Archive for June, 2015

ஸ்ரீ ராமானுஜ ரகஸ்ய த்ரயம் –சரம பர்வ முமுஷுப்படி -ஸ்ரீ அழகப்ப ஐயங்கார் அருளிச் செய்த வியாக்யானம் –

June 2, 2015

ஸ்ரீ ராமானுஜ ரகஸ்ய த்ரயம் –சரம பர்வ முமுஷுப்படி –

1-ஓம் நமோ ராமாநுஜாய

2-ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே ஸ்ரீ மதே ராமாநுஜாய நம

3-சர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர -விபூதிம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் விரதம் மம –

———

ஸ்ரீ திருமந்திர பிரகரணம்

ஓம் நமோ ராமாநுஜாய

இந்த மந்த்ரம் தியாக மண்டபமான பெருமாள் கோயில் –திரு அநந்த சரஸின் கரையிலே அநாதிகாரிகளுக்கு
சொல்ல வேண்டாம் என்று ஆணை இட்டு-எம்பெருமானார் ஆழ்வானுக்கு பிரசாதிக்க-
அது தன்னையே தாரகமாக விஸ்வசித்து-தம்மை விஸ்வசித்து இருப்பார்களுக்கு
இந்த மந்த்ரம் தன்னையே பிரசாதித்து அருளினார்-

திரு மந்த்ரமும் இந்த ராமானுஜ மந்த்ரத்தை கர்ப்பத்துக்குள்-வைத்துக் கொண்டு இருக்குமே
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொது அது-எம்பெருமானாருக்கு உண்டான பூர்த்தி ஈஸ்வரனுக்கு இல்லை
ஈஸ்வரன் பூர்த்தியும்-பிராட்டிமார் பூர்த்தியும்-நித்ய ஸூரிகள் ஆழ்வார் பூர்த்தியும்-ஆச்சார்யர்கள் உடைய
சகல பூர்திகளும் எம்பெருமானார்க்கே உண்டு –

———

ஸ்ரீ த்வய பிரகரணம்

ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே ஸ்ரீ மதே ராமாநுஜாய நம –

இந்த த்வய மந்த்ரம்-–மிதிலா சாலக்ராமத்தில் -எம்பெருமானார் வடுக நம்பிக்கு பிரசாதித்து–
ஸ்ரீ பாத தீர்த்தமும் திருவடிகளையும்-பிரசாதித்து அருளினார்

———

ஸ்ரீ சரம ஸ்லோக பிரகரணம்

சர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர -விபூதிம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம –

இவ்வர்த்தம் ஞான மண்டபத்தில் -திரு நாராயண புரத்தில்-இரவு காலத்தில்
முதலியாண்டான்-எம்பார்-திரு நாராயண புரத்து அரையர்-மாருதி யாண்டான்-உக்கலம்மாள்
இவர்கள் ஐவருக்கும் அருள-மகா மதிகள் இவர்கள் விஸ்வசித்து-மகா ரகசியம் என்று அருளிச் செய்து போந்தனர் –

————–————-

நசேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுரக்ஷரீ –காம வஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ

ஸ்ரீ மத் ராமானுஜ குரவே நம

வரதார்ய குரோ புத்ரம் தத் பாதாப்ஜ ஏக தாரகம்
ஞான பக்த்யாதி ஜலதிம் வந்தே ஸூந்தர தேசிகம்

பாதுகே யதி ராஜஸ்ய கத யந்தி யாதாக்யயா
தஸ்ய தாசரதே பாதவ் சிரஸா தாரயாம் யஹம்

மகரே ஹஸ்த நக்ஷத்ரே சர்ப்ப நேத்ராம்ச சம்பவம்
ஸ்ரீமத் கூர குலாதீசம் ஸ்ரீ வத் ஸாங்கம் உபாசமஹே

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்திம் அதீமஹீ
யதுக்தயஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

——————————-————————————————————————————————————————

மந்த்ர ரஹஸ்யம் -திருமந்திரம் -மந்த்ர ராஜா-ஸாஸ்த்ர ருசி பரிக்ருஹீதம்
விதி ரஹஸ்யம்-ஈஸ்வர ருசி பரிக்ருஹீதம்–சரம ஸ்லோகம்
அனுசந்தான-ரஹஸ்யம் -த்வயம் -மந்த்ர ரத்னம்-ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம்

மந்த்ரத்திலும் மந்திரத்தில் உள்ளீடான வஸ்துவிலும் மந்த்ர ப்ரதானனான ஆச்சார்யன் பக்கலிலும் ப்ரேமம் கனக்க இருக்க வேண்டும்

ஆத்ம குணங்கள் கை புகுந்தால் ஆச்சார்யன் கை புகுரும்-அதனால் -மந்த்ரம் -உள்ளீடான நாராயணன் கை புகுவான் – அதனால் வைகுந்தம் மற்றது கை புகுருமே

விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-பஞ்சம அந்திம உபாயம் –ஆச்சார்யார் அபிமானமே உத்தாரகம்

——–

சைத்ரீ ஸ்ரவண நக்ஷத்ரே ஸ்ரீ மத் வத்ஸ குலோத்பவம்
வரதார்ய குரோர் சிஷ்யன் ஸூந்தராயம் சமாஸ்ரயே

ஆத்தான் வரதாசார்யர் திருக்குமாரர் சிஷ்யன்-தெய்வ நாயகப் பெருமாளே அவதாரம் என்பர்

வரதார்ய குரோர் புத்ரம் ஸத் பதாபி தாரகம்
ஞான பக்த்யாதி ஜலதிம் வந்தே ஸூந்தர தேசிகம்

பெரிய சடகோப ஐயங்கார் இவருடைய திருக்குமாரர்
ஞான த்ருஷ்ட்டி -இவர் கடாக்ஷத்தாலே ஞானம் பெறுகிறோம்
வான மா மலை ஜீயருடைய அஷ்டதிக் கஜங்களில் ஒருவர்

சாரார்த்த மாலை
ஈ ட்டுக்குப் பாட்டுத்தொறும் -பிராமண உரை
திருப்பாவை தாத்பர்யம்
ப்ராமணத் திரட்டுக்கள்-திருமந்திர யோஜனை

எம்பெருமானார் நேராக எம்பாருக்கு அருளி -குரு பரம்பரை மூலம் நமக்கு வந்தவை

———-

ஞான த்ருஷ்டி ஸ்ரீ அழகப்ப ஐயங்கார் அருளிச் செய்த வியாக்யானம் –

அநாதி காலம் அவித்யாதி சஞ்சித புண்ய பாப ரூப கர்ம வஸ்யனாய்
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூப சதுர் வித சரீரங்களைப் பரிக்ரஹித்து
பத்த சம்சாரியாய்
துக்க சாகர மக்னனாய்
தத் நிச் தரண உபாயம் அறியாத சேதனனுக்கு

நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
அத்வேஷ அபிமுக்ய சத் சங்கதிகள் உண்டாய்
சதாச்சார்ய சமாஸ்ரயணம் பண்ணின சரம அதிகாரிக்கு
மோஷ ஏக ஹேதுவாய்
பரம ரகஸ்யமான
ஸ்ரீ ராமானுஜ ரஹஸ்ய த்ரயம் அறிய வேணும்

(ஈஸ்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸுக்ருதம் ததா. விஷ்ணோ: கடாக்ஷம்
அத்வேஷம் ஆபிமுக்யம் ஸத் சங்கம் ச ஸாது ஸ்மோஹம் ஸதாசாரசம் ஸமாஸ்ரயம் –
ஆறு படிகள் -இவற்றையே காட்டும்)

——–

திருமந்திர பிரகரணம்

ஓம் நமோ ராமாநுஜாய —

-இந்த மந்த்ரம் தியாக மண்டபமான பெருமாள் கோயில் –திரு அநந்த சரஸின் கரையிலே அநாதிகாரிகளுக்கு சொல்ல வேண்டாம் என்று ஆணை இட்டு-எம்பெருமானார் ஆழ்வானுக்கு பிரசாதிக்க-
அது தன்னையே தாரகமாக விஸ்வசித்து-தம்மை விஸ்வசித்து இருப்பார்களுக்கு இந்த மந்த்ரம் தன்னையே பிரசாதித்து அருளினார்-

நசேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுராஷரீ–காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருசா -ஆழ்வான் பணித்த படி

ஆச்சார்யஸ் ச ஹரி சாஷாத் சரரூபி ந சம்சய -என்றும் –
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து –பெரியாழ்வார் திருமொழி -5-2-8-என்றும்
சகல பிரமாணங்களாலே ஸ்ரீ மன் நாராயணனே ஆச்சார்யன் ஆகையாலே
தஸ்மின் ராமானுஜார்யே குரு ரிதி சபதம் பாதி -பெரியவாச்சான் பிள்ளை அருளிய ஸ்லோஹம்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் எதிராஜோ ஜகத் குரு -என்றும்
ச ஏவ சர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர சம்சய -என்றும்
ஆச்சார்ய பதம் என்று தனியே ஒரு பதம் -அது உள்ளது எம்பெருமானார்க்கே -என்று சொல்லுகிறபடியே
ஆச்சார்யா பூர்த்தி எம்பெருமானாருக்கே உண்டாகையாலே
அகார வாச்யர் எம்பெருமானார் ஆகை சித்தம் –

ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே நிரசித்து
ஈஸ்வர சத்பாவத்தை அங்கீ கரிப்பித்து
சகல ஜகத் காரண பூதனான ஈஸ்வரனை உண்டாக்கின படியாலும்
ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18- என்கிற ஈஸ்வர வாக்யத்தாலே
ஈஸ்வரன் சரீரமும் எம்பெருமானார் சரீரியுமாகையாலே
சரீரத்துக்கு உண்டான காரணத்வம்
சரீரிக்கே ஆகையாலும் –ஆதி காரணத்வம் எம்பெருமானாருக்கே -என்று சொல்லலாம் –

————–

திருமந்திர பிரகரணம்

ஓம் நமோ ராமாநுஜாய —

-இந்த மந்த்ரம் தியாக மண்டபமான பெருமாள் கோயில் –திரு அநந்த சரஸின் கரையிலே அநாதிகாரிகளுக்கு சொல்ல வேண்டாம் என்று ஆணை இட்டு-எம்பெருமானார் ஆழ்வானுக்கு பிரசாதிக்க-
அது தன்னையே தாரகமாக விஸ்வசித்து-தம்மை விஸ்வசித்து இருப்பார்களுக்கு இந்த மந்த்ரம் தன்னையே பிரசாதித்து அருளினார்-

நசேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுராஷரீ–காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருசா -ஆழ்வான் பணித்த படி

ஆச்சார்யஸ் ச ஹரி சாஷாத் சரரூபி ந சம்சய -என்றும் –
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து –பெரியாழ்வார் திருமொழி -5-2-8-என்றும்
சகல பிரமாணங்களாலே ஸ்ரீ மன் நாராயணனே ஆச்சார்யன் ஆகையாலே
தஸ்மின் ராமானுஜார்யே குரு ரிதி சபதம் பாதி -பெரியவாச்சான் பிள்ளை அருளிய ஸ்லோஹம்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் எதிராஜோ ஜகத் குரு -என்றும்
ச ஏவ சர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர சம்சய -என்றும்
ஆச்சார்ய பதம் என்று தனியே ஒரு பதம் -அது உள்ளது எம்பெருமானார்க்கே -என்று சொல்லுகிறபடியே
ஆச்சார்யா பூர்த்தி எம்பெருமானாருக்கே உண்டாகையாலே
அகார வாச்யர் எம்பெருமானார் ஆகை சித்தம் –

அதில்
மந்த்ரம் இருக்கும்படி எங்கனே என்னில் –
எட்டு திரு அஷரமாய்-ஓம் என்றும்- நம என்றும்- ராமாநுஜாய என்றும்
மூன்று பதமாய் இருக்கும் –

இதில் முதல் பதமாய் –ஏகாஷரமான பிரணவம்
அகாரம் என்றும் உகாரம் என்றும் மகாரம் என்றும்
மூன்று திரு அஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் –

இரண்டாம் பதமான நமஸ்-ந- என்றும் -ம- என்றும் இரண்டு திரு அஷரமாய் இரண்டு பதமாய் இருக்கும்

மூன்றாம் பதமான ராமாநுஜாய பதம் அஞ்சு அஷரமாய்
ராம –என்றும் -அனுஜ -என்றும் இரண்டு பதமாய்
மேலே ஆய -என்று சதுர்தியாயும் இருக்கும் –

—————————————————————————————————————————————–

அகாரார்தம் –

இதுக்கு அர்த்தம் –
முதல் பதமான அகாரத்தாலே -எம்பெருமானாரைச் சொல்லுகிறது –
அகாரோ விஷ்ணு வாசக -என்றும்
அஷராணாம் அகரோஸ்மி–ஸ்ரீ கீதை -10-33-என்றும் –
அகாரத்தோ விஷ்ணு -அஷ்டஸ்லோகி -1
நாராயண வாசகமான அகாரம் எம்பெருமானாரைச் சொல்லுகிறபடி எங்கனே என்னில் –

சாஷான் நாராயணோ தேவ -க்ருத்வா மர்த்ய மயீம் தநும்
மக் நானுத்தரதே லோகன் காருண்யஸ் ச சாஸ்திர பாணினா –ஐயாக்ய சம்ஹிதை -என்றும்
ஆச்சார்யஸ் ச ஹரி சாஷாத் சரரூபி ந சம்சய -(சரரூபி-உலாவும் பெருமாள் இவரே)என்றும் –
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து –பெரியாழ்வார் திருமொழி -5-2-8-என்றும்
சகல பிரமாணங்களாலே ஸ்ரீ மன் நாராயணனே ஆச்சார்யன் ஆகையாலே

தஸ்மின் ராமானுஜார்யே குரு ரிதி ச பதம் பாதி -பெரியவாச்சான் பிள்ளை அருளிய ஸ்லோஹம்
ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் எதிராஜோ ஜகத் குரு -என்றும்
ச ஏவ சர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர சம்சய -என்றும்
ஆச்சார்ய பதம் என்று தனியே ஒரு பதம் -அது உள்ளது எம்பெருமானார்க்கே -என்று சொல்லுகிறபடியே
ஆச்சார்ய பூர்த்தி எம்பெருமானாருக்கே உண்டாகையாலே
அகார வாஸ்யர் எம்பெருமானார் ஆகை சித்தம் –

————-

ஆனால் 1-ஜகத் காரணத்வமும்
2-ஸர்வ ரஷகத்வமும்
3-ஸர்வ சேஷித்வமும்
4-ஸ்ரீய பதித்வமும்
அகாரத்திலே பிரதிபாதிக்கையாலே
எம்பெருமானார் இடத்தில் இவை உண்டாக வேண்டாவோ -என்னில் –
உண்டு -எங்கனே என்னில் –

ஈஸ்வரனே இல்லை என்றும்
உண்டானாலும் நிமித்த மாத்ரமே என்றும்
கர்மம் காரணம் என்றும்
சேதனன் காரணம் என்றும்
பிரதானம் காரணம் என்றும்
சொல்லுகிறவர்களுடைய மதங்களை
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே நிரசித்து
ஈஸ்வர ஸத்பாவத்தை அங்கீ கரிப்பித்து
ஸகல ஜகத் காரண பூதனான ஈஸ்வரனை உண்டாக்கின படியாலும்

ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18-(அறிவார் உயிரானாய்)
என்கிற ஈஸ்வர வாக்யத்தாலே
ஈஸ்வரன் சரீரமும் எம்பெருமானார் சரீரியுமாகையாலே

சரீரத்துக்கு உண்டான காரணத்வம் சரீரிக்கே ஆகையாலும் –
ஆதி காரணத்வம் எம்பெருமானாருக்கே -என்று சொல்லலாம் –
காரணம் ஆகிறது உண்டாகப் பண்ணின வஸ்து இறே

கபர்த்தி மத கர்த்தமம் கபில கல்பந வாகுராம்
துரத்யய மதீத்ய தத் த்ருஹிண தந்தர யந்த்ரோதரம்
குத்ருஷ்டி குஹநா முகே நிபதத பர ப்ரஹ்மண
கர க்ரஹ விசஷணோ ஜயதி லஷ்மணோசயம் முநி-யதிராஜ சப்ததி -38-என்றும் பிரமாணம் உண்டாகையாலே- சகல ஜகத் காரணத்வம் எம்பெருமானாருக்கே உள்ளது –

பர ப்ரஹ்மம் —
சைவம் என்கிற சேற்றில் விழாமல் அதைத் தாண்டி,
கபிலரின் சாங்க்யமத வலையில் அகப்படாது தப்பித்து,
சிக்கல் உள்ள சார்வாகமத யந்த்ர தந்த்ரங்களில் புகாமல் பிழைத்து, வந்தது.
சங்கரரின் மாயாவாதத்தில் –அதன் வாயில் அகப்பட இருந்த சமயத்தில்,
பர ப்ரஹ்மத்தைக் கைகொடுத்துக் காப்பாற்றியவர் , யதிராஜர் .
அதனால், அவர் மேன்மையாக விளங்குகிறார் என்கிறார்
ஜயகோஷம் செய்கிறார்–ஜய ஜய யதிராஜ

பரம் பொருளான புருஷோத்தமனைப் பல பெரிய ஆபத்துக்களின் நின்றும் ரக்ஷித்து அருளினவர் எம்பெருமானார் –
கடக்க அரிதான சைவம் என்ற சேற்றைக் கிடந்து சாங்கியருடைய அப்ரமாணிகமான மதமாகிற வலையில் இருந்து தப்பி –
த்ருஹிண -மதமாகிற -யோக மதம் -சுழலும் யந்திரத்தின்-மத்யத்தையும் தாண்டி
குத்ருஷ்டிகளான குகை வாயிலில் விழுந்து கொண்டு இருந்த பர ப்ரஹ்மம்
எம்பெருமானைக் கை கொடுத்து ஆபத்தின் நின்றும் விடுவிக்கும் சாமர்த்தியம் வாய்ந்த
இந்த லஷ்மண முனி விஜய ஸ்ரீ யுடன் பிரகாசிக்கிறார் –

————————————

சர்வ ரஷகத்வம் -எங்கனே என்னில் –
அதிகாரி நியமம் இன்றிக்கே
ப்ரஹ்ம ஷத்ரிய வைஸ்ய ஸூத்ராதிகளையும்
ஸ்திரீ பால வ்ருத்த முக
ஜட-அந்த -பதிர -பங்கு -பசு பஷி மிருகாதிகளையும்
ரஷிக்கையாலே சர்வ ரஷகத்வமும் உண்டு என்க-

(அநிஷ்ட நிவ்ருத்தி காமாதி தோஷங்களைப் போக்கி அருளி-இஷ்ட பிராப்தி -விஷ்ணு லோக மணி மண்டப மார்க்கதாயீ)

——

சர்வ சேஷித்வம் எங்கனே என்னில்
நம்பெருமாள்
திருவேங்கடமுடையான்
தேவப் பெருமாள்
அழகர்
திருக் குறுங்குடி நம்பி
திரு நாராயணரான யாதவாத்ரி நாதன்
முதலியவர்கள்
உபய விபூதியைக் கொடுத்தும்
ஜாமாதாவாயும்
சிஷ்யனாயும்
குமாரனாயும்-சேஷப் படுகையாலும்

நம் ஆழ்வார் இவருடைய பவிஷ்ய வவதாரத்தைக் கடாஷித்து திருவாய் மொழியிலே
கலியும் கெடும் கண்டு கொண்மின் -5-2-1- என்றும்
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் -5-2-2-
இவருடைய சம்பந்தத்தாலே எல்லாரும் வீடு பெறுவார்கள் என்றும்
நமக்கு இவர் சம்பந்தத்தாலே உஜ்ஜீவனம் என்றும்
பொலிக பொலிக பொலிக -5-2-2-என்றும்
மங்களாசாசனம் பண்ணி

ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு மேல் உள்ள அவதார ரகஸ்யத்தையும் அறிவித்து
பவிஷ்யதாச்சார்யா விக்ரகத்தையும் பிரசாதித்து அருள

அவர் உய்யக் கொண்டாருக்கும்
மணக்கால் நம்பிக்கும்
ஆளவந்தாருக்கும்
அவர் திருக் கோட்டியூர் நம்பிக்கும் பிரசாதிக்கையாலே முன்புள்ள முதலிகளும்

சமகாலத்திலே
கூரேச குருகேச கோவிந்த தாசரதிகள் முதலான எழுபத்து நாலு
சிம்ஹாசன ஸ்தானச்தரும்
700 த்ரிதண்ட சன்யாசிகளும்
பன்னீராயிரம் ஏகாங்கிகளும்
எண்ணிறந்த ஸ்ரீ வைஷ்ணவர்களும்
ராஜாக்களும்
ஸ்ரீ நாம தாரிகளும்
பட்டர் நஞ்சீயர் நம்பிள்ளை வடக்குத் திரு வீதிப் பிள்ளை
பெரியவாச்சான் பிள்ளை பிள்ளை லோகாச்சார்யர்
முதலான பின்புள்ள முதலிகளும்
அவர்க்கே சேஷப் படுகையாலே -சர்வ சேஷித்வமும் உண்டு என்க

——–

இவை இத்தனையும் உண்டு என்னாலும் ஸ்ரீய பதித்வம் சொல்லலாமோ என்னில் -சொல்லலாம்
ஸ்ரீ –சப்தத்தாலே கூரத் ஆழ்வானை சொல்லி
பதி என்று எம்பெருமானாரை சொல்லலாமே

ஆனால் ஸ்ரீ சப்தத்தாலே கூரத் ஆழ்வானை சொல்லுதல் எங்கனே என்னில்
1-கந்தல் கழிந்தால் சர்வர்க்கும் நாரீணாம் உத்தமை உடைய அவஸ்தை வரக் கடவதாய் இருக்கும்
ஆறு பிரகாரத்தாலே பரி சுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாய் இருக்கும்(அநந்யார்ஹ சேஷத்வம்-அநந்ய சரண்யத்வம்-அநந்ய போக்யத்வம்
விஸ்லேஷத்தில் தரியாமை-ஸம்ஸ்லேஷத்தில் தரிப்பது ததேக நிர்வாஹகத்வம்) -என்பதால் ( மொழியைக் கடக்கும் பெரும் புகழான் )ஆழ்வானுக்கும் உண்டாகையாலும்

2-ஈஸ்வரனுக்கு அநேக நாய்ச்சிமார் உண்டானாலும்
அக்ர மகிஷி பெரிய பிராட்டியாரைப் போலே
அக்ர்யம் யதீந்திர சிஷ்யாநாம் ஆத்யம் வேதாந்த வேதிநாம்-என்கிறபடியே
எம்பெருமானாருக்கு பிரதான சிஷ்யர் ஆகையாலும்

3-ஸ்ரீ வஸ்த சிஹ்ன சரணம் யதிராஜ மீடே -யதிராஜ விம்சதி -2 -என்றும்
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம் பாத அனு சிந்தந பர சத்தம் பவேயம் –யதிராஜ விம்சதி -3-
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் —-நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின் –எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே -7-
இப்படி மணவாள மாமுனிகள் -அமுதனார் -ஆழ்வானை புருஷகாரமாக ஆஸ்ரயிக்கை யாலும்
எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்ததால் தமக்கு ஸ்வரூப லாபமும்
மற்றையவர்களுக்கு தம்மை ஆஸ்ரயித்தே ஸ்வரூப லாபமும் பெற வேண்டுகையாலே
ஸ்ரீ சப்தத்தாலே ஸ்ரீ யதே ஸ்ரேயதே என்கிற வ்யுத்புத்தி த்வயார்த்தமும்
இவர் இடத்திலே உண்டாகையாலே ஸ்ரீ சப்தத்தாலே ஆழ்வானைச் சொல்லலாம்

——–

இன்னமுத மூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள் –பொன்னஞ்
சிலை சேர் நுதலியர் வேள் சேரலர் கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு –ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த தனியன் –

கிளியும் கற்ப்பித்ததே சொல்லும் –
இவரும்-கற்பியா வைத்த மாற்றம் இறே சொல்லுவது –
மேல் சொல்லுமவர் அன்றே -சொன்னதைச் சொல்லுமவர் இறே
ஆகையால் ஸ்ரீ கூரத் தாழ்வான் போல்வாரைக் கொண்டு ஸ்ரீ குலசேகர ஆழ்வார் வைபவத்தை கூறுவிக்கிறார்– இன்னமுத மூட்டுகேன் -கூறு என்கிறார்-

———-

ஆனால் புருஷகாரம் ஆம் போது
1-கிருபையும் 2-பாரதந்த்ர்யமும் அனந்யார்ஹ சேஷத்வமும் வேணும் -என்றபடியே
ஆழ்வானுக்கும் இம் மூன்றும் உண்டே –

1-கிருபையாவது -பர துக்க துக்கித்வமும் -பர துக்க அசஹிஷ்ணுத்வமும் ஆகையாலே
வாழை இலை அறுத்து மூர்ச்சையாய் விழுந்ததினாலும்-
குழந்தை பிறந்ததும் நம்பெருமாள் முன் இந்த ஜீவன் சம்சாரத்தில் பிறந்து அவஸ்தை படுகிறதே என்று முறை இட்டதாலும்-
சர்பாஸ்கதமான மண்டூகத்தின் உடைய ஆர்த்த நாதத்தைக் கேட்டு ஆழ்வான் மோஹித்து விழுந்தாரே –
பர துக்க துக்கித்வம்
இது தானே
நான் பெறுகிற லோகம் நாலூரானும் பெற வேணும் என்பதினாலே –பர துக்க அசஹிஷ்ணுத்வமும் பிரகாசித்ததே-
இத்தால் கிருபை வெளிப்பட்டது –

——–

2-சரம ஸ்லோகார்த்தம் பெற்றுக் கொள்ள மாச உபவாசம் இருக்கச் சொல்லி நியமித்தபடி செய்திருக்கையாலே
பாரதந்த்ர்யம் வெளிப்பட்டது-

பாரதந்தர்யமாவது –
ஆச்சார்யர் நியமித்த படியே செய்கை -எங்கனே என்னில்-
ஸ்ரீ எம்பெருமானார் திருக் கோட்டியூர் சந்நிதிக்கு பதினெட்டு தரம் எழுந்து அருளி -அவர் பக்கலிலே லபித்த சரமார்த்தத்தை
ஸ்ரீ ஆழ்வான் -அடியேனுக்கு பிரசாதித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய –
அப்படியே –சம்வத்சரம் ததர்த்தம் வா மாச த்ரய மதாபி வா பரீஷ்ய விவித உபாயை-க்ருபயா நிஸ்ப்ருஹோ வதேத் -என்கிறபடியே –
ஒரு சம்வத்ஸரமாவது -ஆறு மாசமாவது -மூன்று மாஸமாவது -விவித உபாயங்களினாலே பரீக்ஷித்து -நிஷ் காமனாய்-
அர்த்தங்களை பிரசாதித்து அருள வேணும் என்று சாஸ்திர ப்ரதிபாதனங்கள் உண்டாகையாலே –
அப்படியே பரீக்ஷித்து ஸ்ருதமான அர்த்தங்களை ப்ரசாதித்து அருளத் திரு உள்ளமாய் ஸ்ரீ ஆழ்வானுக்கு மாஸ உபவாசம் நியமிக்க –
நியமித்த படியே இருந்தாராகையாலே பாரதந்தர்யம் பிரகாசித்தது –

———-

3-அநந்யார்ஹத்வம் ஆவது –
கிருமி கண்ட வியாஜ்யத்தாலே ஸ்ரீ உடையவர் வெள்ளை சாற்றி மேல் நாட்டுக்கு
எழுந்து அருளின போது கிருமி கண்டன் ஸ்ரீ பெருமாள் பரிகரத்தை நெருக்கிக் கொண்டு போருகையாலே-
இந்த கலகம் உடையவரால் அன்றோ என்று அவர் திருவடி சம்பந்தம் உள்ளவர்கள் ஒருவரும் ஸ்ரீ கோயிலுக்குள் புகுந்து
ஸ்ரீ பெருமாளை சேவிக்க விட வேண்டாம் என்று ஆஞ்ஜை இட்டு வைக்க
ஸ்ரீ கூரத் தாழ்வான் தரிசனத்தை நிர்வகிக்கைக்காக கிருமி கண்டன் இடத்தில் புக்கு அவனாலே திரு நயனங்களுக்கு உபத்திரவம் வந்து –
மீண்டு ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி -அங்குற்றை செய்தி அறியாமல் பெருமாளை சேவிக்க எழுந்து அருளினை அளவிலே –
ஒருவன் ஆழ்வானை உள்ளே புகுராதே என்று என்று தகைய -ஒருவன் தகையாதே கோயிலுக்குள் புகுரும் என்ன –
அவ்வளவில் ஸ்ரீ ஆழ்வான் திகைத்து நின்று இங்குற்றை விசேஷம் எது என்று திருவாசல் காக்குமவர்களைக் கேட்க –
அவர்களும் எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தம் உள்ளவர்கள் ஒருவரையும் பெருமாளை சேவிக்க விட வேண்டாம்
என்று ஆஞ்ஜை இட்டு தகைத்து கிடக்கிறது என்ன –
ஆகில் நீங்கள் என்னை புகுரச் சொல்லுவான் என் என்ன –
ஆனாலும் நீர் எல்லாரையும் போல் அன்றிக்கே நல்ல குணங்கள் உடையவர் ஆகையால் புகுரச் சொன்னோம் என்ன –
ஆழ்வான் அத்தைக் கேட்டு -ஜல சந்த்ரனை போலே நடுங்கி -நாலடி பின் வர-
ஆத்ம குணங்கள் உண்டானால் ஆச்சார்ய சம்பந்தம் உண்டாகும் என்று சாஸ்திரம் சொல்ல-
எனக்கு உள்ள இவை எம்பெருமானார் சம்பந்தத்தை அறுத்துக் கொள்ள ஹேதுவாய் விட்டதோ-என்று வியாகுலப் பட்டு
தம்மையும் மிகவும் நொந்து கொண்டு-எனக்கு  
பேற்றுக்கு எம்பெருமானார் திருவடி சம்பந்தமே அமையும்
இந்த சம்பந்தம் ஒழிந்த பகவத் சேவையும் வேண்டாம் என்று திரு மாளிகைக்கு எழுந்து அருளினார் அன்றோ -என்றதாலும்

ஒரு காலத்தில் ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்தில் தம்மை சீறி அருளினார் என்று கேட்டு-அவருக்கே சேஷமாய் இருந்ததாகில்
அவருடைய விநியோக பிரகாரம் கொண்டு கார்யம் என் -என்று அருளிச் செய்ததாலும்
அனந்யார்ஹத்வம் வெளிப்பட்டது

என்று இவ் வர்த்தங்கள்
மாணிக்க மாலை
வார்த்தா மாலை
அந்திம உபாய நிஷ்டை போன்ற கிரந்தங்களில் அருளிச் செய்கையாலும்

இத்தால் ஸ்ரீ சப்தத்தாலே ஸ்ரீ கூரத் தாழ்வானைச் சொல்லி அவருக்கு பதி என்கையாலே –
ஸ்ரீ யபதித்வமும் எம்பெருமானாருக்கு உண்டு என்றது ஆயிற்று-

ஸ்ரீ திருவரங்கம் கோயில் சாவியை உடையவர் இடம் கொடுத்தல்
ஸ்ரீ பெரிய நம்பி பின்னே திரு வீதி பிரதஷிணம் சென்றது
ஸ்ரீ உடையவர்க்கு முன்பே ஸ்ரீ பரமபதம் சென்ற விருத்தாந்தம்-மூலமும் இவ்வர்த்தம் ஸித்தம்

——————————-

உகாரார்தம்

அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும்
அனந்யார்ஹ சேஷத்வமும்
இவ்விடத்தில் அந்ய சேஷத்வ நிவ்ருத்தி ஈஸ்வர சேஷத்வத்தை சொல்லுகிறது
ஸ்ரீ வடுக நம்பி -அடியேன் –உங்கள் பெருமாளை சேவிக்க வந்தால்
எங்கள் பெருமாள் பால் பொங்கிப் போகாதோ -என்ற வார்த்தையை நினைப்பது
நித்ய சத்ருவாய் இறே இது இருக்கும்

(மன ஜ்ஞானே–மகாரோ ஜீவா வாசக–ஜாத்யேகவசனம்-அனைவரையும் குறித்தாலும்
மகராஸ்து தயோர் தாச -என்று யதீந்திர பிரவணர் -மணவாள மா முனியையே சொல்லும் என்பர் ஞானாதிகர்கள்

நமஸ் -அர்த்தம்–ததீய பாரதந்த்ர்யமே சொல்லும்
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யத் தத் தாஸ தைகரசதா விரதா மமாஸ்து -எதி ராஜ விம்சதி -16-
ஈஸ்வர பாரதந்த்ர்யம் சர்வாத்ம சாதாரணம்-எம்பெருமானார் பாரதந்த்ர்யம் -கதிபய சாதாரணம்-ததீய பாரதந்த்ர்யம் -அசாதாரணம்
எம்பெருமானாருக்கு சேஷம் ஆவதே ஸ்வரூபம்–அவர் திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம் –
இவை இரண்டுக்கும் சேர்ந்த உபாயம் எம்பெருமானார் திருவடிகளே-ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும் சேர்ந்து இருக்க வேணுமே பிராபகம்
பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி-அப் பேறு அளித்ததற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி -45
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமனத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்யா அபிமானம் ஒழிய வேறு கதி இல்லையே
இதுவே நமஸ் பதார்த்தம்)

———————————————-
மகாரார்தம் –

மன ஜ்ஞானே
மகாரோ ஜீவ வாசக
ஜாத்யேகவசனம்
அனைவரையும் குறித்தாலும்-(எம்பெருமானாருடைய தாஸ்யமாய் இருப்பவரே மகார வாஸ்யன்)மகராஸ்து தயோர் தாச -என்று ஸ்ரீ யதீந்திர பிரவணர் –
ஸ்ரீ மணவாள மா முனியையே சொல்லும் என்பர் ஞானாதிகர்கள்

————————————————————-
ஆக
பிரணவத்தால்
சகல ஆத்மாக்களும் ஸ்ரீ எம்பெருமானாருக்கே சேஷம் என்று சொல்லியதாயிற்று

—————————————————————————————————————————————–

(நமஸ் -அர்த்தம்–ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வய நிவ்ருத்தி
அகண்ட நமஸ்-ஒரே சொல் – -வணக்கம்
சகண்ட நமஸ்-பிரித்து –ந மம -நான் எனக்கு உரியன் அல்லன் -ஸ்வாதந்த்ர நிவ்ருத்தி ஆகவே பரனே தந்திரம் -பிரதானம் -பரதந்த்ரன்-பராகாஷ்டை ததீய பாரதந்தர்யம்
ஓம் நம -ஸ்வரூப சிஷை
நமோ நம -உபாய சிஷை
ராமானுஜாய நம -பிராப்தி சிஷை

எம்பெருமானாருக்கு சேஷம் ஆவதே ஸ்வரூபம்–அவர் திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம் –
இவை இரண்டுக்கும் சேர்ந்த உபாயம் எம்பெருமானார் திருவடிகளே-ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும் சேர்ந்து இருக்க வேணுமே பிராபகம்
பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி-அப் பேறு அளித்ததற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி -45
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமனத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் ஒழிய வேறு கதி இல்லையே-இதுவே நமஸ் பதார்த்தம்)

நமஸ் -அர்த்தம்
ததீய பாரதந்த்ர்யமே சொல்லும்
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யத் தத் தாஸதைக ரசதா விரதா மமாஸ்து -எதி ராஜ விம்சதி -16-
ஈஸ்வர பாரதந்த்ர்யம் சர்வாத்ம சாதாரணம்
எம்பெருமானார் பாரதந்த்ர்யம் -கதிபய சாதாரணம்
ததீய பாரதந்த்ர்யம் -அசாதாரணம்

இவ் வர்த்தம்
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது -12
திக்குற்ற கீர்த்தி என் செய்வினையாம் -26
நல்லார் பரவும் இராமானுசனை -80
எம்பெருமானார்க்கு சேஷ பூதரானார் ஒழிய மற்று ஒருவருக்கு அடிமை செய்யாது
இடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே என்று
எம்பெருமானார் தாசர்கள்-என்றும்
எந்த குற்றம் எந்த ஜன்மம் எந்த ஆசாரம் உண்டானவர்கள் ஆனாலும்
அக் குற்றம் அப் பிறப்பு அந்த ஆசாரம் தானே தம்மை ஆட் கொள்ளும் என்றும்
எம்பெருமானார் திரு நாமம் நம்பினவர்களை மறவாதவர்கள் எவரோ அவர்களுக்கே
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளும் சர்வ கைங்கர்யங்களையும்
த்ரிவித கரணங்களாலும் செய்கிறேன்-அமுதனார்

(இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது
அடங்கும் இதயத்து இராமானுசன் அம் பொன் பாதம் என்னும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே —12-)

(திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக் குற்றம் அப் பிறப்பு அவ் வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- )

(நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 –)

வாசா யதீந்திர மனஸா வபுஷா ச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேஸ முகாத்ய பும்ஸாம் பாதா அநுசிந்தன பரஸ் ஸததம் பவேயம் -யதிராஜ விம்சதி —
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ தத் தாஸ தைகர சதாவிரத மமாம்ஸ்து -எதிராஜ விம்சதி -16
இப்படி ததீய பாரதந்த்ர்யம் வெளி இடப் பட்டதே –

என்றும் சொல்லுகிறபடியே
மநோ வாக் காயங்களாலே உம்முடைய திருவடியையே
பஜித்துக் கொண்டு போருகிற கூரத்தாழ்வான் -திருக் குருகைப் பிரான் பிள்ளான் முதலானவர்களுடைய திருவடிகளை எப்போதும் த்யானம் பண்ணுகிறேன் என்றும்
உம்முடைய தாஸ அநு தாஸ கணையிலே சரமாவதி தாஸர்கள் எவரோ அவருடைய தாஸ்ய நிஷ்டையே எனக்கு வேணும் என்றும் மணவாள மா முனிகளும் எம்பெருமானாரை நோக்கி இப்படி விண்ணப்பம் அருளிச் செய்கையாலும்
இந்த உபயரிடத்திலும் ததீய பாரதந்தர்யம் வெளிப்பட்டது இறே –

நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்
ஒன்றும் குறையில்லை ஓதினோம் -குன்றம்
எடுத்தான் அடி சேர் ராமானுஜன் தாள்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி —இயல் சாத்து-1-ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் அருளிச் செய்த தனியன்

(அகங்கார நிவ்ருத்தியும்
நிவ்ருத்தமான ஆத்ம ஸ்வரூபத்துடைய அத்யந்த பாரதந்தர்யமும்
பாரதந்தர்ய பரா காஷ்டையான ததீய சேஷத்வமும் பிரதிபாதித்தாலும்
கீழ் ப்ரணவத்தால் ஆத்ம ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கையாலும்
மேல் புருஷார்த்தத்தை ப்ரதிபாதிக்கையாலும்
பிரதான ப்ரதிபாத்யம் உபாயம் ஆகையாலும்
சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான புருஷார்த்தமும் –ப்ராப்யத்துக்குத் தகுந்த உபாயமும் –
ஆக -இவற்றுக்குத் தக்க -சத்ருஸமான -உபாயம் -இத்தால் ப்ரதிபாதிக்கப்படுகிறது -)

ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர்ந்து இருக்க வேணும் இறே ப்ராபகம் –ஸ்ரீ வசன பூஷணம் –410-என்கிறபடியே

எம்பெருமானாருக்கு சேஷம் ஆவதே ஸ்வரூபம்
அவர் திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம் –
இவை இரண்டுக்கும் சேர்ந்த உபாயம் எம்பெருமானார் திருவடிகளே
ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும் சேர்ந்து இருக்க வேணுமே பிராபகம்

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி
அப் பேறு அளித்ததற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி -45-

(பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45-)-என்று உபாய உபேயங்கள் இரண்டுமே தேவரீர் திருவடிகளே என்று அமுதனார் அருளிச் செய்கையாலே
ஸ்வரூப அநு ரூபமான உபாயம் எம்பெருமானார் திருவடிகளே என்றும் சொல்லுகிறது

(எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-)
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமனத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆச்சார்ய அபிமானம் ஒழிய வேறு கதி இல்லையே-என்று பிள்ளை பலகாலும் அருளிச் செய்யக் கேட்டு இருக்கையாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம்–237-என்று அருளிச் செய்த படியே-அநாதி காலத்தில் நின்றும் -எனக்கு நான் -என்கிற ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமனத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
எம்பெருமானார் அபிமானம் ஒழிய வேறு கதி இல்லையே

இதுவே நமஸ் பதார்த்தம்

—————

ராமானுஜ -பதார்த்தம் –
அகார விவரணம் என்பதால்
பர ப்ரஹ்மத்தையே குறிக்கும்

(த்வாபர ராமன் -பலராமனுக்குட் தம்பி -கிருஷ்ணன் தர்மம் ஸநாதனம் என்றும்-ராமனுக்குப் பின் பிறந்தவன் என்றும் -ராமன் குணத்தைக் கொண்டவன்
ராமன் யாருக்குத் தம்பியோ -என்றுமாம் –
தனது காலத்தில் மோக்ஷம் கொடுத்தவர் -இவர் அனைவருக்கும் எப்பொழுதும் கொடுத்தவர் -ஆகவேஇவரே அண்ணன்
காரேய் கருணை -பிராட்டுக்குத் தம்பி என்றுமாம் -அவள் குணங்களில் ஆறில் ஸாம்யம்
புருஷகாரமாகவும் உபாயமாகவும் இருப்பதால் இவர் அண்ணன் -அவளும் அவனும் பின் தொடர்ந்து
கோதை நாச்சியார் யாருக்குத் தங்கையோ -கோயில் அண்ணன்)

ராமஸ்ய அனுஜ ராமானுஜ-என்று நம்பி மூத்த பிரானுக்குத் திருத்தம்பியான கிருஷ்ணனுக்கு வாசகம்
வாஸூதேவாயா தீமஹி-என்றும்
ப்ரஹ்மண்யோ தேவகீ புத்ரோ ப்ரஹ்மண்யோ மதுசூதன-என்றும்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம்-என்றும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாகபர்யங்கம்
உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம்புரீம் -ஹரிவம்சம் -113-62-என்றும்
ராம கிருஷ்ண நரசிம்ஹாஸ்து பூர்ண ஷாட்குண்ய மூர்த்தய
என்றும் சொல்லப் பட்ட கிருஷ்ணன்-என்றும் சொல்லப்பட்ட்டவாறே
வாஸூ தேவனே பர ப்ரஹ்மம் என்றும்
தேவகீ புத்ரனே பர ப்ரஹ்மம் என்றும்
ஸ்ரீ கிருஷ்ணனே பர ப்ரஹ்மம் என்றும்
ஸ்ரீ கிருஷ்ணனே ஸநாதந தர்மம் என்றும்
ஷீராப்தி சாயியான ஸ்ரீ மன் நாராயணனே வடமதுரையில் திருவவதரித்தான் என்றும்
ராம கிருஷ்ண நரஸிம்ம திரு அவதாரங்கள் பூர்ண அவதாரங்கள் என்றும்
இப்படிச் சொல்லப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணன்

பரித்ராணாயா சாதூனாம் – ஸ்ரீ கீதை -4-8
தா யதாஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி -ஸ்ரீ கீதை -4-7
அர்ஜுனன் ஒருவனுக்கே உபதேசித்து
நாஸ்திகாய ந வக்தவ்யம் நா பக்தாயா கதாசன ந ஸூஸ்ரூஷவே
வாஸ்யம் ந ச மாம் யோப்யஸூயதே -18-67(துஷ்ட நிக்ரஹத்துக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் யுகம் தோறும் அவதரித்து-ஒருத்தனுக்கே பரமார்த்தத்தை உபதேசித்து-அநந்த பிரதமம் ரூபம் லஷ்மணஸ்ச தத பரம் பலபத்ரஸ் த்ருதீ யஸ்து கலௌ கஸ்சித் பவிஷ்யதி –
சதுர்த்த பதத்துக்கு பொருள் நாமே -என்று தாமே அருளிச் செய்தார் இறே-)
என்று அருளிய குறைகள் தீர
அவனே ராமானுஜராக வந்து அவதரித்து(பஹு பிரஸாயம் -18 தடவை நடந்து-பஹு உபாயமான சரம ஸ்லோக அர்த்தங்களை லபித்து)
பூரிதானமாக எல்லாருக்கும் பிரசாதித்து அருளினார்

அன்றிக்கே
ராமானுஜ
ராமா பதம் ஸ்திரீ வாசகம் ஆகையாலே சூடிக் கொடுத்த நாச்சியாரைச் சொல்லி
அனுஜ -பதத்தாலே அவளுக்கு தம்பி -சந்த அனுவர்த்தித்வம் நினைவு அறிந்து நடந்ததால்
நாறு நறும் பொழில் –
வந்தாரோ நம் கோயில் அண்ணர் –
கோதை தங்கை யானாள் எவருக்கோ அவர் என்னவுமாம் –

(ஓன்று நூறாயிரமாக சமர்ப்பித்து பின்னையும் ஆளவும் -அடிமை செய்யவும் -வாய் நேர்ந்த படி-இவரும் சமர்ப்பித்து -கைங்கர்யங்களைப் பண்ணி -அங்கு மங்களா சாசனம் தாமும் செய்து -மேலும் பிற்காலத்திலும் பண்ண அடியார்களையும் நியமித்து செய்து அருளினார் அன்றோ-ஆகவே நாச்சியார் நினைவைப் பின் தொடர்ந்து திருப்பாவை ஜீயர் என்ற விருதும் பெற்றது ப்ரஸித்தம்)

ராமானுஜ பதத்தை -வேற்றுமைத் தொகையாக -தத் புருஷ ஸமாசமாகக் கொண்டு -ராமாய அநுஜ என்றும் வ்யுத்பத்தியாய் சந்த அநு வர்த்தித்தவம் என்றும்
பெரும்பூதூர் மா முனிக்குப் பின்னானாள் வாழியே என்றபடி
அன்மொழித்தொகை -பஹு வ்ரீஹீ ஸமாசமாகக் கொண்டு ராமா அநுஜா யஸ்ய ஸா- கோதை தங்கை எவருக்கோ அவர் -என்றும் பொருள் கொள்ளலாம் -என்றவாறு

அன்றிக்கே
இளைய பெருமாள் தானே அவதரித்து
(அன்று இளைய பெருமாள் சக்ரவர்திக்குத் திருமகனுக்குக் கைங்கர்யம் பண்ணினது ஒழிய
அவனுக்குத் திருவராதனமான நம்பெருமாளை கைங்கர்யம் செய்தது இல்லை
நம் பெருமாளுக்குக் கைங்கரியம் பண்ணுவது பெருமாளுக்கு மிகவும் திரு உள்ளம் உகக்குமாகையாலே) முன்னர் பெருமாளுக்கு செய்த கைங்கர்யத்தை
நம் பெருமாளுக்கு
நித்யோஸ்வ பஷோத்ஸவ மாசோத்ஸவ சம்வஸ்த்ர உத்சவங்கள்
திருப்பணி
திருவாராதனங்கள்
அமுதுபடி சாத்துப்படி
முதலான சகல வித கைங்கர்யங்கள் பண்ணுவித்து
மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு
அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூகமாஸ்வ-என்று ஸ்வாமி நியமிக்க
அப்படியே –இளையாழ்வார் தாமே என்னவுமாம்

அன்றிக்கே
அனுஜ -பதத்தால் சந்த அனுவர்த்தித்வம் சொல்லுகையாலே
சேஷோ வா சைன்ய நாதோ வா ஸ்ரீ பதிர் வேதி சாத்விகை
விதர்க்காய மகா ப்ராஞ்ஞை எதிராஜாயா மங்களம்–பாஷ்யகார மங்கள ஸ்லோகம்-20-
நித்ய கைங்கர்யரான நித்ய ஸூரிகளை உடையவர் என்பதாலுமாம் –
அடையார் கமலத்து -33-திவ்ய பஞ்சாயுதங்களும் இவரே -என்பதாலுமாம் –
காவேரீ விரஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்த்ரம்
ஸ வாஸூதேவோ ரங்கேச பிரத்யஷம் பரமம் பதம்
சர்வேஸ்வரனே -நம் பெருமாள்
திரு அநந்த ஆழ்வான் எம்பெருமானார்
அநந்த பிரதமம் ரூபம் லஷ்மணஸ்ச தத பரம் பலபத்ரஸ் த்ருதீ யஸ்து கலௌ கஸ்சித் பவிஷ்யதி
சதுர்த்த பதத்துக்கு பொருள் நாமே -என்று தாமே அருளிச் செய்தார் இறே-

நசேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுராஷரீ
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருசா -ஆழ்வான் பணித்த படி

இந்த பூர்த்தி வேறு எதிலும் இல்லை
ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம் -எம்பெருமானாரை தன் ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு இருப்பது போல்
திரு மந்த்ரமும் இந்த ராமானுஜ மந்த்ரத்தை கர்ப்பத்துக்குள்
வைத்துக் கொண்டு இருக்குமே

பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொது அது
எம்பெருமானாருக்கு உண்டான பூர்த்தி ஈஸ்வரனுக்கு இல்லை
ஈஸ்வரன் பூர்த்தியும்
பிராட்டிமார் பூர்த்தியும்
நித்ய ஸூரிகள் ஆழ்வார் பூர்த்தியும்
ஆச்சார்யர்கள் உடைய சகல பூர்திகளும் எம்பெருமானார்க்கே உண்டு -என்கை

ஆனால் இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு பெரிய திருமந்திரம் பிரதானம் -முமுஷுப்படி -1-11-என்று ரஹஸ்ய த்ரய விஷயமாக பிள்ளை லோகாச்சார்யாரும்
ந மந்த்ர அஷ்டாஷராத் பர-என்றும்
பூத்வோர்த்வ பாஹு ரத்யாதய ஸத்ய பூர்வம் ப்ரவீமி வா ஹே புத்ர சிஷ்யா ஸ்ருணுத ந மந்த்ர அஷ்டாஷராத் பரம -என்றும்
ஏக கண்டமாக வ்யாஸ பராசராதி மஹ ரிஷிகளும் நாராயண அஷ்டாக்ஷரீ தன்னையே ஸர்வ மந்த்ர உத்க்ருஷ்ட தமமாக ப்ரதிபாதிக்க
ராமானுஜ மந்த்ரத்துக்கு உள்ள பூர்த்தி இல்லை என்று சொல்லுகிறதுக்குப் பொருள் இல்லை என்று சொல்லுகிறதுக்குப் பொருள் எங்கனே என்னில்
ஞாநீத் ஆத்மைவ மே மதம் –ஸ்ரீ கீதை -7-18-என்று எம்பெருமானாரை ஈஸ்வரன் தனது ஹ்ருதயத்திலே வைத்துக் கொண்டு இருந்தால் போலே
நாராயண மந்த்ரமும் ராமானுஜ மந்த்ரத்தைத் தனது கர்ப்பத்துக்குள் வைத்துக் கொண்டு இருந்த அதிசயத்தாலே நாராயண மந்த்ரமே ஸர்வ உத்க்ருஷ்டம் என்று சொல்லலாம்

ஆனாலும் மோக்ஷ ஏக ஹேதுவான ராமானுஜ மந்திரத்துக்கு உள்ள பூர்த்தி
பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் பொதுவான நாராயண மந்திரத்துக்கு இல்லை
எம்பெருமானாருக்கு உண்டான பூர்த்தி ஈஸ்வரனுக்கு இல்லை

ஆகையால்
ஈஸ்வரன் பூர்த்தியும்
பிராட்டிமார் பூர்த்தியும்
நித்ய ஸூரிகள் ஆழ்வார்கள் பூர்த்தியும்
ஆச்சார்யர்களுடைய ஸகல பூர்த்திகளும்
எம்பெருமானாருக்கே உண்டு என்கை

மோக்ஷ பிரதத்வமுமும் புருஷகாரத்வமும் -நித்ய கைங்கர்யங்கள் செய்வதும் -அதுக்குப் பூர்வ பாவியான பக்தியும் – பிரபத்தியும் இவர் இடமே உண்டு என்றபடி 

—————————————————————————————————————————————–

ஆய பதார்த்தம் –
அவன் திருவடிகளிலே கைங்கர்யத்தை பிரார்த்தித்தே பெற வேண்டும்–முமுஷுப்படி -2-63- என்கிறபடியே
கைங்கர்யத்தை யாஸித்தே பெற வேண்டும்
பரவா நஸ்மி காகுஸ்த்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே -ஸ்வயம் து ருசிரே தேஸே க்ரியதாம் இவ மாம் வத –ஆரண்ய -15-7-என்கிறபடியே
நியமித்த படியே செய்ய வேண்டும் -என்கை

மந்த்ரத்திலும்
மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும்
மந்திர பிரதனான ஆச்சார்யன் பக்கலிலும்
பிரேமம் கனக்க உண்டானால் கார்ய கரமாவது-முமுஷுப்படி -1-4- என்றும்
மந்த்ரே தத் தேவதாயாம் ச ததா மந்த்ர ப்ரதே குரவ் த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸா ஹி ப்ரதம ஸாதனம் -என்றும் சொல்லுகிறபடியே
இந்த மந்த்ரத்திலும்
மந்த்ர ப்ரதானரான எம்பெருமானார் இடத்திலும்
மந்த்ரம் ப்ரஸாதித்த ஆச்சார்யர் இடத்திலும்
ப்ரேமம் அதிசயநே யுண்டானால் கார்யகரமாவது என்று இருக்கையாலே
இந்த மந்த்ர ப்ரதானனான எம்பெருமானார் இடத்திலே உத்தாரகத்வ பிரதிபத்தியும்
மற்றவர் இடத்திலே உபகாரத்வ பிரதிபத்தியும் உண்டாய்

இவர் இடம் உத்தாரகத்வ பிரதிபத்தியும்
மற்றவர்கள் இடம் உபகாரத்வ பிரதிபத்தியும் உண்டாய்
தீர்க்க தண்ட நமஸ்கார பிரத்யுத்தான மனந்தரம்-சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத் குருப்யோ நிவேதயத் –
ஆச்சார்ய அதீனமாக வர்த்திக்கும் அதிகாரிக்கு –கை இலங்கு நெல்லிக் கனி -(உபதேச ரத்ன மாலை -62-)வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –தானே வைகுந்தம் தரும் (உபதேச ரத்ன மாலை -61)-இத்யாதிகள் படியே ப்ராப்யம் சம்சயம் இல்லாமல்  இருக்குமே –

ஆகையால் இந்த மந்த்ரத்தை யதா பிரதிபத்தி யுக்தனாய் அனுசந்தித்துக் கொண்டு -விபரீத ப்ரவ்ருத்தி நிவ்ருத்தனாய் –
ஈஸ்வரனுக்கும் -பிராட்டிமார்க்கும் -நம்மாழ்வாருக்கும் –எம்பெருமானாருக்கும் -மணவாள மா முனிக்கும்-ஸ்வ ஆச்சார்யனுக்கும் -உண்டான ஐக்கியத்தை அனுசந்தித்து
ஈஸ்வரனுடைய-பர வ்யூஹாதி பஞ்ச ஸ்தல பூர்த்திகளும்  –
ஆழ்வாருடைய பூர்த்தியும் -மணவாள மா முனியுடைய பூர்த்தியும் -ஸ்வாச்சார்ய பூர்த்தியும் எம்பெருமானாருக்கே உண்டாகையாலே
எம்பெருமானாருக்கே சகலவித கைங்கர்யங்களும் பண்ண வேண்டும்-

(பாட்டுக் கேட்க்கும் இடமும் இத்யாதிகள் எல்லாமே வகுத்த இடத்திலே உண்டே)

(ஈஸ்வரனுக்கும் -பிராட்டிமார்க்கும் -நம்மாழ்வாருக்கும் –எம்பெருமானாருக்கும் -மணவாள மா முனிக்கும்-ஸ்வ ஆச்சார்யனுக்கும் -உண்டான ஐக்கியத்தை அனுசந்தித்து
குணத்தால் வந்த ஐக்யம்
ஈஸ்வரனுக்கும் ஸ்வ ஆச்சார்யனுக்கும்
பிராட்டிக்கும் ஸ்வ ஆச்சார்யனுக்கும் –என்றும் பிரித்தும் அந்வயம்
சேஷி தம்பதி ப்ராப்யம்
பிராட்டிக்கும் ஆழ்வாருக்கும் சேஷி ப்ராப்யம் புருஷகாரம்
மோக்ஷ பிரதம் ராமானுஜருக்கு அதிகம்
ராமானுஜருக்கும் மா முனிகளுக்கும் -ஸ்வாமி தாஸர் -உத்தாரகர் உபசாரகர் -யதீந்த்ரரும் யதீந்த்ர ப்ரவணரும்-உண்டான ஐக்கியத்தை அனுசந்தித்து)

எம்பெருமானாருக்கு கைங்கர்யம் பண்ணும் பொழுது திருவடிக்கே பண்ண வேண்டுகையாலும் –
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் துறை திருவடிகள் ஆகையாலும் –
திருவடிகள் ஸ்தானமான ஸ்வாச்சார்யா பாரதந்தர்ய பர காஷ்டையான அனுஷ்டானத்திலே

திருட அத்யவசாய பரனாய் நிற்கை அன்றிக்கே ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் வேறு ஓன்று இல்லை –

தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது அவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி ஆசாரியனை பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு -என்றும்
ஆஸீனா ஸா சயனா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா நமோ நாராயணாயேதி மந்த்ரர் ஏக சரணாலயம் -என்றும்

சொல்லுகிறபடியே த்ரிவித கரணங்களினாலும் –
அஸ்மத் குருப்யோ நம-என்கிற மந்த்ரம் தன்னையே கால ஷேபம் பண்ணுகிற அதிகாரிகள் இங்கு இருக்கும் போதே முக்தி அடைந்தவர்கள் ஆவார்கள் அன்றோ –

இந்த மந்த்ரம் தியாக மண்டபமான பெருமாள் கோயில்
திரு அநந்த சரஸின் கரையிலே அநாதிகாரிகளுக்கு சொல்ல வேண்டாம் என்று ஆணை இட்டு
எம்பெருமானார் ஆழ்வானுக்கு பிரசாதிக்க
அது தன்னையே தாரகமாக விஸ்வசித்து
தம்மை விஸ்வசித்து இருப்பார்களுக்கு இந்த மந்த்ரம் தன்னையே பிரசாதித்து அருளினார்

திருமந்திர ப்ரகரணம் முற்றிற்று-

—————————————————————————————————————————————–

த்வய பிரகரணம் 

ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே ஸ்ரீ மதே ராமாநுஜாய நம –

இந்த த்வய மந்த்ரம்-மிதிலா சாலக்ராமத்தில் -எம்பெருமானார் வடுக நம்பிக்கு பிரசாதித்து–ஸ்ரீ பாத தீர்த்தமும் திருவடிகளையும்-பிரசாதித்து அருளினார்
திருவடிகளும் ஸ்ரீ பாத தீர்த்த கிணறும் இன்றும் சேவிக்கலாம்
எம்பெருமானார் திருவடிகள் ஸ்வாச்சார்யர் ஆகையாலே-ஸ்வா ச்சார்ய பரதந்திர பரகாஷ்டைதையை-உடையவராய் இருக்கையே-
எம்பெருமானாருக்கு மிகவும் உகந்த திரு உள்ளம் ஆகையாலே-இந்த அனுஷ்டானத்தில் நிற்கையே த்வயார்த்துக்கு தாத்பர்யம்—

நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம்
கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் |
ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம்
தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: ||
-5-

இந்த ச்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு கண்டங்களும் ஆறு பதங்களும் கொண்டு அமைந்தது. பத்துப் பொருளை உட்கொண்டிருக்கிறது: (1) சேதனனைத் தன் வயமாக நடத்தும் திறமை (2) பிராட்டியோடு பிரிக்க முடியாத நிலை (3) ஈச்வரத் தன்மைக்கேற்ற இனிய குண ஸமூஹம் (4) அழகிய திருமேனி (5) உபாயம் (6) சேதனன் செய்ய வேண்டிய கடமை (7) இருவருமான சேர்த்தியில் கைங்கர்யம் என்னும் பலன் (8) உரிமை என்னும் ஸம்பந்தம் (9) கைங்கர்ய ப்ரார்த்தனை (10) கைங்கர்யத்துக்கு இடையூறாக உள்ளவைகளிலிருந்து விடுதலை – ஆகிய இந்தப் பத்துப் பொருள்களையும் இடைவிடாது நினைப்பவனை ரக்ஷிக்கிறது என்னும் இதை வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
நேத்ருத்வம் –
புருஷகாரத்வத்தையும்
நித்யயோகம்-
ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாத நித்ய சம்ச்லேஷத்தையும்
சமுசித குணஜாதம் –
இன்றியமையாத  திருக் குணங்களின் திரளையும்
தநுக்யாப நம் ச-
திரு மேனியைக் காட்டுதலையும் –
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்-
உபாயம் –
உபாயத்தையும் –
கர்த்தவ்யபாகம் –
சேதனன் செய்ய வேண்டிய தான அத்யாவசாயத்தையும்
த்வத மிதுநபரம் ப்ராப்யம் –
இருவருமான சேர்த்தியை விஷயீ கரித்ததான கைங்கர்யத்தையும்
மேவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-

ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
ஸ்வாமித்வம் –
சர்வ சேஷித்வத்தையும்
ப்ரார்த்த நாஞ்ச –
கைங்கர்ய பிரார்த்தனையையும் –
பிரபலதர விரோதி ப்ரஹாணம் –
மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்
தசைதான்

மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-
மந்தாரம் –
மனனம் செய்கிற உத்தம அதிகாரியை
த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட
அயம்
அந்த த்வயம் மந்த்ரமானது
ஏதான் தச
இந்த பத்து அர்த்தங்களையும்
அதிகத நிகம
வேத ப்ரதீதமாயும்
த்வீ கண்ட
இரண்டு கண்டங்களை யுடையதாயும்
ஷட்பத
ஆறு பதங்களை யுடையதாயும்-

த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
ஏவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-
1-ஸ்ரீ –நேத்ருத்வம் -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -ச்ருணோதி -ச்ராவயதி -ஸ்ருணாதி -ச்ரீணாதி
2- மத்-நித்ய யோகத்வம்
3- நாராயண -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌசீல்யம் ஜ்ஞானம் சக்தி-சமுசித குணஜாதம்
4- சரனௌ-திவ்ய மங்கள விக்ரஹம் -த நுக்யாபனம் –
5-சரணம் -உபாயம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
6-பிரபத்யே -கர்த்தவ்யபாகம் -வாசிக காயிக மானசீகங்கள் -கர்த்தவ்யம் புத்யர்த்தம்
7-ஸ்ரீ மதே-மிதுன பரம் பிராப்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்த தத்வேன அன்வயம்
8-நாராயண -ஸ்வாமித்வம்
9-ஆய -ப்ரார்த்த நாஞ்ச -கைங்கர்ய பிரார்த்தனையையும் –
10-நம-பிரபலதர விரோதி ப்ரஹாணம் -மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்-
கடகவல்லி நிகமத்தில் வேதபாகத்தில் உள்ளதே -அதிகத நிகம-

————–

த்வய பிரகரணம் –

த்வயம் இரண்டு வாக்யமாய் –ஆறு பதமாய் –பத்து அர்த்தமாய்25-திரு அக்ஷரமாய் இருக்கும்
அதில் பூர்வ வாக்கியம் -15-அக்ஷரமாய் / உத்தர வாக்கியம் -10-அக்ஷரமாய் இருக்கும் -எங்கனே என்னில் –
ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே
என்றும் –
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
-என்றும் –இரண்டு வாக்யமாய்

ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் -என்றும் –
சரணம்-என்றும் –
பிரபத்யே-என்றும்

ஸ்ரீ மதே-என்றும்
ராமாநுஜாய-என்றும்
நம -என்றும் –ஆறு பதமாய்

ஸ்ரீ -என்றும் –
மத் -என்றும் –
ராமானுஜ-என்றும் –
சரணவ் -என்றும் –
சரணம்-என்றும் –
பிரபத்யே -என்றும் –
ஸ்ரீ மதே-என்றும் –
ராமாநுஜ-என்றும் –
ஆய-என்றும் –
நம -என்றும் –பத்து அர்த்தமாய் இருக்கும் –

பிரதம பதம் ஸ்ரீ மத் -சம்பத் வாசகம் –உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் சொல்லுகிறது
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை சொல்லுகிறது ஆகவுமாம் –
கைங்கர்ய  ஸ்ரீ யை சொல்லுகிறது ஆகவுமாம்
இத்தனை சொன்னாலும் பிரதம அஷர வாச்யர் –
ஸ்ரீ வத்சாங்க ஆச்சார்யர் -கூரத் ஆழ்வான் ஒருவரையே குறிக்கும் என்று -நஞ்சீயர் அருளிச் செய்வர் –

நித்ய யோகமாவது -பிரிந்து இராத இருப்பு
ஆழ்வான் எம்பெருமானாரை பிரியாதே இருந்தாரோ என்னில்
அர்ஜுநஸ் கேசவஸ்ய ஆத்மா கிருஷ்ணஸ் யாத்மா –க்ரீடிண -என்கிறபடியே ஆழ்வான் திரு உள்ளத்தில் எம்பெருமானாரும் -எம்பெருமானார் திரு உள்ளத்தில் ஆழ்வானும் பிரியாமல் இருக்கையாலும்

நித்ய யோகோ மதுப் –ஆழ்வான் எம்பெருமானாரை விட்டு பிரிந்ததே இல்லையோ என்னில்-
அர்ஜுன கேசவஸ்யாத்மா கிருஷ்ணஸ் யாத்மா கிரீடின -என்றபடி
இருவரும் அவர் அவர் திரு உள்ளத்தில் பிரியாமை உண்டே
அன்றிக்கே
ஆழ்வான் யஞ்ஞோபவீத ஸ்தானம்
-என்பது பிரசித்தம் இறே –

சரண பதம் -திரு மேனியை குறிக்கும்
இங்கே மணவாள மா முனியை குறிக்கும்
சரணம் -ஈஸ்வரனும் உபாயம் அன்று -என்கை

பிரபத்யே
வர்த்தமானம்
வேறு ஓன்று உபாயம் என்ற புத்தி புகுராமல் இருக்க
நித்யமும் இதுவே கால ஷேபமாக இருக்கை-

ஸ்ரீ மதே -மிதுனமே பிராப்யம்-
எம்பெருமானாரும் கூரேசாதிகளையும் கூட்டிக் கொள்கிறது –

ராமானுஜ பதத்தாலே-சேஷித்வத்தைச் சொல்கிறது -அது எங்கனே என்னில் –
மேல் சதுர்த்தியில் சேஷ பூதன் பண்ணுகிற விருத்தியைச் சொல்லுகிறது ஆகையால்
சேஷ விருத்தியை கொண்டு அருளுகிறவன் சேஷி யாகையாலே சேஷித்வத்திலே தாத்பர்யம் –
பர்த்தாவுக்கு உபசாரம் செய்கிறது பார்யைக்கு ஸ்வரூபமும் ஸூக ரூபமாகவும் இருக்குமா போலே
தனக்கு சேஷியானவனுக்கு தாஸ்யம் செய்கிறது சேஷ பூதனுக்கு ஸ்வரூபமும் ஸூக ரூபமும் ஆகையால்
சேதனனுக்கு சரம சேஷி எம்பெருமானார்
என்கை –

ஆய
சகலவித கைங்கர்ய பிரார்த்தனையை
சொல்லுகிறது-
கைங்கர்யம் தான் -மானஸ -வாசிக -காயிக -ரூபத்தால் மூன்று விதமாய் –
இது தான் ஒன்றுக்கு ஓன்று நாநா விதமாய் இருக்கையாலே -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும்
சர்வவித கைங்கர்யங்களும் நித்யம் என்கிறது –

நம
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியை
சொல்லுகிறது
தனக்கு இஷ்டமாக பண்ணும் கைங்கர்யம் நரகத்தோடு ஒக்கும்
தனக்கும் அவனுக்கும் இஷ்டமாக பண்ணுகை ச்வர்க்கத்தோடு ஒக்கும் –
அவனுக்கே இஷ்டமாக பண்ணுகை மோஷத்தோடு ஒக்கும்-
உனக்கே நாம் ஆட் செய்வோம்-மற்றை நம் காமங்கள் மாற்று -போலே-
எம்பெருமானார் திருவடிகளே சரணம் –
என்று நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்கையாலே
பூர்வ வாக்கியத்தில் எம்பெருமானார் திருவடிகளே உபாயம் என்று சொல்கிறது –
உத்தர வாக்கியத்தில்  மோக்ஷமும் அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே என்று சொல்கிறது –
த்வயத்தில் உபாய உபேயங்கள் இரண்டும் திருவடிகளே என்று சொல்லுகை –சரணவ்-என்கிற த்வி வசனத்துக்கு தாத்பர்யம்
என்று சம்பிரதாய ஞானரான நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்வர்கள்

—————————————————————————————————————————————–

பிரதம பதம் ஸ்ரீ மத் -சம்பத் வாசகம் –உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் சொல்லுகிறது
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை சொல்லுகிறது ஆகவுமாம் -கைங்கர்ய ஸ்ரீ யை சொல்லுகிறது ஆகவுமாம்-
இத்தனை சொன்னாலும் பிரதம அஷர வாச்யர் –ஸ்ரீ வத்சாங்க ஆச்சார்யர் -கூரத் ஆழ்வான் ஒருவரையே குறிக்கும் என்று -நஞ்சீயர் அருளிச் செய்வர் –
ஆழ்வான் யஞ்ஞோபவீத ஸ்தானம் -என்பது பிரசித்தம் இ றே –
சரண பதம் -திரு மேனியை குறிக்கும்–இங்கே மணவாள மா முனியை குறிக்கும்-

ராமானுஜ பத்தாலே குண பூர்த்தியைச் சொல்லுகிறது
குண பூர்த்தி யாவது ஸமஸ்த திருக் கல்யாண குணங்கள் ஆவன
வாத்சல்யம்
ஸ்வாமித்வம்
ஸுசீல்யம்
ஸுலப்யம்
ஞாநம்
சக்தி
பிராப்தி-பூர்த்தி
பரம காருணிகத்வம்
பரம உதாரத்வம்
அசரண்ய சரண்யத்வாதிகள்

இந்த ஆஸ்ரிதர் எளிதில் ஆஸ்ரயிக்கவும் -ஆஸ்ரிதர் கார்யங்கள் செய்து தலைக் கட்டுகைக்கும் வேண்டிய குணங்கள் இவர் இடத்தில் உண்டாகைக்கு அடையாளம் எங்கனே என்னில்
இந்த குணங்கள் இல்லாவிடில் சேதனர் ஆஸ்ரயிக்கவும் அவர்களை ரஷிக்கையும் கூடாமையாலே
ரக்ஷண த்யான ஸம் ஸ்பர்ஸங்களாலே அவ் வர்களை ரஷித்த இடங்களிலே காணலாம்

சரண பதத்தாலே திருவடிகளைச் சொல்லுகிறது –திருவடிகளைச் சொல்லவே-திவ்ய மங்கள விக்ரஹத்தையும் சொன்னவாறு என்றாலும்
மணவாள மா முனிகளையே சொல்லுகை முக்ய அர்த்தம் என்று ஸம்ப்ரதாய ஞானிகளான நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்வர்
மணவாள மா முனிகளைச் சொல்லவே ஸ்வ ஆச்சார்ய பர்யந்தம் விவஷிதம்

சரண பதத்தாலே உபாயத்தைச் சொல்லுகிறது
ராமானுஜ சரணவ் சரணம் ப்ரபத்யே என்கையாலே ஈஸ்வரனும் உபாயம் அன்று என்கை

ப்ரபத்யே -பதத்தாலே பற்றுகிறேன் என்று சொல்லுகிறது
ஸக்ருதேவ –ராம சரம ஸ்லோகம் பற்றுவது ஒருக்iகாலே இருக்க
பற்றுகிறேன் என்ற வர்த்தமானத்தாலே மற்ற ஓன்று உபாயம் என்கிற புத்தி புகுராமல் நித்யமும் இதுவே கால ஷேபமாக அனுசந்திக்க வேணும் என்கிறது

இந்த பூர்வ வாக்யத்தில் ப்ரதிபாதித்த உபாய வரணம் உபேய அர்த்தமாகையாலே உத்தர வாக்யத்தில் ப்ராப்யத்தைச் சொல்லுகிறது
ப்ராப்யமும் உபேயமும் பர்யாயம்

ஸ்ரீ மதே என்கிற பதத்தாலே மிதுனமே ப்ராப்யம் என்று சொல்லுகிறது
மிதுனமாவது -மேல் எம்பெருமானாரையும் அவருக்கு சாயா பரதந்த்ரருமான கூராதிகளையும் கூட்டிக் கொள்கிறது

ராமானுஜ பதத்தாலே சேஷித்வத்தைச் சொல்லுகிறது -அது எங்கனே என்னில்
மேல் சதுர்த்தியில் சேஷ பூதன் பண்ணுகிற வ்ருத்தியைச் சொல்லுகிறதாகையாலே
சேஷ வ்ருத்தியைக் கொண்டு அருளுகிறவன் சேஷியாகையாலே சேஷித்வத்திலே தாத்பர்யம்-(பட்டர் ஸ்வாமித்வம் என்பதையே இங்கு ஸேஷித்வம் என்கிறார்)
பார்த்தாவுக்கு உபசாரம் செய்கிறது பார்யைக்கு ஸ்வரூபமும் ஸூக ரூபமுமாய் இருக்குமாப் போலே தனக்கு சேஷியானவனுக்கு தாஸ்யம் செய்கிறது சேஷ பூதனுக்கு ஸ்வரூபமும் ஸூக ரூபமுமாய் இருக்கையாலே
சேதனனுக்கு சரம சேஷி எம்பெருமானார் என்கை

ஆய என்கிற சதுர்த்தியாலே-கைங்கர்ய ப்ரார்த்தனையைச் சொல்லுகிறது –
கைங்கர்யம் தான் மானஸ -வாசிக -காயிக ரூபத்தாலே -மூன்று விதமாய்-
இது தான் ஒன்றுக்கு ஓன்று நாநாவிதமாய் இருக்கையாலே
ஸர்வ தேச -ஸர்வ அவஸ்தைகளிலும் -ஸர்வ வித கைங்கர்யங்களும் நித்யம் என்று சொல்லுகிறது

நம என்கிற பதத்தாலே கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது -அதாவது
கைங்கர்யம் தான் தனக்கு இஷ்டமாகப் பண்ணுகை நரகத்தோடு ஒக்கும்
தனக்கும் அவனுக்குமாகப் பண்ணுகை ஸ்வர்க்கத்தோடு ஒக்கும்
அவனுக்கே இஷ்டமாகப் பண்ணுகை மோஷத்தோடு ஒக்கும் என்று வார்த்தா மாலையிலே அருளிச் செய்கையாலே
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்னும் படியே அவனுக்கே இஷ்டமாம் படியே பண்ண வேண்டும் என்கை

எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்கையாலே
பூர்வ வாக்யத்தாலே எம்பெருமானார் திருவடிகளே உபாயம் என்று சொல்லுகிறது
உத்தர வாக்யத்தாலே மோக்ஷமும் அவர் திருவடிகளிலே பண்ணும் கைங்கர்யமே என்று சொல்கிறது
த்வயத்தில் உபாய உபேயங்கள் இரண்டுமே திரு வடிகளே என்று சொல்லுகை சரணவ் என்கிற த்வி வசனத்துக்குத் தாத்பர்யம் என்று நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்வார்கள்

இந்த த்வய மந்த்ரம்
மிதிலா சாலக்ராமத்தில் -எம்பெருமானார் வடுக நம்பிக்கு ப்ரசாதிக்க —
அவரும் அந்த மந்த்ர ப்ரதிபாத்யமான திருவடிகளை மேல் உள்ளவர்களும் சேவித்து கைங்கர்யம் பண்ணி
உஜ்ஜீவிக்கும் படியாக திருவடிகளை பிரசாதிக்க வேணும் என்று விண்ணப்பம் செய்ய
அப்படியே  -ஸ்ரீ பாத தீர்த்தமும் திருவடிகளையும்

பிரசாதித்து அருளினார்-என்று பிரசித்தம் –
திருவடிகளும் ஸ்ரீ பாத தீர்த்த கிணறும் இன்றும் சேவிக்கலாம்-
எம்பெருமானார் திருவடிகள் ஸ்வாச்சார்யர் ஆகையாலே
ஸ்வாச்சார்ய பரதந்திர பரகாஷ்டைதையை
உடையவராய் இருக்கையே-
எம்பெருமானாருக்கு மிகவும் உகந்த திரு உள்ளம் ஆகையாலே
இந்த அனுஷ்டானத்தில் நிற்கையே த்வயார்த்துக்கு தாத்பர்யம்

த்வய ப்ரகரணம் முற்றிற்று

 —

சரம ஸ்லோகார்த்தம் –

சரம ஸ்லோகம் இரண்டு அர்த்தமாய் -11- பதமாய் -32-திரு அக்ஷரமாய் இருக்கும் –அது எங்கனே என்னில் –
சர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர -என்றும் –
விபூதிம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம -என்றும் -இரண்டு அர்த்தமாய் –
சர்வ கர்மாணி –என்றும்
ஸந்த்யஜ்ய –என்றும்
ராமானுஜ-என்றும்
இதி-என்றும்
ஸ்மர –என்றும்
விபூதிம்-என்றும்
சர்வ பூதேப்யோ-என்றும்
ததாமி –என்றும்
ஏதத் –என்றும்
விரதம்-என்றும்
மம -என்றும் -11-பதமாய் இருக்கும்

(மாஸூச -சொல்ல வேண்டாமே சோகம் வர ப்ரஸக்தியே இல்லையே ராமன் இடத்திலும் ராமானுஜர் இடத்திலும்)

(ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷
பூர்வார்த்தத்தில் ஆறும் உத்தரார்த்தத்தில் ஐந்துமாக இங்கும் ஐந்தும் ஆறுமாக11 பதங்கள்-32 எழுத்துக்கள் அனுஷ்டுப் சந்தஸ்)

(ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம்  யேதத் வ்ரதம் மம –யுத்த -18-33-)

பூர்வார்த்தம் அதிகாரி க்ருத்யத்தையும்–
உத்தரார்த்தில் உபாய க்ருத்யத்தையும்
சொல்லுகிறது

சர்வ கர்மாணி –
அனைத்து செயல்களும் -கர்ம ஞான பக்தி பிரபத்தி இவைகளைச் சொல்லும்

ப்ரபத்தியையும் கர்மம் சொல்லலாமோ என்னில்
செய்யப்படுகிற அனைத்தையுமே கர்மம் என்று சொல்லப்படுகிறதாகையாலே ப்ரபத்தியையும் அப்படியே சொல்லமாம் அன்றோ

சந்த்யஜ்ய-
ருசி வாசனைகள் உடன் -லஜ்ஜையுடனும்- -மறுவலிடாத படி-விட வேண்டும்
கலங்கி உபாய புத்யா பண்ணும் பிரபத்தியும் பாதகத்தோடு ஒக்கும்-என்றும்
நெடு நாள் அந்ய பரராய் போந்த பார்யை
லஜ்ஜா பயங்கள் இன்றியே பர்த்ரு சகாசத்திலே நின்று
என்னை அங்கீ கரிக்க வேண்டும் -என்று
அபேஷிக்குமா போலே இருப்பது ஓன்று இறே இவன் பண்ணும் பிரபத்தி-என்றும்

(என் உணர்வில் உள்ளே இருத்தினேன் -அதுவும் அவனுடைய இன்னருளே
உயிரை அறவிலை செய்தனன் தோழீ -அதுவா கின்னு ஸமர்ப்பயாமி -கலக்கமும் தெளிவும் மாறி மாறி வருமே)

இவன் அவனை பெற நினைக்கும் போது பிரபத்தியும் உபாயம் அன்று-என்றும்-ஸ்ரீ வசன பூஷணத்தில் அருளிச் செய்கையாலே-(ஸ்வ தந்ரனான அவனைப் பற்றும் ப்ரபத்தியும் த்யாஜ்யம்)

ஸூ லபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே -லப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்த மன்வேஷதி ஷீதவ்-என்றும்

சஷூர் கம்யம் குரும் த்யக்த்வா சாஸ்திர கம்யந்து யஸ் ஸ்மரேத்-கரஸ்த முதகம் த்யக்த்வா கநஸ்த மபி வாஞ்சதி -என்றும் சொல்லுகிறபடியே
பிரத்யக்ஷ சாஷாத்காரமான ஆசார்யனை விட்டு ஞான சாஷாத்காரமான ஈஸ்வரனைப் பற்றுகை அஞ்ஞனாய் அசக்தனாய் அப்ராப்தனான சேதனனுக்கு கூடாமையாலும்
இவை ஒன்றுக்கும் சக்தன் இன்றிக்கே இருப்பான் ஒருவனைக் குறித்து இவனுடைய இழவையும்-இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு உண்டான ப்ரீதியையும் அனுசந்தித்து
ஸ்தநந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் அது தன் குறையாக நினைத்து தான் ஒளஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே தான் இவனுக்காக உபாய அனுஷ்டானம் பண்ணி ரஷிக்க வல்ல பரம தயாளுவான மஹா பாகவதன் அபிமனாத்திலே ஒதுங்கி –வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும்-
போலே சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவன் இட்ட வழக்காக்குகை -என்றும் அர்த்த பஞ்சகத்திலே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்த படியே 
ஆசார்ய அபிமான நிஷ்டனுக்கு பிரபத்தியும் த்யாஜ்யம் என்றது ஆயிற்று-

ராமானுஜ இதி ஸ்மர -என்கிற பதத்தாலே
பிதரம் மாதரம் —லோக விக்ராந்த சரனௌ சரணம் தே வ்ரஜம் விபோ – (பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத்நாதி தான தான்யானி ஷேத்ராணி ஸ் க்ருஹாணி ச
சர்வ தர்மாம்ச்ச சந்த்யஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான் –
லோக விக்ராந்த சரனௌ தேவ்ரஜம் விபோ)என்றும்
த்வமேத மாதா –சர்வம் மம தேவ தேவ -(த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துச்ச குருஸ் த்வமேவ
த்வமேவ வித்யா தரவினம் த்வமேவ
த்வமேவ சர்வம் மம தேவ தேவ)என்றும் (சேதனர் திட அத்யாவசாயத்துடன் பண்ண மாட்டாமையாலே-இவர்களுக்குத் தானே விண்ணப்பம் செய்து)
மநோ வாக் காயை –சர்வான் அசேஷத ஷமஸ்வ -(மநோவாக் காயைர் அநாதி கால ப்ரவ்ருத்த
அநந்த அக்ருத்ய கரண
கருத்ய அகாரண
பகவத் அபசார
பாகவத அபசார
அசஹ்ய அபசார ரூப
நாநாவித அநந்த அபசாரான்
ஆரப்த கார்யான்
அநாரப்த கார்யான்
கருதான் க்ரியமாணான் கரிஷ்ய மாணாம்ச்ச
சர்வான்
அசேஷத ஷமஸ்வ-ஸ்ரீ சரணாகதி கத்யம்-சூரணை -10)என்று தானே விண்ணப்பம் செய்து)-பிரபத்தி பண்ணின வாத்சல்ய ஸ்வாமித்வ ஸுசீல்ய ஸுலப்ய ஞான சக்திகளாதி யுண்டாய் இருக்கிற என்னை
ராமானுஜ ஸ்மரண மாத்ரமே அமையும்

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் -வேண்டாவோ என்னில்
மன கரணம் பிரதானம்
மற்ற இரண்டும் இதுக்கு சேஷம்

ஜ்ஞானான் மோஷம்(ஆகையால்-பகவத் விஷயத்தில் விட்டே பற்ற வேண்டும் என்று இல்லாமல் ராமானுஜ நினைக்கவே -அஹம் ஸ்மராமி போலவே-அவர் நமக்காக பண்ணுவதால் -இதுவே போதுமே)
ராமானுஜ -என்று மனசிலே நினைவு உண்டாகவே அமையும் –

விபூதிம்
நித்ய விபூதியை சொல்லுகிறது

சர்வ பூதேப்ய
எல்லாருக்கும்(பூ சத்தாயாம் இருக்கும் அனைவருக்கும்)

ததாமி
பிரசாதிக்கிறோம்

ஸ்மர -ஒருவன் சொல்லி அனைவருக்கும் கிட்டுமோ என்னில்
விபீஷணனை -சரணம் அடைந்ததால் அங்கீ கரிக்க கூட வந்த நால்வரும் சரணாகதி பண்ணாமலே பேறு பெற்றால் போலே
ராஜ சேவை ஒருவன் பண்ணிக் கொண்டு வந்த அர்த்தத்தில்
ராஜாவை அறியாத புத்ர மித்ர களத்ர பௌத்ராதிகள் அனுபவிப்பது போலேயும்
எம்பெருமானார் சம்பந்தம் ஒருவனுக்கு உண்டானால்
அவன் சம்பந்த சம்பந்திகளுக்கும் பரம பதம் சித்தம் -என்று தாத்பர்யம்

(பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து ஆள்வாரே)

ஏதத் விரதம் மம –
ரஷிக்கையே ஸ்வபாவம் உள்ள எம்பெருமானார் அருளிய வார்த்தை
நீங்கள் நிர் பரராய் இருக்க வேண்டும் -என்று அருளிச் செய்து அருளினார்-

சத்ய வாக்யோ திருட வ்ரத -என்றும் —
ப்ரியவாதீ ச பூதானாம் சத்யவாதீ ச ராகவா -என்றும் –
ராமோ த்விர் நாபி பாஷதே -என்றும் சக்கரவர்த்தி திருமகனுடைய வாக்கியம் சத்தியமானால் போலே –
இங்கு ஏதத் விரதம் மம -என்ற எம்பெருமானாருடைய வாக்கியமும் –
எம்பெருமானார் சேதனரை ரக்ஷிக்கிறது-சேதனருக்காக அன்று -தம்முடைய விரதம் சித்திக்கைக்காக என்றவாறு

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றிய சக்கரவர்த்தி திருமகன் திரு உள்ளக்  கருத்தை அறிந்து அருளி
நம்முடைய அபிமான அந்தர் பூதரையும் நாமே ரக்ஷிக்கிறோம் -நீங்கள் நிர் பரராய் இருமின் -என்று அருளிச் செய்கிறார்

(பெருமாள் அன்று செய்து அருளியதையே
நம் ஸ்வாமி என்றுமே செய்து அருளவே இந்த சரம ஸ்லோகம் அருளுகிறார்)

இவ் வர்த்தம் ஞான மண்டபத்தில் -திரு நாராயண புரத்தில்
இரவு காலத்தில்
முதலியாண்டான்
எம்பார்
திரு நாராயண புரத்து அரையர்
மாருதி யாண்டான்
உக்கலம்மாள்
இவர்கள் ஐவருக்கும் அருள
மகா மதிகள் இவர்கள் விஸ்வசித்து
மகா ரகசியம் என்று அருளிச் செய்து போந்தனர் –

இதில் பிரபத்தி பிறப்பது துர்லபமாய் இருக்கும் -நாம் சர்வ உத்தாரகர் -நம்மைப் பற்றி நிர்ப்பரராய் இருந்தால்
ஒரு குறைகளும் இல்லாமல் ஈடேறலாம் -என்று அருளிச் செய்தார்

ஸ்ரீ கிருஷ்ணன் -மாம் -என்று தொட்டுக் காட்டி அருளினால் போலே இவரும் இந்த ஐவருக்கும்
தொட்டுக் காட்டி அருளின படியால்
மஹா மதிகளான இவர்கள் கண்டுஇனி நமக்கு எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று விஸ்வஸித்து
நிர்ப் பரராய் இருக்கையாலே நமக்கும் இதுவே தஞ்சம்

இவ் வர்த்தம் பரம ரகஸ்யம் என்று அஸ்மாத் ஆச்சார்யர் யுக்தம்

பெரிய திருமலை நம்பி தாரா பூர்வகமாக எம்பாரை சமர்ப்பித்த பின்பு மாட்டுக்கு புல் இடுவார் உண்டோ என்று முகம் காட்டாமல் இருக்க
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்ற பின்பு
எம்பெருமானாரும் இவருடைய அத்யாவசாயத்தைத் திரு உள்ளம் பற்றி
இந்த மந்த்ர த்வயத்தையும் எம்பாருக்கு அனுக்ரஹித்து அருளினார்

அவர் பட்டருக்கு
அவர் நஞ்சீயருக்கு
அவர் நம்பிள்ளைக்கு
அவர் வடக்குத் திரு வீதிப் பிள்ளைக்கு
அவர் பிள்ளை லோகாச்சார்யருக்கு
அவர் கூர குலோத்தம தாசருக்கு
அவர் திருவாய் மொழிப் பிள்ளைக்கு
அவர் மணவாள மா முனிக்கு
அவர் வானமா மலை ஜீயர்- கோயில் கந்தாடை அண்ணன் –
பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் -அப் பிள்ளை –
பிரதிவாதி பயங்கரம் அண்ணன் -எறும்பி அப்பா –
போரேற்று நைனாராச்சாரியர் -அத்தங்கி சிங்கராச்சார்யர்
முதலான அஷ்ட திக் கஜங்களுக்கும் பிரசாதிக்க
அஸ்மத் ஆச்சார்யர் கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் மூலம் நம்மளவும் வரப் பெற்றோமே –

சரம ஸ்லோக ப்ரகரணம் முற்றிற்று

————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ அழகப்ப ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடுக நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் தாழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ரஹச்ய விவேகம் – ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தது

June 2, 2015

ஸ்ரீ தேவ ராஜ குரு திரு நாமம் உடைய எறும்பி அப்பா –
திருக் குமாரார் -யஞ்ஞ நாராயண குரு –
அவர் யுடைய திருக் குமாரர் –தேவ ராஜ குருவர் –
திருக் குமாரர் -வரவர குருவரர்
இவரை – ஆச்சார்ய ரத்னம் -என்பர் -அந்த திரு நாமம் யுடைய கிரந்தம் அருளிச் செய்கையாலே

இந்த பிரபந்தத்துக்கு அஷ்டா தச பேத விசாரம் என்ற பெயரும் உண்டு

உபாய உபேய பரமான ஸ்ரீமத் சப்தார்த்தை
வேரி மாறாத பூ    மேல் இருப்பாள் வினை தீர்க்குமே
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து-என்றார் நம் ஆழ்வார்
ஆளவந்தாரும் –
ஜகத் சமஸ்தம் யத் பாங்க சம்ஸ்ரயம்-என்றும்
ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசந மந காந்தா பிரசாதாத்ருதே
சம்ஸ்ருத்ய ஷார வைஷ்ணவாத் வ ஸூ ந்ரூனாம் சம்பாவ்யதே கர்ஹிசித் -என்று அருளிச் செய்தார்-

லஷ்ம்யா சஹ ஹ்ருஷீகேச தேவா காருண்யா ரூப்யா ரசாக சர்வ சித்தாந்தே வேதாந்தேஷூ ச கீயதே –
ஸ்ரீ பாஷ்ய காரரும் -ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே கைங்கர்ய ரூபமான பரம புருஷார்த்தம் இவன் நியோகத்தின் படியே நடத்த வேணும் என்று அருளிச் செய்கிறார் –
நாராயணன் சரண்யன் ஆகும் பொழுது லஷ்மி விசிஷ்டனாய் இருக்கும் என்கைக்காக பூர்வ கண்டத்தில் ஸ்ரீமத் சப்தம் –
உபாயத்வம் -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –
புருஷகார சாபேஷம் என்னில் உபாயத்தினுடைய நைரபேஷ்ய ஹாநி வாராதோ என்னில் –
சஹாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம் சரண வரண ஸ்வரூப ச்வீகாரத்தில்
ச்வீகர்த்தா வான புருஷனையும் -சவீ கரிப்பிக்கும் புருஷகாரத்வத்தையும் அபேஷித்து இருக்கும் –
ச்வீக்ருதனான தான் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வாக இஷ்ட பிராப்தி பண்ணுகை ஆகிற கார்ய காலத்தில்
புருஷனும் புருஷகாரமும் ஆகிற உபாயத்தையும் அபேஷியாதே தானே செய்து தலைக் கட்டும் என்கை-
அவன் உபாயமாகும் இடத்தில் சஹாயாந்தரங்களை சஹியாமையாலே தான் உபாய பாவத்தில் அந்வயம் இன்றிக்கே புருஷகாரமாய் இருக்கும் என்று பெரிய ஜீயர் அருளிச் செய்வர் –
ததச்ய சத்ருசம் பவேத் –
வாலப்ப்யம்-புருஷகார பாவத்துக்கும் பிராப்யதைக்கும் உறுப்பாய் இருக்கும்
பூர்வ வ்ருத்தம் பாராதே விஷயீ கரிக்கும் படி அருகே இருந்து சேர்ப்பார் உண்டே -தனித்து இருவரும் உபாயமாக சொல்லுகிற இடங்கள் –பகவானுக்கு அபிமதையாய் அநு ரூபாயாய் இருக்கிற பிரதான்யத்தாலே
இவள் சொல்லிற்றை அவன் செய்யும் என்கிற நிச்சய நிபந்தனமாகக் கடவது-

——————————————————————————————————————————————–

ஸ்ரீக்கு விபுத்வம் கிடையாது –
அவையவை தோறும் -தனித் தனியே வியாபித்து நிற்கும் –
எங்கும் பரந்து -அந்தர் பஹிஸ்ஸ வியாபித்து -உளன் சுடர் மிகு சுருதியுள்
பரந்த தண் பரவையுள் –இடம் திகழ் பொருள் தோறும் –எங்கும் பரந்துளன் –
இவையுண்ட கரனே -தயிர் உண்ட பொன் வயிறு இவ் வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் –
அணோர் அணீயான் மஹதோ மஹீயான் – –அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் -வ்யாப்ய –
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே-அகடிதகட நா சாமர்த்தியம் –
ஈஸ்வரி -ஈஸ்வரன் இருக்கும் இடம் எல்லாம் இருக்கத் தட்டில்லை பர்த்தாவின் படுக்கையும் பிரஜையுடைய தொட்டிலையும் விடாதே இருக்கும் மாதாவைப் போலே
நாரங்கள் -பெரிய பிராட்டியார் தொடக்கமான -நாய்ச்சிமாராவார்
வ்யக்திக்கும் ஜாதிக்கும் உண்டான சம்பந்தம் போலே ஈஸ்வரனுக்கும் பிராட்டிக்கும் உண்டான சம்பந்தம் –
அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபாயதா -என்றும்
அனந்யா ஹி மயா சீதா பாஸ்கரேண ப்ரபாயதா -என்றும்
நித்யைவைஷா ஜகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர அநபாயினி-என்றும்
பகவச் சேஷபூதையாய் இருக்கும்
அர்த்தோ விஷ்ணுரியம் வாணி -என்று அர்த்தாம்சம் அவனதாய் சப்தாம்சம் இவளதாய் இருக்கும்
தன்னடியார் -தம்மடியார் என்ன வேண்டாவோ என்னில் அடியார் என்கிறதுக்கு உள்ளே அடிமையில் அந்தர்பாவம் தனக்கு உண்டாகையாலே

———————————————————————————————————————————————————————-

ஈஸ்வரனுக்கு சஹஜங்கள்-ஸ்வாதந்த்ர்ய காருண்யங்கள்
பண்டு என்னை பராங்முகனாக்கு கைக்கும்
இன்று என்னைப் பொருளாக்கி தன்னுள் வைக்கைக்கும்-அபிமுகன் ஆக்குகைக்கும்
லீலா உபகரணம் ஆக்க பிரதான காரணம் ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம் -சஹகாரி பிரவாஹ அநாதியான ஸ்வ அஜ்ஞாதி லங்கனம்
போக உபகர்ரணம் ஆக்க பிரதான காரணம் ஈச்வரனின் ஸ்வா பாவிக காருண்யம் –
பகவத் பிரசாதத்தாலே அத்யந்த சம்சார நிவ்ருத்தராய்
தஸ்ய ச வசீகரணம் தச் சரணாகதிரேவா-கடவல்லி -சித்த உபாயம் அவனே
மாமேகம் சரணம் வ்ரஜ -அதிகாரி விசேஷணம்
தன்னை ஈஸ்வரன் ரஷிக்கும் போது சம்பந்தத்தோடு கூட விலக்காமையே வேண்டுவது என்னில் அதுவும் அனுபபந்தம்
அகிஞ்சனான அதிகாரிக்கு யதா விதி ரஷாபேஷா பூர்வாக பரந்யாசத்தை ஒழிய வேறு ஒன்றால் அபேஷை இல்லாத சித்த உபாயத்தை மாமேகம் என்று காட்டி
அதினாலே வசீகரணார்த்தமான சாத்ய உபாயத்தை -சரணம் வ்ரஜ -என்று விதியாலே காட்டுகிறது-

என் உணர்வினுள்ளே இருத்தினான் -அதுவும் அவனது இன்னருளே –
இசைவித்து என்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –
சம்பந்த ஞானம் மாத்ரம்
சித்தோ உபாய பிரதிபத்தி மாத்ரம்
அநிவாரண மாத்ரம்
அனுமதி மாத்ரம்
அசித் வ்யாவ்ருத்தி மாத்ரம்
சைதன்ய க்ருத்யம்
சித்த சாதனம்
அதிகாரி விசேஷணம்
விதி விஷயம் ஆக மாட்டாது
தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே ஈஸ்வரனால் வரும் நன்மை முலைப்பால் போலே
ஆர்த்தோவா யதிவா திருப்தா
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜெயம் கதஞ்சன தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்
எதி வா ராவணஸ் ஸ்வயம்
ரிபூணாம்அபி வத்சலன் -அனலோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் -அன்றோ-

இன்று என்னைப் பொருளாக்கி –முன் செய்த முழு வினையால் –யானே என்னை அறியகில்லாதே –
விதி வாய்க்கின்று காப்பாரார்-செய்தாரேல் நன்று செய்தார் என்னுமவன் –
என்னுள் புகுந்து இருந்து -திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கஞ்சித் -அதிகாரி நியமம் இல்லை
கதாசன -கால நியமம் இல்லை
பேற்றுக்கு அடி கிருபையே -வசீகரண உபாயமும் சாதனம் அன்று
ராஜபுத்ரர்கள் சம்பந்த ஞானம் அநந்தரம் சங்கதர் ஆவார்களே
ஸ்வ ரஷண ஸ்வ அந்வய நிவ்ருத்தியை சொல்லுகிற நமஸ் சிலே ஸ்வ ரஷணா ர்த்தமான சாத்திய உபாயத்தை ஆர்த்தமாகச் சொல்லுகை அசங்கதம்
சித்த உபாயத்தை மாமேகம் -என்று காட்டி -அவனுடைய வசீகரண அர்த்தமான சாத்திய உபாயத்தை சரணம் வ்ரஜ என்று விதிக்கையாலே காட்டுகிறது யென்கையும்
ஏக சப்த ஸ்வா ரஸ்ய விருத்தம்
என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -இருத்துகையும்
இசைவித்து என்னை -இசைவுமே அவனுடைய அருளின் கார்யம்
ஆறு எனக்கு நின் பாதமே –நின் கழல்கலையே சரணாக –நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் –அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே —

பிரபத்யே -வர்த்தமான நிர்தேசம் சதா அனுசந்தேயமான ஞானம் -இது உபாயம் அன்று ஈச்வரனே உபாயம்
மாமேகம் சரணம் வ்ரஜ -பிரார்த்தனா மதி சரணாகதி -ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -சரனௌ சரணம் பிரபத்யே -அதிகாரி விசேஷண வாக்யங்கள் –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத சந்தமேனம் -அசித் வ்யாவர்த்தியே ரஷணீயதைக்குப் போரும் –
அத்வேஷம் தொடங்கி-கைங்கர்ய பர்யந்தம் -பலபரம்பரை யாகையாலும் அனன்யார்ஹ சேஷத்வ ஞானமும் பலம் ஆகையாலும்
பகவத் காமானா கார்யம் ஆகையாலும் அதிகாரி விசேஷணம் என்னலாம்
பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளும் ஆச்சார்யன் -அதுவும் அவனது இன்னருளே –
அஹம் அஸ்ய அபராதானாம் ஆலய அகிஞ்சனோ அகதி தவமே உபாயபூதோ மே பவதி பிரார்த்தனா மதி சரணாகதி ரித்யுக்தா சா தேவேச்மின் பிரயுஜ்யதாம்
அஹங்கார கர்ப்பம் என்றே ஆரோபித்தார்கள்
அருளினான் -1-1-1- பகவத் விஷயீ காரத்துக்கு மும்ன்பு தம்மை அசத் கல்பமாக எண்ணி தன்னைச் சொல்லிக் கொள்ள வில்லை
முலைக்கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே –
உடையானிடை -1-2-1-
அஹங்கார மமகாரங்கள் கிடக்க புண்ய ஷேத்திர தீர்த்தம் தேடித் போவது நிஷித்த த்ரவ்யத்தை உள்ளே வைத்து மெழுகூட்டினால் போலே
உடையவன் பக்கலிலே வீடு செய்மின் -வீடு செய்கை சமர்ப்பிக்கை இசைகை-வெறிதே அருள் செய்வர்
யாருக்கு யமேவைஷா வ்ருணுதே -என்று தாம் விஷயீ கரிக்க நினைத்தார்க்கு –
உகப்பாயிற்று அருளுக்கு ஹேது -ப்ரியதம ஏவ ஹி வரணியோ பவதி
மதி -அனுமதி -என்றாக்கி அனுமதி மாத்ரத்திலே -பட்டர் அருளிச் செய்வர்
வைத்தேன் மதியால் என் உள்ளத்தகத்தே –
எய்த்தே ஒழிவன் அல்லேன் –
திருமால் இரும் சோலை மலை என்றேன் -என்ன -மனஸ் சஹகாரியும் இல்லாமல் -உக்தி மாத்ரமே
மித்ரா பாவமே அமையும் என்று இருப்பவன் அன்றோ
திருமால் -அஹ்ருதமாகச் சொன்னதை ஹ்ருதமாக்கிக் கொடுப்பவள் அருகே உண்டே
வந்து -அவன் வருவதே என்று இவர் விஸ்மயப் படா நிற்க
பிபாசை வர்த்தித்தவன் தண்ணீர் இருந்த இடத்தே வரும் அத்தனை அன்றோ -அவன் வார்த்தை
க்ருபணாய் இருப்பார்-ஸ்லாக்யர் இருந்த இடத்தே வரும் இத்தனை அன்றோ
எல்லாருக்கும் அதிகம்யனானவனுக்கு நான் அபிகம்யன் ஆனேன் சோப்ய கச்சத் சபரீம் போலே
என் நெஞ்சம் -அந்த உக்தி சஹ்ருதமான என் நெஞ்சிலே
நிறையப் புகுந்தான் -விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாத படி புகுந்தான்
பால் தீரப் புகுந்தான் -அத்ரி பகவான் ஆஸ்ரமத்திலே சீதா சமேதராய் லஷ்மணன் உடன் புகுந்தால் போலே
இன்று என்னைப் பொருளாக்கி -பொருள் அல்லாத என்னை -என்னுள் வைத்தான் –
தன்னைப் பிறருக்கு அவகாசம் இல்லாதபடி முற்றூட்டாக தன்னை என்னுள் கொடு வந்து வைத்தான்
அன்று -விஷயா கரிக்கும் முன்பு உள்ள எல்லா காலங்களையும்
இன்று =மயர்வற மதி நலம் அருளப் பெற்ற பின்பு
என்னைப் புறம் போக புணர்த்தது என் செய்வான் -உபேஷிக்கை
பரதந்திர வஸ்து செல்ல நிற்க வற்றோ வர நிற்க வற்றோ
குன்று இத்யாதி மலைகளை சேர வைத்தால் போலே மாடங்கள் சூழ்ந்த திருப்பேர்
ஓன்று எனக்கு அருள் செய்ய -முன்பு கை விட்டதுக்கு ஹேது சொல்லவுமாம் -இன்று விஷயீ கரித்ததுக்கு ஹேது சொல்லவுமாம் –
உணர்த்தல் உற்றேனே
யானொட்டி என்னுள் இருத்துவம்
மருவித் தொழும் மனமே தந்தாய்
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி
அத்வேஷமும் இச்சையும் அடியிலே பிறக்கைக்கு தான் கிருஷி பண்ணி
சார்வே தவ நெறிக்கு -கண்டேன் கமலப்பாதம் -காண்டலுமே விண்டே ஒழிந்தேன்
அவனது அருளால் -உறல் பொருட்டு -என் உணர்வின் உள்ளே இருத்தினேன் -வைத்தேன் மதியால் –
ப்ராப்யச்ய பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தௌ ஸ்வச்யைவ உபாயத்வ உபபத்தே –
நாயமாத்மா ப்ரவசநேன லப்ய ந மேதயா ந பஹூநா ஸ்ருதேந
யமேவைஷ வ்ருணுதே தேன லப்ய தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-இதயன் அநந்ய உபாயத்வ ஸ்ரவணாத்
பிரமேய சாரத்தில் கருமத்தால் ஞானத்தால் காணும் வகையுண்டே அநந்ய சரண்யத்வத்தை நாலு பாட்டாலே அருளிச் செய்து
நாலாம் பாட்டில் சேஷி தானே திருவடிகளை தருவது ஒழிய உபாயாந்தரன்களால் காண முடியாது
அஞ்சாம் பாட்டில் தன்னுடைய ச்வீகாரத்தில் உபாய புத்தி தவிர்ந்து சர்வேஸ்வரன் கிருபா பலமே சாதனம்
ஏழாம்பாட்டில் குறையேதும் இல்லாதார்க்கு என்றும் இறை ஏதும் இல்லாதயாம் –
எம்பெருமானாலே எம்பெருமானை பெரும் இத்தனை போக்கி தாம்தாம் நன்மை கொண்டு பேரா நினையார் ஸ்வரூப ஞானம் யுடையார்
கத்யத்திலும் சரணம் புக்கு அநந்தரம் ஷாமணம் பண்ணுகிறார் -பதிவ்ரதை நெடுநாள் வ்யபசரித்து
முன்னே நின்று வருகையே அபராதம் மேலே ரசிக்க வேண்டும் என்பதற்கு ஷாபணம் பண்ண வேண்டுமே
ஸ்வ அனுவ்ருத்தி பிரசன்னாசார்யாராலே மோஷமா
கிருபா மாத்திர ப்ரசன்னாச்சார்யராலே மோஷமா
ஆண்டான் -குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் -ஸ்வ அனுவ்ருத்தி பிரசன்னாச்சார்யர்
ஆழ்வான்-பயன் நன்றாகிலும் பாகு அலறாகிலும் -கிருபா மாத்ர பிரசன்னாச்சார்யராலே என்ன
ஆண்டானும் அப்படியே ஆக வேணும் ப்ரீதராய் போனார்
ஞானப் பிரானை அல்லால் -அவனை ஒழிந்த தானும் உபாயாந்தரங்களும் கழுத்துக் கட்டிகள்
பல போக்தாவான தன ஸ்வரூபமும் பரிக்ரஹித்த உபாயமும் தவிர்ந்து
நான் கண்ட நல்லதுவே -பகவத் பிரசாத லாபத ஞானம் -ஹர்ஷத்துக்கு போக்குவீடாக சொன்ன வார்த்தை –

—————————————————————————————————————————————————————

ஞான சாரம்
குடியும் குலமும் எல்லாம் கோக நகை கேள்வன் அடியார்க்கு
குடி -க்ராமம் /குலம் -கோத்ரம் /எல்லாம் -சரண ஸூ த்ராதிகள்
சேஷியானவன் திருவடிகளையே -சம்பந்தமே நிரூபகமாய்
படியின் மேல் நதிகள் கடலை சேருமா போலே திருஷ்டாந்தம்
ம்லேச்சனும் பக்தனானால் –ஆசார்ய ஹிருதயம் -88-ஜன்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது

—————————————————————————————————————————————-

கைவல்யமும் முக்தி நித்யம்
உற்றது வீடுயிர் –இருகல் இறப்பு –குறுகா நீளா –பெரும் துன்பம் வேரற நீங்கி –அற்றது பற்றெனில் உற்றது வீடு –
கேவலனானவன் -தனி இடத்திலே –ஆத்மா அனுபவ மாதரத்தையே புருஷார்த்தமாக அனுபவித்து
பின்பு சம்சார சம்பந்தமும் பகவத் பிராப்தியும் அற்று
யாவதாத்மபாவி அசரீரியாய்க் கொண்டு திரிவான் ஒருவன் -பிள்ளை லோகாச்சார்யர் –

————————————————————————————————————————————————–

அறிந்தனர் எல்லாம் -பராசர வியாச வால்மீகி பரப்ருதி ரிஷிகளும்
அரியை வணங்கி -சர்வ துக்க நிவர்தகரை ஆஸ்ரயித்து
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே –சம்சார சர்ப்ப சந்தஷ்ட நஷ்ட சேஷ்டைக பேஷஜம் –
அவனுடைய போக்யதையில் இழிந்து
நிரபேஷ உபாயதையில் இழிந்தவர்கள்
த்ரைகுண்ய விஷயா வேதா -வேத மரியாதையில் நின்றார்கள் ரிஷிகள்
ஆழ்வார்களுக்கு இவர்களைக் காட்டில் நெடு வாசி உண்டே
முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணனாயும் வெளியிட்ட சாஸ்திர தாத்பர்யங்களுக்கு விசிஷ்ட நிஷ்க்ருஷ்ட வேஷங்கள் விஷயம் –
சாஸ்திரிகள் தெப்பக் கையரைப் போலே -பிறவிக் கடல் நீந்துவார்க்கே
ஓடம் ஏறினவர்கள் விஷ்ணு போதம் -கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -ஆக்கை விடும் பொழுது எண்ணே
ஆழ்வார்கள் பகவத் பிரசாதத்தாலே பெற்ற பாரதந்த்ர்யா போக்யதைகள்
ரிஷிகள் சாஸ்த்ரத்தாலே பெற்ற சேஷத்வ போக்த்ருத்வங்கள் -விகக்கினை விதியில் காணும் –
மண்டினாரும் மற்றையாரும்
கல்லெடுத்து கல்மாரி -அச்க்தாதி அதிகாரம் சக்தாதிகாரம் சாதனாந்தரங்கள்
ஆப்தனான வேத புருஷன் உபாயாந்தரங்களை விதித்து பட்டி தின்று திரிகிற பசுவுக்கு வசப்படுகைக்கு
கொண்டிப் பசுவுக்கு தடி கட்டி விடுவாரைப் போலே
அஹங்கார மமகாரங்க ளால் வந்த களிப்பு அற்று ஸ்வரூப ஞானம் பிறக்கைக்காக
ஔஷத சேவை பண்ணாதவர்களுக்கு அபிமத வஸ்துக்களிலே அத்தை கலசி இடுவாரைப் போலே
சாஸ்திர விசுவாசம்
ஸ்வரூப விசுவாசம்
அது தோல் புரையே போம் இது மர்ம ஸ்பர்சி

—————————————————————————————————————————————————————–

மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தல் ஆன சித்த உபாயம் –
யாதும் இல்லை மிக்கு அதனில் –
செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது -நான்முகன் திரு
ரத்னத்துக்கு பலகறையைப் போலேயும்
ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலேயும்
பலத்துக்கு சத்ருசம் அன்று
பக்தி மாத்ரமே பற்றாசாக பரம புருஷார்த்த மோஷத்தைக் கொடுத்தாலும் சத்ருசம் இல்லையே
அக்தே உய்யப் புகுமாறு –
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ
உபாயமும் உபேயமும் அவன் திருவடிகளே

—————————————————————————————————————————————————————–

அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
.பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

மணி வல்லிப் பேச்சு வந்தேறி அன்று -விவரணம் —

June 2, 2015

பிதாச ரஹகச் சேஷி பர்த்தா ஜஞேயோ ரமா பதிர் ஸ்வாமீ ஆதாரோ மமாத்மா ச போக்தா ச ஆத்யமநூதித –
ஸ்தான பிரமாணத்தாலே -உகாராம் -அவதரணார்த்தம் –
கண்டார்கள் இகழ்கனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -பெருமாள் திருமொழி -6-2-
பர்த்ரு பார்யா பாவ ரூப சம்பந்தத்தால் -மணி வல்லிப் பேச்சு வந்தேறி இல்லை-

———————————————————————————————————————————

அசந்நேவ ச பவதி
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்திலேன் -திருச் சந்த விருத்தம் -64
சரீரமேவ மாதா பிதரௌ ச ஹி வித்யாஸ் தம் ஜநயதி தத் ஸ்ரேஷ்டம் ஜன்மம் –
ஆச்சார்யன் -பிதா -வித்யா மாதா -ஆத்மாவுக்கு -வித்யா -திருமந்தரம்
தஞ்சமாகிய தந்தை -திருவாய்மொழி -3-6-9-
தந்தை -ஜன்மம் அடியாக -கைவிடும் தந்தை
ஆகிய தந்தை -சர்வேஸ்வரன் -கை விடாத தந்தை -சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது
தஞ்சமாகிய தந்தை -ஆச்சார்யன்
——————————————————————————-
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாகிய திருமால் திரு நாமம் -பெரிய திருமொழி -6-10-6-
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே திரு மால் இரும் சோலை கோனே –
ஒரு மகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால் திரு மகள் போல் வளர்த்தேன் செங்கண் மால் தான் கொண்டு போனான் -பெரியாழ்வார் -3-8-4-
-திரு நாமங்கள் -பகவத் விஷயங்கள் இட்டு -அனன்யார்ஹ சேஷத்வாதிகளால் வளர்க்கப்படும்
————————————————————————————–

ஏற்ற புருஷன் பரம் புருஷனே
எழிலுடைய அன்னைமீர் என்னரங்கத்தின் இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -நாச்-11-2-
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -நாச் -10-3-
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பகமும் சொற்பொருள் தானும் மற்றை நிலைகளும்
வானவர்க்கும் பிறக்கும் நீர்மையினால் அருள் செய்தவராய்
இவர் வாயில் நல வேதம் ஓதும் வானவராவர் தோழி -பெரிய திருமொழி -9-2-1-
குலம்தரும் –நாராயணா என்னும் நாமம் -பெரிய திருமொழி -1-1-9-
சாரங்கன் தொல் சீரை நன்னெஞ்சே ஓவாத யூணாக யுண்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை
பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-திருவாய் -6-5-10-
காவியம் கண்ணி எண்ணில் கடி மலர்ப் பாவை ஒப்பாள் -பெரிய திரு -8-7-9-

———————————————————————————————————————————–

வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி கானிடைத் திரிந்ததோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப ஊனிடை யாழி சங்கு உத்தமற்க்கு என்று உன்னித்து எழுந்த என் தடா முலைகள்
மானிடவர்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -நாச் -1-5-
அங்கைத் தலத்திடை ஆழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்து சிறு மானிடவரைக் காணில் நானும் கொங்கைத் தலமிவை
நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -நாச் -12-4-
மற்றொருவருக்கு என்னைப் பேசல் ஒட்டேன் மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவளாம் என்று எண்ணி கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே -பெரியாழ்வார் – 3-4-5-
பதிம் விச்வச்யாத்மேச்வரீம்
கௌசல்யா லோக பர்த்தாரம்
பணவாள் அரவிணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் -நாச் -10-6-
அன்று ஈன்ற கன்றுக்கு தாய் இரங்கி முன்னனைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே
பெரிய பிராட்டியாரையும் சூரிகளையும் விட்டு ச்நேஹித்துக் கொண்டு போரும் -தத்வ த்ரயம் -3-11-

——————————————————————————————————————————————————

பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்து
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள சூத்ரம் போலே திருமந்தரம்
பாணீம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா
பறவை ஏறு பரம்புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -பெரியாழ் -5-4-2-

————————————————————————————————————-

பிறந்தகம் -லீலா விபூதி
புக்ககம் -நித்ய விபூதி
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை யமுதை நண்ணியும் நண்ண கில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு -திருவாய் 5-1-5-
மறந்தும் புறம் தொழா மாந்தர் -நான்முகன் திருவந்தாதி
மற்றோர் தெய்வம் தேறேன் உன்னை யல்லால் திரு விண்ணகரானே
கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் -நான் முகன் -53
தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -திருவாய்மொழி 3-6-8
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழால் அவளை யல்லால் -திருவாய் -4-6-10
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் -திருமாலை 7
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது -பெரியாழ்வார் -5-1-2-
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்-மற்றும் பலவும் பாரிடந்து பாரை யுண்டுபாரை உளிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்டது -பேசியும் பொழுது போக்குபவள்
மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமாகில் –அது காணும் கண் பயனாவதே
நம்பனை நரசிங்கனை நவின்று யேத்துவர்களைக் கண்டக்கால் எம்பிரான் தன சின்னங்கள் இவர் இவர் என்று இசைகள் தீர்வன்–பெரியாழ்வார் -4-4-9-
தேவர் கோலத்தோடும் –ஆவா வென்று அருள் செய்து அடியெனொடும் ஆனானே
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
காதல் கடல் புரைய விளைத்த காரமர் மேனி
ஒண் டொடி யாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ
என்றே என்னை உன் ஏரார் கோலத் திருந்து வடிக் கீழ் நின்றே ஆட்செய்ய நீ கொண்டு அருள நினைப்பது தான் –

நான் ஏறப் பெறுவேன் நரகத்தை நகு நெஞ்சே –
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன்
நெருநல் கண்டது நீர்மலை –ஒரு நல் சுற்றம் –
முற்றிலும் பைம்கிளியும் பந்து மூசலும் பேசுகின்ற சிற்றில் மென்பூவையும் விட்டு அகன்ற செழும் கோதை -பெரிய திருமொழி -3-7-8-
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
மிக்கு ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரை தொக்குப் பல்லாண்டு இசைத்து கவரி செய்வர் ஏழையர் திருவாய் -7-6-11-
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பரே –
போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் பொழுது நோக்க வேணும் என்று -அழியாது ஒழிகை
அனன்யார்ஹத்வ வைபவம் மூதலிக்கப் படுகிறது

————————————————————————————————————————————————————

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூங்குழல் குறிய
கலையோ வரையில்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திரு வேங்கடம் என்று கற்கின்ற வாசகமே –திரு விருத்தம் -60-

நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே –திருவாய் மொழி –4-5-8-

பின்னை கொல் நிலா மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்று இருந்து உறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த் திருநாமம் கேட்பது சிந்தையே –திருவாய் மொழி -6-5-10-

கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
நீலவரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்த தொப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ –10-10-7-

————————————————————————————————————————————————

அழகிய பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம் .
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அருளிச் செயலில் அமுத விருந்து –

June 2, 2015

ஒது வாய்மையும் உவனியப்பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் -5-8-7-

முற்பட த்வயத்தை கேட்டு -இதிஹாச புராணங்களையும் அதிகரித்து -பரபஷ
பிரதிசேஷபத்துக்கு உடலாக நியாய மீமாம்சைகளும் அதிகரித்து போது போக்கும்
அருளிச் செயலிலேயாம் நம்பிள்ளை போலே -பெரிய வாச்சான் பிள்ளை வ்யாக்யான ஸ்ரீ ஸூக்திகள் –

—————————–

தொழுது முப்போதும் –பார்க்கடல் வண்ணனுக்கே -பார் சூழ்ந்த கடல் போலே இருக்கும் வடிவு
பாற் கடலும் வேம்கடமும் –

—————————–

கழல்களுக்கு கமலம் உவமை அநேகம்
இரண்டு ஞாயிறு உவமை -கதிரவன் உவமை எங்கே
சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதி திருப்பதம் எல்லையில் சீர் இள
ஞாயிறு இரண்டு போலே என்னுள்ளவா -திருவாய்மொழி -8-5-5-

———————-

திருவாய்மொழி -1-10-11-தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே -ஈடு ஸ்ரீ ஸூக்தி
இதுக்கு பலமாக கைங்கர்யத்தை இது தானே தரும் –

———————————-

காரார் புரவி ஏழ் –பூண்ட தொன்று உண்டே -சிறிய திருமடல்
கோஹிதத் வேத யத்ய முஷ்மின் லோகே அஸ்தி வா ந வேதி -வேதம் கோஷிப்பதையே
ஆழ்வார் அருளிச் செய்து இருக்கிறார் –

————————————-

திருப்பணி -கைங்கர்யம்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு விலா அடிமை செய்ய -நம் ஆழ்வார்
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு
நின் கோயில் சீய்த்து பல் படி கால் குடி குடி வழி வந்து ஆட் செய்யும் தொண்டர் -நம் ஆழ்வார்
எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி வந்து வழி வழி ஆட்
செய்கின்றோம் -பெரியாழ்வார்
எந்தாதை தாதை அப்பால் எழுவர் பழ வடிமை வந்தார் -திருமங்கை ஆழ்வார்
தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு ஆட் புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -மதுரகவி ஆழ்வார்-

——————————–

கூட்டும் விதி என்று கூடும்  கொலோ தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை என்
நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -அமுதனார்
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -வல் வினையை
கானும் மலையும் புகக் கடிவான் -தானோர் இருளன்ன மா மேனி எம் இறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து -நம் ஆழ்வார்

————————————

அப்பன் கோயில் -நம் ஆழ்வார் திருவவதார ஸ்தலம் –
வைகாசி எட்டாம் திருநாள் எழுந்து அருளுகிறார்
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த என் அப்பனே –
தமியனேன் பெரிய அப்பனே
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை
முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனி அப்பன் தன்னை
என்று எட்டு தடவை மங்களா சாசனம் செய்து அருளுகிறார்

————————————

திருவாசிரிய அனுபவம்
முதல் பாட்டில் திரு மேனி வைலஷண்யத்தில் ஈடுபடுகிறார் –
இரண்டாம் பாட்டில் – எம்பெருமான் திருவடிகளை சூட வேண்டும் -பகவத் விஷயத்தில் ஆசை
மேலிட்டு இருப்பதே ஸ்வரூபம் என்று நினைக்கிறார் –
மூன்றாம் பாட்டில் -அடியார்களுக்கு ஆட் பட்டு இருக்கும் வாய்ப்புக்கு பாரிக்கிறார்
நான்காம் பாட்டில் -இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் போலே பகவானுக்கு பல்லாண்டு
பாடுவதே பொழுது போக்காக பெற வேண்டும் என்று விரும்புகிறார் –
ஐந்தாம் பாட்டில் -உவந்த உள்ளத்தனாய் உலகளந்த வரலாற்றை நினைந்து உகக்குகிறார்
ஆறாம் பாட்டில் -இப்படிப்பட்ட பராத் பரனை விட்டு சூத்திர தேவதைகளை உலகோர்
வணங்கி பாழாகிறார்களே என்று வருந்தி கதறுகிறார்
நிகமத்தில் – அவனுக்கு என்று இருக்கும் தமது மன உறுதியை அனுசந்தித்து உகக்குகிறார் –
பகவத் ஸ்தாபனத்திலே நோக்கு இந்த பிரபந்தத்துக்கு

———————————

அவனே அவனே அவனும்
மா முனிகள் -திருக் கோலம்
திருவகிந்திர புரத்திலும்
திருவல்லிக் கேணியிலும்
18 குடை

———————-

நாத முனி -பெரியாழ்வார் -தனியன் -நாத முனிகள் சாதித்த தனியன்
கண்ணி நுண் சிறு தாம்பு –
திருப்பல்லாண்டு
திருவாய்மொழி
மூன்று திவ்ய பிரபந்தங்களுக்கும் சாதித்து அருளினார் –

உபதேச ரத்ன மாலை 5 பாசுரம் 5 சம்ப்ரதாய அர்த்தம்

திருப்பல்லாண்டு தனி பிரபந்தம் என்று காட்டி அருள –

—————————-

இடையன் –
ப்ரஹ்ம ருத்ரன் நடுவில் அவதரித்து
தேவகி வயிற்றின் இடையில்
பல ராமன் யோக மாயா நடுவில்
கோபிகள் இடையில்
இடையனாக
சம்சாரிகள் இடையில்
மாலாகாரர் அக்ரூரராதிகள்  இடையில் கம்சன் சிசுபாலாதிகள் இடையில்
இரவு பகல் இடைப் பொழுதில்

—————————————–

பூமா வித்யா -சாந்தோக்ய உபநிஷத் சொல்லும் வித்யை
நாரதர் சனத் குமாரர் இடம் -இருவரும் ப்ரஹ்ம புத்ரர்கள் -ஆத்ம ஜ்ஞானம் உபதேசிக்க கேட்டுக் கொள்ள
வேத சப்தங்களையே ப்ரஹ்மமாக உபாசனம் செய்ய சொல்ல
மேலே உண்டா –
நாமம் சொல்ல வாக்கு வேண்டும்
மனஸ் உதவ வேண்டும் வாக்கு பேச உபாசனம்
மேலே மேலே பிராணன் –
பிராணன் ஜீவன் ஒன்றாக சஞ்சரிக்கும் -ஜீவாத்மா தான் பெரியவன் உபாசனம் பண்ண சொல்ல –
காரணம் து -உபாசனம்
யஸ்ய நானயத்த –சகா பூமி
அந்ய பச்யதி
அந்ய
வேறு ஒன்றை கேட்க பேச அறிய மாட்டானோ அது தான் பூமா –
அல்பம் மற்றவை
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -உண்டே
பூமா ப்ரஹ்ம ஸூதரம் -விபுல ஸூக வாசி
சம்பிரதாச அதி உபதேசாத் -மூன்று பத சேர்க்கை
சம்பிரசாதா -ஜீவாத்மா
அதி -கொத்தமல்லி போலே -அவ்யய சப்தம் -அதிகமாக சொல்லி இருப்பதால்
அடுத்த ஸூத்ரம் அழகாக -தர்ம உப பயேக
ச காரம் முந்திய ஸூத்ரம் காட்டும் –
ஸ்வாபாவிக அமிர்தத்வம்
பூமா அளவில்லா சுகமான பர ப்ரஹ்மமே உபாசிக்க தக்கது –
ஜீவாத்மாவுக்கு அப்படி இல்லை
அனந்யார ஆதாரத்வம் அவனுக்கு மட்டுமே
அனைவரையும் தாங்குவதால்
சூசூரத்வம்
பிரத்யகாத்மா -பிராணன் –
சுந்தர பாஹூ அழகனையே சொல்லும் -கூரத் ஆழ்வான்

தகர வித்யை –
தகரம் ஸ்துதி -தகரம் புண்டரீஹம் -உபாசிதவ்யம் –
பட்டணம் -சரீரம் ப்ரஹ்ம புரம்
பட்டினம் காப்பு -நோய்காள் இங்கே இடம் இல்லை
நவ த்வார -ஒன்பது வாசல் தானுடைக் குரம்பை
களேபரம் -சரீரம்
ஹிருதய தாமரை பவனம் தகராகாசம் த்யானம் மனனம் உபாசனம்
மகா பூத ஆகாசமா ஜீவாத்மாவா பரமாத்மாவா –
தகர உத்தரேப்யா-ஸூ தரம் பின்னால் வரும் உத்தர வாக்ய கத
அபஹதபாப்மா –சத்ய சங்கல்ப 8 குணங்கள்
எண் குணத்தான் தாளை வணங்காதவர்கள் -வள்ளுவர்

—————————

கஞ்சனை குஞ்சி பிடித்து
மேலே வைக்கைப் பொறுக்க மாட்டான் கண்ணன்
உறி மேல் உள்ள வெண்ணெய் எடுப்பது போலே
சிற்றாயன் –

பைகொள் பாம்பேறி உறை பரனே-பரத்வ லஷணம்

தழுவி நின்ற காதல்-4-7-11

கமலக் கண்ணன் என்று தொடங்கி கண்ணுள் நின்று இறுதி கண்டேன் என்ற
பத்தும் உட் கண்ணாலேயாய் -நாயனார்

அநந்த குண சாகரம் -குணக் கடல்–குணங்களுக்கு கடல் போன்றவன் என்னாமல்  
குணங்களை கடலாக கொண்டு அந்த கடலை உடையவன்–பஹூ வ்ரீஹி சமானம் அர்த்தம்–
சீர்க்கடலை உள் பொதிந்த சிந்தனையேன்-பெரிய திருவந்தாதி -69  
பூண்ட நாள் சீர்க் உட்கடலை உட்கொண்டு -ஆச்சார்யா ஹிருதயம் -3-6-  
காதல் கடல் புரைய விளைத்த   அகாத பகவத் பக்தி சிந்தவே

————————————————————————————————————————————————

மதுர கவி சொல்
தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காக பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாக பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம் –இதுவே மா முனிகளுக்கு உண்ணும் சோறு
மதுர கவி சொல் படியே நிலையாகப் பெற்றோம்
மதுர கவி சொல் =கண்ணி நுண் சிறு தாம்பு
வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமாம் பதம் போலே சீர்த்த மதுரகவி செய் கலை
மற்றோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு வெட்டு எழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-3-

ஆசார்ய அபிமானமே உத்தாரகம்
மாம் ஏகம் -சுலபனாய் தேரோட்டியாய் நிற்கும் என்னை –
சுலபனாய் ஆசார்யனாய் இந்த அத்யந்த சாஸ்த்ரத்தை -சிஷ்யனாய் பிரபன்னனாய்
கேட்கும் உனக்கு சொல்லும் என்னை –

தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே

உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார்
பத்து பேர் உண்டு இறே -அவர்களை சிரித்திருப்பார் ஒருவர் உண்டு இறே -அவர் பாசுரம் கொண்டு
இவ் வர்த்தம் அறுதி இடக் கடவோம் –
அதனால் இவர்  சீர்த்த மதுர கவி ஆகிறார் –
திருத்திப் பணி கொள்வான் -ஆழ்வார் உடைய சேஷித்வத்தை சொல்லி –
மேவினேன் அவன் பொன்னடி -தேவு மற்று அறியேன் -அவரின் சரண்யத்வத்தையும் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் –பாவின் இன்னிசை பாடித் திரிவனே –
போக்யத்வ ப்ராப்யத்வங்களையும் காட்டினார் –
பிரதம பர்வநிலை -பகவத் சேஷத்வம்
மத்யம பர்வ நிலை -ஸ்ரீ வைஷ்ணவர்கள் சேஷத்வம் -அவர்கள் காட்ட
சரம பர்வ நிலை -மதுர கவி ஆழ்வார் காட்டிய தத்வ ஹித புருஷார்த்தங்கள் நமக்கும் ஆக வேண்டுமே
மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -போலே சொல்லை அறிந்து நம்புவார்கள் இடமே வைகுந்தமே

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

இனி இனி என்று இருபது கால் அருளிய நம்மாழ்வார் –

June 1, 2015

உற்றாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது
நாடு திருந்த நச்சுப் பொய்கை ஆகாமைக்கு
பிரபந்தம் தலைக் கட்ட
வேர் சூடுவார் மண் பற்றுப் போலே
என்னும் அவற்றிலும்
இனி இனி என்று இருபதின் கால் கூப்பிடும் ஆர்த்தி
அதிகார பூர்த்திக்கு என்னுமது முக்யம்-ஆசார்ய ஹிருதயம் -229-

 

——————————————————————————————————————-

திரு விருத்தம் –

1-தாமான தன்மையில் அருளிச் செய்தது –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை உயிரளிப்பான்
எண்ணின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மேய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1-

2-பிரிவாற்றாத் தலைவி இருளுக்கும் வாடைக்கும் இரங்குதல்-
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவியப்
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவரார் எனை யூழி களீர்வனவே –13–

3-தலைமகனது தாரில் ஈடுபட்ட தலைவி அற்றது கூறுதல் –
எங்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேரமரர்
தங்கோனுடைய தங்கோனும்பரெல்லாயவர்க்கும் தங்கோன்
நங்கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே–25–

——————————————————————————————————————————————————————

திருவாய்மொழி —

4-முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி யுழல்வேன்
வென் நாள் நோய் வீய வினைகளை வேரறப் பாய்ந்து
எந்நாள் யானுன்னை இனி வந்து கூடுவனே –3-2-1-
5-வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பான் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2-

6-கிற்பன் கில்லேன் என்றிலேன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

7-கோலமே தாமரைக் கண்ணது ஒரஞ்சன
நீலமே நின்று எனதாவியை ஈர்கின்ற
சீலமே சென்று செல்லாதான முன்னிலாம்
காலமே உன்னை எந்நாள் கண்டு கொள்வனே –3-8-8-

8-கொள்வன் நான் மாவலி மூவடி தா வென்ற
கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர ஓராயிரம் தோள் துணித்த
புள்வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே–3-8-9-

9–மறுக்கி வல்வலைப் படுத்திக் குமைத்திட்டுக் கொன்று உண்பர்
அறப் பொருளை யறிந்து ஓரார் இவை என்ன உலகியற்கை
வெறித் துளவ முடியானே வினையேனை உனக்கடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே கூயருளாயே –4-9-6

10-நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் ஆகிலும் இனி யுன்னை விட்டு ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை யம்மானே
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கல நகர்
வீற்று இருந்த எந்தாய் உனக்கு மிகை யல்லேன் அங்கே –5-7-1-

11-வாராவருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்
ஆராவமுதாய் அடியேனாவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை யாண்டாய் திருக் குடந்தை
ஊரா உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ –5-8-10-

12-ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும்
சாலப்பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ –6-9-3-

13-அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்
வெறி கொள் சோதி மூர்த்தி அடியேன் நெடுமாலே
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ
பிறிது ஓன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே –6-9-8-

14-ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –5-9-9-

15-எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இன இனமாய்
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே
மெய் நான் எய்தி எந்நாள் உன்னடிக் கண் அடியேன் மேவுவதே –6-10-6-

16-என்றே என்னை உன்னேரார் கோலத் திருந்து அடிக் கீழ்
நின்றே யாட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திரு மாலே –7-3-8-

17-கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய்
கடுவினை நஞ்சே என்னுடையமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே –9-2-10-

18-எவை கொல் அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்
நவையில் திரு நாரணன் சேர் திரு நாவாய்
அவையுள் புகழாவது ஓர் நாள் அறியேனே –9-8-3-

19-முனியே நான் முகனே முக்கண்ணப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே –10-10-1-

20-எனக்காரா வமுதாய் எனதாவியை இன்னுயிரை
மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என்னன்பேயோ -10-10-6-

—————————————————————————————————————————————————

அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவெழு கூற்றிருக்கை -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானங்கள் —

June 1, 2015

திரு எழு கூற்று இருக்கை -ஒரே திவ்ய தேசம் -பக்கம் நோக்கு அறியான் பரகாலன்
46-வரிகள் -ஏழு அடுக்கு
மேல் மூன்று பெட்டிகள் –அப்புறம் -5-7-9-11-13-13-பெட்டிகள்-
36 வரிகள் பெட்டிகளுக்குள்
பின்பு 10 வரிகள் – திவ்ய தேசம் வளப்பம்
கொடி -கும்பகோணம் வெற்றிலை இன்றும் சிறப்பு உண்டே
செல்வம் மல்கும் தென் திருக் குடந்தை –ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த
பரமன் நின் அடி இணை பணிவன்-இடர் அகல -சரணாகதி பண்ணி அருளுகிறார் –

ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் –
வேதம் -ஏழு சந்தஸ் ஸூக்கள் -உண்டே
காயத்ரி அனுஷ்டுப் பிருஹத் ஜகதி -இவையே தேர் -தைத்ரியம்
காயத்ரி ஜகதி இரண்டும் தேர் சக்கரம்
உஷ்னுப் த்ருஷ்டுப் தேர் கட்டைகள்
அனுஷ்டுப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் மேடை –

கல் தேர் மர தேர் சொல் தேர் மூன்று தேர்கள் மதனுக்கு
கர்ப்ப க்ருஹம் -குதிரையும் யானையும் உண்டே -அழகும்
வைதிக விமானம் -வேதம் இரண்டு பகுதிகள் -சாகை -யானை -சம்ஹிதை -குதிரை போல் வேகமாக –
இத்தை உணர்த்தவே இரண்டும் இங்கு
சித்திரை தேர் -மர தேர் -பிரசித்தம் –

————–

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர்  வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் —தனியன் –

எம்பெருமானுக்கு திரு மதிள் போல் அரணாய் இருப்பதான ஆறு பிரபந்தங்கள்
செய்து அருளின ஆழ்வாருடைய திரு நாமங்கள்
பலவற்றையும் சொல்லி அவரை வாழ்த்துகிறது இதில் –

பிரத்யசேஷ குரவஸ் ஸ்துத்யா-என்னக் கடவது இறே –
ஆழ்வார்கள் அர்ச்சாவதாரமாய் எப்போதும் எல்லாருக்கும் பிரத்யஷராய் இறே இருப்பது –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்-

வாழி பரகாலன் –
பகவத் த்விட்டுக்களான பிரதிகூலருக்கு காலரானவர் வாழி

வாழி கலிகன்றி-
கலி தோஷ நிவாரகர் வாழி

வாழி குறையலூர் வாழ் வேந்தன் —
திருக் குறையலூரை அவதார ஸ்தலமாக உடையராய் –
அது வாழும்படிக்கு அத்தை நோக்குகிற ராஜா என்னுதல்-
அங்கே வாழுகிறவர் என்னுதல்

வாழியரோ–மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல் -என்று
ஆழ்வாரையும்
அவர் திருக்கையிலே வேலையையும் ஒருகாலே ஆசாசித்த படி –

மாயோனை –
அரங்கத்து அரவணைப் பள்ளி கொள்ளும் மாயோனை இறே வாள் வலியால் மந்திரம் கொண்டது –
தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் இறே –
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டவர் இடத்திலே இறே மந்திரப் பொருள் கைக் கொண்டது –
மந்திரத்தைப் பற்றி இறே மந்திரம் கொண்டது

மங்கையர் கோன்-
மங்கையர் மன்னன் இறே

தூயோன் –
தூய்மை என்னும் பாஹ்யாப்யந்தர சுத்தியை யுடையவர்

அங்கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்டமுக்கி யடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் -என்று
தாமே தம் திரு நாமங்களைக் கூறினார் இறே

சுடர்மான வேல் –
தேஜோ ரூபமான மான வேல் –
பெரிய வேல்
திருமங்கை மன்னன் எடுக்கும்படியான வேல் –

வாழியரோ –
இத்தால் ஆழ்வாரோ பாதி
ஆயுதமும் ஆசாஸ்யம் என்றபடி –
நின் கையில் வேல் போற்றி என்னக் கடவது இறே
இது தான் கொற்ற வேல் ஆகையாலே வெற்றி வேலாய் இருக்கும் –
இதன் விஜயத்தை வேண்டுகிறது —ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

————————————————————————–

அவதாரிகை -1-
சம்சார ஸ்வபாவ அனுசந்தானத்தாலே மிக அவசன்னரான ஆழ்வார்
அவற்றின் பரிகாரமாக
அவனை கைகளால் தொழுது
மனசாலே நினைத்து
வாயாலே பேசி திருவடிகளிலே விழுந்தார் –

இங்கனே கிடந்தது நோவு பட உமக்கு அபேஷிதம் என் என்ன
பகவத் விரோதியாகிற சம்சாரத்தை வாசனையோடு போக்கித் தர வேணும் -என்றார்

அத்தை நம்மால் செய்யல் ஆவாதே என்ன

உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்கள் உடைய ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் உனது அதீனமே
சர்வ சமாஸ்ரயநீயன் ஆகவும்
ஆபத் சகன் ஆகவும்  இருக்கிற நீயே
என்னுடைய சம்சாரத்தை கழித்து அருளா விடில்
என்னால் கழித்துக் கொள்ளப் போகாதே -என்று
திருவடிகளிலே விழுந்து தம் தசையை அறிவிக்கிறவராய் -இருக்கிறது –

அவதாரிகை -2-
முதலிலே கரண களேபர விதுரமாய்
அவிஜ்ஞ்ஞேய ஸ்வரூபமாய்
அசித் கல்பமாய் இருக்கிற இவற்றை -அர்த்தித்வாதி நிரபேஷமாக
உன்னுடைய நிரவதிக தயையாலே உண்டாக்கின நீயே அருளிக் கடாஷியாயகில்
அமூநி புவநாநி பாவித்தும் நாலம்-ஸ்தோத்ர ரத்னம் -10–
முதலிலே இவை யுண்டாகவே மாட்டாது
சத்தையே தொடங்கி உன்னதீனமான பின்பு உன்னை ஒழிய இவற்றுக்கு ஒரு பிரவ்ருத்தி நிவ்ருத்தி கூடாது
என்னும் இடம் சொல்லவும் வேணுமோ

இது இல்லாத வன்று உண்டாக்கின நீயே இதுக்கு ஒரு போக்கடி பார்க்கை ஒழிய
நான் ஓன்று செய்து உன்னைப் பெறுகை என்று ஒரு பொருள் உண்டோ-

சரணா மறை பயந்த -தாமரை யானோடு
மரணாய மன்னுயிர்கட்கெல்லாம் -அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு –முதல் திரு -60-என்றபடி

ஜ்ஞானாதிகனான சதுர முகனோடே கூட உத்பத்தி விநாசாதிகளுக்கு கர்மீ பவிக்கிற சகல சேதனர்க்கும்
ரஷை என்று பெற்ற பெற்றவை எல்லாம்
நம் மேல் வினை கடிவான் என்றபடி
ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்காக கையிலே திரு ஆழியைத் தரித்துக் கொண்டு இருக்கிற
உபகாரகனான அவன் பார்க்கில் பார்க்கும் இத்தனை அல்லது
வேறு கடல் சூழ்ந்த பூமியில் உள்ள சேதனர் தங்களுக்கு ரஷை தாங்கள் அன்றியார்கள்

அவனை ஒழிய இவை அறியாது ஒழிய வேண்டுகிறது என் என்னில் –
நைவ கிஞ்சித் -ஜிதந்தே -1-6-இத்யாதி –
உனக்கு-பரோஷமாய் இருப்பது ஓன்று இல்லை
எத்தனை யேனும் ஜ்ஞானாதிகரராய் இருப்பாருக்கும் நீ கண்ணுக்கு விஷயம் ஆகாய்
உனக்கு கை புகராதது ஒன்றும் இல்லை –
எத்தனை யேனும் அதிசய ஜ்ஞானாதிகர்க்கும் நீ கை புகுந்தாய் இராய்-

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என்ன வென்றால்
ஒருவனுக்கு கண்ணும் தோற்றாதே
காலும் கடை தாராதே இருப்பது

ஒருவனுக்குக் கண்ணும் தோற்றி
காலும் கடை தருவது

இப்படி இருந்தால் யார் வழி காட்டிக் கொடு போவார்கள்
நான் அஜ்ஞனாய் அசக்தனாய் இருந்தேன் -நீ சர்வஜ்ஞனாய் சர்வ சக்தனாய் இருந்தாய்
இங்கனே இருந்த பின்பு நீ என் கார்யம் செய்து தலைக் கட்டும் இத்தனை போக்கி
நான் என் கார்யம் செய்து தலைக் கட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார்-

நீ தந்த ஜ்ஞானம் கொண்டு அறியப் பார்த்தாலும்
அறிந்த படி செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான சக்தி எனக்கு யுண்டோ –

ஆழ்வாருக்கு முதலிலே செப்பேட்டைக் கையிலே கொடுத்து நிதியைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே
திரு மந்த்ரத்தையும்
அதில் அர்த்தத்துக்கு எல்லை நிலமாகக் கோயில்களையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
க்ருதக்ருத்யராய் –
சம்சாரத்தையும் பரம பதத்தையும் ஒக்க மறந்தார்

ஆழ்வாரைப் பார்த்து எம்பெருமான் -நீர் இருக்கிறது சம்சாரத்தில் கிடீர் -என்று அருளிச் செய்ய –
அதன் கொடுமையை அனுசந்தித்து ஆற்றாமையாலே
மநோ வாக் காயங்களாலே எம்பெருமானை அனுபவித்து ஆற்றப் பார்த்தார்

அது பண்டையிலும் இரட்டையாய் மிகவும் ஆற்றாமையாலே எம்பெருமானுடைய சரண்யதவத்தைப் பேசிக் கொண்டு
அதுக்கு எல்லை நிலமான திருக் குடந்தையில் ஆராவமுத ஆழ்வார் திருவடிகளையே
எத்தசைக்கும் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் உபாயமாக பற்றி முடிக்கிறார் –

சித்திர கவி வகைகள்
சக்ரபந்தம் -பத்ம பந்தம் -நாக பந்தம் -ரதபந்தம்

————————————————————————–

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர்  மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியின் அட்டனை
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு  மானுரியிலங்கு மார்வினன் இரு  பிறப் பொரு மாணாகி
ஒரு முறை  ஈரடி மூவுலகு அளந்தனை
நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை
ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை
முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் அகத்தினுள் செறுத்து
நான்குடன் அடக்கி முக்குணத்து இரண்டவை அகற்றி  ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை
முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை 
ஏழு உலகு எயிற்றினில்  கொண்டனை 
கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை 
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை 
சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண நின்னீரடி யொன்றிய மனத்தால்
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை 
மேதகு மைம் பெரும் பூதமும் நீயே
அறுபத முரலும்   கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறமுதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த
கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

தனிப்பாடல் –
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருத்துந்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே

————————————————————————–

வியாக்யானம் -1-

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்  ஒரு முறையானை ஈன்றனை –

ஒரு பேர் உந்தி
வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களுக்கும்
அத்விதீய காரணமாக
பரப்புடைய திரு நாபியிலே

இரு மலர்த் தவிசில்
அப்பரப்பு அடங்கலும் கண் செறி இட்டால் போலே
பெரிய திகழ்கிற மலராகிய ஆசனத்திலே

ஒரு முறையானை ஈன்றனை
ஒரு கால் விசஜாதிய ஜன்மாவான சதுர முகனை உண்டாக்கினான்-

ஒரு கால் என்றாலும்
ப்ரவாஹ ரூபேண நித்தியமாய் இருக்கும் இறே-நா வேஷஸே-ஸ்தோத்ர ரத்னம் -10-

ஒரு பேர் உந்தி —
ஜகத்தை பிரளயம் கொண்ட காலத்திலே
நிர்ஹேதுக கிருபையாலே
இவற்றின் உடைய சத்தையை உண்டாக்கினவனே
பிரதான ஆதியாய் திரு நாபி

இரு மலர்த் தவிசில்-   –
பெரிய இதழ்களை உடைய தாமரையிலே

ஒரு முறையானை ஈன்றனை –
இவற்றின் உடைய சத்தாதிகளை உண்டாக்கின உனக்கே
பரம் அன்றோ எல்லாரையும் ரஷிக்கிறது

நீ உண்டாக்கின இவற்றின் பிறப்பை அறுக்க உனக்கு அரிதோ   —

————————————————————————–

வியாக்யானம் -2-

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –

நாம ரூப விபாஹா அனர்கமாய் இருக்கிற இத்தை
விபதமமாக்கி
சூஷ்ம ரூபேண அவஸ்தைகளைப் பிறப்பித்து
மஹானாக்கி
அஹங்காரமாக்கி-
தன்மாத்ரைகள் ஆக்கி –
பூதங்கள் ஆக்கி –
பௌதிகமான வர்ண சிருஷ்டி யளவும் வரப் பண்ணி

பின்னை அவ்வருகு உண்டான தேவாதி காயங்களை -அடங்கலும் அவன் முகத்தாலே பண்ணுவதாக
முதலிலே சதுர்முகனை யுண்டாக்கினான் ஆயிற்று

முன்பு உள்ளவை எல்லாம் தானே கை தொட்டுச் செய்து
பின்பு சதுர்முகனை அதிஷ்டித்து நின்று செய்வானாகப் பார்த்தான் –

முன்பு அசித்தைக் கொண்டு கார்யம் கொண்டதோடு பாதி
இவனைக் கொண்டு கார்யம் கொள்ளப் பார்த்ததோடு
வாசி அற்று இருக்கிறதாயிற்று இவனுக்கு –

பாரதந்த்ர்யத்தில் வந்தால் இவனுக்கும் அசித் சாம்யம் உண்டு –
சேதனரான வாசியால் பெறுகிற ஏற்றம் கார்யத்துக்கு
கடவான் அவனே என்று அறுதி இட்டு இருக்கை யாயிற்று

————————————————————————–

ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-

வியாக்யானம் -1–
தான் உண்டாக்கின பயிருக்குக் களை பறிப்பானும் தானே யானால் போலே
ஸ்ருஷ்டமான ஜகத்தை அழிவு செய்யும் ராஷசரை நிரசிப்பானும் தானே —

ஒரு முறை -ஒரு பர்யாயம்

இரு சுடர் -சந்த்ராதித்யர்கள்

மீதினிலியங்கா -மேலே சஞ்சரிக்கப் பயப்படும்படியாய் –

மும் மதிளிலங்கை-கிரி துர்க்க ஜல துர்க்க வன துர்க்க என்கிற
மூன்றையும் உடைத்தான நினைத்தாற்கு அஞ்ச வேண்டும்படியான ராஷசர்
குளவிக் கூடு சேர்ந்தால் போலே சேர்த்து அம்மணக் கூத்தடிக்கும் தேசம் –

இரு கால் வளைய ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-
இரண்டு கோடியும் வளைந்து நிற்கும் பிரதானமான ஸ்ரீ சார்ங்கத்திலே பொருந்தி –
இரண்டு எயிற்றையும் யுடைத்தாய் -நெருப்பை உமிழா நின்றுள்ள சரத்தாலே கட்டுப் பொகட்டாய்-

வாளியில் அட்டனை -ப்ரஹ்ம சிருஷ்டியைப் போல் அன்றியே –
பத்தும் பத்தாக அம்பால் எதிர்த்துப்-பிராட்டியினுடைய சம்ச்லேஷ விரோதியைப் போக்கினால் போலே
என்னுடைய விரோதிகளையும் போக்க வேண்டும் என்று கருத்து-

—————————————

வியாக்யானம் -2-
பிரிவுக்கு ஹேது பூதனான ராவணனை அழியச் செய்தாள் பிராட்டியோ -நீ யன்றோ –

ஒரு கால் சந்த்ர ஸூர்யர்களும் கூட மேலே சஞ்சரிக்கவும் அஞ்சும்படியாய்
காட்டரண் மலை யரண் நீர் அரண் என்கிற மூன்று வகைப்பட்ட அரணை யுடைத்தாய் இருக்கிற இலங்கையை
வில்லினுடைய கோடித்வயமும் வளையும் படி
அத்விதீயமான ஸ்ரீ சார்ங்கத்திலே பூட்டப்பட்டு -இரண்டு எயிற்றையும் யுடைத்தாய்
தொடுக்கும் போது அம்பாய் எதிரிகள் மேலே தைக்கும் போது நெருப்பாய்த் தைக்கும் அம்பாலே முடித்தாய்-

அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் –நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய
முன் ஒரு நாள் தன வில் அங்கை வைத்தான் சரண் -முதல் திரு -59-என்றபடி-

இவ்வாத்மாவுக்கு ஸ்வதஸ் சித்தம் அல்ல –
அய பிண்டத்தையும் அக்னியையும் சேர்த்து வைத்தால் போலே
அன்யோன்ய சம்யோகத்தாலே
அதினுடைய பரமாணுக்கள் ஸூஷ்ம ரூபேண அசித்தில் வந்து சங்க்ரமிக்கை யினாலே யாதல்-அன்றிக்கே –
அதனுடைய குணத்தை பஜிக்கையினாலே யாதல் –
அதினுடைய ஔஜ்வல்யத்தையும் வர்ணத்தையும் உடைத்தாய் இருக்குமா போலே
நித்தியமான ஆத்ம வஸ்து அனாதியாய் உள்ள அசித் சம்யோகத்தாலே
அந்த அசித்திலே அஹம் அபிமானத்தைப் பண்ணும்படி பலிக்கிற-அவித்யா கர்ம வாசனா ருசிகள் –
அவை யடியாக பரிக்ரஹித்த சரீரத்தைப் பற்றி வரக் கடவதான ஆதி வ்யாதி நிஷித்த அனுஷ்டானம்-

இப்படி கார்யமாயும் அடி காண ஒண்ணாதபடி கிடக்கிறவை-
புதுப் புடவையை அழுக்கு கழற்றுமா போலே-க்ரமத்தாலே போகை அன்றிக்கே
ஒரு காலே சவாசநமாகப் போக்க வேண்டில்

நுடங்கிடையை இத்யாதி –
அதுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –
பிரபல பிரதிபந்தகங்களை வருத்தம் அறப் போக்க வல்லவனைப் பற்ற வடுக்கும் –

நுடங்கிடையை –
கண்டாருக்கு என்னாய் விளையக் கடவதோ -என்று
அஞ்ச வேண்டும்படியான சௌகுமார்யத்தை யுடைத்தான இடையை
யுடையவளைக் கிடீர் பிரித்து வைத்தது -என்கை-

முன்பு இலங்கையிலே கொடு புக்குச் சிறை வைத்த ராவணன் மிடுக்கு அழியும் படியாக –
மேகத்திலே மின்னினால் போலே அழகிய திருக் கையிலே ஸ்ரீ சார்ங்கத்தை வைத்தவன் –
எதிரிகளை அழியச் செய்கைக்கு ஒரு வியாபாரம் வேண்டா –
கையிலே வில்லை வைக்க அமையும் –

அழகிய திருக் கையிலே வில்லைப் பிடித்தவன் உபாயம் என்னுதல் –
அவனை உபாயமாகப் பற்றுங்கோள்-என்று விதியாதல் –

நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் -என்றதுக்கு கருத்து என் என்னில்
ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை என்னது என்று இருக்கை யாவது –
பிராட்டியைப் பிரித்த ராவணனோடு ஒக்கும் என்கை –
தன்னைப் பற்றினார்க்கு அவள் விரோதியைப் போக்கினாப் போலே விரோதியைப் போக்கிக் கொடுக்கும் என்கை –
அவளோடு ஒத்த பிராப்தியும் அவன் பக்கல் இவனுக்கு உண்டு என்கையும்
அவனைப் பற்றுவார் அவள் முன்னாகப் பற்றுவார் என்கையும் –

ஒரு பேருந்தி இரு மலர்த் தவிசில்ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா-மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் –

இல்லாததை யுண்டாக்கின உனக்கு உள்ளதுக்கு
ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ என்கையும்

பிராட்டியோட்டைக் கலவிக்கு விரோதியான ராவணனை அழியச் செய்த உனக்கு
என்னுடைய பிரதிபந்தகம் போக்குகை அரிதோ என்கையும்

வாளியில் அட்டனை-
ப்ரஹ்ம சிருஷ்டி போலே சங்கல்ப்பத்தாலே செய்கை அன்றிக்கே
நேர் கொடு நேரே பூசலில் நின்று அழியச் செய்தாய் –

————————————————————————–

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன்
இரு பிறப் பொரு மாணாகி-ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-

வியாக்யானம் -1-
அம்பாலே சாதிக்க ஒண்ணாத இடம் அழகாலே சாதித்த படி சொல்கிறது –

மூவடி நானிலம் வேண்டி -நாலுவகைப் பட்ட பூமியிலே -மலை காடு நிலம் கடல் -என்கிற -மூவடியை வேண்டி –

முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் –
ஒரு காளமேகத்தில் மின்னலை ஏறிட்டால் போலே-
திரு யஜ்ஞோபவீதமும் -அத்தோடு கூடின க்ருஷ்ணாஜிநமும் விளங்கா நின்ற திரு மார்பை யுடையையாய் –

இரு பிறப் பொரு மாணாகி-த்வ்ஜனுமாய் -ஒப்பில்லாத ஸ்ரீ வாமனனுமாய்
தானே இன்னும் ஒரு கால் இவ்வடிவு கொள்ள வேணும் என்னிலும் இப்படி வாயாத வடிவுடையையாய்

ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-ஒருகால் இரண்டு அடியாலே மூன்று லோகத்தையும் அளந்து கொண்டாய்-

இத்தால்-
இந்தரனுக்கு ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தால் போலே
என்னுடைய சேஷத்வத்தையும் மீட்டுத் தந்து அருள வேணும்-என்கிறார் –

தேவர்கள் சென்று இரந்தார்கட்கு இடர் நீக்கிய -கோட்டங்கை வாமனனாய் -திருவாய்மொழி -7-5-6–என்று
உன்னை இரந்தார்கட்கு நீயும் இரந்து அவர்கள் அபேஷிதம் பார்க்கும் அவன் அல்லையோ –

இசையாதார் தலைகளிலே வைத்த திருவடிகளை இசைந்த என் தலையிலே வைக்கல் ஆகாதோ-

பிரயோஜனாந்தர பரனுடைய இழவு தீர்த்த உனக்கு அநந்ய பிரயோஜனான என்னுடைய இழவு தீர்க்கலாகாதோ

இந்த்ரன் கழஞ்சு மண் அன்றோ இழந்தது -நான் என்னையும் உன்னையும் அன்றோ இழந்தது –

————————————————————————–

வியாக்யானம் -2-
அம்பாலே அழிக்க ஒண்ணாத இடத்தை -அழகாலும் இரப்பாலும் அழியச் செய்த படி –

பிரயோஜனாந்தர பரர்களான இந்த்ராதிகளுடைய கார்யம் செய்த நீ
உன்னையே பிரயோஜனமாக நினைத்து இருக்கிற என் கார்யம் செய்யலாகாதோ –

மூவடி நானிலம் வேண்டி-ஈரடியாலே பூமியை அளந்து
ஓரடிக்கு அவனை சிறையிட்டு வைக்க நினைத்து மூன்றடியை இரந்தான் ஆயிற்று –

நெய்தல் மருதம் முல்லை குறிஞ்சி என்றால் போலே சொல்லுகிற
அன்னலும் துன்னலுமான பூமியை அர்த்தித்தது –
இந்நாலிலும் ருஷீஷாம்சமாக கழித்தது பாலை நிலம் என்றும் சொல்லுவார்கள் –
இவருக்கு அபிமதம் நாலு என்னும் இடம் தோற்றி இருந்தது இறே

முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப் பொரு மாணாகி-
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-
மேகத்திலே-மின்னினால் போலே சாத்தின யஜ்ஞோபவீதமும்
கிருஷ்ணாஜிநமும் விளங்கா நின்றுள்ள திரு மார்பை யுடையையாய்
உப நயனம் பண்ணின புதுமை தோற்றும் படி இருப்பாயுமாய் –

இந்த்ரனுடைய அர்த்தித்வம் தலைக் கட்டுகைக்காக இட்ட போதோடு இடாத போதோடு வாசி அற-
முகம் மலர்ந்து போம்படி இறபபிலே தகண் ஏறின வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து-
ஒரு கால் த்ரை லோகத்தையும் ஈரடியால் அளந்து கொண்டாய்

ஆசையில்லாதார் தலை மேலேயும் வைக்கும் திருவடிகளை ஆசையுடைய என் தலை மேலேயும் வைக்கலாகாதோ-

இந்த்ரனைப் போலே கழஞ்சு மண் பெறுதல் –
மகா பலியைப் போலே ஔதார்யம் கொண்டாடுதல் செய்ய இருக்கிறேனோ நான் –
உன்னைப் பெற வேணும் என்று அன்றோ நான் அர்த்தித்திக்கிறது-

உன்னை வைத்து வேறு ஒன்றை இரந்தார்க்கோ நீ இரப்பாளனாகக் கார்யம் செய்வது –
உன்னையே இரந்தார் கார்யம் செய்யலாகாதோ –

மதீய மூர்த்தா நமலங்கரிஷ்யதி கதா –ஸ்தோத்ர ரத்னம் -31-என்று இறே நான் இருக்கிறது-

——————————————————————–

நாற்றிசை நடுங்க–அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி
ஒரு தனி வேழத் தரந்தையை-ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-

வியாக்யானம் -1-
பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்கயோ அபேஷிதம் செய்தது என்னில்
அன்று
ஆபத்தும் விசுவாசமும் என்கிறது அல்பம் உண்டானால்
தான் தண்ணியரான திர்யக்குகளுக்கும் அபேஷிதம் செய்யும் என்கிறது-

நாற்றிசை நடுங்க-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபத்தை நினைத்து கலங்கின கலக்கத்தைக் கண்டு-
ஜகத்துக்கு என்ன மிறுக்குப் புகுகிறதோ -என்று அறியாதே நடுங்க –

அஞ்சிறைப் பறவை ஏறி –
மிக்க அழகையும் வேகத்தையும் உடைத்தான சிறகை யுடைத்தான பெரிய திருவடி மேல் ஏறி-

நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-
நாலா நின்ற வாயையும் மூன்று மதத்தையும் இரண்டு செவியையும் யுடைத்தாய்
வேறு துணை இன்றிக்கே தன் மிடுக்கு அற்று நின்ற ஆனையினுடைய மகா துக்கத்தை

அரந்தை -துக்கம் –

ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-அத்தசையிலே வேற்று நிலமாய்
பெரிய நீர் வெள்ளமான மடுவிலே தீர்த்தாய்
முதலையின் வாயில் நின்றும் ஆனையை மீட்டால் போலே
சம்சாரம் கொண்ட என்னையும் மீட்க வேண்டும் -என்கிறார்-

கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே தயோர்த் வந்தவ சமம் யுத்தம்
திவ்யம் வர்ஷ சஹச்ரகம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்று

ஆனைக்கு முதலை ஓன்று
எனக்கு முதலை ஐந்து

அது மிடுக்கான யானை
நான் துர்பலன் -என்கிறார்

——————————————————–

வியாக்யானம் -2-
பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்காக உன்னை அழிய மாறிக் கார்யம் செய்த அளவேயோ –
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற ஆனை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே
அரை குலையத் தலை குலைய வந்து விழுந்தவன் அன்றோ –

நாற்றிசை நடுங்க-அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-
ஜகத் ஸ்ருஷ்டியாதிகளுக்கும் சங்கல்பத்ததுக்கு அவ்வருகு யுண்டு என்று அறியாமையாலே
ஜகத் உபசம்ஹாரத்துக்கும் அவ்வருகாய் இருந்ததீ-

இது ஒரு சீற்றம் இருந்த படி என் -என்று இருந்ததே குடியாக எல்லாரும் அஞ்சும்படியாக
மேருவுக்கு இனிய மேகம் போலே -அழகிய சிறகை யுடைய பெரிய திருவடி திருத் தோளிலே ஏறி-
பெரிய வேகத்தோடு

நாலா நின்றுள்ள வாயை யுடைத்தாய்
மூன்று வகைப் பட்ட மதத்தை யுடைத்தாய் -இரண்டு கன்னங்கள் குறி –
இரண்டு செவியை யுடைத்தாய்-வேறு துணை இன்றிக்கே
அத்விதீயமாய் இருக்கிற யானையுடைய துக்கத்தை

அத்தசையிலே வேற்று நிலமாய் மிக்க வெள்ளத்தை யுடைத்தான மடுவிலே
அரை குலைய தலை குலைய வந்து விழுந்து போக்கினாய்

க்ரஹம் சக்ரேண மாதவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்றபடி
மடுவிலே போய்ப் புக்கு ஆனையையும் முதலையுமாக அணைத்துக் கொண்டு போந்து கரையிலே ஏறி
ஆனைக்கு நலிவு வாராத படி திரு ஆழியாலே முதலையைக் கிழித்து பொகட்டான் ஆயிற்று –

ராஜபுத்ரனோடு வினையுண்ட கைக் கூட்டனுக்கும் பால் திரளை இடக் கடவது காண்-என்று
பட்டர் அருளிச் செய்யும் படி –

நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-என்றால் போலே
சொல்லுவதுக்கு கருத்து யாது என்னில்
பிரஜை கிணற்றில் விழுந்தால் –
காதும் கண்ட வாளியும்-காலும் தலையும் -வடிவும் இருக்கும் படி காண் -என்பாரைப் போலே
இடர்ப்பட்ட இதனுடைய அவயவங்கள் அவனுக்கு ஆகர்ஷகம் ஆனபடியாலே சொல்லுகிறது –

வேழத் அரந்தையை – –
எளியராய் இருப்பார் நோவு பட்டால் போல் அன்று இறே இதனுடைய நோவுபாடு –

பரமா பதமா பன்ன -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –

சர்வேஸ்வரன் தன்னைப் பேணாதே வந்து விழ வேண்டும் படி கரை கண்ட ஆபத்து ஆயிற்று –

இவ்வாபத்துக்கு அவதி என் என்னில் –
மநஸா சிந்தயத் வாயால் கூப்பிடுமதோவிற்று-வாயால் கூப்பிடவும் இயலாத படி –

ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-
அங்கு காலம் அளவிட்டு இருக்கும் -முதலை ஓன்று -தான் ஆனை –
இங்கோ என்றால் -காலம் அநாதி -இந்த்ரியங்கள் ஐந்து -நானோ துர்ப்பலன் –
ஆனால் வாசி பார்த்துத் தர வேண்டாவோ –

காலைக் கதுவிடுகின்ற -கயலொடு வாளை விரவி -நாச் திரு -3-5-
ஆந்தராளர் குடியிலே பிறந்து ஈஸ்வரன் மர்மஜ்ஞையாய் இருப்பாள் ஒருத்தி வார்த்தை
ஒரு நீர்ப் புழு நலியப் பொறுக்க மாட்டாதவன் –
இரண்டு கிடாய் காலைப் பற்றி நலிகிறது என்கிறாள் –

————————————————————————–

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை-

வியாக்யானம் -1-
உபாயாந்தர நிஷ்டருக்கும் அவற்றை நடத்திக் கொடுப்புதி இறே –
யோகோ யோகவிதாம் நேதா -என்கிறபடியே –

முத்தீ –
மூன்று பிள்ளை பெறுவாரைப் போலே –
கார்ஹாபத்ய ஆஹவ நீய -தஷிண அக்னிகளையும் –

நான்மறை –
ருக் யஜூஸ் சாம அதர்வணங்களையும் யுடையராய் –

ஐவகை வேள்வி-
தேவ யஜ்ந -பித்ரு யஜ்ஞோ -பூத யஜ்ஞோ-மனுஷ்ய யஜ்ஞோ-ப்ரஹ்ம யஜ்ஞ–என்னும்
பஞ்ச மகா யஜ்ஞங்களையும்

இத்தால் கர்ம யோகம் சொல்லிற்று

அறு தொழில் -யஜனம் -யாஜனம் -அத்யயனம் -அத்யாபனம் -தானம் -ப்ரதிக்ரஹம் -என்கிற
ஷட் கர்மங்களை யுடையரான

அந்தணர் வணங்கும் தன்மையை-
அநந்ய பிரயோஜனரான ப்ராஹ்மணராலே ஆஸ்ரயிக்கப் படும் ஸ்வபாவத்தை யுடையையாய் –

———————————–

வியாக்யானம் -2-
வர்ணங்களில் உத்க்ருஷ்ட வர்ணமாய் நல்வழி போகக் கடவதாய் இருக்கும் ப்ராஹ்மண ஜாதிக்கு அடைய-
ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படியைச் சொல்கிறது

முத்தீ-
மூன்று பிள்ளையைப் பெற்ற தாயைப் போலே
ஆஹவ நீய கார்ஹ பத்ய தஷிணாக்னி என்கிற அக்னி த்ரயமும்

நான்மறை –
நாலுவகைப் பட்ட வேதங்களும்

ஐவகை வேள்வி-பஞ்ச மகா யஜ்ஞமும்

அறு தொழில்-
அத்யயனம் பண்ணுகை -பண்ணுவிக்கை-யஜிக்கை -யஜிப்பிக்கை -தானம் பண்ணுகை கொள்ளுகை-என்றால்
போலே சொல்லுகிற இவற்றைத் தொழிலாக யுடையரான

அந்தணர் வணங்கும் தன்மையை-
ப்ராஹ்மாணருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்லிற்று

————————————————————————–

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –

வியாக்யானம் -1-
கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து-
சஷூராதி இந்த்ரியங்களை சப்தாதி விஷயங்களிலே போகாமே உள்ளே அடக்கி

நான்குடன் அடக்கி-
மநோ
புத்தி
சித்த
அஹங்காரங்களையும்-செறுத்து

ஆஹார
நித்ரா
பயம்
ஐதுனங்கள் -உடல் உறவு -இவற்றைத் தவிர்த்து என்றுமாம் –

முக்குணத்து இரண்டவை அகற்றி-
குணத் த்ரயங்களில் ரஜஸ் தமஸ் ஸூக்களை த்யஜித்து

ஒன்றினில் ஒன்றி நின்று-சத்வம் ஒன்றினிலே பொருந்தி நின்று –

ஆங்கு-
அந்த யோகத்திலே

இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை-
புண்ய பாப ரூபமான கர்மங்களாலே வரும் சம்சாரத்தை அறுக்கும்-
உபாசகராலே அறியப்படும் ஸ்வ பாவத்தை யுடையையாய்

இப்படி இருந்த யோகத்தாலே அனுபவிக்கை யாவது –
ஸ்ரீ கஜேந்த ஆழ்வானுடைய மிடுக்குள்ள தசையோடு ஒக்கும் அத்தனை
ஆன பின்பு அவனையே உபாயமாகப் பற்றிப் பிழைக்க வேணும் –

————————————————————————–

வியாக்யானம் -2-
இனி சம்சார பய பீதராய் முமுஷூக்களாய் இருப்பாருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்கிறது-

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து-
ஸ்ரோத்ராதிகளை விஷயங்களிலே போகாத படி நியமித்து-

நான்குடன் அடக்கி-
நித்ய அநித்திய வஸ்து விவேகம் –
சமதமதாதி சாதனா சம்பத்து –
இஹாமுத்ர பலபோக விராகம்
முமுஷூத்வம் -என்றால் போலே-சொல்லுகிற சாதன சதுஷ்டத்தையும் யுடையராய்

அன்றிக்கே
ஆஹாராதிகளைத் தவிர்த்து என்றுமாம் –

முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில்-ஒன்றி நின்று-
சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்களில் வைத்துக் கொண்டு ரஜஸ் தமஸ் ஸூக்களை கழித்து
நிஷ்க்ருஷ்ட சத்வத்தை யுடையராய்க் கொண்டு நின்று

ஆங்கு-
அந்த யோகத்தாலே –

இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –
புண்ய பாப ரூப கர்மங்கள் அடியான சம்சாரிக துக்கத்தை-அறுத்துக் கொள்ள வேணும் என்று இருப்பார்
அறியும் ஸ்வ பாவத்தை யுடையனாய் இருக்கும் –

சாதநாந்தர பரிக்ரஹம் பண்ணினார் உன்னைப் பெற்றுப் போகா நிற்க –
உன்னையே சாதனமாக பரிக்ரஹித்த நான்
உன்னைப் பெறாதே போவதே –

————————————————————————–

முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-

வியாக்யானம் -1-
தம்தாமுடைய கண்களின் மிகுதியாலும்
ஜ்ஞாதிக்யம் என்கிற இதுவே ஏற்றமாகக் கணிசிப்பார்க்கும் –
அவர்களுக்கும் எட்டாத ஸ்வபாவத்தை யுடையவன் என்கிறது –

முக்கண் நால் தோள் –
மூன்று கண்களையும் -நான்கு தோள்களையும் யுடையவன் ஆகையாலே -பஹூ பரிகரனாய்

ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் –
ஐந்து வாயை யுடைய பாம்பையும் கங்கையையும்
ஏக தேசத்திலே அடக்கின ஜடையை யுடையவன் ஆகையாலே-அதிக சக்தனாய் இருந்துள்ள ருத்ரனும்

அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-
இப்பிடார் கொண்டு அறிய ஒண்ணாத
ஸ்வ பாவமாக இருக்கிற பெருமையை யுடையையாய் நின்றாய்

ஆகையாலே பெரிய கிழாயான ருத்ராதிகள் நிலை இதுவானால்
ஷூத்ரரான எங்களுக்கு பெற விரகு யுண்டோ-
நீயே விஷயீ கரிக்கும் அத்தனை என்று கருத்து-

————————————————————————–

வியாக்யானம் -2-
அபிமாநிகளாய் இருப்பார் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானராய் இருந்தார்களே யாகிலும்-
அவர்களுக்கும் அறிய ஒண்ணாத படியான உத்கர்ஷம் சொல்லுகிறது –

முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-
லலாட நேத்ரனாய் -சர்வேஸ்வரன் நாலு தோளும் தானுமாய் இருந்தான் என்று –
தானும் நாலு தோளும் யுடையவனாய்
ஐந்து வாயை யுடைய அரவை யுடையவனாய்
கங்கையை அடக்கின ஜடையை யுடையவனான ருத்ரன்
தன் உயர்த்தி எல்லாம் கொண்டு அறியப் பார்த்தாலும் அறிய ஒண்ணாத ஸ்வபாவம் ஆகிற-
பெருமையை யுடையையாய் நின்றாய் –

கிழாயர் படுகிறது -இதுவானால்
நான் உன்னை அறிக்கை என்று ஒரு பொருள் யுண்டோ-

————————————————————————–

ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-

வியாக்யானம் -1-
ஆபத்து வந்தால் சக்தனோடு அசக்தனோடு வாசி இன்றிக்கே
சர்வ பிராணிகளுக்கும் உதவி அருளினாய் –

மகா வராஹமாய் பிரளயம் கொண்ட ஏழு உலகத்தையும் திரு எயிற்றினிலே வைத்து அருளினாய் –

இத்தால்
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போலே
பவார்ணவம் கொண்ட என்னையும் எடுத்து அருள வேணும் -என்கிறார் –

———————————————————–

வியாக்யானம் -2-
ஆபத்து வந்த அன்று -அந்த ருத்ராதிகளோ நீயோ உதவினார்
பிரளயம் கொண்டு அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த லோகங்களை
மகா வராஹமாய் புக்கு இடந்து எடுத்து
திரு எயிற்றினில் ஏக தேசத்தில்
ஒரு நீல மணி அழுத்தினால் போலே கிடக்கும்படி வைத்தாய் –

சம்சார பிரளயம் கொண்ட என்னையா எடுக்கலாகாது –

————————————————————————–

கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை-

வியாக்யானம் -1-
மனுஷ்யருக்குப் போக்யமான ஷட் ரச ரூபமான பிரயோஜனம் ஆனாய்

என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

——————————————————

வியாக்யானம் -2-
சாஸ்த்ரங்களால் ஷட் ரசங்களுடைய பிரயோஜனமாய் இருந்து வைத்து-
என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

————————————————————————–

சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-

வியாக்யானம் -1-
தம்முடைய போக்யமாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

சுடர் விடும் ஐம்படை அங்கியுள் அமர்ந்தனை-
மிகவும் விளங்கா நின்றுள்ள பஞ்சாயுதங்களையும்
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியாய் இருந்துள்ள திருக் கைகளினுள்ளே
ஆபரணம் போலே அமரும்படி தரித்தாய்

சுந்தர நால் தோள்-
அழகை வகுத்தால் போலே நாலு தோள்களையும் யுடையையாய்

முந்நீர் வண்ண-
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனே

——————————————————————-

வியாக்யானம் -2-
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை-

மிகவும் பிரகாசத்தை யுடைத்தாய் இருக்கிற திவுய ஆயுதங்களை
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான அழகிய திருக் கையிலே தரிப்பாய்

சுந்தர நால் தோள்-
தனக்குத் தானே அழகை விளைப்பதான நாலு திருத் தோள்களை யுடையையாய்

முந்நீர் வண்ண–
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவனே –

————————————————————————–

நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்
மலரன அங்கையின்-முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –

வியாக்யானம் -1-
தம்முடைய அபேஷிதம் பெறுகைக்கு புருஷகாரம் யுண்டு என்கிறார் –

நின்னீரடி யொன்றிய மனத்தால்-
அநந்ய போக ரசராய்

ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்-
கல்மஷம் கழற்றின பூர்ண சந்தரனைப் போலே
தாம்தாம் போகத்தை கொட சொல்லா நின்ற திரு முகத்தை யுடையவராய் –

மங்கையர்-
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்றும்
யுவதிச்ச குமாரிணீம் என்றும்-தங்கள் பருவத்தாலே பிச்சேற்ற வல்ல பிராட்டிமார் இருவரும்

மலரன அங்கையின்-
புஷ்பத்தை த்ருஷ்டாந்திக்க ஒண்ணாத மென்மையை யுடையையான திருக் கைகளாலே

முப்பொழுதும் வருட –
சர்வகாலமும் வருட

அறிதுயில்-
ஆஸ்ரீ த சம்ரஷண பிரகாரத்தை அனுசந்திக்கை

அமர்ந்தனை –
வீசு வில்லிட்டு எழுப்பினாலும் எழுப்பப் போகாது –

—————————————————————-

வியாக்யானம் -2-

நின்னீரடி யொன்றிய மனத்தால்-
தேவரீர் திருவடிகளிலே ஒருமைப் பட்ட நெஞ்சை யுடையவராய்

ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் –
சந்தரனைப் போலே தர்ச நீயமாய் குளிர்ந்த திரு முகத்தை யுடைத்தாய் இருக்கிற-
ஸ்ரீ பெரிய பிராட்டியாரும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் –

மலரன அங்கையின் –
பூ தொட்டால் போலே இருக்கிற மிருதுவான திருக் கைகளாலே

முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –
திருவடிகளை வருட –
ஜகத் ரஷண ரூபமான யோக நித்ரையிலே ஒருப்பட்டு இருந்தாய்-

எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ

————————————————————————–

நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-

வியாக்யானம் -1-
முன்பு அனுசந்தித்த படியே ரஷித்த ரஷண பிரகாரம் சொல்லுகிறது —

நெறி முறை-
சாஸ்திர மரியாதை தப்பாத படி

நால் வகை வருணமும் ஆயினை-
சாதுர் வர்ண்யமும் நீ இட்ட வழக்கு –
ஆத்மாக்களுக்கு வர்ணங்களைக் கொடுத்ததும்
அவர்களுடைய அனுஷ்டானத்துக்கு ஆராத்யனாய் இருப்பானும் அவன் இறே

அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா-ஸ்ரீ கீதை -9-24- என்றும்
வர்ணாஸ்ரம ஆசாரவத புருஷேண பர –புமான் விஷ்ணுர் ஆராத்யே பந்தா
நான்யச் தத் தோஷகாரகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டும் -ஸ்ரீ கீதை -4-13-என்றும் -சொல்லக் கடவது இறே –

(அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச
ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஸ்ச்யவந்தி தே–ஸ்ரீ கீதை -9-24

ஹி ஸர்வயஜ்ஞாநாம்-ஏனெனில் எல்லா வேள்விகளிலும்,
போக்தா ச ப்ரபு ச அஹம் ஏவ-உணவு உண்பவனும்; தலைவனும் நானே தான்!
து தே மாம்-ஆனால் என்னை அவர்கள்
தத்த்வேந ந அபிஜாநந்தி-உள்ளபடி அறியாதவர்,
அத: ச்யவந்தி-ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள்.

நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்;
என்னை மனிதர் உள்ளபடி அறியார்;
ஆதலால் நழுவி வீழ்வார்)

(சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்–ஸ்ரீ கீதை -4-13

குண கர்ம விபாகஸ:-குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக
சாதுர்வர்ண்யம், மயா ஸ்ருஷ்டம்-நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது,
தஸ்ய கர்தாரம் அபி-நானே அவற்றை செய்தேன் என்றாலும்,
அவ்யயம் மாம்-அழிவற்றவனாகிய என்னை
அகர்தாரம், வித்தி-கர்த்தா அல்லேன் என்று உணர்.

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன்.
செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.)

மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-
ஆத்மாக்களுடைய தேக ஆரம்பங்களான மகா பூதங்களும் நீயே

மேதகு-
மேவித்தக்கு இருக்கும்

மேவுகை யாவது
தேவ அஹம் மனுஷ்ய அஹம் என்கிறபடியே பொருந்தி இருக்கை
அதாவது
யாதேனும் ஒரு ஆக்கையிலே புக்கு –திருவிருத்தம் -95-அங்கே தக்கிருக்கை –
அதாவது
கர்மத்துக்கு அனுகூலமாய் இருக்கை

இத்தால்
சத்தாதிகள் நீ இட்ட வழக்கான பின்பு
உன்னை ஒழிய ரஷகர் யுண்டோ என்கை –

————————————————————–

வியாக்யானம் -2-
சாஸ்திர முறை தப்பாத படி முறையிலே நடக்கிற நாலு வகைப் பட்ட வர்ணங்களும்
நீ இட்ட வழக்காய் இருக்கிறது
ஜகத் ஆரம்பகமான பூத பஞ்சகங்களும் நீ இட்ட வழக்கு
சத்தாதிகளும் உன் அதீனமான பின்பு உன்னை ஒழிய ரஷகர் யுண்டோ –

————————————————————————–

அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை –

சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –

அறுபத முரலும் கூந்தல் காரணம்-
வண்டுகள் தேனைப் பருகி முரலா நின்றுள்ள திருக் குழலை யுடையவள் ஆகையாலே-
போக்ய பூதையான நப்பின்னை பிராட்டியின் பொருட்டு

ஏழ் விடை யடங்கச் செற்றனை –
ஏழு எருத்தையும் ஊனப் படாத படி நெரித்தாய் –

இத்தால்-
நப்பின்னை பிராட்டி யுடைய சம்ஸ்லேஷத்துக்கு விரோதிகளைப் போக்கினால் போலே-
என்னுடைய விரோதிகளையும் போக்கித் தந்து அருள வேணும் -என்று கருத்து –

————————————————————————–

வியாக்யானம் -2-
அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை-

ஆறு காலை யுடைத்தாய்-
மது பான அர்த்தமாக படிந்த வண்டுகள் மது பானமத்தாய்க் கொண்டு
ஆளத்தி வையா-மயிர் முடியை யுடைய நப்பின்னை பிராட்டியோட்டை சம்ஸ்லேஷத்துக்கு
பிரதி பந்தகமான ருஷபங்கள் ஏழையும் ஊட்டியாக நெரித்தாய்

என்னுடைய பிரதிபந்தகங்களை நீயே போக்கி அருள வேணும் –

————————————————————————–

அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை-

வியாக்யானம் -1-
அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-

————————————————————————–

வியாக்யானம் -2-
ஆறு வகைப் பட்ட பாஹ்ய சமயங்களால் அறிய ஒண்ணாத ஸ்வ பாவத்தை உடையையே இருந்தாய் –
சார்வாகர் -பௌத்தர்-சமணர் -நையாயிக வைசேஷிகர் -சாஙக்யர் பாசுபதர் –

————————————————————————–

ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை –

வியாக்யானம் -1-
ஐந்து லஷணம் உடைய திருக் குழல் கற்றையை யுடைய
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தாய் –

மேல் சொல்லப் படுகிற ஐஸ்வர்ய சௌலப்யங்களுக்கு அடியான
ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –

——————————————————————

வியாக்யானம் -2-
அஞ்சு லஷணத்தை யுடைத்தான மயிர் முடியை யுடையாளாய் –
சுருண்டு பளபளத்து -நறுமணம் அடர்த்தி மென்மை –
ந கச்சித் ந அபராத்யதி என்னும்
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பினில் வைத்து அருளினாய்-

————————————————————————–

அற முதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை-

வியாக்யானம் -1-
தர்மார்த்த சகல புருஷார்த்த பிரதனுமாய் –
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நிர்வாஹகனாய் –
ஸூக துக்கங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகனாய்
சர்வமும் ஸ்வ பிரகாரமாக இருக்கச் செய்தே -அவற்றோடு ஓட்டற்று நின்றாய்

இத்தால் ஐஸ்வர்யம் சொல்லிற்று –

————————————————————————–

வியாக்யானம் -2-
தர்மார்த்த காம மோஷங்கள் ஆகிற புருஷார்த்த சதுஷ்ட்யங்களுமாய்-
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே ஸ்வ ரூபேண நின்று -அவர்களை சரீரமாகக் கொண்டு நின்று

ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ஸ சம்ஜஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -ஸ்ரீ விஷ்ணு புராணம்
என்னலாம் படி நிற்பானாய்

சுக துக்கங்களுக்கு நியாமகனாய்

காரண அவஸ்தையிலே சத் சப்த வச்யனாய்

சிருஷ்டி காலத்தில் வந்தவாறே
பஹூஸ்யாம் என்கிறபடியே –
விஸ்த்ருதனாய் நிற்கிறாயும் நீ

————————————————————————–

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் செல்வம் மல்கு
தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியிலறி துயில் அமர்ந்த பரம–

வியாக்யானம் -1-
குன்றாமது மலர் -என்று மேலுக்கு
நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்

குன்றா மது மலர்ச் சோலை-
குன்றாத மது வெள்ளத்தை யுடைத்தான பூஞ்சோலை –
ஆராவமுத ஆழ்வாருடைய கடாஷம் ஆகிற அமுத வெள்ளத்தாலே வளருகிற
சோலை யாகையாலே நித்ய வசந்தமாகச் செல்லுகிறது –

வண் கொடிப் படப்பை-
அழகிய கொடிக்கால்களையும் நீர் நிலத்தையும் யுடைய

வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும் செந்நெல் ஒண் கழனித் திகழ் வன முடுத்த –
பெருகி வாரா நின்ற
திருப் பொன்னி மஹார்க்கமான ரத்னங்களைக் கொழித்து ஏற வருகிற

இத்தால்
விளைகிற சென்நெல்லையும் யுடைத்தாயாகையாலே அழகிய கழனியையும் யுடைத்தாய்
விளங்கா நின்ற அழகிய வனங்களாலும் சூழப் பெற்ற

கற்போர் புரிசை –
வித்வான்கள் படுகாடு கிடக்கும் நகரி

கனக மாளிகை-
பொன்னாலே செய்யப் பட்ட மாளிகை

நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்-
அதில் நிமிரா நின்றுள்ள கொடிகள் சந்த்ரனைச் சென்று துவக்கும் –

செல்வம் மல்கு தென் திருக் குடந்தை-
நிரதிசயமான சம்பத்தையும் போக்யதையும் யுடைய திருக் குடந்தையிலே

அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க-
அநந்ய பிரயோஜனரான பிராமணர் ரஹச்யமான ஸூக்த்தங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க

ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம-
தன்னுடைய ஸ்பர்சத்தாலே விரிக்கப் பட்ட
பணங்களை யுடைய திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையில்
ஜகத் ரஷணத்துக்காக உணர்ந்து கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே சர்வேஸ்வரன் ஆனவனே

ஆடரவு-
திரு வநந்த வாழ்வான் உடைய உஸ்வாச நிஸ்வாசங்களாலே
தூங்கு தொட்டிலைப் போலே என்னவுமாம் –

————————————————

வியாக்யானம் -2-
குன்றாத மதுவையும் மலரையும் யுடைத்தான சோலையையும் யுடைத்தாய்
அழகிய கொடிகளை யுடைத்தான தோட்டங்களையும் யுடைத்தாய்
மாறாத ஜல சம்ருத்தியையும் யுடைத்தான பொன்னி பாய்ந்து ரத்னங்களைக் கொழித்து ஏறிடா நிற்பதாய்
அழகிய சென்நெல்லையும் யுடைத்தான கழனிகளை யுடைத்தாய்
திகழா நின்றுள்ள வனத்தை சுற்றிலே யுடைத்தாய் –
தொழில் ஓரப்படா நின்றுள்ள மதிளையும் யுடைத்தாய்
பொன்னாலே செய்யப் பட்ட மாளிகைகளிலே நட்ட கொடிகளானவை ஆகாசத்தில்
சஞ்சரிக்கிற சந்த்ரனை துவக்கினாலும் சுற்றிடா நிற்பதாய்
நிரவதிக சம்பத்தையும் போக்யதையும் யுடைத்தான திருக் குடந்தையிலே
பிராமணர் வேத ஸூக்த்தங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க
உன்னோட்டை ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை யுடைய திரு வநந்த வாழ்வான் ஆகிற
படுக்கையிலே ஜகத் ரஷணத்திலே அவஹிதனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற சர்வாதிகனே —

————————————————————————–

நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

வியாக்யானம் -1-
உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
இத்தை அனுபவிக்கைக்கு விரோதியைப் போக்கி அருள வேணும் –
இத்தால் –
இஷ்டப் பிராப்திக்கும்
அநிஷ்ட நிவாரணத்துக்கும்
சித்தமான உபாயத்தை பற்றிவிடுகிறார் –

————————————————————————–

வியாக்யானம் -2-
என்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
தேவரீர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

நீயும் உன்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
என்னுடைய சம்சாரிக வருத்தத்தைக் கழித்துத் தர வேணும் -என்கிறார்-

————————————————————————–

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி
பெறாமல் இருப்பதை- ஆழ்வார் அனுசந்திப்பதாக
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-