திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-3-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.

பொ-ரை :- உலகத்தீர்! இதனைக் காணுங்கோள் என்று கண்களுக்கு எதிரே வளர்ந்த திருவடிகளையுடைய சர்வேசுவரன் விஷயமாக, திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட, பகவானுடைய ஆணை உருவமாக இருக்கிற, ஆயிரம் திருப்பாசுரங்களுள் திருவிண்ணகரம் என்ற திவ்விய தேசத்தைப் பற்றிய இப்பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள் ஒரு குற்றமும் இன்றி நித்தியசூரிகளுக்கு என்றும் கௌரவிக்கத் தக்கவர்கள் ஆவர்கள்.

வி-கு :- சடகோபன் சொன்ன திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார் விண்ணோர்க்கு என்றும் கோணை இன்றிக் குரவர்கள் ஆவர் என்க.

ஈடு :- முடிவில், இத்திருவாய்மொழி 3வல்லார் நித்தியசூரிகளுக்கு நாள்தோறும் கௌரவிக்கத் தக்கவராவர் என்கிறார்.

காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த தாள் இணையன் தன்னை – 4‘உங்கள் தலைகளிலே நான் காலைவைக்கக்

கொடு வாருங்கோள்’ என்றால், இசையார் என்று பார்த்து, நான் காட்டப் புகுவது ஓர் ஆச்சரியத்தைப் பாருங்கோள் என்பாரைப் போலே இவர்கள் கண்முகப்பே நிமிர்ந்த திருவடித் தாமரைகளையுடையவனை. காண்மின்கள் – 1இது ஓர் ஆச்சரியம் என்னவேண்டிற்றுக்காணும் ‘தலைகளிலே அடிபடப் புக்கவாறே இறாய்ப்பர்கள்’ என்று. குருகூர்ச் சடகோபன் சொன்ன – 2இந்தச் சௌலப்யத்தை அநுபவித்தவர் சொன்ன வார்த்தையாகையாலே ஆப்தம் என்கை. ஆயிரத்து ஆணை திருவிண்ணகர் இப்பத்தும் வல்லார் – ஈசுவரனுடைய உலக நியமனத்தைச் சொன்ன இத் திருவாய்மொழி வல்லார். விண்ணோர்க்கு என்றும் கோணை இன்றிக் குரவர்கள் ஆவர் – நித்தியசூரிகளுக்குக் காலம் என்னும் ஒருபொருள் உள்ள வரையிலும் கௌரவிக்கத் தக்கவராவர். இதில் கோணை இல்லை – ஒருமிறுக்கு இல்லை. என்றது, என் சொல்லியவாறோ? எனின், சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத நித்தியசூரிகளுக்கு, 3நித்திய சம்சாரியானவன் இதனைக் கற்ற அளவிலே கௌரவிக்கத் தக்கவராதல் எங்ஙனே? என்னில், அங்கே இருந்து வைத்தே ததீயத்வ ஆகாரத்தாலே லீலாவிபூதியை நினைத்து உவகையராம் நிலையுள்ளது முக்தர்க்கு ஆகையாலே, இங்கே இருந்தே, அவர்கள் அநுசந்தானத்தைச் செய்கிற இவனை, ‘சம்சாரத்தே இருந்து வைத்தே நம்படி ஒருவனுக்கு உண்டாவதே!’ என்று கொண்டாடி இருப்பார்கள் என்பதனைத் தெரிவித்தபடி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.-  என்ற திருக்குறளையும், அதன் பரிமேலழகர் உரையையும் இங்கே நோக்குக.

திருவாய்மொழி நூற்றந்தாதி

    நல்லவலத் தால்நம்மைச் சேர்த்தோன்முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன்என்று – எல்லையறத்
தானிருந்து வாழ்த்தும் தமிழ்மாறன் சொல்வல்லார்
வானவர்க்கு வாய்த்தகுர வர்.

தெற்கு திருமலை இது
காண்மின்கள்
மண் அளந்த இணைத் தாமரைகள்
தாள் கொண்டு மண் தாவிய ஈசன்
இவனே திரு விக்ரமன் கண் முகப்பே -உலகீர் காணும்
தலை மேல் காலை வைக்க போவேன் என்றால் இசையார் என்று
காண்மின்கள் செப்படி வித்தை போலே
கண் முகப்பே திருவடி நிமிர்த்த
திருவடிகளை உடையவன் -விஸ்மயம் –
தலையிலே அடி பட புக்கவாறே இறாய்ப்பார்கள்
குருகூர் சடகோபன் சௌலப்யம் அனுபவித்து ஆப்தர் வார்த்தை
ஈஸ்வரன் ஆணை சாஸ்திரம் போலே ஆணை ஆயிரம்
ஈஸ்வரன் ஆஞ்ஞை போலே திருவாய்மொழி
கோணை -சங்கை இன்றி -நித்யர்கள் கொண்டாடுவார்கள் –
பொருந்தாமை இல்லை
கால தத்வம் அளவும நித்யருக்கு குரவர் ஆவார்
சேற்றில் விழுந்து வந்தோமே எங்கனே என்னில்
அங்கெ இருந்து -ததீய ஆகாரத்தால் லீலா விபூதியும் அனுசந்தித்து ஆனந்தம் படும் பொழுது
சம்சாரம் இருந்தும் நமது படி ஒருவருக்கு உண்டாவதே கொண்டாடி இருப்பார்
ஸ்ரீதரனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே

சாரம்
நல்ல வளத்தால் நம்மை சேர்த்தோம்
முன் நன்னாரி வெல்லும்
பூரணன் விருத்த விபூதிகன் -விபூதியன்
வாழ்த்தும் தமிழ் மாறன் சொல்
வானவர்களுக்கு வாய்த்த குரவர்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading