அவதாரிகை –
விச்வாமித்ரா பகவானானவன் –
யஜ்ஞ விக்ன கரம் ஹன்யாம் -என்கிற பெருமாளுடைய சங்கல்ப்பத்தை அடி ஒற்றினவர் ஆகையாலே
தன்னுடைய யஜ்ஞ விக்னத்தையும் அவரைக் கொண்டு போக்குவோம் என்று பார்த்து
பெருமாளைப் போர விட வேணும் என்று சக்கரவர்த்தியை இரக்க
அவனும் பெருமாள் பக்கல் வாத்சல்யத்தாலே மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் -திருவாய் -1-4-3-என்று
பிரேம ஆனந்தனாய்க் கலங்கி
அஹம் வேத்மி மகாத்மானாம் -என்று ரிஷி ஈடேற்றி சொன்ன பாசுரம் நெஞ்சில் படாதே
பருவத்தில் இளமையைப் பார்த்து -விடாமைக்கு மன்றாடுகிறான் இந்த ஸ்லோஹத்தாலே-
ஊந ஷோடஸ வர்ஷோ மே ராமோ ராஜீவ லோசந
ந யுத்த யோக்யதாமஸ்ய பஸ்யாமி சஹ ராஷசை–பால -20-2-
1-ஊந ஷோடஸ வர்ஷோ-
இன்னமும் பதினாறு பிராயம் நிரம்பிற்று இல்லை
ஷீர கண்டச் ச ராமபத்ர-என்கிறபடியே பால் மாறாத பருவத்திலேயே ஒரு பூசலும் பொருமோ -என்கிறான்
2-ஊந ஷோடஸ வர்ஷோ-
பால ஆஷோடசாத் வர்ஷாத் பௌகண்டச் சேதி கீர்தயதே -என்கிற மன்வாதி வசனப்படியே
பதினாறு பிராயத்துக்கு கீழ் பாலகனாய் அப்ராப்த வ்யவஹாரன் ஆகையாலே ஒருவன் முது கண் பட வேண்டும் –
சதுரங்க சமாயுக்தம் மயா ச சஹிதம நய -பால -20-10-என்று என்னையும் சதுரங்க பலத்தையும் கூட்டிக் கொண்டு
போம் இத்தனை போக்கி இவரைத் தனியே கொண்டு போனால் பிரயோஜனம் உண்டோ –
3-ஊந ஷோடஸ வர்ஷோ-
பாலோ ஹ்யக்ருத வித்யச்ச ந ச வேத்தி பலாபலம்
ந சாஸ்திர பல சம்பன்னோ ந ச யுத்த விசாரத -என்று பருவம் இதுவே இருந்தது
இன்னமும் தனுர் வேதம் அதிகரித்திலர்
படையில் மிகுதி குறை அறியார்
இவர் தாமான படியாகத் தன்னடையே கார்யகரமாம்படியான அஸ்த்ரங்களிலும் உபதேசம் இல்லை
பூசலாடியும் படை பொருந்தியும் பழக்கம் இல்லை
இவரையா பூசலுக்கு கொடு போகத் தேடுகிறது
இது என்ன சேராச் சேர்த்தி தான் –
4-ஊந ஷோடஸ வர்ஷோ-
பதினாறு பிராயம் நிரம்புகைக்கு சிறு நாளாயிற்று வேண்டுவது
இந்நாள் இத்தனையும் கழிய வந்தான் ஆகில் கண் அழிக்க ஒண்ணாது
அவரையும் அசக்தர் என்ன ஒண்ணாது -கொண்டு போவான் இ றே-
இவ்வளவிலே வந்து பிழைத்தோம் இ றே –
5-ஊந ஷோடஸ வர்ஷோ-
ஊன சப்தம் அந்த சங்கையாலே சிறிது குறை யாயிற்று காட்டுவது
ஆகையால் பதினைந்தரை ஆதல் பதினைந்தே முக்கால் ஆதல் பதினாறாம் பிராயம்
இது ஒரு பதினாறும்
சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசனே -சுந்தர -33-17-என்று விவாஹம் பண்ணின பின்பு பன்னிரண்டுமாய்
இருபத்தெட்டாம் பிராயமாக தொடரா நின்றது காட்டுக்குப் போகிற போது
பர்த்தா மம மஹா தேஜோ வயஸா பஞ்ச விம்சக -ஆரண்ய -47-10-என்றும்
அஷ்டா தச ஹி வர்ஷாணி மம ஜன்மனி கண்யதே-ஆரண்ய -47-10-என்றும் பிராட்டி பாசுரமாய் இருந்தது
சப்த ச வர்ஷாணி தவ ஜாதச்ய புத்ரக-ஆஸி தானி பிரகாங்ஷந்த்யா மயா துக்க பரிஷயம் -அயோத்யா -20-15-என்று
நீ பிறந்த அன்று தொடங்கிபதினேழு ஆண்டு நீ முடி சூடின நாள் வரை க்லே சம் தீரப் பார்த்து இருக்கிறது
ஸ்ரீ கௌ சல்யார்பாசுரமாய் இருந்தது
இருபத்தெட்டுக்கும் இருபத்து ஐந்துக்கும் பதினேழுக்கும் சேர்த்தி என் என்னில்
பதினேழுக்கு சிலர் இங்கனே பரிஹரித்தார்கள்
ஏகா தசே ஷூ ராஜந்யம்-ஆபஸ்தம்பம் -1-11-19-என்று பதினொன்றிலே உபநயனம் ஆகையாலே
ராஜாக்களுக்கு தவி ஜத்வமாய்-அதுவும் ஒரு ஜன்மம் ஆகையாலே
கீழ் பத்தைக் கழித்து பதினேழு என்று நிர்வஹிப்பார்கள்
இது புத்திர பிரவாச ஜனித துக்கத்தாலே நிர் விண்ணையான ஸ்திரீ வார்த்தை யாகையாலே
படுபாடாக பிறந்த அன்று தொடங்கி என்று பிரதம ஜன்மமமேயாம் அத்தனை போக்கி சோக தசையிலே ஒரு பெண்டாட்டி அவஹிதையாய் தர்ம சாஸ்திரம் அனுசந்தித்து
பத்துக் கழித்து த்வதீய ஜென்மத்தை விவஷிக்கை அனுசிதம் ஆகையாலும்
இது ஒரு ஆறும் பன்னிரண்டும் பதினெட்டாய் பதினேழுக்கு விஞ்சி இருக்கையாலும் சேராது
பதினாறும் பன்னிரண்டும் இருபத்து எட்டாய்
பதினொன்று தொடங்கி ஆறும் பன்னிரண்டும் கீழ் பத்தும் ஆக இருபத்து எட்டுக்கு இரண்டும் சேர்ந்தது ஆகில்
இருபத்து ஐந்தை கண் அழித்தாலோ என்னில்
ஊந சப்தம் சாமான்யமாய் விசேஷ வசனத்தாலே பதினாறுக்கு அபவாதம் உண்டாகையாலே அந்யதா சித்தி உண்டாகையாலும்
சந்நியாசி பிரதிபத்தியாலே கௌ ரவ்யனாக நினைத்து அவஹிதையாய் பிராட்டி வாக்கியம் ஆகையால் பஞ்ச விம்சக என்கிற ஸ்ருதிக்கு தௌர்பல்யம் இல்லாமையாலும்
தச சப்த ச என்கிற வாக்கியம் தன்னோடும் விரோதிக்கையாலும்
இருபத்து எட்டை த்ருடமாக்கி இருபத்து ஐந்தை கண் அழிக்க ஒண்ணாது-
பின்பு எங்கனே யாகக் கடவது என்னில்
இருபத்து ஐந்தை ப்ராமாணிகமாய்-ஊந ஷோடசத்தையும் தச சப்த ச வையும் இதுக்கு ஏற்க யோஜிக்கக் கடவோம் -எங்கனே என்னில்
ஊந சப்தம் ஷோடஸ சங்க்யா வைகல்யத்தை காட்டுமத்தனை போக்கி விகல சங்க்யை இன்னது என்று விசேஷிக்க மாட்டாத சாமான்ய சப்தம் ஆகையாலே –
விசேஷா காங்ஷை யுண்டாக ராவணனுக்கு ஹிதம் சொல்லுகிற மாரீசன் பெருமாள் பலம் சொல்லுகிற பிரகரணத்தில்
விச்வாமித்ராத்வர பங்கம் பண்ணின அன்று தத் ரஷண அர்த்தமாக தசரதன் பக்கலிலே ராம லஷ்மணாளை வேண்டிச் செல்ல
பிள்ளைகள் பருவம் நிரம்பாமை சொல்லுகிற சக்கரவர்த்தி
பாலோ த்வாதச வர்ஷோயம் க்ருதாஸ் த்ரச்சராகவ -ஆரணய -38-6 -என்று சொன்னான்
அப்பருவத்திலே என் தம்பி ஸூபா ஹூ வைக் கொன்று என்னையும் கடலில் அழுத்தினான்
என்று சொல்லுகையாலே
ஊனமான வருஷம் நாலாய்-பன்னிரண்டு பிராயமாய் அப்போது விவாஹமாய்
சமா த்வாதச -என்று பன்னிரண்டு நடந்தது
ஆக இருபத்து நாலாய் இப்போது இருபத்து ஐந்து ஆகிறது
தச சப்த ச வும் தச -என்று பத்தும் சப்த என்ற ஏழும் ச என்று இன்னும் ஒரு ஏழும்
ஈரேழு பதினாலாய் பத்தும் பதினாலும் இருபத்தி நாலும் கழிந்து
இருபத்து ஐந்து ஆகிறது என்று சப்தார்த்தம் ஆகிறது
ஆகையால் வ்யாஹதம் போலே தோற்றின மூன்று பிரதேசமும் இவ்வோ பிரமாண யுக்திகளாலே அவ்யாஹதமாய்ச் சேரக் கிடக்கிறது –
ஆனால் நெடுமேடு நெடும் பள்ளமுமாக ஊந ஷோடஸ வர்ஷ -என்று ஷோடஸ வர்ஷ பிரசங்கம் என்
பாலோ த்வாதச வர்ஷோயம் -ஆரண்ய -38-6-என்றும்
பாலோ ஹ்யக்ருத வித்யச்ச -பால -20-10-என்றும்
காக பஷதரம் பாலம் -பால -19-9-என்றும் பல இடங்களிலும் சொன்னானே என்னில்
ந யுத்த யோக்ய தாமச்ய பச்யாமி -என்ற பூசலுக்கு யோக்யர் அன்று என்கைக்காக
பால ஆஷோட சாத் வர்ஷாத் பௌ கண்டச் சேதி கீர்த்யதே -என்கிற மனு வசனத்தை ரிஷி ஸ்மரித்து-
பதினாறாம் பிராயம் நிரம்பினால் ஆயிற்று ப்ராப்தவ்யஹாரனாய்
இன்னானுக்கு இன்னான் என்று பிரமாணம் பண்ணின படியே அறிவதும்
இன்னான் கீழ் இன்னான் என்று அறிவதும்
தனித்து ஒரு ஊருக்குப் போகவும்
தனித்து பூசல் பொரவுமாவது
பதினாறும் நிரம்பாது ஒழிந்தால் இன்னாரை முது கண்ணாக உடைய இன்னார் என்றும்
இன்னார் மகன் இன்னார் என்றும் முது கண் படப் பேச வேண்டும்
ஆனபின்பு சதுரங்க சமாயுக்தம் மயா ச -என்று என்னை முது கண்ணாகக் கூடக் கொண்டு போ என்கைக்காக
ஸ்வதந்திர வியாபார ஷமமான காலம் நிறைந்தது இல்லை -என்கிறான் -ஆகையாலே உசிதம் –
6-ஊந ஷோடஸ வர்ஷோ
இக் குறட்டிலே தெறித்தால் அக் குறட்டிலே பால் தெறிக்கும் பருவம் -என்கிறான் –
இது தன்னை கருத்தும் தத் ஷீர கண்டே ந-என்று பால ராமாயணத்திலும் சொல்லிற்று இ றே
ஷீர கண்டச்ச ராம பத்ர -என்றான் இ றே முராரிகாரனும் அனர்க்க ராகவத்தில்
7-ஊந ஷோடஸ வர்ஷோ
ஆண்களுக்கு யௌ வன ஆரம்ப ஸூ சகமான ச்மச்ரூரேகைகள் இனும் குறித்ததில்லை-மயிர் முடித்திலர்
மொய் பூங்குழல் குறிய கலையோ அரையில்லை நாவோ குழறும்–இவள் பரமோ -திருவிருத்தம்-60 என்றால் போலே-
காகாபஷதரம் வீரம் -பால -19-9- என்று நீ தான் சொன்னால் போலே அலைந்த குடுமியும் சுற்றின பூவுமாய் இருக்கிற இவரையோ
பூசலுக்குக் கொடு போகத் தேடுகிறது -என்ற விடத்திலும்
தேஜாசாம் ஹி ந வயஸ் சமீஷ்யதே -ரகு வம்சம் -11-1–என்றும்
சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் பெரியாழ் -1-4-8-என்றும் சொல்லுகிறபடியே
பருவத்தைக் கொண்டு அவர் அசக்தர் என்று எண்ண வேண்டா காண்-
சிறு நெருப்பு சுடாதோ
சக்தோ ஹ்யேஷா மயா குப்தா திவ்யேன ஸ்வேன தேஜஸா -பால் -19-9-என்றும்
அவதாரத்தில் மெய்ப்பாட்டாலே ஸ்வா பாவிகமான தேஜஸ் ஸைத் தாழ விட்டாரே ஆகிலும்
அத்தசையிலே நான் ஸ ச்நேஹமாக மங்களா சாசனம் பண்ணிக் காட்டிக் கொடுக்கில்
தேஜ ப்ரபாவத்தாலே தாமஸ நிரசனத்தில் சக்தராய்க் காண் இருப்பது என்ன
1-மே ராம –
கையும் கோடாலி யுமாய் மூவேழு இருப்பத்தொரு படி கால் ஷத்ரிய சிரச்சேதம் பண்ணித் திரிந்த முரட்டுப் பரசுராமனாக நினைத்தான் இ றே-
2- மே ராம –
பெரிய பசியோடு உண்ணப் புக்கவனை கையைப் பிடிப்பாரைப் போலே
துக்கே நோத்பாதி தச்சாயம் -பால -20-11-என்றும்
நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப் பாதம் பரவிப் பெற்ற -திரு விருத்தம் -37-என்றும் சொல்லுகிறபடியே
64000 ஆண்டு கூடி ஒரு பிள்ளை பெற்று ஸூதமுக கமலா வலோகனம் பண்ணி வருகிற
என் பக்கல் நின்றும் இவரைப் பிரித்துக் கொண்டு போகை தர்மமோ
3-மே ராம
அனுபஹ தாம வ்ருத்திம் சரேத்-என்று அன்றோ ரிஷிகளுக்குச் சொல்லுகிறது -தோஷம் அற்றவற்றைக் கொண்டு வயிறு வளர்க்க –
ஆனபின்பு என் மமகாரத்தாலே தூஷிதமான வஸ்து உனக்காமோ –
4-ராம – ரமிக்கச் செய்பவன்
சூடக் கண்ட கருமுகை மாலையைப் பிசக்கி வெய்யிலிலே வைப்பாரைப் போலே
ஏததே வாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -சாந்தோக்யம் -3-10-என்றும்
நந்தாமி பஸ்யன் நபி தர்சநேந -அயோத்ய -13-104-என்றும்
கண்ணுக்கு இனிதாகக் கண்டு கொண்டு இருக்கும் அத்தனை போக்கி
இவ்வ்வஸ்துவைப் பூசலுக்கு இலக்காக்குவார் உண்டோ –
குறையில்லை காண் –
ரஞ்ச நீயச்ய விக்ரமை -யுத்த -106-6-என்றும்
ராமம் அக்லிஷ்ட கர்மாணம் -சுத்தர -30-41-என்றும்
அவர் பூசல் செய்யும் போது தான் மயிரில் வைத்த பூ வாடாத படியாகவும்
முகத்தில் குருவேர் பரம்பாத படியாகவும் எதிரிகள் கை வாங்கும் படியாகவும் வடிவு அழகு தன்னாலே ஓரடி எறிந்து காண் அவர் பொருவது என்ன
1-ராஜீவ லோசன
வெய்யில் காணவே வெடித்து -முகிழ் விரிந்து அலர்ந்து கிடக்கிற கண்களைக் கொண்டு வெய்யிலிலே நிற்கவும் போரவும் வல்லரோ -என்கிறான் –
2-ராஜீவ லோசன -என்று நீ தானே சொன்னாயே
வெய்யில் காண தாமரை விகசிக்குமா போலே படை கண்டால் பெருமாளும் உல்லசிதராய்காணும் இருப்பது என்றான் ரிஷி
3-ராஜீவ லோசன –
ராஜீவம் ரக்த பத மம ஸ்யாத்-என்று செந்தாமரை தான் கன்றிச் சிவக்கும் காண் -என்கிறான் ராஜா
அச் சிவப்போ –
ராமோ ரக்தாந்த லோசன -யுத்த -21-13-என்றும்
கிஞ்சித ப்ரூபங்க லீலா நியமித்த ஜலதிம் -என்றும்
கடல் திடர் படக் கடைக் கண் சிவந்து
எதிரிகள் முடியும்படியான சிவப்புக் காண் என்கிறான் ரிஷி
அதற்க்கு ராஜா -ஊந ஷோடஸ வர்ஷோ மே ராமோ ராஜீவ லோசன -என்று அவை எல்லாம் பருவம் நிரம்பினால் ஆயிற்று
இப்போது போராது என்றான்
போராது ஆகில் வெய்யில் ஆனவாறே இராப் பூசல் ஆக்குகிறோம் என்றான் ரிஷி
3-ராஜீவ லோசன –
பொழுது புகப் பெறாது காண் செம்புளிக்கும்
இவர் பிள்ளைத் தனத்தாலே உறங்கவும் அவர்கள் நிசாசரர் ஆகையால் தன்னில் மாயை மேலிடவும் தேடினாய் இ றே
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே செங்கன் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ என்று
நித்ராகஷாய ரூஷிதமான இக்கண் களுக்கு தம்தாமை இலக்காகத் தேடும் அத்தனை போக்கி
கண்ணுடைய இவரைப் பூசலுக்கு இலக்காக்குவார் உண்டோ –
4-ராஜீவ லோசன –
நீரைப் பிரிந்த தாமரை உலருமா போலே என் அருகுக்கு விட்டுப் புறப்பட்டால் அவர் முகம் செவ்வி அழியும்படியாய்க் காண் இருப்பது –
ஜிதந்தே புண்டரீகாஷ-என்றும்
தாமரைக் கண்கள் கொண்டீர்தியாலோ -என்றும் சொல்லுகிறபடியே
எதிரிகளைத் தோற்பிக்கைக்கும் பரிகரம் அங்கே உண்டாய் இருந்ததே என்ன
ந யுத்த யோக்யதாமச்ய பஸ்யாமி-
அக்கண் அழகில் அனுகூல வர்க்கம் ஆழம் கால் படும் அத்தனை போக்கி ஆசூர வர்க்கமும் ஈடு படுமோ ஆசூர பிரக்ருதியான சூர்பணகை -புண்டரீக விசாலாஷௌ-ஆரணய -19-14-என்று ஈடுபட்டிலளோ-
அது தவிரக் கூடவே இ றே பரிகரம் கொண்டு உதவத் தட்டு என் என்னில்
அஸ்ய யுத்த யோக்யதாம ந பஸ்யாமி –
ஆச்ராயம் தான் உண்டாய் பரிகரம் தேட வேண்டாவோ
1-அஸ்ய –
பருவத்தில் இளமை இது -வடிவில் சௌகுமார்யம் இது
இப்படி இருக்கிற இவருக்கும் பூசலுக்கும் என்ன சேர்த்தி கண்டாய்
2- அஸ்ய –
சந்நிஹித தேச வர்த்தமான கால சம்பந்தியை இ றே இதம் சப்தம் காட்டுகிறது
அவர் தேசாந்தரத்திலே இருக்க நான் இங்கே பொய்யே கண் அழிக்கிறேன் என்று நினைத்து இராதே
உள்ளே சந்நிஹிதர் அழைத்துக் காண மாட்டாயோ
3-அஸ்ய யுத்த யோக்யதாம் ந பச்யாமி
ஸ்வ புத்ரம் மூர்த்ன்யு பாக்ராய-என்கிறபடியே மடியிலே வைத்து உச்சி மோந்து உகக்கும் அத்தனை போக்கி பூசலுக்கு யோக்யரோ –
4-ந யுத்த யோக்யதாம் பஸ்யாமி –
பால கிரீட ந காய -என்றும்
பால கிரீட ந கைரிவ-என்றும் -லீலா பரிகரம்கொண்டு விளையாடப் பருவம் அத்தனை போக்கி பூசலுக்குப் பருவமோ
5-ந பஸ்யாமி
அபிநிவேச வசீக்ருத சேதஸாம் பஹூ விதாமபி சமபவதி பிரம -ஆளவந்தார்-ஆகம ப்ராமாண்யம் -தொடக்கம்-3-என்று
ஸ்வ கார்ய பரனாகையாலே உனக்குத் தோற்றாது-
என் கண்ணாலே பார்க்க மாட்டாயோ -என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் –
யுத்த யோக்யதாம் ந பஸ்யாமி -என்று யுத்த யோக்யதையே பிடித்து இல்லை என்று அசத்யம் சொல்லா நின்றாய் –
ராமோ வ்ரஜதி சங்க்ராமம் க்ராமார்த்தே நகரச்ய வா கதவா சௌமித்ரி சாஹிதோ நா விஜித்ய நிவர்த்ததே -அயோத்யா -2-36-
சங்க்ராமாத் புனராகம்யா-அயோத்யா -2-37-என்றும் அவர் பொராத பூசல் உண்டோ என்ன
1-சஹ ராஷசை –
விசேஷ நிஷேதம் பண்ணினேன் இத்தனை போக்கி சாமான்ய நிஷேதம் பண்ணினேனோ
2- ராஷசை –
கூடயுத்தா ஹி ராஷசா -என்கிறபடியே அவர்கள் களவு பூசல் அல்லது பொரார் காண் –
இவர் தர்மப் பூசல் அல்லது பொர வறியார்-
ஆகையாலே கடைப்படாது என்றேன் அத்தனை –
3- அஸ்ய ராஷசை –
இவர் மனுஷ்யர்
அவர்கள் ராஷசர்கள்
இவர் ஒருவர்
அவர்கள் அநேகர்கள்
ஆகையாலும் யோக்யதை இல்லை –
—————————————————————————————————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply