Archive for July, 2021

ஸ்ரீ திருவாசிரிய வியாக்கியான ப்ராமணத் திரட்டு —

July 2, 2021

1-கலவ் புந பாப ரதாபி பூதே –பக்தாத்மநா –ஸ உத் பபூவ

பாபத்திலேயே ஈடுபட்ட மனிதர்கள் நிறைந்த கலி காலத்திலே அந்த பகவான் பக்த ரூபியாகத் தோன்றினார்

2-திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் யுக பதுத்தி தா
யதி பா ஸத்ருஸீ ஸா ஸ்யாத் பாசஸ் தஸ்ய மஹாத்ம ந –ஸ்ரீ கீதை –11-12-

ஆயிரம் சூர்யர்களுடைய ஒளியானது ஒரே காலத்திலே ஆகாயத்திலே தோன்றிற்றாகில்
அந்தப் புருஷனுடைய ஒளிக்கு அது ஸமானம் ஆகலாம்

3-நூபுராத்ய பரிமித திவ்ய பூஷண –ஸ்ரீ கத்ய த்ரயம்

நூபுரம் முதலாகிய கணக்கற்ற திவ்ய ஆபரணங்களை யுடையவன்

4-ருத்ரம் ஸமாஸ்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மாணம் ஆஸ்ரித
ப்ரஹ்மா மாம் ஆஸ்ரிதோ ராஜன் காஞ்சிதுபாஸ்ரித –பாரதம் -ஆஸ் –118-37-

தேவர்கள் ருத்ரனை அண்டி இருக்கின்றனர்
ருத்ரன் தன் தகப்பனாக பிரமனை ஆஸ்ரயித்து இருக்கிறான்
பிரமனோ என்னில் -அவனையும் பிறப்பித்த என்னை அடைந்து இருக்கிறான்
அரசனே நான் ஒருவனையும் பற்றி இருக்க வில்லை

5- வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயநாய -புருஷ ஸூக்தம்

வேத புருஷனாகிய நான் -ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும்
ஸூர்யன் போலே ஒளி விடுபவனும் -ப்ரக்ருதிக்கு அப்பால் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன்
அவனை இம்மாதிரி அறிபவன் இப்பிறப்பிலேயே முக்தனாக ஆகிறான்
மோக்ஷத்திற்கு வேறே வழி கிடையாது –

7–ததக்ஷைத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத -சாந்தோக்யம் -6-2-3-

அந்தப் ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக்கடவேன் என்று சங்கல்பித்தது
அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது

8-கதா புனஸ் சங்க ரதாங்க கல்ப த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணாம் புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி -ஸ்தோத்ர ரத்னம் -31-

திரிவிக்ரமனே சங்கு சக்கரம் கல்பக வ்ருக்ஷம் கொடி தாமரை அங்குசம் வஜ்ராயுதம் இவைகளை அடையாளமாக யுடைய
திருவடித் தாமரை இணை என் தலையை எப்போது தான் அலங்கரிக்கப் போகிறதோ

8-த்யா யதோ விஷயான் பும்ஸஸ் சங்கஸ் தேஷூப ஜாயதே
சங்காத் சஞ்சாயதே காம காமத் க்ரோதோ அபி ஜாயதே –கீதை -2-62-

விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது
அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது
காமத்தினால் கோபம் ஏற்படுகிறது

9-ஆஹார ஸூத்தவ் ஸத்வ ஸூத்தி ஸத்வ ஸூத்தவ் த்ருவா ஸ்ம்ருதி -சாந்தோக்யம் -7-26-2-

உண்ணும் உணவு சுத்தமாக இருந்ததாகில் மனம் சுத்தி அடைகிறது
மனம் பரிசுத்தம் அடைந்த அளவிலே நிலை நின்ற நினைவு எனப்படும் பக்தி உண்டாகிறது

10- ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யஷா வகமம் தர்ம்யம் ஸூ ஸூ கம் கர்த்தும் அவ்யயம் –கீதை -9-2-

வித்யைகளுக்குள்ளும் ரஹஸ்யங்களுக்குள்ளும் மேலானது இது –
பாபங்களைப் போக்கடிப்பதில் உயர்ந்தது -என்னை நேரில் காட்டுவது இது தான்
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாதது –

11-தஸ்மாத் வா ஏ தஸ்மாத் விஞ்ஞான மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய -தைத்த ஆனந்தவல்லி -5-

அப்படிப்பட்ட இந்த விஞ்ஞான மெய்ஞான ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவனும்
அந்த ஜீவனுக்கு அந்தராத்மாவாய் இருப்பவனும் ஆனந்த மெய்ஞான பரமாத்மா

12-க்லஸோ அதிக தரஸ் தேசம் அவ்யக்தா சக்த சேதஸாம்
அவ்யக்தா ஹி கதிர் துக்கம் தேஹவத்பிர வாப்யதே – -கீதை-12-5-

அவ்யக்தம் எனப்படும் ஆத்ம ஸ்வரூபத்தில் ஈடுபட்ட மனத்தை யுடையவர்களுக்கு
அதை அடையும் விஷயத்தில் மிகவும் துக்கம் உள்ளது
தேஹாத்ம அபிமானிகளுக்கு ஆத்ம ச்வரூபத்தை அடைவது மிகவும் கடினம் அன்றோ

13-சராசர விவேக ஜ்ஞா கரீயாம்ஸோ விமத் சரா
பிரமாண தந்த்ரா சந்தீதி க்ருதே வேதார்த்த ஸங்க்ரஹ –வேதார்த்த ஸங்க்ரஹம் -நிகம ஸ்லோகம்

சாரம் அசாரம் ஆகிய இவற்றை விவேகித்து அறிபவர்களும்
மிகுந்த கேள்வி ஞானத்தால் பெருமை பெற்று இருப்பவர்களும்
பிறர் இடம் மாத்சர்யம் மற்றவர்களும் -பிரமாணங்களுக்குக் கட்டுப் பட்டவர்களுமான மஹான்கள்
இக்காலத்திலும் உளர் என்னும் நிச்சயத்தாலே என்னால் வேதார்த்த ஸங்க்ரஹம் செய்யப்பட்டது

14-ஆயுரா ஸாஸ் தே -யஜுர் அஷ்ட -3-5-

நீண்ட ஆயுளைப் பிரார்த்திக்கிறேன்

15- ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்மா நே ஸா ந -மஹா உபநிஷத் –1-

நாராயணன் ஒருவனே பிரளய காலத்தில் இருந்தான்
பிரமனும் இல்லை சிவனும் இல்லை

16-த்ரவீபூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹா முநே
க்ருஹீத்வா தர்ம பா நீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷர ளிதம் பரயா பக்த்யா பாத்யார்க்யாதி பிரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவ நார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீத் யவதாரணாத்
வர்ஷா யுதான் யத பாஹுந் ந முமோச ததா ஹர –ஈஸ்வர ஸம்ஹிதை

மா முனிவரே திரு உலகு அளந்து அருளினை அச்சமயம் ஹரியின் இடம் பக்தியால் தர்மம் ஜலம் ஆயிற்று
ஜெகந்நாதானான அவன் சந்தோஷத்துக்காக அந்த ஜலத்தைக் கொண்டு அவன் திருவடிகள்
என்னால் மேலான பக்தியுடன் விளக்கப் பட்டது
பாத்யம் அர்க்யம் முதலானவைகளால் பூஜிக்கப் பட்டது
விழுந்த ஜலத்தைப் பார்த்து நான் பரிசுத்தப்படுத்த தகுந்தவனாய் இருக்கிறேன் என்று நிச்சயத்தில்
சிவன் ஜடையில் நடுவில் தாங்கினான்
பல வருஷங்கள் ருத்ரன் அத்தைத் தாங்கிக் கொண்டே விடாமல் இருந்தான்

17-ஏகஸ்மின் நப்யதிக் ராந்தே முஹுர்த்தே தியாக வர்ஜிதே
தஸ்யுபிர் முஷிதே நேவ யுக்த மாக் ரந்திதும் ப்ருசம்

பகவத் த்யானம் இல்லாமல் ஒரு முஹூர்த்தம் சென்றாலும் திருடர்களால் திருடப்பட்டவன் போல்
உறக்கக் கதறுவதே தகுந்தது

18-குஹேந ஸார்த்தம் தத்ரைவ ஸ்திதோ அஸ்மி திவசான் பஹுன்
ஆசயா யதி வா ராம புந சப்தா பயே திதி –அயோத்யா –59-3-

பெருமாள் மீண்டும் கூப்பிடுவாரோ என்னும் நப்பாசையாலே குஹனுடன் கூட அங்கேயே பல தினங்கள் தங்கினேன்

19-ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத் தனம் இச்சேத் ஹுதா ஸநாத்
ஈஸ்வராத் ஞானம் அன்விச்ச்சேத் கதிம் இச்சேத் ஜனார்த்தநாத் –ப்ரஹ்மாண்டம்

ஆரோக்யத்தை சூரியனிடம் இருந்தும் -பணத்தை அக்னியிடம் இருந்தும்
ஞானத்தை ஈஸ்வரனிடம் இருந்தும் விரும்பக் கடவன்
மோக்ஷத்தை ஜனார்த்தனிடம் இருந்து விரும்பக் கடவன்

20-ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்யோ நிதித்யாசி தவ்ய–ப்ருஹ 6-5-6-

கேட்கத்தக்கதும் நினைக்கத்தக்கதுமான ஆத்மா த்யானிக்கத் தக்கது -பார்க்காத தக்கது

21-யஸோதாஸ் த நந்த யமத் யந்தம் விமுக்தம்
மிகவும் அழகியதான யசோதையின் கைக்குழந்தை

22-கதம் ந்வயம் ஸி ஸூ ஸேத லோகே நாசமுபாகதே
ஸாகா யாம் வட வ்ருஷஸ்ய பல்லவே து ஸூ சிஸ் மித –பார -ஆற –188-94-

உலகம் எல்லாம் நாசம் அடைந்த பிறகும் ஆல மரக்கிளையில் உள்ள இளம் தளரில்
இனிய புன் முறுவலுடன் கூடிய இக்குழந்தை எப்படிப் படுத்துக்க கொண்டு இருக்கிறது

23-ப்ரஹ்மாணம் நீல ஸிதி கண்டம் ச யாஸ் சாந்யா தேவதா ஸ்ம்ருதா
பிரதிபுத்தா ந சேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -பார -சாந்தி -350-36

பிரமனையும் ருத்ரனையும் மற்றும் தேவதையாகச் சொல்லப்படும் யாவரையும் ஞானிகள் சேவிக்க மாட்டார்கள்
ஏன் எனில் அவர்கள் அளிக்கும் பலன் அளவு பட்டது –

24-ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிக்ஷித் தாஸ்து பூஜநே
ஞாத்வைவம் பக்தி ஸாங்கர்யம் ந குர்யா தேவமேவ ஹி

ஸ்கந்தன் ருத்ரன் இந்திரன் முதலான தேவதைகள் பூஜை செய்யும் விஷயத்தில்
ஞானிகளால் விலக்கப் பட்டு இருக்கிறார்கள்
இப்படி அறிந்து இம்மாதிரியாகவே பக்திக் கலப்பைச் செய்யாமல் இருக்கக் கடவன் –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -81-87–

July 1, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

(குண அனுபவ யோக்யதை பகல் -யோக்யதை இரவு
குண அனுபவம் ஒழியாமல் இருக்கும் படி பண்ணி அருளினான்
அஹோராத்ர புஷ் கரணி -பகல் இரா இல்லாதது உண்டே )

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுது மாள்வர்-தகவாத்
தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
செழும் பரவை மேயார் தெரிந்து–81-

பதவுரை

செழு பரவை மேயார்–அழகிய திருப்பாற் கடலிலே பொருந்திக் கண் வளர்ந்தருளும் பெருமான்,
இவர் தகவாதொழும்பர்–“இவ்வாழ்வார் நம்முடைய அருளுக்குப் பாத்திரமாகக் கூடாத நீசர்;
சீர்க்கும் துணை இலர்–சீர்மை பொருந்திய துணையை உடையவருமல்லர்”
என்று தெரிந்து ஓரார்–என்பதை ஊன்றி ஆராயாதவனாய்
பகல் இரா என்பதுவும் பாவியாது இரு பொழுதும்–பகற்போது இராப்போது வாசியின்றியே எப்போதும்
இகல் செய்து–வலி கட்டாயப்படுத்தி
எம்மை ஆள்வர்–அடியேனை அநுபவியா நின்றான்.

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை இகல் செய்து இரு பொழுது மாள்வர்-
பகல் போது போக்குவது ஓன்று
இரா வைகும் போது போக்குவது ஓன்று என்று பாராதே
எல்லாப் போதும் ஒரு போகியாகத்
தம்முடைய குணங்களாலே
எடுப்பும் சாய்ப்புமாக யுத்தம் பண்ணி இரண்டு போதும் ஆள்வர்

(மோஹன அஸ்திரம்- மயங்கி தூங்க வைத்து -அவன் இடம் ஈடுபாடு
ஜ்ரும்பனாஸ்திரம் -சிற்றம் சிறு காலை எழுந்து மற்றவர்களை எழுப்புகிறாள் )

குணம் ஈடுபடுத்துமோ என்ன அருளிச் செய்கிறார்
அம்பு பட்ட புண்ணுக்கு மருந்து உண்டு
குணத்தால் ஈடுபட்ட புண்ணுக்கு மருந்து இல்லை இறே

போது போக்குவர் போது போக்க மாட்டார் என்று விசாரியாதே -என்றபடி
இகல் -யுத்தம்

தகவாத்தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
தம்முடைய கிருபைக்கும் அவிஷயமான சிறிதென்றும்
தம்முடைய குணங்களைக் கொண்டு
போதயந்த பரஸ்பரம் -பண்ணுகைக்குக் கூட்டும் இல்லை என்றும் விசாரியார்

தெரிந்து செழும் பரவை மேயார்
ஆஸ்ரிதரோடே ஸம்ஸ்லேஷிக்கும் தேசம் ஆராய்ந்து
திருப்பாற் கடலிலே மேவினவர் –

தெரிந்து செழும் பரவை மேயார்
தகவாத்தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை இகல் செய்து இரு பொழுது மாள்வர்-
என்று அந்வயம்

———-

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-

பதவுரை

தீ வினையேன்–மஹா பாபியான நான்
தெரிந்த உணர்வு ஒன்று இன்மையால்–விவேக வுணர்ச்சி சிறிது மில்லாமையினாலே
அந்நான்று–முன்பொரு காலத்தில்
கரந்த உருவிய அம்மானை பின் தொடர்ந்து–நிஜமான வுருவத்தை மறைத்துக் கொண்டு வந்த அந்த மாரீச மானைப் பின் தொடர்ந்து கொன்ற
ஆழி அம் கை அம்மானை–அறுகாழி மோதிரத்தை அழகிய திருக்கையி லணிந்திருந்த இராம பிரானை
கைகேயி கழற்றாமல் விட்ட கணையாழி ஒன்றே பெருமாளிடம் அப்போது இருந்தது –
அத்தையும் திருவடி இடம் கொடுத்தார் அன்றோ
ஏத்தாது–தோத்திரம் செய்யாமல்
அயர்த்து–அறிவு கெட்டு
கீழ் நாள்கள் எல்லாம் வானா இருந்தொழிந்தேன்–கீழ்க் கழிந்த காலமெல்லாம் வீணாக இருந்து விட்டேன்.

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்
அது பத்து
இது எட்டு
என்னும் ஞானம் இத்தனை அல்லது
பகவத் விஷயத்தை ஆராயும் ஞானம் ஒன்றும் இல்லாமையால்
தத் ஞானம் அஞ்ஞானம் அதோந்ய துக்தம்
வித்யாந்யா சில்பநை புணம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்னும் ஞானம் யுண்டாகையால்

(ப்ரஹ்மம் காணவும் அடையும் உள்ள ஞானமே ஞானம்
சம்சாரத்தில அழுத்தாமல் ப்ரஹ்மம் அடையும் கின்பணமே வித்யை
தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்-துளி கூட ஞானம் இல்லை
கர்மம் -வித்யா -இரண்டையும் சொல்லி
ப்ரவ்ருத்தி மார்க்கம் இவை )

தீ வினையேன்
பகவத் அனுபவ யோக்யமான காலத்தைப் பாழே போக்கின
பாபத்தைப் பண்ணினேன்

வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம்
குனியக் குறுணி பற்றும் காலம் எல்லாம் வ்யர்த்தமே இருந்தேன்
(ஆனுகூல்ய லேசம் இருந்தாலே பேறு என்றவாறு )

அவதரித்து அல்ப அநுகூலயத்திலே விஷயீ கரிக்கும் காலம் போயிற்று என்று தாத்பர்யம்

கரந்த உருவின் அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
கைகேயி வாரத்தில் அகப்படா விட்டது திருக் கையில் அருகாழி ஒன்றுமே யாகாதே
வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை
அன்று தொடர்ந்த
அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை
இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது
அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்

அம் மானை ஏத்தாது அயர்த்து
ஏத்துகை -அடிமையாய்
இப்படி அடிமை செய்யப் பெற்றிலேன் என்று இழவு பட்ட பேர் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –

(பேய் முலை உண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன்-ஆயப்பிள்ளை
அதே போல் இங்கும் அம்மானை பத பிரயோகம் )

பெருமாள் மாய மானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது
அடிக் கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு அதின் மேலே எழுந்து அருளினார் -என்று
ஒருவன் கவி பாடவும்
எம்பெருமானார் கேட்டு அருளி
மாறி இடுகிற திருவடிகளிலே என் தலையை வைக்கப் பெற்றிலேன் -என்று அருளிச் செய்தார்

————–

அயர்ப்பாய் அயயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறி யிதுவே கண்டாய் -செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன்
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து –83-

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
செயற்பால அல்லவே–செய்யத் தகாதவற்றையே
செய்கிறுதி-செய்ய முயல்வாயென்று
அஞ்சினேன்–(உன்னைப் பற்றிப்) பயப்படுகின்றேன்;
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து–மல்லர்களின் ஆயுளை முடித்த கண்ண பிரானை மங்களா சாஸநம் பண்ணிக் கொண்டிரு
உயப்போம் நெறி இதுவே கண்டாய்–உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்;
அயயர்ப்பாய்–(அப் பெருமானை) மறந்து கெட்டாலும் கெடு;
அயர்ப்பாய்–மறவாமல் நினைந்து வாழ்ந்தாலும் வாழ்;
சொன்னேன்–(உனக்கு நான் சொல்ல வேண்டிய ஹிதத்தைச்) சொல்லி வைத்தேன்.

அயர்ப்பாய் அயயர்ப்பாய்
அவனை மறந்து அநர்த்தப் படிலும் படு
நினைத்து வாழிலும் வாழு

நெஞ்சமே சொன்னேன்
ஒருத்தன் கிணற்றிலே விழா நின்றால் கரையிலே நின்று அவனுக்குக் கூப்பிட வேணும் இறே
அவ்வோபாதி சொன்னேன்

உயப்போம் நெறியிதுவே கண்டாய் –
அல்லாது எல்லாம் விநாசத்துக்குக் கண்ட வழி
உஜ்ஜீவிக்கக் கண்ட வழி இதுவே

செயற்பால வல்லவே செய்கிறுதி
நான் தப்பச் செய்கிறது உண்டோ என்னில்
செய்யப்படாதவை செய்யா நின்றாய்

செய்யப்படாதவை யாவது –
அயோக்யன் என்று அகலுகை –
தேவதாந்த்ர பஜனங்கள்

நெஞ்சமே யஞ்சினேன்
புகழ்வோம் பழிப்போம் என்கிற இத்தை அஞ்சினேன்
அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகல வேண்டா
பயப்படாமல் வாழ்த்து என்றபடி –

மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து
நம்முடைய விரோதிகள் செய்வது என் என்னில்
மல்லரில் காட்டில் மிடுக்கு உண்டோ
அவற்றுக்கு மல்லருடைய ஆயஸ்ஸை க்ரஸித்தவனை வாழ்த்து

(நம்முடைய தோஷங்களை போக்குவதற்கு மங்களா சாஸனமே ஒரு வழி என்றவாறு )

———————-

(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –
தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம்
ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்
ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்
நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84-

பதவுரை

அவன் அடியை வாழ்த்தி–“அப்பெருமானுடைய திருவடிகளை மங்களா சாஸநம் பண்ணி
பூ புனைந்து–(அத் திருவடிகளிலே) பஷ்பங்களைச் சாத்தி
நின் தலையை தாழ்த்து–உன் தலையை வணங்கு;
இரு கை கூப்பு–இரண்டு கையையுங் கொண்டு அஞ்ஜலி பண்ணு”
என்றால்–என்று சொன்னால்
கூப்பாத–அப்படி செய்யாத
பாழ்த்த விதி–பாழும் விதியை யுடைய
என் நெஞ்சமே–என்னுடைய மனமே!
அவனை–அந்த ஸர்வேச்வானை
எங்கு உற்றாய் என்று ஏத்தாது–‘எங்கே யிருக்கிறாய்’ என்று சொல்லி யழைத்துத் துதியாமல்
தங்க ஆம் எனில்–தரித்திருக்கக் கூடுமாகில்
தங்கு–தரித்திரு.
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–தான்-அசைச் சொல்லாக்க கொண்டு –தங்க ஆம் எனில் தங்கு

பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே
அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து
உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே
(தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )

எங்குச் சென்றாகிலும் கண்டு -திருவாய் –6-8-5-என்னும்படி
ஆதரத்தோடே அவனை ஏத்தாத நெஞ்சமே
அவனைப் பற்றாதே கால் பாவலாம் ஆகில் தங்கு

பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம்
பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்

என்னெஞ்சமே
யவனடியைப் பூ புனைந்து வாழ்த்தி
நின் தலையைத் தாழ்த்தி
இரு கை கூப்பு என்றால் கூப்பாதே
எங்குற்றான் என்றவனை ஏத்தாத
தங்க தான் ஆம் ஏலும் தங்கு
என்று அந்வயம்

நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!-6-8-5-

————-

பகவத் விஷயத்திலே எடுப்பும் சாய்ப்புமாய் இன்னாதாகா
இன்னாதாகா நிற்கச் செய்தே
லோக யாத்திரையை அனுசந்தித்து -மேகத்திலே கண் வைக்கை –
அங்கும் அதுவேயாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –

(ஓடிக் கொண்டே தபஸ்ஸூ பண்ணிட்றே
நின்றாலே நமக்கு த்யானம் வரவில்லையே
என்ன மாயம்
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்டி அங்கும் எடுப்பும் சாய்ப்புமாகவே உள்ளதே
இவன் ஒருவனே இன்னம் கார் வண்ணன் –
வெளுக்காமல் இருக்கவே தபஸ்ஸூ பண்ணுகிறதோ)

தங்கா முயற்றிய வாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-

பதவுரை

பொங்கு ஓதம்–கிளர்ந்த அலைகளை யுடைத்தாய்
தண் அம்–குளிர்ந்து அழகிய
பால் வேலை வாய்–திருப்பாற்கடலிலே
நல் நிறம் கொள் கார்–நல்ல-அழகிய கறுமை – திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டிருக்கிற மேகங்கள்
தங்கா முயற்சிய ஆய்–மாறாத முயற்சியை யுடையனவாய்க் கொண்டு
தாழ் விசும்பின் மீது பாய்ந்து–விசாலமான ஆகாசத்தின் மேலே ஸஞ்சரித்து
கண் வளரும்–திருக் கண் வளர்ந்தருளுகிற
என்னுடைய கண்ணன் பால்–எமது கண்ண பிரானிடத்திலுள்ள
எங்கே புக்கு–எந்த தேசத்திலே போய்
எத் தவம் செய்திட்டன கொல்–எவ் வகையான தபஸ்ஸைச் செய்தனவோ? (அறியேன்.)

தங்கா முயற்றியவாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல் –
உத்யோகித்த உத்யோகம் மாறாதே
ஆகாச அவகாஸம் எல்லாம் உலாவி
எங்கே புக்கு என்ன தபஸ்ஸூ பண்ணிற்றனவோ

தாழ் விசும்பு -எங்கும் ஓக்க ஒத்து ஏக ரூபமாய் இருக்கை –

பொங்கோதத்தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய கண்ணன் பால் நல் திறம் கொள் கார்
கிளர்ந்த திரையை யுடைத்தாய்க் குளிர்ந்து இருந்த திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற
என் கண்ணனுடைய விலக்ஷண நிறத்தைக் கொள்ளுகிற மேகங்கள்
எவ்விடத்தே புக்கு என்ன தபஸ்ஸூ பண்ணிற்றினவோ

(தனக்கு என்று இல்லாமல் பர உபகாரார்த்தமாகவே இருப்பதால் தபஸ்ஸில் ஸ்வ அர்த்தம் இல்லையே

மேகங்களோ உரையீர் திருமால் திரு மேனி ஒக்கும்
யோகங்களும் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நல நீர்கள் சுமந்துநும் தம்
ஆக்கங்கள் நோவ வருத்தும் தவம் மா அருள் பெற்றதே –திரு விருத்தம் –32)

————

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

பதவுரை

கார் கலந்த மேனியான்–மேகத்தோடொத்த திருமேனியை யுடையவனும்
கை கலந்த ஆழியான்–கையோடு சேர்ந்த திருவாழியை யுடையவனும்.
பார் கலந்த வல் வயிற்றான்–(பிரளய காலத்தில்) உலகமெல்லாம் வந்து சேரப் பெற்ற வலிய திருவயிற்றை யுடையவனும்
தண்ணீரால் கண்டு பிடித்து கரைக்க முடியாமல் ரக்ஷித்து அருளினான் அன்றோ
பாம்பு அணையான்–திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவனுமான பெருமானுடைய
சீர் கலந்து–திருக் குணங்கள் நிரம்பிய
சொல்–ஸ்ரீஸூக்திகளை
நினைந்து-அநுசந்தித்து
சூழ் வினையின் ஆழ் துயரை போக்கார் –கொடிய பாவங்களினாலுண்டாகும் மிக்க துன்பங்களைப் போக்கிக் கொள்ளார்களாகில் (ஒழியட்டும்)
என் நினைந்து இப்போது போக்குவர்–வேறு எதை அநுஸந்தித்து இந்தப் போதைப் போக்குவார்கள்.

கார் கலந்த மேனியான்
ஸர்வதா ஸத்ருசமான மேகத்தோடே
ஒத்த திரு மேனியை யுடையவன்

கை கலந்த வாழியான்
திருக் கையிலே வேர் விழுந்த திருவாழியை யுடையவன்
(வேர் மரம் கிளை பூ போல் பொருந்தி அன்றோ இருக்கிறது )

பார் கலந்த வல் வயிற்றான்
பிரளயம் தேடி வந்தாலும் தோற்றாத படி
கலந்த பூமியை யுடையவனுமாய்
வயிற்றிலே புக்க வற்றுக்கு ரக்ஷகமான வயிற்றை யுடையவன்

(நமக்கு வல் வயிறு எத்தை உண்டாலும் ஜெரிக்க வேண்டும்
அவனுக்கு அனைத்தையும் ரக்ஷிக்கவே திருவயிற்றிலே கொள்கிறான் )

பாம்பணையான் -சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
வடிவு அழகுக்கும்
குணங்களுக்கும் வாசகமாய்ப்
பசும் கூட்டான சொற்களை நினைத்து
அனுபவ விநாஸ்யமான பாப பலமான துக்கத்தைப் போக்காராகில்

என்னினைந்து போக்குவார் இப்போது
பாபம் போக்க வேண்டா வாகில்
காலத்தைச் செல்ல விடும்படி எங்கனே

இப்போது –
இப்போதை -இக்காலத்தை -என்றபடி

(கார் கலந்த மேனியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ ராமாயணம்
கை கலந்த வாழியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ பாகவதம்
பார் கலந்த வல் வயிற்றான் சீர் கலந்த சொல் –இதிஹாசங்கள் புராணங்கள்
பாம்பணையான் -சீர் கலந்த சொல் -அருளிச் செயல்கள்
சீர் கலந்த சொல்–திருநாமங்கள் என்றுமாம் )

———

லோகத்தாரைக் கொண்டு கார்யம் இல்லை இறே
நீ
முன்னம் எப்போதும் இத்தையே சொல் -என்று
நெஞ்சுக்கு உபதேசிக்கிறார் –

(பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-

ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையோ என்னில் –
க்ருத்ஸ்நாம் வாப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே-
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமியும் சத்ருசமம் அல்ல என்று இறே சாஸ்திரம் –
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது அங்கும் இங்கும் -என்கிறபடி முமுஷு திசையிலும் முக்தி திசையிலும்
இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
உபகாரம் அதுக்கு பிரத்யுபகாரம் தேடுகையிலே மூட்டும் -உபகார கௌரவம் -பிரத்யுபகாரம் இல்லாதபடி பண்ணும் –
அதுக்கு சத்ருச பிரத்யுபகாரமாக வேணும் –
அது உண்டாகில் இறே இவன் பண்ணலாவது-இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
இவன் திருத்தித் தருகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு ஆத்ம சமப்பர்ணம் பண்ணலாம் –
இவன் தானே திருத்தினவற்றை இவனுக்குச் கொடுக்கை சத்ருசம் அன்றே –
ஸ்ரீ ஆச்சார்யர் திருத்தி ஸ்ரீ பகவான் இடம் கொடுக்கையாலே ஆத்மா ஆச்சார்யர் சொத்து ஆகி விட்டதே –
அதனாலே அத்தை ஸ்ரீ பகவானுக்கு சமர்ப்பிக்கலாம் -ஸ்ரீ ஆச்சார்யருக்கு முடியாதே என்றபடி )

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
நம் மேல் வினை கடிவான்–நம்மிடத்திலுள்ள பாவங்களைப் போக்குவதற்காக
எப்போதும் கை கழலா நேமியான்–ஒரு போதும் கையை விட்டுப் பேராத திருவாழியை யுடையனான எமபெருமானுடைய
மொய் கழலே–அழகிய திருவடிகளையே
ஏத்த–ஸ்துதிக்க
முயல் உத்ஸாஹப்படு;
இப்போதும்–இக் காலத்திலும்
இன்னம் இனி சிறிது நின்றாலும்–மேலுள்ள காலத்திலும்
எப்போதும்–ஆக எந்தக் காலத்திலும்
ஈதே சொல்–இதுவே (உனக்கு நான் சொல்லும்) ஹிதோபதேசமாகும்.

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல்
இக்காலத்திலும் வரும் காலத்திலும் மற்றும் எல்லாக் காலத்திலும்
இது தன்னையே சொல்லு

நல் நெஞ்சே –
நான் புக்க இடத்தே புகக் கடவ நெஞ்சே

எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
எல்லாக் காலத்திலும் கையை விட்டு அகலாத திருவாழியை யுடையவன்
நம் பக்கல் பாபத்தைப் போக்குவான்

மொய் கழலே ஏத்த முயல்
போக்யமான திருவடிகளை ஏத்த உத்ஸாஹி
பற்றினாரை விட்டுக் கொடாத திருவடிகளை என்றுமாம் –

ஈதே சொல்லு

மொய் கழல்
அழகாதல்
மிடுக்காதல்

(ஈதே சொல்-
கீழே சீர் கலந்த சொல் -என்பதாகவுமாம்
அல்லது சொல்ல முயல் -என்ற இப்பாசுரம் சொல்லவே அமையும் )

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரண

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -71-80–

July 1, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

(மாதா பிதா -என்றாலே காரணத்வம் பலிக்குமே
அடியேனுக்கு மட்டும் அன்றி ஸமஸ்த பிரபஞ்சத்துக்கும் த்ரிவித காரணமும் இவனே அன்றோ
பரத்வம் முதல் பத்து -இதுக்கு வேண்டிய மூன்றும்
காரணத்வம் இரண்டாம் பத்து –வியாபகத்வம் மூன்றாம் -நியந்த்ருத்வம் நாலாம் பத்து
நின்ற காரணம் பிரளயத்தில் இவன் ஒருவனே
தனி காரணம் ஒப்பில்லாத த்ரிவித காரணம்
அகில ஜகத் ஸ்வாமி -அஸ்மின் ஸ்வாமி
ஸ்ரீ ரெங்க நாத -மம நாத
என்று பரத்வமும் நீர்மையும் போல் இப்பாசுரம் )

ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அகப்பட உடம்பு கொடுத்தான் என்கிற நீர்மையைச் சொல்லிற்று ஆகவுமாம்
அவர்களுக்கு சத்தா ஹேதுவானான் என்கிற ஐஸ்வர்யத்தைச் சொல்லுகிறது என்றுமாம் –

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-

பதவுரை

தனி நின்ற–தானொருவனுமே காரணமாய் நின்றவனும்
நின்ற காரணம் பிரளயத்தில் இவன் ஒருவனே
தனி காரணம் ஒப்பில்லாத த்ரிவித காரணம்
சார்வு இலா–வேறொருவரைத் தனக்கு ஆதாரமாக உடைத்தாகாதவனுமான
மூர்த்தி–எம் பெருமானே!
அகத்து பனி நீர் உலவு செம்சடையான்–உள்ளே குளிர்ந்த கங்கை நீர் தங்குகின்ற சிவந்த ஜடையை யுடையனான சிவன்.
ஆகத்தான்–உன் திருமேனியை ஆச்ரயித்து வாழ்பவன்;
நான்கு முகத்தான்–நான்முகக் கடவுள்
நின் உந்தி முதல்–உனது திருநாபிக் கமலத்தை மூல காரணமாக வுடையவன்;
இனி–இப்படியான பின்பு
நின் பெருமை–உனது மேன்மையை
யான் நின்று உரைப்பது என்னே-தான் முயன்று சொல்வது எங்ஙனே?
(என்னால் சொல்லப் போகாதென்கை)

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
உன் ஐஸ்வர்யத்தை நான் தானே சொல்லுவது உண்டோ -என்னவுமாம்
உன்னுடைய நீர்மையை நான் சொல்லுவது உண்டோ என்னவுமாம்

தனி நின்ற சார்விலா மூர்த்தி –
கார்ய ஜாதம் எல்லாம் அழிந்து
காரண அவஸ்த்தமாய்
நாம ரூப விபாக அநர்ஹமாய்
தான் என்ற சொல்லிலே அடங்கித்
தனக்கு வேறே ஒரு அபாஸ்ரயம் இன்றிக்கே நின்றவனே

பதிம் விஸ்வஸ்ய-என்னா
ஆத்மேஸ்வரம் -என்னுமா போலே
ருத்ரம் ஸமாஸ்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மாணம் ஆஸ்ரித -என்று இத்யாதிப்படியே
தனக்குச் சேர்த்துச் சொல்லலாம் ஒப்பை யுடையன் அல்லன் என்றுமாம்

(பதிம் விஸ்வஸ்ய–விஸ்வத்துக்குப் பதியாயும்
ஆத்மேஸ்வரம்–தானே தனக்கு ஈஸ்வரனாயும் –
தனி நின்றும் சார்வு இல்லாமலும் –
இது தானே மறையை தமிழாக அருளிச் செய்தது_

சார்வு -ஆச்சர்யம் ஆதல் -ஒப்பு ஆதல் –

பனி நீர் அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான்
கங்கையை ஜடையிலே தரித்தானாய் இருக்கிற ருத்ரன்
வலத்தனன் –திருவாய் -1-3-9- என்னுமா போலே
உன்னுடைய திரு மேனியில் ஏக தேசத்தில் ஆனான்

நான்கு முகத்தான் நின்னுந்தி முதல்
சதுர்முகன் உன்னுடைய நாபியைக் காரணமாக யுடையவன்
இனி நின் பெருமை யான் உரைப்பது என்னே

(அன்மொழித் தொகை உந்தித்தாமரையே முதல் -காரணம்
வேர் முதல் வித்து போல் )

————–

(சாம்யாவாதி மூவரும் சமம் என்பர்
ஏகத்துவ வாதி -ஐக்ய வாதி -உப லக்ஷணம் முறையில் இத்தையும் சொன்னதாக கொள்ள வேண்டும்
மூவருமே ப்ரஹ்மம் இல்லை நாலாவது உத்தீர்ண வாதி
பரா அஸ்ய சக்தி விவிதையா ஸ்ரூயதே –இவனது சக்தி அளவிடமுடியாதே -என்பதை
பராசக்தி வேறே ப்ரஹ்மம் என்று எல்லாம் சொல்வார்கள் உண்டே
மூவரையும் நிரஸித்து
தனது சித்தாந்தம் ஸ்தாபிக்கிறார்
உந்தித் தாமரையே இத்தைக் காட்டுமே
காரணம் வேறே கார்யம் வேறே )

(பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி
பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
விமையவர் தம் திரு வுரு வேறு எண்ணும் போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ
யொன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி
முகிலுருவம் எம் அடிகள் உருவம் தானே-–ஸ்ரீ திரு நெடும் தாண்டகம்–2-)

கீழில் பாட்டிலே
எல்லாருக்கும் ஆஸ்ரயணீயன் -என்று சொல்லிற்று
இதிலே
வேறு ஸமாஸ்ரயணீயராய் இருப்பாராம் சிலரும் உண்டாய் இருக்க
இவனே ஆஸ்ரயணீயன் என்று சொல்லும் படி எங்கனே என்ன
அல்லாதாருடைய மதங்களை உபஸ்த்தாபித்து தூஷித்து ஸ்வ ஸித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –72-

பதவுரை

முதல்வா–ஸகல காரண பூதனான பெருமானே!
மூன்று திரு உருவம் முதல் ஆம் என்பர்–பிரமன் விஷ்ணு சிவன் என்கிற மூன்று திவ்ய மூர்த்திகள் தலைவராவர்’ என்று சிலர் சொல்லுவார்கள்;
மூன்றுக்கும் ஒன்றே முதல் ஆகும் என்பர்–‘மேற் சொன்ன மூன்று மூர்த்திகளுக்கும் வேறொரு தத்துவம் தலையாயிருக்கும்’ என்று மற்றுஞ் சிலர் சொல்லுவார்கள்.
நிகர் இலகு கார் உருவா–மேகமொன்று சொல்லலாம்படி அதனோடொத்து விளங்கா நின்ற திருமேனியை யுடையவனே!
புகர் இலகு தாமரையின் பூ–ஜகத் காரணமாம் ஆகிய பெருமிதத்தால் தேஜஸ்ஸு மிக்கு விளங்குகின்ற தாமரைப் பூவானது
நின் அகத்தது அன்றே–உன்னிடத்திலுள்ளதன்றோ? (திருநாபிக் கமலமே உனது பரத்வத்தை வெளியிட வல்லது என்றவாறு.)

முதலாம் திருவுருவம் மூன்று என்பர்
ஜகத்துக்குக் காரண பூதர் மூவர் என்பர்கள்
(முதலாம்-காரணமாம் )

ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்
மூவருக்கும் காரண பூதன் வேறே ஒருவர் என்பர்கள்

என்பர் என்கிற இத்தால்
ஸ்வ சித்தாந்தம் அன்று என்கிறது

முதல்வா
இதுக்கு எல்லாம் காரண பூதனே

நிகரிலகு காருருவா
மேகம் என்று சொல்லலாம்படி பதிவை யுடையவனே

நின்னகத்தன்றே புகரிலகு தாமரையின் பூ
ப்ரஹ்மாவுக்கு உத்பத்தி ஸ்தானமான தாமரைப்பூ உன் திரு நாபியதன்றோ

இத்தால்
ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனுக்கு ஸமர் அல்லர் என்னும் இடமும்
அவர்களில் ஒருவன் ஜகத்துக்குக் காரணம் என்னும் இடமும்
மூவரையும் ஒழிய-மூவரில் பிரதானராய் இருக்கிற விஷ்ணுவையும் ஒழிய –
வேறே ஓன்று ஜகத்துக்குக் காரணம் அன்று என்னும் இடமும் சொல்லுகிறது

மூவரில் அவனே காரணம் என்னுமத்துக்கும்
விஷ்ணுவுக்கும் பிறப்பு உண்டாகச் சொல்லா நிற்க அவன் காரணமான படி எப்படி
அவதரித்தான் என்ற இடம் உண்டோ என்ன
பிரமாணங்கள் அருளிச் செய்கிறார்

ஸ்ருஷ்ட்டி ஸ்திதி அந்தக்கரணம் –ஏக ஏவ ஜனார்த்தனம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் )-இத்யாதி-என்னும் படியே
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ்தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே-(அதர்வணம் ) -என்கிற இது அவதார விஷயம்
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார (ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் )-என்னும்படியே

(அணைவது அரவணை மேல் இருவர் அவர் இணைவனாம் -முதல்வனாக இருந்து அன்றோ இணைகிறீர்
மற்றவர் கர்மாதீனம் -இவனது இச்சா க்ருஹீதம்
அஜாயமானா பஹுதா விஜாயதே
பிறப்பில் பல் பிறவி பெருமான் இவன் ஒருவனே )

(மத்யே விரிஞ்ச கிரிஸம் பிரதம அவதார
தத் சாம்யத ஸ்தகயிதும் தவ சேத் ஸ்வரூபம்
கிம் தே பரத்வ பிசுநை இஹ ரங்க தாமந்
சத்த்வ ப்ரவர்த்தந க்ரூபா பரிபாலந ஆத்யை –(ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்-உத்தர -51-)

ஹே ரங்க தாமந்
மத்யே விரிஞ்ச கிரிஸம்–பிரம ருத்ராதிகளின் நடுவே
தவ பிரதம அவதார–தேவருடைய முதன்மையான அவதாரமானது
தத் சாம்யத –அவர்களுடன் ஒற்றுமை நயம் காட்டி
ஸ்தகயிதும் தவ சேத் ஸ்வரூபம்–தேவருடைய பரத்வ ஸ்வரூபத்தை மறைத்துக் கொள்வதற்காகில்
தே பரத்வ பிசுநை –தேவருடைய பரத்வத்தை கோள் சொல்லக் கடவதான
சத்த்வ ப்ரவர்த்தந க்ரூபா பரிபாலந ஆத்யை–வேத உபதேச யோக உபதேசத்தி ரூபமான சத்வ ப்ரவர்த்தனம் என்ன
கிருபையினால் ரஷித்து அருளுவது என்ன இவை முதலிய கார்யங்களினால்
இஹ கிம் -இங்கே என்ன பயன் –
நீர்மையைக் காட்டி அருளவே இந்த அவதாரம்
பரத்வத்தை வருந்தியும் மறைக்க முடியாதே –

———-

இவனே ஆஸ்ரயணீயன் என்று அறுதியிட்டால்
பின்னை அனுபவமே இறே உள்ளது

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் -பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-

பதவுரை

பூவையும்–பூவைப் பூவையும்
காயாவும்–காயாம் பூவையும்
நீலமும்–கரு நெய்தல் பூவையும்
பூக்கின்ற–புஷ்பிக்கின்ற
பிரான்–எம்பெருமானுடைய
உருவே என்று–திரு வுருவமே என்ற கொண்டு
பாவியேன்–அடியேனுடைய
பூரிப்பதால் பாக்யனான அடியேன் -பாவி விபரீத லக்ஷணை
காவி மலர்–செங்கழுநீர்ப் பூவையும்
என்றும் காண் தோறும்–பார்க்கிற போதெல்லாம்
அவ் அவை எல்லாம்–அந்தந்த மலர்களெல்லாம்
மெல் ஆவி–மிருதுவான உயிரும்
மெய்–சரீரமும்
மிகவே பூரிக்கும்–மிகவும் பருத்து வளர்கின்றது

பூவை காயா நீலம் பூவா நின்ற காவி மலர் இவை கண்ட பொது எல்லாம்
பிரான் உருவே என்று அறிவுடைய நெஞ்சு
பூரிக்கை அன்றிக்கே
உடம்பும் அகப் படப் பூரியா நின்றது

காவி -செங்கழு நீர்
ஆவி -நெஞ்சு
மெய் -உடம்பு

(ஆத்மாவுக்குத் தானே அறிவு
தர்மபூத ஞானத்துக்கும் அறிவு இல்லை
அறிவு வெளிப்படும் த்வாரமே தானே நெஞ்சு
இங்கு ஆவி என்ற சொல்லால் நெஞ்சு
கண் காது எலும்பு எல்லாம் ஜடப்பொருளாக இருந்தாலும்
கண்ணால் தெரிவதால் -ஞான இந்திரியம் -ஞானத்துடன் சம்பந்தம் என்பதால் உயர்வாகத் தோன்றும்
அதை விட மனஸ் ஸ்ரேஷ்டம்
ஆகவே அறிவுடைய நெஞ்சு என்கிறார்
நெஞ்சும் உடம்பும் பூரிக்கிறதே என்கிறார் )

—————-

சரீர பரிக்ரஹம் பண்ணி
ருசி பிறந்த பின்பு
அபேக்ஷித்தது
காலம் எல்லாம் இரந்தாராய்த் தோற்றுகிற படி
(ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ அன்றோ )

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-74-

பதவுரை

ஒரு நாள் ஒழியாமை-ஒருநாளும் தப்பாமல்
என்றும்–எந்நாளும்
யான் இரந்தால்–அடியேன் பிரார்த்தித்தால்,
குன்று குடை ஆக ஆ காத்த கோவலனார்–(முன்பு) கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திப்
பசுக்களை ரக்ஷித்த கோபால கிருஷ்ண பகவான்
ஒன்றும் இரங்கார்–சிறிதும் தயவு செய்கிறாரில்லை;
உரு காட்டார்–தன் திருமேனியைக் காட்டுகிறாரில்லை;
நெஞ்சே–ஓ மனமே!
புவி–நாமிருக்கும் இடம்
பெரிதே புடை தான்–(அவருடைய அருள் வெள்ளம் ஏறிப் பாய முடியாத) மிகப் பெரிய மேட்டு நிலமோ?

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால் ஒன்றும் இரங்கார் உருக் காட்டார் –
காலம் எல்லாம் நான் இரந்து போர
இருந்த இடத்திலே இருந்தாலும் இவன் நம்மை இரவா நின்றான் என்று இரங்குவதும் செய்கிறிலர்
தம் வடிவைக் காட்டுவதும் செய்கிறிலர்

குன்று குடையாக ஆ காத்த கோவலனார்
இரங்கி உருக்காட்டாதவர்
காட்டிற்று இலராகில் தரிக்கலாம் இறே
உபகாரம் அறியாத பசுக்களுக்கும் உதவுமவர் கிடீர் நமக்கு உதவாது ஒழிகிறார்
(ஆபால கோபாலருக்கும் காட்டுபவன் அன்றோ எனக்கு காட்டாமல் இருக்கிறான் )

நெஞ்சே புடை தான் பெரிதே புவி
அவருக்கு நீர்மை இல்லை என்னப் போகாது இறே
அவர் நீர்மை ஏறிப் பாயாததோர் இடம் தேடி எங்கே கிடந்தோம்

(புடை என்று குஹையாய்
அவன் கடாக்ஷ குஹையிலே கிடந்தோம் என்றபடி )

——————————-

(நம் பெரியவர் என்று பிராட்டியும் அவனும் அபிமானிக்கும் படி அன்றோ
நமது ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
என்னை நினைத்து தவிக்க வைத்தேனே என்று அவன் சமாதானம் செய்ய
சமாதானம் அடைந்து ஹ்ருஷ்டராய் நான் பெரியன் என்று லோக ப்ரஸித்தம்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் –
என்னுள்ளம் புகுந்து அன்றோ நீ சத்தை பெறுகிறாய்
என்று தாமே சொல்லிக் கொள்ளும் படி பண்ணி அருளுகிறார் )

உமக்கு என்றும் உதவிலோமாக நீர் சொல்லுவான் என்
உருக் காட்டிற்று இல்லையே என்று வெறுக்கும் படி உம்மைப் பண்ணினோமே -என்ன
அத்தை அனுசந்தித்து
என்னோடே ஒப்பார் உண்டோ என்கிறார்

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75

பதவுரை

ஊன் பருகு நேமியாய்–(அஸுர சரீரத்திலுள்ள) மாம்ஸங்களைக் கவர்கின்ற திருவாழி யாழ்வானைக் கையிலேந்தியுள்ள பெருமானே!,
புவியும்–இவ் வுலகமும்
இரு விசும்பும்–விசாலமான மேலுலகமும்
என் உள்ளாய்–என் பக்கல் இரா நின்றாய்:
என்னுள்ளம் புகுந்து அன்றோ நீ சத்தை பெறுகிறாய்
யான் பெரியன்–நானே பெரியவன்;
நின் அகத்த–உன்னிடத்தே யுள்ளன;
நீ–உபய விபூதியையும் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற நீ
என் செவியின் வழி புகுந்து–என் காது வழியே புகுந்து
அவிவு இன்றி–ஒரு நாளும் விட்டு நீங்காமல்
நீ பெரியை என்பதனை யார் அறிவார்–நீ பெரியனென்று அறிவாருண்டோ?
உள்ளு–இதை நீயே ஆலோசித்துப் பார்.

புவியும் இரு விசும்பும் நின்னகத்த
உபய விபூதியும் உன் ஸங்கல்பத்திலே கிடக்கின்றன

நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளே அவிவின்றி
உபய விபூதி யுக்தனான நீ
என்னுடைய ஸ்ரோத்ர இந்திரியத்தை வழியே புகுந்து
விச்சேதம் இன்றிக்கே என் ஹ்ருதயத்திலே உளையாகா நின்றாய்

(உளன் ஆகிறான் –
உளையாகா நின்றாய் முன்னிலையாக பேசுகிறார் -சத்தை பெறுகிறாய் என்றபடி
ஸ்ரீ ருக்மிணி தேவி புவந ஸூந்தர காதின் வழியே புகுந்து உள்ளே புகுந்தாய் என்றாள் அன்றோ )

யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
உபய விபூதியை யுடைய நீயோ
விபூதிமானை யுடைய நானோ
பெரியார் யார் என்று அறிவார் யார்

(விஸ்வம் பர பரா ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் -சமக்யா பந்ததி -ஆழ்வாரை
இப்பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார் )

ஊன் பருகு நேமியாய் உள்ளு
அப்ரதிஹத சக்தியான நீ அறிவுதி யாகில் சொல்லு

ஊன் பருகு நேமி
சத்ரு சரீரங்களைப் பருகுகிற திருவாழி

————–

ஸ்ரவண ஞான அனந்தர பாவியான மனனத்தைச் சொல்லுகிறது –

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என் கொலோ
உலகளந்த மூர்த்தி உரை –76-

பதவுரை

உலகு அளந்த மூர்த்தி–த்ரிவிக்ரம பகவானே,
உன்னை உள்ளிலும்–உன்னை(நெஞ்சில்) அநுஸந்தித்த மாத்திரத்திலும்
உள்ளம்–எனது நெஞ்சானது
துடிக்கும்–(ஸந்தோஷத்தினால்) பூரிக்கின்றது
வினை படலம் விள்ள–பாவங்களின் கூட்டங்கள் என்னை விட்டு ஒழிந்து போம்படி
விழித்து–உன்னாலே நான் கடாக்ஷிக்கப் பெற்று
ஸ்ரமணி விதுரர் -ரிஷி பத்னிகளை – பூதராக்கின நெடும் நோக்கு
ஜாயமானம் புருஷன் யம் பஸ்யதி மது ஸூதன கடாக்ஷம்
உன்னை மெய்யுற்றால்–(பரம பதத்திலே வந்து) உன்னை உள்ளபடியே அடைந்து விட்டேனாகில்
இங்கு மானஸ ஸாஷாத் கரித்தால் -மெய் -பாஹ்ய சாஷாத்காரம் ஸமான
உள்ள உலகு அளவும்–நீ வியாபித்திருக்கிற உலகமெங்கும்
யானும் உளன் ஆவன்–நானும் வியாபித்தவனாவேன்;
ஸ்வரூப வியாப்தி இல்லையே அணு ஸ்வரூப ஆத்மா விபு போல் ஆகுமே -தர்ம பூத ஞான வியாப்தி
என் கொலோ–நான் சொல்லுகிற விது ஸம்பாவிதநதானோ?
உரை–நீயே சொல்லு.

உள்ளிலும் உள்ளம் தடிக்கும்
உன்னை அனுசந்திக்கில் ஸ்த்தூலமான தேகம் போலே
அமூர்த்தமான ஹ்ருதயம் தடியா நின்றது

வினைப் படலம் விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால்
பாப ஸமூஹம் விண்டு போம்படி நீ பார்த்து
உன்னை சாஷாத்கரித்து-என்றுமாம்

மெய்யுற்றால் -சாஷாத்கரித்தால்
இங்கே மானஸ சாஷாத்காரம் ஆதல்
அங்கே பாஹ்ய சாஷாத்காரம் ஆதல்

உள்ள உலகளவும் யானும் உளனாவன் என்கொலோ
வியாபக தத்வம் இரண்டு ஆகிறது போலே
(வியாபகத்வம் இரண்டு ஸ்வரூபமம் ஞானமும் -அவனைப் போலவே ஆனதே )

ஞான வியாப்தி இவரது

உலகளந்த மூர்த்தி உரை
சிறிய வடிவைக் கொண்டு லோகத்தை எல்லாம் வ்யாபித்து இருக்கிற நீயே சொல்லு
இந்த ஆச்சர்யத்தை நீ சொல் என்றபடி

————-

அறியாதே நன்று என்று பிரமித்து
வேறே சிலர் உற்றார் என்று இருக்கும் அத்தனை இறே
விமர்த்த ஸஹரான-(பாதக ஸஹர் )- பந்துக்கள் வேறே உண்டோ என்கிறது –

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை–77-

பதவுரை

இரைக்கும் கடல்–கோக்ஷிக்கின்ற திருப்பாற் கடலிலே
கிடந்த–பள்ளிக் கொண்டிரா நின்ற
எந்தாய்–ஸ்வாமீ!-என்னைத் தேடி -கைக்கொள்ள அன்றோ ஷீராப்தி நாதனாக சாதனம் பண்ணுகிறாய்
உரைக்கில்–ஆராய்ந்து சொல்லில்,
ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே–(நீ தவிர) தாயாதிகளென்றும் பந்துக்களென்றும் சொல்லக் கூடியவர்கள் எனக்கு ஆரேனுமுண்டோ?
எனது உயிர்க்கு–என் ஆத்மாவுக்கு
ஓர் சொல்–‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ என்கிற சரம ச்லோகமாகிற ஒரு சொல்லாலே
நன்றி ஆகும் துணை–உதவி செய்யும் துணையும்
உரைப்பு எல்லாம்–மற்றும் சொல்லப்படுகிற எல்லா வகையான துணையும்
நின் அன்றி மற்று இலேன் கண்டாய்–உன்னைத் தவிர வேறொருவரையும் உடையேனல்லேனும் காண்.
நவவித சம்பந்தமும் அவனே -பிதா ச இத்யாதி

(பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-)

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
ஆரே என்று கேட்டால்
வேறே சிலர் இல்லை
நானே யுள்ளேன் -என்று
அவன் தனக்குச் சொல்ல வேணும் போலே

இரைக்கும் கடல் கிடந்த எந்தாய்
நித்ய ஸூரிகள் ஸதா அனுபவம் பண்ணா நிற்கச் செய்தே
திருப்பாற் கடலிலே அவஸர ப்ரதீஷனாய் வந்து கிடக்கிறவனே

உரைப்பெல்லாம் நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர் சொல் நன்றி யாகும் துணை
துர்த் தசையில்
மா ஸூச என்று நற் சொல்லு சொல்லும் அத்தனை

உரைக்கப் படுவது எல்லாம் உன்னை ஒழிய வேறே ஒருவர் இல்லை
துணையாக உரைக்கப்படுவது எல்லாவற்றிலும் உன்னை ஒழியத் துணை இல்லை -என்றபடி

——-

(முதல் ஆழ்வார்கள் அயோனிஜர் -மூன்று திருவந்தாதிகள்
நான்முகன் திருவந்தாதி
பெரிய திருவந்தாதி
இந்த ஐந்தும் அர்த்த பஞ்சகம் -பரத்வாதி பஞ்சகம் சொல்ல வந்தவை என்றும் கொள்ளலாமே )

கீழ் உற்றார் இல்லை என்றது
உற்றார் உண்டாகிலும்
ஸம்ஸாரம் இனிதாகிலும்
உன் அனுபவத்தை ஒழியப் புறம்பு உண்டோ -என்கிறார் –

துணை நாள் பெருங்கிளையும் தொல் குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78-

பதவுரை

துணை–ஸ்நேஹிதர்களும்
நாள்–ஆயுஸ்ஸும்
பெரு கிளையும்–பிள்ளைகள் பேரன்கனென்கிற பெரிய ஸந்தானமும்
தொல் குலமும்–பரம்பரையாக வருகிற நற்குலமும்
சுற்றத்து இணை–பந்துக்களோடே சேர்ந்திருப்பதும்
(ஆகிய இவை யெல்லாம்)
நாளும்–நாள்தோறும்
இன்பு உடைத்து ஆம் ஏலும்–(துக்கத்தை யுண்டு பண்ணாமல்) ஸந்தோஷத்தை யுண்டு பண்ணுவன வென்றே வைத்துக் கொண்õடலும்,
நல் நெஞ்சே–நல் மனமே!
(நீ அவற்றில் ஆசை கொள்ளாமல்)
கணை நாணில் ஒவா தொழில் சார்ங்கன்–அம்புகள் நாணில் நின்றும் ஒருகாலும் மாறாதபடி
வீரத் தொழில் செய்து கொண்டே யிருக்கிற வில்லை யுடையனான இராமபிரானுடைய
தொல் சீரை–இயற்கையான நற் குணங்களையே
ஓவாத ஊண் ஆக உண்––தடை அற்ற -நித்ய போக்யமாக அநுபவிக்கக் கடவாய்.

துணை நாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத் திணை நாளும் இன்புடைத்தா மேலும் –
துணை
ஆயூஸூ
பெருங்கிளை
ஆபி ஜாத்யம்
பந்துக்களோட்டைச் சேர்த்தி
இவை நித்யமுமாய் இனிதாயே யாயிற்றே யாகிலும்

கணை நாணில்
அம்பானது நாணில் இடைவிடாதே வியாபிக்கிற வில்லை யுடையவன்

கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை
என்றும் ஆஸ்ரிதர் கார்யம் மாறாதே செய்து போருமவருடைய கல்யாண குணங்களை

நல் நெஞ்சே
ஸோபாதிக பந்துக்களுக்கும்
நிருபாதிக பந்துக்களுக்கும்
வாசி யறியும் நெஞ்சே

எம்பெருமானைப் பற்று என்று
சொல்லப் பாங்கான நெஞ்சு -என்னவுமாம்

ஓவாத ஊணாக வுண்
விச்சேதம் இல்லாத போகமாக புஜி

————

உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி என் இழிலிற்று ஆனாலும் ஆழி யங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-

பதவுரை

மண் நாட்டில்–இந்த மண்ணுலகத்திலே
ஆர் ஆகி–எப் பிறவியிலே பிறந்தவராயினும்
என் இழிலிற்று ஆனாலும்–எப்படிப்பட்ட இழி தொழில்களை யுடையவர்களாயினும்
ஆழி அம் கைபேர் ஆயற்கு ஆன் ஆம் பிறப்பு–திருவாழியை அழகிய கையிலே யுடைய
ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அடிமைப்பட்ட வர்களாகப் பிறக்கும் பிறவியானது.
உன் நாடு தேச அன்றே–பரம பதத்திள்ள தேஜஸ்ஸை யுடையதன்றோ?
ஊழ் வினையை அஞ்சுமே–அநாதியான பாவங்களைக் குறித்து அஞ்ச வேணுமோ?
விண் நாட்டை–ஸ்வர்க்க லோகத்தை
ஒன்று ஆக–ஒரு பொருளாக
மெச்சுமே–விரும்பக் கூடுமோ?

ஆழியங்கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு
ஸர்வேஸ்வரனாய் வைத்து இதர ஸஜாதீயனாய்ப் பிறந்தவனுக்குக்
கைங்கர்யம் பண்ணுகைக்கு யோக்யமான ஜென்மம்
பரம பதத்தில் இருக்கும் தேஜஸ்ஸை யுடைத்தன்றே என்றுமாம்

உண்ணாட்டுத் தேசன்றே
உள் நாடு என்று பரம பதமாகக் கொள்ளுகிறது-பகவத் அபிப்ராயத்தாலே
(அக்கரை -சம்சாரம் இக்கரை பரமபதம் என்று உண்டே )

தேசன்றே -தேசன்றோ என்றபடி

(தேவத்மும் நிந்தை யானவனுக்கு
ஒளி வரும் ஜனிகள் போலே
ப்ரஹ்ம ஜன்மமும்
இழுக்கு என்பார்க்கு
பண்டை நாளில் பிறவி
உள் நாட்டு தேசு இறே–ஆச்சார்ய ஹிருதயம்-81-

தாஸ்ய ரசம் அறிந்தார்க்கு -பண்டை நாள்- 9-2–என்ற திரு வாய் மொழியில்
பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும் தொண்டர் -என்றும்
உன் பொன் அடி கடவாதே வழி வருகின்ற அடியார்-என்றும்
தொல் அடிமை வழி வரும் தொண்டர்-என்றும் சொன்ன படியே
தாஸ்ய விரோதியான ஜன்மாத்ய அபிமானம் இன்றிக்கே கைங்கர்ய அனுரூபமான குடிப் பிறவி-
ஆழி அம் கை பேராயருக்கு ஆளாம் பிறப்பு -உள் நாட்டு தேசு அன்றே –பெரிய திருவந்தாதி -79-
என்கிறபடியே -பகவத் விமுக பிரசுரம் ஆகையாலே
புற நாடான லீலா விபூதி போல் அன்றிக்கே பகவத் அனுகூல்ய ஏக போக ரசத்திலே
நெருங்கி போக விபூதியாய் ,அவனுக்கு அந்தரங்கமாய் இருக்கிற பரம பதத்தில்
வர்த்திக்கிற தேஜசை உடைத்து இறே என்கை —
பரம பதத்தில் பகவத் கைங்கர்ய அனுகுணமாக பரிக்ரஹிக்கும் தேஹத்தோபாதி
சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு இதுவும் தேஜஸ் கரம் என்று கருத்து
ச ஏக பவதி இத்யாதி போல் அங்கு கைங்கர்யத்துக்கு எடுத்துக் கொள்ளும் பிறப்புக்களில் ஒன்றே இதுவும் )

ஊழ் வினையை யஞ்சுமே விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-
ப்ரஹ்மாதிகள் குடியிருப்பை ஒன்றாக எண்ணுமே
ஸூர புரீ யத் கச்சதோ துர்க் கதி (ஸ்ரீ குண ரத்ன கோஸம் ஸ்ரீ பராசர பட்டர் )

அஞ்சுமே -அஞ்சான் என்றபடி –

ஸ்வர்க்கத்துக்குப் போம் வழி தண்ணிது -என்கிறது
ந தேவ லோகா க்ரமணம் (ஸ்ரீ ராமாயணம் லஷ்மணன் வாரத்தை )
பறைச் சேரியில் அடியிடுமா போலே ஸ்வர்க்கத்தில் அடியிடுகை
வேண்டேன் என்கிறார்
தஸ்யாந்த ராயோ மைத்ரேய தேவேந்த்ராத் வாதிகம் பதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )
பகவத் விஷயத்திலே கை வைத்தவனுக்கு அந்தராயமாவது இந்த்ரனாய் இருக்கும் இருப்பு இறே

உள் நாடு என்று ஸம்ஸாரமாகக் கொண்ட பக்ஷத்திலே
விண்ணாடு என்று பரம பதமாகக் கடவது

மண்ணாட்டில் ஆராகி எவ்விழி விற்றானாலும்
ஸம்ஸாரம் தான் தண்ணிது
அதிலே நிஹீன ஜென்மம் ஆகவும் அமையும்
எல்லா இழிவையும் யுடைத்ததாகவும் அமையும்
பகவத் அனுபவ யோக்கியமான ஜென்மமே வேண்டுவது
இதுக்குப் புறம்பான ஜென்ம வ்ருத்தங்கள் அப்ரயோஜகங்கள்

ஆராகி
எந்த ஜென்மம் ஆகிலும்

எவ்விழிவில்
எந்த வியாபாரம் ஆகிலும் என்னவுமாம்

பேராயர் என்று
அல்லாத இடையர் நித்ய ஸூரிகள் என்னும்படி இவனுடைய இடைத் தனத்தில் முதிர்ச்சி சொல்லுகிறது –

மண்ணாடு தொடங்கி ஒன்றாக எண்ணுமே –என்று கிரியை –

————–

(கீழே ஐஸ்வர்யாதிகள் வேண்டாம்
இதில் கைவல்யமும் ஜரா மரண மோக்ஷம் (ஸ்ரீ கீதை -7 )கிடைத்தாலும் பொருட்டாக எண்ண மாட்டேன்
அவனை மறந்து ஒரு க்ஷணமும் தரியேன் என்கிறார் )

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் -மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

பதவுரை

பிறப்பு–பிறவியையும்
இறப்பு–மரணத்தையும்
மூப்பு–கிழத் தனத்தையும்
பிணி–வியாதிகளையும்
துறந்து–ஒழிந்து
பின்னும்–அவ்வளவோடு மல்லாமல்
இறக்கவும்–மிகவும் இன்பு உடைத்து ஆம் ஏலும்–ஆநந்தமுடையதான கைவல்ய மோக்ஷம் உண்டாவதானாலும்
மண் அளந்தான் பாதமே ஏத்தா பகல்–உலகளந்த பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தப் பெறாத காலங்களிலுண்டான
மறப்பு எல்லாம்–மறப்புகள் எல்லாம்
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே–துன்பமென்றே எண்ணுவனே யொழிய வேறு வகையாக எண்ணுவனோ?

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும் இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் –
ஸம்ஸார ஸம்பந்தம் அற்று
அளவிறந்த ஆத்ம அனுபவம் உண்டாயிற்றாகிலும்

பின்னும் இறக்கவும் –
இறக்கை அளவிறகையாய்
மிகவும் என்றபடி

மண்ணளந்தான் –பாதமே ஏத்தாப் பகல்–மறப்பெல்லாம் ஏதமே என்றல்லால் எண்ணுவனே
திரு உலகு அளந்து அருளின நீர்மையை யுடையவன் திருவடிகளை ஏத்தாத
பகலில் மறப்பெல்லாம்
துக்கமே என்று அல்லது மநோ ரதிப்பானோ

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -61-70–

July 1, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

லோக யாத்ரையை-ஆகாசத்தைப் பார்க்கையே லோக யாத்ரை – அனுசந்திக்கப் புக்காலும்
அவனை முன்னாக அல்லது காண மாட்டாமை சொல்லுகிறது

சிறியாச்சான் –
சப்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதால் போலே
ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீள மாட்டார்கள் –என்று
நம் பிள்ளைக்குப் பணித்தான்

ப்ரஹ்மாதிகளுக்குப் பரம பதத்தில் இருக்கும் இருப்பு அனுபவிக்க நிலம் அன்று
உகந்து அருளின இடங்களிலே அனுபவிக்கும் அத்தனை

(நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள் -காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்
எங்கு இருந்தாலும் உத்பலா விமானம் பார்ப்பாள் பரகால நாயகி
நாமோ அங்கே இருந்தாலும் உத்பலா விமானம் தெரியாது )

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந் நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61

பதவுரை

தாழ் விசும்பின் மீது–வெளியான ஆகாசத்திலே
இலசி கிடக்கும் மீன்–விளங்கா நின்ற நக்ஷத்திரங்களானவை
இறை முறையான்-ஸ்வாமியான முறைமையை யுடைய எம்பெருமான்
ஈஸி ஈஸித்வய -நியமனத்துக்கு உட்பட்ட -சம்பந்தம் உண்டே
மண் அளந்த அந்நாள்–தனது உடைமையான உலகளந்த அக் காலத்திலே
வான் நாடர்–வானுலகத்திலுள்ளாரெல்லாரும்
கூடி–கும்பல் கூடி-ஓன்று சேர்ந்து –
சே அடி மேல்–(அப்பெருமானது) செவ்விய திருவடிகளின் மேல்
மறை முறையால்–வேதங்களிற் சொல்லிய விதிப்படி
தாது இலகு பூ–தாதுக்களாலே விளங்கா நின்றுள்ள புஷ்பங்களை
முறை முறையின்–முறை முறையாக
தெளித்தால் ஒவ்வாதே–தெளிந்தாற் போன்றுள்ளன வன்றோ?

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
ஈஸ்வரனான முறையாலே திரு உலகு அளந்து அருளினவனுடைய திருவடிகளிலே

மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தேவர்கள் வேதம் சொன்ன முறையாலே திரு உலகு அளந்து அருளின திருவடிகளிலே

முறை முறையின் –
முறை முறையாக -வரிசை யடைவே

தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன்
உஜ்ஜ்வலமான புஷ்பங்கள் தெளித்தால் போலே யன்றோ
ஒத்த விசும்பின் மேல் கிடக்கிற நக்ஷத்திரங்கள் இருக்கிறது
(விசும்பு -விஷ்ணு பதம் ஆகாயம் இடம் திருவடி மூன்றுமே பதார்த்தம் )

இறை முறையான் சேவடி மேல்
வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி
முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்
என்று அந்வயம் –

—————

(த்ரிவிக்ரம அனுபவம் பின்னாட்டுகிறது இதிலும் )

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான் குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

பதவுரை

மீன் என்னும் கம்பில்–நக்ஷத்திரங்களாகிற கம்புகளை யுடையதும்
வெறி என்னும் வெள்ளி வேய்–சந்திரனாகிற வெள்ளிக் குழையை யுடையதும்
நக்ஷத்ர பதி சந்திரனும் வெள்ளி சுக்ரனும் -இவர்கள் தலைவர்கள்
இவர்களுக்கு அடங்கி தானே நக்ஷத்திரங்கள்
குழை -வளைந்த கம்பி போல் குடையைத் தங்கி இருக்குமே
வான் என்னம்–ஆகாசமென்கிற பெயருடையதும்
கேடு இலா–ஒருநாளும் அழிவில்லாததுமான
முதலில் படைக்கப்பட்டு இறுதியில் அழிக்கப் படுவதே தானே ஆகாசம்
வான் குடைக்கு–பெரிய குடைக்கு
ஓர் மணி காம்பு போல் நிமிர்ந்து–ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போல வளர்ந்து
மண் அளந்தான் தான்–உலகளந்தவனான பெருமாள்
பின்–மேலுள்ள காலமெல்லாம்
நங்கள் பிணிக்கு–நம்முடைய (ஸம்ஸாரமாகிற) வியாதிக்கு
பெரு மருந்து ஆம்–சிறந்த ஔஷதமாவன்

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய் வான் என்னும் கேடிலா வான்குடைக்கு
தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான்
நக்ஷத்திரங்கள் ஆகிற கம்புகளையும்
உடு பதி என்னுமா போலே
நக்ஷத்ரங்களுக்கு ராஜாவான சந்த்ர சுக்ரர்களைக் குழலாக யுடைத்தான
நித்யமாய்ப் பெருத்த ஆகாசமாகிற குடைக்கு
நீல மணியாலே சமைந்த தொரு காம்பு போலே வளர்ந்து
பூமியை அளந்தான்
(நக்ஷத்ராணாம் அஹம் சசி -கீதை )

நங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்-
திரு வுலகு அளந்து தேவர்களுடைய துக்கத்தைப் போக்கினால் போலே
நம்முடைய ஸம்ஸாரத்துக்கு பரமான ஒவ்ஷதம்

மண் அளந்த அபதானத்துக்குக் குடையும் காம்புமாக்கி நிரூபிக்கிறார்
வெறி -சந்திரன் -தாராபதி
வெள்ளி -சுக்ரன்
வேய் என்று குடையில் அடியிலே இருக்கிற மூங்கில் குழல்

———————

(அவதாரம் முடித்து ஷீராப்தி அடைந்தது போல்
மேகம் திரும்ப வந்தது போல் என்றால் லிங்க குறை வரும்
படி -சொல் அத்யாஹாரம் தருவிக்க வேண்டிய குறையும் உண்டே
ராமனின் தன்மைக்கு மேகத்தின் தன்மை உவமானம் தன்மை படி
பரன் -வாய்மைத்து அஃறிணை கூடாதே வாய்மையன் வசனம் மாறாடிக்கொள்ள வேண்டுமே
மேகம் அவன் மீண்டால் போல் என்று நம்பிள்ளை நிர்வாகம் )

பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-

பதவுரை

பின் துரத்தும் காற்று இழந்த சூல் கொண்டல்–பின்பற்றித் தள்ளுகிற காற்றையிழந்து கடலிலே போய்ச் சேர்ந்த காள மேகமானது
(எப்படி யிருக்கின்றதென்றால்)
திரு செய்ய நேமியான்–வீர வெற்றி லஷ்மி கொண்ட அழகிய சிவந்த சக்கரத்தை யுடையவனும்,
தீ அரக்கி–கொடிய ராக்ஷஸியான சூர்ப்பணகையினது
மூக்கும்–மூக்கையும்
பரு செவியும்–பருத்த காதுகளையும்
அன்று–ஸ்ரீராமாவதாரத்தில்
ஈர்த்த–அறுத்தொழித்தவனுமான
பரன்–ஸ்ரீராமபிரான்
பேர்ந்தும் போய்–(அவதார காரியத்தை முடித்த பின்பு) மறுபடியும் சென்று
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்து–பெரிய திருப்பாற்கடலிலே வந்து சேர்ந்தபடியை ஒத்திருக்கின்றது.

பின்னே துரக்கிற காற்றை இழந்த சூல் கொண்டல்
திரியட்டும் கடலிலே புக்குக் கிடந்த வாய்மையன் -மெய்யான ஒப்பாய் உடையன் என்று

வாய்மைத்து என்றத்தை
வாய்மையின் என்று வசனத்தை மாறாடிக் கொள்ளவுமாம்

வசனத்தை மாறாடுகை –
வாய்மைத்து என்ற நபும்சகத்தை
வாய்மையன் என்று புல்லிங்க மாக்குகை

படி என்று ஸ்வ பாவமாய்
அத்யா ஹார்ய பக்ஷத்தில் லிஙகவ்யத்யயம் வேண்டா –

பருச்செவியுமீர்ந்த பரன் படி என்று அத்யா ஹரித்துக் கொள்ளவுமாம்

ஒன்றுக்கு வசந வ்யத்யயம் பண்ண வேணும்

ஒன்றுக்குப் படி என்று அத்யாஹரிக்க வேணும்

இரண்டு மிறுக்கும் ஒழிய
உபமான உபமேயங்களை மாறாடாதே
நேரே யோஜிக்கப் போம் என்று நம் ஜீயருக்கு (நம்பிள்ளை )விண்ணப்பம் செய்தபடி

பின் திறக்கும் காற்று இழந்து சூல் கொண்டல்
பெருமாள் ராவண விஜயம் பண்ணி
திரியட்டும் திருப்பாற் கடலிலே போய்க் கண் வளர்ந்தால் போலே இருந்தது

(லக்ஷணையால் ராவண வதம் பர்யந்தம் கொள்ள வேண்டும்
தேவ பிரார்த்தனை முடித்த பின்பே திருப்பாற் கடலிலே போய்க் கண் வளர்ந்தார் )

மேகத்தின் ஸ்வபாவம் போலே இருக்கிற பெருமாள் படி என்றால் மிறுக்கு உண்டு
பெருமாளுடைய ஸ்வபாவம் போலே இருக்கிற மேகத்தின் படி என்றால் மிறுக்கு இல்லை என்று கருத்து

மேகமானது
ராவண வதம் பண்ணித் திருப்பாற் கடலிலே அளைந்த வாய்மைத்து -ஸ்வபாவத்தை
யுடைத்து என்று பலிதம் –

—————

(உயர் திண் அணை ஓன்று -நான்கும் பரத்வ ஸ்வரூபம் –
பரத்வே பரத்வம் -தொடங்கி அர்ச்சா பரத்வம் ஈறாக எல்லா திசையிலும் –
மோக்ஷ பிரதத்வம் இருப்பதாலும் பரத்வம்
இதில் விபவ பரத்வம்
இங்கேயே பரத்வ ஸுலப்யாதிகள் அனுபவிக்கலாய் இருக்க பரமபதமும் வேண்டுமோ என்றபடி
மரா மரம் ஏழும் எய்த முதல்வாவோ மரம் இரண்டின் போன முதல்வாவோ -அங்கும் ராமகிருஷ்ண அவதார பரத்வம்
ஜடாயு மோக்ஷம் போன்ற சில இடங்களில் ராமனின் பரத்வம்
வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுள்ளே
அப்பூச்சி காட்டி -பரத்வம் வியக்தம் கிருஷ்ண அவதாரத்தில் )

பரனாம் அவனாதல் பாவிப்பராகில்
உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழு அன்று
எய்தானைப் புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கை தான் தொழாவே கலந்து–64-

பதவுரை

அன்று–முற்காலத்தில்
மரம் ஏழ் எய்தானை–(ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்த ஸால வ்ருக்ஷங்களைத் துளைத்த இராமபிரானென்ன,
புள்ளின் வாய் சீண்டானை–பகாஸுரனது வாயைக் கிழித்தெறிந்த கண்ணபிரானென்ன
இவர்களை நோக்கி
அவன் பரன் ஆம் ஆதல்–‘அந்த இராமபிரானும் அந்த கண்ணபிரானும் (நம்மைப் போன்ற மனுஷ்யரல்லர்;)
ஸாக்ஷாத் பரம புருஷரே யாவர்’ என்கிற விஷயத்தை
உரனால்-தங்களுடைய மனத்தினாலே
பாவிப்பர் ஆகில்–அநுஸந்திப்பர்களே யானால்
(அப்படிப்பட்ட விவேகிகளை)
அமரர் கை-தேவர்களின் கைகளானவை
கலந்து–ஒன்று சேர்ந்து
ஒரு மூன்று போதும்–எப்போதும்
தொழாவே–ஸேவிக்க மாட்டாவோ.

பரன்
மனுஷ்யத்வே பரத்வத்தை அனுசந்தித்தார் ஆகில்
பரம பதம் என்று வேறே ஆஸ்ரயணீய ஸ்தலம் வேணுமோ என்கிறது

உரன் என்று உரஸ்ஸாய் –
அத்தாலே நெஞ்சைச் சொல்லுகிறது

பரன் இத்யாதி
மனஸ்ஸாலே மூன்று போது அவன் பரன் என்று அனுசந்திப்பராகில்
ஆஸ்ரித விரோதி நிரஸனம் பண்ணினவனையே
அபிமானிகளான தேவர்களுடைய கையும் கலந்து தொழும் இறே
அபிமானத்தாலே தங்களோடு ஸஜாதீயனாக புத்தி பண்ணி அநர்த்தப் படுகிறார்கள் இறே

பாவிப்பாராகில் -என்கையாலே
அனுசந்தித்தால் தொழுவர்கள்
அநுஸந்தியாமையாலே தொழார்கள் என்றபடி –

———————–

(துவாதச திருநாமங்கள் வரிசையிலே இப்பாசுரம் -கேசவன் நாராயணன் மாதவன்
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு-பல்லாண்டு பாட -ஆள்செய்ய -கைங்கர்யம் செய்ய தூண்டுகிறார் )

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

பதவுரை

நெஞ்சே-வாராய் மனமே!
கலந்து-நம்மோடு கூடவே யிருந்து
நலியும்–ஹிம்ஸிக்கின்ற
கடு துயரை–கடுமையான துக்கங்களை
மலங்க அடித்து மடிப்பான்–முகம் சிதறப் புடைத்துத் துரத்த வேண்டில்,
விலங்கல் போல்–மலை போன்றவனும்
தொல் மாலை–அநாதி காலமாக நம் மேல் வ்யாமோஹமுடையவனும்
கேசவனை–சிறந்த திருக் குழல் கற்றையை யுடையவனும்
நாரணனை–ஸ்ரீமன் நாராயணனும்
மாதவனை–திருமகள் கேழ்வனுமான பெருமான் விஷயத்திலே
சொல் மாலை–பாசுரங்களாகிற மாலைகளை
எப்பொழுதும்–ஸர்வ காலமும்
சூட்டு–ஸமர்ப்பி.

உடனே வந்து கலந்து நலியா நின்ற அநுபவ விநாஸ்யமான பாபத்தை மலங்க அடித்துத் திரிய விடுகைக்காக
அபேத்யனாய் -(பிளக்க முடியாத -விலங்கல் போல்)
அபரிச்சின்னனாய் -(தொல் மாலை)
பிரசஸ்த கேசனாய் -(கேசவனை)
ஆஸ்ரித வத்ஸலனாய் -(நாரணனை) இருந்த
ஸ்ரீ யபதியை -(மாதவனை)
பரிமளம் மாறாத மாலையை எப்போதும் சூட்டும்படி தன்னைத் தாழ்த்துத் தரும் –

ஸ்ரீ ஸூக்தி -சொல் மாலை –
மற்ற மாலைகளில் நின்றும் வ்யாவ்ருத்தமாக அன்றோ இருப்பது –

(வாடாத மணம் மாறாத மாலை தானே சொல் மாலை
அவனோ பராத்பரன்
நாம் சூட்டும் மாலை போகுமோ என்கிற சங்கைக்கு
தன்னைத் தாழ விட்டு
நாராயணன் கேசவன் மாதவன் ஆனபடியால்
வாத்சல்யம் மிக்கு -அழகு ஈர்க்கும் -பிராட்டி இருக்க ஏற்றுக் கொள்ள வைப்பவளும் அருகில் உண்டே )

—————

(விரோதியைப் போக்குபவன் அன்றோ அவன் –
விரோதிகள் இருக்கவே பாடாமல் கைங்கர்யம் செய்யாமல் இழந்தோம்
அதுக்கும் மேல் இனியவர் போக்யன்
அதுக்கும் மேலே வகுத்த ஸ்வாமி -ப்ராப்யன்
ஆக இங்கும் நாம் கைங்கர்யம் செய்தே ஆக வேண்டும் என்பதுக்கு மூன்று காரணங்கள் )

(ராமன் -திருவாழி -சேருமோ என்னில் -பரத்வம் காட்டாதவன்
தேவேந்திரன் ஐராவதம் இருக்க ரிஷிகள் இடம் போகாதவன்
ஆத்மாநாம் மானுஷம் மணியே தசாரதாத்மஜம் என்பவன் அன்றோ என்னில்
அது இயற்க்கை
எந்த ஆயுதமும் ஸூ தர்சன அம்சம் தானே )

சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-

பதவுரை

நெஞ்சை–ஓ மனமே!
சூடு ஆய நேமியான்–(ஆயுதமாயிருக்கும் மாத்திரமல்லாமல்) அலங்காரமாயுமிருக்கிற திருவாழியை யுடையவனும்
மாட்டே–அவன் பக்கத்திலிருந்து கொண்டே
துயர் இழைத்த–துன்பப் படுத்தின
மாயவனை–ஆச்சர்யனும்
ஈட்ட–திரண்ட
வெறி கொண்ட–பரிமளம் மிக்க
தண் துழாய்–குளிர்ந்த திருத் துழாய் மாலையை யணிந்த
தொல் அரக்கன் இன் உயிரை–வெகு காலமாகத் தீமை செய்து கொண்டிருந்த இராவணனுடைய இனிய உயிரை.
ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு ராவணன் கும்ப கர்ணன் சிசுபாலன் தந்தவக்கரன் -தொன்மையான அரக்கன்
வேதியனை–வைதிகனுமான எம்பெருமானை
அறி கண்டாய்–அநுஸந்தித்திரு;
அது சொன்னேன்–ஒருவர்க்கும் சொல்ல வொண்ணாத அப்படிப்பட்ட இவ் விஷயத்தை உனக்குச் சொன்னேன்.
(ராஜ வித்யை ராஜ குஹ்யம் போல் இங்கும் )

சூட்டாய நேமியான்
விரோதி நிரசனம் பண்ணுகை அன்றிக்கே
அழகுக்குமான திருவாழியை யுடையவன்

தொல்லரக்கன் இன்னுயிரை மாட்டே துயர் இழைத்த மாயவனை –
ராவணன் பேணிப் போந்த உயிரை
அருகே ஸ்ம்ருதி விஷயமாய் நின்று முடித்த
ஆச்சர்ய பூதனை
ஸ்மரன் ராகவா பாணா நாம் விவ்யதே ராக்ஷஸேஸ்வர (விவ்யதே -நினைந்து இருந்து நடுங்கிக் கொண்டே இருந்தானே )
ஆண்ட படை எல்லாம் பெருமாள் என்று எழுத்து வெட்டின திருச் சரங்களை நினைத்துக் கிடந்தது
குலைக்கும் போது அவிகைக்கு உடலானது அத்தனை

(ராம பெயரைக் கண்ணுற்றானே வாலியும் பாணத்தில் )

ஈட்ட வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது
பரிமளம் திரண்ட திருத் துழாயை யுடையனுமாய்
வேதங்களாலேயே ப்ரதிபாத்யனுமானவனை
நெஞ்சே
அறி கண்டாய்
சொன்னேன் உனக்கு அத்தை

1-விரோதி நிரஸனம் பண்ணுவானுமாய்
2-போக்யனுமாய்
3-வகுத்தவனுமானவனை
அறி என்று சொன்னேன்
இது சிலருக்குச் சொல்லுமது அன்று
இத்தைப் புத்தி பண்ணு

———————-

(அங்கு அது நன்று என்று அறிந்து -வானவர் நாடு தானே அது –
அமரர் நித்ய ஸூரிகள் நாடு தருவது மிகவும் எளிதே – –
உமக்குப் பெரு வீடு தந்தோம் என்பான் மகிழ்ந்து –
அத்தை விட்டு
கீழே இரண்டு பாசுரங்களில் சொல்மாலை சூட்ட பல ஹேதுக்களை அருளிச் செய்து
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவர் ஆகையால் அவர் துறையிலே இழிகிறார்
மங்களா சாசனத்தில் ஆழ்கிறார்
நின் புகழில் வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுக்கும் வான் )

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-

பதவுரை

மட நெஞ்சே–அறிவு கெட்ட மனமே!
அதுவோ நன்று என்று–(இப்பூபதியிலிருப்பைவிட) அந்தப் பரமபதாநுபவம் சிறந்ததென்று கொண்டு
அங்கு அவர் உலகு வேண்டில்–அந்தப் பரம பதாநுபவத்தை விரும்புகிற பக்ஷத்தில்
மண் நின்று ஆள்வேன் எனினும்–இந்த மண்ணுலகத்தில் நிலை நின்று ஐச்வரியத்தை ஆள வேணுமென்று விரும்பினாயாகிலும்
கூடும்–அதையும் அவன் எளிதில் அருளக் கூடும்;
அது ஓர் பொருள் இல்லை அன்றே–அதனைக் கொடுப்பது (எம்பெருமானுக்கு) அஸாத்யமான காரியமல்லவே;
அது ஒழிந்து–அந்தப் பரமபதாநுபவத்தை உபேக்ஷித்து விட்டு
கண்ணன்–ஆகவிப்படி உபய விபூதியையும் அளிக்க வல்லவனான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
வாழ்த்துவதே–மங்களாசாஸநம் பண்ணுவதையே
கல்–அப்பஸிக்கக் கடவாய்.

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில் அதுவோர் பொருள் இல்லை
கண் கண்டது ஒழியப் போகை அரிது
இது பொல்லாது என்று -பரம பதம் வேணும் என்று இருக்கில்
அவன் உகப்பதாகையாலே அது தருகையில் அவனுக்குப் பொருள் இல்லை

(கண் காண முடியாத வானவர் நாடு -இதுவோ கண்ணால் காணலாம்
இது -சம்சாரம் பொல்லாது என்று எண்ணி
அவனோ உன் அடியார்க்கு என் செய்வோம் என்றே இருப்பவன் )

அன்றே அது ஒழிந்து மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும்
அது ஒழிய
பூமியை ஆள்வோம் என்று நினைக்கும் அதுவும் தரும்

மட நெஞ்சே
பவ்யமான நெஞ்சே

அவனுக்கு அது தருகையில் குறை இல்லை
நம்முடைய ஆபி முக்யம் அரிது
ஆசைப்பட்டு போகை அரிது
காணானதை ஆசைப் பட்டாலும் தரும் என்றபடி

அது என்கையாலே
அதுக்குப் பிரதி கோடியாய் இது ஸம்ஸாரம்

கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்
ஸூலபனானவனுடைய திருவடிகளைக் கற்றாகிலும் வாழ்த்தப் பார்
அவன் உபய விபூதியும் தந்தாலும்
நீ அத்தை விட்டு அவனை மங்களா ஸாஸனம் பண்ணிப்
போது போக்குவதையே கல் என்றபடி –

(உபய விபூதி அனுபவமும் வேண்டாம் திருநாம சங்கீர்த்தனமே –
இச்சுவை இங்கே இருக்க -அச்சுவை பெறினும் வேண்டா என்கிறார் )

————-

கீழ் அவனுடைய திருவடிகளை வாழ்த்துகை ஒழிய
போக மோக்ஷங்களை வேண்டா என்னும்படி தம்முடைய ஐக்யம் சொல்லுகிறது

(ஐக்யம் -உள்ளத்தில் கலந்தான் என்றபடி
அனைவர் உள்ளமும் இப்படி இருந்தாலும் உணர வேண்டுமே
அவனும் உபய விபூதியும் வேண்டாம்
உமது திரு உள்ளமே வேண்டும் என்கிறான்
பிரதான பாசுரம் இதுவே
பெரிய வராக இது அன்றோ ஹேது
அவன் தம்மிடம் வந்து மன்னி பொருந்தி -தீர்த்தம் ப்ரசாதியாமல் -இருக்கையாலே
அவனுக்கும் நமக்கும் உண்டான ஐக்யம்
இப் பாட்டில் சொல்லுகிறது என்றபடி )

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–68-

பதவுரை

வெல்ல நெடியான்–மிக வுயர்ந்தவனும்
நிறம் கரியான்–நிறத்தால் கரியவனுமான கண்ண பிரான்
உள் புகுந்து–உள்ளே பிரவேசித்து
அடியேனது உள்ளத் தகம் நீங்கான்–அடியேனது உள்ளத்தை விட்டு நீங்குகின்றனில்லை;
(ஆகையாலே)
கல்லும்–திருவேங்கட மலையும்
கனை கடலும்–கோஷிக்கின்ற திருப்பாற்கடலும்
வைகுந்தம்–வைகுண்டமென்கிற
வான் நாடும்–வானுலகமும்
புல்லென்று ஒழிந்தன கொல்–அல்பமாய் விட்டன போலும்;
புல் மண்டி -புல்லிய -தாழ்ந்த என்றும்
ஏ பாவம்–ஐயோ பாவம்!பாபம் வர ப்ரசக்தியே இல்லையே என்ன வியப்பு என்றவாறு

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல்லென்று ஒழிந்தன கொல்
திருமலையை கல் என்றும்
திரு அனந்தாழ்வானை பாம்பு (நாச்சியார் -10-3)என்றும்
தன்னை மாணியாய் மண் அளந்தாய் என்றும்
சொல்லலாம் படி உறவுடைமை இருக்கிறபடி

(வெற்பு என்று வேங்கடம் பாடினேன் என்பார்களே
அடே போடா வா என்னலாமே நெருக்கமாக இருப்பவரை )

திரு மலையும் திருப்பாற் கடலும் பரமபதமும் என்கிற தேசங்கள்
உள வாகவுமாம்
அளவாகவுமாம்
இப்படி சில விசாலமாக பிரதேசங்கள் இருக்கவுமாம் -என்றும் அர்த்தம்

அவற்றிலே தனக்கு ருசி யுண்டாகவுமாம் தோற்றும் இருக்கிறிலன் –
என்னோடே கலந்த பின்பு

ஸுபரி ஐம்பது பெண்களோடே (மாந்தாதாவுடைய பெண்கள் )கலந்து போருகிற இடத்தில்
தன் மக்களைத் தனித்தனியே -பிதா உனக்கு குறை இல்லையே என்று கேட்க
என்னுடன் பிறந்தாரை ஒருத்தரையும் அறியாதே எப்போதும் என்னோடே இருக்கும் இதுவே வெறுப்பு
வேறே ஒரு குறையில்லை என்று
சொன்னால் போலே
இவரும் தம்முடைய எல்லா ஸ்தானங்களையும் மறந்து
என்னை அல்லது அறிகிறிலர் என்கிறார்

புல் என்று
புல்லியதாய் -குறையாக நினைத்து என்றபடி

ஏ பாவம்
பாபத்தினுடைய பிராசர்யத்தைச் சொல்லுகிறது
வி லஷிதார்த்தமாக ஒரு ஸப்தத்தைப் பிரயோகியாமையாலே
(பாபம் சப்தம் சேராதே -ஹந்த- வியப்பு என்றபடி )

வெல்ல நெடியான்
கடக்க நெடியான்
இனி நெடியான் இல்லை என்னும்படி நெடியவன்

வெல்ல –
ஜெயிக்க எண்ணுதல் –
மிகவும் என்னுதல்

நிறம் கரியான்
குணங்கள் இல்லை என்னிலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவன்

உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
அடியேனுடைய ஹ்ருதயத்தினுள்ளே நீங்குவானாய் இருக்கிறிலன்
புறம் படி இவனைக் கிடையாது என்னும்படி இரா நின்றான்

(நீங்கினால் தாரகம் இல்லை என்று இருப்பவன்
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம் கூடு பூரிக்கும்
நாராயனோ வசதி சங்கு சக்ர )

—————–

இவன் பண்ணின ஐக்யாந்தத்தாலே
சரீர ஆரம்பத்துக்கு அடியான பாபமும் போயிற்று என்கிறார்

(யதோ வாசோ நிவர்த்தந்த -அவனது சீர்க்கடலையுமே அடக்கினேன் –
அவனே புகுந்து அனுபவிப்பிக்கிறானே )

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினை யாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க் கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-

பதவுரை

வல் வினையர் ஆவார்–கடுமையான பாவங்களானவை
(தங்களுடைய குடி யிருப்பை யிழந்தமையாலே)
அகம் சிவந்த கண்ணினர் ஆய்–(கோவத்தினால் உள்ளே சிவந்த கண்களையு டையனவாய்
முக்கி–வருந்தி
முகம் சிதைவராம் அன்றே–முகம் வாடியிருக்கின்றன வல்லவோ?
மிகும்–எல்லாரிலும் மேற்பட்டவனான
திருமால்–திருமாலினுடைய
சீர் கடலை–கல்யாண குணங்களாகிற கடலை
உள் பொதிந்த–உள்ளே அடக்கிக் கொண்ட
சிந்தனையேன் தன்னை–சிந்தனையை யுடையேனான என்னை
செவ்வே–செவ்வையாக
அடர்ந்து–நெருக்கி
ஆர்க்கு அடல் ஆம்–யாரால் உபத்ரவிக்க முடியும்? (ஒருவராலும் என்னைத் திரஸ்கரிக்க முடியாது.)

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினை யாராவார் முகம் சிதைவராம் அன்றே முக்கி
முதலியாராய் வர்த்தித்த நம் பாபத்தினார்
கோபத்தினால் சிவந்த கண்ணை யுடையராய்
செருக்கராய்த் திரிந்த நாம் இப்படி படுவதோ என்று முக்கி முகம் கீழ்ப்பட்டு
இழப்புண்டு சிதைந்த முகமுமாய்த் திரியும் அத்தனை இறே

மிகும் திரு மால் சீர்க் கடலை யுள் பொதிந்த
குணா நாமா கரோ மஹான் -என்று
அபரிச்சின்ன விஷயத்தைப் பரிச்சின்னம் ஆக்கினேன்
(கிஷ்கிந்தா தாரை வார்த்தை குணங்களுக்கு எல்லாம் இருப்பிடம் என்கிறாள்
உள் பொதிந்த என்கையாலே பரிச் சின்னம் ஆக்கினேன் என்கிறது )

சிந்தனையேன் தன்னை ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து
இனி என்னைப் பரிச்சின்னர்க்குப் புகுந்து நலியப் போமோ

(செவ்வே அடர்த்து ஆர்க்கு அடலாம் –
என்னை ஒருத்தருக்கும் அடர்க்கப் போகாது என்றபடி )

————

(ரக்ஷித்தாலும் விட்டாலும் உன்னை விடேன் -என்று அநந்யார்ஹத்வம் அருளிச் செய்கிறார் இதில்
வித்துவக்கோடு அம்மான் பதிகம் போல்
எதிரிகளை அதற்கும் -தரிசன மாத்திரத்தாலே அழியச் செய்யும் திரு அபிஷேகம் –
கண்ட மாத்திரத்திலே இவனே தேவ தேவன் -மூன்று முடிக்கு உரிய பேர் அரசு –
அழகால் ஈர்க்கும் –
ராஜாதி ராஜன் ஸர்வேஷாம் என்பதைக் காட்டும் –
ஸ்வாதந்த்ர அபிமானிகளை அழிக்கும் )

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே யினி–70-

பதவுரை

அடர் பொன் முடியானை–அடர்ந்த பொன் மயமான திருவபிஷேகத்தை யுடையவனும்
ஆயிரம் பேரானை–ஸஹஸ்ர நாமங்களால் பிரதிபாதிக்கப் படுபவனும்
சுடர்கொள் சுடர் ஆழியானை–(சந்திர ஸூர்யன் முதலியன) சுடர்களை யெல்லாம் வென்று விளங்குகின்ற
திருவாழியை யுடையவனுமான எம்பெருமானை.
இடர் கடியும் மாதா பிது ஆக–துக்கங்களைப் போக்க வல்ல தாயும் தந்தையுமாக
எனது உள்ளே வைத்தேன்–என்னுடைய ஹ்ருதயத்திலே இருத்தினேன்;
இனி–இனி மேல்
யாது ஆகில் யாதே–(எனக்கு) என்ன நேர்ந்தாலென்ன?

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
தர்சநீயமாய்
ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை யுடையவனை
இவ் வழகுக்கு வாசகமான அநேகம் திரு நாமங்களை யுடையவனை

(ஸ்வரூப ப்ரதிபாத்யமான திரு நாமங்களை விட ரூப
அழகுக்கு ப்ரதிபாத்யமான திரு நாமங்கள் ஆழ்வாருக்கு உகந்தது
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று –
ஸுலப்ய ஸ்ரீ யாபதித்தவம் பரத்வம் ஒவ் வொன்றுக்கும் சஹஸ்ர நாமங்கள் உண்டே )

அடர் –
எல்லாரையும் அடர்க்கிற முடி என்றபடி

சுடர் கொள் சுடர் ஆழியானை
விரோதி நிரசனத்துக்கு அன்றிக்கே
அழகுக்குமான திருவாழியை யுடையவனை

இடர் கடியும் மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே யாதாகில் யாதே யினி
சரீரத்தைப் பூண் கட்டி இடரை விளைக்கும் மாதா பிதாக்கள் இறே அல்லாதார்
இவன் சரீர பரிக்ரஹம் பண்ணுகைக்கு நோன்பு நோற்குமவர்கள் இறே அவர்கள்

யாதாகில் யாதேயினி
இனி பாபம் தன்னை அனுபவிக்கில் எனக்கு வந்தது என்
பாப நிமித்தமாக பயம் இல்லை என்றபடி –

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்