மாறன் பனித்த தமிழ் மறைக்கு
ஆறங்கம் கூற அவதரித்த
வேத சதுஷ்ட்ய அங்க உப அங்கங்கள் பதினாலும் போலே
இந்நூலுக்கும் இரும் தமிழ் நூல் புலவன் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்
ருக் யஜுஸ் சாம அதர்வண வேதங்களுக்கு
சீஷா வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் -ஆறு அங்கங்கள்
மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்திரங்கள் -உப அங்கங்கள் எட்டும்
நம் ஆழ்வார் திரு உள்ளத்தை பின் பற்றியே இவர் அருளிச் செய்து உள்ளார்-
திவ்ய தேச அனுபவம் -நம் ஆழ்வார்
சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து
வாழ்ந்து அங்கு அடியார உடனே இருந்தவாற்றை உரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி -பதிகத்தில்
ஏழாம் பாட்டில் குடந்தை எம் கோவலன் குடி குடியார்க்கே தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர்
திரு நாட்டிலும் மறக்க முடியாத திருக்குடந்தை
தூவி சேர் அன்னம் துணையோடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது -என்றும்
சொற்பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் -என்றும்
திருமொழி தொடங்கும் பொழுதே அருளிச் செய்து
சரம பிரபந்தம் திரு நெடும் தாண்டகத்தில் முடிவிலும்
தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேன் -என்றும் அருளிச் செய்து
தனியாகவும் திரு எழுக் கூற்று இருக்கை பிரபந்தம் அருளிச் செய்தார்
அர்ச்சாவதாரம் போலே விபவ அவதாரத்திலும்
திரு விருத்தம் -பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -என்றும்
ஏனத்துருவாய் இடந்த ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்றும் அருளிச் செய்து
இறுதியில் அவா பெற்று வீடு பெறுவதற்கு முன்பு
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்
உன்னைப் பெற்று இனி போக்குவனோ -என்று
ஸ்ரீ வராஹ நாயனார் பக்கலில் நம் ஆழ்வார் திரு உள்ளம் சேர
திருமங்கை ஆழ்வாரும்
திருமொழி தொடக்கத்தில்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன்
இமையோர் தலைவா மெய்ந்நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -என்று அருளியதுக்கு சேர
திருமங்கை ஆழ்வார்
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு
அமரர் பெரும் விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமான்
நம் ஆழ்வார் விஸ்தரித்தத்தை
திருமங்கை ஆழ்வார் சுருக்கி
அஞ்சிறைய மட நாராய் –
வைகல் பூங்கழிவாய் –
பொன் உலகு ஆளீரோ-
எம் கானல் அகம் கழிவாய்
என்ற நான்கு பதிகம் தூது விட்டு அருளியதை
தூ விரிய மலர் உழக்கி -3-6 பதிகத்தில் நான்கு பாசுரங்களால் மட்டுமே தூது விட்டார்
மேலே 9-4 திருப் புல்லாணி பதிகத்தில்
புள்ளினங்காள் புல்லாணி அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனை செப்புமினே -9-4-2- என்று ஒரே பாசுரத்தாலும்
திருவிருத்தத்தில் தூது விடும் இரண்டு பாசுரங்களுக்கு சேர் திரு நெடும் தாண்டகத்தில் இரண்டு பாசுரங்களால் தூது விட்டு அருளுகிறார்
சொன்னால் விரோதம் இது -சொன்னாவில் வாழ் புலவர் சோறு கூறைக்காக மன்னாத மானிடரை வாழ்த்துதலால் என்னாகும் -2-9-திருவாய் மொழி பதிகம் சுருக்கினை
பெரிய திருமொழி முதல் பதிகத்தில்
இப்பிறப்பு அறியீர் கற்பகம் புலவர்களை கண் என்று உலகில் கண்டவா தொண்டரைப் பாடும் சொற் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் -என்ற பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
கடல் ஞாலம் செய்தேனும் யானே -5-6-என்னும் பதிகத்தில்
கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே
உடனா வனுகரிக்கல் உற்று திடமாக வாய்ந்தவனாய் தான் பேசும் மாறன் -என்பதை பெரிய திரு மொழி 8-2-6-தெள்ளியீர் பதிகத்தில்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்-என்று
நம் ஆழ்வார் போலே தாய் பேச்சால் அனுகரித்து பேசி அருளுகிறார்
திருவாசிரியத்தில்
தளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா —
ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும் அகப்படக் கரந்து
ஓர் ஆலிலைச் சேர்ந்த எம்பெரு மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்றுடையமோயாமே-என்று சுருக்கி அருளியதை விஸ்தரித்து
பெரிய திருமொழி -11-6-மைந்நின்ற கரும் கடல் வாயுலகின்றி பதிகத்தில்
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன -நிகம பதிகம் விஸ்தரித்து அருளுகிறார் –
5-3 மாசறு சோதிப் பதிகம் குதிரியுயாய் மடலூர்துமே -5-3-9-என்றும்
யாம் -மடலூர்ந்தும் -5-3-10-என்றும் அருளிய ப்ரஸ்தாவத்தை
சிறிய திருமடல் பெரிய திரு மடல் இரண்டு பிரபந்தன்களால் விஸ்தரித்து அருளிச் செய்கிறார்
பயிலும் சுடர் ஒளி -3-7-
நெடுமாற்கு அடிமை -8-10-
பாகவத சேஷத்வத்தை
நண்ணாத வாள் அவுணர் -2-6-
கண் சோர வெங்குருதி -7-4-
இவரும் இரண்டு திருமொழிகளில் அருளிச் செய்கிறார்
இழந்தது சங்கே இழந்தது மாமை நிறமே இழந்தது பீடே இழந்தது கட்டே -மாலுக்கு வையம் அளந்த -6-6- திருவாய் மொழியில் தாய் பேச்சாலே தெரிவிக்கப் பட்டதை
பெரிய திருமொழி -8-3-கரை எடுத்த சுரி சங்கு பதிகத்தில்
இழந்தேன் என் வரி வளையே
இழந்தேன் என் கன வளையே
இழந்தேன் என் சரி வளையே
இழந்தேன் என் பெய் வளையே -என்று
தாம் இழந்ததை தம் திருவாக்காலே வெளி இட்டு அருளுகிறார்
கங்குலும் பகலும் -7-2-பதிகத்தில்
இவள் திறத்து என் செய்கின்றாயே
இவள் திறத்து என் சிந்தித்தாயே
போலே
திவளும் வெண் மதி போல் -பெரிய திருமொழி -2-7- பதிகத்தில்
உன் மனத்தால் என் நினைத்து இருந்தாய்
பாசுரம் தோறும் தாய் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
தீர்ப்பாரை யாமினி திருவாய்மொழி -4-6-தேவதாந்தர கட்டுவிச்சி வந்து புகுந்தமை சொல்லிற்று
சிறிய திருமடளிலும் திரு நெடும் தாண்டகத்திலும் -பாசுரம் -11-
பகவத் ப்ரவணையான கட்டுவிச்சி உடைய பேச்சு வெளி இடப் பட்டது
உண்ணும் சோறு-திருவாய்மொழி -6-1- தாமே தனியே திருக்கோளூர் செல்வது போலே
கள்வன் கொல்-பெரிய திருமொழி -3-6- வயலாலி மணவாளன் வந்து ழ்வாரைக் கைப் பற்றிக் கொண்டு போனதை சொல்லிற்று-
————————————————————————————————————————————————————–
திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply