ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –
—————–
இப்படி தொடங்கின ஸ்தோத்ரம் நிர் விக்னமாகத் தலைக் கட்டுகைக்காக அவர் திருவடிகளை ஆஸ்ரயித்து
அத்தாலே நிறம் பெற்றவராய்க் கொண்டு ஸ்ரீ எம்பெருமானாருடைய பகவத் பாகவத ப்ரேம புஷ்கல்யத்தையும்-
ஆஸ்ரித ஜனங்களுக்கு சரம ப்ராப்யராய் இருக்கும் படியையும் சொல்லி சாதரமாக ஏத்துகிறார் –
உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாசே பஷிணாம் கதிர்
ததைவ ஜ்ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தமம் -( சேர்ப்பாரை பஷிகளாக்கி ஞான கர்மங்களை சிறகு ஆக்கி -ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாக உடைய குருவை அடைந்து )என்கிறபடியே ஜ்ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் பகவத் பிராப்தி சாதனமாக சாஸ்திர விஹிதம் ஆகையாலே(கற்க கசடறக் கற்க -கற்ற பின் நிற்க அதற்குத் தக-அனுஷ்டானம் )
கீழ் ஸ்லோஹத்திலே இவருடைய ஜ்ஞான பூர்த்தியைச் சொல்லி
இஸ் ஸ்லோகத்திலே தத் அனுகுணமான
அனுஷ்டான பூர்த்தியை அருளிச் செய்கிறார் –ஸ்ரீ ரங்கேத்யாதியாலே
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்ஸம்
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்
ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே –2-
ஸ்ரீ ரெங்கராஜனின் திருவடி தாமரைகளில் விஹரிக்கும் ராஜ ஹம்சமும்
ஸ்ரீ பராங்குசர் திருவடி தாமரைகளில் மது பானம் செய்து ரீங்காரத்துடன் வட்டம் இடும் வண்டை ஒத்தவரும்
ஸ்ரீ பட்டார் பிரான் பர காலர் இவர்களின் திருமுகங்களுக்கு மலர்ச்சி தரும் ஸூரியனாகவும் மித்ரராயும்
ஸ்ரீ கூரத் ஆழ்வானுக்கு அடைக்கலமாகவும் உள்ள ஸ்ரீ யதி ராஜரை துதிக்கிறேன் —
பதவுரை:-
ஸ்ரீரங்கராஜ சரணாம்புஜ ராஜ ஹம்ஸம் – ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளாகிய தாமரை மலர்களுக்கு (தாமரை மலர்களின் நிழலின் கீழே தங்கியிருக்கிற) ராஜ ஹம்ஸம் போன்றவரும்,
இது எதனால் என்றால் மேல்-
ஸ்ரீமத் பராங்குஸ பதாம்புஜ ப்ருங்கராஜம் – சம்சாரிகளை அங்குசம் இட்டு தலை வணங்கப் பண்ணும் -ஸ்ரீமத் பராங்குஸராகிய நம்மாழ்வாருடைய பரமபோக்யமான திருவடிகளென்னும் தாமரை மலர்களில் (தேனைப் பருகுவதற்காகப்) படிந்திருக்கிற உயர்ந்த வண்டு போன்றவரும்,
ஸ்ரீபட்டநாத பரகால முகாப்ஜமித்ரம் – மங்களா ஸாஸன பரரான ஸ்ரீபட்டநாதராகிய பெரியாழ்வாரென்ன, பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு மிருத்யு -பரகாலராகிய திருமங்கையாழ்வாரென்ன ஆகியவர்களுடைய திருமுகங்களாகிய தாமரை மலர்களை மலரச் செய்கிற ஸூர்யன் போன்றவரும்,
ஸ்ரீவத்ஸ சிஹ்ந ஸரணம் – சிஷ்ய ஆச்சார்ய இரண்டுக்கும் ஸீமா பூமியான ஸ்ரீவத்ஸ சிஹ்நராகிய கூரத்தாழ்வானைத் திருவடிகளாக உடையவருமாகிய,-ப்ராப்ய ப்ராபக பூமியாக –
யதிராஜம் – யதிராஜராகிய எம்பெருமானாரை,
ஈடே –துதிக்கிறேன்.
———–
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்
ஸ்ரீ பகவத் விஷயத்தில் வந்தால் வெளிறான அம்சத்தைக் கழித்து சாரமான அம்சத்திலே யாயத்து இருப்பது –
பர வ்யூஹங்கள் நித்ய முக்தருக்கும் முக்த பிராயருக்கும் (சனகாதிகள் பஃதாஞ்சலி ப்ரஹ்ம பாவனை ஏக நிஷ்டர் )முகம் கொடுக்கும் இடமாகையாலும்
விபவ அந்தர்யாமிகள் புண்யம் பண்ணினாருக்கும் உபாசகருக்கும் முகம் கொடுத்து நிற்கிற நிலையாகையாலும்
அவ்வோ நிலைகளுக்கு ஓரொரு குறைகள் உண்டு
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ -(நீர் இந்தளூரீரே-4-9-5)என்று பரத்வாதிகளுக்கு ஆளாகாத பிற்பாடாருக்கும் முகம் கொடுத்து நிற்கும்
அர்ச்சாவதாரத்துக்கு சொல்லலாவது குறை ஒன்றும் இல்லையே
(தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -4-9-5-)
இப்படி நீர்மைக்கு எல்லை நிலமான அர்ச்சா ஸ்தலங்களுக்கு எல்லாம் வேர் பற்றான ஸ்ரீ கோயில் நிலையிலே யாயத்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆழங்கால் பட்டு இருப்பது –
ஆகையால் ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் மிக்க போக்யதையை அனுசந்தித்து
சரஸ சஞ்சரணம் பண்ணும் படி சொல்கிறது –(பொன் அரங்கம் என்னில் மயிலே பெருகும்)
பரமபத ஐஸ்வர்யத்தையும் சிராங்கிக்கும் படியான விபவ ஐஸ்வர்யத்தை யுடைத்தாய் –
ரதிங்கத-(ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம்–ஸ்ரீ ரெங்கம் ஆசைப்பட்டு வந்த இடம் )என்கிறபடியே சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனையும் ஸ்வ போக்யத்தையாலே ஆழங்கால் படுத்தும் படி
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவரங்கத் திருப்பதியை –
அரங்கமாளி-(திருவாய்7-3)என்கிறபடியே –
ஸ்வ அதீனமாக ஆண்டு கொண்டு போருகையாலே வந்த பெருமையை யுடைய
ஸ்ரீ அரங்கத்தம்மான் திருக் கமலப் பாதத்தில் அலை யெறிகிற மது ப்ரவாஹத்திலே சிறகு அடித்துக் கொண்டு வர்த்திக்கிற ஹம்ஸ ஸ்ரேஷ்டராய் உள்ளவரை -என்கை –
(அறுகால சிறு வண்டும் திருவடித்தாமரைகளும்
சேஷி சேஷ திருவடி இணைகள் சேர்ந்து ஸேவை தானே நமக்கு உத்தேச்யம் )
(தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஶ்லோகம் 27 –)
(அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?)
பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமானுசன் –என்னும்படி இறே
இவ்விஷயத்தில் இவருக்கு உண்டான ப்ராவண்யம் –
(நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –)
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம்-
இனி பாகவத விஷயத்தில் வந்தாலும் -(1)ஸ்வ யத்னத்தால் ஸ்ரீ ஈஸ்வரனைப் பெறப் பார்க்கும் ப்ரபத்தியிலே
அன்வயித்து இருக்கச் செய்தே தங்கள் ஸ்வீ காரத்தை சாதனமாக கொள்ளுமவர்களையும்
(2)அவனே உபாயமாகக் கொள்ளா நிற்கச் செய்தேயும் பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இருக்கிறவர்களையும்
(3)மகிழ்ந்து ப்ராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்கிறதை அத்யவசித்து -இப்போதே பெற்று அனுபவிக்க வேணும்
என்னும் அபிநிவேசத்தாலே கண்ணும் கண்ணீருமாய் யாய்த்து இருக்கும்படியான ஆர்த்தியை உடையராய்
பர வ்யூஹாதி ஸ்தலங்களில் காட்டில்-கண்டியூர் அரங்கம் (திருக்குறும் தாண்டகம் -19)-இத்யாதிப்படியே
ஸ்ரீ கோயில் முதலான ஸ்ரீ அர்ச்சா ஸ்தலங்களில் ஆழங்கால் பட்டு இருக்கும்
ஸ்ரீ ஆழ்வார்கள் அளவிலே யாய்த்து திரு உள்ளம் ஊன்றி இருப்பது
ஆகையால் கைங்கர்ய அபிநிவேசம் ஆகிற ஸ்வரூப அனுரூபமான சம்பத்தை உடையவராய்
நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஸ்ரீ ஈஸ்வரனையும்
ஈஸ்வரோஹம் என்று இருக்கும் சம்சாரிகளையும்
ஸ்வ ஸூக்தி விசேஷங்களாலே வசீக்ருதராய் தலை சீய்க்கும் படி பண்ணுகையாலே ஸ்ரீ பராங்குசர் என்னும்
திரு நாமத்தை யுடையராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார்களில் தலைவரான ஸ்ரீ நம்மாழ்வாருடைய பரம போக்யமான திருவடிகளில்
போக்யதா அனுசந்தானமே நித்ய ஜீவனமாய் யுடையவர் என்கை –
கீழே பராங்குச பாத பக்தம்-என்று
அவர் பக்கல் ப்ரேமத்தை உடையவர் என்கிற மாத்திரம் சொல்லிற்று –
இங்கு அந்த ப்ரேம அனுரூபமாக
அவர் திருவடிகளில் போக்யத்தையுள் புக்கு அனுபவிக்கும் படி சொல்கிறது –
(கீழ் ஞானத்துக்கு ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்
இங்கு குண க்ருத அனுபவம்-அனுஷ்டானத்துக்கு உபயோகி)
அல்லாத ஸ்ரீ ஆழ்வார்களில் காட்டில் ஸ்ரீ நம்மாழ்வாருக்கு உண்டான வ்யாவ்ருத்தி தோற்ற அவர்களோடே கூட அநுஸந்திக்குமது
மாத்திரம் போராது என்று தனியே முற்பட அனுசந்தித்தார்
இப்போது அவர்களோடு கூட அனுசந்தித்து அருளுகிறார் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாரை அல்லாத நாய்ச்சிமாரோடு கூட அநுஸந்தியா நிற்கச் செய்தேயும் முந்துறவே
ஸ்ரீ யபதி -என்று அவள் வ்யாவ்ருத்தி தோற்ற உடையவர் அனுசந்தித்து அருளினால் போலே
அல்லாத ஸ்ரீ ஆழ்வார்களில் இவருக்கு அவயவ பூதர் என்னும்படி இறே இவருடைய ஏற்றம் –
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்-
மங்களா சாசன ரூபமாக ஐஸ்வர்யத்தை உடையவராய் ப்ராஹ்மண உத்தமரான ஸ்ரீ பெரியாழ்வாருடையவும்
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற பிரதிபக்ஷங்களுக்கு ம்ருத்யு பூதரான (பர காலனான )ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருடையவும்
திருமுக மண்டலம் ஆகிற தாமரையை அலர்த்தும் ஆதித்யன் -என்கை –
ஆளுமாளார் (8-3-3)-என்கிறவன் தனிமை தீர ஆள்கள் சேர்த்து அருளுகையாலும்
பாஹ்ய குத்ருஷ்டிகளைக் கிழங்கு எடுத்துப் பொகடுகையாலும் இவரைக் கண்ட போதே அவர்கள் திரு முகம் அலர்ந்த படி –
(ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-)
பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர் ஜை நே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் தரை வித்ய சூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி–-தாடீ பஞ்சகம்–1-)
ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே
கீழே –காமாதி தோஷஹர மாதமபதாஸ் ரிதாநாம்-என்று சாமாந்யேந திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு உபாய பூதர் என்னும் இடம் சொல்லிற்று –(சாமான்யேந அதி தைவம் -ஸாம்யம் காட்ட -த்வார த்ரயம் -அனைத்து உலகும் வாழப் பிறந்த யதிராசர் )
இங்கு அவர்கள் எல்லாரும் ஒரு தட்டும் தாம் ஒரு தட்டுமாம் படியான ஏற்றத்தை யுடையராய்
சிஷ்ய வர்க்க க்ரமத்துக்கு சீமா பூமியான ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு
ப்ராப்ய -பிராபகங்களாக இரண்டுமே தாமேயாக இருக்கும் படி சொல்கிறது
யதிராஜமீடே-
இப்படி ஸ்ரீ ஆழ்வார்கள் உகந்த விஷயமான ஸ்ரீ பெரிய பெருமாள் அளவிலும்
ஸ்ரீ முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்த ஸ்ரீ ஆழ்வார்கள் விஷயத்திலும்
தத் தத் விஷய அனுரூபமான ப்ரேம பூர்த்தியை யுடையராய்
ஆஸ்ரிதருக்கு ப்ராப்ய ப்ராபக பூதருமாய் இருக்குமவர் என்று ஸ்துதிக்கிறேன் என்கிறார்
(ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம்-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்ஸம் யதிராஜ மீடே-ஸ்ரீ ஆழ்வார்கள் உகந்த விஷயமான ஸ்ரீ பெரிய பெருமாள் அளவிலும்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் யதிராஜ மீடே-ஸ்ரீ முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்த ஸ்ரீ ஆழ்வார்கள் விஷயத்திலும்
ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே-தத் தத் விஷய அனுரூபமான ப்ரேம பூர்த்தியை யுடையராய் ஆஸ்ரிதருக்கு ப்ராப்ய ப்ராபக பூதருமாய் இருக்குமவர் என்று ஸ்துதிக்கிறேன் என்கிறார்)(இருப்பிடம் மாத்திரம் அங்கு –அத்ரைவ ஸ்ரீ ரெங்கம் ஸூகம் ஆஸ்வ –ஹம்ஸம்
நம்மாழ்வார் இடம் வண்டு -உண்டு அனுபவிப்பார்-இரண்டும் தாமரை தான் ஆனாலும் அங்கு இருப்பிடம் மாத்திரம் -ஆழ்வார் உகந்த விஷயம் என்பதால் –
மதுரகவி நிஷ்டை –கரிய கோலத்திருவுரு காண்பர் -இங்கு உண்டு களிப்பர்)
பர வ்யூஹ விபவ அந்தர்யாமி போல் அன்றிக்கே -ஸர்வ ஜனங்களும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபமாக கோயிலிலே திருவனந்தாழ்வான் மேல் இனிதாகக் கண் வளரும் ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருக்கமல பாதத்தில் அலை எரிகிற மது பிரவாஹத்திலே சிறகு அடித்து சஞ்சரிக்கும் ராஜ ஹம்ஸம் போன்றவராய் (இருப்பிடம் மாத்திரம் இங்கு – -எம்பெருமானையும் தென்னா தென்னா என்று தலை குவிக்க வைக்க ஆழ்வார் -அவர் திருவடிகளில் போக்யதையை அனுபவிக்கும் –மாறன் அடி பணிந்து உய்யும் எம்பெருமானார் )
ஸூவ ஸூக்திகளால் ஈஸ்வரனையும் சம்சாரிகளையும் வசீகரித்து தலை சீய்க்கும் படி பண்ணுகையால் பராங்குசர் என்னும் திருநாமம் உடையவராய்-
ஸர்வ வித பகவத் கைங்கர்ய அபிநிவேசம் -ஸ்வரூப அனுரூப சம்பத்தை உடைய -இதுவே ஆழ்வாருக்கு நித்ய ஜீவனம் –
நம்மாழ்வாருடைய பரம போக்யமான திருவடிகளில் போக்யதா அனுபவமே நித்ய ஜீவனமாகக் கொண்டவராய்
மங்களா சாசனத்துக்கு ஆள் சேர்த்து அருளுகையாலும் பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரஸித்து ஸூவ மத சம்ஸ்தானம் பண்ணி அருளுகையாலும் பெரியாழ்வார் பரகாலன் இவர்களுடைய திரு முக மலர்த்திக்கு ஹேது பூதராய்-
(மூன்று வரிகளிலும் தாமரை -ஒன்றில் வசிக்கும் ஹம்சம் -அடுத்ததில் மதுவைக் குடிக்கும் வண்டாய்- -இறுதியில் மலர்த்தும் ஸூர்யன் -மூன்று ப்ரபாவங்கள் )
———-
ஸ்ரீ ரங்க-
ஈஸ்வரனே உபாயம் என்று இருக்குமவர்க்கு ஜ்ஞான அனுஷ்டானங்களை கொண்டு பிரயோஜனம் என் என்னில்
இவருக்கு இவற்றால் வருவதொரு பிரயோஜனம் இல்லை யாகிலும் இவை தான்
ஸ்வரூப அநு பந்திகள் ஆகையாலே விட அரிதாய் இருக்கும்
ஸ்வரூப அநு பந்தங்கள் யாய்த்து கைங்கர்ய ரூபங்கள் யாகையாலே –
ரஜ்யதே அநேநேதி ரங்கம்-ரஜ்யதே அஸ்மின் இதி ரங்கம் (மநோ ரஞ்சனம் இதனால் ஸந்தோஷம்-இந்த தேசத்தில் மகிழ்கிறார் )என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும்
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கும் சர்வ சேதனரும் தன்னை ஆஸ்ரயிக்கையால் வந்த ப்ரீதிக்கு காரணம் ஆகையால்-அவர் தமக்கே ப்ரீதி விஷயமான தேசம் என்கிறது(அற்ற பத்தர் சுற்றி வாழும் அரங்கம் )
அதுக்கு மேலே ஸ்ரீ மத்வம் ஆகிறது-
தேசாந்தர கதோ வா அபி த்வீபாந்தர கதோ அபி வா ஸ்ரீ ரெங்க அபிமுகோ பூத்வா ப்ரணீபத்யந சீததி மரங்கம் ரங்கமதி ப்ரூயாத் ஷூத் ப்ரசகல நாதிஷூ ப்ரஹ்ம லோகம் அவாப்நோதி சத்யா பாப ஷயன் நரபி–இத்யாதியில் சொல்லுகிறபடியே
இதுக்கு உண்டான பகவத் அங்கீகார பலத்தாலே-தான் இந்த திக்கை நோக்கி தண்டம் சமர்பித்தல்-பேரைச் சொல்லுதல் செய்வார் என்ன –
அவ்வளவாலே அவர்களுக்கு உண்டான சமஸ்த துரிதங்களையும் போக்கி அபிமத பல விசேஷத்தையும் கொடுக்கைக்கு ஈடான சக்தி விசேஷமாதல்(தேசோயம் சர்வ காம துக் )
ஆத்யம் ஸ்வயம் வ்யக்தமிதம் விமாநம் ரங்க சம்ஜ்ஞிகம்-என்கிறபடியே
ஸ்வயம் வ்யக்த தேசங்களில் பிரதான்யமாதல் –
ஸ்ரீ சப்தம் பூஜ்ய வாசியாகையாலே பகவத் சம்பந்தத்தால் உண்டான பூஜ்யதையைச் சொல்லவுமாம்-ப்ராப்யதையைச் சொல்லவுமாம் – –
அன்றிக்கே
ஸ்ரியா ரங்கம் -ஸ்ரீரங்கம் என்கிற வ்யுத்பத்தியாய் –
அத்தாலே ஔதார்ய காருணிகதா ஆஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ ஸர்வம் அதிசாயிதம் அத்ர மாத -ஸ்ரீ குண ரத்ன கோசம் – 57-
என்கிறபடியே ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய ஔதார்யாதி குணங்களுக்கு பிரகாசகமான தேசம் -என்னவுமாம்-
(ஔதார்ய காருணிகதா ஆஸ்ரித வத்ஸலத்வ
பூர்வேஷு ஸர்வம் அதிசாயிதம் அத்ர மாத:
ஸ்ரீரங்கதாம்நி யத் உத அன்யத் உதாஹரந்தி
ஸீதா அவதாரமுகம் ஏதத் அமுஷ்ய யோக்யா–57-)
(தாயே! ஸ்ரீரங்கநாயகீ! தன்னைப் பற்றிக் கூட கவலைப்படாது மற்றவர்க்கு உதவும் தன்மை (ஔதார்யம்),
மற்றவர் படும் துயரம் பொறுக்காமல் உள்ள தன்மை (காருணிகதா),
அடியார்கள் செய்யும் குற்றத்தையும் மறந்து குணமாக ஏற்றுக் கொள்ளுதல் (வத்ஸலத்வம்)
ஆகிய பல சிறந்த குணங்கள் ஸ்ரீரங்கநாச்சியாரான உன்னிடம் மிகவும் அதிகமாகவே உள்ளதே!
நீ முன்பு சீதையாகவும் ருக்மிணியாகவும் திருஅவதாரம் செய்த போதும்
அந்தக் குணங்கள் உன்னிடம் இருந்தன என பலர் கூறுகின்றனர்.
அப்போது நீ கொண்டிருந்த அந்தக் குணங்கள், இப்போது நீ கொண்டுள்ள இந்த அர்ச்சை ரூபத்திற்குண்டான பயிற்சி போலும்.)
கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கை பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்து
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே–11-9-
பேணுமூர் –அவன் விரும்பி வர்த்திக்கும் தேசம்-பேரும் அரங்கமே –அவ் ஊரின் பேரும் பெரிய பிராட்டியாருக்கு ந்ருத்த ஸ்தானம் –அவனும் பெண் ஆளன் ஊரும் அரங்கம்–
பெண்களுக்கு எல்லாம் பொது என்றபடி –)
ராஜ –
1-அத்தேசத்துக்கு நிர்வாஹகன் ஆகையாலே வந்த ஔஜ்வல்யத்தை உடையவன் என்னுதல்-
2-தன்னுடைய சௌலப்யாதி குணங்களுக்கு பிரகாசகமான தேசத்தைப் பெறுகையாலே வந்த ஔஜ்வல்யத்தை உடையவன் என்னுதல்
3-ஸ்ரீ பெரிய பிராட்டியார் தன்னைத் தனக்கு கொடுக்கைக்கு பாங்கான தேசத்தைப் பெறுகையாலே வந்த ஔஜ்வல்யத்தை உடையவன் என்னுதல் –
ஸ்ரீ ரங்க ராஜ –
உபய விபூதி ஐஸ்வர்யத்தைக் காட்டில் இவ்வைஸ்வர்யம் இவனுக்கு விலஷணமாய் காணும் இருப்பது என்கிறார் –
ஸ்ரீ ரங்க ராஜ –
அவன் ஒன்றை அபிமாநிப்பது அது தனக்கு நிரூபகமாக இறே அபிமாநிப்பது
சரணாம் புஜ –
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருவடித் தாமரைகளுக்கு உபமானம் நேர் இல்லாமையாலே
உபமேயம் தன்னையே உப மானமாகச் சொல்லுகிறது
ஸ்ரீ ராஜ ஹம்சம் –
அத் திருவடித் தாமரைகளில் விஹரிக்கும் ராஜ ஹம்சம் காணும் இவர் என்கிறார் —
1-அதாவது ராஜ ஹம்சதுக்கு தாமரை விஹார ஸ்தானம் ஆகிறாப் போலே
இவருக்கு ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் விஹார ஸ்தானம் ஆன படியும் என்கை
ரமந்தே யோகிந ச அனந்தே சத்யா நந்தே சிதாத்மநி -என்னக் கடவது இறே -ஆகையாலே
அத்ரைவ ஸ்ரீ ரங்க ஸூக மாஸ்வ-என்று ஸ்ரீ பெரிய பெருமாள் அனுக்ரஹித்ததும்
அன்றிக்கே
2-தாமரைக்கு ராஜ ஹம்சம் பிரகாசகம் ஆனாப் போலே இவரும் திருவடிகளுக்கு பிரகாசகர் -என்னவுமாம்-சேஷ சேஷிகள் ஒருவருக்கு ஒருவர் பிரகாசகர் இறே
அன்றிக்கே –
3-கபர்த்திமத கர்தமம் -யதிராஜ சப்ததி -38- இத்யாதியில் சொல்லுகிறபடியே
ஸ்ரீ பகவத் தத்வத்துக்கு பாஹ்ய குத்ருஷ்டிகளால் உண்டான அப்ரகாசதையைப் போக்கி அந்த தத்வத்தை ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களால் பிரகாசிப்பிக்குமவர் என்னவுமாம்
(கபர்த்தி மத கர்த்தமம் கபில கல்பநா வாகுராம்
துரத்யயம் அதீத்ய தத் த்ருஹிண தந்திர யந்திர உதரம்
குத்ருஷ்டி குஹநா முகே நிபதத பர ப்ரஹ்மண
கர க்ரஹ விசஷணோ ஜயதி லஷ்மண அயம் முனி-(38-உடையவர், ப்ரஹ்மத்தைக் காத்தவர் என்கிறார்)
(பர ப்ரஹ்மம் சைவம் என்னும் சேற்றிலே சிக்கியது
கபில முனிவரின் சாங்க்ய வலையிலே சிக்குண்டது
நான்முகன் கண்ட யோக ஸாஸ்த்ரம் என்னும் இயந்திரத்தின் நடுப் பகுதியிலே அகப்பட்டது
இவற்றையும் தாண்டி மாயாவாதிகளின் வாதங்களிலே சிக்குண்டது
இவை அனைத்தையும் நீக்கி பர ப்ரஹ்மத்தை மிகவும் எளிதாக உயர்த்த வல்லவராக
உள்ள ஸ்வாமி அனைவரிலும் மேம்பட்டவராக உள்ளார்-)
(ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே )
பகவத் தத்வம் ஸ்வயம் பிரகாசகமாய் யன்றோ இருப்பது -இவர் பிரகாசகராவது என் என்னில் –
அது ஸ்வயம் பிரகாசகமே யாகிலும்
தத் விஷய ஜ்ஞானம் இல்லாதவர்க்கு அபிரகாசமாய் யன்றோ இருப்பது –
அவர்களுக்கும் தத் விஷய ஜ்ஞானத்தை உண்டாக்கி அத்தை
பிரகாசகமாம் படி பண்ணுகை-ஆகையால் ஈஸ்வரர் சேதனர் இருவருக்கும் உபகாரகர் என்கிறது
இவ் வுபகாரம் சேஷி முக விகாச ஜனகம் ஆகையாலே ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமாய் இருக்கும்
கீழ் இவருக்கு உண்டான பகவத் அங்கீகாரத்துக்கு நிதானத்தைச் சொல்லுகிறது -மேல் –
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
இவருக்கு ஸ்ரீ மத்வமாவது –
1-சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று
அடைந்த வண் குருகூர்ச் சடகோபன் -(6-5-11)என்கிறபடியே ஸ்ரீ ஈஸ்வரனை சர்வ வித பந்துவாகப் பற்றின சீர்மை யாதல்
2-உண்ணும் சோற்றில் படியே அவன் தன்னையே தாரக போஷக போக்யங்களாகப் பற்றின சீர்மையாதல் –
3-ஒழிவில் காலப்படியே சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சமஸ்த வித கைங்கர்யங்களையும் தாம் ஒருவருமே செய்ய வேணும் என்கிற மநோ ரதமாதல் –
அன்றிக்கே
4-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி தம்படி
ஸ்வ சம்பந்தி பரம்பரைக்கும் உண்டாம்படி பண்ணுகை யாதல்
பராங்குச
இப்படிகளாலே பாஹ்ய குத்ருஷ்டிகளை வசீகரிக்க வல்லரான ஸ்ரீ ஆழ்வாருடைய
பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
அத் திருவடித் தாமரைகளின் மதுவைப் புஜித்து-மதுபான மத்தமாய் சுழன்று திரிந்து விளங்குகின்ற ப்ருங்க ஸ்ரேஷ்டரான
இத்தால் பிரமரமானது தாமரையின் மதுவை உண்டு தன் குறை தீர்ந்தற்று அன்றிக்கே மதுபான மத்தமாய் சுழன்று திரியுமா போலே
இவர் ஸ்ரீ மாறன் அடி பணிந்து- கவியமுதுண்டு களித்து -குமதி க்ருதிகளை மதியாதே- பூ மண்டலம் எங்கும் விஜய யாத்ரையாய் சஞ்சரிக்குமவர் என்கிறது(ஸ்ரீ ரெங்கம் கரி சலம் அஞ்சன கரீம் -இத்யாதி )
ப்ருங்கத்துக்கு மது ஜீவனம் ஆனாப் போலேயும்
ராஜ ஹம்சத்துக்கு தாமரை விஹார ஸ்தானம் ஆனாப் போலேயும்
இவருக்கு ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் தாரகமாயும் ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் விஹார ஸ்தானமாயும் இருக்கும் என்கிறது
ஆசார்யவான் புருஷோ வேத -(சாந்தோக்யம் )என்கிறபடியே ஸ்ரீ ஆசார்ய ஆதீனம் இறே உஜ்ஜீவனம் –
சிஷ்யன் பிரதம பர்வத்தில் இழிகிறதும் அவன் உகந்த விஷயம் என்றாய்த்து
இனி இவர் ததீய விஷயத்தில் கிஞ்சித் கரித்த படியைச் சொல்லுகிறது மேல்
(இராமானுச நூற்றந்தாதியிலும் முதல் பாசுரம் மாறன் அடி பணிந்து உய்ந்தமையும் அடுத்த பாசுரத்தில் குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் போல் இங்கும்)
(அன்பன் தன்னை அடைந்தவர்கட்க்கு எல்லாம் அன்பன் -தென் குரு கூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி போல் இங்கும் மூன்று நிலைகள்)
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் –ஸ்ரீ பட்ட நாத ஸ்ரீ பரகால முகாப்ஜ மித்ரம்
ஸ்ரீ சப்தம்
1-பூஜ்யதையைச் சொல்லுகிறதாதல்-
2-ஸ்ரீ மத்வத்தை சொல்லுகிறதாதல்
இவர்களுக்கு ஸ்ரீமத்வமாவது –
1-ஸ்ரீ மாலா காரரைப் போலே திரு நந்தவனம் செய்து திருமாலை சமர்ப்பிக்கையும்
2-பரமத நிரசன பூர்வகமாக ஸ்ரீ மன் நாராயணன் ஆகிற தத்தவத்தை ஸ்தாபித்து அவன் தன்னை சாஷாத் கரித்து-தம்மைப் பேணாதே (பொங்கும் பரிவாலே )அத் தலைக்கு மங்களா சாசனமே பண்ணுகையும்-
3-ஸ்ரீ கோபுர ஸ்ரீ பிரகார நிர்மாணம் முதலிய கைங்கர்ய கரணங்களும் ப்ராப்யத்வமாதல் –
ஆக இப்படி ஸ்ரீ மான்களாய் இருந்துள்ள
பட்ட நாத
ப்ராஹ்மண ஸ்ரேஷ்டரான ஸ்ரீ பெரியாழ்வார் என்ன
இவருக்கு -ப்ராஹ்மணரில் ஸ்ரைஷ்டைமாவது –
மந்திர ப்ரஹ்மண ஸ்ரீ திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தாலே சொல்லப் படுகிற
ஸ்வரூப அநு ரூபமான மங்களா சாசனமும் –
அஸ்தானே பய சங்கையும்
மேன் மேலும் மங்களா சாசனமும் –
பரகால
சத்ரு ம்ருத்யுவான ஸ்ரீ திரு மங்கை யாழ்வார் என்ன –
இவருக்கு சத்ருக்கள் பகவத் விட்டுக்கள்-அவர்கள் ஆகிறார் ஆத்மைக்யம் -இத்யாதியில்
சொல்லப் படுகிற ஆத்மைக்ய வாதிகள் முதலானவர்கள் -இவர்களுடைய
முகாப்ஜ
திரு முக மண்டலங்கள் ஆகிற தாமரைகளுக்கு -முகத்தை தாமரையாகச் சொல்லுகிறது –
தாமரை உடைய சௌகுமார்யம் ஸ்பர்ச சஹம் அன்றிக்கே இருக்குமா போலே
திரு முக மண்டலமும் பர துக்கம் பொறுக்க மாட்டாத சௌகுமார்யத்தை உடையது என்கிறது
மித்ரம்
ஸூர்யனாய் இருக்குமவராய்-
அதாவது ஆதித்யன் ஸ்வ உதயத்தாலே தாமரையை அலர்த்துமா போலே
இவரும் பர மத பிரதி ஷேபாத்ய அநேக வித கைங்கர்யங்களாலே இவர்களுக்கு அபிமதமான ஸ்ரீ பெரிய பெருமாளை உகப்பிக்கை –(ஆச்சார்யன் உகக்கும் கைங்கர்யம் ஆச்சார்யனுக்கு நேராகச் செய்யும் கைங்கர்யத்திலும் ஸ்ரேஷிடம் -சரம பர்வம்)
அன்றிக்கே –
முக சப்தம் -ஆதி சப்த பர்யாயமாய் –
ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ திரு மங்கை யாழ்வார் முதலான ஸ்ரீ ஆழ்வார்கள் ஆகிற
தாமரைகளுக்கு மித்ரரானவர் என்னவுமாம்
அப்போதைக்கு அவர்கள் உகந்த விஷயம் என்று ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் அனந்த கைங்கர்யங்களையும் செய்து
அருளுகையாலே அவர்கள் திருமுக மண்டலத்துக்கு விகாசகர் என்கிறது
ஆக கீழ் ஸ்லோஹத்தில்-பூர்வார்த்தத்தில் சொல்லப் படுகிற இவருடைய ததீய சேஷத்வ பர்யந்தமான தத் சேஷத்வ ஜ்ஞானத்துக்கு
குணமான பர்வ த்ரய கிஞ்சித் காரம் சொல்லிற்று யாயிற்று(பெருமாள் ஆழ்வார் தன்னைப் பற்றிய ஆஸ்ரிதர் மூன்றும் கீழும் இதிலும் உண்டே )
இனி ஆஸ்ரித விஷயத்தில் இவர் இருக்கும் இருப்பைச் சொல்கிறது
ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன அம்ச பூதராகையாலே ஸ்ரீ வத்ஸ சிஹ்னர் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ கூரத் ஆழ்வானுக்கு
ஸ்ரீ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் பிரபத்யே –ஸ்ரீ வை ஸ்தவம் -1- என்று
தம் வாயாலே சொல்லலாம் படி உபாய பூதராய்-ஸ்ரீ ஆழ்வான்- இறே –
ந சேத் ராமாநுஜேத் ஏஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸா -(வரவர விஷய முக்தக ஸ்லோகம்-5 ) -என்று வ்யதிரேகத்திலும்
ஸ்ரீ ராமானுஜ அங்கரி சரணோஅஸ்மி -(ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -102)என்று அன்வயத்தாலும் இவருடைய உபாயத்வத்தை அருளிச் செய்தார்
ஆகையாலே –ஸ்ரீ வத் சிஹ்ன சரணம்-என்கிறார் -இது எல்லாருக்கும் ஒக்குமாகையாலே உப லஷணம்-
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –ஸ்ரீ வை ஸ்தவம் -1-
(யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில் உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்)
(ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்-102-)
கீழ் ஸ்லோஹத்திலே காமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதா நாம் -என்கிற விடத்தில் தாத்பர்ய விதயா தோற்றுகிற உபாயத்வம்(அநிஷ்ட நிவர்த்தகம் உபாயம் அர்த்தமாக அங்கு)
இங்கு ஸ்ரீ வத் சிஹ்ன சரணம்-என்று சரண சப்தத்தாலே வியாக்யானம்
யதிராஜம்
கீழ்ச் சொன்ன ஆகாரங்களால் உண்டான ஸ்வ உத்கர்ஷம் நெஞ்சிலே தட்டாத படியான
வைராக்கியம் உடைய ஸ்ரீ எம்பெருமானாரை
அன்றிக்கே –
கீழ்ச் சொன்ன ஏற்றங்களுக்கு எல்லாம் நிதானமான வைராக்கியம் உடைய எம்பெருமானாரை என்னவுமாம்
இவ் வைராக்யம் இறே இவருக்கு பிரகாச ஹேது –
ஈடே –
வாக் இந்த்ரியம் படைத்த பலம் பெற்றோம் என்று ஸ்தோத்ரத்தில் பிரவ்ருத்தர் ஆகிறார்
ஈடே
கீழே மூர்த்நா ப்ரணமாமி -என்று காயிகமான கைங்கர்யத்தைச் சொல்லி
இதுலே ஈடே என்று
வாசிகமான அடிமையைச் சொல்லுகிறது
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி போலே குணா ஜிதர்க்கு ஸ்தோத்ரம் இறே க்ருத்யமாவது –
———
திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.-திருநக்ஷத்ரம் -ஆனி அவிட்டம் -1755–ஜய நாம ஸம்வத்சரம் -அவதார ஸ்தலம் -ஸ்ரீ திரு மழிசை -ஆச்சார்யர் –திருத்தகப்பனார் -ஸ்ரீ நரசிம்ஹாச்சார்யர்-ரகுவராச்சார்யர் திருத் தாத்தா -சகல மஹீ ப ரத்ன கனக மகுடி -பூமிசார -புண்ய பலமாக அவதரித்த வரகுரு வீரராகவாச்சார்யர் -மகுட ரத்ன ஒளி பெற்று -மஹீசார க்ஷேத்ரம் -வரகுரு வீரராகவாச்சார்யர் -இயல் பெயர் -வாதூல குல திவாகர் -51 திருநக்ஷத்ரம் இருந்தவர்
மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.
இளமையிலேயே மிக்க அறிவாளியாய் திகழ்ந்த இவர், 15 ப்ராயத்துக்குள் தம் யஜுஸ் சாகை முழுதும் கற்றார். அத்தோடே தர்க்கம், வியாகரணம், மீமாம்ஸை, சாங்க்யம், பதஞ்ஜலி யோகம் முதலியனவும், ஜ்யோதிஷம், ஸங்கீதம், பரத நாட்யம், போன்றனவும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 20 பிராயம் முடியுமுன்பே ஸகல சாஸ்த்ர நிபுணர் ஆனார். திருத்தகப்பனாரிடம் ரஹஸ்ய கிரந்தங்கள் கற்று மிக்க இளமையிலேயே ஸம்ப்ரதாய ஸ்ரீகோசங்கள் எழுதலானார். வாதூல வரதாசார்யர் மற்றும் பல திவ்ய தேச யாத்ரைகள் செய்து பலரை வாதில் வென்ற ஸ்ரீரங்காசார்யர் இருவரிடமும் பயின்றார்.
51 ஆண்டுகளே எழுந்தருளியிருந்த இந்த ஸ்வாமி அச்சிறிய வயதுக்குள் பலரை வாதங்களில் வென்றார். ஈச்வர வருஷம் ஐப்பசி சுக்லபக்ஷ சதுர்த்தசியில் பரமபதித்தார்.
இவரின் லிகித கைங்கர்யங்களில் தலையானது பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த ஸ்ரீவசன பூஷணத்துக்கு மாமுனிகள் அருளிச் செய்த வ்யாக்யானத்துக்கு விரிவான அரும்பத உரை அருளியது ஆகும். இவரின் மற்றொரு க்ரந்தமான பக்தி ஸாரோதயம் திருமழிசை ஆழ்வாரின் சரித்ரத்தை மிக அழகாகக் காட்டியுள்ளது.
க்ரந்தங்கள்
இவர் தான் வாழ்ந்த குறுகிய காலத்துள் பல க்ரந்தங்கள் அருளியுள்ளார். அவற்றின் தொகுப்பு இங்கே:
- ஸ்ரீ பக்தி ஸாரோதயம்
- வேதவல்லி சதகம்
- ஹேமலதாஷ்டகம்
- அபீஷ்ட தண்டகம்
- சுக சந்தேசம்
- கமலா கல்யாண நாடகம்
- மலயஜா பரிணய நாடிகா
- ந்ருஸிம்ஹாஷ்டகம்
- மாமுனிகள் ஸ்ரீவசன பூஷண வ்யாக்யான அரும்பதம்
- திருச்சந்த விருத்த ப்ரதிபதம்
- ஸ்ரீரங்கராஜ ஸ்தவ வ்யாக்யானம்
- மஹாவீரசரித வ்யாக்யா
- உத்தர ராம சரித வ்யாக்யா
- சத ச்லோகீ வ்யாக்யா
- ராமாநுஜாஷ்டக வ்யாக்யா
- நக்ஷத்ர மாலிகா வ்யாக்யா
- தேவராஜ குரு விரசித வரவரமுனி சதக வ்யாக்யா
- துஷ்க்கர ச்லோக டிப்பணி
- தினசர்யா
- ஷண்மத தர்சனி
- லக்ஷ்ம்யா உபாயத்வ நிராஸ:
- லக்ஷ்மீ விபுத்வ நிராஸ:
- ஸூக்தி ஸாதுத்வ மாய்யா
- தத்வ ஸுதா
- தத்வ ஸார வ்யாக்யா
- ஸச்சரித்ர பரித்ராணம்
- பழனடை விளக்கம்
- த்ரிம்சத் பிரச்னோத்தரம்
- லக்ஷ்மீ மங்கள தீபிகா
- ராமானுஜ அதிமானுஷ வைபவ ஸ்தோத்ரம்
- அநு பிரவேச ச்ருதி விவரணம்
- ”சைலோக்னிச்ச” ச்லோக வ்யாக்யா
- மஹீஸார விஷய சூர்ணிகா
- “ஸ்வாந்தே மே மதனஸ்திதிம் பரிஹர” இத்யாதி ஸ்லோக வ்யாக்யானம்
- ஸச்சர்யக்ஷகம்
- ப்ராப்ய ப்ரபஞ்சந பஞ்ச விம்சதி:
- ந்யாய மந்தரம்
- தாத்பர்ய ஸச்ச்ரீகரம்
- வசஸ் சுதா மீமாம்ஸா
- வசஸ் சுதா பூர்வ பக்ஷ உத்தரம்
- ப்ரஹ்மவத்வ தங்கம்
- லக்ஷ்மீ ஸ்தோத்ரம்
- வரணபஞ்ச விம்சதி:.
ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||-இவர் தனியன்:)
———–
துர்லபோ மாநுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர:| தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்ட ப்ரிய தர்ஸநம்|| (ஸ்ரீபாகவதம் 11-2-29)
[உயிர்களுக்கு, கண நேரத்தில் அழியக்கூடிய மனிதவுடல் கிடைப்பது அரிது,அது கிடைத்த போதிலும் வைகுண்டநாதனுடைய அன்புக்கு இலக்கான பாகவதர்களைக் காண்பது மிகவும் அரிது] என்கிறபடியே பாகவதர்களுடைய ஸேவையே அரியதானால் அவர்களுக்குக் கைங்கர்யம் செய்வது அரிதென்பதைத் தனியே சொல்லவும் வேண்டியதில்லை யாகையால்,(இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருப்பதைப் பார்த்து உகந்து இருப்பதுஅதி துர்லபம் -அன்றோ)
பாகவத கைங்கர்யமாகிய யதிராஜ விம்ஸதியின் விண்ணப்பத்திற்குத் தடைகள் மிகமிக உண்டாகக் கூடுமென்று நினைத்து,-அத் தடைகள் நீங்குவதற்காக மறுபடியும் தன்னுடைய ஆசார்ய நிஷ்டையாகிய தகுதிக்கேற்றபடி யதிராஜ-ஸ்தோத்ர ரூபமான மற்றொரு மங்கள ஸ்தோத்ரத்தை இயற்றுகிறார் –
ஸ்ரீரங்கராஜ என்று தொடங்கி. இங்குள்ள ஸ்ரீஸப்தம் ஸ்ரீவைகுண்டமும் இவ் வுலகுமாகிய இரு வகைச் செல்வங்களைக் காட்டுமதாய் அவற்றையுடையவன் ரங்கராஜன் என்பதை அறிவிக்கிறது.
அல்லது செம்மை மென்மை நறுமணமாகிய நற்பண்புகளைக் காட்டுமதாய் அவற்றை இயற்கையாகப் பெற்ற ஸ்ரீரங்கராஜனுடைய திருவடித் தாமரைகளைத் தெரிவிக்கிறது.
இதன்படி ஸ்ரீயை உடையன ரங்கராஜ சரணாம்புஜங்கள் என்ற கருத்துத் தோன்றும்.
பராங்குஸரிடமுள்ள ஸ்ரீமத்த்வமாவது – எம்பெருமானை அநுபவிப்பதும், அவனுக்குத் தொண்டு செய்வதும்-அவற்றிற்கு உறுப்பான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளுமாகிய – ஜீவாத்ம ஸ்வரூபத்திற்குத் தக்க செல்வங்கள் நிறைந்துள்ளமையே ஆகும்.
காணவேணுமென்று ஆசைப்படுகை பரபக்தி,-கண்டபிறகு கூடவேணுமென்னுமாசை பரஜ்ஞாநம், -கூடிய பிறகு பிரிய நேருமோ என்று அச்சப்படுகை பரமபக்தி என்பர் பெரியோர். இவை மூன்றும் உணவுக்குப் பசி போலே பகவதநுபவகைங்கர்யங்களுக்கு முன்பு இருக்கவேண்டுமாம்.-பசி இல்லையேல் உணவுருசிக்காததுபோலே, இம்மூன்றும் இல்லையாகில் பகவான் திறத்தில் நாம் செய்யும் அநுபவ-கைங்கர்யங்கள் ருசியாதன ஆகுமாம்.
ஆகவே ஆழ்வாருக்கு இம்மூன்றும் இவற்றின் பின்னே நிகழும் பகவதநுபவ-கைங்கர்யங்களும் நிறைந்துள்ளமை இந்த ஸ்ரீமத் ஸப்தத்தினால் அறிவிக்கபடுகின்றன என்றபடி.ஹம்சம் போல் ஸூத்த ஸத்வம் -பரம ஹம்சர்
ஸ்ரீபட்டநாத பரகால – பட்டநாதரிடத்திலும், பரகாலரிடத்திலும் பொருந்துமதாய், முறையே பரம் பொருள் திருமாலே என்று அறுதியிட்டு அவனுக்குப் பல்லாண்டு பாடுகையாகிற செல்வத்தையும், புறச் சமயிகளை அடக்குதல், திருவரங்கம் பெரிய கோயிலில் மதிள்கட்டுதல்,
மங்களா சாசனம் -பூ கைங்கர்யம்
பரவாதி நிரசன திவ்ய தேச கைங்கர்யம் -விஸ்லேஷ அஸஹத்வம் -தூது விடவும் நான்கு பாசுரங்களுக்கு மேல் விட மாட்டாதவர்
அல்லாதார் மலையாள ஊட்டு போல்
தர்மங்களைச் செய்து -முக விகாஸம்
முகாதி -அனைத்து ஆழ்வார்களும் சொல்லும்
எம்பெருமானைப் பூர்ணமாக அநுபவிக்கவோ, பிரியவோ பொறாத மென்மைத் தன்மையாகிய செல்வங்களையும் குறிக்கிறது.
இத்தகைய மென்மைத்தன்மையை ‘நும்மடியாரெல்லாரோடும் ஒக்க எண்ணியிருத்தீர் அடியேனை’ (பெரிய திரு. 4-9-6) என்று தாமே விண்ணப்பம் செய்தாரிறே திருமங்கையாழ்வார் இந்தளூரிலெந்தை பெருமானிடம்.
‘ஸ்ரீவத்ஸசிஹ்ந’ என்றதில், வத்ஸசிஹ்ந என்பது வத்ஸே – மார்பில், சிஹ்நத்தை – மறுவையுடைய எம்பெருமானை முற்படக்காட்டி, அவனுடைய பெயரைக் கொண்ட கூரத்தாழ்வானைப் பின்பு குறிப்பிட்டு, அவ்வாழ்வானுக்குப் பெரியபிராட்டியோடு உள்ள ஒற்றுமையை ஸ்ரீஸப்தம் தெரிவிக்கிறது. ஸ்ரீயே ஆகிய வத்ஸசிஹ்நரென்றவாறாம்.
தனக்குப் பகைவராகிய ஏகாக்ஷி முதலிய அரக்கியரைக் காப்பாற்றிய ஸீதாப்பிராட்டியோடு தமக்குக் கண் போகக் காரணமாகிய நாலூரானுக்கும் முத்திநல்கிய கூரத்தாழ்வான் எல்லையற்ற கருணையுடைமையில் ஒற்றுமையுடையவரிறே.
முன் ஸ்லோகத்தில் ‘ப்ரணமாமி மூர்த்நா’ என்று தலையால் வணங்குதலாகிய காயிகமான மங்களம் செய்யப்பட்டது.-இஸ்லோகத்தில் ‘ஈடே’ என்று துதி செய்தலாகிய வாசிக மங்களம் செய்யப்படுகிறது.
வாக் – காயங்களின் முயற்சி, மனத்தின் கண் நினைவில்லாமல் நிகழாதாகையால் – மனத்தில் யதிராஜரை உயர்ந்தவராக நினைத்தலாகிய மாநஸிக மங்களமும் செய்யப்பட்டதாகவே கொள்ளத் தக்கது.
இங்ஙனம் இரண்டு ஸ்லோகங்களால் மங்களம் செய்து மேலே நூலைத் தொடங்குகிறார் மாமுனிகள் என்க.
இங்கும் அமுதார்ய ப்ரபந்ந காயத்ரியின் இரண்டாம் பாசுரமும் அனுசந்திக்கக் கடவது
கள்ளார் பொழில் தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக் கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே.-2-
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –
Leave a Reply