பால்யம் யௌவனம் முதலானவைகள்
ஆத்மாவை அடையாதது -தட்டாதது -போன்று
இவற்றைப் பற்றி வரும் விகாரங்கள் அவனுக்கு வாரா
என்று தோஷ அஸ்பர்சம் -குற்றம் தீண்டாமை சொல்லுகைக்காக சொல்லுகிறது

தானே படைத்து –
தம பர தேவ ஏகீ பவதி -சுபால உபநிஷத்
மூலப் பிரகிருதி பரம் பொருளில் ஒன்றுகிறது -என்கிறபடியே
ஸூஷ்ம சித் அசித்துக்களை சரீரமாக உடைய –சரீரியான தானே எல்லா உலகங்களையும் உண்டாக்கி –
அசித்தினும் வேறுபடாத நிலை உடைத்தாகையாலே-அசித் விசேஷிதமான தசையில் –
அபேக்ஷிப்பாரும் – விரும்புவாரும் இன்றிக்கே-
தயாமானமநாவாய் – அருள் உடையவனாய் தானே இறே உண்டாக்கினான்

தானே இடந்து –
ப்ரளயங்கதையான- பிரளயத்தால் மூடப் பட்ட பூமி -என்னை எடுக்க வேண்டும் -என்று
அபேக்ஷிக்கை அன்றிக்கே -விரும்பியதால் அன்று –நஷ்ட உத்தரணம் அழிந்த உலகத்தை நிறுத்தியது

தானே உண்டு –
பிரளயம் வர புகுகின்றது என்று அறிவார் இலரே

உமிழ்ந்து –
உள்ளே கிடந்தது நோவு படும் இத்தனை அல்லது
எங்களை வெளிநாடு காணப் புறப்பட வேண்டும் -என்று இரவாது இருக்க தானே உமிழ்ந்து

இப்படி சர்வ ரக்ஷணங்களையும் -பல விதமான பாது காத்தலை பண்ணுகையாலே
தானே உலகு எல்லாம் –
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -எல்லா பொருள்கள் எல்லாம் ப்ரஹ்மமாகவே இருக்கின்றன-

—————–

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் –
ஒரு அஞ்சன கிரி -நீல மலை இரண்டு பிறையைக் கவ்வி நிமிர்ந்தால் போலே
பிறையில் மறுவைப் போன்றதாயிற்று -திரு எயிற்றில் கிடந்த பூமி –

கோல வராகம் –
மாசு உடம்பில் நீர் வாரா நின்ற நிலை அன்றோ
இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயம் ஆயிற்று
அன்றிக்கே
பாசி தூரத்து கிடந்த பார் மகள் -என்கிறபடியே
பிரணயிநி காதலி அழுக்கோடு இருக்க
தாமான படியே வருவார் ஆகில் பிரணயித்வத்துக்கு
காதலுக்கு நமஸ்காரமாம் -குறைவாம் இத்தனை அன்றோ –என்னுதல்-
அவன் அழிவுக்கு இட்ட வடிவிற்கே அன்றோ இவர் ஆலத்தி வழிக்கிறது

ஒன்றாய் –
வராகத்த்தின் ஜாதீய மாதரம் -இனத்தோடு சேர்ந்ததாய் -என்னுதல்
மூன்று உலகங்களையும் கண் செறி இட்டால் போலே -மறைத்தால் போலே
விம்ம வளர்ந்த படியாலே அத்விதீயம் -ஒப்பு அற்றதாய் -என்னுதல்-

நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் –
பிரளயம் கொண்ட பூமியை அண்டத்தின் உடைய சுவரிலே புக்கு
திரு எயிற்றிலே கொண்டு எடுத்தால் போலே-சம்சார ஆர்ணவம் –
பிறவிக் கடலிலே மூழ்கின என்னை எடுத்தவனே –

———————————–

முதல் திருவந்தாதியில் -ஆறு -பாசுரங்களில் ஸ்ரீ வராஹ நாயனார் அனுபவம் உண்டே –

இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்–ஸ்ரீ முதல் திருவந்தாதி–2-

பொரு கோட்டோர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்ததன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க மா வடிவில் நீ யளந்த மண் –9-

பொரா நின்ற கோட்டை உடைத்தான அத்விதீயமான வராஹமாய்
கண்ட விடம் எங்கும் இடந்து கொண்டு வருகிற படி –
ஒரு காலும் பொராது இருக்க மாட்டாத ஜாதி பிரயுக்தமான ஸ்வ பாவம் இருக்கிறபடி
பூமியைப் பொராத போது பிராட்டி திரு முலைத் தடத்தில் குங்குமத்தை யாகிலும் இடந்திடா நிற்கும் –
ஓர் ஏனம் –
அழிவுக்கு இட்ட உடம்புக்கு ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கை-
புக்கு இடந்தாய்க்கு –
அண்ட பித்தியிலே புக்கு ஒட்டிக் கிடக்கிற இத்தைப் புக்கு எடுத்துக் கொண்டு ஏறின படி
முத்துக்கு முழுகுவார் சுற்றுக் கோணம் கொண்டு எடுக்குமா போலே
அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே –
நீ எப்படிப் பெரிய பாரிப்போடே கூட அன்று எடுத்த பூமி யானது
உன் திரு எயிற்றிலே ஒரு நீல மணி அழுத்தினால் போலே யன்றோ கிடந்தது
இத்தால்
ரஷ்யத்தின் அளவில்லாத ரஷகத்வ பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது
உதாரராய் இருப்பார் ஒருவருக்கு உண்ணச் சொன்னால் ஒன்பது பேர்க்குச் சோறு சமைக்குமா போலே –

——-

கேழலாய்ப் பூமி இடந்தானை யேத்தி எழும் —-25-

மகா வராஹமாய் புக்கு அண்ட பித்தியில் ஒட்டின இத்தைக் கீண்டு
பின்னை இடந்து எடுத்துக் கொண்டு ஏறின வபதாநத்தை ஸ்தோத்ரம் பண்ணி உஜ்ஜீவியா நிற்கும் –

———

இடந்தது பூமி—-வேங்கடமே பேரோத வண்ணர் பெரிது–39-

பிரளய ஆபத்து பிரஸ்துதமான பின்பு பூமியை எடுத்துக் கொண்டு ஏறினான்
பிரளய ஆபத்தில் வந்த நலிவு தீர்த்த படி –
பிரளயம் கொண்ட பூமியை எடுத்து அருளின் போதை அழகு-திரு வேங்கடமுடையான் பக்கலிலே காணலாம் –

——-

பிரானுன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-

இப்படித் திரு உலகு அளந்து அருளின் அன்று என் ஸ்வாமி யான உன்னுடைய திருவடிகளுக்கு அளவு போந்த பூமியானது
இன்று வராகத்து எயிற்று அளவு போதாதவாறு என் கொலோ
இப்போது திரு எயிற்றுக்கு ஏக தேசத்துக்குப் போராதாய் இருக்கிற இது எங்கனே இருக்கிறதோ
ஒரு நாள் போந்த பூமியானது-ஒரு நாள் போராது ஒழிவான் என்-இது என்ன பாரிப்பு தான் -என்கிறார்
நான் ஒருவனுமே உன் குணங்களிலே குமிழ் நீருண்ணா நின்றேன்-என்கிறார் –

————

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —91-

தன் விபூதி அழிய தன்னைப் பேணி இருக்கை அன்றிக்கே தன்னை அழிவுக்கு இட்டு நோக்கும் ஸ்வ பாவனானவன்
திருவடிகளிலே நாடோறும் வாசனை பண்ணாதார்க்கு நித்ய விபூதி உண்டாமோ –
நாடோறும் –
நாடோறும் ஏக சிந்தையனாய்-ஏனத்து உருவாய்
உலகிடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் –
ஊழியான் –
நாம் இல்லாத காலத்து உளனாய் நம்மை ரஷிக்குமவன்

சீயர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்து இருப்பார் பெரிய கோயில் தாசர் என்று ஒருத்தர் உண்டு
அவர் ஒரு கால் வந்து நல் வார்த்தை கேட்டுப் போகா நிற்க
அங்கே இருந்தான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்
நீர் நெடு நாள் உண்டோ இங்கு வந்து -என்ன
ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த வன்றே பேறு சித்தம் -அன்றோ
நடுவு இழந்தது அன்றோ எனக்கு இழவு-என்ன
அசல்கை நின்ற நிலையிலே நம்பிக்கை யுடையதும் மாண்டிருந்ததையும் கெட்டு
என் சொன்னாய்
நாடோறும் மருவாதார்க்கு உண்டாமோ வான் -என்று அன்றோ சொல்லுச் சொல்லுகிறது
திருவந்தாதி கேட்டு அறியாயோ
சீயர் பாதத்தில் நாலு நாள் புக்குப் புறப்பட்ட வாசி தோற்றச் சொல்லுதில்லையீ-என்றானாம் –

கரணம் பிழைக்கில் மரணமாம் படியான பிரமாதத்தால் வருமவற்றுக்குப் பரிஹாரம் சொன்ன இத்தனை போக்கி
ப்ராப்ய ருசி இல்லாதார்க்கு ப்ராப்ய சித்தி உண்டாகச் சொல்லிற்றோ –
ஒருக்கால் அவனே கடவன் என்று சொல்லி
பின் பழைய வலையையே வர்த்திப்பித்துத் திரிய பேறு உண்டாமோ
முன்பு இது நெடும் காலம் இழந்தது இவ்வஸ்துவுக்கு யோக்யதை இல்லாமை யன்றே
ருசி இல்லாமை இறே
அனுபவிக்கைக்குத் தான் வேண்டினவோபாதி இறே ருசியும்
அப்பெரிய பேற்றை பெரும் போது-தனக்கு ருசி வேண்டாவோ –

——-

இரண்டாம் திருவந்தாதியில் -நான்கு-பாசுரங்களில் ஸ்ரீ வராஹ நாயனார் அனுபவம் உண்டே —

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய்-இரண்டாம் திருவந்தாதி–30-

அபரிசேத்யனாய் ஸ்ரீ ய பதியான நீ பெறாதது பெற்றாற் போலே பூமியை அளந்தாய்
நீ அன்று உலகு இடந்தாய்-அதுக்கடியாக பூமியை இடந்தாய்
அப்படி இரந்து செல்லுகைக்கும் ஒருவர் இல்லாமையாலே பிரளயம் கொண்டு அண்ட பித்தியிலே
ஒட்டிக் கிடந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுக்கைக்காக
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு புக்கு இடந்து ஏறினாய் என்று பிரமாணிகர் சொல்லா நின்றார்கள்

——-

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து—-இரண்டாம் திருவந்தாதி-31–

கை கழிந்து போன என்னை தன் பக்கலிலே-ஆபிமுக்யம் பண்ணுவித்து ருசியை பிறப்பித்த-உபகாரகன் என்றும் –
குராவினுடைய நன்றாய் செவ்வியை உடைத்தான-பூவினைக் கொண்டு
இன்ன புஷ்பம் கொண்டு என்னை ஆஸ்ரயிக்க-வேணும் என்று இராதே
நாட்டில் புஷ்பத்துக்கு சஜாதீயமான வடிவை உடையவன்-திருவடிகளை பணியுமவர்கள்
பலத்துக்கு பலம் இறே-ஸூ ஸூ கம் கர்த்துமவ்யயம் -என்கிறபடியே- சாதன தசையிலே இனிதாய் இருக்கை-

பிரான் பெரு நிலம் கீண்டவன் –திருவாய் -1-7-6-

இன்ன புஷ்பம் கொண்டு என்னை ஆஸ்ரயிக்க வேணும் -என்று இராதே
காட்டில் புஷ்பத்துக்கு சஜாதீயமான வடிவை யுடையவன் –
மஹா வராஹமான வடிவை யுடைத்தாய் -ஆபரணம் தேட வேண்டாதபடி -ஒரு படி சாத்தினாப் போலே இருக்கை-
அவன் கைக்கு எட்டின தொரு வடிவு கொண்டால் பூவும் கைக்கு எட்டித்து ஓன்று அமையும் இ றே –

——–

மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–

மண் கொண்டு –பூமியை அளந்து கொண்டு-
பூமியை இடந்து கொண்டு என்னவுமாம் –

——-

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

சேதன அர்க்க அனுபாவ்யமான குணங்களை உடைய சேஷியை –
பிரளயம் கொண்ட விடத்து மஹா வராஹமாய் எடுத்து -இத்தால் ஆபத்தே பச்சையாக நோக்கும் என்றபடி –

——————

மூன்றாம் திருவந்தாதியில் -ஒரு -பாசுரம்- ஸ்ரீ வராஹ நாயனார் அனுபவம் உண்டே —

கேழலாய் -மீளாது மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம் காதல் பெரிது —–54-

சர்வாதிகனான தான் வராஹ வேஷத்தைக் கொண்டால் பின்பு அவ்வளவிலே பர்யவசிக்க இ றே அடுப்பது
அதுக்கு மேலே கேழலாய்த் தன்னை உணர்ந்தான் – ஸ்ரீ யபதி என்று உணர்ந்தால் செய்யப் போமோ-
மீளாது மண்ணகலம் கீண்டு – என்று மேலே கூட்டி-மீளாத படிக்கு ஈடாக பூமியைக் கொண்டு என்றுமாம் –
அவ்விடத்தே பிரளயம் கொண்ட பரப்பை-உடைத்தான பூமியைக் கொண்டு ஏறினான் ஆய்த்து –
பெரிய பிராட்டியார் விரும்பும்படியான மார்வை உடையவன் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் உண்டான சங்கம் சாலக் கரை புரண்டு இருந்தது –
பெண்ணகலம் -என்கிறது -ஸ்ரீ பூமிப் பிராட்டி உடைய திரு மேனியை –
காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை -சிறிய திரு மடல் -என்னக் கடவது இறே –
காதல் பெரிது – ஸ்ரீ பூமிப் பிராட்டியார் பக்கலிலே பிச்சேறி இருக்கும் படி –
தன்னை யாசைப் படுவார் விடாயிலும் மிக்கு இருப்பதே தான் ஆசைப் படுவார் பக்கல் விடாய் –
அவாப்த சமஸ்த காமன் மகா வராஹமாய் அண்ட பித்தியில் நின்றும் பூமியை ஒட்டு விடுவித்து எடுத்து-
அவள் பக்கல் காதலாலே இறே–அவள் அபிமானித்த பூமியை எடுத்தது -என்கை –

——————

நான்முகன் திருவந்தாதியில் -ஒரு -பாசுரம்- ஸ்ரீ வராஹ நாயனார் அனுபவம் உண்டே —

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-

சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த பிள்ளை யானவன்-
பிரளயம் கொண்ட பூமியை இடந்து எடுக்கைக்காக
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத-அத்விதீயமான ஸ்ரீ வராஹமாய் பூமியைத் திரு எயிற்றிலே தரித்தது-
நான் ஒருவனும் இன்றாக அறிகிறேன் அல்லேன்–இது சர்வ லோக பிரசித்தமாய் இருப்பது ஓன்று-

————–

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே–திரு விருத்தம் -39-

பொங்கா நின்ற மூன்று வகைப் பட்ட நீரைஉடைத்தான கடல் சூழ்ந்த பூமிக்கு எல்லாம் உபகாரகன் –
பிரளய ஆபத்திலே ரஷித்தவன்-

—-

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45-

ரஷ்யத்தின் அளவு அன்றிக்கே -ரஷகனுடைய பாரிப்பு இருக்கிற படி –
மாசுடம்பில் நீர் வாரா -ஏறும் அழுக்கு எல்லாம் ஏறும் படியாக இருக்கை–
பன்றியாம் தேசு -ஆத்மாநாம் மானுஷம் மன்யே -என்று கேழலான தேஜசுக்கு
ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கும் தேஜஸ் போராது இருக்கை –
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதியை ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ –
தன்னை அறியாதார்க்கு முகம் கொடுத்தவனுக்கு
தன்னை அறியும் அவர்களுக்கு தான் முகம் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ –
பெரும் கேழலார்-சிலம்பினிடை இத்யாதி –தம் பெரும் கண் மலர் –
பெரும் கேழலார் என்ற உடம்பு-அடைய-கண்ணாய் இருக்கை –
கடல் போலே பெருத்து அது நிறைய தாமரை பூத்தாற் போலே இருக்கை
மகா வராஹஸ் ஸ்ப்புட பத்ம லோசன –
தம் பெரும் கண் மலர் -இப் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து
பிராட்டிக்கு கார்யம் செய்தானாய்-ஸ்ரீ பூமி பிராட்டியை குளிர நோக்கி
கொண்டு இருக்கிற இருப்பு –
நம் மேல் –அவள் பிரஜையான நம் மேல் –
ஒருங்கே -ஸ்ரீ பூமி பிராட்டி பக்கலிலும் பாலி பாயாதபடி
பிறழவைத்தார் -மிக வைத்தார் -தம்மால் தரிக்க போகிறது இல்லை
இவ்வகாலம் -சருகாய் கிடக்கும் மரங்களும் ஒரோ காலத்தே தளிரும்
முறியுமாய் நிற்குமது போலே –

——

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

அத்விதீயமான மகா வராகமாய் -இப்பூமியை தன திருவடிகளால் துகைத்து –
அது தன்னை அடைய-தன் திரு மேனியிலே செருக்காலே எங்கும் ஏறிட்டு கொண்டவன் –

———-

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- –

சர்வ சேதனருக்கும் சர்வேஸ்வரனைப் பற்ற அடுக்கும் -என்று -என் தான் -அவனையே பற்ற வேண்டுகிறது
என் என்ன -இவையாபின்னமானவன்று -பரார்தமாக தன்னைப் பேணாதே -ரஷிப்பான் ஒருவனைப்-பற்ற வேண்டாமோ –
இது ஹேது கர்ப்ப பிரதிக்ஜ்ஜை –
ஹேதுவாகிறது தான் என் என்ன –எறி திரை வையம் -கடல் சூழ்ந்த பூமியை பிரளயம் கொள்ள –
பிறர்க்காக தன்னை அழிய மாறுவான் ஒருவன் ஆகையாலே -ரஷ்யத்துக்காக தன்னைபாராதே-அழிய மாறுவான் -என்கை –
இடந்த -இத்தால் சர்வ சக்தி –என்னுமிடத்தை சொல்லுகிறது —
பிரான் -சக்தியே அன்றிக்கே இவற்றை ரஷிக்கைக்கு ஈடான பிராப்தியும் அவன் கையதே என்கிறது –
ஸ்வாமி என்கிறது -இவற்றின் உடைய ரஷன உபாய ஜ்ஞானமும் -அதுக்கு ஈடான சக்தியும்
பிராப்தியும் உள்ளது அவன் பக்கலிலே என்கை -இவனுடைய அஞ்ஞான அசக்திகளாலும்
அவனையே பற்ற வேணும் -இனி உடைமை பெறுகைக்கு உடையவனே யத்நிக்கும் அத்தனை இறே –
உடைமை தான் யத்நிக்குமது இல்லை இறே -ஆகையாலும் அவனே வேணும் –
ஆக -குறைவாளர்க்கோ அவனைப் பற்ற அடுப்பது என்ன
இரும் கற்பகம் இத்யாதி –இங்கே ஒருஸூ க்ருதத்தைப் பண்ணி அதுக்கு பலமாக ஸ்வர்க்கத்திலே போய்
கல்பக வ்ருஷம் அபேஷித சம்விதானம் பண்ண இருப்பார்க்கும் அவன் வேணும் -ஸ்வ கர்ம பலன் அனுபவிக்கிறான் ஆகில்
அவன் என் என்னில் -இவன் பண்ணின கிரியை இங்கே நசியா நின்றது இறே –
இவன் கர்மத்தையும் அளந்து -இவன் தன்னையும் அளந்து பலம் கொடுப்பான் ஓர் ஈஸ்வரன் வேணும் இறே –
கிரியை நசித்தால்-நின்றுபலம் கொடுக்கைக்கு கிரியா சக்தி என்றாதல் -அபூர்வம் என்றாதல் –
ஒன்றைக் கொள்ளா நின்றார்கள் இறே -இனி ஓன்று கற்பிக்கும் இடத்தில் ஒரு பரம சேதனனைக் கற்பிக்க அமையாதோ –
மற்ற எல்லாயவர்க்கும் -ஷயியான பலத்தை அனுபவிக்கிறவர்கள் தங்களுக்கே அன்றி –
அநந்த ஸ்திர-பலத்தை அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கும் அவன் வேணும் -அவர்களுக்கும் அனுபவத்துக்கு தங்கள் சத்தை-வேணுமே –
எல்லாயவர்க்கும் -தேக யாத்ரைக்கு அவ்வருகு அறியாதே -ஸ்தூவோஹம் க்ருசோஹம்-என்று
இருக்கிற மனுஷ்யாதிகளுக்கும் வேண்டும் சம்விதானம் பண்ணிக் கொடுக்கைக்கும் அவனே வேணும்
ஜ்ஞானாதிகரையும் அதற்க்கு குறைய நின்றாரையும் ஒக்க எடுக்கையாலே இத்தலையில்-உண்டான அறிவு அசத் சமம் என்கை –
என்தான் ஜ்ஞானத்தால் அன்றோ மோஷம் –பேற்றுக்கு இத்தலையில் ஜ்ஞானம் உண்டாக வேண்டாவோ என்ன –
உண்டாகவுமாம் இல்லையாகவுமாம் – அப்ரதிஷேதத்துக்கு வேண்டுவதே இவன் பக்கலில் வேண்டுவது –பேற்றுக்கு அடியான ஜ்ஞானம்
அவன் பக்கலிலே உண்டு என்கிறார் –

ஞானப் பிரானை – தன்னை சூழ் த்திக் கொள்ளுக்கைக்கு ஈடான-அறிவு இறே இவன் பக்கலிலே உள்ளது –
பர ரஷன உபாயம் உள்ளது அவனுக்கே யாயிற்று –
அல்லால் இல்லை –அவன் உளன் என்கை யல்ல -ஈஸ்வரன் இல்லை என்று சாஸ்திரம் எழுதுகிறவனும்-
அந்திம சமயத்தில் வந்தவாறே -சஹஸ்ருதி நலியா நின்றது -என்றான் இறே -வழி கெட நடந்தோமா -என்று
நாஸ்திகரும் கூட அங்கீகரிக்கிற அளவஅன்றே இவர்கள் சொல்லுகிறது -அவனை ஒழிந்த தானும்
தான் பரிக்கிரஹிக்கிற உபாயங்களும் அடைய கழுத்துக் கட்டி என்கை –

ஒரு விசை திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு நடந்த இடத்தே இவ் அர்த்தத்தை அருளிச்-செய்வதாக
ஒரு ஏகாந்த ஸ்தலத்தை எம்பெருமானாரையும் கொண்டு புக்கராய் -திருப்பணி செய்வான் ஒருத்தன் அங்கே உறங்கி குறட்டை விடா நிற்க –
அவனைக் கண்டு அனர்த்தப் பட்டோம் -என்று-இவ்விசைவுக்கு தவிர்ந்து பிற்றை இசைவிலே இத்தை நம்பி அருளிச் செய்ய கேட்டு அருளி
ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற அளவிலே-உச்சி வெய்யிலிலே வந்து புகுந்து நம்பி இவ்வர்த்தத்தை
ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று அருளிச் செய்தார் -உனக்கு இது சொல்லாது இருக்க மாட்டேன் இறே -என்று
சஹகாரி நைரபேஷ யத்தை அருளிச் செய்தார் இறே –
ஈஸ்வரனை ஒழிந்த தன் ச்வீகாரமும் உபாயம்-இல்லை என்பதற்கு இந்த ஐதிஹ்யம் அருளிச் செய்கிறார் –

இனி பல போக்தாவான தன் ஸ்வரூபமும் தான் பரிக்கிரஹித்த உபாயங்களுமே இறே
சஹ காரியாக உள்ளது -அவற்றைத் தவிர்க்கிறது –
நான் கண்ட -கைப் பறியாக பறித்ததாய்-புண்ய பாபங்கள் கலந்து இருக்கையாலே –
புண்யம் தலையெடுத்த போதாக வெளிச் செறித்து – அல்லாது போது கலங்கி இருக்கிற
ஜ்ஞானத்தைக் கொண்டு -பிறரை பிரமிப்பைக்கு சொல்லும் விப்ரலம்ப வாக்கியம் அன்றிக்கே
பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையேனாய் -அவ் வெளிச் செறிப்பு கொண்டு அறுதி இட்டு-சொன்ன வர்த்தம் இது தான்
பிறர்க்கு சொல்ல வேணும் என்று சொல்லிற்றும் அல்ல –
என் அனுபவத்துக்கு போக்கு விட்டு சொன்ன பாசுரம் -என்கிறார் –
கைப்பறியாய் பறித்ததாய் -ஸ்வ யத்னத்தால் சாதிக்கப்பட்ட -இத்தால் ருஷிகளை சொல்லுகிறது –
அத்தை இத்தை -பரத்வத்தையும் சௌலப்யம் இரண்டையும் –
கோயில் கூழை -நியதி இல்லாதா வியாபாரம் -கோயில் பரிசாரகம் செய்யும் வியாபாரம்
வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் -அமுது செய்த அடையாளம் –
பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலான எம்பெருமானாரும் -அர்ச்சாவதாரத்தில் விபவ சமாதி பண்ணுவதும் –
மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் -தம்முடைய பரம சித்தாந்தத்தை வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில் –

———–

படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப –ஸ்ரீ திருவாசிரியம்–6-

இடந்து -ஸ்ரீ வராஹ கல்பத்தில் அண்டபித்தியில் இருந்து குத்தி எடுத்து
ஸ்ருஷ்டமான அநந்தரம் பிரளயம் கொள்ள நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹா வராஹமாக எடுத்து
ஒருவரை இருவரை அன்றிக்கே வரையாதே எல்லாரையும் ஓக்க ரக்ஷிக்கிற அத்விதீய பரதேவதை யானவன் –

——–

யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத்தருகு –7-

“பூமேயே செம்மாதை நின்மார்வில் சேர்வித்து” என்ற விடத்துக் கடல் கடைந்த வரலாற்றையும்,
“பாரிடந்த” என்றவிடத்து வநாஹாவதார வ்ருத்தாந்தத்தையும் அநுஸந்திப்பது..

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-

அண்ட பித்தியில் நின்றும் பூமியை ஸ்ரீ வராஹ ரூபமாய் ஒட்டு விடுத்தும்–
இப்படி ஆனைத் தொழில்கள் செய்வான் என்று நிர்த்தோஷ பிரமாணமும்
பிரமாணத்தை அங்கீ கரித்த ருஷிகளும் சொல்லுகையாலே
ஜகத்தாகிறான் ஈஸ்வரன்
ரஷ்ய ரக்ஷக பாவாதி ஸம்பந்தங்களாலே ஐக்யம்
ஸ்வரூபத -அன்று
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம -என்று
பிரபஞ்சத்துக்கு ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைச் சொல்லி
தஜ்ஜலாநிதி -என்று ஹேது சொன்னால் போலே –

———-

ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-திருவெழு கூற்றிருக்கை

வியாக்யானம் -1-
ஆபத்து வந்தால் சக்தனோடு அசக்தனோடு வாசி இன்றிக்கே சர்வ பிராணிகளுக்கும் உதவி அருளினாய் –
மகா வராஹமாய் பிரளயம் கொண்ட ஏழு உலகத்தையும் திரு எயிற்றினிலே வைத்து அருளினாய் –
இத்தால் பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போலே
பவார்ணவம் கொண்ட என்னையும் எடுத்து அருள வேணும் -என்கிறார் –

வியாக்யானம் -2-
ஆபத்து வந்த அன்று -அந்த ருத்ராதிகளோ நீயோ உதவினார்
பிரளயம் கொண்டு அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த லோகங்களை மகா வராஹமாய் புக்கு இடந்து எடுத்து
திரு எயிற்றினில் ஏக தேசத்தில் ஒரு நீல மணி அழுத்தினால் போலே கிடக்கும்படி வைத்தாய் –
சம்சார பிரளயம் கொண்ட என்னையா எடுக்கலாகாது –

——–

மன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் ——-103
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்
கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை ——-104

நெடுநாள் சர்வேஸ்வரனதாய் அடிபட்டுப் போருகிற இந்த பூமிப் பரப்பை
மாமுது நீர் தான் விழுங்கப் –
பாடி காப்பாரே களவு காணுமா போலே பூமிக்கு ரஷகமான கடல் தானே கொள்ளை கொள்ள –
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்-கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை –
இது உரு மாய்ந்து போமாகில் நாம் வ்யாபரித்து போருமது தான் எது -என்று மீண்டு
கை வாங்காதே -நீருக்கும் சேற்றுக்கும் இறாயாதே இருப்பதொரு மகா வராஹமாய்
ஜலத்திலே புக்கு உடைந்து எடுத்து கொண்டு அண்டத்தை கொம்பிலே
ஒரு நீல மணி அழுத்தினால் போலே யாயிற்று எடுத்து வைத்துக் கொண்டபடி –
கொன்னவிலும் கூர் நுதி மேல் –
இவன் ரஷகன் என்று அனுகூலித்தால் பிழைத்துப் போம் இத்தனை போக்கி
அவனோடு எதிரிட்டால் முடிந்து போம் இத்தனை –
கூத்தனை –
என்றும் ஒக்க பூமியை கீழ் மண் கொண்டு பிரளயம் கொண்டு போனால் ஆகாதோ
இம் மநோ ஹாரி சேஷ்டிதத்தை காணப் பெறில் –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதக்கண்டே!

July 4, 2021

அத்³ய ப்³ரஹ்மண​: த்³விதீயபரார்தே,ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வதமன்வந்தரே,
அஷ்டாவிம்ʼஸ²திதமே கலியுகே³ ப்ரத²மே பாதே³ ஜம்பூ த்வீபே பாரத வர்ஷே பரதக்கண்டே மேரோஹோ,
அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம்,ப்ரபவாதீ³னாம்ʼ ஷஷ்ட்யா​: ஸம்ʼவத்ஸராணாம்ʼ மத்யே விஜய நாம ஸம்வத்ஸரே…”

சங்கல்பத்தில் எந்த கால கட்டத்தில், எந்த இடத்தில் இருந்து கொண்டு எதற்காக பூஜை செய்கிறோம்
என்று தெளிவாக நினைவுறுத்திக் கொள்கிறோம்.
இந்த உலகை ஸ்ருஷ்டித்து இரண்டு பரார்த்தகாலம் இருப்பவர் ப்ரஹ்மா.
தற்போதுள்ள ப்ரம்ஹாவின் இரண்டாம் பரா வில் என்பது அத்³ய ப்³ரஹ்மண​: த்³விதீயபரார்தே.

ஸ்வேத வராஹ கல்பே – க்ருஷ்ண வராஹ கல்பம், ஸ்வேத வராஹ கல்பம் இரண்டில்
இப்போது இருப்பது ஸ்வேத வராஹ கல்பம்.

வைவஸ்வதமன்வந்தரே – இப்போது ஆட்சி செய்யும் 7வது மனு வைவஸ்வத மனு
(ஸ்வாயம்புவர்,ஸ்வாரோசிஷர்,உத்தமர்,தாமஸர், ரைவதர் ,சாக்ஷஷர், வைவஸ்வதர், ஸாவர்ணி ,தக்ஷஸாவர்ணி,
ப்ரஹ்மஸாவர்ணி, தர்மஸாவர்ணி, ருத்ரஸாவர்ணி, ரௌச்யர் ,பௌத்யர் முதலிய 14 மனுக்கள்)

(அஷ்டாவிம்ʼஸ²திதமே) கலியுகே³ ப்ரத²மே பாதே³ – 28வது கலியுகத்தின் முதல் கால் பகுதி

ஜம்பூ த்வீபே – பூலோகம் ஏழு த்வீபங்கள் கொண்டது.
ஜம்பு த்வீபம் எனச்சொல்லப்படும் த்வீபத்தில் இருக்கிறோம்.(ஜம்பூ, ப்ளக்ஷ, புஷ்கர, குஸ, க்ரௌஞ்ச, சக, ஸால்மல)

பாரத வர்ஷே – ஜம்பூத்வீபம் 9 தீவுகளால் ஆனது –
பாரதம், கிம்புருஷம், ஹரி, இலாவ்ருதம், ரம்யகம், ஹிரண்மயம், குரு, பத்ராஶ்வம், கேதுமாலம்
(இந்தியா, இமயமலைப்பகுதி, அரேபியா, திபேத், ரஷ்யா, மஞ்சூரியா, மங்கோலியா, சைனா, துருக்கி என்றும் கூறுவார்)

பரதக்கண்டே மேரோஹோ, – பாரத வர்ஷத்தில் இந்த்ர, சேரு, தாம்ர, கபஸ்தி, நாக, ஸௌம்ய, கந்தர்வ, சாரண, பாரத
என்ற ஒன்பது கண்டங்களின் (பிரதேசங்களின்) இடையே பரத கண்டத்தில் இருக்கிறோம்.

இவைதாம் அந்த சங்கல்பத்தில் சொல்வது. துல்லியமாக நாம் எங்கு இருக்கிறோம், எந்த காலத்தில் இருக்கிறோம் என்று
satellite உதவியே இல்லாமல் , பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டே வேதத்தில் சொல்லிவிட்டனர்.

இந்த பூமி முழுதும் பாரதத்தின் ஒரு பகுதி தான். ஆதனால் USலும் – பாரத வர்ஷே பரதக்கண்டே தான்!.

இது பற்றி விஷ்ணு புராணம்

“உத்தரம் யத் ஸமுத்ரஸ்ய ஹிமாத்ரேஸ்சைவ தக்ஷிணம் வர்ஷம் தத் பாரதந்நாம பாரதி யாத்ரா சந்ததி” – விஷ்ணு புராணம்.
சமுத்திரத்திற்கு வடக்கேயும், ஹிமயமலைக்குத் தெற்கேயும், எங்கு பாரதியர் வசிக்கின்றனரோ, அதற்கு பாரத வர்ஷம் என்று பெயர்.

————

மைத்ரேயர் பூமண்டலத்தின் அளவு, எத்தனை ஸமுத்ரங்கள், த்வீபங்கள், வர்ஷங்கள், பர்வதங்கள், காடுகள், ஆறுகள்
விவரங்களைப் பற்றிக் கேட்கிறார். மஹரிஷி இவற்றை நூறு வருஷங்களானாலும் விவரிக்க முடியாதென்றும்,
அது தேவையற்றதென்றும் கூறி சுருக்கமாகக் கூறுவதாகக் கூறுகிறார்.

ஜம்பு, ப்லக்ஷ, சால்மல, குச, க்ரௌஞ்ச, சாக, புஷ்கரமென்ற ஏழு த்வீபங்களும் முறையே
உப்பு, கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், ஜலம் நிறைந்த ஸமுத்ரங்களால் சூழப்பட்டுள்ளது.
இவற்றில் ஜம்பூ த்வீபம் நடுவிலிருக்கிறது.
அதன் நடுவில் பூமியின் மட்டத்திலிருந்து எண்பத்து நான்காயிரம் யோஜனை உயரமுள்ள மேரு என்ற பொன்மலை இருக்கிறது.
பூமியில் புதைந்துள்ள அதன் அடிப்பாகத்தினுயரம் பதினாறாயிரம் யோஜனைகள். தலைப்பாகத்தின் பரப்பளவு முப்பத்திரண்டாயிரம் யோஜனை.
புதைந்துள்ள பகுதியின் பரப்பளவு பதினாறாயிரம் யோஜனைகள்.
இதன் தெற்கே இமய, ஹேமகூட, நிஷத மலைகளும், வடக்கே நீல, ச்வேத, ச்ருங்கீ மலைகளும் உள்ளன.

இருபத்து நான்கு விரல் = ஒரு கை, நான்கு கை = ஒரு தண்டம், இரண்டாயிரம் தண்டம் = ஒரு க்ரோசம்,
நான்கு க்ரோசம் = ஒரு யோஜனை. நீலமும், நிஷதமும் லக்ஷ யோஜனையளவு நீளமுள்ளவை.
ஹேமகூடமும், ச்வேதமும் தொண்ணூராயிரம் யோஜனைகளும், இமயமும், ச்ருங்கியும் எண்பதினாயிரம் யோஜனைகளும் உடையவை.
இந்த த்வீபத்தில் முதலில் பாரத வர்ஷமும், பின் கிம்புருஷமும், பின் ஹரி வர்ஷமுமாக மேருவிற்குத் தெற்கேயுள்ளன.
ரம்யகம், ஹிரண்மயம், குரு வர்ஷங்கள் மேருவிற்கு வடக்கேயுள்ளன. பாரதமும், குரு வர்ஷமும் தெற்குக் கோடியிலும்,
வடக்குக் கோடியிலும் வில்லாக வளைந்துள்ளன. மேருவைச் சுற்றியுள்ள முப்பத்து நான்காயிரம் யோஜனை பாகம் இளாவ்ருத வர்ஷம்.
மேருவைத் தாங்கி நிற்பதாக அதற்குக் கிழக்கே மந்தர மலையும், தெற்கே கந்தமாதனமும்,
மேற்கே விபுலமும், வடக்கே ஸுபார்ச்வ மலையும் பல குளங்களை உள்ளடக்கியுள்ளது.

மேருவைச் சுற்றி பதினோராயிரம் யோஜனை அளவுடன் கதம்ப, நாவல், அத்தி, ஆல மரங்கள் த்வஜங்கள் போல இருக்கின்றன.
இந்த மரங்களின் பழங்கள் தேவ லோகத்து யானையினளவாகும் (எண்ணூற்றறுபத்தொரு ஓட்டை சாண் சுற்றளவு).
இந்தப் பழங்கள் விழுந்து சிதறி, அவைகளின் ரஸம் ஜம்பூ நதியாகப் பெருகி ஓடுகிறது.
இதை பருகியவர்கள் வேர்வை, துர்நாற்றம், முதுமை, இந்த்ரிய சோர்வு முதலியவைகள் அடைவதில்லை.
அந்த ரஸத்தில் நனைந்து, காற்றால் உலர்ந்த அந்த ஆற்றங்கரை மண் தங்கமாகிறது. இதை ஸித்தர்கள் பூசிக்கொள்கின்றனர்.

மேருவின் கிழக்கே பத்ராச்வ வர்ஷமும், மேற்கே கேதுமாலமும் இருக்கின்றன.
இதனைச் சுற்றி சைத்ரரத, கந்தமாதன, வைப்ராஜ, நந்தன வனங்களும், அருணோத, மஹாபத்ர, ஸிதோந, மானஸ குளங்களும்,
மேலும் சில பர்வதங்களும் உள்ளன. மேருமலையின் மீது பத்தாயிரம் யோஜனை அளவிலுள்ளது ப்ரஹ்மாவின் நகரம்.
அதைச் சுற்றி திக்பாலகர்களின் நகரங்கள் உள்ளன. விஷ்ணுவின் பாதத்திலிருந்து கங்கை சந்த்ர மண்டலத்தைத் தாண்டி
இந்த ப்ரஹ்மப் பட்டிணத்தைச் சுற்றி ஸீதா, அளகனந்தா, சக்ஷு, பத்ரா என்று நான்காகப் பிரிந்து ஓடுகிறது.
ஸீதா ஆகாச மார்கமாய்ச் சென்று பத்ராச்வ வர்ஷம் வழியாகக் கடலில் கலக்கிறது.
அளகனந்தாவும் தென்புற மலைகளின் வழியோடி பாரத வர்ஷம் வழியாக ஏழாகப் பிரிந்து கடலில் சேர்கிறது.
சக்ஷுவும், பத்ராவும் மேற்கு, வடக்கு மலைகளில் ஓடி கேதுமால, குருவர்ஷம் வழியே கடலில் கலக்கின்றன.

ஜம்பூ த்வீபம் ஒரு தாமரையானால் மேரு அதன் மொட்டு. பாரத, கேதுமால, பத்ராச்வ, குரு வர்ஷங்கள் நான்கு புறங்களிலும் இதழ்கள்.
மேருவிற்கு எட்டு எல்லை மலைகள். இவைகளைத் தாண்டியே வர்ஷங்களுள்ளன.
ஜடரம், ஹேமகூடம் இரண்டும் லக்ஷம் யோஜனை அளவில் தெற்கு, வடக்கிலும் உள்ளன. கந்தமாதனமும், கைலாஸமும்,
இமயத்திற்குத் தெற்கே எண்பதினாயிரம் யோஜனையளவில் கடலின் நடுவிலுள்ளன. நிஷதம், பாரியாத்ர மலைகள் மேற்கிலும்,
த்ரிச்ருங்கம், ஜாருதி வடக்கிலும் கடல் நடுவில் எல்லையாக உள்ளன. இதைப்போல் வேறு பல பர்வதங்களும், புஷ்கரிணிகளும்,
ஹேமசித்ரம், பூதவனம், ப்ரஹ்மபார்ச்வம், ஸுநாபகம் என்ற நகரங்களும், ஸ்ரீவனம், கிம்சுகவனம், நளவனம் முதலிய காடுகளும் உள்ளன.
இங்கு லக்ஷ்மி, விஷ்ணு, அக்னி, ஸூர்யன் முதலான தேவர்களுக்கு இருப்பிடங்களும்,
மற்ற யக்ஷ, கந்தர்வர்கள் விளையாடுமிடங்களுமிருக்கின்றன. புண்யம் செய்தவர் மட்டுமே செல்லும் பூலோக ஸ்வர்கங்களிவைகள்.

பத்ராச்வ வர்ஷத்தில் ஹயக்ரீவராகவும், கேதுமாலத்தில் வராஹமாகவும், பாரத வர்ஷத்தில் கூர்மமாகவும்,
குரு வர்ஷத்தில் மத்ஸ்யமாகவும் மஹாவிஷ்ணு அவதரித்திருக்கிறார்.
பத்தாயிரத்திற்கும், அதற்கதிகமாகவும் ஆயுஸுள்ளவர்கள் இங்கேயிருப்பவர்கள். மழை பொழியத் தேவையேயில்லாமல்
பூமியே பல ஆறுகளாகவும், நீர் நிலைகளாகவும் எப்போதும் சுரந்து கொண்டிருக்குமிங்கு. யுக அளவுகளுமில்லை.

——

ப்ருஹதி, உஷ்ணிக், ஜகதி, த்ரிஷ்ணுப், அனுஷ்டுப், பங்க்தி. இந்த ஏழு குதிரைகளையும்
ஸூர்ய கிரணங்களின் ஏழு வர்ணங்களாக கூறலாம்.
இந்த ஏழு குதிரைகளும் வாரத்தில் ஏழு நாட்களுக்கு அடையாளமாக குறிப்பிடுவர்.

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி வியாக்கியான ப்ராமணத் திரட்டு —

July 2, 2021

1-ப்ரத்யஷே குரவ ஸ்துத்யா –பாரதம் -ஆற -188-94
ஆச்சார்யர்கள் நேரிலேயே ஸ்துதிக்கத் தகுந்தவர்கள்

2-குரு பாதாம்புஜம் த்யாயேத் குரோர் நாம ஸதா ஜபேத்
குரு ஸேவாம் ஸதா குர்யாத் ஸோ அம்ருதத்வாய கல்பதே -பிரபஞ்ச ஸாரம்

ஆச்சார்யனின் திருவடித்தாமரையை எப்போதும் தியானிக்க வேண்டும்
திருநாமத்தை எப்போதும் ஜபிக்க வேண்டும்
கைங்கர்யத்தையே எப்போதும் செய்ய வேண்டும்
இப்படிச் செய்பவன் மோக்ஷத்திற்குத் தகுந்தவன் ஆகிறான்

3- மச் சித்தா மத்கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்
கதயந்தஸ் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமேந்தி ச –கீதை -10-9-

என்னிடமே நிலைத்த மனத்தை யுடையவர்களாய் என்னிடமே தங்கள் உயிரியை வைத்தவர்களாய்
என்னுடைய குணங்களையே ஒருவருக்கு ஒருவர் அறிவிப்பவர்களாய்
என்னை எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களாய் சந்தோஷிக்கிறார்கள் -ஆனந்திக்கிறார்கள்

4-ப்ராகேவ து மஹா பாக ஸுமித்ரிர் மித்ரா நந்தன
பூர்வ ஜஸ்யாநு யாத்ரார்த்தே த்ரும சீ ரைர லங்க்ருத –ஸூந்தர –33-28-

மஹா பாக்யவானாய் அனுகூலங்களை உகப்பாய்வானுமாய் இளைய பெருமாள்
தமயனுக்கு பின் செல்ல பூர்வமேவேயே மரவுரிகளாலே அலங்கரித்துக் கொண்டான்

5-தீப்த மக்நி மரண்யம் வா யதி ராம பிரவேஷ்யதி
ப்ரவிஷ்டம் தத்ர மாம் தேவி தவம் பூர்வமாவதாரய –அயோத்யா –21-17-

அம்மா கொழுந்து விட்டு எறியும் அக்னியில் உள்ளாவது காட்டில் உள்ளாவது பெருமாள் நுழைவார் ஆகில்
நான் முன்னமேயே அதனுள் நுழைந்து இருப்பேன் என்று அறிவாயாக

6-பவாம்ஸ் து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநு ஷு ரம்ஸ்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதஸ் ச தே –அயோத்யா -31-25

நீர் பிராட்டியுடன் மலைத்தாழ்வாரைகளிலே விளையாடுவார்
அடியேன் நீங்கள் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் தூங்கும் போதும்
எல்லா அடிமைகளையும் செய்வேன்

7-ஸ்ருஷ்டஸ் தவம் வன வாஸாய ஸ்வ நுரக்தஸ் ஸூஹ் ருஜ்ஐநே
ராமே பிரமாதம் மா கார்ஷீ புத்ர பிராத்தரி கச்சதி –அயோத்யா –40-5–

கைங்கர்யத்துக்காகவே பிறந்துள்ளாய்
பெருமாள் நடக்கும் பொழுது அந்த அழகிலே ஈடுபட்டு அவனுக்குத் தீங்கு செய்வோரை
கவனிக்காமல் இருக்கும் தவற்றைச் செய்யாமல் இரு

8-யதி தவம் பிரஸ்திதோ துர்க்கம் வனமத்யைவ ராகவ
அக்ர தஸ்தே கமிஷ்யாமி ம்ருத் நதி குச கண்டகாந் -அயோத்யா –27-6-

நீர் செல்ல அரிதான வனத்திற்கு இன்றே புறப்பட்டாலும் தர்ப்பைகளையும் முட்களையும் மிதித்து
அழித்துக் கொண்டு நானும் உமக்கு முன்னால் செல்வேன்

9-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ் ச நேதி –தைத்ரியம் -ஆனந்தவல்லி –9-1-

எந்த ப்ரஹ்மத்தின் இடம் இருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட அறியாமல் திரும்புகின்றனவோ
அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எதன் இடமும் பயப்பட மாட்டான்

10-கோ சத்ருஸோ கவய -கவய சத்ருஸோ கவ்

காவியம் என்னும் மிருகம் மாட்டைப்போல் உள்ளது
மாடு கவயம் என்னும் மிருகத்தைப் போல் உள்ளது

11–தத்வே ந யஸ்ய மஹி மார்ண வஸீ கராணு
சக்யோ ந மாது மபி சர்வபிதா மஹாத்யை
கர்த்தும் ததீய மஹி மஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ அஸ்து கவயே நிரபத் ரபாய –ஸ்தோத்ர ரத்னம் -7-

எந்த எம்பிரானுடைய மஹிமைக்கடலில் ஒரு திவலையில் அணு அளவும் கூட சிவன் பிரமன்
முதலியவர்களாலும் உள்ளபடி அளவிட முடியாததோ
அப்பெருமானுடைய பெருமையைப் பற்றிய ஸ்துதியைச் செய்ய ஆரம்பித்து இருப்பவனும் வெட்கம் அற்றவனும்
கவி என்ற பெயர் கொண்டவனுமான எனக்கே நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும்

12-மன பூர்வ வாக் உத்தர -தைத்த சம்ஹிதை -7-5-3-

முதலில் மனஸ்ஸூம் அடுத்த படியாக வாக்கும் பிரவர்த்திக்கின்றன –

13-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ –சாந்தோக்யம் –1-6-7-

ஸூர்ய மண்டலத்தின் நடுவிலுள்ள அப்புருஷனுக்கு ஸூர்யனால் மலர்ந்த தாமரை போன்ற இரு கண்கள் உள –

14-கர்மண்யே வாதி காரஸ்தே மா பலேஷு கதாசன –கீதை -2-47-

முமுஷுவான உனக்கு நித்ய நைமித்திகாதி கர்மங்களை செய்வதற்கே அதிகாரம்
ஒரு பொதுமணகர்ம பழத்தில் அதிகாரம் இல்லை

15-மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ் யஸி ஸத்யம் தே பிரதி ஜாநே ப்ரியா அஸி மே –கீதை –18-65-

என்னிடத்திலேயே மனத்தை வைத்தவனாகவும்
என்னுடைய பக்தனாகவும்
என்னை ஆராதிப்பவனாகவும் ஆவாயாக
என்னை நமஸ்கரிப்பாயாக என்னையே அடைவாய் இது சத்யம்
உனக்கு ப்ரதிஜ்ஜை செய்கிறேன்
எனக்குப் பிரியவன் அன்றோ நீ

16-அசன்னேவ ஸ பவதி அஸத் ப்ரஹமேதி வேத சேத்
அஸ்தி ப்ரஹமேதி சேத் வேத சந்தமேநம் ததோ வித்து –தைத்த-ஆனந்த -6-

17- சரீரம் ஏவ மாதா பிதாரவ் ஜனயத ஸ ஹி வித்யா தஸ்
தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம –ஆபத் ஸூ –1-1-6-

18-ஏஷ பந்தா விதர்ப்பா நாம் ஏஷ யாதி ஹி கோசலான்

இது விதர்ப்ப தேசத்துக்குவேஜ் செல்லும் வழி
இது கோசல தேசத்துக்குச் செல்லும் வலி

19-நாயமாத்மா ப்ரவச நே ந லப்யோ ந மேதயா ந பஹுநா ஸ்ருதே ந
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே த நூம் ஸ்வாம் –கட –1-2-23 –

இந்தப் பரமாத்மா பக்தி அற்ற ஸ்ரவணத்தினாலும் -மனத்தினாலும் தியானத்தினாலும் -அடையத் தக்கவன் அல்லன்
இப்பரம புருஷன் எவனை வரிக்கிறானோ அவனாலேயே அடையத் தக்கவன் –
அவனுக்கு இப்பரமாத்மா தன் திரு மேனியைக் காட்டுகிறான்

20-அவிவேகக நாந்த திங்முகே பஹுதா சந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவ துர்த்திநே பத ஸ்கலிதம் மாம வ லோக யாச் யுத –ஸ்தோத்ர ரத –49-

ஞான சக்த்யாதி குணங்கள் நிறைந்தவன் -அடியாரைக் கை விடாதவனே –
விவேகம் இன்மையாகிற மேகங்களால் இருள் அடைந்த திசைகளை யுடையதும் பலவிதமாக இடைவிடாமல்
துன்பங்களைப் பொழிகின்றனது மான ஸம்ஸாரமாகிய மழை கால இருளிலே
நல் வழியில் இருந்து தவறிய அடியேனைக் கடாக்ஷித்து அருள்வாயாக

21- ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச –கீதை –18-66

மோக்ஷ சாதனமான எல்லா தர்மங்களையும் வாசனையுடன் விட்டு என்னை ஒருவனையே உபாயமாக அடை
நான் உன்னை எல்லாப் பாபங்களின் நின்றும் விடுவிக்கிறேன் துக்கிக்காதே

22-ஆர்த்தோ வா யதி வா திருப்த பரேஷாம் சரணாகத
அரி பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா –யுத்த –18-28

எதிரிகளுக்கும் சரணம் அடைந்த சத்ருவானவன் -வர்த்தத்தாலே சரணம் அடைந்த ஆர்த்தனாயினும்
அரை மனதாகச் சரணம் அடைந்த திருப்தனாகிலும் பண் பட்ட மனத்தையுடைய புருஷனாலே
தன் பிராணனை விட்டு ரக்ஷிக்கத் தக்கவன்

23-ஈர்ஷ்யோ ரோஷவ் பஹிஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோ தகம்
நய மாம் வீர விஸ்ரப்த பாப்பம் மயி ந வித்யதே –அயோத்யா –27-8-

வீரனே அஸூயை கோபம் இவ்விரண்டையும் குடித்து மிகுந்த ஜலத்தைப் போலே தள்ளிவிட்டு
என் வார்த்தையை நம்பி என்னை அழைத்துச் செல்வீராக
உம்மைப் பிரிந்து இருக்கைக்கு காரணமான பாப்பம் எனக்கு இல்லை

24-யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரை சோகாபி கர்சிதை
ஸம்ஸ் ப்ருசேயம் சாகமாஹம் ததா குரு தயாம் மயி –ஸூந்தர –40-2-

பெருமாள் இடம் பேர் அன்பு மிகுந்த யான் புருஷ ச்ரேஷ்டரான அவரை துக்கத்தால் இழைத்த
இந்த என் அவயவங்களாலேயே தொடத்தக்கவளாம் படி என்னிடத்தில் நீ கருணை புரிவாயாக

25- மஹதா தபஸா ராம மஹதா ஸாபி கர்மணா
ராஜ்ஞா தசரதே நாஸி லப்தோ அம்ருத மிவா மரை –ஆரண்ய –66-3-

பெருமாளே தேவர்கள் அம்ருதத்தைப் பெற்றால் போல் பெரும் தவத்தாலும் பெரும் கார்யங்களாலும்
தசரத மஹாராஜரால் நீர் அடையப் பெற்று இருக்கிறீர்

26-ஜென்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத
த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன –கீதை -4-9-

அர்ஜுனா என்னுடைய அப்ராக்ருதமான பிறப்பையும் சேஷ்டிதங்களையும்
எவன் இப்படி உண்மையாக அறிகிறானோ
அவன் தேகத்தை விட்டு மறு ஜென்மம் அடையாமல் என்னையே அடைகிறான்

27-அஜாய மாநோ பஹு தா விஜாயதே தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் –புருஷ ஸூக்தம்

பிறப்பு அற்றவனாய் இருந்தும் பலபடியாகப் பிறக்கிறான்
அவனுடைய அவதார ரஹஸ்யத்தை புத்திமான்களே நன்றாக அறிகிறார்கள்

28-ஏஷ தா ஆத்மா அந்தர்யாம் யம்ருத –ப்ருஹதாரண்யம் –5-7-

ஸர்வ அந்தர்யாமியான இப்பரம புருஷனே இயற்கையான அம்ருதத்தை யுடையவனாய்
உனக்கு ஆத்மாவாக விளங்குபவன் –

29-யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ஸ
அவிஞ்ஞாதம் விஜா நதாம் விஞ்ஞாத மவிஜாநதாம் –கேந –2-3-

எவனுக்கு ப்ரஹ்மம் அளவிட்டு அறியப்பட வில்லையோ அவனுக்கில்லை அது அறியப்பட்ட தாகிறது
எவனுக்கு ப்ரஹ்மம் அறியப்பட்டதாகிறதோ அவன் அதை அறிய வில்லை
அளவிட்டு அறிந்தவர்களுக்கு அறியப்படாததாயும்
அளவிட்டு அறியாதவர்களுக்கு அறியப்பட்டதாகவும் ஆகிறது பெற ப்ரஹ்மம்

தேஷாம் ஞானீ நித்ய யுக்த ஏக பக்திர் வி ஸிஷ்யதே
ப்ரியா ஹி ஞாநிநோ அத்யர்த்தம் அஹம் ச மம ப்ரிய –கீதை –7-17-

என்னுடன் எப்போதுமே சேர்ந்து இருப்பவனும் என்னிடம் மட்டுமே அன்பு செய்பவனுமான ஞானி
அந்த நால்வருக்கும் மேலானவன்
நான் ஞானிக்கு மிகவும் பிரியம் அன்றோ -அப்படியே அவனும் எனக்குப் பிரியமானவன்

31- பரதஸ்ய வச குர்வன் யாஸமா நஸ்ய ராகவா
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா ஸத்ய தர்ம பராக்ரம –அயோத்யா –111-7

ராகவன் சாத்தியமான தர்மத்தையும் பராக்ரமத்தையும் உடையவனே
யாசிக்கும் பரதனுடைய வார்த்தைப்படி செய்வதன் மூலம் உன்னுடைய ஸ்வரூபமான
ஆஸ்ரித பாரதந்தர்யத்தை மீறாமல் இருப்பாயாக –

32-யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜநார்த்தன
ஹார்ஸ் த்ரை லோக்ய நாதஸ்ய கிந்து தஸ்ய ந நிர்ஜிதம் -பாரதம் -ஆற –49-20

மூ உலகங்களுக்கும் நாத்தனாய் ஜனார்த்தனன் என்றும் ஹரி என்றும் சொல்லப்படுமவனான அந்த பகவான்
எந்த தர்ம புத்திரனுக்கு மாதிரியாகவும் ரக்ஷகனாயும் ஸ்நே ஹிதனாயும் இருக்கிறானோ
அந்த தர்மபுத்ரனால் ஜெயிக்கப் படாதது யாது

33-மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ
பந்தாய விஷயங் சங்கி முக்த்யை நிர்விஷயம் மன –ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-7-28-

மனிதர்களுக்கு சம்சாரத்துக்கும் மோக்ஷத்திற்கும் மனது தான் காரணம்
சப்தாதி விஷயங்களில் ஈடுபட்ட மனம் ஸம்ஸார ஹேதுவாகிறது
விஷயங்களில் பற்று அற்ற மனம் முக்தி ஹேதுவாகிறது

34-யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா
இதி ஜாநந் பராம் ப்ரீதிம் கச்ச ராம மயா ஸஹ -அயோத்யா –30-18-

பிரானே உம்முடன் இருப்பதுவே எனக்கு சுவர்க்கம் -உம்மை விட்டுப் பிரிந்து இருப்பதுவே எனக்கு நரகம்
என்னுடைய மேலான அன்பை இம்மாதிரி அறிந்து என்னுடன் கூட வனத்துக்குச் செல்வீராக

35-பூமவ் ஸ்திதஸ்ய ராமஸ்ய ரதஸ்தஸ்ய ச ரக்ஷஸ
ந சமம் யுத்த மித்யாஹுர் தேவ கந்தர்வ தாநவா –யுத்த –103-5-

பூமியில் இருக்கும் ராமனுக்கும் ரத்தத்தில் இருக்கும் ராக்ஷஸனுக்கும் யுத்தம் சமமானது அல்ல என்று
தேவர்களும் கந்தர்வர்களும் அஸூரர்களும் சொன்னார்கள்

36-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ் ஜலா நிதி சாந்த உபாஸீத –சாந்தோக்யம்

ப்ரஹ்மத்தின் இடம் இருந்து உபண்டானதாலும் -ப்ரஹ்மத்திலேயே லயிப்பதாலும்
ப்ரஹ்மத்தாலேயே உயிர் வாழ்வதாலும்
இவை எல்லாம் ப்ரஹ்மமே யாகும் என்று நினைத்துக் கொண்டு சாந்தனாக உபாஸிக்கக் கடவன்

37-யதாவத் கதிதோ தேவைர் ப்ரஹ்மா ப்ராஹ தத ஸூரான்
பராவரேஸம் சரணம் வ்ரஜத்வம ஸூ ரார்த்த தனம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-9-35-

தேவர்களால் தங்கள் துன்பங்களை நன்கு அறிவிக்கப்பட்ட பிரமன் மேலானவர்களோடே கீழானவர்களோடே
வாசியற எல்லாருக்கும்
ஈஸ்வரனாய் இருப்பவனும் அஸூர ஸத்ருவானவனுமான பகவானை சரணம் அடையுங்கோள் –
என்று தேவர்களிடம் சொன்னான்

38-சத்த்வாத் சஞ்சாயதே ஞானம் ரஜஸோ லோப ஏவ ச
ப்ரமாதமோதவ் தமஸோ பவதோ அஞ்ஞான மேவ ச –கீதை –14-7-

சத்வ குணத்தில் இருந்து ஞானம் உண்டாகிறது
ரஜோ குணத்தில் இருந்து ஸ்வர்க்கம் முதலிய பலன்களில் ஆசை உண்டாகிறது
தமோ குணத்தில் இருந்து கவனமின்மையினாலே ஏற்படும் அசத் கர்ம ப்ரவ்ருத்தியும்
விபரீத ஞானமும்ந அஞ்ஞானமும் ஏற்படுகின்றன

39-த்யா யதோ விஷயான் பும்ஸஸ் சங்கஸ் தேஷூப ஜாயதே
சங்காத் சஞ்சாயதே காம காமத் க்ரோதோ அபி ஜாயதே –கீதை -2-62-

விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது
அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது -காமத்தினால் கோபம் ஏற்படுகிறது

40-கோவிந்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூர வாஸி நம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாந் நாப சர்ப்பதே –பார -உத்யோக –47-22-

‘திரௌபதியானவள் வெகு தூரத்தில் இருந்த என்னைக்குறித்து கோவிந்தா என்று கூக்குரல் இட்டது
வட்டியினால் வ்ருத்தி யடைந்த கடனைப் போலே என் ஹ்ருதயத்தில் இருந்து அகலுகிறது இல்லை

41-ப்ரஹ்ம தாண்ட ப்ரகாசா நாம் வித்யுத் ஸத்ருச வார்ச்சஸாம்
ஸ்மரன் ராகவா பாணா நாம் விவ்யதே ராக்ஷஸேஸ்வர –யுத்த –60-3-

ப்ரஹ்ம தண்டத்தைப் போன்ற ஒளி யுள்ளவையும் மின்னலைப் போன்ற தேஜஸ்ஸைப் பெற்றவையுமான
ராம பாணங்களை நினைத்து ராக்ஷஸாதி பதியான ராவணன் மிக வருந்தினான்

42-தாதூ நாமிவ சைலேந்த்ரோ குணா நாமா கரோ மஹான் –கிஷ்கிந்தா –15-21-
ஒரு சிறந்த மலை தாதுக்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் உள்ளது போலே
ஸ்ரீ ராமபிரானும் குணங்களுக்கு எல்லாம் பெரியதோர் இருப்பிடமாவார்

43-பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் ஸாஸ்வதம் சிவம் அச்யுதம் –தைத்ரியம்

உலகங்களுக்கு எல்லாம் பாதியாகவும் தனக்குத் தானே ஈஸ்வரனாகவும் நித்யனாகவும்
மங்கள கரனாகவும் அடியார்களை நழுவ விடாதவனாகவும் இருப்பவனே நாராயணன் –

44-ருத்ரம் ஸமாஸ்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மாணம் ஆஸ்ரித
ப்ரஹ்மா மாம் ஆஸ்ரிதோ ராஜன் காஞ்சிதுபாஸ்ரித –பாரதம் -ஆஸ் –118-37-

தேவர்கள் ருத்ரனை அண்டி இருக்கின்றனர்
ருத்ரன் தன் தகப்பனாக பிரமனை ஆஸ்ரயித்து இருக்கிறான்
பிரமனோ என்னில் -அவனையும் பிறப்பித்த என்னை அடைந்து இருக்கிறான்
அரசனே நான் ஒருவனையும் பற்றி இருக்க வில்லை

45–ஸ்ருஷ்ட்டி ஸ்திதித் எந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம்
ஸ ஸம் ஜ்ஞாம் யாதி பகவாநேந ஏவ ஜனார்தன –அதர்வசிகை –2-15-

படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத் தொழில்களை செய்யும் பிரமன் விஷ்ணு சிவன்
என்னும் பெயர்களை ஜனார்த்தனன் எனப்படும் அந்த பகவானே அடைகிறான்

46-ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே

பிரமன் விஷ்ணு ருத்ரன் இந்திரன் ஆகிய இவர்கள் எல்லாரும் பிறக்கிறார்கள்

47-மத்யே விரிஞ்ச கிரிஸம் ப்ரதமாவதார
தத் சாம்யத ஸ்த கயிதும் தவ சேத் ஸ்வரூபம்
கிம் தே பரத்வபி ஸூநைரிஹ ரங்க தாமன்
ஸத்வ ப்ரவர்த்தன க்ருபா பரிபால நாத்யை –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –2-51-

ஸ்ரீ ரெங்க நாதரே பிரம ருத்ராதிகளின் நடுவிலே உமக்கு ஏற்பட்ட முதல் அவதாரம்
அவ்விருவருடன் ஒன்றாய் இருப்பதைக் காட்டி உம்முடைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொள்வதற்காக வாகில்
ஸத்வ குணத்தை நிர்வஹிப்பது கிருபையால் பிரமன் ருத்ரன் முதலியவர்களை ரக்ஷிப்பது முதலான
மேன்மையைக் காட்டும் காரியங்களால் உமக்கு என்ன பிரயோஜனம்

48-யத் தூரே மனஸோ யதேவ தமஸ பாரே யதத் யத்புதம்
யத் காலா தப சேளி மம் ஸூர புரீ யத் கச்சதோ துர்க்கதி
ஸாயுஜ் யஸ்ய யதேவ ஸூதி ரதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ பரமம் பதம் தவ க்ருதே மாத சமாம் நா ஸி ஷு –ஸ்ரீ குணரத்ன கோசம் –21-

தாயே எவருடைய மனத்திற்கும் எட்டாததாய் -பிரக்ருதிக்கு அப்பால் பட்டதாய் மிக அத்புதமாய் காலத்தால் மாறுபடாததாய்
தன்னை அடைய விரும்புமவர்களை தேவ லோகத்தையும் துர்க்கைதியாக நினைக்கச் செய்வதாய்
ஸாயுஜ்யத்தை அளிப்பதாய் என்னுடைய வாக்குக்கு எட்டாததாய் விஷ்ணுவினுடைய யாதொரு பரமபதம் உள்ளதோ
அது உனக்காகவே விளங்குகிறது என்று வேதங்கள் விளம்புகின்றன

49–ந தேவ லோகா க்ரமணம் நாம ரத் வமஹம் வ்ருணே
ஐஸ்வர்யம் வா அபி லோகா நாம் காமயே ந த்வயா விநா –அயோத்யா –3-5-

நித்ய ஸூரிகள் வாழும் உலகான ஸ்ரீ வைகுண்டத்தில் வாழ்ச்சியையும் கைவல்யத்தையும்
உலகங்களின் ஐஸ்வர்யத்தையும் உன்னைப் பிரிந்த நான் விரும்ப மாட்டேன்

50-வாஸூ தேவே மநோ யஸ்ய ஜப ஹோமார்ச்சநா திஷு
தஸ்ய அந்தராயோ மைத்ரேய தேவேந்திரத் வாதிகம் பதம் =பலம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –2-6-41-

மைத்ரேயனே ஜபம் ஹோமம் அர்ச்சனம் முதலியவைகளில் எவனுடைய மனம் வாஸூ தேவனிடம் லயித்து
இருக்கிறதோ அவனுக்கு தேவேந்திரனாய் இருக்கை முதலிய பலங்கள் இடையூறாகவே ஆகின்றன

51-மச் சித்தா மத்கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்
கதயந்தஸ் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமேந்தி ச –கீதை -10-9-

என்னிடமே நிலைத்த மனத்தை யுடையவர்களாய் என்னிடமே தங்கள் உயிரியை வைத்தவர்களாய்
என்னுடைய குணங்களையே ஒருவருக்கு ஒருவர் அறிவிப்பவர்களாய்
என்னை எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களாய் சந்தோஷிக்கிறார்கள் -ஆனந்திக்கிறார்கள்

52-ஸம் ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மல மேக ரூபம்
ஸந்த்ருச்யதே வாப்யதி கம்யதே வா தத் ஜ்ஞாநம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-5-87-

எந்த அறிவினால் தோஷம் ஏற்றதும் சுத்தமானதும் மிகவும் மலம் ஏற்றதும் ஒருபடிப்பட்டதுமான
அப் பர வஸ்து அறியப்படுகிறதோ காணப்படுகிறதோ அடையப்படுகிறதோ அதுவே ஞானம்
அதைக்காட்டிலும் வேறானது அஞ்ஞானம்

53-தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்யா யா விமுக்தயே
ஆயாசாயா பரம் கர்ம வித்யாந்யா சில்பநை புணம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-19-41

எந்தக் கர்மம் பந்தத்திற்குக் காரணம் அல்லவோ அதுவே கர்மம்
எது முக்திக்குக் காரணமோ அதுவே வித்யை
மற்ற கர்மம் சிரமத்திற்கே
மற்ற வித்யை சில்ப பாண்டித்யம் போன்றதே —

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.