ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–6- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள்/–வியாக்யானம்–

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

—————–

ப்ராப்ய ருசியை யுடையராய் -புறம்புள்ள போக்யங்களில் நசையற்ற ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வார் அன்றோ
நம்மை அனுபவிப்பவர்களாகச் சொன்னீர் -உமக்கும் இரண்டும் உண்டோ-என்ன –
ஏகதேசமும் ப்ராப்ய ருசி அற்று இருக்கிறபடியையும் –
இதர விஷய ருசி கொழுந்து விட்டு வளருகிற படியையும் விண்ணப்பம் செய்து
இவ்விரண்டுக்கும் அடியான பாபத்தைப் போக்கி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்

கீழ் சரணம் என்று பிரஸ்துதமான உபாய க்ருத்யம் இஷ்ட ப்ராபணமும் அநிஷ்ட நிவாரணமும் யாகையாலே-ப்ராபணமான இஷ்டத்தை மூன்று ஸ்லோஹங்களாலே விண்ணப்பம் செய்து-

மேல் ஸ்லோஹ சப்தகங்களாலே(6-12)
நிவர்த்த நீயமான அநிஷ்டத்தை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு
தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும்
தோஷ பூயஸ்வத்தையும் விண்ணப்பம் செய்கிறார் –

அதில் பிரதமத்தில்
நீர் திரு மந்த்ரத்தினுடைய பத த்ரயார்த்த நிஷ்டையை பிரார்த்தியா நின்றீர் –
உமக்கு இதில் பிரேமமும்-தத் இதரங்களில் அருசியும் உண்டோ என்ன -அடியேனுக்கு இவை இரண்டும் இல்லை-தேவரீரே இவற்றையும் உண்டாக்கித் தர வேணும் என்கிறார்

அன்றிக்கே –
அஷ்டாஷாக்ரய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர விதராத்ய -என்றவாறே
உமக்கு இது இல்லையோ என்ன-இல்லை என்கிறார் ஆகவுமாம் –

அல்பா அபி மே ந பவதீய பதாப்ஜ பக்தி
சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா
மத் பாபமேவ ஹி நிதான மமுஷ்ய நாந்யத்
தத் வாரய ஆர்ய யதிராஜ தயைக சிந்தோ –6-

ஆர்ய யதிராஜ தயைக சிந்தோ-மூன்றும் விழிச் சொற்கள்

கருணை ஒன்றே நிரம்பிய சமுத்திரமே–உத்தம ஆச்சர்யரே–ஸ்ரீ யதி தலைநாதனே
எனக்கு தேவருடைய திருவடி தாமரைகளில் பக்தி எனபது கொஞ்சம் கூட இல்லை
புலன் விஷயங்களில் ஆசை தினம் தோறும் வளர்கிறது –என் செய்கேன் பாபியேன்
என் பாபம் தான் மூல காரணம் -மற்று வேறு காரணம் இல்லை தேவரீர் தடுத்து தகைய வேணும்..

பதவுரை:-

தயா ஏக ஸிந்தோ – தயை என்னும் நீர் வற்றாத ஒப்பற்ற கடலே,

ஆர்ய – ஆசார்யரே,-ரக்ஷண உபயோகியான ஞான சக்திகளில் பூர்ணரான

யதிராஜ – எதிகட்கு இறைவரான எம்பெருமானாரே,

மே – -ஸப்தாதி விஷயங்களில் சபலனான அடியேனுக்கு,

பவதீய பதாப்ஜ பக்தி: – தேவரீருடைய திருவடித் தாமரைகளில் ஆசையானது,-ஸ்நேஹ பூர்வ இடைவிடாமல் சிந்தனையே பக்தி

அல்பா அபி – சிறிது கூட,

 (அஸ்தி) – இல்லை,

ஸப்த ஆதி போக ருசி: – ப்ராப்தமான தேவரீர் திருவடித் தாமரைகளை மறைக்க வைக்கும் ஸப்தம் ஆகியவற்றை (தாழ்ந்த பொருள்களிலுள்ள சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றிவற்றை) அநுபவிப்பதில் ஆசையானது,

அந்வஹம் – ஒவ்வொரு நாள்களிலும்,

ஏததே – வளர்ந்து வருகிறது,

ஹா – கஷ்டம்,

அமுஷ்ய – தகுந்த விஷயத்தில் ஆசை சிறிதுமில்லாமையும் தகாத விஷயத்தில் ஆசை பெருகி வருவதுமாகிய இதற்கு,

நிதாநம் – மூல காரணம்,

மத் பாபமேவ (பவதி) அடியேனுடைய அநாதியான பாபமே ஆகும்.

அந்யத் ந – வேறொன்றுமன்று,

தத் – அந்த பாபத்தை,

வாரய – போக்கி யருள வேணும்.-அந்த பாபங்கள் பலன்களைப் போக்கி அருள வேணும்

———-

அல்பா அபி மே ந பவதீய பதாப்ஜ பக்தி-
தேவரீர் திருவடித் தாமரைகளில் பூர்ண பக்தி இல்லாத மாத்திரம் அன்றிக்கே அத்யல்ப பக்தியும் இதர விஷய ப்ரவணனான எனக்கு இல்லை –
ஆனுகூல்ய லேசம் இல்லை என்றாலும் பிரதிகூல நிவ்ருத்தி தான் உண்டாக வேணும் இறே –அதுவும் எனக்கு இல்லை என்கிறார் –

சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா-
தேவரீர் திருவடிகளில் அனுபவத்துக்கு விரோதியான சப்தாதி விஷய அனுபவ ரஸ்யதை(ஸ்ரத்தை ) வர்த்திஷ்ணுவாய்ச் செல்லா நின்றது –
இத்தால் த்ருதீய பதார்த்த நிஷ்டா விரோதி சொல்லிற்று –

இவ் விரண்டும் (ப்ராப்த விஷய ப்ராவண்ய அபாவத்துக்கும் -அப்ராப்த விஷய ப்ராவண்யத்துக்கும்)அடி எது என்ன

மத் பாபமேவ ஹி நிதானம் அமூஷ்ய நாந்யத்
ப்ராப்த விஷய ப்ராவண்ய அபாவத்துக்கும் -அப்ராப்த விஷய ப்ராவண்யத்துக்கும் காரணம்
பாபியான என்னுடைய துஷ் கர்மம் இறே(பாவமே செய்து பாவி ஆனேன் -சுழற்சி )
அவதாரணத்தாலே ஹேத்வந்தரத்தைக் கழிக்கிறது

ஹி-சப்தம்
இவ் வர்த்தத்தினுடைய ப்ரஸித்தியைச் சொல்கிறது

நாந்யத்
ஈஸ்வர ஸ்வா தந்தர்யம் இதுக்கு ஹேது அன்று -(ஆழ்வாரை இங்கே வைத்தது போல் அன்றே )
அவன் உஜ்ஜீவனத்துக்கு ஹிருஷீ பண்ணுகிறவன் ஆகையால் –(பக்தி உழவன் அன்றோ
கர்மமும் கிருபையும் -அவன் அனுமதியால் கர்மமும் –இவன் அனுமதியால் பேறும் என்று மாறாடி நினைக்கக் கூடாதே )

உம்முடைய கர்ம தோஷத்தால் வந்ததாகில் நம்மால் செய்யலாவது உண்டோ என்ன
என்- செய்யலாவது இல்லையோ –
அத்தை அடியேன் அளவில் கிட்டாதபடி தகைந்து அருள வேணும்
நாம் அதுக்கு சக்தரோ என்ன

தத் வாரய ஆர்ய யதிராஜ தயைக சிந்தோ –
ஆர்ய-
செய்யும் விரகு அறிகைக்குத் தக்க அறிவு இல்லையோ

யதி ராஜ
அறிந்தபடி செய்ய வல்ல சக்தி இல்லையோ
ஜிதேந்த்ரியர்களான சன்யாசிகளுக்குத் தலைவர் ஆகையால் அபிமான அந்தர் பூதருடைய பாபத்தைப்
போக்குதற்கு சக்தியில் குறை இல்லை

(அதிகாரம் இல்லாதவருக்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டும்
அப்போது ஒரு சிந்தை செய்தே -போக்க வல்லவர் அன்றோ நீர்)

தயை ஏக சிந்த்யோ
அந்த ஞான சக்திகளை ரக்ஷண உபயோகியாக நடத்தும் கிருபைக்கும் சங்கோசமும் உண்டோ(தயை இல்லாவிடில் ஞான பலாதிகள் தோஷம் ஆகுமே -தயா சதகம் )
அஸ்ய தயை ஏக சிந்த்யோ -என்று விசேஷஜ்ஞர் ஆழங்கால் படும்படி அன்றோ கிருபா பிராஸூர்யம்(காரேய் கருணை ராமானுசா )
ஏக சப்தத்தால்
காரணாந்தரங்களை தடவிப் பிடிக்க வேண்டும் படி சொல்கிறது-

தாத்பர்யம் –
இதர விஷய ப்ராவண்யம் பூர்ணமாகவும்
ப்ராப்த விஷய தேவரீர் திருவடிகளில் பக்தி அதி அல்பமும்
இவ்வாறு அனுகூல அம்ச லேஸமும் இன்றி பிரதிகூல ப்ராவண்யம் வளர்ந்து கொண்டே இருக்கும் நீசனான அடியேனுக்கு
ஞான சக்தி உபயோகி கொண்ட -தயாரிக்க சிந்துவான தேவரீர் பாபியான துஷ்கர்ம பலன்கள்
அடியேன் அளவு கிட்டாதபடி அருள வேண்டும்

————–

அல்பாபீத்யாதி
பிராப்தியையும் -போக்யதையும் விசாரித்தால் பரி பூரணமாக ப்ரேமம் செய்ய வேண்டும் விஷயத்தில்
அடியேனுக்கு அல்பாம்சமும் பிரேமம் இன்றிக்கே ஒழிவதே என்று இன்னாதாகிறார்
அல்பாபி
அப்ராப்த விஷயங்களில் பரி பூரணமான பிரேமத்தைச் செய்யும் அடியேனுக்கு
பிராப்த விஷயத்தில் ப்ரேமம் அல்பாம்சமும் இன்றிக்கே ஒழிவதே என்கிறார்

மே-
அப்ராப்தனாய் இருந்து வைத்து செய்யாது ஒழிந்தேனோ –
பிராப்தனாய் இருந்து வைத்து காணும் செய்யாது ஒழிந்தது காணும் -என்கிறார்
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே –ஸ்ரீ பகவச் சாஸ்திரம்-ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் -இறே

மே
தேவரீர் திருவடிகளிலே நிரவதிகமான ப்ரேமம் செய்யக் கடவ வம்சத்தில் பிறந்த அடியேனுக்கு என்னுமாம்

பவதீய
அடியேனுடைய உஜ்ஜீவனத்தில் கிருஷி பண்ணுகிற தேவரீர் சம்பந்திகளான -என்னுதல்–
பிராப்தரான தேவரீர் சம்பந்திகளான -என்னுதல்-

உபகாரகர் அன்று என்று ஆறி இருக்கலாமோ –
அப்ராப்தர் என்று ஆறி இருக்கலாமோ -என்கிறார்

பதாப்ஜ பக்தி
ஸ்வரூப அனுரூபமான திருவடித் தாமரைகளில் பக்தியானது –
பதாப்ஜ-
போக்யதை இல்லை என்று ஆறி இருக்கலாமோ என்கிறார்

நாஸ்தி
இத்தால் பக்தியில் ஸ்வல்ப அம்சமும் இல்லை என்று பக்தி சப்த வாச்யத்தினுடைய த்வம்ச பிராக பாவங்களைச் சொல்லுகை யன்றிக்கே அத்யந்த அபாவத்தை சொல்லுகிறது(இல்லாமை -முதலிலே இல்லை- இருந்து அழிந்து போனது -அத்யந்த அந்யோன்ய அபாவம்-நான்கும் உண்டே )

அன்றிக்கே –
பவதீய பஜாப்ய பக்தி –
நல்லார் பரவும் -44- என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே
கரண த்ரயத்தாலும் சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும்
சமஸ்த வித கைங்கர்யங்களைப் பிரார்த்திதுச் செய்ய வேண்டும் விஷயமாய்
தேவரீர் சம்பந்திகளான ஸ்ரீ ஆழ்வான் முதலானோர் திருவடிகளில் பக்தியானது
அடியேனுக்கு அல்பாம்சமும் இல்லை என்னவுமாம்
ஆக பிரதம பாதத்தால் பிரதம பதார்த்தம் இல்லை என்கிறது –

(சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்
நல்லார் பரவும் இராமா னுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே.–44-)

இவர் இப்படி சாநுதாபமாக (தாபம் -அநு தாபம் நினைந்து நினைந்து தாபம் படுவது )விண்ணப்பம் செய்தவாறே –
உமக்கு நம்மிடத்தில் பக்தி இல்லையாகில் உண்டாக்கித் தருகிறோம்
இதர விஷயங்களில் அருசி தான் உண்டோ என்ன -அதுவும் இல்லை என்கிறார் மேல்
சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா -என்று
சப்தாதி விஷய அனுபவத்தில் கிடீர் அடியேனுக்கு ப்ரேமம் உண்டாகிறது -என்கிறார் –

போக ருசி
விஷயம் போலே தானும் ஸ்லாக்யமாய் இருக்கை-அஸ்லாக்யமாக இருந்தாலும் –

அன்வஹம்
அது தன்னில் ஒரு கால் உண்டாய் கழிகை யன்றிக்கே தினம் தோறும் உண்டாகா நின்றது -என்கிறார்

ஏததே
அது தன்னிலும் -ஒருபடிப் பட்டு இருக்கை யன்றிக்கே ஸ்வயம் பிரயோஜனமாக
அபி விருத்தம் ஆகா நின்றது என்கிறார் –

அல்பா அபி மே ந பவதீய பதாப்ஜ பக்தி சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா
விரோதி வாசனையும் இல்லாமையாலே சப்தாதி விஷயத்தில் பிரேமமானது அகுதோபயமாக அநு தினம்
அபிவிருத்தமாகா நின்றது என்கிறார்

அன்வஹம் ஏ ததே
அஹோ ராத்ரங்களை இரண்டையும் சொல்லாமல் அஹஸ் சை மாத்ரம் சொன்னது
பகல் முப்பதும் ஆசையை வளர்த்து
இரா முப்பதும் அனுபவித்தாலும் விடிய விடிய ஆசை வளரா நிற்கையாலே –

ஹா
பிராப்த விஷயத்தில் ருசி அல்பாம்சம் இல்லாமையையும் –
அப்ராப்த விஷயத்தில் அநு தினம் அபிவிருத்தம் ஆகிறபடியையும் நினைத்து ஐயோ என்று கிலேசிக்கிறார் —
இத்தால் சரம பதார்த்தம் இல்லை என்கிறது –

நீர் இப்படி கிலேசிப்பான் என்-இவை இரண்டுக்கும் அடி ஆராய்ந்து பரிஹரிக்கலாகாதோ என்ன –
அது பிரசித்தம் அன்றோ என்கிறார் –
மத் பாபமேவ ஹி நிதான மமுஷ்ய –
இவை இரண்டுக்கும் அடி அடியேன் பண்ணி வைத்த பாபமே யன்றோ என்கிறார்
மத் பாபம் என்று
தாம் அறிந்ததாகச் சொல்லுகையாலே ப்ராமாதிகத்தை (கவனக்குறைவால் )வ்யாவர்த்திக்கிறது
ஏவ காரத்தாலே
த்விஷந்த பாப க்ருத்யாம்-ஷாட்யாயன ஸ்ருதி -என்கிறபடியே -ப்ராப்தமான சங்க்ராந்த பாபத்தை வ்யாவர்த்திக்கிறது
மத் பாபம் -என்று தாம் அறிந்ததாகவும் -தாம் செய்ததாகவும் தோற்றுகையாலே-அவை இரண்டும்
சந்திக்தம் -தள்ளி ஏவ காரத்திலே வ்யவச்சேதிக்கப் படுகிறது –

பாபமாகில் பிராயச் சித்த விநாச்யமாய் யன்றோ இருப்பது –
நீர் பிராயச் சித்தங்களைப் பண்ணி போக்கிக் கொள்ளலாகாதோ என்ன
அடியேனுக்கு கர்த்ருத்வம் உள்ளது பாபங்களிலே யாகையாலே பிராயச் சித்தங்களிலே அன்வயிக்க அவசரம் இல்லை என்று
பிராயச்சித்த அந்வய அநவகாசம் ஆகவுமாம் –
இத்தால் பிராயச்சித்த அந்வய அவகாச அசஹமான பாபமே காரணம் -என்கிறது –

மத் பாபம் என்கையாலே
லௌகிக பாபம் போலே அனுபவ விநாஸ்யமாதல் பிராயச்சித்த விநாஸ்யமாதல் அன்றிக்கே
ஸ்வ ப்ரவ்ருத்தி சாமான்யத்துக்கு காரணமாய் -அனுபவ அநு தின வர்திஷ்ணுவாய் இருக்கும்
பாபம் என்று
பாப வைஷண்யத்தைச் சொல்லவுமாம் –

அன்றிக்கே –
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ் தின சம்சய -சுந்தர -38-46-என்கிறபடியே –(அம்மான் இருக்க அம்மானைக் கேட்டது சிறியது -இளைய பெருமாள் இடம் அபசாரம் மஹத் )ஜ்ஞாதாம்சம் அல்பமாய்
அஜ்ஞ்ஞாதாம்சம் பஹூவாய் இருக்கும் பாபம் என்னவுமாம்

ஹி
இவ் வர்த்தம் அடியேன் சொல் கொண்டு அறிவது அன்றிக்கே ஜகத் விதிதமாய் யன்றோ இருப்பது -என்கிறார்

நிதானம்
பாப சேஷத்தால் பிறந்த பாபம் அன்றிக்கே பாபங்களுக்கு எல்லாம் மூலமான பாபம் -என்கிறார் –
நிதாநந்தவாதி காரண -அமரம் -இறே(நிதானம் து ஆதி காரணம் )

அமூஷ்ய
இம் மகா அனர்த்தத்துக்கு-இது ஒழிய மற்று ஓன்று காரணமோ என்கிறார்
பாப விஜாதீயமான ஸ்ரீ ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம் ஆனாலோ என்ன

நாந்யத்
ஸ்ரீ ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம் -அன்று -என்கிறார் –
பரம தயாளுவான ஸ்ரீ ஈஸ்வரனுக்கு பர அனர்த்த அவஹமாய் இருப்பதொரு ஸ்வாதந்த்ர்யம் உண்டோ என்று கருத்து –
இத்தால் மத்யம பதார்த்தம் இல்லை என்கிறது –
ஆகில் நிலை நிற்குமே என்ன -நிவாரகர் இல்லாமையோ நிலை நிற்பது -என்ன -ஆகில் நிவாரகர் ஆர் என்ன –

தத் வாரய
பிராயச் சித்த அனுபவங்களால் நசிக்கை யன்றிக்கே -அநு தின வர்திஷ்ணுவாய் பிரசித்தமான
அப் பாபத்தை தேவரீரே போக்கி யருள வேணும் -என்கிறார்

வாரய
தேவரீருக்கு அசக்யமானது ஓன்று உண்டோ என்று விதிக்குத் தாத்பர்யம் -என் கொண்டு இந் நிர்பந்தம் என்னில்

ஆர்ய யதிராஜ தயைக சிந்தோ
1-பாபத்தைப் போக்கும் விரகு அறிகைக்கு தேவரீர் சர்வஜ்ஞ்ஞர் அல்லீரோ –
2-அஸூத்தரையும் ஸூத்தராக்க வல்ல சக்தி உடையீர் அல்லீரோ
3-இது இஷ்டமாய் இருக்குமவர் அல்லீரோ –
4-பர துக்கம் பொறுக்கைக்கு கிருபை உடையீர் அல்லீரோ
அடியேன் பாபத்தைப் போக்கி யருளாமைக்கு -என்கிறார் –

ஆர்ய
அடியேன் பாபத்தைப் போக்கும் விரகு அறிகைக்கு போரும்படி சர்வஜ்ஞ்ஞர் ஆனவரே -என்கிறார்

யதிராஜ
அறிந்தபடி செய்கைக்கு தக்க சக்தியை உடையவராய் -அத்தாலே விளங்குமவரே என்கிறார்
பிரகாசம் இஷ்ட சித்தி அதீநம் ஆகையாலே இது இஷ்டமாய் இருக்குமவர் என்கிறார்

தயைக சிந்தோ
ஜ்ஞான சக்திகள் இரண்டும் கார்யகரமாம் படி தயா குணம் உடையவரே -என்கிறார்

தயைக சிந்தோ
ஸ்ரீ ராம பாணம் போலே தயை குறி யழியாமல் கிடப்பது தேவரீர் இடத்திலே என்கிறார்
தயைக சிந்தோ
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை -25-என்கிறபடியே அபரிச்சின்னமான தயா குணம் உடையவரே என்கிறார்
இதில் த்ருதீய பாதத்தாலே ஆகிஞ்சன்யத்தைச் சொல்லுகிறது –(மத்யம பதார்த்தம் நமஸ் இல்லை என்றார் கீழ் -ஆகிஞ்சன்யமே நான் எனக்கு அல்லேன் என்பது )

(காரேய் கருணை இராமானுச,இக் கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ யென்னை உய்த்த பினுன்
சீரே யுயிர்க் குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே.–25-)

———-

நித்யம் யதீந்த்ர’ என்ற நான்காவது ஸ்லோகத்தில், அடியேனுடைய மனம் தேவரீர் திருமேனியை நினைப்பதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும். வேறொன்றை எண்ணுவதில் பராமுகமாக இருக்கட்டும்’ என்று அருளியதனால், இப்பொழுது தமது மனம் அப்படியில்லாமல் நேர் முரணாக இருப்பதனைக் குறிப்பாக உணர்த்தினாரல்லவா ? இத்தகைய முரண்பாட்டை, அதன் காரணமான பாபத்தோடு கூடப் போக்கி யருள வேணுமென்கிறார் இந்த ஸ்லோகத்தினால்.யதார்த்தம் மாற்றி ஆசைப்பட்டதை அருள வேணும் -அதுவே ஸ்வரூப அநு ரூபம்

தயையாவது – தனது பயனொன்றையும் எதிர்பாராமல் பிறர்துன்பம் கண்டால், தானும் ‘ஐயோ இப்படி துன்பப்படுகிறானே’ என்று துன்பப்படுகை. அத்தகைய தயையாகிய நீர் வற்றாத கடல் போன்றவர் எம்பெருமானார். ‘ஒப்பற்ற’ என்பதனால், எம்பெருமானாகிய கடலில் தயையாகிய நீர் வற்றினாலும் வற்றும், எம்பெருமானாராகிய கடலில் தயை வற்றாது என்பது கருதப்பட்டது.

ஆர்ய ஸப்தம் (1) ஆசார்ய ஸப்தத்தோடு ஒரே பொருளை யுடையதாய்க் கொண்டு அறியாத தத்வ ஹித புருஷார்த்தங்களை அறிவிப்பதன் வாயிலாக மோக்ஷத்திற்குக் காரணமாகிறார் எம்பெருமானாரென்று அறிவிக்கிறது.குரு அஞ்ஞானம் போக்கி மோக்ஷம் அளிப்பவர் -சரம குரு நிர்ணயம் பார்த்தோம்

(2) ஆராத் யாதி இதி ஆர்ய: என்ற வ்யுத்பத்தியின் மூலமாக, வேதத்தில் கூறிய நல்ல வழியின் அருகிலும், கெட்டவழியின் தொலைவிலேயும் செல்லுமவர் என்று பொருள்பட்டு, எம்பெருமானார் பரம வைதிகர் என்பதைக் காட்டுகிறது. ஆராத் – அண்மையும் சேய்மையும். (3) அர்யதே – ப்ராப்யதே – அடையப் படுகிறார் என்று பொருள்பட்டு, எல்லாராலும் வீடு பேற்றிற்காக அடையப்படுமவர் எம்பெருமானார் என்ற கருத்தை புலப்படுத்துகிறது.

வருத்தம் வியப்பு என்னும் இரண்டையும் குறிக்கின்ற ஹா என்ற இடைச் சொல் – முறையே – தக்க பொருளில் ஆசை யின்மையும், தகாத பொருளில் ஆசை யுடைமையும் தமக்கு வருத்தத்தைத் தருகிறது என்றும், குறைந்த ஸுகத்தைத் தரும் ஸப்தாதி விஷயங்களையே விரும்பி, -(ஸப்தாதி -ஆதி சப்தம் ஸ்வர்க்காதிகளில் ப்ராவண்யம்) -மிகவும் அதிகமான ஸுகத்தை உண்டு பண்ணும் எம்பெருமானார் திருவடிகளை விரும்பாமலிருப்பது தமக்கு வியப்பைத் தருகிறது என்றும் இரண்டு கருத்துகளைத் தெரிவிக்கும்.

மத்பாபமேவ – நான் செய்த பாபமே, நிதாநம் – மூல காரணம்’ என்பதனால் – பக்திமான்களைப் பகைப்பதனால் அப் பக்திமான்கள் பக்தராவதற்கு முன்பு செய்த பாபங்களை எம்பெருமான் அவர்களைப் பகைப்பவர்கள் மேலே ஏறிடுவதுமுண்டு. அப்படி அடியேன் மேலேறிட்ட பாபமன்று, அடியேனே செய்த பாபம் மூல காரணம் என்று தெரிகின்றது.பவதி -பதம் சேர்த்துக் கொள்ள வேண்டும் -அத்யாஹாரம்

அந்யத் ந’ – வேறொன்றுமன்று என்பதனால் – ஸர்வேஸ்வரன் தனது ஸ்வதந்த்ரத் தன்மையினாலோ, அடியேனை யிட்டு விளையாட எண்ணியதனாலோ அடியேன் தகாத பொருளில் ஆசையும் தக்க பொருளில் ஆசை யில்லாமையும் உடையவனாயிருக்கிறேனல்லேன்; பின்னையோ வென்னில் அடியேன் செய்த பாபத்தினாலேயே இப்படி இருக்கிறேன் – என்பது குறிப்பிடப்படுகிறது.

—————–————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading