(ஸ்ரீ பரிமள வல்லி தாயார்
ஸ்ரீ கோவர்த்தன்மை விமானம்
ஸ்ரீ இந்திர தீர்த்தம்
பள்ளி கொண்டு அருளும் பெருமான் -என்று மங்களா சாசனம் )
ஆஸ்ரயிக்க தடங்கலாக உள்ளவற்றையும் போக்கி கைங்கர்யங்களையும் தானே ஏற்றுக் கொண்டு
அருளுபவர் அன்றோ
ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-9-
உரு துயர் -அனுபவ விநாஸ்ய பிரதிபந்தகங்கள்
பிண்டி -அசோகா புஷ்பம்
தேனைக் குடித்து பூ என்று உணரும் -முன்பு நெருப்பு -பயக்ருத் பய நாசன் –
அவனை நினைக்க பயம் போகும் நம்மை நினைக்க பயம் வருமா போலே
வியாக்யானம்-
ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு-
ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லி
அவற்றின் உடைய அர்த்த அனுசந்தானம் பண்ணா நின்று உள்ளவர்களுக்கு –
ஒரு திரு நாமத்தைச் சொல்லி -அவ்வளவில் பர்யவசிக்க மாட்டாதே
ஆயிரம் திரு நாமங்களையும் அடைவு படச் சொல்லி
அந் நாமத்வாரா நாமி யானவனை மனனம் பண்ணா நின்று உள்ளவர்களுக்கு –
உறு துயர் அடையாமல்-
உறக் கடவதாய் நிற்கிற பாபங்கள் பல அனுபவத்துக்கு இவனைத் தொடராதபடியாக
அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்றும் –
ந புக்தம் ஷீ யதே -என்றும் சொல்லுகிறபடியே அனுபவித்தால் அல்லது நசியாத பாபங்கள்
பல அனுபவத்துக்கு வந்து கிட்டாதபடியாக
ஒரு பிசாசம் -கண்டா கர்ணன் – நரகாத ஜகந்நாத நாராயண பராயண என்று சொல்ல
ஆத்மாநாம் வாசுதேவோ ஸ்லாக்கியம் சிந்தயந்த் -என்று ஸ்வ அனுபவம் பண்ணி
அந்ய பரதையாய் இருக்கிற அளவிலே இத்தைக் கேட்டு
கஸ்ய முக்தி கரேஸ்திதா -என்று நம் பேரைச் சொல்லி நம்மை எழுதிக் கொண்டவர் -என்றான் இறே
(தாம் சென்று அடிமை செய்யும் படி -என்றவாறு )
ஏதம் என்று துக்கமாய் – வருத்தத்தை நினைக்கிறது
இத் திரு நாமத்தை சொன்னால் இத்தை உடையவன் செவிப்ப்படும்படி அண்ணியானாய் நிற்க –
ஆஸ்ரயிப்பாருக்கு வருத்தம் இன்றிக்கே ஒழிகைக்கு உடலாய் இருக்கும் இறே
இவர்களுக்கும் வருத்தம் இல்லாதபடி இருக்கும்-
உறு துயர் இத்யாதி
வாக்குத் தூய்மை இலாமையினாலே மாதவா உனை வாய்க் கொள்ள மாட்டேன் -என்று
அசித் சம்சர்க்கத்தை அனுசந்தித்து -நாம் அங்குத்தைக்கு யோக்யராய் பரிமாறுகை யாவது என் -என்று
தன் அயோக்யதையை அனுசந்திக்கைக்கு அவகாசம் இல்லாதபடி
(நின்று அருளும் நம் பெரும் தகை -)ஆஸ்ரயணீயனான தான் சந்நிஹிதன் ஆகையாலே
ஆஸ்ரயிப்பாருக்கு ஒரு வருத்தமும் வாராத படி இருக்கிற
மஹா ப்ரபாவன் வந்து வர்த்திக்கிற விலஷணமான ஹிமவானில்-
தாது இத்யாதி
தாது மிக்கு இருந்துள்ள அசோக புஷ்பம் ஆனது விட்டலருகிற போதை
அக்னி கல்பமான எழிலைப் பார்த்து
பேதை வண்டுகள்
அசோக புஷ்பங்களை நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும்
நித்யமாக பிரமிக்க வல்ல மௌக்யத்தை உடைய வண்டுகள் ஆயிற்று
தானும் நித்ய வாசம் பண்ணா நிற்கச் செய்தேயும்-
அதுவும் நாள் தோறும் மலரா நிற்கச் செய்தேயும்-
எப்போதும் ஒக்க இது நெருப்பு இது நெருப்பு -என்று ப்ரமிக்கும்படியாய் இருக்கும்
முன்னாள் இது அக்னி என்று சங்கித்து விசாரித்து -அன்று என்று நிர்ணயித்து
பிற்றை நாள் அது அன்று என்று இருக்க மாட்டாதே -நெருப்பு -என்றே அஞ்சி இரா நிற்கும்
அதுக்கடி
பய நிவ்ருத்தியும் நித்தியமாய் பயமும் நித்தியமாய் இருக்கையாலே-
இதுக்கு திருஷ்டாந்தமாக திரு வெள்ளறை திரு மொழியில் -5-3-9-ஒரு பாசுரம் அருளிச் செய்வர்
(ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே —5-3-9-
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
மகாபலியினுடைய யஞ்ஞவாட மான அவ்விடத்தில்
தன்னை இரப்பாளனாக்கிக் கொண்டு சென்று
பூமிப் பரப்பை அடங்கலும்
பாங்கினில் கொண்ட பரம
அவனது ஆக்கிக் கொண்ட சர்வாதிகனே
-ராவணாதிகளைப் போலே தலையை அறுத்துப் பொகட்டு
வாங்கிக் கொள்ளலாய் இருக்கச் செய்தே
ஔதார்யத்துக்கு சமைந்து இருந்த படியால்
தன்னை இரப்பாளனாக்கிஅவனதாக்கிக் கொண்டான் ஆய்த்து –
நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே –
இந்த்ரன் உடைய ஆஸ்ரயணத்தோ பாதி
போராதோ என்னுடைய ஆஸ்ரயணம் –
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர –
ஆகாச அவகாசம் வெளி யடையும் படி
வளர்ந்த அசோகம் ஆனது
சிவக்கப் பூத்துக் கிடக்க
இதிலே மது பானம் பண்ணலாம் என்று -அதுக்காக வண்டுகள் சஞ்சரிக்க
மா வேறித் தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே –
அத்தைக் கண்ட குயில்கள் ஆனவை-நெருப்பு என்று
அருகே செல்ல அஞ்சி நின்ற மாவிலே ஏறி
இவை நெருப்பிலே அகப்பட்டனவாகக் கொண்டு
அந ஷர ரச பேச்சாலே -படுகொலை கிடி கோள் -என்றாப் போலே
கூப்பிடா நின்றது யாய்த்து –
இதில் வாசமும் நித்யமாய் இருக்கச் செய்தே
பயமும் நித்தியமாய் செல்லா நிற்கும் யாய்த்து -படப்பை –கொடித் தோட்டம் –)
ஆங்கு மாவலி வேள்வியில் சென்று இரந்து
மஹா பலியினுடைய யஞ்ஞா மாடத்திலே தன்னை அர்த்தியாக்கிச் சென்று
அகலிடம் முழு தினையும் இத்யாதி
பூமிப் பரப்பதைய வாங்குகிற அன்று
அவனை எதிரிட்டு கொண்டு வாங்குகை அன்றிக்கே ஏறிட்டுக் கொண்டு இருக்கிற
ஔதார்யத்துக்கு அநு ரூபமாக வாங்கினான்
ராவணாதிகளைப் போலே தலை அறுக்க வேண்டிற்று இல்லை
ஔ தார்யம் என்று ஒரு அனுகூல லேசம் கிடைக்கையாலே
இவன் கொடுக்க உகந்து இருந்தான் என்று தன்னை இரபபாளன் ஆக்கி
அவனோடு இசைய கொண்டான்
தன்னைதான பூமியை இறே அவன் தந்ததாக கொண்டான்
ஆக நம்முடைய ஆத்ம சமர்ப்பணம் போலே இருப்பது ஓன்று இறே அவனுடைய தானமும்
அதவா
கின்நு சமர்ப்பயாமி -அநந்தரம் அநுசயிக்க வேண்டும்படி இறே இது இருப்பது –
விழுக் காட்டில் ஆத்ம சமர்ப்பணத்தோடு ஆத்ம அபஹாரத்தோடு வாசி அற்று இறே இருப்பது –
ஆகை இறே உபாய நிரபேஷ்யம் சொல்லுகிறது
பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள் புரியே –
சர்வாதிகனே -உன்னை வணங்கி உஜ்ஜீவிக்கிற எனக்கு பிரசாதத்தை பண்ணி அருள வேணும் –
ஆஸ்ரயணத்துக்கு பல வ்யாப்தி உண்டு இறே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழிதர மா வேறி தீம் குயில் –
ஆகாசம் இடம் அறும்படி வளர்ந்து பரப்பு மாறப் பூத்த
அசோகத்தின் உடைய சிந்திய பூக்களில் –
மது பான அர்த்தமாக வண்டுகள் சஞ்சரிக்க
தர்சநீயமான குயில்கள் ஆனவை -இவை நெருப்பிலே புகை என்றே நிச்சயித்து
அது தன்னைத் தட்டாதபடி மாவிலே போய் ஏறி கூப்பிடா நிற்கும் ஆயிற்று –
சிவந்த பூப் பூவாத மாத்தேடி ஏறி நின்று –
மிழற்றும் –
எழுத்தும் சொல்லும் தெரியாதபடி கூப்பிடா நிற்கும்
இவற்றின் உடைய தயநீய தசையைக் கண்டு இன்னது என்று பாசுரம் இட்டு
சொல்ல மாட்டாதே -கடக்க நின்று -தர்ம ஹாநி கிடி கோள் -என்பாரைப் போலே
அவ்யக்தமாக கூப்பிடா நிற்கும் –
படைப்பை –
இது ஆயிற்று ஊரில் கொடித் தோட்டங்கள் இருக்கும்படி-
இத்தால்
அவனுடைய சர்வாதிகத்வத்தையும்
அவனை அனுபவிப்பதாக சொல்லுகிற தங்களுடைய சம்சாரித்வத்தையும்
அனுசந்தித்து
நான் சென்று கிட்டுகை யாவது என் என்று துணுக் துணுக் என்னா நிற்பர்கள் -ப்ரஹ்மாதிகள் –
இவ்வண்டுகள் ஆனவை புஷ்ப சாமான்யத்தைக் கொண்டு மது பான அர்த்தமாக
மேல் விழா நிற்பது அக்னி என்று கிட்ட மாட்டாதே இறாய்த்து வெருவதாக நிற்கும் ஆயிற்று —
அன்றிக்கே
ஆஸ்ரயிப்பாருக்கு -அதசோ பயம் கதோ பவதி -என்னும் இதுவும் உண்டாய்
போக்யதையால் வந்த பயம் என்றும் உண்டாய் இருக்கும் என்னுதல் –
(பெருமானை நெருங்க உண்டாகும் பயம் ப்ரஹ்மாதிகளுக்கு -போக்யத்தையால் உண்டான பயம் அஸ்தாநே பய சங்கை )
ஆஸ்ரயணீய வஸ்து சுலபன் ஆகையாலே ஆஸ்ரயிப்பாருக்கு
தம் தாமுடைய அநுபவ விநாச்யமான பாபங்களை அனுசந்தித்து பயப்படவும் வேண்டா –
அசோக புஷ்பத்தை அக்னியாய் கொண்டு வண்டுகள் அஞ்சுகிற அச்சம் நித்யமாக செல்லா நிற்கும்-
(அவனைக் கண்டால் தங்கள் வினைகளைக் கண்டு அஞ்ச வேண்டாமே
அங்கு உள்ள வண்டுகளைப் பார்க்க இவ்வளவு பக்தி நமக்கு இல்லையே என்றும் பயம் உண்டாகும் )
—————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply