பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள்
திருக்கண்ண மங்கை -பத்தராவி பெருமாள்
திருக்கண்ண புரம்
திருக்கண்ணங்குடி -தாமோதர நாராயண பெருமாள்
வரிசையாக காட்டிக் கொடுக்க அனுபவம்
திருக்கோவலூர்
கபிஸ்தலம் -மற்ற இரண்டும்
பெரிய வடிவம் -நின்ற திருக்கோலம் -பெரும் புறக் கடல்
கற்கலாம் கவியின் பொருள் தானே இதிலே -இறுதியில் –
நம்பூர் வரதாச்சார்யார் -நம்பிள்ளை-கலி கன்றி தாஸர் -கார்த்திகை கார்த்திகை –
பெரியவாச்சான் பிள்ளை -ஆவணி ரோஹிணி – –
முதல் சொல்லே பெருமாள் திரு நாமம் -ப்ருஹத் பஹிர் ஸிந்து -பாற் கடல் இல்லாமல் வெளிக்கடல்
லஷ்மீ வனம்-கிருஷ்ணாரண்யம் -கண்ணன் கடு -கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்
மங்கையைக் கண்டு மணம் புரிந்த தேசம்
கடலைக் கடைந்து பெண் அமுதைக் கொண்டு உகந்தானே
பிராட்டி தபஸ் இருந்து திருக்கல்யாணம்
தேவர்கள்-வண்டு ரூபம் –
கண்ண மங்கை தாயார் -இன்றும் -தேன் வண்டுகள்
அயனம் மாறி பிறையில்
தர்சன புஷ்கரணி
சப்த அம்ருத க்ஷேத்ரம்
மூலவர் பத்தராவி
உத்சவர் -அபிஷேக வல்லி தாயார் பெரும் புற கடல்
திருக்கண்ண மங்கை ஆண்டான் -நாதமுனி சஸ் சிஷ்யர் –
நாய்கள் சண்டை -எஜமானர்கள் -வாக்குவாதம்
பார்த்து -பரமசேதனன் அபிமானம் இருக்க என்ன குறை
கௌஸ்துபம் ஸ்தானம் -நன் பொருள்
ஸ்வ வியாபாரத்தை விட்டார்
பகவத் கைங்கர்யம் ஒன்றே கார்யம்
சக்தி லஜ்ஜை வியாபாரம் விட உபாயம்
இவர் திருவரசும் இங்கே சந்நிதியில் தெற்குப்புறம்
பெரிய உடையார் இளைய பெருமாள் தீர்க்க சிந்தயந்தி நறையூர் அரையர் -உபேய த்ருஷ்டாந்தம்
இந்த பெருமாளே பெரிய வாச்சான் பிள்ளை -அனைத்துக்கும் வியாக்யானம்
உத்பல விமானம்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -கண மங்கை -கண்ணனூர் -மடலில்
கருத்தினால் வாக்கினால் நான்மறை காணாத இவனைக் ககாணலாம் -பிள்ளைப்பெருமாள் ஐ யங்கார்
பெரும் புறக் கடல் -பிரவேசம் –
அவன் அல்லது ஆஸ்ரயணீயன் இல்லை என்று
பிறருக்கு உபதேசிக்கப் புக்கவர்
அமலா அருளாய்-7-9-8- -என்றும்
உன தடியே சரணாமே -7-9-9–என்றும்
தம்முடைய அபேஷையின் மிகுதியைச் சொல்லி தலைக் கட்டினார் –
( கீழே இப்படி பிரார்த்தித்தவர்
பரம ப்ராப்யம் பெறாமல் –
ஸ்ரீ வைகுந்தம் பெறாமலேயே –
இதில் கண்டு கொண்டேனே-ஒன்பதில் கால் – ஹ்ருஷ்டராய் அருளுகிறார்
நாட்டார் திருந்த இன்னும் இவரைக் கொண்டு பாசுரம் பெற வேண்டுமே
நம்மாழ்வார் ஆயிரம் ப்ரதிஜ்ஜை உண்டு
இவர் இடம் அது இல்லையே )
இவர்க்கு இனிச் செய்யலாவது என் என்று பார்த்து
வேறே ஒராசனமாக ( எழுந்து அருளி ) விருந்து
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை அடைய
காட்டிக் கொடுத்து
நம்மை ஒழிந்த வஸ்துக்கள் அடைய நமக்கு உபமானமாய் இருத்தல்
பிரகாரமாய் இருத்தல் செய்யும்படி இருக்கிற நாம்
(விபூதிகள் எண்ணிறந்தவை -ஸ்ரீமத் -உயர்ந்த எல்லாம் எனது தேஜஸ்ஸின் அம்சம் –
சிறந்ததாக உள்ளேன் சில வற்றைக் காட்டி அருளி ஸ்ரீ கீதையில்-பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம் )
உமக்கு ( மானஸ அனுபவமாக மட்டும் இல்லாமல் ) கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து நின்றோம் ஆகில்
நீர் என் பெறாதாராய் தான் கிடந்தது கூப்பிடுகிறது –
இனி
மேல் உள்ள காரியமும் நாமே செய்வுதோம் காணும் -என்று சமாதனம் பண்ண –
அப்படியே அனுசந்தித்து த்ருப்தராகிறார் –
(சரீர யாத்திரை கர்மாதீனம் -ஆத்மயாத்ரை கிருபாதீனம்
அனைத்தும் உபமானம் – பிரகாரம்
கண்ண மங்கையுள் கண்ணாலே கண்டேன் களித்தேன் என்று பேசி அருளுகிறார் )
ஆருரோஹ ரதம் ஹ்ருஷ்டஸ் சத்ருக்க்ன சஹிதோ பலீ –
பெரிய ஆசை உடன் வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு
நினைத்து வந்த கார்யத்தில் செய்தது ஒன்றும் இல்லை –
ஆகிலும் மீண்டு போகிற போது ஹ்ருஷ்டனாய்ப் போனான் இறே-
அப்படியே யாய்த்து இவர் விஷயத்தில் சமாதானம் பண்ணின படியும் –
———————————————————–
பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-
திரட்கோவையை-இனிமை பாக்யம் -ப்ராப்யம்
பக்தராவி -என்னது உன்னதாவியில் அவன் மதம் -பத்தருக்கு பிராணன் -என்றும்
முத்து மாலை -ப்ராப்யம் -கழுத்தில் போட்டு அனுபவிக்க
முத்துக்குவியல் -ப்ராபகம் -வித்து ஜீவிக்கலாம் -உபாயம்-ரக்ஷகனாய் -பிராபகம்
அரும்பினை யலரை-யுவா குமாரா –
திருமணம் பண்ண யுவா வாய் இருக்க வேண்டும் -பாலகன் மாறிக்கொண்டே யுவாவாய் இருப்பானே எப்பொழுதும்
மனத்தாசையை-ஆசை நிறைவேற்றுபவன் இல்லை -ஆசைக்கு விஷயமாகவே இருப்பானே –
அமுதம் பொதியின் சுவைக்கரும்பினை–அமுதமே நீராகி கருப்பஞ்சாறு போல் போக்யன் –
சென்று நாடி -ஆசையே வேண்டுவது
தபஸை -தப -ஆலோசனை பண்ணும் சர்வஞ்ஞன்
பெரும் புறக் கடலை –
சர்வ பதார்த்தங்களையும் தன்னுள்ளே அடக்கி நோக்கும் கடல் போலே
அபரிச்சேத்யனாய் உள்ளவனை –
எல்லா கடலுக்கும் புறம்பாய்
தான் பெருத்து இருக்கிற கடல் போன்று இருக்கிறவனை –
யடல் ஏற்றினைப்-
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த்த வஸ்துக்களையும்
தன்னுள்ளே இட்டு நோக்கும் படி
இவற்றை உடையன் ஆகையாலே வந்த
மேனாணிப்பை உடையவனை –
பெண்ணை –
அப்படி இருந்தால் ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத படியாய்
இருக்குமோ என்னில்
பரதந்த்ரனாய் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –
வெறும் பாரதந்த்ரமேயாய் இருக்கம் இத்தனையோ என்னில் –
யாணை-
நிரங்குசமான ஸ்வா தந்த்ர்யத்தை உடையவனை –
எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை –
எண்ணிறந்த தபஸை உடைய யோகிகளுக்கு
அந்த தப பலத்தை கொடுக்கும்
தபஸ் ஆனவனை –
முத்தின் திரட்கோவையைப் –
கண்ட போதே ஸ்ரமம் எல்லாம் ஆறும்படி
உடம்பிலே ஏறிட்டுக் கொண்டு அனுபவிக்கலாம் படி
முத்தின் உடைய திரண்ட மாலை போலே இருக்கிறவனை-
பத்தராவியை –
தன் பக்கல் பரிவை உடையார்க்கு
தன்னை ஒழிய ஜீவிக்க அரிதாம்படி இருக்கிறவனை –
நித்திலத் தொத்தினை –
மேன் மேல் என நமக்கு உண்டு என்று
தேறி இருக்கலாம்படி
முத்துக் குவை போன்று இருக்கிறவனை –
நித்திலம் -முத்தும் -அழகும் -சௌந்தர்யத் தொத்தை-
அரும்பினை யலரை –
இரண்டு அவஸ்தையும் ஒரு காலே
சூழ்த்துக் கொடுக்கலாம்படி இருக்கிறவனை –
யுவா குமார –
அடியேன் மனத்தாசையை –
நான் நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும்
இதுக்கு முன்பு அனுபவித்து அறியாதது ஒன்றில் போலே
பிறக்கிற ஆசை யானவனை –
அமுதம் பொதியின் சுவைக் கரும்பினைக்
அம்ருதத்தை நீராகப் பாய்ச்சி வளர்த்தால் போலே
நிரதிசய போக்ய பூதமான
கரும்பு போலே இனியனாய் இருக்கிறவனை –
கனியைச் –
அப்போதே நுகரலாம்படி
பக்வ பலமாய் இருக்கிறவனை –
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –
பசித்த இடத்தே
ஸூக போஜனம் பண்ணப் பெறுவாரைப் போலே
அபேஷை பிறந்த இடத்தே
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
—————————————-
எவ்வழியால் காட்டினார்
பக்திக்கும் பிரபத்திக்கும் அவன் இட்ட வழக்கு -நிர்வாகன்
அவ்வழியால் அடைந்து பெரும் இன்பத்தை பெற்று அனுபவிக்கிறார்
நிரதிசய போக்யதையாய் -அவன் காட்டக்கண்டு பெற்று அனுபவிக்கிறார் –
மெய்ந் நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-2-
மெய்யை-விஸ்வசீயமான பிரபத்திக்கு விஷயமானவன்-
கையிலோர் சங்குடை மைந்நிறக் கடலை -உடையவனை இல்லையே ஆகவே சேர்த்தே பொருள்
மைந்நிறக் கடலை கடல் வண்ணனை-மை நிறம் -நிறம்சொல்லி வண்ணம் ரக்ஷண ஸ்வபாவம்
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய்–கடந்த வர்த்தமானம் வரும் காலம் –
நினைத்த மாத்திரமே இன்ப மயம் எப்பொழுதும் -ஆனந்தமயம் -சைந்தனம் போல் –
மெய்ந் நலத் தவத்தைத் –
ஸ்வரூப அனுரூபமாய்
சிநேக ரூபமாய் இருக்கிற அபிமத சாதனமான பக்தியை –
(போஜனத்துக்கு ஷூத்து போல் )
திவத்தைத் தரும் மெய்யை –
பிரபத்தியை –
பொய்யினைக் –
இவ்விரண்டும் இல்லாதார்க்கு
தன் படிகளை ஒன்றும் அறிய ஒண்ணாது இருக்குமவனை –
கையிலோர் சங்குடை மைந்நிறக் கடலை –
கீழ்ச் சொன்ன இரண்டும் உடையார்க்கு
காட்சி கொடுக்கும் வடிவை உடையவனை –
கண்டத்தை எல்லாம் அடைய உள்ளே இட்டு நோக்கும்
கடல் போல் அன்றியே
ஓர் சங்குடை மைந்நிறக் கடலை –
(சேர்த்தி வெள்ளை விழி சங்கும் மைந்நிறம் -பராபக வண்ணம்-நிறம் இங்கு )
கடல் வண்ணனை –
சர்வ பதார்த்தங்களையும் தன்னுள்ளே அடக்கி
சிறியதை பெரியது நலியாத படி
தன் திரைகள் ஆகிற கைகளால் நோக்கும்
கடல் போலே இருக்கும் ஸ்வபாவத்தை உடையவனை –
மாலை –
சர்வாதிகனை –
ஆலிலைப் பள்ளி கொள் மாயனை –
அகடிதகடநா சாமர்த்தியத்தை உடையவனை –
ஒரு சிறு வடிவாலே சகல லோகங்களையும் அடக்கி
ஒரு பவனான ஆலந்தளிரிலே
கண் வளர்ந்து அருளின
ஆச்சர்ய பூதனை –
நென்னலைப் பகலை-
அபிமத லாபம் உண்டான பிற்றை நாளிலே நிர்வ்ருதி ( நினைவு )போலே
நேற்றைப் பகலிலே அனுபவம் இருந்தபடி என்-என்று
ஸ்மரித்து தரிக்கலாம் படி இருக்கிறவனை –
யிற்றை நாளினை –
அநு பூயமான நாள் ஆனவனை –
நாளையாய் வரும் –
இவ்வனுபவத்துக்கு விச்சேதம் பிறவாமே
நாளையாயும் வரப் புகா நின்றது என்று
அனுசந்திக்கலாம்படி இருக்கிற நாளையாய்
நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்-
அது தான் ஒரு நாளேயாய்ப் போகாமே
அப்படி என்றும் ஒக்க யாண்டினைக்-
அப்படிப் பட்ட மாசங்களை உடைய ஆண்டு ஆனவனை –
இனி அவ்வாண்டு தன்னை
அப்படியே இரட்டித்துக் கொள்ளும் இத்தனை –
கன்னலைக் –
நிரதிசய போக்கியம் ஆனவனை –
கரும்பினிடைத் தேறலைக் –
நெருக்கிக் கார்யம் கொள்ள வேண்டாதே
அப்போதே பருகலாம்படி இருக்கிற
கரும்பில் ராசம்சம் ஆனவனை –
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –
————————————————
கீழே தவம் மெய் இரண்டையும் வியாஜ்யமாக்கி ரஷிப்பான்
பக்தி பிரதிபத்தி -இதில்
உமக்கு எத்தாலே ரக்ஷித்தான்
நிருபாதிக கிருபையாலே ரக்ஷித்தன் என்று அருளிச் செய்கிறார் –
எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலை மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனி மா மதி யந்தவழ்
மங்குலைச் சுடரை வட மா மலை யுச்சியை நச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப் பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே—7-10-3-
எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை –
அநந்ய கதிகளான எங்கள் பக்கலிலே
நிர்ஹேதுக கிருபையை பண்ணுகிற
சர்வேஸ்வரனை –
வாசவார் குழலாள் மலை மங்கை தன்னை பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் –
எங்களைப் போல் அன்றியே -தானும் ஒரு ஸ்திரீயுமாய்
ஈஸ்வர அபிமானம் கொண்டாடி இருக்கிற ருத்ரனை
தன் திருமேனியிலே ஒரு பார்ஸ்வத்திலே வைத்து
அது தன்னை தன் பேறாக வைத்து உகந்து இருக்கிற சீலத்தை உடையவனை –
பான்மையைப் –
இந்த சீலம் தான் புழுக் குறித்து எழுத்தாமாப் போலே
ஒரு கால் உண்டாய் போமது அன்றிக்கே
இதுவே ஸ்வ பாவமாம்படி இருக்கிறவனை –
பனி மா மதி யந்தவழ் மங்குலைச் –
குளிர்ந்து நிறைந்து இருக்கிற சந்தரன் உடைய சஞ்சாரத்தை உடைய
ஆகாசம் ஆனவனை –
சுடரை –
நீர்க் களிப்பை அறுக்கைக்கு ஈடான
கிரணங்களை உடைய ஆதித்யனை –
வட மா மலை யுச்சியை –
இப்படி சாதாரணமான வடிவே அன்றியே
அசாதாரணமான விக்ரஹத்தோடே
அத் திருமலையிலே ஏக தேசமாய் இருக்கிறவனை –
நச்சி நாம் வணங்கப் படும் கங்குலைப் –
நசையை உடையோமாய்க் கொண்டு நம்மாலே
ஆஸ்ரயிக்கப்படுகிற போக யோக்யமான காலம் ஆனவனை –
பகலைச் –
அதுக்கு உறுப்பாக த்ரவ்யார்ஜனத்து ஈடான
காலம் ஆனவனை
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-
—————————————————————-
திருக்கோவலூர் சேர்த்து அனுபவம் -கிருஷ்ண க்ஷேத்ரம் அன்றோ –
நிர்ஹேதுக கடாக்ஷம் உம்மை மட்டுமேயோ -பலரையோ
முதல் ஆழ்வார்களும் கடாக்ஷித்தான்
என்றவர் திவ்ய தேசம் சொல்லாமல் போக மாட்டார்
ஆயனது பிள்ளைச் சேவகம் சேர்த்து அனுபவம்
அனைத்து ஆழ்வார்களும் கடாக்ஷித்து அருளினான் என்கிறார் இதில்
தெள்ளியார் என்று -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் –
பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-4-
தேவனை-ஆழ்வார்களை பெற்றதும் தேஜஸ் மிக்கு ஆனவனை –
அந்தணர்-பட்டர் பிரான் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திருமழிசைப்பிரான் -த்விஜர் இரு பிறப்பு
பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையைத் –
பூதனை உடைய முலை ஸ்தலத்தில் உண்டான விஷத்தை அமுது செய்து
விழுக்காடு அறியாத முக்த்தனை-
தெள்ளியார் வணங்கப் படும் தேவனை –
இப்படி முக்க்தர் அன்றியே
அறிவுடையாராய் இருப்பாராலே ஆஸ்ரயிக்கப் படுவானாய்-
அத்தாலே தீப்யம் ஆனவனை –
(தெள்ளியார் -முதல் ஆழ்வார்கள் மூவரும் )
மாயனை –
ஆச்சர்ய பூதனை –
மதிள் கோவலிடைக் கழி மைந்தனை –
இடம் இல்லாத இடத்தே
ஆஸ்ரிதரோடு புகுந்து நெருக்கின
நித்ய யௌவன ஸ்வ பாவனை –
யன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை-
அதுக்கு மேலே ஆஸ்ரிதர் உடைய ஹிருதயத்திலே புகுந்து
அவர்களைத் தன் வழியே நியமித்துக் கொண்டு இருக்கிறவனை –
(அந்தணர் சிந்தையுள் ஈசனை-பெரியாழ்வார் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -திருமழிசைப் பிரான்
பாடுபவர் இவர் தானே
இவர்களை உப லக்ஷணம் ஆக்கி
ஆஸ்ரிதர் ஹிருதயம் -என்றது மாறன் குலசேகரப்பெருமாள் பாணன் )
யிலங்கும் சுடர்ச் சோதியை –
இவர்கள் உடைய சரீரத்திலும் ஆத்மாவிலும்
வர்த்தியா நிற்கச் செய்தே
அவற்றைப் பற்றி வரும் தோஷங்கள் தன் பக்கலிலே தட்டாதபடி இருக்கிறவனை –
எந்தையை –
இந்த ஸ்வ பாவத்தைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனை –
எனக்கு எய்ப்பினில் வைப்பினைக் –
எனக்கு கைம் முதல் இல்லாத வன்று
அழித்துக் கெடுத்து ஜிவிக்கலாம் படி யான
நிதியானவனை –
காசினை –
பொன் போலே ஸ்ப்ருஹணீயம் ஆனவனை –
மணியைச் –
அப் பொன்னை அழித்தும் ஸ்வீகரிக்கக் கடவ
ரத்னம் போலே ஸ்லாக்கியம் ஆனவனை –
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-
—————————————————
திரு நின்றவூர்
பத்தராவிப்பெருமாள் இருவரும்
சேர்த்து அனுபவிக்கப் பண்ண அருளுகிறார்
பால்யர் -ஒன்றும் அறியாதவர் போல் ஞானிகள்
கீழே தம்மை விஷயீகரித்தது த்ருஷ்டாந்தம் சொல்லி
ஆழ்வார்களைப் பெற்ற மேனாணிப்பு தோற்ற
திருப் ப்ரீதி தொடங்கி இவ்வளவும் வந்து அனுபவத்து ஹ்ருஷ்டராய்
அவனது ஐஹிக ஆமுஷ்கிக மோக்ஷ பிரதத்வம் அனுசந்தித்து அருளுகிறார்
ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-
ஏற்றினை-
ஸ்வ ஆனந்த அனுபவத்தால் வந்த
செருக்கை உடையவனை –
இமயத்துள் எம் மீசனை-
ஹிம வானில் திருப் பிரிதியில் இருக்கும் இருப்பைக் காட்டி
என்னை வசீகரித்தவனை –
இம்மையை மறுமைக்கு மருந்தினை –
ஐஹிகமாயும் ஆமுஷ்மிகமாயும் உள்ள பலங்களுக்கு சாதன பூதன் ஆனவனை –
ஆற்றலை-
ஒரு வஸ்துவோ எல்லாவற்றையும் தர வற்றோ என்னில்
அக் கண் அழிவு சொல்ல ஒண்ணாத படி
சர்வ சக்தி உக்தனாய் உள்ளவனை –
யண்டத்தப் புறத்து உய்த்திடும் –
இந்த சர்வ சக்தித்வம் கொண்டு கொள்ள இருக்கிற கார்யம் என் என்னில் –
இவற்றை பரம பதத் தளவும் செல்ல நடத்துகை –
அது தான் அவனுக்கு வேண்டுகிறது என் என்னில் –
ஐயனைக் –
நிருபாதிக பந்துவாகை-
கையில் ஆழி ஓன்று ஏந்திய கூற்றினைக் –
ஆதி வாஹிகர் கையிலே காட்டிக் கொடுத்து
கொடு போகா நின்றால்
ஆரேனும் சிலர் விலக்கினார் உண்டாகில்
இரு துண்டம் ஆக்குகைக்கு ஈடான பரிகரத்தை உடையவனாய்
சத்ருக்களுக்கு மிருத்யு போல் ஆனவனை –
குரு மா மணிக் குன்றினைக் –
ஸ்லாக்யமான நீல ரத்ன பர்வதம் போன்ற வடிவை உடையவனை –
அங்கே கொடு போனால் காட்சி கொடுக்கும் படியான வடிவு இருக்கிறபடி –
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினைக் –
அவ்வளவும் போகப் பற்றாதார்க்கு
(திருமங்கை ஆழ்வார் போல் அர்ச்சாவதாரத்தில் மண்டி அனுபவிப்பாருக்கு
அங்கு போகும் வரை காத்து இருக்க முடியாத ஆர்த்தர்களுக்கு )
காட்சி கொடுக்கைக்காக
திரு நின்றவூரிலே நிற்கிற
முத்துத் திரள் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –
காற்றினைப் –
ஸ்வ ஸ்பர்சத்தால் வரும்
ஸூகமாய் இருக்கிறவனை –
புனலைச் –
தாரகம் ஆனவனை –
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-
(வாழ் முதல் மகிழ் முதல் வளர் முதல் -தாயகம் -போக்யம் -போஷகம் )
——————————————————–
கீழ் பல பிரத உபயுக்தமான
சாமர்த்தியம் தத் கார்யமான விரோதி நிரசனத்தையும்
இவற்றுக்கு நிதானமான ஸ்ரீ யபதித்தவம் அனுசந்தானம் இதில்
துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினை திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6-
கற்பினை-சங்கல்பம் -அத்யயனம் இரண்டையும் சொல்லிற்று –
துப்பனைத்-
தான் நினைத்தது செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான
சாமர்த்தியத்தை உடையவனை -( ஸத்ய ஸங்கல்பன் அன்றோ )
துரங்கம் படச் சீறிய தோன்றலைச் –
கேசி உடைய வாய் கிழியும்படி
சீறிய முக்த்தனை -( அழகனை )
சுடர் வான் கலன் பெய்ததோர் செப்பினை –
ஒளியை உடைத்தாய் –
பெரிய விலையனாய் இருந்துள்ள ஆபரணங்களை
இட்டு வைக்கும் செப்பானவனே –
( பத்து ஆழ்வார்களைப் பூட்டி வைத்துள்ள பெட்டி அன்றோ இவன் )
சுடர் வான் கலன் ஆகிறது தான் என் என்னில் –
திருமங்கை மணாளனைத் தேவனைத் –
பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே
உண்டான ஒத்து மஞ்சளும்
செம்பஞ்சிக் குழம்பும்
மாளிகை சாந்தின் நாற்றமுமாயக் கொண்டு
திரு மேனியிலே புகர் தோன்ற நின்ற நிலை –
திகழும் பவளத்தொளி யொப்பனை-
சர்வைஸ் ஸ்ப்ருஹணீயமானவனை-
யுலகேழினை –
போக்ய
போக உபகரண
போக ஸ்தானங்களாய் உள்ளவனை –
யூழியை –
காலமே சேஷித்த அன்று
காலமாய் நின்றவனை –
ஆழி ஏந்திய கையனை –
நித்தியமான திவ்ய ஆயுதங்களை
ஏந்தும் திருக் கையை உடையவனை –
நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை -என்றபடி –
யந்தணர் கற்பினை –
பிராமணர் உடைய மரியாதை போலே இருக்கிற
சங்கல்பத்தை உடையவனை –
பிராமணராலே அத்யயனம் பண்ணப் படுகிறவனை-என்றுமாம் –
கழுநீர் மலரும் வயல் –
செங்கழுநீர் தொடக்கமான புஷ்பங்கள் அலரா நின்றுள்ள
வயலை உடைத்தான –
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –
————————————–
ஸ்ரீ யபதியாய்
பரம ஸ்வாமி -அபரமன் –அப ரமன் ரம சம்பந்தம் இல்லாதவர்
சர்வ சக்தித்வம் சொல்லி
ஆஸ்ரித விரோதி நிரஸனம் அனுபவம் –
திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனை களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே—7-10-7-
திருத்தனை-திருப்தன் –
திருத்தனைத் –
ஸ்வ ஆனந்த அனுபவத்தாலே
நித்ய த்ருப்தன் ஆனவனை –
(நித்யோதிக சாந்தோதிக திசைகள் உண்டே
த்யேயம் -த்யேயா இருவரும் அவனும்
ஸ்வரூபம் குண அனுபவம் செய்து திருப்தனாய் இருப்பானே)
திசை நான்முகன் தந்தையைத் –
இவ்வருகில் உள்ளாரைக் காட்டில் அதிகனாய் இருக்கிற
சதுர்முகனுக்கு
ஜனகன் ஆனவனே –
தேவ தேவனை-
அவன் ஒருவனுக்கும் அன்றிக்கே
தேவர்கள் ஆனார் எல்லாராலும் ஆஸ்ரயிக்கப்
படுமவனை –
மூவரில் முன்னிய விருத்தனை –
மூவருமான நிலையில்
மற்றை இருவருக்கும் தானே நியாமகனாய்
தானான நிலையில் வந்தால்
சேஷித்வத்தால் வந்த உறைப்புத் தோற்ற இருக்கிறவனை
விருத்தனை -தலைமகனை –
விளங்கும் சுடர்ச் சோதியை-
த்ரிமூர்த்தி மத்ஸ்யத் தனான நிலை ஒழிய
அசாதாரணமான
திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையன் ஆனவனை –
விண்ணை –
போக பூமிகளான ஸ்வர்க்காதிகள் ஆனவனை –
மண்ணினைக் –
அதுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணும்
கர்ம பூமி யானவனை –
கண்ணுதல் கூடிய அருத்தனை –
லலாட நேத்ரனான ருத்ரனை உடைத்தான
அர்த்த பாகத்தை உடையவனை –
அருத்தன் -அர்த்த பாகன் –
யரியைப் –
விரோதிகளைப் போக்குமவன் –
பரி கீறிய அப்பனை-
விரோதி நிரசனத்தை சீலமாக உடைய
உபகாரகனை –
யப்பிலார் அழலாய் நின்ற கருத்தனை –
படபாமுகாக்னி ஜலம் அடைய தன் பக்கலிலே வந்து
சுவரும்படி இருக்குமா போலே
சர்வ பதார்த்தங்களும் தன பக்கலிலே வந்து
லயிக்கும்படி இருக்கும் சக்தியை உடையவனை –
(படபாமுகாக்னி-குதிரை முக அக்னி கடலுக்குள் இருந்து -தண்ணீருக்கு லய ஸ்தானம் )
களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே-
——————————————————–
சர்வ ஸமாச்ரயணீயன்
அதுக்கு உறுப்பாக விரோதி நிரசனம் பலபடியாக அனுசந்தித்து
அப்ரதிஹதன் எதிர்ப்பவர்கள் இல்லாதவன் -என்கிறார் –
வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே —7-10-8-
தோன்றலை-பாலகனாய் –
வெஞ்சினக் களிற்றை –
வெவ்விய சினத்தை உடைய மத ஹஸ்தி போலே
தர்ச நீயமானவனை –
விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை-
கன்றாயும் விளவாயும் வந்த அசுரர்கள் இருவரையும்
தன்னைக் கொண்டு தன்னையே மாய்த்துத் தர
தான் நினைத்தது தலைக் கட்ட வல்லவனை –
பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் –
பூதனை முடியும்படி அவளுடைய விஷத்தைப் போக்யமாகக் கொண்டு
அமுது செய்த முக்த்தனை –
தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை-
சத்ருவாக சர்வ லோகங்களிலும் பிரசித்தனாய்
சாயுதனுமாய் இருக்கிற
ராவணன் முடியும்படி தோன்றின மிருத்யுவை –
அமுதத்தினை-
அவ் விருப்பு தானே அனுகூலர்க்கு போக்யமாய்
இருக்கிறவனை –
நாதனை-
நிருபாதிக சேஷியை-
நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியைக் –
தன் பக்கல் ஆசை உடையார் தலை மேலே நிற்கிறவனாய்-
அது தான் பெறாப் பேறாக நினைத்து பூர்ணனாய் இருக்கிறவனை –
( உச்சி உளானே திரு முடி சேவை இன்றும் சேவிக்கிறோமே
ஆற்றாமை உள்ளாருக்கு சமகாலத்தில்
ஆசையின் தலை மேல் சடக்கென
வந்து ரக்ஷித்து அருளுவான்
ஆங்கு அப் பொழுதே தோற்றுவானே )
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக் –
கம்சனுடைய துரபிசந்தியை அவன் தன்னோடு போக்கி
உகவாதாரோடு செவ்வை அழியப் பரிமாறுமவனை –
கண்ண மங்கையுள் கண்டேனே –
———————————————
விரோதி நிரசனத்துக்கு மட்டும் அன்றியே
ஒப்பனையை
நிரதிசய போக்யனாய்
சர்வபிரகார வை லக்ஷண்யம் அனுசந்திக்கிறார் –
பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-
மறையோர் தங்கள் கண்ணினை-வேதார்த்தம் விளங்க வைக்கும் கண் -அவனே
பண்ணினைப் –
யஆத்யஸ் ஸ்வா தூ நாம் -என்கிறபடியே
பண் போல் இனியன் ஆனவனை –
பண்ணில் நின்றதோர் பான்மையைப் –
இன்னார் இனையார் என்று அன்றியே
எல்லாரையும் ஒக்க வருத்தக் கடவதாய் இருக்கிற
அந்த பண்ணின் இசை போலே நிரதிசய போக்யன் ஆனவனை –
பாலுள் நெய்யினை –
சாராம்சத்தோடு ருஜீஷாம்சத்தோடு வாசி அற
இரண்டிலும் உண்டான உபாதேய அம்சம் ஆனவனை –
(பண்ணின் பான்மை
பாலில் நெய்
சார அம்சம் என்று மட்டும் இல்லை
சாரமாகவும் சாரா அம்சமும் அவனே
எல்லாவற்றிக்கும் போக்யம் உண்டே
பண்ணை போல் அல்லவே பால்
பாலே இனிமை -பாட்டு இசை இல்லாமல் ருசிக்காதே )
மாலுருவாய் நின்ற விண்ணினை-
த்ரிபாத்விபூதி -என்னலாம்படியான பரப்பை உடைய
நித்ய விபூதி உக்தன் ஆனவனை –
விளங்கும் சுடர்ச் சோதியை –
அங்கே நிரவதிக தேஜோ ரூபமான
திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய் நிற்கிறவனை –
வேள்வியை –
அத் தேசத்தை பிராபிக்கைக்கு
சாதனமான கர்மங்களாய் நிற்கிறவனை –
விளக்கின் ஒளி தன்னை –
ஸ்வ ஆயத்தமான தேஜஸ்சை உடையவனை –
(தன்னிலே தான் சார்ந்து இருப்பவன் )
மண்ணினை –
செய்தார் செய்த குற்றங்களை அடைய மறக்குமவனாய்
குற்றம் செய்வார்க்கு தன்னைப் பற்றி
நிற்கும்படி இடம் கொடுக்குமவனை -( பூமியைப் போல் )
மலையை –
இப்படிப் பட்ட தன் ஸ்வபாவத்தை ஒருவரால் சலிப்பிக்க அரிதாம்படி இருக்கிறவனை –
யலை நீரினை –
நினைத்த இடம் எங்கும் ஏற்றிப் பாய்ச்சிக் கொள்ளலாம்படி
இருக்கிறவனை –
மாலை –
ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹமே வடிவாய் இருக்கிறவனை
மா மதியை-
ததாமி புத்தி யோகம் தம் -என்கிறபடியே
தன்னைப் பிராபிக்கைக்கு ஈடான
புத்தி யோகத்தை கொடுக்குமவனை –
( மதி கொடுப்பவன் மா மதி )
மறையோர் தங்கள் கண்ணினைக்-
வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு
தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி
அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை –
கண்கள் ஆர அளவும் நின்று –
காணப் பெறாமையால்
உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –
——————————————————-
பல ஸ்ருதி அவனுக்கே சொல்லி நிகமிக்கிறார் –
ஸ்ரீ கீதா உபநிஷத்துக்கு அவன்
ஸ்ரீ திராவிட உபநிஷத் சாரம் அருளவே கண்ணனாக ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று –
ஒரு தேச விசேஷத்திலே போய் காணும் வஸ்துவை
சம்சாரத்திலே
திருக் கண்ண மங்கையிலே காணப் பெற்றேன் -என்று
காதலால் கலிகன்றி யுரை செய்த –
அபி நிவேசத்தால் ஆழ்வார் அருளிச் செய்த –
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை –
இசையை உடைத்தாய்
அழகியதாய் இருக்கிற
இவை பத்தையும் –
வல்லராய் யுரைப்பார் –
அனுசந்திப்பார்க்கு
அடைவு படச் சொல்லுகையால் உண்டான அருமையாலே
வல்லராய் -என்கிறார் –
மதி யந்தவழ் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் –
மதி தவழ் அம் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் –
உபாதான லோகங்களில்
போக பூமிகள் எல்லாம் புக்கு
அங்கு உண்டான போகங்களைப் புஜிப்பார்கள்-
மெய்மை சொல்லில்-
அர்த்த தத்வம் இருந்த படி சொல்லில் –
வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ண நின் தனக்கும் –
ஐஸ்வர்ய ஸூசகமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே உடைய சர்வாதிகனே
உனக்கும் இதில் ஆதாரம் உண்டாகில்
எனக்கு சிஷ்யனாய்-உனக்கும் அதிகரிக்க வேண்டும்படி யாயிற்று
இதன் உள்ளீட்டின் கணம் இருக்கிறபடி –
குறிப்பாகில்
திரு உள்ளமாகில் –
கற்கலாம் கவியின் பொருள் தானே
ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்
ஒரு வசிஷ்டனோடே
ஒரு சாந்தீபனோடே
தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு
திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply