ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -90–ஸ்ரீ விஷ்ணு மஹத்வ ஸ்தாபனம்–

வ்ருக ப்4ருகு3 மோஹின்யம்ப3ரீஷாதி3 வ்ருத்தேஷு
அயி தவ ஹி மஹத்வம் ஸர்வ ச’ர்வாதி3 ஜைத்ரம் |
ஸ்தித மிஹ பரமாத்மன் நிஷ் கலார்வாக3 பி4ன்னம்
கிமபி தத3வபா4தம் தத்3தி4 ரூபம் தவைவ || (90 – 1)

ஹே ஸ்ரீ பரமாத்மா! விருகாசுரன், பிருகு முனிவர், அம்பரீஷன். போன்றவர்களின் சரித்திரத்தால்,
ஸ்ரீ பரமசிவன் முதலான பிற தேவதைகளைக் காட்டிலும் தங்கள் மஹிமை உயர்ந்தது என்று ஸ்தாபிக்கப்பட்டது.
நிஷ்களப் பரமாத்மாவாகிய தாங்கள் சகளர்களாகிய மற்ற தெய்வங்களைக் காட்டிலும்
இன்னவிதம் என்று சொல்ல முடியாதபடி வேறுபட்டுப் பிரகாசிக்கின்றீர்கள்.

மூர்த்தி த்ரயேச்’வர ஸதா3சி’வ பஞ்சகம் யத் ப்ராஹு :
பராத்மா வபுரேவ ஸதா3சி’வோSஸ்மின் |
தத்ரேச்’வரஸ்து ஸ விகுண்ட2 பத3ஸ்த்வ மேவ
த்ரித்வம் புனர் ப4ஜஸி ஸத்யபதே3 த்ரிபா4கே3 || (90 – 2)

ஸ்ரீ மூர்த்திப் பஞ்சகம் என்று ஸ்ரீ பிரமன், ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ ருத்திரன், ஸ்ரீ ஈச்வரன், ஸ்ரீ சதா சிவன் என்ற
ஐந்து தெய்வங்களைக் கூறுகின்றனர்.
அவர்களில் ஸ்ரீ சதாசிவன் என்னும் ஸ்ரீ பரமாத்மா ஸ்வரூபி தாங்களே. ஸ்ரீ ஈஸ்வரனும் தாங்களே.
ஸ்ரீ வைகுண்ட வாசியாகிய தாங்களே பிரமன், விஷ்ணு, ருத்திரன் என்ற மும் மூர்த்திகளாகவும் திகழ்கின்றீர்கள்.

தத்ராபி ஸாத்விக தனும் தவ விஷ்ணுமாஹூ
தா4தா து ஸத்வ விரலோ ராஜசைவ பூர்ண: |
ஸத்வோத் கட த்வமபி சாஸ்தி தமோ விகார
சேஷ்டாதி3 கஞ்ச தவ ச’ங்கர நாம்னி மூர்த்தௌ || (90 – 3 )

அந்த மும் மூர்த்திகளில் தங்களின் சுத்த சத்துவ ஸ்வரூபத்தை ஸ்ரீ விஷ்ணு என்று கூறுவர்.
ஸ்ரீ பிரமன் சத்துவ குணம் குறைந்தும் ரஜோ குணம் மிகுந்தும் உள்ளார்.
ஸ்ரீ சங்கரன் தமோ குணம் மிகுந்து காணப் படுகின்றார்.

தம் ச த்ரிமூர்த்யதிக3ம் பரபூருஷம் த்வாம்
ச’ர்வாத்மனாSபி க2லு ஸர்வ மயத்வ ஹேதோ: |
ச’ம் ஸந்த்யுபாஸான விதௌ4 தத3பி ஸ்வதஸ்து
த்வத்3ரூப மித்யதி த்3ருட4ம் ப3ஹு ந: ப்ரமாணம் || (90 – 4)

ஸ்ரீ மும் மூர்த்திகளுக்கு அதீதனக இருக்கும் அந்த ஸ்ரீ ஈஸ்வரனையும்,
பிரம்மாண்டத்துக்கு உள்ளும் வெளியும் வியாபித்து உள்ள ஸர்வ ஸ்வ்ரூபியும் ஸ்ரீ பரமாத்மாவும் ஆகிய
தங்களையும் உபாசன விதியில் ஸ்ரீ சிவ ஸ்வரூபமாகக் கூறுகின்றனர்.
இதற்குத் திடமான பிரமாணங்களும் உள்ளன.

ஸ்ரீ ச’ங்கரோSபி ப4க3வன் ஸகலேஷு தாவத்
த்வாமேவ மானயதி யோ ந ஹி பக்ஷபாதீ |
த்வன் நிஷ்ட2மேவ ஸ ஹி நாம ஸஹஸ்ரகாதி3
வ்யாக்2யத்3 ப4வத் ஸ்துதி பரச்’ச க3திம் க3தோSந்தே || (90 – 5 )

ஸ்ரீ சங்கர பகவத் பாதரும் ஸ்ரீ மும் மூர்த்திகளாகிய சகளர்களில் தங்களையே வெகுமானிக்கின்றார்.
அவர் பக்ஷ பாதி அல்ல. அவர் தங்களின் ஸ்ரீ சஹஸ்ர நாமத்துக்கு வியாக்கியானம் செய்தார்.
தாங்களையே துதித்து நற்கதியும் அடைந்தார்.

மூர்த்தி த்ரயாதிக3ம் உவாச ச மந்த்ர சா’ஸ்த்ர
ஸ்யாதௌ3 கலாய ஸுஷுமம் ஸகலேச்’வரம் த்வாம் |
த்4யானம் ச நிஷ்கல மசௌ ப்ரணவே க2லூக்த்வா
த்வாமேவ தத்ர ஸகலம் நிஜகா3த3 நான்யம் || (90 – 6 )

ஸ்ரீ சங்கர பகவத்பாதர் மந்திர சாஸ்திரத்தின் ஆரம்பத்தில் ஸ்ரீ மும் மூர்த்திகளுக்கும் அதீதனாகிய தங்களைக்
காசாம்பூ நிறமுடையவராக வர்ணிக்கின்றார். பிரணவத்தில் நிஷ்கள தியானத்தையும் உரைத்து
அங்கு நிஷ்களனாகவும், சகளனாகவும் தங்களையே கூறியுள்ளார். வேறு எவரையும் அல்ல.

ஸமஸ்தஸாரே ச புராணஸங்க்3ரஹே
விஸம்ச’யம் த்வன் மஹிமைவ வர்ண்யதே |
த்ரிமூர்த்தி யுக் ஸத்யபத3 த்ரிபா4க3த:
பரம் பத3ம் தே கதி2தம் ந சூ’லின : || (90 – 7 )

எல்லாவற்றினுடைய சாரத்தை கூறுகின்ற ஸ்ரீ புராண சங்க்ரஹம் என்ற கிரந்தத்திலும் சந்தேகமே இல்லாமல்
தங்கள் மகிமை தான் வர்ணிக்கப்படுகின்றது. தங்கள் ஸ்தானமே உயர்ந்ததாகக் கூறப்படுகின்றது.
ஸ்ரீ பரமேச்வரனுடைய ஸ்தானம் பற்றிக் கூறப் படவில்லை.

யத் ப்3ரஹ்ம கல்பம் இஹ பா4க3வத த்3விதீய
ஸ்கந்தோ4தி3தம் வபு ரனாவ்ருத மீச’ தா4த்ரே |
தஸ்யைவ நாம ஹரிச’ர்வ முக2ம் ஜகா3த3
ஸ்ரீ மாத4வ: சி’வ பரோSபி புராணஸாரே || (90 – 8 )

ஸ்ரீ பிரம்ம கல்பத்தில் ஸ்ரீ பிரம்ம தேவனுக்கு பிரத்தியக்ஷமாகக் கண்பிக்கப் பட்ட தங்கள் சரீரத்துக்கே
ஸ்ரீ ஹரி, ஸ்ரீ சர்வன் முதலிய திரு நாமங்களை ஸ்ரீ மாதவாச்சாரியார் (சிவபக்தனாக இருந்த போதிலும்)
ஸ்ரீ புராண சாரம் என்ற கிரந்தத்தில் உரைத்துள்ளார்.

யே ஸ்வ ப்ரக்ருத்யனுகுண கி3ரிச’ம் ப4ஜந்தே
தேஷாம் ப2லம் ஹி த்3ருட4யைவ ததீ3ய ப4க்த்யா |
வ்யாஸோ ஹி தேன க்ருத்வா நாதி4காரி ஹேதோ:
ஸ்காந்தா3தி3கேஷு தவ ஹானிவசோS ர்த்தவாதை3: || (90 – 9 )

எவர் எவர் தம் தம் வாசனைக்கு ஏற்ப ஸ்ரீ பரமேச்வரனைச் சேவிக்கின்றார்களோ அவர்களின் பலம்
அந்த ஸ்ரீ பரமேச்வர பக்தியினால் உண்டாகின்றது. அதனால் தான் ஸ்ரீ வியாச முனிவர் ஸ்காந்தம் முதலியவற்றில்
அதன் அதிகாரிக்கு உயர்வையும், தங்களுக்குத் தாழ்வையும் கூறியுள்ளார்.

பூ4தார்த்த2 கீர்த்தி ரனுவாத3 விருத்3த4 வாதௌ3
த்ரேதா4Sர்த்த2 வாத3 க3தய: க2லு ரோசனார்த்தா2: |
ஸ்காந்தா4தி3கேஷு ப3ஹவோத்ர விருத்3த4வாதா3
ஸ்த்வத்தாமஸத்வ பரிபூ4த்யுபசி’க்ஷணாத்3யா: || (90 – 10)

நடந்ததைச் சொல்லுவது, விரோதமில்லாத அர்த்தத்தைச் சொல்லுவது, விருத்தமான அர்த்தத்தைச் சொல்வது
என்று மூன்று வித அர்த்த வாதங்களும் கூறும் விஷயத்தில் ருசியை உண்டு பண்ணுவதற்காகவே
தங்களுக்குத் தாமசத்தையும், பராஜயத்தையும் கூறுகின்ற ஸ்காந்தம் முதலியவை
விருத்த வாதம் என்னும் அர்த்த வாதங்களே.

யத் கிஞ்சித3ப்யவிது3ஷாSபி விபோ4 மயோக்தம்
தன்மாத்ர சா’ஸ்த்ர வசனாத்3யபி4 த்3ருஷ்ட மேவ |
வ்யாஸோக்தி ஸாரமய பா4க3வதோபகீ3த
க்லேசா’ன் விதூ4ய குரு ப4க்திப4ரம் பராத்மன் || (90 – 11)

அறிவில்லாதவனாக இருந்தாலும் என்னால் கூறப்பட்டவை மந்திர சாஸ்திரம் முதலிவற்றில்
காணப் படுகின்ற விஷயங்களே. ஸ்ரீ வியாச முனிவரின் வசன சாரங்கள் நிறைந்த
ஸ்ரீ மத் பாகவதத்தில் துதிக்கப்படும் ஸ்ரீ பரமாத்மாவே! திடமான பக்தியைத் தந்தருள்வீர்!
அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும்

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading