ஸ்ரீ பெரிய திருமொழி-7-5-தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

4-8-பார்த்தன் பள்ளி தாய் பாசுரம்
5-5-திருவரங்கம் தாய்
6 பத்தில் எதுவுமே இல்லை
7-5- மகள் பாசுரம் -அடையாளம் ஸ்பஷ்டமாக ஏழாவது எட்டாவது ஒன்பதாவது பாசுரங்களில் ஸூ சகம்-
4-8 திருவாய் மொழியும் இப்படி ஸூ சகம் -வரிவளையால் 7-8-9-குறைவிலோமே-
7-8-9 பாசுரங்களில் அங்கும் -பேசிற்றெ பேசும் ஏக கண்டர்கள்

கோ சகன் -ஆ மருவி அப்பன் –

தந்தை கால் பிரவேசம் –

கீழே பாகவத சேஷத்வத்தை அனுசந்தித்தார் –
அது பகவத் விஷயத்துக்கு உத்தம்பகமாய் இருக்கும் இறே-
ஆகையால் அபேஷை பிறந்தது –
பிறந்த அபேஷை தான் -வரில் பொகடேன்-கெடல் தேடேன் –   என்று
ஆறி இருக்கும் அளவு அன்றிக்கே
இப்போதே பெற வேணும் என்னும் அளவாய் இருந்தது –

அப்போதே பெறாமையால் வந்த ஆற்றாமை
ஒரு பிராட்டி தசையைப் பிறப்பிக்க
அத்தாலே அவனோடு காதா சித்கமாக சம்ஸ்லேஷத்தை உடையளாய் இருப்பாள் ஒருத்தி
நம்மோடு நித்ய சம்ஸ்லேஷத்தை பிறப்பிக்கைகாக
திரு வழுந்தூரிலே  வந்து சந்நிஹிதன் ஆனான் என்று
அவள் பாசுரத்தாலே அங்குத்தைப் படிகளை
அனுசந்திக்கிறார் –

கீழே பாகவத சேஷத்வம் எல்லை அளவு போகையாலே –
அவர்கள் உகப்பாக -பகவத் விஷயத்தில் ஈடுபட்டு அனைத்தும் இழந்து
பிராட்டி தசை -7-8-9 பாட்டுக்களில் குறிப்பு இருப்பதால் நாயகி பாவம் –

—————————————————–

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ  நல்லிருள் கண்  வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1-

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ  –
ஆபத்திலே வந்து உதவி
அவற்றைப் போக்கும் ஸ்வபாவன் ஆய்த்து-
ஸ்ரீ வசுதேவர் காலில் உண்டான  பெரு விலங்கு உண்டு –
எட்டு கர்ப்பத்துக்கே அவ்வருகே இட்ட விலங்கு
அது தன்னடையே விட்டுப் போம்படியாக –
இவன் வந்து அவதரித்த அநந்தரம்
திருவாய்ப்பாடி ஏறக் கொண்டு போக வல்லாரானார் இறே  –

நல்லிருள் கண்  வந்த எந்தை பெருமானார் –
கம்சன் காவலாக வைத்த துஷ் பிரக்ருதிகள்
கண் படாத படி செறிந்த இருளிலே வந்து தோன்றின
என்னுடைய குல நாதர் ஆனவர் –

வந்த –
ஸ்ரீ வசுதேவருக்கு அன்றி தமக்காகத் தான் வந்து உதவிற்று –

மருவி நின்ற ஊர் போலும் –
அவ்வதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே
அந்த வசுதேவர் போல்வர் எல்லாருக்கும் உதவுகைக்காக
வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் போலும் –
அவன் நின்ற தேசம் இறே உத்தேச்யம் ஆவது –
பிராப்ய பூதனான அவன் வந்து நிற்கையாலே
நமக்கு பிராப்ய பூமி தான் போலே இருந்தது என்று
ஆதர அதிசயம் தோற்ற சொல்லுகிறது
இது அல்லாத பாட்டுகளில் அவற்றுக்கும் பொருள் –

முந்தி வானம் மழை பொழியும் –
வானமானது முந்தி மழையைப் பொழியும் ஆய்த்து –
இவர்கள் உடைய அபிசந்தி ஒழியவேயும்-
அவாந்தர பலங்கள் முற்பட்டு இருக்கும் ஆய்த்து –

மூவா வுருவில் மறையாளர் –
அங்கு உள்ளார் அடங்கலும் தருணாக்நி ஹோத்ரிகள் ஆய்த்து -இருப்பது –
சாஸ்த்ரோக்தமான க்ரமத்திலே  உப நய நாதி சம்ஸ்காரம் தொடங்கி
பிராப்தமான காலத்திலேயே யாகாதிகளைப் பண்ணி இருப்பார் சிலர் ஆய்த்து –

அந்தி மூன்று அனல் ஓம்பும் –
ஒரு பல அபிசந்தியை பண்ணிச் செய்கிறார்கள் அன்று இறே
நித்ய அனுஷ்டானத்துக்காக கொள்ளுவது   ஒரு பலம் இல்லை இறே –
ஆகையால் இதுவே யாத்ரையாய் –
(ஓம்பும் வர்த்தமானம் )

அணியார் வீதி அழுந்தூரே –

தர்ச நீயமான வீதியை உடைத்தான தேசம் –

———————————————————–

வந்து தோன்றிய அனுசந்தானம் கீழ்
அவதார பிரயோஜனம் இதில் –
பூ பாரம் தீர்க்கவே -இதுவே பிரதான பிரயோஜனம் –

பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத்
தேரில் பாகனாயூர்ந்த தேவ தேவனூர் போலும்
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன  குருகினங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-2-

பாரித்து எழுந்த-
இன்று சாரதியைப் பிடிக்கக் கடவோம் -என்று ஒருப்பட்டு வந்த
வெறுங்கையோடு க்ருஹத்தில் போய்ப் புக்கவாறே
பொய்யாசனம் இட்டு
வஞ்சிக்கத் தேடினார்கள் இறே-

படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத் –
சாயுதரான ராஜாக்கள் ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு
முடிந்து
தேர் காலிலே துகை உண்டு கிடக்க –

தம்மை மாள –
அவர்கள் தாங்கள் கோலி வந்ததை
அவர்கள் தங்களோடே போக்கி –

தேரில் பாகனாயூர்ந்த –
தேரில் ரதியாய் நின்று ஊர்ந்தான் ஆகில்
அத்தால் வரும் விஜயமும் தம் தலையிலே கிடக்கும் இறே –
பிரதி பஷமும் அழிய வேணும் –
அர்ஜுனன் தலையில் விஜயமும் கிடக்க வேண்டும் -என்று
அதுக்காக சாரதியாய்க் கொண்டு தேரை நடத்தினான் ஆய்த்து –

ஆழ்வானுக்கு மூலம் வாசித்துப் போந்த சிலரிலே
ஒருவருக்கு கிரந்தம் பார்க்க வேண்டி
ஆழ்வானோடே திரு முடிக் குறையிலே இருந்து பாரா நிற்கச் செய்தே
அரயன் வந்தானாய் –
அவ்வளவில் -அவர் கையில் கிரந்தத்தை
ஆழ்வான் தான் வாங்கி படித்துக் கொண்டு இருந்தானாம் –

தேவ தேவனூர் போலும் –
தன்னை யாராக நினைத்தான் –
அஸ்ப்ருஷ்ட  சம்சார கந்தர்க்கும் அவ்வருகாய் இருக்கிற தான்
சம்சாரிகளில் ஒருவனுக்கு தாழ்வு செய்வதே –

நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன  குருகினங்கள் ஆரல் கவுளோடு அருகு அணையும்-
குருகுகள் ஆனவை திரள் திரளாக
மத்ஸ்ய க்ரஹணத்துக்காக நீர் நிலங்களிலே வந்து இழிந்து
தனக்கு   வாய்க்கு அடங்கும் ஒன்றை க்ரஹித்து
தன் கதுப்பிலே இருக்கச் செய்தே –
வேறே ஒரு பெரிய மத்ஸ்யம்
யாத்ருச்சிகமாக தன் செருக்குப் போக்கு விட்டு மேல் எழப் பாயும் –
அத்தால் வந்த ஹர்ஷத்தாலே பணைத்துக் கொடுக்கும் –
அத்தைக் கண்ட இது தன் சாபலத்தாலே -ஆமிஷம் -என்று கணிசித்து வந்து கிட்டும் –
இதின் வடிவில் பெருமையைக் கண்டு
இது நீர் நிலங்களிலே கிடக்கிறது ஓன்று
பறக்கவும் மாட்டாதே இருக்கிறது ஓன்று -என்று அறிய மாட்டாதே
வெருவி ஓடினது –
பின்னையும் இதன் அருகே வந்து கிட்டா நிற்கும் –

அணியார் வயல் சூழ் அழுந்தூரே –
பாரத சமரத்திலே பீஷ்மாதிகள் -அதி ரதர் மகா ரதர் -என்று இங்கனே
ஆண் பிள்ளைகளாகப் பேர் பெற்று ஜீவித்து இருந்தோம்
இப்போதாக பூசல் கோழைகளாக ஒண்ணாது -என்று
சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது
தேர் காலில் உழக்குண்டு போக ஒண்ணாது   -என்று  அகலுவதாய்க் கொண்டு
அவர்கள் படுவுற்றை படா நின்றன வாய்த்துக் குருகு இனங்களும் –

———————————————————–

கீழே மஹா பாரதம்
இதிஹாச ஸ்ரேஷ்டமான ராமாயணம் இதில்
சாரதியாய் வென்றது கீழே
ரதியாய் வென்றது இங்கு –

செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும்
உம்பர் வாளிக்கு இலக்காக வுதிர்த்த வுரவோனூர் போலும்
கொம்பிலார்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டினங்கள்
அம்பராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே –7-5-3-

மாதவி-குருக்கத்தி பூ –

செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும் –
அரணை உடைத்தான ஊரிலே அன்றோ இருக்கிறது –
அவ் ஊருக்கு கடவோம் நாம் அன்றோ -என்று
துர்மானம் பண்ணி இருக்கிற ராவணன் உடைய தலைகள் பத்தையும்

உம்பர் வாளிக்கு இலக்காக வுதிர்த்த வுரவோனூர் போலும் –
ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்காக்கி
உதிர்த்துப் பொகட்ட வுரவோனூர் போலும்
இந்த்ராதிகள் உடைய வஜ்ரத்துக்கு அழியாத பையல் தலைகளை
மனிச்சுக்கு ஏகாந்தமான மிடுக்காலே அழித்தான் ஆய்த்து-

கொம்பிலார்ந்த மாதவி மேல் –
கொம்புகள் செறிந்து இருந்துள்ள
குருக்கத்தியின் மேலே –

கோதி மேய்ந்த வண்டினங்கள் –
தன் செருக்காலே தளிரையும் பூக்களையும் கோதி
அவற்றில் நின்றும் மது பானம் பண்ணின வண்டினங்கள் –

அதில் காட்டில் போக்யதையும்
இருட்சியுமாய் இருப்பதொரு பிரதேசம் தேடித் போய் இராத் தங்க வேணும் என்று பார்த்து –

அம்பராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே —
அம்பை இளைப்பிக்கிற கண்ணை உடையராய்
ஆத்மகுணோ பேதைகளாய் இருந்துள்ள  ஸ்திரீகள் உடைய
மயிர் முடியிலே போய்ச் சேரா நிற்கும் –

ஐம் பால் என்று
அஞ்சு வகையான மயிர் முடியைச் சொல்லுகிறது –
கந்தம் -மது -மார்த்த்வம் -ஸ்நிக்ததை -இருட்சி –

——————————————

மிடுக்கை அனுசந்தித்து அது பருவம் நிரம்பி -விசுவாமித்திரர் இடம் கற்ற பெருமாள் –
வித்யா ஸம்பத் உள்ளவர்
இதில் முக்த சிசுவாய் -இளம் தளிரில் –
பாவனா ப்ரகரஷத்தால் ப்ரத்யக்ஷ சமானா காரமாய் -உள்ளம் கண் உள்ளே –
கண்டு அனுபவிக்கிறார் –

வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி யடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடித் போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-4-

வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி –
பிரளயத்தில்
ஒரு பவனான ஆலந்தளிரிலே -கண் வளர்ந்து அருளி –

யடியேன் மனம் புகுந்து –
இவன் பிரளயத்தில் கண் வளர்ந்து அருளா நின்றான்
பரிகைக்கு ஒரு யசோதாதிகளும் இன்றிக்கே இரா நின்றது –
என் வருகிறதோ -என்று ஆராய்ச்சி பிறக்கும்படி பண்ணி –
அது உண்டவாறே -அதுவே ஹேதுவாக –

என் உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் –
ஹிருதயத்திலே வந்து புகுந்து
மானஸ அனுபவமேயாய் கண்ணுக்கு விஷயமாகப் பெற்றிலோம் –
என்கிற விஷாதம் கிடவாதபடி
கண்ணுக்கும் தானே விஷயமாய்
ஹிருதயமும் வேறு ஒன்றில் போகாதபடி தானே விஷயம் ஆனவன் –

நின்ற ஊர் போலும் —
கண்ணுக்கு விஷயமாக்கிக் கொண்டு வந்து நிற்கிற தேசம் போலும் –

புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடித் போன காதல் பெடையோடும்-
குட்டிக்கு இரை தேடித் போகிற புள்ளானது
தனியே போகாதே காதலை இட்டு நிரூபிக்க வேண்டும்
பெடையோடே போய்  –

அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே    –
சேறு என்றால் இறாய்க்கக் கடவ வவை-
அங்கு உள்ள போக்யதையின் மிகுதியாலே அத்தை மதியாதே
சஞ்சரியா நிற்கும்

இத்தால் சொல்லிற்று ஆய்த்து
பிரளயம் என்று பாராதே
ஜகத் ரஷணத்துக்காக மகா வராஹம் ஆனது இறங்குமா போலே இரா நின்றது ஆய்த்து –

—————————————————————–

ஆலிலை வ்ருத்தாந்தம் அனுசந்தித்து அஞ்சின இவரை
நீர் அஞ்ச வேண்டாம்
ஜகதாகாரம் காட்டி அருள ஸமாஹிதர் ஆகிறார் இதில் –

பகலும் இரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர் போலும்
துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல் வாய்
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-5-

துன்னி-நெருங்கி -மூன்றுக்கும் அந்வயம் –

பகலும் இரவும் தானேயாய்ப் –
பகல் என்றும் இரவு என்றும் சொல்லப் படுகிற
இவற்றைத் தனக்கு விபூதியாக உடையானாய்-

பாரும் விண்ணும் தானேயாய் –
பூமி அந்தரிஷங்களை தனக்கு  விபூதியாக உடையானாய்–
(வெல்லும் வ்ருத்த விபூதிமான் திரு விண்ணகர் பார்த்தோமே )

நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர் போலும் –
தம பிரகாசங்களை விபூதியாக உடையானாய்
இப்படி ஜகதாகாரனானவன்
அசாதாரண விக்ரஹத்தைக் கண்டு அனுபவிக்கலாம் படி
வந்து நிற்கிற ஊர் போலும் –

துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல் வாய் அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் –
நெருங்கிக் கட்டின துகில்களால் உண்டான கொடியும்
தேர்கள் ஒன்றோடு ஓன்று தாக்கிக் கிளப்ப பட்ட தூளியும்
மிகுதியை உடைத்தாய்
அவ் ஊரில் ஸ்திரீகள் உடைய  குழலுக்கு வாசம் கொளுத்துகைகாக
அகிலைப் புகைப்பார்கள் –
அது மேகம் போலேயாய் வர்ஷாவைக் காட்ட நின்றது –

வர்ஷாவில் வந்தால்  -ஒரு காற்றும் தூளியும் மேகமும் –
மூன்றும் கூடி இறே இருப்பது –
அதில் கட்டின கொடிகளால் வந்த காற்று உண்டாயாய் இருந்தது –
தேர் காலாலே கிளப்பப் பட்ட தூளி உண்டாயாய் இருந்தது –
அவர்கள் குழலுக்கு புகைக்கிற அகில் புகையானது மேகமாய் இருந்தது –

ஆக இம் மூன்றுமே கூடி நித்ய வர்ஷாவைக் காட்டா நின்றது –
ருது விசேஷங்கள் தோறும் உண்டான பதார்த்தங்களை
அனுபவிக்க ஓட்டுகிறனவில்லை

அணியார் வீதி அழுந்தூரே –

——————————————————–

கீழே அச்சம் தீர ஜெகதாகாரம் காட்ட
அச்சம் நீங்கியவர் சத்தை பெற்றாராய் இருக்க
இவரைப் பெற்ற ஹர்ஷத்தாலே
தாம் ஹர்ஷம் தோற்ற கிட்டே வந்து நின்றபடியே அனுசந்திக்கிறார்

ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்
நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத் தார்ப் போவா அணியார் வீதி அழுந்தூரே–7-5-6-

அரவத் தார்ப் போவா-அரவத்து ஆர்ப்பு ஓவா

ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்-
இதழ் விளங்கா நின்றுள்ள தாமரை போலே
ஸ்மிதம் பண்ணி அருளி –
என்னைப் பெறுகையால் வந்த அலாப்ய லாபம்
தன்னது என்னும் இடம்  தோற்ற ஸ்மிதம் பண்ணி –
அத்தாலே தான் செய்தது விலக்காத படியான தசையை எனக்கு பிறப்பித்து
என் அருகே வந்து நின்று
அது சாத்மித்தவாறே
ஹிருதயத்திலே வந்து புகுந்து
இனி இவருக்கு ஒரு போக்கு இல்லை என்று தோற்ற நிற்கிறவர்
கண்ணுக்கு இலக்காகும்படி வந்து நிற்கிற தேசம் போலும் –

நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ –
ஓங்கின  மாடங்களில் உண்டான தனிச் சூலமானது -அத்விதீயமான மகுடமானது –
மேகங்களின் உடைய கீழ் வயிற்றைப் போழ அவை
வர்ஷத்தை உண்டாக்கும் –
இத்தால் மாடங்களின் உடைய ஒக்கம் சொன்னபடி –

ஆடல் அரவத் தார்ப் போவா -(ஆர்ப்பு ஓவா )
ஸ்திரீகள் ஆடுகிற போதை
ஆரவாரத்தால் உண்டான கோஷம் மாறாதே செல்லுகிற –

அணியூர் வீதி அழுந்தூரே  —
அது மாறாமையால் வந்த
அழகை உடைய வீதி -என்றபடி –

———————————————————————-

நாயிகா பாவம் பிரஸ்துதம்
கிட்டி வந்தார்
படுக்கையில் சம்ஸ்லேஷம்
சாத்மிக்கவாறே
அணைப்பு -ஹர்ஷம் மிக்கு முடியாமல் இருக்க –
பிரிவை பிரசங்கித்து –
அவ்வளவிலே கண்ண நீர் பொழிய போக மாட்டாமல் நின்றார் –

மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும்
வேலைக் கடல் போல் நெடு வீதி விண்டோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப்   புகையால்   அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே —7-5-7-

மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி –
போக யோக்யமான காலத்திலே வந்து புகுந்து
பூம் படுக்கையிலே தங்கி
அநந்தரம்
அங்கு நின்றும் போந்து –

அடியேன் மனம் புகுந்து –
அனன்யார்ஹையான என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து

என் நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும்
பிரிவை பிரசங்கித்து
என்னுடைய கண்ணும் கண்ணீருமான ஆற்றாமையைக் கண்டு
பின்னை கால் வாங்கிப் போக மாட்டாதே நின்றவர்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் போலும் –

வேலைக் கடல் போல் நெடு வீதி –
கரையை உடைத்தான கடல் போலே யாய்த்து
திரு வீதிகள் உடைய பெருமை இருக்கும் படி –

விண்டோய் சுதை வெண் மணி மாடத்து —
ஸ்வர்க்கத்து அளவும் ஓங்கி இருப்பதாய்
சாந்திட்டு
அத்தாலே வெளுத்து இருப்பதாய்
மணி மயமான மாடத்தில் உண்டான –
ஆலைப்   புகையால்   அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே –
ஆதித்யன் உடைய உஷ்ணமான கிரணங்களையும்
ஆலையில் உண்டான புகையானது வந்து வீதியையும்
(ஆலைப் புகை )மறையா நிற்கும்-

இத்தால் ஊருக்கும் வயலுக்கும் உண்டான அண்ணிமை  சொல்லுகிறது –

————————————————-

கீழே பிரிவை பிரசங்கித்து கண்ணீர் பொழிய
அங்கும் இங்கும் தங்கி சம்ச்லேஷிக்க வந்தவர்
கலந்த போவது ஏன்
இது எனது இடையாட்டுக் குற்றமே என்கிறார் –

தான் செய்த அபராதத்தை ஷமிப்பிக்க
நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார்-

வஞ்சி  மருங்குலிடை நோவ மணந்து நின்ற  கனவகத்து    என்
நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் நின்ற ஊர் போலும்
பஞ்சியன்ன மெல்லடி நற் பாவை மார்கள் ஆடகத்தின்
அஞ்சிலம்பின் ஆர்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே —7-5-8-

வஞ்சி  மருங்குலிடை நோவ மணந்து நின்ற  கனவகத்து   –
வஞ்சியின்
படியை உடைத்தான இடையானது
நோவக் கலந்து நின்ற ஸ்வப்ன கல்பமான சம்ச்லேஷத்தில்

என் நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் நின்ற ஊர் போலும்
இன்ன பரிமாற்றம் பெற்றிலோம் -என்கிற
அத்ருப்தி நெஞ்சில் கிடவாதபடி யாக வாய்த்து
நெஞ்சிலே குறைவறப் புகுந்து நின்றபடி –
(அணைத்தேன் சுகித்தேன் என்கிறார் -)

பஞ்சியன்ன மெல்லடி நற் பாவை மார்கள் ஆடகத்தின் –
செம் பஞ்சு போலே மிருதுவான காலை உடையராய்
நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை
உடையவர் ஆனவர்கள் உடைய
பொன்னாலே சமைக்கப் பட்ட –

அஞ்சிலம்பின் ஆர்ப்போவா –
அழகிய சிலம்பில் உண்டான
ஆரவாரமானது மாறாதே இருக்கிற –
அணியார் வீதி அழுந்தூரே –

——————————————————-

இடை நோவ மணந்த படி சொல்லி
அது முற்றும் போனால் முடிந்து போவார் என்று
நாலடி விலகிப் போக
கிலேசம்
அல்ப வெறுப்பு தோற்ற அவர் சன்னிஹிதமான தேசம் கொண்டாடுகிறார்

என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங் கலைகள் மெலி வெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-9-

என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப் –
என்னுடைய ஸ்தோத்ராதிகளால் வந்த வெளிச் சிறப்பையும்
சமுதாய சோபையையும் கொண்டு
நினைவு இன்றிக்கே இருக்க
இங்கே நேற்றே எழுந்து அருளி –

பொன்னங் கலைகள் மெலி வெய்தப் போன புனிதரூர் போலும் –
அரையில் பரியட்டமானது தொங்காதபடிக்கு ஈடாக
பண்ணிப் போன புனிதரூர் போலும்
(வீத ராகம் இல்லாமல் சுத்தர் -காதலியைப் பிரிந்தும் -வெறுப்பால் பேசிய படி )

இத் தலையில் உள்ளதை
சர்வ ஸ்வாபஹாரம் பண்ணி
தன் பக்கல் உள்ளது ஒன்றும் தொங்காத படி பண்ணிப் போந்த
சுத்தியை உடையவர் வர்த்திக்கிற தேசம் போலும் –

மன்னு –
ஜல சர சத்வங்கள் மன்னி இருக்கிற –

முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட –
பழையதாய்
மாறாத ஜலத்தை உடைய
பொய்கைகளில் உண்டான
தாமரைப் பூக்களின் மேலே மது பானம் பண்ணின
தர்ச நீயமான நிறத்தை உடைத்தான
வண்டினங்கள் ஆனவை –
செருக்குக்கு போக்கு விட்டு இசை பாட –

அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே    –
அதனுடைய பாட்டுக்கு சேர
அன்னமானது
பெடையோடே ஒக்க ஆட நிற்கும் –

—————————————————-

கலியன் ஒலி சப்தம் இல்லாத சாற்றுப் பாசுரம் –

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10-

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட –
நெல்லுக்கு களையாக முளைத்த குவளைகள் கண்ணைக் காட்டி –
நீர் நிலங்களில் உண்டான அரக்காம்பல் ஆனவை
அவர்கள் உடைய அதரத்தைக் காட்ட –

அல்லிக் கமலம் முகம் காட்டும் –
மிக்க இதழை உடைத்தான தாமரைப் பூக்கள் ஆன

கழனி அழுந்தூர் நின்றானை —
வயலுக்கும் ஊருக்கும் வாசி தெரிவிக்க ஒண்ணாதது ஆய்த்து-

வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன் –
பூம் கொடிகள் ஆனவை நெருங்கி இருக்கிற முழஞ்சுகளிலே
குயில்கள் ஆனவை
முக்தர் சாம கானம் பண்ணுமா போலே கூவா நிற்கும்
திரு மங்கையில் உள்ளாருக்கு ராஜாவாய் உள்ளவர்
பிரதி பஷ நிரசன சீலராய் உள்ளார் –

சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் –
சொல்களால் சம்ருத்தமாய் உள்ள
தமிழ் தொடையை வாயாலே சொல்ல –

பாவம் நில்லாதே –
பாவத்தை உண்டாக்குவதானாலும் தவிர ஒண்ணாததைச் சொல்ல
பாவங்கள் தன்னடையே போம் –

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

தந்து கனவில் கலவி ஆல் துயில் தானாம்
அந்நிலை காட்டி ஐம்புலன் கொண்டு வந்து புகும்
மாடு அழுந்தூரானைப் பகரும் கலியன் ஒலி
பாடல் உண்பார் ஒப்பார் சிங்கம் -65-

மாடு -பக்கம் -செல்வம் -பொன்-அனைய அழுந்தூரான்
ஆழ்வார் பாடல் -பரசமயப் பஞ்சுக் கனலின் பொறி –ஒலி மிக்க பாடலை யுண்டு –வலி மிக்க சீயம் –

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading