பாவஜ்ஞேந க்ருதஜ்ஞேந தர்மஜ்ஞேந ஸ லஷ்மண
த்வயா புத்ரேண தர்மாத்மா ந சம்வ்ருத்த பிதா மம–ஆரண்ய -16-29-
பாவஜ்ஞேந -நினைவை அறிந்தவனாய்
க்ருதஜ்ஞேந -தந்தை ராமனுக்குச் செய்தவற்றை அறிந்தவனாய்
தர்மஜ்ஞேந –
சேஷத்வ தர்மத்தை அறிந்தவனாய்
ஸ லஷ்மண-
த்வயா -உன்னாலே
புத்ரேண -நரகத்தில் இருந்து ரஷிக்கும் புத்ரனான
தர்மாத்மா -மஹா தார்மிகரான
ந சம்வ்ருத்த பிதா மம–எனக்கு தந்தையார் இறந்து போக வில்லை –
அவதாரிகை –
ஸ்வயம் து ருசிரே தே சே க்ரியதாம் இதி மாம் வத-ஆரண்ய -15-7-என்று சொல்லுகிறவர் இ றே இளைய பெருமாள்
இப்படிச் செய்ய வல்ல நீர் நம்மைக் கேட்டது என் -என்கிறார்
பர்ண சாலையைச் சமைத்த அநந்தரம் சொல்லுகிற வார்த்தை இ றே –
பாவஜ்ஞேந –
அல்லாதவை சொன்னாலும்
தாமும் பிராட்டியுமாய் ஏகாந்தமாய் இருக்கும் இடங்கள்
சமைக்கும் படி இளைய பெருமாளுக்கு பெருமாள் அருளிச் செய்யார் இ றே
நெஞ்சாலே நினைக்கும் அத்தனை இ றே
இந்நினைவு அறிந்து செய்தார் –
க்ருதஜ்ஞேந –
அதுவே அன்றிக்கே -செய்து போரும்படி அறிந்து செய்தார்
அறுபதினாயிரம் ஆண்டு ஜீவித்த சக்ரவர்த்தி நெடு நாள் மலடு நின்று பிள்ளை பெற்றவன் ஆகையாலே
இவர் என் நினைத்து இருக்கிறாரோ என்று நினைவை ஆராய்ந்தும்
இவர்க்கு எத்தாலே என்ன குறை வருகிறதோ என்று பொருந்தும் இடங்கள் பார்த்தும்
அவன் செய்து போரும் அடைவு அறிவார் ஆயிற்று –
தர்மஜ்ஞேந –
நினைவு அறிந்தாலும்
செய்து போரும் அடைவு அறிந்தாலும்
தானும் ராஜ புத்ரனான பின்பு -எனக்கும் ஓர் இருப்பிடம் வேண்டாவோ -என்று இருக்குமவனுக்கு
இது செய்ய ஒண்ணாது இ றே
அங்கன் அன்றிக்கே
அத்தலையிலே தாதர்யத்தமே நமக்கு ஸ்வ ரூபமான பின்பு
பின்னை அத்தலைக்கு உறுப்பாக செய்து போருமதே நமக்கு வகுத்தது என்று
அத்தலைக்கு செய்யும் அத்தையே தமக்கு கர்த்தவ்யம் என்று இருப்பர்-
ஸ லஷ்மண த்வயா –
தாம் உள்ளவன்று தாம் உளராய்
தாம் போன வந்ற்றைக்கும் உம்மை வைத்துப் போனாரே -என்கிறார் –
புத்ரேண –
புத-என்று ஒரு நரக விசேஷமாய் அதில் புகாதபடி நோக்கும் என்று ஆயிற்று புத்ரன் என்று பேராகிறது-
ஐயருக்கு நம்முடைய அபிமதி சித்தி இன்றிக்கே ஒழிகை –
தனக்கு மேற்பட நிரயம் இல்லை இ றே
அவர்க்கு அது வாராதபடி நோக்குகிறீர் நீர் இ றே-
தர்மாத்மா –
சக்ரவர்த்தி பிரச்துதன் ஆனவாறே நம் ஐயரை ஒப்பார் உண்டோ
அவரும் ஒருவரே
தாம் இருந்த நாள் நாம் வேண்டுவன எனக்குச் செய்து
தாம் போன அன்று நமக்கு வேண்டுவன செய்கைக்கு உம்மைப் பெற்றுத் தண்ணீர் பந்தல் வைத்துப் போவதே –
மம-
இருவருக்கும் பிதாவானமாய் ஒத்து இருக்கச் செய்தே
மம -என்கிறார் ஆயிற்று
அவர் நமக்குச் செய்யுமத்தை நீர் இருந்து செய்கையாலே நாம் அவரை இழந்திலோம்-நீர் இழந்தீர் ஆகில் இத்தனை இ றே –
——————————————————————————————————————————————————————-
தருணௌ ரூபசம்பன்னௌ ஸூகுமாரௌ மஹாபலௌ
புண்டரீக விசாலாஷௌ சீரக்ருஷ்ணாஜிநாம் பரௌ–ஆரண்ய -19-14-
தருணௌ -வாலிபர்களாய்
ரூப சம்பன்னௌ -அழகு நிறைந்தவர்களாய்
ஸூகுமாரௌ -மிகவும் மிருதுவான தன்மையை யுடையவர்களாய்
மஹாபலௌ-பெரிய பலத்தை யுடையவர்களாய்
புண்டரீக விசாலாஷௌ-தாமரை போல் பரந்த கண்களை யுடையவர்களாய்
சீரக்ருஷ்ணாஜிநாம் பரௌ-மரவுரியையும் மான் தோலையும் உடுப்பாக யுடையவர்களாய் –
ராம லஷ்மணர்கள் இருக்கிறார்கள் –
அவதாரிகை –
ஸ ஹி தேவை ருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி
-அர்த்திதோ மா நுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு ஸ நாதன-அயோத்யா -1-7-என்கிறபடியே
தச கண்ட குண்டித சக்திகளான தேவர்கள் ராஷசர்கள் உடைய ரஜஸ் ஸைப் போக்கும்படி
ரஜோ தூஸரமான வடிவுகளும்
ராஷச ஸ்திரீகள் மாங்கல்யங்கள் வாங்கும்படி கழுத்திலே கட்டின கப்படங்களும் -தோற்றவர்கள் கழுத்தில் அணியும் சக்கரங்கள் –
ராவண பந்தி க்ருதைகளான தங்கள் ஸ்திரீகளுடைய விரித்த தலை
விமுக்த்த கேச்யோ துக்கார்த்தா -யுத்த -115-2-என்று ராஷசிகள் தலையிலே யாம்படி தாங்கள் விரித்த தலை மயிரும்
ஹா புத்ரேதி ஸ வாதிந்யோ ஹா நாதேதி ஸ சர்வச -யுத்த -113-9-என்கிறபடியே
அவர்கள் முகங்களிலே விலாபாஷாரங்களாம்படி தங்கள் முகங்களிலே ஸ் புரிச்கிற சரணஷா ரங்களும்
உத்த்ருத்ய சபு ஜௌகாசித் -யுத்த -113-9-என்கிறபடியே
அவர்கள் கையெடுத்துக் கூப்பிடும்படி தாங்கள் கொடுத்த அஞ்சலி புடங்களும்
ஸ்நாபயந்தீ முகம் பாஷ்பைஸ் துஷாரைரிவ பங்கஜம் -யுத்த 113-10-என்கிறபடியே
அவர்கள் கண்களிலே கண்ணீர் பாயும்படி தாங்கள் கண்ணும் கண்ணீருமாய்
தஸ்மின் நவசரே தேவா பௌலச்த்யோ பப்லுதா ஹரிம்
அபி ஜக்மூர் நிதாகார்த்தா சாயா வ்ருஷமிவாத் வகா -ரகுவம்சம் -10-5-என்றும்
சகோரா இவ சீதாம் ஸூம் சாதகா இவ தோயதம்
அத நா இவ தாதாரம தேவா ஜக்மூர் சனார்த்த நம – என்றும் சொல்லுகிறபடியே
அஸ்வத் ராந்தர் ஆனவர்கள் சாயா வ்ருஷத்தை சென்று சேருமா போலேயும்
சகோரங்கள் ஆனவை சரச் சந்த்ரனை அணுகுமா போலேயும்
சாதகங்கள் ஆனவை வர்ஷூக வலா ஹகங்களை சென்று கிட்டுமா போலேயும்
தரித்ரரானவர்கள் தாத்தாவைச் சென்று கிட்டுமா போலேயும்
ஸ்ரீ யபதியைச் சென்று கிட்டி
தம ப்ருவன் ஸூ ரா சர்வே சமபிஷ்டூய சநநதா-பால -15-17-என்று
ஸ்தவ ப்ரியனானவனை ஸ்தோத்ரம் பண்ணுவார்களாக தொடங்கி
சதைக ரூப ரூபாய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1- என்று அவிக்ருதரான தேவர்
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா -திருவாய் -7-5-2- என்கிறபடியே
அழிவுக்கிட்டு
த்ரிபாத் விபூதியிலே இருக்கக் கடவ தேவர்
சதுஷபாத்தாய் ஹிரண்யா ஷஷபணம் பண்ணிற்றும்
கேவலம் த்ரியக்த்வத்தாலே போராது என்று நரம் கலந்த சிங்கமாய் ஹிரண்ய நிரசனம் பண்ணிற்றும்
மஹதோ மஹீயான் -என்கிற வடிவைக் குறள் உருவாக்கி
அல்லி மலர் மகள் போக மயக்குகளை -திருவாய் -3-10-8-மறந்து ப்ரஹ்ம சாரியாய்
தத் யாந்ந ப்ரதிக்ருஹ்ணீயாத் ந ப்ரூயாத் கிஞ்சித ப்ரியம்
அபி ஜீவித ஹேதோர் வா ராம சத்ய பராக்ரம -சுந்தர -33-26-என்றும்
கோ சஹச்ர ப்ரதாதாரம் -யுத்த -21-8- என்றும்
அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப் புள் தனிப்பாகன் -திரு நெடு -6- என்றும் சொல்லுகிறபடியே
ப்ரஹ்மாத் யனேகா பதப்ரதரான தேவர்
மகாபலி பக்கலிலே பதத்ரயத்தை அர்த்தித்தும்
ப்ராஹ்மாணோஸ்ய முகம் ஆஸீத் பாஹூ ராஜன்ய க்ருத-புருஷ ஸூ க்தம் -என்று
ப்ரஹ்ம ஷத்ரங்களுக்கு உத்பாதகரான தேவர்
பித்ர்யமம் சமுபவீத லஷணம் மாத்ரு கஞ்ச தநு ரூர்ஜிதம் தத்த -ரகுவம்சம் -11-64- என்கிறபடியே
ஜமதக்நி ரேணுகைகள் பக்கலிலே ப்ரஹ்ம ஷத்ரியராய் வந்து தோன்றி இருப்பத்தொரு கால் துஷ்ட ஷத்ரியரைப் பரசுவுக்கு ப்ராதரசநம் ஆக்கிற்றும்
பக்தாநாம் -ஜிதேந்தே -என்றும்
வரத சகல மேதத் சமச்ரிதார்த்தம சகரத்த -ஸ்ரீ வர ஸ்தவம் -68-என்றும்
அடியோங்களுக்காக அன்றோ என்று ஸ்தோத்ரம் பண்ணி
சாபமா நய -யுத்த -21-22-என்று கையிலே ஆயுதம் எடுக்கும் படி
தங்களுடைய வஜ்ர பரசு தண்ட பாசாத்யா யுதங்களை பொகட்டும்
அவன் சாகரம் ஷோஷயாமி -யுத்த -21-22- என்னும்படி கண்ணீரைக் காட்டியும்
ஸூ கிரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -4-19-என்றும்
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -யுத்த -19-30-என்றும்
அவன் சரணம் புகும்படி தாங்கள் சரணம் புக்கும்
அஞ்ஜலிம் ப்ராங்முக க்ருத்வா -யுத்த -21-1-என்று அவன் அஞ்சலி பண்ணும்படி தாங்கள் அஞ்சலி பண்ணியும்
ப்ரஸீ தந்து பவந்தோ மே-ஆரண்ய -10-9- என்று அவன் ஸ்தோத்ரம் பண்ணும் படி தாங்கள் ஸ்தோத்ரம் பண்ணியும்
சர்வே சந்நதா-பால -15-17-என்று தமையனான இந்த்ரனும் முர்பாடநாம் படி திருவடிகளிலே நம்ரராய்
ந நமேயம் -யுத்த -36-11-என்று இருக்கிறவர்களை தலை அழித்துத் தர வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய
பரமகாருணிகனான சர்வேஸ்வரனும்-நித்ய அநபாயிநியான பிராட்டியும்
பிதரம் ரோசசயாமாச ததா தசரதம் ந்ருபம்-பால -15-21- என்றும்
ஜன்கச்ய குலே ஜாதா-பால -1-27- என்றும் சொல்லுகிறபடியே
தாம் தாசரதியாயும் அவள் ஜனககுல ஸூ ந்தரியாயும் திருவவதரித்து
இருவரும் இரண்டு இடத்திலுமாக வளர்ந்து அருளுகிற காலத்திலேயே
இம்மிதுனம் இப்படி அகல விருக்கப் பெறாது
இப்படி அகல விருந்த போது ரஷகர் ஆகாமை அன்றிக்கே
புரேவ மே சாருத தீம நிந்திதாம் திசந்தி ஸீதாம யதி நாதா மைதிலீம்
சதேவ கந்தர்வ மநுஷ்ய பன்னகம் ஜகத் சசைலம் பரிவர்த்தயாம் யஹம் -ஆரண்ய -64-78-என்றும்
குசலீ யதி காகுத்ஸ்த கிம் நு சாகர மேகலாம்
மஹீம் தஹதி காகுத்ஸ்த க்ருத்தஸ் தீவ்ரேண சஷூஷா-சுந்தர -36-13-என்றும்
உவர்கள் தங்களாலே ஜகத்துக்கு அழிவு வரும் என்றும் சேர்ந்த போது
ஆவாபயாம் கர்மாணி கர்த்தவ்யானி பிரஜாச் சோத்பாதயித வ்யா-என்றும்
உபேதம் சீதயா பூயச் சித்ரா சசினம் யதா -அயோத்ய -16-8- என்றும்
ஜகத்துக்கு மங்கள வஹமாய் இருக்கையாலும்
இம்மிதுனத்தை சேர்க்க வேணும் என்கிற அபிசந்தியாலும்
விநாசாய ஸ துஷ்க்ருதாம் -ஸ்ரீ கீதை -4-8-என்றும்
சம்பவாமி யுகே யுகே -ஸ்ரீ கீதை -4-6- என்றும்
யஜ்ஞ விக் நகரம் ஹன்யாம்-என்றும்
அவருடைய அவதார ரஹஸ்ய சங்கல்பத்தை அடி ஒற்றினவன் ஆகையாலும்
விச்வாமித்ர பகவான் ஆனவன் தசரத ரத்னாகரத்தைக் கிட்டி ராம ரத்னத்தை அபெஷிக்க
அவனும் வாத்சல்யத்தாலே மதி எல்லாம் உள் கலங்கி -திருவாய் -1-4-3- பெருமாளை உள்ளபடி அறியாதே
ஊந ஷொடச வர்ஷோ மே -பால -20-2- என்று இன்னம் பதினாறு பிராயம் நிரம்பிற்று இல்லை –
பால ஆஷோட சாத் வர்ஷாத் பௌ கண்டச்சேதி கீர்த்யதே -என்கிறபடியே
அப்ராப்த வ்யவஹாரராகையாலே தனித்து ஒரு கார்யத்துக்கு ஆள் அல்லர்
சதுரங்க பலைர்யுக்தம மயா ஸ சஹிதம் நய-பால -20-10- என்கிறபடியே
முது கண்ணாக என்னையும் கூட்டிப் போ -என்ன
விச்வாமித்ரனும்
இவர் பருவத்தின் சிறுமை கண்டோ நீ வார்த்தை சொல்லுகிறது –
சிருமையுன் வார்த்தையை மாவலி இடைச் சென்று கேள் -பெரியாழ்வார் -1-4-8-என்று முறித்தாய் ஆகில்
வசிஷ்டோபி மஹா தேஜோ யே செமே தபசி ஸ்திதா -பால -19-15-என்று
அறியுமவர்களாய் சந்நிஹிதருமாய் பலருமான இவர்களைக் கேட்க மாட்டாயோ என்று
ஈடேற்றி இசைவிக்க -இவனும் இசைந்து
ஸ புத்ரம் மூர்த ந்யுபாக்ராய ராஜா தசரத ப்ரியம்
ததௌ குசிக புத்ராயா ஸூ ப்ரீதே நாந்த ராதம நா -பால -22-3-என்று
இவனுக்கு இஷ்ட விநியோக அற்ஹமாய்
பிள்ளைகள் இருவரையும் கொடுக்க
அவனும் ராம லஷ்மனர்களைக் கொண்டு போய்க் கர்ம ஞானங்களாலே அவித்யையை நிரசிக்குமா போலே
அவர்களை இடுவித்து தாடகையை நிரசிப்பித்து
அநந்தரம்
அவித்யா சஞ்சிதமாய் புண்ய பாப ரூபமான உபயவித கர்மங்களையும் போலே
தாடக ஜநிதர்களான ஸூ பாஹூ மாரீசர்களையும் அளித்து
அது தன்னில்
உத்தர பூர்வாக யோராச லேஷ விநா சௌ -ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரம் -4-1-13-என்னுமா போலே
ஒருத்தனைக் கொன்று ஒருத்தனை அக
ஸ்ரீ யம் இச்சேத ஹூதாச நாத் -ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம் -என்றும்
ஜாத வேதோ மமாவஹா லஷ்மீம் -ஸ்ரீ ஸூ க்தம்-1- என்று
லஷ்மியைப் பெரும் போது அக்னி புரச்சரமாகப் பெற வேண்டுகையாலே
விச்வாமிதரேண சஹிதோ யஜ்ஞம் த்ரஷ்டும் சமாகத -அயோத்யா -118-44- என்று
ஜனகனுடைய யஜ்ஞ சமயத்திலே சென்று
அக்னி த்ரவ்யங்களைப் பாவித்து
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் -திரு நெடு -13-என்று சொல்லுகிறபடியே
ரௌ த்ரமான வில்லை அழைப்பித்து தேவதாந்திர ஸ்பர்சத்தாலே வண்ட அதினுடைய தோஷம் போம்படி திருக்கையிலே வாங்கி
குணாரோபணம் பண்ணி -நாண் ஏற்றி –
பங்க ஸூ ல்கையான பிராட்டியையும் கைப் பிடித்து மீண்டு வருகிற அளவில்
ராமத்வம் ஈரசு பட்டதோ என்று அதி குபிதனாய் வந்த பரசுராமனைக் கண்டு
புத்திர வத்சலனான சக்ரவர்த்தி சகிதனாய்
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி -யுத்த -18-34- எண்ணக் கடவ பெருமாள் தமக்கு அதி சங்கை பண்ணி
பாலா நாம் மம புத்ராணாம் அபயம் தாதும் அர்ஹசி-பால -75-6- என்று
பேர் வாசிக்கு பிணங்கி வந்தவன் ஆகையாலே பெருமாள் திரு நாமம் சொல்ல அஞ்சி சாதாரணமாக என் பிள்ளைகளுக்கு
அபார பிரதானம் பண்ண வேணும் என்று இரக்க
இவ்வார்த்தையைக் கேட்டு ப்ரவர்க்யம் போலே கிளர்ந்து எரிகிற இவனைக் கண்டு தனிய விடுவோம் என்று பார்த்து
வசிஷ்டாதி ரிஷிகளும்
தம் த்ருஷ்ட்வா பீமா சங்கா சம ஜ்வலந்தம் இவ பாவகம்
ருஷயோ ராம ராமேதி வசோ மதுரம ப்ருவன் -பால -74-21/22-என்கிறபடியே
உன்னை ஒழிய ராமாந்தரம் உண்டோ என்றுபெருமாளுடைய ராமத்வத்தையும் அவன் தலையிலே இரட்டிக்க மாட்டெறிந்து
நெருப்பிலே நீரைச் சொரிவாரைப் போலே குளிர வார்த்தை சொன்ன இடத்திலும்
அவன் ஜானதக்நி யாகையாலே -ஜமதக்னி புத்திரன் -ஆறாத நெருப்பு -இரண்டு அர்த்தங்கள் -ஆறாமையாலே-
பெருமாளும் இவன் கையிலே இந்தக் காஷ்டம் -கட்டை -வில் குச்சி -விறகு -இரண்டு அர்த்தங்கள் –
இருக்கை யாலே இ றே இவன் எரிகிறது என்று பார்த்து
மேல் எழுந்த ஷத்ர தேஜஸ்ஸோடே -உயரக் கிளம்பின -வந்தேறியான -அத்தை வாங்கி
சஹஜமான ப்ராஹ்மாண்யமே சேஷிக்கும் படி பண்ணி
அஷயம் மது ஹந்தாரம் ஜா நாமி த்வாம் ஸூ ரோத்தமம்
தநுஷோ அஸ்ய பராமர்சாத் ஸ்வ ஸ்திதே அஸ்து பரந்தப-பால -76-17- என்று
அவனும் தன் ஸ்வாபாவிகமான ப்ராஹ்மண்யத்துக்கு ஈடாக ஸ்வஸதி சொல்ல -மங்களா சாசனம் பண்ண
தன்னுடைய வைஷ்ணவமான வில்லை வாங்குகையாலே
பெருமாளுடைய வைபவம் சர்வ லோக சித்தமாம் படி மழு ஏந்திப் -ஆணை இட்டு -மழு ஆயுதம் ஏந்தி -போக
பெருமாளும் -ப்ராஹ்மணோ சீதி பூஜ்யோ மே -பால -76-6-என்று இவன் ஸ்வ ஸ்தி சொல்லுகையாலே
பிராமணன் என்று அறுதி இட்டு
அறுகும்-தர்ப்பம் -தாளியையும் -கொடியையும் -பறித்து
இவன் காலிலே போகத்துக் கும்பிட்டு
மாரில் நூலே கடகாக விட்டு ரஷித்து
மீண்டு திரு அயோத்யையிலே புக்கு
இச்சரக்கு பெறுகைக்கு பட்ட வருத்தம் அறியுமவர் ஆகையால் இவள் சீர்மையை அறிந்து
ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் -பால -77-26-என்கிறபடியே
பெருமாளும் பிராட்டியும் இனிது அமர்ந்து எழுந்து அருளி இருக்கக் கண்ட ஸ்ரீ பூமிப் பிராட்டி யானவள்
லோக பாலோப மம நாத மகாமயத மேதி நீ -அயோத்யா -1-34/2-48-என்று தானும் நாச்சியாரோபாதி அம்ச பாகிநி யாகையாலும்
யதா து பார்க்கவோ ராமச் ததா சீத் தரணீ த்வியம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-143-என்று
தனக்கு வகுத்த பரசுராமாவதாரத்தின் உடைய தேஜஸ்ஸூம் இங்கே சங்க்ரமிக்கையாலும்
தன் கூற்றுக்கு ஒக்கப் பெருமாளை ஸ்வயம் வரமாக வரிக்க
ராஜாவும்
இது காந்தர்வமான விவாஹமாக ஒண்ணாது
சமந்தரமாகக் கரக் க்ரஹணம் பண்ணி வைக்க வேணும் -என்று பார்த்து
பௌரஜாநபத மந்த்ரி புரோஹிதர்களைத் திரட்டி மந்தரித்து
மந்திர யித்வா ததச்சக்ரே நிச்ச யஜ்ஞ ஸூ நிச்சயம்
ச்வ ஏவ புஷ்யோ பவிதா ச்வோ அபி ஷிஞ்சாமி நே ஸூ தம்
ராமம் ராஜீவதாம் ராஷம் யௌவராஜ்ய இதி பிரபு -அயோத்யா -4-3–என்கிறபடி
சம்பன்ன நஷத்ரமான பூசத்திலே பெருமாளை அபிஷேகம் பண்ணக் கடவது என்று நிச்சயித்து பண்ண –
ஸோ அஹம் விச்ரம் இச்சாமி -அயோத்யா -2-10- என்றும்
யௌராஜ்யேன சமயோக்து மைச்சத்-பால -1-21- என்றும்
நாட்டாரோடு ராஜாவோடு பண்ணின ஆசைப்பாடுகள் தாங்கள் பண்ணினது ஆகையாலே -எண்ணின வாறாக இக்கருமங்கள் -திருவாய் -10-6-3-என்கிற படியே –
அசத்ய சங்கல்பமாய்
ஆவாஹம் த்வஹம் இச்சாமி பிரதிஷ்டம் இஹ கா நநே -ஆரண்ய -5-34/7-14-என்றும்
தபஸ்வி நாம் ரணே சத்ருன் ஹந்தும் இச்சாமி ராஷசான் -ஆரண்ய -6-25-என்றும்
சத்யா சங்கல்பரானவர் தம்முடைய சங்கல்பமே சங்கல்பமாம் படி
கைகேயி மந்த்ர அந்தர்யாமியாய் நின்று கலக்கி
காட்டிலே எழுந்து அருளி தண்ட காரண்ய வாசிகளான பரம ரிஷிகளைக் காணும் போது
ரிக்த ஹஸ்தேன நோபேயாத் -என்கிறபடியே வெறும் கைக் கொண்டு காணலாகாது என்று பார்த்து
விராத வத புரஸ் சரமாகச் சென்று காண
அவர்களும் மகா ராஜரைப் போலே பெருமாளுடைய வீர்யத்திலே அதி சங்கை பண்ணிப் பரீஷித்துத் தெளிய வேண்டாதபடி விராதவதத்திலே த்ருஷ்ட உதாஹரணர் ஆகையாலே விநீதராய் வந்து
பரி பாலய நோ ராம வதயமா நான் நிசாசரை-ஆரண்ய -6-19-என்று எங்களை ரஷிக்க வேணும் என்று சரணம் புக –
பவதா மாத்த சித்த்யர்த்தமாக தோஹம்யத்ருச்சயா -ஆரண்ய -7-24- என்று ஓம் கொடுத்து
ஜாகாம சாஸ்ரமாம் ஸ்தேஷாம் பர்யாயேண தபஸ்வி நாம் -ஆரண்ய -11-24-என்கிறபடியே
சரபங்க ஸூ தீஷ்ண அகஸ்த்ய தத் பிராத்ரு பிரமுகரான ரிஷிகள் ஆஸ்ரமத்திலே பர்யாயேண எழுந்து அருளி இருக்கிற
பெருமாள் அகஸ்த்யர் உபதேசத்தாலே கோதாவரீ தீரமான பஞ்சவடி பரிசரத்திலே பர்ணசாலையும் சமைத்து
ச ராம பர்ணசாலா யாமாஸீநஸ் சஹ சீதயா
விரராஜ மஹாபா ஹூ ச்சித்ரயா சந்த்ரமா இவ –
லஷ்மணேன சஹ ப்ராதரா -ஆரண்ய -17-4-என்று
நாச்சியாரோடும் இளைய பெருமாளோடும்கூட இனிது அமர்ந்து எழுந்து அருளி இருக்கிற அளவிலே
தமதேசம் ராஷசீ காசிதா ஜகாம யத்ருச்சயா -சா து ஸூர்ப்பணகா நாம -ஆரண்ய -17-5-என்று
சூர்பணகை யாய் இருக்கிற ராஷசி யானவள் யாத்ருச்சிக ஸூ க்ருதம் அடியாக வந்து கிட்டி
ப்ராப்த விஷயமாய் இருக்கச் செய்தேயும் கடகனான ஓர் ஆச்சார்யன் அடியாக
விசேஷ ஜ்ஞானம் பிறவாமையாலே
புருஷகாரம் முன்னாக பற்றாத அளவன்றிக்கே அவ்விஷயத்திலே அசஹ்ய அபசாரத்தைப் பண்ணி
ந ஷமாமி -க்கு இலக்காக
இத யுக்தோ லஷ்மணஸ் தஸ்யா கருத்தோ ராமஸ்ய பசித
உத்த்ருத்ய கட்கம் சிச்சேத கர்ண நாசம் மஹா பல-ஆரண்யம் -18-21- என்றும்
கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காதிரண்டும் ஈரா விடுத்து -சிறிய திருமடல் -39-என்றும்
காதோடு கொடி மூக்கன்று உடன் அறுத்த கைத்தலத்தா -பெரிய திருமொழி -7-4-3- என்றும் சொல்லுகிறபடியே
தஷிண பாஹூ வான இளைய பெருமாளாலே தாம் கை தொடராய் வைரூப்யத்தை விளைப்பிக்க
விரூபணஞ்சாத்மநி சோணி தோஷிதா சசம்ச சர்வம் பகி நீ கரஸ்யசா -ஆரண்ய -18-26- என்று
வார்ந்த மூக்கும் வடிகிற உதிரமுமாய் தன் ப்ராதாவான காரனுக்கு அறிவிக்க அவனும் குபிதனாய்
வ்யக்தமாக்யாஹி கேன த்வமே வம்ரூபா விரூபிதா -ஆரண்ய -19-2-என்று
உன்னை இப்படிச் செய்தவர்கள் யார் என்று தெளியச் சொல் என்று கேட்க
அவர்களை இன்னார் என்று அடையாளம் தெரியச் சொல்லுகிறாள்
தருனௌ-என்று தொடங்கி-
புத்ரௌ தசரதஸ் யாஸ்தாம் ப்ராதரௌ ராம லஷ்மனு-ஆரண்ய -19-15-என்று
இன்னார் மகன் என்றும் இன்ன பேரை யுடையவன் என்றும் சொல்ல ப்ராப்தமாய் இருக்க
தருனௌ ரூபா சம்பன்னௌ-என்று பருவத்தை இட்டுச் சொல்லுவது
வடிவு அழகை இட்டுச் சொல்லுவது என் என்னில்
இவளுக்கு வைரூப்யம் பிறந்தது அத்தனை போக்கி வைராக்கியம் பிறந்தது இல்லைஇ றே-
ஆகையாலே காம மோஹிதா -ஆரண்ய -17-9- என்கிற தன் அபி நிவேசம் வடிவிட்டு ப்ராதாக்கள் முன்னென்று பாராதே தன்னுடைய ஹ்ருதகதத்தைச் சொல்லுகிறாள்
அனுகூலர் ஆகிலுமாம் பிரதிகூலர் ஆகிலுமாம் இவ்விஷயத்தில் அகப்பட்டவர்களுக்கு பணி இ றே இது –
யானி ராமஸ்ய சிஹ் நாநி -சுந்தர -35-3- என்று அடையாளம் தெரியச் சொல் -என்று பிராட்டி திருவடியைக் கேட்க
த்ரிஸ் ஸ்திரஸ் த்ரிப்ரலமபச்ச -சுந்தர -35-27- என்று சொல்லுவதற்கு முன்னே
ராம கமல பத்ராஷ சர்வ சத்வ மநோ ஹர -சுந்தர -35-8-என்று சொன்னான் இ றே –
இவை தனக்கு பிரயோஜக ரூப நாமங்கள் சொல்ல வென்றும் உண்டு இ றே
அதிலே ரூபாணி விசிதய தீர நாமா நி க்ருத்வா -புருஷ ஸூக்தம் -என்கிற கிராமத்திலே பிரதமபாவியான ரூபத்தை முற்படச் சொல்லுகிறாள் ஆகவுமாம்
அன்றியிலே
ஸூ ப்த ப்ரமத்த குபிதா நாம பாவ ஜ்ஞானம் த்ருஷ்டம் -என்று குபிதை யாகையாலே ஹ்ருத்கதார்த்தத்தை
அவசமாக தன்னையும் அறியாமல் வெளியிடுகிறாள் ஆகவுமாம்
இதிலே -ராமமிந்தீ வரச்யாமம கந்தர்ப்ப சத்ரு சப்ரபம்
ப்பூ வேந்த்ரோபமம் த்ருஷ்ட்வா ராஷசீ காம மோஹிதா -என்கிறபடியே
தான் அவரைக் கண்டு காமுகையாவதற்கு அடியாய் இருப்பதொரு ஆகர்ஷகமான ஆகாரமும்
தன் பரிபவத்தால் உண்டான கோபாதி சயத்தாலே
தயோஸ் தச்யாச்ச ருதிரம் பிபேயமஹம்-ஆரண்யம் -19-20-என்றும் சொல்லுகிறவள் ஆகையாலே
கோயமேவம் மஹா வீர்ய -ஆரண்ய -19-6-என்று இவர்களை அளவிட மாட்டாதே அருகிருக்கிற ப்ராதாவான கரனுக்கு
பலமூலா ஸி நௌ தாந்தௌ தாபசௌ தர்ம சாரினௌ-ஆரண்ய -19-15-என்று
அவர்கள் எளிமை சொல்லுகிறதோர் ஆகாரமும்
ராமஸ்ய ச மஹத் கர்ம மஹாம் சதரா ஸோ அபவந்மம-ஆரண்ய -21-10-என்று இவர்களுக்கு
அஞ்சினவள் ஆகையாலும் அவன் நெஞ்சில் எரிச்சல் பிறக்கைக்காகவும்
புத்த்யாஹ மநு பச்யாமி ந த்வம ராமஸ்ய சமப்ரதி
ஸ்தாதும் பரதிமுகே சக்தஸ் சசாபசைய மஹா ரணே -ஆரண்ய -21-16-என்று
கையும் வில்லுமாய் அவ்வாண் பிள்ளை புறப்பட்டால் நீயோ அவர் முன்னே நிற்கிறாய் என்று
அவர்களுடைய ஆண்மை சொல்லுவது ஆகாரமும்
ஆக ஆகாரத்ரயமும் விவஷிதம் –
வியாக்யானம் –
அதில் முற்பட ஆகர்ஷக ஆகாரத்தில் யோஜனை இருக்கிறபடி –
தருனௌ ரூப சம்பன்னௌ ஸூ குமாரௌ மஹா பலௌ
புண்டரீக விசாலா ஷௌ சீரச்ருஷிணாஜிநாம்பரௌ-
அவர்களுடைய
பருவம் இருக்கிறபடியும்
வடிவு அழகு இருக்கிறபடியும்
செயலிருக்கிறபடியும்
மிடுக்கு இருக்கிறபடியும்
கண் அழகு இருக்கிற படியும்
ஒப்பனை அழகு இருக்கிறபடியும்
அவர்கள் இருவருக்கும் உண்டு இத்தனை போக்கி -வேறு ஒருவருக்கும் இல்லை கான் -என்கிறாள் –
என்னை இது விளைத்த ஈரிடண்டு மால் வரைத் தோள் மன்னன் -பெரிய திரு மடல் -என்று
என்னை அகப்பட இப்படி யாக்கிற்று அந்த குண சமுதாயம் அன்றோ –
1-தருனௌ –
யுவா குமார -ருக் -2-8-25-என்றும்
ய பூர்வ்யாய வேதசே நவீயசே ஸூ மஜ்ஜா நயே விஷ்ணவே ததாசதி யவீயசே -யஜூ ஆ -2-4-3-29-என்றும்
அரும்பினை அலரை-பெரிய திருமொழி -7-10-1-என்றும்
வேத சித்தமான அர்த்தத்தை இவளொரு ராஷசி கையாட்சியாகச் சொல்ல்லுகிறாள் இ றே-
இது தான் ராஷசிகளுக்கு பணியாய்இருந்தது இ றே –
வ்யகதமேஷ மஹா யோகீ பரமாத்மா சநாதன
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர -யுத்த -114-14-என்றாள் இ றே மண்டோதரியும்
2-தருனௌ –
முக்தரானவர்களோடு பத்தரானவர்களோடு தசரத வாமதேவாதிகளோடு வாசி அற
கரியான் ஒரு காளை–பெரிய திருமொழி -3-7-1-என்றும்
கோவிந்தன் என்பானோர் காளை புகுதக் கனாக் கண்டேன் -நாச் திரு -6-2-என்றும்
பிரணயிநிகளை அகப்படுத்திக் கொள்ளுவது பருவத்தை இட்டே இ றே
அப்பருவத்தில் ஆயிற்று இவளும் ஈடுபட்டது
3-தருனௌ –
இவள் பத்த பாவை யாயிற்று பெருமாள் பக்கலிலே யாகில் வைரூப்யம் விளைந்தது இளைய பெருமாள் பக்கலிலே யாகில்
இரண்டு பஷத்திலும் ஒருத்தரே அமைந்திருக்க த்வி வசனமாக சொல்லுவான் என் என்னில்
அந்யோந்ய சதருசௌ வீரௌ-கிஷ்கிந்தா -3-12- என்று அழகுக்கும் ஆண் பிள்ளைத் தனத்துக்கும் ஒருவருக்கு ஒருவர் குறையாமையாலும்
க்ருததா ரோஸ்மிபவதி பார்யேயம் தயிதா மம-ஆரண்ய -18-2-என்றும்
ஸ்ரீ மா நக்ருத தாரச்ச லஷ்மணோ நாம வீர்ய வான்
அபூர்வ பார்யா ப்ரார்த்தீ ச தருண பிரிய தர்சன
ஏனம் பஜ விசாலாஷி பாத்தாரம-என்றும்
நான் க்ருத விவாஹனுமாய் ஸ்நிகத பார்யனுமாகையாலே உனக்கு யோக்யன் அல்லன்
இவன் அக்ருத விவாஹனுமாய் விவாஹம் பண வேணும் என்கிற ஆசையை யுடையனுமாய் இருக்கிறான்
ஆனபின்பு இவனை பர்த்தாவாக வரி -என்று பெருமாள் திரு உள்ளமாக
அவ்வழியாலே இளைய பெருமாள் பக்கலிலே இவள் பத்த பாவையாக
கதம் தாஸ ஸய மே தாஸீ பார்யா பவிது மர்ஹசி
ஆர்யச்ய த்வம் விசாலாஷி பார்யா பவ யவீ யஸீ-என்று
அவர் அடிமையான எனக்கு ஸ்திரீ யானால் நீயும் அடிமையாவாய் இத்தனை
அது ந நமேயம் து கஸ்ய சித் -வணங்கல் இலி வரக்கரான உங்களுக்கு சேராது
நாச்சியாராக வாழலாம் படி அவர் தமக்கு இளைய நங்கையாராகப் பாராய் -என்று இளைய பெருமாள் சொல்ல பெருமாள் பக்கலிலும் துவக்குண்டு இப்படி பத்த பாவை யாகையாலும்
வைரூப்ய கரணத்திலும் -விரூபயிதும் அர்ஹசி-ஆரண்ய -18-20-என்று பிரயோஜன கர்த்தாவாயும்
உத்தருத்ய கட்கம் சிச்சேத கர்ண நாசம மஹா பல-ஆரண்ய -18-21-என்று
இருவரையும் கூட்டாகச் சொல்லுகிறாள் ஆகையாலும்
இங்கு இருவரையும் ஒக்கச் சொல்லுகிறாள்
4-தருனௌ-
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் -என்னுமா போலே ஒருவர் இருவராய் வந்து அன்றோ என்னை ஈடழித்தது-
5- தருனௌ –
தம்பி தமயனானால் பர்வத்திலேயும் சிறிது வேறுபாடு காணலாம் இ றே
அப்படி அன்றியிலே ஒரு படியாய்க் காண்இருக்கிறது
புனர்பூசம் பூசமாய் பின்னாளும் முன்னாளும் ஆனால் அத்தனை வாசி தெரியாது இ றே –
இப்படி பருவத்தை யிட்டு மயக்கும் இத்தனையாய் வடிவு தன்னைப் பார்த்தால் போலியாய் இருக்குமோ என்னில்
1- ரூப சம்பன்னௌ-
ரூபத்தைப் பார்த்தால் அழகு வேண்டி இருப்பார்க்கு அவர்கள் பக்கலிலே இரந்து கொண்டு போக வேண்டும்படியாய்க் காண் கூடு பூரித்துக் கிடந்தபடி
2- ரூப சம்பன்னௌ –
காமனார் தாதை -பெரிய திருமொழி -1-1-3-என்று அந்த காமன் அகப்பட
அங்கா தங்காத் சம்பவசி -மந்திர பிரச்னம் -2-11-33-என்று இவர் திரு மேனியில்
ஏக தேசத்தில் உத்பன்னன் ஆகையால் அன்றோ அவ் வழகு தான் யுண்டாயிற்று
3- ரூப சம்பன்னௌ –
உத்பன்னம் த்ரவ்யம் ஷணம்நிர்க்குணம் திஷ்டதி -என்கிறபடியே முற்பட ஆஸ்ரயம் யுண்டாய் -அதிலே குணங்கள் யுண்டாகை அன்றிக்கே
ரூப தாஷிண்ய சம்பன்ன ப்ர ஸூதா -சுந்தர -35-8-என்கிறபடியே
ரூபத தாஸ்ரயங்கள் சஹ உத்பன்னங்களாய் காண் அவர்கள் பக்கல் இருக்கிறது –
4-ரூப சம்பன்னௌ-
வடிவுடை வானோர் தலைவனே -திருவாய் -7-2-10- என்றும்
அச்சோ ஒருவர் அழகிய வா -பெரிய திருமொழி -பெரிய திருமொழி -9-2-என்றும்
என் முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாய் -பெரிய திருமொழி -3-6-9-
காரார் திருமேனி கண்டதுவே காரணமா பேராப் பிதற்றாத் திரி தருவான் -சிறிய திருமடல் -என்றும்
ராமேதி ராமேதி சதைவ புத்த்யா விசிந்த்யா வாசா ப்ருவதீ -சுந்தர -32-11-என்று
பெண் பிறந்தாரைப் பிச்சேற்றி வாய் வெருவப் பண்ணும் வடிவு காண் அவரது
இவர்கள் இருவருடையவும் வடிவு அழகிலே காண் நான் உழலுகிறது –
இவ் வழகேயாய்-அணைத்துப் பார்த்தால் உறைத்து இருக்குமோ என்னில்
1- ஸூ குமாரௌ
முரட்டு ராஷசரான உங்களைப் போலே அன்று காண்-அவர்கள் மார்த்வம் இருக்கிறபடி –
பூவிலே அணைந்தால் போலே காண் இருப்பது –
திருஷ்டாந்தம் சொல்லுமவர்களும்
அதஸீ புஷ்ப சங்கா சம -பாரதம்-சாந்தி -46-118- என்றும்
ராமம் இந்தீவரச் யாமம் -ஆரண்யம் -17-9-என்றும்
பூவைப் பூ வண்ணா -என்றும்
காயம் பூ வண்ணா -என்றும் புஷ்பத்தை இட்டு இ ரே சொல்லிற்று
2- ஸூ குமாரௌ –
வடிவு இணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10-என்று பூவில் பரிமளத்தையும்
மண்ணில் பரிமளத்தையும் உபாதாநமாக யுடைய பிராட்டிமாரும் அகப்பட அணைக்கை அன்றிக்கே
அடுத்து அடுத்து பார்க்கவும் போராத -பொறாத -படியாய்க் காண் அவர்கள் மார்த்த்வம் இருக்கும் படி –
3- ஸூ குமாரௌ –
நடந்த கால்கள் நொந்தவோ -திருச் சந்த -61- என்றும்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல் இப்படிதான் நீண்டு தாவிய அசைவோ -என்றும்
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்-என்றும்
ஸ்வா பாவிகமான வியாபாரமாகப் படத் திரு மேனிக்குப் பொறாது என்று அனுகூலர் வயிறு பிடிக்கும் படியாய்க் காண அவர்கள் மார்த்த்வம் இருக்கும் படி –
4- ஸூ குமாரௌ –
திவ்யனான காமன் ஒருவன் இ றே
இவர்கள் பௌ மராய் இருப்பார் இரண்டு காமராய்க் காண தோற்றுகிறது-
5- ரூப சம்பன்னௌ ஸூ குமாரௌ –
அவன் அனங்க னாய் இ றே இருப்பது
கந்தர்ப்ப இவ மூர்த்தி மான் -சுந்தர -34-30- என்கிறபடியே
ரூபவான்களாய் காண இந்தக் காமர்கள் இருப்பது
ராம மன்மத சரேண தாடிதா துஸ் ஸ்ஹேந ஹ்ருதயே நிசாசரீ-ரகுவம்சம் -11-20-என்று
காமனாகவே பரிக்ரஹித்துச் சொன்னான் இ றே –
இப்படி எழிலும் அழகுமாய் தூரத்திலே அகப்படுத்தும் அளவேயாய்-கிட்டி அனுபவிக்கப் பார்த்தால்
உடல் கொடுக்க -ஆடல் கொடுக்க-சம்ச்லேஷிக்க – மாட்டாத துர்ப்பலராயோ இருப்பது -என்னில்
1-மஹா பலௌ-
வையாத்யத்தில் வந்தால் தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7–என்றும்
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளை-பெரிய திருமொழி -8-3-1-என்றும்
பெண் பிறந்தோர் தோற்று எழுதிக் கொடுக்கும் படியாய்க் காண் இருப்பது
2- மஹா பலௌ-
ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் -பால -77-26- என்றும்
மைந்தனை மலராள் மணவாளனை -திருவாய் -1-10-4- என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ருங்கா ரத்தில் வந்தால் அநேக ருதுக்களை ஒருபடிப்பட நடத்தா நின்றாலும்
எதிர்த்தலை அப்ரதானமாம் படி காண் அவர்கள் பிராபல்யம் இருக்கும் படி –
அன்றிக்கே
3- மஹா பலௌ –
காதல் கடல் புரையவிளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழி கடியனே -திருவாய் -5-3-4-என்கிறபடி
பருவத்தையும் வடிவு அழகையும் செவ்வியையும் இட்டுப்
பிறரை படுகுலைப் படுத்தித் துடிக்கும் படி பண்ணி பின்னை அவர்கள் நினைவில் ஓரடியும்
புகுராத படியாய்க் காண் அவர்கள் அத்யவசாய பிராபல்யம் இருக்கும் படி என்னவுமாம் –
ஆக இப்படி சமுதாய சோபையிலும்-அவயவ சோபை மட்டமாய் இருக்குமோ என்னில் –
1- புண்டரீக விசாலாஷௌ-
அது கண் அழகைத் தப்பினால் அன்றோ வேறொரு அவயவத்தில் இழிய ஓட்டுவது –
2- புண்டரீக விசாலாஷௌ-
அவை -யௌவனம் -வடிவழகு -மென்மை-பலம் – எல்லாம் கிட்டினால் அழிக்குமவை-
இனி இது அங்கன் அன்றிக்கே தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -திருவாய் -9-9-9-என்றும்
தாமரைக் கண்கள் கொண்டீர்தியாலோ -திருவாய் -10-3-1-என்றும்
தூரத்திலே தோற்றின போதே அழிக்கும் படியாய்க் காண் கண்கள் இருப்பது
3- புண்டரீக விசாலாஷௌ-
புண்டரீகம் சிதாம்போஜம் -அமர -1-10-41- இ ரே
சம்ரக்த நய நா கோரா -ஆரண்ய -20-12- என்று உங்களைப் போலே எரி விழியாய் இருக்கை அன்றிக்கே
ஸூ பிரசன்னத வளமான அக்கண்கள் இருந்தபடி காண்
4- புண்டரீக விசாலாஷௌ-
ரஷண உபயோகியான கரு விழியும் செவ்விழியும் கண் பரப்பும் –
தமோ குண உத்ரேகத்தால் நித்ராகஷாயிதம் ஆதல்
ரஜோ குண உத்ரேகத்தாலே கோப சம்ரக்தமாதல் அன்றிக்கே
சத்வ பிரசுரர் ஆகையாலே அவர்களுடைய த்ருஷ்டி பிரசாதமும் இருந்த படி காண் –
5-புண்டரீக விசாலாஷௌ-
அவர் தாம் ஆத்மானம் மானுஷம் மன்யே -யுத்தம் -120-11-என்று தம்மை மறந்தார் ஆகிலும்
யதா கப்யாசம் புண்டரீகமேவ மஷி ணீ-சாந்தோக்யம் -1-7- என்கிறபடியே
அகவாயில் கிடந்த பரத்வத்தைக் கோட் சொல்லித் தாரா நின்றது ஆய்த்தும் கண்கள் தான் –
6-புண்டரீக விசாலாஷௌ-
பாற் கடல் போலே அக்கண்களுக்கு உள்ள அகலம் ஒருவரால் கரை காண ஒண்ணாத படியாய்க் காண் கண்கள் இருப்பது –
7-புண்டரீக விசாலாஷௌ-
கண்ணில் யுண்டான தெளிவுக்கு புண்டரீகத்தை ஒரு போலி சொன்னோம் இத்தனை போக்கி
அகலத்தைப் பார்த்தால் கடலில் புக்கார் கரை காண மாட்டாதே மயங்குமா போலே
புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட வப் பெரிய வாய கண்கள் -என்னும் இத்தனை போக்கி வேறொரு பாசுரம் இட ஒண்ணாது காண் –
8-புண்டரீக விசாலாஷௌ-
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -7-1-9- என்றும்
தடம் கொள் தாமரைக் கண் விழித்து–இடம் கொள் மூவுலகும் தொழ இருந்து அருளாய் -திருவாய் -9-2-3- என்றும் சொல்லுகிறபடியே
பத்த முக்த நித்யாத்மகமாய்
த்ரிவித கோடியானஉபய விபூதியும் ஏக உத்தியோகத்திலே கடாஷிக்க வற்றாய் காண் கண்கள் இருப்பது
9-மஹா பலௌ புண்டரீக விசாலாஷௌ-
பலத்தைக் காட்டி அவர்களைத் தோற்பித்து-அவர்களை ஜிதந்தே புண்டரீகாஷா -ஜிதந்தே -1-1-என்றும்
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் கலைமகனை -திருவாய் -2-7-3-என்றும்
எழுதிக் கொள்வது கண் அழகை இட்டு இ றே-
10- மஹா பலௌ புண்டரீக விசாலாஷௌ-
அவர்கள் அளவிலே ஈடுபட்டவர்கள் நேராகக் கை வாங்க மாட்டாதே
அவலோக நாதா நேந பூயோ மாம் பாலய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-16- என்றும்
தாமரைக் கண்களால் நோக்காய் -திருவாய் -9-2-1-என்றும்
தெரிய நசை பண்ணிக் கால் கட்டும்படி பண்ணுவது இக்கண் களில் தண்ணளி காண் –
11- புண்டரீக விசாலாஷௌ-
ஸூ குமாரௌ -என்கிற பதத்தாலே காமர்கள் என்று சொல்லிற்று இ றே
ஆனால் புஷ்ப பாண ராக வேணுமே
அப்படிக்குக் கண்டது என் என்னில் -கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையம் தளர்ந்து நைவேனை -நாச் திரு -13-3-என்னும்படி -என்னை நிலை குலைத்த புஷ்ப பாணங்கள் இருக்கிறபடி காண் –
அவ்வவய சோபை மாத்ரத்தாலேயோ அகப்படுத்துவது -என்னில்
1-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
ஒப்பனை அழகாலும் அழிப்பார்கள் காண் அவர்கள் என்கிறாள்
2-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
செவ்வரத்த வுடையாடை அதன் மேல் ஓர் சிவளிக்கைக் கச்சு -பெரிய திரு -8-1-7-என்கிறபடியே
உள்ளுடுப்பது மரவுரி -மேல் சாத்துவது கலைத் தோலுமாயிற்று-இருப்பது
3-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
தாருண்யாதியான குண சமுதாயத்தை -யௌவனம் -வடிவழகு -மென்மை -பலம் -கண்ணழகு -என்னும்
சமுதாயத்தை பொதிந்த ஒரு கிழிச் சீரை இருந்த படி காண் –
4-தருனௌ-ரூப சம்பன்னௌ-ஸூ குமாரௌ -மஹா பலௌ-புண்டரீக விசாலாஷௌ சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
கிமவ ஹி மதுராணாம்மண்ட நம நாக்ருதீ நாம் -சாகுந்தலம் -1-19-என்கிறபடியே
வறை முறுகலான ரிஷிகளும் அகப்பட விக்ருதராம் படி இருக்கக் கடவ
அம்மரவுரியும் தோலும் அவர்கள் வடிவிலே சேர்ந்த படியாலே அழகு பெற்று இருந்தபடி -காண் –
5- சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ
ஏதேனுமாக அங்கே சாத்த அமையும் இ றே -ஆகர்ஷகமாகைக்கு
தாஸாமா விர பூச் சௌரி ஸ்மயமா நமுகாம்புஜ பீதாம் பரதர ச்ரக்வீ சாஷான் மன்மத மன்மத -ஸ்ரீ பாகவதம் -10-32-2- என்கிறபடியே
பீதக வாடை யுடை தாழ விருந்தாவனத்தே கண்டோமே -நாச் திரு -14-5-என்றும்
செய்யவுடையும் திருமுகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு -பெருமாள் திரு -6-7-என்றும்
பெண் பிறந்தார் வாய் புலர்த்தும் படியாய்க் காண் உடை அழகு இருப்பது
6-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு -திருப்பல்லாண்டு -9-என்று
ச்வரூபஜ்ஞர்ஆசைப்படுவதும்
பெருமான் அறையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே-நாச் திரு -13-1-என்று
போகபரர் ஆசைப்படுவதும் பரிவட்டத்தை இ றே –
7-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ–
ரூப சம்ஹ நநம் லஷ்மீம் சௌகுமார்யம் ஸூ வேஷதாம் தத்ரு ஸூர் விஸ்மிதாகாரா-ஆரண்ய -1-13- என்று
ஸ்வரூப த்யானபரரான ரிஷிகள் அகப்பட இவிக்ரஹ குணத்திலே உடை குலைப்படா நின்றார்கள்
கன்யா காமயதே ரூபம் -என்றும்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ -பெரிய திரு -8-1-8-என்றும்
உடம்பை உகக்கக் கடவ ஸ்திரீகள் ஆழம் கால் படச் சொல்ல வேணுமோ –
எளிமை சொல்லுகிற யோஜனையில்
1-தருனௌ –
அவர்கள் பக்கலிலே சரக்குண்டாக நினைத்து இருக்க வேண்டா காண்-
ந யுத்த யோக்யதாமச்ய பச்யாமி -பால -20-2-என்கிறபடியே
பூசலுக்கு ஆளாகாதார் சில பாலராய்க் காண் இருப்பது
நானேயோ இது சொன்னேன் –
பாலோ ஹ்யக்ருத வித்யச்ச ந ச வேத்தி பலாபலம்
ந சாஸ்திர பல சம்பன்னோ ந ச யுத்த விசாரத -பால -20-7-என்று பெற்ற தகப்பன் அகப்பட நெஞ்சாறல் பட்டிலனோ –
2- தருனௌ –
யௌவனே விஷயை ஷிணாம்-ரகுவம்சம் -1-8-என்கிறபடியே அந்ய பரராய் திரிகிரவர்களுக்கும் ஒரு பூசல் உண்டோ பொருவது
பாலரான இவ்வளவும் அன்று காண் –
1-ரூப சம்பன்னௌ-
கன்யா காமயதே ரூபம் -ஸூ பாஷிதம் -என்றும்
ரூபேண வநிதா ஜனம் -என்றும் ஸ்திரீகள் அகப்படுகைக்கு
மேனி மினுக்கி திரியும் அத்தனை போக்கி
புருஷர்கள் அகப்ப்படும்படியான ஆண்மை யுடையவர்கள் அல்ல காண்
2- ரூப சம்பன்னௌ –
மூங்கில் பொந்து போலே தொழில் பச்சை இத்தனை போக்கி அகவாயில் உள்ளீடு இல்லை காண் –
அதுக்கடி என் எனில்
1-ஸூ குமாரௌ-
ஸ்ரீ மத் புத்ரர்கள் ஆகையால் செல்வப் பிள்ளைகளாய்க் காண் இருப்பது
2- ஸூ குமாரௌ –
பரஸ்வத ஹதச்யாத்ய மந்த பிராணச்ய பூதலே -ஆரண்ய -22-5-என்கிறபடியே
கடைக் கண் சிவந்து நீ பார்க்கும் பார்வையிலே மாயும்படி இருக்கிறவர்களோ
உன்னுடைய அத்யுக்ரமான ஆயுதங்களைப் பொறுக்கப் புகுகிறார்கள்
வடிவைப் பார்த்தால் திறவியர் அல்லராகிலும் கார்யத்தில் வந்தால் திறவியராய் இரார்களோ என்னில்
1- மஹா பலௌ-
பல ஹீனர் ஆனவளவே அன்று காண் –
க்ரமாகதமான ராஜ்யத்தை கொடுக்கச் செய்தேயும் அகப்பட ஆள்மாட்டாதே ஒதுங்கி
பெண்டாட்டிக்கு அஞ்சி பொகட்டுப் போரும்படி அந்ய நதா பலராய்க் காண் இருப்பது
அன்றியிலே
2- மஹா பலௌ-
பலவான்கள் தான் ஆனாலும் இவர்கள் இருவரும் இத்தனை போக்கி
இவைகளுக்கு பலமாய் வரப் புகுகிறார்கள் உண்டோ
த்ருஷ்ட்வா தத்ர மயா நாரீதயோர் மத்யே ஸூ மத்யமா -ஆரண்ய -20-17-என்கிறபடியே
கால் கட்டாம் படி குழைச் சரக்கை இருப்பாள் ஒரு பெண்டாட்டியையும் முதுகிலே கொண்டு
திரிகிறவர்களோ பூசல் ஆடப் புகுகிறார்கள் –
பூசலாட மாட்டார்கள் அறிந்தபடி என் என்னில்
1-புண்டரீக விசாலாஷௌ-
விளைவது அறியாமையாலே -இவளுக்கு வைரூப்யம் விளைத்தோம்
மேல் என்னாகப் புகுகிறதோ என்று அவர்கள் வெளுக்க வெளுக்க விழிக்கிறது விழியிலே கண்டேன் காண் –
2- புண்டரீக விசாலாஷௌ-
நீரில் தாமரையை வறளிலே இழுப்பாரைப் போலே தன்ன்லமான நாட்டுக்கு அவர்கள் ஆளித்தனை போக்கி
வேற்று -வெற்று-நிலமான -காட்டுக்கு அவர்கள் ஆளல்லர்
என்னும் இடம் அவர்கள் கண்கள் தானே சொல்லித் தருகிறன காண் –
அவர் தாங்கள் அசக்தர் ஆனால் ஐச்வர்யத்தாலே படை யாண்டு போரத் தட்டென்-என்று இருக்க வேண்டா –
1-சீர கிருஷ்ணாஜிநாம்பரௌ-
உடுக்கைக்கு ஒரு புடவை அகப்படல் அன்றியிலே காட்டில்
மரத் தோலையும் மான் தோலையும் உடுத்தித் திரிகிறவர்களோ காசு நேர்ந்து படையாளப் புகுகிறார்கள் –
2-சீர கிருஷ்ணாஜிநாம்பரௌ-
உடுக்கிற புடைவை இரண்டும் ஏக ஜாதீயமாகப் பெற்றதோ –
உள்ளுடை ஒன்றும் மேலுடை ஒன்றுமாய் அன்றோ இருக்கிறது –
3-சீர கிருஷ்ணாஜிநாம்பரௌ-
ஸ்தாவரம் ஓன்று கொடுக்க
ஜங்கமம் ஓன்று கொடுக்க
இப்படி பலர் பக்கலாக இரந்து அன்றோ இது தானும் உடுக்கிறது –
பௌருஷ உபபாதன யோஜனையில்
1- தருனௌ-
ஊந ஷோடஸ வர்ஷ -பால -20-2–எண்ணும்படியான பிள்ளைப் பருவமும் அன்றியிலே
அநேக வர்ஷசாஹஸ்ரோ வ்ருத்தஸ் த்வமஸி பார்த்திவ -அயோத்ய -2-21-என்னும்படி முதிர்ந்த பருவமும் அன்றியிலே
பூசல் என்றால் காட்டு காட்டு என்று வரும்படியான நல்ல பருவம் காண்-
2- தருனௌ –
யௌவநே விஷயை ஷிணாம்-ரக்வம்சம்-1-8-என்றும்
ராஜ்ய காம விஷயா விபேதிரே-என்றும்
பவத் விஷய வாஸிந -என்றும்
விஷய சப்தம் ராஜ்ய வாஸி யாகையாலே
இன்னம் ராஜ்ஜியம் கொள்ள வேணும் என்று மேலே விஜிகீ ஷூ க்களாம் பருவம் காண் –
3- தருனௌ –
இப்பருவம் யுடையார் ஒருவர் அமைந்து இருக்க இருவர் கூடினால் இயலாதது உண்டோ –
இப்பருவமும் யோக்யதையுமாய் வடிவு பார்த்தால் இவர்கள் என்ன பூசல் பொருவது என்னும்படி ஆபாசமாய் இருக்குமோ -என்னில்
1-ரூப சம்பன்னௌ-
சிம்ஹோ ரச்கம் மஹா பாஹூம் -ஆரண்யம் -17-7-என்கிறபடியே
வேறொரு ஆயுதம் வேண்டாதபடி அவர்கள் தோளையும் மார்பையும் கண்ட போதே எதிரிகள் கால்
வாங்கும் படியாய்க் காண் இருப்பது
2- ரூப சம்பன்னௌ –
ரூபம் என்று மதிப்பாய் இப்பருவம் கொண்டு அநுமிக்கை அன்றிக்கே
கதவா சௌமிதரி சஹி தோ நா விஜித்ய நிவர்த்ததே -அயோத்யா -2-37-என்றும்
யசச சசைக பா ஜனம்-கிஷ்கிந்தா -15-19- என்றும் சொல்லுகிறபடியே
அயோத்யா பரிசாரம் துடங்கி ஸூ பாகூ மாரீசாதி வதம் பண்ணினத்தாலே
பெ ரு மதிப்பராய் இருக்கிறவர்கள் அல்லவோ -என்றாகவுமாம் –
இப்படி விரோதி வதம் பண்ணும் இடத்தில் வருத்தத்தோடு க்லேசித்தோ பண்ணுவது -என்னில்
1- ஸூகுமாரௌ-
அவர்கள் ஆண்மைத் தனத்தில் வந்தால் ஒரு வகைக்கு சிறிது சொல்லலாம் இத்தனை போக்கி
வடிவு அழகைப் பார்த்தால் பஹூ முகமாய் பொல்லாதாய் இருக்கை அன்றிக்கே
அத்யந்தம் அபி ரூபமாய்க் காண் இருப்பது -ஸூ -மிகவும் பொருளில்
2- ஸூ குமாரௌ-
அவர்க்களுமாய்ச் சீறிப் புறப்பட்டார்கள் ஆகில் முன்னே வந்த நாலிரண்டு பேரைக் கொன்று விடும் அளவேயோ
கு -சப்தம் பூமியில் உள்ளார் என்னும் பொருளில் –
சதேவ கந்தர்வ மனுஷ்ய பன்னகம் ஜகத் ச சைலம் பரிவர்த்தயாமி -ஆரண்யம் -64-78-என்றும்
சாகர மேகலாம் மஹீம் தஹதி கோபே ந -சுந்தர -36-13-என்றும் பூமியை இருந்ததே குடியாக நசிப்பியார்களோ –
இப்படி நசிப்பிப்பது எது கைம்முதலாக-என்னில்
1- மஹா பலௌ-
தோள் வலியே கைம்முதலாய்க் காண் இருப்பது
2- மஹா பலௌ –
மஹச் சப்தத்தாலே கேவலம் பாஹூ பலமே யன்று
மநோ பலம் யுடையவர்கள் –
கேவலம் மநோ பலமே அன்று
பஹூ பலமும் யுடையவர்கள் -என்று இரண்டையும் நினைத்துச் சொல்லுகிறாள்
3- மஹா பலௌ –
உன்னுடைய சதுரங்க பலமும் அசத் கல்பமாம் படி காண் அவர்கள் பலத்தின் மிகுதி இருக்கும் படி
4-மஹா பலௌ –
நெடும் போது யுத்தம் பண்ணினாலும் ஸ்ரமம் தட்டாத படி பலாதி பலைகள் என்கிற வித்யைகள் உடையராய்க் காண் இருப்பது
விஸ்வாமித்ரர் இடம் பலை அதிபலை என்னும் வித்யைகள் கற்றவர்கள் அன்றோ-
இப்படி ஸ்ராந்தி தட்டாது என்று அறிந்த படி என் என்னில் –
1-புண்டரீக விசாலா ஷௌ-
வேற்று -வெற்று-நிலமான இக்காட்டிலே திரியச் செய்தேயும் தன்னிலத்திலே நின்ற
தாமரைப் போலே அக்கண்ணில் செவ்வி தானே சொல்லா நின்றது காண்
2-புண்டரீக விசாலா ஷௌ–எதிரிகள் என்றால் அவர்கள் பக்கலிலே ஒரு கௌ ரவத்தைப் பண்ணிச் சிறுத்தல் பெருத்தல் செய்கை அன்றிக்கே
அவிக்ருதமாய்க் காண் கண்கள் இருப்பது
3-புண்டரீக விசாலா ஷௌ–
ப்ரீதி விஸ் பாரிதே ஷணம்-என்று எதிரிகளைக் கண்டால் உறாவுகை அன்றிக்கே
மேனாணிப்பாலே ஒரு காலைக்கு ஒரு கால் விஸ்த்ருதங்களாய்க் காண் கண்கள் இருப்பது –
எதிரிகள் என்றால் இப்படி முகம் மலருகைக்கு அடி என்ன –
பூசலுக்கு என்று கட்டி யுடுத்து
சன்னத்தரானால் அன்றோ அப்படியே இருக்கலாவது
அனவசரத்தில் வந்து தோற்றினார் யுன்டாகில் செய்யுமது என் என்னில்
1- சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
சன்னத் தௌ விசரிஷ்யத -என்கிறபடியே உள்ளுடையும் இறுக்கி
உடும்புக்கீடும் இட்டு சந்னத்தராய்க் காண் அவர்கள் இருப்பது
2-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ–
காட்டிலே சர்வவித சத்வங்களையும் வேட்டையாடித் திரிகிறவர்கள் ஆகையால்
உடைத் தோலும் மரச் சட்டையுமாயக் காண் அவர்கள் இருப்பது –
ஆக இப்படி –
சத்யேன லோகன் ஜயதி தீநான் தாநேந ராகவ
குரூன் ஸூ ச்ரூஷ்யா வீரோ தநுஷா யுத்தி சாத்ரவான் -அயோத்யா -12-29-என்கிறபடியே
அபலைகளை -அழகாலே அழித்தும்-தருனௌ-ரூப சம்பன்னௌ-ஸூ குமாரௌ-என்பதாலே
அரிகளை பலத்தாலே அழித்தும் -மஹா பலௌ-என்பதாலே
அகதிகளை அருளாலே அழித்தும் -புண்டரீக விசால ஷௌ-என்பதாலே –
தக்கார்க்குத் தக்க கருவிகளை உடையவராய்க் காண் அவர்கள் இருப்பது –
ஆனபின்பு –
வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தனை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் -பெரியாழ்வார் -4-2-2- என்கிறபடியே
நான் மூக்கு அறுப்புண்டு போமித்தனை போக்கி
அவர்களோடு புக்கால் பலியாது காண் என்று பரிபவித்துச் சொல்லுகிறாள் -கரனை அவமதித்துச் சொல்லுகிறாள் –
——————————————————————————————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply