ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ
முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதௌ-அயோத்யா -53-31-
ந ச ஸீதா-உம்மைப் பிரிந்த ஸீதா தேவி பிழைக்க மாட்டாள்
த்வயா -உம்மோடு
ஹீநா -கூடி இருக்கப் பெறாதே
ந சாஹமபி-உம்மைப் பிரிந்த நானும் பிழைக்க மாட்டேன்
ராகவ -ரகு குலத்து உதித்தவரே
முஹூர்த்தம-சிறிது நேரமே உயிர் வாழ்வோம்
அபி ஜீவாவோ -ஒரு கால் பிழைத்தோம் ஆகில்
ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதௌ–ஜலான் மத்ஸ்யௌ இவ உத்த்ருதௌ- ஜலத்தில் இருந்து எடுக்கப் பட்ட மீன்கள் போலே
தேவரை ஒழிந்த வன்று பிராட்டியும் உளள் ஆகாள் –
அடியேனும் உளன் ஆகேன்
தேவரை ஒழிந்த அன்று முதலிலே ஜீவிக்குமது தான் இல்லை
அபி ஜீவாவா -யதி ஜீவாவா -ஒருகால் ஜீவித்தோம் ஆகில்
முஹூர்த்தம் -ஒரு ஷண காலம்
ஜலான் மத்ஸ்யா இவ -ஜலத்தைப் பிரிந்த மத்ஸ்யம் ஜீவிப்பது
அந்நீர் நசை அறும் அளவிறே-
அப்படியே நில் என்று சொன்ன வார்த்தை
உம்முடைய திரு உள்ளத்திலும் உண்டு என்று அறியும் அளவும் கான் நாங்கள் ஜீவிப்பது –
——————————————————————————————————————————————————————–
விஷயே தே மஹாராஜ ராமவ்யசந கர்சிதா
அபி வருஷா பரிமலா நாஸ் ஸ புஷ்பாங்குர கோரகா-அயோத்யா -59-4-
விஷயே தே மஹாராஜ -மகா ராஜரே உம்முடைய தேசத்தில்
ராமவ்யசந கர்சிதா -ராமனுக்கு நேர்ந்த துன்பத்தாலே வருந்துகின்ற
அபி வருஷா -பரிமலா நாஸ் ஸ புஷ்பாங்குர கோரகா-பூவோடும் முளையோடும் மொட்டோடும் கூடிய
மரங்களும் மிகவும் வாடின –
அவதாரிகை –
கங்கா பரிசரத்திலே பெருமாளை விட்டுத் தேறும் கொண்டு மீண்ட ஸூ மந்தரன்
சக்ரவர்த்தியைக் கிட்டிப் பெருமாள் உடைய விச்லேஷத்தில் பிறந்த விசேஷங்கள் பலவும் சொல்லி
உன் எல்லைக்கு உள் உண்டான ஸ்தாவரங்கள் அகப்பட பட்ட பாடு இது காண் -என்கிறான் –
1-விஷயே தே –
நாட்டாருடைய ராஜ்யத்துக்கும்
உன்னுடைய ராஜ்யத்துக்கும் உள்ள வாசி கேளாய்
1- விஷயே தே-
தஷிண கோசலமும் உத்தர கோசலமுமாய்
உன்னுடைய ரஷணத்திலே ஒதுங்கி எல்லாத் தோரணத்துக்கு உட்பட்ட நாடடங்க
3- விஷயே தே –
இஷ்வாகூ ணா மியம் பூமிஸ் ஸ சைல வன கா ந நா-கிஷ்கிந்தா -18-6- என்று
விளை நிலத்தோடும் -மலை நிலத்தோடும் -மாற நிலத்தோடும் வாசி அற-எனது -என்று -அபிமானித்து இருக்கும் படி உன் அபிமான விஷயமான இப்பரப்பில்
4- விஷயே –
நாடு நகரமும் -திருப் பல்லாண்டு -என்கிறபடியே
விசேஷஜ்ஞராயும் அவிசேஷஜ்ஞராயும்-
கர்ஷகராயும் பல போக்தாக்களாயும்-
உள்ள நாடு -இருந்ததே குடியாக –
யாருடைய நாடு என்னில்
5- தே -ப்ரஜாநாம் விநாயாதா நாத் ரஷணாத் பரணாத் அபி ஸ பிதா -ரகுவம்சம் -1-24- என்றும்
ஸ பிதா யஸ்து போஷக-என்றும் சொல்லுகிறபடியே பெற்ற பிதா பிரஜைகளை ரஷிக்குமா போலே
உன் வயிற்றிலே வைத்து ரசிக்கிற உன்னுடைய
6-தே-
ஸ்தாவரங்கள் அகப்பட க்ருதஜ்ஞராய் பஷபாதம் பண்ணும் படி புண்ய வானாய் இருக்கிற உன்னுடைய
7-தே –
ஹரி பாஹ்யாஸ்து பாஹ்லிகா-என்று பகவத் விமுகமான பாப தேசம் அன்றியிலே
பகவத் அபி முகமாம் படியான இத்தேசத்தை யுடைய உன்னுடைய –
இப்படி விஷயமாம் காட்டில் இப்படியாகைக்கு அடி என் என்னில்
1- மஹா ராஜா –
ராஜா வா ராஜமாத்ரோ வா -யுத்த -63-10 என்று சூத்திர வன்னியமாதல்
சாமந்தராதல் ஷத்ரிய ஜென்மமாய் வைத்துப் பெட்டைக் குடியாதல் ஆகை அன்றியிலே
தஸ்யேயம் ப்ருதிவீ சர்வா -என்றும்
ஏகாத பத்ரம் ஜகாத பிரபுத்வம் -ரகு வம்சம் -என்றும்
வார்யா பலக பர்யந்தாம புங்க்தமஹதீம் மஹீம் -பால -70-3- என்றும்
ஒரு முள் குத்து நிலம் ஆளுமா போலே இப்பரப்பு அடங்க ஈரக் கையாலே தடவி யடக்கி யாளுகிற
உன் மதிப்பான பெருமையாலே என்கிறது
2- மஹா ராஜா –
ரஞ்ஜ நாத் ராஜா -என்றும்
அநு ரக்த பிரஜா பிச்ச பிரஜாச்சா ப்யநு ரஞ்ஜதே -அயோத்யா -1-14- என்றும்
நாடு இருந்ததே குடியாக உமக்கு நற்படும்படி நீர் தான் நல்லீராய்
இப்படி உபய அநு ராகம் உண்டாம்படி நடத்துகிறவர் அல்லீரோ
ஆகையாலே என்கிறது –
அது என் பக்கல் க்ருதஜ்ஞதையாலே யாய் பெருமாள் பக்கல் பிராகாரம் இல்லையோ -என்னில்
1-ராம வ்யசந கர்சிதா –
பிரசச்ய து பிரச்ச தவ்யாம் சீதாம் தாம் ஹரி புங்கவ குணாபிராமம் ராமஞ்ச புனஸ் சிந்தா பரோ பவத் -சுந்தர -16-1-என்றும்
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை யுடையாய் -திருவாய் -8-1-8-என்றும் சொல்லுகிறபடியே
பெருமாளிடைய குணங்களில் அகப் பாட்டாலே -என்கிறது
2-ராம வ்யசந கர்சிதா –
எல்லாரோடும் வரையாதே பொருந்தும்படியான பெருமாளுக்கு இப்ப்ரவாசம் வருவதே என்று க்லேசித்தார்கள் –
3- ராம வ்யசந கர்சிதா –
எல்லோரையும் வாழ்விக்கிற பெருமாளுக்கு இதொரு வ்யசனம் வருவதே என்று
க்லேசத்தால் க்ருசங்கள் ஆயின-
இப்படி க்லேசித்தவர்கள் தான் யார் என்னில்
1-அபி வ்ருஷா-
அறிவுடைய சேதனர் அல்ல –
அறிவில்லாத மரங்கள் அகப்பட
2- அபி வ்ருஷா –
வ்ருஷா அபி வருஷங்களும் என்கிற உங்கார த்தாலே
தேவ திர்யக் மனுஷ்யர்களே யல்ல
ஸ்தாவரம் அகப்பட க்லேசித்தன -என்கிறது-
அவர்கள் தான் க்லேசித்த படி யுண்டோ என்னில்
சுக்ருசா வன நே வதா -என்று வன தேவதைகள் கூப்பிட்டன
அத்ய ஜன் கப்லான் நாகா -அயோத்யா -41-10-என்றும்
மருக்யச்ச தர்ப்பான்குற நர்வ்யபேஷா-ரகுவம்சம் -3-25-என்றும்
யானைகளும் மிருகங்களும் கவ்வின புல்லு கடைவாய் சோர நின்றன வென்று சொல்லிற்று இ ரே
இஹைவ நிதநம் யாமோ மகாப்ர ஸ்தான மேவ வா
ராமேண ரஹிதா நாம் து கிமர்த்தம் ஜீவிதம் ஹி ந-அயோத்யா -47-7- என்றும்
மனுஷ்யர்கள் க்லேசித்தார்கள்
அவ்வளவே அல்ல
மரங்களும் க்லேசித்தன -என்கிறது
கோடை தட்டி உலருதல்
பாரிலே தட்டி உலருதல்
செய்த மரங்கள் அன்றியிலே
தளிரும் முரியுமான பசு மரங்கள் அகப்பட உலர்ந்தன-
நீர் இல்லாமல் உலர்ந்தனவோ என்னில்
1-வ்ருஷா அபி பரிம்லாநா-
வ்ருஷ சேஸநே -வ்ருஷ தாது நீர் தெளித்தல் பெயரால்
ஆகையாலே சிக்தங்களாய் பத்தியிலே நிரம்ப நீர் நிற்கச் செய்தே உலர்ந்தன –
2-பரிம்லாநா-
தறிகை இட்டு வெட்டுண்ட மரங்கள் அடி அற்றால் வாடுமா போலே வாடின
3- பரிம்லாநா–
இப்போது இவ் விஸ்லேஷ க்லேசத்தால் செருக்கு வாடிற்று அத்தனை போக்கி
ஏதி ஜீவநதமா நந்தோ நரம் வர்ஷச தாதபி -சுந்தர -34-6/யுத்த 129-2-என்று
உயிர் கிடந்தால் என்று கூடியும் நன்மை வரும் என்கிற பிரசித்தியாலே
பெருமாள் பதினாலு ஆண்டு கழிந்தால் வருவர் என்னும் நசையாலே கருகிற்றன இல்லை
4-பரிம்லாநா-
சாகைகளிலே அக்ர பிரதேசமாய் இளசாம் கொழுந்துகள் வாடுகை அன்றிலே
5-பரிதோம் லா நா –
மரங்களில் அடிப் பணை யோடு –
தலைப் பணை யோடு -கொம்புகளில் அடியோடு தலையோடு
முத்தல் இலையோடு இளசிலையோடு வாசி அற எங்கும் உலர்ந்தன –
வெறும் இலைகளேயோ வாடிற்று என் என்னில்
1-ஸ புஷ் பாங்குர கோரகா-
பூக்களோடு குருத்துக்களோடு அரும்புகளோடு வாசி அற எல்லாம் சோர்ந்தன –
2-ஸ புஷ் பாங்குர கோரகா-
புஷ்பம் ஆகிறது மலர்ந்த பூ
அங்குரம் ஆகிறது முகிழ்
கோரகம் ஆகிறது கரு மொட்டு
இவை அடங்க உலர்ந்தன
3-ஸ புஷ் பாங்குர கோரகா-வ்ருஷா அபி ராம வ்யசந கர்சிதா பரிம்லாநா
ஸ புத்ர பௌத்ரரான மனிதர் உடம்பு மெலிந்து முகம் வாடினால் போலே
மரம்களோடு பூக்களோடு செருந்துகளோடு சாகைகளோடு சாகிகளோடு வாசி அற
கொழுவியவாய்ப் பருத்துச் செய்வீசுமான மரங்கள் அடைய நோகி உலறுவதும் செய்தன
விஷயே வ்ருஷா பரிம்லா நா –
உன் எல்லைக்குள் பிரமதாவ நோத்யா நா ராம ரூபமாய்
இறைத்து வளர்த்த படை வீடு சூழ்ந்த மரங்களோடு
பறட்டைகளாய் காட்டிலே தானே முளைத்து வளர்ந்த எல்லை நிலத்தில் மரங்களோடு வாசி அற எங்கும் உலர்ந்தன -என்றாகவுமாம்-
———————————————————————————————————————————————————————–
ஆசசஷே அத சத்பாவம் லஷ்மணஸ்ய மஹாத்மந
பரதாயா ப்ரமேயாய குஹோ கஹ ந கோசர -அயோத்யா -86-1-
ஆசசஷே அத -அத ஆசசஷே -அதற்குப் பின் சொன்னார்
சத்பாவம் லஷ்மணஸ்ய மஹாத்மந-மஹா புருஷனான லஷ்மணன் உடைய நன்னடத்தையை
பரதாயா ப்ரமேயாய -அப்ரமேயாய பரதாய -அளவிட ஒண்ணாதவரான பரதனுக்கு
குஹோ கஹ ந கோசர-காட்டில் வசிக்கிற குஹன்-
அவதாரிகை –
ஸ்ரீ பரத ஆழ்வான் வாரா நின்றான் என்று ஸ்ரீ குஹப் பெருமாள் கேட்ட அநந்தரம்
இளைய பெருமாள் செய்தததை எல்லாம் சொல்லத் தொடங்கினார் –
வந்த போது செய்யும் படி சொல்லுகிறது என்-ஓடம் நின்றதே கோல் இருந்ததே –
தானும் தன பரிகரமும் அக்கரைப் படும்படி காண்கிறேன் -என்று ஆக்ரஹ சித்தனாய் இருந்தான்
அநந்தரம் ஸூ மந்தரன் உள்ளிட்டார் வந்து -இளைய பெருமாள் ஸ்வ பாவம் போலே காண் பரத ஆழ்வான் உடைய ஸ்வ பாவம் இருப்பது
அவனை நீ காண வேணும் காண் -என்ன -இவனும் போய் கண்ட அநந்தரம்
இவனுடைய ஸ்வ பாவம் இருந்தபடி என் என்று ஆச்சர்யப் பட்டு
இவனுக்கு நம்மால் கொடுக்கலாம் உபஹாரம் என் என்று பார்த்து
இவனுக்கு சத்ருசமான உபஹாரம் இளைய பெருமாள் ஸ்வ பாவங்களாம் இத்தனை -என்று அவற்றைச் சொல்லத் தொடங்கினான் –
ஆசசஷே அத சத்பாவம் –
சத்பாவம் ஆகிறது சத்துக்களுடைய ஆசாரம் –
சச்சப்தஸ் சாது வாசக -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-11-3-என்றும்
சாதவ ஷீண தோஷாஸ்து-ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-11-3-என்றும் சொல்லுகிறபடியே
சத்துக்கள் ஆவார் ஷீண தோஷர் இ றே-பாவம் -ஆசாரம் –
ஒருவன் அர்த்தாவான் அபிஜாதன் வித்வான் என்று அறிவது அவர்கள் அனுஷ்டானம் கொண்டு இ றே
அப்படியே இ றே இவனுடைய அனுஷ்டானமும்
பெருமாள் கண் வளர்ந்து அருளுகைக்கு பூக்கள் அறுப்பது படுக்கை படுப்பது
தாமரை இலையைப் பறித்துத் தண்ணீரை முகந்து திருவடி விளக்குவது
பின்னையும் தண்ணீரை முகந்து அமுது செய்யப் பண்ணுவது
சேஷித்தத்தை பிராட்டியை அமுது செய்யப் பண்ணுவது
கண் வளர்ந்து அருளப் பண்ணிக் கையும் வில்லுமாய்க் கொண்டு
நம்மையும் கூட அசிர்த்து நோக்குவதாய்காணும் அவருடைய ஆசாரம் இருந்தபடி -என்று வ்ருத்தாந்தத்தைச் சொல்லத் துடங்கினார்-
1-லஷ்மணஸ்ய மஹாத்மந
கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினார்
2-லஷ்மணஸ்ய மஹாத்மந சத்பாவம் அப்ரமேயாய பரதாய ஆசசசேஷ-
கழியின் பெருமையை கடலுக்குச் சொல்லத் தொடங்கினார்
பரதாயா ப்ரமேயாய குஹோ கஹ ந கோசர –
3- பரதாய அப்ரமேயாய ஆசசசேஷ-
சேஷ பூதனால் -நான் பணி செய்யக் கடவேன் -என்று சொல்லியோ பணி செய்வது –
அது கிடக்க
அஹம் சர்வம் கரிஷ்யாமி -சொல்லிற்று எல்லாம் செய்யக் கடவேன் என்று பிரதிஜ்ஞை பண்ணி
ராஜ்யத்தில் இரீர் என்ன
மாட்டேன் என்று பின் போகை சேஷத்வ க்ருத்யமோ –
நெருப்பிலே புகச் சொன்னார் ஆகில் அத்தைச் செய்தல்
அதில் நன்றாம்படி யான ராஜ்யத்தில் இருக்கச் சொன்னார் ஆகில் அத்தைச் செய்தல்
பின் போகச் சொன்னார் ஆகில் அத்தைச் செய்தல்
இப்படி சொல்லிற்று செய்கை அன்றோ சேஷத்வ க்ருத்யம் –
———————————————————————————————————————————————————————————
ஸூபகச் சித்ரகூடோ அசௌ கிரி ராஜோபமோ கிரி
யஸ்மின் வஸதி காகுத்ஸ்த குபேர இவ நந்த நே –அயோத்யா -91-12-
ஸூபகச் -பெருமை பெற்றதாய் உள்ளது
சித்ரகூடோ அசௌ கிரி -சித்ரா கூடம் என்னும் இந்த மலை
ராஜோபமோ கிரி-திருமால் இரும் சோலை மலையை உபமானமாகக் கொண்டதாய்
யஸ்மின் வஸதி -எந்தப் பர்வதத்தில் வாழ்கின்றாரோ
காகுத்ஸ்த -ககுஸ்த வம்சத்தில் உதித்த ஸ்ரீ ராமன்
குபேர இவ நந்த நே-நந்தனம் என்கிற இந்த்ரன் உடைய உத்தியான வனத்திலே குபேரன் வாழ்வது போலே-
அவதாரிகை –
இஷ்வாகூ ணாம் இயம் பூமி ஸ சைல வன காநநா -கிஷ்கிந்தா -18-6-என்று
நாடு நகரமும் காடும் மலையுமான இஷ்வாக்குகள் உடைய
ராஜ்யத்துக்குள் பெருமாள் எழுந்து அருளி இருக்கையால் வீறு பெற்றது திருச் சித்ரா கூடம் -என்கிறது –
ஸூபகச் –
அல்லாத இடங்களைப் பற்ற வீறுடைத்தாய் இருக்கை-
எல்லாரும் விரும்பும்படியாய் இருக்கை
அப்படிக்குப் பெருமாள் எழுந்து அருளி இருக்கையாலே
படைவீடு இருந்ததே குடியாக வந்து படுகாடு கிடந்தது இ றே-
எழுந்து அருளி இருக்கையால் உண்டான வைலஷ்ண்யம் ஒன்றுமேயோ உள்ளது என்ன –
1-சித்ரகூட –
தேச ஸ்வ பாவம் தன்னால் விலஷணம் -என்கிறது
2- சித்ரகூட –
ரமணீயோ ஹ்யயம் தேச -என்று திரு அயோத்யையில் நின்றும் இலங்கை ஏற எழுந்து அருளுகிற பெரிய பெருமாள்
ஸ்ரீ ரெங்க ஷேத்ரத்தின் உடைய போக்யதையாலே அங்கே பதி கொண்டால் போலே –
திரு அயோத்யையில் நின்றும் இலங்கை ஏற எழுந்து அருளுவதாக
ஜகாம சாஸ்ரமாம் ஸ்தேஷாம் பர்யாயேண தபஸ்வி நாம்-ஆரண்ய -11-24- என்று
வளைய வளைய ஆஸ்ரமங்கள் தோறும் தட்டித் திரிகிற பெருமாளும்
இவ்விடத்திலே பிராட்டியும் தாமும் இனிது அமரும்படி இ றே இத் தேசத்தின் உடைய போக்யதை –
3- சித்ரகூட –
நாநா விதமான தாதுக்களாலும்
நாநா விதமான ரத்னங்களாலும்
நாநா விதமான கொடி முடிகளாலும்
திரு உள்ளம் பிணிப்பு உண்ணும் படி ஆச்சர்யமாய் இருக்கை –
இப்படி விசித்ரமான வர்ண கூட சாலைகளை உடைத்தாய் அன்றோ திரு அயோத்யையும் இருப்பது –
அத்தையோ சொல்லுகிறது என்ன –
அசௌ கிரி –
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல்லென்று ஒழிந்தன கொல்-பெரிய திருவந்தாதி -68-என்று
கை விட்டுப் போந்தவை போலேயோ
உகந்து இனிதுறை கோயில் -பெரிய திருமொழி -3-9-7-என்கிறபடியே அவன் உகந்து வர்த்திக்கிற இம்மலை –
என்போலே என்னில்
ராஜோபமோ கிரி-கிரி ராஜோபம-
பெருமாளும் பிராட்டியும் சேர எழுந்து அருளி இருக்கையாலே -திருமால் இரும் சோலை என்று
அழகரும் நாச்சியாரும் எழுந்து அருளி இருக்கிற திருமலையோடு ஒப்புச் சொலலாய் இருந்தது –
இப்படி இம்மலைக்கு ஏற்றம் என் என்ன
யஸ்மின் வஸதி காகுத்ஸ்த –
பிறந்து படைத்துப் பொகட்டுப் போன மதுரை போலும் அன்றியிலே
யாதொரு மலையிலே -திருமால் இரும் சோலை நாங்கள் குன்றம் கை விடான் -திருவாய் -10-8-4-என்கிறபடியே
விடாதே எழுந்து அருளி இருக்கிறார்
இப்படி இருக்கிறவர் தாம் யார் என்னில்
2- காகுத்ஸ்த-
இக்குலமாக உத்தரிக்கும் படியான பெருமையை உடைய பெருமாள் -என்கிறது –
3- காகுத்ஸ்த யஸ்மின் வஸதி-
ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்து
திரு அயோத்யையிலே எழுந்து அருளி இருக்கிற பெருமாள்
யாதொரு மலையிலே எழுந்து அருளி இருக்கிறார் –
4- காகுத்ஸ்த யஸ்மின் வஸதி-
இம்மலையின் மீதே எழுந்து அருளி இருக்கிற போதே
இககுலத்துக்கு கூடஸ்தனாய் இருப்பான் ஒருராஜா வானவன்
இந்த்ரன் ருஷபமாய் இருக்க அதின் கழுத்திலே நின்றாப் போலே இருந்தது –
5- காகுத்ஸ்த யஸ்மின் வஸதி-
பரன் சென்று சேர் திருவேங்கடம் -திருவாய் -3-3-8-என்கிறபடியே
சர்வாதிக வஸ்து இனிது அமர்ந்து அருளுகிற இடம் இ றே-
இப்படி இம்மலையிலே எழுந்து அருளி இருக்கிற இது
வனவாச மர்யாதை யாலேயாய் க்லேசாத்மகமாய் இருக்குமோ என்னில்
குபேர இவ நந்த நே –
தநபதியான வைஸ்ரவணன் தன் செருக்காலே ஸ்வர்க்க லோகத்தில் இந்திர உத்யோனமான நந்தவனத்திலே இருந்தாப் போலே இருந்தது –
குபேரனுடைய தோப்பு சைத்ரரதம் அன்றோ
நந்தவனத்தை சொல்லுவான் என் என்னில்
அயோத்யா பரிசரமான தோப்புக்களை விட்டுச் சித்ரகூட பரிசரமான
தேனமரும் பொழில் சாரலிலே எழுந்து அருளி இருந்த போது
வைஸ்ரவணன் ஸ்வ அசாதாரணமான சைத்ரதத்தை விட்டு
இந்திர உத்யானமான நந்தவனத்திலே இருந்தாப் போலே இருந்தது –
இத்தால்
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமிப் பரப்புக்குள்
அவன் உகந்து அருளின திவ்ய தேசமே
உத்தேச்யம் -என்கிறது –
————————————————————————————————————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply