ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–3- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள்/ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம்

—————–

நம்மைப் பற்றினாருக்கு ப்ராப்ய பிராபகமும் நாமேயாகச் சொன்னீரே –
நம்மைப் பற்றி நிற்கிற உமக்கும் இது ஒவ்வாதோ என்று ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளமாக –
எனக்கு அங்கன் அன்று-
தேவரீர் திருவடிகளையே ப்ராப்யமும் பிராபகமுமாகக் கொண்ட ஸ்ரீ கூரத்தாழ்வான் முதலாமவர் திருவடிகளே
ப்ராப்யமும் பிராபகமுமாகப் பற்றி இருக்குமவனாக வேணும் என்று
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் பிரார்த்தித்து அருளுகிறார்

(ஆச்சார்யர் தனது சிஷ்யனை தனது ஆச்சார்யருக்கு சிஷ்யர் -தொண்டர் தொண்டர் –தொண்டன் சடகோபன்
குருவி தலையில் பனங்காயை வைக்கக் கூடாதே
அனைவருமே எம்பெருமானார் இடமும் சேர்ப்பார்
நாங்கள் கொள்வான் அன்று -காண் கோவிந்தா -ஆண்டாள் மூலம்
திருமங்கை ஆழ்வாரும் மற்று எல்லாம் பேசினாலும் உன் அடியார்க்கு அடிமை
உபகாரகர் கௌரவம் நம் ஆச்சார்யருக்கே -உத்தாராக கௌரவம் எம்பெருமானாருக்கே -)

கீழ் இரண்டு ஸ்லோஹத்தாலும் ஸ்ரீ எம்பெருமானாருடைய ஜ்ஞான அனுஷ்டான பூர்த்தியை அருளிச் செய்து –(பராங்குச பாத பக்தம் -ஞானம் பக்தி விசேஷம் -அந்த முற்றிய ஞானத்துக்குத் தக்க அனுஷ்டானம் -ராஜ ஹம்சம் -ப்ருங்க ராஜம் -முகாப்ய மித்ரம் -)
மேல் மூன்று ஸ்லோஹத்தாலே
ப்ராப்ய பிரார்த்தனை செய்து அருளுகிறார் -உபாய வரணம் ப்ராப்ய சேஷம் இறே –

அதில் முதல் ஸ்லோஹத்திலே
கரண த்ரயத்தாலும் ஸ்ரீ தேவரீர் திருவடிகளையே உபாய உபேயங்களாக அத்யவசித்து இருக்கும்
ஸ்ரீ பூர்வாசார்யர்களுடைய திருவடிகளை அடியேன் இடைவிடாமல் நினைத்துக் கொண்டு இருக்க கடவேனாக வேணும் என்கிறார் –

அன்றிக்கே –
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் -என்று பிரஸ்துதமான உபாய க்ருத்தியம் இஷ்ட பிராப்தியும் அநிஷ்ட நிவாரணமும் ஆகையாலே
அதில் இஷ்டத்தை மூன்று ஸ்லோஹத்தால் அருளிச் செய்கிறார்

அதில் பிரதமத்தில்
ஆசார்ய அன்வயத்துக்கு அவஸ்ய அபேஷிதராய் (உபகார ஆச்சார்யரைப் பற்றியே உத்தராக ஆச்சார்யரான இவரைப் பற்ற முடியும்-வானர முதலிகளைப் பற்றியே பெருமாளை பற்றினான் விபீஷணன்-எறும்பி அப்பாவும் கோயில் அண்ணன் மூலமே மா முனிகளைப் பற்றினார்   )கரண த்ரயத்தாலும் உண்டான ஸ்வ அனுஷ்டான உபதேசங்களாலே தத் விஷய ப்ரீதி வர்த்தகரான உபகாரக விஷயத்தில் க்ருதஜ்ஞதை தமக்கு யாவதாத்ம பாவியாக வேணும் என்கிறார் –வாசா -இத்யாதியால் –(யாவதாத்மா பாவி -நித்ய விபூதியிலும் இது –உபகாரக விஷயத்தில் க்ருதஜ்ஞதை-நடக்கும் அன்றோ )

வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத்
பாதார விந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம்
பாதாநுசிந்தன பரஸ் சததம் பவேயம் –3-

ஸ்ரீ யதீந்த்ர தலைவனே வாக்காலும் மனத்தாலும் காயத்தாலும் உம் திருவடி தாமரைகளை இடைவிடாமல் உபாசிக்கும்
ஆச்சர்யர்களான ஸ்ரீ கூரத் ஆழ்வான் ஸ்ரீ திருக் குருகை பிரான் பிள்ளான் முதலிய புருஷர்களின் திருவடிகளை
ஸ்மரிப்பதிலேயே நோக்கோடு சர்வ காலமும் இருப்பேனாக

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

மநஸா – மனத்தினாலும்,

வாசா – நாவினாலும்,

வபுஷா  – தேஹத்தினாலும்,

யுஷ்மத் – தேவரீருடைய,

பாதாரவிந்த யுகளம் – தாமரை மலர் போன்ற திருவடிகளின் இரட்டையை,

பஜதாம் – நிரந்தரமாக ஸேவித்துக் கொண்டிருக்கிற,

குரூணாம் – ஆசார்யர்களாகிய,

கூராதி நாத குரு கேஸ முக ஆத்ய பும்ஸாம் – கூரத்தாழ்வான், திருக் குருகைப் பிரான் பிள்ளான் முதலிய பூர்வாச்சார்யர்களுடைய்,

ஸததம் பாத அநு சிந்தந பர: – எப்போதும் திருவடிகளைச் சிந்திப்பதில் ஊன்றியவனாக,-அநு சிந்தந-சேஷத்வ சிந்தனை

பவேயம் – (அடியேன்) ஆகக்கடவேன்.

———-

ப்ரத்யக்ஷ குரவே ஸ்துத்யா -என்கிறபடியே பகவத் விஷயத்தில் உபகரண ஆச்சார்யர்களை
ஸ்துதிக்கைக்கும் ஸ்மரிக்கைக்கும் வணங்குகைக்கும் யாய்த்து இவனுக்கு அடியிலே
வாங் மனஸ் காயங்களை அடியிலே உண்டாக்கிற்று –

(பரோஷா மித்ரா பாந்தவ –உறவினரை பின்பும் கார்யாந்தரே வேலைக்காரர்கள் -பிள்ளையை எப்பொழுதும் கொண்டாடக் கூடாது)

விசித்ரா தேக சம்பத்தி ரீஸ்வராய நிவேதிதம்-(ஸ்ரீ விஷ்ணு தத்வம் )இத்யாதிப்படியே சர்வேஸ்வரன் தன்னை ஆஸ்ரயிக்கக் கொடுத்த கரணங்களைக் கொண்டு
அந்ய பரராய் திரிகிற இவ் விபூதியிலே பகவத் ஸமாச்ரயண மாத்திரத்தில் துவளுகை அன்றிக்கே
அத்தையும் பிரதம அவதி என்று கழித்து சரம அவதியான ஆச்சார்ய விஷயத்தில் கரண த்ரயத்தையும் விநியோகிக்கும்
படியான ஏற்றத்தை உடைய இவர்கள் சிலரே என்று வித்தராய் அவர்கள் திருவடிகளைப் பற்றுகிறார் –

வாசா
வாய் அவனை அன்றி வாழ்த்தாது -என்று பிரதம பர்வ நிஷ்டர் பகவத் விஷயம் அல்லது மற்ற ஒரு விஷயத்தை
ஏத்தாதாப் போலே இவர்களும் வகுத்த விஷயம் ஒழிய மற்ற ஒன்றை ஏத்தாத படி –
அவர்களுக்கு வ்யாவ்ருத்தம் தேவதாந்த்ரம் –
இவர்களுக்கு பகவத் விஷயம் -நாவ கார்யம் (4-4-1)-என்றவர்கள் இறே இவர்கள்

(நாக்குக்கு அகார்யம் -ஓம் நமோ நாராயண கூடாது ஸ்ரீ மத் ராமாநுஜாயா நம சொல்பவர்கள்)

சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை-
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணவை யுமக் கன்றென்றி ராமானுச னுயிர்கட்கு
அரணங் கமைத்திலனேல், அரணார் மற்றிவ் வா ருயிர்க்கே?-67-

மநஸா
மந பூர்வோ வாக் உத்தர -என்கிற நியமம் இல்லையாய்த்து இவர்களுக்கு –
வாய் திறக்க இவ்விஷயத்தில் அல்லது வாய் திறக்காதது போலே
நெஞ்சுக்கும் விஷயம் அது அல்லது வேறே இல்லையாய்த்து இவர்களுக்கு –

பாட்டினால் நீ நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் -மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்களுக்கு க்ரமம் இல்லையே

ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பியை -உமக்கு தியானத்துக்கு விஷயம் எது என்று கேட்ட பின்
அவர் அருளிச் செய்த திரு வார்த்தையை நினைப்பது –(ஆளவந்தார் திருமேனியையே நித்ய நினைவு )

வாசா மனசா வபுஷா ச
என்று தம் கரணங்களின் ப்ராவண்ய அதிசயத்தைச் சொல்கிறது –

யுஷ்மத் பாதார விந்த யுகளம் பஜதாம்
இவர்கள் வேப்பங்குடி நீர் இருக்கிற படி-(மருந்து உபாயம் -)
இவ் வாத்மாவுக்கு வகுத்த சேஷியான தேவரீருடைய நிரதிசய போக்யமாய் சேர்த்தி அழகை யுடைத்தான திருவடிகளை
ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் நிரந்தரமாக ஸேவிக்குமவர்களுடைய-

நித்யம் யதிவர சரணவ் சரணம் மதீயம்-என்று ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும்
ஸ்ரீ பரமாச்சாரியார் அருளிச் செய்தார் இறே

திருவடிகளை வாக்காலே பஜிக்கை யாவது தத் வைலக்ஷண்யத்தை புகழுகை
மனஸ்ஸாலே பஜிக்கையாவது -திருவடிகளை நெஞ்சால் நினைக்கை-
சரீரத்தாலே பஜிக்கையாவது ப்ரணமாமிக்கு விஷயம் ஆக்குகை –

கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம்
ஸ்வ அவதாரத்தாலே அவ் வூரை சநாதமாக்கி அது தன்னையே தனக்கு நிரூபகமாக உடைய ஸ்ரீ ஆழ்வான் என்ன –
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில் உபகார ஸ்ம்ருதியாலே அவர் திரு நாமம் சாற்றத் திரு உள்ளமாய் –
ஸ்ரீ எம்பெருமானாராலே புத்ரத்வேன அபிமதராய் ஸ்ரீ குருகைப் பிரான் என்று சாத்தப் பட்ட திரு நாமத்தை உடைய
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளை என்ன -இவர்கள் முதலான ஸ்ரீ பூர்வாச்சார்யர்களுடைய

முக சப்தத்தாலே
ஸ்ரீ முதலியாண்டான் -ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ப்ரப்ருதிகளைச் சொல்லுகிறது –
இவர்களுடைய கரண த்ரய சமாஸ்ரயணமும் அஜ்ஞ்ஞான நிவ்ருத்தி பூர்வாக ஜ்ஞான பிரதத்வமும்
இவர்கள் கிரந்தங்களிலே காணலாம்

பாதாநுசிந்தன பரஸ் சததம் பவேயம்
அவர்கள் தேவரீருடைய பாதாரவிந்தங்களை அநுவரதம் த்யானம் பண்ணுமா போலே
இவ்வநுஸந்தானம் காதாசித்கமாகை அன்றிக்கே நித்தியமாக வேணும் என்கிறது –

அநு விந்தனம்-என்ற பாடமான போது-
அநுஸ் யூதம் விந்தனம் -என்று கொள்ளும் போது சதத சப்தம் சங்கதமாகாது

அநு -ஹித அர்த்தத்திலேயாய் கிருஷ்ண அநு ஸ்மரணம்-என்னும் இடத்தில் போலே
தத் விஷயத்வ சேஷத்வ அனுசந்தானத்தைச் சொல்கிறது –
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட் படுத்தே(107) -என்கிற அர்த்தத்தைச் சொல்கிறது –

இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே.–107-

இவருக்கு இவ் விஷயத்தில் உண்டான பாவ பந்தத்தில் ஊற்றம்-அமுதனார் சரமத்தில் அருளியதை இவர் மூன்றாம் ஸ்லோகத்திலே பிரார்த்தித்து அருளுகிறார்
இவருக்கு இவ்விஷயத்தில் உண்டான பாவ பந்தத்தில் ஊற்றம் அவரவர் திருவடிகளில் பிரார்த்திக்கை அவர் இடமே பிரார்த்திக்கும் படி யாய்த்து

தாத்பர்யம்
எம்பெருமானாரே
தேவரீருடைய பரம போக்யமான திருவடிகளை மனத்தினால் த்யானித்தும் வாயினால் அவற்றின் வைலக்ஷண்யங்களை ஸ்தோத்ரம் பண்ணியும் சரீரத்தால் வணங்கியும் -இப்படி கரண திரயத்தால் நிரந்தர சேவை செய்யும் பாக்யவான்களான கூரத்தாழ்வான் பிள்ளான் முதலிய பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே ப்ராப்யமும் பிராபகமுமாகப் பற்றி தத் ஏக பரமாய் இருக்கும் படி அனுக்ரஹிக்க வேணும்
எம்பெருமானார் சம்பந்திகளின் திருவடிகளில் ப்ராவண்யம் நித்தியமாக செல்லும்படியும் அவர்களுக்கு சேஷ பூதனாக இருப்பதற்கு அவர் இடமே பிரார்த்தித்து அருள்கிறார்

(அபகத கதமாநைரந்திமோபாய நிஷ்டை:
அதிகத பரமார்த்தைரர்த்த காமாநபேக்ஷை: ||
நிகில ஜந ஸுஹ்ருத்பி: நிர்ஜித க்ரோத லோபை:
வரவரமுநி ப்ருத்யை ரஸ்து மே நித்ய யோக:|| 97-இதே போல் எறும்பி அப்பாவும் மா முனிகளின் அடியார் அடியார் சம்பந்தத்தைப் பிரார்த்திக்கிறார் )

(மதம் மானம் என்று சொல்லக்கூடிய துர்க்குணங்களற்றவர்கள்,
சரமோபாயம் என்று சொல்லக்கூடிய ஆசார்ய நிஷ்டை உள்ளவர்கள், உண்மைப் பொருள் அறிந்தவர்கள்,
அர்த்தம் காமம் இவற்றை வெறுத்தவர்கள், எல்லா ஜனங்களுக்கும் நண்பர்களாயுள்ளவர்கள், –
இவர்களுடன் எனக்கு ஸம்பந்தம் நித்யமாக இருக்க வேண்டும்.)

———–

வாசா
திருவடிகளுடைய போக்யதாதிசயம் நெஞ்சால் நினைப்பதற்கு முன்னே
வாயால் சொல்லலாம் படி காணும் இருப்பது

வாசா -என்ற அனந்தரம்-
யதீந்திர -என்கிறது
இந்த்ரிய நிக்ரஹத்தால் பிறந்த ஐஸ்வர்யம் ஸ்வ சம்பந்திகள் அளவும் சென்று –
அத்தை அறியும்படியாய் இருக்கையாலே –
இத்தால் தம்முடைய கரணங்களையும் நியமிக்க வேணும் என்று கருத்தாகிறது

மநஸா வபுஷா ச
மனஸ் அடியாக வரும் க்ரமம் குலைந்தது -கரணங்களுடைய பதற்றத்தாலே –
ப்ரேமம் தலை எடுத்தால் க்ரமம் பார்க்க ஒட்டாது இறே(யத் ஹி மனஸா த்யாயதி -தத் வாஸா வசதி- யத் வாஸா வததி -தத் கர்மணா கரோதி. மனஸ் ஏகம்ந ஸாஸ்த்ரம் ந ஏவ க்ரம -பத்திமை நூல் வரம்பில்லையே )

வாங் மன காயை -என்று கூட்டிச் சொல்லாதே பிரித்துச் சொல்லுகையாலே
கரண ஏக தேச சமாஸ்ரயணமும் கார்யகரம் என்கிறது

யுஷ்மத்
ப்ராப்தரான தேவரீருடைய -என்னுதல் –
ஆன்ரு சம்சய பிரதானரான தேவரீருடைய என்னுதல்

பாதார விந்த யுகளம்
அப்ராப்தமாகிலும் விட ஒண்ணாத போக்யாதிசயத்தை யுடைய திருவடிகளுடைய யுகளத்தை-

யுகளம் என்கையாலே
மற்றொரு துணை தேட வேண்டாத படி நிரபேஷமாய் போந்திருக்கையும் –
சேர்த்தி அழகையும் -சொல்லுகிறது

பஜதாம்
போக்யதாதிசயத்தாலே இடைவிடாமல் ஆஸ்ரயித்து கொண்டு இருக்குமவர்களாய்-
உபாயமாக ஆஸ்ரயிக்கும் அவர்கள் என்னுதல்
பஜனம் -பக்தி விசேஷம் இறே

குருணாம்
திருவடிகள் சம்பந்தத்தால் தங்கள் அஜ்ஞ்ஞானம் போகிற மாத்ரம் அன்றிக்கே தாங்களும் ஸ்வ சம்பந்திகளுக்கு
தேஹாத்ம பாவ அஜ்ஞ்ஞாந நிவர்த்தகராம் படி யாகிறதும் இவர் திருவடிகளை ஆஸ்ரயித்ததாலே–
அஜ்ஞ்ஞான நிவர்த்தகதவம் இறே குரு சப்தார்த்தம் –

யுஷ்மாத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம்
1-ப்ராப்தமான விஷயத்தை பற்றினவர்கள் ஆகையாலே -அப்ராப்த விஷயங்களிலே ப்ராப்தத்வ புத்தி நிவர்த்தகரான என்னுதல் –
2-பரம போக்யமான விஷயத்தைப் பற்றினவர்கள் ஆகையாலே -அபோக்ய விஷயத்தில் போக்யதா புத்தி நிவர்த்தகர்களான என்னுதல்
3-நிரபேஷ உபாயத்தைப் பற்றினவர்கள் ஆகையாலே சாபேஷ உபாயங்களிலே உபாயத்வ புத்தி நிவர்த்தகர்களான என்னுதல் –
4-க்ருபா மாத்ர பிரசன்னமான விஷயத்தைப் பற்றினவர்கள் ஆகையாலே –தேஹி மே ததாமி தே-என்கிறபடியே
இத் தலையில் ஏதேனும் ஒன்றை அபேஷிக்கும் விஷயத்தில் க்ருபா மாத்ர பிரசன்னத்வ புத்தி நிவர்த்தகர்களான என்னுதல்
அன்றிக்கே –
5-பரித்யஜ்ய -வ்ரஜ -மோஷயிஷ்யாமி -என்னும் விஷயத்தில் க்ருபா மாத்ர பிரசன்னத்வ புத்தி நிவர்த்தகர்களான என்னுதல்(சேஷி ராமானுஜன் கண்ணன் போல் அல்லவே சேஷ ராமானுஜன்-அவனைப் போல் பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் அன்றி இவர் மோக்ஷ ஏக ஹேது அன்றோ )

இவருடைய த்யாக ஸ்வீ காரங்கள் இரண்டும் சம்சாரிகளுடைய சம்சார மோஷத்துக்கு இறே
பல்லுயிர்க்கும் வீடளிப்பான் விண்ணின் தலை நின்று மண்ணின் தலை உதித்தவர்-95- இறே –(விண்ணின் தலை நின்று-நித்ய விபூதி தியாகம் –மண்ணின் தலத்துதித்து-லீலா விபூதி ஸ்வீ காரம் -இதுக்குப் பிரமாணம் )

(உண்ணின் றுயிர்களுக் குற்றனவே செய்து அவர்க்குயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப் பானெம் இராமானுசன்
மண்ணின் தலத்துதித்து உய் மறை நாலும் வளர்த்தனனே.–95-)

——–

கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம்
ஸ்வ அவதாரத்தாலே அவ் வூரை சநாதமாக்கி அது தன்னையே தனக்கு நிரூபகமாக உடைய ஸ்ரீ ஆழ்வான் என்ன –
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில் உபகார ஸ்ம்ருதியாலே அவர் திரு நாமம் சாற்றத் திரு உள்ளமாய் –ஸ்ரீ எம்பெருமானாராலே புத்ரத்வேன அபிமதராய் ஸ்ரீ குருகைப் பிரான் என்று சாத்தப் பட்ட திரு நாமத்தை உடைய
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளை என்ன -இவர்கள் முதலான ஸ்ரீ பூர்வாச்சார்யர்களுடைய

முக சப்தத்தாலே
ஸ்ரீ முதலியாண்டான் -ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ப்ரப்ருதிகளைச் சொல்லுகிறது –
இவர்களுடைய கரண த்ரய சமாஸ்ரயணமும் அஜ்ஞ்ஞான நிவ்ருத்தி பூர்வாக ஜ்ஞான பிரதத்வமும்
இவர்கள் கிரந்தங்களிலே காணலாம்

பாதாநுசிந்தன பரஸ்
இவர்கள் பண்ணின உபகாரங்களை நினைத்து இவர்கள் ஸ்ரீ பாதங்களுடைய அவிச்சின்ன ஸ்ம்ருதியிலே
தாம் ஆசக்தராக வேணும் என்கிறார் –

சததம்
இது தான் கால தத்வம் உள்ளதனையும் நடக்க வேணும் என்கிறார்

பாதாநுசிந்தன பரஸ் சததம் பவேயம் –
உபகாரக விஷயத்தில் உபகார ஸ்ம்ருதி தமக்கு தாரகம் ஆகையாலே அது தமக்கு யாவதாத்மா பாவியாக வேணும் என்கிறார்

பாதாநுசிந்தன பாரோ பவேயம்
வ்யதிரேகத்தில் தாம் உளர் அன்று போலே காணும் -உபேயத்வ அபிரதிபத்தி இறே கருதக்நதா பீஜம்(செய்ந்நன்றி கொல்ல விதையாகுமே )
அன்றிக்கே
நாம் ஆதரிக்கைக்கு ஸ்ரீ எம்பெருமானாருடைய சாஷாத் சம்பந்தி சம்பந்தம் வேணுமோ –
அவர்களுடைய சம்பந்தி பரம்பரா சம்பந்தமே அமையாதோ என்கிறார் –

———–

மங்களா சாசனம் செய்து அருளி ஸ்தோத்ரம் ஆரம்பிக்கிறார்
இரண்டாம் மூன்றாம் ஸ்லோகங்களில் யதீந்த்ரர் அடியார்கள் உண்டு
மேல் யதீந்த்ரர் -அது ஸித்திக்க இவை வேண்டுமே

முதலில் அரங்கன் ஆழ்வார்
அடுத்து ஆழ்வார் -அங்கமான ஆழ்வார்கள் கூரத்தாழ்வான்
அடுத்து அனைத்து பூர்வர்கள்

மனஸ் -மத்யமம் -மனஸா வாஸா -மனஸா வபுஷா

யுஷ்மத் -உன்னுடைய -பூஜ்ய பஹு வசனம்

அன்றிக்கே பலர் -உன்னுடைய -என்று ராமானுஜர் ஆழ்வார் எம்பெருமான் மூவருடைய திருவடிகள் என்றுமாம்
யுகளம் -இரட்டை -என்றது -த்வயம் சரணவ் -இரட்டை இல்லை -பூர்வ வாக்கியம் உபாயம் மட்டும் -இரண்டு ஆகாரமும் அங்கு இல்லையே
இங்கு இரண்டு ஆகாரங்களையும் காற்றலாம் -பாவானத்வமும் போக்யமும்
ஸஹாயாந்தர நிரபேஷ்யம் காட்டவுமாம்

மேல் ஸ்லோகத்தில் யதிராஜருக்கடிமையாயிருத்தலை ப்ரார்த்திக்கிறவராய்க்கொண்டு, அது தன்னைத் திடப்படுத்துகிற – யதிராஜ ஸிஷ்யர்களுக்கு அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார்கூராதிநாதர்-கூரத்தாழ்வான். குருகேசர் எம்பெருமானாரால் ஜ்ஞாந புத்திரராக ஸ்வீகாரம் செய்து கொள்ளப்பெற்ற திருக்குருகைப்பிரான் பிள்ளான். முக(முதலான) என்பதனால் எம்பார், முதலியாண்டான் தொடக்கமான மற்றுமுண்டான ஸிஷ்யர்களைக் கொள்க. குரூணாம்-க்ருணந்தி இதி குரவ: என்ற வ்யுத்பத்தியினால் உபதேஸம் செய்யுமவர்களை (அருளிச் செயல்களுக்கு வியாக்யானமும் ஸ்தோத்ரங்களும் அருளிச் செய்தவர்கள் அன்றோ )இந்த குருஸப்தம் குறிக்கும்.

மேலும் ‘கு’ என்பது அறியாமையாகிற அகவிருளையும், ‘ரு’ என்பது அதைப்போக்குமவரையும் குறிப்பிட்டு-குருஸப்தம் அறியாமையைத் தமது உபதேஸத்தால் போக்குமவரைக் குறிப்பிடும். இது கூரத்தாழ்வான் முதலியோர்க்கு அடைமொழியாகும்.

பும்ஸாம் என்பதில் பும்ஸ்ஸப்தம் – புநந்தி இதி புமாம்ஸ: என்ற வ்யுத்பத்தியினால் பரிஸுத்தமானவர்களைத் தெரிவிக்குமதாய்,(ஷேத்ரஞ்ஞர்களுக்கு யதிராஜர் ஞானம் பிறக்க பாவனத்வம் உண்டாகும்-அரவிந்த சப்தம் பிராப்தம் போக்யம் காட்டவே )பகவானுக்கும் அவனடியார்களுக்கும் சிறப்பாக எம்பெருமானார்க்கும் அடிமையாக இருப்பதனால் பரிஸுத்தர்களான கூரத்தாழ்வான் முதலியோர்க்கு விஸேஷணமாகும்.

அநுசிந்தநமானது-கூரத்தாழ்வான் முதலிய ராமாநுஜ ஸிஷ்யர்களைத் தமக்கு ஸேஷிகளாக – தலைவர்களாக த்யாநித்தலாகும். பவேயம் – இது ப்ரார்த்தனை என்னும் பொருளில் வந்த லோட் ப்ரத்யயாந்தமாகையால் கூரத்தாழ்வான் முதலிய பூர்வம் புருஷர்களுடைய திருவடிகளை அடியேன் சிந்திப்பவனாக ஆகவேண்டுமென்று, யதீந்த்ரரான தேவரீரை ப்ரார்த்திக்கிறேன் என்ற கருத்து இதற்குத் தேறும்.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading