கோகுலத்தில் இருந்து மாடுகளை தேடி தெற்கே வர
கோ சகன் -ஆ மருவி அப்பன் -விடாமல் கூடவே ஆனந்தமாக –
கீழே மகள் பாசுரம் பார்த்தோம்
இதில் உகந்து பாடுகிறார் -சமாதானம் ப்ரவேசத்தில் காட்டி அருளுகிறார் –
சிங்கமதாய் -பிரவேசம் –
போன புனிதர் -7-5-9–என்று இன்னாதானார் –
(புனிதர் சுத்தர் -ப்ரணய ரஸம் இல்லா யோகி முனி –முனிவர் கோபிப்பவர்
என்றே சொல்லும்படி )
நாம் எங்கேனும் போனோமோ –
உமக்காகா வன்றோ இவ்வவோ இடங்களில் வந்து நிற்கிறது –
என்று உகந்து அருளின கோயில்களில் நிலையைக் காட்டினான் –
இனித் தான் சிறுக்கன் உடைய பிரதிஞ்ஞா சம காலத்திலேயே வந்து
உதவினவன் என்று நம்மை நீர் அறிந்து இலீரோ –
(அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப்பிரான் அன்றோ )
உமக்கு நினைத்த வகை எல்லாம் பரிமாறுகைக்காக இங்கே வந்து நின்றோம் –
உம்முடைய விரோதியைப் போக்கி
உம்மை அடிமை கொள்ளுகைக்காக இங்கே வந்து நின்றோம் –
என்று திரு வழுந்தூரிலே
நிற்கிற நிலையைக் காட்டக் கண்டு த்ருப்தராய் அனுபவிக்கிறார் –
ததேவ கோபாயா யத பிரசாதாய ச ஜாயதே -என்கிறபடியே
இந் நிலை தான் ( அர்ச்சாவதாரம் )இவர்க்கு இழவுக்கும் உடலாய்
பேற்றுக்கும் உடலாய் யாய்த்து இருப்பது –
ஆகையால் இப்போது தமக்கு சமாதானமாய் விட்டது –
(அப்பு அரும்பதம் -கீழே போன புனிதர் -இங்கே கண்டு கொண்டேன் -களித்து –
ஆஸ்ரிதர் சொன்னபடி செய்வதை அறிவிக்க ஹ்ருஷ்டர் ஆகிறார் )
—————————————————
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
சங்க மிடத்தானைத் தழலாழி வலத்தானைச்
செங்கமலத் தயனனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே —7-6-1-
தென்-அழகான
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த்-
நரசிம்ஹ வேஷத்தை உடையனாய் அவுணன் உண்டு -ஹிரண்யன் –
அவனுடைய மிடுக்கை உடைய சரீரத்தை
சிறுக்கன் உடைய பிரதிஞ்ஞைக்கு முற்பாடனாய் கொண்டு
வந்து கிழித்து
அவனுடைய விரோதி போகப் பெற்றத்தால் வந்த உகப்பும் தன்னதாம் படி –
விரோதியைப் போக்குவானும் தானாய்
அத்தால் உகப்பானும் தானாய் -இருக்கிற் படி –
சிறு பிரஜை பால் குடித்தால் உகப்பாள் தாய் இறே –
( ப்ராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் அவனே )
சங்க மிடத்தானைத் தழலாழி வலத்தானைச் –
கையில் திவ்ய ஆய்தம் கொண்டு கார்யம் கொள்ள
அறிந்திலன் ஆயத்து –
செங்கமலத் தயனனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற –
சிருஷ்டி கார்யத்துக்கு கடவனான ப்ரஹ்மாவோடே ஒத்து இருக்கிற
பிராமணரதான திரு வழுந்தூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற –
அங்கமலக் கண்ணனை-
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை –
(தேவாதி ராஜனே இங்கே சேவை )
அடியேன் கண்டு கொண்டேனே –
அவ் ஊரில் உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே
ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே
இருக்கிற நான்
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
——————————————
கீழே ஒரு அவுணன் நிரஸனம்
இருபத்தொரு படி கால்-க்ஷத்ரியர் நிரஸனம் இதில் –
பரசுராமர் -பார்க்கவ ராமர் -ஜாமதக்னேயர்- ரோஷ ராமர் -அனுபவம் –
கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டு அருளும்
மூவா வானவனை முழு நீர் வண்ணனை அடியார்க்கு
ஆவா வென்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே –7-6-2-
பாசுரம் தோறும் அடியார்
தேவாதி தேவன் ஆ ஆ என்று இரங்கும்-திருப்பாவை போல்
கோவானார் மடியக்-
ஒரோ பிரதேசங்களுக்கு நிர்வாஹகராய்
ஷத்ரியர் என்று பேர் பெற்ற எல்லாரும்
முடியும் படிக்கு ஈடாக –
கொலையார் மழுக் கொண்டு அருளும் –
இருபத்தொரு படி கால் ஷத்ரிய குலத்தை அறுத்துப்
பொகடச் செய்தேயும்
வேறு ஒரு ஆயுதம் வேண்டாத படி இருக்கிற மழுவைக் கொண்டு அருளின
மூவா வானவனை-
ஏக ரூபமான விக்ரஹத்தை உடையவனை –
முழு நீர் வண்ணனை –
ஜல ராசியான கடல் போன்ற நிறத்தை உடையவனை –
அடியார்க்கு ஆவா வென்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற –
அசாதாரண பரிகரத்துக்கு
ஐயோ என்று கிருபையைப் பண்ணி
திரு வழுந்தூரிலே வந்து நிற்கிற
தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியை
நான் கண்ணாலே காணப் பெற்று
ஷோபம் அடையத் தீர்ந்து
களிக்கப் பெற்றேன் –
(ஷோபம் -கலக்கம் -ஸ்திதோஸ்மி –நாஷ்டோ மோஹ -அர்ஜுனன் போல் )
—————————————————
ஆஸ்ரித விரோதிகளை முடித்தமை கீழே
அந்த விரோதிகளுக்கு ஸஹாய பூதர்களையும் பின்னிடப் பண்ணி
விஜயனாக இருந்தது இதில் –
உடையானை யொலி நீர் உலகங்கள் படைத்தானை
விடையானோடே அன்று விறலாழி விசைத்தானை
அடையார் தென்னிலங்கை அழித்தானை யணி யழுந்தூர்
உடையானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –7-6-3-
உடையானை –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த சேதனருக்கும்
நிருபாதிக சேஷியாய் உள்ளவனை –
யொலி நீர் உலகங்கள் படைத்தானை –
சர்வமும் உப சம்ஹ்ருதமாய் கிடக்க
கடல் சூழ்ந்த பூமியை சிருஷ்டித்த
காரண பூதனை –
விடையானோடே அன்று விறலாழி விசைத்தானை –
நாட்டுக்கு ரஷகராக நிறுத்தினவர்கள் தாங்களே
அசூரர்களோடே பாதகராய் வரும் அன்றும்
நோக்குமவனை –
ருத்ரன் கெட்டொட இவன் பண்ணின வியாபாரம் என் என்னில்
மிடுக்கை உடைய திரு வாழியை விதிர்த்தான் இத்தனை இறே
விடையானோடே –
அவன் தான் -பாரவச்யம் சமாயாத -என்று
பரவசனாய்க் கிடந்தும் தெளிந்தும்
கிருஷ்ண கிருஷ்ண மகா பாஹோ -என்னும் இறே சொல்லுவது –
அடையார் தென்னிலங்கை அழித்தானை –
பிராதி கூல்யமேயாய்
அதிலே நிலை நின்றாரை அழியச் செய்யுமவனை –
யணி யழுந்தூர் உடையானை –
நித்ய விபூதி உக்தனான சம்பத்துக்கு மேலே ஓன்று காணும் –
திரு வழுந்தூருக்கு கடவன் ஆனது –
கீழே உபய விபூதி யோகத்தையும் சொல்லி
யணி யழுந்தூர் உடையானை -என்னும் போது
அதுக்கு மேலே ஒரு சம்பத்து ஆக வேணும் இறே –
(த்ரிதீய விபூதி அரங்கம் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்)
அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –
அநந்ய கதியான நான் கிட்டப் பெற்று –
அசந்நேவ -என்னும் நிலை தவிர்ந்து –
உஜ்ஜீவித்து –
க்ருதார்த்தனாகப் பெற்றேன் –
—————————————————————
ருத்ரன் எதிர்ந்தமை கீழே
இந்திரன் எதிர்ந் தமை இதில்
அனுகூலர் அன்றோ இவர்கள்
தானே அதிகாரி புருஷர்களாக நியமித்து -நாட்டினான் தெய்வம் –
அவர்களே ஆஸ்ரித விரோதிகள் ஆனால் வெல்லும் மஹா குணம் இதில் –
குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர்
நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே –7-6-4-
அமர்ந்து உண்ண –மனம் பொருந்தி உகந்து உண்ண –
குன்றால் மாரி தடுத்தவனைக் –
தலைக் காவலாக வைத்த இந்த்ரன்
தானே பாதகனாக நோக்கின படி -சொல்லுகிறது –
அவன் பசி க்ராஹத்தாலே வர்ஷத்தைப் பண்ண
அதுக்கு எதிராக கிடந்த தொரு மலையை எடுத்து பரிக்ரஹித்தவனை –
குல வேழம் அன்று பொன்றாமை அதனுக்கு அருள் செய்த –
நல்ல ஆகரத்திலே பிறந்து
மத முதிதமாய்
செருக்கி
மூலை யடியே திரிகிற யானை யானது
விழுக்காடு அறியாதே
பொய்கையிலே வந்து புக்கு
முதலையின் கையிலே அகப்பட்டு
அது முடிந்து போகாமே
அதின் பக்கலிலே ( நிருஹேதுக )கிருபையைப் பண்ணின –
போர் ஏற்றை-
அவ் வவஸ்த்தையை அறிந்து
பரிஹரிக்க வல்ல
ஆண் புலியை –
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர் நின்றானை-
அன்று பசுவின் நெய்யை அமர்ந்து அமுது செய்த
திரு வழுந்தூர் நின்றானை-
திருவாய்ப்பாடியிலே நின்ற படி யாய்த்து இங்கு நிற்பது –
(பசுமாடு கன்றுகளை தேடி ஆ மருவி அன்றோ இங்கு நின்று அருளுகிறார் )
யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே —
கண்ணாலே காணப் பெற்று
அபூர்ணனான நான்
பூர்ணனாகப் பெற்றேன் –
—————————————————–
திருக்கண்ண மங்கை இந்த பதிகம் கடைசியில் -அனுபவம்
கீழே இந்திரன் அனுகூலம் எதிர்த்து -பசியால் பாதகம் -உபாயத்தால் நிவர்த்தகம் அதில் –
வஞ்சனையால் இங்கு -வந்தவர்களை
தானும் வஞ்சித்து நிரசித்தமை இதில்
கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள் நின்றானை
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றம் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே –7-6-5-
கஞ்சனைக் காய்ந்தானைக்-
கம்சன் உடைய நினைவை
அவன் தன்னோடே போம் படி முனிந்தவனை –
கண்ண மங்கையுள் நின்றானை –
இன்னும் இங்கனே இருந்துள்ள விரோதிகளை போக்கி
ரஷிக்கைக்காக
திருக் கண்ண மங்கையில் நின்றானை –
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
வஞ்சனத்தை உடையளான பூதனை உடைய
முலை வழியிலே பிராணங்களும் வற்றி வரும்படி
முலையை அமுது செய்தவனை –
செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
யதா பூத வாதியான வேதம்
கை வந்து இருக்கிற பிராமணரதான
திரு வழுந்தூரிலே நிற்கிற –
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே –
ஸ்ரமஹரமான வடிவை உடையனாய்க் கொண்டு
தாப த்ரயம் போம் படி நின்றவனை
தாபத் த்ரயத்தாலும் தப்தனாய் இருக்கிற நான் கண்டு
என்னுடைய தாப த்ரயங்கள் தீரப் பெற்றேன் –
——————————————
காய்ந்தவரை காய்ந்தவன் என்றார்
வஞ்சனையால் வந்தோரை வஞ்சித்து முடித்தமையும் கீழே
பெரியாராக எண்ணி இருப்பாற்கு பெரியோனாய் அறிய முடியாதவன் என்கிறார் -இதில்
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே –7-6-6-
தாபத் த்ரயம் நீங்கப் பெற்று அஞ்சன குன்றம் பார்த்து அநிஷ்ட நிவ்ருத்தி கீழே –
கரியானைக் கண்டு களித்தமை -இஷ்ட பிராப்தி –
பெரியானை –
சர்வ ஸ்மாத் பரனானவனை
யமரர் தலைவற்கும் –
தேவர்களுக்கு எல்லாம் நிர்வாஹகனாய் இருக்கிற இந்த்ரனுக்கும்
பிரமனுக்கும் –
ப்ரஹ்மாவுக்கும் –
உரியானை உகந்தான் அவனுக்கும் –
யானை உரி -தோலை -உகந்த ருத்ரனுக்கும்
உணர்வதனுக்கு அரியானை –
இவர்கள் எல்லாருக்கும்
நெஞ்சால் நினைக்கவும் கூட
அரியனாய் இருந்து உள்ளவனை –
அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும் கரியானை –
திரு அழுந்தூரில் உண்டான பிராமணர் ஆனவர்கள்
திருவடிகளில் ஆஸ்ரயிக்கும் படியாக நிற்கிற
ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –
அடியேன் கண்டு கொண்டு களித்தேனே –
அனந்யார்ஹனான நான் கண்டு கொண்டு களிக்கப் பெற்றேன் –
——————————————————–
வேதாந்த அர்த்தம் -பெரியோன் ஆனமைக்கு ஹேதுக்கள்
ஜெகதாகாரன் -ஸ்ரீ யபதித்தவம் –
திருவாழ் மார்பன் தன்னைத் திசை மண் எரி நீர் முதலா
உருவாய் நின்றவனை யொலி சேரும் மாருதத்தை
அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே -7-6-7-
யொலி சேரும் மாருதத்தை-பூநிலா ஐந்துமாய் — –கால் இரண்டுமாய் –
தனக்கு அடைத்த ஸ்பர்சத்தையும்-ஆகாச குணமான சப்தத்தையும் உடைத்தாய் இருக்கிற காற்று
திரு வாழ் மார்பன் தன்னைத் –
ஸ்வ வ்யதிரிக்தர் உடைய ஐஸ்வர்யத்துக்கு
நிதான பூதையான பிராட்டி
அகலகில்லேன் -என்று விரும்பி வர்த்திக்கும் படியான மார்வு படைத்தவனை –
ஈசேசி தவ்ய வைஷம்ய நிம்னோன் நத மிதஞ் ஜகத்
நமஸ் ஸ்ரீ ரெங்க நாயக்யை யத்ப்ரூவி ப்ரமபேததா -என்னக் கடவது இறே-
திசை மண் எரி நீர் முதலா உருவாய் நின்றவனை –
திசை -திக்குகள்
காரண பூதமான பூத பஞ்சகத்துக்கும் நிர்வாஹகனாய்
அவற்றைத் தனக்கு சரீர தயா சேஷமாக உடையவனை –
யொலி சேரும் மாருதத்தை-
தனக்கு அடைத்த ஸ்பர்சத்தையும்
ஆகாச குணமான சப்தத்தையும்
உடைத்தாய் இருக்கிற காற்றுத்
தனக்கு பிரகாரமாக உடையவன் ஆனவனை –
அருவாய் நின்றவனைத்-
இப்படி காரண பூதமான பதார்த்தங்களைக் கொண்டு
தேவாதி கார்யங்கள் அடைய உண்டாக்கி
தத் அநு பிரவச்ய -என்கிறபடியே
ஜீவத்வாரா அவற்றிலே அநு பிரவேசித்து
பின்னை அவற்றைச் சொல்லும் சொல்லு தன்னளவும் வரும்படி
இவற்றுக்கு அடங்கலாரன பூதனாய்
நிற்கிறவனை –
தென் அழுந்தையில் மன்னி நின்ற-
திரு வழுந்தையிலே நித்ய வாஸம் பண்ணுகிற –
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே —
அடி உடைத்தான கல்பகம் ஆய்த்து-
ஸ்வர்க்கத்திலே நிராலம்பநமாக நிற்கிறது அன்றிக்கே
பூமியிலே வேர்ப் பற்று உண்டான கற்பகத்தைக் கண்டு கொண்டு
என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று
ஹ்ருஷ்டன் ஆனேன் –
——————————
ஸ்ரீ யபதித்தவம் சர்வ அந்தராத்மா என்று அனுசந்தித்தார் கீழே
அந்த இரண்டாலும் தம்மை ஆள் கொள்ள வல்லவன் –
ப்ராபகன் -சேர்ப்பிக்க அவளும் இருக்க என்ன கவலை –
நிலையாளாக வென்னை உகந்தானை நிலமகள் தன்
முலையாள் வித்தகனை முது நான்மறை வீதி தோறும்
அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கலையார் சொற் பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே —7-6-8-
நிலையாளாக வென்னை உகந்தானை –
தேஹி மே ததாமி தே -என்னும் படி
ஏற்றுக் கொண்டு போகாமே
நித்ய கைங்கர்யத்திலே என்னை அந்வயிக்கும் படி உகந்தானை –
(எழுவார் விடை கொள்வார் போல் இல்லாமல் நிலையாக
உகந்தானை -திரு உள்ள ஹர்ஷத்தாலே கைங்கர்யம் )
தபஸ்ஸாலும் சமாதி யாலும் பெறுவது ஓன்று அல்ல காணும் –
அவன் உகப்பாலே பெறில் பெரும் இத்தனை அல்லது
பெற வரியது காணும் –
நில மகள் தன் முலையாள் வித்தகனை –
ஸ்ரீ பூமிப் பிராட்டியார் உடைய திரு முலைத் தடத்துக்கு
ஆனைக்கு குதிரை வைக்க வல்ல
ஆச்சர்ய பூதனை -(அணைத்து ஆள்பவன் )
முது நான்மறை வீதி தோறும் அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற –
முது நான்மறை உண்டு -பாசி பூத்த வேதம் –
அது திரு வீதிகள் தோறும் திரைக் கிளப்பத்தை உடைய
கடல் போலே கோஷியா நின்றுள்ள
தென் அழுந்தையில் மன்னி நின்ற –
கலையார் சொற் பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே –
சகல கலைகளாலும் புருஷார்த்தமாக
பிரதிபாதிக்கப் பட்டவனைக் கண்டு கொண்டு
என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று
ஹ்ருஷ்டன் ஆனேன் –
நிலையாளாக வென்னை உகந்தானை-ப்ராபகம்
கலையார் சொற் பொருளை-ப்ராபகம்
—————————————————–
மிதுனமே உத்தேச்யம் –
கைங்கர்யத்துக்கு விஷயம் –
பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர்
வாரார் வன முலையாள் மலர் மங்கை நாயகனை
ஆரா வின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-
பேரானைக் –
திருப் பேரிலே சந்நிஹிதன் ஆனவனை –
குடந்தை பெருமானை –
திருக் குடந்தையிலே வந்து கண் வளர்ந்து தன்னுடைய
சேஷித்வத்தை
உதறிப் -பிரகாசிப்பிக்க – படுத்தினவனை
இலங்கொளி சேர் வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை –
நித்தியமான யௌவனத்தை உடைய
பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவனை –
ஆரா வின்னமுதைத் –
அவ் விருவருமான சேர்த்தி
இவருக்கு இனிதாய் இருக்கிறபடி –
தென் அழுந்தையில் மன்னி நின்ற –
திரு அழுந்தூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற –
காரர் கரு முகிலைக் –
கார் காலத்திலேயே மேகம் போலே
ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவனை –
கண்டு கொண்டு களித்தேனே-
கண்கள் குளிரக் காணப் பெற்று
ஹ்ருஷ்டன் ஆனேன் –
————————————————–
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அற முதல் ஆனவனை யணி யாலியர் கோன் மருவார்
கறை நெடு வேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்
முறை வழுவாமை வல்லார் முழுதாள்வர் வானுலகே—7-6-10-
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற –
மிடுக்கில் வந்தால் தேவ சேநாபதியான ஸூப்ரஹ்மண்யனில்
குறைந்தார் இல்லை யாய்த்து அவ் ஊரில் –
அற முதல் ஆனவனை –
தர்மத்தின் உடைய வேர்ப் பற்றானவனை –
ஸ்வ ஜன ரஷணம்
ஜீவ லோக ரஷணம்
ஆஸ்ரித ரஷணம்
என்று சொல்லப் படுகிற தர்மங்களுக்கு வேர்ப் பற்றானவனை –
யணி யாலியர் கோன் –
சம்சாரத்துக்கு ஆபரணமான
திருவாலியில் உள்ளாருக்கு நியாமகராய் உள்ளார் –
மருவார் கறை நெடு வேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும் –
சத்ரு நிரசனத்தில் வந்தால்
கறை கழற்ற அவசரம் இல்லாத படி இருப்பதாய் –
நெடியதான வேலைக் கையிலே உடையரான ஆழ்வார்
ஒலியை உடைத்தாம்படி அருளிச் செய்த இப் பத்தையும் –
முறை வழுவாமை வல்லார் முழுதாள்வர் வானுலகே –
அடைவில் தப்பாதபடி அனுசந்திக்க வல்லவர்கள்
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே
த்ரிபாத் விபூதி அடையத் தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்கள் –
————
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
சிங்கம் விண்டார்க்கு அன்பன் தொண்டர்க்கு காப்பவன்
பொங்கு வித்தாய் மூவர் வாக்கு எட்டான் பூ நங்கை சேர்
ஆராவமுதை அழுந்தைக் கண்டு இன்புறும்
சீரார் நீலன் நம் திரு -66-
விண்டார் -அடியார்களுக்கு சத்ருக்கள் -/காக்கும் இயல்பினன் கண்ணபிரான் /
பொங்கும் வித்து -த்ரிவித காரணன்
மூவர் வாக்கு எட்டான் -இந்திரன் அயன் அரன்-வாக்கு எட்டான்-
யானும் ஏத்தி ஏழு உலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்-
——————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply