ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –
————–
கீழும் மேலும் ஸ்வ கதமாக அனுசந்திக்கிற வஞ்சநாதி தோஷங்களுக்கு எல்லாம் நிதானத்தை விண்ணப்பம் செய்கிறார் –
நித்யம் த்வஹம் இத்யாதியால்
அன்றிக்கே –
இவர் மித்யா சராமி -என்றவாறே -நீர் பிறர் விஸ்வசிக்கும் படி மித்ரா வேஷத்தை தரித்து திரியா நின்றீர் யாகில்
உமக்கு குரு மந்திர தேவதைகளில் விஸ்வாசம் இருக்கும் படி எங்கனே என்ன –
ஐயோ அடியேனுக்கு இவ் விஷயங்களில் விஸ்வாசம் இல்லாமை மாத்ரம் அன்றிக்கே
அவ் விஷயங்களை பரிபவியா நின்றேன் -என்கிறார் –
நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத் தேவதா மபி ந கிஞ்சித ஹோபி பேமி
இத்தம் சடோப் யசடவத் பவதீய சங்கே
ஹ்ருஷ்டஸ் சராமி யதி ராஜ ததோஸ்மி மூர்க்க –9-
ஸ்ரீ யதி ராஜனே நான் நித்ய காலமும் ஆச்சார்யனையும் மந்த்ரத்தையும் மந்த்ர ப்ரதிபாத்யமான தேவதையும் அவமதிக்கிறேன் .
சிறிதும் அச்சம் படுவது இல்லை..இது என்ன விந்தை –இப்படி ஏமாற்றும் குணம் உடையவன் ஆனாலும் உம் அடியவர் திரளில்
மோசக்காரர் அல்லாதவர் போல சந்தோஷமாக நடிக்கிறேன் –ஆகையால் நான் மூர்க்கன்–
பதவுரை:-
ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே,
அஹம் – அடியேன்,
குரும் – அறியாதவற்றை அறிவித்து அக விருளைப் போக்கும் ஆசார்யனையும்,
மந்த்ரம் – (அவ் வாச்சார்யனாலே உபதேஸிக்கப்பட்ட) திருமந்த்ரமாகிய அஷ்டாக்ஷர மந்த்ரத்தையும்,
தத் தேவதாம் அபி – அம் மந்திரத்துக்கு உள்ளீடான ஸ்ரீமந் நாராயணனையும்,
நித்யம் து – எப்போதுமே,
பரிபவாமி – அவமதிக்கிறேன்.
கிஞ்சித் அபி – சிறிதும்,
ந பிபேமி – இம் மூன்றை அவமதிப்பதனால் நமக்கு வருங்காலத்தில் என்ன கேடு விளையுமோ என்று அஞ்சுகிறேனில்லை.
அஹோ – இது என்ன ஆஸ்சர்யம்.
இத்தம் – இவ் விதமாக,
ஸட:அபி – யாரும் அறியாமல் தீமை செய்யுமவனாயிருந்து வைத்தும், அல்லது ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கை யில்லாதவனாயிருந்து வைத்தும்,
அஸடவத் – உள்ளும் புறமும் ஒக்க நன்மையே செய்யுமவன் போலவும், அல்லது முன் கூறிய மூன்றிலும் மதிப்பு வைக்க வேண்டுமென்று கூறும் ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கை மிக்க ஆஸ்திகன் போலவும்,
பவதீய ஸங்கே – தேவரீர் திருவடிகளில் பக்தி பூண்ட அடியார்களின்-பரமாஸ்திகர்களின் கோஷ்டியில்,
ஹ்ருஷ்ட:ஸந் – நாம் செய்யும் தீமைகள் இவர்களுக்குத் தெரியாமலிருக்கிறதே என்று மகிழ்ச்சி யடைந்தவனாய்க் கொண்டு,
சராமி – ஸஞ்சரிக்கிறேன்.
தத: – அதனால்
அஹம் மூர்க்க:அஸ்மி – அடியேன் மூர்க்கனாகிறேன்.
தத்வாரய – கீழ்க் கூறிய இத்தகைய மூர்க்கத் தனத்தைப் போக்கி யருள வேணும்.
—–
நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்-
அஹேதுகமாக அங்கீ கரித்து -ஸ்வ உபதேசத்தால் தத்வ ஞானத்தைப் பிறப்பித்து –
ஸ்வரூப யாதாத்ம்ய ப்ரகாசகமான திரு மந்திரத்தையும் சார்த்தமாக ப்ரசாதித்து அருளி ஸ்வரூப விருத்தங்கள் புகுராதபடி
இரவு பகல் அவஹிதனாய் நோக்கிக் கொண்டு போரும் ஆச்சார்யன் அருளிச் செய்தபடி அனுஷ்டியாமையாலும் –
தத் உபதிஷ்ட மந்த்ர ரஹஸ்யங்களை அநதி காரிகளுக்கு உபதேசிக்கையாலும்
சர்வ காலமும் பிரதி க்ஷணம் பரிதவியா நின்றேன் –
அவ்வளவும் இன்றிக்கே
மந்த்ரம் பரிபவாமி
அனுசந்தாக்களுக்கு ரக்ஷகமாய் இருக்கையாலே -மந்த்ர ஸ்வ பாவமாய் -சகல வேதாந்த சாரமான திரு அஷ்டாக்ஷரத்தையும்
ஆச்சார்யர் அதுக்கு அருளிச் செய்த யதார்த்தத்தையும் மறக்கையாலும்-அயதார்த்தத்தை அதுக்கு அர்த்தமாக நினைக்கையாலும்
அதின் சீர்மை குன்றும்படி பரிதவியா நின்றேன் –
அவ்வளவும் இன்றிக்கே –
தத் தேவதா மபி-நித்யம் – பரிபவாமி
அந்த மந்திரத்துக்கு சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வ வேஷத்தாலே ப்ரதிபாத்யனான ஸ்ரீ எம்பெருமானையும்
தத் ஸமாச்ரயணத்தைப் பற்ற ஸ்ருஷ்டங்களான கரண த்ரயத்தையும் தத் விஷயத்தில் பிரவணம் ஆக்காமையாலும் –
தத் இதர விஷயங்களில் ப்ரவணம் ஆக்குகையாலும் பரிதவியா நின்றேன் –
தத் தேவதா மபி ந கிஞ்சித ஹோபி பேமி-
எப்போதும் உத்தேச்யமாகவே அநு சந்தித்து கௌரவிக்கத் தக்க குரு மந்த்ர தேவதைகளை அநவரதம் பரிபவித்து
இதுவே யாத்ரையாய்ப் போரா நின்றால்-இதிலே ஒரு சுற்றும் பயம் இன்றிக்கே இரா நின்றேன்
இத்தம் ச ஸோபி
மேல் எழவென்றிக்கே உள்ளூற ஆராய்ந்து பார்த்தால் சடனாய் இருக்கச் செய்தேயும்
அசடோப்ய அசடவத்–சங்கே ஹ்ருஷ்டஸ் சராமி —
ஆச்சார்ய விஷயத்திலும் -அவன் உபகரித்த மந்த்ர விஷயத்திலும் -தத் ப்ரதிபாதிதமான தேவதா விஷயத்திலும்
யுக்த கிரமம் தப்பாமல் யதா பிரதிபத்தியோடே வர்த்திக்குமவர்களாய்
தேவரீருடைய திருவடிகளில் சம்பந்தத்தை இட்டே நிரூபிக்கப் படுபவர்களான மஹாத்மாக்கள் நடுவே
குரு மந்த்ர தேவதைகள் அளவில் இவன் அத்தனை ப்ரேம அதிசயம் உடையவர்கள் இல்லை என்று தோற்றும்படி
நிரதிசய ஹர்ஷ யுக்தனாய்க் கொண்டு ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு இதஸ் ததஸ் சஞ்சரியா நின்றேன்
ததோஸ்மி மூர்க்க–
இப்படி குரு மந்த்ராதிகளை பரிஹரித்து அதில் ஒன்றும் பயமும் இன்றிக்கே -விலக்ஷணர் நடுவே புக்கு –
நானும் அவர்களில் ஒருவன் என்று கண்டவர்களுக்குத் தோற்றும் படி மசக்குப் பரலிட்டு ( சந்தேகம் விளைக்கும் விதை)களித்துத் திரியா நின்றேன் –
என்பது யாது ஓன்று உண்டோ அத்தாலே என் அத்தனை மூர்க்கர் இல்லை –
தாத்பர்யம்
ஆச்சார்யர் உபதேஸித்த தத்வ ஞானம் அனுஷ்ட்டிக்காமல் -மாத்ரம் அல்லாமல் விபரீதமாக அனுஷ்ட்டித்தும்
அநாதிகாரிகளுக்கு உபதேசித்தும்
எம்பெருமானுக்கே கைங்கர்யம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட முக் கரணங்கள் வேறே விஷயத்தில் பயன்படுத்தி இவ்வாறு ஆச்சார்யர் -மந்த்ரம் எம்பெருமான் மூவரையும் பரிதவித்து
இதற்கும் மேல்
இவன் போல் பிரேம அதிசயம் உள்ளார் இல்லார் என்று விஸேஞ்ஞர்களும் கொண்டாடிச் சொல்லும்படி திரியா நின்றேன் –
இவற்றை மாற்றி அடியேனைத் திருத்திப் பணி கொண்டு அருள வேண்டும் என்கிறார்
———
நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம் –தத்தேவதாமபி
யாவதாத்மா பாவியாக ஸ்லாக நீயமான விஷயங்களை கிடீர் அடியேன் நித்தியமான பரிபவிப்பது
அஹம் து
என்று பரிபவிக்கிற தம்முடைய வை லஷண்யத்தைச் சொல்லுகிறார் –
அதாவது சம்சாரிகளிலும் முமுஷூக்களிலும் வேறு பட்டு இருக்கை-
அதாவது சம்சாரிகள் ஸ்வரூப ஜ்ஞ்ஞர் அல்லாமையாலே குரு மந்திர தேவதைகளை பரிபவிப்பார்கள்
முமுஷூக்கள் ஸ்வரூப ஜ்ஞ்ஞர் ஆகையாலே ஸ்லாகியா நிற்பார்கள்
அடியேன் ஸ்வரூப ஜ்ஞனாய் இருந்து வைத்து பரிபவியா நிற்பன் என்கிற இதுவாய்த்து அடியேன் வை லஷண்யம் –(நானோ என்னில் என்று முதலில்)
நித்யம் து பரிபவாமி
உச்சி வீடு விடுமா போலே அல்ப கால விச்சேதமும் இன்றிக்கே பரிபவியா நின்றேன்
அஹம் து நித்யம் பரிபவாமி
லோகத்தில் உள்ளவர்கள் ப்ரம ப்ரமாதிகளாலே காதா சித்கமாக பரிபவிப்பார்கள் ஆகில் அடியேன் அப்படி இன்றிக்கே புத்தி பூர்வகமாக
யாவத் காலமும் பரிபவியா நின்று கொண்டு அதில் நின்றும் கை வாங்குகிறிலேன்
அஹம் து நித்யம் பரிபவாமி
லௌகிகரும் கூட நித்யமாக ஆதரிப்பார்கள் ஆகில் அடியேன் நித்யமாக பரிபவியா நிற்பன் என்கிறார்
து சப்தம்
ஏவ காரார்த்தமாய் அடியேனைப் போலே நித்தியமாய் பரிபவிப்பார் மற்று ஒருவர் இல்லை என்கிறார் ஆகவுமாம் –
இப்படி பரிபவிக்கிறது தான் எவற்றை என்னில்
குரும் ச மந்த்ரம் தத்தேவதாமபி –
ஸ்வ உபதேசாதிகளால் தேஹாத்மா அபிமானம் முதலான அஜ்ஞ்ஞானத்துக்கு நிவர்த்தகனாய் –
ந குரோர் அபரஸ் த்ராதா-என்கிறபடியே
இவன் தனக்கு சர்வ வித ரஷகனான ஸ்ரீ ஆசார்யனையும் –
மந்தாரம் த்ராயதே இதி மந்திர -என்கிறபடியே
ஸ்வார்த்த பிரகாசந த்வாரா -இவன் தனக்கு ஸ்வ ஆச்சார்ய உபதேஷ்டார்த்தங்களில் விஸ்ம்ருதியும்-
தத் அனுரூபமான அனுஷ்டான ப்ரஸ்யுதியும் வாராமல்
ரஷகமான மந்தரத்தையும்
அம் மந்த்ரத்துக்கு உள்ளீடாய் ஸ்வ ஆசார்யனாலே இவ் வாத்ம வஸ்துவுக்கு ப்ராப்த சேஷியாக உபதேசிக்கப் பட்ட ஸ்ரீ தேவதையையும்
கிடீர் அடியேன் பரிபவிப்பது -என்கிறார் –
சகாரம்
சமுச்சாயார்தமாய் -குரு மந்திர தேவதைகளையும் என்று சமுச்சயிக்கிறது
அபி சப்தம்
விரோதார்த்தமாய் –
யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரௌ–ஸ்வேதா -6-23-என்றும்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர ப்ரதே குரௌபத் ரிஷூ பக்திஸ் சதா கார்யா சாஹி பிரதம சாதனம் –ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்கிறபடியே
இச் சேதனனுடைய உஜ்ஜீவனத்துக்கு பிரதம காரணமாக விதிக்கப் பட்ட பக்திக்கு விஷயமான குரு மந்திர தேவதைகளையும்
அதுக்கு எதிர் தட்டாக பரிபவியா நின்றேன் -என்னும் இவ் வர்த்தத்தைச் சொல்லுகிறது –
இதில் குரு பரிபவமாவது –
கேட்ட அர்த்தத்தின் படி நடவாது ஒழிகையும்-அநதிகாரிகளுக்கு உபதேசிக்கையும் –
மந்திர பரிபவமாவது –
அதின் அர்த்தங்களின் விஸ்ம்ருதியும் -விபரீதார்த்த பிரதிபத்தியும்
தேவதா பரிபவமாவது –
கரண த்ரயத்தையும் தத் விஷயத்தில் பிரவணம் ஆக்காது ஒழிகையும் -இதர விஷயங்களில் பிரவணம் ஆக்குகையும் –
இவை இறே அடியேனுக்கு உள்ளது -என்று கருத்து –
இப்படி இருந்து பரிபவிக்கையில் பயம் தான் இல்லையோ என்ன
ந கிஞ்சித ஹோபி பேமி –
ந கிஞ்சித்
அல்பாம்சமும் பயப்படுகிறது இல்லை –
லோகத்தில் புராண வைராக்கியம் போலே -ஸ்ரவண தசையில் பயம் உண்டாகலாம் இறே –
அதுவும் இல்லை அடியேனுக்கு என்கிறார்
அஹோ –
தம்முடைய நிலை தமக்கு ஆச்சர்யமாகத் தோற்றுகையாலே-அஹோ -என்கிறார்
அன்றிக்கே –
இப்படி பிராப்த விஷயங்களைப் பரிபவித்தாலும் பரிபவித்தோம் என்கிற பயம் அல்பாம்சமும் இல்லாது ஒழிவதே
என்று வியசனப் படுகிறார் என்றுமாம்
கிஞ்சித் அபி ந பிபேமி -என்ன வேண்டி இருக்க –
முன்னே ந கிஞ்சித் -என்கிறது –
நிஷேத்யமான பய லேசத்தினுடைய அத்யந்தா பாவத்தைப் பற்ற
மத்யே -அஹோ -என்று பிறந்த ஆச்சர்ய விஷாதங்கள் உள் அடங்காமையாலே –
நீர் இப்படி குரு மந்திர தேவதைகளை பரிபவிப்பது தான் பிறர் அறியும்படியாயோ என்ன கூடமாய்க் காணும் என்கிறார்
இத்தம் சடோப்ய –
கீழ்ச் சொன்ன படியே குரு மந்திர தேவதைகளை கூடமாய் பரிபவித்து பய லேசமும் இன்றிக்கே இருந்தேனே யாகிலும்
அசடவத் –
அது பிறர் நெஞ்சில் தட்டாத படி கரண த்ரயத்தாலும் தேவரீர் திரு உள்ளத்துக்கு அபிமதம் செய்பவன் போலே வர்த்தித்தேன் –
அது கொண்டு –
பவதீய சங்கே –
தேவரீருடைய சம்பந்தமே நிரூபகமாய் இருக்குமவர்கள் அடியேனை பாவ பரிஷை பண்ணாமல் ஸ்வ கோஷ்டியில் புகுர விட்டார்கள்
ஹ்ருஷ்டஸ் –
இவர்களை வஞ்சித்து இவர்கள் சங்கத்தில் புகுந்தேனாவது எப்போதோ என்று இருந்த அடியேன்
அது பெற்றவாறே மனஸ் சந்தோஷம் உடையவனாய்
சராமி –
நிவாரகர் இல்லாமையாலே யதேச்சமாக சஞ்சரியா நின்றேன்
பவதீய சங்கே ஹ்ருஷ்டஸ் சராமி
இவ் வஞ்சனை தான் புறம்பே செய்யப் பெற்றதோ
ஸ்ரீ இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே -86- என்கிறபடியே –
இவ் வாத்ம வஸ்துவுக்கு ப்ராப்த சேஷியான தேவரீர் சம்பந்திகள் திறத்தில் கிடீர் செய்யப் பெற்றது -என்கிறார்
(பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே
உற்றா ரென வுழன் றோடி நை யேனினி, ஒள்ளிய நூல்
கற்றார் பரவும் இராமா னுசனைக் கருது முள்ளம்
பெற்றார் எவர், அவ ரெம்மை நின் றாளும் பெரியவரே.–86-)
அன்றிக்கே –
அடியேனுக்கு ஸ்வ வஞ்சனத்தால் பிறந்த ஹர்ஷத்தை அவர்கள் ஸ்வ கோஷ்டியில் புகுருகையால்
வந்தது என்னும் படி காணும் -என்கிறார் ஆகவுமாம்
யதிராஜ
அடியேனுக்கு இந்த்ரிய நிக்ரஹத்திலே ருசியை உண்டாக்கி அன்றோ தேவரீர் ஸ்ரீ யதிராஜராக வேண்டியது என்கிறார் –
ரஞ்ஜ நாத் ராஜா விறே
பவதீய சங்கே ஹ்ருஷ்டஸ் சராமி யதிராஜ
இந்த்ரிய நியமனத்தால் புகர் பெரும் தேவரீருக்கு -அடியேன் இந்த்ரிய வஸ்யனாய் தேவரீர் சம்பந்திகளை வஞ்சித்து திரிவதே -என்கிறார்
அறிந்து வைத்து வஞ்சிப்பான் என் என்ன
ததோஸ்மி மூர்க்க —
கீழ்ச் சொன்னவை எல்லாம் ஸ்வரூப விரோதிகள் என்று அறிந்து இருக்க பய லேசமும் இன்றிக்கே
அவற்றை விட மாட்டாமையால் செய்கையாலே மூர்க்கன் ஆகிறேன் –
மூர்க்கோஸ்மி–
அடியேனுக்கு மௌர்க்க்யம் யாயிற்று சத்தை என்கிறார் –
கீழ் க்ருதி நோபி (7)–என்றும் –
சிஷ்ட ஜநௌக மத்யே (8-)என்றும் சாமான்யேன சொன்னதை –
பவதீய சங்கே -என்று ஒரு விசேஷத்திலே பர்யவசிப்பிக்கிறார் –
இத்தால் பவதீய சங்கே-ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்திகள் யாய்த்து –க்ருதி நோபி-சாஸ்தரார்த்த வித்துக்களும் சிஷ்ட ஜநௌக மத்யே-தத்தர்த்த பிராமாண்ய வாதிகளும் என்கிறது –
——–
கீழ் நான்காம் ஸ்லோகத்தில் ‘அடியேனுடைய வாக்கு தேவரீருடைய குணங்களைச் சொல்லிப் புகழ்வதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும்’ என்று அருளிச் செய்தவர் அதற்கு நேர் மாறாக குரு மந்த்ர தேவதைகளை வாயார வைது பரிபவித்தலாகிற கெட்ட காரியங்களில் வாக்கு ஊன்றி யிருப்பதை யறிந்து, இத்தகைய பரிபவிக்கும் தீய செயலையும் அதற்குக் காரணமான மூர்க்கத் தனத்தையும் போக்கி யருள வேணுமென்று ப்ரார்த்திக்கிறார்.
குருவை அவமதிப்பதாவது – அவர் உபதேஸித்தபடி விட வேண்டியவற்றை விடாமலிருத்தல், பற்ற வேண்டியவற்றைப் பற்றாமலிருத்தல். தனக்கொரு ப்ரஸித்திக்காகவோ கௌரவத்திற்காகவோ தந லாபத்திற்காகவோ, மந்திரம் கேட்கத் தகுதி யற்றவர்கட்கு மந்திரத்தை உபதேஸித்தல் ஆகிய இவையே ஆம்.
மந்த்ரத்தை அவமதிப்பதாவது – மந்த்ரத்திலுள்ள உண்மைப் பொருளை மறைத்தலும் விபரீதப் பொருளுரைத்தலும் ஆம்.
மந்த்ரத்தால் கூறப்பட்ட தேவதையை அவமதிப்பதாவது – ஸ்ரீமந் நாராயணனால் ஸ்ருஷ்டி காலத்தில் தரப்பட்ட மன மொழி மெய்களை அவன் விஷயத்தில் உபயோகப்படுத்தாமல், பிற நீச விஷயத்தில் உபயோகப் படுத்துதல் ஆகும்.
இவற்றின் விரிவு ஸ்ரீவசந பூஷணாதிகளில் காண்க.
அஹோ – ஆஸ்சர்யம். உலகத்தில் எங்கும் அடியேன் போன்ற பாவியும், பாவத்திற்கு அஞ்சாமலிருப்பவனும் தென்படாமையால் அடியேனுக்கே இது ஆஸ்சர்யத்தைத் தருகின்றதென்கிறார் ‘அஹோ’ என்பதனால்.
—————————————————————————–———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –
Leave a Reply