மூன்றாந் திருவாய்மொழி – “நல்குரவும்”
முன்னுரை
ஈடு :- 1‘இப்படித் தாழநின்றவன் சர்வேசுவரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச்செய்வர். அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேசுவரத்வத்தை அருளிச்செய்கிறார் என்றபடி. ‘இதிலே 2ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச்செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர். 3அதாவது, “சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேரவிட்டுக்கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம். 4சேரவிட்டுக்கொண்ட படிதாம் பலவாக இருக்குமன்றோ: 1முதல் தன்னிலே தம்மையும் அறியாதே அவனையும் அறியாதே இருக்க, தன்படிகளை அறிவித்துக் கூட்டுவித்துக் கொண்டான். உள்ளே புகுர நின்று தம்முடைய தாழ்வினையும் அவனுடைய உயர்வினையும் அநுசந்தித்து ‘நாம் அங்குத்தைக்குத் தக்கவர் அல்லோம்’ என்று அகல, தன்செல்லாமையைக் காட்டிப் பொருந்தவிட்டுக் கொண்டான். 2இனி, அவைபோன்றது அன்றே இது; ஒன்றால் போக்கக் கூடியது அன்றே. 3அகலில் குற்றம், அணுகில் குற்றமாய் இருப்பது ஒன்றேயன்றோ! 4ஜாதி சண்டாளனை நோக்கினால் பிராயச்சித்தம் உண்டு; பிரணயத்தால் உண்டாகிய கோபம் ஆகிற காரணத்தால் சண்டாளர் ஆனவர்க்கு அதுவும் இல்லை. ஆக, இந்தப்படிகளாலே தன்செல்லாமையைக் காட்டி அவன்பொருந்தவிட்டுக்கொண்ட படியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்றபடி.
அங்ஙனம் ஆச்சரியப்படுகிற இவர்க்கு, ‘இவ்வளவு அல்ல காணும் நம்முடைய ஆச்சரியங்கள் இருக்கும்படி. உலகத்தில் தம்மில் தாம் சேராத மாறுபட்ட பொருள்களும் எல்லாம் நம்மோடே சேர்ந்திருக்கிறபடி பாரீர்! ஆனபின்னர், நம்மோடுசேராதார் இலர்காணும்!’ என்று தன்னுடைய விருத்த விபூதிகத்வத்தைக் காட்டிக்கொடுக்க இவரும் கண்டார். கண்ட இவர் ‘இவைஇருந்தபடி என்!’ 1கொடுத்த அறிவைக் கொண்டு அகலுகைக்குக் காரணமாயிருக்கிற இவற்றை எல்லாம் கூட விட்டுக்கொடு நிற்கிறபடிகளும், இனி, நிமித்தகாரணமானது உபாதான காரணமாக மாட்டாது; உபாதான காரணமானது நிமித்த காரணமாகமாட்டாது; இங்ஙனே இருக்க, இவை எல்லாம் தானேயாயிருக்கிற படியையும், இவற்றோடே கூடி இருக்கச் செய்தேயும் இவற்றின் குற்றங்கள் தன்னைத் தீண்டாமல் இருக்கிற படியையும், குற்றம் தீண்டாமல் கடக்க இருக்கைமாத்திரமன்றிக்கே நியமிக்கின்றவனாய் இருக்கிற படியையும், இனி, நாட்டில், பிராப்யமானது பிராபகம் ஆகமாட்டாது; பிராபகமானது பிராப்யம் ஆகமாட்டாது; இங்ஙனே இருக்க, பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் தானேயாக இருக்கிற படியையும், மற்றும், இவனுடைய அழகு சீலம் முதலானவைகளையும் அநுசந்தித்து, ‘இப்படி உபகார சீலனான சர்வேசுவரன் திருவிண்ணகரிலே வந்து அண்மையில் இருப்பவனானான்; இவன் அல்லது நமக்குப் பரம பந்துக்கள் இலர்’ என்று அறுதியிட்டு, ‘இவன் திருவடிகள் அல்லது பற்று இல்லை’ என்று பேசுகிறாராயிருக்கிறது.
முதல் திருவாய்மொழியிலே பரத்துவ அநுபவம்பண்ணி, மூன்றாந் திருவாய்மொழியிலே சௌலப்யத்தை அநுசந்தித்து “எத்திறம்” என்று கிடந்தார். இங்கு, “போகுநம்பி” என்று தள்ளச்செய்தேயும் கால்வாங்கமாட்டாதே நின்ற நீர்மையை அநுசந்தித்து, அதற்கு எதிர்த்தட்டான பரத்துவத்தை அநுசந்திக்கிறார். இப்படிக் கிரமம் இல்லாமல் அருளிச்செய்கிறதற்குக் காரணம் யாது? என்னில், மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் அலரோ; மேன்மையை அநுசந்திப்பது, நீர்மையை அநுசந்திப்பதாமத்தனை அன்றோ!1
இத்திருவாய்மொழியிற் கூறப்படுகின்ற பொருளோடு
1. “தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம்நீ
கல்லினுள் மணியும்நீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ
வேதத்து மறைநீ பூதத்து முதலுநீ
வெஞ்சுடர் ஒளியும்நீ திங்களுள் அளியும்நீ
அனைத்தும்நீ அனைத்தினுட் பொருளும்நீ”-என்ற பரிபாடற் பகுதி ஒப்பு நோக்கத் தகும்.
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.
பொ-ரை :- வறுமையும் செல்வமுமாகி, நரகமும் சுவர்க்கமுமாகி, வெல்லக்கூடிய பகையும் நட்புமாகி, விஷமும் அமுதமுமாகி, பலவகையாகவும் பரந்து பெருமானாகி என்னை ஆள்கின்றவனைச் செல்வம் நிறைந்திருக்கின்ற மக்களையுடைய திருவிண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில் பார்த்தேன்.
வி-கு :- ஆகி ஆகிப் பரந்த பெருமான் என்க. என்னை ஆள்வானைத் திருவிண்ணகர்க் கண்டேன் என்க. இந்தத் திவ்யதேசம், உப்பிலியப்பன் சந்நிதி என்றும், ஒப்பிலியப்பன் சந்நிதி என்றும் இப்பொழுது வழங்கப் படுகிறது. 2செல்வு – செல்வம்.
இத்திருவாய்மொழி, கலிவிருத்தம்.
ஈடு :- முதற்பாட்டு. 1விருத்த விபூதிகனான சர்வேசுவரனைத் திருவிண்ணகரிலே காணப்பெற்றேன் என்கிறார்.
நல்குரவும் செல்வும் – வறுமையும், அதற்கு எதிர்த்தட்டான செல்வமும், நரகும் சுவர்க்கமும் – துக்கத்திற்கே இருப்பிடமான நரகமும், சுகத்திற்கே இருப்பிடமான சுவர்க்கமும். வெல்பகையும் நட்பும் – சமாதானத்தாலே மீளுமதன்றிக்கே வென்றே விடவேண்டும் பகையும், அதற்கு எதிர்த்தட்டான உறவும். விடமும் அமுதமுமாய் – முடித்தே விடுவதான விஷமும், போன உயிரை மீட்கவற்றான அமுதமுமாய். 2போன உயிரை மீட்டுத் தான் போக்கியமுமாய் அன்றோ அமிருதம் இருப்பது. 3விருப்பம் இல்லாத வறுமை முதலானவற்றோடு விரும்பக்கூடிய செல்வம் முதலானவற்றோடு வாசியறத் ததீயத்வ ஆகாரத்தாலே இவர்க்கு உத்தேசியமாய் இருக்குமன்றோ. பல்வகையும் பரந்த பெருமான் – 4ஞானதிகனான தானும்கூட விபூதியைப் பேசப் புக்கு “என்னுடைய விபூதியின் பரப்பிற்கு முடிவு இல்லை” -ஹந்த தே கதயிஷ்யாமி விபூதீராத்மநஸ்ஸுபா:
ப்ராதாந்யத: குருசிரேஷ்ட நாஸ்தி அந்த: விஸ்தரஸ்ய மே”-என்பது, ஸ்ரீ கீதை, 10 : 19.
என்று இளைத்துக் கைவாங்கினத்தை, இவ்வளவு அன்பிலே கனத்த இவரால் சொல்லப் போகாது அன்றோ.5 ஆனாலும் சிறிது பேசினாராகவும் வேணும் அன்றோ. 1வஸ்துவுக்கு விசேடணத்தை ஒழியத்தோன்றுதல் இல்லையன்றோ. 2“வஸ்து விசேடணம் இல்லாதது” என்றுவிசேடணம் இல்லாததாக மாயாவாதம் சொல்லுகிறார் அலரே. 3அங்ஙனேயாகில் மோக்ஷசாஸ்திரந்தான் வேண்டாவே. 4வஸ்துவின் உண்மையைக் கொள்ளும் போது விசேடணம் வேறுபடுத்துவதாயல்லது இராது. 5ஒன்றற்கு ஒன்று விசேடணமாகும்போது அந்யயோக வியவச்சேதம் பண்ணிக்கொண்டல்லது விசேடணம் ஆகமாட்டாது. 6இங்கு, இவனுக்கு, தன்னினின்றும் வேறுபட்ட பொருள்களடங்கலும் விசேடணமாயிருக்கையாலே அந்யயோகவியவச்சேதம் பண்ண ஒண்ணாது. ஆனால், மாறுபட்ட விசேடணங்கள் ஒரு பொருளிலே சேருகிறபடி எங்ஙனே? என்னில், அயோகவியவச்சேதம் பண்ணிக்கொண்டு சேருகிறது.
1இவர்தாம் அவனை அநுபவிக்கவன்றோ இழிகிறது, இந்த மாறுபட்ட விசேடணங்களைச் சொல்லுகிற இவற்றால் பிரயோஜனம் என்? என்னில், அவனை உள்ளபடி கண்டு அநுபவிக்கவேணுமே. 2இராஜபுத்திரனுக்கு, இராஜாவினுடைய இன்பத்திற் கிடமான ஓலக்கத்தோடு சிறைக்கூடத்தோடு வாசி அற ‘என் தமப்பனுடைய செல்வம், என்றுதோன்றுமன்றோ. 3இவர்தமக்கு இங்கு உண்டான அநுசந்தானம், முக்தனுக்கு லீலாவிபூதி அநுசந்தானம் போலே அன்றோ. 4“ஜனங்களின் நடுவில் இருந்துள்ள இந்தச் சரீரத்தை நினையாதவனாகிறான்” -“நோபஜநம்
ஸ்மரந் இதம் சரீரம்” (சாந்தோக்யம், 8. 12 : 3 🙂 -என்னா நிற்கச்செய்தே, முக்தனுக்கு லீலாவிபூதி ததீயத்வ ஆகாரத்தாலே உத்தேசியமாகா நின்றதன்றோ. 1இவர்க்கும் அப்படி முக்தரோடு ஒக்கத் ததீயத்வ ஆகாரம் ஒழிய, வேறு ஆகாரமாக நினைவு இல்லாதபடி இங்கே இருக்கச் செய்தே மயர்வு அறுத்துக் கொடுத்தான். 2தம்முடைய சம்பந்தத்தாலே பார்த்த போது கால்வாங்கியல்லது நிற்க ஒண்ணாதபடி தியாஜ்யமாகத் தோற்றும். 3அன்றிக்கே, ஞான அஜ்ஞானங்களுக்குப் பொதுவான இந்த இருப்பைக் கழித்து, அதற்குக் கலக்கமில்லாத தேசத்திலே போகையிலே விரையக்கடவன் எனப்படுதலால் என்னுதல். பல்வகையும் பரந்த பெருமான் – இப்படி உலக முகத்தாலே பலபடியாக விரிந்திருப்பவனானவன். பரந்த பெருமான் என்னை ஆள்வானை – இங்ஙனம் பரந்து இருத்தல் எல்லாம் தம்மை அகப்படுத்த என்று இருக்கிறார்; 4ஒருவனை அகப்படுத்த நினைத்தார் ஊரை வளையுமாறு போலே. செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேன்-5மருபூமியிலே -மருபூமி – நீரும் நிழலும் அற்ற பாலை நிலம்.-பொய்கை கண்டாற்போலே இருக்கிறபடி. மிக்க செல்வத்தை யுடைத்தான குடிகளையுடைய திருவிண்ணகர் என்பார் ‘செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்’ என்கிறார்.
“இலக்குமணன் செல்வத்தால் நிறைந்தவன்” – ஸர்வ ப்ரியகர: தஸ்ய ராமஸ்ய அபி ஸரீரத:
லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: பஹி: ப்ராண இவாபர:-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 28.-என்னுமாறுபோலே, சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே, கடக்கக் கிடந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போலன்றிக்கே, கிட்ட நின்று அடிமை செய்யும் இளையபெருமாளைப் போலே. 2‘காணவேண்டும்’ என்னும் ஆசையோடே இருந்து வேறு சரீரத்தை அடைந்து வேறு தேசத்திலே போய்க் காண்கை யன்றிக்கே, பசித்த இடத்தே சோறு பெறுமாறு போலே, ஆசைப்பட்ட இடத்தே அநுபவிக்கப் பெறுதலின் ‘திருவிண்ணகர்க் கண்டேன்’ என்கிறார்; 3“நான் சென்று நாடி நறையூரிற் கண்டேனே”- பெரிய திருமொழி, 6. 8 : 1.– என்னுமாறு போலே.
இவர்கள் அபிசந்தி கூட அழித்தான்
எத்தால் -பரத்வத்தாலே- சௌலப்யத்தாலே என்றும் சொல்வார்
இரண்டு நிர்வாஹம்
எதிர் எதிராக திருவாய் மொழி
முழுவதும் வ்ருத்த விபூதி தத்வம் -பட்டர் –
பிள்ளான் எம்பெருமான் உடைய சர்வேஸ்வரத்வம் காட்டும் திருவாய்மொழி -என்று பணிக்கும்
அதில் குறிப்பாக வ்ருத்த விபூதி -சேர மாட்டேன் என்று ஊடுகிறவர்களையும் –
வாசி தோன்ற சர்வேஸ்வரத்வம்
ஆச்சர்யம் பட்டு விஸ்மிதர் ஆகிறார்
சேர விட்டுக் கொண்டதும் அநேகம்
படிகளை முதலில் அறிவித்து கூட விட்டு கொண்டான்
அறியாத சம்ச்சாரியாக இருந்த பொழுது –
உள்ளே புகுர நின்று ஸுய நிஷ்கர்ஷம் அவன் மேன்மை அனுசந்தித்து
நைச்ச்ய அனுசந்தானம் பண்ண -செல்லாமை கட்டி பொருந்த விட்டுக் கொண்டான்
வெண்ணெய் போலே -உம்முடைய திரு மேனியும் -சௌசீல்யம்
சீலத்தால் உடன் சேர்த்தான் அங்கு –
அது போல் அன்று இ றே -இது
கோபம் ஆழ்வாருக்கு -தாமதித்து வந்தான் என்று
அகலில் குற்றம் -அணுகினாலும் குற்றம் இங்கே –
ஜாதி சண்டாளனை நோக்கினால் பிராயச்சித்தம் உண்டு –
ப்ரணய அபராத சண்டாளர் –
பிரணயத்தால் செய்யும் பாபம் பிராயச்சித்தம் இல்லை
செல்லாமையைக் காட்டி பொருந்த விட்டாமை கண்டு
விஸ்மிதரான இவர் –
லோகத்தில் சேராத வ்ருத்த பதார்த்தங்களை காட்டி –
புலியும் மானும் சேர்ந்து தண்ணீர் குடிக்கும் ஸ்ரீ ராம ராஜ்யத்தில் போலே
இது இருந்த படி என் -அகலுகைக்கு உடலாக இன்றி கூட நிற்கும் படி செய்து அருளினான்
நிமித்தம் உபாதானம் ஆக மாட்டாது எல்லாம் தாமாக இருக்கும்படி
குயவன் மண்ணாக மாட்டான்
சேதனன் அவன் அசேதனம் இது
பொருந்தாதவை தன் பக்கல் பொருந்தி விட்ட படி
கூடி இருந்தாலும் அவற்றின் தோஷம் ஸ்பர்சியாத படி
பிரகிருதி சம்பந்தம் இருக்கச் செய்தேயும்
ஓன்று புஜித்து இளைக்க ஓன்று புஜிக்காமல் பெருத்து இருக்கும்
நியந்தாவாய் இருக்கிறபடியும்
காட்டிக் கொடுத்து
பிராப்யம் பிராபகம் நாட்டில் ஒன்றே இருக்காது
இங்கு இரண்டும் தானே ஆக
சௌந்தர்ய சீலாதிகள் காட்டிக் கொடுத்து
பரம பந்து இவனே உபாயம் அருளிச் செய்கிறார்
பரத்வம் முதலில் அனுபவித்து மூன்றாம் திருவாய்மொழியில் சௌலப்யம் அனுபவித்து
எத்திறம் மோஹித்து
இங்கு சௌலப்யம் போகு நம்பி சொல்லவும் -இங்கே இருந்து சேர விட்டதை நினைத்து-
அடுத்து -பரத்வம் அனுபவிக்கிறார்
நீர்மை முதலாகவும் பரத்வம் அடுத்தும் இங்கே
எல்லா குணங்களையும் அனுபவிக்கிறார்-
நல குரவு தாரித்ர்யம் -செல்வம் ஐஸ்வர்யம்
நரகம் ஸ்வர்க்கம்
வெல் பகையும் வென்றே விட வேண்டிய பகை -சமாதானம் வராமல் இருந்தாலும்
நட்பும்
விடமும் அமுதமுமாய்
தானே அமிர்தமாய்
அனைத்துக்கும் அவனே நிர்வாஹகன்
பல வஸ்துக்களாக பரந்து
என்னையும் ஆள்வான்
திரு விண்ணகரில் சேவித்தேன்
ததீயத்வ ஆகாரதாலே அனைத்தும் உத்தேச்யம் ஆழ்வாருக்கு
ஆய் -ஒவ் ஒன்றுக்கும் சேர்த்து கொள்ள வேண்டும்
அவன் நிர்வாஹம் கீழ் அனைத்தும்
விபூதி பேச புக்க கீதாசார்யன் -முழுவதும் சொல்ல முடியாது என்றான்
நாஸ்தி அந்தக -சர்வஞ்ஞன் கூட -இப்படி இளைத்து கை வாங்கி
ப்ரேமம் கலங்கிய இவர் பல்வகையும் பரந்தான் என்று தான் சொல்ல முடியும்
ஆனாலும் சிறிது பேசவும் வேண்டும் இ றே
மாயா வாதம் இல்லை
நிரவித கல்பக ப்ரத்யஷம்
ப்ரஹ்மம் சூன்யம் என்றால் ஞானத்துக்கு விஷயம் ஆக்க முடியாதே
கவ்யம் ஜந்து மாடு போலே இருக்கும் -கொஞ்சம் சாம்யம் உண்டு
அறிந்த ஒன்றை காட்டி -விசேஷணம் கொண்டு அறிவிக்கிறான் –
நிர் விசேஷ வஸ்துவை கிரஹிக்க முடியாதே எம்பெருமானார்-
அந்த ப்ரஹ்மத்தை த்யானம் செய் என்றால் ஒவ்வாதே
இங்கு எல்லாம் உடையவர் என்கிறார்
செல்வம் உள்ளவர் இடம் தாரித்ர்யம் இல்லை
அது போல் இங்கு ஒன்றும் இல்லை என்று சொல்கிறார் இல்லை
மாயா வாதம் போலே இல்லை –
மோஷ சாஸ்திரம் வேண்டாவே -அப்படி என்றால்
ப்ரஹ்மம் ஏகமேவ சத்யம் மற்றவை மித்யை என்பான்
இரண்டு சத்யம் இருக்க கூடாதே அத்வைதம் போகுமே சாஸ்திரம் சத்யம் என்றால்
அதுவும் மித்யை என்றால் இது கொண்டு சத்யமான அவனை எப்படி அறிவது-
வேறே தப்பு ஒன்றும் செய்ய மாட்டேன் ஆனால் பொய் நிறைய சொல்வேன் -கதை போலே
சாஸ்த்ரம் ஞானம் கொடுக்கும் வரை மெய் அப்புறம் பொய் என்பார்
அஞ்ஞானம் அவித்யையால்
அது பொய் என்றால் போக வேண்டாமே
அநிர் வசநேயம்
அவித்யை நிவ்ருத்தி பிரத்யநீகமாக இருக்க வேண்டும்
அது சத்தா அசத்தா கேள்வி வருமே
நியாய சாஸ்திரம் அறிந்தவர் தான் எம்பெருமானார் ஸ்ரீ பாஷ்யம் கொண்டாடுவார்கள்
வஸ்துவை -விசெஷணம் கொண்டே அறியலாம்
வ்யாவர்த்தாக விசேஷணம் -வேண்டுமே
அந்யோக -விவச்சேதம் கொண்டு -வேறு ஒன்றில் இல்லாதது காட்டி –
பச்சை அட்டை உள்ள புஸ்தகம்
அது ஒன்றிலே இருந்தால்
ராமனே வில்லாளி -தனி சிறப்பு அந்ய யோக விவசசேதம்
வேறு படுத்தி காட்ட -அந்ய யோகம் -வந்து சேருவது
இங்கு இவனுக்கு அந்ய யோக விசேஷணம் இன்றி
விருத்தமாக விசெஷணங்கள் கூடுமோ
கொம்பு இல்லாதது அரை கொம்பு முழு கொம்பு -மூன்றும் சொல்லி
முரண்பட்டதாக சொன்னால்
அயோக விசேஷணம் -பிரிக்க முடியாத ஓன்று இவனுக்கு-
தண்டி புருஷ
ப்ரத்யிக் சித்த -அப்ரத்யக் சித்த விசெஷணம்
கருப்பாக இருப்பவர் பிரிக்க முடியாத
ராமனே வில்லாளி
ராமன் வில்லாளியே
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்வர் -பாசுரம் வியாக்யானம் அயோக விவசசேதம்
இதுவே செய்து கொண்டு இருப்பவர் போலே செய்பவர் –
ஒவ் ஒன்றும் உடைமை இது ஒன்றே உடைமை போலே இருக்கிறான்
அயோக விவச்சேதம் மாத்ரம் இது –
இவர் அவனை அனுபவிக்க இழிய
வ்ருத்த விசேஷணம் சொல்வது -முழுவதும் அனுபவிக்க
ராஜ புத்திரன் -அரண்மனையும் சிறைக்கூடமும் -சொத்து தானே
வீட்டு சாக்கடையும் நம் சொத்து தானே
அனைத்தும் உத்தேச்யம்
அவன் சம்பத்து என்று அடங்குக உள்ளே –
முக்தனுக்கு லீலா விபூதி அனுபவிக்குமா போலே ததீயத்வ ஆகாரம் என்பதால் –
ஆழ்வார் -தாரித்ர்யம் விடம் நரகம் -இது போலே பேசுகிறார்
இங்கன் இருக்கச் செய்தே முக்தன் போலே மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே
சம்சாரியும் இல்லை நித்தியரும் இல்லை -திவ்ய சூரி இவர் -ஜீவன் முக்தி சேராதே
திவ்ய சூரி சரிதம் உண்டே ஆழ்வார் காவ்யம்
கால் வாங்கி அல்லாது நிற்க ஒண்ணாத படி சம்சாரம் -இனி யாம் உறாமை -ஸு சம்பந்தம் பார்த்தால்
அவன் சம்பந்தம் பார்த்தால் -உத்தேச்யம் தான்
பல படியாக பரந்து
என்னை ஆள்வான் -என்னை கொள்வதற்கு
ஒருவனை வளைக்க ஊரை வளைப்பது போலே
மிக்க செல்வம் மல்கு குடி
கைங்கர்ய செல்வம்
பகவத் சம்பந்தம் ஒன்றே செல்வம் -அது மாறாத செல்வம் இங்கு உண்டே
கிட்டே இருந்து அடிமை செய்யும் இளைய பெருமாள்
கடக்க நின்று அடிமை செய்தான் பரத ஆழ்வான் –
எம்பெருமானார் திவ்ய தேச வாஸம்
ஸ்ரீ பாஷ்யம் -திவ்ய -ப்ரபந்தம் கைங்கர்யம் -அபிமானத்தில் ஒதுங்கி -குடில் கட்டி
இது இல்லை யானால் அது இல்லை சமம்
ஓன்று ஞான மண்டபம்
சாது சமானம் அபிமானம் வரும்
கூட கோயிலுக்கு போக
திரு மாலை எடுக்க கைங்கர்யம்
அருளிச் செயலை அனுபவிக்க ஆசை
அர்த்தம் கால ஷேபம்
ஸ்ரீ பாஷ்யம் கேட்க வருவான்
எல்லாம் ஓன்று பின் ஒன்று வரும்
தேசசோம் சர்வ காம திருத் –
செல்வம் படைத்த திரு விண்ணகர்
கண்டேனே –
தேசாந்தரம் தேகாந்தரம் இன்றிக்கே
பசித்த இடத்தில சோறு
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.