நம்மாழ்வாருக்கு திருத்தொலை வில்லி மங்கலம் போல் இவருக்கு திருக்கண்ணபுரம்
இவர்களைப் பாட வைத்த முக்கோட்டை
திருமந்த்ரார்த்தம் அருளிய ஸ்ரீ சவுரிராஜப்பெருமாள்
நூறு பாசுரங்கள் அதனாலே இவருக்கும் திரு நறையூர் நம்பிக்குப் போலவே
உலகம் ஏத்தும் -திரு வேங்கடமுடையான் -திருமாலிருஞ்சோலை -திருவரங்கம் -கிழக்கே யானை
இங்கு
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -சரண்ய முகுந்தன்
மால் உமது வாஞ்சை முற்றும் மன் உடம்பின் முடிவில் சாலை நண்ணிச் செவன் எனத் தான் உகந்து
முதல் ஐந்து நாயிகா பாவம் ப்ரேமத்துடன்
முதல் இரண்டு தாய் பாசுரம்
மேல் மூன்றும் மகள் பாசுரம் –
அடுத்து ஞானத்துடன் ஐந்து
குலசேகரப்பெருமாள் ஐந்து திவ்ய தேச பதிகங்கள் –
64 சதுர்யுகம் கண்ட பெருமாள்
நீலமேகப்பெருமாள் -கருப்பு மலை -புண்டரீகாக்ஷன் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன் ஆகாதோ மதுராம் புரம்
திருக்கண்ணபுரம் சொல்லவே வந்தது
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தனி ஸ்லோக வியாக்யானம்
ஒவ் ஒரு பதமும் சவுரி பெருமாளையே குறிக்கும்
பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள்
திருக்கண்ண மங்கை திருக்கோவலூர் முன்பே பார்த்தோம்
மேலே திருக்கண்ணங்குடி இதுக்கு எடுத்ததுமே வரும்
சிலை இலங்கு- பிரவேசம் –
(கீழே போக்யத்தையிலே ஈடுபட்டு
இதில் பிரிந்து திருத்தாயார் பாசுரம் சொல்லும் படி பேசுவதற்கு சங்கதி அருளிச் செய்கிறார் )
கீழ்த் திரு மொழியில்
தன்னுடைய படிகளை எல்லாம் காட்டிக் கொடுக்க
அனுபவித்து –
(படிகளைக் காட்டிக் கொடுக்க -அனுபவித்து
கொடுக்க -அநந்தரம் – அப்பொழுது இங்கு உள்ள சவுரி ராஜப்பெருமாள் படியையும் கண்டு
அனுபவித்து -சேர்த்து யரும் பதம்-இவனும் கண்ணனே தானே -இரண்டும் கிருஷ்ண ஷேத்ரங்கள் )
பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்து –
அது கிடையாத படியாலே ஒரு பிராட்டி தசையைப் பஜித்து-
பிராட்டி உடைய (பிரிந்து இருக்கிற )அவஸ்தையைப் பார்த்த திருத் தாயார் –
1-தன் பெண் பிள்ளை உடைய பாசுரம் இருக்கிற படியாலும் –
2-தன் பக்கல் விரக்தியாலும் –
3-ஆசைப் பட்ட விஷயத்தில் பிரேமத்தாலும் –
பிரிந்த விஷயத்தின் வைலஷண்யத்த்துக்கு அனுரூபமாக எதிர்தலையை அழிக்க வல்ல
குணங்கள் எவ்வளவாக உடைத்தாய் இருக்கும் –
அவற்றிலே கால் தாழ்ந்தமை தோற்ற
அவனுடைய
1-சௌந்தர்யாதிகளையும் –
2-சீலாதிகளையும் –
3-ஆண் பிள்ளைத் தனத்தையும் –
வாய் வெருவா நின்றாள் –
1-என் ஹித வசனமும் கேடகிறிலள்-
2-தன் ஸ்த்ரீத்வமும் பார்கிறிலள் –
3-அவன் ஸ்வரூபமும் பார்கிறிலள் —
அது தானும்
பரத்வத்தில் ஆதல்
விபவத்தில் ஆதல் அன்றிக்கே
அவ்விடங்கள் எல்லா வற்றிலும் சொல்லுகிற ஏற்றங்கள் எல்லாவற்றையும்
உடைத்தாய் இருக்கிற திருக்கண்ண புரத்திலே புக்கு
அங்கே எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ சௌரி ராஜ பெருமாளை சாஷாத் கரித்து
அந் நீர்மையிலே அகப்பட்டாள் போலே இரா நின்றது என்று
வினவ வந்தவர்களைக் குறித்துச் சொல்லுகிற
பாசுரமாய் இருக்கிறது -(அனுமானம் பண்ணி சொல்கிறாள் )
(யதோ வாசோ நிவர்த்தந்தே -வேதம் சொல்லும் அவனை பூர்ணமாக அனுபவித்து
மகள் பேச திருத்தாயார் அனுபவித்த பாசுரம் போல்
ஸத்வித்யா பிரகரணம் மேல் காட்டுகிறார்
ஸ்வேத கேது -உத்தாலகர் -சம்வாதம் –
இங்கு தெரியாதது ஒன்றுமே இல்லை என்று தாயார்
அங்கு தெரிந்து கொள்வதை அறியாமல் உள்ளான்
முகம் பார்த்து அனுமானம் தான் இரண்டுக்கும் பொது )
சில ஆசார்யர்கள் பக்கலிலே சென்று
சில அர்த்தங்களைக் கேட்டு
சரீர பேதத்தளவு அன்றிக்கே -ஜீவர்களுக்கும் பரஸ்பர பேதம் உண்டு என்று
அறிந்த ஏக தேச ஜ்ஞான மாத்ரத்தாலே
சர்வேஸ்வரன் உடைய ஜகத் வைசித்ரி இருந்தபடி என் -என்று கொண்டு
ஆச்சர்யப் பட்டு
எல்லாம் அறிந்தான் போலே பூர்ணனாய்
ஸ்வேதகேது வானவன் பிதாவின் அருகே வந்து இருக்க -பிதா -உத்தாலகன்
பிதா மகன் -அருணன் –
பிதாவும் இவன் வடிவில் வேறுபாடு கண்டு
ஜ்ஞாதவ்யாம்சம் இன்னம் அநேகம் உண்டாய் இருக்க எல்லாம் அறிந்தாரைப் போலே இரா நின்றான் –
அவற்றையும் இவனுக்கு அறிவிக்க வேணும் என்று பார்த்து
(வடிவில் வேறு பாடு கண்டு அறியாததை அறிவிக்க இங்கு
அவள் அறிந்ததை திரும்ப சொல்கிறாள் திருத்தாயார் )
ஸ்தப்தோசி-பரி பூர்ணனைப் போலே எல்லாம் அறிந்தாயாய் இரா நின்றாய்
தமாதேசமப்ராஷ்ய பரிபூர்ண இவ லஷ்யசே -இந்த ஆதேசத்தைக் கேட்டாயோ
ஆதேச -பிரசாசனம்-(சர்வ லோக நியாந்தா -நியமன சாமர்த்தியம் )
பிரசாசிதாரம் சர்வேஷாம் -என்று
ஒன்றை அறியவே எல்லா வற்றையும் அறிந்ததாய்
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களையும் ( பிரசாசிதவாக-சாசனம் பண்ணுபவனாக ) நியமிக்கக் கடவ
சர்வேஸ்வரனையும் அறிந்தாயோ நீ -என்ன
(ஏக விஞ்ஞானேந சர்வ விஞ்ஞானம் )
கோன்வாதேச -ஆதேசம் ஆவது என் என்ன
அவன் வேதத்தில் பூர்வ பாகத்தில் சிலவற்றை ஆதல்
ந்யாயாதிகளில் சிலவற்றை யாதல் -கேட்ட அளவாய்
வேதாந்த ஜ்ஞானம் இன்றிக்கே
சர்வேஸ்வரன் ஒருவனைக் கொண்டு
குலாலாதிகளுக்கு தண்ட சக்ராதிகள் மாத்ரம் நிமித்தமும் சஹகாரியுமாம் அளவே ஈஸ்வரன் –
(என்கிற நையாயிக பக்ஷம் மட்டும் அறிந்து
ப்ரஹ்மம் சரீரமே சேதன அசேதனங்கள் -பரிணாமம் அடையும் என்றும் அறிய வேண்டுமே -)
உபாதாநமும் தானேயாய் -( காரணமும் ப்ரஹ்மமேயாய்)-
பஹூஸ்யாம் -என்கிற காரியமும் ப்ரஹ்மமேயாய் –
சித் அசித்துக்கள் இரண்டும் விசேஷணம் என்று கொண்டு
வேதாந்திகள் போன வழியையும் அறிய வேணும் காண் -என்றான் –
அங்கு –
அவன் அறியாத அம்சம் அறிவிக்கைகாக பிதா கேட்டான் –
இங்கு –
தன் பிள்ளை உடைய படியாலும்
பேச்சாலும்
இவள் சர்வாதிகனான சர்வேஸ்வரனை மறுபாடுருவ அறிந்தாள்-என்று
அத்தை தான் அறிந்தமை தோற்றச் சொல்லுகிறாள் –
(கீழே அனுமானத்துக்கு மாத்திரம் திருஷ்டாந்தம்
இனி அறிந்ததமைக்கும் அனுமானத்துக்கும் சேர இந்த ஐதிக்யம் )
ராஜேந்திர சோழனில் ஒரு பிராமணன் மகன்
புத்தரோடு சம்ப்ரதாயம் உண்டாய்
பூண நூலையும் குடுமியையும் அறுத்துப் பொகட்டான் –
கூரத் தாழ்வான் அங்கே நடந்த அளவிலே
சிகா யஞ்ஞா பவீதங்களைத் தரித்துக் கொண்டு வந்து புகுந்தான் –
பிதாவானவன்
ஸ்ரீ கூரத்தாழ்வானைச் சந்தித்தாயோ என்று கேட்க
புறம்பு உள்ளார் -நீ அறிந்த படி எங்கனே -என்று கேட்க
ஸ்ரீ ஆழ்வான் சந்நிதியில் தமோபி பூதரும் சத்வஸ்தர் ஆவார்கள் காண் -என்கின்றான் –
பிள்ளை அமுதனார் இத் திருமொழிக்கு பிரவேசம் சொல்லா நிற்கச் செய்தே
ராஜாக்கள் அந்தபுரக் கட்டிலே-தெருவிலே –
பள்ளி யந்துலாத்திலே-தண்டிகை -பல்லக்கில் – ஏறி உலவா நிற்பர்கள் காண் –
என்றாப் போலே அநேகம் வாக்ய சில்பங்களை பண்ணினார் –
அப்போது பால்யத்தாலே அவ் வடைவுகள் புத்தி பண்ணப் பெற்றிலோம்
அவற்றுக்கு இதில் பற்றாசு ஏது என்று விசாரித்தோம் –
இது வாகாதே என்று தெளிந்தோம் காண் என்று இவ்வளவிலே நம் பிள்ளை அருளிச் செய்தார் –
கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-8-
————————————————–
தன் பெண் பிள்ளை சொல்லக் கடவ இது
தனக்கு ரசித்த படியாலே
அப் பாசுரத்தை தன் வாயாலேயும் ஒரு கால் பேசி
அனுபவிக்கப் பார்க்கிறாள் –
(என்கின்றாள் ஆல் – வர்த்தமானம் பிரயோகம் -பெண் தாயார் வினவ வந்தவர்கள் மூவரும் இருக்க
இவள் சொன்னதை வினவ வந்தவர்கள் கேட்கவும் பிரசக்தியும் இருக்க
திருத்தாயார் அனுவதிப்பது அவள் ரசிப்பதால் )
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருக்கின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானைக் கண்டாள் கொலோ 8-1-1-
என்கின்றாளால்-என்கின்றாள் ஆல் -ஆச்சர்யம்
ஆல் -விஷாத- வருத்தத்துக்கு அடையாளம்
கொலோ–அனுமானத்தால் சொல்வது –
கண்டாள்-பார்த்து இருப்பது நிச்சயம் –வந்தவர்களுக்கு மறைத்து பேசுகிறாள் –
சிலை என்கின்றாளால் இலங்கு பொன் ஆழி என்கின்றாளால் திண் படை என்கின்றாளால்
தண்டுஎன்கின்றாளால் ஒண் சங்கம் என்கின்றாளால்-ஒவ் ஒன்றுக்கும் தனித்தனியே அனுபவித்து
மகள் சொல்ல திருத் தாயார் சேர்த்தே சொல்கிறாள்
மற்று-மேலும் ஆபரணமாக –
தோள் நான்கே-ஆபரணமோ ஆயுதமோ இல்லை அவயவமே என்றாலும் இங்கு
மற்று அவற்றுக்கு -கீழேயும் இசையும் ஆபரணமாகவே இவளுக்குத் தோற்றுகிறது
எற்றே காண்- எப்படி பிடித்துள்ளான் மகள் வார்த்தை -என்ன அழகாக சொல்கிறாள் தாயார் வார்த்தையாக –
கலை இலங்கு மொழியாளர்-அவர்கள் திண்ணைப்பேச்சும் சாஸ்த்ரார்த்தம் –
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்-
திவ்ய ஆயுதங்களைத் தரித்தால்
அவை பிரதி பஷ நிரசனத்துக்கு உறுப்பாய் இருக்கும் அதுவே அன்றிக்கே
ஆபரணங்களுக்கும்
அழகுக்கும்
முதல் விரலாய் யாயிற்று இருப்பது –
திவ்ய ஆயுதங்களை இவை ஆபரணங்கள் என்று அறியும் தனையும்
உள் புக்காள் ஆகையாலே
இவை ஆயுதம் என்று இருக்கும் அளவன்றிக்கே
பூஷணம் என்று இரா நின்றாள் –
ஆயுதம் என்று இருப்பார் எதிரிகள்
இங்கனே இருக்க விறே
பிரணயிநி யாமவள் இத்தைச் சொல்லி வாய் வெருவுகிறது –
முன்பு இவனை அனுபவித்தவர்கள்
காண வேண்டும் என்று ஆசைப் படும் போது
கூராராழி வெண் சங்கேந்தி கொடியேன் பால் வாராய் மண்ணும் விண்ணும் மகிழவே -என்று இறே ஆசைப் படுவது –
(விரஹ தசையில் ஸுந்தர்யம் தானே சொல்லி வாய் வெருவுவார்கள்
திவ்ய ஆயுதங்கள் -ஆபரணங்களும் அழகுக்கும் முதலில் என்னும் படியாகவே காதலிகளை இருக்குமே
அப்படி சொன்ன பராங்குச நாயகியும் உண்டே
ஆயுத ஆகாரம் வெளியாக தோன்றினாலும்
ஆபரணத்வம் ஆகாரம் இவளுக்குத் தோற்றுவது இவள் உள்ளே புகுந்து அனுபவித்தவள்
மாறுபாடு உருவ பார்த்தவள் அன்றோ -)
திவ்ய ஆயுதங்கள் காந்தன் உடைய இடைச்சரி கடைச்சரி அறுகாழி போலே
ஆபரண கோடியிலுமாய் இரா நின்றது –
(எத்தனை சொல்லினாலும் இரண்டு ஆகாரங்கள் இருப்பத்தைச் சொல்லுவான் என் என்னில்
ஆபரணமாகவே இருக்கும் இவை என்றே இவள் பார்க்கிறாள் )
(ஆயுதமே அடையாளமாகவும் சொன்ன இடங்களும் உண்டே என்பதை மேலே அருளிச் செய்கிறார் )
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
வெடி விளக்கு எரித்துக் கொண்டு இருந்து அனுபவித்து
காந்தன் போன அநந்தரம் -இன்னார் என்று அறியேன் -என்கிறாள் இறே –
வ்ருத்த கீர்த்தனம் பண்ணுகிற போது சொல்லுகிற வார்த்தை இறே –
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் -என்று அடையாளம் சொல்லச் செய்தே இறே
இன்னார் என்று அறியேன் -என்று கலங்குகிறது –
பிரிந்து இருந்து தூது விடுகிற இடத்திலும்–செரு ஒண் சக்கரம் சங்கு -என்று இறே –
திரு வண் வண்டுறையும் பெருமாளுக்கு -அடையாளம் சொல்லி விட்டது –
இன்னார் என்று அறியேன் -என்று ஈடுபடுவது தான் அழகிலே இறே
அதுக்கு ( ஸம்ஸ்லேஷத்துக்கு ) முன்பு திவ்ய ஆயுதங்களாக இருக்குமே –
(நாலாவதாக- பல்லாண்டு பாடும் பொழுதும் மேல் )
சர்வேஸ்வரனுக்கு மங்களா சாசனம் பண்ணப் புகுந்தவர்களும்
சுடர் ஆழியும் பல்லாண்டு -என்றும் –
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு -என்றும்
திவ்ய ஆயுதங்களுக்கு மங்களா சாசனம் பண்ண வேண்டி இருப்பது –
(கீழே ஆக்ஷேப சமாதான அர்த்தமாக சமுதாயமாக
இனி பிரதி பதம் தாத்பர்யம் அருளிச் செய்கிறார்
சிலை -விசேஷணம் இல்லாமல் தொடங்கி இதன் வை லக்ஷண்யம் காட்டி அருளுகிறார் )
சிலை –
சக்ர சாப நிபே சாபே க்ருஹீத்வா சத்ரு நாசநே -என்று
(சக்ர இந்திரன் வர்ஜம் பிடித்து தானே இருப்பானே ஆகவே இந்திர தனுஸ் )
எங்களைத் தோற்பிக்கும் பரிகரமாய் இருந்தது –
இந்திர தனுஸ் போலே எங்களுக்கு தர்ச நீயமுமாய் –
எங்களுக்கு சத்ருவான வாலியை நிரசிக்கைக்கு பரிகரமுமாய் -இருந்தது
அனுகூலருக்கு வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டே இருக்கும் படியையும்
பிரதி கூலர் பிடித்த பிடியிலே மண் உண்ணும் படியுமாயும் இருக்கும் –
அதன்றிக்கே
சாபே –
வில் வலிக்கும் படியை நினைத்தால்
ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே-என்னும்படியாய் இருக்கும்
அழகுக்கு உறுப்பாய் இருக்கும் அனுகூலர்க்கு –
ஸ்மரன் ராகவ பாணா நாம் –
பெருமாள் திரு நாமத்தால் எழுத்து வெட்டின அஷரங்களையும்
திருச் சரங்களின் உடைய சந்நிவேசத்தையும் ஸ்ம்ரியா நின்று கொண்டு –
விவ்யதே –
அவர் ஒரு கால் முன்னே நின்று போகச் செய்தேயும்
எப்போதும் ஒக்க முன்னே நிற்கக் கண்டாப் போலே வ்யதித்தான் —
ராஷேச்வர விவ்யதே –
இவர் ஆண்ட பரிகரம் அடங்கலும் வினைக்கு உடலாய் ஆயிற்று இல்லை –
எடுத்து எடுத்து குலைக்கிற போது சுளைப்பிடாம் -கம்பளி -இட்டு
அமுக்குகைக்கு உடலாம் இத்தனை –
சிலை –
ஒன்றை இட்டு விசேஷிக்க வேண்டாதே
தன்னையே சொல்ல அமைந்து இருக்கிற ஸ்ரீ சார்ங்கம் –
இலங்கு பொன் ஆழி-
மேகத்திலே மின்னினாப் போலே
ஸ்யாமளமான-திரு மேனிக்குப் பரபாகமாய்க் கொண்டு
எல்லா ஆயுதங்களுக்கும் தலையாய் இருக்கிற புகர் தோற்றும்படியாய்
ஸ்ப்ருஹணீயமாய் இருக்கிற திரு வாழி –
திண் படை-
எதிரிகள் மேலிட்டாலும் பிற்காலிக்க வேண்டாத படி
திண்மையை உடைத்தான திரு வாள்
அன்றிக்கே
எதிரிகள் மேலே அழுந்தப் படச் செய்தேயும்
தனக்கு ஒரு விகாரம் இன்றிக்கே இருக்கிற வாள்
படை -என்று
ஆயுத சாமான்யத்தைச் சொல்லக் கடவது –
வாளையும் சொல்லக் கடவது –
(குணவான் -சொல்லி குண சீலம் -குணனம் பெருக்கி பெருக்கி அனுபவிக்கும்
இப்படி பொதுவாகவும் ஒரே குணத்தையும் சொல்வது போல் இங்கும் )
தண்டு –
அத்தோடு ஒரு கோவையான கதை –
இப்படி ஒரு விசேஷணம் இட்டுச் சொல்ல வேண்டாத கதை -என்னுதல் –
இதுக்கு சொன்ன விசேஷணம் தன்னையே சொல்லிற்றாம்படி இருக்கிற தண்டு -என்னுதல் –
(கதை கௌமோதகீ -இதுக்கும் திண் அடைமொழி )
(ஒண் சங்கம் –
திருச் சங்குக்கு ஒண்மை -பகவத் அருகாமை -ப்ரத்யாசத்தி
நான்கு வகையாக அருளிச் செய்கிறார் இத்தையே
1-ரசஞ்ஞதை -வாய் அமுதம்
2-ஸூக ஜீவனம்
3-ஐஸ்வர்ய செருக்கு
4-அந்தரங்கதை
ஒண் சங்கம் –
1-ரசஞ்ஞதை -வாய் அமுதம்-
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ -என்று தேசிகராய் இருந்து வைத்து
ரச விசேஷங்கள் இவர்களுக்கும் (ஆண்டாளுக்கும் ஆழ்வார்களும் ) தன்னைக் கேட்டறிய
வேண்டும்படியாய் இருக்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் –
பிரணயிநிகள் இறே வாக் அம்ருதத்துக்கு தேசிகராய் இருப்பார்
அவர்களும் தன்னைக் கேட்டு அறிய வேண்டும்படி இறே –
2-ஸூக ஜீவனம்
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம்
கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே –
(தூங்கு வதற்கு ஏற்ப கடல் வண்ணன் )
ஸ்திரீ ஜாதியாக ஸ்பர்த்தை பண்ணும் படியாக
பகவத் அனுபவத்திலே வாசனை பண்ணிப் போரும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் –
3-ஐஸ்வர்ய செருக்கு
மாதவன் தன் வாய் அமுதம் பொதுவாக உண்பதனைப் புக்கு
நீ உண்டக்கால் சிதையாரோ வுன்னோடு-
பகவத் பிரத்யாசன்னையான அவள் அங்கீகாரம் கொண்டு ஜீவிக்க இருக்கிற
சர்வ சாதாரணமான ஜீவனத்தை
நீ ஒருவனுமே ஜீவித்தால் அவர்கள் உன்னோடு சீறு பாறு என்னாரோ –
செல்வப் பெரும் சங்கே –
உன்னுடைய ஐஸ்வர்யச் செருக்கு இறே -இங்கன்
முன்னடி தோற்ற வேண்டாது ஒழிகிறது-
4-அந்தரங்கதை-
அல்லாத ஆயுதத்துக்கு விரோதிகள் இருந்த இடத்தே சென்று நிரசிக்க வேணும்
இவனுக்கு உள்ளே அணுக நிற்க வமையும் இறே
(பாஞ்ச ஜன்யம் ச கோஷோ -உளுத்துப் போக வைத்ததே -வெண்மை சாத்வீகம் -சப்தம் கேட்டதுமே நிரஸிக்க வல்லமை
உள்ளே அணுக நிற்க அமையும் -கையில் இருந்து வாயுக்கு போக வேண்டுமே -)
பூக் கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு ஒலியும்-என்று
உகப்பாரும் இச் சேர்த்தியைக் காண வேணும் என்று இறே ஆசைப் படுவது –
(ஸ்ரீ ருக்மிணி ஸந்தேஸம் -வந்ததுக்கு அடையாளம் இதுவே )
(ரசஞ்ஞதை -ஸூக ஜீவனம் -ஐஸ்வர்ய செருக்கும் -அந்தரங்கதையும் -சொல்லிற்று ஆயத்து -)
என்கின்றாளால்-
அப்பாசுரத்தை தான் ஒரு கால் அனுசந்திக்கை யாகிறது –
அதுக்கு அவத்யத்தை விளைக்கை இறே என்றாள் ஆயிற்று –
தான் சொன்னது அவள் சொன்னது போல் இராமையாலே –
அவள் உடைய பாவ பந்தம் தனக்கு இல்லையே –
என்றாள் -சொல்லாமல்-என்கிறாள்-சொல்லாமல்- என்கின்றாளால் -என்பதால் –
ஒரு கால் அனுசந்திக்கை அவத்யம் -என்றதாயிற்று –
ஒரு கால் கண்டு விட்டால் பின்னை பிராதி கூல்யத்தில் எல்லையில் நின்றாரோடு
ஆனுகூல்யத்தில் ( எல்லையில் )நின்றாரோடு வாசி அற துடிக்கும்படி யாயிற்று –
என்கின்றாளால்–
தலைமகளுக்கு திவ்ய ஆயுதங்கள் ஆகர்ஷகமாய் இருக்குமா போல் ஆயிற்று
இவளுக்கும் இருக்கிறபடி –
இவள் சொல்லுகிறது தன்னையே தானும் சொல்லச் செய்தே இவள் சொல்லக்
கேட்டால் போலே இருக்கிறது இல்லை யாயிற்று திருத் தாயாருக்கு –
நாந் ருக்வேத விநீதஸ்ய –
அனுஷ்ட அர்த்த பிரகாசமான ருக்வேதம் சிஷிதனானவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல ஒண்ணாது –
நா யஜூர் வேத தாரிணா –
யஜூர் வேத பாட தாரணம் தான் அரிது -கவலை பாயாமல் சொல்ல வல்லவன்
அது அறிந்தவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல முடியாது –
(நா சாம வேத விதூஷா -கான விசேஷம் அறிவது அரிது )
சக்யமேவம் பரபாஷிதும் –
இத்தை எல்லாவற்றையும் அதிகரித்தவனுக்கு அல்லது
நம் முன்னே இப்படி வார்த்தை சொல்லலாமோ -என்றார் இறே பெருமாள் –
(அவிஸ்ருதம் -வாக் மீ ஸ்ரீ மான் -சொல்லின் செல்வன்
மஞ்சு பாஷித ராகவன் ம்ருது பாஷித ராகவன் கொண்டாடும் படி அன்றோ
ஆயிரம் நாக்கு கொண்ட இள வலையும் பார்த்துப் பேசச் சொல்ல வேண்டும் படி அன்றோ
இவர்கள் சொல்லும் அவிடும் ஸ்ருதியாகுமே )
என்கின்றாளால் –
அடி தோறும் உளுக்கினமை தோற்றி இருக்கிறது –
ஆருக்கு நிலமானதிலே இவள் வார்த்தை சொல்லுகிறது -நித்ய ஸூரிகள் வார்த்தை அன்றோ —
சிலை இத்யாதி –என்கின்றாளால் –
பைசல் காசு – முக்கை காசு -என்னுமா போலே -கைசு -குட்டிச் சிறாங்கை-முக்கை-மூன்று சிறாங்கை-
இவளைப் பாதிக்கைக்கு இது எல்லாம் வேணுமோ –
(ஈடுபாட்டுக்கும் வருந்துவதற்கும் வெறுப்பிலும் என்றவாறு )
இவையோ இவனுக்கு ஆபரணம் -மற்றும் உண்டோ என்ன –
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு –
மற்று அவனுக்கு ஆபரணம் –
ஆபரணத்துக்கு ஆபரணமாய் இருப்பன
தோள் நாலும் என்னா நின்றாள் –
திவ்ய ஆயுதங்களை அனுசந்தித்த இது
அவ்வாயுதங்களின் வழியே -அவற்றைத் தரித்து இருக்கும்
திருத் தோள்கள் அளவும் கொண்டு போய் மூட்டிற்று –
(சம்ஸ்லேஷத்துக்கு முன்னால் ஆயுதமாக தோற்றும் பின்பு ஆபரணமாகவே தோற்றும் முன்பே பார்த்தோம் )
புறம்பு ஓர் இடத்திலும் போக வேண்டாத படி இறே விஷயம் தான் இருப்பது –
சர்வ பூஷண பூஷார்ஹா -என்று
ஆபரணங்களுக்கும் ஆபரணமாகைக்கு அர்ஹமாய் இறே தோள் தான் இருப்பது
ஆயுதங்களை ஆபரணமாக சொல்லிற்று இறே
ஆயுதங்கள் அபாஸ்ரயமுமாய் ஆகர்ஷகமுமாய் இருக்குமா போலே
தோள்களும் அபாஸ்ரயமுமாய் ஆகர்ஷகமுமாய் இருக்கிற படி –
(எடுத்த பிரமாணம் பூஷணங்களுக்கே ஆயுதங்களுக்கு இல்லையே என்று சங்கை வர
இவள் இவற்றை ஆயுதமாகவே பார்க்க வில்லையே )
மலை இலங்கு –
மலை போலே விளங்கா நிற்பதாய் -கல்பக தரு பணைத்தால் போலே இருப்பன
நாலு திருத் தோள்கள் என்னா நின்றாள் –
மலை போலே எதிரிகள் பேதிக்க ஒண்ணாத படி இருக்கை –
மற்று அவனுக்கு –
ஆயுதங்களே போந்து இருக்கச் செய்தே அழகுக்கு வேண்டுவது –
அதுக்கு மேலே நாலு திருத் தோள்களையும் உடையான் என்னா நின்றாள்
மற்று -எனபது -துல்ய விகல்பங்களை இறே –
(துல்ய -ஒரே பெருமை உள்ளவை -விவஸ்திதம் -சமம் இல்லாதவை -இப்படி இரண்டு விகல்பங்கள் )
கீழே திவ்ய ஆபரணங்களைச் சொல்லி -இங்கே -மற்று -என்கையாலே –
தோள்களும் ஆபரணமாக இருக்க வேணும் இறே –
திவ்ய ஆத்மா குணங்களிலும்
திவ்ய ஆத்மா ஸ்வரூபத்தில் காட்டிலும் அனுபாவ்யமாய் இருப்பது திவ்ய விக்ரஹம் இறே
ஸூபாஸ்ரய ப்ரகரணங்களில் த்யேயமாக சொல்லுகிறதும் அது தன்னையே இறே –
(தோள் நான்கே -ஏவகாரத்துக்கு இங்கு விளக்கம் -த்யேயம் ஸ்ரீ பதி ரூபமே -)
திவ்ய விக்ரஹத்துக்கும் திவ்ய ஆத்மா குணங்களுக்கும் உள்ளே
ஒன்றை உபாஸ்யம் என்று சொல்லிற்று –
இத்தை விட்டு அவ்வருகே போகச் சொல்லுகிறது அன்று –
அவ்வருகேயும் அனுபாவ்யம் உண்டு என்கைக்காக சொன்னது இத்தனை –
அங்கன் அன்றாகில் -சதா பஸ்யந்தி-என்னக் கூடாது இறே
தந்தாமுடைய தபஸ்ஸாலே ஷீண பாபரான ருஷிகளைப் போலே அன்றிக்கே
பகவத் பிரசாதம் அடியாக ஜ்ஞானம் பிறந்த ஆழ்வார்கள்
திவ்ய விக்ரஹம் அல்லது அறியார்கள் இறே –
(தஹர வித்யை -தஹராகாசம் -அந்தம் உள்ளதை உபாஸ்யமாகச் சொல்லிற்றே –
இத்தைத் தாண்டித்தான் போக வேண்டும் இல்லையே
உள்ளேயும் இருக்கும் -என்று சொல்ல வந்ததே இந்த வாக்கியம்
ஸ்வர்க்க ஆரோகணம்-மேலே – உள்ளே போனால் காணலாம் –
ஆனால் அது பத்ரிகாஸ்ரமம் விட ஸ்ரேஷ்டம் இல்லையே )
நிலாதுக்குறி பகவர்-பட்டரை -ஸ்ரீ வைகுண்டத்திலே சதுர் புஜனாய் இருக்கைக்கு பிரமாணம் என்ன -என்று கேட்க
அவர் சொல்லி வாய் மாறுவதற்கு முன்பே
தமஸ பரமோ தாதா சங்கு சக்ர கதா தரா -என்னா நின்றது என்ன
(மண்டோதரி சதுஸ் ஸ்லோகம் )
போக்கடி காணாமையாலே கோபத்தாலே கண் சிவக்க
பிரமாண கதிகள் இவையே இருந்தது
பொறுக்கும் அத்தனை இறே -என்று அருளிச் செய்தார் –
எற்றே காண் என்கின்றாளால்-
எற்றே -என்கிறது
மலை இலங்கு தோள் நான்கே -என்னா -இருந்தபடி என் -என்று
தலைமகள் தான் ஆச்சர்யப் படுகிறாள் ஆகவுமாம் –
அதிமாத்ரா ப்ராவண்யம் ஆகாது என்று மீட்க் பார்த்த இடத்தும் மீட்க ஒண்ணாத படி
இவ் விஷயத்தில் அவஹாகித்த படி தான் என் -என்று
திருத் தாயார் ஆச்சர்யப் படுகிறாள் -என்னவுமாம்
என்னே காண் என்கிறாள் –
இதோர் ஆச்சர்யம் இருந்தபடி என்
நீங்களும் இத்தைப் பாருங்கோள் -என்னா நின்றாள் –
காண் என்கின்றாளால்–
நான் அதி மாத்ர பிராவண்யம் ஆகாது -என்ன
மூத்தார்க்கு முத்து
என்னுடைய ஹிதத்துக்காக இப் பேற்றை இழக்கிறது என் என்று விலக்கப் பார்த்த என்னையும்
தன் படி யாக்கப் பாரா நின்றாள் –
இவ் விஷயத்தில் பிராவண்யம் தான் திருத் தாயாருக்கு அபிமதமாய் இருக்கச் செய்தே
அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது என்று நிஷேதிக்கிறாள் இத்தனை இறே –
(ஆல் -ஆச்சர்யம் -ஹர்ஷம் -இரண்டும் என்றபடி )
என்கின்றாளால் –
இது திவ்ய ஆயுதங்களைச் சொன்ன போது போல் அன்று ஆய்த்து
திருத் தோள்களை சொன்ன போது இருக்கிறபடி –
இவளுக்கு திவ்ய ஆயுதங்கள் அழகுக்கு உடலாம் அளவே இறே
அணைக்கைக்கு பரிகரம் இறே தோள்கள் –
(ஆபரணங்களை உடையவன் -அவனுக்கு மற்று தோள் நான்கே இருக்க வேண்டுமே –
மயங்கி அக்ரமமாக -அழகில் ஈடுபட்டு மற்று அவனுக்கு என்கிறாள் )
என்கின்றாளால் –
(வார்த்தை அழகு மட்டும் இருந்தால் எற்றே கேள் இருக்க வேண்டுமே –
குறி அழிந்து இருப்பதைப் பார்க்கவே எற்றே காண் )
நாமும் எல்லாம் இவற்றை சொல்லுகிறோம் இறே
இவள் சொல்லுகிற போது இருக்கிறபடி பாருங்கோள் –
நாமும் எல்லாம் சொல்லி குறி அழியாதே இரா நின்றோம் –
திருத் தாயாரை இவள் காண் என்னப் பெறுமோ என்ன -பெறும்
குடத்தில் விளக்கே போலே கொம்பனார் காமம் புறப்படா
புறப்படில் ஆ புகு மாலை யணி மாலை பிடி போல் கவ்வை தரும்
இவள் அறிவுக்கு முன்பு மறைக்கும் இத்தனை போக்கி
அறிந்த பின்பும் மறைக்கை களவாம் இறே –
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்-
இதர விஷயத்தில் ஸ்நேஹிக்கும் க்ரமம் இல்லை யாகாதே
பகவத் விஷயத்தில் தான் காட்ட காணும் அவர்களுக்கும் –
கதிர் பெருக்கி ஆர்ஜித்து கர்மத்தாலே ஷீண பாபராய்
ஸ்நேஹித்தவர்களுக்கும்
வாசி இருக்கும்படி இதுவாயிற்று –
(பர்வத பரம அணு வாசி போலும் -வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் )
அவர்களுக்கு அப்படியால் வந்த ஸ்நேஹம் முற்பட்டு இறே இருப்பது
அதின் கார்யம் இறே பயலைமை –
அங்கன் அன்றியே -இது பயலைமை முற்பட்டு -ஸ்நேஹம் பிற்பட்டு இருக்கிறது ஆயிற்று –
முலையிலே விளங்கா நிற்பதாய் பூத்த பயலை -என்னவுமாம் –
பீர்க்கு பூத்தது -என்று வை வர்ண்யத்தை சொல்லக் கடவது இறே
பீர்க்கம் பூவை இட்டு தமிழர் சொல்லுவார்கள் இறே
அன்றிக்கே
பூ என்று கொண்டு அழகாய்
முலையிலே விளங்கா நின்றுள்ள பயலைமை என்று
முலைக்கு ஆபரணமான வை வர்ண்யம் -என்றுமாம் –
அதாகிறது
யௌவனத்தில் முத்தாஹாரம் தொடக்கமானவை அல்லவாயிற்று –
முலைக்கு ஆபரணம் வை வர்ண்யம் ஆயிற்று –
அபிமதனைப் பிரிந்து வை வர்ண்யத்தைத் தரியா வாகில்
மரமுலையோ பாதியாம் இத்தனை இறே
பிரிந்து வை வர்ண்யம் ஆகாதே இருந்தாள் ஆகில்
ஆணுக்கும் பெண்ணுக்கும் வாசி இல்லை யாம்
ஆகையால் இவளுடைய ப்ரணயத்துக்கு நமஸ்காரம் இறே –
(துஷ்க்ருதம் க்ருதவான் ராம -பிரபு -பெண் பிறவி எடுத்துப் பார்த்து இருந்தால்
தானே அறிவான் பிரிவாற்றாமை -திருவடி
பகவத த்வரையா நம -ரக்ஷணத்தில் உறுப்புக்கு நமஸ்காரம் போல் இவளுக்கும் இது )
பயலை முன்போட வன்போடு இருக்கின்றாளால் –
நாட்டார் படி அன்றிக்கே இரா நின்றது இவள் படி –
அன்பு பட்ட விஷயத்தின் உடைய அலாபத்தாலே பயலைமை உண்டாக கடவதாக இருக்க
பயலை வழி காட்ட -அத்தை பின் சென்றது அன்பு –
கார்யத்துக்கு பூர்வ வ்ருத்தியாய் இருக்குமதுவே காரணம்
இது அப்படி புத்தி பண்ணுகைக்கு அவகாசம் வைக்கிறது இல்லை
இங்கனே சொல்லுவான் என் என்னில்
ஒரு விஷயத்தில் அன்பு பட்டு அதன் உடைய அலாபத்தில் வருமது ஓன்று அன்றோ பயலைமை -என்னில்
அப்படியே இது திருத் தாயார் வார்த்தை யாகையாலே -தான் கண்டு அனுபவித்த அடைவே சொல்லுகிறாள்
அன்பு முற்பட்டு இது பிற்பட்டாலும் முற்பட பிரதிபத்திக்கு விஷயமாவது இது இறே-
இவள் உடம்பில் வை வர்ண்யமும் பேச்சும் கொண்டு இறே
இவள் விரஹத்தை நிச்சயிப்பது –
இவளுக்கு முற்பட பிரதிபத்திக்கு விஷயம் இதுவாகையாலே
தான் பிரதி பத்தி பண்ணின க்ரமத்திலே சொல்லுகிறாள் –
விஷய வைலஷண்யத்தாலே க்ரம விபர்யாசமும் பிறக்கும் இறே –
முலை இலங்கு பூம் பயலை –
பர்வதத்திலே ஏறும் போலே காணும் வெள்ளம் –
அதாகிறது –
இம்முலை கண்டார் வைவர்ண்ய அடங்க கடவத்தை
இதை பிரிந்து அவன் தானே வெளுத்து இருக்க வேண்டும்
பிரிந்து நோவு படும் லஷணம் இதுக்கு இல்லை -என்கை –
(மெய் இலங்கு -உடம்பு முழுவதும் இருந்தால் தானே விரஹம் அதிகம்
இங்கு முலை இலங்கு -இருப்பதற்கு வியாக்யானம் )
நீ அறிந்த படி என் என்னில் –
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –
இவ் வைவர்ண்யம் தான் ஹேத்வந்தர க்ருதம் என்று புத்தி பண்ணவுமாம் இறே –
அது செய்ய ஒண்ணாத படி இவள் இவ்விஷயத்தில் அகப்பட்டமையை நிச்சயித்து தருகிறது –
இவள் பாசுரம் ஆகிறது
அதாகிறது –
அவன் உடைய திவ்ய ஆயுதங்களின் பேரை இறே சொல்லுகிறது –
(அன்புடன் இருப்பதுக்கு மூலம் -வைவர்ணயம் -அறிந்து
திருக்கண்ண புரத்து அம்மானைக் கண்டமையும் -அறிந்து )
கலை இலங்கு மொழியாளர்-
அவ் ஊரில் உள்ளார் லோக யாத்ரைக்கு உடலாக -உண்ண- உடுக்க -என்று சொல்லும் வார்த்தையிலே
இன்னதனை சாஸ்திரம் கற்றார்கள் -என்று கற்ற சாஸ்திரப் பரப்பு அடங்கலும்
தெரியும்படி வரிக் கொள்ளலாய் இருக்கும் –
(பத்து பாத்திரம் -பத்துடை அடியவர்க்கு எளியவன்
அரிசியில் கல் கரு மாணிக்க மலை ஒன்றுமே இல்லை பேசுவார்கள் போலும் )
கலை -என்கிறது வித்யா ஸ்தலங்களை அடைய -(4 வேதம் 6 அங்கம் 8 உப அங்கங்கள் 18 )
மொழியிலே கலை இலங்கா நிற்கும் –
கலை இலங்கும்படியான பேச்சை உடையராய் இருப்பார்கள்-
(பண் பகர் வில்லி புத்தூர் கோன் -பேசுவதே பாடலாக பண் மிக்கு இருக்குமா போல்
இவர்கள் திண்ணைப் பேச்சும் ஸாஸ்த்ரம் )
கண்ணுக்கு தோற்றாததும் தங்கள் வார்த்தையிலே அறியும்படி இருக்குமவர்கள்
நெடுநாள் பெற்று வளர்த்த என்னோட்டை சம்பந்தம் அற்று
அவ் ஊரில் சம்பந்தம் தோற்றி இரா நின்றது இவள் வார்த்தை இருக்கிறபடி –
த்ருஷ்டும் சக்யம் அயோத்யாயாம் நா வித்வான் ந ச நாஸ்திக
சர்வே நராஸ்ஸ நார்ய்ச்ச தர்ம சீலாஸ் ஸூ சம்யதா-பால காண்டம் –
அறுபதினாராயிரம் ஆண்டு வன்னியம் அறுத்து நன்மைகளை உண்டாக்கிப் போந்த சக்கரவர்த்திக்கும்
இரண்டு பொருள் உண்டாக்க போச்சுதில்லை –
ஒரு அவித்வானை யாதல்
வைதிக அர்த்தங்களை இல்லை என்பான் ஒரு நாஸ்திகனை யாதல் உண்டாக்கப் போச்சுதில்லை –
(கள்வர் இலாமை இத்யாதி -கம்பர் )
அப் படை வீட்டில் உள்ளார் -ராஜ புத்ரர்கள் ஆரேனும் ஒருவர் முடி சூட அமையாதோ
என்று இருக்குமவர்கள் அல்லர் –
பெருமாளே முடி சூடா விடில்
இஹைவ நித நம்யாமோ மகாப்ரச்த்தா நமேவவா
ராமேண ரஹிதா நாஞ்சகிமர்த்தம் ஜீவிதம் ஹின-என்று
பெருமாள் அபிஷேகம் பண்ணாத படை வீட்டில் இருப்பது இல்லை
விழுந்த இடமே சுடுகாடாக போக அமையும் என்று இருப்பார்கள் புருஷர்கள் –
ஸ்திரீகளும் –
ராமமேவா அநுகச்சதத்வம ஸ்ருதிம் வாபி கச்சத – என்று
பெருமாள் வழி மாறிப் போனார் என்று திறக்க அழைத்த பர்த்தாக்கள்
முகம் பிளக்கத் தள்ளிக் கதவு அடைத்துக் கொள்ளுவார்கள் –
தர்ம சீலா –
ராம அனுவர்த்தியே பரம தர்மம் என்று இருக்குமவர்கள் இறே
ஸூ சம்யதா -ஸுவ பிரயோஜனத்தில் நெஞ்சு செலுத்தாதவர்கள் யாயிற்று
அப்படி இருக்குமவர்கள் யாயிற்று இவ் ஊரில் உள்ளாறும் –
கண்ண புரத் தம்மானை கண்டாள் கொலோ –
ஸ்ரீ வைகுண்டத்தில் சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் –
விபவங்களில் மனுஷ்யத்வே பரத்வமாய் இருக்கும் –
அங்கன் அன்றிக்கே -அவதாரங்களில் காட்டில்
அர்ச்சாவதாரத்தில் பரத்வமும் அகப்பட அறிந்தாள்
என்று தோற்றி இரா நின்றது –
ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய ஸூரிகளுக்கு அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டிருக்குமதாய் இருக்கும் –
விபவங்கள் காதா சித்கமாக ஒரு விதுர சபர்யாதிகளுக்கு கொடுத்து விடுமதாய் இருக்கும் –
பிற்பட்டாருக்கும் இழக்க வேண்டாதபடி
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களம் -திரு நெடும் தாண்டகம் -என்று
எல்லாருக்கும் அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு இருக்கும் இடம் இறே அர்ச்சாவதாரம் –
ஒரு வஸ்துவுக்கு குணத்திலே உத்கர்ஷம் ஆனால்
அவ்வேற்றம் உள்ளது இங்கே இறே –
(அம்மான் ஸ்வாமி -என்பதால் பரத்வம் -இது தானே அனைவருக்கும் ஆஸ்ரயிக்க வேண்டும் –
ஸுலப்யம் அனைவரும் அறிவார்கள் )
இங்கே உபாசித்து -அது விதேயமானவாறே -அவ்வருகே ஒன்றை உபாசித்து
அது விதேயமானவாறே அதுக்கும் அவ்வருகே ஒன்றை உபாசித்து
அதுக்கு அவ்வருகே போகக் கடவதாக
இங்கனே ஒரு க்ரமம் சொல்லுவது உபாசகருக்கு –
முதலிலே சர்வ பர ந்யாசம் பண்ணினவர்களுக்கு இங்கேயே எல்லாம் புஷ்கலமாய் இருக்கும் இறே
கடல் அருகே போகா நின்றால்-கண்ணால் கண்ட அளவே உள்ளது -என்று இருக்கும் அவனுக்கு
அவ்வளவே அன்று இறே உள்ளது
அப்படி இவன் பிரதிபத்தியில் குறை போக்கி இங்கே எல்லாம் குறைவற்று இருக்கும்
என்று நினைத்து இருக்குமவனுக்கு புஷ்கலமாய் இருக்கும் இறே-
நாம் இவ்விசை யணித்தாக உகந்து அருளப் பண்ணின இடம் -என்று இவன்
குறைய நினைக்கில் இழக்கும் இத்தனை –
உகந்து அருளின இடத்தில் உபாதான த்ரவ்யத்தை நிரூபித்தான் ஆகில்
மாத்ரு யோனி பரிஷையோடு ஒக்கும் இறே –
கண்ண புரத் தம்மானை –
உகந்து அருளின தேசத்தில் உண்டான ஏற்றம் எல்லாம்
தோற்றும்படி நிற்கும் ஸ்வாமி -அம்மான் – ஆயிற்று –
கண்டாள் கொலோ –
ஸ்ரவண ஜ்ஞானம் என்று தோற்றி இருக்கிறது இல்லை
கண்டவர்களுக்கு தெரியுமா போலே தெரியுமோ இவள் வார்த்தையை கேட்டு அறிந்த நமக்கு –
கண்டாள் கொலோ –
நெடு நாள் நோன்பு நோற்று பெற்ற தாயான முன்னே அறிந்த அம்சம் மறைக்கக் கடவதாய் இருக்க
என் முன்னே இப்படி வெளியிட்டுச் சொல்லும் போது
அவ்விஷயத்தில் இப்படி ஒரு சக்ருத் தர்சனம் உண்டாய் இருக்க வேணுமே –
ஒரு கால் கண்டால் பூர்வ வாசனையும் மறக்கும் படியான
வை லஷண்யம் உள்ளது அவ் விஷயத்துக்கே இறே
(ஒரு நாள் முகத்திலே விளித்தார் படும் பாட்டை குகன் இடமும்
அவன் பரிகரங்கள் இடமும் கண்டோமே )
கலை இலங்கும்படியான பேச்சை உடையராய் இருப்பார் அவ் ஊரில் உள்ளார் –
அப்படியே இவள் பேச்சைக் கொண்டு
இவள் திருக் கண்ண புரத்திலே புக்கு
சௌரிப் பெருமாளை சாஷாத் கரித்தாள் ஆகாதே என்று சொல்லலாய் இரா நின்றது –
அக வாயில் ஓட்டம் எல்லாம் வார்த்தையிலே தெரியும் இறே
(அவர்கள் விஷயத்தில் சாஸ்த்ர வாசனை தெரிவது த்ருஷ்டாந்தம் இவள் கண்டதுக்கு )
திருத் தாயாராயும்
பெண் பிள்ளையாயும்
அனுபவிக்கிறார் ஆழ்வார் தாமே இறே
ஆறுகள் பெருகிப் போகா நின்றால்
வாய்க்கால்களாலும்
பெரு வாய்க்கால்களாலும்
வாய்த் தலைகளாலும்
போனாலும் பின்னையும் கடலிலே புகும் -அம்சம் விஞ்சி இருக்குமா போலே
எல்லார் உடைய தசையும் தமக்கே பிறக்கிறது
இல்லையாகில் கண்ண புரத் தம்மானை கலியன் சொன்ன -என்று
தலைக் கட்ட ஒண்ணாது இறே –
சிலை -இத்யாதி
தன் பக்கல் உள்ளது எல்லாம் விட்டாப் போலே
(அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு அனைத்தையும் -தாயாரையும் )
ஆசைப் பட்ட விஷயத்தில் ஒன்றும் விட மாட்டு கிறிலள்-என்கிறாள்
உகப்பாரையும் வாய் வெருவப் பண்ணும்
உகவாதாரையும் வாய் வெருவப் பண்ணும் –
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் திருவாய் -4-2–என்னுமா போலே –
———————————————————
கீழே திவ்ய ஆயுதங்களை ஆபரணங்களாகக் கொண்டு வாய் வெருவ
பல்லாண்டு பாடின பெரியாழ்வாரும் ஆபரணமாகவே நினைத்து பல்லாண்டு
இப்படி பரம போக்யனானவன் வாராமல் இருக்க
நமது பக்கம் பிரபல பிரதிபந்தகங்கள் இருக்க வேண்டும் என்று சிந்தை செய்து
இவற்றைப் போக்குகைக்கு தமது பக்கம் ஒன்றுமே இல்லை என்பதால் –
வல் வினைகள் -தொடரும்
கையில் உபகரணங்கள் -இப்பொழுது அவையே திவ்ய ஆயுதங்களாக எண்ணி
ஆகவே அவனே போக்கி அருள வேண்டுமே
இவை இருந்தும் நான் இன்னும் உழல உடை குலைப் பட்டு சிதிலம் ஆகிறாள் இதில் –
திருக்கைத்தலத்து சேவையிலும் வில் சாத்தி உத்சவர்
கிருஷ்ண க்ஷேத்ரம் என்றாலும் விபீஷணனுக்கு ராமனாகவே சேவை
அரையர் ஐ திக்யம் -பல மதிள்கள் இருக்க -உடைக்க -வில் பொம்மையா அழகுக்கு விட்டதா ஆயுதமா
தாளம் வீச -அனைத்தையும் அழித்து அருளினான் அன்றோ –
இடது திருக்கையில் வில்லும் வலது திருக்கையில் ஸூ தர்சனமும் தரித்து சேவை உண்டே –
செருவரை முன்னா சறுத்த சிலை யன்றோ கைத் தலத்து என்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-2-
செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத் தலத்து என்கின்றாளால் –
ஒரு நாள் கண்டு விட்ட என்னை நித்ய அனுபவம் பண்ணி வைக்க வேண்டாவோ –
அது செய்யாது ஒழிகைக்கு ஹேது -கையில் அது விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இல்லாமையோ -என்கிறாள் –
பிராட்டியோடு சம்ஸ்லேஷத்துக்கு பிரதிபந்தகரான ராவணாதிகளை நிரசித்த
சார்ங்கம் அன்றோ கையிலே இருக்கிறது –
( சிலையினால் இலங்கை செற்ற தேவன் அன்றோ )
அது என்னைக் கூட்டிக் கொள்ள பரிகரம் ஆகாதோ –
என்னுடைய பிராப்தி பிரதிபந்தகமேயோ –
இங்கனே ஒருவக் கிடந்தது போவது -என்னா நின்றாள் –
செருவர் உண்டு -செருச் செய்வார் –
யுதி ராம வத்த்யம் -(திருவடி ராவணனுக்கு உபதேசம் )
யுத்தத்திலே எதிரிட்டு வெல்ல ஒண்ணாது
அநுதபித்து கால் கட்டி வெல்லில் வெல்லும் இத்தனை –
(தோற்றோம் மட நெஞ்சே என்றால் வெல்லலாம் )
த்விதா பஜ்யே யமப்யேவம் ந நமேயம் -என்று
பிராதி கூல்யத்தில் முதிர நின்றவர்கள் -அவர்களை –
ஆசறுத்த –
யுத்தங்களை நிவர்த்திப்பித்த –
நமக்கோர் எதிரி உண்டாய் போரப் பெறுவது காண்-என்று திரிந்த பையல்களை
வேறு ஓர் இடத்தில் நாங்கள் எதிரிகள் என்று நில்லாதபடி
அவர்களை வாசனையோடு போக்கின சிலை அன்றோ கைத் தலத்தது –
இது தான் கடக்க இருந்து எடுத்துக் வர வேண்டுவதாய் நான் ஆறி இருக்கிறேனோ –
(கடல் அரசன் இடத்தில் போல் இளைய பெருமாளை இட்டு வர வளைக்க வேண்டாமே இங்கு
அங்கு தபஸ் கோலத்தால் வில் கையில் இல்லை )
அது கையிலே இருக்க நான் இப்படிப் பட வேண்டுகிற ஹேது என்-
அழகுக்கோ கையிலே பிடித்து இருக்கிறது
விரோதிகளை நிரசிக்கைக்கு அன்றோ -என்னா நின்றாள் –
ந தநுர்ப் பூஷணாயமே-என்றார் இறே-இளைய பெருமாள் –
ஆபாத ப்ரதீதியிலே -அழகுக்கு உடல் -என்றே இருக்கையாலே
வீரத்துக்கு உடல் அன்று -என்று இருந்தீரோ -என்றார் இறே –
பிள்ளை திருக் கண்ண புரத்து அரையர் -விரோதி வர்க்கம் கூடிக் கொண்டு அற மிகைத்தவாறே –
செருவரை முன் ஆசறுத்த சிலை அன்றோ கைத் தலத்து -என்று விண்ணப்பம் செய்ய
ஒரு ஷணத்திலே முடிக்கிறோம் என்று அருளிச் செய்தார் –
(அன்றோ -ஆபரணம் ஸூசகம் -போல் அரையர் சுரம் வைத்து -ஆயுதம் தானே என்று அர்த்தம் தொக்கி இருக்குமே )
பொரு வரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால் –
இக் கைக்கு வில்லானால்
மற்றக் கை ஒழிந்து இருந்தது -என்று நான் ஆறி இருக்கிறேனோ –
பிரணயிநி களுடைய விரோதியைப் போக்கி நோக்குமதுவே யாய்த்தான் ஆறி இருக்கிறேனோ –
நாட்டுக்காக வந்த நலிவை போக்கினதுவும் இல்லையோ எனக்கு -என்கிறாள் –
சிறகு எழுந்து பொருது கொடு திரிகிற மலைகளை பண்டு யுத்தத்திலே முடித்த
அழகிய திருவாழி யன்றோ மற்றைக் கையிலே எடுத்திருக்கிறது –
முன்பு ஒரு காலத்திலே பர்வதங்கள் அடைய சிறகு எழுந்து ஒரோ பிரதேசங்களிலே
பறந்து வந்திருந்தவாறே -அவ்வோ விடங்கள் நசிக்குமாய் -அத்தை –
பெருமாள் இளைய பெருமாளுக்கு பிரதிபந்தகங்களை அறுத்துக் கொடுக்குமா போலே
இந்தரனுக்கு தம்பியாய் உபேந்திர மூர்த்தியாய் வளர்ந்து அருளுகிற காலத்திலே
அவற்றின் பஷங்களை திருவாழி இட்டு சேதித்தனாகச் சொல்லக் கடவது இறே –
பொன்னாழி –
அழகுக்கு பரிகரமானதைக் கொண்டு ஆயிற்று திண்ணிய மலைகளின் உடைய சிறகுகளை அறுத்தது –
அன்றியே
பொரு வரை என்று -குவலயா பீடமாய்
அத்தை கதுப்பிலே மலங்க புடைத்த போதை
கையும் அருகாழியுமாய் -முத்ரா மோதிரமாய் -இருந்த இருப்பைச் சொல்லவுமாம் –
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட பொன்னாழிக் கை என்னம்மான்-திருவாய் -என்னக் கடவது இறே –
சிலர் உடைய நிர்பந்தத்தாலே திரு வாழியை மறைத்தான் இத்தனை போக்கி
கையிலே திருவாழி ஒழிந்து அன்று இறே இருப்பது –
ஆத்மாநம் மாநுஷம் மன்யே -என்று சூழ்த்து கொடுத்த அவதாரத்திலும்
பெரிய திருவடி வந்து கார்யம் செய்து போனான் இறே –
இவன் மறைக்கப் பார்த்தாலும் -ஸ்வயம் ஆருரோஹ -என்று வந்து ஏறா நிற்கும் இறே –
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா –
மற்று ஏதேனுக்கும் ஒப்பு உண்டானாலும்
வீர வாசிக்கு உன்னோடு ஒப்பார் இல்லாதவனே –
கையிலே ஸ்ரீ சார்ங்கத்தையும் திருவாழியையும் தரித்தால்
இவனே சர்வாதிகன் என்று தோற்றி இருக்கும் யாயிற்று –
உனக்கு ஒப்பார் ஒருவரும் இல்லாமையாலே
உபமான ரஹிதன் ஆனவனே –
வென்னப்பா –
சர்வாதிகனாய்
அரியன்-என்று கை வாங்க வேண்டாதபடி நிருபாதிக சர்வவித பந்துவாய் உள்ளவனே –
நாட்டிலே கையில் ஆயுதம் பிடித்தவர்களை எல்லாம் உகவார்கள் இறே
எனக்கு நிருபாதிக பந்துவாய் உள்ளவனே என்னா நின்றாள் –
கையும் திவ்ய ஆயுதங்களுமாய் பண்ணின உபகாரம் இன்னளவு என்று பரிச்சேதிக்கலாய் இருக்கிறதோ –
நிருபாதிக பந்து என்று தோற்றி யன்றோ செயல் இருக்கிறது –
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ
இக் கூப்பீடு முன்பே தனக்கு உண்டு என்னும் இடம் தோற்ற நின்றான் ஆயிற்று –
தன்னை உபகரிக்கைக்கு தான் முற்பாடனாய்
அவசர ப்ரதீஷனாய் -வந்து நிற்கிறபடி –
(எனக்கு உபகரிக்கைக்கு இல்லை -தன்னை -என்பதால்
நமக்கே தன்னையே தரும் கற்பகம் அன்றோ )
கருவரை –
அஞ்சன கிரி போலே யாயிற்று கண்ணுக்கு விஷயமான போது இருக்கிறபடி –
( நீல மேகப்பெருமாள் தானே மூலவர் )
நின்றானை –
வந்து காண்பார் தாழ்வே யாம்படி
தன்னைக் குறைவறுத்துக் கொண்டு நிற்கிறவனை –
கண்ண புரத் தம்மானை –
கருவரை போல் இருக்குமது ஸ்ரீ வைகுண்டத்திலும் உண்டு இறே
அங்கன் இன்றிக்கே
திருக் கண்ண புரத்திலே வந்து ஸூலபனான சர்வேஸ்வரனை –
(கண்ண புரத் தம்மானை-கண்ணபுரம் -சுலபம் அம்மான் பரத்வம் -சர்வேஸ்வன் )
கண்டாள் கொலோ –
ஸ்ரவண மாதரத்தில் பர்யவசிக்கை அன்றிக்கே
அவ் வடிவில் கண் வைத்தாள் போலே இருந்தது –
கண்டாள் –
அவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கையே அன்றிக்கே
இவளும் ஆபி முக்கியம் பண்ணப் பெற்றது
வடிவு அழகிலும் ஔதார்யம் தோற்ற
நின்ற நிலையிலும் போலே காணும்
இவள் கண் விழித்தது –
(கருவரை -வடிவு அழகு நின்றான் உதார குணம் )
———————————————————
சிலை அன்றோ கைத்தல த்து -வெறுப்பில் வார்த்தை
தோன்றுமால் -இதில் –
வில் வீசும் -வர்த்தமானம்
அணியாகத்து இலங்கும் -கண்ணால் கண்டதாக
இருப்பதால்
அஞ்சி முன் வந்து இவன் இருக்க
பாவநா பிரகர்ஷம் மிக்கு இவள் இருக்க
தாய்மார் தடுக்க இப்பாசுரம் –
இத்தனை (வெறுக்கும் அளவாக காதல் முற்றி )அதி மாத்ர பிராவாண்யம் ஆகாது காண்-
எல்லாம் செய்தாலும் நாங்கள் சொல்லுகிற ஹித வசனத்தை நீ கேட்க வேணும் காண் என்று
நீங்கள் சொன்னால் –
அவனுடைய ஆபரண சோபை கண்களுக்கு முற்படா நின்றது –
உங்கள் வார்த்தை செவிப் படுகிற இத்தை நான் கேட்கவோ
கண்ணுக்கு இலக்கான அவன் அழகிலே துவக்குண்ணவோ -என்னா நின்றாள் –
சேஷித்வ ஸூசகமாய் இருக்கவோ -என்னா நின்றாள் –
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணி யாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் –
நெருங்கி இருப்பதாய் –
பெரு விலையனான ரத்னங்களாலே அலங்க்ருதமான
திரு அபிஷேகத்தின் மேலே சாத்தின திருத் துழாய் மாலையானது தோன்றா நிற்க
உங்கள் வார்த்தை செவிப் படுமோ -என்ன நின்றாள் –
சேஷித்வ ஸூசகமாய் இருக்கும் இறே திரு அபிஷேகமும் திருத் துழாயும் –
அர்ஜுனனுக்கு பர பஷத்தின் உடைய கழுத்து தோற்றினால் போலே
வைத்த வளையமே யாயிற்று இவளுக்கு தோற்றுகிறது –
(லஷ்யத்திலே குறி இருவருக்கும் -அவனுக்கு பக்ஷி உடைய கழுத்து -இவளுக்கு வளையம் )
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால் –
வளையத்தின் நின்றும் நெஞ்சைப் பறித்துக் கொண்டது திரு மகரக் குழை –
அவற்றால் வந்த அழகுக்கு கை விளக்கு பிடித்துக் காட்டினாப் போலே யாயிற்று
திரு மகர குண்டலங்களின் உடைய புகர் இருக்கிறபடி –
மின்னா நிற்பதாய் மஹார்க்கமான ரத்னங்கள் அழுத்தப் பட்ட
திரு மகர குண்டலங்கள் ஆனவை
அவற்றை உள்ளாக்கி தான் புறம்பே திருமேனி அடங்கலும்
முட்டாக்கிடும்படி பிரகாசியா நின்றது -என்னா நின்றாள் –
(மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி ஆட -திரு நெடும் தாண்டகம் -)
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால் –
பொன்னாலே செய்யப் பட்ட ரத்னங்கள் அழுத்தி இருந்துள்ள ஹாரமானது
அவ் வாரம் தனக்கும் ஆரமாய் இருக்கிற திரு மார்பிலே
விளங்கா நின்றது என்னா நின்றாள் –
அணி யாகத்து இலங்கும் –
பிராட்டி எழுந்து அருளி இருந்த திரு மார்பிலே விளங்கா நின்றது –
ஆபரணம் மிகையான மார்பு –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்கும்படி ஆபரணத்துக்கு
ஆபரணமான திரு மார்பிலே
ஆபரணங்களும் ஸ்ரீ கௌஸ்துபமும் விளங்கா நின்றது –
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –
சேமித்து வைத்த வஸ்துவை இவள் ஒருத்தியுமே அறிந்து கொண்டாள் போலே இருந்தது –
உள்ளிருக்கிற வஸ்துவின் சீர்மைக்குத் தக்கபடி அரணாகப் போரும்படி இருப்பதாய்
ஒருவராலும் அழிக்க ஒண்ணாத படியான பெருமையை உடைய மதிளாலே
சூழப் பட்ட திருக் கண்ண புரததிலே வந்து சந்நிஹிதனானவனை கண்டாள் போலே இருந்தது –
(அணி -ஆகம் –
ஹாரமாக -ஆபரணம்
அணித்து -பிராட்டி யாலே அணியப்பட்ட
அணி அழகு -ஆபரணம் –
இப்படி மூன்று அர்த்தங்கள்
பொன்னின் ஹாரம் மா மணி இரண்டும் சேர்ந்த அழகு என்றபடி _
—————————————————-
உருவ வெளிப்பாடு கீழே இவளுக்கு
தாய் -தோழி -காணவில்லை -ஆகவே
மீண்டும் உபதேசம்
அவர்களுக்கும் காட்டுகிறாள் இதில் -ஆரானும் காண்மின்கள்
தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட் பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம் பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார் வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ–8-1-4-
தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால் –
பூத்துத் தழைத்து செவ்வியை உடைத்தாய்
குளிர்ந்து இருந்துள்ள திருத் துழாய் மாலையிலே படிந்த வண்டானது
அத் திருத் துழாயில் மதுவானது புறப்பட்டு
வண்டலிட்டுக் கிடந்த வரை போன்ற மார்பிலே உழா நின்றது -என்னா நின்றாள் –
இம் முலைகளைக் கொடு புக்கு நடலாம்படி சேறு செய்த கிடக்கும் யாயிற்று மார்பு –
(கீழே விருப்பத்துடன் வார்த்தை
மேல் வெறுப்பால் வார்த்தை )
ஆர் ஆசைப் பட்டு பெறாதே இருக்கிறதை ஆர் பெறுகிறாள் -என்னா நின்றாள் –
போரானைக் கொம்பொசித்த (புட் பாகன் )என்னம்மான் என்கின்றாளால் –
யுத்தோன் முகமான குவலயா பீடத்தின் உடைய கொம்பை
அநாயாசேன பறித்து
அச் செயலாலே என்னை அனந்யார்ஹன் ஆக்கினவன் -என்னா நின்றாள் –
சக்க்ய பஸ்யத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றவர்களிலே ஒருத்தி போலே காணும் இவள் –
(களிறு தரு புணர்ச்சி புனல் தரு புணர்ச்சி பூ தரு புணர்ச்சி மூன்றும் லௌகிகத்தில் –
தன்னைக் காத்துக் கொடுத்ததுக்கு என்னை நான் சமர்ப்பித்தேன் )
புட் பாகன் என்னம்மான் என்கின்றாளால் –
பெரிய திருவடி முதுகில் இருந்து
இருப்பைக் காட்டி
என்னை எனக்கு உரியேன் ஆகாதபடி -பண்ணினவன் –
ஆரானும் காண்மின்கள் அம் பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
ஹிதம் சொல்லி விலக்குகிற நீங்களும் பாருங்கோள்-
அழகிய பவளம் போலே இருந்துள்ள திரு வதரத்தைக் கண்டார்க்கு
விட்டுப் போகலாய் இருந்ததோ –
கார் வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –
கார் காலத்தில் மேகமானது நின்று கோஷியா நிற்கும் ஆயிற்று –
ஒக மேக ஸ்வன கிருஷ்ண -என்கிறதுக்கு ஸ்மாரகமாய் இருக்கை –
மேகோதய -என்னும்படியாய் எப்போதும் வர்ஷாவாய்
ஆகாசம் அதிரா நின்ற
திருக் கண்ண புரத் தம்மானை கண்டாள் கொலோ –
உக்தி மாத்ரத்திலே மீளாதே
அவ் விஷயத்தைக் கண்டு அனுபவித்தாள்
என்று தோற்றி இரா நின்றது –
—————————————————–
ஆரானும் காண்மின்கள் காட்டினாலும்
அவர்களுக்கு உருவு வெளிப்பாடு இல்லையே
ஆதலால் மீளவும் இவர்கள் உபதேசிக்க
உங்களுக்கு திருவடி முதல் திருமுடி அழகு
எனது நெஞ்சில் அகலாது இருக்கின்றனவே –
அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித் தடங் கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால்
கடிக் கமலம் கள்ளுகுக்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-5-
அடித் தலமும் தாமரையே –
நம்முடைய உத்தேச்யமும் நிரதிசய போக்யமாய் இரா நின்றது –
(புள்ளும் சிலம்பின் முதலிலே உம்மைத் தொகை போல் –
நாங்கள் வந்ததே அடையாளம் முதலில் சொல்லி அத்தை அவள் மறுத்து ஏற்காமல் போக இரண்டாவது
இங்கும் அடித்தலமும் -உம்மைத்தொகை
நம்முடைய உத்தேஸ்யமும்-நிரதிசய போக்யமாய் இருக்கிறதே -ரக்ஷகம் மட்டும் இல்லையே )
அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் –
அத் திருவடிகளிலே தோற்று விழுந்தவர்களை
எடுத்து அணைக்கும்
கைகளும் தாமரை போலே இரா நின்றது -என்னா நின்றாள் –
முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால் –
அணைத்த போதை ஸ்பர்சத்தாலே துவக்குண்டு
மேல் நோக்கிப் பார்த்த போது
இது பிராப்த விஷயம் என்று தோற்றும்படி இருக்கிற திரு அபிஷேகமும் –
அதிலே சாத்தக் கடவ திரு ஆபரணமும்
என் நெஞ்சை விட்டுப் போகிறது இல்லை -என்னா நின்றாள் –
(கீழ்ப் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் சங்கதி இது என்றும்
கீழ்ப் பதத்துக்கும் மேல் பதத்துக்கும் சங்கதி இது என்றும் அரும் பதம் )
எல்லாம் செய்தாலும் இத்தனை அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது காண் -என்று
நாங்கள் சொல்லுகிற இத்தை நெஞ்சிலே கொள்ள வேணும் காண் -என்பர்களே –
நீங்கள் சொல்லுகிற வார்த்தை நெஞ்சிலே படுவது இவை
என் நெஞ்சை விட்டு அகலில் அன்றோ –
வடித் தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால் –
மார்புக்கு ஆபரணம் பிராட்டி போலே காணும் –
சேர்ப்பாரும் அருகே இருக்க -நான் எத்தைச் சொல்லி அகலுவது -என்னா நின்றாள் –
எனக்கு பற்றாசானார் இருக்க நான் என்ன கண் அழிவு சொல்லிக் கடக்க போவது
ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேராய்
போக்தாக்கள் அளவன்றிக்கே இருக்கிற
கண்ணை உடைய என் ஸ்வாமிநி யன்றோ திரு மார்பிலே இருக்கிறாள் –
அங்கன் இன்றியே
அவன் பிரணய தாரையிலே ஸ்ரோத்ரியன் அல்லன் என்று
நான் ஆறி இருக்கிறேனோ –
போக்யதை இல்லாமையோ –
பிராப்தன் அல்லாமையோ –
சேர்ப்பார் இல்லாமையோ –
நான் எத்தைச் சொல்லி அகலுவது –
கடிக்கமலம் கள்ளுகுக்கும் –
பரிமள பிரசுரமாய் இருந்துள்ள புஷ்பமானது மதுவை பிரவஹியா நிற்கும் ஆயிற்று –
மது பானம் பண்ண விருந்த வண்டுகளுக்கு பிரயோஜனம் இல்லாத படியாகவும்
ஆஸ்ரயம் பொறாத படியாலும்
மதுவை உகா நிற்கும் –
அவ் ஊரில் தாமரையில் படிந்த வண்டுகளால்
அதில் மது வற்றப் பருகப் போகாது -என்கை –
கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —
அவ் ஊரில் பதார்த்தங்கள் போக்தாக்கள் அல்லாத படி
போக்யதை விஞ்சி யாயிற்று இருப்பது –
அப்படி நிரதிசய போக்யனான இவனை
இவள் அனுபவித்து சொல்லுகிறாள் போலே இருந்தது –
—————————————————
உன்னை இப்படி பிச்சேற்றியவன் பேர் சொல்லு என்ன
ஒன்றா
தேவோ நாமோ சஹஸ்ரவான்
முன்பு அனுபவித்த அம்சம் எல்லாம் வாய் வெருவா நிற்கிறாள்
பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-6-
ஆயிரம் பேர் இருப்பதால் பேராளன்
ஸ்வாபாவிகமாகவே -இயற்கையிலே பெருமை உடையவன் பேராளன்
பேராயிரம் உடைய பேராளன் –
குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான
ஆயிரம் திரு நாமங்களை உடையவனை –
பேராளன் –
தேவோ நாம சஹஸ்ரவான் –
பேராயிரம் கொண்டதோர் பீடு உடையான் -நாராயணன் –
நாமம் பல சொல்லி நாராயணன் என்று –
பால் பசு உடையவன் -என்னுமா போலே
நாமம் பல உடைய நாராயணன் –
இந்த ஆயிரம் திரு நாமங்களை உடையன் ஆகையாலே வந்த பெருமையை உடையவன் –
பேராளன் –
பெரியதில் பெரியது கூடிற்று இத்தனை –
அத் திருநாமங்கள் தானும் அவன் பக்கலிலே புகுருகையாலே நிறம் பெற்றன -என்னா நின்றாள் –
பேராளன் -என்று அவன் திரு நாமங்களால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி
அபரிச்சேத்ய ஸ்வ பாவன் ஆனவன் -என்னவுமாம் –
அன்றிக்கே –
பேராளன் பேராளன் என்கின்றாளால்-
பெரியோன் பெரியோன் என்னா நின்றாள் –
ஏரார் கன மகரக் குண்டலத்தன் –
நாம த்வாரா சொல்லும் ஸ்வரூபம் இருக்கிறபடி -சொல்லுகிறது
முன்பு அனுபவித்த அழகுகள் பின்னாட்டுகிற படி –
அழகு நிறைந்து உள்ள ரத்னங்களாலே சமைக்கப் பட்ட
திரு மகர குண்டலங்களை உடையனாய் –
எண் தோளன் என்கின்றாளால் –
அவை வந்து அலை எறியா நின்றுள்ள தோள்கள்
எட்டையும் உடையவன் என்னா நின்றாள் –
எண் தோளன் –
திருத் தோள்கள் நாலாய் இருக்க
ஸ்ரீ பஞ்சாயுதங்களைத் தரித்தால் போலேயும்
நாலு தோளாய் இருக்கச் செய்தே ஆயிரம் தோள் போலே வ்யாபரித்து கடலைக் கடைந்தால் போலேயும்
நாலாய் இருக்க எண் தோளன் -என்கிறாள் என்கிறபடி –
(முதல் பாசுரம் தோள் நான்கே என்கின்றாளால் -இங்கு எண் தோளன் )
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால் –
உபமானம் கதிர் பெருக்க வேண்டி இருக்கிறபடி –
கடலைக் கழுத்தே கட்டளையாகப் பருகின மேகம் போலேயும்
அஞ்சன கிரி போலேயும்
இருக்கிற வடிவை உடையவன் என்னா நின்றாள் –
ஸ்ரமஹரதையும்
அபரிச்சேத்யையும்
இரண்டையும் சொல்லுகிறது –
காரார் வயல் மருவும் –
எங்கும் ஒக்க பயிர் மாறாமையாலே கறுத்த நிறத்தை உடைத்தான
வயலாலே சூழப் பட்ட –
கருவடைந்த பயிர் ஆகையாலே எங்கும் ஒக்க கறுத்த படியே இருக்கும் ஆயிற்று –
முக்தர் என்றும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகராய் இருக்குமா போலேயும்
உள்ளிருக்கிறவன் நிறம் போலேயும் –
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டும் -10-1-1-என்னக் கடவது இறே-
இப்படி என்றும் வயல் கறுத்து சினை கொண்டு இருக்கும் அத்தனை –
கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —
அவ்வடிவில் கண் வைத்தாள் போலே இரா நின்றது –
——————————————————-
வடிவு அழகு பின்னாட்டி அத்தையே சொல்லா நின்றாள் என்று சங்கதி
அவன் உடைய உடை வாய்ப்பிலே தோற்றமை தோற்ற வாய் விடா நின்றாள் –
திருப் பீதாம்பரம் சாத்தினால்-
கௌசேய புஷ்பித கடீ தடம் -என்கிறபடியே
திருவரை பூத்தாப் போலே யாயிற்று இருப்பது –
செவ் வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவளிகைக் கச்சென்கின்றாளால்
அவ் வரத்த வடி யிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மை வளர்க்கும் மணி யுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கை வளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-7-
செவ் வரத்த-சிவந்த ஸ்ரேஷ்டமான –
அவ் வரத்த-அப்படியே சிவந்த –
வரத்த-சிவந்தது என்றும் ஸ்ரேஷ்டமும் அர்த்தங்கள்
செவ் வரத்த உடை ஆடை –
சிவப்பாலும்
ரக்தத்தாலும்
இரண்டாலும் சிவப்பையே சொல்லுகிறது –
அந்த சொல்லே வரவுமாம் –
அத்தோடு பர்யாயமான சொல் இரட்டித்து வரவுமாம் –
அப்போது அதுக்கும் மீமிசை என்று பொருளாய்
அர்த்தத்தின் உடைய அதிசயத்தைக் காட்டக் கடவது –
சிவந்த வரத்த ஸ்ரேஷ்டமான -என்றுமாம் –
ஆக -அறச் சிவந்த வாடை சாத்தும் –
யதன் மேலோர் சிவளிகைக் கச்சென்கின்றாளால் –
அதுக்கு மேலே
சிவளிக்கைக் கச்சு -என்று கட்டும் கச்சு
பொன் எழுதின கச்சு –
அவ் வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் —
அப்படியே சிவந்து இருக்கிற
திருவடிகளும்
திருக் கைகளும்
விகாசாதிகளாலே தாமரையே –
மை வளர்க்கும் மணி யுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்-
கிட்டினதனையும் மையேயாய் இருக்கிறது இத்தனை யாயிற்று
இருண்ட நிறத்தை வளரா நின்றுள்ள நீல மணி -போன்ற என்கை –
மல்கு நீலச் சுடர் தழைப்ப–7-6-6-என்கிறபடியே –
(நீலக்கடல் கடைந்தாய் -பாற் கடலையும் இவனது மை வண்ணம் அத்தையும் நீலம் ஆக்கிற்றே
பிராணவாரா விமானமும் வெண்மை நிறமாய் இருக்கச் செய்தேயும் உள்ளே இருக்கும்
அவனாலே கறுத்து தோன்றுகிறது -பட்டர் )
கை வளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —
அவ் ஊரில் ஒருவரும் தஷிணை கொடுத்து ஹோமம் பண்ணுவிப்பார் இல்லை யாயிற்று –
தன கையால் வளர்க்கப் பட்ட அக்னியை உடையனாகை அன்றோ
அவன் பரியட்டமே பிடித்து
அடைய
இவளுக்கு சிவந்து தோற்றுகிறது –
(தக்ஷிணை -கைக்கூலி கொடுத்து பண்ணுவியாமல் -என்கைக்கு ஞாபகம் இவன் செய்வதால்
ஆள் இட்டு அந்தி தொழாமல் -சந்தியாவந்தனம் -திருவாராதனம் –
உத்தர வீதியில் நான்முகன் அஸ்வமேத ஹோமம் –
ஸ்வயமேவ ஹவிர்பாவம் வாங்கிக் கொண்ட தேவாதி ராஜன் பிரத்யக்ஷம் ஆனால் போல்
இவர்களுக்கும் அந்தரவாதியாக மட்டும் இல்லாமல் கண் முன்னே தோற்றுவானே
ஆகவே அனைத்தும் சிகப்பாகத் தோற்றுகிறது )
——————————————
கீழே அவன் அடியைப் பிடித்தும்
மடியைப் பற்றியும் படியை அனுபவித்ததை கேட்டவர்கள்-
இவளுக்கு இப்படி அனுபவம் செல்லா நின்றால்
முலையில் பூம் பயலை பிறக்கும்படி விரஹ வ்யசனம்
நடக்கைக்கு அடி என் என்று கேட்க –
இவளுக்கு கிட்டே வந்து சம்ஸ்லேஷித்தது அல்லாதே
அதூர விப்ரக்ருஷ்டமாய் வந்தாப் போலே தோற்றுகையாலே
தன்னிடத்தில் வரவில் நிர்ணயம் பிறவாதே
விரஹ கிலேசத்தை அடைந்தாள் என்று
அவள் வார்த்தையாலே அறிந்தாளாக -அனுவதிக்கிறாள் -என்று சங்கதி –
பிள்ளை அமுதனார் இத் திருமொழிக்கு பிரவேசம் சொல்லா நிற்கச் செய்தே
ராஜாக்கள் அந்தபுரக் கட்டிலே-தெருவிலே –
பள்ளி யந்துலாத்திலே-தண்டிகை -பல்லக்கில் – ஏறி உலவா நிற்பர்கள் காண் –
என்றாப் போலே அநேகம் வாக்ய சில்பங்களை பண்ணினார் –
அப்போது பால்யத்தாலே அவ் வடைவுகள் புத்தி பண்ணப் பெற்றிலோம்
அவற்றுக்கு இதில் பற்றாசு ஏது என்று விசாரித்தோம் –
இது வாகாதே என்று தெளிந்தோம் காண் என்று இவ்வளவிலே நம் பிள்ளை அருளிச் செய்தார் –
கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-8-
கருட வாகன உத்சவம் அனுபவித்துப் பாசுரம் இது
வைகாசி -மாசி இரண்டும் ப்ரஹ்ம உத்சவம் -மாசி மகம் தீர்த்தவாரி
காஞ்சி தேவப் பெருமாள் ஆண்டுக்கு மூன்று தடவை -அவர் வீதி ஒரு நாள் என்று -அருளாழி புட் கடவீர் –
வெற்றிப் போர் இந்திரர்க்கும்-நகுஷன் யயாதி போல் இந்த்ரருக்கு சமானம்
ரிஷி கரி பூசுவது போல் இவளும் இங்கு கண் எச்சில் படாமைக்காக நகுஷன் யயாதிகள் போல்-
கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால் –
சர்வ சதாராணவன் விடாயர் இருந்த இடங்களிலே சாய் கரத்தை
கொடு வந்து கொடுப்பாரைப் போலே
எல்லார்க்கும் உபகரிக்கும் அத்விதீயனானவன் –
வாஹனத்தில் ஏறி சர்வ சாதாரண ஸ்தலத்திலே வாரா நின்றான் –
ஆர் இறாஞ்சிக் கொள்ளக் புகுகிறார்
ஆர் கையில் பறி யுண்ணப் புகுகிறான் –
என்று அறிகிலேன் என்கின்றாள் –
வந்தபடி தெரியாமல் வந்து
தன் கண்ணுக்கு உள்ளே இருக்கக் காணும் இவளுக்கு ஓடுகிறது –
வரப் புக்கால் ப்ரதிபந்தகம் இல்லை கிடீர் என்னா நின்றாள் –
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால் –
வெறும் போரிலே பூசலில் வந்தால்
வீர்யே சாஷாச்ச சீபதே -என்னக் கடவது இறே-
இந்த்ரனுக்கும் இந்த்ரன் உண்டு மஹேந்த்ரன் –
வ்ருத்ரவாதிகளாலே பட்டம் சூடினவன்
அவனோடு ஒக்கும் -என்னா நின்றாள் –
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால் –
அவன் மார்வு இறே அணையப் பெற்றால்
ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாசாயா-என்று
அவனை அணையப் பெறில் ஜீவித்தல்
இல்லையாகில் -அசந்நேவ-என்று நசிக்கும்படியாய் இருக்கிற நாங்கள்
உஜ்ஜீவிப்போம் என்னா நின்றாள் –
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –
அவ் ஊரில் விழுவேடு எடுத்துக் கொண்டு அறிதல் –
புஸ்தகம் பார்த்து அறிதல் -செய்வார் இல்லை –
ஆச்சார்ய உச்சாரண அனுச்சாரண க்ரமத்தாலே கற்ற சாஸ்திரங்களையும்
வேதங்களையும் உடையராய் யாயிற்று எல்லாரும் இருப்பது –
அவ் ஊரில் அவனையே கண்டாள் ஆக வேண்டாவோ –
வேத மயன் மேலே வருகிறபடியையும்
யமிந்திரமாஹூ (தைத்ரியம்) -இத்யாதிப் படியையும்
சொல்லும் போது –
(அவ்வூரில் அவனையே கண்டாளாக வேண்டுமே )
———————————————————–
மன்னூடே வருகிறவன் -கிட்டே வந்தவனாகக் கொண்டு
திருத்துழாய் மணம் அலை வீசா நிற்க
இது என் என்று கேட்க
வெட்கம் இல்லாதவளுக்கு
முன்பு அன்பு உண்டு -எனக்கு -வெகு நாளாக தொடர்பு
கிட்டே கண்டு இவர் வார்த்தைகளை கெடுக்காமல்
அழகில் ஈடுஒப்பட்டு வை லக்ஷண்யத்திலேயே ஈடுபட்டு இப்பாசுரம் –
வண்டமரும் வன மாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-9-
சித்த அபஹாரி சக்ரவர்த்தி திருமகன் -இங்கே பார்த்தவர்கள் தங்கள் சித்தம் வழங்குவார்களே –
வண்டமரும் வன மாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்-
தன் நிலத்திலே நின்ற போது மணம் மட்டமாய் –
திருக் குழலிலே ஏறினவாறே இரட்டிற்றாய் இற்று இருப்பது –
வண்டுகள் பரிமளம் போலே படிந்து கிடக்கும் யாயிற்று-
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்-
பண்டு உனக்கு இவ் விஷயத்தில் அன்பு உண்டு என்று சொன்னால்
இல்லாமை சாதிக்குமவள் தானே
இப்போது உனக்கு இவன் பக்கலிலே அன்பு உண்டு என்னா நின்றாள் –
அத்தாலே பலித்தது என் என்ன
ஒரு காலும் உங்களை அற சந்யசித்து சொன்னேன் -என்கிறாள் –
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்-
முதல் நாள் கண்டால்
ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும்
முகத்தில் தண்ணளி யாலும் ஆக
முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ –
எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –
சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் –
என்னும்படியாய் இருக்கும் –
நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி
சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது காட்டுமோ –
பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் )
எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)
(பிரதமத்தில் முன் கண்டால் போலேயும் –
காணாமல் இருந்தது போலேயும் அன்றோ இந்த சப்த பிரயோகம் –
சுரம் கொண்டே இரண்டு அர்த்தங்களும் காட்டுமே
பரி சீலிக்க பரி சீலிக்க பார்த்தது போலே இருக்குமே
இல்லையாகில் லௌகிக விஷய வியாவ்ருத்தம் இருக்காதே )
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –
(இப்படி வார்த்தை )இருந்த படியால் அவ் ஊரிலே புக்கு அவளைக் கண்டாளாக வேணும் என் என்ன –
நெஞ்சு இழந்தார் வார்த்தையாய் இரா நின்றதே இவளது –
அபஹ்ருத சித்தை அன்றாகில் -தாய் முன்னே அவ் வார்த்தை சொல்லாள் இறே-
வந்து கண்டவர்கள் நெஞ்சை மேல் எழுத்துக் கொடா நிற்பர்கள் ஆயிற்று –
(அந்த திவ்ய தேச மக்கள் மனம் வழங்கியது போல் இவளும் வழங்கி இருப்பாள்
என்று அனுமானம் திருத்தாயாருக்கு )
——————————————————–
கண்டாள் கொலோ இது வரை
கண்டாள் -அறுதி இட்டு இதில் –
மா வளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூ வளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-
மா வளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று –
இனி இவள் மீளாத படி யானாள் என்று தாயார் சொன்ன வார்த்தை இறே –
மான் போலேயாய்
பரப்பை உடைத்ததாய்
மிருதுவான நோக்கை உடைய தன் அவயவ சோபைக்கு ஈடாக
ஆச்சர்ய பூதனானவனை கண்டாள் என்று –
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன –
காவில் கடி யானது -அதாவது சோலையில் பரிமளம் –
பூமி எங்கும் வெள்ளம் இடா நின்றது –
பொழில் -பூமி
காவானது சிலர் இட்டாக்கினது போலே தானே வளரா நின்றுள்ள பொழில் சூழ்ந்த –
அவை போலே யாயிற்று சூழ்ந்த சோலை அடைய இருப்பது –
பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் –
சந்தஸ் ஸூக்களால் குறைவற்று
லஷணோபேதமுமான –
பூ வளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –
உபரிதன லோகங்களுக்கு அடைய
கற்பகத்தை சிறப்பாகச் சொல்லக் கடவர்கள் –
பரமபதத்தில் -ஆண்மின்கள் -10-9–என்றபடியே
தாங்களே நிர்வாஹகராய் -இவ் வருகு உள்ளார் அடங்கலும் சாத்யர் ஆவார்கள் –
————-
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
பெருமான் இனியன் அழகன் தேவன் துப்பன்
திருத்தன் சேராச் சேர்ப்பன் நாதன் -விருத்தம் எனக்
கண்ணமங்கை கண்டு கலியன் சொல் அமுதப்பா
உண்ண பிறப்புக்கு நச்சிலை -70 –
தேவன் -விளங்கு சுடர்ச் சோதி/திருத்தன்-திருப்தன்-அவாப்த ஸமஸ்த காமன்
விருத்தம் -விருத்த விபூதி நாதன்-
வானவர் தன நாயகன் -மூத்தவன் –
ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவன்
————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply