ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –
————–
நீர் சரணாகதர் அன்றோ -உமக்கு ஆநு கூல்யாதிகள் இல்லையோ -அவை ஜ்ஞான கார்யங்கள் அன்றோ என்ன
அவை விபரீதமாய்க் காணும் இருப்பது என்கிறார் -துக்கா வஹோ அஹம்-இத்யாதியால் –
(தவத்துளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்,
உவர்த்த நீர் போல உந்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்,
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசன் ஆனேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே (31)
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கந் தன்னுள்
கார்த் திரள் அனய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்க னேனே--32–மித்யா சராமி யதிராஜ ததோ அஸ்மி மூர்க்க –8-)
துக்கா வஹோ அஹமநிசம் தவ துஷ்ட சேஷ்ட
சப்தாதி போக நிரதஸ் சரணாகதாக்ய
த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே
மித்யா சராமி யதிராஜ ததோ அஸ்மி மூர்க்க –8-
ஸ்ரீ யதி ராஜனே நான் அல்லும் பகலும் துஷ்ட வ்யாபாரங்களை செய்பவன்
உமக்கு துக்கத்தை தருபவன்
சரணாகதன் என்று பெயர் வைத்து கொண்டு விஷயங்களின் போகத்தில் ருசியோடு அனுபவித்துக் கொண்டு
சாதுக்களாய்-பெரியோர்கள் நடுவில் உமது திருவடிகளில் பக்தி உடையவன் போல்
பொய்யாக- வேஷம்- நடிக்கிறேன் பொல்லாதவன் ஆகிறேன்..
பதவுரை:-
ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே,
ஸரணாகத ஆக்ய: – ஸரணாகதன் (ப்ரபந்நன்) என்னும் பெயரை மாத்திரம் சுமப்பவனாய்,
ஸப்தாதி போக நிரத: – ஸப்தாதி நீச விஷயங்களை அநுபவிப்பதில் மிக வூன்றி யவனாய்,
துஷ்ட சேஷ்ட: – கூடாதென்று ஸாஸ்த்ரம் விலக்கிய கெட்ட காரியங்களைச் செய்யுமவனாய் (அதனால்) தவ – தேவரீருக்கு,-அநிசம் -இடைவிடாமல் –
து:க ஆவஹ: – (தேவரீருக்கே) -துக்கத்தை உண்டு பண்ணுமவனாய் இருக்கிற,
அஹம் – அடியேன்,
த்வத் பாத பக்த: இவ – தேவரீர் திருவடிகளில் பக்தி பூண்ட ப்ரபந்நன் போல்,
சிஷ்ட ஜந ஓக மத்யே – ‘புருஷார்த்தம் தேவரீர் கைங்கர்யமே, அதற்கு உபாயம் தேவரீருடைய இன்னருளே’ என்று தெளிந்திருக்கும் -அக்ருத்ரிம பக்தி கொண்ட விலக்ஷண -ஸிஷ்ட ஜநங்களாகிய கூரத்தாழ்வான் முதலியோர்களின் கோஷ்டிகளின் நடுவில்,
மித்யா சராமி – பொய்யனாகவே திரிகின்றேன்,
தத: – அக் காரணத்தினால்,
மூர்க்க அஸ்மி – (அடியேன்) மூடனாக அறிவற்றவனாக ஆகிறேன்,-கீழ் நர பஸூ–இங்கு மூர்க்கன் -மனிதன் என்று மறுக்க வில்லை -பக்தி உடையவன் போல் ஏமாற்றியவன் –
தத் வாரய – அப்படிப்பட்ட அறியாமையைப் போக்கி யருள வேணும்.
———
துக்கா வஹோ அஹமநிசம் தவ துஷ்ட சேஷ்ட–
தேவர் திருவடிகளில் சேஷத்வமே நிரூபகமாம்படியான ஸ்வரூபத்தை யுடைய நான் இவ் வாத்மாவுக்கு வகுத்த சேஷியான
தேவரீருக்கு இடைவிடாமல் ஹர்ஷாவாஹனாய்ப் போர வேண்டி இருக்க –
(பர கத அதிசய ஆதானமாக இல்லாமல் )அது செய்யாத அளவன்றிக்கே
தத் விருத்த்யமாக துக்காவஹோமானாய்க் கொண்டு போரா நின்றேன் –
இது என்னுடைய பிரதம பதார்த்த நிஷ்டை இருந்தபடி –
துஷ்ட சேஷ்ட
தயாதி குண பூர்ணரும் ஏறிட்டுப் பார்க்க அருவருக்கும் படி துர் விருத்தியே யாய்த்து செய்து போருவது-
சப்தாதி போக நிரதஸ்
தேவரீர் திருவடிகளில் கைங்கர்யத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து அதுக்கு விருத்தமான சப்தாதி விஷய அனுபவத்தில்
ஒரு சர்வ சக்தியாலும் விடுவிக்க ஒண்ணாத படி மிகவும் பிரவணனாய்ப் போருகிறவன்(ரதி ஆசை -நிரத -மிக்க ப்ராவண்யம் )
சரணா கதாக்ய-
சரணாகதன் என்கிற பேர் மாத்திரம் உள்ளது -அதிலும் நிஷ்டை இல்லை என்கை –
இத்தால் மத்யம பதார்த்த நிஷ்டா ஹானி சொல்கிறது
சப்தாதி போக நிரதஸ்-என்கையாலே
த்ருதீய பதார்த்த நிஷ்டை இல்லை என்னும் இடம் சொல்லிற்று –
இதர விஷய ப்ரவணனாய் துஷ்ட சேஷ்டானாகையாலே இவனைக் கைக் கொள்ளப் போகிறது இல்லை –
சரணாகதன் என்றும் பேர் இட்டு இருக்கையாலே கை விடப் போகிறது இல்லை
இப்படி தள்ளவும் கொள்ளவும் போகாது இருக்கிற இவனை நாம் என் செய்வது என்று புண் படும் படி இருக்கையாலே
நித்யம் துக்காவாஹனாயே இருக்கை என்கை –
த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே-மித்யா சராமி யதிராஜ —
நம் படி இதுவானால் -நமக்கும் இவ் விஷயத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு என்று நடுங்கிக் கடக்க வர்த்திக்க வேண்டி இருக்க
அது செய்யாதே தேவரீர் திருவடிகளில் பாரமார்த்திக ப்ரேம பரிபூர்ணரரைப் போலே க்ருத்ரிமமாக சரியா நின்றேன் –
ததோ அஸ்மி மூர்க்க —
நிஸ் ஸ்நேஹனாய் இருக்கச் செய்தே ஸ்நேஹ யுக்தரைப் போலே அனுகூல கைங்கர்யங்களை ஆசைப்படுவது –
அர்த்திப்பதாய்க் கொண்டு க்ருத்ரிமமாக வர்த்தியா நின்றேன் என்பது யாது ஒன்றாலே –
அத்தாலே மூர்க்கனாகா நின்றேன் –ஞான ஹீனன் என்னைப் போல் யாரும் இல்லை -என்கிறார்-
தாத்பர்யம்
யதிபதியே
தேவரிருக்கே அநந்யார்ஹ சேஷத்வ பூதனாய் இருந்து
ஹர்ஷ வாஹமாய் கைங்கரியம் செய்ய ப்ராப்தனாக இருந்து வைத்தும்
அது செய்யாத மாத்திரம் அன்றிக்கே மேலும் மேலும் தேவரீர் திரு உள்ளம் நித்தியமாக துக்கப்படும்படி விஷயாந்தரங்களே பரம புருஷார்த்தம் என்று எண்ணி வர்த்தித்து இருந்தாலும் தேவரீர் விலக்கித் தள்ள முடியாத படி சரணாகதன் பேர் மாத்திரம் கொண்டு
யதார்த்த பக்தி உடைய விலக்ஷணரான கோஷ்டியில் உள்ளவன் போல் ஏமாற்றி வர்த்திக்கிறேன்-திருத்திப் பணி கொண்டு அருள வேண்டும்-என்கிறார்
——-
துக்கா வஹோ அஹம் –
இது வாய்த்து அடியேனுடைய ஆனுகூல்ய சங்கல்ப்பம் –
சர்வ பிரகாரத்தாலும் ஆனுகூல்ய சங்கல்பம் செய்கைக்கு யோக்யமான விஷயத்தில்
ப்ராதி கூல்யம் செய்கை மாத்ரம் அன்றிக்கே
ப்ராதி கூல்ய கரணத்தால் உண்டான துக்கத்தை தேவரீர் அனுபவிக்கும் படி பண்ணினேன் -என்கிறார் –
துக்கா வஹோ அஹம் –
ஆனுகூல்யம் செய்கையை இட்டு நிரூபிக்கை தவிர்ந்து துக்காவஹன் என்றாய்த்து அடியேனுக்கு நிரூபகம் இருக்கும் படி
அஹம் –
இப்படியானது தான் மற்று ஆரேனும் ஒருவன் என்று ஆறி இருக்கலாமோ
ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாசாய -என்கிறபடியே(சுமத்ரா தேவி இளையபெருமாளுக்கு 24 திரு நஷரத்தில் வனவாசம் செல்ல அருளிச் செய்த வார்த்தை )
தேவரீர் திருவடிகளிலே சமஸ்த வித கைங்கர்யங்களையும் செய்கைக்கு
இட்டுப் பிறந்த அடியேன் காணும் துக்காவஹன் என்னலாம் படி யாவது –
அநிசம் –
இது தான் ஒரு காலத்தில் அன்றிக்கே ஸ்வரூபம் உள்ளதனையும் இதுவே யாத்ரை யாய்த்து என்கிறார்
இப்படி துக்கவஹனாய் இருந்தது யாருக்குத் தான் என்னில்
தவ
மற்றை யாரேனும் விஷயத்திலே யாகில் ஆறி இரேனோ –
காமாதி தோஷ ஹரம்-என்று கீழ்ச் சொன்ன படியே ஆஸ்ரயித்து துக்க நிவர்த்தகரான தேவரீர்
விஷயத்திலே கிடீர் அடியேன் துக்கத்தைச் செய்வது
தவ துக்கவஹா –
இது வாய்த்து அடியேன் செய்யும் பிரத்யுபகாரம் என்கிறார் –
அன்றிக்கே –
ரிபூணாமபி வத்சலா என்கிறபடியே
குற்றம் செய்தவர்கள் திறத்திலும் வத்சலரான தேவரீருக்கு என்னுமாம் –
துஷ்ட சேஷ்ட
இப்படி உபகாரகர் விஷயத்தில் துக்கம் செய்வது மாநசிகமாக வன்றிக்கே
காயத்தாலும் துர் வ்யாபாரங்களைச் செய்தாயிற்று துக்கத்தை உண்டாக்குவது என்கிறார் –
அவை யாவன -தேவதாந்திர பஜநாதிகள்–மானசிகமாகவுமாம்
துஷ்ட சேஷ்ட
மானசிகமாகவும் துக்கம் செய்ய நினைக்க ஒண்ணாத விஷயத்தில் அடியேன் காயிகமாக துர் வ்யாபாரங்களைச் செய்தாய்த்து துக்கத்தைச் செய்வது என்கிறார்
இது தனக்கு அடி என் என்ன
சப்தாதி போக நிரத-
அனுதபிக்கைக்கு மனஸ்ஸூ தான் இல்லை –
அது சப்தாதி விஷயங்களில் மிகவும் ஆசக்தமாகைக்கு த்வாரமாய்த்து என்கிறார் –
ரதி -மன கார்யம் இறே–நிரத--நல்ல விருப்பம் உடையவன்
நீர் சப்தாதி விஷய பிரவணராய் நிந்திதங்களைச் செய்தீர் ஆகில் நமக்கு துக்கா வஹம் ஆகும் படி எங்கனே என்ன –
சரணாக தாக்ய–
சரணாகதன் தன் குறை சரண்யனது அன்றோ –
வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -(2-40)என்றும் –
த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதயா மம -என்றவனோடு பழகினவன் அன்றோ தேவரீர்(கர்மாதீன துக்கம் இல்லை கிருபா கார்யம் )
(உண்டது உருக்காட்டாதே -ஸ்ரீ வைகுண்ட நாதனே சம்சாரிகள் அநர்த்தப்படுவது பார்த்து துக்கப்படுவானே-நிர்ப் பயம் நிர்ப் பரம் அஸ்தி –அஹம் மத் ரஷண பரோ பலம் ந மம ஸ்ரீ பதி ரேவ –அவன் இடம் விடுகிறோம்-ப்ராப்தாவும் – பிராபகனும் -பிராப்திக்கு உகப்பானும் அவனே )
சரணா கதாக்ய –
பிரசித்தி மாத்ரமே யாய்த்து உள்ளது
சரணா கதாக்ய –
தேவரீர் துக்கப் படுக்கைக்கு போரும் -அதில் வ்யுத்பத்தி இல்லை என்கிறார் –ந நாம்நி வ்யுத்பத்தி இறே
உமக்கு சிஷ்ட பரிக்ரஹம் உண்டே -அது ஆனுகூல்யாதிகளிலே ஏக தேசம் அன்றோ என்ன
அது அடியேனுடைய வஞ்சன சாமர்த்தியத்தால் உண்டான இத்தனை போக்கி சத்யம் அன்று என்கிறார் மேல் –
வஞ்சித்த படி தான் எங்கனே என்ன
தவ பாத பக்த இவ –
அடியேனை சிஷ்டர் பரிக்ரஹிக்கைக்கு அடியேன் அனுஷ்டித்த உபாயம் –தேவரீர் திருவடிகளிலே ப்ரீதி உள்ளவன் போலே வர்த்தித்தது –
தத் பின்னத்வே சதி தத் கத பூயோ தர்மம் இறே -சாத்ருச்யம்
தத் பேதம் –
பக்தி இல்லாமை –தத் கத பூயோ தர்மம் –பக்திமான்கள் செய்யும் செயல்கள் –
அவை யாவன ஸ்வர நேத்ராங்க விக்ரியாதிகள்
(மத் பக்த ஜன வாத்சல்யம் பூஜாயாஞ்ச அனுமோதனம் ஸ்வயம் அப்ரயச்ச நஞ்சைவ மதர்தே டம்பவர்ஜனம் –
மத் கதா ஸ்ரவணே பக்தி ஸ்வர நேத்ராங்க விக்ரியா-
மம அனுஸ்மரணம் நித்யம் யச்சமாம் நோப ஜீவதி ,பக்தி ரஷ்ட விதா ,
ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே -( கருட புராணம்- மத்ஸ்ய புராணம் ஸ்லோகம் )– என்கிற படியே
(என்னை பூஜிக்கும் அளவாவது செய்ய வேண்டும் )
ம்லேச்ச ஜாதியில் உள்ளவனும்
1-என்னுடைய -பக்தி ஜன பக்கல் வாத்சல்யமும் –
2-என்னுடைய ஆராதனத்தில் உகப்பும்
3-தானே ஆராதிக்கையும்
4-என் பக்கல் டம்பம் அற்று இருக்கையும் –
5-என் கதையைக் கேட்கும் இடத்தில் பக்தியும் –
6-பக்தி கார்யமான ஸ்வர நேத்ராங்களில் விகாரமும் –
7-என்னையே எப்பொழுதும் நினைக்கையும் –
8-என்னை பிரயோஜ நாந்தரம் கொள்ளாது ஒழிகையும் –)
சிஷ்ட ஜனக மத்யே –
இவ் வநுகார மாத்ரத்தாலே பிரமாண பரதந்த்ரரானவர்கள் அடியேனை மெய்யே தேவரீர் சம்பந்தியாக
பிரதிபத்தி பண்ணி ஸ்வ கோஷ்டியிலே புகுர விட்டார்கள் –
மித்யா சராமி –
அவ்வளவிலும் ஒரு விசேஷம் இன்றியே அக் கோஷ்டியின் நடுவே கோமுக வ்யாக்ரம் (பசுத்தோல் போத்திய புலி )போலே
அவர்கள் மேல் மேலும் விஸ்வசிக்கும் படி அன்ருதத்தையே (பொய் ஆச்சார்யத்தையே )அனுஷ்டியா நின்றேன் –
அதாவது பூர்வ அநு காரத்தை விடாது ஒழிகை –
சிஷ்ட ஜநௌக மத்யே மித்யா சராமி –
ஒருவர் இருவர் அன்றிக்கே மஹா சங்கமான சிஷ்ட ஜனங்கள் உடைய நடுவில் அடியேன்
அன்ருத்தத்தையே அனுஷ்டியா நின்றேன் என்கிறார் –
இத்தால் மஹா ஜனோ யேன கதஸ் ஸ பந்தா –வன பர்வம் -313-17-என்கிற மார்க்கத்தையும் தப்பினேன்(மஹா ஜனங்கள் மார்க்கத்தின் மேலையார் செய்வனகளையே செய்ய வேண்டும் )-என்கிறது –
அதாவது பாவ பந்தம் இல்லாமை –
யதி ராஜ
இக் கோஷ்டிக்கு நிர்வாஹகர் தேவரீர் என்று அறிந்து வைத்துச் செய்யும் வஞ்சனத்தை தவிருகிறிலேன்-
அன்றிக்கே –
தேவரீர் இக் கோஷ்டியின் நடுவே இந்த்ரிய ஜயத்தால் புகர் பெற்று சஞ்சரிக்குமா போலே யாய்த்து
அடியேன் வஞ்சனத்தால் புகர் பெற்று சஞ்சரிக்கும் படி என்கிறார் ஆகவுமாம்
அங்கனும் அன்றிக்கே –
தேவரீர் இக் கோஷ்டியின் நடுவே சத்யத்தை ஆஸ்ரயித்து புகர் பெறுமா போலே யாய்த்து
அடியேன் மித்யா சரணத்தாலே புகர் பெறும்படி என்கிறார் ஆகவுமாம் –
நம்மை இக் கோஷ்டிக்கு நிர்வாஹகராக அறிந்து வைத்து- பயமும் இன்றிக்கே -இப்படி வஞ்சனத்தை செய்வான் என் என்ன
ததோ அஸ்மி மூர்க்க –
ஆகை இறே அடியேன் மூர்க்கன் ஆகிறேன் -என்கிறார்
மூர்க்கோ அஸ்மி
இம் மௌர்க்யம்-மூர்க்கம்- அடியேனுக்கு ஸ்வரூபம் என்கிறார் –
ஹித அஹித விவேகம் இன்றிக்கே பிடித்தது கை விடாமல் இருக்குமவனே
மூர்க்கனாவது –மூர்க்க வைதேய பாலிஸா -என்று இறே அமர கோசம் –
————–
அடியேனுக்கு ஏற்பட்டுள்ள தகாத காரியங்களில் ஊற்றமானது தேவரீருக்கு துக்கத்தை யுண்டாக்குமாகையால் அவ் வூற்றத்தை நஸிப்பித்தருள வேணுமென்று வேண்டுகிறாரிதனால்.
யதிராஜர் – மனத்தை யடக்கிய எம்பார் முதலிய யதிகளையும் தம்முடைய மன வடக்கத்தாலே மகிழச் செய்யுமரசர் எம்பெருமானார் என்றபடி.-யதிகளுக்கு ரஞ்சனம் -ஆனந்தம் அளிப்பவர்
ஸரணாகதாக்ய: – ஸரணாகதன் என்ற பெயரை மட்டும் சுமக்கிறேனே யொழிய, ஸரணாகதிக்கு வேண்டிய வேறு உபாயமில்லாமை வேறு கதி யில்லாமை ஆகிய தகுதிகளில் ஏதுமுடையேனல்லேன் என்றபடி.
ஸரணாகதனுக்குத் தானாக ஏற்படக் கூடிய நன்மையே செய்ய வேண்டுமென்று நினைத்தல், தீமையை அடியோடு அகற்றல், எம்பெருமானார் நிஸ்சயம் நம்மைக் காப்பாற்றியே தீருவர் என்று நம்புதல், தம்மைக் காக்கும் பொறுப்பை எம்பெருமானாரிடம் ஒப்படைத்தல், வேறு உபாயமோ வேறு காப்பவரோ தமக்கு இல்லையே என்று வருந்துதல் ஆகிய ஸ்வபாவங்களில் ஏதுமுடையேனல்லேன் என்றபடியும் ஆம்.
து:காவஹ: – அடியேன் இங்ஙனம் ஸரணாகதனென்று பெயர் சுமந்து, ஸப்தாதி போக நிரதனாய் துஷ்ட சேஷ்டனாயிருப்பது – ‘ஐயோ நம்முடையவன் ஒருவன் இப்படி இருக்கிறானே’ என்று தேவரீருக்கு துக்கத்தை உண்டாக்குமென்றபடி.(அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு சூடாமல் திருவாய் மொழிப் பிள்ளை கூர குலோத்தம தாஸர் இவர்களையும் சரம பர்வதத்தில் அன்றோ வஞ்சித்தேன் -)
அல்லது, இவன் ஸரணாகதனென்று பெயர் படைத்திருப்பதினால் இவனைக் காக்க வேணுமோ, துஷ்ட சேஷ்டனாக இருப்பதனால் இவனைக் கைவிட வேணுமோ, என்ற ஸந்தேஹமாகிய தர்ம சங்கடமாகிய துக்கத்தை யுண்டாக்குமென்றும் சொல்லலாம்.
மூர்க்கனாகிறான் நன்மை தீமைகளின் பகுத்தறிவின்றியே தான் பிடித்தது விடாமலிருக்குமவன். இத்தகைய மூர்க்கத் தனத்தைப் போக்க வேணுமென்று இதனால் ப்ரார்த்தித்தாராயிற்று.-மோஹம் -நிறைந்த மூர்க்கன் -ஆர்ய வாரய -அத்யாஹாரம் கொண்டு போக்கிக் கொடுத்து அருள வேணும் என்கிறார் –
————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –
Leave a Reply