ஸால்வோ பை4ஷ்மீ விவாஹே
யது3குல விஜிதச்’சந்த்3ர சூடா3த்3 விமானம் |
விந்த3ன் சௌ’ப4ம் ஸமாயீ த்வயி வஸதி குரும்
ஸ்த்வத் புரீம் அப்4ய பா4ங்க்ஷீத் |
ப்ரத்3யும்னஸ்த்வம் நிருந்த4ன் நிகி2ல யது3 ப4டைர்
ந்யக்3ரஹீத் உ3க்3ர வீர்யம்
தஸ்யாமாத்யம் த்3யுமந்தம் வ்யஜனி ச ஸமரஸ்
ஸப்த விம்ச’த்ய ஹாந்தம் || (86 – 1)
ஸ்ரீ ருக்மிணியின் விவாஹத்தின் போது சால்வ ராஜன் யாதவ சேனையால் தோற்கடிக்கப்பட்டான்.
பிற்பாடு அவன் பரமேஸ்வரனிடம் சௌபம் என்ற விமானத்தைப் பெற்றுக் கொண்டான்.
தாங்கள் குரு தேசத்தில் இருக்கும் போது மாயாவியாகிய சால்வன், தங்கள் ஸ்ரீ மத் துவாரகை நகரைச் சேதப்படுத்தினான்.
ஸ்ரீ பிரத்யும்னன் யாதவ சேனைகளின் உதவியோடு அவனைத் தடுத்து நிறுத்தினான்.
சால்வனின் கொடிய மந்திரி த்யுமான் என்பவனைக் கொன்றான். இந்தப் போர் இருபத்தேழு நாட்களுக்கு நீடித்தது.
———–
தாவத்வம் ராமசா’லீ த்வரித முபக3த:
க2ண்டி3த ப்ராயசைன்யம்
சௌ4பேச’ம் தம் ந்யருந்தா4: ஸ ச கில
க3த3யா சா’ர்ங்க3 மம்ப்4ர ச’யதே |
மாயாதாதம் வ்யஹிம்ஸீ த3பி தவ புரதஸ்த
த்வயாSபி க்ஷணார்த்த4ம்
நாக்ஞாயீத்யாஹு ரேகே ததி3த3 மவமதம்
வ்யாஸ ஏவ ந்யஷேதீ4த் || (86 – 2)
தாங்களும், ஸ்ரீ நம்பி மூத்த பிரானும் விரைந்து வந்தீர்கள். முற்றிலும் அவன் சேனைகளை
முறியடித்துச் சால்வனைத் தடுத்து நிறுத்தினீர்கள்.
அவன் தன் கதையால் தங்களின் ஸ்ரீ சார்ங்கம் என்னும் வில்லை நழுவச் செய்தான்.
மாயையால் உண்டாக்கப்பட்ட தங்கள் தந்தையை தங்களின் முன்னிலையில் கொன்றான்.
அரைக் கணத்துக்குத் தாங்களே அந்த உண்மையை அறிந்து கொள்ள வில்லை என்று சிலர் சொன்னாலும்
அந்தக் கருத்தை ஸ்ரீ வியாச முனிவர் ஏற்றுக் கொள்ள வில்லை.
————
க்ஷிப்த்வா சௌபம் க3தா3 சூர்ணிதம்
உத3க நிதௌ4 மங்க்ஷு ஸால்வேSபி சக்ரேண
உத்க்ருதே த3ந்தவக்த்ர : ப்ரஸப4 மபி4பதன்னப்ய
முஞ்சத்3க3தா3ம் தே |
கௌமோத3க்யா ஹதேSஸாவபி ஸுக்ருத நிதி4ச்
சைத்3யவத் ப்ராப தை3க்யம்
ஸர்வேஷா மேவ பூர்வம் த்வயி த்4ருத மனஸாம்
மோக்ஷணார்த்தோதார: || (86 – 3)
சௌபம் என்ற விமானம் கதையால் உடைக்கபட்டு கடலில் எறியப் பட்டது.
சால்வனும் தங்களின் ஸ்ரீ சக்கராயுதத்துக்கு பலியானான். அப்போது தந்தவக்திரன் விரைந்து வந்து தங்கள் மேல் தன் கதாயுதத்தை விட்டெறிந்தான். புண்ணியங்களின் பொக்கிஷமாகிய அவனும் ஸ்ரீ கௌமோதகி என்னும் தங்கள் கதாயுதத்தினால் கொல்லப்பட்டான்.
சிசுபாலனைப் போலவே அவனும் சாயுஜ்ய முக்தியை அடைந்தான்.
முன்பே தங்களிடம் மனதைச் செலுத்தியவர்கள் எல்லோருக்கும் தங்களின்
இந்தத் திரு அவதாரம் மோக்ஷத்தைத் தந்தது அல்லவா
———
த்வய்யா யாதேSத2 ஜாதே கில
குரு ஸத3ஸி த்3யூதகே ஸம்யதாயா:
க்ரந்தந்த்யா யாக்ஞஸேன்யாஸ் ஸகருணாம்
அக்ருதா2ச்’ சேல மாலாம் அனந்தாம் |
அன்னாந்த ப்ராப்த ச’ர்வாம்ச’ஜ முனி சகித
த்3ரௌபதீ3 சிந்திதோS த
ப்ராப்தச்’சா’கான்ன மச்’ணன் முனி கண மக்ருதா2
ஸ்த்ருப்தி மந்தம் வனாந்தே || (86 – 4 )
தாங்கள் ஸ்ரீ மத் துவாரகைக்குத் திரும்பிச் சென்ற பிறகு, கௌரவ சபையில் நடந்த சூதாட்டத்தில்
ஸ்ரீ பாண்டவர்களால் ஸ்ரீ திரௌபதி அடகு வைக்கபட்டாள். சூதாட்டத்தில் அவளைத் தோற்று விட்டனர்.
அவளைக் கௌரவர்கள் ராஜ சபையில் மான பங்கம் செய்ய முயன்ற போது ஸ்ரீ திரௌபதி கதறி அழுதாள்.
அவளுக்கு மிகுந்த கருணையுடன் முடிவில்லாத வஸ்த்திரத்தை அளித்தீர்கள் அல்லவா?
பிறகு வனத்தில் ஸ்ரீ பாண்டவர்கள் வசித்து வந்தபோது அவர்கள் உணவு உண்ட பிறகு
ஸ்ரீ பரமேஸ்வரனின் அம்சமான ஸ்ரீ துர்வாசர் தன் கூட்டத்துடன் அங்கு உணவுக்கு வந்து சேர்ந்தார்.
முனிவரின் சாபத்துக்கு அஞ்சிய ஸ்ரீ திரௌபதி தங்களை – தியானித்தாள். தாங்கள் உடனே அங்கே வந்து,
அவள் அக்ஷய பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு சிறு கீரையை உண்டு அதன் மூலம்
ஸ்ரீ துர்வாசரையும் மற்றவர்களையும் வயிறார உண்டது போலத் திருப்தி அடையச் செய்தீர்கள் அல்லவா?
ஓட்டைக்கைக்கும் யானைக்கும் இடையே ஓர் ஆயிரம் தூரம் இடையில் நடக்கிறது புடவை வியாபாரம்
——-
யுத்3தோ4த்3யோகே3த2 மந்த்ரே
மிலதி ஸதி வ்ருத: ப2ல்கு3னேன த்வமேக:
கௌரவ்யே த3த்த சைன்ய: கரிபுர மக3மோ
தௌ3த்ய க்ருத் பாண்டவார்த்த2ம் |
பீஷ்ம த்3ரோணாதி3 மான்யே தவ கலு வசனே
தி4க்ருதே கௌரவேண
வ்யாவருண்வன் விச்’வ ரூபம் முனி ஸத3ஸி புரீம்
சோ’ப4யித்வாSS க3தோபூ4: || (86 – 5)
பிறகு போருக்கு வேண்டிய பிரயத்தனமும் , அதற்கான மந்திராலோசனையும் நடை பெற்றன.
ப2ல்கு3னேன த்வமேக:-ஸ்ரீ அர்ஜுனன் தாங்கள் ஒருவரையே துணையாக வேண்டினான்.
துரியோதனன் மொத்த யாதவ சேனையின் உதவியைப் பெற்றான்.
பிறகு ஸ்ரீ பாண்டவர்களின் தூதுவனாக ஹஸ்தினாபுரம் சென்றீர்கள். ஸ்ரீ பீஷ்மர் ஸ்ரீ துரோணர் போன்றவர்களால்
வெகுமானிக்கபடும் தங்கள் வாக்கு, துரியோதனனால் நிராகரிக்கப் பட்டது.
அங்கே சபையில் விச்வ ரூபத்தை எடுத்துக் கொண்டு பட்டணத்தைக் கதி கலங்கச் செய்து விட்டுத் திரும்பி வந்தீர்கள் அல்லவா?
——–
ஜிஷ்ணோஸ்த்வம் க்ருஷ்ண ஸூத:
க2லு ஸமர முகே2 ப3ந்து4 கா4தே த3யாலும்
கி2ன்னம் தம் வீக்ஷ்ய வீரம் கிமித3 மயி ஸகே2
நித்ய ஏகோSயமாத்மா |
கோவத்4ய: கோSத்ர ஹந்தா ததி3ஹவத4பி4யம்
ப்ரோஜ்ய மய் யர்பிதாத்மா
த4ர்ம்யம் யுத்3த4ம் சரேதி ப்ரக்ருதி மனயதா2
த3ர்ச’யன் விச்’வ ரூபம் || (86 – 6 )
ஹே ஸ்ரீ கிருஷ்ணா ! தாங்கள் ஸ்ரீ அர்ஜுனனுக்குச் சாரதி ஆனீர்கள்.
யுத்த ஆரம்பத்தில் யுத்த களத்தில் வீரனான அர்ஜுனன் மனம் கலங்கினான்.
தன் மித்ர பந்துக்ககளைக் கொல்ல விரும்பவில்லை.
அதனால் அவன் கருணையினாலும் மன வருத்தினாலும் குழம்பினான்.
அப்போது தாங்கள் ” ஓ நண்பனே! இது என்ன புதுக் குழப்பம்? ஆத்மா என்பவன் நித்தியமானவன்! அழிவில்லாதவன்!
இந்த உலகில் கொல்பவன் யார்? கொல்லப்படுபவன் யார்? இப்போது எழுந்துள்ள பயத்தை விட்டு விட்டு
என்னிடம் உன் மனதைச் செலுத்துவாய். தர்ம நெறி தவறாத யுத்தத்தைப் புரிவாய்” என்று அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினீர்கள் .
ஸ்ரீ விச்வ ரூபத்தைக் காட்டி அவன் தன் இயல்பை அடையச் செய்தீர்கள் அல்லவா?
———–
ப4க்த்தோத்தம்ஸேSத பீ4ஷ்மே
தவ த4ரணி பரக்ஷேப க்ருத்யைக ஸக்தே
நித்யம் நித்யம் விபி4ன்த3தி அயுத ஸமாதி4க2ம்
ப்ராப்த ஸாதோ3 ச பார்த்தே2|
நிச்’சஸ்த்ர தவ ப்ரதிக்ஞாம் விஜ ஹத3ரிவரம்
தா4ராயன் க்ரோத4 சா’லீவ
ஆதா4வன் ப்ராஞ்ஜலிம் தம் நத சி’ரஸா மதோ2
வீக்ஷ்ய மோதா3த3 பாகா3 : || (86- 7)
பக்த சிரோன்மணியாகிய ஸ்ரீ பீஷ்மர், தாங்கள் செய்ய விரும்பியபடியே பூ பாரத்தை ஒடுக்கலானார்.
ஒவ்வொரு நாளும் பதினாயிரத்துக்கும் அதிகமான வீர்களைக் கொன்று குவித்தார்.
அதைக் கண்ட ஸ்ரீ அர்ஜுனன் மனம் சோர்ந்து விட்டான். போரில் ஆயுதம் எடுப்பதில்லை என்று தாங்கள்
செய்திருந்த பிரதிக்ஞையை உதறித் தள்ளினீர்கள், கோபத்துடன் சக்ராயுதத்தை எடுத்துக்கொண்டு
ஸ்ரீ பீஷ்மரை நோக்கி ஓடினீர்கள்! தலையைக் குனித்து அஞ்சலி செய்து கொண்டிருந்த
ஸ்ரீ பீஷ்மரைக் கண்டதும் சந்தோஷத்துடன் திரும்பிச் சென்று விட்டீர்கள் அல்லவா?
———-
யுத்3தே4 த்3ரோணஸ்ய ஹஸ்தி ஸ்தி2ரரண
ப4க3த3த்தே ரிதம் வைஷ்ண வாஸ்த்ரம்
வக்ஷஸ்யாத4த்த சக்ரஸ்தகீ3த ரவி மஹா:
ப்ரார்த3யத் ஸிந்து4 ராஜம் |
நாகாஸ்த்ரே கர்ண முக்தே க்ஷிதிம் அவ நமயன்
கேவலம் க்ருத்த மௌலிம்
தத்ரே தத்ராபி பார்த்த2ம் கிமிவ நஹி ப4வான்
பாண்ட3வானாமகார்ஷீத் || (86 – 8)
ஸ்ரீ துரோண யுத்தத்தில் யானை மேல் திடமாக இருந்து கொண்டு போர் புரிந்தான் நரகாசுரனின் மகன் பகதத்தன்.
அவன் விடுத்த ஸ்ரீ நாராயண அஸ்திரத்தைத் தாங்கள் மார்பினில் தாங்கினீர்கள்.
ஸ்ரீ சக்கராயுதத்தால் சூரியனை மறைத்து விட்டு ஜெயத்ரதனைக் கொன்றீர்கள்.
ஸ்ரீ கர்ணன் நாகாஸ்திரத்தை விடுத்த போது பூமியைக் கட்டை விரலால் தாழ்த்தினீர்கள்.
ஸ்ரீ அர்ஜுனனின் கிரீடத்தை மட்டும் அஸ்திரம் நீக்கியது. ஸ்ரீ அர்ஜுனனின் உயிர் காக்கப்பட்டது.
ஸ்ரீ பாண்டவர்களுக்காகத் தாங்கள் என்ன தான் செய்யவில்லை?
———
யுத்3தா4தௌ3 தீர்த்த2 கா3மீ
ஸ க2லு ஹலத4ரோ நைமிச’ க்ஷேத்ர மிச்சன்
அப்ரதயுத்தா2யி ஸூதக்ஷய க்ருத3த2 ஸுதம்
தத்பதே3 கல்பயித்வா |
யக்ஞாக்4னம் வல்வலம் பர்வணி பரித3லயன்
ஸ்நாத தீர்த்தோ2 ராணாந்தே
ஸம்ப்ராப்தோ பீ4ம து3ர்யோத4ன ரணம்
அச’மம் வீக்ஷ்ய யாத: புரீ தே || (86 – 9)
ஸ்ரீ மகா பாரத யுத்தத்தின் ஆரம்பத்திலேயே ஸ்ரீ நம்பி மூத்த பிரான் தீர்த்த யாத்திரை சென்று விட்டான்.
ஸ்ரீ நைமிசாரண்யத்துக்கு ஸ்ரீ நம்பி மூத்த பிரான் சென்ற போது சூத பௌராணிகர் தன் ஆசனத்தில்
இருந்து எழுந்து அவனுக்கு மரியாதை செய்யவில்லை. கோபம் அடைந்த ஸ்ரீ நம்பி மூத்த பிரான்
அவரைக் கொன்றுவிட்டு அவருடைய பிள்ளையை அவர் இடத்திற்கு நியமித்தான்.
பர்வ காலங்களில் யாகங்களைக் கெடுத்து வந்த பல்வலன் என்ற அசுரனைக் கொன்றான்.
தீர்த்த ஸ்நானத்தை முடித்துக் கொண்டு யுத்த முடிவில் திரும்பி வந்தான்.
பீமன், துரியோதனன் இவர்கள் இடையே நடந்த கதாயுத யுத்தம் முடிவடையாததைக் கண்டு
தங்கள் நகரமாகிய ஸ்ரீ மத் துவாரகைக்குத் திரும்பிச் சென்றான்.
————
ஸம்ஸுப்த த்3ரௌபதே3ய க்ஷபண ஹததி4யம்
த்3ரௌணி மேத்ய த்வது3க்தயா
தன்முக்தம் ப்3ராஹ்ம மஸ்த்ரம் ஸமஹ்ருத
விஜயோ மௌலி ரத்னம் ச ஜஹ்ரே |
உச்சித்யை பாண்டவானாம் புனரபி ச விச’த்
யுத்தரா கர்ப்ப4 மஸ்த்ரே
ரக்ஷன்னங்கு3ஷ்ட2 மாத்ர: கில ஜட2ர மகா3ச்’
சக்ரபாணி விபோ4 த்வம் || (86 – 10)
தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீ திரௌபதியின் பிள்ளைகளைப் புத்தி கெட்ட அஸ்வத் தாமன் கொன்று விட்டான்.
அவன் விடுத்த ப்ரஹமாஸ்திரத்தைத் தங்கள் கட்டளைப் படி ஸ்ரீ அர்ஜுனன் உப சம்ஹாரம் செய்து விட்டான்.
அஸ்வத்தாமன் தலையில் இருக்கும் மணியையும் அகற்றி விட்டான்.
ஸ்ரீ பாண்டவர்களின் குலத்தையே நாசம் செய்வதற்காக அஸ்வத்தாமன் விடுத்த அஸ்த்திரம்
உத்தரையின் கர்ப்பதில் புகுந்து விட்டது. அப்போது தாங்கள் கட்டைவிரல் அளவு சரீரம் உடையவராகக்
கையில் ஸ்ரீ சுதர்சனத்துடன் ஸ்ரீ உத்தரையின் கர்ப்பத்தில் புகுந்து சிசுவைக் காப்பாற்றினீர்கள் அல்லவா?
——–
த4ர்மௌக4ம் த4ர்ம ஸூனோ: அபி4த3த4த்3
அகி2லம் ச2ந்த ம்ருத்யுஸ் ஸ பீ4ஷ்ம:
த்வாம் பச்’யன் ப4க்தி பூ4ம்னைவ ஹி ஸபதி3
யயௌ நிஷ்கல ப்3ரஹ்ம பூ4யம் |
ஸம்யாஜ்யாதாச்’வ மேதை4ஸ் த்ரிபி4:அதி மஹிதைர்
த4ர்மஜம் பூர்ண காமம்
ஸம் ப்ராப்தோ த்3வாரகாம் த்வம் பவன புர பதே
பாஹிமாம் ஸர்வ ரோ3கா4த் || (86 – 11)
தான் விரும்பிய போது மரணம் அடையும் வரத்தைப் பெற்றிருந்தார் ஸ்ரீ பீஷ்மர்.
அவர் ஸ்ரீ தர்ம புத்திரனுக்குத் தர்மங்களை எல்லாம் உபதேசம் செய்தார்.
தங்களையும் நேரில் தரிசனம் செய்து தன் பக்தியின் மேன்மையால் ப்ரஹ்ம பாவத்தை அடைந்தார்.
பிறகு தன் அபீஷ்டங்கள் அனைத்தும் நிறைவேறிய தர்ம புத்திரனுக்காக
மூன்று அச்வ மேத யாகங்களைச் செய்வித்தீர்கள்
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! அப்படிப் பட்ட தாங்கள் அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் –
——————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply