Archive for April, 2021

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-4–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 25, 2021

தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்
பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மாமதீ
நின்முகம் கண்ணுள வாகில் நீ இங்கே நோக்கிப் போ–1-4-1-

பதவுரை

இள–இளமை தங்கிய
மா மதி–அழகிய சந்திரனே!
தன் முகத்து–தன் முகத்தில் (விளங்குகிற)
சுட்டி–சுட்டியானது
தூங்க தூங்க–பல காலும் தாழ்ந்து அசையவும்
பொன் முகம்–அழகிய முகத்தை யுடைய
கிண் கிணி–சதங்கைகளானவை
ஆர்ப்ப–கிண் கிண் என்றொலிக்கவும்
தவழ்ந்து போய்–(முற்றத்தில்) தவழ்ந்து போய்
புழுதி–தெருப்புழுதி மண்ணை
அளைகின்றான்–அளையா நிற்பவனும்
என் மகன்–எனக்குப் பிள்ளையுமான
கோவிந்தன்–கண்ண பிரானுடைய
கூத்தினை–சேஷ்டைகளை
நின் முகம்–உன் முகத்தில்
கண் உள ஆகில்–கண் உண்டேயானால்
நீ இங்கே நோக்கி போ–நீ இங்கே பார்த்துப் போ.

விளக்க உரை

சந்திரா! எனது குழந்தையாகிய இக்கோபாலகிருஷ்ணன் தனது நெற்றியிலே சுட்டி அசையவும்
அரையிலே சதங்கை கிண்கிண் என்று சப்திக்கவும் தவழ்ந்து வந்து புழுதி யளைகின்றான்;
இந்த விளையாட்டைக் கண்டால் தான் நீ கண் படைத்த பயன் பெறுவாய்; ஆகையாலே இவ்விளையாட்டைக் காண்கிற
வியாஜமாக நீ இங்கே வந்து இக் குழந்தையின் கண்ணிலே தென்படுவாயாக என்று
யசோதைப் பிராட்டி சந்திரனை யழைக்கிறாள்.

—————-

என் சிறுக் குட்டன் எனக்கோரின்னமுது எம்பிரான்
தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோடு ஆடலாட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-2-

பதவுரை

மா மதீ !
எனக்கு–(தாயாகிய) எனக்கு
ஓர் இன் அமுது–விலக்ஷணமாய் மதுரமாயிருப்பதொரு அம்ருதம் போன்றவனாய்
எம்பிரான்–எனக்கு உபகாரகனான
என் சிறுக் குட்டன்–என் மகனான கண்ணன்
தன் சிறு கைகளால்–தன்னுடைய சிறிய கைகளால்
காட்டிக் காட்டி–பலகாலும் (உன்னையே) காட்டி
அழைக்கின்றான்–அழையா நின்றான்;
அஞ்சனம் வண்ணனோடு–மை போன்ற வடிவை யுடைய இக் கண்ண பிரானோடு
ஆடல் ஆட–விளையாட
உறுதியேல்–கருதினாயாகில்
மஞ்சில்–மேகத்திலே
மறையாது–சொருகி மறையாமல்
மகிழ்ந்து ஓடி வா–உகந்து ஓடி வா.

விளக்க உரை

சிறு குழந்தைகளை மாமா முதலாயினோர் மாலைப்பொழுதில் இடுப்பிலெடுத்துக் கொண்டு
“சந்த மாமா! வா வா வா’’ என்று சொல்லக் கற்பித்துக் கையால் அழைக்கும்படி செய்வதும் உலக வழக்கமாதலால்
அப்படியே கண்ணபிரானும் அழைக்கிறானென்க.
சந்திரன் மேகத்தில் மறைந்து போவது இயல்பாதலால் அப்படி மறைந்து போகவேண்டா வென்கிறாள்.
மறையாதே என்பதை எதிர்மறை வினைமுற்றாகவுங் கொள்ளலாம்.

—————

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா–1-4-3-

பதவுரை

அம்புலி–சந்த்ரனே! (உன்னுடைய)
ஒளி–ஒளி பொருந்திய
வட்டம்–மண்டலமானது (எப்போதும்)
சுற்றும் சூழ்ந்து–நாற்புறமும் சுழன்று
எங்கும்–எல்லாத் திசைகளிலும்
சோதி பரந்து–ஒளி நிரம்பி யிருக்குமாறு
எத்தனை செய்யிலும்–இப்படி உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும்
என் மகன்–என் மகனான கண்ண பிரானுடைய
முகம்–திருமுக மண்டலத்துக்கு
நேர் ஒவ்வாய்–பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்;
வித்தகன்–ஆச்சர்யப் படத் தக்கவனாய்
வேங்கடம்–திருவேங்கடமலையிலே
வாணன்–நின்றாக வாழுமவனான இக்கண்ணபிரான்
உன்னை விளிக்கின்ற–உன்னை அழைக்கிற
கை தலம்–திருக் கைத் தலத்தில்
நோவாமே–நோவு மிகாத படி
கடிது ஓடி வா–சீக்கிரமாய் ஓடிவா.

விளக்க உரை

“மாமதி! மகிழ்ந்தோடிவா’’ என்று அழைக்கச் செய்தேயும் சந்திரன் ஓடிவரக் காணாமையாலே
‘அழகில் தன்னோடொப்பார் ஒருவருமில்லை’ என்கிற கர்வத்தினால் இவன் வாராமலரிருக்கிறான் என்று கொண்டு
அந்தச் செருக்கு அடங்கப் பேசுகிறாள். சந்திரா! நீ இப்போது நாள் தோறும் தேய்வதும் வளர்வதுமாய் இருக்கின்றாய்;
களங்கமுடையனாயும் இருக்கின்றாய்; இப்படி இல்லாமல் நீ எப்போதும் க்ஷயமென்பதே இல்லாமல் பூர்ண மண்டலமாகவே
இருந்து களங்கமும் நீங்கிச் செயற்கை அழகு செய்துகொண்டு விளங்கினாலும் என் குழந்தையினுடைய முகத்திற்குச் சிறிதும் ஒப்பாக மாட்டாய்.
ஆகையாலே நாமே அழகிற் சிறந்துள்ளோம் என்கிற செருக்கை ஒழித்து உன்னைக் காட்டிலும் மிக அழகிய முகமண்டலத்தை
உடையவனான இவன் உன்னைக் கைகளால் அழைப்பதைப் பரம பாக்யமாக அநுஸந்தித்து விரைந்து ஓடிவா;
வாரா விட்டால் வெகுகாலமாக உன்னை அழைக்கிற இக் குழந்தைக்குக் கை நோவு ஒன்றே மிகும்;
இவ்வபசாரத்தை நீ அடைந்திடாதே என்றவாறு.

அம்புலி என்று சந்திரனுக்குப் பெயர். வாழ்நின் என்பது “வாணனென”” மருவிற்று.

————–

சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்க தறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலடனல்லையேல் வா கண்டாய்–1-4-4-

பதவுரை

சந்திரா—சந்திரனே!
சக்கரம்–திருவாழி ஆழ்வானை
கையன்–திருக்கையிலணிந்த கண்ணபிரான்
ஒக்கலை மேல்–(என்) இடுப்பின்மேல்
இருந்து–இருந்துகொண்டு
தட கண்ணால்–விசாலமான கண்களாலே
மலர் விழித்து–மலரப் பார்த்து
உன்னையே–உன்னையே
சுட்டிகாட்டும்–குக்ஷ்த்துக் காட்டுகின்றான்;
தக்கது–(உனக்குத்) தகுதியானதை
அறிதியேல்–அறிவாயாகில் (அன்றியும்)
மக்கள் பெறாத–பிள்ளை பெறாத
மலடன் அல்லையேல்–மலடன் அல்லையாகில்
சலம் செய்யாதே–கபடம் பண்ணாமல்
வா கண்டாய்–வந்து நில்கிடாய்.

விளக்க உரை

சந்திரா! இவனை வெறுங்குழந்தையாக நினைத்து அலட்சியஞ் செய்திடாதே; இவன் சக்கரக் கையன் காண்;
நீ வராமல் இருப்பாயானால் உன்மேல் சக்கரத்தைப் பிரயோகித்து உன்னைத் தண்டித்து விடுவன் என்னும்
கருத்தை யடக்கி சக்கரக் கையன் என்கிறாள்.
“ஆழி கொண்டுன்னை யெறியும் ஐயுறவில்லை காண்” என்று மேலே ஸ்பஷ்டமாகவுங் கூறுவள்.

மக்கள் பெறாத மலடனல்லையேல் வா = குழந்தையை நீ இப்படி துடிக்க விடுவது தகுதியன்று; பிள்ளை பெறாதவர்களன்றோ பிள்ளையின் வருத்தமறியார்கள்; அப்படி நீ மலடனல்லையே; பிள்ளைகளை வருத்தப்படுத்தக்கூடாதென்பது உனக்குத் தெரியுமே என்றவாறு.

———–

அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுறா
மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல்
புழையில வாகாதே நின் செவி புகர் மாமதீ!–1-4-5-

பதவுரை

புகர்–தேஜஸ்வியாய்
மா–பெருமை பொருந்தியிரா நின்ற
மதீ–சந்திரனே!
அழகிய வாயில்–அழகிய திருப் பவளத்திலே
ஊறல்-ஊறுகின்ற ஜலமாகிய
அமுதம்–அம்ருதத்தோடே கூடி
தெளிவுறா–உருத் தெரியாததாய்
மழலை முற்றாத–மழலைத் தனத்துக்குள்ள முற்றுதலுமில்லா திருக்கிற
இளஞ் சொல்லால்–இளம்பேச்சாலே
உன்னை கூவுகின்றான்;
குழகன்–எல்லோரோடும் கலந்திருப்பவனாய்
சிரீதரன்00ச்ரிய: பதியான இக் கண்ண பிரான்
கூவக் கூவ-(இப்படி) பலகாலுமழையா நிற்கச் செய்தோம்
நீ போதியேல்–நீ போவாயேயானால்
நின் செவி–உன் காதுளானவை
புழை இல–துளை யில்லாதவையாக
ஆகாதே–ஆகாதோ?
(ஆகவே ஆகும்)

விளக்க உரை

சந்திரா! உன்னைக் கூவி அழைக்கிற இக் குழந்தையின் இனிய மழலைச் சொல் உன் காதில் விழவில்லையா? செவிடனா நீ?
உன் காதில் துளையில்லையோ? இக்குழந்தை இனிய முற்றாமழலைச் சொல்லினால் உன்னை அழைக்கவும் நீ
காது கேளாதாரைப்போல போய்விட்டாயானால் நீ காது படைத்தது பயனற்றதாகுமன்றோ என்கிறாள்.
இப்படிப்பட்ட இளஞ்சொல்லைக் கேட்டு உடனே ஓடி வருதலே செவிபடைத்ததற்குப் பலன் என்று காட்டினவாறு.
மழலை – எழுத்துகள் ஸ்பஷ்டமாகத் தெரியாதே மதுரமாயிருக்குமது.
மழலை முற்றாத இளஞ்சொல் என்றது – மழலைத் தனத்துருக்குள்ள முற்றுதலுமில்லாத மிக இளஞ்சொல் என்றபடி.
குழகன் – “கொடுத்தார் கொடுத்தார் முலைகளெல்லா முண்டு எடுத்தாரெடுத்தாரோடெல்லாம் பொருந்தி யிருக்கும்
கலப்புடையவன்” என்பது வியாக்கியான வாக்கியம்.

————–

தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்
கண் துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப் பாலறா கண்டாய் உறங்கா விடில்
விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா–1-4-6-

பதவுரை

விண் தனில்–ஆகாசத்திலே
மன்னிய–பொருந்திய
மா மதீ!–பெருமை தங்கிய சந்திரனே!
தண்டொடு–‘கௌமோதகி’ என்னும் கதையையும்
சக்கரம்–திருவாழி யாழ்வானையும்
சார்ங்கம்–ஸ்ரீசார்ங்கமென்னும் வில்லையும்
ஏந்தும்–ஏந்தியிரா நின்றுள்ள
தட–விசாலமான
கையன்–கைகளை யுடைய இக் கண்ண பிரான்
கண் துயில் கொள்ள கருதி–திருக்கண் வளர்ந்தருள நினைத்து
கொட்டாவி கொள்கின்றான்–கொட்டாவி விடாநின்றான்.
உறங்காவிடில்–(இப்போது இவன்) உறங்காதொழிந்தால்
உண்ட–அமுது செய்யப் பட்டிருக்கிற
முலைப்பால்–ஸ்தந்யமானது
அறா–ஜரிக்கமாட்டாது; ஆகையால்
விரைந்து ஓடிவா

விளக்க உரை

உலகத்தில் மனிதர்களுக்கு அதிகமாகக் கொட்டாவி வந்தால் உடனே உறக்கம் வருமென்பது அநுபவஸித்தம் ஆதலால்
“கண்டுயில் கொள்ளக்கருதிக் கொடடாவி கொள்கின்றான்” என்கிறாள்.
இவன் இப்போது கொட்டாவி விடுகிறபடியாலே இனித் தூங்கிவிடுவன்; தூங்கா விட்டாலோ உண்ட முலைப்பால் ஜரியாது;
ஆதலால் இவன் உறங்கிப் போவதற்கு முன்னமே விரைந்து ஓடிவா என்றழைக்கிறாள்.
முதலடியில் மூ­ன்று ஆயுதங்களைச் சொன்னது பஞ்சாயுதங்கட்கும் உபலக்ஷணம்.
இவ் வாயுதங்களின் அழகை ஸேவித்துப் போக வேண்டுவது உனக்கு உரியதேயன்றி இவற்றின் பராக்கிரமத்திற்கு இலக்காகி
முடிந்து போகப் பாராதே என்றுணர்த்தியவாறு.

அறா – அறாது; ஜரியாது.

—————————-

பாலக னென்று பரிபவம் செய்யேல் பண்டொரு நாள்
ஆலி னிலை வளர்ந்த சிறுக்கனவன் இவன்
மேலெழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-7-

பதவுரை

மா மதீ!
பாலகன் என்று–‘இவனொரு சிறு பயலன்றோ’ என்று
பரிபவம் செய்யேல்–திரஸ்கரியாதே;
பண்டு ஒருநாள்–முன்பொரு காலத்திலே
ஆலின் இலை–ஆலந்தளிரிலே
வளர்ந்த–கண் வளர்ந்தவனாகப் புராணங்களிலே சொல்லப் படுகிற
சிறுக்கனவன்–அந்த சிறுப்பிள்ளையானவன்
இவன்–இவனாகிறான் காண்;
வெகுளும் ஏல்–(இவன்) சீறினானாகில்
மேல் எழப் பாய்ந்து–(உன் மேல்) ஒரு பாயலாகப் பாய்ந்து
பிடித்துக் கொள்ளும்–(உன்னைப்) பிடித்துக் கொள்வான்;
மாலை–இம் மஹா புருஷனை
மதியாதே–அவமதியாமல்
மகிழ்ந்து ஓடிவா–.

விளக்க உரை

சந்திரா! ஓயாமல் உன்னை அழைக்கச் செய்தேயும் நீ வாராமையினால் இவனொரு சிறுபிள்ளை தானே இவனுக்காக
ஓடி வர வேணுமோ என்று அலட்சியமாக நினைக்கிறாய் என்பது தெரிகின்றது;
இவனைச் சிறியவன் என்று நீ குறைவாக நினைக்கலாகாது; இவன் முன்னொரு காலத்தில் உலகங்களை எல்லாம்
பிரளயங்கொள்ளாதபடி வயிற்றிலே வைத்துக் கொண்டு சிறு பசுங்குழந்தையாய் இருந்தவன்காண்;
இப்படிப்பட்ட இவனை நீ அலட்சியஞ் செய்தால் இவன் உன்மேற் கோபங்கொண்டு பாய்ந்தெழுந்து உன்னைப் பிடித்துக் கொள்ளவுங் கூடும்;
ஆகையால் இவனை அவமதியாமல் உடனே விரைந்தோடி வா என்கிறாள்.

பாலகன். பரிபவம் – வடசொற்கள். “பிடித்துக் கொள்வன்” “வெகுள்வன்” எனப் பிரயோகிக்க வேண்டுமிடத்து
பிடித்துக்கொள்ளும் என்றும் வெகுளும் என்றும் செய்யு மென்முற்று வந்தன.

——————

சிறியனென்று என்னிளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலி யிடைச் சென்று கேள்
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண்
நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்–1-4-8-

பதவுரை

நிறை மதி–பூர்ண சந்திரனே!
என் இள சிங்கத்தை–எனக்குச் சிங்கக்குரு போன்ற கண்ணபிரானை
சிறியன் என்று–(உபேக்ஷிக்கைக்கு உறுப்பான) சிறுமையை யுடையவனாக நினைத்து
இகழேல்–அவமதியாதே;
சிறுமையில்–(இவனுடைய) பால்யத்தில் நிடந்த
வார்த்தையை–செய்கையை
மாவலி இடை சென்று கேள்–மஹாபலியிடம் போய்க் கேட்டுக்கொள்;
(இப்படி யுள்ளவன் விஷயத்தில்)
சிறுமை பிழை கொள்ளில்–சிறுமை நினைத்தலிது மஹாபாரதம் என்று நினைத்தாயாகில்
(அப்போது) நீயும்;
உன் தேவைக்கு–(அஜன் விஷயத்தில்) நீ பண்ணக் கூடிய அடிமைக்கு
உரியை–தகுந்தவனாவாய் ;
(அதெல்லாமப்படி நிற்க;)
நெடு மால்–ஸர்வ ஸ்மாத் பரனான இவன்
விரைந்து உன்னை கூவுகின்றான்
(‘மகிழ்ந்து ஓடி வா’ என்று வருவிக்க. )

விளக்க உரை

சந்திரா! என் குழந்தையை ‘மற்றுள்ள ஊர்ப் பிள்ளைகளைப் போலே இவனும் ஒரு சிறியவன்தானே’ என்று
இகழ்ச்சியாக நினைக்கிறாய் போலும்;
அப்படி நினையாதே; இவன் முன்பொருகால் மாணிக்குறளுருவாய் மாவலியிடஞ் சென்று செய்த காரியங்களை
அந்த மஹாபலியையே கேட்டுத் தெரிந்துகொள்; மிகப்பெரியவனான இவனைச் சிறியவனென்று நினைத்து அலட்சியஞ் செய்தவிது
மஹத்தான அபசாரம் என்று தாடைமேல் அறைந்து கொள்வாயாகில் பிறகுதான் நீ இவனருகில் வந்து
ஏதேனும் அடிமை செய்வதற்கு யோக்யதை பெறுவாய்.
“சிறுமையின் வார்த்தையை” என்றவிடத்து வார்த்தை என்றது வாய்ச்சொல் என்றபடியன்று; நடவடிக்கை என்றபடி.
“வாத-வூவதி:வதெ: = வார்த்தா ப்ரவ்ருத்திர் வ்ருத்தாந்த:” என்பது அமரகோசம்.
“மாவலியிடைச் சென்று கேள்” என்றதன் கருத்தாவது மாவலியின் கொழுப்பை யடக்கின கதையைக் கொண்டே
நீ அவனது பெருமையை அறுதியிடலாமென்க.

—————————–

தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய
பேழை வயிற்றெம் பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான்
ஆழி கொண்டு உன்னை யெறியும் ஐயுற வில்லை காண்
வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா–1-4-9-

பதவுரை

மா மதீ!;
தாழியில்–தாழியிலே (சேமித்திருக்கிற)
வெண்ணெய்–வெண்ணெயை
தட–பெரிதான
கைஆர–கை நிறைய (அள்ளி)
விழுங்கிய–அமுது செய்த
பேழை வயிறு–பெரு வயிற்றை யுடையவனான
எம்பிரான்–என் கண்ணபிரான்
உன்னை கூவுகின்றான்;
(இப்படி அழைக்கச் செய்தேயும் நீ வாராதிருந்தால் உன் தலையை அறுக்கைக்காக)
ஆழி கொண்டு–திருவாழியாலே
உன்னை எறியும்–உன்னை வெட்டி விடுவேன்;
ஐயுறவு இல்லை–ஸம்சயமேயில்லை;
(இதில் நின்றுந்தப்பி)
வாழ உறுதியேல்–வாழக்கருதினாயாகில்
மகிழ்ந்து ஓடிவா

விளக்க உரை

சந்திரா! இவன் உன்னை விரும்பி அழைக்கின்றவிது வெண்ணெயை வாரி விழுங்கின செய்திபோலே ஆசையின்
கனத்தினாலானது என்னுங்கருத்துப்பட முன்னடிகளருளிச் செய்தபடி. அவ் வெண்ணெய்த் தாழியை இவனுக்கு எட்டாதபடி வைத்தால்
கல்லை விட்டெறிந்து அந்தத்தாழியை உடைப்பதுபோல நீயும் வாராதிருந்தால் இவன் சக்ராயுதத்தை உன்மீது பிரயோகித்து
உன் தலையையறுத்திடுவான்; இதில் கொஞ்சமேனும் ஸந்தேஹமில்லை;
இப்படி இவனுடைய நிக்ரஹத்துக்கு இலக்காகி முடிந்து போகாமல் பிழைத்திருக்க விரும்புவாயாகில்
பெருந்தன்மையாய் வந்துவிடு என்பது பின்னடிகளின் கருத்து.

————–

மைத்தடங் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை
எத்தனையும் சொல்ல வல்ல வர்க்கு இட ரில்லையே–1-4-10-

பதவுரை

மை–மையணிந்த
தட–விசாலமாயிராநின்ற
கண்ணி–கண்களை யுடையளான
அசோதை–யசோதையானளவள்
தன் மகனுக்கு–தன் மகனான கண்ணனுக்கு
ஒத்தன சொல்லி–நினைவுக்கும் சொலவுக்கும் சேர்ந்திருப்பவற்றைச் சொல்லி
உரைத்த–(சந்திரனை நோக்கிச்)சொன்ன
இவை மாற்றம்–இப் பாசுரத்தை
ஒளி–ஒளி பொருந்திய
புத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தவராய்
வித்தகன்–(மங்களாசாஸநி) ஸமர்த்தரான
விட்டு சித்தன்–பெரியாழ்வாராலே
விரித்த–விரித்து அருளிச் செய்யப்பட்ட
தமிழ்–த்ராவிட பாஷாரூபமான
இவை–இப் பாசுரங்கள் பத்தையும்
எத்தனையும்–ஏதேனுமொருபடியாக
சொல்ல வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
இடர் இல்லை–துன்பமொன்றுமில்லை.

விளக்க உரை

யசோதைப் பிராட்டியானவள் சந்திரனை நோக்கித் தன்மகனுடைய கருத்துக்கு இணங்கின வார்த்தைகளை
(‘சந்திரா! வா’ இத்யாதிகளைச்) சொல்லி அச்சமுறுத்தியும் புகழ்ந்தும் பேசின பாசுரங்களை நான்
அவளுடைய பாவனைகொண்டு பேசினேன்; இப்பாசுரங்களை எவ்விதமாகவாவது வாய்விட்டுச் சொல்லவல்லவர்கட்குத்
துன்பமெல்லாம் நீங்கி ஆநிந்தம் விளையுமென்று – இத் திருமொழிகற்றார்க்குப் பலன்சொல்லித் தலைகட்டினாராயிற்று.
நான்காடியில் எத்தனையும் என்றது – யதாசக்தி என்றபடி.

—–

அடிவரவு – தன் என் சுற்றும் சக்கரம் அழகிய தண்டு பாலகன் சிறியன் தாழி மை உய்ய.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-3–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 24, 2021

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!–1-3-1-

பதவுரை

மாணிக்கம்–மாணிக்கத்தை
கட்டி–(இரண்டருகும்) கட்டியும்
இடை–நடுவில்
வயிரம்–வயிரத்தை
கட்டி–கட்டியும்
ஆணிப் பொன்னால்–மாற்றுயர்ந்த பொன்னால்
செய்த–செய்யப்பட்ட
வண்ணம்–அழகிய
சிறு தொட்டில்–சிறிய தொட்டிலை
பிரமன்–சதுர்முகனானவன்
பேணி–விரும்பி
உனக்கு–உனக்கு
விடு தந்தான்–அனுப்பினான்
மாணி குறளனே–ப்ரஹம்சாரி வாமநாவதாரம் பண்ணின கண்ணனே!
தாலேலோ!
வையம் -உலகங்களை
அளந்தானே–(த்ரிவிக்ரமனாய்) அளந்தவனே!
தாலேலோ!

விளக்க உரை

திவ்யமான தொட்டிலைப் பிரமன் கொணர்ந்து ஸமர்ப்பித்தானென்கிறாள்.
மாணிக்கம் – நவரத்நங்களுள் ஒன்று : இது செந்நிறம் உடையது;
(நூல்களில் கருமாணிக்கமென வருதல் இல் பொருளுவமையாம்).
ஆணிப்பொன் – மாற்றறிதற்குக் கொள்ளும் உயர் தரப் பொன்;
இதுக்கு மேலே மாற்றில்லை யென்னும்படியான சிறந்தபொன் என்றுரைப்பர்.
தால் ஏல் ஓ= தால் – ‘தாலு’ என்ற வட சொல் விகாரம், தாடையென்றுபொருள்; ஏலே ஓ=அசைச்சொற்கள்;
குழந்தைகளைத் தொட்டிலிவிட்டுப் பெண்கள் ‘உளு உளு உளு ஆயீஇ! என்று உள்தாடையை நாவாலே ஒலித்துச்
சீராட்டுதலைத் ‘தாலேலோ’ என்று வழங்குதல் மரபு. மாணிக்கம், வயிரம், வண்ணம், பிரமன் – வட சொல் விகாரங்கள்.

———

உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ
இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்;
உடையாய் அழேல் அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!-1-3-2-

பதவுரை

உடை ஆர்–திருவரைக்குச் சேரும்படியான
கனம் மணியோடு–பொன் மணியையும்
இடை–நடு நடுவே
விரவி–கலந்து
கோத்த–கோக்கப் பட்ட
எழில்–அழகிய
தெழ்கினோடும்–இடைச் சரிகையையும்
ஒண் மாதளம்பூ–அழகிய மாதளம்புக் கோவையான அரை வடத்தையும்
விடைஏறு–ரிஷப வாஹகனாய்
காபாலி–கபால தாரியாய்
ஈசன் விடுதந்தான்–ஸ்வ வ்யூஹத்துக்கு நியாமகனான ருத்ரன் விடு தந்தான்-;
உடையாய்–ஸ்வாமியான கண்ணனே!
அழேல் அழேல்–அழாதேகொள், அழாதேகொள்
தாலேலோ
உலகம் அளந்தானே! தாலேலோ!

விளக்க உரை

சிவபிரான் மாதளம்பூக் கோவையென்கிற அரைவடம் முதலியவற்றை அனுப்பியிருக்கிறான்
(அவற்றைச் சாத்திக்கொள்) என்று சொல்லித் தாலாட்டுகிறான்.
உடை என்பது வஸ்திரத்துக்கு வாசகமாயினும் இங்குத் தனியாகு பெயராய் இடையைக் காட்டிற்று.
தெழ்கு – அரையில் சொருகும் கத்தி. சிவன் ரிஷபவாஹனனாதாலால் விடையேறு என்றும்,
பிரமனுடைய ஐந்து தலைகளிலொன்றைப் பறித்துவிட்டதனால் அக்கபாலம் அப்படியே கையிலொட்டிக் கொண்டதுபற்றிக் கபாலி என்றும்,
அணிமா மஹிமா கரிமா லகிமா ப்ராப்தி ப்ராகாம்யம் ஈசத்வம் வசித்வம் என்று சொல்லப்படுகிற
அஷ்டைச்வரியங்களையுடையனாகையாலே ஈசன் என்றும் சொல்லப்பட்டான்.
கனகம் என்ற வடசொல் கனம் எனக்குறைந்தது. உடையாய் – உடையான் என்பதன் ஈறுதிரிந்தவிளி.

————-

என் தம் பிரானார் எழில் திரு மார்வர்க்கு
சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு,
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!–1-3-3-

பதவுரை

எம்தம் பிரானார்–எமக்கு ஸ்வாமியாய்
எழில்–அழகிய
திருமார்வார்க்கு–திருமார்பை யுடையாய்
சந்தம் அழகிய–நிறத்தாலழகிய
தாமரை தாளர்க்கு–தாமரை போன்ற திருவடிகளை யுடையரான தேவர்க்கு
இந்திரன் தானும்–தேவேந்த்ரனானவன்
எழில் உடை–அழகை யுடைய
கிண்கிணி–கிண் கிணியை
தந்து–கொணர்ந்து ஸமர்ப்பித்து
உவனாய் நின்றான்–அதோயிரா நின்றான்
தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ–

விளக்க உரை

இந்திரன் அரைச் சதங்கையைக் கொண்டு வந்து ஸமர்ப்பித்து அதோ நிற்கின்றான் காண் என்று சொல்லித் தாலாட்டுகிறாள்.
முன்னிரண்டடிகளும் படர்க்கையாயிருந்தாலும் முன்னிலைப் படர்க்கையெனக் கொள்க.
எழில் திருமார்வனும் தாமரைத்தாளனுமான உனக்கு என்றபடி.
‘கிண்கிண்’ என்று ஒலிப்பது பற்றிச் சதங்கைக்குக் கிண்கிணி என்று காரணப் பெயராயிற்று.
உவன் – நடுவிலிருப்பதைக் காட்டுஞ் சுட்டெழுத்தான ‘உ’ என்பதனடியாய் பிறந்த ஆண்பாற் பெயர்;
அதிக தூரத்திலும் அதிக ஸமீபத்திலுமில்லாமல் நடுத்தரமாய் இருப்பவனென்று பொருள்.

————

சங்கின் வலம் புரியும் சேவடிக் கிண் கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத் தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்,
செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!–1-3-4-

பதவுரை

சங்கில்–சங்குகளில்(சிறந்த)
வலம் புரியும்–வலம்புரிச் சங்கையும்
சே அடி–செவ்விய திருவடிகளில் (சாத்தத் தகுந்த)
கிண்கிணியும்–சதங்கையையும்
அம் கை–அழகிய கைகளுக்கு உரிய
சரி–முன் கை வளைகளையும்
வளையும்–தோள்வளைகளையும்
நாணும்–பொன்னரை நாணையும்
அரை தொடரும்–அரைவடத்தையும்
அம் கண்–அழகியதாய் விசாலமான
விசும்பில்–ஸ்வர்க்கத்திலுள்ள
அமரர்கள்–தேவர்கள்
போத்தந்தார்–அனுப்பினார்கள்
செம் கண்–சிவந்த கண்களை யுடையையாய்
கரு முகிலே–கானமேகம் போன்ற வடிவை யுமுடையையான கண்ணனே!
தாலேலோ!
தேவகி–தேவகியின் வயிற்றிற்பிறந்த
சிங்கமே–சிங்கக் குருகே!
தாலேலோ!

விளக்க உரை

தேவதைகள் பலர் கூடிப் பல திருவாபரணங்களை அனுப்புகிறார்களென்று சொல்லித் தாலாட்டுகிறாள்.
சங்கில் + வலம்புரி, சங்கின் வலம்புரி,‘
‘குறில்செறியாலன அல்வழிவந்த ’என்ற நன்நூற் சூத்திரத்திள் இறுதியில் ‘பிற’ என்ற மிகையை நோக்குக.
நாண் திருமார்வுக்கு அலங்காரமாகச் சாத்தத்தக்க நாணாகவுமாம்.
செங்கண் + கருமுகில், செங்கட்கருமுகில். கருமுகிலே! முற்றுவமை.

—————–

எழிலார் திருமார்வுக்கு ஏற்கு மிவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ! தூமணி வண்ணனே தாலேலோ!–1-3-5-

பதவுரை

எழில் ஆர்–அழகுமிக்கிருந்துள்ள
திருமார்பிற்கு–வக்ஷஸ்ஸ்தலத்துக்கு
இவை ஏற்கும் என்று–இவை பொருந்தும் என்று
அழகிய–அழகியவையான
ஐம்படையும்–பஞ்சாயுதங்களையும்
ஆரமும்–முத்து வடத்தையும்
கொண்டு–எடுத்துக்கொண்டு,
வழுஇல்–குற்றமற்ற
கொடையான்–ஔதார்யத்தையுடையனான
வயிச்சிரவணன்–குபேரானானவன்
தொழுது–(இவற்றைத் திருவுள்ளம்பற்ற வேணுமென்று) அஞ்ஜலி பண்ணிக்கொண்டு
உவனாய் நின்றான், தாலேலோ!
தூ மணி–பழிப்பற்ற நீலமணி போன்ற
வண்ணனே–வடிவையுடைய கண்ணனே!
தாலேலோ!

விளக்க உரை

சிறு குழந்தைகளுக்கு அனுக்கம் வராமலிருப்பதற்காக எம்பெருமானுடைய பஞ்சாயுதங்களை யமைத்துக் கழுத்திலணியும்படி
ஓராபரணஞ் செய்து அணிய செய்வது வழக்கம். அவ்வாபரணமே இங்கு ஐம்படை என்கிறது.
அதனைக் குபேரன் கொணர்ந்து ஸமர்ப்பித்து அதோ நின்கின்றார்காண் என்று சொல்லித் தாலாட்டுகிறள்.
‘திருமாற்பிற்கு’, ‘திருமார்வுக்கு’ என்பன பாடபேதங்கள். ஹாரமென்ற வடசொல் ஆரமெனத் திரிந்தது.

வழிவில் கொடையான் – அரைகுறையாகக் கொடுப்பது, அஹங்காரத்தோடு கொடுப்பது, கைம்மாறு கருதிக்கொடுப்பது,
கேட்டபின்பு கொடுப்பது, புகழை விரும்பிக் கொடுப்பது ஆகிய இவையெல்லாம் தானத்திற்குக் குற்றங்கள்;
அவ்வகைக் குற்றமொன்றும் இல்லாதபடி கொடுப்பவனும் குபேரன். ‘வயிச்சி ராவணன்’ என்று நீட்டியோதும்
பாடம் இடையில் வந்ததாகையாலும் பொருத்தம் அற்றதாகையாலும் மறுக்கத்தக்கது.
இதன் வியாக்கியானத்தில் ‘அரவை அரா என்னுமாபோலே வைச் ரவணன் என்கிறதை வயிச்சிராவணன் என்கிறது’ என்று
காணப்படுகின்ற வாக்கியமும் இலக்கண மறியாதவர்களால் ஓலைப்புத்தகங்களில் ஓரத்தில் குறிப்பாக எழுதி வைக்கப்பட்டிருந்தது.
பிறகு அச்சுப் பதிப்பிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டு விட்டதென்றும் பொருட் பொருத்தமற்றதென்றும் அழகியமணவாளச்சீயர்
பலகாலுமருளிச் செய்யக் கேட்டிருக்கை.
‘வைச் ரவணன்’ என்ற வட சொல் வயிஸ்ரீஅவணனென விகாரப்பட்டது.
ப்ரஹ்ம புத்ரனான புலஸ்த்யப்ரஜாபதியினுடைய புத்திரனாகிய விச் ரவ முனிவனுக்கு பரத்வாஜ புத்திரினியிடம்
பிறந்தவனான குபேரனைச் சொல்லுகிறது.

—————-

ஓதக் கடலின் ஒளி முத்தி னாரமும்
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்
மாதக்க வென்று வருணன் விடுதந்தான்,
சோதிச் சுடர்முடியாய் தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!–1-3-6-

பதவுரை

ஓதம்–அலையெறிப்பையுடைய
கடலில்–ஸமுத்ரத்தில் (உண்டாய்)
ஒளி–ஒளியை யுடைத்தாய்
முத்தின்–முத்துக்களால் கோக்கப்பட்ட
ஆரமும்–ஹாரத்தையும்
சாதி–நல்ல ஜாதியிலுண்டான
பவளமும்–பவழ வடத்தையும்

சந்தம்–அழகு பொருந்திய
சரி–முன் கை வளைகளையும்
வளையும்–தோல்வளைகளையும்
மா தக்க என்று–விலையில் சிறந்து தகுதியாயிருந்துள்ளவை என்று
வருணன் விடுதந்தான்–வருண தேவனானவன் விடுதந்தான்
சோதி சுடர்–மிக்க ஜ்யோதிஸ்ஸை யுடைய
முடியாய்–கிரீடத்தை யணிந்த கண்ணனே!
தாலேலோ. . !
சுந்தரம் தோளனே–அழகிய திருத் தோள்களை யுடைய கண்ணனே!
தாலேலோ. . !

விளக்க உரை

வருணைதேவன் கருங்கடற் கடவுளாதலால் அக்கடலில் நின்றுந்தோன்றின முத்துக்களினாலும் பவழங்களினாலும் ஆகிய
ஹாரங்களையும் முன்கைச் சரிகளையும் சங்கு வளையல்களையும் அனுப்பினான். அதைச்சொல்லித் தாலாட்டுகிறாள்.
அரக்கு முதலியவற்றால் செய்யப்பட்ட க்ருத்ரிமப்பவழங்களும் உண்டாதலால் அப்படியல்லாமல் உண்மையான சிறந்த
பவளமென்கைக்காகச் சாதிப்பவள மெனப்பட்டது. சோதிச்சுடர் – ஒரு பொருட்பன்மொழிதக்க – வினைமுற்று.

—————-

கானார் நறுந்துழாய் கை செய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர் மேல் திரு மங்கை போத்தந்தாள்,
கோனே! அழேல் அழேல் தாலேலோ! குடந்தைக் கிடந்தானே தாலேலோ!–1-3-7-

பதவுரை

தேன் ஆர்–தேன் நிறைந்துள்ள
மலர்மேல்–(செந்தாமரை) மலரிலுறைகின்ற
திருமங்கை–பெரிய பிராட்டியார்
கான் ஆர்–காட்டிலுண்டான
நறு துழாய்–பரிமளம் மிக்க துளசியாலே
கை செய்த–தொடுத்த
கண்ணியும்–மாலையையும்
வான் ஆர்–சுவர்க்க லோகத்தில் நிறைய வளர்ந்துள்ள
செழு–செழுமை தங்கிய
சோலை–சோலையாய்த் தழைத்த
கற்பகத்தின்–கல்ப வ்ருக்ஷத்தின் பூக்களால் தொடுத்த
வாசிகையும்–திரு நெற்றி மாலையையும்
போத்தந்தாள்–அனுப்பினாள்
கோனே–ஸர்வ ஸ்வாமியான கண்ணனே!
அழேல் அழேல் தாலேலோ!
குடந்தை–திருக்குடந்தையிலே
கிடந்தானே–கண் வளந்தருளுகிற ஸ்ர்வேச்வானே!
தாலேலோ!

விளக்க உரை

நல்ல திருத்துழாய் மாலை முதலியவற்றைப் பெரிய பிராட்டியார் கொடுத்தனுப்பினளென்று சொல்லித் தாலாட்டுகிறாள்.
காநநம் என்ற வடசொல் கான் எனச் சிதைந்தது. தன்னிலத்தில் வளர்ந்ததனால் மணங்குன்றாத திருத்துழாய் என்றபடி.
கைசெய்த என்ற விடத்து, கை – தமிழுபசர்க்கம்.

குடந்தை – கும்பகோணம். குடமூக்கு என்பது முழுப்பெயர். அதில் ஏகதேசமான குடம் என்ற சொல்லை மாத்திரங்கொண்டு
என்ற எழுத்துப் பேறும் ஐ விகுதியும் பெறுவித்துக் குடந்தையென்றார்.
வில்லிபுத்தூர் என்ற முழுப்பெயரில் புது என்றமாத்திரத்தைக் கொண்டு புதுவை என்பது போலவும்,
குருகூரைக் குருகையென்றும், அழுந்தூரை அழுந்தையென்றும், நாகூரை நாகையென்றும், தஞ்சாவூரைத் தஞ்சை என்றும்,
திருச்சேறூரைத் திருசேறையென்றும் பெருங்குளத்தை குளத்தையென்றும் அருளிச் செய்தல் போலவும்
குடமூக்கூரைக் குடந்தையென்றாரென்று கொள்ள வேணும்.
தூப்புல் பிள்ளை தாமும், நவரத்தினமாலையும், மும்மணிக் கோவையிலும், திருவயிந்திரபுத்தை அயிந்தை என்றருளிச்செய்திருப்பதும் நோக்கத்தக்கது.

————

கச்சொடு பொற் சுரிகை காம்பு கனவளை
உச்சி மணிச் சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ
அச்சுதனுக்கென்று அவனியாள் போத்தந்தாள்
நச்சு முலையுண்டாய் தாலேலோ! நாராயணா அழேல் தாலேலோ!!–1-3-8-

பதவுரை

கச்சொடு–கச்சுப் பட்டையையும்
பொன்–பொன்னாற்செய்த
சுரிகை–உடை வாளையும்
காம்பு–கரை கட்டிய சேலையையும்
கனம்–கநக மயமான
வளை–தோள் வளைகளையும்
மணி–ரத்நமிழைத்துச் செய்யப்பட்டதாய்
உச்சி–உச்சியிலே சாத்தத் தக்கதான
சுட்டி–சுட்டியையும்
ஒண் தாள்–அழகிய காம்புகளை யுடைத்தாய்
நிரை–ஒழுங்கான
பொற்பூ–பொற்பூவையும்
அச்சுதனுக்கு என்று–‘கண்ணபிரானுக்கு (க்கொடுங்கோள்)’ என்று
அவனியாள்–பூமிப்பிராட்டியானவள்
போத்தந்தாள்–அனுப்பினாள்;
நஞ்சு–விஷமேற்றின
முலை–பூதனையின் முலையின் பாலை
உண்டாய்–உண்ட கண்ணனே!
தாலேலோ;
நாராயணா! அழேல்! தாலேலோ

விளக்க உரை

ஸ்ரீ பூமிப்பிராட்டியார் சில ஆபரணங்களையும் ஆடையையும் கொடுத்தனுப்பினதைச் சொல்லித் தாலாட்டுகிறாள்.
அச்சுதனுக்கு என்றது முன்னிலைப் படர்க்கை; அச்சுதனானவுனக்கு என்றவாறு. அவநி- வடசொல்; பூமி.
’ஷூரிகா’ என்ற வடசொல் சுரிகையெனத் திரிந்தது;

———

மெய் திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
அய்யா அழேல் அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!!–1-3-9-

பதவுரை

மெய்–திருமேனியிலே
திமிரும்–பூசுகைக்குரிய
நானம் பொடியோடு–கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய ஸூகந்தப் பொடிகளையும்
மஞ்சளும்–மஞ்சள்பொடியையும்
செய்ய–சிவந்ததாய்
தட–விசாலமாயுள்ள
கண்ணுக்கு–கண்களில் (சாத்த)
அஞ்சனமும்–மையையும்,
(திரு நெற்றியில் சாத்துகைக்கு)
சிந்தூரமும்–ஸிந்தூரத்தையும்
வெய்ய கலை பாகி–கொடிய ஆண்மானை வாஹமாகவுடைய துர்க்கையானவள்
கொண்டு–எடுத்துக்கொடு வந்து
உவளாய் நின்றாள்–அதோ இரா நின்றாள்;
ஐயா–ஸ்வாமியான கண்ணனே!
அழேழ் அழேழ் தாலேலோ;
அரங்கத்து–ஸ்ரீரங்கத்திலே
அணையானே–(திருவனந்தாழ்வானைப்) படுக்கையாக வுடையவனே!
தாலேலோ.

விளக்க உரை

துர்க்காதேவியானவள் வாசனைப்பொடி முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பிக்க வந்திருக்கிறாளென்று சொல்லித் தாலாட்டுகின்றாள்.
துர்க்கைக்கு மான் வாஹனமாகையால் கலைப்பாகி எனப்பட்டது. ‘பாகன்’ என்பதன் பெண்பால் பாகி என்பது;
மானின்மேல் ஏறிக்கொண்டு அதனைச் செலுத்துபவள்.
கலா என்ற வடசொல் ‘கலை’ என ஐயீறாகத்திரிந்ததென்று கொண்டு நூற்கலைகளை நடத்துகிற ஸரஸ்வதி என்று பொருள்கொள்வதும் ஏற்கும்;
இப்பொருளில் வெய்ய என்பதற்கு-விரும்பப்படுகின்ற என்று பொருள்.
இத்திருமொழியில் முதற்பாட்டில் பிரதானனாகப் பிரமதேவன் சொல்லப்பட்டபடியால் அவனுக்குப் பத்தினியான ஸ்ரஸ்வதியை
இப்பாட்டிற் சொல்லிமுடிக்கிறதென்று கொள்வது மிகவுமிணங்கும்.

——-

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை யுண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே–1-3-10-

பதவுரை

வஞ்சனையால் வந்த–வஞ்சக வேஷத்தோடே வந்த
பேய்ச்சி–பூதனையினுடைய
முலை உண்ட–முலையை அமுது செய்தவனாய்
அஞ்சனம் வண்ணனை–மை போன்ற நிறத்தை யுடையவனான கண்ண பிரானை
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
தாலாட்டிய–தாலாட்டின படிகளை
செம் சொல் மறையவர்–செவ்விய சொற்கள் நிறைந்த வேதங்களில் வல்லவரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
சேர்–நித்ய வாசம் பண்ணப் பெற்ற
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்த
பட்டன்–பெரியாழ்வார் (அருளிச் செய்த)
சொல்–இப்பாசுரங்கள்
எஞ்சாமை–குறைவு படாமல்
வல்லவர்க்கு–ஓத வல்லவர்க்கு
இடர் இல்லை–துன்பம் ஒன்றுமில்லையாம்.
தான் ஏ – அசை

கண்ணபிரானைத் தொட்டிலிற் கண்வளர்த்தித் தாலாட்டாக யசோதைப்பிராட்டி அன்று சொன்ன பாசுரங்களை
உட்கொண்டு நான் இத்திருமொழி பாடினேன்; இதை நின்றாகக் கற்பவர்கள் ஒருவகைத் துன்பமுமடையாமல்
நித்யாநிந்தம் பெறுவரென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.
தாலாட்டிய என்றது விசேஷணமன்று. இறந்தகாலப் பலவின்பால் வினையாலணையும் பெயர்.
இரண்டாம் வேற்றுமையுருபும் பயனுமுடன்தொக்க தொகை.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-2–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 24, 2021

சீதக் கடல் உள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்வந்து காணீரே–1-2-1-

பதவுரை

சீதம்–குளிர்ந்திரா நின்றுள்ள
கடல்–திருப்பாற்கடலிலே
உன் அமுது அன்ன–உள்ளமுதாகப் பிறந்த பிராட்டியோடொத்த
தேவகி–தேவகிப் பிராட்டியால்
கோதை குழலான் அசோதைக்கு போத்தந்த–பூ மாலையால் அலங்கரிக்கப்பட்ட கேச பாசத்தை யுடைய யசோதைப் பிராட்டிக்குப் போகவிடப்பட்டவனாய்
பேதை–அறிவின்மையை யுடையனாய்
குழவி–சிசுவான கண்ணபிரான்
பிடித்து–(தன் கைகளால்) பிடித்து
சுவைத்து–ருசி பார்த்து
உண்ணும்–திருப்பவளத்தில் வைத்து புஜியா நின்றுள்ள
பாதம் கமலங்கள்–திருவடித் தாமரைகளை.
காணீர்–வந்து காணுங்கோள்.
பவளம்–பவளம் போல் சிவந்த
வாயீர்–அதரத்தையுடைய பெண் காள்! வந்து காணீர்!

விளக்க உரை

வேதத்தில் (எம்பெருமானுடைய சிறந்த திருவடியில் தேன் வெள்ளமுன்டு) என்று சொல்லப்பட்டுள்ளது.
இதை யடியொற்றி ஆழ்வார்களும் ‘‘தேனே மலரும் திருப்பாதம்’’ என்கிறார்கள்.
இப்படிப்பட்ட தனது திருவடியிலுள்ள தேனைப் பருகுவதற்காகவும், தனது திருவயிற்றில் கிடக்கும் உலகங்கட்கெல்லாம்
உஜ்ஜீவநமுண்டாகும்படியாகவும் ஸ்ரீக்ருஷ்ணன் தனது திருவடிகளில் ஒன்றையெடுத்து வாயிலே வைத்துச் சுவை பார்த்துக் கொண்டிருக்க,
அதைக் கண்ட யசோதைப் பிராட்டி தான் மிக மகிழ்ந்து, இதைப் பிறகும் கண்டு மகிழவேணும் என்றெண்ணித்
தன்னருகிலுள்ளாரைக் கொண்டாடியழைத்து, ‘நீங்கள் இக்குழந்தை சுவைத்துண்ணும் இப்பாதக் கமலங்களைப் பாருங்கள்’
என்று அவர்கட்குக் காட்டுகின்றாள்.

கடலில் இரண்டு அமுதம் பிறந்தன; ஒன்று தேவர்களுக்கு போக்யமான உப்புச்சாறாகிய அம்ருதம்; அது புறவமுதமாம்.
மற்றொரு அம்ருதம். ‘‘அமுதில் வரும் பெண்ணமுது’’ எனப்பட்ட பிராட்டி: இவளே உள்ளமுதம்.
ஆகவே இங்கு ‘‘உள்ளமுதன்ன’’ என்றது பிராட்டியைப் போன்ற என்றபடியாயிற்று.
‘‘திருவின் வடிவொக்குந் தேவகி’’ என்று மேலுங் கூறுவர். பிராட்டியைப் போலே பரோபகாரமே சீலமாகவுள்ள தேவகி என்க.

யசோதை தானே சொல்லுகிற பாசுரமாக அமைந்தவிதனில் ‘‘கோதைக்குழலாளசோதைக்குப் போத் தந்த’’ என்னலாமோ வென்னில்;
யசோதையின் சொல்லாக அருளிச்செய்தாலும் இடையில் தமது தன்மையுந்தோன்ற அருளிச் செய்வாரென்க.

———–

முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள்
ஒத்திட் டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்து காணீரே–1-2-2-

பதவுரை

முத்தும்–முத்துக்களையும்
மணியும்–ரத்நங்களையும்
வயிரமும்–வஜ்ரங்களையும்
நல் பொன்னும்–மாற்றுயர்ந்த பொன்னையும்
தத்திப்பதித்து–மாறி மாறிப் பதித்து
தலைப்பெய்தாற்போல்–சேர்த்தாற்போலே
எங்கும்–திருமேனி யெங்கும்
மணி வண்ணன்–மணி போன்ற வர்ணத்தை யுடையனான கண்ணனுடைய
பாதங்கள்–திருவடிகளிலுள்ள
பத்து விரலும்
விரல் பத்தும்
ஒத்திட்டிருந்வா–ஒன்றோடொன்றெத்து அமைந்திருக்கும்படியை
காணீர்–ஒண் நுதலீர்–ஒளிபொருந்திய நெற்றியை யுடையீர் காண்!
வந்து காணீர்!

விளக்க உரை

முதலடியில் சில ரத்னங்களைச் சொன்னது நவரத்னங்களுக்கும் உபலக்ஷணம்.
கோமேதகம், நீலம், பவழம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன நவரத்தினங்களாம்.
கால்களுக்கு இடுகின்ற செம்பஞ்சு மருதாணி என்பனபோல ஸ்ரீகிருஷ்ணனுடைய பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு
நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும் யசோதை இட்டு
‘என் மணிவண்ணனுடைய பாதங்களில் பத்து விரலும் – நவரத்னங்களையும் நல்ல பொன்னையும் ஒளிவிளங்க
மாறி மாறிப் பதித்து வைத்தாற்போலச் சேர்ந்தனவாய் லக்ஷணங்களில் குறையொன்றுமில்லாமலிருப்பதை வந்து பாருங்கள் என்கிறாள்.

———–

பணைத் தோளிள வாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்தார உண்டு கிடந்த இப் பிள்ளை
இணைக் காலில் வெள்ளித் தளை நின்றிலங்கும்
கணைக் கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3-

பதவுரை

பணை–மூங்கில்போன்ற
தோள்–தோள்களை யுடையளாய்
இள–இளமைப் பருவத்தை யுடையளான
ஆய்ச்சி–யசோதையினுடைய
பால் பாய்ந்த–பால் சொரிகிற
கொங்கை–முலையை
அணைத்து–(திருக்கையால்) அணைத்துக்கொண்டு
ஆர–வயிறு நிரம்ப
உண்டு–(பாலை) அமுது செய்து
கிடந்த–(களித்துக்) கிடக்கின்ற
இ பிள்ளை–இந்தக் கண்ண பிரானுடைய
இணை–சேர்த்தி யழகு அமைந்த
காலில்–திருவடிகளில்
வெள்ளி தளை நின்று–வெள்ளித் தண்டை நின்று
இலங்கும்–விளங்கா நிற்கிற
கணைக்கால் இருந்த ஆ–கணைக்காலிருந்தபடியை
காணீர்!
காரிகையீர்–அழகுடைய பெண்காள்
வந்து காணீர்!!

விளக்க உரை

‘‘பணைத்தோளிள வாய்ச்சி’’ என்றது – தன்மையில் வந்த படர்க்கை: ஆய்ச்சியாகிய என்னுடைய என்றபடி.
அன்பினால் நெறித்துப் பால் சொரிகிற என் முலையைத் திருக்கைகளாலே அணைத்து வயிறாரவுண்டு மகிழ்ந்து கிடக்கிற
இப்பிள்ளையினுடைய கால்களில் வெள்ளித்தண்டை விளங்கா நிற்கிற கணைக்காலின் அழகை வந்து காணுங்கள்.

—————–

உழந்தாள் நறு நெய் ஒரோ தடா வுண்ண
இழந்தா ளெரிவினா லீர்த்து எழில் மத்தின்
பழந் தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே–1-2-4-

பதவுரை

உழந்தாள்–(நெய் முதலியவற்றை) பிரயாஸப்பட்டுத் தடாவிலே சேர்த்த யசோதையினுடைய
நறு நெய்–மணம் மிக்க நெய்யை
ஒரோ தடா–ஒவ்வொரு தடாவாக
உண்ண–(கண்ணன்) அமுது செய்த வளவில்
இழந்தாள்–(பிள்ளையைத்) தான் இழந்தவளாக நினைத்த யசோதை
எரிவினால்–வயிற்றெரிச்சலாலே
ஈர்த்து–கையைப் பிடித்திழுத்து
எழில் மத்தின்–அழகிய மத்தினுடைய
பழ தாம்பால்–சுற்றிக் கடைந்தமையாலுண்டான) பழமை பொருந்திய தாம்பை
ஒச்ச–(அடிப்பதாகக்) கையிலெடுக்க
பயத்தால்–அச்சத்தாலே
தவழ்ந்தான்–(அதைத் தப்பிப் போவதாக) தவழ்ந்த கண்ணனுடைய
முழந்தான் இருந்த ஆ–முழங்கால்களிருந்தபடியை
காணீர்!
முகிழ் முலையீர்–முகிழ்த்த முலையையுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

கீழ்ப் பாட்டிற்போல இப் பாட்டிலும் உழந்தாள் என்றதும் இழந்தாள் என்றதும் – தன்மையில் வந்த படர்க்கை.
ச்ரமப்பட்டுக் கறந்து காய்த்துத் தோய்த்துக் கடைந்து வெண்ணையாக்கி யுருக்கித் தடாக்களிலே நான் சேர்த்து வைத்திருந்தேன்.
அந்த நெய்யை ஒவ்வொரு தடாவாக ஒன்றும் மிச்சமாகாதபடி இவன் வாரியுண்டான்.
இவ்வளவு நெய்யை வாரியுண்டால் ஜரிக்கமாட்டாதே!’ என்கிற வயிற்றெரிச்சலாலே கையைப் பிடித்திழுத்து,
மத்திலே சுற்றிக் கடைந்து பழகின தாம்பாலே அடிப்பதாக நான் ஓங்க, பயத்தாலே அதைத் தப்புவதாகத் தவழ்ந்தான்;
இப்படிப்பட்ட இவனுடைய முழந்தாள்கள் இருக்கும்படியைப் பாருங்கள் என்கிறாள்.

இனி, தன்மையில் வந்த படர்க்கையாகக் கொள்ளாமல் படர்க்கையாகவே கொண்டு,
பெரியாழ்வார் தாமான தன்மையில் அருளிச்செய்கிற ரென்னவுமாம்.

இழந்தாள் – பிள்ளையை இழந்ததாக நினைத்தவளென்கை;
இவ்வளவு நெய்யை வாரியுண்ட பிள்ளை பிழைக்கப் போகிறானோ என்று அஞ்சினள்போலும். பயம் – வடசொல்.

—————

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத் துண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப் பிள்ளை
மறங்கொ ளிரணியன் மார்பை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-

பதவுரை

முன்–முற்காலத்திலே
மறம்கொள்–த்வேஷங்கொண்ட
இரணியன்–ஹிரண்யனுடைய
மார்வை–மார்பை
கீண்டான்–பிளந்தவனாய்,
பிறங்கிய–(கொடுமையால் வந்த) ப்ரகாசத்தை யுடைய
பேய்ச்சி–பூதனையினுடைய
முலை–முலையை
சுவைத்து–(பசையறும்படி) ஆஸ்வாதித்து
உண்டிட்டு–அமுது செய்து
உறங்குவான் போலே–(ஒன்றுமறியாமே) உறங்குமவனைப் போலே
கிடந்த–படுத்திருப்பவனான
இ பிள்ளை–இந்தக் கண்ணனுடைய
குறங்குகளை–திருத்துடைகளை
வந்து காணீர்!
குவி முலையீர்–குவிந்த முலைகளை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

கிருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன் பிறந்தவனாய் அக் கண்ண பிரானுக்கு மாமனாகிய கம்ஸன்,
தன்னைக் கொல்லப் பிறந்த தேவகீ புத்திரன் ஒளித்து வளர்கிறானென்பதை நாரதர் சொல்லக் கேட்டறிந்து அக் குழந்தையை
நாடி யுணர்ந்து கொல்லும்பொருட்டுப் பல அசுரர்களை ஏவுகிற கிரமத்திலே, அவர்களில் ஒருத்தியான பூதனை யென்னும் ராக்ஷஸி
நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ண சிசுவையெடுத்துத்
தனது விஷம் தடவின முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் ஸ்தனங்களைக் கைகளால்
இறுகப் பிடித்துத் பாலுண்கிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின்
கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன் ­ -என்ற வரலாறு முதலடியிற் கூறப்பட்டுள்ளது.
நரஹிம்ஹாவதாரம் செய்தவனும் கிருஷ்ணவதாரம் செய்தவனும் ஒருவனே என்ற உண்மையை இவ்வாழ்வார் உணர்ந்தவராதலால்
‘‘மறங்கொளிரணியன் மார்வை முன் கீண்டானாகிய இப்பிள்ளை’’என்றார்.

————-

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்த மிருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே–1-2-6-

பதவுரை

மத்தம்–மதத்தையுடைய
களிறு–யானைகளை நிர்வஹிக்குமவரான
வசுதேவர் தம்முடை–ஸ்ரீவஸுதேவருடைய
சித்தம் பிரியாத–மனத்தை விட்டுப் பிரியாத
தேவகி தன்–தேவகியினுடைய
வயிற்றில்–வயிற்றிலே
அத்தத்தின் பத்தாம் நாள்–ஹஸ்த நக்ஷத்ரத்துக்குப் பத்தாவதான திரு நாளிலே
தோன்றிய–திருவவதரித்த
அச்சுதன்–கண்ண பிரானுடைய
முத்தம் இருந்த ஆ–சண்ணமிருந்த படியை
காணீர்!!
முகிழ் நகையீர்–புன் சிரிப்பை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

இப்பாட்டில் முத்தம் என்றது ஆண்குறியை. ‘மூத்ரம்’ என்னுஞ்சொல் மூத்திரம் பேய்வதற்கு உறுப்பான அவயவத்தைச் சொல்லிற்றாய்,
அச்சொல் முத்தமெனத் திரிந்திருப்பதாகச் சிலர் கூறுவர். சிறு குழந்தைகளின் குறியைப் பேரன்புடையார் முத்தமிடுவார்கள்
என்னுங் காரணம் பற்றி அக் குறிக்கு முத்தமெனப் பெயராயிற்றென்று சிலர் சொல்லுவர்.

அத்தத்தின் பத்தாநாள் – ஹஸ்த நக்ஷத்திரத்திற்குப் பத்தாவது நாள் (கீழ்முறையில் எண்ணிப் பார்த்தால்) ரோஹிணீ நக்ஷத்ரமும்,
(மேல்முறையில் எண்ணிப் பார்த்தால்) திருவோண நக்ஷத்திரமுமாம்.
இவற்றுள் ரோஹிணீ நக்ஷத்திரம் ஸ்ரீக்ருஷ்ணாவதார நக்ஷத்ரம் : திருவோண நக்ஷத்ரம் – தானான தன்மையிலுள்ள திருமாலுக்கு உரிய நக்ஷ்த்ரம்.
இன்ன நக்ஷரத்தில் தோன்றினவனென்று வாய்விட்டுச் சொல்லாமல் ‘‘அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய’’ என்று சொல்லுவானேன்? என்னில் :
இவ்வாழ்வார் மங்களா சாஸநபரராகையினால் ‘கண்ணபிரானது திருவவதார நக்ஷரத்தை நேரே சொன்னால் சத்துருக்கள்
அபிசாரம் செய்வார்களோ!’ என்ற அதிசங்கையினால் மறைத்துச் சொல்லுகிறாரென்று ரஸமாக நிர்வஹிப்பர்கள்.
(அபசாரமாவது – எதிரிக்கு மரணமுண்டாகுமாறு செய்யும் யாக விசேஷம். அதில் எதிரியின் பெயரை ஸங்கல்பத்திற் சொல்லும்போது
‘‘இன்ன நக்ஷத்ரத்தில் பிறந்த இன்னானுக்கு மரணமுண்டாக’’ என்று குறிப்பிட வேண்டிய அவசியமிருப்பதால்,
அதற்கு நக்ஷத்ர நிச்சயமுண்டாகாதபடி மறைத்துச் சொல்லுகிறாரென்றவாறு. )

தேவகிக்கு இட்ட விசேஷணத்தினால் – வஸுதேவருடைய மனம் கோணாதபடி, ஒழுங்காக நடப்பவள் தேவகி என்பது வெளியாம்.
வஸுதேவர் யானைகள் கட்டி வாழ்ந்தவராதலால் மத்தக் களிற்று வசுதேவர் என்றார்.

————-

இருங்கை மத களிறு ஈர்க்கின் றவனை
பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடு பரமன் தன்
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே–1-2-7-

பதவுரை

இரு கை மத களிறு–பெரிய துதிக்கையையுடைய மத்த கஜமான குவலயாபீடத்தை
ஈர்க்கின்றவனை–தன் வசமாக நடத்தா நின்றுள்ள பாகனை
பருங்கி–கொன்று
பறித்துக்கொண்டு–(யானையின் கொம்புகளை) முறித்துக் கொண்டு
ஓடு–(கம்ஸனிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு) ஓடின
பரமன் தன்–பரமபுருஷனான கண்ணனுடைய
நெருங்கு–செறியக் கோத்த
பவளமும்–பவள வடமும்
நேர் நாணும்–அழகிய அரை நாணும்
முத்தும்–முத்துவடமும் (இவற்றோடே சேர்ந்த)
மருங்கும் இருந்த ஆ–திருவரையும் இருந்தபடியை
காணீர்!
வாள் நுதலீர்–ஒளி பொருந்திய நெற்றியை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

இடையினழகையும் அதிலுள்ள ஆபரணங்களினழகையும் காட்டும் பாசுரம் இது. ஸ்ரீக்ருஷ்ணனைக் கொல்லக் கருதிய கம்ஸன்
வில்விழாவென்கிற வியாஜம் வைத்துக் கண்ணனை அழைக்க, அப்பிரானும் பலராமனுடனே புறப்பட்டு வந்து கம்ஸன்
அரண்மனையினுட் புகும்போது, இவர்களைக் கொல்லும்படி கம்ஸனால் ஏவி நிறுத்தப்பட்டிருந்த குவலயா பீடமென்னும் மதயானை சீறிவர,
ஸ்ரீக்ருஷ்ண பலராமர்கள் அவ்யானையை எதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியைப் பறித்தெடுப்பதுபோல
எளிதிற் பிடுங்கியெடுத்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அவற்றால் பாகனையும் அவ்யானையையும்
கொன்றனரென்ற வரலாறு முன்னடிகளில் அடங்கியுள்ளது.

அன்றியே, ஊரில் இடைப்பிள்ளைகள் தெருவிலே விளையாடும்போது ஒருவனை யானையாக வைத்து அவனை யொருவன்
இழுத்துக் கொண்டு திரிய, அவனைக் கண்ணபிரான் தான் மோதி யடித்துத் தானிழுத்துக் கொண்டு ஓடுகின்ற
லீலா விசேஷத்தை முன்னடிகளிற் கூறினதாகவும் உரைப்பர்.

—————

வந்த மதலைக் குழாத்தை வலி செய்து
தந்தக் களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்று மழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி யிழையீர் வந்து காணீரே–1-2-8-

பதவுரை

வந்த–(தன்னோடு விளையாட) வந்த
மதலை குழாத்தை–சிறு பிள்ளைகளின் கூட்டத்தில்
வலி செய்து–தன் வல்லமையைக் காட்டிக் கொண்டு
தந்தம் களிறு போல்–கொம்பு முளைத்த யானைக் குட்டி போல்
தானே–தானே முக்கியனாய் நின்று
விளையாடும்–விளையாடுமவனாய்
நந்தன்–நந்தகோபர்க்கு
மதலைக்கு–(விதேயனான) பிள்ளையாகிய கண்ணனுடைய
நன்றும் அழகிய–மிகவுமழகிதான
உந்தி இருந்த ஆ–நாபி இருக்கிறபடியை
காணீர்!
ஒளி–ஒளியால் விஞ்சின
இழையீர்–ஆபரணங்களணிந்த பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

கண்ணபிரான் தான் சிறு குழந்தையாயிருந்தாலும் தன்னோடு விளையாடுவதற்குக் கூட்டமாய் வரும் பாலகர்களையெல்லாம்
தனது வல்லமையால் அடக்கி, அவர்களெல்லாம் ஒருபக்கமும், தான் மாத்திரம் ஒருபக்கமுமாக நின்று இப்படிதானே
பிராதானனாய் நின்று விளையாடுவன்; அப்போதுதான் கொம்பு முளைக்கப்பெற்ற யானைக்குட்டியை
த்ருஷ்டாந்தமாகச் சொல்லத்தகுந்திருப்பன்; இப்படிப்பட்டவனுடைய உந்தியைப் பாருங்களென்கிறாள்.

————–

அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலை யூட்டி வஞ்சித்து வைத்து
பதறப் படாமே பழந் தாம்பா லார்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளி வளை யீர் வந்து காணீரே–1-2-9-

பதவுரை

அதிரும்–கோஷிக்கின்ற
கடல்நிறம்–கடலினது நிறம்போன்ற
வண்ணனை–நிறத்தை யுடைய கண்ணனுக்கு
ஆய்ச்சி–யசோதை யானவள்
மதுரம் முலை ஊட்டி–இனிய முலைப் பாலை ஊட்டி,
வஞ்சித்து வைத்து–(மேல், தான் இவனைக் கட்டப் போகிறதை இவனறிய வொண்ணாதபடி) ஏமாத்தி
பதறப் படாமே–தன் எண்ணம் தப்பாதபடி
பழ தாம்பால்–பழகின கயிற்றாலே
ஆர்த்த–கட்டி வைத்த
உதரம் இருந்த ஆ–வயிறு இருந்தபடியை
காணீர்!
ஒளி வளையீர்–ஒளி மிக்க வளையை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

கண்ணபிரான் இளம்பிராயத்தில் கோகுலத்திலுள்ள இடையர் மனைகளில் எல்லாஞ் சென்று அவர்களது பால் தயிர் வெண்ணெய்
முதலியவற்றைத் திருடி உண்டதை அவ்விடைச்சிகள் வந்து முறையிட, அறிந்த யசோதை அக்குற்றத்திற்காக ஒரு தண்டனையாகக்
கண்ணனை வயிற்றில் கயிற்றினால் கட்டி உரலோடு பிணித்து வைத்தாளென்பது இதில் அறியத்தக்கது.
‘கடல்நிற வண்ணன்’ என்னாமல் ‘அதிருங் கடல்நிற வண்ணன்’ என்றது கண்ணனுடைய அடங்காத் தன்மையைக் காட்டும்.

————–

பெருமா வுரலில் பிணிப் புண்டிருந்து அங்கு
இருமா மருதம் இறுத்த இப் பிள்ளை
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும்
திரு மார்பு இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே–1-2-10-

பதவுரை

பெரு மா உரலில்–மிகப்பெரிய உரலோடு
பிணிப்புண்டு–கட்டுண்டிருந்து இருந்து
அங்கு–அந்த நிலைமையிலே
இரு மா மருதம்–இரண்டு பெரிய மருத மரங்களை
இறுத்த–முறித்தருளின
இ பிள்ளை–இக் கண்ண பிரானுடைய,
குரு மா–மிகவும் சிறந்த
மணி பூண்–கௌஸ்துபாபரணமானது
குலாவி திகழும்–அசைந்து விளங்கா நின்றுள்ள
திருமார்வு இருந்த ஆ காணீர்!
சே இழையீர்–செவ்விய ஆபரணங்களை யுடைய பெண்காள்
வந்து காணீர்!

விளக்க உரை

“குருமாமணிப்பூண்’’ என்று சிறந்த ரத்நாபரணமாகிய கௌஸ்துபமணியைச் சொல்லுகிறது-
என்ற வட சொல் குரு என்றாயிற்று. ச்லாக்க்யமான என்றபடி.
அப்படிப்பட்ட திவ்யாபரணம் விளங்கப்பெற்ற திருமார்வினழகைக் காணுங்களென்கிறாள்.

மருதமிறுத்தகதை:- கண்ணன் குழந்தையாய் இருக்குங்காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல விளையாடல்களைச் செய்யக் கண்டு
கோபித்த யசோதை கண்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற் கட்டி ஒருரலிலே பிணித்துவிட, கண்ணன்
அவ் வுரலை யிழுத்துக் கொண்டு அங்கிருந்த இரட்டை மருதமர (யமளார்ஜுக)த்தின் நடுவே எழுந்தருள,
அவ்வுரல் குறுக்காய் நின்று இழுக்கப்பட்ட படியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழிந்தவளவில், நாரதர் சாபத்தாலே
அம் மரங்களாய்க் கிடந்த நளகூபரன், மணிக்ரீவன் என்னும் குபேர புத்திரரிருவரும் சாபந்தீர்ந்து சென்றனரென்பது.

———–

நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழ லீர்வந்து காணீரே-1-2-11-

பதவுரை

நாள்கள்–(கண்ணன் பிறந்த பின்பு சென்ற) நாட்கள்
ஓர்நாலு ஐந்து திங்கள் அளவிலே–ஒரு நாலைந்து மாதத்தளவிலே
தாளை நிமிர்ந்து–காலைத் தூக்கி
சகடத்தை–சகடாஸுரனை
சாடிப்போய்–உதைத்துவிட்டு,
வாள் கொள்–ஒளிகொண்டதாய்
வளை–வளைந்திராநின்றுள்ள
எயிறு–கோரப்பற்களையுடைய பூதனையினது
ஆர் உயிர்–அரிய உயிரை
வவ்வினான்–முடித்த கண்ணனுடைய
தோள்கள் இருந்த ஆ காணீர்!
சுரி குழலீர்–சுருண்ட கேசத்தையுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

கண்ணபிரான் நந்தகோபர் திருமாளிகையில் ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிற் பள்ளிகொண்டிருக்க,
யசோதையும் யமுனைக்குப் போயிருக்க, அந்த வண்டியில் கம்ஸனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்து
மேல்விழுந்து கொல்ல முயன்றதை அறிந்து, பாலுக்கு அழுகிற பாவனையாலே தனது சிறிய திருவடிகளை மேலே தூக்கி யுதைத்தருள,
அவ்வுதை பட்டமாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழே விழுந்து அசுரனுட்பட அழிந்ததென்கிற கதை முன்னடிகளில் அடங்கியுள்ளது.
இப்படி சகடத்தை முறித்தவனும் பூதனையை முடித்தவனுமான பெருமானுடைய தோளழகை வந்து காணுங்களென்றாளாயிற்று.

‘‘நாலைந்து திங்களளவிலே’’ என்பதற்கு – நாலு அல்லது ஐந்து மாதங்களுக்குள்ளே என்றும்,
(நாலு மைந்துங்கூடின) ஒன்பது மாதங்களுக்குள்ளே என்றும் (நாலால் பெருக்கப்பட்ட ஐந்தாகிய) இருபது மாதங்களுக்குள்ளே என்றும் பொருளாகும்.
இவ்வாழ்வார் மங்களாசாஸந பரராதலால், ஸ்வலப்யஸிலே அரிய பெரிய காரியஞ்செய்தானென்று சொன்னால் கண்ணெச்சில்படுமோ
என்றஞ்சி அங்கனம் த்ருஷ்டிதோஷம் வராமைக்காக, மாதம்நாலென்றும் ஐந்தென்றும் ஒன்பதென்றும் இருபதென்றுந்
தெரியாதபடி மயங்கவருளிச் செய்தனரென்று ரஸோக்தியாக அருளிச்செய்வர் பூருவர்.

‘‘சகடத்தைச் சாடிப்போய்–ஆருயிர் வௌவினான்’’ என்கிறாரே; பூதனையே முடித்தது முன்னமும் சகடத்தை முறித்தது
பின்னும் நடந்திருக்க முன்பின்னாக மாறாடிச் சொல்லுவானேன்? என்னில்; முறைப்படச் சொல்ல வேணுமென்கிற எண்ணமில்லையென்க.
அந்தந்த காரியங்களைச் செய்தவன் என்பது மாத்திரமே விவக்ஷிதம்.
எயிறு + ஆருயிர், எயிற்றாருயிர். எயிறு – எயிற்றையுடையவளுக்கு ஆகுபெயர்.
‘‘எயிற்றியாருயிர்’’ என்பது எயிற்றாருயிரென விகாரப்பட்ட தென்பாருமுளர்.

சந்திரனுக்குப் பெயரான திங்களென்னுஞ் சொல் மாதத்தை எங்ஙனமே குறிக்குமென்னில்;
சந்திரனுடைய கலைகள் ஒருமுறை தேய்ந்து வளர்தல் ஒரு மாதம் எனச் சந்திரனாலறியப்படும் மாதத்திற்கு லக்ஷணை;
இச்சொல் சாந்த்ரமாநத்து மாதத்தையே குறிக்க வேண்டியதாயினும் ஸௌரமாநத்து மாதத்தையும் வழக்கில் குறித்து வருகின்றது.

——————-

மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே–1-2-12-

பதவுரை

மை–மையணிந்த
தட–பெரிய
கண்ணி–கண்களையுடைய
அசோதை–யசோதைப்பிராட்டியாலே
வளர்க்கின்ற–வளர்க்கப்படுகின்றவனாய்
தலைசெய்–உயர்ந்த க்ஷேத்ரத்திலே (அலர்ந்த)
நீலம் நிறம்–கருநெய்தல் பூவினது போன்ற நிறத்தையுடையவான
சிறுபிள்ளை-(இந்த) பாலக்ருஷ்ணனுடைய
நெய்–கூர்மைபொருந்திய
தலை–நுதியையுடைய
நேமியும்–திருவாழியும்
சங்கும்–திருச்சங்கும்
நிலாவிய–அமைந்திராநின்றுள்ள
கைத்தலங்கள்–உள்ளங்கைகளை
வந்து காணீர்!
கனம்–பொன்னால்செய்த
குழையீர்–காதணிகளையுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

கண்ணழகு படைத்த யசோதைப்பிராட்டி பிறர்கையில் காட்டிக் கொடாமல் தானே வைத்தகண் வாங்காமல் ஆதரித்து
வளர்ப்பதனால் தான் அவளது கண்ணின் நிறமெல்லாம் கண்ணனது திருமேனியில் ஏறி) திருமேனி நிறம் கறுத்திருக்கின்றதோ!
என்று தோன்றும்படியிருக்கிற பிள்ளையென்பது முன்னடிகளின் உட்கருத்து.
யசோதைப்பிராட்டிக்குச் சிற்சில மையங்களில் சங்கு சக்கரங்களைக் காட்டுதலால் ‘‘நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள்’’ என்றார்.
அன்றியே, சக்கரரேகையும் சங்கரேகையும் பொருந்திய கைத்தலங்கள் என்றும் கொள்ளலாம்.
இப்பொருளில் நெய்த்தலை என்ற விசேக்ஷணம் சக்கரத்திற்கு இயற்கை யடைமொழியாகவேணும்.
கைத்தலத்தில் சங்க சக்ர ரேகைகள் அமைவது மஹாபுருஷ லக்ஷணம்.

——————

வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே–1-2-13-

பதவுரை

வண்டு அமர்–வண்டுகள் படிந்திருக்கிற
பூ குழல்–பூ அணிந்த குழலையுடையளான
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
மகனாக கொண்டு–(தன்) புத்ரனாக ஸ்வீகரித்து
வளர்க்கின்ற–வளர்க்கப் பெற்றவனாய்
கோ வலர்–ஸ்ரீநந்தகோபருடைய
குட்டற்கு–பிள்ளையான கண்ணபிரானுடைய,
அண்டமும்–அண்டங்களையும்
நாடும்–(அவற்றினுள்ளே கிடக்கிற) சேதநாசேதநங்களையும்
அடங்க–முழுதும்
விழுங்கிய–(ப்ரளயகாலத்தில்) கபளீகரித்த
கண்டம் இருந்த ஆ–கழுத்திருந்தபடியை

விளக்க உரை

பிள்ளைகளுக்கு அனுக்கம் உண்டாகாமைக்காகத் தாய்மார் தங்களை அலங்கரித்துக் கொண்டிருப்பர்களாகையாலே
‘வண்டமர் பூங்குழலாய்ச்சி’ எனப்பட்டது. யசோதையானவள் கண்ணபிரானைத் தன் மகனென்றே நினைத்திருந்தாலும்
ஆழ்வார் உண்மையை அறிந்தவராதலால் மகனாகக் கொண்டு வளர்க்கின்ற என்றார்.
அண்டமும் நாடு மடங்க விழுங்கியது – பிரளயகாலத்தில்
‘அண்டரண்ட பகிரண்டத்தொருமாநில மெழுமால்வரை முற்றுமுண்ட கண்டம்’ என்றார் திருப்பாணாழ்வாரும். கண்டம் – வடசொல்.

————-

எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டை வாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச்
செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-14-

பதவுரை

ஆய்ச்சியர்–இடைப்பெண்கள்
தொண்டை–‘‘கொவ்வைக்கனி போன்ற
வாய்–அதரத்தையுடைய
எம் சிங்கம்–எமது சிங்கக்குருவே!
வா என்று–(எம்பக்கல்) வா’’ என்று
எடுத்துக் கொண்டு–(இடுப்பில்) எடுத்துக்கொண்டு
அம் தொண்டை–அழகிய கொவ்வைபோன்ற
வாய்–(கண்ணனுடைய) அதரத்தில்
அமுது–(ஊறுகிற) அம்ருதத்தை
ஆதரித்து–விரும்பி,
தம்–தங்களுடைய
தொண்டை வாயால்–கோவை வாயை
தருக்கி–(கண்ணன் வாயோடே நெருக்கி)
பருகும்–பாகம் பண்ணப்பெற்ற
இ செம் தொண்டை வாய்–இந்தச் சிவந்த கோவை வாயை
வந்து காணீர்!
சேயிழையீர்! வந்து காணீர்!!

விளக்க உரை

வாயினழகைக் காட்டுகின்றாள். இடைச்சிகள் ஒவ்வொருத்தியும் ‘என் சிங்கக்குட்டியே! என் யானைக்குட்டியே!’ என்று
பலபடியாகச் சீராட்டி ஸ்ரீகிருஷ்ணகுமாரனை யெடுத்துக் கொண்டு அவனது வாயில் ஊறுகின்ற அமுதம்போல் போக்யமான
நீரைப் பானம் பண்ணுவார்களாம். அப்படி அவர்களால் பானம் பண்ணப்பெற்ற அதரத்தினழகை வந்து பாருங்களென்கை.

————

நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழ லீர்வந்து காணீரே–1-2-15-

பதவுரை

அசோதை–யசோதைப்பிராட்டி
நோக்கி–(கண்ணபிரான்திருமேனியின் மென்மைக்குத் தக்கப்படி) பார்த்து ஆராய்ந்து
நுணுக்கிய–அரைத்த
மஞ்சளால்–மஞ்சட்காப்பாலே,
நாக்குவழித்து – ;
நீராட்டும்–ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற
இ நம்பிக்கு–இக்கண்ணபிரானுடைய
வாக்கும்–திருவாக்கும்
நயனமும்–திருக்கண்களும்
வாயும்–அதரஸ்புரணமும்
முறுவலும்–புன்சிரிப்பும்
மூக்கும் இருந்த ஆ–மூக்குமிருந்தபடியை
காணீர்!
மொய்குழலீர்–செறிந்தகுழலையுடைய பெண்காள்! வந்து
காணீர்!

விளக்க உரை

கண்ணபிரானுடைய திருமேனியின் ஸௌகுமார்யத்தை யறியும் யசோதையானவன் தான் அத்திருமேனிக்குத் தகுதியாக அரைத்த
மஞ்சட் காப்பாலே நாக்கை வழித்துத் திருமஞ்சனஞ் செய்யும்படி அடங்கியிருப்பன் கண்ணன்;
அவனுடைய வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருக்கிறப்படியைப் பாருங்களென்கிறது.
வாக்கு என்றது – தாய், தந்தை முதலானாருடைய நாமங்களைச் சொல்லுகிற வாகிந்திரியத்தைச் சொன்னபடி.
வாயும் என்றது அதரத்தைச் சொன்னபடி. இனி, வாயும் என்பதை முறுவலுக்கு விசேஷணமாக்கி,
வாய்த்திருக்கின்ற புன்சிரிப்பு என்று உரைக்கலாம் என்றான் ஒரு தமிழன்.

—————–

விண் கொளமரர்கள் வேதனை தீர முன்
மண் கொள் வசுதேவர் தம் மக னாய் வந்து
திண் கொளசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே–1-2-16-

பதவுரை

விண் கொள்–ஸ்வர்க்காதிலோகங்களை இருப்பிடமாகக் கொண்ட
அமரர்கள்–தேவதைகளுடைய
வேதனை தீர–துன்பங்கள் தீரும்படி
முன்–முன்னே
மண்கொள்–பூமியை இருப்பிடமாகக் கொண்ட
வசுதேவர் தம்–வஸுதேவர்க்கு
மகனாய் வந்து–பிள்ளையாய் வந்து பிறந்து
திண்கொள்–வலிமைகொண்ட
அசுரர்–அஸுரர்கள்
தேய–க்ஷயிக்கும்படி
வளர்கின்றான்–வளராநின்ற கண்ணனுடைய
கண்கள் இருந்த ஆ காணீர்!
கனம் வளையீர்–கநக கங்கணத்தை யுடைய பெண்காள்
வந்து காணீர்!!

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் நயனமும் என்று கண்ணழகைக் காட்டியிருந்தாலும் அங்கு முகஸமுதாய சோபையைக் காட்டின மாத்திரமேயுள்ளது;
இப்பாட்டில் விசேக்ஷித்துத் திருக்கண்களினழகைக் காட்டுகின்றாள். கண்ணபிரான் சிறுகுழந்தையான பருவத்திலேயே
பலபல அசுரர்களை அழித்ததனால் ‘‘திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான்’’ என்கிறார்.
‘‘பரித்ராணாய ஸாதூநாம் விநாசாயச துஷ்க்ருதாம்’’ என்ற அர்த்தம் முதலடியிலும் மூன்றாமடியிலும் விளங்க நின்றமை காண்க.
அசுரரை என்றவிடத்து, ஐ – சாரியை. வேதாநா என்னும் வட சொல் ‘வேதனை’ என்று ஐயீறாகத் திரிந்தது.

—————–

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே–1-2-17-

பதவுரை

பருவம்–வயது
நிரம்பாமே-முதிருவதற்கு முன்னமே
பார்எல்லாம்–பூமியிலுள்ளார் எல்லாரும்
உய்ய–உஜ்ஜீவிக்கும்படியாக
திருவின் வடிவு ஒக்கும்–பிராட்டியின் வடிவுபோன்ற வடிவையுடையளான
தேவகி–தேவகிப்பிராட்டியாலே
பெற்ற–பெறப்பட்டவனாய்
உருவு கரிய–உருவால் கறுத்ததாய்
ஒளி–உஜ்ஜவலமான
மணி–மணி போன்ற
வண்ணன்–வடிவையுடையனான கண்ணபிரானுடைய
புருவம் இருந்த ஆ காணீர்
பூண் முலையீர்–ஆபரணம் பூண்ட முலையையுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

முதலடியால், சக்ரவர்த்தி திருமகனிற்காட்டில் கண்ணபிரானுக்கு வாசி சொல்லுகிறது;
அவன் பருவம் நிரம்பின பின்பிறே விரோதிகளை முடித்து அநுகூலரை வாழ்வித்தது.
பருவம் ‘பர்வ’ என்னும் வட சொல். பார் – இடவாகு பெயர். பார் எல்லாம் – ஒருமைப் பன்மை மயக்கம்.

—————

மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு
வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை
திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-18-

பதவுரை

மண்ணும்–பூமியையும்
மலையும்–மலைகளையும்
கடலும்–கடல்களையும்
உலகு எழும்–ஸப்தலோகங்களையும்
உண்ணுந்திறந்து–திருவயிற்றிலே வைக்கிறவளவில்
மகிழ்ந்து–உகந்து
உண்ணும்–திருவயிற்றிலே வைத்த
பிள்ளைக்கு–(இக்) கண்ணபிரானுடையதான
எழில் வண்ணம் கொள்–அழகிய நிறங்கொண்ட
மகரம் குழை இவை–இம்மகர குண்டலங்களின்
திண்ணம் இருந்த–திண்மை இருந்தபடியை
காணீர்! சேயிழையீர்! வந்து காணீர்!!

விளக்க உரை

மலையேழும், கடலேழும், உலகேழும் என்றும் இயைக்கலாம்.
மகிழ்ந்து -இவற்றை ப்ரளயங்கொள்ளாதபடி காக்கப் பெற்றோமே’ என்று மகிழ்ச்சி. மகரம் – வடசொல்.
சுறாமீன்வடிவமாகச் செய்யப்படும் காதணிக்கு மகரகுண்டலமென்று பெயர்.
திண்ணம் ‘அம்’ விகுதிபெற்ற பண்பு பெயர். கண்டார் கண்ணையும் நெஞ்சையும் கவரும்படியான திண்மை.

———————-

முற்றிலும் தூதையும் முன் கைம் மேல் பூவையும்
சிற்றி லிழைத்துத் திரிதரு வோர்களை
பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்
நெற்றி இருந்தவா காணீரே நேரிழை யீர்வந்து காணீரே-1-2-19-

பதவுரை

சிற்றில்–சிறுவீடுகளை (மணலினால்)
இழைத்து–செய்துகொண்டு
திரிதருவோர்களை–விளையாடித்திரியும் சிறு பெண்களை
பற்றி–(வலியக்) கையைப் பிடித்துக்
கொண்டு (அவர்களுடைய)
முற்றிலும்–(மணல்கொழிக்கிற)சிறு சுளகுகளையும்
தூதையும்–(மணற்சோறாக்குகிற)சிறு பானைகளையும்
முன் கை மேல்–முன் கைமேல் (வைத்து கொண்டு பேசுகிற)
பூவையும்–நாகணவாய்ப்புள்ளையும்
பறித்துக்கொண்டு–அபஹரித்துக்கொண்டு
ஓடும்–ஓடுகின்ற
பரமன் தன்–(தீம்பில்) சிறந்தவனான
கண்ணபிரானுடைய
நெற்றி இருந்த ஆ காணீர்!
நேர்–நேர்த்தியையுடைய
இழையீர்–ஆபரணங்களணிந்த பெண்காள்!
வந்து காணீர்!

விளக்க உரை

கண்ணபிரான் அவதரித்த பதின்மூன்று பதினான்கு நாள்களுக்குள் ஊர்ப்பெண்களை யழைத்து அவயவ ஸௌந்திரியத்தை
யசோதைப் பிராட்டி காட்டின பாசுரமாக இத்திருமொழி அமைந்ததாயினும், பிறகு நடந்த பால சேஷ்டிதங்களையும்
இவ்வாழ்வார் அறிந்தவராகையாலே அவற்றையும் கண்ணபிரானுக்கு விசேஷணமாக்கி யருளிச்செய்கிறார்.
சிறுபெண்கள் விளையாட்டாகச் சிற்றிலிழைப்பது வழக்கம். அதாவது தெருக்களில் கொட்டியிருக்கும் மண்ணையும் கல்லையுங்கொண்டு
வீடு கட்டுவது போற் செய்து விளையாடுகை. அதற்கு மணல் கொழிக்கச் சிறுமுறம் வைத்துக் கொண்டிருப்பார்கள்.
மணற்சோறு சமைக்கச் சிறு பானையும் வைத்துக் கொண்டிருப்பார்கள்!
தவிரவும், அப்பெண்கள் கொஞ்சி விளையாடும் பொருட்டுத் தங்களது முன்னங்கை மேல் நாகணவாய்ப் பக்ஷியையும் வைத்துக்கொண்டிருப்பார்கள்.
இவற்றையெல்லாம் பலாத்கரமாக பறித்துக் கொண்டு பிடிகொடாமல் ஓடுகின்ற தீம்பனாம் கண்ணபிரான்.
அப்படிப்பட்ட இவனுடைய நெற்றியானது அங்ஙனம் ஓடுகின்ற ஆயாஸத்தினால் குறுவியர்ப்புத் தோன்றி
அழகாயிருப்பதைக் காணுங்கோளென்று காடுகிறபடி. முற்றில் – சிறுமுறம். ‘முச்சல்’ என்று சிறுவர்களின் வழக்கச் சொல்.

———

அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கு மார்ப்ப
மழகன் றினங்கள் மறித்துத் திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20-

பதவுரை

அழகிய–அழகியதும்
பைம் பொன்னின்–பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான
கோல்–மாடு மேய்க்குங் கோலை
அம் கை–அழகிய கையிலே
கொண்டு–பிடித்துக் கொண்டு
கழல்கள்–(கால்களிலுள்ள) வீரக் கழல்களும்
சதங்கை–சதங்கைகளும்
கலந்து–தன்னிலே சேர்ந்து
எங்கும் ஆர்ப்ப–போமிடமெல்லா மொலிக்க
மழ–இளமை பொருந்திய
கன்று இனங்கன்–கன்றுகளின் திரள்களை
மறித்து–(கை கழியப் போகாமல் மடக்கி)
திரிவான்–திரியுமவனான கண்ணபிரானுடைய
குழல்கள்–திருக் குழல்களானவை
இருந்த ஆ காணீர்!
குவி முலையீர்! வந்து காணீர்!!

விளக்க உரை

கண்டவர்கள் கண்ணுக்கு அழகியதாய்ப் பசும்பொன்னாலே செய்யப்பட்டதான கோலை கன்றுகளை மடக்கி மேய்ப்பதற்குக்
கருவியாகக் கையிலே கொண்டும், கன்றுகளை மடக்குவதற்காக ஓடுகையாலே திருவடிகளிலே சாத்தியிருக்கிற
வீரத்தண்டைகளும் சதங்கைகளும் ஒன்றோடொன்று கலந்து எங்கும் ஒலிக்கவும், இளங்கன்றுகளின் கூட்டங்களைச் சிதறிப்
போகவொட்டாமல் மடக்கி மேய்க்கின்ற கண்ணபிரானுடைய அசைத்தலைந்து விளங்குகின்ற திருக் கேச பாசங்களின்
அழகைக் காணுங்கள் என்று – பாதாதி கேசாந்தமாகக் காட்டித் தலைக்கட்டிற்றாயிற்று. .

——————

சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தைத் தென் புதுவைப் பட்டன்
விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே–1-2-21-

பதவுரை

சுரும்பு ஆர்–வண்டுகள் படிந்து நிறைந்த
குழலி–கூந்தலை யுடையளான
அசோதை–யசோதைப் பிராட்டியால்
முன்–க்ருஷ்ணாவதார ஸமயத்திலே
சொன்ன–சொல்லப்பட்ட
திருப்பாத கேசத்தை–பாதாதிகேசாந்த வர்ணநப் பாசுரங்களை
தென் புதுவை பட்டன்–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு (நிர்வாஹகரான) அழ்வார்
விருப்பால்–மிக்க ஆதரத்தோடு
உரைத்த–அருளிச்செய்த
இருபதோடுஒன்றும்–இவ்விருபத்தொரு பாட்டுக்களையும்
உரைப்பார் தாம்–ஓதுமவர்கள்
போய்–(இம் மண்டலத்தைக் கடந்து) போய்
வைகுந்தத்து–ஸ்ரீவைகுண்டத்திலே
ஒன்றுவர்–பொருந்தப் பெறுவார்கள்

விளக்க உரை

கிருஷ்ணாவதார ஸமயத்தில் யசோதைப் பிராட்டியானவள் ஊர்ப்பெண்டுகளை யெல்லாம் அழைத்துக் கண்ணபிரானுடைய
பாதாதிகேசாந்த அவயங்களின் ஸௌந்தரியத்தைக் காட்டின பாசுரங்களையே நான் பேசியிருக்கின்றேன்;
இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள் எம்பெருமானை நித்யாநுபவம் பண்ணுவதற்குப் பாங்கான திருநாட்டிலே சென்று இன்புறுவர் –
என்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

சுரும்பு+ஆர் = சுருப்பார். பாதகேசம் – வட சொல் தொடர். பாதகேசமென்றது – பாதாதிகேசாந்த வர்ணனை என்றபடி. .

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-1–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 23, 2021

வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே.–1-1-1-

பதவுரை

வண்ணம்–அழகு பொருந்திய
மாடங்கள்–மாடங்களாலே
சூழ்–சூழப்பட்ட
திருக்கோட்டியூர்–திருக்கோட்டியூரில் (எழுந்தருளியுள்ள)
கேசவன்–கேசவனென்ற திருநாமமுடையனாய்
நம்பி–கல்யாணகுண பரிபூர்ணனான
கண்ணன்–ஸ்ரீக்ருஷ்ணன்
இன் இல்–(நந்தகோபருடைய) இனிய திருமாளிகையிலே
பிறந்து–திருவவதிரித்தருளின வளவிலே,
(திருவாய்ப்பாடியிலுள்ளார்)
எண்ணெய்–எண்ணெயையும்
சுண்ணம்–மஞ்சள் பொடியையும்
எதிர் எதிர் தூவிட–(ஸந்தோஷத்தாலே ஒருவர்க்கொருவர்) எதிர்த்துத்தூவ,
கண்டக்கினிய–விசாலமாய்
நல்–விலக்ஷணமான
முற்றம்–(நந்தகோபர் திருமாளிகையில்) திருமுற்றமானது
கலந்து–(எண்ணெயும் மஞ்சள் பொடியும் துகையுண்டு) தன்னிலே சேர்ந்து
அளறு ஆயிற்று–சேறாய்விட்டது.

திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் திருவாய்ப்படியில் நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீக்ருஷ்ணனாக
அவதரித்தவளவில் அங்குள்ளவர்கள் எல்லோரும் அளவுகடந்த ஆநந்தமடைந்து, எண்ணையையும் மஞ்சள் பொடியையும்
ஒருவர்மேல் ஒருவர் தூவிக் கொள்ளவே அவ்விரண்டும் கீழேவிழுந்து ஒன்று சேர்ந்து
அந்தத் திருமாளிகையின் முற்றம் முழுவதையும் சேறுமயமாக ஆக்கிவிட்டன.

(ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலில் சேஷசயனத்தை விட்டு நீங்கி வடமதுரையில் வந்து பிறந்தான்) இதியாதி பிரமாணங்களாலே
க்ஷீராப்தியிலிருந்து எம்பெருமான் கண்ணனாக அவதரித்தமை விளங்காநிற்க,
இங்கே திருக்கோட்டியூரில் நின்றும் அவதரித்ததாகச் சொல்லுகிறது என்னவெனில்,
முன்பு இரணியன் மூவுலகங்களையும் அரசாண்டபோது தேவதைகள் அவ்வசுரனை முடிப்பதற்கு வேண்டிய உபாயத்தை
ஆலோசிப்பதற்குத் தகுதியானதும் அசுரர்களின் உபத்ரவமற்றதுமான இடத்தைத் தேடுமளவில்,
கதம்பமுனியின் சாபத்தினால் துஷ்டரொருவரும் கிட்டவர முடியாமலிருந்த இந்த (திருக்கோட்டியூர்) க்ஷேத்திரம்
க்ஷீராப்தி போலவே ஆலோசிப்பதற்கு ஏகாந்தஸ்தாகமாய் இருந்தபடியாலும்,
தேவதைகளின் கூட்டத்தில் எழுந்தருளி அவர்களை ரக்ஷிக்க வேண்டிய ரீதியைச் சிந்திக்கின்ற க்ஷீராப்தி நாதன் போலவே
இந்த க்ஷேத்திரத்து எம்பெருமானும் சேஷசாயியாய் இருப்பதனாலும்,
தமக்கு மங்களாசாசநத்துக்குக் கூட்டுறவான செல்வநம்பியைப் பற்றிச் சொல்லும்போது ஸ்மரிக்கநேர்ந்த இந்த திவ்ய தேசத்தினிடத்தில்
தமக்குள்ள அன்புமிகுதியினாலும் இப்படி ஐக்கியமாக அருளிச்செய்தாரென்று கொள்க.
தேவர்கள் கூட்டமாயிருந்து ஆலோசித்தஸ்தலமென்கிற காரணம் பற்றியே இதற்கு கோஷ்டீபுரம் என்று திருநாமமாயிற்று.
அதுவே தமிழில் கோட்டியூர் என்றாயிற்று.

கண்ணபிரான் வடமதுரையில் கம்ஸனுடைய சிறைக்கூடத்திலே பிறந்திருக்க, நந்தகோபருடைய திருமாளிகையிற் பிறந்ததாகச் சொன்னது –
கம்ஸனுக்குத் தப்பி கோகுலத்தில் பிரவேசித்த பின்புதான் இவன் பிறந்ததாக நினைத்திருக்கையாலே.

பிறந்தினில் – இதை முழுச் சொல்லாகக் கொண்டு ‘பிறந்தவளவில்’ என்றுமுரைக்கலாம்.

‘‘பிறந்து இன் இல்’’ என்று பிரித்துக் கொண்டால் பிறந்து ‘பிறக்க’ என்னும் செயவெனச்சத்தின் திரிபாம்.
‘‘சொல்திரியினும் பொருள் திரியாவினைக்குறை’’ என்னும் நன்னூற் சூத்திரமறிக.
இனி, ‘பிறந்த இன் இல் என்றும் பிரிக்கலாம். பிறந்த போக்யமான க்ருஹத்திலே என்றபடி.

எள் + நெய் = எண்ணெய். ‘சூர்ணம்’ என்ற வடசொல் சுண்ணமெனத் திரிந்தது. தூவிட – தூவியிட.

கண்ணன் முற்றம் – கண்ணன் பிறந்தபோதே அவனையே திருமாளிகைக்குத் தலைவனாக நந்தகோபர் அபிமானித்ததனால்
‘கண்ணபிரானுடைய முற்றம்’ என்கிறார் என்றுமுரைக்கலாம். ‘கண் நல் முற்றம்’ என்றும் பிரிக்கலாம்.

————–

ஓடுவார் விழு வார் உகந் தாலிப்பார்
நாடுவார் நம்பி ரான் எங்குற் றானென்பார்
பாடு வார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடு வார்களும் ஆயிற்று ஆய்ப் பாடியே.-1-1-2-

பதவுரை
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியானது,
ஓடுவார்–(ஸ்ம்ப்ரமித்து) ஓடுவாரும்
விழுவார்–(சேற்றிலே வழுக்கி) விழுவாரும்
உகந்து–உகப்புக்குப் போக்குவீடாக
ஆலிப்பார்–கோஷிப்பாரும்
நாடுவார்–(பிள்ளையைத்) தேடுவாரும்
நம் பிரான்–நமக்கு உபகாரகனான கண்ணன்
எங்கு தான் என்பார்–எங்கேதான் (இராநின்றான்) என்பாரும்
பாடுவார்களும்–பாடுவார்களும்
பல் பறை–பலவகை வாத்யங்கள்
கொட்ட–முழங்க
நின்று–அதற்குப் பொருந்த நின்று
ஆடுவார்களும்–கூத்தாடுவாருமாக
ஆயிற்று–ஆய்விட்டது.

விளக்க உரை
கோகுலத்திலுள்ளாரெல்லாரும் தங்கட்குத் தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு
அளவற்ற ஆநந்தமடைந்து தாம் செய்வது இன்னதென்று தெரியாமல், சிலர் ஓடினார்கள்; சிலர் சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள்;
சிலர் உரக்க கோஷம் செய்தார்கள்; சிலர் ‘நம் கண்மணி எங்கே?’ என்று குழந்தையைத் தேடினார்கள்; சிலர் பாடினார்கள்;
சிலர் பறையடிக்க சிலர் அதுக்குத் தகுதியாகக் கூத்தாடினார்கள்;
ஆகவிப்படி பஞ்சலக்ஷம் குடியிலுள்ளாரெல்லாரும் சொல்ல முடியாத கோலாஹலமாயிருந்தார்கள்.

க்ருஷ்ணஜநநத்தால் திருவாப்பாடியில் விகாரமடையாதார் ஒருவருமில்லையென்பார் ஆய்ப்பாடியே ஓடுவாரும் ஆடுவாருமாக ஆயிற்றென்றார்.
‘எங்குற்றான்’ என்ற பாடமும் கொள்ளத்தக்கதே.

———

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்
ஆணொப் பார் இவன் நேரில்லை காண் திரு
வோணத் தானுலகாளு மென் பார்களே.–1-1-3-

பதவுரை
சீர் உடை–ஸ்ரீமானான
பிள்ளை–க்ருஷ்ணன்
பேணி–(கம்ஸாதிகள் கண்படாதபடி தன்னைக்) காத்து வந்து
பிறந்தினில்–பிறந்தவளவில்
தாம்–ஆடிப்பாடி ஆயர்கள்
காண–(கண்ணனைக்) காண்கைக்காக
புகுவார்–உள்ளே நுழைவாரும்
புக்கு–உள்ளேபோய் (கண்டு)
போதுவார்–வெளிப்புறப்படுவாரும்,
ஆண் ஒப்பார்–‘‘ஆண்தன்மையொத்திருப்பவர்களில்
இவன் நேர்–இவனோடு ஒத்திருப்பார்
இல்லை–(யாரும்) இல்லை; (இவன்)
திரு ஓணத்தான்–ச்ரவண நக்ஷரத்தில் அவதரித்த ஸர்வேச்வரனுடைய
உலகு–விபூதிகளையெல்லாம்
ஆளும்–ஆளக்கடவன்’’
என்பார்கள்-என்று சொல்லுவாருமாக ஆனார்கள்.

விளக்க உரை
கண்ணபிரான் அவதரித்த காலத்தில் கோகுலத்தவர்கள் அந்தக் குழந்தையைப் பார்க்க நந்தகோபர் திருமாளிகையிற் புகுந்துகொண்டும்,
புகுந்து பார்த்தவர்கள் வெளியில் புறப்பட்டு வந்துகொண்டும், அவர்களில் ஸாமுத்ரிக சாஸ்த்ரம் தெரிந்தவர்கள்
‘இவன் எல்லாரைக்காட்டிலும் விலக்ஷண புருஷன் என்னும்படியாக லக்ஷணங்கள் அமைந்திருப்பதனால்
இவன் உபய விபூதி நிர்வாவஹனாயிருப்பான்’ என்று சொல்லிக் கொண்டும் இருந்தார்கள்.

கண்ணபிரான் பிறக்கும்போது சங்கு சக்கரங்களுடனே தோன்றக்கண்ட தேவகீ வஸுதேவர்கள்
‘இந்த ரூபத்தைக் கம்ஸன் தெரிந்து கொள்ளாதபடி மறைத்துக்கொள்’ என்று பிரார்த்திக்க, அப்படியே தாய் தந்தையருடைய
சொல்லைப் பரிபாலித்து, அக்காலத்தில் கம்ஸனால் நேரக்கூடிய ஆபத்தில் நின்றும் தப்பினபடியால்,
‘பேணி’ என்றும், ‘சீருடைப்பிள்ளை’ என்றும் அருளிச் செய்தார். சொன்னபடி கேட்கிற பிள்ளையன்றோ சீருடைப்பிள்ளை.
பேணி என்பதற்கு – ஆசைப்பட்டுக் கொண்டு என்றும், தன்னை மறைத்துக்கொண்டு என்றும் பொருள் சொல்லலாம்.

ஆண் ஒப்பார் இவன் நேரில்லை – லோகத்திலுள்ளவர்கள் ஆண் என்கிற தன்மையில் மாத்திரம் இவனை யொத்திருக்கிறார்களே யொழிய,
மற்றபடி திருமேனி ஸந்நிவேசம் முதலானவற்றில் இவனுக்கு ஒப்பானவர்கள் இல்லையென்கை.
‘‘ஆணொப்பான்’’ என்று பாடமாகில், ஆண்களுக்கு உரிய லக்ஷணத்தால் என்று பொருளாம் ஆன்விகுதி -மூன்றாம் வேற்றுமையுருபு.

‘‘திருவோணத்தானுலகு’ என்று ஆறாம்வேற்றுமைத் தொகையாகக் கொள்ளாமல்
‘திருவோணத்தான்’ என்றும் ‘உலகாளும்’ என்றும் இரண்டு வாக்கியமாகப் பிரித்துக்கொண்டு,
இப்படியிருப்பதால் இவன் திருவோணத்தானாகிய திருமாலேயாவன், உலகங்களையும் ஆள்வன் என்பதாகவுமுரைக்கலாம்.
ஆளும் – செய்யுமென்னும் வாய்பாட்டு வினைமுற்று ஆண்பாலுக்கு வந்தது.

——–

உறியை முற்றத்து உருட்டி நின் றாடுவார்
நறு நெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.–1-1-4-

பதவுரை
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியிலுள்ள
ஆயர்–இடையர்கள்
உறியை–(பால் தயிர் சேமித்து வைத்த)உறிகளை
முற்றத்து–முற்றத்திலே
உருட்டி நின்று–உருட்டிவிட்டு
ஆடுவார்–கூத்தாடுவார் சிலரும்,
நறு–மணம்மிக்க
நெய் பால்தயிர்–நெய்யையும் பாலையும் தயிரையும்
நன்றாக–நிச்சேஷமாக
தூதுவார்–தாநம் பண்ணுவார் சிலரும்,
செறி மென்–நெருங்கி மெத்தென்றிருக்கிற
கூந்தல்–மயிர்முடியானது
அவிழ–அவிழ்ந்து கலையும்படி
திளைத்து–நர்த்தநம்பண்ணுவார் சிலருமாக,
எங்கும்–சேரியடங்கலும்
அறிவு அழிந்தனர்–தங்களூடைய விவேகம் ஒழியப் பெற்றனர்.

விளக்க உரை
கண்ணன் பிறந்த ஸந்தோஷம் உள்ளடங்காமல், நெய்யும் பாலும் தயிருமிருக்கிற உறிகளை அறுத்துக் கொண்டுவந்து
முற்றத்திலே உருட்டிவிட்டு ஆடினார்கள் சிலர்; நெய் பால் தயிர் முதலியவற்றை அபாரமாக தானஞ் செய்தார்கள் சிலர்;
தலைமுடி அவிழ்ந்ததும் தெரியாமல் கூத்தாடினார்கள் சிலர் ஆகவிப்படி கோகுலத்து இடையர்கள் எல்லாரும்
ஸந்தோஷப் பெருமையினால் இன்னதுதான் செய்வதென்று தெரியாமல் உன்மத்தரானார்கள்.

நன்றாகதூவுவார் என்றவிடத்து நன்று ஆக – (பிள்ளைக்கு) நன்மையுண்டாகும்படி என்று முரைக்கலாம்.

———–

கொண்ட தாளுறி கோலக் கொடு மழுத்
தண்டினர் பறியோலை சயனத்தர்
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் –1-1-5-

பதவுரை
தான்கொண்ட–கால்நெருக்கத்தையுடைய
உறி–உறிகளையும்
கோலம்–அழகிய
கெரடு–கூர்மையான
மழு–மழுக்களையும்
தண்டினர்–தடிகளையுமுடையராய்
பறி–(தாழைமடலினின்றும்) பறிக்கப்பட்ட
ஓலை-ஓலைகளினாற்செய்த
சயனத்தர்–படுக்கையையுடையராய்
விண்ட–விசஹித்த
முல்லை அரும்பு அன்ன–முல்லையரும்பு போன்ற
பல்லினர்–பற்களையுடையவரான
அண்டர்–இடையரானவர்கள்
மிண்டி–(ஒருவருக்கொருவர்) புகுந்து
நெய் ஆடினார்–நெய்யாடல் ஆடினார்கள்.

விளக்க உரை
ஜாதிக்குத் தகுந்தபடி உறியையும் மழுவென்னும் ஆயுதத்தையும் பசு மேய்க்கிற கோலையும் ஓலைப்பாயையும் உடையரான
இடையர்கள் ஆநந்தத்தினால் தங்களுடைய பற்கள் வெளியே தோன்றும்படி சிரித்துக்கொண்டு நெருங்கிவந்து நின்று நெய்யாடலாடினார்கள்.
நெய்யாடலாவது – ஸந்தோஷ ஸூசகமாக எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஒருவரோடொருவர் தழுவி நின்று ஆடும் ஆட்டம்;
எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானஞ் செய்தலுமாம்.

‘‘விண்டின் முல்லை’’ என்றும் பாடமுண்டாம்; விண்டு – மலை; மலை முல்லையரும்பு நெருங்கிய பூத்தாற்போலேயிருக்கிற
(வெண்ணிறமான) பற்களையுடையர் என்றபடி, அண்டர் – இடையர்களும் தேவர்களும்; இங்கு இடையர்களைச் சொல்லுகிறது.

———-

கையும் காலும் நிமிர்த்து கடார நீர்
பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித் தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே 1-1-6

பதவுரை
கையும்–திருக்கைகளையும்
காலும்-திருவடிகளையும்
நிமிர்த்து–(நீட்டி) நிமிர்த்து
கடாரம்–கடாரத்தில் (காய்ச்சின)
நீர்–திருமஞ்சனத் தீர்த்தத்திலே
பசு சிறு மஞ்சளால்–குறுங்கண்ணான பசு மஞ்சளால்
பைய–திருமேனிக்குப் பாங்காக
ஆட்டி–ஸ்நாநம் செய்வித்து
ஐய-மெல்லிதான
நா–நாக்கை
வழித் தாளுக்கு–வழித்தவளான யசோதைக்காக
அங்காந்திட-(கண்ணன்) வாயைத்திறக்க, (யசோதையானவன்)
பிள்ளை–கண்ணபிரானுடைய
வாயுள்–வாயினுள்ளே
வையம் ஏழும்–உலகங்களையெல்லாம்
கண்டாள்–ஸாக்ஷத்கரித்தாள்.

விளக்க உரை

யசோதைப்பிராட்டி ஒருநாள் ஸ்ரீக்ருஷ்ணசிசுவைக் குளிப்பாட்டும்போது வழக்கப்படியே குழந்தையின் கையையும் காலையும்
நீட்டி நிமிர்த்துப் பசுமஞ்சளைப் பூசி, நல்ல வாஸநாத்ரவ்யங்களைச் சேர்த்துக் காய்ச்சின தீர்த்தத்தைக் கொண்டு குளிப்பாட்டி,
முடிவில் மஞ்சள் தேய்வைக் கொண்டு நாக்கு வழிக்குமளவில் அந்தக் குழந்தை வாயைத் திறக்க,
அந்த வாயிலே ஸகல லோகங்களையுங் கண்டாள்.
அர்ஜுநனுக்கு திவ்யசக்ஷுஸ்ஸைக் கொடுத்துத் தன்னுடைய விச்வரூபத்தைக் காட்டினாப்போலே
யசோதைக்கும் தன்னுடைய ஸ்வந்தரமான இச்சையினாலே இப்படி காட்டியருளினனென்க.

———-

வாயுள் வையகம் கண்ட மட நல்லார்
ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே–1-1-7-

பதவுரை

வாயுள்–(பிள்ளையின்) வாயினுள்ளே
வையகம்–உலகங்களை
கண்ட–ஸாக்ஷாத்கரித்த
நல் மடவார்–வைலக்ஷண்யத்தையும் மடப்பத்தையுமுடைய
மாதர்–ஸ்த்ரீகளானவர்கள், (‘‘இவன்)
ஆயர் புத்திரன் அல்லன்–இடைப்பிள்ளை யல்லன்
அரு தெய்வம்–பெறுதற்கரிய தெய்வம்,
பாய சீர் உடை–பரம்பின புகழையுடையனும்
பண்பு உடை–குணங்களை யுடையனுமான
பாலகன்–(இந்த) சிறு பிள்ளையானவன்
மாயன்–ஆச்சர்ய சக்தி யுக்தன்’’
என்று–என்று (ஒருவர்க்கொருவர்) சொல்லிக் கொண்டு
மகிழ்ந்தனர்–ஆநந்தித்தார்கள்.

விளக்க உரை
கண்ணனுடைய வாயில் ஸகல லோகங்களையுங்கண்ட யசோதையானவள் ஆநந்தத்தாலே மற்றுமுள்ள
பெண்டுகளையும் அழைத்துக்காட்ட, கண்ணபிரான் அவர்களுக்கும் அருள்கூர்ந்து அப்படியே காட்டிக்கொடுக்க,
அப்பெண்களெல்லாரும் யசோதையைப் போலவே கண்ணன் வாயில் ஸகல லோகங்களையுங் கண்டு ஆச்சரியப்பட்டு,
‘இவன் ஸாமாந்யனான இடைப்பிள்ளையல்லன்; ஸாக்ஷாத் பரமபுருஷனே இப்படிவந்து அவதரித்தானாக வேணும்’
என்று கொண்டாடிக் கூறினார்கள்.

———-

பத்து நாளும் கடந்த இரண்டாநாள்
எத்தி சையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே-1-1-8-

பதவுரை

பத்து நளும் கடந்த–பத்துநாளுங் கழிந்த
இரண்டாம் நாள்–பன்னிரண்டாம் நாளான நாமகரண திநத்திலே
எத் திசையும்–எல்லாத் திக்குக்களிலும்
சயம் மரம்–ஜயதோரண ஸ்தம்பங்களை
கோடித்து–நாட்டி அலங்கரித்து
மத்தம் மா–மதம் பிடிக்குந் தன்மையுள்ள மிருகமாகிய யானைகள் தங்கியிருக்கிற
மலை–கோவர்த்தந பர்வதத்தை
தாங்கிய–(குடையாக) ஏந்தி நின்ற
மைந்தனை–குழந்தையாகிய கண்ணனை
ஆயர்–இடையரானவர்கள்
உத்தானம் செய்து–கைத் தலத்திலே வைத்துக் கொண்டு
உகந்தனர்–ஸந்தோஷித்தார்கள்.

விளக்க உரை

ஸ்ரீக்ருஷ்ண சிசுவுக்கு நாமகரணம் செய்ய வேண்டிய தினம் வந்தவளவில், கோகுலத்து இடையர்களெல்லாரும் எங்கும்
வெற்றித் தோரணங்களை நாட்டி அலங்கரித்து ஸ்ரீக்ருஷ்ணனென்று திருநாமமிட்டு அக்குழந்தையைத் தங்கள் தங்கள்
கையிலேயெடுத்துக்கொண்டு ஆநந்தம் பொங்கி நின்றார்கள்.
பிறந்த பத்தாம் நாளிலாவது பன்னிரண்டாம் நாளிலாவது வேறு நல்ல நாளிலாவது நாமகரணம் செய்யும்படி மநுஸ்மிருதி கூறுகின்றது.
இடையர்களெல்லாரும் வழக்கப்படி தேவேந்திரனை ஆராதிக்கத் தொடங்கினபோது கண்ணபிரான் அதனைத் தடுத்துக்
கோவர்த்தன மலைக்கே அந்த ஆராதனங்களை நடத்தி வைக்க, இந்திரன் பசிக்கோபத்தால் ஏழுநாள் விடா மழை பெய்வித்துப்
பசுக்களையும் இடையர்களையும் துன்பப்படுத்தினபோது அந்த கோவர்த்தன மலையையே யெடுத்துக் குடையாகப் பிடித்துக்
கண்ணன் காத்தருளின செய்தி ப்ரஸித்தம்.
இப்படி கண்ணபிரான் மலையைக் குடையாகப்பிடித்தது நாமகரணஞ்செய்த பின்பு நிகழ்ந்ததாயினும்,
இவ்வாழ்வார் பிற்காலத்தவராகையாலே இப்போது அதனை அநுஸந்திருக்கக் குறையில்லை.

மைந்தன் – ‘மைந்து’ என்று இளமைக்கும் வலிமைக்கும் அழகுக்கும் பெயர்; அதனையுடையவன் மைந்தன். உத்தானம் – வடச்சொல்.

———

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான் மெலிந் தேன் நங்காய்–1-1-9-

பதவுரை

நங்காய்–பூர்ணகளான ஸ்த்ரீகளே (இப்பிள்ளையானவன்)
கிடக்கில்–(தொட்டிலில்) கிடந்தானாகில்
தொட்டில்–தொட்டிலானது
கிழிய–சிதிலமாம்படி
உதைத்திடும்–(கால்களினால்) உதையா நின்றான்
எடுத்துக் கொள்ளில்–(இவனை இடுப்பில்) எடுத்துக் கொண்டால்
மருங்கை–இடுப்பை
இறுத்திடும்–முறியா நின்றான்.
ஒடுக்கி–(இவனுடைய கைகால்களை) ஒடுக்கி
புல்கில்–மார்வில் அணைத்துக் கொண்டால்
உதரத்து–வயிற்றிலே
பாய்ந்திடும்–பாயாநின்றான்
மிடுக்கு–(இச்சேஷ்டைகளைப் பொறுக்கவல்ல) சக்தி
இலாமையால்–(இப்பிள்ளைக்கு) இல்லாமையால்
நான்–தாயாகிய நான்
மெலிந்தேன்–மிகவும் இளைத்தேன்.

விளக்க உரை

யசோதையானவள் தன் ஸமீபத்திலுள்ள பெண்களை நோக்கிக் கண்ணனுடைய பருவத்துக்குத் தகுதியில்லாத
செயல்களைச் சொல்லுவதாக இப்பாசுரம் அமைந்தது.
நங்காய்! என்று ஏகவசநமான ஸம்போதநம் சாதியொருமையாய், ‘நங்கைமீர்களே!’ என்றபடி.
பருவத்திற்குத் தகுந்த செயல்களைச் செய்யும் புத்திரர்களைப் பெற்றிருப்பதனால் நீங்கள் ஒன்றும் குறைவில்லாமலிருக்கிறீர்கள்
என்று சொல்லிக் கொண்டவாறு என்னுடைய பிள்ளையைத் தொட்டிலில் கிடக்கவிட்டாலோ, இவன் தொட்டில் கிழிந்துபோம்படி காலாலுதைக்கிறான்.
‘கால்கள் மெத்தென்றிருப்பதால் நோயுண்டாகுமே’ என்று தொட்டிலினின்றும் எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால்,
இடத்தை விட்டு நழுவி இடுப்பை முறித்து விடுகிறான். ‘எனக்கே இக்குழந்தை செய்யும் சேஷ்டையினால் இடுப்பு முறியும் போது
இக் குழந்தைக்கு எவ்வளவு நோவுண்டாகுமோ! இஃது இவனுடைய திருமேனியின் ஸௌகுமார்யத்துக்குத் தகாதே! என்று நினைத்து
ஒரு தொழிலுஞ் செய்யமுடியாதபடி மார்பிலே வலிய அணைத்துத் தழுவிக்கொண்டால் கால்களினால் வயிற்றை உதைக்கிறான்.
இப்படி இவன் தன்னுடைய பருவத்திற்குத் தகாத காரியங்களைச் செய்வதை நினைத்து நினைத்து நான் மிகவும் இளைத்துவிட்டேன் என்கிறாள்.

மிடுக்கு இலாமையால் – இதற்கு இருவகையாகப் பொருள் கொள்ளலாம்.
இப்படி மிகச் சிறிய குழந்தையாகிய இவனுடைய செய்கையைப் பொறுக்கும் வல்லமை எனக்கு இல்லாமையால் என்றும்,
இந்த செய்கைகளையெல்லாம் தாங்குவதற்கு வேண்டிய சக்தி இந்தக் குழந்தைக்கு இல்லாமலிருப்பதனால் என்றும்.

———-

செந்நெ லார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல் லார்க்கு இல்லை பாவமே–1-1-10-

பதவுரை

செம் நெல்–செந்நெல் தாந்யங்களால்
ஆர்–நிறையப் பெற்ற
வயல்–கழனிகளாலே
சூழ்–சூழப்பட்ட
திருக்கோட்டியூர்–திருக்கோட்டியூரிலே
மன்னு–பொருந்தி வர்த்திக்குமவனாய்
நாரணன்–நாராயண சப்த வாச்யனாய்
நம்பி–ஸர்வ குண பூர்ணனான ஸர்வேச்வரன்
பிறந்தமை–திருவவதரித்தபடியை
மின்னு–விளங்கா நின்ற
நூல்–யஜ்ஞோபலீதத்தையுடைய
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரித்த–விஸ்தரித்து அருளிச் செய்த
பன்னு–ஜ்ஞாநிகள் எப்போதும் அநுஸந்திக்கக் கடவதான
இப் பாடல்–இப் பரசுரங்களை
வல்லார்க்கு–ஓத வல்லவர்க்கு
பாவமில்லை–பாபமில்லை.

விளக்க உரை
செந்நெல் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திருக்கோட்டியூரிலே நித்யவாஸம் பண்ணுகிற ஸ்ரீமந்நாராயணன்
திருவாய்ப்பாடியில் வந்து திருவவதரித்தபடியைப் பட்டர்பிரான் பேசினதும் பக்தர்களுக்கு போக்யமுமான இத் திருமொழியை
ஓத வல்லவர்கள் எம்பெருமானை அநுபவிப்பதற்கு இடையூறான பாவங்களில் நின்றும் நீங்கி வாழ்வர் என்று
இத் திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

நம்பி பிறந்தமை என்றது – திருவாய்ப்பாடியில் நடந்த கொண்டாட்டங்களுக்கும் உபலக்ஷணம்.

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பல்லாண்டு-ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

April 22, 2021

திருப்பல்லாண்டு

தனியன்கள்

நாதமுனிகள் அருளிச் செய்தது

கு3ருமுக2மநதீ4த்ய ப்ராஹ வேதா3நஶேஷா2ந்
நரபதி2பரிக்லுப்தம் ஶுல்கமாதா3துகாம:​ |
ஶ்வஷுரமமரவந்த்3யம் ரங்க3 நாத2ஸ்ய ஸாக்ஷாத்
த்3விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை

மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால் *
சொன்னார் கழற் கமலம் சூடினோம் * – முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் * கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து

பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தான் என்று *
ஈண்டிய சங்கம் எடுத்தூத * – வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான் *
பாதங்கள் யாமுடைய பற்று

———-

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு

பதவுரை

மல் ஆண்ட–மல்லர்களை நிரஸித்த
திண் தோள்–திண்ணிய தோள்களையுடையனாய்
மணி வண்ணா–நீலமணிபோன்ற திருநிறைத்தை யுடையனானவனே!
பல் ஆண்டு பல் ஆண்டு–பலபல வருஷங்களிலும்
பல் ஆயிரம் ஆண்டு–அநேக ப்ரஹ்ம கல்பங்களிலும்
பல கோடி நூறு ஆயிரமும்–இப்படி உண்டான காலமெல்லாம்
உன் சே அடி–உன்னுடைய திருவடிகளினுடைய சிவந்த
செவ்வி–அழகுக்கு
திருக்காப்பு–குறைவற்ற ரக்ஷை உண்டாயிடுக.

பாண்டியராஜனுடைய பண்டித ஸபையிலேவந்து பரதத்வநிர்ணயம் பண்ணின பெரியாழ்வார்க்கு
அவ்வரசன் யானையின் மேலே மஹோத்ஸவம் செய்வித்தபோது அந்த உத்ஸவத்தைக்கண்டு ஆநந்திப்பதற்காக
ஸ்ரீவைகுண்ட ஸபரிவாரனாய் எழுந்தருளி எதிரே ஸேவைஸாதிக்க,
ஆழ்வார் ஸேவித்து வந்த அருமருந்தன்ன எம்பெருமானுக்கு எழும்பூண்டெல்லாம் அஸுரக்ஷ ஸமயமாயிருக்கிற இந்நிலத்திலே
யாராலே என்ன தீங்கு விளைகிறதோ என்று அதிசங்கைப்பட்டு
‘ஒரு அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு பாடுகிறார். அதாவது – ஜய விஜயீபவ என்கிறார்.

ஆழ்வார் இப்படி அதிசங்கையாலே மங்களாசாஸகம் பண்ணுகிறாரென்று தெரிந்துகொண்ட எம்பெருமான்
‘ஐயோ! ஏன் இவர் இப்படி பயப்படுகிறார், எப்படிப்பட்ட எதிரிகளையும் ஒரு விரல் நுனியாலே வென்றொழிக்கவல்ல
தேஹ வலிவு நமக்கு உண்டென்பது இவர்க்குத் தெரியவில்லை போலும், அந்த வலிவைக் காட்டினோமாகில் இவருடைய அச்சம் அடங்கிவிடும்’
என்று நினைத்து, முன்னோ க்ருஷணவதார காலத்தில் தன்னைக் கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்டுவந்த சாணூரன் முஷ்டிகன்
முதலிய மல்லர்களை நொறுக்கித் தள்ளின தன்னுடைய புஜபலத்தைக் காட்டினான்;
ஆழ்வாருடைய அச்சம் தணிவதற்காகக் காட்டின அந்த வலிவு ஆழ்வாருடைய பயம் அதிகரிப்பதற்கே காரணமாயிற்று.
புத்திரன் சூரனாயிருந்தால் அவனுடைய தாயானவுள் ‘இவன் ஒருவரையும் லக்ஷியம் பண்ணாமல் யுத்தம் செய்யப் போய்விடுவனே!
யாராலே என்ன கெடுதி நேர்ந்துவிடுமோ’ என்று பயப்படுவதுபோல்
இவரும் அந்த மல்லாண்ட திண்டோள் வலிமைக்குப் பயப்பட்டு மீண்டும் மங்களாசாஸநம் பண்ணுகிறார்.

பல்லாண்டு என்று ஒரு தடவை சொன்னால் போராதா? ‘‘பல்லாயிரத்தாண்டு’’ என்றும் ‘‘பல்கோடி நூறாயிரம் பல்லாண்டு’’ என்றும்
அதிகமாகச் சொல்லுவானேன்? என்னில் ;
தாஹித்தவன் தாஹம் தீருகிறவரையில் ‘தண்ணீர், தண்ணீர்’ என்றே சொல்லிக் கொண்டிருப்பதுபோல்
இவரும் தம்முடைய அச்சம் அடங்குமளவும் மங்களாசாஸகம் ஓயமாட்டார்.

மல்லாண்ட என்றவிடத்தில் மல் என்ற சொல் மல்லர்களைச் சொல்லும். ஆயுதத் துணையின்றி தேஹ வலிவையேகொண்டு சண்டை செய்பவர் மல்லர்.
இனி, மல்லாண்ட என்பதற்கு ‘பலசாலியான’ என்றும் பொருளுண்டு. மல் – வலிவு.
‘‘உன் சேவடி செவ்வி திருக்காப்பு’’ என்று திருவடிக்கு மாத்திரம் மங்களாசாஸநமிருந்தாலும்
இது திருமேனி முழுமைக்கும் மங்களாசஸநம் பண்ணினதாகும். சேஷபூதனுக்குத் திருவடியே உத்தேச்யம் என்பதைக் காட்டவே
சேவடி செவ்வி திருக்காப்பு என்றார். செவ்வடி என்றாலும் சேவடி என்றாலும் ஒன்றே.

இந்தப் பாசுரம் பல்லவிபோல ஒவ்வொரு பாசுரத்தோடும் சேர்த்துச் சொல்லத் தகுந்தது.
இதையும் மேல் பாசுரத்தையும் சேர்த்து ஒரு பாட்டாக அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.

————

அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே

பதவுரை
அடியோ மோடும்–தாஸபூதர்களாய் அடியேன் தொடக்கமாயுள்ள சேதநர்களோடும்
நின்னோடும்–ஸ்வாமியான தேவரோடும்
பிரிவு இன்றி–பிரிவில்லாமல்
ஆயிரம் பல்லாண்டு–(இந்த ஸமபந்தம்) நித்யமாய்ச் செல்லவேணும்
வடிவு ஆய்–உனக்கு நிரூபகபூதையாய்
நின்–உன்னுடைய
வல மார்பினில்–திருமார்பின் வலது பக்கத்தில்
வாழ்கின்ற–பொருந்தியிராநின்றுள்ள
மங்கையும்–நித்யயௌவநசாலிநியான பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமார்களும்
பல்லாண்டு;
வடிவு ஆர்-(உன்) திருமேனியை வ்யாபித்திருக்கிற
சோதி–ஜ்யோதிஸ்ஸையுடையனாய்
வலத்து–வலத்திருக்கையிலே
உறையும்–நித்யவாஸம் பண்ணுமவனாய்
சுடர்–பகைவரை எரிக்குமவனான
ஆழியும்–திருவாழியாழ்வானும்
பல்லாண்டு-;
படை–ஸேனைகளையுடைய
போர்–யுத்தங்களில்
புக்கு–புகுந்து
முழங்கும்–கோஷிக்கின்ற
அ–அளவற்ற பெருமையுடைய
பாஞ்ச சன்னியமும்–ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானும்
பல்லாண்டு – ; (ஏ ஈற்றசை. )

விளக்க உரை

சேஷபூதர்களான அடியோங்களூம் ஸர்வசேஷியான தேவரீரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாமல் நெடுநாளளவும் மங்களமாக வாழ வேணும்;
பெரிய பிராட்டியாரும் தேவரீருமான சேர்த்தி எப்போதும் மாறாமல் நித்தியவாழ்ச்சியாகச் செல்லவேணும்;
திருவாழி யாழ்வானும் திருச்சங்காழ்வானும் குறையொன்றுமின்றி வாழவேணும் – என்று இப்பாட்டால்
உபய விபூதிகளோடுங் கூடின நிலைமைக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறார்.
‘‘அடியோமோடும்‘‘ என்று இந்த லீலா விபூதியிலிருக்கிற தங்களையும்,
மற்ற மூன்றாலே, பரமபதமாகிய நித்யவிபூதியிலுள்ள பெரிய பிராட்டியார் முதலானவர்களையும் இப்பாட்டில் கூறியிருப்பதனால்
உபயவிபூதியுக்தனான எம்பெருமானுக்கு இப்பாசுரத்தால் பல்லாண்டு பாடினாராயிற்று.

எம்பெருமானுடைய மங்களத்தை மாத்திரமே அபேக்ஷிப்பவரான இவ்வாழ்வார் அடியோமோடும் என்று தம்முடைய மங்களத்தையும்
ஏன் விரும்புகிறாரென்னில், மங்களாசாஸநம் பண்ணுவதற்குத் தம்மைப் போன்ற அடியவர்கள் இல்லாவிடில் எம்பெருமானுக்கு
என்ன தீங்கு விளைந்திடுமோவென்கிற பயசங்கையினால் மங்களாசாஸநத்தில் ஊக்கமுடைய தம்முடைய மங்களத்தையும் விரும்புகிறார்.
ஆகவே, எம்பெருமானுடைய மங்களாசாஸநத்தின் அபிவிருத்திக்காகவே தம்முடைய ஸ்தைர்யத்தை வேண்டுகின்றாரென்க.

(வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கை.) பெரிய பிராட்டியாராலே எம்பெருமானுக்கு மேன்மை உண்டாகின்றதென்பது
‘வடிவாய்’ என்ற விசேஷணத்தினால் விளங்கும்.
புஷ்பத்திற்குப் பரிமளத்தினாலும், ரத்தினத்திற்கு ஒளியினாலும் மேன்மையுண்டாகக் காண்கிறோமிறே.
மங்கை – எப்போதும் மங்கைப் பருவமுடையவள்; அந்தப் பருவத்துக்கு வயதின் எல்லை – பன்னிரண்டு முதல் பதின்மூன்றளவும்.

ஆழ்வார்க்குக் கண்ணெதிரிலே விளங்குகிற சங்கை ‘‘அப்பாஞ்சசன்னியமும்’’ என்று (பரோக்ஷமான வஸ்துவைக் கூறுமாபோலே)
கூறலாமோவென்னில்; தம்முடைய கண்ணெச்சில் படாதபடி முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு சொல்லுகிறார் என்று கொள்க.
அல்லது, அன்று பாரதப் போரிலே அப்படிப்பட்ட அரிய பெரிய காரியங்கள் செய்த பாஞ்சஜந்யம் என்றும்,
அழகிய பாஞ்சஜந்யம் என்றும் பொருள் கொள்ளலாம்.

————–

வாழாட்பட்டு நின்றீ ருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே

பதவுரை
வாழ் ஆள் பட்டு–உஜ்ஜீவிப்பதற்கு உறுப்பான (எம்பெருமானுடைய) அடிமைத் தொழிலில் ஈடுபட்டு
நின்றீர்–நிலைத்து நின்றவர்கள்
உள்ளீரேல்–இருப்பீர்களாகில்
வந்து–(நீங்கள் எங்களோடே) வந்து சேர்ந்து
மண்கொள்மின்–(எம்பெருமானுடைய உத்ஸவார்த்தமான (திருமுளைத் திருநாளுக்குப்) புழுதி மண் சுமவுங்கள்;
மணமும் கொள்மின்–(அந்த உத்ஸவத்துக்கு) அபிமாகிகளாகவும் இருங்கள்;
கூழ் ஆள்பட்டு நின்றீர்களை–சோற்றுக்காக (ப் பிறரிடத்தில்) அடிமைப்பட்டிருப்பவர்களை
எங்கள் குழுவினில்–எங்களுடைய கோஷ்டியிலே
புகுதலொட்டோம்–அங்கீகரிக்க மாட்டோம்; (எங்களுக்குள்ள சிறப்பு என்ன வென்கிறீர்களோ,)
நாங்கள்–நாங்களோவென்றால்
ஏழ் ஆள் காலும்–ஏழு தலைமுறையாக
பழிப்பு இலோம்–ஒருவகைக் குற்றமும் இல்லாதவர்கள்
(எங்களுடைய தொழிலோவென்னில்)
இராக்கதர் வாழ் இலங்கை–ராக்ஷஸர் வஹிக்கிற லங்கையிலிருந்த
ஆள்–ஆண் புலிகள் யாவரும்
பாழ் ஆக–வேரோடே அழிந்து போம்படி
படை–(வாநர) சேனையைக் கொண்டு
பொருதானுக்கு–போர் செய்த பெருமாளுக்கு
பல்லாண்டு கூறுதும்–பல்லாண்டு பாடுகிறவர்களாய் இருக்கின்றோம்

விளக்க உரை

இவ்வாழ்வார் தனியராயிருந்து மங்களாசாஸநம் பண்ணுவதில் த்ருப்திபெறாமலும்,
‘போக்யமான வஸ்துவைத் தனியே அநுபவிப்பது தகாது’ என்கிற நியாயத்தைக் கொண்டும்
இன்னும் பல பேர்களையும் மங்களாசாஸநத்திற்குத் துணைகூட்டிக் கொள்ளவேணுமென்று நினைத்தார்.
உலகத்தில் எத்தனை வகையான அதிகாரிகள் இருக்கிறார்களென்று ஆராய்ந்து பார்த்தார்.
செல்வத்தை விரும்புமவர்கள், ஆத்மாநுபவக்கிற கைவல்யத்தை விரும்புமவர்கள், எம்பெருமானுடைய அநுபவத்தை அபேக்ஷிப்பவர்கள்
என்றிப்படிப்பட்ட அதிகாரிகள் இருப்பதைக் கண்டார்;
இம்மூவகை யதிகாரிகளில் செல்வத்தை விரும்புமவர்களும் கைவல்யத்தை விரும்புமவர்களும் ப்ரோஜநாந்தரபரர்களாயிருந்தாலும்,
அந்த அற்ப பலனுக்காகவாவது எம்பெருமானைப் பணிந்து பிரார்த்திக்கின்றார்கள் ஆகையால் அவர்களையும் திருத்திப் பணிகொள்ளலாம்
என்று ஆழ்வார் நிச்சயித்து மேற்சொன்ன மூவகை அதிகாரிகளையும் மங்களாசாஸநத்துக்கு அழைக்கவிரும்பி,
முதல்முதலாக, எம்பெருமானுடைய அநுபவத்தையே விரும்புமவர்களான ஜ்ஞாநிகளை அழைக்கிறார்.
‘‘அப்யர்ஹிதம் பூர்வம்’’ (எது சிறந்ததோ, அது முற்படும்) என்கிற நியாயத்தாலே
ச்ரேஷ்டர்களான ஞானிகளுக்கு முதல் தாம்பூலம் கொடுக்கிறார்போலும்.

பகவத் விஷயம் தவிர மற்ற விஷயங்களில் செய்கிற கைங்கரியம் எல்லாம் செய்வதற்குக் கஷ்டமாயும்,
கஷ்டப்பட்டுச் செய்தாலும் அந்த தேவதைக்கு த்ருப்திகரமல்லாமலும்,
ஒருவாறு த்ருப்திகரமானாலும் அற்பபலனைக் கொடுப்பனவாயும் இருப்பதால் அவை துயரத்தையே விளைக்கும்;
பகவத் விஷயத்தில் செய்யும் கைங்கரியமோ, எளிதாகச் செய்யக் கூரியதாயும், விரைவில் எம்பெருமானை உவப்பிக்க வல்லதாயும்,
சாச்வதமான பலனையளிப்பதாயும் இருப்பதால் அப்படிப்பட்ட பகவத் கைங்கரியத்தில் ஊன்றி யிருப்பவர்களை ‘‘வாழாட்பட்டு நின்றீர்’’ என்றழைக்கிறார்.
அப்படிப்பட்ட அதிகாரிகள் மிகவும் அருமைப்படுவர்கள் என்பதைக் காட்டுகிறார் ‘‘உள்ளீரேல்’’ என்று.

(மண்ணும் மணமும் கொண்மின். ) மண் கொள்ளுகையாவது -மஹோத்ஸவத்தில் அங்குரார்ப்பணத்திற்குப் புழுதி மண்சுமப்பது.
மணங் கொள்ளுகையாவது – அந்த மஹோத்ஸவத்தினிடத்தில் அபிமாநங்கொண்டிருப்பது.
முற்காலத்தில் அடிமை யோலை யெழுதும்போது ‘‘மண்ணுக்கும் மணத்துக்கும் உரியேனாகக் கடவேன்’’ என்றெழுதுவது வழக்கமாம்.

முதலடியில் ‘‘உள்ளீரேல்’’ என்று ஆழ்வார் உரக்கக் கூவினபடியைக் கேட்ட பலபேர்கள் அவரழைத்த வாசியறியாமல் ஓடிவந்தார்கள்.
அவர்களில் வயிற்றுப் பிழைப்புக்காக நீச ஸேவைபண்ணி ஜீவிப்பவர்களும் சேர்ந்திருந்தபடியால் அவர்களை விலக்கித் தள்ளுகிறார் இரண்டாமடியால்.
பகவத் ஸமபந்தத்தால் தமக்கு உண்டாயிருக்கிற பெருமையும், தம்முடைய காலக்ஷேப க்ரமத்தையும் அருளிச் செய்கிறார் பின்னடிகளில்.

(ஏழாட்காலும்) முன்னே மூன்று, பின்னே மூன்று, நடுவில் ஒன்று; ஆக ஏழு தலைமுறையிலும் என்றபடி
அன்றி, முன்னேழு, பின்னேழு, நடுவேழு என்று கொண்டு (அதாவது முன்னே பத்து, பின்னே பத்து, நடுவில் தான் ஒன்று என்று கொண்டு)
இருபத்தொரு தலைமுறையைச் சொன்னதாகவுமாம். நாங்கள் அநாதிகாலமாக எம்பெருமானையே உபாயமாகவும் உபேயமாகவுங் கொண்டு,
அப்பெருமான் என்றைக்கோ செய்தருளின ராவணஸம்ஹாரத்திற்கு இன்றிருந்து மங்களாசஸநம் பண்ணுகிறோம் ஆகையாலே
பரமவிலக்ஷணர்களாயுள்ள எங்களுடைய கோஷ்டியில் நீங்கள் பிரவேசிக்கலாகாதென்று வயிறு வளர்க்கும் வம்பர்களை விலக்கித் தள்ளினாராயிற்று.

————-

ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடுமனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே.

பதவுரை
வந்து–(கைவல்யத்தில் ஆசையை விட்டு) வந்து
எங்கள் குழாம் புகுந்து–(அநந்யப்ரயோஜநரான) எங்களுடைய கோஷ்டியிலே அந்வயித்து–
கூடும் மனம் உடையீர்கள்–ஒன்றாய்ச் சேர்ந்துவிட வேணுமென்கிற விருப்பமுடையவர்களாயிருந்தால்
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்–பொல்லாத ஸ்தானமாகிய கைவல்யத்திலே உங்களைக கொண்டு தள்ளுவதற்குமுன்னே
வரம்புஒழி வந்து–(ஆதமாநுபவம் மாத்திரம் செய்வோமென்று நீங்கள் வைத்துக் கொண்டிருக்கிற)
வரம்பை ஒழித்துக் கொண்டு (இனி பூர்ணாநுபவம் பண்ணுவோமென்று) வந்து
ஒல்லை–சீக்கிரமாக
கூடுமின்–எங்களோடு சேர்ந்து விடுங்கள்
(அப்படியே சேர்ந்தபின்பு)
நாடும் நகரமும் நன்கு அறிய-நாட்டிலுள்ளவர்களும் நகரத்திலுள்ளவர்களும் (உங்களுடைய) நன்மையை அறிந்து கொள்ளும்படி
நமோ நாராயணாய என்று–திருமந்திரத்தைச் சொல்லி
பாடும் மனம் உடைபத்தர்–பாடுகின்ற எண்ணத்தையுடைய பக்தர்களுக்குள்
உள்ளீர் வந்து–சேர்ந்தவர்களாயிருந்து
பல்லாண்டு கூறுமின்–(எம்பெருமானுக்கு) மங்களா சாஸநம் பண்ணுங்கள்

விளக்க உரை

இப்பாட்டில், ஆத்மாநுபவத்தையே விரும்பியிருக்கும் கைவல்யார்த்திகளைக் மங்களாசாஸநத்துக்கு அழைக்கிறார்.
கீழ்ப்பாட்டில் கூழாட்பட்டவர்களை விலக்கினாப்போலே இவர்களையும் விலக்க வேண்டியிருந்தாலும்,
இவர்கள் கைவல்யமாகிற ஸ்வப்ரயோஜநம் பெறுவதற்காகவாகிம் எம் பெருமானைச் சரணமடைந்தார்களேயென்கிற மகிழ்ச்சியினால்
அவர்களையும் அழைத்து, கிரமமாக உபதேசங்களாலே ஐச்வர்யார்த்திகளும் ப்ரயோஜநாந்தரபரர்களாயிருக்க,
அந்த ஐச்வர்யார்த்திகளை முதலில் அழைப்பதைவிட்டுக் கைவல்யார்த்திகளைக் கூப்பிட்டது ஏனென்னில்; கேண்மின்; –
ஐச்வர்யார்த்திகளை ஸாவகாசமாகவும் திருத்திக் கொள்ளலாம்; கைவல்யார்த்திகளை அப்படி ஸாவகாசமாகத் திருத்திக்கொள்ள முடியாது.
ஏனென்றால், கைவல்யார்த்திகளின் உபாயாநுஷ்டாநம் முடிந்துவிட்டால், ஆத்மாநுபவத்துக்காக ஏற்பட்ட மோக்ஷலோகத்தில் போய்ச்சேர்ந்து விடுவார்கள்;
மறுபடியும் அங்கிருந்து ஒருநாளும் திரும்பி வருதல் இல்லாமையாலே இப்போதே அவர்களைத் திருத்திக்கொள்ளாமல்
சிறிது விளம்பித்தாம் அந்த அதிகாரிகள் பாழாய்ப்போவர்களே! என்கிற அநுதாபத்தினால்
ஆலஸ்யம் ஸஹியாமல் ஐச்வர்யார்த்திகளுக்குமுன்னே கைவல்யார்த்திகளை யழைக்கிறார்.

ஏடுநிலம் என்று கைவல்யஸ்தாநத்தை எங்ஙனமே சொல்லுமென்னில்; பிரகாணபலத்தினால் சொல்லும்;
பொல்லாத ஸ்தானமென்று பதப்பொருள்
அன்றியே, ஏடு – ஸூக்ஷ்மசரீரமானது, நிலத்தில் – தனக்குக் காரணமான மூலப்ரக்ருதியிலே,
இடுவதன்முன்னம் -லயிப்பதற்குமுன்னே, என்றும் பொருள் கொள்ளலாம்.
ஸ்தூலசரீரமென்றும் ஸூக்ஷ்மசரீரமென்றும் சரீரம் இருவகைப்படும்;
பஞ்சபூதங்களின் (ஸூக்ஷ்ம அவஸ்தைகளாகிய) தந்மாத்ரைகள் ஐந்தும் கருமேந்திரியங்கள் ஐந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும்
மநஸ்ஸு ஒன்றும் ஆகிய பதினாறு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸூக்ஷ்ம சரீரமெனப்படும்;
தந்மாத்ரைகளின் ஸ்தூலங்களான பூதங்களூடன் சேர்ந்து அவற்றோடு பஞ்சவிஷயங்களும், ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் – ஆகிய
இருபத்தினான்கு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸ்தூலசரீரமெனப்படும்.
ஆத்மா தனது ஸூக்ஷ்மசரீரம் விரஜாநதீஸ்நாநத்தால் நீங்கியபின்புதான் பரமபதத்தையோ கைவல்யத்தையோ அடையும்.
இவ்விரண்டில் எதையடைந்தபின்பும் திரும்பி வருவதல் இல்லை.
(இவ்விருவகையான சரீரங்களுள் ஸூக்ஷ்மசரீரமானது ஸ்தூல சரீரத்திற்காட்டிலும் பிரதானமாய் அதனுடைய ஸாரமுமாயிருப்பதால்,
பாலின் ஏடு போலுமென்ற காரணம் பற்றி ‘ஏடு’ என்பது ஸூக்ஷ்மசரீரத்தைக் காட்டும்.
‘‘வரம்பொழிய’’ என்பது வரம்பொழி என்று கடைக்குறையாயிருக்கிறது. வரம்பொழியவந்து என்றபடி.
இவ்விடத்தில், வரம்பாவது – அவரவர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு எல்லை; ‘ஆத்மாநுபவத்தோடு நாம் நின்றுவிட வேண்டியது;
பகவானை யநுபவிக்கப்போகக்கூடாது’ என்று நீங்கள் வைத்துக்கொண்ட வரம்பை ஒழித்துவிட்டு உடனே வந்து சேருங்கள் என்றழைக்கிறார்.

கைவல்ய நிஷ்டர்கள் ‘‘ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந் மாமநுஸ்மரந்’’என்கிற சாஸ்திரப்படி தங்கள் கோரிக்கை
நிறைவேறுவதற்காகப் பிரணவத்தை மாத்திரம் உச்சரிப்பார்கள்;
இனி அப்படியல்லாமல் திருவஷ்டாக்ஷரத்தையும் பூர்த்தியாகக் கோஷித்துக்கொண்டு வரவேணுமென்று பின்னடிகளால் அழைக்கிறார்.
பத்தர் – பக்தர்.

———–

அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே.

பதவுரை
அண்டம் குலத்துக்கு அதிபதி ஆகி–அண்ட ஸமூஹங்களுக்கெல்லாம் நியாமகனாய்
அசுரர் இராக்கதரை–அஸூர ராக்ஷஸர்களுடைய
இண்டை குலத்தை–நெருக்கமான கூட்டத்தை
எடுத்து களைந்த–நிர்மூலமாக்கின
இருடீகேசன் தனக்கு–ஹ்ருஷீகேசனான * பகவானுக்கு
தொண்டர் குலத்தில் உள்ளீர்–அடியவராயிருப்பவர்களுடைய கோஷ்டியில் சேர்ந்தவர்களே!
(ஐச்வர்யார்த்திகளே!) நீங்கள்
பண்டை குலத்தை தவிர்ந்து–(பிரயோஜநாந்தரத்தை விரும்பிக்கிடந்தமையாகிற) பழைய தன்மையை நீக்கிக் கொண்டு
வந்து–எங்களோடு சேர்ந்து
அடிதொழுது–பகவானுடைய திருவருடிகளை ஸேவித்து
ஆயிரம் நாமம் சொல்லி–எல்லாத் திருநாமங்களையும் அநுஸ்ந்தித்து
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மின்–எப்போதும் மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டிருங்கள்

விளக்க உரை

இப்பாட்டில் ஐச்வர்யார்த்திகளை அழைக்கிறார். அவர்கள் இரு வகைப்படுவர்;
நெடுநாளாக இருந்து கைதப்பிப் போன செல்வத்தை மறுபடியும் அடைய விரும்புகிறவர்கள் ஒரு வகுப்பு;
நெடுநாள் தரித்ரராகவேயிருந்து புதிதாகச் செல்வமுடைய விரும்புகிறவர்கள் மற்றொரு வகுப்பு.
(முதல் வகுப்பினர் – ப்ரஷ்டைச்வர்யகாமர்களென்றும் இரண்டாம் வகுப்பினர் அபூர்வை ச்வர்யகாமர்களென்றும் சொல்லப்படுவர்.)
இவ்விரு வகுப்பினரையும் இப்பாட்டில் அழைக்கிறார். இவ்வர்த்தம் இப்பாட்டில் எங்ஙனே தெரிகின்றது என்றால்; கேண்மின்; -‘
‘அண்டக்குலத்துக்கு அதிபதியான இருடீகேசனுக்குத் தொண்டக்குலதிலுள்ளீர்!’’ என்றும்,
‘‘அசுரரிராக்கதரை இண்டைக்குலத்தை யெடுத்துக் களைந்த இருடீகேசனுக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர்!’’ என்றும்
விளியை இரண்டாகப் பகுத்துக்கொள்க.
அண்டங்களுக்கு அதிபதியாயிருக்கை ஐச்வரியத்துக்கு முடிவெல்லையாய் இருப்பதால், புதிதான ஐச்வரியத்தைப் பெற விரும்புகின்ற
அதிகாரிகள் அப்படிப்பட்ட அண்டாதிபதித்வத்தைப் பெற விரும்பி அந்த விருப்பம் வெளிப்படும்படி
‘‘அண்டாதிபதயே நம; அண்டாதி பதயே நம:’’ என்று எப்போதும் உருப்போடுவர்கள்!
அந்த அதிகாரிகளை அழைக்கிறாரென்பது முதல்விளியால் விளங்கும்
ஏற்கனவேயிருந்த செல்வத்தை அஸுரராக்ஷஸாதிகள்
போன்ற சத்துருக்கள் அபஹரித்துக் கொண்டதனால் அச்செல்வத்தை மறுபடியும் ஸம்பாதித்துக்கொள்ள விரும்பும் அவர்கள்
அந்த விருப்பம் வெளிப்படும்படி ‘‘அஸுரசத்ரவே நம:, அஸுரசத்ரவே நம: என்று உருப்போடுவார்கள்.
அந்த அதிகாரிகளை அழைக்கிறாரென்பது இரண்டாம் விளியால் விளங்கும்.

ஆகவிப்படி இருவகை அதிகாரிகளையும் அழைத்து ‘‘அந்தோ! நீங்கள் ஸ்வயம்ப்ரயோஜநமாக ஸஹஸ்ரநாமங்களையும்
(வாயாரச் சொல்லி ஆநந்திக்கலாமாயிருக்க, அதைவிட்டு, ‘அண்டாதிபதி, அஸுரசத்ரு:’என்ற இரண்டு நாமங்களை மாத்திரம் அற்பபலனுக்கான உருப்போட்டுக்கொண்டிருக்கிறீர்களோ, இது தகாது; இனி ஆயிரநாமங்களையும் அநந்ய்ப்ரயோஜநமாக அநுஸந்தித்து
எங்களுடைய கோஷ்டியிலே சேர்ந்து மங்களாசாஸநம்பண்ண வாருங்கள் – என்றழைத்தாராயிற்று.

அண்டமாவது – உலகவுருண்டை; அது அளவற்றதாகையாலே அண்டக்குலமென்கிறது அதுக்கு அதிபதியென்று
எம்பெருமானைச் சொல்வது கருத்துடன் கூடியதாகும். உன்னைப் போலே நாங்களும் அண்டாதிபதியாக வேணுமென்று தெரிவித்துக் கொண்டபடி.

இண்டைக்குலம் – நெருக்கமான கூட்டம் என்றபடி. ‘இண்டக்குலம்’ என்று பாடமாகில், ‘‘இண்டர் – குலம்’’ என்று பிரியும்.
அஸுரராக்ஷஸர்களாகிற சண்டாளருடைய கூட்டத்தை என்றபடி. இருடீகேசன் – ஸ்ருஷீகேசன்; இந்திரியங்களை அடக்கியாள்பவன் என்கை.
தொண்டர் + குலம் : தொண்டர்க்குலம்.

————–

எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே.

பதவுரை
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி–என் பிதாவும் அவருடைய பிதாவும் அவருடைய பிதாவும்
அவருடைய பிதாவும் அவருடையபாட்டனுமாகிய ஏழு தலைமுறையாக
வந்து–(உரிய காலங்களில்) வந்து
வழி வழி–முறைதப்பாமல்
ஆள் செய்கின்றோம்–கைங்கரியம் பண்ணுகிறோம்
திரு ஓணம் திருவிழவில்–ச்ரவண நக்ஷத்ரமென்கிற திருநாளிலே
அந்தி அம்போதில்–அழகிய ஸரயம் ஸந்தியாகாலத்தில்
அரி உரு ஆகி–நரஸிம்ஹமூர்த்தியாய்த் தோன்றி
அரியை–(ஆச்ரிதனான ப்ரஹலாதனுக்குப்) பகைவனான இரணியனை
அழித்தவனை–கொன்றொழித்த பெருமானுக்கு
பந்தனை தீர–(அன்றைய) அனுக்கம் தீரும்படி
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுவதும்–மங்களாசாஸநம் செய்வோம்.

விளக்க உரை
‘‘வாழாட்பட்டு’’ என்கிற பாசுரத்தில் அநந்யப்ரயோஜநர்களான முமுக்ஷூக்களை யழைத்தாரென்றோ;
அழைக்கும்போது ‘‘ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்’’ என்று தம்முடைய பெருமையைச் சொல்லியழைத்தார்.
அப்படி அழைக்கப்பட்ட அநந்யப்ரயோஜகர்கள் ‘நாங்களும் உம்மைப் போலவே ஏழுதலைமுறையாக அடிமை செய்கிறவர்கள்’
என்று தங்களுடைய பெருமையையும், எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறவர்களென்கிற தங்களுடைய
தினசரியையும் சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்ததாக இப்பாசுரம் அருளிச் செய்யப்படுகிறது.

‘என் தந்தை’ என்பது எந்தையென மருவிற்று. ஏழ்படிகால் – ‘படி’யென்பதற்கு உடம்பு என்று பொருள்;
அச்சொல் தலைமுறையைக் காட்டுகிறது.
எங்களுடைய ஸந்ததியில் ஒருவர் தப்பாமல் எல்லாரும் ஆட்செய்பவர்கள் என்பதற்காக வழிவழியென்கிறார்.

(திருவோணத் திருவிழாவில் இத்யாதி) எம்பெருமான் எந்த நக்ஷத்திரத்தில் அவதரித்தாலும் அவையெல்லாம் வேதத்தில் சொன்னபடி
விஷ்ணு நக்ஷத்ரமாகிய திருவோண நக்ஷத்திரத்தின் அம்சமாயிருக்கத்தக்கவை யாகையாலும்,
விசேஷித்துத் திருநக்ஷத்திரம் சொல்லாத அவதாரங்களுக்கெல்லாம் இதையே நக்ஷத்திரமாகக் கொள்வது உசிதமாகையாலும்
‘‘திருவோணத் திருவிழாவில் ; அரியுருவாகி’’ என்றார். ச்ரவண என்னும் வடசொல் ஓணமெனத் திரிந்தது.
அரியுரு ஹிம்ஹமென்னும் பொருளதான ஹரியென்னும் வடசொல் அரியென்று விகாரப்பட்டிருக்கின்றது.
‘‘நரஹரியாகி’’ என்னாமல் ‘அரியுருவாகி’ என்றது பிரதானமான சிரஸ்ஸு ஸிம்ஹமாயிருப்பதனாலாம்.
தூணிலே நரசிங்கமாகத் தோன்றி இரணியனைக் கொன்று ப்ரஹ்லாதனைக் காத்தருளின இதிஹாஸம் ப்ரஸித்தம்.

பந்தநா என்னும் வடசொல் பந்தனையெனத் திரிந்தது; அனுக்கம் என்று பொருள்.

——————

தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பதவுரை

தீயின்-(சந்திரன்: ஸூர்யன் அக்நி முதலிய) சுடர்ப்பொருள்கள் எல்லாவற்றையும்விட
பொலிகின்ற–பிரபலமாகப் பிரகாசிப்பதும்
செம் சுடர் திகழ்–சிவந்த ஒளியோடுகூடி விளங்குவதுமான
திருசக்கரத்தின்–திருவாழியாழ்வான் எழுந்தருளியிருக்கிற
கோயில்–ஸ்தானமாகிய
ஆழி–வட்டவடிவமான
பொறியாலே–அடையாளத்தினால்
ஒற்றுண்டு நின்று–அடையாளம் செய்யப்பட்டவர்களாயிருந்து
குடிகுடி–அநாதிஸந்தாநமாக
ஆள் செய்கின்றோம்–(எம்பெருமானுக்குக்) கைங்கரியம் செய்து வருகின்றோம்: (அதுவும் தவிர)
மாயம் பொருபடை வாணனை–க்ருத்ரிம யுத்தம் செய்பவனும் சேனைகளை உடையவனுமான பாணாசுரனுடைய
ஆயிரம் தோளும்–ஆயிரந் தோள்களினின்றும்
பொழி–வெளிக்கிளம்புகிற
குருதி–ரக்தமானது
பாய–வெள்ளமாகப் பாய்ந்தோடும்படி
சுழற்றிய ஆழி–திருக்கையிலே சுழலச் செய்த சக்கராயுதத்தை
வல்லானுக்கு–ஆளவல்ல எம்பெருமானுக்கு
பல்லாண்டு கூறுதும்–மங்களாசாஸநம் செய்வோம்

விளக்க உரை

‘‘ஏடுநிலத்தில்’’ என்னும் பாசுரத்தில் கைவல்யார்த்திகளை அழைத்தாரன்றோ; அழைக்கும்போது ‘‘நாடுநகரமும் நன்கறிய’’ என்று
உங்களுடைய நன்மையை எல்லாரும் தெரிந்துகொள்ளும்படி நீங்கள் வரவேணுமென்று ஒரு வார்த்தை சொன்னார்.
அவர்களும் அப்படியே வரவேணுமென்று நிச்சயித்து சங்கு சக்கரங்களாலே திருவிலச்சினை செய்துகொள்வது நல்ல உபாயம்’ என்று
அதைச் செய்துகொண்டு அடிமை செய்பவர்களாய் பாணஸுரயுத்தத்தில் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு அடிமை செய்த திருவாழியாழ்வானுக்கும்
அவனை அடிமைகொண்ட ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அக்காலத்தில் மங்களாசாஸநம் செய்யப் பெறாத குறைதீர
மங்களாசாஸநம் செய்பவர்களாக ஆய்விட்டோம் என்று தாங்கள் குடும்பமாகத் திருந்தினபடியைச் சொல்லிக்கொண்டு
வந்தார்களாக அருளிச்செய்யும் பாசுரம் இது.

‘‘ஸுதர்சநம் பாஸ்கரகோடிதுல்யம்’’ என்கிறபடியே திருவாழியாழ்வான் கோடிஸுர்ய ப்ரகாசனாகையால் ‘‘தீயிற்பொலிகின்ற’’ எனப்பட்டது.
தேஜ: பதார்த்தங்கள் எல்லாவற்றையும்விட அதிகமாக ஜ்வலிக்கிற என்றபடி.
பொலிகின்ற என்பதும், திகழ் என்பதும் திருச்சக்கரத்திற்கு அடைமொழிகள்.
இனி, ‘‘தீயிற்பொலிகின்ற’’ என்பதை சக்கரத்தின் பொறிக்கு அடைமொழியாக்கி, அக்நியால் விளங்குகிற சக்கரத்தின் பொறி என்றும் உரைக்கலாம்.
மந்த்ர பூர்வமாக ஹோமஞ்செய்த அக்நியில் காய்ச்சப்பட்ட சங்கு சக்கரங்களின் பொறிகளை (அடையாளங்களை)
புஜங்களில் அணிந்து கொள்வது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம்.

பாண : என்ற வடசொல் வாணனெனத் திரிந்தது.

———–

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே.

பதவுரை
நெய் எடை–நெய்யோடு ஸமமான நிறையை யுடையதாய்
நல்லது–போக்யமாய்
ஓர்–விலக்ஷணமான
சோறும்–ப்ரஸாதத்தையும்
நியதமும் அத்தாணி சேவகமும்–எப்போதும் பிரியாமல் கூடவேயிருந்து செய்கிற ஸேவக வ்ருத்தியையும்
கை அடைக்காயும்–திருக்கையால் ப்ரஸாதிக்கும் தாம்பூலத்தையும்
கழுத்துக்கு பூணோடு–கழுத்தில் தரித்துக் கொள்ளவேண்டிய ஆபரணத்தையும்
காதுக்கு குண்டலமும்–காதில் இட்டுக் கொள்ளவேண்டிய குண்டலத்தையும்
மெய் இட–உடம்பில் பூசிக்கொள்ளும்படி
நல்லது ஓர் சாந்தமும்–சிறந்த சந்தனத்தையும்
தந்து–(ரஜஸ்தமோ குணங்களால் ஐச்வரியத்தை விரும்பின என்னுடைய விருப்பத்தின்படியே) கொடுத்து
என்னை–இப்படி ஸம்ஸாரியாயக் கிடந்த என்னை
வெள் உயிர் ஆக்கவல்ல–சுத்த ஸரத்விகனாகச் செய்தருளினவனாய்
பை உடை நாகம் பகை கொடியானுக்கு–படத்தையுடைய பாம்புக்கு விரோதியான கருடனைக் கொடியாக வுடையனான எம்பெருமானுக்கு
பல்லாண்டு கூறுவன்–மங்களாசாஸநம் பண்ணுவேன்.

விளக்க உரை

“அண்டக்குலத்துக்திபதியாகி’’ என்னும் பாசுரத்தில் ஐச்வர்யார்த்திகளை அழைத்தாரே;
அவர்கள்தாம் எம்பெருமானிடத்தில் சில ஐச்வர்யங்களைப் பெற்றுக்கொண்டு திருந்தி மங்களாசாஸநத்துக்கு ஸித்தராக
வந்தபடியைச் சொல்லிக் கொள்ளுகிறார்களாக அருளிச் செய்வது இந்தப் பாசுரம்.

கீழ்ப்பாசுரங்களிற் போல் இதில் பன்மையின்றியே ‘‘பல்லாண்டு கூறுவன்’’ என்று ஒருமையாகப் பிரயோகமிருப்பதற்குக் காரணம் கேண்மின்; –
உலகத்தில் அநந்ய ப்ரயோஜநர்களுடைய கூட்டமும் கைவல்யார்த்திகளுடைய கூட்டமும் மிகவும் ஸ்வல்பமா யிருக்குமாகையாலே
அந்தக் கூட்டங்களிலுள்ள நாலைந்து பேர்கள் பேசினதாகக் கொண்டு அவர்களது பாசுரங்களில்
‘‘பல்லாண்டு பாடுதுமே’’ என்றும் ‘‘பல்லாண்டு கூறுதுமே’’என்றும் பஹுவசந ப்ரயோகம் பண்ணப்பட்டது.
ஐச்வர்யார்த்திகளான இவர்களுடைய கூட்டம் அப்படி ஸவல்பமாயிராமல் அளவற்றிக்குமாகையால்,
ஒரு பெரிய கூட்டத்துக்கெல்லாம் ஒருவன் பிரதாநனாய் நின்று பேசுவது வழக்கமாகையால் அப்படியே இருக்கும் ஒருவன் பேசுவதாகவைக்கப்பட்டது.
மேல் ‘‘அல்வழக்கொன்றுமில்லா’’ என்கிற பாட்டிலுள்ள ஏகவசநத்துக்கும் இதுவே ஸமாதாநம்.

உலகத்தார்க்கு வேண்டிய பதார்த்தங்கள் மூன்றுவிதம் – தாரகம், போஷகம், போக்யம் என
அன்னம் தாரகம், நெய் பால் தயிர் முதலானவை போஷகம், சந்தனம் புஷ்பம் தாம்பூலம் முதலியவை போக்யம்.
ஆக இந்தப் பதார்த்தங்கள் ஒருவனுக்குப் போதுமானவை கிடைத்தால் அவ்வளவில் த்ருப்திபெற ப்ராப்தம் ஊர்ப்பட்ட
அண்டாதிபத்யமெல்லாம் வேணுமென்று விரும்புவது பகவத்மாகும். ஆகையால் ஸ்வரூபஜ்ஞாநமில்லாமல் அண்டாதிபத்யம் அளிக்கவேணுமென்று
நாங்கள் எம்பெருமானைப் பிரார்த்தித்தாலும் அவன் பரமக்ருபாளுவாய் எங்களை உஜ்ஜீவிப்பிக்கத் திருவுள்ளம்பற்றி
எங்களுக்கு உசிதமாய் வேண்டியவளவு தாரக – போஷக – போக்ய வஸ்துக்களைக்கொடுத்து இனிமேலாவது
எங்களுக்கு நல்ல புத்தியுண்டாகும்படி குளிரக்கடாஷித்து ‘‘ஐச்வரியம் த்யாஜ்யம், பகவத்கைங்கர்யமே புருஷார்த்தம்’’ என்னும்
அத்யவஸாயத்தைப் பிறப்பித்து எங்களை சுத்தஸ்வரூபராக ஆக்கினான்.
அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் பண்ணுவோம் நாங்கள் – என்று ஐச்வர்யத்திகள் சொல்லுவதாக இந்தப் பாசுரம் உள்ளது.

‘‘நெய் எடை’’ என்றும் ‘‘நெய் இடை’’ என்றும் பாடபேதமுண்டு.
முந்தினபாடத்தில், நெய்பாதி சோறுபதியாய் இரண்டும் அளவொத்திருக்குமென்கை.
ஒருவீசைச்சோற்றுக்கு ஒருவீசை நெய் சேர்ப்பதென்றால், இதனில் விஞ்சிய நல்ல சோறு இல்லையன்றோ.
‘‘நெய்யிடை’’ என்ற பாடத்தில், நெய்யின் நடுவே உள்ள சோறு என்று பொருளாய்,
நெய்யின் அளவு அதிகமாயும் ப்ரஸாதத்தினளவு அல்பமாயுமிருக்கு மென்கை.
நல்லது ஓர் சோறு இட்டவன் ‘நாம் இட்டோம்’ என்று அஹங்காரங் கொண்டாலும், உண்டவன்,
‘இதற்கு நாம் என்ன கைம்மாறு செய்வோம்’ என்றிருந்தாலும் நல்ல சோறாகமாட்டாது;
பெற்ற தாய் இட, புத்திரன் உண்ணுஞ் சோறுபோலே அன்புடன் இடப்பட்டு ருசியில் குறையில்லாத சோறு என்றபடி.

அத்தாணிச் சேவகமாவது – ஆஸ்தாநஸேவகம்; எம்பெருமானிருக்கும் இடத்தில் கூடவேயிருந்துகொண்டு பிரியாமல் நின்று
செய்கிற கைங்கரியம் ஐச்வர்யார்த்தியானவன் சொல்லுகிற இந்தப் பாசுரத்தில் ‘அத்தாணிச் சேவகமும் தந்து’’ என்று எங்ஙனே சொல்லலாம்?
அநந்யப்ரயோஜநனுக்கன்றோ அத்தாணிச் சேவகமுள்ளது; சோறு அடைக்காய் பூண் குண்டலம் ஆகிய இவற்றைத் தந்து என்பது சேருமேயொழிய
அத்தாணிச் சேவகமும் தந்ததாகச் சொல்லுகிறது சேராதேயென்னில்;
ஐச்வர்யார்த்தியாயிருந்தாலும் பகவத் க்ருபையாலே திருந்தி அநந்ய்ப்ரயோஜநனாய் வந்தமை தோற்றும்படியாகச் சொல்லுகிற
பாசுரமாகையாலே சேருமென்க. நான் அபேக்ஷித்த ஜீவநத்தைமாத்திரம் கொடுத்துவிடாமல் உஜ்ஜீவநத்தையு முண்டாக்கி
என்னைப் பரிசுத்தாத்மாவாகச் செய்தானே! என்று ஸந்தோஷித்துச் சொல்லுகிற பேச்சு.

வெள்ளுயிர் – சுத்தமான ஆத்மா. ஸத்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று குணங்களுண்டு.
அவற்றுள் ஸத்வகுணத்தை வெண்ணிறம் உள்ளதாகவும் ரஜோ குணத்தைச் சிவப்பு நிறமுள்ளதாகவும்
தமோ குணத்தைக் கறுப்பு நிறமுள்ளதாகவும் கூறுவது கவிஸமயமாதலால் இங்கே ஸாத்விகளை வெள்ளுயிரென்றார்.

பையுடைநாகப் பகைக்கொடியானுக்கு என்கிறவிடத்தில், ‘‘பையுடை நாகத்தானுக்கு’’ என்றும்
‘‘(நாகப்) பகைக்கொடியானுக்கு’’ என்றும் பிரித்துக் கொள்வது நன்று.
‘‘அநந்தசாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறேனென்கை’’ என்று வியாக்கியானமருளிச்செய்த
பெரிய வாச்சான்பிள்ளையின் திருவுள்ளம் இதுவேயாம்.
நாகத்துக்கு ‘பையுடை’ என்று விசேஷணமிட்டபடியால் அது வீணாகாமைக்காக இப்படி அர்த்தம் செய்யவேண்டிய தாயிற்றென்ப.
ஸந்தோஷத்தாலே விரிந்த படங்களையுடைய திருவனந்தாழ்வான்மேலே சயனிப்பவனாயும், அந்த நாகஜாதிக்கு சத்ருவான
கருடனை த்வஜமாகவுடையனாயும் இருக்கிற எம்பெருமானுக்கு என்றபடி.

நித்யம், குண்டலம், நாகம் – வடசொற்கள்.

——————–

உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பதவுரை
உடுத்து–தேவரீர் அரையில் சாத்திக்கொண்டு
களைந்த–கழித்துவிட்ட
நின் பீதகவாடை–தேவரீருடைய பீதாம்பரத்தை
உடுத்து–உடுத்துக்கொண்டும்
கலத்தது–தேவர் அமுதுசெய்த பாத்திரத்தில் மிகுந்திருப்பதை
உண்டு–புஜித்தும்
சூடி களைந்தன–தேவர் சாத்திக்கொண்டு களைந்தவைகளான
தொடுத்த–தொடுக்கப்பட்டுள்ள
துழாய் மலர்–திருத்துழாய் மலர் -மாலைகளை
சூடும்–சூட்டிக் கொள்ளுகிறவர்களான
இத்தொண்டர்களோம்–இப்படிப்பட்ட தாஸர்களான நாங்கள்
விடுத்த திசை கருமம் திருத்தி–தேவரீர் ஏவியனுப்பிய திக்கிலே ஆகவேண்டிய காரியங்களை ஒழுங்காகச் செய்து,
படுத்த–கீழே பரப்பிய
பை நாகம் அணை–படத்தையுடைய பாம்பாகிற படுக்கையில்
பள்ளி கொண்டானுக்கு–சயனித்திருக்கிற தேவரீருக்கு
திருஓணம் திருவிழவில்–ச்ரவணத் திருநாளிலே
பல்லாண்டு கூறுதும்–மங்களாசாஸநம் செய்வோம்

விளக்க உரை

‘‘வாழாட்பட்டு’’ என்னும் பாசுரத்தில் அழைக்கப்பட்டு ‘‘எந்தை தந்தை தந்தை’’ என்னும் பாசுரத்தால் தங்கள் வ்ருத்தியைச்
சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்த அநந்யப்ரயோஜநர்கள் தாம் எம்பெருமானை நோக்கிப் பல்லாண்டு பாடும்படியை அருளிச்செய்வது இப்பாட்டு.
‘‘நின் பீதகவாடை’’ என்று முன்னிலையாகச் சொல்லியிருப்பதால் இந்தப் பாசுரம் எம்பெருமானையே நோக்கி
அவர்கள் சொல்லுவதாக நன்கு விளங்கும். கீழே ஆழ்வாரால் அழைக்கப்பட்ட மூவகை அதிகாரிகளும் வரிசையாக
‘எந்தை தந்தை’ ‘தீயிற்பொலிகின்ற’ ‘நெய்யெடை நல்லது’ என்னும் பாசுரங்கள் சொன்னது ஆழ்வாரை நோக்கிச் சொன்னதாம்.
இனி, ‘உடுத்துக்களைந்த’ ‘எந்நாளெம்பெருமாள்’ ‘ அல்வழக்கொன்று மில்லா’ என்கிற மூன்று பாசுரங்களும் –
அவர்கள் எம்பெருமானையே ஸாக்ஷாத்தாக நோக்கிச் சொல்வதாம்.
மேலிரண்டு பாசுரங்களில் எம்பெருமானுடைய விளி வ்யக்தமாகவுள்ளது;
இப்பாசுரத்தில் அப்படி வ்யக்தமாக இல்லாவிடிலும் ‘‘நின் பீதகவாடை’’ என்கிற சொல்லாற்றலால் வ்யந்தமாகிறது.

எம்பெருமானே! நாங்கள் எங்களுக்கென்று அன்னம் வஸ்திரம் புஷ்பம் முதலானவற்றை விலைக்கு வாங்கி உபயோகிப்பதில்லை.
தேவரீர் அனுபவித்துக் கழித்தவற்றை மஹாப்ரஸாதமாகக் கொண்டு அவற்றையே உடுப்பதும் உண்பதும் சூடுவதும், செய்வோம் நாங்கள்;
அவ்வளவோடும் நில்லாமல், தேவரீருக்கு எந்த திக்கிலே எந்த காரியம் ஆக வேண்டியிருந்தாலும் அவற்றை ஒழுங்குபடச்செய்து முடிப்பதும் செய்வோம்.
அவ்வளவிலும் த்ருப்தி பெறாமல், ஒரு வெள்ளிமலையில் காளமேகம் சாய்ந்து கிடப்பதுபோல் ஆதிசேஷ சயனத்திலே
தேவரீர் பள்ளிகொண்டிருக்கிற கிடையழகுக்குப் பல்லாண்டு பாடுவதும் செய்வோமென்கிறார்கள்.

பீதகவாடை – ‘பீதம்’ என்னும் வடசொல் சுப்ரத்யயம் பெற்றுப்பீதகமென்றாயிற்று. பொன்வர்ணமான ஆடை என்கை.
எம்பெருமானுடைய திவ்ய பீதாம்பரத்தைப் பிறர் உடுத்துக் கொள்ளலாமோ? அஃது அப்பெருமானுக்கே அஸாதாரணமன்றோ? என்னில்;
அவனுக்கு அஸாதாரணமான பீதாம்பரத்தை இங்கே விவக்ஷிக்கவில்லை.
சில ஆஸனங்களில் ஸாதாரணத் திருப்பரிவட்டங்களும் சாத்திக் கொள்வதுண்டாகையால் அவற்றைச் சொல்லுகிறது.
அவை பீதகவாடையாகுமோ வென்னில்; எம்பெருமான் திருவரையில் சாத்திக்கொள்ளும் வஸ்த்ரங்களெல்லாம்
திவ்யபீதாம்பரத்தின் அம்சமேயாமென்பது சாஸ்த்ரம்.

பள்ளிகொண்டானுக்கு – பள்ளி கொண்டவுனக்கு என்கை. முன்னிலையில் படர்க்கைவந்த இடவழுமைதி ‘
‘ஒருமையிற் பன்மையும் பன்மையிலொருமையும், ஓரிடம் பிறரிடம் தழுவலுமுளவே’’ என்பது நன்னூல்.

—————–

எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

பதவுரை

எம்பெருமான்–ஸ்வாமிந்!
உன்தனக்கு–தேவரீர்க்கு
அடியோம் என்றெழுத்துப்–நாங்கள் அடிமைப்பட்டவர்கள் என்று சொல்லானது
பட்ட நாள்–எங்களுடைய வாயில் உண்டாகப்பெற்றநாள்
எந்நாள்–எந்த தினமோ,
அந்நாளே–அந்த தினம் முதலாகவே
அடியோங்கள்–அடியோங்களுடைய
அடிகுடில்–அடிமைப்பட்ட ஸந்தானமெல்லாம்
வீடுபெற்று உயந்ததுகாண்–நல்ல கதியையடைந்து உஜ்ஜீவித்துவிட்டது
செம் நாள் தோற்றி–நல்ல நக்ஷத்திரத்திலே திருவவதரித்து
திரு மதுரையுள்–அழகிய வடமதுரையிலே
(கம்ஸனுடைய ஆயுதசாலையில் புகுந்து)
சிலை குனித்து–வில்லை வளைத்து முறித்து
ஐந்தலைய–ஐந்து தலைகளையுடய
பை–படத்தோடு கூடின
நரகம்–காளிய நாகத்தினுடைய
தலை–தலைமேலே
பாய்ந்தவனே–குதித்தவனே!
உன்னை பல்லாண்டு கூறுதும்–தேவரீருக்கு மங்களாசாஸநம் செய்வோம்

விளக்க உரை

‘‘ஏடு நிலத்தில்’’ என்கிற பாசுரத்தில் அழைக்கப்பட்டு ‘‘தீயிற்பொலிகின்ற’’ என்னும் பாசுரத்தால்
தாம் திருந்தினபடியைச் சொல்லிக்கொண்டு வந்துசேர்ந்த கைவல்யார்த்திகள் எம்பெருமானை நோக்கி
மங்களா சாஸநம் பண்ணுகிறபடியைச் சொல்வது இந்தப்பாசுரம்.

எம்பெருமானே நாங்கள் கைவல்ல புருஷார்த்த ப்ராப்திக்கு ஸாதகமாக ‘‘ஓம், நம:’’ முதலிய சொற்களைச் சொல்லிக் கொண்டு
தேவரீரை பஜநம் பண்ணினோம்; தேவரீர் எங்களைக் கடாக்ஷித்து நாங்கள் மீட்சியற்ற கைவல்யத்தை யடைந்து
கெட்டுப் போகாதபடி அருள்புரிந்து நல்லபுத்தியை யுண்டாக்கினபடியால் அடியோங்கள் இப்போது திருந்தி
தேவரீருக்குப் பல்லாண்டு பாடுகிறவர்களாக ஆய்விட்டோ மென்கிறார்கள்.

எம்பெருமானே! தேவரீருக்கு அடியோமென்று எழுத்துப்பட்ட நாள் எந்நாளோ, அந்நாளிலேயே அடியோங்களுடைய குடில்
உஜ்ஜீவித்துப் போயிற்று என்றது – நாங்கள் கைவல்யப்ராப்திக்கு ஸாதகாமாக ஓம், நம: என்பதை அநுஸந்தித்து
அதனால் யாத்ருச்சிகமாக நல்லபுத்தி பிறந்து குடிகுடியாக உஜ்ஜீவித்தோமென்றபடி. குடில் – க்ருஹம்; கைச்யாநுஸந்தாநப் பேச்சு.

வில்விழவென்கிற வியாஜம் வைத்துக் கம்ஸனால் வரவழைக்கப்பட்ட கண்ணபிரான் அவனுடைய ஆயுதசாலையிலே புகுந்து
வில்லையெடுத்து முறித்ததும்
தன்னுடைய விஷத்தாலே யமுநாநதியின் ஒரு மடுவைக் கெடுத்துக்கொண்டு
எல்லார்க்கும் பயங்கரமாயிருந்த காளியநாகத்தைத் தண்டித்ததும் ப்ரஹித்தம்.

———————

அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே.

பதவுரை
திருமாலே–ச்ரியபதியே!
அல் வழக்கு ஒன்றுமில்லா–அநீதிகள் ஒன்றுமில்லாமலிருக்கிற
அணிகோட்டியர் கோன்–அழகிய திருக்கோட்டியூரில் உள்ளவர்களுக்குத் தலைவரும்
அபிமாநம்துங்கன்–ஸ்ரீவைஷ்ணவாபிமாநத்தாற் சிறந்தவருமான
செல்வனைபோல–செல்வநம்பியைப் போலவே
நானும்–நானும்
உனக்கு–தேவரீருக்கு
பழ அடியேன்–பழமையான தாஸனாய்விட்டேன்
பல் வகையாலும் பவித்திரனே–எல்லாவிதங்களாலும் பரிசுத்தனான பெருமானே
நல் வகையால்–அடியேனுக்கு நன்மையுண்டாகும்படி
நமோ நாராயணா என்று–திருமந்திரத்தை அநுஸந்தித்து
பல நாமம் பரவி–(தேவரீருடைய) அனேக திருநாமங்களைச் சொல்லியேத்தி
உன்னை பல்லாண்டு கூறுவன்–தேவரீருக்கு மங்களாசாஸநம் பண்ணுவேன்.

விளக்க உரை

‘‘அண்டக்குலத்துக்கு’’ என்னும் பாசுரத்தாலே அழைக்கப்பட்டு ‘‘நெய்யெடை’’ என்னும் பாசுரத்தால் தாங்கள்
திருந்தினபடியைச் சொல்லிக் கொண்டுவந்து ஐச்வர்யார்த்திகள் எம்பெருமானை நோக்கி மங்களாசாஸநம் பண்ணுகிறார்கள் இதில்
ஐச்வர்யத்திகள் எண்ணிறந்தவர்கள் ஆகையாலே அவர்களுள் ஒருவன் சொல்லுகின்றனென்று
‘‘நெய்யெடை’’ என்கிற பாசுரத்தில் ‘‘கூறுவனே’’ என்று ஏகவசநப்ரயோகம் பண்ணினதுபோலவே இதிலும் கொள்வது.

அல்வழக்கு ஒன்றுமில்லா- தேஹமே ஆத்மாவென்று நினைப்பது, பகவானுக்கு சேஷமாய்ப் பரதந்த்ரமான
ஆத்மாவை ஸ்வத்ந்த்ரமென்று நினைப்பது, தேவதாந்தரங்களைப் பரதெய்வமாக நினைப்பது,
எம்பெருமானிடத்தில் க்ஷுத்ர பலன்களை அபேக்ஷிப்பது, மோக்ஷத்துக்காகவும் கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களை
அநுஷ்டிப்பது இவை முதலானவை அல்வழக்குகள் – அநியாயங்கள்;
அவையில்லாதவரான செல்வநம்பி தேவரீர்க்கு எப்படி நித்யதாஸரோ அப்படி நாங்களும் நித்யதாஸராய்விட்டோம் என்கிறார்கள்.
‘அணிகோட்டியர்கோன்’ என்கையாலே செல்வநம்பி திருக்கோட்டியூரில் அவதரித்தவர் என்று விளங்குகிறது.

இத்தனைநாள் வரையில் ஐச்வர்யத்தியாயிருந்து இன்று வந்து சேர்ந்தவன், ‘செல்வநம்பிக்கைப்போலே நானும் பழவடியேன்’
என்னாலாமோவென்னில், பாபத்தாலே வந்த அஹங்காரம் கழிந்துவிட்டால் எல்லா ஆத்மாக்களுக்கும்
அடிமையே நிலைநிற்பதாகையால் அப்படிசொல்லக் குறை ஏன்? இப்போது நல்வகையால் என்றபடியால் இதுவரையில்
இந்த ஐச்வர்யார்த்திகள் பகவந் நாமங்களைக் கெட்டவழியில் உபயோக்ப்படுத்தினார்களென்று ஏற்படுகின்றது.
கெட்டவழியாவது – பிரயோஜநாந்தரப்ரார்த்தகை. இதுவரையில் தங்களுக்கிருந்த அசுத்திகளையெல்லாம் போக்கி
சுத்தப்படுத்திச் சேர்த்துக்கொண்டபடியால் பல்வகையாலும் பவித்திரனே! என்கிறார்கள். அபிமானதுங்கன் – வடசொல் தொட.

———–

பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே.

பதவுரை
பவித்திரனை–பரிசுத்தனும்
பர மேட்டியை–பரமபத நிலயனும்
சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் தன்னை–ஸ்ரீசார்ங்கமென்கிற தநுஸ்ஸை அடக்கி ஆள்பவனுமான எம்பெருமானை
வில்லிபுத்தூர் விட்டு சித்தன்–ஸ்ரீவில்லிபுத்தூரிற் பிறந்த பெரியாழ்வார்
விரும்பிய சொல்–ஆதரத்தோடு சொன்ன சொல்லாகிய இப்பிரபந்தத்தை,
நல் ஆண்டு என்று–நமக்கு நல்ல காலம் வாய்த்ததென்று (மகிழ்ந்து)
நவின்று உரைப்பார்–ஸர்வதா அநுஸந்திப்பவர்கள்
பரமாத்மனை–ஸ்ரீமந்நாராயணனை
சூழ்ந்து இருந்து–சுற்றும் சூழ்ந்துகொண்டு
(நமோ நாராயணாய என்று. . . )
பல்லாண்டும்–எப்போதும்
பல்லாண்டு ஏத்துவர்–மங்களாசாஸநம் பண்ணப்பெறுவார்கள்.

விளக்க உரை

பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவனாய் நித்ய பரிசுத்தனாய்ப் பஞ்சாயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பவனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் பெரியாழ்வார் பொங்கும் பரிவாலே பாடின இத்திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தை,
நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதென்கிற கொண்டாட்டத்துடன் இவ்விபூதியில் எஞ்ஞான்றும் பாடுகிறவர்கள்
மறுமையில் மோக்ஷலோகத்தை ய்டைந்து அங்கும் எம்பெருமானுடைய முகோல்லாஸத்தையே புருஷார்த்தமாக நினைத்து
அனேக தேஹங்களை எடுத்துக்கொண்டு அப்பெருமானுடைய நான்கு பக்கங்களிலும் இருந்துகொண்டு மங்களாசஸநம்
பண்ணப்பெறுவர்களென்று இதனால் பலன் சொல்லித் தலைகட்டிற்றாயிற்று.

பவித்திரன் – தான் பரிசுத்தனாயிருப்பதோடு அபரிசுத்தர்களையும் பரிசுத்த ராக்கவல்லவன் பரமேஷ்டீ என்னும் பரமேட்டியெனத் தெரிந்தது.
மிகச்சிறந்த ஸ்தானத்தில் வாழ்பவன் என்று பொருள். சார்ங்கம் என்பது (வடமொழியில்) வில்லுக்குப் பொதுப் பெயராயிருந்தாலும்,
பெருமானுடைய திருவில்லுக்குச் சிறப்புப் பெயருமாம் ‘‘வில் ஆண்டான்’’ என்ற சொல்லாற்றலால் -‘சத்துரிக்களைக் காட்டு, காட்டு’
என்று விம்மிக் கிளம்புகின்ற வில்லை அடக்கியாள்பவன் எம்பெருமான் என்பது விளங்கும்.

வில்லிகண்டார் என்பவர்களில் மூத்தவனான வில்லி என்பவனால் ஏற்படுத்தப்பட்ட புதிய நகரமாகையால் வில்லிபுத்தூரென்று திருநாமம்;
வில்லி யென்பவன் புற்றில்நின்றும் வடபத்ரசாயிப் பெருமாளைக் கண்டெடுத்துப் பிரதிஷ்டை செய்த திவ்யதேசமென்று
இதனை வில்லி புற்றூர் என்றுங் கூறுகின்ற்னர்.
வடமொழியில் ஸ்ரீதந்விநவ்யபுரம் எனப் பெரும்பான்மையாகவும் ஸ்ரீத்ந்லிவல்மீகபுரம் எனச் சிறுபான்மையாகவும் வழங்கப்பெறும்.

விட்டுசித்தன் – விஷ்ணுவை சித்தத்திலே உடையவர் என்று பொருள்.
மற்ற ஆழ்வார்களுடைய சித்தத்திலும் எம்பெருமான் எழுந்தருளியிருந்தாலும்
‘‘அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும், அரவிந்தப்பாவையுந்தானும் அகம்படி வந்து புகுந்து,
பரவைத் திரைபலமோதப் பள்ளி கொள்கின்ற பிரானை’’ என்றும்
‘‘பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டோடி வந்து, என் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பி’’ என்றும்
இவ்வாழ்வார்தாமே பேசிக்கொள்ளும்படியாக எம்பெருமான் குடும்பத்தோடே வந்து நித்யவாஸம் பண்ணப்பெற்ற ஏற்றம்
இவ்வாழ்வார் திருவுள்ளத்திற்கே அஸாதாரணமென்றுணர்க.

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை -குத்து விளக்கெரிய-அனுபவம்–

April 21, 2021

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்
மைத்தடங் கன்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்

இது திருப்பாவையின் பத்தொன்பதாம் பாசுரம்.
இந்தப் பாசுரம்தான் பட்டரின் ‘நீளாதுங்க ஸ்தநகிரி’ எனும் தனியன் ஸ்லோகம்
உருவாகக் காரணம் என்று முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாச்சாரியார் தெரிவிக்கிறார்.

மேலும் கடந்த 18-ஆம் பாசுரம் முழுக்க முழுக்க பிராட்டியின் பெருமை பேசும் பாசுரமாகும்.
அதனால் மகாலக்ஷ்மிக்கே உரிய அக்ஷரமான ‘உ’ வில் தொடங்கியது.
இந்தப் பாசுரம் பாதி பிராட்டியையும், பாதி பெருமானையும் போற்றுகிறது.
எனவே ‘கு’ [க்+உ] என்ற எழுத்தில் தொடங்குகிறது.

அடுத்த பாசுரம் ‘மு’ [ம்+உ] வில் தொடங்குகிறது.
இந்த இரண்டு பாசுரங்களும் பிராட்டி மற்றும் பெருமாளின் புகழ் பாடி நாராயண தத்துவத்தைக் கூறுகின்றன.

முந்தைய பாசுரத்தில்
‘செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்’ என்று பாடி
நப்பின்னைப் பிராட்டியை எழுப்பினார்கள்.

இப் பெண்பிள்ளைகள் எழுப்பியவுடன் நப்பின்னையும் கதவைத் திறக்க எழுந்திருந்தாள்.
ஆனால் அப்பெண்பிள்ளைகள் நம்மைப் பற்றினவர்கள் அன்றோ?
அவர்கள் நம்மீது அன்புடையவர்கள் அன்றோ?
எனவே கதவு திறக்கும் ஏற்றத்தை பிராட்டிக்குத் தரக்கூடாது.
கதவைத் திறந்து நாமே அந்த ஏற்றத்தைப் பெற வேண்டும்” என்று
கண்ணபிரான் எண்ணியதால் நப்பின்னையை எழ விடாமல் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தானாம்.

அதை ஊகித்த இவர்கள்
‘நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா, வாய் திறவாய்’ என்று
கண்ணனை வேண்டுகிறார்கள்.

ஆனால் பிராட்டியோ
”இப்பெண்பிள்ளைகள் நம்மையன்றோ முதலில் அழைத்தார்கள்;
எனவே நாம்தானே அருள் செய்ய வேண்டும்” என்று
அவனை எழ விடாமல் கட்டிப் பிடித்தாள்.

உடனே இவர்கள், மீண்டும் “மைத்தடங்கண்ணினாய்” என்று நப்பின்னையை எழுப்பினார்கள்.

அருள் புரியும் அதிசய வைபவத்தைக் காட்டிலும் இல்லற வைபவம் காட்டும் பாடல் இது.
உள்மனப் போட்டி நடக்கிறது என்பார் பயங்கரம் அண்ணங்காச்சாரியார் ஸ்வாமிகள்.
முதலில் நப்பின்னை எழுந்தவுடன் கண்ணன் ”உம்பர் கோமானே” என்று நம்மை எழுப்பியதால் அவளை எழவிடாமல் தான் எழுந்தான்.
ஆனால் பிராட்டியோ, “பிரானே! ஏன் வீண் சண்டை? உம்மை எழுப்பியவுடன் நீர் போக வேண்டியது தானே?
போகாததால் தானே என்னை எழுப்புகிறார்கள். என்னை ஏன் தடுக்கிறீர்கள்? என்று கிளம்புகிறாள்.

”பிராட்டியே! நீ சாஸ்திரம் உணராதவள்; வீண் வழக்குத் தொடராதே; எப்பொழுதும் புருஷகாரம் க்ருதயத்தில் மட்டும் தான்
உனக்கு அந்வயமே ஒழிய காரியம் செய்வதில் எனக்கே உரிமை உண்டு. உனக்கு இல்லை.”

“ஏன் இல்லை? மோட்சம் கொடுக்கும் பெரிய காரியத்தில் வேண்டுமானால் எனக்குத் தகுதி இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் கதவு திறக்கும் இந்தச் சிறிய செயலைக் கூடவா நான் செய்யக் கூடாது? நான்தான் திறப்பேன்.” என்று பிராட்டி சொல்ல
கண்ணன், ”இல்லை இல்லை நான்தான் திறப்பேன் என்று அடியார்க்கு அருள் செய்வதில்
போட்டி நடப்பதாக சுவையான ஒரு நிகழ்ச்சியை ஊகிக்கலாம்.

”தாயே! எம்பிராட்டியே! இந்த உலகில் பாவம் குற்றம் செய்யாதவர் யார் இருக்கிறார்?
அவற்றை பொறுத்துக் கொண்டு எம்பிரானிடம் எம்ம்மைச் சேர்ப்பிப்பது நீ தானே?
அதனாலன்றொ நீ எங்கள் அனைவருக்கும் மாதாவாகிறீர்” என்று தாயாரின் பெருமையையும்,

”தன்னடியார் திறந்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்”
என்று எம்பெருமானின் தன்மையையும் உணர்த்துகிறார்கள். மேலும், தம் அடியாருக்கு அருள்செய்யும் விதத்தில்
ஒருவருக்கொருவர் இவ்வாறு போட்டி போடுகின்றனர் என்பதும் காட்டப்படுகின்றன.

”வாள் கெண்டை யொண் கண் மடப் பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டென் தலைமேல் புனைந்தேனே”
என்று நம்மாழ்வார் விரும்பியதை இப்பெண்களும் பெற ஆசைப்படுகிறார்கள்.

விளக்குகள் இருவகைப்படும்.
அவை குத்துவிளக்கு
மற்றும் தோரண விளக்கு என்பனவாகும்.

இவற்றில் குத்து விளக்கு என்பது
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் சென்று வைக்கக் கூடியது.

ஆனால் தோரண விளக்கு என்பது
நிலையாகக் கோயில் தொங்கிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது.

குத்து விளக்காக நாடெங்கும் சென்று ஸ்ரீவைஷ்ணவம் பேசிய உடையவர் ஸ்ரீமத் இராமானுஜரைக் கூறுவார்கள்.

திருக்கோஷ்டியூரிலேயே தன் திருமாளிகையிலேயே தங்கி இருந்து பெருமானை எண்ணிக் கொண்டிருந்த
திருக்கோஷ்டியூர் நம்பியை தோரண விளக்காகக் கூறுவார்கள்.

ஆண்டாளின் நாச்சியாரின் திருப்பாவையில்
”அணிவிளக்கு, குல விளக்கு, குத்து விளக்கு” என்றெல்லாம் விளக்குகள் பேசப்படுகின்றன.

“குத்துவிளக்கே! நீ நப்பின்னைக்கு மட்டும் கண்ணனைக் காட்டுகிறாய்;
எங்களுக்குக் காட்டக் கூடாதா? என்று கேட்பதாகவும் கொள்ளலாம்.

ஒன்பதாம் பாசுரத்திலேயே “தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரிய” என்று பாடிய நாச்சியார்
இப்பொழுது மீண்டும்
குத்துவிளக்கெரிய என்று உள்ளே அறையில் விளக்குகள் எரிவதை வெளியே இருக்கும் பெண்கள் பார்ப்பதாகப் பாடுகிறார்.

”நப்பின்னைப் பிராட்டியே!, நீ குத்து விளக்காகத் திகழ்கிறாய்.
நாங்கள் எல்லாரும் அகல் விளக்குகள்;
மேலும் நாங்களோ ஊராருக்குப் பயந்துகொண்டு, இந்த விடியல் பொழுதிலே ஒளிக்குப் பயந்து,
”நள்ளிருட்கண் என்னை உய்த்து விடுமின்” என்று இருள் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் நீயோ பகலையும் இரவாக்கிக் கொண்டு குத்துவிளக்கின் ஒளியிலே கண்ணனெம்பிரானின் முக அழகைக் கண்டு
களித்துக் கொண்டிருக்கிறாய்.” என்று பெண்கள் தங்கள் ஆற்றாமையைக் கூறுகிறார்கள்.

மேலும் குத்துவிளக்கு என்பது
தன்னையும் விளக்கிப் பிற பொருள்களையும் விளக்கும் தன்மை உடையதாகும்.
அதுபோல பிராட்டி தன்னையும் விளக்கி
மேலும் பெருமானின் பெருமையையும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள்.

இராமாயணத்தில் ”எல்லா இடங்களிலும் சர்வ வியாபியாய் இருக்கும் மகா விஷ்ணுவாகப் பட்டவர்
ஸ்ரீதேவியினால் சோபிப்பது போல்,
மிகவும் அன்புள்ளவளான அந்த சீதாதேவியினால் இராமபிரான் மிகவும் சோபித்தார்” என்று வால்மீகியும்,

”திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலர்”
என்று அருளிச்செயலும் கூறுவதுபோல்
இங்கே நப்பின்னை கண்ணனையும் பிரகாசிக்கும் ஒரு குத்துவிளக்காக இருக்கிறாள்.

கோட்டுக்கால் கட்டில் மேல் அவர்கள் சயனித்துக் கொண்டிருப்பதாக இவர்கள் பாடுகிறார்கள்.
ஓடு + வீடு = ஓட்டு வீடு என்றாவதுபோல, கோடு + கால் = கோட்டுக்கால் என்று வருகிறது.

”குத்து விளக்கு வேறு எரிகிறது. எங்களைப் போல் பிருந்தாவனைத்தையும், மணற்குன்றையும் தேடிப் போகாமல்
கோட்டுக்கால் கட்டில் மேல் கூச்சம் இன்றிப் படுத்துக் கிடக்கிறாயே” என்கிறார்கள்.
கோடு என்றால் தந்தம் என்பது பொருளாகும்.

நப்பின்னையோ வீரத் திருமகள்; ஏழு எருதுகளை வளர்த்தவள்; அவள் தூங்கும் கட்டில் எப்படி இருக்க வேண்டும்?
கம்சன் அழைத்துச் சென்றபோது அங்கே கண்ணன் குவலயாபீடம் என்ற யானையை வீழ்த்தினானே;
அந்த யானையின் தந்தத்தைப் பறித்துக் கொண்டு வந்து அந்தத் தந்தங்களைக் கால்களாகக் கொண்டு செய்த கட்டிலாம் அது.
வீரப்பெண்மணியாதலால் அதில் அன்றி வேறு எதிலும் நப்பின்னைக்குக் கண் உறங்காதாம்.

இவ்விடத்தில் சீதையின் வீரம் பற்றி வால்மீகி கூறுவதையும் எண்ணிப் பார்க்க வேண்டி உள்ளது. அவர்,
“இராமபிரானின் தோள்களைப் பற்றியுருக்கும் சீதை, யானையையாவது, சிங்கத்தையாவது புலியையாவது கண்டு
பயம் கொள்ளாமல் முகம் மலர்ந்தவளானாள்” என்று கூறுகிறார்.

மேலும் கோடு என்பதைக் கொம்பு என்று பொருள் கொண்டால் ஆழ்வார் பாசுர அடிகள் நினைவுக்கு வருகின்றன.
“இமிலேற்றுவன் கூன்கோட்டிடையாடினை கூத்தடலாயர்தம் கொம்பினுக்கே”
என்கின்றபடி நப்பின்னைப் பிராட்டியைத் திருமணம் புரிவதற்காக,
கண்ணனெம்பெருமான் அடக்கிய ஏழு எருதுகளின் கொம்புகளையும்
கால்களாக அமைத்துச் செய்த கட்டில் என்று பொருள் கொள்ளலாம்.

”பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு” என்றபடி
பிராட்டியும் கால்களில் விழும் முன் அவள் படுத்திருக்கும் கட்டிலின் கால்களில் விழுகிறார்களாம்.

“க்ருஷ்ணன் படுக்கையில் காலைப் பற்றினவர்களிறே பர்யங்க வித்தையில் சொல்லுகிற படுக்கையில் காலிட்டேறுவார்” என்று
ஆறாயிரப்படி மொழிவதையும் சொல்வதையும் நினைக்க வேண்டும்.

அந்தக் கட்டில் பொன்னாலும், மணியாலும் செய்யப்பட்டிருந்தாலும்
இவர்கள் ஆயர்கள் ஆனதால் சாதாரண மொழியில் ’கட்டில்’ என்று கூறுகிறார்கள்.

ஏனெனில்,
”மாணிக்கங்கட்டி வயிரமிடை கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுத்தான்”–என்று பெரியாழ்வார் பாடினார் அன்றோ?

பயங்கரம் அண்ணங்காச்சாரியார் ஸ்வாமிகளின் விளக்கம் அருமையானதாகும்.
கட்டில் நான்கு கால்களால் தாங்கப்படுகிறது.
அது போல இவ்வுலகம் நான்கு சாஸ்திரங்களால் தாங்கப் படுகிறது. அவையாவன:
1. சாந்தி [மனம், இந்திரியம் அமைதியாக இருத்தல்]
2. விசாரம் [ஆத்மாவைப்பற்றிச் சிந்திப்பது]
3. சந்தோஷம் [ எதிலும் திருப்தி மற்றும் உலகவாழ்வில் நிம்மதி]
4. சத்சங்கம் [மகான்களைச் சந்தித்தல் மற்றும் பாகவதர்களுடன் பழக்கமாக இருத்தல்]
மேலும் “கட்டை நாடித் தேனுகனும், களிறும், புள்ளுடன் மடிய வேட்டையாடி வந்த கண்ணன் யானையை
முடித்துக்கொண்டுக் கொணர்ந்த தந்தத்தினல் நப்பின்னைக்குக் கட்டில் அமைப்பதுபோல்,
ஆச்சாரியார் பர சம இத வேதங்களை வென்று முடித்து,
அந்த வெற்றி தோன்ற வீற்றிருக்கும் இருப்பின் வீறு இங்கு அனுசந்திக்கப்படுகிறது.

முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாச்சாரியார் கோட்டுக்கால் என்பதற்கு
தந்த்த்தின் கால் என்பது சாதாரண பொருளாகும். அவர் கூறுகிறார்.
”கோட்டுக்காலில் உள்ள கோடு என்பது ரேகையைக் குறிக்கும். கால் என்பது திருவடியாகும்.
பெருமாளின் திருவடியில் ஆயிரத்தெட்டு ரேகைகள் உள்ளன.
அவற்றில் த்வஜ ரேகை, சங்கு ரேகை, சக்கர ரேகை, அங்குச ரேகை மட்டுமே வெளியில் தெரியும்.
வஜ்ர ரேகை, மிதுன ரேகை, ஊர்த்வ ரேகை, சந்தர ரேகை, சாமர ரேகை, போன்றவை வெளியில் தெரியாது.
அவற்ரில் துர்வர்ண பங்க்தி நிரசன ரேகை என்பது மிகவும் முக்கியமானது ஆகும். துர்வர்ணம் என்றால் தலையெழுத்தாகும்.
அதை மாற்றக் கூடிய ரேகை நம் பகவானின் திருவடியில் உள்ளது.
எனவே கோட்டுக்கால் என்பது பகவானின் உயர்ந்த ரேகைகள் கூடிய திருவடி என்பதைக் குறிக்கும்.”

அடுத்து அக்கட்டிலில் உள்ள படுக்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘மெத்தென்ற பஞ்சசயனம்’ என்கிறார்கள்.
பெரும்பாலும் மெத்தையானது இலவம் பஞ்சில் செய்தால் நல்லது என்பார்கள்.
அதற்குச் சான்றாக ‘இலவம் பஞ்சில் துயில்’ என்ற சொற்றொடரைக் காட்டுவார்கள்.
ஆனால் இது தவறென்று கூறுவாறும் உண்டு.
அது இலவம் பஞ்சில் துயில் அன்று. ’இலவம் பிஞ்செனத் துயில்’ என்பதாகும்.
அதாவது சிறு காற்று பட்டாலும் இலவம் பஞ்சு பறப்பது போல உடனே எழுந்திருக்க வேண்டும்.
கூனி கை பட்ட உடனே கைகேயி எழுந்து விட்டாள்.
அதைக் கம்பன் ’தீண்டலும் உணர்ந்தனள் தெய்வக் கற்பினாள்’ என்று குறிப்பிடுவான்.

பஞ்ச சயனம் என்பதற்கு ஒரு படுக்கையானது ஐந்துவகைக் குணங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
அவை : 1. மென்மை. 2. அழகு. 3. குளிச்சி. 4. வெண்மை. 5. மணம் என்பனவாகும்.
இதில் சிலர் மென்மை என்பதற்குப் பதிலக ‘பரப்பு’ என்பதைக் கூறுவார்கள்.
இங்கே ’மெத்தென்று’ என்று முதலில் கூறிப் பின் ‘பஞ்ச சயனம் என்றும் கூறுவதால்
அப்படுக்கை சற்று மென்மை மிகுந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது.

பஞ்ச சயனம் என்பது அர்த்த பஞ்சக ஞானத்தையும் குறிக்கும்.
அர்த்த பஞ்சக ஞானம் என்பது ஐந்து வகைப்பட்டதாகும். அவை :

ஆன்ம சொரூபம்—-ஆன்மாவின் இயல்பை அறிதல்.
ஈசுவர சொரூபம்— பெருமாளின் இயல்பை அறிதல்
பல சொரூபம் — ஆன்மா அடையும் பயனை அறிதல்
உபாய சொரூபம்— ஆன்மா அப்பயனை அடையும்வழிஅறிதல்
விரோதி சொரூபம்— ஆன்மாவிற்கு வரும் பகைகள் அறிதல்

இந்த அர்த்த பஞ்சக ஞானம் இல்லாவிடில் ஒவ்வொருவருக்கும்
ஆதி ஆத்மீகம், ஆதி பௌதீகம், ஆதி தைவீகம் எனும் மூன்று விதமான துன்பங்கள் ஏற்படும்.

ஆதி ஆத்மீகம் என்பது சரீர ஆத்மீகம் [உடல் நோய்] மற்றும் மன ஆத்மீகம் [காமம், பொறாமை] எனப்படும்.
ஆதி பௌதீகம் என்பது விலங்கு,பிசாசு, பேய் போன்றவற்றால் வருவன என்றும்
ஆதி தைவீகம் என்பது காற்று , புயல், மழையால் வருவன என்றும் பொருள்படும்.

இந்த அர்த்த பஞ்சக ஞானம் கிடக்கும் இடம் ருக், யஜுர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்களாகும்.
அவைதான் இங்கு கட்டிலின் நான்கு கால்களாகக் காட்டப்பட்டிருக்கின்றன.

பஞ்ச சயனம் என்பதை ஐந்து நிற நூல்களைக் கொண்டு நெய்த படுக்கை என்றும் கொள்ளலாம்.
திருப்பாற்கடல்,
ஆதிசேஷன்,
ஆலின் இலை,
வேத உபநிடதங்களின் முடிவு,
அர்ச்சிக்கும் அடியார்களின் வணக்கமான இதயம்
எனும் பகவான் பள்ளி கொள்ளும் ஐந்து இடங்களைக் காட்டுவதாகவும் கொள்ளலாம்.

மேலும் ஐம்பொறிகளின் அடக்கத்தை உணர்த்தும் படுக்கையாகவும் கொள்ளலாம்.

”நாங்களெல்லாம் கண்ணனையும் உன்னையும் பிரிந்து துன்பப்படும் போது
நீ மட்டும் படுக்கையின் மென்மையை அனுபவித்துக் கொண்டு கிடக்கலாமோ?

மென்மையான் படுக்கையெல்லாம் எங்களுக்கு வெம்மையாயிருக்க உனக்கு மட்டுமெப்படி அது மென்மையாய் இருக்கிறது?

எம்மைப்பிரிந்த உனக்கு அப்படுக்கை கடினமாக இருக்க வேண்டாமோ?
நாங்கள் உனக்குக் குழந்தைகள் போன்றவர்கள் அன்றோ?
நாங்களும் அதன் மேலேற வேண்டாமோ? குழந்தைகள் மேலேறித் துவைக்காத படுக்கையும் ஒரு படுக்கையா?

எம்பெருமான் கூட எமக்கும் உறவு உண்டன்றோ? அவனுக்கு நாங்களும் குழந்தைகள்தானே?
நாங்கள் மேலேறினாலன்றோ நீ படுக்கையில் ஏறிய பயன் கிடைக்கும்.
அவன் ஆதிசேஷனான படுக்கையை மிதித்து மேலேறுகிறான்.
அவன் ”நாகபர்யங்கமுத்ஸ்ருஜ்ய” என்பதற்கேற்ப
அப்படுக்கையை விட்டு இந்தப் பஞ்ச சயனத்திற்கு வந்ததே எம்மைப் பெறுவதற்காகத்தானே?” என்றெல்லாம்
ஆயர்குலப் பெண்கள் கேட்கிறார்கள்.

மேலும் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை என்று அவளை அழைக்கிறார்கள்.
கொத்துக் கொத்தாக அரும்புகளை நப்பின்னை தலையில் வைத்தாலும் அவை அவள் தலை பட்டதுமே மலர்ந்து விடுகின்றன.
மேலும் வெளியில் வருவது யார் என்று போட்டி போட்டார்கள் அல்லவா?
அந்த சம்பந்தத்தாலேயே அரும்புகள் மலர்ந்து விட்டனவாம்.
மேலும் ’காலோஸ்மிலோகக்ஷயக்ருத்’ என்று சொல்லப்படுபவன் சம்பந்தத்தால் அவை மலர்வது ஆச்சரியம் அல்லவே?

”இப்படி அரும்புகளுக்கெல்லாம் மலர்ச்சியைக் கொடுக்கும் நீ எங்களுக்கு மலர்ச்சியைத் தரவேண்டாமா?
மலரிட்டு நாம் முடியோம் என்று நாங்களிருக்க நீ மட்டும் கொத்தலர் பூங்குழலியாய் இருக்கிறாயே?” என்று இவர்கள் கேட்கிறார்கள்.

’கொங்கை மேல் வைத்துக் கிடந்த’ என்பதற்கு நப்பின்னைப்பிராட்டியின் மார்பின் மேலே தன் மார்பை வைத்துக் கிடப்பவன் என்றும்,
அவள் மார்பைத் தன் மேல் வைத்துக் கொண்டு கிடப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

பயங்கரம் அண்ணங்காச்சாரியார் ஸ்வாமிகள் ”இப்பாசுரம் ஸதஸ்ஸுக்கு உரியதன்று என்று சொல்வார்கள்.
ஆனால் உண்மையில் இது வேதாந்த விழுப்பொருளை உடைய பாட்டு” என்கிறார்.
மேலும் நப்பின்னை எப்படி மிகச் சிறந்து விளங்குபவளோ அதேபோல சிஷ்யர்களில் சிறந்து விளங்கும் ஒருவர்
தன் ஆச்சாரியரிடம் எமக்கு வாய் திறந்து உபதேசம் செய்யுங்கள்” என்று வேண்டுவதாக இது அமைந்துள்ளது என்கிறார்.

”அத்யந்த பக்தியுக்தஸ்ய ந ஸாஸ்திரம் நைவ ச க்ரம”
என்றபடி அன்பு மேலிட்டவருக்கு சாஸ்திரமுமில்லை; க்ரமுமில்லை என்பதையும் உணர முடிகிறது.
மேலும் “நான் களைப்பினால் ஸ்ரீராமனுடைய மடியில் நீண்ட நேரம் தலைவைத்துத் தூங்கினேன்.
அவரும் அப்படியே என் மடியில் தலை வைத்துத் தூங்கினார்” என்று சீதாபிராட்டி பேசியதும் இங்கு எண்ணத்தக்கது.

மேலும் “மலராள் தனத்துள்ளான்” மற்றும்
“சங்குதங்கு முன்கை நங்கை கொங்கை தங்களுற்றான்” என்று
ஆழ்வார்களும் அவன் ஏற்றத்தை அருளிச் செயல்களில் காட்டுகிறார்கள்.

அவன் மலர்ந்த மார்பை உடையவன்;
அதாவது அவனுக்கு அவள் மார்பே அரணானான படி அவளுக்கு அவன் மலர் மார்பே இருப்பிடமாகும்.
அகலகில்லேன் என அலர்மேல் மங்கை உறையும் மார்பன்றோ?
திருமங்கையாழ்வாரும் “முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகயத்துள்ளிருப்பாள்” என்கிறார்.

மலராது குவியாயாது கிடக்கும் அவன் மார்பு மலர்கிறது. ஏன் தெரியுமா?
அன்பின் கூட்டுறவே காரணமாகும்.
அவளது அரவணைப்பாலே மலர்கிறது.
“வெண்ணெய்க் கன்றாய்ச்சி வன் தாம்புகளால் புடைக்கலர்ந்தானை” என்று
யசோதை அடிக்கே மலர்ந்தவன் அன்புக்கு மலராதிருப்பானா? எனவேதான் ’மலர்மார்பா’ என்றழைக்கிறார்கள்.

’உன் மலர் மார்பு நப்பின்னைக்கு மென்மையாயும் எமக்கு வன்மையாயும் இருக்கிறதே! ஆமாம்;
அது எப்போதும் பக்தர்க்கு மென்மையாயும் பகைவர்க்கு வன்மையாயும் இருப்பதுதானே!” என்கிறார்கள்.
உள்ளே பிராட்டியும் கண்ணனும் ஒருவருக்கொருவர் அன்பினால் பிணைப்புண்டு கிடக்கிறார்கள்.
எனவேதான் ‘எழுந்திராய்’ என்று கூறாமல் ‘வாய் திறவாய்’ என்கிறார்கள்.

”பெருமானே! அவளது அணைப்பால் நெருக்குண்டு கிடப்பதால் எழ முடியா விட்டாலும்
வாயைத் திறந்து ஒரு வார்த்தை எங்களுக்கு உரைக்கக் கூடாதா?
அது கூட முடியவில்லையா? உன் திருமார்பைத் தான் பிராட்டிக்குக் கொடுத்தாய்; பேச்சையாவது எமக்குத் தரக் கூடாதா?
அர்ச்சுனனுக்குக் கீதை சொன்னது போல் எங்களிடம் பேசக் கூடாதா? மலர் மார்பா! வாய் திறவாய்” என்கிறார்கள்.

இந்த இடத்தில் வியாக்கியானம் செய்கையில்
“நீ ஊமத்தங்காய் தின்று கிடக்க நாங்கள் யாரை எழுப்புவது?” என்று கேட்பதாக பெரியவாச்சான் பிள்ளை பேசுகிறார்.

இவர்கள் இப்படிக் கேட்டதும் கண்ணன்
”நம்மை விரும்பி அழைக்கும் இந்த ஆயர் குலப் பெண்களுக்கு ஒரு வார்த்தையாவது கூற வேண்டும்”
என்று வருந்தி வாய் திறக்க ஆசைப்படுகிறான்.

ஆனால் “வந்து அழைக்கும் ஆயர்குடிச் சிறுமிகள் நம்மை நாடி வந்திருப்பவர்கள்;
நம்மை எழுப்பி அழைத்துப் போக வந்திருப்பவர்கள்; எனவே இவர்களுக்கு நாம்தானே அருள் செய்ய வேண்டும்
நம் மணாளனான கண்ணபிரான் அருள் செய்தல் தகாது” என்று எண்ணிய பிராட்டி
மை தீட்டப்பட்ட தன் அழகிய கண்களாலே பிரானை நோக்கி வாய் திறக்காமலிருக்க சைகை செய்கிறாள்.
பிராட்டியின் கண்படி செயல்படும் அவனும் பேசாமலிருந்தான்.

இதை உணர்ந்த வெளியே இருக்கும் பெண்கள் மீண்டும் நப்பின்னையின் அருளை வேண்டுகிறார்கள்.
”அழகிய விசாலமான மை தீட்டப்பட்ட கண்களை உடைய பிராட்டியே! உன் கண்ணழகே எமக்குக் கதி என்றிருந்தோம்.
ஆனால் அதுவே எமக்குப் பாதகம் செய்துவிட்டதே. நீ அழகான உன் கண்களுக்கு மை தீட்டப் பெற்றிருக்கிறாய்.
ஆனால் ‘மையிட்டெழுதோம்’ என்று நோன்பு நோற்கும் நாங்கள் மைதீட்டாத கண்களுடன் வாடுகிறோம்.
அடியார்களாகிய நாங்கள் அனுபவிக்காததை நீ மட்டும் அனுபவிக்கலாமா?
உன் கண்ணுக்க்கு மை அழகு செய்கிறது.
ஆனால் மையாகிய இருட்டாகிய அஞ்ஞானம் எங்கள் கண்களில் இருக்கிறதே;
அதை நீக்கி எமக்கு அருள் செய்வாயாக. என்று வேண்டுகின்றனர்.

கறுத்த கண்களினை உடையவளே என்றும் பொருள் கொள்ளலாம். வால்மீகி சொல்லும் போது
“ந ஜீவேயம் க்ஷணமபி விந தாமஸிதேக்ஷணாம்” என்கிறார்.
அதாவது “கறுத்த கண்களை உடைய அப்பிராட்டியைப் பிரிந்து
நான் ஒரு கணப்பொழுதும் உயிர் தரியேன்” என்று பெருமான் கூறினாராம்.
மேலும் “ராகவோஸ்ர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸிதேக்ஷணா” என்பதன் மூலம் பிராட்டி பெருமான் இருவருமே
அழகு குணம் இரண்டிலும் ஒருவருக்கொருவர் தகுந்தவர்கள் என்று சொல்லவருகிறார் வால்மீகி.
ஆனால் ‘அஸிதேக்ஷணா’ என்பதன் மூலம் பெருமானைக் காட்டிலும் பிராட்டி கண்ணழகில் சிறந்து விளங்குபவள் என்று சொல்கிறார்.
மேலும் ”என்னதான் நீ பிராட்டி போல அலங்காரம் செய்துகொண்டாலும் பிராட்டி போல உன்னால் கண்ணால் விழிக்கமுடியாது என்கிறார் பட்டர்.

அப்படியான ‘கண்ணழகை உடையவளே! உன் பரந்த கடல் போன்ற கண்களைத் தாண்டி வந்தால்தானே
கண்ணபிரான் எம்மைக் காண முடியும்? எம் கண்ணுக்கும் மையிட அருள் செய்வாயாக” என்று வேண்டுகிரார்கள்.

இதற்கு திருச்சி புத்தூர் ஸ்ரீ உ.வே.கி. ஸ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமி வியாக்கியானம் செய்யும்போது
“மைப்படி மேனி” [திரு விருத்தம்] இறே” என்பது ஆறாயிரப்படி.
நப்பின்னையின் கண்களில் இருப்பது உண்மையில் மையில்ல;
அவள் அருகிலிருக்கும் கண்ணனின் சாயல்தான் இவளுக்கு மையாகிறது.
இந்த ஆயர்குலப் பெண்கள் விரும்பும் மையும் அதுவேயாகும்.
என்வே உன் கண்ணுக்கு மையாய் இடும் அம்மேனியை எங்கள் கண்களுக்கும் இடுவாயாக” என்று கேட்பதாக அருளுவார்.

அடுத்து ”நீ உன் மணாளனை எப்பொழுதும் பிரியமாட்டாயா? எல்லாருக்கும் நாயகனாய் இருக்கும்போது நீ ஒருத்தி மட்டுமே
துயிலெழவொட்டாமல் அவனைக் கணப்பொழுதும் பிரியாமல் இருக்கிறாயே?” என்கிறார்கள்.

“அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பா” என்று ஆழ்வார் பாடினாரன்றோ?
“ராகவரே! உம்மைப் பிரிந்த சீதையும் உயிர் தரியாள். நானும் ஜீவித்திருக்க மாட்டேன்” என்று
இலக்குவன் கூறியது இங்கு நினைவு கூறத்தக்கது.

கம்பனும்
”நீருளதெனின் உள மீனும் நீலமும்–யாருளதெனின் உள நானும் சீதையும்” என்று இலக்குவன் கேட்பதாகப் பாடுவான்.

இங்கே ஆச்சார்ய சிஷ்ய பாவம் பேசப்படுகிறாதாம்.
உண்மையான சீடனுக்கு ஆச்சார்யாரை விட்டுப் பிரிவது மிகவும் அஹஸ்யமாயிருக்குமாம்.

இப்பாசுரத்தில் தத்துவம் தகவு என்ற இரண்டு பேசப்படுகின்றன.
தத்துவம் என்பதை சொரூபம் என்றும்
தகவு என்பதை சுபாவம் என்று கொண்டோமானால் நீ இப்படி இருப்பது
உன் புருஷகாரத்திற்கும் மற்றும் கிருபைக்கும் பொருந்தாது எனப் பொருள் வரும்.

தத்துவம் என்பதை சத்யம் என்றும் தகவு என்பதை தர்மம் என்றும் கொண்டால் பகவான் உனக்கு மட்டுமன்று;
உலகுக்கே உரியவன் எனும் உண்மையை நீ உணரவில்லை;
நீ இப்படி இருப்பது தர்மமன்று என்று கூறுவதாகப் பொருள் கொள்ளலாம்.

இப்பாசுரம் பல உள்ளர்த்தங்களை அடக்கியதாகும்.
இது பக்தியோடு அணுக வேண்டிய அகத்துறைப் பாடல்.
ஆன்மாக்களின் பரிபக்குவ நிலை காண இறைவன் முந்துகிறான்.
பாகவதரை வைத்து பகவானை அடைவது போலப்
பிராட்டியை வைத்தே பெருமானை அடைய வேண்டும்.

யானையின் தந்தங்களாலான கட்டில் பாசுரத்தில் பேசப்படுகிறது.
அந்தத் தந்தங்கள் இரண்டும் அகங்காரம் மற்றும் மமகாரம் ஆகும்.

ஆச்சார்யர்கள் சொல்லும் வார்த்தைக்கிணங்க எம்பெருமான் பரப்பிரம்ம்ம் என்பதை உணர்ந்து
அவனை அடைய வேண்டும் என்பதை இப்பாசுரம் உணர்த்துகிறது.

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும் அர்ச்சாவதாரமும் -ஸ்ரீ உ வே ஸூ தர்சன ராமானுஜ ஸ்வாமிகள் –

April 20, 2021

ஸ்ரீ: ஸ்ரீமத்யை கோதாயை நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று
கோலிப் பதிவிருந்த கொற்றவனே – வேலை
அணைத்தருளும் கையா லடியேன் வினையைத்
துணித்தருள வேணும் துணிந்து

எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஐந்து நிலைகள்
ஸ்ரீயபதியான ஸர்வேஶ்வரன் எழுந்தருளியிருக்கும் நிலைகள் ஐந்து. அவற்றுள் பரத்வமாவது
(1), ஒளிக் கொண்ட சோதியாய் நித்ய முக்தர்களுக்குத் தன்னை அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு பரமபதத்தில்
எழுந்தருளியிருக்கும் இருப்பாகும். இப்படிப்பட்ட பரமபதத்தின் லக்ஷணங்களை ஸ்ரீ பராசரபட்டர்

யத்தூரே மநஸோ யதேவ தமஸ:பாரேய தத்யத்புதம்
யத் காலா தபசேலிமம் ஸுரபுரீ யத் கச்சதோ துர்கதி: |
ஸாயுஜ்யஸ்ய யதேவ ஸுதிரதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத்விஷ்ணோ: பரமம் பதம்……. * (ஸ்ரீ குண கோ – 21) என்கிற ஶ்லோகத்தில் அருளினார்.

[எந்த இடம் மனத்திற்கு தூரத்தில் உள்ளதோ, எந்த இடமே ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதோ எந்த இடம் மிகவும் வியக்கத்தக்கதோ,
எந்த இடம் காலத்தினால் முதுமை அடையாததோ, எந்த இடத்தை நோக்கி போகின்றவனுக்கு தேவர்களின் நகரமான
அமராவதியும் நரகமோ எந்த இடமே முக்தி நிலைக்கு பிறப்பிடமோ , இறைவனான விஷ்ணுவின் மேலான ஸ்தானம் ஆகிற பரமபதம்].

திருமாமணிமண்டபத்தில், நித்ய முக்தர்களுக்கு தன்னுடைய அழகை எல்லாம் காட்டி –
எப்படி கடலானது அலையெடுத்த வண்ணம் இருக்கிறதோ அதே போன்று தன்னுடைய திருக்கல்யாண குணங்களை
அவர்களுக்குக் அனுபவிக்கக் கொடுத்து கொண்டு தன்னுடைய செங்கோல் ஆட்சி ஒரு குடைக்குக் கீழ் நடத்துகிற இடம்.
இதனை பட்டர் ஸ்ரீ குணரத்ன கோசத்தில்
ஸ்புரது பரிபணாரத்நரோசிர் விதானம் விஸ்தீர் யாநந்த போகம் ததுபரி நயதா விச்வமே காத பத்ரம்
(படங்களின் ரத்நங்களினுடைய ஒளியாகிற மேல் கட்டியை உடையதுமான ஆதிசேஷன் திருவுடம்பை விரித்து
அதன்மீது வீற்றிருந்து உலகை ஒருகுடைக்கீழாம்படி நடாத்துகிறவனும்) என்றருளினார்.

வ்யூஹமாவது (2) பரமபத நாதனிடமிருந்து உத்பத்தியான வாஸுதேவ, ஸங்கர்ஷண, ப்ரத்யும்ந, அநிருத்த ரூபங்கள்.
இந்த ரூபங்களை உடையவனாய் ஆமோத ப்ரமோத ஸம்மோத லோகங்களிலும், க்ஷீராப்தியிலும் எழுந்தருளியிருக்கும் நிலை.
ப்ரஹ்மாதிகளின் குறைகளைக் கேட்பதற்கும், ஸனத்குமாரர்கள் முதலானோர்கள் கிட்டி அனுபவிப்பதற்காகவும் இருக்கும் நிலை.

விபவமாவது(3) அநிருத்தனிடத்தில் இருந்து உண்டான இராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்.
இவை பூர்ணாவதாரங்கள், ஆவேசாவதாரங்கள் என இருவகைப்படும்.
பூர்ணாவதாரங்கள் – இராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்;
ஆவேசாவதாரங்கள் – பரசுராம, பலராமாதி அவதாரங்கள்; பூர்ணாவதாரங்கள்
ஜன்ம கர்ம ச மே திவ்யம் (கீதை – 4-9) [அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான பிறப்பையும், சேஷ்டிதங்களையும்
எவன் இப்படி உண்மையாக அறிகிறானோ, அவன் தேஹத்தை விட்டு மறுஜன்மம் அடையான்; என்னை அடைகிறான்] என்கிறபடி
விக்ரஹங்கள் (திருமேனிகள்) அப்ராக்ருதம்.

அந்தர்யாமித்வமாவது (4) சேதனாசேதனங்களில் எழுந்தருளியிருக்கும் இருப்பு.
இதனைக் குறிக்கிற ஶ்ருதியானது “ய: ப்ருதிவ்யாம் திஷ்டந் ய: ஆத்மநி திஷ்டந்” என வஸ்துக்கள் தோறும்
எம்பெருமான் அந்தர்யாமியாய் இருக்கின்றான் என ஒதிற்று.
இது தன்னை திருமழிசைப் பிரான் * நின்றியங்கும் ஒன்றலா உருக்கள் தோறும் ஆவியாய் ஒன்றி உள்கலந்து நின்ற இன்ன தன்மை *
(நின்று – நிலைபேராதே நிற்கும் மலைமுதலிய ஸ்தாவர பதார்த்தங்களைச் சொல்லுகிறது;
இயங்கும் – அசையக்கூடிய பசுபக்ஷ்யாதி ஜங்கம பதார்த்தங்களைச் சொல்லுகிறது,
இப்படிப் பலவகைப்பட்ட சரீரங்கள் தோறும் ஆத்மாவாய் பொருந்தி நின்ற உன்னுடைய ஸ்வபாவம்) என்றருளினார்.
எம்பெருமான் இப்படி எழுந்தருளியிருப்பது, யோகிகளின் ஹ்ருதயத்தில் அவனை த்யானிப்பதற்காக.

அர்ச்சையாவது (5) * அர்ச்சாயாம் ப்ரதிமா பூஜா * என்கிற நிகண்டுவின்படி தனது பக்தர்களின்
திருவாராதனத்திற்காவும், உஜ்ஜீவனத்திற்காவும், தான் பரிபூர்ணனாய் நிற்கும் நிலை.
இது தன்னை வானிட்ட கீர்த்தி வளர் கூரத்தாழ்வான் திருக்குமாரரும், ஸ்ரீரங்கேசரின் புரோஹிதருமான பட்டர்
ஸ்ரீ ரங்கராஜஸ்தவத்திலே
ஆஸ்தாம் தே குணராஶிவத் குணபரீவாஹாத்மநாம் ஜன்மநாம் ஸங்க்யா பௌமநிகேதநேஷ்வபி குடீகுஞ்ஜேஷு ரங்கேஶ்வர | அர்ச்ச்யஸ்ஸர்வஸஹிஷ்ணுரர்ச்சகபராதீநாகிலாத்மஸ்திதி: ப்ரீணீஷே ஹ்ருதயாலுபிஸ்தவ ததஶ்ஶீலாஜ்ஜடீபூயதே ||* (ஸ்ரீ ரங். ஸ்த் – உத் 74) என்றருளினார்.

ரங்கேஶ்வர – பெரிய பெருமாளே!; தே குணராஶிவத் – தேவரீருடைய திருக்கல்யாணகுணக் கூட்டங்கள் போல;
குணபரீவாஹாத்மநாம் – அந்த திருக்கல்யாண குணங்களை காரணங்களாகவும், அவற்றைப் ப்ரகாஶிப்பவைகளாகவும்
இருப்பதினாலே அந்த திருக்குணங்களுக்கு ப்ரவாஹங்களாயிருக்கிற; ஜன்மநாம் – திருவவதாரங்களுடைய;
ஸங்க்யா – எண்ணித் தலைக்கட்டி முடிக்கமுடியாமையானது;

அஜாயமானோ பஹுதா விஜாயதே * (தை. பு 21) (பிறப்பில்லாதவன் பலபடியாகப் பிறக்கிறான்),

பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி * (கீதை – 4-5) இத்யாதி ப்ரமாணங்கள் இதனை உணர்த்தும்.
ஆஸ்தாம் – இருக்கட்டும். இதனால் இவருக்கு அர்ச்சையில் உள்ள ஆதரத்தினை உணர்த்தினாராயிற்று,
அர்ச்சாவதாரத்தை அனுபவித்தால் தேவரீர் எவ்வளவு திருவவதாரங்கள் எடுத்த போதிலும் அவற்றில் ஊற்றமில்லை என்றபடி;
த்வம் – தேவரீர்; பௌமநிகேதநேஷ்வபி – இப்பூமண்டலத்திலுள்ள ஆலயங்களிலும்;
குடீகுஞ்ஜேஷு – க்ருஹங்களிலும் ஆச்ரமங்களிலும்; அல்லது பௌமநிகேதநேஷ்வபி – திருவரங்கம் முதலான கோயில்களிலும்;
குடீகுஞ்ஜேஷு – திருக்குறுங்குடி, திருக்கண்ணங்குடி, திருவெள்ளியங்குடி, முதலான குடிகளிலும்;
அர்ச்ச்ய இதி – அர்ச்சாவதாரமாய் எழுந்தருளி * தன்னை அநாதரிக்கிறவர்களை தான் ஆதரிப்பவராயும் *
ஸாக்ஷாதபசாரம், உபசாராபதேஶமான அபசாரம் (உபசாரம் செய்ய வேண்டும் என்றாரம்பித்துப் பண்ணும் அபசாரம்)
ஆகியவற்றை ஸஹிக்கையே ஸ்வபாவமாகக் கொண்டும், ப்ரீணீஷே – உகந்து எழுந்தருளுகின்றீர்;
(அணியழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – அழகிய திருவழுந்தூரில் வந்துநின்று
(அத்தலத்தில் வாழ்க்கையையே பெறாப் பேறாக நினைத்து) அகமகிழ்கின்ற நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானே);
தத: – அப்படிப்பட்டதான; தவ ஶீலாத் – தேவரீருடைய ஶீலகுணத்தினால்; ஹ்ருதயாலுபி: ஜடீபூயதே – ஸஹ்ருதயர்கள் மோஹிக்கிறார்கள்.
இங்கு ஸஹ்ருதயர்கள் என்றது ஆழ்வார்களை. மயர்வற மதிநலம் அருளப்பெற்று ஸர்வஜ்ஞரான ஆழ்வார்கள்,
இந்த ஶீல குணத்தை அநுஸந்தித்து மோஹிக்கிறார்கள்.

இப்படி ஐந்து ப்ரகாரங்கள் இருந்தாலும் அவற்றில் ஸ்தல பேதமேயொழிய வஸ்து பேதமில்லை என்பதினை
ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் தம்முடைய ஆசார்ய ஹ்ருதயத்தில்,

” பகலோலக்கமிருந்து கருப்புடுத்துச் சோதித்து காரியம் மந்த்ரித்து வேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி
யாதுஞ்சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்தவென்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு விண்மீதென்கிற ஐந்திலும் காணலாம் ” (157)
என்ற சூர்ணிகையில் அருளினார்.

—————

கலியனும் அர்ச்சாவதாரமும்
ஸ்ரீய பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆழ்வார்கள்.
அவர்களுள் இறுதியாக, ஆசார்ய பரம்பரையிலே ஸ்ரீமத் வரவரமுனிகள் போலே, திருவவதாரம் பண்ணியருளியவர் திருமங்கை ஆழ்வார்.
மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற அவதரித்த * என்கிற உபதேசரத்தினமாலை ஸ்ரீஸுக்திப்படியே,
நான்கு வேதங்களின் ஸாரமாக நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களுக்கு,
இவ்வாழ்வாருடைய ஆறு திவ்யப்ரபந்தங்கள் ஆறு அங்கங்களாம்.
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள் * (ஆ. ஹ். 36) என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை கொண்டு இவர் ப்ரபாவம் அறியலாம்.

நம்மாழ்வாரை * க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் * என்றார் ஸ்ரீ பராசர பட்டர்.
ஸ்வாமி மணவாள மாமுனிகளை * யதீந்த்ர ப்ரவணர் * (எம்பெருமானார் மீது அளவற்ற ப்ரேமை கொண்டவர்) என்றான் ஸ்ரீ அழகிய மணவாளன்.
அதே போன்று * அர்ச்சாவதார ப்ராவண்யமே * வடிவெடுத்தவர் யார் என்று கேட்டால் – அது திருமங்கை ஆழ்வார் ஒருவரே ஆவர்.
நம்மாழ்வார் * செய்ய பரத்துவமாய் சீரார் வ்யூஹமாய் துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் எய்துமவற்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான் * என்று உபதேசிப்பது அர்ச்சாவதார விஷயமாய் இருந்தாலும்,
அதை அனுஸரித்துக் காட்டியவர் திருமங்கை ஆழ்வாரே ஆவர்.
நம்மாழ்வார் அப்பதிகந்தன்னிலேயே (அர்ச்சாவதார ஏற்றம் சொல்லும் பதிகந்தன்னில்)
* அன்றுதேர்கடவிய பெருமான்கனைகழல் காண்பதென்றுகொல் கண்களே? * என்று தான்
க்ருஷ்ணாவதாரத்தில் ஆதரத்துடன் இருப்பதைக் காட்டினார்.
அயர்வறுமமரர்களுக்கு இனியனாய், நாகபர்யங்கங்கத்திலே சயனிப்பவனாயிருந்துவைத்து வஸுதேவருடைய திருமாளிகையிலே
அவதரித்தவனாய் எனக்குப் பிராணனாய், துரியோதனன் முதலானோர் படையொடும் முடியும்படியாக
பாண்டவ பக்ஷபாதியாயப் பார்த்தஸாரதியாயிருந்த எம்பெருமானுடைய திருவடிகளை என்னுடைய கண்கள் ஸேவிக்கப்பெறுவது என்றைக்கோ என்கிறார்.

பேயாழ்வார் எம்பெருமானை அமுதம் என்றார் – * மருந்தும் பொருளும் அமுதமும் தானே * எம்பெருமானை அமுதம் என்றது –
இஷ்டங்களைப் பெறுவிப்பதற்கும் அநிஷ்டங்களைத் தொலைப்பதற்கும் உபாயமாகநிற்கும் மட்டுமேயன்றி
ஸ்வயம் போக்யமாயும், ஆனதுபற்றியே ப்ராப்யமாயுமிருக்கும் என்றபடி.

பரத்வத்திலே அமுதமாயிருப்பது * மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது * ஆகும் –
நித்யமாய் மூவகைப்பட்டதான ஆத்மவர்க்கத்துக்கும் அப்பால் பரமபத்திலே (உபயவிபூதிக்கும்) முதல்வனாய்க் கொண்டு
எழுந்தருளியிருப்பவனும் (ஸ்வரூபரூபகுணங்களில்) அளவிடமுடியாதவனும் அருமையான அம்ருதம் போன்றவன்.

* நரம்கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே, அங்கண்மா ஞாலத் தமுது.* என்றிருப்பது விபவதாரங்களாகிற அமுது.
நரசிங்கவுருக்கொண்டு பிளந்தொழிந்த அழகனுடைய இணையடியே அழகிய இடமுடைத்தான இம்மாநிலத்தில் போக்யமான அம்ருதமாகும்.

அந்தர்யாமி தஶையிலே அமுதமாயிருப்பது * கடிசேர் நாற்றத் துள்ளாலை * என்பது.
கடிசேர் நாற்றத்துள்ளாலை – விலக்ஷணான பரிமளங்களெல்லாம் சேர்ந்த தேனிலுள்ள சுவையினுடைய
கோது கழிந்த (குற்றங்கள் கழிந்து) ஸாரமான பாகம் போலிருக்கிற விச்சேதமற்று (தடையின்றி) நித்யமான ஆனந்தமயனாய் இருப்பவன்.
இப்பாசுரத்தில் ஆழ்வார் அனுபவிப்பது அந்தர்யாமி தத்வத்தை என்பது குறித்துக்கொள்ளத் தக்கது.

இப்படி எம்பெருமான் மற்ற தஶைகளில் அமுதமாயிருந்தாலும், திருமங்கை ஆழ்வார் உகப்பது
* திருமூழிக்களத்து விளக்கே – இனியாய தொண்டரோம் பருகின்னமுதாய கனியே * என்று அர்ச்சாவதார நிலையையேயாம்.
திருமூழிக்களமென்னுந் திருப்பதியில் விளக்குப்போல் விளங்குமவனே, பரமபோக்யனே! தொண்டரான அடியோங்கள்
பானம் பண்ணுதற்கு உரிய இனிய அமுதமானவனே! கனிபோன்றவனே! ; ஸ்ரீவைஷ்ணவர்களாகிய அடியோங்கள் பருகும்
அம்ருதமாய் அப்போதே எடுத்து நுகரலாம்படி கனி போன்று இருக்கிறவனே!

திருமங்கை ஆழ்வாரை ஸ்ரீரங்கநாதன் விஷயீகரிக்கத் திருவுள்ளம் பற்றி, வாய்த்த திருமணங்கொல்லையினில்
அவருக்கு திருமந்த்ரம் அருளிச் செய்த பின்பு, ஆழ்வார் தம்முடைய நிலைக்குச் சேராதவைகளை வெறுத்து ஒதுக்கி,
அத்திருமந்த்ரம் திருவவதரித்த இடமான திருவதரி தொடங்கி அர்ச்சாவதார எம்பெருமான்களை மங்களாஸாஸனம் செய்யத் தொடங்கினார்.
திருமந்த்ரம் விளைந்த இடமான திருப்பிரிதியை மங்களாஸாஸனம் செய்தருளின பின்பு, அந்த திருமந்த்ரம் உள்ளே கொண்ட
வஸ்துவான அர்ச்சாவதார எம்பெருமான்களை மங்களாஶாஸனம் செய்தருளத் தொடங்கி அருளிச் செய்கிறார்.

* மந்த்ரத்திலும், மந்த்ரத்திற்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்த்ரப்ரதனான ஆசார்யன் பக்கலிலும்
ப்ரேமம் கனக்க உண்டானால் கார்ய கரமாவது * என்னும் மூமுக்ஷுப்படி சூர்ணிகை நினைக்கத் தக்கது.
வெறும் தேஸங்களாக இருந்த உகந்தருளின நிலங்களைத் திவ்யதேஸங்களாக ஆக்கித் தந்தவர்கள் ஆழ்வார்கள்.

திருமங்கையாழ்வார் மொத்தம் 86 எண்பத்தாறு திவ்யதேஶங்களை மங்களாஶாஸனம் செய்துள்ளார்.
இவற்றுள் கலியன் மட்டுமே மங்களாஶாஸனம் செய்துள்ள திவ்யதேஶங்கள் நாற்பத்து ஏழு (47).
இந்த திவ்ய தேஶங்கள் பிற ஆழ்வார்களால் மங்களாஶாஸனம் செய்யப்படாமல் இவர் மட்டுமே மங்களாஶாஸனம் செய்துள்ளார்.
இங்ஙனம் ஆழ்வார் மங்களாஶாஸனம் செய்து அருளவில்லை எனில் திவ்யதேஶங்கள் எண்ணிக்கை 108 ஆக இருந்திராது!
ஆழ்வார் தாமும் முதல் பத்தில் திருமந்த்ரத்தினைப் பற்றி அருளிச் செய்த பின்பு
இரண்டாம் பதிகத்தில் திருப்பிரிதி தொடங்கி வரிசையாக
வடநாடு, தொண்டைநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, மலை நாடு என மங்களாஸாஸனம் அருளியுள்ளார்.

திருமங்கை ஆழ்வார் மட்டும் மங்களாஶாஸனம் செய்த திருப்பதிகள்
திருஉறையூர்
திருக்கரம்பனூர்
திருபுள்ளம்பூதங்குடி
திருஆதனூர்
திருதேரழுந்தூர்
திருசிறுபுலியூர்
திருசேறை
திருதலைச்சங்கநாண்மதியம்
திருக்கண்டியூர்
திருநாகை
திருநறையூர்
திருநந்திபுரவிண்ணகரம்
திருஇந்தளூர்
திருக்காழிசீராம விண்ணகரம்
திருக்கூடலூர்
திருக்கண்ணங்குடி
திருக்கண்ணமங்கை
திருவெள்ளியங்குடி
திருமணிமாடக்கோயில்
திருவைகுந்தவிண்ணகரம்
திருஅரிமேய விண்ணகரம்
திருத்தேவனார்தொகை
திருவண்புருடோத்தமம்
திருச்செம்பொன்செய் கோயில்
திருத்தெற்றியம்பலம்
திருமணிக்கூடம்
திருக்காவளம்பாடி
திருவெள்ளக்குளம்
திருப்பார்த்தன்பள்ளி
திருமெய்யம்
திருப்புல்லாணி
திருவஹீந்த்ரபுரம்
திருநீரகம்
திருநிலாத்திங்கள்துண்டம்
திருக்காரகம்
திருக்கார்வானம்
திருக்கள்வனூர்
திருபவளவண்ணம்
திருப்பரமேச்சுர விண்ணகரம்
திருப்புட்குழி
திருநின்றவூர்
திருஇடவெந்தை
திருசிங்கவேள்குன்றம்
திருநைமிசாரண்யம்
திருப்பிரிதி

திருநெடுந்தாண்டகத்தின் அவதாரிகையிலே, ஆழ்வார்களின் ஊற்றத்தை அருளிச் செய்யும் விதமாக
(ஆழ்வார்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த நிலையின்லே ஊன்றியிருப்பார்கள்) ,
இவரது அர்ச்சாவதார ப்ராவண்யத்தைக் காட்டியருளுகிறார் ஸ்ரீ பெரிய ஆச்சான் பிள்ளை.

முதலாழ்வார்கள்–பரத்வம்
திருமழிசைப்பிரான்–அந்தர்யாமி தஶை
குலசேகரப் பெருமாள்–ராமாவதாரம்
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்–க்ருஷ்ணாவதாரம்
தொண்டரடிப்பொடிகள், திருப்பாணாழ்வார்–திருவரங்கம் பெரிய கோவில்
திருமங்கையாழ்வார்–அர்ச்சாவதாரம்

இது தன்னைக் கலியன் திருநெடுந்தாண்டகத்தில் ஒரு பாசுரம் கொண்டு பார்க்கலாம்.

கல்லெடுத்துக் கன்மாரி காத்தாய்! என்றும்
காமருபூங் கச்சியூரகத்தாய்! என்றும்
வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய்! என்றும்
வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே! என்றும்
மல்லடர்த்து மல்லரையன் றட்டாய்! என்றும்
மாகீண்ட கைத்தலத்தென் மைந்தா வென்றும்
சொல்லெடுத்துத் தன்கிளியைச் சொல்லே யென்று
துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின் றாளே. (13)

ராஜகுமாரர்கள் ஒவ்வொரு பிடி சோற்றுக்கும் நெய் கொண்டு புஜிக்குமா போலே, இவ்வாழ்வார் தாமும் பாசுரத்தின்
அடிதோறும், காமருபூங் கச்சியூ ரகத்தாய்! என்றும் – வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே! என்றும் – அர்ச்சையை அனுபவிக்கிறார்.
இதே போன்று அருளிச் செய்யப்பட்ட * மண்ணளந்த தாளாளா! தண்குடந்தை நகராளா! வரையெடுத்த தோளாளா! *,
முதலானவைகள் நோக்கத்தக்கது.
இங்கு ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீ ஸூக்தி * அல்லாத ஆழ்வார்களுக்கும் இவர்க்குமுண்டான வாசி இதுவிறே.
அவர்கள் மேன்மையை அநுபவிக்கும் போது பராவஸ்தையைப் பேசுவர்கள்;
அந்நீர்மையை ஸாக்ஷாத்கரிக்கைக்காகத் திருப்பதிகளிலே இழிவர்கள்;
இவர் மேன்மையை அநுபவிப்பதும் திருப்பதிகளிலே, நீர்மையை அநுபவிப்பதும் திருப்பதிகளிலே; அத்தை ஸாக்ஷாத்கரிப்பதும் திருப்பதிகளிலே.
* மற்றைய ஆழ்வார்களுக்கும் இத்திருமங்கை ஆழ்வாருக்கும் உள்ள வாசி (வேறுபாடு) இதுவேயாகும்.
அவர்கள் எம்பெருமானது மேன்மையை அனுபவிக்க வேண்டுமானால் பரத்வத்திலே இழிவார்கள்.
எம்பெருமானது நீர்மையை அனுபவிக்க வேண்டுமானால் அவனது அவதாரங்களைப் பேசுவார்கள்.
அந்த நீர்மையை நேராகக் காணவேண்டில் மட்டுமே அர்ச்சாவதாரத்தைப் பேசுவார்கள்.
ஆனால் திருமங்கை ஆழ்வாரோ மேன்மையை அனுபவிப்பதும் திருப்பதிகளிலே; நீர்மையை அனுபவிப்பதும் திருப்பதிகளிலே;
அதை நேரே கண்டனுபவிப்பதும் திருப்பதிகளிலே.

மேன்மையை அர்ச்சையிலே அனுபவித்தது
யாவருமா யாவையுமாய் எழில்வேதப் பொருள்களுமாய் – மூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந் துறையுமிடம்
[சேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய், அசேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய்,
அழகிய வேதங்களின் அர்த்தமும் தானாய், (பிரமன், விஷ்ணு, ருத்ரன் என்று) மூன்று வடிவுகள் கொண்டவனும் தானேயாய்,
முழுமுதற் கடவுளான, எம்பெருமான் அமர்ந்து உறையும் இடம்- திருத்தேவனார்தொகையே] (பெரி திரு 4-2-1)

வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும் தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம்
[நித்ய விபூதியும் லீலாவிபூதியும் அவ்வவ்விடங்களிலுள்ள பல வகைப்பட்ட ஜீவராசிகளும் ஆகிய அவையெல்லாம்
தானேயாயிருக்கப்பெற்ற எம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் – திருத்தேவனார்தொகையே] (பெரி திரு 4-2-2)

உலகுண்ட பெருவாயரிங்கே வந்து, என் பொருகயல்கண்ணீரரும்பப் புலவி தந்து புனலரங்கமூரென்று போயினாரே
[பிரளயகாலத்தில் உலகங்களை யெல்லாம் அமுதுசெய்த பெரிய திருவாயையுடைய வரும்,
நீர்வளம் பொருந்திய திருவரங்கம் தம்மூர் ] (திருநெடுந்தாண்டகம் – 24)

அண்டமுமெண்டிசையும் நிலனும் அலைநீரொடு வானெரி கால்முதலா உண்டவன் [அண்டங்களையும் எட்டுத்திசைகளையும் பூமியையும்
கடல்களையும் ஆகாசத்தையும் அக்நியையும் காற்றையும் இவை முதலான மற்றும் பல பொருள்களையும் பிரளயம் கொள்ளாதபடி
திருவயிற்றிலே வைத்து நோக்கின எம்பெருமானுக்கு இடமாவது பரமேச்சுரவிண்ணகரம் ] (பெரி திரு 2-9-4)

நன்மான வொண்சுடரே நறையூர்நின்ற நம்பீ
நன்மானவொண்சுடரே! = விலக்ஷணமாய் அளவிடமுடியாத அழகிய சுடரையுடையவனே!, என்றவாறே
இப்படிப்பட்ட திருவுருவம் பரமபதநாதனுக்கே யன்றேவுள்ளது’ என்று சிலர் நினைக்கக்கூடு மென்றெண்ணி
உடனே ‘நறையூர் நின்ற நம்பீ!’ என்கிறார்] (பெரி திரு 7-2-3)

நீர்மையை அர்ச்சையிலே அனுபவித்தது
பின்னானார் வணங்கும் சோதி – அவதாரத்திற்குப் பிற்பட்டவர்கள் ஆச்ரயிக்கத்தக்க சோதியாக திருமூழிக்களம் முதலிய திருப்பதிகளிலுறைபவனே!
பரத்துவத்திலும் வ்யூகத்திலும் விபவங்களிலும் அந்தர்யாமித்துவத்திலும் அந்வயிக்கப் பெறாதவர்கள் இங்குப் பின்னானார்’ எனப்படுகின்றனர்.
அன்னவர்கட்காகத் திருமூழிக்களம் முதலான அர்ச்சாவதார நிலங்களிலே எழுந்தருளியிருப்பவனே!’ என்கின்றார் ஆழ்வார்.
திருமூழிக்களமென்றது உபலக்ஷணமாய் அர்ச்சாவதார ஸாமாந்ய வாசகமாய் நிற்கும்.
திருமூழிக்களமென்றது மற்றைய அர்ச்சாவதாரங்களுக்கு உபலக்ஷணம். பின்னானார் – அவதாரத்திற்குப் பிற்பாடர்;
வணங்கும் சோதி – ஆஶ்ரயிக்கக்கூடிய ஜ்யோதிர்மயமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனே.
நம்மாழ்வாரும் ‘திருமூழிக்களத்துறையுமொண்சுடர்‘ என்றது குறிக்கொள்ளத்தக்கது.

எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களுள் ஸௌலப்யம் சிறந்தது;
அத்திருக்குணம் இருட்டறையில் விளக்குப்போலே பிரகாசிப்பது அர்ச்சாவதாரத்திலே;
ஆகையால் ‘ஒண்சுடர்‘ என்றும் ‘விளக்கு‘ என்றும் ‘சோதி‘ என்றும் அருளினார் என்று உணரவேண்டியது.
இங்கு * இருட்டறையில் விளக்குப் போலே ப்ரகாஶிப்பது இங்கே * என்னும் பிள்ளைலோகாசார்யர் ஸ்ரீஸூக்தி நினைக்கத்தக்கது.

திருக்கண்ணபுரத்து அம்மான்
திருக்கண்ணபுரத்து அம்மான் என்றால் திருக்கண்ணபுரத்திலே உறையும் ஸ்வாமி என்றர்த்தம்.
இங்கு ஆழ்வார் திருக்கண்ணபுரத்து அம்மான் என்றழைத்ததற்கு ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை அற்புதமாகத் தாத்பர்யம் அருளிச் செய்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானாகிற தத்வம் ஸர்வஸ்மாத்பரனாயிருக்கும். அதனை அனுபவிப்பவர்களும் நித்யமுக்தர்கள்.
அவதாரங்களில் மநுஷயத்வே பரத்வமாயிருக்கும். அனுபவிப்பதும் விதுரர், சபரி போன்ற ஒரு சிலருக்காயிருக்கும்.
பரகால நாயகியானவள் அர்ச்சாவதராத்தில் பரத்வம் உட்பட அனைத்தையும் அறிந்தாள்.
இதனை ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை –
” அவதாரங்களிற் காட்டில் அர்ச்சாவதாரத்தில் பரத்வமும் அகப்பட அறிந்தாளென்று தோற்றியிராநின்றது “.
இதனை ஸ்வாமி அருளிய இப்பதிகத்தின் அவதாரிகையோடு ஒப்பிட்டு நோக்க வேண்டும்.
அதன் சாராம்சம் – எம்பெருமானோடு அனுபவிக்க மாட்டாமையாலே தளர்ந்து பிராட்டி தஶையினை அடைந்து,
திருத்தாயார் வாயாலே பேசுவதாக அமைந்தது இத்திருமொழி. வேதாந்தங்களை அதிகரிக்காது ஒரு சில ஆசார்யர்களிடம் கேட்டு
எல்லாம் தெரிந்தவன் போல் இருந்த ஶ்வேதகேதுவை நோக்கி “ஸ்தப்தோஸி” (எல்லாம் அறிந்தவன் போன்று நின்றாய்!) என்று
அவனுக்கு ப்ரஹ்மமே ஜகத்காரணம் என்று அறிவுறுத்துவதற்காக வினவினார் அவனது தந்தையான உத்தாலகர்.
அவன் அறியாததை அறிவிப்பதற்காக தந்தை வினவினார்.
இங்கு இவள் பேச்சுக்களைக் கேட்டால் இவள் பரத்வத்தில் ஈடுபட்டிருக்கவில்லை; விபவத்தில் ஈடுபட்டிருக்கவில்லை;
வ்யூஹத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை; அர்ச்சாவதாரத்தில், அதிலும் திருக்கண்ணபுரத்தில் தான் ஈடுபட்டிருக்கிறாள்.
இங்கு கலியனது திருத்தாயார் ஸர்வாதிகனான ஸர்வேஶ்வரனையும் நன்றாக அர்ச்சையிலே அறிந்திருக்கிறாள் என்று தானறிந்ததைச் சொல்லுகிறாள்.

திருஇந்தளூர் விசேஷானுபவம்
திருமங்கையாழ்வாரின் திருஇந்தளூர் மங்களாஶாஸனம் அதிவிலக்ஷணமானது. அர்ச்சாவரதார பெருமையை இப்பதிகத்தில்
ஆழ்வார் அனுஸந்தித்தது சிறிது அனுபவிக்கலாம். ஆழ்வார் திருஇந்தளூரில் எம்பெருமானை கிட்டி அனுபவிக்கலாம் என்று
மிகுந்த பாரிப்போடே திருஇந்தளூர் எழுந்தருளினார். ஆனால் அந்த சமயம் அகாலமானதால்
திருஇந்தளூர் எம்பெருமான் ஸேவை ஸாதிக்கவில்லை. அதனால் ஆழ்வார் மிகவும் நைந்து எம்பெருமானோடு ஊடி வார்த்தையாடுகிறார்.

இங்கு குறிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு

ஆழ்வார் ஊடுவதும் அர்ச்சாவதார எம்பெருமானோடே! நம்மாழ்வார் ” மின்னிடை மடவாரில் ” கண்ணனோடே ஊடினார்.
ஆழ்வார் தாமான தன்மையில் ஊடுகிறார்.
திருஇந்தளூர் எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச் செய்யும் ப்ரகாரம்
தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு
மாய், எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால்,
தாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியோமுக்
கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே.

திருவிந்தளூர்ப் பெருமாளே! தேவரீர் தேஜஸ்தத்வத்திற்கு அந்தர்யாமியான எம்பெருமானாகவும் ஜலதத்வத்திற்கு
அந்தர்யாமியான பெருமானாயும் திசைகளுக்கு அந்தர்யாமியான பெருமானாயும் விசாலமான பூமிக்கு அந்தர்யாமியான பெருமானாயும்
நின்றால் – (அஜ்ஞரான) அடியோங்கள் தேவரீரைக் காணமாட்டாதவர்களாயிருக்கிறோம்;
தாயாகவும் ஸ்வாமியாகவும் பிதாவுக்கும் பிதாவாகவும் இருக்கின்ற பெருமானே! தேவரீர் எமக்கே அஸாதாரணரான ஸ்வாமியல்லவோ?
அடியோமுக்கே எம்பாருமானல்லீரோ நீர் – பரவாஸுதேவனாயிருக்கும் இருப்பு நித்ய முக்தர்களுக்கு அநுபவிப்பதற்கு.
வ்யூஹ நிலை பிரமன் முதலானாருடைய கூக்குரல் கேட்கைக்காக. ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்கள்
அக்காலத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே பயனளித்தற்கு. அந்தர்யாமியாய் இருக்குமிருப்பு ப்ரஹ்லாதாழ்வான் போல்வார்க்குப் பயனளிக்கும்.
அர்ச்சாவதார நிலையொன்றே அடியோங்களுக்கு ஜீவனம். ஸம்ஸாரிகளுக்கு முகங்கொடுக்கைக்காகவேயன்றோ இது ஏற்பட்டது.

பரத்வம் நித்ய ஸூரிகளுக்காய் இருக்கும். வ்யூஹம், ப்ரஹ்மாதிகளுடைய கூக்குரல் கேட்கைக்காக.
விபவங்களான ராமக்ருஷ்ணாதியவதாரங்கள் தசரத வாஸுதேவாதிகளுடைய பாக்யத்தினால் பெற்றவைகளாய் இருக்கும்.
அர்ச்சாவதாரங்களோ என்னில் ஸம்ஸாரிகளுக்காக. ஸம்ஸாரிகளோ தங்களுக்கு ஹிதம் (நன்மை) இன்னது என்றோ,
இந்த உலக வாழ்க்கையாகிற ஸம்ஸாரம் த்யாஜ்யம் (விடத்தக்கது) என்றோ,
ஸர்வேஶ்வரன் ஆகிய எம்பெருமான் ப்ராப்யன் (அடையத்தகுந்தவன்) என்றோ ஜ்ஞானம் இல்லாதவர்கள்.

இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி – * குருடர்க்கு வைத்த இறையிலியில் விழித்தார்க்குப் ப்ராப்தி இல்லையிறே *
[இறையிலி – அறச்சாலை – வரி நீக்கப்பட்ட நிலம். இறையிலி = இறை + இல். இறை – வரி].
கண் இழந்தவர்களுக்கு என்று உரித்தானதில், கண் உடையோர் அனுபவிக்கக் கூடாதிறே என்பது தாத்பர்யம்.
பரத்வத்தை அனுபவிக்கும் நித்யமுக்தர்கள் – இவர்கள் படியை ஸ்ரீ பராசர பட்டர் தம்முடைய ஸ்ரீகுணரத்னகோஸத்தில் –

தே ஸாத்யா ஸந்தி தேவா ஜநநி! குணவபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை:
போகைர்வா நிர்விசேஷாஸ் ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா:
ஹே ஸ்ரீ:! ஸ்ரீரங்க பர்த்து ஸ்தவச பதவரீசாரவ்ருத்யை ஸதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத்கார கைங்கர்ய போகா: ||

[ தாயான இலக்குமியே எவர்கள் குணங்களாலும் வடிவங்களாலும் கோலங்களாலும் நடத்தைகளாலும் ஸ்வரூபங்களாலும்
வேற்றுமையற்றவர்களோ, ஆகையால் எப்பொழுதும் சிறிதும் குற்றமற்றவர்களோ, எப்பொழுதும் ஒழிவில் காலமெல்லாம்
ப்ரீதியினால் உருகின மனோவிகாரத்தாலே கலங்கின ஹ்ருதயத்தாலே கைங்கர்யங்களின் இன்பமுடையவர்களோ அந்த நித்ய ஸூரிகள்].
இதனால் இவர்களது மேன்மை விளங்கும். இவர்களுக்கு அருளுமிடம் பரத்வம்.

வ்யூஹமோ என்னில் – மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வாரே வ்யூஹத்தை அருளிச் செய்யுமிடத்து
* பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் * என்றார். ஆழ்வாரே யாம் கண்டேயும் என்னாதே யாம் கேட்டேயும் என்றருளினார்.
அவர்க்கும் இது கேட்கையோடிருத்தல் என்றால் மற்றவர்களுக்கு அரிது என்பது சொல்லவும் வேண்டுமோ?

விபவமோ – அக்காலத்தில் உள்ளார்களுக்கு மட்டும் அனுபவமாய் இருக்கும்.

அந்தர்யாமி தஶை – * என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும் உட்கண்ணால் காணுமேல் * என்று அரிதாய் இருக்கும்.
எக்காலத்திலும் வெளிக்கண்ணாலே காணக்கூடாத அப்படிப்பட்ட விலக்ஷணமான திருவுருவத்தை நெஞ்சாகிற
அகக்கண் விகஸித்து (மலர்ந்து) ஸாக்ஷாத்கரிக்குமாகில் என்று ச்ரமாமாயும் ப்ரஹ்லாதாழ்வான், திருமழிசைப்பிரான் போன்றோருக்குமாய் இருக்கும்.

எனவே தான் இவர்களை * விழித்தார் * என்றழைக்கிறார் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை.
இவ்வர்த்தங்கள் ஸ்ரீ வசனபூஷணம் ஸு 39 (பூகத ஜலம் போலே….) ஸ்ரீமத் வரவரமுனிகள் வ்யாக்யானத்தால் விரிவாக அறியலாம்.

ஸ்ரீமத் இத்யாதி பூஜ்யராய், அஸ்மத் ஆசார்யனாய், சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று
போது போக்குவது அருளிச் செயலிலேயாய், தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
நும்மடியோமுக்கு நும்மைக் காட்டாது அடியேனை
நும்மடியாரோடொப்ப எண்ணுதிரென் – நம்கலியன்
இந்தளூரானுக்கு இயம்பினான் தன் இன்னாமையைத்
தந்நிலை மாறாத வனாய் (39)

அநுகாரமும் அர்ச்சையிலே!
ஒருவர் போன்று மற்றொருவர் செய்து காட்டுவது அநுகாரமாகும். கோபிகைகள் கண்ணன் வாராமையாலே மிகவும்
விஶ்லேஷப்பட்டு ஒரு கோபிகை கண்ணன் போன்று அநுகரித்துத் தரித்தார்கள்.
ஆண்டாள் நாச்சியாரும் கோபிகைகள் போன்றே இடைப்பேச்சும் முடைநாற்றமும் என அநுகரித்துத் தானும் திருப்பாவை அருளிச் செய்தார்.
இவ்வாறு அநுகரித்தல் பிரிவாற்றாமையின் துன்பம் குறைவதற்க்குச் செய்ய்யும் செய்கை ஆகும்.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் * கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் * (5-6) என்கிற பதிகத்தில்
கடல் ஞாலத்தீசனாக அநுகரித்துத் தரித்தார்.
ஆனால் திருமங்கையாழ்வாரோ என்னில் அவ்வநுகாரமும் அர்ச்சையினிலே அநுகரித்துத் தரித்தார்.
தெள்ளியீர் பதிகத்தில் * வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் * (8-2-6) என்பதே.
திருவேங்கடமலையில் நின்றும் திருக்கண்ணபுரத்தேற வந்து சௌரிப்பெருமாளாக நிற்பது யானே என்றார் ஆழ்வார்.
இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யான ஸ்ரீஸூக்தி
*வேறே அநுகரித்தாரும் சிலர் உண்டிறே. “கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்” என்று.
அவளைப் போலே ஜகத்காரணரூபியைப்பற்றும் அவளன்றிறே இவள். அர்ச்சாவதாரரூபியையிறே இவள் அநுகரிப்பது.
இவ்வர்ச்சாவதார ரூபத்தால் பிறக்கும் அநுபவமொழிய, அந்தந்த அவதாரங்களால் பிறக்குமநுபவத்தை நாய்க்கிடவென்றிருக்குமவளிறே இவள்.
அர்ச்சாவதாரங்களால் வரும் அனுபவமன்றி மற்றவை திருமங்கை ஆழ்வார் கைக்கொள்ள மாட்டார் என்பது இங்கு நோக்கத்தக்கது.
மற்றைய ஆழ்வார்களிற் காட்டிலும் இவ்வாழ்வார்க்கு அர்ச்சாவதாரத்தில் ப்ராவண்யம் அளவற்றதாகையாலே
இவ்வநுகாரமும் அர்ச்சாவதார விஷயமாகவே செல்லுகின்றது.

தூதுவிடுவதும் அர்ச்சைக்கே
நம்மாழ்வார் எம்பெருமானைக் குறித்து அவரது நிலையை அறிவிக்கும் பொருட்டு திர்யக்குக்களை (பறப்பன முதலியவற்றை) தூது விட்டார்.
அது நான்கு திருவாய்மொழிகளில் – * அஞ்சிறைய மடநாராய், வைகல் பூங்கழிவாய், பொன்னுலகாளீரோ, எங்கானலகங்கழிவாய் *.
இந்த நான்கு பதிகங்களிலும் ஒவ்வொரு நிலையில் தூது விட்டார். முதலில் விபவம், கடைசியாகத் திருமூழிக்களம் அர்ச்சையில் தூதுரைத்தார்.
இவையனைத்தும், ஆசார்ய ஹ்ருதயத்தில் விரிவாக அருளிச் செய்யப்பட்டுள்ளது.

கலியனோ தூதும் அர்ச்சாவதார எம்பெருமானுக்கே உரைத்தார். * தூவிரிய மலருழக்கி * (3-6) அழகிய சிறகுகளோடு கூடிய
வண்டு, குருகு முதலானவற்றை வயலாலி மணவாளன் திறத்து தன்னுடைய சிந்தை நோய், உடலின் நோய் ஆகியவற்றை அறிவிக்கும்படி பணிக்கிறார்.
ஒன்பதாம் பத்தில் * காவார் மடற்பெண்ணை * (9-4) பதிகத்தில் ஆழ்வார் உள்ளத்தாலும், உடலாலும் எய்திய நோய் கூற
புள்ளினத்தை திருப்புல்லாணி எம்பெருமானிடத்து தூது விடுகிறார்.
திருநெடுந்தாண்டகத்தில் இரண்டு பாசுரங்கள், அணியழுந்தூர் எம்பெருமானிடத்தும், திருக்கண்ணபுரம் சௌரிராஜனிடத்தும் தூது விடுவதாக அமைந்தது.
இங்கு வ்யாக்யான ஸ்ரீஸூக்தி *
(திருக்கண்ணபுரம் புக்கு) ரிஷிகளும் அல்லாத ஆழ்வார்களும் சொல்லுமாபோலேயன்று காணும் – இவர்க்குத் திருக்கண்ணபுரம் என்றாலிருக்கும்படி.
அவர்கள் அளவன்றே இவர்க்கு அவ்வூரில் உண்டான பாவபந்தம்.
அநந்தாழ்வான் “திருவேங்கமுடையான்” என்னுமாப்போலேயும்,
பட்டர் “அழகிய மணவாளப் பெருமாள்” என்னுமாப்போலேயும்.
சோமாசியாண்டான் ” எம்பெருமானாரே சரணம்” என்னுமாப்போலேயும் திருநாமங்களைச் சொல்லும்போது இவராதரம்.
ஆழ்வார் திருக்கண்ணபுரம் என்பதை மிகுந்த ஆதரத்துடன் (ப்ரேமத்துடன்) சொல்வார் என்பதே இதன் தாற்பர்யம்.

இன்னமும் * காணுமோ கண்ண புரமென்று காட்டினாள் * (8-2-2) என்றவிடத்தில் ஆழ்வாருக்கு
திருக்கண்ணபுரத்தில் உள்ள ஆதரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
(காணுமோ கண்ண புரமென்று காட்டினாள்) சுற்றும்கண்ணையோட்டிப் பார்த்தவாறே திருக்கண்ணபுரம் கண்ணுக்கு விஷயமாக
வேண்டுவானென்னென்னில்; இவளுக்கு அபிமதம் சவுரிப்பெருமாள் பக்கலிலே யாகையாலும்,
இவள் தான் லக்ஷ்யத்தை உடையளாகையாலும், திருக்கண்ணபுரம் கண்ணுக்கு விஷயமாயிற்று.
திருக்கண்ணபுரத்தைக் காணிகோள், அஞ்சலியைப் பண்ணிகோள்” என்று சொல்லப்புக்கு முடியச் சொல்லமாட்டாதே
குறையும் ஹஸ்தமுத்ரையாலே காட்டினாள் * இது பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யான ஸ்ரீஸூக்தி.

‘திருக்கண்ணபுரத்தைப் பாருங்கள்; கையெடுத்துக் கும்பிடுங்கள்’ என்று சொல்லத் தொடங்கி,
பூர்த்தியாகச்சொல்லித் தலைக்கட்டமாட்டாமல் ‘காணுமோ கண்ணபுரம்’ என்று வாயாற் சொல்லி மற்றதை கையினால்
முத்திரையினால் முடிக்கிறாள். திருக்கண்ணபுரம் என்றால் மேலே ஒன்றும் செய்ய முடியாதபடி ஆயிற்று,
இவ்வாழ்வாருக்கு அவ்வூரில் உள்ள ப்ராவண்யம்.

இவ்வாழ்வாரின் தூதும் அர்ச்சாவதார எம்பெருமானுக்கே உரைத்தார்.

பாகவத சேஷத்வம்
வேதத்தின் உட்பொருளான பாகவத் சேஷத்வத்தை கலியன் இரண்டு திருமொழிகளில் அருளிச் செய்தார்.
அதுவும், கடல்மல்லைத் தலசயனத்து எம்பெருமான் திறத்து அடியார்களாய் இல்லாதவர்களோடு கூடாமையும்,
திருச்சேறை எம்பெருமானின் அடியார்களை விட்டுப் பிரியாதவராய் இருத்தலையும் (கண்சோர வெங்குருதி வந்திழிய) சொல்லி
பாகவத சேஷத்வத்தை அனுஸந்தித்தார். இதுவும் அர்ச்சாவதார எம்பெருமானிடத்து அடியவராய் இருத்தலே சொல்லப் பட்டது.
இரண்டு திவ்யதேஶங்களைச் சொன்னது மற்றவைகளுக்கு உபலக்ஷணம்.

மடல்
ஆழ்வார் மடலெடுத்ததும் அர்ச்சாவதாரத்திலேயாகும். பெரிய திருமடல் தனியன் இது தன்னை விளக்கும்.

பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும் – நன்னுதலீர் நம்பி நறையூரர் *
மன்னுலகில், என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில் * மன்னு மடலூர்வன் வந்து.

அழகிய நெற்றியையுடைய மாதர்காள்! பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளும் தாமரைப்பூவிற்பிறந்த பிராட்டியும்
தோத்திரம் செய்யப்பெற்ற திருநறையூரில் எழுந்தருளியிருப்பவனும் கல்யாண குணபரிபூர்ணனுமான எம்பெருமான்
எனது அவஸ்தையைக் கடாக்ஷித்தும் க்ருபை செய்யாவிடில் திருப்பதிகள் தோறும் மடலூர்ந்து கொண்டு இருப்பேன்.

நாயகியாய் வளை இழத்தலும் அர்ச்சைக்கே
ஆழ்வார் நாயகி தஶையினை அடைந்து எம்பெருமானது திருக்குணங்களில் ஈடுபட்டு இருக்க, அந்நாயகியைப் பார்த்து திருத்தாயார்,
அவள் எப்படி வளை இழந்தாள், என்று கூறுவதாக திருவாய்மொழியிலும், திருமொழியிலும் ஒவ்வொரு பதிகம் இருக்கின்றன.
திருமொழியில் தானிழந்தவற்றைத் தன் வாக்காலே அருளினார் என்னும் வாசி குறிக்கத் தக்கது.
இங்கு * கலை வளை அஹம் மம க்ருதிகள் * என்ற ஆசார்ய ஹ்ருதயம் காட்டுகிற ஸ்வாபதேஶார்த்தம் நோக்கத் தக்கது.

* மாலுக்கு வையமளந்த மணாளற்கு * (6-6) பதிகத்தில், நம்மாழ்வார் வாமனன் எம்பெருமான் முதலாக
* இழந்தது பீடே, இழந்தது சங்கே * என எல்லாம் இழந்ததாக தாய்ப் பேச்சாலே சொல்லப்பட்டது.

பரகால நாயகி (திருமங்கை ஆழ்வாரோ) என்னில் * இழந்தேனென் வரிவளையே இழந்தேனென் கனவளையே,
இழந்தேனென் செறிவளையே, இழந்தேனென் பொன்வளையே, இழந்தேனென் கனவளையே, இழந்தேனென் ஒளிவளையே *
என்று வரிவளையை இழந்தது திருக்கண்ணபுரத்துறையும் எம்பெருமானுக்கே ஆதலால், இவ்வனுபவமும் அர்ச்சையிலே ஆயிற்று.
இத்திருமொழியில் ஆழ்வார் தாமான தசையில் இழந்தேன் என்னுடைய வரிவளையே என்றருளினார்.
தெள்ளியீர் பதிகத்தில் ஆழ்வார் தாய்ப்பேச்சாக சவுரிப்பெருமாளை நோக்கி இவளது கைவளையைக் கொள்ளை கொள்வது
தகுதியோ சொல்வீர் என்று கேட்கிறாள்.
இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி குறிப்பிடத் தக்கது –
* பராவஸ்த்தையைத் தொழுதாளோ? வ்யூஹங்களைத் தொழுதாளோ? அவதாரங்களைத் தொழுதாளோ?
அர்ச்சாவதாரத்தில் நீர் நின்ற ஊரையன்றோ இவள் தொழுதது * .

அர்ச்சாவதாரமே ஆறும் பேறும்
திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகத்தில் அர்ச்சாவதாரத்தில் இழிகையே உஜ்ஜீவன ஹேது என்பதனை –
* உலக மேத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க்குய்யலாமே? * என்றருளினார்.
உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டனவாயுள்ள திருக்கண்டியூர், திருவரங்கம், திருமெய்யம், திருக்கச்சி, திருப்பேர்நகர், திருக்கடல்மல்லை,
ஆகிய இத்திருப்பதிகளைப் பேசிக்கொண்டு அவகாஹிக்குமவர்கள் உஜ்ஜீவிக்கலாமத்தனையொழிய அல்லாதவர்களுக்கு உஜ்ஜீவிக்க வழியுண்டோ?

பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே – திவ்யதேஶங்களையே ஏத்தித்தொழுகின்ற பாகவதர்களுக்குக் கதியானவனே! –
விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர்வேங்கடம் மண்ணகரம் மாமாடவேளுக்கை, மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம்
தென்கோட்டி என்று தானுகந்த ஊரெல்லாம் தன்தாள் பாடி என்று அர்ச்சாவதாரங்கள் தோறும்
யாத்திரையாகப் போவது போக்கித் திரியும் பரமபாகவதர்களுக்குக் கதியே.

இனி, திருக்கண்ணபுரத்தையே ஆறாகவும் பேறாகவும் சொன்னது இரண்டு திருமொழிகள்.
* தொண்டீர் உய்யும் வகை * (8-6) என்பது திருக்கண்ணபுரத்து எம்பெருமானை ஆறாக (வழியாக) சொன்னது.
* வியமுடை விடையினம் * (8-7) திருமொழி திருக்கண்ணபுரத்தைப் பேறாக (உபேயமாகச்) சொன்னது.

தொண்டீர் உய்யும் வகை பதிகத்தில் * வருந்தாதிரு நீ மடநெஞ்சே நம்மேல் வினைகள் வாரா * (8-6-6) என்றும்
*மால் ஆய், மனமே! அருந்துயரால் வருந்தாதிரு* (8-6-8) என்றும் உபாயத்வம் (விரோதி நிரஸநத்வம்) சொல்லப்பட்டது.
இத்திருமொழி அவதாரிகை * ஸர்வேஶ்வரன் நம்முடைய ரக்ஷணத்தில் உத்யுக்தனாய் கொண்டு திருக்கண்ணபுரத்திலே ஸந்நிஹிதனானான்;
நாமும் அவனை ஆஶ்ரயித்து உஜ்ஜீவிப்போம் * என்று உபாயத்வம் சொல்லப்பட்டது குறிக்கத்தக்கது.

வியமுடை விடையினம் பதிகந்தன்னில் திருக்கண்ணபுரத்தின் ப்ராப்யத்வம் சொல்லப்பட்டது. எங்ஙனேயென்னில்,
விரோதிகள் தொலைந்தால், எம்பெருமானை அனுபவிப்பது பரமபத்திலேயாம். ஆனால் அவ்வெம்பெருமானும் அதனை விட்டு
இத்திருக்கண்ணபுரமே ப்ராப்யம் என இங்கு எழுந்தருளியிருப்பதனால் இதுவே ப்ராப்யமாயிற்று,
* கணபுரம் அடிகள் தம் இடமே* என்று ஒரு தடவைக்கு ஒன்பது தடவை எம்பெருமானின் இருப்பிடத்தை அநுபவித்து இனியரானதும் நினைக்கத்தக்கது.

இவ்வர்த்தங்களை * தொண்டர்க்கு வேண்டிற்றுச் செய்யும் கண்ணபுரத்தான் நண்ணார் ஒழிப்பானை ஆறாக * என்றும்
* வியன்ஞாலத்தில் மல்கு சீரால் நல்வானில் நயமுடைக் கண்ணபுரம் பேறாக * என்றும்
திருமொழி நூற்றந்தாதியில் அழகுற அருளியது காணத்தக்கது.

ஒரு நல் சுற்றம் பதிகம்
இப்பதிகம் பெரிய திருமொழியில் பத்தாம் பத்து முதல் பதிகமாகும். இப்பதிகந்தன்னில் ஆழ்வார் பரமபதத்தேறப் போவதாகத்
திருவுள்ளம் பற்றி இந்தத் திருமொழியை அருளிச் செய்கிறார். இதில் கல்யாணமான ஒரு பெண்பிள்ளையானவள் தனது
பிறந்தகத்தில் நின்றும் புகுந்தகத்திற்க்குச் செல்லும்முன் தனது உற்ற தோழிகளிடமும் உறவினர்களிடமும் சொல்லிவிட்டு
புறப்படுமாபோலே அமைந்தது. நவோடையான பெண் – பிறந்தகத்தின்றும் புக்ககத்துக்குப்போம்போது ஜந்மபூமியிலுள்ள
உறவுமுறையாருள்ளிடமெங்கும் புக்கு முகம் காட்டுமாபோலே
ஆழ்வார் தமக்கு ஒரு (அத்விதீயமான) நற்சுற்றமாகக் கொண்டது திவ்யதேஶ எம்பெருமான்களையே.
இங்கு திருநீர்மலை, திருக்கண்ணமங்கை முதலான திவ்யதேஶ எம்பெருமான்களின் குணாநுபவம் பண்ணுகிறார்.

இளையபெருமாள், மாதா பிதா என அனைவரும் எனக்குப் பெருமாளே என்றார். மார்க்கண்டேய மஹரிஷி பாண்டவர்களுக்கு
மாதா, பிதா, ஸுஹ்ருத் என அனைத்தும் ஸ்ரீமந் நாராயணனே என உபதேஶித்தார்.
கலியன் இப்படி எல்லாமாகப் பற்றுவது அர்ச்சாவதார எம்பெருமான்களையே. ஆழ்வார்க்கு இவ்வுலகம் பிறந்தகம்; புகும்வீடு பரமபதம்;
திவ்யதேஶ எம்பெருமான்களே உற்றார் உறவினர், சுற்றத்தவர் மற்றும் பிறரும் ஆவர்.
இங்குள்ள திவ்யதேஶ எம்பெருமான்களிடம் சொல்லிக் கொண்டு ஆழ்வார் வானேறப் புறப்படுகிறார்.

மோஹிப்பதும் அர்ச்சையிலே
கண்ணன் யசோதையுடன் விளையாடி, அவள் கையால் அடி வாங்கி, அவள் கையால் கட்டுப்பட்டிருந்த அனுபவத்தை நினைத்து,
எத்திறம்! உரலினோடிணைந்திருந்தேங்கிய எளிவே! * என்று ஆறுமாதம் மயங்கி மோஹித்திருந்தாராம் ஸ்வாமி நம்மாழ்வார்!
இதனை * த்வா மந்ய கோபக்ருஹ கவ்யமுஷம் யசோதா குர்வி த்வதீய மவமாந மம்ருஷ்யமாணா,
ப்ரேம்ணா த தாம பரிணாமஜுஷா பபந்த தாத்ருக் ந தே சரித மார்யஜனாஸ் ஸஹந்தே* (40) என்கிற
அதிமானுஷஸ்தவ ஸ்லோகத்தில் அருளிச் செய்தார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.
இங்ஙனம் நீ கட்டுண்டிருந்தாய் என்கிற சரிதத்தைப் ப்ரஸ்தாவித்த மாத்ரத்தில் ஸஹிக்க முடியாமல் *எத்திறம்* என்று ஆழ்வார்கள் மோஹிப்பர்கள்.

திருமங்கையாழ்வார் மோஹிப்பதோ அர்ச்சாவதாரத்திலே!
உம்பொன்னுமஃதே (திருநெடு – 19) * உம்பொன் என்கிறது அல்லாத ஆழ்வார்களை;
‘மத்துறுகடைவெண்ணெய் களவினிலூரவிடையாப்புண்டு, எத்திறம்! உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே!!‘ என்று
அவதாரத்தை அநுஸந்தித்திறே அவர்கள் மோஹித்தது; அர்ச்சாவதாரத்திலேயிறே இவள் மோஹிப்பது -இது வ்யாக்யான ஸ்ரீஸூக்தி.
இத்தன்மை மற்ற ஆழ்வார்களுக்குத் தான் உண்டோ என திருத்தாயார் கேட்கிறார்

இதன் மூலம் கலியனின் அர்ச்சாவதார ஈடுபாடு விண்ணப்பிக்கப்பட்டது.

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
எண்ணும் திருப்பதி நூற்றெட்டினையும் நண்ணுவார்
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற்பாதம், என்றலைமேல் பூ

மால்நீர்மைக்கு எல்லை உகந்தஊர் நூற்றெட்டு
சாலநண்ணியுள்ள கணக்கினிதாய் – ஆலிநாடன்
செய்யுந்திருமொழி நூற்றெட்டும் ஓதிடுவார்
எய்துவர் வைகுந்தம் ஏய்ந்து. (திருமொழி நூற்றந்தாதி சாற்றுப் பாசுரம்)

திருமாலின் நீர்மை குணத்திற்கு எல்லை நிலமான திவ்ய தேசங்கள் 108. அந்த கணக்கு வரும்படி திருவாலி நாட்டிற்கு
அதிபதியான ஆழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி 108ம் ஓதிடுவார் (திருமொழி மொத்தம் 108 பத்துக்கள்),
விரைவாக வானவர் நாடான ஸ்ரீவைகுந்தம் புக்கு அங்கு திருமாலிற்கு அடிமை செய்வார்.

ஸ்ரீமதாலி ஸ்ரீநகரி நாதாய கலிவைரிணே
சதுஷ்கவிப்ரதாநாய பரகாலாய மங்களம்.

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே ஸூதர்சன ராமானுஜ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ குழைக் காதர் பிரபந்தத்திரட்டு –1. ஸ்ரீ குழைக்காதர் கலம்பகம்–

April 16, 2021

ஸ்ரீ குழைக்காதர் கலம்பகம்—
திருமதி பத்மஜா அனந்தராமன் அவர்களால் தொகுத்துப் பிரசுரிக்கப்பட்டு வாசகர்களுக்கு அமுதமாக‌ அளிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ தென் திருப்பேரையில் எழுந்தருளியுள்ள மகரநெடுங்குழைக்காதரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு
கலம்பகம், பிள்ளைத்தமிழ் போன்ற சிறு பிரபந்தங்கள் தோன்றியுள்ளன.
அவைகளில் இதுவரை அச்சேறாத ‘குழைக்காதர்கலம்பக’மும், ‘குழைக்காதர் சோபன’மும் –

பராங்குச நாயகி தேடித் தேடி அலைந்து தன் மனம் குருகூருக்குக் கிழக்கே மூன்று கல் தொலைவில்
தாமிரவருணி ஆற்றங்கரையில் இருக்கும் தெந்திருப்பேரை நகரில் வீற்றிருந்த திருக் கோலத்தில் இருக்கும்
நிகரில் முகில் வண்ணணான, மகரக் குழைக்காதனிடம் சென்றுவிட்டது என்றும்,
இனி ஒரு கணம் கூட‌ தாமதிக்காமல் அவனிடம் செல்லவேண்டியதுதான் என்றும் உரைக்கிறாள்.

உற்றார்கள் தன் காதல் வேகத்தைத் தணிக்கச் சொன்ன‌ வழிகளையும் ஒத்துக் கொள்ளவில்லை,
செவி சாய்த்துக் கேட்கவுமில்லை. ஒரே பிடிவாதமாகத் தன் காதல் சுரம் நிவர்த்தியாக வேண்டுமென்றால்,
தன்னை காக்க வேண்டில் “ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்”, என்று கோதையைப்போல் அங்கலாய்க்கிறாள்.

காதல் வெள்ளம் பீறிட்டு, “வெள்ளைச் சுரிசங்கோடாழியேந்தி” என்றும் ஆரம்பித்து,
“ஊழி தோறூழியுருவும் பேரும்” என்று தலைக்கட்டுகிறாள் பராங்குச நாயகி.
தெய்வீகக் காதலர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அப்புறம் சோகம் ஏது? மோகம் ஏது?
‘தத்ர கோ மோஹ:? க: சோக:?’ என்கிறது உபநிஷத்து.

“வேத வொலியும் விழா வொலியும் பிள்ளைக் குழாவிளையாட்டொலியும் அறாத்” திருப்பேரை என்று
நம்மாழ்வாரால் போற்றப்பட்ட இத் திருப்பதி
இப்பதி திருப்பேரெயில், திருப்பேரை, வரலாறு கண்ட பேரை, தண்டமிழ்ப் பேரை, தென்பேரை எனப்
பலவாறாகப் பாராட்டப் பெற்ற ‘கலை மல்கு பேரை’யாகும்.
‘பேரெயில்’ என்பது ‘பேரை’ என்று மருவி வழங்கி வருகிறது.
அஷ்டப்பிரபந்த ஆசிரியர் இவ்வூரைத் ‘தென்திருப்பேரை’ என்றே குறிப்பிடுகின்றார்.
மணவாள‌ மாமுனிகள் தமது வியாக்கியானத்தில் ‘மகாநகரமான‌ தென்திருப்பேரையிலே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இராமவதாரத்தில் வெற்றி யடைந்த ஜெயராமன் சோழநாட்டில் காவிரிநதி தீரத்தின் வடகரையிலும் தென் கரையிலும் உள்ள
பதினெட்டு ஊர்களைத் தலவகார‌ சாமவேதிகளுக்குத் தானம் செய்த‌தாகக் கூறப்படுகிறது.
அந்த பதினெட்டு ஊர்கள் காவிரிக்கு வடகரையில் எட்டும், தென்கரையில் பத்தும் என வெண்பாவே அறிவிக்கிறது.
“திட்டைக்குடி அன்பில் திரு பூறையூர் அதனூர் மட்டவிழ்பூந் தோகூர் வயவாலி—
சிட்டர் திருக்குன்ற மருதூர் குறைதீர்த்தார் அப்பனூர் என்று வடகரையில் எட்டு”

“இடையாற்றி னங்குடிசீர் எப்போதும் வாழூர் மிடைமணலூர் ஈரைந்தாம் வேலி —-
இடைமருதூர் நாணமங்கை பிள்ளைமங்கை நல்லபெருமாள் மங்கை பரணமங்கை தென்கரையிற் பத்து”

ஆதியில் தென் திருப்பேரையில் வாழ்ந்த நூற்றெட்டு குடும்பத்தினரும் ஜைமினி என்ற முனிவரைப் பின்பற்றிய
சாமவேதிகள் என நம்பப்படுகிறது. தற்போது இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
இந்த ஜைமினி சாமவேதிகள் ‘தலவ காரர்’ என்று அழைக்கப் படுவதுண்டு.
இவர்கள் ‘கேனோபநிஷத்’ என்னும் உபநிடத்தினைத் தங்கள் தனிச் சொத்தாகக் கருதி வருகின்றனர்.

தென்திருப்பேரையில் வீற்றிருக்கும் மகர நெடுங்காதரின் திருமுகத்தை ‘வாடாத செந்தாமரை’ என்று
கோயில் முன் மண்டபத்தில் எழுதப்பட்டுள்ள பாடல் ஒன்று வருணிக்கிறது.
அதனை எழுதிய புலவரின் பெயர் தெரியவில்லை.

“கண்டாயோ சோதிக் கதிரவனே! நீயுமிந்த‌
மண்டலங்கள் எங்கும் போய் வந்தாயே – தண் தமிழ்ச் சீர்
கோடாத பேரைக் குழைக்காதர் நன்முகம் போல‌
வாடாத செந்தாமரை”

சூரியனே! நீ உலகமெங்கும் போகிறாய். எங்கள் குழைக்காத பெருமானின் ஜோதி முகம் போன்ற‌
‘வாடாத செந்தாமரை’ யினைப் பார்த்திருக்கிறாயா? என்று புலவர் ஒருவர் வினா எழுப்பினார்.
கோயிலுக்கு எதிரே கருடன் சந்நிதி போன்ற மறைவு ஒன்றும் இல்லாததால் ஆண்டின் ஒரு பகுதியில் சூரிய ஒளி
மூலவரின் முகச் சோதியில் விழுவதைக் கண்டு களித்த புலவர் ஒருவர் இப் பாடலை எழுதியதில் வியப்பொன்றுமில்லை.

பேரையில் பெருமாளின் திருவிளையாட்டினையும் அவருக்குத் துணை நின்ற பிராட்டியார் இருவரின் ஊடலைப் பற்றியும் ‘
தாமிரவருணி மகாத்மியம்’ என்னும் புராணம் விவரிக்கின்றது.

அன்றொரு நாள் வானுலக‌ வைகுந்தத்தில் திருமகளின் மணாளனான தாமரைக் கண்ணனிற்கும் ஓர் இக்கட்டான நிலை ஏற்பட்டது.
அன்றும் என்றும் போல் கருநிற காயா மலர் மேனியினையுடைய பூமாதேவியிடம் பிரான் மிகுந்த ஈடுபாடு கொண்டதனைக் கண்டு திருமகள் வெகுண்டாள்.
துர்வாச முனிவரின் உதவியினை நாடினாள். அவரும் இசைந்தார்; புறப்பட்டார். பூதேவி பெருமானுடன் மகிழ்ச்சியாக‌ உரையாடிக்
கொண்டிருக்கையில் முனிவர் வந்தார். தன்னைப் பூதேவி புறக்கணித்து விட்டாள் எனச் சீற்றங் கொண்ட முனிவர்,
‘எவ்வழகு காரணமாக நீ செருக்குற்றாயோ அவ்வழகு இல்லாதொழிக’ என சாபமிட்டார்
அவளும் நிறமிழந்து பின் சாப விமோசனமாக இத் திருப்பதியில் உள்ள நிகரில் முகில் வண்ணனின் கோயிலில்
‘பேரை’ என்னும் நாமம் தாங்கித் தவம் புரிந்து மீண்டும் தன் வண்ணத்தைப் பெற்றாள் என்பது வரலாறு

ஒரு பங்குனித் திங்கள் மதிநிறைந்த உத்திர மீன் கூடிய நன்னாளன்று தவமிருந்த திருப்பேரைச் செல்வி
வழக்கம் போல் பெருநை நதியில் தீர்த்தமாடிவிட்டுத் திரு மந்திரத்தை உருவேற்றித் தீர்த்தத்தை அள்ளினாள்.
அதிலே துள்ளும் கயல் போல மகர வடிவமான இரு குழைகள் சுடர் விடுவதைக் கண்டாள்.
அவள் உடலும், உள்ளமும் விம்மிச் சிலிர்த்தன. திருப்பேரைச் செல்வி தன் நாயகனான முகில் வண்ணனின் நீண்ட காதுகள்
இந்த மகரக் குண்டலங்களை யணிந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தாள்.
அவர் திருக்கழுத்தின் இரு மருங்கிலும் அழகாக அசைந்தாடுமே என்று பூமகள் எண்ணினாள்.
உடனே பிரானும் தோன்றி தம் நெடிய செவிகளில் அணிந்து பூதேவிக்கு மகிழ்ச்சி யூட்டினாராம்.
இந்த இனிய, அரிய காட்சியினைத் தேவரும், முனிவரும் காணும் பேறு பெற்றனர். இவர்களும் இறைவனைப் போற்றிப் பரவினர்.

பேரையில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமான் அக் குழைகளை அணிந்த காரணத்தால் ‘மகர நெடுங்குழைக் காதர்’ என்னும் பெயர் பெற்றார்.
அக் குழைகள் கிடந்த தீர்த்தம் ‘மகர தீர்த்தம்’ எனப் பெயர் பெற்றது.
நிலமகள் ‘பேரை’ என்னும் பெயருடன் பயன்பெற்ற இடமாதலால் அவ்வூரும் திருப்பேரை என்னும் பெயர் பெற்றது.

இங்கு அதுமுதல் தன்நிறம் பெற்ற பூதேவியான திருப்பேரை நாச்சியாருடன், சீதேவியான குழைக்காத வல்லியுடனும்
பிரான் கோயில் கொண்டு காட்சி தருகிறார். திருப்பேரை நாச்சியாரின் மற்றுமொரு திருநாமம் பேராபுரி நாயகி.
இங்கு இறைவன் சங்கு, கதை, பதுமம் முதலியவற்றை யணிந்தவராய், ஏக வுருவமாய் எழுந்தருளியிருக்கிறார்.
இவரின் தன்னிகரில்லாத் தனிச்சிறப்பு மகர வடிவமான நீண்ட காதணிகளை யணிந்து, குழைகின்ற காதுகளாக அமைந்து
அடியார்களின் அல்லல்களை நீக்கும் அன்புத் திருவுருவமாக விளங்குவது

இவ்வூரிலிருந்து எழும் வேத பாராயண ஒலியினையும் செந்தமிழ் வேதமாகிய திருவாய்மொழி, பாராயண ஒலியினையும்
எக்காலத்தும், எப்போதும் குழைக்காதரின் நெடிய காதுகள் குளிரக் குளிர கேட்டுக் கொண்டே யிருக்குமாம்.

மகரக் குழையானின் காதுகளுக்கு மற்றுமொரு விருந்தினையும் ஆழ்வார் படைக்கிறார்.
அதுதான் ‘பிள்ளைக்குழா விளையாட்டொலி’ யாகும். சிறார் சிறுமணல் வீடுகட்டி அழகனை அதிலே நிறுத்திச் சேவிப்பார்களாம்.
அந்த மாயனும் இந்த இளம் நெஞ்சுகளுடன் கைகோர்த்தும், காலடித்தும் விளையாடுகிறான் என்பது மக்கள் நம்பிக்கை.

விண்ணை முட்டும் இந்த விளையாட்டொலியினைக் கேட்டு மகிழத்தான் மகரக்குழைக் காதர் தம் கோயிலுக்கு முன்
வீற்றிருக்கும் கெருடனை வாய்க்கால் கரைக்கு அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

கருவறையில் கம்பீரமான தோற்றத்தில் மூலவரான ‘மகராயுத கர்ணபாச்சர்’ (மகர பூஷணம்) தமது தேவியர் இருவரான
குழைக்காத வல்லித் தாயாருடனும், திருப்பேரை நாச்சியாருடனும் எழுந்தருளியுள்ளார்.
கிழக்கே திருமுக மண்டலம் நோக்க வீற்றிருந்த திருக்கோலத்தில் வலது காலைத் தொங்கவிட்ட வண்ணம்,
இடது காலை மடித்து வைத்தவராய் வீராசனம் செய்தபடி காட்சி யளிக்கிறார்.
மூலவருக்கு முன் இருமருங்கிலும் பிருகுரிஷியும், மார்கண்ட ரிஷியும் வீற்றிருக்கின்றனர்.
மூலவரின் அருளாசியினைப் பெற முழங்கு சங்கக் கையனான கௌதுக பேரர் அமர்ந்திருக்கிறார்.
கருவரைக்கு முன்பு மண்டபத்தில் மாண்புற உற்சவ மூர்த்தியான முகில் வண்ணன் சீதேவி, பூதேவித் தாயாருடன் காட்சி தருகிறார்.

பெருமாள் : மகர நெடுங்குழைக்காதர்
தாயார் : குழைக்காதுவல்லி
விமானம் : பத்திர விமானம்
தீர்த்தம் : சுக்கிர புஷ்கரணி
வீற்றிருக்கும் திருக்கோலம் கிழக்கே பார்த்த சந்நிதி
சுக்கிரன், பிரமன், ஈசானியருக்கும், ருத்திரருக்கும், பிரத்யக்ஷம்.

——–

பல்வேறு வகையான நிறமும், உருவமும், மணமும் கொண்ட மலர்களால் தொடுத்த மலர் மாலை போன்று
இப்பிரபந்தமும் பல்வேறு வகைப் பாக்களையும், பொருள்களையும், சுவைகளையும் கொண்டு வரும்
என்னும் உவமை நயம் பொருந்தவே இது ‘கலம்பகம்’ என்னும் பெயர் பெறுவதாயிற்று.

‘களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த‌ அலங்கலத் தொடையல் ‘என்ற தொண்டரடிப் பொடியார் பாத் தொடரால் இது புலப்படும்.

இங்கு இரண்டு கலம்பகங்கள் உள்ளன.
ஒன்று அபிநவ காளமேக அநந்த கிருஷ்ணையங்கார் எழுதி வெளியிட்ட ‘திருப்பேரைக் கலம்பக’ மாகும்.
பிறிதொன்று தான் ‘குழைக்காதர் கலம்பகம்’.
இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் பற்றிய விவரங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. இதுவரை அச்சிடப்பட்டதாகவும் தெரியவில்லை.
‘அழகர் கலம்பகம்’ ‘ திருப்பேரைக் கலம்பகம்’ என்றார் போன்று தெய்வத்தினைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதுடன்,
தலத்தின் பெயரால் ‘திருவரங்கக் கலம்பகம்’ ‘திருவேங்கடக் கலம்பகம்’ போன்றன‌ எழுதப்பட்டன.

முதன் முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ள‌ ‘குழைக்காதர் கலம்பகம்’ இனிய எளிய 101 செய்யுட்களைக் கொண்டது.
இது காப்புச் செய்யுளுடன் துவங்குகிறது-

பூ என்னும் மங்கலச் சொல்லுடன் “குழைக்காதர் கலம்பகம்” மங்களகரமாகத் துவங்கி இனிய எளிய ஆற்றொழுக்கு நடையில்
கலம்பக உறுப்புக்கள் விரவி வர 100 செய்யுட்களைக் கொண்டு விளங்குகிறது.
நூலின் இறுதியில் ஒரு வாழ்த்துப் பாடலுடன் நூல் முடிவடைகின்றது.
இந்நூல் முழுவதையும் கற்றுணர்ந்தால் புலவர் பெருமாளிடம் கொண்ட ஈடுபாடும், தமிழின் மீது கொண்ட பற்றும்,
இத் திருப்பதியின் மீதுள்ள பக்தியும் நன்கு புலனாகின்றன.
“பேரை மால் குழைக்காதர்” ‘மகரக் குழையனே’ ‘பேரை வாழ் முகிலே’ என்று பலவாறு எம்பெருமானை விளித்துப் பாடுகிறார்.
இராமாவதாரத்திலும், கிருஷ்ணாவதராத்திலும் நூலாசிரியர் கொண்ட மிகுந்த ஈடுபாட்டினை இக் கலம்பகம் எடுத்துக் காட்டுகிறது.

‘கானகம் புகுந்து விராதனை வதைத்துக் கவந்தனைக் கவர்ந்து சூர்ப்பணகை கரிய மூக்கரிந்து கரனுயிர் குடித்துக் கருங்கடல் வழிபடக் கடந்து”
என இராமபிரானின் சாதனைகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார். சகடம் உடைத்தவன், மருதிடைப் பாய்ந்தவன்,
நரசிம்மாவதாரம் எடுத்தவன், குறள் வடிவானவன், இராவணனை வென்றவன்…
ஏன் எல்லாமே மகரக் குழையனே என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
மேலும் அப்பிரானைப் ‘பேரேசர்’, ‘வழுதித் திருநாடன்’ எனவும் போற்றிப் பரவுகின்றார்.

————

1- குழைக்காதர் கலம்பகம்

காப்பு

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

செவிதொறுங் கனிந்த செந்தேன்
தெளிந்தசொல் தவறுண் டேனும்
புவிபுகழ்ந் தெடுத்த பேரைப்
புகழ்க்கலம் பகத்தைக் காக்க!
பவ‌விலங் கறுத்த புள்ளின்
பாகணைத் தொடர்ந்து பற்றிக்
கவிமதம் பொழியும் ஞானப்
பராங்குசக் களிறு தானே,

எடுத்துக் கொண்ட நூல் இனிது முடியும் பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகிறார்.
காக்க-காவலாக இருக்கட்டும். வியங்கோள் வினைமுற்று. பராங்குசக் களிறு காக்க!
பவம்-பிறப்பு, விலங்கறுத்த-பற்று நீக்கின, புள்ளின் பாகன்-கருடனை ஊர்ந்து செல்வோன். தொடர்ந்து பற்றி- பற்றித் தொடர்ந்து;
கவி பொழியும்-கவிதையை மிகுதியாகச் செய்யும். பராங்குசன்-நம்மாழ்வார், தான், ஏ-அசை,
பிற சமயங்களாகிற யானைகளுக்கு அங்குசம் போன்றவன். ஆழ்வாரை யானையென்று உவமித்ததற்கேற்ப, கவிமதம் பொழியும் என்றும்,

———

அவையடக்கம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மழைக்காவல் புரந்துலகம் தழைப்ப நீதி
மன்னவர்செங் கோலளிப்ப மறைநூல் வாழக்
குழைக்காதர் கலம்பகமென் றொருபேர் நாட்டிக்
கொழித்ததமிழ் சுழித்தெடுத்துக் கூறும் பாட‌
லுழைக்காவ லடிதொடைசீர் தளைமா ருடல்
ஒருபொருட்டு மொவ்வாத தெனினு மென்சொற்
பிழைக்காக விகழ்வரோ பெரியோர் ஞானப்
பெருமான்றன் திருநாமம் பெற்றக் காலே

நூல்

வண்ணக ஒத்தாழிசைக் கலைப்பா

பூமாது நலம்பெருக்கப் புவிமாது வளஞ்சுரப்பத்
தேமாலை புனைந்தேத்தித் தேவர்களும் தலை குனிப்ப‌
நீதியரும் பிக்கருணை நிறைபுனலா நூற்றெட்டு
வேதியரும் திருப்பேரை வியனகநூற் தழைத்தோங்கக்

கவிச்செல்வர் மூதறிவிற் கனிந்துருகும் பழம்புலவர்
செவிச்செல்வந் தவறாது செந்தமிழின் தேனிறைப்ப‌
வரிவளைக்கை யரம்பையர்கள் மலர்க்கவரி யெடுத்தியக்கத்
தருமலர்ப்பூந் தாதருந்தித் தமிழ்த்தென்ற லடிவருட‌
வெளியகத்தே நின்றுயர்ந்த வீங்குமணித் தூணிரையின்
ஒளிகெழுமி யிருள்துடைத்த வோலங்கு மண்டபத்துட்
காய்சினத்த கோளரியின் கழுத்தளக்கச் சுமந்தேந்தும்
ஆசனத்துக் கடவுளருக் கரசெனவீற் றிருந்தனையே

இஃது பன்னீரடித்தரவு

———-

கோதுபிடித் தரித்தமுதங் கொடுத்தநீ யளைகவர்ந்து
சூதுபிடித் தடிச்சுவடு தொடர்ந்துபிடித் தசோதையெனு
மாதுபிடித் தடித்தவுடன் மண்ணையுண்ட வாய்மலர்ந்து
காதுபிடித் தழுதுமலர்க் கைபிடிக்க நின்றனையே

பெருவிருந்தா யொருவரைப் பிறந்துவளர்ந் தெதிர்ப்படுமுன்
னருகிருந்த மதலையைமற் றவுணனழித் திடுமென்றே
திருவுளந்தான் விரைவிரைந்து சிறுபொழுது மொருவயிற்றிற்
கருவிருந்து வளராமற் கற்றூணிற் பிறந்தனையே.

விரிகடலும் புவியுமுண்டு விசும்பளக்க நின்றுயர்ந்து
தரும்பிரம னடிவீழ்ந்து தலைதாழுந் தன்மையினால்
பெருகிவரும் பிரளயமுன் பேருருவம் போன்றதென்னே
திருவுருவ மீனாகிச் செலுவிலெடுத் தடக்கினையே

இவை மூன்றும் நாலடித்தாழிசை

———

பயிரவி யெனவரு படுகொலை யலகையின்
உயிரையு முலையுட னொருவழி பருகினை

பிடியென நொடியினிற் பிறையெயி னருடிபட‌
வடிமத கரியொடு வலிகொடு பொருதனை

ஒருபத சிரமொடு மிருபது கரமுடன்
பருவரை புறமிடு பரிபவ மருளினை

இதுபொரு ளிதுதவ மிதுகதி யெனமுது
சதுமறை படவற சமயமு மருளினை.

இவை நான்கும் ஈரடி அராகம்

————

மலைகுனிய விசும்பளக்கு மதிவிலங்கை வழிதிறப்பச்
சிலைகுனியப் புயநிமிரத் திருச்சரமொன் றெடுத்தனையே

மூவடிகேட் டீரடியான் மூவுலகு மளந்தசெழும்
பூவடியிற் பிறந்த கங்கைப் புனலாட நின்றனையே.

இவையிரண்டும் ஈரடி அம்போதரங்கம்

துட்டவா ளரவவடந் துவக்கிவரை திரித்தனையே
வட்டவான் குறலாமை வடிவெடுத்துக் கிடந்தனையே
முட்டவான் முகடதிர முழங்குகடற் கடைந்தனையே
பட்டவா ரமுதம‌ரர் பசிக்குவிருந் தளித்தனையே.

இவை நான்கும் நாற்சீரடி அம்போதரங்கம்

மருதொடு சகட மொடித்தனை மணிமுடி யரவினடித்தனை
பருவரை நிமிர வெடுத்தனை பரிமள துளப முடித்தனை

இவை நான்கும் முச்சீரடி அம்போதரங்கம்

மயிலு மறிவுநீ மலரு மணமுநீ யியலு மிசையுநீ யெளிது மரிதுநீ
உயர்வு மிழிவுநீ யுடலு முயிருநீ புயலு மழையுநீ புறமு மகமுநீ

இவையெட்டும் இருசீரடி அம்போதரங்கம்

என வாங்கு – இது தனிச் சொல்

அரும்பவிழ் குவளையும் சுரும்பவிழ் குமுதமும்
கருங்கொடி வள்ளையும் கமலமு மலர்ந்து
கண்ணும் வாயும் வண்ணவார் குழையும்
திருமுகச் செவ்வியு மொருமுகப் படுத்திக்
கண்டவர் துவளுங் காட்சியிற் றுவன்றி
நலங்கிளர் மணிநிறை நன்னீர்ப் பண்ணை

பொலங்கொடி மகளிரிற் பொலிந்த பேரையுண்
மகரக் குழையன் மலரடி நோக்கி
யுச்சியிற் றெழுதகை யுரியவ ருளரேல்
வச்சிரத் தடக்கை வருபெரு மன்னரிற்
சிறந்து விதிப்படி செங்கோ னடாத்தி
மதிக்குடை கவிப்ப மண்ணுமா கமுமே. 1

அரும்பவீழ் – மொட்டு விரிந்த, சுரும்பு – வண்டு, அவிழ்- மலர்த்தும்; வார் குழை- நீண்ட குழையணிந்த காது,
செவ்வி – அழகு, ஒருமுகத்து – ஒரு சேரக்காட்டி, பொலங்கொடி- அழகிய கொடி, மகளிரில் – பெண்கள் போன்று,
கவிப்ப – கவிப்பார்கள். (ஒரு குடைக்கீழ் ஆள்பவர்கள்) மாகம் – விண்ணுலகு.

—————

இது பன்னீரடி நிலை மண்டிலவாசிரியச் சுரிதகம்

நேரிசை வெண்பா

மாகவலைப் பட்டழிந்து மங்கைமார் தங்களனு
போகவலைப் பட்டமனம் போதாதோ – நாகவணைக்
கொன்புரக்கு நேமிக் குழைக்காத ரேயடியேற்
கன்புரக்கு மோவொருகா லம். 2

மா கவலை-மிகுந்த கவலை, கொன்புரக்கும் – பெருமையுடன் காக்கும், நேமி – சக்கரம், உரக்கும்-திடம் பெறும்.

——————–

கட்டளைக் கலித்துறை

ஒருகை முகக்குஞ் சரஞ்சொன்ன பேரென் றுரைக்கும் பொற்கா
தருகை முகக்கு மயில்விழி யீரருட் பேரையின்மான்
முருகை முசுக்கும் பசுந்தண் டுழாயென்று மொய் குழலச்
சருகை முகக்கு மிருக்குமுள் ளாவி தழைக்குமென்றே 3

ஒருகைமுகக்குஞ்சரம் – முகத்தில் துதிக்கையுடைய ஒப்பற்ற யானை (கஜேந்திரன்),
காதருகை முசக்கும் அயல்விழி – காதளவோடிய வேல் போன்ற கண், மான்- மான் போன்ற விழியுடைய என் மகள்,
முருகு- மணம், முகத்தல் – மோந்து பார்த்தல், சருகு – வாடல், மொய் குழல் – நெருங்கிய கூந்தலையுடைய பெண்,
என்றும் – என்று சொல்லுவாள்,
உண்ணாவிதழைக்கும் என்றே இருக்கு – உயிர் மட்டும் இருக்கிறது என்று சொல்லும்படி தளர்வுற்றிருக்கிறாள்.

————–

பதினான்குசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

தழைத்தெழுங் கிரணப் பனிநிலா மதியந்
தடங்கற்கடற் பரிதியென் றுதிக்கும்
தமிழுடன் பிறந்த மந்த மாருதமும்
தமுற்குழம் பெடுத்தெடுத் திறைக்கும்
குழைத்தகுங் குமச்செங் களபலே பனமுங்
கொதித்துயிர் குடிக்குமென் னளவிற்
கொடுவினை விளைந்த காலநல் லனவுங்
கொடியவா மென்பதின் றறிந்தேன்.
கழைக்குலந் தடிந்து சந்தனந் திமிர்ந்து
காழகிற் குழாமுறித் தெதிர்ந்து
கரிமுக மருப்புங் கவரியுஞ் சுமந்து
கனகமுந் தரளமுங் கொழித்து
மழைக்குலம் பிளிறு நெடுஞ்சுரங் கடந்து
வணிகர்போற் கடைநிலம் புரக்க
வருபெரும் பொருனைத் துறைவனே குவளை
வளைவயற் பேரைமா தவனே. 4

மதியம்: பரிதியென்றுதிக்கும் – சந்திரன் சூரியன் போன்று சுடுகின்ற கிரணங்களோடு உதிக்கும்,
களப லேபனம் – சந்தனப் பூச்சு, கொடுவினை விளைந்தகாலம் – போதாத காலம்,
கழைக்குலம் தடிந்து – மூங்கில் கூட்டத்தை ஒடித்து, சந்தனம் திமிர்ந்து – சந்தன மரத்தை முறித்து,
காழகில் குழாம் – வயிரம் கொண்ட அகில் மரத்தொகுதி, கரிமுக மருப்பு – யானைக் கொம்பு,
தரளம் – முத்து சுரம் – பாலைவனம், கடை நிலம் – நெய்தல்.

————

எழுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

தவசரியை குரியையிது தவிரவினை கொலைகளவு
தனைநினையு மறிவிலி யைமா
கவலைபடு விகடபக டனையகப டனையுனது
கழலிணைக ளடிமை கொளுவாய்
நவமணியு மலர்மகளு மிளமதியு மதகளிறு
நறைகமழு மமுது மெடவே
திவலையெறி கடல்கடையு நிகரில்முகல் வணவமரர்
தெளியுமரு மறைமு தல்வனே. 5

தவசரியை – தவம், சரியை: விகடபகடு – நகைக்கிடமான மதயானை, கபடனை – வஞ்சகனை,
மதகளிறு – ஐராவதம், நறை – வாசனை, திவலை – துளி, முகில்வண – முகில்வண்ணனே.

—————

சந்தத் தாழிசை

மறைமுடித் தலையி லுறமிதித் தபத மருதிடைத்
தவழு மாயனார்
வழுதிநா டர்மக ரக்குழைக் கடவுள் மழைகொழித்
தொழுகி யருவியாய்
நிறைமுடித் தலையி லருவிகுப் புறநி லாவுதித்
தொழுகு வெற்பனே
நீயளித் தவீவை வேயின் முத்தமென நிச்சயப்பட
மொழிந்த தேன்
பிறைமுடித் தலையில் வடியவிட் டதொரு பின்னல்
பட்டசடை யில்லையே
பிணையெ டுத்ததிலை திரிபு ரத்தையழல் பிழிய
விட்டநகை யில்லைமா
கறைமுடித் தமிட றில்லை முக்கணொடு கரக
பாலமிலை யெங்கள்மால்
கழலினைத் தொழ மறந்த தாலெமர்கள் கைவீசக்
கடவ தாகுமே 6

மறைமுடி-உபநிடதம், உற-பொருந்த, வெற்பன்- குறிஞ்சி நிலத்தலைவன், வேயின் முத்தம்-மூங்கிலில் உள்ள முத்து;
சிவபெருமான்; பிணை-மான், மிடறு-கழுத்து, மாகறை முடித்த மிடறு-நீலகண்டம் கரகபாலம்-கையில் தலை யோடு.

————–

சந்தவிருத்தம்.

ஆகமொன் றிரண்டு கூறுகண்டு பண்டை யாடகன்ற னங்க மடுபோர்
வாகைவென்றி கொண்டு பேரைவந்த கொண்டல் மாயவன் துயின்ற கடலே
பாகையும் பிழிந்து தேனையுங் கவர்ந்து பாலுடன் கலந்த மொழிசேர்
கோகிலங்க ளின்றென் னாவிமென்று தின்று கூவுகின்ற தன்பர் குறையே. 7

ஆகம்-மார்பு, ஆடகன்-இரணியன், கொண்டல்- மேகம் போன்ற நிறமுடைய திருமால்,
கோகிலம்- குயில், அன்பர் குறை-தலைவர் குற்றம்.

————–

கட்டளைக் கலித்துறை

குறைக்கொழுந் தாயமு தின்கொழுந்தாரை கொழிக்கு மந்திப்
பிறைக்கொழுந் தார்மதிட் பேரைப் பிரான்தம்பி பின்வரவென்
முறைக்கொழுந் தாவெனு மென்மொழிச் சீதை முலைமுயங்கி
மறைக்கொழுந் தாயன்று கைம்மாறு செய்தனன் வானவர்க்கே. 8

குறைக்கொழுந்தாய்-குறைந்த கலைகளோடு கொழுந்து போன்று, தாரை-கிரணங்கள்,
பிறைக் கொழுந்து ஆர்-சந்திரமண்டலம் தொடும், தம்பி- இலக்குவன்.

———–

வண்ண விருத்தம்

வானவர் தானவர் மாமனு ஜாதிகள் வாழ்வது சாவதுமேல்
வானுல காள்வது கீழ்நர காள்வதுன் மாயையி னாலலவோ
ஏனமு மாயொரு வாமன னாகிய ராமனு மானவனே
ஞானவ ரோதய பேரைய ராதிப நாரண காரணனே. 9

ஏனம்-வராகம்.

———–

சந்த விருத்தம்

கார ணங்குறி யாய்வ ழங்கிவள் காதன் மங்கையரே
வார ணந்தனில் வீதி வந்தனன் மாலை தந்திலனே
நார ணன்ஜக பூர ணன்றிரு ஞான சிந்தனையால்
ஆர ணம்புகழ் பேரை யம்பதி யாழி யம்புயலே. 10

வாரணம்-யானை, மாலை-துளவ மாலை ஆரணம், வேதம்.

———-

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆழி மாதவன் பேரை மாலளந் தவனி யுண்டவன் பவனி கண்டபின்
தோழி மீரவன் துளப மாலையென் துணை முலைக்கிடார் குழல்மு டிக்கிலார்
ஊழி வேர்விழுங் கங்கு னட்டதும் உடுப திக்குவே றழல்கொ டுத்ததும்
கோழி வாயையுங் கூவொ ணாமல் மண் கூறு கொண்டதும் கொடிய தாயரே. 11

ஊழி வேல் விழும் கங்குல்-யுகமாக வேரூன்றிவிட்ட இரவு, உடுபதி-சந்திரன், அழல்-வெப்பம்,
மண் கூறு கொண்டது – மண்ணைக் கொண்டு அடைத்தது ஒப்பு: “கோழி வாய் மண் கூறு கொண்டதோ!”

——–

நேரிசை வெண்பா

ஏடவிழுங் கண்ணிக் கிரப்பா ளவள் கலைநாண்
கூடவிழுங் கண்ணீர் குறையாதோ – மாட மதில்
வீதிமக ரக்குழையும் வெண்மதியுந் தோய்பேரை
நீதிமக ரக்குழைய னே. 12

ஏடு-புற இதழ், கண்ணி-துளவ மாலை, மகரக்குழை-மகர தோரணம்..

———-

கட்டளைக் கலித்துறை

குழைத்திருப் பாரமு தக்கனி வாயிற் குழல் பதிக்குங்
கழைத்திருப் பாலிசை கண்டருள் வோர்குழைக் காதர் நன்னாட
டிழைத்திருப் பார்மணற் கூடலென்றாலு மிறப் பதன்றிப்
பிழைத்திருப் பாருமுண் டோவென்பார் சூள்பொய்த்த பின்னையுமே. 13

குழல்-புல்லாங்குழல், கழை – மூங்கில், பால் இசை- பால் போல இனிய கீதம்,
கூடல் இழைத்தல்- பிரிந்த தலைவி மணலில் கோடு இழைத்து வருவனா என்று குறி பார்த்தல்,
சூள்- சபதம்; வருவதாக ஆணையிட்ட சொல்.

———-

தாழிசை

பின்னை யைத்தழு விப்பு ணர்ந்தருள் பெற்ற செங்கனி வாயிர்னா
பெருமி தத்தமிழ் முறைகொ ழித்தறி பேரை யம்பதி யன்னமே
யன்னை யிப்படி மலர ணைக்கு ளணத்த கையி னெகிழ்த்துவேறடைகொ டுத்த கபாட நீவியடிச்சி லம்பொழி யாமலர்

முன்ன டித்தெரி யாதி ருண்டு முகிழ்ந்து கண்புதை கங்குல்வாய்முளரி யம்பத நோவ
வன்பினில் மூத றிந்தவர் போலவந்தென்னை யிப்படி வாழ வைத்தது
மின்ப மோகநல் வாழ்வுபறறி யான்ம னுக்கிலு நான்ம றைக்கும திப்பிறப்பினி லில்லையே. 14

பின்னை-நப்பின்னை, பெருமித்தமிழ்முறை கொழித்து அறிபேரை-தமிழை முறையாகக் கற்று
அதன் பெருமையை ஆராய்ந்து அறிந்த தென் திருப் பேரை, கபாலம் நீவி-தாழ்ப்பாளைத் திறந்து

———-

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

ஏது காரணத் தெவர்க ளேருமற் றிழிகு லத்தெழும் புலை ரேனுமுட்
சாதிபேதமற் றவர்கள் மிச்சிலைத் தருவ ராயினும் புனித வாழ்வுதா
னாத லாலருட் பேரை நாரணர்க் கடிமை யானவுத்தமர் ச ரோருகப்
பாத தூளிபட் டுலகம் வாழ்தலிற் பரவு வார்பதத்தளவி லாததே. 15

மிச்சில்-உண்ட மிச்சம், சரோருகம்-தாமரை.

————

தரவு கொச்சகம்
அளவறியாப் புனலிடைப்பட் டழுந்தினர்போ லணியிழையீர்
விளைவறியாப் பேதை மயல் வெள்ளத்தி லழுந்துவளேற்
களவறியாத் தயிர்நுகர்செங் கனிவாயர் மணிப் புயத்திற்
றுளவறிவாள் பின்னையொன்றுஞ் சொலவறிய மாட்டாளே.. 16

அளவு அறியாப் புனல்-ஆழம் தெரியாத வெள்ளம்,
விளவு அறியாப் பேதை-வாய் விட்டுச் சொல்லத் தெரியாத இளம்பெண், மயல் வெள்ளம் -காதல் வெள்ளம்.

——————-

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

ஆளைப் பொருது கயங்கலக்கி யடியிற் படிந்து மதகிடிய
வாளைப் பகடு புகுந்துழக்கும் வயல்சூழ் வழுதித் திருநாடன்
ருளைத் தொழுது பசுந்துளபஸ் சருகுக் கிரந்து மடவீர்மா
றோளைக் கருதி மடலெழுதத் துணிவாள் விரைகொன் றறியாளே.. 17

வாளைப் பகடு-ஆண் வாளை மீன், பிரகு-வேறு உபாயம்.

————–

அருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

அறிவி லேனொடு மேய நீதியி னிடைவி லேதிரியேன்
நெறியி லேனுறு கதியி லேறுனை நினையு மாறுளதோ
யிறைவ னேமறை முதல்வ னேதொழு மெமது நாயகமே
மறுவி லாமர புடைய பேரையில் மருவி வாழ் முகிலே.. 18

மறு-குற்றம், மரபு-ஆன்றோர் ஒழுக்கம்.

——–

ஊசல் – கலித்தாழிசை

வாழிவலம் புரிந்துநெடுங் குழைக ளாட
மலர்க்காந்தள் செங்கைவரி வளைக ளாட
வனமுலையிற் குடைந்த முத்து வடங்க ளாட
மழைகவிந்த குழலவிழ்ந்து மருங்கி லாடச்
சூழிவலம் புரிகளிற்று மைந்த ராடச்
சுரர்முனிவ ருயிரனைத்துஞ் சூறை யாடச்
சுடர்வயிர வடம் பிணைத்துக் கமுகி னெற்றித்
தூங்குமணிப் பொன்னூசல் துவக்கி யாட
மேழிவலம் புரிபழனப் பேரை நாட்டில்
மேதகு சீர் வளம்பாடி யாடி ரூசல்
விரைத் துளபச் செழும்புயலைத் தொழுநூற் றெட்டு
வேதியர் தம் புகழ்பாடி யாடி ரூசல்
ஆழி வலம் புரிபாடி யாடி ரூசல்
அவங்கருடக் கொடி பாடி யாடி ரூசல்
ஆழ்வார்கள் தமிழ் பாடி யாடி ரூசல்
அமுதனையீ ரணியிழையீ ராடி ரூசல்.. 19

வாழி-அசை, குடைந்த முத்து-முத்தைக் குடைந்து செய்த, மருங்குல்-இடை, சூழி-நெற்றிப் பட்டம்,
துவக்கி-கட்டி, மேழி-கலப்பை, ஆழிவலம்புரி- சக்கரம், சங்கு.

————

அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

ஆடி லாள் கழலாடி லாள்கனை யாடி லாள் பனிநீர்
போடி லாள்கலைதேடி லாள்வளை பூனி லாளவடான்
பீடு லாவிய வீதி கோலிய பேரை வாழ் முகிலே
நாடு வாளிசை பாடு வாணம நார ணாவெனவே 20

கழல் ஆடிலாள்- கழற்காய் விளையாடவில்லை. சுனை ஆடிலாள்-நீராடவில்லை,
கடை போடிலாள்- மேகலை அணியவில்லை, பீடு-பெருமை.

—————

நாராய ணாயவென வோதாமல் வீண்மொழிகோ
ணாவாலு மேதுபய ணவர்புகழே
யாராலு மோதிலவை கேளாத மூடர்செவி
யானாலு மேதுபய னறிவிலிகாள்
காரான சோதியழ காராத காதலொடு
காணார்க ணாலுமொரு பயனுளதோ
வாராழி மீதுதுயில் பேரேசர் கோயில்வலம்
வாராத காலுமொரு பயனிலையே.. 21

வீண் மொழி கொள்- வீண் வார்த்தை பேசுகின்ற, ஆராத-திருப்தி அடையாத, பேரேசர்-தென் திருப்பேரைக் கடவுள்.

————-

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

ஒருபிழைகண் டயர்ப்பா ருளாதாரவி லோதா
ருறவுநினைந் திருப்பார்கள் கோபமமை யாதோ
விருவருமிங் கிதத்தோடு கூடியணை யாநா
ளிளமைநலங் கிடைத்தாலிங் கேது பயனாமோ
முருகவிழ்செங்க கனிக்கோவை வாய்மொழியி னாலே
முனிவர்பெருங் குடித்தாழ்வு வளரதறி யீரோ
மருவியசந் தனக்காவின் மாமலர் கொய் வாரே
மகரநெடுங் குழைக்காதர் பேரையணை யாரே. 22

செங்கனிக் கோவை வாய்-கோவைப் பழம் போல் சிவந்த வாய்.

————-

கட்டளைக் கலித்துறை

ஆரய ராம லிருப்பா ரவருக் கருள் புரியும்
பேரைய ராதிபர் நங்குழைக் காதர் பிறங்கன் மின்னே
தாரை யராவிக் கடைந்தசெவ் வேலென்னஸ் சாய்ந்த குழற்
காரை யராவியென் னெஞ்சை யராவுங் கடைக் கண்களே. 23

அயராமல்-மறவாமல், பிறங்கலமின்னே-மலையிலுள்ள பெண்ணே, தாரை-முனை, குழல் காரை- கார் போன்ற கூந்தல்.

————-

பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

கண்ணகம் புதைப்ப வெளியிடஞ்ச சுவறக்
கருந்தடத் திருட்படாய் விரித்துக்
கடல்வீடக் குழம்பை யள்ளியிட் டுலகங்
கரந்துகொண் டனவெனத் தணிந்து
விண்ணகம் புதைத்த பரிதியு மதியும்
விழுங்கியுண் டொருபுடை செறிப்ப
வேர்விழுந் தூழி முடிவிலாக் கங்குல்
விடிவிலாத் தகைமையே துரையாய்
மண்ணகம் புதைத்த துணையடி முனிவர்
மனத்தகம் புதைப்ப வேழ்புலியும்
வயிற்றகம் புதைத்த பெருமவென் றிடைச்சி
மார்க்கமும் புதைப்பநீ வெருவிப்
பண்ணகம் புதைத்த பவளவாய் புதைத்துப்
பருமணிக் குழைபிடித் தாடப்
படித்தவர் சுருதி முடித்தவர் பேரைப்
பதிவளம் புரக்குமா முகிலே. 24

படாம்-துணி, குழை பிடித்து-குழையணிந்த காதை பிடித்து.

———–

நேரிசை வெண்பா
மாவளர்த்த வன்னையரு மாரன் குயில்வளர்க்கக்
காவளர்த்தா ரென்று குழைக் காதரே – நாவளைத்துச்
செற்றார் நகைவடிப்பத் தீவெடிப்பப் பூந்துளவின்
முற்றார் நகைவெடிக்கு மோ. 25

மாரன்-மன்மதன், கா-சோலை, செற்றார்- பகைவன்,
தீ வெடிப்ப வெடிக்குமோ-தீத் தோன்றுவது போலத் துளவ மலர்கள் சிவந்து தோன்றும்.

————

சுரம் போக்கு – கட்டளைக் கலித்துறை

வெடித்துச் சிவந்தவப் பாலைக்கப்பாலை வெளியில் வெப்பம்
பிடித்துச் சிவந்தன வோவந்த ணீர்கண்ணன் பேரைவெற்பில்
வடித்துச் சிவந்தசெம் பஞ்சோ டனிச்ச மலருறுத்தித்
தடித்துச் சிவந்தன கண்டீர் மடந்தைபொற் றாளினையே 26

வெடித்து – வெடிப்புகள் தோன்றி, பாலைக்கப் பாலை – பாலை நிலத்துக்கப்பாற்பட்ட, அந்தணீர் – முக்கோல் பகவர்களே,
செம்பஞ்சு – மருதோன்றி பூசிய சிவந்த நிறம், அனிச்ச மலர் – மென்மையான ஒரு வகைப் பூ,
தடித்துச் சிவந்தது – வீங்கிச் சிவந்து போயின, மடந்தை – என் மகள். முக்கோல் பகவரை வழிவினாதல் என்னும் அகப்பொருள் துறை.

————

மறம் – சந்தத் தாழிசை

தாளெடுத்துல களந்தபேரைமுகி றனதருட்குறு
நிலத்துளோர்
தையலைப்புது மணங்குறித்தெழுது சருகுகொண்டு
வருதூதனே

வேளெடுத்தவடி வேல்படப்பொருது வினையெடுத்தவர சரையெலாம்
வெட்டிவிட்டதிரு முகமலாதுதிரு முகமும் வேறறிவதில்லையே
நாளெடுத்தபடை பாடெடுத்ததிலை நாணயப்பிழையி வின்னமு
நரபதித்தலைவர் தலையெடுத்ததிலை நமனெதிர்த்துவரு மாயினும்
வாளெடுத்துவரி சிலைகுனித்துவளை தடிபிடித்து மெமெர் வெல்வராம்
மனுவரம்பழியு நாளுமெங்கள்குல மறவரம்பழிவ தில்லையே. 27

மறம்: இது கலம்பகத்தின் ஒரு துறை.
மணம் பேசத் தூது வந்தவனை மறவர்தம் குலப் பெருமை சொல்லி மகட்கொடை மறுத்தல். அரிட்குறு – அருளைப் பெற்ற,
தையலை – பெண்ணை, சருகு – ஓலை, வேள் – முருகன், வேல்பட – வேலாயுதமும் தோற்க, வினையொத்த – போர்த் தொழிலைச் செய்த,
நாகொடுத்த படை பாடெடுத்த நிலை – நாள் முழுவதும் எடுத்த ஆயுதத்தைப் பக்கத்தில் வைத்து விடுவதில்லை.
நாணயப்பிழை – நா நயப் பிழை; பேசுந்திறமையிலுள்ள பிழை. நரபதித் தலைவர் – தலைமை பெற்ற அரசர்கள்,
நமனெதிர்த்து வருமாயினும் – எதிரி எமனேயாயினும், மனு வரம்பு – மனித ஜாதியின் வரம்பு, மற வரம்பு – வீர மறவர் குலத்தின் ஒழுங்கு.

————-

பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

இல்லத் தடங்கா மடந்தையர்கற்
பெனவும் பசிக்கென் றிரந்தவர்கொன்
றீயா தவர்கைப் பொருள்போலு
மிரவிக் கிருள்போ லவுமடியார்
சொல்லத் தொலையா வெழுபிறப்புந்
துடைகுங் கருணைக் குழைக்காதர்
துணைத்தா ளளக்கும் புவிமருங்கிற்
சுற்றிக் கிடக்குங் கருங்கடலே
கொல்லத் துணியா தன்னையருங்
கொதியார் மதியு மதன்படையுங்
கூப்பிட் டழையாக் கருங்குயிலும்
கொடுமை படுத்தாக் குழலிசையு
மல்லற் படுத்தா வயலவரு
மளித்துப் பிரியீ ரெனவுரையா
தயர்த்துக் கொடுத்த மனமிருக்க
வாரை வெறுக்கக் கடவேமால். 28

இல்லத்தடங்கா – வீட்டினுள்ளே தங்கியிராத, பசிக்கென்று – பசி என்று, ஒன்று – ஒரு பொருளும்,
சொல்லத் தொலையா – சொல்லி முடிவு காணாத, எழு பிறப்பு – எழுவகைக் கதி, துடைக்கும் – நீக்கும்,
தாள் அளக்கும் – தாள்களால் அளந்து கொண்ட, புவி மருங்கில் – பூமியின் எல்லாப் புறங்களிலும்,
கொதியார் – கோபிக்கமாட்டார். மதன்படை – மன்மதன் படைக்கலங்கள், குழலிசை – வேய்ங்குழல் ஓசை,
அளித்து – தலையளி செய்து, அயர்த்துக் கொடுத்த – மறந்து பிரிவுக்குச் சம்மதித்த.

—————–

சம்பிரதம்

கடல டங்கவுறு மொருசி றங்கைபுனல்
கடுகி லும்புகுது மூசிவே
ரிடம்வ லஞ்சுழலும் வடத டங்கிரியு
மெமது சம்பிரத மீதெலா
முடனி ருந்துமகிழ் குருப ரன்பரவை
யுலக ளந்தமுகில் பேரைமா
லடல்பு ரிந்துபக லிரவு கொண்டதுவு
மரிய சம்பிரத மானதே. 29

சம்பிரதம் – ஜால வித்தை, கடலடங்கலுழிதொறு சிறங்காக புனல் கடுகிலும் புகுதும் – கடல் நீர் முழுவதும் ஒரு கைக்குள் அடக்குவோம்;
கடுகிலும் புகுவோம் என்றும், கடல் எல்லாவற்றிலும் ஒரு கை தண்ணீர் மொண்டு விரைந்து வந்திடுவோம் என்றும் பொருள் கொள்க.
வடமேருவும் ஊசிவேருடன் இடது புறமும், வலது புறமும் சுழலும்படி செய்வோம் என்றும் ஊசிவேரைக் கொண்டு
வடமேருவை இடது புறமும் வலது புறமும் சுற்றிச் செல்வோம் என்றும் பொருள் கொள்க.
பரவையுலகு – கடல் சூழ்ந்த உலகம், பகலிரவு கொண்டதும் – பகலை இரவாக்கியதும்.

—————–

நேரிசை வெண்பா

தேவகியார் பெற்ற திருவருத்தம் பாராமல்
கோவியர்தா மன்றுகுழைக் காதரே – தாவி
யடிக்குங்கைம் மாறோநீ ரஞ்சினர்போற் காது
பிடிக்கும்கைம் மாறோ பெரிது. 30

கோவியர் – இடைப் பெண்கள், அடிக்குங் கை மானோ – அடிப்பதற்குக் கையில் எடுத்த கோலோ,
காது பிடிக்கும் – தோப்புக்கரணம் போடுவதற்கு இரு கைகளால் காதுகளை மாற்றிப் பிடிக்கும், கைம்மாறு – உதவி.

———–

கலிவிருத்தம்

பெருவிட வரவணைப் பேரை மாதவன்
மருவிட நினைகிலான் மங்கை மாதரே
தருவிட வெண்ணிலாத் தழைத்த தெங்கணு
மொருவிட மிலைநமக் குறைவி டங்களே. 31

தருவிட – விடத்தைத் தருகின்ற

————-

கட்டளைக் கலித்துறை

உறைக்கோடு மாடவர் வாளா லொருகொம் பிறந்து மற்றைக்
குறைக் கோடு கொண்டுழல் குஞ்சரம் போலும் கொடியிடையீர்
துறைக் கோடு வாய்வைத்த மால்பே ரையிற் றென்னர் சூழ்ந்த பண்டைச்
சிறைக்கோடு மேகம் பிறைக்கோடு தாங்கிச் சிறக்கின்றதே. 32

உறைக் கோடும் வாள் – உறையில் விரைந்து புகும்வாள், ஒரு கொம்பிறந்து – கொம்பு வெட்டப்பெற்று,
குறைக் கோடு – கோடு, உழல் குஞ்சரம் – திரிகின்ற யானை, துறைக்கோடு – நீர்த் துறையில் கிடந்த சங்கு, தென்னர் – பாண்டியர்,
பண்டைச் சிறைக்கோடு மேகம் – பாண்டியர் சிறை வைத்த மேகம், பாண்டியர் மேகங்களைச் சிறையிலிட்ட திருவிளையாடல்,
பிறைக்கோடு – பிறை போலும் கொம்பு.

———–

தூது – எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

சிறந்தார் தொழத்தரு மருந்தா மழைப்புயல்
செழும்பே ரையுத் தமர்பால்
அறந்தா னுறக்குரு கினங்காண் மடப்பெடை
யனங்கா ளுரைத் தருள்வீர்
இறந்தா மெனிற்பிழை யிருந்தா மெனிற்பழு
திரங்கா மனத்தவர் போன்
மறந்தான் மறக்கவு நினைந்தா னினைக்கவு
மனந்தா னெமக் கிலையே. 33

அறந்தானுற உரைத்தருள்வீர் – இப்பறவொழுங்கைப் பொருந்த எடுத்துரைப்பீர்.

———–

வெண்பா

எமக்குமுகம் வாட விருந்தா மரைகள்
தமக்குமுகம் வாடுஞ் சலிப்பென் – அமைத்துரையும்
பெண்மதியென் றோதாமற் பேதைநாட் டன்னங்காள்
தன்மதியி லுண்டோ தழல். 34

அழைத்துரையும் – பொருந்தச் சொல்லுங்கள், பெண் மதி – பெண்ணின் பேதைமை,
பேதை நாட்டு – பேதைமையுடைய என்னுடைய நாட்டிலுள்ள.

————-

பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

தழல்பிழிந்து சாறுகொண்டு சந்தனத்தி லிட்டதார்
தண்ணிலாவை யெரியெழஸ் சமைத்துவிட்ட பாவியார்
குழல் பிழிந்த விசையிலே குளிர்ந்தசிங்கி வைத்ததார்
கொடுமைவந்த காலமாசை கொண்டிருக்க வல்லமோ
நிழல்பிழிந்து பருகவென்று நினையுமசுர மருதமும்
நெறியவென்ற குரிசில்பேரை நீர்குளிக்கு நாரைகா
ளழல்பிழிந்த வேலரெம்மை யாணையிட் டகன்றதா
லந்தவாய்மை யுடல்பிழிந்தே னாவியுண்டு விட்டதே. 35

நிழல் பிழிந்து பருகவென்று நினையும் அசுர மருதம் -நிழலிலே* உயிரைப் பிழிந்து குடிக்க வேண்டுமென்று
நினைத்த அசுரர்களாகிய மருத மரங்கள், குரிசில் – சிறந்தவன், அழல் பிழிந்த வேலர் – நெருப்பைக் கக்குகின்ற வேலையுடையவர்,
ஆணை – சூள், சபதம் அந்த வாய்மை – தவறாத அந்தச் சொல்.

————

பின்முடுகு வெண்பா

ஆவியுண்டு மையுண் டறிவையுண்டு நிற்குமிரு
காவியுண்டு தாமரைக்கே கண்டீரோ – தேவியுடன்
மால்வளர்ந்த பேரையின்கண் வாவிகண்டு பூவையுண்டு
கால்கிளர்ந்த நீலவண்டு காள். 36

மையுண்டு – மை தீட்டப் பெற்று, அறிவுண்டு – மதியை மயக்கி, ஆவியுண்டு – உயிரைக் குடித்து;
காவி – நீலோத்பல மலர் போன்ற கண்கள், தாமரைக்கே – தாமரை போன்ற முகத்தில், வளர்ந்த – நீண்டகாலம் தங்கிய,
வாவி – குளம், பூவை – பூவிலுள்ள மதுவை, கால் கிளர்ந்த – சென்ற.

————–

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

வண்டிருக்குங் குழற்புறத்து வாட்டிமடித் துப்பிடித்து வடிந்த வள்ளைத்
தண்டிருக்குங் குழைமடவீர் குழைக்காதர் பேரையின் முத் தமிழே போல
வுண்டிருக்க வுவட்டாத விதழமுது மிள நீரு முங்கள் பாலிற்
கொண்டிருக்கப் பெருங்காமப் பசிக்குதவா திருப்பதுவுங் கொடுமை தானே. 37

புறத்து – அருகில், வள்ளைத் தண்டு – வள்ளைத் தண்டு போன்ற காதுகள், வடித்து – பெருக்கி,
உவட்டாத – தெவிட்டாத, உங்கள் பாலில் – உங்களிடத்தில்.

——–

வஞ்சி விருத்தம்

கொடித்தேரினர் குழைக்காதினர் குலக்கார்வரை மேற்
பிடித்தீர்தழை கெடுத்தீர்கரி பிணைத்தேடுவ தேன்
அடித்தாமரை நடப்பீரவை யடைத்தாளுவ தோர்
தொடித்தோழியர் புனச்சார்பொரு தொழுத்தாலை வே 38

பிடித்தீர்தழை – வில்லையொழித்துக் கையில் தழையை வைத்திருக்கிறீர்,
கெடுத்தீர் கரி – யானையைத் தவறவிட்ட தாகக் கூறிக்கொள்கிறீர். பிணைத்தேடுவதேன் – ஆனால் ஏன் மானைத் தேடுகிறீர்.
அடித்தாமரை – தாமரை போன்ற மெல்லிய கால்கள் வருந்த, அடைத்தாளுவதோர் தொழு – அடைத்துக் காக்கின்ற தொழுவம்,
புனச் சார்பு – தினைப்புனம், தொடி – வளையலணிந்த.

———–

கட்டளைக் கலித்துறை

தொழும்பாக்கி யண்டர் தொழக்கற்ப காடவி சூழலர்த்தே
னெழும்பாக் கியமென் றிருப்பதெல் லாமிந்து விட்டந்தட்டித்
தழும்பாக் கியபொழில் சூழ்பேரை மால்சர ணாரவிந்தச்
செழும்பாக் கியமென் றவனடி யார்பண்டு செய்தவமே 39

அண்டர் – தேவர்கள், தொரும்பாக்கி – அடிமையாகி, அடவி – சோலை, அலர் – மலர்,
எழும் பாக்கியம் – பாக்கியம் கிட்டும், இந்து – சந்திரன், விட்டம் – அடிப்பாகம்,
சரணாரவிந்தம் – பாத தாமரைகள், பண்டு – முள்.

—————

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

செய்யிற் கரும்பு வளர்பேரைத் திருமா றிருநா டனையீரும்
தொய்யிற் கரும்பு மலர்க்கணையுந் தொழிலுக் கரும்பு விழியுமதன்
கையிற் கரும்பு மலர்க்கணையுங் கைக்கொண் டதுபோற் கண்டவென்மேல்
எய்யிற் கரும்புங் கணையுமிலை இன்றைக் கிறவா திருப்பேனே. 40

செய் – வயல், தொய்யில் – மங்கையர் மார்பில் சந்தனத்தால் போடும் கோலம், தொழிலுக்கு – என்னை வருத்தும் செயலுக்கு,
அரும்பும் – தோன்றும், மதன் – மன்மதன், எய்தில் – எய்தால் (என்னைத் தழுவிக் கொண்டால்),
கரும்பும் கணையும் இலை – எனை வருத்தும் படைகள் உங்களிடம் இல்லாது போகும், இறவாதிருப்பன் – பிழைத்துப் போவேன்.

————

பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

இரும்பை நெறித்துத் துதிக்கைமடுத்
திளங்கோ மகளிர் வீரனெறிப்ப
வெதிர்த்தார் சிரத்தை நெறித்துமலை
யிடறி நெறித்துக் கடர்புறத்துச்
சுரும்பை நெறித்து வழிகறங்கச்
சுற்றும் தழைக்குஞ் செவிப்படலத்
துங்கக் களிற்றின் மிசைப்பவனி
தொழுதாள் விரகம் தொலையாதோ?
கரும்பை நெறித்து முடப்பலவின்
கனியை நெறித்து மடைமுதுகிற்
கதலிப் படலைக் குலைநெறித்துக்
கன்னிக் கமுகின் மடனெறித்துக்
குரும்பை நெறித்துத் தேனொழுகுங்
குவளை நெறித்துப் புடைத்துவரால்
குதிக்கும் புனற்பே ரையின் மகரக்
குழையே யெவர்க்குங் கோமானே. 41

இரும்பு – அங்குசம், துதிக்கை மடுத்து – யானைத் துதிக்கையில் மாட்டி, கோ மகளிர் – அரச குலத்துப் பெண்கள்,
விரல் – விரலால், எதிர்த்தார் – பகைவர். சுரும்பு – வண்டு, வழி கறங்க – வழியில் சுழலும்படி, செவிப் படலம் – செவியின் பரப்பு,
துங்கம் – சிறப்பு, பவனி – குழைக்காதர் வரும் வீதியுலா, விரசம் – காதல் துன்பம், தொழுதாள் – தொழுத தலைவி,
முடப்பலவு – வளைந்த பலா, படலைக் குலை – பரந்த குலை, மடல் – பாளை, குரும்பை – இளநீர், வரால் – மீன்.

——-

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

மானென்பார் கலையென்பார் தொடுக்க லாகு
மலர்த்தழையா லெய்ததொரு மத்த வேழந்
தானென்பார் பதியென்பார் வழியே தென்பார்
தாமரைப்பூங் கோயிலென்று தவிர்ந்த தென்பார்
கோனென்பார் குலத்துதிக்குங் கருணை மேகங்
குழைக்காதர் பேரையிளங் கொம்பே வம்பே
யானென்பா ரல்லவென்பா ரில்லை யென்பா
ரிவர்கோட்டிக் கெதிருரைப்பார் யாவர் தாமே. 42

மத்த வேழம் – மதம் பிடித்த யானை, பதி – தலைவியின் ஊர், தாமரைப் பூ – இலக்குமி உறையுமிடம்,
கோனென்பார் – தலைவர்கள், கொம்பே – பெண்ணே, வம்பே – வீணாக,அல்ல – வேறொருவன், இல்லை – ஒன்றுமேயில்லை,
கோட்டி – வார்த்தை,எதிருரைப்பார் – பதில் சொல்வார்.

———

கழித் தாழிசை

தாமோதரர் மதுசூதனர் தருபேரையின் மடவீர்
நாமோதர மாமோகினி நலமோதர மறியீர்
ஆமோதர மலவோவெளி தடியேறுடன் முனிவாய்ப்
போமோதர நினையீர்கமழ் புதுவாய் மல ரமுதே. 43

நலம் – அழகு, முனிவாய் – கோபங் கொண்டு.

———-

கலிவிருத்தம்

தேனார் பொருனைத் திருமால் தமிழ்ப்பேரை
யானாத கல்வி யறிவார் பயனன்றோ
கானார் கருங்குழலார் காமத்தின் பால் மறந்து
போனாரறத்தின் பொருட்டுப் பொருட்பாலே. 44

அமுதுர நினையீர் என்று கூட்டுக.* ஆனாத – அழியாத, கானார் – மானம் நிறைந்த, காமத்தின் பால் -காதலின் பகுதி,
அறத்தின் பொருட்டு – இல்லறம் நடத்த விரும்பி, பொருட்பால் – பொருளைத் தேடி,
திருக்குறளில் காமத்துப்பால் சிறிது, அறத்துப்பால் நடுத்தரம், பொருட்பால் மிகப் பெரிது.

——————

கலித்தாழிசை

பால்வடியுந் திரண்முலையும் பச்சுடம்பும் பசுநரம்புஞ்
சூலவடிவுந் தோன்றாமற் றூண்வயிற்றிற் றோன்றியநாண்
மேல்வடிவா மிரணியனை வினைதொலைக்குந் தமிழ்ப்பேரை
மால்வடிவாந் திருவடிவ மரகதத்தின் மணி வடிவே. 45

சூல் – கருப்பம், மேல் வடிவு – பெரிய வடிவம், வினை தொலைக்கும் – அழிக்கும்.

————

கட்டளைக் கலித்துறை

வடித்தூது சங்கொப்ப வண்டோட்டு மல்லிகை வாயிற்கௌவிப்
பிடித்தூது வண்டோடும் பேசுகிலேன் பிரியாத வைவர்
குடித்தூது சென்ற குழைக்காதர்க் கென்மயல் கூறிவரும்
படித்தூது நீசெல்லு வாய்மழை சாடும் பனிக் கொண்டலே 46

தோடு – புற இதழ், ஐவர் – பஞ்ச பாண்டவர், சாடும் – சொரியும்.

————

கழித்தாழிசை

கொண்டலைக் கோதி வகிரிட் டிருண்ட குழலாரே
குங்குமச் சேறு பூசித் திரண்ட முலையாரே
தெண்டிரைப் பாயல் மீதிற் றுயின்ற ருளுமாமால்
தென்திருப் பேரை மீதிற் சிறந்த மடவீரே
அண்டற்பொற் பூமி தான்விட் டெழுந்த ருளினீரோ
அம்புயக் கோயில் வாழப் பிறந்த வருநாமோ
தண்டமிழ்ப் பாகி னூறிக் கனிந்த மொழிதாரீர்
சந்தனக் காவி னீழற் பொழிந்து மருவீரே. 47

கொண்டல் – மேகம், அண்டர் பூமி – தேவலோகம், நாமோ – நீங்களோ – முன்னிலைப் பொருளில் வந்த தன்மை.

——-

மருத்தேற லுண்ணுங் களிவண்டு காள்வம்மின் மாலறிந்து
கருத்தே மகிழவுங் கண்களி கூரவுங் காய்கதலிக்
குருத்தே விசும்பளக் கும்பேரை மால்குழைக்காதர்செம்பொற்
றிருந்தே ரிலுங்கடி தாய்வரு மோவன்பர் தேர்வரவே 48

மருந்தேறல் – மணம் பொருந்திய தேன், மால் – ஆசை,
கதலிக்குருத்தே விசும்பளக்கும் பேரை – வாழைக் குருத்துக்களே ஆகாயத்தை எட்டிப் பிடிக்கிற – உயர்வு நவிற்சி அணி.
கடிதாய் – விரைவாய், அன்பர் -தலைவர்.

———–

எழுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

வரம்பறுங் கடற்பாயல் பிரிந்தநங் குழைக்காதர்
மகிழ்ந்ததென் திருப்பேரை வளவயல்சூழ்
கரும்பையுங் கசப்பாக விளைந்தமென் சுவைப்பாகு
கனிந்தசெந் தமிழ்ப்போலு மொழிமடவீர்
இரும்புநெஞ் சவர்க்காக நெகிழ்ந்தநெஞ் செமக்காக
விருந்துசஞ் சரித்தாவி யவர்பிறகே
வீரும்புநெஞ் செமக்காக மறந்தவன் பவர்க்காக
விரிஞ்சலும் படைத்தானென் விதிவசமே 49

பாயல் – படுக்கை, மகிழ்ந்த – விரும்பின, திருப்பேரையை மகிழ்ந்து பாற்கடலை விட்டு வந்தார் என்று பொருள் கொள்க.
கசப்பாக – கசப்பாக்கி, பாகு – தேன்பாகு, ஆவியிலிருந்து – உயிர் வாழ்ந்து, சஞ்சரித்து – நடந்து – திரிந்து,
விரிஞ்சன் – பிரமன், விரிஞ்சனும் படைத்தான்.

——–

பன்னிருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

விதிக்குந் தொழிலாற் பலகோலம்
வெவ்வே றெடுத்து நடித்தொருவன்
விளையா டுவபோற் றொலையாத
வினையிற் சுழன்று தடுமாறி
எதிற்குந் சிறிதா மெறும்புகடை
யானை முதலாந் தொல்குலத்தி
லெல்லாப் பிறப்பும் பிறந்தலுத்தே
னினியுன் திருத்தா ளெனக்கருள்வாய்
குதிக்குங் கலுழிப் பெருஞ்சுவட்டுக்
குறுங்கட் பெருவான் மழைமதித்துக்
கொலைவேட் டெழுதெவ் வுடல்பிளக்கக்
குத்தும் பிறைக்கிம் புரியெயிற்று
மதிக்கும் புகர்மத் தகமுகத்து
வரிவண் டிரைக்கும் பணைக்கரத்து
மதவா ரணத்துக் கருள்புரியும்
மகரக் குழையெம் பெருமானே. 50

விதிக்கும் தொழில் – பிரமன் படைத்த செய்கையியினால், வெவ்வேறுபல – வேறுவேறானபல, கோலம் -வேடம்,
ஒருவனே பல கோலங்களில் நடிக்கிறான், அதுபோல ஒரு உயிர் பல உடல்களில் பிறக்கிறது, எதிர்க்கும் -எதற்கும்,
யானை முதல் எறும் பீறாக, குதிக்கும் கலுழி – வெள்ளமாகப் பொங்கி வரும், சுவடு – கால், குறுங்கல் – சிறிய கல்,
வேட்டு – விரும்பிதெவ் – பகைவர், மத்தகம் – யானைத் தலை, பனை – பெருத்த.

———

எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

மகரக்குழை மாயன் பொருனைத்துறை நாடன்
மண்டங்குடி யாளுந் தொண்டன்பணி வாதன்
பகதற்கரி தாகும் பரதத்துவ போதன்
பைம்பொற்கிரி வாழுஞ் செம்பொற்கொடி போல்வாய்
சிகரத்தன பாரங் குழையக்குறு வேர்வுஞ்
சிந்துங்கனி வாயின் பந்தத்துரை மாறுந்
தகரக்குழல் சோருங் களவித்தொழில் போகந்
தங்குஞ்சுனை தானிங் கெங்குங்கிடை யாதே. 51

தொண்டன் – தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

————

சந்தக்கலி விருத்தம்

எங்குங்கிடை யாதபே ரின்பந்தரு பேரைமால்
வெங்கண்களி யானைபோம் வேள்கண்டெழு மாதரார்
சங்கங்களை வாருகே சந்தத்துழல் வருமா
தங்கங்கணி யாகவே ளம்பின்னுயிர் வாடுமே. 52

வேள் – விருப்பம், சங்கம் – சங்கு வளையல், மாது – மாதர், அணி -வரிசை, வேள் – மன்மதன்.

———–

அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

வாடு மனைத்துயிர் வாழ வளிப்பவர் மாமக
ரக்குழைமால்
கூடு புனற்றுறை யாடி யிளைத்துடல் கூறு
நரைக்குருகீர்
பேடையை விட்டக லாதிரு முத்தமிழ் பேரறி
விற்குணமே
யாடவ ரிப்படி போன பிழைக்கினி யாரை
வெறுப்பதுவே. 53

ஆடவர் – தலைவர்

———–

பதினாங்கு சீர்ச் சந்த விருத்தம்

ஆர்வெறுப்பினு மயல் வெறுப்பினு மன்னைமார்கள் வெறுப்பினு
மமுதசந்திர கலைவெறுப்பினு மந்திமாலை வெதுப்ப வேள்
போர்வெறுப்பினு மறலிவந்தொரு புடைவெறுப் பினும் வளைகடற்
புடவியேழும் வெறுப்பினுமொரு பொருளதாக நினைப்பனோ
வார்வெறுத்தெழு கொங்கையீமக ரக்குழைத்திரு
மாயனார்
மார்பிடத்தும் வரைப்புயத்தும் மணந்தணைந்து
முயங்குபைந்
தார்வெறித்துள வாயினுஞ் சருகாயினும்
பெற விட்டதோர்
சாமகீத மொழிச்சுரும்பொடு தான்வெறுப்பில
தாகியே. 54

அயல் – அயலார், வெதுப்ப – சுட, வேள்போர் -மன்மதன் செய்யும் போர், மறலி – எமன், புடை -பக்கத்தில்,
கடல் வளை – கடல்சூழ்ந்த, புடவி – பூமியிலுள்ளார், முயங்கு -உடலிற் கலந்த, வெறி -மணம்,
பெறவிட்டது – தலைவி பெறத் தலைவன் அளித்தது, சுரும்பு – வண்டு, வெறுப்பிலதாகி -விருப்பங்கொண்டு.

——–

அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

இலதாகி யுளதாகி யுடலாகி யுயிராகி யிருளாகி
யொளியாகநீ
பலதாரை வெகுமாயை விளையாடு குணநீதி
பலதேவ ரறிவார்களோ
மலருடு கயல்சாட மதகூரு புனல்சாடி வருபேரை
நகராளனே
சிலபேர்க ளறிவார்கள் சதுவேத முதுபோத
தெளிஞான முடையோர்களே. 55

தாரை -ஒழுங்குமுறை.

—–

புய வகுப்பு

முப்பத்திரண்டு சீர்க் கழிநெடிலடியாசிரியச் சந்த விருத்தம்

உடையக் கலசத் தயிர் கொட் டியெடுத்
திதழ்வழி யொழுகிய திவலை பொழிந்தன
உரலைக் கதவுக் கடையிட் டுயரத்
துறிபல தடவிய நறுநெய் கவர்ந்தன
உடல்கட் டிறுகத் தொழில் மற் பிடியிட்
டசுரரை யெமபுர மளவு துரந்தன
உயிரைப் பருகக் களவிட் டலகைப்
பணைவரை முலைமுக நெருடி யிருந்தன.
படியிற் றுடைபட் டுழலக் கனகனை
நகநுனி யுழுதிடு செருவி யிடந்தன
பனையிற் கனியொத் திருபது முடியத்
தலையுருள் படவடு பகழி சொரிந்தன
பரிதிக் கதிருட்புதையத் தமணப்
படநிழல் கெழுமிய திகிரி சுமந்தன
பருமச் சிகரக் கயிலைப் பரனுக்
கிடுபலி கெடநிறை பரிசில் வழங்கின
கடலைக் கடையப் பருமத் துவலித்
திமையவர் பசியற வமுதம் விளம்பின
களபத் தெளியிற் றுளபத் தொடையில்
பரிமள ம்ருகபத முழுகி யளந்தன
கனவட் டமுலைத் திரள்பட் டுருவிப்
பொதுவியர் வரிவளை பொருது சிவந்தன
கமலத் தவளைத் தழுவிக் களவியி
லிளகிய புளகம தொழுகி மலிந்தன
மடையிற் கழியிற் பொருனைத் திரையினி
லுதறிய வரிமண லலகு நெடும்புழை
மதகிற் கதலிப் படலைக் குலையினில்
வளமுக கடவியில் மருவி வலம்புரி
வயலெக் கரிடப் புதுமுத் தமிழ்சொற்
குருகைய ரதிபதி பரவு நெடுந்தகை
மகரக் குழையுத் தமனித் தியனுயர்
பரகதி முதலவ னணிபொற் புயங்களே. 56

திவலை – தயிர்த்துளி, கதவுக்கடை – கதவின் அருகில், உயரத்து – உயர்ந்த இடத்திலுள்ள,
மல்தொழில் பிடி – மற்போரில் செய்கின்ற பிடிகள், துரந்தன – செலுத்தின, களவிட்டு – வஞ்சகமாக வந்த,
அலகை – பேய்ப்பெண் பூதனை, பணைவரை – பெருத்த மலை, படியில் – பூமியில், துடை – தொடை,
கனகன் – இரணியன், உருள்பட – உருள, பகழி – அம்பு, கதிருட் புதை அத்தமனம் – சூரியன் மறைந்த அந்திப் பொழுது,
நிழல் கெழுமிய – ஒளி நிறைந்த, திகிரி – சக்கரம், பருமச் சிகரம் – உயர்ந்த உச்சி, பலி – பிச்சை,
பரிசில் – வெகுமதி, பருமத்து வலித்து – பெரிய மத்தை இழுத்து, விளம்பின -பறிமாறின, தெளி – குழம்பு,
தொடை – மாலை, மிருகமதம் – மான் மதம், கத்தூரி, பொதுவியர் – இடைச்சியர், கமலத்தவள் – இலக்குமி,
புளசம் – மயிர்க்கூச்செறிதல், புழை – துவாரம். வலம்புரி – சங்கு, எக்கர் -மணல், குருகையரதிபதி – நம்மாழ்வார்.
பரவுநெடுந்தகை – போற்றப்படும் பெரியோன், பரகதி – மோட்சம், முதலவன் – முதன்மையானவன், அளி – அழசிய.

——–

குறம் – பதினான்கு சீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

புயங்க சேகர முயங்கு நாடதி
புகழ்ந்த பேரையை வணங்கியே
புரிந்த வாய்மையி னிகழ்ந்த மாகுறி
புகன்று வாழ்குற மடந்தை நான்
இயங்கு மாகெவு ளியும்பொ லாதல
விருந்த மாநில மிணங்கவே
யிசைந்து மாநிதி துலங்க வேயருள்
பொருந்தி வாழுவை யிலங்கிழாய்
வயங்கு மாதலை வரைந்து பேரதில்
வளங்கொள் சேவக ரிரண்டுபேர்
வளர்ந்த நாவல ரிரண்டு பேரோரு
வனுந்த ராதலம் வணங்குவோ
னுயங்கி நானுடல் வருந்தி னேனெழு
குழந்தை வாய்பசி யடங்கவே
யுடந்தை யாயொரு சிறங்கை கூழிடு
கிழிந்த தூசுரு ளுறங்கவே. 57

புயங்க சேகரம் – அரவளிந்த, முயங்கு – பொருந்திய, நாடகி – நடிக்கின்ற பெண், காளி, புரிந்த வாய்மை -சொன்ன சொல்,
கெவுளி – பல்லி சொல், பொலாதல – நன்மை செய்யும் குறிதான், இருந்த மாநிலம் – வாழ்கின்ற ஊர்,
இணங்கவேயிசைந்து – சம்மதம் பொருந்தி, இலங்கிழாய் – விளங்கும் ஆபரணத்தையுடைய பெண்ணே,
சேவகர் – வேலை செய்வோர், நாவலர் – புலவர், உயங்கி – வருந்தி, உடந்தையாய் – மனமிசைந்து, சிறங்கை – கைகொள்ளுமளவு,
தூசு – கூட்டத் தலவர் ஐந்து பேர் – நன்கு விளங்கவில்லை, திருமால், சிவன், அயன், விநாயகன், முருகன் இவர்களைக் குறிக்கலாம்.
பசியால் அழுத குழந்தை வாய்மூடச் சிறங்கை கூழிடு; உறங்கக் கந்தை கொடு என்பது பொருள்,

———-

கொற்றியார் – எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

அரங்கத்து ளேதுயிலு மருஞ்சக்ர பாணிவய
லகஞ்சுற்று பேரை நகர்வாய்
விரும்புற்ற தாமமுலை யரும்பித் தாமரையில்
விளைந்துக்க மாமணி கொலோ
கருங்கற்றை வார்குழலை முடிந்திட்ட நாமமொடு
கலந்திட்ட தாவடமு மாய்
வருங்கொற்றி யாரழகி னரங்கொற்றி யாடலது
மருங்கொற்றி யாரறி வரே 58

கொற்றியரா – கலம்பகத்தின் உறுப்பு,
வைணவ சின்னம் பூண்டு பிச்சைக்கு வருவோர்கள் மீது காதல் கொண்டு ஒரு காமுகன் கூறுவதாகச்
சிலேடை பொருள்பட வருவது இச்செய்யுள். வயலகம் – வயலிடம், தாமம் – மாலை,
தாமரையின் மாமணி – தாமரைக்காய் மாலை, அரும்பித்த – மலர்ந்த, நாமம் -திருமண் காப்பு,
தாவடம் – முத்து மாலை, அரங்கு – நாடக மேடை, ஒற்றி – இசைந்து, மருங்கொற்றி – அருகேயிருந்து கவனித்து.

————–

சந்தக்கலி விருத்தம்

வருகார்முகில திருபேரையி லமர்பூ வணைசேர்
பெருவாழ்வொடு மொருநாளவை பிரிவோ மலவே
திருவேயமு துருவேபொரு சிலைவேள் குருவா
முருவேறெம துடல் வேறெம துயிரோ குயிசரே. 59

பூவணை – மலர்ப் படுக்கை, அமுதுரு – அமுதம் போன்ற வடிவம்.

————

நேரிசை வெண்பா

உயிர்முடிக்குஞ் செவ்வந்தி யுண்டெனவே கோதை
மயிர்முடிக்குஞ் செவ்வந்தி வையாள் – அயனார்
பெருந்துளதிக் கேகமும் பேரைமால் சாத்து
மருத்துளதிக் கேமயலா வாள். 60

உயிர் முடிக்கும் – உயிரை அழிக்கும், செவ்வந்தி – சிவந்த அந்தி மாலை, மயிர் முடி – கூந்தல்,
செவ்வந்தி – செவந்திப்பூ, மருந்துளதி – வாசனை பொருந்திய துளசி, மயல் – ஆசை.

————-

எழுசீர்க் கழிநெடிலடி சந்த விருத்தம்

மயலற் றவைக்கருள்செய் மகரக் குழைக் கடவுள்
வயிரப் பொருப்பி னயல்சூழ்
முயலைத் துடைத்துமதி யதனைப் பதித்ததென
முகவட்ட மிட்டு வருவீர்
புயலிற் கறுத்தகுழல் வரையிற் பணைத்தமுலை
புளகிக்கி விற்று வீடும்வே
ரயலற்ற வற்பவிடை திருநெற்றி யிற்றலதே
மழியத் துடைப்ப தழகே. 61

பொருப்பின் – மலையிடத்தே, முயல் – சந்திரன் கறை, மதி – சந்திரன், முகவட்டம் – முகத்தில் பொட்டு,
புயல் – மேகம், புளகிக்கில் – புளகித்தால், கூச்சமடைந்தால், அற்பஇடைவேரற்றுவிடும்;
ஆகையால் திலகத்தை அழித்துவிடுவீர், அழகு – நல்லது.

—————–

அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

அழகு தங்கிய மகர வண்குழை யமலர் தண்கிரிவாய்
நுழை நுழைந்தென துயிரை யுண்டது நுவல வும்படுமோ
மழை சுமந்தலை கடல் சுமந்திணை மலை சுமந்தருளே
தழைய வந்தொரு பொழிலி னின்றது தனியிளங் கொடியே 62

நுவலவும் படுமோ – சொல்லும் தரமோ. மழை – கூந்தல், கடல் – கண்,
மலை – கொங்கை, கொடி -பெண் கொடி காட்சி யென்னும் துறை.

———

ஒன்பது சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்

இளங்கொடி யிணங்குமுது சூழல்
நெருங்கிய பொதும்பர்வெளி நீழல்
இதண்புடை யிருந்து விளையாடி நீர்
விளம்பிய குளிர்ந்த மொழி யூடு
கரைந்தது கருங்கலினை வீசி
வெறுங்கவ ணெறிந்துபய னாகுமோ
வளந்தலை மயங்குதமிழ் நாடர்
செகந்தனில் முகுந்தர்வரு பேரை
மடந்தையர் வணங்கு மபிஷேகமே
தெளிந்தசொ லினிங்களென நூறு
பசுங்கிளி விழுந்தபுன மீது
செழுந்தினை விளைந்துகரை யேறுமே. 63

பொதும்பர் – சோலை, இதண் – பரண், அபிஷேகம் – முடிபோறாள், புனம் – திணைப்புனம்,
கறையேறுமே – மாசூல் கைக்குக் கிடைக்குமோ?

————

களி – பதினான்குசீர்க் கழிநெடிலடிச் சந்தத் தாழிசை

கரைபடைத் தமடைமுது குடைப்ப வொரு
கயல் படைத் துலவு பேரை மால்
கருணையைப் புகழ வரு பரப்பிரமர்
களியர்கா னறியு நறவுமாய்
வரிசையிட்டன ளிலச்சி யாகினி
வலைச்சியைத் தொழு மடத்துளே
மதுக்குடந்தனை யெடுத்துவைத் ததனை
வளைய வைத்து நட மாடுவோம்
விரிசடைக் கடவுள் புரமெரித் ததுவும்
விடமிடற் றிடை செறித்ததும்
வேலுடைக் கடவுள் சூரனைச் சமரில்
வென்றதும் பொருது கொன்றதும்
அரிமலர்ப் பிரமனறுதலைக் குடுமி
யறுதலைக் குறை முளைத்ததும்
அன்று பஞ்சமிதன் மந்திரப் பெருமை
யன்றி வேறு வரமல்லவே. 64

களி – குடியர் கள்ளைச் சிறப்பித்துக் கூறுவது, களியர் – குடிகாரர், நறவு – கள்,
இலச்சி யாகினி வலச்சி – பரவும் தெய்வம், பஞ்சமி – கள், மந்திரப் பெருமை – மந்திர சக்தி.

————

பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

அல்லிக் கமல மடிபெயர வருகிற் குவளைக்
கழுத்தொடிய
வாம்பற் குழுவின் மடலுடைய வலையிற்
றுளைத்து கரையேறி
நெல்லிற் புகுந்து கொடிவள்ளை நெரியத் தவழ்ந்து
பணிலமணி
நிலவைப் பொழியுந் தமிழ்ப் பேரை நெடுமால்
பொருனைத் திருநாட்டின்
வல்லிக் கொடியே மடப்பிடியே வனசத் திருவே
யமுதுருவே
வயிரக் கொழுந்தே மரகதமே மயிலே யனையீர்
மழையருவி
கல்லிற் பொருத வரைச் சாரல் கடிகாவனைத்துந்
தொலைத்தன னென்
கையுந் தழையுமுகம் பார்த்துக் கருணை புரியக்
கடவீரே. 65-

அல்லி – அகவிதழ், பணிலம் – சங்கு, மணி – முத்து, வனசம் – தாமரை.

—–

வஞ்சித்துறை

வீர மாரனா

லார மாலை வேம்
நேர மாலை தா
நேர மாலை தா
பேரை மாயனே. 66-

ஆரம் – முத்து, வேம் – வெப்பந்தரும், நேர – எனக்குக் கிடைக்கும்படி.

———

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியத் தாழிசை

பேரை வளம்பதி மாலே பேதையை வந்தணை யாநா
ளீர நறுங்குழ லாரே பேதை நினைந்தினி நோவேன்
மார சரம்படு பூவோ வாரி விடும்பனி நீரோ
ஆர வடம்படு தூளோ வாவியை யுண்டது தானே. 67

மாரசரம் படு பூ – மன்மதன் அம்பாக விடுகின்ற பூ, ஆரவடம் – முத்துமாலை.

———–

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

கார் காலம்

தான் குதிக்கு மந்தியுமீ றந்தி மாலைத்
தழல் குதிக்கு மெனத் துணையே தழுவுங்காலம்
தேன் குதிக்கு மிதழியும் பொன் சிதறுங் காலம்
திருந்திழையார் விழித்தாளஞ் சிந்துங் காலம்
நாங்குதிக்கு மொழுங் குதிக்கும் படியே வந்த
ஞானவரோ தயன்பேரை நகர்வாய் வட்ட
வான் குதிக்குங் காலமவர் மறந்த காலம். 68

மந்தி – பெண் குரங்கு, இதழி – கொன்றை, தரளம் – முத்துப்போன்ற கண்ணீர், ஒழுங்கு – நியாயம்,
ஞான வரோதயன் – சிறந்த ஞானத்தால் அறியப் படுவோன்.

——————

தரவு கொச்சகக் கலிப்பா

மறம் புரியுந் திகிரியுடன் வலம்புரியுந்தரித்து நமக்
கறம் புரியுங் குழைக்காத ரருட்டேரை யுயர் நகர் வாய்ப்
புறம் புரிய மணிப் புரிசைப் பொறி சுமக்குந் துகிற் கொடிக
ணிறம் புரியும் புயல் குளித்து நீணிலவிந் துவக்குமே. 69-

புரிசை – மதில், புயல் – மேகம், துவக்கும் – கட்டும்.

———

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

நீணி லாவெழும் பளிக்குமண் டபத்திடை
நின்றுதன் னிழற் கோலங்
காணி லாயிழை யொருத்தியென் றழைக்குமென்
கன்னியைத் தழுவாயோ
தூணி லாடக னுரம் பிளந் துயிருணத்
தோன்றிய நெடுமாலே
கேணுலாவிய தடம் பொழிற் பேரைவாழ்
திருந் தெழிற் குரியானே. 70-

எழும் – செய்யும், பளிங்கு மண்டபம் – கண்ணாடி மண்டபம், நிழற்கோலம் – பிரதிபிம்பம்,
ஆயிழை ஒருத்தி – வேறு ஒரு பெண், ஆடகன் – இரணியன், உரம் – மார்பு, திருந்தெழில் – சிறந்த அழகு.

————

அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

உரிசை மாவுள வொழுகு தேனுள வுறைகொள் கூவலின் வாய்
விரியு நீருள பதியி னீரினி விடிய வேகுகவே
யரிவை வாடின ளிறைவ பேரையி லமர மால்வரைவா
யிரவி போனடி னொருவர் போகில ரெயினரோ கொடிதே. 71

உரிசை – ருசி, உறை – கிணற்று விரிசுவராகிய உறை, கூவல் – கிணறு, பதியில் – ஊரில் தங்கி,
எயினர் ஒருவர் போகிலர் – வேடர் ஒருவர் கூடப் போகவில்லை, ஓ!கொடிது – மிகவும் கஷ்டம்,

————–

கட்டளைக் கலிப்பா

கொடியளந்த வசோதைகை மாறஞ்சிக்
குழை தொடுங் கைக்குழைக்காத ரேயும
தடியளந்த வுயிர் யாவும் வாழவன்
றாழிகொண்ட மரக்கால் பதித்துநீர்
படியளந்தது போதாம லன்னமும்
படைத்திருப்பது பாலனென்றோதலால்
மிடியளந்த வறிஞரைப் போலன்று
வெண்ணெய் தொட்டுண்ட தென்ன விநோதமே 72-

கொடியள் அந்த அசோதை – கொடுமை செய்து பிரசித்தி பெற்ற அசோதை , மாறு – விளார், பிரம்பு;
குழைதொடும் – தோப்புக்கரணம் போடக் காதைப் பிடிக்கும், அடியளந்த – காலால் அளந்த, ஆழி – சக்கரம்,
அமரக்கால் – தெய்வத்தன்மை வாய்ந்த கால், படியளந்தது – பூமியை அளந்தது உணவு கொடுத்தது,
பாலன் – காத்தற் கடவுள், மிடியளந்த – வறுமையிலே வளர்ந்த, தொட்டுண்டது – களவிலுண்டது,

————-

பன்னிரு கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

என்னைத் தனியே புதுநிலவுக் கிரையிட்டிருக்கக் கடவீரோ
எரிவாய் மடுக்கும் பணிவாடை யிளமைப் பயனு மடநாணுந்
தின்னக் கொடுத்து விடுவீரோ தீரா விடும்பை யிவை யனைத்துந்
தீர்க்கும்படியே செழுந்துளபத் திருத்தார் கொடுத்து விடுவீரோ
கன்னற் கனிவாய்ப் பாலொழுகக் கதலிக் குலைவா யமுதொழுகக்
கருங்காவியின் வாய்த் தேனொழுகக் கமலத்தவர் வாய்த் தாதொழுகச்
செந்நெற் குலைவாய்ப் பாலொழுகச் செழுந்தாண் மேதி புகுந்து முக்குந்
திரைநீர் பெருகு வயற்பேரைச் செல்வக் கருணைப் பெருமாளே. 73-

வாய் மடுக்கும் – வாயிற் கொண்ட, இடும்பை – துன்பம், கனிவாய் – கனிந்து, செழுந்தாள் – பெருத்த கால்கள்

——-

கட்டளைக் கலித்துறை-

மாவாய்க் கிழிக்குங் குழைக்காதர் பேரை வளை கடனீர்
நாவாய் படைத்துப் பயனென் கொலோ நடுச் சொல்லறியாப்
பூவாய் குடைந்து செழுந்தா தளைந்து பொதிந்த தென்றற்
றீவாய் மறலி யெனவந் துலாவுமித் தென்றிசைக்கே 74

வளை – வளைந்த, நாவாய் – நாக்கையுடையவாய், தோணி, நடு – நடுவுநிலைமை.

————–

எண்சீர்க் கழிநெடிலடி சந்தத் தாழிசை-

தெற்குத் திசை நோக்கித்திரு வரங்கத்திடைத் துயில்மால்
தென்பேரையி லன்பாகிய செம்பொற்கிரி மடவீர்
அற்பத்தழை கண்டான்முலை யாளுக்கி டொணாதோ
அருமைப் பணி விடைபோதவு மடியேனுள நலனோ
கற்பித்தன செய்வேன்கடி காவிற்றழை கொய்வேன்
காமன்கையில் விலையோவிரு காதோலை யிலெழுதா
விற்கத்திரு வுளமோவெனை மேவத்திரு வுளமோ
வினையேனொரு பிழைநூறிது விண்ணப்ப முமக்கே. 75-

எழுதா -எழுதி.

——–

அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்

கேச வாமழை வள்ளலே கேழ லாயதிர் கொண்டலே
யீச னேதிகழ் பேரைவா யிறைவனேயென வெண்ணியே
நாச வாழ்வை முனிந்துநீர் நாரணா நமவென்றுவாய்
பேசு வீரறி கின்றதே பிறவி வேரரிகின்றதே. 76-

கேழல் – வராகம், அறிகின்றதே பேசுவீர்.

———–

சித்து

ஐம்பத்து நான்கு சீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

அரிபாளை நறவூறு முதுதாழை கொண்டல்
முடிசூடி வெளிகீறு சுடர்கால் குடைந்து
புனல்வேலி வலிஞாழல் கனிசூ ரலம்பு
முழுமூடு படமோதி வரைவா யிறங்கி
யழல்சீறி நிழல்மாறி மலைவேக வெம்பு
சுரமாறி நிரையாயர் நிலமே கடந்து
தத்திவீழ் பொருநை வந்தநாள்
அலையேறு புதுநீரி லெதிரேறி நின்று
வலைவாணர் புனல்சாய மணிவா லறைந்து
கழைபாற விடுதோணி தடுமாற வுந்தி
வளர்யானை கொடுபோன சுழியூடலம்பி
யகிலார மணநாறு வெகுசே றளைந்து
முடிகூடு நரைபோலு நுரைமாலை சிந்த
முத்த வால்வளை கறங்கவே

மருவீதி மலராடை புனைமார் பணிந்து
துறைதோறு மருகோடி விளையாடி யங்க
ணலையாத கயமூழ்கி யணைகோடு கண்டு
மதகோடு மடைதாழ வினைமேலெழுந்து
வயலாமை கொழுமேழி முகவாய் முறிந்து
கடுமேதி தடுமாற வுளவான் மலங்க
வெக்கர் பாய்மணல் மருங்குறா

மடவாழை குலைசாய நிலைசூழ் கரும்பு
புடை போல வளர்பூக முடல்கூன மந்தி
தளை மீறி யுமிழ்தேனின் மறுகா றதும்ப
மடநாரை பெடையோடு மலர்மே லொதுங்க
வரிவாளை குதிபாயும் வளநா டுகந்த
நெடுமாய னருள்பேரை நகர் வாழ் வுகந்த
சித்தரேமடி பணிந்து கேள்

திருமாது பிரியாத மடமாது செம் பொன்
றுருவான தொருவேரி லதுமா லறிந்த
வொருமூலி தடவாமு னரனார் பசும்பொன்
னிறமான பிரமாண மறைநூலி லுண்டு
சிலையான வடமேரு வரனா ருகந்த
துரையாணி யொருகோடி யிழையாத செம்பொன்
வைத்த தார்பெருமை யும்பரூர்

சிறுகாலை நிறமான கனகாதி யெங்கள்
குருநாதர் பரிவான மதிபார முண்டு
மதராஜ னுபதேச மொருபூ மருந்து
மடமாத குறவோடு விளைபா டகங்கள்
திரைதாவு கடலூடு படுதீவி லொன்று
பெயரீழ நவகோடி மணிசாடு கின்ற
வித்தையோ புதுமை யின்று நீ

சருவாம லொருபூத ரணுகாம லஞ்சு
தலைவாச லடைதாழி டருகே யிருந்து
குகைமூடு யுமிபோடு கரிபோடு செம்பி
லரிதார மிடுதார முதலா மிரும்பு
தனிலூத விடிவேறு தவறாது செம்பொ
னதுவார முடனோது முபதேச மந்த்ரம்
அப்பனே அமுது கொண்டுவா.

தலைவாழை யிலைமீது படைகோழி கொன்று
பொரிகாடை கதுவாலி மிளகான நன்று
சருகாமை கொடுனாவென் றுயிர்கா னுடும்புசாளை
கயல்தேளி சிறுசாளை பொடிபாதி நண்டு
தயிர்மாறி பருமாறு திரன்பால் சொரிந்து
பணியார வகைபோடு நளபாக முண்ட
தப்படா களப சந்தமே. 77-

தாழை – தென்னை, ஞாழல் – குங்கும மரம், சூர் – மூங்கில், மூடு – மரம், சுரம் – பாலை நிலம், ஆயர் நிலம் – முல்லை,
வலைவாணர் – நெய்தல் நில மக்கள், கழை – தோணியைத் தள்ளும் மூங்கில் கம்பு, உந்தி – தள்ளி, ஆரம் – சந்தனம்,
முடிகூடு – மயிர் முடியில் ஏற்படும், வால் வளை – வெள்ளிய சங்கு,கோடு – உச்சி, மேழி – கலப்பை, மேதி – எருமை,
ஆன் – பசு, மலங்க – வருந்த, எக்கர் – மணல்மேடு, மறுகால் – நிறைந்த தண்ணீர் வடியுமிடம், உரையாளி – மாற்று அறிவிக்கும் ஆளி,
உம்பரூர் – தேவ லோகம், சருவாமல் – திகைக்காமல். ஒரு பூதர் – ஒரு மனிதர், அஞ்சுதலை வாசல் – ஐம்பொறி,
தாழிடு – தாழ்ப்பாள் போடு, குகை – பொன்னையுருக்குங் கூடு, அரிதாரம் -உருக்குவதற்குப் பொன்னுடன் கலக்கும் மருந்து,
விடிவேறு – விடியும் பொழுது, வாரம் – பட்சம், அமுது – உணவு, தலைவாழையிலை – பெரிய வாழையிலை,
என்னுயிர் – எனக்கு மிகுந்த விருப்பம், கயல், தேளி, சாளை – மீன்வகை, மாரி – மழைபோல,
பணியாரம் – பட்சணம், அப்பு – பூசு, சந்தரம் – சந்தனம்.

———-

எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

சந்தனக் காவில் வந்துநிற் பீ்ர்தம்மு டங்குளித் தாசலாடுவீர்
பந்தடித் தானும் மருங்குபற் றாது பண்பலக காணுமாதரே
தெந்திருப் பேரை வண்குழைகா காதர் திண்கிரிச் சாரல்மீதிலே*
மைந்தரைச் சீறி யுங்கள் நீட்டுர வஞ்சகக்காவி தாவுமே* 78-

தடம் – சுனை, மருங்கு – இடை, நீட்டுரம் -கொடுமை, காவி – கண்கள்.

———–

மடக்கு-கட்டளைக் கலிப்பா-

தாவு யுண்ப துறிமுகப் பாலையே
சயன போகத் தலமுகப் பாலையே
தேவி யென்பது பங்கயத் தாளையே
தேவர் கோன்விரும் பங்கையத்தாளையே
யாவு மாய்வந் துதிப்பது மாயனே
யென்று பன்னித் துதிப்பது மாயனே.
நாவி லோதுவ துன்றிருப் பேரையே
நான் வணங்குவ துன்றிருப் பேரையே. 79-

உறிமுகப் பாலையே – உறியிலுள்ள பாலையே, சயன போகம் உகப்புத் தலம் – படுக்க இனிதாய் மகிழ்ச்சி தரும் இடம்,
ஆலையே – ஆலிலையையே, பங்கயத்தாளையே – தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமியையே,
தேவர் கோன் அங்கை அத்தாளையே விரும்பும் என்று பொருள்,
ஆயனேயென்ற உதிப்பதும் – கண்ணனாக வந்து அவதரிப்பது. பன்னி – சொல்லி, மாயனே – மாயையுடையவனே,
திருப்பேரையே – அழகிய திருநாமங்களையே; திருப்பேரையென்னும் ஊரையே.

———–

வஞ்சி விருத்தம்

பேரி யம்பிலன் பேரைமால்
வேரி யம்புனல் வெற்பில் வேள்
காரி யம்பறை கண்கள் வேல்
வாரி யம்பெனன் மானு மே. 80

இச்செய்யுள் கடைமடக்கு. வேரி – மணம், வேள் காரியம் பறை – மன்மதன் தொழிலைக் கூறும், வாரி – கடலை, மானுமே – நிகராகுமே.

————

பதினான்கு சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

மானுடன் பிறந்து கலையுடன் வளர்ந்து
மதியுடம் பழுக்கறத் துடைத்து
வள்ளையுங் குமிழுங் குமுதமும் பதித்து
மாசறக் கடைந்த வேல் கிடத்திக்
கூனுடன் கிடந்த தடஞ்சிலை தொடுத்துக்
கொடுங் கொலைத் திலதமிட் டெழுதிக்
குருகுலப் பிரமன் பெருமையிற் படைத்த
குளிர்முகத் திருவை நீ தருவாய்
கானகம் புகுந்து விராதனை வதைத்துக்
கவந்தனைக் கவர்ந்து சூர்ப்பனகை
கரியமூக் கரிந்து கரனுக்குயிர் குடித்துக்
கருங்கடல் வழிபடக் கடந்து
போனது மரக்கன் புகுந்தது முடிவிற்
புரந்தரன் பெருந்தவ மெனமுன்
பொருதவா மகரக் குழையனே கருணைப்
புனல்வளம் பொழிந்தகார் முகிலே. 81-

மதி, வள்ளை, குமிழ், குமுதம், வேல், சிலை இவை முறையே முகம், காது, மூக்கு, வாய், கண், புருவம் இவற்றுக்கு உவமை.
மான் – சந்திரன் களங்கம், கலை – சந்திரகலை, குருகுலம் – குருகுல வாசம் பண்ணி,
திரு -இலக்குமி போன்ற மகள், வழிபட -வணங்கி வழிபட.

——–

அம்மானை – கலித்தாழிசை-

காரையூர் வண்ணர் குழைக் காதர் சிலைப் போர் விசயன்
தேரையூர் மாலாய்த் திரிந்தனர்கா ணம்மானை
பேரையூ ரென்றிவர்தாம் பேசுவதே னம்மானை
பின்னைமால் கொண்டிருந்தாற் பேசாரோ வம்மானை 82-

காரை ஊர் – மேகத்தில் பொருந்திய, வண்ணர் – நிறத்தை உடையவர். விசயன் – அருச்சுனன்,
தேரையூர்மால் – தேரை ஓட்டுகிற கண்ணன், தேரையூரிலுள்ள விஷ்ணு; பின்னை மால் – நப்பின்னைப் பிராட்டியிடம் காதல்,
மால் கொண்டிருந்தால் – அறிவு மயக்கம் கொண்டிருந்தால், பின்னைப் பேசாரோ – அதன் காரணமாகப் பேச மாட்டாரோ?

———-

கைக்கிளை மருட்பா-

அம்மா னகையு மடுகின்ற மால்பேரை
யெம்மாவி கொண்ட திவணகையே – பெம்மான்
வரிசிலை வடவரை வளைத்த பின்றைத்
திரிபுரஞ் செற்றதுந் திருமுன் னகையே 83-

அம்மான் – மாமனாகிய கம்சம், நகையும் சுடுகின்ற -சிரிப்பையும் ஒழித்துக் கொன்ற, பேரை – பேரையில்,
இவள் தலைவி, ஆவியுண்டது – உயிர் கவர்ந்தது, பெம்மான் – சிவபெருமான், சிலை – வில்லாக,
வடவரை – மகா மேருமலை, செற்றது – அழித்தது, முன் – முன்னே, தோன்றின, திருநகை – அழகிய சிரிப்பு.

——–

நேரிசை வெண்பா-

நகைத் தாமரை புரைதாள் நாயகனார் பேரை
யகத்தா மரை யமுதே மன்னாள்–முதத்தழகு
தான் பிடித்த செல்வம் தாம் பிடிக்க மாட்டாமல்
வான் பிடித்த தன்றோ மதி 84-

நகை – ஒளி, புரையும் – ஒக்கும், பேரையகம் – பேரைத்தலம், தாமரையமுதம் – தாமரையில் இருக்கும் இனிய இலக்குமி
அன்னாள் – ஒப்பானவள். பிடித்த – கொண்ட, தரம் பிடிக்க மாட்டாமல் – அழகின் தன்மை யறிந்து ஒப்பாக மாட்டாமல்,
வான் பிடித்தது – வானத்தில் ஓடி ஒளிந்தது.

————

ஒன்பதின்சீர் வண்ண விருத்தம்

மதிக்கும்பெரு மாள்மதி வார்சடை
முடிக்கும்பெரு மாளய னாரிரு
வருக்கும்பெரு மானெனு மாமறைநூல்
துதிக்கும்பெரு மானெளி யோர்பிழை
பொறுக்கும்பெரு மாளடி யார்வினை
தொலைக்கும்பெரு மாள்வரு பேரையிலே
குதிக்குங்கயல் போல்விழி யீரினி
யிறக்குங்குழை யார்முனம் வார்மனங்
கொதிக்கும்பத மானது தானறியீர்
அதிக்கும்பசி யென்னது தூதையில்
வடிக்குஞ்சிறு சோறிடு மாறிடும்
அறத்தின்பய னாவது தானிதுவே 85-

மதிக்கும் – எல்லோரும் பாராட்டும், மதிவார் சடை முடிக்கும் பெருமான் – சந்திரனை நீண்ட சடையிலே சூடும் சிவபெருமான்,
அயனார் – பிரமன், எனும் – என்று தலபுராணம் கூறும். மறைநூல் – வேதம். துதிக்கும் புகழைக் கூறும், தொலைக்கும் – தீர்க்கும்,
இறக்கும் குழை – நீண்டு தொங்கும் காதணி, கொதிக்கும் பதம் – மிகுந்த வெப்பம் தரும் நிலை,
அதிக்கும் – அதிகரித்துக் கொண்டே வரும். தூதை – பானை சோறிடும், பசி மாறிடும்; அறத்தின் பயனாவது இது தான். அறம் – இல்லறம்.

——————

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

வேயிருந் திசைத்த செவ்வாய் விண்ணொடு பிறந்த மேகம்
பேயிருந் தலறக் கொங்கை பிசைந்துண்ட பேரை மாயர்
தூயபைந் துளப நாறுந் துணையடிக் கமலப் பூவே
மாயவெம் பிறவி நோய்க்கு வாசட மருந்து தானே. 86-

வேயிருந்திசைத்த – புல்லாங்குழலை வைத்து ஊதின, விண்ணொடு – விண்ணில், மேகம் – மேகம் போன்றவன்,
பேய் – பூதனை, நாறும் – கமழும், துணை -இரண்டு, வாசடம் – வைத்திய நூல்.

———–

மதங்கியார் – எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

மருதொடித்து நெடியசாடு மடிபடத் தவழ்ந்த மால்
வழுதிநாடு பாடியாடி வந்தமா மதங்கியார்
முருகெழக் கிடந்தலைந்து முகிலுலாவு மளகமும்
முனிவருக்கு மயலளித்த முகிழ்நகை ப்ரதாபமும்
இருகவட்டு முலைமுகத்தி லெழுதிவிட்ட தொய்யிலும்
இளைஞரைத் தொடர்ந்துகொல்லு மின்பவே லிரண்டுமற்
றொருபிறைக் கொழுந்திலன்னை ஓதியிட்ட திலகமும்
உயிர்பறிக்கு மியமனுக்கு பாயவித்தை காணுமே. 87-

மதங்கியார் – வாளைக் கையில் பிடித்துச் சுழற்றியிடுகின்ற பெண், சாடு – சகடு, வண்டி; மடிபட – இறந்து வீழ,
முருகு – வாசனை, உலாவும் – போன்ற. ப்ரதாபம் – புகழ், இருவெட்டு – இரண்டாகப் பிரிந்த
தொய்யில் – மகளிர் மார்பில் அணியும் சந்தனக் கோலம், பிறைக் கொழுந்து – சிறு பிறை போன்ற நெற்றி,
திலகம் – பொட்டு, இயமனுக்கு உயிர் பறிக்கும் உபாய வித்தையென்று கூட்டுக.

————

மேற்படி விருத்தம்-

மேலிருக்கு மதிக்குழவி முடித்தார் போற்ற
வீற்றிருக்குங் குழைக்ககாதர் விமலர் நாட்டிற்
சேலிருக்கும் விழியணங்கே நின்னை யல்லாற்
றெய்வ மாமகளிரையும் தீண்டு வேனோ
மாலிருக்கு மின்பதுன்ப மறிந்தா ரந்தோ
மணிவயிரங் குன்றவெள்ளி வள்ளத் துள்ளே
பாலிருக்க முகஞ்சுளிப்பப் பருவாய் கைப்பப்
படுகொலைசூழ் நஞ்சையள்ளிப் பருகுவாரே. 88-

மதிக்குழவி – பிறை, முடித்தார் – சிவபெருமான், மால் – விஷ்ணு, ஆசை; வயிரங்குன்ற – வயிரமும் ஒப்பாகாத,
வள்ளம் – கிண்ணம், சுளிப்ப – கோண, கைப்ப-கசப்பாக. படுகொலைசூழ்-கொடுமையான கொலையைச் செய்கிற, அள்ளி-முகந்து.

————

பருந்தாட் கொடியதென் றோகுழைக் காதர் பதிப்புரிசைப்
பெருந்தாட் கொடியை யணங்கே தண்சாரற் பிடியணங்கு
மிருந்தாட் கொடிய கடாயானை போலு மிறைவர் தம்மைக்
கருந்தாட் கொடியிற் றுவக்குநும் மூரிக் கழைக்குறவே சுரம் போக்கு 89-

புரிசை-மதில், அணங்கு-பெண், சுணங்கும்-வருந்தும், பிடி-பெண் யானை, கடா யானை -ஆண் யானை,
இறைவர்-தலைவன், கொடியில் -பூங்கொடி போல, துவக்கும்-கட்டும், மூரிக்கழை -வலிய மூங்கில், கழைக்கு-கழையில்,.
உறவே-பொருந்தும்படி, அணங்கே, நும் தாள் சாரல் கழைக்கு உறவே, புரிசைக் கொடியைத் துவக்கும்,
இறைவர் தம்மை கருந்தாள் கொடி துவக்குவது போலத் துவக்கும். ஏன்? பருந்தாட் கொடிய தென்றோ? என முடிவு காண்க,
தலைவனுடன் சுரம் போக்குக்கு உடன்பட்ட தலைவியைத் தலைவன் ஊர் அதி சமீபத்தில் இருக்கிறதென்று தோழி தேற்றுதல்,
ஊரளித் தென்றல் என்ற அகப் பொருள் துறை.

——–

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

கழைக்காவ லானதழல் கொதித்தேறு பாலைவழி
கழித்தோமிராமல் மயிலே
தழைக்காவ லார்கமல மலர்த்தாளு றாமலொரு
சரத்தூர மேகி லுளவே
குழைக்காதர் நாடுமவர் திருப்பேரை யூருமணி
கொழித்தேரு வாவி களுநீள்
மழைக்கா ருலாவும் வரி மணற்சூழல் வாவுமிள
மரச்சோலை நீழல் களுமே. 90-

கழைக்கு ஆவலான தழல்-மூங்கிலை விரும்பிப் பற்றுகிற தீ, கொதித்தேறு-வளர்ந்து கொண்டே செல்லுகிற,
பாலை வழி-பாலை நிலத்தினூடே போகிற பாதை. இராமல்-உட்கார்நது இளைப் பாறாமல்.
சரத்தூரம் அம்பு போடுகிற, கமல மலர்த்தாளுருமல்-தாமரை போன்ற அடிகள் வருந்தாமல்.
மணி-இரத்தினங்கள். மழைக்கார்-மழை மேகங்கள் சூழல்-மேடுகள், வாவும்-தாவி வருகின்ற, நீழல்களும் உளவே என்று முடிவு காண்க.

————

எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்-

மேதி பாசடைக் குவளை தின்றுவாய்
வேரி பாய் புனற் பேரை மாயனே
தீது போகவும் பிறவி போகவுந்
தேவரே தொழுஞ் செல்வமான தாள்
ஓதி மாதராற் கயிற்றி லிட்டதால்
உரல் பிணிக்கவுஞ் சகடு தைக்கவும்
தூது போகவுங் கடவதோ வெனாத்
தொழுது மா மறைச் சுருதி பாடுமே 91-

மேதி-எருமை, பாசடை-பசிய இலை, வேரி-தேன், தீது-தீவினை, ஓதி-கூந்தல்,
கயிற்றில்…உரல் பிணிக்கவும்-கயிற்றின் ஒரு நுனியைக் காலில் கட்டி, மற்றொரு நுனியை உரலைச் சுற்றிக் கட்டவும்,
சுருதி-வேதம். கேட்கப்படுவது.

————

நேரிசை வெண்பா-

பாடு குரலறியாப் பைங்கிளியே செந்தினையின்
காடு பூங்காலறியாக் காவலார் – நீடசுரர்
வேரரிந்த மால் பேரை வெற்பிற் சிலகுறவ
ராரரிந்த வாரறியா ரோ. 92

காடு-புனம், பூங்கால்-பூவைப்போல மென்மையான கால், காவலார்-காவல் செய்பவர், ஆரரிந்த-ஆர முழுவதும் அரிந்த.

———-

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

அறிவிருந்த சிறுமதலைக் கிர்ணியனா ரடர்த்தநாள்
வெடித்த தூணிற்
பிறிவிருந்த தேவகிபாற் கருவிருந்த திருவயிறும்
பிரிந்த வன்றே
செறிதரங்க நிறைபொருநைத் திருப்பேரை
வளநகருஞ் சேடன் மீதி
லெறிதரங்கப் பாற்கடலு மென்னெஞ்சு மவர்க்கலா
திடம தாமே. 93-

சிறுமதலை – சிறுபிள்ளை, மதலை – பிள்ளையின் பொருட்டு, தரங்கம் – அலை, பொருனை – தாமிரபரணி நதி.

———

எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்.

ககனர் முக் கணர் காண மதலையைச் சலியாது
தலை யறுத துடல் வேறு கறி சமைத் தவள் பாவியோ
விகடமிட் டொருதேவி தசரதற் கினிதான
மகன் வனத் திடையேக விளைய வைத் தவள் பாவியோ
மகனெனக் கருதாம னிலவிலிட் டிள வாடை
வளையவிட் டநியாய மதனை விட் டவள் பாவியோ
பகருமுத் தமிழ்ஞான கருணை பெற் றவர் பேரை
மடநடைப் பெடை நாரை பதிலினிச் சொல வேணுமே. 94-

ககனர் – ஆகாயத்திலுள்ளவர், முக்கணர் – சிவ பெருமான், மதலை – சிறு தொண்டன் பிள்ளை,
கறி சமைத்தவள் சிறுத்தொண்டன் மகன் இராமன், விளையவைத்தவள் – கைகேயி, மதனை விட்டவள் -தலைவன் தாய்.

———-

பாண் – மேற்படி விருத்தம்

மேருவைப் பிளந்தெடுத்து வேறு கூறு செய்த போல்
வெஞ்சினத்தி லிரண்யன்றன் மேனியைப் பிளந்து பேர்
கூருகிர்தி தடக்கை கொண்டு கூறு செய்த பேரை மால்
குரைகழற் புகழ்ந்து பாடல் கொண்டு பெற்ற வரிசையோ
மூரியற்ற விறலியர்க்கு முன்னடைந்து செல்கையால்
மொய் வினைத் துதிக்கை கொண்டு முடிகளைச் சரிக்கையால்
பாரியற்கை கொண்டழிந்து பலகடம் பெருக்கையால்
பரிசில் பெற்ற யானை நீதி பாணருக்கு மொக்குமே. 95-

முரி – சோம்பல், விறலியர் – பாணன் மனைவிகள், பெருமையுடைய அரசியர்;
துதிக்கை கொண்டு -துதிப்பதினால், தும்பிக்கையினால்;
முடிகளைச் சரிக்கையால் – அரசர்களை வெல்லுகையால், தலைகளை வணங்கச் செய்கையால், கடம் – மதஜலம், கடன்.

———-

பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்-

பாண் வாய் மிழற்றுஞ் சுரும்பின் தொடர விரி
பங்கயத் தாதிறைத்தும்
பனி மலர்க் குவளை யஞ் சேயிதழ் சுரக்கும்
பசுந்துளித் தேனை மாந்திச்
கேண் வாய் தொடுத்த மதி வண்டுளியி னிற் சிதறு
மல்லிகை யவிழ்த்தும் வாகச்
செம்பொற் றகட்டுக் கருந்தாழை மடலிற்
செறித்த பொற் சுண்ணமாடித்
தூண் வாய் சுமக்கும் பளிக்கறைப் பத்திச்
சுவர்ப் புறத் திடைகு யிற்றுஞ்
சுடர் மணிச் சாளரக் கண் வழி நுழைந்து பைந்
துளவைப் பெறாத மடவார்
நாண் வாய் கிழித்துவேள் சிறுநா ணிறுக்கிட
நடக்குஞ் செழுந் தென்றல் பார்
ஞான புங்கவ விறைவ பேரையம் பதி முதல்வ
நந்தா வளக் கொண்டலே. 96-

பாண் – பண், இசை; மிழற்றும் – மழலையிற் பேசும், சுரும்பு – வண்டு, மாந்தி -குடித்து, மதி வண் குளி – சந்திகளின் துண்டுகள்,
அவிழ்த்தும் – மலரச் செய்தும், சுண்ணம் – வாசனைப் பொடி, பளிக்கறை – பளிங்கு மண்டபம், குயிற்றும் – அமைத்திருக்கிற,
சாளரம் – பலகணி, நாண் – நாணத்தை, வேள் – மன்மதன். நாண் – வில்லின் நாண், ஞான புங்கவ – அறிவிற் சிறந்தவனே, நந்தா – அழியாத.

—-

நேரிசை வெண்பா

நந்தா வளம் பிறந்த நம் பேரை மால் பவனி
வந்தார் வளம் பிறந்த வார்த்தைக்கே – செந்தழல் போல்
வண்ண மாயங்குதித்த மாமதி கண்டென் பசலைக்
கென்ன மாயங் குதித்ததே. 97-

நந்தா வளம் – அழியாத வளப்பம், பிறந்த – தோன்றிய மால் – குழைக்காதர், வந்தார் – வந்தார் என்ற,
வளம் பிறந்த – பெருமை தோன்றும், வார்த்தைக்கே -பேச்சுக்கே, வண்ணம் – நிறம், உதித்த – எழுந்த,
மாமதி – பூர்ண சந்திரன். பசலை – நிற வேறுபாடு, மாயம் – காரணம் அறிய முடியாத கொடுமை, குதித்தது – திடீரென்று தோன்றிற்று.

————-

எழுசீர்ச் சந்த விருத்தம்

குதிக்குங்கவுள் மதத் தண்டுளி மழைக் குஞ்சர மழைக்கும் புயல்
கொழிக்குந் தமிழ் வளர் பேரையிலே
மதிக்கும் பொருள் மிகப் பெண்டுகள் வெறுக்குங்குடி தழைக்கும்படி
வளர்க்குந் திரு மடமா மயிலே
வறிக்கும்படி படிக்குஞ்சிறி தனிச் சங்களும் பணிப்பஞ்சிலும்
வெறுக்கும் பத முனதா கையினால்
உதிக்குங் கதிர் வெறுக்கும் பால் கொதிக்குஞ் சுடர் நடக்குந்தொறு
முறைக்கும் பொழு துயிர் வாடுவையே. 98-

கவுள் கன்னம் – கவுளிலிருந்து குதிக்கும், துளிமழை -தூற்றல் முற்றிச் சொரியும் மழை, குஞ்சரன் – கஜேந்திரன் என்னும் யானை,
அழைக்கும் – ஆதிமூலமே என்று கூப்பிடும், புயல் – மேகம் போன்ற குழைக்காதர், கொழிக்கும் தமிழ் வளர்-தமிழ் செழித்து வளர்கின்ற,
பேரை-தென்திருப்பேரை, தழைக்கும்படி-மதிப்பில்லாத குடும்பம் சிறந்த மதிப்படையும்படி,
பெண்டுகள் வளர்க்கும் – பெண்களால் வளர்க்கப்பெற்ற, மயில்-மயில் போன்ற பெண்ணே,
சிறிதென்று விதிக்கும்படி படிக்கும் அனிச்சங்களும் -சிறிதென்று தீர்மானிக்கும்படி நாமறிந்த மென்மையான அனிச்சப் பூக்களிலும்,
பஞ்சினும் உற-பஞ்சிலும், பட்டாலும், உனது பதம் வெறுக்கும்-உனது கால்கள் நோகும்,
“அனிச்சமும், அன்னத்தின் தூவியும் மாதர், அடிக்கு நெரிஞ்சிப்பழம்,” என்ற குறளைக் காண்க.
உதிக்கும் கதிர் கொதிக்கும் சுடர் நடக்குந்தொறும், வெறுக்கும் பரல் உறைக்கும் பொழுது நீ உயிர் வாடுவை என்று கூட்டுக.
உயிர் வாடுவையே-தாங்கிக் கொண்டு உயிர் வாழ முடியுமா?

———-

இருபத்தைந்தடி நேரிசை யாசிரியப்பா

வாடை வந் தியங்கப் பீடை கொண்டுளதே
தென்றலங் கன்று மென்று தின் றுமிழ்ந்து
கோது பட வாருயிர்க் குறையையுஞ் சுழித்துக்
குழித்து விரல் குழைத்துச் சுழித்த மணற் கூடலும்
அள்ளி யிட்ட புள்ளியம் பசலையும்
துயிற்சுவை யறியாப் பயிர்ப்புறு தடங்களும்
மறவா வன்புந் துறவா வுள்ளமும்
அன்னப் பேடும் புன்னையங் காவும்
துணை பட விரிந்து துயர்படுங் காலத்தும்
பழுதிலா துயர்ந்த வழுதி நாட் டெவையும்
யாரையுந் தமிழ்ப் பேரயும் புரக்க
வளநகர் வார்குழைச் சிகரபூ தரத்தோன்
தெய்வ நாயக னைவர் தேர்ப் பாகன்
மலைமால் வரைத்தல மலைச் சாரலின் கண்
மணங்கொள் பூங்கொடி யணங்கு தண் பொதும்பரிற்
சிறந்த காட்சியிற் பிறந்த தண்ணளி போற்
கை தொட்டுத் தலைவர் மெய் தொட்டூப்பி யின்று
பணை முலைக் குரும்பை பிணை மலைப் புயத்தின்
ஊடுறப் பொருது பாடுறக் கிடப்ப
வரிவளைத் தழும்பு மார்பிடத் தழுந்தப்
பரிபுரச் சில்லொலி பல்கல னொலிப்பப்
புலவியுங் கலவியும் பொருந்திநற் சீருள்
நலமிகு பெருஞ்சுவை நமக்கினி தளிக்கச்
சிறுதுயிற் கனவு தந் தருளு
மகர நெடுங்குழை வாழி வா ழியவே. 99-

வாடை-வடக்கேயிருந்து வரும் காற்று, இயங்க-வீச, பீடை-வருத்தம், தென்றலங்கன்று-இளந்தென்றல்,
தென்றல்-தெற்கேயிருந்து வரும்காற்று. கோதுபட-கோதென்று நீக்கவைத்த, கூடல் – கூடலிழைத்தல்,
அள்ளியிட்ட-வாரிச் சொரிந்த, பயிர்ப்பு-பிறர் பொருளைத் தீண்டின வெறுப்பு,துணைபட-உயிர்த்துணை பிரிந்தால்,
இரிந்து- ஓடி, புரக்க-காக்க, வார்-நீண்ட, பூதரம்-மலை போன்ற தோள், ஐவர்-பஞ்ச பாண்டவர்,
அணங்கு-படர்ந்து வருத்தம் செய்கிற, பொதும்பர் – சோலை, தண்ணளி-தலையளி, குரும்பை-இளநீர் புயம்-தோள்,
பாகுற-பக்கத்தில் பொருந்த, பரிபுரம் -பாதசரம், சில்லொலி-சில்லென்ற ஒலி, பல்கலன்- பல ஆபரணங்கள், புலவி-ஊடல், கலவி-புணர்ச்சி,

————–

நேரிசை வெண்பா

வாழி புகழ்ப் பேரை மகரக் குழை வாழி
வாழி தமிழ் நூற்றெட்டு மாமறையோர் -வாழியவே
தேக்கும் பதக மலந் தீர்த்தெனது சிந்தையுள்ளே
பூக்கும் பத கமலப் பூ. 100-

பதக மலம்-குற்றமாகிய அழுக்கு, பத கமலம்-அடித்தாமரை, பூக்கும்-தோன்றும்.

————

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பதித்த நவ ரத்னமணி மோலி வாழி
பங்கயப்பூந் திருமுகச் செம் பவளம் வாழி
கதித்த சீர் நெற்றியில் வெண் டிருமண் காப்பு
கத்தூரித் திலகமிரு கண்கள்
துதித்தநறும் பசுந்துபைத் தோள்கள் வாழி
சுரிமுகச்சங் காழிவான் கதைவில் வாழி
மதித்தபீ தாம்பரஞ்சேர் அரைநூல் வாழி
மகரநெடுங் குழைக்காதர் வாழி வாழி. 101–

மோலி-கிரீடம், பவளம்-இதழ், சுரிமுகம்-வளைந்த அடிப்புறம், ஆழி-சக்கரம். கதை-தண்டாயுதம், பீதாம்பரம்-பொன்னாடை.

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குழைக்காது வல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ மகர நெடும் குழைக்காதர் -ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ர ரஸங்கள் –

April 14, 2021

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நி தத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

————————————————————————

1-ப்ரஸ்தாவ பத்ததி –விஷயம் அறிமுகம் –ஸ்லோகங்கள் 1-20-
2-சமாக்யா பத்ததி —திரு நாம பத்ததி –ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சடகோபம் -ஸ்லோகங்கள் -21-30-
3-பிரபாவ பத்ததி -பெருமைப் பத்ததி -பாதுகையின் பெருமை -ஸ்லோகங்கள் -31-100-
4-சமர்ப்பண பத்ததி -பணயப் பத்ததி -பெருமாள் ஸ்ரீ பரத ஆழ்வான் இடம் பணயமாக விட்டு அருளியது -ஸ்லோகங்கள் -101-120-
5-பிரதி பிரஸ்தான பத்ததி -பதில் பயணப் பத்ததி -பெருமாளை விட்டு ஸ்ரீ பாதுகை ஸ்ரீ பரத ஆழ்வான் உடன் சென்றது -ஸ்லோகங்கள் -121-140-
6-அதிகார பரிக்ரஹ பத்ததி -உரிமைக் கோட் பத்ததி-ராஜ்ய அதிகாரம் -ஸ்லோகங்கள் -141-180-
7-அபிஷேக பத்ததி -முடி சூட்டுப் படலம் -ஸ்லோகங்கள் -181-210-
8-நிர்யாதநா பத்ததி -மீட்சிப் பத்ததி -ஸ்லோகங்கள் -211-240-
9-வைதாளிக பத்ததி -வந்திவை தாளிக பத்ததி -அரசர்கள் புகழ்வது -ஸ்லோகங்கள் -241-250-
10-ஸ்ருங்கார பத்ததி -பெருமாள் உடன் ஸ்ரீ பாதுகை சேர்ந்து மகிழ்வது -ஸ்லோகங்கள் -251-260-
11-சஞ்சார பத்ததி -ஸ்லோகங்கள் -261-320-
12-புஷ்ப பத்ததி -ஸ்லோகங்கள் -321-350-பூக்களால் அர்ச்சனை –
13-பராக பத்ததி -ஸ்ரீ பாதுகா தூள் படலம் -ஸ்லோகங்கள் -351-380-
14-நாத பத்ததி -இனிய நாத பத்ததி -ஸ்லோகங்கள் -381-480-
15-ரத்ன சாமான்ய பத்ததி -மணிப் போது படலம் -ஸ்லோகங்கள் -481-520-birds eye view
16-பஹூ ரத்ன பத்ததி -ஸ்லோகங்கள் -531-580-
17-பத்மராக பத்ததி -செம்மணிப் படலம் -ஸ்லோகங்கள் -581-610-
18-முக்தா பத்ததி -முத்துப் படலம் -ஸ்லோகங்கள் -611-660-
19-மரகத பத்ததி -ஸ்லோகங்கள் -661-680-
20-இந்திர நீல பத்ததி -நீல மணி படலம் -ஸ்லோகங்கள் -681-710-
21-பிம்ப பிரதிபிம்ப பத்ததி -ஸ்லோகங்கள் -711-730-
22-காஞ்சனா பத்ததி -பொற் படலம் -ஸ்லோகங்கள் -731-750-
23-சேஷ பத்ததி -சேஷ பூதமாய் -ஆதி சேஷ அவதாரமாய் -ஸ்லோகங்கள் -751-760-
24-த்வந்த்வ பத்ததி -இரட்டைப் படலம் -ஸ்லோகங்கள் -761-780-
25-சந்நிவேச பத்ததி -ஸ்லோகங்கள் -781-800-
26-யந்த்ரிகா பத்ததி -குமிழ்கள் அமைப்பும் அனுபவம்- குடை போன்றவை -மேலும் பல -படலம் -ஸ்லோகங்கள் -801-810-
27-ரேகா பத்ததி -வேரிப்படலம் -ஸ்லோகங்கள் -811-820-
28-ஸூபாஷித பத்ததி -நன் மொழிப் படலம் -ஸ்லோகங்கள் -821-830-
29-பிரகீர்ண பத்ததி -கலம்பக படலம் -ஸ்லோகங்கள் -831-910-
30-சித்ர பத்ததி -ஸ்லோகங்கள் -911-950-
31-நிர்வேத பத்ததி -உருக்கப் படலம் -வைராக்கியம் வெறுப்பு ஆற்றாமை வெளிப்படுத்தும் உருக்கப் படலம் -ஸ்லோகங்கள் -951-970-நைச்ய அனுசந்தானம் –
32-பல பத்ததி– பேற்றுப் படலம் -ஸ்லோகங்கள் -971-1008-

——–

அஷ்டாக்ஷரம் +த்வயம் -32
சரம ஸ்லோகம் -32
காயத்ரி -24-+அஷ்டாக்ஷரம் சேர்த்து -32
ப்ரஹ்ம வித்யை -32-

———-

சந்த ஸ்ரீ ரங்க ப்ருத்வீச சரண த்ராண சேகரா
ஜயந்தி புவந த்ராண பத பங்கஜ ரேணவ –1-

தலைக்கு மேல் பாதுகை வைத்த அடியார்களின் திருவடி ரேணவ-மண் துகள்கள் -இதுவே இதன் கவி நயம்
புவந த்ராண-புவனங்களை காக்க வல்லது –
அடியார்க்கு அடியார் –அடியோங்களே -சரம -நிஷ்டை –

ஸ்ரீ ரங்க நாதனுடைய ஸ்ரீ பாதுகைகளை ஸ்ரத்தை யுடன் சிரஸ்ஸில் தரித்துக் கொள்ளும் பெரியோர்கள் உடைய
திருவடித் தூள்கள் உலகம் அனைத்தையும் உஜ்ஜீவிக்கச் செய்கின்றன –
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி தொழும் பரமை காந்திகள் உலகையே உஜ்ஜீவிக்கச் செய்யும் சக்தி பெற்றவர்கள் ஆகிறார்கள் –

————-

நீசே அபி ஹந்த மம மூர்த்தநி நிர்விசேஷம்
துங்கே அபி யத் நிவிசதே நிகம உத்தமாங்கே
ப்ராசேதஸ ப்ரப்ருதிபி: ப்ரதம உபகீதம்
ஸ்தோஷ்யாமி ரங்கபதி பாதுகயோர் யுகம் தத்—5—

நீசே அபி ஹந்த -தாழ்ந்தவனாக இருந்தாலும்
மம மூர்த்தநி நிர்விசேஷம்-ஏற்றத் தாழ்வு பாராமல் அடியேனுடைய சென்னியிலும் அமர்ந்து –
சடாரி தலையில் வைத்தாலும் அலம்ப வேண்டா பாவனத்வம் உண்டே
துங்கே அபி யன் நிவிசதே நிகம உத்தமாங்கே -வேதாங்கம் -உபநிஷத் -மலைக்கும் மடுவுக்கும் போல் அன்றோ –
ப்ராசேதஸ ப்ரப்ருதிபி ப்ரதம உபகீதம் -வால்மீகி தொடக்கமான ரிஷிகளால் ஸ்துதிக்கப் பட்ட
ஸ்தோஷ்யாமி ரங்க பதி பாதுக யோர் யுகம் தத் -அந்த பாதுகை இணை -ஸ்துதிக்கப் புகுந்தேனே –

———–

அநிதம் ப்ரதமஸ்ய சப்த ராசே:
அபதம் ரங்க துரீண பாதுகே த்வாம்
கத பீதி: அபிஷ்டுவந் விமோஹாத்
பரிஹாஸேந விநோதயாமி நாதம்–16—

அநிதம் ப்ரதமஸ்ய சப்த ராசே -தொடக்கம் இல்லாத வேதத்தினுடைய -ரிஷிகள் மந்த்ர த்ருஷ்டா தானே மந்த்ர கர்த்தாக்கள் இல்லையே –
சப்த ராசே -வார்த்தைக்கு கூட்டங்களாலும் கூட
அபதம் ரங்க துரீண பாதுகே த்வாம் -சொல்லி முடிக்க முடியாத -ஸ்ரீ ரெங்க நாத பாதுகா தேவியே -உன்னை –
கதபீதி ரபிஷ்டுவன் விமோஹாத் –பயமே இல்லாமல் -அறியாமையால் -ஸ்துதிக்கிறேன்
பரிஹாசேன விநோதயாமி நாதம்-ஸ்ரீ ரெங்க நாதனுக்கு ஏளன விஷயமாகும் -சேஷிக்கு மகிழ்வு கொடுக்கவே ஸ்துதி –

————

ய சப்த பர்வ வ்யவதா ந நுங்காம்
சேஷத்வ காஷ்டாம பஜன் முராரே
தஸ்யாபி நாமோத் வஹநாத் த்வயா அசௌ
லகூ க்ருதோ பூத் சடகோப ஸூரி –26-

ய சப்த பர்வ வ்யவதா ந நுங்காம் சேஷத்வ காஷ்டாம் அபஜன் முராரே –எந்த ஆழ்வார் -முரனை வதைத்த
அவனது சேஷத்வ எல்லை நிலத்தில் அடைந்தாரோ
அடியார் அடியார் தம் அடியார் –பயிலும் சுடர் ஒளி –
ப்ருத்ய ப்ருத்ய -முகுந்த மாலையிலும் உண்டே -இப்படி எட்டாவது படியில் இருக்கும் ஆழ்வாரை
தஸ்யாபி நாமோத் வஹநாத் த்வயா அசௌ லகூ க்ருதோ பூத் சடகோப ஸூரி-அந்த நம்மாழ்வார் பெயரைத் தாங்கி –
தொண்டர் தலைவன் பெயரைத் தங்குவது போல் –
உன்னாலே -இவரை வென்று -சடகோப தாசன் -என்று ஒன்பதாவது படிக்குச் சென்றாயே –

———–

நிச் சேஷம் அம்பரதலம் யதி பத்ரிகா ஸ்யாத்
ஸப்த அர்ணவீ யதி ஸமேத்ய மஷீ பவித்ரீ
வக்தா ஸஹஸ்ர வதந: புருஷ ஸ்வயம் சேத்
லிக்யதே ரங்க பதி பாதுகயோ: ப்ரபாவ:—-32-

பாதுகையின் பெருமைகளை எழுத இயலும் – எப்படி? ஆகாயம் முழுவதுமாகச் சேர்ந்து பெரியதொரு காகிதமாக இருந்தல் வேண்டும்.
ஏழு கடலும் இணைந்து, எழுதும் மையாக மாற வேண்டும். எழுதுபவனாக ஆயிரம் தலைகளுடன் கூடிய பரமபுருஷனாகிய
ஸ்ரீரங்கநாதனே இருக்க வேண்டும். இப்படி என்றால் – பாதுகையின் பெருமைகளை ஏதோ ஒரு சிறிய அளவு எழுதி முடிக்க இயலும்.

————-

யோஷித்பூத த்ருஷந்தி அபோட சகட ஸ்தேமாநி வைமாநிக
ஸ்ரோதஸ்விநீ உபலம்பநாநி பஸித் உதஞ்சத் பரீக்ஷிந்தி ச
தூத்யாதிஷ் வபி துர்வசாநி பதயோ: க்ருத்யாநி மத்வேவ யத்
தத் தே தத் ப்ரணயம் தத் ஏவ சரண த்ராணம் வ்ருணே ரங்கிண:–39-

நம்பெருமாளின் திருவடிகள் எப்படிப்பட்டவை – கல்லாகக் கிடந்த அகலிகையைப் பெண்ணாக மாற்றியவை;
பலம் வாய்ந்த சகடாசுரனை உதைத்து அழித்தவை; த்ரிவிக்ரம அவதாரத்தில் வானம் வரை அளந்து, கங்கையை உண்டாக்கியவை;
சாம்பலில் இருந்து பரீக்ஷத் அரசனை உண்டாக்கியவை; பாண்டவர்களுக்காகத் தூது சென்றவை ஆகும்.
இப்படிப்பட்ட பல குணங்களை வெளிப்படுத்திய திருவடிகளுடன் எப்போதும் பாதுகைகள் சினேகத்துடன் பிரியாமல் உள்ளன.
இப்படியாக நம்பொருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! எனக்கு மேன்மை ஏற்பட அருள்வாயாக.

—————-

பத சரசி ஜயோஸ்த்வம் பாதுகே ரங்க பர்த்து
மனசி முநி ஜநாநாம் மௌலி தேசே ஸ்ருதீ நாம்
வசசி ஸ ஸூ கவீ நாம் வர்த்தசே நித்ய மேகா
ததிதம வகதம் தே சாஸ்வதம் வைஸ்வ ரூப்யம்–49-

ஸ்ரீ பாதுகையே எம்பெருமானை போலவே நீயும் ஒரே காலத்தில் பல இடங்களிலும் இருக்கிறாய்
பெருமாள் திருவடியிலும்
ரிஷிகள் உடைய மனதிலும்
வேதாந்தங்களிலும்
கவிகளுடைய வாக்கிலும் வசிக்கிறாய்
இதுவே நீ எங்கும் பரந்தமையைக் காட்டுகிறது –

———–

கனக சரித நூபே கல்ப வ்ருஷஸ்ய பூஷ்ணோ
பதகி சலைய லக்னா பாதுகே மஞ்ஜரீ த்வம்
பரிணதி மதுராணாம் யா பலா நாம் சாவித்ரீ
வஹசி நிகம ப்ருந்தை சம்பதம் ஷட்பதா நாம் –57-

ஸ்ரீ பாதுகையே காவிரிக் கரையில் கல்ப தருவாக ஸ்ரீ ரங்க நாதன் எழுந்து அருளி இருக்கிறார் –
பெருமாளுடைய மிருதுவான திருவடித் தளிர்களில் பூத்த புஷ்பமாகவும் நீ விளங்குகிறாய் –
இந்த புஷ்பத்தில் சதுர்வித புருஷார்த்தங்களும் பழமாக பழுக்கின்றன –
வேதங்கள் பூவில் சாரம் அறிந்த வண்டுகளாக உன் மகிமையை ஓதுகின்றன –

———

பரதாஸ்வஸநேஷு பாத சப்தம் வஸுதா ஸ்ரோத்ர ஸமுத்பவ: முநீந்த்ர:
படதி த்வயி பாதுகே ததஸ் த்வம் நியதம் ராம பதாத் அபிந்ந பூமா—-70-

பாதுகையே! புற்றில் இருந்து தோன்றிய வால்மீகி மஹரிஷி, இராமாயணத்தில் பரதன் மக்களைச் சமாதானப்படுத்தக்
கூறிய சொற்களில், உன்னைப் பற்றிக் கூறும்போது திருவடி என்ற பதத்தையே பயன்படுத்துகிறார்.
இதன் மூலம் உனக்கும் இராமனின் திருவடிகளுக்கும் உள்ள பெருமைகளில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்று புரிகிறது.

————-

அஸ்த்ர பூஷணதயா ஏவ கேவலம் விஸ்வம் ஏதத் அகிலம் பிபர்த்தி ய:
அகிலம் ஏந மணி பாதுகே த்வயா ஸ: அபி சேகரதயா ஏவ தார்யதே–78–

உயர்ந்த இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பெற்ற பாதுகையே! பெரியபெருமாள் செய்வது என்ன?
இந்த உலகங்கள் முழுமையையும் தனது ஆயுதம் போன்றும், ஆபரணம் போன்றும் எந்தவிதமான சிரமமும் இன்றி தரிக்கின்றான்.
அப்படிப்பட்ட பெரியபெருமாளை நீயும் அதே போன்று, உனது தலையில் எந்தவிதமான சிரமமும் இன்றி,
மலர் போன்று வைத்துக் கொள்கிறாய்.

————-

பரஸ்ய பும்ஸ: பத ஸந்நிகர்ஷே
துல்ய அதிகாராம் மணி பாதுகே த்வாம்
உத்தம்ஸயந்தி ஸ்வயம் உத்தமாங்கை:
சேஷாஸமம் சேஷ கருத்ம தாத்யா:—-83-

உயர்ந்த இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! பரம்பொருளான பகவானின் திருவடிகளின் கீழே
நீயும் ஆதிசேஷன், கருடன் முதலானோர்களும் ஒரே போன்றுதான் கைங்கர்யம் செய்து வருகின்றீர்கள்.
ஆயினும் ஆதிசேஷன், கருடன் போன்றவர்கள் உன்னைப் பரிவட்டம் போன்று தங்கள் தலைகளில் ஏற்றுக் கொள்கின்றனர்.
இது உனக்குப் பெருமை அல்லவா?

———–

மூர்த்நா ததாநாம் மணி பாதுகே த்வாம்
உத்தம் ஸிதம் வா புருஷம் பவத்யா
வதந்தி கேசித் வயமாமநாம:
த்வாம் ஏவ ஸாஷாத் அதி தைவதம் ந:—-99-

ஸ்ரீ பாதுகையே சிலர் பெருமாளையாவது உன்னையாவது த்யானிப்பது அவசியம் என்று கூறுகிறார்கள்
நாங்களோ உன்னை மட்டுமே த்யானிப்பது போதும் என திடமாக நம்புகிறோம்
ஆசார்ய பலம் இருந்தால் தானே பகவத் கிருபையும் கிட்டுமே –

————

ப்ராப்தே ப்ரயாண ஸமயே மணி பாத ரக்ஷே
பௌரான் அவேக்ஷ்ய பவதீ கருண ப்ரலாபாந்
மஞ்ஜு ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம்
ராமம் பத க்ரஹண பூர்வம் அயாசதேவ—-103-

மஞ்ஜூ ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம் -சமாதானம் சொல்கிறாள் -ஆசுவாசம் படுத்துகிறாள்
ராமம் பத க்ரஹண பூர்வம் அயாசதேவ-காலைப் பிடித்து பிரார்த்தனை பண்ணுவேன் என்கிறாள் ஸ்ரீ பாதுகா தேவி

—————

பாதாவநி ப்ரபுதராந் அபராத வர்க்காந்
ஸோடும் க்ஷமா த்வம் அஸி மூர்த்திமதீ க்ஷமைவ
யத் த்வாம் விஹாய நிஹதா: பரிபந்தி நஸ்தே
தேவேந தாசரதி நா தச கண்ட முக்யா—110-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பவளே!
அனைத்துக் குற்றங்களையும் பொறுத்துக் கொள்ளும் அளவிற்கு சரீரம் பெற்றவளாக, பொறுமையே வடிவமாக நீ உள்ளாய்.
ஆகையால் தான் இராமன் உன்னைப் பரதனிடம் அளித்து விட்டு, இராவணன் போன்றவர்களை அழித்தான் போலும்.

————-

நியதம் அதிருரோஹ த்வாம் அநாதேய சக்திம்
நிஜசரண ஸரோஜ சக்திம் ஆதாது காம:
ஸ கதம் இதரதா த்வாம் ந்யஸ்ய ராம: விஜஹ்ரே
த்ருஷத் உபசித பூமௌ தண்டகாரண்ய பாகே—116–

ஸ்ரீ பாதுகையே பொறுமையின் பிறப்பிடமான உன் மீது ஏறி பெருமாளும் தானும் எதையும் தாங்க வல்ல
உனது குணத்தை சம்பாதித்துக் கொண்டார் -இல்லாவிடில் மிருதுவான பாதங்களைக் கொண்டு
கற்கள் முட்கள் நிறைந்த ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எவ்வாறு சஞ்சரிப்பார்

————–

பரதஸ் ஏவ மாம் அபி பிரசமித விஸ்வாபவா துர் ஜாதா
சேஷேவ சிரஸி நித்யம் விஹரது ரகுவீர பாதுகே பவதீ –120-

வீரனாகிய இராமனின் பாதுகையே! ”இராமனைக் கானகம் அனுப்பிய கைகேயின் மகன்” என்ற அபவாதங்கள்
பரதன் மீது விழாமல் அவன் காப்பாற்றப்பட்டான் – எப்படி? உன்னைத் தனது தலையில் ஏற்ற காரணத்தினால் ஆகும்.
இது போன்று எனது தலையிலும் நீ எப்போதும் தங்கி நின்று, எனது அபவாதங்களையும் போக்க வேண்டும்.

———–

ப்ரசஸ்தே ராம பாதாப்யாம் பாதுகே பர்யுபாஸ்மஹே
ஆந்ரு சம்ஸ்யம் யயோர் ஆஸீத் ஆஸ்ரிதேஷு அநவக்ரஹம்—-121-

இராமனின் திருவடிகளை விட மிகவும் உயர்ந்த அவனுடைய பாதுகையை நாங்கள் த்யானம் செய்கிறோம் –
காரணம், அயோத்தி நாட்டின் மீது இராமனுக்கு இல்லாத தயை பாதுகைக்கு இருந்த காரணத்தால் அல்லவா பாதுகை மீண்டும் வந்தாள்?

————

ஆஸா: ப்ரஸாதயிதும் அம்ப ததா பவத்யாம்
தைவாத் அகாண்ட சரதீவ ஸமுத்திதாயாம்
ஸ்தோகாவசேஷ ஸலிலாஸ் ஸஹஸா பபூவு:
ஸாகேத யௌவத விலோசந வாரிவாஹா:—-130-

தாயே! பாதுகையே! இராமன் கானகம் புகுந்தவுடன் நீ அயோத்திக்கு மீண்டும் வந்தாய்.
மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வல்ல சரத் காலம் போன்று நீ வந்தாய்.
உன்னைக் கண்டவுடன் அயோத்தி நகரத்தில் இருந்த பெண்களின் கண்கள் என்ற மேகங்கள், தங்கள் மழை நீரை நிறுத்தின.

——————–

ஸமுபஸ்திதே ப்ரதோஷே
ஸஹஸா விநிவ்ருத்ய சித்ரகூட வநாத்
அபஜத புநஸ் ஜந பதம்
வத்ஸம் தேநு: இவ பாதுகே பவதீ—-140-

பாதுகையே! மேய்வதற்காகச் செல்லும் பசுவானது அஸ்தமன நேரத்தில் கன்றுக் குட்டியிடம் வந்து விடுகிறது.
அது போன்று நாட்டிற்கும் பரதனுக்கும் கவலை ஏற்பட்ட போது,
நீ சித்திர கூடத்தில் இருந்து மிகவும் விரைவாக கோசலத்திற்குத் திரும்பினாய் போலும்.

————

வர்ஷாணி தாநி வ்ருஷளோ ந தபாம்ஸி தேபே
பாலோ ந கச்சித் அபி ம்ருத்யுவசம் ஜகாம
ராஜ்யே தவ அம்ப ரகு புங்கவ பாத ரக்ஷே
ந ஏவ அபரம் ப்ரதி விதேயம் அபூத் ப்ரஸக்தம்—-153-

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாப்பவளே! நீ அயோத்தியை ஆண்ட போது –
மற்ற வர்ணத்தினர்கள் யாரும் தவம் இயற்றவில்லை (அந்தணன் தவிர); எந்தக் குழந்தையும் இறந்து போகவில்லை;
ப்ராயச்சித்தம் தேடும் அளவிற்கு எந்தவிதமான குற்றமும் நிகழவில்லை.

————–

அநந்ய பக்திர் மணி பாதுகே த்வாம்
அபி அர்ச்சயந் தாசரதிர் த்வீதீய:
விகல்ப்யமாந: ப்ரதமேந கீர்த்யா
வந்த்ய: ஸ்வயம் வ்யோமஸதாம் பபூவ—166-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! எந்த ஒரு பயனும் எதிர்பார்க்காமல், உன்னிடம் மட்டுமே பக்தி கொண்டு,
பரதன் உன்னை மட்டுமே வணங்கி நின்றான். இதனால் தசரதனின் இரண்டாவது புத்திரனான அவனை,
முதல் பிள்ளையான இராமானுக்குச் சமமாகவே அனைவரும் கருதினர்.
இப்படியாகப் பரதன் தேவர்களுக்குச் சமமானவனாகவே வணங்கப்பட்டான்.

————–

மஹீஷிதாம் ராகவ பாத ரக்ஷே
பத்ராஸ நஸ்த்தாம் பவதீம் ஸ்ப்ருசந்த:
பூர்வம் ததாத்வே நியதே அபி பூய:
கல்யாணதாம் ஆநசிரே கிரீடா:—-171-

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ சிம்மாசனத்தில் வீற்றிருந்தபோது,
உன்னை அரசர்களின் தலையில் உள்ள கிரீடங்கள் (அவர்கள் உன்னை வணங்கும்போது) தொட்டன.
அவை முன்பே தங்கமாக உள்ளபோதிலும், உன்னைத் தொட்ட பின்னர் மட்டுமே உயர்ந்த பலனைப் பெற்றன.

————-

ப்ராப்த உதயா ததாநீம்
கிம் அபி தம: தத் நிராகரோத் பவ்தீ
தநுரிவ மனுகுல ஜநுஷாம்
ப்ரஸவித்ரீ ரத்ந பாதுகே ஸவிது:—180-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமன் கானகம் புகுந்த போது நீ அரச பதவி ஏற்கும்
உதயம் என்பதை அடைந்தாய். ஆக மநுகுலத்தின் அரசர்களுக்கு ஆதாரமாக உள்ள ஸூரியன் போன்று நீ ஆனாய்.
இதன் மூலம் எங்கும் உள்ள இருளை நீக்கினாய்.

————–

ப்ராது: நியோகே அபி அநிவர்த்தமாநம்
ராஜ்ய அபிஷேகம் ச பரித்ய ஜந்தம்
ராமாநுஜௌ தௌ நநு பார தந்த்ர்யாத்
உபௌ உபாப்யாம் பவதீ ஜிகாய—-184-

பாதுகையே! இராமனின் ஆணைகளை அவனது தம்பிகளான இலட்சுமணனும், பரதனும் மீறாதவர்களே ஆவார்கள்.
ஆயினும் இராமனின் ஆணைக்கு ஏற்ப அவர்கள் இருவரும் பட்டாபிஷேகம் ஏற்கவில்லை.
ஆனால், நீ ஏற்றுக் கொண்டாய். இதன் மூலம் அவர்கள் இருவரையும் நீ வென்றாய்.

————-

மநு வம்ஸ புரோஹிதேந மந்த்ரை: அபிமந்தரய த்வயி பாதுகே ப்ரயுக்தம்
அபிஷேக ஜலம் க்ஷணேந ராஜ்ஞாம் சமயாமாஸ ஸமுத்திதாந் ப்ரதாபாந்—-200-

பாதுகையே! மனுவம்சத்தின் குலகுருவான வசிஷ்டர் உன் மீது மந்திரங்கள் கொண்டு ஜபிக்கப்பட்ட புண்ணிய நீரை,
பட்டாபிஷேகத்தின்போது சேர்த்தார். இந்த நீர் செய்தது என்ன?
விரோதிகளான அனைவருடைய வீரம் என்ற தீயை அணைத்துவிட்டது.

————–

அபிஷேசயது ஸ ராம: பதேந வா ஸ்ப்ருசது பாதுகே பவதீம்
அவிசேஷித மஹிமா த்வம் கிம் வா விசேஷ: க்ஷமா ஸமேதாநாம்—210-

பாதுகையே! இராமன் உனக்கு உயர்ந்த அரச பதவி என்ற பட்டாபிஷேகம் அளித்தாலும், தனது திருவடிகளில் உன்னை வைத்தாலும் –
உனது பொறுமை காரணமாக, நீ குறைவற்ற பெருமை மாறாமலேயே உள்ளாய்.
பூமியின் பொறுமையை ஒத்தபடி உள்ளவர்களுக்கு இது போன்று ஏற்றத் தாழ்வுகளில் பேதம் என்ன உள்ளது?

———–

உபாஸ்ய வர்ஷாணி சதுர் தச த்வாம்
உத்தாரிகாம் உத்தர கோஸலஸ்தா:
ஸநந்த நாத்யைரபி துர் விகாஹம்
ஸந்தாநிகம் லோகம் அவாபுர அக்ர்யம்—-212–

பாதுகையே! வடக்கு கோஸலை நாட்டில் உள்ள மக்கள் உன்னை பதினான்கு வருடங்கள் வணங்கி வந்தனர்.
இதனால் அவர்களுக்குக் கிட்டியது என்ன?
ஸநந்தனர் போன்ற உயர்ந்தவர்களாலும் அடைய இயலாத ஸாந்தாநிக லோகத்தை அவர்கள் எளிதாக அடைந்தனர்.

—————-

பாதாவநி த்வத் அபிஷேசந மங்களார்த்தம்
பேரீசதம் ப்ருசம் அதாட்யத யத் ப்ரதீதை:
ஆகர்ண்ய தஸ்ய ஸஹஸா துமுலம் நிநாதம்
லங்கா கவாட நயநாநி நிமீலிதாநி—-220-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
உன்னுடைய பட்டாபிஷேகம் என்னும் மங்கள கரமான நிகழ்வின் போது, நூற்றுக் கணக்கானவர்கள் பெரிதாக வாத்தியம் ஒலித்தனர்.
இந்த ஓசை இலங்கை வரை கேட்டது. இதனைக் கேட்ட இலங்கையின் கதவுகள் மூடப்பட்டன.

———————–

நிஸ்தீர்ண துங்க ஜலதே: அநகஸ்ய தேவி
த்வத் ஸம்ப்ரயுக்த ரகுநாத பதாந்வயேந
ஸத்ய ஸநந்தன முகை: அபி துர் நிரீக்ஷா
ஸாம்ராஜ்ய ஸம்பத் அபரா பரதஸ்ய ஜஜ்ஞே—-237–

பாதுகாதேவியே! உன்னுடன் தொடர்பு கொண்டதால் உயர்ந்த இராமனின் திருவடிகள் மூலமாகப் பரதன்
தனது துக்கம் என்ற பெரிய கடலை எளிதாகக் கடந்தான். இதன் மூலம் தூய்மை அடைந்த பரதன்,
ஸநந்தர் போன்றவர்கள் கூடக் காண இயலாத தேஜஸ் அடைந்தான்.
இதனால் பக்தர்களுக்குச் சக்ரவர்த்தி போன்றவன் என்ற பட்டம் பெற்றான்.

———–

இதி நிகமவந்தி வசஸா ஸமயே ஸமயே க்ருஹீத ஸங்கேத:
அபி ஸரதி ரங்கநாத: ப்ரதிபத போகாய பாதுகே பவதீம்—-250-

நம்பெருமாளின் பாதுகையே! இப்படியாக அந்தந்த காலத்தில் இவற்றைச் செய்யவேண்டும் என்று
வேதங்களாகிய வந்திகள் (துதி செய்பவர்கள் எனலாம்) மூலம் ஸ்ரீரங்கநாதன் உணர்கிறான்.
அந்தந்த காலத்தில் சுகங்களை அனுபவிக்கும் பொருட்டு உன்னை அடைகிறான்.

————

சரண கமல ஸங்காத் ரங்க நாதஸ்ய நித்யம்
நிகம பரிமளம் த்வம் பாதுகே நிர்வமந்தீ
நியதம் அதிசயாநா வர்த்தஸே ஸாவரோதம்
ஹ்ருதயம் அதி வஸந்தீம் மாலிகாம் வைஜயந்தீம்—258-

அழகிய மணவாளனின் பாதுகையே! பெரிய பெருமாளின் திருமார்பில் உள்ள மஹாலக்ஷ்மியுடன் தொடர்பு கொண்டுள்ளதால்,
அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்கிற மாலைக்கு நறுமணம் அதிகமே ஆகும்.
ஆயினும் அவனது திருவடிகளின் தொடர்பு உனக்கு மட்டுமே அல்லவா உள்ளது?
இதன் மூலம் நீ எப்போதும் வேதங்களின் நறுமணத்தை பரப்பியபடி உள்ளாய்.
ஆக ஸ்ரீரங்கநாச்சியாரின் தொடர்பு பெற்ற அந்த மாலையை விட, அவனது திருவடிகளின் தொடர்பு பெற்ற நீ உயர்ந்தே உள்ளாய்.

———

ஸ்ப்ருசத: சிரஸா பதேந ச த்வாம்
கதிம் உத்திஸ்ய முகுந்த பாதுகே த்வௌ
அவரோஹதி பஸ்சிம: பதாத் ஸ்வாத்
அத்ரோஹத்யநக: ததேவ பூர்வ:—-267-

க்ருஷ்ணனின் பாதுகையே! உன்னை இருவர் தொடுகின்றனர். ஒருவர் உன்னைத் தனது கால்கள் கொண்டு தொடுகிறார்,
மற்றோருவர் உன்னைத் தனது தலையால் தாங்குகிறார். தலையால் தொட்டவர் மேலே (பரமபதம்) ஏறியபடி உள்ளார்.
காலால் தொட்டவர் (நம்பெருமாள் ஆசனத்தில் இருந்து இறங்க எண்ணி, பாதுகை மீது திருவடி வைக்கிறான்) கீழே இறங்குகிறார்.

————–

த்வயா அநுபத்தாம் மணி பாத ரக்ஷே
லீலா கதிம் ரங்க சயஸ்ய பும்ஸ:
நிஸா மயந்த: ந புநர்பஜந்தே
ஸம்ஸார காந்தார கதாகதாநி—-275-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கத்தில் சயனித்துள்ள பரம புருஷனாகிய பெரிய பெருமாள்,
உன்னைச் சாற்றிக் கொண்டு சஞ்சாரம் செய்கிறான். இதனைக் காண்பவர்கள், இந்த உலகில் பிறப்பது-இறப்பது
என்று சுழற்சியை இனி மேற்கொள்வதில்லை.

———–

பதஸ் ப்ருசா ரங்க பதிர் பவத்யா
விசக்ரமே விஸ்வம் இதம் க்ஷணேந
ததஸ்ய மந்யே மணி பாத ரக்ஷே
த்வயைவ விக்யாதம் உருக்ரமத்வம்—-281-

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் திருவடியில் இருந்ததால் தான் அவர் நொடிப் பொழுதில் உலகை அளந்தார் –
அதனாலேயே -உருக்ரமன் -த்ரிவிக்ரமன் -என்ற பெயரையும் பெற்றார் –

——————

ஸம்பத்யதே ஸமுசிதம் க்ரமம் ஆஸ்ரயந்த்யா
ஸத்வர்த்மநா பகவதோ: அபி கதிர் பவத்யா
ஈஷ்டே பதாவநி புந: க இவேத ரேஷாம்
வ்யாவர்த்த நஸ்ய விஷமாத் அபத ப்ரசாராத்—290-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் நல்ல வழியில் சென்று
சஞ்சாரம் செய்வது என்பது, உனது அடிவைப்பு மூலமே உண்டாகிறது.
இப்படி உள்ளபோது, மற்றவர்களைத் தீய வழிகளில் நடக்காமல் திசை திருப்பும் திறன் வேறு யாரிடம் உள்ளது?

————-

நித்யம் ய ஏவ ஜகதோ மணி பாத ரக்ஷே
ஸத்தாஸ்திதி ப்ரயதநேஷு பரம் நிதாநம்
யோ அபி ஸ்வதந்த்ர சரிதஸ் தவத் அதீந வ்ருத்தி:
கா வா கதா ததிதரேஷு மிதம்பசேஷு—-299-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகைப் படைப்பது, இந்த உலகில் உள்ள
அனைத்தைக் காட்டிலும் உயர்ந்திருப்பது ஆகிய தன்மைகளை உடைய ஸ்ரீரங்கநாதனே உன் வசப்பட்டுள்ளான்.
இப்படி உள்ளபோது இந்த உலகில் உள்ள மற்ற அற்பர்கள் உனக்கு அடிமை என்று கூறவும் வேண்டுமா?

—————

கமபி கநக ஸிந்தோ: ஸைகதே ஸஞ்சரந்தம்
கலச ஜலதி கந்யா மேதிநீ தத்த ஹஸ்தம்
அநிசம் அநுபவேயம் பாதுகே த்வயி அதீநம்
ஸுசரித பரிபாகம் ஸூரிபி: ஸேவநீயம்—-309-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! காவேரியின் மணல்திட்டில் ஸ்ரீரங்கநாதன் சஞ்சரிக்கிறான்.
அவன் ஸ்ரீதேவியாலும் பூதேவியாலும் சூழப்பட்டு உள்ளான். சிறந்த புண்ணியங்களின் பயனாக உள்ளான்.
நித்யஸுரிகளால் என்றும் போற்றப்பட்டபடி உள்ளான். உன்னிடம் எப்போதும் வசப்பட்டு உள்ளான்.
இப்படிப்பட்ட இந்த ஸ்ரீரங்கநாதனை நான் எப்போதும் வணங்கியபடி இருப்பேனாக.

—————

ஸம்பவது பாதரக்ஷே ஸத்ய ஸுபர்ண: ஆதி: ஔபவாஹ்ய கண:
யத்ராஸு ரங்கபர்த்து: ப்ரதம பரிஸ்பந்த காரணம் பவதீ–320–

பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
ஸ்ரீரங்கநாதன் சஞ்சாரம் செல்வதற்கு அவனுக்கு வாகனங்களாக ஸத்யன், கருடன் என்று பலரும் இருக்கக்கூடும்.
ஆனால் இவர்களுக்கு முன்பாக அவன் முதல் அடி எடுத்து வைப்பதற்கு நீ அல்லவோ காரணமாக உள்ளாய்?

———–

அஸ்ப்ருஷ்ட தோஷ பரிமர்ஸம் அலங்க்யம் அந்யை:
ஹஸ்தாபசேயம் அகிலம் புருஷார்த்த வர்கம்
சித்ரம் ஜநார்த்தந பதாவநி ஸாதகாநாம்
த்வயி அர்ப்பிதா: ஸுமநஸ: ஸஹஸா பலந்தி—-331-

ஜனார்த்தனனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னிடம் மலர்களைச் சமர்ப்பணம் செய்பவர்களுக்குக் கிட்டுவது என்ன?
எந்தவிதமான தோஷங்களும் இல்லாததும், மற்றவர்களுக்கு எட்டாததும், இவர்களுக்குக் கையினால் பறிக்கக்கூடியதும்
ஆகிய உயர்ந்த புருஷார்த்தங்கள் மிகவும் எளிதாகக் கிட்டுகின்றன.

———–

ஸூடாரக்வத ரஜஸா ஸூர்ண ஸ்நபனம் விதாய தே பூர்வம்
ரங்கேஸ பாதுகே த்வம் அபிஷிஞ்சதி மௌளி கங்கயா சம்பு:—350-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சிவன் தனது தலையில் உள்ள கொன்னை மலர்கள் கொண்டு உனக்கு சூர்ணாபிஷேகம் செய்கிறார்.
அதன் பின்னர் தனது தலையில் உள்ள கங்கையைக் கொண்டு உனக்கு திருமஞ்சனம் செய்து வைக்கிறார்.

————–

க்ருதிந: சிரஸா ஸமுத் வஹந்த:
கதிசித் கேசவ பாதுகே ரஜஸ்தே
ரஜஸஸ் தமஸோ அபி தூரபூதம்
பரிபஸ்யந்தி விசுத்தமேவ ஸத்வம்—-356-

அழகான கேசத்தைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய துகள்களைத் தங்கள் தலைகளில்
கொள்கின்ற புண்ணியம் செய்தவர்களின் நிலை என்ன? அப்படிப்பட்டவர்கள் ரஜோகுணம், தமோகுணம் ஆகிய
இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஸத்வகுணம் நிறைந்த பரம பதத்தைக் காண்கின்றனர்.

————

கங்காபகா தட லதாக்ருஹம் ஆஸ்ரயந்த்யா:
பாதாவநி ப்ரசலிதம் பதவீ ரஜஸ்தே
ப்ராயணே பாவநதமம் ப்ரணதஸ்ய சம்போ:
உத்தூளநம் கிம் அபி நூதநம் ஆதநோதி—-368-

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் உன்னைச் சாற்றிக் கொண்டு கங்கைக் கரையில் எழுந்து அருளிய போது உண்டான
தூசியைச் சிவன் தலை வணங்கி தோஷ நிவாரண அர்த்தமாக புதியதாகத் தன் உடலில் பூசிக் கொள்கிறார் –

—————–

பஞ்சாயுதீ பூஷண மேவ சௌரே
யதஸ் தவைதே மணி பாதரஷே
விதந்வதே வ்யாப்ததிச பராகா
சாந்தோதயான் சத்ருசமூ பராகான் –374-

ஸ்ரீ பாதுகையே சத்ருக்களைக் கொல்வதற்காகப் பெருமாள் எழுந்து அருளுகிறார்
உன்னுடைய தூளியைக் கண்ட மாத்ரத்திலேயே சத்ருக்கள் ஓடோடிப் போகிறார்கள்
பெருமாளுடைய பஞ்சாயுதங்களும் அலங்காரத்திற்காக மட்டுமே ஆகின்றன –

————-

மதுரம் மணி பாதுகே ப்ரவ்ருத்தே
பவதீ ரங்க ந்ருபதே விஹார காலே
அபயார்த்த்நயா ஸமப்யு பேதாந்
அவி ஸம்வாதயதீவ மஞ்ஜு நாதை:–390-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார காலத்தில் பலரும் அவன் அருகில் வந்து,
தங்களுக்கு அபயம் அளிக்க வேண்டி நிற்கின்றனர். அப்போது நீ செய்வது என்ன?
உன்னுடைய இனிமையான நாதம் மூலம், “அபயம் அளிக்கப்பட்டது”, என்று கூறுகிறாய் அல்லவோ?

——————-

நித்யம் பதாம் புருஹயோ: இஹ கோபிகாம் த்வாம்
கோபீ ஜந ப்ரியதமோ மணி பாத ரக்ஷே
ஸம்பந்ந கோஷ விபவாம் கதிபி: நிஜாபி:
ப்ரீத்யேவ ந த்யஜதி ரங்க ஸமாஸ்ரிதோபி—-420-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! கோபிகைகளுக்கு மிகவும் ப்ரியமானவனாகிய நம்பெருமாள்,
தனது ஸஞ்சாரங்கள் முடிந்து ஸ்ரீரங்க விமானத்தை அடைந்த பின்னரும் உன்னை விடுவதில்லை.
மிகவும் இனிமையான நாதம் கொண்ட உன்னை அவன் கோபிகை என்றே கருதியுள்ளான் போலும்.

————-

க்ஷிபதி மணி பாத ரக்ஷே நாதைர் நூதம் ஸமாஸ்ரித த்ராணே
ரங்கேஸ்வரஸ்ய பவதீ ரக்ஷாபேக்ஷா ப்ரதீக்ஷண விளம்பம்—-480-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தனது அடியார்கள் தன்னிடம், ” என்னைக் காக்கவேண்டும்”, என்று
விண்ணப்பம் செய்யவேண்டும் என்று ஸ்ரீரங்கநாதன் எதிர்பார்க்கிறான்.
இத்தகைய அவனது எண்ணத்தை உனது நாதங்களால் நீக்கி, அவன் காப்பாற்றும் காலதாமதத்தைக் குறைத்து விடுகிறாய்.

———–

ரங்கேஸ பாதாவநி தாவகாநாம்
ரத்ந உபலாநாம் த்யுதய: ஸ்புரந்தி
ஸ்ரேய: பலாநாம் ஸ்ருதி வல்லரீணாம்
உபக்நசாகா இவ நிர்வ்யபாயா:—-485-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மக்களுக்கு வேண்டிய புருஷார்த்தம் என்னும் பழங்களை
அளிக்கின்ற கொடிகளாக வேதங்கள் உள்ளன. அந்த வேதங்கள் படர்வதற்கு ஏற்ற கொழுகொம்புகளாக
உனது இரத்தினக் கற்களின் ஒளிக்கீற்றுகள் உள்ளன.

———–

ப்ரபவந்தி தவீயஸாம் ஸ்வபாவாத்
தவ ரத்நாநி முகுந்த பாத ரக்ஷே
அயஸாமிவ ஹந்த லோஹ காந்தா:
கடிநாநாம் மநஸாம் விகர்ஷணாய—512–

ஸ்ரீரங்க நாதனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! ஒரு சிலர் ஸ்ரீரங்கநாதன் வீதியில் வலம் வரும்போது,
வீட்டை விட்டு வராமல் இருப்பார்கள். அவர்களது இரும்பு போன்ற மனங்களை, தூரத்தில் இருந்தே இழுக்க வல்ல
காந்தம் போன்று உன்னுடைய இரத்தினக் கற்கள் சாமர்த்தியம் கொண்டவையாக உள்ளவனவே!

————

ரங்காதிராஜ பத ரக்ஷிணி ராஜதே தே
வஜ்ர உபஸங்கடித மௌக்திக வித்ரும ஸ்ரீ:
ஸக்தா சிரம் மநஸி ஸம்யமிநாம் நிவாஸாத்
ஸூர்ய இந்து அஹ்நிமய மண்டல வாஸநேவ—-550–

ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! வைரத்துடன் சேர்த்துப் பதிக்கப்பட்ட முத்து, பவழம் ஆகியவற்றின் ஒளியானது –
நீண்டகாலமாக யோகிகளின் மனதில் நீ இருந்து வருவதால், அங்குள்ள சூரியன், சந்திரன், அக்னி மண்டலங்களின்
வாசனையுடன் கூடியதாக உன்னில் காணப்படுகிறது.

———–

ஜநயஸி பதாவநி த்வம்
முக்தா சோண மணி சக்ர நீலருசா
நகருசி ஸந்ததி ருசிராம்
நந்தக நிஸ்த்ரிம்ச ஸம்பதம் சௌரே:—580-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது முத்துக்களின் ஒளி, பத்மராகக் கற்களின் ஒளி மற்றும் இந்த்ரநீலக் கற்களின் ஒளி
ஆகியவை ஸ்ரீரங்கநாதனின் திருவடியின் நகங்களில் புதிய ஒளியை ஏற்படுத்துகின்றன.
இதனைக் காணும்போது நீ அவனுடைய நந்தகம் என்னும் கத்தியின் தோற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

————

அர்ச்சிஷ்மதீ காஞ்சந பாத ரக்ஷே
ப்ரஸ்தௌதி தே பாடல ரத்ந பங்க்தி:
ரேகா ரதாங்கஸ்ய மஹ: ப்ரபஞ்சம்
ரங்கேச பாதாம்புஜ மத்ய பாஜ:—-591–

ஸ்ரீரங்கநாதனின் பொன்மயமான பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய தாமரை மலர் போன்ற அழகிய திருவடியின் நடுவில்,
ரேகை வடிவத்தில் சக்கரம் உள்ளது. உன்னுடைய பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது,
அந்தச் சக்கரத்தின் ஒளியைப் போன்று காணப்படுகிறது.

———–

அருணமயஸ் தவ ஏதே
ஹரி பத ராகேண லப்த மஹிமாந:
கமயந்தி சரண ரக்ஷே
த்யு மணி கணம் ஜ்யோதி ரிங்கணதாம்—-610-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது பத்மராகக்கற்கள், ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித் தாமரைகளின்
சிவந்த ஒளியைப் பெறுகின்றன. இதனால் அவை, மற்ற சூரியன்கள் அனைத்தையும், ஒளி குறைந்த,
மின்மினிப்பூச்சிகள் போன்று மாற்றி விடுகின்றன.

————-

ரங்கேஸ சரண ரக்ஷா
ஸா மே விததாது சாஸ்வதீம் ஸூத்திம்
யத் மௌக்திக ப்ரபாபி:
ஸ்வேத த்வீபம் இவ ஸஹ்யஜா த்வீபம்—-660-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ எனக்கு அழிவற்ற வெண்மையை
(பாவங்கள் அற்ற தன்மை, ஞானம்) உண்டாக்க வேண்டும். உன்னுடைய முத்துக்களின் அந்த ஒளியால் அல்லவோ
ஸ்ரீரங்கம் என்னும் காவேரியால் சூழப்பட்ட தீவானது, ச்வேத த்வீபம் போன்று வெண்மையாக உள்ளது?

——————-

ஸ்தல கமலநீவ காசித்
சரணாவநி பாஸி கமல வாஸிந்யா:
யத் மரதக தள மந்யே
ய: கச்சிதஸௌ ஸமீக்ஷ்யதே சௌரி:-680–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாமரையில் வீற்றுள்ள ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஏற்ற ஒரு நிலத் தாமரை வனமாக நீ உள்ளாய்.
அந்தத் தாமரை வனத்தின் இலைகளாக உனது மரதகக் கற்களின் பச்சை ஒளி உள்ளது.
அந்த இலைகளின் நடுவே ஸ்ரீரங்கநாதன் ஒரு இலை போன்று காணப்படுகிறான்.

——————

நமதாம் நிஜ இந்த்ரநீல ப்ரபவேந முகுந்த பாதுகே பவதீ
தமஸா நிரஸ்யதி தம: கண்டகம் இவ கண்ட கேநேவ—710–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முள்ளைக் கொண்டு முள்ளை எடுப்பது போன்று, கருமையாகக் காணப்படும்
உனது இந்த்ரநீலக் கற்களின் ஒளி மூலமாகவே நீ உன்னை வணங்குகின்றவர்களின் அறியாமை என்னும் இருளை நீக்குகிறாய்.

———–

ப்ரஜ்வலித பஞ்ச ஹேதி: ஹிரண்மயீம் த்வாம் ஹிரண்ய விலயார்ஹ:
ஆவஹது ஜாத வேதா: ஸ்ரியம் இவ ந: பாதுகே நித்யம்—750–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சக்கரம் முதலான ஐந்து ஆயுதங்களை ஏற்தியபடி,
ஹிரண்யன் போன்றவர்களை அழிப்பதற்காக ஸ்ரீரங்கநாதன் உள்ளான்.
இப்படிப்பட்ட அவன், தங்கமயமான உன்னை, அவனுக்குச் செய்யும் கைங்கர்யச் செல்வமாக உள்ள உன்னை,
எங்களுக்கு எப்போதும் தந்தருள வேண்டும்.

——————

பஹுமுகபோக ஸமேதை: நிர்முக்ததயா விஸூத்திம் ஆபந்நை:
சேஷாத்மிகா பதாவநி நிஷேவ்யஸே சேஷ பூதைஸ் த்வம்—-760–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷனின் அவதாரமான நீ, பலவிதமான இன்பங்களுடன் கூடியவர்களும்,
அனைத்து கர்மங்களில் இருந்தும் விடுபட்டதனால் தோஷம் இல்லாத தன்மையை அடைந்தவர்களும் ஆகிய
ஸ்ரீரங்கநாதனின் தொண்டர்களால் எப்போதும் வணங்கப்படுகிறாய்.

————-

பாதுகே பவ பய ப்ரதீ பயோ:
பாவயாமி யுவயோஸ் ஸமாகமம்
ஸக்தயோர் தநுஜவைரிணர் பதே
வித்யயோர் இவ பராவராத் மநோ:–768–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! அசுரர்களின் சத்ருவான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உள்ள நீங்கள்,
ஸம்ஸார பயத்திற்குச் சத்ருவாக உள்ளீர்கள். இப்படியாக உள்ள உங்கள் இருவரது சேர்க்கையைக் காணும் போது,
பரை மற்றும் அபரை என்ற வித்யைகளின் சேர்க்கை என்றே நான் எண்ணுகிறேன்.

————

பத்த ஹரி பாத யுகளம் தபநீய பாதுகே யுவயோ:
மோசயதி ஸம்ஸ்ரிதாநாம் புண்யாபுண்யமய ஸ்ருங்கலா யுகளம்—-780–

தங்கமயமான பாதுகைகளே! உங்களது இந்த இணை என்பது இரண்டாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை ஒன்றாகக் கட்டுகிறது.
இந்த இணையே, உங்களை அண்டியவர்களின் புண்ணியம் மற்றும் பாவம் என்னும் சங்கிலிகளின் பிணைப்பை விடுவிக்கின்றன.

——–

அப்ரபூதமபவத் ஜகத்ரயம்
யஸ்ய மாதும் உத்தி தஸ்ய பாதுகே
அப்ரமேயம் அமி தஸ்ய தத்பதம்
நித்யமேவ நநு சம்மிதம் த்வயா –795-

ஸ்ரீ பாதுகையே -திரு உலகு அளந்த சமயம் மூன்று உலகும் அவன் திருவடிக்கு போதாமல் போயிற்று –
அளவிட முடியாதவனான அவனுடைய அளவிட ஒண்ணாத மஹிமை கொண்ட அந்த திருவடியும் கூட உன்னாலே
நித்தியமே அளவிடப் பட்டு நிகிறதே -உன் பெருமைக்கு மற்றவை ஏதும் இணையாகாது –

———–

ப்ரதமா கலேவ பவதீ சரணாவநி பாதி ரங்க சந்த்ரமஸ:
ஸ்ருங்க உந்நதிரிவ யத்ர ஸ்ரியம் விபாவயதி யந்த்ரிகா யோக:—-810-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைக் காணும்போது ஸ்ரீரங்கத்தின் சந்த்ரனாகிய ஸ்ரீரங்கராஜனின்
முதல் கலை போன்று உள்ளாய். இப்படியாக உள்ள அந்தக் கலையின் நுனி போன்ற அழகை உனது குமிழ் ஏற்படுத்துகிறது.

———-

ரேகா அபதேசதஸ் த்வம்
ப்ரசமயிதும் ப்ரளய விப்லவ ஆசங்காம்
வஹஸி மதுஜித் பதாவநி
மந்யே நிகமஸ்ய மாத்ருகா லேக்யம்—-820-

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ப்ரளய காலத்தில் வேதங்கள் அழித்துவிடுமோ
என்ற சந்தேகம் சிலருக்கு உண்டாகலாம். இதனால் அந்த சந்தேகத்தை நீக்கும் விதமாக உன்னில் காணப்படும்
கோடுகள் என்பதன் மூலம், வேதங்களின் ப்ரதியை நீ வைத்துக் கொண்டுள்ளாய் என்பதை உணர்த்துகிறாய் போலும்.

———

அதரீக்ருத: அபி மஹதா
தமேவ ஸேவேத ஸாதரம் பூஷ்ணு:
அலபத ஸமயே ராமாத்
பாத க்ராந்தாபி பாதுகே ராஜ்யம்—830-

மேலும் மேலும் உயர எண்ணுபவன், உயர்ந்த ஒருவனால் தாழ்வாக நடத்தப்பட்டாலும், அவனையே அண்டி வணங்கி நிற்க வேண்டும்.
பாதுகையானது இராமனின் திருவடிகளால் மிதிக்கப்பட்டாலும், ஒரு காலகட்டத்தில் இந்த இராமனின் ராஜ்யத்தையே அடைந்தாள்

————–

ஸ்பீதம் பதாவநி தவ ஸ்நபந ஆர்த்ர மூர்த்தே:
ஆஸாகரம் ததம் அபூத் மணிரஸ்மி ஜாலம்
லீலோசிதம் ரகு ஸுதஸ்ய சரவ்யம் ஆஸந்
யாதூநி யஸ்ய வலயேந விவேஷ்டிதாநி—-842–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திருமஞ்சனம் மூலம் நனைந்துள்ள உனது இரத்தினக்கற்களின் ஒளியானது ஸமுத்திரம்
வரை பரவி நின்றது. அந்த ஒளியானது ஒரு வலை போன்று காணப்பட்டது.
அந்த வலையில் சூழப்பட்ட அரக்கர்கள் அனைவரும் இராமனின் பாணங்களுக்கு விளையாட்டு போன்று இலக்கானார்கள்.

—————-

ரங்காதி ராஜ பத பங்கஜம் ஆஸ்ரயந்தீ
ஹைமீ ஸ்வயம் பரிகதா ஹரி நீல ரத்நை:
ஸம்பாவ்யஸே ஸுக்ருதிபி: மணி பாதுகே தவம்
ஸாமாந்ய மூர்த்தி: இவ ஸிந்து ஸுதா தரண்யோ:—853–

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் பற்றியவளாகவும்,
தங்கமயமாக இந்த்ரநீலக் கற்களால் இழைக்கப்பட்டவளாகவும் நீ உள்ளாய்.
ஆக நீ திருப்பாற்கடலில் அவதரித்த மஹாலக்ஷ்மி என்றும், பூமிபிராட்டி என்றும் புண்ணியவான்களால் எண்ணப்படுகிறாய்
(தங்க நிறம் = மஹாலக்ஷ்மி, இந்த்ரநீலம் = பூதேவி).

———

ரகுபதி ஸங்காத் ராஜ்ய கேதம் த்யஜந்தீ
புநரபி பவதீ ஸ்வாந் தர்ஸ யந்தீ விஹாராந்
அபிஸமதித வ்ருத்திம் ஹர்ஷ கோலாஹலாநாம்
ஜநபத ஜநிதாநாம் ஜ்யாயஸா சிஞ்ஜிதேந—-883-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமனின் திருவடிகளில் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சேர்ந்ததால்,
அதுவரை ராஜ்ய பாரம் காரணமாக உண்டான துயரங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் நீ விட்டாய்.
மீண்டும் உனது உல்லாஸமான ஸஞ்சாரங்களைக் காட்டியபடி, இனிமையான நாதத்தால்,
அயோத்தியில் உண்டான இனிமையான சந்தோஷக் கூச்சல்களை மேலும் வளர்த்தாய்.

———–

ரம்ய ஆலோகா லளித கமநா பத்மராக அதரோஷ்டீ
மத்யே க்ஷாமா மணி வலயிநீ மௌக்திக வ்யக்த ஹாஸா
ஸ்யாமா நித்யம் ஹரி தமணிபி: சார்ங்கிண: பாத ரக்ஷே
மந்யே தாது: பவஸி மஹிளா நிர்மிதௌ மாத்ருகா த்வம்—-898–

சார்ங்கம் என்ற வில்லை உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் அழகிய தோற்றத்தைக் கொண்டவளாக,
மெதுவான அழகிய நடையைக் கொண்டவளாக, பத்மராகக் கற்களின் சிவந்த தன்மையால் அழகான உதடுகள் கொண்டவளாக,
நடுப்பாகத்தில் (இடை) சிறுத்தவளாக, இரத்தினக்கற்களின் கூட்டம் என்ற வளையல்கள் அணிந்தவளாக,
முத்துக்கள் போன்ற அழகான சிரிப்பைக் கொண்டவளாக, பச்சைக்கல் மூலம் என்றும் யுவதியாகத் தோற்றம் அளிப்பவளாக நீ உள்ளாய்.
இப்படியாக நான்முகன் உத்தமப் பெண்களைப் படைக்க உதவுகின்ற மாதிரி உருவமாக (model) நீ உள்ளாய் என்று எண்ணுகிறேன்.

இந்த சுலோகத்தினை அதியற்புதமாய் ஒரு சிலேடை நடையில் அமைத்துள்ளார்.
இதிலுள்ள “நித்ய“ என்னும் ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டு மீதமுள்ள பதங்களோடு சேர்த்து
விசேஷமான அர்த்தங்களைக் காண்போம்!
நித்யம் ரம்யாலோகா – எப்பொழுதும் தெளிவும், ஆனந்தமும் கொண்ட ஆத்மாவிலிருந்து உண்டான
வெளிப்படையான தேஜஸ்ஸை உடைத்தாயிருக்கை.
நித்யம் லலிதகமனா – ஜனங்களுக்கு நடையில் பல கோணல், விகாரங்கள் இருப்பது போல் அவர்கள் கடைபிடிக்கும்
அனுஷ்டானத்திலும் பல தோஷங்கள் உண்டு. அம்மாதிரியெல்லாம் இல்லாமல் சாஸ்திர ரீதியாய், ஸத் ஸம்ப்ரதாயமான
ஆசார அனுஷ்டானங்களை விதிப்படிக்கும், பெரியவர்களது உபதேச க்ரமபடிக்கும், சிரத்தை, பக்தி, விசுவாசத்தோடு ,
ஆடம்பரம், அஹங்காரம், பிரதிபலன்கள் ஏதும் எதிர்பார்க்காமல், எப்போதும் ஒரே மாதிரியாய் அனுஷ்டிப்பது.
நித்யம் பத்மராகாத்ரோஷ்டி தன்னுடைய நற்குணங்களாலும், நல்வாக்கினாலும், தம்முடைய வாக்கு,
கேட்பவர்களிடத்து ஆனந்தமான மெய்யுணர்வு ஏற்படும்படி இருக்கை.
நித்யம் மத்யே க்ஷாமா இத்தனை பெருமைகளும், யோக்யதைகளும் இருந்தும் கூட பவ்யமாகயிருத்தல்.
நித்யம் மணிவலயிநி – வேதம் கூறும் சாஸ்திரங்களையும், அது குறித்த பூர்வாச்சார்யர்களுடைய விளக்கங்களையும்,
வியாக்யானங்களையும் எப்போதும் ஆபரணம் போன்று நினைவில் கொண்டிருக்கை
நித்யம் மெளக்திகவ்யக்தஹாஸா – எப்போதும் தன்னுடைய சௌஹார்த்ததாலும் (எல்லாரையும் அன்போடு அணைத்துச் செல்லும் குணம்)
மலர்ச்சியோடு கூடிய தோற்றத்தினாலும் எப்போதும் இவர் நம்மோடுயிருந்து அருள வேண்டும் என்றிருக்கை.
நித்யம் ஸ்யாமா ஹிதமணிபி – நல்ல இறையனுபவத்தாலே காமக்ரோதாதிகள் அறவேயொழிந்து, புத்தி தெளிவடைந்து,
அதனால் சரீரம் நல்ல தேஜஸ்ஸையடைந்திருக்கை.
நித்யம் சார்ங்கிண: பாதரக்ஷே – பெருமாளுக்கு எந்தவிதமான அபராதங்களும் ஜனங்கள் செய்யமால்,
அபஹாரம் வராதபடிக்கு நித்ய ரக்ஷகர்களாய் இருக்கை. இதற்கு ஜனங்களுக்குப் பெருமாளைக் குறித்த
தெளிவான அறிவு வேண்டும். அதனை பல ப்ரமாணங்கள் மூலம் புகட்டும் தெளிவு வேண்டும்.

இவைகள் தாம் ஸதாச்சார்யனுடைய லக்ஷணங்கள். அவர்களால் சிக்ஷையடைந்து தேறிய நல்ல சீடர்களின் லக்ஷணமும் ஆகும்.

—————–

காலே தல்பப புஜங்கமஸ்ய பஜத: காஷ்டாம் கதாம் சேஷதாம்
மூர்த்திம் காமபி வேத்மி ரங்க ந்ருபதே: சித்ராம் பத த்ரத்வயீம்
ஸேவா நம்ர ஸுராஸுரேந்த்ர மகுடீ சேஷாபடீ ஸங்கமே
முக்தா சந்த்ரிகயேவ யா ப்ரதயதே நிர்மோக யோகம் புந:—-907–

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! வியப்பை அளிக்கவல்ல ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளான உங்களை
அவனது ஸஞ்சார காலத்தில் அடிமைத்தனத்தின் எல்லைக்கே செல்வதால்,
அவனுடைய படுக்கையான ஆதிசேஷனின் உருவமே என்று எண்ணுகிறேன்.
ஸ்ரீரங்கநாதனை வணங்கி நிற்பவர்களான தேவர்கள் மற்றும் அசுரர்களின் தலைகளில் உங்களை வைக்கும்போது
உங்கள் முத்துக்களின் ஒளியானது பரிவட்டம் போன்று காணப்படுகிறது. மேலும் அவர்களின் தலையில் உள்ள பரிவட்ட
வஸ்த்ரத்துடன் இந்த ஒளியும் இணையும்போது, உரித்த நாகத்தின் தோல் போன்று காணப்பட்டு, ஆதிசேஷனை நினைவுபடுத்துகிறது.

ஆதிசேஷனுடைய இன்னொரு உருவம்தான் பாதுகை.
இவ்விதம் கூறுவதற்கு இரண்டு காரணங்களை இந்த ஸ்லோகத்தில் கூறுகின்றார்.
1-ஆதிசேஷனை வெள்ளிமலை போல் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றது. நல்முத்துக்கள் பதிக்கப்பெற்ற பாதுகையிலிருந்து
வெளிப்படும் காந்தியானது வெள்ளிமலையை போன்று காட்சியருளுகின்றது.
2-தம் பக்தர்களை கௌரவிக்கும் போது, அவர்களது சிரஸ்ஸில் வெள்ளைத் திருப்பரிட்டத்தினைச் சுற்றி கட்டி
அதன் மேல் பாதுகையை சாதிக்கும் போது, வெள்ளைத் திருப்பரிவட்டம், உரித்து விட்ட பாம்பு சட்டைப் போன்றும்,
பாதுகை ஆதிசேஷனின் சிரஸ் போன்றும் காட்சியருளுகின்றது.
(“சேஷப்படி“ என்பது திருப்பரிவட்டத்திற்கான சமஸ்கிருதப் பெயர்.
இந்த சுலோகத்தின் மூலம் இது அந்த காலத்தில் வெளுப்பு வர்ணத்திலிருந்த்து அறியப்படுகின்றது.)
சேஷத்வ காஷ்டை மிகுந்தவர்கள் ஆழ்வார் மற்றும் ஆச்சார்யர்கள். இவர்கள் ஆதிசேஷன் போன்ற நித்யசூரிகளின் அவதாரமேயாவர்.
(ஸ்வாமி மணவாள மாமுனிகள் சொரூபத்தில் கூட சட்டை உரித்த பாம்பினைப் போன்று பால் போன்ற நிறத்தில்தான் இருப்பாராம்.)
சுத்த சத்துவ குணத்தோடேயே அவதரித்தவர்கள். இவர்களை, இவர்களின் ஸ்ரீசூக்திகளைப் போற்ற போற்ற
நமக்கு சத்துவ குணம் மேலிடும், தோலுரித்த பாம்பின் பிரகாசம் போன்று.

————-

பாபாத பாபாத பாபாஸ் பாத பாத தபா தபா
தபாதபா பாதபாத பாத பாத தபாதபா –933– (சித்ர பத்ததி )

பாபம் அற்றது -அகார வாச்யனான ஸ்ரீ விஷ்ணுவின் ஸ்ரீ பாதத்திற்கு ஒளி கொடுப்பது -ஜீவர்களுக்கும் ஒளி வழங்குவது –
தன்னை பகவான் இடம் சமர்ப்பிக்குமவர் விஷயத்தில் ரஷை தரும் திருமஞ்சன தீர்த்தம் உடையது
சர்வ லோக ரஷகமாய் இருப்பதும் சர்வ பாபா நாசகமாய் இருப்பதுமான பெருமாள் திருவடிகளுக்கும் கூட ரஷணம் தருவது ஸ்ரீ பாதுகையே –
அது என்னை சர்வ பாபங்களில் இருந்து காத்து அருளிற்று –

ஒரே வார்த்தையை 16 முறை-இது அ ஆ என்கிற உயிர் எழுத்துக்களை கொண்டது , இரண்டு மெய் எழுத்துக்களையும் கொண்டது .

பாதபா , பாபா , அத , அபா , பாதபா , பாத , பா , பாத , பாபாத் , அபாபாத் , ஆ , பாபா , த , பாபா , ஆத , பா , பாத , பா

என்று பிரித்து படிக்கப் பட வேண்டும் , அதன் பொருள் என்னவெனில் ,
மரம் போன்ற தாவரங்களையும் , பிராணிகளையும் , அடைந்திருக்கும் பாபத்தை உணடழிக்கக் கூடிய
அபிஷேக நீரை சொந்தமாக்கிக் கொண்டுள்ளதும் , முறையே நியமிக்கப் பட்டு , பதவிகளில் இருக்கும் தேவர்களை
காக்கின்ற ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை காத்திடுவதுமான பாதுகை ,
பெற்றோர்களை நன்கு பார்த்துக் கொள்வோர் விஷயத்திலும் , நன்கு காப்பாற்றாதவர்கள் விஷயத்திலும் முறையே
பாப புண்ணியத்தை நோக்குவதும் , ஸ்ரீ விஷ்ணுவை அனுபவிக்கின்றவற்கு சரணாகதிக்கு வழி வகுப்பதும் ,
நிந்திக்கும் விரோதிகளை அழிக்கக் கூடிய பெருமாளின் ஒளிகளை காப்பதும் பாதுகையே –என்று பாடுகிறார்-

———–

சரம் அசரம் ச நியந்துஸ் சரணௌ
அந்தம் பரேதரா சௌரே:
சரம் புருஷார்த்த சித்ரௌ சரணாவநி
திசஸி சத்வரேஷு ஸதாம்—950-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அடியார்களைக் காப்பாற்றும் அதே சிந்தனை கொண்டவளாக உள்ளாய்.
அசைகின்றதும், அசையாமல் உள்ளதும் ஆகிய அனைத்தையும் நியமிக்கின்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள்,
உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷத்தைப் பற்றிய ஞானத்தை உண்டாக்கி, காக்கவல்லவையாக உள்ளன.
இப்படிபட்ட அவனது திருவடிகளை (இதன் மூலமாக ஸ்ரீரங்கநாதனை) ஸாதுக்களின் வீட்டிற்கே அழைத்து வந்து,
அவர்களின் பூஜை அறையில் நிலையாக நிறுத்தி விடுகிறாய்.
ஆக நீ ஸ்ரீரங்கநாதனை வெகு சுலபமாக அவர்களது இல்லங்களுக்கு அழைத்து வருகிறாய்.

———-

அபி ஜந்மநி பாதுகே பரஸ்மிந்
அநகை: கர்மபி: ஈத்ருசோ பவேயம்
ய இமே விநயேந ரங்க பர்த்து:
ஸமயே த்வாம் பதயோஸ் ஸமர்ப் பயந்தி—-952-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அந்தந்த காலங்களில் ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சகர்கள் உன்னை அவனது திருவடிகளில்
மிகவும் அன்புடன் ஸமர்ப்பணம் செய்கிறார்கள். எனது அடுத்த பிறவியில் இவர்கள் போன்று
ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சகராகப் பிறந்து உனக்கு கைங்கர்யம் செய்வேனோ?

————

காலே ஜந்தூந் கலுஷ கரணே க்ஷிப்ரம் ஆகார யந்த்யா:
கோரம் நாஹம் யம ப்ரிஷதோ கோஷமா கர்ண யேயம்
ஸ்ரீமத் ரங்கேச்வர சரணயோ: அந்தரங்கை: ப்ரயுக்தம்
ஸேவாஹ்வாநாம் ஸபதி ஸ்ருணுயாம் பாதுகா ஸேவக இதி —969-

கலுஷ=கலங்கியிருக்கின்ற – கரணே=இந்திரியங்களுடைய – காலே=செத்துப் போகிற காலத்திலே –
ஜந்துாந்=ஜந்துக்களை (ஜீவன்களை) – க்ஷிப்ரம்=சீக்கிரமாக – ஆகாரயந்த்யா:=அழைக்கிறதாயிருக்கின்ற –
யமபரிஷத:=யமக் கூட்டத்தினுடைய – கோரம்=பயத்தையுண்டுப் பண்ணுவதான – கோஷம்= இரைச்சலை –
அஹம்=நான் – நாகர்ணயேயம்=கேட்கமாலிருக்க வேண்டும். – ஸ்ரீமத்=மஹாலக்ஷ்மியோடு கூடிய –
ரங்கேஸ்வர=ஸ்ரீரங்கநாதனுடைய – சரணயோ:=திருவடிகளுக்கு – அந்தரங்கை:=அந்தரங்கமாய் –
ப்ரயுக்தம்= சொல்லப்படுகின்ற – பாதுகாஸேவகேதி= பாதுகா ஸேவகரே என்று – ஸேவா=ஸேவைக்காக –
ஆஹ்வானம்=பகவத் ஸந்நிதிக்குள் அருளப்பாடிட்டு (என்னை)அழைப்பதை – ஸபதி=சீக்கிரமாக –
அஹம்=நான் – ச்ருணுயாம்=கேட்கவேண்டும்.

———–

ஜ்ஞாந க்ரியா பஜந ஸீம விதூர வ்ருத்தே:
வைதேசி கஸ்ய தத் அவாப்தி க்ருதாம் குணாநாம்
மௌளௌ மமாஸி மது ஸூதந பாதுகே த்வம்
கங்கேவ ஹந்த பதித விதிதைவ பங்கோ:—983-

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஞானயோகம், கர்மயோகம் மற்றும் பக்தியோகம்
ஆகியவற்றின் எல்லைகளுக்கு வெகுதூரத்தில் நான் உள்ளேன். அவற்றைப் பெறுவதற்குரிய குணங்களுக்கும் அப்பால் நான் உள்ளேன்.
இப்படிப்பட்ட என் தலை மீது, முடவன் ஒருவன் கங்கையில் விழுந்தது போன்று, நீயாகவே வந்து அமர்ந்தாய். என்ன வியப்பு!

———

இதி ரங்க துரீண பாதுகே த்வம்
ஸ்துதி லக்ஷ்யேண ஸஹஸ்ரசோ விம்ருஷ்டா
ஸபலம் மம ஜந்ம தாவத் ஏதத்
யதி ஹாசாஸ்யம் அத: பரம் கிம் ஏதத்—-1001–

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! இப்படியாக உன்னைத் துதிப்பது என்ற ஸ்தோத்ரம் ஒன்றைச் சாக்காக
வைத்துக் கொண்டு, என்னால் ஆயிரக்கணக்கில் நீ சிந்திக்கப்பட்டாய்.
இதன் மூலமாக எனது பிறவியானது மிகுந்த ப்ரயோஜனம் மிக்கதாகி விட்டது.
இதற்கு மேல் இந்த உலகத்தில் நான் பெற வேண்டியதும், ப்ரார்த்தனை செய்ய வேண்டியதும் வேறு என்ன உள்ளது?

——–

ஜயதி யதிராஜ ஸூக்தி:
ஜயதி முகுந்தச்ய பாதுகா யுகளீ
ததுபயதநா: த்ரிவேதீம்
அவந்தயயந்த: ஜயந்தி புவி ஸந்த:—-1008–

யதிகளின் தலைவர் என்று போற்றப்படும் எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம் போன்ற நூல்கள் மிகவும் மேன்மையுடன் விளங்குகின்றன.
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் மிகவும் மேன்மையுடன் விளங்குகின்றன.
இந்த இரண்டையும் ஒருவர் தனது செல்வமாகக் கொண்டாலே போதுமானது –
அப்படிப்பட்டவர்கள் மூன்று வேதங்களையும் ஸபலமாக்கியபடி வாழ்ந்து மேன்மை அடைகின்றனர்.

ஸ்ரீ யதி ராஜர் என்கிற ஸ்ரீ ராமானுஜர் உடைய திவ்ய ஸூக்திகள் -ஸ்ரீ பாஷ்யம் முதலானவை -சிறப்பாக விளங்குகின்றன –
மோஷ தாதா வாகிற ஸ்ரீ ரங்க நாதனுடைய திருப் பாதுகையினை இவ்வுலகில் விளங்குகிறது –
ஸ்ரீ பாஷ்யகார ஸ்ரீ ஸூக்திகளையும் ஸ்ரீ பாதுகா மூர்த்தியான ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளையும் மட்டுமே தம் தனம்
என்று கொண்டு இருக்கும் சாதுக்கள் த்ரயீ என்ற வேதத்தை வீணாக்காமல் அதை முழு பிரமாணம் ஆக்குகிறவர்கள் –
அவர்கள் இப்புவியில் சிறந்து விளங்குகிறார்கள் –

முதல் ஸ்லோகம் “ஸந்த” என்ற தொடங்கியது.
இந்த ஸ்லோகத்தின் முதல் பதமும் “ஸந்த” என்று முடிவதைக் காண்க.
இந்த ஸ்லோகம் கூறி முடித்தவுடன், மீண்டும் முதல் ஸ்லோகத்தைக் கூறுவது மரபாகும்.

சந்த ஸ்ரீ ரங்க ப்ருத்வீஸ சரண த்ராண சேகரா
ஜயந்தி புவந த்ராண பத பங்கஜ ரேணவ –1-

——————————————————————————–

அயோத்யா காண்டத்தில் நூற்றிப் பன்னிரண்டாவது ஸர்க்கம் உருக்கமான ஒரு காட்சியை நம் முன் காட்டுகிறது.

அதிரோஹார்ய பாதாப்யாம் பாதுகே ஹேமபூஷிதே I
ஏதே ஹி சர்வலோகஸ்ய யோகக்ஷேமம் விதாஸ்யத: II-(நூற்றிப்பன்னிரண்டாவது ஸர்க்கம், 21வது ஸ்லோகம்)

ஆர்ய – ஸ்வாமியே!
ஹேமபூஷிதே – பொன்னால் அலங்கரிக்கப்பெற்ற
பாதுகே – பாதுகைகளில்
பாதாப்யாம் – திருவடிகளால்
அதிரோஹ – ஏறி அருள்வீராக!
ஹி ஏதே – ஏனெனில் இவைகள்
சர்வலோகஸ்ய – எல்லா உலகத்தின்
யோகக்ஷேமம் – யோகக்ஷேமத்தை விதாஸ்யத: – வகிக்கப் போகின்றன

பாதுகா பாதுகா பாதுகா’ என்று சொல்லிப் பாருங்கள், பாதுகாப்பா என்று வரும்.
ஆம்! இறைவனின் பாதுகைகளை நம் சிந்தையில் இருத்துவோம், அவை நம்மை நிச்சயம் காப்பாற்றும்.”

ஸ்தோத்ர காவ்யம் -இது –
திரி ஸானு -கெட்டதையே பேசுபவர் -விஸ்வவஸூ -நல்லதையே பேசுபவர்
புஷபவத் -புஷபவந்தவ் -இரட்டைக்கு -பூ விழுந்த கண் பார்வை தெரியாத என்பான் திரிசாஸூநு
ஸூர்ய சந்த்ரர்களையும் சேர்த்து குறிக்கும் ஒரே வார்த்தை -புஷபவந்தவ்-திங்களும் ஆதித்யனும் போல்
வேங்கடாத்ரி கவி -இப்படி பாடி -இழந்த கண்ணை மீட்க லஷ்மீ சஹஸ்ரம் பாடி கண் பார்வை பெற்றார் –
23-ஸ்லோகம் -பாதுகா சஹஸ்ர மஹிமை சொல்கிறார்
பாதுகையையே பாடி உள்ளார் -தாயே உன்னை பாட முடியாதா –
சாஷாத் ஹயக்ரீவர் தேசிகன் -கவி ஸிம்ஹம் -தார்க்கிக ஸிம்ஹம் –
அவரை ஓப்பிடும் பொழுது ஊமையைப் போன்ற நான் பாடுவதே விஸ் மயம்

———————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருப்பாவை ஸ்வாபதேசம்”–ஓரிரு வார்த்தைகளில்-/ஸ்ரீ திருப்பாவையும் ஸ்ரீ திவ்ய தேச அனுபவ ஸூசகமும் –

April 13, 2021

திருப்பாவை ஸ்வாபதேசம்” –ஓரிரு வார்த்தைகளில்–
(ஸ்ரீ ராமானுஜர் இதழில் வெளியிட்ட திருப்பாவை மகாத்மியம்)

1. மார்கழிக்கு…..ப்ராப்ய, ப்ராபகம்.
2. வையத்து……. க்ருத்ய அக்ருத்ய விவேகம்.
3. ஓங்கி…….திருநாம சங்கீர்த்தனம்.
4. ஆழிமழை……பாகவத ப்ரபாவம்.
5. மாயனை……வித்யா ப்ரபாவம்.
6. புளளும்…….அர்ச்சாவதாரம்.
7. கீசுகீசு…….சேஷத்வ ஞானம்.
8. கீழ்வானம்……பாரதந்த்ர்யம்.
9. தூமணிமாடம்……. பாரதந்த்ர்யம்.
10. நோற்று……ஸித்த தர்மம்.
11. கற்று…….அநுஷ்டானம்.
12. கனைத்திளம்……அநுஷ்டானம்.
13. புள்ளின்வாய்……ஸ்வரூப ஞானம்.
14. உங்கள்…….ஆத்மகுண பூர்த்தி.
15. எல்லே……பாகவத ஸ்வரூபம்.
16. நாயகனாய்…….ஆசார்ய ப்ரபாவம்.
17. அம்பரமே…..ஸ்வகத ஸ்வீகாரம்.
18. உந்து…..பிராட்டி.
19. குத்துவிளக்கெரிய …புருஷகார.
20. முப்பத்துமூவர்…..வைபவம்.
21. ஏற்ற கலங்கள் ….ஸ்வரூபக்ருத தாஸ்யம்.
22. அங்கண்மா…..அநந்யார்ஹ சேஷத்வம்.
23. மாரிமலை……பகவத் க்ருபை.
24. அன்றிவ்வுலகம்….. மங்களாசாஸனம்.
25. ஒருத்தி…….தத்வ த்ரயம்.
26. மாலே…..ஸாரூப்யம்.
27. கூடாரை ….ஸாயுஜ்யம்
28. கறவைகள் …ப்ராபகம் (உபாயம்)
29. சிற்றஞ்சிறு……ப்ராப்யம் (உபேயம்)
30. வங்கக்கடல்…..பலச்ருதி.

———-

ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில்

1) பாரை உண்டு –
2) பார் உமிழ்ந்து –
3) பார் இடந்த எம்பெருமான்,
ஸ்ரீ வராஹ மூர்த்தியாய், மானமிலா பன்றியாய் பூமி பிராட்டியை ரக்ஷித்து கொடுத்தார்!

அப்போது காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை
அருளிச் செய்ய வேண்டும் என்று ஜகன் மாதாவான பூமி பிராட்டி பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள்.

இதையே ‘கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான்
கோதா சதுச்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார். (#ஸ்ரீ_கோதா_சதுச்லோகி )

அப்போது எம்பெருமான் 3 இலகு உபாயங்களை உபதேசிக்கிறார்.

1) ‘கீர்த்தனம்’ – பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும்.
2) ‘தஸ்மை ப்ரசுரார்ப்பணம்’ என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும்.
3) ‘ப்ரபதன’ சுலபன் அவன் – ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்று அருளினார் ஸ்ரீ வராஹ மூர்த்தி.
பூமி பிராட்டியை ரட்ஷித்து இடது பக்கம் அமர்த்தி கொண்டு -அவரே திருக்கையால் நாம் முதலில்
பூமா தேவியை பற்றி கொண்டு அவனை பற்ற வேண்டும் என்று காட்டி கொடுக்கிறார்.

ஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் ஆண்டாள் அவதரித்தாள்.

ஸ்ரீ வராஹ மூர்த்தி அருளிய 3 உபாயங்களை, ஸ்ரீ ஆண்டாள்,

1. தூமலர் தூவித்தொழுது
2. வாயினால் பாடி ️
3. மனத்தினால் சிந்திக்க
என மூன்று யுகம் தாண்டி நமக்கு புரியும் படி அருளினாள்.

“உதாராம் கோதாம்” – பாட வல்ல நாச்சியார் ஆக திருஅவதரித்து பாட்டின் பெருமையை நமக்கு அருளினாள்!
வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை – மூன்று பத்து பாசுரங்களாக திருப்பாவையில் பாடினாள் ஆண்டாள்.
1) முதல் பத்து பாசுரங்கள் ‘ எம்பெருமான் திருநாமங்களை பாடு’ என வலியுறுத்துகிறது.
2) 2-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்கிறது.
3) 3-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்கிறது.

“மாயனை மலர் தூவி, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்”
என்று பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யத்தை ஆச்ரயித்து நாம் கோதாவின் ஸ்ரீஸூக்திகளை,
திருப்பாவையை நித்யமாகவே பாடுவோம். பாடி தொழுது வணங்குவோம்!

——————–

ஸ்ரீ திருப்பாவையும் ஸ்ரீ திவ்ய தேச அனுபவ ஸூசகமும் –

மார்கழித் திங்கள் – நாராயணன் – பரமபத நாதன்

வையத்து – பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் – அழகிய பாற் கடல் (க்ஷராப்தி நாதன்)

ஓங்கி உலகளந்த உத்தமன் -திருக் கோவலூர் அனுபவம்

ஆழி மழை – பழியம் தோளுடைப் பத்ம நாபன் – திருவநந்தபுரம்

மாயனை – வடமதுரை அனுபவம் – மதுரா

புள்ளும் சிலம்பின – திருவண்வண்டூர்

கீசு கீசு என்று -திருவாய்ப்பாடி அனுபவம்

கீழ் வானம் – தேவாதி தேவன் – திருவத்தியூர் அனுபவம்

தூ மணி – திருக்கடிகை

நோற்றுச் சுவர்க்கம் – திருக்காட்கரை

கற்றுக் கறவை – திருமோகூர்

கனைத்து இளம் கன்று – திருசித்ரகூட அனுபவம்

புள்ளின் வாய் கீண்டான் -திருக்குடந்தை

உங்கள் புழக்கடை – திருஅழுந்தூர்

எல்லே இளம் கிளியே – திருவல்லிக்கேணி அனுபவம்

நாயகனாய் நின்ற – திருக்குறுங்குடி அனுபவம்

அம்பரமே தண்ணீரே – காழிச் சீராம விண்ணகரம்

உந்து மதகளிற்றன் – திருநறையூர் அனுபவம்

குத்து விளக்கு -திருவிடவெந்தை

முப்பத்து மூவர் – திருப்பாடகம்

ஏற்ற கலங்கள் – திருக்கண்ணமங்கை – திருநாராயணபுரம்

அம்கண் மாஞாலம் – திருமால் இரும் சோலை

மாரி மலை முழஞ்சில் -திருவரங்கம்

அன்று இவ்வுலகம் -கோவர்த்தன் அனுபவம்

ஒருத்தி மகனாய் – திருக்கண்ணபுரம்

மாலே மணிவண்ணா –ஸ்ரீ வில்லி புத்தூர்

கூடாரை வெல்லும் – திருவேங்கடம்

கறவைகள் பின் சென்று –ஸ்ரீ விருந்தாவனம்

சிற்றம் சிறு காலை –ஸ்ரீமத் த்வாராபதி

வங்க கடல் கடைந்த –ஸ்ரீ வில்லி புத்தூர்.

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .