ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–4- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள்/ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

—————–

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளுக்கு இப்படி அவிநா பூதராய்-
அவரை அல்லது அறியாத ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வாருடைய திருவடிகளில் சேஷத்வத்தையும் பிரார்த்தித்து அருளி –
அவர்கள் அளவில் ஊற்றத்தாலே-அவர்கள் உகந்த விஷயமான
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் கரண த்ரயமும் ப்ரவணமாம் படி பண்ணி அருள வேணும்
என்று அவரைப் பிரார்த்தித்து அருளுகிறார்

கீழ் ஸ்லோகத்தில் உபகார விஷயத்தில் உபகார ஸ்ம்ருதி தமக்கு யாவதாத்மா பாவியாக வேணும் என்று பிரார்த்தித்து
ததுபக்ருதமான (அவர்களால் உபகரிக்கப்பட்ட )ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே கைங்கர்யம் தம்முடைய கரண த்ரயத்துக்கும்
அநவரத அந்வயம் உண்டாக வேணும் என்று அவர் தம்மையே பிரார்த்திக்கிறார்
அன்றிக்கே –
பாத அநு சிந்தன பரஸ் சததம் பவேயம் -என்று தாம் பிரார்த்தித்த புருஷார்த்தம் தமக்கு அப்போதாக சித்தியாமையாலே
அது தனக்கும் அடியான தத் விஷய ப்ரேமமும் போனதாகக் கொண்டு அது தன்னை பிரார்த்திக்கிறார் ஆகவுமாம்

(அவர்களைப் பற்றி நம்மிடம் வராமல் எம்மைப்பற்றி அவர்களைப் பற்றப் பார்க்கிறீரோ
ஆடி ஆடி -நரஸிம்ஹா –பாகவத ஸமோஹம் கிட்டாமல் வருந்தி அவனையே கால்கட்டி ஆழ்வார் அழுதால் போல்-அதே நிலை இங்கு ஒரு படி கீழ் -)

நித்யம் யதீந்திர தவ திவ்ய வபு ஸ்ருதௌ மே
சக்தம் மநோ பவது வாக் குண கீரத்தநேசௌ
க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கர த்வயஸ்ய
வ்ருத்யந்த ரேஸ்து விமுகம் கரண த்ரயஞ்ச –4-

ஸ்ரீ யதி தலை நாதனே ஒழிவில் காலம் எல்லாம் உம் திரு மேனியின் நினைவில் என் மனம்
ஆசை கொண்டு இருக்க வேண்டும்
இந்த என் வாக்கு உம் குண கீர்த்தனத்தில் ஆசக்தமாய் இருக்க வேண்டும்
இரு கைகளின் செய்கையும் ஊழியம் செய்வதிலே இன்புற வேண்டும்
முக் கரணங்களும் மற்ற வ்யாபரங்களில் கண் எடுத்து பாராமல் இருக்க வேண்டும்..

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர்-ஸார்வ பவ்மரான -யதீந்த்ரரே,

மே – விஷயாந்தரங்களில் பழகிப் போந்த அடியேனுடைய,

மந: – மனமானது,

தவ – தேவரீருடைய,

திவ்யவபுஸ்ம்ருதௌ – மிகவும் அழகிய திருமேனியை நினைப்பதில்,

நித்யம் – எப்போதும்,

ஸக்தம் – பற்றுடையதாக,

பவது – இருந்திடுக.

அஸௌ மே வாக் – தேவரீரைத் துதியாமல் வெகு தூரத்தில் இருக்கிற அடியேனுடைய வாக்கானது,-அஸௌ-இந்த நாக்கு -இவளவு தாழ்ந்த ஒன்றுக்கு உம்மை ஸ்துதிக்க வாய்த்த பாக்யம் என்னே

தவ – தேவரீருடைய,

குணகீர்த்தநே – நீர்மை எளிமை கருணை அழகு மென்மை முதலிய கல்யாண குணங்களை ஆசையோடு துதிப்பதில்,

ஸக்தா பவது – பற்றுடையதாக இருந்திடுக.

மே – அடியேனுடைய,

கர த்வயஸ்ய – இரண்டு கைகளுக்கும்,

தவ – தேவரீருக்கு,

தாஸ்ய கரணம் து – அடிமை செய்வதொன்றே,

க்ருத்யம் – கடமையாக,

அஸ்து – இருந்திடுக.

மே – அடியேனுடைய,

கரண  த்ரயம் – (தேவரீரையே நினைப்பதிலும் துதிப்பதிலும் அடிமைசெய்வதிலும் பற்றுடையதாக இருக்கவேணுமென்று ப்ரார்த்திக்கப்பட்ட) மனம் வாக்கு காயம் என்கிற மூன்று கருவிகளும்,

வ்ருத்தி அந்தரே – வேறொருவரை நினைப்பதும் துதிப்பதும் அடிமை செய்வதுமாகிய வேறு காரியங்களில்,

விமுகம் ச அஸ்து – பராமுகங்களாகவும் இருந்திடுக.

——-

நித்யம் யதீந்திர தவ திவ்ய வபுஸ்ருதௌ மே-சக்தம் மநோ பவது மே மநோ –
தவ திவ்ய வபுஸ்ருதௌ-நித்யம் -சக்தம்-பவது
அநாதி காலம் இதர விஷயங்களில் பழகிப் போந்த என்னுடைய மனஸ்ஸானது தேவருடைய திவ்ய மங்கள விக்ரஹத்திலே
சர்வ காலமும் மண்டி விஷயாந்தர ஸ்மரணத்துக்கு ஆளாகாத படி நன்றாகச் செய்வதாகவும் –

உந்தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலேன் -என்கிறபடி
மனஸ்ஸுக்கு ஸூபாஸ்ரயமான அவலம்பனம் தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரகமேயாக வேணும் என்கை –(எதிராசர் வடிவு அழகு –இல்லை எனக்கு எதிர் )

கையிற் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும், உன்றன்
மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங் கொண்டலே!–104-

(பற்பமெனத் திகழ் பைங்கழலும் தண்பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்
முப்புரிநூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
கற்பகமே விழிகருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற்சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகென் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே!)

வாக் குண கீரத்த நே சௌ–பவது
இதுக்கு முன் பஹுர் (துர்)விஷயங்களை ஜல்பித்துப் போந்த வாக்கு தேவருடைய கல்யாண குணங்களையே வர்ணித்துக் கொண்டு
பேசுகையில் சகிதமாக வேணும் என்கை –

க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கரத் வயச்ய
அந்ய வ்ஷயங்களுக்கு நிஹீன வ்ருத்தி செய்து போந்த கைகள் இரண்டுக்கும் க்ருத்யம் தேவருடைய நித்ய கைங்கர்யம் ஆவதாக –

வ்ருத்யந்த ரேஸ்து விமுகம் கரணத்ர யஞ்ச –
தேவரீர் விஷயத்தில் கரண த்ரயமும் அபிமுகமானாலும் விஷயாந்தரங்களில் வைமுக்யம் இல்லாத போது
இது நிலை நில்லாது என்று பார்த்து
புறப் பூதமான வை லக்ஷண்யத்தை யுடைய ஹேய விஷயங்களை நினைக்கை- தொழுகை -சொல்லுகை யாகிற வியாபாரத்தில்
நின்றும் கரண த்ரயமும் முகம் மாறுவதாக
இத்தால் நையும் மனம் உன் குணங்களை யுன்னி (102)-இத்யாதிப்படியே
கரண த்ரயத்துக்கும் ஸ்ரீ எம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யத்தை இதர நிவ்ருத்தி பூர்வகமாக
பிரார்த்தித்து அருளினார் ஆய்த்து –

நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந் தெம்
ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அரு வினையேன்
கையும் தொழும் கண் கருதிடுங் காணக் கடல் புடை சூழ்
வையம் இதனில், உன் வண்மை யென் பாலென் வளர்ந்ததுவே?–102-

(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய -அடுத்து தானே மாம் ஏகம் வ்ரஜ –
பாதமடைவதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே-8-2-11-ஆழ்வார் பிரதம விஷயத்தில் அருளிச் செய்ததையே இங்கு சரம விஷயத்தில் அருளிச் செய்கிறார்)

தாத்பர்யம்
எம் பெருமானாரே
அநாதி காலம் அபிராப்த விஷயங்களிலே பழகிப் போந்த அடியேன் தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை ஸூபாஸ்ரயமாக த்யானம் செய்வதாகவும்
அப்ராப்த விஷயங்களையே புகழ்ந்து போன எனது வாக்கானது -தேவரீருடைய கல்யாண குணங்களையே புகழ்கையில் நிரதமாக -நித்தியமாக ஆகும்படியாகவும்
அப்ராப்த விஷயங்களை நிஹீன கைகளுக்கு விஷயமாக ஆக்கிக் கொண்ட அடியேன் கைகளுக்கு தேவரீருடைய நித்ய கைங்கர்யமே யாத்திரையாக ஆகும்படியாகவும்
இப்படி மனோ வாக் காயம் நினைக்கை முதலான தவிர்ந்து தேவரீர் திருவடிகளில் ப்ரவணமாகும் படி அருள வேண்டும் -அருள வேண்டும்

ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்
பாணித்³வந்த்³வ ஸமர்சயாச்யுத கதா:² ஶ்ரோத்ரத்³வய த்வம் ஶ்ருʼணு ।
க்ருʼஷ்ணம் லோகய லோசநத்³வய ஹரேர்க³ச்சா²ங்க்⁴ரியுக்³மாலயம்
ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துளஸீம் மூர்த⁴ந் நமாதோ⁴க்ஷஜம் ॥ 16॥

————-

நித்யம் யதீந்திர தவதிவ்ய -வபுஸ்ருதௌ-
நித்யம்-மேல் தாம் அபேஷிக்கிற ஸ்ம்ருதி தமக்கு அத்யந்தம் போக்யமாய் இருக்கையாலே அத்தை பிரார்த்திப்பதற்கு முன்னே அதனுடைய அவிச்சேதத்தை பிரார்த்திக்கிறார் -நித்யம் என்று –
யதீந்திர-ஸ்வ அபேஷிதம் செய்கைக்குத் தக்க சக்தி விசேஷத்தை யொப்பி சம்போதிக்கிறார்-யதீந்திர என்று –

அன்றிக்கே
இதர விஷய வைராக்யத்தால் உண்டான பெரு மதிப்புத் தோற்ற இருக்கும் இருப்பு கண்டு
யதீந்திர -என்று சம்போதிக்கிறார் ஆகவுமாம் –

தவ –
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து (5-2-8)-என்றும் –
சாஷான் நாராயண தேவகாருண்யாத் ஸாஸ்த்ர பாணி –(ஜெயாஸ்தா சம்ஹிதை)-என்றும் –
ஆசார்யஸ் ச ஹரிஸ் சாஷாத் -என்றும் சொல்லுகிறபடியே பகவத் அவதார விசேஷமான தேவரீருடைய -என்னுதல்-

காருண்யாத் குரு ஷூத்தமோ யதிபதி -என்கிறபடியே க்ருபா மாத்திர பிரசன்னாச்சார்யரான தேவரீருடைய -என்னுதல்

எந்தை எதிராசர் இவ் வுலகில் எம் தமக்காக வந்துதித்த (29)-என்கிறபடியே
அடியோங்களை உத்தரிப்பிக்க அவதரித்த தேவரீருடைய -என்னுதல்
இவை எல்லா வற்றாலும் பிரார்த்திக்கிறது அத்தலைக்கு அவஸ்ய கர்த்தவ்யம் என்கிறது

(ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 –)

(எந்தை எதிராசர் இவ் வுலகில் எம் தமக்காக
வந்துதித்த நாள் என்னும் வாசியினால் -இந்தத்
திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை நெஞ்சே
ஒருவாமல் எப்பொழுதும் ஓர் –உபதேச ரத்னமாலை-29-)

திவ்ய
திவி பவம் திவ்யம் -என்கிற வ்யுத்பதியாலே அப்ராக்ருதம் -என்னுதல் –(ஸ்வரூபம்)
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் –104- என்கிறபடியே(ரூபம்)மிக்க தேஜஸ்சை உடைத்தான என்னுதல் –
ஆதியஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த –என்றது ததியர்க்கும் ஒக்கும் இறே-(நமே ஸ்நாநம் –பரதாழ்வான் இல்லாமல் குளிக்க மாட்டேன் -பஞ்ச ஜன்ய அம்சம் )
ஆவிர்பாவைஸ் ஸூர நர சமோ தேவ தேவஸ் ததீயா -என்றும் –(வாமனன் -தேவர் அதீதி புத்ரன் ராமன் கிருஷ்ணன் நர)
தருணவ் ரூப சம்பன்னௌ-(தருணௌ ரூபசம்பன்னௌ ஸூகுமாரௌ மஹாபலௌ புண்டரீக விசாலாஷௌ சீரக்ருஷ்ணாஜிநாம் பரௌ–ஆரண்ய -19-14–என்றாள் சூர்ப்பணகை-திருமேனி வர்ணனை – இறுதியில் த்ருஷ்ட்டி போல் மான் தோல் மரவுறி)என்றும் சொல்லக் கடவது இறே

(கையிற் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும், உன்றன்
மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங் கொண்டலே!–104-)

(சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?–3-5-5-)

தவ திவ்ய
ப்ராப்தமானதுவே போக்யமாய் இருக்கும் என்கிறது

வபு ஸ்ம்ருதௌ
திருமேனி ஸ்மரணத்திலே த்யேயம் ஸூபாஸ்ரயம் இறே

வபு 
திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கும் (உம்மைத்தொகை இத்தை விட)
திவ்ய மங்கள விக்ரஹம் போக்யமாய் இருக்கிறது காணும் இவர்க்கு(ரிஷிகள் ஸ்வரூபத்தில் இழிய ஆழ்வார்கள் திவ்விய மங்கள ரூபத்தில் இழிவார்கள் அன்றோ )

ஸ்ம்ருதௌ
விஷயத்தோபாதி ஸ்ம்ருதி தானும் போக்யமாய் இருக்கிற படி

தவ -என்று
ஸ்ரீ பகவத் அவதாரங்களையும் -ஸ்ரீ ஆழ்வார்களையும் வ்யாவர்த்திக்கிறது
திவ்ய என்று
இவர் தம்முடைய விக்ரஹாந்தரங்களையும் வ்யாவர்த்திக்கிறது –

இத்தால் ஸ்ரீ நம்மாழ்வார் –
உயர்வற உயர் நலம் உடையவன் -என்று தொடங்கி-
1-உயர் நலம் உடையவன்-ஸ்ரீ ஈஸ்வரனுடைய ஆநந்தாதி குணங்களையும்
2-உயர்வற-திவ்யாத்மா ஸ்வரூபத்தையும் –
3-அருளினன் -நிர பேஷா உபாயத்வத்தையும்-4-அயர்வறும் அமரர்கள் அதிபதி பரத்வத்தையும் அனுசந்தித்து தாம்
துயர் அறு சுடர் அடி -என்று திருமேனியிலும் சௌந்தர்யாதிகளிலும்-ஈடுபட்டு
தமக்கு அந்தரங்கமான திரு உள்ளத்துக்கு
தொழுது எழு என் மனனே -என்று உபதேசித்தாப் போலே(சக்தம் மநோ பவது)

இவரும் -தவ -என்று
ஸ்ரீ எம்பெருமானாருடைய திவ்யாத்ம ஸ்வரூபத்தையும்
ஆத்ம குணங்களான க்ருபா சௌலப்யாதிகளையும் அனுசந்தித்து
திவ்ய வபு -என்று
அப்ராக்ருத திவ்ய சம்ஸ்தானமான திரு மேனியிலே ஈடுபட்டு ஸ்வ சம்பந்தியான மனஸ்ஸூம் திருமேனி ஸ்மரணத்திலே சக்தமாக வேணும் என்கிறார் என்கிறது –

வபு
உப்யதே பித்ரேதி வபு -என்கிற வ்யுத்பத்தியாலே –
சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ –(ஆரண்ய பர்வம் )என்றும் –
தேவ தேவோ ஹரி பிதா -(ஸ்ரீ விஷ்ணு புராணம்-த்வம் மாதா சர்வ லோககானாம் தேவ தேவோ ஹரி:பிதா  த்வயைதத் விஷ்ணுநா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் )என்றும்
பூதாநாம் யோ அவ்யய பிதா (ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் )–என்றும் சொல்லுகிறபடியே –
சகல ஜகத் பிதாவான ஸ்ரீ எம்பெருமானாலே கேவலம் ஸ்வ இச்சையாலே சர்வ சேதன விஷயமாக
ஹித பிரவர்த்தன உபயோகி தயா க்லுப்தமாகையாலே-ஜன்ம ஜரா மரணங்களாலே விவர்ஜிதமாய் –
நித்தியமாய் -பகவத் அனன்யார்ஹ சேஷமாய் -ஜ்ஞானானந்த ஸ்வரூபமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு வர்த்தகமான திருமேனியுடைய ஸ்மரணத்தாலே என்னவுமாம் –
திருமேனி அப்ராக்ருதம் ஆகையாலே ஜ்ஞான வர்த்தகமாய் இறே இருப்பது

(ஆத்ம ஸ்வரூபத்துக்கு வர்த்தகமான திருமேனியுடைய ஸ்மரணத்தாலே -மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனேகண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர்களெல்லாம்அண்ணல் இராமா னுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற் காயினரே.–41-நமக்கு சரீரம் ஆத்ம ஸ்வரூபத்துக்கு திரோதானம்- ஸ்வாமிக்கு திவ்ய மங்கள விக்ரஹம் -ஸூத்த ஸத்வமய அப்ராக்ருதம் )

மே
1-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -(2-6)என்கிறபடியே ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறித் திரிகிற என்னுடைய -என்னுதல் –
2-திருமேனி ஸ்மரணத்துக்கு இட்டுப் பிறந்த அடியேனுடைய என்னுதல் –
3-திருமேனி ஸ்மரணத்த்தில் போக்யதை அறியும் அடியேனுடைய என்னுதல் –
4-அசௌ-என்றத்தை லிங்க வ்யக்தமாக்கி -அதோ மன -என்று மனஸ்ஸூக்கு விசேஷணம் ஆக்கி –
இதர விஷயங்களில் சபலமாய் இதன் வாசி அறியும் மனஸ் -என்னுதல் –
5-ஜ்ஞான ப்ரசரண த்வாரமான மனஸ் -என்னுதல்

(நித்யம் யதீந்திர தவ திவ்ய வபு ஸ்ருதௌ மே சக்தம் மநோ பவது –அசௌ-இந்த மனம் இல்லை -எனது மனம் இருக்கிறது -நகு பும்ஸம் -அசௌ-கொள்ள முடியாது லிங்கம் பொருந்தாது -அத மனஸ் -மாற்றிக்கொள்ளலாம்
வாக் குண கீரத்தநேசௌ-இந்த வாக்கு -ஸ்த்ரீ லிங்கம் -எனது வாக்கு இங்கு இல்லை -கீழ் இருந்து கொண்டு கூட்டுப்பொருள்)

(மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-)

மே மன
மனஸ்ஸூ தான் ஜ்ஞான ப்ரசரண த்வாரமே யாகிலும்
அது ப்ராப்த விஷயத்தில் ஆகாமல் அப்ராப்ருத விஷயங்களிலேயாய்த் தடுமாறுகைக்கு அடி
அடியேனுடைய சம்பந்தம் என்கிறார் –

மே மன
அடியேனுக்கு பவ்யமான மனஸ் -என்கிறார் -இத்தால் ஸ்வ சம்பந்திகளுக்கும் இவை உண்டாக வேணும் என்கிறது –(ஸ்வாமி திரு உள்ளம் போல் அணுக்கராக வேணுமே நாமும்)

சக்தம் மநோ பவது
அப்ராப்த விஷயத்தில் அநவரத சஞ்சரணத்தால் உண்டான உறாவுதல் தீரும் படி தேவரீர் திரு மேனியை நினைக்கையே
தனக்கு ஸ்வரூபமாம் படி யாக வேணும் என்கிறார் –(தொழுது எழு என் மனனே என்கிறார்)

ஜ்ஞான இந்த்ரியங்களிலே பிரதானமான மனஸ்ஸூக்கு விஷயம் சொன்ன போதே உப லஷண தயா
மற்ற சஷூராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்துக்கும் (ஐந்து செயல்கள் மேல் சொல்லி இங்கு -ஆதி -கண் மெய் காது மூக்கு நாக்கு )தத் தர்சன தத் சௌகுமார்ய-தத் குண ஸ்ரவண –
தத் திவ்ய கந்த -தத் தீர்த்த பிரசாத -மாதுர்யாதிகள் விஷயங்களாக வேணும்
என்னுமதுவும் சொல்லப் பட்டது –

மனஸ்ஸூக்கு சேஷம் இறே மற்ற இந்த்ரியங்கள் –குரு பாதாம் புஜம் த்யாயேத் -என்னக் கடவது இறே

அசௌ வாக்
நிதியைப் பொழியும் முகில் என்று –மன்னா மனிசரைப் பாடி (3-9-4)-இளைத்து இருக்கிற என் நா என்னுதல்
தேவரீருடைய குண கீர்த்தன லுப்தையான என் நா வென்னுதல்

(நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –)

(என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-)

குண கீர்த்தன
தேவரீருடைய ஆத்ம குணங்களான வாத்சல்யாதிகளுக்கும்
திரு மேனி குணங்களான சௌந்தர்யாதிகளுக்கும் வாசகங்களான
திரு நாமங்களைச் சொல்லுகையாலே –
நித்யம் சக்தா பவது -சொலப்புகில் வாயமுதம் பரக்கும் -என்கிறபடியே
திரு நாம அனுசந்தானம் -உபக்ரமே தொடங்கி போக்யமாய் இருக்கையாலே
இதில் என் நாவானது
அநாதி காலமே பிடித்து விஷயாந்தரங்களை ஸ்துதித்து இளைத்துக் கிடந்த தன்னிளைப்பு எல்லாம் தீரும் படி
என்றும் ஒக்க சக்தமாக வேணும் என்கிறார்

(சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே )

குரோர் நாம சதா ஜபேத் -என்னக் கடவது இறே –
இவ்விடத்தில் குண சப்தத்தாலே திரு நாமத்தை லஷிக்கிறது
இப் பிரமாண அநு குணமாக குண அவிநாபத்தைப் பற்றவுமாம் –(குணத்தைப் பிரிந்து ப்ரஹ்மம் இருக்காது என்பதற்கு இதுவே பிரமாணம் )

யாநி நாமாநி கௌணானி

ஸ்ரீ முதலியாண்டான் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பியை சேவிக்க எழுந்து அருளின போது-
அவர் த்யானத்தில் எழுந்து அருளக் கண்டு பின்பு
தண்டன் சமர்ப்பித்து த்யானம் எது மந்த்ரம் எது -என்று கேட்க அவரும் –
த்யானம் ஸ்ரீ ஆளவந்தார் திரு மேனி
மந்த்ரம் ஸ்ரீ யமுனைத் துறைவர் என்கிற திரு நாமம் -என்று அருளிச் செய்தார் ஆகையாலே
த்யாநாந்ந்தர (த்யான அநந்தர பிராப்தி )பிராப்தி திரு நாமத்துக்கு இறே

பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரச்ய சந்தி தே-(அயோத்யா -2-26-அயோத்யா மக்கள் சக்ரவர்த்தி இடம் -தயரதன் பெற்ற மரகத மணித்தடம் இடம் உள்ள கல்யாண குணங்கள் )- என்கிறவிடத்தில் குண சப்தத்தை
திரு நாமத்துக்கு வாசகமாக அருளிச் செய்தார் இறே ஸ்ரீ பெரிய ஜீயர்

இப்படி மநோ வாக் காயங்களுக்கு விஷயத்தைச் சொல்லி –
மேல் காயிக வியாபாரம் தேவரீர் விஷயத்தில் பண்ணும் கைங்கர்யம் ஆக வேணும் என்கிறார் க்ருத்யம் -இத்யாதியால்-(க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கர த்வயஸ்ய)
அன்றிக்கே
காயம் தனக்கு விஷயத்தைச் சொல்லுகிறார் ஆகவுமாம் –விசித்ரா தேஹ சம்பந்தி ஈஸ்வராய விஷ்ணு தத்வம் -விறே

கர த்வயஸ்ய-
கைங்கர்யம் செய்யும் இடத்தில் மற்றொரு துணை தேட வேண்டாத படி அந்யோந்ய சஹாயமான-கரத் வயத்தினுடைய –

க்ருத் யஞ்ச –
வியாபாரமும்

தவ தாஸ்ய கரணம் து பவேத் –
தேவரீர் விஷயமாய் -விலஷணமாய் இருக்கிற கைங்கர்யம் ஆக வேணும் என்கிறார்

து -சப்தம் –(அதுவோ என்னில் )
வைஷ்ணவ வாசி -கைங்கர்யத்துக்கு வைஷண்யமாவது-இதர விஷய ஸூஸ்ருஷை போலே ஸ்வரூப விரோதியாய்
துக்கோ தர்க்கமாய் இருக்காய் யன்றிக்கே ஸ்வரூப அநுரூபமாய் ஸூ கோதர்க்கமாய் இருக்கை-
(2)அன்றிக்கே –
பகவத் கைங்கர்யம் போலே சாஸ்த்ரைகசமிதி கம்யமாய் இருக்கை யன்றிக்கே தேவரீர் ஸ்ரீ ஸூக்திகளால்
அறியத் தக்கதாய் இருக்கை யாகவுமாம்
(3)அன்றிக்கே –
கரத்வயஸ்ய து கர்த்தவ் யஞ்ச -என்று அந்வயித்து-முன்பு எல்லாம் இதர விஷயங்களை ஸூஸ்ருஷித்து அதுவே
யாத்ரையாய்ப் போந்த இந்த கரத்வயத்தினுடைய வ்ருத்தி என்னவுமாம் –
(4)அங்கன் அன்றிக்கே –
து சப்தம் -அப்யர்த்தமாய்(அதுவும் என்கிற பொருளில் )காயிக வியாபாரமும் தாஸ்ய கரண ரூபமாக வேணும் என்கிறார் ஆகவுமாம்
உபாய வரணாத்மகத்வம் உண்டு இறே அஞ்சலிக்கு

இத்தால் கரண த்ரயத்துக்கும் உபாய உபேயங்களில் அந்வயம் உண்டு என்கிறது
இத்தால் கர்மாத் யுபாயங்களுக்கு பகவன் நிஷ்ட உபாயத்வ அபி வ்யஞ்சகத்வம் ஒழிய சாஷாத் உபாயத்வம் இல்லை என்கிறது
நிதித்யாசிதவ்ய என்கிறதும் இவனுடைய அஜ்ஞ்ஞதையைப் பற்றி இறே

(5)யத்வா (க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கர த்வயஸ்ய)சகாரா துகாரங்கள் இரண்டும்(உம்மைத் தொகையும் பிரசித்த அர்த்தமும் )-ஏவகாரார்த்தமாய் -கரண த்வயத்தினுடைய வியாபாரம் தானே
ப்ராப்த விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமே யாக வேணும் -என்கிறார் ஆகவுமாம்

(6)அங்கனும் அன்றிக்கே –
து -சப்தம் -ஏவகாரார்த்தமாய் விஷயாந்தர ஸூஸ்ருஷையை வ்யவச்சேதிக்கிறது ஆகவுமாம் –

(7)அன்றிக்கே
கர த்வயச்ய ச தவ தாஸ்ய கரணந்து க்ருத்யம் பவேத் -என்று யோஜிக்கவுமாம் –
குரோர் வார்த்தாச் ச கதயேத்-என்னக் கடவது இறே –
இவ் விடத்திலே ச காரத்தாலே கைங்கர்யத்தைச் சொல்லுகிறது

இப்படி கரண த்ரயமும் அநு கூல விஷயங்களில் மண்டி இருந்தாலும் வ்யாபாராந்தரங்களில் ஆனால் கொத்தையாம் இறே –
ஆகையால் கரண த்ரயமும் வ்யாபாராந்தரத்தில் விமுகமாக வேணும் என்கிறார் –

வ்ருத்யந்தரே அஸ்து விமுகம் கரண த்ரயஞ்ச -என்று
இது ஏவ கார பர்யாயமான து சப்தத்தாலே நிரசிக்கப் பட்டது அன்றோ என்னில் –
அத்தாலே தாஸ்யே தரங்கள் யாய்த்து வ்யவச்சேதிக்கப் படுகிறது
இங்கு பகவத் கைங்கர்யம் தாஸ்யம் ஆகையாலே அத்தை வ்யவச்சேதிக்கிறது –
ஆசார்ய நிஷ்டனுக்கு த்வய புருஷார்த்தமான பகவத் கைங்கர்யம் விரோதி இறே –

கரண த்ரயஞ்ச வ்ருத்யந்த்ரே விமுக மஸ்து –
து சப்தம் வை லஷண வாசியான போது இங்கு விஷயாந்தரங்களை வ்யாவர்த்திக்கிறது

அன்றிக்கே –
சகாரம் -இவ -வர்த்தமாய் (அதே போல் )-கரண த்ரயமானது வகுத்த விஷயத்தில் சக்தமானால் போலே- தத் இதர விஷயங்களில்
விமுகமாக வேணும் என்கிறார் என்னவுமாம் –
குரோர் அந்யன் ந பாவயேத் -என்னக் கடவது இறே –

———

கீழ் ஸ்லோகத்தில் யதிராஜ ஸிஷ்யர்களான கூரத்தாழ்வான் முதலியவர்களுக்குத் தாம் அடிமையாயிருத்தலை ப்ரார்த்தித்தவர், அதனால் திடப்படுத்தப்படுகிற யதிராஜருக்குத் தாம் அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார்.

‘க்ருத்யம் ச’ என்றவிடத்திலுள்ள உம்மைப் பொருள் படுகின்ற சகரம், மற்றும் நல்ல விஷயங்களில் ஈடுபடவேண்டிய கண் காது முதலியவற்றையும் குறிப்பிட்டு, அவையும் யதிராஜர் திறத்திலே பற்றுடையதாக இருக்க வேண்டுமென்ற ப்ரார்த்தனையைக் காட்டுகிறது.

இதில் முதல் மூன்றடிகளால் தம்முடைய மன மொழி மெய்கள் யதிராஜரிடமே ஊன்றியிருக்க வேண்டுமென்பதையும், நான்காம் அடியால் மற்றவரிடம் பற்றற்றிருக்க வேண்டுமென்பதையும் யதிராஜர் தம்மிடமே ப்ரார்த்தித்தாராயிற்று.

அது இது உது –
இது -சந்நி -ஸமீப வர்த்தி
நடுவில் ஏகது
தள்ளி -அது
தத் -அந்த பரோக்ஷம்
அசவ் மனம் தள்ளி விஷயாந்தரங்களில் சஞ்சரிக்கும்
இவற்றை மாற்றி -சத்தா பவதி -உம்மிடமே ஈடுபட வேண்டும்
அஸேவ்ய சேவை பண்ணிப் போந்த கரங்கள் தாஸ்யத்திலே ஈடுபட்டும்

அபிராப்த விஷயங்களில் -சஞ்சலம் ஹி மனஸா -மாற்றி சேஷி ப்ராப்தமான போக்யமான உம்மிடமே ஈடு படட்டும்

பவது அஸ்து என்ற க்ரியாபதங்களிரண்டும் ப்ரார்த்தனையைக் காட்டும் லோட் ப்ரத்யயாந்தங்கள்.

க்ருத்யம் – அவஸ்யமாகச் செய்தே தீரவேண்டிய கடமை என்றபடி.

முதலடியில் உள்ள தவ, மே என்பனவற்றை மற்ற மூன்றடிகளோடும் கூட்டுக.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading