ஸ்ரீ பாஷ்யம்-1-1-முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்- முதல் பாதம் —

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———————————————————-

545 ஸூத்ரங்கள் –
நான்கு அத்தியாயங்கள் -சமந்வய–அவிரோத -சாதனா -பல அத்யாயங்கள் –

முதல் அத்தியாயத்தில்-11+6+10+8=35 அதிகரணங்கள்

—————————————————–

1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம் -ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே –
1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே-
1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்
1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
1-5-ஈஷத் யதிகரணம் –சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே
1-6-ஆனந்தமயாதிகரணம் -ஆனந்தமயமாக உள்ளது ப்ரஹ்மமே –
1-7-அந்தர் அதிகரணம் -ஸூ ரியனுக்கு உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .
1-8-ஆகாசாதி கரணம் -ஆகாயம் எனப்படுவதும் ப்ரஹ்மமே –
1-9-ப்ராணாதி கரணம்–பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே
1-10-ஜ்யோதிர் அதிகரணம் -ஜோதி என்பதும் ப்ரஹ்மமே –
1-11-இந்திர பிராணாதி கரணம் -இந்த்ரன் பிராணன் எனபது ப்ரஹ்மமே –

————————————————————-

2-1- சர்வத்ர பிரசித்தி அதிகரணம் –ப்ரஹ்மமே அனைத்தும் எனபது பரம் பொருளே
2-2-அத்த்ரதி கரணம் -உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே
2-3-அந்த்ராதிகரணம் -கண்களில் உள்ளவன் ப்ரஹ்மமே –
2-4-அந்தர்யாம் யதிகரணம் -அந்தர் யாமியாகக் கூறப்படுபவன் ப்ரஹ்மமே –
2-5-அத்ருத்யச்வாதி குணா திகரணம் -அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே
2-6-வைச்வா நராதிகரணம் -வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-

———————————————————————–

3-1-த்யுத்வாத்யதிகரணம் -தேவலோகம் பூமி ஆகியவற்றின் இருப்பிடம் ப்ரஹ்மமே –
3-2-பூமாதி கரணம் -பூமா எனப்படுவதும் ப்ரஹ்மமே
3-3- அஷராதி கரணம் -அஷரம் எனபது ப்ரஹ்மமே –
3-4-ஈஷதி கர்மாதிகரணம் -கானப்படுபவன் ப்ரஹ்மமே
3-5-தஹராதி கரணம் -தஹரா ஆகாயம் என்பதுவும் ப்ரஹ்மமே
3-6-ப்ரமிதாதி கரணம் -கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –
3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு
3-8–மத்வதிகரணம் -தேவர்களுக்கு மதுவித்யை உண்டு
3-9- அப ஸூ த்ராதி கரணம் -ஸூ த்ரர்களுக்கு ப்ரஹ்ம விதியை இல்லை –
3-10-அர்த் தாந்தரத்வாதி கரணம் -ஆகாயம் எனபது ப்ரஹ்மமே-

———————————————————————

4-1- ஆநுமா நிகாதி கரணம் -பிரகிருதி உலகின் காரணம் இல்லை
4-2-சமசாதி கரணம் -ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி
4-3-சங்க்யோப சங்க்ரஹாதி கரணம் -இந்த்ரியங்களுக்கு ப்ரஹ்மமே அந்தர்யாமி –
4-4-காரணத்வாதி கரணம் -ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –
4-5-ஜகத்வாசித்வாதி கரணம் -ப்ரஹ்மமே அறியத்தக்கது –
4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –
4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –
4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-

————————————————————

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-முதல் பாதம் —32 ஸூத்ரங்கள் –

1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம் -ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே –

1-1-1- அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச –
அறிவதில் ஆராய்வதில் உள்ள விருப்பம் -எதனை ஆராய்வதில் எதனால் –
அத -இந்த காரணத்தினால் -மோட்ஷபலனை அளிக்க வல்ல

ப்ரஹ்ம சப்தேன ச ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ –அனவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கண -புருஷோத்தம -அபிதீயதே –

ஜிஞ்ஞாசாதி அதிகரணம் சம்பூர்ணம்

—————————————

1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே–

1-1-2- ஜந்மாதி அஸ்ய யத–

ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் திறமை எவனிடம் உள்ளவோ அவனே ப்ரஹ்மம் –

தைத்ரிய உபநிஷத் –
ப்ருகு தந்தை வருணனிடம் கேட்க வருணன் அளித்த பதில் –
யதோ வா இமாநி பூதா நி ஜாயந்தே -யேன ஜாதாநி ஜூவந்தி யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத்வி ஜ்ஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்மேதி —
மூன்று செயல்களையும் குறிக்கும் ப்ரஹ்மம் ஒன்றே -மூன்று அல்ல
அரைக் கொம்பு கொம்பு இல்லாதது முழு கொம்பு உள்ளது –
வெவ்வேறு காலங்களில் –
சத் புருஷன் அத்விதீயம் ஏகமேயம்-சகபத்னி -திரு உள்ள தேவனே தேவன் ஆவான்-

அஸ்ய–ஜாத –யத–யஸ்மாத் சர்வேஸ்வராத்- நிகில ஹேய ப்ரத்ய நீக ஸ்வரூபாத் -ஸத்ய சங்கல்பாத்
ஞான ஆனந்த அனந்த கல்யாண குணாத் பும்ஸ -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ப்ரலயா பிரவாத்தன்தேதத் ப்ரஹ்மத்தி சூத்ரார்த்த

ஜந்மாத்யாதி அதிகரணம் சம்பூர்ணம்

——————————————————–

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்

1-1-3- சாஸ்திர யோநித்வாத் –வேதங்களே பிரமாணங்கள்

அநு மானம் பிரத்யஷம் கொண்டு அறியலாகாது –

சாஸ்திர யோநித்வாதிகரணம் சம்பூர்ணம்
————————————

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –

1-1-4-தத் து சமன்வயாத் –

உபாசகனுக்கு பயனாக ப்ரஹ்மமும்-ப்ரஹ்மத்துக்கு பயனாக உபாசகனும் ஆவதால்
கர்மங்களையும் பலன்களையும் சொல்லும் வேதங்கள் பிரமாணங்கள் ஆகும்

சமந்வயாதிகரணம் சம்பூர்ணம்

——————————————

1-5-ஈஷத் யதிகரணம்-சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே

1-1-5- ஈஷதேர் நா சப்தம் –
ஈஷ் என்பதம் மூலம் ப்ரஹ்மமே காரணம் -பிரகிருதி இல்லை என்கிறது

சத் வித்தை -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகும் –
பஹூஸ்யாம் -சங்கல்பித்து கொண்டு பலவாகிறான் ப்ரஹ்மம்
அக்னி நீர் இவை இப்படி சொல்வதும் ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருப்பதால் -காரணப் பொருள் ப்ரஹ்மமே –

——————————————————

1-1-6- கௌண சேத் ந ஆத்ம சப்தாத் –
ஆத்மா ப்ரஹ்மத்தையே குறிக்கும் -சத் என்பதும் ப்ரஹ்மமே

சாந்தோக்யம்
ஜகத் ஆத்மயம் இதம் சர்வம் -அனைத்தும் பணியாற்றவும் ப்ரஹ்மமே காரணம்

—————————————————-

1-1-7-தந் நிஷ்டஸ்ய மோஷ உபதேசயாத் –
சத் என்பவன் தன்னை உபாசிக்குமவர்களுக்கு மோஷம் அளிப்பவனே அதனால் ப்ரஹ்மமே –

சாந்தோக்யம் -3-14-1-
யாதாக்ரது ரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -என்றபடி
பிரக்ருதியை எவ்வாறு உபாசிக்கிறானோ இறந்தபின் அப்படியே ஆகிறான் -எனவே சத் எனபது பிரகிருதி அல்ல-

சத் வித்யா பிரகரணத்தில்-சாந்தோக்யத்தில் –
ஆச்சார்யவான் புருஷ வேத -தஸ்ய தாவதேவ சிரம் யாவன்ன விமோஷ்யே அத சம்பத்ஸ்யே-என்று
சத் உபாசனமே மோக்ஷ உபாயமாக சொல்லப்பட்டது –
எவனுக்கு உபதே ஷ்டாவான ஆச்சார்யன் இருக்கிறானோ அவனே ப்ரஹ்ம வித்தாவான் -சரம சரீரத்தில் இருந்து விடுபடலாம் அளவே
அவனுக்கு கால தாமதம் -சரம சரீரம் விழுந்த உடனே சத் சப்த நிஷ்டானாய் ஜகத் காரண பூதனான பரம புருஷனை அடைகிறான்
சத் உபாசன நிஷ்டனுக்கு சரீரம் விழும் அளவு தான் மோக்ஷ ப்ராப்தியில் தாமதம் -சரீரம் தொலைந்த உடன் முக்தன் ஆகிறான் –
அதனால் நாராயணனே ஸச் சப்த வாச்யன் என்று அறுதி விடப்படுவதால்
ப்ராக்ருதமான வஸ்து பிரதானம் அன்று என்பதே ஸூத்ரத்தின் தாத்பர்யம்
தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி -இத்யாதிகளால்–இதே தத் சப்தம் –
இதே தத் சப்தம் -தன்னிஷ்டஸ்ய -வாக்யத்திலும்
எனவே – நாராயண உபாசனமே மோக்ஷ உபாயம் -என்றதாயிற்று

—————————————————

1-1-8-ஹேயத்வா வச நாத் ச –
சத் என்பதை தாழ்வாகவும் தவறாகவும் சொல்ல வில்லை –
உபாசனை செய்யலாம் -எனவே அது ப்ரஹ்மமே

—————————————————–

1-1-9-பிரதிஜ்ஞ்ஞா விரோதாத் –
சத் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்றோம் அதனால் அது பிரகிருதி இல்லை ப்ரஹ்மமே –
அறிவற்ற பொருள் அறிவுடையார்க்கு உணர்த்தாதே –

——————————————————–

1-1-10 –ஸ்வாப்யயாத்–
தூங்கும் பொழுது சத் உடன் கலக்கிறோம் சத் ப்ரஹ்மமே

சாந்தோக்யம் -6-8-1-
யத்ரை தத்புருஷ ஸ்வ பிதி நாம சதா சோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வ மபீதோ பவதி
தஸ்மா தேநம் ஸ்வ பி தீத்யாஸ் ஷதே ஸ்வம் ஹயபீதோ பவதி –

———————————————————————————-

1-1-11-கதி சாமான்யாத் –
சத் எனபது ப்ரஹ்மமே பல உபநிஷத்துக்களும் இத்தையே சொல்லும் –

ஐத் ரேய உபநிஷத் -1-1-
ஆத்மா வை இதம் ஏக ஏவாக்ர ஆஸீத் -ஆத்மா என்னும் பொருளாக இது -சத் -இருந்தது –
தைத்ரியம் -2-1-1-
ஆத்மன ஆகாச சம்பூத -இந்த பிரமத்தில் இருந்து ஆகாசம் யுண்டாயிற்று
இவற்றால் ஸ்ரீ மன் நாராயணனே சத் என்றும் உலகின் காரணம் என்றதும் ஆயிற்று –

கதி சாமான்யாத்-
கதியாவது -பிரவ்ருத்தி -அதாவது அர்த்த போதகத்வம் –
சாமான்யாத்-அது சாமானமாய் இருக்க வேண்டியது அவசியம் ஆகையால் -என்றவாறு
காரண வாக்கியங்கள் எல்லாம் ஒரே மிடறாக இருக்க வேண்டியதாகையாலே என்றவாறு
அத புருஷோ ஹ வை நாராயணோ காமயத -என்றும்
ப்ரஜாஸ் ஸ்ருஜ்யேதி-என்றும் –
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் –என்றும்
ந ப்ரஹ்மா நேசாநோ நேம த்யாவா ப்ருத்வீ -என்றும்
நாராயணனுக்கே ஜகத் காரணத்வம் ஓதப்பட்டுள்ளதே
ஸச் சப்த தேவதா வாக்கியங்கள் -சப்தங்கள் நாராயணன் இடமே பர்வசிக்கும் –
பிரதானம் பிரகிருதி ஸச் சப்த வாஸ்யம் அன்று

————-

1-1-12- ஸ்ருதத்வாச்ச –

சாந்தோக்யம் -7-26-1-
ஆத்மத பிராண ஆத்மத ஆகாச ஆத்மத ஏவேதம் சர்வம் என்று இந்த ப்ரஹ்மத்தில் இருந்து
சுவாசம் ஆகாசம் அனைத்தும் உண்டானது என்பதால்-

அத சர்வஞ்ஞ -சர்வ சக்தி -சர்வேஸ்வரேஸ்வர-நிரஸ்த நிகில தோஷ கந்த -அனவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணவ் மஹார்ணவ -புருஷோத்தமோ நாராயண ஏஷ நிகில
ஜகத் ஏக காரணம் ஜிஜ்ஞ்ஞாஸ்யம் ப்ரஹமேதி ஸ்திதம்

1-5-ஈஷத் யதிகரணம்-சம்பூர்ணம்

————————————————-

1-6-ஆனந்தமயாதிகரணம்-ஆனந்தமயமாக உள்ளது ப்ரஹ்மமே –

1-1-13- ஆனந்தமய அப்யாசாத் –

ஆனந்த வல்லி-
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஜ்ஞானமயா தன்யோந்தர ஆத்மாநந்தமய தே நைஷபூர்ண -என்று
முந்திய வரில் ஆத்மாவிடம் இருந்து ஆகாயம் -ஆகாயத்தில் இருந்து காற்று -காற்றில் இருந்து அக்னி -அக்னியில் இருந்து நீர்
நீரில் இருந்து பூமி -பூமியில் இருந்து தாவரங்கள் -தாவரங்களில் இருந்து உணவு -உணவில் இருந்து உடல் –
விஜ்ஞான மயம் மட்டும் அல்ல ஆனந்தமே உருவாக ஓன்று உள்ளது –

இதற்கு பூர்வபஷம் –
ஆத்மாவுக்கு உடல் உள்ளது என்பதால் இது ஜீவனைக் குறிக்கும் –
தைத்ரியம்
தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா –
ஞானமயன் ஆத்மா-ஜீவன் தான் அவனுக்குள்ளும் இருக்கும் ஆனந்தமயன் பரமாத்மா –
அவனது ஆனந்தத்தை அளக்க இயலாது -சைஷா நந்தச்ய மீமாஸ் ஸா பவதி –
மனுஷ்ய ஆனந்தத்தை விட பல கோடி நூறாயிரம் மடங்கு ஆனந்தம்
யச்யாத்மா சரீரம் சுருதி வாக்யத்தால் அந்த பரம்பொருளுக்கு உடல் தொடர்பு உண்டே -எனவே
ஆனந்தமயனாக சொல்லப் படுபவன் பரம் பொருளே-

—————————-

1-1-14-விகார சப்தாத் ந இதி சேத் ந ப்ராசுர்யாத் –
மயன் உருவம் என்பதால் பரம் பொருள் அல்ல -என்றால் –
மயன் மிகுதியையும் குறிக்கும்-மிகுதியான ஆனந்தம் உடையவன் -என்றதாயிற்று –

——————————–

1-1-15-தத்தேது (ஹேது)-வ்யபதேசாத் ச
ப்ரஹ்மத்தின் ஆனந்தம் மற்றவர்களுக்கும் ஆனந்தம் அளிக்கும் –

ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்று அவன் ஆனந்தம் அளிப்பவன் என்றும்
கோ ஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-என்று
அவன் இல்லை என்றால் யாராலும் ஆனந்தம் அனுபவிக்க முடியாது என்றும் தைத்ரியம் கூறுவதால்

————————————–

1-1-16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே

தைத்ரியம் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்றும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் ப்ரஹ்மம் ஜீவனை விட உயர்ந்தது என்கிறது

————————————-

1-1-17-ந இதர அநுபபத்தே –

தைத்ரியம் –
சோஸ்நுதே சர்வ காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்தேதி -என்று
மிகுந்த ஞானம் உள்ள ப்ரஹ்மத்தின் இடம் இருந்து ஜீவன் தான் விரும்பும் அனைத்தையும் பெறுகிறான் –
என்பதால் ஆனந்தமயன் ஜீவன் அல்ல –

———————————

1-1-18-பேத வ்யபதேசாத் ச

தைத்ரியம்
தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞான மயாத் அந்ய அந்த்ர ஆத்மா ஆனந்தமய – என்று
ஆனந்தமயன் விஜ்ஞான மயனை விட மாறுபட்டவன் என்பதால்-ப்ரஹ்மமே -ஜீவன் அல்ல என்றதாயிற்று –

———————————–

1-1-19-காமாத் ச ந அநுமாநாபேஷா –

பஹூச்யாம் சங்கல்பத்தால் -உடல் புலன்கள் இல்லாமல் பிரகிருதி உதவி இல்லாமல் செய்பவன் –
என்பதால் ப்ரஹ்மமே-ஜீவன் இல்லை

——————————–

1-1-20-அஸ்மின் அஸ்ய ச தத்யோகம் சாஸ்தி –
ஆனந்தமயனுடன் சேரும் பொழுது ஜீவனுக்கும் ஆனந்தம் உண்டாகும்

1-6-ஆனந்தமயாதிகரணம் சம்பூர்ணம்-

————————————————————————————-

1-7-அந்தர் அதிகரணம்–ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .

1-1-21-அந்த தத்தர்மோபதேசாத் –
கண்கள் உள்ளும் சூரியன் உள்ளும் இருப்பவன் ப்ரஹ்மமே-

ய ஏஷ யந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ரூர் ஹிரண்ய கேசக ஆப்ரணகாத்
சர்வ ஏவ ஸூ வர்ண -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணி என்றும் –
ய ஏஷ அந்தர் அஷிணி புருஷோ த்ருஸ்யதே தஸ்யை தஸ்ய ததேவ ரூபம் யதமுஷ்யரூபம்
ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித-என்று பாபங்களால் தீண்டப்படாமல் இருப்பவன் -என்றும்
சைவ ருக் தத் சாமததுக்க்கம் தத்ய ஜூ ஸ் தத் ப்ரஹ்ம-என்றும்
சொன்னபடி ஜீவர்கள் அல்ல ப்ரஹ்மமே-

———————————-

1-1-22- பேத வ்யபதேசாத் ச அந்ய –

ப்ருஹத் ஆரண்யகாவில் –
ய ஆதிதயே திஷ்டன் ஆதித்யாத் அந்த்ரோயம் ஆதித்யோ நவேத யஸ்யா தித்ய சரீரம் ய ஆதித்யம் அந்தரோ யமயதி -என்று
யார் சூரியனில் அந்தர்யாமியாக உள்ளானோ -அவன் சூரியனுக்கு தெரியாமல் அப்படி உள்ளவன் யாரோ –
அவனுக்கு சூர்யன் உடம்பாக உள்ளான் -அவனே சூர்யனை வழி நடத்துகிறான்
ஸூபால உபநித்தும் இது போலே ஜீவர்களுக்குள் அந்தர்யாமாவாக உள்ளத்தை சொல்லும் –
அவனே பரம்பொருள் ஜீவன் அல்ல என்றதாயிற்று-

அந்தர் அதிகரணம் சம்பூர்ணம்

——————————————————–

1-8-ஆகாசாதி கரணம் -ஆகாயம் எனப்படுவதும் ப்ரஹ்மமே –

1-1-23-ஆகாஸ தல் லிங்காத் —

சர்வாணி ஹ வை இமானி பூதானி ஆகாசதேவ சமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யச்தம் யந்தி என்று
ஆகாசமே மூல காரணம் என்றும்
ஹ வை -முன்பு சொல்லிய பிரமத்தின் தொடர்ச்சியே சொல்லிற்று –
பேத வ்யபதேசாத் ச அந்ய -1-2-22–என்பதில் இருந்து அந்நிய பதம் வருவித்துக் கொள்வது
சாந்தோக்யம் –
சர்வாணி ஹ வா இமானி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத்யந்தே -என்று
ஆகாச சப்தத்தால் சொல்லப் படுபவன் –
அந்நிய –
பூத ஆகாசத்தில் காட்டிலும் வேறு பட்டவன் -ஏன் என்னில்
தல் லிங்காத்–
பரமாத்மாவுக்கு அசாதாரணமான
லிங்கம் ச்ருதமாய் இருப்பதால் -என்பதே ஸூத்ரம் பொருள் –

சர்வாணி ஹ வா இமானி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத்யந்தே–ஆகாசம் ப்ரத்யஸ்தம் யந்தி
ஆகாசோ ஹ்யேவ ஏப்யோ ஜ்யாயான் ஆகாச பாராயணம் –
சர்வ பூத உத்பத்தி காரணத்வமும் -சர்வ பூத லய காரணத்வமும் -சர்வ ஸ்மாத் ஜ்யேஷ்டத்வமும் -பராயணத்வமும் -சொல்லிற்றே
ஜ்யேஷ்டத்வம் -குணங்களாலும் ஸ்வரூபத்தாலும் உத்க்ருஷ்டமாய் இருக்கை/ பராயணத்வம் -பரம ப்ராப்யம் என்றபடி –
அப்படிப்பட்டவை பரமாத்மாவுக்கு சம்பாவிதம் -பூதாகாசத்துக்கு சம்பவிக்க மாட்டாதே –
அசேதனமாயும் ஹேயமாயும் அன்றோ இருக்கும் –
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே –
விச்வத பரமம் நித்யம் விஸ்வம் நாராயணன் ஹ்ரீம்
நாராயணம் மஹாஜ்ஜேயம் விச்வாத்மநாம் பாராயணம் -என்பதால்
பரம புருஷனையே இந்த ஆகாச சப்தம் சொல்லும் என்றதாயிற்று –
ஈஷாணம் முதலானவை முக்கியமாக கொள்ளலாம் என்பர் பூர்வ பக்ஷிகள் -ஸ்ருதியை விட லிங்கத்துக்கு பிராபல்யம் –
காங்காயாம் கோஷ–கங்கா பதஸ்ய கங்கா தீரே லக்ஷணா
ஆ -சமந்தாத் -காசாதே -பிரகாசதே-வியுத்பத்தியால் -நாராயணன் -பர ப்ரஹ்மத்தையே கொள்ள வேண்டும் –

ஆகாசாதி கரணம் சம்பூர்ணம்

—————————————————————-

1-9-ப்ராணாதி கரணம்–பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே

1-1-24-அத ஏவ பிராண –

சர்வாணி ஹ வா இமானி பூதானி பிராணமேவாபி சம்விசந்தி பிராணமப் யுஜ்ஜிஹதே –
கல் மரக்கட்டைகளுக்கு பிராணன் இயங்க தேவை இல்லையே
தோன்றி மறையும் தன்மை பரம் பொருளுக்கே உண்டு-

அத ஏவ -பிரசித்தம் போலே நிர்தேசம் இருப்பதினாலேயே
பிராண -பிராண சப்தத்தால் சொல்லப் படுபவன்
அந்நிய -பிராண வாயுவில் காட்டில் வேறுபட்டவன் –
சாந்தோக்யம்
சர்வாணி ஹி வா இமானி பூதாநி ப்ராணம் ஏவ அபி சம்விசந்தி ப்ராணம் அப்யுஜ்ஜி ஹதே சைஷா தேவதா ப்ரஸ்தாவம் அந்யாவத்தா –
ஹை வை -பிரதித்தம் -பிராணன் இடத்திலே லயம் அடைகின்றன -பிராணன் இடத்தில் இருந்தே வெளிவருகின்றன
ப்ராணயதி– ஜீவயதி என்கிற வியுத்பத்தியால் பர ப்ரஹ்ம பர சப்தம்
உத்பத்தி ஸ்திதி களை பிராண அதீனமாக கண்டாலும் சேதன ஸ்வரூபத்தின் ஸ்திதி
பிராண அதீனமாக அல்லாமையாலே இதுவும் பரமார்த்த பரமே

ப்ராணாதி கரணம் சம்பூர்ணம்

——————————-

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -ஜோதி என்பதும் ப்ரஹ்மமே –

1-2-25-ஜ்யோதி சரணாபிதா நாத் —
ஜோதியும் ப்ரஹ்மமே -மற்றவை அதன் பாதங்களில் பணியும்

சாந்தோக்யம் –
பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய அக்னியை-
ஆகாசாத் வாயு –வாயோர் அக்னி -என்பதால் -ஆகாசம் வாயு அக்னி மூன்றுக்கும் காரணத்வம் சங்கித்து மறுக்கப் படுகிறது

அத்யதத பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ அனுததமேஷூ உத்தமேஷூ
லோகேஷூ இதம் வா வத்யதித மந்த புருஷே ஜ்யோதி –
என்று அக்னியே காரணம் என்று பூர்வபஷ வாதம்
பாதோச்ய சர்வ பூதானி த்ரிபாதச்யாம்ருதம் திவி -என்று பாதத்தில் நான்கில் ஒரு பாகமே பஞ்ச பூதங்களும்
அனைத்து லோகங்களும் என்று சாந்தோக்யம் சொல்லுமே
உயர்வற உயர்ந்த ஒளி உள்ளதாக ஓதப்பட்ட ஜ்யோதிஸ்ஸூக்கு –
பாதோஸ்ய சர்வ பூதாநி த்ரிபதாஸ் யாம்ருதம் தீவி -என்ற புருஷ ஸூக்த்தத்தின்
மந்திரத்தின் பொருள் நினைவூட்டப் படுகிறது –
ஆகையால் வேதாந்தமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமசஸ் து பாரே –
பரம புருஷன் பரமாக கொள்ள வேண்டும்
அஹம் வைச்வா நரோ பூத்வ பிராணி நாம் தேஹமா ஸ்ரீ தா -ஸ்ரீ கீதை –
உடம்பில் உள்ள அக்னியும் ப்ரஹ்மமே

————————-

1-1-26-சந்தோ அபிதா நாத் ந இதி சேத் ந ததாசே தோர்ப்பண நிஹமாத் ததாஹி தர்சனம்

காயத்ரி சந்தஸில் கூறப்படுபவன் ப்ரஹ்மமே-காயத்ரி போலே ப்ரஹ்மத்தையும் மனசில் கொள்ள வேண்டும் –
காயத்ரிவா இதம் சர்வம் -காயத்ரி சந்தஸ் பிரமத்தைப் போலே நான்கு பாதங்கள் உடையது –

—————————————

1-1-27-பூதாதி பாத வ்யபதேசா அபபத்தே ச ஏவம்

சாந்தோக்யத்தில் பூதங்கள் பூமி உடல் இதயம் ஆகிய நான்கு பாதங்கள் உள்ளதாக சொல்வதால்
காயத்ரி என்றதும் ப்ரஹ்மமே –

————————————

1-1-28-உபதேச பேதாத் ந இதி சேத் ந உபய அஸ்மின் அபி அவிரோதாத் –

பரம் பொருளின் மூன்று பாதங்கள் பரமபதத்தில் இருப்பதாகவும் 1-1-25- சொல்லி –
சாந்தோக்யம் பரோதிவ ஜ்யோதி -என்று
பரம பதத்துக்கு மேலே உள்ளதாகச் சொல்லப் பட்டுள்ளது –
இரண்டுக்கும் பேதம் இல்லை மரத்தின் மேலே பறவை என்பதும் மரத்தில் பறவை என்பதும் ஓன்று போலே –

1-10–ஜ்யோதிர் அதிகரணம் சம்பூர்ணம்

————————————-

1-11-இந்திர பிராணாதி கரணம்

1-1-29-ப்ராணா ததா அநுகமாத் –

பிராணனாக நான் உள்ளேன் என்று இந்த்ரன் கூறியதும் ப்ரஹ்மத்தை தான் –
கௌஷீதகி ப்ராஹ்மணத்தில்
தன்னை உபாசித்த ப்ரதர்த்தனன் என்பவன் இடம் –
சா ஹோவாச ப்ராணோஸ்மி ப்ராஜ்ஞாத்மா தம் மாம் ஆயுர் அம்ருதம் இத் உபாஸ்வ –
உயிராகவும் அமிர்தமாகவும் சொன்னான்
அதே கௌஷீதகி ப்ராஹ்மணத்தில்-
ச ஏஷ ப்ராணா ஏவ ப்ராஜ்ஞாத்மா ஆனந்தோஜரோம்ருத-என்று
பிராணன் ஆனந்தமாயும் இளமையுடனும் அழியாமலும் உள்ளதாக சொல்லி இருப்பதால்
பிராணன் என்றது இந்த்ரன் தனக்கு உள்ளே உள்ள ப்ரஹ்மத்தை தான்-

—————————–

1-1-30- ந வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-

ஏஷ ஏவ சாது கர்ம காரயதி தம் யமேப்யோ லோகேப்ய உன்நிநீஷதி ஏவசாது கர்ம காரயதி தம் யமதோ நிநீஷதி-என்று
நன்மை தீமைகள் பரம் பொருளால் விளையும் என்றும் –
தத் யதா ரதஸ் யாரேஷூ நேமி ரர்ப்பிதா நாபாவர அர்ப்பித்தா ஏவ மேவைதா பூத மாத்ரா ப்ராஜ்ஞா மாத்ரா ப்ராணே அர்ப்பிதா-என்று
தேரின் சக்கரத்தில் உள்ள கம்புகள் சக்கரத்தின் நடுவில் சேர்க்கப் பட்டது போலே அசேதனங்கள் சேதனங்களின் இடமும் சேதனங்கள்
ப்ரஹ்மத்திடமும் இணைக்கப் பட்டுள்ளன என்பதால் இந்த்ரன் பிராணன் ஆகியவை பரம்பொருளையே குறிக்கும்-

——————————–

1-1-31-சாஸ்திர த்ருஷ்ட்யா து உபதேச வாமதேவவத் –

வாசுதேவரைப் போலே இந்த்ரனும் வேதங்கள் மூலம் உண்டான ஞானத்தினால் இவ்வாறு கூறினான் –
சாந்தோக்யம் –
அநேன ஜீவேன ஆத்ம நா அநு பிரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று ஜீவன் மூலமாக
அசித்துக்களை ஆக்கிரமித்து பெயரும் ரூபமும் கொடுக்கிறேன் என்றும்
ப்ருஹத் ஆரண்யா காவில்-
ய ஆத்மினி திஷ்டன் ஆத்ம நோந்தர யமாத்மா ந வேத யச்யாத்மா சரீரம் ய ஆத்மாநமந்திரோ யமயதி -என்று
எந்த பரம்பொருள் ஜீவாத்மாவில் உள்ளதோ -எந்த பரம்பொருளை ஜீவாத்மா அறியவில்லையோ -யாருக்கு ஜீவாத்மா உடலாக உள்ளதோ –
உள்ளே புகுந்து ஜீவாத்மாவை யார் இயக்குகின்றானோ -என்று தனக்கு உள்ளே உள்ள பரம்பொருளை இந்த்ரன் குறிப்பிட்டான்-
ப்ருஹத் ஆரண்யா காவில் –
தத்தைதத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபதே அஹம் மநுரபவம் ஸூ ர்யச்யாஹம்-என்று
ப்ரஹ்மத்தை உணர்ந்த வாமதேவர் தானே மனுவாகவும் ஸூர்யனாகவும் –
பரம்பொருளே அந்தர்யாமியாகவும் உணர்ந்து -இப்படிக் கூறினார்-

———————————-

1-1-32-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத ந உபாசாத்ரை வித்யாத் ஆ ஸ்ரீ தத்வாத் இஹ தத் யோகாத் –

கௌஷீதகி ப்ரஹ்மணத்தில்-
ந வாசம் விஜிஜ்ஞா சீத வக்தாரம் வித்யாத் -என்றும்
த்ரிசீர்ஷாணம் த்வாஷ்ட்ரம் அஹம் அருன்முகான் யதீன் சாலாவ்ருகேப்ய ப்ராயச்சம் -என்றும்
இந்திரனைப் பற்றி சொல்லிற்று –
யாவதஸ்மின் சரீரே ப்ராணோ வசதி தாவதாயு -என்றும் பிராணனைக் குறித்தும் சொல்லிற்று
பரம்பொருளை உபாசிப்பது -தைத்ரியம்
ஆனந்தோ ப்ரஹ்ம-சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம- -உள்ளபடியே உபாசிப்பது ஒரு முறை –
ஜீவாத்மாவை உடலாக உடையவன் -என்று உபாசிப்பது ஒரு முறை –
பிராண வாயுவை உடலாக உடையவன் -அந்தர்யாமியாக உள்ளவன் என்பதையே சொல்லும் —

இந்திர பிராணா அதிகரணம் சம்பூர்ணம்

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம்-சம்பூர்ணம்-

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading