அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா
பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–
——————————————————————————————————————
முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-மூன்றாம் பாதம் — 44 ஸூத்ரங்கள் –
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்
1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -தேவலோகம் பூமி ஆகியவற்றின் இருப்பிடம் ப்ரஹ்மமே –
1-3-1-த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –
பூமி தேவலோகம் பரம் பொருளுக்கே இருப்பிடம்
முண்டக –
யச்மிந்த்யௌ ப்ருத்வீ சாந்தரிஷ மோதம் மன சஹ பிராணைச்ச சர்வை தமேவைகம் ஜானதாத்மா நம் அந்யா வாசோ
விமுஞ்சத அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5–என்றும்
அரா இவ ரத நாபௌ சம்ஹதா யத்ர நாட்ய -ச ஏஷோ அந்தஸ் சர்தே பஹூதா ஜாயமான –முண்டகம்-2-2-6–என்றும்
மன சஹ பிராணை ஓதம் -என்றும்
நாராயண வல்லி உபநிஷத்தில்-1-3-2–
சந்ததம் சிராபிஸ்து லம்பத்யா கோச சந்நிபம் தச்யாந்தே ஸூஷிரம் சூஷ்மம் தஸ்மின் சர்வம் ப்ரதிஷ்டிதம் -என்று
ஜீவன்களின் நாடிகளுக்கும் பரம் பொருளே ஆதாரம் என்றும்
ஸ்ரீ கீதையில் –
அஜோ அபிசன் நவ்ய யாத்மா பூதா நாம் ஈஸ்வரோ அபிசன் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாம் யாத்மமாயயா -என்றும் –
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்யா நாராயண ஸ்தித -என்றும்
ஸ்வேஸ்வதார உபநிஷத்தில் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -ஸ்வேதாஸ்வர -3-8–என்றும்
முண்டக உபநிஷத்தில் –
யஸ் சர்வஜ்ஞ சர்வவித்–முண்டகம்-1-2-9–என்று அனைத்தும் பரம் பொருளையே ஆதாரமாகக் கொண்டது என்கின்றன –
பிறப்பற்றவன் -அழிவற்றவன் -சர்வேஸ்வரன் -சங்கல்பம் அடியாக -பஹுதா ஜாயமான-முண்டகம் -2-2-6-என்றும்
அஜாயமாநோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா பாரிஜாநந்தி யோனிம்-தைத்ரியம் -3-13-என்றும்
சொல்லுகிறபடி நித்ய மங்கள விக்கிரகத்துடன் திருவவதரித்து
அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறான் -ஜீவனுடைய அனைத்து உபகரணங்களும் ஆதாரம் என்றபடி –
——————————————-
1-3-2- முக்தோ உபஸ்ருப்ய வ்யபதேசாத் ச –
முண்டக உபநிஷத் –
யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்மயோநிம் ததா வித்வான் புண்ய பாபே
விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி–முண்டக -3-1-3- -என்றும்
யதா நத்ய ஸ்யந்தமாநா சமுத்ரேஸ் தம் கச்சந்தி நாம ரூபே விஹாய ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த
பராத்பரம் புருஷன் உபைதி திவ்யம் -முண்டக -3-1-8–என்றும்
நதிகள் ரூப நாமம் இல்லாமல் கடலை அடைவது போலே முக்தாத்மாக்கள்,பரம்பொருளை அடைகின்றனர்-
பொன்னிறம் கொண்டவன் -நியமிப்பவன் -காரணமானவன் -அவனைக் கண்டதும்
புண்ய பாபங்கள் அற்று பரம சாம்யம் அடைகிறான் –
——————————————-
1-3-3- ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருச் ச –
முன்பு உள்ள சூத்ரங்களில் பிராண வாயுவைக் குறிப்பிடாதலால் -இங்கு பிரக்ருதியையும் ஜீவனையும் கூறப்பட வில்லை –
———————–
1-3-4-பேத வ்யபதேசாத் –
ஜீவனின் தன்மைகளில் இருந்து இவனை வேறுபடுத்தி சொல்வதாலும் இவன் பரம் பொருளே –
முண்டக –
சாமா நே வ்ருஷே புருஷோ நிமக் நோ அநீசயா சோசதி முஹ்ய மான -ஜூஷ்டம் யதா பச்யத் யந்யமீசம் அஸ்ய மஹி
மரம் போன்ற அழியக் கூடிய சரீரத்தில் அழுந்தி மயங்கிய ஜீவன் -அதே சரீரத்தில் உள்ள பரமாத்மா -தன்னிலும்
வேறுபட்டவன்-நியமிப்பவன் -மேன்மை உடைய பரமாத்மா -என்று உணர்ந்து வருத்தம் நீங்குகிறான் என்றபடி –
—————
1-3-5- பிரகரணாத்–
முண்டக உபநிஷத்தில் பரம் பொருளின் தன்மைகள் கூறப்பட்டு வேறு எதையும் கூறப்படாத காரணத்தால் இங்கு கூறப்படுகிறவன் பரம் பொருளே –
1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-அவனுக்கே உரித்தான தன்மைகளுடன் யாராலும் காணப்படாமல் உள்ளவன்-
முண்டக உபநிஷத் –
அத பரா யயா ததஷரமதி கமே யத்ததத்ரேஸ்ய மக்ராஹ்ய மகோத்த்ரம வர்ணம் அசஷூ ஸ்ரோத்ரம்
தத பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் ததவ்யயம் யத் பூத யோ நிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்றவாறு –
————————
1-3-6-ஸ்தித்யத நாப்யாம் ச –
முண்டக உபநிஷத்தில் இந்த உடலில் இருக்கும் தன்மை பரம் பொருளுக்கு
பரம் பொருளுக்கு உடலில் இருக்கும் இருப்பு மட்டுமே -ஜீவாத்மாவுக்கு மட்டுமே கர்ம பலன் அனுபவிக்க வேண்டும் –
த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே தயோர் அந்நிய பிப்பலாம் ஸ்வாத் வத்தி
அனஸ்ந்னந்தயோ அபிசாகாதீதி-முண்டகம் -3-1-1-என்கிறபடி -உண்ணாமல் தேஜஸ் மிக்கு -இருப்பவன் பரமாத்மா என்றபடி
முதல் அதிகரணம் -த்யுத்வாத்யதிகரணம்- முற்றிற்று
————————————-
இரண்டாம் அதிகரணம் –பூமாதிகாரணம்
1-3-7-பூமா சம்ப்ரசாதாத் தத் உபதேசாத் –
பூமா -பெரியவன் -ஜீவனை விட உயர்ந்த பெருமை யுடைய பர ப்ரஹ்மம் –
சாந்தோக்யம் -யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ச்ருணோதி நாந்யத் விஜா நாதி ச பூமா அத யத்ர நாந்யத் பச்யத்
அந்யஸ் ச்ருணோதி அந்யத் விஜா நாதி தத் அல்பம் -என்று
பூமா பற்றியும் அல்பம் பற்றியும்
சாந்தோக்யத்தில் நாரத முனிவர் சனத் குமாரரிடம் ப்ரஹ்மம் பற்றி விளக்கி சொல்ல கேட்க
வாக்கு மனம் ஈடுபாடு புத்தி ஞானம் வலிமை உணவு நீர் ஆகாயம் ஞாபக சக்தி குறிக்கோள் -பிராணன் -என்று சொல்லி
ஏவம் விஜானன் அதிவாதீ பவதி -என்று பிராணனை ப்ரஹ்மம் என்று உணர்ந்தவன் அதிவாதி -உயர்ந்த ஞானம் உடையவன் ஆகிறான்
சாந்தோக்யத்தில் மேலும் ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேன அதிவததி என்று சத்யம் என்று ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் அதிவாதி ஆகிறான்
சம்ப்ரசாதா என்றது ஜீவனை யா என்கிற சங்கைக்கு -ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே என்று
இந்த உடலை விட்டு நீங்கி அந்த உயர்ந்த ரூபத்தை அடைகிறான் இதன் மூலம் ஸம்ப்ரசாதனன் என்பது ஜீவனைக் குறிக்கும் என்று உணரலாம்
——————
1-3-8-தர்மோபபத்தே ச-
பூமா என்பதற்கு பல தன்மைகள் சொல்லப் பட்டுள்ளன அது பரம் பொருளை மட்டுமே குறிக்கும்
சாந்தோக்யம் –ஏதத் அம்ருதம்-பூமா அழிவற்றது என்றும்
சர்வே மஹிம் நி -மற்று எதையும் சாராமல் தன்னுடைய பெருமையால் விளங்கி நிற்கும் என்றும்
ச ஏவாத ஸ்தாத் ச ஏவேதம் சர்வம் -என்று அதுவே மேலும் கீழும் முன்னும் பின்னும் தெற்கும் வடக்காகவும் உள்ளது
போன்ற தன்மைகள் பூமா பரம் பொருளுக்கே பொருந்தும் என்றதாயிற்று –
