ஸ ப்ராதுச் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன
ஸீதா முவாசாதியஸா ராகவஞ்ச மஹாவ்ரதம்–அயோத்யா -31-2-
ஸ-அந்த லஷ்மணன்-
ப்ராதுச் சரனௌ -தமையினார் உடைய திருவடிகளை
காடம் நிபீத்யா -நன்றாக பிடித்துக் கொண்டு
ரகு நந்தன -ரகு குலத்தை ஆனந்திப்பவராய்
ஸீதா முவாசாதியஸா ராகவஞ்ச மஹாவ்ரதம்–ஸீதா பிராட்டியையும் பெரிய விரதத்தையும் யுடைய ஸ்ரீ ராமனையும் பார்த்து சொன்னார் –
அவதாரிகை –
சக்ரவர்த்தித் திருமகன் வனவாச உன்முகநான தசையிலே –
திரு அயோத்யையில் உள்ளார்க்கு ரஷகராயும்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்குத் துணையாயும்
நில் என்று இளைய பெருமாளை அருளிச் செய்ய
காட்டிலும் கூடப் போய் அடிமை செய்கையில் யுண்டான ருசியாலே –
அருளிச் செய்த வார்த்தை அசஹ்யமாய்
கூடப் போக வேணும் என்று பிராட்டி முன்னிலாகப் பெருமாள் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –
ஸ –
அவதரித்த இடத்திலும்
அடிமை செய்ய வேணும் என்று பரமபதத்தில் நின்று துடர்ந்து போந்து
கூடத் திருவவதரித்த பின்பு
பால்யாத் ப்ரப்ருதி ஸூ ஸ் நிக்த-பால -18-27-என்கிறபடியே
எல்லா அவச்தைகளிலும் பிரியாதே போந்து
ந ச ஸீதா த்வயா ஹீ நா ந சாஹம் அபி ராகவ முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்தருதௌ-அயோத்யா 53=31-என்று அன்வயத்திலே தரித்து
வ்யதிரேகத்தில் முடியும்படியான இளைய பெருமாள்-
1-ப்ராதுச் –
இவருடைய அநு வ்ருத்தியைக் கொண்டு அவ்வழியிலே அவரை பரித்துக்-ரஷித்துக்- கொண்டு போந்தவர் –
2- பிராது –
ப்ராதிவினுடைய –
நாராயணனுடைய என்றபடி -த்வயம் பூர்வ வாக்கியம் நாராயணன் என்றது ஆறாம் வேற்றுமை உருபுடன் -நாராயண்ஸ்ய -நாராயணனுடைய என்னுமா போலே
மாதா பிதா ப்ராதா நிவாசஸ் சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண-ஸூ பாக்க உபநிஷத்-
1-சரனௌ
நாராயணஸ்ய சரனௌ -என்றபடி
2- சரனௌ -என்கிற தாதுவிலே
ப்ராப்யமுமாய் ப்ராபகமுமாய் இருக்கும் என்கைக்காக
சரனௌ சரணம் பிரபத்யே -என்கையாலே கதிப் பொருளான மோஷ சாதனத்வத்தையும்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்கையாலே பஷண அர்த்தமான மோஷ ப்ராப்யத்வமும்
இத் திருவடிகளுக்குச் சொல்லப் பட்டன அன்றோ
3- சரனௌ –
கையைப் பிடித்து அபேஷித்தால் மறுக்கலாம்
மறுக்க ஒண்ணாத படி திருவடிகளைப் பிடித்து அடிமை செய்ய இழியும் துறை இ றே ஆஸ்ரயிக்கும் துறை –
1-காடம் நிபீட்ய –
வ்யதி ரேகத்தில் தரிக்க மாட்டாத தம்முடைய அபி நிவேசம் எல்லாம் தோற்றும்படி பிடித்து
2-காடம் –
காடம் என்கிறது இவை யதார்த்தம் -என்கிறது மனபூர்வமாக -சொல்லும் உண்மை வார்த்தைகள்
சரணம் ப்ரபத்யே -என்கிற உபாய ச்வீகாரத்தை சொல்லுகிறது –
ரகு நந்தன-
ஜ்யேஷ்ட அநு வ்ருத்தியை உகந்து போரும் ரகு குலத்தார் எல்லாரையும்
தம்முடைய அநு வ்ருத்தியாலே உகப்பித்தவர் –
ஸீதா முவாசாதியஸா ராகவஞ்ச மஹாவ்ரதம்
பிராட்டியையும் பார்த்து வார்த்தை சொன்னார் –
திருவடிகளைப் பிடித்து செவியிலே வார்த்தை சொல்லுவாரைப் போலே
திரு முகத்தாலே இ றே ஆஸ்ரயனண உன்முகரான சேதனருடைய வார்த்தை கேட்டு அருளுவது
ச்ருணோதி ஸ்ராவயதீதி ஸ்ரீ
சாடுக்தி -தன முகத்தாலே அன்றோ சேதனருடைய வார்த்தை கேட்பது
பிராட்டியின் மூலமாக அன்றோ வார்த்தை கேட்பது
அதியஸா –
மிக்க யசசை யுடையவர் –
தானும் ராஜ குமாரராய் இருக்க இழி தொழில் என்று பாராதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று ஒருவன் ஜ்யேஷ்ட அநு வர்த்தனம் பண்ணின படியே என்று
லோகம் அடங்க ஆச்சர்யப் படும்படியான வார்த்தைப் பாடுடையவர் –
1-ராகவஞ்ச மஹா வரதம்
மஹா வரதரான பெருமாளைப் பார்த்து வார்த்தை சொன்னார்
2- ராகவஞ்ச –
சரணாகத விஷயத்தில் புருஷகாரம் வேண்டாத படியான குடிப் பிறப்பை யுடையவரை
3- மஹா வ்ரதம்-
குடிப் பிறப்பு தான் மிகுதி என்னும் படி
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம-யுத்த -18-33- என்று
சர்வ லோக பூஜ்யமான சங்கல்பத்தை உடையவர் அன்றோ தேவர்
சர்வ பூதங்களும் என்றால் உம்மால் வரும் பயம் பரிஹரிக்க வேண்டாவோ -என்று கருத்து –
அதி யஸா ரகு நந்தன ஸ ப்ராதுச் சரனௌ காடம் நிபீட்ய ஸீதா முவாச –
——————————————————————————————————————————————————————————-
பவாம்ஸ்து ஸ ஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூ ரம்ஸ் யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதச்ச தே -அயோத்யா -31-25-
பவாம்ஸ்து –
ஸ்ரீ ராமனே -தேவரீரோ
ஸ ஹ வைதேஹ்யா -ஸீதா பிராட்டியாரோடு கூட
கிரிஸா நுஷூ -மலைத் தாழ் வரைகளிலே
ரம்ஸ் யதே-விளையாடுவீர்
அஹம் ஜாக்ரத ஸ்வ பத –
அடியேன் விழித்துக் கொண்டும் தூங்கிக் கொண்டும் இருக்கிற உமக்கு
சர்வம் கரிஷ்யாமி-எல்லா அடிமைகளையும் செய்வேன் –
அவதாரிகை –
ஸ ப்ராது-என்கிற முன் ஸ்லோஹத்தாலே சரணம் புக்கால்
அந்த சரணா கதிக்குப் பலம் கைங்கர்யம் என்று
ஸ பிரகாரமாக பலத்தைச் சொல்லுகிறது இஸ் ஸ்லோகத்தாலே-
திரு அயோத்யையிலே வர்த்திக்கிற காலத்தில் அடிமை பூண்ட என்னோபாதி
அங்கு உள்ளாறும் அடிமை செய்ய –
நானும் விழுக்காட்டிலே அடிமை செய்யப் போந்த என்னை
வனவாசத்துக்கு கூடப் போவேனாக இசைந்த உபகார ச்ம்ருதியாலே
காட்டிலும் சர்வ அவஸ்தையிலும்
சர்வ சேஷ வ்ருத்திகளும் பண்ணக் கடவேன் –
என்னைக் கொண்டு எழுந்து அருளீர் என்கிறார் -என்றுமாம் –
பவாம்ஸ்து –
அடிமை செய்யப் பெறாது ஒழிந்த என்னைப் போல் அன்றியிலே
பூரணன் ஆகையாலே உமக்கு அடிமை கொள்ளா விடினும் செல்லும் –
ஆகிலும் என்னிடம் அடிமை கண்டால் விசேஷம் இ றே-
ஆனாலும் என்னுடைய ஸ்வரூப சித்யர்த்தமாக அடிமை கொண்டு அருள வேணும் –
ஸ ஹ வைதேஹ்யா –
அடிமை செய்யும் இடத்தில்
மிருக வதார்த்தமாக போகுமிடத்தில் சஹகரிக்குமது ஒழிய
பிராட்டியும் தேவரும் கூட எழுந்து அருளி இருக்கும் இருப்பிலே அடிமை செய்யக் கடவேன்-
கிரிஸா நுஷூ ரம்ஸ் யதே
அவளோடே கூடே அடிமை செய்யுமிடத்தில்
பர்ண சாலையில் எழுந்து அருளி இருக்கும் அடிமை செய்யும் அளவன்றிக்கே
ஜலக்ரீடை பண்ணி
மலைத் தாழ் வரைகளிலே ஒருவருக்கு ஒருவர் வெற்றி கொண்டாடி ரசிக்கும் அளவிலும் அடிமை செய்யக் கடவேன் –
த்வாம் அஹ ஸீதா பஹூ வாக்ய ஜாதம் -ஆரண்ய-63-12-என்றால் போலே –
அஹம் –
தாஸ்ய ரசங்களில் யான் ஒருவனாய் அடிமை செய்ய வேணும்
அவ்வவ அவஸ்தைகளில் அதுவே ஸ்வரூபமாக உடையனான நான் –
சர்வம் கரிஷ்யாமி –
மிருக யார்த்தமாகப் போகுமிடத்தில் கையும் வில்லுமாய் அடிமை செய்தும்
காயும் கிழங்கும் கல்லுமிடத்தில் -வெட்டுமிடத்தில் – கநித்ர பிட காதரனாய் -மண் வெட்டியும் கூடையும் சுமந்து –
இதம் மேத்யமிதம் ஸ்வாது -நிஷ்டப்தமித மக் நி நா ஏவ மாஸ்தே ஸ தர்மாத்மா சீதயா சஹ ராகவ -அயோத்யா -96-2-என்னும் இடத்தில்
மாம்ச பசனம் -பக்குவம் -பண்ணியும்
பர்ண சாலா நிர்மாணத்தில்
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத -ஆரண்யம் -15-7-என்று ஆஜ்ஞ்ஞாபித்து
எல்லா அடிமை செய்தும்
மலைத் தாழ் வரைகளிலே ஜலக்ரீடை பண்ணும் இடத்தில்,வல்கலை -மரவுரி -பிழிந்து உலர்த்தியும்
ராஷசர் வேட்டையாடும் இடத்தில் காவலாய் இருந்தும்
சர்வ சேஷ வ்ருத்திகளும் பண்ணக் கடவேன் –
ஜாக்ரத ஸ்வ பதச்ச தே-
தேவரும் பிராட்டியும் கண் வளர்ந்து அருளும் போதும்
காட்டில் துஷ்ட சத்வங்களும் -பிராணிகளும் –
துஷ்ட பிரக்ருதியான ராஷச ஜாதியும் கிட்டாத படி
கையும் வில்லுமாய் நோக்கியும்
உணர்ந்து அருளின போது எல்லா அடிமை செய்தும் போரக் கடவேன் –
———————————————————————————————————————————————————————————–
ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜநகாத் மஜாம்
அயோத்யாமடவீம் வித்தி கச்ச தாத யதா ஸூ கம் -அயோத்யா -40-8-
ராமம் தசரதம் வித்தி -ஸ்ரீ ராமனை தசரத சக்ரவர்த்தியாக நினைத்திரு
மாம் வித்தி ஜநகாத் மஜாம் -ஸீதா பிராட்டியை நானாக நினைத்திரு
அயோத்யாமடவீம் வித்தி -அடவீம் அயோத்யாம் வித்தி -காட்டை அயோத்யா பட்டணமாக நினைத்திரு
கச்ச தாத யதா ஸூ கம் –தாத யதா ஸூ கம்-கச்ச -குழந்தாய் ஸூ கமாக செல்வாயாக –
அவதாரிகை –
ஸ்ரீ ஸூமித்ரையார் பெருமாள் பக்கல் யுண்டான வாத்சல்யத்தாலும்
இளைய பெருமாள் பக்கல் ஹிதபரதை யாகையாலும்
அஹம் த்வா அநுக மிஷ்யாமி வநமக்ரே தநுர்தர -அயோத்யா -31-3-என்றும்
அநு ஜ்ஞாதச்ச பவதா பூர்வ மேவ எதோ சம்யஹம்
கிமிதா நீம் புநரிதம் க்ரியதே மே நிவாரணம் -அயோத்யா -31-7- என்றும்
மன்றாடிக் கூடப் போக ஒருப்பட்ட இளைய பெருமாளை அதி சங்கை பண்ணி
இங்கு படை வீட்டில் உண்டான பந்து போகங்களைக் குவாலாக நினைத்து கால் தாழாதே –
எல்லா உறவு முறையும் பெருமாளும் பிராட்டியுமாக நினைத்து கூடப் போம் -என்கிறாள்-
1-ராமம் தசரதம் வித்தி –
பெற்றார் பெற்று ஒழிந்தார் -பெரிய திருமொழி -8-9-7-என்ற ஔ பாதிக பந்துக்களான எங்களைக் குவாலாக நினைத்து இராதே
தேவதேவோ ஹரி பிதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-126-என்றும்
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயுமாவார் -திருமாலை -37- என்றும் சொல்லுகிறபடியே
நிருபாதிக பிதாவான பெருமாளை தஞ்சமாக நினைத்து போம் –
மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
அப்படி ஔ பாதிகமான என்னையும் குவாலாக நினைத்து இராதே
தவம் மாதா சர்வ லோகாநாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-126-என்றும்
அகில ஜகன் மாதரம் -சரணாகதி கத்யம் -என்றும் சொல்லுகிறபடியே பிராட்டியையே தஞ்சமாக நினைத்துப் போம்
அயோத்யாமடவீம் வித்தி-
யத்ர நாஸ்தி ஹரிஸ் தத்ர வஸ்தவ்யம் ந க்ருதாத்மநா
வஸ்தவ்யம் தத்ர தத்ரைவ யதாராஸ்தே மது ஸூ தன-என்று சொல்லுகிறபடியே
பெருமாள் சந்தி இல்லாத படை வீட்டை விரும்பாதே
அவருகந்த காட்டைத் தஞ்சமாக நினைத்துப் போம்-
அன்றியிலே
2-ராமம் தசரதம் வித்தி-
லோக மரியாதையாலே உங்கள் ஐயரைப் பிரிந்தீராக நினைத்து இராதே
ஜ்யேஷ்டோ ப்ராதா பித்ரு சம -என்கிற மரியாதையால் உங்கள் தமையனாரை ஐயர் என்று நினைத்துப் போம்
மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
அந்த மரியாதையாலே மதிநியாரை என்னோபாதி தாயாராக நினைத்துப் போம் –
அயோத்யாமடவீம் வித்தி-
காடு என்று நினைத்திராதே பெருமாள் விரும்பிற்று ஆகையாலே அயோத்யையோபாதி ஸ்மரித்துப் போம்-
அன்றியிலே
3-ராமம் தசரதம் வித்தி –
கஷாய பானம் போலே சாஸ்திர வச்யராய் வர்த்திக்கை அன்றிக்கே
பாலே மருந்தாமாப் போலே ரமயதாம் வரரான பெருமாள் ஆகையாலே
அதற்க்கடியான குணவத்தையில் வந்தால் குணைர் தசரதோபமா-அயோத்யா -1-9-என்று
உங்கள் ஐயரோடு ஒப்பர் என்று நினைத்திருக்கும்
மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
நான் உங்கள் ஐயருக்கு அநு குணையாய் இருக்குமா போலே
இவளும் உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை -திருவாய் -10-10-6-என்றும்
துல்ய சீல வையோ வ்ருத்தாம் -சுந்தர -16-5-என்றும் சொல்லுகிறபடியே
பெருமாளுக்கு அநு குணை யான ஆகாரத்தாலே உம்மை உகப்பிக்கும் என்று நினைத்திருக்கும்
அயோத்யாமடவீம் வித்தி-
ராமாபிஷ்டவ சம்யுக்தா -அயோத்யா -6-16-என்
மங்களா நி ப்ரயுஞ்ஜாநா -ஆரண்யம் -1-12-என்று
அக்காடு தானும் அநு கூலமாய் இருக்கும் என்று நினைத்திரும் என்றாகவுமாம் –
அன்றியிலே
4-ராமம் தசரதம் வித்தி –
உங்களைப் பிரிந்த ஐயர் இனி உளராக மாட்டார் .
இனி மேல் எல்லா உறவு முறையும் பெருமாள் என்று நினைத்து இரும் –
மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
அசத் சமா விதவா -என்கிற மர்யாதையாலே நானும் என்று ஒருத்தி உண்டாக நினைத்து இருக்க வேண்டா –
அந்த உறவும் பிராட்டி என்று நினைத்து இரும் –
அயோத்யாமடவீம் வித்தி –
இனி படை வீடு என்றும் ஓன்று உண்டாக நினைத்து இருக்க வேண்டா
புல் என்று ஒழிந்தன கொல்-பெரிய திருவந்தாதி -98-என்று படை வீடும் இன்றே காடு எழுந்தது என்று நினைத்து இரும்-
அன்றியிலே
5-ராமம் தசரதம் வித்தி மாம்-
உங்கள் தமையனாரை உங்கள் ஐயரோ பாதி ஸ்திரீ பரந்தரர் என்று நினைத்து இரும் -அதாவது
கைகேயி வார்த்தையைக் கேட்டு அவர் உங்களைக் காடேறப் போக விடுமா போலே
பிராட்டி வார்த்தையைக் கேட்டு மாயாம்ருகத்தின் பின்னே போகத் தொடங்குவர் கிடீர் –
வித்தி ஜநகாத் மஜாம்-
நான் உம்மை இப்போது போக விடுகிறாப் போலே அவளும் அப்போது தயங்கின உம்மையும் கூட
நிர்பந்தித்துப் போக விடக் கூடும் கிடீர் –
அயோத்யாமடவீம் வித்தி –
இப்படை வீட்டில் நிற்கப் பெறாதே காடேறப் போகிறாப் போலே அக்காடு தன்னிலும் நிற்கப் பெறாதே கடல்கரையில் போகக் கூடும் கிடீர் என்று
அவதானம் பண்ணிக் கொள்ளும் என்கிறார்கள் ஆகவுமாம் –
அங்கன் அன்றியிலே
6-ராமம் தசரதம் வித்தி-
வெறும் வடிவு அழகே என்று இராதே ராஷசரோடே வினையொத்த காலத்தில் உங்கள் ஐயரைப் போலே
தனி வீரம் செய்ய வல்ல ஆண் பிள்ளை கிடீர் என்று நினைத்து இரும்
மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
அப்பூசல் நிமித்தமாக பயப்படுகை அன்றியிலே தேவாசூர சங்க்ராமத்தில் உங்கள் ஐயர் உடைய வீரப்பாடு கண்டால் நாங்கள் உகக்குமா போலே
அவ வாண் பிள்ளைத் தனம் கண்டால் சத்ரு ஹந்தாரம் பரிஷச்வஜே -ஆரண்ய -30-39-என்று
மதித்துப் பாரி தோஷம் கொடுப்பாள் ஒருத்தி வீர பத்னி என்று நினைத்து இரும் –
அயோத்யாமடவீம் வித்தி –
அப்போது இவளை பேணுகைக்கு மதிளும் சிறையுமாய் இருப்பதொரு படை வீடு இல்லை என்று நினைத்து இராதே
காட்டோடு நாட்டோடு வாசியில்லை
புலி நின்ற தூறு என்னுமா போலே நிற்கிறவன் பக்கல் மதிப்பாலே அக்காடு தானே ஒருவராலும்
மேலிட ஒண்ணாதது என்று நினைத்து இரும் -என்றார் ஆகவுமாம் –
அங்கன் அன்றியிலே
7-ராமம் தசரதம் வித்தி –
உங்கள் ஐயர் உங்கள் விச்லேஷத்தில் பாடாற்ற மாட்டாதாப் போலே கிடீர்
உங்கள் தமையனாரும் -ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர -66-10-என்றும்
அத்யைவாஹம் கமிஷ்யாமி லஷ்மணேன கதாம் கதிம் -உத்தர -107-3-என்றும்
உங்கள் விச்லேஷத்தில் பாடாற்ற மாட்டாத படியும்
மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
நான் இப்போது உங்களைப் போக விட்டு -எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே -பெரியாழ்வார் -3-2-2-என்று
அனுதபிக்கப் போகிறாப் போலே கிடீர்
இவளும் உங்களைப் பிரிந்தால் க்லேசிக்கும் படியும் –
அயோத்யாமடவீம் வித்தி
அபப்ரஷ்ட மனுஷ்யா ச தீந நாக துரங்க மா ஆர்த்த ஸ்வர பரிக்லாநா – அயோத்யா -59-15-என்று
இத் திரு அயோத்யை இப்போது படப் போகிறாப் போலே கிடீர் உங்களோடு பிரிவு உண்டானால்
பரி ஸூஷ் கப்லா ஸா நி -என்றும்
அபி வருஷா பரிம்லா நா -அயோத்யா 59-4/5-என்றும் அக்காடு தானும் படும்படி என்று ஆகவுமாம் –
அங்கன் அன்றியிலே
8-ராமம் தசரதம் வித்தி –
பெருமாள் என்றும் இப்படி அபஹ்ருத ராஜ்யரேத் தெரியும் இத்தனையோ -என்று நினைத்து இராதே
உங்கள் ஐயரோ பாதி முடியும் சூடிப் பத்து திக்கிலும் ஆணையும் செங்கோலும் நடத்துவார் என்று நினைத்து இரும் –
மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
பிராட்டியும் அப்படி உடன் கேடாகத் திரிகை அன்றிக்கே நான் மஹிஷீ பதத்திலே அபிஷேகம் பண்ணி இருந்தால் போலே
க்ருத அபிஷேகையாய் மஹிஷீ பதத்திலே இருந்து நிர்வஹிக்கும் என்று நினைத்து இரும் –
அயோத்யாமடவீம் வித்தி –
இப்படி திரு அபிஷேகம் பண்ணின அனந்தரமே
அமீ ஜனஸ்தான மபோட விக்நம் லப்த்வா சமாரப்த நாவோட ஜானி
அத்யாசதே சீரப்ருதோ யதாஸ்வம் சிரோஜ்ஜிதான் யாச்ரம மண்டலாநி-ரகுவம்சம் -13-22-என்று
இக்காடு தானும் படை வீடோ பாதி நிறை குடி என்று நினைத்திரும் –
அங்கன் அன்றியிலே –
9-ராமம் தசரதம் வித்தி –
பதாதிம் வர்ஜித தச்சத்ரம் -அயோத்யா -33-5- என்றும்
தேர் ஒழிந்து மா ஒழிந்து வனமே மேவி -பெருமாள் திருமொழி -9-2- என்றும்
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய் சிலையும் கணையும் துணையாகச் சென்றான் -பெரிய திரு மொழி -1-5-1-என்றும்
அனுசந்தித்த வர்கள் வயிறு பிடிக்கும் படி என்றும்
இக்கால் நடையோ என்று இராதே பத்து திக்கிலும் புஷ்பகம் துடக்கமான தேர்களிலே
ஏறித் திரிவர் என்று நினைத்து இரும்
மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
துன்னு வெயில் வெறுத்த வெம்பரல் மேல் பஞ்சடியால் மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும் அன்ன நடைய அணங்கு நடந்து இலளே-பெரிய திருமடல் -50/51/52–என்று
பிராட்டியும் துஸ் சஞ்சாரமான காட்டிலே என்றும் இப்படி நடந்து திரியும் இத்தனையோ என்று நினைத்து இராதே
நான் உங்கள் ஐயர் அருகே தேர்த் தட்டிலே இருக்குமா போலே புஷ்பகாதி களிலே பிராட்டியும் கூட வரவர் என்று நினைத்துஇரும்
அயோத்யாமடவீம் வித்தி-
இக்காட்டிலேயோ உருவற்று இருந்து விடப் புகுகிறது -என்று இராதே
இதிலே இப்போது நித்ய சஞ்சாரம் பண்ணப் புகுகிறாப் போலே கிடீர்
மீண்டு புகுந்து இப்படை வீட்டிலேயும் நித்ய சஞ்சாரம் பண்ணப் புகுகிறது -என்று நினைத்து இரும்-
ஆக இப்படி போகிற இடத்தில் அஸ்வாஸ்யத்தை அநு சந்தித்துப் பிற்காலித்த இளைய பெருமாளோடு
ஏற்ற வார்த்தை சொல்லிற்றாக இ றே ஆபாதத்தில் தோற்றுகிறது
இது ப்ராகேவது மஹா பாக்ஸ் சௌமித்ரிர் மிதர நந்தன பூர்வஜச்யா நுயாதரார்த்தே தருமா சீரை ரலங்க்ருத-சுந்தர -33-28-என்றும்
பாஷ்பபர்யா குலமுச சோகம் வோடுமசக் நுவன் -அயோத்யா -31-1- என்றும்
வ்யதிரேகத்தில் சத்தையே பிடித்து இல்லை யாம் படியாய் –
போகை க்கு முற்கோலி நிற்கிற இளைய பெருமாள் நிலைக்குச் சேராது
இது சேரும் போது இங்கனே பொருளாக வேணும்
10-ராமம் தசரதம் வித்தி-
அஹம் தாவன் மஹா ராஜே பித்ருத்வம் நோப லஷயே -அயோத்யை -58-31-என்று
உங்கள் ஐயர் அளவில் நீர் நெகிழ்ந்து நிற்கிறது ஓன்று உண்டு
அத்தை விட்டுப் பெருமாளைப் பெற்றார் என்னும் ஆகாரத்தாலே யாகிலும்
அவரோபாதி இவரும் ஒருத்தர் உண்டு என்று நினைத்து இருக்க வேணும் –
மாம் வித்தி ஜனகாத்மஜம் –
என்னையும் அவர் கைப்பிடித்தார் என்கிற ஆகாரத்தாலே நெகிழ்ந்து இராதே
பெருமாளோட்டை சம்பந்தத்தால் பிராட்டியை பிரதிபத்தி பண்ணி இருக்கிற மாத்திரம் அவரோட்டைக் குடல் துவக்காலே
நானும் ஒருத்தி யுண்டு என்று நினைத்து இரும் –
அயோத்யாமடவீம் வித்தி –
வனம் நகரமே வாஸ்து யேன கச்சதி ராகவ -அயோத்யா -33-22-என்று
பெருமாள் விரும்பின காட்டியே படை வீடாக நினைத்து இவ் ஊரை நெகிழ்ந்து இருக்கிறது ஓன்று உண்டு
அத்தை விட்டு அவர் தங்கள் ஐயர் சொல் மாறாமைக்காகக் காட்டை விரும்பினால் போலே
தம்பி சொல் மாறாமைக்காக இப்படை வீட்டையும் விரும்புவர் –
ஆகையாலே இத்தையும் அத்தோபாதி உத்தேச்யம் என்று நினைத்து இருக்க வேணும்
இப்படி இளைய பெருமாள் நினைவு இதுவே யானாலும் ராம வாத்சல்யத்தாலே கலங்கிச் சொல்லுகிறாள்
ஆகையாலே முன்பு சொன்னவையும் அர்த்தமாகக் குறை இல்லை-
1-கச்ச –
ஆகையால் அங்குள்ள குறைகளை நினைத்து நெஞ்சாரல் பட்டிராதே அவ்வோ விடங்களுக்குத் தக்க படியே பேணிக் கொண்டு போகப் பாரும்
கச்ச தாத ய்ச்ய்ஹ்ச்ச் ஸூ கம் -பரம சம்ஹிதை -என்றும்
காம ரூப்ய நு சஞ்சரன் -தை ப்ரு-10-5-என்றும்
ததா யதா தருண வத்ஸா வத்சம் வத்சோ வா மாதரம் சாயா வா சத்வம் அநு கச்சேத ததா பிரகாரம் -பரம சம்ஹிதை -என்றும்
நிழலும் அடி தாறுமானோம்-என்றும் சொல்லுகிறபடியே
துடர்ந்து குற்றேவல் செய்யப் பாரும் –
2- கச்ச –
ஏதத் சாம காயன் ஆஸ்தே-தை ப்ரு-10-5–என்றும்
அந்தமில் பேரின்பத்தடியாரோடு இருந்தமை -திருவாய் மொழி -10-9-11-
1-தாத -அப்பனே –
பகவத் விஷயத்தில் போராடி ஓரடி புகுர நின்றவர்களை கௌரவித்து வார்த்தை சொல்லக் கடவது -என்கிற மர்யாதையாலே ஐயர் -என்று சொல்லுகிறாள் –
அன்றியிலே
2- தாத –
உம்மைப் பெற்ற நானும் கைகேயி படைத்த பேர் படியாத படி பண்ணப் பாரீர் -என்று உபசரித்து வார்த்தை சொன்னார்கள் ஆகவுமாம்-
1-யதா ஸூ கம் -முடிந்த வரையிலே ஸூ கம் –
யதா சம்பவம் ஸூ கம் -என்றாய்
நன்மைகளும் வந்தது வரக் கண்டு போகப் போரும்
இவர் ஸூ கத்துக்கு வைகல்யமாவது
பவாம்ஸ்து சஹ வைதெஹ்யா கிரிசா நு ஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி -அயோத்யா -31-25-என்று
அச் சேர்த்தியிலே அடிமை செய்யப் பாரித்தவற்கு அது கிடையாதே
அம் மிதுனம் அக்கரையும் இக்கரையுமாய்ப் பிரிந்து ஏக தேச கைங்கர்யமாகை இ றே
அங்கன் அன்றியிலே –
2-யதா ஸூ கம் –
ராமஸ்ய யதா ஸூ கம் பவதி ததா கச்ச -என்றாய்
பாவஜ்ஞேந க்ருதஜ்ஞேந தர்மஜ்ஞேந ச லஷ்மண
தவயா புதரேண தர்மாத்மா ந சம்வ்ருத்த பிதா மம-ஆரண்ய -16-29-என்று
அவர் உம்மை உடையவர் ஆகையாலே யாதொரு படியினாலே நெஞ்சில் குறை யற்று உகப்பேயாய் இருப்பார் –
அப்படியே பேணிக் கொண்டு போகப் பாரும் என்றாகவுமாம்
அங்கன் அன்றியிலே
3-யதா ஸூ கம் –
உமக்குப் படைவீட்டிலும் ஸூ க ஹேதுவாய் இருப்பது
ஐஸ்வர்யம் வாபி லோகா நாம காமயே ந த்வயா வி நா -அயோத்யா -31-5-என்று
பெருமாளோட்டை அவிச்லேஷம் இ றே
அது எங்கும் உண்டாகையாலே உம்முடைய ஸூ கத்துக்கு வைகல்யம் இல்லை காணும் என்றாகவுமாம் –
ஆக
இப்படி ஸ்ரீ ஸூமித்ரையார் பெருமாள் பக்கல் உண்டான வாத்சல்யத்தாலே இளைய பெருமாளை பஹூமுகமாகத் தாம் சிஷித்து வார்த்தை சொன்னார் ஆயிற்று –
————————————————————————————————————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்