த்ரஷ்டும் சக்யமயோத்யாயம் நா வித்வான் ந ச நாஸ்திக
சர்வே நராச்ச நார்யச்ச தர்ம சீலாஸ் ஸூ சமயதா –பால -6-8-
அறுபத்தினாயிரம் ஆண்டு வன்னியம் அறுத்து நன்மைகளையும் உண்டாக்கி போந்த சக்ரவர்த்தி-
ஒரு அவித்யானை ஆதல்
வைதிகமான அர்த்தங்களை இல்லை என்பான் ஒரு நாஸ்திகனை யாதல்
உண்டாக்கப் போச்சுதில்லை
அப்படை வீட்டில் உள்ளார் ராஜ புத்ரர்கள் ஆரேனும் ஒருவர் முடி சூட அமையாதோ என்று இருக்குமவர்கள் அலர்
பெருமாளே முடி சூடா விடில்
இஹைவ நிதநம் யாமோ மஹா பிரஸ்தா நமேவ வா
ராமேண ரஹிதா நான்ச கிமர்த்தம் ஜீவிதம் ஹி ந -அயோத்யா -47-7-என்று
பெருமாள் அபிஷேகம் பண்ணாத படை வீட்டில் இருப்பதில்லை
விழுந்த இடமே சுடுகாடாகப் போக வமையும் என்று இருப்பர் புருஷர்கள் .
ஸ்திரீகளும் –ராமமே வாநுகச்சத் வமச்ருதிம் வாபி கச்சத -என்று பெருமாள் வழி மாறிப் போனார் என்று திறக்க வழைத்த பர்த்தாக்கள் முகம் பிளக்க
தள்ளிக் கதவடைத்துக் கொள்ளுவார்கள்
தர்ம சீல-
ராம அநு வ்ருத்தியே பரம தர்மம் என்று இருக்குமவர்கள் இ றே-
ஸ்வ பிரயோஜனத்திலே நெஞ்சு செல்லாதவர்கள் ஆயிற்று –
———————————————————————————————————————————————————————————–
கௌசல்யா ஸூப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவமாஹ் நிகம் –23-2-
கௌசல்யா -சக்ரவர்த்தியினுடையவும்
ஸ்ரீ கௌசல்யாருடையவும்
தபபலமாய் இருக்க –
கௌசல்யா ஸூ ப்ரஜா ராம -என்று ரிஷி சொன்னதற்கு ஹேது
மாதா புத்ரஷ்ய பூயாம்சி கர்மாணயாரபதே-என்று கர்மமானது புத்திரன் விஷயமாக மாதாவுக்கே அதிகம் என்று சொல்லுகையாலும்
மாத்ரு தேவோ பவ -பித்ரு தேவோ பவ -தை சீஷா -11-2- -என்கிற ஸ்ருதியானது
மாதாவை பிரதானமாகச் சொல்லுகையாலும்
கைகேய்யா ப்ரிய காரணாத்-பால -1-24- என்று மாத்ரு ச பத்னியான மாதாவுக்கு பிரியமாக துஷ்கரக்ருத்யத்தைப் பண்ணுகையால்.
இவருக்கு மாத்ரு வ்ருத்தி அதிகம் என்னும் நினைவினாலும் .
அறுபதினாராயிரம் மலடு நின்று அருமையாக பெற்ற பிள்ளையைச் சக்ரவர்த்தி விச்வாமித்ராத் வரத்தாரணம் பண்ண அனுப்புவேனோ என்று சம்சயிக்க
மாத்ருத்வ ப்ரயுக்த சம்பந்தத்தை இட்டு நிஷேதிக்கை அன்றிக்கே தம்முடையே பின்னே அனுப்பினாள் என்ற உபகாரத்தாலும்
கௌசல்யையினுடைய நல்ல குமாரனே -என்கிறார் –
ஸூ ப்ரஜா-
மாத்ரு பித்ரு வாக்ய பரிபாலனம் பண்ணுகையும்
அவர்களுக்கு ப்ரிய ஹிதன்களைப் பண்ணுகையும்
சத் புத்ர லஷணம் என்று லோகத்தார் அறியும்படி –
மத்விதா வா பிது புத்ரா – யுத்த -18-16-என்று
தம்முடைய பிள்ளைத் தனத்தை தாமே கொண்டாடும்படியான பிள்ளைத் தனத்தை அனுஷ்டித்துக் காட்டுகையாலும்
கௌசல்யா ஸூ ஸூ பே தே ந -பால -18-11-என்றும்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை -என்றும்
என்னை நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்-பெரியாழ் -2-2-6- என்றும்
முடியப் புகழும் படியான பிள்ளைத் தனத்தாலே
பெற்ற தாயாரை விளங்கப் பண்ணுகையாலும்-நல்ல குமாரனே -என்கிறார் –
ராம –
ரூப ஔதார்ய குண சேஷ்டிதங்களாலும் மனத்துக்கு இனியனாய்
சர்வ பிராணிகளையும் வசீகரிக்கிற வடிவு அழகை யுடையவனே -என்கிறார்
தேவோ நாம சஹஸ்ரவான் -என்று ஆயிரம் திரு நாமத்துக்கு சத்ருசமாய் –
சதுர்வித புருஷர்களுக்கும் ஜப்யமாய்
சர்வ அபீஷ்ட பிரதமான திரு நாமத்தைச் சொல்லுகிறார் –
கௌசல்யா ஸூ ப்ரஜா ராம -என்று
அனுபாஸ்யமான பரசுராமாதிகளை வ்யாவர்த்திக்கிறார் –
நரசார்த்தூல –
தன்னுடைய வேள்வி காக்க வல்ல ஆண் புலி -என்கிறார்-
பூர்வா சந்த்யா –
அவன் பிரதம கடாஷத்துக்கு யோக்யமாய்
அவனாலே தன விரோதியைப் போக்கிக் கொள்ளவும் யோக்யமாய்
ஜ்ஞானோத் போதகமான காலத்தைச் சொல்லுகிறார்
இவர் ஆச்சார்ய பிரதரானவர் –
சாமான்யமான சகல தர்மங்களையும் அனுஷ்டித்து அருளுவர்
ப்ராதஸ் சந்த்யையை உபாசியாமல் கண் வளர்ந்து அருளலாமோ -என்று கருத்து –
ப்ரவர்த்ததே –
மிகவும் வர்த்தியா நின்றது
இங்கு வர்த்தமானமாகச் சொல்லுகிறது
இந்த நல் விடிவே நித்யமாக வேணும் -என்கிறார்
கர்த்தவ்யம் தைவமாஹ் நிகம் –
எம்பெருமானாலே விதிக்கப் பட்ட நித்ய நைமித்திகமாய் இருக்கிற ஆஹ்நிமான சகல தர்மங்களையும் அனுஷ்டித்து அருள வேணும் ஆகையாலே –
உத்திஷ்ட-என்று
திருப் பள்ளி யுனர்த்தினார் ரிஷி –
கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவமாஹ் நிகம்-
——————————————————————————————————————————————————————————————-
இயம் ஸீதா மம ஸூதா சஹதர்ம சரீதவ
ப்ரதீச்ச சை நாம பத்ரம் தே பாணிம க்ருஷ்ணீஷ்வ பாணிநா –17-26-
அவதாரிகை –
பெருமாள் வில்லை முறித்துப் பாரதந்த்ர்யத்தோடே விநீதாராய் நிப்ருதராய் நிற்க
ஸ்ரீ ஜனக சக்ரவர்த்தி சிந்தார்ணவத்தில் நின்றும் கரை ஏறின ஹர்ஷாதி சயத்தாலும் –
பதி சம்யோக ஸூ லபம் வயோ த்ருஷ்ட்வா து மே பிதா சிந்தார்ணவ கத பாரம் நாஸ சாதாப்லவோ யதா -அயோத்யா -118-34-என்றபடி –
மிதுனச் சேர்த்தி கண்டு அல்லது நிற்க ஒண்ணாமையாலும்
சேர்க்கை தனக்குப் பரம உத்தேச்யம் ஆகையாலும்
கடக க்ருத்யம் முன்னாகச் செய்ய வேண்டுகையாலும்
பெருமாள் திருக்கையிலே பிராட்டியைக் கொடுத்து க்ருதக்ருத்யன் ஆகிறான்
இவன் புருஷகாரத்துக்கும் புருஷகாரம் ஆகிறான் இ றே –
இயம் ஸீதா –
சந்திர காந்தா நாம் ராம மதீவ ப்ரிய தர்சனம் ரூப ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-அயோத்யா -3-29-என்னும்படியான
வடிவு படைத்த நம் பக்கலில் எல்லாரும் வந்து விழுகிறார்கள் என்று உம்மைப் பார்த்து இறுமாந்து இராதே இவளையும் பாரீர் -என்கிறான்
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -சுந்தர -16-5-என்று வேறு விஷயம் இல்லாமையாலே உமக்குத் தருகிறேன் இத்தனை காணும் –
இவளுக்கு ஏற்றம் ஏது என்று திரு உள்ளமாகக் கொண்டு பிறப்பில் ஏற்றம் சொல்லுகிறான்
ஸீதா –
ஆபிஜாத்யத்தையும்
கர்ப்ப வாசம் பண்ணாத ஏற்றத்தையும் காட்டுகிறான் –
ஸீதா லாங்க லபத் ததி-அமரகோசம் –
ஸீதா –
பொற் கொடி போலே –
பொன் முளைப்பது பூமியில் இ றே
இவள் தான் ஹிரண்ய வர்ணை இ றே –
அழகோ நமக்குத் தேட்டம் –
ஆபி ஜாத்யம் வேண்டாவோ என்று கருத்தாகப் பிறப்பில் ஏற்றம் சொல்லுகிறான் –
மம ஸூ தா –
மிதிலாயம் ப்ரதீப்தாயாம ந மே கிஞ்சித் பிரதஹ்யதே -என்றவன் அபிமானிக்கப் பிறந்தவள் –
வள்ளி மருங்குல் என்தன் மடமான் -பெரிய திருமொழி -3-7-1-என்று தாயார் வை லஷண்யம் சொல்லுமா போலே –
பிறவாமையிலும் ஏற்றம் உண்டு
பிறப்பிலும் ஏற்றம் உண்டு
ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால் திரு மகள் போலே வளர்த்தேன் -பெரியாழ்வார் -3-8-4-என்கிறான்-
ஜநகா நாம் குலே கீர்த்தி மாஹரிஷ்யதி மே ஸூ தா-பால -66-22- என்றவாறே
பெருமாள் இப்படி வைலஷணயத்தில் குறையில்லை யானாலும் அது வன்றே நமக்குத் தேட்டம்
நாம் அதிகரித்த கார்யத்துக்கு சஹகாரியாக வேணுமே -என்ன
சஹதர்ம சரீதவ –
அதிலும் அனுஷ்டானத்திலும் முற்பாடை என்கிறான் –
மித்ர பாவேன சம்ப்ராபதம் ந த்யஜேயம் கதஞ்சன -யுத்த -18-33- என்றும்
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -யுத்த-18-34-என்று இ றே தேவர் வ்ரதம்
அதிலும்
பவேயம் சரணம் ஹி வ -சுந்தர -27-53-என்றும்
அலமேஷா பரித்ராதும் ராஷசீர் மஹதோ பயாத்-சுந்தர 27-36-என்றும்
பாபா நாம் வா சுபா நாம் வா வதாரஹாணாம் ப்லவங்கம் கார்யம் கருணமார்யேண ந கச்சின் ந அபராத்யதி -யுத்த -116-44-என்றும்
மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வாத்ராபராதாஸ் த்வயா
ரஷ நத்யா பவ நாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தம் ச விபீஷணம் சரணமித் யுக்திஷ மௌ ரஷத
ஸா நஸ் சாந்தர மஹா கஸ ஸ ஸூ சையது ஷாந்திச தவா கஸ்மி கீ -ஸ்ரீ குணரத்ன கோசம் -50-என்று
உம்மிலும் முற்பாடை -என்கிறான் –
இவர் ஸ்ரீ நந்தகோபர் திரு மகன் -கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த பெண்ணாளன் – போல் அன்றே
நாம் இதுக்குக் கடவோமோ
ஐயரும் ஆச்சியரும் வசிஷ்டாதிகளும் அன்றோ -என்ன
1-ப்ரதீச்ச -என்கிறான் –
அங்கீகரியும் -என்கிறான்
நின் தாள் நயந்திருந்த இவளை யுன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -பெரிய திருமொழி -2-7-1-என்கிறான்
புருஷார்த்தமாக வேணுமே
துல்ய சீல வயோ வருத்தி யானாலும் பிரயோஜனம் இல்லையே –
2-ப்ரதீச்ச -என்று
வரில் பொகடேன் கேடில் தேடேன் -என்று இராதே கொள்ளீர் –
இவள் இறையும் அகலகில்லேன் -என்று இருக்குமா போலே
நீரும் ந ஜீவேயம் ஷணமபி -சுந்தர -66-30- என்று இருக்க வேணும் காண் -என்கிறான்-
ஏ நாம –
வரும் திருவைக் காலாலே தள்ளாதே கொள்ளீர் –
பெருமாள் ஐயர் ஆகையோபாதி இசைந்து நின்றார்
இவனுக்கு அவ்வளவு போராதே
நாடு நகரம் அறிய நல்ல பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து -பெரியாழ்வார்-3-7-10-
தக்கவா கைப்பற்ற -பெரியாழ்வார் -3-8-6- ஆசைப் படுகிறான்-
1-பாணிம் க்ருஹ்ணீஷ்வ
வெள்ளி வளைக் கைப்பற்றச் -பெரியாழ்வார் -3-7-1-சொல்லுகிறான்
பாது காவல் வைக்கவும் பரிசற வாழவும் தேடுகிறான்
ஆழியான் என்தன் மகளைப் பண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடும் கொலோ
கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்துப்
பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்கும் கொலோ -பெரியாழ்வார் -3-8-7-
2- க்ருஹ்ணீஷ்வ –
கையைப் பிடிப்பீர்
யார் பிரயோஜனத்துக்கு யார் காத்து இருக்கிறார்
3- ஏ நாம் பாணிம் க்ருஹ்ணீஷ்வ –
இவ்வேப்பம் குடி நீரை இ றே நான் உம்மைக் குடிக்கச் சொல்லுகிறது
பால் குடிக்கக் கால் பிடிக்க வேண்டுவதே
பால் மொழியாள் -பெரியாழ்வார் -3-10-5-இ றே இவள் தான்
மதுரா மதுரா லாபா -சுந்தர -66-15-என்று சொல்லப் பட்டவள் அன்றோ-
பத்ரம் தே –
சேர்த்தி தான் கண்டவாறே மங்களா சாசனம் பண்ணுகிறான்
இவ்விஷயத்துக்கு பெண் பெற்றுக் கொடுத்தார் எல்லாருக்கும் திருப் பல்லாண்டு பாட வேண்டும் போலே காணும்
நன்று நன்று ந றையூரர்க்கே-பெரிய திருமொழி -8-2-2- பரகால நாயகி தாயாரும் பல்லாண்டு பாடினாரே –
இப்போது செய்ய வேண்டுவது என் என்ன
பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா
கையாலே கையைப் பிடியீர்
பிரணயாப ராதத்திலே -ப்ரணய கலஹத்தில்- தலையாலே காலை நெருக்குகிறீர்
இப்போது கையாலே கையைப் பிடியீர் என்கிறான் –
அஸ்மா ரோபண சமயத்தில் அம்மி மிதிக்கும் பொது -கையாலே காலைப் பிடிக்கிறீர்
இப்போது கையாலே கையைப் பிடியீர் என்கிறான் –
கைத்தலம் பற்றின அனந்தரம் கைப்பற்றித் தீ வலம் செய்யும் போது இ றே திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிப்பது
2- பாணி நா பாணிம் –
கையால் கையைப் பிடியீர் என்னாமல்
கையைக் கையால் பிடியீர் -என்றது
செம்மை யுடைய திருக் கைக்கு மேலே என் கை வைத்து என்னும்படி -நாச்சியார் -6-8/6-9-
போக்யதை கை விஞ்சி இருக்கையாலே .
உபய விபூதியும் ஒரு மூலையிலே அடங்கும்படி பெருத்த பஹூ ச்சாயை யுடைய தயரதன் பெற்ற மரகத மணித் தடமும் -திருவாய் -10-1-8-
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் -திரு நெடும் தாண்டகம் -13-என்கிறபடியே
ஸ்ரமஹரமாக அவகாஹிக்கும் படி நீர்மையும் போக்யதையும் விஞ்சி இ றே இருப்பது
சத்ரு ஹந்தாரம் பரிஷச்வஜே -ஆரண்ய -30-39-என்று
கரசாராக்னியால் உண்டான வெம்மையும் தணிந்து
பகவத் ச்வா தந்த்ர்யா ரூபமான வெம்மையும் தணிந்து
இப்படி சேதன ஈஸ்வரர் இருவருக்கும் ஒதுங்க நிழலாய் இ றே
வேய் போலும் எழில் தோளி-பெருமாள் திரு -9-4- யுடைய தோள் அழகு விஞ்சி இருப்பது
பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணி நா –
திருக்கையால் கைத்தலம் பற்றக் கனாக் கண்டு இருக்குமே இவளும்-
———————————————————————————————————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply