அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா
பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–
————————————————————————————————————-
மூன்றாம் அத்யாயம் -சாதனா அத்யாயம்-இரண்டாம் பாதம் –உபய லிங்க பாதம் -8 அதிகரணங்கள்-40 ஸூத்ரங்கள்
குற்றம் குறை அற்றவன் -அளவற்ற திருக் கல்யாண குணங்களை கொண்டவன் தாழ்வு அற்றவன் -என்கிறார் இதில்-
——————————————————————————-
முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்– 6 ஸூத்ரங்கள்-கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன -எனபது நிரூபிக்கப் பட்டுள்ளது-
இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-
மூன்றாவது அதிகரணம் -கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் — 1 ஸூத்ரம்–உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது –
நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் – 1 ஸூத்ரம்- விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-
ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் -15 ஸூத்ரங்கள்–அத்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-
ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் -4 ஸூத்ரங்கள்–ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன -அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –
ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் -7 ஸூத்ரங்கள்–ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும் இவனை
தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது –
எட்டாவது அதிகரணம்-பலாதிகரணம் – 4 ஸூத்ரங்கள்-கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது
————————————————————————————————————————————-
முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்
கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன -எனபது நிரூபிக்கப் பட்டுள்ளது
———————————————————-
3-2-1-சந்த்யே சிருஷ்டி ஆஹஹி
கனவு நிலையில் உள்ளதைப் பற்றி ப்ருஹத் உபநிஷத் -4-3-10-ந தத்ர ரதா ந ரதயோகா ந பந்தா நோ பவந்தி அத ரதான்
ரதயோகான் பத –ஸ்ருஜதே ந தத்ர ஆனந்தா முத பிரமுதோ பவந்தி அத ஆனந்தான் முத
ப்ரமுத ஸ்ருஜதே ந தத்ர வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்யோ பவந்தி அத வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ச ஹி கர்த்தா
சந்த்யம் -கனவில் உள்ள இடம் /ச ஹி கர்த்தா -அவனே செய்கிறான் -படைப்பவன் ஜீவனா பரமாத்மாவா பூர்வ பஷி ஜீவன் என்பார்-
—————————————————————————————————————-
3-2-2-நிர்மாதாரம் ச ஏகே புத்ராய ச
கட உபநிஷத் –5-8–ய ஏஷூ சுப்தேஷூ ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண-என்கிறது விரும்பியவற்றை தூங்கும்பொழுது தானே படைக்கின்றான் -பூர்வ பஷி
விரும்பியவற்றை -புத்ராதிகளையும் –
கட உபநிஷத் -1-5-சர்வான் காமான் சந்தத ப்ரார்த்தயஸ்வ /கட உபநிஷத்-1-23- -சதாயுஷு புத்திர பௌத்ரான் வ்ருணீஷ்வ-என்கிறது மேலே சித்தாந்த பதில்
——————————————————————————————————————
3-2-3-மாயா மாத்ரம் து கார்த்ஸ் யேன அநபிவ்யக்த ஸ்வரூபத்வாத்
து -பூர்வ பஷ வாதங்களை மறுக்கிறது -மாயா -ஆச்சர்யம் -மித்யை அல்ல-ஜனகச்ய குலே ஜாதே தேவ மாயேவ நிர்மிதா -பால -2-27-
ந பவந்தி -கனவில் காண்பவை அவன் ஒருவன் மட்டுமே காணுமாறு பரம் பொருள் படைக்கிறான் என்கிறது -இந்த ஆச்சர்யமே மாயா-சத்யசங்கல்பன் அன்றோ –
கட உபநிஷத் -5-8-எ ஏஷூ சுப்தேஷூ ஜாகர்தி -இவை தூங்கும் பொழுது அவன் விழித்து உள்ளான்
மேலும் அதே வரியில் -தத் ஏவ சுக்ரம் தத் ப்ரஹ்ம தத் ஏவ அம்ருதம் உச்யதே தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நான்யேதி கச்சன -என்று
அந்த ப்ரஹ்மமே ஒளி அமிர்தம் அனைத்தும் ஒடுங்கி உள்ளன -அவனைக் கடந்து ஏதும் இல்லை என்கிறது
ப்ருஹத் உபநிஷத் -4-3-10-வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா என்று பரம புருஷனைப் பற்றிக் கூறியது
———————————————————————————————————————–
அபஹதபாப்மத்வம் ஜீவனுக்கு சம்சாரத்தில் இல்லாத காரணம்
3-2-4-பராபித்யாநாத் து திரோஹிதம் ததோ ஹி அஸ்ய பந்த விபர்யயௌ –
பரம புருஷனின் சங்கல்பம் காரணமாகவே மறைக்கப் பட்டு சம்சார பந்தம் ஏற்படுகின்றது
பராபித்யா நாத் -சங்கல்பமே
து -பூர்வ பஷம் நிரசனம்
தைத்ரியம் -2-7-1-யதா ஹி ஏவ ஏஷ ஏ தஸ்மின் அத்ருஷ்ய அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே அபயம் பிரதிஷ்டாம் விந்ததே அத ச
அபயம் கத பவதி யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் உதரம் அந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி -என்றும்
ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி -என்றும்
2-8-1-பீஷாச்மாத்வாத பவதே -என்றும் கூறும்-
—————————————————————————————————————————
3-2-5-தேக யோகாத்வா ச அபி –
ஜீவனின் ஸ்வரூப மறைவு உடல் சேர்க்கையின் பொழுது உண்டாகிறது –ஸூ ஷ்மம் நிறைந்த பிரக்ருதியின் தொடர்பால் -ஆக ஜீவன் படைக்க சக்தன் அல்லன்
கட உபநிஷத் -5-8-தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நாத்யேதி கச்சன -எனபது பரம் பொருளுக்கே பொருந்தும்-
—————————————————————————————————————————
3-2-6-ஸூ கச்ச ஹி ஸ்ருதே ஆச ஷதே ச தத்வித —
கனவுகள் நற்பலன் தீய பலன்களை உணர்த்தும் ஸ்ருதிகளும் அப்படியே சொல்லும்
சாந்தோக்யம் -5-2-8-யதா கர்ம ஸூ காம்யேஷூ ஸ்த்ரியம் ச்வப்நேஷூ பச்யதி ஸ்ம்ருத்திம் தத்ர ஜாநீயாத் தஸ்மின் ஸ்வப்ன நிதர்சனே —
எனவே கனவும் சர்வேஸ்வரன் நியமனம் என்றதாயிற்று-
—————————————————————————————————————————–
இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-
———————————————–
3-2-7-தத் பாவ நாடீஷூ தத் ஸ்ருதே ஆத்மநி ச –
ஆழ்ந்த உறக்க நிலை -கனவுகள் அற்ற -ஸூ ஷுப்தி நிலை -நாடிகளில் நுழைந்து –
சாந்தோக்யம் -8-6-3-யத்ர ஏதத் ஸூ ப்த சமஸ்த சம்ப்ரசந்தம ஸ்வப்னம் ந விஜா நாதி ஆ ஸூ ததா நாடீஷூ ஸூ ப்தோ பவதி -என்றும்
ப்ருஹத் உபநிஷத் -2-1-19-அத யதா ஸூ ஷூப்தோ பவதி யதா ந கஸ்ய ச ந வேத ஹிதா நாம நாட்யோ த்வாசப்ததி சஹஸ்ராணி ஹ்ருதயாத் புரீததம் அபி பிரதிஷ்டந்தே தாபி பிரத்யவஸ்ருப்ய புரீதாதி சேத -என்று
ஹிதா நாடிகள் என்று கூறப்படும் 74000 நாடிகள் இதயத்தில் நின்றும்ன் புறப்பட்டு புரீதத் என்னும் இடத்தை அடைந்து ஜீவன் இவைகளால் சூழப் பட்டு உறங்குகின்றான்
சாந்தோக்யம் -6-8-1- யத்ர ஏதத் புருஷ ஸ்வபுதி நாம சதா நாம்ய ததா சம்பன்னோ பவதி -என்று
ஆழ்ந்த உறக்கத்தில் ஜீவன் பரமாத்வா உடன் சேர்ந்து உள்ளான் -என்கிறது -ஆக ஜீவன் உறங்கும் இடங்கள் நாடிகள் புரீதத் ப்ரஹ்மம் மூன்றும் கூறப் பட்டன
மூன்றும் வெவ்வேற இடங்கள் இல்லை மாடியில் கட்டில் மேல் -மெத்தை மேல் உறங்குகிறான் போலே -நாடி மாடி /புரீதத் -கட்டில் /பரமாத்மா மெத்தை -போலே –
————————————————————————————————————————————–
3-2-8-அத பிரபோத அஸ்மாத் —
ப்ரஹ்மத்திடம் உறங்குவதால் அங்கே இருந்தே விளித்து எழுதல் எனபது பொருந்தும்
சாந்தோக்யம் -6-10-2-சத ஆகம்ய ந விது சதா ஆகச்சாமஹே-என்றபடி ப்ரஹ்மத்திடம் உறங்கி விட்டு வந்த போதிலும் தாங்கள் அவ்விதம் செய்வதை ஜீவன் அறிவதில்லை
————————————————————————————————————————————–
மூன்றாவது அதிகரணம் -கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் -உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது
—————————————————————
3-2-9-ச ஏவது கர்மானு ஸம்ருதி சப்த விதிப்ய-
கர்மம்– ஞாபகம் –வேத வரி –விதிகள் –ஆகிய நான்கு காரணங்களாலும் அதே ஜீவனே விழித்து எழுகிறான்
உண்மையான ஞானம் வரும் வரை கர்மங்களின் பலன்களை அனுபவித்தே தீர வேண்டுமே
சாந்தோக்யம் -6-10-2- த இஹ வ்யாகரோ வா சிம்ஹோ வா வ்ருகோ வா வரஹா வா கீடோ வா பதங்கோ வா தம்சோ வா மசகோ வா யத்யத் பவந்தி ததா பவந்தி -என்று
புலி சிங்கம் ஓநாய் பன்றி புழு பறவை ஈ கொசு -அதே உருவில் எழுந்து வருகிறான்
சாந்தோக்யம் -8-11-1-தத் யத்ர ஏதத் ஸூ ஷூப்த –நாஹகலு அயம் ஏவம் சம்ப்ரதி ஆத்மானம் ஜா நாதி அயம் அஹம் அஸ்மி இதி நோ ஏவ
இமானி பூதானி வி நாசமேவ அபீத பவதி நாஹம் அத்ர போக்யம் பச்யாமி -என்றும்
முக்தனைப் பற்றி -சாந்தோக்யம் -8-12-3-பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே ச தத்ர பர்யேதி ஐ ஷத் கிரீடன் ரமமாண- என்றும்
7-25-2-ஸ ஸ்வ ராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்றும்
7-26-2-சர்வம் ஹ பச்ய பஸ்யதி சர்வம் ஆப் நோதி சர்வச -என்றும் கூறும் –
—————————————————————————————————————————————
நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் -விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-
————————————————————————————–
3-2-10- முக்தே அர்த்த சம்பதி பரி சேஷாத்–
பூர்வ பஷம்-மயக்கம் மூர்ச்சை மற்ற மூன்று நிலைகளுக்குள் சேர்ந்ததே என்பர்
மரணத்தின் பாதி நிலையே -ஞானம் இல்லாததால் விழிப்போ கனவோ இல்லை
ஆழ்ந்த உறக்கம் இறந்த நிலை யும் இல்லை -மரணத்தின் பாதி நிலையே பிராணன் இருப்பதால்
—————————————————————————————————————————————–
ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் -அத்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-
—————————————————————
3-2-11-நஸ்தா நத அபி பாஸ்ய உபயலிங்கம் சர்வத்ர ஹி
அகில ஹேய நீயகத்வ -சமஸ்த கல்யாண ஏக குணங்கள் கொண்டவன் -ப்ரஹ்மத்தை அடையும் பொருட்டு சம்சார விரக்தி பிறந்த பின்பு அவனது உபய லிங்கத்வம் விளக்குகிறார் –
ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-2-8-சம்போக பிராப்தி இதி சேத் ந வைசேஷ்யாத்–என்று அந்தராத்மாவாக இருப்பது உபாசகன் தன்னை அடைய -சுக துக்கங்களை அனுபவிக்க இல்லை –
ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-3-6-ஸ்தித்யத நாப்யாம்-ச -இருப்பதாலும் உண்பதாலும் -ஒரு மரம் இரண்டு பறவைகள் -முண்டக உபநிஷத்
ப்ரஹ்ம சூத்ரம் -3-2-5–தேஹயோகாத்வாத் -தேக சம்பந்தம் இருப்பதாலும் –ப்ருஹத் உபநிஷத் -3-7-3- ய ப்ருதிவ்யாம் திஷ்டன் -பூமியில் இருப்பதாலும்
ப்ருஹத் உபநிஷத் -3-7-22–ய ஆத்மநி திஷ்டன் -ஆத்மாவில் இருப்பதாலும் /ப்ருஹத் உபநிஷத்-3-7-18- -ய சஷூஷூ திஷ்டன்
ப்ருஹத் உபநிஷத்-3-7-23- -ய ரேதஸ் திஷ்டன் -ரேதசில் இருப்பதாலும் -தோஷங்கள் தட்டும் என்பர் பூர்வ பஷி —
சாந்தோக்யம் -8-1-5-அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யு விசோக விஜிகத்ச அபிபாச சத்ய காம சத்ய சங்கல்ப-என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84/85– சமஸ்த கல்யாண குணாத் மகோ சௌ ஸ்வ சக்தி லேசோத்ருத பூத வர்க்க தேஜோ பல ஐஸ்வர்ய மஹாவபோத ஸூ வீர்ய சக்த்யாதி குணைகராசி
பர பராணாம் சகலா ந யத்ர க்லேசாதய சந்தி பராவரே சே-என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-51-சமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ணு வாக்யம் பரமபதம் -தோஷம் அற்றவன் என்றதாயிற்று
————————————————————————————————————————————-
3-1-12-பேதாத் இதி சேத் ந ப்ரத்யோகம் அதத் வசநாத் –
சரீர தொடர்பு கூறும் இடங்களிளும்பரமாத்மா தோஷம் அற்றவன் -ப்ருஹத் உபநிஷத் -3-7-3-ய ப்ருதிவ்யான் திஷ்டன் -3-7-23- ய ஆத்மா நி திஷ்டன் -இடங்களிலும்
ச தே ஆத்மா அந்தர்யாமி அம்ருத -தோஷம் அற்று தானாகவே -கர்மம் அடியாக அன்று -உள்ளான்
ப்ரஹ்ம ஸூ த்ரம் -3-2-4-பராபித்யா நாத் து திரோஹிதம் -ஸூ த்ரத்தில் நிரூபிக்கக் கண்டோம்
அசேதனப் பொருள்களும் சில கால கட்டத்தில் அவனது சங்கல்பத்தின் படி இன்பம் பயக்கும் படியைக் காண்கிறோம்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6-46-48-நரக ஸ்வர்க்க சம்ஜ்ஞே வை பாப புனே த்விஜோத்தம -வஸ்து ஏகம் ஏவ துக்காய ஸூ காய ஈர்ஷ்யா கமாய ச –
கோபாய ச யத தஸ்மாத் வஸ்து வஸ்தவாமகம் குத-தத் ஏவ ப்ரீதயே பூத்வா புன துக்காய ஜாயதே –
தத் ஏவ கோபாய யத் பிரசாதாய ச ஜாயதே தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூ காத்மகம் –என்றபடி
ப்ரஹ்மத்துக்கு உடல் தொடர்பு லீலைகளுக்கு மட்டுமே இருக்கும்-
————————————————————————————————————————————
3-2-13-அபி ச எவம் ஏகே –
முண்டக உபநிஷத் -3-1-1-த்வா ஸ்பர்ணா சயுஜா சகாய சமா நம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதே தயரன்யே பிப்பலம் ச்வாத்வத்தி
அனச்னன் அந்ய அபிசாகசீதி -என்றும்
சாந்தோக்யம் -அநேன ஜீவேன ஆத்மநா அநு ப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி –என்றும் உண்டே
கர்மவசப்படுவானோ பரம் பொருளும் என்றால் ரூபம் அற்றவன் என்கிறது அடுத்த ஸூ த்ரத்தில்-
———————————————————————————————————————————–
3-2-14-அரூபவதேவ ஹாய் தத் ப்ரதா நத்வாத் —
கர்மம் அடியாக தேவாதி மனுஷ்ய தேகம் எடுப்பது போலே ப்ரஹ்மத்துக்கு இல்லையே –
உள்ளே புகுந்தாலும் நாம ரூபன்களால் பாதிக்கப் படுவதில்லை
சந்தோக்யம் -8-14-1-ஆகாசோ வை நாம ரூபாயோ நிர்வஹிதா தே யதந்த்ரா தத் ப்ரஹ்மம்-
அந்தர்யாமியாக இருந்தும் தோஷம் தட்டாமல் உள்ளான்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தைத்ரியம் -1-1-ஒளி ரூபம் என்றும் –
-ப்ருஹத் உபநிஷத் –நேதி நேதி-இல்லை இல்லை -என்பதால் கல்யாண குணங்கள் உள்ளவை எனபது எவ்வாறு என்றால்
————————————————————————————————————————————-
3-2-15–பிரகாசவத் ச அவையர்த்தாத் —
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் என்ற சுருதி பொய்யாகக் கூடாது என்பதால் ஒளி மயமானது ப்ரஹ்மம் எனபது போலே
சத்யசங்கல்பன் ஜகத் காரணன் அந்தர்யாமி அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் அனந்த கல்யாண குண சாகரம் என்ற சுருதி வாக்யங்களையும் ஏற்க வேண்டும்
—————————————————————————————————————————————
3-2-16-ஆஹ ச தந்மாத்ரம்–
சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்மம் என்று ஒளிமயம் என்றது மற்றையவற்றை மறுக்க வில்லை –
நேதி நேதி -ப்ருஹத் உபநிஷத் -4-2-4- எதனால் என்பதை மேலே பார்ப்போம்
————————————————————————————————————————-
3-2-17-தர்சயதி ச அத அபி ஸ்மர்யதே-
உபய லிங்கத்வம் அநேக ஸ்ருதி ஸ்ம்ருதி களும் சொல்லுமே –
ச்வேதாச்வதார உபநிஷத் -6-7-தம் ஈச்வரானாம் பரமம் மகேஸ்வரம் தம் தைவதாநாம் பரமம் ச தைவதம் -என்றும்
6-9-ச காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கச்சித் ஜனிதா ந சாதிப -என்றும்
6-8-ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச் சாப்யதிகச்ச த்ருச்யதே பராச்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -என்றும்
முண்டக உபநிஷத் -1-1-9-ய சர்வஜ்ஞ சர்வவித் யஸ்ய ஞானமயம் தப -என்றும்
தைத்ரிய ஆனந்த வல்லி–2-8-1-பீஷாச்மாத்வாத பவதே பீஷோ தேதி சூர்ய -என்றும்
தைத்ரிய ஆனந்த வல்லி-2-8-ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -என்றும்
2-9-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்ந பிபேதி குதச்சந-என்றும்
ச்வேதாச்வதார உபநிஷத் -6-19-நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜனம் என்றும்
ஸ்ரீ கீதையில் பல இடங்களில் – -10-3-யோ மாம் அஜம் அநாதிம் ச வேத்தி லோக மகேஸ்வரம் -என்றும் -10-42-விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ் நம் ஏகாம் சேந ஸ்திதோ ஜகத் -என்றும்
9-10-மயா அத்ய ஷேண பிரகிருதி ஸூ யதே ச சராசரம் ஹேது நா அநேன கௌந்தேய ஜகத்தி பரிவர்த்ததே -என்றும்
15-17-உத்தம புருஷ த்வன்ய பரமாத் மேத்யுதா ஹ்ருத யோ லோகத்ரயமா விச்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர-என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-46/47– சர்வஜ்ஞ சர்வக்ருத் சர்வ சக்தி ஞான பலர்த்திமான் அன்யூனஸ் சாபி அவ்ருத்திச்ச ஸ்வாதிநோ அநாதிமான் வசீ
க்லமதந்த்ரீ
பயக்ரோத காமாதி பிரசம்யூத நிரவத்ய பர ப்ராப்தே நிரதிஷ்டோ அஷர க்ரம-என்றும்
ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருந்தும் உபய லிங்கங்கள் நிறைந்தவன் என்பதை பல இடங்களிலும் சொல்லிற்றே –
———————————————————————————————————————————–
3-2-18-அத ஏவ ச உபமா சூரியகாதிவத்
ஆகவே நீரில் -கண்ணாடியில் -பிரதிபலிக்கும் சூர்யன் போன்றவை பர ப்ரஹ்மத்துக்கு உபமானமாக சொல்லப் பட்டன
யாஜ்ஞாவல்க்ய ஸ்ம்ருதி 3-144-ஆகாசம் ஏகம் ஹி யதா கடாதி ஷூ ப்ருதக் பவேத் –ததாத்மைகோ ஹ்ய நேகஸ்தோ ஜலாதாரேஷ்வி வாம்சுமான்
–ஏக ஏவ ஹி பூதாத்மா போதே பூதே வ்யவஸ்திதே ஏகதா பஹூதா ச ஏவ த்ருச்யதே ஜல சந்த்ரவத் –ஒரே தன்மையுடன் பல பொருள்களில் ப்ரஹ்மம் இருப்பான் என்கிறது-
———————————————————————————————————————————–
3-2-19-அம்புவத் அக்ரஹணாத் து ந ததாத்வம் —
நீரில் உள்ளது போலே பொய்யானவன் அல்லவே ப்ரஹ்மம்-உண்மையாகவே உள்ளான் -ப்ருஹத் உபநிஷத் -3-7-3- ய பிருதிவ்யாம் திஷ்டன் -என்றும் -3-7-4- ய அப்ஸூ திஷ்டன் -என்றும் -3-7-22-ய ஆத்மநி திஷ்டன் -என்றும்
தோஷம் தட்டாது என்பதற்கு சொல்லிய திருஷ்டாந்தம் உண்மையாக இருப்பவன் ஆகையால் பொருந்தாது என்பர் பூர்வ பஷி
—————————————————————————————————————————————-
3-2-20-வ்ருத்தி ஹ் ராஸ பாக்த்வம் அந்தர்பாவாத் உபய சமஞஜஸ்யாத் ஏவம் தர்சநாத் ச –
சிறிய நீர் நிலை பெரிய நீர் நிலை பிம்மம் தோன்றுவது போலே சுருக்கமும் விரிவும் இல்லாதவன் என்பதற்கே திருஷ்டாந்தம்
ஆகாசம் ஏகம் ஹி யதா கடாதி ஷூ ப்ருதக் பவேத் -வெற்றிடம் குடங்களில் தனித் தனியே உள்ளது போலே
ஜலதாரேஷூ இவ அம்சுமான் -நீர் நிலைகளில் சூரியன் போலே பலவற்றிலும் உள்ளான்-
ப்ருஹத் உபநிஷத் -2-3-1-த்வே வாவா ப்ரஹ்மணோ ரூபே மூர்த்தம் ச அமூர்த்தம் ச -என்று ஸ்தூல அஸ்தூல ரூபங்கள் இரண்டும் உண்டு என்று சொல்லத் தொடங்கி–2-3-6-தஸ்ய ஹ வா ஏதஸ்ய புருஷஸ்ய ரூபம் யதா மஹாரஜநம் வாச -என்று திவ்யமான ரூபம் உள்ளது என்று சொல்லி தொடர்ந்து -அதாத ஆதேச நேதி நேதி இதி நஹ்யே தஸ்மாத் இதி நேதி அந்யத் பரம் அஸ்தி என்று
இதி -என்றது –மூர்த்தம் அமூர்த்தம் ஸூ ஷ்மம் ஸ்தூலம் போன்றவை சொல்லி உடனே ந -என்று இவற்றை நிராகரித்து
ப்ரஹ்மம் மட்டுமே உண்மை மற்றவை அவன் மேல் ஏறிட்டுக் கூறப்பட்டன என்று சொல்லி
தோஷம் அற்றவன் என்று எவ்வாறு சொல்ல முடியம் என்பர் பூர்வ பஷி கள்
அதற்கு பதிலாக அடுத்த ஸூ த்த்ரம் –
——————————————————————————————————————————————-
3-2-21-பிராக்ருத ஏதாவத்த்வம் ஹி பிரதிஷேததி தாதா ப்ரவீதி ச பூய
முன்பு கூறிய ரூபங்களை மட்டுமே நிராகரித்து அனைத்து கல்யாண குணங்கள் நிறைந்தவன் என்று மேலே சொல்வதால்
விக்ரஹத்தை கண்டு ப்ரஹ்மம் இவ்வளவே என்று நினைக்கலாம் -அத்தையே நிராகரித்தது நேதி நேதி என்று
தொடர்ந்து ப்ருஹத் உபநிஷத் -2-3-6-ந ஹி ஏ தஸ்மாத் இதி நேத்யன்யத் பரமஸ்தி அத நாமதேயம் சத்யச்ய சத்யமிதி ப்ராணா வை சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் இதி -என்கிறது
பிராணன் உள்ளதால் ஜீவன் -ஆகாயம் போல் அல்லாமல் நித்யம் சத்யம் -இப்படிப்பட்ட ஜீவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் பர ப்ரஹ்மம்
ஞானம் சுருங்குவதும் விரிவதும் இல்லை -பாபங்களால் தீண்டப் படாதவன் -கர்மவச்யன் இல்லை -அதனால் இவர்களைக் காட்டிலும் மேலான சத்யம் என்கிறது –
ப்ரஹ்மம் எனபது விக்ரஹம் மாத்ரமே அத்தைக் கொண்டு அறியலாம் என்பதையே நேதி நேதி என்கிறது சாஸ்திரம் ஒன்றே அவனை அறிய பிரமாணம் என்பதால்
———————————————————————————————————————————————–
3-2-22-தத் அவ்யக்தம் ஆவ ஹி –
சாஸ்திரம் ஒன்றே பிரமாணம் என்பதை கட உபநிஷத் -6-9-ந சந்த்ருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யதி கச்ச ந ஏ நம் -என்றும்
முண்டக உபநிஷத் -3-2-8-ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா -என்கிறதே –
மேலும் ஒரு ஸூ த்ரத்தால் உணர்த்துகிறார் –
———————————————————————————————————————————————-
3-2-23-அபி சம்ராதனே ப்ரத்யஷ அநுமா நாப்யாம்–
பக்தி என்னும் உபாசனம் கொண்டே ப்ரஹ்மத்தை அறிய -ப்ரஹ்மத்துக்கு மகிழ்வு ஏற்ப்படுத்தி -உணர இயலும் என்று ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் சொல்லும் –
முண்டக உபநிஷத் -3-2-3-நாயமாத்மா ப்ரவச நேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ஸ்ருதே ந யமேவைஷ வ்ருணுதே தென் லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்றும்
3-1-8-ஜ்ஞான பிரசாதேன விசுத்த சத்த்வ ததஸ்து தம் பச்யதி நிஷ்கலம் த்யாய மாந-என்றும்
ஸ்ரீ கீதையில் -11-53- நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேன ந சேஜ்யயா-என்றும்
-11-54-பக்த்யா த்வ நன்யயா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுனா ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன பிரவேஷ்டும் ச பரந்தப–என்றும் சொல்லுமே
சம்ராதனே -ஆழ்ந்த பக்தி என்னும் உபாசனத்தையே ஸூ தரத்தில் குறிக்கப் படுகிறது -இதுவே அவனுக்கு மகிழ்வு ஏற்படுத்தும் என்றதாயிற்று-
———————————————————————————————————————————————-
3-2-24-பிரகாசாதி வத் அவைசேஷ்யம் பிரகாச ச கர்மணி அப்யாசாத் –
ஞான ஆனந்த மயம் போலேவே மூர்த்தமாகவும் அமூர்தமாகவும் உள்ள பொருள்களை உடலாகக் கொண்ட
ப்ரஹ்மம் என்றே யோகிகள் இடைவிடாத உபாசனத்தால் உணர்ந்து காண்கிறார்கள்
ப்ருஹத் உபநிஷத் -1-4-10-தத்தைதத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபேத அஹம் மநுரபவம் ஸூ ர்யச்ச-என்கிறது –
———————————————————————————————————————————————-
3-2-25- அதோ அனந்தேன ததாஹி லிங்கம்
மேலே கூறியவற்றால் உபய லிங்கமாகவே உள்ளது என்று காட்டி அதிகரணத்தை நியமிக்கிறார்
அளவற்ற திருக் கல்யாணங்களை கொண்டதாயும் அகில ஹேய ப்ரத்ய நீகனாயும்ந ப்ரஹ்மம் உண்டு என்று நிரூபித்தாயிற்று-
———————————————————————————————————————————————–
ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் -ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன -அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –
———————————————————————-
3-2-26-உபய வ்யபதேயாத் து அஹி குண்டலவத் —
இது பூர்வ பஷ ஸூத்ரம் -சுருண்டும் நீண்டும் உள்ள பாம்பு போலே ப்ரஹ்மம் -த்வேவாவ ப்ரஹ்மணோ ரூப-மூர்த்தம் அமூர்தம் இரண்டும் ப்ரஹ்மத்தின் ரூபம்
தொடர்ந்து அதாத ஆதேச நேதி நேதி -ப்ருஹத் உபநிஷத் -2-3-6- என்று ப்ரஹ்மம் அசித் பொருள்கள் அளவு மட்டும் அல்ல என்றது
நஹி ஏ தஸ்மாத் ந அத்ய அன்யத பரமச்ய-என்று ப்ரஹ்மத்தை விட உயர்ந்த பொருள் இல்லை -என்றும் இதையே திருடமாக
அத நாமதேயம் சத்யச்ய சத்யம் பிராண ஏவ சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் என்றும்
ச்வேதாச்வதர உபநிஷத் -6-16-பிரதான ஷேத்ரஜ்ஞபதிர் குணேச – என்றும் -6-13-நித்யோ நித்யச் சேதநச்சேதநா நாம் -என்றும்
மஹா நாராயண உபநிஷத் -13-1-பதிம் விச்வச்ய ஆத்மேச்வரம் –என்றும் ம்சொல்லிற்று-
சுருண்டும் நீண்டுமுள்ள பாம்பு போலேயா
சூரியனும் ஒளிக் காற்றையும் போலேயா
அம்சம் அம்சி பாவமா -மூன்று வித கேள்விகள் ப்ரஹ்மத்துக்கும் அசித்துக்கும்
ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-4-23-பிரக்ருதிச்ச பிரதிஜ்ஞாத் ருஷ்டாந்தா னுபரோதாத் -என்று பிரமமே உபாதான காரணம் என்றும்
ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-1-15-தத நன்யத்வம் ஆரம்பண சப்தாதிப்ய-பொருளும் காரணமும் வேறு அல்ல -என்றும்
அம்ச அம்சி பாவம் முன்பே கூறப்பட்டது
மூன்றில் பாம்பு போலே நீட்டியும் சுருண்டும் என்பதே அசித்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் என்பதே சரியான விடையாகும்
ப்ரஹ்ம ஏவ இதம் சர்வம் -ப்ருஹத் உபநிஷத் -4-5-1- இவை அனைத்தும் பிரமமே என்றும்
சாந்தோக்யம் -7-25-2-ஆத்மா ஏவ இதம் சர்வம் -இவை அனைத்தும் ஆத்மாவே
சாந்தோக்யம் -6-3-2-ஹந்தா ஹமிமாஸ் திஸ்ரோ தேவதா அநேன ஜீவேன ஆத்ம அநு ப்ரவச்ய -என்று தேஜஸ் நீர் பூமி மூன்றின் உள்ளே புகுந்து அநேக நாம ரூபங்களை எடுக்கிறேன்
எனவே அசித் என்பதும் ப்ரஹ்மத்தின் ஒருவகையான விசேஷ நிலை என்றதாயிற்று-
——————————————————————————————————————————————–
3-2-27-பிரகாசஸ்ரயவத்வா தேஜஸ் த்வாத் —
ஒளியும் உத்பத்தி இடமும் போன்று -காரணம் இரண்டும் தேஜஸ் என்ற ஜாதியினால்
இது பூர்வ பஷ ஸூ த்ரம்
வா என்றது பாம்பு போன்று நீண்டும் சுருங்கியும் -அம்ச அம்சி பாவம் இரண்டையும் தள்ளுகிறது
அசித் ரூபம் என்றால் இரண்டும் வெவ்வேறே என்கிற பேத ஸ்ருதிகள் தள்ளப்படும் -அவிகாராய சுருதி வாக்யமும் தள்ளுபடும்
——————————————————————————————————————————————–
3-2-28-பூர்வவத் வா
முன்பு கூறப் ஒப்ட்டது போன்று என்றவாறு -கடந்த இரண்டு ஸூ த்ரங்களில் உள்ள பூர்வ பஷத்தை தள்ளுகிறது
முதல் வாதம் படி அசித் ஸ்வரூபம் ப்ரஹ்மத்துக்கு வரும் தோஷங்களும் தட்டும்
ஒழி ஒளிக்கதிர் என்று கொண்டால் பசு குதிரை இரண்டு பிரிவுகளான ப்ரஹ்மம் ஸ்ருதி வாக்ய விரோதம் ஆகும்
ஆக முன்பு கூறிய படி ஒரு அம்சமாகவே கொள்ள வேண்டும்
ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-3-42-அம்சோ நாநா வ்யபதேசாத் -ஒரு அம்சமாகவே ஆகும்
ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-3-45-பிரகாசாதிவத் து நைவம்பர-பரமாத்மாவின் அம்சம்
பிரிக்க இயலாது
பேத அபேத ஸ்ருதிகளும் கொள்ள முடியும்
தோஷங்களால் தீண்டப் படாததது என்ற வாதமும் கொள்ளப் படும்
ஆக ஒளி ரத்னக் கல்லை விட்டு பிரிக்க முடியாதது போலேயும்
குணம் குணம் உள்ளவன் -ஆத்மா உடல் போலே
ஜீவனும் அசித்தும் ப்ரஹ்மத்தின் அம்சங்களே -என்றாகிறது-
————————————————————————————————————————————————
3-2-29-பிரதிஷேதாச்ச
தள்ளப் படுவதாலும் -கடந்த ஸூ த்ரச் சித்தாந்தம் தொடர்கிறது
ப்ருஹத் உபநிஷத் -4-4-25-ச வா ஏஷ மஹா நஜ ஆத்மா அஜரோ அமர -பரமாத்மா பிறப்பு இறப்பு கிழத் தன்மை அற்றவன் -என்றும்
சாந்தோக்யம் -8-1-5-நாச்ய ஜரயா ஏதத் ஜீரயதி -வயதாகி கிழத் தன்மை அடைவது இல்லை
தோஷங்கள் தட்டாமல்
காரணமாகவும்
அம்ச அம்சி பாவமே பொருந்தும் என்றதாயிற்று
ஸூ ஷ்மமாக உள்ள பொழுது அவற்றை அம்சமாக காரணமாயும்
ஸ்தூலமாக உள்ள பொழுது அவற்றை அம்சமாகக் கார்யமாகவும்
கார்ய கார்யங்களுக்கு இடையில் பேதம் இல்லை -அபேத ஸ்ருதியும்
காரணமான ப்ரஹ்மத்தை அறிந்தவன் கார்யப் பொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாகவும் கொண்டு
ப்ரஹ்மத்தை தோஷங்கள் தீண்டுவது இல்லை என்றும் சமஸ்த கல்யாண குணங்கள் கொண்டவன் என்றும்
உபய லிங்கத்வம் நிரூபிக்கப் பட்டது
————————————————————————————————————————————————
ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் -ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும் இவனை தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது
———————————————————————————
3-2-30-பரமத சேது உன்மான சம்பந்த பேத வ்யபதேசேப்ய-
அணை அளவு தொடர்பு வேறுபாடு ஆகியவை கூறப்பட்டதால் இதை விட உயர்ந்தது உள்ளது
சாந்தோக்யம் -8-4-1-அத ய ஆத்மா ச சேது வித்ருதி -இந்த ஆத்மாவைத் தாங்கும் பாலமாக உள்ளான்
சாந்தோக்யம் -8-4-2-ஏதம் சேதும் தீர்த்தவா அந்தஸ் சந் அனந்தோ பவதி -பாலத்தை கடந்து குருடனானவன் நிலை மாறப் பெறுகிறான்
இவற்றால் ப்ரஹ்மத்தை விட உயர்ந்தவை உண்டு என்றதாயிற்று
உந்மிதம்-என்று அளவு பட்டு ப்ரஹ்மம் கூறப் படுகிறது
சாந்தோக்யம் -3-18-2-சதுஷ்பாத் ப்ரஹ்ம-நான்கு பாதங்கள் கொண்டது என்றும்
ப்ரசன உபநிஷத் -ஷோடாசகலம் -பதினாறு பிரிவுகள் கொண்டது -என்றும்
ச்வேதாச்வதர உபநிஷத் -6-19-அம்ருதஸ்ய பரம் சேதும் தக்தேந்த மிவா நலம் -தானாக வெளிப்படும் மோஷத்தை அடைய உதவும் பாலமாக ப்ரஹ்மம் உள்ளான் என்றும்
முண்டக உபநிஷத்-2-2-5- -அம்ருதஸ்யைஷ சேது -மோஷத்தை அடைவிக்கும் பாலம் ப்ரஹ்மம் என்றும்
முண்டக உபநிஷத் -3-2-8-பராத்பரம் புருஷம் உபைதி -பரமாத்மாவை விட உயர்ந்த புருஷன் அடைகிறான் என்றும்
தைத்ரிய நாராயண வல்லி -1-5- பராத்பரம் யத் மஹதோ மஹாந்தம் -பெரியதான பரமாத்மாவை விட பெரியதான என்றும்
ச்வேதாச்வதர உபநிஷத் -3-9-தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம் -அந்த புருஷனால் இவை நிரம்பி உள்ளன -என்றும்
3-10-ததோ யதுத்தரதரதரம் தத் அரூபம் அநாமயம் -அந்த புருஷனைக் காட்டிலும் மேலானது-உருவம் அற்றது -துன்பம் அற்றது -என்றும்
இப்படி பல ஸ்ருதிகள் அந்த பிரமத்தைக் காட்டிலும் மேலான வஸ்து உள்ளதைச் சொல்லிற்று
இனி இந்த பூர்வ பஷத்துக்கு பதில் மேலே –
——————————————————————————————————————————————–
3-2-31-சமான்யாத்து-
பொதுவான தன்மை காரணத்தால் ஆகும் -து -பதம் பூர்வ பஷத்தை தள்ளுகிறது
சேது என்று ஒரு கரையில் இருந்து அடுத்த கரைக்கு செல்வதை சொல்ல வில்லை
சாந்தோக்யம் -8-4-1-ஏஷாம் லோகா நாம் அசம்பேதாய-இந்த உலகங்கள் ஒன்றுடன் ஓன்று கலக்காமல் இருக்க -என்கிறது
சேதனம் அசேதனங்களை தன்னுள் வைத்து ஒன்றுடன் ஓன்று கலவாமல் காப்பதால் சேது எனப்படுகிறான்
சாந்தோக்யம் -8-4-2- ஏதும் சேதும் தீர்த்தவா -தீர்த்தவா அடைதல் பொருளில் கடந்து என்று அல்ல –
வேதாந்தத்தை கடக்கிறான் முற்றிலும் அறிந்தவன் ஆகிறான் என்றே பொருள்
—————————————————————————— —————————————————————
3-2-32-புத்த்யர்த்த பாதவத் —
பாதம் போன்று உபாசனத்துக்கு கூறப் பட்டது -சதுஷ்பாத் ப்ரஹ்ம /ஷோடசகலம் /பாதோச்ய விசவா பூதானி /என்று
உபாசனத்துக்கு புத்திக்கு அளவு படுத்தி சொன்னவை
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-தெளிவாக உள்ளதே -இவனே காரணம் என்பதை
தைத்ரியம் -2-1-தஸ்மாத்வா ஏ தஸ்மாத் ஆத்ம ந ஆகாச சம்பூத –இதில் இருந்து ஆத்மாவும் ஆகாசமும் வெளிப்பட்டன
என்றும்
தைத்ரியம்-2-6- -சோகாமயாத பஹூச்யாம் பிரஜாயேய-அது தன்னைப் பலவாகக் கடவது என்று எண்ணியது -என்றும்
சாந்தோக்யம் -3-18-2-வாக் பாத பிராண பாத சஷூ பாதோ மன பாத –பாதங்களாக வாக் போன்றவை உள்ளன என்றது உபாசனைக்கு எளிதாக்கவே என்றவாறு
———————————————————————————————————————————————-
3-2-33-ஸ்தான விசேஷாத் பிரகாசாதிவத்
அளவிட முடியாத வஸ்துவை உபாசனை பொருட்டு மாதரம் எப்படி அளவிட்டு சொல்ல முடியும் என்றால் -ஒளி முதலான ஸ்தானங்களின் சம்பந்தம் காரணம் ஆகும்
ஜன்னல் ஒளி –குட ஆகாசம் போலே
———————————————————————————————————————————————-
3-2-34-உபபத்தேச்ச–
தன்னை அடையும் உபாயமாக தானே உள்ள தன்மை பொருந்துவதால் –
முண்டகம் -அம்ருதஸ்யைஷ சேது -அடியைப் படும் இலக்கே அவன் என்றே பொருள் கொள்ள வேண்டும்
முண்டகம் -3-2-3-நாயமாத்மா ப்ரவசநேன லப்யோ ந மேதயா
ந பஹூ நா ஸ்ருதே ந யமேவைஷ வ்ருணுதே தே ந லப்யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம்-என்று
பரமாத்மாவை கேட்டோ ஆழ்ந்த ஞானத்தாலோ அறிய அடைய முடியாது -அவனே யாரைத் தெரிந்து எடுத்து அவன் மட்டுமே அடைகிறான் அவனுக்கு தனது ரூபத்தை வெளிப்படுத்துகிறான்-
—————————————————————————————————————————————–
3-2-35-ததா அந்ய பிரதிசேஷாத்-
இ[ப்படி அவனைக் காட்டிலும் வேறு இல்லை என்று மறுப்பதால் ஆகும்
ததோ எதுத் தர தரம் -என்றும் பராத்பரம் புருஷம் -என்றும் -அஷராத் பரத பர -என்றும் உயர்ந்த வஸ்து வேறே உண்டு என்கிறீர்கள்
அதே ச்வேதாச்வதர உபநிஷத் -3-9-யஸ்மாத் பரம் ந அபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாத் ந அணீய ந ஜ்யோயோஸ்தி கச்சித் என்றதே
ப்ருஹத் உபநிஷத்
2-3-6-நஹ்யே தஸ்மாத் இதி நேதி அந்யத் பரமஸ்தி-என்றும்
நாராயண வல்லி -1-2- ந தஸ்ய ஈசே கச்ச ந தஸ்ய நாம மஹத்யச-என்றும் -சர்வே நிமேஷா ஜ்ஞ்ஞிரே வித்யூத புருஷா நதி -என்றும் ச ஆப ப்ரதுகே உபே இமே -என்றும்
1-3-அத்ப்யஸ் சம்பூத ஹிரண்ய கர்ப்ப இத்யஷ்டௌ-என்றும் அவனே ஜகத் காரணம் என்றதே
ஆனால் ச்வேதாச்வதர -3-10- ததோ எதுத் தர தரம் என்று சொன்னது எதனால் என்றால் -இந்த வரிக்கு முன்னால் -3-8-
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ புரஸ்தாத் தமேவ விதித்வா அதி ம்ருத்யுமேதி நான்ய பன்னா வித்யதே அயநாயா -என்று முழங்கி
3-9-யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாத் நாணீய நஜ்யா யோஸ்தி கச்சித் வருஷ இவஸ்தப்த திவி திஷ்டதி ஏக தே நேதம் பூர்ணம் புருஷே ந சர்வம் -என்றும்
நிகமத்தில் -3-10-ததோ எதுத் தர தரம் தத் அரூபம் அநாமயம் ய எதத் விது அம்ருதாச்தே பவந்தி அதே தர துக்க மேவ அபியந்தி -என்றது
மேலும் முண்டகம் 3-2-8–பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்பதை 2-1-2-அஷராத் பரத பர -என்றதே –
————————————————————————————————————————————
3-2-36-அநேக சர்வ கதத்வம் ஆயாம சப்தாதிப்ய —
ஆயாம -அனைத்தும் ப்ரஹ்மத்தால் வ்யாபிக்கப் பட்டது என்கிறது-சர்வ வ்யாபகத்வம்
ச்வேதாச்வதர உபநிஷத் -தே நதம் பூர்ணம் புருஷேண சர்வம் -என்றும் -நாராயண வல்லி -11-6-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ச்ரூயதேபி வா அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும்
‘முண்டகம் -1-1-6-நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஷூஷ்மம் யத் பூதயோ நிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
ஸூ தரத்தில் உள்ள ஆதி என்ற பதம் ப்ரஹ்மத்துக்கு அனைத்துமாய் இருக்கும் பெருமையை
ப்ருஹத் உபநிஷத் -4-5-1-ப்ரஹ்மை வேதம் சர்வம் -என்றும் சாந்தோக்யம் -ஆதமை வேதம் சர்வம் -என்றும்
ப்ரஹ்மமே அனைத்தையும் விட உயர்ந்தது என்று முழங்கும் –
————————————————————————————————————————————-
எட்டாவது அதிகரணம் -பலாதிகரணம் -கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
——————————————————————
3-2-37-பலம் அத உபபத்தே —
பரம் பொருளின் இடம் இருந்தே பலம் கிட்டுகின்றன -இதுவே பொருந்தும் -எங்கும் உள்ளவன் -அனைத்தும்ம் அறிந்தவன் -சர்வ சாக்தம் -உதாரன் -யஜஞம் தானம் ஹோமம் உபாசனம் இவற்றால் மகிழ்ந்து
அளிக்கின்றான் ஷணம் நேரம் அழியக் கூடிய கர்மங்கள் பலன்களை தர வல்லமை அற்றனவே என்றவாறு-
————————————————————————————————————————————-
3-2-38-ஸ்ருதத்வா ச
இப்படியே ஸ்ருதி வரிகள் -பல போகங்களையும் மோஷத்தையும் பரம் பொருளே அளிப்பதாக கூறுகின்றன –
ப்ருஹத் -4-4-24-ச வா ஏஷ மஹான் அஜ –ஆத்மா அந்நாத வஸூதான -என்றும்
தைத்ரிய ஆரண்யகம் -2-7- எஷஹி ஏவ ஆனந்த யாதி -என்றும் கூறும்
—————————————————————————————————————————————–
3-2-39-தர்மம் ஜைமினி அத ஏவ
தர்மம் முதளியவைகளே பலன் அளிப்பதாக ஜைமினி கூறுகிறார்
கண்களில் புலப்படாத அபூர்வா -எதிர்காலத்தில் அந்த பலன்களை அளிக்கின்றது
சாஸ்திரம் யஜேன ஸ்வர்க்க காமா -யாகம்மூலம் ஸ்வர்க்கம் கிட்டும் என்றதே –
—————————————————————————————————————————————-
3-2-40-பூர்வம் து பாதராயண ஹேது வ்யபதேசாத் —
பலனை அளிப்பதால் முந்தையதே -என்கிறார் பாதராயணர்-
து -பூர்வ பஷத்தை தள்ளுகிறது
வாயு அக்னி குறித்து யாகம் பண்ணும் பொழுது யஜ் -அந்த யாகங்களின் எஜமானனாக உள்ள தேவதைகளே பலன்களை அளிப்பதாக கூறும்
தைத்ரிய சம்ஹிதை -2-1-1-வாயவ்யாம் ச்வேதமால பேத பூதி காமோ வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா வாயுமேவ ஸ்வேன பாக தேயேன உபதாவதி ச ஏவ எனம் பூதிம் கமயதி -என்று
இது போன்ற வாதங்களை அர்த்த வாதங்கள் என்று தள்ள இயலாது -இதனை மருத்துன் கண்களுக்கு புலப்படாத அபூர்வம் என்பதை உருவாக்கி பலன் அளிப்பதாக சொல்வதை பிரமாணிகர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்
பூர்வ பஷிகள் யஜேத என்பதை யஜ் ஏத என்று பிரித்து
யஜ் தவத்தை என்றும் ஏத அபூர்வம் என்றும் சொல்வதை ஏற்க இயலாது
ஏத எனபது கர்த்தாக்கள் மூலம் இயற்றப்படும் கர்மங்களைக் குறிக்கும்
இதனை உணர்த்தவே-தைத்ரிய சம்ஹிதை -2-1-1-வாயுர்வை ஷேபிஷ்டா த்கேவதா -என்றன -ஆயினும் ஆராதிக்கத் தகுந்தவனாக உள்ளவன் பரம புருஷனே –
அவனே அந்தர்யாமியாக இருந்து கொண்டு பலனை அளிக்கின்றான் என்பதை நாராயண வல்லி -1-2-
இஷ்டா பூர்த்தம் பஹூதா ஜாதம் ஜாயமா நம் விச்வம் பிபர்த்தி புவனச்ய நாபி –ததே வாக்னி தத் வாயு தத் ஸூ ர்ய தாது சந்த்ரமா -என்று கூறியது
ப்ருஹத் உபநிஷத்- 3-7-7- யோ வாயௌ திஷ்டன் யஸ்ய வாயு சரீரம் என்றும் -3-7-5-யோ அக்னௌ திஷ்டன் -என்றும் 3-7-9–யோ ஆதித்யே திஷ்டன் -என்றும் சொல்லிற்று
ஸ்ரீ கீதையிலும் -7-21-யோ யோ மாம் யாம் தநும் பக்த ச்ரத்தயா அர்ச்சிதும் இச்சதி தஸ்ய தஸ்ய அசலாம் ஸ்ரத்தாம் தாம் ஏவ வித்தாம் யஹம் -என்றும்
7-22-ச தயா ச்ரத்தயா யுக்த தஸ்ய ஆராதன மீஹதே லபதே சே தத காமான் மயைவ விஹிதான் ஹிதான் -என்றும்
9-24-அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச -என்றும்
7-23-தேவான் தேவ யஜோ யாந்தி மத் பக்தோ யாந்தி மாம்பி -என்றும்
9-25-யாந்தி மத்யாஜி நோபிமாம் -என்றும் அரசன் தானே நேரடியாகவோ வேலையாட்கள் மூலமாகவோ மகிழ்ந்து பரிசு அளிப்பது போலே
பரமபுருஷன் இடம் இருந்தே ஸ்வர்க்கம் போன்ற போகங்களும் மோஷமும் கிட்டுகிறது என்று நிரூபணம் ஆயிற்று -அனைத்து அர்த்தவாதங்களும் பொருந்தி விடுகின்றன —
—————————————————————————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-