பூமாதி கரணம் சம்பூர்ணம்
——————————————–
1-3-3-அஷர அதிகரணம் -அஷரம் எனபது ப்ரஹ்மமே –
1-3-9-அஷரம் அம்பராந்த த்ருதே-
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
ச ஹோவாச ஏதத்வை தத் அஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவ தந்தி அஸ்தூலம் அநணு
அஸ்ரஸ்வம் அதீர்க்கம் அலோஹிதம் அஸ்நேந ஹமச்சாயம் –(ப்ரு -3–8–8-)
வசக்னு மகா ரிஷியின் பெண் கார்க்கி என்ற பெண் யாஜ்ஞவல்க்யர் இடம் -கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் )-என்று
அஷரம் பருத்ததும் அல்ல சிறியதும் அல்ல குட்டியும் அல்ல நெட்டையும் அல்ல நிழலும் அல்ல இருளும் அல்ல
காற்றும் அல்ல ஆகாசமும் அல்ல-எதனுடன் சேர்ந்ததும் அல்ல எதையும் உண்பவன் அல்ல -இப்படி பலவாறு சொல்லி –
யயா தத் அக்ஷரம் அதிகம்யதே–முண்டகம் –1–1–5-/
முண்டக-2-1-2- அஷராத் பாரத பர -என்று அஷரம் என்பதை பிரக்ருதியாக சொல்லி
ப்ருஹத் ஆரண்யாகாவில்-
யத் ஊர்த்வம் கார்க்கி திவோ யதர்வாக் ப்ருதிவ்யா யத் அந்தரா த்யாவா ப்ருத்வீ இமே யத் பூதஞ்ச பவச்ச
பவிஷ்யச் சேத்யா சஷதே-ஆகாச ஏவ தத் ஓதம் ச ப்ராதம் ச –5-8-4–என்று கேட்டு
ஆகாச ஏவ ததோதஞ்ச ப்ரோதஞ்ச -என்று அந்த பொருள்கள் சார்ந்து உள்ளது ஆகாசமே என்று பிரக்ருதியே ஆகும்
அது அஷரத்தை ஆதாரமாக கொண்டது என்பதால் அஷரம் ப்ரஹ்மமே-
—————————————————
1-3-10-சா ச பிரசாச நாத் –
அஷரம் சூரியனையும் சந்திரனையும் நியமிப்பதாக சொல்வதால் அது ப்ரஹ்மமே
யஸ்ய அஷரம் சரீரம் -என்பதால் உடலுடன் தொடர்பு கொண்ட ஜீவனோ என்னில் -ப்ருஹத் ஆரண்யாகாவில்-
அஷரச்ய பிரசாச நே கார்க்கி சூர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத-என்று சூரியனையும் சந்திரனையும் இயக்குவது என்பதால் ப்ரஹ்மமே
———————
1-3-11-அந்ய பாவ யாவ்ருத்தே ச –
அஷரம் மிக உயர்ந்தது ஒப்பார் மிக்கார் இல்லாதது –
ப்ருஹத் ஆரண்யா காவில் கார்க்கி என்பர் கேட்க -தத்வா ஏதத் அஷரம் கார்க்கி அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு அஸ்ருதம் ஸ்ரோத்ரு-என்றும்
நான்யதோ அஸ்தி த்ரஷ்ட்ரு நான்யதோ அஸ்தி ஸ்ரோத்ரு-என்பதால் அஷரம் பரம் பொருளே –
அஷர அதி கரணம் சம்பூர்ணம்
———————————————–
1-3-4-ஈஷதி கர்மாதிகரணம் -கானப்படுபவன் ப்ரஹ்மமே
1-3-12-ஈஷதி கர்ம வ்யபதேசாத் ச –
ஜீவனுக்கும் மேலான புருஷன் என்று ப்ரஹ்மத்தை சொல்லிற்று -ப்ரசன உபநிஷத்தில் -சத்யகாமன் என்பவனது கேள்விக்கு விடையாக
ய புநரேதம் த்ரிமாத்ரேண ஒம் இதி ஏதே ஏவ அஷரேண பரம்புருஷம் அபித்யாயித ச தேஜஸி ஸூர்யே சம்பன்ன-
யதா பாதோதரஸ் த்வாச்சா விநிர் முச்யதே ஏவம் ஹை வ ச பாப்மநா விநிர்முக்தி ச சமாபி உந்நீயதே ப்ரஹ்ம லோகம்
ச ஏதஸ்மாத் ஜீவநாத் பராத்பரம் புரிசயம் புருஷம் ஈஷதே – -என்று
புருஷன் என்ற ஹிரண்யகர்ப்பன் உபாசித்து ப்ரஹ்ம லோகம் அடைவதைச் சொல்லிற்று என்பர் பூர்வபஷத்தில்
ஆனால் மேலே -யத்தத் சாந்தம் அஜாம் அம்ருதம் அபயம் பரஞ்ச -என்பதால் உள்ள
யத்தத் கவயோ வேதாந்த -என்று நித்ய சூரிகள் பார்க்கும் இடம் என்பதால் பரம புருஷனையே சொல்லிற்று-
ஈஷதி கர்மாதிகரணம் சம்பூர்ணம்
——————————————————————-
1-3-5-தஹராதி கரணம் -தஹரா ஆகாயம் என்பதுவும் ப்ரஹ்மமே
1-3-13-தஹர உத்தரேப்ய-
இதயத்தில் உள்ள தஹர என்னும் ஆகாயத்தில் உள்ளவனும் பர ப்ரஹ்மமே
சாந்தோக்யம் –8-1-1–அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்மபுரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரே ஆகாசாஸ்
தஸ்மின் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஞாசி தவ்யம் -என்று
ஆகாயமா பரம் பொருளா ஜீவனா –
அதே உபநிஷத்தில் மேலே -ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோகோ விஜிகத்சோ அபிபாபசஸ்
சத்யகாம சத்ய சங்கல்ப -என்பதால் பரம் பொருளே
மேலும் அதே உபநிஷத்தில் மேலே -யாவான் வா அயமாகா சாஸ்தா வா நேஷோ அந்தர் ஹ்ருதய ஆகாச-8-1-3- -என்று
ஆகாயம் போலே என்பதால் தஹரா எனபது ஆகாசம் இல்லை-
——————————————————————-
1-3-14-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –
அனைவரும் சென்று அடையும் இடம் என்பதாலும் ப்ரஹ்ம லோகம் என்பதாலும் தஹரா பர ப்ரஹ்மமே -பரம் பொருளே
சாந்தோக்யம் –
தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹித ம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி சஞ்சரந்தோ ந விந்தேயுர் யேவ ஏவேமாஸ் சர்வா பிரஜா
அஹர் அஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி பிரத்யூடா–8-3-2–என்றும்
இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதுஸ் சதி சம்பத்யா மஹயிதி-என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில்–
ஏஷ ப்ரஹ்ம லோகஸ் சம்ராடிதி ஹோவாச -என்பதால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே-
———————————————-
1-3-15-த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய அஸ்மின் உபலப்தே –
அனைத்துக்கும் ஆதாரமாக பற்றாக உள்ளவன் தஹரா என்பதால் பர ப்ரஹ்மமே –
சாந்தோக்யம் –
அத ய ஆத்மா ச ஹேதுர் வித்ருதி ரேஷாம் போகாநாம் சம்பேதாய-8-4-1–என்று
உலகங்கள் அனைத்துக்கும் ஆதாரம் என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில்–4-4-22- –
ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷ பூதபால ஏஷ சேதுர் விதரண
ஏஷாம் லோகா நாம சம்பேதாய -என்பதால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே-
——————————————–
1-3-16-பிரசித்தே ச –
ஆகாயம் என்று பரம் பொருளை ஒட்டியே பல இடங்களிலும் சொல்லப் பட்டதால் தஹரா பர ப்ரஹ்மமே –
தைத்ரீய ஆனந்த வல்லியில் —
கோ ஹி ஏவ அந்யாத்க ப்ராணயாத் -யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-2-7-
மேலும் -சாந்தோக்யம்-1-9-1-
சர்வாணி ஹ வா இமானி பூதானி ஆகாசாத் ஏவ சமுத்பத்யந்தே– -என்று
ஆகாயம் பரம் பொருள் என்ற காரணத்தால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே –
———————————————–
1-3-17-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –
தஹரா ஜீவனாக இருக்க முடியாது -ஜீவனுக்கு பொருந்தாத தன்மைகள் சொல்லப் படுவதால்
சாந்தோக்யம் –
அத ய ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண
அபி நிஷ்பத்யதே ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத் அம்ருதம் அபயம் யேதத் ப்ரஹ்ம-8-3-3- -என்று
ஆத்மா சம்பிரசாதன் என்றும் பரம் பொருளைக் காட்டிலும் வேறு ஒருவனாக சொல்லப் பட்டதால்
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்ட தஹரா ஆகாயத்தின் தன்மைகள் பர ப்ரஹ்மத்துக்கு மட்டுமே பொருந்தும்-
——————————————–
1-3-18-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து –
பிரஜாபதி ரிஷி இந்த்ரனிடம் ஜீவனுக்கும் உயர்ந்த தன்மைகள் ப்ரஹ்மத்தின் அருளால் –
சம்ப்ரசாதோ அஸ்மாச்
சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண நிஷ்பத்யதே –
ஆனால் தஹரா ஆகாயத்துக்கு இந்த தன்மைகள் மறையாமல் இயற்கையாகவே உள்ளன –
எனவே தஹரா ஜீவன் அல்ல பரம் பொருளே-
——————————————
1-3-19-அன்யார்த்த ச பராமர்ச –
ஜீவனுக்கு பரம் பொருளின் கடாஷத்தால் உயர்ந்த தன்மை அடைவதை சொல்லி
பரம் பொருளின் உயர்ந்த தன்மை காண்பிக்கப் பட்டது-
———————————————
1-3-20-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –
தஹரா ஆகாயம் சிறியது என்பதால் பர ப்ரஹ்மம் அல்ல எனபது சரியல்ல –
இதயத்தில் உள்ளான் -1-2-7 சூத்ரம் சொல்லவே சிறிய உருவம் உள்ளவனாக சொல்லப் பட்டது-
———————————————–
1-3-21-அநு க்ருதே தஸ்ய ச –
முண்டகம் –
யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான்
புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி –3-1-3–என்பதால்
இயற்கையாக அந்த தன்மைகளைக் கொண்ட தஹரா ஜீவன் இல்லை பர ப்ரஹ்மமே-
————————————————-
1-3-22- அபி ஸ்மர்யதே-
ஸ்ரீ கீதை –
இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகாதா–சர்க்கே அபி நோபே ஜாயந்தே
பிரளயே ந வ்யதந்தி ச -14-2- -என்று இதே கருத்து சொல்லப் பட்டதே-
1-3-5-தஹராதி கரணம் சம்பூர்ணம்
——————————————–
1-3-6-ப்ரமிதாதி கரணம் -கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –
1-3-23-சப்தாத் ஏவ ப்ரமித–
ஸ்வேதாச்வதார உபநிஷத்தில்-
பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி அங்குஷ்ட மாத்ர-என்று பிராண வாயு கர்ம வினைகள் சம்சாரம்
என்பதால் அங்குஷ்ட மாத்ர என்றது ஜீவனே பூர்வ பஷம்
கடோ உபநிஷத்தில் –
ஈசா நோ பூத பவ்யச்ய ந ததோ விஜூ குப்சதே -என்று முக் காலங்களையும் நியமிக்கும் தன்மை
பரம் பொருளுக்கே உண்டு -எனவே அங்குஷ்ட மாத்ரன் பரம் பொருளே-
———————————————————–
1-3-24-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்
மனிதர்கள் இதயத்தில் பர ப்ரஹ்மம் உள்ளான் என்பதைக் காட்டவே கட்டை விரல் அளவு உள்ளவன் -என்கிறது –
உபாசனைக்கு ஏற்றவாறு என்றவாறு –
ப்ரமிதாதி கரணம் சம்பூர்ணம்
————————————————————-
1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு
1-3-25-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-
உபாசனை மனிதர்களுக்கு மட்டும் அல்ல தேவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் பாதராயணர்-
உடல் இல்லையே துன்பம் வாராதே உபாசனை வேண்டாம் -என்பர் பூர்வ பஷிகள்
நாம ரூப வியாகரணம் -தேவர்களுக்கும் பொருந்துமே –
சாந்தோக்யம் –
தௌ சமித் பாணி பிரஜாபதி சகாசமா ஜக்மது -என்பதால்
தேவர்களுக்கும் உடல் உண்டு உபாசிப்பார்கள் என்றதாயிற்று-
———————————————————–
1-3-26-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–
தேவர்கள் பல உடல்களை எடுத்துக் கொள்ள முடியுமே –
ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொண்டு ஹவிர்பாஹம் பெறலாம்
சௌபரி பல உடல்களை கொண்டதும் உண்டே-
————————————————–
1-3-27-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-
தேவர்கள் உடலுடன் உள்ளவர்கள் என்றால் வேத வாக்யங்களுக்கு பங்கம் வருமோ என்றால் வாராது
இந்த்ரன் பொதுப் பெயர் வேத ஒலியைக் கொண்டே பிரஜாபதியைப் படைக்கின்றான் –
பூ என்ற சொல்லின் மூலம் பூமியைப் படைக்கின்றான்
ஆரம்பத்தில் வேத வாக்யங்கள் படைக்கப் பட்டன -அதில் இருந்தே அனைத்தையும் படைத்தான் -மனு ஸ்ம்ருதி-
———————————————–
1-3-28-அத ஏவ ச நித்யத்வம் —
விஸ்வா மித்ரர் வசிஷ்டர் கூறியது போன்றவை -இவர்கள் கல்ப காலத்தில் கர்ம பலன்களுக்கு தக்க படி தோன்றுகின்றனர்
அவர்களுக்கு வேதத்தில் குறிப்பட்ட பகுதிகள் தானாகவே தெரியத் தொடங்கும்
ஆக வேத வரிகள் ஒவ்வொரு கல்பத்திலும் தொடர்ச்சியாக ஒருவருக்குப் பின் ஒருவருக்கு உபதேசிக்கப் படும்
————————————————-
1-3-29-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச —
பிரளய காலத்துக்கு பின்புமுன்பு உள்ளது போலே தோன்றுவதால் வேதங்கள் நித்யம் –
தைத்ரியம் –
சூர்யா சந்த்ரமசௌ தாதா யதா பூர்வமகல்பயத் -என்றும்
ஸ்வே தாஸ்வதார உபநிஷத்தில் –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் –
யதர்த்துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே த்ருச்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதிஷூ -என்றும்
கல்பத்திலும் முன்பு இருந்தவை போலே அனைத்தும் தோன்றும் -என்றதே –
தேவாதிகரணம் சம்பூர்ணம்
—————————————————-
1-3-8–மத்வதிகரணம் -தேவர்களுக்கு மதுவித்யை உண்டு
1-3-30-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-
மது வித்யை போன்ற விதைகளுக்கு தேவர்களுக்கு அதிகாரம் இல்லை -என்பர் ஜைமிநி
சூரியன் தேனை சேகரிக்கின்றான்-வேத ஓசைகளே தேன் -நான்கு திசைகள் நான்கு வேதங்கள்-கிழக்கில் இருந்து ருக் வேதம்
இந்த அமிர்தம் போன்ற தேவை உபாசிப்பவன் வஸூக்களில் ஒருவன் ஆகிறான் -தேவர்கள் முன்பே வஸூக்களாய்
உள்ளதால் எப்படி தங்களையே உபாசிக்க முடியும் -எனவே பொருந்தாது –
—————————————————-
1-3-31-ஜ்யோதிஷி பாவாத் ச –
உயர்ந்த ஜ்யோதி ரூபமான பரம்பொருளை தேவர்கள் உபாசிப்பதால் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜயோதிராயுர் ஹோபாசதே அம்ருதம் -என்று சொல்லப்பட்டதே
அதனால் ப்ரஹ்ம உபாசனை தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் சொல்லப் பட்டாலும்
தேவர்களுக்கு அது சிறப்பு மது வித்யை பொருந்தாது-
———————————————————
1-3-32-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —
தேவர்களுக்கு மது வித்யையில் அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கருதுகின்றார் –
30/31 சூத்ரங்கள் பூர்வ பஷமாக்கி இது சித்தாந்தம்
மது வித்யை மூலம் வஸூக்கள் தங்கள் அந்தர்யாமியாக உள்ள பரம் பொருளை உபாசிக்கிறார்கள் -தங்களையே அல்ல-
இந்த கல்பத்தில் வஸூவாக உள்ளவர்கள் அடுத்த கல்பத்திலும் வஸூவாக இருக்க உபாசிக்கின்றனர்-
எனவே அவர்களுக்கும் அதிகாரம் உண்டு-
————————————————————
1-3-33-ஸூகஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –
அன்னப் பறவைகளின் பேச்சைக் கேட்ட ஜானஸ்ருதியின் சோகம் -அவன் உடனே
ரைக்வ ரிஷியிடம் ஓடியதில் இருந்து புரிகின்றது
இது முதல் 39- வரை சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம ஆராய்ச்சி பொருந்துமா என்றது பற்றி விளக்கும்
இரண்டு அன்னப் பறவைகள் -அவரை ரைக்வர் என்று நினைத்தாயோ என்றதும் ஓடி
ரைக்வரும் சூத்ரா உன்னுடைய மரியாதையைக் கண்டு மகிழ்ந்து உபதேசிக்கின்றேன் என்றார்
இது ஜாதி வாக்கியம் அல்லை அன்னப் பறவைகள் பேச்சை கேட்டு மனம் வருந்தியதால் என்பதே பொருள்-
——————————————————————-
1-3-34-ஷத்ரியத்வ கதே -ச
தானம் அன்னதானம் போன்றவை ஞானஸ்ருதி செய்ததால் அவன் ஷத்ரியன்-
சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை அதிகாரம் இல்லை
———————————————————————
1-3-35-உத்தரத்ர சைத்ரரதேன லிங்காத் —
சைத்த்ரரதன் என்பவன் ஷத்ரியன் என்பதற்கு அடையாளங்கள் உண்டே -சம்வர்க்க வித்யையில்-சௌனகன் மகனான
காபேயனும்-காஷ சே நி என்பவரின் மகனான அபிப்ராதாரி இருவரும் உணவு உன்ன அமர்ந்த போது
ஒரு பிரமச்சாரி வந்து பிச்சை கேட்க -இங்கு காபேயன் பிராமணன் என்றும் அபிப்ரதாரி ஷத்ரியன் என்றும்
ஏதேர வை சைத்ரரதம் காபேயா அயாஜயன் -என்பதன் மூலம் காபேயன் பிராமணன் என்றும்
சைத்ரரதோ நாம ஏக ஷத்ரபதி சாயாத -என்பதன் மூலம் அபிப்ரதாரி ஷத்ரியன் என்று அறியலாம்
இத்தால் காபேயனுடன் ப்ரஹ்ம விதியை பயின்ற அபிப்ரதாரி -சைத்ர ரத வம்சத்தில் வந்தவன் -ஷத்ரியன் என்றும்
ரைக்ருவர் உடன் தொடர்புடைய ஞானஸ்ருதியும் ஷத்ரியனாக இருக்க வேண்டும் –
அதனால் சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று
————————————————————–
1-3-36-சம்ஸ்கார பராமர்சாத் தத பாவாபி லாபாத் ச –
ப்ரஹ்ம வித்யை கூறும் வரிகளில் உப நயனம் பஞ்ச சம்ஸ்காரங்கள் கூறப்படுவதாலும்-
சாந்தோக்யம் உபத்வா நேஷ்யே-உப நயனம்
செய்து வைக்கின்றேன் -என்று உள்ளது ப்ரஹ்ம விதியை பற்றி சொல்லும் பகுதியில் –
சூத்ரர்களுக்கு உப நயனம் போன்றவை பொருந்தாது என்பதாலும் அவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை
ந சூத்ரே பாதகம் கிஞ்சித் ந ச சம்ஸ்காரம் அர்ஹதி –
எனவே சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று-
—————————————————————-
1-3-37-தத் பாவ நிர்த்த்தாரேண ச ப்ரவ்ருத்தே —
சூத்திரன் அல்ல என்பதை உறுதி செய்த கொண்ட பின்பே ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கப் பட வேண்டும்
ஜபாலை என்பவரின் குமாரன் சத்யகாமன் ஒரு குருவிடம் ப்ரஹ்ம வித்யை கற்க செல்ல –
உனது கோத்ரம் என்ன என்று கேட்டதும் தெரியாது என்று சொன்னதும்
இத்தை கேட்டதும் பிராமணன் மட்டுமே இப்படி உண்மை சொல்வான் -எனவே உனக்கு
ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கிறேன் -என்றார் –
——————————————————————-
1-3-38-ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் —
சூத்ரர்கள் வேதத்தைக் கேட்பதும் பொருளை ஆராய்வதும் அதன் பலனை பெறுவதும் கூடாது என்று வேதங்கள் கூறும்
தஸ்மத் சூத்ர சமீபே நாத்யேதவ்யம்-என்பதாலும்
சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை –
——————————————————————–
1-3-39- ச்ம்ருதே ச-
ஸ்ம்ருதி களும் சூத்ரர்கள் வேதம் கேட்டால் காதை அறுக்க வேண்டும் –
வேதம் ஓதினால் நாக்கை அறுக்க வேண்டும்
மனப்பாடம் செய்தால் உடலை அறுக்க வேண்டும் என்பதால் அதிகாரம் இல்லை-
அப ஸூ த்ராதி கரணம் சம்பூர்ணம்
—————————————————————–
1-3-6-ப்ரமிதாதி கரணம் சேஷம்
1-3-40-கம்ப நாத் –
அங்குஷ்ட மாத்ரனைக் கண்டு தேவர்களும் அஞ்சி நடுங்குவதால் அவனே பரம் பொருள் –
கட உபநிஷத் –
யதிதம் கிஞ்ச ஜகத் சர்வம் பிராண எஜதி நிஸ்ஸ்ருதம்
மஹத்பயம் வஜ்ர முத்யதம் ய ஏதத் விதுரம் ருதாஸ்தே பவந்தி
பயதா ச்யாக் நிஸ் தபதி பயாத் தபது ஸூர்ய
பயா இந்திரஸ்ஸ வாயுஸ்ஸ ம்ருத்யுர் தாவாதி பஞ்சம-
தைத்ரிய உபநிஷத் –
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
பீஷாஸ் மாதக் நிஸ் சேந்த்ரஸ்ஸ ம்ருத்யும் தாவதி பஞ்சம –
இப்படிப்பட்ட பெருமைகளை யுடையவனே பர ப்ரஹ்மம்-
——————————————-
1-3-41-ஜ்யோதிர் தர்சநாத் –
அங்குஷ்ட மாத்ரனை மிகுந்த ஒளி உள்ளவனாகச் சொல்லுவதால் அவனே பரம் பொருள் –
கட உபநிஷத் –
ந தத்ர ஸூர்யோபாதி ந சந்திர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி –
தமேவ பாந்த மநு சர்வம் தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி –
இப்படிப்பட்ட பெருமை உடையவன் பரம் பொருளாகவே இருக்க முடியும்-
ப்ரமிதாதி கரணம் சேஷம் சம்பூர்ணம்
————————————————–
1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம் -ஆகாயம் எனபது ப்ரஹ்மமே-
1-3-42-ஆகாச அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —
ஆகாசத்துக்கும் மற்றவற்றுக்கும் வேறுபாடுகள் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளதால் ஆகாயம் எனபது பரம் பொருளே
முக்தி பெற்ற ஜீவனே ஆகாசம் என்பர் பூர்வ பஷி –
சாந்தோக்யம் –
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ராஹோர் முகாத் ப்ரமுச்ய
தூத்வா சரீரமக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகமபி சம்பவாமி –
சித்தாந்தம் -ஆகாயத்தைக் கூறும் பொழுது -நாம ரூபயோர் நிர்வஹிதா -பெயர் மற்றும் உருவங்களை நிர்வஹிப்பவன்
என்பதால் ஆகாயம் ஜீவன் அல்ல பரம் பொருளே –
———————————————————
1-3-43-ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ -பேதேந –
தூங்கும் பொழுது உள்ள ஜீவனும் உயிர் பிரியும் பொழுது உள்ள ஜீவனும் வெவ்வேறு என்பதால் ஜீவன் வேறு பரம்பொருள் வேறு
பூர்வ பஷி -தத் த்வமசி–அஹம் பிரம்மாஸ்மி –நேஹ நா நாஸ்தி -என்பர்
சித்தாந்தம் –
ப்ருஹத் உபநிஷத் –
ப்ராஜ்ஞே நாத் மநா சம்பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சன வேத நாந்தரம் –
ஜீவன் உறங்கும் பொழுது பரம் பொருளால் அணைத்துக் கொள்ளப் படுகிறான் –
அப்பொழுது அவனுக்கு எதுவும் தெரியாத நிலையில் உள்ளான் என்றும்
ப்ராஜ்ஞே நாத் மநான் வாரூட உத்சர்ஜன்யாதி -என்று பரம் பொருளுடன் சென்று சேர்த்தி பெறுகின்றான்
எனவே ஜீவனும் பரம் பொருளும் ஓன்று அல்ல -ஆகாயம் பர ப்ரஹ்மமே ஜீவன் அல்ல-
————————————————————-
1-3-44-பத்யாதி சப்தேப்ய —
பதி என்ற பதம் மூலம் ப்ரஹ்மம் அழைக்கப் படுவதால் அவனும் ஜீவனும் ஓன்று அல்ல
ப்ருஹத் உபநிஷத் -சர்வஸ்யாதி பதிஸ் சர்வஸ்ய வஸூ சர்வஸ் யேசாந-என்று
அனைத்துக்கும் நாயகன் -நியமிப்பவன் -சர்வேஸ்வரன் என்பதால்
பரம் பொருளும் ஜீவனும் வேறு -ஆகாசம் எனப்படுபவன் பரம் பொருளே –என்றதாயிற்று-
அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம் சம்பூர்ணம்
——————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply