ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –
————–
(கைமுதல் ஒன்றும் இல்லை -நன்மைகள் இல்லாத மாத்திரம் அல்லாமல் தீமைகள் நிறைந்தவன் -குற்றங்களையும் ஆவிஷ்காரம் செய்து -தோஷ பூயிஷத்வம் நிறைந்தவை –
மூர்க்கன் -மூன்று தடவை -(8-9-10-)-வரிசையாக சொல்லிக் கொள்கிறார்
வாக்குத் தூய்மை இல்லை –மூர்க்குப் பேசுகிறான் என்று முனிவாயேலும்–காக்காய் வாயிலும் கட்டுரை கொள்வார் –காரணா -நீயே காரணம் கருடக்கொடியானே – -பெரியாழ்வார்
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேனே மூர்க்கனேனே -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்)
பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களை அநு வர்த்திகைக்கு உண்டான மநோ வாக் காய ரூப கரண த்ரயத்தையும் கொண்டு
1-அவ் விஷயங்களை பரிதவித்து -2-அதில் ஒரு பயமும் இன்றிக்கே-3- விலக்ஷணர் நடுவில் அனுவர்த்தியாத மாத்திரம் அன்றிக்கே-4-அநவரதம் அபராதமே பண்ணிக் கொண்டு போருகையால் உண்டான வியஸன அதிசயத்தால் அருளிச் செய்கிறார் –
(ஓ மண் அளந்த தாடாளா -தண் குடந்தை நகராளா –வரை எடுத்த தோளாளா -வியாஸனம் மிக்கு
பா மறு மூ உலகம் படைத்த பத்ம நாபாவோ–அளந்த பத்ம பாதாவோ -தாமரைக் கண்ணாவோ -தானியேல் -ஓ ஓ ஓ என்று -வியஸனம்)
தேவரீர் சம்பந்திகளை வஞ்சிக்கும் மாத்ரம் அன்றிக்கே தேவரீர் தம்மையும் வஞ்சிக்கப் பெற்றேன் என்கிறார் –
ஹா ஹந்த ஹந்த-இத்யாதியால் –
ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோ அஹம் சராமி சததம் த்ரிவித அபசாரான்
ஸோஅஹம் தவா ப்ரியகர ப்ரியக்ருத் வதேவ
காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –10-
ஸ்ரீ யதி ராஜனே… ஆ ஆ ஐயோ ஐயோ.. நான் மனத்தாலும் செய்கையாலும் சொல்லாலும் சர்வ காலத்திலும் மூன்று வித
அபசாரங்களையும் செய்து கொண்டு உமக்கு பிரியத்தை செய்பவன் போல நடித்திக் கொண்டு
கால ஷேபம் செய்து கொண்டு இருக்கிறேன் ..ஆகையால் நான் மூர்க்கன் .
பதவுரை:-
யதிராஜ – வாரீர் யதிராஜரே,
ய: அஹம் – எத்தகைய அடியேன்,-(தாழ்ந்த விஷயத்தில் அழுந்திய )அடியேன்
மநஸா வாசா க்ரியயா ச – (பகவத் விஷயத்தில் ஆழ்ந்து இருக்கக்கடவ 0மன மொழி மெய்களால்,
த்ரிவித அபசாராந் – பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாரங்களாகிற மூவகைப்பட்ட பாபங்களையும்,
ஸததம் சராமி – இடைவிடாமல் எப்போதும் செய்து வருகிறேனோ,–வர்த்தமான நிர்த்தேசம்
ஸ:அஹம் – அத்தகைய அடியேன்,
தவ – அடியேனிடம் பரம தயாளுவாய்ப் பேரன்பு பூண்ட-(ரக்ஷணத்தில் கிருஷி பண்ணும் -)தேவரீருக்கு,
அப்ரியகர: ஸந் – இஷ்டமல்லாதவற்றையே செய்பவனாய்க் கொண்டு,
ப்ரிய க்ருத்வத் ஏவ – இஷ்டமானவற்றையே செய்பவன் போலே,
காலம் நயாமி – காலத்தைக் கழித்து வருகிறேன்.
ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயோ– கஷ்ட -கஷ்ட தரம் -கஷ்ட தமம்
தத: அஹம் மூர்க்க: அஸ்மி – அதனால் அடியேன் மூர்க்கனாகிறேன்,
தத்வாரய – அந்த மூர்க்கத் தனத்தைப் போக்கி யருள வேணும்.
———-
ஹா ஹந்த ஹந்த மநஸா
பகவத் பாகவத ஆச்சார்யர்களை அனுசந்திக்கக் கண்ட மனஸ்ஸூ படும் பாடே
க்ரியயா
க்ரியா சப்தத்தால் க்ரியா ஹேதுவான காயத்தை லஷிக்கிறது –
ச வாசா
உத்தேஸ்யங்களைக் குறித்து அஞ்சலி பிரணாமாதி அனுகூல விருத்தி பண்ணுகைக்கும் –
தத் குணங்களைப் புகழுகைக்குமாகக் கண்ட காயமும் வாக்கும் அபராதங்கள் பண்ணி அநர்த்தப்படுவதுக்கு உறுப்பாவதே –
சததம் –
ஸ்வரூப அனுரூபமான விருத்தியில் அந்வயித்தவருக்கு கால விசேஷத்தில் விச்சேதம் வருகை
அஸஹ்யமானால் போலே யாய்த்து அந்த அபதார கரணத்திலும் கால விசேஷத்தால் உண்டான விச்சேதம் அஸஹ்யமான படி –
சராமி –
என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே சர்வ அவஸ்தையிலும் அபராதம் அனுவர்த்திக்கிறபடி
த்ரிவித அபசாரான்
ஓர் ஒரு விஷயத்தில் அபராதமே அதி க்ரூரமாய் இருக்க மூன்று அபராதங்களிலும் அந்வயித்த படி –
அது தான் கதி பய அபதாரத்திலே ஸூவறுகை அன்றிக்கே-நாநா வித அபசாரங்களிலும் (முக்காலம் மூன்றுவித அபசாரம் முக்கரணங்களால் )அந்வயித்த படியைப்
பற்ற (ஸர்வ தர்மான் -போல் இங்கு அபசாரான் )பஹு பவன பிரயோகம் பண்ணுகிறது
அஹம் சர்வம் கரிஷ்யாமிக்கு எதிர் தட்டு இருக்கிறபடி
ஸோஹம்
அபராத பண்ணின கையில் அறாத இந்த பாபிஷ்டன்
தவா ப்ரியகர
ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அன்வயித்து வாழ வேணும் என்று இதுக்கு கிருஷி
பண்ணிக் கொண்டு போகும் தேவரீருக்கு
பண்ணின கிருஷியைப் பாழாக்கி அநிஷ்ட கரனாய்ப் போருமவன்-
ப்ரியக்ருத் வதேவ
அர்த்த சித்தி இதுவாய் இருக்க -பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் இவன் அத்தனை
ப்ரேமம் உடையாரும் கைங்கர்ய ருசி உடையாரும் இல்லை -ஆன பின்பு இவனே நமக்குப் பிரிய கரன் -என்று
தேவரீரும் நினைக்கும்படி யாய்த்து வர்த்திப்பது –
ஏவம் காலம் நயாமி
இப்படி க்ரித்ருமமான பரிமாற்றத்தால் காலத்தைக் கழியா நின்றேன்(காலையில் சூதாட்டம் -மஹா பாரதம் –மாலையில் -ஸ்த்ரீ பிராயர் ராமாயணம் –இரவில் சோர பாகவதம் )
யதிராஜ ததோஸ்மி மூர்க்க
ரக்ஷண சாமர்த்தியமும் உடைய தேவரீரும் சன்னிஹிதராய் இருக்க இவ் வஸ்து அபராதத்திலே கை கழிகையாலே
என்னத்தனை மூர்க்கர் இல்லை என்கிறார் –(திருக்குடந்தை ஊரா உனக்கு ஆட்பட்டும் இன்னும் அடியேன் உழல்வேனோ )
தாத்பர்யம்
பகவத் விஷய வ்ருத்தி செய்ய -யோக்கியமான மநோ வாக் காயங்களால்
மூன்றுவித அபசாரங்களையும் -இவையே யாத்திரையாக -செய்து போந்தேனே
ரக்ஷணத்துக்கு கிருஷி பண்ணும் தேவரீருக்கு அநிஷ்டம்
இப்படி இருந்த போதிலும் இவன் அத்தனை கைங்கர்ய ருசி உள்ளார் அல்ல என்று தேவரீருக்கு திரு உள்ளம் படும்படி காலத்தைப் போக்கா நின்றேன்
வியஸன மிகுதியால் ஹா ஹந்த ஹந்தஎன்கிறார்
————
ஹா ஹந்த ஹந்த-
வீப்சையால் விஷாதிசயம் தோற்றுகிறது-
தாம் அத் தலையில் கரண த்ரயத்தாலும் பண்ணுகிற அபராதங்களையும்(உபகாரங்கள் செய்பவன் போல் )வஞ்சனைகளையும் பார்த்து –
அவற்றை விண்ணப்பம் செய்வதற்கு முன்பே துக்கம் இரட்டித்து ஐயோ என்கிறார் –
அபராதங்களைச் செய்வது உபகாரக விஷயத்திலே யாகையாலே பொறுக்க மாட்டிற்று இலர்
மநஸா க்ரியயா ச வாசா –
சகாரம் சமுச்சயார்த்தகம் -அது தானும் ஒரு கரணத்தால் அன்றிக்கே கரண த்ரயத்தாலும் செய்யப் பெற்றேன்
மநஸா க்ரியயா ச
பிரமாதிகமாக அன்றிக்கே சங்கல்ப பூர்வமாயிற்றுச் செய்வது
வாசா
நினைத்த போதே சொல்லில் -அறிந்து பரிஹரிப்பார்கள் என்று நினைத்து -செய்த பின்பாயிற்று சொல்லுவது
(வானில் மீது ஏற்றி அருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தையே -முதலில் அங்கு கூட்டிச் சென்று -ராஜகுமாரன் சிறையில் இருக்க கிரீடம் சாத்தி பின்பு விலங்கை அறுப்பாரைப் போல் -பரபரத்து அங்கு கூட்டிச் சென்று -நித்ய ஸூரிகள் நினைவூட்ட அறுத்து விடுவார்-அதே போல் மனசா வாசா கிரியா இல்லாமல் மனசா கிரியையா வாசா)
வாசா
அது தானும் கூடமாயோ -பிறர் அறிந்ததும் என் வாயாலே காணும்
மநஸா க்ரியயா ச வாசா –
வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் -என்கிறதுக்கு
எதிர் தட்டாய் கிடீர் அடியேன் செய்து இருப்பது –
யோ அஹம் –
பாபிஷ்ட ஷத்ர பந்துச -என்கிறபடியே பாபம் செய்கையிலே பிரசித்தனான அடியேன் —
யோ வஜ்ர பாத (அந்த அம்பு -ராம பாண பிரசித்தம் )-இத்யாதிகளாலே
ய சப்தம் பிரசித்த பராமர்சி இறே
(பாபிஷ்ட ஷத்ர பந்துச-புண்ய க்ருத புண்டரீகாக்ஷன் இருவரும் ஆச்சார்யரால் பேறு பெற்றார்கள் பிரமாணம்)
யோ அஹம் –
இப் பிரசித்தியை இட்டு நிரூபிக்கும் படி காணும் அடியேன் இருப்பது
சராமி –
அனுதாபம் பிறந்து க்லேசிக்கிற தசையிலும் அபராதங்களை செய்கையை தவிருகிறிலேன்
சததம் –
தம் தாம் பிரசித்தியை ஒரு நாளும் கை விடார்கள் இறே –
அபராதங்கள் தான் எவை என்ன –
த்ரிவித அபசாரான்-
மூன்று வகைப் பட்டு இருந்துள்ள அபசாரங்களைக் காணும் அபராதங்கள் இருப்பது என்கிறார் –(முக்கரண – மூன்று வித -மூன்று பேர் இடமும் )
அவை யாவன -1-அக்ருத்ய கரண- க்ருத்ய அகரண -2-3-பகவத் அபசாரமும் -பாகவத அபசாரமும் -4-அசஹ்ய அபசாரமும் -என்று –நிஷித்தங்களை நாலு விதமாகச் சொல்லா நிற்க இங்கு அபராதங்களை மாத்ரம் சொல்லுகிறது –
விதி நிஷேதங்கள் இரண்டும் பகவத் ஆஜ்ஞா ரூபங்கள் ஆகையாலே
தத் அதிக் கிரமம் பகவத் அபசாரத்திலே சேரும் என்னும் அபிப்ப்ராயத்தாலே யாதல்
அக்ருத்ய கரணாத்ய பேஷயா பகவத் அபசாராதிகள் க்ரூரங்கள் ஆகையாலே அவற்றினுடைய அனுஷ்டானத்தைச் சொன்ன போதே
தத் அனுஷ்டானம் கிம் புனர் நியாய சித்தம் இறே என்னும் அபிப்ராயத்தாலே யாதல் –
அங்கன் அன்றிக்கே
மனசேத்யாதிக்கு சேர கரண பேத நிபந்தனமான கார்ய பேதத்தை திரு உள்ளம் பற்றி த்ரிவித அபசாரம் என்கிறார் ஆகவுமாம்
அப்போதைக்கு ஒரொரு அபசாரங்களை கரண த்ரயத்தாலும் அனுஷ்டித்தேன் என்று பொருளாகக் கடவது-
ஸோஅஹம் –
கீழ்ச் சொன்னபடியே அபராதங்களைச் செய்யா விடில் சத்தை பெறாத அடியேன்
தவ-
1-சத்யம் சத்யம் புனஸ் சத்யம் எதிராஜோ ஜகத் குருர் -ச ஏவ சர்வ பூதா நாம் உத்தர்த்தா நாஸ்தி சம்சய -என்கிறபடியே
சர்வ உத்தாரகரான தேவரீருக்கு என்னுதல்-
2-வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித –என்கிறபடியே
பர துக்கம் பொறுக்க மாட்டாத ம்ருது பிரக்ருதிகரான தேவரீருக்கு என்னுதல்
அப்ரிய கர –
உபகாரத்தைப் பார்த்தாலும் -சௌகுமார்யத்தைப் பார்த்தாலும் பிரியமே செய்யத் தக்க விஷயத்தில் அப்ரியத்தைச் செய்யா நின்றேன் –
சிஷ்யன் ஆசார்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் என்கைக்கு எதிர்தட்டாய் யாயிற்று அடியேன் நிலை என்கிறார்
அப்ரியகர-
நெஞ்சாலும் அபிரியம் நினைக்க ஒண்ணாத விஷயத்தில் கிடீர் அடியேன் அபிரியத்தை காயிகமாகச் செய்வது என்கிறார்
ஆகில் நம் முன் நிற்கும் விரகு என் என்ன
ப்ரியக்ருத் வத் –
தேவரீர் திரு உள்ளம் அறிய தேவரீருக்கு அபிரியம் செய்தேனே யாகிலும் -அது தேவரீர் திரு உள்ளத்தில் தட்டாத படி
தேவரீர் திரு உள்ளத்தாலே பிரியம் செய்வான் போலே வர்த்தித்தேன் –
அது கொண்டு தேவரீர் திரு முன்பே நிற்கலாய்த்து என்கிறார் –
ராவணன் சந்நியாசி வேஷத்தைக் கொண்டு பிராட்டியை வஞ்சித்தால் போலே அடியேன் சாத்விக வேஷத்தைக் கொண்டு
தேவரீரையும் வஞ்சித்தேன் என்று கருத்து
ஏவம் காலம் நயாமி –
இப்படி ஆசார்ய அபசாரம் பண்ணாது ஒழியில் அடியேனுக்கு காலம் செல்லாது என்கிறார்
கால மேவம் நயாமி
குணானுபவ கைங்கர்யங்களே போது போக்கு ஆகையும்-முமுஷுப்படி -என்கிறபடியே குணானுபவ கைங்கர்யங்களாலே
போக்கத் தக்க காலத்தைக் கிடீர் அடியேன் அவ் விஷயங்களை வஞ்சித்து அதுவே யாத்ரையாகப் போக்குகிறது என்கிறார் –
யதி ராஜ-
இவர் இப்படி விண்ணப்பம் செய்தவாறே இவர் செய்த அபராதங்களை தம் திரு உள்ளத்திலே தட்டாமல்
ஸ்வ அபராதங்களை அறிந்து -அனுதவித்து- பிராப்த விஷயத்தில் அவற்றை விண்ணப்பம் செய்யும் படி ஓர் அதிகாரியும் உண்டாவதே -என்று
இவர் திரு உள்ளம் உகந்து இருக்கும் படி இருக்கும் இருப்பைக் கண்டு -யதி ராஜ -என்று சம்போதிக்கிறார்-
அன்றிக்கே –
இவர் அனுதாபத்தைக் கண்டு இவர் இவ் வபசார கரணத்தில் நின்றும் மீண்டாராகும் விரகு ஏதோ வென்று
தம் திரு உள்ளத்தில் ஓடுகிற படி தோற்ற இருக்கும் இருப்பைக் கண்டு ஆஸ்ரித விஷயத்தில் உஜ்ஜீவன யத்னமே யன்றோ
தேவரீருக்கு புகர் என்று -ஸ்ரீ யதி ராஜ -சப்தத்தாலே சம்போதிக்கிறார் ஆகவுமாம் –
இப்படி சாநுதாபமாக ஸ்வ அபராதங்களை விண்ணப்பம் செய்த பின்பும் அபசாரங்களிலே அன்வயிக்கிற படியைக் கண்டு –
அபசாரங்கள் என்று அறிந்து வைத்து அவற்றில் அன்வயிக்கப் பெறுவதே என்று
ததோஸ்மி மூர்க்க —
ஆகாது என்று அறிந்து வைத்து அவை தன்னையே செய்கையால் இறே அடியேன் மூர்க்கன் ஆகிறது என்கிறார் –
நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகரு மாமிவரை -ஓர்த்து நெஞ்சே
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச்
சொன்னவரை நாளும் தொடர்———68-
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப்
பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே –தன்னெஞ்சில்
தோற்றினதே சொல்லி இது சுத்த யுபதேச பர
வார்த்தை என்பார் மூர்க்கராவார்——-71-
—————–
பிரியமானவன் போல் ஏவ -அவதாரணம் -ஆபிராம் செய்தொமோ என்ற மனதில் தோன்றாதபடியே காலம் போக்கி உள்ளேன்
பெருமாள் திருவடிகளே சரணம் -ஹிதம் -நம்மை ரக்ஷிப்பதுக்கு வேறே ஒன்றும் இல்லை -உறுதியாக இருப்பார்கள் பிரபன்னர்கள் – பிரியமான கைங்கர்யம் செய்வதிலேயே கால ஷேபம் செய்வார்கள்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் செய்யாமல் இவ்வாறு செய்வதால் துக்கம் அதி பூமி -துக்க த்ரயம் –
அபசார த்ரய அனுசந்தானாம் -தத் ப்ரயுக்த துக்கத்த்ரயம் -ஹா ஹந்த அந்த-
பகவத அபசாரம் -ஹா
பாகவத அவசரம் ஹந்த
அஸஹ்யா அபசாரம் -ஹந்த
கவலை படாமல் இருப்பதே மூர்க்கன் -அத்தைப் போக்கி அருள பிரார்திக்கிறார்
மனத்தின் தீய செயல்களையும் (தீய சிந்தனையையும்) அதற்குக் காரணமான மூர்க்கத் தனத்தையும் போக்கி யருள வேணும் என்கிறார். ‘நித்யம் யதீந்த்ர’ (4) என்னும் ஸ்லோகத்தில்
மன மொழி மெய்களைக் குறிப்பிட்டபடியால், வ்ருத்த்யாபஸு(7), துக்காவஹோSஹம் (8), நித்யந்த்வஹம் (9), ஹா ஹந்த ஹந்த (10) என்கிற இந்த நான்கு ஸ்லோகங்களிலும் மன மொழி மெய்களைக் குறிப்பிட்டிருந்த போதிலும்,
ஏழு எட்டாம் ஸ்லோகங்களில் வ்ருத்த்யா என்றும் துஷ்டசேஷ்ட: என்றும் முதலில் குறிப்பிட்டதை யொட்டி மெய்யின் செயலையும்,
ஒன்பதாம் ஸ்லோகத்தில் ‘குரும் பரிபவாமி’ என்று முதலில் குறிப்பிட்டதனால் வாக்கின் செயலையும்,
பத்தாம் ஸ்லோகமான இதில் ‘மநஸா’ – என்று முதலில் கூறியதனால் மனத்தின் செயலையும் ப்ரதாநமாக நினைக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்கிறார் உரையாசிரியரான அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.
பகவதபசாரமாவது – ஸ்ரீமந்நாராயணனை ப்ரஹ்ம ருத்ராதிகளோடு ஸமாநமாக நினைக்கையும், ராமாத்யவதாரங்களை வெறும் மநுஷ்யராக நினைக்கையும், அர்ச்சாவதாரங்களைக் கல்லாகவும் செம்பாகவும் நினைக்கையும் பிறவும் ஆம்.
பாகவதாபசாரமாவது – தனது தந லாபத்திற்காகவும், சந்தனம் புஷ்பம் பெண்கள் ஆகியவற்றிற்காகவும் ஸ்ரீவைஷ்ணவர்க்குப் பண்ணும் விரோதம் ஆகும்.
அஸஹ்யாபசாரமாவது – ஒரு காரணமுமின்றியே யிருக்க, பகவான் என்றாலும், பாகவதர்களென்றாலும், பொறாமலிருக்கையும், ஆசார்யாபசாரமும் தொடக்கமானவையாகும்.
இதன் விரிவு ஸ்ரீவசந பூஷணத்தில் காணத் தக்கது.
மூன்று அபசாரங்களைத் தாம் செய்வது தமக்கு வருத்தம் தருவதென்பதை ஹா, ஹந்த, ஹந்த என்று மூன்றிடைச் சொற்களால் குறித்தருளினர் என்க.
ஆறாவது ஸ்லோகத்திலுள்ள ‘தத்வாரய’ என்பதனை இப் பத்தாம் ஸ்லோகம் வரையில் கூட்டிப்பொருள் உரைக்கப்பட்டது.
தொண்டரடிப் பொடிகள் திருமாலை முப்பத்திரண்டாம் பாசுரத்தில் ‘மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே’ என்று மூன்று தடவைகள் தம்மைப் பற்றிக் குறிப்பிட்ட மூர்க்க ஸப்தத்தை, இதில் மாமுனிகள் எட்டு ஒன்பது பத்தாம் ஸ்லோகங்களில் தம்மைப் பற்றிக் குறிப்பிட்டருளினார் என்பர் இதன் உரையாசிரியர்.
————————————————————————–———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –
Leave a Reply