ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -87–ஸ்ரீ குசேல விருத்தாந்தம்–

குசேல நாம ப4வத: ஸதீர்த்2யாதாம்
கத : ஸ ஸாந்தீ3பனி மந்தி3ரே த்3விஜ:|
த்வதே3க ராகே3ண த4னாதி3 நிஸ்ப்ருஹோ
தி3னாதி3 நின்யே ப்ரச’மி க்3ருஹாஸ்’ரமீ || ( 87 – 1 )

ஸ்ரீ சாந்தீபனி முனியின் ஆசிரமத்தில் தங்களுடன் கல்வி கற்றவரும், சாந்த ஸ்வபாவம் உடையவரும்,
கிருஹஸ்தரும் ஆன ஸ்ரீ குசேலன் என்னும் பெயருடைய பிராமணன், தங்களிடம் கொண்ட பக்தியால்
பணம் முதலியவற்றில் பற்று இல்லாமல் நாட்களைக் கழித்து வந்தார். ( 87 – 1 )

கிழிந்த ஆடை -இதுவே நிரூபகம்-

———-

ஸமான சீ’லாSபி ததீ3ய வல்லபா4
ததை2வ நோ சித்த ஜயம் ஸமேயுஷீ |
கதா3சிதூ3சே ப3த வ்ருத்தி லப்த4யே
ரமாபதி: கின்ன ஸகா2 நிஷேவ்யதே || ( 87- 2 )

ஸ்ரீ குசேலனுக்குச சமமான சீலம் பெற்றவள் ஆயினும், அவர் மனைவி அவரைப் போல
மனத் தூய்மை பெற்று இருக்க வில்லை.
“செல்வம் கிடைக்கத் தங்கள் தோழனும், ஸ்ரீ லக்ஷ்மியின் கணவனும் ஆன
ஸ்ரீ கிருஷ்ணனை ஏன் சேவிக்கக் கூடாது?” என்று அவனிடம் கேட்டாள். ( 87 – 2 )

————

இதீரிதோSயம் ப்ரியயா க்ஷுதா4ர்தயா
ஜுகு3ப் ஸமானோSபி த4னே மதா3வஹே|
ததா3 த்வதா3லோகன கௌதுகாத்3யயௌ
வஹன் படாந்தே ப்ருது2கானுபாயனம் || ( 87 – 3 )

பசியால் வருந்தும் தன் மனைவி இவ்விதம் கூறியவுடன், அந்த ஸ்ரீ குசேலன் கர்வத்தை உண்டு பண்ணும்
செல்வத்தை வெறுத்த போதிலும், தங்களைத் தரிசிக்க விரும்பினர்.
தங்களுக்குக் காணிக்கையாக வஸ்திரத் தலைப்பில் கொஞ்சம் அவுலை எடுத்துக் கொண்டு
ஸ்ரீ மத் துவாரகைக்குச் சென்றார். ( 87 – 3 )

ஷுத் ஷாமா -பசியால் வாடுபவள் -இதுவே நிரூபிக்க இவளுக்கு

————–

க3தோSய மாச்சர்ய மயீம் ப4வத் புரீம்
க்3ருஹேஷு சை’ப்3யா ப4வனம் ஸமேயிவான் |
ப்ரவிஷ்ய வைகுண்ட2 மிவாப நிர் வ்ருதிம்
தவாதி ஸம்பா4வனயா து கிம் புன:|| ( 87 – 4)

அந்த ஸ்ரீ குசேலன், ஆச்சரியங்கள் நிறைந்த தங்கள் நகரை அடைந்து பதினெட்டாயிரம் வீடுகளுக்கு
இடையில் சை’ப்3யையின் வீட்டை அடைந்து ஸ்ரீ வைகுண்டத்தையே அடைந்து விட்டவர் போல ஆனந்தம் எய்தினார்.
தங்களுடைய சிறந்த உபசாரமே அதற்குக் காரணம் என்று சொல்லவும் வேண்டுமோ? ( 87 – 4 )

—————–

ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம்
கரே க்3ருஹீத்வா Sகத2ய: புராக்ருதம்|
யதிந்தனார்த2ம் கு3ருதார சோதி3தை:
அபர்து வர்ஷம் தத3மர்ஷி கானனே || (87 – 5 )

தங்களால் நன்கு பூஜிக்கப்பட்டார். தங்கள் பத்தினி விசிறி வீசினாள்.
ஸ்ரீ குசேலனைக் கையால் பிடித்துக் கொண்டு பழங்கதைகள் பேசினீர்கள்.
ஸ்ரீ குரு பத்தினி விறகு கொண்டு வரச் சொன்ன போது காலம் அல்லாத காலத்தில்
பெய்த மழையைப் பொறுத்தது எப்படி என்று. ( 87 – 5)

———-

த்ரபா ஜூஷோSஸ் மாத் ப்ருது2கம் ப3லாத3தா2
ப்ரக்3ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதா3சி’தே த்வயா|
க்ருதம் க்ருதம் நன்வியதேதி ஸம்ப்4ரமாத்
ரமா கிலோ பேத்ய கரம் ருரோத4 தே || ( 87 – 6 )

பிறகு ஸ்ரீபதிக்கு ஒரு பிடி அவல் கொடுப்பதற்கு வெட்கம் அடைந்த அந்த ஸ்ரீ குசேலனிடம் இருந்து
பலவந்தமாக அவலைப் பிடுங்கி உண்டீர்கள்.
ஒரு பிடி அவல் உண்டதுமே ஸ்ரீ லக்ஷ்மி தேவி ஓடி வந்து “போதும் போதும் இத்தனை அனுக்ரஹம் செய்தது!”
என்று தங்கள் கையைப் பற்றித் தடுத்தாள் அல்லவா? ( 87 – 6 )

———–

ப4க்தேஷு ப4க்தேன ஸ மானிதஸ் த்வயா
புரீம் வஸன்னேக நிசா’ம் மஹா ஸுக2ம் |
ப3தா புரேத்3யூர் த்3ரவிணம் வினாயயௌ
விசித்ர ரூபஸ் தவ க2ல்வனுக்3ரஹ:|| ( 87 – 7 )

அடியவர்களுக்கு அடியவர் ஆகிய தங்களால் நன்கு உபசரிக்கப்பட்டு, ஸ்ரீ குசேலர் அந்த இரவை மிகவும்
சுகமாக ஸ்ரீ மத் துவாரகையில் கழித்தார்.
அடுத்த நாள் செல்வம் எதுவும் தங்களிடமிருந்து பெறாமலேயே திரும்பிச் சென்றார்.
தங்களுடைய அனுகிரஹம் விசித்திரமானது அல்லவா? ( 87 – 7 )

———–

யதி3 ஹ்யாசிஷ்ய மதா3ஸ்யத3ச்யுதோ
வதா3மி பா4ர்யாம் கிமிதி வ்ரஜன்னசௌ |
த்வது3க்தி லீலாஸ்மித மக்3ன தீ4: புன
க்ராமாத3பச்’யன் மணி தீப்ர மாலயம் || ( 87 – 8 )

“நான் செல்வத்தை யாசித்து இருந்தால் நிச்சயமாக ஸ்ரீ கிருஷ்ணன் தந்திருப்பான்.
ஆனால் நான் கேட்கவும் இல்லை! அவன் தரவும் இல்லை! பத்தினி கேட்டால் என்ன பதில் சொல்லுவேன்?” என்று
ஆலோசித்துக் கொண்டு நடந்த அந்த ஸ்ரீ குசேலன், உங்கள் இனிமையான வார்த்தைகளையும், மந்த ஹாசத்தையும்
நினைவில் கொண்டு மனம் லயித்தவனாகச் சென்றான்.
ரத்தினங்களால் பிரகாசிக்கின்ற ஒரு அழகிய கிருஹத்தைக் கண்டான். (87 – 8 )

————

கிம் மார்க3 விம்ப்4ரச’ இதி ப்4ரமன் க்ஷணம்
க்3ருஹம் ப்ரவிஷ்ட: ஸ த3த3ர்ச’ வல்லபா4ம் |
ஸகீ பரீதாம் மணி ஹேம பூ4ஷிதாம்
பு3போ3த4 ச த்வத் கருணாம் மஹாத்3பு4தாம் || ( 87 – 9 )

“வழி தவறி வந்துவிட்டேனா என்ன?” என்று சிறிது நேரம் பிரமித்து நின்றான் ஸ்ரீ குசேலன்.
பிறகு வீட்டுக்குள் சென்ற ஸ்ரீ குசேலன் தோழிகளால் சூழப்பட்டவளும், பொன்னாலும், மணிகளாலும்
அலங்கரிக்கப் பட்டவளும் ஆகிய தன் மனைவியைக் கண்டான். தங்களின் கருணையை உணர்ந்தான்.( 87 – 9 )

————

ஸ ரத்னசா’லாஸு வஸன்னபி ஸ்வயம்
ஸமுன்ன மத்3 ப4க்தி ப4ரோSம்ருதம் யயௌ |
த்வமேவ மாபூரித ப4க்த வாஞ்சி2தோ
மருத் புராதீ4ச’ ஹரஸ்வ மே க3தா3ன் || ( 87 – 10)

அந்த ஸ்ரீ குசேலன் அந்த இரத்தின மாளிகையில் வசித்த போதும், பொங்கும் பக்தி குறையாமல்
வாழ்ந்து மோக்ஷத்தை அடைந்தான்
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! இவ் விதம் பக்தர்களுடைய எல்லாக் கோரிக்கைகளை நிறைவேற்றிய தாங்கள்
அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் -( 87 – 10 )

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading