திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-4-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

வேண்டித்தேவர் இரக்கவந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டுஅன்று அன்னை புலம்பப் போய்அங்கொர் ஆய்க்குலம்புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
ஈண்டுநான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?

பொ-ரை :- தேவர்கள் வேண்டி இரக்க வந்து பிறந்ததும், அற்றைய நாளில் செறிந்த இருட்டிலே தாயாகிய தேவகிப்பிராட்டியானவள் திருவடிகளைப் பிடித்துக்கொண்டு புலம்ப, அந்நிலையிலே சென்று ஒப்பற்றதான ஆயர்பாடியிலே புக்கதும், கம்சனுடைய ஆட்கள் காணாதபடி வளர்ந்து கம்சன் இறக்கும்படியாக வஞ்சனை செய்ததுமான செயல்களை இப்போது இருந்து சொல்லப்பெற்றேன்; எனக்கு என்ன விரோதம் உளது?

வி-கு :- கஞ்சனை – கம்சனானவன். மயக்கமாகக்கொள்ளாது, நேரே பொருள் கோடலுமாம். துஞ்சுதல் – இறத்தல்.

ஈடு :- ஐந்தாம் பாட்டு. 1அவதரித்து, கம்சன் அறியாதபடி வளர்ந்து கம்சனை மாய்த்தபடியை இன்று இருந்து அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஓர் எதிர் இல்லை என்கிறார்.

தேவர் இரக்க வேண்டி வந்து பிறந்ததும் – 2‘எங்கள் அளவு அறியாதே ஒருவனுக்கு வரம் கொடுத்து அவனை உயரப் பார்த்தோம்: எங்களுக்குக் குடி இருப்பு அரிதாயிற்று’ என்று தேவசாதி கப்படம் கட்டிக்கொண்டு செல்ல3 “தந்தையாக அடையவேண்டும் என்று விரும்பினார்” என்கிறபடியே,தத: பத்மபலாசாக்ஷ: க்ருத்வா ஆத்மாநம் சதுரவிதம்
பிதரம் ரோசயா மாஸ ததா தசரதம் ந்ருபம்”-என்பது, ஸ்ரீராமா. பால. 15 : 30 1/2.

தான் விருப்பமுள்ளவனாய், வந்து பிறந்ததுவும், அன்றிக்கே, 4“என்னுடைய மாயையாலே” –ப்ரகிருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”என்பது, ஸ்ரீ கீதை, 4 : 6.

என்னும் படி அன்றோ என்னுதல். என்றது, என்னுடைய இச்சையாலே என்றபடி. 5‘மாயா வயுனம் ஞானம்’ என்பது நிகண்டு. 6இரக்கிறவர்கள் அளவு பார்த்தல், தன்னளவு பார்த்தல் செய்கையன்றிக்கே வந்து பிறந்தபடி காணும் இவரை வருத்துகிறது. 7தான் இரப்பாளனாய்க் காரியம் செய்யுமவன், பிறர் இரந்தால் பொறுக்கமாட்டானேயன்றோ. பிறந்ததும் வீங்கு இருள்வாய் – 1“எல்லா உலகங்கட்கும் ஆதாரனான ஸ்ரீ கிருஷ்ணன் நடு இரவில் அவதரித்தார்” என்னும் படி அன்றோ.

“மத்யராத்ரே அகிலாதாரே ஜாயமாநே ஜநார்தநே
மந்தம் ஜகர்ஜு: ஜலதா: புஷ்பங்ருஷ்டி முசோ த்விஜ”-என்பது, ஸ்ரீ விக்ஷ்ணுபுரா. 5. 3 : 7.

2‘இவனும் விழுக்காடு அறியாதே அகப்பட்டுக் கொடு நின்றான், கம்ச பயமும் ஏற்பட்டதாயிரா நின்றது, இருளாலே அன்றோ நாம் பிழைத்தது. இனி, இந்த இருளைச் சரணம்புகுமித்தனை அன்றோ’ என்று பிள்ளையுறங்காவில்லிதாசர் பணிப்பாராம். 3“ஊர் எல்லாம் துஞ்சி” என்ற திருவாய்மொழியில், கூற்றமான இருள், இப்போது இவர்க்கு ஆதாரத்துக்கு விஷயமாயிற்று அன்றோ. 4வீங்கு இருள்வாய்ப் பூண்டு அன்று அன்னை புலம்பப்போய் என்று கூட்டுக. 5“மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள்” –பெரியாழ்வார்
திருமொழி, 5. 3 : 1.
-என்கிறபடியே, பெற்றுப் பெற்று இழந்தவள் ஆகையாலே, இவனையும் இழக்கிறோமோ! என்று விரகபயத்தாலே, காலைப் பூண்டு கிடந்து கூப்பிடப்போய். 6பிள்ளை பக்கல் அன்பினாலே இவள் கூப்பிட, இவன் முலைச்சுவடு அறியாமையாலே போனபடி. வீங்கு இருள் – வளர்கிற இருள்.
அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் – 1 அந்த நிலையிலே இடையிலே வளருகைக்கு ஓர் அஞ்சினான் புகலிடம் உண்டாவதே! ஆய்க்குலம் – ‘கம்சன் பாதகன்’ என்று பயப்பட அறியாதவர்கள். 2‘குடிவாய் உடன்பட இருந்தானாகில் இருக்கிறான், இல்லையாகில் உழக்கோலாலே தகர்க்கிறோம்’ என்று இருப்பர்கள். காண்டல் இன்றி வளர்ந்து – கம்சனும் அவன் வரக்காட்டின தீயோர் கூட்டமும் காணாதபடி வளரப்பெறுவதே! கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்-ஸ்ரீ நாரத பகவான் அறிவித்தபின்பு ஒருபோது தாழாதே வந்து, அவன்தான் நினைத்த வஞ்சனையை அவன் தன்னோடே போக்கினதும். கம்சன் முடியும்படியாக வஞ்சனை செய்தது, 3இராமாவதாரம் போலே ‘செவ்வைப்பூசல் அல்லது அறியேன்’ என்று இராமை அன்றோ. ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் –“அயர்த்திலன் முடிவு மஃதே யாயினும் அறிஞ ராய்ந்த
நயத்துறை நூலின் நீதி நாம் துறந் தமைதல் நன்றோ.”

“நின்றவன் னிலை நோக்கிய நெடுந்தகை இவனைக்
கொன்றல்உன்னிலன் வெறுங்கை நின் றானெனக் கொள்ளா.”-என்பன, கம்பராமாயணம்.

ஊராண்மை, உபகாரியாந்தன்மை: அஃதாவது, இலங்கையர் வேந்தன்
போரிடைத் தன் தானை முழுதும் படத் தமியனாய் அகப்பட்டானது
நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற் செல்லாது ‘இன்றுபோய்
நாளை நின் தானையோடு வா’ என விட்டாற் போல்வது” என்பது,
பரிமேலழகருரை. திருக்குறள், 773.

தேவகியாரைப் போலே சமகாலத்தே இருந்து பயப்படாதே, இப்போது பயம் கெட்டு இருந்து அநுபவிக்கப் பெற்றேன். ஈண்டு – இப்போது. எனக்கு என்ன இகல் உளதே-கம்சன் பட்டபின்பு எனக்குப் பகைவர்கள் உண்டோ? இகல் – பகை. அன்றிக்கே, கம்சனை முடித்தபடியை இன்று இருந்து அநுபவிக்கப்பெற்ற எனக்கு இனி ஒரு மிடி இல்லை என்கிறாராகவுமாம்.

அயர்த்திலன் முடிவு மஃதே யாயினும் அறிஞ ராய்ந்த
நயத்துறை நூலின் நீதி நாம் துறந் தமைதல் நன்றோ.”

“நின்றவன் னிலை நோக்கிய நெடுந்தகை இவனைக்
கொன்றல்உன்னிலன் வெறுங்கை நின் றானெனக் கொள்ளா.”-என்பன, கம்பராமாயணம்.

தாழ்வே இல்லை
வேண்டி தேவர் இரக்க வந்து –
தேவர் இரக்க -வந்து பிறந்தான்
வேண்டி இரக்க இரண்டு பதங்கள்
தனக்கே ஆசை இருந்தது -தானாக வேண்டி
எங்கள் அளவு அறியாமல் ஒருவனுக்கு வரம் கொடுத்து -குடி இருப்பு பறித்து –
கப்படம் கட்டிக் கொண்டு யாசிக்க
பிதரம் யார் என்று தேர்ந்து எடுத்து
ஆத்ம மாயயா -தோன்றி –
மாயா -ஆச்சர்யம் ஞானம் பர்யாய பதம் -இச்சையால் சங்கல்ப ஞானத்தால்
இரக்கிரவர்கள் தாழ்வும் பாராமல் வந்து தோன்றி
வீங்கு இருள்வாய் மத்திய ராத்ரியில் -ஜாயமானே ஜனார்தனே
பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
இருளாலே பிழைத்தோம் பணிப்பாராம்
கம்சன்-சிறைக் கூடம் விழுக்காடு அறியாமல் இவனும் அகப்பட
இருட்டு நமக்கு காத்து கொடுத்ததே
இருளைசரணம் புகுவாரம் பரிவின் காரணம்
ஊரெல்லாம் துஞ்சி  இருள் இவருக்கு உத்தேச்யம் இப்பொழுது
அங்கோர் ஆய்க் குலம் புக்கதும்
அஞ்சினார் புகல் இடம் உண்டே
கம்சன் பாதகன் என்று அறியாதவர்கள்
செற்றார் திரள அழிய சென்று செறு செய்யும்
தயிரும் பாலும் கப்பம் கொடுத்து கோ சமிர்த்தி உண்டே அங்கு
குடிவாய் உடன் பட்டு இருந்தால் இருக்கட்டும்
மாடு மேய்க்கும் கோலால் கொன்று
கம்சன் படை எடுத்து போக முடியாத வீரம் உண்டே  இங்கே
ஓர் ஒப்பற்ற ஆய்க் குலம்
காண்டல் இன்றி வளர்ந்து
கம்சனும் பாதகமும் காணாமல் வளர்ந்து
ஒருத்தி மகனாய் ஓர் இரவில் வீங்கு இருளில்
காஞ்சனை துஞ்ச வஞ்சனை அவன் நினைவை அவன் இடமே செய்து அருளி

முடியும்படி வஞ்சனை செய்து ராமன் போலே செவ்வைப் பூசல் இன்றி
ஈண்டு அலட்ரப் பெற்றேன்
தேவகி சமகாலத்தில் பயந்து இருக்க
இப்பொழுது நான் அலற்ற  பெற்றேன் பயம் கெ ட்டு இருந்து
இகல் சத்ரு
அவன் சத்ருக்கள் போன பின்பு
அவனும் நாராயணன் சத்ருக்கள் இல்லை
பகவத் விமுகர் ஆழ்வாருக்கு சத்ரு
இனி இகல் துக்கும் இல்லை என்கிறார் ஆகவுமாம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading