ஸ்ரீ பெரிய திருமொழி-7-9—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

கிருபா சமுத்திரம் -அருள் மா கடல் அமுது
பால சயனம்
ஆதி சேஷன் கருடன் போட்டி
கருடன் கீழே -ஆதி சேஷன் மேல் சயனம்
ஜல சயனம் -ஸமுத்ர கரையில் –
சல சயனம் -வஞ்சனை –
கடல் சின்னதாக மறைத்து சயனம்

பால சயனம்
லிங்க ரூபம் -வியாக்ரபாதர் புலிக்கால் முனிவர்
கணவர் இருவரும் கர்ப்பக்ருஹம்
ஆதி சேஷனால் பிரசித்தம் பெற்ற திவ்ய தேசம்
கருடன் கீழே தாழ
புஷ்காரணி கரையிலும் சேஷன் நாக தோஷம்
தெற்கு நோக்கி புஜங்க சயனம்
கிருபா -சமுத்திரம் -அருள் மா கடல்
அருமா கடலமுதே -பெரிய கடலைக் கடைந்து அருமைப் பட்டு வாங்கின
அமிர்தம் போலே நிரதிசய போக்யனாய்-
தயா நாயகி தாயார் –

கள்ளம் மனம் -பிரவேசம் –

கீழ்த் திரு மொழியிலே
அவனே கிடி கோள் ஆஸ்ரயணீயன் -என்றார் –
பாஹ்ய குத்ருஷ்டிகள் உடைய வார்த்தையைக் கேட்டு
அனர்த்தப் பட்டு போகாதே  –
ஆஸ்ரயணீயன் ஆனவன் திருவடிகளை ஆஸ்ரயித்து
உஜ்ஜீவித்து
போகப் பாருங்கோள் என்கிறார் –

முதல் நான்கு பாசுரங்கள் பர உபதேசம் –

————————————————–

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல  சயனத்
துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே —7-9-1-

திருக் கடித்தானத்துள்ளும் ஆழ்வார் உள்ளும் போல் இங்கும் –

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர் –
யதாஹி சோரஸ் சததாஹி புத்த -என்கிறபடியே
(ஜாபாலிக்கு ராமன் வார்த்தை இது )
வேதார்த்த அபலாபம் பண்ணுவார் சோரார் இறே-
அதுக்கு மேலே அவனுடையதான ஆத்மாபஹாரம்
பண்ணிப் போருகிறார் சிலர் இறே
கிருத்ரிமத்தைப் பண்ணி வர்த்திக்கிற ஹிருதயம்
அதில் நின்றும் வேறுபடும் பிரகாரத்தை மநோ ரதித்து
அவன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வேண்டி இருப்பீர் –

வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரை யெங்கும் –
பழையதான கடல் திரைகளால் உண்டான வெள்ளமானது
கரை எங்கும் போந்தேற –

தெள்ளும் மணி திகழும் –
நினைவு இன்றிக்கே இருக்க
கடல் ஏறி வந்த படியாலே
அங்கு உண்டான ரத்நாதிகள் விளங்கா நின்றுள்ள  –

சிறு புலியூர்ச் சல  சயனத்துள்ளும் எனதுள்ளத்துள்ளும் உறைவாரை உள்ளீரே –
உகந்து அருளின நிலங்களும்
இவர் திரு உள்ளமும்
ஒக்க வாய்த்து அவன் விரும்பி இருப்பது –
இப்படி இருக்கையாலே
ஆஸ்ரயிப்பாருக்கு ஆஸ்ரயணீய ஸ்தானம்  இவை இரண்டும் யாய்த்து –
(நமக்கும் திவ்ய தேச ப்ராவண்யமும் ஆழ்வார் ப்ராவண்யமும் வேண்டும் )

சல சயனன் -என்றது
அது அவனுக்குத் திரு நாமமாய்
ஜல சயனன் வர்த்திக்கிற இடம்
சல சயனம் என்று ஊருக்கு பெயராகிறது –

சல சயனத்தைத் தொழும் –ஆறாம் பாட்டு
ம காரம் ன காரம் மாறி இருப்பதாகக் கொள்ள வேண்டும் –

———————————————–

கீழே புத்த அவதாரம் கள்ளர்
இதில் வீதிகளில் திரியும் சமணர்

தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றோடு கஞ்சி
மருவிப் பிரிந்தவர்  வாய் மொழி மதியாது வந்து அடைவீர்
திருவில் பொலி மறையோர்  சிறு புலியூர்ச் சல சயனத்து
உருவக் குறளடிகள் அடி யுணர்மின் யுணர்வீரே  –7-9-2-

திருவில்-திருவை இல்லமாகக் கொண்டவர் –

தெருவில் திரி சிறு நோன்பியர் –
அசதச்ய வேஷத்தை உடையராய்க் கொண்டு
தெருவிலே சஞ்சரிக்கிற அவைதிக வ்ருததத்தை உடையராய் –

செஞ்சோற்றோடு கஞ்சி மருவிப் பிரிந்தவர்  வாய் மொழி மதியாது வந்து அடைவீர்-
தண் தயிரினால் திரளை மிடற்றிடை நெருக்குவான் -என்றும் –
மனந் திரியாக் கஞ்சி என்றும் உண்டு அவர்கள் புஜித்து வாசனை  பண்ணிப் போருவது-
ஆக இப்படி அவைதிக அனுஷ்டானத்தை உடையராய்
வைதிக மரியாதையை அகன்று திரிகிறவர்கள் உடைய வாயில் வார்த்தையை
அநாதரித்து வந்து ஆஸ்ரயிப்பீர் –

திருவில் பொலி மறையோர்  –
ஐஸ்வர்யம் குறைவற்று இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற –

சிறு புலியூர்ச் சல சயனத்து உருவக் குறளடிகள் அடி யுணர்மின் யுணர்வீரே
அழகியதாய்
கண்டார்க்கு மேல் விழும்படியான வடிவை உடைய ஸ்ரீ வாமனன் ஆன சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை
ஸ்மரியுங்கோள்-
அனுசந்திக்கப் பார்க்கிற நீங்கள்
உணர்வீர் -அனுசந்தானத்தை உடையீர் –

தெருவில் திரி சிறு நோன்பியர் -செஞ்சோற்றோடு கஞ்சி மருவிப் பிரிந்தவர்  உடைய
வாய் மொழி மதியாது வந்து அடைவீர்-அநாதரித்து வந்து ஆஸ்ரயிப்பீர் –
திருவில் பொலி மறையோர்  –
சிருபுலியூர்ச் சல சயனத்தை வந்து ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் –
உருவக் குறளடிகள் அடியை உணருங்கோள்–என்று கிரியை

அ நாதரித்து -ஆஸ்ரயித்து-உணர்ந்து மூன்று கிரியா பதங்கள் –

——————————————————

கள்ள மனத்தை விட்டு வாழ்ந்தவர்கள் உண்டோ என்ன அருளிச் செய்கிறார்

கண்டிகோளே நாம் இருக்கிறபடி
நீங்களும் இப்படியே இருக்கப் பாருங்கோள் -என்கிறார் –

பறையும் வினை தொழுது உய்மின் நீர் பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒரு பால் வயல் ஒரு பால் பொழில் ஒரு பால்
சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத்
துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே–7-9-3-

பறையும் வினை தொழுது உய்மின் நீர் –
அநாதி காலம் பண்ணின பாபங்கள் அடங்கலும் பறந்து போம் –
தொழுது உஜ்ஜீவியுங்கோள் –

பணியும் சிறு தொண்டீர்-
அப்ராப்த விஷயங்களிலே தொண்டு பட்டு இருக்கிற நீங்கள்
விழுந்து ஆஸ்ரயிங்கோள் –
(சிறு தொண்டீர்-அல்ப விஷயாந்தர ப்ராவண்யம் உள்ளவர்களே )

அங்கன் அன்றிக்கே –
சிறு தொண்டீர்-
அந்தரங்க கிங்கராக வேண்டி இருப்பீர் –
பணிமின் –
ஆஸ்ரயிங்கோள் -என்னுமாம் –

அறையும் புனல் ஒரு பால் வயல் ஒரு பால் பொழில் ஒரு பால்
சிறை வண்டினம் அறையும் –
அவ்வூர் தான்
ஓர் அருகு நீர் வெள்ளம் அறையா நிற்கும்
ஓர் அருகு பொழிலாய்  இருக்கும்
ஓர் அருகு வயலாய் இருக்கும்
இவை மூன்று இடத்திலும் ஒக்க அறையா நின்றுள்ள சிறகை
உடைத்தான வண்டுகளின்  உடைய சமூஹமானது
அறைகிற-

சிறு புலியூர்ச் சல சயனத் துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே-
சிறு புலியீர் சல சயனத்தில்
நித்ய வாஸம் பண்ணுகிற சர்வேஸ்வரன் உடைய
திருவடிகளை ஒழிய
வேர் ஒன்றை த்யாஜ்யதயா வாகிலும் அறிவது ஓன்று இல்லை –

————————————————————-

உம்மைப் போல் நாங்கள் வேறே ஒன்றை அறியாமல் இருக்க
விரோதிகளைப் போக்கி அநுக்ரஹிப்பானோ
தங்கள் நிகர்ஷம் சொல்லிக் கொள்வதே அதிகாரம் –
தம்முடைய வை லக்ஷண்ய அனுசந்தானத்தாலும் மகிழ்ந்து
ஆப்த வாக்கியமாக
அவனது ஸுலப்ய குணம் அநுஸந்தித்து
உங்களையும் அநுக்ரஹிப்பான்
அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் -என்கிறார் –

தம்மை அவர்கள் ஆப்தராக நினைத்து இருக்கிறபடியால்
தாம் சொல்லிற்று கேட்பார்கள் -என்று பார்த்து
தம் படியை அவர்களுக்கு அறிவித்து
நீங்களும் என்னைப் போலே அவனைக் கொண்டு
உங்கள் விரோதிகளைப் போக்கிக் கொள்ளப் பாருங்கோள்
என்கிறார் –

வானார் மதி பொதியும் சடை மழுவாளி யொடு  ஒருபால்
தானாகிய தலைவனவன் அமரர்க்கு அதிபதியாம்
தேனார் பொழில் தழுவும் சிறு புலியூர் சல சயனத்
தானாயனது அடி அல்லது ஓன்று அறியேன் அடியேனே —7-9-4-

வானார் மதி பொதியும் சடை மழுவாளி யொடு  ஒருபால் தானாகிய தலைவனவன் –
பரந்த ஆகாசத்துக்கு எல்லாம் தானே போரும்படியாய்   இருக்கிற சந்த்ரனை
தன் ஜடையிலே ஏக தேசத்திலே அடக்கி
தமப்பன் பிறர் என்று பாராதே கொல்லுகைக்கு பரிகரமான
மழுவை உடைய ருத்ரனுக்கு தன் திருமேனியிலே இடம் கொடுத்து கொடு நிற்கிற
சீலத்தை உடைய சர்வாதிகன் –

அமரர்க்கு அதிபதியாம் –
தேவர்களுக்கு நிர்வாஹகனான இந்த்ரனும்
தான் என்கிற சொல்லுக்குள் அடங்கும்படி இருக்கிறவன் –

தேனார் பொழில் தழுவும் –
தேன் மாறாத பொழி லாலே அணையப் பட்டு இருந்துள்ள

சிறு புலியூர் சல சயனத் தானாயனது அடி அல்லது ஓன்று அறியேன் அடியேனே –
கிருஷ்ணாவதாரம் தீர்த்தம் பிரசாதித்தது என்று
வெறுக்க வேண்டாதபடி -பிற்பாடருக்கும்
அனுபவிக்கலாம் படி
அவ்வதார்ரத்தின் படியே வந்து சாய்ந்தவன் –
அவன் திருவடிகள் அல்லது வேறு ஒன்றையும் அறியேன் –
அதுக்கடி அவன் சேஷ பூதன் ஆகையாலே –

————————————————-

கீழே நான்கும் பர உபதேசம்
திருந்தினவர்களும் திருந்தாதவர்களு மாக இருக்க
சம்சாரம் படுத்தும் பாடடை பேச பாயாவாஹமாய் இருக்க
பர உபதேசம் விட்டு
அருள் புரியே என்று அடுத்த ஐந்து பாசுரங்களில் –

நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறிநீர்ச்
செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை யடியாய் உனதடியேற்கு அருள் புரியே—7-9-5-

நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை –
ஒரு காலும் விட்டுப் பற்றக் கடவதல்லாத
நெடு நரகமான
சம்சாரத்துக்கு உள்ளே போய்ப் புகாதபடி –

நாளும் எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம்
ப்ரஹ்மாதிகள் காலம் எல்லாம் நின்று
என் ஆயனே -என்று  தொழுது ஸ்தோத்ரம் பண்ணுகிற தேசம்-

எறிநீர்ச் செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து –
மிக்க ஜலத்தை உடைத்தான பொய்கைகளிலே
அந்த நீர்ச் செறிவாலே
தாமரைகள் போய் அலறுகிற  சிறு புலியூர்ச் சலசயனத்திலே –
(சேஷ புஷ்கரணி -அநந்த சரஸ் இங்கு )

அந்தாமரை யடியாய் –
செவ்விப் பூ போலே இருக்கிற திருவடிகளை  உடையவனே –

உனதடியேற்கு அருள் புரியே   –
அல்லாதார் செய்தபடி செய்ய
அநந்ய கதியான என் பக்கலிலே உன்னுடைய
கண் அழிவற்ற கிருபையைப் பண்ணி அருள வேணும் –

—————————————————

ததீய சேஷத்வம்
சடக்கென அருள் புரியாமல் இருக்க
அடியார் அடியாரானால் உடனே அருளுவான்

முழு நீலமும் அலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவாரவர் கண் வாய் முக மலரும்
செழுநீர் வயல் தழுவும்  சிறுபுலியீர்ச் சலசயனம்
தொழு நீர்மை யது உடையார் அடி தொழுவார் துயர் இலரே —7-9-6-

சலசயனம்-சலசயனன் -பெருமாளையே சொன்னவாறு -மகார னகர மாற்று

முழு நீலமும் அலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக் கழுநீரொடு
எங்கும் ஒக்க கறுத்து இருக்கிற நீலமும்
அரக்காம்பலும்
தாமரையும்
செங்கழுநீரும்
இவை தன்னிலே கூடி  –

மடவாரவர் கண் வாய் முக மலரும் –
அங்கு உண்டான ஸ்திரீகள் உடைய
கண்ணையும்
வாயையும்
முகத்தையும்
காட்டா நிற்கிற –

செழுநீர் வயல் தழுவும்  –
அழகிய ஜலமானது வயலை அணைந்து இருக்கிற –

சிறுபுலியீர்ச் சலசயனம் –
தொழு நீர்மை யது உடையார் அடி தொழுவார் துயர் இலரே
சிறுபுலியீர்ச் சலசயனத்தை தொழுகையே
ஸ்வ பாவமாக உடையாருடைய திருவடிகளைத் தொழுவார்க்கு

துக்கங்கள் நில்லா –
அவை தன்னடியே விட்டுப் போம் –

————————————————

பக்தர் உள்ளத்திலா வேதாந்தமா ஹஸ்திகிரியா -கூரத்தாழ்வான் வரதராஜ ஸ்தவம்

கீழ் அடியாரைப் பற்றி தேறி இருந்தார்
அத்தைக்கு கண்டு உக்காந்து
எங்கும் உள்ளபடிகளைக் காட்டி அருள -இப்பாசுரம் –

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீ யோம்புகை  மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுன தடியார் மனத்தாயோ வறியேனே—7-9-7-

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்  மாயா –
சேய்-என்று
ஷேத்ர பாலகனுக்கு பேராய்
அவன் அவ்விடத்துக்கு காவலாக சொல்லிப் போருவது ஓன்று உண்டு அதாகிறது –
(பதினெட்டாம் படி கருப்பன் ருத்ரன் பிள்ளை காவல் தெய்வம் )

அன்றிக்கே –
சேய் -என்று
தூரத்துக்கு வாசகமாய் இருக்கையாலே
மிகவும் ஓங்கின திருமலையிலே நிற்கிற ஆச்சர்ய பூதனை –

வெனக்கு உரையாய் இது –
எனக்கு இத்தை அருளிச் செய்ய வேணும் –

மறை நான்கினுளாயோ-
எங்கும் ஒக்க உன்னையே சொல்லா நின்றுள்ள
வேதங்கள் நாலிலும் உளாயோ –

தீ யோம்புகை  மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத் தாயோ –
எப்போதும்  ஒக்க அக்நி கார்யத்தில் அவஹிதராய்ப் போருகிற
பிராமணர் உடைய
சிறுபுலியூர்ச் சலசயனத்தில் உள்ளாயோ   –

வுன தடியார் மனத்தாயோ வறியேனே   –
உன் திருவடிகளில் அசாதாரணராய்  இருப்பார் ஹிருதயங்களில் உள்ளாயோ –
அடியேன் அறிகிறேன் இல்லை –
எனக்கு இது தெரிய அருளிச் செய்ய வேணும் –

இத்தால் சொல்லிற்று ஆயத்து –
சௌபரி பல வடிவு கொண்டால் போலே
இவ்வோ இடங்கள் தோறும்
இனி அவ்வருகு இல்லை என்னும்படி
குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான் –

————————————————-

கீழே பல வடிவங்களைக்காட்டி அருள
ஆச்சார்யம் பட்டார்
அனுபவத்துக்கு தடைப்படும் படி சம்சாரத்தில் இருக்க
அது நியாமாக நிச்சயமாக இருக்க
ப்ராப்ய ஆபாசங்களில் நசை அற்று
சரணம் புக்கு
கிருபையை பிரார்த்திக்கிறார் –

பால சயனம்
லிங்க ரூபம் -வியாக்ரபாதர் புலிக்கால் முனிவர்
கணவர் இருவரும் கர்ப்பக்ருஹம்
ஆதி சேஷனால் பிரசித்தம் பெற்ற திவ்ய தேசம்
கருடன் கீழே தாழ
புஷ்காரணி கரையிலும் சேஷன் நாக தோஷம்
தெற்கு நோக்கி புஜங்க சயனம்
கிருபா -சமுத்திரம் -அருள் மா கடல்
தயா நாயகி தாயார் –

மையார் வரிநீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உன கழலே  தொழுது எழுவேன் கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஐவாய அரவணை மேல் உறை யமலா யருளாயே –7-9-8-

தொழுது எழுவேன்-அருளாய் -ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கும் படி
செவ்வாய் -நேராய் இருக்கிற -நேர்மையும் வண்ணமும்

மையார் வரிநீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு உய்வான் உன கழலே –
அஞ்சனத்தாலே குறைவற அலங்க்ருதமாய்-
செவ்வரி கருவரிகளை உடைத்தாய் –
நீல மலர் போலே இருக்கிற கண்களை உடைய ஸ்திரீகளை
மநோ ரதித்து இருக்கும் இருப்பை   விட்டு
உஜ்ஜீவிக்கைகாக உன் திருவடிகளை –

தொழுது எழுவேன் –
ஆஸ்ரயிப்பேன் –

கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சல சயனத்து –
கிளி போலே இருக்கிற ஸ்திரீகள் உடைய
அக் கிளி போன்ற பேச்சு நெருங்கி இருக்கிற
சிறுபுலியூர்ச் சல சயனத்த்தில் –

ஐவாய அரவணை மேல் உறை யமலா யருளாயே –
அனுபவ ஜனித ப்ரீதிக்குப் போக்கு விடுகைக்கு
பலவாய்த் தலைகளை உடையனாய்
சைத்யாதிகளை பிரக்ருதியாக உடைய திரு வநந்த ஆழ்வான் மேலே
சாய்ந்து அருளி
பிரயோஜன நிரபேஷமாக
ரஷணத்திலே ஒருப் பட்டு இருக்கிறவனே  –

என் பக்கலிலே உன்னுடைய கிருபையைப் பண்ணி அருள வேணும் –
கிளியானது மடவார் உடைய சிவந்த வாயில் பேச்சை அப்யசிக்கிற -என்னுமாம் –

கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சல சயனத்து –
ஐவாய அரவணை மேல் உறை யமலா-
மையார் வரிநீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு உய்வான் உன கழலே –
தொழுது எழுவேன்-அருளாய் -என்று அந்வயம்

————————————————-

முக்ய உயிர் பாசுரம்
உபாயமாகப் பற்ற வில்லை
சரணம் க்ருஹம் புருஷார்த்தம் இதுவே என்கிறார்
அவன் காட்டி அருளிய அவற்றால் உண்டான போக்யதா அதிசயத்தால்
ப்ராப்ய நிஷ்கர்ஷம் இது
தனக்கேயாக எனைக் கொள்ளு மீதே –2-9- அங்கு இது 7-9-

கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெரு மால் வரை  யுருவா  பிறவுருவா நினதுருவா
திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடலமுதே யுனதடியே சரணாமே—7-9-9-

பெரு மால் வரை-மூன்று விசேஷணங்கள் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதன்

கருமா முகிலுருவா-
ஆஸ்ரிதர்க்கு கண்ட காட்சியிலே
சகல தாபமும் போம்படி ஸ்ரமஹரமான பெரிய
மேகம் போன்ற
வடிவை உடையவனே –

கனலுருவா-
அநாஸ்ரிதர்க்கு கிட்ட ஒண்ணாத படி
அநபிபவ நீயமான வடிவை உடையவனே –

புனலுருவா –
சர்வ ஸூலபனான வடிவை உடையவனே –

பெரு மால் வரை  யுருவா-
அபரிச்சேத்யமான வடிவை உடையவனே –

பிறவுருவா-
இன்னும் சொல்லிச் சொல்லாத வடிவுகளை உடையவனே –

நினதுருவா –
இப்படி ஜகதாகாரமான வடிவுகளை ஒழிய
அசாதாராணமான வடிவுகளை உடையவனே –

திருமா மகள் மருவும் -சிறுபுலியூர்ச் சல சயனத்து –
பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணுகிற
(தயா நாயகித்தாயார் )

அரு மா கடலமுதே –
பெரிய கடலைக் கடைந்து அருமைப் பட்டு வாங்கின
அமிர்தம் போலே
நிரதிசய போக்யனாய்க் கொண்டு
பெரிய பிராட்டியாரோடும் கூட சிறுபுலியூர்ச் சல சயனத்த்திலே
சாய்ந்து அருளினவனே-

யுன தடியே சரணாமே  –
ஸ்ரீ யபதியான உனது திருவடிகளை   ஒழிய
எனக்கு வேறு ஒரு புகல் இல்லை
பிராப்யம் இல்லை –

———————————————–

சீரார் நெடு மறுகில் சிறு புலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே —7-9-10-

சீரார் நெடு மறுகில் சிறு புலியூர்ச் சல சயனத்து –
ஐஸ்வர்யத்தை அடையக் கோள் சொல்லித் தாரா நின்ற
பெரிய திரு வீதிகளை உடைய
சிறு புலியூர்ச் சல சயனத்த்தில் –

ஏரார் முகில் வண்ணன் தன்னை –
அழகிய வடிவை உடைத்தான மேகம் போன்ற வடிவை யுடையனாய்க் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிறவனை-

இமையோர் பெருமானைக் –
அங்கு கண் வளர்ந்து அருளுகிறவன் தான் ஆர் என்னில் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -யாய்த்து –

காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை –
நிரந்தர மேக சஞ்சாரத்தை உடைத்து -என்னுதல்
இருள் மிக்கு இருந்துள்ள வயலை உடைத்தான
திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
ஒலியை உடைத்தாம்படி அருளிச் செய்த மாலை –

பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே –
பாபம் வருகைக்கு யோக்யமான தேசத்திலே இருக்கச் செய்தேயும்
இவற்றை வாயாலே சொல்லி ஆஸ்ரயிக்க-
பாபங்கள் தானே
நமக்கு இவ்விடம் இருப்பிடம் அல்ல -என்று விட்டுப் போம்-

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கள்ள மதம் கொள்ளாச் சல சயனத்தார் தாள் நீர்
கொள்ளும் என்றும் பெண்டிர் நிரயம் தான் வெள்கி யவை
நீங்க பேறாச் சேர்ந்தான் பரகாலன் நெஞ்சே சொல்
பாங்காய் அவன் பெருமை -69-

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading