ப்ராகே3வாசார்ய புத்ராஹ்ருதி நிச’மனயா
ஸ்வீய ஷட் ஸூனு வீக்ஷாம்
காங்க்ஷந்த்யா மாது ருக்த்யா ஸுதல பு4வி
ப3லிம் ப்ராப்ய தேனார்சிதஸ்த்வம்|
தா4துச்’சா’பாத்3 தி4ரண்யான்வித கசி’பு
ப4வான் சௌ’ரிஜான் கம்ஸ ப4க்3னான்
ஆநீயையான் ப்ரத3ர்ஷ்ய ஸ்வபத3
மனயதா2: பூர்வ புத்ரான் மரீசே: || ( 88 – 1 )
ஸ்ரீ குரு புத்திரனை அழைத்து வந்ததைக் கேட்டதால், வெகு நாட்களாகவே தன்னுடைய
ஆறு புத்திரர்களைக் காண விரும்பினாள் ஸ்ரீ தேவகி.
தாங்கள் சுதல லோகம் சென்று மகா பலியால் பூஜிக்கப்பட்டீர்கள்.
பிரம்ம சாபத்தால் ஹிரண்ய கசிபுவுக்குப் பிள்ளைகளாகப் பிறந்தவர்களும்,
பிறகு ஸ்ரீ வசுதேவருக்குப் பிறந்து கம்சனால் கொல்லப்பட்டவர்களும், மரீசியின் முதல் பிள்ளைகளுமான,
அவர்களை அழைத்து வந்து ஸ்ரீ தேவகிக்குக் காட்டிய பின்னர் அவர்களை
லோகத்துக்குத் திருப்பி அனுப்பினீர்கள் அல்லவா? ( 88 – 1 )
ச்’ருததே3வ இதி ச்’ருதம் த்3விஜேந்த்3ரம்
ப3ஹு லாச்’வம் ந்ருபதிம் ச ப4க்தி பூர்ணம் |
யுக3பத்தவ மனுக்3ரஹீது காமோ
மிதி2லாம் ப்ராபித தாபஸை: ஸமேத:|| ( 88 – 2 )
ச்ருததேவன் என்று பிரசித்தி பெற்ற பிராமாணோத்தமனையும், பக்தி நிறைந்த பஹுலாச்வன்
என்ற அரசனையும் ஒரே சமயத்தில் அனுக்ரஹிக்க விரும்பியதால்,
தாங்கள் தபஸ்விகளுடனேயே ஸ்ரீ மிதிலைக்குச் சென்றீர்கள் அல்லவா? ( 88 – 2 )
க3ச்ச2ன் த்3விமூர்த்தி ருப4யோர் யுக3பன்னிகேதம்
ஏகேன பூ4ரி விப4வைர் விஹிதோபசார:|
அன்யேன தத்3தி3ன பு4தைச்’ச’ ப2லௌ த3னாத்3யை:
துல்யம் ப்ரசஸேதி3த த3தா3த2 ச முக்தி பா4ம்யாம் || ( 88 – 3 )
இரண்டு உருவங்களை எடுத்துக் கொண்டு, இருவருடைய இல்லங்களுக்கும் ஒரே காலத்தில் சென்றீர்கள்.
அரசன் பஹுலாச்வனால் மிகுந்த வைபவத்துடனும், அந்தணன் ச்ருததேவனால் மிகவும் எளிமையாக அன்று
சம்பாதிக்கப்பட்ட பழங்கள், அன்னம் முதலியவற்றால் உபசரிக்கப் பட்ட தாங்கள்,
இருவரிடத்திலும் ஒரே போல சந்தோக்ஷம் அடைந்தீர்கள் அல்லவா?
அவ் விருவருக்கும் ஒரே போல மோக்ஷத்தை அளித்தீர்கள் அல்லவா? ( 88 – 3 )
பூ4யோSத2 த்3வாரவத்யாம் த்3விஜ தனய
ம்ருதிம் தத் ப்ரலாபானபி த்வம்
கோ வா தே3வம் நிருந்த்4யாதி3தி கில
கத2யன் விச்’வ வோடா4Sப்ய ஸோடா4:|
ஜிஷ்ணோர் க3ர்வம் விநேதும் த்வயி மனுஜ தி4யா
குண்டி2தாஞ்சாஸ்ய பு3த்3தி4ம்
தத்வாரூடா4ம் விதா4தும் பரமதம
பத3 ப்ரக்ஷணேநேதி மன்யே || ( 88 – 4 )
பிறகு ஸ்ரீ மத் துவாரகையில் அடிக்கடி உண்டான ஒரு பிராமணனின் குமாரர்களின் மரணத்தையும்,
அந்த பிராமணனின் சோகமான புலம்பல்களையும், “தலை விதியை யாரால் தடுக்க முடியும்?” என்று
சொல்லியவாறு தாங்கள் சகித்துக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா?
சமஸ்த பிரபஞ்சத்தையும் தரிக்க வல்ல தாங்கள் அவ்வாறு அவற்றைச் சகித்துக் கொண்டு இருந்தது
இந்தக் காரணங்களுக்காகவே என்று நான் எண்ணுகின்றேன்.
ஸ்ரீ அர்ஜுனனுடைய கர்வத்தைப் போக்க வேண்டும்; தங்களை வெறும் மனிதனாகவே எண்ணியிருந்த அவன்
கருத்தை மாற்ற வேண்டும்; விவேகம் இல்லாத அவன் புத்தியை ஸ்ரீ வைகுண்டத்தைக் காட்டுவதன் மூலம்
பரமார்த்த போதத்தை அடைந்ததாகச் செய்ய வேண்டும் என்பவையே அவை என்று நான் எண்ணுகின்றேன்.( 88 – 4 )
நஷ்டா அஷ்டாஸ்ய புத்ரா: புனரபி
தவ தூபேக்ஷயா கஷ்ட வாத3:
ஸ்பஷ்டோ ஜாதோ ஜனானா மத2
தத3வஸரே த்3வாரகாமாப பார்த்த2:|
மைத்ர்யா தத்ரோஷிதோSசௌ நவம
ஸுத ம்ருதௌ விப்ர வர்ய ப்ரரோத3ம்
ச்’ருத்வா சக்ரே ப்ரதிஞாம் அனுபஹ்ருத
ஸுதஸ் ஸன்னிவேக்ஷ்ய க்ருஷானும் || ( 88 – 5 )
அந்த பிராமணனுடைய எட்டுப் பிள்ளைகள் இறந்து விட்டனர். தங்கள் உபேக்ஷை காரணமாகவே
ஜனங்களுக்கு இடையில் “கஷ்டம்! கஷ்டம்!” என்ற பேச்சு ஸ்பஷ்டமாகக் கேட்கத் துவங்கியது.
அதே சமயத்தில் ஸ்ரீ அர்ஜுனனும் ஸ்ரீ மத் துவாரகைக்கு வந்தான்.
சிநேகத்தால் ஸ்ரீ அர்ஜுனன் அங்கு வசித்திருக்கும் பொழுது, ஒன்பதாவது புத்திரனும் இறந்து போனதால்
அந்த பிராமணன் கதறி அழுதான். அதைக் கேட்டு மனம் வருந்திய ஸ்ரீ அர்ஜுனன் கடுமையான ஒரு பிரதிக்ஞை செய்தான்,
“இனிப் பிறக்கும் குழந்தையை இறக்க விடமாட்டேன். அதையும் மீறி அது இறந்து போனால்
அதைத் திருப்பிக் கொண்டு வருவேன். அப்படிக் கொண்டுவர முடியாவிட்டால்
நான் அக்னிப் பிரேவேசம் செய்வேன்!” என்று . ( 88 – 5 )
மானீ ஸ த்வா மப்ருஷ்ட்வா த்விஜ நிலய
க3தோ பா3ணஜாலைர் மஹாஸ்த்ரை:
ருந்தா4ன: ஸூதிகே3ஹம் புனரபி ஸஹஸா
த்3ருஷ்ட நஷ்டே குமாரே |
யாம்யாமைந்த்ரீம் ததா2ன்யாஸ் ஸுரவர
நக3ரீர் வித்3யயாSS ஸாத்3ய ஸத்3யோ
மோகோ4த்3யோக3: பதிஷ்யன் ஹுதபு4ஜி
ப4வதா ஸஸ்மிதம் வரிதோSபூத் || ( 88 – 6 )
செருக்குற்ற ஸ்ரீ அர்ஜுனன் தங்களிடம் சொல்லாமல் அந்த பிராமணன் வீட்டுக்குச் சென்றான்.
ஆக்கிநேயம் முதலிய பெரிய அஸ்திரங்களால் பிரசவ அறையை மறைத்து விட்டான்.
குழந்தை பிறந்தது. உடனே அது மறைந்தும் போயிற்று.
உடனேயே அதைத் தேட யமபுரி, இந்திரனின் பட்டணம் , மற்ற தேவர்களின் நகரங்களை
தன் யோக வித்தையால் அடைந்த ஸ்ரீ அர்ஜுனனால் குழந்தையைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
தன் பிரதிக்ஞைப்படி அக்னிப் பிரவேசம் செய்ய முற்படும் போது தங்களால் தடுக்கப்பட்டான். ( 88 – 6 )
ஸார்த்த4ம் தேன ப்ரதீசீம் தி3ச’மதி
ஜவினா ஸ்யந்த3னேனாபி4யாதே
லோகாலோகம் வ்யதீததாஸ்திமிர
ப4ரமதோ2 சக்ரதா4ம்னா நிருந்த3ன்|
சக்ராம்சு’ க்ளிஷ்ட் த்3ருஷ்டிம் ஸ்தி2தமத2
விஜயம் பச்’ய பச்’யேதிவாராம்
பாரே த்வம் ப்ராத3த3ர்ச’ கிமபி ஹி
தமஸாம் தூ3ர தூ3ரம் பத3ம் தே || ( 88 – 7 )
அந்த ஸ்ரீ அர்ஜுனனுடன் மிகவும் வேகமாகச் செல்லும் தேரில் ஏறிக் கொண்டு,
மேற்கு திசையை நோக்கிச் சென்று, லோகாலோக மலைகளைக் கடந்து, அங்கு நிலவிய
காரிருளை ஸ்ரீ சுதர்சனச் சக்கரத்தால் அகற்றினீர்கள்.
அப்போது ஸ்ரீ சுதர்சனத்தின் ஒளியால் கண்கள் வருந்திய ஸ்ரீ அர்ஜுனனிடம்,
” பார்! பார்!” என்று சொல்லிக் காரண ஜலத்துக்கும் அப்பால், வெகு தூரத்தில் இருக்கும்,
இன்னந்தென்று வர்ணிக்க முடியாத தங்கள் உலகமான ஸ்ரீ வைகுண்டத்தைக் காண்பித்தீர்கள் அல்லவா? ( 88 – 7 )
தத்ராஸீனம் பு4ஜங்கா3தி4ப ச’யனதலே
தி3வ்ய பூ4ஷாயுதா4த்3யை:
ஆவீதம் பீதசேலம் ப்ரதினவ ஜலத3
ச்’யாமலம் ஸ்ரீமத3ங்க3ம் |
மூர்த்தினா மீசி’தாரம் பரமிஹ
திஸ்ருணா மேகமர்த்த2ம் ச்’ருதீனாம்
த்வாமேவ த்வம் ப்ராத்மன் ப்ரியஸக2
ஸஹிதோ நேமித2 க்ஷேம ரூபம்|| (88 – 8 )
அந்த ஸ்ரீ வைகுண்டத்தில் சர்ப்ப ராஜனாகிய ஸ்ரீ ஆதி சேஷன் அமைத்த படுக்கை மேல் வீற்றிருப்பவரும்;
சிறந்த ஆபரணங்களை அணிந்து இருப்பவரும்; சிறந்த ஆயுதங்களை ஏந்தியவரும்;
மஞ்சள் பட்டாடை அணிந்தவரும்; நீருண்ட புதுக் கார்மேகம் போன்ற ஷ்யாமள நிறம் உடையவரும்;
ஸ்ரீ பொருந்திய திருமேனி கொண்டவரும்; ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் செய்வதற்கு மும்மூர்த்திகளை நியமிக்கின்றவரும்;
சர்வ காரண பூதரும்; வேதங்களுக்கு முக்கிய அர்த்தபூதரும்; மோக்ஷரூபியாகவும் இருக்கின்ற தங்களையே,
தாங்கள் தங்கள் நண்பன் ஸ்ரீ அர்ஜுனனுடன் வணங்கினீர்கள் அல்லவா? ( 88 – 8 )
யுவாம் மாமேவ த்3வாவதிக
வ்ருதாந்தர்ஹித தயா
விபி4ன்னௌ ஸந்த்3ரஷ்டும் ஸ்வய மஹ
மஹார்ஷம் த்3விஜ ஸுதான் |
நயேதம் த்3ராகே3 தானிதி க2லு
விதீர்ணான் புனரமூன்
த்3விஜாயா தா3யாதா3:ப்ரணுத
மஹிமா பாண்டு3ஜனுஷா || ( 88 – 9 )
பிரகாசமான ஐஸ்வரியத்தை உடையதாக இருப்பதால் ஸ்ரீ பரமாத்மாவாகவும் ;
மறைந்த ஐஸ்வரியத்தை உடையதாக இருப்பதால் ஜீவாத்மாவாகவும் இரண்டாகப் பிரிந்தவர்களும்,;
நானாகவே இருப்பவர்களும் ஆகிய உங்கள் இருவரையும் பார்க்க வேண்டும் என்று நானே
பிராமணனின் குழந்தைகளை இங்கே கொண்டு வந்தேன். அவர்களைச் சீக்கிரமாக அழைத்துச் செல்லுங்கள் ” என்று
சொல்லிக் குழந்தைகளைத் திருப்பித் தரவும், ஸ்ரீ அர்ஜுனனுடன் விரைந்து திரும்பி வந்து
அவனால் புகழ் பெற்றுவிட்ட அந்த பிரமணனிடம் குழந்தைகளைத் திருப்பித் தந்தீர்கள் அல்லவா? ( 88 – 9 )
ஏவம் நானா விஹாரைர் ஜக3த3பி4 ரமயன்
வ்ருஷ்ணி வம்ச’ம் ப்ரனுஷ்ணன்
ஈஜானோ யக்ஞபே4தை3 ரதுல
விஹ்ருதாபி: ப்ரீணயன்னேண நேத்ரா:|
பூ4பா4ர க்ஷேப த3ம்பாத் பத3 கமல
ஜுஷாம் மோக்ஷணாயாவதீர்ண :
பூர்ணம் ப்ரஹ்மை ஸாக்ஷாத் யது3ஷு
மனுஜதா ரூஷிதஸ்த்வம் வ்யலாஸீ:|| ( 88 – 10)
இவ்விதம் பற்பல லீலைகளைச் செய்து கொண்டும்; உலகத்தைக் களிப்புறச் செய்து கொண்டும்;
ஸ்ரீ வ்ருஷ்ணீ வம்சத்தை ஓங்கி வளரச் செய்துகொண்டும்; பற்பல யாகங்களைச் செய்து கொண்டும்;
ஒப்பற்ற லீலா விஹாரங்களால் மான் கண்ணியரான பெண்களை சந்தோஷப்படுத்திக் கொண்டும்;
பூபாரத்தை ஒழிப்பது என்ற வியாஜத்தால் தங்கள் மலரடிகளைச் சேவித்தவர்களுக்கு மோக்ஷத்தைக்
கொடுப்பதற்கு என்றே யது வம்சத்தில் அவதரித்த; எங்கும் நிறைந்துள்ள பர ப்ரஹ்ம ஸ்வரூபியாகிய தாங்கள்;
மனிதத் தன்மையால் மறைக்கப்பட்டு விளங்கினீர்கள் அல்லவா? ( 88 – 10)
ப்ராயேண த்3வாரவத்யாம் அவ்ருதத3யி ததா 3
நரதஸ் த்வத்3 ராஸார்த்ரஸ்
தாஸ்மாம் லேபே4 கதாசித் க2லு ஸுக்ருத விதி4ஸ்
த்வத் பிதா தத்வ போ3த4ம் |
ப4க்தானா மக்3ரயாயீ ஸ ச க2லு
மதிமா நுத்3த4வஸ் த்வத்த ஏவ
ப்ராப்தோ விஞ்ஞான ஸாரம் ஸ கில
ஜனஹிதாயாதுனாssஸ்தே ப3த3ர்யாம் || ( 88 – 11 )
ஹே ஸ்ரீ பகவன்! ஸ்ரீ நாரதர் தங்கள் சேவையில் ஈடுபட்டவராக அதிக நாட்கள்
ஸ்ரீ மத் துவாரகையில் வசித்து வந்தார் அப்போது ஒரு நாள் தங்கள் பிதாவாகிய புண்ணிய சீலர்
ஸ்ரீ வசுதேவர் அந்த ஸ்ரீ நாரதரிடமிருந்து ஞானோபதேசத்தைப் பெற்றார்.
பக்தர்களில் முந்தியவரும் புத்திசாலியுமான அந்த ஸ்ரீ உத்தவரும் தங்களிடமிருந்தே ஞான சாரத்தை அடைந்தார்.
அந்த ஸ்ரீ உத்தவர் ஜனங்களின் நன்மைக்காக இன்றும் ஸ்ரீ பதரிகாசிரமத்தில் இருக்கின்றார் அல்லவா? ( 88 – 11 )
ஸோயம் க்ருஷ்ணாவதாரே ஜயதி தவ விபோ4
யத்ர சௌஹார்த பீ4தி ;
ஸ்நேஹ த்3வேஷானுராக3 ப்ரப்ருதிபி:
அதுலை: அச்’ரமை: யோக3 பே4தை3:|
ஆர்திம் தீர்த்வா ஸமஸ்தா மம்ருதபதமகு:
ஸர்வத: ஸர்வலோகா:
ஸ த்வம் விச்’வார்தி சா’ந்த்யை
பவனபுரபதே ப4க்தி பூர்த்யை ச பூ4யா:|| ( 88 – 12 )
ஹே பிரபூ! எந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் சௌஹார்த்தம், பயம், துவேஷம், அனுராகம் முதலிய
ஒப்பற்ற, கஷ்டமில்லாமல் மனதைச் செலுத்தக் கூடிய உபாய விசேஷங்களால், எல்லா இடங்களிலும்
எல்லா ஜனங்களும் துன்பங்களைக் கடந்து மோக்ஷத்தை அடைந்தனரோ;
அந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் உலகப்பிரசித்தி பெற்று விளங்கிகிறது. அப்படிப்பட்ட தாங்கள் எல்லோரும்
எல்லாத் துன்பங்களும் நீங்கி சாந்தி அடையவும், எல்லோருடைய பக்தி பரிபூரணம் அடையவும் அருள வேண்டும்.( 88 – 12)
———————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply