திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-4-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

  கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டைஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.

பொ-ரை :- வேய்ங்குழலிலே இனிய பாட்டுக்களை வைத்து ஊதியதும் பசுக்களை மேய்த்ததும், கெண்டைமீன் போன்ற பிரகாசம் பொருந்திய கண்களையும் வாசனைபொருந்திய பூக்களை யணிந்த கூந்தலையுமுடைய நப்பின்னைப் பிராட்டியினுடைய தோள்களைக் கூடியதும், மற்றும் பலவான, அழகிய மாயப்பிரானுடைய செயல்களை நினைந்து மனம் குழைய அன்போடு காலங்கள் கழிகின்றன; ஆதலால் எனக்கு எந்த உலகம்தான் ஒப்பாகும்.

வி-கு :- மற்றும் பல செய்கை என்க. நினைந்து மனம் குழைந்து போது நேயத்தோடு கழிந்த என்க. குழைந்து – குழைய; எச்சத்திரிபு. கேயம் – பாட்டு. கழிந்த – கழிகின்றன; காலமயக்கம். மாற்றிக் கூட்டாமல், கழிந்தபோது – கழிந்த காலத்தில் என நேரே பொருள் கூறலுமாம். உலகம் : ஆகுபெயர்.

ஈடு :- இரண்டாம் பாட்டு. 1“தொல்லருள் நல்வினையால் சொலக் கூடுங்கொல்” என்று பிரார்த்தித்த படியே பெறுகையாலே, திருநாட்டிலேதான் என்னோடு ஒப்பார் உளரோ? என்கிறார்.

கேயம் தீம்குழல் ஊதிற்றும் – 2தான் நினைத்த பெண்களுடைய பெயரை வைத்துப் புணர்த்துச் சுவைப் பாட்டாக வைத்து ஊதிற்றும். கேயம் – பாட்டு. தீம் – இனிமை. இனிமையையுடைய பாட்டு என்றபடி. நிரை மேய்த்ததும் – கும் பசுமேய்க்கைக்கும் ஒன்றே பரிகரம். 1குழலை ஊதவே பசுக்கள் வயிறு நிறையும். 2சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில் கைவந்திருக்குமாறுபோலே யாயிற்று, கிருஷ்ணனுக்குக் குழல் கைவந்திருக்கும்படி. கெண்டை ஒண் கண்வாசம் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் – 3கரனைக் கொன்ற அன்று, பிராட்டி “கணவனை ஆலிங்கனம் செய்தாள்” –“தம் த்ருஷ்டவா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருக்ஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.

என்னும்படி அணைத்தாற் போலே யாயிற்று, பசுமேய்த்து வந்த சிரமம் எல்லாம் போகும்படி நப்பின்னைப் பிராட்டி இளமை பொருந்திய அழகிய திருக்கண்களாலே குளிர நோக்கி அழகிய திருக்குழலின் பரிமளத்தாலே திருமேனியை வாசனையுடைய தாம்படி ஆக்கித் தன் தோள்களோடே அணைத்ததுவும். கெண்டை ஒண்கண் – கெண்டை போலே மிக இளமையினையுடையனவாய், அமிருதத்தைப் பெய்தாற்போலே குளிர நோக்குகிற திருக்கண்கள். வாசம் பூங் குழல் – 4வாசம் செய் பூங்குழலிற் காட்டிலும் –திருவாய். 10. 10 : 2.-பொலிவையுடைத்தான தன்னே்ற்றமுடைய குழலையுடையவள். பின்னை தோள்கள் மணந்ததும் – அவளுடைய தோள்களுடனே கலந்ததுவும். மணத்தல் – கலத்தல். 5“தோளி” –இது, திருவாய். 4. 2 : 5.-என்கிறபடியே, இவளுக்கு அழகு 6கைவிஞ்சியிருக்குமே.

பெண்களை அழைக்கைக் மற்றும் பல-மற்றைப் பிராட்டிமாரோடு கலந்தபடி. 1சக்கரவர்த்தித் திருமகனுக்கு அத்யயநம், ஆசாரிய சேவை, அஸ்திர சாஸ்திரப் பயிற்சிகள் உண்டாமாறுபோலே, இவனுக்கு, எல்லாம் இவையே அல்லவோ. மாயம் கோலம் பிரான்-2நப்பின்னைப் பிராட்டியோடே கலந்த ஒற்று மஞ்சளும் தானுமான மிக்க ஆச்சரியமான ஒப்பனையுடைய உபகாரகன். 3அன்றிக்கே, நப்பின்னைப் பிராட்டியோடு கலந்தாற் போலே, அல்லாத பிராட்டிமார் “கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள், தங்குமேல் என் ஆவி தங்கும்” –நாய்ச்சியார் திருமொழி, 8 : 7.என்று இருக்குமவர்களுடைய திருமுலைத்தடத்தில் குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாய் நின்ற அழகினைச் சொல்லவுமாம். தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது – அவன் செயல்களை நினைத்தவாறே நெஞ்சு தன்வசம் இன்றி அழியும்படி. 4“நினைதொறும், நெஞ்சு இடிந்துகும்” –. 9. 6 : 2.என்றே அன்றோ இருப்பது. நேயத்தோடு கழிந்தபோது – 5நினைக்கப்படுகின்ற பொருளினுடைய இனிமையாலே நினைவு தான் இனிதாய்க் கழிந்தபோது. நேயம் – நேசம். எனக்கு எவ்வுலகம் நிகர் – ஒரு தேச விசேடத்தில்தான் எனக்கு ஒப்பாவார் உளரோ? 6அநுபவ வேளை போலே நினைக்கின்ற காலத்திலும் இனிமையோடே செல்லக்கடவதானால் எனக்கு எங்கே ஒப்பு? 1ஆகாசவாயர் எனக்கு எதிரோ! வாய் – இடம். பரமாகாசம் என்கிற பரமபதமாகிற இடத்திலுள்ளார்தாம் எனக்கு ஒப்பாரோ!! உலகம் என்பது, உயர்ந்தோராகையாலே நித்திய சூரிகள் என்றபடி.

பிரார்த்தித படி பெற்றதால் பரம பதத்திலும் சமம் தனக்கு இல்லை என்கிறார்-

கேயம் = பாட்டு
தீம்  = இனிமை
இனிமை உடைய பாட்டு
பரதந்த்ரனாய் பசு மேய்க்க போகையாலே வரவு தாழ்த்தது இத்தனை
நெஞ்சை உருக்க குழல் வழியே பதில் சொல்கிறான் -பாசுரங்கள் இசை உடன் சொல்லி
நிரை மேய்த்ததும்
பெண்களை அளிக்கவும் பசுக்களை மேய்க்கவும் குழலே பரிகரம்
மான் கணங்கள் மெய்கை மறந்து
குழல் உஊதவெ பசுக்கள் வயிறு நிறையும்
சக்கரவர்த்தி திரு மகன் வில் வித்தை கை வந்தது போலே
இவனுக்கு குழல் ஊதுவது
கெண்டை போன்ற கண் –
பசு மேயத வந்த சரமம் தீர நப்பின்னை அணைத்து
கரணாதி சத்ரு ஹன்தாரம் ஆனபின்பு சீதை பிராட்டி ஆலிங்கனம்
இப்பொழுது தான் அணைத்து -முன்பு ஸ்திரீ பு ருஷ விக்ரஹம் என்று
நப்பின்னை குளிர நோக்கி -முக்தம் இளைமையான கண்கள்
திருக் குழல் பரிமளம் வாசிதம் ஆக்கி
சர்வ கந்த வஸ்துவுக்கு
கெண்டை போலே -அமிர்தம் வர்ஷிக்கும்
வாசம் செய் பூம் குழல் -பெரிய பிராட்டியார்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
இதனாலே பின்னை திரு நாமம்
நீளா தேவி நப்பின்னை -ஆயர் பாவை நப்பின்னைக்கு தன்  இறை
பிற் பட்டவள் பின்னை என்னவுமாம்-

மணத்தால் =கலத்தல்
தோள் அழகும் உள்ளவள்
அழகு கை விஞ்சி இருக்கும்
மற்றும் பல -மற்றும் பல பிராட்டிமார் உண்டே
ராமன் போலே இல்லையே கிருஷ்ணன்
ருக்மிணி சத்தியபாமை நப்பின்னை
அத்யயனம் ஆசார்ய சேவை அஸ்த்ர சஸ்திர பயிற்சி மூன்றும் அவனுக்கு
குங்குமப் பூ தடவி -அணைத்து கொண்டு இவன் பெற்றான்
செய்கை நினைந்து மனம் குழைந்து
செயல்கள் நினைந்து நெஞ்சு இடும்
நேசம் -நேயம் உடன் கழிய
எனக்கு யார் தான் நிகர்
தேச விசேஷத்திலும் யாரும்நிகர் இல்லை அனுபவ நினைவு வேளையிலும் நெஞ்சு உருகி இனிக்க
ஆகாச வாயர் எனக்கு எதிரோ
வாய் =இடம்
உலகம் எனபது உயர்ந்தோர்  ஆகையால் சூரிகள் என்றவாறு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading