Archive for December, 2011
ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -6-
December 25, 2011திரு பாவை- அனுபவம் -8-கீழ் வானம் வெள்ளென்று ..
December 25, 2011ஹேமந்த ருது
ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– சூர்ணிகை -227..
December 25, 2011ஒன்பதாம் பத்தால்-
இப்படி அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே –
இத்தலையில் ஒன்றும் அபேஷிக்காமல் -பிரளயாதி ஆபத்துகளிலே உதவி ரஷிக்கும் ஆபத் சகனான சர்வேஸ்வரன் –
கீழ் பிரகாசிப்பித்த ஆத்ம தர்சனதுக்கு பலம்-
ஸ்வரூப அனுரூபமான பிராப்த்யத்தை அனுபவிக்கை ஆகையாலே –
அவ் அனுபவத்தில் உண்டான த்வரையாலே -ஷண காலம் விளம்பம் பொறுக்க மாட்டாமல் –
ஆர்த்தரான தமக்கு -ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாகக் கடவது -என்று
நாள் அவதி இட்டு கொடுக்கப் பெற்றவர் –
கீழ் தாம் உபதேசித்துத் திருந்தினவர்கள் ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத
பரம கிருபையாலே -யதா அதிகாரம் சர்வ உபாயங்களையும் அருளிச் செய்கிறார் -என்கிறார்-
———————————————–
1-எண் திசையும் அகல் ஞாலம் அளிக்கின்ற
ஆலின் மேல் என்னும் படி நித்ய போக பாத
லீலா உபகரணத்தின் லயாதிகளை போக்கும் ஆபத் சகன்
2-ஆர் உயிர் என்னப் படுத்தின ஆத்ம தர்சன பல அனுபவ
பரம்பரையைக் கூவுதல் வருதல் என்று முடுக விட்டு
3-ஏகம் எண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறும்
உருகி அலற்றி கவையில் மனம் இன்றி பதினாலாண்டு
பத்து மாசம் ஒரு பகல் பொறுத்தவர்கள் ஒரு மாச தின
சந்த்யையில் படுமது ஷணத்திலே யாக விரங்குகிற த்வரைக்கு ஈடாக
4-இனிப் பத்தில் ஓன்று தசம தசையிலே பேறு என்று
நாட் கடலாக தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை
போலே நாள் இடப் பெற்றவர்
5-இம்மட உலகர் கண்ட தோடு பட்ட
அபாந்த வாரா ஷகா போகயா சுக அனுபாய
பிரதி சம்பத்தியைக் காட்டி
6-மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற
வைகல் வாழ்தலான சித்தோபாயம்
7-அதில் துர் பல புத்திகளுக்கு மாலை
நண்ணி காலை மாலை விண்டு தேனை
வாடா மலர் இட்டு அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு தாள் அடையும் பக்தி
8-அதில் அசக்தருக்கு உச்சாரண மாத்ரம்
சர்வ உபாய சூன்யருக்கு இப் பத்தும்
பாடி யிடும் தொண்டன் என்று
கீதாச்சர்யனைப் போலே அதிகார
அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில் ..
———————————————–
1-எண் திசையும் அகல் ஞாலம் அளிக்கின்ற ஆலின் மேல் என்னும் படி நித்ய போக பாத
லீலா உபகரணத்தின் லயாதிகளை போக்கும் ஆபத் சகன்-
(பாத லீலா உபகரணம் -நித்ய போகமான பரமபதத்தை நோக்காக காள் கூறாக இருக்கும் லீலா விபூதி -என்றவாறு)
அதாவது-
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்-9-1-1- -என்றும் ,
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்-அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்-9-3-2- -என்றும்
அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன்-9-9-2- -என்றும்
ஆலின் மேலால் அமர்ந்தான்-9-10-1- -என்றும்
சகல லோகங்களையும் பிரளயம் கொள்ளாமல் ஏற்கவே -திரு வயிற்றில் வைத்து நோக்கி
அழிந்தவற்றை மீண்டும் உண்டாக்கியும் –
ஹிரண்யாஷனாலே தள்ளுண்டு அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுத்தும்
மகா பலி பலாத்கரித்து ஆளுகிற தசையிலே -எல்லை நடந்து மீட்டும் –
இப்படி பிரளயாதி ஆபத்துகளில் உதவி ரஷித்தவன் என்னும் படி —
கீழ் சொன்ன சத்ய காமத்வத்தால் வந்த நைரபேஷ்யம் தோற்ற -இத்தலையில் அபேஷம் அற –
பிரதுபகாரம் நினையாமல் -வரையாதே -தன் பேறாக நோவு படும் அளவுகளிலே உதவி –
பாதோஸ்ய விஸ்வா பூதானி த்ரிபாதாஸ் யாம்ருதம் திவி -புருஷ ஸூக்தம்–என்கிறபடியே
அம்ருத சப்தத்தால் சொல்லும்படி -நித்ய போகமான-த்ரிபாத் விபூதியைப் பற்ற அல்பம்
ஆகையாலே பாத சப்தத்தால் சொல்ல பட்ட லீலா உபகரணமான இவ் விபூதியில்
லயாதிகளை போக்கும் ஆபத் சகனானவன்–
———————————————————-
2-ஆர் உயிர் என்னப் படுத்தின ஆத்ம தர்சன பல அனுபவ பரம்பரையை கூவுதல் வருதல் என்று முடுக விட்டு
அதாவது
இருந்தும் வியந்தில் -8-7–தம்மோடு கலந்த கலவியை ஸ்மரிப்பிக்க வித்தராய் –
பேசுகிற அளவிலே -அவன் தட்டு மாறி -நின்று பரிமாறின சீலத்தில் ஈடுபட்டு –
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -9-6-9–என்று என் ஆத்மா பட்டது –
நித்ய அனுபவம் பண்ணுகிற நித்ய சூரிகள் ஸ்வரூபம் தான் பட்டதோ என்னும் படியாக –
தாம் மேல் விழுந்து அனுபவித்த -ஆத்ம வைலஷண்யத்தை
கீழில் பத்தில் யாதாவாகக் காட்டக் கண்டு -அதுக்கு பலம்-ஸ்வரூப அனுரூபமான
பிராப்யத்தை அனுபவிக்கை ஆகையாலே –
சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -என்றும் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய்-என்றும் –
உன் தாமரை மங்கையும் நீயும் இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் -என்றும் –
கனி வாய் சிவப்ப நீ காண வாராய் -என்றும் –
நின் பன்னிலா முத்தம் தவழ கதிர் முறுவல் செய்து நின் திரு கண் தாமரை தயங்க நின்று அருளாய் -என்றும்-
திருப் பவளத்தை திறந்து -ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் –
திரு கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும் –
திரு அடிகளை என் தலை மேல் வைத்து அருள வேண்டும் –
தேவரீரும் பிராட்டியும் சேர்ந்து கூட எழுந்து அருளி இருக்கிற இருப்பை எனக்கு காட்டி அருள வேண்டும் –
என் முன்னே நாலடி உலாவி அருள வேண்டும்
அனுகூல தர்சனத்திலே பிறக்கும் ஸ்மிதம் காண வேண்டும் -என்று இப்படி
அனுபவ பரம்பரையை ஆசைப் பட்டு -க்ரம பிராப்தி பற்றாமையாலே –
கூவுதல் வருதல் செய்யாய் -என்று
நிரதிசய போக்யமான உன் திரு அடிகளில் நான் வந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல்- நீ இங்கே வருதல்-செய்து அருள வேணும் என்று –
இப்படி முடுக விட்டு–
————————————————-
3-ஏகம் எண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறும் உருகி அலற்றி கவையில் மனம் இன்றி
அதாவது
(ஓராயிரமாய் -திருவாய்மொழியில்)மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே –
என்று அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரமபதத்தைக் காண்கையிலே சர்வ காலமும் ஏக ரூபமாய் மனோரதித்து –
(மையார் கருங்கண்ணி திருவாய்மொழியில்)காணக் கருதும் என் கண்ணே – என்று
பெரிய பிராட்டியாரோடும் -திவ்ய ஆயுதங்களோடும் -திவ்ய விக்ரகத்தோடும் –
கூடி இருக்கிறவனைக் காண வேண்டும் என்று ஆசை பட்டு –
(இன்னுயிர்ச் சேவலும் திருவாய்மொழியில் )எழ நண்ணி நாமும் நம் வான நாடோடு ஒன்றினோம் -என்று
ஸ்மாரக பதார்த்த தர்சனத்தில் நோவு படுகையாலே -முடிந்து போகையிலே ஒருப் பட்டு –
(உருகுமால் நெஞ்சம் திருவாய்மொழியில் )திரு காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினை தொறு-நெஞ்சம் உருகுமால் -என்று
அவன் அனுபவ தசையில் பரிமாறின சீலாதிகளை நினைக்கும் தோறும்
அனுபவ உபகரணமான நெஞ்சு சிதிலமாய் கரைந்து –
(எம் கானல் அகம் கழிவாய் திருவாய்மொழியில் )தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே கேளீரே -என்று
தூத பிரேஷண முகத்தாலே – கிளி மொழியாள் அலற்றிய சொல் – என்று
ஆற்றாமையாலே அக்ரமமாகக் கூப்பிட்டு –
(அறுக்கும் வினையாயின திருவாய்மொழியில்)கவையில் மனமின்றி கண்ணீர்கள் கலுழ்வன் -என்று
இரு தலைத்த நெஞ்சு இன்றிக்கே -ஏகாக்ர சித்தராய்
(மல்லிகை கமழ் தென்றல் திருவாய்மொழியில்)பதினாலாண்டு பத்து மாசம் ஒரு பகல் பொறுத்தவர்கள்
ஒரு மாச தின சந்த்யையில் படுமது ஷணத்திலே யாக விரங்குகிற த்வரைக்கு ஈடாக
பெருமாளைப் பிரிந்து பதினாலாண்டு பொறுத்து இருந்த ஸ்ரீ பரதாழ்வான் –
பூர்ணே சதுர்தச வர்ஷே பஞ்சம்யாம் லஷ்மணாக்ரஜ –யுத்த -127-1—என்று அவதி கழிந்த ஒரு நாளில் பட்ட கிலேசமும் —
பத்து மாசம் பொறுத்து இருந்த பிராட்டி -மாஸாத் ஊர்த்தவம் ந ஜீவிஷ்யே –ஸூந்தர –40 -10–
(இன்னம் ஈண்டொரு திங்கள் இருப்பல் யான் நின்னை நோக்கிப் பகர்ந்து நீதியோய்-
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அனந்த மன்னன் ஆணை இதனை மனக்கொள் நீ –ஸ்ரீ கம்பநாட்டாழ்வார் )-என்று
திருவடி இடம் சொல்லி விட்ட அநந்தரம் -அவ்வொரு மாசத்தில் பட்ட கிலேசமும் –
கிருஷ்ணன் பசு மேய்க்கப் போக ஒரு பகல் எல்லாம் பொறுத்து இருந்த ஸ்ரீ கோபிமார்-
அவன் பசுக்களின் பின் குழையிலே வாரா நிற்க – முற் கொழுந்தில் காணாமையால்
ஒரு சந்த்யையில் பட்ட கிலேசம் எல்லாம் –ஒரு ஷணத்திலே யாம் படி –
அவனை விட்டு அகல்வதற்க்கே இரங்கி -என்று ஈடு படுகிற த்வரைக்கு ஈடாக-
——————————————————-
4-இனிப் பத்தில் ஓன்று தசம தசையிலே பேறு என்று
அதாவது-
நயன பிரீதி பிரதமம் சிந்தா போகஸ் ததோனு சங்கல்ப
நித்ராஸ் சேதஸ் தநுதா விஷய விரக்திஸ் த்ரபாநாச
உந்மாதோ மூர்ச்சா ம்ருதி ரித்யேதா ச்மரதசா தசைவ ஸ்யு-என்றும்-
பிரதமஸ் தவபிலாஷ ஸ்யாத் த்விதீயம் சிந்தனம் பவேத்
அநு ஸ்ம்ருதிஸ் த்ருதீயந்து சதுர்த்தம் குண கீர்த்தனம்
உத்யோக பஞ்சமம் ப்ரோக்த பிரலாப ஷஷ்ட உச்யதே
உன்மாதஸ் சப்தமோ ஞேய அஷ்டமோ வ்யாதிருச்யதே
நவமே ஜடாத சைவ தசமம் மரணம் ததா -என்றும்-
காட்சி முதலாச் சாக்காடு ஈறாக் காட்டிய பத்தும் கை வரும் எனினே
மெய்யுறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே –நம்பியகப்பொருள் -என்றும்
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல் நோக்குவம் எல்லாம்
அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்காடு என்றச் சிறப்புடை மரபினவை கழவென மொழிப–தொல்காப்பியம்-என்றும்
சொல்லுகிறபடி -காமுகராய் இருப்பார்க்கு தசம அவஸ்தையிலே மரணமாம் போலே –
நம் பக்கல் பரபக்தி உக்தரான உமக்கும் நம்மை பெறாவிடில் முடியும் படியான பரம பக்தி தசை –
பத்தாம் பத்திலே -பிறக்கத் தேடுகிறது –
ஆகையால் கீழ் சொன்ன விளம்பம் இல்லை –இனி உள்ளது பத்தில் ஓன்று தசம தசையான
மரண அவஸ்தையிலே பேறு என்று
நாட் கடலாக தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை போலே நாள் இடப் பெற்றவர்
நாட் கடலை கழிமின்-1-6-7- –என்கிறபடியே -விரஹ வ்யசனத்தாலே ஒருநாள் கடல் போலே துச்தரமாம் படி –
பூர்ணே சதுர்தசே வர்ஷே -யுத்த -127-1–என்று தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நெடுக நாள் இட்டு
கொடுத்தால் போல் ஆகாமே –
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு -நாச்சியார்-6-2-– என்று
இன்று எனில் வெள்ளக் கேடாம்-சில நாள் கழித்து எனில் வறட்கேடாம் என்று நினைத்து –
நாளை என்று நாச்சியாருக்கு நாள் இட்டால் போலே –
மரணமானால் -என்று ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாக -அவன் தானே
நாள் இட்டு கொடுக்க பெற்று ஹ்ருஷ்டர் ஆனவர் –
——————————————
5-இம் மட உலகர் கண்ட தோடு பட்ட அபாந்த வாரா ஷகா போக்யா சுக அனுபாய பிரதி சம்பத்தியைக் காட்டி
அதாவது-
சரம உபாய உபேய பர்யந்தமாக -தாம் அருளிச் செய்த ஹித வசனம் கேட்டு –(சரம உபேயம் -அர்ச்சாவதாரம்)
திருந்தினவர்களை ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத தம்முடைய கிருபையால் –
இம் மட உலகீர் -9-2-7–என்று சம்சாரத்தில் அறிவு கேடர் ஆனவர்களுக்கு –
கொண்ட பெண்டிர் -என்று தொடங்கி -சந்நிதியிலே ஸ்நேகிக்கும் அது ஒழிய காணாத போது
ஸ்நேகம் ஓன்று இன்றிக்கே இருக்கிற பார்யா புத்ராதிகள் பந்துக்கள் அன்று —
பிரளய ஆபத் சகனானவனே பரம பந்து என்றும் —
துணையும் சார்வும் –
பொருள் கை உண்டாய் –
அரணமாவர் -என்ற பாட்டுகளாலே –
அவனை ஒழிந்தார் தாங்கள் உபகாரரைப் போலே -பிரயோஜனம் உள்ள போது பந்துக்களாய் கொண்டாடி –
ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேஷிப்பார்கள்–ஆகையால் அவர்கள் ரஷகர் அல்லர் –
தன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணினாரையும் விஸ்வசிப்பித்து ரஷிக்கும் அவனே–அவதார முகத்தால்
ஸூலபனாய் -ரஷண அனுரூபமான குணங்களை உடையவனாய் – -அவனை ஒழிய வேறு ரஷகன் இல்லை –
ஸ்திரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து -என்று தொடங்கி -தங்களுக்கு போக்யைகளாக சம்பாதித்த
ஸ்திரீகள் ஆபத்து வந்த வாறே உபேஷிப்பர்கள் —
ஏக பிரகாரமாக சந்நிக்தனாய் இருப்பவன் அவனே- ஆன பின்பு -அவர்கள் போக்யர் அல்லர் —
அவனே நிரதிசய போக்யன் என்றும் –
இல்லை கண்டீர் இன்பம்-என்று தொடங்கி
துக்கங்களிலே சில வற்றை ஸூகம் என்று பிரமிக்கும் இத்தனை போக்கி அவனை ஒழிய
ஸூக ரூபமாய் இருப்பது ஓன்று இல்லை என்றும் –
யாதும் இல்லை மிக்கு அதனில்-என்று தொடங்கி
அவனை ஒழிய வேறு ஒன்றை ரஷகம் என்று பற்றினவர்கள் பண்டை நிலையும் கெட்டு
அனர்த்தப் பட்டு போவர்கள் –ஆன பின்பு அவனை ஒழிய உபாயம் இல்லை என்றும் -இப்படி-
அவனை ஒழிந்தாருடைய அபந்துவத்தையும் -அரஷகத்வத்தையும் –அபோக்யத்வத்தையும் —
அஸூகத்வத்தையும் –அனுபாயத்வத்தையும் –
அதுக்கு பிரதி கோடியான -அவனுடைய –
பரம பந்துத்வத்தையும் –நிருபாதிக ரஷகத்வத்தையும் –நிரதிசய போக்யதையும் –
ஸூக ரூபத்தையும் –நிரபேஷ உபாயத்வத்தையும் –தர்சிப்பித்து-
இம் மட உலகருடைய அபாந்தவாதிகள் பிரதி சம்பந்தியை அவர்களுக்குக் காட்டி என்று
வாக்ய யோஜன க்ரமம்–
—————————————————-
6-மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தலான சித்தோபாயம்
அதாவது-
மற்று ஓன்று இல்லை சுருங்க சொன்னோம்- மா நிலத்து எவ் உயிர்க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள்-என்று இதுக்கு மேல் சொல்லல் ஆவது ஓன்று இல்லை –
இது தன்னை ஸூக்ரகமாக சொன்னோம் –மகா பிருத்வியில் சகல ஆத்மாக்களுக்கும் இது தனக்கு பரக்க
ஆயாசிக்க வேண்டா – சிந்தா மாத்ரமே அமையும் –கேளி கோள் -என்கையாலே –
தனக்கு மேல் ஓன்று இன்றியே இருப்பதாய்
ஸங்க்ரஹேன உபதேசிக்கலாய் –
சர்வாதிகாரமாய் –
வரண ஸூகரமுமாய் -இருக்குமதாய் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் -என்று
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று
கிருஷ்ணனை ஒழிய வேறு உபாயம் இல்லை என்கையால்-
சித்தமாய்
பரம சேதனமாய்
சர்வ சக்தியாய்
நிர் பயமாய்
ப்ரப்தமாய்
சகாயாந்தர நிர பேஷமாய்
இருக்குமதாகவும் சொல்லப் படுமதாய்
வட மதுரை பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல்-என்கிற
யாவதாத்மபாவியான -குண அனுபவத்துக்கு உடலான -சித்தோ உபாயத்தை உபதேசித்தும் –
————————————————
7-அதில் துர் பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை
வாடா மலர் இட்டு அன்பராம் சாங்க பக்தி –
அதாவது-
சக்ருதேவ ஹி சாஸ்தார்த்த க்ருதோயம் தார என்னரம்
நராணாம் புத்தி தெவ்பல்யா துபாயாந்தர மிஷ்யதே -என்கிறபடியே
அந்த சித்தோ உபாயத்தில் மகா விசுவாசம் பிறக்கைக்கு அடியான
பாக்கியம் இல்லாமையாலே -இதர உபாய பரித்யாக பூர்வகமாக
அதில் இழிகையில் விசுவாசம் இல்லாமை யாகிற புத்தி துர் பல்யம் உடையவர்களுக்கு –
மாலை நண்ணி தொழுது எழுமினோ –காலை மாலை கமல மலர் இட்டு நீர் –
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –தனதன்பர்க்கு -என்று
பக்தி யுக்தராய் கொண்டு சர்வ காலமும் புஷ்ப்யாதி உபகரணங்களாலே -அவனை சமாராதனம் பண்ணி
அவன் பக்கலிலே பக்தி நிஷ்டர் ஆகுங்கோள் -என்று
அங்க சகிதையான பக்தியை உபதேசித்தும்
அதில் அசக்தருக்கு தாள் அடையும் பக்தி
அதில் துஷ்கரத்வம் -விளம்ப பயம் -ஆகிய வற்றால் அனுஷ்டிக சக்தர் அல்லாதவருக்கு –
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் -என்று
நிவ்ருத்தி சாத்தியம் ஆகையாலே
ஸூகரமாய்
சர்வாதிகாரமுமாய்
சரீர அவசானத்திலே பல பிரதமுமான பிரபத்தியை வெளி இட்டும்–
——————————————————–
8-அதில் அசக்தருக்கு உச்சாரண மாத்ரம்-
அதாவது
உபாய பல்குத்வ பல கௌரவ விரோதி பூய ஸ்தவங்களாகிற சங்காத்ரயத்தாலே
அதில் வ்யவசாயதுக்கு உடலான சக்தி இல்லாதார்க்கு –
திரு கண்ண புரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே -என்று
வசனத்தை பற்றாசாக பிடித்து அவன் திருத்திக் கொள்ளும் படியான
உச்சாரண மாத்ரத்தை வெளி இட்டும்
சர்வ உபாய சூன்யருக்கு இப் பத்தும் பாடி யிடும் தொண்டன் என்று
உச்சாரணம் தனக்கும் தாமாக ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஷமர் அன்றிக்கே –
கீழ் சொன்ன உபாயங்கள் எல்லா வற்றிலும் -அயோக்யராய் இருப்பார்க்கு –
இப்பத்தும் பாடி யாடி பணிமின் அவன் தாள்களையே -என்று இத் திரு வாய் மொழியை
பிரீதி பிரேரராய் கொண்டு பாடி அவன் திருவடிகளில் விழுங்கோள் என்று
ஸ்ரீ கீதாச்சர்யனைப் போலே அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில் ..
அதாவது
ஸ்ரீ கீதோ உபநிஷதாச்சர்யன் தன்னுடைய பரம கிருபையால்-
நெறி எல்லாம் எடுத்து உரைத்த –4-8-6-என்கிறபடியே சேதனருடைய ருசி அனுகுணமான உபாயங்கள்
எல்லாவற்றையும் உபதேசித்தாப் போலே
இவரும்
பிராப்தி அணித்தவாறே சம்சாரிகள் ஒருவரும் இழக்க ஒண்ணாது என்கிற கிருபையால் எல்லாம் எடுத்து உரைத்து –
அவ்வவருடைய அதிகார அனுகுணமாக உபாயங்கள் எல்லாம் உபதேசித்து அருளுகிறார்
ஒன்பதாம் பத்தில் என்கை-
————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
ஆச்சார்ய ஹிருதயம்- ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– சூர்ணிகை -226..
December 24, 2011எட்டாம் பத்தால்-
கீழ் சொன்ன சர்வ சக்தி யோகத்தாலே நித்யமாக கல்பிதமான –
போக்ய போக உபகரண -போக ஸ்தானங்களை உடையவன் ஆகையாலே –
சத்ய காமனான சர்வேஸ்வரன் -கீழ்
தமக்கு உண்டான வாசிகமான அடிமையையும் விஸ்வமரித்து -தன் அனுபவ அலாபத்தாலே
கலங்கி -தன்னுடைய குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ணி –
சம்சார தோஷ அனுசந் தானத்தாலே -அஞ்சின இவரைத் தரிப்பிக்கைக்காக -பூர்வோக்த
உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
அத்தாலே க்ருதஜ்ஞராய் -அதுக்கு பலமாக –
இவர் ஆத்ம சமர்ப்பணம் பண்ண –
அத்தாலே தான் பெறாப் பேறு பெற்றானாய்-
இவருக்கு உண்டான ஆத்ம குணங்களாலே அதி ப்ரீதனாய் –
இவர் திரு உள்ளத்திலே இருந்து நிரதிசயமாக அனுபவிப்பித்து -இனி
அயோக்யர் என்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைப் பிரகாசிப்பிக்க –
அதனுடைய யாதாத்ம்யத்தை அனுசந்தித்தவர்
கீழ் தம்முடைய பிராப்ய பிராபகங்களை கேட்டு உகந்தவர்கள் –
பிராப்யம் ஒன்றும் -பிராபகம் ஒன்றுமாய் -இரு கரையர் ஆகாதபடி –
பிராப்யமாக சொன்ன விஷயம் ஒன்றிலுமே அவர்களை தத் பரர் ஆக்குகிறார் என்கிறார் ..
——————————————-
1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு
என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்
கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும்
கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்
2-தலைச் சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல
பிரத்யு உபகாரமாக வேந்தர் தலைவன்
கன்யகா தானம் போலே ஆரத் தழுவி
அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே
அதீவ விளங்கிப் பணைத்து
3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார்
என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில்
க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே
ப்ரீதி வர்த்தித்து
4-தித்திக்க உள்ளே உறைந்தது கண்டு கொண்டு இருந்து
அமானுஷ போகம் ஆக்கினவன்
5-மூன்று தத்துக்குப் பிழைத்த அருவினை நோய்
மறுவலிடாமல் சிறியேன் என்றதின் பெருமையைகே காட்ட
6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் லஷ்மீ துல்யமாய் –
அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்
7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இருகரையர் ஆகாமல்
மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே
குறிக் கொண்மின் உள்ளத்து என்று
பிராப்ய ஏக பரர் ஆக்குகிறார்
எட்டாம் பத்தில் ..
(சத்யகாமன் -ஆத்மலாபத்தாலே அதீவ விளங்கி -பணைத்து -ப்ரீதி வர்த்தித்து -உறைந்து -கண்டு கொண்டு இருந்து –
அமானுஷ போகம் ஆக்கினான் -அங்கனம் ஆக்கினவனாகி நோய் மறுவலிடாமல் சிறியேன் என்றதன் பெருமையைக் காட்டினேன் –
காட்டக் கண்டு அனுசந்தித்த ஆழ்வார் ஸ்வ சாதன சாத்யஸ்தர் -இருகரையராகாமல் -அவர்களை ப்ராப்ய ஏக பரராக்குகிறார் -என்றபடி-
வேந்தர் தலைவன் -ஜனக மகாராஜன் / ஜென்ம பாசம் விட்டு-முதல் – சீதா குணங்களால் -வரை
ப்ரீதி வர்த்திக்க காரணங்கள் -சீதா பிராட்டி -ஆழ்வார் சாம்யம் சொல்லிற்று இத்தால் )
————————————–
1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு
என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்-
அதாவது-
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார் மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி-8-1-1- -என்றும் –
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே யாம்–8-3-6-என்றும் –
நேர்பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன்–8-9-11-என்றும் –
நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த-8-10-11 -என்றும்
லஷ்மீ பிரப்ருதி திவ்ய மகிஷிகளுக்கு வல்லபனாய் -நித்ய ஸூரிகள் ஏவிற்றுச் செய்ய –
அவர்கள் சேஷ வ்ருத்திக்கும் -ஜ்ஞானாதிகளுக்கும் தானே விஷயமாய் –
தன்னோடு பொருந்தி பூர்ணமாய் கட்டளைப் பட்டு இருக்கிற லோக
த்ரயத்துக்கும் நிர்வாஹனாய் இருக்கும் என்னும் படி —
கீழ் சொன்ன சக்தி தன்னாலே நித்யமாக கல்பிக்க பட்ட -பத்னி பரிஜன ஸ்தான –
போக்ய போக உபகரணங்களை உடையவன் ஆகையாலே
சத்ய காமனாய் இருக்கிறவன்-
கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும் கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்
அதாவது
உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ள வைத்தோம் -என்று
தான் இவரைக் கொண்டு வாசிகமான அடிமையும் விஸ்மரிக்கும் படி ஆக்கின –
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி -8-1-2–என்று
தன்னைக் கண்டால் கண்டு அனுபவிக்கப் பெறாமையால் வந்த கலக்கமும் –
அவ்வளவு இன்றிக்கே –
உமர் உகந்து உகந்து -6-1-4–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்-என்று
தன்னுடைய ஆஸ்ரித பாரதந்த்ரமாகிய குணத்திலும் –
இறந்ததும் நீயே -8-1-7–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்-என்று
தன்னுடைய சர்வ பிரகாரித்வம் ஆகிய ஸ்வரூபத்திலும் -பண்ணிய சங்கையும் –
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்-8-1-9–என்று
சம்சார தோஷ அனுசந்தானத்தால் வந்த அச்சமும் நிவ்ருதம் ஆகும் படியாக
————————————-
2-தலை சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல பிரத்யு உபகாரமாக-
அதாவது-
தாள்களை எனக்கே தலை தலை சிறப்பத் தந்த-8-1-10- -என்னும்படி-
மலரடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன் அருளிய –7-10-5-
என்று பராசராதிகள் -முதல் ஆழ்வார்கள்- உண்டாய் இருக்க -தம்மைக் கொண்டு வாசிகமான அடிமையைக் கொண்ட
பூர்வோ உபகாரத்தை ஸ்மரிப்பிக்க -அப்படி மிக சிறக்கும்படி உபகரித்ததில் தமக்கு உண்டான
க்ருதஜ்ஞ்தைக்கு பலம் சத்ருச பிரதுபகாரம் ஆக-
வேந்தர் தலைவன் கன்யகா தானம் போலே ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே-
அதாவது
உதவிக் கைம்மாறு என் ஆர் உயிர் என்ன -உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -7-9-10–என்று
கீழ் பிரதுபகாரமாக ஆத்மாவை சமர்ப்பிக்கத் தேடி அதின் பகவதீயத் அனுசந்தானத்தாலே
நிவ்ருத்தர் ஆனபடியும் அறியாதபடி -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தால் கலங்கி –
வேந்தர் தலைவன் சனகராசன்-என்கிறபடி
ஷத்ரிய அக்ரேசனராய் -ஜ்ஞானாதிகனான ஜனக ராஜன் -மகோஸ்வரமான தனுர் பங்கம் பண்ணின
பெருமாள் ஆண் பிள்ளைத் தனைத்தை கண்ட ஹர்ஷத்தால் கலங்கி –
விஷ்ணோஸ் ஸ்ரீரீர அனபாயிநீ – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-8-17–என்கிறபடியே -தத் அப்ருதக் சித்தையாய் –
ராகவத்வே பவத் சீதா – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-9-144–என்று தத் அவதார அனுகூலமாக அவதரித்த பிராட்டியை –
இயம் சீதா மம ஸூதா சஹா தர்ம சரீதவ -பிரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம்
க்ருஹ்னீஷ்வ பாணிநா-பால–73-26 -என்று சமர்ப்பித்தாப் போலே
பேர் உதவிக் கைம்மாறத் தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10–என்று
அமூர்தமாய் இருக்க செய்தே -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தாலே –
தாளும் தோளுமாய் பணைத்துத் தோற்ற -பாவன பிரகர்ஷத்தாலே அணைத்துக் கொண்டு அத்ர ஆதரத்தோடு
அனந்யார்ஹமாக சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவைப் பெருகையாலே
அதீவ விளங்கிப் பணைத்து
அதீவ ராமச் சுசுபே -என்றும்
அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகத்மஜா -ஆரண்ய-37-18–என்றும்
அவளைப் பெற்று விளங்கினாப் போலே –
சோதி-8-1-10- -என்று
இவர் பேசும் படி இவர் தம்மது அல்லாத ஒன்றைத் தம்மதாகப் பிரமித்து
கொடுத்தாப் போலே -அவனும் தன்னது அல்லாத ஒன்றைப் பெற்றாப் போலே பிரமித்து
அத்யுஜ்வல்லனாய் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்-8-1-10- -என்னும்படி
சதசாகமாகப் பணைத்து-
————————————
3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார் என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில்
க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து-
அதாவது –
ஸ்ரீ ஜனக மகா ராஜன் திருமகள் பெருமாளைக் கைப் பிடித்த பின்பு அவர் அளவில்
பிரேமத்தால் ஜன்ம பூமியான ஸ்ரீ மிதிலையை நினையாதாப் போலே –இவரும் –
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -8-2-11-என்று
திருவடிகளைக் கிட்டுகையில் சங்கத்தாலே -புறம்புண்டான வழிய சங்கங்களை நிச் சேஷமாக விட்டு –
ஆத்வாரம் அனுவவ்ராஜ மங்களான்யா பிதத்யுஷீ -அயோத்யா-16-21-(ஆத்வாரம் -வாசல் அளவும் )-என்று
அவள் பெருமாள் உடைய வடிவழகைக் கண்டு மங்களா சாசனம் பண்ணினாப் போலே -இவரும் –
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-8-3-3-என்று
தமக்கு பரிகைக்கு ஒரு ஆளும் ஆளுகிறிலீர்–மலை சுமந்தார் போலே திரு ஆழியையும்
திரு பாஞ்ச சந்யத்தையும் தரிப்பார் தாமாய் இரா நின்றது என்று -அவன் சௌ குமார்யத்தைக் கண்டு பரிந்து –
அவள் பெருமாளுடைய சௌர்யாதிகளை நினைத்து பயம் கெட்டு -துல்ய சீல-ஸூந்தர-16-5 -இத்யாதிப் படியே
தனக்கு அனுரூபரான இவரோடு பொருந்து அனுபவித்தாப் போலே -இவரும் –
வார் கடா வருவி–8-4-1-என்று தொடங்கி -அவன் சௌர்யாதிகளை அனுசந்தித்து -நிர்பரராய் –
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான் முகனை யமர்ந்தேனே -என்று
அவனோடு பொருந்தி அனுபவித்து -விஸ்லேஷ தசையிலே -அவள் –
ஹி மகத நலிநீவ நஷ்ட சோபா வயசன பரம்பர யாதி பீட்ய மானா
சஹ சர ரஹீதேவ சக்ர வாகிஜனக சுதா க்ருபாணாம் தசாம் பிரபன்னா -ஸூந்தர-16-30-என்று
நிர்க்க்ருணரும் இரங்க வேண்டும்படியான தசையைப் பிராப்தையானாப் போலே -இவரும் –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -8-5-2–என்று
அவனைக் காண ஆசைப்பட்டு -திக்குகள் தோறும் பார்ப்பது -கூப்பிடுவது ஆகையாலே –
கண்ணும் வாயும் நீர் பசை அறும்படி ஆகையால் –
ஜனக குல சுந்தரியின் குணங்கள் எல்லாம் இவர் பக்கலிலே காண்கையாலே –
ப்ரியாது சீதா ராமஸ்ய தாரா பித்ரு க்ருதா இதி குணாத் ரூப குணச் சாபி ப்ரீதிர்ப் பூயோப் ப்யவர்த்தத–பால -77-25-என்று
குண தர்சனத்தாலே அவள் பக்கல் ப்ரீதி வர்த்தித்தால் போலே இவர் அளவில் ப்ரீதி வர்தித்தது —
————————————————–
4-தித்திக்க உள்ளே உறைந்தது-
அதாவது –
மனஸ்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித -பால -77-25 -என்று
எப்பொழுதும் அவள் நெஞ்சுக்கு இனிதாம்படி -இருந்தாப் போலே –
உள்ளும் தோறும் தித்திப்பான்–8-6-3–என்றும் ,
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் -8-6-2–என்று
அனுசந்திக்கும் தோறும் நிரதிசய போக்யனாய்க் கொண்டு
இவர் திரு உள்ளத்தில் நித்ய வாசம் பண்ணி –
கண்டு கொண்டு இருந்து அமானுஷ போகம் ஆக்கினவன்
அதாவது –
இருந்தான் கண்டு கொண்டு -8-7-2-என்று
தரித்திரன் தன லாபம் உண்டானால் பார்த்துக் கொண்டே இருக்குமா போலே
இவரைப் பெற்ற ப்ரீதியாலே -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருந்து –
சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசன
புஞ்சானா அமானுஷான் போகான் சர்வ காம சம்ருத்திநீ –ஸூ ந்தர-33-17-
(திரு அயோத்தியில் -12-வர்ஷங்கள் பெருமாளுடன் அமானுஷ போகம் அனுபவித்து அவாப்த ஸமஸ்த காமாளக இருந்தேன் )-என்று
விஸ்லேஷ தசையிலும் வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிக்கலாம் படி -அவளை –
மானுஷம் அன்றிக்கே -திவ்யமாய் இருந்துள்ள போகங்களைப் புஜிப்பித்தாப் போலே -இவரையும் –
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேன்-8-7-2–என்றும் –
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி நான் அறியேன் மற்று அருளே –8-7-7-
என்று வித்தராய்ப் பேசும்படி -அப்ராக்ருத போகங்களைப் புஜிப்பித்தவன்-
——————————————
5-மூன்று தத்துக்கு பிழைத்த -அருவினை நோய் மறுவலிடாமல் – சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
அதாவது –
அருவினை நோய் மறுவலிடாமல்-
மருள் தானீதோ—8-7-1-என்றும்
பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் -என்றும்
அருள் தான் இனி யான் அறியேன் -என்றும்-
உகப்பு செல்லா நிற்கச் செய்தே –
மூன்று தத்துக்கு பிழைத்த — சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
அதாவது
சிறியேனுடை சிந்தையுள் நின்று ஒழிந்தார் -என்று
தம் சிறுமையை அனுசந்தித்தவாறே –
1-வள வேழ் உலகிலே -1-5-
களவேழ் வெண்ணெய் தொட உண்ட கள்வா என்பேன் -அரு வினையேன் -என்றும் –
வணங்கினால் உன் பெருமை மாசுணாதோ-என்றும் –
அடியேன் காண்பான் அலற்றுவன் இதினால் மிக்கு ஓர் அயர்ப்பு உண்டே -என்றும்-
2-பொரு மா நீள் படையிலே –1-10-
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் -என்றும் –
3-அம் தாமத்து அன்பிலே –2-5-
அல்லாவி உள் கலந்த -என்றும் –
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை -என்றும் –
இப்படி மூன்று இடத்தில் வந்து பரிஹ்ருதம் ஆகையாலே -மூன்று தத்துக்கு இவர் பிழைத்த
அயோக்யதா அனுசந்தான வியாதி -மறுவலிட்டு இன்னும் இவர் அகலில் செய்வது என் என்று அஞ்சி –
இனி இவர் தாம் அகலுகிறது -வந்தேறியான அசித் சம்பந்தத்தை இட்டு -இது நமக்கு அனர்ஹம் என்று இறே –
இதனிடைய யதாவஸ்தித வேஷத்தைக் கண்டால் அகல ஒண்ணாதே என்று பார்த்து –
அது மறுவல் இடாதபடியாக –
அதாவது –
நமக்கு கௌஸ்துபம் போலவும்
ஸ்ரீ ஸ்தனம் போலவும்
தேஜஸ் கரமுமாய் போக்யமுமாய் இருக்கும் –
அப்ருக்து ஸித்த விசேஷணமாய்க் காணும் உம்முடைய ஆத்ம ஸ்வரூபம் இருப்பது என்று –
சிறிதாக இவர் அனுசந்தித்த ஆத்ம வஸ்துவின் வைலஷண்யத்தை –
யானும் தானாய் ஒழிந்தான்-8-8-4 -என்றும் –
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாக தித்தித்து -என்று தனக்கு அப்ருதக் ஸித்த பிரகாரமாகவும்
நிரதிசய போக்யமுமாகவும் அனுசந்திக்கும் படி காட்டிக் கொடுக்க
——————————————————-
6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் ஸ்ரீ மஹா லஷ்மீ துல்யமாய் –
அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
தேக இந்திரியங்களில் வ்யாவிருத்தமாய் -ஞான ஆனந்த மயமாய் –
நினையும் நீர்மை யதன்றி வட்கிது நின்று நினைக்கப் புக்கால் -என்றும் –
அருமாயன் பேச்சின்றி பேச்சு இலள் -என்றும் –
அன்று மற்றோர் உபாயம் என் -என்றும் –
யதா நிரூபணம் பண்ணில் பிராட்டியோபாதி -அனந்யார்ஹமாய் –
அவ்வளவும் அன்றிக்கே –
மாகாயம் பூக் கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கமிலா அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட் பாடே —ஊழி தொரு ஊழி வாய்க்க தமியேற்கு –
என்று விலஷண விக்ரக யுக்தனான சர்வேஸ்வரனை விஸ்லேஷிக்க ஷமர் அல்லாத பாகவதர்களுடைய
சேஷத்வத்தின் எல்லையில் நிற்கிறவர்கள் எனக்கு சேஷிகள்-
இரு கரையர் -அன்றிக்கே அவர்களுக்கே சபரிகரமாக அனந்யார்ஹனாய்ச் செல்லும்
நல்ல கோட் பாடு கால தத்துவமுள்ள அனையும் எனக்கு சித்திக்க வேண்டும் என்று –
இப்படி ததீய சேஷத்வ காஷ்டை அளவும் செல்ல நிற்கும் படி பரதந்த்ரமான
ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்-
—————————————–
7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இருகரையர் ஆகாமல்
மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே
குறிக் கொண்மின் உள்ளத்து என்று
பிராப்யை ஏக பரர் ஆக்குகிறார்
எட்டாம் பத்தில்
அதாவது
தம்முடைய சாதன சாத்தியங்களே தங்களுக்கு என்று இருக்கிறவர்கள்-
தத் விஷயம் பிராபகமும் ததீய விஷயம் பிராப்யமுமாய் -இரு கரையர் -ஆகாதபடி-
(அவன் உபாயம் -திவ்ய தேசம் உபேயம் -என்று உபாய உபேயங்களை வெவ்வேறாகக் கொள்ளாமல் -என்றபடி-
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -ஸ்ரீ வசன பூஷணம் -411-)
திருக் கடித் தானத்தை ஏத்த நில்லா குறிக் கொள் மினிடரே -8-6-6–என்றும்-
கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ -வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித் தான நகரே இடர் கெட உள்ளத்து கொள்மின்-8-6-7–என்றும்-
திருக் கடித் தானத்தை ஸ்தோத்ரம் பண்ணின அளவில் -துக்கங்கள் எல்லாம் நிலை குலைந்து போம் –
இத்தை குறிக் கொள்ளுங்கோள் –சர்வேஸ்வரனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை
உபய விபூதியில் உள்ளார் எல்லாரும் அனுபவிக்கும் படியான திருக் கடித் தான நகரை
உங்கள் சமஸ்த துக்கங்களும் போம்படி நெஞ்சில் கொண்டு அனுசந்தியுங்கோள் என்று
கீழில் பத்தில்- பிராப்யமாக உபதேசித்த அர்ச்சாவதார பூமியே -துக்க நிவர்தகம் என்கையாலே –
பிராப்யமான விஷயமே பிராபகம் என்று தர்சிப்பித்து -பிராப்ய விஷயம் ஒன்றிலுமே –
தத் பரர் ஆக்குகிறார் எட்டாம் பத்தில் என்கை —
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– சூர்ணிகை -225..
December 24, 2011ஏழாம் பத்தால்
உபாய க்ருத்யதுக்கு உபேஷிதமான விசித்ர சக்தி யோகத்தாலே –
யதாஜ்ஞானம் பிறந்தவர்களுக்கு கொடுக்கக் கடவதான பரம பதத்தைத் தானே உபாயமாக கொடுக்கும் இடத்தில் –
திர்யக் ஸ்தாவரங்களுக்கும் சத்ருவுக்கும் உள் படக் கொடுக்க வல்ல சர்வேஸ்வரன் திரு அடிகளை
ஷண காலமும் பிரிய ஷமரும் இன்றிக்கே –சாங்க பிரபதனம் பண்ணின -தம்மை-விஷயங்களிலே மூட்டி –
தன் பக்கலிலே சேராதபடி -அகற்றுமவையான -இந்திரியங்கள் நடையாடுகிற சம்சாரத்தில் -வைக்கக் கண்டு –
விஷண்ணராய்க் கூப்பிட்டு –
தம் தசை தாம் பேசமாட்டாதபடி -தளர்ந்து
பிறரால்- மீட்க ஒண்ணாதபடி -அபருஹ் சித்தராய் —
அவன் தன் விஜயங்களைக் காட்டி இவரைத் தரிப்பிக்க –
அந்த தரிப்பும் சம்சாரிகள் இழவைப் பார்த்து நினைத்து சுவறி பழைய வார்த்தியே தலை எடுத்து –
அனுபாவ்ய விஷயம் -ஸ்ம்ருதி விஷயமாய் ஒரு முகம் செய்து -நலிய நோவு பட்டு-
இப்படி எடுப்பும் சாய்ப்புமாக கிலேசம் செல்லச் செய்தே
-உபாய பூதனான உனக்கு ஞான சக்திகளிலே குறைவற்று இருக்க –
எனக்கு ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களிலும் ஆர்த்தியிலும் குறை வற்று இருக்க –
என்னை சம்சாரத்திலே வைக்கைக்கு அடி என் என்று கேட்க –
அவனும்
நமக்கும் நம் உடையாருக்கும் இனிதாக திருவாய் மொழி பாடுவிக்க வைத்தோம் காணும்
என்று அருளிச் செய்ய –
வ்யாசாதிகள் முதல் ஆழ்வார்கள் கவி பாட உண்டாய் இருக்க நம்மைக் கொண்டு கவி
பாடுவித்துக் கொள்வதே என்று அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து –
அதுக்கு பிரதி உபகாரம் தேக் காணாமையாலே –
இனி இது ஒழிய செய்யலாவது ஓன்று இல்லை-என்று
திரு வாறன் விளையிலே-பெரிய பிராட்டியாரோடு எழுந்து அருளி இருக்கிற பேர் ஓலக்கத்திலே –
திரு வாய் மொழி கேட்பித்து -அடிமை செய்வதாக மனோரதித்து –
அங்கே தம் திரு உள்ளம் பிரவணம் ஆகையாலே -பரம பதத்தில் இருக்கும் இருப்பையும் உபேஷிக்கும் படி ஆனவர் –
கீழ் தம்முடைய உபாய நிஷ்டை வெளி இடும்படி புகுர நின்றவர்களுக்கு –
திரு வாறன் விளையே -பிராப்யம் –அங்கு எழுந்து அருளி நிற்கிறவனே உபாயம் -என்று
தாம் அறுதி இட்ட பிராப்ய பிராபகங்களின் முடிவை தம் முகப்பாலே வெளி இடுகிறார் என்கிறார் —
——————————————
1-எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன்
மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே
2-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
பிராபகத்வம் புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்க
வல்ல சர்வ சக்தி பாதமகலகில்லா தம்மை
3-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு நலிவான்
சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டுக்
4-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில்
திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கித்
5-தேற்ற ஒண்ணாதபடி தோற்று ஒன்றி நிற்கப்
பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி
6-பழைய தனிமைக் கூப்பீடு தலை எடுத்து -சூழவும்
பகை முகம் செய்ய -எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க
உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த
வைசித்திரியைக் கேட்க
7-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை
அருளிச் செய்ய -என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர்
எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே
8-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த
நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக
கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர்
9-சரமோ உபாய பரர் ஆனார்க்கு நீள் நகரமது -துணித்தான்
சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று
பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் —
——————————————-
1-எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன்
மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே-
அதாவது-
எண்ணிலா பெரு மாயனே-7-1-1–என்று
எண்ணிறந்த ஆச்சர்ய குணங்களை உடையவனே என்றும் –
குணங்கள் கொண்ட மூர்த்தி யோர் மூவராய் படைத்து அளித்து கெடுக்கும் –7-1-1-
என்று சத்வாதி குண அனுகுணமான மூர்த்திகளைக் கொண்டு சிருஷ்டியாதிகளை பண்ணுபவன் என்றும் –
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் -7-2-7–என்று
இடமறிந்து சுக துக்கங்களை கல்பித்தவன் என்றும்
ஊழி தோர் ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும் -7-3-11-என்று
கல்பம் தோறும் ரூப நாம சேஷ்டிதங்களை வேறாக உடையனாய்க் கொண்டு ஜகத்தை ரஷிக்கும் என்றும் –
மாய வாமனனே -7-8-7–என்று ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் என்றும் –
உள்ளப் பல் யோகு செய்து -7-8-4–என்று திரு உள்ளத்தில் பல ரஷண உபாய சிந்தைகளும் பண்ணி நிற்றி என்றும்
இப்படிப் பல விதமாகச் சொல்லப் பட்ட உபாய க்ருத்யத்துக்கு
அபேஷிதமான ஆச்சர்ய சக்தி யோகத்தாலே
———————————————–
2-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் பிராபகத்வம்
புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்க வல்ல சர்வ சக்தி-
அதாவது-
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் – 7-5-11-என்றும்
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் 7-6-10–என்றும்
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானே என்று அத்யவசித்து -பின்னை
நாட்டார்கள் செயல்களைக் கண்டு ஆதல்- யுத்தி ஆபாசம் கொண்டு ஆதல் –பிற்காலியாதே நின்று –
அவர்களுக்கு நிரதிசய ஆனந்த யுக்தமாய் -ஒருவராலும் ஸ்வ யத்னத்தால் ப்ராபிக்க ஒண்ணாது இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்தை
தன் அருளால் கொடுக்கிற தன் உபாயத்தை –
புற்பா முதலா புல் எறும்பாதி ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன் -7-5-1–என்றும்
நாட்டை அளித்து உய்யச் செய்து-7-5-2- -என்றும் –
சேட் பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட் பால் அடைந்த-7-5-3- -என்றும்
ஜ்ஞானம் லேசமில்லாத திர்யக் ஸ்தாவரங்களும்
பிராதி கூல்யத்தில் முதிர நின்ற சத்ருவுக்குக்குமாம் படி பண்ண வல்ல சர்வ சக்தி யானவன் –
பாதமகலகில்லா தம்மை-
அதாவது-
அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையும்-6-10-9- -என்று
தன் திருவடிகளை ஷண காலமும் அகல சக்தர் அன்றியே –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்—6-10-10-என்று சரணம் புக்க தம்மை-
——————————————-
3-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு-
அதாவது-
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆமவை -5-7-8–என்று
தன் திருவடிகளைக் கிட்டாதபடி அகற்றவற்றான இந்திரியங்களின் நடுவே –
இவ் உடம்பிலே இருக்கும் படி வைக்க கண்டு-
நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டு
அதாவது-
நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் -7-1-1–என்றும்
அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய்-7-1-10- -என்றும் –
விண்ணுளார் பெருமானேயோ -7-1-5–என்றும் –
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தீயோ-7-1-10- -என்று
விளம்ப ஹேது இல்லாத உபாயத்தை பரிக்ரஹித்தால் அது பல பிரதமாம் படியும்
கிடந்து கூப்பிடும் இத்தனை ஆகையாலே -கீழ் தாம் பரிக்ரஹித்த உபாயத்தின் பலமாய் வந்ததாய் –
கலங்கா பெருநகரம் கலங்கி -அவனுக்கு அங்கு குடி இருப்பது அரிதாய் வந்து
விழ வேண்டும் படியான சம்சாரத்தில் -அடிக் கொதிப்பால் வந்த பெரிய
ஆக்ரோசத்தோடே கூடிக் கொண்டு தம் தலையால் வந்தததையும் அவன் தலையில்
ஏறிடும் படியான பிராப்தியை உணர்ந்தவர் ஆகையாலே –இந்திரியங்களை இட்டு
நலிவிக்கிறாய்-நீ என்று அவன் மேல் பழி இட்டு –
(பிரஜை தெருவிலே இடறித் தாய் முதுகிலே குத்துமா போலே -ஸ்ரீ வசன பூஷணம் )
————————————————
4-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கி-
(திரு விருத்தத்தில்–62-(-இதுவே கங்குலும் பகலுமாக விரிந்தது )-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் -ஈங்கு இவள் தன் நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே -பாசுரப்படி இங்கு முறை கெட்ட -என்று அருளிச் செய்கிறார் )
அதாவது-
கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை-
அதாவது–
இப்படி கூப்பிட தானும் ஷமர் அன்றிக்கே -அவசந்னராய் கொண்டு -ஒரு பிராட்டி தசையை அடைந்து –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்-
இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும் –
சிந்திக்கும் திசைக்கும் -இத்யாதிப் படியே
திவாராத்ரா விபாகமற -அழுவது -தொழுவது -மோகிப்பது -பிரலாபிப்பது —
அடைவு கெடப் பேசுவது -நெடு மூச்சு எறிவது -அது தானும் மாட்டாது ஒழிவது –
ஸ்தப்தையாய் இருப்பது -இப்படி ஆர்த்தி விஞ்சி செல்லுகையாலே –
ஆசா சிந்தா ஸ்ம்ருதி கீர்த்திர் விலாபோன்மாத விப்ரமா
மோஹோ வியாதிர் ம்ருதிச்சேதி விகாரா காம ஜாதச -என்றார் போலே
அவஸ்தைகளுக்கு அடைவு பிடிக்க ஒண்ணாத படி நடக்கிற ஆர்த்தியை-
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிற கோவில் திரு வாசலிலே
பெண் பிள்ளையைப் பொகட்டு திரு தாயார் கூச்சு முறை தவிர்ந்து -தானே இவள் தசையை அவருக்குச் சொல்லி –
திரு வரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாய் –
என் செய்திட்டாய் –
என் சிந்தித்தாய் –
என் செய்கேன் திரு மகட்கு -என்று
அவர் தம்மையே கேட்கும் படி அத்யாவசாதம் பிறந்து-
அடைவற்ற அரதியை -என்ற பாடமான போது –
கங்குலும் பகலும் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே திவாராத்ரா விபாகமற
அழுவது-தொழுவது -இத்யாதிகளாலே -ஆசா சிந்தாதிகளில் போலே
அவஸ்தைகளுக்கு ஓர் அடைவு பிடிக்க ஒண்ணாதபடி நடக்கிற அரதியை
என்று யோஜிக்கவுமாம்–
———————————————
5-தேற்ற ஒண்ணாதபடி தோற்று-ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-
அதாவது-
தேற்ற ஒண்ணாதபடி தோற்று-
அதாவது-
அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா -என்றும் –
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் -என்று
பார்ஸ்வச்தராலும் தேற்றி தரிப்பிக்க ஒண்ணாதபடி அபஹ்ருத சித்தராய் கொண்டு
பாரதந்த்ர்யமும் இழந்து –(வெள்ளைச் சுரி சங்கு சாரம்)-
ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-
அதாவது-
இப்படி விரஹ வ்யதையாலே மிகவும் தளர்ந்து இருக்கிற இவரைத் தரிப்பைக்கைகாக தன்
விஜய பரம்பரையைக் காட்டிக் கொடுக்க கண்டு ப்ரீதராய் –
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடு ஒன்றி நின்ற சடகோபன் -என்று
தன் விஜயத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடு பொருந்தி இருக்கும்
படி பண்ணின பல தானமானது –(ஆழி எழ சங்கும் எழ சாரம்)
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -என்று
அவதார பிரயுக்த சௌலப் யத்தை உடையவனாய் -ப்ரிய பரனுமாய் -ஹித பரனுமாய் –
தான் அங்கீகரிக்க நினைத்தாரை -நிர்ஹேதுகமாக -மோஷ பர்யந்தமாக -நடத்தும் அவனுமாகிய
இவனை ஒழிய -மற்றும் ஒரு விஷயத்தை கற்பரோ -இப்படி சுலபமான இவ் விஷயத்தை
சம்சாரிகள் இழப்பதே என்று அவர்கள் இழவை அனுசந்தித்து -அதிலே சுவறி-( கற்பார் ராம பிரானை அல்லால் சாரம்)
———————————————-
6-பழைய தனிமை கூப்பீடு தலை எடுத்து –
அதாவது
பாமரு மூ உலகும் படைத்த பத்மநாபாவோ-என்று தொடங்கி
தனியேன் தனை யாளாவோ – என்று
ஒரு துணை அன்றிக்கே இருந்து -அவனுடைய ஜகத் காரணத்வாதிகளைச் சொல்லிக்
கூப்பிடும் படி -முன்புத்தை –
உண்ணிலாவியில் -கூப்பீடே மீளவும் தலை எடுத்து-
சூழவும் பகை முகம் செய்ய-
அதாவது
சூழவும் தாமரை நாண் மலர்போல் வந்து தோன்றும் -என்றும் –
இணைக் கூற்றம்கொலோ அறியேன் -என்றும் –
கண்ணன் கோளிழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே -என்று
முன்பு அனுபவித்தவனுடைய-முக அவயவ சோபையானது – விசத ஸ்ம்ருதி விஷயமாய் –
பார்த்த பார்த்த இடம் எங்கும் தோன்றி நின்று நலிய-
(திரு முக மண்டலத்தில் திருக்கண்கள் -திரு மூக்கு -திரு வாய் – திருப்புருவம் -திருக்காது -திருநெற்றி
முதலானவை நலிவதால் சூழவும் பகை முகம் செய்ய என்கிறார் )
-எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க-
அதாவது
விஜயங்களைக் காட்டித் தரிப்பித்த போது தலை சாய்ந்தும் -மீளவும் கூப்பிடும் படி தலை எடுத்தும்-
இப்படி எடுப்பும் சாய்ப்பும் ஆக செல்லுகிற கிலேசம் நடவா நிற்கச் செய்தே-
உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க-
அதாவது
உபாய பூதனான உனக்கு அஜ்ஞான அசக்திகளாகிற தோஷம் இன்றிக்கே இருக்க –
சரண்யனான எனக்கு -ஆகிஞ்சன்யம்-அநந்ய கதித்வங்களும் ஆர்த்தியும் உண்டாகையாலே அதிகாரி தோஷம் இன்றிக்கே இருக்க –
பாசங்கள் நீக்கி -என்று தொடங்கி
மாயங்கள் செய்து வைத்தி -என்று
அவித்யா கர்ம வாசன ருசிகளை -சவாசனமாகப் போக்கி -உனக்கு
அனந்யார்ஹ சேஷம் ஆக்கிக் கொண்ட பின்பு ஜன்ம மரணாத் யாச்சர்யங்களை உண்டாக்கி –
என்னை சம்சாரத்தில் வைத்த ஆச்சர்யத்தை அருளிச் செய்ய வேணும் என்று கேட்க-(மாய வாமனன் சாரம்)
—————————————
7-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய-
அதாவது
அவன் -நமக்கும் நம் உடையாருக்கும் -போது போக்காகா உம்மைக் கொண்டு திருவாய் மொழி
பாடிவித்து கொள்ள வைத்தோம் காணும் –என்று கர்மம் அடியாக அன்றிக்கே-
தன் இச்சையாலே இருத்தி –
உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய
அதாவது
உறப் பல இன் கவி -என்கிறபடியே
தனக்கு தகுதியான கவிகளைப் பாடுவித்து கொண்ட ஸ்வ பிரயோஜனமும் –
பர பிரயோஜனமுமான -வித்தை -வைத்ததுக்கு ஹேதுவாக அருளிச் செய்ய-
என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே-
அதாவது
வியாச பராசர வால்மீகி பிரப்ருதிகள்-முதல் ஆழ்வார்கள் -உண்டாய் இருக்க –
தம்மைக் கொண்டு கவி பாடு வித்த உபகாரத்தை அனுசந்தித்து –
என் சொல்லி நிற்பானோ-என்றும் ,
எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ -என்றும் ,
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் ஆர்வேனோ –
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வேனோ -என்று
அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்தால்-எங்கனே நான் தரையில் கால் பாவுவது –
அவ் உபகாரத்தை கால தத்வம் உள்ள அளவும் அனுசந்தித்தாலும் -பர்யாப்தன் ஆகிறிலேன் –
சகல ஸ்தலங்களிலும் உண்டான சகல சேதனருடையவும்-வாகாத் யுபகரணங்களை-
நான் ஒருவனே யுடை யேனுமாய் — கால த்ரயத்திலும் -பேசி அனுபவித்தாலும் -த்ருப்தன் ஆவேனோ –
உதவிக் கைம்மாறு -என்று தொடங்கி –
எதுவும் செய்வது ஒன்றும் இல்லை இங்கும் அங்கும் -என்று இதுக்கு பிரத்யு உபகாரமாக
ஆத்ம சமர்ப்பணைத்தைப் பண்ணுவோம் -என்னில் -அதுவும் -ததீயமாய் -இருக்கையாலே –
உபய விபூதியிலும் செய்வது ஒன்றும் இல்லை என்னும் படியான உபகார ஸ்ம்ருதியோடு கூடிக் கொண்டு –
———————————————–
8-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே
பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர்-
அதாவது-
செம்பவளத் திரள் வாய் தன் சரிதை கேட்டான் -பெருமாள் திருமொழி -10-8—என்கிறபடியே –
பிராட்டியை ஒழிய பெருமாள் தனி இருந்த இருப்பிலே குசலவர்கள்
ஸ்ரீ ராமாயணம் கேட்பித்தாப் போல் அன்றிக்கே –
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் எழ உலகை
இன்பம் பயக்க இனிது உடன் வீற்று இருந்து -என்று
ஆனந்த மயனான தனக்கும் -ஆனந்த வர்தகையான பிராட்டியும் தானுமான சேர்த்தியில் –லோகம் அடங்க வாழும் படி –
உபய விபூதி நாதத்வத்தால் வந்த வேறு பாடு தோற்ற எழுந்து அருளி இருந்த –
நிலத் தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளையில்-அந்த பூ சூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே –
பிரத்யு உபகாரமாக திரு வாய் மொழி கேட்விப்பித்து அடிமை செய்ய பாரித்து –
திரு வாறன் விளையில் பரத்வ விமுகமாம் படி தன் நெஞ்சு பிரவணம் ஆகையாலே –
திருவாறன் விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின் — சிந்தை மற்று ஒன்றின் திறத்து
அல்லாத் தன்மை -தேவ பிரான் அறியும் -என்று
பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –
ஹாவு ஹாவு -என்று சாம கானம் பண்ணும் பரம பதத்தில் கோஷ்டியையும் –
ஸ்வதஸ் சர்வஜ்ஞனாய் -நினைவுக்கு வாய்த் தலையிலே இருந்து –
எல்லோருடைய நினைவும் அறியும் அயர்வறும் அமரர்கள் அதிபதி அறிய விஸ்மரித்தவர் –
———————————————
9-சரமோ உபாய பரர் ஆனார்க்கு
அதாவது
கீழ் தாம் அருளிச் செய்யக் கேட்ட (அகலகில்லேன் இறையும் பாசுரத்தில்) ஸித்த சாதனத்திலே- தத் பரர் ஆனவர்களுக்கு
நீள் நகரமது -துணித்தான சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று
பிராப்ய சாதன அவதியைப் ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் .
அதாவது –
நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திரு வாறன் விளை –
வாணனை ஆயிரம்தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம்-என்றும்
உள்ளித் தொழுமின் தொண்டீர் -என்று
நிரதிசய போக்யமான திரு வாறன் விளை யாகிற மகா நகரமே பிராப்யம்–
அங்கு எழுந்து அருளி இருக்கிற உஷா அநிருத்த கடகன் ஆனவனே அந்த பிராப்யத்துக்கு பிராபகம் –
இவ்வர்த்ததில் மாறாட்டம் இல்லை -ஆகையால் இவ் அர்த்தத்தில் ருசி உடையார் புத்தி பண்ணுங்கோள் என்று –
பிராப்யத்தினுடைய அவதி ததீய விஷயம் என்றும் –
பிராபகத்தினுடைய அவதி அர்ச்சாவதார ஸூலபன் என்றும் –
இவ்வர்த்தத்தை தம்முடைய உகப்பாலே வெளி இட்டு அருளுகிறார்- ஏழாம் பத்தில் என்கை.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
திரு பாவை- அனுபவம் -7-கீசு கீசு என்று ..
December 24, 2011அஞ்சும் குடிக்கு சந்ததி -அஞ்சு -முதல் ஆழ்வார்கள்-திரு மழிசை நம் குலசேகரர் பெரி ஆழ்வார் –
ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -5-
December 24, 2011ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– சூர்ணிகை -224..
December 23, 2011ஆறாம் பத்தால்-
தன்னுடைய பரம கிருபையாலே சர்வரும் வந்து ஆஸ்ரயிக்கும் படி இருக்கிற
சர்வ சரண்யனான சர்வேஸ்வரன் -பக்தி பாரவஸ்யத்தாலே அநந்ய கதிகளாம்
தமக்கு தம் திரு அடிகளையே -நிரபேஷ உபாயமாகக் காட்டிக் கொடுக்க –
அவ்வுபாயத்தில் விச்சேதம் இல்லாதபடி நடக்கிற வ்யவசாயத்தை உடையராய் –
தம்முடைய வ்யவசாயத்தை கடக முகத்தாலே -இவனுக்கு அறிவித்து –
வரவு தாழ்க்கையாலே தமக்கு விளைந்த -பிரணய ரோஷத்தை அவன் பரிகரிக்க –
அவன் சாமர்த்தியத்தை அனுசந்தித்து -குண அனுபவத்துக்கு பண்ணின பிர பத்தியும்
பலித்தவாறே –பிராப்திக்கு பிரபத்தி பண்ணுவதாகக் கோலி –
ஸித்த உபாய வர்ணம் இதர பரித்யாக பூர்வகம் ஆகையாலே
பௌராணிக வசன பிரக்ரியையாலே -உபாய விரோதிகளான த்யாஜ்ய அம்சங்களை
சாவசனமாக தத் பிரசங்கமும் அசஹ்யமாம் படி விட்டு –
விட்டவை எல்லாம் தமக்குப் பற்றுகை விஷயமாக நினைத்து -பரம ஆர்த்தியோடே தமக்கு
உபாயமாக நினைத்து இருக்கும் -திரு உலகு அளந்தவனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை –
நித்ய ஸூரிகளும் வந்து அனுபவிக்கும் படி வந்து நிற்கிற -திரு மலையிலே கண்டு கொண்டு –
பூர்வ வாக்ய பிரக்ரியையாலே சரணம் புக்கவர் –
பத்துடை அடியவரிலே -தொடங்கி ஐஞ்சாம் பத்து அளவாக உபதேசித்த பக்தி உபாயத்தின்
துஷ்கரத்வாதி தோஷ அனுசந்தானத்தாலே சோகம் ஜனிக்கும் படியான பாகம் பிறந்தவர்களுக்கு
தம்முடைய பிரபத்தி நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் என்கிறார் .
—————————–
1-என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய்
அடியீர் வாழ்மின் என்று கருணையாலே
சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும்
கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம்
கல்வெட்டாக்குகிற சரண்யன்
2-அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள்
அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான்
புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூம பலமாகவும்
அநந்ய கதித்வம் உடைய தமக்கு
3-பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு
ஏக சிந்தையராய் திர்யக்குகளை இட்டு
ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து விளம்ப ரோஷம்
உபாயத்தாலே அழிய
4-உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க
பலித்தவாறே சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின
5-சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்களைக்
கை வலிந்து கை கழலக் கண்டும் எல்லாம் கிடக்க
நினையாத கன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று
ததீய சேஷம் ஆக்கியும் -புறத்திட்டு காட்டி என்று
பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு
6-தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை
யாவையும் ஒன்றே ஆக்கி
7-தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ
முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே
8-திரி விக்ரமனாய்க் குறள் கோலப் பிரானாய்
அடியை மூன்றை இரந்த வன் கள்வன்
கண் முகப்பே அகல்கொள் திசை வையம்
விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை
9-இணைத் தாமரைகள் காண இமையோரும்
வரும் படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே
கண்டு அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர்
10-பிணக்கறத் தொ சசோக சஜாதீயர்க்குத் டங்கி வேத புனித விறுதி சொன்ன
சாத்ய உபாய ஸ்ரவண
11-தந்தனன் மற்றோர் களை கண் இலம்
புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த்ய அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் —
—————————————–
1-என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே
சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம்
கல் வெட்டாக்குகிற சரண்யன்
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே -6-1-10–என்று
ஆர்த்த ரஷணத்திலே தீஷித்து இருக்கிறவனுக்கு -ரஷ்ய வர்க்கத்தில் நானும்
ஒருத்தி உளள் என்று சொல்லுங்கோள் என்றும் –
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே-6-3-7- -என்று
திரு விண்ணகரிலே நின்று அருளும் அவன் திரு அடிகள் அல்லது சர்வருக்கும் வலிய புகல் அல்லை என்றும்-
வன் சரண் சுரர்க்காய் -6-3-8–என்று தேவர்களுக்கு வலிய ரஷகனாம் என்றும் –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும் -6-10-11–என்று
நமக்கு சேஷ பூதராய் உள்ள எல்லோரும் நமக்கு அடிகளின் கீழே -அநந்ய பிரயோஜனராய் புகுந்து
உஜ்ஜீவி யுங்கோள் என்று தன் அருளைப் பண்ணா நிற்கும் என்றும் சொல்லுகிற படி-தன்னுடைய கிருபையாலே –
சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே
நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷண உபஸ்திதம்—யுத்த —17-14-என்று வந்து சரணாகதனான விபீஷண ஆழ்வான் –
சர்வலோக சரண்யன் என்ற உக்தி சமுத்திர கோஷம் போலே நிரார்த்தம் ஆகாதபடியாகவும் –
சக்ருதேவ பிரபன்னாயா தவாச்மீதச யாசதே
அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் வ்ரதம் மம –யுத்த –18-33– என்று(பூதேப்ய -சர்வராலும் வரும் பயம்)
சரணாகத ரஷணத்தில் தீஷிதனாய் சரண்யனான தான் செய்த யுக்தி ச ஹ்ருத்யமாகாதா படியும் –
வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேம்கடம் -3-3-7–என்றும் ,
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா வகை நினைந்து வைகல்
தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேம்கடம் -முதல் திருவந்தாதி-26-என்றும் —
போதறிந்து வானரங்கள்–இரண்டாம் திருவந்தாதி-72–என்றும் –
கண்டு வணங்கும் களிறு-மூன்றாம் திருவந்தாதி-70 -என்றும் –
நித்ய ஸூரிகள்–நித்ய சம்சாரிகள் -பிரயோஜனாந்த பரர் -அநந்ய பிரயோஜனர் –மனுஷ்யர்-திர்யக்குகள் -என்கிற
வாசி அற ஆஸ்ரயிக்கலாம் படி சர்வ ஸமாச்ரயணீயனாய் நிற்க்கையாலே –
தன்னுடைய உபாயத்வம் சிலா லிகிதம் ஆகும் படி திரு மலையில் எழுந்து அருளி இருக்கிற
அநாலோசித விசேஷ சேஷ லோக சரண்யனான சர்வேஸ்வரன் –
————————————————
2-அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான்
புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூமா பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு
அவித்யாதோ தேவே பரிப்புருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்
பூம்நாவா ஜகதி கதிமந்யா மவிதுஷாம் கதிர் கம்யச்சாஸௌ ஹரிரிதி
ஜிதந்தாஹ்வயமனோ ரஹச்யம் வியாஜக்ரே சகலு பகவான் ஸௌ நகமுனி -ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்தி –
(அஞ்ஞானத்தாலாவது -அளவிட்டு அறிய ஒண்ணாதாவன் என்கிற ஞானத்தாலாவது -தன் பக்தியினுடைய மேன்மையாலாவது
அவனைத்தவிர வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்களுக்கு இவன் பேறாகவும்-உபாயமாகவும் -ஆகிறான் என்று
ஸுநக மகரிஷி ஜிதந்தே மந்திரத்தின் உள் பொருளை விரித்து உரைத்தார் )-என்று –
உபாயாந்தரங்களை அறியவும்-அனுஷ்டிக்கவும் ஈடான ஜ்ஞான சக்திகள் இல்லாமையாலே -ஆதல்-
பகவத் ஏக பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு-தத் ஏக உபாயத்வம் ஒழிய-தத் வ்யத்ரிக்தோ உபாயம் அன்வயம் ஆகாது என்று –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3–என்னும்படியான
ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானத்தால் ஆதல்–அநந்ய கதிகளாம் அளவு அன்றிக்கே –
(அஞ்ஞானத்தாலோ ஞான ஆதிக்யத்தாலோ இல்லாமல் பக்தி பாரவசயத்தால் அன்றோ ஆழ்வாராதிகள் பிரபத்தி )
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனும் அல்லேன்-5-7-2- -என்றும்
என் நான் செய்கேன் -5-8-3–என்றும்
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய் -6-10-4–என்று
ஸாதனம் அனுஷ்டித்து முக்த பிராயனாய் இருக்கிறேன் அல்லேன் –
சாதன அனுஷ்டானம் பண்ணுபவர்களில் ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் –
மேலும் சாதன அனுஷ்டானம் பண்ண ஒண்ணாத படி உன் சௌந்தர்யாதிகளில்
ஈடுபட்டு -உன்னைக் காண வேணும் என்னும் ஆசையினால்-பலஹீனமாய் தளர்ந்து –
இனி உபாய அனுஷ்டான ஷமன் அல்லேன் –
உன் திருவடிகளை பெருகைக்கு என்னால் செய்யல் ஆவது இல்லை –
எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி உண்டு –
முன்பு பரிகல்ப்தமான உபாயங்கள் ஒன்றும் என் பக்கல் இல்லை –
நிரதிசய போக்யமான உன் திருவடிகளை நான் கிட்டும் வழி கல்பிக்க வேண்டும் என்று சொல்லும் படி –
மெய்யமர் காதல்–6-8-2–என்று அவன் ஸ்வரூபத்தை அனுசந்திதாதல் –குண ஜ்ஞானத்தாலே ஆதல் —
தரிக்க ஒண்ணாத படி திரு மேனியிலே அணைய வேண்டும் படியான காதல்-என்னும் படி-
கீழ் பத்திலே தமக்கு பிறந்த பக்தி பூமா உண்டு –பாரவச்ய ஜனகமான பக்தி அதிசயம் –
அதனுடைய பலமாகவும் -உபாயாந்தரதுக்கு ஆள் அன்றிக்கே –
களை கண் மற்று இலேன் -5-8-8–என்னும் படி
அநந்ய கதித்வம் உடையரான தமக்கு சமாசத்தில் பக்தி பூம பலம் என்ன வேணும் –
பூமா பலம் என்கிற இது -பாடச்கலனத்தாலே வந்ததாம் இத்தனை –
———————————————–
3-பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10–என்னும்படி
தன் திருவடிகளை சகாயாந்தர நிரபேஷ சாதனமாகக் காட்டிக் கொடுக்க –
கழல்கள் அவையே சரணாக கொண்ட -5-8-11-என்றும் –
அடிமேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன்–5-9-11-என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் –5-10-11என்றும் சொல்லுகிறபடி-
விரோதி நிரசன சீலனானவன் திரு வடிகளையே நிரபேஷ
உபாயமாகக் கொண்டு ஏக ரூப மான வ்யவசாயத்தை உடையராய்
திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து
வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் கனிவாய் பெருமானைக் கண்டு
வினையாட்டியேன் காதன்மை –கைகள் கூப்பிச் சொல்லீர்-6-1-1- -என்று தொடங்கி –
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்கள் -என்னுமதளவாக பெற்று அன்றி தரியாத
அதிமாத்ர பிராவண்யம் உண்டாய் இருக்கவும்-ஸ்வ ரக்ஷண ஸ்வாந்வயத்தை சகியாத ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே –
ததேக ரஷத்யத்வ வ்யவசாய ரகிதராய் இருக்கிற தம்முடைய கருத்தை –
உபாப்யாமேவ பஷாப்யாம் -என்கிறபடியே ஜ்ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய
யோகத்தாலே ப்ராப்யமான பகவத் விஷயத்தை சீக்கரமாக ப்ராபிக்கைக்கு ஈடான
யோக்யதை உடையரான கடகரை இட்டு அறிவித்து –
விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய
இப்படி அறிவித்த அளவிலும் அவன் வரவு தாழ்க்கையால் உண்டான
பிரணய ரோஷத்தாலே -வந்து மேல் விழுந்த அளவிலும் –
போகு நம்பீ –
கழக மேறேல் நம்பீ -என்று
உபேஷித்து அவன் முகம் பாராமல் இருப்போம் என்று -சிற்றில் இழைப்பது –
சிறு சோறு அடுவதாக -அது தன்னுடைய போக விரோதி ஆகையாலே –
அழித்தாய் உன் திருவடியாலே -என்கிறபடியே அவன் அந்த அநாதர அந்நிய பரதைகளை
தனக்கும் சரம உபாயமான திரு வடிகளாலே யுப லஷிதமான விக்ரகத்தின் உடைய
வைலஷண்யத்தாலே – குலைக்க -அவனோடு பொருந்தி –
—————————————————–
4-உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்கப் பலித்தவாறே
பிறந்தவாற்றிலே –அவதார அனுபவம் பெறாத இழவாலே பதற –
தத் குண சேஷ்டிதங்களை அனுபவித்தாகிலும் தரிப்போம் என்று இழிந்த அளவில்-
நிறந்தனூடு புக்கு என தாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற -என்றும் –
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை வுருக்குங்கள் -என்றும் –
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கும் -என்றும் –
ஊடு புக்கு எனதாவியை வுருக்கி உண்டு இடுகின்ற -என்னும்படி
அவை மிகவும் சைதில்ய ஹேதுவாகையாலே -தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி
பண்ணி அருள வேண்டும் என்று அவனை உபாயமாக வரித்தித்தும்
குரவை ஆய்ச்சியரிலே- என்ன குறை எனக்கு -என்று தொடங்கி –
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கு யார் பிறர் நாயகர் -என்று
ப்ரீதி பூர்வகமாக அவதார குண சேஷ்டிதங்களை சர்வ காலமும் முறையிலே கிட்டி
அனுபவிக்கப் பெற்ற எனக்கு யார் தான் நியாமகர் என்று கர்விக்கும் படி பலித்தவாறே –
–சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று
இதர உபாய த்யாக பூர்வ கத்வமாகிற பிரகாரத்தோடே -சித்த உபாய வர்ணம்
சக்ருதேவ -என்கிறபடியே -பிராப்த்திகாகவும் ஒருகால் பண்ண வேண்டும் என்று பார்த்து
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின
பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகின் குருன்
ரத்னானி தான தான்யானி ஷேத்ராணி ச க்ருஹானிச
சர்வ தர்மாம்ச்ச சந்தய்ஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான்
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ராஜம் விபோ-என்கிற வசனம்
ஆக்னேயம் அஷ்டம் அஞ்சைவ பவிஷ்யன் நவமம் ஸ்ம்ருதம்-என்கிறபடி
அஷ்டாதச புராணத்திலும் வைத்துக் கொண்டு ஒன்பதாம் புராண மாக சொல்லப் பட்ட –
பவிஷ்யத் புராண சித்தம் ஆகையாலும் –புராண வித்தகர் ஆகையாலே -பௌ ராணிகரான
ஸ்ரீ பாஷ்ய காரர் கத்யத்தில் -இவ் வசன பிரக்ரியையாலே -த்யாஜ்யங்களின் உடைய த்யாக பூர்வகமான
சரண வரணத்தை பண்ணுகையாலும் –
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின -என்கிறது —
இங்கன் அன்றிக்கே -இவ் அர்த்தம் புராண சித்தம் ஆகையாலும் -அது தான்
புராதான புருஷ அனுஷ்டான ரூபமாக சொல்லப் படுகையாலும் -இவை இரடையும் பற்ற –
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின–என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் .
சித் அசித் பிராப்ய பிராபக உபாசங்களை
ஆக இப்படி புராணரும் பௌ ராணிகரும் -பிதரம் மாதரம்-என்று தொடங்கி –
சாஷரான்-என்னும் அளவாக -சந்த்யஜ்ய -என்கிற இதுக்கு கர்மீ பவிக்கையாலே –
வஹ்ய மாண சித்த உபாய வர்ணத்துக்கு அங்கமாக த்யாஜிக்கும் படும் அம்சம் ஆக்கின
சித் வஸ்துகளும் அசித் வஸ்துக்களுமாய் உள்ள – பிராப்ய உபாசங்களையும் -பிராபக உபாசங்களையும் –
இதில்-சர்வ தர்மாம்ச்ச -கீழ் -உபாயாந்தர சக காரியுமாய் -ஸூயம் பிரயோஜனம் ஆகையாலே -உபேயமுமாய் –
இரண்டுக்கும் பொதுவாய் இருந்துள்ள வற்றை சொல்கிறது -எங்கனே என்னில்-
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ -என்று கொண்டு -ஈச்வரனோபாதி மாதா பிதா அனுவர்த்தனத்தையும்
உபாசன அங்கமாக சாஸ்திரம் விதிக்கையாலே -மாதா பிதாக்கள் -உபாயாந்தர சக காரிகளுமாய் –
அவ்வளவு இன்றிக்கே -இவர்களுடைய வியோகம் அசஹ்யமாய் இருக்கையாலே –
ஸூயம் பிரயோஜனமாயும் இருப்பார்கள் —
ஸ்திரீயும் சஹா தர்ம சாரினியாய் இருக்கையாலே -உபாயாந்தர சக காரியுமாய்-
அபிமதையும் ஆகையாலே உபேய பூதை யுமாய் இருக்கும் புத்ரனும் –
புன்நாம்னோ நரகாத் த்ராயதே இதி புத்ர – என்கிறபடி-நரக தர்சனத்துக்கு அடியான
பாபா விமோசன ஹேது வாகிற முகத்தாலே -உபாயாந்தர சக காரியுமாய் -தம்முடைய
வியோகம் அசஹ்யாகும் படி இருக்கையாலே உபேயாமுமாயும் இருக்கும் பந்துகள்-
இவனைக் குடிப் பழியாக வர்த்தியாத படி நியமித்து நல் வழியே நடத்துபவர்கள் ஆகையாலே –
உபாயாந்தர சக காரிகளுமாய் -பெரும் குடி பாட்டத்தே பிறந்தோம் என்கிற செருக்காலே –
உபேய பூதருமாய் இருப்பார்கள் –
தோழனும்- இவனுக்கு ஹிதைஷயாய் -ஹிதத்தை யே பிரவர்த்திப்பிக்கை யாலே – உபாயாந்தர சக காரியுமாய்-
அபிமதனாய் இருக்கையாலே உபேயமுமாய் இருக்கும்
குருக்கள் ஆகிறார்கள்- உபயாந் தரங்களை உபதேசித்துப் போந்தவர் ஆகையால்-உபயாந்தர சக காரிகளுமாய் –
உபகாரர் ஆகையாலே உபேயமுமாய் இருப்பார்கள்
ரத்னங்கள் உபாயாந்தரங்களுக்கு இதி கர்தவ்யதா சக காரகமுமாய் -மேற் சொல்லுமவற்றை
அழிய மாறி ஸ்வீகரிக்க படுமவை ஆகையாலே உபேயமுமாய் இருக்கும்
தான தான்யங்களும் ஷேத்ரங்களும் அப்படியே
க்ருகங்கள் வாசஸ்தான முகத்தாலே உபாயந்தரங்களுக்கு சக காரகமுமாய் –
மாட மாளிகையாய் எடுக்கும் படியான அபிமதத்வத்தாலே உபேயுமாய் இருக்கும்
மேல் சர்வ தர்மாம்ச்ச -இத்யாதியாலே
சாஷாத் உபாயாந்தரங்களையும் -உபேயாந்தரங்களையும் சொல்கிறது –
அதில் சர்வ தர்மாம்ச்ச என்று கர்ம யோகத் உபாயங்களை சொல்கிறது –
சர்வ காமாம்ச்ச -ஐ கிக பரலோக ஐஸ்வர்ய விசேஷங்களைச் சொல்கிறது
சாஷரான்-அஷர சப்த வாச்யமான கைவல்யத்தையும் அவ்வோபாதி த்யாஜ்யம் என்கிறது –
ஆக இப்படி உபாயத்வேனவும் உபேயத் வேனவும் வ்யவஸ்திதங்கள் அன்றிக்கே – கீழ் சொன்ன படியே –
உபாயாந்தர சக காரித்வத்தாலும்-அபிமதத் வாதிகளாலும் உண்டான பிராப்ய பிராபகங்கள்
உடைய மாதா -பித்ராதிகளும் -ரத்ன தான தான்யாதிகளும் –ஆனவற்றை சித் அசித் பிராப்ய
பிராபக ஆபாசங்கள் என்கிறது –
அதவா -சர்வ தர்மாம்ச்ச -இத்யாதிகள்-தானும் பரம பிராப்ய பிராபகங்கள் பற்ற ஆபாசங்கள்
ஆகையாலே -அவை தன்னையும் கூட்டிக் கொண்டு சொல்லவுமாம் –
கை வலிந்து -இத்யாதிக்கு அனுகுணமாக ஒதுக்குகிறதே இறே உள்ளது
மேல் சொல்லுகிற வர்ணத்து அங்கமான த்யாகம் -உபாய விரோதிகள் சர்வத்தையும் –
விஷயமாக உடைத்து ஆகையாலே -கை வலிந்து -இத்யாதிகளால் சொன்னது
த்யாஜ்யமான இத்தனைக்கும் உபலக்ஷணம் –
அப்படி ஆனால் இறே சப்ரகாரமாக சத்ருத் கரணீயம் என்றதுக்கு சேருவது
ஆக இப்படி இருந்துள்ள
————————————————
5–கை வலிந்து கை கழல கண்டும் எல்லாம் கிடக்க நினையாத கன்றும்-
(போலி உபாய உபேய பொருள்கள் தாமே கழன்று போவதையும் -உபேக்ஷித்துப் போவதுமாவையுமாக இருப்பதை –
துவளில் மா மணி மாடம் -மாலுக்கு வையம் -உண்ணும் சோறு -மூன்றிலும் காணலாமே )
நம்மை கை வலிந்து -6-5-7–என்றும் –
இழந்தது சங்கே -6-6-1-என்றும் –
இதெல்லாம் கிடக்க இனிப் போய் –6-7-9-
எம்மை ஒன்றும் நினைத்து இலளே –6-7-9-
இன்று எனக்கு உதாவாது அகன்ற -6-7-6–என்று
சித் அசித் வர்க்கமான இவற்றைக் கை விட்டு -உறங்குவான் கைப் பண்டம் போலே –
பகவத் பிரேம பாரவச்யத்தாலே தன்னடையே தன் கையில் நின்றும் நெகிழ்ந்து போக கண்டும் –
சர்வான் போகான் பரித்யஜ்ய -சரணாகதி கத்யம்-என்கிற படியே இவற்றை ஒன்றாக நினையாமல்
உபேஷித்து அகன்று போயும் –
ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும்
இதில் ததீயருக்கு போக்யமாக சமர்ப்பிக்கத் தக்க வற்றை-
பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ –
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ-என்று
தமக்கு உபாதேயமான பரம பத்தோடு ஒக்க கடகருக்கு பரிசிலாக சமர்ப்பித்தும்-
புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு
என்னைப் புறத்து இட்டு இன்னும் கெடுப்பாயோ–6-9-8–என்று உனக்கு அசலாம்படி
விஷயங்களிலே என்னைத் தள்ளி இன்னம் கெடுக்கப் பார்க்கிறாயோ என்றும் –
பல நீ காட்டிப் படுப்பாயோ-6-9-9–என்றும்
நாட்டார் காணா விடில் பிழையோம் என்கிற விஷயங்கள் தமக்கு காணில் முடியும் படி
அத்யந்த அசக்யமாய் இருக்கையாலே -விஷயங்களைக் காட்டி என்னை முடிக்கப் பார்க்கிறாயோ என்றும்
சொல்லுகையாலே -அவற்றின் பிரசங்கத்திலே ஏங்கி- மூச்சு அடங்கும் படி -பீதராய் -அவற்றை விட்டு
————————————————————
6-தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ -த்வமேவ பந்துச -குருஸ் த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் -த்வமேவ த்வமேவ சர்வம் மம தேவ-கத்ய த்ரயம் -என்கிறபடியே –
தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த -6-5-11–என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியே மாதா பித்ராதி சர்வ பந்து— என்றும் –
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்–6-7-11–என்றும் –
தாரக போஷாக போக்யங்கள் எல்லாம் சர்வ சுலபனான கிருஷ்ணனே என்றும் –
வைத்த மா நிதியாம் மது சூதனையே –6-7-11- என்று
ஆபத் ரஷகமாக சேமித்து வைத்த அஷயமான நிதியும் அவனே என்றும் –
பூவை பைம்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் -6-7-3–என்றும்-
லீலா உபகரணங்களால் பிறக்கும் ரசம் எல்லாம் ஸ்ரீய பதி யினுடைய திரு நாமங்களை
சொல்லவே உண்டாகா நிற்கும் என்றும் –
இப்படி கீழ் இட்டவை எல்லாம் பற்றுகிற விஷயமொன்றுமாக நினைத்து
———————————————-
7-தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே
கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்றும் ,
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ -என்றும்
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குருகாதோ -என்றும் –
புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ -என்றும்
ஜகத்துக்கு சர்வ பிரகார ரஷகனாய் –ஸ்ரீயா சார்த்தம்-என்கிறபடியே –
பெரிய பிராட்டி யாரோடு எழுந்தி அருளி இருக்கிற உன்னைப் பெறப் பெறாதே –
சம்சாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இப்படி அவசன்னனாகக் கடவேன் –
திரி விக்கிரம அவதார முகத்தாலே நீயே வந்து எல்லார் தலையிலும் திருவடிகள் வைத்த உன்னைக்
காண ஆசைப் பட்டு கிடையாமல் அக்நி சகாசத்தில் மெழுகுபோல-ஜீவிக்கவும் பெறாதே -முடிக்கவும் பெறாதே –
சம்சாரத்தில் இப்படி திரியக் கடவனோ -சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளிலே
என்னை அருளப் பாடிடும் காலம் இன்னும் அணித்தாகாதோ –
விரோதிகளின் கையில் அகப்படாதே -ஜகத்துக்கு வேர் பற்றான -உன்னை நோக்கித் தந்தவனே !
மானச அனுபவம் மாத்ரம் அன்றிக்கே -உன் திரு அடிகளை பிரத்யஷமாக கிட்டுவது என்றோ என்கிற ஆர்த்தி யோடே-
——————————————
8-திரி விக்ரமனாய் குரல் கோலப் பிரானே அடியை மூன்றை இரந்த வன் கள்வன்
கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ரஜம் விபோ -என்று
வசிஷ்ட சண்டாள விபாகமற வரையாதே திருவடிகளை வைக்கையாலே-சௌசீல்யமும் –
உறங்குகிற பிரஜையின் முதுகைக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
விமுகனார் தலையிலும் திரு வடிகளை வைக்கையாலே -வாத்சல்யமும் –
அவதரித்து முன்னே நின்று கார்யம் செய்கையாலே -சௌலப்யமும் –
தே -என்கையாலே -தன் பேறாக செய்கைக்கு உறுப்பான ஸ்வாமித்வமும் –
விபோ -என்கையாலே -ஞான சக்த்யாதி குண பூர்த்தியும் -சொல்லுகையாலே –
த்ரி விக்கிரம உபதானத்திலே -ஆஸ்ரயண உபயோகியாயும் -கார்ய உபயோகியாயும் –
உள்ள குணங்கள் எல்லாம் பிரகாசிக்கையாலே –
தெய்வ நாயகன் திரி விக்ரமன்-5-7-11-
மாண் குறள் கோலப் பிரான் –5-9-6-
அடியை மூன்றை இரந்தவாறும்-5-10-9-
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன்-6-1-11 -என்று-சர்வேஸ்வரனாய்-
ஆஸ்ரித வத்சலனான தான் –
திரு விக்கிரம உபாதானம் பண்ணு கைக்காக பெரு விலையனான அழகை-சிறாங்கித்து
அனுபவிக்கலாம் படி வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து கொண்டு மகாபலி
யஜ்ஞ வாடத்திலே சென்று – மூன்று அடி- என்று இரந்து -தான் சொன்ன படியே அவன் செய்யும் படி
விநீதமாய் ஆகர்ஷமான வடிவைக் காட்டி வசீகரித்து நின்ற மகா வஞ்சகன்-
காண் மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த -6-3-11-என்று
நோக்கு வித்யை காட்டுவாரைப் போலே -இதோர் ஆஸ்ரயம் பாரும் கோள் என்று – லௌகிகர் எல்லோருடையவும் கண் எதிரே –
அகல் கொள் வையம் அளந்த மாயன்-6-4-6-
திசை ஞாலம் தாவி அளந்ததுவும் –6-5-3-
வையம் அளந்த மணாளன் –6-6-1-
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மான் –6-9-2-
ஓர் அடியால் எல்லா உலகும் தட வந்த –6-9-6-
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகள்-6-9-9–என்று
விஸ்த்ருதமாய் -திக்குகளோடு -கூடின பூமியையும் -உபரிதன லோகங்களையும் –
தென்றல் உலவினால் போலே -ஸூகரமாம்படி -எங்கும் ஒக்கப் பரப்பி அளந்து கொண்ட
சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளை –
————————————-
9-இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத் திலதத்தே கண்டு
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று -இத்யாதி படியே
திரு உலகு அளந்து அருளின -சர்வ சுலபமாய்-நிரதிசய போக்யமாய்-சேர்த்தி அழகையும்
உடைத்தான திரு அடிகளை நாம் காண்பது எப்போது என்று -நித்ய ஸூரிகளும்
அனுபவிக்க ஆசைப் பட்டு வரும் படி-
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திரு வேம்கட மா மலை -என்று
திரு உலகு அளந்த செயலாலே பிரகாசிக்கிற சர்வ ஸ்மாத் பரத்வத்தை உடையவன் –
அந்த ஸ்ரமம் தீர விடாயர் மடுவிலே சேருமா போலே உகந்து நிற்கிற –
திலதம் உலகுக்காய் நின்ற திருவேம்கடம் -என்று லோகத்துக்கு முக்ய ஆபரணமான
திரு மலையிலே கண்டு –
அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர்
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்று
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரை முன்னிட்டு –
நிகரில் புகழாய்-என்று தொடங்கி-
திருவேம்கடத்தானே -என்னும் அது அளவாக –
வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -சௌசீல்யம்-சௌலப்யம் -ஆகிய குணங்களை
அடைவே அனுசந்தித்துக் கொண்டு –
புகல் ஓன்று இல்லா -என்றும்
அடியேன் -என்றும்
தம்முடைய ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ்பம் புரஸ்சரமாக
உன் அடிக் கீழ் -என்று -சரணவ்-என்கிற திருவடிகளையும் –
அமர்ந்து புகுந்தேன் -என்று சரணம் பிரபத்யே -என்கிற
அர்த்தத்தையும் அனுசந்தித்து அருளுகையாலே –
பூர்வ வாக்ய பிரக்ரியையாலே -பூர்ண பிரபதனம் பண்ணினவர்-
———————————————
10-பிணக்கற தொடங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு
(சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு-சாதன பக்தியை கேட்டு துஷ்கரம் என்றும் அபிராப்தி என்றும் நினைத்தலால்
பிறந்த சோகமுடைய தன்னை ஒத்த அதிகாரிகளுக்கு என்றவாறு )- பத்துடை அடியவரிலே –
பிணக்கற அறு வகை சமயமமும் -என்கிற பாட்டிலே –
வணக்குடை தவ நெறி வழி நின்று -என்று உபக்ரமித்து –
வேத புனித விருக்கை நாவில் கொண்டு-ஞான விதி பிழையாமே -அச்சுதன் தன்னை மேவித்
தொழுது உய்ம்மினீர்கள்–5-2-9- என்கிறது அளவாக கீழ் உபதேசித்த சாத்ய சாதன பக்தி ஸ்ரவணத்தாலே –
அதினுடைய துச்சகத்வ ஸ்வரூப விரோதித்வங்களை நினைத்துப் பிறந்த சோகத்தோடு கூடி
அத்தாலே
-எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு-5-7-5-
என்னான் செய்கேன் –5-8-3-
என்று இருக்கும் தம்மோடு சஜாதீயராம் படியான அதிகாரம் பிறந்தவர்களுக்கு-
—————————————-
11-தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை
உக்த அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் .
அதாவது –
திரு விண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பாரில் அப்பன் தந்தனன் தன தாள் நிழல்-
திரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண் மின்களே –
என்கிற தம்முடைய உக்தியாலும் –
(களை கண் இலம் காண் மின்களே –முன்னிலை வினைமுற்று உபதேசத்தில் நோக்கு )
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –
என்கிற தம்முடைய அனுஷ்டானத்தாலும் -தமக்கு இந்த சித்தோ உபாயத்தில் உண்டான
நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் ஆறாம் பத்தில் -என்கை
———————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
திரு பாவை- அனுபவம் -6-புள்ளும் சிலம்பின காண் ..
December 23, 2011கீசு -அரவம்-பறவை ஒலி -பிரிவாற்றாமை- கலந்து பேசி-தோணி